தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, August 31, 2019

ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் ----2 மார்க்வெஸ் :தமிழில் நாகார்ஜுனன்

தானியத்தில் மறைந்த ஜிப்ஸிப்பெண்ணின் காதல் ஆரூடம் தமிழில் நாகார்ஜுனன் 
கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ்

பதினாறாம் நூற்றாண்டில் ஆங்கிலேயக் கடற்கொள்ளைக்காரன் ஸர் ஃப்ரான்ஸிஸ் ட்ரேக் ரியோஹச்சா நகரத்தைக் கொடூரமாகத் தாக்கிய போது பீரங்கிகளின் முழக்கத்தையும் அபாய எச்சரிக்கை மணிகளின் ஒசையையும் கேட்டுக் கதிகலங்கி உர்ஸலாவின் எள்ளுப்பாட்டியானவள் சித்தம் தவறிப்போய் எரிந்துகொண்டிருக்கும் அடுப்பின் மீது அப்படியே உட்கார்ந்துவிட்டாள். ஏற்பட்ட தீக்காயங்களால் எஞ்சிய வாழ்நாள் முழுதும் வீணாகிப்போனாள் அந்தப் பெண்மணி. பக்கமாக ஒருக்களித்துச் சாய்ந்து கொண்டும் தலையணைகளின் மீது கையூன்றிக் கொண்டும்தான் உட்கார முடிந்தது. மேலும் யாரும் பார்க்கிறாற்போல அவள் அப்புறம் நடக்கவே இல்லை என்பதற்கு நடையில் ஏற்பட்டுவிட்ட விநோதக்கோளாறே காரணமாக இருக்க முடியும். தன் உடலிலிருந்து எப்போதும் ஏதோ கருகிய வாசனை வந்துகொண்டிருப்பதாக உணர்ந்தவள் சமுதாயத்திலிருந்தே விலகிவாழ்ந்து கொண்டிருந்தாள். ஆங்கிலேயர்களும் அவர்களுடைய வேட்டைநாய்களும் திறந்த ஜன்னல்வழி படுக்கையறைக்குள் வந்து செஞ்சிவப்புக் கோல்களால் தனக்குச் சூடுபோட்டு நடத்த இருந்த வெட்கங்கெட்ட சித்திரவதைகளுக்குக் கனவிலும் பலியாகிவிடக்கூடாது என்பதற்காக இரவு பூராவும் தூங்காதிருக்கும் அவள் முற்றத்துக்கு வரும் போது அதிகாலை அவள் முகத்தில் விழிக்கும். அரகோன் வியாபாரியான அவளுடைய புருஷன் பயங்களைத் தணிக்கும் பொருட்டு ஏகப்பட்ட மருந்துகளையும் விளையாட்டுப் பொழுதுபோக்குப் பொருட்களையும் தருவிப்பதில் தம் பாதிநேரத்தைச் செலவழித்தார். கடைசியில் வியாபாரத்தையும் தொலைத்துவிட்டு சமுத்திரத்துக்கு வெகுதூரத்தில் மலையடிவாரத்தில் வாழ்கிற செவ்விந்தியக் குடிகளுக்கு அருகில் குடும்பத்தை அமைத்துக்கொண்டு கடற்கொள்ளைக்காரர்கள் யாரும் மனைவியின் கனவுக்குள் புகமுடியாதபடி ஜன்னல்களற்ற படுக்கை அறையையும் கட்டினார். 
மலைகளுக்குள் மறைந்திருந்த அதே கிராமத்தில் புகையிலை பயிரிட்டுக்கொண்டு சில காலமாக வசித்துவந்தார் டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. இவருக்கும் உர்ஸலாவின் எள்ளுத்தாத்தாவுக்கும் ஏற்பட்ட வியாபார உறவின் மூலமாக சில வருடங்களிலேயே இருவரும் எக்கச்சக்கமாக சம்பாதித்துவிட்டனர். சில நூற்றாண்டுகள் கழித்து புகையிலை விவசாயியான டான் ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியாவின் எள்ளுப்பேரனுக்குப் அரகோன் வியாபாரியின் எள்ளுப்பேத்திக்கும் திருமணம் விமரிசையாக நடந்தேறியது. கணவனின் பைத்தியக்கார எண்ணங்களையும் அலைச்சல்களையும் பற்றிக் கவலைப்பட நேருகிற ஒவ்வொருமுறையும் முன்னூறு வருஷங்கள் வரையில் தொடர்ந்து வந்திருக்கிற தலைவிதியை நொந்து கொண்டு ரியோஹச்சா நகரத்தை கடற்கொள்ளைக்காரனான ஸர் ஃப்ரான்ஸிஸ் ட்ரேக் கொடூரமாகத் தாக்கிய சனியன் பிடித்த அந்நாளைத் திட்டத் துவங்குவாள் உர்ஸலா. மனதுக்கு ஆறுதல் தேடவே அப்படித் திட்டுகிறாள். உண்மையில் காதலை விடவும் உறுதியான ஒன்றால் ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் உர்ஸலாவும் மரணம் வரையிலுமாகப் பிணைக்கப்பட்டிருந்தார்கள். உறவுமுறை கொண்டவர்கள் என்பதால் 
314 

திருமணமானவுடன் இருவருக்கும் பொதுவானதாக மனச்சாட்சியின் குத்தலானது இருந்து வந்தது. மாநிலத்திலேயே பெயர்பெற்ற ஊராக முன்னோர்கள் கடுமையான உழைப்பினால் மாற்றித்தந்திருந்த அதே கிராமத்தில்தான் சேர்ந்து வளர்ந்தார்கள். இப்பூவுலகத்தில் நுழைந்த உடனேயே அவ்விருவரின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது என்றாலும் தம்பதிகள் ஆகிவிட இருவரும் விருப்பம் தெரிவித்த கணத்திலிருந்தே உறவுக்காரர்கள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தப் பிரயத்தனப்பட்டார்கள். எக்கச் சக்கமான திருமண உறவுகளால் பிணைக்கப்பட்டிருந்த இரு குடும்பங்களின் ஆரோக்கியமான வழித்தோன்றல்களான ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் உர்லா இகுவாரென்னும் உறவு கொண்டால் உடும்புகளைப் பெற்றெடுக்கும் துர்ப்பாக்கியத்துக்குத் தள்ளப்படக்கூடும் என்ற பயந்தார்கள் உறவுக்காரர்கள். குடும்பத்தில் ஏற்கனவே இதுபோல நடந்திருந்ததும் காரணம். உர்ஸலாவின் அத்தை ஒருத்திக்கும் ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவின் மாமாவுக்கும் பிறந்த மகன் ஒருவன் வாழ்க்கை பூராவும் லூசான காற்சராய்களையே அணிந்துகொண்டு நாற்பத்திரண்டு வயதுவரை கன்னிகழியாமலேயே இறந்துபோனது அவர்களை என்னவோ செய்தது. அவன் முதுகுத்தண்டின் கீழ்எலும்பு வாலைப்போல நீண்டு போத்தல் கார்க்குகளைத் திறக்கப் பயன்படும் ஸ்க்ரூட்ரைவரைப் போலச் சுழன்று வளர்ந்ததும் அதன் முனையில் மயிர்க்கொத்து ஒன்று இருந்ததும் உண்மைதான். இதுவரை எந்தப்பெண்ணும் பார்த்திராத அந்தப் பன்றிவால்தான் அவன் உயிரையும் குடித்துவிட்டது. கசாப்புக்கடையில் வேலை செய்த நண்பன் தன் வெட்டுக்கத்தியை மீது போட்டவுடன் அவன் செய்த உதவியால் ஏற்பட்ட ரத்தப்பெருக்கு நிற்காமல் துடிதுடித்துச் செத்தான் பன்றிவால் இளைஞன். தன் பத்தொன்பது வயது அளித்த தைரியத்தில் இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்டும் வகையில் சொன்னான் ஜோஸ் 'அர்க்காடியோ புண்டியா. 
"எனக்குப் பன்றிக்குட்டிகள் பிறந்தால் என்ன பேசினால் போதும்." 
'மூன்று நாட்களாக வாண வேடிக்கைகளுடனும் செப்புவாத்தியங்களின் முழக்கங்களுடனும் நடந்தேறிய திருவிழாவாக அவர்கள் திருமணம் இருந்தது. பிறக்கப்போகும் குழந்தை பற்றிய பயங்கர ஆரூடங்களை உர்ஸலாவின் அம்மா அவளுக்குச் சொல்லி உடலுறவையும் தவிர்த்துவிடக் கூறி அவளை எச்சரித்திருந்தபடியால் அவர்களுடைய மண வாழ்க்கையின் சந்தோஷம் தள்ளிப்போடப்பட்டது சில காலம் வரையில். 
பலசாலியும் வேட்கை மிக்கவனுமாகிய கணவன் தன்னைத் தூங்கும்போது பலாத்காரம் செய்துவிடுவானோ என்ற பயத்தில் பாய்மரத்துணியில் தைக்கப்பட்டு தோல்பட்டைகள் குறுக்காகவும் முன்பக்கம் இரும்புப்பித்தானால் மூடப்பட்டும் அமைந்த அம்மா அணிந்திருந்த கற்புப்பூட்டை தினசரி இரவு அணிந்துகொண்ட பிறகே தூங்கப்போனாள் உர்ஸலா. தன் சண்டைச்சேவல்களை ஜோஸ் அர்க்காடியோ புண்டியா பராமரித்துக் கொண்டிருக்கும் பகல்வேளை களிலோ உர்ஸலா தன் 
315 

அம்மாவுடன் உட்கார்ந்துகொண்டு ஆடைகளிலும் துணிகளிலும் பூவேலைப்பாடு செய்து மகிழ்ந்தார்கள். இப்படியாகத்தானே மாதங்கள் கழிந்தன. இரவுப்பொழுதுகளில் உடலுறவுக்குப் பதிலாக இருவரும் இனம் தெரியாததும் பதற்றமானதுமான மல்யுத்த வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். கடைசியில் ஏதோ சரியில்லை என்றும் மோப்பம் பிடித்துவிட்ட உறவுக்காரர்கள் திருமணமாகி ஒரு வருஷத்துக்குப் பிறகும் உர்ஸலா கன்னிகழியாமலேயே இருப்பதாகவும் கணவன் ஆண்மை இழந்தவனாக இருப்பதே காரணம் என்றும் பேசிக்கொண்டார்கள். வதந்தியைச் செவிமடுத்தவர்களின் வரிசையில் கடைசியானவன் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா, 
"எல்லோரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் தெரியுமா உர்ஸலா" என்றான் 'அமைதியாக. 
"பேசட்டும். உண்மையல்ல என்று நமக்குத் தெரியும்" என்றாள். 
அடுத்த ஆறு மாதங்களுக்கு இப்படியே போய்க்கொண்டிருக்க, கடைசியில் ப்ரூடென்ஷியோ அக்விலர் என்பவனுக்கு எதிரான சேவல்சண்டையில் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா வெற்றியடைந்த சோகமான ஞாயிற்றுக்கிழமை வந்தேவிட்டது. தன் சேவலின் சிந்திய ரத்தத்தால் வெறியடைந்துவிட்ட ப்ரூடென்ஷியோ அக்விலர் ஜோஸ் 'அர்க்காடியோ புண்டியாவிடமிருந்து பின்வாங்கியவுடன் அடுத்து என்ன தான் சொல்லப்போகிறான் என்பதைச் சுற்றிருந்தவர்கள் யூகித்துவிட்டனர். 
"வாழ்த்துக்கள். வெற்றிபெற்ற சேவலாவது உன் மனைவியை சந்தோஷப்படுத்தட்டும்." 
அமைதியாக சேவலைக் கையிலெடுத்துக்கொண்ட ஜோஸ் அர்க்காடியோ புண்டியா உடனே திரும்பிவருவதாகக் கூட்டத்தினரிடம் சொல்லிவிட்டுத் தனியாக ப்ரூடென்ஷியோ 'அக்விலரிடம் பேசினான். 
"வீட்டுக்குப் போய் ஆயுதத்தை. எடுத்துவா. கொல்லப்போகிறேன்." 
உன்னை இப்போது 
பத்தே நிமிடங்கள் கழித்து தாத்தாவின் இருமுறை ஈட்டியுடன் சண்டைக்களத்துக்கு வந்து சேர்ந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. ஊரின் பாதிப்பேர் அங்கே குழுமியிருக்க அவனுக்காகக் காத்திருந்த ப்ரூடென்ஷியோ அக்விலருக்குத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் துளியும் நேரமில்லை. எருதின் பலத்தோடும் பிராந்தியத்தின் சிறுத்தைப்புலிகளைக் கொல்வதற்கு முதலாம் அவ்ரலியானோ புண்டியா தப்பாது வைத்ததே குறியோடும் ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியா எறிந்த இருமுனை ஈட்டியானது ப்ரூடென்ஷியோ அக்விலரின் தொண்டைக்குழியைப் பதம்பார்த்துக் கிழித்துச்சென்றது. நல்லடக்கத்துக்கு முந்தைய அவ்விரவில் சண்டைக்களத்திலேயே சவப்பெட்டியை வைத்து 
316 

இரவு முழுவதும் ஊரார் ஜெபித்துக்கொண்டிருக்க, கற்புப்பூட்டை அணிந்து கொள்ள உர்ஸலா முயல்கையில் படுக்கை அறைக்குள் நுழைந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. ஈட்டியை அவள்மீது நீட்டிக்கொண்டே கூறினான். 
"அதைக் கழற்றி விடு." 
"நடக்கப்போகும் அத்தனைக்கும் நீதான் பொறுப்பு" என்று அவள் முணுமுணுக்க ஈட்டியை அழுக்குத் தரையில் வீசியெறிந்தான் ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியா. 
"உடும்புகளை நீ பெற்றெடுத்தால் அவற்றையே வளர்ப்போம். உன்னால் இனி ஊரில் கொலைகள் ஏதும் நடக்க வேண்டாம்" என்றான். 
அது குளிர் நிலவு காய்ந்த ஜூன் மாத இரவு. ப்ரூ டென்ஷியோ அக்விலரின் உறவுக்காரர்களின் அழுகையைச் சுமந்து கொண்டு அறைக்குள் வந்து சென்ற காற்றைப் பற்றிக் கவலைப்படாமல் அதிகாலை வரையில் படுக்கையில் குதூகலித்தார்கள் இருவரும். 
ப்ரூடென்ஷியோ அக்விலர் கொல்லப்பட்டது. சவாலின் தீர்ப்பாக அறிவிக்கப்பட்டாயிற்று என்றாலும் கணவன் மனைவி இருவருக்கும் தங்கள் மனச்சாட்சியின் நரம்புஸ்ருதியின் இழை பிசகிப் போயிருந்தது புரிந்துவிட்டது. ஓரிரவு தூக்கம் வராத உர்ஸலா தாகத்தால் வெளியே வர அங்கே தண்ணீர்ப்பாத்திரம் அருகே நின்றுகொண்டிருந்த ப்ரூடென்ஷியோ அக்விலரைக் கண்டாள். கோபமாயிருந்தவன் தன் தொண்டையின் ஓட்டையை காகிதம் தயாரிக்கப் பயன்படும் புல்லால் அடைக்க முயன்றுகொண்டிருந்தான். பார்த்த உர்ஸலாவுக்குப் பயமின்றிப் பரிதாபமே ஏற்பட்டது. அறைக்குத் திரும்பி, பார்த்ததைக் கணவனிடம் கூறியபோது அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சொன்னான். 
"மனச்சாட்சியின் பாரத்தை நம்மால் தாங்க முடியவில்லை என்பதுதான் அர்த்தம்." 
இன்னும் இரண்டு இரவுகள் கழித்து குளியலறையில் அதே புல்லால் ரத்தம் கட்டிப் போயிருந்த தன் தொண்டையைக் கழுவிக்கொண்டிருந்த ப்ரூடென்ஷயோ அக்விலரைக் கண்டாள் உர்ஸலா. இன்னோர் இரவில் மழையில் நடைபயின்று கொண்டிருந்தவனைக் கண்டாள். மனைவியின் மாயாவிநோத தரிசனங்களைக் கேட்டு எரிச்சலடைந்த ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியா மீண்டும் ஈட்டியை எடுத்துக்கொண்டு முற்றத்துக்குப் போன போது ஏற்கனவே செத்துப்போய்விட்ட அந்த மனிதன் முகத்தில் சோக பாவத்துடன் உட்கார்ந்திருந்தான். 
"நரகத்துக்கு இன்னும் போகவில்லையா நீ. எத்தனை முறையும் வந்தாலும் கொல்லாமல் விடமாட்டேன்" என்று உறுமினான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
317 

ப்ரூடென்ஷியோ அக்விலர் போகவுமில்லை. ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவால் ஈட்டியைத் தூரத்தூக்கி எறியவும் முடியவில்லை. அவனால் நிம்மதியாகத் தூங்கக்கூட அப்புறம் முடியவில்லை. மழையினூடே செத்துப்போன அந்த வெளிறிய மனிதன் தன்னை வெறித்து நோக்கிய பார்வையும் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் நிலைமை குறித்து அவன் கொண்டிருக்கும் ஆழமான ஏக்கமும் அவர்களிடையே வாழ வேண்டும் என்கிற அவனுடைய வேட்கையும் தான் கொண்டு வந்த புல்லுக்கட்டை நனைக்க வீடுபூராவும் தண்ணீரைத் தேடியலைந்த அவனுடைய பதற்றமும் ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவை வாட்டி வதைக்கத் துவங்கின. 
"ரொம்பத்தான் வருத்தப்பட்டுப் போய்விட்டான் தனிமையில் வாடும் அந்த மனிதன் என்று உர்ஸலாவிடம் சொல்லிவிட்டுப் போனான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. அடுப்பின் மீதிருந்த பாத்திரங்களை விலக்கித் தேடிக்கொண்டிருந்த செத்துப்போன மனிதனை அடுத்த முறை பார்த்ததில் ஏற்பட்ட பச்சாத்தாபத்தில் தண்ணீர்க்குடங்களை வீட்டில் கண்ட இடங்களிலெல்லாம் வைக்கும் அளவுக்கு உருகிவிட்டிருந்தாள் உர்ஸலா. ஒருநாள் கழுத்துக்காயத்தைக் கழுவுவதற்காக தன்னுடைய அறைக்கே வந்துவிட்டிருந்த ப்ரூடென்ஷியோ அக்விலரைப் பார்த்தவுடன் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா முடிவுக்கு வந்தவனாகப் பேசலானான். 
"இதோ பார், ப்ரூடென்ஷியோ. நானும் மனைவியும் இந்த ஊரைவிட்டே போகப் போகிறோம். மலைத்தொடரைத் தாண்டி எவ்வளவுதூரம் முடியுமோ போவோம். திரும்ப மாட்டோம். இனியாவது நீ மனச்சாந்தி அடையலாம்." 
இப்படியாகத்தான் மலைத்தொடரைக் கடந்தார்கள். இந்த சாகசத்தில் ஈடுபட விரும்பி ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவின் நண்பர்களான இளைஞர்கள் சிலர் தங்கள் வீடுகளைக் கழற்றி மடக்கிக்கொண்டும் குழந்தை குட்டிகளைக் கூட்டிக்கொண்டும் சேர்ந்துவிட்டார்கள். தங்களுக்கென்று யாரும் சத்தியம் செய்து தந்திராத, இடம்தெரியாத நிலத்தை நோக்கி பிரயாணப்பட்டார்கள். கிளம்புவதற்கு முன்பு வீடு முற்றத்தில் ஈட்டியைப் புதைத்துவிட்டு சண்டைச் சேவல்களை ஒவ்வொன்றாக கழுத்தைத் திருகிப்போட்டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. இதனாலாவது ப்ரூடென்ஷியோ அக்விலருக்கு மனச்சாந்தி கிட்டினால் சரி என்று நினைத்தான். திருமண தினத்தன்று தான் அணிந்திருந்த உடைகளையும் பாத்திரங்கள் சிலதையும் அப்பா சேமித்துத் தந்திருந்த தங்க நாணயங்கள் அடங்கிய பேழையையும் மட்டும் ட்ரங்குப்பெட்டியில் போட்டு எடுத்துவந்தாள் உர்ஸலா. குறிப்பிட்ட இலக்கு ஏதுமின்றிப் பயணம் செய்தார்கள். பரிச்சயமான யாரையும் பார்த்து விடக்கூடாது என்றும் அடுத்து வருபவர்களுக்கு எந்தவிதமான அடையாளத்தையோ சுவடையோ விட்டுச் செல்லக்கூடாது என்றும் தீர்மானித்துக்கொண்டு ரியோஹச்சா நகரத்துக்கு எதிரான திசையில் நடந்து சென்றார்கள். அபத்தமானதொரு பிரயாணமாக ஆகிப்போனது. கிளம்பிய பதினான்கு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் குரங்கு மாமிசத்தாலும் பாம்புக்கஞ்சியாலும் தாக்குண்டு பீடிக்கப்பட்ட உர்ஸலாவின் 
318 

வயிற்றிலிருந்து அழகான மனிதக்குழந்தை பிறந்தது. அதற்குள் உர்ஸலாவின் இருகால்களும் விலகிப்போய் அவற்றின் ரத்தக்குழாய்கள் குமிழிகளைப்போல வெடிக்கச் சித்தமாக இருந்ததால் பாதிதூரத்துக்கு ஏணையில்தான் போட்டுத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். குழிவிழுந்த கண்களுடனும் காய்ந்துபோன வயிறுகளுடனும் கூட வந்து கொண்டிருந்த குழந்தைகள் பார்க்கப் பரிதாபமாக இருந்தபோதிலும் அம்மா அப்பாக்களை விடவும் பிரயாணத்தின் கொடூரத்தை சந்தோஷமாகத் தாங்கிக் கொண்டிருந்தார்கள். கிளம்பி இரண்டு வருஷங்களுக்கும் மேலாகிவிட்ட ஒருநாள் காலையில் மலைத்தொடரின் மேற்குப்புறச்சரிவுகளை முதன்முதலாகக் காணும் பேறு பெற்ற மனிதர்களும் அவர்கள் தான். பூவுலகத்தின் மறுபக்கம் வரையிலும் பரவிப் பாய்ந்திருந்த பிரம்மாண்டமான ஏரிப்பிராந்தியத்தையும் மேகம்சூழ்ந்த சிகரத்திலிருந்து கண்டார்கள். ஆனால் சமுத்திரத்தைத்தான் பார்க்க முடியவில்லை. கடைசியாகப் பார்த்த செவ்விந்தியர்களிடமிருந்து வெகுதூரம் தாண்டிப்போய் அந்தப் பிராந்தியத்தின் சதுப்புநிலங்களில் பல மாதங்கள் சுற்றி அலைந்து ஒருநாள் உறைந்துவிட்ட கண்ணாடியின் பிரவாகமாய்த் தெரிந்த கல்நதியின் கரையில் இளைப்பாறினார்கள் பிரயாணிகள். மிகப்பல வருஷங்களுக்குப் பிறகு இரண்டாவது உள் நாட்டு யுத்தத்தின்போது திடீர்த்தாக்குதல் நடத்தி அதிரடியாக ரியோஹச்சா நகரத்தைப் பிடித்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் அதே வழியில் பயணப்பட்ட கர்னல் அவ்ரலியானோ புண்டியா ஆறே நாட்களுக்குப் பிறகு தமது செயலின் பைத்தியக்காரத்தனத்தைப் பரிபூரணமாகப் புரிந்து கொண்டார். ஆனாலும் நதிக்கரையில் பிரயாணிகள் தங்கிய முதல் இரவில் கர்னல் அவ்ரவியானோ புண்டியாவின் அப்பாவின் மக்கள் எல்லோருமே தங்கள் கப்பல் நொறுங்கிப்போனதால் தப்பிக்க முடியாமல் தத்தளிப்பவர்களாகவே தெரிந்தார்கள். பிரயாணத்தின்போது அவர்கள் எண்ணிக்கை ஏறிவிட்டிருந்ததும் எல்லோரும் வயதாகித் தான் சாகவேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்ததும் அதே விருப்பத்தின்படிதான் அவர்களுடைய வாழ்க்கையும் பிறகு அமைந்ததும் முக்கியம். அதே இடத்தில் கண்ணாடிச்சுவர்களுடன் கூடிய இரைச்சலான நகரம் ஒன்று எழும்புவதாக அந்த இரவே கனவுகண்டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. அந்த நகரம் எது என்று உர்ஸலா கேட்டவுடன் அர்த்தமற்று இருந்தாலும் அவன் கனவில் பட்டு இயற்கையையும் மீறியதாய் எதிரொலித்தது கண்ணாடிச்சுவர்கள் அவனுக்குச் சொன்ன அதுவரையிலும் கேட்டிராத பெயர். மக்காந்தோ. இனியும் தம்மால் சமுத்திரத்தைக் கண்டுபிடித்துக்கொண்டிருக்க முடியாது என்று தோழர்களிடம் சொன்னான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா அடுத்த நாள் காலையில், மேலும் நதிக்கரையின் மிகக் குளிர்ந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து மரங்களை வெட்டிச் சீராக்கித் தருமாறும் கூறிவிட்டான். மக்காந்தோ கிராமத்தை அவர்கள் நிறுவியது இப்படியாகத்தான். 
ஐஸை அவர்கள் கண்ட அந்நாள் வரையிலும் கண்ணாடிச்சுவர்களாலான வீடுகள் பற்றித் தான் கண்ட கனவு ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்குப் புரியவே இல்லை. புரிந்தவுடன் அதன் ஆழமான அர்த்தத்தைக் கிரகித்துக்கொண்டுவிட்டதாக எண்ணினான். தண்ணீரைப் போன்று சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய ஏதோ 
319 

பொருளிலிருந்து பெருமளவில் ஐஸ்கட்டிகளை கூடிய சீக்கிரத்தில் தயாரிக்க முடியும் என்றும் ஐஸ்கட்டிகளைக் கொண்டே கிராமத்தின் புத்தம்வீடுகளை எழுப்ப முடியும் என்றும் எண்ணினான். கிராமத்தை வாட்டிய வெப்பத்தால் கதவுத் தாழ்ப்பாள் களும் பிணைப்புகளும் வளைந்துபோய் முறுக்கிக்கொள்கிற இடமாக மக்காந்தோ இனியும் இருக்காது என்றும் பனிபெய்கிற நகரமாக மாறப்போகிறது என்றும் எண்ணிக்கொண்டான் ஜோஸ் அக்காடியோ புண்டியா. அப்போதே ஐஸ்கட்டிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை அவன் நிறுவிவிட நினைத்தாலும் மகன்களின் கல்வியின் மீது கொண்டிருந்த அக்கறையால் தள்ளிப்போட்டான். ரசவாதத்தில் விநோத ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்த அவ்ரலியானோவின் குறிப்பாக கல்வியில் அதிக நாட்டம் கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. பழைய பரிசோதனைச் சாலையைத் தூசிதட்டி, புனிதத்துவம் நிறைந்த மெல்க்யுடஸின் குறிப்புக்களை மரியாதை கலந்து படித்து விட்டு, அன்றொரு நாள் சட்டியின் அடிப்பாகத்துடன் ஒட்டிக் கொண்டேவிட்ட கசடிலிருந்து உர்ஸலாவின் தங்கத்தைப் பிரித்தெடுக்க முயன்றார்கள் அப்பாவும் பிள்ளையுமாய். ஜோஸ் அர்க்காடியோவுக்கோ இதிலும் நாட்டமிருக்கவில்லை. தண்ணீர்த் தொட்டியில் தன் ஆன்மாவையும் உடலையும் முழுமையாக ஜோஸ் அர்க்காடியோ புண்டியா ஈடுபடுத்திக் கொண்டிருந்த போது விடலைப்பையனாகத் திமிறிக்கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ. அவன் குரல் உடைந்து மேலுதட்டில் எப்போதுமான ரீங்காரம் தோன்றியது. ஓரிரவு படுக்கப்போகுமுன் உடைகளை அவன் களைந்து கொண்டிருந்த போது அங்கே நுழைந்த உர்ஸலாவை பச்சாத்தாபமும் வெட்கமும் பிடுங்கித்தின்றன. கணவனுக்குப் பிறகு நிர்வாணமாகப் பார்த்துவிட்ட முதல் ஆண்பிள்ளையான ஜோஸ் அர்க்காடியோ வாழ்க்கைக்கு சீக்கிரமாகவே தயாராகிவிட்ட அதீத லட்சிய மனிதனாக அவளுக்குத் தென்பட்டான். மூன்றாவது முறையாகக் கர்ப்பம் தரித்திருந்த உர்ஸலா புதுமணப்பெண்ணுக்கே உரித்தான பயங்கரத்தை மீண்டும் அனுபவித்தாள். 
வீட்டுவேலைகளுக்கு உதவுதாய் அப்போது வந்துசேர்ந்த ஒருத்தி எப்போதும் கெட்ட வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் எல்லோரையும் பாதித்துக் கொண்டிருந்தாள். எதிர்காலத்தை சீட்டுக்கட்டுகளில் பார்த்து ஜோஸியம் சொன்னாள். அவளிடம் மகன் ஜோஸ் அர்க்காடியோ பற்றி உர்ஸலா பிரஸ்தாபித்தாள். குடும்பத்தில் பிறந்த பன்றிவால் இளைஞனைப் போலவே ஜோஸ் அர்க்காடியோவும் ஏதோ விதத்தில் இயற்கைமீறியவனாய் அவளுக்குத் தெரிந்தான். அதைக் கேட்டுவிட்டு வீடு பூராவும் உடைந்த கண்ணாடிச் சில்லுகளின் தெறிப்பாக எதிரொலித்த சிரிப்பை உதிர்த்த ஜோஸியக்காரப் பெண் சொன்னாள். "நினைப்பது போலன்றி மகன் மிகவும் அதிர்ஷ்டக்காரனாய் இருப்பான்." ஜோஸியத்தை நிரூபிக்க சில நாட்கள் கழித்து சீட்டுக்கட்டையும் வீட்டுக்கு எடுத்துவந்தாள். சமையலறைக்கு அருகிலிருந்த தானியக் கிடங்கில் ஜோஸ் அர்க்காடியோவுடன் புகுந்துகொண்டு கதவைத் தாளிட்டுக் கொண்டாள். பழைய தச்சு மேஜையொன்றின் மீது சீட்டுக்கட்டுகளை விரித்து வைத்து அவனைக் காத்திருக்க வேண்டினாள். தனக்கு எதுவும் தோன்றலாம் என்றும் அவகாசம் தரப்பட 
320 

வேண்டும் என்றும் ஜோஸ் அர்க்காடியோவிடம் கூறினாள். அருகே திகைப்புடன் நின்றுகொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ. திடீரென்று கையை நீட்டி அவனைத் தொட்டு "என் ராஜாவே" என்று சொன்னாள். மட்டுமே சொல்ல முடிந்தது அவளால். தன் எலும்புகளில் நுரையும் மரத்துப்போய்விட்ட பயமும் பொங்குவதை உணர்ந்த ஜோஸ் அர்க்காடியோவுக்கு அழ வேண்டும் போலத் தோன்றியது. வேறெதுவும் செய்யாமல் அங்கிருந்து அகன்ற அவளை இரவு முழுவதும் தேடிக் கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ. அவளுடைய அக்குள்களின் புகைவாசனை அவனுடைய தோலுக்கு ஏறிவிட்டிருந்ததுதான் அதற்குக் காரணம். எப்போதுமே தன்னுடன் அவள் இருக்க வேண்டும் என்றும் அவள் தன் அம்மாவாக இருக்க வேண்டும் என்றும் இருவரும் அதே தானியங்கிடங்கை விட்டு விலகாமல் வாழ வேண்டும் என்றும் அவள் தன்னைப்பார்த்து "என் ராஜாவே" என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் விரும்பினான். இந்த ஆசையைத் தாங்க முடியாமல் ஒருநாள் அவள் வீடு தேடிப் போயேவிட்டான் ஜோஸ் அர்க்காடியோ. வீட்டின் முன் அறையில் மரியாதை நிமித்தம் வந்தவனைப்போல யாருக்கும் புரிபடாத வகையில் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். அந்தத் தருணத்தில் அவள்மீது விருப்பம் ஏதுமின்றி இருந்தான். அவளுடைய புகைவாசனைக்கு அந்நியமான பெண்ணையே அங்கே சந்தித்தான். காப்பி குடித்துவிட்டு மனத்தாங்கலுடன் அங்கிருந்து கிளம்பிப் போனான். அன்றிரவு தூங்காமல் படுத்துக்கொண்டிருக்கும் பயங்கரத் தருணத்தில் அதிதீவிர வேட்கையுடனும் குரூரமான பதற்றத்துடனும் செயல்பட விரும்பினான். தானியக்கிடங்கில் இருந்தவளை அன்றி அன்று மதிய வேளையில் தான் சென்று கண்டவளையே அப்போது விரும்பினான். 
'சில நாட்கள் கழித்து வீட்டுக்குக் கூப்பிட்டாள் அவனை. தனியாகத் தன் அம்மாவுடன் இருந்தாள். சீட்டுக்கட்டு ஒன்றைக் காண்பிப்பதாகக் கூறிப் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள் அவனை. அங்கே அவள் சுதந்திரமாகத் தொட்டதில் முதல் நடுக்கத்துக்குப் பிறகு அவனுக்கு மயக்கமே வந்துவிட்டது. சுகத்தை விட பயத்தையே அதிகமாக அனுபவித்தான் ஜோஸ் அர்க்காடியோ. அன்றிரவு அங்கே வருமாறு அவனிடம் கூறினாள். தன்னால் போக முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட ஜோஸ் அர்க்காடியோ விட்டால் போதும் என வருவதாகக் கூறிவிட்டான். ஆனால் எரியும் படுக்கையின் வெப்பத்தால் தாக்குண்ட பிறகு முடியாதென்றாலும் அவளைச் சந்தித்தே ஆகவேண்டும் என்பது அவனுக்குப் புரிந்து விட்டது. ஸ்பரிசத்தால் மட்டுமே உடை அணிந்து கொண்டு கிளம்பினான். அருகில் படுத்திருந்த சகோதரன் அவ்வரலியானோவின் சீரான மூச்சையும் அடுத்த அறையிலிருந்த அப்பாவின் உலர்ந்த இருமலையும் முற்றத்தில் துள்ளும் கோழிகளின் ஆஸ்துமாவையும் கொசுக்களின் ரீங்காரத்தையும் தன் சொந்த இதயத்தின் துடிப்பையும் இதுவரை கவனித்திராத உலகமொன்றின் பரபரப்பையும் கேட்டுக்கொண்டே தாண்டிச்சென்று தூங்குமூஞ்சித் தெருவை அடைந்தான் ஜோஸ் அர்க்காடியோ. சொன்னதைப் போலன்றி கதவு தாழிடப் பட்டிருக்கும் என்று நம்பினான். அதுவோ திறந்திருந்தது. விரல் நுனிகளால் தள்ளியவுடன் கதவு கிளப்பிய சோகமான முனகல் அவனுள் உறைந்துவிட்ட எதிரொலியை விட்டுச்சென்றது. பக்கவாட்டில் சப்தமின்றி நுழைந்தவுடனேயே அந்த வாசனையை 
321 

உணர்ந்து கொண்டு விட்டான். அந்தப் பெண்ணின் மூன்று சகோதரர்களும் தனித்தனி கயிற்றுக் கட்டில்களில் படுத்துக்கொண்டிருந்ததை பார்க்கவும் அவதானிக்கவும் முடியாததால் சுவரோரமாக ஒட்டிக்கொண்டே வந்து படுக்கை அறைக் கதவைக் கண்டுபிடித்தான் ஜோஸ் அர்க்காடியோ. வழிநடையில் கயிற்றுக்கட்டிலை இடித்து விட்டவுடன் அதுவரை குறட்டை விட்டுக்கொண்டிருந்த மனிதன் யாரோ அன்று புதன் கிழமை" என்று தூக்கத்தில் திரும்பியவாறே சொல்லிக்கொண்டான். தான் நினைத்ததை விடவும் குறைவான கயிற்றுக்கட்டில்களே அங்கிருப்பதாக உணர்ந்த ஜோஸ் அர்க்காடியோவுக்கு திடீரென்று இருட்டில் விஷயம் புலனாகியது. நம்பிக்கை தகர்ந்துவிட்ட ஏக்க உணர்வு அவனைத் தாக்கியது. படுக்கை அறையைத் திறக்கும்போது தரையைக் கதவு கிறீச்சிட்டதைத் தவிர்க்க முடியாமல் போனது. தான் முற்றிலும் அந்நியப் படுத்தப்பட்டு விட்டதாகப் புரிந்துகொண்டான் ஜோஸ் அர்க்காடியோ. 
'குறுகலான அறையில் அவளுடைய அம்மா, அம்மாவின் இன்னொரு மகள் மற்றும் அவளுடைய இரு குழந்தைகள் ஆகியோர் படுத்திருந்தனர். இல்லாமலே போயிருக்கக் கூடிய அவளும்தான். வீட்டின் எல்லா இடங்களிலும் அவளுடைய வாசனை இல்லாமல் போயிருந்தாலும் வாசனையை வைத்தே அவளை வந்தடைந்திருக்க முடியும். அந்த அளவுக்கு பிரத்தியேகமானதும் மயக்கம் தருவதாகவும் வாசனை இயங்கியது: அவனுடைய தோலிலும் ஏறிக்கொண்டிருந்தது, எல்லையற்ற ஆழக்குழி ஒன்றில் கைவிடப்பட்டதாகக உணர்ந்த அவன் எவ்வளவு நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தானோ தெரியாது. திடீரென்று விரல்கள் விரித்த கை ஒன்று இருட்டில் துழாவி அவன் முகத்தை ஸ்பரிசித்தது. தெரியாமலேயே அந்தக் கையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு அது அதிர்ச்சியை அளிக்கவில்லை. தன்னை அந்தக்கையிடம் ஒப்படைத்துவிட்டான் ஜோஸ் அர்க்காடியோ. பயங்கரமான அயர்ச்சியுடன் இருந்தவனாய் தன்னை வடிவமற்ற ஓரிடத்துக்கு அமைத்துச் செல்வதை அனுமதித்தான். அங்கே அவன் உடைகள் களையப்பட்டன: உருளைக்கிழங்கு மூட்டையைப் போல இருபக்கமும் அவன் பந்தாடப்பட்ட அந்த அடிப்புறமற்ற இருட்டில் தூக்கியெறியப்பட்ட போது கைகள் பயனற்றுப்போய் பெண்வாசனை மறைந்து அம்மோனியா நாசியைத் தாக்கியது. அந்தப் பெண்ணின் முகத்தை நினைவுகொள்ள முயன்றபோது உர்ஸலாவின் முகத்தை முன்னே கண்டான். வெகுகாலமாக செய்யவிரும்பிய ஆனால் செய்யவே முடியாது என்று எண்ணிய செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ. என்ன தான் செய் து கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல் போனதற்குக் காரணம் அவனுக்குத் தலைகால் தெரியாமல் போனது மட்டுமல்ல. யார் தலை, யார் கால் என்பதும் புரியாமல் போனதும் தான். சிறுநீரகங்களிலிருந்து கிளம்பிய பனிப்புகையையும் குடல்களின் காற்றையும் பயத்தையும் அங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்ற நினைப்பையும் அதேசமயம் அயர்ச்சியான மெளனத்திலும் பயங்கரத்தனிமையிலும் எப்போதும் இருந்துவிடவேண்டும் என்ற விருப்பத்தையும் தவிர்க்க முடியாமலிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ, 
பெயர் பிலர் டெர்னரா. மக்காந்தோ கிராமத்தை நிறுவுவதற்காகக் கிளம்பிய கூட்டத்தாருடன் இழுத்தடிக்கப்பட்டு வந்தவள் தான். பதினான்கு வயதில் அவளை 
322 

பலாத்காரமாக அடைந்துவிட்டு பிறகு இருபத்திரண்டு வயதுவரை காதலித்தும் காதலை வெளியில் சொல்ல முடியாமல் பிளவுண்டு கிடந்த ஒருவனிடமிருந்து அவளைப் பிரித்து இழுத்துக்கொண்டு வந்தனர் குடும்பத்தார். பூவுலகத்தின் எல்லைக்கே அவளைப் பின்தொடர்ந்து வரத் தயாராக இருப்பதாக சத்தியம் செய்து கொடுத்திருந்தான். ஆனால் பின்பு அவன் வாழ்க்கை சீராகத் துவங்கியது தெரிந்ததும் அவனுக்காகக் காத்திருந்த அவள் பொறுமையிழந்து போனாள். மூன்று நாட்களிலோ மூன்று மாதங்களிலோ மூன்று வருஷங்களிலோ கடலிலிருந்தோ பூமியிலிருந்தோ வரப்போவதாக தன் சீட்டுக்கட்டுகள் சொல்லிச் சென்ற பொன்னிற அல்லது கறுப்புநிறத் தலையர்களை அவனாக அடையாளம் காணத்துவங்கினாள் பிலர் டெர்னரா. காத்திருந்தே தொடைகளின் பலத்தையும் மார்புகளின் இறுக்கத்தையும் மென்மையான வழக்கத்தையும் இழந்தாலும் இதயத்தின் பைத்தியக்காரத்தனத்தைத் தக்கவைத்துக்கொண்டாள். அதீத விளையாட்டுப் பொருளாய் விளங்கிய அவளைப் புதிர்ப்பாதைகள் நிறைந்த அறைக்குள் ஒவ்வொரு இரவும் தேடிப் பின்தொடர்ந்தான் ஜோஸ் அர்க்காடியோ. அறைக்கதவு தாழிடப்பட்டிருந்த ஒருநாள் அதைத் தட்டவும் செய்தான். முதல்முறை தட்டுவற்கான தைரியம் வந்துவிட்டால் கதவு திறக்கும்வரை தட்டியாக வேண்டும் என்பதைப் புரிந்திருந்தான் ஜோஸ் அர்க்காடியோ. நீண்டநேரம் அவன் காத்திருந்த பிறகே கதவு திறந்தது. பகற்பொழுதுகளில் படுத்துக்கொண்டு கனவு கண்டான். முந்திய இரவுகளின் நினைவுகளைச் சுவைத்துக் கொண்டிருப்பான் ஜே 
பபான் ஹோஸ் துர்க்காடியோ. அப்போது சில வேளைகளில் பிலர் டெர்னரா அங்கே வருவாள். சிரித்துக்கொண்டும் அரட்டையடித்துக்கொண்டும் அவனுக்கு ஏற்பட்ட பதற்றத்தை மறைப்பதற்கு பிரத்தியேகமான முயற்சி எதுவும் மேற்கொள்ள வேண்டிய தேவை அவனுக்கிருக்க வேண்டியதில்லை. அங்கே வந்து சென்ற அந்த சாமானியப் பெண்ணின் சிரிப்பு புறாக்களை பயமுறுத்திவிட்டாலும் அவளுக்கும் உள்மூச்சு விடுவதற்கும் இதயத் துடிப்பைச் சீராக்குவதற்கும் அவனைப் பயிற்றுவித்ததும் ஆண்கள் மரணத்தைக் கண்டு இப்படி பயப்படுவதற்கான காரணத்தை அவனுக்குக் கற்றுக்கொடுத்ததுமான அந்தக் கண்காணாத சக்திக்கும் எந்தத் தொடர்புமிருக்கவில்லை. அந்த அளவுக்கு தன்னில் லயித்துப் போயிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ. அவனுடைய தந்தையும் சகோதரனும் பழைய சட்டியிலிருந்த கசடிலிருந்து உர்ஸலாவின் காணாமல் போன தங்கத்தைப் பிரித்தெடுத்ததாக அறிவித்து வீட்டிலிருந்த இதர மனிதர்களிடம் பரபரப்பையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியபோது கூட அதை ஜோஸ் அர்க்காடியோ சட்டை செய்யவில்லை. 
பலநாட்கள் கடுமையாக உழைத்து இக்காரியத்தைதச் சாதித்திருந்தார்கள் ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் அவ்ரலியானோவும். ரசவாத விஞ்ஞானத்தைப் பூவுலகத்துக்கு அளித்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள் சந்தோஷமான உர்ஸலா. பரிசோதனைச்சாலையைச் சூழ்ந்து கொண்ட மக்காந்தோ கிராமவாசிகளுக்கு ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் அவ்ரலியானோவும் பட்டாஸ்களின் மீது கொய்யாப்பழ ஜெல்லியை வைத்து விநியோகித்து மகிழ்ந்தார்கள். திரும்பக்கிடைத்த தங்கத்தை, தான் அப்போதுதான் கண்டெத்த பொருளைப் போல், அவர்களுக்குக் காட்டினான் ஜோஸ் 
323 

அாககாடியோ புண்டயா. தங்கம் வைக்கப்பட்டிருந்த பீங்கான் கிண்ணத்தை ஏந்திக் கொண்டு சுற்றிய அவன் முன்னால் வந்தான் ஜோஸ் துர்க்காடி யோ. பரிசோதனைச் சாலைக்கு அது நாள் வரை வந்திராத ஜோஸ் ஆர்க்காடியோவிடம் அந்த மஞ்சள் சமாச்சாரத்தைக் காண்பித்துக் கேட்டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. மிகவும் பணிவுடன் கேட்டான் அவன். 
"எப்படியிருக்கிறது உனக்கு இது." 
"நாய்ப்பீயைப் போல" என்றான் பெரிய மகன். 
ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்கு வந்த கோபத்தில் புறங்கையால் மகனை ஓங்கி அடித்தான். ஜோஸ் அர்க்காடியோவுக்கு கண்ணீரும் ரத்தமும் கலந்து வெளிவந்தன. அன்றிரவு அவனுடைய வீக்கங்களுக்கு மூலிகை ஒத்தடம் கொடுத்தாள் பிலர் டெர்னரா. டிங்ச்சர் பாட்டிலையும் பஞ்சையும் இருட்டில் தடவி எடுத்துத் தந்தாள். இன்னும் வலி அதிகமாகாத படிக்கு அவனுடன் உடலுறவு கொண்டு விளையாடினாள். அதன் முடிவில் தங்களை அறியாமலேயே இருவரும் நெருக்கத்தில் குசுகுசுத்துக் கொண்டிருந்தனர். 
"உன்னுடன் தனியாக இருக்க விரும்புகிறேன். இப்படி ஒளிந்தே காதலித்தது போதும். ஒருநாள் எல்லோரிடமும் சொல்லிவிடப் போகிறேன்" என்றான் ஜோஸ் அர்க்காடியோ. 
அவனைச் சமாதானப்படுத்தாமலேயே சொன்னாள் பிலர் டெர்னரா. "தனியாக இருக்கும்போது விளக்கை அணைக்காமல் வைத்திருப்போம். அப்போதுதான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியும்; யாரும் குறுக்கிட முடியாதபடிக்கு கத்திக்கொண்டிருக்க என்னால் முடியும்; என் காதில் எதையும் முணுமுணுக்க உனக்கும் சாத்தியமாகும்." 
பிலர் டெர்னராவுடன் நடந்த இந்த சம்பாஷணையாலும் ஜோஸ் அர்க்காடியோ பண்டியா மீதிருந்த வெறுப்பினாலும் கட்டுக்கடங்காத உடலுறவுக்கான நிச்சயச் சாத்தியப் பாட்டினாலும் தைரியம் பெற்று அமைதிகொண்டான் ஜோஸ் அர்க்காடியோ. உடனே போய் அப்படியே சகோதரனான அவ்ரலியானோவிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டான் ஜோஸ் அர்க்காடியோ. 
சகோதரனின் சாகசங்களால் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றி மட்டுமே அவ்ரலியானோ முதலில் யோசித்தான். ஜோஸ் அர்க்காடியாவை அந்த அளவு கவர்ந்திழுத்த பெண்ணின் வசீகரம் முதலில் அவனுக்குப் புரியவே இல்லை. கொஞ்சமாக வரம்பித்து அவனிடம் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஜோஸ் அர்க்காடியோவின் சாகங்களைப் பற்றி ஆச்சர்யமுற்ற அவனுடைய சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்ள விரும்பினான் அவ்ரலியானோ. மூத்த சகோதரனிடம் தன்னையே அடையாளம் கண்டு பயத்தையும் சந்தோஷத்தையும் ஒரே சமயத்தில் எய்தினான் அவ்ரலியானோ. அதிகாலைவரை சகோதரனுக்காக எரியும் கரித்துண்டுகளாலானதைப் போன்ற 
324 

படுக்கையில் விழித்திருப்பான் அவ்ரலியாளோ. ஜோஸ் அர்க்காடியோ திரும்பியவுடன் விழித்தெழும் நேரம்வரை இருவரும் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஒரேவிதமான மயக்கத்தில் இருப்பார்கள். அப்பாவின் விஷய ஞானத்திலும் ரசவாதத்திலும் ஆர்வம் காட்டாமல் தனிமைவாசத்தில் தஞ்சம் புகுந்தனர். 
"பையன்களுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ" என்று நினைத்த உர்ஸலா கடைசியில் அவர்கள் வயிற்றில் ஏதோ நாக்குப்பூச்சிகள் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். வெறுக்கக்கூடிய கஷாயத்தை புழுக்களின் முட்டையை அரைத்துத் தயாரித்தாள். ஒரேமாதிரியான வேண்டா வெறுப்பான உணர்வுடன் இருவரும் குடித்துத் தொலைத்து விட்டு ஒருநாளைக்குப் பதினொரு முறை மலங்கழிக்க உட்கார்ந்த போது ரோஜா நிற ஒட்டுண்ணிகள் வெளியே வந்து விழுந்தன. அவற்றை அத்தனை பேருக்கும் காட்டிப் பரவசப்பட்டாள் உர்ஸலா. இரு புதல்வர்களின் மயக்கத்துக்கான ஆதாரக் காரணம் இப்பூச்சிகள்தான் என்று நம்பிக்கொண்டிருந்தாள். அதே சமயத்தில் அவ்ரலியானாவுக்குக் கொஞ்சமாக விபரம் புரியத்தொடங்கிவிட்ட சகோதரனின் அனுபவங்களை சொந்த அனுபவங்களாக எண்ணத்துவங்கினான். உடலுறவின் அதீத இயக்கங்களை தன்னிடம் ஜோஸ் அர்க்காடியோ விளக்கிக்கொண்டிருந்தபோது இடைவெட்டிக் கேட்டேவிட்டான் 'அவ்ரலியானோ. "அது எப்படித்தான் இருக்கும்." 
"பூகம்பத்தைப் போல." 
ஜனவரி மாத வியாழக்கிழமை காலை இரண்டு மணிக்கு அமரந்தா பிறந்தாள். அறைக்குப் பிறர் வருவதற்கு முன்பே உர்ஸலா குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டாள். லேசாகவும் தண்ணீரைப் போல மிதப்பாகவும் இருந்த அமரந்தாவின் அங்க அவயவங்கள் மனித உறுப்புக்களாகவே இருந்தன. வீட்டுக்கு ஏகப்பட்ட பேர் வந்துவிட்டதும்தான் அமரந்தாவை உணர ஆரம்பித்தான் அவ்ரலியானோ. வீட்டிலிருந்த சந்தடியால் பாதுகாப்பு உணர்வு பெற்ற அவரலியானோ மூத்த சகோதரனை அன்றிரவு தேடிப் போனான். பதினொரு மணிக்கே பிலர் டெர்னராவின் படுக்கை அறைக்கு வந்துசேர்ந்திருந்த ஜோஸ் அர்க்காடியோவை எப்படி வெளியே கொண்டுவருவது என்று பலவாறு யோசித்த அவ்ரலியானோ அந்த வீட்டை பலமணிநேரம் சுற்றிவந்து விசிலடித்துக் கொண்டிருந்தான். கடைசியில் வேறுவழியின்றி தன் வீட்டுக்கு வந்தபோது, அங்கே அப்போதுதான் பிறந்திருந்த தங்கைப்பாப்பாவுடன் அப்பாவியாக மூஞ்சியை வைத்துக்கொண்டு விளையாடுகிற ஜோஸ் அர்க்காடியாவைக் கண்டான் அவ்ரலியானோ. 
பெண்பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு தேவைப்படுகிற நாற்பது நாள் ஓய்வு முடிவதற்கு முன்னே நாடோடிகள் மீண்டும் வந்துவிட்டார்கள். கழைக்கூத்தாடிகளும் பந்தாடுகிற வித்தைக்காரர்களும் நிறைந்த அக்கூட்டத்தினர் ஐஸ்கட்டியை மக்காந்தோ கிராமத்துக்குக் கொண்டுவந்த அதே நாடோடிகள் தான். மெல்க்யுடஸின் நாடோடிக்கூட்டத்தினரைப் போல விஞ்ஞானரீதியான முன்னேற்றத்தைத் தங்கள் 
325 

இலக்காக இவர்கள் கொண்டிருக்கவில்லை. தாம் கொண்டுவந்த கருவிகளைக்  கேளிக்கைக்காக மட்டுமே பயன்படுத்தினர். ஐஸ்கட்டியைக் கொண்டு வந்தக்காலத்தில்கூட வாழ்க்கைக்கான ஐஸின் பயன்பாட்டை முன்னிலைப்படுத்தாமல் சாக்கஸ் கூடாரத்துக்கு வருபவர்கள் ஆவலாகப் பார்க்கும் பொருளாகவே கருதினார்கள். 
இந்த முறையோ இதர கைவினைப்பொருட்களுடன் மாய ஜமுக்காளம் ஒன்றையும் எடுத்து வந்தனர். நாடோடிகள். பறக்கும் சக்தி கொண்ட அதைப் போக்குவரத்து வளர்ச்சிக்கான அடிப்படைக்கருவியாகக் கருதாமல் கேளிக்கைப் பொருளாக மட்டுமே பாவித்தார்கள். அதில் ஏறி கிராமத்தின் வீடுகளைப் பார்த்தவாறே அவசரமாக ஒருமுறை பறந்து செல்வதற்காக மக்காந்தோ வாசிகள் தங்கள் கடைசி தங்க நாணயங்களைத் தோண்டி எடுத்து நாடோடிகளிடம் கொடுத்தார்கள். இத்தகைய கூட்டுக் குழப்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கில் மறைந்துகொண்டு ஜோஸ் அர்க்காடியோவும் பிலர் டெர்னராவும் பலமணி நேரம் காதலித்து இளைப்பாறினர். கூட்டத்துக்குள் மறைந்து திரிகிற காதலர்களான இருவரும் ரகசிய இரவுகளின்போது அனுபவித்திருந்த சந்தோஷமான கணங்களைவிடவும் காதல் என்ற உணர்வு இன்னும் ஆழமானதாகவும் ஒய்வானதாகவும் இருப்பதாக சந்தேகம் கொண்டனர். 
பிலர் டெர்னராதான் இருவரும் ஆழ்ந்துபோயிருந்த மாயச்சுழலை உடைத்தாள். தன் அருகாமையில் இருப்பதால் ஜோஸ் அர்க்காடியோவுக்கு ஏற்படுகிற உற்சாகத்தால் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கிடையேயான உறவின் மொத்த வடிவத்தையும் அந்தக் கணத்தையும் குழப்பிக்கொண்டவள் திடீரென்று உலகத்தையே அவன்மீது கொட்டிக் கவிழ்த்து விட்டாள். 
"இப்போதுதான் நிஜமாகவே நீ ஆண்பிள்ளை." 
அவள் சொன்னது அவனுக்குப் புரியாததால் இன்னும் விளக்கினாள். "அப்பாவாகப் போகிறாய் நீ." 
இதைக்கேட்ட ஜோஸ் அர்க்காடியோ பல நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வரவேயில்லை. சமையலறையில் பிலர் டெர்னராவின் குலுங்கும் சிரிப்பைக் கேட்டு பயந்துபோய் பரிசோதனைச்சாலையில் தஞ்சமடைந்தான். உர்ஸலாவின் கோபமான சாபத்துடன் மீண்டும் அந்த பரிசோதனைச்சாலை இயங்கத் தொடங்கியிருந்தது. தவறான பாதையில் போய் மீண்டுவந்த மகனை அங்கே மகிழ்ச்சியுடன் வரவேற்றான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. அப்போதுதான் தத்துவவாதியின் கல்லைத் தேடி அலையும் பரிசோதனையில் முழுமையாக ஈடுபட்டு அதை சவாலாகவே எடுத்துக்கொண்டிருக்க ஜோஸ் அர்க்காடியோ புண்டியா மகனையும் அதே பரிசோதனையில் ஈடுபடுத்தி ஒருநாள் மதியம் பரிசோதனைச்சாலையின் ஜன்னலருகே அந்த மாய ஜமுக்காளம் பறந்து சென்றபோது மகன்கள் இருவரும் ஆர்வத்தோடு போய்ப்பார்த்தார்கள். நாடோடி 
326 

ஒருத்தன் ஜாலியாக உட்கார்ந்து ஓட்டிக்கொண்டிருக்க கிராமத்தின் ஏகப்பட்ட குழந்தைகள் கைவீசிக்கொண்டே துரத்திவந்தார்கள். அதைக்கூட ஜோஸ் அர்க்காடியோ புண்டியா சட்டை செய்யவில்லை. "கிடக்கட்டும் அந்த முட்டாள்கள். அவர்களின் கதை அவ்வளவுதான். அதைவிட பிரமாதமாக நிச்சயம் பறக்கப்போகிறோம். அழுக்கு ஜமுக்காளத்தை விடவும் நம்மிடம் அதிகமான விஞ்ஞானக் கருவிகள் இருக்கின்றன" என்று சொல்லிவிட்டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
| தத்துவவாதியின் முட்டையைத் தேடி அலைவதில் ஏதோ ஆர்வமிருப்பதாகக் காட்டிக்கொண்ட போதும் உண்மையில் ஜோஸ் அர்க்காடியோவுக்கு அதன் சக்தி பற்றி ஏதும் தெரியவில்லை. அதைப் பார்த்தபோதுகூட அரைகுறையாக ஊதிப்போய்விட்டிருந்த போத்தல் என்றே நினைத்தான். கொஞ்சமாகத் தன் கவலைகளிலிருந்து மீள முடியாமல் பசியும் தூக்கமும் இழந்து துன்புற்றான் ஜோஸ் அர்க்காடியோ. தன் பரிசோதனை முயற்சிகளில் தோல்வி அடைந்துகொண்டிருந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியா கோபமடைவது போலவே ஜோஸ் அர்க்காடியோ கடுப்பாகிப்போனான். ரசவாதத்தை அளவுக்கு அதிகமாக நேசித்துவிட்டதால்தான் மகனுக்கு இந்த நிலைமை என்று தவறாகப் புரிந்துகொண்டுவிட்ட ஜோஸ் அர்க்காடியோ புண்டியா பரிசோதனைச் சாலையின் பொறுப்புகளிலிருந்து அவனை விடுவித்தான். ஆனால் அவ்ரலியானோவுக்கு மட்டும் சகோதரனின் தற்போதைய வியாதிக்கான காரணம் தத்துவவாதியின் கல்லைத் தேடி அலைந்ததில் இல்லை என்பது விளங்கிவிட்டது. இதற்குள் ஜோஸ் அர்க்காடியோவுக்கு எதிலும் ஈடுபாடு இல்லாமல் போயிற்று. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் அவர்களுடன் பேச்சுக்கொடுப்பதிலும் ஈடுபட்டுவந்த அவன் விட்டேற்றியாகவும் கோபம் கொள்பவனாகவும் ஆகிப்போனான். உலகத்தின் மீதே வஞ்சம் கொண்டுவிட்ட ஜோஸ் 'அர்க்காடியோ ஓரிரவு தனிமைவாசத்தை நாடும் பதற்றத்துடன் படுக்கை விட்டகன்றான். வழக்கமாக அடைகிற பிலர் டெர்னராவின் வீடன்றி, விழாக்கோலம் பூண்டிருந்த நாடோடிகளின் கூடாரங்களை நோக்கிப்போனான் ஜோஸ் அர்க்காடியோ. அங்கிருந்த ஏகப்பட்ட அதிசயங்களைச் சுற்றிவந்தும் எதிலும் ஆர்வம் கொள்ளாமல் அவை அத்தனையிலும் பங்கெடுக்காத இன்னொன்றால் ஈர்க்கப்பட்டான். அது ஒரு பெண். சிறிய நாடோடிப் பெண். உண்மையில் குழந்தை போலிருந்தாள். போட்டிருந்த மணிமாலைகளில் அழுந்திப்போய்விட்டிருந்தவளைத்தான் வாழ்க்கையில் கண்ட மிக அழகான பெண்ணாகத் தீர்மானித்தான் ஜோஸ் அர்க்காடியோ. பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிய மறுத்ததால் பாம்பாகப் போகுமாறு சபிக்கப்பட்டவனின் சோகக்காட்சியைக் காணக் கூடிய கூட்டத்தின் நடுவில் அவளை நோட்டம் விட்டான் ஜோஸ் அர்க்காடியோ. 
பாம்புமனிதனின் வாழ்க்கை குறித்த கேள்விபதில் நிகழ்ச்சி சோகமாக நடந்தேறிக் கொண்டிருக்க, முதல்வரிசை வரையில் முண்டியடித்து வந்து நாடோடிப்பெண்ணின் பின்னால் நின்றுகொண்டான் ஜோஸ் அர்க்காடியோ. அவள் பின்புறமாகத் தன் உடலை வைத்து அழுத்தினான். தன்னை விடுவித்துக்கொள்ள அப்பெண் முயன்றபோது இன்னும் வைத்து அழுத்தினான் ஜோஸ் அர்க்காடியோ. அதிர்ச்சியுடனும் பயத்துடனும் 
327 

வேட்கையின்  இந்த நிச்சய சாட்சியத்தை நம்ப மறுத்து நின்றவள் கடைசியில் அவனைப் பார்த்து நடுங்கிய புன்னகையை உதிர்த்தாள். அதே சமயத்தில் பாம்புமனிதனை இரண்டு நாடோடிகள் கூண்டுக்குள் போட்டுக் கூடாரத்துக்குத் தூக்கிப் போனார்கள். காட்சியை அதுவரை நடத்திக்கொண்டிருந்த நாடோடி கூறினான். 
கூடியிருக்கும் பெருமக்களே, பார்க்கக்கூடாத ஒன்றைப் பார்த்துவிட்டதால் நூற்றைம்பது வருஷங்கள் வரை தினசரி இரவுசமயத்தில் தலை வெட்டுப்படுமாறு சபிக்கப்பட்ட பெண்ணைத்தான் பார்க்கப் போகிறீர்கள். இப்போதும் தலை வெட்டுண்டு தொங்கப்போகிறாள்." 
சிரச்சேதக் காட்சியைக் காண விரும்பாத ஜோஸ் அர்க்காடியோவும் நாடோடிப்பெண்ணும் அவளுடைய கூடாரத்துக்குச் சென்று அங்கே முத்தமிட்டுக் கொண்டே பதற்றத்துடன் உடைகளைக் கழற்றினார்கள். கஞ்சியால் மொடமொட வென்றிருந்த மார்புக்கச்சையைக் கழற்றியவுடன் ஒன்றுமில்லாததாகவே ஆகிவிட்டாள். தளர்ந்துபோன சிறிய தவளையாகத் தெரிந்த அவளுடைய இன்னும் வளராத மார்பகங்களும் கால்களும் ஜோஸ் அர்க்காடியோவின் முழங்கை அளவுக்குக்கூட வரவில்லை என்றாலும் அந்த மென்மையை ஈடுசெய்வதான உறுதியுடனும் வெம்மையுடனும் விளங்கினாள் நாடோடிப்பெண். 
எப்படியிருந்த போதிலும் ஜோஸ் அர்க்காடியோவால் கூடாரத்தில் வைத்து ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் ஏகப்பட்ட நாடோடிகள் உபகரணங்களை விற்பதற்காக அங்கே வந்துவிட்டுக் கடைசியில் படுக்கையில் சாய்ந்து பகடைகளை வீசி விளையாடிக் கொண்டிருந்ததுதான். கூடாரத்தின் நடுப்பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த விளக்கு பாப்பிய வெளிச்சத்தில் தழுவுதலுக்கிடையே என்ன செய்வதென்றே தெரியாமல் ஜோஸ் அர்க்காடியோ மல்லாந்து படுக்க, நாடோடிப்பெண் அவனைக் கிளர்ந்தெழச்செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தாள். நாடோடிக்கூட்டத்தில் சேராதவனாகவும் கிராமவாசியம் இல்லாத ஒருத்தனுடன் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தாள் இன்னொரு நாடோடிப்பெண். அவர்கள் இருவரும் உடைகளை அவிழ்க்க ஆரம்பித்தவுடன் வந்திருந்த பெண் ஜோஸ் அர்க்காடியோவின் பிரம்மாண்டமான மிருகத்தைப் பரிதாபகராமாகப் பார்த்து உணர்ச்சியுடன் சொன்னாள். 
"மகனே, கடவுள் உன்னை இப்படியே வைத்துக் காப்பாற்றட்டும்." 
ஜோஸ் அர்க்காடியோவுடன் வந்திருந்த பெண் இருவரையும் போகச்சொல்லிய போதும் தரையில் படுக்கைக்கு அருகே இருவரும் படுத்துக்கொண்டு போக முடியாது என்று கறிவிட்டார்கள். அவர்களுடைய உணர்வெழுச்சியானது ஜோஸ் அர்க்கோடியோவைக் கட்டிவிட்டது. அவன் தொட்டவுடன் அவளுடைய எலும்புகள் அலங்கோலமாக நொறுங்கி விளையாட்டுப்பொம்மைகளைப் போலத் தவிடுபொடியாகிவிட, அவள் தோலானது. 
328 

வெளிறி வியர்வை வழிந்தோட, கண்களில் நீர் சுரக்க, அவள் உடலிலிருந்து சோகமான கேவலும் களிமண்ணின் வாசனையும் வெளிவந்தன. ஆனாலும் தாக்குதலைத் தீரத்துடன் தாங்கிக்கொண்டாள் அந்தச் சிறுபெண், தேவதைகளால் காற்றில் செலுத்தப்பட்டவனாக உணர்ந்த ஜோஸ் அர்க்காடியோவின் இதயம் மென்மையான ஏசல்களாக வெடித்து அவள் காதினில் பாய்ந்து அவளுடைய மொழியில் வாய்வழியாக வெளிவந்தது. இது நடந்தது வியாழக்கிழமை என்ப சனி இரவில் சிவப்பு முண்டாசைச் சுற்றிக்கொண்டு ஜோஸ் அர்க்காடியோ நாடோடிகளுடன் பயணப்பட்டுவிட்டான். 
அவனைக் காணோம் என்ற தெரிந்தவுடன் கிராமம் பூராவும் தேடினாள் உர்ஸலா. நாடோடிகளின் கூடாரங்களோ குப்பைக்கூளங்களாக எரிந்து கொண்டிருந்தன. அந்தச் சாம்பலுக்கிடையில் முத்துமணிகளைத் தேடிக்கொண்டிருந்த யாரோ உர்ஸலாவிடம் அவள் மகனை முந்திய இரவு பார்த்தாகவும் பாம்புமனிதன் கூண்டை வண்டியில் வைத்து நாடோடிகளுடன் சேர்ந்து அவன் தள்ளிக்கொண்டு போனதாகவும் சொல்லிவிட, அவன் நாடோடியாகிவிட்டான்' என்று கணவனிடம் போய்க் கூச்சலிட்டாள் உர்ஸலா. ஆனால் மகன் காணாமல் போனது பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்படாதிருந்தான் ஜோஸ் 'அர்க்காடியோ புண்டியா. 
'போனது நிஜமாயிருக்கட்டும். அப்படியாகத்தான் மனிதனாக மாறுவான் என்று சொன்னான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. ஏற்கனவே ஆயிரம் முறை அரைக்கப் 'பட்டுவிட்ட ரசாயனப் பொருட்களை ஆயிரத்து ஓராவது முறையாக 'அரைத்துக்கொண்டே 
நாடோடிகள் எங்கே போயிருக்கக்கூடும் என்று உர்ஸலா விசாரித்துப்பார்த்தாள்: அப்படிக்காட்டப்பட்ட வழியில் விசாரித்துக்கொண்டே போனாள். அவர்களைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை அவளுக்கிருந்தது. ஆனால் திரும்பிய வரவேண்டும் என்ற எண்ணமே வரமுடியாத அளவுக்கு கிராமத்திலிருந்து மிக அதிக தூரம் போய்விட்டிருந்தாள். அன்றிரவு எட்டு மணிக்குத்தான் அவள் திரும்பவில்லை என்பதைக் கவனித்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியா, தான் அரைத்துக்கொண்டிருந்த ரசாயனக் கலவையை சாணத்தில் ஊறவைத்துவிட்டு அழுதுகொண்டிருந்த அமரந்தாவை நோக்கிச்சென்றான்; சில மணி நேரத்தில் கிராமவாசிகளிடம் சொல்லி அமரந்தாவை ஒரு பெண்ணிடம் விட்டுவிட்டு காணாமல் போன உர்ஸலாவைத் தேடிப் புலனாகாத பாதைகளிலே அலைந்தான். சில கிராமவாசிகளுடன் அவ்ரலியானோவும் அவனுடன் வந்தான். யாரும் அந்தப் பக்கம் வரவில்லை என்று புரியாத பாஷை பேசிய அமெரிந்திய மீனவர்கள் சைகை மூலம் சொல்லியும் கேட்காமல் மூன்று நாட்கள் அலைந்துவிட்டு மக்காந்தோவுக்கு எல்லோரும் திரும்பிவிட்டார்கள். 
சோகத்தால் பல வாரங்கள் செயலற்றுப்போன ஜோஸ் அர்க்காடியோ புண்டியா கடைசியில் அமரந்தாவைக் கவனிப்பதில் ஈடுபடத் துவங்கினான். தாயைப் போல 
329 

அவளைக் குளிப்பாட்டி உடை அணிவித்தான். உர்ஸலாவுக்குத் தெரியாத சில பாடல்களையும் இரவில் பாடிக்கொண்டிருந்தான். ஒரு நாள் பிலர் டொன வேலைகளைக் கவனிக்க வந்தபோது மூத்த சகோதரனும் அம்மாவும் தொலைந்துபோனது அவளால்தான் என்று அவ்ரலியானோவுக்குப் பொறிதட்டியது. சோகமானது அந்த அளவுக்கு அவன் மூளையைக் கூர்மையாக்கி விட்டிருந்தது. அதையடுத்து அவன் அவளைத் துன்புறுத்திய மெளனமான சூழ்நிலையின் தானாகவே வெளியேறிய அந்தப் பெண் மீண்டும் அந்த வீட்டுக்கே வரவில்லை. 
காலம் சூழலைத் தணித்தது. எப்போது என்று தெரியாமலேயே ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியாவும் அவ்ரலியானோவும் பரிசோதனைச்சாலைக்குத் திரும்பிவிட்டிருந்தனர். தூசிதட்டி, தண்ணீர்க்குமாயை ஒளியேற்றிவிட்டு சாணத்தில் ஊறிக்கொண்டிருந்த ரசாயனச் சமாச்சாரத்தை எப்படியாகிலும் மாற்றிவிடவேண்டும் என்ற முனைப்பில் உழைத்துக்கொண்டிருந்தார்கள் அப்பாவும் மகனும், பாதரசப்புகையால் அழுத்தம் பெற்ற அந்தச் சிறிய அறையில் பிரம்புக்கூடையில் உட்கார்ந்து கொண்டே அமரந்தாவும் இருவரின் செயல்பாடுகளை ஆர்வத்துடன் கவனித்துவந்தாள். உர்ஸலா காணாமல் போன சில மாதங்களில் விநோதமான விஷயங்கள் நடக்கத்தொடங்கின. 'அலமாரியில் மறதியாக வைக்கப்பட்டிருந்த காலி ஃப்ளாஸ்க் கனத்துப்போய் நகர்த்தவே முடியாமல் ஆகிவிட்டது. மேஜையிலிருந்த பாத்திரத்துத் தண்ணீர் அடுப்பில்லாமல் அரை மணி நேரத்தில் ஆவியாகிப்போனது. பரபரப்புடன் இவற்றைக் கண்காணித்து வந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் மகன் அவ்ரலியானோவும் தாங்கள் தயாரித்துக் கொண்டிருந்த சமாச்சாரத்தால்தான் இதெல்லாம் நடக்கமுடியும் என்று நினைத்துக் கொண்டார்கள். ஒருநாள் அமரந்தாவின் பிரம்புக்கூடை அறையைச் சுற்றி வந்து நின்றது. பீதியில் அதை நிறுத்த ஒடிய அவ்ரலியாயோவைத் தடுத்துவிட்டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. கலவரம் அடையாமல் கூடையை அதன் இடத்தில் வைத்துவிட்டு மேஜையின் காலுடன் சேர்த்துக் கட்டினான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. "வெகுகாலமாக எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோமோ அது நடந்தே தீரும்" என்ற தீர்மானத்துடன் அவன் பின்வருமாறு சொல்லக்கேட்டான் அவ்ரலியானோ. 
"கடவள்பற்றி பயம் உனக்கில்லை என்றால் உலோகங்கள் மூலமாக அவரிடம் பயங்கொள்." 
காணால் போய் ஐந்து மாதங்களுக்குப் பிறகு திடீரென்று ஒருநாள் திரும்பினாள் உர்ஸலா. புத்துணர்ச்சியுடனும் இதுவரையில் கிராமவாசிகள் அறிந்திராத மோஸ்தரில் ஆடைகள் அணிந்துகொண்டும் வந்து சேர்ந்தாள். ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவால் அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை. 
"ஏதோ நடக்கப் போகிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தேனே." என்று மகிழ்ச்சியுடன் கூவினான். பரிசோதனைச்சாலையில் பல நாட்களாக அடைபட்டு அந்த 
330 

ரசாயனச்சமாச்சாரத்தை மாற்றிவிட முயன்றபோதெல்லாம் காணவிரும்பிய மாயா விநோதம் என்னவாக இருக்கவேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தான். வெகு நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த தத்துவவாதியின் கல்லாகவோ உலோகங்களுக்கு உயிரூட்டக்கக்கூடிய ஓங்காரச் சுவாசத்தின் விடுதலையாகவோ வீட்டின் தாழ்ப்பாள்களையும் பூட்டுக்களையும் தங்கமாக மாற்றிவிடக்கூடிய சக்தியையோ அல்லாது உர்ஸலாவின் வருகையைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்ததாக ஜோஸ் அர்க்காடியோ புண்டியா எண்ணிக்கொண்டான். ஆனால் அவன் அடைந்த பரபரப்பு அவளிடம் காணப்படவில்லை. ஏதோ ஒருமணிநேரம் மட்டுமே விலகிப்போயிருந்தவளைப் போல சாதாரணமாக அவனை முத்தமிட்டுவிட்டுச் சொன்னாள். 
'யார் வந்திருக்கிறார்கள் பார்." 
கதவைத்தாண்டி தெருவுக்குப் போன ஜோஸ் அர்க்காடியோ புண்டியா அதிர்ச்சியால் உறைந்துபோய் நின்றுகொண்டிருந்தான். அங்கே ஒரு பெரிய கூட்டம், நாடோடிகளாக இல்லாமல் மக்காந்தோ கிராமவாசிகளைப் போலவே இருந்த கூட்டத்தினர். சீரான முடியும் கறுத்த தோலும் கொண்ட அவர்கள் மக்காந்தோ கிராமவாசிகள் பேசிய அதே பாஷையைப் பேசி அதே நோவுகளைப் பற்றி அங்கலாய்த்துக்கொண்டிருந்தனர். கொண்டுவந்த கோவேறு கழுதைகள் மீது பாத்திரங்கள், நாற்காலிகள் மற்றும் தட்டுமுட்டுச்சாமான்கள் இருந்தன. சாதாரண தினசரி எதார்த்தத்தை விற்க வந்தவர்களாக அவர்கள் நின்று கொண்டிருந்தனர். சதுப்புநிலத்தைத் தாண்டி இரண்டே நாட்கள் நடைதூரத்தில் இருந்த அவர்களுடைய கிராமத்தை அடுத்து ஏகப்பட்ட ஊர்களில் ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்கு மாதம் ஒருமுறை தபால் வந்து கொண்டிருந்தது. 
ஆக விநோத சமாச்சாரங்களைக் குறிவைத்து ஜோஸ் அர்க்காடியோ புண்டியா அலைந்த போது தட்டுப்படாத வழியானதை, தேடிப்போன நாடோடிக்கூட்டத்தினரைப் பிடிக்கமுடியாத உர்ஸலாதான் கண்டறிந்துவிட்டிருந்தாள். 
தமிழில் நாகார்ஜுனன் 

ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் - தமிழில் - நாகார்ஜுனன்

ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் ----1
கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ் :
மிகப்பல வருஷங்களுக்கு அப்புறமாகத் தன். மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராக நிற்கிற துப்பாக்கிக்காரர்களை எதிர்நோக்கியிருக்கும் அந்தத் தருணத்தில் தான், கர்னல் அவ்ரலியானோ புண்டியாவுக்கு ஐஸ்கட்டியை முதன்முதலாகப் பார்ப்பதற்காகத் தன்னை அப்பா கூட்டிப் போன வெகுதூரத்திலான அந்த மத்தியானப் பொழுதானது நினைவுக்கு வரத் துவங்கியது. அந்தக் காலத்திலெல்லாம் மக்காந்தோ கிராமத்திலிருந்த இருபதே வீடுகளும் தெளிந்தோடிக் கொண்டிருந்த நதியொன்றின் கரையிலேயே இருந்து விட்டன. மனித நாகரீகத்துக்கே முற்பட்ட காலத்து ராட்சஸ முட்டைகளைப் போலவும் பளபளவென்று பாலீஷ் செய்யப்பட்டும் இருந்த வெண்நிறக் கற்களாலான படுகையானது நதியை ஒட்டியிருந்தது. அப்போதுதான் உதித்துவிட்டிருந்த பிரபஞ்சத்தின் எக்கச்சக்கமான பொருட்களை வார்த்தை சொல்லி அழைக்க முடியாததால் சுட்டித்தான் காட்ட வேண்டியிருந்தது. ஒவ்வொரு வருஷமும் மார்ச் மாதம் கந்தல் அணிந்த நாடோடிகள் நாத, தாள வாத்தியங்கள் முழங்க அங்கே வந்து சேருவார்கள். தங்கள் கண்டுபிடிப்புக்களை மக்காந்தோ கிராம வாசிகள் முன்பு கிடத்திக் காட்சி நடத்துவார்கள். 
நாடோடிகள் முதன்முதலாக மக்காந்தோ கிராமத்துக்குக் கொண்டுவந்த அதிசயப் பொருள் என்னவென்றால் காந்தம்தான். அடங்காத தாடியும் குருவியின் கைகளையும் கொண்டதடித்த நாடோடி ஒருவன் காந்தப்பொருளை மாஸிடோனிய நாட்டு ரசவாதிகள் கண்டறிந்த பூவுலகின் எட்டாவது அதிசயம் என்று சொல்லி நிரூபிக்கவும் முற்பட்டான். அவன் பெயர் தான் மெல்க்யுடஸ். இரும்புக்கட்டிகள் இரண்டை ஒவ்வொரு வீட்டையும் தாண்டி அவன் இழுத்துச் செல்கையில் அண்டாகுண்டாக்கள், பாத்திரங்கள், கரண்டிகள் இன்னபிற சாமான்கள் அத்தனையும் தரையில் விழுவதையும் வெளிப்படத் துடிக்கும் ஆணிகள், திருகுமரைகள் அடங்கிய வீட்டு மேல் உத்திரங்கள் பதற்றமான முனகல் போடுவதையும் கண்டுகேட்டு அடங்காத ஆவல் கொண்டனர் மக்காந்தோ கிராமவாசிகள். வெகுநாள் காணாமல் போய்விட்டதாகக் கழித்துக்கட்டப்பெற்ற இரும்புச் சாமான்கள் சில கூட மெல்க்யுடஸ் கொண்டுவந்த அற்புத இரும்புக்கட்டிகளின் பின்னால் சென்று ஒட்டிக் கொண்டன. பொருட்களுக்கேயான பிரத்தியேகமான வாழ்க்கை உண்டென்றும் பொருட்களின் விசேஷ ஆத்மாக்களை விழிப்படையச் செய்தால்தான் பூவுலகத்தில் அத்தகைய வாழ்க்கையானது சாத்தியப்படும் என்றும் கடூரமான குரலில் அங்கே அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான் மெல்க்யுடஸ். 
இயற்கையின் விநோத அறிவையும் மாயமந்திரப் புதிர்களையும் மீறிச்செல்கிற அதீதக் கற்பனைவளத்தைத் தன்னிடம் கொண்டிருந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியா, மெல்க்யுடஸ் கொண்டுவந்திருந்த பயனற்ற கண்டுபிடிப்பைப் பற்றியே யோசிக்கலானான். காந்தத்தைக் கொண்டு பூமியின் அடிவயிற்றில் பொதிந்திருக்கிற தங்கத்தையெல்லாம் மீட்டுக் கொண்டுவிட முடியும் என்று நம்பினான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. காந்தம் அப்படியெல்லாம் பயன்படாது என்று நேர்மையான நாடோடியாகிய மெல்க்யுடஸ் எடுத்துச்சொல்லிப் பலமுறை ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவை எச்சரித்ததும் உண்மைதான். இருந்தாலும் நாடோடிகளின் நேர்மைத்தன்மையை அப்போதெல்லாம் நம்பியிராத ஜோஸ் அர்க்காடியோ புண்டியா தன்னிடமிருந்த ஒரே கோவேறு கழுதையையும் ஜோடி ஆடுகளையும் கொடுத்து மெல்க்யுடஸின் காந்தம் பூசப்பட்ட இரும்புக்கட்டிகளை வாங்கிக் கொண்டான். இந்த மிருகங்களை நம்பியே கஷ்ட ஜீவனம் நடத்திவந்த மனைவி உர்ஸலாவால்கூட அவன் மனத்தை மாற்ற முடியவில்லை. 
"கவலையை விடு உர்ஸலா. சீக்கிரத்தில் வீட்டின் தரையையே தங்கத்தால் இழைத்துக் காட்டுகிறேன் பார்" என்று ஜோஸ் அர்க்காடியோ புண்டியா அவளிடம் சூளுரைத்துவிட்டுப் பல மாதங்களாக பரிசோதனைகளில் ஈடுபட்டான். அந்தப் பிராந்தியத்தையே அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து பார்க்கலானான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. மக்காந்தோவின் புராதன நதிப் படுகையைக்கூட விட்டுவைக்கவில்லை அவன். மெல்க்யுடஸ் கொண்டுவந்த அற்புதக் கட்டிகளைத் தரதரவென்று இழுத்துக்கொண்டும் அந்த நாடோடி சொல்லிவைத்துவிட்டுப் போன மந்திரங்களை எந்நேரமும் உச்சாடனம் செய்துகொண்டும் இருக்கிறான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
எவ்வளவோ தோண்டிய பிறகும் ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்குக் கிடைத்ததெல்லாம் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த துருவேறிப்போன கவச உடை ஒன்றுதான். கவச உடையின் அத்தனை பகுதிகளும் இறுகப் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தன. உள்ளிருந்த வெற்றிடம் கிளப்பிய நாதமோ கற்களால் இழுத்துக்கட்டப்பட்ட சுரைக்காயைத் தட்டிப்பார்த்தால் வரக்கூடிய விநோத சப்தத்தை ஒத்திருந்தது. ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் அவனுடைய சாகசத்தோண்டலில் பங்கெடுத்த இன்னும் நாலுபேரும் கவச உடையை மிகவும் பிரயத்தனப்பட்டு உடைத்தபோது கண்டது சுண்ணாம்புப்பூச்சால் இறுகிப் போயிருக்கும் எலும்புக்கூட்டையும் அதன் நெஞ்சிலிருந்த செப்புப்பதக்கத்தின் உள்ளே இன்னும் பத்திரமாயிருக்கும் பெண்கூந்தலின் ஒரே நீளமான முடியையும். 
நாடோடிகள் அடுத்த மார்ச் மாதத்தில் வந்தார்கள் டெலஸ்கோப்பையும் பீப்பாய் அளவிலான பூதக்கண்ணாடியையும் தூக்கிக்கொண்டு. ஆம்ஸ்டர்டாம் நகர யகர்களின் அதிநவீனக் கண்டுபிடிப்பு என்று வர்ணித்தார்கள் பூதக்கண்ணாடியை. கிராமத்தின் - கோயில் நாடோடிப்பெண்ணை நிற்க வைத்துவிட்டு கூடாரத்தின் வாசலில் நிறுவினார்கள் டெலஸ்கோப்பை. அங்கே வந்து ரியால்கள் கொடுக்கும் யாரும் தூரத்திலிருந்த பெண்ணைக் கைக்கெட்டும் அளவில் பார்க்க முடிந்தது. அப்படி நிறைய பேர் பார்க்க வரிசை அமைக்கும்போது விஞ்ஞானமானது தூரம் என்ற கருத்தாக்கத்தையே மனித மனத்திலிருந்து துடைத்து எறிந்து விட்டது என்றும் பூவுலகத்தின் எந்த மூலையிலும் நடந்து கொண்டிருக்கும் எதையும் இனிவரும் காலத்தில் வீட்டில் உட்கார்ந்து கொண்டே  பார்த்து விடமுடியும் என்றும் திட்டவட்டமாகப் பெருமைப்பட்டுக் கொண்டான் மெல்க்யுடஸ்.

பிரம்மாண்டப் பூதக்கண்ணாடி மூலம் அதிர்ச்சி தரக்கூடிய பரிசோதனையை நடத்திக் காட்டினான்   மக்காந்தோ கிராமத்தின் உச்சிவேளை சூரியன். காய்ந்த வைக்கோலை நடுத்தெருவில் கிடத்தி சூரிய கிரணங்களை மீது செலுத்தி எரித்தார்கள் நாடோடிகள். மெல்க்யுடஸ் அளித்த காந்தக்கட்டிகளின் தோல்வியால் மனம் வெறுத்துப் போயிருந்த ஜோஸ். அர்க்காடியோ புண்டியா இன்னமும் ஆறுதல் அடைந்திருக்காவிட்டாலும் புதிய பரிசோதனையைப் பார்த்துவிட்டு யுத்தத்துக்கான பிரத்தியேகமான ஆயுதமாக பூதக் கண்ணாடியைப் பயன்படுத்த முடிவெடுத்தான். காந்தம் பூசப்பட்ட இரும்புக்கட்டிகளை மீண்டும் மெல்க்யுடஸுக்கே மூன்று காலனியத் தங்க நாணயங்களுடன் கொடுத்து பிரம்மாண்டமான பூதக்கண்ணாடியைப் பெற்றுக்கொண்டான். இதையெல்லாம் தடுக்க முடியாமல் போன உர்ஸலாவுக்கோ அழுகை பொத்துக் கொண்டு வந்தது. வாழ்க்கை பூராவும் அப்பா கஷ்டப்பட்டுச் சேர்த்துவைத்திருந்த தங்க நாணயங்களைப் பேழையில் வைத்து அதைத் தன் படுக்கை அடியில் மறைத்து விட்டு தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம் என்றிருந்த உர்ஸலாவை மீறி அவற்றில் மூன்றையும் கொடுத்து பூதக்கண்ணாடியை வாங்கியிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. அவளைத் தேற்றுவதற்குக்கூட ஏதும் சொல்லாமல் விஞ்ஞானிக்கே உரித்தான கவனத்துடனும் துறவு நோக்கத்துடனும் தன் பரிசோதனைகளில் மூழ்கிப்போனான் ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியா. 
பரிசோதனைகளில் ஒன்று தன் உயிருக்கே ஆபத்தாகப் போய் முடியும் என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் உழைத்தான். பூதக்கண்ணாடியின் தாக்குதலால் எதிரிப் படைகள் நிலை குலைந்து போய்விடும் என்ற உண்மையை நிரூபிக்கும் பொருட்டு சூரிய கிரணங்களைத் தன்மீதே செலுத்திக் கொண்ட போது உடம்பில் ஏற்பட்ட தீக்காயங்கள் ஆறிப்போவதற்குப் பலகாலம் பிடித்தது. பூதக் கண்ணாடிக் கண்டுபிடிப்பின் அதீத பயங்கரத்தைப் பார்த்துப் பதறிப்போன உர்ஸலாவின் எதிர்ப்பை அழித்தொழிக்க விரும்பி வீட்டையே எரித்துவிடவும் துணிந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. பூதக்கண்ணாடி என்கிற பிரம்மாண்டமான ஆயுதத்தின் கேந்திர ரீதியான பலங்கள், பலவீனங்களையும் கணக்கிட்டுக் கொண்டே தன் அறையில் தினசரி பலமணிநேரம் உட்கார்ந்து கொண்டிருந்தான். பரிசோதனைகள் குறித்த திட்டவட்டமான குறிப்புகளை தீர்மானகரமான முறையில் யாரும் மறுக்க முடியாதபடிக்கு எழுதலானான். பூதக்கண்ணாடி ஆயுதத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியும் என்ற குறிப்புகள் கொண்ட புத்தகத்தை எழுதி முடித்து அரசாங்கத்துக்கு அனுப்பவும் முனைந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. பரிசோதனைகள் பற்றிய விபரங்களும் விளக்கப்படங்களும் எக்கச்சக்கமாக நிரம்பி வழிந்தவுடன் புத்தகத்தை அரசாங்கத்திடம் சேர்ப்பிக்கச் செய்ய அவன் அனுப்பி வைத்த நபரோ மலைத்தொடர்களைத் தாண்டியும் ஆழம் தெரியாத சதுப்புநிலக்காடுகளில் தொலைந்துபோயும் சுழல்கள் மிகுந்த நதிகளைக் கடந்தும் ஏமாற்றத்தாலும் கொள்ளை நோயாலும் பீடிக்கப்பட்டு துர்மிருகங்களுக்கு இரையாகிவிடும் கடைசி நிமிடத்தில் எப்படியோ கோவேறு கழுதைகள் தபால் கொண்டுவருகிற வழியை அடைந்து அந்த அற்புதப் பாதையைக் கண்டுபிடித்தே விட்டான். நாட்டின் தலைநகரத்துக்குப் போய்ச் சேருவது என்பதே முடியாத அந்தக்காலத்தில்கூட அரசாங்கம் இடப்போகிற ஆணைகளுக்கெல்லாம் கட்டுப்பட்டு நடக்கப்போவதாகவும் பூதக்கண்ணாடி ஆயுதத்தை ராணுவ அதிகாரிகளின் செளகர்யத்துக்கு ஏற்றவகையில் பரிசோதித்துக்காட்டச் சித்தமாக இருப்பதாகவும் 

இனிவரும் காலத்தில் நடக்கவுள்ள விண்வெளி யுத்தத்தில் அதே ஆயுதத்தைப் பிரயோகிப்பதற்கென அவர்கள் அத்தனை பேரையும் பயிற்றுவிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா கடிதத்தில் எழுதியிருந்தான். எழுதிய பின் பல வருஷங்கள் அரசாங்கத்தின் பதிலுக்காகக் காத்திருந்து ஏமாந்த அவன் தன் திட்டத்தின் மகத்தான தோல்வி பற்றி மெல்க்யுடஸிடம் அங்கலாய்த்தான். மெல்க்யுடஸோ அதே இரும்புக் கட்டிகளை அவனுக்குத் திருப்பித்தந்து தன் நேர்மையை நிலைநிறுத்திக் கொண்டதோடு போர்த்துக்கீசிய வரை படங்களையும் கடற்பிரயாணங்களின்போது பயன்படுகிற உபகரணங்களையும் விட்டுச் சென்றான் அவனிடம். அதுமட்டுமின்றி ஹொமம் என்கிற துறவியின் சுவடிகளைப்பற்றித் தன் கைப்பட எழுதி அதன்மூலம் திசைமானி மற்றும் வானமானி உள்ளிட்ட எண்ணற்ற உபகரணங்களை ஜோஸ் அர்க்காடியோ புண்டியா பயன்படுத்தவும் வகை செய்துவிட்டுப் போனான் அந்த விநோத நாடோடி. 
-- 
வீட்டின் கொல்லைப்புறமாக தனி அறை கட்டி யாரும் தொந்தரவு செய்ய முடியாதபடிக்கு உட்கார்ந்துகொண்டு மாரிக்கால மாதங்களைப் பரிசோதனைகளில் கழித்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. உச்சிவேளையைத் திட்டவட்டமாகக் கணித்து அதற்கான சமன்பாட்டை உருவாக்க முயன்ற போது சூரியன் தாக்கி மயக்கமே வந்து விட்டது. மெல்க்யுடஸ் அளித்த உபகரணங்களைப் பயன்படுத்துவதில் நிபுணனாகிவிட்ட ஜோஸ் அர்க்காடியோ புண்டியா புதிய பிரபஞ்சத்தை நிர்மாணித்து பெயர் தெரியாத கடல்களில் பிரயாணம் செய்து நரவாசனையே அற்ற பிராந்தியங்களில் சஞ்சரித்த அதீத ஜீவராசிகளுடன் உறவுகொள்ள விழைந்தான். படிப்பறையையே விட்டு நகராமல் இந்த அத்தனையையும் செய்துகொண்ட அவன் அதே காலகட்டத்தில் தன்னிடமே சப்தமாகப் பேசிக்கொள்ளும் பழக்கத்தையும் வீடு புகுந்து யாரையும் கவனிக்காமலேயே நடந்து சென்றுவிடும் பழக்கத்தையும் மேற்கொள்ளத் துவங்கினான். முதுகுமுறியத் தோட்டவேலை செய்துகொண்டும் வாழைமரங்களையும் சேனைக் கிழங்குகளையும் முட்டைச்செடிகளையும் பயிராக்கிக் கொண்டும் இருந்தார்கள் உர்ஸலாவும் குழந்தைகளும். ஜுரவேக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவோ அதையெல்லாம் நிறுத்திவிட்டு ஏதோ இனம்புரியாத லயிப்பில் போய் சிக்கிக்கொண்டதைப் புரிந்து கொண்டதால் தவித்தார்கள் அவர்கள். ஏதோ மயக்கத்தில் ஆழ்ந்திருந்த அவனோ தனக்கே புரியாத வார்த்தைச் சங்கிலிகளைப் பேசிக்கொண்டான். கடைசியில் டிசம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை மதியத்தூக்கத்துக்கு முன்பான சாப்பாட்டின் போது இதுநாள்வரை அவனைத் தாக்கியிருந்த விஷயத்தைச் சட்டென்று விளங்கிக்கொண்டார்கள். கற்பனா சக்தியின் தாக்குதலுக்கு ஈடுகொடுப்பதன் மூலம் வெகுகாலமாகப் பெயரில்லாக் கண்காணிப்புச் செயல் ஒன்றில் ஈடுபட்டுவந்த அப்பாவானவன் தன் அதீதமான கண்டுபிடிப்பை மிகவும் பவ்யமாக வெளியிட்ட தருணமதைக் குழந்தைகள் தங்கள் வாழ்நாள் பூராவும் நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள். 
"உலகம் உருண்டையானது, ஆரஞ்சுப் பழத்தைப்போல" என்றான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. உர்ஸலா பொறுமையிழந்து போய்விட்டாள். "வேண்டுமானால் நீ மட்டும் பைத்தியமாக இரு. குழந்தைகள் மேல் உன் நாடோடிக் குழப்பங்களை ஏன் 'திணிக்கிறாய்" என்று கத்தினாள். அவளுடைய கோபமும் பதற்றமும் அவனை ஏதும் செய்யாததால் மேலும் வெறிகொண்டு வானமானியை அவள் தரையில் மோதி உடைத்த பின்பு அடுத்த வானமானியைத் தயார் செய்து கிராமவாசிகளை அறையில் கூட். வைத்துக்கொண்டு "உலகம் உருண்டை" என்ற தான் கண்டறிந்த உண்மையைக் கோட்பாட்டு ரீதியாக நிறுவ முற்பட்டான். கிழக்குத்திசையிலேயே பிரயாணித்தும் கொண்டிருந்தால் புறப்பட்ட இடத்தையே வந்தடைய முடியும் என்ற சாத்தியப்பாட்டை விளக்குகிற வகையில் அவன் எடுத்துக் கொண்ட உதாரணங்கள் அவர்களில் யாருக்கும் புரியவே இல்லை. ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்கு பித்துப் பிடித்துவிட்டது என்ற முடிவை கிர்ரமம் நிதர்சன நிறமாக மாற்றிக்கொண்டிருந்த வேளையில் மெல்க்யுடஸ் திரும்பிவந்தான். வானசாஸ்திர யூகங்களின் மூலம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்ட "உலகம் உருண்டை" என்கிற உண்மையைத் தானாகவே கண்டறிந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவைப் பாராட்டினான் மெல்க்யுடஸ். மக்காந்தோ கிராமவாசிகளுக்கு இந்த உண்மை சுத்தமாகத் தெரியாமல் போயிருந்தாலும் இதைப் புதிதாகக் கண்டறிந்தவன் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா என்பதை எண்ணிப் பரவசம் அடைந்தான் மெல்க்யுடஸ். ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்கு மெல்க்யுடஸ் அப்போது வழங்கிய பரிசுதான் கிராமத்தின் எதிர்காலத்தையே மாற்றப்போவதாய் அமைந்த ஒரு ரசவாத பரிசோதனைச் சாலை. 

மெல்க்யுட்ஸுக்கோ எக்கச்சக்கமாக வயதாகிவிட்டிருந்தது. முதன்முதலில் மக்காந்தோ கிராமத்துக்கு வந்தபோது அவனுக்கு ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவின் வயதுதான் இருந்தது என்றாலும் குதிரையைக் காதுகளைப் பிடித்தே இழுத்துத் தள்ளிவிடுகிற அளவு பலம் பொருந்தியவனாக இருந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியா இன்றும் அப்படியே காணப்பட்டான். மெல்க்யுடஸோ இனந் தெரியாத நோயால் தாக்குண்டவனாக அப்படியே உதிர்ந்துவிட்டிருந்தான். உண்மையிலேயே பல்வேறு விநோத நோய்கள் அந்த நாடோடியைத் தாக்கிவந்தன. மரணம் தன்னை எல்லா இடத்திலுமாகப் பின்தொடர்ந்து வந்திருக்கிறது என்பதையும் தன் கந்தல் ஆடையின் நுனிகளை மோப்பம் பிடித்துக் கொண்டு வந்துவிட்ட மரணம் தன்னை முழுமையாகப் பற்றிவிடவும் இல்லை என்பதையும் ரசவாத பரிசோதனைச்சாலையை ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவிடம் வழங்கும்போது சொன்னான் மெல்க்யுடஸ். மனித குலத்தை இதுநாள்வரை கலக்கிவந்திருக்கும் அத்தனை அதீத நோய்களிலிருந்தும் யுகங்களின் பேரழிவுகளிலிருந்தும் தப்பிப்பிழைத்து அலைந்து கொண்டிருக்கும் அகதிதான் மெல்க்யுடஸ். பெர்சியாவில் பெல்லக்ரா, ஜப்பானில் பெரிபெரி போன்ற ஊட்டச்சத்துக்குறைவு நோய்களிலிருந்து மீட்புப்பெற்றும் அலெக்ஸாண்ட்ரியா நகரத்தில் குஷ்ட ரோகத்தையும் மடகாஸ்கர் தீவில் கொள்ளை நோயையும் கண்டும் சிசிலியில் வெடித்த பூகம்பத்திலிருந்து விடுபட்டும் மெகல்லன் ஜலசந்தியில் பிரயாணம் செய்த கப்பல் நொறுங்கிய போது சமுத்திரத்தில் காணாமல் போயும் தப்பிப்பிழைத்த மனிதன் மெல்க்யுடஸ். நோஸ்ட்ரடாமஸ் என்கிற பதினைந்தாம் நூற்றாண்டுப் ஃப்ரெஞ்சு தீர்க்கதரிசியின் உள்மனச் சாவிகளை வைத்திருப்பதாகக் கருதப்பட்ட இந்த விநோதப் பிறவியின் மிக சோகமான முகத்தை ஒளிவட்டம் சூழ்ந்திருந்தது. எதார்த்தம் மறைத்துவிட்டுப் போயிருந்த அத்தனைக் கதைகளையும் ஒருசேரக் கண்டதாகத் தென்பட்டது முகத்திலிருந்த ஆசியப்பார்வை. அணிந்திருந்த கறுப்புத் தொப்பியானது  பெரிய இறக்கைகள் கொண்ட காகமாக அவனை இனங்காட்டியது. உடுத்தியிருந்த வெல்வெட் கோட்டின் மீது நூற்றாண்டுகளின் மினுமினுப்பு சறுக்கிச் சென்றது. இருந்தாலும் எக்கச்சக்கமான ஞானத்தையும் மர்மமான திருஷ்டியொன்றின் முழுவீச்சையும் கொண்டிருந்த மெல்க்யுடஸுக்குக்கூட தினசரி மனிதனுக்கேயான சாதாரணப் பிரச்னைகளும் இருந்தன, வயதாகிவிட்டபடியால் ஏற்படும் நோய்கள் பற்றியும் சாதாரணப் பொருளாதாரப் பிரச்னைகள் பற்றியும் அடிக்கடி பேசினான். ஊட்டச் சத்துக்குறைவால் அந்த நாடோடியின் தோல் வெடித்துச் செதில்கள் தோன்றியபோது பற்கள் கொட்டிப் போய் சிரிப்பு காணாமல் போனது. தன் ரகசியங்களை அவன் சொல்லத் துவங்கிய மூச்சடைக்கும் உச்சிவேளையில் பிரமாதமான நட்பு தனக்கும் அவனுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாகத் தீர்மானித்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. மெல்க்யுடஸ் சொன்ன மாயாஜாலக் கதைகளைக் கேட்டு அதிர்ந்து போய்விட்ட குழந்தைகளை  பார்த்தான் அவன். அந்த மத்தியானப்பொழுதில் ஜன்னல் அருகே உலோக வெளிச்சத்தின் மினுமினுப்பில் அமர்ந்து கொண்டு கற்பனாசக்தியின் அடியாழத்திலிருந்து கறுப்புப் பிராந்தியங்களைக் குரலால் மெல்க்யுடஸ் ஜ்வலிக்கச் செய்ததும் மெல்க்யுடஸின் நெற்றிப் பொட்டிலிருந்து வெப்பத்தால் உருகிவழிந்து ஓடிக்கொண்டிருந்த பொருள் தான் க்ரீஸ் என்பதும் அப்போது ஐந்து வயது கூட ஆகியிராத அவ்ரலியானோவுக்குத் தன் எஞ்சிய வாழ்நாள் பூராவும் நினைவிருக்கப் போகிறது. அவ்ரலியானோவின் அண்ணன் ஜோஸ் அர்க்காடியாவோ கதைசொல்கிற அற்புத பிம்பத்தைத் தன் மூதாதையர்களின் நினைவுகளில் முக்கியமானதாக வரித்துக்கொண்டு தன்னுடைய வழித் தோன்றல்களுக்கும் விட்டுச் செல்லப்போகிறான் தெரியுமா. 
ஆனால் உர்ஸலாவுக்கு மட்டும் இந்த நிகழ்ச்சி கெட்ட கனவுகளையே நினைவுபடுத்தியது. அறைக்குள் அவள் நுழைந்தபோது பாதரச உப்பு வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக்குடுவையைக் கவனமின்றி மெல்க்யுடஸ் உடைத்துவிட்டதுதான் காரணம். 
"சாத்தானின் நாற்றம் இதுதான் போல" என்றாள் உர்ஸலா. 
"சாத்தான் கந்தக வாசனை கொண்டவன் என்று ஏற்கனவே நிரூபிக்கப் பட்டாகிவிட்டதால் இந்த உப்பு மேலே பட்டால் அரிப்பெடுக்கும் சாதாரணப்பொருள் மட்டும்தான்" என்றான் மெல்க்யுடஸ். 
பாதரசத் தாதுப்பொருளின் மோசமான குணங்கள் எத்தகையன என்று விஸ்தாரமாக மெல்க்யுடஸ் விளக்கியதைப் புறக்கணித்துவிட்டுப் பிரார்த்தனைக்காக குழந்தைகளை அழைத்துச் சென்றுவிட்ட உர்ஸலாவின் மனத்தில் மெல்க்யுடஸின் நினைவுடன் தொடர்புடையதாக அந்த நாற்றம் தங்கிவிட்டது. 
கண்ணாடிக்குடுவைகள், ஃபுனல்கள், சல்லடைகள் தவிர புராதனத் கண்ணீர்க்குழாய்கள், மெல்லிய நீண்ட கழுத்துடைய கண்ணாடிப் பாத்திரம், தத்துவ வாதியுடைய முட்டையின் மறுபதிப்பு மற்றும் யூத மேரியின் முக்கோண வடிகட்டியின் ' அதிநவீன மாதிரியை அடிப்படையாக வைத்து நாடோடிகளே அமைத்திருந்த இன்னொரு வடிகட்டி ஆகியவையே அந்தக் குறைந்தபட்சரசவாத பரிசோதனைச்சாலையில் இருந்தன. இவைதவிர ஏழு கிரகங்களுக்குப் பொருந்துவதான ஏழு உலோகங்களின் மாதிரிகளையும் தங்கத்தை இரட்டிப்பாக்குகிற மோஸே மற்றும் ஸோஸ்ஸிமஸ் ஆகிய கடவுளர்களின் ரகசியச் சமன்பாட்டையும் வாசிப்பவர்களைத் தத்துவவாதியின் மந்திரக்கல்லைத் தயாரிக்க அனுமதிக்கிற சுவடிகளையும் மெல்க்யுடஸ் அங்கே விட்டுச் சென்றிருந்தான், தங்கத்தை இரட்டிப்பாக்கும் சமன்பாடுகளின் திடீர் சுலபத்தன்மையால் மதிமயங்கிப்போன ஜோஸ் அர்க்காடியோ புண்டியா பல வாரங்களாகவே உர்ஸலாவிடம் கெஞ்சி வாதாடி அவள் புதைத்திருந்த தங்க நாணயங்களைப் பெற்றுக்கொண்டுவிட்டான். பாதரசத்தை எத்தனை முறைபகுத்தாய் முடியுமோ அத்தனை மடங்காக நாணயத் தங்கத்தைப் பெருக்கித் தருவதாக அவளிடம் கூறிவிட்டான். நாணயங்களில் மூன்றை மட்டும் சட்டியில் இட்டு அவற்றுடன் செப்புப்பட்டைகளையும் கந்தகக்கல், மஞ்சள் தாது மற்றும் ஈயத்தை வைத்து விளக்கெண்ணெயில் காய்ச்சிப் பார்த்தான். சட்டியில் பொங்கி வந்த சகதிக்குழம்போ மின்னும் தங்கத்தைப் போலன்றி தீய்ந்துபோன சர்க்கரையின் நிறத்தை ஒத்திருந்தது. எடுத்துக்கொண்ட முயற்சியில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற பதைபதைப்பில் ஏழுகிரக உலோகங்களையும் அதே சகதிக்குழம்பில் இட்டு உருக்கி பாதரசத்தோடும் ஸைப்ரஸ் நாட்டு கந்தக உப்போடும் கலந்து முள்ளங்கி எண்ணெய் கிடைக்காததால் பன்றிக்கொழுப்பில் காய்ச்சி வடிகட்டிப் பார்த்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. இதன்மூலம் உர்ஸலா கொண்டுவந்த சீதனமானது சட்டியுடன் ஒட்டிக் கொண்டு விட்ட பன்றிக்கசடாக மாறிப்போனது. 
நாடோடிகள் அடுத்த முறை மக்காந்தோவுக்கு வருகைதந்தபோது அவர்களை விரட்டிவிடுவதற்காக கிராமவாசிகளை ஒன்று திரட்டிவிட்டாள் உர்ஸலா. இருந்தாலும் ஆச்சர்யமும் ஆவலும் யாரைத்தான் விட்டன. எல்லாவிதமான வாத்தியங்களையும் முழங்கிக் கொண்டு மக்காந்தோவில் நுழைந்த நாடோடிகளில் ஒருவன் நாஸியென்ஸெனஸின் அதிநவீனக் கண்டுபிடிப்பைக் காட்டுவதாக உரத்த குரலில் சொன்னான். அந்தக் கண்டுபிடிப்பானவன் வேறுயாருமில்லை - மெல்க்யுடஸ்தான். பளபளப்பான புதிய பற்களுடன் இளமையாகச் சிரித்துக் கொண்டிருந்தான் மெல்க்யுடஸ். முன்பு நோய் தாக்கி பற்கள் காணாமல் போய் விட்டதையும் கன்னங்கள் தொங்கிப் போனதையும் உதடுகள் உலர்ந்து வெடித்துப் போனதையும் மறக்க முடியாத கிராமவாசிகளுக்கு அவனுடைய புதிய அவதாரம் பெரும் பீதியைக் கொடுத்தது. புதிய பல்செட்டைக் கழற்றிக்காட்டிய போது கணம் மட்டும் நொறுங்கி உதிர்ந்து போன அந்தக்கால மெல்க்யுடஸ் தெரிந்ததென்னவோ உண்மைதான். அதீத சக்திகளைப் பெற்று அவன் விளங்குவதற்கான நிரூபணமாக அவர்கள் இதைப் புரிந்து கொண்டார்கள். மெல்க்யுடஸின் அதீத ஞானமானது பொறுக்க முடியாத அளவுக்குப் போய்விட்டதை ஜோஸ் அர்க்காடியோ புண்டியா கூட உணர்ந்து கொண்டுவிட்டான். பல்செட்டை அப்படிக் கழற்றிக்காட்டிய மெல்க்யுடஸ் ஓர் ஏமாற்று வித்தைக்காரன் என்று புரிந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்கு ரசவாதத்தில் அதுநாள் வரை இருந்துவந்த ஈடுபாடு காணாமல் போனது. வேளாவேளைக்குச் சாப்பிடுவதையும் விட்டொழித்து வீட்டுக்குள் நடைபயின்று கொண்டே நாட்களைக் கழித்தான் அவன். "உலகத்தில் எத்தனையோ ஆச்சர்யகரமான விஷயங்கள், அதோ நதிக்கு அப்பால் ஏகப்பட்ட புதிய மந்திர உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாமோ இந்த இடத்திலேயே கழுதைகளைப்போல் வாழ்கிறோம்" என்று உர்ஸலாவிடம் அங்கலாய்த்துக் கொண்டான். - 

மக்காந்தோ நிறுவப்பட்ட காலத்திலிருந்தே ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவை அறிந்திருந்த கிராமவாசிகள் மெல்க்யுடஸின் தாக்கத்தால் எப்படியெல்லாம் மாறிப்போய் விட்டான் என்று அதிர்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள். முன்பெல்லாம் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா சராசரிக் குடும்பத்தலைவனாகவும் குழந்தை வளர்ப்பு மற்றும் வீட்டு மிருகங்கள் பராமரிப்பில் பெரிதும் ஈடுபட்டு கூட்டுழைப்பில் முது? திளைப்பவனாகவும் இருந்தான். கிராமத்தின் முதல் கட்டிடமாக அவனுடைய வீடு இருந்தபடியால் மாதிரியாகக் கொண்டு இதர வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அந்த வீட்டில் வெளிச்சம் மிக்க முன் அறையும் வராந்தா போன்ற சாப்பாட்டு அறையும் அங்கேயெல்லாம் ஏகப்பட்ட மலர்க்கொத்துகளும் இரண்டு படுக்கை அறைகளும் ஒரே செஸ்ட்நட் மரம் நன்கு படர்ந்து வளர்ந்த பிரம்மாண்டமான முற்றமும் பராமரிக்கப்பட்ட தோட்டமும் ஆடுகள், பன்றிகள், கோழிகள் சமாதான சகவாழ்வு நடத்தி வருகிற தொழுவமும் இருந்தன. அவன் வீட்டில் மட்டுமின்றி மக்காந்தோ கிராமத்திலேயே நடமாடமுடியாதபடி தடை செய்யப்பட்ட மிருகங்கள் ஏதும் உண்டென்றால் அவை சண்டைச் சேவல்கள் தான். 
கணவனைப் போலவே சுறுசுறுப்பாக இருந்த உர்ஸலா திடசித்தம் கொண்டவளாகவும் வாழ்நாளில் ஒரே பாட்டுக்கூடபாடியிராதவளாகவும் ஒரே தருணத்தில் பல இடங்களில் நடமாடுபவளாகவும் அதிகாலையிலிருந்து பின்னிரவு வரையில் தொடர்ந்து இயங்கிவருவதால் கஞ்சி போட்ட தன் பாவாடையின் மெலிதான மொறமொறப்பால் எங்கும் பின் தொடரப்படுபவளாகவும் இருந்தாள். பல்லாங்குழி போன்ற வீட்டின் தரையும் சுண்ணாம்பைக் கண்டிராத மண் சுவர்களும் அவர்களே செய்து கொண்ட மேஜை நாற்காலிகளும் எப்போதும் உர்ஸலாவின் கைபட்டு சுத்தமாகவே இருந்தன. அவர்களுடைய துணிகள் வைக்கப்பட்டிருந்த பழைய அலமாரிகூட ஏதோ அபூர்வ மூலிகை ஒன்றின் வெம்மையான வாசனையில் ஆழ்ந்திருந்தது. 
கிராமத்திலேயே அதிக சுறுசுறுப்பும் முனைப்பும் கொண்டவனான ஜோஸ் அர்க்காடியோ புண்டியா ஊரை வடிவமைத்த விதமே அலாதிதான். அத்தனை வீடுகளும் அங்கே ஓடிய நதிக்குச் சமதூரத்தில் இருக்கும்படியாகவும் எந்த வீட்டிலிருந்தும் நதிக்குத் தண்ணீர் எடுக்கச் செல்லும் நபர் செலவிட வேண்டிய நேரம் சம அளவில் இருக்கும் படியாகவும் உச்சிவெயில் ஏறும்போது எல்லா வீடுகளுக்குக் கிடைக்கும் வெப்பமும் சம் அளவினதாக இருக்கும்படியாகவும் கிராம வடிவமைப்பு. கிராமத்தின் மொத்த ஜனத்தொகையான முன்னூறு பேரும் கடுமையான உழைப்பாளிகள் என்பது மட்டுமின்றி சரித்திரத்தில் எந்த கிராமமும் இவ்வளவு கடுமையாக உழைத்ததாக அந்த முன்னூறு பேரில் யாரும் கேள்விப்பட்டதில்லை என்பதும் உண்மை. அவர்களில் யாருக்குமே முப்பது வயதுக்கு மேல் ஆக வில்லை என்பதால் மட்டுமின்றி அவர்களில் யாரும் இதுவரை மாணமடையவில்லை என்ற காரணத்தாலும் மக்காந்தோ சந்தோஷமான கிராமமாக இருந்தது. 
கிராமம் நிறுவப்பட்ட காலத்திலிருந்தே பலப்பல கூண்டுகளையும் கண்ணிகளையும் நிர்மாணித்து வந்திருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. வீட்டிலும் இதர வீடுகளிலும் ஜோடிப் புறாக்கள், காட்டு மைனாக்கள், ஈத்தின்னிப் பறவைகள், கொஞ்சும் சிகப்புக் குருவிகள் ஆகியவற்றைக் கொண்டு கூண்டுகளை நிரப்பினான். எக்கச்சக்கமான பறவைகளின் கூட்டுக்கச்சேரியானது எத்தகைய தொந்தரவாக மாறியது என்பதை அவ்வப்போது காதுகளில் தேனீமெழுகை அடைத்துக்கொண்டு வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் தன் எதார்த்த உலகத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் உர்ஸலாவைக் கேட்டால் சொல்லுவாள். தலைவலிக்கு மருந்தாக கோலிக்குண்டுகளை விற்றுக்கொண்டு மெல்க்யுடஸின் நாடோடிக் கூட்டத்தினர் முதன்முதலாக வருகை தந்த காலத்தில் தன்னைச் சதுப்புநிலம் சூழ்ந்திருந்த போதையில் காணாமல் போய்விட்டிருந்த மக்காந்தோ கிராமத்தை அவர்கள் கண்டுபிடித்ததே ஆச்சர்யம்தான். இருந்தாலும் பறவைகளின் சங்கீதக் கச்சேரிதான் சரியான வழியைத் தங்களுக்குக் காட்டியது என்று நாடோடிக் கூட்டத்தினர் கூறிக் கொண்டிருப்பதும் நினைவிருக்கலாம். 
 காந்தக்கட்டிகளின் ஜுரவேக இயக்கத்தாலும் வானசாஸ்திரக் கணக்குகளாலும் மனிது குலமே வேறொரு எதிர்கால மிருகமாக மாறிவிடுவது பற்றிய அதீதக் கனவுகளாலும் பூவுலகத்தின் ரகசிய அற்புதங்களைக் கண்டறியும் ஆவலினாலும் கிராமமே பீடிக்கப்பட்ட போது கிராமத்துக்கே உரித்தான சமுதாய முனைப்பானது கரைந்து காணாமல் போனது. சுறுசுறுப்புக்கும் சுத்தத்துக்கும் பெயர்போன ஜோஸ் அர்க்காடியோ புண்டியா சோம்பேறியாகவும் அழுக்காடைகள் அணிந்து கொண்டும் சுற்றி வந்தான். அவனுடைய காட்டுத்தாடியைத் திருத்த உர்ஸலா சமையலறைக்கத்தியை எடுத்து வந்தாள். விநோதமான மயக்கத்தில் வழக்கம் போல ஆழ்ந்துவிட்டான் என்று கிராமவாசிகள் சொல்லிக் கொண்டார்கள். பித்துப்பிடித்தவன் என்று நிச்சயமாக நம்புபவர்கள் கூட தங்கள் குடும்பங்களையும் வேலைகளையும் உதறிவிட்டு அவனை ஒருநாள் பின் தொடர்ந்து வந்தது ஆச்சர்யம் தான். அன்றுதான் தன் அத்தனை உபகரணங்களையும் வெளியில் எடுத்து வைத்துவிட்டு "கண்டுபிடிப்புக்களால் பெரிதும் மாறிக்கொண்டிருக்கும் வெளியுலகத்துடன் மக்காந்தோவை இணைக்க முன்வருவீர்களா" என்று பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
அந்தப் பிராந்தியத்தின் புவியியல் அமைப்பைப் பற்றி அவனுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கவில்லை. கிராமத்துக்குக் கிழக்கே ஊடுருவிச் செல்ல முடியாத மலைத்தொடரும் பின்னால் புராதன ரியோஹச்சா நகரமும் இருப்பதை அறிவான். தன் தாத்தாவான முதலாம் அவ்ரலியானோ புண்டியா சொன்ன கதைகள் மூலம் பிரபல ஆங்கிலேயக் கடற்கொள்ளைக்காரன் ஸர் ஃப்ரான்ஸிஸ் ட்ரேக் அங்கே பீரங்கிகளுடன் முதலைவேட்டைக்குச் சென்றதையும் முதலைகளுக்குள் வைக்கோலைத் திணித்து முதலாம் எலிஸபெத் ராணிக்குப் பரிசாக வழங்கியதையும் அறிந்து கொண்டான். இளமையாக இருந்த காலத்தில் நண்பர்களுடன், அவர்களுடைய குடும்பத்தினருடன், சமையல் உபகரணங்களுடன், சமுத்திரத்தைத் தேடி அதே மலைத் தொடரைத் தாண்ட முயற்சித்திருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. கிராமத்துக்குத் தெற்குத்திசையில் போனாலோ அங்கே தாவரச் சகதியுடனான சதுப்பு நிலங்கள், அவற்றுக்கு முடிவே இல்லை என்று நாடோடிகள் சொல்லக் கேட்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. மேற்குத் திசையிலும் பரந்து விரிந்த சதுப்பு நிலம் போய்க் கலந்த பெரிய ஏரியில் மெல்லிய தோலுடைய திமிங்கலக் கன்னிகள் தங்கள் அதீத மார்பகங்களைக் காண்பித்து ஏகப்பட்ட மாலுமிகளின் எதிர்காலங்களை அழித்துக் கொண்டிருந்தன. அதே திசையில் பயணம் செய்து ஆறு மாதங்களுக்குப் பிறகு கோவேறு கழுதைகள் தபால் கொண்டு வருகிற அந்தக் குறுகிய நிலப்பரப்பைக் காணமுடியும் என்று நாடோடிகள் சொல்லிக் கொண்டனர். 
வடதிசை நோக்கிப் பயணப்பட்டால் மட்டுமே மீண்டும் மனித நாகரீகத்தைச் சந்திக்க முடியும் என்று ஜோஸ் அர்காடியோ புண்டியா நம்பினான். ராட்சஸப் பறவையின் முட்டைகளாலான நதிப்படுகையின் வழியாகச் சென்று முன்பு ஒருநாள் கவச உடையைத் தோண்டி எடுத்த இடத்தையும் கடந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் நண்பர்களும் ஏற்கனவே மக்காந்தோவை நிறுவுவதற்கு முன்பாக இருபத்தியாறு மாதங்கள் அவ்வாறு அலைந்திருக்கிறார்கள். பிரயாணத்தின் முதல் வாரத்தின் கடைசியில் ஒரு மானைக் கொன்று வறுத்து அதில் பாதியைச் சாப்பிட்டு மீதிக்கு உப்புக் கண்டம் போட்டு வைத்துக் கொண்டார்கள். 
புனுகுவாசனை கூடிய மக்காவ் குரங்குகளின் நீலநிற இறைச்சியை உண்பதைத் தவிர்ப்பதற்காகவே அப்படிச் செய்தார்கள். பிரயாணத்தின் அடுத்த பத்து நாட்களுக்கு அவர்களால் சூரியனையே பார்க்கமுடியாமல் போய் எரிமலைச்சாம்பலான பூமியில் கால் வைத்த போது ஈரமாகவும் மிருதுவாகவும் தெரிந்தது. கடந்துசென்ற தாவரங்கள் இன்னும் அடர்த்தியாக மாறியது மட்டுமின்றி பறவைகளின் அலறலும் குரங்குகளின் கூச்சலும் கொஞ்சமாக நின்றுபோய் பூவுலகத்தையே சோகம் மூழ்கடித்தது. கொதிக்கும் எண்ணெயில் பூட்ஸ்கள் இறங்கும்போதும் ரத்தச் சிகப்பு லில்லிப்பூக்களையும் தங்கவண்ண நெருப்புமலர்களையும் வெட்டுக் கத்திகள் வீழ்த்தும்போதும் மிகப் புராதனமான நினைவுகள் தாக்கின. ஆதியிலேயே மனிதகுலம் பாழ்பட்டுப் போவதற்கு முன்பு புரிந்து விட்ட குற்றம் வரையிலுமாக நினைவுகள் தூக்கிச் சென்றன. மின்மினிப் பூச்சிகளின் மெல்லிய வெளிச்சத்தில் அந்த உறக்க நடையாளர்கள் ஒருவாரத்துக்கு மேலாக நடந்து சென்ற போது ரத்த வாசனையால் பீடிக்கப்பட்டு மூச்சுத் திணறிப் போனார்கள். அப்போதுதான் தங்களால் வேரறுக்கப்பட்டு வீழ்த்தப்பட்ட தாவர வகைகள் கண்முன்னரே உடனுக்குடன் வளர்ந்து வழியை மூடிவிட்டதால் அவர்களால் அந்தப் பிரயாணத்திலிருந்து மீண்டு வரவே முடியாமல் போய்விட்டது. "அதனால் பரவாயில்லை. நமது அடையாளங்களும் நீங்கிப் போகாமலிருந்தால் சரிதான்" என்றான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. திசைமானியின் துணையுடன் தோழர்களைப் புலனாகாத வடக்குத்திசையை நோக்கிச் செலுத்திச் சென்றான். இந்த மயக்கப் பிராந்தியத்திலிருந்து வெளியேறி எதார்த்தத்தைத் தரிசிக்க அது தான் வழி என்று ஒருவேளை எண்ணினான் போலும். நட்சத்திரங்களற்ற அடர்த்தியான ஓரிரவை இருட்டானது துல்லியமான புதிய காற்றால் நிரப்பிக் கொண்டிருந்த வேளையில் அயர்ச்சியடைந்த அவர்கள் இரண்டுவாரப் பிரயாணத்துக்குப் பின்பு முதன்முறையாகத் தூங்கத் துவங்கினார்கள். 
வெளிச்சம் தாக்கி எழுந்த அத்தனை பேர்களும் அப்படியே பேச்சடைத்துப் போய் நின்றார்கள். பனைமரங்களாலும் குரோட்டன்ஸ் செடிகளாலும் சூழப்பட்ட பெரும் ஸ்பானியப் போர்க்கப்பல் காலைச் சூரியனின் மௌனத்திலும் வெண்பனிப்படலத்திலும் பட்டுப்பிரகாசித்துக் கொண்டிருந்தது முன்பு. கந்தல்பாய்கள் நிஜ மரங்களிலிருந்துதொங்கிக்கொண்டிருக்க, பிணைக்கயிறுகளைச் சுற்றிப் பழச்செடிகள் வளைத்துக் கொண்டிருக்க, அலட்சியமாய் ஒருக்களித்துச் சாய்ந்திருந்தது போர்க்கப்பல். அடிப்பாகமோ கடல் ஜீவராசிகள் செத்தழுகிக் காய்ந்துபோன கசடாலும் பாசியாலும் கற்களாலான தரையுடன் மிக அழுத்தமாகப் பதிந்துபோயிருந்தது. காலத்தின் வேட்கையிலிருந்தும் பறவைகளின் அலைபாய்ச்சலிலிருந்தும் வெளியேறி சரித்திரத்திலிருந்து விலகிய தனிமைகொண்டு தனக்கேயான பிரத்தியேகமான வெளியில் வசித்திருந்தது கப்பல், ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவின் நண்பர்கள் தேடிப் பார்த்தபோது அதனுள் பூச்செடிகளாலான காட்டைத்தவிர வேறெதுவுமில்லை. 
சமுத்திரமானது அருகே எங்கோதான் இருப்பதைப் போர்க்கப்பல் உணர்த்திய போதும் திடசித்தம் குலைந்துபோன ஜோஸ் அர்க்காடியோ புண்டியா தளர்ந்தவனானான். சமுத்திரத்தைத் தேடி ஏகப்பட்ட தோல்விகளுக்கிடையே பிரயாணம் மேற்கொண்ட போதும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டதையும் எதையும் உருப்படியாகச் செய்யாமலேயே தாண்ட முடியாததாய்த் தன்முன்னே கிடந்த சமுத்திரப்பிராந்தியத்தை எப்படியோ அடைந்ததையும் தலைவிதி என்று நொந்து கொண்டான். 
மிகப்பல வருஷங்கள் கழிந்த பிறகு கர்னல் அவ்ரலியானோ புண்டியா அதே பிராந்தியத்தைக் கடந்த போது தபால் கொண்டுவரும் வழியாகிவிட்டிருந்தது. மேலும் பாப்பிச் செடிகள் சூழ்ந்திருந்த கப்பலின் எரிந்த வெளிச்சட்டகத்தை மட்டுமே அவரால் பார்த்துக்கொள்ள முடிந்தது. அப்போது கப்பலை நேரில் கண்ட பிறகாவது தம் அப்பா சொல்லிப்போன கதை வெறும் கற்பனை அல்ல என்று புரிந்து கொண்ட கர்னல் அவ்ரலியானோ புண்டியா கப்பல் எப்படிக் கரையைத் தாண்டி உள்ளே வந்து தரைதட்டிப் போயிருக்க முடியும் என்று அப்போதுதான் யோசித்துப்பார்த்தார். கப்பலைக் கண்டுபிடித்த போதோ இதுபற்றியெல்லாம் யோசிக்காமல் சமுத்திரத்தைத் தேடிப் போனான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. இன்னும் நாலு நாள் பயணம் செய்து சமுத்திரத்தை நிஜமாகவே அடைந்தபோது இதுவரை கடந்துவந்த அபாயங்களுக்கும் சாதித்திருந்த சாகசப் பயணத்துக்கும் சற்றும் தகுதியில்லாததான சாம்பல் பூத்த அழுக்கு நுரையைக் கண்டவனுக்கு சப்பென்றாகி கனவுகள் கணத்தில் முடிந்தே போய்விட்டன. 
"அடக்கடவுளே எல்லாப்பக்கங்களும் நீரால் சூழப்பட்ட கிராமம்தான் மக்காந்தோ" என்று கத்தினான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
சாகசப்பயணத்துக்குப் பிறகாக வரைந்த அரைகுறைக் கிறுக்கலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இன்னொரு வரைபடம் மக்காந்தோவை தீபகற்பமாகக் காட்டியது. தீபகற்ப மக்காந்தோவை நம்பிப் பலகாலம் செயல்பட்டு வந்தபோதும் அந்தப் படத்தின் மூலத்தை வரையும்போது வெறியுடனும் கோபத்துடனும் தானிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா, மக்காந்தோவை ஏன் தான் வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்தோமோ என்ற ஆங்காரத்துடன் இயங்கியவாறே தனக்குத்தானே வழங்கிக்கொண்ட தண்டனையாக படத்தை வரைந்திருந்தான். தொடர்புசாதன வசதிகள் இல்லாத நிலைமையை மிகைப் படுத்திச் சித்தரித்திருந்த அவன் "இங்கேயே மாட்டிக்கொண்டு விட்டோமே, விஞ்ஞானத்தின் பயன்களை அனுபவிக்க முடியாமல் இங்கேயே கிடந்து அழுகிச் சாகிறோமே" என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்தான். தன்னுடைய பரிசோதனைச் சாலையில் பல மாதங்கள் கிடந்து உழன்ற பிறகு இது பற்றி ஏற்பட்ட நிச்சய பூர்வமான எண்ணத்தின் அடிப்படையில் கடைசியில் மக்காந்தோ கிராமத்தையே வேறொரு இடத்துக்கு நகர்த்தி விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டான் ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியா, அவனுடைய இத்தகைய ஜுரவேகத்திட்டங்களை ஏற்கனவே யூகித்து விடும் பழக்கங் கொண்ட உர்ஸலாவோ கிராமத்தை வேறிடத்துக்குக் கடத்திக்கொண்டு போய்விட கணவன் போட்டிருந்த திட்டத்தை, மக்காந்தோவின் அத்தனை கணவன்மார்களும் உடந்தையாக இருந்த ரகசியத்தை, அவர்களுடைய கட்டுமீறிச்செல்கிற அதீதமான முனைப்பை கிராமத்து மனைவிமார்களுக்குத் தெரிவிப்பதில் எறும்பின் சுறுசுறுப்புடன் செயல்பட்டாள். வெறும் சாக்குப்போக்குகள், ஏமாற்றங்கள் மற்றும் தவிர்ப்புகளில் சிக்கித் தவித்து தன் திட்டமானது ஏன சரழிந்து மாயக்கனவாகச் சிதைந்து போனது என்று ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்கு மட்டும் விளங்கவே இல்லை. அப்பாவியாக உர்ஸலா கவனித்துக் கொண்டிருந்தபோது அவனோ பரிசோதனைச்சாலையின் உபகரணங்களைப் பெட்டியில் அடுக்கிப் பூட்டிக்கொண்டும் அடுத்துக் குடிபெயர இருக்கும் இடத்தின் பெயரை ரகசியமாக முணுமுணுத்துக் கொண்டும் இருந்தான். அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட உர்ஸலா பெட்டிகளை அவன் ஆணியறைந்து மூடவும் அவற்றின்மேல் இங்க்கால் தன் பெயரை எழுதவும் காத்திருந்தாள். கிராமத்து ஆண்கள் யாரும் அவனுடைய திட்டத்துக்கு உடன்படப்போவதில்லை என்பதையும் அவன் அறிந்தாயிற்று என்பதை அந்த முணுமுணுப்பிலிருந்து தெரிந்துகொண்ட அவள், அவன் அந்த அறையின் கதவையே பெயர்த்தெடுக்க முற்பட்டபோது கேட்டாள், 
"ஏன், என்ன பண்ணப் போகிறாய்."
"யாரும் கிளம்பாவிட்டாலும் நாம் மாத்திரம் போக வேண்டியது தான்." 
"எங்கும் போகவேண்டியதில்லை. மகன் பிறந்திருக்கிறபடியால் இங்கேயே தங்கி விடுவோம்" என்றாள் ஆணித்தரமாக. 
"இதுவரை இங்கே மரணம் ஏதும் நிகழவில்லையே. யாராவது செத்துப்போய் புதைக்கப் படும்போதுதான் வாழ்பவர்களுக்கு இடம் சொந்த பூமியாக முடியும்" என்றான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
"நீங்கள் எல்லோரும் இங்கேயே தங்கிவிடவேண்டும் என்பதற்காக நான் சாகவும் தயார்" என்றாள் உர்ஸலா உறுதியாக. 
இவ்வளவு திடசித்தத்துடன் மனைவியானவள் பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. மாயாஜால வித்தைகளால் அவளை மயக்கி அங்கிருந்து கிளப்பி விடமுயற்சித்தான். கூட்டிச் செல்லப்போகிற உலகத்தில் ஏதோ மந்திரத்தைலத்தைப் பூமியில் கெளித்தாலே விரும்புகிற பழமான து மரத்தில் காய்த்துத் தொங்கும் என்றும் அங்கே  வலிநிவாரண உபகரணங்கள் மிக சல்லிசாகக் கிடைக்கும் என்றும் ஆசைகாட்டினான். அவனுடைய புனைசுருட்டுக்களை லட்சியம் செய்தாளில்லை உர்ஸலா. 
"உன் பைத்தியக்காரக் கனவுகளைக் கலைத்துவிட்டு குழந்தைகளைப் பற்றி கவலைப்பட்டாக வேண்டும். கழுதைகளைப் போல அவர்கள் திரிந்துகொண்டிருப்பதை நீ பார்க்கவில்லையா," 
சொன்ன வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு வெளியில் பார்த்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. வெறுங்காலுடன் தோட்டத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள். உர்ஸலாவுடன் பேசிய நிமிடத்தில் அவனுக்குள்ளே நிச்சய மர்மமாக ஏதோ தோன்றி நிகழ் காலத்திலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் இதுவரை அலசியிராத நினைவுப்பிராந்தியங்களுள் தள்ளிவிட்டது. அந்த மர்மத்தின்படி வாழ்க்கையின் எஞ்சிய பகுதி பூராவும் கைவிடப்பட இருந்த வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாள் உர்ஸலா. வேறுவழியில்லாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டே கண்களில் பனித்த நீரைப் புறங்கையால் துடைத்து ஒதுக்கி அவளைப் பார்த்துக் - கொண்டே நின்றான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
"சரி, பெட்டியிலிருந்து பொருட்களை எடுக்க அவர்களைக் கூப்பிடு" என்றான். 
மூத்தவனான ஜோஸ் அர்க்காடியோவுக்கு பதினான்கு வயது. சதுரவட்டைத் தலையும் அடர்ந்த முடியும் அப்பாவின் முக்கிய குணாதிசயங்களையும் கொண்டிருந்தான். நன்கு வளர்ந்து பலசாலியாகத் தெரிந்த அவனுக்குக் கற்பனாசக்தி குறைவு என்பது உடனே தெரிந்து விட்டது. மலைத்தொடரை எல்லோருமாகக் கடந்த காலத்தில் உர்ஸலா கருத்தரித்து பெற்றிருந்தபடியால் மிருக குணாதிசயங்கள் ஏதுமின்றி அவன் இருந்தததற்காகவே கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள் உர்ஸலாவும் ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும். மக்காந்தோ கிராமம் நிறுவப்பட்ட பிறகு பிறந்த முதல் குழந்தையான அவ்ரலியானோவுக்கு வரும் மார்ச் மாதத்துடன் ஆறு வயது நிரம்பிவிடும் என்றாலும் இன்னும் பேசாமடந்தையாகவே இருந்தான். உர்ஸலாவின் கர்ப்பத்தில் அழுது கொண்டே இருந்தவன் பிறக்கும் போது அழுகையை நிறுத்திவிட்டுக் கண்களை அகலத் திறந்து பார்த்தான். 
உர்ஸலாவுடன் அவனைப் பிணைத்திருந்த தொப்பூழ்க்கொடி அறுக்கப்பட்ட போதும் அழாமல் தலையை மெதுவாக இருபக்கமும் திருப்பி பிறப்பறையிலுள்ள அத்தனை மனித முகங்களையும் பொருட்களையும் ஆர்வத்துடன் கவனித்தான் அவ்ரலியானோ. பார்க்க வந்திருப்பவர்கள் அத்தனை பேரையும் அலட்சியம் செய்துவிட்டு பெரும் மழையால் கிழிபட்டுப் போய்விடவிருந்த பனங்கூரையின் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று வயதாகிய போது கொதிக்கும் சூப்பை அடுப்பிலிருந்து எடுத்து மேஜையின் மேல் உர்ஸலா வைத்தபோது சமையலறைக்குள் அவன் நுழைந்த நாளில்தான். அந்தப்பார்வையின் தீட்சண்யத்தை முழுமையாக உணர்ந்தாள் உர்ஸலா, "சூப் கீழே விழுந்து கொட்டப் போகிறது" என்பதாக குழந்தை கதவருகே நின்றவாறே சொல்லி, 
முடித்தவுடன் மேஜையின் நடுநாயகமாக வைக்கப்பட்டிருந்த பாத்திரமானது செலுத2ம் பட்ட பொருளாக மேஜையின் விளிம்பை நோக்கி நகர்ந்து தரையில் விழுந்து உடைந்து சிதறிப் போனது. ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவிடம் சம்பவத்தைப் பற்றி அவள் பிரஸ்தாபித்தபோது சாதாரண நிகழ்ச்சியாக உதாசீனம் செய்துவிட்டான். குழந்தைப் பிராயத்தை மனமுதிர்ச்சிக்கு முற்பட்ட காலமாகவே எண்ணியதாலும் தானும் ஏதோ மாயக்கற்பனையில் உழன்று இருந்ததாலும் எப்போதும்போல மகனுடைய செயல்களுக்கு அந்நியமாகவே இருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. ' 
இருந்தாலும் பரிசோதனைச்சாலையின் பொருட்களைப் பெட்டியிலிருந்து எடுத்து வெளியே வைக்க குழந்தைகளை உதவிக்கு அழைத்த மத்தியானப் பொழுதுக்குப் பிறகு அவர்களுக்காக தன் விசேஷ நேரங்களையெல்லாம் செலவிட ஆரம்பித்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. இனந்தெரியாத வரைபடங்களாலும் விநோதமான ஓவியங்களாலும் நிரப்பப்பெற்ற சுவர்களாலான சிறியதோர் அறையில் தனியாக உட்கார்ந்து குழந்தைகளுக்கு எழுதப் படிக்கவும் மனக்கணக்குப் போடவும் சொல்லிக் கொடுத்தான். இதுவரை படித்திருந்த பூவுலகத்தின். அதிசயங்கள் மட்டுமன்றி கற்பனா சக்தியின் எல்லையைத் தீவிரப்படுத்தியும் பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசலானான். சுற்றி உட்கார்ந்துகொண்டு சிந்திப்பதை மட்டுமே பொழுதுபோக்காகக் கொள்ளும் அளவுக்கான மூளைக்கூர்மையுடனும் மனச்சாந்தியுடனும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடிப்பகுதி மக்கள் வாழ்ந்தார்கள் என்பதையும் சலோனிகா துறைமுகத்திலிருந்து ஒவ்வொரு தீவாகத் தாண்டிக் குதித்துக்கொண்டே போய் ஈஜியன் கடலைக் கடந்துவிட முடியும் என்றும் குழந்தைகள் அவன் பேச்சைக் கேட்டுத்தான் நம்பினார்கள். 
மாயாவிநோதங்களில் மூழ்கிப்போன நாட்களின் வகுப்புகள் குழந்தைகளின் மனதில் எந்த அளவுக்குப் பதிந்துபோயிருந்தன என்பதை மிகப்பல வருஷங்கள் கழித்து ராணுவ அதிகாரி ஒருவர் "சுடு" என்ற ஆணை பிறப்பித்து விடுவதற்கு ஒரே விநாடிக்கு முன்பான அந்தத் தருணத்தில் துப்பாக்கிகளை எதிர்நோக்கி நிற்கிற கர்னல் அவ்ரலியானோ புண்டியாவுக்கு பௌதீக வகுப்பை நிறுத்திவிட்டு அப்பா ஏதோ விஷயத்தில் அப்படியே லயித்துப்போய் நின்றுவிட்ட மத்தியானப் பொழுதின் காட்சி நினைவுக்கு வந்ததிலிருந்து முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். கிராமத்துக்கு மீண்டும் வருகை தந்து கொண்டிருக்கிற நாடோடிக்காரர்களின் நாத, தாள வாத்திய முழக்கங்களையும் மெம்ஃபிஸ் ஞானிகளுக்கு மட்டுமே சொந்தமான தங்களின் அதிநவீனக் கண்டுபிடிப்பு குறித்து பிரகடனங்களையும் தூரத்திலேயே கைகளைக் காற்றில் நீட்டிக் கொண்டிருக்கும் கண்கள் முற்றிலும் அசைவுறாமல் கேட்டுக் கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா, 
தங்கள் சொந்த பாஷையை மட்டுமே அறிந்துவைத்திருந்த இளைய பிராயத்தினராயிருந்த புதிய நாடோடிக் கூட்டத்தினர் எண்ணெய்ப்பசை மிக்க தோலும் திறமைமிக்க அங்க அவயவங்களையும் கொண்டிருந்தனர். அவர்களுடைய ஆடல்பாடல்கள் தெருக்களை நிறைத்து மகிழ்ச்சிப் பரபரப்பை விதைத்துவிட்டன. நீண்ட இத்தாலிய மெட்டுக்களைப் பாடி அத்தனை வண்ணங்களையும் தீட்டிவிடுகிற கிளிகளையும் தாம்பூரின் இசைக்கருவியின் நாதத்தைக் கேட்டு ஒரே சமயத்தில் நூறு பொன்முட்டைகளை இடுகிற கோழியையும் மனிதர்களுக்கு ஜோசியம் பார்த்துச் சொல்கிற விநோதக் குரங்கையும் ஒரே சமயத்தில் பித்தான்களையும் தைத்து ஜுரங்களையும் போக்குகிற பல்விதப் பயன்பாட்டு எந்திரத்தையும் நாடிவேகத்தைக் குறைத்துவிடுகிற மருந்துலேகியங்களையும் இன்னும் இவைபோன்ற ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளையும் நாடோடிகள் கொண்டுவந்தனர். இவற்றையெல்லாம் மறக்காதிருக்க இன்னொரு நினைவு எந்திரத்தையே கண்டுபிடித்தாக வேண்டும் என்று யோசித்திருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. ஒரே கணத்தில் கிராமத்தின் முகத்தையே மாற்றிவிட்டார்கள் நாடோடிகள். திருவிழாக் கூட்டத்தைக் கண்டதால் சொந்த கிராமத்தின் தெருக்களிலேயே காணாமல் போனார்கள் மக்காந்தோ வாசிகள். . 
அந்தப் பேரிரைச்சலிலும் குழப்பத்திலும் காணாமல் போகாதிருக்க கைக்கு ஒரு குழந்தையை இறுகப்பற்றிக் கொண்டும் தங்கப் பற்களைக் காட்டிச்சிரிக்கிற விநோதமான கழைக்கூத்தாடிகளுடன் மோதிக்கொண்டும் ஆறுகரங்களைக் கொண்டு பந்தாடுகிற ஜீவிகளுடன் முட்டிக்கொண்டும் தன் பயங்கரக்கனவின் அனந்த கோடி ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் பைத்தியக் காரனைப் போல் மெல்க்யுடஸைத்தேடி அலைந்துகொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. தன் பாஷையை அறிந்திராத நாடோடிகளிடம் மெல்க்யுடஸ் பற்றி விசாரித்தான். கடைசியில் வழக்கமாக மெல்க்யுடஸ் கூடாரம் அடித்துத் தங்குகிற இடத்தை அடைந்தபோது அங்கே மெளனமான ஆர்மீனியன் ஒருத்தன் உருவமிழந்து போகச்செய்கிற கஷாயத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தான். கூட்டத்தினரிடையே முண்டியடித்துக் கொண்டு ஜோஸ் அர்க்காடியோ புண்டியா நெருங்க ஆரஞ்சு நிறத்திலான கஷாயத்தை ஒரே மடக்கில் குடிக்கத்துவங்கினான் ஆர்மீனியன். தன் ஒரே கேள்வியை ஜோஸ் அர்க்காடியோ புண்டியா கேட்டவுடன் ஆர்மீனியன் சகதியும் புகையும் கலந்த தாதுக்குட்டையாக மாறிப்போவதற்கு முன்பு அவனைத் தன் பயங்கலந்த பார்வையில் சுருட்டிவிட்டுச் சொல்லிய பதில் இன்னும் அந்தக் கறுப்புக் குட்டைக்கு மேல் எதிரொலித்து மிதந்து கொண்டிருக்கிறது. * "மெல்க்யுடஸ் இறந்து போனான்." 
- இதர விநோதப் பொருட்களால் கவரப்பட்டுக் கூட்டத்தினர் கலையும் வரையிலும் அர்மீனிய நாடோடி தாதுக்குட்டையாக ஆவியாகிப் போகும் வரையிலும் அசையாமல் அதே இடத்திலிருந்துகொண்டு தன்னைத் தாக்கிய விஷயத்திலிருந்து மௌனமாக மீள முயன்று கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா, சிங்கப்பூர் கடற்கரையில் தாக்கிய விநோத ஜுரத்திலிருந்து மெல்க்யுடஸ் மீள முடியாமல் போனதைப் பற்றியும் ஜாவாக்கடலின் அடியாழத்தில் உடல் சுறாமீன்களுக்காக வீசப்பட்டது பற்றியும் நாடோடிகளிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியர். காக்கைகளுக்கோ இந்த விஷயங்களில் ஆர்வமிருப்பதாகத் தெரியவில்லை. மெம்ஃபிஸ் ஞானிகளின் அதீதமான புதிய கண்டுபிடிப்பைக் காண தங்களை ஸாலமன் ராஜாவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படுகிற கூடாரத்துக்கு அழைத்துப்போகுமாறு அப்பாவை நச்சரித்துக் கொண்டிருந்தனர். முப்பது ரியால்கள் - கட்டி கூடாரத்தின் மையத்துக்குத் 
தங்களைக் கூட்டிப்போகுமாறு வற்புறுத்தினார்கள் குழந்தைகள். அங்கே உடல் பூராவும் மயிர்க்கற்றை நிரம்பிய ஒருவன் தலை மொட்டை யடித்துக்கொண்டு பிரம்மாண்டமாக உட்கார்ந்திருந்தான். செப்பு வளையம் ஒன்றை மூக்கில் அணிந்து கொண்டும் இரும்புச் சங்கிலியால் கணுக்கால் கட்டப்பட்டும் கடற்கொள்ளையில் சிக்கிய அலமாரியைக் கண்காணித்துக்கொண்டும் உட்கார்ந்திருந்தான் அந்தச் செக்குலக்கை. அவன் திறந்தவுடன் அலமாரியிலிருந்து கிளம்பியது பனிப்புகை, ஊடுருவிப்பார்க்கத் தக்கதாக அதற்குள் இருந்த பெரும் கட்டிக்குள் காணப்பட்ட அனந்த கோடி ஊசிகளுக்குள் பட்டு அஸ்தமனச்சூரியன் வண்ண நட்சத்திரங்களாகப் பிளவுண்டான். அதிர்ந்துபோய்விட்ட ஜோஸ் அர்க்காடியோ புண்டியா விளக்கத்துக்காகக் காத்திருந்த குழந்தைகளிடம் கூறினான். 
"உலகிலேயே மிகப் பெரிய வைரக்கல் இதுதான்." 
கிடையாது. இதுதான் ஐஸ்கட்டி" என்றான் செக்குலக்கை நாடோடி. 
அந்தப் பனிக்கேக்கை நோக்கி ஏன் என்று விளங்காமலேயே கையை நீட்டினான் ஜோஸ் அர்ககாடியோ புண்டியா. ஆனால் அந்த நாடோடி கையை விலக்கிவிட்டுக் கூறினான். 
"அதைத் தொடுவதானால் இன்னும் ஐந்து ரியால்கள்." 
கொடுத்துவிட்டுக் கையை ஐஸ்கட்டிமேல் வைத்துப் பார்த்தவனுக்கு சில நிமிஷங்களில் அந்த மாயத்துடன் ஏற்பட்ட தொடர்பில் இருதயமே பயத்தாலும் சந்தோஷத்தாலும் நிரம்பியது தெரிந்தது. இன்னும் பத்து ரியால்கள் கொடுத்து அந்த சந்தோஷப்பெருக்கைத் குழந்தைகளும் அனுபவிக்க வகைசெய் தான். ஆனால் ஐஸைத்தொட மறுத்துவிட்டான் ஜோஸ் அர்க்காடியோ. இளைய மகன் அவ்ரலியானோவோ ஓரடி முன்னால் வந்து தொட்டு விட்டுக் கையை இழுத்துக் கொண்டே கூறினான். 
"கொதிக்கிறது." 
அதிர்ச்சி அடைந்திருந்த அவ்ரலியானோவைக் கவனித்துக் கொண்டிருந்தான் ஜோஸ் சர்க்கார்டியோ புண்டியா. கடற்பூச்சிகளுக்கு இரையாகிப்போன மெல்க்யுடஸின் உடலையும் தன்னுடைய பைத்தியக்கார சாகசங்களையும் கணம் மறந்து போய் அந்த ரகசிய அற்புதத்தின் நிரூபணத்தைக் கண்டு அப்படியே மயங்கிக்கிடந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. இன்னும் ஐந்து ரியால்கள் தந்துவிட்டு மாயக்கட்டியின் மேல் கை வைத்துக் கொண்டு புனிதப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் சாஸ்திரங்களுக்கான நடைமுறை நிரூபணங்களைக் கண்டறிந்தவனாக கூக்குரலிட்டுச் சொன்னான். 
"இதுதான் நம் காலத்தின் மிகப்பெரும் கண்டுபிடிப்பு." 
தமிழில் - நாகார்ஜுனன் 


Thursday, August 29, 2019

பனிமூட்டத்தில் சொல்லக் கதைதேடும் மார்க்வெஸ் ஸல்மான் ருஷ்டி****தமிழில் - தேவதாஸ்

பனிமூட்டத்தில் சொல்லக் கதைதேடும் மார்க்வெஸ் 
ஸல்மான் ருஷ்டி 
காப்ரியேல் என்கிற மனிதர் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியவர் என்ற சந்தேகம் நெடுங்காலமாக இருந்து வந்தது தான். இதனால் அச்சகங்களில் அற்புதங்கள் நடந்தபோது காத்திருந்தவர்களாகத் தலையசைத்தோம். ஆனால் அவருடைய மாயாஜால வித்தைகளை அறிந்து வைத்திருந்ததால் அவற்றின் வசியத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்றால் முடியவில்லை. வசப்பட்டு மரப்பெஞ்சுகளிலிருந்தும் தோட்டத்து ஊஞ்சல்களிலிருந்தும் எழுந்து வந்து ஈக்களைக் காட்டிலும் வேகமாகப் புத்தகங்களை வெளித்தள்ளும் அச்சகங்களுக்கு மூச்சிறைக்க ஓடிப் போனோம். கைகளை நீட்டுவதற்குள் புத்தகங்களும் தாவி வந்தன. கிளம்பிய புத்தக வெள்ளம் சந்துபொந்துகளிலும் வீதிகளிலுமாகப் பாய்ந்து மைல்பல் தூரத்திலுள்ள வீடுகளின் தரையெல்லாம் நிறைப்ப கதையிலிருந்து யாரும் தப்பமுடியாதபடிக்கு. பார்வை இல்லாமல் இருந்தாலா கண்களை இறுக்க மூடிக் கொண்டாலோ காதருகே உரத்துப் பேசும் குரல்கள் கேட்டவாறு. "உங்களுடைய சுயசரிதம் தான்" என்று ஒவ்வொருவரையும் திருப்திப் படுத்துகிற திறன் கொண்டிருக்கும் இவற்றிடம் கன்னிகாஸ்திரீகளைப் போல மயங்கிப் போயிருக்கிறோம். எங்களுடைய தேசத்தை நிரப்பிவிட்டு புத்தகங்கள் சமுத்திரத்தை நோக்கிப் போகின்றன. மாயமிக்க அச்சகங்களிலிருந்து கிளம்பும் முடிவற்ற புத்தகங்களால் சமுத்திரங்களும் மலைகளும் சுரங்க ரயில்பாதைகளும் பாலைவனங்களும் அடைபட்டுத் திணறுகிற வரை, பூமியின் பரப்பு முழுதுமாக நிரம்புகிற வரை ஓயாது என்பதைப் புரிந்து கொள்கிறோம். 
ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலை எழுதிப் பதினைந்து வருஷங்கள். நாற்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. மூல ஸ்பானிய மொழியில் மட்டும். மொழிபெயர்ப்புகளாக எத்தனை விற்பனை தெரியவில்லை. புதிய புத்தகம் வருகிறதென்றால் ஸ்பானிய அமெரிக்க தினசரிகளில் செய்தி முதல்பக்கம். தள்ளுவண்டிப் பையன்கள் தெருவில் பிரதிகளை விற்கிறார்கள். பாராட்டுவதற்கு வார்த்தைகளின்றி விமர்சகர்கள் மாய்ந்து போகின்றனர். ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை சமீபத்திய நாவலின் முதல் பதிப்பு பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் போனது. 
கற்பனையை இயக்குகிற மாபெரும் சக்தி பாட்டியின் நினைவு. எழுத்துக்கான உத்வேகத்தை அளித்தவர்களாக அமெரிக்க நாவலாசிரியர் வில்லியம் ஃபாக்னர், ஜோர்ஜ் லூயி போர்ஹெ அப்புறம் Epitaph of a Small Winner, Quincas Barba மற்றும் Dom Casmuno நாவல்களை எழுதிய மச்சாடோ டி ஆஸிஸ் போன்றவர்கள். ஃபாக்னரின் தாக்கத்தை ஒப்புக்கொள்கிறார். 308 

குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலில் லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றின் சர்வாதிகாரியை கடனுக்குப் பதிலாக நாட்டின் சமுத்திரத்தைத் தருமாறு அமெரிக்க அரசாங்கம் நிர்ப்பந்திக்கிற ஆச்சரியத்தைப் பார்க்க முடிகிறது. "ஏப்ரல் மாதத்தில் அவர்கள் கரீபியக் கடலை எடுத்துச் சென்றனர். தூதுவர் எவிஸ்கின் கடற்படைப் பொறியாளர்கள் இலக்கமிடப்பட்ட துண்டுகளாக கடலை எடுத்துச் சென்று அரிஸோனாவின் குருதிச்சிகப்புவிடியல்களில் பதித்து வைத்தனர்" என்று எழுதுவதற்கு வருஷக்கணக்காக திரைக்கதை எழுதிய அனுபவம் உதவியிருக்கும். இவற்றையெல்லாம் விட பாட்டிதான் கதைகளுக்கான முக்கிய உந்துசக்தி. 
லூயி ஹார்ஸ் மற்றும் பார்பரா டோமன் ஆகியோருக்கு அளித்த பேட்டியில் பாட்டிதான் மொழிவளத்துக்குக் காரணமானவள் என்கிறார். "அப்படித்தான் பேசினாள். பெரிய கதைசொல்லி." பாராட்டுகிறார். இந்திய துணைக்கண்டத்திலும் கதைகளைச் சுழல் விடுபவர்களாகப் பெண்கள் இயங்குவதை எழுத்தாளர் அனிதா தேசாய் சுட்டிக்காட்டுகிறார். லத்தீன் அமெரிக்காவில் இதே நிலைமைதான். தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட மார்க்வெஸ் அம்மாவைச் சந்திக்கும்போது எட்டு வயதாகி விடுகிறது. எட்டு வயதுக்குப் பிறகு தம்முடைய வாழ்க்கையில் சுவாரசியமாக ஏதும் நிகழவில்லை என்று குறிப்பிடுவது முக்கியமானது. "ஆவிகள் நிறைந்த பெரிய வீடு தாத்தா பாட்டியுடையது. மூட நம்பிக்கை மிகுந்தவர்கள். சட்டென்று மனதில் பதிந்துவிடக் கூடியவர்கள். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் எலும்புக்கூடுகளும் நினைவுகளும் மண்டிக்கிடக்கின்றன. மாலையில் மணி ஆறுக்குப் பிறகு அறையை விட்டுக் கிளம்ப தைரியம் வராது. மாயத்தன்மை கொண்ட, திகில்களாலான உலகம்" என்கிறார் பேட்டியில், 
வீட்டைப் பற்றிய நினைவைக் கொண்டும் பாட்டியின் கதைசொல்கிற முறையைக் கொண்டும்தான் மக்காந்தோவைக் கட்டமைக்கத் துவங்குகிறார். பாட்டிக்கு அப்புறமாகவும் அவரிடம் நிறைய விஷயங்கள். குழந்தைப்பருவத்தில் அரக்காடக்கா ஊரில் வசித்துவிட்டு இளைஞனாகும் முன்பு கிளம்பி நகர உலகத்துக்கு வந்துவிடுகிறார். நகர எதார்த்தம் குறித்த இலக்கணம் வேறாக இருப்பதைப் புரிந்துகொள்கிறார். ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் உலகத்தின் பேரழகி ரெமெடியோஸ் சொர்க்கத்தை அடைவது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றாக விவரிக்கப்பட, மக்காந்தோவுக்கு முதன்முதலில் ரயில் வருகிற செய்தி கிராமத்துப்பெண் ஒருத்தியை அலறியடித்துக்கொண்டு ஓடவைக்கும் அளவுக்கு பயடிமுட்டுகிறது. "சமையல் அறை ஒன்று ஊரையே இழுத்துக்கொண்டு வருவதாக" ரயிலைச் சொல்கிறாள். இந்த இரண்டு நிகழ்வுகள் பற்றியதான நகர மனிதர்களின் விவரணையும் எதிர்வினையும் தலைகீழாக ஆகிப்போகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கிராமத்தின் பிரபஞ்சப் பார்வையை நகரத்தின் நோக்கத்துக்கு மேலானதாக வைத்துக்காட்ட இங்கே முயற்சிக்கிறார். இதுதான் கதைகளின் மாயத்துக்கான ஆதாரம். 
309 

லத்தீன் அமெரிக்காவின் எதார்த்தத்துக்கு ஏற்பட்ட அபாயம் கலாச்சாரம் சார்ந்த அளவுக்கு அரசியல் சார்ந்ததும். என்னவென்று கொள்ளமுடியாத படிக்கு எதார்த்தம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது மார்க்வெஸின் அனுபவம், நிஜம் எப்போதும் கூறப்படும் பொய். தீவிரமான அரசியல் கண்ணோட்டம் கொண்ட மார்க்வெஸிடம் புறநிகழ்வுகள் பெரும் உருவகங்களாக மாறிப்போவது இதனால்தான். ராணுவ வாழ்க்கையை மேற்கொள்கிற கர்னல் அவ்ரலியனோ புண்டியாவும் எதிரி ஒருத்தனை விருந்தாக விழுங்கிய பின் வெகு தூங்கிப் பிறகு மாலைநேரத்தைக் காலை என்று தீர்மானித்து சூரிய வடிவத்திலான அட்டைகளை ஏந்தியவாறு இரவெலாம் ஜன்னலோரங்களில் ஜனங்களை நிற்க வைத்த சர்வாதிகாரியும் நாவல்களில் இப்படித்தான் முடிகிறது வாழ. 
ஸர்ரியலிஸத்திலிருந்து உருவாகி மாற்றம் பெற்றுள்ள அற்புத எதார்த்தம் மார்க்வெஸினுடையது. மூன்றாம் உலகப் பிரக்ஞையை வெளிப்படுத்துவதாகும். அசாத்தியமான, பழமை திகைக்க வைக்கிற நவீனத்தை எதிர்கொண்டு விடுகிறதும் ஊழல்களும் தனிப்பட்ட கவலைகளும் மேற்கத்திய உலகத்தைக் காட்டிலும் உறுத்தும் வகையில் காணப்படுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் என்கிற பரப்பின் மீது நூற்றாண்டுக்கால் சொத்தாகிய நினைவும் அதிகாரமும் கெட்டிதட்டிப் போன அழுக்குகளை உண்டாக்கியுள்ள அரைகுறை சமுதாயங்கள் என்று வி எஸ் நைப்பால் குறிப்பிடுவதுடன் நாவல்கள் ஒத்துப்போகின்றன. நம்பமுடியாத பட்டப்பகலில் சம்பவங்கள். இலக்கிய உலகத்தை மார்க்வெஸ் பிரத்தியேகமாகக் கண்டுபிடித்த ஒன்றாகவோ சுயசரிதைக் குறிப்புகளாகவோ மூடுண்ட அமைப்பாகவோ அணுகுவது தவறு. அந்தரத்தில் தொங்கும் உலகத்தைப் பற்றி அல்லாமல் வாழ்கிற உலகத்தையே இப்படியெல்லாம் எழுதுகிறார். மக்காந்தோ இருப்பது அதன் மாயத்தன்மை. "கார்சியாப் பிரதேசம்" என்பதான தொல்கதையை உருவாக்க தொடர்ந்து முயல்வதாகக்கூடத் தோன்றுகிறது. உதாரணமாக ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலின் முதல் வாக்கியத்தைப் பார்க்கலாம். 
மிகப்பல வருஷங்களுக்கு அப்புறமாகத் தனது மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராக நிற்கிற துப்பாக்கிக்காரர்களை எதிர்நோக்கியிருக்கும் அந்தத் தருணத்தில்தான் கர்னல் அவ்ரலியானோ புண்டியாவுக்கு ஐஸை முதன்முதலாகப் பார்ப்பதற்காகத் தன்னை அப்பா கூட்டிப்போன தூரத்து மத்தியானப்பொழுதானது நினைவுக்கு வரத் துவங்கியது. 
ஏற்கனவே கொல்லப்பட்ட மரணத்தின் கதை நாவலின் முதல் வாக்கியத்துடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. 
310 

தன்னைக் கொல்லப்போகிற நாளில் அதிகாலை ஐந்தரை மணிக்கே எழுந்துவிட்ட ஸான்டியாகோ நஸ்ஸர் பிஷப் வந்துகொண்டிருந்த படகுக்காகக் காத்திருந்தான். 

இரண்டு நாவல்களும் வரப்போகிற மரணத்தைச் சுட்டிக்காட்டி அசாதரணமான பழைய சம்பவத்தை விவரிப்பதில் தொடர்கின்றன. குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலும் மரணத்தில் துவங்கி வாழ்க்கையைச் சுற்றிப் பரவுகிறது. நாவல்களை இணைத்தே வாசிக்கும்படியும் நாவல் ஒன்றை அடுத்ததன் ஒளியில் பரிசீலிக்குமாறும் யாசிக்கிறார். வகைசில பாத்திரங்கள் திரும்ப வருகின்றன. மாஜி சிப்பாய், ஒழுக்கம் கெட்ட பெண், அம்மா, சமரசத்துக்கு முயலும் பாதிரியார், வேதனை கொள்ளும் மருத்துவர். இன்னொரு உதாரணத்தையும் கூறலாம். பலர் சேர்ந்து செய்த குற்றத்துக்குப் பொறுப்பாக இன்னொருத்தனைப் பலிகடா ஆக்குவதை அனுமதிக்கும் தீவினைக்காலம் நாவலின் கதை, நம்பவியலாத சோம்பல் வியாதியால் பீடிக்கப்படுகிற, அறிவிக்கப்படுவதும் முன் அறிவிக்கப்படுவதுமான கொலையைக் கூடத் தடுக்கத் தவறுகிற, நகரத்துப் பிரஜைகளை விவரிக்கும் ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை நாவலை எதிரொலிக்கிறது. கதைகளின் நோக்கங்கள், சாதனைகள் வெவ்வேறாக இருந்தாலும் ஒப்புமைகளும் உள்ளன. 
பாட்டியை விடவும் பிரம்மாண்டமான கதையாகிருதி கொண்டவர். படைத்த மக்காந்தோவை விட பூதாகரமாகிவிடுகிறார். ஆரம்பக்கால எழுத்துக்கள் ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலுக்கான ஆயத்தங்களாகவே தெரிகின்றன. முதலில் எழுதியபோதும் இரண்டு நகரங்களைப் பற்றித்தான். ஒன்று மக்காந்தோ. அடுத்தது பெயரற்ற ஏதோ நகரம். அந்த நகரம் மக்காந்தோவைப் போலன்றி தொல்கதைத்தன்மை குறைந்ததது. இயற்கையானது. பெரியம்மாவின் நல்லடக்கம் கதையில் வருகிற நகரத்தைப் போல. 
குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் முடிவற்ற வாசகங்கள் வருகிற எல்லையற்ற கொடுங்கோன்மையின் வெளிப்பாடாகின்றன. நவீன வளர்ச்சியின் சாத்தியப் பாடுகளும் மாற்றங்களும் மறுக்கப்பட்டதான சர்வாதிகாரத்தை நாவல் வளைத்துச் சொல்கிறது. சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை காலத்தைக் கட்டிப் போடுகிறது. நாவல் சர்வாதிகாரியின் ஆட்சிக்காலத்துக் கதைகளின் மீது ஏறியும் இறங்கியும் செல்கிறது. நாவலின் வளைகோட்டு வடிவம் ரத்த ஓட்டம் நின்றுபோனதை உணர்வதற்கான சரியான உவமை. 
ஆரம்பகால எழுத்துமுறைக்குத் திரும்புவதுபோலத் தோன்றினாலும் உண்மையில் எற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை மீண்டும் புதிய எழுத்து வழி காணும் 
311 

முயற்சியே. நாவல் மரியாதை, அவமரியாதை மற்றும் அவமானம் தொடர்பானது. பயார்டோ ஸான் ரொமானுக்கும் ஏஞ்செலா விக்காரியோவுக்கும் திருமணம். ஆனால் ஸான்டியாகோ நஸ்ஸரைத் தன்னுடைய காதலன் - மாஜி என்று அவள் குறிப்பிடுவதுடன் முதலிரவு முறிந்துபோகிறது. பெற்றோர் வீட்டுக்குத் திரும்புகிறாள். அவள் சகோதரர்களான இரட்டையர்கள் குடும்பத்தின் மரியாதையைக் காப்பாற்ற ஸாண்டியாகோ நஸ்ஸரைக் கொலைசெய்ய வேண்டிய நிலையில், தங்கள் செயல்பாட்டில் இரட்டையர்கள் காட்டும் தயக்கத்தில்தான் சின்ன நாவலின் மறக்கமுடியாத முக்கியத்துவம். நோக்கம் பற்றி ஓயாமல் பீற்றிக்கொள்ளும் இரட்டையர்கள். ஸான்டியாகோ நஸ்ஸர் பற்றி அறியாமலிருப்பது ஆச்சர்யம்தான். நகரத்தின் அமைதியே இரட்டையர்களை பீதியூட்டும் கொலையைச் செய்யத் தூண்டுகிறது. நிச்சயிக்கப்பட்டவளை மறுக்கவேண்டிய நிலையிலுள்ள பயார்டோ ஸான் ரொமான் பயங்கரமான வீழ்ச்சிக்கு உள்ளாகிறான். "கெளரவம்தான் அன்பு" என்கிறது ஒரு பாத்திரம். அவனைப் பொறுத்தவரையோ அது உண்மையல்ல. இதற்கெல்லாம் மூல காரணமாயிருக்கும் ஏஞ்செலா நிதானமாகத் துயரத்தை எதிர்கொள்கிறாள். 
நாவலின் கதைவெளிப்பாட்டுமுறை மார்க்வெஸுக்குப் புதிது. கொலை நடந்து இடத்துக்குப் பல வருஷங்கள் கழித்து பெயரற்ற நிழலுருவான கதைசொல்லி வருவதும் கடந்த காலம் குறித்த விசாரணை மேற்கொள்வதுமான உத்தி. கதைசொல்லி மார்க்வெஸ்தான் என்று நாவல் குறிப்பால் சொல்கிறது. வருகிற பெயர்கொண்ட அத்தை ஒருத்தி அவருக்குண்டு. கொலை நடக்கும் இடம் மக்காந்தோவை எதிரொலிக்கிறது. ஜெரினால்டோ மார்க்வெஸ் அங்கே வந்து போகிறார். இன்னொரு பாத்திரத்துக்கு கோட்டஸ் என்று பெயர். 
இடம் மக்காந்தோவோ, இல்லையோமுன்போலன்றி வெகுதூரத்திலிருந்து எழுதுகிறார். நாவலும் கதைசொல்லியும் அரைகுறை நினைவுகள், புதிர்கள் மற்றும் முரண்பட்ட தகவல்களின் பனிமூட்டத்தின் ஊடாக நடந்தது என்ன, ஏன் என்பதை நிறுவ முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் கிடைப்பது தற்காலிக விடைகள் மட்டுமே. வேர்களிலிருந்து விலகிப் போய் சம்பிரதாயமும் சிரமமும் மிக்க திரைகளின் ஊடே எழுதிச் செல்வதனால் இரங்கற்பாவின் தொனியை நாவல் பெறுவது இப்படித்தான். முந்தைய நாவல்கள் உள்ளடக்கம் மீதான கட்டுப்பாடு கொண்டிருக்க, இந்த நாவலில் சந்தேகத்துடன் உள்ளடக்கத்தை அணுகுகிறார். ஒலிம்பஸ் மலையை விட்டு விலகிவந்த தன்னிலை ஒன்றின் பிரமாதமான விவரிப்பாக புதிய தயக்கம் உருக்கொள்கிறது. இதுதான் நாவலின் வெற்றி. நிச்சயமின்மையுடனும் கூறுகாண் வாசிப்புடனும் எழுத்துமுறை இதுவரை எழுதியவற்றையெல்லாம் விட தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. 
312 

மம்தா 
நாவலில் ஒருவித நீதி போதிக்கப்படுவதையும் லேசாக உணர முடியு முந்தைய நாவல்களில் அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் மட நிலைப்பாட்டை எடுப்பார். கதைகளில் வருகிற  வாழைத்தோட்ட அதிபர்களில் நல்லவர்கள் இருக்க முடியாது  குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் கதை பத்திகளிலாவது ஜனங்கள் பற்றிய புனைவு இருக்கும். பற்றி எழுதும் போது குறை 6)சால்வதை இதுவரை தவிர்த்திருக்கிறார். ஏற்கனவே சொல்லப்பட " நாவலில் தம்மை வேறொரு தொலைவான இடத்தில் நிறுத்திக்கொள்கிறார். கனவுக'' தவிர்க்க இயலாமல் போய் கொடூரமான சம்பவங்கள் நிகழக்கூடிய, குறுகிப்போன சமுதாயத்தின் மீது தாக்குதல் கொடுத்த உதவுகிறது. இத்தகைய எதிர்ப்புணர்வுடன் முன்பு இப்படி எழுதியதில்லை. நாவல் நெடுங்கால மெளனத்துக்குப் பிறகே சிறிதுகாலம் கற்பனைப் படைப்பைக் கைவிட்டிருந்தார். மேதைமை பாதிக்கப்படாமல் பாதை மாறியதற்கு நன்றி பாராட்டியாக வேண்டும். இந்த வருஷம் இங்கிலாந்தில் இதைவிடப் பிரமாதமான புத்தகம் வெளிவரப் போவதில்லை .. 
தமிழில் - தேவதாஸ்