தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, September 15, 2017

சதுரங்க ஆட்டக்காரர் - பிரேம்சந்த்

google-ocr 

pdf : ?

சதுரங்க ஆட்டக்காரர் - பிரேம்சந்த்

வர்ஜித் அலி ஷா ஆண்டுகொண்டிருந்த காலம். தலைநகர் லக்னுே உல்லாஸக் கேளிக்கையில் மூழ்கிக் கிடந்தது. ஏழைஒமான், அறிவிலி-அறிவாளி எல்லாத் தரப்பாரும் சுகடோக மான சொகுசு வாழ்க்கையில் லயித்திருந்தார்கள், எல்லா வாழ்க்கை மட்டத்திலும் கேளிக்கை-கொம்மாளங்களுக்கே சமூக மதிப்பும் கவர்ச்சியும் மேலோங்கியிருந்தன. ஆட்சித்துறை, இலக்கிய வட்டாரம், சமூக நிறுவனம், கலைத்துறை, தொழில் துறை, நடையுடைபாவனை, எங்குமே உல்லாசப்போக்கு செல் வாக்குப் பெற்றிருந்தது. அரசாங்க அலுவலர்கள் காமக் கேளிக்கைகளில் இறங்கினுர்கள் இலக்கியப் படைப்பா எரிகள் காதல், பிரிவுத்துயர், ஏக்கம், இன்பம் என்றே சுழன்ருர்கள்; தொழிலாளர்கள் அழகுப் பண்டங்களை உருவாக்கிஞர்கள்; வியாபாரிகள் கண் மை, அத்தர், வாசனைத் தூள், தாதுவிருத்தி மருந்துகள், கேளிக்கைப் பண்டங்கள்-இவைகளையே மானுவாரி யாக வியாபாரம் செய்தார்கள்.

எல்லார் கண்களிலும் சிற்றின்பக் கிறக்கம் பளிச்சிடும். உலக நடப்பைப்பற்றி எவருக்குமே கவலை இல்லை. கெளதாரி, காடை களின் சண்டைப் போட்டிகள்; சொக்கட்டான், சதுரங்க விளை யாட்டு; பொழுதுபோக்கு-மனமகிழ் ஆட்டப்போட்டிகள்அரசர் முதல் ஆண்டிவரைக்கும் இதே கிறக்கம். பிச்சைக் காரர்கள், பக்கிரிமார்கள்கூட யாசகத்தில் கிடைக்கும் காசுகளை உணவுக்குச் செலவழிக்காமல், போதை-போட்டி இனங் களுக்கே முன்னுரிமை கொடுத்தார்கள். சூதாட்டங்களால் அறிவுத்திறன் வளர்கிறது; சிந்தணுசக்தி கூர்மையாகிறது, சிக்கல் க3ளத் தீர்க்கும் திறன் அதிகரிக்கிறது என்றெல்லாம் நியாயம் கற்பிக்கப்பட்டது. (இத்தகைய நியாயவாதிகள் இப்போதும் இருக்கவே செய்கிருர்கள்.)

ஆகையினுல்தான், ஜாகீர்தார்களான மிர்ஜா ஸஜ்ஜாத் அலி, மீர்ரோஷன் அலி இருவரும் தம் புத்தி சக்தியை மேதாவிலாஸ் மாக வளர்த்துக்கொள்ளவே பெரும் பொழுதைச் செலவழிக்க லாஞர்கள்-இதில் குறை காண என்ன இருக்கிறது? விவரம்

________________

சதுரங்க ஆட்டக்காரர் 239

தெரிந்த பெரியவர்கள் ஏன் குறைகாணவேண்டும்? இருவருக்கும் பரம்பரைச் சொத்தாக ஜாகீர் மானியம் இருந்தது, வாழ்க்கைச் செலவுக்குக் கவலை இல்லை. மனமகிழ் மன்றமாக வீட்டைக் கருதியதில் என்ன தவரும்?

காலையிலேயே இரு அன்பர்களும் சிற்றுண்டியைப் பலமாக முடித்துக்கொண்டு, ஜமுக்காளத்தை விரித்து அமர்வார்கள். சதுரங்கக் கட்டமும், காய்களும் வரவேற்கும் படு உளக்கத்துடன் ஆட்டத்தில் முனைவார்கள். பிறகு நேரம்போவதே தெரியாது. மதியம், பிற்பகல், மாலை, அந்திப்போது-மளமளவென நேரம் விரையும். வீட்டுக்குள்ளேயிருந்து தாக்கீதுகள் வந்துகொண் டிருக்கும். இங்கிருந்து வரும் பதில்: "இதோ வருகிறேன், போ! தட்டைப்போடு வருகிறேன். '

சமையல்காரன் அலுத்துப்போய், சாப்பாட்டை ஆட்டக் களத்திற்கே கொண்டுவந்து வைத்துவிடுவான். சாப்பாடு, ஆட்டம் இரண்டும் சேர்ந்தே நடக்கும்.

மிர்ஜா ஸஜ்ஜாத் அலி இல்லத்தில் பெரியவர் எவரும் இல்லை. கண்டிப்பு-கேள்விக்கு இடமில்லை. அவர் வீட்டு முன்கூடத்தில் ஆட்டம் நிகழும். வீட்டிலுள்ளவர்களுக்கு இது பிடிக்கத்தான் இல்லை. ஏச்சுப் பேச்சுகள் ஒலித்துக்கொண்டுதான் இருந்தன. அக்கம்பக்கத்தார், வீட்டு வேலைக்காரர்கள் கூடக் குறை கூறி ஞர்கள் "மகா மோசமான விளையாட்டு இது, வீட்டையே குட்டிச்சுவராக்கிவிடும். இந்த மாதிரி பித்து எதிரிக்குக்கூட வரவேண்டாம். நல்லது-பொல்லாதுகளுக்கு லாயக்கில்லாமல் ஆக்கிவிடுகிறது. மனிதனை உதவாக் கரையாக்கிவிடும் இந்தச் சூதாட்டம். மோசமான தொத்து வியாதி."

மிர்ஜாவின் மனைவிக்கு அடங்கா வெறுப்பு. வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் ஏசிவிடுவாள். இதற்காக மனைவியைச் சந்திப் பதையே மிர்ஜா வெகுவாகத் தவிர்த்து வந்தார். அவர் படுக்கச் செல்லும்போது பேகம் உறங்கிக் கொண்டிருப்பாள். காலையில் பேகம் எழும்போது, கணவர் எழுந்திருக்கமாட்டார். பேகம் இந்தக் கோபத்தையெல்லாம் பணியாட்களிடம் காட்டுவாள். சூதாட்டக் களத்திலிருந்து தேவைக் கோரிக்கைகள் வரும்போ தெல்லாம் பேகம் எரிந்துவிழுவாள்,

"என்ன? வெத்திலே பாக்கு வேணுமாமா? வந்து எடுத்துக் கிட்டுப் போகச் சொல்லு!"

________________

240 பிரேம்சந்த் சிறுகதைகள்

“வந்து சாப்பிட நேரமில்லையாமா? சாப்பாட்டைக் கொண்டு போய் அவங்க தலையிலே கொட்டு, வேணும்னுத் திங்கட்டும், இல்லாட்டி நாய்க்காவது போடட்டும்."

ஆனல் இதையெல்லாம் நேரே களத்திலேயே போய் தெரி விக்கப் பேகம் இன்னும் துணியவில்லை. தன் கணவரைவிட எதிர் ஆட்டக்காரர் மீர்ரோஷன் அலியிடம் ஆத்திரம் அதிகம். காரணம், பேகம் ஆத்திரப்படும்போதெல்லாம், மிர்ஜா குற்றத் திற்கு மீர்ரோஷனையே பொறுப்பாளியாக்கித் தப்பித்துக் கொள்வது வழக்கம். இதனுல் மீர் சாயபுக்கு அந்த அம்மணி "மீர் விடியா மூஞ்சி' என்று பெயர் சூட்டியிருந்தார்.

ஒருநாள் பே க மி ற் குத் தலைவலி. வேலைக்காரியிடம், "அய்யாவைக் கூட்டி வா! வைத்தியர் வீட்டுக்குப்போய் மருந்து வாங்கி வரணும். ஒடு, சீக்கிரம் வா!' என்று சொல்லி அனுப்பிஞள்

பணிப் பெண் வந்து சொன்னபோது, "போ, இதோ வரு கிறேன்." என்று வழக்கம்போல் மிர்ஜா சொல்லி அனுப்பினுர்,

பேகம் அம்மாளுக்கு ஆத்திரம், "எனக்குத் தலைவலி மண்டை யைப் பிளக்கிறது. இவர் வெளியே சதுரங்கம் ஆடிக்கொண் டிருக்கிறதாவது முகம் சிவந்தது. பணிப் பெண்ணைத் திரும் பவும் அனுப்பி, ‘போய்ச் சொல்லு! இப்பவே எழுந்து வாருங் களா, இல்லை, நானே வைத்தியர் வீட்டுக்குப் போகட்டுமா? என்று கேட்டுவரச் சொன்னுள்.

மிர்ஜா மிக சுவாரசியமாக விளையாடிக்கொண்டிருந்தார். இரண்டே ஆட்டத்தில் எதிராளி தோற்கப்போகிருர், இந்த வெற்றித் தருணத்தில் எழுந்திருக்கலாகுமா? எரிந்து விழுந்தார், "அப்படி என்ன உயிரா போய்விடும்? கொஞ்சம் பொறுத்திருக்க கூடாதா?”

மீர்சாகப் சமாதானப்படுத்தினர், "போய்த்தான் பார்த்து விட்டு வாருமே, பெண்களுக்கு மென்மையான சுபாவம்."

"சரிதாங்காணும்! ஏன் போகச் சொல்லமாட்டிரு? இரண்டே ஆட்டத்திலே ஐயா தோற்கப்போகிழுரில்லையா? அதுதான் கரி சனப்படுகிருரு!"

"ஐயா! இந்த இறுமாப்பு வேளும். நானும் நல்லா யோசிச்சு வைச்சிருக்கேன். என் ஆட்டத்திலே புதுத்திருப்பம் வரும். நீர் சரிஞ்சிடுவீரு. எதுக்கும் போய் பார்த்திட்டுவாரும். ஏன் வீனுக்கு அவங்க மனசை வருத்தப்படுத்துறியம்??

அப்படியா? உம்மைத் தோற்கடிச்சிட்டே போகிறேன்."

________________

சதுரங்க ஆட்டக்காரர் 罗金及

"நான் காயைத் தொடமாட்டேன். நீர் உள்ளே போப் விசாரிச்சிட்டு வாரும்."

அட, நீர் ஒண்ணு! வைத்தியர் வீட்டுக்குப் போயாகணுங் காணும். தலைவலியும் இல்லை; என்னைத் தொந்தரவு பண்ணியா கனும், அதுக்கு ஒரு சாக்குப்போக்கு. "

* எப்படி இருந்தாலும் அவங்களே சமாதானப்படுத்தணு மில்லே "

"சரி, இந்த ஒரு ஆட்டம் ஆகட்டும்.

* தொடமாட்டேன். நீர் உள்ளே போய் அவங்களைப் பார்த்து விசாரித்துவிட்டு வருகிற வரைக்கும் நான் காயிலே கை வைக்க மாட்டேன். '

மிர்ஜா வேண்டாவெறுப்பாக, உள்ளே எழுந்து போனுர், பேகம் அம்மா கோபாவேசத்தில் இருந்தார். முனகியவாறே, * உங்களுக்கு இந்த எளவெடுத்த ஆட்டம் இத்தினி ஆசையாயி டிச்சு. இங்கே உசிரே டோனுலும் எழுந்திருக்கமாட்டிக. சேச்சே! உங்கமாதிரி ஆண்பிள்ளை எவரும் இருக்கமாட்டாங்க, ” என்று சாடினுள்.

*நான் என்ன செய்ய? மீர் சாகப் விடமாட்டேங்கருரு. ரொம்பச் சொல்லி, சிரமப்பட்டு எழுந்து வந்தேங்கறேன்.”

"அவரு ஒரு 2.கவாக்கரை விடியா மூஞ்சி, தன்னைப்போலவே எல்லாரையும் நிஃனச்சிருக்கிருரு, அவருக்குப் பெண்டாட்டி பிள்ளைகள் இருக்கிழுங்களா இல்லை, எல்லாரையும் விழுங்கிட் டாராங்கிறேன்?"

மிர்ஜா தாம் நல்லவர்போல், "ரொம்ப மோசம், சூதாடின்ன வெறிபிடிச்ச சூதாடிங்கறேன். வீடேறி வந்திட்டப்புறம் முடி யாது, போன்னு எப்படிச் சொல்றது?’ என்ருர்,

'திட்டித் திருப்பி அனுப்புறது!"

"நீ ஒண்ணு. சம அந்தஸ்திலே இருக்கிறவரு. மதிச்சுத்தானே ஆகணும்.'

Ffi, 5T Gar Gi fru ஏசிவிட்டு வர்றேன். கோவிச்சுக்கிட்டா லும் பரவாயில்லை. அவுக தயவிலேயா நாம்ட வாழருேம்? . . . இத்தாடி ஹிரியா! போய் சதுரங்கப் பலகை, காய்ங்க எல்லாத் தையும் எடுத்துக்கிட்டு வந்திடு. மீர் சாகப் கிட்டேபோப், எசமான் இனிமேலே விளையாட வரமாட்டாங்களாம், நீங்க வீட்டுக்குப் போகலாமாம்னு! சொல்லிட்டு வாடீ!

16۔۔۔۔۔۔۔۔.{g.8

________________

密4易 பிரேம்சந் த் சிறுகதைகள்

மிர்ஜா துணுக்குற்ருர், "இந்தா, இந்தா! இப்படியெல்லாம் போய்ச் சொல்லிவைக்காதே. வம்பாகிப்போகும். ஏய் ஹிரியா! ாங்கே கிளம்பிவிட்டே. நில்லு! போகவேனும்."

"ஏன் தடுக்கிறீங்க? என் இரத்தத்தைக் குடிச்சமாதிரி இவளைத் தடுத்தீங்கள்ஞ. சரி, இவளைத்தானே தடுப்பீங்க. நானே போகிறேன்; என்னைத் தடுங்களேன் பார்க்கலாம்!"

பேகம் ஆத்திரத்துடன் வெளிக்கூடத்திற்கு வந்தாள். மிர்ஜா தவித்தார். பேகமை நைச்சியம் செய்தார்:

"ஆண்டவன் பேராலே வேண்டிக்கிறேன். போகாதே! ஹஜரத் ஹாலேன் மேலே ஆணை என் மானத்தை வாங்காதே, நில்லு!" பேகம் பொருட்படுத்தவில்லை. வெளிக்கூடத்தின் கதவு வரைக்கும் சென்ருள், சட்டென்று பிற மனிதர் எதிரே போகக் கூச்சமாக இருந்தது. கால்கள் எழும்பவில்லை. எட்டிப் பார்த் தாள். நல்ல காலம், மீர் சாகப் இல்லை. அவர் முன்பே ஓரிரு காய்களைத் தமக்குச் சாதகமாக இடம் மாற்றிவைத்துவிட்டு, நல்ல பிள்ளைபோல் வெளியேபோய் உலாத்திக்கொண்டிருந்தார். கேட்டால் காரணம் சொல்லலாமே.

பேகம் உள்ளே வந்தாள், சதுரங்கப் பலகையை ஒதுக்கித் தள்ளிஞள். காய்களைத் தூக்கி வெளியே எறிந்தாள். வெளிக் கூடத்தின் கதவைச் சாத்தி உள்புறம் தாளிட்டாள். தரை அதிர நடந்து உள்ளே போஞள்.

மீர்ரோஷன் அலி வெளியே கதவுப்பக்கம் நின்றுகொண்டிருந் தார், கை வளைகள் ஒலிப்பதையும், காலடியோசை அதிர் வதையும் கேட்டார். சதுரங்கக் காய்கள் வெளியே வந்து விழுவதைக் கண்டார். புரிந்துகொண்டார். ஒசைப்படாமல் வீடு திரும்பிவிட்டார்.

மிர்ஜா பேகமிடம் சிணுங்கிஞர், "மகா அநியாயம் இது." "இனிமே அந்த மீர் துக்கிரி இங்கே வரட்டும். மூஞ்சிக்கு நேரேயே ஏசி விரட்டிவிடுறேன். இவ்வளவு மும்முரம் தொழு கையிலே காட்டினல், பெரிய மகாஞயிடலாம். நீங்க பாட்டுக் குச் சதுரங்கம் ஆடிக்கொண்டிருப்பீங்க, நான் அடுப்படியிலே கிடந்து வேகனும்? வைத்தியர் வீட்டுக்குப் போகிறீங்களா, இன்னும் சால்சாப்பு இருக்கா? −

மிர்ஜா வீட்டைவிட்டுக் கிளம்பினர். நேரே மீர்ரோஷன் வீட்டிற்குச் சென்ருர், நடந்ததைக் கூறி வருத்தம் தெரிவித் தார். மீர் சொன்னர், "காய்கள் வெளியே வந்து விழுந்ததுமே

________________

சதுரங்க ஆட்டக்காரர் 24总

புரிந்துகொண்டேன். ரொம்பக் கோடக்காரிங்கறேன். நீர் இப்படித் தலையிலே தூக்கிவைத்திருக்கக்கூடாது. நீர் வெளி யிலே என்ன செய்தால் அவங்களுக்கென்ன? வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்வது அவங்க பொறுப்பு. மீதி சமாசாரங்களைப் பற்றி அவங்களுக்கென்ன?”

"அது போகட்டும். இனிமேல் எந்த இடத்திலே உட்கார லாம்?--மிர்ஜா.

"நம் வீட்டிலேயே போடலாமே. " "ஆஞல் வீட்டுக்காரிக்கு என்ன சமாதானம் சொல்லுவேன்? வீட்டிலேயே இருந்துவந்ததாலே அவ்வளவாகக் கோவிக்கிற தில்லை. இங்கே உட்கார்ந்து ஆட்டம்போடுகிறேனென்று தெரிந் தால் சும்மா விடமாட்டாங்க. '

"கத்திட்டுப் போகட்டுமே இரண்டு மூணு நாளானல் தானே சரியாயிடும். ஆணுல் ஒண்ணு, இன்னேயிலேயிருந்து நீர்கொஞ்சம் விறைப்பாகவே இருக்கணுங்காணும்"--மீர்ரோஷன்,

2

மீரோஷன் அலியின் டேகம் (மனைவி) ஏதோ காரணத்துக் காகக் கணவர் வீட்டைவிட்டு ஒதுங்கியிருப்பதே நல்லதென்று நினைத்திருந்தாள். இதனுலேயே அவருடைய சூதாட்டப்பித்தை குறைகூறியதே இல்லை. சில சமயம் நேரம் அதிகமாகிவிட்டால் ஆளை அனுப்பி நினைவுபடுத்துவாள். இதஞல் மீர்சாகப் நிக்னத் துக்கொண்டார், தம் பேகம் மிக அடக்கமானவள், பொறுமை சாலி என்று. ஆளுல் இந்தப் புது ஏற்பாடு பேகமிற்குச் சங்கட மளித்தது. பகல் முழுவதும் வீட்டு முன் கூடத்திலேயே முகா மிட்டிருப்பது, அவள் சுதந்திரத்திற்கு இடைஞ்சலாகியது. அடிக்கடி வாசல் பக்கம் எட்டி எட்டிப் பார்த்து ஏங்கித் தவித் தாள்.

வேலைக்காரர்களும் முகம் சுளித்தார்கள். இதுவரைக்கும் வேலை ஏதும் இல்லாமல் விசிராந்தியாக இருந்தார்கள், வீட்டிற்கு எவர் வருகிருர், போகிருர் என்கிற கவனிப்பே இல்லாமல் முடங்கிக்கிடந்தார்கள். இப்போது பகல் பூராவும் கைகட்டிச் சேவகம் செய்தாகவேண்டியிருக்கிறது. அடிக்கடி கூப்பாடு, அகிலச்சல், வெத்திலேடாக்கு, பட்சணம்-பலகாரம், ஹ"க்கா

________________

24 பிரேம்சந்த் சிறுகதைகள்

தயாரிப்பு, என்று-ஓயாத ஒழியாத தொந்தரவு. வேலைக் காரர்கள் பேகமிடம் முறையிட்டார்கள், "அம்மணி இந்த எளவெடுத்த ஆட்டம் எங்க உயிரைவாங்குதம்மா! காலெல்லாம் கொப்புளிச்சுப் போச்சுங்க. இதென்னங்க ஆட்டம்? காலையிலே குந்திஞங்கன்ஞ, மாலை மயங்கியும் எளிந்திருக்க மனசு வரமாட்

டேங்குதே. ஒரு மணி, இரண்டு மணி பொழுதுபோக்காய் ஆடு

வாங்க, பார்த்திருக்கோம், போவட்டும், எங்களுக்க்ென்னம்மா வந்தது? வேலை செய்ய வந்தவனுக, சொன்ன வேலையைச் செய்யருேம். ஆனல், இந்த ஆட்டம் மகா மோசமானது.

இதிலே சிக்கியவங்க முன்னுக்கே வரமுடியாது. வீடு குட்டிச்

சுவராயிடும். கஷ்டத்திற்கு மேலே கஷ்டம் வரும். இந்த வீட்டோடு நிற்காது, தெருவுக்கும் பரவும், பேட்டைக்குப் பரவும். பிறகு ஊரே இதுக்குப் பலியாகும். அக்கம் பக்கமெல் லாம் இதே பேச்சுதாங்க அம்மா! எசமான் வீட்டு உப்பைத் திங்கருேம்; எசமானுக்கு ஏற்படுகிற தலைக்குனிவை எங்களாலே பொறுத்துக்க முடியல்லீங்க. கேட்கவே சங்கடமாயிருக்குது. என்ன செய்வோம் நாங்க?"

இவ்வளவையும் கேட்டுவிட்டு பேகம் சொன்னுள், "எனக்கும் இது கட்டோடு பிடிக்கத்தான் இல்லை. சொன்னல் கேட்டாத் தானே?"

அப்பேட்டையில் சில பெரியவர்கள் இந்த ஓயாத சூதாட்டக் கச்சேரியை விமரிசித்து எச்சரித்தார்கள். "இனிக் கேடுகாலம் தான். நம்மையெல்லாம் பாதுகாக்க வேண்டிய சீமான்களே இந்த நிலைக்கு வந்துவிட்டபிறகு, அல்லாதான் நம்மையெல்லாம் காப்பாற்றவேண்டும். பாதுஷா ஆட்சியே இதஞலே அழிந்து போகும். தீய குறிகளெல்லாம் தென்படுகின்றன."

நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடியது. பகல் கொள்ளைகள் மலிந்தன. கேள்வி முறை இல்லை. கிராமப்புறத்துச் செல்வ மெல்லாம் தலைநகர் லக்னேவிற்கு வரவழைக்கப்பட்டன. அங்கு கிேளிக்கை, கொம்மாளம், உல்லாச போகங்களில் விரயமாயின. கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து கடன் சுமையை அதிகரித்துக் கொண்டேபோஞர் பாதுஷா, நாட்டில் நல்லாட்சி இல்லாத தால் வரிவசூல் குறைந்தது. ஆங்கிலேய ரெஜிடெண்ட் அடிக்கடி தாக்துே, எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருந்தது. இங்குதான் அடிமுதல் முடிவரையிலும் உல்லாசக் கேளிக்கைகளில் கிறங்கிக் கிடந்தார்களே. வரப்போகும் ஆபத்தை எவரும் உணரவில்லை.

________________

சதுரங்க ஆட்டக்காரர் 24 5

ஜாகீர்தார் மீர் ரோஷன் அலி அவர்களின் மாளிகையின் வரவேற்புக் கூடத்தில் சதுரங்கப்போர் துவங்கிப் பல நாட்களாகி விட்டன. தினமும் புதுப்புதுத் திட்டத்துடன் படையெடுப்பு, மோதல், வெற்றி-தோல்வி, வீராவேசம். இறுதியில் இரு தளபதிகளும் பகைமை யொழித்து நண்பர்களாகி விடுவார்கள். சில நாட்கள் மனத்தாபம் எழும்; சதுரங்கத்தைக் கலைத்துவிட்டு கோபதாபத்துடன் மிர்ஜா தம் மாளிகைக்குப் புறப்பட்டு விடுவார்; டமீர்ரோஷன் தம் அந்தப்புரத்திற்குச் செல்வார். இரவு தூங்கியெழுந்ததும் கோபதாபமெல்லாம் மறைந்து நேச பாவத்துடன் சதுரங்கமாடக் கூடுவார்கள்.

ஒருநாள் மும்முரமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு குதிரை வீரர் வந்துசேர்த்தார். பாதுஷாவின் தூதுவர். மீர் ரோஷனே அழைத்தார். மீர்ரோஷனுக்கு வெலவெலத்தது. ஏதோ புது விடத்து வந்திருக்கிறது, சிக்கலாகாது. வேலைக்காரர் களிடம், எசமான் வீட்டிலே இல்லைன்னு சொல்லிடுங்க!” GTGü7Gyrf.

குதிரைவீரர் வேலைக்காரர்களை மிரட்டிஞர் வி ட் டி லே இல்லாமல் எங்கே போஞர்?"

* தெரியாதுங்களே! அவங்களிடத்திலே தகவலைச் சொல்விடு ருேம். என்ன விஷயம்?"

"உங்களிடத்திலே சொல்லி என்ன லாபம்? பாதுஷா தாக்கீது அனுப்பியிருக்கிருங்க. படைக்கு ஆட்களை அனுப்பவேண்டி யிருக்கும். அவரும் வரவேண்டியிருக்கும். ஜாசீர்தார் என்ருல் கம்மாவா? எத்திலே பிழைக்க முடியாதுன்னு சொல்லிவிடு!”

* சரிங்க! வந்ததும் சொல்லிவிடுகிருேம். ' "சொன்னுப் போதாது. நான் நாளைக்கு வந்து கையோடு கூட்டிப்போகனும், தயாராய் இருக்கச் சொல்! பாதுஷா உத்தரவு."

குதிரை வீரர் போய்ச் சேர்ந்தார். தகவலறித்ததும் மீர்ரோஷ னுக்குக் கதிகலங்கியது. மிர்ஜாவிடம் யோசனை கேட்டார்: "என்னைய்யா, செய்யறது?’

"ரொம்ப ஆபத்துதான். என்னையும் தேடுவாங்க. ' "இழவெடுத்தவன் நாளைக்கு வருவதாகச் சொல்லிப்போயிருக் கிருன்ே.

"பேராபத்து சண்டைக்குப் போகணும். அநாதையாகச் சாகனும். மிர்ஜா இடிந்துபோஞர்."

________________

246 பிரேம்சந்த் சிறுகதைகள்

மீர்ரோஷன், "இதுக்கு ஒரே வழி வீட்டிலேயே இருக்கக் கூடாது. கோமதி நதிக்கரையைத் தாண்டி அப்பாலே போயிட ணும். கண்காணுத இடம். குதிரை சவாரி வந்து ஏமாந்து போகும்" என்ருர்,

"வாஹ், வாஹ்! நல்ல யோசனை. வேறே வழியே இல்லை. காதும் காதும் வைத்தமாதிரிக் கிளம்பிப் போயிடனும் மிர்ஜா பாராட்டிஞர்.

மறுநாள் குதிரை வீரரை எதிர்கொண்டழைத்துச் சென்ற பேகம், "நீங்க நல்ல தந்திரம் செய்தீங்க! நல்லாப் பயமுறுத்தி விரட்டிவிட்டீங்க!" என்று சிலாகித்தாள் அந்தப்புரத்தில் நுழைந்தவாறு.

குதிரைவீரர், "இந்த உதவாக்கரைகளை இப்படித்தான் விரட்டணும். சூதாட்டம் இவனுக புத்தியையே அரிச்சிடுத்தே! இனிமே இந்த வீட்டுப் பக்கம் பகலிலே வரமாட்டானுக" என்று கூறி நிம்மதியாக மகிழ்ந்தார்.

3

Dறுநாள் இரு நண்பர்களும் விடிகாலையிலேயே கிளம்பிவிட்டார் கள். சாப்பாடு, சதுரங்க சாதனங்கள், படுக்கை, சமேதராக, கோமதி நதியைக் கடந்து, காட்டுப்பகுதியில் பாழடைந்திருந்த ம குதிக் குள் புகுந்துகொண்டார்கள். நவாப் ஆஸ்ஃப் உத்தெளலா கட்டிய பழைய மசூதி, வழியில் புகையிலை, சிலம் (புகைத்தூள்), தீக்குச்சி எல்லாம் வாங்கிக்கொண்டார்கள். மசூதிக்குள் விரிப்பைப்போட்டு, ஹ"க்காவைப் பற்றவைத்துக் கொண்டு, சதுரங்கமாடத் தொடங்கிவிட்டார்கள். பிறகு உலக நிலவரமே நினைவிலிருந்து மறைந்தது. ஆட்டம் பற்றிய சில சொற்களைத் தவிர வேறு பேச்சு இல்லை. தவயோகிகட இவ்வளவு லயிப்புடன் யோக சாதனையில் ஈடுபட்டிருக்க முடியாது. பகல் போது ஏறியபின், பசி எடுத்ததும், இருவரும் பலகாரக் கடைக்குச் சென்று, சாப்பிட்டுவிட்டு, ஹ"க்கா-சிலம் குடித்து கொஞ்சம் மணக்களிப்பை ஏற்படுத்திக்கொண்டு, மறுபடியும் சதுரங்கப் போர்க்களத்தில் பிரவேசித்தார்கள். சில நாட்கள் சாப்பாட்டு நினைவுகூட ஏற்படுவதில்லை.

________________

சதுரங்க ஆட்டக்காரர் 247

நாட்டில் அரசியல் நிலவரம் மிக மோசமாகிக்கொண்டிருந்தது. கும்பனிப் படைகள் லக்ஞேவை நோக்கி முன்னேறின. நாடு நகரமெல்லாம் அல்லோலப்பட்டன. நகர மக்கள் கிராமத்தை நோக்கி விரைந்தார்கள். இந்நிலையிலும் நம் சதுரங்க சூரர்கள் களத்தைவிட்டு ஓடவில்லை. வெளிநடப்பைக் குறித்துக் கவலையே இல்லை. வீட்டிலிருந்து காலையில் சந்து பொந்துகள் வழியாக எல்லையைக் கடப்பார்கள். சாலைவழியாக வந்தால் ஆபத்து, பாதுஷாவின் அதிகாரி எவனுவது கண்டுவிட்டால்? அப்படியே இழுத்துக்கொண்டு போய்விடுவார்களே. ஆயிரக்கணக்கான ரூபாய்கள் வருடாந்தர வருமானமுள்ள ஜாகீர் வசதியை எத்துப் பிழைப்பாகவே அநுபவித்துவர விரும்பினர்கள்.

ஒருநாள் இரு நண்பர்களும், அதே மசூதிக்குள் வழக்கம்போல் ஆடிக்கொண்டிருந்தார்கள், மிர்ஜாவிற்குத் தோல்வி முகம். மீர்ரோஷன் வெட்டுமேல் வெட்டாக வெற்றி கண்டுகொண் டிருந்தார். இந்நேரத்தில் வெள்ளைக்காரக் கும்பனிப் படைகள் வருவது தெரிந்தது. லக்னேவைக் கைப்பற்ற வருகிறது. மீர் சொன்னர், "இங்கிலீஷ்காரன் படை வருகிறது. அல்லாவே ரட்சி!"

மிர்ஜா, "வரட்டும். நீர் ஆட்டத்தைக் கவனியும். இதோ செக் உம்ம பாதுஷாவுக்கு ஆபத்து.'

அட நீர் ஒண்ணு? வெள்ளைக்காரப் படைகளைக் கொஞ்சம் பார்க்கலாமே. மறைவிலே நின்னு பார்க்கலாம். மீர் ஒதுங்கப் பார்த்தார்.

"பார்த்துக்கலாம், என்ன அவசரம். இதோ இன்னுெரு செக்!"

"பீரங்கியெல்லாம் இருக்கும். ஐயாயிரம் சோல்ஜர்கள் இருப்பார்கள். என்ன வாட்ட சாட்டங்கறேன்! வெள்ளைச் சிவப்பு நிறம். செங்குரங்குகள் அணிவகுத்து வருகிற மாதிரி இருக்குதையா! பார்த்தாலேயே பயமெடுக்குதய்யா!"

மிர்ஜா சினந்தார், "ஜனுப்! சால்சாப்பு வேண்டாம். இதெல் லாம் வேறே எங்கியாவது வைத்துக்கொள்ளும். இதோ செக்" "நீர் நல்ல மனுசனையா ஊருக்கே ஆபத்து வந்திருக்கு. உமக்கு செக்கும் வெட்டும் பெரிசாப்போச்சா ஊரை முற்றுகை பிட்டாங்கன்ஞ வீட்டுக்கு எப்படிப் போய்ச்சேருவோம்? இதை யோசித்தீரா? மீர் குறைகூறிஞர்.

________________

248 பிரேம்சந்த் சிறுகதைகள்

"வீட்டுக்குப்போகிற நேரம் வருகிறபோது பார்த்துக்கொள்ள லாம். ஆட்டத்தைப் பாரும்! இதோ ஒரு வெட்டு அடுத்த ஆட்டம் ஐயா ஜயிக்கிருரு'-மிர்ஜா.

கும்பனிப்படை கடந்துசென்றது. காலை பத்துமணி இருக்கும். இருவரும் மறுபடியும் ஆட அமர்ந்தார்கள். புது ஆட்டம்.

மிர்ஜா கேட்டார், "இன்னக்குச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது?"

"இன்னக்கு உபவாசங்காணும். உமக்குப்பசி எடுத்திடிச்சோ ?” -மீர்,

"இல்லைய்யா! ஊர்க்கதி என்ன ஆ கி யிருக்கு மே 1ா, தெரியல்லையே."

மீர் அலட்சியமாக, "ஊரிலே ஒண்ணும் ஆகியிருக்காது. ஜனங்க சாப்பிட்டுவிட்டுச் சுகமாகப் படுத்துக்கிட்டிருப்பாங்க. நம்ப நவாப் ஸாஹாப்கூட மஜாவாகத்தான் இருப்பாரு" என்ருர், இந்த முறை ஆட்டம் விறுவிறுப்படைந்தபோது பிற்பகல் மூன்று மணி. மிர்ஜா பக்கம் தோல்வி முகம். நாலு மணி யடித்தது. கும்பனிப் பட்டாளம் திரும்பிவரும் சந்தடி கேட்டது. நவாப் வாஜித் அலி சிறை பிடிக்கப்பட்டார். கும்பனிப் படை அவரை எங்கோ கொண்டுபோகிறது. திரும்புவது சந்தேகம். ஊரிலே எந்த உபத்திரவமுமில்லை. எதிர்ப்பில்லை; ரத்தக் களரியுமில்லை. இதுகாறும், ஒரு சுதந்தர மன்னரின் தோல்வி இவ்வளவு அமைதியாக, எதிர்ப்பே இல்லாமல் ஏற்பட்டிருக்க முடியாது. இது தேவர்கள் போற்றும் கொல்லாமைப் பண்பு காரணமாக இல்லை. கோழைகளும் பயங்கொள்ளிகளும்கூடக் கண்ணிர் வடிக்கத்தக்க படுமோசமான கோழைத்தனம், பரந்த, பெருமைமிக்க அவத் ராஜ்யத்தின் நவாபு பூஞ்சைக் குற்றவாளி போல் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். அவருடைய தலைநகரம் லக்னே உல்லாசக் கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கிறது! இது அரசியல் தரக்கேடான, படுமோசமான சமூக வீட்சியின் இறுதி எல்லை.

மிர்ஜா சொன்னுர்: "நம் நவாபு அவர்களைக் கும்பெனிக் கொடியவர்கள் சிறைப்பிடித்து இழுத்துப்போகிருர்களப்யா!"

"போகட்டும். இதோ பாரும், ஒரு வெட்டு!--மீர் ரோஷன். "கொஞ்சம் பொறுமைப்யா! இப்போது மனசு சரியில்லையா! இந்தச் சமயத்திலே நம் நவாபு ரத்தக் கண்ணிர்விட்டு அழுது கொண்டிருப்பார்"--மிர்ஜா.

________________

சதுரங்க ஆட்டக்காரர் 2A9

"அழுதுதானே ஆகணும், இங்கே இருந்த சுகபோகமெல்லாம் அங்கே கிடைக்குமா? இதோ பாரும், செக்!"

"எவருக்கும் வாழ்வு ஒரே மாதிரி இருக்காதய்யா! எவ்வளவு

பரிதாபமான நிலைமை! த்சொ! த்சொ! . . . மிர்ஜா நொந்து விசனித்தார்.

"அது சரி. என்ன செய்யறது? . . . இதோ செக்! இனிமே

நீர் தப்பமுடியாதுங்காணும்!"-மீர்ரோஷன்.

"ஆண்டவன் ஆணை, நீர் மகா கல்நெஞ்சுக்காரரைய்யா! இவ்வளவு பயங்கரமான கொடுமையைப் பார்த்தபிறகும் உமக்கு வருத்தம் ஏற்படவில்லையே! ஐயோ, பாவம் நம் நவாபு வாஜித் அலிஷாஹ்!!--மீர்ஜா.

"ஒய்! முதலிலே உம் பாதுஷாவைக் காப்பாற்றும் . பிறகு நவாபுக்குக் கண்ணிர் உகுக்கலாம். இதோ பாரும், இதோ வெட்டு ஆட்டம் முடிந்தது. கைகொடும்! மீர்ரோஷன் எக்காள மிட்டார்.

அவத் பாதுஷாவை (நவாப் வாஜித் அலிஷாஹ்) சிறைப் படுத்திக்கொண்டு, ஆங்கிலேயர் படை அந்தப் பக்கமாகத்தான் திரும்பிச் சென்றது. படையணிகள் அப்பால் கடந்ததும், மிர்ஜா மறுபடியும் ஆட்டம் தொடங்கினர். தோல்வியின் வலி இலேசானதல்ல. மீர்ரோஷன் அழைத்தார், "வாருமைய்யா! நம் நவாப் அவர்களுக்காகத் துக்கம் தெரிவித்து ஒரு 'மர்ஸியா' ஒதுவோம்.'

மிர்ஜாவுக்கிருந்த ராஜபக்தி இந்தத் தோல்வித் துயரத்தில் கரைந்துவிட்டது. இப்போது அவர் தோல்விக்குப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்தார்.

4

Dலை மயங்கியது. பாழ்மண்டபத்தில் வெளவால்கள் அலறத் தொடங்கின. பறவைகள் வந்து தம் கூடுகளில் ஒடுங்கின. அப்போதும், இரு வீரர்களும் களத்தில் பொருதிக்கொண்டிருந் தார்கள்-இரு வெஞ்சின வீரர்கள் உயிர்ப் பணயத்துடன் உக்கிரமாகப் போரிடுவதைப்போல. மிர் ஜா தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோற்றுவிட்டார். இந்த நாலாவது ஆட்டமும் வெற்றிமுகமில்லை. ஒவ்வொரு முறையும் முஸ்தீபுடன்

________________

250 பிரேம்சந்த் சிறுகதைகள்

வெல்லவேண்டுமென்று முனைகிருர், இருந்து ம் நடுநடுவே தடுமாறித் தவறிவிடுகிருர், ஒவ்வொரு முறையும் தோல்வி மனப்பான்மை பழிதீர்க்கும் வெறி ையக் கிளர்த்தியது. மீர்ரோஷன் வெற்றி மிதப்பில் "கஜல்" பாடத்தொடங்கினர்; சிட்டிகை கொட்டித் தாளம் போட்டார். எரிச்சலூட்டும் களிப்புப் பிரதிபலிப்பு. ஏதோ புதையல் கிடைத்தமாதிரி பேருவகை. மீர்ஜாவுக்கு உள்ளூர எரிச்சல் குமைந்தது. வெளிக்கு அவரைப் பாராட்டிஞர். போகப்போக தோல்விக்கான வாய்ப்பு தான் அதிகரித்தது. கைதடுமாறியது, நகர்த்தின காயைத் தவிர்த்து வேறு காயை நகர்த்தலாஞர்.

மீர் கடிந்தார், "நகர்த்துவதை யோசித்து ஒரே தடவையாக நகர்த்துமைய்யா! மறுபடியும் கைவைக்கலாகாது. சரியாகத் தோணுதவரையில் காய்மேலே கை வைக்கவேண்டாம். ஒரு காயை நகர்த்த அரைமணியாகிறது. அப்படியும் இந்தத் தடுமாற்றமா? இனிமேலே ஐந்து நிமிடத்திற்குமேலே ஆளுல் அந்த ஆட்டம் போச்சு. இப்போது ஆட்டத்தை மாத்துறிர். பேசாமல் காயை முந்தின இடத்திலேயே வையும்."

இந்நிலையில் மீர்ரோஷனின் மந்திரி வெட்டுக்கு இருந்தது. மீர் அதைத் தவிர்க்கக் காய் நகர்த்தலாஞர். மிர்ஜா ஆட்சே பித்தபோது, "நான் இன்னும் காயே நகர்த்தவில்லையே? என்ருர் மீர்.

"நீர் நகர்த்தியாகிவிட்டது. காயை இந்த இடத்திலேயே வையும். நான் வெட்டப்போகிறேன். மீர்ஜா எதிர்த்தார்.

"இப்போது எதுக்காக வைப்பேன். நான் காயை இன்னும் வைக்கவே இல்லையே."

"நீர், சாகிறவரைக்கும் காயை வைக்கமாட்டீர்; அதுக்காக ஆட்டம் நின்னுடுமா? மந்திரி வெட்டுப்படுகிறதைப் பார்த்ததும் பேத்துமாத்தா செய்கிறீர்?"-மீர்ஜா.

மீர் சினந்தார், பேத்துமாத்து நீர் செய்கிறீர். வெற்றி தோல்வி தலையெழுத்துப்படி நடக் கி றது. பேத்துமாத்து செய்யறதஞலே பிரயோஜனமில்லை."

"இந்த ஆட்டத்திலே உமக்குத்தான் தோல்வி." "எப்படியாம்?" "காயை முதலிலே இருந்த இடத்திலேயே வையும் மீர்ஜா கத்தினுர்,

"ஏன் வைப்பேன்? வைக்கமாட்டேன்."

________________

சதுரங்க ஆட்டக்காரர் 25

"வைக்கமாட்டீரா? ஏனும்? வைத்தா கணும். ' வ1 க்குவதப் முற்றியது. இருவரும் தத்தம் நிலையில் பிடிவாத ம. க இருந்தார்கள். மீர்ஜா ஆத்திரத்துடன், ! உங்க பரம்பரை யிலேயே எவராவது சதுரங்கம் ஆடியிருந்தால்தானே சட்ட திட்டம் தெரியப்போகிறது. புல் செதுக்கிக்கொண்டிருந்தவங்க தானே. இவரு வந்துவிட்டாரு ஆட! ஜாகீர் கிடைச்சுட்டத ணுலேயே எவனும் பெரிய மனிசனுயிட முடியாது’ என்ருர் .

மீர் வெகுண்டார் , " உங்க அப்பா புல்செதுக்கியிருப்பார் . இங்கே பரம்பரை பரம்பரையாய் சதுரங்கமTடித் தேர்ந்தவங்க ளாக்கும் , '

"சரித்தான் டோங்காணும். காஜி உத்தீன் ஹைதரிடத்திலே சமையல் காரணுயிருந்து வந்தவங்க, இப்பேAது பெரிய மனுசனு யிட்டாங்க, பெரிய மனுசாயிருக்கிறது விளையாட்டா என்ன?"

அது உங்கள் அப்பன்-பாட்டன் சமா சாரம். அவங்களை ஏன் இழுக்கனும்? இங்கே நாங்கள் பாதுஷாவோடு உட்கார்ந்து ச11ப்பிட்டுவந்தவங்கதான்."

மிர்ஜா ஏசுவசனத்தில் திட்டிஞர், மீர் ஆத்திரத்துடன் எச்சரித்தார் . நாவை அடக்கிப் பேசும், இல்லை, ஏடாகூடமாயிடும். இந்த மாதிரிப் பேச்செல்லடம் கேட்டுப் பழக்கமில்லை. முறைச்சுப் பார்த்தால் கண்களைத் தே எண்டியெடுத்திடறவன் நான் தெரிஞ்சுக்கும்!" அப் டியா! வ: , ஒரு கைபார்த்து விடலாம்." இதுக்கெல்லாம் அஞ்சுகிற ஆளில்லை நான். ' இருவரும் வாஃா உருவிக்கொ ண்டு 11ாய்ந்தார்கள். இருவரும் உல்ல!! சப்பிரியர்கள்; ஆல்ை கோழைகளில்லை. நவாபுகள் ஆண்ட காலம் எப்போதும் இடுப்பில் கச்சை, வாள், கட்டாரி, உரை எல்லாம் இருக்கும். மக்களிடையே, பெரிய அதிகாரி களிடையே அரசியல் தரக்கேடு வேர் விட்டிருந்தது. ராஜ விசுவாசம் அற்றுவிட்டது. பாதுஷாவுக்காக நாம் ஏன் உயிர் துறக்கவேண்டுமென்கிற அலட்சியப் போக்கு பரவியிருந்தது. ப, துஷா பதவிக்கும் இதே நிலைதான். எனினும் தனிப்பட்ட வீர உணர்வு மங்கிவிடவில்லை.

இருவரும் வீராவேசத்துன் போரிட்டார்கள். இருவரும் வ ஸ்வீச்சுக்களுக்கு இலக்காகி, படுகாயமடைந்து தரையில் சாய்ந்தார்கள். துடிதுடித்து மடிந்தார்கள். தம் பாதுஷா சிறைபிடிக்கப்பட்டு இட்டுச் செல்லப்படும்போது வருந்தாத

________________

252 பிரேம்சந்த் சிறுகதைகள்

வர்கள், சதுரங்கக் காய்களில் ஒன்ருன மந்திரிக் காய்க்காகத் தம் உயிரையே துறந்தார்கள்!

இருட்டு கவிந்தது. தரையில் சதுரங்கக் கட்டத் துணியும், காய்களும் சிதறிக்கிடந்தன. சதுரங்க பாதுஷாக்கள் (காப்கள்) தம் தம் சிங்காசனத்தில் அமர்ந்து உயிர் துறந்த இரு வீரர்களுக் காகக் கண்ணிர் வடித்தார்கள்.

சுற்றுப்புறம் அமைதியில் மூழ்கியது. இடிபாடான நிலைவாயில் வளைவுகளும், குட்டிச்சுவர்களும், புழுதி படிந்து பழுதுபட்ட மீஞர்களும் இரு ஜாகீர்தார்களின் சவங்களைக் கண்டு வேதனைப் பட்டுக்கொண்டிருந்தன.