தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, January 28, 2018

மௌனி - சுந்தர ராமசாமி :: கொல்லிப்பாவை சிற்றிதழ் :: ஜூலை 1985

இசைவால் இயலும் உலகு!
Photo shared on
‎February ‎14, ‎2018


மௌனி

சுந்தர ராமசாமி

" திரை அருகில் இருந்தாலும், அப்புறம் என்ன என்று அறியக் கூடவில்லை; நீக்கியும் கண்டு சொல்ல முடியவில்லை.”

மெளனியின், 'எங்கிருந்தோ வந்தான்' சிறு கதையில் பத்மாவின் கூற்று.

மெளனி மறைந்து விட்டார், மரணம் அவர் மீதும் கவிந்து விட்டது.

மரணம் அதன் பாரபட்சமற்ற தன்மை. யும் நிச்சயத் தாக்குதலையும் ஒவ்வொருமுறை நிரூபிக்கும்போதும் நாம் மீண்டும் அதிர்ச்சி கொள்கிறோம். மரணத்தை சகஜமாகக் கண்டு, அதன் வருகை வரையிலும், முன் கூட்டிக் கணிக்க இயலாத வாழ்வின் இதழ் விரிப்புக்களைப் புதுமையாகக் காணவேண்டிய நாம், அனைத்தையும் பழமையாகக் கண்டு, ஆகப் பழமையான மரணத்தை மட்டுமே புது மையாகக் காண்கிறோம்,

இவ்வாறெல்லாம் யோசித்த பின்னரும் மனதை வெறுமை கவ்வுகிறது. மாற்றாக மெளனியின் படைப்புலகத்தை மீண்டும் இப் போது நினைவு கூர்ந்து பார்க்கலாம். அவர் படைப்புக்கும் நமக்குமான உறவை துல்லியப்படுத்திக்கொள்ள மீண்டும் ஒரு பிரயாசை நாம் எடுத்துக்கொள்வோம் என்றால் அதுவே நாம் அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

மெளனி மறைந்து விட்டார். ஆனால் அவருடைய படைப்புலகமோ இதோ இப்போ தும் நம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் இப்போதும் நாம் அதன் உள்ளே நுழைய முடியும், முன் எண்ணங்களை உதறி விட்டு, மன வாசல்களையும் சற்றே திறந்து வைத்துக்கொண்டோம் என்றால், மெளனியின் எழுத்துருவம் ஒரு புதிய பரிமாணத்தை இப்போதும் நமக்குத் தரக்கூடும்.

வாழ்வை உள்ளடக்கிக் கொண்டு, ஆனால் முற்றாக அதை விளங்கிக் கொள்ள முடியாத பிரமிப்பை எப்போதும் நமக்குத் தந்தபடி சுழன்று கொண்டிருக்கும் இந்த ஆகர்ஷண மண்டலத்துக்கு மேலே, மற்றொரு சிறு ஆகர்ஷண கோளமாக அந்தரத்தில் தொங்குகிறது மெளனியின் படைப்புலகம். தெளிவும் தெளிவின்மையும், சிறிது வெளிப் படையும் அதிக ரகசியங்களும், காரிருளும் மின்னற் கீற்றுகளும் கொண்டகோளம் இது. ஆனால் விடாது நம்மை ஆகர்ஷித்து, களைப்பின்றிப் பின் தொடர்ந்து விரைய, சுகமான வற்புறுத்தலை தந்து கொண்டும் இருக்கிறது. இந்த மண்ணின் வெளிப்பாடுகளுக்கும் அந்தரத்தில் தொங்கும் இந்த ஆகர்ஷண கோளத்திற்குமான வேற்றுமைகள் வெளிப்படையானவை, மண்ணின் கோலங்களையோ, ஸ்தூலப் பிரதிபலிப்புக்களையோ, இயந்திர வியாபகங்களையோ லெளகீக நியதிகளையோ பிரதிபலிக்க மறுத்த கோளம் இது. வீச்சின்றிச் சுருங்கி தன் மண்ணையும் உதறி விட்ட இந்தச் சிறிய கோளம் நம்மை ஏன் ஆகர்ஷிக்க வேண்டும்? நம் தளத்தை அது நிராகரித்தது போல் அதையும் நமக்கு ஏன் நிராகரிக்க முடியாமற் போயிற்று?

ப பிரதிபலிப் கோலங் வெளிப்படைத

படைப்பாளியின் மறைவு, அவன் படைப்பின் மீது நமக்கு அனுதாபத்தை ஏற்படுத்தும் என்றால், படைப்பை விடப் படைப்பாளி முக்கியம் என்றாகி விடும், காலத்தை முறியடிக்க முன்னும் கலையை ஒருவன் உருவாக்கிய பின்னரும், காலத்தால் வீழ்ந்து விடும் உடலை, பற்றிக் கொண்டிருக்க முடியுமா? தன் அழிவுக்கு எதிராக காலத்தின் மீது நகர்த்த, தனக்கென்று எதுவும் இல்லாத உடலாகக் கலைஞனை எப்படிக் காண முடியும்? மெளனி என்ற ஜீவிதத்தின் அர்த்தம் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கே உரித்தான வியாகூலங்கள், சஞ்சலங்கள், அழகின் மின்னல்கள், திக்பிரமைகள், பரிதவிப்புக்கள் எல்லாம், தனி மனிதனின் வாழ்வுபோல் அலங்கோலமாக இல்லாமல், கட்டுமானத்துடன், பொருள்சார்ந்த வடிவத்தில் நம்முன் இருக்கிறது அது.

புற வீச்சின் வியாபகத்தை, படைப்புத் தேவை சுருக்கிக்கொண்டு விட்டமெளனியின் எழுத்துக்களில் எப்போதும் ஒரு வாலிபன் வருகிறான், அவன் காதல் ஏக்கம் கொண்டிருக்கிறான். காதலில் தன்னைக் கரைத்துக் கொள்வதில் உவகை பொங்க நிற்கிறாள்

அவன் காதலிக்கும் யுவதியும். இந்த இரு ஜீவன்களில் இடையே நிகழும் ஆகர்ஷணம் மனத்தளத்தில் விரிந்து, புறத்தளத்தில் சிறிது நிகழ்கிறது. ஆகர்ஷணம் அல்ல; ஆகர்ஷணத்தின் விளைவான வியாகூலம்தான் தொடர்ந்து இங்கு மீட்டப்படுகிறது. இந்தச் சோக மீட்டலுக்கு அழுத்தம் தரும் ஸ்வர ஸ்தானங்களும், நாதங்களும், பின்னணிகளுமே இந்த மண்ணிலிருந்து இவர் படைப்பில் இட்ம் பெறுகின்றன. சோகம் கவிந்து நிற்கும் மனதிற்குச் சுருதிகூட்டவே புறஉலக வர்ணனைகளும் பயன்படுகின்றன. பரஸ்பர ஆகர்ஷணத்திலும் பிரிவிலும் வியாகூலமுறும் இந்த ஜீவன்களின் ஜோடிகள் ஒருவரையொருவர் அதிகம் அறிந்தவர்களும் அல்லர். ஒரு ஜீவன் மற்ருெரு ஜீவனை செய்தி வசமாகவே அறிந்திருக்கிறது. அல்லது தூரப்பார்வையில் சிறிது தெரிந்து கொண்டிருக்கிறது. அல்லது கிட்டப் பார்வையில் சற்றே அதிகமாக உணர்ந்துகொண்டிருக்கிறது. அறியநேர்ந்த இந்தக் கீற்று அனுபவங்களைச்சார்ந்து அல்ல; இக் கீற்றுக்கள் உருவாக்கும் கற்பனையைச் சார்ந்தே காதலின் ஆகர்ஷணம் உள் பெருக்காக மனங்களில் மண்டுகிறது. ஒரு போதும் இந்த ஜீவன்கள் இணைவதும் இல்லை. இணைவதற்கான பிரயாசைகள் மேற்கொள்வதும் இல்லை. வாழ்வின் தளத்தில் கூடி முயங்கும் உன்னிப்பும் இவர்களுக்கு இல்லை. கூடிமுயங்குவதில் பெறும் இன்பத்திற்காக அல்ல; பிரிவின் துக்க லகரியை உண்டு, கவித்துவப் புலம்பலுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்ளவே ஆகர்ஷணம் கொள்ள முன்னுவது போல் நம்மை எண்ண வைத்து விடுகின்றன இந்த ஜீவன்கள். இவ்வாறு இணைய முடியாமற் போனதற்கு, இளமையில்பாய்ந்து குறுக்கிட்டு ஒருவரை விழுங்கி விடும் மரணம், எப் போதும் ஒரு காரணமாக இருக்கிறது. மரணத்தின் சொரூப உக்கிரம் கூட அற்ற அற்ப அபத்தங்களுங்கூட காரணங்களாகி விடுகின்றன. எப்படியும் அடைய முடியாமற் போகிறது. இதுதான் முக்கியம். அடைவதற்காக ஜீவனைப் பிடுங்கும் வேட்கையும், அடைய முடியாமற் போகும் அவலமும். இதுதான் மெளனியின் மையமான தந் இதையே வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு பின்னணிகளில் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு கோலங்களில் அவர்மீட்டுகிறார், மௌனியின் கலையில் காதலைச் சார்ந்து நிகழ்த்தப்படும் இந்த அவலங்கள் நம் அனுபவத்தில் முழு வாழ்வையும் தொட்டு விரிவு கொள்கின்றன.

மெளனியின் கலைக்கும் நம் வாழ்வுக்குமான தொடர்பு மந்திரவாதிக்கும் கண் கட்டு வித்தைக்குமான தொடர்பைப் போன்றது. வாழ்வின் தளம் போல்மந்திரவாதியும் நிஜம். பொருள் வேண்டி நிற்கும் வாழ்வின் நிலையை மெளனியின் கலை ஏற்றுக்கொண்டிருப்பதால் தான் அவலப் பூச்சான அவரது கலைக் கண்கட்டு வித்தைகள் நம் மீது ஆழ்ந்த அர்த்தத்தைப் பாய்ச்சுகின்றன. வாழ்வின் நிலையில், கனவு, ஸ்திதியின் குரூரம், அவலம் மூன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாமற் பின்னிக் கிடக்கின்றன. இவ்வனுபவங்களின் மையம் மெளனியின் கலை உலகத்தின் மையத்தால் அதிர்வு கொள்கிறது. அங்கு காதலுக்கு எதிராக முறிவுகள், கனவைப் பறிக்கும் மரணங்கள், இசைக்கு எதிராக அபஸ்வரங்கள், தோற்றத்துக்கும் நிஜத்திற்குமான முரண் நிலைகள், என்ன ஏது என்று தெரியாத புதிர் திக்பிரமை.

நமது போதாமையை எப்போதும் நாம் உள்ளூர உணரும் வகையில் வாழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதாமை நம்மை வருத்தம் கொள்ளச் செய்கிறது. அள்ளி அள்ளிப் பிடிக்கும்போதும் பிடிப்பை வழுக்கிக் கொண்டு தூர தூரப் போகிறது வாழ்க்கை. நாம் நம்மை காட்டிக்கொள்ள விரும்பும் முக மூடிகளுக்கு அப்பால், நமது சித்தாந்தங்களுக்கும் தத்துவங்கழுக்கும் அப்பால் நமது மரபு சார்ந்த வலுக்களுக்கு அப்பால் உள்ளூர போதாமையின் துக்கம் நம்மை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறது. எதையும் முற்றாக அறியவோ, அணைக்கவோ, சொந்தமாக்கிக் கொள்ளவோ, நம் விருப்பம் போல் இயக்கவோ முடியாமற்போகும் போதாமை இது. இந்த அபூர்ணத்தின் துக்க நிலையை மொனியின் கலை ஸ்பரிசித்து மீட்டுகிறது. காதல் எனும் முகாந்திரத்தை முன் நிறுத்தி எழுப்பப்படும் மீட்டல்களின் அதிர்வுகள் முழு வாழ்வுக்குமாக விரிகின்றன. அந்தரத்தில் தொங்குவது போன்ற இவரது ஆகர்ஷண கோளம் வாழ்வின அபூர்ணத்தின் குறியீடே. இவரது மொத்தப் படைப்பும் ஒரு குறியீடாகத் தோற்றம் தரும் வலுமையும் இறுக்கமும் கொண்டது.

Sunday, January 21, 2018

உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை - கோணங்கி : நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு 11_1995.

WWW.padippakam.Com
நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு
சிறுகதை


உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை - கோணங்கி




அன்புள்ள மார்க்ஸ் அவர்களுக்கு தாமதமாகிவிட்டது பிரதியை திரும்பத் திரும்ப முடிக்க.


நிறப்பிரிகை இலக்கிய மலருக்கு.

கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் மரத்தில் முகத்தை மோதி ரத்தமும் புனைவும் ஒழுக ஊளையிட்ட அலிகளின் ஒலம் பத்தாயிரம் நரிகள் சிரித்த தான வாதவூரார் 'அன்று இரவில் பரி கள் நரியாக மாறி சிரிசிரியென சிரித்த 5ானகச் சிரிப்பு தோற்றம் கொள்ள உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை.


பதிவு :

27-6-96.

முன் அறியப்படாத உயரமான மஞ்சள் நிற அலியின் தலைமுடியின் வாசனை அந்த அறையை ஊடுருவி இருளில் புறண்டு மூச்சு விட கருங்குழல் நாசிகள் கைகளில் ஈரம் படரத் திறந்து கொண்ட ஒற்றை முடிச் சுருளில் இவன் இருள் கோடாய் நீண்டு நகர்ந்து கீழிறங்கிய அலியின் கேச அலைப் படிகளில் சுவாசித்த கல்மூங்கில் குரல் பல வாய் மாறி மாறித் தேம்ப புதர் நரம்புகள் விம்மி எழுந்த வெந்நாகப் பூவால் அதிரும் வண்டுகளின் மோனம் முகம் முகவாய் வந்து குழல் மூங்கிலைத் துளைந்து ரீங்காரமிட தீவிரமாய் எரியும் காற்றை செங்காந்தள் விரல் வளைத்துச் சுருட்டும் இசை துடித்து ஒடும் நடுக்கத்தில் அதுவரை கேட்டிராத மிருக உறுமல் கல் மூங்கிலில் ஊடாடி அலறித் தொலைந்து மஞ்சள் அலியின் வியர்வை நெடி அரும்பி மெல்லிய ஒநாயின் ஊளையாய் பரவி பூவின் அருகே செல்ல ஒநாய்களின் மெளனமான கேள்விகள் ஏன். எங்கே. என பிலத்தில் மின்னிய பளிங்குப் பற்கள் தீமுறிப்பூண்டு வாசனை நெடிக்க பற்களின் ஊசிஒளி கண்களாக மாறி ஈர்த்த கற்சுவர் சூழ்ந்த குகையில் வெறிமிக்க குரைப்புகள் ஆழத்தில் தேய்ந்து நாலுகாந்தப் பூவைத்தொட மஞ்சள் நீள விரல் படியில் கல்மூங்கில் மூச்சுக்குள்ளிருந்த சிறுத்தைத் தோல்கொண்ட யுவதி வால் சுழற்றிச் சிரித்தாள் அருகில்.

கரையும் கல்மூங்கில் பாசீ. பாசீ என தண்டில் சுட்ட தீத் துளைகள் ஆயிரம் வாசித்த மிருக மூர்க்க மூச்சின் நிறம் கலந்து சிறுத்தை முகம் திரும்பிப் பார்த்தது மஞ்சள் அலியை, எலும்புகளுக்குள் புகுந்து சுழலும் காற்றில் சிறுத்தையின் பாடலை வாசித்தான் மயங்கியவாறு மறைந்த மிருகத் தாலி உறிந்து அதிரும் ஊனின் வெறிமிக்க வாத்தியம் காட்டுப் பகடைகள் முழக்க சுடுவனப் புலால் கடிபடும் எலும்பின் ஓசை சிக்கிமுக்கியில் உராய பரவும் தீயில் தவில் விரல்கள் எரிந்து பரபரக்க அலியின் காதருகில் இல்மூங்கில் அசைந்து விலா எலும்புச் சுருளில் சரம் ஒட ரத்தம் சூடேறப் பாடு சிறுத்தையின் பாடலை. சலஞ்சலச் சங்கும் வலம்புரியும் கபாலங்களால் ஊத கருங்கிளி பாடுகிறது அதோ' என்றது கல்மூங்கில். ‘கருங்கிளிதான் பாசீ சகஜாதி என அறியப்பட்ட சதுர் கூடத் தூணில் மறைபவள்’ என கலமூங்கில் ரகசியம் சொல்ல சிறுத்தையானாள் பா சீ. ரகஸியக் குகையில் கருங்கிளி மறைந்து சொன்ன குகையின் வடிவத்தை துளை துளையாய் திறந்து மூடி மறைத்து மூச்ச விழ்த்து சொன்னது கல்மூங்கில்.

உப்புக்கத்தியுடன் சிறுத்தைக்கு அருகில் சென்று பாசீ. என கொஞ்சமாக முனகினான் அலி. பாசி. இல்லை" என்றது கருங்கிளி மறைந்தவாறு உப்புக்கல் பலகையில் கத்தியை ஒடவிட்டு மடித்துத் திருப்புகிறான் உரசி. சிறுத்தையின் கண்ணுக்கும் நாசிக்கும் மிக நெருக்கமாக நகர்த்தி அதன் மென்தோலில் படாமல் நக அளவு இடை வெளிமேல் தீட்ட வடிவொத்த சிறுத்தை யொன்றின் ரூபத்தை அபிநயித்து கத்தியால் றிே கோடுகள் பதித்தான் வேகத்தில், நழுவி ஒடிய சாம்பல் கத்தியின் வெளிச்சத்தில் உதிர வாசனையை நுகர்ந்து கேவுகிறான் சப்தமில்லாவல். சிறுத்தையின் மூச்சு வெப்ப மாய் கத்தி விளிம்பைத் தொட எரியும் குருதியின் இசை கூர்முனையில் நடுங்கி நேர் பளபளப்பில் ஊர்ந்து நகரும் எரியும் குருதி கல்மூங்கிலில் துகள் துகளாய் உறைந்த உப்பாகி மூங்கில் இசையை உறையவைத்த உதிர உப்பு சாம்பல் வனங்களின் காற்றாகி பயங்கரச் சடங்குகளில் ஊதும் பாஞ்ச சன்னியமெனும் வலம்புரி அடைத்த மூச்சு விம்மி பாறைகளும் குன்றுகளும் உப்புப் பளிங்குகளாய் வெண்மை கொள்ளும். இவனை ஆட்கொண்ட மூச்சின் திணறலோடு உப்புக் கத்தியால் காற்றை துண்டிக்க ஒடிஓடி உறைந்து போகிறான் காலத்தில்.

உப்புப் பாறை மீது சிறுத்தை அமர்ந்து பாஞ்சசன்னிய முழக்கமிட சாம்பல் வனக் குன்றுகளில் மறுகுரல் கேட்கும். கல்மூங்கில் உப்புத் துளைகளில் சிறுத்தைப் பெண்ணின் நாசி ஈரம் தொட மெல்லிய வெண்குருதியோடு காற்று கரகரக்கிறது. உப்புக்கல் பறக்கும் வனமூங்கில் காற்று அநாதியில் உறைந்த குரல்களோடு மீண்டு வர உறைந்த விலா எலும்பிலிருந்த மூச்சு சுழன்று பறவைக் கூட்டமாய் உள் சுழல்கிறது. பறவைக் கூண்டெனும் சிறுத்தையின் எலும்புக் கூடில் சுண்ணாம்புநிற் கடல் ஆலாப்பறவை அலைவுறுகிறது துயரத்தில், பாஞ்ச சன்னிய முழக்கத்தில் பறந்த சுண்ணாம்பு நிற ஆலா கிறீச்சிடும் உப்புவனப் பாறைப் பிள்வுகளின் மூச்சு சிறகில் படர சிறுத்தையின் பாடல். பில வாயில் திறந்து அழைக்கும் வெண்சாம்பல் ஆலா அலறிப் பறக்கும் உப்பின் பளபளப்பான வளி மண்டலச் சூறையில் சிறகு பதித்த தடம் உறையும் மெல்ல.

நெஞ்சுத்தடம் மீதுவைத்த சிறுத்தையின் காலடி கவ்விய நகப்பிடியில் இவன் ஈரல் காமத்தில் எரிகிறது காந்தலாய், சிறுத்தையின் அருகில் திரும்பிய உப்புக்கத்தி கேச அலையை நீவி அதன் அலாதிக் கஸ்தூரி நெடியில் மூழ்கிய கத்தியின் வெளிச்சத்தை தவறவிட மெல்ல சரிந்து நழுவி அலைகளுக்குக் கீழே சென்று மூழ்கியபடி பளிச்சிடும். தைல அலைமிதப்பின் ஆழ்தொலைவில் தத்தளிக்கும் உப்புக்கத்தியில் சுடரும் அசைவில் பருகாத குருதி நெடிக்கசிவின் துர்கந்தம் கருநத்தையின் நீலநிற ரத்தம் கத்தியில் கோடாய் நீண்டுவர குரல் அறு பட்ட புள்ளொலிக் கூட்டமும் மீன் எறி சிரல் பறவையின் இனிய ரத்தமாகி சாம்பல் கத்தி ஊர்கிற அலையலையான கேச அலைச் சுருள் படிகளில் அலறும் குருதி தோய்ந்த சிச்சிலி சிறுபறவைகள் வழிமாற பாறைகளில் அலகு தேய்த்த பூழான் பறவைகள் இருளில் புதுங்கி வா. வா. என அழைக்கும். கேசச் சுருளில் இறங்கி மஞ்சள் அலியின் நிசப்தமான ஞாபகப்பரப்பில் கால்படாமல் உப்புவனத்தின் வெண் நிறப்பரப்பில் நடந்து போகிறாள் தனிமையில், உள்கொண்ட வெறுமை வெளியில் படர்ந்து மயக்கமடைந்து உப்புப்பாறையின் அடியில் சிறுத்தையின் தடம் பற்றி உள்போய் உள் போய் மயங்கித் திரிந்து கொண்டிருக்கிறாள் தீராமல், வளைத்துக் கொண்ட மிருகங்களின் கண்களில் வெண்பூ இதழ்விரிந்த நிலப்பரப்பில் முன் அறியப்படாத மஞ்சள் அலியின் வாசனைகளில் என்றுமே காணாத பெண்சாயைகள் நிர்வான விளிம்பில் மிருக வால் சுழற்றி கண்களை மூட அருகே போய் வெப்பம் தாங்காமல் கதறுகிறாள் மிருகங்களைக் கண்டு. அவற்றின் மாம்ச அணைப்பில் நழுவிவிழுகிறாள் பாறைகளில்,

குறுத்துப் பாறையில் அமர்ந்து நட்சத்திர ராசிகளோடு உரையாடும் சிங்கத்தை அருகில் காண விரல் நீண்டபோது அதன் கேசக்கற்றையில் கதிர் விரியும் சூரியன் ஒலத்துடன் பறந்து சரிகிறது கீழே. சிங்க முடி அடர்ந்த கட்டுக் கட்டான மஞ்சள் அலி மீது சிவந்த அலகைத் துடைக்கும் கருங்கிளி தேய்ந்த அவன் அடையாளம் உப்புவனத்தின் படிவாய் சிக்கி இருப்பது கண்டு சிறுத்தையிடம் சொல்லி வர பில வாயில் திறந்து உள்சென்று புலம்பியது மெதுவாய். வெண் தந்தமான தொலியில் மயங்கிய பறவை அலகால் இவனைக் காட்ட பாறைகளிடையில் நிர்வாணமாய் ஒடுகிறான் கத்தியுடன்,

பாறைப்பிளவில் யுவதியின் தேகம் கீறி வெளிப்பட்ட ரத்த உப்புகள் கசியும் ஒரு துளி நீலநிற நத்தைச் சுருளில் சுழன்று நெருங்க கேச அலையால் தாக்கப்படுகிறான். நழுக்கென்று அரவங்களாய் நெளி யும் சாவதானமான கொடிகளில் நீலப் பணி நுரை கக்கும் வெள்ளிப்புழுக்கள் நெளிந்தோட பனி உமிழ் படலத்தில் அரை மயக்கமாய் மிதந்து கொண்டே நழுவிய கத்தியை விரலால் தொட ஒவ்வொரு விரலிலும் தீண்டிய கீறலில் ரத்த உப்புக்கல் விரல் இடுக்கில் மறைந்து ஒளிர்கிறது ஜுவாலை'யாய்.


பாசி அருகில் நெருங்கி மார்பில் பதித்த உப்புக்கல்லை அருந்தக் கொடுக்கிறான் தாபத்தில், அவள் உடல் தோல் கடந்து உள் புகுந்த கல் உப்பின் கரகரப்பான காரல் வேகத்தில் சாவின் அருகில் சென்று திரும்பி அழைக்கிறாள் தாது. அவன் அதரத்தில் சாம்பல் நீலக்குருதித் துளி இடம் மாறி ஒட்டிக் கொள்கிறது இலஸ் நாசியில் அதை மஞ்சள் அலியின் கேச அலையில் கழுவிக்கழுவி வாசனையூட்டுகிறாள். உதிரத்தூளின் நெடி மூச்சை அடைக்கிறது.ஏனோ மஞ்சள் அலியின் சாம்பல் நீலக்குருதி கரைய மறுக்கும் பாதரஸம். அதில் அசையும் ஒற்றை முடிச்சுருளின் ரகஸியத்தில் தீவிரமடையும் சிறுத்தையின் ஒலம் உப்புக்கத்தியின் ஒளியில் பாய்ந்து ஒடுகிறது கானகத்தில். பாசீ. என்றான் கேவலின் ஊடே கத்தி மீது பதித்த பார்வையை திருப்பாமல், நிலை குத்தி வெறித்த சாம்பல் நீலக் குருதி அருகில் முன் அறியப்படாத சிறுத்தையின் உதய கால வெளிர் பிரதேசத்தில் நெருஞ்சிகளும் அருகும் நில ஆவரைகளும் வெண்பூடுகளின் காரநெடியும் பரவி ஆட்கொண்ட நினைவு களில் உயரமான அலியின் சாயைகள் ஊடுருவிய பழுப்பு மஞ்சள் பிரதேசத்தில் சூரியோதயத்தின் குளிர்ந்த வட்டத்தில் பறவைகளும் இலைப்பூச்சியும் குச்சித்தட்டாணும் வண்டு சளும் சுழன்று சுற்றி மென்துகள்கள் தொலைவில் வட்டமிட்டு வெளிர் மஞ்சள் வெப்பமாய் சுற்றிவர வெண்நகங்களை சூரியன் மீது தீட்டும் மிருகங்களின் விடி காலையின் வெம்பரப்பில் மிதந்தது காடு.

இவன் உடலைச்சுற்றிக்கொண்ட சிறுத்தை வால் நுனியில் அலகுதேய்த்த கருங்கிளி பேசியது அவளிடம் “பாசீ. சாம்பல் உப்புக்கத்தியால் குருதி உறிஞ்சப்படும் வரை பேசமுடியவில்லை என்னால், இக் காமுகன் பழைய-எரிது-நகரின் பாழ் அறைகளில் ஜீன்களாகி அலைவுறும் யுவதிகளின் துயிலில் ரகஸியமாய் சென்று உப்புக்கத்தியால் சுரோனிதப் பைகளைக்கீறி மர்மமான கமலக்கல்லை எடுத்து தன் சுருளும் கருநத்தைக் கண்கள்மீது பதித்து கண்மேல் கல் சுழற்றி புதிர்பார்வையில் வேறொரு தாவர கிரகப் பூச்சியின் பச்சை மோப்பத்தை நுகர்ந்து ஞாபகங்களின் பார்வையால் சுரோனித நெடியில் காமுறுகிறான் பலரிடம், உருவமில்லாத் ஜீன்கள் காத்திருக்கிறார்கள் பரம்பரையான தாம்பத்தியகட்டில் குமிழ்கள் உள்ளே'

கருங்கிளி விரித்த பாதரஸப் பரப்பில் மயங்கியவாறு இவன் சிறுத்தையின் வாலில் சிக்கியிருந்தான். சுருளும் ரத்தக் கண்ண்ல் சுரோனிதக் கமலத்துளையில் சிசுக்களின் நீச்சல் பிரபஞ்சமெங்கும் பறந்து சிறுபுள் இறகுகளைக் கோதி இவன் கண்பர்ப்பில் வரைகிறார்கள் வோறொரு கண்களை. கமலக்கல் பட்டைகளில் வெட்டப்பட்ட பிறவாத குழந்தைகளின் லிபி அசைந்து பார்வைப் பரப்பில் இழுத்த கோடுகளில் மிருகங்கள் மீது துயில்கிறார்கள் சிறகு குவித்து. அதை அறியும் கருங்கிளி பேசியது பதற்றத்துடன் "ரத்த விடுதிகளில் வாடும் பும்மை தூணக்காரர்களின் உடல் விளிம்புகள் உப்புக்கத்தியால் தொட்டு கத்தி வெளிச்சத்தில் மறைகிறான் இருளில், தாது எனும் வசீகர அலியான இவனைத்தேடி யார் வருகிறார்கள் ரகஸியமாய்' என்றது.

பழங்கண்ணாடி வேவுபார்க்கும் பாழ் அறைக்கு ரகஸிய அலிகளும் யுவதிகளும் வந்து உப்புக்கத்தியை தேடுகிறார்கள். சாம்பல் கத்தியில் மறைந்த ரகஸியக் கடிதங்களை எரிப்பதற்காக அந்நகரின் வேசைகளும் அலைந்தவாறிருந்தனர். எல்லோரது   கால் தடயங்களையும் கண்ணாடியில் மஞ்சள்தாது நிர்வாணமாய் நின்று கேச அலைச்சுருளை விரித்து அலை பாய சுழற்றுகிறான். ஒவ்வொரு முடிச் சுருளும் தவித்து தானே வாய் திறந்து மூச்சு விட மஞ்சள் அலியின் உடலை ஈரநாவினால் ஸ்பரிசிக்க காமுறும் கருங்குழல் நீண்டு வளர்ந்துகொண்டே எங்கம் விரிகிறது முடிவற்று. நக அளவுக்குமேல் நழுவி ஓடும் கத்தியிடம் விடுகிறான் தன்னை, கூர்ந்து பார்த்தான் கண்ணாடியில், வேறு யாரோ இருக்கிறார்கள் உள்ளே. கூட்டமாய் வரும் மிருகங்கள் மஞ்சள் அருவிமீது ஊர்ந்து நெருக்க உடலனைத்தையும் கொண்ட மிருக மூர்க்க வெறி தாபமாய் சிதறி வெடிக்கக் காத்திருக்கிறான் கண்ணாடி ஆட்கொண்ட வெறுமையில் வெற்றுக் கூடான நிலையில் சுட்டுப்பொசுக்கும் கண்ணாடியின் பார்வையிலிருந்து விலகி ஒட பின் தொடர்கிறது சந்து சந்துகளாக, கருநத்தைக் கண்கீறிப் பதித்த சுரோனிதக் கல் தன் விநோதப் பார்வையால் அழைத்துச் செல்கிறது எங்கோ, உளவுக் கண்ணாடியிடம் பிடிபடுகிறான்.மீண்டும், அதே படிம அறையில் உப்புக்கத்தியை விரல்களில் தீட்டியவாறு மேலும் கீழும் நடந்தான். கண்ணாடிக் கதவை மெல்ல வருடி சிரித்த வாறு தாளமிடுகிறாள் பாசீ. அவன் காதில் விழாத பாதங்களின் நகர்வு தரையில் சுழல இர ஷ வந்துவிட்டதென்று கத்தியை வாங்கி முகம் பார்த்தாள் பாசீ. .

முத்துக் கற்கள் பதித்த கருக்கலான ஆடி பின் பார்வை மங்கித் தெரிய அரவங்கள் கக்கிய நீலக்கல்லின் விடி ஒட்டம் கண்ணாடிச் சட்டங்களிலிருந்து பாதரசப் பரப்பில் தொற்றிக்கொள்ள அவன் பிம் பக்தை பச்சை மஞ்சள் என இருவேறு பாகமாகக் கீறினாள் பாசீ. தூண்களில் ஓடி மறைகிறார்கள் வெட்கத்தில், தூணில் பதுங்கிய வேறு வேறு அலிகள் நிறங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் அருகே, எரிது நகரின் காமுகர்களால் தீட்டப்பட்ட லிபி கள் அலிமுகமெங்கும் பச்சை வடிவமடைந் திருந்தது. அதை உப்புக்கத்தி வெளிச்சத்தில் வாசித்து தாபமடங்காமல் சுரோனிதப் பைக்குள் கை நுழைத்து காணாமல்போன் வைரங்களைத்தேடி அலறுகிறாள் பதற்றத்தில். அலிமுகம் மோனத்தில் அபூர்வ சாயல் கொண்டு ஆடியில் பதித்த நாகக்கற்களை நுனி நாக்கினால் ஸ்பரிசித்தவாறு கண்டத்தில் ஏறும் விஷத்தை மெல்ல சுவைத்து கண்களில் பதித்த கமலக்கற்களால் அலியுலகின் அனாதியுடன் தன் மார்புமீது விரல் அழுந்த ஊளையிடுகிறான் தேம்பியவாறு. தொட்டால் சுருங்கிவிடும் கூச்சத்தில் கண்ணாடிக் குள் சென்று மறைகிறான் அலி.

தூண்மறைவிலிருந்து சகஜாதியும் தாதியும் வெளிப்பட்டு ஒருவரையொருவர் காமுற்று ஆடியின்மீது மறதியை மூடி நெருங்குகிறார்கள் இயல்பில். உப்புக் கத்தியை தரை விரிப்பிலிருந்து நகர்த்தி ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் உப்புக் கத்தியை தொட்டு ஸ்பரிசித்தவாறு உடல் படத்தில் மறைகிறார்கள் யுவதிகள். உருவே கண்ணாடியாகி உள்மறையும் வெண்பரப்பி லிருந்து அறையின் புறவெளி சூன்யமாகி உப்புக்கத்தி மட்டும் சரிந்து கிடக்கிறது தனிமையில்,

ஆடியுள் அசையும் பெண்வடிவம் திரும்பவும் கத்தியைத்தொட உயிர்க்கிறது அறையில். கண்களில் சுழலும் கத்தியை உடனே முறைத்து விஷத்தில் மிதந்து உடல் ஸ்பரிசத்தில் அறை வெதும்பி உப்பின் வேகத்தில நரம்புகள் துடித்து சுற்றிக்கொண்டு ஒருவரையொருவர் காமுற்று துளைந்த பசசை விஷத் துளி கத்தியில் பூசிக் காத்திருக்கிறார்கள் இடைவெளியில், விஷ நெருக்கத்தில் ரத்த நாளங்கள் வெடித்து உறைகிற உப்புக்கல் தரையில் உருண்டு ஒலித்தது துணுக்குற.

ஒவ்வொரு விஷக்கல்லையும் வளைந்த அலகால் கொறித்து ருசித்த கருங்கிளியின் மஞ்சள் விட்டக்கண் விரிந்து பரவிய கதிரில் குறுங்கோடுகள் வெளிர் தீபச்சுடராய் எரிய அதில் வந்த விஷமருந்திய கிளிமுகங்கள் நிர்வாண மஞ்சள் அலியாக மாறி நீலம்பாரித்த கண்டத்தில் கத்தியால் கீறி விஷக்கல்லை எடுக்க அருகில் வருகிறாள் பாசீ. கிளிவர்ண தோகையுள் மஞ்சள் அலி சிறகசைக்க கேச அலைகளில் பிஞ்சுப் பூச்சிகள் இறைந்து சுற்றி ஒடும் அலி நிழல்களை பின்தொடரும். காணாமல் போன அலியின் இடுப்புவாரில் பாஷாணம் பூசிய ஏழு வகை உப்புக்கத்தி  உறையிட்டு சொருகியவாறு வெள்ளை முகமூடி அணிந்து வந்து சாம்பல் நீலக் கத்தியின் பாஷானத்தை கண்ணாடி மீது நீவிக் கொண்டிருந்தான். மெதுவாக நிறம் மாறிய ஆடியுள்ளிருந்து சகஜாதியான வள் வெளிப்பட்டு இரும்பு ஜன்னலுக்கு ஓடிச் சென்று அதன் வழியாக எரிது நகரில் அசையும் விளக்குகளில் சுற்றும் பிஞ்சுப் பூச்சிகளைப் பார்க்கிறாள்.

எதிர்பார்த்திருந்த அலிகளின் சாயைகள் விளக்குகளில் நீளும் நிழல்களுடன் மெல்ல நகர்ந்து செல்கின்றன வீதியில், பதினாயிரம் தினார்களுக்கு விற்கப்பட்ட உயரமான மஞ்சள் அலி நீல மஞ்சள் வர்ண விளக்குகளுக்குள் சுழன்று கொண்டிருக்கிறான் அகாலத்தில். மெலிந்த இரவின் வெளிர் தோற்றத்தின் நிசப்தத்தில் பனி நீலம் உதிர்ந்து துகள் துகளாக வலிந்து உருக ஆரம்பித்திருந்தது. மொகலாயர் விட்டுச் சென்ற கூஜாச் சிம்ளி மூடிய ஆழ்ந்த நகர் விளக்குகளை நகருக்கே ஆன பைத்தியக்கார அலிகள் காலந்தவறவிட்ட இளமையைத் தேடி நீலஒளியை எட்டிப் பார்த்தவாறு ஈரல் நடுங்க ஆண் காதலி களின் சாவு மெளனத்தை துடைத்தவாறு தன்லகுனிந்திருக்கிறார்கள். அவ்வுப்பு வீதி களில் வெண் குருத்தாக எரியும் ஜீவனில் உப்புக்கட்டிகளைப் போட்டு அணையாம லிருக்க சாம்பல் கிண்ணங்களை ஏந்தியவாறு கருங்கிளிகள் பறந்தவாறு அசைக்கும் சிறகு களில் இருள்.
****
எரிது நகரின் பாழ் விளக்குச் சிம்ளியைத்துடைக்கும் பரம்பரையான அடிமை அலிகள் விவாக்குத்தைல சீசாவும் திரிக்கற்றையும் கொண்டு ஒவ்வொரு விளக்கிடமும் சென்று கேட்கிறார்கள் தாங்கள் யாரென்று. அலிகளின் கேள்விகளால் துணுக்குற்று உடையும் சிம்ளிக்காக அழக்கூடும் அடிமை அலி, ஏனோ தெருச் சிம்ளிகளிடம் குழந்தை யாக நடந்து கொள்கிறான் மஞ்சள் அலி, உருவை அசைத்து அசைத்து பாதங்கள் உரசி நகரும் வயதான அலிகளின் கண்களில் வடிந்த புகையும் இருளைத் துடைப்பதற்கு ஆளே இல்லை இங்கு.

எரிது நகரின் சோபை தினம் தினம் மெலிந்த ஒளியால் உயிர்பிரியும், ஆண் விரும்பிகள் மீது வீசப்பட்ட கல் உருக அகால விளக்கு எரிகிறது தனிமையில், கிரி மினல் குற்றங்கள் பரவும் சுவர் ஒரம் விரல் பதித்து நடமாடும் மென்மையான இருளில் திரிபோட்டு தைலமிட்டு தழுவுகிறார்கள் இரவை. அவ்விளக்குத் தூண்களை வைத்த முன்னோர் நகர் நீங்கி வெளிப்புறத்தில் நகரை நோக்கிய ஏக்கத்தில் சமாதிப் படிகத் தில் உறைந்து விட்டிருந்தனர். நகரே சரிந்து விழும் ஏரிப் படிகத்தில் ஒவ்வொரு ஒளிப்புள்ளிகளும் நகர்ந்து வருகின்றன பழையவர்களை நோக்கி, நீரில் நெளியும் ஒளிப் பூச்சிகளைப் பிடித்து கெண்டை மீனுக்கு கொடுத்து நகரின் நினைவுகளை கரும்பிவிடும் மீனுருவாகி விடுவார்கள்.

அறியப்படாத கோல் நகரின் அழுக்குக் கோடுகள் நடமாடித் திரிந்த இடங்களாக இருக்கும். புலத்தில் விழுந்து பதிந்த பாதங் கள் திரும்ப்த் திரும்பவரும். அடுத்த காலத்த வரும் பாதங்களை அங்கே நகர்த்திச் செல் வது ஏனோ மிருதுவான புலங்களில் பாதம் படியப்படிய பறவைகளும் விநோத உணர்வு களும் வந்து கண்ணுக்குத் தெரியாத ரகஸிய இழைகளால் பின்னப்படும் பிரேமையின் கத கதப்பை நகரே அடைந்து விடும். அங்கே தோல் இரவுகளை உலர்த்தி பதனமாக்கிய தொலியில் எதை எதையோ கிறுக்கிவிடும் மென்மையான பாவங்களை வீட்டிலுள்ள ஸ்திரீகளே எழுப்புகிறார்கள். ஏணம் தவறி விழுந்ததும் கரண்டிகளும் முணு முணுக்கின் றன. தண்ணிர் சிந்தும் ஒசையிலிருந்தோ சூடான கொதிநீரை ஆற்றும் விரல்களிலோ அதிசயம் சேர்ந்து விடும், சாதாரண குரல் களுக்கிருந்த அர்த்தமே நகரை உயிர்ப்பிக்கக் கூடும்.

உயரமான மஞ்சள் அலி ஒருவனின் தோலில் வரையப் பட்டிருக்கும் பச்சைநிற லிபிகளில் பரம்பரையான அலிகளின் கதா சறுக்கம் கரைந்து எழுந்த தெருக்களில் ஸ்திரீகளின் முகவெட்டுடன் அலிகளின் அழைப்பு. கதாச்சுருளை கடத்திச் செல்லும் உப்பு மனிதன் அந்நியனாய் மெல்ல வந்து பச்சை லிபிகளை வாஸிக்கிறான். கைகளில் உடலில் திறந்த ரணமான காயங்களை தையல் போட்டு மூடியிருந்தான். வண்ணத் துப் பூச்சிகளை அலி உடலுடன் சேர்த்து தைத்துவிடும் அந்நியனைத் தேடி பலர் வந்து போகிறார்கள். வர்ண இறகின் நிறப்பொடி யால் ஆணைப் பெண்ணாக மாற்றும் தையல் வேலை நடந்துவந்தது ரகஸியமாய் அடைத்து வைக்கப்பட்டவர் உடலில் காலான் வளர, கல் உப்புக்காலான் ஆண் பெண்ணுமான உருவுடன். வெட்கத்தால் மறைந்து திரிகிறார்கள். கல்உப்புக் காலா னாய் விட்ட பெண் உருவங்களை கத்தியால் கீறி வைலட்பூவைத் தேடுகிறான் தாது. பூனைத்தோல் கொண்ட அலி சுரோனிதச் சற்றுகளில் அருவருப்பான ஜீவ ஜந்துக் களைப் பிடித்து சீசாவில் அடைத்து தாது வின் அறைக்குள் திறந்துவிட தனிமையில் துயிலும் உப்பு மனிதனான தாது மீது ஊர்ந்து நகரும் ஐந்துக்களின் அடிவயிற்று வெப்பத்தில் காமாக்கினி பொங்கி வெடிக் கும் உப்புக்கட்டிகளின் நெடி அறையை மூழ்கடித்தது. -

அலிகள் அலைவுறும் சந்துகளில் ஒவ்வொருவரின் உடலுடன் விநோதப் பிராணியை ஒட்டுத்தைத்து தோல் தையலில் இழைகட்டு பிரித்ததும் இணைந்துகொண்ட இரு உயிரினமாகிவிடும் விநோதம் நகரை நெருக்கடியில் சிக்க வைத்தது. குள்ளநரிகள் கூட்டமாய் உடலில் புகுந்து சிரித்து ஊளை யிட ஊசிப்பற்களில் நடுங்கும் நகரம். பல்லி ஓணான்களின் நாசிகளில் ஈரம் படரத் தெருக்க்ளின் சுவர் ஒரம் சாய்ந்து மயங்குகிறார்கள் காமாந்தக வேகத்தில், வெந்நீர் கோப்பையிலிருந்து சுடு ஊசியில் ஏற்றிய மஞ்சள் திரவத்தை தானே கையில் குத்தி ஏற்றி துடைத்த பஞ்சில் நெடிக்கும் திரவத்தை நுகர்ந்தவாறு மஞ்சள் அலையில் தடுமாறி விழும் அலிகள் எதிர்ப்படும் விநோத சாயைகளைக் கூடவே அழைத்த வாறு சுவர்களில் மறைந்திருக்கிறார்கள்.

எழுத்தாணிக்காரத் தெரு நகரும் பனை யோலைச் சந்துகளில் கல்பாவிய வெண் குருததில் சிறுமிகள் பாததுாளிகள் தொட்டுப் பதிந்துவிட்ட ரேகையில் அசையும் உருவு களை வெறித்த கண்களால் நகரேபார்க்க  மெல்ல சுழலும் கோடுகள் சுவர் ஜன்னலி பாவுகளாய் சுரிந்து சுரிந்து உள்புக பட்டுத் தறியில் அலிகளுக்கான ஆடையை நெய்து கொண்டிருக்கிறார்கள் சிறுமியர். அலைவு றும் ரேகை நூலால் உருவாகும் மஞ்சள் அலியின் மாயக்கம்பளத்தில் யார் யாரோ வந்து அலிகளை ஏலமிடுகிறார்கள். பாதச் சிறு இழைகள் கல்லில் படியப்படிய நூலாகி விடும் வேகத்தில் இடமற்று ஊர்ந்து வரும் ஜன்னல்களில் பாவு ஒட உள்கூடத் தறியில் வயதான அலியொருவர் அறுந்த இழைகளை முடிந்து துக்கம் பெருக சிறுமியரை நோக்கி கைநீட்டி அழைக்க புள்ளொலிக் கூட்ட்மாய் வந்து வயோதிகரை ஒட்டி தங்கள் ரேகை களை அவர் உடல் மீது பதித்து விடுவார் கள். எண்ணமுடியாத சங்கேத வரிவரியாய் பிரியும் சிறுமியர் பாதரேகையே எரிது நகரின் அந்தரங்க வரைபடமாய் விரிய தறிக்கூடச் சலம்பல் நகருக்கு வெளியில் சேட்கும். சாதாரணமாக விடுபட்ட பிஞ்சுப் பாதப்பதிவுகளை அசாதாரண ஆழத்தில் நூற்கிறார்கள் அலிகள்.சிறுமியின் கண்ணில் நகரும் புலப்படாத ஒளி இழை சுழன்று ஒடுகிறது எங்கும்.

ஏனோ, ருதுவான ஸ்திரீகளின் ஆடை களைத் திருடும் அலிகளை விலங்கிட்டு சுவர்களில் அறைகிறார்கள் கொடியவர்கள். கருங்கல் சுவர் நடுங்க மனித வாடைக்காக காத்திருக்கும் மஞ்சள் அலி சிறுமியர் தடம் நகரெங்கும் படரவேண்டிக் கனவுகாணும் அறையில் அசைவற்றுக்கிடக்கிறான், ஸ்திரீ களின் ஆடையுடுத்தி ஒப்பனையில் கானகம் புகுந்து மறையக்கூடும். நிறமழிந்த ஆடை களில் உவர்வாசம் கனவுகளில் நெடிக்கிறது. தண்டுவட எலும்புச் சுழலில் வளைந்து படரும் உவர்மண்வாசனை கொண்ட எலும்பினாலான யாழ் அலியின் குமுறலாகி அனிடப்பட்ட சலவைத்துணிகளின் அலைவு உவர்த்து உள்தேம்ப எலும்பில் ஸ்பரிசிக்கும் சலவைக்கல் உருக்கள் அனாதரவான ஏரிக் கரைகளில் தேய்ந்து உருக துயருற்ற அலி வண்னானின் விரல்கள் வியர்வையும் உப்பும் டொதிந்த துணிகளைக் கழுவக்கழுவ வெழுத்த ஆடைகளில் மற்ைகிறார்கள் நிர்வாண மனிதர்கள். துவைக்கிற கல்லுக் குள் படிந்த பூ நிறங்களை நில வெண்ணிறத் தில் காண இவன் காத்திருக்கிறான் அங்கு மூழ்கியவாறு கனவில் கண்ட சிறுத்தையின் அருகாகப் பல கூண்டுகளில் பஞ்சநிறக் கிளி கள் அடைபட்டு துயிலில் கண்டகனவு நிழல் கம்பிகளோடு வெளிரூபமடைந்து சிறுத் தைப் பெண்ணுடன் பழுப்பு மொழிபேச இவன் ஏதும் புரியாமல் காதுமடல் சிவந்து தனித்தனி சப்தங்களை சேர்த்து மயங்கி கனவில் கண்டான் தாதுமூல மொழியை.

-போதையூட்டப்பட்ட நகரின் சுவர்கள் தள்ளாட நடந்து திரிகிறார்கள் பும்மை தூணக்காரர்கள். நிழல் சாலை மதுக்கூடம் குப்பிகளை உரசி உடைந்த பாட்டில்களில் கீறிச் சபதம் செய்த குருதி விரல்களில் மஞ்சள் மதுவும் கரைந்து காயங்களை மறைக்கும் தையல் கோடுகளில் குருதியை முத்தமிடும் இரவு, திரண்ட தோளில் கை வைத்தவாறு கிரிமினல் குற்றவாளிகள் குற்றங்களை உளறி ரகசியங்களை வெளிப் படுத்தச் சீறும் உயிர்ஊற்றுகள் ரத்தத்துடன் கலந்து இருள்கிறது குப்பிகளிடையே, ஒரு வரையொருவர் பார்த்துக்கொள்வார்கள் துவண்டு அழுகிறார்கள் எச்சில் ஒழுகி. வாய் கோணி ஊளையிட குப்பிக்குள் உறுமும் விலங்குகள் ஒயின் நிறத் திராட் சைத் தோட்டத்துக்குள் மறைகின்றன. நெருப்பில் வாட்டிய மீன் உடல் உலர்ந்து கருக தன்குடலை அறுக்குமாறு துரண்டு கிறார்கள் முரடர்கள். புலால் தோலில் நகரும் ஈரல் துடிப்பில் தோன்றும் இவன் முகம் உப்புக்கத்தியின் வெட்டு அடையாளத் தழும்பில் ஒளிர்கிறது.

சிதைந்துப்ோன ஒயின் தோட்டத்தில் பாம்புகளின் மூச்சு சுழன்று சுழன்று காலிக்குப்பிகளின் மூச்சாகி சுழல்கிறது. நொறுங்கிப்போன கனவுக்குமிழ்களில் சீசாக் களில் கண்ணாடிச் சில்லுகளை குற்றமற்ற மதுக்கூடச் சிறுவர்கள் பிஞ்சு விரல்களால் உமிழப்பட்ட வார்த்தைகள் அடியில் பகை யும் உதாசீனமும் நெடிப்பதை குருதியும் ஒயினும் கலந்து மயங்கிய உறவை காயங் களை தைலம்பூசி காலிக் குப்பிக்குள் பதுங்கி துயில்கிறார்கள். பின்னிரவில் கழுவப்பட்ட மதுக்கூடத்தைத் தேடி கீறலில் எட்டிப் பார்த்து சிறுவர்கரங்களில் கீறிய பீங்கான் கீறல்களை தொட்டுக் கரைகிறான் உப்புக் கத்தியுடன்,


கனவில்கண்ட பிலம் விலகி தெளிவற்றி உருவில் சிறுத்தையின் தொப்புள் அடியில் எரியும் வைலட் பூ கதிர்நிழல் காட்ட நிழல் ஒநாய்கள் விரட்ட தன் ஆடைகளைப் பிய்த் தெறிந்து நிர்வாணமாய். எரியும் பாடல் களுக்கிடையே கிளிகளின் குளறுமொழி இளஞ்சிவப்பு கண்கள் கீறி மெல்ல காற்றில் கரைந்து இவன் மெய்யுருகி உள்ளிரல் பற்றி எரிவது அவியாது வளைந்து நின்று ஒலி எழுப்பிய ஒநாய்க்குகைச் சுவர்களில் அடர்ந்த கிளி இறகு அசைந்து பிலவாயில் தாண்டி கடலுக்குள் விழுந்து அடித்தளம் புகுந்தது கருங்கிளி. நீரில் தீப்பிழம்பு உமிழும் பாடல் உராயும் நகங்கள் மீன்களை எழுப்பி "துயில வேண்டாம்' என முணுமுணுத்தது அயிறைகளிடம்,

குகை சூழ்ந்த நீரில் சிறுத்தையின் உடல் புள்ளிகள் அலை வண்ணத்துப் பூச்சிகளாய் சிறகலைத்து இவன் உடலில் ஒட்டி சிறகு குவித்து தும்பிகளின் உதிர உறிஞ்சல் ரத்தப் பெருக்கில் சிறகு படபடவென ஆயிரம் அலைச்சிறகு விரித்து செந்நீர் கசிந்த ஞாபகப்பரப்பில் யார் யாரோ கருநீர் உருவங்களாய் நழுவிச் செல்ல முன் அறியப் படாத மஞ்சள் அலியின் சருமத்துவாரங் களில் வாய்திறந்த சுரோனித உயிர்த்திரள் வெப்பத்தால் உயிர் நெருக்க தொல் எலும் பில பதுங்கிய ஒநாய்கள் மயங்கும் மெல்லிய விலா எலும்பின் மின்பரப்பில் அலைகள் வால்துடிக்கும் மீனுருவங்களாய் முயங்கிப் பெருகிய முட்டைகளின் உயிர்மின்னல் உப்பு நீரில் சுரிந்து வளைந்து சிறுத்தையின் நாசி யில் அலியின் குருதியின் ரகசிய வாசனையில் இவள் கூந்தல் இழைபூசி ஒவ்வொரு நீண்ட முடிச்சுருளும் உதிரத்தில் தோய கிளி தாதுமூலக் கனவில் பழுப்பு வண்ணத்துப்பூச்சி மோதிரமாய் வளைந்து இவள் காட்டாணி விரலில் சுற்றிக் கொண் டது. மோதிர வளைவில் சென்ற சுருண்ட நிலப்பரப்பின் உச்சிமீது கமலக்கல்.

வைலட்கல் பூவில் பட்டை வெட்ட வெட்ட உருமாறும் வைலட் கல் சதுக்கத்தின் புதிர்பாதைகளூடே மறைந்து பாயும் வைலட் சிறுத்தை. அதை அடைய விலா எலும்பில் உறையும் பறவைகளை சிறு புள் கூட்டங்களை எழுப்பி கூகையின் சுருள மூச்சை ஏவுகிறான் சிறுத்தை மீது. இவன் உதிரத்துளி வைலட்கற்களாய் சிறுத்தையின் நாசியில்பட யுகாந்தகால நெருப்பில் காத் திருக்கிறாள் இவனுக்காக, ஏனோ, இரு வேறு கால சுழற்சியில் மறையும் பூச்சிகளாய் மயங்குகிறது வைலட், முடிவற்ற வெறுமை சூழ்ந்த இருப்பில் இவன் விழித்தபோது வைலட்பூ சிறுத்தையின் கண்களில் மறை வதை அடையாளம் காண சாவின் உச்சிமீது காத்திருக்கிறான். சிறுத்தையின் உடல் புள்ளி இருப்பின் குறியீட ராகத் தோன்றியது இவனுக்கு.

இவையென சிறிதும் பெரிதுமான புள்ளிகள் ஒழுங்கற்றுப் பரவிய மென்தொலி மேல் கானகத்தின் வடுக்கள். தத்தளித்தவர்று நீரில் ஆரஞ்சு நிறமாய் மாறிவிட்ட அலியின் உடல், சிறுத்தை உடல் புள்ளிகள் பிரபஞ்சத் 'தின் கண்களாய் பல திறக்க அச்சத்தில் மூழ்கியபடி இருந்தான் எல்லையற்று. ஆட் கொண்ட வெறுமை நீர் பூச்சிகளாக வெம்பி உடலைக் குடைந்து நச்சரித்துக் கொண் டிருக்கின்றன. வெற்றுக் கூடான உடலில் உப்புத்துகள் படலமாய் உதிர இக்கணம் உருவற்ற சூனியத்தில் திரண்ட உதிரக்கற் கள் உப்புத் தூண்களாய் சமைந்த தெருவில் மெல்ல கரையும் உவர்காற்றில் நாசியில் அறுக்கும் அமிலநெடி சூழ்ந்து கொள்ள மூழ்கும் நகரின் கீழ்தட்டு அறையில் சுவர்கள் பொதும்பி தாரை தாரையாகக் கசிவதை பார்த்துக்கொண்டிருக்கிறான் உப்புச் சுவர் களுக்குள். எழமுடியாத கனமான உப்புநீரில் நழுவி வந்த நிலவைச் சுற்றி பொடி மீன்கள் கரும்பி தூள் தூளாக நிலவுப்புழுதி பறக்க கரும்பும் பற்களுடன் உள்ளே போய் திரும்ப முடியாமல் நிலவுவாசியாகி நீருக்குள் வர முடியாமல் ஆனால் நீரால் சூழப்பட்டு உலர்ந்து கொண்டிருக்கும் அயிறைமீன் சிற்றுடல்கள் உப்புமூடி உறைந்து கொண் டிருந்த நிலவின் உவர் ஒளி இவன் வெறுமை யுள் படர்ந்து உருகியது கரிப்பாய்.

இவன் சாம்பல் கத்தி கொண்டு உப்புப் பாறைகளைக் குடைந்து உள்போய் சுரங்கம் தோண்டி மறைந்து கொள்கிறான். ஆரஞ்சு உடலை உப்புக்குள் புதைத்து கால நீட்சியில் வளைகளைக் குடைந்து இரவு பகல் தெரி யாத பாதரச வெளியில் ஊர்ந்து கொண்
டிருக்கிறான். உப்புச் சுரங்க வாசிகளான ஆரஞ்சுநிற அலிகள் சிலரும் பொந்துகளில் முகம் நீட்டிப் பார்க்கிறார்கள். அவர்களும் இவனைத் தெரிந்து கொண்ட பயத்தில் இட மற்றுத் துளையும் ஊசிகளால் பொந்து களின் நூறுகிளைகளில் மறைகிறார்கள். குடைந்த உப்புக் குழல்களில் கானகக் குரல் தள் சுருண்டு வரும், அலையில் மறைந் திருக்கும் இறந்தவர்களும் எரிதுநகரின் கீழ் சந்துகளில் சமாதியில் உலவும் ஸ்திரீகளும் நகரின் மேல் நட்க்கும் சோக நாடகத்தை உணரக்கூடும். பழமையான ஆடியில் உப்புக் கத்தியை உரசியவாறு எதை எதையோ தேடு கிறான். மாய உப்பு உருவங்கள் தோன்றி மயக்க வெளிறிய முகத்துடன் உடலற்ற ஜீன்கள் துயிலின் ஊடே புகுந்து இளமை யான உருவை விரித்து சரசமாட அசையாத கண்களுடன் பயங்கர நினைவுகளை முணு முணுத்தன. நகரின் அடிக்கற்களுக்கு அடியில் உப்புக் குன்றுகளில் ரகசிய உப்பு மனிதரின் குகைகளில் மெலிந்த கல்படும் கையில் நிர்வாண உடல்களை உலர்த்திவருக் பலருடன் இவனும், உப்புக்கல் படுக்கையில் உதிர்ந்த உணர்வுகளை சேர்த்து கதிர் கற்றைகளாக ஏந்திய அம்மண உருவிலான கிழ மனிதன் சம்மணமிட்டு கற்பகாலமாய் அமர்ந்திருக்க அவ்வுருவின் மோனச் சிறு புன்னகை காண பித்தத்தில் சுழலும் உப்புக் கோலத்தை மணியாக தலைக்குமேல் ஏந்தி அவ்வுருவின் கீழ் உதடு முணுமுணுக்கும் மர்மமான ஒலியை ஆரஞ்சு நிறமான இவன் காதுகள் உள்ளீர்த்து அழ கேவும் மூச்சை அடைத்த உப்பு விரல்கள் இவன் சிரசைத் தொட்டு ஒவ்வொரு சுரி குழலையும் தடவ அதிரும் ஒற்றைமுடிகளின் சலனத்தில் இவன் எண்புகளுக்குள் சுருளும் அண்ட கோச திரள் சுழிக்க உப்பு நகங்களால் மஞ்சள் அலி யின் தலைமுடி பறிக்க நீளும் விரல்களி லிருந்து விலகிவிலகி ஓடுகிறான் கத்தியுடன், மெலிந்த கல் திட்டுகளைச் சீவிச் சீவி ஸ்படி கத்தில் அசையும் ஆவிகளிடம் முற்பட்ட அம்மண மனிதர்களின் ஞாபகங்களைக் கேட்டவாறு முக்காலங்களின் இணைப்பை துண்டிக்க ஒற்றை முடி பறிப்பதால் ஆகும் வினையிலிருந்து நழுவி எல்லாக் காலத்திலும் உருகும் கற்களில் உரசினான் கத்தியால்.


சாவித்ரிபாய் புலே ஜோதிபா புலேவுக்கு எழுதியது & டொப்ரிஞ்சா முற்றுகையின் பத்தொன்பதாம் நாள் ஆங்கிலத்தில் : நெழாத் இப்ரீசீமோவிச் தமிழில் : ரவிக்குமார்

WWW.padippakam.Com
கடிதம்

சாவித்ரிபாய் புலே ஜோதிபா புலேவுக்கு எழுதியது

சாவித்ரிபாய் புலே (1881-1897) மகராஷ்டிராவின் முதல் ஆசிரியை, தனது ஒன்பதாவது வயதில் ஜோதிபாபுலேவை ம ண ந் தா ர். அவரது உந்துதலால் கல்வி கற்று 1848-ல் புலேவுடன் சேர்த்து பெண்களுக்கான பள்ளி ஒன்றைத் தொடங்கினார். ஐந்து பள்ளிகள் அவர்களால் நடத்தப்பட்டன. 1851-ல் மாங், மஹர்சாதிப் பெண்களுக்கென ஒரு பள்ளியைத் துவக்கி, 1856-ல் தாம் கடுமையாக நோய் வாய்ப்படும்வரை அதில் ஜோதிபாபுலே தனது தோழி ஃப்ாத்திமா ஷேக் ஆகியோ ருடன் சேர்ந்து கல்வி கற்பித்தார். இந்தக் கடிதம் 1856-ல் அவர் நோயுற்று தனது தாய்வீட்டில் இருந்தபோது எழுதியது.

சாவித்ரி ஒரு கவிஞரும் கூட, அவரது 41 கவிதைகள் அடங்கிய, "காவ்ய புடல' என்ற கவிதைத் தொகுதி 1854-ல் வெளியானது. ஜோதிபா புலேவின் வாழ்க்கை வரலாற்றை கவிதைகளால் எழுதி அவர் 1892ல் வெளி அதே ஆண்டில் அவரது உரைகள் அடங்கிய தொகுப்பு ஒன்றும் வெளியானது.

uáLL厅行,

பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் தலித்துக்களுக்காகப் பாடுபடும்போது எதிர் கொள்ளும் பிரச்சனைகளில் சிலவற்றை இங்கே தரப்பட்டுள்ள கடிதத்தில் நாம் உணர (pig-il D.இது மட்டுமன்றி நவீன பெண்ணியல்வாதி களான ஹெலன் சிஷி, லூஸி எரிகாரே போன்றோர் குறிப்பிடும் பெண்களுக்கே உரித் தான மொழியை, வெளிப்பாட்டு முறையை நாம் இதில் அடையாளம் காண்கிறோம்(?) வெவ்வேறு விதமான வாசிப்புகளில் வெவ்வேறு சுவடுகளை நாம் இதில் கண்டுபிடிக்கும்போது இந்தக் கடிதம் இலக்கியமாக இருப்பதை உணரலாம். -

கடிதத்தை மராத்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு

மொழியாக்கம் செய்தவர் : மாயா பண்டிட்

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : ரவிக்குமார்

56ör só : Women writings in India - Vol 1 Ed. Susie Tharu, K. Lalita, Oxford Univ Press. 1991.

0 நிறப்பிரிகை

10, அக்டோபர் 1856

உண்மையின் வடிவமான எனது பிரபு ஜோதி பாவுக்கு சாவித்ரியிடமிருந்து பணி வா ன வாழ்த்துக்கள் பல.

ஏராளமான சிரமங்களுக்குப் பிறகு கடைசியில் எனது உடல்நலம் சரியாகிவிட்டது. பாவ், நான் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் எவ்வித சலிப்புமில்லாமல் கவனித்துக் கொண் டான். உண்மையில் அவன் எவ்வளவு அன்பு டையவனாயிருக்கிறான் என்பது அப்போது தான் எனக்குத் தெரிந்தது! நான் பூரண குணமடைந்ததும் உடனே நான் பூனாவுக்கு வந்துவிடுகிறேன். என்னைப்பற்றி எவ்வித மான கவலையும் படாதீர்கள். இது ஃபாத்தி மாவுக்கு மிகவும் தொந்தரவு தரும் ஆனால், அவள் நிலமையைப் புரிந்துகொள்வாள், முணுமுணுக்கமாட்டாள் என்று நம்புகிறேன்.

ஒருநாஸ் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது பாவ் சொன்னான், ! நீயும் உன் கணவரும் நிச்சயம் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப் படுவீர்கள், மாங்குகள், மஹர்கள் போன்ற தாழ்ந்த சாதியினருக்கு நீங்கள் உதவு கிறீர்கள், இது சந்தேகத்துக்கிடமில்லாமல் பாவகாரியம்தான். நம் மு ைடய குடும்ப கெளரவத்தையும் தீங்கள் சகதியில் தள்ளி விட்டீர்கள். இதனால்தான் நான் சொல் கிறேன். நம்முடைய சாதி வழக்கப்படி நடந்து கொள்ளுங்கள், பிராமணர்கள் சொல்வதைப் பின்பற்றுங்கள்'. இந்த ப் பொறுப்பற்ற மோசமான யேச்சுைக் கேட்டதும் அம்மாவுக்கு முகம் வெளுத்துவிட்டது. பாவ் மற்றபடி அன்பான வன்தான், ஆனால் அவன் ரொம் பவும் குறுகிய புத்திக்காரன். நம்மை விமர் சிக்கவோ, வசைபாடவோ அவன் தயங்குவதே இல்லை." அம்மா மிகவும் வருத்தப்பட்டார்கள். அவனை அவர்கள் திட்டவில்லை, நியாயமாக எடுத்துச் சொன்னார்கள்.

** இனிமையாகப் பேசும் ஆற்றலை கடவுள் உனக்குத் தந்திருக்கிறார் அதை இப்படி வீணாக்கலாமா ?' என அம்மா அவனிடம் கேட்டார்கள். அதைக் கேட்டதும் அவனுக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது, அவன் ஒருவார்த்தைகூட பேசவில்லை. அவனது வாதம் தவறானதென நிரூபிக்க நான் சொன்னேன்: 'பாவ் உன்னுடைய அணுகுமுறை மிகவும் குறுகிய ப ா ர் ைவ கொண்டது, பிராமணர்களின் உபதேசங்களைக் கேட்டு உனது அறிவும் மங்கிவிட்டது. நீங்கள் ஆடு மாடுகளைக்கூட வைத்து சீராட்டுகிறீர்கள். நாகபஞ்சமி வந்தால் விஷமுள்ள பாம்புகளைக் கூடப் பிடித்து அவற்றுக்குப் பால்வார்க் கிறீர்கள். ஆனால் உங்களைப் போலவே மனிதர்களாயிருக்கும் மாங்குகளையும், மஹர் களையும் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்குகிறீர்கள். இதற்கு ஏதேனும் காரணம் சொல்லமுடியுமா ? பிராமணர்கள் உங்களை தீண்டத்தகாதவர்கள் என்றுதான் நினைக்கிறார்கள். நீங்கள் தொட்டுவிட்டால் தீட்டாகி விடும் என்று அஞ்சுகிறார்கள்'. இதைக் கேட்டதும் அவனது முகம் சிவந்துவிட்டது, என்னைப் பார்த்துக்கேட்டான் : "நீங்கள் மாங்குகளுக்கும் மஹர்களுக்கும் ஏன் கல்வி கற்றுத் தருகிறீர்கள் ? யாராவது உங்களைக் குற்றம் சொன்னாலேர் தி ட் டி னா லே ர என்னால் தாங்க முடியவில்லை ' நான் ஆங்கிலேயர்கள் மா த கு க ரூ க்கு ம் மஹர் களுக்கும் என்ன செய்கிறார்கள் என்பதை அவனிடத்தில் விளக்கினேன் கல்வியறிவு இல்லாமல் இருப்பது மிருகத்துக்கு சமமானது. அறிவு பெற்றிருப்பதால்தான் பிராமணர்கள் இப்படி மேன்மையான இடத்தில் உள்ளனர்.

படிப்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது. யார் ஒருத்தர் படிக்கிறார்களோ அவர்கள் சமூக அந்தஸ்தில் கீழ்நிலையிலிருந்து மேலே உயர்ந்து வி டுகிறார் கள். எனது பிரபு கடவுளைப் போன்றவர், இந்த உலகத்தில் அவருக்கு இணையானவர்கள் யாருமில்லை. என் ஸ்வாமி ஜோதிபா அந்த கேடுகெட்ட பிராமணர்களைப் பகைத்துக் கொண் டு சண்டை போட்டுக்கொண்டு மாங்குகளுக்கும் மஹர்களுக்கும் கல்வி கற்பிக்கிறார். ஏனென் றால் அவர்களும் மனிதர்கள்தான் அவர்களும் மற்றவர்களைப் போல வாழ த் தகுதி யுள்ளவர்க்ள் தான் என்று அவர் நம்புகிறார். எனவே, அவர்கள் படிக்கவேண்டும், அதனால் தான் நானும் அவர்களுக்கு படிப்பு சொல்லித் தருகிறேன். இதில் என்ன கெடுதல் இருக்கிறது? ஆமாம் ! நாங்கள் பெண்களுக்கு, மாங்குகளுக்கு, மஹர்களுக்கு ப் படிப்பு சொல்லித் தருகிறோம்தான். பிராமணர்கள் இது அவர்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும் நம்புகிறார்கள் அதனால் தான் " அபிராமணியம் " (புனிதமற்றது) "அபிராமணியம் ' என்ற மந்திரத்தை ஓதிக்கொண் டிருக்கிறார்கள். எங்களை நிந்திக்கிறார்கள், உன் ைன ப் போன்றவர்களின் மனதில் விஷத்தை ஏற்றுகிறார்கள்.

6T6).

"ஆங்கிலேய அரசாங்கம் என் கணவரது சேவைகளை பாராட்டி ஒரு விழாவை ஏற்பாடு செய்ததையும் இந்த அற்பமான மனிதர்களை அவமானப்பட வைத்ததையும் நீ ஞாபகம் வைத்திருப்பாய். உன்னைப்போல, கடவுளின் பெயரை ஓதிக்கொண்டு புனிதஸ்தலங்களுக்குப் பிரயாணம் செய்துகொண்டு ஒரு காலமும் என் கணவர் இருக்க மாட்டார். கடவுள் செய்ய வேண்டிய காரியங்களைத் தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். நான் அதி ல் உதவி செய்கிறேன். இது எவ்வளவு அருமையான காரியம் தெரியுமா ! எனக்கு இதில் கிடைக்கும் ச ந் தோ ச ம் அளவிட முடியாதது. அது மட்டுமல்ல, ஒரு மனிதப் பிறவி எட்டக்கூடிய எல்லை எதுவென்பதையும் இது உணர்த்து கிறது". அம் மா வும், பாவும் என்னையே கவனித்துக் கொண்டு இருந்தார்கள். பாவ் தான் சொன்னதற்காக வருந்தி மன்னிப்புக் கேட்டான். 'சாவித்ரி, சாட்சாத் சரஸ்வதியே தான் உன் வழியாகப் பேசியிருக்கவேண்டும். உன்னுடைய புத்தி கூர்மையைப் பார்த்து நான் ரொம்பவும் சந்தோசப் படுகிறேன்' என்றாள் அம்மா. பூனாவைப் போலவே இங்கேயும் உங்களுக்கு எதிராக மனிதர்களிடம் விஷமூட்டி வைப்பவர்களைப் பற்றி கேட்கும் போது எனக்கு தவிப்பாயிருக்கிறது. ஆனால் இந்த மாதிரி மனிதர்களுக்குப் பயந்து நம் முடைய பணிகளை நாம் ஏன் விடவேண்டும் ? அதற்குப் பதில், இன்னும் அந்தப் பணிகளில் ஆழ்ந்து விடுவதுதான் சரி. எதிர்காலத்தில் வெற்றி நமக்குத் தான். -

இன்னும் என்ன எழுதுவது ?

மிகவும் பணிவான வாழ்த்துக்களோடு.

纽_危j岛町

சாவித்ரி

***************************************************************

டொப்ரிஞ்சா முற்றுகையின் பத்தொன்பதாம் நாள் ஆங்கிலத்தில் : நெழாத் இப்ரீசீமோவிச் தமிழில் : ரவிக்குமார்


டொப்ரிஞ்சா முற்றுகையின் பதினாலாம் நாள் 

ஆதெம் கரிமான் ஒரு புத்தம் எழுதிக் கொண்டிருந்தார். அவர் வசிப்பது ஐந்தாவது மாடியில் நான் இருப்பது நான்காவது மாடியில். எங்களது சன்னல்களின் வழியாகப் பார்த்தால் சரயேவோ விமானநிலையமும் இக்மான் மலைகளும் தொலைவில் தெரியும்
அந்த மலைகள் தொடர்ந்து நிறம் மாறிக்  கொண்டேயிருக்கும், இரவுபகலாக, எப்போதும்  :  அழகாக, ட்ர்ெஸ்கா விசா மலையின் பணி போர்த்திய சிகரம் மூடுபனிக்கூடாக சிலசமயம் தெரியும். ஆதெமுக்கு பணியென்றால் பிரியம்.  அவருக்கு ஐம்பத்திரெண்டு வயது. கடந்த காலத்தில் நடந்துவிட்ட குற்றங்களைத் தடுத்து நிறுத்தப்போகிற ஒரு புத்தகத்தை அவர் எழுதவிரும்பினார்.

ஆதெம்கரிமான் என்னமாதிரி மனிதர் ? அவர் பிறந்தது சரயேவோ வில். அப்படிச் சொல்வது கொஞ்சம் குழப்பக்கூடியதுதான்: சரயேவோவில் எப்படி ஒருவர் பிறக்கமுடியும்? அவர் நல்லநிறமாக இருக்கவில்லை. ஆனால், அதுவும்கூட சரியானதல்ல. இப்படிச் சொல் வது பொருத்தமாக இருக்கலாம் : சாம்பல்நிற தலைமுடி ; மீசையோ தாடியோ கிடையாது, சாதாரணமான உருவம் : தனியான அடை யாளம் எதுவுமில்லை.

மனிதன் என்பவன் இரண்டு கால்கள் உள்ள இறகுகள் இல்லாத ஒரு உயிரி என்று பிளாட்டோ சொன்னார். தமாஷாகச் சொன்னால் இந்த விவரிப்பு ஆதெம் கரிமானுக்குப் பொருந்து ம். ஆதெமின் உயிர்ப்பு அவரது உடலின் மேல்பகுதியில் தான் இருந்தது : அவரது இதயத்தில், அவரது தலையில் அவருக்கு ஒரு ஆன்மாவும் இருந்தது, அவர் நுட்பமான உணர்வு கொண் டவர், நேர்மையானவர். ஒரு மனிதனை அவன் பேசுவதற்கு முன்பே புரிந்துகொள்ளும் திறமையும், வரப்போகிற தீங்குகளை முன்பே உணர்ந்து கொள்ளும் ஆற்றலும் அவருக் கிருந்தது. தனி ைம யி ல் இருக்கும்போது மக்களைப் பற்றிய எண்ணம் ஆதெமைக் கிலி கொள்ளச் செய்யும். எல்லா மிருகங்களுமே ஆதெமுக்குப் புரிந்து கொள்ள முடியாதவை தான், ஆனாலும், அவற்றைக் கவனித்துக் கொண்டிருப்பதில் அவருக்குப் பிரியம், ஆதெம் கரிமான் என்னமாதிரி எழுத்தாளர் என விவரிப்பது ஒரு விதத்தில் எளிதானது : நல்ல எழுத்தாளர், ரொம்ப நல்ல எழுத்தாளர், ஆனால் யாருக்குமே தெரிந்திராத எழுத்தாளர்

ஆதெமின் புத்தகத்தில் முதல்வரி இதுதான் ;

1942ல் சேத்னிக்குகள் ஃபோஸரிவைச் சேர்ந்த ஹாஜி தஹிரோவிச்சின் 'முதுகுத்தோலை உரித்தார்கள். அந்தத் தோலை அவனது தலைமேல் இழுத்து மூடிவிட்டு ஒரு சீட்டை அதில் செருகி விட்டுப் போனார்கள் அந்த சீட்டில் இப்படி எழுதியிருந்தது : முக்காடு போட்ட முசுலீம் பெண்".

சே த் னி க்கு க ள் ஹாஜி தஹிரோவிச்சின் தோலை ஏற்கனவே உரித்துவிட்ட பிறகு எப்படி அதை ஆதெம் கரிமான் த டு க் கப் போகிறார்?

ஆதெம் அவரது புத்தகத்தை இந்த வருடம் ஏப்ர லி ல் எழுதத்தொடங்கினார். அதே மாதத்தில்தான் அதுவும் நடந்தது. ஒரு ஆள்அவரும் புத்தகங்கள் எழுதுபவர் தான் ஒரு பேராசிரியர், அவர் தபாஸி என்ற கிராமத்தில் ஒரு மனிதத்தலையை உதைத்து உரு ட் டினார். தற்செயலாக, தபாஸியும் ஃபோஸா வைச் சுற்றியுள்ள மலைகளில் உள்ள ஒரு ஊர்தான்.

அந்தப் பேராசிரியர் அவராக அந்தத் தலையை உதைக்கவில்லை. போஸ்னிய அரசின் அமைச்சர் ஒருவர் அங்கிருந்தார்அல்லது யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு சமயத்தில் அந்தத் தலையை உதைக்கத்தான் போகிறார்கள்; அதைத் திருப்பி உதைத்து விளையாட இன்னும் யாரோ இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி உதைத்து விளை யாடிய பிறகு அவர்கள் தங்களது ஷிக்களை கழுவிக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

பேன்ட்களை சுருட்டிவிட்டுக் கொண்டிருந் தால் ஆச்சரியம்தான்.
அந்த போஸ்னிய அமைச்சர் உதைத்துப் பேராசிரியர் பக்கம் தள்ளியதும் அவர் திருப்பி உதைத்து அமைச்சர் பக்கம் தள்ளியதுமான அந்த மனிதத்தலை, ஒருகாலத்தில் அந்த கிராமத்தின் விவசாயி ஒருவரது கழுத்தில் இருந்தது அந்த விவசாயிக்கு ஒரு ஆட்டு மந்தை இருந்தது. அவரது ஆடுகளின் செழுமை அந்த வட்டாரத்துக்கே தெரியும், அவர்கள் அவரை நேரடியாக சிரச்சேதம் செய்துவிடவில்லை : முதலில் அவரிடம் பத்து ஆட்டுக்குட்டிகள் கேட்டார்கள், அப் புற ம் பிராந்தி கேட்டார்கள் நிறைய பிராந்திஅப்புறம் முப்பது ஆடுகள் கேட்டார்கள். அவர்கள் எல்லோருமே அந்த விவசாயி வீட்டு மேசைக்கு எதிரே மரபெஞ்சுகளில் வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள் - அந்த அமைச்சர், அந்த பேராசிரியர், அப்புறம் எழுசேத் னிக்குகள். அந்த விவசாயி ஆடுகளைத்தர மறுத்துவிட்டார். அவர்கள் பணம் தருவ சொன்னார்கள் மறுபடியும் அவர் மறுத்துவிட்டார். ஆகவே, மூன்று சேத்னிக்குகள், அவரது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். அங்கேதான் அவரை அவர்கள் கொன்றது.

தாகச்

அதற்கு இன்னொரு காரணமும் கூட இருந்தது; அவர் ஒரு செர்பியர் இல்லை. அந்த ட்ரினா ஆறு அந்த விவசாயி எந்த ஆற்றங்கரையில் வசித்துவந்தாரோ அந்த ட்ரினா ஆறு - செர்பியர்களுக்கு மட்டுமே சொந்தம், பெல்கிரேடில் உட்கார்ந்து கொண்டு புத்தகங்கள் எழுதிக்கொண்டிருக்கும் மனிதர்கள் குறைந்தபட்சம் இப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

டொப்ரிஞ்சா முற்றுகையின் பதினைந்தாம் நாள் :

"நான் எழுதத் தொடங்கிறேனே அந்த புத்தகத்தtல்' என்றார் ஆதெம் "ஆனால் அது சாத்தியமில்லை' * அந்த முதல்வரியை நீ படித்தாயா?" "ஆமாம், படித்தேன்' 'ஹாஜி தஹிரோவிச்சின் தலைவிதியைப்பற்றி அதை ப் படிப்பதற்கு மு ன்பு உனக்குத் தெரியுமா?"

'இல்லை, எனக்குத் தெரியாது' 

'சரி உனக்கு இப்போது தெரிகிறதா? 
"ஆமாம் தெரிகிறது" 
" உனக்கு அவனைப் பார்க்கமுடிகிறதா?" 
"ஆமாம், பார்க்கமுடிகிறது" 
'அவனைப் பிணமாகவா பார்க்கிறாய்?" '
இல்லை, அந்தக் கொடூரமான சூழ்நிலையில் உயிரோடுதான் பார்க்கிறேன்'.
 "அதுதான்!' என்றார் ஆதெம்,
 'இப்போது நான் செய்ய வேண்டியதெல்லாம் அவனது தோலை உரித்து விடாதபடி அவர்களைத் தடுக்க வேண்டியது, அவ்வளவு தான்' 
'ஆனால் எப்படி ?" 
'அது சாத்தியமில்லாமல் இருக்கலாம் ஆனால் குறைந்தபட்சம் நான் முயற்சியாவது செய்கிறேன்' என்றார் ஆதெம் கரிமான்,

அதே நாளில், சேத்ணிக்குகள் ரோகாடிலாவுக்கு மேலேயுள்ள ஒரு கிராமத்தில் புகுந்து அங்கிருந்த ஆண்களையெல்லாம் இழுத்து வந்து ஒரே இடத்தில் நிறுத்தினார்கள். பிறகு அவர்களையெல்லாம் உயிரோடு எரித்துக் கொன்றார்கள்,

குறிப்புகள் :

சேத்ணிக் படைகளைக் குறிப்பிடப் பயன் படுத்தப்படும் சோடா' (CETA) என்ற சொல்லிலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை, சேத்னிக்குகளுக்குப் பல குணாம்சங்கள் உள்ளன அவர்கள் பொய் சொல்வார்கள், அவர்கள் செர்பியர்கள். அவர்கள் போஸ் னியர்களை அழிப்பார்கள் அப்படி அழிப்பதன் மூலமாக - அதாவது துண்டு துண்டாக

*ஏற்கனவே நடந்துவிட்ட குற்றங்களை தடுத்துவிடலாமென்று எ ப் படி நினைக் கிறீர்கள் ? நான் ஆதெம் கரிமானைக் Gë si Gë Lisit,


வெட்டிக் கொல்லுதல், கொலை செய்தல், தீயிட்டுக் கொளுத்துதல், பெண்களைக் கற் பழித்தல், கொள்ளையடித்தல் மூலமாக - போஸ்னியாவை வென்றுவிடலாமென சேத்னிக்குகள் நம்புகிறார்கள். அந்த சேத்னிக்குகள் செர்பியர்களின் நலன்களை பாதுகாப்பவர்கள். செர்பியர்களின் நலன்களென்றால் -செர்பிய ஆண்கள், பெண்கள், பறவைகள், மீன்கள், தாவரங்கள், இன்னும் சொன்னால் செர்பியக காக்கைகள் என்றும் கூட அர்த்தமாகும். டாக்டர், ஸ்வெதிஸ்லாவ் ஸெக் எ ன்ப வர் தனது, செர்பிய இயற்கை பற்றி (on serbain Nature, Zemum - 1938) என்ற நூலில் தெரிவித்துள்ள கவலையைக் கவனியுங்கள் :

'கடந்த முப்பது ஆண்டுகளில் செர்பியக் காக்கைகள் பறப்பதற்கு மிகவும் சோம்பல் படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தமாதிரிப் போக்கு நீடித்தால் இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் செர்பியக் காக்கைகள் பறப்பதையே நிறுத்திவிடும் " அது காக்கை என்பது அல்ல பிரச்சனை, அது செர்பியக் காக்கை என்பதுதான் கவலைக்குரிய விசயம்,

போஸ்னியாவின் தலைநகர், மசூதிகள், திருச்சபைகள் தேவாலயங்கள் நிரம்பிய இடம். (பாடகர்களையும், நடிகர் களையும் பற்றி சொல்லத் தேவையில்லை). அந்த நகரம் மலைகளால் சூழப்பட்டது : அதன் வழியேதான் மில்ஜாக்கா ஆறு ஓடு கிறது, உயரமான் வெள்ளை மதில்களால் சூழப்பட்டு இடையிடையே நீர்வீழ்ச்சிகளும், பாலங்களும் கொண்ட நகரம், பாலங்கள் ஒவ்வொன்றும் அரண்மனைகளின் நுழை வாயில்கள் போல அவ்வளவு அழகாயிருக்கும், சரயேவோ என்ற சொல் துருக்கிய வார்த்தை யான சராஜ்’ (SARAJ) என்பதிலிருந்து உண் டானது சராஜ் என்றால் அரண்மனை என்று பொருள், சரயேவோ என்ற சொல் 1507 ல் தான் முதன்முதலில் புழக்கத்துக்கு வந்தது

சரயேவோ :

1897-ல் யூகேன் சாவோஜ்கி சரயேவோவை

சூறையாடித் தீ யி ட் டான். அடுத்து வந்த முன்னூறு ஆண்டுகளில் சரயேவோ ஐந்து முறை தீக்கிரையாக்கப்பட்டது. இப்போது த்ரெபெவிச் ம ன ல களுக்கு அப்பால் டொப்ரிஞ்சா வரை இந்த நகரம் விரிவடைந்து, நானும், ஆதெம் கரிமானும் வசிக்கின்ற டொப்ரிஞ்சா வரைக்கும்.

போஸ்னியா : ஒரு நல்ல நாடு

81/rஸ்fைur ஹெர்ஸ் கிகாவீனா அதே போலத்தான். ஹெர்ஸகொவீனாவில் உள்ள மலைகள் வெறுமையாய் இருக்கின்றன என்பது தவிர.

ட்ரீனா அழகிய குளிர்ந்த ஆறு. அதுதான் செர்பியாவிலிருந்து போஸ்னியாவைப் பிரிப்

பதும், இணைப் பதும், சொர்க்கத்தின் உதாரணங்கள் என நான் நம்புகின்ற அழகிய தோட்டங்கள் அந்த ஆற்றின் கரையெங்கும் உள்ளன. அதற்கு அப்புறம் உள்ள மலைகள் உயர்த்து, கம்பீரமாக காட்சி தருகின்றன, மெல்லிய தென்றல் அவற்றிலிருந்து வீசும்,

டொப்ரிஞ்சா முற்றுகையின் பதினாறாவது நாள் :

ஹாஜி தஹிரோவிச் இன்னமும் வலியில் கதறுகிறானா?" நான்கே ட்டேன். எனக்குக் கவலையாக இருந்தது.

கதறுகிறான்" கரிமான் பதில் சொன்னார், இதைப்படி' என்றார்.

1942 மார்ச் மாதத்தின் கடைசி வியாழக் கிழமை அதிகாலையில் சேத் னிக்குகள் *மிலிசி"க்கு சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள விர்சிஞ்சே கிராமத்தில் நுழைந்தார்கள் கண்ணுக்குத் தென் பட்ட மனிதர்களை யெல்லாம் ஒரு இடத்துக்கு இழுத்துவந்தார்கள் அவர்களையெல்லாம் ஒரு மஸ்ஜிதுக்குள் அதைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள், அந்த கா ைல யி ல், உயிரோடு நூ ற் று எண்பத்து மூன்று மனிதர்கள் விர்சிஞ்சேவில் இறந்தனர். தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். அந்த நூற்று எண்பத்து மூன்று பேர்களில் அந்த ஊரின் முவல்லிம், ஹீசைன் எஃபின்டி தலோவிச் என் பவரும் அவருடைய குடும்பத்தினரும் அடக்கம் : அவரது மனைவி, அவரது நான்கு மகன்கள், ஒருமகள்.

தள்ளிப் பூட்டினார்கள்,

இ ைத த் தடுக்கமுடியாவிட் டால் ' நான் கேட்டேன் : இதில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை’ முன்பே நிகழ்ந்து விட்ட குற்றங்களை ஆதெம் த டு க் க ப் போகிறார் என்பதுதான் மொத்த திட்டமும்

g66

*மழை" ஆதெம் அமைதியாகச் சொன்னார். "பலத்தமழை தீயை அணைத்துவிடும் ! அவர்கள் காப்பாற்றப் படுவார்கள்!"

"ஆமாம்! ஆனால் அது உங்கள் புத்தகத்தில் மட்டும்தான் நடக்கும்'

* எல்லாம் ஒன்றுதான்' ஆதெம் சொன்னார்.

திடீரென ஆதெம் என் கைகளைப் பிடித்து இழுத்துத் தரையில் வீழ்த்தினார். அவரும் பதுங்கிக் கொண்டார். வெளியில் துப்பாக்கி வெடிக்கும் சப்தங்களை நாங்கள் கேட்டோம். குண்டுவீச்சு மீண்டும் தொடங்கிவிட்டது. லுகா விஸ்ா தளத்திலிருந்து டொப்ரிஞ்சாமீது குண்டுவீசப்படும் பதினாறாவது நாள் இது. நாங்கள் கூடத்துக்குத் தவழ்ந்து போனோம். அதுதான் நாங்கள் பாதுகாப்பாக உணரும் Lu (55).

"குண்டுவிசத் தொடங்கிய புதிதில் . '

ஆதெம் கிசுகிசுத்தார், "சிட்டுக்குருவிகளின் சப்தத்தை நீ கேட்டிருக்கவே முடியாது - கவனித்தாயா? அவ மொத்தமும் பாடுவதை நிறுத்தி விட்டன. ஒருவாரம் போனதும் அவை திரும்பவும் பாடத் தொடங்கின. துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தங்களுக்கு இடையே நீ கேட்டிருக்கலாம் இப்போது அ ை வ தொடர்ந்து பாடுவதை நீ கேட்கலாம். வேட்டுச்சப்தங்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி.

குறிப்புகள் :

விர்சிஞ்சீச சில குடிசைகள், சில வீடுகள், ஒரு பள்ளிக்கூடம் ஆகியவை கொண்ட ஒரு கிராமம். சுற்றிலும் அராபியாவில் உள்ளது போலவே மலைகள்,ஆனால்இவைபசுமையாக இருக்கும். இன்னும் சரியாகச் சொன்னால் விர்சிஞ்சேவில் உள்ள மலைகள் குளிர் காலத்தில் வெண்மயாக இருக்கும். அராபியாவில் அப்படி இருக்காது. அர்ாபியாவில் குளிர் காலத்தில் பணி பெய்வதே இல்லை.

மஸ்ஜித் : கோபுரம் போன்ற அமைப்பும் வேறு சில அமைப்புகளும் இல்லாத மசூதி, எவை யெவை இருக்காது என்பதை நான் இங்கு பட்டியலிடப் போவதில்லை. ஏனெனில் பிறகு அதை நான் விளக்கவேண்டியதிருக்கும், மசூதியில் தான் 183 பேர்களை சேத்னிக்குகள் எரித்துக் கொன்றது. அந்த 183 ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சேத்னிக்குகளால் தான் எரித்துக் கொல்லப்பட்டாாகள். கம்யூனிஸ்டுகளால் அல்ல என்ற போதிலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக விர்சிஞ்சேவின் மக்கள் அந்த ம சூ தி யை மீண்டும் கட்டிக்கொள்வதற்கு கம்யூனிஸ்டுகள் அனுமதிக்கவே யில்லை.

மூவல்விம் : மதகுரு

பார்டி சான்கள் : டிட்டோவின் வீரர்கள்



குறிப்புகளைப் பற்றிய குறிப்புகள் :

ஜோஸ்ப் ஃப்ராஸ் டிட்டோ :

1945-ல் சேத்னிக்குகளையும் உஸ்தஷாக்க ைளயும் தோற்கடித்த பார்டிசர்ன்களின் தலைமைத் தளபதி அவர்தான். 1980-ல் அவர் இறந்த பிற்பாடு அவரது நாடு பிளவு பட்டது. செர்பிய சேத்ணிக்குகள் அவரது ராணுவத்தின் அத்தனை ஆயுதங்களையும் கொண்டுபோய் விட்டார்கள். இரண்டாவது உலக யுத்தத்தின் துவக்கத்தில் பாசிஸ்டுகளை எதிர்த்த போரின் போது பார்டிசான்களோடு சேரும்படி சேத்னிக்குகளை டிட்டோ இரண்டு முறை அழைத்தார். அவர்கள் சம்மதித் தார்கள் பொய்யாக,

9 (5 வசந்தகால காலை நேரத்தில், க்ரெபோல்ஸ்கோ மலையின் சரிவில் பார்டிசான்களின் குழு ஒன்றும், சில செர்பியர்களும் முஸ்தபா தொவாட்ழியா என்ற பெய ருடைய ஒரு முசுலீமும் நின்று கொண்டிருந் தனர்.

எங்களோடு வந்து செர்பிய பார்டிசான்கள்

* அன்புத்தோழரே, சேர்ந்து கொள்' வாஞ்சையோடு அழைத்தனர்.

முஸ்தபா எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் அவர்களோடு போனார். சற்றுநேரத்திற்லெல்லாம் அந்த பார்டிசான்கள் சேத்னிக்கு களாக மாறிவிட்டார்கள். முஸ்தப ா ைவ உயிரோடு கழுவிலேற்றினார்கள். அது நடந்தது 1942 மே மாதம் இர ண் டா ம் தேதியில்.

நோபல் பரிசு பெற்ற நமது எழுத்தாளர் 48

இவோ ஆன்ட்ரிச் அதை இப்படித் தான் விவரித்தார் :

'இரண்டரை மீட்டர் நீளமுள்ள ஒக்மரக்கம்பம் ஒன்று தரையில் நடப்பட்டிருந்தது. அதன் முனையில் இரும்பாலான கூர்நுனி பொருத்தப் பட்டிருந்தது. அவர்கள் முஸ்தபாவை தரை யில் படுக்கச் சொன்னபோது அவர் தலையை கவிழ்ந்து கொண்டார். பிறகு சேத்னிக்குகள் அவரை அணுகி அவரது கோட்டயும், சட் ைட ைய யும் கழற்றினார்கள். எதுவும் பேசாமல் அவர் குப்புறப்படுத்துக் கொண்டார். அவர்கள் அவரது கால்களைக் கயிற்றால் பிணைத்தார்கள், அவரது கால்களை இரண்டு சேத்னிக்குகள் விரித்துப் பிடித்துக் கொண்டார்கள். அதே சமயத்தில் யோவான் என்கிற இன்னொரு சேத்னிக் அந்தக் கம்பத்தை இரண்டு மரத்துண்டுகளுக்கு எதிரே வைத்து அந்த கம்பத்தின் கூர்நுனி முஸ்தபாவின் கால்களுக்கிடையில் இருக்கும்படி அமைத்தான். "பெல்ட்'டிலிருந்து சின்ன அக ன் ற கத்தி யொன்றை எடுத்தான், கிடத்தப்படிருந்த முஸ்தபாவின் கால்சட்டையில் சூத்துப்பக்கமாக கிழித்து அந்தக் கம்ய்த்தின் முனை நுழையு மளவுக்கு ஒ ட் ைட போட்டான். கட்டப் பட்டிருந்த அவரது உடல் அந்தக் கத்தியின் சின்னக் குத்து விழுந்ததும் உதறியது, எழுந் திருக்கும்விதமாக மேல் பகுதியை உயர்த்தியது ஆனால் தி ரு ம் பவும் தரையில் விமுந்து மோதியது. அந்த குரூரமான வேலையின் ஒரு பகுதி முடிந்தது. யோவான் பின்பக்கமாக தாவி எழுந்தான். ஒரு மரசுத்தியலை எடுத்து அந்தக் கம்பத்தின் அடிப்பகுதியில் மெதுவாக ஒரே சீராக அடிக்க ஆரம்பித்தான். நிறுத்தி விட்டு அந்தக் கழுமரம் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் உடலைப் பார்த்தான், கயிறுகளை ஒரேசீராக மெதுவாக இழுக்கும்படிக் கூறும்விதமாக பக்கத்திலிருந்த இரண்டு சேத்னிக்குகளைப் பார்த்தான், செருக பட்டிருந்த அந்த மனிதனின் உடல் ஒவ்வொரு அடி விழும்போதும் இறுகியது. அவரது முதுகெலும்பு வளைந்து குனிந்தது, ஆனால் இழுத்து ப் பிடிக்கப்பட்டிருந்த கயிறுகள் இறுக்கி அவரை மீண்டும் நிமிர்த்தின. அந்த சபிக்கப்பட்ட மனிதர் எப்படி தனது தலையை தரையில் மோதிக் கொண் டார் என்பதை ஒருவர் கேட்டிருக்கலாம், அந்த வினோதமான சப்தத்தையும் கூட. அது ஒரு அலறலோ, அழுகையோ அல்லது மரணக்கூச்சலோ அல்ல; அது ஒரு மனிதசப்தமோ கூட அல்ல. கழுவேற்றப்பட்ட, சித்ரவதை செய்யப்பட்ட அந்த உடலிலிருந்து வந்த சப்தம் ஒரு கிறிச் ஒலி, அல்லது ஒரு வெடிப்பு, யாரோ வேலி அ டை க் க மரக்கட்டைகளில் முளைகளை வைத்து அடிக்கும் போது உண்டாவதைப் போல ஒவ்வொருமுறை அடித்ததும் யோவான் இப்போது அந்தக் கழுவேற்றப்படும் உடலை அணுகிப் பார்த்தான், தடி சரியானபடி போகிறதா என் ஆராய்ந்தான், முக்கியமான பாகங்கள் சேதம் ஆகாமல் இருக்கின்றனவா என உறுதி செய்துக் கொண்டான், மீண்டும் தனது பணியைத் தொடர்ந்தான். ஒருகணம் அடிப்பது நிறுத்தப்பட்டது. வலது தோள் பட்டையின் தசை இறுகிப் போயிருப்பதையும், தோல் மேலே கிழித்துக் கொண்டு வருவ தையும் யோவான் பார்த்து விட் டான். உடனே அந்த உடலை அணுகி உப்பிக் கொண்டுவந்த பகுதியைக் குறுக்காகக் பத்தி யால் கிழித்தான். வெளிறிப்போன ரத்தம் முதலில் கசிந்தது, அப்புறம் பீச்சியடித்தது. மெதுவாக கவனமாக இரண்டு மூன்று முறை அடிக்கப்பட்டதும் அந்த கம்பத்தின் இரும்பு கிழிக்கப்பட்ட பகுதி வழியாக நீட்டிக்கொண்டு வந்தது. அந்த இரும்பு நுனி வலது புறக் காதுக்கு அருகில் வரும்வரை மேலும் சில முறை அடித்தான். வாட்டுவதற்க்ாக கழியில் கோத்துத் தயாராக வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல அந்த மனிதன் கழுயேற்றப்பட்டான் ஒரேயொரு வித்தியாசம் கழியின் நுனி அவன் வாய்வழியே வருவதற்குப் பதில் முதுகுப் பக்கமாக வந்து விட்டது, அவனது உள் உறுப்புகளை இதயமோ நுரையீரலோ எதுவுமே பாதிக் கப்கப்படவில்லை. சுத்தியலைத் தூர எறிந்து விட்டு தரையில் கிடந்த அந்த மனிதனை நோக்கிச் சென்றான், யோவான், அந்த உடலை சோதித்துப் பார்த்தான், கம்பத்தின் நுனி வெளியேவந்திருந்த இடத்திலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஒரு குளம் போல ரத்தம் கீழே தேங்கியிருந்தது. அந்த இரண்டு சேதனிக்குகளும் விரைத்துப்போன அந்த உடலை மல்லாக்கப் புரட்டினார்கள் அந்த உடலின் கணுக்கால்களை அந்தக், கம்பத்தோடு வைத்து சேர்த்துக் கட்டினார்கள். அதே சமயம், அந்த மனிதன் உயிரோடிருக் கிறானா என யோவான் சோதித்துக் கொண் டிருந்தான், அவரது முகத்தைப் பார்த்தான். அது திடீரென்று வீங்கி உப்பிப்போயிருந்தது, கண்கள் விரிந்து துடித்துக் கொண்டிருந்தன, ஆனால் பார்வை அசையாமல் நிலைகுத்தி யிருந்தது, உதடுகள் வலிப்பு வந்தது போல இறுகியிருந்தன, கிட்டித்துப்போன பற்கள் உதடுகளுக்குப் பின்னே பின்னிக் கொண்டிருந் தன. அவரால் முகத்தின் தசையில் சில பகுதிகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை, அவரது முகம் ஒரு முகமூடியைப் போல காட்சியளித்தது, வேகவேகமாக மூச்சுவிட்டதில் அவரது நுரையீரல்கள் அடித்துக் கொண்டன. சமைப்பதற்கு எடுத்துச் செல்லும் விலங்கைத் தூக்குவதுபோல அந்த இரண்டு சேத்னிக்கு களும் அவரை மெதுவாக தூக்கினார்கள். ஜாக்கிரதையாகத் தூக்கும்படியும், கவனமாக நிமிர்த்தும்படியும் அவர்களை நோக்கிக் கத் தி னா ன், அவனும் உதவி செய்தான். அந்தக் கம்பத்தின் அடிப்பகுதியை அவர்கள் தரையிலிருந்த குழிக்குள் நட்டார்கள். பின்புறமாக ஒரு கட்டையால் முட்டு கொடுத்து அதை அந்தக் கம்பத்தோடு சேர்த்து ஆணி அடித்தார்கள்.

யோவான்



அந்த மூன்று சேத்னிக்குகளும் அங்கிருந்து விலகிக் குழுவின் மற்றவர்களோடு சேர்ந்து கொண்டனர். அந்த வெற்றிடத்தில் முஸ்தபா தோவாட்ழியா அந்தக் கம்பத்தில் தனித்து இருந்தார், தரையிலிருந்து ஒரு மீட்டர் மேலே. மார்பு பிளந்து. இடுப்பு வரை நிர்வாணமாக, தொலைவிலிருந்து பார்க்கும்போது, அந்தக் கம்பம் அவரது உடலின் வழியே செருகப்பட் டிருப்பதையோ, அவரது கணுக்கால்கள் அத்துடன் பிணைக்கப் பட்டிருப்பதையோ அவரது கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருப் பதையோ யாரும் அனுமானிக்க முடியாது.

சித்ரவதைக்கு ஆளான அந்த மனிதரை சேத்னிக்குகள் நெருங்கிப் பார்த்தார்கள். கம்பத்தின் வழியே மெலிதாக ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அவர் இன்னமும் உயிரோடிருந்தார், நடப்பது என்னவென்ற உணர்வோடு அவரது உடலின் பக்கவாட்டுப் பகுதிகள் உயர்ந்து, தாழ்ந்து கொண்டிருந்தன, அவரது கழுத்து நரம்புகள் புடைத் துக் கொண்டிருந்தன. அவரது விழிகள் மெதுவே சுழன்று கொண்டிருந்தன. ஆனால், அவரால் பார்க்கமுடிந்தது. கிட்டித்துப்போன அவரது பற்களுக்கிடையிலிருந்து ஒருவகை யான இழுப்பும், உறுமலும் வெளியில் சிதறிக் கொண்டிருந்தன, அதிலிருந்து ஒரு சில வார்த்தைகளை மட்டும்தான் ஒருவர் புரிந்து கொள்ள முடியும் : : சேத்னிக்குகளே. சேத்னிக்குகளே' அவர் விம்மினார். "நீங்கள் நாய்களைப்போல சாகவேண்டும் . நாய் களைப் போல சாகவேண்டும் !"

அது 1992-ன் ஜூலை பதினொன்றாம் தேதி,

குண்டுவீசித் தாக்கினார்கள். நான்கு குழந்தைகளைக் கொன் று பத்து குழந்தைகளைக் காயப்படுத்தினார்கள்.

டொப்ரிஞ்சா முற்றுகையின் பதினெட்டாம் நாள் 
ஆதெம் சொன்னார் : முதலில் அவர்கள் டாங்குகளால், எந்திரத் துப்பாக்கிகளால், விமான எதிர்ப்பு பீரங்கிகளால் குடியிருப்பைத் தாக்கினார்கள். அப்புறம் கட்டிடத்துக்குள் நுழைந்தார்கள். நீ உயிரோடு கிடைத்தால் உடனே மரணம் அவர் கள் உனது குரல் வளையை அறுப்பார்கள், உனது வீட்டைக் கொள்ளையடித்து விட்டு அதைத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். நீ மாட்டிக் கொள்ளாதே. நீ டொப்ரிஞ்சாவுக்குள் நழுவிவிடலாம். ஒரு நண்பருடனோ தெரிந்தவர்களுடனோ தங்கலாம். ஆனால் சேத்னிக்குகள் உன்னைப் பின் தொடர்ந்து வருவார்கள். நீ நிலவறைக்குள் பதுங்கலாம் - தவறா? இப்போது அவர்கள் குண்டுவீசி அங்கேயே உன்னை இருத்தி விடுவார்கள்: வெளிச்சம் கிடையாது, தண்ணீர் கிடையாது, உணவு கிடையாது, உன்னால் தாக்குபிடிக்க முடியாமல் போகும்போது நீ வெளியே வருவாய், கீரைகளைப் பறித்து சமையல் செய்யலாமென. நீ பதுங்கு குழி யிலிருந்து சுடப்படுவாய் ! காயமுற்று, கொல்ல LLITLDs).

டொப்ரிஞ்சாவைக் காத்து நிற்பவர்கள், உன்னைப் பதுங்கு குழியிலிருந்து சுட்டவனைப் டொப்ரிஞ்சா முற்றுகையின் பதினேழாவது பிடிப்பார்கள். அப்புறம் என்ன நடக்கும்? நாள், வானத்தின் ஒருபகுதியை, மலையின் சேத்னிக்குகள், பிடிபட்டவனை ஒப்படைக்கச் ஒரு பாகத்தை அடுத்த கட்டிடத்தின் ஒரு சொல்லிக் (345. L'Irfiss, டொப்ரிஞ்சாவும் பகுதியை நாங்கள் பார்த்தோம். டொப்ரிஞ் சரயேவோவின் பிறபகுதிகளும் அவர்களால் சாவுக்கு பக்கத்தில் ரஸ்னிகா குடியிருப்பில் முற்றுகையிடப்பட்டுள்ள நி ைல யி ல் ஒரு சேத்னிக்குகள் ஒரு மழலையர் பள்ளியைக் ஆம்புலன்ஸை ஆஸ்பத்திரிக்கு அனுமதிப்பதற்கு மாற்றாக பிடிப்பட்டவனை விடுவிக்கச் சொல்வார்கள். ஆக வே , நீ அவனை - உ ன் ைன சுட்டுக் காயப்படுத்திய அதே ஆளை-ஒப்படைப்பாய். அதே நாளில் நகரின் இன்னொரு பகுதியில், மொய்மிலோ' என்று வைத்துக் கொள்ளேன் அங்கே இன்னொரு சேத்னிக் ஒரு நர்சை சுட்டுக் கொல்வான். ஆக, கடைசியில் உன் புண்ணுக்கு மருந்து போட்டுக் கொள்வதற்காக ஆஸ்பத்திரிக்கு நீ போகும்போது அங்கே மருந்தும் இருக்காது, சாப்பாடும் இருக்காது, ஒரு நர்ஸ் தான் கிடப் ஆக, இன்னொரு ஆஸ்பத் திரிக்கு நீ மாற்றப்படுவாய். கூட்டம் நெரியும் இன்னொரு ஆஸ்பத்திரிக்கு; வறுத்த பன்றிக் கறியைத் தின்றுவிட்டு, பிராந்தி குடித்து விட்டுத் தங்களது பாடல்களைப் பாடியபடி சு ற் றி லுமு ள் ள மலைகளிலிருந்து சேத் னிக்குகள் குண்டுவீசிக் கொண்டிருக்கும் இன் னொரு ஆஸ்பத்திரிக்கு, அப்புறம், அந்த ஆம்புலன்ஸ் திரும்பிச் செல்லும், தடையைக் கடப்து செல்ல சேத்னிக்குகள் அனுமதித்த அந்த ஆம்புலன்ஸ் - சேத்னிக்குகள் அதன் டிரைவரைக் கொன்றுவிட்டு அதைச் திருடிச் செல்வார்கள். இதற்கிடையில் நீ பட்ட காயத் தி னால் ஆஸ்பத்திரியில் செத்திருப்பாய், உன்னை சுட்டானே அந்த காயத்தினால், ஆம்புலன்ஸ் வருவதற்காக உன்னால் திருப்பி

பாள்-பினமாக

ஒப்படைக்கப்பட்டானே அவன் சுட்டதனால் உண்டான காயத்தினால், இப்போது அவர் களால் திருடிச் செல்லப்பட்டதே அந்த ஆம்பு லன்ஸ், ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள் உனக் பக்கத்துத் தோட்டத்தில் ஒருகுழி வெட்டுவார்கள், ஆனால் சேத்னிக்குகள் உன்
காகப்

சவப்பெட்டிமீது குருவை சுடுவார்கள் அடக்கம் செய்ய விரும்பிய துணிச்சல்மிக்க அந்த சில நல்லவர்கள் மீதும் இரவு கவியும்போது மலைகளிலிருந்த அவர்கள் உனது புதைகுழியின்மீது குண்டுவீசுவார்கள்.

சுடுவார்கள்,

முசுலீம் மத

உன்னை

சுடுவார்கள்.

**இந் த யுத்தத்தை எ ன் ன வெ ன் று நீ

சொல்வாய்?"

'ஹாஜி தஹிரோவிச்சின் காயங்கள் அவனை இன்னும் இம்சிக்கின்றன, அவனது வேதனை சகிக்கமுடியவில்லை நான் சொ ன்னே ன். "ஆமாம்' ஆதெம் மெதுவாகச் சொன்னாக் 'எனக்குத் தெரியும். ஆனால் விர்சிஞ்சாவைச் சேர்ந்த அந்த முல்லாவும், அவரது நான்கு மகன்களும், மனைவியும், மகளும் இன்னும் நூற்று எழுபத்தாறு பேர்களின் உயிர்களும் 'ரிக்கப்பட்ட அந் த மசூ தி யி லி ரு ந் து காப்பாற்றப்பட்டன '

"ஆமாம்' நான் சொன்னேன் "நேற்று ரோகடிஸாவுக்கு அருகில் ஆயிரம் வீடுகளை சேத்னிக்குள் கொளுத்தினார்கள். ஏராளமான வீடுகள்!" ஆதெம் கரிமான் சொன்னார். எனது உள்ளத்தில் ஒளியூட்டக் கூடிய வார்த்தைகள் ஜந்தே ஐந்துதான் உள்ளன' என்றேன் நான் போஸ்னியா ஹெர்ஸகெர் வீனாவின் பாதுகாப்பு ராணுவப்

LJ SOL

டொப்ரிஞ்சா முற்றுகையின் பத்தொன்பதாம் நாள்:

'உங்கள் புத்தகத்தின் ஆரம்பப் பகுதியைத் தான் நான் படித்தேன். ஆனால், ஏற்கனவே பலவிசயங்கள் பார்க்கமுடியாதபடி ஆகிவிட்டன விளக்கங்கள், விளக்கங்களுக்கு விளக்கங்கள் என நீங்கள் கொடுத்த போதிலும் பார்க்க முடியவில்லை.

** என்ன பார்க்க முடியவில்லை?' ஆதெம்

(34 l'UIT ff.

'டொப்ரிஞ்சாவைப் பாரக்க முடியவில்லை. விடுகளை மF களை, சந்துகளை, நாய்களைப் பார்க்க முடிய வி ல் ைல. எதையெல்லாம் பார்க்க முடியவில்லையென்று கணக்குப்போடிக் கூட என்னால் முடியவில்லை" என்றேன்.

O நிறப்பிரிகை

51

LILQCIL135LDWWW.padippakam.Com

இது ஒரு புத்தகம், சினிமா கிடையாது' என்றார் ஆதெம், புன்னகைத்தப்படியே சொன்னார் "ஒரு புத்தகமென்றால் புத்தகம் தான்'. "ஆனால் வாசிப்பவர்கள் எரிக்கப்பட்ட மசூதி யில் அந்த நூற்று எழுபததாறு உயிர்களைப் பார்க்கவில்லையே' நான் வலியுறுத்தினேன். "என்னுடைய புத்தகத்தை நீ எழுத விரும்பு கிறாயா?' ஆதெம் கேட்டார். *இல்லை ஆனால் எரியும் மசூதியிலிருந்து அந்த மக்கள் வெளியேறுவதை நீங்கள் பார்க்க கூட இல்லை. அவர்கள் எப்படி அந்த மசூதி யிலிருந்து வெளியேறினார்கள் எ ன் ப ைத நீங்கள் காட்ட முடியாதா ?”

அவர்கள் மெதுவாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்' என்றார் ஆதெம். " அப்படியா சங்கதி" என்றேன், கடைசியில் திருப்தியுற்ற உணர்வோடு, சற்று யோசித்து சொன்னேன் : " சரி, என்னைப் பொருத்த வரை, நான் சாட்சி சொல்லமுடியும், விர்சிஞ் சேவின் அந்த முல்லாவையும், அவரது நான்கு மகன்களையும் மகளையும் உயிரோடு நல்ல படியாக பார்த்ததாக அதை நான் பார்த் தேன்'

* நன்றி ' என்றார் ஆதெம். அது 1992 ஜூலை பதினேழாம்தாள் விசே

கார்டுக்கு அருகில் வுஸின் என்ற இடத்தில் எண்பது ஆண்களையும் பெண்களையும் ஒரு நிலறைக்குள் தள்ளி அடைத்து சேத் நிக்குகள் தீவைத்தது அதே நாளில்தான். நான் அதை ஆதெம் கரிமானிடம் சொல்லவில்லை, அவருக்கும் அது தெரியும் என்பது எனக்குத் தெரிந்திருந்த போதிலும்,

முடியவில்லை. என்னால் அவர்களைக் காப் பாற்றமுடியாது, ஆனால் ஐரோப்பாவால் அவர்களைக் காப்பாற்ற முடியாதா - அல்லது மற்றப்படி அது தயாராக இல்லையா, என்னால் அவர்களைக் காப்பாற்ற முடியாது, ஆன ல் அமெரிக்காவிலும் முடியாதா - அல்ல து அ த ற் கு விருப்பமில்லையா, என்னால முடியாது, ஆனால் இந்த மொத்த

உலகும் கூடவா அவர்களைக் காப்பாற்ற முடியாது, அல்லது அதற்கும் கூட விருப்ப மில்லையா,

O ஆங்கிலத்தில் : நெழாத் இப்ரீசீமோவிச் தமிழில் : ரவிக்குமார்

01-19-1993

மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகள் : போஸ்னியா, ஹெர்ஸ்கொவீனா :

முன்னாள் யூகோஸ்லேவியக் குடியரசின் ஆறு உறுப்பு நாடுகளில் ஒன்று. 51280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், சுமார் 45 லட்சம் மக்கள் தொகையையும் கொண்டது. மொத்த மக்கள் தொகையில் 48% செர்பியர்கள்,35%முசுலீம்கள் 22% க்ரோஷியர்கள், நாட்டின் பாதிப் பகுதி காடுகளாலும், மற்றவை மேய்ச்சல் மற்றும் விவசாய நிலங்களாலும் ஆனவை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே இல்லிரியன் என்ற ஆதிவாசி மக்கள் வாழ்ந் துள்ளதாகத் தெரிகிறது. போஸ்னியா என்ற பெயர் அவர்களால் வைக்கப்பட்டதென கூறப் படுகிறது.

டொப்ரிஞ்சாவிலிருந்து நூற்று எண்பத்து மூன்று பேர்களைக் ஆதெமால் காப்பாற்ற நாட்டின் ஆட்சி மொழி யா க இருக்கும் முடியும்போது எண்பது பேர்களை ஏன் செர்போ-க்ரோஷிய மொழி லத்தீன், கிரில்லிக் என்னால் காப்பாற்ற முடியாது? என்று ஆகிய இருமொழிகளின் எழுத்துக்களால் நினைத்துக்கொண்டேன். ஆனால் என்னால் எழுதப்படுகிறது.

52 O நிறப்பிரிகை

படிப்பகம்WWW.padippakam.COIn

‘யூகோஸ்லேவியாவின் இதயம்' என்று அழைக்கப்பட்ட இந்த நாடு, ஆஸ்திரிய நாட் டின் தலைமைப் பிரபு ஃப்ரான்ஸ் ஃபெர்டி னன்ட் என்பவரை கேவ்ரிலோ ப்ரின்ஸிப் என்ற போஸ்னிய மாணவர் சரயேவோவில் வைத்து 1914-ல் கொலை செய்ததால் முதல் உலகப்போர் மூள்வதற்குக் காரணமாகி உலக அரங்கில் பிரபலம்பெற்றது,

கி. பி. முதல் நூற்றாண்டுக்குப்பின் இந்த நாட்டின் ஆட்சி, பைசன்டீனியர்கள், க்ரோதியர்கள், ஹங்கேரியர்கள், ரோமானியர்கள், செர்பியர்கள் என மாறி வந்துள்ளது. ஓட்டோமான் பேரரசு அமைக்கப்பட்ட பின் 1400 முதல் 1878 வரை துருக்கியர்களால் ஆளப்பட்டு 1918-ல் யூகோஸ்லேவியாவின் பகுதியாக மாற்றப்பட்டது.

2. இந்தப்பிரதி அச்சாகும் நேரம் போஸ்னியாவை மூன்றாகப் பங்கிட்டு அமைதித்தீாவு' ஏதும் எட்டப்பட்டிருக்கலாம், கடந்த இருபது மாதங்களாக நடந்துவந்த சண்டையில் என்ன நடந்தது . என்ன நடக்கவில்லை. என்பதை இதுபோன்ற பதிவுகள் சொல்லிக்கொண்டே யிருக்கும், கதை, கட்டுரை, வரலாறு செய்தி அறிக்கை இவற்றுக்கு இடையிலான எல்லைகளை அழித்து அழிவின் வெப்பத்தைக் கடத்தி வந்து நமக்குள் பரவவிட்ட இந்தப் பிரதியை எழுதியவர் ஒரு போஸ்னிய எழுத்தாளர். வேறு விவரம் தெரியவில்லை.

நன்றி: ஆங்கிலத்தில் வெளியிட்ட - GRAWTA 42,

WINTER 1992, LONOON,

அமெரிக்காவிலிருந்து அனுப்பிய -

கோ. ராஜாராம் படிக்கக் கொடுத்த - ராஜன்குறை.

0 நிறப்பிரிகை

நிறப்பிரிகை - 7

*************************************************************************



*****************************************************************
ஜனவரி -94 வழக்கம் போல 120 பக்கங்கள் விலை ரூ. 20/-

ܦ .

இந்த இதழில்.

O

O

نب

பெரியாரியம் - கூட்டு விவாதம்

வகுப்பு வாதம் - நான்கு கட்டுரைகள்

- அ. மார்க்ஸ்

மாற்று மருத்துவ முறையாக - ஓமியோபதி - . அ. மார்க்ஸ்

அந்தோனியோ இராம்ஹி மாற்றுக் கலாச்சாரம்-ஒரு பார்வை . ஆ.மா.

மாற்றுக் கலாச்சாரங்கள் - வாழ்விற்கான சாத்தியங்கள் பற்றிய சில மேலோட்ட மான வார்த்தைகள் . ராஜன்குறை

டங்கல் அறிக்கையும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் . கெயில் ஓம்பேத்

தலித்களுக்குச் சார்பாகவா பன்னாட்டு நிறுவனங்கள்? . எஸ். சி.



அந்த கூட்டு விவாத (மாற்றுக் கலாச் சாரம்) அறிவிப்பு முதலியன.

53

படிப்பகம்

**********************************************************

Monday, January 15, 2018

முருங்கைமர மோகினி - கு.அழகிரிசாமி & சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் - தி.ஜானகிராமன்


https://ia600500.us.archive.org/1/items/orr-10582_Murungaimara-Mohini/orr-10582_Murungaimara-Mohini.pdf
முருங்கைமர மோகினி - கு.அழகிரிசாமி

Thanks to .விமலாதித்த மாமல்லன்

ஊருக்கு வடபுறத்தில் இருக்கும் ஐரணக் கவுண்டர் தோட்டத்துக்கிணற்றில் சதாகாலமும் இறவையாடிக்கொண்டிருந் தாலும் தண்ணிர்வற்றவே வற்றாது; எப்போதும் ஊறிக்கொண்டு தானிருக்கும். ஊருக்குப் புதிதாக வந்திருப்பவர்கள் அதில் இறங்கிக் குளித்தாலும் ஜலதோஷம் பிடிப்பதில்லை. அத்தோடு இறங்கிக் குளிப்பதற்கு ஏற்றபடிசெளகரியமானபடிகளுடனும் வழுக்கலில்லா மலும் இருக்கும்.

இந்தக் காரணங்களை உத்தேசித்துத்தான் பலகாரக்கடை நல்ல பெருமாள் பிள்ளை ஏறக்குறைய கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இதே கிணற்றில் குளித்து வருகிறார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் சனியும் புதனும் தவிர்த்து மற்ற நாட்களில் அதிகாலையிலேயே வந்து ஸ்நானத்தை முடித்துக்கொண்டு சூரியோதயத்தின் போதுகடைதிறக்கப் போய்விடுவார்.

ஆனால், போன தைப்பொங்கலுக்கு மறுநாள் ஏதோ தலை வலிக்கிறது என்று சொல்லிக்கொண்டுபடுத்தார் நல்லபெருமாள் பிள்ளை. அதிலிருந்து சுமார் இரண்டு மாதகாலம் குளிர்ஜுரம் அவரை வாட்டியெடுத்து விட்டது. ஆள் மிகவும் உருக்குலைந்து போய் விட்டார். ஊராரும் அவருடைய மனைவியும் கூட, நபர் வேலை சாய்ந்து விடும்' என்று ஒரு நாள் சந்தேகப்பட்டு

126 * கு.அழகிரிசாமி







விட்டார்கள். மனிதன் செத்துப்போன பிறகு அவனுடைய குணாதிசயங்களைப் பற்றிப் புகழ்ந்து பேச ஆரம்பிக்கும் மனித சமூகம் நல்லபெருமாள் பிள்ளையின்"அத்தாபத்தியானநிலையைக் கண்டு, அந்த நிமிஷத்திலேயே அவருடைய நல்ல குணங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டது. ஜனங்கள் கொஞ்சம் கூட்டிக் குறைத்துப் பேசிக் கொண்டாலும் அதில் முக்கால்வாசி உண்மையாகவே இருந்தது.

நல்லபெருமாள் பிள்ளைக்கு இப்போதுவயது ஐம்பது சந்ததி கிடையாது. இந்தக் கவலை ஒரு காலத்தில் அவரைக் கொஞ்சம் கஷ்டப்படுத்தியதுண்டு.ஆனால், அவருக்கு இப்போது அப்படிப் பட்ட லெளகீகமான ஆசைகள் ஒன்றும் கிடையாது. ஏதோ வயிற்றுப் பாட்டுக்கு ஒரு தொழிலைச் செய்துகொண்டு நாலு பேருக்கு நல்ல பிள்ளையாகக் காலத்தைத் தள்ளி விட வேண்டும் என்பதைத் தவிர அவருக்கு வேறொரு லட்சியமும் கிடையாது. அவருடைய சுபாவத்துக்கேற்றபடி மிகவும் நல்லமாதிரி யாக அமைந்திருந்தாள் அவரது தர்மபத்தினிமுத்தம்மாள்.

இதுவரையும் நல்லபெருமாள் பிள்ளை ஒருவரிடமும் ஒரு பைசா கைநீட்டிவாங்கியது கிடையாது.ஒருவனுடைய சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு சாதாரண காரியத்தைக்கூடச் செய்தவரில்லை. ஏதோ நாலு கடைகளைப் போலத் தம் பலகாரக் கடையை நடத்திக்கொண்டு வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கறார் வியாபாரம் செய்து வருகிறார்.

மண், பொன், பெண் என்ற மூன்று ஆசைகளையும் துறந்திருந்த இந்தச் சந்தர்ப்பத்திலே அவர் மரணப் படுக்கையில் படுத்திருந்து கடைசியாக உயிர் பெற்று எழுந்தும்விட்டார், சில நாட்கள் வீட்டுக்கும் வாசலுக்கும் நடமாடிக் கொள்ளமட்டும் முடிந்தது. உடம்பில் ரத்தப் பசையென்பதே இல்லாமல் வெளிறிப்

முத்துக்கள் பத்து * 127







போய் இருந்தார். இந்த இடைக்காலத்தில் - சுமார் இரண்டு மாத காலத்தில் - அவருடைய கடையில் வியாபாரம் அவ்வளவு சரிவர நடக்கவில்லை. ஒத்தாசைக்கு வேறு யார் இருக்கிறார்கள்? முத்தம்மாளுக்குத்தன் கணவனுக்குப்பணிவிடைசெய்யவே நேரம் சரியாயிருக்கும். அதனால் அவர் சேர்த்து வைத்திருந்த ஆஸ்தி யெல்லாம் செலவழிந்துபோய்விட்டது. முத்தம்மாள் வாயையும் வயிற்றையும் கட்டி கணவனுக்குத் தெரியாமல் வைத்திருந்த மூலதனமும் அநேகமாகக் கரைந்துவிட்டது.இந்தப்பணமுடையை ஈடுசெய்து பழைய நிலைமையை மீண்டும் அடைவதற்கு வியா பாரத்தில் சில கட்டுதிட்டங்களையும், வாழ்க்கைச் செலவில் சில சிக்கன விதிகளையும் கையாளத் தொடங்கிவிட்டார்.

இப்போது அவளுடைய கடையில் இட்டிலி, வடை யெல்லாம் முன்னையில் பாதிகூடஇல்லையென்பது ஊரார் புகார். நல்லபெருமாள் பிள்ளையும் கிருஷ்ணபசஷத்துச் சந்திரன்போலப் பலகாரங்களின் உருவைச் சிறிது சிறிதாகத் திடீரென்று ரகசியம் வெளிப்பட்டுவிடாதபடி குறைத்துவந்தபோதும் ஊர் மகாஜனங் களின் கைத்தராசு எடைபோட்டுப் பார்த்துவிட்டது. இது வியாபாரத்தைப்பொறுத்தமட்டிலும்பிள்ளையவர்கள் செய்த ஒரு பெரிய மாறுதல், அடுத்தபடி, வீட்டிலும் சாப்பாட்டுக்குக் குறைந்த அளவில் பதார்த்தங்களைத் தயாரிக்கச் சொல்லி விட்டார். காலையில் வெறும் நீராகாரம் மத்தியானத்துக்கும் காலையாகார நேரத்துக்கும் நடுவேயுள்ள ஒரு இடைநேரத்திலே சுண்டைவற்ற லோடும் ரசத்தோடும் சாப்பாட்டுமுறையைக் கழித்துவிடுவார்கள். இரவில் வெந்நீர்ப் பழையதுக்கு மத்தியானம் வைத்த ரசமும், விற்காமல் மிஞ்சியவடையும்தான்.

பிள்ளையின் உடம்பும் பூரணமாக குணமாகிப் பழைய சுகத்துக்குவந்துவிட்டது.ஒருநாள் காலையில் சுமார் ஏழு மணிக்குத்

128 x- கு.அழகிரிசாமி







தம்முடைய பழைய கணற்றுக்குக் குளிக்கவந்தார். ஐரணக் கவுண்டரின் தோட்டத்துக்குள் போகமேல் பக்கமாக உள்ள வாசல் வழியாக நுழைவார் நல்லபெருமாள் பிள்ளை. குளித்துவிட்டு வெளியே வருவது தென்பத்து வழியாக மேல் பக்கத்தில் உள்ள ஒடைக்கரையில் ஒருவேப்பமரம் இருக்கிறது.அதில் பல்தேய்ப்பதற் காக ஒரு குச்சி ஒடித்துக்கொண்டு அப்படியே மேற்குவாசல் வழியாக நுழைவது செளகரியமாயிருக்கும். தென்பக்கத்து வாசல் வீட்டுக்குச் சமீபம்.

ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு அப்புறம் இப்பொழுது தான் அவர் முதல் தடவையாக அந்தத் தோட்டத்துக்குக் குளிக்க வந்திருக்கிறார். அதனால் இப்போது அங்கே ஏற்பட்டிருக்கும் சிற்சில மாறுதல்கள் அவருடைய கண்ணில் பட்டன.

இப்போது மிளகாய்ச் செடிகள் பெரிதாக வளர்ந்து பூவும் பிஞ்சுமாக இருந்தன. அவரைக்கொடி பக்கத்திலிருக்கும் அகத்தி மரங்களின்மீது படர்ந்து குலைகுலையாகக் காய்த்திருந்தது. கிணற்றுக்குமேல்புறமாக உள்ள நாலைந்து தென்னை மரங்களில் இருக்கும் இளநீர்க் குலைகள் களவு போகாமல் இருப்பதற்காக மரங்களின் மேல் பாகத்தில் முள் கம்பியைச் சுற்றி விட்டிருந்தார் கவுண்டர். பல்தேய்த்துக் கொண்டிருந்த நல்லபெருமாள் பிள்ளையின் கண்கள் இந்த முள்கம்பியை கவனமாகப் பார்த்தன. ஏதோ சற்று யோசித்தார். உடனே அவருடைய உள்ளம் கொஞ்சம் விளையாட ஆரம்பித்துவிட்டது!

களவு செய்யவேண்டும் என்று வருகிறவனை இந்த முள் கம்பியா தடுத்துவிடும்? இதை இலேசாகக் கழற்றிவிட்டு மரமேறுவதென்ன சீமை வித்தையா? இது சரி; இந்த இளநீர்க் குலைகளைத்தான் கம்பியைச் சுற்றிப் பத்திரம் செய்துவிட்டார். இதோ பக்கத்திலே அவரைக் கொடியில் காய்கள் கொத்துக்

முத்துக்கள் பத்து * 129







கொத்தாய்க்காய்த்திருக்கிறதே! இந்த அவரைக்கொடிக்குமுள்கம்பி சுற்றிவைக்கக்கூடாது கவுண்டர்?அதுதானே! ஏதோ கடவுளுக்கும் மானத்துக்கும் பயந்து மனுஷன் பேசாமல் இருந்தால்தான் போச்சே ஒழிய அவனுக்குக் காவல் போட முடியுமா என்ன?

குளித்துவிட்டு ஈரத்துணியை உதறி மேலே போட்டுக் கொண்டு வெளியே வந்தார். அப்போது கிணற்றுக்கு வடமேற்கு மூலையில் அவரைக் கொடிகளின் நடுவே ஒரு சிறு முருங்கை மரத்தில் ஐந்தாறுகாய்கள் தொங்குவதையும் பார்த்துக்கொண்டார். அந்த முருங்கை இதுவரையும் செடியாக இருந்து இப்போதுதான் முதல் முதலாகக் காய்க்க ஆரம்பித்திருக்கிறது.அந்தக் காய்களுக்கும் பாதுகாப்பு வேண்டுமல்லவா? ஆனால் முருங்கை மரத்துக்கு முள்கம்பிகற்றமுடியுமா? முடியாது.அதனால், மனிதனுடையமான உணர்ச்சியில் நம்பிக்கை வைத்து அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு பழைய செருப்பைக் கட்டித் தொங்கவிட்டிருந்தார் ஐரணக் கவுண்டர் செருப்பின் காவலை மீறுவதற்கு மனிதனுக்குதேகபலம் இருந்தாலும் மனம் அவமானத்துக்கு பயப்படும். கேவலம் நாலு முருங்கைக்காய்களுக்குச்செருப்படியா என்று நினைத்துத்திருடன் திரும்பிவிடுவான் என்பதே கவுண்டரின் திடமான கருத்து.

இந்த விஷயத்தையும் நன்கு புரிந்து கொண்டார் நல்ல பெருமாள்பிள்ளை.'கவுண்டரும் இலேசுப்பட்டவரில்லை என்று நினைத்துக்கொண்டே எட்டு மணிக்கெல்லாம் வீடு போய்ச் சேர்ந்தார்.

மறுநாள் காலை ஏழு மணிக்கு மேலேயே இருக்கும். பிள்ளை முன் தினத்தைப்போலவே அந்தக் கிணற்றில் கமலைக் கிடங்கின் பக்கமாக உள்ள கல்லின்மேல் உட்கார்ந்து பல் தேய்த்துக் கொண்டிருந்தார்.அவருடைய பார்வைமுருங்கைக்காய்களின்மேல் படிந்திருந்தது.ஒருபொருளை வெகுநேரம் பார்த்தால் வெறுப்புத் 130 * கு.அழகிரிசாமி







தட்டுவதும் உண்டு; அல்லது அதன்மேல் அளவு கடந்த ஆசை பிறப்பதும் உண்டு.

ஏற்கெனவே உடல் பலஹினமுள்ள பிள்ளையவர்களுக்கு மனசிலும் பலஹரீனம் ஏற்பட்டதுபோல, இந்தச் சமயத்தில் முருங்கைக்காய்களின் மேல் எப்படியோ சபலம் தட்டிவிட்டது. முருங்கைக்காய்களைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.

அதிகப் பிஞ்சும் அதிக முற்றலும் இல்லாதபடி கறிக்குப் பக்குவமான காய்கள்தான். இதை வைத்துக் குறைந்தது மூன்று நாட்களுக்காவது கறிப் பாட்டைக் கழித்துவிடலாம். உம்?. பக்கத்திலும் ஒருவரும் இல்லை.

சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டார்.

“நாமென்ன ஆயிரம் ரெண்டாயிரம் என்று அடுத்தவன் சொத்தைக் கொள்ளையடிக்கவா போகிறோம்? கவுண்டருக்கும் நாலைந்து முருங்கைக்காய்கள் போய்விட்டால் குடிமுழுகிப் போய்விடாது.நம்முடைய கடநிலைமைக்கு.

தோட்ட வேலைக்காரன் தண்ணிர் இறைப்பதற்காக மாடுகளை'தை என்று சத்தம்போட்டு ஒட்டிவருவது பிள்ளையின் காதில் படவே மூச்சுவிடாமல் எழுந்தார். கிணற்றுக்குள் இறங்கிக் குளிக்கப்போய்விட்டார்.

"சீச்சி, இது சுத்த எச்சிக்கலைத்தனம்.” என்று அவர் மனம் அப்புறம் சொன்னது.

பலகாரக்கடையில் அவர் உட்கார்ந்திருக்கும்போதுகாய்கறிக் கூடைக்காரி வந்தாள். உடனே முத்தம்மாள் அன்று வீட்டுக்கு வேண்டிய இரண்டொரு காய்கறிகளை வாங்க ஆரம்பித்தாள்.

அப்போது பிள்ளையவர்களின் மனக் கணக்கில் மேற்படி

முத்துக்கள் பத்து * 131







முருங்கைக்காய்கள் தோற்றமளிக்க ஆரம்பித்தன."யாரும் இல்லாத
சமயத்தில் போனால் கொண்டு வந்திருக்கலாம். அப்படி ஆறு காய்களை வாங்கவேண்டுமென்றால் இரண்டனாவாவது ஆகும். இந்தக் காலத்தில் இரண்டனா யார் கொடுக்கிறார்கள்?" என்று நினைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் கழித்து மனம் மாறிவிட்டது.

சே, செருப்பைக் கட்டித் தொங்கவிட்டிருக்கும் போது.

இப்படியே மனம் மிகவும் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தது. ஏதோ அவருடைய பலத்தைச் சோதிக்க வந்த மோகினிப் பிசாசு போல இருந்தது அந்த முருங்கை மரம். இதைப் பேராசை என்று சொல்லமுடியுமா? கேவலம் இரண்டனா முருங்கைக்காய்கள்தான். அப்படிப் பேராசை இருந்திருந்தால் நல்லபெருமாள் பிள்ளை வியாபாரத்தில் கொள்ளையடித்திருப்பார்.அது ஒருபக்கம் இருக்க அவர் கண்ணுக்கு அவரைக்காய்களும் பட்டதே, அவற்றின் மீது அவருக்கு ஏன் ஆசை போகவில்லை? இது என்ன மர்மமென்று தெரியாமல் பிள்ளையே மிகவும் சங்கடப்பட்டார்.

மறுநாள் காலையில் நாலரை மணிக்கு இருட்டோடு இருட்டாகக்கிணற்றுக்குக்குளிக்கப்போனார்.கிருஷ்ண பக்ஷத்துக் காலைப்பிறை கீழ் வானத்தின் அடிப்பாகத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. நல்லபெருமாள் பிள்ளை வழக்கம்போல் மேற்குப்புறமாகப் போய் வேப்பங்குச்சியை ஒடித்தார்; ஆனால், என்றுமில்லாத வழக்கமாக அரவம் கிளம்பாமல் ஒடித்தார். களவுக்கு இந்த முன்ஜாக்கிரதை பூர்வாங்க ஏற்பாடாக இருந்தது. கிணற்றின் பக்கத்தில் வந்து, முருங்கைக்கு எதிரே நின்று கொண்டு, காய்களைப் பறிக்கலாமா கூடாதா என்று சிறிது நேரம் மனசோடு வாதாடினார். மனம் என்னவோ வழக்கம் போல நீதி போதித்தது.

132 * கு.அழகிரிசாமி







ஆனால் ஆசையோ பிடிவாதமோ-ஏதோ ஒருசக்தி அவரை உந்தித் தள்ளியது.மரத்துக்குமேல்புறமாகவும்பிறைநிலாவுக்குநேராகவும் நின்ற மரத்தில் காய்கள் எங்கே தொங்குகின்றன என்பதைப் பார்த்துக்கொண்டார்.ஐந்தாறு காய்கள் தொங்கியது தெரிந்தது. கூடவே, செருப்பும் தொங்கிக்கொண்டிருந்தது!

திடீரென்று சுற்றுமுற்றும்பார்த்துவிட்டுக்காய்களைப்பறிக்க ஆரம்பித்துவிட்டார்.அவசர அவசரமாகக் காய்களைப் பறிக்கும் போது முருங்கைப் பூக்கள் தலையிலும் உடம்பிலும் உதிர்ந்து விழுந்தன. உடனே அவற்றை உதறினார்.அப்புறமும் செருப்பைப் பார்க்கும்போது அவருக்கு அவமானமாக இருந்தது. அதனால், அதையும் மரத்திலிருந்து அறுத்து எறிந்துவிடத் தீர்மானித்தார். அப்படியாவதுமானத்தைக்காத்துக்கொள்ளலாம் அல்லவா?

செருப்புக் கட்டப்பட்டிருந்த கயிறுபலமாக இருந்தது.அதை வெட்டி இழுக்கும்போது முருங்கைக் கொப்பு முறிந்துவிட்டது. அது முறியும் போது ஏற்பட்ட சத்தம் பிள்ளையவர்களுக்குப் பீரங்கி வேட்டைப்போல் கேட்டது. அதிர்ச்சியினால் வெல வெலத்துப்போய் ஒருமுறைநாலாபக்கமும் பார்த்தார்.நல்லவேளை, ஒருவரும் இல்லை, என்றாலும் இந்த பயங்கரமான காரியத்தைச் செய்தபின் கிணற்றில் இறங்கிக் குளித்துவிட்டுப் போகத் தைரியம் எங்கிருந்து வரும்? உடனே முருங்கைக்காய்களை கஷ்கத்தில் செங்குத்தாக வைத்து இடுக்கி மேல்துண்டினால் போர்த்துக் கொண்டு அவசர அவசரமாகப் புறப்பட்டார். மேல்பக்கமாகத் தூரத்தில் யாரோ சுருட்டுப்பிடித்துக்கொண்டு வருவது தெரிந்தது. அதனால் தெற்கு வாசலை நோக்கி வேகமாகப் போகும்போது, வரப்பிலிருந்து எப்படியோ வழுக்கிப் பக்கத்தில் இருந்த கீரைப்பாத்தியில் மிதித்துவிட்டார்.அப்போது,முதல்நாள் மாலை தண்ணீர் இறைக்கப்பட்டுச்சேறாக இருந்த அந்தபாத்தியின் ஈரமண்

முத்துக்கள் பத்து * 133









அவர் வேஷ்டியிலெல்லாம் தெரித்து விழுந்து விட்டது. உடனே உயிரைக் கையில் ஏந்திக்கொண்டு வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தார்.

மனைவியிடம் விஷயத்தைச் சொல்லாமல் காய்களை ஒரு இடத்தில் வைத்துவிட்டுஉடையை மாற்றிக்கொண்டார்.அதன்பின் கிணற்றுக்குக்குளிக்கப்போகத் தைரியம் இல்லை. உடம்பெல்லாம் ஒரே நடுக்கம். ஜலதோஷம் பிடித்திருக்கிறது என்று ஒரு சிறு பொய்யைச் சொல்லிவிட்டு முத்தம்மாளை வெந்நீர் போடச்

சொன்னார்.

காலை பத்துமணிக்கொல்லாம் யாரோகாய்கறிக்கூடைக்காரி யிடம் வாங்கியதாகச் சொல்லி மேற்படி முருங்கைக்காய்களை மனைவியின் கையில் கொடுத்தார் பிள்ளை.

இனி என்னென்ன அவமானம் எல்லாம் வருமோ? கவுண்டர் கிணற்றுக்கு வந்து பார்த்தால் நம்மீதே சந்தேகப்பட்டாலும் படலாமே? தினந்தோறும் நாம்தானே முதல் ஆளாகப்போய் அந்தக் கிணற்றில் குளிக்கிறோம்? நாம் பல்தேய்த்த வேப்பங்குச்சியை ஒரு வேளை கிணற்றில் பக்கமாகத்தான் போட்டுவிட்டோமோ? அதைக்

கவுண்டர் பார்த்துக்கொண்டால்?-

இதைத்தான் அவர் மாறிமாறிநினைத்துக்கொண்டு கஷ்டப் பட்டார்.

மத்தியானம் பன்னிரண்டு மணிக்குச் சாப்பிடுவதற்காக இலையின் முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார் பிள்ளை. ஐம்பது வருஷகாலமாக அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாத மனசுக்கு முருங்கைக்காயின் மேலே எதற்கு இப்படி ஆசை விழுந்தது? ஆனால்,இது ஆசையா? பொதுவாக, ஆசையென்றால் எல்லாவற்றிலுமே ஆசை விழவேண்டுமே?அவரைக்காயும் எட்டிப்

134 * கு.அழகிரிசாமி







பறிக்கிறாற்போலத்தானே இருந்தது, அதை ஏன் திருடவில்லை?-

மனைவி முருங்கைக்காய்ச் சாம்பாரைச் சாதத்தில் விட வந்தாள்.

உடனே அவர், "வேறு ரசம் கிசம் வைக்கடல்லையா? அதைக் கொண்டுவா. முருங்கைக்காய்ச் சாம்பார் வேண்டாம்” என்று சொன்னார்.

மனைவி மிகவும் ஆச்சரியப்பட்டு, “என்னது? சாம்பார் வேண்டாமா? நீங்கதான் முருங்கைக்காய் சாப்பிடணும்னு ஆசைப்பட்டு வாங்கியிருக்கிறீர்களே பிறகு வேண்டாம்னு ஏன் சொல்றீக?' என்று கேட்டாள்.

"ஆசை என்ன ஆசை? ஒண்ணுலே ஆசை விழுந்தா அதைச் சாப்பிட்டுத் தீக்கணும்னு கட்டாயமா?” என்று சொல்லிவிட்டு கீரையை விரவிக்கொண்டு சாப்பிடப்போனார்.

முத்தம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை.

'எனக்கு ஆசையா விழுந்தது? அதற்கு இந்த முருங்கைக்காய் என்ன தங்கப் புதையலா, என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டே கீரைச் சாதத்தை விழுங்கினார் பிள்ளை.

முத்தம்மாள், தன் கணவரின் ஜலதோஷத்தை உத்தேசித்துத் தயார் செய்திருந்த மிளகுரசத்தை எடுத்துவர உள்ளே போனாள்.

xx xx xx

முத்துக்கள் பத்து * 135


   முதல் பக்கம்     மொழி-இலக்கியம்     சிறுகதை


***************************************************************************

http://www.valaitamil.com/sappadu-pottu-narpathu-rupai_1834.html
சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்  
- தி.ஜானகிராமன்
‘மணியார்டரா ‘ எனக்கா ‘ ‘
‘ஆமா ஸ்வாமி ‘ உங்களுக்கேதான் ‘ ‘
‘உத்ராபதி, உனக்கு வயசு நாப்பதாயிருக்கும், சாளேசரம் போட்டுக்கற வயசு ‘ நல்லா பாத்துச் சொல்லு. நான் வாணா கண்ணாடி தரட்டுமா ? ‘ என்று துருப்பிடித்த வினோலியா ரோஸ் சோப் பெட்டியைத் திறந்து, வெற்றிலைக்கும் வெட்டுப் பாக்குக்கும் மேல் படுத்துக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடியைத் தொட்டார் முத்து.
‘கண்ணாடியும் வாணாம், சீப்பும் வாணாம். உங்களுக்குத்தான் வந்திருக்கு. நீங்களே அந்தக் கண்ணாடியை மாட்டிக்கிட்டுப் பாருங்க…எம். சாம்பமூர்த்தி யாரு ? ‘
‘அக்கணாக்குட்டியா ? நம்ம புள்ளையா ? இப்ப மெட்ராஸிலேயா இருக்கு அது ? ‘
முத்து அவசர அவசரமாக மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டி, இடது காதில் நூலைச் சுற்றிக் கொண்டார்.
‘ஆமா, வேலைக்குப் போயிட்டானே அக்கணாக்குட்டி ஒரு மாசத்துக்கு முன்னால, உனக்குத் தெரியாது ? ‘
‘தெரியாதே. எங்க வேலையோ ? ‘ என்று மணியார்டர் பாரத்தில் இரண்டு இடத்தில் இண்ட்டு போட்டுக் கொடுத்தார் உத்ராபதி. கையெழுத்தானதும் அடிக் கடிதத்தைக் கிழித்து முப்பதொன்பது ரூபாய்க்கு நோட்டும் ஒரு ரூபாய்க்கு சில்லறையுமாகப் பையிலிருந்து எடுத்து நீட்டினார்.
‘சில்லறையும் மாத்திப்ட்டு நாற்பது ரூபாயைக் கொடுப்பானேன் ? அரை ருபாயைக் குறைச்சுண்டு கொடுக்கப் படாதோ ? ‘ என்று அரை ரூபாயை நீட்டினார் முத்து.
‘நாலணாப் போதும் சாமி. உங்ககிட்ட அதுக்கு மேலே வாங்கறது பாவம் ‘ என்று பாதியைத் திரும்பிக் கொடுத்து விட்டார் உத்ராபதி.
‘முதல் சம்பளம் வாங்கி அனுப்பிச்சிருக்கான் அக்கணாக்குட்டி. எட்டணாவாத்தான் இருக்கட்டுமேன்னு நினைச்சேன் ‘ என்று நாலணாவைத் திரும்பி வாங்கிக் கொண்டார் முத்து.
‘பிறத்தியார் பணம் அனுப்பிச்சா, ரண்டுகையாலும் வீசி வீசி தருமம் பண்ணுவாங்க சாமி ‘ என்று சொல்லிக் கொண்டே குறட்டில் இறங்கி வந்தாள் அவர் மனைவி.
‘ஏழைக்குதாம்மா தெரியும் ஏழை கஷ்டம். நீங்க சொல்றீங்களே, மாசம் நானூறு ரூபா அனுப்பறாரு ரட்டைத் தெரு மகாலிங்கய்யரு மகன், மிலிட்டரியிலே கர்னலா இருக்குறாராமே. மகாலிங்கய்யரு அப்படியே வாங்கிட்டு குந்தினாப்பல உள்ளே போயிடுவாரு. ஒரு பத்துகாசு டாத்தண்ணிக்கு ? மூச்சுப் பிரியப்படாது… முகத்தைப் பார்த்தாத்தானே ?… அக்கணாக்குட்டி என்ன வேலையாயிருக்கு ? ‘
‘என்ன வேலையோ ? நம்ம எம். கே. ஆர். கிட்ட போய் புலம்பினேன் ஒரு நாளைக்கு, நம்ம பையனுக்கு ஒரு வழி பண்ணப்படாதா செட்டியார்வாள் ‘ இப்படி உதவாக்கரையாத் திரியறானேன்னு நின்னேன். ஒரு மாசம் கழிச்சு சொல்லியனுப்பிச்சார். போனேன். உம்ம பையனை அனுப்புரீராய்யா மெட்ராஸஉக்கு ? ஒரு பெரியமனுஷன் வீட்டிலே கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம். ஒரு பையன் இருந்தாத் தேவலைன்னு சொல்றாங்க. பெரிய இடம், புள்ளீங்க பள்ளிக்கூடத்துக்குப் போகும். கொண்டு விடணும், கடை கண்ணிக்குப் போகணும். இப்படி சில்லரை வேலையா இருக்கும் போலிருக்கு. நல்லா கவனிச்சிப்பாங்க. வீட்டோடு சாப்பாடு போட்டு வைச்சிப்பாங்கன்னார் எம். கே. ஆர்.
‘அனுப்புறீமான்னு கேக்கணுமா ? நான்தான் கஞ்சிவரதப்பான்னு தவிச்சுண்டு கிடக்கேன். இன்னிக்கே அனுப்பிக்கறேன்னேன். நாலு நாக்கழிச்சு அவர் காரியஸ்தர் மெட்ராஸ் போனார். அக்கணாக்குட்டியை அழச்சிண்டு போயிட்டார். சரியா ஒண்ணரை மாசம் ஆச்சு. பணம் வந்திருக்கு. ‘
‘என்னமோ சாமி கண்ணைத் திறந்தாரு. நீங்க முன்னாலே, இந்த மூக்கு கண்ணாடிக்கு அந்த நூலை எடுத்திட்டு ஒரு காது வாங்கிப் போடுங்க. அப்புறம் ஒரு உறையிலே போட்டு வச்சுக்குங்க. இப்படியே சீவல் மேலேயும் பாங்கு மேலேயும் வச்சிட்டிருந்தா பழங்கோலி மாதிரி கீறல் விளாம என்ன பண்ணுமாம் ‘ ‘ என்று சொல்லிக்கொண்டே உத்திராபதி நகர்ந்தார்.
சம்சாரம் முத்துவைப் பார்த்தாள்.
‘இப்படிக் கொடுத்திட்டு நேரே உள்ள வரட்டும். பற மோளம் மாதிரி ஊரெல்லாம் போய் தம்பட்டம் கொட்டிண்டு நிக்கவேண்டாம் ‘ என்று பல்லோடு பல்லாகச் சொல்லி வெற்றிலைப் பெட்டி மேலிருந்த நோட்டுகளை பெட்டிக்குள் போட்டு மூடி, பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்.
வெற்றிலைப் பெட்டி கையை விட்டுப் போனதும் கூடவே விரைந்தார் முத்து. அவர் உள்ளே வந்ததும் கதவைத் தாழிட்டாள் சம்சாரம்.
முத்து தோளிலிருந்த மூன்று முழம் ஈரிழையை இடுப்பில் கட்டி, அவள் கையிலிருந்த பெட்டியை வாங்கித் திறந்து நோட்டுகளை எடுத்து, பறையிலிருந்த பரமேச்வரனின் படத்தின் அடியில் வைத்து, நெடுங்கிடையாக விழுந்து மூன்று தடவை நமஸ்காரம் செய்தார்.
‘ஏன் நிக்கறே ‘ நீயும் பண்ணேன் ‘ ‘
‘எல்லாம் பண்றேன் ‘ என்றுதான் அவள் வழக்கமாகச் சொல்லிவிட்டு நின்றிருப்பாள். ஆனால் மனசு பாகாகிக் கிடந்ததால் அவரே சம்பாதித்து விட்டாற்போல, பதில் பேசாமல் கீழே குனிந்து மூன்று முறை வணங்கி எழுந்தாள். அவளுக்கு, அந்தக் காலத்து முத்துவின் ஞாபகம் வந்தது. ஏழு வருடங்களுக்கு முன்னால் முத்து இப்படிக் கிழம் சென்று போகவில்லை. மயிர் கருகருவென்றிருக்கும், அள்ளிக்கட்ட வேண்டிய கூந்தலாக இருக்கும். மூக்கிலிருந்து இரண்டு கோடுகள் இந்த மாதிரி விழவில்லை. மார்பும் இரு பிளவாக அடித்தென்னை மட்டை மாதிரி வைரமாக இருக்கும். இப்படிச் சரியவில்லை. தோள்பட்டை இப்படிச் சூம்பவும் இல்லை. ஆடு சதை, துடைச் சதை எல்லாம் இப்படி கழளவுமில்லை. அப்போது வெற்றிலைப் பெட்டி பித்தளைப் பெட்டி. இப்பொழுது குப்பைத் தொட்டிபோல ஒரு வயதானத் தகரப் பெட்டி. அப்பொழுது வெள்ளிச் சுண்ணாம்புக் கரண்டான். இப்பொழுது பிரம்மோத்சவத்தில் தெருவோரக் கடைப்பரப்பில் வாங்கின தகரக் குழாய். அதுவும் துரு. கழுத்துக் குழியை தங்க ருத்ராட்சக் கொட்டை மறைத்ததுபோய், இப்பொழுது குழிதான் தெரிகிறது. மேனிபோய், தெம்பு போய் கங்காளி மாதிரி நிற்கறதைப் பார்த்துதான் ‘ரண்டாம் தாரமாம்மா ‘ ‘ என்று போன வருஷம் அமர்த்தின புதுத் தயிர்க்காரி கேட்டாள் போலிருக்கிறது. இப்படியா விசுக்கென்று இந்த பிராமணன் கிழண்டு போகும் ‘ மருந்துக்குக்கூட மயிரில் கறுப்பில்லாமல், கூந்தல் கொட்டைப் பாக்காகி….பல் விழவில்லை, ஆனால் கோணவும் பழுப்பேறவும் ஆரம்பித்து விட்டது.
ஆனால் இது ஒன்றும் அவள் கண்ணை இந்தக் கணம் உறுத்தவில்லை. ‘என்ன இருந்தாலும் இதுக்கு இருக்கிற சாமர்த்தியம் சாமர்த்தியம்தான் ‘ என்று உவந்தாள்.
அவளுக்குச் சற்று சிரிப்பாகக்கூட இருந்தது. நம் பிள்ளையைப் பார்த்து நாற்பது ரூபாய் சம்பளம் போட்டு சாப்பாடும் போடத் தோன்றிற்றே ஒருவனுக்கு ‘ இந்த உலகத்தில் எத்தனை அசடுகள் இருக்கமுடியும் ‘
இல்லை….அண்ணாக்குட்டி நிஜமாகவே சமர்த்துதானோ ‘ நமக்கு ஒரு பிள்ளை. செல்லப்பிள்ளை. அசட்டுத்தனமேதான் கண்ணில்பட்டது. வெளியே போனதும் மறைந்திருந்த சமர்த்து வெளி வந்துவிட்டதோ என்னவோ.
….இல்லை….பணத்தையே தின்று, பணத்தையே உடுத்தி, பணத்திலேயே படுத்துப் புரளுகிற கொழுப்பு ஜன்மங்களால் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்து நாற்பது ரூபாய் கொடுக்கவாவது ‘…கொழுப்போ டம்பமோ, மனது நல்ல மனது. இந்தப் பாச்சைக்கு, பேச்சைக்காலும் பேச்சைக்கையும் கொன்னல் பேச்சுமாக இது கிடக்கிற லட்சணத்துக்கு இப்படி ஆதரிக்க வேண்டும் என்று தோன்றிற்றே.
‘தட்சிணாமூர்த்தே, வைதீச்வரா, லோகமாதா ‘ நீங்கள்ளாம்தான் காப்பாத்தணும் ‘ என்று பயந்துபோய் நின்றாள் அவள்.
‘சரி, காவேரியிலே போய் ஸானம் பண்ணிட்டு வந்துடறேன்…சில்லறை ஏதாவது கொடேன். கீரைத்தண்டு பாற்காய்னு ஏதாவது வாய்ண்டுவரேன் ‘ என்று முடுக்கினார் முத்து. ‘இன்னிக்கு கூடவா வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும் ? ‘, என்று சொல்லாமல் பிணங்குகிற முறுக்கு அது. நாலணாவை எடுத்துக் கொடுத்தாள். கன்னத்தில் அவளை செல்லமாக நிமிண்டிவிட்டு அவர் வெளியே போகிறார். பணம் வந்தால் இந்த நிமிண்டல், குழையல் எல்லாம் இரண்டு பேருக்கும் சகஜம்.
அவர் குளிக்கப் போனது நடந்து போகிற மாதிரி இல்லை. குதி போடுகிறது போலிருந்தது. அவனை — அதை, ரூபாய் அனுப்பும்படி யாரும் சொல்லவில்லை. அது அது வேலை என்று போனால் போதும் என்றிருந்தது. அது போய் நாற்பது ரூபாய் அனுப்பவாவது ‘ ‘நீ உருப்படமாட்டே, நீ உருப்படவே மாட்டே ‘ என்று அவனைச் சபித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது, வயிற்றில் பிறந்த பிள்ளையை இப்படியா சபிப்பார்கள் ‘ நம்ம புத்தி இவ்வளவு கட்டையாக ஏன் போயிற்று ? இப்பொழுது பணத்தை அனுப்பி நம்ம புத்தியில் கரியை பூசிவிட்டதே ‘ இந்தப் பிள்ளை ‘ அக்கணாக்குட்டி, இனி மேல் உன்னை அதட்டக் கூடமாட்டேண்டா என்று தன்னைத் திட்டிக்கொண்டு நடந்தார் முத்து ஒரு பிள்ளை ‘
பிள்ளைகளெல்லாம் தாயையும் தகப்பனையும் கொள்ளாமல் பாட்டனையும் பாட்டியையும் கொள்ளுமாமே, –அதுபோல் அக்கணாக்குட்டியைப் பற்றிய வரையில் மெய்தான். அவன் முத்துவின் மாமாவைக் கொண்டு விட்டான். முத்துவைக் கொண்டிருந்தால் அண்டா, தவலைகளை அலட்சியமாக உருட்டுகிற வலுவு வந்திருக்கும். ஆயிரம் பேருக்கானாலும் ஒரு கல் உப்போ, புளியோ ஏறாமல் குறையாமல் சமைத்துப் போடுகிற நளபாகம் கை வந்திருக்கும். முத்துவின் சம்சாரத்தைக் கொண்டிருந்தால் பார்க்கவாவது லட்சணமாக வளர்ந்திருக்கலாம்.
மீனாட்சி லட்சணம் தான். சமையற்கார முத்து பெண்டாட்டி என்று யார் சொல்ல முடியும் ? நூத்தம்பது வேலி பண்ணைவீட்டு எஜமானி எண்ணெய் ஸ்நானத்துக்காக நகைநட்டுகளைக் கழற்றி வைத்தாற் போலிருக்கும் …..ஸ்நானம் செய்துவிட்டுத் திரும்பி உள்ளே நுழைந்த கையோடு ஈர வேட்டியோடேயே அவளை அப்படியே அம்மென்று திணறத் திணறக் கட்டிக் கொள்ள வேண்டும். ம்க்கும்…ம்க்கும் இதுவேறயாக்கும் என்று சொன்னாலும் சொல்லுவாள். கட்டிண்டு தொலை என்று சொல்வது போல மரம் மாதிரி நின்றாலும் நிற்பாள். அவளுக்குப் பிறந்த பிள்ளை அந்த மாதிரி மூக்கும் முழியுமா இருக்கக் கூடாதோ ? மூக்கில் வற்றாத ஜலதோஷம். ஹ் ஹ் என்று நிமிஷத்துக்கு ஒரு உறிஞ்சல். முட்டிக்கால், முட்டிக் கை. குதிகால் கீழே படாமல் இரண்டு குதியிலும் முள்குத்தினாற் போன்ற விந்து நடை, வாயைச் சற்று திறந்தாலே ஓட்டுக் கூரை மாதிரி பல் வரிசை — வரிசை இல்லை கோணல் — ஓடு மாற்றி நாலு வருடமானாற் போல. அந்த பல்லுக்கு ஏற்ற சொல், எச்சிலில் குளித்துக் குளித்து வரும் ஒவ்வொரு பேச்சும். எப்ப வந்தேல் மாமா சேக்யமா ? நாலானன் சேக்யமார்க்கானா, (நாலானன் என்றால் நாராயணன்) செலுப்பு பிஞ்சு போச்சுப்பா இன்னிக்கி காவேரி ரண்டால் ஆலம்…. வயசு பதினைந்து முடிந்தும் இதே பேச்சுதான். படிப்பு வரவில்லை. எலிமெண்டரிக்கு மேல் ஏறவில்லை. ஐந்து வருஷம் வீட்டோடு கிடந்ததும் போன வருஷம் ஒரு மளிகைக் கடையில் இழுத்துவிட்டார். அங்கே ஒரு நாள் எண்ணெயைக் கொட்டி ரகளை. வேலை போய்விட்டது. சைக்கிள் பழுது பார்க்கிற கடையில் கொண்டுவிட்டார். நாலு நாளைக்குப் போய்விட்டு வந்து ஜஉரமாகப் படுத்துக் கொண்டு விட்டது. நான் மாட்டேன்; சைக்கிலுக்குப் பம்பு அடிக்கச் சொல்றான். கண்டு கண்டா மார் வலிக்குது. நான் மாட்டேன் போ என்று திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டது. முத்து அலையாத இடமில்லை. பையனை அழைத்துக் கொண்டு வர்ச் சொல்லுவார்கள். போவார், பையனைப் பார்த்ததும் சொல்லியனுப்புகிறேன் என்று அனுப்பி விடுவார்கள். விறகு கடையில்கூட வேலைக்கு வைத்துப் பார்த்தாயிற்று. ஒரு கட்டையைத் தூக்க நூறு முக்கல். தினமும் நகத்திலும் விரல் இடுக்கிலும் சிலாம்பு. வீட்டுக்கு வந்து போகமாட்டேன் என்று அடம். நீ உருப்படவே மாட்டே என்று அப்பா அம்மா பாட்டு ‘ ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டான் அவன். பேசாமல் போய் திண்ணையில் உட்கார்ந்து வாசலில் போகிற வெள்ளாட்டையும் குட்டியையும் முக்கை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்துக் கொண்டிருப்பான். இல்லாவிட்டால் வீட்டுக்கார வாத்தியார் பெண்ணோடு ‘நேத்திக்கி ரிசவாகனம் பாக்கலியே நீ தூங்கிப் போயிட்டியே ‘ என்று திருநாள் சேதிகளைப் பேசிக் கொண்டிருப்பான்.
ஸ்வாமி நினைத்தால் என்ன செய்யமாட்டார் ‘ ஊமைக்கும் அசடுகளுக்கும் அவர் தானே கண். என்னப்பா ‘ வைத்தீச்சுவரா ‘ இந்த மட்டுமாவது பாதை காட்டினியே ‘
முதல் தடவை பணம் வந்து ஆச்சரியத்தில் கழிந்தது. இரண்டாம் தடவைகூட அந்த ஆச்சரியம் குறையவில்லை. மூன்றாம் தடவை இரண்டு மூன்று நாள் தாமதமாயிற்று. வேதனையாயிருந்தது. பயமாக இருந்தது. ஐந்தாவது தடவை ஒரு வாரம் தாமதம். கோபம் வந்தது. கோபத்தை சமாளித்துக்கொண்டு என்ன கஷ்டமோ இடைஞ்சலோ என்று சமாதானம் செய்து கொண்டு சாந்தமான சமயத்தில் பணம் வந்து குதித்துவிட்டது. ‘இது சம்பாதிச்சு நான் சாப்பிடணுங்கறது இல்லை ஸ்வாமி. என்னமோ முன்ன மாதிரி கண் சரியாகத் தெரியலை. கை நடுங்கறது. என்னமோ குழப்பம். மொளகாப் புளியெல்லாம் முன்ன மாதிரி திட்டமா விழமாட்டேங்கிறது. இல்லாட்டா என்ன விட்டுட்டு ஆனந்தம் பயலைக் கூப்பிடுவாளோ ஏலாவூர் பண்ணையிலே ‘ எத்தனை கலியாணத்துக்கு அங்கே டின்னரும் டிபனுமா பண்ணிப்போட்டிருக்கேன் ? இந்தப் பய இப்படி பிள்ளையா பிறந்து இப்படி நிக்கறதேங்கிற கவலையிலே எனக்கு கையி, தீர்மானம், தைரியம் எல்லாம் ஆடிப்போச்சு ஸ்வாமி. இப்ப அது நிமிர்ந்துட்டுது. என் குழப்பம் நிமிரலே, என்ன பண்றது ‘ இல்லாட்டா இது சம்பாரிச்சா நான் சாப்பிடணும் தலையெழுத்து ‘ என்று மணியார்டர் வாங்கும்போது வந்து, விசாரிக்கிற பார்வையாகப் பார்த்த வீட்டுக்கார வாத்தியாரிடம் உருகினார் முத்து.
அந்தச் சமயத்தில்தான் வண்டிக்காரத் தெருவிலிருந்து வக்கீல் குமாஸ்தாவின் காரியஸ்தன் வைத்தியநாதய்யன் வந்து செய்தி சொல்லிவிட்டுப் போனான். மத்தியானம் முடிந்தால் வீட்டுப்பக்கம் வந்துவிட்டுப் போகச் சொன்னாராம் அண்ணாவையர்.
வக்கீலுக்குக் குமாஸ்தா. அந்த குமாஸ்தாவுக்கு ஒரு காரியஸ்தனா ? இது உலகத்தில் இல்லாத ஆச்சரியம் இல்லையோ ? ஆனால் நடக்கிறதே. அண்ணாவையனுக்கு காரியஸ்தன் ஒருவன் இல்லை, இரண்டு மூன்று பேர் உண்டு. இந்தா என்றால் ஏன் எங்கேயென்று ஓடக் காத்திருக்கிற எடுபிடி ஆட்கள் மூன்று பேர் –அண்ணாவையன் முத்துவுக்குக்கீழ் சமையலாக இருந்தவன்தான். திடாரென்று ஒரு நாளைக்கு வக்கீல் ஜகதுவுக்கு குமாஸ்தாவாக ஆனான். மூன்று வருஷத்தில் ஜகதுவையே உட்கார்த்தி வைத்துவிட்டான். தானே வக்கீல் மாதிரி தொழில் நடத்தத் தொடங்கிவிட்டான். முதலிமார் கேஸ்கள், செட்டி நாட்டுக் கேஸஉகள் –பாகப் பிரிவினைகள் வியாஜ்யங்கள் என்று பிரளயமாடுகிறான். கோர்ட்டு ஏறாமலே எத்தனை மத்தியஸ்தங்கள் ‘ பல மத்தியஸ்தங்கள் வாசல் திண்ணையில் நீட்டின கால்களை முடக்காமலே நடக்கும். மலையாளத்து இரட்டைத் தாழம் பாயில் திண்டுமீது சாய்ந்து….ஏ அப்பா ‘ என்ன கார்வார் ‘ என்ன மோக்ளா ‘
முத்து கீரைத்தண்டு சாம்பார் சாதத்தைச் சாப்பிட்டு வினோலியா டப்பாவுடன் வண்டிக்காரத் தெருவுக்குப் போனார். போகாமல் எப்படி இருக்க முடியும் ‘ விறகு கடையிலும் சைக்கிள் கடையிலும் அக்கணாக் குட்டியை வேலைக்கு வைத்தது அண்ணாவையன் தானே. இது வேலையை விட்டால் அவன் என்ன செய்வான் ?
வழக்கம் போல நீட்டின காலை மடக்காமலே ‘வா முத்து, உட்காரு ‘ என்று அண்ணாவையன் திண்ணையில் தாழம் பாயில் சாய்ந்தவாறே அழைத்தான்.
‘வைத்தா வந்து சொன்னான், அய்யர்வாள் கூப்பிட்டார்னு ‘
‘ஆமா. முத்து ‘ என்று எழுந்து புகையிலையை உமிழ்ந்துவிட்டு வந்து, ‘ராத்திரி மெட்ராஸ் போறேன். இந்த தடவை யாராவது கூட இருந்தா தேவலை போலிருக்கு. ஒரு வாரமா ஜஉரம். முந்தாநாத்தான் ஜலம் விட்டுண்டேன். நாளைக்கு அர்ஜண்டா கேஸஉ ஹைக்கோர்ட்டிலே. பத்தியச் சாப்பாடு. ஹோட்டல்ல தங்கப்போறதில்லெ. தம்முடு கலியாண மண்டபத்திலே தங்கப் போறேன். நீகூட வந்து ஒரு ரசம் சாதமோ தொகையலோ பண்ணிப் போட்டா தேவலைன்னு தோணறது. அதான் கூப்பிட்டனுப்பிச்சேன் ‘
‘அதுக்கென்ன செஞ்சுபிடறது. ‘
‘நீ தீர்க்காயுசா இருக்கணும், நாலாநாள் திரும்பி விடலாம். நீ போறதுக்கு ரெடி பண்ணிக்கோ. நாளை நாளன்னிக்கி ஒண்ணும் அச்சாரம் வாங்கலியே ‘
‘இப்ப என்ன ஆடி மாசத்திலே அச்சாரம் ? ‘
‘ரொம்ப நல்லது போ. அப்ப ரண்டு நாள் கூடத் தங்கினாலும் பாதமில்லேன்னு சொல்லு. ‘
‘ஒரு மாசமாத்தான் இருக்கட்டுமே. நீங்க கூப்பிடறச்சே நான் வெட்டி முறிக்கப் போறேனோன்னேன். என்ன பேச்சு இது ? ‘
‘சரி, இந்தா–இதோ இருவது ரூவா இருக்கு. மீனாட்சி கிட்ட கொடு. செலவுக்கு வேணுமே அவளுக்கு… ‘ ராத்திரி ஏழு மணிக்கு வந்துடு. இங்கேயே சாப்பிட்டுப் புறப்படலாம்.
‘சாப்பிடறேன். இது என்னத்துக்கு ? ‘ என்று உபசாரமாக பணத்தை மறுத்தார் முத்து.
‘எது என்னத்துக்கு ? –கொடுத்தா பேசாம வாங்கிவச்சுக்கோயேன். நீதான் மகாப் பிரபுன்னு தெரியுமே எனக்கு. ‘
‘சரி ‘ என்று புன்சிரிப்புடன் இரண்டு நோட்டையும் வினோலியாப் பெட்டிக்குள் வைத்து மூடி ‘நானே போகணும் போகணும்னு நெனச்சிண்டிருந்தேன். நீங்க கூப்பிட்டுது பால்லெ பழம் விழுந்தாப்பல ஆயிட்டுது ‘ என்றார் முத்து.
‘என்ன ? ‘
‘நம்ம அண்ணாக்குட்டி அங்கதானே இருக்கான்… போறபோது அவனையும் ஒரு நடை பார்த்துட்டு வந்துடலாமே ‘
‘ஒஹோஹொ. ரண்டு மாசம் முன்னாலேயே சொன்னியே– யாராத்திலெயோ இருக்கான்னு. எனக்கு மறந்தே போயிடுத்து பாரேன். பலசரக்குக் கடைக்காரனுக்கு பைத்தியம் புடிச்சாப்பல ஆயிடுத்து என் புத்தி… பேஷ்– ‘
பட்டணத்துக்கு வந்த நாலாம் நாள்தான் முத்துவுக்கு ஒழிந்தது. அண்ணாவையருக்கு சமைத்துப்போட்டு விட்டு அவரோடும் சுற்ற வேண்டியிருந்தது. மூன்று நாளுக்குப் பிறகுதான் அண்ணாவையருக்குத் தைரியம் வந்தது. தனியாக நடமாடலாம் என்று. அன்று சனிக்கிழமை. வேங்கடாசலபதி பெயரைச் சொல்லி ஒரு சர்க்கரைப் பொங்கல் பண்ணச் சொன்னார் அண்ணாவையர். அவருக்குச் சாப்பாடு போடுவதற்கு முன்னமே சொல்லி விட்டார் அவர். ‘முத்து, நான் சாப்பிட்டுக் கோர்ட்டுக்குப் போறேன். நீ அக்கணாக் குட்டியைப் பார்த்துட்டு சாயங்காலத்துக்குள்ள வந்துரு. ராத்திரி வண்டிக்கே கிளம்பும்படியா இருக்கும். முடிஞ்சா அந்தப் பயலையும் அழச்சிண்டு வா. நானும் பார்க்கறேன் ‘ என்ரு அவர் சொன்னதும் அவிழ்த்துவிட்ட கழுதை மாதிரி ஓட வேண்டும் போலிருந்தது முத்துவுக்கு. நெஞ்சுக்குள் குதியாகக் குதித்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவருக்குச் சாதத்தைப் போட்டார். டாக்சி பிடித்துக் கொண்டு அவரை ஏற்றி வழியனுப்பி விட்டு, ஒரு எவர்சில்வர் டப்பாவில் சர்க்கரைப் பொங்கலைப் போட்டுக்கொண்டு மாம்பலம் பஸ்ஸில் ஏறினார்.
வீடு கண்டு பிடிப்பது சிரமமாக இல்லை. வீடா அது பங்களா. பங்களாகூட இல்லை. சின்ன அரண்மனை. ஒரு மாஞ்சோலைக்கு நடுவில் இருந்தது. கேட்டைக் கடந்து நுழைந்ததும் நடுவில் ஒரு நாகலிங்க மரம். இப்பாலும் அப்பாலும் இரண்டிரண்டு மாமரங்கள். ஒரே நிழலாக இருந்தது. தள்ளிப்போனால் கார் நிற்கும் முகப்பு. காரும் இருந்தது. நாகலிங்க மரத்துக்குப் பக்கத்தில் சிமண்டு சோபா இரண்டு திண்ணைபோல கட்டியிருந்தன, அங்கே நான்கு பையன்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘அம்பி ‘ ‘ என்று இரண்டு தடவை கூப்பிட்டார் முத்து. அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. மாமரத்தில் ஒரு குயில் கத்திற்று. கீழே நாகணவாய் இரண்டு மஞ்சள் மூக்கும் குழைந்த கூவலுமாக ஆடி ஆடி நடந்து கொண்டிருந்தன.
‘நான் டபிள்ஸ் எத்தனையோ தடவை போயிருக்கேண்டா இதே சைக்கிள்ளே என்ன செஞ்சிடுவாங்க ? எங்க தாத்தா ஹைகோர்ட் ஜட்ஜஉ கான்ஸ்டபிள் என்னைப் பிடிச்சிடுவானா ? ‘
‘ம்க்ம்…நீ யார் க்ராண்ட்ஸன்னாயிருந்தா போலீஸ்காரனுக்கு என்னடா ? அவன் டூட்டி செய்யத்தான் செய்வான். ‘
‘பெட்டு ? –நான் டபுள்ஸ் போறேன், மணியோட….. பிடிக்கிறானா பார்ப்பமா ? அஞ்சு ரூபா பெட்டு ‘ இந்தா ‘ என்று சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து வைத்தான் அந்தப் பையன்.
பன்னிரண்டு வயதுக் குழந்தையின் பையிலிருந்து ‘பெட்டு ‘க் கட்ட ஐந்து ரூபாய் பணம் வருவதைப் பார்த்து முத்து பயந்து போய்விட்டார். இந்தப் பையன்களைத்தான் அக்கணாக்குட்டி பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு விடுகிறானா ‘ அவருக்குப் பயமாகவும் இருந்தது. பெருமையாகவும் இருந்தது.
‘அம்பி ‘ ‘ என்று மறுபடியும் கூப்பிட்டார். பதிலில்லை. அன்று சனிக்கிழமை, பள்ளிக்கூடம் இல்லை போலிருக்கிறது.
மறுபடியும் கூப்பிட்டார்.
‘யாரு ? ‘
‘சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் கும்மாணத்திலிருந்து வந்திருக்கானே அவன் இஞ்சதானே இருக்கான். ‘
‘தெரியாது ‘
‘இதுதானே குப்புசாமி அய்யர் பங்களா ‘ ‘
‘யார்றா குப்புசாமி அய்யர் ? ‘
‘போடா ‘ நம்ம மோகன் தாத்தா தாண்டா. அவர் வீடுதான் ‘
‘நீங்க இந்த வீடு இல்லையா ? ‘
‘இல்லை. நாங்க எங்க ப்ரண்டு மோகனைப் பார்க்க வந்திருக்கோம். மோகன் உள்ளே சாப்பிடப் போயிருக்கான். ‘
முத்து மெதுவாக நகர்ந்து வீட்டின் முகப்புக்குப் போனார். அங்கு யாருமில்லை. உள்ளே ஹாலுக்குப் போனார். பாதி இருட்டு. அங்கே பெரிய மைசூர் மகாராஜா ராணியோடு நிற்கிறபடம், கொம்பு, மான்தலைகள், யாரோ தலைப்பாகை நீளக்கோட்டு கால்சட்டை போட்ட மனிதரின் படம் எல்லாம் மாட்டியிருந்தன. அங்கும் யாருமில்லை. அதையும் தாண்டினார். ஒரு கிழவன் அந்தண்டை நடையில் ஒரு ஸ்டூல்மீது உட்கார்ந்திருந்தான்.
‘யாரு ? ‘
‘ஏம்பா சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் இங்க இருக்கானே தெரியுமோ ? ‘
‘பையன்னா ? எந்தப் பையன் ? ‘
‘இங்கே வேலைக்கிருக்கான்பா ஒரு பையன் — கும்மாணத்திலிருந்து வந்திருக்கான். ‘
‘அப்படிச் சொன்னால் தெரியும் ? சாம்புவைத்தானே கேக்கறீங்க —பெரிய அய்யரோட இருக்கே அந்தப் பையன்தானே ? ‘
‘அது என்னமோ, இங்க வேலையா யிருக்கான் அந்தப் பையன் ? ‘
‘கும்பகோணத்துப் பையன்தானே ? ‘
‘ஆமாம். ‘
‘அப்ப இப்படி இறங்கி அதோ அங்கே போங்க — காட்டேஜஉக்கு, அங்கதான் இருப்பான் பையன், இப்பதான் அய்யரோட வெளியே போய் வந்தான். ‘
‘இங்கே ? ‘ என்று நடை முடிவில் இருந்த வாசற் படியைக் காட்டினார் முத்து.
‘இங்க சின்ன ஐயா ரண்டுபேரும் இருக்குறாங்க… பெரியய்யா இருக்கிற இடம் அதுதான். அங்கதான் அந்தப் பையன் இருக்கான்… நீங்க யாரு ? ‘
‘நான் அந்தப் பையனோட தோப்பனார். ‘
‘அப்படியா ‘ சரி சரி, போங்க. ‘
முத்து நடையிலிருந்து இறங்கி தோட்டத்தோடு போனார். ஏ அப்பா எத்தனை பெரிய வீடு ‘ எத்தனை மரங்கள் ஒரு ஆளைக் காணவில்லை. வாசலை இப்படி ஹோவென்று போட்டுவிட்டு உள்ளே எங்கேயோ இருக்கிறார்களாம். ஒரு ஈ காக்கையைக் காணோம் ‘ முந்நெற்றி மயிரைப் பிடித்தாலும் தெரியாது போலிருக்கிறது.
ஒரே நிசப்தமாக இருந்தது. தோட்டப் பாதையில் நடந்து அங்கே காட்டேஜின்படி ஏறினார் முத்து.
தாழ்வாரத்தில் வந்து ‘சார் ‘ என்றார்.
‘யாரு ? ‘
‘நான்தான் ‘ என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
அங்கே ஒரு பெரிய மேஜை, அதன்மேல் தடிதடியாகக் கணக்குப் புத்தகங்கள். அதன் பின்னால் நாற்காலியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் கறுப்பாக மூக்குக் கண்ணாடி, மேஜையில் ஒரு நீலக்கடுதாசி. அதன் மேல் வரைபடம். அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் பக்கத்தில் நின்று அவருடைய தலையை, கிராப்புத் தலையை வரக்கு வரக்கு என்று சொரிந்து கொண்டிருக்கிறான்.
கறுப்பு கண்ணாடியின் உடலும் லேசாகக் கறுப்புத்தான். முத்து உள்ளே நுழைந்ததும் அவர் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றாமலே நிமிர்ந்து பார்க்கிறார்.
‘யப்பா ‘ என்று ஒரு குரல்.
அக்கணாக்குட்டியின் குரல்தான், மேஜை மீதிருந்த மங்கிய விளக்கின் கறுப்பு மறைவுக்குப் பின்னால் அக்கணாக்குட்டியின் முகம் தெரிந்தது.
‘எப்பப்பா வந்தே ? ‘ என்று ஹ் என்று உறிஞ்சிக் கொண்டே சிரிக்கிறான் அவன்.
‘யார்றா சாம்பு ? ‘
‘எங்கப்பா மாமா ‘ என்று அவர் தலையைச் சொறிந்து கொண்டே அக்கணாக்குட்டி ‘எப்பப்பா வந்தே ? ‘ என்று சிரித்தான்.
‘நமஸ்காரம் ‘ என்றார் முத்து.
‘நமஸ்காரம். சாம்பு அப்பாவா — வாங்கோ ‘ ‘
‘வந்தேன் ‘
‘உட்காருங்கோ ‘
ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார் முத்து. வெய்யிலிருந்து உள்ளே வந்ததும் கண்ணை மறைத்த இருள் மெதுவாக விலகிற்று. கண் நன்றாகத் தெரியத் தொடங்கிற்று.
‘செளக்கியமா ? ‘ என்றார் கறுப்புக் கண்ணாடி.
‘செளக்யம் ‘
முகத்தை நன்றாகப் பார்த்தார் முத்து. உதடு அறுந்தது மாதிரி அதைத்துத் தொங்கிற்று. கன்ன எலும்பில் இரண்டு அதைப்பு. காது வளையமெல்லாம் அதைப்பு. மேஜை மீது படிந்திருந்த கைகளை பார்த்தார். கைகள் படியவில்லை. கட்டைவிரல் மற்ற விரல்களெல்லாம் மடங்கியிருந்தன. நீட்ட முடியாத விரல்கள் என்று பார்த்தாலே தெரிந்தது.
‘எப்பப்பா வந்தே…ஹ் ? ‘ என்று பல் வரிசையைக் காட்டிக் கொண்டே கேட்டான். அக்கணாக்குட்டி. அவருடைய தலையைச் சொறிவதை மட்டும் நிறுத்தவில்லை.
‘இப்ப தாண்டா வரேன் ‘
‘இப்ப ஏதுப்பா வண்டி….ஹ் ? ‘
‘வண்டி முன்னூறு நிமிஷம் லேட்டு. தெரிஞ்சவா வீட்டிலே வந்து இறங்கினேன். சாப்பிட்டேன், உடனே புறப்பட்டு வரேன் ‘ என்று தன்னறியாமல் பொய் சொன்னார் முத்து.
அப்பொழுது கறுப்புக் கண்ணாடிப் பெரியவர் கன்னத்தை சொரிந்து கொண்டார். எல்லாரும் விரல் நுனியால் நகத்தால் சொறிந்துகொள்வார்கள். அவர் மடக்கின விரலின் பின்பக்கத்தால் சொறிந்து கொண்டார். முத்துவுக்கு பகீர் என்றது. இரண்டு மூன்று விரலில் நகமே இல்லை.
முத்துவுக்கு உட்கார முடியவில்லை. மேலெல்லாம் அரிப்பது போலிருந்தது. அந்த அறையில் காலைப்பாவவிட்டாலே உள்ளங்கால் அரிக்கும்போலிருந்தது. முள்மேல் உட்கார்வது போல குறுகிக்கொண்டார்.
பெரியவர் என்னென்னமோ வெல்லாம் கேட்டார். தப்பும் தவறுமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் முத்து. காதில் ஒன்றையும் சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளே பூஞ்சதை நரம்பெல்லாம் அழுவதுபோல் ஒரு கசிவு.
‘போரும்டா சாம்பு ‘ என்றார் பெரியவர்.
அக்கணாக்குட்டி சொறிவதை நிறுத்தினான்.
‘பையன் ரொம்ப சமர்த்தாயிருக்கான். அவன் இருக்கிறது எனக்கு ஆயிரம் பேர்கூட நிற்கிறாப்போல இருக்கு ‘ என்றார் பெரியவர். சொல்லிவிட்டு ‘சித்தே இருங்கோ, இதோ வந்துடறேன் —சாம்பு இப்படி வாயேன் ‘ என்றார்.
அக்கணாக்குட்டி அருகில் வந்து நின்றான். பெரியவர் எழுந்து அவன் தோளில் கையைப் போட்டுக்கொண்டார். அக்கணா நடந்தான். அவரும் விந்தி விந்தி துணி பூட்ஸ் காலால் நடந்தார். அவரை ஹாலின் ஒரு கோடியில் உள்ள கதவைத் திறந்து உள்ளே விட்டு வெளியே காத்து நின்றான்.
‘உங்க மாதிரி யார் இருப்பா ? விளக்கேத்தி வச்சேளே என் குடும்பத்துக்கு. நிஜமாகச் சொல்றேன். அக்கணாக்குட்டி அனுப்பிக்கிறானே மாசாமாசம் அதிலே தான் வயிறு ரொம்பறது. யார் செய்வா இந்த மாதிரி இந்தக் காலத்திலே ? அவனையும் ஒரு ஆளாக்கி….அவன் ஒரு கால் காசைக் கண்ணாலே காணப்போறானோன்னு ஒடிஞ்சு போய்விட்டேன். ஸ்வாமிதான் உங்க ரூபத்திலே வந்து அவன் கண்ணைத் திறந்துவிட்டார்…. ‘ அக்கணாக்குட்டியைப் பார்க்கபோகும் போது அவனுடைய எஜமானரைப் பார்த்தால் இப்படி என்னென்னவெல்லாமோ சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்திருந்தார் முத்து.
இப்போது வாயைத் திறக்கவில்லை. முடியவில்லை அந்த நினைவெல்லாம் தோன்றிய சுவடே இல்லை. மனதில் ஒரு பீதி. ஒரு குமைச்சல். குமட்டல். ஒரு கோபம். ‘பாவி ‘ நீ நன்னாயிருப்பியா ? ‘ என்று அடிவயிற்றிலிருந்து கதற வேண்டும் போலிருந்தது. அக்கணாக்குட்டி ஹால் ஓரத்தில் பெரியவர் வருவதற்காகக் காத்து நின்றவன் அப்பாவைப் பார்த்துப் புன்சிரிப்பு சிரித்தான். ஹ் என்று உறிஞ்சினான்.
முத்துவுக்கு நெஞ்சில் கட்டி புறப்பட்டாற்போல் வலித்தது. இவனையும் தாண்டி கதவைப் பார்த்தது அவர் கண். வெளியே நெளியப் போகும் நல்ல பாம்பைப் பார்ப்பது போல் ஒரு கிலி வேறு சூழ்ந்துகொண்டது.
‘இந்தண்ட வாடா ‘ என்று வாயால் தலையை அசைத்தார் — அவசரமாக, சுளிப்பாக.
அவன் புரிந்து கொள்ளவில்லை. புன்சிரிப்புடனேயே சாத்தியிருந்த கதவைக் கையால் காண்பித்து சைகை காட்டினான்.
பெரியவர் காவி பூட்ஸஉம் காலுமாக வந்தார். சுவரில் பதிந்த ஒரு பளபள கம்பியிலிருந்த ஒரு துண்டை எடுத்து அவரிடம் நீட்டினான் அக்கணா. அவர் கையைத் துடைத்துக் கொண்டதும், தோளைக் கொடுத்தான். பிடித்துக் கொண்டு வாத்து நடை நடந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.
முத்து ஆரம்பித்தார். ‘சம்சாரத்துக்கு ஊரிலே உடம்பு ரொம்ப மோசமாயிருக்கு. பதினஞ்சு நாளா படுத்த படுக்கையாயிருக்கா. பிள்ளையைப் பார்க்கணும் பார்க்கணும்னு புலம்பறா, ஜஉரம் இறங்கவே இல்லை…. ‘
‘அடடா….நீங்க ஒரு வார்த்தை எழுதப்படாதோ ? ‘
என்னமோ சாதாரண ஜஉரம்னு நெனச்சிண்டிருந்தேன். அது என்னடான்னா இறங்கற வழியாயில்லெ. அப்புறம் அவ தங்கைக்கு லெட்டர் போட்டு வரவழச்சேன், கிராமத்திலேர்ந்து. இவளானா புலம்பறா. உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லி பயலை அழச்சிண்டு போகலாம்னு வந்திருக்கேன் ‘ என்று அடுக்கிக் கொண்டே போனார் முத்து.
பெரியவர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். கறுப்புத்தான் கண்ணை மறைத்திருக்கிறதே என்ன தெரியும் ? அந்த முகத்தில்தான் என்ன தெரியும் ? தடிப்புத்தான் தெரிந்தது.
முத்துவுக்கு மட்டும் தான் சொன்னதை அவர் நம்பவில்லையோ என்று வயிற்றில் கனத்தது.
பெரியவர் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்.
‘ஊர்லெ சிநேகிதர் ஒருத்தர் காரிலே வந்திருக்கார். சேர்ந்து போயிடுவமேன்னார். ரயில்காரனுக்கு கொடுக்கறதையாவது மிச்சம் பண்ணலாம்னு நினைச்சேன். ‘
பெரியவர் வாய்தடிப்பு ஒரு புன்னகையாக மலர்ந்தது. சிரித்தால் அழகாகத்தான் இருக்கிறது. யார் சிரித்தால் என்ன என்று தோன்றிற்று முத்துவுக்கு.
‘பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும் ‘ என்றார் முத்து.
‘பாதகமில்லை ‘ என்று ஒரு புத்தானை அழுத்தினார் பெரியவர்.
‘சாம்பு, அப்பா கூப்பிடறாரேடா போறியா ? ‘ என்று கேட்டார்.
‘அம்மா ரொம்ப ஜஉரமாக கிடக்காடா. உன்னைப் பார்க்கணும்னு பேத்திண்டேயிருக்கா– ராவில்லே பகலில்லே ‘ என்றார் முத்து.
‘சரிடா சாம்பு. வேட்டி சட்டையெல்லாம் எடுத்து வச்சுக்கோ ‘ என்றார் பெரியவர். ‘பையன் ரொம்ப ஒத்தாசையாயிருந்தான் ஸ்வாமி. சுருக்கக் கொண்டு விட்டு விடுங்கோ. ‘
‘ம் ‘ உடம்பு சரியாயிருந்தா, அங்கே என்ன வேலை ? ‘ என்றார் முத்து.
அக்கணா பின்னாலிருந்த இன்னொரு அறைக்குப் போனான்.
வாசலிலிருந்து ஒரு தட்டில் டிபன் காபி எல்லாம் பரிசாகரன் கொண்டு வந்தான். அதற்குத்தான் புத்தானை அழுத்தினார் போலிருக்கிறது பெரியவர்.
‘சாபிடுங்கோ. ‘
‘நான் இப்பத்தானே சாப்பிட்டேன். ‘
‘இங்கே வந்து வெறும் வயத்தோட போகலாமா ? ‘
முத்துவுக்குச் சொல்ல மெல்ல முடியவில்லை. ‘பாலாம்பிகேச வைத்யேச ‘ என்று மனத்துக்குள் சுலோகம் சொல்லிக் கொண்டே காபியை மட்டும் எடுத்து கண்ணை மூடி மளமளவென்று விழுங்கினார். பரிசாரகன் பாத்திரங்களை எடுத்துப் போனான்.
அக்கணாக்குட்டி பையும் கையுமாக வந்தான். வெளிச்சத்தில் நன்றாகப் பார்க்கும்போது அவன் எவ்வளவு மாறிவிட்டிருக்கிறான் என்று தெரிந்தது. தலையை வழவழவென்று சீவி விட்டிருந்தான், வெள்ளை வெளெரென்ற சட்டை, வெள்ளை வேட்டி, முகத்தில் ஊட்டத்தின் பொலிவு, சட்டைக்கு வெளியே தெரிந்த முன்னங்கைகூட பளபளவென்று நிறம் ஏறியிருந்தது.
‘என்னை ரொம்ப மன்னிச்சிக்கணும் ‘ என்று எழுந்து கும்பிட்டார் முத்து.
‘எதுக்காக ? ரொம்ப நன்னாருக்கே. ‘
‘நமஸ்காரம் பண்ணிட்டு போய்ட்டு வரேன்னு சொல்லிக்கோடா ‘ என்றார் முத்து.
அக்கணா விழுந்து வணங்கி எழுந்து ‘போய்ட்ரேன் மாமா ‘ என்றான்.
‘போய்ட்டுவா. போய் லெட்டர் போடு, அம்மாவுக்கு உடம்பு எப்படியிருக்குன்னு. எப்ப வரேன்னும் எழுதணும். ‘
‘சரி மாமா. ‘
இருவரும் வெளியே நடந்தார்கள்.
இவ்வளவு சீக்கிரம் காரியம் நடக்கும் என்று நினைக்கவில்லை, சிங்கத்தின் குகையிலிருந்து வருவது போல, திரும்பிப் பார்க்காமல் வேகமாக வெளியே வந்து தோட்டத்தை தாண்டி தெருவுக்கு வந்து சாலைக்கு வந்தார் முத்து. ‘மெதுவாப் போப்பா ‘ என்று கூடவே விரலால் நடந்து சிறு ஓட்டமாக ஓடிவந்தான்.
சாலைக்கு வந்து பஸ் ஏறினதும்தான் வாயைத் திறந்தார் முத்து.
‘ஏண்டா மக்கு ‘ இந்த மாதிரி உடம்பு அந்த மாமாவுக்குன்னு நீ சொல்லவே இல்லியே ‘ என்றார்.
‘என்ன உடம்பு ? ‘
‘உனக்குத் தெரியலியா ? ரொம்ப கரிசனமா தலையைச் சொறிஞ்சு விட்டியே, புத்திதான் இல்லை, கண்ணுகூடவா அவிஞ்சு போச்சு ? ‘
‘அது ஒட்டிக்காதாம்பா ? ‘
‘ஒட்டிக்காதா ‘ யார் சொன்னா ? ‘
‘அவாத்து மாமி, மாமா, மோகன் எல்லோரும் சொல்வாலே. ‘
‘பின்னே அந்த மோகன், மாமி, மாமா எல்லோரும் வந்து அவர் தலையைச் சொறியப்படாதோ ? ‘
‘அவாலுக்கெல்லாம் வேலையில்லியாக்கும் ? மோகன் பல்லிக்கூடம் போறான். மாமா என்ஜீனியர், மாமி பூ நூல்லே பை பனியன்லாம் போடறா. அவாலுக்கு டயம் ஏது ? அவா சொறியப்படாதோங்கிறீயே. ‘
‘உன்னை ஏமாத்தியிருக்காடா எல்லாரும், அசட்டுப் பொணமே ‘
‘ஒண்ணும் இல்லே. இத பாரு பேப்பர்லேயே போட்டிருக்கு ‘ என்று பையின் பிடியை அகட்டி உள்ளேயிருந்து நாலு சினிமாப் பாட்டு புத்தகங்களை எடுத்தான் அக்கணா. ஒரு புத்தகத்தைப் பிரித்து அதிலிருந்துஒரு தினசரிதாள் பக்கம் ஒன்றை எடுத்தான். அதிலெ ஒரு வெள்ளைக்காரப் பெண் யாரோ ஒரு ஆணின் கையைப் பிடித்துத் தடவிக் கொண்டு நிற்கிறாள். கருப்புக் கண்ணாடிகாரருக்கு இருந்த மாதிரியே கை, மூக்கு எல்லாம்…. ‘இது யாரு தெரியுமா ? வெல்லைக்கார தேசத்திலே ரானி. போன மாசம் மெட்ராசுக்கு வந்தா — ராஜாவோட. இந்த ஊருக்கு வந்து சினிமா, டிராமால்லாம் பார்க்கலியாம், காரை எடுத்துண்டு ஒரு கிராமத்துக்குப் போனாலாம். மாமா மாதிரி அங்கே முப்பது நாப்பதுபேர் இருக்கலாம். மருந்து சாப்பிடறாலாம். அவால்லாரையும் பார்த்து, கையெல்லாம் தடவிக் கொடுத்தா வெல்லைக்கார ரானி, போட்டோ போட்டிருக்கா பாரு தடவிக் கொடுக்கறாப்பல, ஒட்டிக்கும்னா ரானி தடவிக்கொடுப்பாலா, பேத்தியம் மாதிரி பேசறியே ? ‘
‘பேத்யம் மாதிரியா ? நானா பைத்தியம் ? ‘ என்று படத்தைப் பார்க்க ஆரம்பித்தார் முத்து.
‘படத்தை மட்டும் பாக்கறியே. கீலே எலுதியிருக்கு பாரு. ‘ என்று விரலை அந்த வரிகள் மீது ஒட்டிக் காண்பித்தான் அக்கணா.
‘பாலாம்பிகேச வைத்யேச ‘ என்று சுலோகம் சொல்லிக் கொண்டே வினோலியா பெட்டியைத் திறந்து கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார் முத்து.
         ‘மணியார்டரா ‘ எனக்கா ‘ ‘‘ஆமா ஸ்வாமி ‘ உங்களுக்கேதான் ‘ ‘‘உத்ராபதி, உனக்கு வயசு நாப்பதாயிருக்கும், சாளேசரம் போட்டுக்கற வயசு ‘ நல்லா பாத்துச் சொல்லு. நான் வாணா கண்ணாடி தரட்டுமா ? ‘ என்று துருப்பிடித்த வினோலியா ரோஸ் சோப் பெட்டியைத் திறந்து, வெற்றிலைக்கும் வெட்டுப் பாக்குக்கும் மேல் படுத்துக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடியைத் தொட்டார் முத்து.‘கண்ணாடியும் வாணாம், சீப்பும் வாணாம். உங்களுக்குத்தான் வந்திருக்கு. நீங்களே அந்தக் கண்ணாடியை மாட்டிக்கிட்டுப் பாருங்க…எம். சாம்பமூர்த்தி யாரு ? ‘‘அக்கணாக்குட்டியா ? நம்ம புள்ளையா ? இப்ப மெட்ராஸிலேயா இருக்கு அது ? ‘முத்து அவசர அவசரமாக மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டி, இடது காதில் நூலைச் சுற்றிக் கொண்டார்.‘ஆமா, வேலைக்குப் போயிட்டானே அக்கணாக்குட்டி ஒரு மாசத்துக்கு முன்னால, உனக்குத் தெரியாது ? ‘‘தெரியாதே. எங்க வேலையோ ? ‘ என்று மணியார்டர் பாரத்தில் இரண்டு இடத்தில் இண்ட்டு போட்டுக் கொடுத்தார் உத்ராபதி. கையெழுத்தானதும் அடிக் கடிதத்தைக் கிழித்து முப்பதொன்பது ரூபாய்க்கு நோட்டும் ஒரு ரூபாய்க்கு சில்லறையுமாகப் பையிலிருந்து எடுத்து நீட்டினார்.‘

      சில்லறையும் மாத்திப்ட்டு நாற்பது ரூபாயைக் கொடுப்பானேன் ? அரை ருபாயைக் குறைச்சுண்டு கொடுக்கப் படாதோ ? ‘ என்று அரை ரூபாயை நீட்டினார் முத்து.‘நாலணாப் போதும் சாமி. உங்ககிட்ட அதுக்கு மேலே வாங்கறது பாவம் ‘ என்று பாதியைத் திரும்பிக் கொடுத்து விட்டார் உத்ராபதி.‘முதல் சம்பளம் வாங்கி அனுப்பிச்சிருக்கான் அக்கணாக்குட்டி. எட்டணாவாத்தான் இருக்கட்டுமேன்னு நினைச்சேன் ‘ என்று நாலணாவைத் திரும்பி வாங்கிக் கொண்டார் முத்து.‘பிறத்தியார் பணம் அனுப்பிச்சா, ரண்டுகையாலும் வீசி வீசி தருமம் பண்ணுவாங்க சாமி ‘ என்று சொல்லிக் கொண்டே குறட்டில் இறங்கி வந்தாள் அவர் மனைவி.‘ஏழைக்குதாம்மா தெரியும் ஏழை கஷ்டம். நீங்க சொல்றீங்களே, மாசம் நானூறு ரூபா அனுப்பறாரு ரட்டைத் தெரு மகாலிங்கய்யரு மகன், மிலிட்டரியிலே கர்னலா இருக்குறாராமே. மகாலிங்கய்யரு அப்படியே வாங்கிட்டு குந்தினாப்பல உள்ளே போயிடுவாரு. ஒரு பத்துகாசு டாத்தண்ணிக்கு ? மூச்சுப் பிரியப்படாது… முகத்தைப் பார்த்தாத்தானே ?… அக்கணாக்குட்டி என்ன வேலையாயிருக்கு ? ‘‘என்ன வேலையோ ? நம்ம எம். கே. ஆர். கிட்ட போய் புலம்பினேன் ஒரு நாளைக்கு, நம்ம பையனுக்கு ஒரு வழி பண்ணப்படாதா செட்டியார்வாள் ‘ இப்படி உதவாக்கரையாத் திரியறானேன்னு நின்னேன். ஒரு மாசம் கழிச்சு சொல்லியனுப்பிச்சார். போனேன். உம்ம பையனை அனுப்புரீராய்யா மெட்ராஸஉக்கு ? ஒரு பெரியமனுஷன் வீட்டிலே கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம். ஒரு பையன் இருந்தாத் தேவலைன்னு சொல்றாங்க.

      பெரிய இடம், புள்ளீங்க பள்ளிக்கூடத்துக்குப் போகும். கொண்டு விடணும், கடை கண்ணிக்குப் போகணும். இப்படி சில்லரை வேலையா இருக்கும் போலிருக்கு. நல்லா கவனிச்சிப்பாங்க. வீட்டோடு சாப்பாடு போட்டு வைச்சிப்பாங்கன்னார் எம். கே. ஆர்.‘அனுப்புறீமான்னு கேக்கணுமா ? நான்தான் கஞ்சிவரதப்பான்னு தவிச்சுண்டு கிடக்கேன். இன்னிக்கே அனுப்பிக்கறேன்னேன். நாலு நாக்கழிச்சு அவர் காரியஸ்தர் மெட்ராஸ் போனார். அக்கணாக்குட்டியை அழச்சிண்டு போயிட்டார். சரியா ஒண்ணரை மாசம் ஆச்சு. பணம் வந்திருக்கு. ‘‘என்னமோ சாமி கண்ணைத் திறந்தாரு. நீங்க முன்னாலே, இந்த மூக்கு கண்ணாடிக்கு அந்த நூலை எடுத்திட்டு ஒரு காது வாங்கிப் போடுங்க. அப்புறம் ஒரு உறையிலே போட்டு வச்சுக்குங்க. இப்படியே சீவல் மேலேயும் பாங்கு மேலேயும் வச்சிட்டிருந்தா பழங்கோலி மாதிரி கீறல் விளாம என்ன பண்ணுமாம் ‘ ‘ என்று சொல்லிக்கொண்டே உத்திராபதி நகர்ந்தார்.சம்சாரம் முத்துவைப் பார்த்தாள்.‘இப்படிக் கொடுத்திட்டு நேரே உள்ள வரட்டும். பற மோளம் மாதிரி ஊரெல்லாம் போய் தம்பட்டம் கொட்டிண்டு நிக்கவேண்டாம் ‘ என்று பல்லோடு பல்லாகச் சொல்லி வெற்றிலைப் பெட்டி மேலிருந்த நோட்டுகளை பெட்டிக்குள் போட்டு மூடி, பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்.வெற்றிலைப் பெட்டி கையை விட்டுப் போனதும் கூடவே விரைந்தார் முத்து. அவர் உள்ளே வந்ததும் கதவைத் தாழிட்டாள் சம்சாரம்.முத்து தோளிலிருந்த மூன்று முழம் ஈரிழையை இடுப்பில் கட்டி, அவள் கையிலிருந்த பெட்டியை வாங்கித் திறந்து நோட்டுகளை எடுத்து, பறையிலிருந்த பரமேச்வரனின் படத்தின் அடியில் வைத்து, நெடுங்கிடையாக விழுந்து மூன்று தடவை நமஸ்காரம் செய்தார்.‘ஏன் நிக்கறே ‘ நீயும் பண்ணேன் ‘ ‘‘எல்லாம் பண்றேன் ‘ என்றுதான் அவள் வழக்கமாகச் சொல்லிவிட்டு நின்றிருப்பாள். ஆனால் மனசு பாகாகிக் கிடந்ததால் அவரே சம்பாதித்து விட்டாற்போல, பதில் பேசாமல் கீழே குனிந்து மூன்று முறை வணங்கி எழுந்தாள்.

         அவளுக்கு, அந்தக் காலத்து முத்துவின் ஞாபகம் வந்தது. ஏழு வருடங்களுக்கு முன்னால் முத்து இப்படிக் கிழம் சென்று போகவில்லை. மயிர் கருகருவென்றிருக்கும், அள்ளிக்கட்ட வேண்டிய கூந்தலாக இருக்கும். மூக்கிலிருந்து இரண்டு கோடுகள் இந்த மாதிரி விழவில்லை. மார்பும் இரு பிளவாக அடித்தென்னை மட்டை மாதிரி வைரமாக இருக்கும். இப்படிச் சரியவில்லை. தோள்பட்டை இப்படிச் சூம்பவும் இல்லை. ஆடு சதை, துடைச் சதை எல்லாம் இப்படி கழளவுமில்லை. அப்போது வெற்றிலைப் பெட்டி பித்தளைப் பெட்டி. இப்பொழுது குப்பைத் தொட்டிபோல ஒரு வயதானத் தகரப் பெட்டி. அப்பொழுது வெள்ளிச் சுண்ணாம்புக் கரண்டான். இப்பொழுது பிரம்மோத்சவத்தில் தெருவோரக் கடைப்பரப்பில் வாங்கின தகரக் குழாய். அதுவும் துரு. கழுத்துக் குழியை தங்க ருத்ராட்சக் கொட்டை மறைத்ததுபோய், இப்பொழுது குழிதான் தெரிகிறது. மேனிபோய், தெம்பு போய் கங்காளி மாதிரி நிற்கறதைப் பார்த்துதான் ‘ரண்டாம் தாரமாம்மா ‘ ‘ என்று போன வருஷம் அமர்த்தின புதுத் தயிர்க்காரி கேட்டாள் போலிருக்கிறது. இப்படியா விசுக்கென்று இந்த பிராமணன் கிழண்டு போகும் ‘ மருந்துக்குக்கூட மயிரில் கறுப்பில்லாமல், கூந்தல் கொட்டைப் பாக்காகி….பல் விழவில்லை, ஆனால் கோணவும் பழுப்பேறவும் ஆரம்பித்து விட்டது.ஆனால் இது ஒன்றும் அவள் கண்ணை இந்தக் கணம் உறுத்தவில்லை.

       ‘என்ன இருந்தாலும் இதுக்கு இருக்கிற சாமர்த்தியம் சாமர்த்தியம்தான் ‘ என்று உவந்தாள்.அவளுக்குச் சற்று சிரிப்பாகக்கூட இருந்தது. நம் பிள்ளையைப் பார்த்து நாற்பது ரூபாய் சம்பளம் போட்டு சாப்பாடும் போடத் தோன்றிற்றே ஒருவனுக்கு ‘ இந்த உலகத்தில் எத்தனை அசடுகள் இருக்கமுடியும் ‘இல்லை….அண்ணாக்குட்டி நிஜமாகவே சமர்த்துதானோ ‘ நமக்கு ஒரு பிள்ளை. செல்லப்பிள்ளை. அசட்டுத்தனமேதான் கண்ணில்பட்டது. வெளியே போனதும் மறைந்திருந்த சமர்த்து வெளி வந்துவிட்டதோ என்னவோ.….இல்லை….பணத்தையே தின்று, பணத்தையே உடுத்தி, பணத்திலேயே படுத்துப் புரளுகிற கொழுப்பு ஜன்மங்களால் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்து நாற்பது ரூபாய் கொடுக்கவாவது ‘…கொழுப்போ டம்பமோ, மனது நல்ல மனது. இந்தப் பாச்சைக்கு, பேச்சைக்காலும் பேச்சைக்கையும் கொன்னல் பேச்சுமாக இது கிடக்கிற லட்சணத்துக்கு இப்படி ஆதரிக்க வேண்டும் என்று தோன்றிற்றே.‘தட்சிணாமூர்த்தே, வைதீச்வரா, லோகமாதா ‘ நீங்கள்ளாம்தான் காப்பாத்தணும் ‘ என்று பயந்துபோய் நின்றாள் அவள்.‘சரி, காவேரியிலே போய் ஸானம் பண்ணிட்டு வந்துடறேன்…சில்லறை ஏதாவது கொடேன். கீரைத்தண்டு பாற்காய்னு ஏதாவது வாய்ண்டுவரேன் ‘ என்று முடுக்கினார் முத்து. ‘இன்னிக்கு கூடவா வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும் ? ‘, என்று சொல்லாமல் பிணங்குகிற முறுக்கு அது. நாலணாவை எடுத்துக் கொடுத்தாள். கன்னத்தில் அவளை செல்லமாக நிமிண்டிவிட்டு அவர் வெளியே போகிறார்.

        பணம் வந்தால் இந்த நிமிண்டல், குழையல் எல்லாம் இரண்டு பேருக்கும் சகஜம்.அவர் குளிக்கப் போனது நடந்து போகிற மாதிரி இல்லை. குதி போடுகிறது போலிருந்தது. அவனை — அதை, ரூபாய் அனுப்பும்படி யாரும் சொல்லவில்லை. அது அது வேலை என்று போனால் போதும் என்றிருந்தது. அது போய் நாற்பது ரூபாய் அனுப்பவாவது ‘ ‘நீ உருப்படமாட்டே, நீ உருப்படவே மாட்டே ‘ என்று அவனைச் சபித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது, வயிற்றில் பிறந்த பிள்ளையை இப்படியா சபிப்பார்கள் ‘ நம்ம புத்தி இவ்வளவு கட்டையாக ஏன் போயிற்று ? இப்பொழுது பணத்தை அனுப்பி நம்ம புத்தியில் கரியை பூசிவிட்டதே ‘ இந்தப் பிள்ளை ‘ அக்கணாக்குட்டி, இனி மேல் உன்னை அதட்டக் கூடமாட்டேண்டா என்று தன்னைத் திட்டிக்கொண்டு நடந்தார் முத்து ஒரு பிள்ளை ‘பிள்ளைகளெல்லாம் தாயையும் தகப்பனையும் கொள்ளாமல் பாட்டனையும் பாட்டியையும் கொள்ளுமாமே, –அதுபோல் அக்கணாக்குட்டியைப் பற்றிய வரையில் மெய்தான். அவன் முத்துவின் மாமாவைக் கொண்டு விட்டான். முத்துவைக் கொண்டிருந்தால் அண்டா, தவலைகளை அலட்சியமாக உருட்டுகிற வலுவு வந்திருக்கும். ஆயிரம் பேருக்கானாலும் ஒரு கல் உப்போ, புளியோ ஏறாமல் குறையாமல் சமைத்துப் போடுகிற நளபாகம் கை வந்திருக்கும். முத்துவின் சம்சாரத்தைக் கொண்டிருந்தால் பார்க்கவாவது லட்சணமாக வளர்ந்திருக்கலாம்.

         மீனாட்சி லட்சணம் தான். சமையற்கார முத்து பெண்டாட்டி என்று யார் சொல்ல முடியும் ? நூத்தம்பது வேலி பண்ணைவீட்டு எஜமானி எண்ணெய் ஸ்நானத்துக்காக நகைநட்டுகளைக் கழற்றி வைத்தாற் போலிருக்கும் …..ஸ்நானம் செய்துவிட்டுத் திரும்பி உள்ளே நுழைந்த கையோடு ஈர வேட்டியோடேயே அவளை அப்படியே அம்மென்று திணறத் திணறக் கட்டிக் கொள்ள வேண்டும். ம்க்கும்…ம்க்கும் இதுவேறயாக்கும் என்று சொன்னாலும் சொல்லுவாள். கட்டிண்டு தொலை என்று சொல்வது போல மரம் மாதிரி நின்றாலும் நிற்பாள். அவளுக்குப் பிறந்த பிள்ளை அந்த மாதிரி மூக்கும் முழியுமா இருக்கக் கூடாதோ ? மூக்கில் வற்றாத ஜலதோஷம். ஹ் ஹ் என்று நிமிஷத்துக்கு ஒரு உறிஞ்சல். முட்டிக்கால், முட்டிக் கை. குதிகால் கீழே படாமல் இரண்டு குதியிலும் முள்குத்தினாற் போன்ற விந்து நடை, வாயைச் சற்று திறந்தாலே ஓட்டுக் கூரை மாதிரி பல் வரிசை — வரிசை இல்லை கோணல் — ஓடு மாற்றி நாலு வருடமானாற் போல. அந்த பல்லுக்கு ஏற்ற சொல், எச்சிலில் குளித்துக் குளித்து வரும் ஒவ்வொரு பேச்சும். எப்ப வந்தேல் மாமா சேக்யமா ? நாலானன் சேக்யமார்க்கானா, (நாலானன் என்றால் நாராயணன்) செலுப்பு பிஞ்சு போச்சுப்பா இன்னிக்கி காவேரி ரண்டால் ஆலம்…. வயசு பதினைந்து முடிந்தும் இதே பேச்சுதான். படிப்பு வரவில்லை. எலிமெண்டரிக்கு மேல் ஏறவில்லை. ஐந்து வருஷம் வீட்டோடு கிடந்ததும் போன வருஷம் ஒரு மளிகைக் கடையில் இழுத்துவிட்டார். அங்கே ஒரு நாள் எண்ணெயைக் கொட்டி ரகளை. வேலை போய்விட்டது.

         சைக்கிள் பழுது பார்க்கிற கடையில் கொண்டுவிட்டார். நாலு நாளைக்குப் போய்விட்டு வந்து ஜஉரமாகப் படுத்துக் கொண்டு விட்டது. நான் மாட்டேன்; சைக்கிலுக்குப் பம்பு அடிக்கச் சொல்றான். கண்டு கண்டா மார் வலிக்குது. நான் மாட்டேன் போ என்று திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டது. முத்து அலையாத இடமில்லை. பையனை அழைத்துக் கொண்டு வர்ச் சொல்லுவார்கள். போவார், பையனைப் பார்த்ததும் சொல்லியனுப்புகிறேன் என்று அனுப்பி விடுவார்கள். விறகு கடையில்கூட வேலைக்கு வைத்துப் பார்த்தாயிற்று. ஒரு கட்டையைத் தூக்க நூறு முக்கல். தினமும் நகத்திலும் விரல் இடுக்கிலும் சிலாம்பு. வீட்டுக்கு வந்து போகமாட்டேன் என்று அடம். நீ உருப்படவே மாட்டே என்று அப்பா அம்மா பாட்டு ‘ ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டான் அவன். பேசாமல் போய் திண்ணையில் உட்கார்ந்து வாசலில் போகிற வெள்ளாட்டையும் குட்டியையும் முக்கை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்துக் கொண்டிருப்பான். இல்லாவிட்டால் வீட்டுக்கார வாத்தியார் பெண்ணோடு ‘நேத்திக்கி ரிசவாகனம் பாக்கலியே நீ தூங்கிப் போயிட்டியே ‘ என்று திருநாள் சேதிகளைப் பேசிக் கொண்டிருப்பான்.ஸ்வாமி நினைத்தால் என்ன செய்யமாட்டார் ‘ ஊமைக்கும் அசடுகளுக்கும் அவர் தானே கண். என்னப்பா ‘ வைத்தீச்சுவரா ‘ இந்த மட்டுமாவது பாதை காட்டினியே ‘முதல் தடவை பணம் வந்து ஆச்சரியத்தில் கழிந்தது.

        இரண்டாம் தடவைகூட அந்த ஆச்சரியம் குறையவில்லை. மூன்றாம் தடவை இரண்டு மூன்று நாள் தாமதமாயிற்று. வேதனையாயிருந்தது. பயமாக இருந்தது. ஐந்தாவது தடவை ஒரு வாரம் தாமதம். கோபம் வந்தது. கோபத்தை சமாளித்துக்கொண்டு என்ன கஷ்டமோ இடைஞ்சலோ என்று சமாதானம் செய்து கொண்டு சாந்தமான சமயத்தில் பணம் வந்து குதித்துவிட்டது. ‘இது சம்பாதிச்சு நான் சாப்பிடணுங்கறது இல்லை ஸ்வாமி. என்னமோ முன்ன மாதிரி கண் சரியாகத் தெரியலை. கை நடுங்கறது. என்னமோ குழப்பம். மொளகாப் புளியெல்லாம் முன்ன மாதிரி திட்டமா விழமாட்டேங்கிறது. இல்லாட்டா என்ன விட்டுட்டு ஆனந்தம் பயலைக் கூப்பிடுவாளோ ஏலாவூர் பண்ணையிலே ‘ எத்தனை கலியாணத்துக்கு அங்கே டின்னரும் டிபனுமா பண்ணிப்போட்டிருக்கேன் ? இந்தப் பய இப்படி பிள்ளையா பிறந்து இப்படி நிக்கறதேங்கிற கவலையிலே எனக்கு கையி, தீர்மானம், தைரியம் எல்லாம் ஆடிப்போச்சு ஸ்வாமி. இப்ப அது நிமிர்ந்துட்டுது. என் குழப்பம் நிமிரலே, என்ன பண்றது ‘ இல்லாட்டா இது சம்பாரிச்சா நான் சாப்பிடணும் தலையெழுத்து ‘ என்று மணியார்டர் வாங்கும்போது வந்து, விசாரிக்கிற பார்வையாகப் பார்த்த வீட்டுக்கார வாத்தியாரிடம் உருகினார் முத்து.அந்தச் சமயத்தில்தான் வண்டிக்காரத் தெருவிலிருந்து வக்கீல் குமாஸ்தாவின் காரியஸ்தன் வைத்தியநாதய்யன் வந்து செய்தி சொல்லிவிட்டுப் போனான். மத்தியானம் முடிந்தால் வீட்டுப்பக்கம் வந்துவிட்டுப் போகச் சொன்னாராம் அண்ணாவையர்.

        வக்கீலுக்குக் குமாஸ்தா. அந்த குமாஸ்தாவுக்கு ஒரு காரியஸ்தனா ? இது உலகத்தில் இல்லாத ஆச்சரியம் இல்லையோ ? ஆனால் நடக்கிறதே. அண்ணாவையனுக்கு காரியஸ்தன் ஒருவன் இல்லை, இரண்டு மூன்று பேர் உண்டு. இந்தா என்றால் ஏன் எங்கேயென்று ஓடக் காத்திருக்கிற எடுபிடி ஆட்கள் மூன்று பேர் –அண்ணாவையன் முத்துவுக்குக்கீழ் சமையலாக இருந்தவன்தான். திடாரென்று ஒரு நாளைக்கு வக்கீல் ஜகதுவுக்கு குமாஸ்தாவாக ஆனான். மூன்று வருஷத்தில் ஜகதுவையே உட்கார்த்தி வைத்துவிட்டான். தானே வக்கீல் மாதிரி தொழில் நடத்தத் தொடங்கிவிட்டான். முதலிமார் கேஸ்கள், செட்டி நாட்டுக் கேஸஉகள் –பாகப் பிரிவினைகள் வியாஜ்யங்கள் என்று பிரளயமாடுகிறான். கோர்ட்டு ஏறாமலே எத்தனை மத்தியஸ்தங்கள் ‘ பல மத்தியஸ்தங்கள் வாசல் திண்ணையில் நீட்டின கால்களை முடக்காமலே நடக்கும். மலையாளத்து இரட்டைத் தாழம் பாயில் திண்டுமீது சாய்ந்து….ஏ அப்பா ‘ என்ன கார்வார் ‘ என்ன மோக்ளா ‘முத்து கீரைத்தண்டு சாம்பார் சாதத்தைச் சாப்பிட்டு வினோலியா டப்பாவுடன் வண்டிக்காரத் தெருவுக்குப் போனார். போகாமல் எப்படி இருக்க முடியும் ‘ விறகு கடையிலும் சைக்கிள் கடையிலும் அக்கணாக் குட்டியை வேலைக்கு வைத்தது அண்ணாவையன் தானே. இது வேலையை விட்டால் அவன் என்ன செய்வான் ?வழக்கம் போல நீட்டின காலை மடக்காமலே ‘வா முத்து, உட்காரு ‘ என்று அண்ணாவையன் திண்ணையில் தாழம் பாயில் சாய்ந்தவாறே அழைத்தான்.‘வைத்தா வந்து சொன்னான், அய்யர்வாள் கூப்பிட்டார்னு ‘‘ஆமா.

          முத்து ‘ என்று எழுந்து புகையிலையை உமிழ்ந்துவிட்டு வந்து, ‘ராத்திரி மெட்ராஸ் போறேன். இந்த தடவை யாராவது கூட இருந்தா தேவலை போலிருக்கு. ஒரு வாரமா ஜஉரம். முந்தாநாத்தான் ஜலம் விட்டுண்டேன். நாளைக்கு அர்ஜண்டா கேஸஉ ஹைக்கோர்ட்டிலே. பத்தியச் சாப்பாடு. ஹோட்டல்ல தங்கப்போறதில்லெ. தம்முடு கலியாண மண்டபத்திலே தங்கப் போறேன். நீகூட வந்து ஒரு ரசம் சாதமோ தொகையலோ பண்ணிப் போட்டா தேவலைன்னு தோணறது. அதான் கூப்பிட்டனுப்பிச்சேன் ‘‘அதுக்கென்ன செஞ்சுபிடறது. ‘‘நீ தீர்க்காயுசா இருக்கணும், நாலாநாள் திரும்பி விடலாம். நீ போறதுக்கு ரெடி பண்ணிக்கோ. நாளை நாளன்னிக்கி ஒண்ணும் அச்சாரம் வாங்கலியே ‘‘இப்ப என்ன ஆடி மாசத்திலே அச்சாரம் ? ‘‘ரொம்ப நல்லது போ. அப்ப ரண்டு நாள் கூடத் தங்கினாலும் பாதமில்லேன்னு சொல்லு. ‘‘ஒரு மாசமாத்தான் இருக்கட்டுமே. நீங்க கூப்பிடறச்சே நான் வெட்டி முறிக்கப் போறேனோன்னேன். என்ன பேச்சு இது ? ‘‘சரி, இந்தா–இதோ இருவது ரூவா இருக்கு. மீனாட்சி கிட்ட கொடு. செலவுக்கு வேணுமே அவளுக்கு… ‘ ராத்திரி ஏழு மணிக்கு வந்துடு. இங்கேயே சாப்பிட்டுப் புறப்படலாம்.‘சாப்பிடறேன். இது என்னத்துக்கு ? ‘ என்று உபசாரமாக பணத்தை மறுத்தார் முத்து.‘எது என்னத்துக்கு ? –கொடுத்தா பேசாம வாங்கிவச்சுக்கோயேன். நீதான் மகாப் பிரபுன்னு தெரியுமே எனக்கு.

         ‘‘சரி ‘ என்று புன்சிரிப்புடன் இரண்டு நோட்டையும் வினோலியாப் பெட்டிக்குள் வைத்து மூடி ‘நானே போகணும் போகணும்னு நெனச்சிண்டிருந்தேன். நீங்க கூப்பிட்டுது பால்லெ பழம் விழுந்தாப்பல ஆயிட்டுது ‘ என்றார் முத்து.‘என்ன ? ‘‘நம்ம அண்ணாக்குட்டி அங்கதானே இருக்கான்… போறபோது அவனையும் ஒரு நடை பார்த்துட்டு வந்துடலாமே ‘‘ஒஹோஹொ. ரண்டு மாசம் முன்னாலேயே சொன்னியே– யாராத்திலெயோ இருக்கான்னு. எனக்கு மறந்தே போயிடுத்து பாரேன். பலசரக்குக் கடைக்காரனுக்கு பைத்தியம் புடிச்சாப்பல ஆயிடுத்து என் புத்தி… பேஷ்– ‘பட்டணத்துக்கு வந்த நாலாம் நாள்தான் முத்துவுக்கு ஒழிந்தது. அண்ணாவையருக்கு சமைத்துப்போட்டு விட்டு அவரோடும் சுற்ற வேண்டியிருந்தது. மூன்று நாளுக்குப் பிறகுதான் அண்ணாவையருக்குத் தைரியம் வந்தது. தனியாக நடமாடலாம் என்று. அன்று சனிக்கிழமை. வேங்கடாசலபதி பெயரைச் சொல்லி ஒரு சர்க்கரைப் பொங்கல் பண்ணச் சொன்னார் அண்ணாவையர். அவருக்குச் சாப்பாடு போடுவதற்கு முன்னமே சொல்லி விட்டார் அவர். ‘முத்து, நான் சாப்பிட்டுக் கோர்ட்டுக்குப் போறேன். நீ அக்கணாக் குட்டியைப் பார்த்துட்டு சாயங்காலத்துக்குள்ள வந்துரு. ராத்திரி வண்டிக்கே கிளம்பும்படியா இருக்கும். முடிஞ்சா அந்தப் பயலையும் அழச்சிண்டு வா. நானும் பார்க்கறேன் ‘ என்ரு அவர் சொன்னதும் அவிழ்த்துவிட்ட கழுதை மாதிரி ஓட வேண்டும் போலிருந்தது முத்துவுக்கு. நெஞ்சுக்குள் குதியாகக் குதித்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவருக்குச் சாதத்தைப் போட்டார். டாக்சி பிடித்துக் கொண்டு அவரை ஏற்றி வழியனுப்பி விட்டு, ஒரு எவர்சில்வர் டப்பாவில் சர்க்கரைப் பொங்கலைப் போட்டுக்கொண்டு மாம்பலம் பஸ்ஸில் ஏறினார்.வீடு கண்டு பிடிப்பது சிரமமாக இல்லை.

         வீடா அது பங்களா. பங்களாகூட இல்லை. சின்ன அரண்மனை. ஒரு மாஞ்சோலைக்கு நடுவில் இருந்தது. கேட்டைக் கடந்து நுழைந்ததும் நடுவில் ஒரு நாகலிங்க மரம். இப்பாலும் அப்பாலும் இரண்டிரண்டு மாமரங்கள். ஒரே நிழலாக இருந்தது. தள்ளிப்போனால் கார் நிற்கும் முகப்பு. காரும் இருந்தது. நாகலிங்க மரத்துக்குப் பக்கத்தில் சிமண்டு சோபா இரண்டு திண்ணைபோல கட்டியிருந்தன, அங்கே நான்கு பையன்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.‘அம்பி ‘ ‘ என்று இரண்டு தடவை கூப்பிட்டார் முத்து. அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. மாமரத்தில் ஒரு குயில் கத்திற்று. கீழே நாகணவாய் இரண்டு மஞ்சள் மூக்கும் குழைந்த கூவலுமாக ஆடி ஆடி நடந்து கொண்டிருந்தன.‘நான் டபிள்ஸ் எத்தனையோ தடவை போயிருக்கேண்டா இதே சைக்கிள்ளே என்ன செஞ்சிடுவாங்க ? எங்க தாத்தா ஹைகோர்ட் ஜட்ஜஉ கான்ஸ்டபிள் என்னைப் பிடிச்சிடுவானா ? ‘‘ம்க்ம்…நீ யார் க்ராண்ட்ஸன்னாயிருந்தா போலீஸ்காரனுக்கு என்னடா ? அவன் டூட்டி செய்யத்தான் செய்வான். ‘‘பெட்டு ? –நான் டபுள்ஸ் போறேன், மணியோட….. பிடிக்கிறானா பார்ப்பமா ? அஞ்சு ரூபா பெட்டு ‘ இந்தா ‘ என்று சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து வைத்தான் அந்தப் பையன்.பன்னிரண்டு வயதுக் குழந்தையின் பையிலிருந்து ‘பெட்டு ‘க் கட்ட ஐந்து ரூபாய் பணம் வருவதைப் பார்த்து முத்து பயந்து போய்விட்டார். இந்தப் பையன்களைத்தான் அக்கணாக்குட்டி பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு விடுகிறானா ‘ அவருக்குப் பயமாகவும் இருந்தது. பெருமையாகவும் இருந்தது.

       ‘அம்பி ‘ ‘ என்று மறுபடியும் கூப்பிட்டார். பதிலில்லை. அன்று சனிக்கிழமை, பள்ளிக்கூடம் இல்லை போலிருக்கிறது.மறுபடியும் கூப்பிட்டார்.‘யாரு ? ‘‘சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் கும்மாணத்திலிருந்து வந்திருக்கானே அவன் இஞ்சதானே இருக்கான். ‘‘தெரியாது ‘‘இதுதானே குப்புசாமி அய்யர் பங்களா ‘ ‘‘யார்றா குப்புசாமி அய்யர் ? ‘‘போடா ‘ நம்ம மோகன் தாத்தா தாண்டா. அவர் வீடுதான் ‘‘நீங்க இந்த வீடு இல்லையா ? ‘‘இல்லை. நாங்க எங்க ப்ரண்டு மோகனைப் பார்க்க வந்திருக்கோம். மோகன் உள்ளே சாப்பிடப் போயிருக்கான். ‘முத்து மெதுவாக நகர்ந்து வீட்டின் முகப்புக்குப் போனார். அங்கு யாருமில்லை. உள்ளே ஹாலுக்குப் போனார். பாதி இருட்டு. அங்கே பெரிய மைசூர் மகாராஜா ராணியோடு நிற்கிறபடம், கொம்பு, மான்தலைகள், யாரோ தலைப்பாகை நீளக்கோட்டு கால்சட்டை போட்ட மனிதரின் படம் எல்லாம் மாட்டியிருந்தன. அங்கும் யாருமில்லை. அதையும் தாண்டினார். ஒரு கிழவன் அந்தண்டை நடையில் ஒரு ஸ்டூல்மீது உட்கார்ந்திருந்தான்.‘யாரு ? ‘‘ஏம்பா சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் இங்க இருக்கானே தெரியுமோ ? ‘‘பையன்னா ? எந்தப் பையன் ? ‘‘இங்கே வேலைக்கிருக்கான்பா ஒரு பையன் — கும்மாணத்திலிருந்து வந்திருக்கான். ‘‘அப்படிச் சொன்னால் தெரியும் ? சாம்புவைத்தானே கேக்கறீங்க —பெரிய அய்யரோட இருக்கே அந்தப் பையன்தானே ? ‘‘அது என்னமோ, இங்க வேலையா யிருக்கான் அந்தப் பையன் ? ‘‘கும்பகோணத்துப் பையன்தானே ? ‘‘ஆமாம். ‘‘அப்ப இப்படி இறங்கி அதோ அங்கே போங்க — காட்டேஜஉக்கு, அங்கதான் இருப்பான் பையன், இப்பதான் அய்யரோட வெளியே போய் வந்தான். ‘‘இங்கே ? ‘ என்று நடை முடிவில் இருந்த வாசற் படியைக் காட்டினார் முத்து.

         ‘இங்க சின்ன ஐயா ரண்டுபேரும் இருக்குறாங்க… பெரியய்யா இருக்கிற இடம் அதுதான். அங்கதான் அந்தப் பையன் இருக்கான்… நீங்க யாரு ? ‘‘நான் அந்தப் பையனோட தோப்பனார். ‘‘அப்படியா ‘ சரி சரி, போங்க. ‘முத்து நடையிலிருந்து இறங்கி தோட்டத்தோடு போனார். ஏ அப்பா எத்தனை பெரிய வீடு ‘ எத்தனை மரங்கள் ஒரு ஆளைக் காணவில்லை. வாசலை இப்படி ஹோவென்று போட்டுவிட்டு உள்ளே எங்கேயோ இருக்கிறார்களாம். ஒரு ஈ காக்கையைக் காணோம் ‘ முந்நெற்றி மயிரைப் பிடித்தாலும் தெரியாது போலிருக்கிறது.ஒரே நிசப்தமாக இருந்தது. தோட்டப் பாதையில் நடந்து அங்கே காட்டேஜின்படி ஏறினார் முத்து.தாழ்வாரத்தில் வந்து ‘சார் ‘ என்றார்.‘யாரு ? ‘‘நான்தான் ‘ என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.அங்கே ஒரு பெரிய மேஜை, அதன்மேல் தடிதடியாகக் கணக்குப் புத்தகங்கள். அதன் பின்னால் நாற்காலியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் கறுப்பாக மூக்குக் கண்ணாடி, மேஜையில் ஒரு நீலக்கடுதாசி. அதன் மேல் வரைபடம். அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் பக்கத்தில் நின்று அவருடைய தலையை, கிராப்புத் தலையை வரக்கு வரக்கு என்று சொரிந்து கொண்டிருக்கிறான்.கறுப்பு கண்ணாடியின் உடலும் லேசாகக் கறுப்புத்தான். முத்து உள்ளே நுழைந்ததும் அவர் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றாமலே நிமிர்ந்து பார்க்கிறார்.‘யப்பா ‘ என்று ஒரு குரல்.அக்கணாக்குட்டியின் குரல்தான், மேஜை மீதிருந்த மங்கிய விளக்கின் கறுப்பு மறைவுக்குப் பின்னால் அக்கணாக்குட்டியின் முகம் தெரிந்தது.‘எப்பப்பா வந்தே ? ‘ என்று ஹ் என்று உறிஞ்சிக் கொண்டே சிரிக்கிறான் அவன்.

           ‘யார்றா சாம்பு ? ‘‘எங்கப்பா மாமா ‘ என்று அவர் தலையைச் சொறிந்து கொண்டே அக்கணாக்குட்டி ‘எப்பப்பா வந்தே ? ‘ என்று சிரித்தான்.‘நமஸ்காரம் ‘ என்றார் முத்து.‘நமஸ்காரம். சாம்பு அப்பாவா — வாங்கோ ‘ ‘‘வந்தேன் ‘‘உட்காருங்கோ ‘ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார் முத்து. வெய்யிலிருந்து உள்ளே வந்ததும் கண்ணை மறைத்த இருள் மெதுவாக விலகிற்று. கண் நன்றாகத் தெரியத் தொடங்கிற்று.‘செளக்கியமா ? ‘ என்றார் கறுப்புக் கண்ணாடி.‘செளக்யம் ‘முகத்தை நன்றாகப் பார்த்தார் முத்து. உதடு அறுந்தது மாதிரி அதைத்துத் தொங்கிற்று. கன்ன எலும்பில் இரண்டு அதைப்பு. காது வளையமெல்லாம் அதைப்பு. மேஜை மீது படிந்திருந்த கைகளை பார்த்தார். கைகள் படியவில்லை. கட்டைவிரல் மற்ற விரல்களெல்லாம் மடங்கியிருந்தன. நீட்ட முடியாத விரல்கள் என்று பார்த்தாலே தெரிந்தது.‘எப்பப்பா வந்தே…ஹ் ? ‘ என்று பல் வரிசையைக் காட்டிக் கொண்டே கேட்டான். அக்கணாக்குட்டி. அவருடைய தலையைச் சொறிவதை மட்டும் நிறுத்தவில்லை.‘இப்ப தாண்டா வரேன் ‘‘இப்ப ஏதுப்பா வண்டி….ஹ் ? ‘‘வண்டி முன்னூறு நிமிஷம் லேட்டு. தெரிஞ்சவா வீட்டிலே வந்து இறங்கினேன். சாப்பிட்டேன், உடனே புறப்பட்டு வரேன் ‘ என்று தன்னறியாமல் பொய் சொன்னார் முத்து.அப்பொழுது கறுப்புக் கண்ணாடிப் பெரியவர் கன்னத்தை சொரிந்து கொண்டார். எல்லாரும் விரல் நுனியால் நகத்தால் சொறிந்துகொள்வார்கள். அவர் மடக்கின விரலின் பின்பக்கத்தால் சொறிந்து கொண்டார். முத்துவுக்கு பகீர் என்றது. இரண்டு மூன்று விரலில் நகமே இல்லை.

         முத்துவுக்கு உட்கார முடியவில்லை. மேலெல்லாம் அரிப்பது போலிருந்தது. அந்த அறையில் காலைப்பாவவிட்டாலே உள்ளங்கால் அரிக்கும்போலிருந்தது. முள்மேல் உட்கார்வது போல குறுகிக்கொண்டார்.பெரியவர் என்னென்னமோ வெல்லாம் கேட்டார். தப்பும் தவறுமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் முத்து. காதில் ஒன்றையும் சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளே பூஞ்சதை நரம்பெல்லாம் அழுவதுபோல் ஒரு கசிவு.‘போரும்டா சாம்பு ‘ என்றார் பெரியவர்.அக்கணாக்குட்டி சொறிவதை நிறுத்தினான்.‘பையன் ரொம்ப சமர்த்தாயிருக்கான். அவன் இருக்கிறது எனக்கு ஆயிரம் பேர்கூட நிற்கிறாப்போல இருக்கு ‘ என்றார் பெரியவர். சொல்லிவிட்டு ‘சித்தே இருங்கோ, இதோ வந்துடறேன் —சாம்பு இப்படி வாயேன் ‘ என்றார்.அக்கணாக்குட்டி அருகில் வந்து நின்றான். பெரியவர் எழுந்து அவன் தோளில் கையைப் போட்டுக்கொண்டார். அக்கணா நடந்தான். அவரும் விந்தி விந்தி துணி பூட்ஸ் காலால் நடந்தார். அவரை ஹாலின் ஒரு கோடியில் உள்ள கதவைத் திறந்து உள்ளே விட்டு வெளியே காத்து நின்றான்.‘உங்க மாதிரி யார் இருப்பா ? விளக்கேத்தி வச்சேளே என் குடும்பத்துக்கு. நிஜமாகச் சொல்றேன். அக்கணாக்குட்டி அனுப்பிக்கிறானே மாசாமாசம் அதிலே தான் வயிறு ரொம்பறது. யார் செய்வா இந்த மாதிரி இந்தக் காலத்திலே ? அவனையும் ஒரு ஆளாக்கி….அவன் ஒரு கால் காசைக் கண்ணாலே காணப்போறானோன்னு ஒடிஞ்சு போய்விட்டேன். ஸ்வாமிதான் உங்க ரூபத்திலே வந்து அவன் கண்ணைத் திறந்துவிட்டார்…. ‘ அக்கணாக்குட்டியைப் பார்க்கபோகும் போது அவனுடைய எஜமானரைப் பார்த்தால் இப்படி என்னென்னவெல்லாமோ சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்திருந்தார் முத்து.இப்போது வாயைத் திறக்கவில்லை. முடியவில்லை அந்த நினைவெல்லாம் தோன்றிய சுவடே இல்லை.

        மனதில் ஒரு பீதி. ஒரு குமைச்சல். குமட்டல். ஒரு கோபம். ‘பாவி ‘ நீ நன்னாயிருப்பியா ? ‘ என்று அடிவயிற்றிலிருந்து கதற வேண்டும் போலிருந்தது. அக்கணாக்குட்டி ஹால் ஓரத்தில் பெரியவர் வருவதற்காகக் காத்து நின்றவன் அப்பாவைப் பார்த்துப் புன்சிரிப்பு சிரித்தான். ஹ் என்று உறிஞ்சினான்.முத்துவுக்கு நெஞ்சில் கட்டி புறப்பட்டாற்போல் வலித்தது. இவனையும் தாண்டி கதவைப் பார்த்தது அவர் கண். வெளியே நெளியப் போகும் நல்ல பாம்பைப் பார்ப்பது போல் ஒரு கிலி வேறு சூழ்ந்துகொண்டது.‘இந்தண்ட வாடா ‘ என்று வாயால் தலையை அசைத்தார் — அவசரமாக, சுளிப்பாக.அவன் புரிந்து கொள்ளவில்லை. புன்சிரிப்புடனேயே சாத்தியிருந்த கதவைக் கையால் காண்பித்து சைகை காட்டினான்.பெரியவர் காவி பூட்ஸஉம் காலுமாக வந்தார். சுவரில் பதிந்த ஒரு பளபள கம்பியிலிருந்த ஒரு துண்டை எடுத்து அவரிடம் நீட்டினான் அக்கணா. அவர் கையைத் துடைத்துக் கொண்டதும், தோளைக் கொடுத்தான். பிடித்துக் கொண்டு வாத்து நடை நடந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.முத்து ஆரம்பித்தார். ‘சம்சாரத்துக்கு ஊரிலே உடம்பு ரொம்ப மோசமாயிருக்கு. பதினஞ்சு நாளா படுத்த படுக்கையாயிருக்கா. பிள்ளையைப் பார்க்கணும் பார்க்கணும்னு புலம்பறா, ஜஉரம் இறங்கவே இல்லை…. ‘‘அடடா….நீங்க ஒரு வார்த்தை எழுதப்படாதோ ? ‘என்னமோ சாதாரண ஜஉரம்னு நெனச்சிண்டிருந்தேன். அது என்னடான்னா இறங்கற வழியாயில்லெ. அப்புறம் அவ தங்கைக்கு லெட்டர் போட்டு வரவழச்சேன், கிராமத்திலேர்ந்து. இவளானா புலம்பறா. உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லி பயலை அழச்சிண்டு போகலாம்னு வந்திருக்கேன் ‘ என்று அடுக்கிக் கொண்டே போனார் முத்து

         பெரியவர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். கறுப்புத்தான் கண்ணை மறைத்திருக்கிறதே என்ன தெரியும் ? அந்த முகத்தில்தான் என்ன தெரியும் ? தடிப்புத்தான் தெரிந்தது.முத்துவுக்கு மட்டும் தான் சொன்னதை அவர் நம்பவில்லையோ என்று வயிற்றில் கனத்தது.பெரியவர் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்.‘ஊர்லெ சிநேகிதர் ஒருத்தர் காரிலே வந்திருக்கார். சேர்ந்து போயிடுவமேன்னார். ரயில்காரனுக்கு கொடுக்கறதையாவது மிச்சம் பண்ணலாம்னு நினைச்சேன். ‘பெரியவர் வாய்தடிப்பு ஒரு புன்னகையாக மலர்ந்தது. சிரித்தால் அழகாகத்தான் இருக்கிறது. யார் சிரித்தால் என்ன என்று தோன்றிற்று முத்துவுக்கு.‘பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும் ‘ என்றார் முத்து.‘பாதகமில்லை ‘ என்று ஒரு புத்தானை அழுத்தினார் பெரியவர்.‘சாம்பு, அப்பா கூப்பிடறாரேடா போறியா ? ‘ என்று கேட்டார்.‘அம்மா ரொம்ப ஜஉரமாக கிடக்காடா. உன்னைப் பார்க்கணும்னு பேத்திண்டேயிருக்கா– ராவில்லே பகலில்லே ‘ என்றார் முத்து.‘சரிடா சாம்பு. வேட்டி சட்டையெல்லாம் எடுத்து வச்சுக்கோ ‘ என்றார் பெரியவர். ‘பையன் ரொம்ப ஒத்தாசையாயிருந்தான் ஸ்வாமி. சுருக்கக் கொண்டு விட்டு விடுங்கோ. ‘‘ம் ‘ உடம்பு சரியாயிருந்தா, அங்கே என்ன வேலை ? ‘ என்றார் முத்து.அக்கணா பின்னாலிருந்த இன்னொரு அறைக்குப் போனான்.வாசலிலிருந்து ஒரு தட்டில் டிபன் காபி எல்லாம் பரிசாகரன் கொண்டு வந்தான். அதற்குத்தான் புத்தானை அழுத்தினார் போலிருக்கிறது பெரியவர்.‘சாபிடுங்கோ. ‘‘நான் இப்பத்தானே சாப்பிட்டேன். ‘‘இங்கே வந்து வெறும் வயத்தோட போகலாமா ? ‘முத்துவுக்குச் சொல்ல மெல்ல முடியவில்லை. ‘பாலாம்பிகேச வைத்யேச ‘ என்று மனத்துக்குள் சுலோகம் சொல்லிக் கொண்டே காபியை மட்டும் எடுத்து கண்ணை மூடி மளமளவென்று விழுங்கினார்.

          பரிசாரகன் பாத்திரங்களை எடுத்துப் போனான்.அக்கணாக்குட்டி பையும் கையுமாக வந்தான். வெளிச்சத்தில் நன்றாகப் பார்க்கும்போது அவன் எவ்வளவு மாறிவிட்டிருக்கிறான் என்று தெரிந்தது. தலையை வழவழவென்று சீவி விட்டிருந்தான், வெள்ளை வெளெரென்ற சட்டை, வெள்ளை வேட்டி, முகத்தில் ஊட்டத்தின் பொலிவு, சட்டைக்கு வெளியே தெரிந்த முன்னங்கைகூட பளபளவென்று நிறம் ஏறியிருந்தது.‘என்னை ரொம்ப மன்னிச்சிக்கணும் ‘ என்று எழுந்து கும்பிட்டார் முத்து.‘எதுக்காக ? ரொம்ப நன்னாருக்கே. ‘‘நமஸ்காரம் பண்ணிட்டு போய்ட்டு வரேன்னு சொல்லிக்கோடா ‘ என்றார் முத்து.அக்கணா விழுந்து வணங்கி எழுந்து ‘போய்ட்ரேன் மாமா ‘ என்றான்.‘போய்ட்டுவா. போய் லெட்டர் போடு, அம்மாவுக்கு உடம்பு எப்படியிருக்குன்னு. எப்ப வரேன்னும் எழுதணும். ‘‘சரி மாமா. ‘இருவரும் வெளியே நடந்தார்கள்.இவ்வளவு சீக்கிரம் காரியம் நடக்கும் என்று நினைக்கவில்லை, சிங்கத்தின் குகையிலிருந்து வருவது போல, திரும்பிப் பார்க்காமல் வேகமாக வெளியே வந்து தோட்டத்தை தாண்டி தெருவுக்கு வந்து சாலைக்கு வந்தார் முத்து. ‘மெதுவாப் போப்பா ‘ என்று கூடவே விரலால் நடந்து சிறு ஓட்டமாக ஓடிவந்தான்.சாலைக்கு வந்து பஸ் ஏறினதும்தான் வாயைத் திறந்தார் முத்து.

           ‘ஏண்டா மக்கு ‘ இந்த மாதிரி உடம்பு அந்த மாமாவுக்குன்னு நீ சொல்லவே இல்லியே ‘ என்றார்.‘என்ன உடம்பு ? ‘‘உனக்குத் தெரியலியா ? ரொம்ப கரிசனமா தலையைச் சொறிஞ்சு விட்டியே, புத்திதான் இல்லை, கண்ணுகூடவா அவிஞ்சு போச்சு ? ‘‘அது ஒட்டிக்காதாம்பா ? ‘‘ஒட்டிக்காதா ‘ யார் சொன்னா ? ‘‘அவாத்து மாமி, மாமா, மோகன் எல்லோரும் சொல்வாலே. ‘‘பின்னே அந்த மோகன், மாமி, மாமா எல்லோரும் வந்து அவர் தலையைச் சொறியப்படாதோ ? ‘‘அவாலுக்கெல்லாம் வேலையில்லியாக்கும் ? மோகன் பல்லிக்கூடம் போறான். மாமா என்ஜீனியர், மாமி பூ நூல்லே பை பனியன்லாம் போடறா. அவாலுக்கு டயம் ஏது ? அவா சொறியப்படாதோங்கிறீயே. ‘‘உன்னை ஏமாத்தியிருக்காடா எல்லாரும், அசட்டுப் பொணமே ‘‘ஒண்ணும் இல்லே. இத பாரு பேப்பர்லேயே போட்டிருக்கு ‘ என்று பையின் பிடியை அகட்டி உள்ளேயிருந்து நாலு சினிமாப் பாட்டு புத்தகங்களை எடுத்தான் அக்கணா. ஒரு புத்தகத்தைப் பிரித்து அதிலிருந்துஒரு தினசரிதாள் பக்கம் ஒன்றை எடுத்தான். அதிலெ ஒரு வெள்ளைக்காரப் பெண் யாரோ ஒரு ஆணின் கையைப் பிடித்துத் தடவிக் கொண்டு நிற்கிறாள். கருப்புக் கண்ணாடிகாரருக்கு இருந்த மாதிரியே கை, மூக்கு எல்லாம்…. ‘இது யாரு தெரியுமா ? வெல்லைக்கார தேசத்திலே ரானி. போன மாசம் மெட்ராசுக்கு வந்தா — ராஜாவோட. இந்த ஊருக்கு வந்து சினிமா, டிராமால்லாம் பார்க்கலியாம், காரை எடுத்துண்டு ஒரு கிராமத்துக்குப் போனாலாம்.

             மாமா மாதிரி அங்கே முப்பது நாப்பதுபேர் இருக்கலாம். மருந்து சாப்பிடறாலாம். அவால்லாரையும் பார்த்து, கையெல்லாம் தடவிக் கொடுத்தா வெல்லைக்கார ரானி, போட்டோ போட்டிருக்கா பாரு தடவிக் கொடுக்கறாப்பல, ஒட்டிக்கும்னா ரானி தடவிக்கொடுப்பாலா, பேத்தியம் மாதிரி பேசறியே ? ‘‘பேத்யம் மாதிரியா ? நானா பைத்தியம் ? ‘ என்று படத்தைப் பார்க்க ஆரம்பித்தார் முத்து.‘படத்தை மட்டும் பாக்கறியே. கீலே எலுதியிருக்கு பாரு. ‘ என்று விரலை அந்த வரிகள் மீது ஒட்டிக் காண்பித்தான் அக்கணா.‘பாலாம்பிகேச வைத்யேச ‘ என்று சுலோகம் சொல்லிக் கொண்டே வினோலியா பெட்டியைத் திறந்து கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார் முத்து.


by parthi   on 14 Mar 2012