தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, February 25, 2017

தமிழ் சிறுகதை 10 - சி.சு. செல்லப்பா

AUTOMATED GOOGLE-OCR from

104-ezhuththu.pdf
தமிழ் சிறுகதை 10
சி.சு. செல்லப்பா

சிறுகதைமணிக்கொடி மூன்றாவது ஏட்டில் (28.4.1935) கு.ப. ராஜகோபாலனின் 'சிறுகதை’ என்ற கதை வெளிவந்தாலும் அதுக்கு முன்பே கு.ப.ரா"சுதந்திரச்சங்கு வாரப் பதிப்புபத்திரிகையில் மூன்று கதைகள் எழுதி இருக்கிறார். குடும்ப சுகம் (23.3.1984) நூர் உன்னிஸா (30.3.1934) தாயாரின் திருப்தி (13.3.1934) ஆகியவை. நான் ஒரு தவறு செய்து விட்டேன். 1935ல் வெளிவந்த சிறுகதை மணிக்கொடி முதல் ஏட்டில் வெளியான என் கதை "ஸரஸாவின் பொம்மை" கதையை ஆராயுமுன், அதாவது பிச்சமூர்த்தியின் 'முள்ளும் ரோஜாவும்" கதையை பார்த்தபோதே, கு.ப.ரா. வையும் பார்த்திருக்க வேண்டும்.
கு.ப.ரா. வை அவரது 'நூர் உன்னிஸாவை வைத்துத்தான் பார்க்கவேண்டும். அது "சுதந்திரச்சங்கு'வில் இரண்டாவதாக வெளிவந்தாலும் அதுதான் முதலில் அவர் எழுதிய கதை. "குடும்ப சுகம்" பின்னால்தான் எழுதியது என்பது பிச்சமூர்த்தி கொடுத்த தகவல். ஆகவே நூர் உன்னிலா சிறுகதைக்கு என்ன பங்கு செலுத்தியது என்று பார்ப்போம். குளத்தங்கரை அரசமரம், என்னை மன்னித்து மறந்து விடு, மலரும் மணமும், ஊமச்சி காதல், கேதாரியின் தயாார், முள்ளும் ரோஜாவும், தபால்கார அப்துல் காதர் ஆகிய இதுக்கு முன் நாம் பார்த்த கதைக்குப்பின்வந்த கதை நூர் உன்னிஸ்ா.


இதுதான்முதல் காதல்கதை என்றுநான்கருதுகிறேன். அதாவது மணமாகாத இருவரின் உறவு சம்பந்தப்பட்டது. "மலரும் மணமும்" 'முள்ளும் ரோஜாவும் விஷயம் வேறு. மணமான நிலையில் ஆசை வெறியில் ஏற்பட்ட பின்விளைவுகள் பற்றியது. 'ஊமச்சி காதல்" தமாஷானது என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். மற்ற கதைகள் பிரச்னைகள் வேறானவை. ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பமாக வாழ்க்ைையத் தொடர மணமுறை ஒரு சமுதாய நியதியாகஎழுத்து -

கைக்கொள்ளப் பட்டு வருகிற நிலையில், அந்த வாழ்க்கை சக்கரம் சரியாக சுழல பெரியோர் பெற்றோர், குணம் தரம் பார்த்து,அறிவு பூர்வமாக அந்த உறவை நிர்ணயிக்கும்நடைமுறை இருந்து வருகிறது. அதிலிருந்து வேறுபட்டு ஆணும் பெண்ணும் தாமே குணம் பார்த்து தரம் பார்த்து, பரஸ்பரம் அறிந்து உணர்ச்சி பூர்வமாக மனம் கொடுத்து தங்கள் வாழ்க்கைத்துணைகளை தேர்ந்தெடுத்து குடும்ப அமைவது இன்னொரு நடைமுறை. முன்னதுக்கு பெற்றோர் பொறுப்பு; பின்னதுக்குதாங்களேபொறுப்பு. பின்னதை காதல் அடிப்படையில் ஏற்பட்ட உறவு என்கிறோம். பழைய புராண, சரித்திர, இலக்கியத் துறைகளில் இதுக்கு இடம் இருந்திருப்பது தெரியும் ஆனாலும், தற்கால சமூக வாழ்வில் அதுக்கு இடம் பொருட்படுத்தத் தக்கதாக இருந்து வரவில்லை. இன்று வரையிலும் கூட அது பேசும் படியாக பாதிப்பு விளைவித்திருப்பதாகவும் சொல்வதுக்கில்லை.
இந்த நிலைமையில் நூர் உன்னிலா வெளி வந்தது. நூர் உன்னிஸாவில் “டீன் ஏஜ்" என்கிற வளர்பருவ மயக்கம், அது நீடித்து வளர்ந்து உக்ரமாகி தாங்கள் பகுத்தறிந்து உணர்ந்த ஒரு உணர்ச்சித் தீவிரம், அதன் பயனாக அவர்கள் உறவிலே ஏற்பட்ட முடிவு ஆகியவை: சேர்ந்து ஒரு சுத்தமான காதல் கதை உருவாகி இருக்கிறது. இதிலே ஏற்பட்ட சிக்கலும் புதுவிதமானது அன்றைக்கு, இந்த கதையின் உள்ளடக்கத்தை நான் சொல்வதைவிடகதையின் முடிவில் வரும் கடிதமே கலைப்பாங்குடன் சொல்லிவிடுகிறது:-
இக்கடிதத்தை என்வாக்காவும் அடையாளமாகவும்நீவைத்துக் கொள்ளலாம். நாம் திருச்சியில் சிறு குழந்தைகளாக விளையாடியபோது என்மனதில் உன்னிடம் ஏற்பட்ட பற்று என்னை விட்டு இன்னும் அகலவில்லை ஏனென்றால் ஸ்தா உன் உருவம் சிலைபோல என்முன்நிற்கிறது. நித்திய இளமையோடு உன்னுடன் விளையாடுவது போலவே கனவு காண்கிறேன். உன்னை மற்றொரு முறை இவ்வுயிரில் பார்க்க வேண்டுமென்ற அவாவும் நிறைவேறி விட்டது. இனி என் நாட்களை பூர்வம் ஜெபுன்னி ஸாவைப் போல கழிக்கப் போகிறேன். தாயாரிடம்நீ கலியான மில்லையென்று சொன்னது எனக்கு திருப்தியைக் கொடுத்தது. இ னி மேல் நீ இன்னுமொரு ஸ்திரீயுடன் பேசாது உன் வாழ் நாட்களை என் மனத்தோடு மட்டும் லயிக்கச் செய்துகழிப்பாயானால் நானும் சோர்வின்றி வாழ்வேன். அப்படியே செய்கிறேனென்று நீ

எனக்குப்பதில் எழுத வேண்டாம். நீ செய்வாயென்று எனக்கொரு தீவிர நம்பிக்கை இருக்கிறது. அதே என் உயிர்நாடி, நான் மெய்மறந்து உன்னையே நினைக்கிறேன். ஆனால் நாமிருவரும் இவ்வுடலில் ஸதிபதிகளல்ல. சரீர இச்சைவேண்டாம். பூர்ணமாக என் ஆகாகத்தில் ஜொலிக்கும் சுகச்சந்திரனுக்குக் களங்கமுண்டாக்காதிரு, சரிதானே?
இப்படிக்கு நூர் உன்னிஸ்ா
கதாநாயகன் சொல்வதாக அமைந்தகதைமுடிவில் வரும்
வரிகள் இவை:
“என் மனமோகினியின் கட்டளைப் படி நான் உலக வழிகளில்திரிந்து வருகிறேன். நான் செய்யும் காரியங்களிலும் நான் நினைத்த மாத்திரத்தில் என் முன்தங்கப்பதுமை போல வந்து நின்று என்னை உத்ஸாகப் படுத்துகிறாள். என் சோர்விலும் என் மனதின் முன் குதித்துக் கொண்டு வந்து என்னை ஆற்றுகிறாள்.
லைலா மஜ்நூன், ஷெரீன் பர்ஹாத், ரோமியோ ஜூலியட் கதைகள் நமக்குத் தெரியும். இளம்பருவகாதல்நிறைவேறாமல் மனம் முறிந்து சோககரமாக வாழ்க்கை முடிவுகள் அவர்கள் உறவில், அது மாதிரி முடிந்திருக்க வேண்டிய ஒரு சம்பவம்தான் இதுவும், முதலில் காதலுக்கு இடம் இல்லாத காலம். இரண்டாவது, முன் சொன்னவர்களிடையே அந்தஸ்து வித்யாசம். குடும்ப விரோதம் இவை அவர்கள் உறவுக்கு தடையாக நிர்ணயிக்க, இங்கே ஜாதிக்கும் மேலாக மதம் இடையே சுவர் எழுப்பிய நிலை. நடப்பு ரீதியாக பார்த்தால் சாத்தியமே இல்லாதது அன்றைக்கு.
அவர்களின் காதல் சாத்யமாகாதது இருக்கட்டும். அத்தகைய காதல் ஏற்படுவதுக்கான பகைப்புலமே ஏற்பட வழி இல்லாத காலம் என்றும் சொல்வேன். சமுதாயக் கட்டுப்பாடுகள் அவ்வளவு அமுக்கினசந்தர்ப்பம். விதிவிலக்குகள்இருந்ததாஎன்பதுகூட எனக்கு சந்தேகம்தான். கேள்விதான். 'மலரும் மணமும் பிரச்னைக்கே களம் இல்லாத போது'நூர் உன்னிஸா’ பிரச்னைக்கா வாய்ப்பு? ராமையா, பிச்சமூர்த்திக்கு மேலே ஒரு படி போய்விட்டார்கு.ப.ரா.தன் கதைக்கு விஷயம் கரு தேர்ந்தெடுப்பதில், கலைஞன் பார்வையிலே கோணங்கள் மதிப்புகள், உணர்ச்சிகள் காலதேச வர்த்தமானத்துக்கு ஏற்ப மாறி வருவதையும் விரிவடைவதையும் நாம் பார்க்கிறோம்.எழுத்து - சி.க. செல்லப்பா
கு.ப.ரா. கதையில் கோணம் மாறுதல் குறிப்பிடத்தக்கது. காதல் வழி மணம் என்றால், அதுவும் பெற்றோருக்கு பிடிக்காத, சமூகம் விரும்பாததாக இருந்து விட்டால், அதில் தோல்வியுற்று மனமுறிந்து காதலர்கள் தங்களை அழித்துக் கொள்வது அல்லது பிறரால் அழிக்கப்படுவது (அனார்கலி விஷயம்) நடந்து வாழ்வுமுடிவதுதான் கையாளப் பட்டிருக்கிறது. துஷ்யந்தன் சகுந்தலை காதல்கூட வேறு விதமான, ஒரு தரப்பின் குற்றத்தால் துக்ககரமாக ஆகிவிடுகிறது. ஆனால் கு.ப.ரா. இந்த பழசாகிவிட்ட கோணங்களிலிருந்து தன் பார்வையை திருப்பி புதுக்கோணத்தில் பார்க்கிறார். மேலே குறிப்பிட்ட கடிதம் அதை நிரூபிக்கிறது சிறுவயதில் ஏற்பட்ட பற்று, அவனை பனிரெண்டு வருஷங்களாக பார்க்க விட்டாலும் அவனைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும், வளர்ந்து அவன் நினைவாகவே கனவாகவே என்றோ ஒரு நாள் மற்றொருமுறை பார்த்தாலே போதும் என்று எதிர்பார்த்து வாழ்ந்து அந்த கணம் கிடைத்ததும் அதாவ்து பின் அண்ணன் கல்யாணத்தன்று அவனை சந்திக்கும் சில விநாடிவாய்ப்புக்குப்பின்தன்மனநிறைவைப் பெற்று தன் காதலின் பரிசை பெற்றுவிட்ட திருப்தியுடன் தன் மீதி வாழ் நாளை கழிக்க முடிவு செய்து "சோர்வின்றி வாழ்வேன்" என்று தன் காதலனிடம் சொல்லும் அளவுக்கு அவள் என்ன மனதிடம் கொள்கிறாள்! அது மட்டும் இல்லை. அவனுக்கும் ஆணையிடுகிறாள், அவனும் தன் மனதோடு மட்டும் லயிக்கச் செய்யும் படியும் தன் லட்சியத்துக்கு மாசு ஏற்படாதபடி நடந்து கொள்ளும் படியும். அவனும் அந்த ஆணையின்படி நடந்து வாழ்ந்து சோர்வு இன்றி மணிநிறைவில் வாழ்கிறான்.
இந்த பார்வை சிறுகதை இலக்கியத்தில் புதியது. புரட்சிகரமானது. இது யதார்த்தமானதா என்று இந்தக் காலத்தில் கேள்வி கேட்கக்கூடும. அசட்டுக் கேள்வி, காதல் என்பதின் புனிதம் தெரியாமல் காமத்தை எடுத்துக் கொண்டு பால் உணர்ச்சி வெளியீட்டுப்படைப்புகள் இன்றுமிஷன் உற்பத்தியாக வெளிவருகிற காலகாட்டத்தில், வேறு எப்படி இருக்கும் கேள்விகள்? காதலின் பரிசுத்தம், பரிசுத்தமான காதல் எந்த அளவுக்கு உயர்த்தக்கூடும் என்பதுக்கு இந்த கோணம் நிரூபணம்.வல்லிக்கண்ணன்
மதிப்பை எடுத்துக்கொண்டாலும், நாமிருவரும் இவ்வுடலில் சதிபதிகளல்ல. சரீர இச்சை வேண்டாம் என்கிற போது, தாம்பத்ய வாழ்க்கையில் உடலுறவுக்கு 'சரீர இச்சை என்பதற்கு எவ்வளவு புறக்கணிக்கத்தக்க, குறைந்தபட்ச இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. இதுவும் இன்று "பிளேடானிக் காதலா, புலன்களுக்கு உரியதாக இல்லாத, ஆத்மார்த்தமான காதலா என்று டக்கான கேள்விக்கு உரியதுதான். சதையுணர்ச்சிக்கு மிதமிஞ்சிய மதிப் பு கொடுத்து, ஆண் பெண் உறவு அதையே வைத்துத்தான் என்று கீழ்த்தரமான காமவேட்கை ஒரு கடைக்கோடியிலே படைப்பில் சித்தரித்துக் காட்டப்படுக்கையில் மறு கோடியிலேஅதுக்கு எதிராக சரீர ஸ்பரிசமே இல்லாமல் தாம்பத்ய உறவு இருக்க வேண்டும் என்பதுக்காக வலியுறுத்தப்படுவது இது என்று ஆகாது. கு.ப.ரா.வே. பின்னால் ஒரு கட்டுரையில் ("சதைப்பற்றற்ற காதல்" பாரத தேவி 30.7.1939) "சதை என்ற சேற்றில் முழுகஅல்ல, அதற்கு மேலே போய் தாமரையைப் போலத் தலையெடுத்து நிறக, இரவும் பகலும் போலவும்துக்கமும் சுகமும் போலவும் வேற்றுமை கொண்டிருக்கும் ஸ்திரீ tG569 சுபாவங்களை ஒன்றாக்க" என்றும் உடற்சேர்க்கையைவிட மனச்சேர்க்கையே புனித உள்ளங்களுக்கு அதேபெருத்த கலவி இன்பத்தைக் தரும்" என்றும் அருகாமைகூட காதலுக்குத் தேவையில்லை. பிரிவாற்றாமையில் காதல் வளர்கிறது, விரகே பிரேம ராசி பவதீ" என்று காளிதாஸன் கூடச் சொல்லி இருக்கிறார்" என்றும் குறிப்பிட்டிருக்கிற மாதிரி சீக்கிரமே அழியக்கூடிய அலுக்கக்கூடிய ஒரு உறவுக்கும் அப்பால் நீடித்து நிலைக்கும் ஒரு உறவு இருக்கக்கூடும் என்பதை இந்த சிறுகதை தத்துவ மதிப்பாக வைத்திருக்கிறார் கு.ப.ரா.
"மலரும் மணமும் கதையில் விதவைப் பெண் செல்வம் ராமதாஸை நேருக்கு நேர் காண தினம் மெய்மறந்து நிற்பதும் “முள்ளும் ரோஜாவும்" கதையில் உடலழகு என்னும் பொய்ப்படுதா கமலம் கண்களை மறைத்து கணவனின்ஆத்ம வனப்பை அறியாமல் செய்து விட்டதும் இரண்டும் உடல் இச்சையை முன்வைத்து நின்ற பாத்திரச் சித்தரிப்புகள். கு.ப.ரா. நோக்கு இந்த கதைமூலம்உடல் இச்சை திருப்தி சாத்யமாகாத நிலையிலும் உறவை காப்பாற்றிக் கொண்டு வாழ்க்கையை நிறைவான தாக்கிக் கொள்ள முடியும் என்பது.எழுத்து - சி.சு. செல்லப்பா
மூன்றாவதாக உணர்ச்சி. தங்கள் லட்சியம் ஈடேற இயலாத நிலையில் உணர்ச்சி வசப்பட்டு தங்களை அசட்டு அபிமான உணர்ச்சியால் அழித்துக் கொள்ளாமல் அறிவைக் கொண்டு உணர்ச்சியை சமனப்படுத்தி சுத்தப்படுத்தி தங்கள் வாழ்க்கையை வேறு பயனுள்ளகாரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் இருவரும். அதே சமயம், நித்திய இளமையோடு தங்கள் உறவு நீடிப்பதான நம்பிக்கையால்தான் மனிதன் வாழ்கிறான் என்கிறதானால் காதலிலும் அதில் தோல்வி கண்டாலும் அது சாத்தியம் என்பதுஇந்த கதையில் தெரிவது.
எனவே நூர் உன்னிஸா அன்று சிறுகதையில் ஒருபுதுக் கதவை திறந்ததும், இதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டோம். அவருடைய 'விடியுமா கதை வெளிவரும் வரை இந்தக்கதை எனக்கு அபிமானக்கதை - நடுவில் காதலே சாதல், வீரம்மாவின் காளை போன்ற அவர் கதைகளை படித்து ரசித்த போதும். இன்றும் அது அப்பழுக்கு இல்லாத கதையாகவே நான்கருதுகிறேன். எழுதி உள்ள விதம் ரொம்ப சிறப்பானது. ஆரம்பமே நல்ல பிகு. முடியும் போதும் அதே தொனியில், இடையில் நெகிழ்ச்சி தளர்ச்சி கிடையாது. ஏற்றப்பட்ட நாணின் விடைப்பு. கதாபாத்திரமே சொல்கிற பாணி. சிறுகடிதத்துடன் ஆரம்பம் சிறுகடிதத்துடன் முடிப்பு, சிக்கனமாக சொல் உபயோகம். அழுத்தமான உணர்த்தல் உதாரணம்;
என்மனதில் தோன்றித் தோன்றி என்னை மயக்கிய பெண்ணுரு யாருடையது என்று தவித்தேனே- அப்பா, அது நூருன்னிலா வினுடையதே. ஒரு சிறுமியின் முக்காடிட்ட குற்றமற்ற முகம், அதில் மைதீட்டிய இமைகளிடையே குரு குரு என்று சஞ்சலித்த இரண்டு குறை கூறும் விழிகள், ரோஜாக்களிடையே மல்லிகை போல கீழிதழைச் சற்றே கடித்து வெளியே தோன்றின பல்வரிசை - இத்தகைய உருவம் மோகினி போல் என் மனதில் குடிகொண்டு ஆட்டிவைத்ததே-அது அவளுடையது. அவளுடைய மனநிலையும் என்னுடைய மனநிலையை ஒத்திருக்கக்கூடுமா என்ன? இல்லா விட்டால் இக்கடிதத்துக்கு ஏன் காரணமாகிறாள் கூட்டத்தில் திரியும் என்னைக் குறித்தல்லவோ கூப்பிடுவது போலிருக்கிறது!வல்லிக்கண்ணன்
‘என் ஹிருதய நிலைமையை அவள் அறிவாளோ? முடியாது. பூவின் அவா மணமாக வெளியேறித் தாக்குகிறது’ நினைவில் புறப்படும் அலை எப்படி அவள் இருதயக் கரையில் போய் மோத முடியும் ஸாத்தியமில்லை.அக்கடிதத்தில் தன் சகோதரன்ைக் கருவியாகக் கொண்டு என்னையேனிங்கு வர வழைத்தாள்) என்னிடத்தில் அவளுக்கோர் - அதெப்படி நான் சொல்வது?
உணர்ச்சிசித்தரிப்பில் கு.ப.ரா. பின்னால் சிறப்பான வெளியீடு காட்டி இருப்பதுக்கு நல்ல சூசனை இந்தக் கதையில் தெரிகிறது. சம்ஸ்கிருத இலக்கியங்களில் நல்ல உள்ள அவரது நடையில் அந்த பரிச்சயம் மொழிச்சொற்கள்தக்க இடங்களில் பொருத்தமாக பயனாகி வ.வெ.க. அய்யர், சங்கு சுப்ரமண்யன் நடை போல் ஒரு கம்பீரம் அமைந்ததாக இருக்கும். அவரது நடையில் கவிதைப் பாங்கும் தொனிக்கும், 'மலரும் மணமும் போல் சோகமாகவும் 'முள்ளும் ரோஜாவும் போல் இன்பமாகவும் முடியாமல், நெடுகிலும் அநுபவிக்கும் வேதனையை தள்ளிக் கொடுத்து அந்த வேதனையையும் இன்பக் கனவுகளாக தம் இச்சா சக்தியால் மாற்றும்முயற்சியில் ஈடுபட்ட இரு உள்ளங்களில் போராட்டத்தை வெளியிடும் முடிவாக இருக்கிறது. ஒரு சுத்த கலைஞனின் சுத்தமான படைப்பான இந்த கதையை நான் இன்றும் முன் போலவே ரசிக்க முடிகிறது. இதுக்குப் பின் கு.ப.ரா., வாழ்க்கையில், குடும்பத்தின், ஆண் பெண்உறவின் சிக்கல்களை போராட்டங்களை பிரச்னைகளை வைத்து பல கதைகளை எழுதி இருக்கிறார், அவரை சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராக ஆக்கத்தக்க திறமை இந்த கதையிலேயே வெளித் தெரிகிறது.
மணிக்கொடியில் முதல் சிறுகதையான 'சிறுகதை’ வருமுன் வ.ரா. மணிக்கொடியின் கட்டுரைகள் "கருவளையும் கையும் என்ற தலைப்பில் கவிதைகள், பூரூரவஸ், ஊர்வசி ஆகிய புராண பாத்திரங்களைதன் கற்பனையில் புதுசு படுத்திய சித்தரிப்புகள் எழுதி இருந்தாலும் இந்தகதைதான் அவரை எடுத்துக்காட்டியது. கதைக்குள் கதையாக அமையும் உத்தி முறை ராமையாவின் “வார்ப்படம் கதையில் கையாளப்பட்டது போன்ற ஒரு புதுவிதமானது ஆகும்.
295

Monday, February 20, 2017

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜெயகாந்தனும் மெய்யியல் மரபும் : கோவை ஞானி


AUOMATED GOOGLE-OCR... 
188 
எவ்வகையில் முன்னேறும்? இலக்கியம் போதைப்பொருள் அல்ல, அது ஒரு பேராற்றல் மூன்றாம் தர அரசயில்வாதிகளுக்கு இலக்கியம் ஆள் பிடித்துக் கொடுக்க முடியாது. நாம் எதற்காகக் கம்பனையும் வள்ளுவனை யும் இளங் கோவையும் படிக்க வேண்டும்? அது போலவே டால்ஸ் டாயையும் ஷேக்ஸ்பியரையும் இவர்களைப் பற்றிய படிப்பிலிருந்து எவற்றை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்?
இவையெல்லாம் உயிருள்ள கேள்விகள். இவற்றுக்கு விடை அளிப்பதில்தான் நம் இலக்கியத்திற்கான எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.
எழுபதுகளில் கலை இலக்கியம், இலக்கு கருத்தரங்ககு, காவ்யா வெள்யீடு, 1983
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்,  ஜெயகாந்தனும் மெய்யியல் மரபும் : கோவை ஞானி
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 17
ஜெயகாந்தனின் இந்த நாவல் தமிழ் நாவல்களுக்கிடையில் ECU வித்தியாசமான நாவல் என்பதை முதல் & Jimo) (, ?](361)(3u ! நரம புரிந்து கொள்கிறோம். நாவலின் மையப்பாத்திரமாகிய ஹென்றி, தோற்றத்தில் மட்டுமல்லாமல், தான் பிறர்மீது செலுத்தும் பாதிப்பிலும் ஏசுநாதர் போன்றவன். கிருஷ்ண ராஜபுரத்தில் வாழும அரையாடை மனிதர்களையும், அவர்கள் ஆதரவில் வாழும விலங்குகளையும் ஒரு குழந்தைத்தனமான பார்வையில் ரசிக்கிறான். ரசனையில் இவன் குழந்தை போலத் தோன்றினாலும், இவனுக்குள் ஒரு முதிர்ந்த மனிதன் இருக்கிறான். மனிதர்களிடத்தும் உயிர்களிடத்தும் இவன் கொள்ளும் அன்பும் மரியாதையும், இவனை தேவராஜன் பார்வையில் ஒரு அதிசய மனிதனாக்குகிறது (உண்மைதான், இன்றைய உலகியல் சூழலில் இவன் ஒரு அதிசய மனிதன்தான்), ஹென்றியின் இந்த மேன்மைக் குணம், இவனுக்கு இவனது வளர்ப்புத் தந்தை சபாபதிப்பிள்ளை வழங்கிய நன்கொடை தன வாழ்க்கையில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களைக் கண்டு அனுபவித்து, இவற்றாலெல்லாம் இவர் சிதைந்து போகாமல் சாதிமத பேதங்களையும் பயனற்ற கல்விச் சுமையையும் துறந்து உலகில் அன்பையும் மரியாதையையும் தவிர வேறு எல்லாவற்றையும் உதிர்த்துக் கொண்ட ஞானவான் சபாபதிப் பிள்ளை. இவர்தான் ஹென்றிக்குள் தொடர்ந்து வாழ்கிறார். மரியாதையோடுகூடிய இந்த அன்பைப் போற்றுவதில்தான் ஹென்றி ஏசுவாகிறான். கதை நெடுகிலும் பார்க்கிறோம். இந்த ஹென்றிதான் உடைமையின் கோரத்திற்குப் பலியாகாமல், யார் மீதும் தன ஆக்கிரமிப்பைச் செலுத்தாமல், இயற்கைக்கிடையில், மனிதர்க்கிடையில் அன்பின் சின்னமாக உலவுகிறான். இவனது பார்வையின் வழியே தன் கிராமத்தைப் பார்த்த தேவராஜனுக்குத் தன கிராமத்தின் மேன்மை புரிகிறது. ஹென்றியின் மேன்மைக் குணத்தைப் புரிந்து கொண்ட நிலையில்தான், முரட்டுத்தனமான தோற்றத்திற்கடியில் துரைக்கண்ணுவிற்குள்ளும் ஒரு ஹென்றி இருப்பதை நாம புரிந்து கொள்கிறோம். பயன் கருதாமல் அன்பு செய்யும் ஆக்கம்மாவின் மேன்மையையும் இந்தப் பார்வையின் வழியேதான் நாம் புரிந்து கொள்கிறோம். ஹென்றி, துரைக் கண்ணு ஆகியவர்களின் பார்வையால் பாதிக்கப்பட்ட நிலையில் தான் கிராமப் பஞ்சாயத் 

ஞானி 190
தாரின் குணங்கள் மேன்மையுறுகின்றன. இத்தகைய மனிதர்கள், நிகழ்வுகளினூடே பார்க்கும் போதுதான் இந்த நாவல் ஒரு அன்புக் காவியமாக, அன்பை உபதேசிக்கும் வேதமாக நமக்குத் தோன்றுகிறது. நாம் காணும் வாழ்க்கையில் மனிதர்கள் இத்தகையவர்களாக இல்லை. உடைமையின் கோரப்பிடிக்குள் சிக்கிச் சிதைந்து நாகரிகத்தின் அலங்கோலங்களைச் சுமந்து நாறிப்போன மனிதர்க்கிடையில், இந்நிலையிலும் நாசமாகக் கூடாது என்ற முறையில் உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கும் சில மேன்மையான மனிதப் பண்புகளின் முழு வடிவமாகவே ஹென்றியும் துரைக்கண்ணுவும் இருக்கின்றார்கள் மனிதனுக்குள் இயங்கும் இத்தகைய குணங்களிலிருந்து ஹென்றி போன்ற உன்னத மனிதர்ளைக் கண்டறிந்து தருவதனாலேயே ஒரு இலக்கியம் உன்னதமான இலக்கியமாகிறது, படைப்பாகிறது இலக்கியத்தின் இன்றியமையாத தேன்வயை இத்தகைய இலக்கியம்தான் நிறைவு செய்கிறது. உடைமைப் பற்றை உதறிவிட்டு, இயற்கைப் பொருள்கள், உயிர்கள், மனிதர்களை வியப்புணர்வு மேலோங்கப் பார்த்து ரசிக்கும் ஹென்றி, தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய மனிதன். பழக்கதோசத்தால் மந்தமாகிவிட்ட பொருட்கள், நிகழ்வுகள், மனிதர்கள் மீது படிந்திருக்கிற தூசியை ஓர் இயல்பான பார்வையிலேயே விலக்கி, பொருள்கள் முதலியவற்றின் அழகை மேன்மையைப் பார்க்கிறான் ஹென்றி. ஹென்றியின் இத்தகைய பார்வை, நிர்வான நிலையிலான பார்வை, இந்தப் பார்வையைக் கொண்ட நிலையில்தான் நிலவொளியில் நிர்வாணமாகக் குளிக்கிறான். அன்பற்ற உலகம்தான் பைத்தியங் களைத் தோற்றுவிக்கிறது. அன்புதான் பைத்தியங்களை தெளிவிக்கிறது. ஹென்றியின் பார்வையில் பைத்தியக் காரப் பெண் பைத்தியம் தெளிவது இதனால்தான். இத்தகைய ஹென்றி உடைமைச்சூழலில் சடங்குகளுக்கு இடம் கொடுக்கும் நிலையில், அந்தப் பேதை மீண்டும் பைத்தியம் ஆகிவிடுவதில் வியப்பில்லை. உடைமையையும் சடங்கையும் உதறிய இன்னொரு காலத்தில், அவள் மீண்டும் வருவதை நாம் இங்கிருந்தே பார்த்துக்கொள்ள முடியும். தேவராஜன் அறிவுபூர்வமாகப் பிரச்சனைகளை அலசித் தடுமாறிக் கொண்டிருக்கும்போது ஒரு அநுபூதி நிலையில் உண்மைகளைத் தரிசிக்கிறான் ஹென்றி. ஹென்றிக்கு மின் விளக்குகள் தேவையில்லை. எளிய சூழல்-கிராமம் போதும், இத்தயை சூழலில் ஹென்றி ஆதிவாசியாகிவிடவில்லை, போட்டியும் பூசலும் மலிந்த உலகியல் சூழலில், மனித மேன்மையைத் தனக்குள் தாங்கியிருப்பவன் ஹென்றி, ஒர் ஆழ்ந்த பார்வையில் புரிந்து கொள்கிறோம் ஹென்றி ஒரு சித்தன் என்பதை, ஜெயகாந்தனின் பெருமைக்குரிய படைப்புகளாகிய அம்மாசிக் கிழவன், ராஜராமன், ஓங்கூர்ச் சாமியார், கல்யாணி
191 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்
ஆகியவர்களோடு சேர்ந்தவன் இந்த ஹென்றி. தமிழ்ச் சமுதாய வரலாற்றின் நெடுங்காலப் பார்வையில் பார்த்தால், திருமூலரோடும் தாயுமானவரோடும் பட்டினத் தாரோடும் இன்னும் எத்தனையோ சித்தர்களோடும் சேர்ந்தவன் இந்த ஹென்றி. ஒரு கலாச்சார வாழ்வில் உன்னதமான இல்ட்சிய மனிதனாக உருவாகி இன்றுவரை நம்மோடு, நமக்குள் சிறிய அளவிலேனும் இருப்பவன் இந்த ஹென்றி. இவ்வகையில் இவன் ஒரு தொன்மக்கூறு (Myth), ஒரு arche type. இவனுக்கு வரலாற்றில் சாவு இல்லை.
தமிழ் நாவல் 50 பார்வை பத்தினிக்கோட்டப் பதிப்பகம், மேலையூர், 197818. 
ஜெயகாந்தனும் மெய்யியல் மரபும்
l. எந்த ஒரு மனிதனும் தான் வாழும் காலச் சமூகச் சூழலால் பாதிக்கப்படாமலிருக்க முடியாது, சமூகத்தில் தனது இருப்புக்கு வாழ்நிலைக்கு ஏற்ற முறையில் சமூகப்பரப்பின் பலதுறைப் பிரச்சனைகளின் பாதிப்புக்கு உள்ளாக நேரும். பாதிப்பை அதே வழியில் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஏற்கனவே உள்ள தனது ಇತ್ಲಿ ಜ್ಯೋತಿ ஏற்ப சமூகப் பிரச்சனைகளைச் சந்திப்பதுடன் சந்திக்கும்போதே தன்னை மறுவுருவாக்கம் செய்துகொள்வதும் சமூகத்தைப் திரும்ப தான் பாதிக்கும் வகையிலான செயலில் ஈடுபாடு கொள்வதும் உடன் நிகழ்ச்சிகளாகும். தனக்குள் இறுகிப்போகாத எந்த ஒரு மனிதனும் சமூகத்துக்கும் தனக்குமான இத்தகைய வினை-எதிர்வினை உறவில், தன் ஆயுட்காலம் முழுவதும் இருப்பது தவிர்க்க இயலாதது.
இவ்வகை இடையறாத உறவில் மாற்றத்தில் இருக்கும் இரு எதிர்நிலைகளுள் ஒன்று தான், மற்றது 'சமூகம், சமூகம் என்று நாம் குறிப்பிடும் வரையறைக்குள் உலகம், வரலாறு முதலிய பலவற்றையும் அடக்கலாம். தான் என்ற எல்லைக்குள் அடங்கும் பலவறறுள் தான் வாழும் சமூகத்தின் முன்கால வரலாற்றின் தொடர்ச்சியாகவும், நிகழ்கால வரலாற்றுச்சக்திகளின் பகுதியாகவும் இருந்து தனக்குள் வந்து இடம் பெற்ற கலாச்சார, கலை, இலக்கிய, மெய்யியல் மரபுகளும் அடங்கும்.
தனக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவுகள் எப்பொழுதும் சிக்கலானதாகவும் நெருக்கடி மிக்கதாகவும் முரண்நிலைகள் கொண்டதாகவும் இருக்கும். தனக்கும் சமூகத்துக்கும் இடையில் மட்டுமல்லாமல் தனக்குள்ளும் சமூக நிலைபாடுகளுக்குள்ளும் முரண்நிலைகள் தொடர்கின்றன. எந்த ஒரு சிக்கலின் தீர்வின் போதும் தீர்வைத் தொடர்ந்தும் புதிய முரண்நிலைகள் தோன்றும், தொடரும். முரண்நிலையற்ற ஒரு நிலை சாத்தியமும் இல்லை, முரண்நிலைகளைச்சரிவர எதிர்கொள்வதும் தீர்ப்பதன் மூலமும்தான் சமூகமும் தனிமனிதனும் வளர்ச்சி பெறமுடியும்,
இவை சில பொதுவான வரையறைகள், இவை முழுமையான வையாக இல்லை என்றாலும் நம்மை எதிர் கொள்ளும் பிரச்சனை பற்றிய ஆய்வுக்கு இந்த முன்னுரை தொடக்கநிலையாக அமையும்.
. ஜெயகாந்தன் தனிமனிதனாகக் காட்சியளித்தாலும் قہ /ائے۔hل}JتیJ நீண்டகாலக் கலை இலக்கியக்கலாச்சார அரசியல் ஈடுபாடுகளையும் அவரது பாதிப்புகளையும வைத்துப் பார்க்கும்போது, ஜெயகாந்தன் ஒரு இயக்கம் என்று சொல்லக்கூடியவராகத் திகழுகிறார். மனிதர்கள்மீது ஒரு கலைஞன் என்ற முறையில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு, வியக்கத்தக்க முறையில் சிறந்தது.
193 மர்ர்க்சியமும் தமிழ் இலக்கியமும்
கண்களையும் மனத்தையும் திறந்து வைத்து, மனிதர்களை சமூகத்தை ஆழ்ந்து கவனிப்பவர். அவர் பலமுறை குறிப்பிட் டுள்ளதுபோல, தான் பார்த்த மனிதர்களை - நிகழ்ச்சிகளைக் கலையழகோடு சித்திரிப்பவர். மனிதர்கள் வெளிப்பார்வைக்குக் குற்றவாளிகள் போலத் தோன்றினாலும் அவர்களிடம் காணப் படுவனவாகிய தவறுகளுக்கு அவர்களே பொறுப்பல்ல; இந்தச் சமூகம்தான் காரணமென்பதால் அவர்களின் தவறுகள், குற்றங்களும் அல்ல; சிலசமயம்.இவை நோய்கள்; மனநோய்கள். மனநோயாளிகளை அன்போடு, பரிவோடு பேணி அவர்களின் மனப்பிறழ்ச்சியிலிருந்து அவர்களை விடுவிக்கவேண்டும். உள்ளே இருக்க வேண்டியவர்கள் வெளியிலும் வெளியிலிருக்க வேண்டியவர்கள் உள்ளேயும் இருப்பது காலத்தின் கோளாறு. முற்றான தீயவர் எங்கும் இல்லை - முழுமையான நல்லவரென்று எவரும் இல்லாததுபோல, மனிதர்களை, அவர்களின் புறத் தோற்றம், செயல்பாடு கடந்து அகத்தில் ஆழத்தில் பார்க்க வேண்டும். இப்படி மனிதர்களைப் பார்க்கும்போது நம்மிடம் பொங்கிவழியும் குணம் அன்பு இந்த அன்பு, நமக்கு ஜெயகாந்தன் கற்றுத்தரும் மந்திரம். ஒரு கலைஞன் என்ற முறையில் ஜெயகாந்தன் தன் பாத்திரங்கள் பலவற்றை இந்த அன்பு கொண்டு வார்த்தெடுக்கிறார். இந்த அன்பு நிறைந்த மனம் கொண்டவர்க ளுக்கு வாழ்க்கை வெறுப்பைத் தராது, நம்பிக்கையைத்தான் தரும் ஹென்றி, கங்கா, கல்யாணி என்று எத்தனை பேர்களைச் சொல்ல!
அதாவது, ஜெயகாந்தனிடம் செறிந்துள்ள மனிதநேயப்பார்வை, சமூகச்சூழல் பற்றிய படிப்பிலிருந்தும் ஜெயகாந்தனிடம் வந்து செறிந்துள்ள மெய்யியல் மரபிலிருந்தும் உருவாகியுள்ளது என்பதுதான் இங்கு நாம் கவனங்கொள்ள வேண்டிய உண்மை, ஜெயகாந்தனை, அவரது தான் (self) என்பதை உருவாக்கிய சக்திகளுள் முக்கியமானவை, அவரிடம் வந்து செறிந்துள்ள மெய்யியல் கலாச்சார மரபுகள். திரும்பவும் சொல்லிக் கொள்வோம் ஜெயகாந்தனுக்குள் வந்து செறிந்துள்ள இந்த மரபு, முரண்நிலைகள் கொண்டதுதான்.
3. ஜெயகாந்தன் என்ற நம் காலத்துக் கலைஞர்-சிந்தனையாளர் என்பவரிடம் வந்து செறிந்துள்ள மெய்யியல் மரபில் சில அழுத்தமான வலுவான இழைகளைக் கண்டு குறிப்பிடலாம். நெடுங்காலமாக இந்தியாவில் தோன்றி வளர்ந்து, காலந்தோறும் தனக்குள் பலவற்றை இணைத்துக்கொண்டு புதிய மாற்றங்களையும் விளக்கங்களையும் காலத்துக்கு ஏற்றவாறு பெற்று, இந்திய மக்களில் பெரும்பாலோரின் வாழ்க்கைமுறையில் கலந்துள்ள இந்து மதம்-ஒரு முக்கிய இழை. இன்னொன்று, மேலை நாடுகளிலிருந்து தோன்றி மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வை அகற்றி சமத்துவமான சமுதாயம் தேவை என்பதை வலியுறுத்தும் சோசலிசம்-கம்யூனிசம், Lost 

3.ஞானி 19A 
இப்படிச் சொன்ன உடனே-இதனை வேறுவகையில் பொருள் படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காகச் சில விளக்கங்களை உடனடியாகக் கூறிக்கொள்ளவேண்டும்.
ஜெயகாந்தன் குறிப்பிடும் இந்து மதம் என்பது, ஜெயகாந்தன் தனக்குள் செறித்துக் கொண்ட இந்துமதம்-அதாவது இந்து மதம் என்றால் இதுதான் என்று ஜெயகாந்தன் ஏற்றுக் கொண்ட இந்து மதம், அது போல ஜெயகாந்தன் குறிப்பிடும் சோசலிசம் என்பது கூட, தான் புரிந்து கொண்ட, தனக்குள் செறிவுபெற்ற இந்துமதம் என்பதி லிருந்தே உருப்பெறுகிறது. விவேகானந்தரும் பாரதியும் தனக்குக் கற்றுக் கொடுத்ததான் மார்க்சை லெனினைப் புரிந்து கொண்ட வகையிலான சோசலிசம்.
ஜெயகாந்தனுக்குள் இடம்பெற்ற மெய்யியல் மரபுகளில் மேலும் இரண்டு ஒன்று காந்தியம், மற்றது பெரியாரின் பகுத்தறிவு வாதத்துக்கு மறுப்பு. இந்துமதம் பற்றிய ஜெயகாந்தனின் பார்வையிலிருந்தே காந்தியம், பகுத்தறிவு மறுப்புக் கருத்துகளும் தோன்றுகின்றன என்பதையும் குறிப்பிட்டுக் கொள்வோம்.
4 மேற்குறித்த விவரிப்புகளின் வழியே இவ்வகைக் கருத்தாக்கங்கள் ஜெயகாந்தனிடம் இடம் பெறுவதற்கான வரலா சமூகச்சூழல் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும். ஜெயகாந்தனை முதன்முதலில் அழுத்தமாகப் பாதித்த சக்தி, கம்யூனிஸ்டுக் கட்சி கட்சியோடு நெருக்கமான உறவு கொண்ட காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்-படிப்பினைகள், கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து முற்றாக விலகாமல், விலக முடியாமல் ஒதுங்கியிருந்து கற்றுக்கொண்ட பல அனுபவங்கள். இவற்றுக்குக் காரணமான பல சமூக நிகழ்வுகள், உலகளாவிய நிகழ்ச்சிகள்-இவை ஒரு தொகுதி. மற்றொன்று நேருவின் சோசலிசச் செயல்பாட்டு முயற்சிகள். நேருவின் காந்திய நடைமுறை. அதாவது வன்முறை வழியில்லாமல் அன்பு முறையிலேயே சோசலிசம் சாதிக்க முடியுமென்ற நம்பிக்கை. இவற்றோடு தமிழகத்தில் தி., தி.மு.. வளர்ச்சி-அவர்களின் பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழிலக்கியப் பண்பாட்டுப் பெருமை, உலக அளவில் சோசலிசம் பெற்றுவரும் வெற்றிகளும் தோல்விகளும், இந்தியாவில் நேருவின் சகாப்தம், தமிழகத்தில் சிந்தனைத் துறையிலும் அரசியல் துறையிலும் ஏற்பட்டு வந்த மாற்றங்கள்-இவற்றுக்கிடையில் ஜெயகாந்தன் என்ற ஆளுமை. மேலும் இரண்டு: இந்து மதத்துக்குக் கடைசியாக விவேகானந்தர் தந்த விளக்கமும், காந்தியார் தந்த விளக்கமும்-எல்லாவற்றுக்கும் வாயிலாகப் பாரதியார். இவற்றோடு ஜெயகாந்தனின் குடும்பச் சூழலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பரம்பரைச் செல்வப் பெருமை தந்தையோடு முற்றாக அழிந்த நிலையும் அதிலிருந்து தன்னை நிமிர்த்துக் கொண்ட உறுதியும், இவை அனைத்தும் ஒன்றுடன் மற்றது மோதல் - உரசல் இல்லாமல்
95 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் பொருந்தக் கூடியன அல்ல, இவற்றுக்கிடையில் மோதலோடும் இவற்றுக்குள் நெருக்கடிகளோடும் ஜெயகாந்தன் உருவாகிய சமூக வரலாற்றுச் சூழலின் சில பிரமாண்டமான தன்மைகளை நாம மறந்துவிடக்கூடாது. இந்தியாஅரசியல் விடுதலை பெற்ற நிலையில் மாபெரும் சாதனைகளை எதிர்நோக்கியிருந்த ಹೌ೧೩.೭ಾಷ್ಟ್ರಿಡಿ... வியக்கத்தக்க முறையில் உருவாக்கிக் கொண்டது. என நேரு முதலியவர்கள் பெருமைப்பட்டதும் இந்தயாவுக்கான ஒரு ஜனநாயக அரசியல் முறைவை உருவாக்கித் ಶಿಕ್ಞಿoTo! இந்திய அரசியல் சட்டம்; இந்திய மக்களை உலுக்கிய காந்தியாரின் கொலை; இந்திய வானில் ஒரே நம்பிக்கை ஒளியாக இருந்து இந்திய அரசியல் உயர்பீடமேறிய நேரு சோசலிசம் பற்றி அவர் தீட்டிய பல வணண எழிலோவியங்கள் உலகஅளவில் ஸ்டாலினுக்குப் பிறகு, பேர்வுெ றியின் தேவையில்லாமலேயே உலகத்தில் சோசலிச சொர்க்கத்தைச் சாதிக்க முடியுமென்ற குருச்சேவின் சமாதான சகவாழ்வுக கோட்பாடு; சோசலிசத்தைச் செயல்படுத்த நேரு முன் பிரமிக்கத்தக்க ஐந்தாண்டுத் திட்டங்கள் இந்தியாவில் எழுநத கனா கத் தொழில்கள் அணைக்கட்டுகள்: தமிழக 67 శాశక్తితి? காமராசர், பெரியார் முதலிய தலைவர்கள், அவர்களின் செயல்பாடுகள்:இந்தியாவின் அரசியல் வண்ணத் தை மாற்றத் கம்யூனிஸ்டுக் கட்சி மேற்கொண்ட பல நிகழ்ச்சிகள். இவை மாம னிதர்களின் மலையைப் புரட்டும் செயல்களாக வருணிக்கத்தக்க வை. இவ்வகை வரலாற்றுச் சூழலில் வாழ்ந்த பெருமையை நாம் இகழ்ந்துவிட முடியாது.
ண்டுக்கால அளவில் இந்திய மக்களின் எதிர் அளவில் நிறைவேறின? தொழில் துறையில், கல்வி விஞ்ஞானம் முதலிய துறைகளில் பெரும் ୫୩୬ ଗ୍f $ଜୀt நிகழ்ந்தன. ஆனால் விளைவுகளைப் பொறுத்தவரை, நேரு அவர்களே தன் இறுதிக் காலத்தில் கண்டபடி, பெருமுதலாளி தொழில்துறைச் சாதனைகளின் பயன்களைப் பெற்றனர். நிலச்சீர்தி ருத்தச் சட்டங்கள் சட்ட நூல்களிலேயே இருந்தன. தேர்தல் ஜனநாயகம், இந்திய அரசியல் சட்டம் முதலியவை மக்களிடம் அதி காரப் பரவல்ை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அரசு நிறுவனங்களிட மும் தொழில்துறைச் சக்திகளிடமும் நிலக்கிழார்களிடமுமே அதிகர ரக் குவிப்பைச் சேர்த்தது. இந்து முஸ்லிம் ஒற்றுமை என்ற காந்தியக் கனவு சிதைந்தது. உழைக்கும் மக்களின் நிலை உயர்வடையவில் லை, சமுதாயத்தில் கலாச்சாரச் சீரழிவுகள் பெருகின. சாதி புதிய guւգ வங்களில் தழைத்தது. மத்தியதர வர்க்க அறிவாளிகள், கலைஞர்கள முதலியவர்கள், ஆளும் வர்க்க வணிக வர்க்கச் சேவைக்கே 51685)ut ஒப்படைக்கலாயினர். விடுதலை கேள்விக்குறியாயிற்று.
தமிழ்ப்பெருமை, பண்பாடு பற்றிய ஆரவாரப் பேச்சுகள் வெற்ற லங்கார மேடைப்பேச்சு என்றாயிற்று. பகுத்தறிவு வாதம், வெறும்
பார்ப்பனிய எதிர்ப்பாக, புராண எதிர்ப்புப் பிரச்சாரமாகத் தேய்ந்தது ,ஞானி 96 கம்யூனிஸ்டுக் கட்சி வெறும் பொருளாதாரவாதம், தொழிற் சங்கவாதம் பாராளுமன்ற வாதத்துக்குப் பலியாயிற்று சமுதாயம் கடுமையான நெருக்கடி நிலையில் ஆழ்ந்தது.
இந்தப் பின்னணியிலிருந்து ஜெயகாந்தனிடம் இடம்பெற்ற ஜெயகாந்தனை உருவாக்குவதில் பங்குபெற்ற - ஜெயகாந்தன் தனக்குள் செறித்துக் கொண்ட மெய்யியல் மரபுகளைப் பார்ப்போம்,
5. ஜெயகாந்தனின் ஒரு கட்டுரையிலிருந்து :
நவீன இந்தியன் தனது கலாச்சார வேர்களை அறுத்துக்கொண்டவன் அல்ல. நவீன யுகத்தின் பொருள் முதல் வாதக் கருத்துகளும் நவீன உற்பத்திமுறை வாழ்க்கையும் அவனால் அப்படியே அங்கீகரிக்கப்பட வேண்டியது காலத்தின் விதி. அதே பொழுதில் இன்றைய நவீன ஐரோப்பாவிலும் நமது புராதன இந்தியாவிலும் மனிதவாழ்க்கைக்கு அடிப்படையான மனித நேய மெனும் ஆன்மீகம், ஐரோப்பாவில் ஏற்படுகின்ற புதிய வேதங்களிலிருந்தும் அந்த வேதங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய சமூக வாழ்க்கைளிலிருந்தும் தரிசனம் தருவதை ஓர் இந்தியன் புரிந்துகொள்வான்.
கம்யூனிஸ்ட் அறிக்கையே நவீன மனித குலத்துக்கு ஐரோப்பா வழங்கிய புதிய வேதம் கிறிஸ்தவ மார்க்கம் போலவோ, இஸ்லாமிய மார்க்கம் போல்வோ அல்லாமல் ஹிந்து மதத்துக்கு இனையான ஆனால் மிகவும் இளமை பொருந்திய செயல் திறனுடைய ஐரோப்பாவின் புதிய மதமாத முகிழ்த்ததே கம்யூனிசம். கம்யூனிசம்தான் ஹிந்து மதம் போலத் தனிமனித நலன்களை உள்ளடக்கிய சமூகம் சார்ந்த ஒரு வாழ்க்கை நெறியாகும். (சுதந்திர சிந்தனை-பக்.157 அடிக்கோடிட்டது கட்டுரையாளர்)
தெய்வ வெறி ஏறிய ஒரு தீர்க்கதரிசியின் தரிசனம் போல வெளிப் படும் சொற்கள் இவை. ஒரு வைதிக மதவாதியோ ஒரு வைதிக மார்க்சியவாதியோ அதிர்ச்சியடையத்தக்கக் கருத்துகள் இவை, இந்து, இந்திய ஆன்மீகம், கம்யூனிசம் ஆகிய எல்லாமே புதிய பொருட்பொலிவோடு விளங்குகின்றன. இவ்வரிகளில் இந்தியன்தன் கலாச்சார வேர்களிலிருந்து தன்னைத் தழைத்துக் கொண் டானேயானால், அவன் நவீன காலத்திலும் கம்யூனிச உள்ளடக் கத்தோடு தன்னைப்புதுப்பித்துக்கொள்ள முடியும் என்ற கூறுகின்றன இவ்விரிகள்,
ஜெயகாந்தன் தன்'ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபங்களில் எழுதுகிறார்:
நமது ஹிந்து தர்மத்தின் பேராலேயே இந்த தேசத்தை சோஷலிசப் பாதையில் அழைத்துச்செல்ல முடியும் என்று நான் மார் தட்டிச்
g7 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்
சொல்லுகிறேன் (பக். 256) ஹிந்து தர்மத்தை உண்மையாக நம்புகிறவர்களுக்கு உகந்த சமூக அமைப்பு சோஷலிச சமூக அமைப்புத்தான். ஒர் இந்தியன் என்பவன் தனி மனிதன் அல்லன். சமூக மனிதனே அவன் நமது பண்பாட்டு உண்மைகளாலும் இதிகாச வேதங்களாலும் சான்று காட்டி இதனை நான் நிரூபிக்கத் தயார் (257ருஷ்யாவில் ஏற்பட்டு நிலவுகிற ஒரு புதிய சமூக அமைப்பை ஒரு ஹிந்து தன்னியல்பாகவே ஓர் ஆதர்சமாய்க் காண்பது அவசியக் கடமையாகிறது. (பக. 273)
மனுஷகுல் வாழ்க்கையில் இந்தப் புவியின் ஒரு பகுதியில் (சோவியத் யூனியனில்) நிகழ்ந்திருக்கிற மனுஷகுல சம்பந்தப் பட்ட, ஒரு ஹிந்துவின் புராதன வாழ்க்கை நெறிகளோடு முழுவதும் சம்பந்தப்பட்ட ஒரு நவீன சமுதாய நாகரிகத்தைப் பற்றிய பிரச்சினையே எனது அரசியலுக்கு மட்டுமல்லாமல், எனது சொந்த வாழ்க்கைக்கும் ஆன்மீகச் சிந்தனைகளுக்கும் அடிப்படை (பக் 275),
மனிதர்களுக்கிடையில் வேறுபாடுகள் இல்லாத, எல்லார்க்கும் எல்லாம் உரியதாகிற, உடைமை பொது என ஆகிற-உடைமைப் பற்றை வென்றுவிட்ட ஒரு புதிய சோசலிசச் சமூகமே இந்து என்பவனின் இயல்பான சமூகம் என்பதை வலியுறுத்தும் ஜெயகாந்தன், இதுவே புராதனமான இந்து தருமம் என்பதையும் சேர்த்தே கூறுகிறார்.
நிச்சயமாக நாம் இங்கு ஒன்றை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்து மதம் என்பதற்கு எத்தனையோ பேர் கூறும் விளக்கங்களிலிருந்து ஜெயகாந்தன் முற்றிலும் வேறுபடுகிறார். ஜெயகாந்தனின் பார்வை தனித்துவமான பார்வை. ஜெயகாந்தன் வியந்தும் விரும்பியும் மேற்கோள் காட்டுகிற விவேகானந்தர், பாரதி வழிவந்த பார்வை எதன் பேராலும் ஆதிக்கம் செலுத்த விரும்பாத எல்லா உடைமைப் பற்றையும் அறவேதுறந்து விடுகிற, எல்லாரும் ஒர்நிறை எல்லாரும் ஓர் விலை என்று கூறுகிற ஓர் உயர் மனிதனின் பார்வை இது. வேதகாலத்தில் நிலவிய, இதிகாசங்கள் கனவு காண்கிற ஓர் உயரிய சமுதாயம் இந்துவின் சமுதாயம். மார்க்சியவாதிகள் கூறும் புராதனப் பொதுவுடைமைச்சமுதாயம், வேதகாலச்சமுதாயம் வருணங்களாக வேறுபட்டாலும் மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு இன்னும் ஏற்படாத சமுதாயம் அல்லது இப்படி விளக்கப்பட்ட சமுதாயம் வேதகாலச் சமுதாயம். ܨܪܶ
இந்த இடத்தில் மேலுமோர் உண்மையைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்து மதம் என்ற சொல்லாக்கம் ஏற்பட்டது கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர். அக்காலத்திலிருந்து இந்து மதம், சாதி முதலியவற்றை-ஏற்றத்தாழ்வை, வினைக் கோட் பாட்டைத் தனது அங்கமாக ஏற்றுக் கொண்டது. சடங்குகள் உருவ வழிபாடுகள் முதலியவை இந்து மதத்தின் இன்றியமையாப் பகுதிகள்.198 ஞானி ஜெயகாந்தன் இந்த இந்து மதத்தை மனத்தில் கொண்டு இந்து தருமத்தை விளக்கவில்லை. அவர் காணும் இந்து தருமத்துக்கு மூலம் வேதங்கள் உபநிசத்துகள் இம்முறையில் பார்த்தால் சங்கரர்கூட இவருக்கு ஆதாரமாக மாட்டார் (Indian Thought by K Damodharan, page 259-260).
ஜெயகாந்தன் பார்வையில் பட்டுத் துலங்கும் இந்து தருமம், 20ஆம் நூற்றாண்டுச் சூழலில் மனித சமத்துவம் பற்றிய கோட்பாடு செயலாக்கம் பெற்றுவிட்ட சூழலில்-விவேகானந்தர் பாரதி வழியில் புதுப்பிக்கப்பட்ட கருத்தாக்கம் அல்லது சித்தாந்தம்,
இப்படிச் சொல்வதின்மூலம் ஜெயக்ாந்தன் பார்வையில்படும் தருமம், இந்துக்கள் என்று தம்ம்ை நம்பும் நூறு பேர்களில் 99 பேர் மறுத்துவிடுகிற கருத்தாக்கம் என்று கூறி, ஜெயகாந்தனின் கருத்தைப் புறக்கணித்து விடலாமா? இந்தக் கருத்தாக்கம் இந்து சமயத்தை வெறும் சட்ங்காச்சாரமாக்கி விட்ட இந்து சமயத்தைச் சொல்லி அதிகாரம் தேடு, தம் செல்வங்களைப் பாதுகாத்துக் கொள்கிற எத்தனை பேர்களைக் கூர்மையாக விமர்சனம் செய்யவல்ல கருவி இதனை நாம் இழந்துவிட முடியாது தவிர, இந்து சமயத்தின் பகுதியாகிவிட்ட எத்தனையோ மகான்கள், முனிவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் உதாரணமாக இராமி கிருஷ்ண பரமஹம்சர், இராமலிங்க அடிகள், தாகூர், திருமூலர் முதலியவர்கள் போற்றிய நெறி இத்தூய நெறிதானே! சமயத்தின் பேரால் செல்வமும் அதிகாரமும் சேர்த்து வாழும் பெரிய மனிதர்களை விமர்சனம் செய்வதற்கும் சோசலிசம் நோக்கி மக்களைச் செலுத்துவதற்கும் இக்கருத்து பயன்படுமென்பதில் ஐயமில்லை.
6. வேதம் புதுமை செய்வதைப் பற்றிப் பாரதியின் வழியில் பேசும் ஜெயகாந்தன் பார்ப்பணியத்துக்குச் சார்பாக சண்ட மாருதம்போல கிளம்பிய வரலாற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்வோம், பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பைக் கண்டு அருவருப்பும் கோபமும் கொண்ட ஜெயகாந்தன், பெரியார் முன்னிலையில் ஆவேசமாக பெரியாரே பாராட்டும் முறையில் பேசியதுபற்றி நாம் அறிவோம் (ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்-பக், 235-249). இந்த விவாதத்தின் போதும் பிற சமயங்களிலும் ஜெயகாந்தன் விளக்கிய பிராமணன் யார் என்பதை இங்கு
TřGLATÈ.
பார்ப்பன இளைஞர் மாநாட்டுப் பேச்சிலிருந்து :
எவன் ஞானத்தைத தவிர வேறு செல்வத்தைத் தேடாமல், தேடிய ஞானச் செல்வத்தையும் மனிதரின் மேம்பாட்டுக்காக விநியோகம்செய்து வருகிறானோ அவனே பிராமனன், எவன் அடுத்தவேளை சோற்றுக்காகத் தன் வீட்டில் நெல்லைச் சேமித்து வைக்காமல் இருக்கிறானோ அவனே
199
பிராமனன்.
மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்
எவன் தனது புலன்களையெல்லாம் அடக்கிக்கொண்டு நெறிப்படுத்திக் கொண்டு லெளகீக இன்பங்களிலும் புலன் நுகர்ச்சியிலும் வெறிகொண்டு தறிகெட்டுப் போகாமல் ஒரு சமூகத்தைத் தனது ஞானத்தினால் காப்பாற்றுகிறானோ அவனே பிராமணன், அவன் ஒரு சமூகத்தின் ஆசான். விஞ்ஞானம், கலை, கணிதம், கவிதை, காவியம், இம்மை மறுமைக்குரிய வாழ்வின் சீலங்கள் யாவற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஞானக் களஞ்சியம் அவன் (ப்க 25). ஜெயகாந்தனே கூறுகிறபடி 'பிராமண தருமம் என்பது மனுஷத்துவத்தின் மகத்தான நிலை (பக். 333) இப்படி ஆவேசமாக ஜெயகாந்தன் பேசும்போதே, நந்தனைப் போலொரு பார்ப்பான் என்ற பாரதியின் வரிகள் இடையில் வருகின்றன. சத்திரியராகிய விவேகானந்தரைவிட யார் பிராமணன்? என்று கேட்கிறார். விசுவாமித்திரன், கண்வர் முதலிய முனிவர்கள் பிராமணர்கள், பிறவியில் சூத்திரனாகிய நான் கடமையில் பிராமணத் தொழிலைச் செய்கிறேன் என்றும் கூறுகிறார். ஜெயகாந்தனின் தீவிரமான பார்வையிலிருந்து தெறித்து வரும் கருத்துக்களை ஆழ்ந்து பார்த்தால் ஜெயகாந்தனேகூடக் கூறுகிற மாதிரி, இந்தியர்களுக்கு மட்டும்தான் பிராமண தருமம் சொந்த மென்று இல்லை. உலகம் முழுவதும் மக்கள் சமூக மேன்மைக்காகத் தன்னலம்துறந்து உழைத்த, உழைக்கும் இலட்சக்கணக்கான அறிஞர் கலைஞர், போராளிகள் அனைவரும் பிராமணர்கள் தாம். அப்புறம் இவர்களில் சத்திரியர், சூத்திரர் வேறுபாடு மறைந்து விடுகிறது. பின் எதற்காக இந்தப் பிராமணன் பற்றிய பேச்சு என்ற கேள்வியும் வருகிறது. உலகம் முழுவதும் எல்லாக்காலங்களிலும் சமயங்கள் சித்தாந்தங்கள், மெய்யியல் கள் முதலிய துறைகளில்-முன்னைய உண்மை மறைந்து பாசி படிந்து, சடங்காதாரங்கள் அவற்றின் இடத்தைப் பிடித்துக் கொண்டு, ஆட்சிபுரிகின்ற போதெல்லாம் ஞானவேல் ஏந்தி வந்து கோயிலை வியாபாரக் கூடமாக்கும் கயவர்களை, கழாக்கால் பள்ளியுள் வைத்தவர்களை, அடித்து விரட்டிட திரும்பவும் புதிய வெளிச்சம் தரக் கூடியவர்கள் அனைவரும் பார்ப்பனர் ஆகின்றனர். பிரும்மத்தின் இயல்பறிந்தவர் பிராமணர் என்ற கருத்து மாறி புதிய சமூகத்தின் வெளிச்சத்தில், பிராமணர் என்ற சொல்லுக்கே கூடத் தேவையில்லாமல் போகிறது.
இவை ஒரு புறம் இருக்க, தமிழகத்தில் எழுந்த இந்தக் கருத்துப் போராட்டத்தில், ஜெயகாந்தன் கருத்தில் இருந்த உண்மை போலவே, பெரியார் கருத்திலிருந்த நியாயத்தையும் நாம் பார்க்கத் தவறிவிடக் கூடாது. பாரதி வழியில் ஜெயகாந்தனின் விமர்சனத்திற்குள்ளாகிற, பிறப்பால் பார்ப்பனன் என்ற பெருமையும் ஆணவமும் கொண்டு ஞானத்தை உதறி எறிந்து விட்டு பூனூலையும்ஞானி 200
சாதிப் பெருமையையும் தாங்கித் திரிபவர்களைப் பெரியார் தன்வழியில் கடுமையாகத் தாக்கினார். அவர் தாக்குதலில் ஆத்திரம் இருந்த அளவுக்கு அறிவு இருக்கவில்லை என்று விமர்சிப்பது சரியானது. சாதிமதங்கள், புராணங்கள், சடங்குகள் முதலிய எல்லாவற்றின் தோற்றத்திற்கும் பார்ப்பனார் தாம் காரணம் என்று பெரியாரும் அவர்வழி நின்றவர்களும் சாடியபோது, வரலாறு பற்றிய அறிவும் பார்வையும் அவர்களுக்கு இல்லை என்பது தெளிவு. தவிர, அவர்களது தாக்குதலில் பார்ப்பன சாதியைச் சேர்ந்த மனிதர்கள் இழிவு படுத்தப்பட்டார்கள் இந்த நாகரிகக்கேடு சமூகநலம் பற்றிய அக்கறை உள்ளவர்களுக்கு வருத்தம் தரக் கூடும். கடவுட் கருத்தாக்கம், புராணக் கதைகள் முதலிய அனைத்தும் வரலாற்றின் சில கட்டங்களில் மனிதர்களோடு சம்பந்தப்பட்டு, மனித சமூகச் செயல்பாடுகள் முதலியவற்றைக் கருவாகக் கொண்டு தோன்றியவை. இவ்வகைக் கருத்தாக்கங் களின் வரலாற்றுத் தொடர்பை மறந்துவிட்டு நம் நாகரிகம் தூய்மையானது என்று முரசு கொட்டுவது பகுத்தறிவாக முடியாது.தவிர தமிழகச் சூழலில் இத்தகைய விவாதம் தவிர்க்க இயலாததாக இருந்தது. எதிரெதிர் நிலையிலிருந்தவர்களிடம் நியாயங்களும் உண்மைகளும் இருந்தன என்பதை இன்று நாம் பின்னோக்கிப் பார்க்கும்போது புரிந்துகொள்ள் முடியும். இந்தக் கருத்து மோதலில் தீவிரமான எதிர்நிலையில் நிற்க நேர்ந்ததின் விளைவாக ஜெயகாந்தன் பல இடங்களில் சறுக்க நர்ந்தது. காந்தியார்கருத்தில் கண்ட வருணாசிரமக் கோட்பாட்டில் தவறில்லை; சாதியத்தால் தீங்கில்லை போன்ற கருத்துக்களை ஜெயகாந்தன் ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்தார். கடவுள் பற்றிய கருத்திலும் அவருக்குத் தெளிவு ஏற்படவில்லை.
7. பகுத்தறிவாளர்களோடு வெளிப்படையாக விவாதம் நடத்திக் கொண்டிருந்த ஜெயகாந்தன் மார்க்சியர்களுடன் தனிப்பட்ட முறையில் விவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியுடன் உறவு அறுபட்டநிலை ஏற்படுகிறது. கம்யூனிஸ்டுகள் போற்றும் வன்முறைக்காகவும் பிற காரணங்களுக்காகவும் இந்தப் பிரிவு நேருகிறது. நாளடைவில் கம்யூனிஸ்டுக் கட்சி பற்றி விரிவான விமரிசனங்களைத் தருகிறார்.
இத்தகைய விமரிசனங்களூடே கம்யூனிஸ்டுகளின் மெய்யியல் பார்வை பற்றிய விமரிசனத்தை முன்வைக்கிறார். பொருள் முதல்வாதம் என்றால் வெறும் சடவாதம், புலனின்புவாதம் என்று மதவாதிகள் விமர்சித்த மாதிரிதான் இந்தியக் கம்யூனிஸ்டுகளின் பொருள் முதல்வாத விளக்கங்கள் இருப்பதை ஜெயகாந்தன் காணுகிறார் (224). மெய்யியலைப் பொருள் முதல்வாதம், கருத்து முதல்வாதம் என்று பிரிவுபடுத்திப் பார்த்து பொருள்தான் இறுதி உண்மை என்று கூறும் எல்லாப் போக்குகளும் முற்போக்கானவை; பொருளல்ல, ஆன்மா இறைவன்தான் இறுதி உண்மை என்று கூறும்
ܕܡܐ
20 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் எல்லாக் கருத்து முதல்வாதங்களும் பிற்போக்கானவை என்று மார்க்சியர் கூறி வந்தனர், காந்தியம் பிற்போக்கு, விவேகானந்தர் பிற்போக்காளர், எல்லாச் சமயவாதிகளும் பிற்போக்காளர் என்று ஒரே முத்திரையை எல்லாருக்கும் குத்தி வந்தனர். இலட்சியங்களை முன் வைக்கும் ஆன்மீகம் கூடஇவர்களுக்குப் பிற்போக்காகிறது. இப்படிப்பட்டவறட்டுவாதப் போக்கில் கம்யூனிஸ்டுகள் ஈடுபட்டது ஜெயகாந்தனுக்கு உடன்பாடாக இல்லை. இந்நிலையில் ஆவேசத்தோடு ஜெயகாந்தன் கேட்கிறார் :
இந்தியாவில் மனித வாழ்வையும் சமூக வாழ்வையும் மேம் படுத்திய உண்ம்ை த்தர்கள். ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குபவர்கள். அன்பே சிவமாவதை அறிந்தவர்கள். சாதிமத பேதங்கள், சடங்குகள் முதலியவற்றை உதறியவர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தச் சித்தர் மரபு காலம்தோறும் தொடர்ந்து வருகிறது. இராமலிங்கருடன் முடிவதல்ல இந்தப் பரம்பரை. புதுமைப்பித்தன், . பிச்சமூர்த்தி, .நா.சு.தி. ஜானகிராமன் முதலியோர் படைப்புகளிலும் இவர்கள் தடம் பதித்திருக்கிறார்கள். இந்த மரபின் தொடர்ச்சியே ஜெயகாந்தன். தர்க்கத்தால் இவர்களை அறிய முடியாது, அளக்க முடியாது. இவர்களிடம் முரண்கள் இருக்கும். அவற்றைத் திருத்தி நேர்படுத்த முயன்றால், மனித சமூகத்தின் வலுவார்ந்த, புதிய ஆற்றல்களைத் தோற்றுவிக்கிற ஒர் ஊற்றுக் கண்ணைத்தூர்த்தது மாதிரியாகும். தவிர இதனைத் துர்க்கவும் முடியாது.
இறுதியாக நமது சமுதாயம் கடுமையான நெருக்கடிகளைத் தாங்கி, தனக்குள் முட்டிமோதித் திணறிக் கொண்டிருக்கிறது. பழைய கூட்டை உடைத்துக்கொண்டு புதியதாய் நம் சமூகம் பிறப்பெடுக்கக் காத்திருக்கிறது. இந்த நெருக்கடி நிலையின் போது எத்தனையோ வடிவத்தில், வண்ணங்களில் புதிய கருத்து கள், செயல் முறைகள் உருக்கொள்ளும் இந்த வடிவங்களுள் வண்ணங்களுள் தற்காலச் சமூகம் முகம் காட்டும். ஒருபக்கம் ஹென்றி, ஆதி முகங்கள். மற்றொரு பக்கம் சேஷாத்ரி, சத்திய மூர்த்தி, உமா முகங்கள். இடையில் எத்தனையோ எல்லாமே இந்த வரலாற்றுக் கொந்தளிப்பிலிருந்து முகிழ்ப்பவை. ஜெயகாந்தன்வழியே நமக்குப் புலப்படும் சமூகம், சமூக நெருக்கடிகள் நமது ஆழ்ந்த சிந்தனைக்குரியவை தன்னைப்பற்றி அறிதலின் மூலம் வரலாற்றையும், வரலாற்று நீரோட்ட்த்தை அறிதலின் மூலம் தன்னை உருவாக்கிக் கொள்வதும் மெய்யியல் செயல்பாடு. ஜெயகாந்தனைப் பற்றி அறிதலும் இந்நோக்கில் நமக்கான முகங்களை உருவாக்கும்.
கிறித்துவ மதத்தில் விடுதலை இறையியல் மாதிரி இந்து மதத்தில் புத்தாக்கம் இல்லை. இங்கு இன்று வளர்வது அடிப்படையில் மதவாதப் போக்கே. இந்த RSS போக்குக்குக் இராமகிருஷ்ண மடங்களும் பலியாகின்றன. நம் காலத்தில் விவேகானந்தர் இல்லை.ஞானி 202
கோயில்களைச் சார்ந்த ஆசிரமங்கள் - ஆசிரமங்களிலிருந்து புரட்சிக்காரர்கள் தோன்ற முடியும். இந்து மதம் தன்னை நவீன காலப்போக்கில் புதுப்பித்துக் கொண்டால், நிலைமை<