தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Monday, December 28, 2020

விசாரணை - காஃப்கா ;; முதல் அத்தியாயம் :: ஏ.வி. தனுஷ்கோடி

 விசாரணை - காஃப்கா ;; முதல் அத்தியாயம் கைது - திருமதி க்ரூபாஹுடனும் பிறகு மிஸ் ப்யூர்ஸ்ட்ன ருடனும் சம்பாஷணை 

யாரோ ஒருவர் யோசப் க.வைப்பற்றி வேண்டுமென்றே அவதூறாகச் சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் எந்த ஒரு தவறும் செய்யாதபோது, ஒருநாள் காலை திடீரென்று அவன் கைது செய்யப்பட்டான். அவன் வசிக்கும் அறையை அவனுக்கு வாடகைக்கு விட்டிருந்த திருமதி க்ரூபாஹின் சமையற்காரி ஒவ்வொரு நாளும் காலை சுமார் எட்டு மணிக்கு அவனுக்கு உணவு கொண்டு வருவாள். அன்று அவள் வரவில்லை . அப்படி ஒருபோதும் நடந்ததில்லை . க. சிறிது நேரம் காத்திருந்தான். எதிரே வசித்துவந்த முதியவள் வழக்கத்துக்கு மாறாக ஆவலுடன் தன்னையே கவனித்துக்கொண்டிருப்பதைப் படுக்கையில் இருந்தபடியே பார்த்தான். பிறகு ஓர் அந்நிய உணர்வுடன் பசியும் சேர்ந்து கொள்ள அவன் அழைப்பு மணியை அடித்தான். உடனே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இதுவரை அவன் ஒருபோதும் பார்த்திராத ஒருவன் உள்ளே நுழைந்தான். சிறிது ஒல்லியாக இருந்தாலும் அவனுக்கு, நல்ல கட்டான உடலமைப்பு. மிகக் கச்சிதமாகத் தைக்கப்பட்ட கறுப்பு நிற உடையை அணிந்திருந்தான். பயணியின் உடை போல் எல்லா வகையான மடிப்புகளும் பைகளும் பக்கிள்களும் பட்டன்களும், கூட ஒரு பெல்ட்டும் வைத்துத் தைக்கப்பட்டிருந்த காரணத்தினால், அது எந்த வகையில் பயன்படும் என்பது தெளிவாக இல்லா விட்டாலும், பார்ப்பதற்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட வகையில் பயன்படும் என்று பட்டது. "யார் நீங்கள்" என்று கேட்டவாறே க. தன் படுக்கையில் பாதி நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆனால் வந்தவன், தான் அந்த அறைக்குள் வந்தது அனைவரும் அறிந்த மிகச் சாதாரணமான விஷயம் போல், க. கேட்ட கேள்வியை அலட்சியப்படுத்திவிட்டுத் தன் போக்கில் "நீங்கள் அழைப்புமணியை அடித்தீர்களா” என்று மட்டும் கேட்டான். அதற்கு க. "அன்னாதானே காலை உணவு கொண்டுவர வேண்டும்” என்றான். வந்தவனை மௌனமாகக் கூர்மையாகக் கவனித்தும், சிந்தனையில் ஆழ்ந்தும், அவன் யாராக இருக்க முடியும் என்பதை முதலில் நிர்ணயிக்க முயன்றான். ஆனால் வந்தவன், க. தன்னை வெகுநேரம் கவனிக்கவிடாமல், கதவின் பக்கம் திரும்பி, அதைத் திறந்து, கதவை ஒட்டி நின்றுகொண்டிருந்த யாரோ ஒருவனிடம் "அவர் தனக்குக் காலை உணவு அன்னாதானே கொண்டுவர வேண்டும் என்று கேட்கிறார்" என்றான். அவன் கூறியதைத் தொடர்ந்து அடுத்த அறையில் மெல்லிய சிரிப்பொலி கேட்டது. ஒலியை வைத்துப் பல பேர் சேர்ந்து சிரித்தார்களா என்பதை நிச்சயிக்க முடிய வில்லை. வந்த அந்நியன், தனக்கு ஏற்கனவே தெரிந்ததைவிட மேலும் அதிகம் தெரிந்து கொள்வதற்கு ஏதும் இல்லையென்றாலும், அறிவிக்கும் தொனியில் க.விடம் சொன்னான், "அது முடியாத காரியம்." "இது என்ன வேடிக்கை" என்று சொல்லிவிட்டு க. தன் படுக்கையை விட்டுக் குதித்தெழுந்து வேகமாகக் கால்சட்டையை அணிந்து கொண்டான். "அடுத்த அறையில் யார்தான் இருக்கிறார்கள் என்பதையும், இந்தத் தொல்லைக்கு திருமதி க்ரூபாஹ் என்ன சொல்லப்போகிறாள் என்பதையும் பார்த்துவிடுகிறேன்” என்றான். தான் அதைச் சொல்லியிருக்கக் கூடாது என்பதையும், அப்படிச் சொல்லியதால் வந்தவனுக்குத் தன்னைக் கண்காணிக்கும் அதிகாரம் ஓரளவுக்கு இருக்கிறது என்று ஒப்புக்கொள்வது போலிருந்தது என்பதையும் உடனே அவன் உணர்ந்தான். ஆனால் அது அந்தக் கணத்தில் அவனுக்கு ஒரு முக்கியமான விஷயமாகப் படவில்லை. இருந்தாலும் வந்தவன் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பது "நீங்கள் இங்கேயே இருப்பது நல்லது” என்று அவன் கூறி யதிலிருந்து தெரிந்தது. "நீங்கள் யாரென்று சொல்லாதவரை நான் இங்கே இருக்கப்போவதுமில்லை, நீங்கள் சொல்வதைக்  கேட்கப்போவதுமில்லை." "நான் உங்கள் நன்மைக்காகத்தான் சொன்னேன்” என்று அந்த அந்நியன் சொல்லிவிட்டு, தானாகவே கதவைத் திறந்தான். தான் நினைத்ததைவிட மெதுவாகவே அடுத்த அறையில் க. நுழைந்தபோது அது முந்தைய நாள் மாலை எப்படி இருந்ததோ ஏறக்குறைய அப்படியே இருப்பதாக முதல் பார்வைக்குப் பட்டது. அது திருமதி க்ரூபாஹின் வரவேற்பறை. மேஜை, நாற்காலி போன்ற மரச்சாமான்கள், அவைமேல் போட்டிருக்கும் துணி, பீங்கான் பாத்திரங்கள், புகைப்படங்கள் அத்தனையும் சாதாரணமாக அடைத்திருக்கும் அந்த அறையில் இன்று சற்று அதிகமாக இடம் இருந்தது போல் தோன்றியது. ஆனால் அது உடனே புலப்படவில்லை . காரணம், முக்கியமான மாறுதல் ஒன்று நிகழ்ந்திருந்தது; அங்கே திறந்திருந்த ஜன்னல் அருகே ஒருவன் ஒரு புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தான். அவன் நிமிர்ந்து பார்த்தான். "நீங்கள் உங்கள் அறையிலல்லவா இருக்க வேண்டும்? ஃப்ரன்ஸ் உங்களுக்குச் சொல்லவில்லை?" "ஆமாம், ஆனால் இதற்கு என்ன அர்த்தம்?" என்று க. கேட்டு விட்டுப் புதிதாகச் சந்தித்தவனிடமிருந்து, கதவின் அருகிலேயே நின்றுகொண்டிருந்த ஃப்ரன்ஸ் என்றழைக்கப்பட்டவனிடம் பார்வையைத் திருப்பி, பிறகு உட்கார்ந்திருப்பவனை மீண்டும் பார்த்தான். முதியவர்களுக்கே உரித்தான ஆவலுடன், இங்கு நடக்கப்போகும் எல்லாவற்றையும் பார்ப்பதற்காக எதிரே இருந்த ஜன்னல் அருகே வந்திருந்த அந்தக் கிழவியை, திறந்திருந்த ஜன்னல் வழியே மீண்டும் பார்க்க முடிந்தது. "நான் திருமதி க்ரூபாஹிடம்..." என்று சொல்லிக்கொண்டே, க. அவனிடமிருந்து மிகவும் தள்ளி நின்றிருந்த அந்த இருவரிடமிருந்து தன்னைப் பிய்த்துக்கொண்டு போவது போல் நகர்ந்து அங்கிருந்து செல்ல முனைந்தான். "கூடாது!" என்று ஜன்னல் அருகே இருந்தவன் சொல்லியவாறு, புத்தகத்தை அருகிலிருந்த சிறிய மேஜைமீது எறிந்துவிட்டு எழுந்து நின்றான். "நீங்கள் இங்கிருந்து போகக்கூடாது, நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்.” “அப்படித்தான் தோன்றுகிறது" என்றான் க. பிறகு, "எதற்காக?" என்று கேட்டான். அதை உங்களுக்குச் சொல்வதற்காக எங்களை வைத்திருக்க வில்லை. உங்கள் அறைக்குப் போய்க் காத்திருங்கள். எடுக்க வேண்டிய நட வடிக்கைகள் ஆரம்பித்துவிட்டதால், உரிய நேரம் வரும்போது எல்லாவற் றையும் தெரிந்துகொள்வீர்கள். உங்களோடு இப்படி நட்புமுறையில் பேசுவது, எனக்கு இடப்பட்டப் பணியை நான் மீறுவதாகும். ஆனால் ஃப்ரன்ஸைத் தவிர யாரும் இதைக் கேட்டுக்கொண்டிருக்கவில்லை என்று நினைக்கிறேன். அவனே எல்லா விதிமுறைகளுக்கும் மாறாகத்தான் உங்களுடன் நட்பு முறையில் நடந்துகொள்கிறான். உங்களைக் கண்காணிப்பவர்களைத் தேர்ந்தெடுத்ததில் உங்களுக்கிருந்த அதிர்ஷ்டம் போல் உங்களுக்கு அதிர்ஷ்டம் மேலும் இருந்தால், நீங்கள் நல்லதையே எதிர்பார்க்கலாம்" என்றான். க. உட்கார விரும்பினான், ஆனால் ஜன்னல் அருகில் இருக்கும் நாற்காலியைத் தவிர வேறு உட்கார வசதி அந்த அறையில் எங்குமே இல்லாமல் இருந்ததை இப்போதுதான் கவனித்தான். அவன் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை நீங்கள் போகப் போகத் தெரிந்து கொள்வீர்கள்" என்று ஃப்ரன்ஸ் சொல்லிவிட்டு, அவனும் மற்றவனும் ஒரே சமயத்தில் க.வை நோக்கிச் சென்றார்கள். குறிப்பாக, இரண்டாமவன் க. வைவிட மிகவும் உயரமாக இருந்தான்; பேசும்போது அடிக்கடி அவன் க.வின் தோளில் தட்டினான். இருவரும் அவனுடைய இரவு உடையை ஆராய்ந்து விட்டு, இனிமேல் இதைவிட மிகவும் மோசமான சட்டையை அவன் அணிய வேண்டியிருக்கும் என்றார்கள். மேலும், அவனுடைய மற்ற உடைகளைப் போல் இந்தச் சட்டையையும் அவர்கள் பாதுகாத்துவருவார்கள் என்றும், பிறகு அவனுடைய விஷயம் சாதகமாக முடியும் போது அவனிடம் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள் என்றும் கூறினார்கள். "டிப்போவில் கொடுத்துவைப்பதை விட எங்களிடம் இவற்றைக் கொடுத்துவைப்பது மேல்" என்றார்கள் "ஏனென்றால், டிப்போவில் அடிக்கடி பித்தலாட்டம் நடக்கிறது என்பது மட்டு மில்லாமல், ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து அங்கிருக்கும் சாமான்களை, அவற்றுக்குரியவர்களின் விசாரணை முடிந்துவிட்டதா இல்லையா என்றுகூடப் பார்க்காமல் அவர்கள் விற்றுவிடுகிறார்கள். இது போன்ற வழக்குகள் எல்லாம், குறிப்பாக சமீப காலமாக, எவ்வளவு இழுத்துக்கொண்டே போகின்றன தெரியுமா! எப்படியிருந்தாலும் கடைசியில் உங்களுக்கு டிப்போவிலிருந்து சாமான்கள் விற்ற பணம் வந்து சேர்ந்துவிடும். ஆனால், முதலில் அந்தத் தொகையே மிகவும் குறைவாக இருக்கும்; ஏனென்றால், சாமான்களின் விலையை நிர்ணயிப்பது. மற்றவர்கள் அவற்றுக்குத் தரத் தயாராக இருக்கும் உச்சவிலை அல்ல, ஆனால் உச்ச லஞ்சத்தொகைதான். எங்கள் அனுபவத்தில் நாங்கள் அறிந்தது என்னவென்றால், ஒவ்வொரு கை மாறும்போதும் உங்களுக்குக் கிடைக்கும் தொகை ஒவ்வொரு வருஷமும் குறைந்து கொண்டே போகும் என்பதுதான்." க. இந்தச் சொற்பொழிவைக் கேட்கவே இல்லை. அவனது உடமைகள் மேல் அவனுக்கு இன்னும் உரிமை இருக்கலாம். இருந்தாலும் அதை அவன் அவ்வளவு முக்கியமான விஷயமாகக் கருதவில்லை. தன்னுடைய நிலைமையைப்பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வது அதைவிட அவனுக்கு முக்கியமாக இருந்தது. அவர்கள் மத்தியில் அவனால் அதைப்பற்றிச் சிந்திக்கக்கூட முடியவில்லை. இரண்டாவது காவலாளியின் வயிறு - அவர்கள் காவலாளிகளாகத்தான் இருக்க வேண்டும் - அவன்மீது அவ்வப்போது அதிகாரம் கலந்த நட்பு முறையில் இடித்துக்கொண்டிருந்தது. அந்தப் பருமனான உடலுக்குச் சிறிதும் சிறிதும் பொருத்தமில்லாத, உலர்ந்துபோய், எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கிற, கடுமையான தோற்றத்துடன் கூடிய, பக்கவாட்டில் கோணலாக வளைந்து போன மூக்குடன் காணப்பட்ட மற்ற காவலாளியுடன் தன்னுடைய தலைக்கு மேல் பார்வைகளைப் பரிமாறிக்கொள்கிற முகத்தை க. நிமிர்ந்து பார்த்தான். அவர்கள் எத்தகைய மனிதர்கள்? எதைப்பற்றிப் பேசினார்கள்? எந்தத் துறை யைச் சேர்ந்தவர்கள்? க. இன்னும் ஒரு ஜனநாயக ஆட்சியில்தானே வாழ்கிறான். எங்கும் அமைதி நிலவுகிறது. எல்லாச் சட்டங்களும் நேர்மையாகத்தான் இருக்கின்றன. இருந்தும் அவனுடைய அறையில் அவனைத் திடீரென்று கைது செய்ய யாருக்கு இவ்வளவு தைரியம் வந்தது? முடிந்தவரை எல்லா வற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் தன்மையும், கடுந்துன்பத்தையும் அது வந்த பிறகே கடுந்துன்பமென்று ஒப்புக்கொள்ளும் தன்மையும், எவ்வளவு அச்சுறுத்தினாலும், எதிர்காலத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்யாமலிருக்கும் இயல்பும் உடையவன் அவன். ஆனால் இந்த இயல்பு  அவனுக்குச் சரியானதாகப் படவில்லை ; இது முழுவதையும் ஒரு வேடிக்கை என்று எடுத்துக்கொள்ளலாம். இந்தத் தரக்குறைவான விளையாட்டை, அவனுக்குத் தெரியாத ஏதோ ஒரு காரணத்தால் - ஒருவேளை இன்று அவனுடைய முப்பதாவது பிறந்தநாள் என்பதாலோ என்னவோ - அவனுடன் வங்கியில் வேலை செய்யும் சகாக்கள் ஏற்பாடு செய்திருக்கலாம். அப்படி நடக்க ஏது இருக்கிறது. ஒருவேளை அவன் எப்படியாவது அந்தக் காவலாளிகளின் முன் வாய் விட்டுச் சிரித்துவிட்டால், அவர்களும் சேர்ந்து சிரித்துவிடலாம். அவர்கள் கீழ்மட்டத்தில் இருக்கும் அரசாங்க ஊழியர்களாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் அரசாங்க ஊழியர்களைப் போல்தான் தோற்றமளித்தார்கள். இருந்தாலும் காவலாளி ஃப்ரன்ஸை முதல்முறையாகப் பார்த்தபோது, இந்தக் காவலாளியிடம் இன்னும் ஒருவேளை தனக்கிருக்கும் மிகச் சிறிய அனுகூலத்தையும் கை நழுவவிடக்கூடாது என்று தோன்றிய எண்ணத்தை, இப்பொழுது மீண்டும் உறுதிசெய்து கொண்டான். ஒரு விளையாட்டு என்று புரிந்து கொள்ளத் தனக்குத் தெரியவில்லை என்று பிறகு பிறர் சொல்வார்களானால் அதில் ஆபத்து ஏதும் அதிகம் இல்லை என்று க.வுக்குத் தெரியும். எனினும், அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளும் சுபாவம் அவனுக்குச் சாதாரணமாக இல்லைதான். என்றாலும், சில சமயங்களில் - அவை மிகச் சாதாரணமானவையே என்றாலும் அவன் தன் நண்பர்களின் இயல்புக்கு மாறாக, ஏற்படக்கூடிய விளைவுகளைத் தெரிந்திருந்தபோதும் அதுபற்றிச் சிறிதும் கவலைப்படாமல், முன்னெச்சரிக்கையின்றி நடந்து கொண்டு, அதனால் ஏற்பட்ட விளைவினால் தண்டனை அனுபவித்ததை நினைவுகூர்ந்தான். இம் முறையாவது அது போல் மீண்டும் நடக்கக்கூடாது. இது ஒருவகை விளையாட்டாக இருக்குமானால், அவனும் அதில் பங்கெடுத்துக்கொள்ள விரும்பினான். இன்னும் அவன் சுதந்திரமாகத்தான் இருந்தான். "ஒரு நிமிஷம்..." என்று கூறி விட்டு, இரண்டு காவலாளிகளுக்கிடையே நுழைந்து அவசரமாகத் தன் அறைக்குச் சென்றான். "புத்திசாலியாகத்தான் தோன்றுகிறான்" என்று அவனுக்குப் பின்னால் அவர்கள் கூறியது அவன் காதில் விழுந்தது. தன் அறையில், தன் மேஜையின் அறைகளை எல்லாம் இழுத்துப்போட்டான். அவற்றில் எல்லாப் பொருள்களும் மிகவும் ஒழுங்காக இருந்தன. ஆனால் அவன் தேடிய அவனுடைய அடையாள அட்டையை மட்டும் அவனுக்கிருந்த படபடப்பில் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் அவனுடைய சைக்கிள் லைசென்ஸ் கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு, உடனே காவலாளிகளிடம் செல்ல நினைத்தான். ஆனால், அவனுக்கு அது மிகவும் உபயோகமற்றதாகப்பட்டது. அதனால் அவனுடைய பிறப்புச் சான்றிதழ் கிடைக்கும் வரை 

பக்கத்து அறைக்கு அவன் வந்த அதே நேரத்தில் எதிரில் இருந்த கதவைத் திறந்து, திருமதி க்ரூபாஹ் அந்த அறையினுள் வர எத்தனித்துக்கொண்டிருந்தாள். அவளை ஒரே வினாடிதான் பார்க்க முடிந்தது. ஏனென்றால், அவள் க.வை அடையாளம் கண்டுகொண்ட உடனேயே வெளிப்படையாகவே சங்கடமுற்று, தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு கதவுக்குப்பின் வேகமாகச் சென்று மறைந்து, மிகவும் ஜாக்கிரதையாகக் கதவை மூடினாள். பரவாயில்லை. உள்ளே வாருங்கள்" என்று க. அந்தக் கணத்திலேயே சொல்லியிருக்க முடியும். ஆனால், காகிதங்களுடன் அவன் அந்த அறையின் நடுவில் நின்றபடி, எதிரில் மீண்டும் திறக்கப்படாமல் இருந்த கதவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, காவலாளிகளின் அழைப்பைக் கேட்டுத் திடுக்கிட்டான். திறந்த ஜன்னலின் பக்கத்தில் மேஜையின் அருகே உட்கார்ந்து கொண்டு, அவர்கள் அவனுடைய காலையுணவைச் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை இப்போது கவனித்தான். "ஏன் அவள் உள்ளே வரவில்லை?" என்று கேட்டான். "அவள் வரக்கூடாது” என்று உயரமாக இருந்த காவலாளி கூறினான். "நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்களே!" "எப்படி நீங்கள் என்னைக் கைது செய்திருக்க முடியும்? அதுவும் இந்த வகையில்?" "சரிதான், மறுபடியும் ஆரம்பித்துவிட்டீர்களா" என்று காவலாளி கூறிவிட்டு, ஒரு ரொட்டித் துண்டைத் தேன் ஜாடியில் தோய்த்தான். இது போன்ற கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்வதில்லை” "நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்? என்றான் க. “இதோ என்னுடைய அடையாள அட்டை, இப்போது உங்கள் அடையாள அட்டைகளைக் காட்டுங்கள், குறிப்பாகக் கைதுவாரண்டைக் காட்டுங்கள். "கடவுளே!" என்றான் காவலாளி. "நீங்கள் இருக்கும் நிலைமையில் எங்களுக்குப் பணிந்து போகாமல், உங்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லோரையும் விட உங்களுக்கு மிக உதவியாக இருக்கும் எங்களைச் சீண்டிப்பார்க்க வேண்டுமென்று நீங்கள் முடிவு செய்துவிட்டதைப் போல் தோன்றுகிறது. நான் சொல்வது உண்மைதான், நீங்கள் நம்பத்தான் வேண்டும்” என்ற ஃப்ரன்ஸ் தன் கையிலிருந்த காப்பிக் கோப்பையை வாய்க்குக் கொண்டுபோகாமல், க.வை வெகுநேரம் அர்த்தமுள்ளதைப் போல, ஆனால் புரிந்துகொள்ள முடியாத பார்வையுடன், உற்றுப்பார்த்தான். க. தன்னை அறியாமல், ஃப்ரன்ஸுடன் கண்களினாலேயே பேச ஆரம்பித்தான்; ஆனால் உடனே தன் அடையாள அட்டையின்மீது அடித்துச் சொன்னான். “இதோ என்னுடைய அடையாள அட்டை.” "அதைப் பற்றி எங்களுக்கென்ன?" என்று உயரமான காவலாளி இடைமறித்துக் கத்தினான். "ஒரு குழந்தையைப் போல நீங்கள் எரிச்சலூட்டுகிறீர்கள், என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இப்படி, காவலாளிகளான எங்களிடம் அடையாள அட்டையைப்பற்றியும் கைதுவாரண்ட்பற்றியும், விவாதம் செய்வதால் உங் களுடைய பாழாய்ப்போன வழக்கைச் சீக்கிரமாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒரு நாளைக்குப் பத்து மணிநேரம் உங்களைக் காவல் காத்து அதற்கான சம்பளத்தைப் பெறுவதைத் தவிர, உங்களுடைய அடையாள அட்டைகள் பற்றியும், உங்கள் விஷயத்தைப்பற்றியும் ஒன்றும் புரியாத, ஒன்றிலும் சம்பந்தப்படாத கீழ் மட்டத்திலிருக்கும் ஊழியர்கள் நாங்கள்; நாங்கள் அவ்வளவுதான்; இருந்தாலும் எங்களை நியமித்துள்ள பெரும் அதிகாரம் இது போன்று கைது செய்வதற்கான கட்டளை பிறப்பிக்கும் முன்பு, கைது செய்யும் காரணத்தையும் கைது செய்யப்படும் நபரைப்பற்றியும் மிகவும் தெளிவாகத் தெரிந்துகொண்டிருக்கும் என்று அறிந்து கொள்ளும் சக்தி எங்களுக்கு இருக்கிறது. இதில் தவறு ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரம்பற்றித்தான் எனக்குத் தெரியும். எனக்குத் தெரிந்தவரை எங்களை நியமித்துள்ள அதிகாரம் நீங்கள் நினைப்பது போல் மக்களிடையே ஏதோ ஒரு குற்றத்தைத் தேடி அலைவதில்லை. ஆனால் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போல், குற்றங்களினால் அது ஈர்க்கப்பட்டு, காவலாளிகளான எங்களை அனுப்ப வேண்டியிருக்கிறது. இதுதான் சட்டம். இதில் தவறு எங்கே இருக்க முடியும்?” “இந்தச் சட்டம் எனக்குத் தெரியாது” என்றான் க. "அதனால் அந்த அளவுக்கு உங்களுக்குத்தான் கஷ்டம்” என்றான் காவலாளி. "இது உங்கள் கற்பனையில் மட்டும்தான் இருக்கிறது” என்றான் க., எப்படியாவது காவலாளிகளின் எண்ணங்களில் நுழைந்து அவர்களைத் தனக்குச் சாதகமாகத் திருப்பிவிடவோ அவர்களது எண்ணங்களை ஆக்கிரமித்துக்கொள்ளவோ அவன் நினைத்தான். ஆனால், அதை மறுத்து, அந்தக் காவலாளி கூறினான். "அதை நீங்கள் உணரும் காலம் வரும்." ஃப்ரன்ஸ் தலையிட்டுக் கூறினான். "இதோ பார் வில்லெம், அந்தச் சட்டம் தனக்குத் தெரியாது என்று அவர் ஒப்புக் கொள்கிறார்; அதே சமயம், தான் குற்றமற்றவர் என்றும் அவர் கூறுகிறார்." "நீ சொல்வது சரிதான். ஆனால், எதையுமே நம்மால் அவருக்குப் புரியவைக்க முடியவில்லை" என்றான் மற்றவன். க. மேற்கொண்டு பதில் சொல்லவில்லை இந்த மட்டமான ஜந்துக்களின் - அவர்களே தாங்கள் அப்படித்தான் என்று ஒப்புக்கொள்கிறார்கள் - உளறல்களைக் கேட்டுத் தான் இன்னும் குழப்ப மடைய வேண்டுமா என்று அவன் யோசித்தான். இவர்கள் பேசும் விஷயங்கள் பற்றி இவர்களுக்கே ஒன்றும் புரியவில்லை. இவர்கள் இவ்வளவு முட்டாள்களாக இருப்பதால்தான் இவ்வளவு தீர்மானமாகவும் இருக்கிறார்கள். இவர்களிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பதைவிட எனக்குச் சமமானவர்களுடன் ஒருசில வார்த்தைகள் பேசுவது எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாக்கிவிடும். அவன் அந்த அறையில் காலியாக இருந்த இடத்தில் சில முறை மேலும் கீழும் நடந்தான். எதிரே, அந்தக் கிழவியைப் பார்த்தான்; அவள் தன்னைவிட இன்னும் வயதான ஒரு தொண்டு கிழவனை இழுத்துக்கொண்டு வந்து, ஜன்னலருகே அணைத்தவாறு நின்றிருந்தாள். க. எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். "உங்களுடைய மேற்பார்வையாளனிடம் என்னை அழைத்துப் போங்கள் " என்றான். "அவர் விரும்பினால்தான்; அதற்கு முன்பு அல்ல" என்றான், வில்லெம் என்று அழைக்கப்பட்ட காவலாளி. "இப்போது நான் உங்களுக்குக் கூறும் ஆலோசனை" அவன் மேலும் தொடர்ந்தான், "நீங்கள் உங்கள் அறைக்குச் சென்று, அடுத்தபடியாக உங்களை என்ன செய்ய வேண்டுமென்று முடிவெடுக்கும் வரை, அமைதியாகக் காத்திருங்கள் உங்களுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால், பயனற்ற எண்ணங்களால் மனதை அலட்டிக்கொள்ளாமல் உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் இன்னும் பெரிய கஷ்டங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். நாங்கள் உங்களை எவ்வளவு நல்ல முறையில் நடத்தினோமோ அதற்கேற்றவாறு நீங்கள் எங்களை நடத்தவில்லை. நாங்கள் யாராக இருந்தாலும் உங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இப்போது, சுதந்திர மனிதர்களாகவாவது இருக்கிறோம் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள். இந்த வித்தியாசம் ஒன்றும் அவ்வளவு அற்பமானதல்ல. இருந்தாலும், உங்களிடம் பணம் இருந்தால் எதிரிலிருக்கும் சிற்றுண்டிச்சாலையிலிருந்து உங்களுக்குச் சிற்றுண்டி வாங்கிவரத் தயாராக இருக்கிறோம்." | 

இப்படி அவர்கள் உதவியாயிருக்க முன்வந்ததற்கு க. பதில் சொல்லாமல், சிறிது நேரம் மௌனமாக நின்றிருந்தான். ஒருவேளை அவன் அடுத்த அறையின் தவையோ, அல்லது முன் அறையின் கதவையோ திறந்தாலும், அவர்கள் இருவருக்கும் அவனைத் தடுக்கும் துணிவு இல்லாமலிருக்கலாம். இது போல் ஏதாவது ஒரு எல்லைக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சென்றால்தான், இதற் கெல்லாம் ஒரு எளிய முடிவு கிடைக்கும் போலிருக்கிறது. அல்லது, ஒருவேளை அவர்கள் அவனைப் பிடித்துக் கீழே வீழ்த்தி விடலாம். அப்போது அவன் இதுவரை ஒருவகையில் தக்கவைத்துக்கொண்டிருந்த தன்னுடைய மேலான நிலையை இழந்துவிடுவான். நிகழ்ச்சிகள் தம் போக்கில் கொண்டுவரும் முடிவின் நிச்சயத்தன்மையைத் தேர்ந்து, தன்னிடமிருந்தோ மற்றவர்களிடமிருந்தோ மேலும் ஒரு வார்த்தையும் வெளிவர இடந்தராமல் தன் அறைக்குத் திரும்பினான். 

அவன் தன் படுக்கையில் விழுந்தான். பிறகு காலை உணவுக்காக, பேசினுக்குப் பக்கத்திலிருந்த மேசைமீது முதல் நாள் மாலை வைத்த அழகான ஆப்பிளை எடுத்தான். இப்போது அதுதான் அவனுடைய காலை உணவு. எப்படியிருந்தாலும் அவன் அதை வாய் நிறையக் கடித்தபோதே, எதிரில் இருந்த அசுத்தமான சிற்றுண்டிச்சாலையிலிருந்து காவலாளிகளின் தயவில் கொண்டு வந்திருக்கக்கூடிய காலை உணவைவிட இது மேலானது என்பது நிச்சயமாகத் தெரிந்தது. இப்போது தான் மிகவும் தெம்பாகவும், நம்பிக்கையுடனும் இருப்பதை உணர்ந்தான். வங்கிக்கு இன்று காலை வேலைக்குப் போக முடியாதுதான். இருந்தாலும் வங்கியில் அவன் மற்றவர்களைவிட உயர்பதவி வகித்ததால் அவன் போகாததை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அவன் உண்மையான காரணத்தைத் தெரிவிக்க வேண்டுமா? அப்படிச் செய்ய அவன் எண்ணினான். அவனை அவர்கள் நம்பாவிட்டால்? இந்த விஷயத்தில் நம்புவது கஷ்டந்தான். திருமதி க்ரூபாஹை சாட்சியாகக் கொண்டுவரலாம் அல்லது எதிரே இருக்கும் ஜன்னலுக்கு இப்போதுவந்து கொண்டிருக்கும் அந்த இரண்டு கிழங்களையும் சாட்சியாகக் கொண்டுவரலாம். காவலாளிகள் அவனை இந்த அறைக்கு விரட்டி, தனியாக இருக்கும்படி விட்டிருப்பதில், அவன் தற்கொலை செய்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தன என்பது, குறைந்த பட்சம் காவலாளிகளின் நோக்கிலிருந்து பார்க்கும்போது, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே சமயத்தில் அப்படிச் செய்து கொள்ளத் தனக்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்று அவன் தன் நோக்கிலிருந்து தானே கேட்டுக் கொண்டான். அவர்கள் இருவரும் அடுத்த அறையில் இருந்து கொண்டு அவனுடைய காலை உணவைப் பறித்துக்கொண்டுவிட்டார்கள் என்பதனாலா? தற்கொலை செய்து கொண்டிருந்தால் அது அர்த்தமற்றதாக இருந்திருக்கும். அப்படிச் செய்து கொள்ள அவன் நினைத்திருந்தாலும் தற்கொலை அர்த்த மற்றது என்பதால் அப்படிச் செய்யும் நிலையில் அவன் இருந்திருக்கமாட்டான். காவலாளிகளின் குறுகிய அறிவு அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாமலிருந்திருந்தால் அவர்களும், தற்கொலை அர்த்தமற்றது என்ற அதே திடமான நம்பிக்கையினால், அவனைத் தனியாக இருக்க விடுவதில் பாதகம் ஒன்றுமில்லை என்று எண்ணினார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். சுவரில் பதித்திருந்த பீரோவை நோக்கி அவன் சென்றதையும், அதில் அவன் பத்திரப் படுத்தி வைத்திருந்த உயர்தர பிராந்தியை எடுத்து, காலை உணவுக்குப் பதிலாக ஒரு டம்ளரைக் காலி செய்ததையும், பிறகு இரண்டாவது டம்ளரை தைரியம் வரவழைத்துக்கொள்வதற்காகக் குடித்ததையும், கடைசி டம்ளரை - உண்மையில் அப்படி வேண்டியிருக்காது என்றாலும் - ஒருவேளை தேவையிருந்தால் ஒரு முன்னேற்பாடாக எதற்கும் இருக்கட்டுமே என்று முடித்ததையும், அவர்கள் வேண்டுமென்றால் பார்த்துக்கொள்ளட்டும். அப்போது அடுத்த அறையிலிருந்து அவனை அழைத்த அழைப்பு, அவன் பற்கள் கண்ணாடி டம்ளரில் இடித்துக்கொள்ளும் அளவுக்கு அவனைத் திடுக்கிடவைத்தது. "மேற்பார்வையாளர் உங்களைக் கூப்பிடுகிறார்!? என்று கேட்டது. அவனைத் திடுக்கிட வைத்தது இந்தக் குறுகிய, வெடுக்கென்ற ராணுவக் கத்தல்தான் - காவலாளி ஃப்ரன்ஸால் அப்படிக் கத்த முடியும் என்று அவன் எண்ணவேயில்லை. அந்தக் கட்டளை என்னவோ அவனுக்கு மிகவும் உகந்ததாகவே இருந்தது. "இவ்வளவு நேரம் ஆயிற்றா?" என்று பதிலுக்குக் கத்திவிட்டு, பீரோவைச் சாத்திவிட்டு உடனே அடுத்த அறைக்கு விரைந்தான். அங்கே அந்த இரண்டு காவலாளிகளும் நின்றுகொண்டு சர்வசாதாரணமான விஷயம் போல் அவனை மறுபடியும் அவன் அறைக்குத் துரத்தினர். "நீங்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கத்தினார்கள். "சட்டை மட்டும் போட்டுக்கொண்டு மேற்பார்வையாளரின் முன் சென்றால், உங்களுடன்கூட எங்களையும் சேர்த்து அடித்து நொறுக்கிவிடுவார்." "நாசமாய்ப் போக, விடுங்கள் என்னை !” என்று க. கத்தினான். ....................


குறிப்பு - க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் ---- விசாரணை - காஃப்கா

 ஒரு குறிப்பு 

வாசிப்பு என்பது இயந்திரகதியில் நிகழும் செயல் அல்ல. மாறாக மனஒழுங்கை வலுயுறுத்தும். படைப்புச் செயலில் பங்குகொள்ளும் ஒரு செயல், வாசகனின் கவனத்தையும் அக்கறையையும் கோரும் போதுதான் ஒரு படைப்பு தன் முழு வீச்சையும் புலப்படுத்துகிறது. பெரும்பாலோருக்கு வாசிப்பு எளிதில் நிகழும், முயற்சி தேவைப்படாத ஒரு பழக்கமாக இருந்துவருகிறது. வாசகனின் முயற்சியை வேண்டும். அதன்மூலம் வாசகனின் அகவிஸ்தரிப்பைச் சாத்தியமாக்கும். வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமிடையே உள்ள உறவைத் தெளிவாக எடுத்துக்காட்டும் மொழிபெயர்ப்புகள் தமிழில் அவசியம் என்ற வகையில்தான் விசாரணை' தமிழாக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. மொழி பெயர்ப்புகள் அவை வந்து சேரும் மொழியில் புதிய சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டக்கூடியவை. புது வெற்றிகளுக்கு வழி வகுக்கக்கூடியவை, என்ற வகையிலும் 'விசாரணை' முக்கியத்துவம் பெறுகிறது. 

'விசாரணை' நேர்கோட்டில் செல்லும் கதை அல்ல. எளிதான விவரணை முறையில் எழுதப்பட்ட கதையும் அல்ல. மொழியும் மிகவும் வித்தியாசமானது. காஃப்காவின் தீவிரம் அவருடைய நடையை நிர்ணயிக்கிறது. ஒரு நிலைமையின் பல்வேறு புள்ளிகளை ஒரே நேரத்தில் அவர் மனம் பதிவு செய்கிறது. இதனால் முற்றுப்புள்ளிகள் அழிகின்றன. ஒரு ஆவேச மனத்தின் பெருக்காய் அவர் வாக்கியங்கள் தொடருகின்றன. பத்திகள் இறுக்கமாக, மூச்சுவிட இடமில்லாமல், நீண்டு, நெருக்குகின்றன. இவையெல்லாம் வெறும் உத்திகள் அல்ல. ஆக, காஃப்காவைத் தமிழில் கொண்டுவரும் போது நாம் உள்ளடக்கத்தை மட்டும் கொண்டுவருவதில் பொருளில்லை. அவர் மொழியும் தமிழில் வரக்கூடிய மொழிதான். சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆனால் தமிழின் தனித்தன்மை கெடாமல், அதை மீறாமல் காஃப்காவின் மொழியைத் தமிழில் கொண்டு வரும் போது தமிழ் மொழியும் விரிவடைகிறது. இந்த அடிப்படைதான் 'விசாரணை' மொழிபெயர்ப்பில் க்ரியா மேற்கொண்டுள்ள பெரும் உழைப்பை அர்த்தமுள்ளதாக்குகிறது. 

1985 இல் துவங்கிய மொழி பெயர்ப்பின் முதல் வரைவு 1987 இல் முழுமை அடைந்தது. தொடர்ந்து, சிட்டத்தட்டத் தலைக்குச் சுமார் 400 மணிநேரம் என்ற அளவில் ஏ.வி. தனுஷ்கோடியும், ஜி. கிருஷ்ணமூர்த்தியும், நானும் அதை மூலத்துடன் ஒப்பிட்டுத் திருத்தங்கள் செய்தோம். அதைத் தொடர்ந்து 1987க்கும் 1992 மார்ச் மாதத்துக்கும் இடையே ஜி. கிருஷ்ணமூர்த்தியும், கே. நாராயணனும், நானும் விட்டு விட்டுப் பல நூறு மணிநேரம் செலவழித்திருக்கிறோம். அதே போல் வண்ணநிலவன். ஏ. சீனிவாசன். நிஜந்தன் ஆகியோரும் வெவ்வேறு கட்டங்களில் மொழிபெயர்ப்பு செம்மைப்பட உதவியிருக்கிறார்கள். இவர்கள் அனைவருடைய ஒத்துழைப்புக்கும் க்ரியா நன்றி செலுத்துகிறது. கையெழுத்துப் பிரதி தயாரிக்கும் செலவை ஜெர்மனியிலுள்ள InterNatianes அமைப்பு எந்த முன் வந்திருக்கிறது. இந்த உதவிக்கு Inter Nationes அமைப்புக்கும். அதைச் சாத்திய மாக்சிய சென்னை மாக்ஸ் முல்லர் பவனுக்கும் எங்கள் நன்றி. 

எஸ். ராமகிருஷ்ணன் 

Thursday, November 05, 2020

சிவசங்கரா எழுதியது & - ஞாபகக் குறிப்புகள் - ஜெ. கிளாரிந்தா

 சிவசங்கரா எழுதியது

-------------------------------------
தாமரைக் கடவுளே உன்
காய்ந்து போன கணுக்காலை
யாரறிவர்? காரிருளில்
கண்ணிமைக்கும் நேரத்தில்
பார்த்திருந்த பசுமையெல்லாம்
நீ மறுக்கும் கரும் பயிராப் போச்சு
நான் பிறந்த வேளையிலே
என் மக்கள், உன்
சூதறிந்த சூரியனின்
பாதி தெரிந்து பண்களால் செய்தனர்

அப்புறத்தை அகண்டெரிக்கும் பாதியையும்
நாம் கண்டு பண்ணிசைக்கும்
பேயினத்தை தேவர்களாய்ச் செய்வோமோ?
அரக்க சிசுவொன்று அவதரித்து
வந்த தென்று இரக்கக்குணமுடையோர்
இனிபு்பாகச் சொல்வாரோ.
-கடும்பனியில் சிந்தனைகள் - ஒரு பொய்யான சிந்தனைக்கூறு
----------------------------------------------------------------------------
அவளின் ஆர்வமூட்டும் உதடுகளையும் சிவந்த கொலுசணிந்த கால்களையும் நான் உடனடியாக காண விரும்பினேன். எங்கு தொடர்பற்ற - ஆசையற்ற ஈடுபாடு என்னில் பிரவாகிக்கையில் அங்கு நான் கலப்பற்ற சூர்யோதயம் போன்ற பேரன்பை உணர்கிறேன். என்னை நான் தன்னிச்சையாக இயக்குகையில், எதையும் - எதற்காகவுமில்லாமலும் - செலுத்தப் படாமல் - உணரப்படும் - செயலாக்க என்றால் முடிந்திருக்கிறது.

- ஞாபகக் குறிப்புகள்
ஜெ. கிளாரிந்தா

Thursday, October 15, 2020

காக்கை குருவி எங்கள் ஜாதி ஒரு காவியம் - நகுலன் (மறு வெளியீடு)

 காக்கை குருவி எங்கள் ஜாதி ஒரு காவியம் - நகுலன்


நான் கண்டதுண்டு

காக்கை, குருவி, கோழி, கருடன், பருந்து, புறா, வாத்து, மைனா,மயில், மரங்கொத்தி, அக்காக்குருவி, மீன் கொத்தி முதலிய பறவைகளை நான் கண்டதுண்டு.

எங்கு சென்றாலும் இந்தக் காக்கை உபத்திரவம் அல்ல. உற்சவப் பிரளயம், சனி பகவான் வாகனம், இதைப் பற்றி ஒரு கதை. பிராட்டியினுடைய ஸ்தனத்தைக் கொத்தியதாக அம்மா மிகப் பரிவுடன் சாப்பிடுவதற்கு முன் இதற்குப் பருப்பும் நெய்யுமாக ஒரு உருண்டைச் சோறு கொடுப்பாள். சிறு வயதில் பித்ருக்களைச் சாந்தி செய்யப் பெரியோர்கள் “காகாகாகாகா” என்று கத்துவதை நான் கேட்டதுண்டு, காகா கரைந்துண்ணும். காகம் கூடிவரும் ஒரு நபர் மறைந்தால் கூட கூச்சலிடும் காகம், என் மனவட்டத்தில் சுற்றித் திரியும் ஒரு கறுப்புப் புள்ளி - காகாகாகாகா.

குருவி. சின்னச் சின்னக்குருவி ‘விர்’ரென்று அதன் சின்னஞ்சிறகடித்து, தத்தித் திடீரென்று மேலே எம்பி குதிக்கும் ஒரு சிறு குருவி. ஒரு ஸில்க் கோதுமை நிறம். பாரதி இதையும் தன் ஜாதியென்று சொன்னதைத் தவிர வேறொன்றும் இதைப் பற்றி ஞாபகம் வரவில்லை.

என் மனதில்
விர் என்று
ஒரு உணர்வு
“பார் என்னை”

என என்னை
உணர்த்தி
போகப் போனேன்
நான்.


விழுப்பரம், திருச்சிராப்பள்ளி, நீல ஆகாயத்தின் வெகு உயரம், பெருமாள் கோயில் இவைதான்

பருந்து
என்று
பகர

கருடன்
என்று 
நகர

என் உள்ளத்தின்
உயரத்தில்
சுற்றிச் சுற்றிச்
சுழலும்


கோழி, சிவப்புக் கொண்டை வெள்ளைக் கோழி; “கொக்கரக்கோ” என்று கத்திக் கொண்டு போவது; அது  அடைகாத்துக் குஞ்சு பொரிப்பது (அப்படிச் சலனமற்றுத் தன்னுள் தானே கவிழ்ந்து உட்கார்வது எளிதில்லை) சருக்கங்கள் விழுந்த முன் கால், அதன் சதைத் தாடி

கோழித்தூவல் என்று ஒரு சொல்;
வாரணம் என்று ஒரு வார்த்தை

பார்த்தாயா, நீ, புறாவைப் பார்த்ததுண்டா?
வகை வகையாக
வெளுப்பாக
சாம்பலாக
விதவிதமாக
அழகான காகமாக
ஆரும் விரும்புவதான
புறாவே, நீ கண்டதுண்டோ
கண்ணம்மா?
ஆனாலும் என்ன?


புறாக்கூடு போன்ற சிற்றறைகளில் லோகாயுதம் என்ற பேரேட்டின் தாஸ்தாவேஜூகளைச் சிவப்பு நாடாவில் கட்டி வைத்து விசிறி சுழலும் ஒரு அறையில் ஒரு மனிதன் அமர்ந்திருக்கப் பிணம் போன்ற மனிதர்கள் வரிசை வரிசையாக நிற்கிறார்கள்.


ஆனால் மசூதியின் பெருவெளியில் இப்புறாக்கள், என் அருமை சுசீலாவைப் போல் என்னைப் பரவசமுறுத்துகின்றன.

நாரை

நாராய் நாராய் செங்கால் நாராய்.  பழைய பிசிராந்தையார் பாட்டு, அவர் ஊரிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம் ஒரு நரைத்த பறவை (பழம் பெருச்சாளி) காலரில்லாத சட்டை போட்டுக்கொண்டு ஆபிஸில் தவமிருக்கும்.

நாரை - நாரை

நாரை ஓடிச் செல்லும் நதியில் ஒரு மீன் பாய்ந்தால் துள்ளியெழும்.

விதவிதமாய்க்
காசாக தோட்டாகக்
கசந்த மனதுடன்
என் பிச்சை
மனதை
கொஞ்சம்
கொஞ்சமாகக்
கசக்கி கசக்கி

இந்த நாரையை நான் சாந்திப் படுத்தியிருக்கிறேன். என் நாமாவளியில் அவன் ஒரு நாமம். சம்ஹாரமூர்த்தி என்பதில்தான் சுசீலா எனக்கு எத்தகைய உவகை.

நாரை, ஒரு நாரை
ஒர் மீன் கொத்தி
மாமிசம் சாப்பிடும்
ஒரு நாரை

வாத்து, வாத்து, வாங்கலியோ வாத்து - கோழி முட்டை டபிள் ஸைஸ் வாத்து முட்டை - ஐயா முகத்தைக் கண்டால் உபத்திரவம் போலத் தோன்றுகிறது.

வாத்து முட்டையை 
வேக வைத்து
அதில் ஆத்திக் கீரையைக்
கலந்து கபளீகரம்
செய்தால்
ஐயா 
மூலவேதனை
ஐயோ, நான் போறேன்
என ஓடிப் போகும்

சிறு வயதில், சைதாப்பேட்டையில்தான் என நினைக்கிறேன். குட்டை குட்டையாக இந்த அவலக்ஷணமான வாத்துக் கூட்டம் சதக் சதக் கென்று சென்றதைப் பார்த்தபோது, சுசீலா, காமரூபினி, மனமோகினியே.

எனக்குத்தான்
எவ்வளவு மகிழ்ச்சி
அதைச் சொல்லதான்
படுமோ
அல்லது
சொல்லித்தான்
தீருமோ

ஏ, தேரை, இது ஏன்

மைனா
மைனா
வா வா என்றால்
மைனா
வருமா?

இரண்டு சிட்டுக் குருவியின் சைஸ் ஒரு அசல் மைனா; பழுப்பின் கருப்பு; கருப்பின் பழுப்பு அதன் மேனி; அதன் கண் சுற்றி மிளிரும் மஞ்சள் வரிகள், அது சிறகுயர்த்தினால் ஒரு வசீகர வெள்ளை.

அது
புல்வெளியில் 
தத்தித் திரிவது
கண்டால்
சூசிப் பெண்ணே
ரோசாப் பூவே
உன்னைப் போல்
அதுவும்தான்
ஒரு அழகின் வடிவம்
காண்.

மயில் மேனிக் நீலக் கறுப்பு; கறுப்புநீலம்ந அதன் கழுத்து பாம்பின் நீளம்; அதன் தோகை விரித்தால் அல்குல் போல் கண்கள் ஆயிரம், கார் காலத்தில் அது தோகை விரித்து ஆடுவது காண்பவர் கண்களுக்கு உற்சவம்; அது ஒரு உறுசவமூர்த்தி. மயில் ஆடக் குயில் பாட என்றொரு பாடல்

சுசீலா
அது ஒரு ஆள் உயரப் பறவை
அதைப் பார்க்கையில்
சுசீலா
நீ சென்று மறைவதைப்
போல்
ஒரு பிரமை.

அந்தப்  பழையப் பாடல் உனக்கு ஞாபகம் வருகிறதா?

ஆறுமுகம்
அவன்
என் அண்ணன்
சூரபதுமன்
வேறுபட
வதைத்த முகம்
ஏது முகம்?

என் அன்பே நீ வா. இந்த இருபதாம் நூற்றாண்டில் சந்தர்ப்பங்களில் நீயும் நானும் மயில் கறி சாப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது.

சுசீலா
இந்த டம்பப் பறவைதனை
ரம்பம் கொண்டு
டகர், டகர்
என ராவி எறிவது
ஒரு தனி இன்பம்

மயிலுக்குப் பின் ஒரு மரங்கொத்தி, அதன் ஒய்யாரக் கொண்டை ஒரு அரசன் கிரீடம், அட்டை மஞ்சள், அழகான கறுப்பு அதன் மேனி.

இந்த மரமேறும்
மரங்கொத்தி
என் மனவெளியில்
ஒய்யாரமாய்த் திரியும்
ஒரு அதிசயப் பறவை

வா, சுசீலா, வா, இன்னும் சில பறவைகளை உனக்குக் காண்பிக்கிறேன்.

நடுக்கட்டில்
ஒரு அதிரூப சந்தரி
தன் கூந்தல் விரித்து
அசோக மரத்தடி
சீதை போல
சோகமயமாய்ச் சாய்ந்திருந்த
போது

அந்தரத்தில் ஓரு அக்காப் பறவை ஐயோ என்று சிறகடித்து குரல் எடுத்துக் கூவிப் போயிற்று.

இது
ஏன்
என் அருமைப்
பெண்ணே
சுசீலா?
என்னைப்
போல்
அவளும்
காதல் சுரத்தில்
உடல் வெந்தாளா?
அல்லது
செத்துத்தான்
மண்ணோடு மண்
ஆனாளா?

ஓடிச் சென்றது ஒரு நதி, டபக் கென்று அதன் நடுவில் பாய்ந்தது ஒர் கருநீலப் பறவை. அதன் அலகில் ஈர மினுமினுப்புடன் அதிசயங் கக்கும் அசல் மீன்.

மரங்கொத்திப் பறவையுண்டென்றால் இவ்வுலகில் மீன் கொத்திப் பறவையுண்டு.

சுசீலா, நான்தான் என்ன என்ன அனுபவங்களைக் கண்டேன். கோவில் சென்று சனீச்வரனைச் சேவித்தேன். வந்து எனக்கு விட்டு விடுதலையாகப் பறக்கும் சிட்டுக் குருவியைக் காட்டினான். மசூதியில் புறாக்களைப் பார்த்தேன்.ஆற்றங்கரையில் ஒற்றைக்கால் தவம் செய்யும் நாரையைக் கண்டேன். ஒரு வாத்துக் கூட்டம் என்னைப் பார்த்துக் கண்ணடித்து நாங்களும் இருக்கிறோம் என்றது. மைனா என் மனவெளியில் தத்தித்தத்திச் சென்றது. மயில்  என்னைக் கண்டு நகைத்தது. மரங்கொத்தியும் மீன் கொத்தியும் உனக்கும் ஒரு கூரிய அலகு தேவை என்றன. பருந்து போல், கருடன் போல் ஆமைகளை முடங்கிக் காணும் நானும், பருந்து போல் கருடன் போல் உயரப் பறந்த தருணங்கள் உண்டு. அக்காக்குருவி போல் நானும் உட்கார்ந்து அழுத சமயங்களுண்டு..

ஆனால்
சுசீலா
இந்த உலகம்
என்ற பெருவெளியில்
நீ என்னைத் தனியாகத்
தவம் புரிய விட்டுச்
சென்று விட்டாய்.

பரவாயில்லை, சுசீலா, பரவாயில்லை. நீ சிருஷ்டித்த தனிமையில் நான்.

என் உள்ள வெளியில் பல மின்னல்கள்
வீசக் கண்டேன்
பரவசமடைந்தேன்.


(என் சகோதரி திரிசடைக்கு)

- விருட்சம், 1994


தட்டச்சு : ரா ரா கு

Monday, July 20, 2020

வெறி நாய் புகுந்த பள்ளிக்கூடம் - சார்வாகன் -- கணையாழி , நவம்பர் 1993, டிசம்பர் 1993

வெறி நாய் புகுந்த பள்ளிக்கூடம் 

சார்வாகன் 

ஹெட்மாஸ்டர் ராஜதுரை வழக்கமான குட்டித்தூக்கம் கலையப்பெற்றுக் கண் விழித்ததுக்கும் கடிகாரம் பனிரெண்டு மணி அடித்து முடித்ததுக்கும் சரியாக இருந்தது. 'பத்து நிமிஷம் முன்னாடியே ஏன் தூக்கம் கலைந்தது?' என்ற உறுத்தலுடன் தற்செயலாக ஜன்னல் வழியாகப்பார்த்தார். வகுப்பறைகளால் வரையறுக்கப்பட்ட பள்ளிச் சதுக்கத்தின் நடுவே, கொடிக்கம்பம் நின்றிருக்கும் மேடைமேலே ஒரு நாய் பின்னங்காலைத் தூக்கினபடி நின்றிருந்தது! அந்தக் காட்சியை கண்டதும் அவருக்குக் கன கோபம் வந்துவிட்டது. மேஜை மேலிருந்த மணியை ஓங்கி அடித்தார். பியூன் மாணிக்கம் உள்ளே ஓடி வந்தான்.

“மாணிக்கம் அங்கே என்ன இருக்குது பாருய்யா!” என்று இரைந்தார். 

“இன்னிக்கு என்ன ஆயிடிச்சு இவருக்கு?" எனறெழுந்த அகவினாவுடன், அவன் விஷயம் புரியாது மேலும் கீழுமாக பார்த்துவிட்டு, "எங்கேய்யா, எனக்கு ஒண்ணும் தெரியலீங்களே'' என்றான். 
ராஜதுரை ஜன்னலை நோக்கிக் கையைக் காட்டினார். ஜன்னல் விளிம்பிலே மேய்ந்து கொண்டிருந்த பழுப்பு நிறப் பல்லி யைத் தவிர வேறெதுவும் அவன் கண்ணில் படவில்லை.

"இதுவா, இது வாழும் பல்லீங்க, ரொம்ப நாளா இங்கே தான் இருக்குது" என்று சொன்னபடி, 'பல்லி அவர் தலை மேலே விழுந்து அவர் தூக்கத்தைக் கலைச்சுட்டதுபோல' என்ற அகத்தெளிவுடன் அதை விரட்ட அடியெடுத்தான். 

"அடச்சே, அதை இல்லய்யா, கொடிமேடையைப்பாரு, என்னாத் தெரியுது?" குறிப்புணராக் குருட்டுப் பியூன்கள் மேலும் அவர்கள் முன்னோர் மேலும், உண்டான எரிச்சலுடன் ராஜதுரை மறுபடியும் தன் கையை ஜன்னலுக்காக வீசினார். 

அப்போதுதான் மாணிக்கம் அந்த நாயைப் பார்த்தான். மற்ற தெருநாய்களைவிட அரைப் பங்கு கூடுதலான வளர்ச்சியுடன் தடித்த பிடறியினுடன் கூடிய அந்த நாய், தன் வேலையை முடித்துவிட்டுக் கொடி மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. சீமைப்பசு மாதிரி வெள்ளை உடம்பில் கருப்புத்திட்டுகள். இடது விலாவிலே உள்ளங்கை அகலத்தில் ஒரு பெரிய ரணம். 

"ஓட்டுய்யா, என்ன சும்மா பாத்துகிட்டே நிக்கிறியே, முன்னபின்ன நாய் பாத்ததில்லே?" என்று ராஜதுரை கத்தினார். 

ஹெட்மாஸ்டரின் அனுமதி பெறாமல் எதுவும் பள்ளிக் கூடத்துக்குள்ளே நுழையக்கூடாது, காலை ஒன்பதே முக்காலுக்குப் பள்ளியின் கிராதிக்கதவுகளை மூடிப்பூட்டிவிட்டால், அதுக்கப்புறம் மத்தியானம் ஒரு மணிக்குத்தான் திறக்க வேண் டும் என்பது அவருடைய கண்டிப்பான உத்தரவு. நாலு வருஷங்களாக அமலில் இருந்துவரும் இந்த உத்தரவை ஒரு மிருகம், அதிலும் கேவலம் ஒரு நாய், எவ்வளவு தைரியத்துடன் இன்றைக்கு மீறியிருக்கிறதுமல்லாமல், தான் கம்பீரமாக நின்று மாணவர்க்கு அறிவுரையாற்றும் கொடிமேடையை அசுத்தப்படுத்தியிருக்கிறது. எவ்வளவு திமிர் அதற்கு இருக்கவேணும் என்பதினாலேதான் அவருக்குக் கோபமே தவிர ஜீவ ஜந்துகளின் மேல் இருக்கும் வெறுப்பினால் அல்ல. 

'படபடக்கும் இருதயத்தை அமைதிப்படுத்த ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்கலாம்' என்று அவர் நினைத்த சமயத்தில் நாயை விரட்டப்போன மாணிக்கம் உள்ளே நுழைந்தான். 

அவன் முகம் கலவரம் அடைந்திருந்தது. 

"அது சாதா நாயில்லீங்கய்யா, வெறி நாய் மாதிரி இருக்குது. நான் அதை ஓட்டப்போனேனா, சும்மா கல்லைப் பொறுக்குற மாதிரி குனிஞ்சு எடுத்துக் கையை வீசினேனா, அது என்னடான்னா என்னைப் பார்த்துக் கடிக்க வரமாதிரி கொர்ர்னு உறுமுது, உறுமினாங்காட்டியும் எனக்கு பயமாயி டுச்சய்யா" என்று தணிந்த குரலில் சொன்னான். 

"என்னா, வெறி நாயா? பாத்தா தெரு நாயாட்டமே இருக்குது, என்னாய்யா பெனாத்தறே" என்று சொன்ன படியே ராஜதுரை ஜன்னலருகில் வந்து நாயைக் கவனித்தார். 

நாய் இப்போது கொடி மரத்தில் ஏறப் பார்த்துக் கொண்டும் அதை பிராண்டிக் கொண்டும் இருந்தது. ராஜ துரை ஜன்னலருகில் வந்ததும், அது ஓடுவதை நிறுத்தி அவர் இருக்கும் பக்கம் திரும்பி, இரு காதுகளையும் தாழ்த்தி, உதடுகளைப் பின்னுக்கிழுத்துப் பல்வரிசைகளை அவருக்குக் காட்டியது. உடனே அவர் ஒரு முடிவுக்கு வந்தார். 

"மாணிக்கம், மைக்கை எடுத்து மேஜை மேலே வெய்" என்று உத்தரவிட்டார். அவனும் அவ்வாறே செய்தான். 

"ஆசிரியர்களே அருமை மாணவர்களே, இது தலைமை ஆசிரியர் பேசுவது'' என்று ஆரம்பித்தார். உடனே, ஒலி பெருக்கியின் சப்தத்தை மீறிக்கொண்டு 'ஊழ்ழ்ழ்..... ழக்கொக்' அந்த நாயின் ஊளை சப்தம் கிளம்பியது. அதற்குப் பதில் குரலாக 'ஹோ' என்று அருமை மாணவர்கள் குரலெ ழுப்பினர். 

ஆசிரியர்கள் ஓய்வறையில் மசால் வடை தின்று கொண் டிருந்த பார்த்தசாரதி சார் திடுக்கிட்டு தன்னருகே வடையின் வாசனையை இலவசமாக நுகர்ந்தவண்ணம் காப்பி குடிக்க கொண்டிருந்த தர்மராஜ் சாரை நோக்கி, 
"எச்செம்முக்கு என்ன ஆயிட்டுது இன்னிக்கி? கடைசியிலே ஒரு வழியா பைத்தியமே பிடிச்சுட்டுதா என்ன?' என்று ஆவலுடன் வினவினார். வேறு சில ஆசிரியர்கள் 'ஐயய்யோ எச்செம்முக்கு என்னமோ ஆயிட்டது போல இருக்கே' என்ற பதைப்புடன் எழுந்தனர். மாணவர்களின் பதில்குரலைக் கேட்டு ஆச்சரியமடைந்த நாய் ஊளையிடுவதை நிறுத்த, ராஜ துரை தன் பேச்சைத் தொடர்ந்தார். 

"ஆசிரியர்களே, அருமை மாணவர்களே, அமைதியுடன் இருங்கள். கலவரம் அடையாதீர்கள். பயப்பட வேண்டாம். வகுப்பு அறைகளை மூடித் தாழ்ப்பாள் போட்டு விடுங்கள். ஒருவரும் வெளியே வரக்கூடாது. இது என் உத்தரவு. நமக்கு நேர்ந்திருக்கும், அதாவது நேரவிருக்கும் பேராபத்திலிருந்து நாம் நிச்சயம் விடுபடுவோம். அதாவது உங்களுக்கு ஒரு ஆபத்தும் நேராதபடி நான் உடனே நடவடிக்கை எடுக்கப்போகிறேன். பயம் வேண்டாம்....'' 

இந்த சமயத்தில் எல்லா வகுப்பறைகளிலிருந்தும் கலவரமடைந்த மாணவர்கள் எழுப்பின அர்த்தமுள்ள அர்த்தமில்லாத ஒலிகளும் பேச்சுகளும் கேள்விகளும் குரல்களும் கூக்குரல்களும் கலந்து பிசிறின பேரொலி மறுபடியும் அவர் பேச்சைத் தடை செய்தது. 

"ஸ்ஸ்ஸைலன்ஸ்'' என்று உரத்துக்கத்தி அமைதியை நிலை நாட்டி விட்டு ராஜதுரை மீண்டும் பேசலுற்றார். 

"ஆசிரியப் பெருமக்களே, அருமை மாணவர்களே, இந்தக் கலைமகளின் கோவிலிலே, நம்முடைய புனிதமான பள்ளிக் குள்ளே வெறிநாய் ஒன்று புகுந்துவிட்டிருக்கிறது. நாம் தினமும் அன்புடன் சந்திக்கும் பள்ளிச் சதுக்கத்திலே, அதன் இதயம் போன்ற கொடி மேடையிலே இந்த வெறி நாய் இறுமாப்புடன் ஏறி அமர்ந்திருக்கிறது. வெறி நாய் கடிக்குமானால் அதன் விஷத்துக்கு மாற்று மருந்து கிடையாது. மரணம்தான் நிச்சயம். அதனால்தான் நீங்கள் எவரும் வகுப்பறைக்குள்ளிருந்து வெளியே வரக்கூடாதென்று உத்தரவிட்டிருக்கிறேன். மேற்க்கொண்டு என்ன செய்வது என்பதைத் திட்டம் செய்து செயல்படுத்த ஆசிரியர் பிரதிநிதிகளான திருவாளர்கள் இன்பராஜ், மனோகர் கோதண்டராமன், இந்திர குமார், சத்தார், ரகுபதி ஆகிய ஆசிரியர்களையும், திருவாட் டியர் கல்யாணி, சுசீலா தேவதாஸ் ஆகிய ஆசிரியைகளையும், மாணவர் பிரதிநிதி திரு ரமேஷூ மற்றும் மாணவியர் பிரதிநிதி குமாரி எஸ். கலாவல்லி ஆகியவர்களையும் உடனே என் அறைக்கு வருமாறு அழைக்கிறேன். அவர்கள் சதுக்கத்தின் குறுக்கே நடந்து வெறிநாயின் கோபத்தை கிளறிவிடாமல், பின் தாழ்வாரமாக என் அறைக்குப் பக்கத்திலிருக்கும் எட்டாம் வகுப்பறை வரை வந்து, பின் எட்டாம் வகுப்பறையுள் நுழைந்து, நாயின், கவனத்தை ஈர்க்காதபடி மெல்லப் பதுங்கி நடந்து என் அறைக்குள் வர வேண்டியது. இத்துடன் தலை மை ஆசிரியர் பேச்சு நிறைவடைகிறது. 

ஜனநாயக ரீதியாகக் காரியம் செய்த பெருமிதத்தோடு ஆபத்துக்காலத்தில் தயங்காது முடிவெடுத்த பெருமிதம் சேர அவர் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து காத்திருந்தார். எதிரே கைகட்டி நின்றிருந்த மாணிக்கம், "ஐயா" என்று ஈனக்குரலில் அழைத்து மேலே பேச்சு வராததினால் ஜன்னல் பக்கம் கை யைக் காட்டினான். நாய் இப்போது மேடையிலிருந்து கீழே இறங்கி மேடையைச் சுற்றினபடியும் அவ்வப்போது நின்று உடம்பை வளைத்து விலாவிலிருந்த ரணத்தை மொய்க்கும் ஈக் களை விரட்டிப் புண்ணை நக்கினபடியும் இருந்தது. 
"எனக்கு வெளியே ஒக்காரப் பயமாயிருக்குது, ஸ்டூலை உள்ளே போட்டு உக்காந்துக்கறேன். உத்தரவு கொடுங்கய்யா" என்று கெஞ்சும் குரலில் மாணிக்கம். 

'நிஜமாகவே பயந்து போயிருக்கிறான் பாவம்' என்று நினைத்த ராஜதுரை, "எல்லாரும் வந்தப்புறம் கதவை மூடிக்குனு ஓரமா உக்காந்துக்க, இன்னிக்கு மாத்திரம்" என்று ராஜ துரை அவனுக்கு அனுமதி கொடுத்தார். மாணிக்கத்தின் பயத்தைப் போக்குவதற்காகத் தன் அந்தஸ்த்தையும் விட்டுக் கொடுக்கும் பரந்த கருணை மனம் தன்னிடமிருக்கிறது என் பதில் அவருக்கு சந்தோஷமும் பெருமையும் உண்டாக, மேலும் சௌகரியமாக நாற்காலியில் சாய்ந்துகொண்டார். அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக பதுங்கிய அறைக்குள்ளே நுழையலாயினர். 

"என்னாடா அதுக்குள்ளே வந்துட்டே, யாரான செத்துட்டாங்களா என்ன? ஏய் ரேடியோவைக் கொண்டா  இங்கே, சாவு மியூசிக் போடறாங்களா பாப்பம்."
திண்ணையில் உட்கார்ந்திருந்த தன் தகப்பனாரின் குரலுக்கு நிற்காமல், "உள்ள வாங்கப்பா சொல்றேன். நான் சாப்பிட்டுட்டு வுடனே பள்ளிக்கூடம் போவணும்" என்று சொல்லிக்கொண்டே ஓட்டமும் நடையுமாய் உள்ளே நுழைந்தான்  அந்தப்பையன். 

"அமோ, சீக்கிரம் சோறு போடுங்க, நான் உடனே திரும்பிப் போவனும்'' என்று கூவினபடி சாப்பிட உட்கார்ந்தான். அவன் தகப்பனார், திரு. முத்தையன், அவன் பின்னே வந்து. 

"என்னடா ஆச்சு, திடீர்னு வர்றே, சோறு போடுங்கறே, உடனே போகணுமிங்கறே, என்னா சமாசாரம்?" என்று கேட்க, அவசரம் அவசரமாக சோற்றை அள்ளிப்பபோட்ட படி அவன் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தான். 

"பள்ளிக்கூடத்துக்குள்ளே வெறி நாய் பூந்துடுச்சு, கொக்கு பேச ஆரம்பிச்சாச்சா...'' 

"அது என்னடா கொக்கு? கொக்கு எப்பிடிப் பேசும்? நாய் பூந்துடுச்சாம், கொக்கு பேசிச்சாம். டேய், நீ பள்ளிக்கூடம் போனயா, இல்லை வேற எங்கியானும் போயி பங்கியடிச் சுட்டு வரியா ராஸ்க்கல்?" 

"அட என்னப்பா நீங்க நான் சொல்றதைக் கேளுங்கப்பா. பள்ளிக்கூடத்துலே அஸெம்பிளிக்கு நிப்பமில்லியா, அங்கே ஒரு வெறிநாய் வந்துட்டிருக்குது. கொக்கு, அதாங்கப்பா எங்க எட்மாஸ்டர் ஒயரமா மூக்கு நீளமா இருக்காரில்லே, அதுனாலே அவருக்குக் கொக்குன்னு பேரு. அவரு பேச ஆரம்ப சாரா, ஓடனே அந்த நாயும்...'' அதுக்கு மேலே அவனால் பேச முடியவில்லை, சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. வாய் நிறையச் சோற்றுடன் அவன் 'குப்' பென்று சிரிக்க, திரு முத்தையன் மேல் குழம்புடன் கலந்த சோறு மாரிப்பொழிய அவர் அவசரமாகப் பின்னுக்கு நகர்ந்தார். சிரிப்படங்கி அவன் தொடர்ந்தான். 

"கிளாஸிலிருந்து யாரும் வெளியே வரக்கூடாதுன்னிட் டாரு. எல்லாரையும் உள்ளே வெச்சுப் பூட்டிட்டாங்க. என் னா செய்றதுன்னு கமிட்டி வெச்சிருக்காரு. நாய் உர்உர்னு உலாத்திகிட்டிருக்குது...'' 

"எல்லாரையும் உள்ளே வெச்சு பூட்டிட்டாங்கறே, நீ மாத்திரம் எப்புடிறா இங்கே வந்தே?" 

"உள்ளேந்துதான் பூட்டினாங்க. பூட்டுன்னா சாவி பூட்டு இல்லே. சும்மா தாப்பாள் தான். நாங்க பின்னாலே செவர் ஏறிக்குதிச்சு சாப்பாட்டுக்கு வந்திருக்கோம். சாப்புட்டுட்டு வுடனே திரும்பிப்போயி என்னா பண்றாங்கன்னு பாக்கப்போ றோம். இன்னிக்கு இனிமே கிளாஸ் கிடையாது. தமாஸ்தான்" என்று சொல்லிக் கழுவின கையைக் நிஜாரிலே துடைத்தபடியே ஓட ஆரம்பித்தான் அந்தப்பையன். 

திரு. முத்தையனின் மூளை முடுக்கிவிடப்பட்ட இயந்திரமாகச் செயல்பட ஆரம்பித்தது. சின்னூரில் நாடு தழுவிய அரசியல் கட்சிகள் மூணும், மாநிலம் தழுவிய கட்சிகள் மூணும், மாவட்டம் தழுவியக் கட்சிகள் ரெண்டு கட்சிகளும், நகரம் தழுவிய ஒண்ணரைக் கட்சிகளும் (ஒண்ணாக இருந்தது. பல வருஷங்களுக்கு முன் - கடைசியாக நடந்த நகரசபைத் தேர்தலின்போது ஒண்ணரையாக உடைந்து விட்டது), சில தெருக்களே தழுவிய அஞ்சாறு கட்சிகளும் இருக்கின்றன. இவற்றுள் ஒன்றின் தலைவர் திரு. முத்தையன் அவர்கள். பள்ளித்தலைமை ஆசிரியர் இன்னொரு கட்சியின் அனுதாபி என்பது ஒருபுறமிருக்க, கடைசியாக நடந்த நகரசபைத் தேர்தலில் பிற கட்சிகளின் சூழ்ச்சியினால் தன்னுடைய நகராளும் திறமையைச் சின்னூர்ப் பொதுமக்கள் உணரத் தவறிவிட் டார்கள் என்கிற ஏக்கம் இன்னொரு புறமிருக்க, அப்பாவிச் சிறுகுழந்தைகள் படிக்கும் பள்ளியில் வெறிநாய் புகுந்துவிட்டதே என்கிற தாபத்தாலும், அதை விரட்டியடிக்காமல் பள்ளி நிர்வாகம் கமிட்டி வைத்துக்காப்பி டிபனுடன் கதை பேசிய காலம் கழிக்கிறதே என்ற அறச் சீற்றத்தாலும், இந்த இக்கடான நிலைமைக்கு வழிகாணும் பொதுஜன சேவை செய்ய தகுதி தம் கட்சி ஒன்றுக்கே இருக்கிறது என்ற நம்பிக்கையினாலும், சிறுவர் உயிர்காக்கும் சேவை செய்யவேணும் என்ற பொது நல உணர்வினாலும் உந்தப்பட்ட திரு. முத்தைய அவர்கள் ஓட ஆரம்பித்த தன் மகனைப் பார்த்து, 

"டேய், போறப்போ வழியிலே கன்னியப்பனை நான் ஓடனே இங்கே வரச்சொன்னேன்னு சொல்லீட்டுப்போ. என்ன புரிஞ்சுதா? ஒடனே இங்கே வரணும். இல்லே முதுகுத் தோல உரிச்சுப்பிடுவேன் ஜாக்கிரதை'' எனச்சொல்லி விரட்டினார். கன்னியப்பன் அவருடைய வலது கை. 

பதினெட்டு நிமிஷங்களில் கன்னியப்பனும் வந்து சேர்ந்தான். இருவரும் இப்போ என்ன செய்வது என்ற மந்திராலோசனையில் இறங்கினார். 
***

ராஜதுரையின் அறையில் ஆசிரியமாணவப் பிரதிநிதிகள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். வெளியிலே அந்த நாய் ஆறு நிமிஷத்துக்கொருமுறை 'ஊழ்ழ்ழ்..... ழக் கொக்' என்று முப்பது வினாடிகள் ஊளையிட்டுவிட்டு இன்னுமொரு முப்பது வினாடிகள் 'லொள் லொளழ் லொள் லோழ் லொள்' என்று குரைத்துவிட்டு சதுக்கத்தை வளைய வருவதும், அவ்வப்போது முன் தாழ்வாரத்தில் ஏறி வகுப்பறைகளின் கதவுகளைத் தட்டிச் சுரண்டுவதும், இடையிடையே உடம்பை வளைத்து விலாவிலிருந்த ரணத்தை நக்கிக் கொடுப்பதுமாக இருந்தது. 

“இது வெறும் தெரு நாயா, அல்லது வெறி நாயான்னு முதல்லே தீர்மானம் செய்யணும். பிறகு தீர்மானத்தின்படி வெறும் நாயா இருந்தா என்ன செய்றது, வெறி நாயா இருந்தா என்ன செய்றதுன்னு முடிவெடுக்கணும். பிறகு முடிவெடுத்த படிச் செயல்படணும், அவ்வளவுதான். விசயம் சிம்ப்பிள்" என்று தர்க்க ரீதியாக மனோகர் சார் பிரச்சினையை விளக்கினார். 

"வெறும் நாயாவது தெருநாயாவது, நாய் நாய்தான். நாயும் பன்னியும் அசுத்தமான பிராணிங்க. அதுங்க ஊருக்குள் ளாரவே இருக்கக்கூடாது, பள்ளிக்கூடத்துக்குள்ளே இருக்க விடலாமா? இதை உள்ளே வரவழச்சதே தப்பு, இப்பப்போயி என்னென்னமோ தீர்மானம் பண்ணனும் பிறகு முடிவு எடுக்கணும் பிறகு செயல்படணும்னு பேசிக்கிட்டிருக்கீங்களே! என்னிக்கு இதெல்லாம் செய்யறது? எனக்கு மாத்திரம் இடுப்பு முழங்கால் எல்லாம் வாயு பிடிப்பு இல்லேன்னா நான் ஒத்தனே போயி இந்த நாயி உள்ளே வரதுக்கு முன்னாலியே அதை வெளியே தொரத்தியிருப்பேன்." என்று சத்தார் சார் வேகமுடன் சொன்னார். 

"யாரு இந்த நாயை வரவழைச்சது?" என்று கோதண்ட ராமன் சார் தன் அறியாமையினால் விளைந்த ஐயத்தைப் போக்கிக்கொள்ளக் கேட்டார். 

"நாங்கதான் ஸுடன்ஸ், பள்ளிக்கூடம் வரணுங்கிறது எங்க டூட்டி, நீங்கள்ளாம் வாத்தியாருங்க, பள்ளிக்கூடம் வரணுங்கிறது ஒங்க டூட்டி. அத்தாலே நாம பள்ளிக்கூடம் வர்றோம். நாயி ரெண்டுமில்லே. ஸூடன்ஸுமில்லே வாத்தியாரு மில்லே. சரியான புத்தி இருக்கிற நாயின்னா பள்ளிக்கூடம் வருமா? இதுலேந்தே தெரியுதே இதுக்குப் பைத்தியம் புடிச்சிருக்குன்னு'' என்று ரமேஷு காரணகாரியத்தோடு தன் அபிப்பிராயத்தைச் சொன்னான். 

“இதுக்குத்தானுங்க நம்ம ஊரிலே ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி வேணுமின்னு நான் பத்து வருஷமா பிரச்சாரம் செய்துவரேன். யாராச்சும் கேட்டாங்களா? என்னமோ என் சொந்த உபயோகத்துக்காகக் கேக்கிறமாதிரிக் கேலி பண் றாங்க. அப்பிடி ஒரு ஆஸ்பத்திரி இருந்தா இப்ப நாம ஓடனே போனை எடுத்து, 'இந்தாய்யா, இங்கே வந்து இந்தப் பைத்தியக்கார நாயைப் புடிச்சுட்டுப்போங்கன்னு சொல்லி விஷ யத்தை முடிச்சிருக்கலாம் இல்லியா?" என்று சுப்பிரமணியம் சார் வருத்தப்பட்டுக் கொண்டார். 

"அட என்னா சார் நீங்க இப்போ நடக்கற சமாசாரத்தைப் பாப்பமா. பத்து வருஷம் பைத்தியக்கார ஆஸ்பத்திரின்னு பேசிகிட்டு" என்று ராஜதுரை தன் அலுப்பை தெரிவித்தார். 

"சார் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆளனுப்பினமே, இன்னும் காணமே. ரத்தினத்தை வேணுன்னா அனுப்பிவிடுறீங்களா என்றார் சுசீலா தேவதாஸ் மிஸ். 

"ஆண்டவனே வேல் முருகா, குழந்தைங்கெல்லாம் அடை பட்டுக் கிடக்காங்க. வெளியிலே வெறிநாய் சுத்துது. இங்க ஆபத்துலே இருந்து காப்பாத்தப்பா. இந்தப் பள்ளிக்கூடத்துலே இருக்கிற எல்லாருக்கும் என் செலவிலேயே பழனியிலேயே முடியிறக்கிடறேம்பா" என்று கல்யாணி மிஸ் வேண்டிக்கொண்டார். 

மற்றவர்கள் எல்லோரும் திடுக்கிட்டுப்போனார்கள். ராஜதுரை அவசரமாக, 
"மிஸ், நீங்க அப்படியெல்லாம் வேண்டிக்க வேண்டிய அவசியமில்லே. மொதல்லே மனுஷயத்தனம், அதாலே முடியலேன்னா அரசயத்தனம், அப்பவும் முடியலேன்னாத்தான் தெய்வயத்தனம். நாம் இன்னும் மனுஷயத்தனமே, ஆரம்பிக்கலியே" என்று சொல்ல எல்லோரும், “ஆமா மிஸ், இப்பவே அப்பிடி வேண்டிக்க வேணாம், கொஞ்சம் பொறுத்துக்கங்க" எனறு மிஸ்ஸைக் கேட்டுக்கொண்டார்கள். ஈரமாகிவிட்டிருந்த கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டு, கல்யாணி மிஸ்ஸும் அரை மனசாகச் சரியென ஒப்புக்கொண்டார். 'மலைபோல வந்த நெருக்கடி பனிபோலத் தீர்ந்தது என்று மற்றவர்கள் பெருமூச்சுவிட்டுக் கொஞ்சம் நிம்மதி யடைந்து வெறிநாய்ப்பிரச்சனைக்கு முடிவு தேட மீண்டும் ஆரம்பித்தார்கள். 

கொடிக்கம்பத்தை அசுத்தம் செய்வது தேசவிரோதக் குற்ற மானபடியாலும், அம்மாதிரிக் குற்றங்கள் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலையைப் பாதிக்குமென்றபடியாலும் போலீஸ் உதவியை நாடுவது என்று முதலில் முடிவெடுத்தார்கள். முதல் நாள் இரவு அங்குமிங்குமாகச் சிறிது மழைத்தூறல்' இருந்தன் காரணமாக டெலிபோன் வேலை செய்யவில்லையென்பது, ராஜதுரை காவல் நிலையத்துக்குப்போன் செய்யப் போனபோதுதான் தெரிந்தது. போலீசுடன் எப்படித் தொடர்பு கொள்வது என்பது குறித்து அடுத்தபடி விவாதம் வந்தது. மூணாவது பியூனாகிய முத்துவை அனுப்பி உடனே போலீஸ் உதவி தேவை என்பதைத் தெரியப்படுத்துவது என்று ஒரு குட்டி விவாதத்தின் பின் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட் து. மாணிக்கம்தான் முதல் பியூன். ஆனால் அவன் முன்னே நாயை விரட்டப்போனபோது பூட்டி வைத்திருந்த கிராதிக் கதவுச் சாவிக்கொத்தை, சதுக்கத்திலே அவன் கை நடுங்கிக் கீழே போட்டுவிட்டபடியாலும், வயசான மாணிக்கத்தால் சுவர் ஏறிக்குதித்து வெளியே போகமுடியாது என்றபடியாலும் அவன் பெயர் தள்ளுபடியாயிற்று. இரண்டாவது பியூன் ரத்னம் வெளியே போனால் வழியிலேயே சாராயக்கடையிலயே தங்கிவிடுவான், காவல்நிலையம் போய்ச்சேரமாட்டான் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டபடியால் அவன் பெயரும் தள்ளுபடியாயிற்று. எனவே, மூணாவது பியூனான முத்துவை 'உடனே போலீசாவது, அவர்களால் இயலாததென்றால் ராணுவத்தையாவது அனுப்பி வைத்து வெறிநாயை அப்புறப்படுத்த வேணும், என்ற எழுத்து மூலமான கோரிக்கையுடன் அனுப்பி வைத்தனர். முத்து போய் ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆச்சு. இன்னும் காணவில்லை. கவலை தேங்கிய முகத்துடன் காத்திருந்தார்கள். 
******************

முத்து காவல் நிலையத்தை அடைந்தபோது நிலையம் வெறிச்சென்று கிடந்தது. வெளியே ஒருத்தரும் இல்லை. வெளி வராந்தாவில் குற்றப்பதிவு செய்யும் ஆளையும் காணோம். பாதி மூடியிருந்த கதவை மெல்லத்திறந்து உள்ளே பார்த்தால் அங்கே முன் அறையிலும் எவரையும் காண வில்லை. அந்த அறையையும் கடந்து நடுக்கூடத்துக்குள் முத்து மெல்ல அடிமேல் அடி வைத்து நுழைகையில், "அப்படியே சில்லு, ஆடாதே அசையாதே சுட்டுப்பிடுவேன் ஜாக்கிறதை" என்ற இடிக்குரல் கேட்க, அவன் நடுங்கிப்போய் அப்படியே தின்றான். 

“பயந்துட்டையா? அட, இப்பேர்கொத்த பயங்காளின்னா போலீஸ்டேசனுக்குள்ள ஏதோ ஒண்ணு நுழையறமாதிரி நுழையலாமா, என்னா திருட வந்தே சொல்றா!" என்று சொன்னபடி ஏட்டாயிருந்து கொஞ்சகாலம் முன்னால் பதவியிறக்கம் செய்யப்பட்ட பி.சி. பெருமாள் முத்துவின் தோள் மேல் கையைப் போட்டார். முத்து மெல்லத் திரும்பவும், 'திருடவந்தவனை' அடையாளம் கண்டுகொண்ட பெருமாள்,

"அட நம்ம முத்துவா, நீ எப்போ இந்தத் தொழில்லே எறங்கினே?" என்று இன்னும் சந்தேகம் தணியாதவராய்க் கேட்டார்.

"பெருமாளு, ஒரு நிமிசம் கொலை நடுங்க வெச்சுட்டீங்களே, ஒக்காருங்க, விசயத்தைச் சொல்லறேன்'' என்று சொல்லிப் பெருமாளை எஸ்.ஐ.யின் நாற்காலியில் அமர்த்தி எதிரே இருந்த ஸ்டூலில் தான் உட்கார்ந்து முத்து தான் வந்த விஷ யத்தை சொன்னான்.

"அடடா, இன்னிக்கீன்னு பாத்து வந்தியே, நேத்து முந்தா நேத்து வந்திருக்கக்கூடாது? இன்னிலேந்து மூனுநாள் ஸ்டேசனிலே யாரும் கெடையாது. நான் ஒத்தன்தான். அப்பறம் வா. இப்ப வேணுன்னா தேதி போடாதே கம்ப்லைன்ட் எழுதிக் குடுத்துட்டுப்போ , எஸ்.ஐ. நாளன்னி சாயங்காலம் வருவாரு, சொல்றேன்'' என்று பெருமாள் சாவதானமாகச் சொன்னார்.

“என்ன நீங்க இப்பிடிச் சொல்லிட்டீங்க? இப்ப உடனே ஆள் வேணும்னா அடுத்த வாரம் வா - போன வாரம் வாங்கறீங்க. பள்ளிக்கூடத்துலே வெறி நாய் பூந்துட்டிருக்குது. வெறிநாயி கடிச்சா அவ்வளவுதான். அத்தினி பிள்ளைங்களும் நாயாட்டும் கொலைச்சுக்கினே செத்துடுவாங்க. ஆயிரத்தை நூறு பேரும் அவுட். குளோஸ், பணால். விசயம் ஒரே அர்ஜண்ட்டு " என்று முத்து தன் அவசரத்தை விளக்கினான்.

"அடேங்கப்பா, ஆயிரத்தை நூறு பேரு கொலைச்சுக்கினே செத்துட்டாங்களா! அத்தினி பொணத்தைப் படுக்க வைக்கறத்துக்கு ஒங்க இஸ்கூலிலே எங்கே எடம் இருக்குது? அடேங்கப்பா, ஆயிரத்தைநூறு பேர் " என்று வியந்து கொண்டே, அதேசமயம் நரம்புத் தளர்ச்சிக்காக நேரே நரம்பிலேயே ஊசி போடுகிறேன் என்று சொல்லிக் கையையெல்லாம் குத்திக் குத்தி ரணகளமாக்கிவிட்ட அந்த அரசாங்க டாக்டர் 'பாழாய் போற பரமேசுவரன்' இப்பொ எப்பிடி இத்தனை பிணங்களுக்கும் பிரேத பரிசோதனை செய்யத் திண்டாடப்போகிறான் என்று மனக்கண்ணில் பார்த்து ரசித்த பெருமாள், பிறகு 
ஆச்சரியம் தணிந்தவராய். 

"இதை மொதல்லியே சொல்றதுக்கென்னா? என்னமோ நாயி கொடிமேலே ஒண்ணுக்குப்போயிடிச்சின்னு எட் மாஸ்ட்டர் ரூம்லே பூட்டி வெச்சிருக்காங்கன்னு சொல்றியாங்காட்டியும் நெனைச்சுட்டேன. ஏன்யா, செத்துப்போனப்புறம் வந்து சொல்றியே, முன்னாலியே வந்து சொல்லக்கூடாது? ஒத்தனைக் கடிக்கறதுக்கு அரை நிமிஷம் ஆகும்னாக்கூட ஒரு மணியிலே நூத்திருவது பேரு, பத்துமணியிலே ஆயிரத்து எரநூறுபேரு, இன்னும் ரெண்டரை மணிலே மீதி முன்னூறு பேரு, மொத்தம் பன்னென்டு மணி நேரம் நாயி கடிச்சுக்கினே இருக்கச்சே என்னய்யா பண்ணிக்கினு இருந்தீங்க நீங்கள் ளாம்? புடுங்கிக்கினு இருந்தீங்களா? என்னா பள்ளிக்கூடம் நடத்தறீங்க? நாயிக்கு பொரை போட்டா அது ஆளைக் கடிக்கிறதை வுட்டுட்டு ஓம் பின்னாலியே வாலை ஆட்டிக்கினு வராதா? அதை வுட்டுட்டு... ஒங்க எல்லார் மேலேயும் கொலைக்குத்தம் பதிவு செய்யறேன். அப்பத்தெரியும்...'' பெரு மாள் ஆவேசமாகப் பேசிக் கொண்டே போனான். 

முத்து பயந்துபோய், "ஆத்திரப்படாதீங்க. இன்னும் அவங்க சாவலே. நீங்க வரலேன்னாதான் எல்லாரும் அவுட் டாயிடுவாங்க. கொலைச்சிக்கினே'' என்று ஆரம்பித்து மறு படியும் விஷயத்தை முதலிலிருந்து விளக்கினான்.

"அடப்பாவி சொல்றதை சரியாச் சொல்லக்கூடாது? அதாம் பாத்தேன், என்னடாது ஆயிரத்தை நூறு பேர் ஒண்ணா கொலைச்சிக்கினே செத்தாங்கன்னா இங்கே வரைக்கும் அவங்க கொலைக்கிற சத்தம் கேக்கணுமே, ஆனா கேக்கக் காணமே, அது எப்பிடின்னு. இப்போ விஷயம் புரிஞ்சுது. நீ போ, இப்போ போலீஸ்வரமுடியாது. எல்லாரும் சின்னப்பட்டணத்துக்கு செக்கூரிட்டி டூட்டி மேலே போயிருக்காங்க, வர மூனு நாளாவும். நான் ஒத்தன்தான் ஸ்டேசனை வுட்டுட்டு ஓம் பின்னாடி நான் வரமுடி
அப்புறம் இங்கே இருக்கிற நாற்காலி, மேஜை, பீரோ எல்லாம் எவனாவது கௌப்பிக்கினு போய்ட்டான்டை பொறுப்பு? யார் பதில் சொல்றது அப்போ , நீயா நானா?" என்று பெருமாள் தன் இயலாமையை விளக்கினார்.

"இங்கேந்து எல்லாரும் சின்னப்பட்டிணம் போயிட் டாங்களா! அங்கே என்ன ஆச்சு? எதினாச்சும் கலாட டாவா?" என்று முத்து ஆவலுடன் கேட்டான்.

"கலாட்டாவுமில்லே, கல்யாணமுமில்லே. நம்ம மண்ணாறு இருக்குதில்லே, அதுலே தண்ணி வந்தா வீணா கடலுக் தப்போயிடுமேன்னு அணை போட்டுத் தடுக்கறாங்களாம். அப்பிடீன்னா சின்னப்பட்டிணம் முழுகிப்போயிடும்னு பயந்துபோய் அந்த ஊரிலே இருக்கிறவங்க எல்லாம் கொழந்தை குட்டியோட, மாடு கன்னோடு, பாத்திரம் பண்டத்தோட மெட்ராஸுக்குப்போயி அணை கட்டற மந்திரி பங்களாக் காம்ப்பவுண்டிலே டேரா போட்டுக் குடிவந்துட்டாங்களாம். மந்திரி மச்சாரு சின்னப்பட்டிணமாச்சே அவங்களையெல்யாம் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பிச்சாங்க. அவங்களுக்கெல்லாம் சின்னப்பட்டிணத்திலேயே மறுவாழ்வு கொடுக்றெதுக்குக் கல் நடற விழா இன்னிக்கி, நாளைக்கி, நாளன் எனக்கி. நாலு மெட்ராஸ் மந்திரிங்க, ரெண்டு ஆந்திரா மந்ரிங்க, ரெண்டு டில்லி மந்திரிங்க எல்லாம் வராங்க. காத்மா காந்தியைக்கூடக் கலந்துக்க வெக்கணும்னு சில பேர் ஆர்ப்பாட்டம் பண்ணனும்னாங்க. அவர் நெஜமாவே செத்துப்போயிட்டாருன்னு தெரிஞ்சப்பறந்தான் 'சரி அவரை விடு'ன்னாங்க. இவ்வளவு பெரிய மனுசங்க வர்றாங்கன்னா, பாக்கிஸ்தான் சீக்கிஸ்தான்னு எவனாவது வந்து குண்டு வச்சிடுவான் இல்லே, அதுனாலே இந்த மாவட்டப் போல் ஸல்லாம் அங்கே போவணும்னு உத்தரவு" இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்த பெருமாளை இடைமறித்து,

"மந்திரி எப்பிடி அவங்களை சமாதானப்படுத்தி அந்த ஜனங்களை முழுகப் போற ஊருக்கே திருப்பி அனுப்பி வெச்சாரு? பலே அளாயிருப்பாரு போல இருக்குதே!" என்று ஆச்சரியத்துடன் முத்து கேட்டான். 

"அவரு ரொம்பக் கெட்டிக்காரரு. ஒனக்கும் எனக்கும் தலையிலேதான் மூளை, அவருக்கு ஒடம்பெல்லாம் மூளை. என்ன சொன்னார் தெரியுமா? 'மண்ணாத்திலே என்னிக்காவது தண்ணி வந்ததுண்டா? கிடையாது. அதனாலே அணை கட்டினாக்கூட யாரும் முழுகிடமாட்டாங்க. அதே சமயம் உங்க எல்லாருக்கும் அணை கட்டுற வேலை கிடைக் கும். சிமிட்டி, கல்லு, மண்ணு வியாபாரமல்லாம் நல்லா நடக்கும். அதெல்லாம் உற்பத்தி பண்ணற தொழிலாளருக்கெல்லாம் சம்பளம் போனஸ் எல்லாம் கிடைக்கும். இந்தக் காசையெல்லாம் வெச்சு எல்லாரும் துணி மணி, பாத்திரம் பண்டம் வாங்கறப்போ அந்த வியாபாரிங்களுக்கும் அதை உற்பத்தி பண்ணறவங்களுக்கும் வருமானம் கிடைக்கும். இந்த மாதிரி இந்த அணையினாலே நாடே சுபிட்சமாகும். அப்படி ஒருவேளை தப்பித் தவறி மழை பெஞ்சு ஊரு முழுகிடுச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். ஏண்டான்னு என்னைக் கேளுங்க. மாற்றுக் கட்சிக்காரங்க பேச்சை கேட்டு ஊரைவிட்டு ஊர் வந்து பிச்சையெடுக்காதீங்க. இந்தாங்க, இப்போதைக்கு ஆளுக்கு ஒரு வேட்டி, ஒரு துண்டு, ஒரு சேலை'ன்னு சொல்லி ஆளுக்கு ஒரு துண்டு குடுத்து, 'இன்னிக்குப் பதினஞ்சாம் நாள் நான் சின்னப் பட்டினம் வந்து ஒங்க மறுவாழ்வு ஞாபாகார்த்தமா கல் நட்டுப் பொடவை வேட்டி குடுக்கறேன்'னு சொல்லி அனுப்பிச்சிட்டாரு" என்று மந்திரியின் சாமர்த்தியத்தைப் பெரு மாள் விளக்கினார்.

"அப்போ போலீசு எங்க பள்ளிக்கூடத்துக்கு வராதுன்னு சொல்லு. அப்படீன்னா ராணுவத்தையாவது அனுப்பிவிடணும்னாங்க'' என்று முத்து மாற்றுக் கோரிக்கையை முன் வைத்தான்.

"நீ ஒண்ணு! மிலிட்டெரியைக் கூப்பிடறதுன்னா என்ன லேசுப்பட்டதா? தாசில்தாருக்கு நாங்க எழுதணும். அவர் வந்து பாத்துட்டு கலெக்டருக்கு எழுதணும், அவர் வந்து பாத்துட்டு மந்திரிக்கு எழுதணும், மந்திரி வந்து பாத்துட்டு முதல்வருக்கு எழுதணும். முதல்வர் வந்து பாத்துட்டு - 'விஷயம் முத்திப்போயிடுச்சு, எங்களாலே ஆகாது, மிலிட்டெரியை அனுப்புங்க'ன்னு டில்லிக்கு மனுக்குடுக்கணும் அதுவரைக்கும்  நாங்க விடுவமா? எங்கள 
எல்லோரையும் சுட்டுத்தள்ளி நொறுக்கிடமாட்டம் ?  ராணுவமெல்லாம் வராது, நீ போ,   போறப்போ நாலு பொரை வாங்கி வாய்க்கிக்கு போட்டுடு. அது பாட்டுக்கு வந்துடும். பாக்க போ' என்று சொல்லி முத்துவை வெளியேற்றினார் பெருமாள். 


காரியம் கைகூடாததனால் சோர்ந்த உள்ளத்துக்குக் தெம்புகொடுப்பதற்காக 
 முத்து 'நரசிம்மன் இளம் பருதி தேனீர் நிலையத்துக்குச் சென்றான். டீ குடித்தபடியே அங்கிருந்த மற்ற சக டீ பானகர்களுக்குத் தன் பள்ளிக்கு நேர்ந்திருக்கும் அபாயத்தையும் போலீஸ் அதிகாரம் உதவிக்கு வராமல் கை கழுவிவிட்டதையும் சொல்லி ஓரளவு ஆறுதல் பெற்றான். முத்துவின் மனத்தாங்கைலை ஊக்கத்துடன் கேட்டவர்களில் ஒருத்தர் தின பேரிகை'யின் உள்ளூர் நிருபர் அருணகிரி. இன்னொருத்தர் ஆளுங்கட்சியின் தீவிர அபிமானி. மூன்றாமவர். எட்டு மாற்றுக் கட்சிகளில் இரண்டின் அனுதாபி. நான்காமவர், வேறொரு கட்சியின் தலைவர் திரு. பலராமன். முத்து சென்ற வுடன், இவர்கள் ஒவ்வொருவரும் தம்தம் கட்சிக் காரியாலங்களை நோக்கி விரைந்தனர். 'நமது நிருபர்' அருணகிரி, வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டுச் சற்றுச்சிரம பரிகாரம் செய்துவிட்டுப் பள்ளிக்கூடத்துக்கு விரைய வேண்டியது என்று திட்டம் போட்டார்.
^^^^^^^^^^^^^^^^^^^^

"போலீசுமில்லை , ராணுவமும் இல்லியா! அடக்கடவுளே, இப்போ நாம என்ன செய்யறது? இந்த மாதிரி வந்து மாட்டிக்கிட்டோமே  என்று அழாக்குறையாக் கேட்டார் இந்திரகுமார் சார்.

"இந்த அரசாங்கம் எப்படி பொறுப்பற்றது, மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாதது என்பது இப்போது பிழைக்கும். அடுத்த தேர்தலில் நம் பள்ளியிலிருந்து ஒரு ஓட் கூட...'' என்று ரகுபதி சார் காரசாரமா ஆரம்பிக்க, 

"யோவ், நம்ம சங்கடத்தை அரசியலாக்காதே" என்று மனோகரன் சார் உறுமினார்.

"என்னய்யா நீ ஒண்ணு, இப்ப என்ன செய்யறன்னு தெரியாம தெணறிக்கிட்டிருக்கோம், நீ வந்து அரசாங்கம் தேர்தல்னு ஆரம்பிக்கறே. அடுத்த தேர்தல் வரைக்கும் உயிரோட இருக்க வேணாம்? கிளிஜோஸ்யம் பாக்கவேண்டியவெனல்லாம் வாத்தியார் வேலைக்கு வந்துட் டானுங்க" என்று கோதண்டராமன் சார் வழி மொழிய,

"யாரைய்யா கிளி ஜோஸ்யம் பாக்கறவன்னு சொல்றே? யாரு கிளி ஜோஸ்யம் பாக்கிறவன்? யாரு கழுத்திலே கொட்  கட்டிக்கினு வருஷா வருஷம் திருப்பதிக்குப்போயி மொட்டைத்தலையோட வர்றது?" என்று ரகுபதி சார் கோதண்ட ராமன் சார் மேல் பாய,

"கிளி ஜோசியமின்னா ஒண்ணும் தாழ்வில்லை சார். அருணகிரி நாதரே கிளிசொரூபம்னு சொல்வாங்க. ஆண்டாள் மதுரை மீனாட்சி எல்லாம் கிளி வெச்சிருக்காங்க" என்று கல்யாணி மிஸ் சமாதானப்பேச்சை ஆரம்பிக்க,

"ஸைலன்ஸ், இப்படிக் கூச்சல் போட்டா வெறி நாய் இங்கே நம்மைப் பாக்க வந்துடும். மெல்லப்பேசுங்க" என்று ராஜதுரை எச்சரித்தவுடன் எல்லோரும் 'கப்'பென்று பேச்சை நிறுத்தி அறைக்கதவையும் ஜன்னலையும் திகிலுடன் பார்த்தார்கள்.

"ஜன்னல் கதவை மூடிடலாமா ? கம்பிக்கிடையாலே நாய் வந்துட்டா?" என்று சுசீலா தேவதாஸ் மிஸ் தன் கவலையைத் தெரிவித்தார். அப்போது ரமேஷ் எழுந்து நின்று,

"சார் எனக்கு ஒண்ணு தோணுது, சொல்லட்டுமா?" என்று கேட்டான்.

"சொல்லுப்பா ரமேஷு, தைரியமாச்சொல்லு" என்று சொல்லி ராஜதுரை வருங்காலப்பிரஜைகளான மாணவர்களைத் தான் சம மதிப்போடு நடத்துவதை அங்கே இருக்கும் ஆசிரியர்கள் முன் மாதிரியாகக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் கம்பீரமாகத் தன் நாற்காலியில் அசைந்து உட்கார்ந்தார். 

"எச்சம் சார் சொன்னாரில்லை மொதல்லே மனுஷ யத்தனம், அதுக்கப்புறம் அரச யத்தனம், அதுக்குப்பறந்தான் தெய்வ யத்தனம்னு?"

"ஆமாம் என்பதற்கடையாளமாக எல்லோரும் தலையாட்டினார்கள். 'ரமேஷ' கெட்டிக்காரப்பையன் முன்னுக்கு வரக்கூடியவன்' என்று ராஜதுரை மனசுக்குள் சிலாகித்துக் கொண்டார். 

நாம எடுத்தவுடனேயே அரச யத்தனத்துக்குப் போயிட்டோம் - போலீசு உதவின்னா அரச யத்தனம்தானே? மொதல்லே நாம். நாமே நம்ம முயற்சியினாலேயே, மத்தவங்க உதவியை எதிர்பார்க்காமே இந்த வெறிநாயை விரட்ட முடியுமான்னு பாக்கணும். அப்படித்தான் எனக்குத் தோணுது அதனாலே" என்று சொன்னவன் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாததினால் அத்துடன் தன் பேச்சை சிறுக்கிக்கொண்டான். "சபாஷ் ரமேஷ். நீ சொன்னது ரொம்ப சரி. இதை கவனிக்காமே இவ்வளவு நேரம் வீணாக்கிட்டமே. நாம்பலே சேர்ந்து வெறிநாயை விரட்ட வேண்டியதுன்னு தீர்மானிக்கலாமா" என்று ராஜதுரை புதிய தெளிவுடன் கேட்டார்.

“விரட்டவேண்டியதுங்கிறதைவிட 'வெறி நாய்த் தொல்லையை ஒழிக்க செயல்படவேண்டியது'ன்னா பொருத்தமாயிருக்கும் என இன்பராஜ் சார் கொண்டு வந்தார்.

எல்லோரும் அதை ஆமோதிக்க, திருத்தம் ஏகமனதாக  நிறைவேறியது.

அடுத்தபடியாக எப்படி வெறிநாய்த் தொல்லையை ஒழிக்கச் செயல்படுவது என்று அவர்கள் ஆராய முற்பட்டார்கள். எப்பேர்ப்பட்ட வெறிநாயும் பத்து நாளைக்குள் தானாகவே இறந்துவிடும். அதுவரை பொறுத்துப்பார்க்கலாம்' என்ற சுப்பிரமணியம் சாரின் யோசனைக்கு ஆசிரியைப் பிரதிநிதிகள் இருவரும் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

“நீங்கள்ளாம் ஆண்பிள்ளைகள், பத்துநாளென்ன, பதினஞ்சு நாள்கூட வீட்டுப் பக்கமே வராமே இருக்கலாம், பெண்களாலே அப்பிடி இருக்கமுடியாது. பத்துநாள் நாங்க இங்கேயே இருந்தா எங்க எல்லாருடைய வீட்டு நிலைமை என்ன ஆகும்? குழந்தைகள் கதி என்ன? ஒருநாள் கூடக் கணவன்மாரிடத்திலே வீட்டுப்பொறுப்பை விட்டுவிட முடியாமலிருக்கும் நிலையிலே பத்து நாளைக்கு எப்பிடி விடுவது? பொறுப்பத்த ஆம்பிளைப்பேச்சு இது. பத்து நாளைக்குப் பள்ளிக்கூடத்திலே இருக்கிற எல்லாருக்கும் யார் சாப்பாடு, குளியல், படுக்கையெல்லாம் ஏற்பாடு செய்வார்கள்?" என்று சரமாரியாகக் கேள்விக்கணைகள் தொடுத்தனர்.

அவர்களின் ஒன்றுபட்ட தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், "என்னமோ எனக்குப் பட்டதைச் சொன்னேன், பிடிக்கலேன்னு சொல்லவேண்டியதுதானே, ஏன் புருசன் பொண்டாட்டி ஆம்பிளை பொம்பிளைன்னு ஆரம்பிக்கிறீங்க?" என்று முணுமுணுத்தபடி சுப்பிரமணியம் சார் பின் வாங்கினார்.

"வெறிநாயை விஷம் வெச்சுக் கொல்லணும்" என்றார் மனோகர் சார்.

“நம்ம கிட்டே ஏது விஷம்?" என்று இந்திரகுமார் சார் கேட்க,

“ஒங்க அறிவியல் லேபரட்டரியிலே புட்டி புட்டியா மண்டையோடு படம் போட்டு 'விஷம்'னு லேபில் ஒட்டி கலர் கலரா அடுக்கி வெச்சிருக்கீங்க, நீங்களே நம்ம கிட்டே ஏது விஷம்னு கேக்கறீங்களே?" என்று சுசீலா தேவதாஸ் மிஸ்  கேட்டார்.

"போங்க மிஸ் நீங்க ஒண்ணு. தேவையான கெமிக்கல்ஸ் வாங்கப்பணம் இல்லேன்னு இந்த வருஷம் ஒண்ணும் வாங்கலே. இன்ஸ்பெக்ஷனும் போது காலி புட்டியைக் காமிக்க முடியுமா? எப்பிடிறா பரிசோதனைகள் செய்தேன்னு புடிக்க மாட்டான்? அதுனாலே சும்மா கலர்த் தண்ணியை ஊத்தி மேலே 'விஷம்' னு லேபில் போட்டு வெச்சிருக்கேன். வயித்தெரிச்சலை கௌப்பாதீங்க, வெளியே சொன்னா வெக்கக் கேடு" என்று ஆற்றாமையுடன் பதிலிறுத்தார் இந்திரகுமார் 

சார் தொடர்ந்து, "பாதரசமும்  பினாயில் எண்ணையுந்தான் நம்மகிட்ட இருக்கிற விஷம், எப்பிடி அதை நாயிக்குக் குடுப்பீங்க. நாய்தான் அதைச் சாப்பிடுமா?" என்றார்.

"நான்  சொல்றேன்னு கோவப்படாதீங்க.னமோ வெறிபிடிச்ச நாயானாலும் அதைக் கொல்லணும்னா   கஷ்டமாயிருக்கு. வாயில்லா ஜீவன்...'' என்று கல்யாணி மிஸ் ஆரம்பித்தபோது, ஜன்னல்பக்கமிருந்து கொர்கொர்ரென்று சப்தம் வர எல்லோரும் அந்தப் பக்கம் திரும்பினார்கள்  அந்த வெள்ளை கருப்பு நாய் ஜன்னல் விளிம்பில்முன் கால்களை  வைத்தபடி நின்று , கம்பிகளிடையில் மூக்கை நுழைத்து மோப்பம் பிடித்தபடி இருப்பதைக் கண்டு 
திடுக்கிட்டுப்போனார்கள். . அப்போது அது வாயை அகலத்திறந்து அப்போது 
பெரிய கொட்டாவி விட்டுவிட்டுத் தலையைப் பின்னுக்கு இழுத்து மறைந்தது. நாயையும், அதன் பிரமாண்டமான வாயையும், சிவந்து வளைந்திருந்த அதன் நாவையும், ரம்பப் பல் வரிசைகளையும், மற்றவற்றினும் நீண்டு உயர்ந்திருந்து கோரைப் பற்களையும் அருகிலிருந்து கண்ட அதிர்ச்சியினால் ஒரு நிமிஷம் யாருக்கும் பேச்சு எழவில்லை . பிறகு பயமயக்கம் தெளிந்து, சத்தார் சார், 
"மிஸ், இதுவா வாயில்லா பிராணி? எத்தனாம் பெரிய வாய் எத்தனாம்பெரிய பல் தனக்கு இருக்குதுன்னு ஓங்களுக்கே காட்டிட்டுப்போவுது பாத்திங்களா இது வெறும் நாயில்லை மிஸ். நாய் உருவத்திலே வந்திருக்கிற ஷைத்தான். இதை ஒழிச்சாத்தான் நமக்கு விமோசனம்" என்று பயம் கலந்த ஆவேசத்துடன் சொன்னார்.

ஆனாலும் கல்யாணி மிஸ் பிடிவாதமாக,"வாயிருக்கட்டும், பல் இருக்கட்டும், ஏன் இதை கொல்லணும்? சுப்பிரமணியம் சார் சொன்ன மாதிரி பத்து நாளேலே இது தானாவே செத்துடப்போகுது. நாம ஏன் இதைக் கொன்னு அந்தப்பாவத்தை நம்ம தலையிலே கட்டிக்கணும்? பேசாமே கிராதிக் கதவைத் திறந்துவிட்டா, அது தானாகவே பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே ஓடிப்போயிடும், பள்ளிக்கூடமும் தப்பிச்சுடும் என்று சொல்லிவிட்டு, சத்தார் சார் பக்கம் திரும்பி “எங்க புராணப்படி தரும தேவதையே நாய் உருவத்திலே வரும். நம்மை சோதனை பண்ண” என்று அவருக்கும் பதில் சொன்னார்.

“மிஸ் பேச ஆரம்பிச்சப்போ எனக்கு ஒரு ஐடியா தோணிச்சு, ஆனா அது நடைமுறையில் சாத்தியமில்லே, அதுனாலே சொல்லல்லை” என்று சத்தார் சார் இழுத்தார்.

“பரவாயில்லை, சொல்லுங்க, சாத்தியமா இல்லையாங்கிறதைப் பிறகு யோசிக்கலாம். மொதல்ல ஐடியாவைச் சொல்லுங்க" என்று ராஜதுரை ஊக்குவிக்க, சத்தார் சார் தயங்கித் தயங்கித் தன் 'ஐடியா'வைச் சொன்னார்.

“இந்திய ராணுவத்தை வரவழைக்கிறது சாத்தியமில்லேன்னு முத்து சொல்லிடுச்சா. அப்பொ எனக்கு இந்த ஐடியா வந்துது... பாகிஸ்தான்லே சலாம்னு ஒரு பெரிய விஞ்ஞானி இருக்காரு... ரொம்ப மனிதாபிமானம் உடையவர்... பாகிஸ்தானுக்கு அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, அதுக்குத் தாத்தாகுண்டெல்லாம் கண்டுபிடிச்சுக் கொடுத்திருக்கிறாரு... அவருக்கு ஒரு தந்தி கொடுத்தா... அங்கேயிருந்து விமானமூலம் ஏதாவதொரு குண்டோடே இங்கே அனுப்புங்கன்னு... நம்மையும் நம்ம குழந்தைங்களையும் காப்பாத்தினா... இரண்டு நாட்டினுடைய நட்புகூட...'' அவரை முடிக்கவிடவில்லை . கல்யாணி மிஸ்ஸும் சுப்பிரமணியம் சாரும் அடிபட்ட புலிபோலப்பொங்கி எழுந்தார்கள்.

"பாத்தீங்களா இவர் சொல்றதை? நாயை அடிச்சிக்கொல்லணும்னு ஆரம்பிச்சார், இப்போ பாகிஸ்தானைக் கூப்பிட்டு நம்ம தலைமேலே அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, அதுக்குத் தாத்தா குண்டெல்லாம் போட்டு, நம்ம பள்ளிக்கூடத்தை மாத்திரமில்லை, நம்ம ஊரையே, நம்ம மாவட்டத்தையே சுடு காடாக்கி நாட்டையே பாகிஸ்தான் வசம் தள்ளப்பார்க்கிறார். அப்படீன்னா இவர் அங்கேயே போகவேண்டியதுதானே, இவர் பேச்சை சகிச்சுக்கிட்டு இனிமே இங்கே இருக்க முடி யாது, வெளிநடப்புச் செய்கிறோம்" என்று உரத்துக் கத்தி விட்டுக் கதவருகில் போனார்கள்.

கதவருகில் போனவர்கள் வெளியே வெறிநாய் இருப்பது ஞாபகம் வர, பேசாமல் திரும்ப வந்து நாற்காலிகளை ஒரு ஓரத்துக்காகச் சரசர வென்று இழுத்துப்போட்டு மற்றவர்களுக்குத் தங்கள் முதுகைக்காட்டி உட்கார்ந்தனர். உட்கார்ந்ததும், கைகளால் முகத்தைப்  பொத்திக் கொண்டு பிதுங்கிக்கொண்டிருந்த விலாச்சதைகளெல்லாம் குலுங்கக் கல்யாணி மிஸ் அழ ஆரம்பித்ததைக் கண்டு எல்லோருமே திகைத்துப் போய், என்ன செய்வதென்று தெரியாமல் வெவ்வேறு மூலைகளைப் பார்த்தபடியும் தலையைத் தொங்கபோட்டபடியும் விழித்தனர். கல்யாணி மிஸ்ஸின் கேவலைத் தவிர வேறு சப்தமில்லை . 

அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு 'ஊழ்ழ்ழ்ழ்ழ கொக்" என்ற நாயின் ஊளைச்சத்தம் கேட்டது. ராஜதுரை திடுக்கிட்டெழுந்தார். 

"மிஸஸ் கல்யாணி மிஸ், மிஸ்டர் சத்தார் சாகிப் சார், ஒங்க ரெண்டு பேரையும் வேண்டிக்கேட்டுக்கறேன். நம்ம பள்ளிக்கூட விஷயத்தை இந்தோ பாகிஸ்தான் இந்து முஸ்லீம் பிரச்சினையா ஆக்கிடாதீங்க மிஸ். சுப்பிரமணியம் சார், திரும்பி வந்து எங்க ளோட சேந்துக்கங்க, தயவு செய்து, ப்ளீஸ்'' என்று ராஜதுரை வேண்டிக்கேட்டுக் கொள்ள, இருவரும் மீண்டும் தாங்கள் நாற்காலிகளை இழுத்து, ஆனால் சத்தார் சாரைப் பார்க்காத மாதிரி வேறு திசையைப் பார்க்கிற மாதிரி உட்கார்ந்தார்கள். - "மிஸ் சொன்ன யோசனையை நான் ஒத்துக்கலே. அப் படி ஒத்துட்டாலும் யார் கிராதிக் கதவைத் திறப்பாங்க? சாவிக் கொத்து எங்கே இருக்குது பாத்தீங்களா?" என்றார் ரகுபதி சார். அவர் கேட்ட கேள்விகள் அறிவினாக்களாக இருந்தபடியால் யாரும் பதில் சொல்ல முன் வரவில்லை. 

“நம்மகிட்ட சாவி இருந்தா கூட 'கேட்'டைத் திறந்து வெறிநாயை வெளியே அனுப் பக்கூடாது சார். இந்த வெறி நாய் இங்கே இருக்கிறதனாலே இது நம்ம பொறுப்பு. வெளியிலே நம்ம ஊரிலே முப்பதாயிரம் பேர் இருக்காங்க. இதை வெளியே விட்டா அத்தனை பேருக்கும் 'டேஞ்சர்'. இது ரொம்பக் கெட்ட வெறிநாய் இந்த ரெண்டு மூணு மணி நேரத்துக்குள்ளே இத்தனை சிநேகிதமாயிருந்த எங்களுக்குள்ளே, அறிவாளிகளான ஆசிரியர்களுக்குள்ளே விரோதத்தையும் கசப்பையும் ஏற்படுத்திட்டிருக்குது. அதனாலே இதுக்கு வெறியில்லேன்னாக்கூட இதைச் சும்மா விடக்கூடாது. மொதல்லே இதை ஒழிச்சுக் கட்டினாத்தான் நாம் முன்னைப்போல இருக்க முடியும். இது நம்ம பொறுப்பு. நாம தான் இதை இங்கியே கொன்னு தீர்த்துடணும். இது நம்ம கடமை." என்று இது வரை வாய்மூடி மௌனியாக இருந்த எஸ். கலாவல்லி மூச்சு விடாமல், முகம் சிவந்து ஆவேசமாகச் சொன்னாள். கேட்ட மற்றவர், “அட நம்ம சாது எஸ். கலாவல்லியா இப்பிடிப் பேசுது!" என்று மனசுக்குள் அதிசயித்துக் கொண்ட னர். 

கல்யாணி மிஸ்ஸின் யோசனை இவ்வாறு அநாதை யாகிச் சாகடிக்கப்பட்டது. இன்பராஜ் சார் எழுந்து நின் றார். "நாய்னு சொன்னவுடனே உங்களுக்கு எந்த சொல் நினைப்புக்கு வருது, சட்டுனு சொல்லுங்க பார்ப் பம்' என்றார். 

"கல்லு " 

- என்றான் ரமேஷு தயங்காமல் 

"பார்த்தீங்களா, இதுக்கு ஆங்கிலத்திலே 'சொற்சேர்க்கை' அதாவது ‘வேர்டு அசோசியேசன்'னு சொல்வாங்க. நாம் இவ்வளவு நேரம் 'வெறி நாய் வெறிநாய்'னே சொல் லிக்கிட்டிருந்தோம். 'வெறி நாய்'னா உடனே என்ன நினைப்புக்கு வருது? 'கடி', 'சாவு', 'பைத்தியம்', 'ஊசி' இதான் நெனைப்புக்கு வருது. அதுனாலேதான் நாம் இத்தனை நேரமாய் பேசியும் ஒரு முடிவுக்கும் வரமுடியலை. என்ன புரிஞ்சுதா?" என்று வகுப்பில் மாணவர்களைக் கேட்பதுபோலக் கேட்டார் இன்பராஜ் சார். 

“நாயைக் கல்லாலே அடிக்கணும்” என்றான் ரமேஷு. 

"கரெக்ட், விஷயம் தீர்ந்து போச்சு" என்று சொல்லி வெற்றிப்புன்னகையுடன் மற்றவர்களைப் பார்த்தார் இன்ப ராஜ் சார். 

“நான் இதை மொதல்லியே நெனைச்சேன், ஆனா போன வாரந்தான் பசங்களை வெச்சு காம்பவுண் டிலே இருந்த கல் அத்தனை யும் ஒண்ணுவிடாமே பொறுக்கியெடுத்து வெளியிலே கடாசிட்டோம். அதான் நான் கம்முனு இருந்ததுட்டேன்" என்று கோதண்டராமன் சார் சொல்ல, சுசீலா தேவதாஸ் மிஸ்ஸும் 'ஆமா' என்று சொல்லி அதை ஆமோதித்தார். 

கல்லுக்கு பதிலாக எதை உபயோகிப்பது என்று ஆலோசிக்க ஆரம்பித்தார்கள். 

“நீங்க பேசிட்டிருங்க, நான் தோ வந்துட்டேன்" என்று சொன்னபடி ரமேஷு பதுங்கி வெளியேறினான். 

வெளியே இருக்கும் மைதானத்தின் நாலு மூலை களிலிருந்து நாலு ஊர்வலங்கள் பள்ளிக்கூடத்தின் கிராதிக் கதவை நெருங்கிக் கொண் டிருந்தன. ஒவ்வொரு ஊர்வலத்திலும் சுமார் இருபது பேர் இருந்தார்கள். திரு. முத்தையன் கிழக்கு ஊர்வலத்தையும், தெற்கிலிருந்து வந்ததை திரு. பலராமனும், மேற்கு ஊர்வலத்தைத் திரு. விசுவநாதனும், வடக்குக் கும்பலைத் திரு. துரைக்கண்ணு பீ.ஏ. வும் தலைமைதாங்கி வழிகாட்டி வந்தார்கள். அவர்கள் பின்னாலே அந்தந்தக் கட்சி ஊழியர்கள் பலவித சுலோகன்கள் எழுதப்பெற்ற அட்டைகளைத் தூக்கினபடி வந்தனர். தாங்கள்தான் பள்ளியைக் காப்பாற்ற ஆர்பாட்டம் செய்ய வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு வந்த ஒவ்வொரு கட்சிக்காரர்களுக்கும் வேறு மூன்று கட்சிகளும் வந்திருக்கின்றன என்பதைக் கண்டவுடன் எரிச்சல் உண்டாகி விட்டது. 

"சீக்கிரம் நடங்க, மொத எடத்தை நாம பிடிக்கணும்" என்று ஊழியர்களுக்கு உத்தர விட்டுவிட்டுத் தலைவர்கள் நால்வரும் கிராதிக் கதவை நோக்கி ஓடினர். பந்தயத்தில் காலே அரைக்கால் வினாடி முந்திக்கொண்ட திரு. துரைக் கண்ணு பீ. ஏ., 

“நாங்கதான் முன்னாடி வந்தோம், நீங்கள்ளாம் பின்னாடி போங்க" என்று மற்றவர்களைப் பார்த்து மேல் மூச்சு வாங்கினபடி இரைந் தார். 

“துரை, பதறாதேப்பா, யாராயிருந்தாலும் நியாயத்துக்குக் கட்டுப்படணும், இந்தத் தெருவிலே நாங்கத்தானே மொதல்லே நொழைஞ்சோம். நீ வேணுன்னா எங்களுக்குப் பின்னாடி மொதல்லே நின்னுக்க.'' என்று நிதானமாகச் சொல்லிவிட்டு திரு. முத்தையன் தன் ஆட்கள் பக்கம் திரும்பி, “யோவ் கன்னியப்பா, நம்ம ஆளுங்களை இங்கே வரிசையா நிக்கவை" என்று உரக்க உத்தரவிட் டார். 

"நியாயம் பேசறதுன்னா அதுக்கும் நாங்க தயார். அப்போ நாங்கதான் முன்னாடி இருக்கணும்." என்று சொல்லி புன்னகை மின்னல் ஒன்றை முகத்தில் உதறிவிட்டு, பின்னாலிருந்த தன் ஆட்களை முன்னே வருமாறு கையை ஆட்டினார் திரு. விசுவ நாதன். “இது என்னா நியா யம்? ஒனக்கு மாத்திரம் தனி நியாயமா. பின்னாலிருந்தாலும் முன்னாடி வரணு மின்னு ? இது என்ன நியாயமிங்கறேன்." என்று துரைக் கண்ணு பீ.ஏ. கோபமாக கூறியபோதும் திரு. விசுவநாதன் தன் நிதானமிழக்காமல் இன்னும் ஒரு புன்ன கையை உதிர்த்துவிட்டு, “ஒங்க எல்லாருக்கும் முன்னாடியே உங்களுக்கெல்லாம் சமாசாரம் தெரியறதுக்கு முன்னாடியே, நேத்தே, நாங்க கிளம்பிட்டோம். நமது பள்ளியை, அதிலிருக்கும் பச்சிளம் குழந்தைகளை, நம் மக்கள் வாழத் தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்து இரவும் பகலும் பள்ளியிலும் வீட்டிலும் கல்விப் பணியினால் தொண்டாற்றி வரும் ஆசிரியர்களுக்கு நேர்ந்திருக்கும். பேராபத்தை மதியாத இந்த அரசு, வேர்வையால் வயல்களுக்கு உரமிட்டு வாழும் விவசாய மக்களை, தியாக வாழ்வு நடத்தி வரும் தாய்க் குலத்தை, தினமும் ஓடாய் உழைத்து வாடும் தொழிலாளத் தோழர்களை, வஞ் சனையில்லாமல் நேர்மையுடன் தொழில் புரிந்துவரும் நடுத்தர மக்களை, முத்தனைய நாட்டுக்குச் செல்வம் சேர்க்கும் முதலாளிப் பெருமக்களை, நம் அனைவரையும் கருவேப்பிலை போலக் கசக்கி எறியும் இந்த அரசாங்க மும்...'' என்று, தான் தயாரித்துக் கொண்டு வந்திருந்த சொற்பொழிவை அவிழ்த்து விட ஆரம்பித்தார்.  

''இது என்னா நியாயம்? ஒனக்கு மாத்திரம் தனி நியாயமா. பின்னாலிருந் தாலும் முன்னாடி வரணுமின்னு ? இது என்ன நியாய மிங்கறேன்.'' 

திரு. விசுவநாதனின் இந்த அதர்ம அதிரடித்தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத திரு. முத்தையனும், திரு. துரைக் கண்ணு பீ.ஏ.வும் திகைப்பி லிருந்து விடுபட்டுத் தங்களைச் சுதாரித்துக் கொள் வதற்குள், திரு. விசுவநாதன், “உடுக்கை இழந்தவன் கை போலே உதவி உடனே பதறிக் கொடுப்பது கட்சி" என்ற குறள் எங்கள் கட்சி கீதம்...'' என்று தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார் திரு. விசுவநாதன். அவரைத் திரு. துரைக்கண்ணு பீ.ஏ. கோபத்துடன் இடை மறித்து, “நிறுத்து பேச்சை, எப்படி நீங்க நேத்தே கிளம்ப முடியும்? இன்னிக்குத் தானே நாயே உள்ளே பூந்துச்சு, இவரு நேத்தே கிளம்பிட்டாராம், இவரு சொல்றாரு நாம் கேட்டுக்கணும். எப்பிடி நேத்தே கிளம்பிடுவாரு?" என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட் டார். 

திரு. விசுவநாதன் சிறிதும் தயங்காமல், “வருமுன் காவாது வாழ்வான் வாழ்வு துரு முன் ஊசிபோலக் கெடும்' என்ற குறளே எங்களுடைய அரசியல் உயிர்மூச்சு. நாங்கள்தான் உண்மையான அரசியல்வாதிகள். வருமுன்னே காப்பவர்கள். நீங்களெல்லாம் ஸ்டேஷனில் ரயில் வந்த பின் வீட்டை விட்டுக் கிளம்பு கிறவர்கள். நான் சொல்வதை நிரூபிக்கிறேன் பாருங்கள்" என்று பதில் சொல்லிவிட்டுத் தன் கட்சி ஊழியர்களைப் பார்த்து, "ராஜசேகரா, நீ நேத்திக்கு எங்கேயிருந்து கிளம்பினே?" என்று கேட்டார். 

“செம்பாக்கத்திலேயி ருந்து' என்று ராஜசேகரன் குரல் கொடுத்தான். 

“தொரசாமீ, நீ எங்கேயிருந்து கிளம்பினே?" 

"மேல்பாக்கத்திலிருந்து தலைவரே" துரைசாமி குரல் கொடுத்தான். 

“வேலாயுதம், நீ நேத்து எங்கேயிருந்து வந்தே?'' 

“வெம்பாக்கத்திலேயிருந்து" வேலாயுதம் குரல் கொடுத்தான். 

"கோவிந்தசாமி, நீ எங்கியிருந்து நேத்துக் கிளம்பினே?" 

கோவிந்தசாமீ குரல் கொடுக்கவில்லை. ஆவலுடன் தலைவரையே பார்த்துக் கொண்டு தலையை ஆட்டிக் கொண்டு நின்றான். அவனுக்கு காது சரியாகக் கேட்காததால் தலைவர் தன்னைக் கேள்வி கேட்டது தெரிந்தி ருக்கவில்லை . மீதி மூன்று கட் சிக்காரர்களும் ஒண்ணாகச் சேர்ந்து,  “கோயிந்தா கோஓஓயிந்தா" என்று கோஷமிட்டார்கள். 

“என்னாய்யா?" என்ற கோவிந்தசாமி குரல் கொடுத்தான். 

“நீ நேத்திக்கு எங்கியிருந்து கிளம்பினே?" என்று திரு. விசுவநாதன் கூவினார். 

“கேட்டுச் சொல்றேன் ஐயா' என்று பணிவாகச் சொல்லிவிட்டுத் தன் அருகிலிருந்த சாமிநாதனை “தலைவர் என்ன சொல்றாரு?" என்று வினவ, சாமிநாதனும் கோவிந்தசாமியின் காதில் தலைவரின் கேள்வியை ஓதினான். 

கேள்வி புரிந்த சந்தோஷம் ததும்பும் முகத்தோடு கோவிந்தசாமி, “கீழ்ப்பாக்கத்துலேயிருந்து'' என்று உரத்துக் கூவி னான். 

கட்சி பேதமின்றிக் கூட்டம் 'ஹோ' வென்று சிரித்து விட்டு, “கோயிந்தா கோஓஓ யிந்தா கீழ்ப்பாக்கம் போஓஓ யிந்தா" என்று கோஷமெழுப் பியது. 

இதுவரை பேசாமலிருந்த திரு. பலராமன் பொறுமையிழந்தவராய், வேட்டியை உதறி மடித்துக் கட்டி, சட்டைக் கைகளை மேலே தள்ளிக்கொண்டே, |"அந்தாண்டை போயி நீங்கள்ளாம் நியாயம் பேசுங்க: நாயி தூந்துட்டிருக்குது, ஆசியம் பண்றாங்க, ரயிலாம் ஸ்டேஷனாம், மேல்பாக்கமாம், மண்ணாங்கட்டியாம், யோவ் வாங்கடா இங்கே, இவங்கள்ளாம் பின்னாலே தள்ளு." என்று உத்தரவிட்ட படியே, கிராதிக்கதவின் அருகில் இருந்தவர்களை ஊழியர்கள் தலைவர்கள் என்று வித்தியாசம் காட்டாமல், ஜன நாயகமாகப் பின்னுக்குத் தள்ள ஆரம்பித்தார். 

அப்போது, தன் சட்டை யை யாரோ பின்னாலிருந்து இழுக்கவே, "எந்த நாய்டா எம்மேலே கை வைக்கிறவன்!'' என்று ஆவேசத்துடன் சொன்னபடித் திரும்பினவர், 

“ஐயோ நாயீ!" என்று கூவினபடி, தரையில் எறிந்த ரப்பர் பந்துபோல் தாவி எழும் பித்துள்ளி எட்டடி தள்ளி விழுந்தார். திரு. பலராமனின் சட்டைக்கிழிசலை வாயிலே கௌவினபடி கிராதிக் கத வின்பின் நின்றிருந்த நாயைக் கண்ட கட்சி ஊழியர்கள் “ஐயோ நாயி" எனக் கூவித் தங்கள் தலைவர்களுக்குத் தாங்கள் தாழ்ந்தவர்கள் என நிரூபிக்கும் வகையில் ஒரே தாவில் பத்தடி பின்வாங்கினர். 

நடப்பதையெல்லாம் இது வரை பார்த்துக்கொண்டிருந்த நமது நிருபர் அருணகிரி, ஜோல்னாப் பையிலிருந்து குறிப்பேட்டையெடுத்து அவசரமாக எழுத ஆரம்பித்தார்: "அரசியல் தலைவர்கள் மீது வெறி நாயின் தாக்குதல்!! நால்வர் காயம்!!!" என்று அவர் குறிப்புகள் தொடங் கின. 

ஹெட்மாஸ்டர் ராஜ துரையின் அறையில் ரமேஷு பேசிக் கொண்டிருந்தான். ஆசிரியர்களின் முகங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருந்தது. ரமேஷு தான் எப்படி மெல்ல வெளியே சென்று, பின் தாழ்வாரம் வழியாக மற்ற மாணவர் களைக் கண்டு, போன வாரம் பொறுக்கி எறிந்த கற்களைச் சேகரித்து அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு வந்தான் என்பதைச் சொல்லிக் கொண்டி ருந்தான், 

“ஐயோ பாவம், குழந்தைங்க பட்டினியாயிருக் குங்க, இந்த வெய்யல்லே எப் படி கல்லெல்லாம் பொறுக்குங்க!" என்று பச்சாதாபத் துடன் கல்யாணி மிஸ் கேட் டதுக்கும், 

"கிராதிக் கதவுதான் பூட்டிக் கெடக்கே, எப்பிடி வெளி யே இருக்கிற கல்லை உள்ளே கொண்டு வருவாங்க?" என்று கோதண்டராமன் சார் எழுப் பிய சந்தேகத்துக்கும் பதி லாக, 

“கவலைப்படாதீங்க மிஸ், அல்லாரும் வீட்டுக்குப்போயி சாப்பிட்டுட்டு வந்துட்டாங்க, ஒத்தன்கூடக் கட் அடிக்கலே. ஆனா, எப்பிடி வெளியிலே போனாங்க, எப்பிடி உள்ளே வந்தாங்கன்னு மட்டும் என் னைக் கேக்காதீங்க, அ.து ஸ்டூடன்ஸ் ரகசியம், நான் சொல்லிடக்கூடாது' என்று ரமேஷு உறுதியாகச் சொல்லி விட்டான். 'இந்த நெருக்கடி முடிஞ்ச உடனே, பள்ளிக் கூடத்துக்கு அடியிலே சுரங் கப்பாதை ஏதாவது இருக்கு தான்னு தோண்டிப் பார்க்கணும்' என்று மனசுக்குள்ளே ராஜதுரை தீர்மானித்தார். அதேசமயம், 'பையன் கெட்டிக்காரன் தான், 

ஆனா கொஞ்சம் ஆபத்தானவனா இருப்பான் போல இருக்கு, சமயம் பார்த்துக் கீழே இறக்கணும்' என்ற எண்ணமும் அவருக்குத் தோன்றாம லில்லை . 

அரைமணி காலத்துக்குள் அறைக்குள் கற்கள் நிறையச் சேர்ந்துவிட்டன. முக அடையாளம் தெரியாதபடி கண் ணுக்குக் கீழே கைக்குட்டை கட்டின மாணவர்கள் பத்து பேர் ஒருவர் பின் ஒருவராய்ப் பதுக்கமாகத் தவழ்ந்து வந்து அறைக்குள் ஆளுக்கு ஒன்றாகக் கல் நிரப்பிய புத்தகப் பைகளை வாய் பேசாமல் வைத்துவிட்டுபோனார்கள். தன்னுடைய மாணவர்களின் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் கண்டு பெருமிதம் அடைந்த ராஜதுரை, அதே சமயம் 'அடடா, இதைக் கல்வி மந்திரி பாக்க முடியாமல் போச்சே' என்று சிறிது வருத்தமும் அடைந்தார். பள்ளிக்கூட வளர்ச்சி யைப் பற்றின அவரது சிந் தனை ஓட்டத்தைக் கலைக்கும் வகையில், 

“நாம் ரூமுக்குள்ளே இருக் கோம், நாய் வெளியிலே உலாத்திக்கினு இருக்கு, ஒரே ஒரு ஜன்னல்தான் இருக்குது, நாம் ஆறேழு பேர் இருக்கோம், எப்படி எல்லாரும் நாய் மேலே கல்லை வீச றது?" என்று புதிதாக ஒரு பிரச்சினையை ஆரம்பித்து வைத்தார் ரகுபதி சார். 

இன்பராஜ் சார் எழுந்து நின்றார். "ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, அதை நாம் எந்த மாதிரியான கேள்வி உருவத்தில் வடிக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. ரகுபதி சார், உங்களுக்கு என் வாழ்த்துக்கள், கிரீட்டிங்க்ஸ் இல்லை, கங்க்ராசுலேசன்ஸ். பிரச்சினையை நீங்க சரியாக முன் வைத்தீர்கள். சரியான கேள்வி யென்றால் அதிலேயே பாதி விடை அடங்கியிருக்கிறது. என்ன புரிஞ்சுதுங்களா?" என்றார். 

“உள்ளேயிருந்து நாம கல்லை எறிய முடியாதுன்னா வெளியிலே போய் எறிய. ணும்" என்று ரமேஷு தயங் காமல் பதில் சொன்னான். 

“உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, நான் கல்லை வீச மாட்டேன். இதுவரை என் ஆயுசிலே நான் யாரையும் கல்லாலே அடிச்சதில்லே, இன்னிக்குப்போய் அடிக்கப் போறதும் இல்லை .'' என்று கல்யாணி மிஸ் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். 

“தேவையில்லை மிஸ், நாங்க ஆம்பிளைங்க இருக்கோம், நீங்க கல் வீச வேண்டி யதில்லை. சும்மா அப்பப்போ எங்களுக்கு ஆளுக்கு ஒரு கப் காப்பி போட்டுக் குடுத்தால் போறும்." என்று சிரித்துக் கொண்டே சமாதானம் பேச வந்த சுப்பிரமணியம் சாரைக் கல்யாணி மிஸ் கோபத்துடன் விழித்துப்பார்த்து, 

“இந்தாங்க சார், வீணா ஆம்பிளை பொம்பளைன்னு வம்புக்கு இழுக்காதீங்க. நீங்க என்ன ஒலகத்திலே இருக்கிற பொம்பளைங்க எல்லாம் ஒங்க பெண்ஜாதி மாதிரி பேசறீங்க? பொம்பளைன்னா ஒங்களுக்கெல்லாம் காப்பிப் போட்டுக் கொடுக்கணும்னு எழுதி வெச்சிருக்குதா என்ன?" என்று ஆரம்பித்தார். 

'ஒலகத்திலே இருக்கிற பொம்பளைங்க எல்லாம் தனக்குப் பெண்ஜாதி மாதிரி' "தேவையில்லை மிஸ், நாங்க ஆம்பிளைங்க இருக்கோம், நீங்க கல் வீச வேண்டியதில்லை. சும்மா அப்பப்போ எங்களுக்கு ஆளுக்கு ஒரு கப் காப்பி போட்டுக் குடுத்தால் போறும்.'' 

என்பதைக் கேட்ட சுப்பிரமணியம் சாருக்கு முகம் வெளிறி மூச்சு முட்டித் தலை சுற்ற, “ஆண்டவனே, என்னமோ தமாஷுக்குச் சொன்னா விபரீதமா எடுத்துக்கறீங்களே' என்று ஈனக்குரலில் முறையிட்டுவிட்டுப் பிறகு, ஏற்பட்ட மன உளைச்சலைத் தீர்க்க அறைக்குள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறு, 'பெண்களுக்கு ஆண்டவன் ஏன் நகைச்சுவையை வைக்க மறந்துவிட்டான்' என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட் டார். 

“வெளியே போய் வீசணுமா, வெளியிலே ஷைத்தான் நாய் இருக்குதே?" என்று சத்தார் சார் கலவரத் துடன் கேட்டார். 

“நாய் உலாத்திக்கினு தானே இருக்குது? அது எதிர் சாரி வகுப்பறைகள் கிட்டப் போகும்போது நாம் வெளியே வந்து கல்லை வீசுவோம். அது நம்ம பக்கம் வரும்போது நாம ரூமுக்குள்ளே வந்துடலாம்" என்று மனோகரன் சார் சொன்னதும் எல்லோரும் கவலை நீங்கினவர்களாய் அந்த யோசனைக்குத் தங்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்தார்கள். 

இன்பராஜ் சார் எழுந்து தன் அருகிலிருந்த கல் பையிலிருந்து ஒரு பெரிய கல்லாகப் பார்த்துப் பொறுக்கி எடுத்து, “நமது மாண்புக்கும் மதிப்புக்கும் உரிய தலைமை ஆசிரியர் திரு. ராஜதுரை எம்.ஏ. எட்ஸட்டராஅவர்களை முதல் கல்லை வீசி வெறிநாய் ஒழிப்புச் செயல் திட்டத்தை துவக்கி வைக்குமாறு உங்கள் சார்பிலும், பள்ளியின் சார்பிலும் என் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறிக் கல்லை ராஜதுரையிடம் சமர்ப்பித்தார். எல்லோரும் கைகொட்டி ஆமோதித்தார்கள். 

வெறிநாய்க்குத் தன்னை முதற்பலியாக்க முயற்சிக்கும் ஆசிரிய இனத்தை மனசுக்குள் சபித்துக்கொண்டு, இந்தப் பிராண சங்கடத்திலிருந்து எப்படித் தப்புவது என்று யோசித்தவராய், மிகவும் கஷ்டப்பட்டு முகத்திலே கொஞ்சம் சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்தபடி, “ஆசிரியப் பெருமக்களான நீங்கள் என்மீது காட்டுகிற பெரு மதிப்புக்கும் அன்புக்கும் நான் ஆழ்ந்த நன்றி உள்ளவனாயிருக்கிறேன் என்பதை முதலில் எடுத்துரைக்கக் கடமைப் பட்டிருக்கிறேன் என்று தெளிவாகவும் பணிவாகவும் உறுதி யாகவும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் எனக்கிட்டிருக்கும் மகத்தான பணி...'' என்று ஆரம்பித்த ராஜதுரையின் பேச்சை 

“கோயிந்தா கோ ஓஓ யிந்தா" என்ற அசரீரியான கோஷம் வெளியிலிருந்து வரவேற்றது. ராஜதுரை திடுக்கிட்டு பேச்சை நிறுத்தி உட்கார்ந்துகொண்டார். சில வினாடிகளுக்குப் பிறகு மீண்டும் கோஷம் கேட்டது. 'இன்னிக்கோட என் ஆயுசு முடிஞ்சுது போல இருக்குதே' என்று அவர் மனசு திகிலுடன் கைகளைப் பிசைந்துக்கொண் டது. 

"நல்ல சகுனம், யாரோ திருப்பதி போறாங்க. இன்னிக்கி இந்த நாயாலே வந்த டேஞ்ஜர் போன நாமகூட" என்று ஆரம்பித்த கோதண்ட ராமன் சார், கல்யாணி மிஸ்ஸின் வேண்டுதல் ஞாபகம் வரச் சட்டென்று நிறுத்திக் கொண்டார். 

"நீங்க கல்லை ஆசீர்வாதம் செய்து குடுங்க, மீதியை நாங்க பாத்துக்கறோம்'' என்று ரமேஷு சமயோசிதமாக மற்றவர்கள் கவனத்தைத் திசைதிருப்பவும் ராஜதுரை மனமகிழ்ந்து "உங்களுக்கு மகத்தான வெற்றி உண்டாகட்டும்" என்று ஆசீர்வதித்துத் தொட்டுக்கொடுக்கவும். எல்லோரும் (கல்யாணி மிஸ் தவிர) கல் பைகளை மாட்டிக்கொண்டு, 'மாணவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்து விட்டோம்' என்ற உயரிய எண்ணத்தின் கம்பீரப் பளு கால் களைக் கனக்க, அறையை விட்டு மெல்ல வெளியே வந்தனர். 

எதிர்சாரி வகுப்பறை ஒன்றின் அருகில் அந்த நாய் உடம்பை வளைத்து விலாரணத்தைச் சாவதானமாக நக்கிக் கொடுத்துக்கொண்டி ருந்தது. வெறிநாய் ஒழிப்புக் குழுவின் தரப்பிலிருந்து கற்கள் நாலு திசைகளிலும் பறந் தன. இந்தத் தாக்குதலை எதிர் பாராத நாய், ஒரு கல்கூட அதைத்தாக்காத போதும் விபரீதமாகச் சப்தம் செய்தபடித் துள்ளி எழுந்து சதுக்கத்தில் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. பல கற்கள் வகுப்பறைக் கதவுகளின் மேலும், ஜன்னல்கள் வழியாக மாண வர்கள் மேலும் விழ, மாண வர்களும் வெறி நாய் ஒழிப்புச் செயல்திட்டத்தில் உற்சாகமாக பங்கேற்க முன் வந்தனர். அவர்கள் வீசின கற்கள் நாய் இருந்த, இருக்கப்போகிற இடங்களையும் ஒழிப்புக் குழுவையும் நோக்கிப் பறந்தன. கற்கள் தவிர பல ஏவுகணை கள் வீசப்பட்டன. நோட்டுப் புத்தகங்கள், ரூல் தடிகள், இங்க்கி புட்டிகள், கண்ணாடிக் குண்டுகள், பம்பரங்கள் எல்லாம் பல திசைகளிலும் பறந்தன. தாங்கள் வீசும் கற்களும் வேறு பல பொருள்களும் ஆகாயத்தில் பறப் பதைக் காணும் ஆனந்தமும், நாய் அலறி அங்குமிங்கும் துள்ளித் தாவி ஓடுவதைக் காணும் சந்தோஷ வெறியும், கற்கள் கதவுகள் மேல் மோதும் ஒலிகளையும் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழும் ஓசைகளையும் கேட்கும் இன்பமும், தங்கள் கோஷங்களைக் கேட்கும் சந்தோஷமும் ஒன்று சேர, ஆசிரியர்களும் மாணவர்களும் நாயையும் அதைப்பற்றின பயங்களையும் அறவே மறந்து, அதி உற்சாகத்துடன் வேட்டி புடவைகளை வரிந்து கட்டி, பற்கள் தெரியச் சப்தமாகச் சிரித்தபடியும் முகத் தை வலித்துக்கொண்டும் ஒரு வரை ஒருவர் ஊக்குவித்துக் கொண்டும் கல்லெறிவதில் முழுமூச்சுடன் ஈடுபடலாயினர், 

கட்சி பேதம் பாராமல் வெறிநாய் எல்லோரையும் கடிக்கும் என்பதாலும், அனைவரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் கிராதிக் கதவை அடைந்திருந்தனர் என்பதாலும், தடியடி கண்ணீர்புகை துப்பாக்கிச் சூடு சித்திரவதை விஷவாயுப் பிரயோகம் செய்து வீரமேற்றப் போலீசு இல்லையென்பதாலும் நான்கு தலைவர்களும் ஒரு சமரச முடிவுக்கு வந்திருந் தனர். நான்கு மாற்றுக் கட்சிகள் இணைந்து செயல் படும் இந்த மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காட்சியைக் காண ஊரே திரண்டு வந்திருக்க வேண்டும். பொது மக்களுக்கு வரலாற்று முக்கியத்தில் ஈடுபாடு இல்லாததனாலோ என் னவோ, யாரும் வரவில்லை . வழக்கமாக மேயும் கழுதை களே மைதானத்தில் தத்தித் தத்தி நடந்து மேய்ந்து கொண் டிருந்தன. 

கிராதிக் கதவிலிருந்து பாதுகாப்பாகப் பதினைந்து அடி தள்ளி நான்கு வரிசை களாகக் கட்சி ஊழியர்கள் அணி வகுத்து நின்று கோ ஷங்கள் எழுப்பினபடி இருந்தனர். 

"வெறிநாய்... ஒழிக!" "முடிசூடா மன்னன் முத் தையன்.... வாழ்க!'' 

“பள்ளிக்குள் வெறிநாயை விரட்டிய பாதகர்கள்... ஒழிக' | 

“பள்ளிக் காவலர் பலரா மன்... வாழ்க!" 

“தியாகச் செம்மல் துரைக் கண்ணு பீ.ஏ.... வாழ்க!" 

“மாணவர் விரோதி முத்தையன்... ஒழிக!" - “விளையாட்டு வேந்தன் விசுவநாதன்... வாழ்க!" 

"மாணவர் உயிரோடு விளையாடும் பள்ளி நிர்வா கம்... ஒழிக!" | 

இப்படியும் இன்னும் பல விதமான கோஷங்கள் ஒன்றோடொன்று பின்னி எழுந்துவானைப் பிளந்தன. 

இடையே சாமிக் கண்ணுவுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட, பக்கத்திலிருந்த நடேசனை நோக்கி, “ஏம்பா , நடேசா, புத்தியிருக்கிற நாயின்னா மனுஷாள் சொல்றதைக் கேக்கும், ஜுஜுன்னா ஓடிவரும், உக்காருன்னா உக்காரும். இது பைத்தியக் கார நாயிங்கறாங்களே, நாம ஒழிகன்னா அதுக்குப் புரியுமோ?" என்று கேட்டான். 

"அதெல்லாம் தலைவரு பாத்துப்பாரு, நீ நல்லா சத்தம் போடு, அது அவருக்குக் கேக்கணும், அதான் முக்கியம், சொல்லு, வெறிநாய்... ஒழிக'' என்று நடேசன் சொல்லிக் கோஷமெழுப்புவதில் முனைந்தான். 

இந்தச் சமயந்தான் பள்ளி யுள்ளிருந்து பறந்து வரும் கற்கள் ஆர்ப்பாட்டக்காரர் களைத் தாக்க ஆரம்பித்தன! 

"நாய் கல்லடுத்து அடிக்குது டோய்!" என்று அடி பட்ட முருகேந்திரன் அலறினான். 

"தாக்குங்கடா, வுடாதீங்க" என்று கத்திக்கொண்டு 'டைகர்' அண்ணாமலை கற் களைப் பொறுக்கிப் பள்ளிக் குள் எறிய ஆரம்பித்தான். 

"உதவிக்கீன்னு வந்தா நம்மையே கல்லால அடிக்கி றாங்க பாத்தியா, இந்தப் பள்ளிடப் பசங்களுக்கும் 

வாத்தியான்களுக்கு என்னா திமிராப் போச்சு பாத்தியா, போடுங்கடா" என்று உற்சாகப் படுத்தினபடி எத்தி ராஜ் தானும் கற்களை வீசத் தொடங்கினான். அதைப் பார்த்த மற்றவர்களும் இங்கும் அங்கும் ஓடிக் கற்களைப் பொறுக்கிப் பள்ளிக் கூடத் தின்மேல் வீசத் தொடங் கினர். 

ராஜசேகரன் எறிந்த கல் திரு. துரைக்கண்ணு பீ.ஏ. வின் முகத்தைத் தாக்க, அவர் மூக்கு உடைந்து ரத்தம் பெருக, 'ஐயோ இத்தனை ரத்தமா!' என்ற ஆச்சரியத்தி னால் அவர் உடனே மூர்ச்சை யானார். 

"அமரர் துரைக்கண்ணு பீ.ஏ. வாழ்க!" என்று கூவின படி அவருடைய கட்சிக் காரர்கள் திரு. பலராமனின் கட்சி ஆட்.களைத் தாக்க ஆரம்பித்தனர். 

'மூணு காலம் ஸ்டோரி கிடைச்சுட்டுது, இது போதும். பேராசைப்படக் கூடாது' என்கிற சந்தோஷத் திருப்தி குதிகாலைச் சுண்டி விட நமது நிருபர் போஸ்டாபீஸை நோக்கி ஓட ஆரம் பித்தார். --------------------------------------------------------------------------------------------------

136 
கணையாழி 
நனவிடை தோய்தல்'- ஓர் அறிமுகம் - இந்திரா பார்த்தசாரதி 
--- வெளியீடு, 375.10, ஆர்க்காடு சாலை', சென்னை 
20 and) 
என் பிறந்த மண்ணின் நேசிப்பு என் தவம். இந்தத் தவ வினையுரு சேர்ந்ததுதான் எழுத்து ஊதியம்' என்று 'நனவிடைதோய்தல்' என்ற தம் நூலின் முன்னீட்டில் கூறும் எஸ். போ.. ஈழத்தின் ஐம்பதாண்டுகளுக்கு முந்திய அன்றாட வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறார். இப்புகைப்படம் கலைஞனுடைய நுண்ணுணர்வில் விளைந்த சொல் நேர்த்தியுடன் கூறப்படுவதால், ஓர் அதிசயக் கலைப் பரிமாணம் பெறுகிறுது 

----- ஒரு கட்டுரைக் கோவையன்று இதை ஒரு நடைச் சித்திரத் தொடராகவும் கொள்ள முடியாது 
-- தேர்ந்த கலைஞனின் impressionistic Jottings' என்று சொல்லலாம். ப்ரௌஸ்டின் எழுத்துக்களைப் படித்தவர் களுக்கு நான் சொல்ல வருவது புரியக்கூடும். 
இந்நூலில் வருகின்ற மாந்தர் அனைவரும் சாமான்ய மக்கள். பலமும், பலகீனமும் நிறைந்தவர்கள். சிவருக்கு அவர் பலமே. பலகினமாகவும், பலருக்கு அவர்கள் பலகீனமே பலமாக பமிருக்கின்றன. இவர்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள், இவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பது போன்ற மதிப் பட்டுத் தீர்ப்புகள் எவையும் எஸ்.பொ. வழங்கவில்லை. இவர்களில் ஒவ்வொருவரையும் நம்மால் நேசிக்காமல் இருக்க முடியாது. அப்படி நேசிக்க வைத்திருப்பதே இரு.எஸ்.பொ.வின் கலை வெற்றி.
'நனவிடை தோய்தல்' ஒரு சமூகத்தின் கதை. இன்று சர்வ தேச அரங்கில் அதிகம் பேசப்படுகின்ற ஒரு சமூகத்தின் கதை ஒரு சமூகத்தைப் பற்றி நன்கு அறிய வேண்டுமென்றால், அதன் கலாச்சாரத் தொன்மையையும், அச்சமூகத்தைச் சார்ந்த ஒவ்வொருவரிடத்தும் ஊடுருவி நிற்கும் கலாச்சாரப் பிரக்ஞைத் தொடர் நிகழ்வையும் சரிவரப் புரிந்து கொள்ளுதல் அவசியம். இந்நூலைப் படித்த பிறகு தான், இன்றைய ஈழ மக் களைப் பற்றித் தெரிந்து கொள்ள எனக்குச் சாத்தியமாயிற்று. 

இவ்விதழில் வெளியாகியிருக்கும் 'போர்' என்ற 'நனவுக் குமிழி'யைப் படிக்கும்போது, நமக்குள் பல கேள்விகள் எழலாம். எஸ்.பொ சொல்ல விரும்புவது என்ன? வெறும் 'தேங்காய்ப் போரை'ப் பற்றித்தானா? அல்லது யாழ்ப்பாணம், வெறும் பனைமரக் கலாச்சாரம் மட்டுமன்று என்று நிரூபிப் பதுதான் அவர் குறிக்கோளா?
இன்றைய யாழ்ப்பாண நிகழ்வுகளை 'போர்' என்ற இந் நடைச் சித்திரப் பின்னணியில் சிந்தித்துப் பாருங்கள், அப்படியானால், இது வெறும் நடைச்சித்திரமா, அல்லது உருவகமா? உங்கள் சிந்தனையின் ஆழத்தைப் பொருத்தது. இந் நினைவு அலையின் குதியன், குத்து' பெறும் கலைப்பரிமாணம், 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்பது போல.

போரைப் பற்றிச் சிறிது சொல்லியாகவேண்டும். இன்று நடக்கும் தேர்தல் போர் போல், ஒரு கிராமத்தில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே நிகழும் போட்டிதான் தேங்காய்ப் போர். கைக்கு அடக்கமான, வலுவான தேங்காய் ஒன்றை ஒவ் வொரு கோஷ்டியும் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு கோஷ்டிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள தேங்காய்களை ஒரே வீச்சில் உடைக்க வேண்டும். அதிகத் தேங்காய் உடைத்தவுடன் வெற்றிப் பெற்ற பலவான் கிராமத்துச் சமூகம், இரண்டாகப் பிரியும், அந்தக் கோஷ்டியை ஆதரிப்பதற்காக, சமூக அந்தஸ்து, வேளாண்மை, இவை அனைத்தும், இத் தேங்காய்ப் போரின் வெற்றி, தோல்வியின் அடிப்படையில் நிர்ணயமாயின. மனிதர்களுக்கு மட்டுமன்று, தென்னை மரங்களுக்கும் பட்டப்பெயருண்டு. ஒரே வீச்சில் பதினெட்டுத் தேங்காய்களை வீழ்த்தும் போர்த் தேங்காயைத் தரும் மரம், 'பதினைட்டடியான்' 'நாற்பதடியான்' என்ற பட்டம் தாங்கிய மரம் ஒன்றைத் தாம் மிகுந்த 'பக்தி'யுடன் நோக்கியதாக எஸ்.பொ. நினைவு கூர்கிறார்! தமிழகக் கலாசாரத்தில் (இந்தியத் தமிழகம் உள்பட) அன்றிலிருந்து இன்றுவரை பட்டங்களுக்குப் பஞ்சமில்லை என்று தெரிகிறது. இக் கட்டுரை' ('கட்டுரை' என்று சொல்லலாமா) முழுவதும் எஸ்.பொ.வின் மிக மெலிதான நகைச்சுவை இழைந்தோடுகிறது.

இதில் வரும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் மிகச் சாதாரண மக்கள். ஆனால் அவர்களுடைய அசாதாரண, ஒவ்வொருவரையும் அவரவர்களுடைய மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட் இம் வித்தியாசமாகக் காட்டும் தனிப்பண்பு, எஸ்.பொ.வின் எழுத்து நளினத்தின் மூலந்தான் புலனாகின்றது. 'நூறு குருவிகளை ஒரே தோட்டாவினால் சிலாவிச் சுட்டு வீழ்த்திய சாதனையாளராகத் தம்மை வருணித்துக் கொள்ளும் 'ஓட்டை' நாகேசர், அக்கிராமத்தார் அனைவராலும் அதிகாரப் பர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 'நாரதர்', 'போர்' தொடங்குவதற்குக் காரணமாக இருப்பவரும் அவர்தான். அவரே இரண்டு பகுதிக்கும் பொதுவான 'நடுவர்'. இப்போரின் 'சூத்திரதாரி', 'கண்ணபரமாத்மா' என்று அவர் சித்தரிக்கப்படுகிறார்.

இத்தொகுதியில் வரும் ஒவ்வொரு சித்திரமும் தனித்தனி நிகழ்வாகத் தோன்றினாலும், நூலைப் படித்து முடித்த பிறகுதான், நூலின் கருத்து முழுமையும், எஸ்.பொ.வின் பார்வையில் காணும் பிரபஞ்ச வீச்சும் புலனாகும். ('போர்' பக்கம் (கணையாழி) : 92_104) - இந்திரா பார்த்தசாரதி 


நவம்பர் 1993 
139