தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, September 03, 2012

மிலேச்சன்-அம்பை, கறுப்புக் குதிரைச் சதுக்கம் - அம்பை

www.archive.org
google ocr

கறுப்புக் குதிரைச் சதுக்கம் - அம்பைambai (3)

உணர்ச்சிவசப்படாத அறிவுஜீவிக்கு ஒர் அறிக்கை இது.

யதார்த்தத்தை என்னால் தரமுடியவில்லை. என் முதல் பாடம்: யதார்த்தத்துக்குக் கண்ணாடி இல்லை. இந்த அறிக்கையிலுள்ள யதார்த்தம் காயடிக்கப்பட்டது; பால் வற்றியது; கருப்பை பிய்க்கப்பட்டது. வேற்று வெளி - கால அனுபவங்களை, சுய வெளியின் கனத்த சொற்களால் தொய்யவைக்கும் அறிக்கை இது. இதில் அகப்படாததை உணர நீ இங்கு வர வேண்டும். கண்ணிர் வற்றிய அவள் கண்களைக் காண வேண்டும். அவளிடமிருந்து பிறக்கும் மெளனத்தை ஸ்வீகரிக்க வேண்டும். அதில் எரிய வேண்டும்.

சிறு அறைதான். நீ இதில்தானே வளர்ந்தாய்: ஆலையின் புழுதியைத் தலையில் பறக்கவிட்டவாறு வந்த ஒருத்தியிடம்தான் விசாரித்தேன். வழிகாட்டினாள். அந்த அறையில் எதுவும் இல்லை. நனைந்த துணி கனத்துத் தொங்கும் ஓர் உணர்வு. ஒருத்தி மூலையில் அமர்ந்திருந்தாள். விரிசடை திரெளபதி. தரையைத் தொட்டது கூந்தல். அதுதான் வாகனம் போல் அதன் மேலேயே அமர்ந்திருந்தாள். மங்கிய கறுப்புப் புடவை. நிமிர்ந்து பார்த்தாள். ரோஸா கந்தசாமி. அக்னி குண்டம். (கட்சியின் முக்கிய தோழர் ஒருவர் ரோஸா லக்ஸம்பர்க் நினைவாக வைத்த பெயராமே?)
O

1926. நீண்ட பயணம். கந்தசாமி பிளாட்பாரத்தில் பூனை மயிர் மீசையுடன் இறங்கியபோது கையில் ஒரு துணி மூட்டையும் மதறாஸிச் சின்னமான கூஜாவும். பரேல் சந்தில், மேலே தகரத்தகடு இருந்ததால் அறை என்று அழைக்கப்பட்ட ஒன்று. ஒரு நகரம் கை, கால் நீட்டி விஸ்தாரமாகிக் கொண்டிருக்கும் வேளை ஆலைகளால் ஈர்க்கப்பட்ட பல வெளியாட்களில் ஒருவன் கந்தசாமி. தொழில்யுகத்தின் ஆரம்ப நாடித்துடிப்பில் அவன் கலந்திருப்பான். 1928 வேலை நிறுத்தத்தில் கந்தசாமி இருந்தான். 1929 இலும். வேலை நிறுத்த காலத்தில் நடந்த மாலை வகுப்புகளில் அவன் இருந்திருப்பான். தோழர் டாங்கேயின் பேச்சுகளைக் கேட்டிருப்ான். பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி பற்றி மராட்டியில் பேசியதைக் கவனமாகக் கேட்டிருப்பான். கார்ல் மார்க்ஸ் வெறும் தாடி மனிதரல்ல அவனுக்கு. பல வருடங்களுக்குப் பிறகு பையன் பிறந்தபோது அவன் நிறம் மாறியிருக்கவில்லை. சிவப்புத் தான். லெனின் என்று பெயர் வைத்தான். லெனினின் தலையை வருடியவாறு சொன்ன கதைகள்:

"ரொட்டியோட வெலை ஏறிக்கிட்டே போச்சுது. ஜனங்களுக் கெல்லாம் பசி அவங்க அரமனை வாசல்ல நின்னுகிட்டு பசி, பசிங்கறாங்க அப்ப ராணி மேரி ஆன்டோனட் என்ன சொன்னா... ரொட்டி இல்லன்னா கேக்கு திங்கட்டுமே அப்படீன்னா ..."

"பகத்சிங்கைக் கடைசில ஜெயில்ல போட்டாங்க ரொம்பக் கொடுமைப் படுத்தினாங்க. அவர ஒரு நாளு விடிகாலேல தூக்குப் போட்டபோது அந்த ஒடம்பைக்கூட அவங்கம்மாவுக்குக் காட்டல்லே ..."

லெனின் கேட்ட கதைகளில் திடீர் திருப்பங்கள் நிறைய உண்டு. தேவதைகள், கடவுள்கள், ராட்சஸர்கள் இல்லாத கதைகள்தான். அவன் தலைப்புகள் இட்டிருந்தான். பிரெஞ்சுப் புரட்சிக் கதை 1917 கதை வ. உ. சி. கதை பாரதியார் கதை ஸாவர்க்கர் கதை (ஸாவர்க்கர் கப்பலிலிருந்து தப்பித்த நிகழ்ச்சியை மீண்டும்.மீண்டும் சொல்லச் சொல்வான்), காந்தி கதை 15 ஆகஸ்டு கதை மெஷின் கதை தொழிலாளி கதை. இங்கிலீசில் தான் படிக்கமுடியாத குறைக்காக லெனினுக்கு இங்கிலீஷ் படிப்பு. லெனின் ஆலையில் வேலை செய்ய அல்ல. அவன் படிக்க, யோசிக்க சமுதாயத்தை மாற்றத் திட்டங்கள் போட.
 O

அவள் தலைக்கு மேல்தான் கந்தசாமியின் மாலையிட்ட புகைப் படம் இருந்தது.

இவள் தயங்கியவாறு நுழைந்தாள்.

நிமிர்ந்து பார்த்து "யா" என்று மராட்டியில் வரவேற்றாள்.

- ஒரு சாட்டை வீச்சு வீசித் தலையை முடிந்துகொண்டாள்.

 இவள் தமிழில் "நான் லெனினோட." என்றாள்.

கண்களைக் குறுக்கிப் பார்த்தாள்.

 "அண்ணியா?" "அம்மா, யார் வந்திருக்காங்கன்னு பாரு."

தடுப்பின் பின்னாலிருந்து அம்மா வந்தாள். கண், முகம், பஞ்சுத் தலையை எல்லாம் துடைத்துவிட்டுக் கருநாகப் படமாய் எழுந்தது அந்த உலக்கைக் கைகள்தாம்.
______________

சற்றுக் கூச்சமாய் இருந்தது இவளுக்கு. அந்த கைகளைத் தான் உற்றுப் பார்ப்பது. அவற்றை இயல்பாய் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவற்றில் ஒடிய கரும்பச்சை நரம்புப் புடைப்புகளில் கண்கள் ஒடி ஒடி மீள்வது இவள் பேதப்பட்டு இருப்பதை மண்டையில் அடிப்பது போல் இருந்தது.

"லெனின் வூட்டுக்காரி."

"வாம்மா. வளி தெரிஞ்சிச்சா?"

கேட்டுவிட்டு அருகில் வந்து தலையை வருடினாள்.

"லெனின் செளக்யமா ?”

"நல்ல புள்ளம்மா அவன் கையைப் பற்றிக்கொண்டாள். "இன்னும் நிஜார் போட்ட சின்னப் பையனாகவே தெரியறான் எனக்கு ஒரு வாட்டி அவர செயில்ல போட்டுட்டாங்க. பன்னெண்டு வயசுப் பையனை இளுத்துக்கிட்டு ஒடறேன் அங்க. அங்க அலைஞ்சு, இங்க போயி அவரப் பாக்குற வரிக்கும் பசிக்குதம்மான்னு சொல்லலியே பையன்! எப்படிப்பட்ட புள்ள அவன்!"

அவளைக் கீழே பாயில் அமர்த்தினாள்.

"அவன் போறபோது முந்தானைலேந்து எட்டனா எடுத்துக் குடுத்து இவ்வளவுதாண்டா முடியும் தம்பின்ன போது கையைப் புடிச்சிக்கிட்டு அழுதாம்மா அவன். பிளாட்பாரத்துல அத்தினி பேர் முன்னாலியும் கொரகொரன்னு இளுத்துக்கிட்டு அழுவறான். கையைத் தடவித்தடவித் தந்தான் ..."

"அம்மா, அவங்களையும் பேச விடுவியா, இல்ல நீயே பேசி முடிக்கப்போறியா?"

"போடீ" என்று விட்டு "டீ கொண்டாறேன்" என்று எழுந்து போனாள்.

ரோஸா இவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"உங்க பேர்கூடத் தெரியாது."

"அபிலாஷா."
O

(நீ அவளைப் பார்த்து இரண்டு மூன்று வருடங்களாகி இருக்கும் இல்லையா? அவள் ஆலைத் தொழிலாளிகள் சங்கத்துக்காக வேலை செய்கிறேன், மேலே படிக்கவில்லை என்றதும் கோபமாகச் சென்றாயாமே? அங்கு சுவரில் ஒரு புகைப்படம் இருந்தது. உன் அப்பா, அம்மா, நீ, அவள். சுருட்டை சுருட்டையாய் எவ்வளவு முடி உனக்கு ! நீ போட்ட முதல் கால்சராயா புகைப்படத்தில் இருப்பது? அவளுக்கு மூன்று வயது இருக்கும். பின்னால் கார்ல் மார்க்ஸ். ஆம். அந்த புகைப்படக் கதை நீ சொல்லியிருக்கிறாய். ஸ்டுடியோவுக்கு உன் அப்பா கார்ல் மார்க்ஸ் புகைப்படத்தைச் சுமந்து வந்ததும், அதைப் பின்னால் வைக்க வேண்டும் என்று வற்புறுத்தியதும், ஸ்டுடியோக்காரர், "உங்கள் உறவா.: ஜம்மென்று இருக்கிறார் வெளிநாட்டவர் மாதிரி" என்றதும்)

எந்த விஷயத்தையும் தராசில் வைத்து நிறுத்தி இரு பக்க எடையையும் பார்க்கும் உனக்கு, பதட்டமடையாத மார்க்ஸியவாதியான உனக்கு எழுதும் அறிக்கையில் உணர்ச்சிகள் தெறித்துவிடாமல் கவனமாக இருக்க முயல்கிறேன். இதில் வெற்றி பெறுவேனா என்று தெரியவில்லை.

கனன்று கொண்டிருக்கும் நெருப்பு மாதிரி இருந்தாள் அவள். எந்த நிமிஷமும் சடாலென்று குதிரை ஏறி ராணி லகஷ்மிபாய் மாதிரி விரைந்துவிடுவாள் என்று நினைக்க வைக்கும் லகானிட்ட வேகம் அவளிடமிருந்தது. ஜூலியா படம் நினைவிருக்கிறதா? தோழியைப் பார்க்க வெட்டப்பட்ட காலுடன் வருவாளே, வதைக்கப்பட்ட முகத்துடன் வனெஸ்ஸா ரெட்க்ரேவின் அந்த முகத்தை நினைவில் கொண்டுவா. அவளை நான் மறுபடி சந்தித்தேன். தெரிகிறது. நான் ஒரு அதீதக் கனவு கலந்த உருவத்தை ரோஸாவுக்குத் தந்து கொண்டி ருக்கிறேன். அது இந்தக் கணத்தில் என் உணர்ச்சிகள் வடிக்கும் உருவம் இருக்கட்டும் அது மிகை வியப்பு பூரிப்பு. இவை இப்போதைக்கு எனக்கு உரியவை ஆகட்டும். பிறகு நிதானமாகச் செதுக்கிக் கொள்ள லாம். அப்போதும் குறைந்துவிடாது எதுவும்.

இந்த முன்னுரையை நான் உனக்குத் தர வேண்டியிருக்கிறது. உன் தங்கையை உனக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. கொள்கையில் உன்னுடன் உடன்படாமல் வன்முறைவாதிகளை ஆதரித்த தங்கையை புத்தக அறிவு, மேற்கோள்கள், பல மணி நேரங்கள் தர்க்கம்புரியச் சொற்கள்-இவை மட்டுமில்லை இவை நம்மில் யாரிடம் இல்லை? சொற்களைப் பற்றிக்கொண்டு தொங்குபவர்கள்தாமே நாம், இவற்றுடன் அவளிடம் இருப்பது ஒர் எழுச்சி பெற்ற மனச்சாட்சி பல சரித்திர ஆதாரங்கள். ஒரு குலைக்கப்பட்ட உடம்பு ஒரு பறிக்கப் பட்ட உறவு. இந்தப் பின்னணியில்தான் நீ இந்த அறிக்கையைப் படிக்க வேண்டும்.
O

ரோஸாவுக்கு ஐந்து வயதிருக்கும்போது அவர்கள் ஜோபட்பட்டியில் (குடிசைப் பகுதி) ஒவ்வொரு வாரமும் வந்து அவர்களுடன் பேசி விட்டுப் போகும் ஆண்களும் பெண்களும் ஒரு சித்திரப் பட்டறை நடத்தத் தீர்மானித்தார்கள் குழந்தைகளுக்கு கலர் பென்சிலும் பேப்பரும் தந்தார்கள். நீலப் பென்சிலை எடுத்து முக்கால் பக்கத்தில் தேய்த்தாள் ரோஸா, கடலாம். நட்ட நடுவில் காகிதக் கப்பல் மாதிரி ஒரு கப்பல். அதன் மேல் அரை நிஜாருடன் ஒருவன். அவன் கையில் ஒரு கொடி அதில் நுணுக்கினாள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்று. தன்னந்தனியாய் நடுக்கடலில் அவன் யாரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தான் என்று தெரியவில்லை. ஆனால் அப்படி முறையிடுவது ஒரு தினப்படிச் செயலாக அவளுக்குப்பட்டது. மீதிக் கால்பக்கத்தில் பொம்மைபோல் கைகால்களை நீட்டிக்கொண்டு பலர் கரையில். எல்லோர் கைகளிலும் கொடிகள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்று. கப்பலில் நின்றவனின் கையில் ஆரம்பித்து ஒர் அம்புக்குறி கீறினாள். கந்தசாமி என்று எழுதினாள். கோணல்மாணலாய், பிறகு ஆள்காட்டி விரலைச் சப்பிக் கடித்துவிட்டு அதை அடித்து விட்டு எழுதினாள். லெனின்.

இன்னொரு விஷயம் அவளுக்கு ஞாபகம் இருக்காது. ஒரு மாலை, ஜோஷி மாமா லெனினின் விருப்பத்துக்கு இணங்கி மீண்டும் 1917 கதை சொன்னார். வெளியே வாகன சத்தம் கொஞ்சம் குறைந்திருந்தது. பிச்சைக்காரர்கள் ரொட்டிமாவு பிசைந்து சமையலை ஆரம்பித்தாகி விட்டது. எங்கோ செளபாட்டியில் கிளம்பிய உப்புக் காற்று பல கரி வாயுக்களுடன் கலந்து கொஞ்சம் சிலுசிலுக்க வைத்தது. லெனின், மாமா தோளோடு நெருங்கி சப்பிய விரலுடன் அவள் ஒரு மூலையில். முடித்துவிட்டு வழக்கம் போல் கேள்விகளுக்கு நேரம் தந்தார் ஜோஷி மாமா. அவரை என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். கையை உயர்த்தி, அனுமதி வாங்கி, அமைதியாக, மரியாதையாகக் கேட்க வேண்டும். லெனின் வழக்கம்போல், 1917 வேறு இடங்களில் நடந்தால் என்ன ஆகும்? எல்லோரும் படிக்க முடியுமா? எல்லோருக்கும் வீடு கிடைக்குமா? எல்லோரும் எல்லாம் சாப்பிட முடியுமா-கேக்கு கூட கடைசிக் கேள்வியை அவன் எதிலும் நுழைத்து விடுவான். பிரெஞ்சுப் புரட்சியின் அந்த கேக்கு பிம்பம் அவன் மனத்தில் ஒட்டிக் கொண்டுவிட்டது. சப்பிய விரலை எடுத்துவிட்டு ரோஸா கையை உயர்த்தி வெடுக்கென்று மராட்டியில் கேட்டாள். ஆம்சா ஸண்டாஸ் கராப் கா? (எங்கள் கக்கூஸ் ஏன் அழுக்காக இருக்கிறது?).

பிரெஞ்சுப் புரட்சி விளையாட்டில் கிலோடீனை இயக்குபவனாக மட்டுமே விளையாடுவேன் என்று பிடிவாதம் பிடித்து, ரத்தத்தை உறைய வைக்கும் ஒலங்களோடு லெனின் குப்புறவும் மல்லாக்கவும் "செத்து விழவேண்டும் என்று அவள் வீம்பு செய்திருந்தாலும் அவளுடைய ஆதர்சம் லெனின்தான். அவன் மேல்படிப்புக்கு டெல்லி போனபோது பிளாட்பாரத்தில் அவளும் இருந்தாள். எச்சிலையும் கண்ணிரையும் சேர்த்து விழுங்கியவாறு.
O

அபிலாஷா திரும்பி எந்த நிலை வாகாக இருந்ததோ அப்படிப் படுத்துக்கொண்டாள். ரோஸா அவள் தலையணையைச் சரி செய்தாள்.

"சேதி பேப்பரில் வந்து ஒரு மாசம் ஆயிடுச்சே? அதெப்படி இப்பத்தான் அண்ணன் அனுப்பினாரு ?"

"லெனின் என்னை அனுப்பினான்னு எப்படி நினைக்கிறே?"

"பின்னே ?"

" நாரின்னு ஒரு பத்திரிகை வருது தெரியுமா? அதோட சார்பா நான் வந்திருக்கேன். உன்னைப் பேட்டி கண்டுட்டுப் போடலாம்னு."

மல்லாந்து படுத்து விட்டத்தைப் பார்த்து வெடித்துச் சிரித்தாள் ரோஸா "நிஜமாவா?" என்று விட்டுக் குப்புறப் படுத்துச் சிரித்தாள்.

"நீ சிரிக்கிறாய்."

"எனக்கு இது நடந்திருக்காட்டா வந்திருக்க மாட்டீங்க இல்லையா?”

"அப்படி இல்ல ரோஸா. நான் லெனின் கிட்ட நிறையதடவை கேட்டுக்கிட்டேதான் இருந்தேன். இது நடந்தது."

"ஒரு சாக்காயிடுச்சு! நல்ல சாக்கு ! அண்ணனைக்கூட மசிய வெக்கற சாக்கு!"

 "இங்கு இருக்குற நாப்பத்திரண்டு சங்கமும் வந்தாச்சு என் கிட்ட கூட்டத்துல நிறையப் பேசியாயிடுச்சி. எழுதியாயிடுச்சி. மராட்டி பேசத் தெரிஞ்சவங்க, சிகரெட் பிடிக்குற பொம்பளைக, வெள்ளைப் புடவைக்காரிக, எங்க கட்சி இதை எடுத்துக்கிட்டு வாதாடும்னு சொன்னவங்க எல்லாரும் வந்துட்டும் போயாச்சு. தமிழ்ப் பத்திரிகைக்காரர்கட வந்தாரு ஒத்தரு. இது சூடான நியூஸாம். பத்திரிக பேரு "மங்களம். நல்ல மங்களமான, சூடான நியூஸ்!"

"ரோஸா, நீ..."

"இல்ல. இல்ல. தயவுசெய்து அண்ணி, நீங்களும் நீ கசப்படையக் கூடாது அப்டீன்னுட்டு உபதேசம் பண்ணாதீங்க இப்படிப் பண்ணினாங்க நிறையப் பேரு. அவங்களுக்குள்ள எத்தனை சண்டை தெரியுமா? மார்ச் எட்டு அன்னிக்கு ஊர்கோலம் போகத் தீர்மானிச்சப்போ, ஒரு சங்கம் சொல்லிச்சு, வெலைவாசி உயர்வு, கெரோஸின், அரிசிப் பஞ்சத்தையும் இத்தோட சேர்க்கணும்னு இன்னொண்ணு சொல்லிச்சு, ஒலகத்துல இருக்குற முதலாளித்துவ முயற்சிகளை எல்லாம் இத்தோட பத்தியும் சொல்லணம்னு இடது ஒற்றுமை பற்றிச் சொல்லணம்னுட்டு ஒரு பொளவு. இப்படியே பேசிக்கிட்டே போனாங்க கடைசில எல்லாரும் தனித்தனியா ஊர்கோலம் போனாங்க காலா கோடா சதுக்கத்துல சந்திச்சுக்கிட்டாங்க. அப்புறம் பேசினாங்க பேசினாங்க அப்பிடிப் பேசினாங்க . . ."

அபிலாஷாவால் அவள் வெடிப்பை ஏற்க முடிந்தது. அவர்கள் தப்புச் செய்யாமலில்லை. இடது, வலது, தலைக்கு மேல், காலின் கீழ் என்று எங்கு பார்த்தாலும் குற்றம் பார்ப்பவர்கள் இருந்தால் எப்படி? கீதா சிகரெட் பிடிக்கிறாள். அது ஒரு பழக்கம்தான். எத்தனை குடிசைப் பெண்கள் பீடி பிடிக்கவில்லை? அவள் அதை ஒரு சின்னமாக்க வில்லை. சிகரெட்டை ஒரு உறிஞ்சு உறிஞ்சின பின் என்னமாக வார்த்தைகள் விழுகின்றன அவளுக்கு! அவள் மில் தொழிலாளிகளைப் பற்றி எழுதிய புத்தகத்தை மீறக்கூடிய ஒரு புத்தகம் இன்னும் யாரும் எழுதவில்லை. எவ்வளவு துல்லியமாக, கோட்பாடு ரீதியில் துளிக்கூடப் பிசகாமல் எழுதியிருக்கிறாள்! உலகத்து எந்தத் தொழிற்சங்கம் எப்படி வேலை செய்கிறது என்பதைத்துக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்வாள். கட்சியில் அவள் பதவி மிக உயர்வானது. வெறும் புத்தகங்கள் எழுதுபவர்களை உலுக்கி எடுத்துவிடுவாள் களத்துக்கு வா என்று. லெனினின் வழுக்கை மண்டையில் ஏறி உட்கார்ந்து விட்டாளே! லெனின்தான் பதிலுக்கு, "கீதா, நான் இடது என்கிறது மட்டுமில்லை, என் ஜாதியும் சேர்ந்துவிட்டால் உனக்கு ஒரு நல்ல உயிருள்ள சின்னம் கிடைத்துவிடும். மடக்குக் கதவைத் திறந்ததும் கண்ணைக் கவரக்கூடிய சின்னம். மன்னித்துக் கொள். இந்தக் கடை மூடியாகி விட்டது. மற்ற கடைகளில் பார்" என்று சொல்லி விட்டான்.

அவர்கள் செய்த பல போராட்டங்களுக்கு வலு இருந்தது. இல்லாமலா பலாத்காரம், வரதட்சினை, இரண்டும் இவ்வளவு பெரிய விஷயமாயிற்று? நடைமுறையில் தப்பு விழுந்துபோகிறது சில சமயம். இரவு கூடினோம். பதினோரு மணிக்கு ஒரு மணி நேரத்தில் அத்தனை ஆபாசச் சுவரொட்டிகளையும் கறுப்படிக்க. மாலினி வேலைதான் பெயிண்ட் வாங்கிவருவது கொண்டு வந்திருந்தாள். அப்புறம்தான் அதில் எழுதியிருந்ததைப் படித்தோம். கலக்கி, இரண்டு மணி நேரம் வைத்துப் பின் உபயோகிக்கவும். மாலினியை வாட்டிவிட்டோம். புரட்சிக்கு எதிரி என்றுகூட ஜெஸிகா சொல்லி விட்டாள்.
அப்புறம் அந்தத் தீவட்டி வெளிச்ச இரவு ஊர்வலம். தீப்பந்தம் எல்லாம் ரெடி கெரோஸின் கொட்டி எரிய வைக்கும்போது போலீஸ் வந்துவிட்டது. கெரோஸின் அல்லது பெட்ரோல் தெருவில் எரியவைக்கக் கூடாது என்று. பின்னே இதை எப்படித்தான் எரியவைப்பது என்று சீறியபோது அந்த இன்ஸ்பெக்டர் சாந்தமாக "நெய்யை உபயோகித்துப் பாருங்களேன்," என்றார். அப்புறம் ஆளுக்கு ஒரு மெழுகுவத்தியோடு ஊர்வலம் போனோம். சுட்டிக்காட்டப்படக்கூடியவைதான். ஆனால் மேலே மிதக்கிற தப்புகள்தான். கனம் இல்லாதவை.

எல்லாம் சேர்ந்துதானே எழுச்சி? சிரிப்பு, கேலி, கோபம், விமர்சனம், ஆரவாரம், படபடப்பு, ஆக்ரோஷம் எல்லாம்தான் இருக்கும். ஆணின் கொட்டையில் இரண்டு உதை விட்டாலே போதும் எங்கள் குமுறல்

அடங்க என்று நினைப்பவர்களின் கோபத்தையும்தான் ஈர்க்க வேண்டியிருக்கிறது. தெருவில் ஒன்றுக்குப் போய்க் கொண்டிருப்பவனைப் பார்த்து "இழுத்து அறுத்துவிட வேண்டும். அப்போதுதான் போக மாட்டான்" என்று குமுறும் சுலபாவிடம் வெறும் கோபம் மட்டுமில்லை. தயார் உடைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பெண்களைச் சங்கப்படுத்தி வேலை நிறுத்தம் செய்ய அவள்தான் உழைத்தாள்.

எங்களிடம் பிளவுகள் உண்டென்றால் அது அமைப்பில் உள்ள பிளவுகளின் எதிரொலிதான். ரோஸா விஷயத்தில் அவளை வேறு மாதிரி அணுகியிருக்க வேண்டும். கிளிமூக்கு மாங்காய், மிளகு பொடி தூவிய வெள்ளரிக்காய்த் துண்டுகளின் சேர்க்கையோடு ராமபக்த ஹனுமான் படம் பார்த்தபோது, சடேலென்று மார்பைப் பிளந்து உள்ளே ராமர், மனைவி தம்பியுடன் இருப்பதைக் காட்டுவானே, அந்த மாதிரி ஒரு பரஸ்பர சம்பாஷணைத் தொடர்பு இருக்க வேண்டும். உள்ளே இருப்பதைப் பிளந்து காட்டுவது மாதிரி எவ்வளவு சுலபமாக இருந்தது அந்த மாதிரி பேச்சுத் தொடர்பு! ஒரு நெற்றிக்கண்ணைத் திறந்தால் போதும், மீறிக்கோபம் வந்தால் ஓர் ஒற்றைக்கால் தாண்டவம் ஒரு குச்சியை எதிரில் போட்டுப் பேசினால்கூடப் போதும். வாயைப் பிளந்து காட்டினால் போதும் ஈரேழு உலகங்கள் தெரிய. எவ்வளவு எளிது. சொற்கள் சேரச் சேரத் தொடர்பு இற்றுப்போய்விட்டது. இதை மீறி ஒரு தொடர்பு இருக்கிறது. மெளனத்தில் கண்களில். கைகள் இணைவதில்.

ஒவ்வொரு பெண்ணும் இன்னொருத்தியின் கண் அடியில் உள்ள கரு வட்டங்களைத் தடவ வேண்டும். பிரசவக் கோடுகளில் உள்ளங்கை களை வைக்கவேண்டும். புடைத்த நரம்புகளில் விரலை வைக்க வேண்டும். வெடித்த கால்களைக் கைகளில் ஏந்தவேண்டும். யோனியில் முகம் பதிக்க வேண்டும்.
O

(என் வருகையில் உன் பங்கு பற்றி நான் அவளிடம் சொல்லவில்லை. அது பெரிய முன்னுரையாகிவிடும். உன் டெல்லி வாழ்க்கையின் ஆரம்ப வருடச் சோகங்களை இப்போது இவர்கள் கிரகிக்கும் நிலையில் இல்லை.

ஒரு கடும் வெய்யில் கால மாலையில்தான் - உன் ஆய்வுக் கட்டுரை பிரசுரமான வெய்யில் காலம்-நீ என்னை அணுகி என்னுடன் நீங்கள் துணிக்கடைக்கு வர முடியுமா?" என்றாய். கடையில் நீ இரு பான்ட் துணிகள்-நிறங்கள் கூட நினைவிருக்கிறது, கரும் பழுப்பும் கரு நீலமும்மற்றும் இரண்டு ஷர்ட் துணிகள் எடுத்தாய் நான்தான் தேர்ந்தெடுப்பதில் உதவினேன்.

 நாங்கள் சுட்டிக்காட்டிச் சிரித்த உன் தொளதொள பான்ட்களுக்கும், ஹிந்தி சினிமா வில்லனின் சாயம் மங்கிய மேல் உடைகள் போன்ற சட்டைகளுக்கும் அதன் பின்தான் நீ விடுதலை தந்தாய். அதுவரை குளிர்காலத்தில் மெத்தையின் ஒரு பகுதியால் உன்னை மூடிக்கொண்டு நீ தூங்கினாய். பாதிரி கோட்டு மாதிரி ஒரு கறுப்புக் கோட்டும், உன் கறுத்த நிறத்தின் பின்னணியில் பளிரென்று அடித்த ஒரு வர்ணக் கலவைக் கம்பளிச் சட்டையும். ஆனால் அவற்றில் நீ கூச்சப்படுவது போல் தெரியவில்லை. நீ குறுகிப் போனது நம் புரொபஸர் தன் தயாள மனப்பான்மையை வெளியிட "இதுதான் நான் சேர்த்துக் கொண்டுள்ள ஹரிஜன் ஸ்டுடன்ட்" என்ற உன்னை எழுந்து நிற்கச் சொன்னபோதுதான். அதைவிட, பம்பாயிலிருந்தே உனக்கு உதவி, இதுவரை உன்னை ஊக்கியிருந்த குமார் உன் தோளின் மேல் எஜமானனின் கையை வைத்ததுதான் உன்னைக் குத்தியது. தன் தெளிய மார்க்ஸிய சித்தாந்தங்களை உன்னுடன் பகிர்ந்துகொண்ட குமார். "உதாரணமாக நம் லெனினை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று அவன் உன்புறம் கையை நீட்டிய போதெல்லாம் அந்த விரலிலிருந்து உன் பக்கம் தேள்கள் பாய்ந்தன. தான் கைதுக்கிவிட்ட தோரணையை அவன் விட மறுத்த போதுதான் நீ விலகினாய். ஒரு நாடகம் கலந்த நிகழ்ச்சியில். ஹரிஜன மாணவர்களிடம் நீ பேசி அவனுக்கு ஒட்டுப் போடச் செய்யவேண்டும் என்று அவன் விரும்பினான். 'ஹரிஜன மாணவர்கள் வாழ்க்கையில் நிறையக் கஷ்டப் பட்டிருக்கிறார்கள். எதுவும் அவர்களாக விரும்பித் தேர்ந்தெடுக்காத கஷ்டங்கள். அவர்களாகத் தேர்ந்தெடுக்கும் கஷ்டமாக இருக்கும் உன் தலைமை. இதை நான் செய்ய முடியாது. என் அருமை மார்க்ஸிய நண்பர்களே' என்று நீ அழைத்துப் பேசும்போது ஹரிஜனர் என்ற அர்த்தம் அதில் தொக்கி இருக்கும். அதைக் கேட்க சில குற்றமற்ற செவிகளை என்னால் அனுப்ப முடியாது" - எல்லோர் முன்னாலும் நீ சொன்னாய். உன்னுடைய அந்தச் சகிக்கமுடியாத கறுப்புக் கோட்டில் நீ இருந்தாய். யாரும் உன்னைக் கவனிக்கக்கூட இல்லை. நீ பேசியவுடன் ஒரு மின்சாரம் பரவியது. நன்றி மறந்த நாய் என்றான் குமார். நீ கதவருகில் போய்த் திரும்பிப் பார்த்தாய்: ஒரு நாயின் கண் மூலம் உன்னைப் பார்க்கும்போது நீ ஒரு சுவையான எலும்புத் துண்டாகக்கூடத் தெரியவில்லை எனக்கு என்றாய்.

எவ்வளவு பாலைவனங்களைக் கடந்து, கால்கள் கொப்பளிக்க, குருதியும் சீழும் சேர நீ நடந்தாய் என் நண்பா ! ஆனால் உன் வேர்கள் அருகே இவ்வளவு ஈரம் கசியும் மண் இருக்கும்போது அதில் உன் பாதங்களை அவ்வப்போது பதித்திருக்கலாகாதா? ஆனால் உன் அடி மனத்தில் இவர்களைப்பற்றி ஒர் அவமான உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். நல்ல பதவிக்கு வந்துவிட்ட அமெரிக்கக் கறுப்பன் ஹார்லெமில் உள்ள பெற்றோர்களை நினைத்து அவமானப்படுகிறான் என்று சோபனா படித்த கட்டுரை நினைவிருக்கிறதா?)

இனி விஷயத்துக்கு வருகிறேன்.

ஆரம்பச் செய்திகளில் ஒரு விட்டேற்றித்தனம் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு இப்படி ஆனதுபற்றி இவர்களின் குடிசைப்பகுதியினர் நடத்திய ஊர்வலம்பற்றிய நாலெழுத்துச் செய்தி மட்டும்தான். பலாத்கார எதிர்ப்பு அணி இதில் ஈடுபட்டு அவர்கள் வக்கீல் பகிரங்க அறிக்கை விட்ட பின்புதான் மற்ற பத்திரிகைகள் இதைப் பற்றிப் பத்திபத்தியாய் எழுதுகின்றன. இந்தச் செய்திகளையும் வக்கீலின் அறிக்கையையும் நான் ஒரு வார்த்தை விடாமல் படித்து விட்டேன். ப. எ. அணியின் செயலாளர் மீனா அரோரா எல்லாவற்றையும் தந்தாள்.

"இண்டியன் எக்ஸ்பிரஸ்" இதை முதல் பக்கத்தில் பெரிய அடைப்புச் செய்தியாய்ப் போட்டிருக்கிறது. இதன் பின் "இண்டியன் எக்ஸ்பிரஸ்" பின்வாங்கிய காரணம் ரோஸா போலீஸ் புகார் கொடுக்க மறுத்தது தான். ப.எ.அணியின் வேகம் தடைப்பட்டதும் இதனால்தான். இங்குதான் அவர்களுக்கும் ரோஸாவுக்கும் இடையே பிளவு. அவர்களால் அவளைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மாற்றமுடியவில்லை. அவள் அவர்கள் காரியாலயத்தின் ஒரு கூட்டத்தில் பேசியதை அவர்கள் ரிகார்ட் செய்திருந்தார்கள். நான் கேட்டேன். அவள் ஆரம்பிப்பதே ஒரு தாக்குதல், "எனக்கும் உங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. உங்கள் புடவையின் தரத்துக்கும் என் புடவையின் தரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நான் சொல்லவில்லை. அதைவிடப் பெரிய வித்தியாசம், உங்களை யாரும் பலாத்காரம் செய்து உங்களைக் கிழிக்கவில்லை. நான் கிழிபட்டிருக்கிறேன். ரத்தம் கொட்டியிருக்கிறேன். நம்மைச் சேர்த்திருப்பது இதுதான். நம்மைப் பிரிப்பதும் இதுதான்."

விலா குல்கர்னி "ஈவ்ஸ் வீக்லி"யில் இந்தக் கூட்டம் பற்றி எழுதுகிறாள் - "என் பூர்ஷ்வா வாழ்க்கையில் டீச்சரின் சிறு கோபம், சகத்தோழிகளின் காய்விட்ட கோபம், அப்பா அம்மாவின் கண்டிப்பான வளர்ப்புக்கான கோபம், கணவரின் சில்லறைச் சிடுசிடுப்புகள் தவிர கோபத்தை நான் அறிந்தவளல்ல. இதனால்தான் ரோஸா என்னிடம் பயத்தை உண்டாக்குகிறாள். அதைப்போல் கோபத்தை நான் பார்த்ததில்லை. அனுபவித்ததில்லை. அவள் சொன்னதைக் கேட்டுவிட்டு எழுந்தபோது என் உடலெல்லாம் வியர்த்து உள் ஆடைகள் ஒட்டிக்கொண்டு விட்டன. அவள் கடைசியில் கேட்ட கேள்வி இன்னும் என்னில் எதிரொலிக்கிறது. யாரிடம் நீங்கள் நீதி கேட்க விரும்புகிறீர்கள்? யார் என்னைக் குலைத்தார்களோ அவர்களிடமா? யாருக்காக இருக்கிறது நீதி மன்றம்? எனக்காகவா? நான் ஒரு ஈ, எறும்பைக்கூட வேண்டுமென்றே கொன்றது கிடையாது. ஆனால் ஒரு நாள் வரும். அப்போது அந்தப் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஒவ்வொருவனின் குடலையும் நான் பிரித்து இழுத்து வெளியில் போடுவேன். அவர்கள் ரத்தத்தைப் பூசிக்கொள்வேன். இதற்கு எனக்கு எந்த நீதிமன்றத்தின் அனுமதியும் தேவையில்லை. நான் அனுமதி கேட்பவளில்லை. பறிப்பவள்.


இப்படி அவள் சொல்லித் தலையை ஆட்ட கட்டியிருந்த நீண்ட முடி மறைந்து வைத்திருந்த பாம்பு மாதிரி பொட்டென்று கீழே விழுந்தது. அந்த பிம்பம் என் மனத்தில் என்றும் இருக்கும்" என்று முடிக்கிறாள் வீலா குல்கர்னி அவள் கட்டுரையில்.

எட்டாவது மார்ச் ஊர்வலக் கோரிக்கையில் பல கட்சிகளின் கோரிக்கைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறது ரோஸாவின் விவகாரம். காரணம், நீ ஆதரிக்கும் கட்சியினர் இதைத் தனித்த ஒரு நிகழ்ச்சியாக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. தனிநபர் பற்றிய விவகாரம் அளவுக்கு மீறி விரிவதை அவர்கள் எதிர்த்து இருக்கிறார்கள். இதை அமைப்பின் சறுக்கல்களின் பின்னணியில் பார்க்கவேண்டும் என்கிறார்கள் அவர்கள். அனைத்துலக நிதி ஸ்தாபனத்தின் நடை முறைக் கொள்கைகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சந்தை ஆக்ரமிப்பு, இவற்றின் மகத்தான பின்னணியில்தான் இங்குள்ள அமைப்பின் குறைபாடுகளைப் பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள். முதலில் அமெரிக்கத் துரதரகம் முன்பு நின்று அதை எதிர்த்துக் கோஷமிட்டபின்தான் ஊர்வலம் என்பது அவர்கள் கட்சி. ரஷ்யாவை ஏன் விட்டு விட்டீர்கள், அந்த ஏகாதிபத்தியம் மட்டும் குறைவா? நாங்கள் குடிசையில் உள்ள பெண்களிடம் எழுச்சியை உண்டாக்கு கிறோம். அதனால் விலைவாசி உயர்வு, தண்ணிர்ப் பிரச்சினை, கெரோஸின் விலை இவற்றையும் கோரிக்கைகளில் இணைக்கவேண்டும். அப்படித் துதரகம் முன்பு கோஷமிட வேண்டும் என்றால் நாங்கள் ரஷ்யத் துரதரகம் முன்பும் கத்துவோம். தயாரா? என்று அடுத்த கட்சி. ப. எ. அணி இந்தப் பிரச்சினையைப் பிரதானமாக வைப்பது வெறும் ஆண் - எதிர்ப்பாகப் புரிந்து கொள்ளப்படலாம், அதைப் போலீஸாரின் வன்முறைக்கு எதிர்ப்பாகக் கொண்டாலும் முக்கியப் பிரச்சினைகளிலிருந்தும் பார்வை திசை திரும்பிவிடும்; அதனால் அதற்கு ஒரு தனி ஊர்வலம் இன்னொரு தினம் நடத்தலாம் என்று தீர்மானித்து, அடுத்த நாளே அதைச் செய்யவும் செய்திருக்கிறார்கள். பலாத்காரச் சட்டம் பற்றிக் கூட்டமும் போட்டிருக்கிறார்கள். சட்டம்பற்றிய மறுபார்வை இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டாலும் ரோஸா விஷயம் பிசுபிசுத்துப் போனதற்குக் காரணம் ரோஸாதான். அவள் ஊர்வலத்திலும் கூட்டத்திலும் கலந்து கொள்ள வில்லை.

சில ஜனநாயக உரிமைக் கழகங்கள் மூலம் பிரபாகர் ஷிண்டேயின் கட்சியினர் அவளை அணுகியபோது, "வாழ வேண்டிய இளைஞர் களைக் கண்ணைப் பறித்து, எலும்புகளை உடைத்து, முட்டியைப் பெயர்த்துப்போட்டு வைத்திருக்கிறார்கள். போய் மீளுங்கள் அவர்களை. காடுகளில் துரத்தி அடித்துக் கொல்கிறார்கள். அதைத் தடுக்க என்ன செய்தீர்கள்? எனக்கு நீங்கள் என்ன செய்யமுடியும்? போய் எழுதுங்கள் அறிக்கைகளை ரோஸா பலாத்காரம் செய்யப்பட்டாள்; அவளுக்கு நீதி வேண்டும் என்று. கொல்லப்பட்ட பிரபாகர்


விண்டேயை மீட்க முடியுமா உங்களால் முகம், உடம்பெல்லாம் வீங்கி வீங்கிச் செத்தான். எங்கே போனிர்கள் அப்போது? விழுந்து அழ எனக்கு ஒரு ஆதரவான தோள் அப்போது கிடைக்கவில்லை. அன்பும் பாசமும் பலவீனங்கள் என்று முணுமுணுத்தீர்களாமே? இப்போது என்ன அக்கறை?" என்று கண்டபடிக் கோபமாகப் பேசி அனுப்பியிருக்கிறாள்.

இப்படித்தான் அந்த விவகாரம் தேங்கிவிட்டது.
O

மரங்கள் அடர்ந்த, நிலா வெளிச்சம் இலை நுனியைத் தொட்டு மடங்கிவிழும் வனத்தில் கோதாவரி பாருலேகர் நடந்தாள். ஆங்கிலேயர் களால் ஒடுக்கப்பட்டு நசுங்கிக்கொண்டிருந்த ஆதிவாசிகளின் நேசம் பெற அவள் நடந்தாள். அவளிடம் சுமை ஏதும் அதிகம் இல்லை. ஒரே ஒரு சிவப்புக் கொடிதான். அவர்கள் அவளை ஏற்கும்வரை மரத்தடியில் தூங்கும்போதும், ஏற்றுக்கொண்ட பின் ஆடு, ஆட்டுப் புழுக்கையுடன் ஒரே அறையில் உறங்கிய போதும், தேநீர் வேண்டும் என்று நாவு தவித்தபோதும் அவளை உற்சாகமூட்டியது அந்தக் கொடிதான். பைபிளைக் கையில் பிடித்துக் கொண்டு, ஆப்பிரிக்கக் காடுகளில் புகுந்து அலைந்து நடந்த கிறிஸ்துவச் சமயப் பரப்பாளர் களின் ஆர்வத்துக்கு இணையானதுதான் அவளுடையது. ஆனால் இவளிடம் கடவுள் இல்லை. இருந்தது. ஒரு மன எழுச்சி உண்டாக்கு வதற்கான பலம்தான்.

அதே காடுகளில் அவள் வழியில் நடந்தவன்தான் சுதாகர் விண்டே பின்பு வேறு வழியில் போனவன். பிரபாகரின் அண்ணா. அதே காடுகளில்தான் அவன் பல முறை துரத்தப்பட்டதும். கடைசியில் சிறையில் அவன் தூக்குப்போட்டுக்கொண்டதாகச் சொன்னார்கள்.

ஒரு நீலம் பாரித்த கழுத்தின்மேல் தன் அரசியல் ஏறாத விரலால் பிரபாகர் ஷிண்டே நீவிவிட்டிருக்கிறான். விரலில் அந்த நீலம் ஏறியதுபோலிருந்தது. அந்த நீலக் கழுத்து அவன் மூளையின் பாதியில் என்றும் அடைத்துக் கிடந்தது. அவனுக்கு ஆதிவாசிகளின் குடிசை களில் துரங்க ஓர் இடம் எப்போதும் இருந்தது.

ஆதிவாசிகளின் நிலப் பிரச்சினைபற்றிய கூட்டம் ஒன்றில் பெண்கள் குழு ஒன்று தொழிலாளிப் பெண்களுடன் வந்தது. அப்போது ரோஸாவும் வந்திருந்தாள். கூட்டுப்பாடல்களுக்கு அவள்தான் முதல் குரல் கொடுத்தாள். மராட்டியின் அடி ஆழத்தில் கொஞ்சம் தமிழ்ப் பசையோடு பாடினாள். அவள் இன்னும் ஆலைத் தொழிலாளிகள் சங்கத்தில் வேலை செய்ய ஆரம்பித்திருக்கவில்லை. தன் தோழியோடு வந்திருந்தாள். லெனினின் கருத்துப்படி மேலே படிக்கலாம் என் றிருந்தாள்.


பிரபாகர் ஷிண்டே அவள் வாழ்க்கையின் முதல் திருப்பு முனை. அவள் படிக்கவில்லை. சங்க வேலைகளில் ஈடுபட்டாள். அதைக் கனவுகளில் மிதக்கும் செய்கையாக நினைத்தான் லெனின். வந்தான். ரோஸா நேருக்குநேர் அவனைப் பார்க்கும் உயரம் வளர்ந்து விட்டிருந்தாள். பிரபாகர் ஷிண்டேக்கும் லெனினுக்கும் விரலைச் சுட்டிச் சண்டையிட்டுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. "சுவரைத் தாண்ட ஏணி வேணும். சுவரையே உடைச்சிட்டா எப்படி?” என்று லெனின் பேசும் முன், "இந்த உபமானங்களை ஏதாவது கருத்தரங்குல சொல்லுங்க. அதுதான் சரியான இடம். நீங்களெல்லாம் இருக்க வேண்டிய இடம்" என்று ஷிண்டே இடை வெட்டியதும், அடிதடி வராத குறைதான்.

ஒருநாள் சாயங்காலம் பிரபா ஒரு மராட்டிக் கட்டுரை படித்துக் காட்டிக்கொண்டிருந்தான் ரோஸாவுக்கு ஒர் ஆஸ்பத்திரியில் ஒரு சின்ன டாக்டர். அன்றைக்கு அவருக்கு இரவு ட்யூட்டி. நான்கு கிராமத்து ஆட்கள் ஒரு பதினேழு வயது பூரண கர்ப்பிணிப் பெண்ணைக் கட்டிலில் போட்டுக் கொண்டு எடுத்துவந்தார்கள். பெண்ணைப் பரிசோதித்த சின்ன டாக்டருக்கு வியர்த்தது. ஒரு குஞ்சுக் கை அவள் தொடைகள் இடையே நீட்டிக் கொண்டிருந்தது. அதில் பச்சையும் நீலமுமாய் சீழும் விஷமும் ஏறிக் கொள கொளத்துக் கிடந்தது. அவர் ஒடிப்போய் தனக்கு மேல் இருந்த டாக்டரை அழைத்து வந்தார். அது லட்சத்தில் ஒரு கேஸ் அந்த ஆஸ்பத்திரியைப் பொறுத்தவரை செய்யக்கூடியதெல்லாம் துண்டு துண்டாகக் குழந்தையை வெளியே கொண்டு வருவதுதான். அதை அவர் செய்தார். மறுநாள் காலை பெரிய டாக்டர் அறையில் சண்டை. அந்தக் குறிப்பிட்ட அறுவை சிகிச்சை புத்தகத்தில் படித்தபின் செய்துபார்க்க பெரிய டாக்டருக்குச் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. அவர் காலையில் வரும்வரை செய்திருக்கக்கூடாது என்பது அவர் வாதம். பெண்ணைக் காப்பாற்றச் செய்ததாக இரவு டாக்டர் கூறினார். பெரிய டாக்டர் அவர் nனியாரிட்டியை அவமதித்து விட்டதாகச் சொன்னார். சின்ன டாக்டர் கிராமத்தினரிடம் வந்தார். அவர்களுக்கு உபதேசிப்பது தன் பட்டணத்துக் கடமை எனறு நினைத்தார்: "முன்பே கூட்டி வரக்கூடாதா?’ என்றார். அவர்களில் வயதானவர், "கூட்டி வரலாம். எங்க கிராமத்துல ரொம்ப நாளுக்கு அப்புறம் மழை கொட்டிச்சு. எல்லாரும் வயல் வேலைக்குத் தேவைப்பட்டாங்க. இவளும் வயல்லதான் இருந்தா. வேலை முடிஞ்சதும் கூட்டிட்டு வந்தோம்" என்றார். அந்தக் கொளகொளத்த கை தொங்க அவள் வயல் வேலை செய்திருப்பாள் என்பது சின்ன டாக்டரின் வயிற்றைப் பிசைந்தது. அவரே எழுதியிருந்தார் கட்டுரையை.

படித்துவிட்டு லெனின் பக்கம் திரும்பினான் பிரபா. "அறிவு ஜீவிகள் இதற்காக ஒரு சொட்டுக் கண்ணிர் சிந்த முடியுமா? கண்ணிர் இருக்கிறதா உங்களிடம்?" என்றான். எழுந்த லெனின் தன் கையில் இருந்த கண்ணாடி டம்ளரை பிரபாகரின் மீது கோபமாக வீசிவிட்டு வெளியேறினான்.
O

"அண்ணி."

“உம்"

"தூங்கிட்டீங்களா?"

"இல்லையே?"

" நாரி பத்திரிகைக்காக மட்டும்தானா வந்தீங்க?"

"அதுக்கும் சேர்த்து."

"ஷீலா குல்கர்னி மாதிரி நல்ல இங்கிலீஷில் எழுதவா ?”

"இதுக்கு நான் என்ன பதில் சொல்ல கொலஞ்சு, நசுங்கிப் போகாத பொண்ணுங்க கிட்ட உனக்குக் கோவம் போல."

"சே "

"பின்னே ? நேத்து கார்பாடா பக்கத்துல ஒரு பதினாலு வயசுப் பொண்ணு. ரெண்டு போலீஸு, ரெண்டு வட்டாரத்து தடியன்களா சேர்ந்து பூவை மிதிக்கிற மாதிரி ... அந்தப் பொண்ணு தலையைத் தடவுறபோது அது உன் கையா இருக்கணம்னுட்டு நினைச்சேன். நீ ஒரு தடவு தடவி அவளைச் சரிப்படுத்திப்புடுவே. உன்னால முடியும். உனக்கு அது புரியும்."

"அன்னை தெரிஸாவா ஆகச் சொல்lங்களா?"

"அதுக்கு நிறைய பேர் இருக்காங்க நீ உன் கோவத்தை எங்களுக்கு பலமா தா."

"யோசிக்கிறேன்."
O

ரோஸா எனக்கு ஒரு பேட்டி தந்தாள். அதன் முக்கிய பகுதிகளை
உனக்குத் தருகிறேன்.

பிரபாகர் ஷிண்டே மிக மெனமையானவன். வெறும் அடுப்பு எரியும் வெளிச்சத்தில், இரவுகளில், ஆதிவாசிக் குடிசைகளில் அவ னுடன் அவள் மாவுச் சோறும், பச்சை வெங்காயமும் சாப்பிட்டிருக் கிறாள். காலையில் கையால் குத்தி உடைத்த அரிசிக் கஞ்சியுடன், பூண்டும் மிளகாயுமாய் இடித்த சட்னி சாப்பிட்டிருக்கிறாள். மில்லிலும், ஆதிவாசிகளிடையேயும் அவன் பெயர் ஃபக்கிர். சந்நியாசி எதற்கும் நிதானத்தை இழக்காதவன். (இந்த நியதி உடைந்தது உன்னிடம் மட்டும்தான்)


அந்தக் குறிப்பிட்ட மாலையை அப்புறம் அவள் பலமுறை நினைத்துப் பார்த்தாள். சிறுசிறு விஷயங்களும் பிரம்மாண்ட நினைவுப் பிழம்புகளாய் உள்ளன அவள் மனத்தில். அன்று மத்தியானம்தான் அவன் ஆதிவாசிகள் இருப்பிடத்திலிருந்து திரும்பியிருந்தான். அவள் சங்கத்திலிருந்து வந்தபோது அவன் வந்திருந்தான். அன்று அவள் சீக்கிரமாகவே வந்திருந்தாள். மில்லின் கிடங்கில் யாரோ நெருப்பு வைத்துவிட்டார்கள். ஒரே குழப்பம். அவனும் அம்மாவுமாக பெரிய விருந்துக்கான பட்டியல் போட்டிருந்தார்கள். பூரி, கடி, ஆலுரோஸ்ட், புலாவ், ராய்தா விஷயம் என்னவென்று கேட்டால் இருவரும் சொல்லாமல் சிரித்தார்கள். விருந்துப்பட்டியலில் இருந்த விஷயங்கள் எல்லாம் அவளுக்குப் பிடித்தது.

மில் கிடங்குபற்றி அவனிடம் சொல்லிவிட்டுக் குளித்து உடை மாற்ற அவள் உள்ளே சென்றாள். பத்து நிமிஷத்திற்குள் அவள் வெளியே வந்தபின் அது நடந்தது.

ரோஸா சொன்னாள்:

பிரபாவைப் பிடிச்சுக்கிட்டுப் போனபோது அவரு ரோஜாச் செடிக்குத் தண்ணி விட்டுக்கிட்டிருந்தார். சாதாரண அரெஸ்ட் இல்லை. பின்னால ஒரு உதை. கீழே விழுந்து பல்லு தெறிச்சிச்சு. பிடரில ஒரு அடி. அவரு வாயில ரத்தம் ஒழுகிச்சு.

"கோடவுன்ல நெருப்பு வெச்சுட்டு இங்கியா வந்தே?"ன்னாங்க.

"நான் இங்கியேதான் இருக்கேன்"னு சொன்னதுக்கு ஒரு அறை. கண்ணு முன்னாலியே ஒரு கண்ணு வீங்கி மூடிக்கிச்சு. அடுத்த நாள் நானும் இன்னும் சில பேரும் போனோம். முதல்ல அவங்கதான் போனாங்க. என்னை வேண்டாம்னாங்க. ஆனா நான் போனேன். அவரைக் கிழிச்சுப் போட்டிருந்தாங்க ஒதடு நீலமா வீங்கியிருந்துச்சு. பேச முடியலை. மார் மயிரெல்லாம் ரத்தம். ஒரு கையி மடங்கி நீலமா கிடந்திச்சு மொகமெல்லாம் வீக்கம். மொனகினாரு நான் கூப்பிட்டப்போ திரும்பினபோது லுங்கி வெலகிச்சு. தொடயெல்லாம் நீலம் கொட்டை பலூன் மாதிரி வீங்கி நாகப்பழக் கலர்ல பளபளன்னு இருந்துச்சு. இன்னிக்கும் கண்ணை மூடினா தெரியறது அந்த வீங்கின கொட்டைதான். நீல பலூன் மாரி உப்பிக்கிட்டு, ரத்தம் ஒலந்துபோய் ... வலிச்சிருக்கும் ... எவ்வளவு வலிச்சிருக்கும் ... அவ்வளவு வீங்க எவ்வளவு உதை... பலமான பூட்சு காலால.. ஒத்தக் கண்ணால என்னப் பார்த்தாரு கண்ணுல உசிரு இல்ல. செவசெவன்னுட்டுக் கொழம்பிக் கிடந்துச்சு வாயை அசைச்சாரு.

அதுதான் கடைசி. மறுநா ஒடம்புதான் கெடச்சுச்சு. நானும், அம்மாவும், அவங்கம்மாவும், தங்கச்சியுமே அதைச் சொமந்துகிட்டு ஊர்கோலம் போனோம். அப்புறமா என்ன வந்து அரெஸ்ட் பண்ணி னாங்க ஒடந்தைன்னுட்டு.

பொம்பளை போலீஸ் ஸ்டேஷன் போனா என்ன ஆகும்? அதுதான் ஆச்சு. தடிதடியா வந்து விழுந்தாங்க மேல. மயக்கம் போட்டப்ப எல்லாம் தண்ணி அடிச்சு எழுப்பினாங்க முழிக்கிற போதெல்லாம் ஒருத்தன் மேல இருந்தான். அவங்க பண்ணி சலிச்ச பெறகு இருக்கவே இருக்குது குச்சி, கம்பு, ஒயருன்னுட்டு, எதெது துழையுதோ அது. அப்புறம் சிகரெட் நெருப்பால மார்ல சுட்டாங்க கோடவுன்ல நெருப்பு வெச்சவன் கெடச்சுட்டான். உடம்புல பண்ண இன்னும் ஒன்றும் இல்ல - வெளில அனுப்பிட்டாங்க.

வந்த ஒடனே அம்மா என்னைப் பார்த்துக் கேட்டாங்க-விபரீதமா எதுவும் நடக்கல்லியேடீ பெண்ணெ - பயந்துகிட்டே கேட்டாங்க.

ரோஸா சிரித்தாள்.

(கைது செய்யப்பட்ட அன்று மாலை விருந்து எதற்கு என்று உனக்குத் தெரிய வேண்டும். அது உன் தங்கையின் கர்ப்பத்தைக் கொண்டாட டாக்டர் உன் அம்மாவிடம் அன்றுதான் செய்தியை உறுதிப்படுத்தியிருந்தார். ரோஸா இதை என்னிடம் கூறவில்லை. பிரபாகரின் தங்கை என்னிடம் சொன்னாள்.

ரோஸா திரும்பி வந்த அன்று மத்தியானம் உட்கார்ந்திருந்தாளாம். அடி வயிற்றில் வலி என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவளைச் சுற்றிலும் ரத்தக் கிளறியாம். அப்படித்தான் ஒரு சின்ன பிரபாகரோ, ரோஸாவோ தங்கள் முடிவுக்குத் தள்ளப்பட்டது. நான் ரோஸாவிடம் இதுபற்றிக் கேட்டபோது, "ஆமா, நான் சொல்லல, யார் கிட்டயும் சொல்லல. நடந்த கோரத்துல இது ஒரு கோரம். இங்க செல பொம்பளைங்களுக்குப் பத்து மாசம் முழுசும் உசிரைச் சொமக் கறதுக்கான சுதந்திரமும், உரிமையும் இன்னும் வரல போலிருக்குது. இதை எந்தத் துரதரகம் முன்னால போய் கத்தட்டும் நானு? எந்த ஜட்ஜுக்கு நேரம் இருக்குது இதைக் கேட்க?" என்றாள். பின் அவள் தன் இரு மார்பகங்களையும் கல்லைச் சுமப்பது போல் தன் இரு கைகளால் தாங்கி, பொட்டுக் கண்ணிர் இல்லாமல் ஒரு கேவல் கேவினாள். கனத்து வரும் என் மார்பகங்களை அடிக்கடி தொட்டுப் பார்த்து, அதில் நிழலாடத் தொடங்கியிருக்கும் பச்சை நரம்புகளில் நீ உன் இதழ்களை, வலிக்கக்கூடாது என்று பஞ்சுபோல் மெத்தென்று வைப்பதை நினைத்துக் கொண்டேன்)

O
காசிபாயி பரேலுக்கு வந்து எத்தனையோ வருடங்களாகிவிட்டன. அவள் வயதையெல்லாம் கேட்பது அவளைப் பகைத்துக்கொள்வதற் கான ஆயத்தம்தான். "ஏன் மாப்பிள்ளை பார்த்திருக்கிறாயா? கூட்டிவா ரெண்டு பெத்துக்கலாம் இன்னும்" என்பாள் பளிச்சென்று. அவளுடைய பிள்ளை குடித்துவிட்டு போலீஸ் லாக்கப்பில் கிடந்தால் கூட்டிவருவது இவள்தான். போலீஸ் அடிக்க மறந்த அடியை இவளே அவன் மண்டையில் போட்டுவிடுவாள்.

பரேலே அவள் கண் முன்தான் விஸ்தாரமாயிருக்கிறது. ஏன், லஞ்சம் வாங்கிய காண்டிராக்டர்கள் அந்த மேம்பாலம் கட்டி, அது ஒர் இரவு உடைந்து கீழே படுத்திருந்த எல்லோரையும் துவம்ச மாக்கிய சமீப நிகழ்ச்சிகூட அவள் முதலிலேயே யூகம் செய்ததுதான். "மும்பாயில் உடைந்து விழாமல் எது கட்டியிருக்காங்க இதுவரை?" என்று நிகழ்ச்சியைத் துடைத்து விட்டுவிடுவாள். பரேல் வினாயகர்கூட இவள் கண்முன் வளர்ந்தவர். வினாயக சதுர்த்திக்கு உட்காரும் சிறு பொம்மையாக இருந்தவர், ஒவ்வொரு வினாயக சதுர்த்திக்கும் வளர்ந்துகொண்டேபோய், இந்த வருடம் அறுபது அடியாக நின்றது வரை சரித்திரம் காசிபாயிக்குத் தெரியும். நின்றது மட்டுமல்லாமல், ஒரு காலை இன்னொன்றின் மேல் வளைத்து, கையில் புல்லாங்குழல் வேறு. ஏன், கிருஷ்ணனின் ஏக போக உரிமையா என்ன? மூவிக வாகனம் எல்லாம் அதோ மூலையில் சின்னதாக இருக்கிறது. மகாராஷ்டிரத்தின் இவ்வளவு பெரிய கடவுளுடன் எலியைச் சம்பந்தப்படுத்திப் பெரிசுபடுத்துவதை வினாயக பக்தர்கள் ஏற்க மாட்டார்கள். அதனால்தான் தாமரைமேல், குழலுடன் என்று மாற்றம் தாமரையும் குழலும் யாரிடம் இருந்தால் என்ன? வினாயகரின் முகம்கூட யானைக்களையை மீறிக் கொஞ்சம் அமிதாப் பச்சன் சாயல் அடிப்பதாகச் சிலர் சம்சயப்பட்டார்கள். இந்தப் பரேல் வாதம் எல்லாம் ஜனித்துப் பெருகியதற்கெல்லாம் சாட்சி காசிபாயி. காசிபாயை அதிர்ச்சியடைய வைக்கிற மாதிரி விஷயம் பரேலில் நடந்ததாகச் சரித்திரம் இல்லை. ஆனால் காசிபாயால் ஒரு மாலை வேளையை மறக்க முடியவில்லை. அதைப்பற்றி அவள் பேசாத காரணம் அவள் அதனின்றும் இன்னும் மீளாததால்தான்.

காசிபாயி, ஸ்ேட் வீட்டு வேலையை முடித்துவிட்டு, அவர்கள் வீட்டு வீடியோவில் அவர்களுடன் பாதி ஹிந்திப் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்தப் பிண ஊர்வலம் அவள் கண்ணில் பட்டது. பரேல் கூட்டமே சற்று வெலவெலத்து நின்றது. பாடையைத் தூக்கிச் சென்றது. நான்கு பெண்கள். இரண்டு வயதானவர்களும், இரண்டு இளம் பெண்களும், ஒருத்தியின் தலைமுடி விரிந்து தொங்கியது. யார் கண்ணிலும் ஜலம் இல்லை. முடியைப் பிரித்துப் போட்டவள் பார்வை எந்தப் பக்கமும் திரும்பவில்லை. கேட்பவர்களுக்கு இன்னொரு பெண்தான் பதிலளித்தாள். சீக்கிரமே பாடையின் பின் ஒரு கூட்டம் சேர்ந்தது. "புலிஸ் அத்யாசார், நஹி சலேகி என்ற கோஷம் கிளம்பத் தொடங்கியது. காசிபாயும் சேர்ந்துகொண்டாள். அவளைத் தொடர்ந்து பல பெண்கள்.

அவர்கள் வெகு தூரம் நடந்தார்கள் என்பது காசிபாயிக்கு நினைவு இருக்கிறது. எரியவைத்துவிட்டுத் திரும்பும்போது காசிபாயிக்கு என்ன தோன்றியதோ என்னவோ, மற்றவர்களை விலக்கிக்கொண்டு போய் அந்த முடிவிரிந்த பெண்ணைப் பாய்ந்து அனைத்துத் தன்மேல் சாய்த்துக்கொண்டு தலையைத் தடவிவிட்டுத் தன் மார்பில் அடித்துக்கொண்டு அரற்றலானாள்.

வேறு எந்தக் கட்சியோ, குழுவோ தன் அனுதாபத்தையும் உதவியையும் அளிக்கும்முன், காசிபாய் தன் மார்பில் ஓங்கி அடித்துக் கொண்ட ஒர் அறையில் தன் எதிர்ப்புக் குரலை வெளியிட்டு விட்டாள். அந்த அறையைச் சொற்களில் மொழிபெயர்ப்பது மிகவும் கஷ்டம்.
 O

பலாத்கார எதிர்ப்பு அணியின் காரியாலயச் சுவரில் ஒரு செய்தித்தாள் அளவு வெள்ளைத்தாள் ஒட்டப்பட்டிருந்தது. தாளின் மேல் முனை தடித்த வர்ணப் பென்சிலால் நிறையக் கோடுகளும், அம்புக்குறிகளும், அடைப்புக்குறிகளும், எழுத்துகளும் இருந்தன. தாளின் ஆரம்பத்தில் கறுத்த எழுத்துகளில் கொட்டையாய் எழுதப்பட்டிருந்தது. ரோஸாவின் வழக்கு. மீனா அரோரா தரையில் அமர்ந்து தாளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். சுற்றி இருபது பேர் இருந்தனர். ஜோதி, சுவ ரொட்டிகளைத் தயாராக்கியாயிற்று. மேன்கா பதிப்பக ஸேட்ஜி இவள் போய் சுவரொட்டிகள் பற்றிய விவரங்கள் சொன்னதும் தாளை எடுத்து விலைப்பட்டியல் போட்டார். அதைக் கையில் வாங்கி நாலாய் மடித்து அவரிடமே கொடுத்தாள் ஜோதி.

"இது எனக்குத் தேவையில்லை ஸேட்ஜி. எங்களுக்கு நீங்கள் ஒரு குறைந்த விலைப்பட்டியல் போடப்போகிறீர்கள்" என்றுவிட்டுத் தன் சோடா பாட்டில் கண்ணாடி மூலம் சிரித்தாள்.

"யார், நானா?” "நீங்களேதான்."

"மஹாலகடிமி மந்திருக்கு மட்டும்தான் நான் தானம் செய்யும் வழக்கம்."

"இந்த வருடம் எங்களுக்கும் கொஞ்சம் தானம் செய்யுங்கள்."

"எவ்வளவு?"

"உங்களால் முடிந்த அளவு" என்றுவிட்டு மடக்கென்று எழுந்து தலைப்பு முனையை ஏந்திப் பிடித்துவிட்டுச் சிரித்தாள்.

அணியின் விகடன் ஜோதிதான். தான் சுவரொட்டி அடித்த அனுபவத்தைக் காது, மூக்கு வைத்துச் சொல்லக் காத்திருந்தாள்.


விலா குல்கர்னி "ஈவ்ஸ் வீக்லி"யில் நீண்ட கட்டுரையாய் வெளி வந்திருந்த அவள் இரண்டாவது கட்டுரைப் பக்கங்களைப் பிரித்து வைத்தாள். இரண்டொரு மராட்டி இதழ்களையும், குஜராத்திப் பத்திரிகைகளையும் கொண்டு வந்திருந்தாள் ரீலதா. ஜனநாயக உரிமைக் கழக ராதா அந்த மாத இதழை பலாத்காரத்தைப்பற்றி விவாதிக்கச் செலவிட்டிருந்தாள். ரோஸா வழக்கைப் பிரதான கட்டுரையாக்கியிருந்தாள்.

மீனாட்சி, பெரிதாக்கப்பட்ட பம்பாய் வரைபடத்தில் அவர்கள் மேற்கொள்ளப்போகும் ஊர்வலத்தின் வழியைச் சிவப்புப் பென்சிலால் குறித்துக்கொண்டிருந்தாள்.

அம்ருதா ஸிங் உள்ளே நுழைந்தாள். அப்போதுதான் கோர்ட்டி லிருந்து வந்திருந்தாள். கறுப்பு அங்கியை இன்னும் களையவில்லை. நுழைந்தவாறே, "முதல் தடவை ரோஸாவைப் பரிசோதித்த டாக்டர் சாட்சி சொல்ல ஒப்புக்கொண்டாகிவிட்டது" என்றாள்.
O

ரோஸாவைச் சம்மதிக்க வைக்க ஒரு வாரமாயிற்று. அவள் வாதம் தீர்மானமாக, துளி ஓட்டையில்லாமல் இருந்தது. விளம்பரம் பற்றி வெட்கமோ கூச்சமோ அவளுக்கு இருக்கவில்லை. ஆனால் நீதிமன்றங்களின் நீதிபற்றி அவளுக்கு உறுதியான அவநம்பிக்கை இருந்தது. நான் சொல்லக்கூடியதெல்லாம் எந்த அமைப்பு உன்னை ஒதுக்குகிறதோ அதன் ஸ்தாபனங்களை - உன்னை ஒடுக்கப் பயன் படுகிறதே அவற்றை-நீயும் உன்னளவுக்கு உபயோகி என்பதுதான். ஜனநாயக உரிமைக் கழக ராதாவும் இதை வந்து வற்புறுத்தினாள். ரோஸா டீ போட்டுத் தந்தாள். எங்களுடன் பல மணி நேரங்கள், இரவில்கூட, உட்கார்ந்திருந்தாள். நாங்கள் சொல்வதை எல்லாம் அவள் கவனமாகக் கேட்டாள். மாட்டேன் என்பதை அவள் வாய் விட்டுச் சொல்லாமலே அதன் அலைகளை அறையில் பரவவிட்டாள். கடைசியில் அவளைக் கணிய வைத்தது உன் அம்மாதான். சண்டை யிடும் பாணியும், ஆயுதமும் இப்படித்தான் என்பது சாஸ்வதமாக்கப் பட்டது இல்லை. தண்ணிரில் சண்டை போடும்போது துடுப்புத்தான் ஆயுதம், படகு கவிழ்ந்தால் கரைவரை கைதான் துணை சொன்னது உன் அம்மா.

கடைசியில் ரோஸா சரி என்றாள். நாங்கள் சேர்க்க வேண்டிய நிதி பற்றியும் திட்டங்கள் பற்றியும் பேசியபோது தன் தலைப்பின் முடிச்சை அவிழ்த்து முதல் எட்டனாவைத் தந்தது உன் அம்மாதான். (ஆமாம். அதுதான் இன்றுவரை உன் அம்மாவின் பணப்பை. ஸ்டேஷன் விடைபெறல் நினைவிருக்கிறதா?)

உன் அம்மா போன்றவர்களிடம் ஒரு பாஷை இருக்கிறது. அதற்கு, சொற்களுள்ள மொழியின் ஏற்ற இறக்கங்களும், ஒரு புலப்படாத உருவ அமைப்பும் இருக்கிறது. இருந்தும் அதில் சொற்கள் இல்லை. கை வீச்சில், கண் பார்வையில், முதுகில் அழுத்தும் கையில், சிரிப்பில், அழுகையில், அரற்றலில், ஒலத்தில், சொற்கள் நிராகரிக்கப்பட்ட மெளனத்தில் அழுந்திக்கொண்டிருக்கிற பாஷை இது. எங்களையும் அவர்களையும் பிரிப்பது இந்த பாஷைதான். ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் நாங்கள் பேசினாலும், அது ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் மொழிதான். வெறும் பாலம். நாங்கள் தேடுவது வேறு பாஷை என்று தோன்றுகிறது. இந்தப் பக்கம்- அந்தப் பக்கம் என்று இல்லாத பாஷை இரு கரைகளையும் முறுக்கிப் பிணைந்துவிடும் பாஷை, சிறு குழந்தை இரு கைகளையும் விரித்துத் தூக்கியவுடன் புரிந்துவிடும் பாஷை.
O

ஊர்வலம் தாதர் சிவாஜி பார்க்கிலிருந்து தொடங்கி முதன் மந்திரியின் வீடுவரை வந்தது. பின்பு காலா கோடா சதுக்கத்தில் வந்து நின்றது. கேட்வே ஆஃப் இண்டியாவிலிருந்து பார்த்த போது தலைப்பால் மூடிய தலைகளாகவே அலைஅலையாய்த் தெரிந்தது. உள்ளே புகுந்த லாரியின் பின்புறம் ஏறிப்பேசியது ரோஸாதான். கடும் கத்திரிப் பூ நிறத்தில் புடவை. மாலை வெய்யில் அதன் மேல் பட்டபோது விஷத்தை விழுங்கிய சிவன் கண்டமாய்த் தெரிந்தது. அவள் வீட்டு ஒரத்தில் ஒரு தொட்டியில் இருந்த வெள்ளை ரோஜாச் செடிபற்றிப் பேசினாள் ரோஸா. அந்தச் செடி மிகவும் ஆசையாய் நடப்பட்டது. பரேல் பஸ் சத்தம், அடுத்தவர் மூச்சு மேலே படும் ஜன நெருக்கடி, பரேலின் கெட்ட காற்று, இயந்திரங் களையே பார்க்கும் அலுப்பு இவற்றுக்கு மாற்றாக இருக்க நடப்பட்ட வெள்ளை ரோஜாச் செடி. அது வெறும் செடி அல்ல. அது ஒரு கனவு. இருவர் நெய்த கனவு. ஒருநாள் பரேல் கூட்டத்தில் ஒரு வெள்ளை ரோஜா தலைகாட்டி சில மாயங்களைச் செய்திருக்கும். இத்தகைய கனவுகள் அந்த வட்டாரத்துக்கு உரியவை இல்லை போலும். வெள்ளை ரோஜாக்கள் வேறு தோட்டங்களுக்கு உரியவை. இந்த வெள்ளை ரோஜாவின் கதை என்ன என்று சொல்கிறேன் என்ற ஆரம்பித்தாள் ரோஸா. ஒரு மணி நேரம் பேசினாள். முடித்து விட்டு அவள் தன் முஷ்டியை உயர்த்திய போது காலா கோடா சதுக்கத்தை முஷ்டிகள் ஆக்ரமித்தன. ஒரு சிறு கோஷமும் எழும்பாமல் அதீத மெளனத்தில் சில நிமிஷங்கள் கடந்த பிறகு "நாரீ ஷரீர் பே அத்யாசார் நஹி ஸ்ஹேங்கே, நஹறி ஸ்ஹேங்கே' (பெண்கள் உடம்பை ஒடுக்குவதைப் பொறுக்க மாட்டோம், பொறுக்க மாட்டோம்) என்று ஹிந்திப் பாட்டு வெடித்துக்கொண்டு கிளம்பியது).
O

ப. எ. அணியின் ஓரறைக் காரியாலாயத்தில் ஒரு சிறு கொண் டாட்டம் நடந்துகொண்டிருந்தது. ஊர்வலத்தின் வெற்றியை ஒட்டி அது கொண்டாடப்படவேண்டிய விஷயம்தான். இதுவரை அவர்கள் திட்டமிட்ட வேறு எந்த ஊர்வலமும் இவ்வளவு வெற்றி அடையவில்லை. கடந்த ஊர்வலங்களில் யாரைச் சேர்த்துக்கொள்வது, யாரை விடுவது போன்ற குழப்பங்கள் இருந்தன. ஒரு வயதான மாது, "நல்ல கிறித்துவர்களே, பெண்களை உதாசீனம் செய்வது ஏசுவுக்குத் துரோகம் இழைப்பது. ஏசுவின் பக்கம் வாருங்கள். பெண்களைக் கருணையுடன் நடத்துங்கள்" என்ற வாசங்கள் எழுதிய அட்டையுடனும், விநியோகிக்கத் துண்டுப் பிரசுரங்களுடனும் ஓர் ஊர்வலத்துக்கு வந்தபோது மீனா அரோராவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் விளக்கியதும், அந்த வயதான மாது, "நீ கிறிஸ்துவின் எதிரியா?" என்ற அன்புடன் கேட்க, அதில் ஒரு மணி நாழிகை செலவாகியது. கடைசியில் அந்த மாது மீனாவின் பின்னாலேயே பிடிவாதமாகத் தன் அட்டையைப் பிடித்து நடந்தாள் அந்த ஊர்வலத்தில். அது ஒரு நிருபர் கண்ணில் பட்டு "ப. எ. அணி எந்தக் குறிப்பிட்ட கட்சியின் கிளையும் இல்லை; அது அகன்ற ரூபம் கொண்டது என்பது உண்மைதான். அவர்கள் ஏசு கிறிஸ்துவைக்கூட விட்டு வைக்கவில்லை" என்று எழுதினார்.

"பெண்களைத் தெய்வமாகப் போற்றுங்கள்" என்ற மேற்கோள் களுடன் ஒரு குழு வந்தபோது - அந்த ஊர்வலத்தில் வந்ததே அந்த ஒரு குழுதான் - மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. உரத்த சம்பாஷனைக்குப் பிறகு வந்தவர்கள் மீனாவின் ஷர்ட்டைப் பிடித்து உலுக்கி, "பான்ட்-ஷர்ட் போட்டுக்கொண்டு பெண்களுக்கு ஆதரவு தேடாதே. புடவை கட்டு" என்று தனிப்பட்ட முறையில் ஏசுவதில் முடிந்தது. அவர்கள் அணியில் எவ்வளவு பேர் புடவை அணிகிறார்கள் என்றும், உடை என்பது எவ்வளவு மேம்போக்கான விஷயம் என்றும் மீனா விளக்கும் முன் அவள் ஷர்ட் காலர் கிழிந்துவிட்டிருந்தது. வந்தவர்கள் புடவை கட்டியிருந்தாலும் அவர்களுக்கும் தெய்வத் தன்மைக்கும் இடையே மீனாவின் கிழிந்த காலர் தூரம் இருந்தது. நடந்த ஒரே ஒரு பெரிய ஊர்வலத்திலும் வேறு வேறு வழியாய், வேறு வேறு தூதரகங்கள் முன் போய் விட்டுத்தான் அவர்கள் ஓரிடத்தில் சேர்ந்திருந்தார்கள். அவற்றோடு ஒப்பிடும்போத ரோஸா ஊர்வலம் ஒரு வெற்றிதான்.

அந்த ஊர்வலத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபட முடிய வில்லை இவர்களால்.

பரேலின் அத்தனை பெண் தொழிலாளிகளையும், வீட்டுவேலை செய்யும் பெண்களையும், தெருக் கூட்டும் பெண்களையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எண்பது கிலோமீட்டர் தூரத்திலிருந்து பெண்கள், காலையில் எழுந்து, சமையலை முடித்துவிட்டு, இடுப்பில் குழந்தை களோடு, சொந்தப் பணத்தில் மின்சார ரயில் டிக்கெட் எடுத்து வருவார்கள் காலை எட்டு மணிக்கே என்றும் அவர்கள் எதிர்பார்க்க வில்லை. யாரும் எதையும் எதிர்பார்த்து வரவில்லை. பித்தளைத்தூக்குகளிலும், காகிதச் சுருளிலும் ரொட்டியும் உருளைக்கிழங்கும் அவர்களே கொண்டுவந்தார்கள். சிறு குழந்தைகள் வாயில் முலைக் காம்புகளும், கட்டை விரல்களும், அழுத வாயில் பெப்பர்மின்ட் குச்சியும். தலைப்பை விசிறித் தலையில் போட்டுக் கொண்ட பின் மழை, வெய்யில் அவர்களை ஒன்றும் செய்யாது போலிருந்தது. குழந்தைகளும் முலைப்பாலோடு இந்த உணர்வையும் சேர்த்துப் பருகியவைபோல் சிணுங்காமல் இடுப்பில் இருந்தன. முஷ்டிகள் உயர்ந்தபோது சில கொழுக்கு மொழுக்கு குட்டி முஷ்டிகளும், பெப்பர்மின்ட் ஒழுகிய முஷ்டிகளும், விரல் சப்பியதால் கட்டை விரலில் வடு ஏறிய முஷ்டிகளும் அதில் இருந்தன.

பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகளைச் சுவரில் இருந்த அறிவிப்புப் பலகையில் குத்திக் கொண்டிருந்தாள் பூரீலதா. ஒரு தமிழ்ப் பத்திரிகையும் அதுபற்றி எழுதியிருந்தது. ஊர்வலம்பற்றி எழுதிவிட்டு முடிவில், "ஒரு சந்தேகம், ஊர்வலத்தில் இருந்த சில பெண்களைப் பார்த்தபோது அவர்கள் ஆண்களா பெண்களா என்று தெரியவில்லை. இதுவும் பெண்கள் கோரும் சுதந்திரமா? பலாத்கார எதிர்ப்புபற்றி ஊர்வலம் நடத்தத் தகுந்த உடைதானா இது?" என்று கேட்டுத் தன் தமிழ் ஆண்பிள்ளைத்தனத்தை வெளியிட்டு, தமிழ்க் கலாசாரத்தைக் காப்பாற்றியிருந்தார் நிருபர். அதிலும் சொந்தக் காலில் நிற்க முடியாமல் ஓர் எழுத்தாளரை அணுகி, "இது மாதிரிப் பெண்கள் ஊர்வலம் போய் கோஷமிடுவது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?" என்று கேட்டிருந்தார். எழுத்தாளரும், "இது பற்றித் தெரிந்து கொள்வதோ அபிப்பிராயம் தருவதோ அவசியம் என்று படவில்லை எனக்கு" என்று பதில் அருளியிருந்தார். அபிலாஷா இதை எல்லாம் மொழி பெயர்த்தாள் மற்றவர்களுக்கு. பளிரென்று ஆரஞ்சு வண்ணத்தில், பத்திரிகையில் வெளிவருவதை எல்லாம் ஆசீர்வதிப்பதுபோல் புன்னகைத்த சங்கரச்சாரியார் படத்தை மேலிருப்பதுபோல் மடித்துப் பலகையில் செருகினாள் பூரீலதா. பலகையின் கறுப்புத் துணிக்கும் புகைப்பட ஆரஞ்சு வண்ணத்துக்கும் பொருந்தும் என்றாள்.

 ஊர்வல முடிவில் ஓர் ஒய்வு பெற்ற நீதிபதி தன்னை அணுகி, வெற்றி பெறப்போவது தொண்ணுாறு சதவிகிதம் உறுதி என்று சொன்னதைச் சொன்னாள் அம்ருதா ஸிங்.

எதிர்காலம்பற்றி அந்த மகிழ்ச்சி மிதமிஞ்சிய வேளையில் சந்தேகங்கள் இருக்கவில்லை.
 O

அதைப்பற்றி நான் எழுதாவிட்டால் இந்த அறிக்கை பூரணமாகாது. ரோஸாவின் ஊர்வலப் பேச்சும் அதன் பாதிப்பும். மார்க் ஆன்டனி மாதிரி எல்லோர் உணர்ச்சி மையத்தையும் தன்னிடம் ஈர்த்து வைக்க முடிகிறது அவளால். அதன் தினத்தாள் செய்திகளை இத்துடன் இணைத்திருக்கிறேன். (லோக் ஸத்தாவில் வந்துள்ள புகைப்படத்தில் வலது மூலையில் இருப்பவள் யமுனாபாயி ஸாவந்த். பார்த்தால் சாது மாதிரி இருக்கிறாள் இல்லையா? அவள் கணவனைப் போலீஸ் பிடித்தபோது, நீண்ட முறுக்கிய மீசை வைத்துள்ள போலீஸ்காரரின் மீசையை எட்டிப் பிடித்து இவள் தொங்கினாளாம். மீசை கையில்: "நாரீ' பத்திரிகையில் நான் அனுப்பிய கூட்டத்தின் புகைப்படங்கள் வந்துள்ளன. அதில் பதினாறாம் பக்கத்து மூன்றாவது புகைப்படத்தில், இரண்டாம் வரிசையில் காமிராவை நேர் எதிரே பார்த்து நிற்கும் மூவர் க்ராண்ட் ரோடில் தொழில் செய்பவர்கள். மீனா அரோராவிடம் தாங்களும் பலாத்காரத்தை எதிர்க்கும் ஊர்வலத்தில் வர விரும்புவதாகக் கூறினார்கள். அவர்கள் போலீஸ் அனுபவங்கள் பற்றி நிறையச் சொன்னார்கள். போலீஸ் ஸ்டேஷன் போவதானால் ஒரு குழந்தையை இடுப்பில் கொண்டு போய் விடுவார்களாம். குழந்தை அழஅழ, தொல்லை பொறுக்காமல் தண்டம் சீக்கிரம் கட்டச் சொல்லி அனுப்பிவிடுவார்களாம். நைலான் புடவை கட்டித்தான் போவார்களாம். கையில் நெருப்புப் பெட்டி இல்லாமல் போகமாட்டார்களாம். "எவனாவது பக்கத்தில் வந்தால், நான் நெருப்பு வைத்துக்கொண்டு விடுவேன்" என்று ஒரு பயமுறுத்தல் போட்டுவிடுவார்களாம். எந்தக் கிராமத்திலும் பணமும் சக்தியும் வாய்த்தவர்கள் சக்தியற்றவர்களைத் தண்டிக்கும் போது அதில் இலக்கு ஆகிறவர்கள் பெண்கள்தாம்; முதலில் புகுந்து இழுப்பது அவர்களைத்தான்; குலைப்பது அவர்களைத்தான் என்று கங்கா என்பவள் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்)

மீண்டும் ரோஸாவிடம் வருகிறேன். அன்றையப் பேச்சுக்கு ரோஸா எந்த ஆயத்தமும் செய்யவில்லை. காலால் மிதித்து நசுக்கப்பட்டவர் களின் நாபியினுள் ஒரு மொழி ஊற்று இருக்கிறது. அது உன் எழுத்தில் இருக்கிறதென்று நான் எண்ணியதுண்டு. எவ்வளவு தவறு அது. உன்னிடமோ என்னிடமோ அது வர அதன் தாபம் நமக்குள் நுழைய வேண்டும். அதன் நாக்குகள் நம்மைத் தீண்டி நம் சருமத்தைக் கரகரவென்று நக்க வேண்டும்.

வெகு எளிதான மராட்டியில், ஜரிகை அலங்காரம் செய்யாமல் அவள் பேசினாள். அவள் பேச்சுக்குக் கிடைத்த பெரிய பாராட்டு மீனா அரோரா அடுத்துச் செய்ததுதான். அவளுக்குப் பிறகு பேச வந்த மீனா எதிரேயுள்ள கூட்டத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டுப் பெருத்த விம்மல்களோடு அழத் தொடங்கினாள். அதைவிட நன்றாக அவள் பேசியிருக்க முடியாது. நாங்கள் ஊர்வலச் செய்தியைக் காட்ட டி.வி.யை அணுகியபோது, அந்த கோபால் ஷர்மா, "நாங்கள் காட்டுகிறோம். ஆனால் மெளனப்படம்தான். எங்கள் கமென்டரியோடு. நீங்கள் என்ன பேசப்போகிறீர்களோ, யாருக்குத் தெரியும்?" என்றான். மீனா அரோரா அழுது அவனைத் தோற்கடித்துவிட்டாள் என்று நினைக்கிறேன். அவன் டி. வி. காமராவைத் திருப்பிய பக்கமெல்லாம் கண்ணிர். அவன் செய்ததெல்லாம் படக்கென்று வெட்டிவிட்டதுதான். இவனை எல்லாம்தான் கீழே உதை விடலாம் என்று வருகிறது. உட்காரு என்றால் தவழ்பவர்கள்.

ஊர்வலம் பல வகையில் வித்தியாசப்பட்டவர்களை ஒரே இடத்தில் பிணைத்துப்போட்டது. பலரும் கலந்தது, ஒர் உருவாக்கப்பட்ட நிலைமையில், அசாதாரண உற்சாகத்துடனும், ஆழமறியா ஆர்வத் துடனும், ஓர் அதீத சந்தோஷப் பீறிடலுடனும் நடந்தது. அதன் தாக்கம் இன்னும் இருக்கிறது. சமநிலைக்கு வந்ததும் சில முட்கள் தைக்கும். ஆனால் அவை முட்கள்தாம். இரும்புக் கதவுகள் இல்லை. ரோஸா ஒரு பெரிய போராட்டத்துக்கான நிமித்தத்தை மட்டுமில்லை, வேலிகளையும் கதவுகளையும் மூடப்பட்ட ஜன்னல்களையும் ஒரே வீச்சில் திறப்பதற்கான மூச்சையும் உள்ளே ஒடவிட்டிருக்கிறாள். அந்த மூச்சில் கலந்திருக்கும் சக்திபற்றிச் சொல்லமுடியவில்லை. இது வெறும் சொற்களால் மூட்டை கட்டப்பட்ட அறிக்கை. அந்தச் சொற்களினூடே ஒர் உயிர் இழை தென்பட்டால் அதைப் பற்றிக்கொள். இருக்கும், எங்காவது முழு உயிருடன் படபடத்தவாறு. அது எங்கள் புது மொழியின் முதல் குரல். அதில் ரோஸாவின் உஷ்ண மூச்சு கலந்திருக்கும்.
 O

ப.எ. அணியின் அறைச் சுவர்களில் பல சுவரொட்டிகள் ஏறியிருந்தன. ஒன்றில் வெறும் வரைபடங்கள். முழங்கால் மேல் முகம் பதித்து ஒரு பெண்: கை கால்கள் விலங்கிடப்பட்ட முகம் தெரியாத பெண். அஞ்சூ ஒரு பெரிய கேலிச்சித்திரம் தீட்டியிருந்தாள்.

ஒரு நீதிபதி. எதிரில் கூண்டில் ஒரு பெண்.

"நீ கன்னியா?"

"இல்லை."

 "அப்படியானால் நீ பலாத்காரம் செய்யப்படவில்லை. பலாத்காரம் நடந்தபோது நீ கத்தினாயா?"

"இல்லை. என் வாயைக் கட்டிவிட்டார்கள்."

 "கத்த முயற்சியாவது செய்தாயா?"

"இல்லை. நான் மயங்கிவிட்டேன்."

 "அப்படியானால் இது பலாத்காரம் இல்லை. நீ உடன்பட்டு நடந்ததுதான்."

கேலிச் சித்திரத்தை ஒரு மிகத் தடித்த சிவப்புக் கோடு பெருக்கல் குறியால் அடித்து இருந்தது. எதிரே அம்புக் குறியிட்டு அஞ்சூ எழுதியிருந்தாள் "இது கடந்த சரித்திரம்” என்று.
O


அம்மா வீட்டில் இல்லை.

அபிலாஷா விடை பெறக் காத்திருந்தாள். வழக்கு ஆரம்பமானபின் மீண்டும் வருவாள்.

ரோஸா உடை மாற்றப் போயிருந்தாள். தடுப்புக்குப் பின்னால், சொல்ல மறந்தது ஏதோ நினைவுக்கு வர அபிலாஷா எழுந்து தடுப்பருகில் போனாள். ரோஸா உடைகளைக் களைந்திருந்தாள் அவை காலருகே குவிந்து கிடந்தன. அவள் மார்பின் மேல் தோல் கருகிய தழும்புகள் தெரிந்தன. உடைகள் இல்லாமல் பார்த்த போது நாணில் ஏற்றாத அம்பு மாதிரி தோற்றம் அளித்தாள்.

பறப்பவள்போல் வந்து அபிலாஷா ரோஸாவைத் தழுவிக் கொண்டாள். தன் முகத்தை அவள் அடிவயிற்றில் பதித்தாள். தரையில் சரிந்து அமர்ந்து ரோலாவைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டாள். ரோஸாவின் மூடிய விழிகளுள் ஈரம் கசிய ஆரம்பித்தது.
O

மிலேச்சன்-அம்பை

www.azhiyasudargal.blogspot.com
ambai (3)

எழுபதுகளில் எழுச்சி பெற்று வரும் பெண்ணினத்தின் முக்கியக் குரல்களில் ஒன்றாக அறியப்பட்ட 'அம்பை'யின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பிறந்தது கோயம்புத்தூரில் (17-11-1944). இந்தியப் பெண்களின் பிரச்னைகள், அவர்களுடைய சமூக அந்தஸ்து ஆகியவை பற்றிய இவரது கட்டுரைகள் பிரபல ஆங்கில சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. 'அந்தி மாலை'  (நாவல், 1966), 'நந்திமலைச் சாரலிலே' (குழந்தைகள் நாவல், 1961), 'சிறகுகள் முறியும்' (சிறுகதைகள், 1976) - இவை நூல் வடிவில் வெளிவந்துள்ள படைப்பு கள். 'தங்கராஜ் எங்கே?' என்ற குழந்தைகள் திரைப் படத்துக்காக வசனம் எழுதியிருக்கிறார்.



ஊரின் ஒதுக்குப்புறத்தில், பிறரின் தொடல்களுக்கு அருகதையற்ற கீழ்ஜாதி ஆத்மாவாய்த் தன்னை உணர்ந்தான் சாம்பு அந்த இடத்தில்; அந்தச் சமயத்தில்.அவனைச் சுற்றிலும் பேச்சு நடந்துகொண்டிருந்தது. அவன் பங்கேற்காததைப் பற்றிக் கவலைப்படாத பேச்சு. அவன் அங்கே யிருந்த நாற்காலிகளில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஸவிதா, அவளுக்கும் அவள் பெற்றோர்களுக்குமிடையே உள்ள அபிப்பிராய பேதங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள், காலை சிற்றுண்டி யின் போது. "அவர்களுக்கு நான் பெரிய பிசினஸ் எக்ஸிக்யூடிவைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை. எனக்கு அப்படியில்லை. அறிவு பூர்வமாக நான் ஒருவனை விரும்பவேண்டும். அவனுக்கு மற்றவர்களின் துன்பங்களில் பங்கேற்கத் துடிப்பு இருக்க வேண்டும்."


அவனுக்கு ஏனோ அவன் தங்கை இந்துவின் நினைவு வந்தது. ஸவிதா, உனக்குத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது. உன் அப்பா பெரிய வர்த்தகர். ஓர் அறிவு ஜீவியை நாடக்கூட உன் போன்ற வர்களுக்குத்தான் உரிமை. ஆனால் இந்து? அவள் காலையில் எழுந்து அம்மாவிடம் ஆயிரம் திட்டுகள் கேட்டவாறே இயங்கி, அவளே கஞ்சி போட புடைவை ஒன்றை உடுத்தி, குட்டி டிபன்பாக்ஸில் மத்தியான்னத்துக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு பஸ் பிடிக்க ஓடுவாள். பஸ்ஸில் இடம் விடும் முதல் ஆள் அவள் கவனத்தைக் கவர்ந்துவிடுவான். புன்சிரிப்புப் பூக்கும். அவள் மனம் குளிர ஓர் ஆண் முகம் போதும். தர்க்கரீதியாக இயங்குவது இல்லை அவள் மனம். அவள் வெறும் உணர்ச்சிகளின் கலவை. தியாகம், பாசம், தூய்மை, தேசபக்தி, அன்பு, காதல் போன்ற சொற்கள் அவள் மனத்தின் தந்திகளை மீட்டுபவை. அவளிடம் கல்யாணத்தைப் பற்றிப் பேசி ஒருவனைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் அவள் மிரண்டுவிடுவாள். காலம் காலமாய் அவள் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத, இருந்து பழக்கமில்லாத உரிமை அது. அவள் காதலித்தாலும் சினிமா கூட்டிப் போக, புடைவைகள் வாங்கித் தர, அடிக்காமல் அன்பு செலுத்த (அப்பாவிடம் வாங்கிய பெல்ட் அடிகளின் எதிரொலி) ஒருவனைத்தான் காதலிப்பாள். கல்யாணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்றுச் சினிமாப் பார்க்கும் திருப்தியிலும் பண்டிகைகள் கொண்டாடும் பக்தியிலும் வாழ்க்கையைச் செலவழித்து விடுவாள். தனக்கு நிராகரிக்கப்பட்டது எது என்பதை அவள் அறியமாட்டாள். அந்த மட்டும் திருப்தி. அவன் அதை உணரும்போதுதான் சிக்கல்கள்.
 

"மதராஸி இன்று ரொம்ப யோசிக்கிறார்" என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டுச் சிரித்தாள் ஸவிதா. புன்னகை செய்தான் சாம்பு.


"ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்ட அறிவு ஜீவியைப் பற்றி என்ன நினைக்கிறாய் சாம்பு?" என்று கேட்டாள் ஆங்கிலத்தில்.


"நான் கூட ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்ட அறிவு ஜீவி தான். என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்றான் பதிலுக்கு.


அவள் கடகடவென்று சிரித்தாள்.


"நல்ல ஜோக்" என்றாள்.


"ஏன்?" என்றான்.


"உன் கொள்கை என்ன?" என்றாள் உதடுகளை மடக்கிச் சிரித்தபடி.


"உன்னைப் போன்ற ஓர் அறிவு ஜீவியை மணப்பதுதான்" என்றான் பட்டென்று.


அவள் திடுக்கிடவில்லை. ஒரு நாளில் பத்து முறைகளாவது இவளை மணக்க விரும்புவது பற்றித் தெரிவிக்கும் ஆண்கள் அவள் தோழர்கள். சாம்பு சொன்னதுதான் அவளை வியப்பில் ஆழ்த்தியது.


"குடித்திருக்கிறாயா இத்தனை காலையிலேயே?" என்றாள்.


சாம்பு மேஜையை விட்டு எழுந்தான்.


சென்னை வீதிகளில் உலவும் மனிதர்களை வெறுத்து, மூச்சு முட்டும் அதன் கருத்துகளைப் பகிஷ்கரித்து அவன் டில்லியை வந்தடைந்தான். ஒரு நாள் விடிகாலை, எம்.ஏ. பரீட்சை முடிந்த நிம்மதியில் நடக்க அவன் கிளம்பினான் சென்னையில். கோலம் போட்டவாறே அவனை ஊடுருவி நோக்கும் சந்தியா; (காதலை அவள் நம்புகிறாள், மடப்பெண்!) வயதுக்கு வந்துவிட்ட தன் பேத்தியை மனத்தில் இருத்தி அவனை நோக்கும் எதிர் வீட்டுத் தாத்தா; யுகம் யுகமாய்ச் சிகரெட் கடன் தந்த பெட்டிக்கடை நாயர்; தெரு ஓரத்தில் எந்தக் கூச்சமும் இல்லாமல் எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட மண்ணில் புரண்டு, சேற்றில் உளைந்து பக்கெட் பக்கெட்டாய் மூத்திரம் கொட்டும் எருமை மாடுகள்; வளைந்து குறுகி, பின் அகன்று மீண்டும் சுருங்கிக்கொண்ட, கோலங்கள் பூண்ட அந்த வீதி - எல்லாமே அந்த விடிகாலை வேளையில் ஓர் அந்நியக் கோலம் பூண்டன. திடீரென்று பெருங்கரம் ஒன்று அவனைத் தூக்கி அங்கே கொண்டுவந்து நிறுத்தியது போலத் தோன்றியது. அவன் சாம்பமூர்த்தி அல்ல. கள்ளிக்கோட்டையில் வந்திறங்கிய வாஸ்கோடகாமா போல், ஒரு மிலேச்சனின் கண்களோடு அந்த வீதியை நோட்டமிட்டான். அவனுக்கு மூச்சு முட்டியது.


அவனுக்குரிய இடமில்லை அது என்று தோன்றியது.


பாராகம்பாத் தெரு மரங்களின் நிழலில், இந்தியா கேட்டின் பரந்த புல்லில் பி.எச்டி பட்டத்துக்குப் படிக்கும் அறிவு ஜீவிகளின் சிந்தனையில் தன்னைக் கலந்துகொள்ள அவன் முயன்றான்.


"ஹலோ சாம்பு! இன்னிக்கு வராய் இல்லையா?" மணி கேட்டான். "எங்கே?"


"இன்னிக்கு ஸ்டிரைக். காம்பஸுக்குப் போகணும்." "எதுக்காக ஸ்ட்ரைக்?" "விலைவாசி ஒசந்ததுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க."


"அரிசி என்ன விலை விக்கறதுன்னு தெரியுமா உனக்கு? டேய், பீர் விலை ஒசந்ததுன்னாதானேடா உனக்கு உறைக்கும்?"


"இதோ பாரு. உன்னோட பேச எனக்கு நேரமில்லை. நான் பிஸியா இருக்கேன். வரயா இல்லையா?"


"வரேன்."


"விலைவாசியை இறக்கு."


"இந்திரா ஒழிக."


"மாதாஜி முர்தாபாத்."


"டவுன் வித் ப்ளாக்மார்க்கடியர்ஸ் அண்ட் ஹோர்டர்ஸ்."


"சாம்புவைப் பாரேன். என்ன ஆக்ரோஷமாய்க் கத்தறான்."


"இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்லேதான் ஒருத்தனோட அடங்கிக்கிடக்கிற மூர்க்கத்தனம் வெளியே வரது. கூட்டத்திலே அவன் ஒருத்தன் ஆயிட்டான் இல்லையா?"


சாம்பு பக்கத்தில் வந்தான்.


"காலையில் என்ன சாப்பிட்டாய்?"


"என்ன விளையாடறயா?"


"சொல்லு."


"முட்டை டோஸ்ட், ஜாம், காஃபி, வாழைப்பழம்."


"பயத்தம்பருப்புக் கஞ்சின்னு கேள்விப்பட்டிருக்கிறாயா?"


"ஏன்?"


"அதுதான் எங்க வீட்டுலே கார்த்தாலே சாப்பிட. மிராண்டா ஹவுசில் படிக்கிறாளே உன் தங்கை, கெரஸின் க்யூன்னா என்ன, அதுலே நிக்கற அநுபவம் எப்படீன்னு தெரியுமா அவளுக்கு?"


"நீ சொல்றது தப்பு, சாம்பு. ஒரு விஷயத்தைப் பற்றி என் எதிர்ப்பைத் தெரிவிக்கக் கஷ்டப்படறவனை நான் பார்த்து அதைப் புரிஞ்சுண்டாப் போதும். நானே அதை அநுபவிக்க வேண்டிய அவசியமில்லை. கான்ஸரை ஆபரேஷன் செய்யற டாக்டர் அதோட கொடுமையைப் பார்த்துப் புரிஞ்சுண்டாப் போதும் - அவனுக்கே கான்ஸர் வரவேண்டிய அவசியம் இல்லை."


"இது வியாதி இல்லை."


"இதுவும் ஒரு வியாதிதான், சமூகத்தைப் பீடிக்கிற வியாதி."


"அப்படியே வைச்சிப்போம். நான் அதை அநுபவச்சிருக்கேன்."


"என் சின்னத் தம்பிக்குத் தூங்கறப்போ கதை சொல்லறச்சே, 'அதுதான் ராமராஜ்யம் ஒரே பாலும் தேனும் ஓடும், ரத்னங்கள் வீட்டுலே இறைஞ்சு கிடக்கும்' அப்படி எல்லாம் சொன்னா, ராம ராஜ்யத்துலே கெரோஸின் நிறையக் கிடைக்குமோ அப்படீன்னு அவன் கேள்வி கேக்கறப்போ எந்தப் பின்னணியிலேந்து அது பொறந்ததுன்னு எனக்குப் புரிகிறது. அம்மா கரண்டியைச் சாதத்துலே வெக்கறபோதே ரொம்பச் சமத்தா 'அம்மா, எனக்குப் பசிக்கலே; ஒரே ஒரு கரண்டி போதும்'னு என் கடைசித் தங்கை சொல்லறபோது அரிசி விளைவோட பாரம் என் நெஞ்சிலே ஏறிக்கறது."


பக்கத்தில் நின்றவாறு சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த ஸவிதா பெரிதாகச் சிரித்தாள்.


கோஷங்கள் மாலையில் முடிந்தன.


மீண்டும் ஹாஸ்டலுக்கு வரும் வழியில் ஆரதி பானர்ஜி அவனுடன் நடந்து வந்தாள். மென்குரலில் ஆங்கிலத்தில் கூறினாள்.


"உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடுதான். ஏனென்றால் நீங்கள் கூறும் அநுபவங்கள் என் வீட்டில் புதிதல்ல" என்றாள்.


"நீ பி.எச்டி. செய்யாமல் வேலைக்குப் போயிருந்தால் உன் வீட்டிற்கு அது பயன்பட்டிருக்கும் இல்லையா?"


அவள் புன்னகை செய்தாள்.


"ஆமாம். ஆனால் என் கனவுகள் என்னை இங்கே அழைத்து வந்தன."


"எந்த மாதிரிக் கனவுகள்?"


"மூன்று வருடங்களில் பி.எச்டி. முடித்துவிடலாம். பின்பு பெரிய வேலை. ஒருவேளை என் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்து வைக்க ஒரு பணக்காரக் கணவன் கூடக் கிடைக்கலாம். நிஜத்தில் நடந்தது வேறு. பி.எச்.டி.யின் முடிவில் கூடிய வயதும் மனம் பிடிக்காத வேலையும் நித்தியக் கன்னி பட்டமுந்தான் எஞ்சும் போல் இருக்கின்றன."


"உன் மனசுக்குப் பிடித்த யாரும் இங்கில்லையா?"


அவள் அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். பட்டென்று சொன்னாள்: "என்னிடம் உள்ள மொத்த புடைவைகள் ஐந்து."


"புரியவில்லை."


"ஓபராய் போய்க் காஃபி குடிக்கவோ, அக்பர் ஹோட்டல் போய்ச் சாப்பிடவோ அணிந்துகொள்ளக் கூடிய புடைவைகள் என்னிடம் இல்லை. பெரிய ஹோட்டல்களில் நுழைந்தவுடனேயே என் கண்கள் விரிந்து நாவடைத்துப் போய் விடுகிறது. என் முந்நூறு ரூபாய் ஸ்காலர்ஷிப்பில் நூறு ரூபாய் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். மரியாதைக்குக் கூட என்னால் எங்காவது வெளியே போனால் 'நான் பில் தருகிறேன்' என்று சொல்ல முடியாது. எனக்கு இந்த மனநிலையில் ஏற்படும் எந்த அன்பும் காதல் என்ற பட்டம் பெற முடியாது. அது சுயநல எண்ணங்களோடு திட்டமிட்டுப் பின் நடைமுறையில் செய்யப்படும் வியாபாரந்தான். காதல் என்ற சொல்லுக்கே நம் வாழ்க்கை முறையில் இடம் இல்லை. இது குறிப்பிட்ட சிலரின் ஏகபோக உரிமை."


"ம்."


"ஒரு நிமிஷம்" என்று அப்பால் சென்றாள்.


"ஏய் சாம்பு, ஆரதியிடம் ஜாக்கிரதை. அவள் ஒரு கணவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள். விழுந்து விடாதே."


பின்னால் கனைத்தாள் ஆரதி.


"ஆரதி, நான் ஒன்றும்..."


"பரவாயில்லை கோவிந்த். நீ டெல்லியின் நாற்றச் சந்துகளில், விளக்குக் கம்பம் புடைவை கட்டிக்கொண்டு வந்தால் கூடப் பின்னால் போகிறாய் என்று கேள்விப்பட்டேன். நான் உன்னை விடத் தேவலை இல்லையா?"


கோவிந்துக்குப் பலமான அடிதான்.


அதன்பின் மௌனமாகவே நடந்தனர்.


ஹாஸ்டலில் இந்துவின் கடிதம் வந்திருந்தது.


‘வைரத் தோடாம் அண்ணா. அப்பா முடியாது என்று கூறிவிட்டார். அண்ணா நீ பி.எச்டி. முடித்ததும் நமக்கு இந்த மாதிரி தொல்லை இல்லை. நீ புரொபஸராகிவிடுவாய். அண்ணா நீ நன்றாகப் படி. எனக்கு ஆஃபிஸில் வேலை ஜாஸ்தி. புது ஆஃபீஸர் ரொம்ப டிக்டேஷன் தந்துவிடுகிறார். நாங்கள் எல்லாருமாக ‘நேற்று இன்று நாளை’ போனோம். எனக்குப் பிடித்தது.”


இந்து, இந்து உன் உலகம் எவ்வளவு வித்தியாசமானது. என்னுடையதை விட?


பி.எச்டி. முடித்தால் புரொபஸராகி விடுவேனா? இந்த பி.எச்டி.யை எப்போதுதான் முடிப்பது? புரொபஸர் கருணையின்றி பி.எச்டி. வாங்க முடியுமா? அவர் ஜீனியஸ்தான். அதுதான் தொல்லை. பத்து வருடங்களுக்கு குறைந்து அவரிடம் பி.எச்டி. வாங்க முடியாது. தீஸிஸ் விஷயமாகப் போனால் மிக அழகாக ரெயில்வே ஸ்டிரைக் பற்றிப் பேசுவார். ஜோன் பேயனின் ஸெக்ஸி குரல் பற்றிப் பேசுவார். நிக்ஸன் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைப் பற்றிச் சொல்வார். ஜெரால்ட் ஃபோர்டு எதற்கும் பயனில்லை என்பார். யாரும் நினைவு வைக்க முடியாத சரித்திர சம்பவங்களை நினைவு கூர்ந்து ஜோக் அடிப்பார். ஒன்றரை மணி நேரம் ஆகிவிடும்.


“ஸார், என் சாப்டர்...”


“என்ன சாப்டர்?”


“ஒன்றாவது ஸார்.”


“வீட்டுலே குடுத்தியா ஆஃபிஸிலியா?”


“வீட்டுலேதான்.”


“இன்னொரு காப்பி உண்டா?”


“ம். ஸார்.”


“நாளைக்குக் கொண்டாயேன். பார்க்கலாம்.”


“சாரி, ஸார்.”


இரண்டு வருடங்களாக இதுதான் நடக்கிறது, இந்து. உங்களுக்கு எல்லாம் இது எப்படிப் புரியும்?


“என்ன சாம்பு, லவ் லெட்டரா?” தேஷ்பாண்டே கேட்டான்.


“இல்லை தேஷ்பாண்டே.”


“கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்களா வீட்டில்?”


சிரித்தான் சாம்பு, “ம்ஹூம்.”


“சரி, இன்னிக்கு வெச்சுக்கலாமா?”


“வேண்டாம் தேஷ்பாண்டே.”


“டேய், நீ ஒரு முட்டாள் மதராஸி, வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத மதராஸி.”


"இருக்கட்டும்."


"உனக்குத் தைரியம் இல்லை. ஒரு பெக் சாப்பிட்டா நீ டவுன் தான்."


"என்னைச் சாலஞ்ச் பண்ணாதே."


"சும்மா பேச்சுத்தான் நீ. அம்மா திட்டுவாளா?"


"சரி, இன்னிக்கு வெச்சுக்கலாம்."


சாயங்காலம் தேஷ்பாண்டேயின் அறையில் ஐந்தாறு நபர்கள் கூடினர். சுடச்சுடத் தொண்டையில் இறங்கிப் பின் சூடு உடம்பில் பரவியது. ஸிக்கிம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.


திடீரென்று யானை பலம் வந்தது போலிருந்தது. குறுக்காகத் தொப்பி வைத்துக்கொண்ட நெப்போலியன் தான் எனத் தோன்றியது. பிரஷ் மீசை வைத்த ஹிட்லராக மாறி யூதர்களைக் கூட்டம் கூட்டமாக அழிப்பது போல் தோன்றியது. வேஷ்டி சட்டையுடன் அண்ணாதுரை, ஒரு கூட்டத்தில் பேசுவது போல் தோன்றியது. சிவாஜி கணேசன் முகம் கொண்ட ராஜராஜ சோழன் தான் என்று மார் தட்டிக்கொள்ள அவா எழுந்தது. இழைய முடியாத டில்லி சூழ்நிலை. டைப் அடித்து அடித்து விரல்களைச் சொடுக்கிக் கொள்ளும் இந்து, பாத்திரத்தின் அடியில் இருக்கும் சாதத்தைக் கரண்டியின் சுரண்டல் ஒலி இல்லாமல் எடுக்கும் அம்மா, எல்லாம் மறைந்து அவனே பூதாகாரமாய் ரூபமெடுத்து அத்தனையையும் அடித்துக்கொண்டு மேலெழுந்து வருவது போல் உணர்வு தோன்றியது.


"ஸிக்கிமை ஆக்ரமிக்க வேண்டும்" என்று உரக்கச் சொன்னான்.


"ஏய் சாம்பு, என்ன ஏறிடுத்தோ நன்னா?" மணி கேட்டான்.


"சேச்சே, அதெல்லாம் இல்லை."


"ஜாக்கிரதை, ஒரேயடியாக் குடிக்காதே. மெள்ள மெள்ள."


"நான்ஸென்ஸ். நான் சரியாத்தான் இருக்கேன். ஸவிதா வரலியா?"


"ஸவிதா இங்கே எங்கேடா வருவா?"


"ஏன் வரக்கூடாது? நான்தான் அவ தேடற துடிப்புள்ள இளைஞன். நான் நடுத்தரக் குடும்பம்னா அவ என்னை லவ் பண்ணக்கூடாதா? நான் ஒரு துடிப்புள்ள இளைஞன்."


ஸிக்கிம் பற்றிய பேச்சு நின்றது.


சாம்பு பேசிக்கொண்டே போனான்.


"ஸவிதாவை எனக்குப் பிடிக்கறது. ஆனா இந்த உலகமே வேற. அரசியல், ஆராய்ச்சி, வெளிநாட்டுத் தொடர்பு பற்றிப் பேசற அக்கறை இல்லாத உலகம் இது. தேஷ்பாண்டே, இங்கே ஓட்டை போட்டுண்டு வந்த எலி நான். இங்கே இருக்கிற யார் மாதிரியும் நான் இல்லே. நான் ஒரு துரத்தப்படும் எலி. பூனைகள் உலகத்துலே அகப்பட்டுண்ட எலி. ஸவிதாவை நெருங்க முடியாத எலி. என் தங்கை இந்து இருக்கிற உலகத்துலேயும் நான் இல்லே. கோலம், கோபுரம், புடைவை, சினிமா, கற்பு, கணவன், அம்மா, அப்பா இவர்கள் எல்லாருக்கும் நான் அந்நியமாப் போய்விட்டேன். ஓ, எங்கே?" என்று எழுந்து கால்களை உதறி அறை முழுவதும் தேடி ஓடினான்.


"ஹே, எதைத்தான் தேடுகிறாய்?"


"என் வேர்கள், என் வேர்கள்" என்று ஆங்கிலத்தில் கூறி அழுதான் சாம்பு.


திடீரென்று எழுந்து, "எனக்கு எங்கேயும் இடம் இல்லை" என்று கூறி ஓட ஆரம்பித்தவன் முறித்துக்கொண்டு கீழே விழுந்தான். அறை முழுவதும் வாந்தி எடுத்த நெடி.


"தேஷ்பாண்டே, இதெல்லாம் உன் தப்பு. ஹோல் ஈவினிங் கில்... ஸ்பாயில்ட்."


"ஏய், இவன் முழிக்கமாட்டேன் என்கிறானே?"


"முகமெல்லாம் வெளுத்துவிட்டது."


"குட் லார்ட்! டாக்ஸி கொண்டுவா. வெலிங்டன் ஹாஸ்பிடலுக்கு ஓடலாம்."


கண்ணை விழித்தபோது தேஷ்பாண்டேயின் முகம் தெரிந்தது.


"ஐ ஆம் சாரி."


"இட்ஸ் ஓ கே! எத்தனை பெக் குடித்தாய்?"


"ஒன்பது."


"ஜீஸஸ்!"


"எனக்கு அத்தனையும் தேவைப்பட்டது, தேஷ்பாண்டே! தேஷ்பாண்டே நான் இந்த இடத்தில் இருக்க வேண்டியவன் இல்லை. ஏழு வருஷம் பி.எச்டி. பண்ண என்னால் முடியாது. என் தங்கை கல்யாணம் ஆகாமல் தவித்து விடுவாள். என் அம்மா உருக்குலைந்து போய் விடுவாள். அறிவுஜீவியாவது கூட எனக்கு ஓர் ஆடம்பரமான விவகாரந்தான். அங்கேயும் நான் ஓர் அந்நியன் தான். ஆனாலும் அங்கே நான் தேவைப்படறேன்."


"டேக் ரெஸ்ட், சாம்பு."


தலை திரும்பியபோது ஆரதி வருவது தெரிந்தது.


தேஷ்பாண்டே எழுந்தான். ஆரதியைப் பார்த்து மரியாதைக்குப் புன்னகை செய்துவிட்டுப் போனான்.


"என்ன சாம்பு, இது என்ன இப்படிப் பண்ணிவிட்டீர்கள்?"


கண்களில் நீர் பெருகியது.


"ஆரதி, நான் ரொம்பத் தனியனாக இருக்கிறேன்."


"ம்."


"என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை."


"ம்."


"உனக்கும் இந்த அனுபவம் உண்டா?"


கையிலிருந்த பையைப் பார்த்தவாறே ஆரதி பேசினாள்.


"ம், உண்டு. இதை விட உண்டு. உங்களுக்கு வீட்டுக்குத் திரும்பிப் போக முடியும். அங்கே மூத்தபிள்ளை என்ற அந்தஸ்து உண்டு. எனக்குத் திரும்பிப் போக முடியாது. என் குடும்பம் நான் இல்லாமல் இருக்கப் பழகிவிட்டது. நான் அங்கே போகும்போதெல் லாம் வெளியாளாய் உணர்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை பிரச்னைகள் இல்லாத ஒரு பெண். அந்த எண்ணத்தை மாற்ற நான் விரும்பவில்லை. இரண்டு உண்மைகளை நான் உணர்வதால் என் நிலைமையை என்னால் ஏற்க முடிகிறது. ஒன்று, வேலை செய்து தான் வாழவேண்டும் என்ற சமூகப் பிரக்ஞையால் பிறக்கும் உணர்வு. இரண்டு, நாம் எல்லோருமே ஒவ்வொரு வகையில் தனியாள்தான் என்ற உணர்வு."


"நான் ஸவிதாவை விரும்புகிறேன்."


ஆரதி புன்னகை செய்தாள். "எனக்குத் தெரியும்."


"நான் பைத்தியக்காரன் என்று நினைக்கிறாயா?"


"ம்ஹூம். உண்மைகளைப் பார்க்காதவர்."


"புரியவில்லை."


"ஸவிதாவை நீங்கள் விரும்புவது நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவன் என்ற தாழ்மையுணர்ச்சியால்தான். அந்த வர்க்கத்து உணர்வுகளிலிருந்து விடுபட விரும்பும் வேகத்தால்தான். இந்த உணர்வே ஒரு தப்பிக்கும் முயற்சிதான். ஏணி மேல் ஏறி, எந்த வர்க்கத்தை ஏளனம் செய்கிறீர்களோ அதே வர்க்கத்தை நீங்கள் எட்டிப் பார்க்கிறீர்கள். கீழேயும் உங்களுக்கு இடம் இல்லை. மேலே யும் உங்களுக்கு இடம் இருக்காது."


"கோபிக்காதே. நீ என்னை விரும்புகிறாயா?"


அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.


"மற்றவர்கள் நினைப்பதுபோல் நான் ஒரு கணவனை நிஜமாகவே தேடி அலையவில்லை. உண்மையான பரிவுணர்வைக் காட்ட என் போன்றவர்களுக்கும் முடியும்."


"ஐ ஆம் ஸாரி."


"டோண்ட் பி" என்று கூறிவிட்டு எழுந்தாள்.


அவள் போனபின் வெகுநேரம் நெஞ்சில் பல உணர்ச்சிகள் குழம்பித் தவிக்க வைத்தன. வேர்களற்ற நான் யார்? என்னை எந்த அநுபவங்களோடு நான் ஒன்றிப் போகவைக்க முடியும்? ஆராய்ச்சி செய்ய நேரமோ, பணமோ அவனிடம் இல்லை. அது ஒரு நீண்டகாலத் திட்டம். அவன் போன்றோர்களிடம் இல்லாத ஒரு போகப் பொருள்; காலத்தை அலட்சியம் செய்யும் மனப் பான்மைதான். அவன் காலத்துடன், ஒன்று, அதனுடன் சண்டை யிட்டு, அதனிடம் மண்டிபோட வேண்டியவன். இல்லாவிட்டால் இந்துவின் வாழ்வு குலைந்துவிடும். தம்பியின் எதிர்காலம் இருளடை யும். எங்கும் புகுந்து எப்படியும் வாழும் எலிகளில் அவன் ஒருவன். புரிந்தது. ஆனால் ஏற்க முடியவில்லை. குப்பைத் தொட்டியின் மேல் மல்லாக்கப் படுத்து இறந்து, காக்கை தன் வயிற்றைக் குத்திச் சதை யைப் பிடுங்கும் எலியாய்த் தன்னை உணர்ந்தான். அவன் வித்தியாச மாக எதையும் செய்ய முடியாது. அவனுக்கு நிராகரிக்கப்பட்ட உரிமை அது. அவன் எதிர்வீட்டு ஸந்தியாவை மணக்கலாம். அவ ளுடன் நல்ல கணவனாகப் படுக்கலாம். அவள்மேல் ஆதிக்கம் செலுத் தலாம். குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். பணம் இல்லாமல் தவிக்கலாம். ரிடையர் ஆகலாம், இறக்கலாம். குப்பைத் தொட்டி மேல் செத்த எலி போல, இதுவே அவனுக்கு விதிக்கப்பட்ட வரம்புகள்.


வரம்புகள், வரம்புகள், வரம்புகள்!


ஆஸ்பத்திரியின் கட்டிலில்; அதன்மேல் அவன், கோபாலை யரின் மகன் சாம்பமூர்த்தி. அவனே அவனுக்கு அந்நியமானவனாகப் பட்டான்.


அவன் திரும்பிப் போவான். கோலங்களின் ஓரமாக எருமைகளைத் தாண்டி அந்தத் தெருவில் நடப்பான்; ஆனால் அதுவல்ல அவன் இடம். அத் தெருவின் மண்; அதன் மீது பஸ் பிடிக்க ஓடும் இந்து; சைக்கிளில் போகும் அப்பா; புத்தகப் பையுடன் போகும் தம்பி; எல்லாரும் எலிகள்; பொந்து போட ஓடும் எலிகள். வரம்புகளைக் கட்டிக்கொண்டு அதனுள் ஓடும் எலிகள்.


பல்லாயிரக்கணக்கான எலிகள், மாறுபட்ட அவனைக் கோரைப் பற்களால் சுரண்டி வால்களால் அவனைத் தாக்கி அவன் மேல் ஆக்கிரமிப்பது போல் உணர்ந்தான். திடீரென்று கோடிக்கணக்கான பூனைகள் எலிபோல் தோன்றிய அவனை நகங்களால் கீறி வாய்க்குள் அடைத்துக்கொள்வதைப் போல் தோன்றியது.


சாம்பு வீரிட்டான்.
--------

    புதிய தமிழ்ச் சிறுகதைகள் ,தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன் 
    நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,1984