www.padippakam.com
www.padippakam.com
automated google-ocr PYTHON script by TSHIRINIVASAN
காலச்சுவடு
ஆண்டுமலர் 1991
(மெய்ப்பு பார்க்க இயலவில்லை)
(மெய்ப்பு பார்க்க இயலவில்லை)
டோபா டேக்சிங்
மூல ஆசிரியர் : சாதத் ஹசன் மண்டோ
தமிழில் சரஸ்வதி ராம்நாத்
பிரிவினைக்குப் பின் இரண்டு மூன்றாண்டுகள் கழித்து, பாகிஸ்தானிய, இந்திய அரசுகளுக்கு, சாதாரண கைதிகளைப் பரிவர்த்தனை செய்து கொண்டதுபோல் மனநோயாளிகளையும் பரிவர்த்தனை செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. அதாவது இந்தியாவில் மனநோய் விடுதிகளி லுள்ள முசல்மான் மனநோயாளிகளைப் பாகிஸ் தானுக்கும், அங்குள்ள சீக்கிய மனநோயாளி களை இந்தியாவுக்கும் அனுப்பிவிட வேண்டும்.
இது உசிதமானதா இல்லையா என்று கூறுவது கடினம். எதுவானாலும் சரி. உயர்மட்டத்தில் பல குழுக்கள் கூடி விவாதித்தன. கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. முடிவில் ஒருநாள் மன நோயாளிகளை பரஸ்பரம் பரிமாற்றம் செய்து முடிவு எடுக்கப்பட்டது. இவ்விஷயம் தீர ஆலோசிக்கப்பட்டு, எந்தெந்த மனநோயாளிகளின் குடும்பத்தினர் இந்தியாவில் இருக்கிறார்களோ, அவர்கள் மட்டும் இங்கேயே இருக்கும் படி ஏற்பாடாகியது. மீதமுள்ள வர்கள்தான் நாட்டின் எல்லைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். பாகிஸ்தானின்நிலை சற்று வேறாக இருந்தது.
அங்கிருந்த இந்தியர்கள், சீக்கியர்களில் பெரும் பாலானோர் முன்னரே இந்தியா சென்று விட்டி ருந்ததால் அங்கு நோயாளிகள் எவரையும் தங்க வைத்துக்கொள்ளும் பிரச்சினையே எழவில்லை. இந்து. சீக்கிய மனநோயாளிகள் அனைவரும் போலிஸ் பாதுகாப்புடன் எல்லைக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். இந்தியாவில் என்ன நடந்தது என்பது பற் றித் தெரியாது. இங்கு லாஹூரில் உள்ள மன நோய் விடுதிக்கு இப்பரிமாற்றம் பற்றிய செய்தி எட்டியதும் காரசாரமான விவாதங்கள் நடை பெற்றன. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக 'ஜமீன்தார் தினசரியை விடாமல் படித்து வரும்
ஒரு மனநோயாளியான முசல்மானிடம், 'மெளல்வியாரே! பாகிஸ்தான் என்றால் --- என்ன?' என்று கேட்டபோது, அவன் ஆழ்ந்த சிந்த னைக்குப் பின் 'அது இந்தியா வில் ஒரு இடம். அங்கு சவரக் கத்திகள் செய்யப்படுகின்றன என்றான். இந்த ஆழ்ந்த கணிப்பு மற்றவர்களால் மிகுந்த திருப்தியுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதேபோல் ஒரு சீக்கிய மன மற்றொரு சீக்கிய மனநோயாளியிடம், "சர்தார்ஜி
ಕ@ni199||
நோயாளி,
படிப்பகம்
________________
www.padippakam.com
நாம் எதற்காக இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறோம்? நமக்கு அந்தநாட்டில் பேசப்படும்மொழி தெரியாதே' என்றான். இதற்கு மற்றவன் புன்சி ரிப்புடன் பதில் சொன்னான்."எனக்கு இந்துஸ்தானிகளின் பாஷை தெரியும். அந்த சைத்தான்கள் இந்த மண்ணில் அரசர்கள் போல் கர்வத்துடன் உலாவுவார்கள்."
ஒருநாள் குளித்துக் கொண்டிருக்கும்போது ஒரு முஸ்லீம் மனநோயாளி பாகிஸ்தான் ஜிந்தா பாத்" எனக் கோஷமிட்டான். ஆவேசத்துடன் கத்தியபோது கால் வழுக்கி தரையில் வீழ்ந்தவன் நினைவிழந்து போனான். பைத்தியம் பிடிக்காத சிலரும் அங்கிருந்தனர். அவர்கள் மனநோயாளி கள் அல்ல, கொலைகாரர்கள். அவர்களுடைய உறவினர்கள், துக்குத் தண்டனையிலிருந்து அவர்களைத் தப்புவிக்க அதிகாரிகளுக்கு லஞ் சம் கொடுத்து அவர்களை இங்கு சேர்த்திருந்த னர். இவர்களுக்கு இந்தியா ஏன் துண்டாடப்பட்டது, பாகிஸ்தான் என்றால் என்ன, என்பது பற்றி மேலோட்டமாகக் கொஞ்சம் தெரிந்திருந்தது.
ஆனால் அப்பொழுது நாட்டில் ஏற்பட்டிருந்த நிலைமையைப் பற்றி எல்லா விவரங்களும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. தினசரி நாளேடுகளிலிருந்தும் ஏதும் விவரமாகத் தெரிந்து கொள்ள இயலவில்லை. காவலாளிகள் படிப்புவாசனை இல்லாத வடிகட்டினமுட்டாள்களாக இருந்ததால் அவர்களின் பேச்சிலிருந்தும் எதையும் அறிந்து கொள்ள இயலவில்லை.
முகமது அலி ஜின்னா என்ற ஒருவர், காய்தே ஆஜம் என்று அழைக்கப்படுபவர், முஸ்லீம் மக்க ளுக்காக தனி நாடொன்றை உருவாக்கியுள்ளார்: அது பாகிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது எனச் சிலர் கூறினார்கள். அந்த பாகிஸ்தான் எங்கே இருக்கிறதென்று அங்குள்ளவர்களுக்குத் தெரியவில்லை. அதனால் முழுப்பைத்தியமா கவோ, அரைப் பைத்தியமாகவோ இருந்தவர்க ளுக்கு தாங்கள் இருப்பது இந்தியாவா, பாகிஸ் தானா என்பதை நிச்சயிக்க இயலவில்லை.
அவர்களிருப்பது இந்தியா என்றால், பாகிஸ்தான் என்பது என்ன? எங்கே இருக்கிறது அது? அவர்களிருப்பதுதான் பாகிஸ்தான் என்றால், அதெப்படி சாத்தியம்? கொஞ்ச நாட்கள் முன் வரை இங்கு, இதே இடத்தில் இந்தியாவில்தானே இருந்தனர். பின் எப்படி?
ஒரு மனநோயாளி குழம்பிப் போனான். பாகிஸ்தான் இந்துஸ்தான், இந்துஸ்தான் பாகிஸ் தான் என்ற குழப்பத்தில் பின்னும் மனம் பேதலித் துப் போனான். ஒருநாள் தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தவன், எல்லாவற்றை யும் அப்படியே போட்டுவிட்டு, அருகிலிருந்த ஒரு மரத்தின் கிளையின் மீதேறி உட்கார்ந்து கொண்டு, மணிக்கணக்காக, பாகிஸ்தான் இந்துஸ் தான் பிரச்சினைகளைப் பற்றி பிரசங்கம் செய்து கொண்டிருந்தான். காவலாளிகள் அவனைக் கீழே இறங்கிவரும்படி சொல்லச்சொல்ல, அவன் கிளைக்குக் கிளை தாவி மேலே ஏறிக் கொண்டே போனான். காவலாளிகள் அதட்டி, மிரட்டியதும், "நான் பாகிஸ்தானிலோ இந்தியாவிலோ வசிக்க விரும்பவில்லை. இந்த மரத்தின் மேல்தான் இருக்க விரும்புகிறேன்' என்று அறிவித்து விட் டான். அவனது ஆவேசம் தணிந்தபின், மிகவும் வற்புறுத்திய பின்னர்தான் கீழே இறங்கி வந்தான். வந்தவன் தனது சீக்கிய இந்திய நண்பர்களைத் தழுவிக்கொண்டு, அவர்கள் தன்னைவிட்டு இந்தி யாவிற்குப் போய்விடப் போகிறார்களே என்று கண்ணீர் வடித்தான்.
ஒரு முஸ்லீம் ரேடியோ இன்ஜினியர். எம்.
காலச்சுவடு 238
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
www.padippakam.com
எஸ்ஸி. பட்டம் பெற்றவன். மற்ற நோயாளிகளிட மிருந்து விலகி, நாள் முழுவதும் தனியே தோட் டத்தின் ஒரு பகுதியில் நடந்து கொண்டே இருப் பான். இந்த பரிவர்த்தனைச் சர்ச்சையினால் பாதிக்கப்பட்ட அவன் திடீரென ஒருநாள் தனது உடைகளை கழற்றி அட்டெண்டரிடம் கொடுத்து விட்டு, அம்மணமாய் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி ஒட ஆரம்பித்துவிட்டான்.
சின்யோட்டைச் சேர்ந்த ஒரு முசல்மான் நோயாளி, அகில இந்திய முஸ்லிம் லீக்கின் பரம விசுவாசி, தினசரி பதினைந்து, பதினாறு தரம் குளிப்பான். அவன் திடீரென இப்பழக்கத்தை விட்டுவிட்டான். இதனால் தன்னை 'காயிதே ஆஜம் முகமது அலி ஜின்னா' என்று அறிவித்துக் கொண்டான். அவன் பெயர் முகமது அலி. இதைப் பார்த்த ஒரு சீக்கிய பைத்தியம் தன்னை "மாஸ்டர் தாராசிங்' என்று கூறிக்கொண்டது. ஒரு பெரிய இனக்கலவரமே ஏற்பட்டிருக்கும் நல்ல வேளை, அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக, அவர்களை "பயங்கரமான மனநோயாளிகள் என அறிவித்து தனித் தனி செல்களில் அடைத்து விட்டனர்.
லாஹுரைச் சேர்ந்த ஒரு இளம் இந்துவக்கீல். காதல் தோல்வியினால் அவன் சித்தம் கலங்கி விட்டது. அமிருதசரஸ் இந்தியாவைச் சேர்ந்ததா கிவிட்டது எனக் கேள்விப்பட்டதும் அவன் பின் னும் மனம் பேதலித்துப் போய்விட்டான். அந்த நிலையிலும் தன் காதலி அமிருதரஸில் இருப்பவள் என்பது அவனுக்கு மறக்கவில்லை. அன் றையதினம்எல்லாஇந்துமுஸ்லிம்தலைவர்களை யும் திட்டிக் கொண்டே இருந்தான். அவர்கள் தான் இந்தியாவைத் துண்டாடி தனது காதலியை இந்தியக்காரியாகவும், தன்னைப்பாகிஸ்தானியா கவும் செய்துவிட்டனர் என்று வசைமாரிபொழிந் தான். இப்பொழுது பரிவர்த்தனை பற்றிய பேச்சு வார்த்தைகள் துவங்கியதும், அவனது நண்பர்கள் இனி அவன் தன் காதலி இருக்கும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு விடுவான் என்று பாராட்டினார் கள். ஆனால் அவனோ பிடிவாதமாக "நான் லாஹைைர விட்டுப் போக மாட்டேன்; எனதுவக்கீல் தொழில் அமிருதசரஸில் சிறப்பாக நடக்காது' என்று மறுத்தான்.
இம்மனநோய் காப்பகத்தில் இரண்டு ஆங் கிலோ இந்திய மனநோயாளிகள் ஐரோப்பியர்க ளுக்கான பகுதியில் இருந்தனர். நாட்டிற்கு சுதந்தி ரம் அளித்த பின் பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் நாட் டிற்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்துவிட்டனர் என்று அறிந்ததும் அவர்கள் பெரும் அதிர்ச்சிக் குள்ளாயினர். பகல் முழுவதும் தங்களுக்குள் ளேயே தாழ்ந்த குரலில் இது குறித்து பேசிக் கொண்டிருந்தனர். இனி இந்த விடுதியில் அவர்க ளது நிலை என்னவாகும்? ஐரோப்பியர்களுக் கென இனித் தனிவார்டு இருக்குமா? அல்லது எடுத்துவிடுவார்களா? பிரேக்பஸ்ட்தரப்படுமா? டபிள் ரொட்டிக்குப் பதிலாக, பிளடி இண்டியன் சப்பாத்திதான் தரப்படுமா? இத்யாதி.
இன்னொரு சீக்கிய மனநோயாளி. கடந்த பதி னைந்து ஆண்டுகளாக இப்காப்பகத்தில் இருந்து வருகிறான். அவன் வாயிலிருந்து எப்பொழுதும் விசித்திரமான, கோர்வையில்லாத வார்த்தைகள் தான் வெளிப்படும். 'ஓ படதி கிட் கிட் தி ஏங்ஸ் திபேத்தியானா தி மூங் தி தால் ஆப் தி லால்டேன் " என்ற அர்த்தம் புரியாத சொற்களை பிதற்றிய வண்ணம் இருப்பான். அவனது கால்களின் ஆடு சதைகள் வீங்கி இருந்தன. இருந்தாலும் படுத்து ஒய்வெடுத்துக் கொள்ளமாட்டான். கடந்த பதி னைந்து ஆண்டுகளில் அவன் ஒரு கணம் கூட உறங்கியதில்லை என வார்டர்கள் சொன்னார் கள். எப்பொழுதாவது அவன் சுவற்றில் சற்றே சாய்ந்தவண்ணமிருப்பதைக் காணலாம். மற்றபடி எப்பொழுதும் நின்று கொண்டே தானிருப்பான். இதனாலோ என்னவோ அவனது கால்கள் வீங்கி யிருந்தன. ஆனால் அது அவனைச் சற்றும் பாதித் ததாகத் தெரியவில்லை.
சமீபகாலமாக அவன் நிகழப்போகும் பரி வர்த்தனைப் பற்றிய விவாதங்களையும், சர்ச்சை களையும், இந்து முஸ்லீம் நோயாளிகளின் இட மாற்றம் பற்றிய பேச்சுக்களையும் கவனமாகக் கவனிக்கத் துவங்கி இருந்தான். இது பற்றி யாரோ அவனிடம் கேட்டபோது, மிகுந்த கம்பீரத்துடன்
| காலச்சுவடு
239
ஆண்டுமலர் 1991
w
படிப்பகம்
________________
www.padippakam.com
- 'ஓ படதி கிட் கிட் தி ஏங் ஸ்தி பேத்தியானா தி மூங் தி தால் ஆப் தி பாகிஸ்தான் கவர்மெண்ட்' என்றான். இதன் பிறகு அவன் வாயில் - ஆப் தி பாகிஸ்தான் கவர்மெண்ட் என்ற வார்த்தைக்கு பதிலாக ஆவ் தி டோபா டேக்சிங் என்ற வார்த் தைகள் இடம்பெற்றன. டோபா டேக்சிங் என்பது அவனது வீடு இருந்த சிற்றும் இதைத்தொடர்ந்து, டோபா டேக்சிங் எங்கே இருக்கிறது? இந்தியா விலா, பாகிஸ்தானிலா என்று தன் சக நோயாளி களிடம் அவன் கேட்கத் துவங்கினான். ஆனால் யாருக்கும் அது எங்கே இருக்கிறது என்று தெரிய வில்லை. பதில் கூற முயற்சித்தவர்களும் குழம் பிப் போனார்கள். சியால்கோட் முன்னர் இந்தியா விலிருந்தது. இப்பொழுது அது பாகிஸ்தானைச் சேர்ந்தது எனக் கேள்விப்பட்டனர். லாஹூர் தற்ச யம் பாகிஸ்தானிலிருக்கிறது. நாளை அது இந் துஸ்தானுக்குப் போய்விடுமோ அல்லது இந்துஸ் தான் முழுவதுமே பாகிஸ்தானாகி விடுமோ? யார் கண்டது. தவிர, இந்த இந்துஸ்தான், பாகிஸ் தான் இரண்டுமே என்றாவது ஒருநாள் பூகோள வரைபடத்திலிருந்து முற்றும் மறைந்து விடாது என்று நெஞ்சின் மீது கை வைத்து யாரால் உறுதி கூற முடியும் எனத் தோன்றியது அவர்களுக்கு.
இந்த சீக்கிய மனநோயாளியின் தலைமுடியில் பெரும்பகுதி உதிர்ந்து விட்டிருந்ததால் எஞ் சியிருந்த கொஞ்சம் மயிர் அவனது தாடியின் ஒரு பகுதியாய் அவன் ஒழுங்காய், சரிவர குளிப் பதில்லை - சடைபோட்டு பயங்கரமானதொரு தோற்றத்தை அளித்திருந்தது. ஆனால் அவன் அபாயமற்றவன். யாரிடமும் சண்டை சச்சரவிட் டுப் பார்த்ததில்லை. வயதான வார்டர்களுக்கு அவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தது.
டோபா டேக்சிங்கில் அவனுக்கு நிறைய நில புலன்கள் இருந்தனவாம். வசதியான மேட்டுக்
| காலச்சவடு
|240
குடிஜமீன்தாராக வாழ்ந்துகொண்டிருந்தவனுக்கு திடீரென சித்தம் கலங்கிவிட்டது. அவனது உறவி னர்கள் இரும்புச் சங்கிலியினால் அவனைக் கட்டி இழுத்துக்கொண்டு வந்து இக் காப்பகத்தில் சேர்த்து விட்டிருந்தனர். இது நடந்து பதினைந்து ஆண்டுகளாகி விட்டன. மாதத்திற்கொரு முறை அவனைப் பார்க்க யாராவது வருவார்கள். பஞ் சாபில் இனக் கலவரங்கள் மூண்ட பின் அவர்கள் வருவது நின்று விட்டது. அவன் பெயர் பிஷன் சிங். ஆனால் எல்லோரும் அவனை டோபா டேக்சிங் என்றே அழைத்தனர். இன்று என்ன தேதி, என்ன மாதம், அவன் இங்கு வந்து எத் தனை ஆண்டுகளாகின்றன என்பது எதுவும் அவ னுக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு மாதமும் தனது உறவினர்கள் என்றைக்கு வருவார்கள் என் பது மட்டும் எப்படியோ தெரியும். வார்டர்களி டம் இன்று அவர்கள் வருவார்கள் என்று கூறு வான். அன்று மட்டும் நன்றாகக் குளிப்பான். உடம்பில் சோப்பைத்தேய்த்துத் தேய்த்துகழுவிக் கொள்வான். தலைக்கு எண்ணெய் தடவிக்கொள் வான். உபயோகப்படுத்தாத தனது சுத்தமான ஆடைகளை எடுத்து அணிந்துகொண்டு தன் னைக் காண வந்திருப்பவர்களைச் சந்திக்கச் செல் வான். ஆனால் அவர்களுடன் எதுவுமே பேச மாட்டான். மெளனமாக இருப்பான். என்ன கேட் டாலும் பதில் கூற மாட்டான். சில சமயம் மட்டும் தனது வழக்கமான ஒ படதி கிட் கிட் தி ஏங் ஸ் தி பேத்தியானா தி மூங்தி தால் ஆ வதி லால் டேன்' என்னும் வார்த்தைகளை உதிர்ப்பான்.
அவன் இக்காப்பகத்திறகு வந்து சேர்ந்த சமயம் அவனுக்கொரு சிறிய மகள் இருந்தாள். இப் பொழுது அவள் பதினைந்து வயது நிரம்பிய அழ கிய இளமங்கை, எப்போதாவது அவளும் தந்தை யைக் காண வருவதுண்டு. கன்னங்களில் கண் aர் வழிந்தோட அவன் எதிரே உட்கார்ந்திருப் பாள். அவன் அவளை இன்னாரென்று அறிந்து கொண்டானா தெரியவில்லை. அவனுடைய தனி உலகத்தில் அவன் காணும் இன்னொரு முகம் அவள் அவ்வளவுதான். அவள் குழந்தையாக இருந்தபோதும் தன் அப்பாவைப் பார்த்து அழு வாள். இப்பொழுதும் அவள் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணிர் பெருகுகிறது.
-
1991
படிப்பகம்
________________
www.padippakam.com
பாகிஸ்தான், இந்துஸ்தான் பற்றிய செய்திகள் வரத் துவங்கிய பின்தான், தன்னையொத்த நோயாளிகளிடம் டோபாடேக்சிங் எங்கே இருக் கிறது என்று விசாரிக்கத் துவங்கி இருந்தான். அவ னுக்குத் திருப்திகரமான பதிலேதும் கிடைக்க வில்லை. ஒருவருக்கும் அது பற்றி தெரிந்திருக்க வில்லை. நாளுக்கு நாள் அவனது நிம்மதி குலை யத் துவங்கியது. வழக்கமாக அவனைப் பார்க்க வருபவர்களின் வருகையும் நின்றுவிட்டது. முன் பெல்லாம் யாரும் கூறாமலேயே, தன்னைச் சந் திக்க அன்று வருவார்கள் என்பது அவனது ஆறாம் அறிவு உணர்த்தியிருக்கும். இப்பொழுது நினைவுக்குள்ளிருந்து ஒலிக்கும் அந்தக் குரலும் மடிந்து விட்டிருந்தது. ஆனால் அவர்கள் வர வேண்டும் என்ற விருப்பமென்னவோ அவன் நெஞ்சுக்குள்ளிருந்தது. அவனிடம் பரிவான அன்பு காட்டுகிறவர்கள், அவனுக்காக இனிப்புக ளும், பழவகைகளும், துணிமணிகளும் கொண்டு வர வேண்டும் என்றிருந்தது. அவர்களிடம் டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது - இந்தியா விலா, பாகிஸ்தானிலா? என்று கேட்டால் நிச்ச யம் அது எங்கே இருக்கிறது என்று கூறுவார்கள். ஏன் என்றால் அவனது நில புலன்களிருக்கும் டோபா டேக்சிங்கிலிருந்துதான் அவர்கள் வருவ தாக அவன் நினைத்தான்.
இந்த மனநோய் விடுதியில் இன்னொரு பைத் தியமும் உண்டு. அவன் தன்னைக் கடவுள் என்று கூறிக் கொண்டான். அவனிடம் ஒருநாள் பிஷன்சிங் - 'டோபா டேக்சிங் எங்கேயிருக்கி றது - இந்தியாவிலா, பாகிஸ்தானிலா?' என்று கேட்டதும் அவன் தன் வழக்கப்படி கடகட வென்று உரக்கச் சிரித்தவாறே 'அது இந்தியாவி லும் இல்லை. பாகிஸ்தானிலும் இல்லை. நான் தான் அதற்கான உத்தரவு இதுவரை பிறப்பிக்க வில்லையே' என்றான். பிஷன்சிங் அவனிடம் மன்றாடினான். அதற்குத் தேவையான உத்தர வைப் பிறப்பிக்குமாறும் அதன் மூலம் தனது பிரச் சனைகள் தீர்ந்துவிடும் என்றும் வேண்டிக் கொண் டான். ஆனால் கடவுளுக்கு வேறு பல உத்தரவுக ளைப் பிறப்பிக்க வேண்டியிருந்தது. முடிவில் சலித்துப் போன பிஷன்சிங் கோபத்துடன் - ஒ படதி கிட் கிட் தி எங்ஸ்திபேத்தயானா தி, மூங்கி தால் ஆவ் வாஹே குருஜி தா கால்சா எண்ட் வா ஹே குருஜி பதஹ் ஜோ போயே சோ நிஹால் சத்சிரீ அகால் என்று கத்தினான். இதன் பொருள் 'நீ முசல்மான்களின் கடவுள், சீக்கியர்களின் கட வுளாக இருந்திருந்தால் நிச்சயம் என் பிரார்த்த Gö)6ðLGö)lL! கேட்டிருப்பாய்' என்பதாக இருக்கலாம்.
நோயாளிகளின் பரிமாற்றம் நிகழ்வதற்குச் சில நாட்கள் முன்னர் டோபா டேக்சிங்கின் ஒரு முசல்மான் நண்பன் அவனைப் பார்க்க வந்தான். இதற்கு முன் அவன் இங்கு வந்ததேயில்லை. பிஷன்சிங் அவனைக் கண்டதுமே பேசாமல் திரும்பிச் செல்ல ஆரம்பித்தான். வார்டன் அவ னைத் தடுத்து - 'உன் நண்பன் பசல்தீன் உன் னைப் பார்க்க வந்திருக்கிறான்' என்றான். பிஷன் சிங் ஒருமுறை பசல்தீனை ஏறிட்டுப் பார்த்தவன் தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டான். பசல்தீன் சட்டென முன்னே வந்து அவன் தோளின் மீது தன் கரத்தை வைத்து 'நெடுநாட்க ளாகவே உன்னைச் சந்திக்க நினைத்துக் கொண்டி ருந்தேன். ஆனால் அவகாசம் கிடைக்கவில்லை. உன்னைச் சேர்ந்தவர்கள் யாவரும் பத்திரமாய் சந்தோஷமாய் இந்தியாவிற்குப் போய் சேர்ந்து விட்டார்கள். என்னால் முடிந்த உதவிகளைச் செய்தேன். உன் மகள் ரூப் கெளர்...' என்றவன் சற்றே தயங்கி, "அவளும் பத்திரமாய் இருக்கி றாள் இந்தியாவில்' என்றான். பிஷன் சிங் நினை வுபடுத்திக் கொள்ள முயன்றான். மகள்...ரூப் கெளர்.
பசல்தீன் மீண்டும் கூறினான் "ஆமாம். அவ ளும் செளக்கியம், பத்திரமாக இந்தியாவில் இருக் கிறாள். அவர்களுடன் அவளும் இந்தியாவிற்குப் போய்விட்டாள்.' -
பிஷன் சிங் மெளனமாக இருந்தான்.
"அவர்கள்... உன் குடும்பத்தினர். உன் செளக்கியம் பற்றி விசாரித்துக் கொள்ளும்படி என்னிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
இப்பொழுதுதான் நீயும் இந்தியாவிற்கு போகவி ருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டேன். அங்கு
காலச்சுவடு
24
ஆண்டுமலர் 1991
படிப்பகம்________________
-
www.padippakam.com
சகோதரர் பல்வீர்சிங், வாதவாசிங் இடம் என் வணக்கத்தை தெரிவித்துவிடு. சகோதரி அமிர்த கெளரியிடம் என்சலாமைத் தெரிவிக்கவும். பசல் தீன் நலமாக இருக்கிறான் என்று பல்பீர்சிங் இடம் சொல்லு, இரண்டு எருமைகளை அவர்கள் என் னிடம் விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். இரண் டும் கன்றுகள் போட்டன. ஒன்று கிடாரி. ஆனால் அது பதினாறு நாட்களில் செத்துப் போய்விட் டது. அவர்களை நான் மிகவும் நினைத்துக் கொள் கிறேன் என்று சொல்லு என்னால் ஆக வேண்டி யது எதுவாக இருந்தாலும் எழுதச் சொல். நான் எப்பொழுதும் செய்யத் தயாராக இருக்கிறேன். வீட்டிலிருந்து உனக்காக கொஞ்சம் இனிப்புக் கொண்டுவந்தேன்' - என்று கூறியவாறே ஒரு பொட்டலத்தை நீட்டினான்.
பிஷன்சிங் அப்பொட்டலத்தை வாங்கி அரு கில் நின்ற காவலாளியிடம் கொடுத்துவிட்டு, பசல்தீன்னை நோக்கி 'டோபா டேக்சிங் எங்கே யிருக்கிறது?' என்று வினாவினான்.
பசல்தீன் வியப்புடன், "எங்கேயிருக்கும்?. அது எங்கேயிருந்ததோ, அங்கேயே இருக்கிறது" என்றான்.
பிஷன்சிங் மீண்டும் கேட்டான், 'பாகிஸ்தா னிலா, இந்துஸ்தானிலா?"
"இந்துஸ்தானில். இல்லை, பாகிஸ்தானில்"
பிஷன்சிங், "ஓ எட்தி கிட் கிட் தி ஏங் ஸ்தி பேத்தியானாதி மூங் தி தால் ஆங்கி பாகிஸ்தான் அண்ட்இந்துஸ்தான் ஆல்திதுர்பிடமுஹ்' என்று முணுமுணுத்தவாறே அங்கிருந்து சென்றுவிட்டான்.
பரிவர்த்தனைக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முடிவடைந்துவிட்டன. அங்கிருந்து இங்கும், இங் கிருந்து அங்கும் அனுப்பப்பட வேண்டிய மன நோயாளிகளின் பெயர் பட்டியல் வந்து சேர்ந்து விட்டது. பரிவர்த்தனைக்கான தேதியும் குறிப்பிட்டாகிவிட்டது.
கடுங்குளிர் காலத்தில் ஒரு மாலைப் பொழு தில் இந்து, சீக்கிய மனநோயாளிகள், ஆயுதம்
தாங்கிய போலீசார், மற்றும் அதிகாரிகளுடன் லாரிகளும், பஸ்ஸும், மனநோய் காப்பகத்திலி ருந்து, இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக் கும் எல்லைக் கோடான 'வாஹ்கா வை நோக்கிப் புறப்பட்டன. வாஹ்கானின் எல்லையில் இருபக் கத்து அதிகாரிகளும் சந்தித்துக் கொண்டனர். பத் திரங்கள் கையெழுத்திடப்பட்டன. கையெழுத் திட்டதும் பரிமாற்றத்திற்கான வேலைகள் துவங் கின. இரவு முழுவதும் இது தொடர்ந்துநடைபெற் றது. பஸ்களிலிருந்து ஆட்களை வெளியே கொணர்வதும், அதிகாரிகளிடம் ஒப்படைப்பதும் சிரமமான காரியமாகத்தானிருந்தது. சிலர் பஸ்ஸி லிருந்து இறங்கவே மறுத்தனர். வெளியே வர சம்மதித்தவர்களை சமாளிப்பதும் கடினமாக இருந்தது. அவர்கள் கை நழுவி இங்குமங்கும் ஓடினர். சிலர் உடம்பில் துணியே இல்லாது நிர் வாணமாய் நின்றனர். உடைகளை மாட்டினால் கிழித்து எறிந்தனர். ஒருவன் வசைமாரி பொழிந் தான். இன்னொருவன் பாடினான். சிலர் சச்சர விட்டுக் கொண்டனர். சிலர் அழுதனர். சிலர் புலம்பினார்கள். யார் பேசுவதும் காதில் விழாத படி ஒரே இரைச்சலும் சத்தமுமாக இருந்தது. பெண் நோயாளிகள் போடும் கூச்சல் ஒரு புறம். குளிர் கடுங்குளிர் காற்றில் பற்கள் தாளம் போட் டன. உடல் நடுங்கியது.
பெரும்பான்மையான நோயாளிகளுக்கு இந்த மாற்றம் பிடிக்கவேயில்லை. தாங்கள் இது வரை இருந்த இடத்திலிருந்து, பலவந்தமாக தங் களை பஸ்ஸிலே ஏற்றி, புதிய இடத்தில் எங்கே கொண்டு போய் தள்ளுகிறார்கள் என்பது அவர்க ளுக்குப் புரியவில்லை. 'பாகிஸ்தான் வாழ்க" 'பாகிஸ்தான் ஒழிக" என்ற கோஷங்கள் எழுந் தன. ஒரு சில சீக்கிய, முசல்மான் மனநோயாளி கள் ஆவேசம் கொண்டனர். இரண்டொருமுறை நேரவிருந்த கைகலப்பு தவிர்க்கப்பட்டது.
பிஷன்சிங்கின் முறை வந்ததும் அவன் வெளியே கொண்டுவரப்பட்டான். பதிவேட்டில், பதிவு செய்ய வேண்டி அவனது பெயரைக் கேட் டதும், மேஜைக்குப் பின்னால் அமர்ந்திருந்த அதி காரிகளை நோக்கி அவன், 'டோபா டேக்சிங்
காலச்சுவடு 242
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
www.padippakam.com
எங்கேயிருக்கிறது?' என்று கேட்டான். 'இந்தியாவிலா? பாகிஸ்தானிலா?" அந்த அதிகாரி அசிங்கமாய் சிரித்தவண்ணம் சொன்னான்: 'பாகிஸ்தானில்."
பிஷன்சிங் ஒட முயன்றான். ஒரே தாவலில் தன் சகாக்களுடன் போய் நின்றவனை பாகிஸ்தா னிய சிப்பாய்கள் பிடித்து, பிரிவினைக் கோட் டிற்கு அப்பாலிருந்த இந்தியாவின் பக்கம் தள்ள முயற்சித்தனர். ஆனால் அவன் அசையவில்லை. 'டோபா டேக்சிங் இங்குதானிருக்கிறது" என் றான் உறுதியுடன். பிறகு உரத்த குரலில் 'ஓ' பட்தி கிட் கிட் தி ஏங் ஸ்திபேத்தியானாதி மூங் தி தால் ஆவ் டோபா டேக்சிங் அண்ட் பாகிஸ்தான்' எனக்கூச்சலிட்டாள்.
'டோபா டேக்சிங் முன்னரே இந்தியாவிற்குப் போய்விட்டது. அப்படியே அது அங்கில்லா விடிலும் விரைவில் அது அங்கு வந்துவிடும்" என்று அவனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனால் அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாக மறுபக்கம் அழைத்துச் செல்ல முயன்றபோது தனது வீங்கிய கால்களைஉறுதியுடன் ஊன்றிக் கொண்டு நின்றான் அவனை யாராலும் அசைக்க முடியவில்லை. அவன் பயங்கரமானவன் அல்ல. வயதானவன். அவனை பலவந்தப்படுத்த இயலாமல் போனதும் அவனை அப்படியே விட்டுவிட்டு ஏனைய நோயாளிகளின் பரிமாற்றம் தொடர்ந்தது.
இரவு கழிந்தது.
சூரியன் உதிப்பதற்குசற்று முன்பு, பதினைந்து ஆண்டுகளாகதன்கால்களில் நின்று கொண்டேயி ருந்த பிஷன்சிங்கின் வாயிலிருந்து ஒரு பயங்கர கூச்சல் எழுந்தது. அவனை நோக்கி இரு பக்கத்து அதிகாரிகளும் ஓடி வந்தனர். பிஷன்சிங் தலை குப்புற மண்ணில் விழுந்தான்.
அவன் விழுந்த இடத்தின் ஒரு பக்கம் முள் வேலிக்கப்பால் இந்துஸ்தான் இருந்தது. மறுபக் கம் முள்வேலிக்குப் பின்னால் பாகிஸ்தான். இருநாடுகளுக்கும் நடுவில் பெயரில்லாத அந்த மண்ணில் பிஷன்சிங்கின் உடல் விழுந்து கிடந்தது.
காலச்சுவடு
243
ஆண்டுமலர் 1991
படிப்பகம்