தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, February 25, 2017

தமிழ் சிறுகதை 10 - சி.சு. செல்லப்பா

AUTOMATED GOOGLE-OCR from

104-ezhuththu.pdf
தமிழ் சிறுகதை 10
சி.சு. செல்லப்பா

சிறுகதைமணிக்கொடி மூன்றாவது ஏட்டில் (28.4.1935) கு.ப. ராஜகோபாலனின் 'சிறுகதை’ என்ற கதை வெளிவந்தாலும் அதுக்கு முன்பே கு.ப.ரா"சுதந்திரச்சங்கு வாரப் பதிப்புபத்திரிகையில் மூன்று கதைகள் எழுதி இருக்கிறார். குடும்ப சுகம் (23.3.1984) நூர் உன்னிஸா (30.3.1934) தாயாரின் திருப்தி (13.3.1934) ஆகியவை. நான் ஒரு தவறு செய்து விட்டேன். 1935ல் வெளிவந்த சிறுகதை மணிக்கொடி முதல் ஏட்டில் வெளியான என் கதை "ஸரஸாவின் பொம்மை" கதையை ஆராயுமுன், அதாவது பிச்சமூர்த்தியின் 'முள்ளும் ரோஜாவும்" கதையை பார்த்தபோதே, கு.ப.ரா. வையும் பார்த்திருக்க வேண்டும்.
கு.ப.ரா. வை அவரது 'நூர் உன்னிஸாவை வைத்துத்தான் பார்க்கவேண்டும். அது "சுதந்திரச்சங்கு'வில் இரண்டாவதாக வெளிவந்தாலும் அதுதான் முதலில் அவர் எழுதிய கதை. "குடும்ப சுகம்" பின்னால்தான் எழுதியது என்பது பிச்சமூர்த்தி கொடுத்த தகவல். ஆகவே நூர் உன்னிலா சிறுகதைக்கு என்ன பங்கு செலுத்தியது என்று பார்ப்போம். குளத்தங்கரை அரசமரம், என்னை மன்னித்து மறந்து விடு, மலரும் மணமும், ஊமச்சி காதல், கேதாரியின் தயாார், முள்ளும் ரோஜாவும், தபால்கார அப்துல் காதர் ஆகிய இதுக்கு முன் நாம் பார்த்த கதைக்குப்பின்வந்த கதை நூர் உன்னிஸ்ா.


இதுதான்முதல் காதல்கதை என்றுநான்கருதுகிறேன். அதாவது மணமாகாத இருவரின் உறவு சம்பந்தப்பட்டது. "மலரும் மணமும்" 'முள்ளும் ரோஜாவும் விஷயம் வேறு. மணமான நிலையில் ஆசை வெறியில் ஏற்பட்ட பின்விளைவுகள் பற்றியது. 'ஊமச்சி காதல்" தமாஷானது என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். மற்ற கதைகள் பிரச்னைகள் வேறானவை. ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பமாக வாழ்க்ைையத் தொடர மணமுறை ஒரு சமுதாய நியதியாகஎழுத்து -

கைக்கொள்ளப் பட்டு வருகிற நிலையில், அந்த வாழ்க்கை சக்கரம் சரியாக சுழல பெரியோர் பெற்றோர், குணம் தரம் பார்த்து,அறிவு பூர்வமாக அந்த உறவை நிர்ணயிக்கும்நடைமுறை இருந்து வருகிறது. அதிலிருந்து வேறுபட்டு ஆணும் பெண்ணும் தாமே குணம் பார்த்து தரம் பார்த்து, பரஸ்பரம் அறிந்து உணர்ச்சி பூர்வமாக மனம் கொடுத்து தங்கள் வாழ்க்கைத்துணைகளை தேர்ந்தெடுத்து குடும்ப அமைவது இன்னொரு நடைமுறை. முன்னதுக்கு பெற்றோர் பொறுப்பு; பின்னதுக்குதாங்களேபொறுப்பு. பின்னதை காதல் அடிப்படையில் ஏற்பட்ட உறவு என்கிறோம். பழைய புராண, சரித்திர, இலக்கியத் துறைகளில் இதுக்கு இடம் இருந்திருப்பது தெரியும் ஆனாலும், தற்கால சமூக வாழ்வில் அதுக்கு இடம் பொருட்படுத்தத் தக்கதாக இருந்து வரவில்லை. இன்று வரையிலும் கூட அது பேசும் படியாக பாதிப்பு விளைவித்திருப்பதாகவும் சொல்வதுக்கில்லை.
இந்த நிலைமையில் நூர் உன்னிலா வெளி வந்தது. நூர் உன்னிஸாவில் “டீன் ஏஜ்" என்கிற வளர்பருவ மயக்கம், அது நீடித்து வளர்ந்து உக்ரமாகி தாங்கள் பகுத்தறிந்து உணர்ந்த ஒரு உணர்ச்சித் தீவிரம், அதன் பயனாக அவர்கள் உறவிலே ஏற்பட்ட முடிவு ஆகியவை: சேர்ந்து ஒரு சுத்தமான காதல் கதை உருவாகி இருக்கிறது. இதிலே ஏற்பட்ட சிக்கலும் புதுவிதமானது அன்றைக்கு, இந்த கதையின் உள்ளடக்கத்தை நான் சொல்வதைவிடகதையின் முடிவில் வரும் கடிதமே கலைப்பாங்குடன் சொல்லிவிடுகிறது:-
இக்கடிதத்தை என்வாக்காவும் அடையாளமாகவும்நீவைத்துக் கொள்ளலாம். நாம் திருச்சியில் சிறு குழந்தைகளாக விளையாடியபோது என்மனதில் உன்னிடம் ஏற்பட்ட பற்று என்னை விட்டு இன்னும் அகலவில்லை ஏனென்றால் ஸ்தா உன் உருவம் சிலைபோல என்முன்நிற்கிறது. நித்திய இளமையோடு உன்னுடன் விளையாடுவது போலவே கனவு காண்கிறேன். உன்னை மற்றொரு முறை இவ்வுயிரில் பார்க்க வேண்டுமென்ற அவாவும் நிறைவேறி விட்டது. இனி என் நாட்களை பூர்வம் ஜெபுன்னி ஸாவைப் போல கழிக்கப் போகிறேன். தாயாரிடம்நீ கலியான மில்லையென்று சொன்னது எனக்கு திருப்தியைக் கொடுத்தது. இ னி மேல் நீ இன்னுமொரு ஸ்திரீயுடன் பேசாது உன் வாழ் நாட்களை என் மனத்தோடு மட்டும் லயிக்கச் செய்துகழிப்பாயானால் நானும் சோர்வின்றி வாழ்வேன். அப்படியே செய்கிறேனென்று நீ

எனக்குப்பதில் எழுத வேண்டாம். நீ செய்வாயென்று எனக்கொரு தீவிர நம்பிக்கை இருக்கிறது. அதே என் உயிர்நாடி, நான் மெய்மறந்து உன்னையே நினைக்கிறேன். ஆனால் நாமிருவரும் இவ்வுடலில் ஸதிபதிகளல்ல. சரீர இச்சைவேண்டாம். பூர்ணமாக என் ஆகாகத்தில் ஜொலிக்கும் சுகச்சந்திரனுக்குக் களங்கமுண்டாக்காதிரு, சரிதானே?
இப்படிக்கு நூர் உன்னிஸ்ா
கதாநாயகன் சொல்வதாக அமைந்தகதைமுடிவில் வரும்
வரிகள் இவை:
“என் மனமோகினியின் கட்டளைப் படி நான் உலக வழிகளில்திரிந்து வருகிறேன். நான் செய்யும் காரியங்களிலும் நான் நினைத்த மாத்திரத்தில் என் முன்தங்கப்பதுமை போல வந்து நின்று என்னை உத்ஸாகப் படுத்துகிறாள். என் சோர்விலும் என் மனதின் முன் குதித்துக் கொண்டு வந்து என்னை ஆற்றுகிறாள்.
லைலா மஜ்நூன், ஷெரீன் பர்ஹாத், ரோமியோ ஜூலியட் கதைகள் நமக்குத் தெரியும். இளம்பருவகாதல்நிறைவேறாமல் மனம் முறிந்து சோககரமாக வாழ்க்கை முடிவுகள் அவர்கள் உறவில், அது மாதிரி முடிந்திருக்க வேண்டிய ஒரு சம்பவம்தான் இதுவும், முதலில் காதலுக்கு இடம் இல்லாத காலம். இரண்டாவது, முன் சொன்னவர்களிடையே அந்தஸ்து வித்யாசம். குடும்ப விரோதம் இவை அவர்கள் உறவுக்கு தடையாக நிர்ணயிக்க, இங்கே ஜாதிக்கும் மேலாக மதம் இடையே சுவர் எழுப்பிய நிலை. நடப்பு ரீதியாக பார்த்தால் சாத்தியமே இல்லாதது அன்றைக்கு.
அவர்களின் காதல் சாத்யமாகாதது இருக்கட்டும். அத்தகைய காதல் ஏற்படுவதுக்கான பகைப்புலமே ஏற்பட வழி இல்லாத காலம் என்றும் சொல்வேன். சமுதாயக் கட்டுப்பாடுகள் அவ்வளவு அமுக்கினசந்தர்ப்பம். விதிவிலக்குகள்இருந்ததாஎன்பதுகூட எனக்கு சந்தேகம்தான். கேள்விதான். 'மலரும் மணமும் பிரச்னைக்கே களம் இல்லாத போது'நூர் உன்னிஸா’ பிரச்னைக்கா வாய்ப்பு? ராமையா, பிச்சமூர்த்திக்கு மேலே ஒரு படி போய்விட்டார்கு.ப.ரா.தன் கதைக்கு விஷயம் கரு தேர்ந்தெடுப்பதில், கலைஞன் பார்வையிலே கோணங்கள் மதிப்புகள், உணர்ச்சிகள் காலதேச வர்த்தமானத்துக்கு ஏற்ப மாறி வருவதையும் விரிவடைவதையும் நாம் பார்க்கிறோம்.எழுத்து - சி.க. செல்லப்பா
கு.ப.ரா. கதையில் கோணம் மாறுதல் குறிப்பிடத்தக்கது. காதல் வழி மணம் என்றால், அதுவும் பெற்றோருக்கு பிடிக்காத, சமூகம் விரும்பாததாக இருந்து விட்டால், அதில் தோல்வியுற்று மனமுறிந்து காதலர்கள் தங்களை அழித்துக் கொள்வது அல்லது பிறரால் அழிக்கப்படுவது (அனார்கலி விஷயம்) நடந்து வாழ்வுமுடிவதுதான் கையாளப் பட்டிருக்கிறது. துஷ்யந்தன் சகுந்தலை காதல்கூட வேறு விதமான, ஒரு தரப்பின் குற்றத்தால் துக்ககரமாக ஆகிவிடுகிறது. ஆனால் கு.ப.ரா. இந்த பழசாகிவிட்ட கோணங்களிலிருந்து தன் பார்வையை திருப்பி புதுக்கோணத்தில் பார்க்கிறார். மேலே குறிப்பிட்ட கடிதம் அதை நிரூபிக்கிறது சிறுவயதில் ஏற்பட்ட பற்று, அவனை பனிரெண்டு வருஷங்களாக பார்க்க விட்டாலும் அவனைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும், வளர்ந்து அவன் நினைவாகவே கனவாகவே என்றோ ஒரு நாள் மற்றொருமுறை பார்த்தாலே போதும் என்று எதிர்பார்த்து வாழ்ந்து அந்த கணம் கிடைத்ததும் அதாவ்து பின் அண்ணன் கல்யாணத்தன்று அவனை சந்திக்கும் சில விநாடிவாய்ப்புக்குப்பின்தன்மனநிறைவைப் பெற்று தன் காதலின் பரிசை பெற்றுவிட்ட திருப்தியுடன் தன் மீதி வாழ் நாளை கழிக்க முடிவு செய்து "சோர்வின்றி வாழ்வேன்" என்று தன் காதலனிடம் சொல்லும் அளவுக்கு அவள் என்ன மனதிடம் கொள்கிறாள்! அது மட்டும் இல்லை. அவனுக்கும் ஆணையிடுகிறாள், அவனும் தன் மனதோடு மட்டும் லயிக்கச் செய்யும் படியும் தன் லட்சியத்துக்கு மாசு ஏற்படாதபடி நடந்து கொள்ளும் படியும். அவனும் அந்த ஆணையின்படி நடந்து வாழ்ந்து சோர்வு இன்றி மணிநிறைவில் வாழ்கிறான்.
இந்த பார்வை சிறுகதை இலக்கியத்தில் புதியது. புரட்சிகரமானது. இது யதார்த்தமானதா என்று இந்தக் காலத்தில் கேள்வி கேட்கக்கூடும. அசட்டுக் கேள்வி, காதல் என்பதின் புனிதம் தெரியாமல் காமத்தை எடுத்துக் கொண்டு பால் உணர்ச்சி வெளியீட்டுப்படைப்புகள் இன்றுமிஷன் உற்பத்தியாக வெளிவருகிற காலகாட்டத்தில், வேறு எப்படி இருக்கும் கேள்விகள்? காதலின் பரிசுத்தம், பரிசுத்தமான காதல் எந்த அளவுக்கு உயர்த்தக்கூடும் என்பதுக்கு இந்த கோணம் நிரூபணம்.வல்லிக்கண்ணன்
மதிப்பை எடுத்துக்கொண்டாலும், நாமிருவரும் இவ்வுடலில் சதிபதிகளல்ல. சரீர இச்சை வேண்டாம் என்கிற போது, தாம்பத்ய வாழ்க்கையில் உடலுறவுக்கு 'சரீர இச்சை என்பதற்கு எவ்வளவு புறக்கணிக்கத்தக்க, குறைந்தபட்ச இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. இதுவும் இன்று "பிளேடானிக் காதலா, புலன்களுக்கு உரியதாக இல்லாத, ஆத்மார்த்தமான காதலா என்று டக்கான கேள்விக்கு உரியதுதான். சதையுணர்ச்சிக்கு மிதமிஞ்சிய மதிப் பு கொடுத்து, ஆண் பெண் உறவு அதையே வைத்துத்தான் என்று கீழ்த்தரமான காமவேட்கை ஒரு கடைக்கோடியிலே படைப்பில் சித்தரித்துக் காட்டப்படுக்கையில் மறு கோடியிலேஅதுக்கு எதிராக சரீர ஸ்பரிசமே இல்லாமல் தாம்பத்ய உறவு இருக்க வேண்டும் என்பதுக்காக வலியுறுத்தப்படுவது இது என்று ஆகாது. கு.ப.ரா.வே. பின்னால் ஒரு கட்டுரையில் ("சதைப்பற்றற்ற காதல்" பாரத தேவி 30.7.1939) "சதை என்ற சேற்றில் முழுகஅல்ல, அதற்கு மேலே போய் தாமரையைப் போலத் தலையெடுத்து நிறக, இரவும் பகலும் போலவும்துக்கமும் சுகமும் போலவும் வேற்றுமை கொண்டிருக்கும் ஸ்திரீ tG569 சுபாவங்களை ஒன்றாக்க" என்றும் உடற்சேர்க்கையைவிட மனச்சேர்க்கையே புனித உள்ளங்களுக்கு அதேபெருத்த கலவி இன்பத்தைக் தரும்" என்றும் அருகாமைகூட காதலுக்குத் தேவையில்லை. பிரிவாற்றாமையில் காதல் வளர்கிறது, விரகே பிரேம ராசி பவதீ" என்று காளிதாஸன் கூடச் சொல்லி இருக்கிறார்" என்றும் குறிப்பிட்டிருக்கிற மாதிரி சீக்கிரமே அழியக்கூடிய அலுக்கக்கூடிய ஒரு உறவுக்கும் அப்பால் நீடித்து நிலைக்கும் ஒரு உறவு இருக்கக்கூடும் என்பதை இந்த சிறுகதை தத்துவ மதிப்பாக வைத்திருக்கிறார் கு.ப.ரா.
"மலரும் மணமும் கதையில் விதவைப் பெண் செல்வம் ராமதாஸை நேருக்கு நேர் காண தினம் மெய்மறந்து நிற்பதும் “முள்ளும் ரோஜாவும்" கதையில் உடலழகு என்னும் பொய்ப்படுதா கமலம் கண்களை மறைத்து கணவனின்ஆத்ம வனப்பை அறியாமல் செய்து விட்டதும் இரண்டும் உடல் இச்சையை முன்வைத்து நின்ற பாத்திரச் சித்தரிப்புகள். கு.ப.ரா. நோக்கு இந்த கதைமூலம்உடல் இச்சை திருப்தி சாத்யமாகாத நிலையிலும் உறவை காப்பாற்றிக் கொண்டு வாழ்க்கையை நிறைவான தாக்கிக் கொள்ள முடியும் என்பது.எழுத்து - சி.சு. செல்லப்பா
மூன்றாவதாக உணர்ச்சி. தங்கள் லட்சியம் ஈடேற இயலாத நிலையில் உணர்ச்சி வசப்பட்டு தங்களை அசட்டு அபிமான உணர்ச்சியால் அழித்துக் கொள்ளாமல் அறிவைக் கொண்டு உணர்ச்சியை சமனப்படுத்தி சுத்தப்படுத்தி தங்கள் வாழ்க்கையை வேறு பயனுள்ளகாரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் இருவரும். அதே சமயம், நித்திய இளமையோடு தங்கள் உறவு நீடிப்பதான நம்பிக்கையால்தான் மனிதன் வாழ்கிறான் என்கிறதானால் காதலிலும் அதில் தோல்வி கண்டாலும் அது சாத்தியம் என்பதுஇந்த கதையில் தெரிவது.
எனவே நூர் உன்னிஸா அன்று சிறுகதையில் ஒருபுதுக் கதவை திறந்ததும், இதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டோம். அவருடைய 'விடியுமா கதை வெளிவரும் வரை இந்தக்கதை எனக்கு அபிமானக்கதை - நடுவில் காதலே சாதல், வீரம்மாவின் காளை போன்ற அவர் கதைகளை படித்து ரசித்த போதும். இன்றும் அது அப்பழுக்கு இல்லாத கதையாகவே நான்கருதுகிறேன். எழுதி உள்ள விதம் ரொம்ப சிறப்பானது. ஆரம்பமே நல்ல பிகு. முடியும் போதும் அதே தொனியில், இடையில் நெகிழ்ச்சி தளர்ச்சி கிடையாது. ஏற்றப்பட்ட நாணின் விடைப்பு. கதாபாத்திரமே சொல்கிற பாணி. சிறுகடிதத்துடன் ஆரம்பம் சிறுகடிதத்துடன் முடிப்பு, சிக்கனமாக சொல் உபயோகம். அழுத்தமான உணர்த்தல் உதாரணம்;
என்மனதில் தோன்றித் தோன்றி என்னை மயக்கிய பெண்ணுரு யாருடையது என்று தவித்தேனே- அப்பா, அது நூருன்னிலா வினுடையதே. ஒரு சிறுமியின் முக்காடிட்ட குற்றமற்ற முகம், அதில் மைதீட்டிய இமைகளிடையே குரு குரு என்று சஞ்சலித்த இரண்டு குறை கூறும் விழிகள், ரோஜாக்களிடையே மல்லிகை போல கீழிதழைச் சற்றே கடித்து வெளியே தோன்றின பல்வரிசை - இத்தகைய உருவம் மோகினி போல் என் மனதில் குடிகொண்டு ஆட்டிவைத்ததே-அது அவளுடையது. அவளுடைய மனநிலையும் என்னுடைய மனநிலையை ஒத்திருக்கக்கூடுமா என்ன? இல்லா விட்டால் இக்கடிதத்துக்கு ஏன் காரணமாகிறாள் கூட்டத்தில் திரியும் என்னைக் குறித்தல்லவோ கூப்பிடுவது போலிருக்கிறது!வல்லிக்கண்ணன்
‘என் ஹிருதய நிலைமையை அவள் அறிவாளோ? முடியாது. பூவின் அவா மணமாக வெளியேறித் தாக்குகிறது’ நினைவில் புறப்படும் அலை எப்படி அவள் இருதயக் கரையில் போய் மோத முடியும் ஸாத்தியமில்லை.அக்கடிதத்தில் தன் சகோதரன்ைக் கருவியாகக் கொண்டு என்னையேனிங்கு வர வழைத்தாள்) என்னிடத்தில் அவளுக்கோர் - அதெப்படி நான் சொல்வது?
உணர்ச்சிசித்தரிப்பில் கு.ப.ரா. பின்னால் சிறப்பான வெளியீடு காட்டி இருப்பதுக்கு நல்ல சூசனை இந்தக் கதையில் தெரிகிறது. சம்ஸ்கிருத இலக்கியங்களில் நல்ல உள்ள அவரது நடையில் அந்த பரிச்சயம் மொழிச்சொற்கள்தக்க இடங்களில் பொருத்தமாக பயனாகி வ.வெ.க. அய்யர், சங்கு சுப்ரமண்யன் நடை போல் ஒரு கம்பீரம் அமைந்ததாக இருக்கும். அவரது நடையில் கவிதைப் பாங்கும் தொனிக்கும், 'மலரும் மணமும் போல் சோகமாகவும் 'முள்ளும் ரோஜாவும் போல் இன்பமாகவும் முடியாமல், நெடுகிலும் அநுபவிக்கும் வேதனையை தள்ளிக் கொடுத்து அந்த வேதனையையும் இன்பக் கனவுகளாக தம் இச்சா சக்தியால் மாற்றும்முயற்சியில் ஈடுபட்ட இரு உள்ளங்களில் போராட்டத்தை வெளியிடும் முடிவாக இருக்கிறது. ஒரு சுத்த கலைஞனின் சுத்தமான படைப்பான இந்த கதையை நான் இன்றும் முன் போலவே ரசிக்க முடிகிறது. இதுக்குப் பின் கு.ப.ரா., வாழ்க்கையில், குடும்பத்தின், ஆண் பெண்உறவின் சிக்கல்களை போராட்டங்களை பிரச்னைகளை வைத்து பல கதைகளை எழுதி இருக்கிறார், அவரை சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராக ஆக்கத்தக்க திறமை இந்த கதையிலேயே வெளித் தெரிகிறது.
மணிக்கொடியில் முதல் சிறுகதையான 'சிறுகதை’ வருமுன் வ.ரா. மணிக்கொடியின் கட்டுரைகள் "கருவளையும் கையும் என்ற தலைப்பில் கவிதைகள், பூரூரவஸ், ஊர்வசி ஆகிய புராண பாத்திரங்களைதன் கற்பனையில் புதுசு படுத்திய சித்தரிப்புகள் எழுதி இருந்தாலும் இந்தகதைதான் அவரை எடுத்துக்காட்டியது. கதைக்குள் கதையாக அமையும் உத்தி முறை ராமையாவின் “வார்ப்படம் கதையில் கையாளப்பட்டது போன்ற ஒரு புதுவிதமானது ஆகும்.
295