தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, January 29, 2020

Beyond Perception - MAUNI பிரக்ஞை வெளியில் - மௌனி,

Beyond Perception - MAUNI    Tr.  Lakshmi Holmström

பிரக்ஞை வெளியில் - மௌனி,
"Look there, at that girl," said Sekaran.

"Those girls?" corrected his friend Kittu, laughing, N as he walked by his side. .

The two had crossed the expanse of sand and were striding towards the edge of the sea. The fading evening light fell on people seated here and there along the beach, touching them with beauty. There wasn't much of a crowd there, though, that evening. At some distance, just where the waves died at the shore, were three girls, facing them, deep in conversation.

Sekaran had been gazing intently at them as he walked along with his friend. He repeated, now, "I am not usually in the habit of looking at girls. I am talking to you about her - that one there."

Kittu still could not fathom which of the three girls Sekaran had indicated by his glance. Sekaran had come to stay in town for a few days, to rid himself of the tedium of life in the village. And, at times, he said things which even his childhood friend Kittu was hard put to understand. Besides this, Sekaran's behaviour in recent days had struck Kittu as being particularly odd. “Whom do you mean? The one who swallows her escaping teeth to stop them from falling out? Or the one who looks as if she is restraining her crazy hair from flying off her head by plaiting it tightly into two?" Kittu spoke in an easy bantering tone. No profound comparisons had been intended, his lighthearted words were meant only to provoke laughter. Either his imagination could not extend to the other girl, or he could not find the comparisons he wanted within a currently fashionable idiom. Anyway, he stopped there.

“Yes, Kittu, I recognize the ones you are describing. I don't mean them, nor do I even particularly want to look at them. But tell me what strikes you the instant you see the third girl. If you can't find some trendy urban mode of description, then try the traditional vocabulary of the Tamil pundit."

"Can't do that, my friend ... Can't even try to scc if it might work. I never learned Tamil formally, you see ..."
-Well, that might be one thing that you managed to do right. Otherwise you would have been splitting hairs over words and letters. At least now you are not in a position to do so. But listen, I was saying something to you and you've interrupted me and made me change my train of thought completely ... Look at that girl now. Let us see what occurs to you, how 'apt your descriptions and comparisons can be."

Kittu's glance swept over her from the top of her head to her feet, and yet was unable to take in all of her. Her appearance, her beauty, her charm plunged him into a sudden surprise. It was impossible to know where exactly that grace, which could be heard only in whispers, was being held captive. She was like a silent, vivid mystery. One could not free one's self of her, nor shake free one's gaze. It was as if she could reflect whatever mood or expression the spectator chose. Kittu stood still, momentarily amazed that there should be one so beautiful on this earth

Sekaran held him by the shoulder and shook him hard as if to bring him back to life. “Why do you stand there as if you were dead, as if you have never seen anyone like her? Can't you let your imagination lead you? Something that one has seen sometime, somewhere, lies forgotten at the bottom of the mind. A yearning to seek it waits at the very corners and edges of one's eyes. At the first sight of her it fills the eyes and spreads over the face, proclaiming with joy, This is it! This is how miracles turn, without a sense of shock, into true happiness ... Oh, I can't explain it in a way that will make you understand ... Yet I feel pressed for time, too." Sekaran was silent for a moment. Then, glancing at her again, he said, “It is when you look upon her in such a way that she becomes the source of imagination spreading through each throbbing pulse-beat of your life."

"Sekara, I know very well the depth of your thoughts and the vehemence of your feelings. But, when your mind is so overtaken by emotion, I really don't know what it might lead to." Kittu's voice betrayed his concern.
“Kittu, in some ways you are right, I think ... Recently, I have felt I don't understand anything any more... You know Sushila very well. It is my great good fortune to have her for my wife. But she was born by mistake into this world. Perhaps she too was fortunate in some way, in having me as her husband. When I look at her now, all sorts of thoughts pass through my mind. When a husband looks at his wife, boundless notions occur to him. These days, sometimes, my love for her has gone beyond all limits, and I have immediately felt afraid ... No, it is not quite right to say that ... But I do feel a strange fear in my heart. Yet, it seems there is a. seductiveness about that fear, too. It draws me close, even as it drives me away. This is what Sushila has done to me ... I am often weary of attending to family matters at home. I came here, thinking my heart would be eased if I stayed in town for a few days ... Yet, even here, when I see this girl, she takes on the appearance of Sushila."

Sekaran spoke these words in a rush before they had walked ten paces. Yet, beneath the hasty words, a certain calm was perceptible. "I don't know what I'm blurting out. Don't misunderstand me ... Look at that girl in the middle, she is the one I meant. I told you that in recent times, when I look at Sushila, all sorts of ideas come to my head. Those confusions become a bit clearer when I look at this girl. That is what I wanted to say to you. And you will understand, I know. Anybody else might misconstrue what I have said, and think ill of me ... Just look at her. How bravely her beauty ventures out to strike you! She is a young girl, as yet unmarried. She appears to be womanhood itself. Do you know what fearful strength womanhood possesses? But, a woman, by the very fact of being so, must become a man's wife. And a husband tries to confine this huge notion of womanhood within the tight frame of a child's slate, and gives himself the pleasure of drawing a picture there, which he calls Wife. As for seeking the womanhood in her, that is a terrifying thing ... Well, Kittu, do you ever feel afraid when you look at your wife?" Sekaran was smiling as he said these words.

Absorbed in their conversation, they had now come very close to the girls. Afraid that their words might have been overheard, they suddenly stopped, as if the continuous sound to which they had both assented had vanished. The girls too seemed to have stopped speaking in exactly the same way, as soon as they realized that the men were near them. Anxious that what they had said amongst themselves might have been overheard by the other group, they exchanged shy glances, hesitant smiles. Because they experienced the same feeling at the same time, there became established between them a subtle bond without their even being aware of it. And that bond would either tighten or slip away, depending on the impact of all the incidents and circumstances that were yet to come.

The next day, at about one, Sekaran was about to go into a restaurant for a cup of coffee. By chance he saw that girl at the entrance. Startled, they stopped and looked at each other. A slight smile spread on both faces.

Sekaran laughed as he looked at her and asked, "Those others?”

She, in her turn asked, “That other?” She went on, "It is neither evening nor are we at the seaside that I should be whiling away time with them."

"Quite right ... shall we have some coffee?" "Not now, thank you. Perhaps another time ..." she said.

“Very well. This evening, maybe ...?” She nodded and moved away hastily. Sekaran stood where he was for a time. He looked as if he was in the middle of a pleasant dream.

That evening, Sekaran happened to go to the seaside on his own. He noticed them from a distance, sitting exactly where they had been that first day. When he came up to them, he began saying,

"Have you been waiting ..." stopped, and altered his words. Have you been here a long while?”

They seemed a little startled. Then that girl answered, “We've been here for a little while."

He sat down at some distance from them. The girl looked at the others, and said in a voice which revealed no expression whatsoever, "I happened to meet him in town this afternoon." The others looked at these two in turn, as if they were bound together by a rope.

These three girls, Bhanu, Sushila and Sumati, came from well to-do and respectable families. Neither they nor their parents could quite decide what they should do next, now that they had completed their studies. They had fallen into the habit of meeting every evening at the seaside, as a way of passing time. And time passed by more pleasantly indeed after Sekaran joined them in their evening conversations. His words were always enjoyable and le lud a pleasant disposition. An affection began to grow between the three girls and Sekaran, without their even being aware of it. Even though they had known him for so short a time, they began to look upon him as an old friend. They had accepted him and he them, without ever exchanging names or making formal introductions. When there has been no opportunity for these in the first meeting, then it is certainly prudent to clarify these matters in due course,

One day, Sekaran was in an obvious state of excitement. Turning to Sushila in particular, he said, "Well, Sushila ..." About to say something in a rush, he stopped short, startled by what he had said. He turned awny and stared into the distance. The girls looked at ench other. They too were surprised.

Smiling a little sarcastically, Bhanu asked him, "What might your name be?"

Sekarnn turned around to face her. "Sekur," he said, and her name?'

"You live just called her Sushila, so why do you ask mey" "I truly didn't know that," he said. After a while, with a certain air of composure he went on, "Did you ever play at the swings? Do you know this game? When you were little, you might have taken turns on the swing, pushing each other. The child on the swing would move at great speed past the one pushing her. How strange that game would be if the child on the swing seemed one person at a distance, and quite another when seen close-up! In those days, the same swinging form used to appear to me in two different and alternating perspectives. But now, I seem to be using the same name for two different people swinging by." There was a certain charm in the way he laughed out aloud. "Forgive me for speaking to you so familiarly, and after knowing you for so short a tine ... Someone who is very close to me, whom I care about greatly, is called Sushila. Now, when I hear that your name too is Sushila, my mind turns in odd ways at the coincidence. That's all."

It was nearly a month since Sekaran had left his home in the village. He had at first stayed for a few days with Kittu. Then, saying that he was returning home, he had, in fact, taken a room and continued to linger in the town. It seemed that he could not bring himself to lenve the place. But, in the past few days, he had been thinking of home frequently. He would say each evening to the girls, "I'll go home to the village tomorrow, most probably." Yet he would be there to meet them the next day.

One evening, Sekaran was anxious to arrive at the seashore somewhat early, for he did not wish to startle the girls who probably were quite sure that he had at last left the town that day. Pulled between luis increasing need to go home and the desire to stay where be was and continue to feel the delight he experienced in talking to the girls, he wns caught in a dilemma. He felt as if he were stumbling about in the dark, widespaces of perception. Ile observed the affairs of the world as if he stood in a tiny crack splitting the boundary line which divides sleep and waking. Perhaps that is the

place from which the world is given that mysterious vencer that makes it, and all that it contains, appear substantial and true, that vision that is lost when we sleep, forgotten when we wake ...

Sekaran had spent the morning in some distress and had arrived early at the bus-stand, intent on going to the seaside. Unable to push himself to the front of the crowd, he let two buses pass by. As he watched the buses pull away, it seemed to him that the whole world was moving on, leaving him there on his own. Yet another bus went by, while he gazed after it, wishing that at least the girls might be left behind, along with him. The street spread wide, and, as if ignoring the trees and houses on either side, ran east to west, narrowing into the distance where it seemed to touch the horizon. Trees stood on either side, along the verges of the street, in many strange forms and in various colours; while between them, the houses could be seen, some visible, others hidden from view.

Sekaran saw the trees and houses standing there, startled into immobility, like himself. Then, as the trees moved gently in the wind, they seemed to shake. He could hear a dog barking in the house that stood opposite. The echo gave the odd impression that it was indeed the house that was barking. Some distance away he could see a clump of casuarina. It looked absurd, as if it were dancing about in political fervour, a banner tied to its head. Towards the west, the sun was just about to set. The whole world seemed to be tinted a pale saffron yellow, and took on a withdrawn look. An intense emotion stirred within Sekaran's mind, unable to find an outlet. His features assumed a harshness, and a contemptuous smile appeared at the corner of his mouth. He stood there. observing the spectacles of the street, like a living idol who watches from his pedestal, the ecstatic devotion of modern-day bhaktas, a sarcastic smile on his face.

The noises of the town, like impatient cries, paraded the streets, unnoticed by anyone. Motor cars flew past and disappeared. Many people walked on, like corpses, desperate to retrieve the lives that had escaped them. And there were others, half-running, holding on to their lives for fear that they would run away from them. All forms seemed both apparent yet hidden, all noises heard yet unheard, all that was happening seemed chaotic, incomprehensible, disordered and awkwardly scattered about. The sensory impressions that he had acknowledged separately as this form, this sound, this name, this appearance, seemed to slip away from their normal order so that his mind could no longer grasp or accept them.

A popular film tune fell upon his ear, forcing itself on him. It was the sound of modern civilization, the attempt of a tea-stall keeper to make his business take on a form larger than itself. Sekaran stood there, letting the buses pass him by, observing the street. He was overwhelmed by the idea that the whole world was being eroded to an inordinate degree through these trivial activities. International commerce, which used the strength of human beings as its capital, seemed to have ground to a standstill. Not seeing gain nor profit, it was now beginning to eat into its very capital.

Although he had meant to be early, it was actually very late by the time he arrived at the seaside. Even from a distance he was instantly aware of where they sat, talking together. As he came near, Bhanu welcomed him, smiling. “Well, Sekar, you are very late this evening. You must have come directly from the village, maybe?”

Sushila said quietly, “You did not go home to the village today." It sounded, to the others, both a question and an exclamation.

Bhanu added, “How can one go unless there is an invitation?” “But they don't know at home that I am here,” said Sekaran.

Bhanu began to laugh loudly, "Oho, Sekar left home in anger, without telling them where he was off to."

"Look Sushila, what Bhanu says is not true, right?" Sekaran asked, in an almost pleading voice.

For some days Sushila had been finding Sekaran's conversation very disturbing. She did not know about the others, but sometimes she disliked the tone of his words. There had once been a calm and depth in his conversations, which had been very attractive. But for the past couple of days she had noticed a guardedness and hesitation in his speech that she found almost repelling. When she wondered why this should be so, she was possessed by different emotions. In turn she felt annoyance, fear, anger and sympathy, and she became weary thinking about it. Sometimes she also felt a kind of grief.

The girls did not really approve of him leaving his wife and children and his village to while away his time in town. They were aware that their own fathers were seeking bridegrooms for them. When a girl, who is yet unmarried, thinks about a man whom she does not know intimately, when she waits for him, can it possibly be the same as when a wife longs for and looks forward to her husband's return? Wife and unmarried girl were by definition different, yet by virtue of being female were, at the same time, similar. No, they did not like it that he refused to go home, that his wifc was waiting for him. Sekaran was wrong in staying in town.. Sometimes it also seemed wrong that they should talk to him as they did.

Often Sushila would wonder if indeed she was the reason for his not going home. Perhaps he was refusing to go home because of the pleasure he derived, both from talking to her, and in being heard by her. Sushila could neither prevent her thoughts from following in that direction, nor could she quite comprehend those ideas which flashed through her mind. Before her mind could become aware of the thoughts that had tumbled out, and follow them to the place where they had perched, they had flown elsewhere. She could not confront the thought that Sekaran would not go home because of her, because she prevented it. She could think of herself neither as being possessed of so cruel a will nor of being so contemptible a character. Was it not a terrible thing to separate a man from his wife? And for another woman to engineer it? Who was she? And could she do such a thing? What did it mean to speak of oneself, and of one's nature and character? Is it by their transformations and opposites, even through our denials and refusals, that what we know as “I” and “mine” reveal themselves as truth? If that is so, can these characteristics that we claim for ourselves be described as firm or steadfast? What are they, really? Sushila could not work it out clearly. It seemed that a name intervened by accident and became the target for a number of attributes, roving without form or home, for these things called “I” and “my character” to pierce and tunnel through. Sushila was filled with strange thoughts. Was she not, after all, a strange girl? Her mind seemed to stretch infinitely ...

As they were walking along after having parted from him, Sushila said, “Bhanu, is it right for him to stay here, or would it be better for him to go home? What do you think? You could say something casually, as if you understood it all well. Or, in another mood, you could say that his staying on here is wrong whether he knows it or not. From that point on, our conversation could branch off into all sorts of directions: what we are aware of and what we are not aware of; what we are responsible for; knowingly or unknowingly. Right. Wrong. Accountability. All these words will take on a number of connotations and meanings. I can debate in opposition to all those notions until you are bored. But when I try to speak what I feel, when I try to express the paradoxical truths of life and experience, then I can only make it sound like an absurdity ..."

She paused for a while and then carried on. “It strikes me that I didn't consider Sekaran as a man at first ... I understand very well what men are and what masculinity is supposed to be about. Men are like roosters, flapping their wings and crowing at the threshold, while the backyard door is left open so that they can slip away. But masculinity is like a plucked hen. I think, after all, I regarded Sekaran as I would a woman, and spoke to him in that way. Can a woman discern the power of womanhood in a man? Is it possible? Is that the reason why I both like and dislike him? He has a wife who has the same name as I. Is it she that I am looking for in hin? Has he claimed her womanhood and made her so helpless? I want to cling to something and weep my heart out." Saying this, she held on tightly to Bhanu. Sumati, following them, was deep in her own thoughts, quiet as a deaf-mute.

Sekaran's words had certainly sounded as if he were not at ease that day. Sushila, on the other hand, had spoken to him very fluently, and even sparklingly. It seemed that she was preventing him from going home by this kind of conversation. Perhaps Sushila was thinking of the extent to which any man repels a woman by his antics and his words. How could a woman bear to spend a lifetime with a man, as his wife ... How could such an experience be described as a pleasure, or be called "love"? What a dilemma, to have to live intimately with someone who was actually repulsive! In order to live one's life always in a decent way, how many subterfuges one had to use! Perhaps it was only when their husbands were out of sight and elsewhere, that women got some sort of pleasure in waiting for their return. Sushila had begun to think that Sekaran's wife's life was profoundly dependent on her own existence. She thought to herself that what she had done - and was doing now - was indeed to stop him from going home. Sushila, who had so far had the impression of standing in the middle of a great void, now became aware that such a thought could give her a place too. Suddenly she realized that what she had thought of before as a cruel tendency in herself, to which her mind would not agree, could now be seen differently.

It had grown quite dark. Many of the people who had been sitting about on the beach had gone their way. A few others were preparing to leave. They too rose to their feet. They would have to go to the junction, walk along the opposite street for some distance and then part from Sekaran at the crossroads there. As they were crossing the road, they heard the noise of a motor car coming from the left. Leaving him, the girls turned back and reached the pavement edging the road. Sekaran, however, stood there in the middle of the road. startled, still, unaware of the traffic about him. The car coming towards him swerved quickly, but seemed unable to stop from colliding with him as it went past. It continued at that speed, without stopping, as if nobody had even noticed what had happened. Sekaran stumbled, lost balance and began to collapse. As he was falling, Death pushed ahead of everyone else and caught him.

Bhanu ran towards him, just as she saw him fall and, stooping down to stroke him gently, said, "Ayyo, our Sekar ... Oh, god, there is neither speech nor breath ..." Tears welled up in her eyes.

Sushila, who had arrived at her side, murmured, “Our Sekar," as she helped Bhanu to her feet. Then she said, “Come, Bhanu, we must go ... before the crowds begin to gather..." and quietly she led her away. Sushila was certain in her mind that he had died.

"But we are abandoning him in the middle of the street ..." Bhanu's words seemed to enter Sushila's soul like an unspoken shriek as she held her friend's face to her chest. Sunk in her own sorrow, Sumati followed them.

Sushila realized that in an instant, the place where she stood had, once again, become a void. She walked, it seemed, in empty space, like a form without a name. By standing in the way, between husband and wife, she had found a place for herself, a means of giving a wife the delight of perpetually waiting for her husband by obstructing his return. Now Death had plucked away that place and forcefully pushed her off. How unjustly just Sekaran's death seemed! Sushila walked on in great uncertainty, not knowing how or where her life henceforth would find a place for itself,

For some days, they had not met at the seaside. Sushila would often stand at the window of her upstairs room, gazing outward. She who had once felt that her very thoughts weighed heavily upon her, now knew neither grief nor joy. It was as if she stood watching as a name shed itself of the burdensome form that it had assumed, and floated away gently into space, a mere name. Who would it be, were the name "Sushila” to inhabit another form? Does the shadow that leaves the body when it is dark, recognize its own body when it is light once more, and can it attach itself anew with this knowledge? When the name "Sushila" cast her aside, did she take form again in her imagination as Sekaran's wise, Sushila?

In the village, it is not possible to forsake the morning and evening chores. It is necessary to wake up at dawn, even before the first light, sprinkle the front yard with cowdung, sweep it, and draw the kolam. Somehow, the kolam falters ... perhaps because the darkness of the night did not bring restful sleep. Where it should lighten in the east, nothing appears, however carefully one looks. This darkness which had made a heap of all that had been spread out in the night, in order to set it alight, how dense indeed it was before the first light!

No sign of her husband, yet the day lengthens towards night. The afternoon extends itself when her child stops circling about her legs and falls asleep in her cradle. But night intervenes and stops the day. In the evening, the sun disappears. As soon as the night arrives, she lights a lamp, and placing it in the niche in the thinnai, stands by the pillar, like a shadow. She looks westward, far beyond the place where the sun sank. Her vision is keen, but she can see nothing. Sushila climbs down the front steps and worships the deity in the temple opposite, then takes the lamp and goes in ...

The night is never foreshortened, but grows longer and longer. Were the distressed soul to be overwhelmed by sorrow, then at least it can look forward to dreams of joy. Perhaps life is nothing except the pleasure of pain.

Sushila, unmarried, would often look outward from her westward facing upstairs window, on her own, staring into the distant horizon, as if she were searching for her selfhood everywhere. And, in seeing Sekar's wife Sushila in her imagination, it was as if she had discovered herself.

Young Sushila stood by her window, becoming the wife who awaited her husband's return and his passionate "love."
In that case, a woman "in love” is an unmarried widow - an absurdity!


பிரக்ஞை வெளியில் - மௌனி

‘ அதோ பார் அந்தப் பெண்ணை ’ என்றான் சேகரன்.

‘ பெண்களை ...? ’ என்று திருத்தினான், அவனோடு கூடப்  போய்க்கொண்டிருந்த, அவன் நண்பன் கிட்டு  சிரித்துக்கொண்டே. இருவரும் மணற்பரப்பைக் கடந்து, சமுத்திரக்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே, மங்கும் மாலை ஒளியில் வசீகரத்தோற்றம் கொண்டு, அநேகர் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அன்று கடற்கரையில் அதிக கூட்டமில்லை. கொஞ்சதூரத்தில் கடல் அலை மடியும் கரையின் சமீபமாக, மூன்று பெண்கள் அவர்கள் பக்கம் பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்துக்கொண்டே, தன் நண்பன் கிட்டுவுடன் பேசி நடந்துவந்த சேகரன்             ‘ எனக்கு பெண்களைப் பார்க்கும் வழக்கம் கிடையாது, அதோ அந்தப் பெண்ணைத்தான் சொல்லுகிறேன் ’ என்று மறுபடியும் சொன்னான். சேகரன், பார்வையில் குறிப்பிட்ட பெண்ணை கிட்டுவால், அம்மூவரில் யார் என்று தெரிந்து கொள்ளமுடியவில்லை. கிராம வாழ்க்கையில் அலுப்படைந்து அதைத் துடைத்துக்கொள்ள, பட்டணத்தில் சில நாட்கள் தங்கிப் போகலாமென்று வந்த சேகரன் பேச்சுகள், அவன் பாலிய சிநேகிதன் கிட்டுவால் கூட, சில சமயம் புரிந்து கொள்ளமுடியவில்லை. மற்றும் சமீப சில நாட்களாக சேகரன் போக்கும் ஒரு விதமாக கிட்டுவிற்குத் தோன்றியது.

‘ யாரைச் சொல்லுகிறாய் ...? வாயிலிருந்து தப்பி ஓடும் பற்களை, வெளியில் விடாது தடுத்து விழுங்குகிறவளையா ... பிச்சல மயிர் தலையிலிருந்து பறந்து போகாது இருக்க இரட்டைப் பின்னலாகத் தெரிவதையா ?’ எனச் சொல்லி  நிறுத்தினான் கிட்டு. பேச்சில் கேலி படர பேசினானே ஒழிய, இக்கற்பனைகள் அவர்களை ஆழந்து குறிக்கும் உவமைகளல்லாது ஏதோ மேலெழுந்த வாரியாக, பிறர் கேட்டுச் சிரிக்கவேண்டுமென்பதற்காகத் தான் இருந்தன. மேலும் மற்றுமொரு பெண்ணிடம் இவன் கற்பனைகள் ஓடவில்லையோ, அல்லது அந்த பட்டணச் சோதா மோஸ்தரில் கற்பனைகளைக் காண முடியவில்லையோ, எதினாலோ அவன் பேச்சு நின்றது.

‘ சரி கிட்டு நீ குறிப்பிட்ட பெண்களைக் கண்டு கொண்டுவிட்டேன். அவர்களைச் சொல்லவில்லை, நான் பார்க்கவுமில்லை.  அவர்கள் நடுவில் இருக்கிறாளே அவளைப் பார்த்ததும் உனக்குத் தோன்றுவதைச் சொல் ... பட்டண ரீதியில் முடியாவிட்டால். தமிழ்ப்பண்டிதர் பேச்சிலும் கொஞ்ச முயன்று பார் ..........’ என்றான் சேகரன்.

‘ அது முடியாதப்பா ... முடிகிறதா என்று பார்ப்பதற்கும் என்னால் முடியாது. நான் முறையாகத் தமிழ் படிக்க வில்லையே ’ என்றான் சேகரன்.

‘ இந்த வகையிலாவது நீ செய்தது ஒன்று சரி ... இல்லாவிட்டால், எழுத்தாலும் பேச்சாலும் பாயைப் பிராண்டிக்கொண்டிருப்பாய் ! .... நான் எதையோ சொல்லும்போது, நீ எதையோ பேசி என் எண்ணம் போகும் திசையை மாற்றிவிட்டாய். சரி, அது போகட்டும், அதோ அந்தப் பெண்ணைப் பார். உனக்கு என்ன தோன்றுகிறது, உன் உவமைகளும், பேச்சுக்களும் அவளிடம் எவ்வளவு பொருத்தம் காணுகிறது. பார்க்கலாம் ’ என்றான் சேகரன். அப் பெண்ணை  உச்சந்தலையிலிருந்து, கால் வரை தடவிய கிட்டுவின் பார்வையில் பட்டது ஒன்றுமில்லை. அவள் தோற்றம், அழகு, வசீகரம் எல்லாம் இவனை ஒரு பிரமிப்பில் ஆழ்த்தியது. அவள் சௌந்தரியம் எதில் அடங்கி, கேட்காது முணுமுணுக்கிறது என்மது தெரியவில்லை. மொத்தத்தில் பார்வையினின்றும் உதறமுடியாது நிற்கும், விடுவிக்க முடியாத ஒரு மௌன ஜீவப் புதிர் போன்று விளங்கினாள். பார்ப்பவர் மனது கொள்ளும் எந்தப் பாவனையையும் ஏற்று நிற்பவள் போன்று இருந்தாள். இவ்வளவு அழகி உலகிலிருக்க முடியுமோ என்று ஜடமாக பிரமித்துப் பார்த்து நின்றான் கிட்டு. அவன் தோளைப் பிடித்துக் குலுக்கி - அவனை உயிர்ப்பிக்க வேண்டிய நிமித்தம் போலும் - சேகரன் சொன்னான் ... இவளைப்போல் பார்த்ததில்லை என அவளைப் பார்த்து பிரமித்து ஜடமாக நிற்கிறாயே ... கற்பனைகளுக்கு இடமாக முடியுமோ எங்கேயோ எப்போதோ கண்டதொன்று, மனத்தடியில் மறந்தும் கிடக்கிறது. அதைத் தேடும் ஆர்வம் கண் விளிம்பில் ஒட்டிக் காத்திறுக்கிறது; இவளைப் பார்க்குங்கால் கண்களில், முகத்தில் பரவி, ‘ இதுதான் ’ .. எனக் களி கொள்ளுகிறது .. எந்த அதிசயமும், பிரமிப்பின்றி ஆனந்தமெனப்படுவது இவ்வகையில்தான் .. எனக்கு புரியும்படி சொல்ல வரவில்லை. அவகாசமும் அவசரப்படுகிறது ’ ... எனப் பேசிய சேகரன், சிறிது மௌனமானான். அவளை ஒரு தரம் பார்த்துவிட்டு... ‘ இவ்வகையில் அவளைப் பார்ப்பதில்தான், அவள் கற்பனை ஊற்றென உன் ஒவ்வொரு ஜீவ நாடியிலும் துடிப்பில் பரவுவாள் ... ‘ எனச் சொல்லி நிறுத்தினான்.

‘ சேகரா, உன் மூளை வன்மையும், உணர்வு வேகமும் எனக்குத் தெரியும், கற்பனைகளில் நீ உணர்ச்சி வசமாவது, உன்னை எங்கு கொண்டு செலுத்துமோ தெரியவில்லை எனக்கு ..  ’ என்று கிட்டு கொஞ்சம் வருத்தம் கலந்த குரலில் சொன்னான்.

‘ கிட்டு, நீ சொல்லுவது ஒரு வகையில் சரியெனப்படுகிறது .. சமீப காலமாக, எனக்கு ஒன்றுமே புரிவதில்லை .... சுசீலாவைத்தான் உனக்கு நன்றாகத் தெரியுமே, அவளை மனைவியாக அடைந்தது என் பாக்கியமென்றாலும் தவறியே இவ்வுலகில் பிறந்த அவள், என்னை அடைந்ததும் அவளுக்கு ஒருவித  பாக்கியம்தான். அவளை நான் இப்போது பார்க்கும்போது, என்னென்னவோ தோன்றுகிறது .... மனைவியை கணவன் பார்ப்பதில் என்னென்னவோ எல்லையற்று தோன்றவிருக்கிறது. சிறிது காலமாக, என் பிரியம் அவளிடம் அளவு கடந்துவிடுகிறது ... உடனே மனது ஒரு பயம் அடைகிறது... பயம் என்று சொல்வது சரியல்ல. மனதில் ஒரு விநோத பயங்கரம் காணுகிறது. அந்த பயங்கரத்தில், ஒரு வசீகரமும் காண முடிகிறது போலும். கிட்டவும் இழுக்கிறது, எட்டவும் துரத்துகிறது. இது, இப்போது என் மனைவி சுசீலா செய்கிற வேலை...குடும்பக்காரியங்களில் எனக்கு அடிக்கடி அலுப்பும் சலிப்பும் தோன்றுகிறது. இங்கு வந்து சில நாள் தங்கிச் செல்வதில் மனது கொஞ்சம் லேசாகும்  என எண்ணித்தான் இங்கு வந்தது...இங்கேயும் பெண்ணைப் பார்க்கும்போது அவளைக் காணும் தோற்றம் கொள்ளுகிறேன்...’ ஒரு வேகத்தில் பத்து தப்படி நடக்குமுன் இவ்வளவையும் பேசிவிட்டான். ஆனால்  அதற்கடியிலும் ஒரு நிதானம் தெரிந்தது. சிரித்துக்கொண்டே கிட்டுவைப் பார்த்து, ‘ ஏதோ உளறுகிறேன்-நீ ஒன்றும் நினைத்துக்கொள்ளாதே ... அதோ நடுவில் உட்கார்ந்து இருக்கிறாளே, அவளைத் தான் சொன்னேன். சமீப காலமாக சுசீலாவைப் பார்த்தால் எனக்கு என்னவோ தோன்றுகிறது என்று சொன்னேனே. அதுதான் இவளைப் பார்க்கும்போது கொஞ்சம் தெளிவடைவதுபோல தெரிகிறது. என்ன  என்பதுதான் புத்திக்கு புலப்படவில்லை. அதைத்தான் உன்னிடம் சொன்னேன். உனக்கும் நன்றாகப் புரிந்து இருக்கும் ! ... உன்னிடமில்லாமல் வேறு யாரிடமாவது சொன்னால் தவறாகவும், கேவலமாகவும் என்னை நினைப்பார்கள் ... அதோ அவளைப் பார் .. அவள் அழகு எவ்வளவு வசீகரமாக துணிவு கொண்டு தாக்குகிறது. அவள் கலியாணமாகத கன்னிப்பெண். பெண்மை எனப்படுவது அவள்தான் போலும். எவ்வளவு பயங்கர சக்தி பெண்மை என்பது உனக்குத் தெரியுமா ?  பெண்ணென்றால் ஒருவனுக்கு மனைவியாகத்தான் வேண்டும். பிருமாண்ட வெளியில் உருக்கொள்ளும் பெண்மையை, சட்டத்திற்குட்பட்ட சிறு கற்பலகையில், மனைவியென சித்திரம் வரைந்து இன்பமடையப் பார்க்கிறான் கணவன். அவளிடம் பெண்மையைப் பார்ப்பதோ, பயம் கொள்ளுவதுதான் ... என்ன கிட்டு, நீ எப்போதாவது உன் மனைவியைக் கண்டு பயம் கொள்ளுவது உண்டோ ’ என்றான், சிரித்துக் கொண்டே சேகரன்.

இவர்கள் பேசிக்கொண்டே அப்பெண்கள் சமீபமாக வந்துவிட்டார்கள். தங்கள் பேச்சு, அவர்கள் காதில் விழுந்து இருக்குமோ என்ற சந்தேகம் கொண்டு திடுக்கிட்டுப் பேச்சை நிறுத்தினர். இசைந்து தொடரொலியெனக் கேட்டு வந்த ஒரு சப்தம், இவர்கள் பேச்சை நிறுத்தியதும், திடீரென மறைந்ததான  தோற்றம் கொண்டனர். பேசிக்கொண்டிருந்த அப்பெண்களும், இவர்களைச் சமீபத்தில் கண்டதும் இவர்களைப் போன்றே பேச்சை நிறுத்தினர் போலும் ஒருவர் ஒருவர் தத்தம் பேசியது மற்றவர் காதில் ஒருக்கால் விழுந்து இருக்குமோ, என்ற சந்தேகத்தின் சஞ்சலத்தில், ஒருவரை ஒருவர், ஓரக்கண்ணால், சிறிது புன் சிரிப்பில் மாறி மாறிப் பார்த்துக்கொண்டனர். இருவருக்கு, ஒரேவிதமான உணர்வு பிடிப்பு ஒரே சமயத்தில் உண்டாவதின் நிமித்தமாக, அவர்களிடையே ஒரு சூக்ஷுமமான பிடிப்பு, அவர்களையறியாமலே ஏற்பட்டு விடுகிறதுபோலும். மேலும் அப்பிடிப்பு, பின் சமய சந்தர்ப்ப விசேஷங்களைப் பொருத்து, இறுகவோ நழுவவோ, மற்றும் என்னென்ன விதத்தில் பாதிக்கவோ காத்து நிற்கும் போலும்.

மறுநாள் பகல் ஒரு மணி சுமாருக்கு சேகரன் காப்பி சாப்பிட, ஒரு ஹோட்டலுக்குப் போய்க் கொண்டிருந்தான். அந்த ஹோட்டல் வாயிலில் அப்பெண்ணை யதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தது. வியப்பில் ஒருவரை ஒருவர் சிறிது பார்த்து நின்றனர். இருவர் முகத்திலும் ஒரு சிரிப்பு படர்ந்தது.

‘அவர்கள் !?’ என்று அப்பெண்ணைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, சேகரன் கேட்டான். அதைத் தொடர்ந்து அவள் ‘ அவர் !? ’ என்று கேட்டுவிட்டு, மேலும் ‘ இது மாலை வேளை அல்ல ; கடற்கரையும் அல்ல ; அவர்களுடன் பேசி பொழுது போக்க ’ என்றாள்.

‘ சரிதான் கொஞ்சம் காப்பி சாப்பிட்டுவிட்டு போகலாமே .. ’ என்றான் சேகரன்.

‘ வேண்டாம் இப்போது ... பிறகு பார்த்துக் கொள்ளலாம்... ’ என்றாள் அப்பெண்.

‘  சரி, சாயங்காலம் பார்த்துக் கொள்ளலாம் ... ? ’ என்றான். தலையை அசைத்துவிட்டு, அப்பெண் ஒரு அவசரத்தில் போய்விட்டாள். அவள் சென்றவுடன், சிறிது நேரம் சேகரன் அவ்விடத்தைவிட்டு அகலாமல் நின்றிருந்தான். ஒரு இன்பக் கனவு கண்டதான ஒரு தோற்றம் கொண்டான்.

அன்று மாலை, சேகரன் மட்டும் தனியாக கடற்கரைப் பக்கம் போக நேர்ந்தது. சிறிது தூரத்திலிருந்து முதல் நாள் உட்கார்ந்து இருந்த இடத்தில் உட்கார்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை,  கவனித்தான். அவர்களருகில் நெருங்கியதும் ,  ‘ வெகு நேரமாகக் காத்து ... ’ என்று ஆரம்பித்தவன், சிறிது தயங்கி ‘வந்து நேரமாகிறதோ ...’ என , மாற்றிக் கேட்டான். அப்பெண்கள் சிறிது திடுக்கிட்டனர். அப்பெண் ‘ வந்து கொஞ்சம் நேரமாகிறது ’ என்றாள். அவர்களுக்குக் கொஞ்சம் தள்ளி இவன் உட்கார்ந்து கொண்டான். அப்பெண் மற்றவர்களைப் பார்த்து, ‘ அவரை, மத்தியானம் டவுனில் சந்திக்க  நேரிட்டது’ என்று குரலில் ஒரு பாவமும் தோன்றாவகையில் சொன்னாள். ஒரு கயிறு கொண்டு, இருவரையும் சேர்த்து பிணைத்து போன்று அவ்விரு பெண்களும் இவ்விருவரையும் மாறி மாறிப் பார்த்தனர்.

பானு, சுசீலா, சுமதி இம்மூவரும் வசதியான, மூன்று கௌரவக் குடும்பப் பெண்கள். படிப்பு முடிந்தவுடன், மேற்கொண்டு செய்வ தென்னவென்பது, இவர்களுக்கும் இவர்கள் பெற்றோர்களுக்கும் புரியவில்லை போலும். மாலை நேரத்தில் பொழுது போக்குவதற்காக, கடற்கரை சென்று பேசி காலம் கழிப்பது வழக்கம். சேகரன் இவர்கள் கோஷ்டியில், மாலைப் பேச்சில் கலந்து கொண்டதில் இவர்களுக்குப் பொழுது போவது சிறிது லேசாகியது. சேகரன் பேச்சுகள், கேட்க சுவாரஸ்யமாக இருக்கும். அவன் நல்ல குணமும் இவர்களுக்குப் பிடித்ததாக இருந்தது. அம்மூவருக்கும் இவனிடம், அவர்களை அறியாதே ஒரு பிரியம் ஏற்படலாயிற்று. இக்குறுகிய கால பழக்கத்திலும், அவனை வெகு நாளாகத் தெரிந்த ஒரு நண்பனென அவர்கள் எண்ணலாயினர். இதுவரையிலும், யார் யார், எவர் எவர் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளாமலும், பெயர் என்ன வென்று கேட்டுக்கொள்ளாமலும் தான் பழகி வந்தனர். சந்தித்தவுடன், முதலில் இவ்வகைப் பேச்சிற்கு இடமில்லாது போய்விட்டால், பிறகு கொஞ்சம் பழக்கமானவுடன் இவ்வகையில் கேட்டுக்கொள்ளுவது ஒரு அலௌகீம் தான்.

ஒருநாள் சேகரன் சிறிது பதட்டத்தில் காணப்பட்டான். அப்பெண்களில் சுசீலாவைப் பார்த்து ஏதோ பேச வாயெடுத்தவன், ‘ என்ன சுசீலா ... ... என்றவுடன் திடுக்கிட்டு பேச்சை, எட்டிய வெளியை நோக்கியபடி நிறுத்தினான். இப்பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களும் ஆச்சரியமடைந்தனர்.

கொஞ்சம் பரிகாசமாகச் சிரித்துக்கொண்டே பானு சேகரைப் பாரத்து, ‘ உங்கள் பெயர் என்னவோ ... ’ என்றாள். இவளைப் பார்த்துத் திரும்பிய சேகர், ‘ சேகர் .. அப்பெண்ணின் பெயர் ? ’ என்றான். ‘ நீங்கள் இப்போதுதான் சுசீலா என்று சொல்லிவிட்டு, என்னைக் கேட்கிறீர்களே ’ என்றாள். ‘ இல்லை, எனக்கு இது வரையில் தெரியாது ’ என்றான்.

சிறிது சென்று, ஒரு நிதானத்தில், ‘ நீங்கள் ஊஞ்சல் ஆடுவது உண்டோ, ஊஞ்சல் விளையாட்டுத் தெரியுமோ ? சிறுவயதில், அப்படியாக ஒருவரை ஒருவர் ஊஞ்சலில் வைத்து, நீங்கள் வீசி ஆட்டி விளையாடி இருக்கலாம். வேகத்தில், கிட்டவும் எட்டவும், ஆட்டுபவருக்கு ஊஞ்சலில் இருப்பவர்கள் வந்துபோய்க் கொண்டிருப்பார்கள். கிட்ட ஒருவராகவும், எட்ட ஒருவராகவும் ஊஞ்சலில் இருப்பவர் ஒருவரே தோற்றம் கொடுத்தால், அந்த ஊஞ்சல் விளையாட்டு இன்னும் எவ்வளவு விநோதமாகத் தோன்றும் ? முன்பு நான் ஒரு உருவை வைத்து இருவராகக் கண்டு ஆட்டினேன் போலும் ’ என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தது வெகு வசீகரமாக இருந்தது ... ‘
என்னை மன்னித்து விடுங்கள். உங்களிடம் நான் இவ்விதம், இவ்வளவு சீக்கிர பழக்கத்தில், சுவாதீனமாகப் பேசுவதை ... எனக்கு மிகவும் தெரிந்தவள், எனக்கு வெகு பிரியமான ஒருவள் பெயர் சுசீலா. இப்போது உங்கள் பெயரும் சுசீலா என்பதில் ஒரு யதேச்சை பெயர் ஒற்றுமை என்பதில் என்னென்னவோ என் மனது விநோத விதத்தில் எண்ணுகிறது. அதுதான்.

சேகரன் ஊரை விட்டு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் போகிறது. வந்த சில நாட்கள் வரையில் கிட்டுவுடன் தங்கி, ஊர் போவதாக அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியவன் ஒரு விடுதியில் தங்கிக் காலம் கழித்துக் கொண்டிருந்தான். பட்டணத்தைவிட்டுப் போக அவனுக்கு இன்னும் மனம் வரவில்லைபோலும். ஆனால் சமீபமாக, சில நாளாகவே அவனுக்கு ஊர் ஞாபகம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. ‘ அநேகமாக நாளைக்கு ஊருக்குப் போகலாம் ’ என மாலையில் அப்பெண்களிடம் சொல்லுவதும், மறுநாள் மாலையில் அவர்களைக் கடற்கரையில் சந்தித்துப் பேசுவதாகவும் இருந்தான்.

அன்றைய தினம் ‘ இன்று நிச்சயமாக ஊருக்குப் போயிருப்பான் ’ என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களிடையே தன் தோற்றம் திகைப்பைக் கொடுக்கும் என்ற நினைவில் சேகரன் கொஞ்சம் முன் நேரத்திலேயே கடற்கரையை அடையும் ஆவலிலிருந்தான். அவசியம் ஊர் போக வேண்டிய தென்ற எண்ணம் ஒரு பக்கமும், அப்பெண்களிடையே பேசுவதில் காணும் இனபத்தில் இங்கேயே இருக்க நினைப்பது ஒரு பக்கமும் இவனை ஆட்டுவித்து, என்ன செய்வது என்று தோணாது இருந்தான். ஒளிபடராத பிரக்ஞைவெளியில் சேகரன் தடுமாறிக் கொண்டிருந்தான். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் உள்ள எல்லைக்கோடு, பிளவு கொண்டு ஒரு சிறு வெளி விரிவு தெரிவது போலும் அந்நடு வெளியில் நின்று உலக விவகாரங்களைக் கவனித்தான். உலகம் உண்மையெனத் தோன்றுவதற்கு -- வஸ்துக்கள் வாஸ்தவமெனப் படுவதற்கு மாயைப் பூச்சு கொள்ளுமிடம் அதுதான் போலும். தூக்கத்தில் மறையவும், விழிப்பில் மறக்கவும் ......

அன்று பகல்பொழுதை ஏதோ அவஸ்தையில் கழித்து, மாலையில் கடற்கரையை அடைய, கொஞ்சம் முன்நேரத்திலேயே பஸ் ஸ்டாண்டில் சேகரன் நின்றிருந்தான். அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில், முன்னேறத் தெரியாது இரண்டு பஸ்ஸுகளை விட்டான். தன்னை விட்டு நகர்ந்து செல்லும் அவைகளைப் பார்க்கும்போது உலகமே தன்னைத் தனிமையில் விட்டு, நகர்ந்து போவதாக நினைத்தான். கடற்கரையில் அப்பெண்களையாவது விட்டுச்செல்லாதா என்ற ஏக்கப்பார்வையில், மற்றொரு பஸ்ஸும் போய்விட்டது. இருபக்க மரங்களையோ, அப்பால் நின்று தெரியும் பங்களாக்களையோ, கவனியாதே போன்று, நகர  வீதி அகண்டு, நீண்டு குறுகி, கிழக்கு மேற்காக எட்டிய வெளியை அடிவானம் வரையில் சென்று தொட வெகுதூரம் போய்க்கொண்டிருந்தது. வீதி ஓரத்தில் மரங்கள் அப்பாலும் இப்பாலும் பலபல விசித்திரத் தோற்றத்திலும் பலவித நிறத்திலும், மரங்களிடையே, பாதி தெரிந்தும் தெரியாமலும், வீடுகளும், பங்களாக்களும் பார்வையில் பட்டன.

தன்னைப் போன்றே திகைத்து வீதிமரங்களும், வீடுகளும் நகரமுடியாது நின்றிருப்பதை சேகரன் பார்த்தான். லேசாக மரங்கள் காற்றில் அசையும் போது, அதன் தலையிலிருந்து பூக்கள் பொல பொலவென்று உதிருவது வெகு விநோதமாகத் தெரிந்தது. எதிர் பங்களாவிலிருந்து நாய் குரைப்பு சத்தம் கேட்டது. எதிரொலியில் அப் பங்களாவே நாயெனக் குரைப்பது போன்றிருந்தது. எட்டிய தூரத்தில் ஒரு பட்ட சவுக்கு மரம் நட்டுத் தெரிந்தது. அது தன் தலையில் ஓரு கொடியைக் கட்டிக் கொண்டு ‘ பொலிடிகல் ’ குஷியில் கூத்தாடுவது எவ்வளவு அபத்தமாகத் தெரிகிறது ! மேற்கே சூரியன் மறைய விருக்கிறான். உலகமே ஒரு லேசான மஞ்சள் காவித் தோற்றத்தில்  ஒரு வரட்டு விரக்தி கொள்ளுகிறது. வெளியடைய முடியாத ஒரு பளு கொடுக்கும் வேகம், சேகரன் மனதிற்கடியில் குமுறிக்கொண்டிருக்கிறது. அவன் முகத்தில் ஒரு கடுமை கண்டும், உதட்டின் விளிம்பில் ஒரு ஏளனப் புன்னகை அருவிக் கொண்டிருந்தது. கோவிலில் தற்கால பக்தர்களின் சிரிப்பில் மாடத்திலிருந்து பார்த்து நிற்கும் ஒரு ஜீவகளை சிலை என, பட்டணப் போக்குகளைப் பார்த்துக் கொண்டு, சேகரன் நின்றிருந்தான்.

பட்டணச் சந்தடிகள் , பொறுமையிழந்த கூக்குரல்கள் போன்று வீதிவழியே, யார் கவனிப்பிலும் படாது, போய்க் கொண்டிருந்தன. மோட்டார்கள் பறந்து சென்று மறைந்தன. தங்களை விட்டுச்சென்ற உயிரைப்பிடிக்க, நடைப்பிணங்களென, அநேகர் கடந்து சென்றனர். மற்றும் சிலர் தங்களை விட்டு, உயிர் ஓடாது இருக்க, அதைப் பிடித்துக்கொண்டு ஓட்டத்திலும் நடையிலும் சென்றனர். உருவங்கள், தெரிந்தும், மறைந்தும் சப்தங்கள் கேட்டும் கேட்காமலும், எல்லா சந்தடிகளும் ஒரு அலங்கோலத்தில் ஒரு புலனாகாத நியதியில் அவதிப் பட்டுச் சிதறித் தெரிந்தன. இந்த உரு, இந்த சத்தம், இந்தப் பெயர், இந்தத் தோற்றம் என்ற இசைவுமுறை நழுவி, தனித்தனியாகக் காணும் புலணுர்வுகளை, மனது ஒப்புக் கொள்ள முடியவில்லை.

எட்டிய வெளியிலிருந்து, சினிமா மெட்டு காதை சுவைக்கத் துளைத்துக் கொண்டிருந்தது. ஒரு டீக்கடைக்காரனுடைய வியாபாரம் விசுவரூபம் கொள்ளமுயலும், நவீன நாகரிக சத்தம் அது. பஸ்ஸுகளைத் தவறவிட்டுக்கொண்டு இவ்வகைப் பார்வையில் அங்கு நின்று கொண்டிருந்தான். உலகமே, ஒரு நஷ்டக்கணக்கில், இவ்வித ஆர்பாட்டங்களில் தேய்ந்து கொண்டு போவதான எண்ணம் தான் அப்போது அவன் கொண்டது. சக்தியை - ஜனசக்தியை - முதலெனக் கொண்டு, ஆரம்பித்த இந்த உலக வியபகாரம் விளைவுகளில் மதிப்பைக் காணக்கூடாத திகைப்பில், நஷ்டத்தில், முதலையே வீண் விரயமாக்கிக் கொண்டு வருகிறது போலும்.

சீக்கிரம் செல்ல நினைத்த சேகரன், சிறிது நேரம் சென்றே கடற்கரையை அடைந்தான். அவர்கள் வழக்கம் போல், அந்த இடத்திலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை, தூரத்திலிருந்தே கவனித்தான். அவன் அவர்களை அணுகியபோது ‘ என்ன சேகர், இன்று ரொம்ப லேட் .. ஊரிலிருந்து நேரே இங்குதானே வருவது ... என்று சிரித்துக் கொண்டே பானு சேகரை வரவேற்றாள். சுசீலா, நிதானத்துடன் ... ‘ இன்று ஊருக்குப் போகவில்லை!? ’ என்றாள். அது கேட்பவருக்குக் கேள்வியாகவும் அதைக்  கேட்பவருக்கு ஆச்சரிய விளியாகவும், தோன்றும்படி இருந்தது. ‘ வாவென்று அழைத்து லெட்டர் வந்தாலல்லது எப்படிப் போகிறது ... ’ என்றாள் பானு.

‘  நான் இங்கிருப்பது வீட்டிற்குத் தெரியாது ... ’ என்றான் சேகரன்.

‘ ஓகா, சேகர் கோபித்துக் கொண்டு சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வந்துவிட்டார் ’ என்று சொல்லி, பானு கொஞ்சம் உரக்கச் சிரித்தாள்.

‘ என்ன சுசீலா - பானு சொல்வது  பொய்தானே ’ என்று அரை கெஞ்சலுடன் சுசீலாவைப் பார்த்து சேகரன் கேட்டான்.

‘ எனக்கு எப்படித் தெரியும் சேகர் ... நீங்கள் பேசுவது சரியாக இல்லை. நீங்களும் ஏதோபோல் இருக்கிறீர்கள் ’ என்றாள் கொஞ்சம் வருத்ததுடன் சுசீலா.

‘ கொஞ்ச நாளாகவே சேகரன் பேசுவது சுசீலாவுக்கு ஏதோபோல் தோன்றியது. மற்றைய பெண்களுக்கு எப்படியோ, இவளுக்குத் தெரியாது. அவன் பேச்சுகள் சில சமயம் இவளுக்குப் பிடிக்காது. ஒரு அசட்டுத்தனமான ஜாக்கிரதையில், இவர்களுடன் பேசுவது இவளுக்கு அருவருப்பளித்தது. சிற்சில சமயம் அவன் பேச்சுகள், நிதானமாயும், ஆழ்ந்த கருத்துடன் வசீகரமாயும் இருக்கும். இரண்டொரு நாளாக சுசீலாவுடன் பேசும்போது ஒரு ஜாக்கிரதையும் ஒரு தடுமாற்றமும், சேகர் பேச்சில் தெரிந்தது. அது எதனால் என யோசிக்கும்போது, அவனை ஒருவித உணர்ச்சியில் கொள்ள முடியவில்லை. அருவருப்பபு, பயம், வெறுப்பு, பரிதாபம் முதலிய பலவிதமான உணர்ச்சிகளை, மாறி மாறி அவள் மனது கொண்டு யோசனைகளும் சலிக்க ஆரம்பித்தன. சிற்சில சமயம் அவள் மனது துக்கமும் அடையும்.


ஊரையும், மனைவி குழந்தையையும் விட்டு, இப்படி அவன் பட்டணத்தில் காலம் கழிப்பது இப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை. தங்கள் தகப்பனார், தங்களுக்காக கணவன்மார்களைத் தேடிக் கொண்டிருப்பது இவர்களுக்குத் தெரியும். கல்யாணம் ஆகவேண்டிய பெண், தனக்குத் தெரியாத ஒருவனை எண்ணி, அவனுக்காகக்  காத்திருப்பது போன்றதா, ஒரு மனைவி தன் கணவன் வருகைக்கு ஏங்கி எதிர்பார்த்து இருப்பது ? கன்னியும் மனைவியுத் வேறெனப்படுவதில், அதுமாதிரி இல்லாவிட்டாலும், இருவரும் பெண் என்பதில், அது போலவும் தோன்றுகிறது. இவன் ஊர் போகாது இருப்பது, இவன் மனைவி இவனுக்காகக் காத்திருப்பது, இதெல்லாம் இவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒரு தவறான காரியத்தைதான், சேகரன் இங்கு இருப்பதில் செய்கிறான். அவனுடன் தாங்கள் பேசுவதும் தவறாகத்தான் தெரிகிறது.... ஒருக்கால் அவன் ஊர் போகாது இருப்பதற்கு தான்தான் காரணமா, என்று சில சமயம் சுசீலா எண்ணுவாள். தன்னெதிரிலும், தன்னுடன் பேசுவதிலும், அவன் ஒரு வகை இன்பம் கண்டு, அதனால்தான் ஊர் போகாது இருக்கிறான்போலும். சுசீலாவினால் தன் மனம் போகும் ரீதியைத் தடுக்கவோ, தன் மனதில் தோன்றி மறையும் எண்ணங்களை நன்கு புரிந்துகொள்ளவோ முடியவில்லை. தத்தி, தன்னைவிட்டுக் குதித்தோடிஉட்கார்ந்து கொள்ளுமிடத்தைத் தெரிந்து கொள்ளுமுன்பே மற்றொரு இடத்திற்குத் தாவிப் போவது போன்றுதான் அவள் மனமும் எண்ணமும் இருந்தன. சேகரன் ஊர் போகாதது, தன்னால், தன் தடுப்பால், என்று அவளால் நேர்முகமாக நினைக்க முடியவில்லை. தான், அவ்விதத்தில் குரூர சித்தம் படைத்தவளாகவோ, கேவல குணமுடையவளாகவோ, கருத முடியவில்லை. ஒரு கணவனை அவன் மனைவியிடமிருந்து பிரிப்பது ஒரு குரூர செய்கையல்லவா ? அதையும் ஒரு பெண் செய்வதென்றால் ? அப்படியாயின் தான் யார், எப்படி ? தான், தன் சுபாவம், குணம் என்பதெல்லாம் என்ன ? தான் அல்லாததென ஒன்று தோன்ற, அதை மறுத்து மாறுதலை கொள்வதில்தானோ இவைகள் ஆகும் ? மாறி மாறித்தானோ, நான் என்னுடைய என்பதெல்லாம் மறுப்பில் மறுதலையாக உண்மையெனத் தோன்றும் ? அவ்வகையானால், இவைகளெல்லாம் ஸ்திரமெனக் கருத முடியுமா ? உண்மையில் இவைகளெல்லாம் என்ன ? சுசீலாவினால் ஒன்றையும் தெளிவுறக் கண்டு கொள்ள முடியவில்லை .. உருவற்று ... இடமற்று - தன் வழியே உலாவும் குணங்கள், நான், சுபாவம் எல்லாமே ஊடுருவத் துளைத்துச் செல்ல குறியென யதேச்சையிலே குறுக்கிடுகிறது பெயர், உருக்கொள்ள ? வெகு விநோதமான எண்ணங்களைக் கொண்டாள் சுசீலா. அவள் ஒரு விநோதப் பெண்தானே ! அவள் மனது வெகுவாக விரிவடைந்தது போலும் ! ...

அவனைவிட்டு, இவர்கள் பிரிந்து செல்லும்போது, பானுவைப் பார்த்து சுசீலா கேட்டாள் : ‘ பானு, அவன் இங்கிருப்பது சரியா, ஊருக்குப் போவது சரியா ? என்ன தோன்றுகிறது உனக்கு ... உனக்கு நன்றாக விளங்குவது போன்று, ஏதோ ஒன்றைச் சொல்லுவாய். வேறு வகையில் அவன் இருப்பது அவனுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்கிறான் என்று சொல்லுவாய். அதிலிருந்தும் கிளைபாதைகளென ‘ தெரிவது, தெரியாதது, ’ நாம் நமக்குத் தெரிந்து தெரியாமல் பொறுப்படைவது .. ‘ பொறுப்பு ’ ... ‘ சரி ’, ‘ தவறு ’ எல்லா வார்த்தைகளுமே என்னவெல்லாமோ அர்த்தம் கொடுக்கும். பேசுவதும் புரிவதும் மறுதலையில் சலிக்க என்னால் பேசமுடியும். ஆனால் உணரும்போது ஜீவியத்தை, உலகப்போக்கை முரண்படும் உண்மைக் கூற்றெனக் கண்டு, அதைச் சொல்லும்போது, மாறுபட்ட அபத்தமாகத்தானே விளக்கமுடிகிறது ....’

சிறிது நிறுத்தி மேலும் பேசலானாள். ‘ சேகரனை நான் ஆணாக நினைத்துப் பழகவில்லை போலும் ... ஆண்கள் ... ஆண்மை என்பதெல்லாம் எனக்கு நன்றாகப் புரிகிறது. நழுவ,  புழக்கடை வழியைத் திறந்து வைத்துக்கொண்டு, வாயிலில் நின்று சிறகடித்துக் கொக்கரிக்கும் சேவல்கள் ஆண்கள். ஆண்மையோவெனில் இறகு உரித்த கோழிகள். சேகரனைப் பெண்ணென மதித்துதான் நான் பழகி பேசுகிறேன் போலும் ! ஒரு பெண் பெண்மையின் சக்தியையா ஒரு ஆணிடம் உணரமுடிகிறது ? அதனால்தான், நான் அவனிடம் கொள்ளும் விருப்பும் வெறுப்பும் ? .. அவனுக்கு என் பெயர் கொண்ட ஒரு மனைவி இருக்கிறாள். அவளையா, இவனிடம் நான் பார்ப்பது ? அவள் பெண்மையை, இவன் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டானா ? ... என் பிரியமான பானு, நீ என்னைக் கேவலமாகக் கருதமாட்டாய் என்பது எனக்குத் தெரியும். எதையாவது கட்டிக்கொண்டு அழவேண்டுமென மனம் தவிக்கிறது. இப்போது .. ’ என்று பானுவை இறுகத் தழுவிக்கொண்டாள் .. தெரியாதே பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த சுமதி, பேசா மடந்தையென, ஏதோ யோசனையில் ஆழ்ந்தவள் போன்றிருந்தாள்

சேகரன் பேச்சுக்கள் அன்று சரியாக இல்லை. சுசீலா வெகு நேர்த்தியாகவும், கல கலப்புடனும் அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவன் ஊருக்குப் போவதை, இவ்வகையில் பேச்சினால் தடுத்துக் கொண்டிருந்தாள் போலும். ஆணென ஒருவன், எதிரில் சேஷ்டைகளிலும், பேச்சுக்களிலும் எவ்வளவு வெறுப்பை அளிக்கிறான் என்பதை சுசீலா எண்ணிக்கொண்டாள் போலும். ஒரு ஆணுடன் ஒரு பெண், மனைவி என எப்படிக் காலம் தள்ள முடியும் ..... அதில் இன்பமோ ‘ காதல் ’ என்பதான ஒன்றையோ எப்படிக் காண முடியும் .... வெறுப்பை அளிப்பவருடன் கூடப் பழகுவது எவ்வளவு தர்மசங்கடம் ... விடாது தொடர்ந்து, நியாயமான முறையில் வாழ்க்கையை நடத்த, எத்தனை உபாயங்களை தர்மமென காண வேண்டியிருக்கிறது ! தன் எதிரில், காணாது தொலைந்தாலாவது கணவன் வருகைக்கு ஏங்கிக் காத்திருப்பதில் ஒருவகை இன்பம் காணமுடியும்போலும் பெண்களால் ! சேகரன் மனைவி சுசீலாவின் வாழ்க்கையின் ஆதாரமெனத்தான், தன்னை எண்ணிக்கொண்டாள். அவனை ஊரடையாது - தடுப்பதைத்தான், தான்  செய்கிறது - செய்வது என்று நினைத்தாள். அவ்வித எண்ணம் சூனிய வெளியில் நின்று கொண்டிருப்பது போன்று தோற்றம் கொண்ட தனக்கும் ஒரு இடமளிப்பதென உணர்ந்தாள். முன்பு தன் மனதிற்கு இசையாத குரூர குணமென்பதையும், தன் மனது ஒரு திருப்தியில் கண்டது, என்பதாகவும் அவளுக்குத் தோன்றியது.

இருட்டு கண்டு விட்டது. உட்கார்ந்து இருந்த அநேகர் எழுந்து போய்விட்டனர். மற்றும் சிலர் எழுந்து போவதற்கும் ஆயத்தமானார்கள். இவர்களும் எழுந்து நடந்து வீதியை அடைந்தனர். அந்த முச்சந்திவீதியைக் கடந்து, எதிர் வீதியில் கொஞ்சம் நடந்த பிறகு, மற்றொரு சந்து குறுக்கிடும்போது, சேகரன் இவர்களை விட்டுப் பிரியவேண்டும். இவர்கள், வீதியைக் குறுக்காகக் கடக்கும்போது, இடது புறத்திலிருந்து ஒரு மோட்டார் சப்தம் கேட்டது. இவனை விட்டு, அவர்கள் பின் திரும்பி நடந்து, ஓரமாக நடை பாதையை அடைந்தனர். வீதி நடுவில் நின்ற சேகரன் முன்பின் போவது தெரியாது, ஒரு திகைப்பில் நடு வீதியில் நின்று விட்டான். வந்து கொண்டிருந்த மோட்டார் எவ்வித லாவகத் திருப்பலிலும், இவனைக் கடந்தபோது சிறிது இவனை உராந்து சென்றதுபோலும். ஒருவருக்கும் தெரியவில்லை என்பதே போன்று மோட்டாரும், நிற்காது சென்று விட்டது. சேகரன் சிறிது தடுமாறி, சமாளிக்க முடியாமல் கீழே சாய்ந்தான். தொடர்ந்து விழும் அவனை ‘ சாவு ’ யாவரையும் விட முன் சென்று பிடித்துக் கொண்டது .... சேகரன் கீழே சாய்ந்தான் ...

கண்ணெதிரில் கீழே விழும் சேகரனை, முன்னடைந்து குனிந்து தடவியபடியே பானு, ‘ ஐயோ நம் சேகர் ... பேச்சு மூச்சில்லையே ... ’ என்று கண்களில் நீர் ததும்பச் சொன்னாள். அருகில் வந்து நின்றிருந்த சுசீலா ‘ நம்ப சேகர் ! ’ என முணுமுணுத்தபடி, பானுவைத் தூக்கி நிறுத்தி ... ‘ வா பானு போகலாம் ... கூட்டம் கூடுமுன் .. ’ என்று சொல்லி நிதானமாக அவளை அழைத்துச் சென்றாள். அவன் இறந்து விட்டான் என்பது சுசீலா மனதிற்கு  நிச்சயமாகவே பட்டது. ‘ அநாதையாக நடுத் தெருவில் விட்டுச் செல்லுகிறோமே.. ’ என்ற பானுவின் குரல், வெளிவர முடியாது, தன் மார்பில் அவள் முகத்தைப் புதைத்துச்சென்ற சுசீலாவின் மனதிற்குள் கூச்சல் கொண்டு அமுங்கியது போலும் ! வெகு வருத்ததில், சுமதி, இவர்களைப் பின்தொடர்ந்து நடந்து போனாள்.

ஒரு கணத்தில், தான் நின்ற இடம் மறுபடியும் சூனியமானதென்ற ஒரு உணர்வுயடைந்தாள் சுசீலா. வெற்று வெளியில், உருவற்ற பெயரென சுசீலா நடந்து கொண்டிருந்தாள். கணவனுக்கும் மனைவிக்கும், குறுக்காகத் தடுத்து நின்றதென்பதில், இடம் கொண்டு நின்ற கன்னி சுசீலாவை ‘ மரணம் ’ எட்டித் தள்ளி விட்டது.

ஒரு மனைவிக்கு, சதா தன் கணவன் வருகைக்குக் காத்திருப்பதில் இன்பம் கொடுக்க, அவனைத் தடுத்து நின்றதில் இடம் கொண்ட சுசீலாவை எட்டித் தள்ளியே அந்த இடத்தை  ‘ மரணம் ’ பறித்துக்கொண்டு விட்டது. எவ்வளவு அநியாய நியாயமெனப் படுகிறது சேகரன் மரணம். இனி எவ்விடம் தன்னிடமாகக் காண்பது என்ற மனத் தடுமாட்டத்தில் சுசீலா நடந்து கொண்டு போனாள்.

                               *                                  *                                  *

சில நாட்களாக, இவர்கள் மாலையில் கடற்கரையில்  கூடுவது இல்லை. தன் மாடி அறை ஜன்னலடியில் மாலையில் நின்று கொண்டு எட்டிய வெளியை, சுசீலா பார்ப்பதுண்டு. தன்  சிந்தனைகளே, ஒரு பளுக் கொடுப்பதென நினைத்தவள் மனம், அப்போது துக்கத்தையும் கொள்ளாது சந்தோஷத்தையும் கொள்ளாது இருந்தது. பெயர் கொண்ட ஒன்று, தன் உருவை, சுமையெனக் களைந்து, பெயரெனத்தான் எட்டிய வெளியில் லேசாக மிதப்பதைப் பார்த்து நிற்பவள் போலும்.சுசீலா வென்ற பெயர், மறுபடி உருக்கொண்டால் யாராக முடியும் ? இருளில், உடலை விட்டகன்ற நிழல், ஒளி கண்டவுடன் சரியெனத்தானா, பிரிந்த தன்னுடல் எனக் கண்டு மறுபடியும் உடலுடன் ஒட்டிக் கொள்ளுகிறது ... ? சுசீலா, பெயரெனத் தன்னைக் களைந்து கண்டதில், சேகரன் மனைவி சுசீலா எனவா மனதில் உருக்கொண்டாள் ... ?

கிராமத்தில் காலை, மாலை வேலைகளை கவனிப்பின்றிக் கைவிட முடியாது. அதிகாலையில் இருட்டுடன் எழுந்து, வாயிற்புறம் சாணம் தெளித்து, பெருக்கி, கோலம் வரையவேண்டும். இரவின் இருளில் தூக்கம் காணாதினாலா, போடும் கோலம் தவறுகிறது.  ..... வெளிச்சம் காண இருக்கும் கிழக்கே, வெகு தூரத்தை உன்னிப்பாய்க் கவனிப்பதில், கண்டது ஒன்றுமில்லை. இரவில் பரவியதை, ஒன்று கூட்டிச் சேர்த்துக் கொளுத்த குவித்த இருட்டு, ஒளி கொள்ளுமுன்தான் எவ்வளவு இருட்டு ! கணவனைக் காணமுடியவில்லை. பகல் நீண்டும் இரவு வருகிறது. குழந்தை காலைச் சுற்றி வராது தொட்டிலில் தூங்கும்போதுதான், பகல் நீண்டும் இரவு வருகிறது. அதைத் தடுக்க இரவு குறுக்கிடுகிறது. மாலையில் சூரியன் மறைகிறான். இரவு வந்தவுடன்  விளக்கை ஏற்றி, வாயிற் புறையில் வைத்துவிட்டு திண்ணைத் தூண்டியில் நிழலென நிற்கிறாள். மேற்கே சூரியன் மறைந்த விடத்திற்கும் அப்பாலே, பார்க்கிறாள். கண்ணொளி கொண்டும், ஒன்றையும் பார்க்கமுடியவில்லை. கீழிறங்கி, எதிரே தெரியும் கோயில் சுவாமியைத் தரிசித்து விட்டு, விளக்கை எடுத்துக் கொண்டு உள்ளடைகிறாள் சுசீலா .... இரவும் குறுகாது நீண்டு வளருகிறது. அல்லலுறும் மனது தூக்கம் கொண்டாலாவது இன்பக் கனவையாது எதிர் பார்க்கலாம் ..... வேதனைகளின் இன்பம்தான் வாழ்க்கை போலும் !

தானாக வேண்டி, எதிலும் தன்னைக் காண தேடுவது போல கன்னி சுசீலா, மேற்கு பார்த்த தன் மாடி அறை ஜன்னலடியிலிருந்து  எட்டிய வெளியை வெறித்துப் பார்ப்பதுண்டு. சேகரன் மனைவி சுசீலாவை மனதில் கண்டதில், அவளாகத் தன்னையும் கண்டு கொண்டுவிட்டாள் போலும் !

தன் கணவன் வருகைக்காக எதிர்பார்த்து ‘ காதல் ’ காண மனைவியாக, கன்னிப் பெண் சுசீலா தன் மாடி ஜன்னலடியில் நின்றிருந்தாள்.

அப்படியாயின், ஒரு வகையில் ‘ காதல் ’ கண்ட பெண் கலியாணமாகாத கைம்பெண் என்ற அபத்தம்தானே  !

சரஸ்வதி, 1960

தட்டச்சு : ரா ரா கு

Tuesday, January 28, 2020

Dream Fort - MAUNI - Tr. by Lakshmi Holmstrom, மனக்கோட்டை - மௌனி


Dream Fort - MAUNI - Tr. by Lakshmi Holmstrom

Ten years ago, at the time when he was studying at the University in Madras, his parents had tried very hard to arrange a marriage for him. None of these efforts had been successful. It was impossible to say why; it was almost as if something had intervened by chance, every time. Then his parents died, one after another. He refused the well-paid job he had just been offered and returned to his village and property. As an only heir with not too many close relations, he lived alone, respected by the others in the village and enjoying some rare friendships. 

But in the past few years, it seemed to him that his life had lost direction, and was drifting aimlessly. He could not accept that this was entirely accidental. He thought his mind needed to change and expand in some way in order to be at one with his surroundings and to experience them fully. Often he was struck by the thought that it was important to understand that life in this world is a composite of illusory circumstances and that he could never be certain that what he thought he recognized was truly that. The knowledge that this awareness rendered his life in some sense as an empty dream filled him with pain. He did not possess the total faith that might have freed him, or the belief that everything is Ishwara's will. His appearance, his ways and his manner, his turn of phrase combined in an unusual and almost paradoxical way to make even strangers who looked upon him eager to know him. He seemed to have a special gift for friendship. 

Oftern he would leave home and travel for months. Not defined or limited in any way, his wanderings had no particular route or aim. They took in without discrimination large metropolises, small towns, places of pilgrimage and historical ruins. He travelled according to his will and fancy alone. 

He had made four, five such journeys. This time too, it was almost five months since he had left home. He had returned to the niearby town but, having no particular desire to go home as yet, 
booked himself a room in a hotel, thinking he would stay for a few days. It was a town that he knew well, but where he had no pressing work. So he whiled away a couple of days, going out only occasionally to chat with his former friends when he saw them here and there, and staying in his room for the rest of the time. One evening, as he walked along the pavement of a particular road, a couple of men who were walking together overtook him, went past him, and then turned around. One of them called out, "Hello, my friend, how are you? When did you ..." 

They were friends who had studied with him at one time. It turned out that they had actually been talking about him as they had gone past. He thought that their words, "Could it be he ... No, it is someone who looks like him ... Of course it is the man himself," could be interpreted as everyone's words, or a single person's, or even his own doubts about himself. Astonished by this thought, and what followed in its wake, he walked on, laughing and chatting with them. 

One of them said, “Even the way you laugh has changed," but then went on to talk about their various other friends, without asking him anything. Then the other broke in, “We were talking about Sankar just yesterday. Then we remembered you, talked about you. When we saw you just now we couldn't be sure it was you. Did you know that Sankar ... died? 

It struck him as odd that he had taken form out of their uncertainty. And he thought further that he knew himself even less than they knew him. Without answering their question, he said aloud, "Yes, Sankar is dead," even as the words shouted through his mind. He walked on, following his own train of thought, till it seemed to him that if he continued to talk to them in this manner, they would surely take him to be insane. So he said goodbye to them and returned to his own hotel. 

"Yes, Sankar is dead.” He repeated the words, once, to himself. In those days, when he himself had enjoyed the regard of a circle of friends, Sankar would hardly ever be seen amongst them. Yet he could be certain that Sankar would be there, somewhere, at a distance, perhaps just out of sight. He used to think that if he were to ever need Sankar, his friend would instantly appear, lost in some dream. Perhaps he even thought that he could never ever be completely outside Sankar's thoughts. Even when they were together, Sankar never spoke much, and when he did so, his words were like a couple of charcoal scribbles making a picture across a wide waste. He understood that he should look within himself. into the wide expanse of his own mind and experience in order to give form to those few words. In scholarship and in every other way, they had been equals ... How pleasurably tormenting they were the memories of one's youth! 

After some years, Sankar had travelled north in pursuit of a different path of study. He remembered now that they had got a photograph of themselves taken together. before that. They had been in close correspondence sinec. He had even replied to Sankar's last letter. In fact he could see that letter now ... He was filled with pain. What those others had said suddenly struck him as right, that the fact of his being alive had become uncertain with Sankar's death. 

Sankar's last letter ... 

My parents know you really well. So does the rest of my family. I honestly don't know how this happened. You came to my house once and stayed for some time. They might have seen you then, and got to know you. But I doubt that just that one brief meeting would have been enough. It is true that I have spoken to them very often about you. I don't know how it is that, bom out of my description, you are so alive in their minds. You have been accepted now as one of the family to the extent that everyone speaks about you. I have assured them that when I go home next, I will take you with me ... You might not know that the last time you came, my youngest sister, Sumi, watched you through a crack in the door. Do you know, if ever she mentions you, it appears she has understood you so clearly, so beautifully. I want to see you talking to her. Do visit them, if ever you have the opportunity, even without me. Even if they don't recognize you immediately. they will certainly know you as soon as you introduce yourself ... 

It was a long time before he got any sleep that night. 

As soon as he rose the next day, he thought he should go visit them. He was not unaware of the huge difference between the way it would have been, were he visiting them alone when Sankar was alive, and seeing them now, on his own. Moreover, their house was nearby, quite close to the hotel where he was staying. Of course. it might be that they no longer lived there. Then he thought, even if they were still there, if they did not recognize him, he would find it difficult to introduce himself, and so he gave up the thought of visiting them. He did not wish to stay in the city any longer. Neither did he feel any urge to go back to his village. 

There was a small town which lay along the railway line which linked the city to his home. He knew of a ruined fort on a hill just there, a famous historical site. He set off suddenly by the morning train, intent on visiting it. 

It had grown completely dark by the time the train pulled in at the station. Had it arrived on tiine, he might have reached there while it was still late afternoon. On that day, though, the train was three hours late. Not a single soul besides himself appeared to alight at that station. The place gave the appearance of being deserted, but for a couple of porters and four, five carriages which seemed to be asleep as they awaited outgoing passengers. The site that he wished to see was very near the station; he could see it even now. But the small town where he was to sleep that night lay at a distance of three miles. At one time there had been a famous city at the foot of the hill on which the fort stood. The passage of time and the passing of civilizations had perhaps shifted it, eroded it. Or perhaps it had just disappeared, leaving few remnants - just some huts scattered on the lower slopes of the hills. A crescent moon was about to descend into the western horizon, in the lovely semidarkness. Innumerable stars, sprinkled across the heavens, gave out a dim light. For a while he stood there, looking about him. He saw the hills and mountains, embossed in the dim curtain of light, forming different shapes. They seemed to appear here and there, as if they had been ripped out of the earth and then flung about by the devas and the asuras in their great battle against each other. This little light - from the stars above and the tiny lamp-lights flickering from huts scattered everywhere on the earth beneath - seemed to be enough for an unbounded imagination to give life to these inanimate objects. The buried quiet was the real lament, like the intermittent silence in the space between sobs. So he thought, as he stood there, looking around him. 

He had to engage a vehicle and drive through the night, making a journey along a road that he was not familiar with. It promised to be a wonderful experience. It seemed to him that the vehicle hardly moved as it drove through the dark street, lined by trees on both sides. Only the wayside stalls and their lights gave any indication of the passage of time or distance. One or two customers could be seen in the shops in the silence of the night. They looked as if they were still buying goods at this late hour. He could not take in the incessant, continuous sound of the vehicle, or the noises made by the driver. The journey seemed to be a blind one, a quest for silent spaces. He kept being startled as the dogs, which lay asleep in the middle of the roads, shook themselves awake just at the moment when they were nearly hit, and fled away, squealing. Yes, it struck him as a truly strange experience, this journey in the dark. 

The next day, he rose earlier than usual and set off, without even a packed meal. He intended to complete all his sight-seeing and return to the hotel before midday. 

In the bright morning the landscape, dripping with sunlight, spread out clearly as far as the eye could see. It was not a mountainous area, but rather, a wide, barren land. Many hillocks were scattered about, large and small. The scene surprised him. The earth lay barren and hard with some grassy spots, a few bare trees, some shrubs. Goats and cows appearing singly, a couple of men in the foreground, and in the distance, the movement of herds of goats and sheep - these stood out, refusing to fade away into the wide backdrop. Changing each instant with the changing light, reflecting the differences of time and season, and merging with the onlooker's age and mood, that landscape would yield many images and many perspectives. 

The fort he had come to see could be seen at the top of a high hill. When he reached the base of that hill, he could see that, because of the comparative richness of the soil, a number of small trees and shrubs seemed to crouch there. Birdcalls from the surrounding trees, the sound of birds in flight as they swooped towards him from a great distance, the breeze that stroked.him so gently and set up a murmur amongst the leaves - all these suggested only ruin and decay to him. He could clearly see the walls and fortifications, the mansions and the temple towers above. By the time he had climbed up and looked about him at leisure, and was ready to return at last, it was past noon. He was tired, too tired to be hungry The fortifications, the hills further away and everything he saw in front of him seemed part of a shimmering mirage, desperate to move even further away. 

Although he had not visited the site before this, he had read and heard a great deal about it. He had certainly been told about the ancient legends of the bronze chariot which once belonged to the lost temple and about the underground passages of the fort. He had read a number of books which spoke of the construction of  the fortress city in the treta yuga and the sthalapuranas told in its 'honour, some claiming to tell the historical truth, others declaring themselves as works of the imagination. When he recalled all that he knew, he wanted to laugh out loud at the absurdity of it. There had been a brilliant and daring emperor once, who had, in his piety, donated the bronze chariot to the temple; and it was he who had devised a number of secret tunnels in order to out-manæuvre his enemies, as well as a series of underground passages in which he could hide as a last stratagem, even when surrounded by his foes. The story went that, on one occasion, he had determined to do just that: he had gone out to resist an arıny of foes and fought bravely, but lost to them. Eager to reach the underground passages, he found that he had forgotten his way. He arrived at the fort amongst his enemies, pretending to be one of them, raising his voice with them as they shouted, “Jai, jai." His enemies, not realizing who he was, took him for one of them; indeed they crowned him as their king when they reached the castle, and waited upon his commands. Along with all those people, the bronze chariot and the underground passages, too, are now all lost and forgotten. 

It is said that here, at one time, Indra had bathed in the mountain stream to cleanse himself of the sin of murdering a brahmin and had been granted a divine vision. But all that is forgotten now, for neither is there an Indra in these days, nor one who can commit brahmahatti, and therefore there is no need for such atonement. Things decay and are lost forever. Those kings, fathers and sons who had conquered the Himalayas, who had crossed the oceans to set up trade, who had held great assemblies, who had been patrons of literature and music and drama - they and their deeds have all passed, as if they were hallucinations, into history, the truths lost among the fictions. To his vision, temple and fort and pool all seemed the same; they took on a look of loss, of a silent yearning, aching, mourning. They seemed to long to reach out in the shimmering heat to the wide vaste beyond. 


How absurd everything appears! To the vain, every tiny success becomes too much, impossible to transcend. It leaves them deranged, and able just to indulge in these outward manifestations, vulgar exhibitions and spectacles which only play to the clamouring crowd. The huge manifestations are, after all, the result of trivial successes and desires. These attempts are like torches, attempting to illurninate a path in broad daylight. How can they ever match the single little spark which lights up the profound darkness of night? Everything comes into being and takes form only to change, decay and disappear ... His eyes were dazzled by the morning light. He closed them. Someone went past, carrying a huge box. He smiled to himself and thought, You should have been inside this box and carried yourself down, it might have been easier ... Everything faded away suddenly ... A noise, unheard before, was heard now. At once he opened his eyes to see. A crow called out from the branches above him. He was shocked to find that it was almost evening. He had shut his eyes at midday and then, in no more than an instant, seemed to have awakened in the evening. He rose to his feet and began to walk swiftly towards the town, for it looked as if it would rain soon. 

The wind blew with great force as he walked past the big houses in the outer suburbs of the town, and then it began to drizzle. He stopped by the front gates of a house, seeking protection from the rain. Soon, he noticed a young woman, about twenty-five years old, standing by the pillars of the verandah of the bungalow and looking intently at him. The wind dropped and it began to rain very heavily. Once again he looked towards her. She still stood there, staring at him. It struck him that it was improper for him to be there. And, he was only getting more wet. Just as he had decided that it would be better if he walked on, even if he were to get soaked, he found himself being shielded by an umbrella, and invited to come inside. As if in a dream, he realized he was sitting on a chair in the verandah. Outside, there was some daylight left, even though the sky was dull and overcast. But within the house it was so dark that it was nearly time for the lights to be switched on. She was standing like a shadow by the front door, observing him with great attention. When the lights came on in the front verandah and within the house simultaneously, dazzled by the light, he turned once more towards the front door. But she was no longer there. She had gone. back into the house. 

A car pulled up in front of the bungalow and a man who was clearly a senior professional got out, followed by a servant. The gentleman walked past him, hardly noticing his presence there. This was, obviously, her husband. He wondered how he might have introduced himself, had the gentlemen asked him who he was and what he was doing there. Although he was somewhat relieved that he hadn't been confronted in this way, yet he did not know how he could prevent it from happening very shortly. At the same time, he did not seem to be able to get away. As he continued to sit there in that chair, he began to feel trapped in a web of misunderstanding. 

In a little while, the gentleman came out again, having changed his clothes. Now he invited him in, saying, "Do forgive me, sir, I didn't notice you. Why don't we go inside and talk?” 

They seated themselves on two chairs, facing each other. He still felt some anguish, even though his position had changed. His pain and embarrassment were perhaps the result of his inability to introduce himself. An attendant brought them coffee which they drank. He had not noticed when she had moved within his line of vision, behind her husband. He saw now, the same expression of sadness spread across the faces of both husband and wife. He wondered who they thought he was. He was completely taken aback when the other began with the words, “You don't know who we are," and continued, "I don't know how to introduce ourselves to you." The gentleman went on quickly, as if unwilling to prolong that moment, "I believe you remember your friend, Sankar." There was a pause. 

Instantly, he understood everything. He looked at the other withi respect. “Yes, that is so," he said, though he knew that was not quite what was needed to be said. 

The gentleman began to speak again as if taking no notice of his words. First he asked his wife to leave them for a little while. "We know that you are Sankar's friend, Sekar. And you know now, who we are ... All the same, you may not be aware of some of the things that have happened to this family, recently... I realize how necessary it is for you to know these things. That is why I am speaking to you now ..." 

He had begun to say, Oh, yes, Sankar died ... but stopped himself. 

"Yes, Sankar is dead ... You might even know the circumstances of his death. But it is important for me to say all this to you once. In telling you, and in seeking some relief for my own pain, I might be causing you further grief. If I do so, please forgive me.” The man paused awhile, and then continued, “Yes, indeed, I have to tell it a thousand times over in an attempt to heal the wound. For Sumi, though, it was such unbearable sorrow that she could not even think or speak of it. She is not here now. If you want to judge how much we loved Sankar, you could say if you like that it was as much as the affection he had for you. You must not think that I say this by way of excusing myself for speaking in some meaningless and mysterious manner. You must forgive my hesitation, my fumbling for words. It is because of my anxiety to find some way of saying what I need to say ..." 

Once again he paused before proceeding further. “Yes, Sankar died. Time passes, but this fact remains unchanged in our minds landscape. However hard one tries to forget it, it strikes harder. It remains there, planted firmly, strongly, never changing. The telegram announcing his death was addressed to his father ... His father telegraphed in reply that the last rites should be completed in that distant place, by those people. Somewhere in the north, in a place we had not seen, Sankar had taken up a senior position with a mining company. He died of some poisonous gas while surveying a stretch of mines, two thousand feet underground. His life didn't remain within his body for even as long as the time it took to bring him to the surface. Would his soul achieve some peace simply because we looked at his body? His father's telegram was meant as an answer to that question. A long while later, his belongings arrived here ... Does that not seem to deny his death? And now you have come. In this family, we think of you as one of us. We know you from all that he has told us about you ... 

“Although he was affectionate towards all of us, he was particularly close to his sister, Sumi. His death had a profound effect upon her. The last letter he wrote was addressed to her. In our eagerness to know when he was coming home, all of us had surrounded her, pressing close and clamouring, not allowing her to read it. It took her ages to get to its end. You should have seen her face then! I can't - indeed I shouldn't - describe it. It was to me she handed the letter when she finished it. I read it aloud while everybody listened ... If only our lives could have continued in that mood of celebration. He had written that he was going to take some leave that was due to him and come home very soon to see all of us. He said that he would most probably - no, almost certainly - bring you with him. Our eagerness to see him was mingled with our desire to meet you. We looked forward with such joy to the day. You can understand how we felt. It was the eagerness of children waiting for a festival whose significance they do not know. It seems that what we are given in this world is for only a short time. Within days that telegram arrived. You will understand what state it left us in. His death is beyond our comprehension, we cannot accept it. Sorrow came to us gradually, shocked as we were, and little by little, it has overwhelmed us." 

He did not know at what point she had returned from indoors and taken her place once again, behind her husband. 
"Sankar's death interrupted our plans for Suri's wedding ... When she left us, it was as an unmarried girl. It was as if she could not accept her brother's death even for a few days. She maintained that bright eager look with which she had waited for him. But some deep inward yearning began to reveal itself, as if in expectation of a propitious moment, so that when we saw that look of eagerness, such a bright look, we were afraid. There was certainly a terrible beauty about her. She never spoke much to anyone. Yet I cannot say that she was entirely quiet. She would say something, suddenly, that struck a deep chord. Then she would talk only to me, calling out to me frequently: Anna ... Anna Gradually, her mind became disturbed. When we looked at her, it wasn't sorrow we felt, we could not bear to watch her, could only turn away with a sigh. She too left us. Seeking him ..." 

He finished speaking. Although he was looking at Sekar, his gaze seemed elsewhere. His quiet words had revealed clearly a boundless sorrow. In the silence that followed, there was time for each of them to reflect on what had been said, and to follow his own train of thought. 

The man began again. "Had you come to see us then ..." 

Sekar interrupted sharply, saying, “That could never have happened." 

-Why not - just as you have come now ..." 

"How can you possibly think of that time as the same as this? Sankar had just died. At that time, however much you knew about me, you would not have recognized me, had I come alone and without him. Have you not realized this much?” He too spoke very quietly, but he had said more than he should have done. His thoughts were raging wildly. 

"What do you mean?” 

"Do you think it was a mere coincidence that I should come here now? I exist now in his imagination, and I can see them, Sankar Anna: Elder brother. and Sumi, together. Don't you realize that now... in my life ... they are both always with me?" 

They watched him, but did not turn their eyes in the direction of the apparition towards which he was looking. Perhiaps they feared a little that his mind was faltering. 

He went on, "That is it, that is exactly what I was saying now." He was about to rise to his feet, but sat down once more and said, "Are you not able to see your wife clearly? It is exactly like that..." 

"How can you compare the experience of apprehending a person through one's senses to ..." 

He began again, harshly, "What can it really be you speaking?" Then, calming himself, he went on, "I see Sumi now, as clearly as you see your wife. I see hier now. It was possible for Sankar to die, but it will be impossible for him to be without dreaming of me and my life. So long as I'live out my life as if it is real, even though it is in Sankar's dream, he lives too. Sumi could have followed him, seeking his dreams ... But how is it ever possible for her to leave me? How can I live now except in this way?" 

He got to his feet slowly. He had to cross the front door, go past the two or three steps of the verandah and walk through the open gateway before he could reach the street. They could neither prevent his going nor offer him any means of protection against the rain. Thiey could only bid him farewell and watch him as he went through the gateway and disappeared at last into the street, out of their sight. Both sorrow and tears were out of place at that moment, 

The wind continued to blow fiercely. Nor was there an end to the fine drizzle. 

******************************************
மனக்கோட்டை -  மௌனி

பத்து வருஷங்களுக்கு முன்பு இவன் பட்டிணத்தில் உயர் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது , இவன் பெற்றோர்கள் இவனுக்கு கலியாணப் பிரயத்தனங்கள் செய்ததுண்டு. ஒவ்வொரு சமயமும் காரணம் காண முடியாத வகையிலே, எதேச்சை குறுக்கீட்டினால் என அவைகள் எல்லாம் தடைபட்டுவிட்டன. அவர்களும் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர். தனக்குக் கிடைத்த உயர் உத்தியோகம் ஒன்றையும் உதறிவிட்டு, தன் கிராமத்தில் சொத்து சுதந்திரத்திடையே காலம் கழித்துக்கொண்டிருந்தான். ஒரு பிள்ளை என்பதினாலும், நெருங்கிய உறவினர்கள் என்பதின்றியும் தனியே இருந்து ஒரு நேர்மையான நட்புறவில் ஏனைய கிராமத்தினரிடை மதிப்புகொண்டு வாழ்ந்து வந்தான்


சமீப சில வருஷங்களாக, தன் வாழ்க்கை,குறிப்பற்று,போக்கு புரியாமல், பாதையில் நழுவிச் செல்லுவதான தோற்றம் கொள்ளலானான். எதேச்சையென கொள்ளுவதை மனது மறுக்கிறது. தன்னையும், தன் சூழ்நிலைகளையும் , சம்பவங்களையும். ஒருமை கொள்ள வேண்டியிருக்கிறது. சூழ்நிலைக்களன்களில் ஒன்றி, அனுபவம் கொள்ள  மனநிலை விரிவும் மாற்றமும் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. உலக வாழ்க்கையே ஒரு பெரிய சூழ்நிலைத் தோற்றமெனக் கொள்ளவேண்டியிருப்பதில், தன் அறிமுகம் சரியென ஒரு போதும் தெரிய முடிகிறதில்லை என்றும் தெளிந்து கொள்ள, வெறித்து கனவென வாழ்க்கையைக் கண்டு நிற்பதான ஒரு எண்ணமும் இவனுக்கு அடிக்கடி எழுவதுண்டு. மனது வேதனை கொள்ளவதாகிறது, எல்லாம் ஈசுவர சங்கல்பம் என, தன்னை விடுத்துக் கொள்ளும் நம்பிக்கையும் இல்லை. இவன் தோற்றம், நடையுடை பாவனைகள், பேச்சுப் பழக்கங்கள், எல்லாம் சேர்ந்து. ஒரு விநோத விரோத பாவத்தில் கலந்து. இவனைத் தெரியாதவர்களுக்கும்கூட இவனைப் பார்க்குங்கால் , தெரிந்து கொள்ள அவா கொடுப்பதாக இருக்கும். இவ்வகையில், இவன் சிநேகித சித்திபெற்றவன் போலும்.

அடிக்கடி இவன் ஊரைவிட்டு, மாதக் கணக்கில் வெளியூர் போய் வருவது உண்டு. பெரிய பட்டிணங்கள், சிறிய நகரங்கள், க்ஷேத்திரங்கள் மற்றும் பழங்கால சரித்திர சின்னங்கள் என ஒரு வரையறையிலும் அகப்படாது, சித்தன் போக்கெனத் தோன்றும், இவன் பிரயாணங்கள். இதுவரையில் இவ்வகையாக நான்கைந்து தரத்திற்கு மேலாகவே சுற்றியிருக்கிறான். இப்போது, இவன் ஊரை விட்டகன்று நாலைந்து மாதங்களுக்கு மேலாகி விட்டது .திரும்பி பட்டிண மடைந்தவன், ஊரையடையும் ஆவலின்றியே, அங்கு சில நாட்கள் தங்கிப் போகலாமென நினைத்து ஒரு ஹோட்டல் அறையில் தங்கினான்.

தெரிந்த பட்டிணத்தில் , ஊரைச் சுற்றும் அலுவல்கள் இல்லை. எப்போதாவது சிறிது நேரம் , சிறிது தூரம் வெளியே சென்று உலாவி வருவதிலும், ஆங்காங்கே தென்படும் , தன் பழைய சிநேகிதர்களைக் கண்டு சிறிது பேசித் திரும்புவதிலும், பாக்கி அதிக நேரத்தை தன் அறையில் கழிப்பதுமாக இரண்டொரு நாட்கள் சென்றன. ஒரு நாள் மாலை ,ஒரு வீதியோரமாகச் சென்றுகொண்டிருக்கும்போது, பின்னின்று, சிலர் பேசிக்கொண்டு தன்னைக் கடந்து முன் சென்றபோது, அவர்கள் திரும்பி இவனைப்பார்த்தனர். இவனைத் தெரிந்துகொண்டு ஒருவன் ‘என்னப்பா சௌக்கியமா ? - எப்போது’ என்றான். அவர்கள் இவனோடு படித்த நண்பர்கள். மேலும் அவர்கள் தன்னைக் கடக்கும்போது பேசிக்கொண்டு போனதும் தன்னைப் பற்றித்தான் எனவும் இவன் நினைத்தான். ‘-அவன் தானே - இல்லை அவனைப்போல - இல்லை அவனே தான்’ என்பவைகள். ஒவ்வொருவருடைய பேச்சாகவும், ஒருவனுடைய பேச்சாகவும்,மேலும், தானே தன்னைப் பற்றிய சந்தேகத்தில் பேசிக் கொண்டதென, எவ்வகையிலும், அர்த்தம் கொடுக்கும் வகையில் பட்டது, இவனுக்கு வியப்பை கொடுத்தது. இச்சிந்தனைப் போக்குடன் அவர்களோடு சிரித்துப் பேசிக் கொண்டு போனான்.

“உன் சிரிப்புகூட மாறி விட்டது” என்றவன் இவனைப்பற்றி ஒன்றும் கேட்காமலே, தங்களைப்பற்றியும், ஏனைய நண்பர்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். மற்றொருவன், ‘நேற்றுகூட நாங்கள் சங்கரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். உன் நினைவுகூட வந்து , உன்னைப்பற்றியும் பேசினோம்’  உன்னைப்பார்த்தபோது, நீயோவெனக் கூட சந்தேகித்தோம்.சங்கர் இறந்தது உனக்கு தெரியுமோ? -’ என்றான். சந்தேகத்திலும் தான் அவர்களுக்கு உருவாவது இவனுக்கு விநோதமாகப் பட்டது. அவர்களுக்குதான் புரியுமளவுக்குக்கூட, தனக்கு தன்னைப் புரியவில்லை என்ற எண்ணத்துடன், சங்கர் இறந்தது முன்பே தெரியுமா  என்பதின்றியே, ‘ஆம் சங்கர் இறந்து விட்டான்-' என தன் மனதிற்குள்ளே  இரைந்து சொல்லுவது போன்று சொன்னவன் தன் சிந்தனைப் போக்கிலே போய்க் கொண்டிருந்தான். இவ்விதம் அவர்களுடன் பேசிக்கொண்டு போனால் தன்னை பைத்தியக்காரத்தனமாக தவறாகப் புரிந்து கொள்ளுவார்கள் என சீக்கிரம் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, தன் விடுதியை அடைந்தான்.

‘ஆம் சங்கர் இறந்து விட்டான்.'  இவன் மனது ஒரு தரம் சொல்லிக்கொண்டது. அநேக மாணவர் மத்தியில் இவன் ஒரு மதிப்பில் வீற்றிருக்கும்போது, அவனை அங்கு பார்க்கமுடியாது. கொஞ்சம் எட்டியோ, அல்லது பார்வையில்கூட படமுடியாத வகையில், அவன் அங்கிருப்பது மட்டும் நிச்சயம் . அவசியமானால் பார்வையில் கொள்ளக்கூடிய விதத்தில், அவன் எங்கேயாவது பகற்கனவு கண்டு கொண்டிருப்பான் என இவன் எண்ணுவான். தான், அவன் எண்ணத்தில் எப்போதும் இருக்காமல் இருக்க முடியாது  என்பதும் இவன் எண்ணம் போலும். தனியே, இருவரும் சேர்ந்து இருக்கும்போதுகூட, அதிகமாகப் பேசுவது இல்லை. பரந்த வெளியில் சித்திரம் காண இரண்டொரு கரிக்கிறுக்கல் கோடுளெனத் தோன்றும், அவன் வார்த்தைகள். இவன் மனோ விசாலத்தைப் பொருத்து , அதற்கு உருவம் கொடுக்க தன்னைத் தான் பார்பதற்கான தோற்றம் தான், இவன் கொள்ளவான். படிப்பிலும் மற்றும் எவ்விதத்திலும் இவனுக்கு சரிநிகரானவன். எவ்வளவு இனிமையாக துன்புறுத்தும் நினைவுகள் பாலிய கால பழைய நினைவுகள்!

அவனோ சில வருஷங்கள் படித்துவிட்டு, வேறுவிதப்படிப்பிற்கு வடக்கே சென்று விட்டான். போவதற்கு முன்பு இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டதும்  ஞாபகம் வந்தது. அவனுடன் வெகுநாட்கள் கடிதத் தொடர்பு கொண்டிருந்தான். கடைசியாக , அவன் எழுதிய லெட்டருக்கும் இவன் பதில் எழுதி இருக்கிறான். அவனுடைய கடைசிக் கடிதம் வெகு தெளிவாக கண்முன் நின்றது... இவன் மனது மிக வருத்தமடைந்தது . அவர்கள் சொல்லுவதுபோல அவனோடு - அவன் இறப்போடு , தன் இருப்புகூட சந்தேகம் கொள்ளவதும்  சரியெனத் தோன்றியது. அவன் இறுதிக் கடிதம் .......'உன்னை , என் பெற்றோர்கள் நன்கறிந்தவர்கள். ஏனைய குடும்பத்தினரும்கூட எப்படி எனத்தான் தெரியவில்லை. ஒரு தரம் , நீ என் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் பேசிப் போனாய். அப்போது அவர்கள் உன்னைப் பார்த்து இருக்கலாம். தெரிந்து கொண்டிருக்கலாம். அச்சிறு சந்திப்பு போதுமா, என்பதில் எனக்கு சந்தேகம். அடிக்கடி உன்னைப்பற்றி நான் அவர்களிடம் பேசியிருக்கிறேன். என் கற்பனையில் பிறந்து , அவர்கள் மனதில் நீ வாழ்வது , எவ்விதமோ தெரியவில்லை. எல்லோருமே, உன்னையும் பற்றி பேசுமளவிற்கு ,  நீ எங்கள் குடும்பத்தினரிடை  ஒருவருரினென்ற தோற்றம்  நாங்கள் கொண்டிருக்கிறோம். அடுத்த தடவை நான் ஊருக்குப் போகும்போது உன்னையும் அழைத்து வருவதாகச் சொல்லி இருக்கிறேன்...அப்போது, நீ வந்தபோது என் கடைசித்  தங்கை சுமி, உன்னை கதவிடுக்கிலிருந்து பார்த்தது, உனக்குத் தெரிந்து இருக்க முடியாது. அவள் எப்போதாவது உன்னை குறிக்கும்போது, எவ்வளவு நன்றாக, அழகாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் தெரியுமா ? நான் போகும்போது, உனக்குக் காட்டுகிறேன். நீ அவளுடன்  பேசி நான் பார்க்க வேண்டும்... என்னையின்றி நீ போக நேர்ந்தாலும், போய் வா . உன்னைப் பார்த்து அவர்கள் தெரிந்துகொள்ள முடியவிட்டாலும் ,நீ சொன்னால் நிச்சயமாக தெரிந்து கொண்டு விடுவார்கள் ..'


அன்றிரவு அவன் தூக்கம் காண, வெகு நேரமாயிற்று.


மறுநாள் காலையில் எழுந்தவுடன், அவன் இல்லாதே, அவர்கள் வீட்டிற்குப் போய் வரலாமெனக்கூட, நினைத்தான். அவன் எழுதியபோது, தனியாகப் போய் வருவதற்கும் , இப்போது அவன் இல்லாமல் போவதற்கும், ஏராள வித்தியாசம் இருக்கிறதென்பதை , அவன் அறியாமலில்லை. அவர்கள் இருந்த வீடும், இப்போது இவன் ஹோட்டலுக்குச் சமீபமாகத் தான் இருந்தது .இப்போது அவர்கள் அங்கு இருக்காமலும் இருக்கலாம் என்றும் தோன்றியது .ஒருக்கால் அவர்கள் இருந்தும், அங்குபோய், தனக்கு அவர்களைத் தெரிந்து, அவர்களுக்கு தன்னை அவர்களுக்குத் தன்னைத் தெரியாவிட்டால், எவ்வகையில் தன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தமுடியும் என்பதும் சேர்ந்து, அங்குபோகும் எண்ணத்தைக் கைவிட்டான். பட்டிணத்தில், மேலும், தங்கவும் பிடிக்கவில்லை. ஊர்போகும் ஆவலும் இல்லை.

பட்டிணத்திலிருந்து தன்னூர் செல்லும், ரயில் பாதை நடுவில், ஒரு சிற்றூர் இருந்தது. அதனருகில், சரித்திரப் பிரசித்திபெற்ற ஒரு பாழடைந்த மலைக் கோட்டை இருப்பது இவனுக்குத் தெரியும். இதுவரையில், இவன் அதைப் பார்த்தது கிடையாது. இந்த சந்தர்ப்பத்தில் அதன் நினைவு கொண்டு அதைப் பார்க்கலாமென, பட்டிணத்தைவிட்டு காலை வண்டியிலே கிளம்பிவிட்டான்.


இருட்டு நன்றாகக்  கண்டுவிட்டது . ரயில் அந்த ஸ்டேஷனை அடையும்போது,  மேலும் நாழிகை ஆகிவிட்டது. குறிப்பிட்ட நேரத்தில் வண்டி வந்திருந்தால், மாலை நேரத்திலேயே அடைந்து இருக்க முடியும். அன்று ரயில் , மூன்று மணி நேரம் லேட். அந்த ஸ்டேஷனில் இவனைத் தவிர  வேறு யாரும் இறங்கியதாகத் தெரியவில்லை, ஸ்டேஷனே இரண்டொரு சிப்பந்திகளைத் தவிரவும், வெளியே பிரயாணிகளுக்காக்  காத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் , நான்கைந்து வண்டிகளையும் தவிர , ஜனசஞ்சாரமற்ற தோற்றம் தான் கொடுத்தது . அவன் பார்க்கப் போகுமிடம் ,இப்போது இருட்டிலும்கூட தெரியும் வகைக்கு , ஸ்டேஷனுக்கு சமீபத்தில்தான் இருந்தது. ஆனால், அவன் அன்றிரவு தங்க, மூன்று மைல்களுக்கப்பால் உள்ள, ஒரு சிறு நகரத்தை அடைய  வேண்டிருந்தது . அக்குன்றுக் கோட்டை அடியில் ஒரு பெரிய பட்டிணம் ஒரு காலத்தில் இருந்தது . அது காலத்தில் நாகரீகத்திலும், நகர்ந்தும் , தேய்ந்தும், இப்போது இருக்கிட மடைந்திருக்கலாம். அல்லது  மறைந்தே, சிறு குடிசைகளாக, மலையடிவாரத்தில், சிதறித் தோற்றம் கொண்டிருக்கலாம். மேற்கு அடி வானத்தில் மறைய விருக்கும் பிறை சந்திரன், அறையிருட்டைத்தான், அழகுடன் உலகிற்கு அளித்துக் கொண்டிருந்தது. ஆகாயத்தில்  தெரிந்த எண்ணிலா நக்ஷத்திரங்கள், மொத்தமாக,சிறு ஒளிகொடுக்க இருந்தன.. ஸ்டேஷனில்  இறங்கியவன், சிறிது நேரம் அப்பிராந்தியத்தைச் சுற்றிப் பார்வைகொண்டு, நின்றிருந்தான். மங்கிய ஒளித் திரையில், அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரியும் அநேக மலைக்குன்றுகள் பல ரூபத்தில் பதிந்திருக்கக் கண்டான். தேவாசுர யுத்தத்தில், ஒருவருக்கொருவர், மலைகளைப் பிடுங்கி அடித்துக் கொண்டதில் , சிதறித் தெறித்தனவென, ஆங்காங்கே தோன்றித்  தெரிந்தனவே போலும் ,உயிரற்ற அவைகளுக்கு, எல்லையிலா கற்பனையில்  ஜீவன் கொடுக்க, இச்சிறு ஒளிபோதும் - மேலே வானத்தில் எண்ணிலா நக்ஷத்திரங்கள் தெரிவதும் கீழே பூமீயில் கண்ணுக் கெட்டிய வரையில் ஆங்காங்கே தெளிக்கப் பட்டுத் தெரியும், சிறு குடிசைகளின் விளக்கொளியும் போதும் போலும். புதைவு கொண்ட அமைதி, விட்டுவிட்டு விம்முதலில் காணும் மெளனக் குமுறலின், ஓலமென எல்லாவற்றையும்  பார்த்து, சிறிது நின்றிருந்தான்.

ஒரு வண்டியைப் பிடித்துக்கொண்டு, இதுவரையில் பார்க்காத, ஊர்ப்பயணத்தை, இருள் வழியே இப்போது இவனுக்குப் போக நேர்ந்தது. இது இவனுக்கு, ஒரு அதிசய அனுபவமாக இருக்கவும் அமைந்தது. ரயில் பிரயாணம் தாமதப்படாது இருந்து இருந்தால் , இருட்டுக் காணும் முன்பே ஊரை அடைந்து இருப்பான்.

இருப்பக்கமும் மரங்களுடர்ந்த இருள் சாலையில் வண்டி போகும்போது, இவனுக்கு, வண்டியில் போவதாகவே தோன்றவில்லை. காலதேச விவரணத்தைக் குறிக்க, ஆங்காங்கே சாலையோரத்தில் தெரியும் சிறுகுடிசைக் கடைகளின் விளக்கொளிதான் . சில கடைகளில் , தாமதமாக, இரவில்  வெகுநேரம் சென்று சாமான்கள் வாங்கியது போன்றே நிசப்த்தில் இரண்டொருவர் தெரிந்தனர். விடாது, தொடர்ந்து கேட்கும், வண்டி, வண்டிக்காரன் , சப்தத்தை கவனிப்பில் கொள்ளமுடியவில்லை. குருட்டுத் தனமான , மெளனவெளித் தேடுதலாகப்பட்டது இப்பிரயாணம். நடுவீதியில், அயர்ந்து  தூங்கிக் கொண்டிருக்கும் நாய்கள், வண்டி இடிக்குமளவு விழித்தெழக் காத்து, தீடீரென ஊளையிட்டோடுவது , அடிக்கடி இவனுக்கு அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தது. இந்த தெரியாத ஊர்ப்பயணம், இருட்டில், ஒரு விநோத அனுபவமாகத்தான் இவனுக்கு பட்டது.

மறுநாள் காலையில், கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து, எல்லா காரியங்களையும் முடித்துக்கொண்டு, நடுப்பகல் பொழுதிற்கு முன்பே பார்க்கவேண்டியவைகளை பார்த்துவிட்டு திரும்பிவிடலாமென்று, கையில் ஆகாரம் கொண்டு போகாதே கிளம்பினான்.

காலை ஒளியில், சொட்டச்சொட்டக் குளித்து நின்று கண்ணுக்கொட்டிய தூரம் வரையில், அப்பிராந்தியம் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. அது ஒரு மலைப் பிரதேசமல்ல. ஒரு பெரிய பொட்டல், வெட்டவெளிப் பிரதேசம். ஆங்காங்கே, சின்னதும் பெரியதுமாக, அநேக குன்றுகள் சிதறித் தெரிந்தன. எட்டிய வெளி வரையில், கட்டான் தரையும், சிலசில இடங்களில்  பசும்புல் பூமி,  மரம் மட்டைகள், சிறு புதர்கள்  ஆகியவைகளும், ஒன்றுகூடி, ஒரு பிரமிப்பை கொடுக்கும்வகையில் தெரிந்தது. தனித்தனியாக ஆடுமாடுகளும், இரண்டொரு மனிதர்கள், எட்டிய வெளியில் மந்தையென ஆடுமாடுகள் அசைவுத் தோற்றம்... ஆகியவைகள் அகண்ட வெளியில் கரையாது தோன்றியது. ஒவ்வொரு நேர ஒளியிலும், பருவகால வித்தியாசத்திலும், பார்ப்பவர் மனநிலையோடு கலந்து, வேவ்வேறு வகைக்குக்காண, எண்ணிலாச் சாயைக் கொண்டு தோற்றம்  கொடுக்க இருந்தது, அப்பிராந்தியம். ஒரு உயரமான குன்றின்மீது, இவன் பார்க்க இருக்கும், கோட்டை தெரிந்தது. அதன் அடிவாரத்தை அடைந்தபோது, அவ்விடம் கொஞ்சம்  செழுமையான பூமி எனத்தோன்ற , மர பட்டைகளும் , புதர்களும் மண்டியிருந்தன. மரத்திலிருந்த பக்ஷிகளின் குரல், தூரத்திலிருந்து கும்பலாகப் பறந்து வரும் பறவைகள் தன்னைத் தடவி ஸ்பரிசம் கொடுக்கும் காற்று இலைகளூடே சலசலப்பு கொள்ளுவது , எல்லாமுமே  இவனுக்கு ஒரு பாழ் பட்டுக் கொண்டிருக்கும் தோற்றத்தைத் தான் கொடுத்தன. குன்றின் அடிவாரத்திலிருந்து,
கோட்டை கொத்தளங்கள், மாளிகை மாடங்கள், கோவில் கோபுரங்கள் எல்லாம் தெரிந்தன. மேலே ஏறி, சாவகாசமாக, எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, நடுப்பகல் சரிவு கண்டுவிட்டது. களைப்பில் பசிக் கூடதோன்றவில்லை. சிறிது இளைப்பாறி, பிறகு நடக்கலாம், என ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். எதிரே உற்றுநோக்கிக் கொண்டிருந்தான். கோட்டைக் கொத்தளங்கள், எட்டித் தெரியும் குன்றுகள், எல்லாம் எட்டி நகர்ந்து மறையத் துடித்து, கானல் சலனத்தில் தெரிந்தன. இந்தக்கோட்டையை இது வரையில் பார்க்காதவனானாலும், அதைப்பற்றி அநேக விஷயங்களைக் கேட்டும், படித்தும் தெரிந்துகொண்டிருந்தான்.

மறைந்த கோவில் வெங்கலத் தேரையும்,கோட்டைப் பாதாளச் சுரங்க வழிகளையும் , பராபரிச் செய்திகளென, இவன் கேட்டிருக்கிறான். திரேதாயுகத்தில், அதன் ,நிர்மானம் ,ஸ்தல மகிமைப்  புராணம், உண்மைக் கூற்றென சரித்திரம், கல்பனைக்கதைகள், முதலிய என்னவெல்லாமோ அதைப்பற்றி புத்தக ரூபமாகப் படித்தும் தெரிந்து கொண்டவன். இப்போதும்  தனக்குத்  தெரிந்த தெல்லாவற்றையும் நினைக்கும்போது, அபத்தமென, சிரிப்புகூட தோன்றியது. பக்தியில் கோவிலுக்கு வெங்கலத் தேரை வார்த்துவிட்டு, எதிரிகளை முறியடிக்க, விநோதமான குறுக்குப் பாதைகளை, வெகுயுக்தியுடன் கண்ட ஒரு மேதாவி வீரதீர சக்ரவர்த்தி, தொலைவிலே எதிர்க்க வரும் எதிரிகளை முறியடிக்க ,  அவர்கள் மத்தியில் திடீரெனப் புகவும், பிறகு தோற்றால் திடீரென மறைந்து கோட்டையை அடையவும், அநேக சுரங்கப் பாதைகளை அமைத்தான். ஒரு தரம்  அவ்வகை செய்ய தீர்மானித்து, அநேகரை , எட்டிய வெளியில் விரோதிகளெனக்கண்டு அவர்களிடை புகுந்து  வீரதீரபராக்கிரம  செயல்கள் புரிந்து ,சுரங்க வழியே கோட்டையை அடையும் ஆவலில் தோற்று , மறைய நினைத்தப் போது எல்லாம் மறந்துவிட்டது . அவர்கள் மத்தியிலே அவர்களாகவே ‘ஜே-ஜே' கோஷமிட்டு கோட்டையை அடைந்தான். அவர்களும் மறந்து, தாங்களென  மதித்து , இவனையே அரசனாக்கி , கோட்டையை அடைந்து கைகட்டி கட்டளைக்குக் காத்திருந்தனர். அவர்களோடு வெங்கலத் தேரும் ,சுரங்கப் பாதைகளும் மறந்து மறைந்துவிட்டன.  இந்திரன் ,பிரும்மஹத்தி தோஷ நிவாரணம்,சுனையில் முழுகி சுவாமி தரிசனத்தில் கண்டது ...  தற்போது ஒருவராலும்  இந்திரனாக முடியாததினாலும் , பிராயசித்தம்  காணும் வகைக்கு , பிரும்மஹத்தி செய்ய முடியாததினாலும் , அதுவும் மறந்துவிட்டது. மறைய பாழடைந்து கொண்டிருக்கிறது. அந்த அரசன் அவன் தகப்பன்  அவன் -அவன் மகன் இவன் எனக்கொண்டு, கடல் கடந்து  வாணிபம் செய்தது... இமயத்தை வென்றது, பேரவை கூட்டியது , முத்தமிழ் பரிமாறியது. அது இது எல்லாமும், மனப்பிராந்தியில் சரித்திரமாகி ,கல்பனைகளுடன், உண்மையும் மறந்துவிட்டது, மறைந்தும்விட்டது. கோவில்,கோட்டை, குளம் எல்லாமுமே, இவன் பார்வைக்கு,ஒன்றெனத் தோன்ற , இப்பாழ் தோற்றம் இவனெதிரில் மெளனமாக ஏங்கிப் புலம்பி நின்றன. கானல் சலனத்தில்  எங்கேயே எட்டிய வெளியையும் நாடிப்போகத் துடித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவு அபத்தமாகப் படுகிறது எல்லாம். ஒரு அல்பசித்திகண்டு, தாங்கமுடியாது, மேலே போக வழிகாணாது,த வித்துக் கொந்தளிக்கும் மனோவியக்திகள் , இவ்வகை வெளிவிளக்க ஆர்ப்பாட்டம் , ஊர் கூட்டும் தமுக்கடி தமாஷா போன்று, எவ்வளவு அபத்தமாகப் படுகிறது. எவ்வித பிரமாண்டத் தோற்றமும் ஒரு அல்பசித்தியின், அல்ப பவிஷாசையின், வெளிக்கமாகத் தானே, தோற்றம் கொள்ளுகிறது. இரவின் அந்தகார இருளைக் காண, ஒரு சிறு ஒளிப்பொறி  போன்றாக முடியுமா, இப்பகல் தீவட்டிகளின் ஒளிகாட்ட முயலுதல்கள். எல்லாம் மாறி , மறைய, பாழடையத்தானே தோற்றம் கொள்ளுகிறது. பகல் ஒளியைப் பார்க்க , இவன் கண்கள் கூசின. சிறிது கண்களை மூடினான். யாரோ ஒருவன் ஒரு பெரிய பெட்டியைச் சுமந்து சென்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு,நீ பொட்டிக்குள்ளிருந்தே உன்னைத் தூக்கிக்கொண்டு போனால், சவுகரியமாகுமே என்று சொல்லிக் கொண்டிருந்த போது, எல்லாம் மறைந்தன. ஒரு கேட்காத சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை உடனே திறந்து பார்த்தான். ஒரு காகம்  மேலே மரக்கிளையிலிருந்து கரைந்து கொண்டிருந்தது. மாலை நேரம் கண்டு கொண்டிருந்தது, இவனைத் தூக்கி வாரிப் போடும்படி இருந்தது. நடுப்பகலில் அயர்வுக் கண்டு, தூங்கி மாலையில் விழித்ததென்பது , இவ்வளவு  நொடிப்பொழுதில் என்று தோன்றியபோது ,அன்று மாலை தானோ,என்பதும் கூட, இவனால் அனுமானிக்க முடியவில்லை . மழை வருமெனத் தோன்றி ,எழுந்து நகரத்தை நோக்கி வேகமாக நடக்கலானான்.

ஊர் எல்லைக்கு வெளியே இருக்கும் பங்களாக்களைக் கடந்து கொண்டிருக்கும்போது, வேகமாக காற்று கிளம்பி சிறு தூரலாக மழை ஆரம்பமாயிற்று. அருகிலிருந்த ஒரு பங்களா வாயிற் கேட்டடியில் சாரல் படாது இருக்க ,சிறிது ஒதுங்கி நின்றிருந்தான்.காற்றில் மழை கலைந்தால் , கொஞ்சம் காத்திருந்து , நனையாமல் போகலாம் என இவன் நினைத்து, சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது அப்பால் தள்ளி ,உள்ளே நின்ற அப்பங்களா வரண்டா தூணடியில்,இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்று , இவனைக் கூர்ந்து கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் உணர்ந்தான். காற்று ஓய்ந்து,மழை வலுக்க ஆரம்பித்தது . மறு முறை உள் பக்கம் பார்த்தான்.  அவள் அப்படியே நின்று தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான். அங்கியிருப்பது ஒருவிதத்திலும் இவனுக்குப் பொருத்தமாகப் படவில்லை .  நின்றாலும் நனையத்தான் வேண்டுமெனத் தோன்றியது. இனி நிற்பதும் பிடிக்கவில்லை என, நனைத்துகொண்டே நடக்க எண்ணியவனுக்கு , தன் அருகில் ஒருவன், கையில் குடையுடன் தன்னை உள்ளே அழைத்து வரண்டாவில் வந்து இருக்கும்படி சொன்னதும், இவன் அங்கு நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதும் ,ஒரு கனவு நிகழ்ச்சியைத்தான் கொள்ளும்படிஇருந்தது. வெளியே மப்பு மந்தாரத்திலும் , வெளிச்சம்  இருந்தது.பங்களாவுக்குள் , விளக்கு போடுமளவிற்கு இருட்டு கண்டிருந்தது.வாயிற்படி கதவருகில் நின்று நிழலென ,தன்னை அவள் கவனித்தது தெரிந்தது. உடனே ,வாயில் விளக்கும் , உள் வெளிச்சமும் போடப்பட்டவுடன், ஒளி நடுவில் திடுக்கிட்டான், மறுபடியும் வாயில்படி பக்கம் பார்த்தான்.அவள் அங்கு நின்றிக்கவில்லை. உள்ளே சென்றுவிட்டாள்.அந்த பங்களாவுக்குள் ஒரு கார் வந்து நின்றது. அதனின்றும் உயர்ந்த  உத்தியோகஸ்தரெனப்படும் ஒருவர் இறங்கி, ஒரு சேவகன் தொடர உள்ளே சென்றார். இவனைக் கடக்கும் போது பார்த்தும் பார்க்காத பாவனையில் மறைந்து விட்டார். அவள் கணவனென்பது இவனுக்குத் தெரிந்துவிட்டது. போகும்,‘தன்னை யார்'என்ன விசேஷமெனக் கேட்டிருந்தால் , அப்போது தன்னை எவ்விதம் அறிமுகப்படுத்தியிருக்க முடியும், என்பது இவனுக்கு விளங்கவில்லை. அவர் தன்னைக் கேட்காது போனதில் ,சிறிது நிம்மதி அடைந்தும் , இனியும் தனக்கு அவ்வகை நேராது இருக்க முடியுமா,எ ன்பது புரியாமலும் கூட , அங்கு விட்டு அகல  முடியாமல் ,நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.ஏதோ, ஒரு தவறிய சூழ்நிலையில் சிக்கித்தவிப்பதான எண்ணம் இவன் மனம் கொண்டது.

சிறிது நேரத்தில் ,அவர் உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வந்தார்......................... ‘மன்னிக்க வேண்டும், ஸார்,கவனிக்கவில்லை.உள்ளே உட்கார்ந்து பேசலாமே...'என்று அவனை அழைத்துப் போகவும் ,  ஹாலில் நாற்காலியில் ,ஒருவர் முன் ஒருவராக உட்கார்ந்து கொண்டனர். முதலில் கண்ட நிலைக்கு , தற்போது கொஞ்சம் மாறுதலாகத் தோன்றினாலும் , மனது , ஒரே விதமாக இவனுக்கு வேதனை கொடுத்துக் கொண்டிருந்தது. தன்னை யாரென அறிமுகப் படுத்திக் கொள்ள முடியாத ,தன் நிலைமையைத் தான் ,வேதனைகளெனக் கண்டு கொண்டிருந்தான். ஒரு பரிசாகரன் , இரண்டு கப் காப்பி கொணர்ந்து வைக்க ,இருவரும் பருகினர்.அவருக்குப் பின்னால் , தன் பார்வையில் அவள் பட எப்போது வந்தாள் என்பதை இவன் கவனிக்கவில்லை அத்தம்பதிகள் இருவர் முகத்திலும் ,ஒரு சோகக்களை படர்ந்து இருப்பதை, இவன் பார்த்தான் . தான் அவர்களுக்கு யாரெனப்படுகிறோம்,என்பதும் புரியவில்லை.


‘......உங்களுக்கு , எங்களைத் தெரியவில்லை' எனக் கொண்டு ,‘நாங்கள் எப்படி எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் , என்பது புரியவில்லை'என்றது இவனுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப் போடும்படி இருந்தது. மேலும் இவன் திகைப்பை நீடிக்கா வண்ணம் தடுப்பதே போன்று ‘உங்களுக்கு ,உங்கள் நண்பன் , சங்கரை நினைவிருக்கிறது, என்று நினைக்கிறேன் என்று சொல்லி சிறிது நிறுத்தினார்'. இவனுக்கு எல்லாமே, ஒரு நொடியில் புரிந்துவிட்டது. அவரிடம் ஒரு மதிப்பும்,கொண்டான்.‘...........ஆமாம் சரிதான்' என்று பேசியதும், இவனுக்கு சரியாகப் பேச ஆரம்பித்தார்.அதற்கு முன், அவர் தன் மனைவியை சிறிது உள்ளே போய் வரச்சொன்னார்.


‘நீங்கள் சங்கர் நண்பர் சேகர் தான் என்று எங்களுக்குத் தெரிகிறது. உங்களுக்கும்,எங்களைத் தெரிகிறது ....ஆனால் ,இக்குடும்ப  சம்பவங்கள் சில,உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.....உங்களுக்கும் தெரியவேண்டுமென்ற அவசியமுணர்ந்து,நான் சொல்லுகிறேன்.........’

  ஆமாம் சங்கர் இறந்து விட்டான், என்றவன் பேச்சை நிறுத்திக்கொண்டான்.

 ‘ஆமாம் சங்கர் இறந்துவிட்டான்......எப்படி என்றும்,உங்களுக்குத் தெரிந்து  இருக்கலாம்  .இருந்தாலும் நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமுணர்ந்து சொல்லுகிறேன். உங்கள் துக்கம் மேலும், அதிகமாகலாம் ஆனால் உங்களிடம் சொல்லுவதில் ,என் மனம் சிறிது ஆறுதல் கொள்ளும் .அதற்காக மன்னியுங்கள்’. சிறிது நிறுத்தி மேலும் பேசலானார்.

‘ஆமாம் , ஆயிரம் தடவை , நான் சொல்லி ஆறவேண்டிய துக்கம் அது. சுசிக்கோ, ஓரு தரம்கூட நினைக்க முடியாத, தாங்க முடியாத துக்கம். அவள்  இப்போது இங்கில்லை. எங்கள் பிரியம், சங்கரிடம் எவ்வளவு எனத் தெரியவேண்டுமானால், ஒருக்கால் ,அது அவன் உங்களிடம் கொண்ட அளவு, என்று வேணுமானால் சொல்லலாம். ஏதோ விவரமற்று , அர்த்தமற்ற புதிர் போட இவ்வளவு சப்பை கட்டி பேசிக் கொண்டிருப்பதாக நீங்கள் எண்ணமாட்டீர்கள் . நான் சொல்லுவதற்கு ,நிதானம் கொள்ள,தவிப்பின் வெளியீடுதான், இவ்வகை பேச்சின் தடுமாட்டம், மன்னிக்கவேண்டும் ....?’ சிறிது நிறுத்தி மேலும் தொடர்ந்தார்.

‘...சரி சங்கர் இறந்தான். காலம் போனாலும் , அந்த சம்பவம் , மனவெளியில் மாறாது நிலைத்துவிட்டது.அதை மறுக்குமளவுக்கு இருக்கும் வகையில் , மேலும் கடுமையாக பாதிக்க, அத்துக்கம், மாறாது ஸ்திரமென நிலைத்துவிட்டது அவன் இறந்த செய்தித்தந்தி அவன் தகப்பனாருக்கு....அவன் இறுதிக் கடன்களை , அங்கேயே அவர்களே செய்யும்படி,இவர் பதில் தந்தி, வடக்கே, கண்கணாதேசத்தில், ஒரு சுரங்க கம்பெனியில்,ஒரு உயர்பதவி வகித்தவன், பூமிக்கடியில் இரண்டாயிரம் அடி கீழே சுரங்கத்தை பார்வையிடும் போது , ஏதோ விஷம் தீண்டி இறந்தான். மேலே கொண்டு வரும் அளவிற்கு, அவன் உயிர், உடம்பில் தரிக்கவில்லை. அவனைப் பார்ப்பதில் தான் அவன் ஆத்மா சாந்தியடையப் போகிறதா? தகப்பனார் பதில் தந்திதான் அதற்குப் பதில். பிறகு வெகுநாள் கழித்து அவன் சாமான்கள்  வந்து சேர்ந்தன.....அவன் இறப்பை மறுக்குமளவுக்கு இல்லை? நீங்கள் இப்போது வந்தீர்கள்  .உங்களை இந்த குடும்பத்தில் ஒருவராகத்தான் நாங்கள் கருதிக்கொண்டு இருக்கிறோம்.உங்களைப் பற்றி அவன் சொல்வதிலிருந்து, எங்களுக்கு, நன்றாகத் தெரியும்’......

‘எல்லோரிடமும் அவன் பிரியமாகப் பழகினாலும் அவன் கடைசித் தங்கை சுமியிடம்,அதிகப் பிரியம் போலும். அவன் இறந்தது,அவளை வெகுவாகப் பாதிக்க  ஆரம்பித்தது.கடைசியாக, அவன் எழுதிய லெட்டர் அவளுக்குத்தான்... அவன் எப்போது வருகிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் ,நாங்கள் எல்லோரும் அவளைச் சுற்றிச்சூழ்ந்து , அவளைப் படிக்க வொட்டாது செய்து கொண்டிருந்தோம். வெகு நேரமாயிற்று அவளுக்கு  அதைப்படித்து முடிக்க. அவள் முகத்தை அப்போது பார்க்கவேண்டும்.! வர்ணிக்கக்கூடாது-முடியாது. படித்து முடித்தவுடன் லெட்டரை என்னிடம்தான் கொடுத்தாள். நான் அதை இரைந்து படித்தது,எல்லோரும் கேட்டது ...... அப்போது எங்களிடம் கண்ட குதூகலத்தில் , வாழ்க்கையே போய்க்கொண்டிருந்தால்... ‘சீக்கிரம் லீவு எடுத்துக் கொண்டு எல்லோரையும் பார்க்க வருவதாகவும் ,வரும்போது, உங்களையும் அநேகமாக ,நிச்சயமாக அழைத்துக் கொண்டு வருவதாயும் ... எழுதியிருந்தது. எல்லோருக்கும் உங்களை நன்றாகத் தெரியும். அவன் வருகை ஆவலில் ,உங்கள் வருகையும்  கலந்து ,நாங்கள் வெகு ஆவலாக அந்த நாளை எதிர்பார்க்கும் ஆவல்தான் அது.உலகில் கொடுத்து வைப்பது, கொஞ்சநாள் தான் போலும்... சில நாட்சென்று , அந்த  தந்தியும் வந்தது  .எங்கள் நிலைமையை அப்போது , நீங்கள் உணர முடியும். அவன் இறப்பு, மறுக்குமளவிற்கு மீறியே போகிறது .அதிர்ந்துபோன, எங்களை துக்கம் பீடிக்க கொஞ்சம் கொஞ்சமாக வந்தது.

  உள்ளே சென்றவள் , எப்போது  திரும்பிவந்து அவன் பின் நின்றாள் என்பது , இவனுக்குத் தெரியவில்லை. கீழே தொங்கிய தலையுடன் , கேட்டுக்கொண்டிருந்தாள்.

‘....சங்கர் இறந்ததில் சுமி கலியாணப் பிரயத்தினங்கள் தடைப்பட்டது... பிறகு, அவளும் கன்னியாகவே போய் விட்டாள். தன் தமயன் இறப்பை, கொஞ்சநாள் வரையிலும் அவள்  மனது ஒப்புக்கொள்ளவில்லை போலும். அவன் வருகையை எதிர்பார்த்து நிற்பவள்போன்று,வெகு வசீகரத் தோற்றம் கொண்டிருந்தாள். ஆயினும் உள்ளே குடிக்கொண்ட ஒரு ஏக்கம், வெளிக்கிளம்பியப்படி, காலத்தை  எதிர்பார்த்திருந்ததுபோலும் , அப்போது அவள் தோற்றம் ,வெகு  வசீகரமான தோற்றம் ,எங்கள் மனதிற்கு ,ஒரு அச்சத்தை விளைவித்துக் கொண்டிருந்தது.அவள் ஒரு பயங்கரத்தின்  கவர்ச்சியாகத்தான் தோன்றினாள். அதிகமாக ஒருவரோடும்,பேசுவதில்லை. ஆனால் பேசாது இருந்தாகவும் சொல்ல முடியாது. வெகு ஆழ்ந்துதொனிக்குமாறு ,அவ்வப்போது,ஏதாவது திடுக்கிடப் பேசுவாள். என்னை ‘அண்ணா -அண்ணா’யென அழைத்து கொஞ்சம் அதிகமாகப் பேசுவாள் . பிறகு சிறிது சிறிதாக, அவள் மனம் ,சஞ்சலிக்க ஆரம்பித்தது. அப்போது அவளைப் பார்க்கும்போது மனதிற்கு  வருத்தம் தோன்றுவதில்லை ...பார்த்து , பார்க்க முடியாது ,பெருமூச்சுடன் திரும்பிப்போவதுதான் முடியும்.... அவளும் போய் விட்டாள். அவறைத் தேடி..’ அவர் பேசி முடித்துவிட்டார். இவனைப் பார்த்தும் , எங்கெங்கேயும் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லையற்ற துக்கம் ,  அவர் நிதானப் பேச்சில் , வெகு தெளிவாகத் தெரிந்தது. சிறிதுநேர மெளனத்தில் , அவர் அவர்களுக்கு அந்த சூழ்நிலையில் தத்தம்  எண்ணப்போக்கில் போய்க்கொண்டிருக்க,அவகாசமிருந்தது.

 ‘நீங்கள் அப்போது வந்து பார்த்திருந்தால் .........’ என்று ஆரம்பித்தவரை , இவன் இடைமறித்து ,

 ‘அப்படி நேர்ந்து இருக்க முடியாது’- என்று சொன்னான்.

‘என்ன - இப்போது வந்தது போல ,...’ எனத் திடுக்கிட அவர் கேட்டார்.

‘எப்படி முடியும்,இப்போது போல,அப்போது பார்ப்பது..’என்றவன் மேலும்,

 ‘அப்போது  சங்கர் இறந்து விட்டான் . அப்போது எனக்கு  ......எவ்வளவு தெரிந்து இருந்தும்  அவன் இல்லாது நான் வந்தால்  நீங்கள் தெரிந்து  கொண்டிருக்க முடியாது .இது தெரியவில்லை உங்களுக்கு  -?’என்றான் இவன். வெகு நிதானமாகவே, கொஞ்சம் அதிகமாகவும் பேசியும் விட்டான் . எண்ணங்கள் எங்கெங்கேயோ போய்க் கொண்டிருந்தன.

‘என்ன ’என்றார் அவர்.

 ‘இப்போது யதேச்சையாகவா , வந்து சேர்ந்தேன்? இல்லை. என் வாழ்க்கை அவன் கற்பனையில் , என்பதில் அவர்களும் கூட இருப்பது,  உங்களுக்குத் தெரியவில்லை .இப்போது ? - நான் இருப்பதில் ’- என்றான்.

தெரிவது போன்ற தோற்றம் ,சிறிது கொண்டும், அவன்  பார்க்குமிடத்தைப் பார்க்காது,அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள். இவன் மனம்  தடுமாறுவதாகவும் சிறிது எண்ணமடைந்தார் போலும்......

இவன் சொன்னான், ‘ இதுதான், நான் இப்போது சொல்லுவது. ’ எனச் சொல்லி எழ நினைத்தவன் மறுபடியும் உட்கார்ந்து கொண்டு, ‘நீங்கள் உங்கள் மனைவியை இப்போது பார்க்கவில்லை? அப்படித்தான் - ’ என்றான். 


‘எல்லோரும் காண இருப்பவளை நீங்கள் எப்படி உவமிப்பது -’  என்றார்.

‘என்ன நீங்களா பேசுவது..’ என்று கொஞ்சம் கடுமை தொனிக்க சொன்னவன், மீண்டும், நிதானமாக நீங்கள் உங்கள் மனைவியைப்  பார்ப்பது போல நானும் சுமியைப் பார்க்கிறேன் - இப்போது பார்க்கிறேன்........சங்கர் இறக்க முடியும், என் வாழ்க்கையை, என்னை, கனவு காணாது இருக்கமுடியாது, அவன் கனவில் , நனவென வாழ்க்கை கொள்ளும், நான் இருக்குமளவும் அவன்?..........அவனை நாடி அவன் கனவை நாடி சுமி போகமுடியும் என்னைவிட்டு...எப்படி முடியும்? நான் இப்படியாவதை, தவிர்த்து,எப்படி வாழமுடியும்...’

இவன் நிதானமாக  எழுந்து , வெளியே சென்று கொண்டிருந்தான். வாயிற்படியைத் தாண்டி , மற்றும் வரண்டாவின் இரண்டு மூன்று படிகளையும் தாண்டி, மேலும் , பங்களா கேட்டையும் தாண்டித்தான் , எதிரே போகும் வீதியை அடைய வேண்டும் . போவதை தடுக்கவோ ,மழையில் நனையாது போக , வசதியளிக்கவோ, இவர்களால் முடியவில்லை . பிரியா விடைக்கொண்டு ,போவதைத்தான் கேட்டைத்தாண்டி வீதியில் பார்வையில் மறையும் வரையில் , பார்த்து நின்றிருந்தனர். துக்கத்திற்கோ , கண்ணீர் துளிகளுக்கோ அப்போது அங்கே இடமில்லை. 

 காற்று கடுமையாக வீசிக்கொண்டிருந்தது . மழையும் சிறு தூரலாக விட்டபாடில்லை.

- எழுத்து 1963
தட்டச்சு  :  தீட்சண்யா



” இலக்கியம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும். இந்த சாவு வேகத்தினாலான நாற்கரச் சாலையிலிருந்து ஒதுங்கி கிளை பிரிந்து மௌனியின் மனக்கோட்டை சிறுகதைக்குள் தேவாசுர யுத்தத்தில் சிதறிக்கிடக்கும் சிற்பங்களையிடையே காலக் கணிப்பிற்கு அப்பால் ஊடுருவிவி நிற்கிறது. இதற்கு முன்பு இல்லாத கலையை உருவாக்கிவிடும் நனவிலைச் சடங்கின் திருஷ்டியிலிருந்து அப்போது வரை சொல்லப்படாத கதைகளை சிருஷ்டித்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் கதையாளர்கள் “ 

- கோணங்கி (கல் குதிரை - முதுவேனிற் கால இதழ் -2014) - 

நன்றி றியாஸ் குரானா