தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, November 21, 2017

தழல் பறவையின் கூடு : சல்மான் ருஷ்டி தமிழில் விஜயராகவன் :: புது எழுத்து – இதழ் எண் : 19

சல்மான் ருஷ்டி தமிழில் விஜயராகவன் 
தழல் பறவையின் கூடு

இந்தப் பெண்களை என்னதான் செய்வது? அவர்கள்
மிக லகுவாக எரிகிறார்கள். நீங்கள் திரும்பினால் போதும் அந்தப்பக்கம் எரிந்து விடுகிறார்கள்.
- சல்மான் ருஷ்டி

எப்படி உடல்கள், வேறு உடல்களாக, மாறுகிறது என்பதை சொல்ல நான் இப்போதுதயாராகவுள்ளேன்
 .- ஒவிட், வளர்சிதை மாற்றம், டெட் ஹியூஸ்ஸின் மொழிபெயர்ப்பில்

அது ஒரு தட்டையான, வறண்ட, உஷ்ணப்பிரதேசம் பலதடவை பொய்த்துப் போன மழையால் வறட்சி வென்றுவிட்டதாக சொல்வார்கள். அங்கு வாழ்பவர்கள் சமவெளிமனிதர்கள், கால்நடை விவசாயிகள், ஆனால் அவர்களது கால்நடைகள் அவர்களை விட்டு விலகி, தடுமாறியபடி தென்திசை நோக்கி இடம் பெயர்ந்து நீர்தேடி அலைந்தன. கால்நடைகளின் கொம்பு துருத்திய, ஒட்டி உலர்ந்த மண்டை ஓடுகள் பார்ப்பதற்கு நெடுஞ்சாலை அறிவிப்பு கல்கள் போல் தோற்றமளித்தன.

மேற்கு புறம்தண்ணிர்இருந்தாலும், அது குடிப்பதற்கு லாயக்கற்ற உப்பு நீர், பின்பு இந்த சதுப்பும் கூட வறண்டது. காய்ந்த தட்டையான நிலப்பரப்பில் செத்தை செடிகள் காற்றில் உருண்டன. நிலத்தில் உருவான வெடிப்புகள் ஒரு வளர்ந்த மனிதனை விழுங்கும் அளவு இருந்தன.

ஒரு விவசாயி சாவதற்கு மிக நேர்த்தியான வழியாக இது இருந்தது-அவனது நிலமே அவனை விழுங்குவதுதான்.

பெண்கள் இம்முறையில் இறப்பதில்லை. தீப்பிடித்து எரிந்துதான் சாவார்கள்.

நினைவு தெரிந்த காலத்தில், இங்கு ஒரு அடர்ந்த காடு இருந்தது என மேன்மைதாங்கிய மகாராஜாதனது அமெரிக்க புதுமனைவியிடம் சொல்லியவாறு, தனது மாளிகையை நோக்கி சொகுசு காரில் சென்றார். அந்தக் காட்டில் அபூர்வமான புலி ஒன்று வாழ்ந்தது. அது உப்பைப் போல் வெளுப்பாகவும், முறுக்காகவும், சிறியதாகவும் இருந்தது. மேலும் பாடும் பறவைகள், பல்வேறு வகைகள் அப்பறவைகளின் கூடுகளே இசையால் ஆனது போல் நிறைந்திருந்தன. அரை நூற்றாண்டுக்கு முன் இவரது தகப்பனார். இதே காட்டு வழி செல்லும் போது அப்பறவைகளின் இசையோடுதானும் பாடிசெல்வார், அதோடு புலிகளும் சேர்ந்திசைக்குமாம். ஆனால் தற்போது இவரது தகப்பனாரும் இறந்து போய், புலிகளும் இல்லாமலாயின. பறவைகளும் போய் அழிந்துபட்டன ஒன்றே ஒன்றைத் தவிர. அந்தப் பறவையும் பாடுவதேயில்லை. காடழிந்து போனதால் 3 3

________________

அப்பறவை தனது கூட்டை ஒரு ரகசியமான இடத்தில் அமைத்துக் கொண்டது. அது ஒரு தழல் பறவை என தனது புது மனைவியிடம் அவர் கிசுகிசுத்தார். அவளோ ஒரு பெருநகரத்தின்குழந்தை, கன்னித்தன்மையில்லாத வெளிநாட்டவள். இந்த நாடகபாணி கதையை கேட்டு சிரித்தாள். தனது நீண்ட மின்னும் மஞ்சள் நிற கேசத்தினை ஆட்டி சிரித்தாள். அவளது மஞ்சள் நிற தேகம் நெருப்பாக ஜொலித்தது.

தற்போது இளவரசர்கள் இல்லை. அரசு பலகாலத்திற்கு முன்பே இம்முறையை ஒழித்துவிட்டது. தற்போது அரசகுல ஆட்சிமுறை ஒரு கற்பனைக் கதையாக, பிரபுத்துவ காலக்கட்டத்தில் நடந்த ஒரு தேவதைக் கதைபோல், வழக்கொழிந்து போனது.

அவர்களது அரசகுல அடையாளங்களும், சிறப்பு சலுகைகளும் மறுக்கப்பட்டன. நம்மேல் அவர்கள் செலுத்திவந்த அதிகாரம் இல்லாமலானது. இவ்விடத்தில் இளவரசர், சாதாரண திரு. மகாராஜ் ஆனார். அவர் ஒரு பன்முகத்தன்மை படைத்த மனிதர். அவரது நகரத்து அரண்மனை சூதாட்ட விடுதியாக மாறியது. அதே சமயம் அவர்நாட்டின் சாபக்கேடான ஊழல் முதலிய விஷயங்களை களைய அமைக்கப்பட்ட குழுவின்தலைவராகவும் விளங்கினார். தனது இளமைக் காலத்தில் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தார். ஆனால் ஓய்வுக்குப்பின் விளையாட்டிற்கெல்லாம் நேரமில்லாமல் போனது. சுற்றுப்புற சூழல் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று தனது இடப்பகுதியின் வறட்சியைப் போக்க ஆராய்ந்து வந்தார். ஆனால் தற்போது சொகுசு காரில் தனது ஊரக கோட்டை மாளிகையை நோக்கி சென்று கொண்டிருக்கும் திரு. மகராஜ் அங்கு விலை மதிப்புள்ள, நீரை கண்காட்சிக்காக மட்டும் நீர் ஊற்றாக எப்போதும் ஊற்றும்படியும் வைத்திருந்தார். அங்கு அவர் தனது நூலகத்தில் சேர்த்து வைத்திருந்த பழங்கால சுவடிகளும், புத்தகங்களும் சுற்றுவட்டாரத்திலேயே மிகவும் அருமை பெருமை வாய்ந்ததாகும். ஆனாலும் தனது வட்டாரத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பும் உரிமையையும் பெற்றிருந்தார். இதனால் யார் புதிய டிஷ் இணைத்தாலும் அதன் மூலம் இலாபம் சம்பாதித்தார். திரு. மகராஜின் பல காதல் லீலைகளைப் போல அவரது வியாபார வருமானங்களைப் பற்றிய விவரங்களும் மங்கலாக தெளிவற்றிருந்தன.

இங்கு ஒரு கல் உடைக்கும் இடமுள்ளது. கார் இங்கு நிற்கிறது. ஆண்களும், பெண்களும் கடப்பாறைகளும் தகரசட்டிகளும் வைத்திருந்தவர்கள் திரு. மகராஜைக் கண்டவுடன் குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள். இதைப் பார்த்த அமெரிக்கப் புதுப்பெண் உள்ளுணர்வால்தான் உண்மை உறைக்காத வேறு ஒரு காலக்கட்டத்திற்கு வந்ததை உணர்ந்தாள். இங்கு திரு. மகராஜ் இன்றும் இளவரசர்தான், அவள் அவருடைய இளவரசிதான். அவளுக்கு, ஏதோ ஒரு கதையில் புகுந்து கொண்டது போலும், அவளே வார்த்தைகளாக ஒரு காய்ந்த வரண்ட காகித பக்கத்தில்தவழ்வதாகவும், அவளே அந்த காகிதமாக ஆனதாகவும், அந்த காகித பக்கத்தில் அவளது கதை எழுத உள்ளதாகவும் அப்போது இரக்கமற்ற உஷ்ணகாற்று ஒன்று வீச அவளின் உடலே பாப்பிரைஸ் தண்டாகவும், அட்டையாகவும், அவளது ஆன்மாவே காகிதமாகவும் மாறியது. இது மிகவும் சூடாக உள்ளது. அவள்நடுங்கினாள்.

4. 4.

________________

அது கல்உடைக்கும்தளமில்லை. அது ஒரு நீர்த்தேக்கம். பஞ்சத்தாலும் வறட்சியாலும் அடிப்பட்ட விவசாயிகளைதிரு. மகராஜ் பணிக்கமர்த்தி இந்த நீர் தேக்கத்தை உருவாக்கினார். இதனால் அவர்களுக்கு வேலையும், மேலதிகமாக நம்பிக்கையும் கொடுத்துள்ளதாகதனது புதுமணப்பெண்ணிடம் தெரிவித்தார். அவள் மறுத்து தலையசைத்தாள். அந்த பெரும் பள்ளம் ஏகதேமாக நிரம்பியிருந்தது. ஆனால் கொடுமையான விதிவசத்தால், கலங்கலான, உப்பு பற்று நிறைந்த, மனதினாலும், கால்நடைகளும் உபயோகப்படுத்த முடியாத நீரால் நிறைந்திருந்தது.

எதிர்மறையான அந்த நீர் தேக்கத்தை சேர்ந்த பெண்கள் தீயின் பல நிறங்களில் உடையணிந்திருந்தார்கள். மொழியின் சரளத்தால், குருடாகப்பட்ட முட்டாள்கள் மட்டுமே, தீயின் நிறம் சிவப்பு மற்றும் பொன்நிறம் என நினைப்பார்கள். நெருப்பு அதன் விசனம் தோய்ந்த விளிம்புகளில் நீலநிறமாகவும், அதன் பொறுக்காத நெஞ்சப் பகுதிகளில் பச்சையாகவும், சில சமயங்களில் வெள்ளையாகவும் ஏன் அதன் ஆங்காரத்தில் கருப்பாகவும் கூட இருக்கும்.

சிவப்பும் பொன்னிறமும் கொண்ட புடவை அணிந்த, ஒரு முட்டாள் பெண் நேற்று தண்ணிர் வற்றிய பள்ளத்தில் நெருப்பு பற்றி எரிந்து போனதாக திரு. மகராஜிடம் அந்த வேலையாட்கள் கூறினார்கள். அவள் எரிந்து கொண்டிருந்த போது அவர்கள் எல்லோரும் மேட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் நமஸ்கரிப்பது போல் கைகளை அசைத்தாள். ஆண்கள் தங்களின் ஆண்மையின் உணர்வால் அவளது விதியின் முடிவை உணர்ந்தார்கள். அங்கிருந்த பெண்கள், அவர்களின் பெண்கள், கூடக்குரலிட்டு ஒலமிட்டனர்.

அந்தப் பெண் எரிந்து முடிந்த போது அங்கு ஒன்றுமேயில்லை. எலும்புத் துணுக்கோ, சதையோ எதுவும் மிஞ்சவில்லை. அவள் ஒரு காகிதத்தைப் போல எரிந்து, காற்றின் மூலம் ஒன்றுமில்லாமலாகி வானமேகினாள்.

இப்பகுதி மனிதர்களுக்கு, பெண்கள் சுத்தமாக எரிந்து போவது பற்றி ஏதும் செய்ய முடியாத ஒரு ஆச்சரியமே மிஞ்சியது. அவர்கள் மிக லகுவாக எரிகிறார்கள். என்னதான் செய்வது? நீங்கள் திரும்பினால் போதும், அந்தப் பக்கம் எரிந்து விடுகிறார்கள். இருபாலருக்கும் உள்ள வித்தியாசமாக கூட இருக்கலாம் போலிருக்கிறது என ஆண்கள் சொன்னார்கள். ஆண்கள் பூமியைப் போலதாங்கிக் கொள்ளும் மனப்பான்மையும், உறுதியும் கொண்டிருந்தார்கள். ஆனால் பெண்களோ, சலன புத்தியுடனும், நிதான மற்றும் இவ்வுலக வாழ்விற்கு நீண்ட ஆயுளற்றும், சடாரென்று ஒரு புகைக் கோளத்தில் எந்த விவரணையுமில்லாமல் மறைந்து போகிறார்கள். இதை உஷ்ணத்தில், அவர்கள் வெயிலில் அதிக நேரம் வெளியில் இருந்தால் என்னவெல்லாம் நடக்குமோ நாங்கள் அவர்களை வீட்டிற்குள்ளே இருக்க சொல்கிறோம். அபாயத்திலிருந்து அவர்களை காக்க, ஆனால் பெண்கள் எப்படி பட்டவர்கள் என்பதுான் உங்களுக்கு தெரியுமே. அது அவர்களின் விதி, அவர்களின் இயல்பு.

பதவிசான பெண்கள் கூட கனன்று கொண்டிருக்கும் இதயம் படைத்தவர்களாக இருந்தார்கள் என திரு. மகராஜ் தனது மனைவியிடம் முணுமுணுத்தவாறு, காரில் சென்று கொண்டிருந்தார். இவ்வாறு அவர் பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என அவள் கூறினாள். அவள் வாழ்வில் நவீனத்துவத்தை கடைபிடிப்பவள். இவ்வாறு தனது பெண்மையை பொதுவான பார்வையாகவும்,

5 5

________________

மட்டமான கொட்டடியில் அடைப்பதையும், விளையாட்டாக கூட ஏற்க மறுப்பதாக சொன்னாள். அவர் இதைக் கேட்டு புன்னகையுடன்தலை சாய்த்து மன்னிப்பு கேட்டார். தீச்சுடர்தான் தீச்சுடர்தான் நான்தான் சரியாக நடந்து கொள்ள வேண்டும் எனநினைத்து கொண்டார்.

ஆம் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என அவள் ஆணையிட்டுவிட்டு, வசதியாக அவர்மேல் சாய்ந்து கொண்டாள். அவரதுநரைத்த தாடி அவள் நெற்றியை வருடிக் கொடுத்தது.

அவள் பெரும் பணக்காரி எனவும் வயதான, குண்டு நிஜாம் போல் பணம் படைத்தவள் என வதந்தி அவளுக்கு முன் புகைந்து கொண்டு போயிற்று. இந்த நிஜாமானவர்தனது பிறந்த நாட்களில் ஏராளமான நகை நட்டுகளை அணிந்து, இந்த நகைகள் அணிவதற்காகவே பல்வேறு வரிகளை மக்கள் மேல் சுமத்துவார். மக்கள் நிஜாமின் விருந்தைக் கண்டே அஞ்சிநடுங்குவார்கள். பிரமாண்டமான அல்வாவும் ஆளுயுர ஜெல்லி இனிப்பும், இமயமலை போல உயர்ந்த குல்பியும் நிஜாமின் வயிற்றுக்குள் சென்று கொண்டேயிருக்கும். அங்கு நிறைந்திருக்கும் உணவு,தங்களின் உக்கிராணத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதையும், நிஜாம் அஜீரணம் வருமளவிற்கு உண்டு ஏப்பமிடுவதை காண்கையில், தங்கள் குழந்தைகளின் பசியேப்பமும், பசி ஒலமும் நினைவுக்கு வரும். நிஜாமின் பெருந்தீனிதங்களது பஞ்சம் என்பதை உணர்ந்திருந்தனர் மக்கள்.

ஆம், இதைப்போலவே பெரும் பணக்காரி என வதந்தி பரபரத்தது. அவளது தந்தை ஒரு கிழக்கு ஐரோப்பிய அகற்றப்பட்ட ராஜ பரம்பரை எனவும், ஒவ்வொரு வருடமும் தனது முக்கியமான பணியாளர்களை தனிவிமானத்தில் அழைத்துக் கொண்டு தனது பழைய சமஸ்தானத்திற்கு சென்று, அங்குள்ள கால நதிக்கரையில் நான்குநாள் கோல்ப் பந்தய விளையாட்டை அரங்கேற்றுவார் என்றும், அந்த பந்தயத்தில் வென்ற வெற்றி வீரனை, கடவுள் போல சிரித்துகொண்டேசர்வசாதாரணமாக வேலையிலிருந்துதுச்சமாகதுரக்கியெறிவார் எனவும் அந்த வீரன் நம்பிக்கை அழிந்து கால நதிக்கரையிலேயே உழன்று அந்நதியிலேயே சாவன் ஒரு பந்தைப்போல.

அவள் பணம் படைத்தவள். அவள் ஒரு விளைநிலம், அவள் மகன்களை பெற்றெடுப்பாள், மழையையும் கொண்டு வருவாள்.

இல்லை அவள் ஏழை எனவும் வதந்தி மின்னியது. அவளது தாய் ஒரு வேசி, இவர் பிறந்த போது தகப்பன்தூக்கு போட்டு செத்து போனார். வேசிக்கு பிறந்த இவளே ஒரு காய்ந்த நிலம் எனவும், கட்டுக்கடங்காதஜந்து எனவும், வறட்சி அவளது உடலில் உள்ளது எனவும், அந்த சாபத்தால் அவள் ஒரு மலடி எனவும், அதனால்தான் இங்கு வந்து, இங்குள்ள பழுப்பு நிறமுள்ள குழந்தைகளை அவர்களது விட்டிலிருந்து திருடிக்கொண்டு அவற்றை கண்ணாடி போத்தல்களை கொண்டு போஷிக்கவும் (ஏனெனில் அவளது மார்புகள் பாலின்றி வற்றிப் போனதால்) எண்ணியிருந்தாள்.

திரு. மகராஜ் உலக முழுவதும் தேடி, தங்களது வாழ்வை ஒளிரச் செய்யும், ஒரு அதிசய நகையை தேடிக் கொண்டு வந்துள்ளார். திரு. மகராஜ் பாவத்தில் சிக்கிக்கொண்டு, தங்கள் வாழ்வை அழிக்கக்கூடிய நாசத்தை தனது மாளிகைக்கு கூட்டி வந்துள்ளார். அவர் ஒரு மஞ்சள் மயிர்காரியிடம் மாட்டிக் கொண்டுவிட்டார் 6 6

________________

இப்படியாக அவளைப்பற்றிய அனுமானங்களும், கதைகளும் மக்கள் கூடுமிடமெல்லாம் பேசலாயிற்று. அரண்மனையை நோக்கி செல்லும்போது அவளுக்கேதான் ஒரு கதைக்குள் போவது போல் தோன்றியது. அவளது உயர்ந்த நகரத்தில் அவளது நண்பர்கள் பலர் பல கதைகளை சொல்லியிருக்கிறார்கள். அவளைப் போல் பல பெண்கள், வெள்ளைத் தோலும், மஞ்சள் முடியும் கொண்டவர்கள், இருண்டநிறக்காதலர்களை காதலித்து மனமுடைந்தார்கள் என அவருடன் போக வேண்டாம். அவருடன்படுத்துவிட்டாயானால் அவர் உன்னை மதிக்கமாட்டார். அவர் உன்னைப் போன்ற பெண்ணை மனைவியாக நினைக்க மாட்டார். உன்னுடைய வித்தியாசதன்மை உற்சாகத்தை ஏற்படுத்தும், ஆனால் உனது இதயத்தை உடைத்து விடுவார்.

அவர் மணப்பெண் என அழைத்தாலும், அவள் அவருடைய மனைவியல்ல. இதுவரையில் அவள் எந்தவித பயத்தையும் உணரவில்லை.

வெறுமையின் வாசல் போல், ஒரு சிதிலமடைந்த நுழைவாயில் ஒன்று நாட்டுப்புறத்தில் இருக்கிறது. செத்துப்போன பல மரங்களில் கடைசியாக ஒரே ஒரு மரம் மட்டும் பட்டுப்போய் கொண்டிருந்தது. அம்மரத்தின் வெளித்தெரிந்த வேர்கள், இறந்து கிடக்கும் ராட்சதனின் கைகளைப் போல தோற்றமளித்தது. கல்யாண ஊர்வலத்தை பார்த்து சொகுசு கார்நிதானித்து ஊர்ந்தது. தலைப்பாகை அணிந்திருந்த மணமகனை அவள் காரிலிருந்தபடியே பார்த்தாள். மணமகள் இளமையானவனோ, துடிப்பு மிக்கவனோ அல்ல, தோல் சுருங்கிய, நரைத்த வயதான கிழவனாக இருந்தான். இது ஏதோ ஒரு அமர காதலாக இருக்க வேண்டும். சூழல்களால் காலத்தே மணமுடிக்க முடியாமல் போயிருக்கலாம். தற்போது எங்கோ அந்த வயதான மணப்பெண் திருமணத்திற்கு தயாராக இருக்கலாம். கடைசியாக சந்தோஷ முடிவிற்கு அவர்களது காதல் வந்துள்ளது போலும் என வாய்விட்டு பேசிவிட்டாள். இதைக் கேட்ட திரு. மகராஜ் புன்னகைத்துக் கொண்டே மறுத்தார். மாப்பிள்ளையின் மணப்பெண் ஒரு இளம் கன்னிப்பெண்,தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளார்.

ஏன் ஒரு அழகான இளம் பெண் வயதான முட்டாளை மணக்க விழைகிறார்?

திரு. மகராஜ் தோளை குலுக்கியவாறே, கிழவன் குறைந்த வரதட்சணைக்கு சம்மதித்திருக்கலாம், ஒருவர் பல பெண்களை பெற்றிருந்தால் இதெல்லாம் சகஜம். மேலும் கிழவனுக்கு அவனது நீண்ட ஆயுள்காலத்தில் இது போல பல வரதட்சணைக்கு இடமுண்டு என்றார்.

கொம்பும், குழலும் அவளிருந்த பக்கம் நாரசமான இசையை முழங்கின. பறை சத்தம் பீரங்கி வெடித்தது போல ஒலித்தது. அவளிருந்த கார்ஜன்னல் பக்கம் திருநங்கை நடனக்காரர்கள் அவளைப் பார்த்து கெக்கலி கொட்டி சத்தமிட்டனர். ஒய் அமெரிக்கா, அரே எப்படி இருக்கே பங்காளி? வாரே வாஅந்த சமாச்சாரத்தை ஆட்டு பார்க்கலாம் என பலவாறு கூக்குரலிட்டனர். திடீரென அவள் பீதியடைந்தாள். கார் டிரைவரைப் பார்த்து வேகமாக போ எனக் கட்டளையிட கார் வேகம் பிடித்து திருமண கோஷ்டி மீதி புழுதியை வாரியிரைத்தவாறே சென்றது. திரு. மகராஜ் அமைதியே உருவானவராக அமர்ந்திருந்ததை பார்த்து, தன்னைப் பார்த்தே கோபம் கொண்டாள்.

7 7

________________

மன்னித்துக்கொள்ளுங்கள், எனழுணுமுணுத்தாள். இது ஒன்றுமில்லை, இந்த உஷ்ணம்தான்.

அமெரிக்கா முன் ஒரு காலத்தில், இவர்கள் இருவரும் சாலையிலிருந்து முன்னுறு அடி உயரத்தில் உள்ள விடுதியில் இந்திய மதிய உணவை உண்டு கொண்டே அமெரிக்கா அவர்கள் உணவருந்திய மேசை அங்கிருந்தபடி பார்க்க ஏற்ப அமைந்திருந்ததால், சுற்றுபுற பசுமையான பூங்காவின் செழுமையை ரசித்தார்கள். இந்த வறண்ட நிலப்பரப்பிலிருந்து கொண்டு அதை நினைத்து பார்க்கும் பொழுது அசிங்கமாக தோன்றியது. எனது நாடு உங்களது போலத்தானிருக்கும் என அவர் கொஞ்சினார். கொந்தளிக்கும் பெரிய, கடவுள்களால் நிறைந்த நாடு, நீங்கள் பேசும் உடைந்த ஆங்கிலம் போன்றே நாங்களும் எங்கள் மட்டமான ஆங்கிலத்தைப் பேசுவோம். நீங்கள் ரோமன்கள் ஆவதற்கு முன்பு காலணி மக்களாகத்தானிருந்தீர்கள். எங்களது துரைமார்களும் உங்களவர்களும் ஒருவரே. நீங்கள் துரைமார்களை எங்களுக்கு முன்பே தோற்கடித்துவிட்டீர்கள். அதனால் எங்களைவிட அதிக பணம் படைத்தவர்களாக இருக்கிறீர்கள். மற்றபடி நாம் எல்லா வகையிலும் ஒத்துதான் இருக்கிறோம். உங்கள் தெருமுக்குகளிலும், அதே குப்பை, அதே பரபரப்பு, அதே உடனடித் தன்மை, என்றார். உடனடியாக அவளுக்கு, இவர் என்ன சொல்கிறார் என புரிந்தது. அதாவது அவளுக்கு புரிந்திராத இடத்திலிருந்து அவர் வருவதையும், அவருடைய மொழியை தேர்வதும், குறிப்புகளை புரிந்து தெளிவதும், மிகவும் கடினம் என உணர்ந்தாள். இதன் பிரமாண்டமும், மர்மமும் அவளது ஆழமான தேவையை கிளறி, அவளை படுத்தி எடுத்தது.

அவள் அமெரிக்க பெண்ணாக இருந்ததால், அவர் பணத்தைப் பற்றி அவளிடம் பேசினார். பழைய பாதுகாக்கப்பட்ட பொது உடைமை தத்துவம், இத்தனைக் காலமாக பொருளாதாரத்தை இழுத்துபிடித்துக் கொண்டிருந்தது நீங்கியதனால் நம்மிடம் மட்டும் சரியான கருத்திருந்தால் மிகப் பெரும் பணம் பண்ண முடியும். இளவரசராக இருந்தும் பொருளாதாரப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டிதான் உள்ளது. அவரிடம் பல திட்டங்களை இருந்தது. அவருக்கும், பொருளாதார குழுக்கள் அடங்கிய வட்டங்களில் பணத்தையும் பொருளாதாரதிட்டங்களையும் செயல்படுத்தி வெற்றிகாண்பதில், விற்பன்னர் என பெயர் இருந்தது.

அவள் மழையை கொண்டு வருபவள்தான். இளவரசரை அவள் ஒபரா இசைக் கச்சேரிக்கு அழைத்துச் சென்றாள். சிறந்த உயரிய வார்த்தைகள் புரிய முடியாமல், இசைக் கோர்வையாக காதில் விழுந்த போது அவள் எப்போதும் போல் உணர்ச்சியின் உச்சத்தை அடைந்தாள். பின்பு அவரை வீட்டிற்கு அழைத்து சென்று மயக்கினாள். அவளது நகரம், அவளது மேடை, அவள் இளமையாகவும், ஆணித்தரமாகவுமிருந்ததால், அவர்களிருவரும் கலவி புரிய ஆரம்பித்தனர். தான் தனது வேர்களை விட்டு விலகிதானறிந்த எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிடப் போவதை உணர்ந்த, அவளது முயக்கத்தின் இயக்கம் மிக மூர்க்கமானது. அவரது உடலே தானறியாத பாதையின் பூட்டிய கதவு எனவும் ஆகவே அந்த கதவை உடைத்தெறிய எண்ணியது போல் இயங்கினாள்.

எல்லாமே சிறப்பாக இருக்கும் எனநினைக்காதே, என அவர் அவளிடம் எச்சரித்தார். மிகக் கொடுமையான வறட்சி நிலவி வருகிறது என்றார். 8 8

________________

துரதிர்ஷ்டவசமாக அவரது அரண்மனை சகிக்க முடியாதபடி நாற்றமடித்து கொண்டும், உதிர்ந்து கொண்டுமிருந்தது. அவளது அறையில் கிழிந்த திரைசீலைகளும் படுக்கை நைந்தும் போயிருந்தது. அறையின்சுவற்றில் அலங்கார சித்திரமாக தம்பதியினரின் பாலுணர்வு புணர்வுகள் வரையப்பட்டிருந்தன. அவர்கள் தனது கணவனின் மூதாதைகளா? அப்படி பிடிவாதக்கார வியாபாரியிடம் வாங்கிய மொத்த சரக்கில் மிஞ்சிய படங்களா? என தெரியவில்லை. இருண்ட தாழ்வாரங்களிலருந்து சத்தமான இசை ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என அறியமுடியவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும் போது பல நிழல்கள் ஓடி மறைந்தன. அவர் அவளை தனது அரண்மனையில் அமர்த்திவிட்டு எந்த விவரணையும் சொல்லாமல் காணாமல் போனார். தானே அந்த அரண்மனையில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

அன்று இரவு அவர்தனியாக உறங்கினாள். தலைக்கு மேல் மின்விசிறி சூடான வெப்பக்காற்றை வீசியது. காற்று சுடுநீர் போல் தகித்தது. அவளால் தனது வீட்டை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அங்கே குளிர்பதன இயந்திரத்தையும் இரவில் ஓயாமல் ஒலிக்கும் சங்கொலிகளும் நிஜத்தை நிதர்சனமாக்கும் பெரும் கட்டிடக் காட்டிற்குள் திருப்திக்குள் கற்பனா மனோ ராஜ்ஜியம்தலைதூக்குவது சிரமம். நமது கேளிக்கைகள் எல்லாம் சிறப்பு வாய்ந்த பிரமாண்டங்களாகவே இருக்கின்றன. ஏனெனில் இருண்டதிரையரங்குகளுக்கு வெளியேவும், புத்தகங்களின் பக்கங்களுக்கு அப்பாலும், கோதிக் இசையின் இரைச்சலுக்கு பின்னும் தினசரி நிதர்சனம் நம்மை தப்பிக்க விடாமல் சர்வ வல்லமையுடன் பிடித்து வைத்துள்ளது. நாம் வேறு பல பரிமாணங்களைப் பற்றியும், பித்து பிடித்த மறைபொருள்களைப் பற்றியும், நிழல் உலகம் பற்றியும் கனவுகாண்கிறோம். ஏனென்றால் நாம் விழிக்கும் போது நிஜம் அதன் பெரும் பிடியில் நம்மை இறுக்கிக் கொள்கிறது. நம்மால் பொருளியலின் தொடுவானத்திற்கு அப்பால் பார்க்க முடிவதில்லை. ஆனால் இங்கோ, கரப்பான் பூச்சிகளுக்கு பயந்து கொண்டு வரண்ட காற்றின் பிடியில், உங்களது எல்லா எல்லைகளும் நொறுங்கிறது. அபாயத்தின் சாத்தியம் புதுப்பிக்கப்படுகிறது.

அவளால் சுலபமாக அழ முடிவதில்லை. ஆனாலும் அவள் உடல் குலுங்கியது. வறண்ட கண்ணிரை வடித்தபடியே தூங்கினாள். அவள் விழித்தபோது நடனக்காரர்களின் சத்தமும், மேளச்சத்தமும் கேட்டது.

அரண்மனை முற்றத்தில், முதிய மற்றும் இளைய பெண்களும், இளைஞர்களும் கூடினர். மேளக்காரனின் லயத்திற்கு ஏற்ப பெண்கள் ஒசிந்தாடினர். அவர்கள் கால் வளைத்து, கைகளால் ஒருவரை ஒருவர் இணைத்துக் கொண்டு கண்கள் ஒளிர, முடுக்கப்பட்டபோர் படையினரைப் போல் குளுமையான கல் தளத்தில் நடனமாடினர். (இளங்காலை நேரமாதலால் அரண்மனைமுற்றம் நிழலோடியிருந்தது. அந்த கல்தளத்திற்கு இன்னும் சூரியன் உஷ்ணத்தை கொடுக்கவில்லை)

நடனமாடுபவர்களின் முன்பு உயர்ந்த உருவமாகவும், நேர் கொண்ட முதுகும் உடைய பெண்மணிதான்திரு. மகராஜின் சகோதரி நடனக்காரர்களை இயக்கிக் கொண்டிருந்தவளும் அவளே. அறுபது வயதுக்கு மேல் ஆகி இருந்தாலும், அந்த மாகாணத்திலேயே சிறந்த நடனமணி. செல்வி. மகராஜ் 9 9

________________

புதுமணப்பெண்ணைப் பார்த்ததும் எந்தவித அங்கீகரிப்பும் செய்யவில்லை. தற்போது அவள் நடனக்காரர்களின் தலைவி அசைவே பிரதானம்.

நடனம் முடிந்தபின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். திரு. மகராஜின் பெண்கள், சகோதரியும் அமெரிக்கனும்,

என் செய்து கொண்டிருக்கிறீர்கள்? தழல் பறவையை சாந்தப்படுத்த, நடனமாடுகிறோம். தழல் பறவையா (அவளுக்கு லிங்கன் மையத்தில் கேட்ட ஸ்ட்ராவின்ஸ்கி ஞாபகத்திற்கு வந்தது)

செல்வி மகராஜ் தலையசைத்து, ஆம் எப்போதும் பாடாத பறவைதான். அதன் கூடு ரகசிய இடத்தில் உள்ளது, அதன் தீய சிறகுகள் பெண்களைத் தீண்டினால், நாம் எரிவோம், என்றாள்.

அப்படியெல்லாம் ஒரு பறவை இருக்காது. இது பழம் பாட்டிகளின் கதையாகும்.

இங்கு பழம் பாட்டிகளின் கதையெல்லாம் இல்லை. அந்தோ பழம் பாட்டிகளே இங்கு இல்லை!

அகன்ற தோள்களில் பூவேலைப்பாடு செய்த மேலங்கியும் தலைப்பாகையும் அணிந்து திரு. மகராஜ் உள் நுழைந்தார். ஆண்மையின் உருவமாகவும், அழகாகவும் வெற்றிகரமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டும் வந்தார். அவள் வேறு காலக்கட்டத்து பெண்மணிப்போல வெடுவெடுப்பாக அணுகினாள். அவர் கெஞ்சலாக சமாதானம் செய்தார். அவளுக்கான வரவேற்பை ஏற்பாடு செய்ய சென்றிருந்ததாகவும், அவள் இந்த வரவேற்றை விரும்புவாள் என நினைத்ததாகவும் கூறினார்.

என்ன வரவேற்பு?

பொறுத்திருந்து பார்.

வாடையடிக்கும் அரண்மனைக்கு அப்பால் உள்ள பாலைவெளியில் திரு. மகராஜ் ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். நட்சத்திரங்களுக்கு கீழே நிலவொளியில் இஸ்வஹானிலிருந்தும், விராசிலிருந்தும் கொணரப்பட்ட பெரும் கம்பளங்களில் நடந்து வந்து சுற்றுப்புற பெரிய மனிதர்கள் அவளை வரவேற்றார்கள். அருமையான இசைக் கலைஞர்கள் தங்களின் சோகமயமான புல்லாங்குழலின்மோனஇசையையும், கதகதக்கும்தந்த வாத்தியமும் புராதனமான மற்றும் மிகவும் புதுமையான காதல் பாடல்களை பாடினர். அந்த நிலப்பரப்பின் மிகச்சுவையான உணவு வகைகளை அவளுக்கு சுவைக்க கொடுத்து மகிழ்வித்தனர். சுற்றுபுறத்தில் அவள் மிகவும் பெயர்பெற்ற பிரமுகராக உருவெடுத்தாள். பக்கத்து மாநிலத்தின் ஆளுநர், உங்களது கணவரை எங்கள் மாநிலத்திற்கு வர வரவேற்றிருக்கிறேன். ஆனால் உங்களது அழகான மனைவியை அழைத்து வரவில்லையெனில் நீங்கள் வரவேண்டாம் என சொல்லி வெடிச் சிரிப்பு சிரித்தார். இன்னொரு முன்னாள் இளவரசர், தனது அரண்மனை பெட்டகத்தில் உள்ள கலைப்பொக்கிஷங்களை அவளுக்கு காட்ட விரும்பினார். திருமதி. ஒனாசிஸ்க்கு தவிர நான் வேறு யாருக்கும் இந்த கலைப் படைப்புகளை காட்டியதில்லை. உங்களுக்காக இந்த படைப்புகளை எனது பூங்காவில் ஜாக்கிலினிற்கு பரப்பியது போல் காட்டத்தயார் என்றார்.

நிலவொளி இருக்கும்வரை, நடனமும், பாட்டும், குதிரை பந்தயமும், ஒட்டக பந்தயமும் நடந்தன. பட்டாசு வாண வேடிக்கைகளும் அவர்களின்

10 10

________________

தலைகளுக்கு மேல் ஒளிர்ந்தன. திரு. மகராஜின் மேல் ஈஷிக்கொண்டே அவள் எனக்காக ஒரு மாயாஜால ராஜ்ஜியத்தையே ஏற்படுத்தி இருக்கிறீர்கள். இப்படித்தான் ஒவ்வொரு இரவும் நீங்கள் ஓய்வெடுப்பீர்களா? என குறும்பாக கேட்டாள். முன்பு அவர் தன்னுடன் இல்லாதைக் கூட அவள் மன்னித்துவிட்டாள்.

அவர் உடல் இருகுவதை அவள் உணர்ந்தாள். அவரது வார்த்தைகளில் விரக்தி வழிவதைப் புரிந்து கொண்டாள். அவர்நீதான் இதற்கு காரணம், இந்த பாழடைந்த பகுதியில் இப்பெரும் மாயை உருவாக்கியவள் நீதான். ஒட்டகங்களும், குதிரைகளும் உணவு வகைகள் கூடதுாரப்பிரதேசங்களிலிருந்து கொண்டு வரப்பட்டன. உனது சந்தோஷத்திற்காக நாங்கள் பட்டினி கிடக்கிறோம். நாங்கள் இப்படி வாழ்வதாக நீ எப்படி கற்பனை செய்துக்கொண்டாய், ? உன்னை மகிழ்விக்க நாங்கள் மேலும் கடனாளியாகின்றோம். நாங்கள் பிழைக்க கனவு காண்கின்றோம். இந்த அராபிய இரவு ஒரு அமெரிக்க கனவு ஆகும் என்றார்.

நான் ஒன்றும் உங்களிடம் கேட்கவில்லையே, இந்த குறிப்பிடத்தக்க பெருவிருந்தும், பெருந்தீனியும் எனது தவறல்லவே, உங்களது கொடும் பேச்சும், குற்றச்சாட்டும் எரிச்சலூட்டுகிறது என்றாள்.

அவர் மிகவும் குடித்திருந்ததால், உண்மைகளை பேசலானார். சக்தியின் காலடியில் எங்களது பிரார்த்தனை மழையை உருவாக்குபவளே, மழையை கொண்டு வா என்றார்.

பணத்தைத்தானே குறிப்பிடுகிறீர்கள். வேறு என்ன? அதை தவிர வேறு ஏது? நான் காதல் என நினைத்தேன். என்றாள். முழு நிலவு அன்றைக்கு போல் என்றுமே அழகாக இருந்ததில்லை. அன்றைய இசையைப் போல் இனிமையான இசையை எப்போதும் கேட்டதில்லை. எந்த இரவும் அன்று போல் கொடூரமாக இருந்ததில்லை. நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும், என்றாள்.

அவள்கருவுற்றிருந்தாள். உறவுகளைதுண்டித்துக்கொள்ளநினைத்தாள். இணைப்பு பாலத்தையும், படகுகளையும் எரித்து விட கனவு கண்டாள். அவளுக்கு மிகவும் பிடித்த திரைப்படத்தை கனவு கண்டாள். அத்திரைப்படத்தில் ஒருவன் தனது பரம்பரை கிராமத்திற்கு வருவான். எப்படியோ அவள் காலத்தால் சுழன்று தனது தகப்பனின் இளமைக்காலத்துக்கு சென்றுவிடுகிறான். கிராமத்திலிருந்து தப்பிக்க எண்ணி புகைவண்டிநிலையத்திற்கு வந்தால், அங்குதண்டவாளங்களே மறைந்து போயிருக்கும். அவன் வீடு செல்ல வழியே இருக்காது. இந்த இடத்தில் படம் முடியும்.

கனவுகளிலிருந்து விழித்தெழுந்தபோது, வியர்த்து வழிந்ததால், அவள் போர்த்தியிருந்த போர்வையெல்லாம் ஈரமாகியது. தகிக்கும் படுக்கையறையில் அவளது படுக்கைக்கு அருகில் ஒரு பெண்மணி ஒருத்தி அமர்ந்திருந்ததைக் கண்டு தனது ஈரப்போர்வையை போர்த்திக் கொண்டு தனது நிர்வாணத்தை மறைத்துக் கொண்டாள். செல்வி மகராஜ்தான் புன்னகைத்தபடியே உன் உடல்நல்ல உறுதி வய்ந்ததுதான், இளமை வாய்ந்தது. மற்றபடி என்னைப் போல் இல்லாமலில்லை என்றாள்.

அவரை விட்டு விட்டு நான் போயிருக்க வேண்டும். இன்போது என்ன செய்வதென்று தெரியவில்லை.

11 11

________________

செல்வி. மகராஜ் தலையை குலுக்கினாள். கிராமத்தில் ஆண் குழந்தைதான் பிறக்கும். அதனால் இந்த வறட்சி மறையும் என பேசிக்கொள்வதாகவும், மூடநம்பிக்கைதான் ஆனால் அவர் உன்னை போக விடமாட்டார். பின்பு நீ போவாயானால் குழந்தையை அவர் வைத்துக் கொள்வார் என விவரித்தாள்.

அதையும்தான் பார்த்துக்கொள்ளலாம், என வெடித்தாள். கோபப்படும் போது அவள் குரல் கரகரப்படைந்து, அவளுக்கே பிடிக்காமல் போகும். அவளது மனக்கண்ணில் கதை தன்னை சுற்றி இறுகுவதையும் தான் கதையினுள் சிக்கி இருப்பதையும் கண்டு இதிலிருந்து வெளிசெல்ல சரியான, வழியையோ அல்லது மோசமான வழியையோ கண்டாக வேண்டும் என நினைத்தாள். செயலற்று இருப்பதுதான் தவறு. உஷ்ணத்தால் மண்டை குழம்புவதோ, அடக்கப்பட்டவள் போல் அடங்கிப் போவதோ கூடாது. காதல் முன்பு பல தவறுகளை செய்ய வைத்துள்ளது. தற்போது அவள் தனது மூளையை உபயோகிப்பாள்.

மெதுவாக, வாரங்கள் பல கழியும் போது, அவளுக்கு தெரிய ஆரம்பித்தது. நகரத்தில் உள்ள அவரது அரண்மனையை சூதாட்ட விடுதியாக அவர் சொந்தமாக நடத்தவில்லை. நம்பத் தகுதியில்லாத பயங்கரமான மனிதர்களுடன், ஒரு முட்டாள்தனமான ஒப்பந்தம் செய்து வைத்திருந்தார். மிகக் குறைந்த வாடகைப் பணமே அவர்கள் கொடுத்தார்கள். மிகச் சிறிய எழுத்தில் எழுதி இருந்த ஒப்பந்த விதிகளின்படி குறிப்பிட்ட சிறப்புநாட்களில் திரு. மகராஜ் காக்காய் பிடிக்கும் சிரிப்புடன் சூதாட்ட மேசைகளை சுற்றி வந்து சூதாடுபவர்களை மகிழ்விப்பதுடன், அந்த சூதாட்ட விடுதிக்கு ஒரு மரியாதையையும் உருவாக்கி கொடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தார். தொலைக்காட்சி டிஷ் வியாபாரம் இதைவிட பரவாயில்லைதான். ஆனால் இந்த நாட்டுப்புற அரண்மனை, அதில் வரும் வருமானத்தையெல்லாம் விழுங்கித் தொலைத்தது. டிஷ் வியாபாரத்தை விட பெரும் வியாபாரம் இருந்தால் கூட அதையெல்லாம் இந்த பாழடைந்த அரண்மனையை நிர்வகிக்கவே சரியாக போகும்.

வயதறிய முடியாதநிலையில் அந்த பழமையான அரண்மனை இருந்தது. சற்றேறக்குறைய அறுநூறு வருடங்களாவது இருக்கும். மின் வசதியும், ஜன்னல்களும், மர ஜாமான்களும் பலவிடங்களில் இல்லாமலிருந்தது. குளிர்காலத்தில் குளிராகவும், வெயில் காலத்தில் உஷ்ணமாகவும் மழை வந்தால் மாளிகையில் உள்ள பெரும்பாலான பெரும் அறைகள் வெள்ளக்காடாகவும் மாறும். அவர்களிடமிருப்பதெல்லாம் அரண்மனை நீர் ஊற்று ஒன்றுதான் வற்றாதது. விடிவதற்கு முன்னால் மாளிகையின் பாழடைந்த வவ்வால்கள் தொங்கும். பின்பகுதியின் ஒரத்தில் வரிசையாக கிராமத்தவர்கள் வறட்சியினால் கோபமுற்றும், தங்கள் அவமானத்தை மறைத்துக் கொண்டும் இருட்டின் மறைவிலிருந்து கொண்டுதங்கள் குடங்களில் நீர்நிரப்பி செல்வர். அந்ததாகமுற்ற மனித வரிசைக்குப்பின்னால் அமானுஷ்யமான எரிந்த, கருத்த கொத்தவால் சுவர் நிற்கிறது. சில ஆங்கில வார்த்தைகளே அறிந்த கிராம பெண், இந்த எரிந்த கோட்டை முன்பு இளவரசரின் வாசஸ்தலமாக இருந்ததாகவும், பெரும் புதையல்களும், உயிர்களும் எரிந்து சாம்பலானதாகவும் சொன்னாள்.

12 12

________________

எப்போது இது நடந்தது? வெகு காலத்திற்கு முன். திரு மகராஜின் விரக்தியை தற்போது அவள் புரிந்து கொண்டாள். செல்வி மகராஜ் அவளிடம் கூறினாள். மற்றொரு இளவரசி தனது கணவனின் வாரிசானவள் எங்களைவிட வறியவளாதலால் சமீபத்தில் நெருப்பை குடித்து வாழ்வை முடித்துக் கொண்டாள். தனது பரம்பரை வைரங்களை நுணுக்கி கோப்பையில் போட்டு விழுங்கிப் போய் சேர்ந்தாள்.

திரு. மகராஜின் அமெரிக்கவிஜயத்தின்போது அவர்தன்னை ஒரு புதுமை விரும்பி போலவும் செயற்கையானநாகரீகவாதியாகவும் ஒரு மாயையை உருவாக்கி கொண்டதினால், அவள் மனதில் இடம் பிடித்து வென்றார். நவீன மனிதனைப் போல பேசக் கற்றுக் கொண்டாலும் அவருக்கு உண்மையில் நிகழ்காலத்தை எதிர்கொள்ளத்திராணியில்லை. அவரது உலகறியாதன்மை, பஞ்சவறட்சி, இந்த சரித்திரங்களால் அவளது மனமாற்றம், போன்றவைதான் திரு. மகராஜின் சறுக்கலாக வடிவெடுத்தன. கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற பந்தயவீரன் தனது சொந்த ஊரில் உயர் பதவி வகிக்கும் நிலைக்கு உயர்வான். ஆனால்திரு. மகராஜோதனது வீட்டைப் போலவே துருப்பிடித்து போயிருக்கிறார். அவளது அறை சொகுசின் உச்சத்திலிருந்தது போல் காட்சியளித்தது. மெதுவாக சுழலும் மின்விசிறி, ஜன்னல்களில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள், சில நேரங்களில் இணைப்பு கிடைக்கும் தொலைபேசி, அவளது மடிக்கணினிக்கு எப்போதாவது இணைப்பு கிடைக்கும் மோடெம் வசதி, மற்றும் மின் இணைப்பு போன்றவை தனது கடந்த கால வாழ்வோடு இணைந்த கிரகத்திற்கு தொடர்பு ஏற்படுத்தி கொடுத்து உதவியது.

அவர்தனது அறைக்கு அழைத்து செல்ல அவமானப்பட்டதால் அவளைக் கூட்டி செல்லவேயில்லை.

தனது வயிற்றில் வளரும் உயிரை உணர்ந்த பின், அவள் அவரை மன்னிக்க விரும்பினாள். அவரது கடந்த காலத்திலிருந்து காப்பாற்றி, உருமாறிக்கொண்டே இருக்கும், தனது நிகழ்காலத்திற்கு கொண்டு வர அவளால் முடிந்த அளவிற்கு உதவுவாள். அவளே அமெரிக்கா அவள் மழையை கொண்டு வருவாள்.

வியர்வையுடனும், நிர்வாணமாகவும் அவள் படுத்திருக்கும் போது அடிக்கடி விழித்தெழுவாள். அப்பொழுதெல்லாம் செல்வி. மகராஜ் அருகில் அமர்ந்தபடியே ஆம் நடன மங்கையை போன்றே அருமையான உடல், இது மிக நன்றாக எரியும் என முணுமுணுப்பாள்.

என்னைத் தொடாதே (அவள் பதறினாள்) எல்லா மணப்பெண்களும் தூரதேசத்திலிருந்தே, இங்கு கொண்டு வரப்படுகிறார்கள். நமது ஆண்கள் வரதட்சணையே செலவழித்த பின் தழல் பறவை வரும்.

என்னை மிரட்டாதே (மனக்கலவரமடைந்தாள்) எத்தனை மணமகள்களை அவர் மணந்துள்ளார்என உனக்கு தெரியுமா? மனக்குழப்பமுற்றும், கோபமாகவும், மிரண்டு போயும், அவள் அவரை கேள்வி கேட்டாள். இது உண்மையா? இதனால்தான் உங்களது சகோதரி திருமணம் செய்து கொள்ளாமல் தனது பாதுகாப்பில் கிராமத்தில் உள்ள முதிர்கன்னிகளையெல்லாம் காப்பாற்றி வருகிறாளா? கணவனை ஏற்க அஞ்சி

13 13

________________

முடிவுற்ற நடன வகுப்பில் ஆடிவரும் வாழ்நாள் கன்னிகள், அதனால்தான் இப்படியிருக்கிறார்களா?

உங்களது மணப்பெண்களை எரிப்பது உண்மையா? எனது பயித்தியக்கார சகோதரி ஏதாவது உளறியிருப்பாள் என அவர் சிரித்தார். உனது அறையில் உன் உடல்தழுவி, நீரையும் நெருப்பையும் பற்றியும், பெண்மையின் அழகையும் ஆண்மையின் மர்மத்தைப் பற்றியும் மந்திரப் பறவையைப் பற்றியும் இறப்பின் குறியீடாக அப்பறவை இருப்பதையும் சொல்லியிருப்பாள் என நினைக்கிறேன் என்றார்.

இல்லை, அவள் கவனமாக நினைவுகூர்ந்தாள். தழல் பறவையைப் பற்றி முதலில் கூறியது நீங்கள்தான்.

திரு. மகராஜ் அவளை தனது சகோதரியின் நட வகுப்பிற்கு கடுங்கோபத்துடன் அழைத்துச் சென்றார். அவரைப் பார்த்த உடன் சலங்கை அணிந்த நடனமணிகள் ஆட்டத்தை நிறுத்தினர். நீங்கள் எல்லாம் எதற்காக வந்திருக்கிறீர்கள் எனது மனைவியிடம் கூறுங்கள், நீங்கள் அகதிகளா, அல்லது மாணவர்களா? நாங்கள் எல்லாம் நடனம் படிக்க வந்த மாணவிகள் ஐயா. நீங்கள் பயத்தினால் தான் இங்கிருக்கிறீர்களா? ஒ, தயை கூறுங்கள்! ஐயா, நாங்கள் ஒன்றும் பயந்து கொண்டு இங்கு வரவில்லை. அவரது கேள்விகள் உரத்த குரலில் தொடர்ந்து கொண்டே இருக்கும் போதும், அவரது பார்வைமட்டும் தனது சகோதரியின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தது. செல்வி மகராஜ் அமைதியாகவும், நிமிர்ந்தும் நின்றிருந்தாள்.

அவரது கடைசி கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. எத்தனை மணப்பெண்கள் எனக்கு? எத்தனை என நீ சொன்னாய்? சகோதரனும் சகோதரியும் பார்வையால் ஒரு துவந்த யுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஒருவரிடம் மற்றவர் ஒரு முடிவிலா கைதி சரித்திரத்திற்கு வெளியேயும் கால முடிவில்லாமலும், இவள்தான் முதல் மணமகள் என முதலில் கண்களை தாழ்த்தியபடி செல்வி. மகராஜ் கூறினாள்.

தனது மனைவியை நோக்கி, கைகளை விரித்தபடி முடிந்ததா, நீயே எல்லாவற்றையும் காதார கேட்டுக் கொண்டாய் இனிமேல் கட்டுக் கதைகள் வேண்டாம் என்றார்.

சூரியனின் உஷ்ணம் சித்தத்தை கலங்கடித்தது. சோனிமாடுகள் காய்ந்த புல்வெளிகளில் செத்து விழுந்தன. சில நாட்கள் மஞ்சள் மேகங்களால் வானம் நிறைந்தது. மேற்குப்புறமுள்ள சதுப்புநிலத்தின் மேல் மேகங்கள் தொங்குவதைப் போல் நிறைந்தன. விகாரமான அந்த மஞ்சள் நிற மழை கூட வரவேற்பை பெறும்தான். ஆனால் அம்மழை கூட பெய்யவில்லை.

எல்லோரிடமிருந்தும் கெட்ட வாடை வீசியது. அனைவரது மூச்சுக் காற்றிலும், பூச்சி வாடையும், செத்த பூனையின் வாடையும், பாம்புகளின் வாடையும், தவளை வாசனையும் வீசியது. எல்லோரது வியர்வையும், கனமாகவும், துர்நாற்றமடிப்பதாகவுமிருந்தது.

அவளது முயற்சிகளையும் மீறி உஷ்ணம் அவளை மயங்க வைத்தது. வயிற்றில் குழந்தை வளர்ந்து கொண்டிருந்தது. திருமதி. மகராஜின்நடனமணிகள், கதவுகள், ஜன்னல்களை மூட சமயத்தில் மறந்து விடுகின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவரின் உடல்களில் பலவித வர்ணங்களையும் காட்டுத்தனமான

14 14

________________

சித்திரங்களையும் வரைந்து கொண்டிருப்பதை அங்கிங்குமாக பார்க்க முடிந்தது. ஒருவர் மேல் ஒருவர் ஆலிங்கம் செய்து உறவுக் கொள்வதும் தெரிந்தது.

அவள்கர்ப்பிணியாக இருப்பதால்திரு.மகராஜ் அவளிடம் வருவதில்லை. வரவும் மாட்டார். ஆனால் எல்லா இரவுகளிலும் செல்வி மகராஜ் வருவாள். அவளது நடன வகுப்பில் சகோதரனின் சண்டைக்கு பின் பேசுவதை குறைத்துக் கொண்டாள். அவளது படுக்கைக்கு அருகே அமர மட்டும் கேட்பாள். சில சமயங்களில் மென்மையாக தொடுவாள். அதை திரு. மகராஜின் அமெரிக்க மனைவியும் அனுமதிப்பாள்.

அவளது உடல்நலம் பாதிக்கப்பட்டது. சுரத்தால் நடுக்கமும், சில சமயம் அதிக வியர்வையும் வழியலாயிற்று. அவளது மலம், இளகிய களிமண் போல் போனது. அரண்மனை நீர் ஊற்றுதான் நீர் வரட்சியிலிருந்தும் துரித மரணத்திலிருந்தும் அவளைக் காப்பாற்றியது. செல்வி. மகராஜ் அவளுக்கு சிசுரூஷைகள் செய்து அவளுக்கு தேவையான தாது உப்புகளையும் போஷாக்கையும் ஊட்டினாள். விபரம் தெரியாத வயதான வைத்தியன் ஒருவன்தான் அந்த பகுதியில் இருந்தான். அவனால் ஒரு உபயோகமுமில்லை. குழந்தை ஆபத்தானநிலையில் உள்ளதை இரு பெண்களும் உணர்ந்தனர்.

இந்த நோய் பீடித்த, நீண்ட இரவுகளில், அறுபது வயதைக் கடந்த நடனக்காரி அமைதியாகவும் மெதுவாகவும் பேசலானாள்.

இங்கு பயப்படக்கூடிய ஏதோ ஒன்று நடந்துள்ளது. திருப்பப்படவே முடியாத மாற்றம். ஆரம்பத்தில் நாங்கள் அதை கவனிக்காததால் கடைசியில் அதை எதிர்க்கொள்ளவே முடியாமல் போயிற்று. பின்புதிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளாததால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவில் முத்தாய்ப்பான பிளவு உண்டானது. ஆண்கள் மழையின்மையை கண்டு பயப்படுவதாக கூறுவதும், பெண்கள் நெருப்பின் இருப்பைக் கண்டு பயப்படுவதும் இதுதான் ஏதோ ஒன்று எங்களிடமிருந்து பாய்ந்து வெளிவருகிறது. தற்போது அதை அடக்குவது கடினம். இங்கே முன்னொரு காலத்தில் பெரும் இளவரசர்ஆண்டு வந்தார். அவர் தான் கடைசியான பெரும் அரசர் எனக் கூட கூறலாம். அவரைப்பற்றி சொல்லும்போது எல்லாமும் பிரமாண்டமாகவும், புராண காலத்து பெருமையுமாக இருக்கும். அவர் உலகத்திலேயே மிக அழகான இளவரசர். அவர் மிகச்சிறந்த ஆடல் அழகியாகவும், எவரையும் மயக்கக் கூடிய அழகும் படைத்த பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஒரு பையனும் ஒரு பெண்ணுமாக இரு குழந்தைகள் பிறந்தனர். வயதானதால் இளவரசருக்கு பார்வை மங்கி வலுக்குறைந்தது. ஆனால் நடனக்காரியான மனைவியின் அழகு குறையவேயில்லை. அவள் ஐம்பது வயதில் இருபத்தி ஒன்று வயதுக் குமரியைப் போல் தோற்றமளித்தாள். இளவரசரின் வயதேற வயதேற அவருக்கு அவளுடைய கவர்ச்சி கொடுத்த ஊக்கம் குறைந்து அங்கே பொறாமைதலைதூக்கியது.

(செல்வி மகராஜ் தோளை குலுக்கியபடி கதையின் முடிவிற்கு வந்தாள்) கோட்டை எரிந்து போனது. இருவரும் இறந்து போனார்கள். இளவரசருக்குதன் மனைவி பல காதலர்கள் வைத்திருந்தாக சந்தேகம். ஆனால் அப்படி ஏதும் கிடையாது. சேவகர்களின் பராமரிப்பில் குழந்தைகள் வளர்ந்தார்கள். பெண் குழந்தை நடனக்காரியாகவும் மகன் விளையாட்டு வீரனாகவும் வளர்ந்தனர். இறந்து போன பழைய இளவரசர் தனது தனியாத ஆங்காரத்தால் ஒரு பெரும் பறவையாக மாறியதாகவும் அப்பறவை தீப்பிழம்புகளால் ஆனது எனவும் அதுவே இளவரசியை எரித்தது என்றும் சொல்லிக் கொண்டார்கள். இப்போதும் அப்பறவை, கணவர்களின் கொடூரமான கட்டளைக்கு இணங்கி பிற பெண்களை எரிக்க வந்து கொண்டுதாணிருக்கிறது என கிராமத்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

15 15

________________

அது சரி, நீ என்ன சொல்கிறாய்? என கட்டிலில் படுத்திருந்த நோயாளியான அவள் கேட்டாள்.

எங்களை பார்த்து மனமிரங்கிவிடாதே. என செல்வி மகராஜ் கூறினாள். இயற்கைக்கு விரோதமான ஒன்றை உண்மையில்லாத ஒன்று என தப்பான அர்த்தம் கொள்ள வேண்டாம். நாங்கள் உருவகங்களிடையே சிக்கியுள்ளோம். அது எங்களை சிதைத்து எங்களது வாழ்வின் அர்த்தத்தை வெளிக்காட்டுகிறது.

அவளது நோய் விலகி, குழந்தையும் சீராக வயிற்றில் வளரதுவங்கியது. திரைச்சீலை விலகியது போல் அவளுக்கு ஆரோக்கியம் பளிச்சிட தொடங்கியது. பழையபடியே சிந்திக்கத் தொடங்கினாள். தான் உண்மையில் அறியமுடியாத இந்த மனிதருடன் இந்திரஜாலம் நிறைந்த இந்த இடத்திலும் இருக்க முடியாது. குழந்தையை அவளே வைத்துக் கொள்வாள். நகரத்திற்கு சென்று அங்கிருந்து அமெரிக்காவிற்கு பறப்பாள். குழந்தை பிறந்த பிறகு நடப்பது நடக்கட்டும். அவளுக்கு தகப்பனைத் தடுக்கும் எண்ணமில்லை. அவர் வந்து குழந்தையை பார்க்கலாம்.

எப்பொழுது வேண்டுமானாலும் வரபோக, கிழக்கே குழந்தையை கூட்டிக் கொண்டு போய்வரக் கூட அனுமதிப்பாள். குழந்தை இரண்டு கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினாள் போதும். வளர்ந்தவர்களை போல் நடந்து கொள்ள வேண்டும். அவள் திரு. மகராஜிற்கு பொருளாதார ரீதியான அறிவுரைகளைக் கூட தொடரக்கூடும். ஏன் முடியாது? அது அவளின் தொழில் அல்லவா. அவளது இம் முடிவை செல்வி. மகராஜிடம் சொல்லிய போது அடி விழுந்ததது போல் அவள்துடித்தாள்.

ஆழ்ந்த இரவின் நடுவே, நமது அமெரிக்கன் ஏதோ கூச்சல் குழப்பத்தை கேட்டு விழித்தெழுந்தாள். அரண்மனையின் வராண்டாக்களிலும் முன்வாசலிலும் சத்தம் நிலவியது. உடையணிந்து அங்கே சென்று பார்த்தாள். பலவகையான வாகனங்கள் அங்கே அணிவகுந்து நின்றிருந்தது. துருப்பிடித்த பஸ் பல ஸ்கூட்டர்கள், ஒரு புதிய ஜப்பானிய ஆள் ஏற்று வாகனம் திறந்த லாரி, இருப்பை மறைக்கக்கூடிய வகையில் வர்ணம் பூசப்பட்ட ஜீப் போன்ற பலவகையான வாகனங்களில் செல்வி மகராஜின் பெண்கள், கோபத்துடனும், பாடிக் கொண்டும் ஏறிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரின் கைகளிலும் வீட்டில் உபயோகிக்கும்தடிகள், தோட்ட பொருட்கள், சமையல்கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. அவர்களுக்கு எல்லாம்தலைமையாக செல்வி, மகராஜ்ஜிப்பில் அமர்ந்து சத்தமாக எல்லோரையும் அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இங்கே என்னநடக்கிறது? உனக்கு இது அவசியமில்லை. உனக்கு தேவதைக் கதைகளில் தான் நம்பிக்கையில்லையே, நீஉனது ஊருக்கு போகப் போகிறாய்.

நான் உங்களுடன் வருகிறேன். செல்வி. மகராஜ்ஜிப்பை முரட்டுத்தனமாக ஒட்டினாள். மோசமான பாதையில் விளக்கில்லாமலே விரைவாக ஒட்டினாள். பலதரப்பட்ட வாகன அணிவகுப்பும் அவள் பின் தொடர்ந்தது. அவர்கள் அனைவரும் உருகி வழியிம் முழுநிலவின் வெளிச்சத்தில் விரைந்தனர்.

அவர்களுக்கு முன் சிதிலமடைந்த கல் நுழைவாயில், வெறுமையின் வாசல் பட்டுப்போன மரத்தருகே நின்று கொண்டிருந்தது. அணிவகுப்பு அங்கே

16 16

________________

இறங்கி அக்கல் வாசல்வழியே வழிந்தோடியது. வாகனங்களின் விளக்குகள் அனைத்தும் போடப்பட்டு ஒளியூட்டப்பட்டது. நடனமணிகள் அனைவரும் அந்த கல் வாசல் ஒன்றுதான்அதற்கு அப்பால் விரவி கிடந்த வெட்டவெளிக்கு வழி என்பதைப் போலும். இதுவே மற்றொரு உலகத்திற்கு வழி என்பதைப் போலும் ஓடினார்கள். அமெரிக்கன் இறங்கி அந்த வாசல் வழியாக சென்ற போது மறுபடியும் அவளுக்கு அதே நினைப்பு வந்தது. கண்ணுக்கு தெரியாத ஜவ்வு வழியே வருவதைப் போரவும், பார்க்கும் கண்ணாடி வழியாக வேறு ஒரு உண்மையை பார்ப்பதைப் போலவும், புதினம் போலவும் உணர்ந்தாள்.

மோட்டார் வாகனங்களின் வெளிச்சத்தில் அங்கு ஒரு நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்தது. அந்த கிழ மணமகனை உங்களுக்கு ஞாபகம் வருகிறதா, தனது இளம் மணப் பொண்ணைப் பார்க்க ஊர்வலமாக சென்று கொண்டிருந்தானே, நினைவிருக்கிறதா? தற்போது அவன் இங்கு கொலை வெறியுடனும், குற்றத்துடனும் நின்று கொண்டிருந்தான். அவனது இளம் மனைவி ஒன்றும் புரியாமல் அப்பாவியாக அவனருகில் நின்று கொண்டிருந்தாள்.

இவர்களுக்கு பின்புறத்திலே கிராமத்தின் ஆண்கள் நின்றிருந்தார்கள். சந்தோஷமற்ற இந்த தம்பதிகளை திரு. மகராஜ் விசாரித்துக் கொண்டிருந்தார்.

சந்தோஷமற்ற இந்த நாடக தருணத்தில், பெண்கள் கூக்குரலிட்டு கொண்டு ஓடி வந்தவர்கள், திரு. மகராஜின் தோற்றத்தை கண்டு திகைத்து நின்றனர். சகோதரி தனது சகோதரனை பார்த்து முறைத்தாள். விளக்கு வெளிச்சத்தில் உடன்பிறப்புகளின் முகங்கள் வெண்மையாகவும், மஞ்சளாகவும், சிவப்பாகவும் ஜொலித்தது. அவர்கள் அமெரிக்கனுக்கு புரியாத பாஷையில் பேசினார்கள். மொழி தெரியாத ஒபெரா இசைக்கச்சேரி போல இருந்தது அது. அவர்களது சைகைகளிலிருந்து அவர்கள் சொல்ல வருவதை புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அவர்களது உடல், மொழி தமது எண்ணங்களிலிருந்து வருவதால் ஒவ்வொரு வார்த்தையையும் இவளால் புரிந்து கொள்ள முடிந்தது. செல்வி. மகராஜ் தனது சகோதரனை நோக்கி, எது நமது பெற்றோரால் தொடங்கப்பட்டதோ அது இப்போது நிறுத்தப்பட வேண்டும் என கட்டளையிட்டாள். அதற்கு பதிலாக, அந்த பதில் அந்த பாழடைந்த கல்வாசலுக்கு அப்பால் உள்ள உலகம் புரிந்து கொள்ளவே முடியாத வகையில் இருந்தது. அவர் பதில் பேச பேச அவரது உடல் தீப்பிழம்பாக மாற, உடலிலிருந்து சிறகுகள் வெடித்து கிளம்பின. கண்கள் கனலை கக்க, தழல் பறவையின் மூச்சு செல்வி மகராஜை கரிக்கட்டையாக எரித்தது. அவளை எரித்து முடித்துவிட்டு கிழவனின் கதறும் இளம் மனைவி பக்கம் பார்வையை திருப்பியது.

அவரது பதில் காற்றில் மிதந்து நின்றது. நான்தான் தழல் பறவையின் கூடு.

செல்வி. மகராஜ் எரிவதைக் கண்ட அவளது ஆழத்தில் ஏதோ ஒன்று கழன்று கைவிலங்கு உடைந்ததைப் போலவும், பொறுமையின் எல்லையை கடந்தது போலவும் உணர்ந்தாள். ஒரு பேரலையைப் போல் திரு. மகராஜ் மேல் பாய்ந்தாள். பொறுக்க முடியாமல் அவளைப் பின்தொடர்ந்து நடனக்காரிகளும் அவர் மேல் விழுந்தனர். அவளது உடல் எல்லை கடந்து ஆழிப் பேரலையாக

17 17

________________

கொட்டியது. தாங்க முடியாத எடை கொண்ட அவளது மழை நெருப்பை பறவையையும் அதன் கூட்டையும் மூழ்கடித்தது. இவற்றை மூழ்கடித்ததோடல்லாமல் வரட்சிநிலவிய பூமியை முழுவதுமாக ஆக்கிரமித்தது. அதன் வெள்ளப் பெருக்கில் கிழமணமகனையும், மற்ற கொலைகாரஆண்களையும் அடித்து சென்று இந்த பயங்கரபிரதேசத்தை சுத்தப் படுத்தியது. வாழ்வின் பண்டைய கொடூரங்களிலிருந்து புனிதப்படுத்தியது.

நேற்றிரவு சமஸ்தானத்தில் எதிர்பாராமல் பெய்த பெருமழையால் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. வரட்சியைநீக்குமளவிற்கு பெய்த இந்த மழையால் இந்த பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இறந்தவர்களில் முன்னாள் இளவரசர் திரு. எ. மகராஜ் மற்றும் அவரது சகோதரியும் இவர் மிகச்சிறந்த சாஸ்திரீய நடனக்கலைஞர் ஆவார்கள் என அஞ்சப்படுகின்றது. திரு மகராஜின்நிச்சயிக்கப்பட்ட மனைவி, அமெரிக்க பெண் உயிர்பிழைத்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது கடலுக்கு மேலே, அவள் தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறாள். பிரபஞ்சம் பழைய உருவத்திற்கே திரும்புகிறது. ஆனால் அவளது உருவம் மாறியிருக்கிறது. திரு. மகராஜின் குழந்தை அமெரிக்காவில் பிறக்கும். தனது மேடிட்ட வயிற்றை வருடிக் கொடுத்தாள். அவளே நெருப்பும் நீருமாக சேர்கிறாள்.

18 18