தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, November 21, 2017

தழல் பறவையின் கூடு : சல்மான் ருஷ்டி தமிழில் விஜயராகவன் :: புது எழுத்து – இதழ் எண் : 19

சல்மான் ருஷ்டி தமிழில் விஜயராகவன் 
தழல் பறவையின் கூடு

இந்தப் பெண்களை என்னதான் செய்வது? அவர்கள்
மிக லகுவாக எரிகிறார்கள். நீங்கள் திரும்பினால் போதும் அந்தப்பக்கம் எரிந்து விடுகிறார்கள்.
- சல்மான் ருஷ்டி

எப்படி உடல்கள், வேறு உடல்களாக, மாறுகிறது என்பதை சொல்ல நான் இப்போதுதயாராகவுள்ளேன்
 .- ஒவிட், வளர்சிதை மாற்றம், டெட் ஹியூஸ்ஸின் மொழிபெயர்ப்பில்

அது ஒரு தட்டையான, வறண்ட, உஷ்ணப்பிரதேசம் பலதடவை பொய்த்துப் போன மழையால் வறட்சி வென்றுவிட்டதாக சொல்வார்கள். அங்கு வாழ்பவர்கள் சமவெளிமனிதர்கள், கால்நடை விவசாயிகள், ஆனால் அவர்களது கால்நடைகள் அவர்களை விட்டு விலகி, தடுமாறியபடி தென்திசை நோக்கி இடம் பெயர்ந்து நீர்தேடி அலைந்தன. கால்நடைகளின் கொம்பு துருத்திய, ஒட்டி உலர்ந்த மண்டை ஓடுகள் பார்ப்பதற்கு நெடுஞ்சாலை அறிவிப்பு கல்கள் போல் தோற்றமளித்தன.

மேற்கு புறம்தண்ணிர்இருந்தாலும், அது குடிப்பதற்கு லாயக்கற்ற உப்பு நீர், பின்பு இந்த சதுப்பும் கூட வறண்டது. காய்ந்த தட்டையான நிலப்பரப்பில் செத்தை செடிகள் காற்றில் உருண்டன. நிலத்தில் உருவான வெடிப்புகள் ஒரு வளர்ந்த மனிதனை விழுங்கும் அளவு இருந்தன.

ஒரு விவசாயி சாவதற்கு மிக நேர்த்தியான வழியாக இது இருந்தது-அவனது நிலமே அவனை விழுங்குவதுதான்.

பெண்கள் இம்முறையில் இறப்பதில்லை. தீப்பிடித்து எரிந்துதான் சாவார்கள்.

நினைவு தெரிந்த காலத்தில், இங்கு ஒரு அடர்ந்த காடு இருந்தது என மேன்மைதாங்கிய மகாராஜாதனது அமெரிக்க புதுமனைவியிடம் சொல்லியவாறு, தனது மாளிகையை நோக்கி சொகுசு காரில் சென்றார். அந்தக் காட்டில் அபூர்வமான புலி ஒன்று வாழ்ந்தது. அது உப்பைப் போல் வெளுப்பாகவும், முறுக்காகவும், சிறியதாகவும் இருந்தது. மேலும் பாடும் பறவைகள், பல்வேறு வகைகள் அப்பறவைகளின் கூடுகளே இசையால் ஆனது போல் நிறைந்திருந்தன. அரை நூற்றாண்டுக்கு முன் இவரது தகப்பனார். இதே காட்டு வழி செல்லும் போது அப்பறவைகளின் இசையோடுதானும் பாடிசெல்வார், அதோடு புலிகளும் சேர்ந்திசைக்குமாம். ஆனால் தற்போது இவரது தகப்பனாரும் இறந்து போய், புலிகளும் இல்லாமலாயின. பறவைகளும் போய் அழிந்துபட்டன ஒன்றே ஒன்றைத் தவிர. அந்தப் பறவையும் பாடுவதேயில்லை. காடழிந்து போனதால் 3 3

________________

அப்பறவை தனது கூட்டை ஒரு ரகசியமான இடத்தில் அமைத்துக் கொண்டது. அது ஒரு தழல் பறவை என தனது புது மனைவியிடம் அவர் கிசுகிசுத்தார். அவளோ ஒரு பெருநகரத்தின்குழந்தை, கன்னித்தன்மையில்லாத வெளிநாட்டவள். இந்த நாடகபாணி கதையை கேட்டு சிரித்தாள். தனது நீண்ட மின்னும் மஞ்சள் நிற கேசத்தினை ஆட்டி சிரித்தாள். அவளது மஞ்சள் நிற தேகம் நெருப்பாக ஜொலித்தது.

தற்போது இளவரசர்கள் இல்லை. அரசு பலகாலத்திற்கு முன்பே இம்முறையை ஒழித்துவிட்டது. தற்போது அரசகுல ஆட்சிமுறை ஒரு கற்பனைக் கதையாக, பிரபுத்துவ காலக்கட்டத்தில் நடந்த ஒரு தேவதைக் கதைபோல், வழக்கொழிந்து போனது.

அவர்களது அரசகுல அடையாளங்களும், சிறப்பு சலுகைகளும் மறுக்கப்பட்டன. நம்மேல் அவர்கள் செலுத்திவந்த அதிகாரம் இல்லாமலானது. இவ்விடத்தில் இளவரசர், சாதாரண திரு. மகாராஜ் ஆனார். அவர் ஒரு பன்முகத்தன்மை படைத்த மனிதர். அவரது நகரத்து அரண்மனை சூதாட்ட விடுதியாக மாறியது. அதே சமயம் அவர்நாட்டின் சாபக்கேடான ஊழல் முதலிய விஷயங்களை களைய அமைக்கப்பட்ட குழுவின்தலைவராகவும் விளங்கினார். தனது இளமைக் காலத்தில் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தார். ஆனால் ஓய்வுக்குப்பின் விளையாட்டிற்கெல்லாம் நேரமில்லாமல் போனது. சுற்றுப்புற சூழல் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று தனது இடப்பகுதியின் வறட்சியைப் போக்க ஆராய்ந்து வந்தார். ஆனால் தற்போது சொகுசு காரில் தனது ஊரக கோட்டை மாளிகையை நோக்கி சென்று கொண்டிருக்கும் திரு. மகராஜ் அங்கு விலை மதிப்புள்ள, நீரை கண்காட்சிக்காக மட்டும் நீர் ஊற்றாக எப்போதும் ஊற்றும்படியும் வைத்திருந்தார். அங்கு அவர் தனது நூலகத்தில் சேர்த்து வைத்திருந்த பழங்கால சுவடிகளும், புத்தகங்களும் சுற்றுவட்டாரத்திலேயே மிகவும் அருமை பெருமை வாய்ந்ததாகும். ஆனாலும் தனது வட்டாரத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பும் உரிமையையும் பெற்றிருந்தார். இதனால் யார் புதிய டிஷ் இணைத்தாலும் அதன் மூலம் இலாபம் சம்பாதித்தார். திரு. மகராஜின் பல காதல் லீலைகளைப் போல அவரது வியாபார வருமானங்களைப் பற்றிய விவரங்களும் மங்கலாக தெளிவற்றிருந்தன.

இங்கு ஒரு கல் உடைக்கும் இடமுள்ளது. கார் இங்கு நிற்கிறது. ஆண்களும், பெண்களும் கடப்பாறைகளும் தகரசட்டிகளும் வைத்திருந்தவர்கள் திரு. மகராஜைக் கண்டவுடன் குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள். இதைப் பார்த்த அமெரிக்கப் புதுப்பெண் உள்ளுணர்வால்தான் உண்மை உறைக்காத வேறு ஒரு காலக்கட்டத்திற்கு வந்ததை உணர்ந்தாள். இங்கு திரு. மகராஜ் இன்றும் இளவரசர்தான், அவள் அவருடைய இளவரசிதான். அவளுக்கு, ஏதோ ஒரு கதையில் புகுந்து கொண்டது போலும், அவளே வார்த்தைகளாக ஒரு காய்ந்த வரண்ட காகித பக்கத்தில்தவழ்வதாகவும், அவளே அந்த காகிதமாக ஆனதாகவும், அந்த காகித பக்கத்தில் அவளது கதை எழுத உள்ளதாகவும் அப்போது இரக்கமற்ற உஷ்ணகாற்று ஒன்று வீச அவளின் உடலே பாப்பிரைஸ் தண்டாகவும், அட்டையாகவும், அவளது ஆன்மாவே காகிதமாகவும் மாறியது. இது மிகவும் சூடாக உள்ளது. அவள்நடுங்கினாள்.

4. 4.

________________

அது கல்உடைக்கும்தளமில்லை. அது ஒரு நீர்த்தேக்கம். பஞ்சத்தாலும் வறட்சியாலும் அடிப்பட்ட விவசாயிகளைதிரு. மகராஜ் பணிக்கமர்த்தி இந்த நீர் தேக்கத்தை உருவாக்கினார். இதனால் அவர்களுக்கு வேலையும், மேலதிகமாக நம்பிக்கையும் கொடுத்துள்ளதாகதனது புதுமணப்பெண்ணிடம் தெரிவித்தார். அவள் மறுத்து தலையசைத்தாள். அந்த பெரும் பள்ளம் ஏகதேமாக நிரம்பியிருந்தது. ஆனால் கொடுமையான விதிவசத்தால், கலங்கலான, உப்பு பற்று நிறைந்த, மனதினாலும், கால்நடைகளும் உபயோகப்படுத்த முடியாத நீரால் நிறைந்திருந்தது.

எதிர்மறையான அந்த நீர் தேக்கத்தை சேர்ந்த பெண்கள் தீயின் பல நிறங்களில் உடையணிந்திருந்தார்கள். மொழியின் சரளத்தால், குருடாகப்பட்ட முட்டாள்கள் மட்டுமே, தீயின் நிறம் சிவப்பு மற்றும் பொன்நிறம் என நினைப்பார்கள். நெருப்பு அதன் விசனம் தோய்ந்த விளிம்புகளில் நீலநிறமாகவும், அதன் பொறுக்காத நெஞ்சப் பகுதிகளில் பச்சையாகவும், சில சமயங்களில் வெள்ளையாகவும் ஏன் அதன் ஆங்காரத்தில் கருப்பாகவும் கூட இருக்கும்.

சிவப்பும் பொன்னிறமும் கொண்ட புடவை அணிந்த, ஒரு முட்டாள் பெண் நேற்று தண்ணிர் வற்றிய பள்ளத்தில் நெருப்பு பற்றி எரிந்து போனதாக திரு. மகராஜிடம் அந்த வேலையாட்கள் கூறினார்கள். அவள் எரிந்து கொண்டிருந்த போது அவர்கள் எல்லோரும் மேட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் நமஸ்கரிப்பது போல் கைகளை அசைத்தாள். ஆண்கள் தங்களின் ஆண்மையின் உணர்வால் அவளது விதியின் முடிவை உணர்ந்தார்கள். அங்கிருந்த பெண்கள், அவர்களின் பெண்கள், கூடக்குரலிட்டு ஒலமிட்டனர்.

அந்தப் பெண் எரிந்து முடிந்த போது அங்கு ஒன்றுமேயில்லை. எலும்புத் துணுக்கோ, சதையோ எதுவும் மிஞ்சவில்லை. அவள் ஒரு காகிதத்தைப் போல எரிந்து, காற்றின் மூலம் ஒன்றுமில்லாமலாகி வானமேகினாள்.

இப்பகுதி மனிதர்களுக்கு, பெண்கள் சுத்தமாக எரிந்து போவது பற்றி ஏதும் செய்ய முடியாத ஒரு ஆச்சரியமே மிஞ்சியது. அவர்கள் மிக லகுவாக எரிகிறார்கள். என்னதான் செய்வது? நீங்கள் திரும்பினால் போதும், அந்தப் பக்கம் எரிந்து விடுகிறார்கள். இருபாலருக்கும் உள்ள வித்தியாசமாக கூட இருக்கலாம் போலிருக்கிறது என ஆண்கள் சொன்னார்கள். ஆண்கள் பூமியைப் போலதாங்கிக் கொள்ளும் மனப்பான்மையும், உறுதியும் கொண்டிருந்தார்கள். ஆனால் பெண்களோ, சலன புத்தியுடனும், நிதான மற்றும் இவ்வுலக வாழ்விற்கு நீண்ட ஆயுளற்றும், சடாரென்று ஒரு புகைக் கோளத்தில் எந்த விவரணையுமில்லாமல் மறைந்து போகிறார்கள். இதை உஷ்ணத்தில், அவர்கள் வெயிலில் அதிக நேரம் வெளியில் இருந்தால் என்னவெல்லாம் நடக்குமோ நாங்கள் அவர்களை வீட்டிற்குள்ளே இருக்க சொல்கிறோம். அபாயத்திலிருந்து அவர்களை காக்க, ஆனால் பெண்கள் எப்படி பட்டவர்கள் என்பதுான் உங்களுக்கு தெரியுமே. அது அவர்களின் விதி, அவர்களின் இயல்பு.

பதவிசான பெண்கள் கூட கனன்று கொண்டிருக்கும் இதயம் படைத்தவர்களாக இருந்தார்கள் என திரு. மகராஜ் தனது மனைவியிடம் முணுமுணுத்தவாறு, காரில் சென்று கொண்டிருந்தார். இவ்வாறு அவர் பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என அவள் கூறினாள். அவள் வாழ்வில் நவீனத்துவத்தை கடைபிடிப்பவள். இவ்வாறு தனது பெண்மையை பொதுவான பார்வையாகவும்,

5 5

________________

மட்டமான கொட்டடியில் அடைப்பதையும், விளையாட்டாக கூட ஏற்க மறுப்பதாக சொன்னாள். அவர் இதைக் கேட்டு புன்னகையுடன்தலை சாய்த்து மன்னிப்பு கேட்டார். தீச்சுடர்தான் தீச்சுடர்தான் நான்தான் சரியாக நடந்து கொள்ள வேண்டும் எனநினைத்து கொண்டார்.

ஆம் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என அவள் ஆணையிட்டுவிட்டு, வசதியாக அவர்மேல் சாய்ந்து கொண்டாள். அவரதுநரைத்த தாடி அவள் நெற்றியை வருடிக் கொடுத்தது.

அவள் பெரும் பணக்காரி எனவும் வயதான, குண்டு நிஜாம் போல் பணம் படைத்தவள் என வதந்தி அவளுக்கு முன் புகைந்து கொண்டு போயிற்று. இந்த நிஜாமானவர்தனது பிறந்த நாட்களில் ஏராளமான நகை நட்டுகளை அணிந்து, இந்த நகைகள் அணிவதற்காகவே பல்வேறு வரிகளை மக்கள் மேல் சுமத்துவார். மக்கள் நிஜாமின் விருந்தைக் கண்டே அஞ்சிநடுங்குவார்கள். பிரமாண்டமான அல்வாவும் ஆளுயுர ஜெல்லி இனிப்பும், இமயமலை போல உயர்ந்த குல்பியும் நிஜாமின் வயிற்றுக்குள் சென்று கொண்டேயிருக்கும். அங்கு நிறைந்திருக்கும் உணவு,தங்களின் உக்கிராணத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதையும், நிஜாம் அஜீரணம் வருமளவிற்கு உண்டு ஏப்பமிடுவதை காண்கையில், தங்கள் குழந்தைகளின் பசியேப்பமும், பசி ஒலமும் நினைவுக்கு வரும். நிஜாமின் பெருந்தீனிதங்களது பஞ்சம் என்பதை உணர்ந்திருந்தனர் மக்கள்.

ஆம், இதைப்போலவே பெரும் பணக்காரி என வதந்தி பரபரத்தது. அவளது தந்தை ஒரு கிழக்கு ஐரோப்பிய அகற்றப்பட்ட ராஜ பரம்பரை எனவும், ஒவ்வொரு வருடமும் தனது முக்கியமான பணியாளர்களை தனிவிமானத்தில் அழைத்துக் கொண்டு தனது பழைய சமஸ்தானத்திற்கு சென்று, அங்குள்ள கால நதிக்கரையில் நான்குநாள் கோல்ப் பந்தய விளையாட்டை அரங்கேற்றுவார் என்றும், அந்த பந்தயத்தில் வென்ற வெற்றி வீரனை, கடவுள் போல சிரித்துகொண்டேசர்வசாதாரணமாக வேலையிலிருந்துதுச்சமாகதுரக்கியெறிவார் எனவும் அந்த வீரன் நம்பிக்கை அழிந்து கால நதிக்கரையிலேயே உழன்று அந்நதியிலேயே சாவன் ஒரு பந்தைப்போல.

அவள் பணம் படைத்தவள். அவள் ஒரு விளைநிலம், அவள் மகன்களை பெற்றெடுப்பாள், மழையையும் கொண்டு வருவாள்.

இல்லை அவள் ஏழை எனவும் வதந்தி மின்னியது. அவளது தாய் ஒரு வேசி, இவர் பிறந்த போது தகப்பன்தூக்கு போட்டு செத்து போனார். வேசிக்கு பிறந்த இவளே ஒரு காய்ந்த நிலம் எனவும், கட்டுக்கடங்காதஜந்து எனவும், வறட்சி அவளது உடலில் உள்ளது எனவும், அந்த சாபத்தால் அவள் ஒரு மலடி எனவும், அதனால்தான் இங்கு வந்து, இங்குள்ள பழுப்பு நிறமுள்ள குழந்தைகளை அவர்களது விட்டிலிருந்து திருடிக்கொண்டு அவற்றை கண்ணாடி போத்தல்களை கொண்டு போஷிக்கவும் (ஏனெனில் அவளது மார்புகள் பாலின்றி வற்றிப் போனதால்) எண்ணியிருந்தாள்.

திரு. மகராஜ் உலக முழுவதும் தேடி, தங்களது வாழ்வை ஒளிரச் செய்யும், ஒரு அதிசய நகையை தேடிக் கொண்டு வந்துள்ளார். திரு. மகராஜ் பாவத்தில் சிக்கிக்கொண்டு, தங்கள் வாழ்வை அழிக்கக்கூடிய நாசத்தை தனது மாளிகைக்கு கூட்டி வந்துள்ளார். அவர் ஒரு மஞ்சள் மயிர்காரியிடம் மாட்டிக் கொண்டுவிட்டார் 6 6

________________

இப்படியாக அவளைப்பற்றிய அனுமானங்களும், கதைகளும் மக்கள் கூடுமிடமெல்லாம் பேசலாயிற்று. அரண்மனையை நோக்கி செல்லும்போது அவளுக்கேதான் ஒரு கதைக்குள் போவது போல் தோன்றியது. அவளது உயர்ந்த நகரத்தில் அவளது நண்பர்கள் பலர் பல கதைகளை சொல்லியிருக்கிறார்கள். அவளைப் போல் பல பெண்கள், வெள்ளைத் தோலும், மஞ்சள் முடியும் கொண்டவர்கள், இருண்டநிறக்காதலர்களை காதலித்து மனமுடைந்தார்கள் என அவருடன் போக வேண்டாம். அவருடன்படுத்துவிட்டாயானால் அவர் உன்னை மதிக்கமாட்டார். அவர் உன்னைப் போன்ற பெண்ணை மனைவியாக நினைக்க மாட்டார். உன்னுடைய வித்தியாசதன்மை உற்சாகத்தை ஏற்படுத்தும், ஆனால் உனது இதயத்தை உடைத்து விடுவார்.

அவர் மணப்பெண் என அழைத்தாலும், அவள் அவருடைய மனைவியல்ல. இதுவரையில் அவள் எந்தவித பயத்தையும் உணரவில்லை.

வெறுமையின் வாசல் போல், ஒரு சிதிலமடைந்த நுழைவாயில் ஒன்று நாட்டுப்புறத்தில் இருக்கிறது. செத்துப்போன பல மரங்களில் கடைசியாக ஒரே ஒரு மரம் மட்டும் பட்டுப்போய் கொண்டிருந்தது. அம்மரத்தின் வெளித்தெரிந்த வேர்கள், இறந்து கிடக்கும் ராட்சதனின் கைகளைப் போல தோற்றமளித்தது. கல்யாண ஊர்வலத்தை பார்த்து சொகுசு கார்நிதானித்து ஊர்ந்தது. தலைப்பாகை அணிந்திருந்த மணமகனை அவள் காரிலிருந்தபடியே பார்த்தாள். மணமகள் இளமையானவனோ, துடிப்பு மிக்கவனோ அல்ல, தோல் சுருங்கிய, நரைத்த வயதான கிழவனாக இருந்தான். இது ஏதோ ஒரு அமர காதலாக இருக்க வேண்டும். சூழல்களால் காலத்தே மணமுடிக்க முடியாமல் போயிருக்கலாம். தற்போது எங்கோ அந்த வயதான மணப்பெண் திருமணத்திற்கு தயாராக இருக்கலாம். கடைசியாக சந்தோஷ முடிவிற்கு அவர்களது காதல் வந்துள்ளது போலும் என வாய்விட்டு பேசிவிட்டாள். இதைக் கேட்ட திரு. மகராஜ் புன்னகைத்துக் கொண்டே மறுத்தார். மாப்பிள்ளையின் மணப்பெண் ஒரு இளம் கன்னிப்பெண்,தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளார்.

ஏன் ஒரு அழகான இளம் பெண் வயதான முட்டாளை மணக்க விழைகிறார்?

திரு. மகராஜ் தோளை குலுக்கியவாறே, கிழவன் குறைந்த வரதட்சணைக்கு சம்மதித்திருக்கலாம், ஒருவர் பல பெண்களை பெற்றிருந்தால் இதெல்லாம் சகஜம். மேலும் கிழவனுக்கு அவனது நீண்ட ஆயுள்காலத்தில் இது போல பல வரதட்சணைக்கு இடமுண்டு என்றார்.

கொம்பும், குழலும் அவளிருந்த பக்கம் நாரசமான இசையை முழங்கின. பறை சத்தம் பீரங்கி வெடித்தது போல ஒலித்தது. அவளிருந்த கார்ஜன்னல் பக்கம் திருநங்கை நடனக்காரர்கள் அவளைப் பார்த்து கெக்கலி கொட்டி சத்தமிட்டனர். ஒய் அமெரிக்கா, அரே எப்படி இருக்கே பங்காளி? வாரே வாஅந்த சமாச்சாரத்தை ஆட்டு பார்க்கலாம் என பலவாறு கூக்குரலிட்டனர். திடீரென அவள் பீதியடைந்தாள். கார் டிரைவரைப் பார்த்து வேகமாக போ எனக் கட்டளையிட கார் வேகம் பிடித்து திருமண கோஷ்டி மீதி புழுதியை வாரியிரைத்தவாறே சென்றது. திரு. மகராஜ் அமைதியே உருவானவராக அமர்ந்திருந்ததை பார்த்து, தன்னைப் பார்த்தே கோபம் கொண்டாள்.

7 7

________________

மன்னித்துக்கொள்ளுங்கள், எனழுணுமுணுத்தாள். இது ஒன்றுமில்லை, இந்த உஷ்ணம்தான்.

அமெரிக்கா முன் ஒரு காலத்தில், இவர்கள் இருவரும் சாலையிலிருந்து முன்னுறு அடி உயரத்தில் உள்ள விடுதியில் இந்திய மதிய உணவை உண்டு கொண்டே அமெரிக்கா அவர்கள் உணவருந்திய மேசை அங்கிருந்தபடி பார்க்க ஏற்ப அமைந்திருந்ததால், சுற்றுபுற பசுமையான பூங்காவின் செழுமையை ரசித்தார்கள். இந்த வறண்ட நிலப்பரப்பிலிருந்து கொண்டு அதை நினைத்து பார்க்கும் பொழுது அசிங்கமாக தோன்றியது. எனது நாடு உங்களது போலத்தானிருக்கும் என அவர் கொஞ்சினார். கொந்தளிக்கும் பெரிய, கடவுள்களால் நிறைந்த நாடு, நீங்கள் பேசும் உடைந்த ஆங்கிலம் போன்றே நாங்களும் எங்கள் மட்டமான ஆங்கிலத்தைப் பேசுவோம். நீங்கள் ரோமன்கள் ஆவதற்கு முன்பு காலணி மக்களாகத்தானிருந்தீர்கள். எங்களது துரைமார்களும் உங்களவர்களும் ஒருவரே. நீங்கள் துரைமார்களை எங்களுக்கு முன்பே தோற்கடித்துவிட்டீர்கள். அதனால் எங்களைவிட அதிக பணம் படைத்தவர்களாக இருக்கிறீர்கள். மற்றபடி நாம் எல்லா வகையிலும் ஒத்துதான் இருக்கிறோம். உங்கள் தெருமுக்குகளிலும், அதே குப்பை, அதே பரபரப்பு, அதே உடனடித் தன்மை, என்றார். உடனடியாக அவளுக்கு, இவர் என்ன சொல்கிறார் என புரிந்தது. அதாவது அவளுக்கு புரிந்திராத இடத்திலிருந்து அவர் வருவதையும், அவருடைய மொழியை தேர்வதும், குறிப்புகளை புரிந்து தெளிவதும், மிகவும் கடினம் என உணர்ந்தாள். இதன் பிரமாண்டமும், மர்மமும் அவளது ஆழமான தேவையை கிளறி, அவளை படுத்தி எடுத்தது.

அவள் அமெரிக்க பெண்ணாக இருந்ததால், அவர் பணத்தைப் பற்றி அவளிடம் பேசினார். பழைய பாதுகாக்கப்பட்ட பொது உடைமை தத்துவம், இத்தனைக் காலமாக பொருளாதாரத்தை இழுத்துபிடித்துக் கொண்டிருந்தது நீங்கியதனால் நம்மிடம் மட்டும் சரியான கருத்திருந்தால் மிகப் பெரும் பணம் பண்ண முடியும். இளவரசராக இருந்தும் பொருளாதாரப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டிதான் உள்ளது. அவரிடம் பல திட்டங்களை இருந்தது. அவருக்கும், பொருளாதார குழுக்கள் அடங்கிய வட்டங்களில் பணத்தையும் பொருளாதாரதிட்டங்களையும் செயல்படுத்தி வெற்றிகாண்பதில், விற்பன்னர் என பெயர் இருந்தது.

அவள் மழையை கொண்டு வருபவள்தான். இளவரசரை அவள் ஒபரா இசைக் கச்சேரிக்கு அழைத்துச் சென்றாள். சிறந்த உயரிய வார்த்தைகள் புரிய முடியாமல், இசைக் கோர்வையாக காதில் விழுந்த போது அவள் எப்போதும் போல் உணர்ச்சியின் உச்சத்தை அடைந்தாள். பின்பு அவரை வீட்டிற்கு அழைத்து சென்று மயக்கினாள். அவளது நகரம், அவளது மேடை, அவள் இளமையாகவும், ஆணித்தரமாகவுமிருந்ததால், அவர்களிருவரும் கலவி புரிய ஆரம்பித்தனர். தான் தனது வேர்களை விட்டு விலகிதானறிந்த எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிடப் போவதை உணர்ந்த, அவளது முயக்கத்தின் இயக்கம் மிக மூர்க்கமானது. அவரது உடலே தானறியாத பாதையின் பூட்டிய கதவு எனவும் ஆகவே அந்த கதவை உடைத்தெறிய எண்ணியது போல் இயங்கினாள்.

எல்லாமே சிறப்பாக இருக்கும் எனநினைக்காதே, என அவர் அவளிடம் எச்சரித்தார். மிகக் கொடுமையான வறட்சி நிலவி வருகிறது என்றார். 8 8

________________

துரதிர்ஷ்டவசமாக அவரது அரண்மனை சகிக்க முடியாதபடி நாற்றமடித்து கொண்டும், உதிர்ந்து கொண்டுமிருந்தது. அவளது அறையில் கிழிந்த திரைசீலைகளும் படுக்கை நைந்தும் போயிருந்தது. அறையின்சுவற்றில் அலங்கார சித்திரமாக தம்பதியினரின் பாலுணர்வு புணர்வுகள் வரையப்பட்டிருந்தன. அவர்கள் தனது கணவனின் மூதாதைகளா? அப்படி பிடிவாதக்கார வியாபாரியிடம் வாங்கிய மொத்த சரக்கில் மிஞ்சிய படங்களா? என தெரியவில்லை. இருண்ட தாழ்வாரங்களிலருந்து சத்தமான இசை ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என அறியமுடியவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும் போது பல நிழல்கள் ஓடி மறைந்தன. அவர் அவளை தனது அரண்மனையில் அமர்த்திவிட்டு எந்த விவரணையும் சொல்லாமல் காணாமல் போனார். தானே அந்த அரண்மனையில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

அன்று இரவு அவர்தனியாக உறங்கினாள். தலைக்கு மேல் மின்விசிறி சூடான வெப்பக்காற்றை வீசியது. காற்று சுடுநீர் போல் தகித்தது. அவளால் தனது வீட்டை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அங்கே குளிர்பதன இயந்திரத்தையும் இரவில் ஓயாமல் ஒலிக்கும் சங்கொலிகளும் நிஜத்தை நிதர்சனமாக்கும் பெரும் கட்டிடக் காட்டிற்குள் திருப்திக்குள் கற்பனா மனோ ராஜ்ஜியம்தலைதூக்குவது சிரமம். நமது கேளிக்கைகள் எல்லாம் சிறப்பு வாய்ந்த பிரமாண்டங்களாகவே இருக்கின்றன. ஏனெனில் இருண்டதிரையரங்குகளுக்கு வெளியேவும், புத்தகங்களின் பக்கங்களுக்கு அப்பாலும், கோதிக் இசையின் இரைச்சலுக்கு பின்னும் தினசரி நிதர்சனம் நம்மை தப்பிக்க விடாமல் சர்வ வல்லமையுடன் பிடித்து வைத்துள்ளது. நாம் வேறு பல பரிமாணங்களைப் பற்றியும், பித்து பிடித்த மறைபொருள்களைப் பற்றியும், நிழல் உலகம் பற்றியும் கனவுகாண்கிறோம். ஏனென்றால் நாம் விழிக்கும் போது நிஜம் அதன் பெரும் பிடியில் நம்மை இறுக்கிக் கொள்கிறது. நம்மால் பொருளியலின் தொடுவானத்திற்கு அப்பால் பார்க்க முடிவதில்லை. ஆனால் இங்கோ, கரப்பான் பூச்சிகளுக்கு பயந்து கொண்டு வரண்ட காற்றின் பிடியில், உங்களது எல்லா எல்லைகளும் நொறுங்கிறது. அபாயத்தின் சாத்தியம் புதுப்பிக்கப்படுகிறது.

அவளால் சுலபமாக அழ முடிவதில்லை. ஆனாலும் அவள் உடல் குலுங்கியது. வறண்ட கண்ணிரை வடித்தபடியே தூங்கினாள். அவள் விழித்தபோது நடனக்காரர்களின் சத்தமும், மேளச்சத்தமும் கேட்டது.

அரண்மனை முற்றத்தில், முதிய மற்றும் இளைய பெண்களும், இளைஞர்களும் கூடினர். மேளக்காரனின் லயத்திற்கு ஏற்ப பெண்கள் ஒசிந்தாடினர். அவர்கள் கால் வளைத்து, கைகளால் ஒருவரை ஒருவர் இணைத்துக் கொண்டு கண்கள் ஒளிர, முடுக்கப்பட்டபோர் படையினரைப் போல் குளுமையான கல் தளத்தில் நடனமாடினர். (இளங்காலை நேரமாதலால் அரண்மனைமுற்றம் நிழலோடியிருந்தது. அந்த கல்தளத்திற்கு இன்னும் சூரியன் உஷ்ணத்தை கொடுக்கவில்லை)

நடனமாடுபவர்களின் முன்பு உயர்ந்த உருவமாகவும், நேர் கொண்ட முதுகும் உடைய பெண்மணிதான்திரு. மகராஜின் சகோதரி நடனக்காரர்களை இயக்கிக் கொண்டிருந்தவளும் அவளே. அறுபது வயதுக்கு மேல் ஆகி இருந்தாலும், அந்த மாகாணத்திலேயே சிறந்த நடனமணி. செல்வி. மகராஜ் 9 9

________________

புதுமணப்பெண்ணைப் பார்த்ததும் எந்தவித அங்கீகரிப்பும் செய்யவில்லை. தற்போது அவள் நடனக்காரர்களின் தலைவி அசைவே பிரதானம்.

நடனம் முடிந்தபின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். திரு. மகராஜின் பெண்கள், சகோதரியும் அமெரிக்கனும்,

என் செய்து கொண்டிருக்கிறீர்கள்? தழல் பறவையை சாந்தப்படுத்த, நடனமாடுகிறோம். தழல் பறவையா (அவளுக்கு லிங்கன் மையத்தில் கேட்ட ஸ்ட்ராவின்ஸ்கி ஞாபகத்திற்கு வந்தது)

செல்வி மகராஜ் தலையசைத்து, ஆம் எப்போதும் பாடாத பறவைதான். அதன் கூடு ரகசிய இடத்தில் உள்ளது, அதன் தீய சிறகுகள் பெண்களைத் தீண்டினால், நாம் எரிவோம், என்றாள்.

அப்படியெல்லாம் ஒரு பறவை இருக்காது. இது பழம் பாட்டிகளின் கதையாகும்.

இங்கு பழம் பாட்டிகளின் கதையெல்லாம் இல்லை. அந்தோ பழம் பாட்டிகளே இங்கு இல்லை!

அகன்ற தோள்களில் பூவேலைப்பாடு செய்த மேலங்கியும் தலைப்பாகையும் அணிந்து திரு. மகராஜ் உள் நுழைந்தார். ஆண்மையின் உருவமாகவும், அழகாகவும் வெற்றிகரமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டும் வந்தார். அவள் வேறு காலக்கட்டத்து பெண்மணிப்போல வெடுவெடுப்பாக அணுகினாள். அவர் கெஞ்சலாக சமாதானம் செய்தார். அவளுக்கான வரவேற்பை ஏற்பாடு செய்ய சென்றிருந்ததாகவும், அவள் இந்த வரவேற்றை விரும்புவாள் என நினைத்ததாகவும் கூறினார்.

என்ன வரவேற்பு?

பொறுத்திருந்து பார்.

வாடையடிக்கும் அரண்மனைக்கு அப்பால் உள்ள பாலைவெளியில் திரு. மகராஜ் ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். நட்சத்திரங்களுக்கு கீழே நிலவொளியில் இஸ்வஹானிலிருந்தும், விராசிலிருந்தும் கொணரப்பட்ட பெரும் கம்பளங்களில் நடந்து வந்து சுற்றுப்புற பெரிய மனிதர்கள் அவளை வரவேற்றார்கள். அருமையான இசைக் கலைஞர்கள் தங்களின் சோகமயமான புல்லாங்குழலின்மோனஇசையையும், கதகதக்கும்தந்த வாத்தியமும் புராதனமான மற்றும் மிகவும் புதுமையான காதல் பாடல்களை பாடினர். அந்த நிலப்பரப்பின் மிகச்சுவையான உணவு வகைகளை அவளுக்கு சுவைக்க கொடுத்து மகிழ்வித்தனர். சுற்றுபுறத்தில் அவள் மிகவும் பெயர்பெற்ற பிரமுகராக உருவெடுத்தாள். பக்கத்து மாநிலத்தின் ஆளுநர், உங்களது கணவரை எங்கள் மாநிலத்திற்கு வர வரவேற்றிருக்கிறேன். ஆனால் உங்களது அழகான மனைவியை அழைத்து வரவில்லையெனில் நீங்கள் வரவேண்டாம் என சொல்லி வெடிச் சிரிப்பு சிரித்தார். இன்னொரு முன்னாள் இளவரசர், தனது அரண்மனை பெட்டகத்தில் உள்ள கலைப்பொக்கிஷங்களை அவளுக்கு காட்ட விரும்பினார். திருமதி. ஒனாசிஸ்க்கு தவிர நான் வேறு யாருக்கும் இந்த கலைப் படைப்புகளை காட்டியதில்லை. உங்களுக்காக இந்த படைப்புகளை எனது பூங்காவில் ஜாக்கிலினிற்கு பரப்பியது போல் காட்டத்தயார் என்றார்.

நிலவொளி இருக்கும்வரை, நடனமும், பாட்டும், குதிரை பந்தயமும், ஒட்டக பந்தயமும் நடந்தன. பட்டாசு வாண வேடிக்கைகளும் அவர்களின்

10 10

________________

தலைகளுக்கு மேல் ஒளிர்ந்தன. திரு. மகராஜின் மேல் ஈஷிக்கொண்டே அவள் எனக்காக ஒரு மாயாஜால ராஜ்ஜியத்தையே ஏற்படுத்தி இருக்கிறீர்கள். இப்படித்தான் ஒவ்வொரு இரவும் நீங்கள் ஓய்வெடுப்பீர்களா? என குறும்பாக கேட்டாள். முன்பு அவர் தன்னுடன் இல்லாதைக் கூட அவள் மன்னித்துவிட்டாள்.

அவர் உடல் இருகுவதை அவள் உணர்ந்தாள். அவரது வார்த்தைகளில் விரக்தி வழிவதைப் புரிந்து கொண்டாள். அவர்நீதான் இதற்கு காரணம், இந்த பாழடைந்த பகுதியில் இப்பெரும் மாயை உருவாக்கியவள் நீதான். ஒட்டகங்களும், குதிரைகளும் உணவு வகைகள் கூடதுாரப்பிரதேசங்களிலிருந்து கொண்டு வரப்பட்டன. உனது சந்தோஷத்திற்காக நாங்கள் பட்டினி கிடக்கிறோம். நாங்கள் இப்படி வாழ்வதாக நீ எப்படி கற்பனை செய்துக்கொண்டாய், ? உன்னை மகிழ்விக்க நாங்கள் மேலும் கடனாளியாகின்றோம். நாங்கள் பிழைக்க கனவு காண்கின்றோம். இந்த அராபிய இரவு ஒரு அமெரிக்க கனவு ஆகும் என்றார்.

நான் ஒன்றும் உங்களிடம் கேட்கவில்லையே, இந்த குறிப்பிடத்தக்க பெருவிருந்தும், பெருந்தீனியும் எனது தவறல்லவே, உங்களது கொடும் பேச்சும், குற்றச்சாட்டும் எரிச்சலூட்டுகிறது என்றாள்.

அவர் மிகவும் குடித்திருந்ததால், உண்மைகளை பேசலானார். சக்தியின் காலடியில் எங்களது பிரார்த்தனை மழையை உருவாக்குபவளே, மழையை கொண்டு வா என்றார்.

பணத்தைத்தானே குறிப்பிடுகிறீர்கள். வேறு என்ன? அதை தவிர வேறு ஏது? நான் காதல் என நினைத்தேன். என்றாள். முழு நிலவு அன்றைக்கு போல் என்றுமே அழகாக இருந்ததில்லை. அன்றைய இசையைப் போல் இனிமையான இசையை எப்போதும் கேட்டதில்லை. எந்த இரவும் அன்று போல் கொடூரமாக இருந்ததில்லை. நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும், என்றாள்.

அவள்கருவுற்றிருந்தாள். உறவுகளைதுண்டித்துக்கொள்ளநினைத்தாள். இணைப்பு பாலத்தையும், படகுகளையும் எரித்து விட கனவு கண்டாள். அவளுக்கு மிகவும் பிடித்த திரைப்படத்தை கனவு கண்டாள். அத்திரைப்படத்தில் ஒருவன் தனது பரம்பரை கிராமத்திற்கு வருவான். எப்படியோ அவள் காலத்தால் சுழன்று தனது தகப்பனின் இளமைக்காலத்துக்கு சென்றுவிடுகிறான். கிராமத்திலிருந்து தப்பிக்க எண்ணி புகைவண்டிநிலையத்திற்கு வந்தால், அங்குதண்டவாளங்களே மறைந்து போயிருக்கும். அவன் வீடு செல்ல வழியே இருக்காது. இந்த இடத்தில் படம் முடியும்.

கனவுகளிலிருந்து விழித்தெழுந்தபோது, வியர்த்து வழிந்ததால், அவள் போர்த்தியிருந்த போர்வையெல்லாம் ஈரமாகியது. தகிக்கும் படுக்கையறையில் அவளது படுக்கைக்கு அருகில் ஒரு பெண்மணி ஒருத்தி அமர்ந்திருந்ததைக் கண்டு தனது ஈரப்போர்வையை போர்த்திக் கொண்டு தனது நிர்வாணத்தை மறைத்துக் கொண்டாள். செல்வி மகராஜ்தான் புன்னகைத்தபடியே உன் உடல்நல்ல உறுதி வய்ந்ததுதான், இளமை வாய்ந்தது. மற்றபடி என்னைப் போல் இல்லாமலில்லை என்றாள்.

அவரை விட்டு விட்டு நான் போயிருக்க வேண்டும். இன்போது என்ன செய்வதென்று தெரியவில்லை.

11 11

________________

செல்வி. மகராஜ் தலையை குலுக்கினாள். கிராமத்தில் ஆண் குழந்தைதான் பிறக்கும். அதனால் இந்த வறட்சி மறையும் என பேசிக்கொள்வதாகவும், மூடநம்பிக்கைதான் ஆனால் அவர் உன்னை போக விடமாட்டார். பின்பு நீ போவாயானால் குழந்தையை அவர் வைத்துக் கொள்வார் என விவரித்தாள்.

அதையும்தான் பார்த்துக்கொள்ளலாம், என வெடித்தாள். கோபப்படும் போது அவள் குரல் கரகரப்படைந்து, அவளுக்கே பிடிக்காமல் போகும். அவளது மனக்கண்ணில் கதை தன்னை சுற்றி இறுகுவதையும் தான் கதையினுள் சிக்கி இருப்பதையும் கண்டு இதிலிருந்து வெளிசெல்ல சரியான, வழியையோ அல்லது மோசமான வழியையோ கண்டாக வேண்டும் என நினைத்தாள். செயலற்று இருப்பதுதான் தவறு. உஷ்ணத்தால் மண்டை குழம்புவதோ, அடக்கப்பட்டவள் போல் அடங்கிப் போவதோ கூடாது. காதல் முன்பு பல தவறுகளை செய்ய வைத்துள்ளது. தற்போது அவள் தனது மூளையை உபயோகிப்பாள்.

மெதுவாக, வாரங்கள் பல கழியும் போது, அவளுக்கு தெரிய ஆரம்பித்தது. நகரத்தில் உள்ள அவரது அரண்மனையை சூதாட்ட விடுதியாக அவர் சொந்தமாக நடத்தவில்லை. நம்பத் தகுதியில்லாத பயங்கரமான மனிதர்களுடன், ஒரு முட்டாள்தனமான ஒப்பந்தம் செய்து வைத்திருந்தார். மிகக் குறைந்த வாடகைப் பணமே அவர்கள் கொடுத்தார்கள். மிகச் சிறிய எழுத்தில் எழுதி இருந்த ஒப்பந்த விதிகளின்படி குறிப்பிட்ட சிறப்புநாட்களில் திரு. மகராஜ் காக்காய் பிடிக்கும் சிரிப்புடன் சூதாட்ட மேசைகளை சுற்றி வந்து சூதாடுபவர்களை மகிழ்விப்பதுடன், அந்த சூதாட்ட விடுதிக்கு ஒரு மரியாதையையும் உருவாக்கி கொடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தார். தொலைக்காட்சி டிஷ் வியாபாரம் இதைவிட பரவாயில்லைதான். ஆனால் இந்த நாட்டுப்புற அரண்மனை, அதில் வரும் வருமானத்தையெல்லாம் விழுங்கித் தொலைத்தது. டிஷ் வியாபாரத்தை விட பெரும் வியாபாரம் இருந்தால் கூட அதையெல்லாம் இந்த பாழடைந்த அரண்மனையை நிர்வகிக்கவே சரியாக போகும்.

வயதறிய முடியாதநிலையில் அந்த பழமையான அரண்மனை இருந்தது. சற்றேறக்குறைய அறுநூறு வருடங்களாவது இருக்கும். மின் வசதியும், ஜன்னல்களும், மர ஜாமான்களும் பலவிடங்களில் இல்லாமலிருந்தது. குளிர்காலத்தில் குளிராகவும், வெயில் காலத்தில் உஷ்ணமாகவும் மழை வந்தால் மாளிகையில் உள்ள பெரும்பாலான பெரும் அறைகள் வெள்ளக்காடாகவும் மாறும். அவர்களிடமிருப்பதெல்லாம் அரண்மனை நீர் ஊற்று ஒன்றுதான் வற்றாதது. விடிவதற்கு முன்னால் மாளிகையின் பாழடைந்த வவ்வால்கள் தொங்கும். பின்பகுதியின் ஒரத்தில் வரிசையாக கிராமத்தவர்கள் வறட்சியினால் கோபமுற்றும், தங்கள் அவமானத்தை மறைத்துக் கொண்டும் இருட்டின் மறைவிலிருந்து கொண்டுதங்கள் குடங்களில் நீர்நிரப்பி செல்வர். அந்ததாகமுற்ற மனித வரிசைக்குப்பின்னால் அமானுஷ்யமான எரிந்த, கருத்த கொத்தவால் சுவர் நிற்கிறது. சில ஆங்கில வார்த்தைகளே அறிந்த கிராம பெண், இந்த எரிந்த கோட்டை முன்பு இளவரசரின் வாசஸ்தலமாக இருந்ததாகவும், பெரும் புதையல்களும், உயிர்களும் எரிந்து சாம்பலானதாகவும் சொன்னாள்.

12 12

________________

எப்போது இது நடந்தது? வெகு காலத்திற்கு முன். திரு மகராஜின் விரக்தியை தற்போது அவள் புரிந்து கொண்டாள். செல்வி மகராஜ் அவளிடம் கூறினாள். மற்றொரு இளவரசி தனது கணவனின் வாரிசானவள் எங்களைவிட வறியவளாதலால் சமீபத்தில் நெருப்பை குடித்து வாழ்வை முடித்துக் கொண்டாள். தனது பரம்பரை வைரங்களை நுணுக்கி கோப்பையில் போட்டு விழுங்கிப் போய் சேர்ந்தாள்.

திரு. மகராஜின் அமெரிக்கவிஜயத்தின்போது அவர்தன்னை ஒரு புதுமை விரும்பி போலவும் செயற்கையானநாகரீகவாதியாகவும் ஒரு மாயையை உருவாக்கி கொண்டதினால், அவள் மனதில் இடம் பிடித்து வென்றார். நவீன மனிதனைப் போல பேசக் கற்றுக் கொண்டாலும் அவருக்கு உண்மையில் நிகழ்காலத்தை எதிர்கொள்ளத்திராணியில்லை. அவரது உலகறியாதன்மை, பஞ்சவறட்சி, இந்த சரித்திரங்களால் அவளது மனமாற்றம், போன்றவைதான் திரு. மகராஜின் சறுக்கலாக வடிவெடுத்தன. கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற பந்தயவீரன் தனது சொந்த ஊரில் உயர் பதவி வகிக்கும் நிலைக்கு உயர்வான். ஆனால்திரு. மகராஜோதனது வீட்டைப் போலவே துருப்பிடித்து போயிருக்கிறார். அவளது அறை சொகுசின் உச்சத்திலிருந்தது போல் காட்சியளித்தது. மெதுவாக சுழலும் மின்விசிறி, ஜன்னல்களில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள், சில நேரங்களில் இணைப்பு கிடைக்கும் தொலைபேசி, அவளது மடிக்கணினிக்கு எப்போதாவது இணைப்பு கிடைக்கும் மோடெம் வசதி, மற்றும் மின் இணைப்பு போன்றவை தனது கடந்த கால வாழ்வோடு இணைந்த கிரகத்திற்கு தொடர்பு ஏற்படுத்தி கொடுத்து உதவியது.

அவர்தனது அறைக்கு அழைத்து செல்ல அவமானப்பட்டதால் அவளைக் கூட்டி செல்லவேயில்லை.

தனது வயிற்றில் வளரும் உயிரை உணர்ந்த பின், அவள் அவரை மன்னிக்க விரும்பினாள். அவரது கடந்த காலத்திலிருந்து காப்பாற்றி, உருமாறிக்கொண்டே இருக்கும், தனது நிகழ்காலத்திற்கு கொண்டு வர அவளால் முடிந்த அளவிற்கு உதவுவாள். அவளே அமெரிக்கா அவள் மழையை கொண்டு வருவாள்.

வியர்வையுடனும், நிர்வாணமாகவும் அவள் படுத்திருக்கும் போது அடிக்கடி விழித்தெழுவாள். அப்பொழுதெல்லாம் செல்வி. மகராஜ் அருகில் அமர்ந்தபடியே ஆம் நடன மங்கையை போன்றே அருமையான உடல், இது மிக நன்றாக எரியும் என முணுமுணுப்பாள்.

என்னைத் தொடாதே (அவள் பதறினாள்) எல்லா மணப்பெண்களும் தூரதேசத்திலிருந்தே, இங்கு கொண்டு வரப்படுகிறார்கள். நமது ஆண்கள் வரதட்சணையே செலவழித்த பின் தழல் பறவை வரும்.

என்னை மிரட்டாதே (மனக்கலவரமடைந்தாள்) எத்தனை மணமகள்களை அவர் மணந்துள்ளார்என உனக்கு தெரியுமா? மனக்குழப்பமுற்றும், கோபமாகவும், மிரண்டு போயும், அவள் அவரை கேள்வி கேட்டாள். இது உண்மையா? இதனால்தான் உங்களது சகோதரி திருமணம் செய்து கொள்ளாமல் தனது பாதுகாப்பில் கிராமத்தில் உள்ள முதிர்கன்னிகளையெல்லாம் காப்பாற்றி வருகிறாளா? கணவனை ஏற்க அஞ்சி

13 13

________________

முடிவுற்ற நடன வகுப்பில் ஆடிவரும் வாழ்நாள் கன்னிகள், அதனால்தான் இப்படியிருக்கிறார்களா?

உங்களது மணப்பெண்களை எரிப்பது உண்மையா? எனது பயித்தியக்கார சகோதரி ஏதாவது உளறியிருப்பாள் என அவர் சிரித்தார். உனது அறையில் உன் உடல்தழுவி, நீரையும் நெருப்பையும் பற்றியும், பெண்மையின் அழகையும் ஆண்மையின் மர்மத்தைப் பற்றியும் மந்திரப் பறவையைப் பற்றியும் இறப்பின் குறியீடாக அப்பறவை இருப்பதையும் சொல்லியிருப்பாள் என நினைக்கிறேன் என்றார்.

இல்லை, அவள் கவனமாக நினைவுகூர்ந்தாள். தழல் பறவையைப் பற்றி முதலில் கூறியது நீங்கள்தான்.

திரு. மகராஜ் அவளை தனது சகோதரியின் நட வகுப்பிற்கு கடுங்கோபத்துடன் அழைத்துச் சென்றார். அவரைப் பார்த்த உடன் சலங்கை அணிந்த நடனமணிகள் ஆட்டத்தை நிறுத்தினர். நீங்கள் எல்லாம் எதற்காக வந்திருக்கிறீர்கள் எனது மனைவியிடம் கூறுங்கள், நீங்கள் அகதிகளா, அல்லது மாணவர்களா? நாங்கள் எல்லாம் நடனம் படிக்க வந்த மாணவிகள் ஐயா. நீங்கள் பயத்தினால் தான் இங்கிருக்கிறீர்களா? ஒ, தயை கூறுங்கள்! ஐயா, நாங்கள் ஒன்றும் பயந்து கொண்டு இங்கு வரவில்லை. அவரது கேள்விகள் உரத்த குரலில் தொடர்ந்து கொண்டே இருக்கும் போதும், அவரது பார்வைமட்டும் தனது சகோதரியின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தது. செல்வி மகராஜ் அமைதியாகவும், நிமிர்ந்தும் நின்றிருந்தாள்.

அவரது கடைசி கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. எத்தனை மணப்பெண்கள் எனக்கு? எத்தனை என நீ சொன்னாய்? சகோதரனும் சகோதரியும் பார்வையால் ஒரு துவந்த யுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஒருவரிடம் மற்றவர் ஒரு முடிவிலா கைதி சரித்திரத்திற்கு வெளியேயும் கால முடிவில்லாமலும், இவள்தான் முதல் மணமகள் என முதலில் கண்களை தாழ்த்தியபடி செல்வி. மகராஜ் கூறினாள்.

தனது மனைவியை நோக்கி, கைகளை விரித்தபடி முடிந்ததா, நீயே எல்லாவற்றையும் காதார கேட்டுக் கொண்டாய் இனிமேல் கட்டுக் கதைகள் வேண்டாம் என்றார்.

சூரியனின் உஷ்ணம் சித்தத்தை கலங்கடித்தது. சோனிமாடுகள் காய்ந்த புல்வெளிகளில் செத்து விழுந்தன. சில நாட்கள் மஞ்சள் மேகங்களால் வானம் நிறைந்தது. மேற்குப்புறமுள்ள சதுப்புநிலத்தின் மேல் மேகங்கள் தொங்குவதைப் போல் நிறைந்தன. விகாரமான அந்த மஞ்சள் நிற மழை கூட வரவேற்பை பெறும்தான். ஆனால் அம்மழை கூட பெய்யவில்லை.

எல்லோரிடமிருந்தும் கெட்ட வாடை வீசியது. அனைவரது மூச்சுக் காற்றிலும், பூச்சி வாடையும், செத்த பூனையின் வாடையும், பாம்புகளின் வாடையும், தவளை வாசனையும் வீசியது. எல்லோரது வியர்வையும், கனமாகவும், துர்நாற்றமடிப்பதாகவுமிருந்தது.

அவளது முயற்சிகளையும் மீறி உஷ்ணம் அவளை மயங்க வைத்தது. வயிற்றில் குழந்தை வளர்ந்து கொண்டிருந்தது. திருமதி. மகராஜின்நடனமணிகள், கதவுகள், ஜன்னல்களை மூட சமயத்தில் மறந்து விடுகின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவரின் உடல்களில் பலவித வர்ணங்களையும் காட்டுத்தனமான

14 14

________________

சித்திரங்களையும் வரைந்து கொண்டிருப்பதை அங்கிங்குமாக பார்க்க முடிந்தது. ஒருவர் மேல் ஒருவர் ஆலிங்கம் செய்து உறவுக் கொள்வதும் தெரிந்தது.

அவள்கர்ப்பிணியாக இருப்பதால்திரு.மகராஜ் அவளிடம் வருவதில்லை. வரவும் மாட்டார். ஆனால் எல்லா இரவுகளிலும் செல்வி மகராஜ் வருவாள். அவளது நடன வகுப்பில் சகோதரனின் சண்டைக்கு பின் பேசுவதை குறைத்துக் கொண்டாள். அவளது படுக்கைக்கு அருகே அமர மட்டும் கேட்பாள். சில சமயங்களில் மென்மையாக தொடுவாள். அதை திரு. மகராஜின் அமெரிக்க மனைவியும் அனுமதிப்பாள்.

அவளது உடல்நலம் பாதிக்கப்பட்டது. சுரத்தால் நடுக்கமும், சில சமயம் அதிக வியர்வையும் வழியலாயிற்று. அவளது மலம், இளகிய களிமண் போல் போனது. அரண்மனை நீர் ஊற்றுதான் நீர் வரட்சியிலிருந்தும் துரித மரணத்திலிருந்தும் அவளைக் காப்பாற்றியது. செல்வி. மகராஜ் அவளுக்கு சிசுரூஷைகள் செய்து அவளுக்கு தேவையான தாது உப்புகளையும் போஷாக்கையும் ஊட்டினாள். விபரம் தெரியாத வயதான வைத்தியன் ஒருவன்தான் அந்த பகுதியில் இருந்தான். அவனால் ஒரு உபயோகமுமில்லை. குழந்தை ஆபத்தானநிலையில் உள்ளதை இரு பெண்களும் உணர்ந்தனர்.

இந்த நோய் பீடித்த, நீண்ட இரவுகளில், அறுபது வயதைக் கடந்த நடனக்காரி அமைதியாகவும் மெதுவாகவும் பேசலானாள்.

இங்கு பயப்படக்கூடிய ஏதோ ஒன்று நடந்துள்ளது. திருப்பப்படவே முடியாத மாற்றம். ஆரம்பத்தில் நாங்கள் அதை கவனிக்காததால் கடைசியில் அதை எதிர்க்கொள்ளவே முடியாமல் போயிற்று. பின்புதிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளாததால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவில் முத்தாய்ப்பான பிளவு உண்டானது. ஆண்கள் மழையின்மையை கண்டு பயப்படுவதாக கூறுவதும், பெண்கள் நெருப்பின் இருப்பைக் கண்டு பயப்படுவதும் இதுதான் ஏதோ ஒன்று எங்களிடமிருந்து பாய்ந்து வெளிவருகிறது. தற்போது அதை அடக்குவது கடினம். இங்கே முன்னொரு காலத்தில் பெரும் இளவரசர்ஆண்டு வந்தார். அவர் தான் கடைசியான பெரும் அரசர் எனக் கூட கூறலாம். அவரைப்பற்றி சொல்லும்போது எல்லாமும் பிரமாண்டமாகவும், புராண காலத்து பெருமையுமாக இருக்கும். அவர் உலகத்திலேயே மிக அழகான இளவரசர். அவர் மிகச்சிறந்த ஆடல் அழகியாகவும், எவரையும் மயக்கக் கூடிய அழகும் படைத்த பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஒரு பையனும் ஒரு பெண்ணுமாக இரு குழந்தைகள் பிறந்தனர். வயதானதால் இளவரசருக்கு பார்வை மங்கி வலுக்குறைந்தது. ஆனால் நடனக்காரியான மனைவியின் அழகு குறையவேயில்லை. அவள் ஐம்பது வயதில் இருபத்தி ஒன்று வயதுக் குமரியைப் போல் தோற்றமளித்தாள். இளவரசரின் வயதேற வயதேற அவருக்கு அவளுடைய கவர்ச்சி கொடுத்த ஊக்கம் குறைந்து அங்கே பொறாமைதலைதூக்கியது.

(செல்வி மகராஜ் தோளை குலுக்கியபடி கதையின் முடிவிற்கு வந்தாள்) கோட்டை எரிந்து போனது. இருவரும் இறந்து போனார்கள். இளவரசருக்குதன் மனைவி பல காதலர்கள் வைத்திருந்தாக சந்தேகம். ஆனால் அப்படி ஏதும் கிடையாது. சேவகர்களின் பராமரிப்பில் குழந்தைகள் வளர்ந்தார்கள். பெண் குழந்தை நடனக்காரியாகவும் மகன் விளையாட்டு வீரனாகவும் வளர்ந்தனர். இறந்து போன பழைய இளவரசர் தனது தனியாத ஆங்காரத்தால் ஒரு பெரும் பறவையாக மாறியதாகவும் அப்பறவை தீப்பிழம்புகளால் ஆனது எனவும் அதுவே இளவரசியை எரித்தது என்றும் சொல்லிக் கொண்டார்கள். இப்போதும் அப்பறவை, கணவர்களின் கொடூரமான கட்டளைக்கு இணங்கி பிற பெண்களை எரிக்க வந்து கொண்டுதாணிருக்கிறது என கிராமத்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

15 15

________________

அது சரி, நீ என்ன சொல்கிறாய்? என கட்டிலில் படுத்திருந்த நோயாளியான அவள் கேட்டாள்.

எங்களை பார்த்து மனமிரங்கிவிடாதே. என செல்வி மகராஜ் கூறினாள். இயற்கைக்கு விரோதமான ஒன்றை உண்மையில்லாத ஒன்று என தப்பான அர்த்தம் கொள்ள வேண்டாம். நாங்கள் உருவகங்களிடையே சிக்கியுள்ளோம். அது எங்களை சிதைத்து எங்களது வாழ்வின் அர்த்தத்தை வெளிக்காட்டுகிறது.

அவளது நோய் விலகி, குழந்தையும் சீராக வயிற்றில் வளரதுவங்கியது. திரைச்சீலை விலகியது போல் அவளுக்கு ஆரோக்கியம் பளிச்சிட தொடங்கியது. பழையபடியே சிந்திக்கத் தொடங்கினாள். தான் உண்மையில் அறியமுடியாத இந்த மனிதருடன் இந்திரஜாலம் நிறைந்த இந்த இடத்திலும் இருக்க முடியாது. குழந்தையை அவளே வைத்துக் கொள்வாள். நகரத்திற்கு சென்று அங்கிருந்து அமெரிக்காவிற்கு பறப்பாள். குழந்தை பிறந்த பிறகு நடப்பது நடக்கட்டும். அவளுக்கு தகப்பனைத் தடுக்கும் எண்ணமில்லை. அவர் வந்து குழந்தையை பார்க்கலாம்.

எப்பொழுது வேண்டுமானாலும் வரபோக, கிழக்கே குழந்தையை கூட்டிக் கொண்டு போய்வரக் கூட அனுமதிப்பாள். குழந்தை இரண்டு கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினாள் போதும். வளர்ந்தவர்களை போல் நடந்து கொள்ள வேண்டும். அவள் திரு. மகராஜிற்கு பொருளாதார ரீதியான அறிவுரைகளைக் கூட தொடரக்கூடும். ஏன் முடியாது? அது அவளின் தொழில் அல்லவா. அவளது இம் முடிவை செல்வி. மகராஜிடம் சொல்லிய போது அடி விழுந்ததது போல் அவள்துடித்தாள்.

ஆழ்ந்த இரவின் நடுவே, நமது அமெரிக்கன் ஏதோ கூச்சல் குழப்பத்தை கேட்டு விழித்தெழுந்தாள். அரண்மனையின் வராண்டாக்களிலும் முன்வாசலிலும் சத்தம் நிலவியது. உடையணிந்து அங்கே சென்று பார்த்தாள். பலவகையான வாகனங்கள் அங்கே அணிவகுந்து நின்றிருந்தது. துருப்பிடித்த பஸ் பல ஸ்கூட்டர்கள், ஒரு புதிய ஜப்பானிய ஆள் ஏற்று வாகனம் திறந்த லாரி, இருப்பை மறைக்கக்கூடிய வகையில் வர்ணம் பூசப்பட்ட ஜீப் போன்ற பலவகையான வாகனங்களில் செல்வி மகராஜின் பெண்கள், கோபத்துடனும், பாடிக் கொண்டும் ஏறிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரின் கைகளிலும் வீட்டில் உபயோகிக்கும்தடிகள், தோட்ட பொருட்கள், சமையல்கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. அவர்களுக்கு எல்லாம்தலைமையாக செல்வி, மகராஜ்ஜிப்பில் அமர்ந்து சத்தமாக எல்லோரையும் அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இங்கே என்னநடக்கிறது? உனக்கு இது அவசியமில்லை. உனக்கு தேவதைக் கதைகளில் தான் நம்பிக்கையில்லையே, நீஉனது ஊருக்கு போகப் போகிறாய்.

நான் உங்களுடன் வருகிறேன். செல்வி. மகராஜ்ஜிப்பை முரட்டுத்தனமாக ஒட்டினாள். மோசமான பாதையில் விளக்கில்லாமலே விரைவாக ஒட்டினாள். பலதரப்பட்ட வாகன அணிவகுப்பும் அவள் பின் தொடர்ந்தது. அவர்கள் அனைவரும் உருகி வழியிம் முழுநிலவின் வெளிச்சத்தில் விரைந்தனர்.

அவர்களுக்கு முன் சிதிலமடைந்த கல் நுழைவாயில், வெறுமையின் வாசல் பட்டுப்போன மரத்தருகே நின்று கொண்டிருந்தது. அணிவகுப்பு அங்கே

16 16

________________

இறங்கி அக்கல் வாசல்வழியே வழிந்தோடியது. வாகனங்களின் விளக்குகள் அனைத்தும் போடப்பட்டு ஒளியூட்டப்பட்டது. நடனமணிகள் அனைவரும் அந்த கல் வாசல் ஒன்றுதான்அதற்கு அப்பால் விரவி கிடந்த வெட்டவெளிக்கு வழி என்பதைப் போலும். இதுவே மற்றொரு உலகத்திற்கு வழி என்பதைப் போலும் ஓடினார்கள். அமெரிக்கன் இறங்கி அந்த வாசல் வழியாக சென்ற போது மறுபடியும் அவளுக்கு அதே நினைப்பு வந்தது. கண்ணுக்கு தெரியாத ஜவ்வு வழியே வருவதைப் போரவும், பார்க்கும் கண்ணாடி வழியாக வேறு ஒரு உண்மையை பார்ப்பதைப் போலவும், புதினம் போலவும் உணர்ந்தாள்.

மோட்டார் வாகனங்களின் வெளிச்சத்தில் அங்கு ஒரு நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்தது. அந்த கிழ மணமகனை உங்களுக்கு ஞாபகம் வருகிறதா, தனது இளம் மணப் பொண்ணைப் பார்க்க ஊர்வலமாக சென்று கொண்டிருந்தானே, நினைவிருக்கிறதா? தற்போது அவன் இங்கு கொலை வெறியுடனும், குற்றத்துடனும் நின்று கொண்டிருந்தான். அவனது இளம் மனைவி ஒன்றும் புரியாமல் அப்பாவியாக அவனருகில் நின்று கொண்டிருந்தாள்.

இவர்களுக்கு பின்புறத்திலே கிராமத்தின் ஆண்கள் நின்றிருந்தார்கள். சந்தோஷமற்ற இந்த தம்பதிகளை திரு. மகராஜ் விசாரித்துக் கொண்டிருந்தார்.

சந்தோஷமற்ற இந்த நாடக தருணத்தில், பெண்கள் கூக்குரலிட்டு கொண்டு ஓடி வந்தவர்கள், திரு. மகராஜின் தோற்றத்தை கண்டு திகைத்து நின்றனர். சகோதரி தனது சகோதரனை பார்த்து முறைத்தாள். விளக்கு வெளிச்சத்தில் உடன்பிறப்புகளின் முகங்கள் வெண்மையாகவும், மஞ்சளாகவும், சிவப்பாகவும் ஜொலித்தது. அவர்கள் அமெரிக்கனுக்கு புரியாத பாஷையில் பேசினார்கள். மொழி தெரியாத ஒபெரா இசைக்கச்சேரி போல இருந்தது அது. அவர்களது சைகைகளிலிருந்து அவர்கள் சொல்ல வருவதை புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அவர்களது உடல், மொழி தமது எண்ணங்களிலிருந்து வருவதால் ஒவ்வொரு வார்த்தையையும் இவளால் புரிந்து கொள்ள முடிந்தது. செல்வி. மகராஜ் தனது சகோதரனை நோக்கி, எது நமது பெற்றோரால் தொடங்கப்பட்டதோ அது இப்போது நிறுத்தப்பட வேண்டும் என கட்டளையிட்டாள். அதற்கு பதிலாக, அந்த பதில் அந்த பாழடைந்த கல்வாசலுக்கு அப்பால் உள்ள உலகம் புரிந்து கொள்ளவே முடியாத வகையில் இருந்தது. அவர் பதில் பேச பேச அவரது உடல் தீப்பிழம்பாக மாற, உடலிலிருந்து சிறகுகள் வெடித்து கிளம்பின. கண்கள் கனலை கக்க, தழல் பறவையின் மூச்சு செல்வி மகராஜை கரிக்கட்டையாக எரித்தது. அவளை எரித்து முடித்துவிட்டு கிழவனின் கதறும் இளம் மனைவி பக்கம் பார்வையை திருப்பியது.

அவரது பதில் காற்றில் மிதந்து நின்றது. நான்தான் தழல் பறவையின் கூடு.

செல்வி. மகராஜ் எரிவதைக் கண்ட அவளது ஆழத்தில் ஏதோ ஒன்று கழன்று கைவிலங்கு உடைந்ததைப் போலவும், பொறுமையின் எல்லையை கடந்தது போலவும் உணர்ந்தாள். ஒரு பேரலையைப் போல் திரு. மகராஜ் மேல் பாய்ந்தாள். பொறுக்க முடியாமல் அவளைப் பின்தொடர்ந்து நடனக்காரிகளும் அவர் மேல் விழுந்தனர். அவளது உடல் எல்லை கடந்து ஆழிப் பேரலையாக

17 17

________________

கொட்டியது. தாங்க முடியாத எடை கொண்ட அவளது மழை நெருப்பை பறவையையும் அதன் கூட்டையும் மூழ்கடித்தது. இவற்றை மூழ்கடித்ததோடல்லாமல் வரட்சிநிலவிய பூமியை முழுவதுமாக ஆக்கிரமித்தது. அதன் வெள்ளப் பெருக்கில் கிழமணமகனையும், மற்ற கொலைகாரஆண்களையும் அடித்து சென்று இந்த பயங்கரபிரதேசத்தை சுத்தப் படுத்தியது. வாழ்வின் பண்டைய கொடூரங்களிலிருந்து புனிதப்படுத்தியது.

நேற்றிரவு சமஸ்தானத்தில் எதிர்பாராமல் பெய்த பெருமழையால் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. வரட்சியைநீக்குமளவிற்கு பெய்த இந்த மழையால் இந்த பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இறந்தவர்களில் முன்னாள் இளவரசர் திரு. எ. மகராஜ் மற்றும் அவரது சகோதரியும் இவர் மிகச்சிறந்த சாஸ்திரீய நடனக்கலைஞர் ஆவார்கள் என அஞ்சப்படுகின்றது. திரு மகராஜின்நிச்சயிக்கப்பட்ட மனைவி, அமெரிக்க பெண் உயிர்பிழைத்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது கடலுக்கு மேலே, அவள் தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறாள். பிரபஞ்சம் பழைய உருவத்திற்கே திரும்புகிறது. ஆனால் அவளது உருவம் மாறியிருக்கிறது. திரு. மகராஜின் குழந்தை அமெரிக்காவில் பிறக்கும். தனது மேடிட்ட வயிற்றை வருடிக் கொடுத்தாள். அவளே நெருப்பும் நீருமாக சேர்கிறாள்.

18 18

Sunday, November 19, 2017

எழுத்து நவீனத்துவம் நாகரீகம் - வைக்கம் முகமது பஷீர் : தமிழ் அமிழ்தம்

padippkam.com

WWW tarmilarangan.net

எழுத்து நவீனத்துவம் நாகரீகம் - வைக்கம் முகமது   பஷீர்

தொகுப்பும் தமிழாக்கமும் : எ.எம். சாலன்

1

நவீன கால இலக்கியங்கள் என்றால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை பெண்களின் மாதவிலக்கு, காதல் தோல்வி, போன்ற விஷயங்களாக இருக்கலாம் சில இலக்கியவாதிகள் இம்மாதிரியான விஷயங்களை மட்டுமே எடுத்து வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது தைரியத்தை நான் வாழ்த்துகிறேன்.

அவற்றை நெருங்கவோ அம்மாதிரியான விஷயங்களை எடுத்துக் கையாளவோ எனக்குத் தைரியம் கிடையாது. அந்த  கையறாக்களைக் காண்பது கூட எனக்கு விருப்பம் இல்லை.

லட்சோப லட்சம் வருடங்களுக்கு முன்னால் பூமியில் தோன்றிய முதல் பெண்மணியான ஏவாளினுடைய மாதவிலக்கை உலகத்தின் முதல் ஆணான ஆதாம் எடுத்து உபயோகித்ததாகச் சான்றுகள் இல்லை. அதன் பிறகு யுகயகங்களாகக் கோடானு கோடி பெண்கள் இப்பூமியில் தோன்றினார்கள். இப்போதும் தோன்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கும் மாதவிலக்கு ஏற்பட்டுக்கொண்டு தானிருக்கின்றன. இவர்களுக்கு ஏற்படும் மாதவிலக்கைப் பற்றி நம்மில் சில இலக்கியவாதிகள் மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக நாம் அவர்களை பாராட்டிக்கொள்வோம்.

'சில இலக்கியவாதிகள் எனக் குறிப்பிடும் போது பின் நவீனத்துவ இலக்கியவாதிகள் என எடுத்துக்கொள்ளுங்கள். மாதவிடாய் விவகாரம் அவர்களுடைய இலக்கியத்தின் அணுகுண்டு அல்லவா! அதை வெற்றி கொள்ளகூடிய ஓர் ஹைட்ரஜன் வெடிகுண்டை நான் கண்டு பிடித்து நான் எழுதும் கதைகளுக்குள் பொருத்தவேண்டும் என நினைத்தேன். இரவும் பகலும் இதைப்பற்றியே தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அம்மாதிரியான வெல்லும் சக்தி

இலக்கியத்தில் வேறு எதற்கு இருக்கிறது? அது,

ஏவாள் தொடங்கி எல்லாப் பெண்களிடமும் காணப்படக்கூடியதாகவும் இருக்கவேண்டும். ராப்பகலாக நான் சிந்தித்து சிந்தித்து நான் ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டைக் கண்டுபிடித்து என்னுடைய ஒரு கதைக்குள் பொருத்திவிட்டேன்! அந்தக் கதையினுடைய பெயர்தான் "புர்ர்ர்ர்"

ஏமாற்றத்தை அல்லது காதல் தோல்வியை

[ಶಿಸಿà|20||

அடிப்படையாக வைத்து ஒரு சிறு காவியம் படைத்தேன். அது வெளிவந்ததும் தற்கால இலக்கியவாதிகளில் சிலர் என்னை இலக்கிய ஆசான் எனக்கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள், மாத்திரமில்லை! அதோடு அவர்களுக்கு நடுவே உட்காருவதற்காக வேண்டி எனக்கு ஒரு 'சீட் கூடப் போட்டுத் தர ஆரம்பித்துவிட்டார்கள்.

எனக்கு கள், சாராயம், கஞ்சா - முதலிய மதுவகைகளுடைய வாடை அறவே பிடிப்பதில்லை.

நீங்கள் இம்மண்ணில் வந்து பிறப்பதற்கு முன்பே இவற்றுடன் தொடர்புடையவன் நான். சரஸ், கஞ்சா, பாங்க், அபின், மது வகைகள் என இவற்றுக்கெல்லாம் நான் சேவை செய்திருக்கிறேன்.

இவற்றை உபயோகப்படுத்தியதன் மூலம் எனக்குப் புதிய அறிவோ, வெளிச்சமோ கிடைத்ததாகச் சரித்திரம் இல்லை. மயக்க மருந்துகளையும் மதுபானங்களையும் மக்கள் ஒதுக்கித்தள்ள வேண்டும். இல்லையெனில் நம் உடல் நலம் கெட்டு மரணத்தின் வாய்க்குள் போய் விழ வேண்டியதாகவிடும். இவற்றையும் மீறி எவராவது இவற்றை உபயோகிக்கிறார்கள் என்றால், உபயோகித்துக்கொள்ளட்டும். ஜனத்தொகையைக் குறைக்க ஒரு வேளை உதவலாம்.

செத்தால் இவைகளையெல்லாம் அதோடு முடிந்து விடும். எனவே உயிருடன் இருக்கும்போதே இவற்றையெல்லாம் அனுபவித்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, மதுபானங்களையும் மயக்க மருந்துகளையும் இந்த விஷயங்களெல்லாம் கதைகளுக்குள்ளும் கவிதைகளுக்குள்ளும் நுழைக்கப்படத்தான் செய்கின்றன. வேண்டுமானால் அது நுழைக்கப்படட்டும்? பரவாயில்லை. மேலே கண்டவற்றுக்கு எதிரான லட்சியங்களும் இருக்கின்றன. பூமியில் தோன்றிய ஜீவராசிகளில் எல்லாம் முதலிடம் மனிதனுக்குத்தான் காரணம் அவனுக்கு ஆத்மா உண்டு. மரணத்திற்குப் பிறகும் வாழும் தன்மை பெற்றவன், அவன். கடவுளும் இருக்கிறார். ஆனால் சிலர் அவரை இல்லையென்று சொல்லுகிறார்கள். இதை அடிப்படையாகக்கொண்டு இலக்கியப் படைப்புகள் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன.

இவையெல்லாம் காலங்காலமாக நம் பூமியில் உள்ளவைகள்தாம். இதில் எதுவும் புதிதாக ஒருவராலும் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல! இது இந்தியாவுக்குள்ளும் இருந்தது; ஐரோப்பாவிலிருந்தும் கதைகள் வழியாக இக்கருத்துக்கள் ஏராளமாக வந்திறங்கின.

உதாரணத்திற்கு நாம் வைத்திருக்கும் கிருதாவை எடுத்துக்கொள்ளுங்களேன். இது எங்கும் பின்பற்றப்பட்டு வருவதைப் பார்க்க முடியும். இதை வைத்துக்கொண்டு திரிவதனால் என்ன லாபம்? அழகு அதிகரிக்குமா? பெரிய கிருதா வைத்திருக்கக்கூடிய ஒரு பிரபலமான திரைப்பட இயக்குநரைக்கண்டு நான்

தமிழ்த் தேசிய ਮੁਗਰੋਂ ।

________________

WWW familarangam.net

கேட்டேன் : "எதுக்கு இதுமாதிரி கிருதா வைத்திருக்கிறீர்கள்?" என

அதற்கு அவர் சொன்ன மறுபடி : "இதுதான் நாகரீக மனிதனுக்குரிய அடையாளம்" என்று.

"சியாமுதீன் அகமது ஒரு அரபு பண்டிதர். அரேபியாவில் - மதினா பல்கலைக்கழகத்திலிருந்து அரேபிய மொழியில் படித்துப் பெரிய பட்டம் வாங்கியவர். அவர் எனது நாவலான இளம் பருவத்துத் தோழி" யை அரபு மொழியில் மொழிபெயர்த்து மெக்காவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பப்போகிறார்.

உங்களுடைய சம்மதம் கிடைத்தால் போதும்' என்றார், 6.TašTaaf) b,

அவர் சொல்கிறார்: "பள்ளிக் கூடத்தில் படிக்கும் குழந்தைகள் பெஞ்சுகளையும் நாற்காலிகளையும் அடித்துப்போட்டுவிட்டு ஊர்வலம் போகிறார்கள். அருகிலுள்ள கடைகளைக் கல்லால் அடிக்கிறார்கள். இங்கேயுள்ள குழந்தைகள் எவரைக் கண்டும் பயப்படுவதில்லை. இவர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகளும் இங்கே இருக்கிறார்கள். எண்ணிப்பார்க்கும் போது நம்முடைய எதிர்காலம் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது. அரேபியாவில் பள்ளிக்கூடங்களும் காலேஜீகளும் இல்லாமல் இல்லை. ஆனால் அங்கே போராட்டங்கள் இல்லை. பொது வேலை நிறுத்தங்கள் நடைபெறுவதில்லை. அங்கேயுள்ள சனங்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கும் கடைகளில் சிலவேளை சிப்பந்திகள் கூட இருப்பது கிடையாது. ஆனால் தருணம் பார்த்து அதனுட் புகுந்து ஒருவரும் திருட முயல்வதில்லை, காரணம், திருடுபவனுடைய கைகள் அங்கே வெட்டப்படும். ஒரு மனிதனைக் கொலை செய்தால், கொன்றவனுடைய கழுத்தை அறுத்து அகற்றிவிடுவார்கள். அங்கே இங்குலாப்பும் இல்லை.

கம்யூனிஸ்டு ரஷ்யாவிலும் சீனாவிலும் மாணவர் போராட்டமும், வேலை நிறுத்தமும் உண்டா, 6TGö7687Galfri

இல்லையென்று நினைக்கிறேன்!

-சியயமுதீன் அகமதுவிற்கு ஒரு "சாயா வழங்கி விட்டு நானும் ஒன்று குடித்துக் கொண்டேன். பிறகு சம்மதப் பத்திரம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன். அவர் அதைப் பெற்றுக்கொண்டு எழுந்து சென்றார்.

வேண்டுமானால் நவீனத்துவம், பின்னை நவீனத்துவம் - இந்த இரண்டையும் இன்று எடுத்துக்கொள்ளலாம். அனேகம் கோடி நவீனத்துவம் - பின்னை நவீனத்துவமுமான இன்றுகள் எவ்வளவோ கடந்து போய்விட்டன. அவற்றுள் ஒவ்வொரு இன்னம் பின் நவீனத்துவமாகின்றன. ஆயிரம் வருடங்கள் கழிந்த பிறகு 'பின்னை நவீனத்துவ இன்றுகள் மேலும் வரும். ஆயிரம் வருடங்கள் கடந்த பிறகு மனிதனுடைய நிலை எவ்வாறு இருக்கும்? அன்று நாம் ஒருவரும் இப்பூமியில் இருக்கமாட்டோம், நம்முடைய பெயரும் - பின்னை நவீனத்துவம் - இலக்கியமும் மாய்ந்துபோய்விடும்.

அதெல்லாம் போகட்டும். மனித சமூகம் இந்த பூமியில் தோன்றி லட்சோப லட்ச ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கு என்னவெல்லாமோ நிகழ்ந்து முடிந்துவிட்டன. பல மதங்கள் தோன்றின. அநேகம் மாற்றங்கள் ஏற்பட்டன. அதில் பல இன்று சுலபமாகக் கிடைப்பது ரோமங்கள் மட்டும்தான். அது இருந்தால் இன்று என்னவேண்டுமானாலும் நிகழ்த்திக் காட்டி விடலாம்.

-இப்படிச் செய்வதை "மாடர்ன் என்றோ,'லேட்டஸ்ட் மாடர்ன் என்றோ நாம் சொல்லிக்கொண்டு திரியலாம்.

இன்று முடியை நீளமாக வளர்த்து, எண்ணெய் தேய்த்து வாரப்படாத சகிரி போன்ற முடியை - பேன் உடையை நாற்றம் பிடித்த இளைஞர்கள் - நாகரீகம் எனச் சொல்லிக்கொண்டு அலைகிறார்களே. இவர்களுடைய எதிர்காலத்தைப்பற்றி எண்ணும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு நானும் "மாடர்னாக நடந்தவன்தான்!

அக்காலத்தில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் தலையை மொட்டையடித்து - சில்லறைத் தாடியைச் சுமந்துகொண்டு நடப்பது வழக்கம் அதுதான் அன்றைய முஸ்லீம்களின் தோற்றம், முடி வளர்ப்பது செய்யக் கூடாத காரியம். இம்மாதிரியான விதிவிலக்கு எங்கிருந்து வந்தது? 'இஸ்லாம் குடிகொண்டிருப்பது முடியிலா? ஆண்கள். முடிவளர்க்கக்கூடாது எனில், தெய்வம் எதற்கு ஆண்களுக்கு முடியைத் தந்தருள வேண்டும்? பெண்களில் முகத்தில் முடிவளர அனுமதிக்காத அல்லா, ஆண்களின் முகத்தில் ஏன் முடியை வளரச் செய்யவேண்டும்?

இஸ்லாம் மதத்தின்படி முடியை வளர்த்திக் கொள்ளலாம். ஆனால் அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். நான் முடியை வளர்த்தியெடுத்து "கிராப்' கட்டிங் செய்துகொண்டேன். வானம் இடிந்து வீழ்ந்தது எனச் சொன்னதும் எனது குடும்பக்காரர்களும் ஊர்ப்பிரமுகர்களும் குதித்துக்கொண்டு ஓடிவந்தார்கள். ஆனால் எனது

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

assay 21 |

________________

www.tamiarangannel

'வாப்பா மட்டும் என்னை ஒன்றும் சொல்லவில்லை.

மதப்பிரமுகர்களெல்லாம் என்னைப் பார்த்து

உறுமினார்கள்.

'உன்னை இஸ்லாம் மதத்திலிருந்து விலக்கிவிடுவோம் என்று என்னைப் பயமுறுத்தினார்கள்.

வேண்டுமானால் விலக்கிக்கொள்.

இஸ்லாம் மதம் அழிந்து போக நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் பலவந்தமாகப் பிடித்து நிறுத்தி முடியை வடித்தெடுப்போம்.

நியாயந்தான்! அன்று என் கையில் ஒரு ஒம்பது இஞ்ச் நீளத்தில் பளபளக்கும் கூர்மையான ஒரு கத்தி இருந்தது. அந்தக் கத்தியை யெடுத்து ஓங்கியவாறு நான் சொன்னேன்: 'சாகணும்னு எவனுக்காவது ஆசையிருந்தா - எம்முன்னால் வந்து முடியை வெட்டி மாற்ற வரலாம் உஷார்"

அன்று யாராவது ஒருவர் கற்றை முடிக்காக வேண்டி என்னிடம் வந்திருப்பார்களேயானால் நான் அவர்களைக்கொன்றிருப்பேன், இல்லையா? செய்திருக்கமாட்டேன் எனத் திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. முடியைக் கத்தரித்துக்கொண்டு நவீன மனிதனாக நான் அன்று சுற்றியலைந்து கொண்டிருந்தேன். தலையில் எண்ணெய் தேய்க்கமாட்டேன். "சகிரி மாதிரி இன்றைய இளந்தலைமுறையினைரைப் போல அலைந்துகொண்டிருந்தேன். ஆனால் நான் அக்காலத்தில் தினமும் தவறாமல் குளித்து விடுவேன். அதனால் என் சரீரம் நாற்றமடிப்பதில்லை. ஆனால் தாராளமாக என் தலையில் பேன் கிடந்தது. தலையில் பயங்கரமாகச் சொறியெடுக்கும். சொறிந்து சொறிந்து நான் காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தேன். பறட்டைத் தலை பராமரிப்பு ஒன்றும் கிடையாது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தலையிலுள்ள முடியுதிரஆரம்பித்தது. ஆக, இறுதியில் முழு

வழுக்கைத் தலையானானேன்.

இலக்கியத்தில் ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலைமுறைக்கும் இடையே ஒரு பாகு இடைவெளி ஏற்படும். மொழி வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதன்மூலம் நாம் புதுப்புது அறிவைப்பெற்று வருகிறோம். அதன் மூலம் மனிதன் புதிய சாதனைகளைப் படைக்கிறான். சட்டங்கள் உருவாகின்றன. வசதிகள் பெருகுகின்றன. அவ்வேளையில் அதில் சில பழையதாகிறது. சில அழிந்து போகிறது. இந்த வேளையில்தான் தலைமுறைக்குத் தலைமுறை சின்னவெளி ஏற்படும்.

எதற்காக எழுதுகிறோம்? அதைப்பற்றி நான் கிஞ்சிற்றும் சிந்தித்ததே கிடையாது. ஆனால் விடாமல் தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிட்டேன்.

என் மனதில் தோன்றியவற்றைப்பற்றியெல்லாம், எழுதினேன். இப்படித்தான் எழுதவேண்டும்' என்று எனக்கு ஒருவரும் உபதேசம் செய்தது கிடையாது.

[ಶಿಸಿà| 22 ||

5մլիք ճքքա Յյ51615 հ6ննե5ն

நானாகவே பிறகு என் அனுபவங்களைக் கதைகளாக்க முயன்றேன். அளவுக்கு அதிகமாகக் கஷ்டங்கள் அனுபவித்தவன் நான் எராளமான நாட்கள் பட்டினியும் கிடந்திருக்கிறேன். சொல்லமுடியாத அளவு துன்பங்களையும் அனுபவித்திருக்கிறேன்.

ஓர் இலக்கியவாதியானதில் திருப்திதானா? (பவரே தன்னை நோக்கிக் கேட்டுக்கொள்கிறார்.)

வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பெரிய பெரிய கனவுகள் ஒன்றும் இல்லாததினால் திருப்தி என்று சொல்லிக்கொள்ளலாம். மலையானி மொழியானது ரொம்ப சின்னமொழி. அது ஒரு சிறுவட்டம் மாத்திரமே அக்காலத்தில் எழுதுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவு என்றாலும் அதன் மூலம் பட்டினி கிடக்காமல் காலத்தை ஒட்டினேன். அவ்வளவுதான். எழுதுவதைத் தவிர எனக்கு வேறு ஒரு வேலையும் தெரியாது. கதைகள் எழுதுவதிலிருந்து வரும் வருமானத்தை யொழித்தால் எனக்கு வேறு வருமானமும் கிடையாது.

மனித குலத்திற்குச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இதுநாள் வரையில் நான் குறிப்பிடத்தக்க முறையில் ஒன்றையும் சொல்லிவிடவில்லை. குறைவான அறிவு: குறைவான அனுபவங்கள். சிறு 'பாவனை' - இவற்றை மட்டுமே கைப்பொருளாகக் கொண்டு பலகதைகள்

3

வழியே சிறு விஷயங்களைப் பற்றி நான் சொல்ல முயன்றிருக்கிறேன்.

ஒரு முக்கிய இலக்கியவாதிக்கு மனித குலத்திற்குச் செய்யவேண்டிய கடமைகள் உண்டா? நம்முடைய இலக்கியவாதிகளில் சிலர் இல்லையென மறுக்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதி ஓர் இலக்கியவாதியினால் மனிதர்களை மோசமானவர்களாக்க முடியும். வாழ்வின்மேல் வெறுப்பையூட்ட முடியும். இம்மாதிரியான படைப்புகளும் நம்மிடையே உலவுகின்றன.

ஒரு இலக்கியவாதியினுடைய படைப்புகள் அனைத்தும் அவன் இப்பூமியை விட்டு மறைந்து ஐம்பது வருடங்கள் ஆகும்போது அது பொதுசொத்தாகிவிடும். இது சட்டம் யார் வேண்டுமானாலும் அச்சடித்து விற்பனை செய்து கொள்ளலாம். நாம் எல்லோரும் நன்மையின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.

கண்டபடியெல்லாம் எழுத வருங்காலத் தலைமுறையினரை மோசமானவர்களாக்க வேண்டுமா? இன்றைய மனிதர்களையும் மோசமாக்க வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் எழுதுவதை நிறுத்திக்கொள்ளலாம் பிழைப்பதற்கு நம்முடைய நாட்டில் எவ்வளவோ தொழில்களெல்லாம் இருக்கின்றன: நான், நன்மையின் மேல் நம்பிக்கையுள்ளவன், பெளதீக விஷயத்தில் நம்பிக்கை கொண்டவன். மனித குலத்திற்கு இதை விட ஓர் ஒளிமயமான காலம் அமையப்போகிறது என எண்ணுபவன். மனிதனுக்கு

________________

www.tamiarangan.net

ஒருபோதும் மரணமில்லை என்ற கருத்தில் உறுதியான நம்பிக்கையுள்ளவன். அண்ட சராசரங்களையும் சிருஷ்டித்த தெய்வத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவன். அந்த தெய்வத்திற்கு உருவம் கிடையாது என்பதில் நம்பிக்கையுடையவன். தெய்வம் கருணையுள்ளவன் என்றும் நம்புபவன்.

இங்கே நன்மையும் தீமையும் இருக்கின்றன. நல்ல பழங்களும் அழுகிய பழங்களும் உண்டு. நாம் நல்ல பழங்களையே சாப்பிடவேண்டும்; நல்லதையே செய்யவேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, வழிகாட்டவேண்டும். மேலே நாம் கண்ட சிந்தனைகளை நீங்கள் எனது கதைகளிலும் காணமுடியும். அந்தச் சிந்தனைகளில் பல என்னையும் ஆகர்ஷித்திருக்கிறது. நான் எழுதிய கதைகளில் சிலவற்றை நான் கிழித்தெறிந்திருக்கிறேன். என் மனதில் தோன்றிய விஷயங்களில் பலவற்றை நான் எழுதாமலும் விட்டிருக்கிறேன். எழுத எழுதப் புதிய உள்ளடக்கங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. நம்முடைய சொந்த அனுபவங்களாக இருந்தால், நம்மால் அவற்றை நம்பிக்கையோடு சொல்லிச் செல்லமுடியும் (படைப்பாக்க முடியும்) என்னுடைய படைப்புகள் பெரும்பாலும் எனது சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டவைகளே! விஞ்ஞானமும் என்னைக் கவர்ந்திருக்கிறது.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பயங்கரமான இருள், கடல், மலைகள், பாலைவனங்கள், நதிகள், பிரபஞ்சம் - இவை அனைத்தும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேதானிருந்தன.

நான் காதலாக இருந்திருக்கிறேன். அரசில்வாதியாக வாழ்ந்திருக்கிறேன். எனக்கு எப்போதும் சுதந்திரனாக இருக்க இஷ்டம் அடிமைத்தனத்திற்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். போலீஸ்காரர்களிடமிருந்து அடி - இடி - உதை போன்றவற்ற்ை வாங்கிக் கட்டியிருக்கிறேன். அவர்கள் வாயிலிருந்து வரும் கெட்ட வார்த்தைகளையெல்லாம் கேட்டிருக்கிறேன். போலீஸ் லாக்கப்புகளில் அடைக்கப்பட்டிருக்கிறேன். பல நாட்கள் ஜெயில் தண்டனைகளை அனுபவித்திருக்கிறேன். இவையெல்லாவற்றையும் வைத்துக் கதைகளும் எழுதியிருக்கிறேன்.

எதற்காக எழுதினேன்? வாசகர்கள் படித்து ரசிப்பதற்காக வேண்டி நல்ல சிந்தனைகளை உணர்த்துவதற்காக வேண்டி 4.

"நவீன இலக்கியம் என ஒன்று இருக்கிறதா? என்று கேட்டால், நவீனமான 'இன்று இருப்பதுபோல், இலக்கியத்திலும் காணக்கிடக்கிறது. நான் முன்னர்க் குறிப்பிட்டது போன்று இன்று நேற்றாக மாறும் நூறு நூறாயிரங்கள் வருகின்றன. அவை அனைத்துமே நேற்றுடன் போய்ச் சேர்ந்துவிடும். இப்படி தினசரி அனைத்துமே போய்க்கலந்து கொண்டேதானிருக்கும். மனிதனுடையதாக - மேகங்கள், உடலுறவு, உறக்கம்,

இவையனைத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை, லட்சோப லட்சம் வருடங்களுக்கு முன்பு இருந்தது போலவேதான் அவைகளையெல்லாம் இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்றன. யுத்தங்களும் நோய்களும் வறுமையும் அன்றும் இன்றும் போலத்தான் இருந்து கொண்டிருக்கின்றன. நவீன 'மனிதன் இன்றுகளில் நின்று கொண்டு பல சாதனைகளையும் புரிந்திருக்கிறான். இதற்காக வேண்டித்தான் கடவுள் மனிதனுக்குப் புத்தியைக் கொடுத்திருக்கிறான். இலக்கியவாதியும் ஓர் மனித ஜீவியே! சக்தி ஒருபோதும் ஒரே நிலையில் இருந்துகொண்டிருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. நம் சிந்தனையிலும் நம்பிக்கையிலும் மாறுதல் ஏற்படும்.

தயவு செய்து ஒருமுறை எழுதிய கதைகளை மாதிரி மீண்டும் மீண்டும் எழுதாதீர்கள். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாதீர்கள். நான் கதைகள் எழுதும் போது இம்மாதிரி நிகழாமல் இருக்க, கவனமாக இருப்பேன், அப்படி இல்லையென்றால் நான் எழுதிய ‘என்னுடைய உப்பாவுக்கு ஒரு யானை இருந்தது என்ற நாவல், எனது இளம் பருவத்துத் தோழி என்ற நாவலைப் போன்று அல்லவா அமைந்திருக்கவேண்டும்.

என்னுடைய உப்பாவுக்கு ஒரு யானை இருந்தது' என்ற படைப்பிலே பயங்கரமான சோகத்தை ஹாஸ்யமான முறையில் வெளிப்படுத்திவிட்டேன்.

எழுதியது மாதிரி, திரும்பத் திரும்ப எழுதுவதற்கு அதிக சிரமம் ஒன்றுமில்லை. ஆனால் அப்படி எழுதக்கூடாது என்பதால்தான், நான் அந்தமாதிரி எழுதவில்லை. நாம் எழுதுவது (படைப்பது) ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானதாக இருக்கவேண்டும். நான் ஏற்கனவே சொன்னது போன்று மனதில் தோன்றிய பலவற்றையும் எழுதாமலும் விட்டிருக்கிறேன். வாசகர்களுக்கு இதனால் என்ன லாபம்?

நான் படைப்புத் தொழிலில் ஈடுபடும் பொழுதெல்லாம் இந்தக் கேள்வியை என் கண்முன்னால் நிறுத்தி வைத்துக்கொள்வேன். வாசகர்களை அழவைத்து நாம் அவிர்களது மனதைச் சுத்தப்படுத்தவேண்டும், அல்லது சிந்திக்க வைக்கவேண்டும். இவைகளையெல்லாம் எந்த அளவுக்கு இலக்கியத்தில் உட்படுத்தப்பட்டிருக்கிறது என வாசகர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, எழுதுவதற்கு இப்போதும் எனது கையில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு நேரந்தான் இல்லை. (பவர் இங்கே தனது முதுமையைச் சுட்டுகிறார்) இறைவனடி சேர்ந்த பிறகுதான் இனி எனக்கு எழுத நேரம் கிடைக்கும்!

மரணம் எப்போது எனத் தெரியவில்லை என்றாலும் நான் எழுதிக்கொண்டேயிருக்கிறேன் எழுதிக்கொண்டிருப்பதை எழுதித் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

'ಶಿಸಿà|23||

ਸ਼ੁਰੀ, ತಙ್ಗಹಾ।

Saturday, November 18, 2017

பூனைகளின்-அநுசரணம்/

http://unnatham.net/பூனைகளின்-அநுசரணம்/
Saturday, 18th November 2017

உன்னதம் (http://unnatham.net/)
By unnatham Posted on November 8, 2017

X.

சிறுகதை

-ஜூலியோ கொர்த்தஸார்

அலனாவும் ஓசிரிஸம் என்னைப் பார்க்கும்போது, அப்பார்வையில் ஏதாவது கொஞ்சம்பாசாங்கோ, கொஞ்சம் வஞ்சனையோ கலந்திருந்தது என்று என்னால் புகார் சொல்ல முடியவில்லை. அலனா அவளுடைய நீல விழிச்சுடரோடும், ஒசிரிஸ் அதனுடைய பசுமை ஒளிரும் விழிக்கதிரோடும் என்னை நேர்கொண்டு நோக்கினார்கள். மேலும்,அவர்கள் தம்மில் ஒருவரையொருவர் பார்க்கும்போது இந்த முறையில்தான் பார்த்துக்கொண்டார்கள். பால் கிண்ணத்திலிருந்து திருப்தியுடன் மியாவியபடி ஓசிரிஸ் தன் வாயை உயர்த்தும்போது, அலனா அதன் கருத்த முதுகைத் தடவிவிடுவாள். எனக்குப் புலப்படாத வெளிகளில், என் கொஞ்சல்கள் எட்டமுடியாத தூரத்தில் நின்று, ஒருவரையொருவர் புரிந்து கொண்டுள்ளனர்-இந்தப் பெண்ணும் பூனையும்.இதை அறிந்த பிறகு சிலகாலம், நான் ஒசிரிஸ் மேலிருந்த என் அதிகாரத்தைத் துறந்துவிட்டேன்; பாலமிட்டு இணைக்கமுடியாத தூரத்தில் இருந்துகொண்டு, நாங்கள் நல்ல சிநேகிதர்களாக இப்போது இருக்கிறோம். ஆனால், அலனா-என் மனைவி, எங்களுக்கிடையில் இருக்கும் தூரம், மாறுபட்ட ஒன்று. இந்த விஷயத்தை அவள் உணர்ந்திருக்கவில்லை என்று எனக்குத் தெரிந்தாலும், என்னைப் போலவே அவள் என்னை நேர்கொண்டு நோக்கும்போதும், என்னைப் பார்த்துப் புன்னகை செய்தோ அல்லது என்னைப் பார்த்துப் பேசியபடியோ, எல்லாவிதச் சமிக்ஞைகளிலும் எல்லாவித விஷயங்களிலும் கொஞ்சம்கூட மிச்சம் வைக்க நினைக்காமல் தன்னை அவள் சமர்ப்பிக்கும்போதும்,- காதலுறவின் போது தன்னை அவள் கொடுப்பதுபோல், அவளுடைய ஒட்டு மொத்த சரீரமும் அவள் கண்களைப் போலவே விளங்கியது. பூரணமான அர்ப்பணிப்பு குறுக்கீடில்லாத பரிமாறல்,

இது வினோதமானதுதான்-ஓசிரிஸின் உலகத்தினுள் புகுவதற்கு நான் மறுதலிக்கப்பட்டபோதும் கூட, அலனாவின் மேல் எனக்குள்ள காதலை, சுலபமான முழுமையான விஷயமாக எளிமையானதாக, தம்பதிகளுக்கேயுரிய ரகசியங்களற்ற வாழ்க்கையாக என்றும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அந்த நீலவிழிகளுக்குப்பின்புறத்தில், வார்த்தைகள்-முணுமுணுப்புகள்-மெளனங்களின் ஆழத்தில், இன்னும் அகன்ற மற்றொரு பிரதேசம் விரிகிறது.இன்னொரு அலனா அங்கே உயிர்க்கிறாள். ஆனால் இதை இப்படி நான் அவளிடம் சொன்னதில்லை. நிறையதினங்களும் நிறைய வருவடியங்களுமாக நழுவிக்கொண்டு விலகிய இந்த சந்தோஷத்தின் மேல்மட்டத்தைச்சிதைக்க முடியாதபடி நான் அவளை மிகவும் அதிகமாகக் காதலித்தேன். அதனால், எனக்கே உரித்தான முறையில் புரிந்து கொள்ளவும், கண்டுபிடிக்கவும் பிடிவாதமாக முயன்று வந்தேன். வேவுபார்க்காமல் அவளைக் கண்காணித்தேன். சந்தேகிக்காமல் அவளைத் தொடர்ந்து கவனித்தேன். அங்ககினப்பட்டும் கூட அற்புதமாக உள்ள ஒரு சிலையை முடிவுறாத ஒரு கைப்பிரதியை, வாழ்க்கை ஜன்னலில் செதுக்கப்பட்ட ஒரு துண்டு வானத்தை நான் காதலிக்கிறேன்.

ஒரு தருணத்தில், சங்கீதமானது, அவளிடம் என்னைச் சரியாகக் கொண்டு போய்ச்சேர்க்கும் பாதையை அமைக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியுள்ளது. எங்கள் வசமிருந்த பர்டோக், டியூக் எல்லிங்டன், கால்காஸ்டா-இசைத்தட்டுக்களை அவள் கேட்கும்போது கவனித்திருக்கிறேன். படிப்படியான ஊடுருவல், அவளுள் என்னை அமிழ்த்தியது.இசை, ஒரு மாறுபட்ட விதத்தில் அவளை நிர்வாணமாக்கியது. அதிகமாக இன்னும் அதிகமாக, அலனாவாக அவளை மாற்றியது, ஏனெனில், என்னிடமிருந்து எதையும் மறைக்காத, என்னை எப்போதும் நேர்கொண்டு பார்க்கக்கூடிய பெண்ணாக மட்டும் அப்போது அலனா தோன்றவில்லை. அவளை இன்னும் நன்றாகக் காதலிக்கும் வகைமைக்காக, அலனாவுக்கு எதிரிலும் அலனாவுக்கு மேலாகவும் நின்று, அவளை நோக்கி அப்போதும் நகர்ந்தேன்- முதலில், இசையானது இன்னொரு அலனாவை எனக்கு வடிணத் தோற்றமாகக் காட்டிவந்தாலும், ஒருநாள் ரெம்ப்ரெண்டின் படப்பிரதியொன்றில் முகங்கொண்டிருந்தபோது, அவள் இன்னும் அதிகமாக மாறியிருந்ததைக் காணும்படி எனக்கு வாய்த்தது. ஒரு நீலக்காட்சியில் தோன்றும் வெளிச்சங்களையும் நிழல்களையும், வானிலிருந்து ஒரு மேகக்கூட்டம் சட்டென்று மாற்றியமைத்ததைப் போலிருந்தது அது, அலனாவிலிருந்த அலனாவின் ஷணத்தோற்றத்தை, மீண்டும்திரும்ப நிகழவே நிகழாத உடனடி உருமாற்றத்தை அளவிட்டுக் கொண்டிருக்கும் ஒற்றைப் பார்வையாளராக, அந்த ஓவியம், அவளை, அவளையும் மீறி எங்கோ தூக்கிச் சென்றுவிட்டது என்று நான் உணர்ந்தேன். கீத் ஜெத்ரெட் பீதோவன், அணிபல் ட்ரோலியே போன்ற மத்தியஸ்தர்கள், அருகில் நெருங்க அனிச்சையாக உதவினார்கள். ஆனால் ஒரு ஓவியத்தையோ படப்பிரதியையோ கவனித்திருக்கும் போது, தான் எதுவாக இருக்கிறோம் என்று அவள் நினைத்திருக்கிறாளோ, அதுவும் கூட தொலைந்து போய் நின்றாள் அலனா. ஒரு கற்பனை லோகத்துக்குள் அவள் ஒரு கணம் சென்றிருக்கலாம்; எனவே, அதை அறியாமல் தன்னைவிட்டே அவள் விலகி வந்திருக்கலாம்-ஒரு ஒவியத்திலிருந்த இன்னொன்றுக்கு நகர்ந்து கொண்டு, அவை பற்றிய அபிப்பிராயங்களை உதிர்த்துக் கொண்டோ அல்லது மெளனித்தோ இருந்து வருவதை, அவளுக்குக் கொஞ்சம்பின்னாக இருக்கையில் அல்லது அவளை சீட்டுக் கட்டினுள் அதன் ஒவ்வொரு புதிய அலட்சியமான உதறலின்போதும் ஒளிந்துகொண்டும் ஜாக்கிரதையாகவும் உள்ள ஒருசீட்டைப் போன்று இருக்கிறாள்; ஒன்றுக்குப்பின் ஒன்றாக, குயின்களும் ஏஸ்களும் ஸ்பேடுகளும் கிளப்களுமாக வருகிறாள் அலனா.

இந்த ஓசிரிஸ"டன்கூடிக்குலவுவதற்கு என்ன இருக்கிறது? அதற்க அதன் பாலைக் கொடுத்ததும்,திருப்தியடைந்ததைப் போல், சந்தோஷத்தில் மியாவிடும் கரும்பந்தாக, தனியே விலகிப் போய்விடுகிறது அது. ஆனால் நேற்றுப்போலவே, இன்றும் அந்த ஓவியகாலரிக்கு அலனாவை அழைத்துச்செல்கிறேன். கண்ணாடிகளாலும் இருள் மங்கிய அறைகளாலும் ஆன ஒருதியேட்டருக்கு மறுபடியும் ஒரு தடவை போகிறோம். கான்வாஸிலுள்ளதுல்லியமான பிம்பங்கள், இந்த பிம்பத்துக்கு முகம் காட்ட உல்லாசமாக, நீல ஜீன்ஸ்களுடனும் ஒரு சிவப்புரவிக்கையுடனும், நுழைவாசலில் சிகரெட்டைவீசியெறிந்துவிட்டுப்பின் படம் படமாய் போய்ப்பார்க்கிறவளாய், பார்ப்பதற்குத் தேவைப்படும் கச்சிதமான தூரத்தில் நிற்கிறவளாய், சமயாசமயங்களில் விமர்சிக்கவோ தன் அபிப்பிராயத்தை ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளவோ என்னை நோக்கித்திரும்புகிறவளாய் அவள் கவனிக்கிறாள். நான் ஓவியங்களுக்கு அங்கே இருக்கவில்லை என்பதையோ, கொஞ்சம் பின்னாலிருந்தும் பக்கவாட்டிலிருந்தும் நான் பார்க்கும் முறை அவளுடையது போன்றதல்ல என்பதையோ அவள் கண்டுபிடிக்கவேயில்லை. படத்துக்குப் படம் சென்று பார்க்கும் முறை அவளுடையமெதுவான பிரதிபலிப்பான நடை அவளை மாற்றிக்காட்டுகிறது என்பதை, நான் கண்களை இறுக்கமூடிக் கொண்டு என்கரங்களில் அவளை அழுத்தமாகப் பிடித்துக்கொள்வதற்கும் அவளுடன் ஒரு சித்தப்பிரமைக்குள் பறக்கத்துடிக்கும் பைத்தியகாரத்தனம் கொஞ்சம் பிறக்க, நேராகப் பொதுஜனங்களிடைபுகுந்து வெளியேறத் துடிப்பதற்கு எதிராகவும் போராடிக்கொண்டிருந்ததை அவள் அநேகமாக உணரவேயில்லை. ஆசுவாசம் கொண்டவளால், தன் சந்தோஷமும் கண்டுபிடிப்பின் அதிசயமும் கலந்த இயல்போடு, கனமேயில்லாமல், தன்னுடைய தயக்கங்களும் என்னிலிருந்து வேறான ஒரு காலவெளியில் செதுக்கப்பட்டதை உணராமல், என் தாகத்தின் எதிர்பார்ப்புமிகுந்த உணர்ச்சி வேகத்திலிருந்து அந்நியமானவளாய் அவள் தோன்றினாள்.

சங்கீதத்தில் ஆழ்ந்த அலனா, ரெம்ப்ராண்டைப் பார்க்கும் அலனா-இதுவரை எல்லாமே ஒரு நிச்சயமற்ற சகுனமாகவே இருந்தன. ஆனால், இப்போது என் நம்பிக்கை, பொறுக்க முடியாமல் நிறைவுபெற ஆரம்பித்தது. நாங்கள் அங்கே வந்து சேர்ந்த கணத்திலிருந்து, ஒரு பச்சோந்தியின் சகிக்கமுடியாத கபடமின்மையுடன் ஓவியங்களில் தன்னைப் பறிகொடுத்தவளாய் ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்காகப் போய்க்கொண்ட அவளது தோரணைகளைப் பதுங்கியிருந்து வேவுபார்க்கும் பார்வையாளனை அறியாதவளாய் அலனா தோன்றினாள். அவளுடைய சிரத்தின் முன்நோக்கிய சாய்வு, அவளுடைய கரங்களின் அல்லது உதடுகளின் அசைவு உள்முகமாக அவளக்குள் உள்ளோடும் அவளை, இன்னொருத்தியாக காட்டும்வரைக்கும் தனக்குள் முழுதாக ஒடியாடுவதானவர்ணவியலைத் தேடி அந்த அடுத்தவள் எப்போது அலனாவாக இருக்க, தன்னை இன்னொரு அலனாவாகச் சேர்ந்தெழுப்ப, சீட்டுக்கட்டு முழுதும் காலியாகும் வரை, சீட்டுகள் அணிவகுக்கின்றன. அவளுக்குப் பக்கமாக, காலரியில் சுவரையொட்டி, மெதுவாக நடந்துகொண்டே தன்னை ஒவ்வொரு ஓவியத்துக்கும் அவள் உந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன்.அவளிடமிருந்து ஒவியத்துக்கும், ஒவியத்திலிருந்து என்னிடமும், மீண்டும்திரும்பிஅவளிடமும் செல்லும் ஒரு முக்கோண________________

மின்னல் வேக வீச்சில், என் கண்கள் அகண்டு பெருகின. அவளைச் சுற்றிலுமுள்ள மாறுபட்ட பிரபை, ஒருகணம் பின்னதுக்கு வழிவிட்டு, ஒரு புதிய ஒளிவட்டம் அமைப்பதையும், சாசுவத நிர்வான நிலைக்கு, சத்திய நிலை ஒன்றில் அவளைப் பகிரங்கப்படுத்திக் காட்டும் விதத்தில், வர்ண அடர்த்தி பெற்றுமாறுவதைச் சிக்கெனப் பிடித்தன என் கண்கள். இந்த பிரித்துக்காட்டும் வர்ணக் கலவை, திரும்ப நிகழ்வது எவ்வளவுதூரம் சாத்தியம் என்பதை முன்னறிவது அசாத்தியமாகியது.எத்தனை புதிய பல அலனாக்கள், ஒரு தொகுப்பில் பின்வரும் தீர்மானத்துக்கு என்னை இறுதியில் இட்டுச் செல்லும்? நாங்களிருவரும் திருப்தியடைந்தவர்களாய் வெளிப்படத்தோன்ற, எதையும் அறியாதவளாய், தனக்குக் குடிப்பதற்கு பானம் வாங்கும்படிஎன்னிடம் சொல்வதற்கு முன், புதிய சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டாள் அவள் என்னுடைய நீண்டகாலத் தேடல் கடைசியாக உச்சகட்டம் அடைந்துவிட்டது என்பதை நான் அறிந்த நிலையில், இதன் பிறகு இதிலிருந்து, என் காதல், புரிந்துகொண்டும் புரியாமலும் கூட உருவெடுக்கும் என்பதை உணர்ந்த நிலையில், மூடிய கதவுகள், தடுக்கப்பட்டநடைபாதைகள் பற்றிய நிச்சயமின்மை இல்லாமல், அலனாவின் தெளிந்த பார்வையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.

எதிர்புறத்தில், கருத்த பாறைகளின் பின்னணியில் ஒரு தனித்த படகு, அங்கு அவள் அசைவற்று நெடுநேரம் இருந்ததைக் கவனித்தேன். அவளது கரங்களின் புலனாகாத சிறகடிப்பு, ஆகாயத்தில் நீந்துவதாக, கடலுள் நீந்துவது தொடுவானங்களிலிருந்து பறப்பதாக அவளைத் தோன்றவைத்தது. ஆச்சரியப்படும் சக்தியை நான் நீண்டநேரம் தக்கவைத்திருக்கமுடியவில்லை.அந்த இன்னொரு படம்-ஈட்டிமுனைக்கம்பிக்கிராதி ஒன்று தண்டித்துவிலகிச் சென்று, மரத்தொகுதியின் எல்லையில் நிற்பதான ஒவியம்-ஒரு சரியான நோக்குநிலையைத் தேடுவதற்கு அவளைப் பின்வாங்க வைத்தது.திடீரென்று விலகி வெறுத்தல், ஒப்புக்கொள்ள முடியாத எல்லைக் கோட்டைப்புறமொதுக்குதல், பறவைகள், கடலின் ராட்ஸ்சமிருகங்கள், மெளனத்தினுள் ஜன்னல்கள் திறந்து கொள்கின்றன. அல்லது மரணம் என்ற போலியான தோற்றத்தை உள்நுழையவிடுகின்றன. ஒவ்வொரு புதிய ஓவியமும் அலனாவை மேன்மேலும் ஈர்த்து இழுத்துச்சென்றன. அவளுடைய முந்திய நிறத்தை அவளிடமிருந்து கொள்ளையிட்டுச் சென்றன. அவளிடமிருந்த, சமயத்துக்குத்தக சரிசெய்த கொள்ளும் அநுசரணச் சுதந்திரத்தை பிடுங்கியெறிந்தன. பறத்தலை, விரியத்திறந்தவெளிகளை இரவையும் இன்மையையும் எதிர்கொண்டு மறுக்கும் அவளை, சூரிய வெளியின் வியாகூலத்தை ஃபோனிக்ஸ் பறவையாகும் அதிபயங்கர ஆவல் துடிப்பை ஸ்திரப்படுத்தின. அவளுடைய பார்வையைத் தாங்குவது எனக்கு அசாத்தியம் என்பதை அறிந்தவனால், திகைப்பை என் முகத்தில் அவள் கண்டபோது, கேள்விக்குறியின் எதிர்பாராத வியப்பை அவள் கொண்டாள். ஏனெனில் நானும் பயணத்தின் இலக்காக இருக்கும் அலனா.என் அலனாவிடம், இதுதான் நான் ஆசைப்பட்டது. நகரத்தின் நிகழ்காலத்தாலும் கஞ்சத்தனத்தாலும் இதுவரை கடிவாளமிடப்பட்டிருந்தது. இது முதற் கொண்டும் இறுதிவரையிலும் இப்போது அலனா, கடைசியில் அலனாவும் நானும். அவளுடைய நிர்வாணத்தை என்கரங்களுக்குள் பிடித்தனைக்க ஆசைப்படுகிறேன். நான் அவளுடன் காதலுறவுகொள்ள, எல்லா விஷயங்களும் தெளிவுபட்டுவிடும்; எல்லா விஷயங்களும் எப்போதைக்குமாகப் பேசி முடிக்கப்பட்டிருக்கும் (அவற்றில் பலவற்றை நாங்கள் முன்பே அறிந்திருப்போம்) வாழ்வின் முதல் விடியல் பிறக்கும்.

காலரியின் இறுதியை நாங்கள் அடைந்துவிட்டோம். இன்னும் என் முகத்தை மறைத்தபடி, காற்றும் விதிவிளக்குகளும் என்னைப் பற்றி அலனா அறிந்தவைகளுக்குள் மீண்டும் என்னைக் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் வெளிப்புறக் கதவை நோக்கி நான் சென்றேன். மற்ற பார்வையாளர்கள் என்னிடமிருந்த அவளை மறைக்க, ஒரு ஓவியத்தின் முன்பு-ஒரு ஜன்னலும் பூனையும் உள்ள அந்த ஓவியத்தின் முன்பு-நீண்டநேரமாக அசைவற்றுப்பார்த்துக் கொண்டு அவள் நிற்பதைக் கண்டேன். கடைசியாக நிகழ்ந்த ஒரு மாற்றம், மற்றவர்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் நேர்த்தியாக விரிக்கப்பட்டு, மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் சிலையாக அவளைப் படைத்துக்காட்டியது. அந்தப் பூனை, ஓசிரிஸை ஒத்ததோற்றத்திலிருப்பதைக் கவனித்தேன். எங்களது பார்வையைத் தடுக்கும் பக்கச் சுவரின் ஜன்னல் வழியாக, தொலைதூரத்திலிருந்த ஏதோ ஒன்றை அது நோக்குவது போலிருந்தது. தனக்கேயுரிய அலட்சியத்துடன் அசைவற்றதாக-அலனாவின் நிரந்தர அசைவின்மையைவிட மாற்றுக்குறைந்த அசைவின்மையில் உள்ளதாக அது தெரிந்தது. ஏதோ ஒருவகையில், முக்கோணம் சிதறிப் போனதை நான் உணர்ந்தேன். என்னை நோக்கித்தன் தலையை அலனா திருப்பியபோது, அந்த முக்கோணம் அதற்குமேல் உயிர்தரித்திருக்கவில்லை. ஓவியத்துக்குள் அவள் ஆழ்ந்துவிட்டாள். அவள் திரும்பிவரமாட்டாள். இப்போதும் பூனையின் பக்கத்தில்தான் அவள் இருந்தாள். அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்று யாரும் காண முடியாத,ஜன்னலுக்கு அப்பால் பார்த்துக்கொண்டு, நேர்கொண்டு பார்க்கும் வேளைகளில் மட்டும் என்னைப் பார்த்துக்கொண்டு, அலனாவும் ஒரிசிஸ் எம்நின்றார்கள்.

தமிழில்: கால சுப்பிரமணியம்

தோற்றங்களின் மயக்கம் : Lakshmi Manivannan : அப்பாவின் வீட்டில் நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப் புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும் "- நாவல் முன்னுரையிலிருந்து ..

Lakshmi Manivannan
3 November 2014 ·தோற்றங்களின் மயக்கம்

"அப்பாவின் வீட்டில் நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப்புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும் " என்கிற என்னுடைய இந்த நாவலை ;நீளமான கதை என்றோ ,குறு நாவல் என்றோ குறிப்பிடவும் ,முடிவு செய்யவும் ; வாசகர்களுக்கும் ,நவீனத்துவ விமர்சகர்களுக்கும் தோதுப்படுமா என்று தெரியவில்லை .அதற்கான முக லட்சணம் இதில் இல்லை . நவீன விமர்சகர்களுக்குத் தோதுப்படுமா என்பது எனது லட்சியமும் இல்லை .பொதுவாக தமிழ் நாவல்களுக்கு உத்தேசிக்கப்படுகிற கதையோ,தொடர்ச்சியோ ,முடிவோ இதன் பக்கங்களில் உருவாகவில்லை . குறைந்த பட்சமாக எழுத்தாளன் என்கிற வகையில் ,எழுத்தின் போக்கை நிச்சயிக்க என்னால் எடுக்கப்பட்ட முயற்சியையும் இந்த பக்கங்கள் வெளியேற்றிவிட்டன .


கலை வடிவம் பற்றி நிச்சயிக்கப் பட்ட வரையறை கொண்டோருக்கும் ; தற்காலச்சூழலில் விவாதிக்கப்படுகிற கருத்துப்பண்டங்களின் நேரடி விளைவு அப்பட்டமாக எழுத்தில் தெரியவேண்டும் என விரும்புவோருக்கும், ஏதேனும்
விசித்திரமான சாகசங்களை எதிர்நோக்கி வாசிப்போருக்கும் இந்த பக்கங்கள்
மனச்சுணக்கத்தை ஏற்படுத்தக்கூடும் .ஆனால் என்னுடைய வாசகர்களுக்கு இவை முக்கியமான பக்கங்களாக அமையும் என்கிற எண்ணம் எனக்கிருக்கிறது .என்னையும் ,அவர்களையும் குறிப்பிட்ட தொலைவுவரையில் அறிய வாசகர்களுக்கு உதவும் .ஏனெனில் இந்த பக்கங்களை எழுதும்போது நான் அறிந்து கொண்டவை அதற்கு முன்னால் அறியாதவை .

மனம் என்று அறியப்படுகிற ஒன்று,பல முனைகளில் இந்த பக்கங்களை எழுதும்போது துலங்குவதை உணர்ந்தேன் .அந்த முனைகளை எல்லாம் வாசகன் கோர்த்து இணைத்துக்கொள்ள எந்த அளவுக்கு உபயோகப் பட்டிருக்கிறேன் என்பதை இப்போது உணர இயலவில்லை .சேதாரமின்றி வாசகனிடத்திலும் இந்த பக்கங்கள் துலங்கிவிடுமாயின் அது புண்ணியம் .மங்கலாகத் துலங்கினாலும் சிறப்பானதே .

ஏற்கனவே சொல்லபட்ட கதைகளின் தொடர்ச்சியாய் கதைகளை உருவாக்குவது போலவே ;சொல்லப்பட்ட கதைகளைக் கழற்றி , குறிப்பாக சைக்கிளை அதன் உதிரிபாகமாக மாற்றிவிடுவதுபோல;கதையைக் கழற்றும் கதையற்ற கதையை உருவாக்குவதற்கும் இடமுண்டு என்கிற கருத்து எனக்குண்டு .கதை என்கிற ஒன்று ,வாசகனின் மனதில் திரட்சி கொள்வதற்குப் பதிலாக ,பல முனைகளையும் துலங்கச் செய்து ,வாசகன் ; கதை என்கிற சுவாரசியம் நோக்கிச் சரிந்து விடாமல் செய்கிற கதை அல்லது எழுத்து முறையே நான் குறிப்பிடுவது .அதன் மூலம் காப்பியங்கள் மனதில் இயங்கும் முறையை மாற்றியமைத்துக் கொள்ளவோ ,மனதில் அது இயங்கும் முறையிலிருந்து தற்காத்துக் கொள்ளவோ வாய்ப்பு உருவாகிறது .

என்னுடைய இந்த நாவலின் பக்கங்களில் கதாபாத்திரங்களின் திரட்சி கொள்ள இயலாத பண்பு ,எனது மனோபாவத்துடனும் தொடர்புடையது . அகம் , புறம் என்று பகுக்கப்பட்டுள்ள பொதுப்படையான பிரிவுகளில் எனக்கு
எனக்கு நம்பிக்கை இல்லை .புறத்தோற்றங்களின் மீது அகத்தோற்றங்களின்
விந்தைகளும் சாரமும் கவிந்துள்ளன .மிகச் சாதாரணமானவை என்றும்,தினசரி வாழ்வில் மேலோட்டமானவை என்றும் எதிர் கொள்ளப்படும் நிகழ்வுகள் பல ;அசாதாரணமாகவும் .உள்ளடுக்கின் சாரம் செறிந்த பொருக்குகளாகவும் உள்ளன .அகம்,புறம் என்பவை என்னைப் பொறுத்தவரையில் தனித்து எதையும் சுட்டுவதில்லை .பொருள் தருவதுமில்லை .நிகழ்வுகளை முன்னிட்டு அவை மயக்கமடைந்து விடுகின்றன .

கொலை என்கிற நிகழ்வு இந்த நாவலில் பௌதிகமாக நிகழவில்லை . ஆனால் நாவலின் பக்கங்களில் தொடர்ந்து அது நடித்துக்கொண்டிருக்கிறது . நீர்ப்பரப்பில் கொளுத்து வளரும் செடிகளைப் போன்று கொலைக்கான சாத்தியங்கள் குருகுருவேன தளிர்த்துக் கொண்டிருக்கின்றன . கொலைக்கான வடிவங்கள் திட்ட வட்டமாக வரையறை செய்ய இயலாதவை .நுட்பமானவை .ஆனால் ஏகதேசமாக அதன் இருப்பிடம் புலப்படுகிறது .கொலை நிகழ்வதற்கு முன்பே நிகழ்வுக்கான இடம் தயாராகிவிடுகிறது .பிறகு நிகழும் சம்பவம் முக்கியமாகக் கருதப் படவேண்டியதும் அல்ல .முன்பே தனது தகர உள்ளடுக்கில் கொலையை வேண்டி இடம் அதிரத் தொடங்கி விடுகிறது .

பனிப்பள்ளங்களை அறிய இழுத்துச் செல்லப்படும் பிராணிகளைப் போல .கொலையின் வெளிர் நிறத்தை முயன்றிருக்கிறேன் .

கொலை என்பது பௌதீக இருப்பை இழக்கச் செய்யும் நிகழ்வு மட்டுமல்ல , சட்டங்கள் -தண்டனைகள் -அரசு -விளையாட்டு -கலவரம் என்றுள்ள வெளிப்படையான விந்தைத் தோற்றங்களிலும் ,உள்ளுணர்விலும் : இருப்பிற்கான பங்களிப்பை மறுத்துவிடுகிற நிகழ்வுமாகிறது . படிமங்கள்,சித்திரங்கள் ஆகியவை கொலை நிகழ்வதற்கான முலகங்களாக வினையாற்றுகின்றன .படிமங்களை முன்வைத்து அதிகாரம் தனது விளையாட்டைத் தொடங்குகிறது .

மனம் எனும் மையப்பரப்பை விழிப்பற்று இயங்கச் செய்கிற மனம் , காப்பியங்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்திவிடுகிறது.பொதுவாக சொல்லப்படுவதுபோல படைப்பு எழுச்சி ஏதும் இந்த நாவலை எழுதும்போது ஏற்படவில்லை

இந்த நாவலை எழுதும் காலத்தில் சுந்தர ராமசாமி ஊக்கமாகத் திகழ்ந்தார் . எனது இந்த நாவலையும் அவருக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறேன் .சுந்தர ராமசாமிக்கு பிறருடன் செலவு செய்ய காலமிருந்தபோது அதிர்ஷ்டவசமாக அவரது நண்பனாயிருந்தேன் .அவரது நட்பு ,நீண்ட காலம் சிரமப்பட்டு ஒருவர் அறிந்து கொள்ள வேண்டிய அனுபவங்களை எளிதாக்கியது .மிகக் குறுகிய காலத்தில் அனுபவத்தை வசமாக்கியது .புத்தகங்களை தேர்ந்தெடுத்து மட்டுமே படிக்க உதவியது .திரும்பிப் பார்க்கும்போது அவருடனான நட்பின் நினைவுகள் இனிமையாக உள்ளன .

நூல்களில் தெரிவித்து விடாத எதையும் முன்னுரைகளில் தெரிவித்து விட இயலாது என்று கருதுகிற எழுத்தாளர்கள் உண்டு .எனது நூல்களுக்கு எனது முன்னுரைகள் அவசியமாகவே இதுவரையில் இருந்துள்ளன .அந்தந்த நூல்களில் வெளியாகி இருக்கும் முன்னுரைகளுக்கும் அந்த நூல்களுக்குமிடையில் இணைப்பு இருப்பதாகவே கருதுகிறேன் .இந்த நூலும் அவ்வாறே அமைகிறது .

லக்ஷ்மி மணிவண்ணன்
23-12-2001

(" அப்பாவின் வீட்டில் நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப் புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும் "- நாவல் முன்னுரையிலிருந்து ..

அகரம் .பிளாட் எண்: 1,நிர்மலா நகர்,தஞ்சாவூர் -613 007
பக்கம் :160 முதல் பதிப்பு :2001 " )

painting-shin kwangho

Sunday, November 12, 2017

வெட்ஜ்வுட் தேநீர் விருந்துக்கலம் - மிலோராட் பாவிச் & எது கவிதை? - - ரோமன் யாக்கப்ஸன் :: உன்னதம் (http://unnatham.net/)

2 ன்னதம் (http://unnatham.net/)


வெட்ஜ்வுட் தேநீர் விருந்துக்கலம்
- மிலோராட் பாவிச்

By unnatham (http:/Tunnatham.net/author/unnatham/) Posted in g 6616015Lh OPosted on October 10, 2017 (http://unnatham.net/wedgwood/)

- மிலோராட் பாவிச்

நீங்கள் வாசிக்கவிருக்கும் இந்தக் கதையில், கதைநாயகர்களின் பெயர்கள் ஆரம்பத்தில் சொல்லப்படுவதற்குப் பதிலாக இறுதியில் சொல்லப்படும்.

மொழியியல் மற்றும் இராணுவ அறிவியல் மாணவனான எனது தம்பிதான் தலைநகரின் கணிதப் பயிற்றுநர்கள் மத்தியில், எங்கள் இருவரையும் நேருக்குநேராக அறிமுகப்படுத்தினான். கணிதம் 1க்குத் தயார்செய்வதற்காக அவள் ஒரு கூட்டாளியைத் தேடிக்கொண்டிருந்ததால், நாங்கள் இருவரும் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம்; அவள் என்னைப் போல வெளியூர் இல்லை; அதனால், அவளுடைய பெற்றோரின் பெரிய வீட்டிலேயே படித்தோம். ஒவ்வொரு நாளும் மிகவும் அதிகாலையிலேயே அவளுடைய பளபளக்கும் லேலண்ட் பஃபலோ மகிழுந்தினைக் கடந்து சென்று முன்வாசலில் குதித்து, கல் ஒன்றைத் தேடியெடுத்து அதனை என் காற்சட்டைப்பையில் பத்திரப்படுத்தியதும், அழைப்பு மணியை அழுத்திவிட்டு மேல்மாடிக்குச் செல்வேன். புத்தகம், நோட்டு, பயில் கருவி எதனையும் நான் எடுத்துச் செல்வதில்லை; எல்லாமே அவளுடைய அறையில் எப்போதுமே பயில்வதற்குத் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும். நாங்கள் ஏழு முதல் ஒன்பது வரையில் படித்தோம்; பின்னர் எங்களுக்குக் காலை உணவுதந்தார்கள்; அது முடிந்ததும் நாங்கள் பத்து வரையிலும் தொடர்ந்தோம்; பத்து முதல் பதினொன்று வரையில் ஏற்கெனவே முடித்த பாடங்களைத் திரும்பவும் ஒரு பார்வை பார்ப்போம். அப்போது முழுவதும் நான் அந்தக் கல்லை என்கையிலேயே வைத்து உருட்டிக்கொண்டிருப்பேன். ஒருவேளை நான் தூங்கிவிட்டால், தரையில் விழும் அது, வேறு யாரும் கவனிக்கும் முன்பாகவே என்னை எழுப்பிவிடும். பதினொன்றுக்குப் பிறகும் அவள் தொடர்ந்து படித்தாள்; ஆனால் நான் இல்லை. ஆக, ஞாயிற்றுக்கிழமை, மற்றும் அவள் தனிமையில் படிக்கும் நேரம் தவிர்த்த மற்ற நேரம் முழுவதும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணிதத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தோம். அவளுக்கு இணையாக என்னால் படிக்கமுடியவில்லை என்பதையும் என்னுடைய அறிவு அவளைவிட மிகமிகப் பின்தங்கியிருந்ததையும் அவள் வெகு விரைவிலேயே புரிந்துகொண்டாள். நான் தவறவிட்ட பாடங்களைப் படிப்பதற்காகவே வீட்டுக்குச் செல்வதாக அவள் நினைத்துக் கொண்டபோதிலும், அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொன்னதில்லை. பிறருக்குக் கற்பிப்பதன் மூலம் அவள் தனக்குத்தானே கற்பித்துக்கொள்வதை # "ஒவ்வொருவரும் மண்புழுவைப்போல அவரவர் வழி முழுவதும் மென்று தின்றே கடந்து முடிக் கட்டும்" என

னைததாள.________________

செப்டம்பர் பருவம் வந்தபோது, தேர்வுநாளன்று சந்திக்கலாமென்றும் இருவரும் சேர்ந்தே தேர்வெழுதுவதென்றும் ஒப்புக் கொண்டிருந்தோம். அவள் தேர்வுப்பரபரப்பில் இருந்ததால், அன்று நான் தேர்வெழுதுவதென்ன, அங்கே தலைகாட்டக்கூட இல்லையென்பதைக் கண்டுகொள்வதற்கு அவளுக்கு நேரமில்லாமற் போயிருந்தது. அந்தத் தேர்வில் அவளது வெற்றி விவரம் தெரிந்த பிறகுதான், எனக்கு என்னவானதென்று அவளுக்குள்ளாகவே கேட்டுக்கொண்டாள். ஆனால், குளிர்காலம் வரையில் நான் தலையைக் காட்டவேயில்லை."அது சரி, எல்லாத் தேனீக்களும் தேன் சேகரிக்கவேண்டுமா, என்ன?" என்று அவள் முடிவுக்கு வந்தாள்; ஆனாலும், அவள் அவளுக்குள்ளாகவே சிலநேரங்களில் நினைத்துக்கொண்டாள்,"அவனுக்கு என்னதான் ஆனது? அநேகமாக கிழக்கிலிருந்து வாங்கி மேற்கில் அல்லது இங்கு வாங்கி அங்கு விற்கும், புன்னகை தவழும் வணிகர்களில் ஒருவனாகத் தான் அவன் இருக்கவேண்டும்ஞ்."

கணிதம் முன்னுக்கு வந்தபோது, திடீரென ஒருநாள் என்னைச் சந்தித்த அவள், என்கை மூட்டுகளில் புதிதாகத் தோன்றியிருந்த தேமல் களையும் அதற்கு முன் அவள் பார்த்திராத, புதிதாக முளைத்த மயிர்ப்பரப்பினையும் ஆர்வத்துடன் கவனித்தாள். முன்பு போலவே மீண்டும் நிகழ்ந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் நான் செல்வதும், அவள் வெதுவெதுப்பும் குளிருமிணைந்த நீர்ப்பெருக்கின் நடுவே நீந்திவருவதுபோல பசுமையடுக்குகள் நிறைந்த காற்றின் வழியே இறங்கிவந்து, தூக்கம் வழியும், ஆனால், கண்ணாடியைக்கூடத் துளைத்துவிடும் கண்களுடன் எனக்காகக் கதவைத்திறப்பதும் நிகழ்ந்தன. நான் தாடியை எப்படி அழுந்தத் தடவி ஒதுக்குகிறேன் என்பதையும் என் கையுறைகளை எப்படிக் கழற்றி உருவுகிறேனென்றும் ஒரு கணம் அவள் கவனிப்பாள். நடுவிரலையும் பெருவிரலையும் இணைத்து, ஒரு குறிப்பிட்ட பாணியில் அவற்றை வெளிப்பக்கமாகத்திருப்பி இரண்டு கையுறைகளையும் ஒரே இழுப்பில் ஒருசேர உருவிக் கழற்றிவிடுவேன். அது முடிந்ததும் அவள் உடனடியாக படிப்புக்கு ஆயத்தமாகிவிடுவாள். அவள் முழுவலிமையும் திரட்டி அவளுடைய மனத்தைத் தயார்செய்தாள்; அது தினமும் நிகழ்ந்தது. சிறிதும் அயராத மன உறுதியுடனும் ஒழுங்குமுறை தவறாமலும் பாடத்தின் அனைத்து விவரங்களுக்குள்ளும் மூழ்கிய அவள், அது, நாங்கள் புது மலர்ச்சியுடன் தொடங்கும் காலைநேரமோ அல்லது, காலை உணவுக்குப் பிறகோ அல்லது முடிக்கும் நேரத்திலாயினும், சிறிது வேகம் குறைத்தாலும் குறைப்பாளே தவிர, எந்த ஒரு சிறு விவரத்தையும் விட்டுவிட்டுத் தாண்டிச் செல்லமாட்டாள். அப்போதும் பதினொரு மணிக்கு நான் எழுந்து சென்றுவிடுவேன். நான் செய்துகொண்டிருந்த செயல்களில் என்னால் முழுமையாகக் கவனம் செலுத்தமுடியவில்லையென்பதையும் ஒரு மணிநேரத்துக்குள்ளேயே என் கண்கள் சோர்ந்துவிடுவதையும், நான் அவளுக்கு வெகுவாகப் பிந்தியிருந்ததையும் அவள் விரைவிலேயே கண்டுகொண்டாள். அவள் மேஜைக்கடியில் என் கால்களைப் பார்ப்பாள்; அவற்றில் ஒன்று எப்போதும் வெளியேறத் தயாராக இருக்கும்; மற்றொன்றோ அசைவின்றி இருக்கும்; பின்னர் அவை ஒன்றுக்கொன்று நிலை மாற்றிக்கொள்ளும்.

ஜனவரி பருவத் தேர்வு வந்தபோது, என்னால் தேர்வில் வெற்றிபெறமுடியாது என்ற நினைப்பு அவளுக்கிருந்தது; ஆனால் அவளுக்குள்ளாகவே இருந்த ஒரு சிறிய குற்றஉணர்வினால் அமைதியாக இருந்தாள்."எதுஎப்படியிருந்தாலும், நானென்ன, அவனைப் படிக்கச்செய்வதற்காக, அவன் கைமூட்டில் முத்தமிடவா வேண்டும்? அவன் தலைக்குள் ரொட்டி வெட்டிக்கொண்டிருந்தால், அது அவனுடைய சொந்தப் பிரச்சினைஞ்." என்ற முடிவுக்கு அவள் வந்தாள்.

அதன் பின்பும் அங்கே என் தலையைக் காணாதபோது, அவள் வியப்புக்குள்ளாகிய தோடு, தேர்வுமுடித்தபின், ஒருவேளை பிற்பகல் அல்லது பிறிதொரு நாள் தேர்வுக்கு நான் அனுமதிக்கப்பட்டிருக்கலாமோ என்ற எண்ணத்தில் தேர்வெழுதுபவர்களின் பட்டியலில் தேடிப்பார்த்தாள். அவளுக்குப் பெரிதும் வியப்பு ஏற்படும்வகையில், என் பெயர் அந்த நாளுக்கென்ன, வேறெந்த நாளுக்குமான பட்டியலிலுமே இடம்பெற்றிருக்கவில்லை. விவரம் தெளிவாகவே தெரிந்தது: நான் அந்தப் பருவம் முழுவதற்குமே தேர்வுக்கு மனுச்செய்திருக்கவில்லை.

மே மாதத்தில் மீண்டும் நாங்கள் பார்த்துக் கொண்டபோது, அவள் கான்கிரீட்டுக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். ஏற்கெனவே எழுதாத தேர்வுகளுக்காக இப்போது நான் படித்துக்கொண்டிருக்கிறேனா என அவள் கேட்டபோது,நானும் கான்கிரீட்டுக்குத் தயார் செய்வதாகத் தெரிவிக்க, எதுவும் நடக்காதது போல, நாங்கள் தொடர்ந்து முன்புபோலவே ஒன்றாகப் படித்தோம். இளவேனிற்காலம் முழுவதையும் படிப்பதிலேயே கழித்தோம். ஜூன் பருவத் தேர்வு வந்தபோது, இம்முறையும் நான் தேர்வு எழுதப் போவதில்லையென்றும் இலையுதிர்காலம் வரையில் என்னைப் பார்க்க முடியாதென்றும் அவளுக்கு ஏற்கெனவேயே தட்டுப்பட்டுவிட்டது. முழுமையாகத் திறந்த வாயளவுக்கு விரியும் அழகிய கண்களைக் கொண்ட அவள், இப்போது கிறக்கத்துடன் என்னை நோக்கத் தொடங்கினாள். வழக்கம் போலவே இம்முறையும் நிகழ்ந்து முடிந்தன. அவள் கான்கிரீட் தேர்வு எழுதி வெற்றியும் பெற்றாள். வெறுமனே கூட, அங்கு செல்வதைப்பற்றி, நான் நினைத்தும் பார்க்கவில்லை.

வெற்றிபெற்ற நிறைவில் வீட்டுக்கு வந்தபின், என் நிலைமை குறித்துப் புதிரும் குழப்பமுமாயிருந்த அவள், நான் முதல்நாள் அவசரத்தில் என்னுடைய நோட்டுப்புத்தகங்களைக் கூட மறந்து அங்கேயே விட்டுச்சென்றிருந்ததைக் கண்டாள். அவற்றில் என்னுடைய மாணவர் கையேட்டைக் கண்டிருக்கிறாள். அதைத் திறந்து பார்த்தபோதுதான் நான் ஒரு கணித மாணவன் இல்லையென்பதையும், எப்படியோ, என்னுடைய தேர்வுகள் அனைத்தையும் முறையாக எழுதி வெற்றிபெற்றிருந்ததையும் வியப்புடன் கண்டுகொண்டிருக்கிறாள். முடிவற்று நீண்ட எங்கள் கூட்டுப் படிப்பின் கால அளவுகளை நினைவுகூர்ந்த அவள், எனக்கு எவ்விதப் பயனுமில்லாமல் மிகப் பெரும் மனச் சுமையும் அழுத்தமுமாக இருந்திருக்கக்கூடிய பெருங்காலவிரயமுமான அதனை நினைத்துப் பார்த்ததோடு, தவிர்க்கமுடியாத இந்தக் கேள்வியையும் அவளுக்குள்ளாகக் கேட்டுக்கொண்டாள்; எதற்காக? நான் வெற்றிபெறவேண்டிய தேர்வுகளுக்கோ, எனது பற்றார்வத்துக்கோ எவ்வகையிலும் தொடர்பில்லாத பாடங்களை அவளுடன் சேர்ந்து படித்து அத்தனை கால நேரத்தைச் செலவழித்தது ஏன்?சிந்திக்கத் தொடங்கிய அவள் இப்படியான ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தாள்: "அடிநிலத்தில் அமைதியாகக் கடந்துசென்றது என்ன என்பது குறித்து ஒருவர் எப்போதுமே விழிப்புடனிருக்கவேண்டும்." இவையெல்லாவற்றுக்கும் காரணம் தேர்வு அல்ல; அவள், அவள் மட்டுமே தான். நான் அவ்வளவு வெட்கப்படுபவனாகவும் எனது உணர்வுகளை வெளிப்படுத்த இயலாதவனாகவும் இருந்தேனென்பதை யார்தான் நினைத்திருக்கமுடியும்? உடனேயே, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த என் வயதுப் பையன்களோடு நான்தங்கியிருந்த வாடகை அறைக்குச் சென்ற அவள் அங்கு பார்த்த வறுமையைக் கண்டு வியப்பு கொண்டதோடு, நான் வீட்டுக்குச் சென்றுவிட்டிருந்த தகவலையும் தெரிந்திருக்கிறாள். சலோனிகா அருகிலுள்ள ஒரு சிறு கிராமத்தின் முகவரியையும் அவர்கள் தெரிவிக்கவே, அவள் அவளுடைய பஃபலோவை எடுத்துக்கொண்டு, எவ்விதத் தயக்கமும் இல்லாமல், என்னைப் பற்றி வழக்கத்துக்கு மாறான எந்தத் தகவலையும் அவள் தெரிந்துகொள்ளாத பாவனையில் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, ஏஜியன் கடற்கரை நோக்கி என்னைத் தேடிப் புறப்பட்டாள். இப்படியாகத்தான் அது நிகழ்ந்தது.

வெயில் மேற்கில் சாய்ந்துவிட்ட நேரத்தில் வந்துசேர்ந்த அவள், வாசலில் புதிய ரொட்டிகுத்தி, முளையில் மிகப்பெரிய வெள்ளை எருமைக்கடா ஒன்று கட்டப்பட்ட விரியத் திறந்த வீடு என அடையாளம் சொல்லப்பட்ட வீட்டைக் கண்டுபிடித்தாள். வீட்டினுள்ளே படுக்கை ஒன்றும், சுவரில் உருவச்சின்னம் ஒன்றும் அதன் அடிப்பக்கத்தில் சிவப்புச் சரிகைப்பட்டை ஒன்று, துளையிட்டுக் கம்பி இழை கோர்க்கப்பட்ட கல் ஒன்று, ஒரு பம்பரம், ஆளுயரக் கண்ணாடி ஒன்று மற்றும் ஒரு ஆப்பிள் அவள் கண்ணில் பட்டது. வெயிலில் நிறம் மாறிய மேனியும் நீண்ட தலைமுடியுமாக நிர்வாண இளைஞன் ஒருவன், சாளரப் பக்கம் முதுகு தெரியுமாறு, ஒரு கையை முட்டுக்கொடுத்து, ஒருக்களித்துப் படுத்திருந்தான். அவனது தண்டுவடத்தடம், அகன்ற முதுகு முழுவதுமாக இறங்கி, இடுப்பு வரையிலும் சென்று இலேசாக வளைந்து முரட்டு இராணுவக் கம்பளி ஒன்றுக்குள் மறைந்திருந்தது. எந்த ஒரு கணத்திலும், ஒரு திரும்பலில், மறுபக்கப் பதின் பெண், அவளது மார்பகங்கள் மற்றும் ஆழ்ந்து வலிமைமிகுந்த அவளது அந்த இதமான மாலை நேர ஒளிரும் பளபளப்பு, அனைத்தும் அவள் கண்ணில்பட்டுவிடக்கூடுமென்ற எண்ணம் அவளுக்குள் தோன்றியது. உண்மையிலேயே அந்தத் திரும்புதல் நிகழ்ந்தபோது, அந்தப்படுக்கையில் பெண் எவரும் இல்லையென்பதை அவள் கண்டாள். ஒற்றை முழங்கையில் சாய்ந்து, மதிய விருந்தில், முழுவதுமாகத் தேன்படிந்துபோயிருந்த எனது மீசையின் முடியொன்றைச்

________________

சுவைத்துக்கொண்டிருந்தேன், நான். அவளது எண்ணம் போலவே, நீண்ட நேரம் காரோட்டி வந்த சோர்வும் விரைவிலேயே அகன்றுவிட்டது. கண்ணாடிப் பாதம் கொண்ட ஒரு தட்டில் அவளுக்கு ஒன்றும், கண்ணாடியில் தெரிந்த அவளது ஆன்மாவுக்காக மற்றொன்றுமாக, அவள் பெற்றுக்கொண்ட இரட்டை விருந்து:கொஞ்சம் பீன்ஸ், ஒரு கொட்டைப் பருப்பு ஒரு மீன்; சாப்பாட்டுக்கு முன் அவளுக்கு அளிக்கப்பட்ட சிறிய ஒரு வெள்ளி நாணயத்தை, நான் சாப்பிடும்போது நாக்குக்கு அடியில் வைத்துக்கொண்ட மாதிரியே அவளும் வைத்துக்கொண்டாள். ஆக, எங்கள் நால்வருக்குமாக இரவு உணவு கிடைத்தது:இருவர் நாங்கள், மற்றுமிருவர், கண்ணாடியில் தெரிந்த இரு ஆன்மாக்கள். உணவு சாப்பிட்டு முடித்த பின் அவள் உருவச்சின்னத்தின் முன் போய் நின்று அது எதைக் குறிக்கிறதென்று கேட்டாள். "தொலைக்காட்சிப்பெட்டி", "வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உன்னைப் போலல்லாமல் முற்றிலும் வேறுவிதமாகக் கணிதத்தைப் பயன்படுத்தும் மற்றொரு உலகத்துக்கான சாளரம்" என்றும் சொன்னேன்.

"அது எப்படி?" எனக்கேட்டாள், அவள்.

“ரொம்பவும் எளிது" என்றேன் நான்."உங்கள் அளவைக் கணித மதிப்பீட்டு அடிப்படையில் உருவாக்கப்படும் எந்திரம், விண்கலம் மற்றும் விண் ஊர்திகள் அளவை முறை முற்றிலுமாகப் போதுமானதாக இல்லாத மூன்று கூறுகளின் மீதே கட்டமைக்கப்படுகின்றன. அவை:பொருட்களின் தனிமைக்கூறு, அவை பயனாகும் நிலைப் புள்ளி, அவ்வப்போதைக்கான கணம் என்பதான இடம், பொருள், காலம் ஆகிய மூன்றுமே. தனிமைக்கூறுகளின் மொத்தமே ஒரு அளவை ஏற்படுத்துகிறது; தனிமைக்கூறு என்பதோ, எவ்வித அளவை முறையின் அளவீடுகளுக்கும் உட்படுத்த இயலாதது. நிலைப்புள்ளியைப் பொறுத்தவரையில் அதற்கெனத் தனியாக, அகலம் அல்லது உயரம், நீளம் அல்லது ஆழம் என எந்தவொரு உருவளவு அல்லது பருமளவும் இல்லாமலிருப்பதால் அது அளவீடுகள் மற்றும் கணக்கீடுகளுக்கு உட்படாததாக உள்ளது. எனினும், காலத்தின் மிகச்சிறு கூறான கணம் எப்போதுமே பொதுவான ஒரு வகு எண்ணைக் கொண்டுள்ளது. அதாவது, அவ்வப்போதைக்கான கணம், அதுவும் அளவைக்கு உட்படாதது என்பதுடன் அளவீடு செய்ய இயலாததாக உள்ளது. இப்படியாக, உங்கள் அளவீட்டு முறை அறிவியலின் அடிப்படைக் கூறுகள், இயல்பிலேயே அளவீட்டு அணுகுமுறைக்கு அந்நியப்படும் தன்மையைக் கொண்டுள்ளன. இப்படியிருக்கையில், அப்படியான ஒரு அறிவியல் மீது நான் ஏன் நம்பிக்கை கொள்ளவேண்டும்? இப்படியான அளவீட்டுமுறையின் தவறான கருத்தாக்கங்கள் அடிப்படையில், மனித வாழ்நாளுக்கும் மூன்று அல்லது நான்கு அல்லது அதன் பன்மடங்குக்கும் குறைவான வாழ்நாளுள்ள இயந்திரங்கள் எதற்காக உருவாக்கப்படுகின்றன? பாரேன், நீவைத்திருப்பதைப் போலவே நானும் ஒரு வெள்ளை பஃபலோவைத்திருக்கிறேன். லேலண்டில் தயாரிக்கப்பட்ட உன்னுடையதைப் போலல்லாமல் வேறுமாதிரியாக உருவானது. அதில் வெளியே போய்ப்பார், ஒருவிதத்தில் உன்னுடையதைவிட நல்லதாக இருப்பதை நீயே தெரிந்துகொள்வாய்."

"பழகியதா?" என அவள் சிரித்துக்கொண்டேகேட்டாள். "நிச்சயமாக" என்றேன், நான்."உம், போ, முயற்சித்துத்தான் பாரேன்" என்றும் ஆர்வமூட்டினேன். அவள் வாசலில் நின்ற பெரிய வெள்ளை எருமைக்கடாவைத் தடவிக்கொடுத்துப் பின் மெதுவாக அதன் முதுகில் ஏறியமர்ந்தாள். அதன் கொம்புப் பக்கம் என் முதுகு தெரியுமாறும் அவள்முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தவாறும் அதன் மீது நானும் ஏறி அமர்ந்து அதனை, கடல் அருகே செல்லுமாறு ஒட்டி, தண்ணிருக்குள் முன் கால் இரண்டுமிருக்க, பின்கால் இரண்டும் மணலில் இருக்குமாறுநிறுத்தினேன்.அவளின் ஆடையை நான் அவிழ்க்கத் தொடங்கியதும், அவள் முதலில் இதென்னவென்று வியக்கத்தான்செய்தாள். அவளது ஆடைகள் ஒவ்வொன்றாகத் தண்ணிரில் விழுந்து முடிந்ததும், அவள் எனது பொத்தான்களைக் கழற்றத் தொடங்கினாள். ஒரு கட்டத்தில் எருமைக்கடாவின் மீது சவாரி செய்வதை நிறுத்திவிட்டு, நான் அவளுக்குள் பருத்துக்கொண்டே போவதாக உணர்ந்து, என்மீது சவாரிசெய்யத் தொடங்கினாள். நாங்கள் எருது மீது ஏறாமலிருந்திருந்தால் என்ன செய்துகொண்டிருப்போமோ, அதனை அந்த எருது செய்துகொண்டிருக்க, அவளை மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திக்கொண்டிருந்தது நானா அல்லது எருதா, என அவளால் சொல்ல முடியாமலிருந்தது. இரண்டு காதலர்கள் மீது அமர்ந்திருந்த அவள், நாங்கள் எப்படி ஒரு வெண் சைப்ரஸ் காட்டை கடற்கரையில் வெண்பனி மற்றும் துளைக் கற்களைத் தேடிச்சேர்த்துக்கொண்டிருந்தவர்களையும், தங்கள் சொந்த நிழலின் மீதே தீமூட்டி, அதனை எரித்துக்கொண்டிருந்தவர்களையும், சிறிதாக இரத்தம் கசிந்த இரண்டு பெண்களையும், ஒரு தோட்டத்தையும் இரண்டு மணிநேரமாக, முதல் ஒரு மணிநேரம் பறவைகள் பாடிய அத்தோட்டத்தில் இரண்டாம் மணியில் மாலை மலர, அதில் முதலில் கனிகள் தோன்றியதோடு காற்றின் பின்னணியில் பனிப்புயலின் வீச்சு இருந்ததைக் கடந்தோமென்பதை அவள் அந்த இரவினூடாகப் பார்த்தாள். என்னிடமிருந்த எடை முழுவதும் அவளுக்குள் பாய்வதாக அவள் உணரவும், எருது எக்காளமிட்டுக் கூட்டுக்காலில் பாய்ந்து அவளைக் கடலுக்குள் எடுத்துச் செல்ல, கடைசியில் அலைகள் எங்களைப் பிரிக்கட்டுமென எங்களை அலைகளிடம் விட்டுச் சென்றது.

அது எப்படி இருப்பினும், அவளுடைய கண்டுபிடிப்பு குறித்து என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இலையுதிர்காலத்தில் பட்டம் பெறுவதற்குத் தயாரான போது, மீண்டும் நான் அவளுடன் சேர்ந்து படிப்பதாகக் கூறியபோது, அவள் சிறிதளவு கூட வியப்படையவில்லை. முன்பு போலவே தினமும் ஏழு முதல் காலை உணவு வரையிலும் பின்னர் பத்தரை வரையிலும் படித்தோம்; இப்போதென்ன, நான் படித்துக் கொண்டிருந்த பாடத்தில் என்னை நிபுணனாக்க உதவும் முயற்சியிலும் பத்தரைக்குப் பிறகும், புத்தகங்களிலிருந்தும் எங்களைப் பிரிக்கும் அந்த அரை மணிநேரத்துக்கு என்னை அங்கே தங்கச்செய்வதிலும் அவள் ஈடுபடுவதில்லை. செப்டம்பரில் அவள் பட்டம் பெற்றபோது, அவளுடன் சேர்ந்து நான் தேர்வு எழுதியிருக்கவில்லையென்பதற்கு அவளொன்றும் வியப்படையவில்லை.

அதன் பிறகும் ஒருமுறைகூட என்னைப் பார்க்க முடியவில்லையென்பதில் அவள், உண்மையிலேயே வியப்படைந்தாள்; அன்று மட்டுமல்ல, அதைத் தொடர்ந்த நாட்கள், வாரங்கள் மற்றும் தேர்வுப் பருவங்களின் போதுங்கூட மீண்டும் ஒருபோதும் பார்க்கவில்லை. வியப்படைந்த அவள், அவளைப் பற்றிய எனது உணர்வுகள் குறித்த அவளின் கணிப்பு தவறானவையெனத் தெளிவாகத் தெரிந்துவிட்டதென்ற முடிவுக்கு வந்தாள். எதன் பொருட்டென்று, எதுவும் கூறமுடியாத ஒரு குழப்பத்திலிருந்த அவள், நாங்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உட்கார்ந்து படித்த அதே அறையில் காலையில் அமர்ந்தாள். காலை உணவைத் தொடர்ந்து, அங்கே மேசை மீதிருந்த வெட்ஜ்வுட் தேநீர் விருந்துக்கலம் அவள் கண்ணில் பட்டது. பின்னர்தான், அவள் உணர்ந்தாள். பல மாதங்களாக, ஒவ்வொரு நாளும் முடிந்து தொடங்கிய மறுநாளிலும் மாபெரும் முயற்சி மேற்கொண்டு, காலத்தையும் சக்தியையும் கணக்கில்லாத அளவுக்கு விரயமாக்கி, நான் அவளுடன் சேர்ந்து படித்தது, ஒவ்வொரு நாள் காலையிலும் நல்லதொரு காலை உணவை, அந்த ஆண்டுகளில் நான் பெற முடிந்த, அந்த ஒரே நேர உணவைப் பெறுவதற்காகவே. அதனை உணர்ந்த அவள் அவளுக்குள்ளாகவே இன்னொன்றையும் கேட்டுக்கொண்டாள். நான் அவளை வெறுத்ததென்பது உண்மையிலேயே நடக்கக்கூடியதா?

முடிவில் இன்னுமொரு கடமை விட்டுப் போயிருக்கிறது:இந்தக் கதையின் கதைசொல்லிகளுக்குப் பெயரிடுவது; வாசகருக்கு ஏற்கெனவேயே தட்டுப்பட்டிருக்கவில்லையெனில், இதோ என்பதில், என் பெயர் பால்கன்தீபகற்பம். அவள் பெயர் ஐரோப்பா.

தமிழில் ச. ஆறுமுகம்

________________

மிலோராட் பாவிச் 1929 இல் பெல்கிரேடில் பிறந்தவர்; செர்பிய மொழியின் சமகால எழுத்தாளர், கவிஞர், தத்துவவாதி, மொழிபெயர்ப்பாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் செர்பியன் கலை மற்றும் அறிவியல் கழக உறுப்பினராகப் பணியாற்றியவர். இலக்கிய வரலாற்றில் பத்து ஆய்வுநூல்கள், பல கவிதைத்தொகுதிகள் நான்கு சிறுகதைத்தொகுதிகள் மற்றும் ஐந்து நாவல்கள் வெளியாகியுள்ளன. அவரது படைப்புகள் செர்பியாவிலும் அயல்நாடுகளிலும் மிகவும் மதிக்கப்படுவதோடு பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளன. நோபல் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பல பட்டியல்களிலும் அவரது பெயர் இருந்தது. ஆயினும் அந்த விருதினைப் பெறாமலேயே 30.11.2009 இல் மறைந்தார்.

யதார்த்த விவரிப்பினுள் மாபெரும் கற்பனைகளை இணைப்பதுவே அவரது உரைநடையின் சிறப்பாகக் கருதப்படுகிறது. இத்தகைய நடை அவரது படைப்புகளுக்கு ஒரு முடிவற்ற தன்மையை அளிப்பதாக மிகுபுனைவாளர்கள் போற்றிப் பாராட்டுகின்றனர்.

இந்த சிறுகதையின் பிரதான கதாபாத்திரங்களின் பெயர்கள் கதையின் கடைசியில் கொடுக்கப்படும் என்ற குறிப்போடு கதை தொடங்குகிறது. கதையின் தலைப்பை வெறுமனே "தேநீர் விருந்துக்கலம்" என்று வைக்காமல் "வெட்ஜ்வுட்" என்னும் சொல்லை இணைத்திருக்கிறார். அந்தச் சொல்தான் இந்த கதைக்குள் நுழையும் வழி என்று கொள்ளலாம்.1759ல் தொடங்கப்பட்ட பாத்திரங்கள் தயாரிக்கும் வெட்ஜ்வுட் நிறுவனத்தின் படைப்புகள் மகாராணியார் பாத்திரங்கள் என்றே அழைக்கப்பட்டன. சீனாவிலிருந்து ஹாலந்து வழியாகக் கொண்டு வரப்பட்ட சிவப்புக் கற்களாலும் களிமண்ணாலும் செய்து சுடப்பட்ட இப் பாத்திரங்கள் உலகம் முழுவதும் பரவின. 1800களில் தேநீர் சொகுசு வாழ்வின் அடையாளமாக இருந்தது. தேநீரின் பின்னே பெரும் வரலாறே இருக்கிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களையும் பிஜி மாதிரியான தீவுகளில் கரும்புத் தோட்டங்களையும்(சீனிக்காக) காலனிய அதிகாரம் மூலம் ஏராளமாக விளைவித்து உலகம் முழுவதையும் தேநீருக்கு அடிமையாக்கியது பிரிட்டிஷ் அரசாங்கம். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகளை தேநீர்த்தோட்டங்களுக்காக அழித்த பிறகுதான் தென்கிழக்கு தமிழகத்தில் மாதம் மும்மாரிபொழிவது குறைந்து மறைந்தேவிட்டது. "போஸ்டன் தேநீர் விருந்து"ம் ஓபியம் யுத்தமும் பெரும் வரலாறானது. ಡ್ದಿ வெட்ஜ்வுட் தேநீர் கிண்ணங்களில் தேநீர் விருந்துகள் அளிப்பது மேட்டுக்குடிக் குடும்பகளில் ஒரு பண்பாடாக மாறயது.

மிலோராட் பாவிச் கதையின் இறுதியில் கதாபாத்திரங்களின் பெயர்களை"ஐரோப்பா" மற்றும் "பால்கன்ஸ்" என்ற சொற்களால் குறிப்பிடும் போது, இச் சிறுகதை பெரும் அரசியல் வடிவம் கொள்கிறது. நாள் முழுவதும் பட்டினி கிடக்கும் "பால்கன்ஸ்" என்னும் இளைஞன், காலை உணவுக்காகவே தான் படிக்காத கணிதத்தை கற்றுக்கொடுப்பதற்காக "ஐரோப்பா" என்ற பெண்ணின் வீட்டுக்கு தினமும் போகிறான். பெரும் அதிர்ச்சியுடன் கதையை மீண்டும் ஒருமுறை வாசிக்க முடிந்தது. குரோஷியா, போஸ்னியா, ஹெர்ஜிகோவினா, மசிடோனா, மாண்டிநெக்ரோ மற்றும் செர்பியா என சிதறுண்டயுகோஸ்லேவியா ஐரோப்பிய யூனியனில் பெரும் ஏழை நாடுகளாக இன்றளவும் போராடிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான சிறுகதைகளே இன்று முழு உலகமும் போற்றும் "கஸார்களின் அகராதி" நாவலுக்கான அடிப்படையாக இருந்துள்ளன. பிரதிக்குள் புதைந்திருக்கும் பெரும் பிரதிகளையும் நம்மை வாசிக்க வைக்கிறார் பாவிச்.

இப்பொழுது மீண்டும் இந்தப் பிரதியை வாசிக்கும்போது கதை வேறு வடிவம் கொள்வதை உணரமுடியும்,


Sunday, 12th November 2017

உன்னதம் (http://unnatham.net/)
http://unnatham.net/எது-கவிதை/
எது கவிதை? - - - ரோமன் யாக்கப்ஸன்

ஒத்திசைவு என்பது வேறுபடுத்திப்பார்ப்பதன்முடிவு ஒன்றுக்கொன்று எதிரான ஆக்கக்கூறுகளால் ஆனதுதான் இவ்வுலகம் மேலும்."என்று நான் சொல்லியபோது அவர்இடையிட்டுக்கூறினார் கவிதை.இவ்வுலகில் மிகவும் நேர்மாறான வேறுபாடுகளின் ரகசியமான பண்புத்தொடர்பை ஏற்படுத்துவது. உண்மையானகவிதை ஒத்திசைவு என்பது வேறுபடுத்திப்பார்ப்பதன்முடிவு ஒன்றுக்கொன்று எதிரான ஆக்கக்கூறுகளால் ஆனதுதான் இவ்வுலகம் மேலும். என்று நான் சொல்வியபோது அவர்இடையிட்டுக் கூறினார் கவிதை. இவ்வுலகில் மிகவும் நேர்மாறான வேறுபாடுகளின் ரகசியமான பண்புத் தொடர்பை ஏற்படுத்துவது. உண்மையான கவிதை'

- கரேல் சடனோ, செக் கவிஞர்கரேல் மாச்சாவின்நண்பர்

எது கவிதை: கவிதை ஆனதையும் அல்லாததையும் அடுத்தடுத்துவைத்துப் பார்க்கும் பொழுதுதான்,நாம் கவிதையை வரையறுக்க முடியும். ஆனால் எதுகவிதை அல்ல என்பதை நிர்ணயிப்பதும் அவ்வளவு எளிதல்ல.

நவீன செவ்வியல் அல்லது புனைவியலாளர் காலகட்டங்களில் கவிதையில் ஒப்புக் கொள்ளப்பட்ட பாடு பொருட்கள் ஒரு கட்டுக்குள் இருந்தன. அவை வழிவழியாகத் தேவைப்பட்ட நிலா, குளம், மலை, கோட்டை குயில், ரோஜா போன்றவை என்பது நன்கு அறிந்ததே. மேற்குறித்த பழகியதடத்திலிருந்து, புனைவியலாளர்களின் அபிலாஷைகள் கூடவிலகிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.இன்று என்னைச் சுற்றிலும் விழுந்து கொண்டிருக்கும் இடிபாடுகளுக்கிடையே நான் நிற்பதாகக் கனவு கண்டேன்.கீழே உள்ள ஏரியில் குளிக்கும் தேவகன்னியரைப் பார்த்தேன்.ஒரு காதலன் தன் காதலியோடு சேர்வதற்கு அவளின் சமாதிக்குப் போகிறான். அதன்பின், அந்த அழிந்து போன பழமையான கோதிக் பாணி கட்டிட இடிபாடுகளின்________________

ஜன்னல்களிலிருந்து குவியல் குவியலாக எலும்புகள் பறந்து வெளிவந்தன என்றுகரேல் மாச்சா (KareHynekMacha1810-36) எழுதுகிறார். மற்ற எல்லாஜன்னல்களை விட நிலவொளி ஊடுருவிவரும் கோதிக் ஜன்னல்கள் மிகவும் ஏற்கப்பட்டவை. தற்காலத்தில் பல்பொருள் அங்காடியிலுள்ள கண்ணாடிகாட்டும் கற்பனை முரணுருவும் கிராமத்தில் வழிப்போக்கர் தங்கும் விடுதியிலுள்ள ஈமொய்க்கும் கண்ணாடிப் பாளங்களும் கவிதைப் பாடு பொருட்களுக்குத் தகுதி வாய்ந்தனவைகளாகக் கருதப்படுகின்றன. மேலும் அண்மைக் காலங்களில் ஜன்னல்கள் வழியே எதுவும் வெளியே பறந்து வர முடியும் செக்நாட்டு சர்ரியலிஸ்க்கவிஞர் நெஸ்வால்(VitezslawNezwa) இவ்வாறு எழுதுகிறார்:

வியப்பிற்குட்பட்டேன் நான்
மலர்த்தோட்டம் கழிப்பிடம்
வாக்கிய நடுவினில் வித்தியாசம் இதிலில்லை
அவற்றுக்கு நீ அளித்திட்ட அழகு அல்லது அது உருவானது
இது எதையும் வேறுபடுத்திக் கூற முடியாது

இன்றைய கவிஞர் கரமஸோவ்சீனியர்க்கு அழகற்ற ஒரு பெண் என்ற ஒன்றில்லை. சந்து, பொந்து செயலற்ற தன்மை, இயற்கை நிலக்காட்சி, அல்லது எண்ணம் இவற்றில் எதுவுமே கவிதைப்பாடுபொருளுக்கு அப்பாற்பட்டவை அல்ல; வேறு விதத்தில் சொல்வதெனில், கவிதைப்பாடு பொருள் பற்றிய வாதத்திற்கு இன்று முக்கியத்துவமில்லை.

இனி கவிதா நெறிமுறைகளை ஒரு வரம்பிற்குள் கொண்டு வரவியலுமா? கிஞ்சித்தும் முடியாது. மாறுதல், நிரந்தரம் என்பதைக் கலையின் வரலாறு உறுதிப்படுத்துகிறது. இந்த நெறிமுறையின் உள்நோக்கத்தை வைத்து, கலையில் குற்றங்கான முடியுமா? டாடாயிஸ்வாதிகளும்,சர்ரியலிஸ்வாதிகளும் கவிதை எழுத முயற்சித்தவர்களை கவிதை எழுத அனுமதித்தார்கள் என்பதை நாம் நினைவிற்குக் கொண்டு வரவேண்டியவர்களாயிருக்கிறோம் ரஷ்யக் கவிஞர் க்லெப்னிகோவ் (Weimir Khlebnkow) அச்சுப் பிழைகளிலிருந்து எத்தனை இன்பம் அடைந்தார் என்பதை நாம் உணர வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அச்சுப் பிழைகளும் கூட அடிக்கடி மிகச்சிறந்த கவிஞனை உருவாக்குகின்றன என்று ஒருமுறை அவரே கூறியிருக்கிறார். இடைக்கால கட்டங்களில் கிரேக்கசிலைகளை அறியாமை காரணமாக உருச்சிதைத்தார்கள். இப்போது சிற்பியே உருச்சிதைவை ஏற்படுத்துகிறான். ஆனால் விளைவு ஒன்றாகவே இருக்கிறது. முஸோர்க்ஸ்கியின் (Modest Mussorgsky) இசை ஹென்றிரூஸோ ஒவியம் இவற்றுக்கு என்ன விளக்கம் தருவது? படைப்பாளியின் மேதைமையை வைத்தா? அல்லது கலைத்துவக் குறைபாட்டை வைத்தா, விளக்கம் தருவது?நெஸ்வாலினுடைய இலக்கணப் பிழைகளுக்குப்புத்தக அறிவுக் குறைபாடா? அல்லது உணர்வுபூர்வமாக ஒதுக்கியதா? எது காரணம்: உக்ரேனியக் கோகலும் அவருடைய குறைபாடுடைய ருஷ்ய மொழியும் இல்லாதிருந்தால், ருஷ்ய இலக்கிய மொழியின் அமைப்புச் சட்டங்கள் எப்பொழுதாவது நலிவுற்று விடப்பட்டிருக்குமா?லாரமண்ட் (Comte de Lautreamont) அறிவமைதியுடையவராக இருந்திருந்தால் அவரது Les Chants de Maldoror க்குப் பதிலாக அவர் என்ன எழுதியிருந்திருப்பார்? இப்படிப்பட்டஊகங்கள் சுவையான சிறுகதைத் துணுக்குகளின் கருப்பொருள் வகையைச் சார்ந்தவை. கிரேட்ச்சன்ஆனாக இருந்திருந்தால் ஃபாஸ்ட்க்கு எப்படி தன் உள்ளுணர்வைக் காட்டியிருந்திருப்பாள் என்பதைப் போன்றதாகும், மேலேயுள்ளவை.

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்த கவிஞர்களைச் சுட்டும் நெறிமுறைகளைத்தனிமைப்படுத்திக்காட்டுவதில் நாம் வெற்றியடைந்தாலும்கூடகவிதைக்கும் கவிதை அல்லாததுக்கும் இடையேயான எல்லை வரையறைக்கோட்டை நாம் இன்னும் நிலைநாட்டவேண்டியதிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் சொல்லாட்சித்திறத்தில் ஒரே விதமான மோனைகள். இனிமையைத் தூண்டும் நெறிமுறைகளில் வேறுமாதிரிப்படிவங்கள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. தெருவில் ஒடும் வண்டிகளில் நிகழும் உரையாடல், நகைச்சுவைத் துணுக்குகள் நிரம்பியவையாய் உள்ளன. அவையெல்லாம் மிக நுட்பமானதன்னுணர்ச்சிப் பாடல்களில் காணப்படும் வடிவங்களை அடிப்படையாகக் கொண்டவை. கிசுகிசுவின் அமைப்பும், அதிக விற்பனையாகும் புத்தகத்தின் அமைப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான் (கிசுகிசுப்பவரின் புத்திசாலித்தனத்தைச் சார்ந்து) சென்ற வருடத்தில் அதிக விற்பனையான புத்தகத்தோடு கூடத் தொடர்புடையதுதான்.

கவிதையைக் கவிதை அல்லாததிலிருந்து பிரிக்கும் எல்லைக்கோடு, சீனப் பேரரசின் எல்கையைவிடக்குறைந்த நிலைத்தன்மையுடையது. நோவலிஸம், மல்லார்மேயும் அரிச்சுவடியை மிகச்சிறந்த கவிதைப்படைப்பாகக் கருதுகிறார்கள். மதுவிவரப்பட்டியல் (Pyotrwazemsky) மன்னர்களின் உடைப்பட்டியல் (Nikolai Gogol) காலஅட்டவணை (Boris Pasternak) சலவையாளர் கணக்கு (Aleksey Kruteryx) இவற்றில் கூடக்கவிதைப் பண்புகள் இருப்பதாக ருஷ்யக் கவிஞர்கள் பாராட்டியிருக்கிறார்கள். புதினம் அல்லது சிறுகதையைவிட வெறும் செய்தி விவரணை சிறந்த இலக்கியத்துவ வகைமை என்று எத்தனை கவிஞர்கள் இன்று கருதுகிறார்கள். பொஸேனா நெம்கோவா (Bozena Nemcova) என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தலைசிறந்த செக் உரைநடையாளரில் ஒருவரும், AMountain Village என்ற கதையை எழுதியவரும் ஆவார்.தன்னுடைய அந்தரங்கக் கடிதங்களை மிகச்சிறந்த கவிதைப் படைப்பாக அவர் பெருமைப்பட முடிவது போல் இப்போது ஒருசில ஆர்வலரால்தான் முடியும்.

மிகச்சிறிய கதைத்துணுக்கொன்று ஒரு சமயத்தில், உலக மல்யுத்தவீரன், சோப்ளாங்கி ஒருவனிடம் தோற்றுவிட்டான், இதைக் கண்ட பார்வையாளருள் ஒருவன், மேடை மீதேறி இப்போட்டி ஏற்கனவே திட்டமிடப்பட்டசதியென்று கூறி சவாலுக்கழைத்து, வெற்றி பெற்றவனைத்தோற்கடித்தும் விட்டான். மறுநாள் செய்தித்தாளில் இவ்விரண்டுமே சூழ்ச்சி என்றொரு கட்டுரை வந்தது. சவாலிட்டு வெற்றிபெற்ற பார்வையாளர் பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று அக்கட்டுரைக்குப் பொறுப்பான ஆசிரியர் முகத்தில் ஒர் அறைவிட்டார். ஆனால் செய்தித்தாள் கட்டுரையும் பார்வையாளர் தான் அவமானப்பட்டதால் கட்டுரையாசிரியரை அறைந்ததும் எல்லாமே வேடிக்கைக்காகச் செய்யப்பட்ட கிண்டலாகும்.

உண்மை நிஜமான உலகம் அல்லது வேறெதற்காகவோ இவற்றின் பெயரால் தன்னுடைய கவிதைகளில் கலைகளில் தன் கடந்தகாலத்தைக் கைவிட்டுவிட்டேன் என்று கூறும் கவிஞனை நம்பவேண்டாம். டால்ஸ்டாய் எரிச்சலோடு தன் படைப்புகளை மறுதலிக்க முயற்சித்தாலும்,அவர் ஒரு கவிஞனாகப் பரிமளிப்பதற்குப் பதிலாக பாமரத்தனமான புதிய இலக்கிய வடிவங்களின் வழிகளை அமைத்துவிட்டார். ஒருநடிகர் தன் முகமூடியைக் கிழித்தெறிந்த பொழுது அவருடைய ஒப்பனை நிச்சயமாக வெளிவரும் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டதுபோல் மேலே குறிப்பிட்டதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

உண்மை இயற்கை இவற்றின் பெயரால் ஒருகவிஞனைக் கடுமையாக அலசுகிற விமர்சகனையும் நம்ப வேண்டாம். வேறொரு கவிதையியல் தனிமைக்குழுவின் வேறொரு உருத்திரிபடைந்த நெறிமுறைக் குழுவின் பெயரால், அதாவது உருத்திரிபடையும் மூலக் கூறுடைய நெறிமுறைகளின் ஒரு தொகுதியை நிராகரிப்பதைத்தான் உண்மையிலேயே விமர்சகன் செய்திருப்பதெல்லாம். மொத்தத்தில் கவிதை என்பது ஒரு பெரிய பொய், எழுத ஆரம்பித்ததிலிருந்தே மிகத் துணிவுடன் பொய் சொல்லத் தவறுகிறவன் கவிஞனாகமாட்டான் இந்தக் கணத்தில் Dichtung(சிக்கலான) வடிவத்தை விட Wahrhet(உண்மையும் அழகும் கொண்ட) வடிவத்தில்தான் ஈடுபாடு கொண்டிருக்கிறேன் என்று பிரகடனப்படுத்தும்போது அக்கலைஞன், மேலே கூறிய அதே விளையாட்டைத்தான் சொல்கிறான்.

________________

கவிஞன் தன்னைப்பற்றி அறிந்திருக்கிற இலக்கிய வரலாற்றாசிரியர் பலபேர் அவனது படைப்பின் அமைப்பை அலசுகிற அழகியலாளன், கவிஞனின் உள்மன அமைப்பைத்துருவி ஆய்கிற உளவியலாளன் எனப்பலருண்டு உபதேசியாரிடம் அமைந்துள்ள அதே நிச்சயத்தன்மையுடன் இப்படிப்பட்ட இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கவிஞன் படைப்பை அப்பட்டமான மனித ஆவணம் அவனுடைய கலைத்துவத்திறனின் நிரூபனம்'உண்மையானது'வாழ்க்கையை இயல்பாகப் பார்க்கும் தன்மைபோலித்தனமான, மிகக்கஷ்டப்பட்ட இலக்கிய நோக்கு'இதயத்திலிருந்து வருவது'செயற்கைத்தனமானது இவ்வாறு என்னென்னவோ உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள். சோல்டான்(Fedor Soldan) எழுதிய ஆய்வுநூல் Havaceks Decadent Erotica விலிருந்து எடுக்கப்பட்டமேற்கோள்களே மேற்கண்டவை. சிற்றின்ப உணர்வூட்டும் கவிதைக்கும், ஒரு கவிஞனின் சிற்றின்ப வாழ்க்கைக்கும் இடையேயுள்ள உறவை சோல்டான்விளக்குகிறார். அடிக்கடி மாறுதலுக்குரியவாதம் சார்ந்த உறவைவிட கலைக்களஞ்சியத்திலுள்ள பதிவுக்குறிப்புக்களுடன் ஈடுபாடு கொண்டிருப்பது போல குறியும், குறியோசை தெரிவிக்கும் பொருளும், இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து மாறாதது என்று கருதுவது போல காலங்காலமாக உள்ள இருமுக உணர்ச்சிப்போக்குகளின் உளவியல் கொள்கையைப் பற்றி அவர் இதுவரை கேட்டிருந்திராததுபோல், அதனுடைய எதிர்மறை உணர்வின் கலப்பே இல்லாத வகையில் அவ்வளவு தூய்மையான உணர்வென்று ஒன்றில்லை. உள்மன மெய்மைகவிதையியல் புத்தாக்கப் புனைவு இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதன்னியல்பான மூலமுதல் இயல்பின் உறவுகளைக் கண்டுபிடிப்பதற்காக, இலக்கிய வரலாற்றுக் களத்தில் இருமுக முறைமையை அநேக ஆய்வுகளில் இன்றும் உபயோகிக்கிறார்கள். இவ்விரண்டுச் சரியொப்புநிலைகள் எவ்வளவு சாரமற்றவையாய் இருக்கக் கூடும் என்பதற்கு உதாரணமாக மாச்சாவின் டயரிக்குறிப்பை ஆய்ந்து பார்க்கலாம், இந்த டயரிக்குறிப்புமிக அதிகமாக அறிவூட்டத்தக்க ஆவணம்; ஓரளவு வேண்டாதன அகற்றப்பட்ட விதத்தில்தான்,இன்றைய தேதிவரை வெளிவந்திருக்கிறது. ஒருவரைப்பற்றி மற்றவர் எழுதும் வரலாற்றுக்குரிய சிக்கல்களை ஒதுக்கிவிட்ட சில வரலாற்றறிஞர்கள் கவிஞனின் வெளியிடப்பட்ட படைப்புக்களில் மட்டும் முழுவதுமாக ஆழ்ந்த கருத்தைச் செலுத்துகிறார்கள். கவிஞனின் வாழ்க்கையை எவ்வளவுக் கெவ்வளவு தகவல்களைக் கொண்டு, மீட்டுருவாக்கம் செய்ய முடியுமோ,அவ்வளவு மற்றவர்கள் முயற்சி செய்கிறார்கள். மேற்கண்ட இரண்டு அணுகுமுறைகளின் நிறைகளை ஏற்றுக்கொண்ட போதிலும் பாடப்புத்தகங்களில் காணப்படும் அதிகாரபூர்வமான விளக்கங்களின் தன்மையுடைய நம்பந்தகுந்த ஒருவரின் வாழ்க்கைச்சரித்திரத்தைவிட மாற்றியமைக்கும் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் அணுமுறையை வெகு உறுதியாக நிராகரிக்கிறோம். ப்ராக் நகரத்தின் பெட்ரின் பூங்காவிலுள்ள மாச்சாவின் உருவச்சிலையை வியந்து கொண்டிருக்கும் கனவுலக வாலிபங்கள் ஏமாற்றமடையாமலிருப்பதற்காக மாச்சாவின் டயரிக்குறிப்பில் தேவையற்றவை தவிர்க்கப்பட்டன. ஆனால் புஷ்கின் ஒருதடவை கூறியதுபோல, இலக்கியம் இலக்கிய வரலாற்றைக் குறித்ததல்ல) 15வயதான யுவதிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால் பதினைந்து வயதான யுவதிகள், மாச்சா, டயரிக்குறிப்பிலுள்ளதை விட மிகவும் விபரீதமானவற்றை எப்படியாகிலும் படிக்கிறார்கள். காவிய நீளமைதியோடு, ஆசிரியரின் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் உடலுறுப்புக்களின் செயல்களை, இந்த டயரிக்குறிப்பு விவரிக்கிறது.ஒரு கணக்கரின் கடினமான திட்ப நுட்பத்துடனும் எளிதில் புரியவியலாத குழுக்குறியில் அவர் தன்னுடைய காதலிலோரியுடன் எத்தனை முறையில் அடுத்தடுத்து உடலுறவில் திருப்தியடைந்தார் என்பதை இதுபதிவு க்ேகிறது. கூர்மையான பொருள் பொதிக் கருங்கண்கள், ஆழ்சிந்தனை வரிபடர்விழுமிய நெற்றி, வெளிர்நிறச் சிந்தனை, தோற்றம் இவற்றோடு கூட, மெருகேறிய ஒழுகலாறும், நம்பிக்கைக்குரியவளாயும் இருப்பதுதான், மற்றெல்லாவற்றையும் விட அப்பெண்ணின்பால் அவரை ஈர்த்துக்கொள்ளச் செய்தன என்று மாச்சாவைப் பற்றிக்கரேல் சபீனா எழுதியிருக்கிறார்.இந்த விதமாகத்தான் பெண்மையின் அழகு மாச்சாவின் கவிதைகதைகளில் வெளிப்படுகிறது. அவரது காதலியின் தோற்றத்தைப் பற்றிய விவரங்கள் நிறைந்த டயரிக்குறிப்பிலுள்ள வர்ணனைகள் ஏறக்குறைய ஜோசப் சைமா(osefsma) வின் தலையில்லாப் பெண் முண்டம் சர்ரியலிஸ் ஓவியங்களை நமக்குப் பெருமளவில் நினைவில் கொண்டு வருகின்றன.

தன்னுணர்ச்சிக் கவிதைகள் மற்றும் இந்த டயரிக்குறிப்புகளுக்கும் இடைப்பட்ட உறவும் Dichtung(சிக்கலான) மற்றும் Wahrhet (உண்மையும் அழகும் கொண்ட) டிற்கும் இடைப்பட்ட உறவும் இணைஒத்தவைகளாக இருக்க முடியுமா? இருக்கவே முடியாது. இரு நோக்குகளும் சமமாகச் சொல்லத்தக்கவை அவை சாதாரணமாக வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை. ஒரே காட்சியை இரு வேறு முறைகளில் திரைப்பட இயக்குநர் எடுப்பதாகச் சொல்வது போல, புலமைசால் சொல் தொகுதியில், மொழியின் வெவ்வேறு பொருள் மட்டங்கள் புலனுணர்வு சார்ந்த ஒருபொருள் ஒரே அனுபவத்தினை வேறுபடுத்துகிறது. இதற்கு உதாரணமாக, Maர் (மே மாதம் என்னும் இக்கவிதையால் மாச்சாபெரும் கவனம் பெற்றார்), மற்றும் Marinka என்னும் அவரது சிறுகதையைச் சொல்லலாம். மாச்சாவின் டயரிக்குறிப்பு, எல்லா விதத்திலும் அவரின் கவிதைப் படைப்பாக ಟ್ವಿಠ್ಠಲ್ಚಿ இந்த டயரிக்குறிப்பு பயனெறிக் கோட்பாட்டின் எந்தச் சுவடும் கொண்டதில்லை. இது தூயகலை கலைக்காகவே கவிதை கவிஞனுக்காகவே என்று இருக்கிறது. இன்று மாச்சா உயிரோடு இருப்பதாக இருந்தால் ஒருவேளை தன் சொந்த அந்தரங்க உபயோகத்திற்கு-தன்னுணர்ச்சிக்கவிதையை ஒதுக்கிவிட்டு,(சின்னமான்ே, சின்னமானே என் முறையீட்டைக் கேளாய்) என்று தனது டயரிக்குறிப்பை வெளியிட்டிருந்திருப்பார். இதன் விளைவாக ஜாய்ஸோடும், லாரன்ஸோடும் மாச்சா பலபொதுவான விவரணைகள் பெற்றிருப்பதால் அவர்களோடு ஒப்பிடப்பட்டிருப்பார்.இம்மூவரையும் விமர்சகர் ஒருவர். ஒழுங்குமுறைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டமுழுமையான விலங்கு உண்ர்வுத் தூண்டல்களால் இலக்கின்றி அலைகிற மனித வகைமை பற்றிய உண்மைச்சித்திரத்தைக் கொடுக்க முயற்சிக்கிறவர்கள் என்று விமர்சித்திருப்பார். புஷ்கின் இப்படித்தொடங்குகிற ஒரு கவிதையை எழுதி உள்ளார்.

அற்புதமான ஒரு கணம் 
நினைத்துப் பார்க்கிறேன் நான் 
சடுதியில் மறையும் ஒரு காட்சியாய் 
தூய அழகின் ஓர் உருவமாய் 
தோன்றினாய் நீ என்முன்

கடவுளின் கருணையால் இன்றுஅன்னா பெட்ரோவ்னாவை அனுபவித்தேன்' என்று இக்கவிதையில் வரும் பெண்ணைப் பற்றித்தன் நண்பருக்குக் கிண்டலாக புஷ்கின் எழுதியிருந்த கடிதத்தினால், தன்வயதான காலத்தில், டால்ஸ்டாய் பெரிதாகச் சினம் கொண்டார். ஆனால், அந்த இடைக்காலத்தில் வந்த செக் நாட்டு mastickr போன்ற நகைச்சுவை நாடகங்கள் ஒழுக்க உணர்வுகளை அவமதிக்கக்கூடியவைகளாக இல்லை.ode(வெண்பா வடிவம்) மற்றும் burlesque (கேலிவடிவம் இவ்விரண்டும் சமமாகவே ஒப்புக்கொள்ளத்தக்கவை. ஒரு பாடுபொருளை வெளிப்படுத்தும் இரு கவிதையியல் வகைமைககளாக இவ்விரண்டும் இருக்கின்றன.

லோரியின் முதல் காதலன்தான் அல்ல என்ற சந்தேகம்தான் மாச்சா மனதைச் சஞ்சலப்படுத்திய பாடுபொருளாகும், தனது மே மாதம் கவிதையில் இக்கலைப் பண்புக்கூறுகீழ்க்கண்டவாறு உருவாகி இருக்கிறது. 

ஒருக்காலும் இல்லை! அவள் என் மாசற்ற தேவதை

நானவளைக் கூடுமுன் அவளேன் தவறினாள்?

ஏன் என் தந்தை அவளைக் கெடுத்தவரானார்?

________________

என் தலைவியைக்கெடுத்தவரவர் 
அன்னியமானேன் நான். 
மேலும், என்பகை என்தந்தை அவரைக் கொன்றது அவரது மைந்தம்.

இந்த டயரிக்குறிப்பின் ஓரிடத்தில்,இருமுறை லோரியை அனுபவித்தபின் அவர் அவளிடம் மறுமுறையும் பேசியது: வேறுயாராவது உன்னைக்கூட அனுமதித்திருந்தாயா என்பது பற்றி, அவள் இறக்க விரும்பினாள்.ஒ கடவுளே நான் எவ்வளவு துயரமடைகிறேன். என்று அவள் கூறினாள் என்மாச்சாவர்ணித்துள்ளார். அதைத் தொடர்ந்து கட்டுமீறிய சிற்றின்ப வர்ணனைவருகிறது. பின் கவிஞர் தன் ஆன்மாவை அசைத்த விரிவான வர்ணனை, அவள் என்னை ஏமாற்றிக் கொண்டிருந்தால் கடவுள் அவளை மன்னிக்கட்டும், நான் மன்னிக்க மாட்டேன் அவள் மட்டும் என்னை நேசிப்பதாக இருந்தால் -அப்படித்தான் தெரிகிறது-ஏன், ஒருவேசி என்னை நேசிப்பதை அறிய வந்தால் அவளை நான் மனப்பேன்.

மெய்மையின் மிக நுணுக்கமான முழுமையான மறுபதிப்பாக இந்த டயரிக்குறிப்பின் பதிப்புரு உள்ளதென்றோ, கவிஞனைப் பொறுத்தமட்டில் மே மாதம் தெள்ளத் தெளிந்த கற்பனையாக்கமாக இருக்கிறதென்றோ யாராவது கருதுவார்களென்றால் அதுபள்ளிப் பாடப்புத்தகங்கள் செய்வதுபோல் ஒரு கருத்தை எளிமைப்படுத்துவதாகும். ஒருவேளை, டயரிக்குறிப்பைவிட உள்ளுணர்சார்வெளிப்பாட்டினை ஈடிபஸ் உள்ளர்த்தங்களால் தீவிரப்படுத்தப்பட்ட (என்பகை என் தந்தை) இந்தக் கவிதை டயரிக்குறிப்பைவிட அதிகமாகச் சுட்டுகிறது. வெறும் இலக்கியத்தந்திரமாக மாயாகோவ்ஸ்கியின் கவிதையில் தற்கொலை, கலைப்பண்புக் கூறாக இருக்கப்பட்டதாக ஒருசமயத்தில் எண்ணப்பட்டது. மாயாகோவ்ஸ்கி, மாச்சாவைப் போல் இருபத்தாறாம் வயதில் நிமோனியாவினால் இறந்திருந்தால் இன்று இவ்வாறாக இது எண்ணப்படமுடியும்

புதிய புனைவியல் சார்ந்த ஒருவரைப் பற்றிய முழுமையற்ற வர்ணனையை மாச்சாவின் குறிப்புகள் கொண்டிருக்கின்றன. உண்மை உருவத்தையும், அத்துடன் அவர் தன்காதல்வயப்பட்டகதாபாத்திரங்களை எந்த அடிப்படை ီ|န္တိမျိုဇို့ எடுத்துக் கொண்டாரோ அந்த அமைப்பாகவும் இது தோற்றமளிக்கிறது என்று சபீனா எழுதுகிறார். அவன் அதிதீவிரமாக நேசித்தாலும் அவனைவிடமிகத்தீவிரமாக நேசித்த காதலியின் கால்களில் இப்பகுதியின் கதாநாயகன் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கிறான். அவள் கெடுக்கப்பட்டதாக நம்பிக் கொண்டு கெடுத்தவனின் பெயரை, அவள் சார்பாகவே பழிவாங்குவதற்காக தெரிந்துகொள்ள, நிர்ப்பந்திக்க முயற்சிக்கிறான்.அனைத்தையும் அவள் மறுத்தாள்.அவன் ஆவேசமாக இருந்தான். எதுவுமே நடந்திருக்கவில்லையென அவள் சத்தியம் செய்தாள். பிறகு மின்னலென ஒரு எண்ணம் அவனுள் தோன்றியது. அவளுக்காகப் ಙ್ಗ நான் அவனைக் கொல்ல வேண்டும் சாவே எனக்குரிய தண்டனை அவள் வாழட்டும் என்னால் முடியாது. கெடுத்தவனுக்குக் கூடத் துன்பம் வரப்பிரியப்படாத, அவனுடைய காதலிநெடுநாளாக வேதனைப்படும்தேவதையாக இருக்கிறாள் என்ற நம்பிக்கையின் உறுதிப்பாட்டில் தான் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான். பிறகு கடைசிக் கணத்தில் அவள் அவனை ஏமாற்றியிருக்கிறாள் என்பதையும், அவளுடைய தெய்வீகமுகம், பேயின் முகமாக மாறிவிட்டிருக்கிறது என்பதையும் அவன் உணர்கிறான். இவ்வாறாகத் தானே, தன்சொந்த சோகமிகுந்த அனுபவத்தை தன்னுடைய நம்பிக்கைக்குரிய நண்பனுக்கு ஒரு கடிதத்தில் தெரிவிக்கிறார்.ஒரு காரியம் என்னைப்பைத்தியக்காரனாக ஆக்கிவிடும் என்று ஒருசமயத்தில் உன்னிடம் சொன்னேன் அது நடந்தேவிட்டது. துரதிருஷ்டவசமாக நாங்கள் தவறு செய்தோம் என்காதலியின் தாய் இறந்தாள். அவள் சவப்பெட்டி அருகே ஒரு சபதம் எடுக்கப்பட்டது. பின்னர் இது உண்மையல்ல. பிறகு நான். ஆஹா.ஹா எட்வர்ட் நான் பைத்தியமாகவில்லை, ஆனால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறேன்.

கொலையும் தண்டனையும், தற்கொலை, குமுறலுக்குப்பின் ஏற்பட்ட விரக்திநிலை என மூன்று பதிப்புருக்கள் நம்மிடம் உள்ளன. மேற்கூறிய ஒவ்வொரு நிலையும் கவிஞனால் அனுபவிக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட சாத்தியங்களையும் தவிர்த்து வேறொன்றுமிருக்க முடியாதநிலையில் எல்லாமே ஒப்புக் கொள்ளப்படத்தக்கவை, கவிஞனின் சொந்தவாழ்க்கையிலும் அவரின் படைப்புகளிலும் இவை நாம் உணரக்கூடியவை. தற்கொலை, புஷ்கினின்சாவுக்கு காரணமான மரணப் போட்டி மாச்சாவின் இலக்கியத்துவமான கேலிக்குரிய முடிவு இவற்றிற்கிடையேயான வேறுபாட்டையாரே வரையறுக்க இயலும் குறிப்பிடத்தக்க வகையில் பிறருக்கு அறிவிக்கக் கூறிய மாச்சாவின் உயர்படைத்தான தகுதியில் மட்டுமின்றி இலக்கியக் கலைப்பண்புக் கூறுகள் வாழ்க்கையோடு எவ்வளவு இணக்கமான முறையில் கலப்பதில் கவிதைக்கும் சொந்த வாழ்க்கைக்கும் இடைப்பட்டபல பண்புத்திறன்கள் கொண்டஇடைவிளைவுகாணப்படுகிறது. தனிமனித மனோநிலை மூலத்தை ஆய்வு செய்வதும் மாச்சாவின் மனோநிலை, சமுதாய நோக்கம் அவற்றின் தனிநபர் உளவியல் அடிப்படைகளை ஆய்வு செய்வதும் ஒரே முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும் தனிநபர் உளவியல் அடிப்படை ஆய்வின் முக்கியத்துவத்தை உடையதாக இருக்கிறது.மாச்சாவின் காலத்தைச் சார்ந்தவரும் விமர்சகரும் நாடகாசிரியருமான ஜே.கே. டில். தனது மிகச்சிறந்த குறுநாவலான Rozervanecல் குறிப்பிட்டமாச்சாவின் வார்த்தைகளான, 'என் காதல் ஏமாற்றப்பட்டிருக்கிறது அவரை மட்டும் சார்ந்ததல்ல, அவை ஒரு வாழ்க்கைப் பாங்கைக் குறிக்கிறது. ஏனெனில் அவருடைய இலக்கியக் குழுவின் கோஷம் வேதனைதான் உண்மையான கவிதைக்குத் தாயாக இருக்கக் கூடும் எனப் பிரகடனப்படுத்துகிறது. அவர் காதலில் சந்தோஷமற்றவர் என்று கூற முடிந்ததால்தான் மாச்சாவின் படைப்புகள் அனைத்தும் சிறந்தது என்ற டில்லின் கூற்றை இலக்கிய வரலாற்று தரத்தில் சரியென்று கூற முடியும். ஆசையின் திருப்திக்குப் பின் தொடருகிற அயர்வான மனச்சோர்வுக்காலகட்டத்தில் உண்டாகும் இடைவெளியை நிரப்புவதற்கு பொருத்தமான வழி கற்பழித்தவர்-பொறாமைக் காதலர் என்ற பாடுபொருளாகும். கவிதையியல் மரபுவழியினால் முழுவதுமாக உருவாக்கப்பட்ட மரபுரீதியான கலைப்பண்புக் கூறு ஆகிய ஒரு தளர்வான்நம்பிக்கையற்ற உணர்வு மாற்றமடைகிறது தன் நண்பனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், கலைப்பண்புக் கூறின் இலக்கியத்தன்மையை வலியுறுத்திக் கூறுகிறார் மாச்சா. விக்டர் ஹ்யுகோவுக்கோ, யூஜின்சுவோவுக்கோ தங்களுடைய அற்புதமான நாவல்களில் எனக்கு நேர்ந்திருக்கிற எவற்றையுமே விளக்கிக்கூறும் சக்தி இல்லை. நான் ஒருவன்தான் அவற்றை அனுபவித்தவன். எனவே, நான் ஒரு கவிஞன் மாச்சாவினுடைய நம்பிக்கையற்ற தன்மை, மெய்மையின் அடிப்படையுடையதாக இருக்கிறதா? என்ற கேள்வி, அல்லது -யூகிப்பதுபோல கட்டுப்பாடற்ற கவிதையில் புத்தாக்கப் பிணைவால் உருவாகியதா? என்பதும் ஆய்வுக்குரியதாக, சட்டநுணுக்க ஆய்வுக்கே உரியதாக முக்கித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏதோ ஒரு கருத்து இயைபில் ஒவ்வொரு சொல்லார்ந்த செயலும் அது குறிக்கும் நிகழ்வைச் சிறப்பு இயல்புடையதாக்குகிறது; பண்புமாற்றம் செய்கிறது. அதனுடைய கருத்து சார்பினால் உணர்வு வயப்பட்ட உட்கருத்தினால், அதைக்கேட்ட கவிஞரால் அது ஆட்படும்பூர்வாங்கமான தணிக்கையினால் அது விளைவித்துக் கொண்ட ஏற்கனவே உருவாக்கப்பட்ட எடுத்துக்காட்டு அமைப்புகளினால் அச்சொல் எப்படி செயல்படுகிறது, என்பது நிர்ணயிக்கப்படுகிறது. ஏனெனில் செய்திப் பரிமாற்றம் அவ்வளவு இன்றியமையாத முக்கித்துவம் உடையதல்ல என்று தணிக்கை இங்கே தளர்த்தப்படவோ அல்லது குறைக்கப்படவோ செய்யப்படமுடியும் என்பதைசொல் சார்ந்த செயலில் கவித்துவம் மிகத் தெளிவாக்குகிறது. ஜான்கோ கிரால்(1822-76) ஆற்றல்மிக்க ஒரு ஸ்லோவாகியக் கவிஞர். தனது மெருகற்ற அழகிய திடீர் படைப்புகளால், பிதற்றலுக்கும் நாட்டுப்பாடல்களுக்கும் இடைப்பட்ட எல்லைக் கோட்டை சிறப்பான விதத்தில் இல்லாமல் செய்துவிடுகிறார். மேலும் தன் கற்பனையில் மிகச் சுதந்திரமாகக் கூட இருக்கிறார், மாச்சாவைவிட தமது எழில்நயமிக்க வட்டார மனப்பாங்கில் அதிகமான தன்னியல்பை உடையவராக இருக்கிறார். மாச்சாவைப்போல, கிராலும் ஒரு தனிச் சிறப்புடைய ஈடிபஸ் வகையே, கிராலைப் பற்றி நெம்கோவாவின் முதல் எண்ணப்பதிவு தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறானது; அவர் மிகவும் இயற்கைக்குமாறுபட்டவர்.அவரது இளம் மனைவி மிக நுட்பமுடையவளாக இருந்தாலும் மிகவும் சூதுவாதற்றவள். அவர்,

________________

அவளை உண்மையிலேயே ஒருவேலைக்காரியாகத்தான் வைத்திருந்தார். தன் முழு ஆன்மசக்தியோடு வேறு எவருக்கும் மேல், எப்பொழும் ஒரேஒரு பெண்ணைத்தான்,தான் நேசித்ததாக அவர் தனக்குத்தானே சொல்வார். அந்தப் பெண், தன் தாயை நேசித்த அதே அளவிற்கு தன் தந்தையை வெறுத்தார். அவரின் தந்தை அவரின் தாயைத் துன்புறுத்தினார்.(அவர் மனைவியை அவர் துன்புறுத்தியதுபோல) அவள் இறந்ததிலிருந்து வேறு எவரையும் தான் நேசித்ததில்லை என அவர் கூறிக்கொள்கிறார். நான் உணர்ந்த அளவில், அந்த மனிதர் ஒரு பைத்தியக்காரக் காப்பு விடுதியில் தான் தன் வாழ்நாளை முடிப்பார். ஆனால் துணிவுமிக்க நெம்கோவாவைக்கூட இது அதனுடைய பைத்தியத்திற்குரிய உள்ளர்த்தங்கள் பயமுறுத்தினாலும் கிராலினுடையவியக்கத்தக்க உடல், உள்ள வளர்ச்சியற்ற பண்புவகை எவ்விதமான அவர் கவிதைகளிலிருந்தும் பீதியுணர்வை வெளிக்கொணரவில்லை. Readings for Students என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பில் பொய் முகமூடியைவிட சிறிது அதிகமானதாக அவை தோன்றுகின்றன. உண்மையில் எப்படி இருப்பினும் ஒரு தாய்- மகன் பாசத்தின் துன்பலியலை கவிதை அநேகமாகக் கண்டிராத அளவிற்கு முரட்டுத்தனமான ஒளிவுமறைவற்ற சொற்களில் அவை வெளிப்படுத்துகின்றன.

கிராலின்கதைப்பாடல்களும், பாடல்களும் எதைப் பற்றியவை?'பங்கிட்டுக்கொள்ளப்படமுடியாத ஆர்வமிக்க தாயன்பு மகனின் தவிர்க்க முடியாத புறப்படுகை, தாயின் ஆலோசனைக்குப்பின்னும் உறுதியான நம்பிக்கை இவை எல்லாமே வீணாயின."விதியை எதிர்த்து யார் போகமுடியும் நானில்லை. தூரதேசங்களில் இருந்து தாயிடம் திரும்புதல் முடியாது என்று நம்பிக்கையற்று மகனைத்தாய் தேடுகிறாள். இவ்வுலகெங்கும் என்துக்கம் கல்லறை பற்றியதே. ஆனால் என் மகனைப்பற்றிய ஒரு செய்தியும் இல்லை'மகன் நம்பிக்கையற்று தாயைத் தேடுகிறான். உன் தாய் பரந்த வயற்புரத்திற்குச் சென்று விட்டிருக்கிறாள். பறக்கிற வல்லூறே ஏன் உன் தகப்பனார், சகோதரர்கள் வீட்டுக்கு உன்னுடைய கிராமத்திற்குப் போகிறாய்? ஜாங்கோவின், அவன் தாயின் கர்ப்பப்பை பற்றிய கனவுடன்கூடிய இயல்புக்கு மீறிய, ஜாங்கோ அழிவுக்குட்படுத்தப்பட்டான் என்ற உடல்பயம், நெஸ்வாலைப் போன்ற, தற்காலத்திய சர்ரியலிஸ்க்கவிஞர்களின் பாடுபொருட்களை ஞாபகப்படுத்துகிறது. நெஸ்வாலின் AStory of Six Empty Houses என்பதிலிருந்து எடுக்கப்பட்டஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

அங்கு விட்டுவைக்க முடியுமா?
 தாயே,என்றென்றும் எனை நீ? 
எங்கும் யாதொரு விருந்தினரும் 
என்றுமிருக்காத வெற்றறையில் 
உன்னின் விருந்தளியாய் 
உறைவதில் மகிழ்வுறுகிறேன் நான். 
ஆனால் கடைசியாக நான் கட்டாயமாக 
வெளித்தள்ளப்படும்போது 
அச்சம் தருவதாய் அது இருக்குமே 
எத்தனையோ நிலைகள் காத்திருக்கின்றன எனக்காக எல்லாவற்றிலும் மிகவும் அச்சந்தரும்நிலை 
மரனத்தை நோக்கிப்போவதே

இங்கு கிராலின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன்"(The Recruit)-ல் இருந்து ஒரு பகுதி.

ஏன் ஒப்படைத்தாய் விதியின் கைகளில்
 ஒஎன் தாயே 
என்னை நீ உண்மையிலேயே நேசித்திருந்தால் பூந்தொட்டியிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட 
புதுமலரொன்று போல 
அந்நியப்பட்ட இவ்வுலகில் என்னை நீ 
கைவிட்டிருப்பதை உணரவில்லையா? 
எவரும் நுகர்ந்திரா மலர் பறிக்கத்தானெனில் 
பதியமிடுவதேனா?
கொடிது மிகக் கொடிது 
பசும்புல் வெளியொன்று மழையின்றி வாடுவது 
ஆயின் இதனினும் 
நூறு மடங்கு கொடிதன்றோ ஜான்க்கோ துன்புறுத்தப்படுவது.

வாழ்க்கையில் சடுதியில் ஏற்படும் உயர்வும் தாழ்வும் போல, கவிதைபற்றிய தவிர்க்க முடியாத நேர்எதிரிடையான முடிவு எந்தவொரு விதத்திலும் இருக்கிறது. மறுபடியும் இங்கு நெஸ்வாலைப் பார்க்கிறோம்.

நான் நடந்திருக்கவில்லை என்றுமே இந்த வழி கண்டெடுத்தமுட்டையைத் தொலைத்து விட்டிருக்கிறேனா ஒரு கறுப்புக்கோழியின் வெள்ளைமுட்டை அவன் ஜுரத்தில் இருந்திருக்கிறான்.மூன்று முழுநாட்கள். நாய் ஊளையிட்டுக்கொண்டிருந்தது இரவுப்பொழுதெல்லாம் பூசாரி வந்துகொண்டிருக்கிறான் எல்லாக் கதவுகளையும் அவன் ஆசீர்வதிக்கிறான் மயில் தன் இறகுகளால் செய்வது போல, பனிபெய்துகொண்டிருக்கிறது அங்கொரு பின ஊர்வலம் அம்முட்டை சுற்றியோடிக்கொண்டிருக்கிறது என்னவொரு வேடிக்கை, சாத்தானோ முட்டையினுள் உள்ளே ஒன்றுமில்லாத வெறும் முட்டைக்கூடு.

எதிர்ப்புணர்வுக் கவிதைக்கு முழுமையான ஆதரவாளர்கள் இவ்விதக் கவிதை விளையாட்டுக்களால் மிகவும் திகைப்படைந்ததால், ஒன்று தங்களால் இயன்றவரைக்கும் அவற்றை அடக்கிவைக்கவோ, அல்லது மனவேதனைப்பட்டதால் அவர்கள், நெஸ்வாலின் வீழ்ச்சியையும் குறிக்கோளுக்கு வஞ்சனைபுரிந்தமையைப் பற்றியும் பேசினார்கள். ஆயினும் மிக நுணுக்கமாக சிந்தித்து கட்டமைக்கப்பட்ட அவருடைய எதிர்ப்புத்தன்னுணர்ச்சிக்கவிதைகளின் இரக்கமற்றதர்க்க ரீதியான வெளிப்பாட்டியல் போலவே, இவ்விதக் குழந்தைகளின் ஒலிநயப்பாடல்களும் குறிப்புநுட்பமுடைய புதுமைப்போக்கு உடைத்தாயிருக்கிறது என்று முழுமையான நம்பிக்கை உடையவனாயிருக்கிறேன். ஒருங்கிணைந்த

________________

நோக்கின் முழுமையான பகுதியாகவும் வார்த்தையை போலியான உபயோகத்திலிருந்து தவிர்க்கிற ஒருங்கிணைந்த நோக்காகவும் அவை இருக்கின்றன. மொழியியல் குறிகளின் சடுதியில் தோன்றிய, வீச்சுடைய செயற்கை நடைஇவற்றின் காலகட்டமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின்பிற்பகுதி இருந்தது. சமூகவியல் நோக்கில் இவ்வாய்வு முடிவு எளிதில் நியாயப்படுத்தக் கூடியது.இந்தக் காலகட்டத்தில் அநேக வகைமாதிரியான கலாச்சார நிகழ்வுகள், எவ்விதத்திலாவது செயற்கை நடையை மறைக்க வேண்டுமென்ற மேலும் கிடைக்கக்கூடிய எல்லா வழிகளிலும் செயற்கை நடைமேல் நம்பிக்கையைத் தூக்கி நிறுத்தவும் ஒரு உறுதியை வெளிப்படுத்துகிறது. தத்துவத்தில் நேர்காட்சிவாதமும், எளிய எதார்த்தவாதமும், அரசியலில் தாராளப்போக்கும், மொழியியலில் புதிய இலக்கணக்கூறுகளும், நாடக இலக்கியத் துறைகளில் மாயாவாதமும் இலக்கியக் கொள்கையில் நுண்மையாக பிரித்துப்பார்க்கும் முறைமையும் இப்படிப்பட்ட பலவிதமானவற்றின் வழித்துறைகளின் பெயர் வார்த்தையின் ஆளுமையை முதன்மைப்படுத்தவும், அதனுடைய மதிப்பீட்டிலுள்ள நம்பிக்கையை வழிப்படுத்தவும் உபயோகப்பட்டன.

தற்காலத்திலோ,அறிவுப்புலனுணர் அடிப்படைக் கோட்பாடு, மொழியியல் நாவல்களை ஒன்றிலிருந்து ஒன்றைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிக்கும், தனிப்படுத்தப்பட்ட குறிப்பிட்டபொருளுக்கும் இடைப்பட்ட ஒரு சொல்லின் அர்த்தத்திற்கும் அந்த அர்த்தம் எதைச்சுட்டியதோ அந்த உட்பொருளுக்கும் இடைப்பட்டதனிச்சிறப்பியல்பின் இன்றியமையாத முக்கியத்துவத்தை மிகத்திறம்படத் தெளிவுபடுத்தியிருக்கிறது. சமூக அரசியல்களத்தில் ஒரு இனமொத்த

றிப்பிடப்பட்டசம்பவம் உள்ளது; குழப்பமற்ற, வெறுமையான, ஊறுவிளைக்கும் புலனாகாத செயற்கைப் பேச்சுக்கும் ທີ່ມີຕໍ່ எதிர்ப்பு, ஒவியம் போன்ற சொல்திறத்தை உபயோகிப்பதற்காக மோசடியான வார்த்தைகளை எதிர்க்கும் கருத்தியல் கொள்கைக்கான போராட்டம்(அது) எப்படி, வானவியல், பூமியானது பலகோள்களில் ஒன்று என்பதைத் தெளிவுறுத்தியதன் மூலம் உலகைப்பற்றிய மனிதனின் கண்ணோட்டத்தைப் புரட்சிகரமயமாக்கியுள்ளதோ, அதுபோல கலையில் பல சாத்தியமான குறியமைப்புகளில் மொழியும் ஒன்று எனத்தெளிவாகவும் உறுதியாகவும் சலனப்படங்கள்தான் வெளிப்படுத்தியுள்ளன. தனக்கென ஒருதனித்தன்மை படைத்த பழைய உலகின் புராணக்கதையின் முடிவை, கொலம்பஸின் கடற்பயணம் முக்கியமாகக் குறிப்பிட்டுவிட்டது. ஆனால் இந்தப்புராணக்கதை, அமெரிக்காவின் சமீபத்திய வளர்ச்சியால் மரனஅடிவாங்கியது. ஆரம்பத்தில், திரைப்படமும் அயல் பண்புடைய ஒரு கலைக்குழுவாகவன்றி வேறொன்றுமில்லை என்று கருதப்பட்டது. மேலும் அதுபடிப்படியாக வளர்ச்சியுற்ற போதுதான் இதற்கு முந்தியிருந்த நடைமுறைக் கருத்துப் பாங்கினை உடைத்தெறிந்தது. பல்வேறு கொள்கை வேறுபாடுகளுள்ள பலகுழுக்களைச்சார்ந்த கவிஞர்களின் கவிதையானது ஒரு சொல்லின் அர்த்த புஷ்டியுள்ள தன்னாளுமை பற்றிய உத்திரவாதம் தருகிறது.ஆகையால் நெஸ்வாலின் விளையாட்டுத்தனமான ஒலிநயப் பாடல்கள் உறுதியான ஒரே எண்ணமுடையவர்களைப் பெற்றிருக்கிறது. இலக்கிய வடிவவியல் ஆய்வு பற்றிய சில சந்தேகங்களை எழுப்புவது சமீப காலத்தில் விமர்சக வட்டத்தில் மோஸ்தரான போக்காக இருந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக, இதை மறுத்துக் கூறுபவர்களின் இந்தக்குழு, உண்மை வாழ்க்கைக்கும் கலைக்குமிடைப்பட்ட உறவுகளைச் சரியாகப் புரிந்து கொள்வதில் தோல்வியுற்றிருக்கிறார்கள். இந்தக்குழு கலை கலைக்காகவே அணுகுமுறையைத் துணைக்கழைக்கிறது.இது காண்டிய அழகியலாளரின் வழியைப் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கிறது. இவ்விதத்தனிப்பட்டப் பாங்கினைச் சார்ந்த மறுப்புகளுடைய விமர்சகர்கள் மூன்றாவதொரு உருஅமைப்பு இருக்கிறதென்பதை மறந்து, முற்றிலுமாக ஒரு சார்புநிலையில் தங்களது தீவிரவாத உணர்வை உடையவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் எதையுமே ஒரு மட்டத்திலேயே நோக்குகிறார்கள்.டைஞ்சனோவ் (Tyhanov) முகராவ்ஸ்கி (Mukarovsky) ஸ்க்லோவ்ஸ்கி (skovsky) மற்றும் நான், எங்களில் ஒருவருமேகலையின் தன்னிறைவுத் தன்மைபற்றி என்றுமே பிரகடனப்படுத்தியதில்லை, நாங்கள் எடுத்துக்காட்டமுயற்சி செய்வது எதுவென்றால்- கலைசமுதாயக் கட்டமைப்பில் ஒரு உட்கூறு மற்ற எல்லாவற்றுடனும் கலந்து எதிர்விளைவை ஏற்படுத்துகிறது. அது தன்னிலேயே மாற்றம் அடையக்கூடியதாக இருக்கிறது. ஏனெனில் கலையின் செயற்களம் சமுதாயக் கட்டமைப்பில் உள்ள மற்ற பகுதிகள்இவற்றினுடைய உறவுநிலையான தொடர்ந்ததர்க்கவாதம் சார்ந்த இயக்கத்தை உடையதாக இருக்கிறது. கலையைத் தனித்துப் பார்ப்பதல்ல நம்நிலை மாறாகக் கலையின் அழகியல் செயலின் தன்னாளுமை பற்றியதே.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், கவிதைபற்றிய பொதுவான கருத்தின் உட்பொருள் நிலையற்றது; தற்காலிகமாக வரையறுக்கப்பட்டது.ஆனால் கவிதையியற்றல், கவிதைச் செயற்பாடு, வடிவவியலாளர்கள் வற்புறுத்தியதுபோல தனித்தன்மை வாய்ந்த மூலக்கூறாகும். அதாவது வேறு மூலக்கூறுகளுக்கு எந்திரத்தனமான உருமாற்றப்படமுடியாத ஒன்று. இதைத் தனித்தன்மை வாய்ந்ததாகப் பிரித்து எடுக்கமுடியும் சான்றாக, புதியமுறை ஃபார்மலிஸ் ஓவிய பாணியின் பல்வகை நெறிமுறைகளைப் போல, ஆனால் இது ஒரு விசேஷமான கேள்விக்குரிய பொருள்; கலையில், வாதம் சார்ந்த ஆய்வாளர் கண்ணோட்டத்தில் தோற்ற மூலகாரணத்தைக் கொண்டதாக இது இருக்கிறது. இருப்பினும் இது ஒரு விசேஷமான கேள்விக்குரிய பொருள்தான். பெரும்பகுதியான கவித்துவத்துவம் ஒரு சிக்கலான அமைப்பின் ஒரு பகுதிதான். ஆனால் இப்பகுதி மற்ற தனித்தன்மை வாய்ந்த மூலக்கூறுகளை இன்றியமையா நிலையில் மாற்றுகிறது. அவற்றின் மூலம் முழுமையின் தன்மையை நிர்ணயிக்கிறது. எண்ணை எதிலும், அல்லது தன்னளவில் ஒருமுழுமையான உணவல்ல; தற்செயலாக உணவோடு சேர்க்கப்படும் உணவின் ஒரு பகுதியாகவுள்ள எண்ணை, உணவின் ருசியை மாற்றுகிறது. சிலசமயங்களில், இது எவ்வளவு ஊடுருவிக்கலந்து விடுகிறதென்றால், பெட்டியிலிட்டு நிரப்பப்பட்ட எண்ணையில் பாதுகாக்கப்பட்டமீன், செக்மொழியில் கூறப்படுவதுபோல அம்மீன் தன்னுடைய ஆரம்பகால இனவியல் பெயரை இழக்க ஆரம்பிக்கிறது. சார்டிங்கா (Sardina-sardine), ஓலேவ்கா (pleiovka) என்ற புதுப்பெயரைப் பெற்று விடுகிறது.(ole-pl+ovka) (வருவிக்கப்பட்ட பின்னொட்டு). ஒரு சொல் சார்ந்த செயல் கவித்துவத்தை ਸ਼ பொழுதுதான், ஒரு கவிதையியல் செயற்பாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியத்துவம் அடைகிறது. அதை நாம் கவிதை என்று கூறலாமா?

ஆனால் எப்படிக்கவித்துவத்துவம் தன்னை வெளிப்படுத்துகிறது? ஒரு சொல், சொல்லாக உணரப்படும் பொழுதும், அச்சொல்லில் கவித்துவம் வெளிப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட பொருளை சொல், பிரதிநிதித்துவப்படுத்தும் பொழுதல்ல; அல்லது உணர்ச்சியின் திடீர் வெளிப்பாடல்ல, மெய்மையை ஏனோ தானோ என்று குறிப்பதற்குப் பதிலாகச் சொற்கள், அவற்றின் கூட்டமைப்பு, அவற்றின் அர்த்தம், அவற்றின் வெளி, உள் வடிவம், அவற்றிற்கே உரித்தான தகுதியும் முக்கியத்துவம் பெறும் பொழுதும் கவித்துவம் வெளிப்படுகிறது. இவையெல்லாம் தேவைதானா? ஒரு குறிப்பிட்டபொருளோடு, ஒருகுறி இணைந்துபோகவில்லை என்ற ஒரு தனிப்பட்ட உண்மைக் கருத்தைக் கூறவேண்டிய அவசியம் தேவைதானா? ஏனெனில் குறிப்பிடும் பொருளுக்கும் குறிக்கும் பொருளுக்கும், இடைப்பட்ட அடையாளத்தைப் பற்றிய விழிப்புணர்வும் அந்த அடையாளத்தின் குறைபாட்டினைப் பற்றிய நேரிடையான விழிப்புணர்வும் தேவையாயிருக்கிறது. இந்த இயல்பியல் மாற்றம் மிகத்தேவையானதைக் குறிக்கும். முரண்பாடு இல்லாமல் கருத்துருவங்களின் இயக்கமில்லை, குறிகளின் இயக்கமில்லை என்பதற்கான காரணம் மேலும் கருத்துருவத்திற்கும் இடைப்பட்ட உறவு இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. செயல்தன்மை ஸ்தம்பித்து விடுகிறது.மேலும் மெய்மையின் விழிப்புணர்வு மறைந்து விடுகிறது.

________________

புகழ்பெற்ற இலக்கியக் கோட்பாட்டாளரும்பின்நவீனத்துவசிந்தனைகளின் முன்னோடியுமான ரோமன் யாக்கப்சனின் (1896-1982)Semotics of Art என்ற நூலில் இருந்து What is poetry என்னும் இந்தக் கட்டுரை எடுக்கப்பட்டது. ஆங்கில மொழியாக்கம்: மைக்கேல் ஹைம்

தமிழாக்கம் மரிய ஜோசப்
L