தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Sunday, October 10, 2021

விளாடிமிர் நபக்கோவின் வெதசுவாராஸ்யமான எழுத்துருக்களில் (word beings) ஒருவனான ஸெபாஸ்டியன் நைட் இந்தியாவுக்கு வந்திருந்தபோது ....நாகார்ஜூனன்.


 " தத்தளிப்பு.

சொல்லத் தெரியாமல் சொல்வது. அனுபவத் திற்கும் பாஷைக்கும் எப்போதும் இருக்கும் இடைவெளி. பாஷை என்பது வேட்டை நாயின் கால்தடம். கால்தடத்தை நாம் உற்றுப் பார்க்கும் போது வேட்டைநாய் வெகு தூரம் போயிருக்கும்... ஜே.ஜே. யின் மூளையை வேட்டை நாயுடன் தான் ஒப்பிடமுடியும்...”

“ஸெபாஸ்டியன் நைட் எழுதிச்சென்ற புத்தகங்களின் வாழ்க்கை யானது அவற்றில் காணப்படும் உருவகங்களின் ஊடே சேர்க்கை * களாலான உலகங்களைத் தெரிவிக்கிற ஜன்னல்களைப் போல் உருளும் ஓர் இணைநிகழ்வாக, சிந்தனை ரயிலின் நிகழ்வாக உள்ள உருவகங்களின் ஊடே நிரம்பி வழிகிறது...” -

மூன்று நாவல்களை எழுதிச்சென்ற எழுத்தாளன் ஸெபாஸ்டியன் நைட் என்பவனின் சரிதம் போன்ற ஒன்றை அவனுடைய தம்பியைப் போன்ற ஒருத்தன் எழுதிச்செல்கிறான்' என்று எழுதுகிறார் விளாடிமிர் நபக்கோவ். ஸெபாஸ்டியனின் முதல் நாவல் The Prismatic Bezel;துப்பறியும் நாவலைப் parody செய்கிற burlsque வகை எழுத்து; நேரடித்தன்மை அற்ற கேலியான கதையாடல். 

இரண்டாவது நாவல் Success; நாவலின் தலைப்பான எழுத்தாளனின் புறவயப்பட்ட வெற்றியை விதியாகக் கொண்ட அவனுடைய இயக்கம் பற்றியது. 


கடைசிநாவல் தான் The Doubtful Asphodel என்பது. இது சுயக்காதலும் தேடலும் கொண்டு இறக்கும் தறுவாயில் தன் வாழ்க்கைக்குச் சந்தேகமான அர்த்தத்தை வடிகட்டித்தேடுகிற மனிதனைப் பற்றியது. அவன் வாழ்க்கை வெறும் அர்த்தமற்ற சிதறல்கள், புத்தகங்களில் நிரம்பி வழியும் உருவகங்கள். இலக்கியத்தின் ஓர் உள்ளீடான கேலியை இலக்கியமாக்கும் முயற்சிகள் என்பதாக அமைகிறது... 

The Real Life of Sebastian Night 

by

VLADIMIR NABOKOV 

விளாடிமிர் நபக்கோவின் வெதசுவாராஸ்யமான எழுத்துருக்களில் (word beings) ஒருவனான ஸெபாஸ்டியன் நைட் இந்தியாவுக்கு வந்திருந்தபோது கேரள எல்லையில் தன்னுடைய நாவல்களைப் பற்றி விளக்கிப் பேச விரும்பினான். அரைகுறையாகக் கேட்டவர்களில் கட்சிக்காரர்கள் புடைசூழ உட்கார்ந்திருந்த ஒருவன் தனக்கே போட்டுக்கொன்ட மாஜி எழுத்துதான் ஜே.ஜே. இதுவரை வாசித்துக்கொண்டு வந்துவிட்டவர்களில் ஆச்சரியம் அடையாதவர்கள் அமெரிக்காவுக்குப் போய் அங்குள்ள விளாடிமிர் நபக்கோவின் கல்லறைக்கு அருகில் pose கொடுத்துக்கொண்டு கட்டுரைகள் மூலம் குரல் எழுப்பலாம். ஆச்சர்யம் அடைபவர்கள் இரண்டு நாவல்களிலிருந்தும் மேற்கோள் காட்டப்பட்டுள்ள மேலிரண்டு பத்திகளையும் வித்தியாசப்படுத்திக் கொண்டுவிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள USIS நூலகம் வரை வந்து தேடினால் சிக்க க்கூடிய நாவல் - The Real Life of Sebastian Night by Vladimir Nabokov, First published in 1941. அட்டைப்ப டம்: Michael Train. 

நாகார்ஜூனன்.