தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Friday, February 21, 2020

Undying Flame - MAUNI Tr. Lakshmi Holmstrom --- அழியாச்சுடர்-மெளனி

Undying Flame - MAUNI

That day, unusually for me, I did not go to see him in the morning. The sun had been beating down with a fierce intensity since its first appearance. Overcome by a sense of alienation, which was incomprehensible even to myself, I had not stepped outside die house at all. Deciding that I would see him in the evening, I spent the sweltering morning at home.

This was the day before yesterday. I reached his house at about four-thirty in the afternoon. When I got there, I found him, as usual, seated in a chair in the front room. We had been friends since childhood. Seeing him like that, sitting at the open window, deep in thought, I stood at the threshold of the room for a moment, hesitant to come upon him too suddenly. But he surprised me by calling out to me to come in, even though he had not turned around to seo me. There was something truly startling about his appearance at that moment. In the room was a single chair, and a table beside it. The window in front of him, facing the street, lay wide open.

I entered the room, asking him, "Have you had your coffee yet?"

"No.

"What?"

"Yes, I have been sitting here all morning. Thinking ..." He laughed lightly as he said this.

My friend has almost forgotten bow to laugh and, to my knowledge, he has not laughed at all in recent times. And, even at that moment, his laughter sounded as if it lacked the warmth of emotion. The tone of his voice, and the intensity with which his gaze was directed outside - not once did it turn towards me - made me feel uneasy. Before I could think about this, he began to speak. Of late, he had changed subtly, I feel.

"Come here, my friend. Come and sit here and look ahead of you." Saying this, he rose and perched on the table. I took his place in the chair.

"What do you see out there?” he asked.

A huge tree, stripped of its leaves, looking withered and dead, stood in front of me. Nothing else crossed my vision, not even by chance. The tree seemed to me to be standing there alone, unkempt, dishevelled, mourning silently. Birds which came swooping through the air to perch upon its branches, suddenly grew still, as if they had lost their lives and become one with that tree. Their cries sounded intermittently, like death-calls. After a while, with a quick flutter of wings, they flew away, as if with renewed life. I didn't think about the tree's appearance for too long. I could not quite understand how and why the sights that my friend had seen during the morning of that hot day, staring vacantly with half-closed eyes, had agitated him so much.

When I heard him ask me, "Well?" I was totally taken aback.

I said, “There's just that tree."

“What? Yes, only that tree," he said, as he bent down a little from where he sat, to look at it. Then he began to speak. “Yes, that is it. Can you see it groping for something that the skies do not possess, hands outspread, eyes shut, always searching? It stands there, swaying and moving. It cannot rest; its play is not yet over. Softly, the western wind wafts over it. Clouds come and rest upon it, heavy with love. It shudders, unable to bear their weight. Is it a royal whisk, outspread to cleanse away the clouds from the pathways of the skies? Or does it stand there, yearning for the raindrops which will bring new shoots? Why does it stand? Why?"

I did not care for his tone, nor for his words. “What is the matter with you? When did you become a poet? Why this excitement, and this frustration?"

"Listen, I'll tell you. My mind stepped into the past, yesterday by yesterday, until it came to a standstill at an event that happened nine years ago. I have been restless ever since. I am agitated by everything in an indescribable way. That is all." He stopped. His eyes shone as they had never done before, as if eager to look upon that which is unseeable, ordained by an asariri, a voice from heaven.

He began to speak again. But it was clear that it was not me that he was addressing, “Yes, nine years ago. I was about eighteen years old then, a college student. An incident from those days has played like a refrain in my imagination since this morning. You might remember what I looked like in those days."

"Very well indeed .... You..."

"Yes, yes, I know. I had a long nose, with a slight curve to it, as if to hook and pull back people who moved ahead of me. Beneath that, finely-chiselled lips, partly revealing a set of teeth fit to dazzle. I had always had long hair, worn in a firm knot at the nape of my neck. But, then I got my hair cropped and I would often stroke the short hair, deliberately reminding people of the thick long black locks that I had sacrificed. Lost in the beauty of my own bright eyes, I thought I had worth and value. Perhaps many people looked at me in those days, and looked often. I was not aware of what they thought about me. But now, now I look about me with an empty gaze. My eyes are lifeless. My good looks seem to have died with my youth. But my life did not end in my youth. She too looked at me then."

"She?" I asked.

"Yes! She did too. Listen. How many years is it since I went to the temple? I have not been there after that day. Not until yesterday. I used to go often once. Usually, with you. In fact you were with me that evening.

"It was not a festival day, but there she was, at the temple. I had not known that she would be there. As we were leaving, we crossed her at the entrance, as she was about to go in. She was then perhaps about thirteen. Suddenly, she turned and looked at me. Perhaps it was I who impelled her to turn her gaze towards me. But what was it that drew me, that made me turn and follow her, taking you with me? I don't know. It might have been my own immaturity. Don't say it was love or some such thing, though it leaves me dissatisfied to say there was no reason for what I did. Call it a kind of arrogance, if you like. Something that happens spontaneously, without a cause, itself becomes the cause. Or so it Seems, when we seek a cause.

"Well, I followed her. I followed her so closely that I could have touched her. My lips involuntarily muttered some words. I knew it wasn't because I wanted to say something. There was nothing I could say.

"At the Ishwara sannidhi, she came in front of the deity, bowed her head and stood for a while in silent meditation. I was behind her, immediately behind her. Through the gaps between her folded hands, I glimpsed the innermost sanctuary, its hanging lamps shining dimly, as if from a great distance. Her eyes seemed to have gone beyond the image of the god, past the boundaries of life's beginning and end, to rejoice in some extraordinary happiness. How long we stood there, I don't know. Time stood still, lost in her form, in that Presence.

"When at last, released from her meditation, she turned towards me, I spoke out of a state of ecstasy, and in spite of myself: For you, I am ready to do anything. I am capable of doing anything.

- You and those who came with her were standing a little distance away. You could not possibly have heard those words. But I am certain that she had. She smiled.

"At that moment, a doubt entered my mind. Was she the only one to have heard me? The image within, and the yaali that was one with the pillar in front of us - these, I thought, had heard me too. When I looked at the lingam again, the deity, resplendent in sandal paste and sacred vibhuti, suddenly took form, his brows knitted in anger. Startled and frightened, the yaali which was one with the pillar frowned at me in rage and fear. It rose, rearing on its hind legs, threatening me. I looked towards her. She was looking the other way and she walked away slowly with her companions,

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sannidhi: The sanctum sanctorum. Yaali: A mythical animal with the face of a lion, and the trunk and tusks of an elephant.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


her long braided hair hanging straight down her back. For a while I followed her with my eyes, as if only her footsteps could break the deep oppressive silence of that world. Joining her companions, chattering brightly, anklets ringing, she walked away. The silence of the sanctuary was shattered by the echoes of those sounds ... Bats crisscrossed overhead, shrieking."

My mind raced while my friend was speaking. Spinning out of control it began to draw pictures. The temple, the sanctuary. Yes, bats which are abroad even during the day, wandering about, unaware that it is indeed day. Within that inner space, where daylight hesitates to enter more than halfway, in that dim twilight, the images stand, taking on radiant life. Were temples sculpted in order to nourish that great happiness at the silent centre of our deepest and most private experience? What truths does that sannidhi wish to communicate, surrounded as it is by the corridor with hanging lights, where, to one's shocked surprise, there is no difference between the devotees and their shadows? Are all of us merely shadows? Of what then are we the moving shadows? My mind threw up these questions, and for a moment my hair stood on cod.

There was something magnificent about any friend's expression. His words resonated in my ears as if he had been made privy to some special secret. He paused at times as if he thought it was impossible to communicate his feelings in words. His eyes shone with a bright light then.

"She moved away to perform the ritual circumambulation of the temple," he continued. "Her long plaited hair swayed gently as her footsteps impelled her forward. Follow her, follow her - the words sounded in my mind. impossible to resist. I did not speak the words out loud. There was a vilva tree at the entrance of the temple. While splinters of moonlight fell through its leaves and lay scattered about. I spoke to her silently, wordlessly: Love, look at me.

"And she did turn around. Her eyes too spoke: Follow me.

"I heard a sudden noise. The squeaking of a bat, hanging upside down. It sounded like laughter to the ear, but sent waves of deathly fear into my heart. I stood for a while under the vilva tree, staring after her.

“Then I began to follow her. The moonlight was as bright as day. I followed her, as if I were her long shadow. She turned to look at me just before she reached the corner. That look seemed to plead with me to take back the words I had spoken. There was an allure even in that look of anguish. I had come close to her and had started to say the words once more: For you. I am ready ... But I could not finish what I had begun. She went ahead, while I returned hastily to the vilva tree where I had left you. We walked home in silence."

When he had paused for a while, I asked, "Who was she? How is it that I cannot remember her?”

He took no notice of my question and went on speaking. I began to get impatient.

"Since that day I stopped going to the temple. I did not know why I did so. It seemed to happen naturally. Last night my mind was restless. Unanchored, my imagination wandered about. I set off suddenly, on impulse, walking towards the temple, the deity. It was late at night when I arrived there. I had wished to get there when the crowds had thinned. That way, I could see the deity, in the innermost shrine faraway, even from the entrance to the temple. And in that quiet, there would be that huge lamp with its single great flame shining beside the lingam.

"And then I saw it dimming slightly, then returning to its usual brightness. Some devotee must have been praying there. I moved forward, slowly. That flicker, the sudden dimming and resurgence of the glow was as if the last soul in the world had finished its worship and gone, leaving on earth only that light, inextinguishable even to the very end. This happened yesterday and it revived that fire within me which had been about to die for lack of care, making the flame stand tall again.

The temple was not empty as I had expected. She would be about twenty-two now. She was dressed in the height of fashion. When I saw her this time in the temple, I felt a sudden pain. I even registered a kind of repulsion at this unexpected meeting. She didn't seem to recognize me. Because my own notions of culture and conduct have faltered and are in a state of flux, her fashionable appearance and refinement were in fact of some consolation to me. When I remembered what I had said in her ear, her new appearance stopped me from hating myself. I found myself disliking her instead, with a sudden intensity ... But when she stood in meditation before the deity; she lost that outward veneer. I understood then how human beings acquire beauty in the presence of their god, and to what inward joy they surrender.

"The strength of her meditation drove me a little mad. It made me stand there, staring starkly in a kind of joy. Ecstasy filled me. When she turned around and saw me, she recognized me instantly. Then, for a while, she looked intently at the pillar in front of us. I saw the yaali, indestructible witness to my words, stand up and dance wildly. When I looked upwards, ayyo! - another yaali was watching me, bending low, enraged. Standing there, turning my eyes towards what she was watching, I was seized with anguish. She looked at me as if she were giving me some kind of command. That look pierced through me. Then her gaze left me like one who half gives away her innermost secret in the delirium of a daydream. Before my feelings could be translated into thoughts, before my mind could understand what it was she had said, she had gone away. When I lifted my head I saw that she had turned towards me one last time. Like two gemstones at the end of a deep dark tunnel, tears sparkled in her eyes - I am destiny's shadow. You see in me the seductive harshness of love.

"What did she say? What had she asked me to do? Was it, after all, a dream? No, she never spoke. But what is there in sound or in words? Or indeed in form? They are all meaningless. They cannot make us aware of the truth, they all grow dark, darken. However tightly we hold on to these things, they slip away like smoke. There are these pointing fingers, though, which tell us that all is not quite maya. They point to something else - Look, up there! - yet they themselves disappear even before we learn to move in that direction. In the uncertainty of darkness, we are left with just the belief that unless we make that leap of chance, we may never reach the right path ...

"Look at the tree there, its widely spreading wavy lines, its every living atom, can you not see them merging with the colours of the sky? When it sways gently, it is searching in the wide spaces of the sky. Is it not blindly that it searches?

It had become completely dark. While he sat there, still gazing outwards. I slipped away, without saying goodbye.

When I came outside, I looked upwards. Numberless stars were strewn there, like chalk-marks made by children on night's arching blackboard. They shone with an undying light, as if no matter how much each single star poured out its light, it would never melt nor die. I heaved a great sigh, exhausted, aware that we will never really understand what lies above us. I walked and walked and at last went home.

This morning he is not to be seen. Where he went and why. I do not know. I do not know if he knows that either. My only thought is that He alone knows everything. If indeed there is a He.


அழியாச்சுடர்-மெளனி
வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" http://azhiyasudargal.blogspot.com/2008/09/blog-post_15.html
மெளனி (நன்றி : மணிக்கொடி 1937) வழக்கமாகக் காலையில் அவனைப் பார்க்கப் போவது போல நான் அன்று செல்லவில்லை. உதயத்திலிருந்தே உக்கிரமாக வெய்யில் அடித்தது. தெளிவுற விளங்காத ஒருவித அலுப்பு மேலிட்டதனால் நான் வீட்டை விட்டே வெளிக்------கிளம்பவில்லை. மாலையில் சென்று அவனைப் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி, மிக உஷ்ணமான அன்று பகலை, என் வீட்டிலேயே கழித்தேன். image நேற்று முன்தினம் இது நிகழ்ந்தது. மாலை நாலரை மணி சுமாருக்கு நான் அவன் வீட்டை அடைந்தே.ன். அவன் என் பாலிய சிநேகிதன். நான் சென்றபோது, தன் வீட்டின் முன் அறையில், அவன் வழக்கம்போல் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். திறந்த ஜன்னலுக்கு எதிரே உட்கார்ந்து இருந்த அவன் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக எண்ணித் திடீரென உட்புகச் சிறிது தயங்கினபடியே ரேழியில் நின்றேன். என் பக்கம் பாராமலே, என்னை அவன் உள்ளே அழைத்தது திடுக்கிடத்தான் செய்தது. அவனுடைய அப்போதைத் தோற்றமும் கொஞ்சம் ஆச்சரியமளிப்பதாகவே இருந்தது. உள்ளே ஒரே நாற்காலியும் அதன் அருகில் ஒரு மேஜையும் இருந்தன. மற்றும் எதிரில் வீதிப் பக்கம் ஜன்னல் திறந்திருந்தது. `காபி சாப்பிட்டாகிவிட்டதா?’ என்று கேட்டுக்-கொண்டே நான் உள்ளே நுழைத்தேன். `இல்லை’ என்றான். `என்ன?’ `ஆமாம். காலை முதல் இங்கே உட்கார்ந்தபடிதான் இருக்கிறேன் _ யோசனைகள்_’ எனக் கொஞ்சம் சிரித்தபடி கூறினான். என் நண்பன் சிரிப்பதை மறந்து விட்டான் என்பதும், எனக்குத் தெரிந்து சமீப காலத்தில் சிரித்ததே இல்லை என்பதும் உண்மை. அப்போது அவன் சிரித்ததும் உணர்ச்சி இழந்த நகைப்பின் ஒலியாகத்தான் கேட்டது. அவன் பேசின தொனியும், என்னைப் பாராது வெளியே வெறித்துப் பார்க்கும் பார்வையும் எனக்கு என்னவோ போல் இருந்தன. மேலே நான் யோசிக்க ஆரம்பிக்குமுன் அவன் பேச ஆரம்பித்தான். அவன் சமீப காலமாக ஒருவித மனிதனாக மாறிவிட்டான். `இங்கே வாப்பா; இங்கே இப்படி உட்காரு; எதிரிலே பார்’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து மேஜையின் மீது அவன் உட்கார்ந்து கொண்டான்; நான் நாற்காலியில் அமர்ந்தேன். `நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அதோ அங்கே என்ன தெரிகிறது பார்’ என்றான். இலையுதிர்ந்து நின்ற ஒரு பெரிய மரம், பட்ட மரம் போன்ற தோற்றத்தை அளித்துக்கொண்டு எனக்கு எதிரே இருந்தது. வேறு ஒன்றும் திடீரென என் பார்வையில் படவில்லை. தனிப்பட்டு, தலைவிரிகோலத்தில் நின்று, மௌனமாகப் புலம்புவது போன்று அம்மரம் எனக்குத் தோன்றியது. ஆகாயத்தில் பறந்து திடீரென அம்மரக் கிளைகளில் உட்காரும் பட்சிகள், உயிர் நீத்தவையேபோல் கிளைகளில் அமைந்து ஒன்றாகும். அவற்றின் குரல்கள் மரண ஒலியாக விட்டுவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன. சிறிது சென்று, ஒன்றிரண்டாகப் புத்துயிர் பெற்றுக் கிளைகளை விட்டு ஜிவ்வெனப் பறந்து சென்றன. அதிக நேரம் அம்மரத்தின் தோற்றத்தைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. காலையிலிருந்து உக்கிரமான வெய்யிலில் பாதி மூடிய கண்களுடனும், வெற்று வெளிப்பார்வையுடனும் கண்ட தோற்றங்கள் என் நண்பனுக்கு எவ்வெவ்வகை மனக் கிளர்ச்சிக்குக் காரணமாயினவோ என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. `என்ன?’ என்று அவன் கேட்டது என்னைத் தூக்கிவாரிப் போடும்படி இருந்தது. `அதோ, அந்த மரந்தான்’ என்றேன். `என்ன? மரமா? சரி’ என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்தபடியே சிறிது குனிந்து அதைப் பார்த்துவிட்டு அவன் பேசலானான். `ஆமாம்; அதுதான்; ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடிக் கை விரித்துத் தேடத் துழாவுவதைப் பார்த்தாயா? ஆடி அசைந்து நிற்கிறது அது; ஆட்டம் ஓய்ந்து நிற்கவில்லை..... மெல்லெனக் காற்று மேற்கிலிருந்து அடிக்கும். காதல் முகந்த மேகங்கள், கனத்து மிதந்து வந்து அதன்மேல் தங்கும்...... தாங்காது தளர்ந்து ஆடும்...... விரிக்கப்பட்ட சாமரம் போன்று ஆகாய வீதியை மேகங்களிலிருந்து சுத்தப்படுத்துவதா அது....? அல்லது தளிர்க்கும் பொருட்டு மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது...? எதற்காக...?’ `என்ன நீ பெரிய கவியாகிவிட்டாயே! ஏன் உனக்கு இவ்வளவு வேகமும் வெறுப்பும்.....!’ என்றேன். அவன் பேச்சும் வார்த்தைகளும் எனக்குப் பிடிக்கவில்லை. `சொல்லுகிறேன் கேள்: நேற்று நேற்று என்று காலத்தைப் பின்கடத்தி மனம் ஒன்பது வருஷத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்திற்குச் சென்று நின்றது. அந்த நிகழ்ச்சியை நினைப்பூட்டிக் கொண்ட பிறகு என் நிலை தடுமாறிப் போய்விட்டது. என்னவெல்லாமோ என் மனம் சொல்ல முடியாத வகையில் அடித்துக்கொள்ளுகிறது. அவ்வளவுதான்...’ எனச் சொல்லி நிறுத்தினான். அவன் கண்கள், காண முடியாத அசரீரியான ஏதோ வஸ்துவைப் பார்க்கத் துடிப்பதுபோல என்றுமில்லாதபடி ஜொலித்தன. என்னிடம் சொல்லுவதற்கு அல்ல என்பதை அவன் பேசும் வகை உணர்த்தியது. `ஆம், ஒன்பது வருஷத்துக்கு முன்பு நான் கல்லூரி மாணவன். எனக்கு அப்போது வயது பதினெட்டு, அக்கால நிகழ்ச்சி ஒன்றே இன்று காலை முதல் பல்லவியாகப் பலவிதமான கற்பனையில் தோன்றுகிறது. அப்போது நான் பார்ப்பதற்கு எப்படி இருப்பேன் என்பது உனக்கு ஞாபகம் இருக்கலாம்...’ `நன்றாக... நீ...’ `சரி, சரி, என் நீண்ட மூக்கு, முகத்திற்கு வெகு முன்பாக நீண்டு செல்லுபவர்களைத் திருப்பி இழுப்பது போல வளைந்திருக்கும். அதன் கீழ் மெல்லிய உதடுகள் மிருதுவாகப் பளீரென்ற பல் வரிசைகளைப் பிறர் கண்கூசச் சிறிது காண்பிக்கும். அப்போதுதான் நான் கிராப் புதிதாகச் செய்து கொண்டேன். நீண்டு கறுத்துத் தழைத்திருந்த என் கூந்தலைப் பறிகொடுத்ததாகவே பிறர் நினைக்கும்படி, படியாத என் முன் குடுமியை, என் கையால் நான் அடிக்கடி தடவிக்கொள்ளுவேன். குறுகுறுவென்ற கண்களோடு என் அழகிலேயே நான் ஈடுபட்டு மதிப்பும் கொண்டிருந்தேன். அப்போது என்னை அநேகர் பார்த்திருக்கலாம். என்னைப் பற்றிய அவர்களுடைய எண்ணங்களை நான் கண்டுகொள்ளவில்லை. இப்போதோவெனின் நான் பார்ப்பது வறட்டுப் பார்வைதான். என்னுடைய கண்கள் வறண்டவை தாமே! என் அழகு இளமையிலேயே முடிவடைந்து விட்டது போலும். ஆனால், என் வாழ்க்கை இளமையில் முடியவில்லையே. அவளும் என்னைப் பார்த்தது உண்டு.’ `அவள் யார்?’ என்றேன் நான். `ஆமாம், அவளும்: சொல்லுவதைக் கேள். நான் கோவிலுக்குப் போய் எத்தனை வருஷமாகிறது? அந்தத் தினத்திற்குப் பின்பு, நேற்று வரையில் நான் கோவிலுக்குப் போனதில்லை. அதற்கு முன் அடிக்கடி போய்க்கொண்டு இருந்தேன். நீயும் என்னோடு வருவதுண்டே. நான் சொல்லும் அன்றிரவிலும் நீ என் பக்கத்தில் இருந்தாய். `அது திருவிழா நாள் அல்ல... அவளும் வந்திருந்தாள். அவள் வருவது எனக்குத் தெரியாது. நாம் கோவிலை விட்டு வெளி வந்தபோது உள்ளே போய்க் கொண்டிருந்த அவளை இருவரும் கோவில் வாயிலில் சந்தித்தோம். அவளுக்கு அப்போது வயது பதின்மூன்று இருக்கலாம். அவள் சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வையைத் திருப்பியது நானாக இருக்கலாம். ஆனால் திரும்பி, உன்னையும் கூட்டிக்கொண்டு அவள் பின்னோடு உள் செல்ல என்னை இழுத்தது எது? எனக்குத் தெரியவில்லை. அப்போதைய சிறு பிள்ளைத்தனமாக இருக்கலாம். காதல், அது, இது என்று காரணம் காட்டாதே. காரணமற்றது என்றாலும் மனக்குறைவு உண்டாகிறது. கர்வந்தான் காரணம் என்று வைத்துக் கொள். `அவள் பின்னோடு நான் சென்றேன். அநேகந்தரம் அவளைத் தொடக்கூடிய அளவு அவ்வளவு சமீபம் நான் நெருங்கியதும் உண்டு. என் வாய் அடிக்கடி ஏதோ முணுமுணுத்ததும் உண்டு. அது எதையும் சொல்வதற்கல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. `ஈசுவர சந்நிதியில் நின்று தலை குனிந்து அவள் தியானத்தில் இருந்தாள். அவளுக்குப் பின் வெகு சமீபத்தில் நான் நின்றிருந்தேன். அவளுடைய கூப்பிய கரங்களின் இடை வழியாகக் கர்ப்பக்கிருகச் சரவிளக்குகள் மங்கி வெகு தூரத்திற்கு அப்பாலே பிரகாசிப்பதாகக் கண்டேன். அவன் கண்கள், விக்கிரகத்திற்குப்பின் சென்று வாழ்க்கையின் ஆரம்ப இறுதி எல்லைகளைத் தாண்டி இன்ப மயத்தைக் கண்டுகளித்தனபோலும்! எவ்வளவு நேரம் அப்படி இருந்தனவோ தெரியாது. `காலம்’ அவள் உருவில், அந்தச் சந்நிதியில் ஓடாமல் சமைந்து நின்றுவிட்டது. `தியானத்தினின்றும் விடுபட்டு என் பக்கம் அவள் திரும்பிய போது ஒரு பரவசம் கொண்டவனேபோல என்னையும் அறியாதே `உனக்காக நான் எது செய்யவும் காத்து இருக்கிறேன்; எதையும் செய்ய முடியும்’ என்று சொல்லி விட்டேன்! நீயும், அவளுடன் வந்தவர்களும் சிறிது எட்டி நின்றிருந்தீர்கள். உங்கள் காதுகளில் அவ்வார்த்தைகள் விழவில்லை. ஆனால் அவள் காதில் விழுந்தன என்பது நிச்சயம். அவள் சிரித்தாள். `அவளுக்கு மட்டுந்தானா நான் சொன்னது கேட்டது என்பதில் எனக்கு அப்போதே சந்தேகம். உள்ளிருந்த விக்கிரகம் எதிர்த் தூணில் ஒன்றி நின்ற யாளி அவையும் கேட்டு நின்றன என்று எண்ணினேன். எதிரே லிங்கத்தைப் பார்த்தபோது கீற்றுக்குமேலே சந்தனப் பொட்டுடன் விபூதி அணிந்த அந்த விக்கிரகம், உருக்கொண்டு புருவஞ் சுழித்துச் சினங்கொண்டது. தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிகமருண்டு பயந்து கோபித்து முகம் சுழித்தது; பின்கால்களில் எழுந்து நின்று பயமூட்டியது. அவளைப் பார்த்தேன். அவள் மறுபக்கம் திரும்பி இருந்தாள். பின்னிய ஜடை பின்தொங்க, மெதுவாகத் தன்னோடு வந்தவர்களுடன் சென்றாள். நான் அவளைச் சிறிது தொடர்ந்து நோக்கி நின்றேன். ஆழ்ந்து அமுங்கிய உலக நிசப்தத்தைக் குலைக்க அவளுடைய சதங்கைகள் ஒலிக்கும் ஒலி அவசியம் போலும்! வந்தவர்களுடன் குதூகலமாகப் பேசி, வார்த்தைகளாடிக்-கொண்டே கால் சதங்கைகள் கணீரென்று ஒலிக்கப்போய் விட்டாள். சந்நிதியின் மௌனம் அவளால் உண்டான சப்தத்தின் எதிரொலியில் சிதைவுற்றது. வௌவால்கள் கிரீச்சிட்டுக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன.’ என் நண்பன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் மனம் ஓடியது. அது கட்டுக்கடங்காமல் சித்திரம் வரைய ஆரம்பித்தது _ கோவில், சந்நிதானம், ஆம். பகலிலும் பறக்கும் வௌவால்கள் பகலென்பதையே அறியாதுதான் கோவிலில் உலாவுகின்றன. பகல் ஒளி பாதிக்குமேல் உட்புகத் தயங்கும். உள்ளே, இரவின் மங்கிய வெளிச்சத்தில் சிலைகள் ஜீவ களைகொண்டு நிற்கின்றன. ஆழ்ந்த அனுபவத்திலும் அந்தரங்கத்திலும் மௌனமாகக் கொள்ளும் கூடமான பேரின்ப உணர்ச்சியை வளர்க்கச் சிறப்பித்ததுதானா கோவில்? கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அதன் பிரகாசத்தில் நடமாடும் பக்தர்களுக்கும், அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத திகைப்பைக் கொடுக்கும். அச்சந்நிதானம் எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள்தாமா.....? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?_என்பன போன்ற பிரச்னைகளை என் மனம் எழுப்பியபோது, ஒரு தரம் என் தேகம் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது. என் நண்பனின் பார்வை மகத்தானதாக இருந்தது. ஏதோ ஒரு வகையில், ஒரு ரகசியத்தை உணர்ந்த அவன் பேச்சுக்கள் உன்னதமாக என் காதில் ஒலித்துக்-கொண்டிருந்தன. பேச்சினால் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது என நினைக்கும்போது அவன் சிறிது தயங்கி நிற்பான். அப்போது அவன் கண்கள் பிரகாசத்தோடு ஜொலிக்கும். `அவள் சென்றாள், பிராகாரத்தைச் சுற்றிவர. பின்னப்பட்டிருந்த அவள் கூந்தல் மெதுவாக அசைந்து ஆடியது. அவள் நடை அமுத்தலாக அவளை முன் செலுத்தியது. `பின்தொடர் பின்தொடர்’ என என் மனத்தில் மறுக்க முடியாதபடி ஓர் எண்ணம் தோன்றியது. வெளியில் நான் வாய்விட்டுச் சொல்லவில்லை. பிராகார ஆரம்பத்தில் ஒரு வில்வ மரம் இருந்தது. அதன் இலைகளின் ஊடே நிலவு தெளிக்கப்பட்டு வெண்மைத் திட்டுகளாகப் படிந்து தெரிந்தது. `பிரியமானவளே என்னைப் பார்’ என்று மனத்தில் நான் சொல்லிக் கொண்டேன். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவளும் `பின்தொடர்’ என்று சொல்லுவதைத்தான் அவள் பார்வையில் கண்டேன். ஏதோ ஒரு சப்தம் கேட்டது. அது தலைகீழாகத் தொங்கும் ஒரு வௌவாலின் சப்தம்; காதில் சிரித்து மனத்தில் மரண பயத்தைக் கொடுக்கும் சப்தம். வில்வ மரத்தடியிலிருந்து அவளைத் தொடர்ந்து நோக்கி நின்றேன். பிறகு அவள் பின்தொடரச் சென்றுகொண்டு இருந்தேன். `பகல் போன்று நிலவு காய்ந்தது. பின் நீண்டு தொடர்ந்த அவள் நிழலேபோன்று நானும் அவளைத் தொடர்ந்தேன். மூலைத் திருப்பத்திற்குச் சிறிது முன்பு அவள் என்னைப் பார்க்கத் திரும்பினாள். நான் சொன்ன வார்த்தைகளைத் திருப்பிக்கொள்ளும்படிக் கேட்டுக் கெஞ்சுவது போல அவள் பார்வை இருந்தது. அவள் வருத்தத்திலும் வசீகரமாகத் தோன்றினாள். அருகில் நெருங்கிய நான் மறுபடியும் ஒரு தரம் `என்ன வேண்டுமானாலும் உனக்காக_’ என்று ஆரம்பித்தவன் முழுவதும் சொல்லி முடிக்கவில்லை. நான் திரும்பி வேகமாக வந்துவிட்டேன். அவளும் கீழ்ப் பிராகாரத்திற்குச் சென்றுவிட்டாள். வில்வ மரத்தடியில் நின்றிருந்த உன்னை அடைந்தேன். இருவரும் பேசாது வீடு சேர்ந்தோம்.’ அவன் பேச்சைக் கொஞ்சம் நிறுத்தியபோது, `யார் அவள்? எனக்கு ஞாபகமில்லையே?’ என்று கேட்டேன். என்னுடைய கேள்வி அவன் மனத்திலேபடவில்லை. அவன் மேலே பேச ஆரம்பித்தான். எனக்கு ஆத்திரம் மூண்டது. `அன்று முதல் நான் கோவிலுக்குப் போவதை நிறுத்திவிட்டேன்; எதற்காக நின்றேன் என்பது எனக்குத் தெரியாது. சுபாவமாகத்தான் போவது நின்றுவிட்டது என்று நினைத்தேன். `நேற்று இரவு என் மனம் நிம்மதி கொண்டு இருக்கவில்லை. எங்கேயோ அலையத் தொடங்கியது. கோவிலுக்குச் சென்று ஈசுவர தரிசனம் செய்து வரலாமெனப் புறப்பட்டேன். இரவின் நாழிகை கழித்தே சென்றேன். அதிகக் கூட்டமில்லாமல் இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய எண்ணம். பெரிய கோபுர வாயிலைக் கடக்கும்போதே, சுவாமியின் கர்ப்பக்கிருகம் தெரியும். `வெகு காலமாக, ஜோதி கொண்டு ஜொலிப்பது போன்று நிசப்தத்தில் தனிமையாக ஒரு பெரிய சுடர் விளக்கு லிங்கத்தருகில் எரிந்து கொண்டிருக்கும். அது திடீரெனச் சிறிது மறைந்து பழையபடியே அமைதியில் தெரிந்தது. யாரோ ஒரு பக்தன் கடவுளை வழிபட உள்ளே சென்றான் போலும். நான் மெதுவாகப் போய்க்-கொண்டிருந்தேன். உலகின் கடைசி மனிதன் வழிபாட்டை முடித்துக் கொண்டு அநந்தத்திலும் உலகின் அவியாத ஒளியை உலகில்விட்டுச் சென்றதுபோலத் தோன்றின அந்தத் தீபத்தின் மறைவும் தோற்றமும். தூண்டப்படாது என்னுள் எரிந்த ஒளி நிமிர்ந்து ஜொலிக்கத்தான் நேற்று இது நிகழ்ந்தது. கோவிலில் நான் நினைத்தபடி ஒருவரும் இல்லாமல் இல்லை. `அவளுக்கு இப்போது இருபத்திரண்டு வயது இருக்கலாம். நாகரிகப் பாங்கில் அவள் இருந்தாள். அவளை இப்போது கோவிலில் கண்டதும், என் மனம் வேதனை கொண்டது. எதிர்பாராது நேர்ந்த இந்தச் சந்திப்பினால் அவளிடம் நான் ஒருவகை வெறுப்புக் கொள்ளலானேன். அவள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைத்தேன். இப்போது என்னுடைய நாகரிகப் போக்கு எண்ணங்கள் தடுமாறி, மனமாற்றம் கொள்ளும் நிலைமையில் இருப்பதால், அவளுடைய அமுத்தலும் நாகரிக நாசுக்கும் எனக்குச் சிறிது ஆறுதலைக் கொடுத்தன. நான், முன்பு அவள் காது கேட்கச் சொன்னவற்றை நினைத்துக் கொண்டபோது, என்னையே நான் வெறுத்துக் கொள்ளாதபடி, அவள் புதுத் தோற்றம் ஆறுதல் கொடுத்தது. முழு வேகத்தோடு அவளை வெறுத்தேன். ஆனால் அவள் கடவுளின் முன்பு தியானத்தில் நிற்கும்போது தன்னுடைய மேற்பூச்சை அறவே அழித்து விட்டாள். கடவுளின் முன்பு மனிதர்கள் எவ்வளவு எழில் கொள்ள முடிகிறது, எத்தகைய மனக்கிளர்ச்சிக்கு உடன்படுதல் முடிகிறது என்பதை அப்போது நான் உணர்ந்தேன். `அவள் தியானத்தின் மகிமை என்னைப் பைத்தியமாக்கிவிட்டது. வெறித்து வெறுமனே நிற்கச் செய்தது; ஓர் இன்ப மயம், ஒரு பரவசம். திரும்பிய அவள் என்னைக் கண்டுகொண்டுவிட்டாள். எதிரில் நின்ற தூணை அவள் சிறிது நேரம் ஊன்றிப் பார்த்தாள். என் வாக்கின் அழியாத சாட்சியாக அமைந்து நின்ற அந்த யாளியும் எழுந்து நின்று கூத்தாடியதைத்தான் நான் பார்த்தேன். மேலே உற்று நோக்கியபோது ஐயோ! மற்றொரு யாளி வெகுண்டு குனிந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. அவள் பார்க்குமிடத்தைப் பார்த்து நின்ற என் மனம் பதைத்துவிட்டது. என்னை நோக்கி ஆணை இடுபவளாகத் தோன்றினாள். அவள் பார்வை என்னை ஊடுருவித் துளைத்துச் சென்றது. ஒருவன், தன் உள்ளூற உறைந்த ரகசியத்தை, ஒரு பைத்தியத்தின் பகற்கனாவில் பாதி சொல்லிவிட்டு மறைவது போல அவள் பார்வை என்னை விட்டு அகன்றது. உணர்ச்சிகள் எண்ணங்களாக மாறுமுன், அவள் சொன்னது என்ன என்பதை மனம் புரிந்து கொள்ளுமுன், அவள் போய்விட்டாள். குனிந்த என் தலை நிமிர்ந்தபோது அவள் மறுபடியும் என் பக்கம் திரும்பியதை நான் பார்த்தேன். ஆழமான இருண்ட சுரங்கத்தினின்றும் இருமணிகள் மின்னுவதுபோல இரு சொட்டுக் கண்ணீர் அவள் கண்களினின்றும் உதிர்ந்தது. `நான் விதியின் நிழல். என்னிடம் காதலின் முழு வசீகரக் கடுமையை நீ காணப்போகிறாய். `அவள் என்ன சொன்னாள்? அவள் என்ன செய்யச் சொன்னாள்? நான் என்ன செய்ய இருக்கிறது? எல்லாம் ஒரு கனவுதானா? அவள் பேசவில்லை. சத்தத்தில் என்ன இருக்கிறது; பேச்சில்? உருவில் _ சீ சீ! எல்லாம் அர்த்தமற்றவை_உண்மையை உணர்த்த முடியாதவை; எல்லாம் இருளடைகின்றன. இறுகிய பிடிப்பிலும் துவண்டு புகை போன்று நழுவுகின்றன. ஆனால் எல்லாம் மாயை என்பதை மட்டும் உணர்த்தாது `மேலே அதோ’ என்று காட்டியும் நாம் பார்த்து அதன் வழியே போகத் தெரிந்துகொள்ளுமுன் மறையவுந்தான் இந்தச் சுட்டு விரல்கள் இருக்கின்றன. இருண்ட வழியில் அடையும் தடுமாற்றத்தில் அகஸ்மாத்தாகத் தாண்டிக் குதித்தாவது சரியான வழியை அடைய மாட்டோமா என்ற நம்பிக்கைதான் நமக்கு இருப்பது. `அதோ மரத்தைப் பார். அதன் விரிக்கப்பட்ட கோடுகள், அதன் ஒவ்வொரு ஜீவ அணுவும் வான நிறத்தில் கலப்பது தெரியவில்லையா? மெல்லென ஆடும்போது அது வான வெளியில் தேடுகிறது. அது குருட்டுத்தனமாகத்தானே அங்கே தேடுகிறது.....?’ நன்றாக இருட்டிவிட்டது. அவன் வெளியில் வெறித்துப்பார்த்துக் கொண்டு இருக்கும்போது, நான் சொல்லிக் கொள்ளாமலே வெளிக் கிளம்பிவிட்டேன். வீதியில் வந்ததும் உயரே உற்று நோக்கினேன். இரவின் வளைந்த வானத்திலே கற்பலகையில் குழந்தைகள் புள்ளியிட்டதுபோல எண்ணிலா நட்சத்திரங்கள் தெரிந்தன. தத்தம் பிரகாசத்தை மினுக்கி மினுக்கி எவ்வளவுதான் கொட்டினும், உருகி மடிந்துபடும் அழிவே கிடையாது போல அவைகள் ஜொலித்தன. மேலே இருப்பதை அறிய முடியாத தளர்ச்சியுடன் ஒரு பெருமூச்செறிந்தேன். நடந்து நடந்து வீட்டை அடைந்தேன். இன்று காலையில் அவனை வீட்டில் காணோம். அவன் எங்கே எதற்காகச் சென்றானோ எனக்குத் தெரியாது. அவனுக்குத் தெரியுமோ என்பதும் தெரியாது. எல்லாம் `அவனுக்கு’த் தெரியும் என்ற எண்ணந்தான் _ அவன் என்பது இருந்தால்.

Saturday, February 08, 2020

தி. ஜ. ரங்கநாதன்& சங்கரராம் - க.நா.சு இலக்கிய சாதனையாளர்கள்

தி. ஜ. ரங்கநாதன்& சங்கரராம் - க.நா.சு
இலக்கிய சாதனையாளர்கள்

தி. ஜ. ரங்கநாதன்
கம்பன் பிறந்த ஊரில் பிறந்தவர் - தி. ஜ. ரங்கநாதன்.
"அவன் காலத்துப் பள்ளிக்கூடத்தில் கம்பன் எத்தனாங்கிளாஸ் வரையில் படித்தானோ- எனக்குத் தெரியாது. நான் எலிமெண்டரி ஸ்கூல் தாண்டியதில்லை'" என்று ஒரு தரம் சொன்னார் தி. ஜ.ர. - எல்லாம் அவராகக் கற்றுக்கொண்டது தான், வெ. சாமிநாத சர்மா தனக்குத் தெரியாத விஷயங்களை எழுதக்கூடாது என்ற கொள்கை உடையவர். அதேபோல மொழிபெயர்ப்புகளில் - எவ்வளவு சிக்கலான விஷய மானாலும் - மிகச் சிறப்பாக, தெளிவுடன், பழகு தமிழில் மொழிபெயர்த்து விடுவார் தி. ஜ. ர. குமாவூன் புலி, ஒரே உலகம், மகாத்மா காந்தி, அதிசய உலகத்தில் அலிஸ் என்று பல நூல்களையும் சிறப்பாக மொழி பெயர்த்தவர் அவர்.
சதுரங்கம் முதல் ரேடியோ மெக்கானிஸம் வரையில் எல்லாவற்றையும் தானாகப் படித்துக் கொண்டவர் தி. ஜ. ரங்கநாதன், விஷயங்களைச் சரிவரத் தெரிந்து கொளள வேண்டும் என்று அளவற்ற ஆசை அவருக்கு. நடை முறையில் மோட்டார் யந்திரம் பழுதுபார்ப்பது முதல் ரேடியோ ரிப்பேர் செய்வது வரையில் அவர் தானாக பழகிக் கொண்டிருந்தார்.
சக்தி காரியாலயத்தில், சக்தி பத்திரிகையின் எடிட்டராக அவர் இருந்தபோதுதான் அவரை முதல் தடவையாகச் சந்தித்தேன். அவரிடம் நான் ஒரு கதையைக் கொடுத்தேன். மார்க்கண்டன் என்று கதை. கதையைப் பிரித்துக்கூடப் பார்க்காமல் வாங்கி வைத்துவிட்டு “உங்களுக்கு ரேடியோ மெக்கானிஸம் தெரியுமா?'' என்று கேட்டார். “தெரியாது'' என்று பதில் சொன்னேன். “தெரிந்து கொள்ள ஆசையில்லையா?'' என்று கேட்டார். "இல்லையே'' என்றேன். 'அதெப்படி ஆசையில்லாது இருக்க முடியும்?'' என்று அவர் கேட்டதும், சம்பந்தமே யில்லாமல் சைக்கிள் விடக்கூட எனக்குத் தெரியாது'' என்று நான் சொன்னதும் எனக்கு நினைவிருக்கிறது.
“நீங்கள் ஏன் நாவல்கள் எழுத முயலக்கூடாது?'' என்று ஒருதரம் அவரைக் கேட்டேன்,
'எழுத முயன்று பார்க்கவில்லை என்று நீங்கள் நினைப்பது சரியில்லை. பல தடவை முயன்று பார்த்திருக் கிறேன். முதல் அத்தியாயத்துக்கு மேல் நகரமாட்டேன் என்கிறது. கதைக்காக உருவாக்கிக்கொண்ட மூன்று நாலு பேர்வழிகளையும் மேலே என்ன செய்யச் சொல்வது என்று புரியவில்லை '' என்றார்.
எஸ். வி. வி.க்கும் அவருக்கும் மாம்பலத்தில் துமிலன் வீட்டில் நடந்த ஒரு இலக்கிய நண்பர்கள் கூட்டத்தில் நடந்த ஒரு விவாதம் நினைவுக்கு வருகிறது. எஸ். வி. வி. தான் நாவல் எழுதுகிற பாணியைப்பற்றிச் சொன்னார். "எல்லா நாவலையும் அப்படி எழுதினால் ஒரே மாதிரியாக அமைந்துவிடுமே!'' என்று தி. ஜ.ர. அவரைக் கேட்டதும் எஸ். வி. வி. அவரை "நீங்கள் ஒரு நாவலும் எழுதியதில் லையோ?'' என்று மடக்கினார். எப்படித் தெரிகிறது?' * என்றார் தி. ஜ.ர. 'நாவல் எழுதியவராக இருந்தால் இந்த மாதிரி ஒரு அசட்டுச் சந்தேகம் வந்திராது. ஒரு உதாரணம் சொன்னால் அது எல்லாவற்றிற்கும் எந்த சந்தர்ப்பத்துக்கும் பொருந்தும் என்று எண்ணி விடுகிறவரால் நாவல் எழுதவே முடியாது'' என்று விளக்கினார் எஸ். வி. வி. தி. ஜ.ர. பதில் சொல்லவில்லை .
பல இலக்கிய நண்பர்கள் கூட்டங்களுக்கு வந்து பங்கு கொண்டிருக்கிறார். தி.ஜ.ர. பல விஷயங்களை அவர் அளவில் அழுத்தமாகவே சொல்லுவார். ஆனால் அவர் சொல்லுகிற விஷயங்கள் அவர் முக்கியமான எழுத்தாளர் என்று எண்ணுபவர்கள் இடையே கூட எடுபடாது. அவர் சொல்கிற விஷயம் சரியான விஷயமாக இருந்தால்கூட எடுபடாது. இது ஏன்? என்று நானே பல சமயம் ஆச்சரியப் பட்டதுண்டு.
''மணிக்கொடிக்காரர்கள் என்னைச் சிறுகதையாசிரிய னாகக்கூட ஏற்றுக்கொள்வது கிடையாது'' என்று குறைப்பட்டுக்கொள்ளுகிற மாதிரி ஒருதரம் கூறினார். அது உண்மைதான். "ஏன் அவர்கள் - ஏற்றுக்கொள்வ தில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது?'' என்று கேட்டேன். சிறிது நேரம் யோசித்துவிட்டு நாணயமாக எனக்குத் தெரியவில்லை'' என்று சொன்னார். எனக்குத் தெரிகிற காரணத்தைச் சொல்லட்டுமா?'' என்று கேட்டேன். கு.ப. ரா., புதுமைப்பித்தன், சிதம்பர சுப்பிரமணியம் போன்ற மணிக்கொடி எழுத்தாளர்கள் சிறுகதை என்கிற இலக்கிய உருவத்தில் நம்பிக்கை உள்ள வர்கள். உங்களுக்கு அதில் பூரணமாக நம்பிக்கையில்லை. சமயம் நேருகிறபோது சிறுகதையும் எழுதுகிறீர்கள். அவ்வளவுதான்'' என்றேன். “அது உண்மையாகவே இருக்கலாம்'' என்று ஏற்றுக்கொண்ட தி. ஜ.ர. ' எனக்கு -உபயோகமான எழுத்து. என்பதிலும், essay என்கிற இலக்கிய உருவத்திலும் இருக்கிற நம்பிக்கை சிறுகதையில் வரவில்லை '' என்றார். -
தமிழில் வேறு ஒருவரும் செய்யாத அளவுக்கு அவர் essay என்கிற இலக்கிய உருவத்தை மிக அற்புதமாகக் கையாண்டிருக்கிறார். அவருடைய பொழுதுபோக்கு
என்கிற கட்டுரைத் தொகுப்பு மிகவும் அற்புதமாக வந்திருக்கிற ஒரு தமிழ் நூல். A loose sally of the mind என்று essay என்கிற இலக்கிய உருவத்துக்கு அர்த்தம் சொல்லுவார்கள். அந்த மாதிரிப் பார்க்கும்போது தி. ஜ. ரங்க நாதனின் எஸ்ஸேஸ் லக்ஷிய உருவம் பெற்றவை என்று சொல்லவேண்டும். ஒரு நாற்பத்தொன்பது கட்டுரைகள் அடங்கிய இந்த நூலைத் தமிழுக்குக் கிடைத்த ஒரு அரிய பொக்கிஷமாகவே கருதவேண்டும்.
தி. ஜ. ரங்கநாதன் இந்தக் கட்டுரைகளில் எந்தெந்த மாதிரியான விஷயங்களை, பிரச்னைகளை எழுப்புகிறார் என்று நினைத்துப் பார்ப்பதே சுவாரசியமான விஷயமாக அமைகிறது. தாயுமான ஸ்வாமிகள் இப்போது உயிருடன் இருந்தால் எந்தப் பத்திரிகை ஆபீஸிலாவது அவருக்கு ஆசிரியர் உத்தியோகம் கிடைத்திருக்குமா என்று ஒரு கேள்வி. பாடத்தெரியாதவன் சங்கீதத்தைப் பற்றிப் பேசலாமா கூடாதா என்று ஒரு கேள்வி. ஸைக்கிள் வண்டியை துவிச்சக்கரவண்டி என்று சொல்லலாமா உதை வண்டி என்று சொல்லவேண்டுமா? - பகல் தூக்கத்துக்கு மிகவும் உகந்த வேலை வாத்தியார் வேலையா, வேறு ஏதாவதா? ஒரு பத்திரிகை நிருபர் சென்னை சட்டசபை ஒரு இரவு முழுவதும் அங்கத்தினர் களைத் தூங்கப் போகவிடாமல் வேலை செய்து சரித்திரத்தைப் படைத்துவிட்டது என்று ஒரு - பத்திரிகை நிருபர் எழுதியது சரியா அல்லவா? கடவுள் தோல்வி யறுவது யாரிடம்? - இந்தமாதிரிப் பல கேள்விகளுக்கு
அவர் கட்டுரைகளில் விடை காணலாம்.
கட்டுரைகளைத் தவிர பல குழந்தை நூல்களையும் படைத்திருக்கிறார் அவர். தமிழ்வாணன் என்கிற மிகவும் வெற்றி பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளர் ஒருதரம் என்னிடம் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. 'தி. ஐ. ரங்க நாதன்தான் என் ஆதர்ச புருஷர் . அவர் அடியேனுக்குப் போட்ட பிச்சைதான் நான் இன்று என் அறிவு என்று
சொல்வதெல்லாம்'' என்று சொன்னார். இதை உண்மை யென்றே வைத்துக் கொள்ளலாம். தி. ஜ. ரங்கநாதன் இலக்கியவுலகில் அவ்வளவாக வெற்றி காணாதவர். என்றாலும் பலரும் அவரை ஒரு குருவாக மதித்து ஏற்றுக் கொள்வதில் பெருமை கண்டார்கள். வ. ரா.வும், தி. ஜ.ர.வும் அந்தத் தலைமுறை எழுத்தாளர்களின் -குருபீடத்தில் இருந்தவர்கள். பலர் பின்னர் வ. ரா. விட மிருந்து நகர்ந்துவிட்டார்கள். தி. ஜ. ரங்கநாதனிடமிருந்து நகரவேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்பட்டதில்லை.
மஞ்சேரி - ஈசுவரன் என்கிற சிறுகதாசிரியரும் தி. ஐ. ர.வும், ஆப்த நண்பர்கள். இந்த நட்பு அவர்கள் ஆயுட்காலம் பூராவும் நீடித்தது. பல ஈஸ்வரன் சிறுகதைகளை தி.ஜ.ர . அழகுபட மொழிபெயர்த் திருக்கிறார்.
ஒரு தினசரிப் பத்திரிகை ஆசிரியராக வேண்டும் என்று தான் தி. ஜ. ரங்கநாதனுக்கு ஆசை. பத்திரிகையாளர்களே நடத்திய ஒரு தினசரியில் போய்ச் சேர்ந்தார். ஆனால் பத்திரிகையில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. திரும்பவும் மஞ்சரியின் ஆசிரியராக வந்து சேர்ந்துவிட்டார், தனக்கு இவ்வளவுதான் என்ற நினைப்புடன். ஓரளவுக்கு ஆசைகள் அதிகம் இல்லாது வாழ்ந்து விட்டவர் என்று தி ஜ. ரங்கநாதனைச் சொல்லவேண்டும். -
*****************************
சங்கரராம்
தமிழ் நாவல் இலக்கியவுலகின் முதல்வராகக் கருதப் பட வேண்டியவர் சங்கரராம் என்கிற புனை பெயரில் எழுதிய T. L. நடேசன் என்பவர். நாற்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் நாவலின் இலக்கிய மறுமலர்ச்சியைச் சந்தேகத்துக் கிடமில்லாமல் தொடங்கி வைத்தவர் சங்கரராம். மண்ணாசை என்கிற அவர் நாவல் நாற்பது களிலும் பின்னரும் ஏற்பட்ட ஒரு நாவல் கலை வளத்துக்கு முன்னோடியாகச் செயல்பட்டது. அவரைத் தொடர்ந்து ஷண்முகசுந்தரம், நான், மற்றவர்கள் எழுதினோம்.
மண்ணாசை நாவல் கலையின் ஒரு சிகரத்தை எட்டிப் பிடித்தது என்று சொல்ல வேண்டும். கிராமத்துக்குத் திரும்பிப்போ, நகரங்களை நம்பாதே என்று ஒரு இயக்கம் இருபதுகளிலும் முப்பதுகளிலும் தீவிரமாக இருந்தது. இதன் ஒரு கூறு மகாத்மாகாந்தியின் சிந்தனைகளையும் தொட்டது என்று சொல்லலாம். இலக்கியத்தில் இதன் முதல் நவீன ஆரம்பம் என்று நட் ஹாம்ஸனின் நிலவளத் தைச் சொல்லவேண்டும். 1919-ல் அதற்கு நோபல் இலக்கியப் பரிசு கிடைத்தது பரவலாக இந்தியாவிலும் பேசப்பட்டது என்று தெரிகிறது. பாரதியார் அந்த நாவலையும், நாவ லாசிரியர் பற்றியும், பத்திரிகாசிரியராக ஒரு குறிப்பு எழுதி யிருக்கிறார்.
இந்தக் கிராமத்துக்குத் திரும்பிப்போ' இயக்கத்தின் செயல்பாடாகவே கே. எஸ். வேங்கடரமணியின் இரண்டு நாவல்களையும் (முருகன், கந்தன்) கவனிக்கலாம். அவை ஆங்கிலத்தில் ஏற்படுத்திய தாக்க அலைகளை விட அதிக மாகத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டபோது ஏற்படுத்தியது. (ஒரு நாவலை மொழி பெயர்த்தவர் கிருஷ்ணகுமார். இரண்டாவது நாவலை மொழி பெயர்த் தவர் ஆசிரியரே.) கே. எஸ். வேங்கடரமணியைப் பின்பற்றி சங்கரராம் தன் நாவலை Love of the Dust என்று ஆங்கிலத் தில் எழுதினார். குடியானவன் தன் மண்ணை நேசிக்கிற அளவு வேறு எதையும் நேசிப்பதில்லை என்கிற ஒரு அடிப்படை விஷயத்தை ஒரு மனுஷ்யப் பார்வையுடன் இந்த நாவலில் விவரித்திருக்கிறார். இதை மொழி பெயர்த்து அவரே வெளியிட்டபோது கல்கியும் மற்றவர் களும் நாவல்கள் எழுதத் தொடங்கி விட்டார்கள். ஆனால் அவர்களிடம் இல்லாத ஒரு இலக்கியத் தரம், கலை மேன்மை சங்கரராமிடம் இருந்தது. தன்
இந்த நாவல் இப்போது படிக்கக் கிடைப்பதில்லை; அச்சில் இல்லை என்பது பற்றித் தமிழர்கள் வெட்கப்பட வேண்டும். அது ஒரு Classic status என்று சொல்லக் கூடியதை எட்டிவிட்ட நாவல். அதைப் படிக்காதவன் எவனும் தமிழ் நாவலைப் பற்றிப் பேச லாயக்கில்லாதவன் என்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன், அதற்குப் பிறகு பல நாவல்களும் தொடர்கதைகளும் எழுதினார் சங்கர ராம். ஆனால் அவை அந்த முதல் நாவலின் தரத்தை எட்டியதாகச் சொல்ல இயலாது. இன்னொன்றும் கூடவே சொல்லவேண்டும். தமிழில் எழுத ஆரம்பித்தபிறகு அவர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதவில்லை . தமிழில் எழுதுவது அவர் திருப்திக்குப் போதுமான தாக இருந்தது.
- மண்ணாசை மூன்று நாலு பதிப்புகள் கடகடவென்று வந்தன. இருந்தும் பிரசுரகர்த்தாவிடம் சண்டையிட்டுக் கொண்டு (வேறு என்ன? பணத்தைப்பற்றித்தான்) வேறு ஒருவரிடம் - நூலைப் பிரசுரிக்கத் தந்தார். அதோடு, பதிப்புகள் வருவது நின்றுவிட்டது. பிரசுரகர்த்தர்கள், ஆசிரியர்களுக்கிடையே நிலவுகிற இன்றைய நிலைப்பற்றிய வியாக்கியானமாக இதைக் கொள்ளலாம்.
நாவலாசிரியராகப் பெயர் பெற்ற சங்கரராம் பல சிறு கதைகள் எழுதியிருக்கிறார். இன்று விமரிசன ரீதியாக எனக்குத் தோன்றுவது அவர் சிறுகதையில் சாதித்த அள வுக்கு நாவல்களில் சாதிக்கவில்லை என்பது தான். இதற்குக் காரணம் தேடிக்கொண்டு வெகு தூரம் போக வேண்டிய தில்லை. மண்ணாசைக்குப் பின்னால் வந்த அவர் நாவல் கள் எல்லாமே தொடர்கதைகளாக வந்தவைதான். பத்திரிகைத் தேவையையும் பணத்தேவையையும் காரண மாகக் கொண்டு எழுதப்பட்டவை. சிறுகதைகள் உள்ளே யுள்ள உந்துதலால் எழுதப்பட்டவை.
அவர் முதன் முதலில் எழுதிய நூலும் ஒரு சிறுகதைத் தொகுப்புத்தான். ஆங்கிலத்தில் Children of the Kaveri என்று ஆறணா விலை போட்டிருந்த அந்தப் புஸ் தகத்தை எடுத்துக்கொண்டு தானே பிரசுரித்திருந்த மாதிரி தானே விற்க அவர் ஒரு நவராத்திரி லீவில் அண்ணாமலை யூனி வர்ஸிடி ஹாஸ்டலுக்கு வந்தார். ஹாஸ்டல் பையன்கள் எல்லோரும் லீவுக்கு ஊருக்குப் போயிருந்தனர். என்னைப் போல லைப்ரரியில் படிக்கிற அக்கறையுடன் நாலைந்து பேர்வழிகள் மட்டுமே இருந்தோம்.
சங்கரராமைக் கண்டதும் அவர் புஸ்தகத்தில் - எனக்கும் பின்னால் நேரப்போகிற கதியை நினைத்துக் கொண்டே - மூன்று பிரதிகள் கமிஷன் கழித்து ஒரு ரூபா கொடுத்து வாங்கிக் கொண்டேன். மூன்று பிரதிகள் எதற்கு?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டார். நான் என் னுடைய இலக்கிய அபிலாஷைகளைச் சொன்னேன். ஓரளவுக்கு அகம்பாவத்துடன் “அப்படி ஒன்றும் எழுதுவ தென்பது சுலபமான விஷயம் அல்ல'' என்று சொல்லிவிட்டு பேச்சை நிறுத்திக் கொண்டார். அந்த அகம்பாவம் எனக்குப் பிடித்திருந்தது. நன்றாக எழுதுவதென்பது, அப்படி ஒன்றும் சுலபமான காரியம் இல்லை தான். நன்றாக எழுதுபவர்கள் அகம்பாவம் கொள்ள நிச்சயமாக உரிமை உள்ளவர்கள் தான் என்று இன்றும்கூட 1985-ல் நினைத்துப் பார்க்கும் போதும் தோன்றுகிறது.
இது என் கல்லூரி நாட்களில் முப்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் நடந்தது. பின்னர் அவரைச் சந்தித்தபோது 1944, 1945-ல் இது பற்றி அவருக்கு நினைப்பூட்ட முயன்றேன். சந்திப்பு எனக்கு நினைவிருந்தமாதிரி அவருக்கு நினைவில்லை. ஆனால் அந்தப் புஸ்தகம் விற்கவேயில்லை. இருநூறு முந்நூறு ரூபாய் கைநஷ்டப் பட்டதோடு சரி'' என்றார். இந்தத் தொகுப்பிலிருந்து 1957, 58-ல் நான் பம்பாயில் சந்தித்த Joseph Kalmer என்பவரிடம் நாலைந்து கதைகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடு செய்ததும், அதற்குக் கணிசமான அளவில் சங்கரராமுக்குப் பணம் வந்தது என்றும், அது காரணமாக இன்னும் கொஞ்சம் மொழி பெயர்ப்புகள் சாத்தியமா என்று கேட்டுக்கொண்டும் சங்கர ராம் என் வாலாஜா வீட்டு மாடிக்கு வந்ததும் நினைவிருக் - கிறது.
ஒரு சமயம் பேச்சுவாக்கில் அவர் பிள்ளை குட்டிகள் குடும்பம் என்று கேட்டபோது "அதெல்லாம் சாரமில்லாத விஷயங்கள். அது பற்றிப் பேச வேண்டாம்'' என்று சொல்லிவிட்டார். ஏதோ தனியாக இருப்பதாகவும், ஒரு கோசாலை நடத்துவதாகவும் அதில் ஏகப்பட்ட நஷ்டம் என்றும் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு விடை பெற்றுப் போனார்.
வீட்டில் தெலுங்கு பேசுபவர் என்று எண்ணுகிறேன். அகண்ட காவேரிக் கரையைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் ஒரு விலாசம் இருந்தாலும் அதிகமாகச் சென்னையில் தங்காதவர் என்று எண்ணு கிறேன். நான் நடத்திய நூற்றுக்கணக்கான இலக்கிய நண்பர்கள் கூட்டங்களில் ஒன்றுக்குக்கூட அவர் வந்ததில்லை என்று நினைவிருக்கிறது. காரணம், விரோதமோ அல்லது அதனிடம் அவநம்பிக்கையோ அல்ல - அவர் அநேகமாக சென்னைக்கு வெளியே இருந்தார் என்பதுதான்.
பணத்துக்குக் கஷ்டப்படுவதைப் பற்றியும், தன் புஸ்தகங்களைப் போட்டவர்கள் சரியாகப் பணம் கொடுப்ப தில்லை என்பது பற்றியும் தாராளமாகச் சொல்லுவார். இதில் எவ்வளவு தூரம் கற்பனை, எவ்வளவு தூரம் நிஜம் என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் அவருடன் அவ்வளவாக நெருங்கிய பழக்கம் எனக்கு ஏற்படவில்லை.
தன் பிற்கால நாவல்களைப் பற்றி ஒரு சமயம் என் அபிப்பிராயத்தைக் கேட்டார். “மண்ணாசை நல்ல நாவல்'' என்று நான் சொன்னதும் மற்றதையெல்லாம் எழுதியிருக்க வேண்டாம் என்கிறீர்களா?'' என்று கேட்டார். 'அதை எப்படி நான் சொல்ல முடியும்?'' என்று பதில் சொன்னேன். அவருக்கே தன் சிறுகதைகள் பற்றிக் கேட்க நினைவில்லை.
நான் இல்லாத வேறு ஒரு சமயம் வீட்டுக்கு வந்திருக் கிறார். அப்போது யாரோ ஒரு இலக்கியத் தகுதியற்ற வருக்கு சாஹித்திய அக்காதெமி பரிசு கிடைத்திருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்திருந்த சமயம். என் மனைவி அவருக்குக் காபி கொடுத்துவிட்டு “உங்களுக்கு இன்னும் வரவில்லையே இந்தப் பரிசு?'' என்று கேட்டிருக்கிறாள். வராதம்மா வராது. எனக்கெல்லாம் வராது!'' என்று பதில் சொன்னாராம்..
தனக்கு சாஹித்திய அக்காதெமி பரிசு வரவில்லையே என்று மறுதடவை என்னைச் சந்திக்கும்போது ஆதங்கப் பட்டார். “அது அவ்வளவு முக்கியமா?'' என்று கேட்ட தற்குச் சற்றுத் தயங்கிவிட்டு எனக்கு உடனடியாக இப்போ கோசாலையைத் தொடர ஒரு ஐயாயிரம் வேண்டும். எங்கே போவது?'' என்றார். கோசாலையை மூடிவிட்டு அந்தச் சமயம் சென்னைக்கு வந்து விட்டார் என்று கேள்விப்பட்டேன்.