தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, May 18, 2017

நட்சத்திரம் உதிர்ந்த மந்திரச்சிமிழ் - கோணங்கி

நட்சத்திரம் உதிர்ந்த மந்திரச்சிமிழ்  - கோணங்கி

Scanned by CamScanner & Google-OCR

ஆந்தை இறகு பூனையிடம் கேட்டு எழுதிவரும் இந்தநூல் சுவடிகளை ரவுக்கை போட்ட எலிகள் கடத்திச் செல்ல வந்து மறைந்தவற்றைத் தேடுமாறு காக்கையிடம் சொல்வீர் வாசகரே நீரூரில் பதம் பொருளாய் ஒளிகள் வீசக் கோட்டுர் சித்தர் வாசியா நின்ற நக்ஷ்த்திரவாஸியின் இடது பாத லிபிகள் காப்பு

சில்பியின்நரகம் விழித்த கிளி கிருதமாய் நதி ஏவி நீர்படரும் தடாதகையின் தோளில் அமர்ந்து தனிமொழி பேசி படபடத்த கண்ணால் தேடும் பாசுரங்களின் ஆதார ஊற்றில் பைந்துழாய் முகம் பிறந்த ஆண்டாளின் நீர் நகரில் அலைவுற்ற கவிசிறிய விரலில் கால்வைத்து சூடிக்கொடுத்த மாலையில் குழல் கேசமொன்று மார்கழித் தெருவாய் நீண்டு மனக்கோட்டை நோக்கி படர்ந்து செம்பு மணல் நடுங்க எழுந்த ஆங்கார யாளிகள் அடக்கிய நாகசுர மூச்சில் நட்டுவனார் இசைத்த தொன்மத்தில் தவில் முழக்க எமன் தோலில் பிறந்த சொல் டமருகத்தில் மோத வாய்பிளந்த தேவாசுர யுத்தத்தில் சிதறிக்கிடந்த நக்ஷ்த்திர அண்டகோள விலாசம் உருத்திரண்டு கண்ணாடியுள்ளிருந்து எழுந்தான் நக்ஷ்த்திரவாஸி. மீண்டும் கவிதை உன் கை மண்ணில் நக்ஷ்த்திரக் குவியல் கொறிக்கும் சிவப்பு அலகுடன் பச்சை சிறகு

கபால வழி திறக்க பூனை உருட்டிய மண்வீட்டுப் பானைகளில் தவச வாடையில் கிடைத்த சுவடிகள் குதிரைவாலித் தவசமாய் மாறியதால் 'சேற்றில் விழுந்த சொற்கள் தானியமாயின. மாளிகையோ குடிசையோ என்றெனக்குத் தெரியாத ஒரு பூமித் தளத்திலே குழந்தைகளாயின தானியம் கனிந்து உயர விடிந்தது'. தானியத்தில் மறைந்த ஏடுகள் எரியும் கலப்பை மேழிகளில் திணறுவதை உழுதவாறே வெறுமை புறளும் மண்கட்டிகளில் வளரும் குதிரைவாலி நாற்றில் பச்சைக்கோடு கோடாய் வாக்கியங்கள் விரிவதை வாஸிப்பிரே! 

ஆயிரம் கபாலங்கள் நெருப்பில் விழாமல் பிடித்தவாறே ஸ்திரிகள் பஞ்ச மூலகமாய் வாசனைகளில் அலையலையாய் உரையாடும் மெளனம் பூனைசொன்ன ரஸவாது மூலிகை மை ஈரம் உலராமல் எழுதிவந்த ஏடுகளால் கூரைவீடே எரிந்து ஏடுகள் பற்றி நெருப்பு ஒலமிட அணைக்கவந்தவர் மீது ரஸவாதியின் அட்ஸரங்கள் தொற்றி விரட்ட எரிந்த கூரையின் மொட்டைமச்சில் மீந்த ஏடுகளை இந்த துண்டுகளை நெருப்பின் இருளில் புதைத்த வார்த்தைகளை எட்டுக் கழுதைகளில் சுமந்துபோன ஏகாளி வாஸிக்க வாஸிக்க ஒடும் ரஸவாத பாதரஸமொழி பித்தத்தின் எரிகொம்புகளாகி ரஸஎழுத்தின் துடி பொறுக்காமல் மாண்டுபோன பலரும் வெள்ளி நாயின் ஊளையைத் தொடர எழுதுவதைவிட்டு ஆந்தை ஓயாமல் கனியுண்ணத் துயில் கனவை சூட்சும சக்கரத்தில் தீட்ட ஆந்தைக் கண் ஏடுபார்த்து பிரமை கொள்ள வேண்டாம் வாசகரே!

63

பக்கங்களினுள்ளே ஆழ ஒடும் இருட்குகையில் நிறுத்திவிட்டு மறைந்துவிடும் மனவுலகினுள் உலவி எழுதும் மெளனியின் சொல் அமைப்பு தேவரடியார் தந்த பூர்வீக இசை மூலத்தின் வலுநடையால் தலைகீழ் சுடரின் நிழலாய் இருளின் கால்களுடன் யாளிகள் வருகின்றன பின்னே புறவுலகைக் கிழிக்கும் விஷக் கணையானால் உருவம் தான் வேகம் அதுவரையான வெற்று வாஸிப்பில் ஓயாத பெரும் சப்தம் நிற்காது தலைக்குள் கூச்சலிடும் பகலைத் தாண்டி கால் நிற்கிறது எல்லையற்ற அந்தகாரத்தில் சப்தப் பிழைகளைவிட்டு நழுவி விலகித் தென்படும் உன்னத இசையின் குரலை தனித்து உணரும் சுரணையாக ஏற்பட்ட விழிப்புத்தான்  ‘சில்பியின்நரகம்’

கடந்த உலகுக்கும் தாவரங்களுக்குமிடையில் மறு நூற்றாண்டுகளின் கலைந்த அடுக்கில் காந்தள் கருவுற எறிந்த படிமம் வீழ்பணிவாய் தழல்கொள்ள பாறைப் படிவுகளில் வெளிச்சம்புகாதவனத்தில் கடல்மடுவில் யுகாந்தவெளியில் கானகத்தில் பசுமைச்சாறு பொங்க விளைந்து கொண்டிருந்தது படிமம். கேழ்ஏவரையும் இல்லோன் கபாடபுரக்கிளி அன்ன யாழ் ஏர்மொழிப் படிமம் வீசி வீசிச் சுழலும் நக்ஷ்த்திரவாஸி, ஐந்து தானிய அடர்விலிருந்து 1888 தானிய நிறை சேர விளைந்த கடல்முத்து சுடரப்பிறந்த படிமடலகம்.

மிதக்கும் கீழ்திசைத் தீவிலிருந்து முளைத்த வெள்ளி கைப்பிடியளவு கடலில் விரிந்தது. இப்போதும் ஸப்த சமுத்திரங்கள் மணல் காணும்ஆழத்தில் நக்ஷ்த்திரவாஸியின் ஈமப்பேழையுள் வசிக்கிறது கபாடபுரக்கிளி

ஐந்துநிறங்கொண்ட திணைகளில் அமர்ந்திருக்கும் அறுபத்திநாலு புராணக் கிளி நகரத்திரங்களோடு சூதாடி திசைநான்கில் பறக்கும் லங்காபுரியானையின் தந்த மொழி பேசும் ரத்தத்தின் குணரூபமான உன்னை எதிரியாக்கும் சனாதன வக்ரப் பார்வையில் தப்பி பிறை கவ்வி மலை நடந்தது கண்ணுக்குள் கண் சுற்ற கண்ணாடி ஒன்றுக்குள் ஒன்று மாறிச் சுற்றிவரும் கபாடபுரக்கிளி இறகு ஆறு கோடிழுத்து கண்ணாடி பனிரெண்டாகி ஆடியுள் ஆந்தை இறகு ஆறுகோடிழுத்து அறுபத்தி நாலு கிளிகளுக்கும் கூடு வரைந்து திசைக்கொரு ரஸஆடி கிழக்கு முதலாய் திக்குகள் எட்டும் விரிய கிளியைப் பூனை கவ்வவர எதேச்சையில் நின்ற கலையின் ஆருடச் சக்கரத்தில் யானை முயல் காகம் பாம்பு எலி கருடன் பூனை கொக்கு காடை நரி குருவி மாறிமாறித் தோன்றும் ஆடி சுழல கதித்தகுரல் வல்லூறு வீழ்திசை மாயத்தில் கண்ஏடு திரும்பும் பக்கங்களில் நக்ஷ்த்திரவாஸியின் சிறகு நீட்டித் தொட சக்கரம் நின்ற கட்டத்தில் சரசப்பொற்கோழி தீபச்சிமிழுக்குள் மறைய மையிருட்டில் ஆந்தைக் கண் ஏடு புரண்டு நின்ற பித்தனும் மெளனியும் ஜிப்சிகளின் டேரட்கார்டுகளை குலுக்கியவாறு கைதட்டிக் கைதட்டிக் கதை கூறும் நவீன சதுக்கத்தில் புத்தகப் பலகை விரிந்து மாறும் எழுத்துக்கள் பொற்கோழி மஞ்சநிறப் பாவையாகி கண்ணாடிச் சிம்ளிக்குள் மெல்ல சுடர ஏட்டுப்பலகையில் உதிரத் தொடங்கிய திணைகள் உருண்டுருண்டு நிலத்தில் மறைந்து பின்சென்ற வாசகர் கண்ட ரகஸியப் பேழையில் மாபெரும் இறகுடன் எழுதிக்கொண்டிருக்கிறான் நக்ஷத்திரவாஸி,

நக்ஷ்த்திரவாஸி வார்த்தையில் திறந்துகொண்ட கபாடபுரம் ஞாபகம் காண மறதியைத் தேடுவதில் ஜடமென இருநூறு வருஷங்கள் நாற்காலிகளில்  
வீற்றிருந்தார்கள் எழுத்தாளர்கள் கபாடபுரமெங்கும் வரில் படரும் நகர்த்திர வாஸியின் ஒளிகண்டு கண்ஏடு திறக்க எதார்த்தவாதக்கதை உலை இருள் கொண்டுவிட்டது.கபாடபுரத்திலிருந்து திரும்பிப்பார்க்கிறான் நக்ஷ்த்திரவாஸி அறுபத்திநாலுகிளிகளும் கபாடபுரப்பொந்துகளில் இருந்தவாறே ஒவ்வொரு கிளியாக நக்ஷ்த்திரவாஸியின் கனவுகளின் தனிமொழியால் உதிரும் ஏடுகளை மொழிய முகச்சாயல் பார்த்து முற்பிறப்பின் கதை கூற பூனையிடம் சொல்லாததை சுருட்னிடம் கேட்டு சிங்கத்தை அடைக்க முதலையிடம் மந்திரம் கேட்டு கட்டிலைவிட்டிறங்காக்காதலியிடம் ரவுக்கை கேட்ட எலிகளின் தந்திரத்தை எழுதி மறையும் யானையை முயலிடம் பார்த்து வேதாளம் சொன்ன கதையில் விடுவிக்கப்படாத புதிரை அடுத்த கதைக்கு நகர்த்தி பாம்பின் சுருள் எழுத்து ஊர்ந்து நீண்டுவரும் கனவு சுருள நாயின் தடம் பதிந்த மொழிபேசி நரி ஏமாந்து ஊளையிட்ட திராட்சைத் தோட்டத்தில் புளித்த சுரைக்குடுவைக்குள் புதைந்து ஊறும் கதைஏடு கபாடபுரத்தின் புராதன நரம்புகளோடி பிரின்நிறத் திராட்சை நிறமாகிக் கால மயக்கத்தில் மூழ்கிய கபாடபுரவாஸிகள் இழந்த பொற்கோழியை தொல்கதையில் தேடித்தேடி தோற்றுப்போனார்கள் நிலவில் பழுத்த கபாடபுரத்தின் மாய விளக்கின் பன்முகவாசலில் வெவ்வேறு அர்த்தப்புனைவில் சுடர்ந்த பிரதிமைகள் ஒளிநாவுகளாய் சுழல மாயவிளக்கில் மறைந்து கூவியது பொற்கோழி விநோதக் கண்ணாடியிலிருந்து ஓடிவந்த கருப்பு வர்ண நூல் பொம்மை தன்மார்பில் ஒளித்துவைத்த ஒரு பொன் முட்டையை கையில் ஊதியபடியே 'பிறப்பதற்கு வாழும் கணமே சாவாக வேண்டும் இருபத்திநாலு மாயச்சிமிழ் வித்தையே கவிதை என கருப்பு மேஜிக் புத்தகமாகிச் சுற்றிய முட்டைமேல் பாஷாண மையினால் நீண்டவால் பூனையை வரைந்துவர இராவிருட்டில் முட்டை மேலோடு விம்மி வட்டமான புத்தகமாய் சுழல சித்திரப்பூனை நகர்ந்து சிரித்தவாறு முட்டைக்குள் மறைய நீந்திய சிரிப்பு மட்டும் பூனையின் பிரதிமைகளாய் உள்ளுறைந்த பழுப்பு நகரைச் சுற்றி பூனைவால் மட்டும் நுழைந்து கபாடபுரத்தின் தெருக்களில் திரிந்த ரவுக்கைபோட்ட எலிகளைத்தேட சந்துபொந்துகளில் மூக்கைப் புதைத்து நகருக்குள் ஊர்ந்துவரும் நீண்டவால் பூனையின் சிரிப்பு மறையாமல் இருப்பதை துயிலும் கபாடபுர வாஸிகளுக்குத் தெரிவிக்க ஓடோடிவிட்டன. ஒளிவீசித் தொட்ட மாயவிளக்கிடம் மாட்டிக் கொண்ட எலிகள் தொட்டதும் அழகான இளவரசியாகத்தான் மாறியது பொற்கோழி, இளவரசி பார்த்த கண்ஏடு கபாடபுரத்தின் புராதன ரஸ ஊற்றில் மொழிமாறிக்கொண்டே இலைகளும் கொடிகளும் படர்ந்த லிபி பாசிகளுக்கிடையில் கண்கள் ஆயிரம் முளைத்த வெள்ளித்தாவரங்கள் எட்டி வளைந்து மேருமலை மீது உதிர்ந்த படிமம் மந்திரச் சிமிழில் சுழன்றது தலைகீழ்சுடராய், மாயவிளக்கை அரசாளும் கழுகிடம் அடிமைகளாகி கிழக்கழுகரசன் காத்துவரும் நக்ஷத்திரவாஸியின் ஈமப்பேழையில் மறைந்தது பொற்கோழி தேடித்தோற்றவர்கள் ஏழுகன்னிமாரின் சமையலறை ஏவல் பணியாளர்களாய் உருவிழந்து சாயைகளாய் மந்திரலுநாய்களின் பிளந்த வாயிலிருந்து தலைநீட்டி ஏழுகன்னிமாரிடம் சாபவிமோசனத்திற்காய் நிமித்திகம் கேட்டு வாய்மொழியின் ஸப்தாக்ஷரத்தைக் கிளியாக்கி அகத்தியர் வகுத்த எல்லா ஏடுகளின் வெள்ளித்தாவரங்களின் உரையாடலைத் தொடங்கியது கபாடபுரக்கிளி போகரின் தொடுகுறியும் கூற எழுதா மொழிப்பாதையில் கிளம்பிவந்த அரூபமானவர்கள் மரணத்தின் பின்னும் ஞாபகம் தனியே விலகி நடமாடத் துவங்கியது

கண்ஏடு பார்த்துக்கூற கடுகு ராஜியத்தின் இளவரசி காதலால்கனிந்த அலகு சிவந்து ஆரூடம் மொழிந்த கிளியிடம் காகங்கள் கூடி வாக்குவாதம் செய்து சாவில் விழுந்த தீக்கனவில் காக்கை முக்கை நீட்ட செஞ்சேவல் பறந்து சென்று துயர இருள்வீசும் யாழ்நகரின் குருதிதோய்ந்த மதில் மீது இறகுநீட்ட எழுதிச் செல்கின்றான் அடையா விடுதலையின் தேசீய கீதத்தை லங்காபுரி யானையாகிப் பறக்கும் திசை நான்கில் நக்ஷத்திரவாஸி

செஞ்சேவல் மதில் மீது நின்று கூவ நகருக்கு வெளியே பொட்டணங்களோடும் கால்நடைகளின் எலும்புதுருத்திய நடையோடும் இறந்த மாட்டின் தோலில் சுருண்ட பசியுடன் கூட்டமாய் பெருஞ்சுவர் நோக்கி வளைந்த முதுகுகளில் பாரங்களோடு வண்டிகளை இழுத்து நகர்கிற பாதையில் துப்பாக்கிகள் தோட்டாக்களில் கரு வெடித்தது. அழிவு இப்படியாக ஆயிரம் பறவைகள் தலைகீழாய் குதித்த அலகு எரியும் கபாடபுர மொழியின் தீநிழல் போர் முன்இருளாய் அசைய விஷம் சுமந்த கண்டத்தில் கடித்தகுப்பிகளில் கழுவக் கழுவ கை விரலில் எஞ்சியது சாம்பல் நீலக்குருதி

உயிர் மாய்ந்த கபாடபுரக் கிளிக்கூட்டம் தேடிப் பறந்து வந்த செஞ்சேவல் நெருப்பாய் உமிழ்ந்த கண்ணீரில் உள்சுழல்கிறது பரிதியின் செங்கோளம் "தீகருக்க சுவரெங்கும் நிழல் கீறி விரிசல்களாயிற்று’ காலெடுத்துப் பரந்து வந்தசெஞ்சேவலை ஆந்தைக்குக் காகம் சொல்ல நீர்க்கரையான் அரித்த ரஸவாதச் சுவடிகளைப் புரட்டிப்புரட்டி வரிவரியாகத்தெரு எரியப் பொல்லாச்சாவே சாம்பல் மூட கண்ஏட்டில் செஞ்சேவல் சித்திரத்தில் பாஷாணமுலிகை தடவிய எழுத்தை ஆந்தை இறகு எழுதி நகர ராஸிமண்டல ஸ்ருதிகளை இருபத்திநாலாய்ப்பிரித்து குறிஞ்சியாழில் எட்டுக்கிளிகளும் நெய்தல் யாழை அடுத்த எட்டும் மருத யாழில் பாலையில் அறுபத்திமூன்று கிளிகளும் மாறிமாறி மொழிந்த சுரப்பாதைகளை துளசியில் பிறந்த ஸ்திரியின் பாசுரங்களை பிரித்துப்பாட பூவில் மறையும் நகரங்களை திறந்து காட்ட ஏதோ வெண்பூ விரிந்து செவந்திப்புராணத்தில் சிவன்பாதம் தூக்கி எல்லையற்ற ராத்திரியில் நிற்க காகம் செம்புநிறமாகி கிளி கொறிக்கா ஒர் நெல்லின் அடியில் புதைந்த கன்னியின் தலை மட்டும் பீடத்தில் ரத்த விளாராய் பிய்த்தெடுத்த நரம்புநாண்களுடன் உதிரம் தோய்ந்த கேசம் படர்ந்தது திரிசடையாய் கபாடபுரத்தின் தனிப்பாடலை ஊமையான ருத்ரகணிகையொருத்தி வில்மேல் தெறித்த தென்முத்து சுழன்று ஹிரண்ய ஹர்ப்பத்தில் துளைந்து ஒளியுமிழப் பறந்தது சென்று ருத்ரகணிகையர் நெஞ்சறுக்கும் பெண் சோகத்தில் எல்லாக் காலத்திற்குமான அனந்தத்தின் களிவெயில் இசைத்த யாழில் திரிபுரம் எரிந்து சுழல்கிறது.

"உவமை, உருவகம்,மூர்த்திகரம், திறக்கும் கற்பனை வேகத்தில் இழையும் பித்த நிலையே படிமம் என்றான். மிருகங்களின் காலடிகளும் பறவையின்         நக்ஷத்திர தடங்களும் காற்றின் மிக மெல்லிய துயரமும்படிய மணல் பாதையில் காத்திருக்கும் சாவை தள்ளிப் போட்டவாறு தனிமை குடித்தி நக்ஷத்திரவாஸியின் மூச்சில்விலகும் விண்கோள்களும் உரசும் சுற்றுவிதிகளும் தாண்டி மெளனத்தில் கலந்து சாவின்அமைதியில் இறகுகளை மாற்றிப் அசைவின்றி மிதக்கும் அரூபத்தில் கரைகிறான் நக்ஷத்திரவாஸி.

அகநானூறு மன உலகப்பரிசோதனைகள் இடைக்கால இருளின் முன் மறக்கப்பட்டுவிட இன்று ஒரு புதுவிழிப்பில் முழுசாகாஉணரப்படாமல் பண்டிதப் படிப்பு அகவலக ஓட்டத்தை எட்டவில்லை எனினும் மூதாதைக் கவிகளைப் போல் இயல்பிலேயே  சுரணையுள்ள படைப்பாளி  உணர்ந்துகொண்டான். அகநானூறின் மனஉலகம் இந்தப் பண்டிதர்களுக்குத் தெரிந்திருந்தால் பித்தனும் மெளனியும் புரியவில்லை தெளிவில்லை என சொல்லமாட்டார்கள்" என்றான் வேகத்தில். இந்த நூற்றாண்டு முடிய இன்னும் இரண்டுதப்படிகளே எஞ்சியுள்ள தருணத்தில் இரண்டுதப்படிகள் சந்தித்த சாவின் நீலநிறக் கண்முலம் பார்த்துக் கொண்டிருக்கும் நக்ஷத்திரவாஸி தனிமொழியின் நிலப்பரப்பில் மேல் நோக்கி பயணம் உலக மொழிகளுக்கு மாறி படிமம் கழலும் கிரகவிதியின் கணிதார்த்தமாக எண்களை மாற்றி கடந்து சென்றான் பெயர்களை அகரர் இளம் பதிந்து வைத்த கீழ்திசை சுவடி அறையில் நக்ஷத்திரவாஸி குருதியின் ரகசிய இழையில் பயணமாகிறான். கருப்புநகரின் கடற்கரையில் நடந்து அப்பால் இருந்த தீவைப்பார்த்து யானைகள் ஒளிவெள்ளத்தில் பறக்கும், தொலைந்துபோன லெமூரியாவின் அதிஅற்புதக் கற்பனை கொண்ட எழுத்துமுறை கண்ணாடியுள்ளிருந்து லெமுரியாவைத் தாக்கிய சுருள் மின்னல் வில் அதிரும் காலாந்தத்தில் சரிந்து வெடித்துச் சுழலும் கவிதை விண்மீனிலிருந்து இன்னொரு விண்மீனுக்குத் தாவும் படிமம் மாபெரும் துணைக்கண்டத்தின் அடியில் விலகிய சிறுநிலத் துண்டின் ’சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்’ வரைந்து கொண்டிருக்கும் மனித முழு விடுதலைக்கான கவிதையை மறை பொருளாகவுள்ள மொழியின் நூற்றாண்டுகளுக்குப் பின் முன் உருகி நகரும் விடுதலைக்கான தேடலின் தொடர் கண்ணியை காணும் வேட்கையில் அருபத்தில் கரைகிறது உயிர் மரபின் தொடர்ச்சியை இயல்பிலேயே சுவீகரித்துக் கொண்டவன் இனகாழ்ப்புணர்ச்சியும் வர்ணாசிரமகாழ்ப்புணர்ச்சியும் ஓநாய்களாய் விரட்டிய கருப்புநகரின் சந்துகளில் தப்பித் திரிந்த வருஷங்கள் வக்ரமன விகல்ப்பர்கள் பின் துரத்த மௌண்ட்ரோட்டில் பட்டினியும் வறுமையும் உருவெடுத்து மறித்த இடம் விலகி நகர்கிறான் நக்ஷத்திரவாஸி. அன்றாட மனிதனின் மலம் மக்கும் குடலில் அறுத்தெடுக்கமுடியாதது கலையென்று குரூர மனவிகாரங்கள் வளைத்துக் கொண்டபுறத்தின் எல்லை தாண்டி அனாதியான கானகத்தில் மறைகிறான் நீலநக்ஷத்திரவாஸி. மெளனத்தின் அடியில் நொறுங்கிய சிருஷ்டிகளின் அதிர்வு கரையான் நின்ற ஏடுகளில் கோர்த்துச் செல்கிறான் அடுத்த வாக்கியங்களை இருளில் புகுந்து அடிக்குரலில் குமுறும் கபாடபுரப்பறவை ஒன்றின் சோகமென ஊமையான அவன் முகம் மரணத்தின் ஆழத்தில் கண்கள் புதைந்து உள்ளே சஞ்சரித்துக் கரு வெடித்துப் படரும் இன்னொரு உலகைக் கருக்கொண்டு

சரிந்து விழும் கதைகள் சுவர் எழுப்பிய கபாடபுரம் கண்முன் ’மண்டபத்தின் கீழ்மேல் தரைக்கூரை எதிரொலிக்க நகைத்தது பெண்குரல்’ செவிப்புலனாம் ஓசைகேட்டுக் கட்புலனாம் பொருளுனரும் தொல்லோர் திணைப்புக்களின் வாசனைக்குள் 'அனுகி அலைந்த சிரிப்பின் கலீர் ஒலி தீண்டி கவர்கள் பதறின.’

நக்ஷத்திரவாஸியின் பேழை திறந்தது பாதங்களின் கீழ் நக்ஷத்திரவாஸிகள் திரும்பின. அவன் உடல் எங்கும் ஆயிரம் உதிரநிறங்கொண்ட வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்த அதிரொளி ஞாபகங்களின் தும்பிகனை நீட்டி உறிஞ்சிய ஈர்ப்பில் நிலங்களாய் விரிந்த படிமகோளங்கள் விருட்சங்கள் பர்வதங்கள் நவகண்டத்தின் பிரமாணமும் மடுஉய்யானங்களும் தும்பிகள் உதிரவீச்சில் பறந்து வருகின்றன அவனை நோக்கி வாசம் பொருந்திய புஷ்பத்தின் மது உள்ளறைகளில் சுருளும் தும்பிகளின் முகவாசனை

ஈசனார்பதிக்கு தென்பாற் சிகரத்தின் மேல் மொழிகீறிய அம்புடன் நக்ஷத்திரவாஸி

மரணமடைந்தவர் சொல்லாதின்ற சித்திரபுத்திரர் சொற்படிக்கு அதட்டி விரட்டி அடிக்கிற காலதூதர்கள் சூழ் சம்யமணியாகிய எமபுரத்தில் சுவடி ஏந்திய பித்தன் "அதன் நாபியிலும் இதயத்திலும் ஜீவரஸத்தை தடவு" என்றான். 'மின்னல் சட்டச் சடசடாவென கம்பிகள் வழியாகப்பாய்ந்து குகைமுழுவதும் ஒரே பிரகாசமாகிக் கண்ணைப் பறித்தது. நன்னயப்பட்டன் முகமும் உடலும் கோர உருப்பெற்றது பேய்ப்பாய்ச்சலில் சென்று மறையும் ஒரு பெண்ணுருவின் சடையைப் பிடித்துத் திரும்பி குகையுள் மறைந்தான். வெளியே குமுறும் இடியும் மின்வலும் எங்கிருந்தோ வந்து கவிந்தன. குகைக்குள்ளே பேயுருவில் நடமாடுகிறான் நன்னயப்பட்டன்.

நக்ஷத்திரவாஸி வார்த்தையில் கபாடபுரத்தின் மறையாத யார் யாருடைய  
காலடிகளின் வளைந்த ரேகை நக்ஷ்த்திரவாஸியின் இடதுபாத லிபி முன்னோர் கலாச்சாரம் மூழ்கிய கடலினுள்ளே தொல்காப்பியத் திணைப்பூவில் விரியும் கடல் கொண்ட கபாடபுரம் வெறுமையாகி நின்ற தெருக்களில் உலவும் முன்னறியாத கதைகள் யுகங்களை விழுங்கி கிழக்கோட்டானாய் தனிமொழியில் சொல்லத் தொடங்கிய ஞாபகங்கள் மோதித் தெருக்கள் எதிரொலிக்கின்றன. கபாடபுரத்தின் தெருவில் நக்ஷ்த்திரவாஸியுடன் பேசுகிறது நகரம் கடல் கொண்டழிந்த தெருக்களில் வசித்தது தனிமை. மெளனியின் எட்டிய வெளிக்கும் அப்பால் கபாடபுரம் விரிவதைப் பார்வை கொள்ளச் சிறிது நேரம் ஆகியது போலும், பின்னும் முன்னும் இழந்து கொண்டிருக்கும் பிரம்மாண்ட கலாச்சாரத்தின் பாழ் தோற்றம் நீரடிப்பாதையில் புதைந்த சுடுமண் தாழியில் செதிலாய்த் தோல் சுருண்ட நக்ஷ்த்திரவாஸி விரல்களில் கிளி நகங்கள் முளைத்து இறகடர்ந்த கபாடபுரக்கிளியாகி பச்சை குத்திய மீனராசிமண்டல வடிவம் உடலெங்கும் நகர்ந்து தாவரங்களும் இலை நரம்பின் வெப்பமும் சர்ப்பவளைவில் விழுங்கப்பட்ட சந்திரப்பெண்ணும் சுருண்ட ஸர்ப்பமூச்சின் பயமும் தொட மின் செதில் குத்திட்டு அசைய நக்ஷ்த்திரவாஸி இடது பாத மொழி பிறப்பின் ரகஸிய உரையாடலாய் உயிரைத்தொட சாவில் கால் நீட்டி அசைந்து கொண்டிருந்த லிபிகள் அருகிருந்த பஞ்சலோகப் பட்சி காரண்ட இருள் வீசிப் பறக்க பிறையும் நக்ஷ்த்திரரமீன்களும் உதயமாகிப் புலப்படாத கிரககோளத்திலிருந்து வந்த நக்ஷ்த்திரவாஸி வளர் சடை இருள் விரிக்க சிரசு ஆந்தையாக எலிகள் விலாவில் சேர சீழ்முதுகு விரிந்த சிறகுடன் இருபத்திநாலு கழுகெலும்புகளாய் கோர்த்திருக்க மேல்முதுகு கருடனாய் காலும் கையும் அன்னமாய் முட்டுகுருவி காட்டாணிவிரல் எழுத்தாணியாய் எழுத்தோ ஸர்ப்பமாய் சடை முடிவிலா கானகமாய் அலைபடும் ஆழி வளர்சடை சுபாடபுரமாய் கோடு சுருள் முடி சுழிந்து புகுந்த கனவு திறந்த கோர வல்லுறுவாய்திறக்க விரிந்தது கபாடபுரம் . உறைநிலையில் இருந்த பூதக ஏடுகள் நுரைபொங்கிவர நக்ஷ்த்திரவாஸியை இழுத்த சர்ப்ப அலைகளால் விழுங்கப்பட்டு மீண்டும் சர்ப்ப வாய் திறந்து வெளிப்பட்டான் ஞாபகங்களில் ஊர்ந்து வரும் ஏடுகளில் நிழல் கோடுகள் எதிரே ஒளிபடர்ந்த தரையில்  ஆடும் நிழல்கள். எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ஊழிப் பருவ வெட்டி வெட்டிப் போன எழுத்துக்கள் நிழல்களாகி விரட்ட கூட்டமாய் கடலுக்குள்ளிருந்து நுழைய கபாடபுர நிழலின் அசுர ஓட்டத்திலிருந்து தப்பி ஓடுகிற நிழல்கள் தவளைகள் குரல் சுழற்சியில் உருவெடுத்த கபாடபுரம் நீருக்குள் சுழி சுழியாய் சுழல்கிறது. நகரும் பவளப் பாறைகளில் பிசாசுப்பாறையில் இடம்மாறி நகரும் நாவலந்தீவு எட்டுத் துதிக்கைகள் கொண்ட கடல்ராஸியாக மாறிய நாவலந்தீவு தோன்றி மறைய பித்தன் தலையில் விழுந்த துதிக்கையின் ஸ்பரிசம் பட்டு கற்பனைத் தீவுகளின் விசித்திர நீர்ச்செடிகள் ஒளிர்வடைந்து புதைபாதையில் சுழற்றி இழுத்தது பித்தனை செல்லும் வழி இருட்டு செல்லும் மனம் இருட்டு சிந்தை அறிவினிலும் தனி இருட்டு பித்தன் தானே விசித்திரப் பிராணியைத் தேடிப்போகிறான்.

பனையோலைச் சுவடிகள் நீந்திவர ஓங்காரமிட்டு அலறித்துடிக்கிறது கடல் இருள் படிகளில் புதுமைப்பித்தன் உள்ளே மெளனி வடித்த பெண் சப்தம் "யார் நீ என்றேன். நீ முளைத்த நாளன்றே முனைத்து முளைத்துன் முகத்திசைக்கு எதிர்திசை நோக்கி விழித்திருப்பவள் என்றாள் ஜலத்தின் கதவுகள் அலையோடித் திறக்க’ கேட்டு கேட்டு மறையும் பிரபஞ்சகானம் என்றான் நக்ஷ்த்திரவாஸி வான வெளிச்சம் ஜலப்பரப்பின் மேல் படர்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. மெல்லெனக் காற்று விசியது அல்லிப்பூக்களின் தலைகள் ஆடின. பிரபஞ்சகானம் அவளுள் அடைபட்டு விட்டது அடைபட்ட சங்கீதம் விரிந்து வியாபகம் கொள்ள வெளியுலகம் கொஞ்சமாய் மாறுதல் அடைந்தது. தலை சிறுசிறுத்தது. ஒன்றும் புரியாமல் இவன் தூனோடு தூணாகி விட்டான். அவள் சங்கீதத்தின் ஆழ்ந்த அறிதற்கரிய ஜவ உணர்ச்சிக் கற்பனைகள் காதலைவிட ஆறுதல் இறுதி எல்லையைத் தாண்டிப் பரிமாணம் கொண்டன. மேருவைவிட உன்னதமாய் மரணத்தைவிட மனதைப் பிளப்பதாய் அலைகள் வந்து வந்து மோதிச் செல்கின்றன. கபாடபுர இசைப்பறவைகளின் எச்சம் வழிவழியாய் குரல் கொடுக்கும் கோயில் பிரகாரங்களில் நடந்து போகின்றான் மெளனி. சிலைகள் உருவெடுத்து மறையும் கோபுரமெல்லாம் மூளிக் கலசங்கள் மோதும் சிறகுகளோடும் காதல் வடித்த கண்களோடும் கபாடபுர இசைப்பறவை பறந்து பறந்து துடிக்கும் குரல் பித்தனை எந்த யுகத்திலோ பின் தொடர்பவள். பேசாமடந்தையாகி கடல் கொண்டும் கல்லா கல்லாந் கன்னியே கண்மூடிப் பொய்ப்புன்னகை புரிந்து நிற்கிறாள் எதையோ கல்பதுமையிடம் இழந்த பித்தன் கதறுகிறான். கர்ப்பகிருஹ இருட்டு துயரங்களில் மூழ்கிக் கிடக்கிறது. இருளை மீறி முனகல் கேட்கிறது. மனம் கீறும் கண்களோ, இரு தீப்பொறிகள் உள்ளே தெறிக்கின்றன. நிருதியின் திசையிலிருந்த பலிபீடத்தின் மீது தலை அமர்ந்திருந்து கன்னியின் தலை, பீடத்தில் பலியிடப்பட்டு கடலில் எறியப்பட்ட சப்த கன்னிமாரின் எலும்புகளின் குமுறல் அறைகளுக்குள் அடைபட்ட கடலாய் சிறுகிறது. கன்னியின் சிரசு கல்லாகி ஆமையோட்டு நிறத்தில் அவள் எல்லா முகத்தோற்றங்களையும் காட்டுவதாக பித்தன் பார்த்தவாறு நிலைகுத்தி
வெறித்தான். அவனது தந்தையின் தந்தை முகத்தை நினைத்துப் பார்த்து அதில் பிரதிபலிக்கக் கண்டான். பிறகு பாட்டியின் முகத்தோற்றத்ததை நினைக்க அதுவும் இருத்தது தாய் முகம் அத்தை முகம் புராதன முகங்களையெல்லாம் காண இருந்தது. அனுபவத்திற்கு அப்பாற்பட்டதையும், அதில் காண முடியும் பித்தன் கற்பனையில் வாழ்ந்தவர்கள் கடந்த காலத்தைச் சேர்ந்த கட்டுக்க தைகளின் வீரர்களது முகத்தோற்றங்கள் கேள்விப்பட்ட கதைகளிலுள்ள அதிமானுடர் தனது சாயலில் பிரம்மராக்ஷஸ் தோற்றம் கொள்ள எல்லா முகங்களின் ஒரே முகமாகக் கன்னியின் உதிரத்தெடதுடு குரல்களில் விரிந்து வந்த நிலத் தோற்றங்களைப் பார்வை கொண்டு கரிய கடலான இருளில் உறைந்து போன கற்கள்கனம் வில நகர்கின்றன. கணநிலையாகத் தங்குகின்ற கரியநிற இருளடைந்த கடல் துளி விரிந்து துளிக்குள் விரியும் கபாடபுரம் பயங்கரம் நிரம்பி மங்கலாய் தெரிகிறது நகரம் நீரில் அசைகிறது. பித்தனின் வார்த்தையில் உயிர்க்கும் கபாடபுரம்,

இருக்கும் கன்னியின் சிரக அதன் அலகபாரம் ரத்த விளாறாகப் பலிபீடத்தில் விரிந்து கிடக்கிறது. அவள் கூந்தல் வளர்ந்தபடியே இருந்து கட்டுக் கட்டாய் அலையலையாய் வெளியேறிப் போனது அவள் அரூபத்துடன், கானகங்களில் மிருகங்களின் புராதன மூச்சின் மேல் துயில்கிறாள் கன்னி பூத்த உடைமரக் கு-ைமுள் படுக்கையில் குத்தும் இராவிருட்டு திரும்பவும் கடலில் புகுந்து பலிபீடத்தில் தலையாகி விடுகிறாள் மனிதவம்சத்தின் ஞாபகச் சரடாய் இருந்து வருகிறாள் பலிபீடத்தில் பேசுகிறது தலை, சண்பகப்பூவின் வாசம் கலந்த மெல்லிய காற்று ஊசலாடியது பலிபீடத்தில் காற்று எங்கிருந்து வருகிறது. கற்குகைக்குள்ளே தோன்றி அதனுள்ளே மடிகிறது போலும்,

’இம்மாதிரிக் காற்றடித்தால் சூரியோதயமாகிவிட்டது என்று அர்த்தம் அஸ்தமன மாகும் போது மல்லிகையின் வாசம் வீசும்’ என்றது கன்னியின் தலை

“நீ யார்?."

"மூன்று கர்ப்பகாலம் கடந்துவிட்டது. எத்தனைகாலம் பிரக்ஞையுடன் இருக்க இச்சைப்படுகிறேனோ அத்தனை காலமும் வாழமுடியும்

சிரசு மறுபடியும் பேச ஆரம்பித்தது.

உடல் இழந்த வாழ்வு ஏற்பட்டதை கேட்காதே ரகஸியம் உனக்குக் கிடைக்காது. பரம ரகஸியமாய் ஹிரண்ய கர்ப்பத்தில் சென்று ஒடுங்கிவிட்டது. இது திசைகள் அற்றுப்போன இடம் எந்த வழியாகச் சென்றாலும் ஒன்றுதான்.

பிலத்திலிருந்து எழுவதும் மறுகணம் அடியோடு மறைவதுமாகத் தெரிந்தது. பூமிக்கு அடியிலிருக்கும் எரிமலைதான் இப்படி அக்னி கக்கும் தென் வீழ்திசையில் இரண்டுதலையும் மூன்று கால்களும் நான்கு கொம்புகளும் செம்பூ சிவந்த ஆறு கண்களும் ஏழு நாக்கும் ஏழுகைகளும் உடைத்தாகி அசவாகனமும் சுதை சுவாகா எனும் பாரியையுடைய புகையைத்தானே கொடியாகக் கொண்ட அக்கினி கரைவிதைப் பற்கள் நெறுநெறுக்கக் கோபத்தில் உமிழும் ஒளிப்பிரவாகத்துடன் மண்டபத்தூணில் நிலைபெயர்ந்து ஆட பூமியின் அடியில் கபாடபுரத்தின் பெருங்குமுறல் கேட்டுக் கொண்டிருந்தது. பிலத்துக்குள் சென்றான் பித்தன்.

ஒரே இருட்டு.

கடல் குகைக்குள் மறதியில் மூழ்கிய கபாடபுரவாஸிகள் தங்கள் தனிமொழியால் இசைக்கும் மகரயாழில் மறைந்த வார்த்தையின் சங்கேதப்பாடலை இசைக்கிறார்கள். அவர்கள் கையிலிருந்தது ஐந்து தானிய நிறைகொண்ட தென்முத்து மட்டும்தான். ஒவ்வொரு பூவைச்சேர்ந்த தானியத்திலும் ஒரு கன்னியின் தனிப் பாடலை இசைத்தார்கள்.அந்த வடிவங்களைக் கேட்கக் கேட்க பல குளிர் காலங்களுக்கு கூடலிழைத்தல் சுடரொடு புலம்பல்,  மின்னிடை மடந்தை அன்னமோடாய்ந்தது தேர்வழி கடலொடு கூறல் கூதிர் கண்டு கவர்ந்தும்  முன்பனிக்கு நொந்துரைத்தது யாழ்.    கோடைகளுக்கு பாலைகளின் பாதைகளுக்கு இருங்கூதிரெதிர்வு கண்டு கருங்குழலி கவலையுற்றது. பின்பனி நினைந்திறங்கி இளவேனில் கண்டு இன்னலெய்தியது பாலையாழ் மென்னகைப் பேதை கையில் யாழின் மொழி இருளா நின்ற கோகிலம் ஒரு காலைக் கொருகால் நிறம் பெற்று இருளா நின்றன குயில்கள். முல்லை நிலங்களுக்கு மருதநில மரங்களின் வளைவில் ரம்பையர்கள் போகமுற்று வேணல்சார் பாலையாழில் வண்டு உழுது சப்தியாதின்ற அகில் விருட்சங்களும் செண்பகப்பாலையும் ஆகாசமளாவி அசைந்தது. குமரிக் கண்டத்தில் சிலா நதிக்குத் தெற்கிருந்த நெய்தல்யாழில் முத்து ஊர்ந்து ஒளியுமிழ்ந்தது மொழியாய் மந்திரவயப்பட்ட குறிஞ்சிக்கு நெய்தலின் தீராத அலைகளுக்கு அவர்களது தனிப்பாடல் இழுத்துச் சென்றது. கடல் குகையின் கதகதப்பான சுவர்களில் இருந்த பெருமுச்சில் விரிந்த யாழின் நரம்புகள் தீரவே தீராமல் அதிர்ந்து கொண்டே இருக்கவும் இதயத்தை அறுக்கும் சோகத்தை இசைக்கவும் மகரயாழ் கல்லில் மோதி விழுந்தது. கை தவறிவிட்ட மகரயாழ் கடலில் மூழ்கியபடியே அலைகளால் அதிர்கிறது. தானே வாசித்துக் கொண் டிருக்கும் யாழ் முழ்கிய இனக்குழுவின் தனிப்பாடலின் அடியில் மெளனித்து 


உள்போய் உள்போய் குமுறிக் குமுறிக் கதறுகிற யாழ் பாறையில் மோதி யாழ் அலைகள் அழி அழி எனக் கதறும் வானளாவிய கோபுர நிழல்களைக் கடல் அரிக்கிறது. கடல் மோதி மோதி கோபுரத்தைக் கொல்கிறது. கோபுரம் உருவெடுத்துப் பெருகி வளர்கிறது. கபாடபுர வீடுகளில் கருமையான கடல் பாறைகளில் பாதம் படர்ந்து கடல் நீலமாகிவிட்ட பித்தன் எப்போதுமே கடலின் மேல் நடமாடுகிறான். கபாடபுரம் ஒளியில் லேசாய் மினுக்கும் சில ஜன நடமாட்டம் தெரிகிறது. தெருக்களில் மீண்டும் நடமாடும் அரூபமானவர்கள் கபாடபுரத்தில் இன்னமும் எஞ்சிப் போயிருக்கிறார்கள் எங்கோ மறைந்துபோய் ஆள் அருவம் கேட்டு கடல்கோட்டையில் மறைகிறார்கள். என்றைக்குமான மனிதர்களுடன் பேசிப் பேசி வார்த்தை இழந்து நிற்கின்றன. கபாடபுரத்தெருக்கள்  சுருக்கங்களே முகமாகிப்போன மனித அருபங்கள் படபடத்து தெருக்கள் ஊடுருவி நகரும் கரும்பூமி கபாடபுரத்திலும் உண்டுதானே. அங்கே மொழி கருத்துப்பிறந்த கதைகள் கொடிகற்றிக் கொள்ளும் சில இழந்த கோயில்களில் சிலை செதுக்கும் சப்தம், கல்லின் வறண்ட ஊற்றை நோக்கி கோயில்களில் உளிகளில் அலைகள் கோடு கோடாய் சுழலும் நாக்கி உளிகள் நகரும்.

கடல்பறவை கூட்டம் கூட்டமாய் அமரும்`  கபாடபுர மதில்கள் மணல்வெளியில் கால்வைத்து மணல் கொறிக்கும். பாழ் வெளியே சிறகு முளைத்து மணல் சிறகில் பறந்து செல்லும் கபாடபுரக்கிளி அலகில் வளைந்த நூற்றாண்டுகளான தனிமை வாசத்திலிருந்த ஒரு மஞ்சள் தானியம் `_

இரவின் இருள்வழியே உருவற்று ஊளையிட்டோடியது எட்டிப்போகும் நரி தொன்மக்கதைகளுக்கு ஊசியாகும் முள்ளெலிகளோடு வருகிறான் நக்ஷ் த்திரவாஸி கிளைகளிலிருந்து சுருண்டு தொங்கும் நாக சர்ப்பங்கள் கடல்வேடன் கொண்டு செல்கிறான் நக்ஷ்த்திரவாஸியின் ஈமப்பேழையை அதில் கபாடபுரக்கிளி வந்து காகம் செத்துவிழக் கண்ட கனவுகூறி நக்ஷ் த்திரவாஸி நாடிகளுக்குள் பஞ்சபூதங்கள் சுழன்று அவன் பிரதிமைகளாய் அசையும் ஏழு கன்னிமாருடன் நிலப்பட்சி கடந்து வந்த புலத்தோற்றங்களில் கபாடபுரக்கிளி மறைய ஆந்தை சிவப்பான கண்கொண்டு பார்த்த பச்சைநிற இறகடர்ந்த நக்ஷ்த்திரவாஸி உடல்தோலில் சுற்றிப்படர்ந்தன படபடத்து உறங்கும் நாழிகையில் நக்ஷ்த்திரவாஸி இடதுபாத லிபி கீறி நகர கெடுதியறிகுறி கண்ட கல்லாந்தையொன்று தெற்காகப் பறந்து இருள் வீசி சிறகுகளை மடித்து கபாடபுரம் ஏகியது. நரியின் ஊளையில் புரளும் நாக சாரைகளின் காட்டுக் கலவி புறங்களில் விம்ம ஒலிபுரளும் உறுமிக்குள் சாரைகளின் சீற்றம் இருளின் கால்கள் திரியும் வேட்கையில் ஊளையிடும் அரூபவனம் விட்டுக் கேட்கும் உருவற்ற ஊளை, மரண நடனமிடும் முள்ளெலிகளுடன் நரிகளும் தொடர இடுகாட்டில் மூதாதையின் எலும்புகள் உறுமும் ஆயிரம் கபால வழிதிறக்க குறுக்கோடும் வெருகுப்பூனை கபால வெளிச்சத்தில் விழுந்து மிதந்து மறைந்து கண்ணாடியுள்ளிருந்து நக்ஷ்த்திரவாஸி வருகிறான். தொலைதூர நரியின் குரல் தேய உடனே இடதுபாதத்தில் ஊறும் லிபி, உறுமியில் பற்றும் தூக்கிய பாதச்சொல் தோலில் நகர்ந்து அதிர பிரபஞ்சகானமது நரியின் ஊளை எழுத்தாவிகளின் இருள் கூட்டம் முற்பிறப்பு எலும்புகளில் சுற்றிச் சுழல கண்களைப் பறிக்கும் எலும்புத்துகள்கள் மணலில் சுற்றி உலகத்து ஜீவராசிகளின் எலும்புக்கூடுகள் பாதி புதையுண்ட மொழி மணிபல்லவத்தில் மாந்திரீகப் பாத்திரத்துடன் ககனங்கள் துகளாகும் வெறியுடன் பிறந்தகோலத்திலே வாலைக் கனிவு குன்றாத கன்னியுருவம் அசைவற்று நிற்கும் உருவத்தின் முகத்தில் புன்னகை உயிர் குடிக்கும் கொடுர உணர்ச்சிக்கும் அப்பால் வேட்கை பெருக்கெடுக்கும் இதழ் நடுக்கம் சப்த உலகங்களும் மோதுவனவாகும்பேரிடி .உருவம் இருந்தாற்போல் ஏய்த்து உருமீறி திசைகலங்கிப் புலனொடுங்க குரலற்று உறுமும் பெயரற்ற மிருகம் வெற்றுவெளியில் ஒளியின் பிலம் கானத்தில் நாயின் ஊளை திருகத் திருக நக்ஷ்த்திரவாஸி பாறை ஊசிகள் இருகூறாகப் பிளக்க மாட்டுத்தோலில் உறுமும் பறைச்சேரி நாய்க்குரைப்பே பிரபஞ்சகானம்

வாலைக்கனிவு குன்றாக் கன்னியிடம் அடைபட்ட உன்னத கானம் பாம்பு மணி உமிழப் பணியிருள் ஒளிர்ந்து ஆம்பல் எனும் பண்ணில் ஐம்பது பதிவிரதைகளின் நாத ஒலி எட்டாத் தொலைவில் நரியின் ஊளை பிரபஞ்சகானம் அவளுள் அடைபட்டு வெளியில் படரும் நாளை வேண்டிக்கூறும் பிரலாபிப்பே என விழுந்த மெளனி காதில் உரசும் மாட்டுத்தோல் உறுமி ஒரே இடத்தில் படபடக்கப் பதிந்து பரவும் மிகக்கோரமான பறைச்சேரி நாய்க்குரைப்பே பிரபஞ்சகானம் வசிகரமென தோலின் மீது எழுதப்பட்ட மாந்திரீகமொழி நக்ஷ்த்திரவாஸியின் இடதுபாத லிபி, கட்புலனுக்கு அடைபடாத பறைச்சேரி எமன் தவில் முழங்க நான் முதுகெலும்பு வளர்ந்து நாதவித்தாய் ரூபடையும் தொன்மம் வர்ணபேதங்கள் சிற்பசெளந்தர்யங்கள் சக்திப்பிரளயம் காவல்தெய்வம் இருட்டு பின்தொடரும் ஞானக்குகை சப்த நுணுக்கங்களில் சஞ்சரிக்கும் கிரியாசத்தி மோப்பம் தொன்னூற்று ஆறுவகை ஞானம் மனிதனைக் கடைசிவரை தொடரும்  
அனுபூதியென நாயின் மூக்கால் எழுதிச்சென்றான் நவீனன். இந்த ஊரில் மேட்டுத்தெரு என வீதி வண்ணான் குடி கசாப்புக்கடை மனித சமூகத்தின் எச்சங்கள் தெருநாய்கள். காகாவென கத்தும் விகாரமான காகங்கள். கோடியில் நின்றுபார்த்தால் மறுகோடியில் பார்ப்பனர்கள் மயானம் எட்டியவெளி சாம்பல்

பிணம் தள்ளும் கோலுடன் சுடுகாட்டுச் சாம்பலில் புரண்டு நிணம் எரிய கோடி
 கோடி யோனி பேதங்களில் துவாரங்கள் சுருண்டு ஊளையிட அனந்த கோடி ஜீவராசிகள்   பட்சிஜாலங்கள் இரைச்சலும் ஊளையும் தொடர வருகிறான் நக்ஷ்த்திரவாஸி. மயான பூமி இடிபட அவாந்திரவெளியில் நெருப்பாறு பாய நசஷ்த்திர மண்டலங்கள் திறந்து அப்போது துக்க ஒலத்தில் வாடைக்காற்றுடன் அவர் கோடியில் நாயின் ஊளை முன்வரிகளின் மும்பலின் மேல் நக்ஷத்திரவாஸியின் இடதுபாத விபி முகில் கூட்டம் புகைந்து மேலோங்க தொலைவில் நட்சத்திரம் உதிர்ந்த மந்திரச்சிமிழ். சுற்றிவந்து தலைதூக்கி ஊளையிடும் உருவமற்ற  நரிகள் கபாடபுரக் கிளிகள் மறைந்துறையும் ஈமப்பேழையில் நக்ஷத்திரவாஸி

                                                                                                மாசி-பங்குனி
                                                                                                தாது வருஷம்