தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Monday, June 30, 2014

காருண்யம் - கைலாஷ் சிவன்

காருண்யம் - கைலாஷ் சிவன்

உள்ளம் பரிதவிக்க
பச்சையெல்லாம்
பற்றி எரிகிறது
இருந்தும்
நெஞ்சமெல்லாம்
நிறைய
உயிராக
கூவுகிறது
குயில்

-சூன்ய பிளவு என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து

@@@@@@@@@@@@@@@@@@

சொல்லிருட்டு வலைக்குள்
சிக்கிய
கவிதை மீன்கள்
ஒவ்வொன்றாய்
உயிர்துடித்து
இறந்தென்
பசித்த வாய்க்குள்
அதிலொன்றின்
ஓசை முட்கள்
இன்றென்
குரலைத் தைக்கின்றன
நினைவுகளிலிருந்து
நழுவிய சிலது பார்வையில்
துள்ளி தெறித்து
சதா நீந்தி வரும்
தான் வாழ்ந்த
அமைதியில்.
(ஸ்ரீவை முத்துராஜுக்கு)

Sunday, June 29, 2014

என் கவிதைகளை சோளக்கொல்லை பொம்மைகளாக்கி .... - லீனா மணிமேகலை

என் கவிதைகளை சோளக்கொல்லை பொம்மைகளாக்கி திரித்து, கிழித்து, அடித்து, மூத்திரம்பெய்து, வக்கரித்து,அவரவர் மன இழிவுகளை இறக்கி வைத்துக் கொண்டிருப்பதாக அறிகிறேன்!நல்லது! யாவரின் வன்முறைக்கும் வடிகாலாக ஏதாவதொரு 'பயன்பாட்டு மதிப்பு' பிரதிக்கு இருப்பதைக் குறித்து ஒரு நீண்ட மூச்சை எறிகிறேன்!


https://www.facebook.com/lmanimekalai/posts/10152495590567645
********************************************

https://www.facebook.com/lmanimekalai/posts/10152495590567645

எவ்வளவு அடித்தாலும் தாங்குவேன்
அடியுங்கள்
சதுரகிரி மலையடிவாரத்து
மாவூத்து தண்ணியில்
ஊறிய பழஞ்சோறு
தின்று வளர்ந்தவள்
அதில் தாமிரச் சத்து அதிகமாம்
அவ்வா சொல்லுவார்
நாளை உங்கள் தலைமுறை
எட்டாவது கன்னியான
என் சன்னிதானத்தில்
வாக்கு கேட்டு வந்து நிற்கும்
உங்கள் சாதகத்தில்
எழுதிக்கொள்ளுங்கள்


Leena Manimekalai
Saturday, ‎May ‎30, ‎2015 10.40 pm
1 hr · Edited · 

அகாலத்தில் விட்டுச்சென்றவன் எழுதிய
ஆயிரத்தியெட்டுக் கடிதங்களின்
தேதியையும், நேரத்தையும்
அழித்துப் பார்க்கிறேன்
முடியவில்லை
வார்த்தைகளின் ஈரம் உலராமல்
தீயிலும் வேகவில்லை
திரும்ப வாசிக்க நேர்ந்துவிடுகிற துயரத்திலிருந்து மீள
தாய்மொழியை மறக்கும் சக்தியும் எனக்கில்லை
ஒரு சாபம் போல என்னை நீங்க மறுக்கும் கடிதங்களுக்கு
துரோகத்தின் கதையை சொன்னேன்
தற்கொலைப் படைவீரர்களின் வைராக்கியத்தோடு
ஒவ்வொன்றும் ஆழ்ந்த அமைதியுடன்
மரணித்தன

Leena Manimekalai
2 hrs · Edited · 
அந்தப் பட்டுப்போன மரத்தின் கிளைகளில்
கவிதைகளைக் கிறுக்க
பச்சையம் துளிர்க்கிறது
கைவிட்டுப்போன பறவைகள் திரும்புகின்றன
முதன்முறையாக எழுத்துக்கு
சன்மானம் பெற்றுவிட்ட கர்வம் எனக்கு


Leena Manimekalai
What if a betrayal haunts and breaks you into pieces inside? Super pretend that it doesn't affect you, laugh so loud that nobody can hear the sound of tears flooding like a wild river, get pre occupied with all the work that doesn't exist in "real", imagine yourself as a larger than life person and behave abnormally normal, try try and try to imagine all the love stories are ultimately the stories of betrayal!
https://www.facebook.com/lmanimekalai/posts/10152800672922645

Saturday, ‎June ‎13, ‎2015
When a natural disaster hits, we talk for years about the height of the waves, the ferocity of the wind, the power of the tremor that remade the landscape of our lives. But the emotional disasters in our lives go largely unacknowledged, their repercussions unclaimed.

Leena Manimekalai @LeenaManimekali ·  07--11--2014 8:00 pm

கமலா தாஸின் அடர்ந்த கூந்தலின் ஒவ்வொரு மயிரிழையாய் பிரித்தெடுத்து முத்தமிட்டுக்
கொண்டிருந்தபோது
கேரளப் போலீஸ் கைது செய்தது
இருவரையும் வேனில் ஏற்றினார்கள்
அங்கு சேப்போவும் அவ்வையாரும் ஆண்டாளும்,சில்வியா பிளாத்தும், ப்ரீடாவும் ஏற்கெனவே கை விலங்கிடப்பட்டு ஏற்றப் பட்டிருந்தார்கள்
எங்கள் கூட்டு முத்தங்களின் முன் செயலிழந்த போலீஸ் ராணுவத்தை அனுப்பியது
கவிதைகளை ஏவினோம்
எல்லா ஆயுதங்களும் அவற்றின் முன் தோற்றன
ராஜ தந்திர நடவடிக்கையாக
அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு 'மொழி' கடுங்காவலில் வைக்கப் பட்டது
முட்டாள் அதிகாரத்துக்கு தெரியவில்லை
முத்தத்திற்கு ஏது மொழி?
லீனா மணிமேகலைbedtime story:
"Franz Kafka, the story goes, encountered a little girl in the park where he went walking daily. She was crying. She had lost her doll and was desolate.
Kafka offered to help her look for the doll and arranged to meet her the next day at the same spot. Unable to find the doll he composed a letter from the doll and read it to her when they met.
'Please do not mourn me, I have gone on a trip to see the world. I will write you of my adventures.' This was the beginning of many letters. When he and the little girl met he read her from these carefully composed letters the imagined adventures of the beloved doll. The little girl was comforted.
When the meetings came to an end Kafka presented her with a doll. She obviously looked different from the original doll. An attached letter explained: 'my travels have changed me... '
Many years later, the now grown girl found a letter stuffed into an unnoticed crevice in the cherished replacement doll. In summary it said: 'every thing that you love, you will eventually lose, but in the end, love will return in a different form.'" —Kafka & the Doll: The Pervasiveness of Loss, May Benatar
charcoal drawing by Deanna Staffo


Leena Manimekalai shared a status update. 18 - 07 -2014
3 hrs · 
Art should comfort the disturbed and disturb the comfortable. ― Cesar A. Cruz 
{Courtesy Pravin Mishra}

https://www.facebook.com/lmanimekalai/posts/10152526842337645 13/07/2014

Letter to myself;

Dear Leena, I know you so much and wont let myself judge you. You flutter yourself like a wombwet bird every dawn only to have wings large enough to hide the sun to dusk. You are too bright for the dust to cloud you.
Remember, you are born with the readiness to love and dont forget to give more than you receive. Your soul is your home and is armoured with your fearless 'self'. Am sure that you will not let anything crush it.
You are your weather and you bloom a hibiscus with your own water and sun and soil, come what may, who may!
Kisses
Leena

https://www.facebook.com/lmanimekalai/posts/10152495559327645

என் கவிதைகளை சோளக்கொல்லை பொம்மைகளாக்கி திரித்து, கிழித்து, அடித்து, மூத்திரம்பெய்து, வக்கரித்து,அவரவர் மன இழிவுகளை இறக்கி வைத்துக் கொண்டிருப்பதாக அறிகிறேன்!நல்லது! யாவரின் வன்முறைக்கும் வடிகாலாக ஏதாவதொரு 'பயன்பாட்டு மதிப்பு' பிரதிக்கு இருப்பதைக் குறித்து ஒரு நீண்ட மூச்சை எறிகிறேன்!


https://www.facebook.com/lmanimekalai/posts/10152495590567645

எவ்வளவு அடித்தாலும் தாங்குவேன்
அடியுங்கள்
சதுரகிரி மலையடிவாரத்து
மாவூத்து தண்ணியில்
ஊறிய பழஞ்சோறு
தின்று வளர்ந்தவள்
அதில் தாமிரச் சத்து அதிகமாம்
அவ்வா சொல்லுவார்
நாளை உங்கள் தலைமுறை
எட்டாவது கன்னியான
என் சன்னிதானத்தில்
வாக்கு கேட்டு வந்து நிற்கும்
உங்கள் சாதகத்தில்
எழுதிக்கொள்ளுங்கள்

புரியாத ஒன்று - ஷண்முக சுப்பய்யா

என் சாதிபோல் உயர்ந்த ஒரு சாதி
இப்பூதலத்திலில்லை.
என் மதம் போல் மகத்தான ஒரு மதம்
இச்சகத்தினிலில்லை.
என் மொழிபொல் எழிலான ஒருமொழி
இவ்வூழியிலில்லை.
ஆனால்,
என் சாதியல்லாத சாதியில்
என் மதமல்லாத மதத்தில்
என் மொழியல்லாத மொழியில்
என்னைவிட சிறந்தவர்கள்
எப்படித்தான் பிறந்தார்கள்
லென்பதுதான் புரியவில்லை. 

சுபமங்களா - ஆகஸ்ட் ,1994, பக்க எண் 72
என்னுடைய உடல் 
ஒரு சிறைக்கூடமல்ல
 அதில் மொழி
 மாலை ஐந்து மணி வெயிலாகவும் 
 சிறு சாரலாகவும் அடித்துக்கொண்டிருக்கிறவரை!

Leena Manimekalai
11 hrs · 13/07/2014
Michael Rosen's Poem For The Children of Gaza:

In Gaza, children,
you learn that the sky kills
and that houses hurt.
You learn that your blanket is smoke
and breakfast is dirt.
You learn that cars do somersaults
clothes turn red,
friends become statues,
bakers don’t sell bread.
You learn that the night is a gun,
that toys burn
breath can stop,
it could be your turn.


‘We are also looking at our observers.
We Palestinians sometimes forget that - as in
country after country. the surveillance.
confinement and study of Palestinians is part
of the process of reducing our status and
preventing our national fulfillment except as
the Other who is opposite and unequal.
always on the defensive - we too are looking,
we too are scrutinizing, assessing, judging.
We are more than someone’s object. We
do more than stand passively in front of
whoever, for whatever reason, has wanted to
look at us

Edward Said, After the lost sky

byAna Matias
https://www.facebook.com/photo.php?fbid=10152525704137645


காற்றைத் திரித்து ....சுந்தர-ராமசாமி

நன்றி : https://www.facebook.com/pages/சுந்தர-ராமசாமி/168411476697548


காற்றைத் திரித்து
நகத்தைக் கிழிந்து
விளக்கேற்றி.....
ஊனைக் கரைத்து
உயிரைப் பிழிந்து
எழுத்தாக்கி......
நெஞ்சைக் குத்தி
விரலைத் தேய்த்தும்
படைத்தேன்

திரியை எரித்தது விளக்கு

விளக்கை அணைத்தது காற்று
விரலையும் கரைத்தது குருதி

எனினும்

என்னை அழிக்க யாருண்டு
எழுத்தில் வாழ்பவன்


•                               •                                   •


இரங்கற் கூட்டம்போட ஆட்பிடிக்க அலையாதே

நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே .

இருப்பினும்

நண்ப,

ஒன்று மட்டும் செய்.
என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
'கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்து விட்டான்' என்று மட்டும் சொல்.

உன் கண்ணீர் ஒரே ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு.

•                               •                                   •


இப்போது நான் மீண்டும்....

இப்போது நான் மீண்டும்
நண்ப, எனக்கு உறக்கமில்லை
இருளின் செழுமை சேர்த்து
ரகசிய அறைகளில் நெசவாகிக்கொண்டிருக்கும்
இனங்கூற முடியாத ஏதோ ஒன்று நெற்றிப்பொட்டை
சதா தாக்கிக்கொண்டிருக்கிறது


இன்று அதிகாலை வாசல் கதவைத் திறந்தபோது
எதிரே சீரழிவின் துள்ளி மறியும் கோலம் ஒன்று
இன்றுவரை (உன்) அன்பைச் சொல்வதில்
தோல்வியே தொடர்கிறது

அன்பு என்பது ஆபத்து
இசை என்பது அவசரம்
கலை என்பது கொலை

அச்சுக் காட்டில் முளைத்து நிற்கும்
அறிவின் அகங்காரம்
கண்ணீரைத் துடைக்க முடியாது

(என்) துக்கத்திற்கு விடுமுறை இல்லை என்பதறிவேன்
இருப்பினும் அது சற்றுத் தூங்கினால்
நானும் சற்றுத் தூங்கமுடியும்

சதா ஒரு சத்தம்
செவிப்பறையைத் துளைக்கும் இரைச்சல்
சந்தடி: அவலங்களின் கோலங்கள்
நடுநெஞ்சில் அவலம் பீறிட்டது

மீண்டும் இறந்தேன் நேற்று

ஆனால், வருவேன் மீண்டும்
வருவேன் என்று என் முன் சொன்னவன்
வந்த பின் வருவேன் நான்.

•                               •                                   •

ஓவியத்தில் எரியும் சுடர்

அந்த ஓவியத்தில் எரியும் சுடரை
கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை
அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன
தன் விரல்நுனிகளால்
எரியும் சுடரைத் தொடத்
துடிக்கிறது அதன் மனம்
சுடர் அருகே
தன் விரல்களைக் கொண்டுபோன பின்பும்
தயங்கி
மிகத் தயங்கி
தன் தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது
அந்தக் குழந்தை
அந்தச் சுடர்
தன்னை எரித்துக்கொண்டே
ஓவியத்தை எரிக்காமல் இருக்கும் விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அந்தச் சுடர்
உருவாகி வந்தபோது
ஓவியாவின் விரல்களை எரிக்காமல் இருந்த விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அழிக்காமல் எரியவும்
அழகாக நிற்கவும்
எப்படிக் கற்றுக்கொண்டது அது ?
குழந்தையின் விரல்களில் அப்போதும்
வியப்பு துடித்துக்கொண்டிருக்கிறது.

•                               •                                   •

அது குழந்தை ..


மொழியை வலையாக மாற்றி
வீசிப் பிடிக்க முயன்றபோது
கிழித்துக்கொண்டு வெளியே ஓடிற்று உண்மை
பிடிக்கப் பின்னால் பாய்ந்தேன்
பலன் இல்லை ..
மூச்சுத் திணறி சோர்ந்த சரிந்தேன்
பின் ஏதேதோ யோசனைகள்
தூக்கம் ..
கண் விழித்ததும் குழந்தைப்போல்
மார்பில் அமர்ந்திருந்தது உண்மை
மௌனம் பிடிக்கும் என்றது
யோசனை பிடிக்கும் என்றது
அதிகம் பிடிப்பது

அன்புதான் என்று சொல்லிச் சிரித்தது ..


•                               •                                   •

உறவு ..


உறவு அது அப்படித்தான்
கவர்ந்திழுக்கும் அத்தர் நெடியடிக்கும்
அணைத்துப் பிசையும் பூப்பூவாய்ப் பூக்கும்
மனங்கள் இணைத்து ஆக்கங்கள் மலரும்
காலடியில் அடிவானங்கள் குவியும்
அதன்பின் எகிறிக் குதித்து இரத்தம் கசியும்
துருவின் துகள்கள் புற்றுப்போல் குவிந்து
பார்வைகள் திரியும்
கசப்பு மண்டி அடித்தொண்டை அடைத்து
மலக்கிடங்கில் விழுந்து சாகும்
மீண்டும் உயிர்த்தெழுந்து வாசம் பரப்பி
வளைய வரத் தொடங்கும்.

•                               •                                   •

எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க, அது அதற்கான இடைவெளி தேவைப்படுகிறது.

சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி.•                               •                                   •

“எழுதிட்டே இருங்க. எழுதறதுதான் மருந்து…” எழுதினால் அம்மாவை மறக்க முடியுமா என்றேன்.


“மறக்கிறதாவது? இன்னும் துல்லியமா ஞாபகத்தில் பதிவாங்க. ஆனா எழுத்தில் இருக்கற நினைவுகளில வலி இருக்காது. ஏன்னா மத்த நினைவுகளில காலம் பின்னால ஓடுது. நாம முன்னால இருக்கோம். எழுத்து எவர் டைம்லைன்னா இருக்கு…” எழுத்தின் வலிமை பற்றி பல தடவைகளிலாக சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். அவமானங்கள், இழப்புகள் போன்ற தாங்க முடியாத விஷயங்களைக்கூட எழுதும்போது இனிமையாக மாற்றிக் கொள்ளலாம். எழுத்து உருவாக்கும் உலகம் எப்படியோ தன்னை இனிதாக்கிக் கொள்கிறது. “…ஏன்னா, நிஜ வாழ்க்கையின் துன்பங்களில் ஒரு சாரம் இல்லை. இருந்தா அது நமக்குப் புரியறதில்லை. அந்தத் தத்தளிப்புதான் துக்கமே. அப்பத்தான் மனசு கிடந்து அலையடிக்குது. மரணம், அவமானம், இழப்பு, பிரிவு….. ஏன் ஏன்னுதானே நம்ம மனசு கிடந்து தவிக்குது. எழுத்தில அதெல்லாம் வாறப்ப நமக்குத் தெரியறது ஏன்னு. அதான்….”


# ஜெயமோகனின் “சுந்தர ராமசாமி – நினைவின் நதியில்”.


•                               •                                   •


நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம்.


•                               •                                   •


ஒரே ஒரு கவிதை
போதும்

இந்த ஜென்மம் பொருள்பட
என்பது
என் நம்பிக்கை

அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்.


•                               •                                   •


வீணை ஒலியோடு ஒரு சூட்சமமான கணத்தில் அவள் குரல் இணைவதும் மற்றும் ஒரு சூட்சமமான கணத்தில் அவள் குரல் நழுவ, வீணை தனித்து ஒலிப்பதும் என்னை வாரிச்சுருட்டும்.

அவள் எனக்காக அங்கு இருக்கிறாள். என் வருகையை எதிர்பார்த்து. என்னை பார்க்க வேண்டும் என்பதை தவிர அவளுக்கு வேறு துக்கம் இல்லை. நானோ துடித்து கொண்டிருக்கிறேன்.

என்னால் ஓடிப்போக முடியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் நடந்து போய்விட முடியும். அவள் இருப்பிடம் எனக்கு தெரிய வேண்டும்.

அந்த வீணை ஒலி மீதேறி நான் போக முடியுமா? தூரங்களை ஒலி மூலம் கடக்க முடியுமா?

--சுந்தர ராமசாமி ஜே ஜே சில குறிப்புகள்


•                               •                                   •


ஜே ஜேயை நான் சந்திக்கும்போது உடல் தாண்டி, மொழி தாண்டி, எங்களுக்குள் ஆத்மீகப் பிணைப்பு ஏற்படும் என்று நம்பினேன்.

கருத்து உலகங்களிலும் இலக்கிய உலகங்களிலும் சகபயணிகளாக நாங்கள் யாத்திரை செய்வோம்.நேர் சந்திப்புகள் அடிக்கடி நிகழும்.

அவனிடமிருந்து நான் தெரிந்துகொள்ள வேண்டியவை எவ்வளவோ. சர்ச்சைகள் . தெளிவுகள் . அறியாத உலகங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

கருத்துகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொள்ளத்தக்க தோழமை. மனம் எப்படி ஏங்குகிறது ஏன் இதற்கு…!

•                               •                                   •

“கலைஞன் மரணத்தை ஏற்க மறுத்து, தனக்கே உரித்தான சப்தங்களை விட்டுவிட்டுச் செல்கிறான். அவனுடைய சப்தங்கள் மூலம் நாம் அவனை நூற்றாண்டுகள் தாண்டிச் சந்திக்க முடிகிறது. மனிதனைப் பரவசத்தில் ஆழ்த்தும், புல்லரிப்பில் ஆழ்த்தும் என் சப்தத்தை விட்டுவிட்டுப் போக வேண்டும்”

•                               •                                   •

......

ஆனால் தன் ஆயுளுக்குப் பின் நிதி வழங்கப்படும் காலத்தை மட்டுமே நம்பி ஒரு எழுத்தாளன் வாழ நிர்ப்பந்திக்கப்படுவது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தின் இருப்பைக் காட்டவில்லை.

அரசியல், கல்வித்துறைகள், இலக்கிய அமைப்புகள், திரைப்படங்கள், சமய நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் வணிக மதிப்பீடுகளை ஏற்றுக் கொண்டு குறுகிய வழிகளில் செயல்படுவதைப் போற்றும் ஒரு சமூகம் நோயுற்ற ஒரு சமூகம் என்பதில் தவறில்லை.

இந்த நோயின் காரணமாக மேலான மதிப்பீடுகள் இன்று முற்றாகச் சரிந்து விட்டன.மட்டுமல்ல தாழ்ந்து கிடக்கும் மதிப்பீடுகள்தான் நடைமுறை சாத்தியமானவை என்ற நியாயமும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

வணிக சினிமாவின் சீரழிந்த மதிப்பீடுகள்தான், தமிழ் அறிவுவாதிகள் என்று கூறிக் கொண்டு நெளியும் அநேகரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அடிப்படையில் இது நிலவுடைமை சமூகத்தின் மதிப்பீடுகள் ஆகும்.

யார் உண்மையில் அறிவுவாதிகளோ, யார் தரத்திற்காகவும் மேன்மைக்காகவும் நிற்கிறார்களோ அவர்களை மக்களுக்குத் தெரியாது. யார் யாரை மக்களுக்குத் தெரியுமோ அவர்கள் மக்களின் அடிப்படை நாகரிகத்தையே சிதைத்து அந்தச் சிதைவிலேயே தங்கள் குறுகிய நோக்கங்களின் வெற்றிகளில் திளைப்பவர்கள்.

Monday, June 23, 2014

ஒருவேளை - சுகிர்தராணி

நன்றி : http://paradise-within.blogspot.in/2006/11/blog-post_19.html


ஒருவேளை

தோலினால் அடி தைக்கப்பட்டக்
கூடையுடன் அவள் கிளம்புகிறாள்
முனைமழுங்கிய இரும்புத்தகடும்
சேகரிக்கப்பட்ட சாம்பலும்
அவள் கைகளில் கனக்கின்றன.
மனித நெரிசலில் திணறும்
வீடொன்றின் பின்புறம் வந்து நிற்கிறாள்
பார்வையில் படுகிறது.
ஆணியில் சுழலும் சதுரத்தகடு.
ஒற்றைக்கையால் அதை உயர்த்தியபடி
சாம்பலையள்ளி உள்ளே வீசுகிறாள்
பின்
துளையின் முரட்டுப் பக்கங்களில்
முழங்கை சிராய்க்க
இடவலமாய் கூட்டிக் கூட்டி
கூடையில் சரிக்கிறாள்.
நிரம்பிய கூடை தலையில் கனக்க
நெற்றியில் வழியும் மஞ்சள்நீரை
புறங்கையால் வழித்தபடி
வெகுஇயல்பாய் கடந்து போகிறாள்,
அவளுக்காக என்னால் முடிந்தது
ஒருவேளை மலங்கழிக்காமலிருப்பது.

Thursday, June 19, 2014

எல்லாம் என்பதுபற்றி ஒரு கவிதை, ஒரு கவிதை - நகுலன்

எல்லாம் என்பதுபற்றி ஒரு கவிதை - நகுலன்

வந்தது Zack
எப்போதும் போல்
துயிலிலிருந்த எழுந்தது போன்ற
ஒரு சோர்வு
அவன் முகத்தில்
எப்போதும் அப்படித்தான்
தோல் பையைத் திறந்து
குப்பியை எடுத்ததும்
நான் உள் சென்று
ஐஸ் கொண்டு
வந்ததும்
சரியாகவே இருந்தது
அவன்
ஓவியங்களை நான்
பார்த்திருக்கிறேன்
அவைகளும்
ஒரு குழம்பும் மயக்க நிலையைத்
தான் தெரிவித்தன
வண்ணக் கீறல்கள்
இருட் பிழம்புகள்
தாரளமாகவே
இருவரும் குடித்துவிட்டு
அடிமட்டத்தை
அணுகிகொண்டிருந்தோம்
அப்போது
அவன் சொன்னதும் அதை
நான் கேட்டதும்
இன்னும் என் பிரக்ஞையில்
சுழன்றுகொண்டிருக்கிறது
“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை”
இதைச் சொல்லிவிட்டு
அவன் சென்றுவிட்டான்.

ஒரு கவிதை - நகுலன்

சின்னஞ்சிறு
சிட்டொன்று
சென்று திரிந்து
‘விர்’ரென்று பறந்து வந்து
அது திரிந்து பறந்ததும்
வந்து இருந்ததும்
மனதில் மறைய
இலையசையும்
கிளையொன்றில்
வந்து அமரக்கண்டு வியப்பெயதி
கண் தவற
கருத்து உயர
கண்டு நின்ற
என்னைக் கண்டு
“ இதுவா கவிதை ?
கவிதை இதுவா ? ”
என்று சிரித்தது
ஒரு பூதம்.

-ஞானரதம், 1972

கீழ் கண்டவற்றுக்கு நன்றி
 :  https://twitter.com/nagulankavithai
இருப்பதற்கு என்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை மூலவராய் நினைத்து எவ்வளவு ஏமாற்றங்கள்