ராக் தர்பாரி’ (தர்பாரி ராகம்) - ஸ்ரீலால் சுக்லா:முன்னுரை - கங்கா பிரசாத் விமல்,
முன்னுரை
பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதிக் காலகட்டக் தான் இந்தி நாவல்களின் துவக்கம் என்ருலும், ஆழமான, வளம் நிறைந்த, கம்பீரமிக்கதொரு பரம்பரையின் துவக்கம் பிரேம் சந்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. இருபதாம் நூற்ருண்டின் துவக்கக் காலத்திலேயே மேலே நாடுகளில் நாவல் இலக்கிய மானது தனது வளர்ச்சியின் உச்சகட்டத்தை எட்டியிருந்த சமயம், இந்தி நாவல் இலக்கியமானது தனது இளம் பருவத் துப் பேதைமை, கற்பனை மிகுந்த பாத்திரப் படைப்பு, அளப்பு ஆகியவற்றிலிருந்து விடுபட முயற்சி செய்து கொண்டிருந்த தென்ப்து வியப்பிற்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனல் சில ஆண்டுகளுக்குள்ளாகவே பிரேம்சந்தின் படைப்புக்கள், நாவல் இலக்கியத்தில் புதியதொரு பாணியைத் தோற்றுவித்தன அத்துடன், இந்தி நாவல் இலக்கியத்திற்குப் புத்துயிரளித்து, மேன்மையுறச் செய்து, சிறந்த நாவல்களின் வரிசையிலே அதற்கொரு தனியிடமும் அளித்துவிட்டன.
இந்த இருபதாம் நூற்ருண்டு, தனது அரசியல் கிளர்ச்சிகள், கலாசார மாற்றங்கள், மோதல்கள் ஆகியவற்றின் மூலம் நியதிக்குட்பட்ட மனித வாழ்வின் முன் ஒரு பெரும் கேள்விக் குறியை எழுப்பும் நூற்ருண்டாகும். விஞ்ஞான அறிவியல் துறை, தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றின் முன் னேற்றம், பண்பாடு, நுண் கலேகள் போன்றவைகளே அர்த்த மற்றவை என நிரூபிப்பதற்குரிய சான்றுகளே இந்த யுகம் திரட்டி வருவது மட்டுமன்றி, கலேகள் ஒரு கடினமான சவாலே எதிர்நோக்கும் படியும் செய்துள்ளன.
அறிவியல், தொழில்நுட்ப அறிவின் அறைகூவலுக்குமுன் நாவலும் இதே கிலேயில்தான் நிற்கின்றது. நாவலின் அதீத கற்பனைகளே விஞ்ஞானம் உருவாக்கிக் காட்டியுள்ளது எனி னும் மனித உள்ளத்தின் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் குன்ருத , குறையாத பொக்கிஷமாகவே இன்றளவும் இருந்து வருகின்றன. தொழில்நுட்ப அறிவிற்குமுன் சிறுமைப்பட்டு விடும் மனித உணர்வுகளே, அவற்றுடைய விகாரங்களுடன் காவல் சித்திரிக்கின்றது. நம்முடைய இன்றைய சமூக, தனிப் பட்ட வாழ்வின் அகப்புற நிலகளின் நரகத்தையும் அதேν முன்னுரை
தீவிர முனைப்புடன் இன்றைய நாவல்கள், தமக்குரிய விஷய மாகவும் எடுத்துக்கொண் டிருக்கின்றன. இந்தி நாவல் இலக் கியம் பற்றிக் கூறும் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறந்ததொரு மொழியின் மகத்தான பேறு எனக் கணிக்கப்படும் மனித வாழ்வின் பல்வேறு கிலே களேப்பற்றிய படைப்புகளே இந்தி நாவல் இலக்கியம் பெற்றுள்ளது எனக் கூறுவது மிகை யாகாது. இந்தி நாவல் இலக்கியத்தின் வரலாறு மிகப் பழமையானது, தொன்மையானது என்ற நிலை இல்லா விடினும், அது அடைந்துள்ள முன்னேற்றமும், ஆதாயமும் குறிப்பிடத் தக்கனவாகும்
பிரேம் சந்திற்கு முற்பட்ட காலத்தின்_நாவல்கள், இந்திர ஜாலங்களும், அற்புதங்களும், சரித்திர காலக் கற்பனைகளும் நிறைந்ததாக இருந்தன. அவை, தங்களது சுவடுக ஃா இலக்கியத் தடத்தில் பதிக்காமல் சென்றிருப்பதே அவற் றின் முக்கியத்துவமற்ற தன்மைக்கு ஒரு சான் ருகும். மொழி நடை, கலேத்தன்மை என்ற நிலையிலிருந்து கணிக்கும் போதும் கூட இங் நாவல்கள், இந்தி நாவல் இலக்கியத்திற்கு எதையும் அளித்துள்ளன என்று மதிப்பிட முடியாமல் இருக் கிறது. பிரேம்சந்த் முதல் முறையாகச் சமுதாய விழிப் புணர்வுடன், சமூக மாற்றங்கள், சுதந்தரம், சிதிலமாகி அழிந்துகொண்டிருந்த மதிப்பீடுகள், மரபுகள் ஆகியவற்றின் அமைப்பை எதிர்த்து, மற்றப் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது தெளிவு. பிரேம்சந்தின் நாவலான "கோதானம் ஒரு மை ல் கல்லா கும்; இங்கிருந்துதான் இந்தி நாவல்களின் புதிய சகாப்தம் தொடங்குகிறது.
கோதானத்தில் ஒரு விவசாயி, கூலியாக மாறவேண்டி யிருந்த நிர்ப்பந்தம், சோக வரலாருகச் சித்திரிக்கப்பட்டுள் ளது. இந்தச் சித்திரத்தின் மூலம் பிரேம்சந்த், முதலாளித்துவ அன்மப்பைத் தாக்க விரும்பினர். மேலும் ஒரு விவசாயி கூலியாக மாறவேண்டிய அவல நிலையானது நகர்ப்புற நாகரிகப் பாதிப்பின் பயங்கரமான முன்னே டி என்பதை யும் உணர்த்த விரும்பினர். நகரம், கிராமம் எனும் வெவ் வேறுபட்ட இரு புள்ளிகளேத் தொட்டுச் செல்லும் இக்கதை யானது ந ம் மு ைட ய இன்றைய வாழ்வின் சரித்திர பூர்வமான இலக்கிய த ஸ்தா வே ஐ" ஆகும். பிரேம்சந்தும்முன்னுரை vii
அவரது சமகாலத்து எழுத்தாளர்களில் பெரும்பாலோரும், சமூக யதார்த்த வாதத்தைத்தான் தங்களுக்கு விஷய மாக்கிக் கொண்டிருந்தனர். வாழ்வின் பல்வேறு அம்சங் கஃளயும் தன்னகத்தே கொண்டிருந்த அக்காலத்து நாவல் களில், பண்பாட்டின் வளர்ச்சிக்குரிய அம்சங்கள் யாவும் நிறைந்திருந்தன.
அடி மைத் த ஃளயிலிருந்து விடுபடவேண்டுமென்ற துடிப்பு, குடி யானவர்களின் , தொழிலாளர்களின் பொருளாதார நிலை உயர அவர்களது போராட்டங்கள், இந்திய சமூகத்தில் நியாய பூர்வமான அடிப்படையில் சமத்துவத்தைக் கொண்டு வர வேண்டுமென்ற உறுதி ஆகியவை தீவிர முனைப்புடன் சித்திரிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதிலும் விரவி நின்ற .பாசிஸம், உலகப் போரின் கெடுபிடி, முடியாட்சியாளர்களின் மனப்போக்கு ஆகியவை எத்தகைய அச்சமூட்டும் சூழலைத் தோற்றுவித்திருந் தன என்பதை இந்தி நாவல்களில் சுதந்தரப் போராட்டத்தின் சம்பவங்களிடையே இன்றும் தேட முடியும். மக்களின் எழுச்சி யெ னும் யதார்த்த கிலேயிலிருந்து தோன்றிய தேசீய மனுேபா வத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த நாவலானது இரண் டாம் உலகப் போருக்குப் பின் 'மனிதனை நிலைக் களஞகக் கொண்டு, தனி மனிதனின் அகவயப்பட்ட, உள் மன உலகத் தின் உணர்வுகளே ச் சித்திரிக்கும் நாவலாக எப்படி மாறியது என்பது சுவையான விஷயமாக இருக்கக் கூடும். ஆனல், சமூக உணர்வுகளுக்குப் பின், தனி மனிதனின் அகவயப்பட்ட உலகத்தின் சித்திரிப்பு என்பது தற்செயலாய் நிகழ்ந்து விட்டது அல்ல என்பதில் சந்தேகத்திற்கு இடமே யில்லை. உண்மையில், தனி மனிதனே க் கூறு போட்டு ஆாாயும் இந்தப் போக்கு, தனி மனித ஆராய்ச்சியின் போக்குத்தான். அக் ஞேய், ஜைனேந்திரர், இலா சந்திர ஜோஷி, பகவதி சரண் வர்மா ஆகியோரின் நாவல்களுடன், யஷ் பால், அஷ்க், அமிருதலால் நாகர், விருந்தாவன் லால் வர்மா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புக்களும் சரியான அர்த்தத்தில், இந்திய வாழ்வின் பல்வேறு மொழி பண்பாட்டுத் துறையைச் சார்ந்தவர்களின் கதைகளே நம் முன் வைத்துள்ளன.
சுதந்தரம் என்பது உறுதியான புள்ளியாகும். இதை ஆதார மாகக் கொண்டு, சுதந்தரத்திற்கு முற்பட்ட, பிற்பட்டviii முன்னுரை
காவல்களில் 'சமூக யதார்த்த வாதம், மனே தத்துவம்" என்ற பிரயோகங்களுக்குப் பின்னர், முற்றும் புதியதொரு போக் கைப் பற்றிய உணர்வு, நாட்டின் விடுதலைக்குப் பின் படைக் கப்பட்ட நாவல்களிலே காணப்படுகிறது. புதிய தலைமுறைப் படைப்பாளர்கள் இந்திய அரசியல், மற்றும் விடுதலைக்குப் பின்னுள்ள பாரத நாட்டின் யதார்த்த நிலையை அதன் உண்மையான நிலைகளில் கண்டு சித்திரிப்பதில் வெற்றி யடைந்துள்ளனர். மோகன் ராகேஷ், பணிஷ்வர் நாத் ரேணு, கிருஷ்ண பலதேவ் வைத், நாகார் ஜான், பைரவ பிரசாத் குப்தா, கமலேஷ்வர், ராஜேந்திர யாதவ், ராங்கேய ராகவ், நரேஷ் மேஹ்தா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புக் களில் இதைக் கான முடியும். ரேணுவின் ‘மை லா அஞ்சல்", காகார் ஜானனின் 'பல்சன் ம்ா’ ஆகிய இரண்டு நாவல்களும் பிரேம்சந்த் காலத்துச் சமூக யதார்த்தவாதத்தின் மறு மலர்ச்சி பெற்ற மனுேநிலையைச் சித்திரித்துக் காட்டு கின்றன. மேலும் உணர்வின் வெளிப்பாடு என்ற அடிப் படையில் இன்றைய பாரத மக்களின் உணர்வை வெளிப் படுத்தியுள்ளன. இக்கால கட்டத்து நாவல்களில் பல இன்றைய "கிளாஸிக்" நாவல்களாக இடம் பெற்றுள்ளன. இதில் வியப்பிற்குள்ளாக்கும் விஷயம் என்ன வென்ரு ல், இன்றைய படைப்புகளே இன்றைய யுகத்தின் "கிளாஸிக்" படைப்புகளாகும் தகுதி பெற்றுள்ளன. ஆனல், கதைக் கரு என்ற நோக்கில் மட்டுமின்றிக், கலேத்தன்மை, உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்ற நோக்கில் கூடச் சுதந்தரத்திற்குப் பின் படைக்கப்பட்டுள்ள பல நாவல்கள், நாவல் எனும் உருவகத் துக்கு மீண்டும் விளக்கம் கூறும் முயற்சியாக உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லே.
விடுத&லக்குச் சில வருடங்களுக்குப் பின்னர், புதிய தலே முறையைச் சார்ந்த எழுத்தாளர்கள் பலர் தோன்றியுள்ளனர். இவர்களில் சிலர் சிறந்த நாவல்களே எழுதியுள்ளனர். உருவ அளவில் இவை சிறியனவையாக இருந்தபோதிலும், இன்றைய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள இவை தம்மள விலேயே ஒருவிதப் பிரமாணங்களாக அமைந்துள்ளன. பூரீ காத்தவர்மா, பூரீலால் சுக்லா, ரமேஷ் பக்ஷி, மகேந்திர பல்லா போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள், தங்கள் சமகாலத்து வாழ்வை, அதன் முழு அவலத்துடன் சித்திரித்முன்னுரை ix
துக் காட்டியுள்ளன. நமது சமூக வாழ்வில் உள்ளவற்றை, கலேத் தன்மையுடன் விவரிப்பது என்பது எந்த வொரு சாதனத்தின் மூலமும் சாத்திய மன்று. ஏனெனில் இன்று இருப்பவை எல்லாமே, ஒரு கடுமையான வகையைச் சேர்ந்த வம்ச அழிவின் பகுதியேயாகும். தனி மனிதன், குடும்பம், ஜாதி, அமைப்பு, ஸ்தாபனம்; நம்பிக்கை, எதிர் காலத்தைப் பற்றிய கணிப்பு ஆகியவற்றின் பால் வளர்ந் துள்ள கண்ணுேட்டத்தை பார்வையை, வெறிகொண்ட தென் ருே, புரட்சிகர மனதென் ருே, நிராசையானது ’பைத் தியக்காரத்தனமானது என்ருே வார்த்தைகளால் சிறைப் பிடித்து அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இது ஒரு கொள் கைப் பிடிவாத மற்ற நிலே. இது அழிக்கப்பட வேண்டும் என்று தான் கூறமுடியும். உண்மையில் சில காவல்கள் இதை அழிப்பதற்குரிய கருத்துக்களேச் சித்தாங் த ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளன.
விடுதலே க்குப் பின்னர், ஜனநாயகத்தை அமலாக்குவதில் ஈடுபட்டுள்ள அரசியல், எந்த அளவு வரை நமது கலாசாரத் தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களே அதிக நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது என்பது ஒரு விசித்திரமான, ஆணுல், அச்சமூட்டும் கதையாகும். சமகாலத்து நாவலாசிரியர்கள், இந்தத் திகிலூட்டும் நெருக்கடியைத் தமது நாவல்களின் குறிக்கோள்களாக்கிக் கொண்டிருக்கின்றனர். சுதந்தரத் துக்கு முற்பட்ட நாவலாசிரியன் எந்த அளவிற்குச் சமூகம், மனிதன் ஆகிய இரண்டின் அக புற வாழ்வின் பிரச்னைகளே வேதனையுடன் சித் திரித்தானுே, அந்த முறையைத் துறந்து விட்டு, ஒதுங்கி நின்று சித்திரிக்காமல், புதிய த லே முறை எழுத்தாளன், தன்னைத்தானே அச் சமூக நிலையில் கிலேநிறுத் திக் கொண்டு, சமூகத்திலிருந்து செத்து மடிந்துகொண் டிருக் கும் கம்பிக்கைகளின் போர்வையை விலக்கிக் காட்டியுள் ளான். "ஜஹாஜ்-கா-பஞ்ச்சியை "அங் தேரே பந்த் கம்ரே? யுடன் ஒப்பிட முடியாது. எந்த இரு நாவல்களேயும், எந்த வொரு கிலேயினின்றும் ஒப்பு நோக்க இயலாமல் போகலாம். செளகரியத்துக்காக வேண்டுமானல், இரு காவல்களும் வெவ் வேறு கண்ணுேட்டத்தைக் கொண்டுள்ளன எனக் கூறலாம். இந்தப் பார்வை அல்லது மனுேபாவமே ஒரு விதத்தில் காவலின் மூலாதாரத்தின் அமைப்பாகும். இதனுல், சுதந்தரத்). முன்னுரை
துக்குப் பின்னல் எழுதப்பட்டிருந்தாலும், இரு நாவல்களின் சமுதாயப் பார்வையில் வேறுபாடுகள் இருக்கமுடியும். இதனுல்தான், ஒரு நாவலில் மனித கிலேயில் நின்று காட்டப்படும் தனி மனிதனின் உள் மன உலகத்தைக் காண் கின்ருேம். இன்னுெரு காவலில், நமது யதார்த்த கிலேயை கேரிடையாகக் காணவும், அச்சுறுத்தும் அதன் மனித உருவைப் பார்க்கவும் நேரிடும் கிலேயில், இவ்விரண்டு பார்வை யிலுமுள்ள வேறுபாட்டின் சூத்திரத்தைத் தேடி எடுத்து விடுகிருேம். அது இன்றைய நாவல்களே, முந்திய நாவல் களிலிருந்து வேறுபடுத்தி இனம் கண்டுகொள்ள நமக்கு உதவுகிறது.
*கோதானத்திலிருந்து - ‘ராக் தர்பாரி’ (தர்பாரி ராகம்) வரையிலுள்ள நீண்ட யாத்திரையினிடையே இப்படிப்பட்ட எண்ணற்ற சிறந்த படைப்புகள் உள்ளன. ஒரு "கிளாஸிக்'குக் குரிய சிறப்புகளுடன் கூடியவையாகவும் உள்ளன. மேலும் இன்றைய நாவல்களில், சோதனை முயற்சி'களான நாவல் களும் உள்ளன. ‘கோதானமும், ராக் தர்பாரியும் நிச்சயம் இரு துருவங்கள்தான். இவ்விரண்டிற்குமிடையே, படைப் பாற்றல் என்ற முறையில் எவ்வித ஒற்றுமையிருந்தாலும் இல்லாவிடினும், இந்திய வாழ்க்கையின் இரு முக்கியமான புள்ளிகள். இரு கலாசாரப் பார்வையின் உயிர்த் தத்துவம் இரு நாவல்களிலும் உள்ளது.
பிரேம்சந்த் பெரும் புகழ் பெற்ற நாவலாசிரியர். இலக்கிய உலகில் அவருக்குள்ள மதிப்பும் இடமும், ‘ராக் தர்பாரி’யின் ஆசிரியரை விட முற்றும் வேறுபட்டது. தமது சோதனை பூர்வமான எழுத்துக்கள் மூலம் இலக்கியத்தில் தமக்கென இடம் வகுத்துக்கொண்ட புதிய த லே முறை எழுத்தாளர்களில் பூரீ லால் சுக்லாவும் ஒருவர். ராக் தர்பாரிக்கு முன் பூரீலால் சுக்லா, நையாண்டி, அங்கத எழுத்தாளர் என்ற முறையில் இந்தி இலக்கியத்தில் புகழ் பெற்றிருந்தார். திடீரென ‘ராக் தர்பாரி” நாவலின் மூலம், அவர் சிறந்த நாவலாசிரியர் வரிசை யில் இடம் பெற்றுவிட்டார்.
அங்கத எழுத்தாளர் என்ற முறையில் அவரது கட்டுரை களில், நையாண்டியின் எத்தகைய தீவிரத்தைப்பற்றி விமர் சிக்கப்பட்ட தேர் (குறிப்பாக ‘அங்கதனின் கால்’ என்ற கட்டுரைத் தொகுப்புப்பற்றி) அதே தீவிர முஃன ப்பை அவரதுமுன்னுரை Χί
நாவலிலும் காண்கிருேம், ‘ராக் தர்பாரி” நையாண்டிக் கட்டுரைகளின் தொகுப்புதான் எனச் சில விமரிசகர்கள் கருத்து வெளியிட்டிருக்கும் போதும், அவரது நாவலில் பரிகாசத் தின் கடுமையை உணர்கின் ருேம். இதனுல் உண்மையில் எழுத்தாளர்களின் தீவிரத் தன்மையைப் பொறுத்தவரையில், கோதானமும், ராக் தர்பாரியும் ஒன்றுதான். இவ்விரு எழுத் தாளர்களின் படைப்பாற்றலைப்பற்றிச் சந்தேகப்படுவதற் கில்லே. இதில் ஒரு சுவையான விஷயம் என்னவென்ருல் *கோதானத்தில் கிராமத்திலிருந் து நகரத்தின் கதை வெளிப் படுத்தப்பட்டுள்ளது; அதாவது நகர்ப்புற நாகரிகத்தின் எதிர்விளைவுகளின் பயங்கரமான அச்சுறுத்தும் உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ‘ராக் தர்பாரி’யிலோ, பிரயாணம் நகரத்திலிருந்து கி ரா ம த் ைத நோக்கிச் செல்லுகிறது. விடுதலைக்கு முன் நகர்ப்புற நாகரிகத்தின் மாயையை நோக்கி விரைந்த கண்மூடித்தனமான ஓட்டத்தில் நகரத்துக்கு மகத் துவம் இருந்தது. இன்றும் அதன் மகத்துவமும், முக்கியத்துவ மும் குறையவில்லை எனினும், அரசியல் புரட்டுகளிலிருந்து தப்ப வேண்டி, நகரத்தின் மற்றப் பாதிப்புகளிலிருந்து விடு படுவதற்காக, “கிராமத்தை நோக்கிச் செல்’ என்று கூறப்படும் வாசகம் இருக்கிறதே அது இன்றைய பாரதத்தின் உண்மை யான நிலையை, நிஜமான சித்திரத்தைத் திறந்து காட்டிக் கொண்டே செல்லுகிறது.
கிராமமும், நகரமும் இந்திய மக்களின் விழிப்பு, அதாவது எழுச்சி அல்லது வீழ்ச்சியின் இரு கலாசாரக் கேந்திரங் களாகும். இங்கு வாழ்க்கையின் துடிப்பில், அதன் கதியில் எல்லாவிதமான வேற்றுமைகளும் உள்ளன. ஆனல் ஜன நாயகமானது இவர்களுக்கு அளித்துள்ள முன்னேற்ற வாய்ப்பு ஒன்றே தான். ஒரு சிறிய கிராமம் போன்ற ஊரும், பெரிய நகரங்களிலும், தலைநகரங்களேப் போலவே இங்கும் கிராமீய வாழ்வின் சந்தடிகளும், குழப்பங்களும், இனம், ஜாதி ஆகியவற்றின் பாதிப்புகளிலிருந்து தப்பமுடியவில்லே. இதே போல் அரசியல் மாற்றங்களிலிருந்தும், போக்குகளிலிருந்தும் தங்களே விலக்கிக்கொண்டு வாழ இயலவில்லை. ‘ராக் தர்பாரி' யிலுள்ள இந்த உண்மை அதன் தலைப்பிலேயே எதிரொலிக் கிறது. சிறிய கிராமங்களிலும், மாநகரங்களிலும் அரசியல் அமைப்பானது எந்தவொரு புதிய மன இயல்புகளைத் தோற்றுxii முன்னுரை
வித்து வளர்த்துக்கொண்டு வருகிறதோ, அது பல்வேறு மட்டங்களிலும் புதியதொரு பிரபுத்துவ முறையின் செயற் பாட்டை மலரச் செய்துகொண் டிருக்கிறது. ‘ராக் தர்பாரி"யி லுள்ள கிண்டலும், அங்கதமும், நையாண்டியும் அமானுஷிய மானது மட்டுமல்ல; மிகவும் அசிங்கமான, குரூரமான, அரு வருக்கத்தக்க, சகிக்க முடியாத செயல்முறையைக் கடுமையா கத் தாக்கி விமரிசிக்கின்றன.
கதையில் பல்வேறு உத்திகளைத் தாராளமாகக் கைய்ாண் டிருப்பதாலும், சரளமான, இனிய நடையினுலும் இந் நாவல் ஒரு 'கிளாஸிக்’கிற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. ஆனல் ஒரு மிகச் சாதாரணமான 'கிளாஸிக்’ எனக் கூறுவது பொருங் தாது. இது, இன்றைய அச்சுறுத்தக்கூடிய கிலேயை உணர்த் தும் அர்த்த முள்ள கிண்டலாகும். இந்த அமைப்புக்குள்ளே, இதன் விக்ாயாட்டுகளுக்குள்ளே இருந்துகொண்டே ஒரு விதத் தில் அதை மறுப்பதாகும் இது. தான் இருந்துகொண்டே, தன் இருக்கையை அழிப்பதென்பது நல்லதொரு படைப்பாற்ற லின் லட்சியமாக இருக்கவும் கூடும். ஆனல் இங்கு 'ராக் தர்பாரி'யிலுள்ள சிறப்புக்களே, நல்ல அம்சங்களே ஒவ்வொன் ருக எண்ணுவது என் உத்தேசம் அல்ல. கலைத்தன்மை என்ற நோக்குடன் பார்க்க, எந்த விதமான முக்கிய ஆதாரங்களும் இல்லை. (வரையறுக்கப்பட்ட கலேத்தன்மை என்னும் நோக் குடன் பார்க்கும் போது, அது இல்லாத கிலேயிலும், கலேத் தன்மையற்ற படைப்பு சிறந்ததாக விளங்க முடியும்.) மற்ற ஆதாரங்களின் படியும், ‘ராக் தர்பாரி’ சிற் சில இடங்களில் பலவீனமானதாக இருக்கலாம். ஆணுல் தன்னுணர்வின் வெளிப்பாடு என்ற அடிப்படையில், இது ஒரு நேர்மையான முயற்சியாகும். நமது சமூகத்தின் அயோக்கியத்தனம், மோசடி, நாணய மற்ற போக்கு, குழ்ச்சி, த கிடுதத்தங்களே அப்படியே அப்பட்டமாகக் காட்டும் ஒரு நேர்மையான முயற்சி இது.
விமரிசகர் ஒருவர் ‘ராக் தர்பாரி'யை வட்டார காவல்களில் கடைசியான படைப்பு எனக் கூறியுள்ளார். வட்டார காவல் களின் துவக்கம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என அவர் கினேக்கிருரரென்பது எனக்குத் தெரியாது. ஆனல், ஒன்று மட்டும் கூறமுடியும். "ராக் தர்பாரி' பயனுள்ள, கிண்டல் எழுத்தின் ஆரம்பம் என்பது உறுதி. இதில் சில அசிங்கமானமுன்னுரை Χiii
அங்கதப் பிரயோகங்களும் உள்ளன. ஆஞல் ஒவ்வோர் அங்கதமும், நையாண்டியும் மேலெழுந்த வாரியான அர்த்தத் தில் விகாரமானவைதான். ஒவ்வோர் அடியும், தாக்குதலும், தர்க்க மெனும் ஆயுதத்தின் மூலந்தான் தாக்குகின்றது. ஒவ் வொரு தாக்குதலும், குருதியில் தோய்ந்த குரூரத்துடன் தான் தொடங்குகின்றது. இன்றைய மொழியில் எதைப் புரட்சி, அல்லது கிளர்ச்சியெனக் கூறுகிருேமோ, அதையே அங்கத மானது தனது மொழியில் ஒப்புதல் எனக் கூறி, அதன் உள்ளர்த்தங்களின், சுய நலங்களின் அடிப்படையையே கலங்க் அடித்து, ஒளிவு மறைவு இன்றி அதனை, அதனுட்ைய சரியான அர்த்தத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டி, உணர்த்திப் புரிய வைக்க முயற்சி செய்கிறது. ஒர் அங்கத நாவல் என்ற முறையில் ‘ராக் தர்பாரி’யின் வெற்றி சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். ஆனல் சந்தேகத்துக்கு இடமின்றி இது ஒர் அங்கத நாவல்தான். இதற்குத் தனக்கென ஒரு தனிப் பார்வை இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள வேறு வழியும் இருக்கும் எனக் கூறவும் முடியும். அதைப் படைப்பின் போக்கு என்று பார்க்கவும் வாய்ப்புள்ள காவல் இது. இதனுல்தானே என்னவோ, இது நாவலாகவும் அங்கதமாகவும் உள்ளது. இன்றைய அமைப்பின் குரூரமான முகத்தை, அரசியலின் அருவருப்பூட்டும் செயல்களே, அட்டகாசங்களே நம் முன்னே கொணர்ந்து நிறுத்தும் செயலேப் பத்திரிகைகளினலும் சாதிக்க முடியும். இந்த நோக்கில் பார்த்தால் ‘ராக் தர்பாரி”க்கும் பத்திரிகைக்கும் வேற்றுமை உண்டு. பத்திரிகை கலேப் படைப் பாக முடியாது. "ராக் தர்பாரி'யோ ஒரு கலேப்படைப்பாகும். அது கலத்தன்மை கொண்ட படைப்பு என்பதற்கு முதல் கிபந்தனேயே, அது எல்லாவிதச் சந்தேகங்களும் நிறைந்த தாக, சர்ச்சைக்குரியதாக இருக்கவேண்டும் என்பதுதான். ‘ராக் தர்பாரி சர்ச்சைக்குரியது மட்டும் அல்ல, சக்தேகத் துக்கும் மையமானது என்பதில் வியப்பேதும் இல்க்ல.
- கங்கா பிரசாத் விமல்
அத்தியாயம் 1
நகரத்தின் எல்லை இது. இங்கிருந்து தொடங்குவதுதான் இந்தி யக் கிராமமெனும் பெருங் கடல்.
அங்கே ஒரு டிரக் கின்றுகொண் டிருந்தது. அதைப் பார்த் ததுமே பாதைகளேப் பலவந்த மாய் மிதித்துச் செல்வதற் கென்றே இது பிறந்திருக்கிறதென்ற உறுதி ஏற்பட்டுவிடும். சத்தியம், அதாவது மெய்யைப் போலவே இதற்கும் பல தோற்றங்கள் இருந்தன. போலீஸ்காரன், தான் நின்ற இடத்தி லிருந்து பார்த்தால் இந்த டிரக் கட்ட நடுப் பாதையில்தான் நிற்கிறது எனச் சாதிக்க முடியும். இன்னுெரு புறத்திலிருந்து டிரைவர், இது பாதையின் ஓரத்தில்தான் கிற்கிறது என நிரூபிக் கவும் முடியும். இன்றைய நாகரிகத்தின்படி டிரைவர், டிரக்கின் வலது புற த் துக் கதவை, இறக்கையைப் போல் நன்ருய்த் திறந்து வைத்திருந்தது அதற்கு மேலும் அழகூட்டியது என லாம். இது மட்டுமா? இது இங்கே கிற்கும் சமயத்தில் இன் னுெரு வாகனம் இதைக் கடந்து சென்றுவிடும் என்ற ஆபத் துக்கும் இடமில்லாமல் இருந்ததும் குறிப்பிடத் தக்கது.
பாதையின் ஒருபுறத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இருந்தது. மற்றெரு புறத்தில் கூரை வேய்க்த கடைகள். மரக் கட்டை, ஒடிங் துபோன தகரத் துண்டுகள், மற்றும் அங்கே கிடைக்கக் கூடிய தட்டுமுட்டுச் சாமான்களேக் கொண்டு கிறுவிய கடைகள் வரிசையாக கின்றன. அவற்றைப் பார்த்ததுமே இக்தக் கடை களே எண்ணிவிடமுடியாது என்பது புரிக்குவிடும். பெரும்2 தர்பாரி ராகம்
பாலான கடைகளில் மக்கள் விரும்பிப் பருகும் பானம் இருந்தது. அங்கு விரவி கின்ற தூசி, எண்ணெய்ச் சிக்கு, பல முறை உபயோகித்த தேயிலைத் தூள், கொதிக்கின்ற தண்ணிர் ஆகியவற்றின் உதவி கொண்டு தயாரித்த அவ்வினிய பானம் தாராளமாய்க் கிடைத்தது. இரவு, பகல், காற்று, மழை, ஈ, கொசு போன்றவற்றின் இடைவிடாத தாக்குதல்களேத் தீரத் துடன் எதிர்த்துப் போராடிக்கொண் டிருக்கும் இனிப்புப் பலகாரங்களும் அங்கே இருந்தன. நம் நாட்டுக் கைவினைக் க&லஞர்களின் கைத் திறமைக்கும், விஞ்ஞான நுட்ப அறிவுக் கும் அவை ஒரு சான்ருக விளங்கின. எங்களுக்கு ஒரு நல்ல கூடிவர பிளேடு தயாரிக்கும் நுட்ப அறிவு தெரியாமல் இருந் தாலும், மட்டமான சாமான்களே ருசி மிக்க உணவுப் பண்டங் களாக மாற்றுவது எப்படி என்ற உபாயம் இந்த உலக முழுவதிலும் எங்களுக்கு மட்டுந்தான் தெரியும் என்பதை அவை பறைசாற்றின.
டிரக்கின் டிரைவரும், கிளினரும் ஒரு கடையின் எதிரே நின்று தேநீர் பருகிக்கொண் டிருந்தனர்.
தூரத்திலிருந்தே ரங்கநாத் டிரக்கைப் பார்த்துவிட்டான். பார்த்ததுமே கடையில் வேகம் பிறந்துவிட்டது.
இன்று ரெயில் அவனை ஏமாற்றிவிட்டது. தினமும்போல் லோக்கல் பாசஞ்ஜர் வண்டி இரண்டு மணி நேரம் தாமதித்து வரும் என நினைத்தே அவன் வீட்டிலிருந்து புறப்பட்டான். ஆனல் அது ஒன்னரை மணி நேரம் மட்டும் தாமதித்து வந்து விட்டுப் போய்விட்டது. புகார்ப் புத்தகமெனும் சரித்திர ஏட்டில் தன் பங்கு வரலாற்றையும் பதித்துவிட்டு, ரெயில்வே அதிகாரி களின் கேலிக்குப் பாத்திரமான கிலேயில் அவன் ஸ்டேஷனே விட்டு வெளியேறினன். சாலைக்கு வந்ததும் டிரக் கண்ணிலே பட்டது; அவ்வளவுதான். அவன் மகிழ்ச்சிக்கு எல்லேயே இல்லே. அவன் டிரக்கை நெருங்கியபோது, டிரைவரும், கிளினரும் தேநீரின் கடைசித் துளிகளே ருசித்துக்கொண்டிருக்தனர். இங்கு மங்கும் பார்வையை அ&லயவிட்ட ரங்க காத் இயன்றவரையில் தன் மகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு, "டிரைவர் 1 இக் த டிரக் சிவபால் கஞ்ச் பக்கம் போகுமா?" என்று வினவினுன்.
டிரைவருக்கு காவால் சுவைக்க இன்னும் தேநீரும், கண்ணுல் பருகக் கடைக்காரியும் இருந்ததனுல் அவன் அலட்சியமாகப் பதிலுரைத்தான் “போகும்.”அத்தியாயம் ஒன்று 3.
'என்னே அழைத்துப் போவாயா? பதினேந்தாவது மைலில் இறங்கிவிடுவேன். நான் சிவபால் கஞ்ச் போகவேண்டும்.”
எதிரே அமர்ந்திருந்த கடைக்காரியிடம் தான் காண விரும் பியதை யெல்லாம் ஒரே பார்வையில் அளந்துவிட்ட டிரைவர் தனது பார்வையை ரங்கநாத்தின் பால் திருப்பினன். ஆகா ! என்ன தோற்றம் ! கதர்ப் பைஜாமா, தலையில் கதர்த் தொப்பி, சதர்ச் சட்டை, தோளிலிருந்து தொங்கும் பெரிய ஜோல்ரூ பை, கையில் தோல் பெட்டி டிரைவர் பார்த்துக் கொண்டே நின்றன். இமைக்கக்கூட இல்லை. பின்னர் ஏதோ யோசித்தவன் போல், 'உட்கா ருங்க ஐயா ! இதோ புறப்பட வேண்டியதுதான்’ என்ருன்.
கடா புடா ஓசையுடன் டிரக் புறப்பட்டது. நகரத்தின் கோணல் மாணலான வ&ளவுகளிலிருந்து விடுபட்டதும் சற்றுத் தூரத்தில் நேரான, சீரான, சந்தடியற்ற பாதை வந்துவிட்டது. இங்கே தான் டிரைவர் முதல் முறையாக டாப் கியரைப் பிரயோகித்தான். ஆணுல் அது நழுவி நழுவி நியூட்ரலில் விழ லாயிற்று. நூறு கஜ தூரம் செல்வதற்குள் கியர் நழுவிவிடும். ஆக்ஸிலேட்டரை மிதித்ததும் டிரக்கின் கர்புர் ஒசை அதிகரித்து, வேகம் குறைந்துவிடும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டே யிருந்த ரங்கநாத், "டிரைவர் சார் ! உங்க கியர் நம்ம நாட்டு அரசாங்கம்போல்தான் இருக்கிறது” என்ருன்.
டிரைவர் சிரித்துக்கொண்டே இந்தப் பாராட்டுப் பத்திரத்தை ஏற்றுக்கொண்டான். ரங்கநாத் தான் கூற வந்ததை மேலும் தெளிவாக்க விரும்புபவன் போல் தொடர்ந்தான்: ‘'எத்தனை முறை டாப் கியரில் போட்டாலும், அது இரண்டு கஜ தூரம் சென்றதுமே நழுவி, தன் பழைய இருப்பிடத்துக்கு வந்து விடுகிறதே.”
டிரைவர் சிரித்தபடி, 'ஐயா ! ரொம்பப் பிர மாதமாய் ச் சொல் லிட்டீங்க!” என்ருன்.
இந்த முறை கியரை டாப்பில் போட்டதும் ஒரு காலை 90° டி கிரி கோணத்தில் உயர்த்திக் கியரைத் துடையின் கீழே அழுத்திக்கொண்டான். அரசாங்கத்தை நடத்தவும் இந்த நுட்பங்தான் தேவை எனச் சொல்ல விரும்பிய ரங்கநாத், விஷயம் கொஞ்சம் பிர மாதமாகப் போய்விடப் போகிறதே என்று அஞ்சியவன் போல் மெளனமாகிவிட்டான்.4. தர்பாரி ராகம்
டிரைவர் தன் துடையைக் கியரிலிருந்து நகர்த்திப் பழைய இருக்கைக்குக் கொணர்ந்துவிட்டான். இம்முறை அவன் கியரில் ஒரு நீண்ட மரக்கட்டையை முட்டுக் கொடுத்து நிறுத்தி ஞன். கட்டையின் ஒரு முனையைப் பேனலின் கீழே செருகி விட்டான். அவ்வளவுதான். டிரக் விரைந்தது. முழு வேகத்துடன் விரைந்த அதைத் தொஃலவில் கண்டதுமே, சைக்கிள் காரன், வண்டியோட்டி, பாதசாரி என்று யாவருமே பயந்து போய்ப் பாதையை விட்டு ஒதுங்கிவிட்டனர். அவர்கள் அஞ்சி ஒடிய வேகத்தைப் பார்த்தால் அவர்களேத் துரத்திக்கொண்டு வரு வது ஒரு சாதாரண டிரக் அல்ல, காட்டுத் தீயின் ஜ்வாலேயோ, வங்கக் குடாக் கடலில் எ மு க் த தொ ரு கடற் புயலோ, மக்களின் மீது ஏவிய, கண்டபடி வசை பாடும் ஊழியனுே, அல்லது கொள்ளக்கூட்டத்தினரோ என்று தோன்றியது. மக்களே, உங்கள் ஆடு மாடுகளே, குழந்தை குட்டிகளே வீ ட் டி ற் குள் ளே பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். நகரத்தி லிருந்து இப்பொழுதுதான் ஒரு டிரக் புறப்பட்டிருக்கிறது’ என்று முன்னரே அறிவித்திருக்க வேண்டுமென நினைத்தான் ரங்கநாத்,
இதற்குள் டிரைவர், “சொல்லுங்க, ஐயா, என்ன விஷ யம்? ரொம்ப நாட்களுக்குப் பிறகு கிராமத்துப் பக்கம் போகி ருப்போல இருக்குது" என்ருன் . ரங்க நாத் தன் புன்னகை யினுல் இந்த கூேடி மகல விசார&ணயை ஊக்குவிக்கவே டிரைவர் தொடர்ந்தான். "ஐயா! இப்பொழுது என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?"
*சும்மா, திண்ணேயைத் தேய்த்துக் கொண்டிருக்கிறேன்!” டிரைவர் சிரித்தான். எதிர்பாராமல் ஒரு விபத்தே நேர்ந் திருக்கும். நல்ல வே&ள, தப்பியது. சுமார் பத்துப் பன்னி ரண்டு வயதிருக்கும்; கோவனூண்டியான ஒரு பையன் டிரக் கின் சக்கரத்திலிருந்து மயிரிழையில் தப்பினன். எ கிறிக் குதித்துப் பல்லியைப் போல் பாலத்தின் மீது போய் விழுங் தான். டிரைவர் இதனுல் பாதிக்கப்பட்டதாகவே தெரிய வில்லே. ஆக்ஸிலேடரை ஒரு மிதி மிதித்தவன் சிரித்துக் கொண்டே, 'என்ன சொன்னிங்க? கொஞ்சம் விளக்கமாய் ச் சொல்லுங்க” என்ருன்,
"சொன்னேனே, திண்னேயைத் தேய்க்கிறேன் என்று! இங்கிலீஷிலே இதைத்தான் ரிஸர்ச் என்று சொல்லுகிருர்கள்.அத்தியாயம் ஒன்று 5
போன வருடம் எம். ஏ. முடித்தேன். இந்த வருடம் ரிஸர்ச் செய்யத் தொடங்கி யிருக்கிறேன்.”
ஏதோ அலிவ்லேலா கதையைச் சுவாரசியமாய்க் கேட்டுக் கொண்டிருப்பவன் போல் புன்னகை தவழ டிரைவர் வினவி ஞன்: "ஐயா! சிவபால் கஞ்சுக்கு என்ன விஷயமாய்ப் போநீங்க?"
"அங்கே என் மாமா இருக்கிருர், எனக்கு உடம்பு சரி யில்லாமல் இருந்தது. கிராமத்தில் கொஞ்ச நாட்களிருந்து உடம்பைத் தேற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.”
இம் முறை டிரைவர் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந் தான். பின்னர், “நல்லாக் கதை அளக்க நீங்க ஐயா’ என்ருன்,
ரங்கநாத் அ வ ஃன ச் சந்தேகத்துடன் பார்த்தவாறே, “இதில் க்தை அளக்க என்ன இருக்கிறது?’ என்ருன்.
ஒன்றுமே அறியாதது போன்ற இந்தப் பாவத்தைக் கண்ட அவனுடைய சிரிப்பு பின்னும் அதிகமாகிவிட்டது. சிசிப்புக் கிடையே, ‘நல்லாச் சொன்னிங்க, போங்க! சரி, இது கிடக் கட்டும். மித்தல் சாகப் எப்படி இருக்கிருர்? சொல்லுங்க! ரிமாண்டிலிருந்தவன் கொலே விஷயம் என்ன ஆயிற்று” என்று வினவியதும் ரங்க காத்தின் ரத்தமே உறைந்துவிட்டது. தழுதழுத்த குரலில், “எனக் கென்ன தெரியும் இதெல்லாம்? அந்த மித்தல் என்பவன் யார்?’ என்று கேட்டான்.
டிரைவரின் சிரிப்பு ப்ரேக் போட்டதுபோல் நின்றுவிட்டது. டிரக்கின் வேகமும் சற்றுக் குறைந்துவிட்டது. ரங்கநாத்தை உற்றுப் பார்த்தவாறே கேட்டான்: 'உங்களுக்கு மித்தல் சாகப்பைத் தெரியாதா?”
‘தெரியாது.” *ஜயின் சாகப்பை?” *தெரியாது.” டிரைவர் ஜன்னல் வழியே காறி உமிழ்ந்து விட்டுத் தெளி வான குரலில் கேட்டான். 'தாங்கள் சி. ஐ. டி. யில் தானே வேலே பார்க்கிறீங்க?"
ரங்க காத்துக்கு எரிச்சலாக வந்தது. “சி. ஐ. டி யா? அப் படீன்னு என்ன?’ நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றிய டிரைவரின் பார்வை, கண்முன்னே நீண்டு கிடந்த பாதையில் படிந்தது. சில மாட்டு வண்டிகள் ஊர்ந்துகொண் டிருந்தன.6 தர்பாரி ராகம்
எப்பொழுது, எங்கே சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அங்கே காலே நீட்டிப் படுத்துவிடவேண்டியதுதான் என்ற பொதுப் படையான சித்தாந்தத்தை நிறைவேற்றுபவர்களாய் வண்டிக் காரர்கள் காலே நீட்டிப் படுத்து, முக த்தைத் துணியால் மூடிய வண்ணம் உறங்கிக்கொண் டிருந்தார்கள். மாடுகள் தங்கள் திறமையினல் அல்லது பழக்கத்தினுல் தம் பாட்டில் வண்டியை இழுத்துச் சென்று கொண் டிருந்தன. இதுவும் கூட ‘மக்கள்’, *மகேசன்’ என்று பேசக்கூடிய விஷயங் தான். ஆனல் ரங்க நாத்துக்கு எதையும் பேசக் கூடிய துணிவு இல்லே இப்பொழுது. அந்தச் சி. ஐ. டி. என்ற வார்த்தைகளே அவனை ஒரு கலக்குக் கலக்கி விட்டிருந்தன. டிரைவர் முதலில் ரப்பர் ஹார்னே அழுத் தினன். பின்னர் ஆரோகண அவரோகண ஸ்வரங்களில் ஒலிக்கும் ஹார்னே அழுத்தினன். நாரா சமாயிருந்தது அந்த ஒலி. ஆணு ல் வண்டிகள் நகரவில்லே. தன் வழியே மெல்ல மெல்ல அசைந்து கொண்டிருந்தன. டிரக்கை வெகு வேகமாய் ஒட்டிக் கொண்டு வந்த டிரைவர், மாட்டு வண்டி கஃாக் கடந்து செல்லவே விரும்பினுன். ஆனல் வண்டிகளே நெருங்கியதுமே, தான் செலுத்திக்கொண்டிருப்பது டிரக் தான், ஹெலிகாப்டர் அல்ல என்பது தெரிந்துவிட்டது போலும். சட்டெனப் பிரேக்கைப் போட்டான். பேனலில் செருகி வைத் திருந்த கட்டையைக் கீழே தள்ளினன். கியரை மாற்றியவன், வண்டி களே உராய்வதுபோல் அவற்றைக் கடந்து விர்ரெனச் சென்று விட்டான். சற்றுத் தூரம் சென்றதும் வெறுப்பு நிறைந்த குரலில் கேட்டான்: ‘சி. ஐ. டி. இல்லையென் ருல் இந்தக் கத ரெல்லாம் ஏன் போட்டுக்கொண் டிருக்கிறீங்க நீங்க?”
ரங்கநாத் இந்தத் தாக்குதலில் பின்னும் சற்று வெலவெலத் துப் போய்விட்டான். இருந்தாலும் சகஜமான விசாரிப்பாகக் கருதுபவன் போல், “இந்தக் காலத்தில் எல்லாருங் தானே கதர் போடுகிறர்கள்” என்ருன் நிதானமாக
* சாதாரண ஆசாமி எவனும் கட்டுவதில்லையே!’ என்ற டிரைவர் மீண்டும் ஒரு முறை காறி உமிழ்ந்தவன் கியரை டாப் பில் போட்டான்.
டிரக்கின் பின்புறமிருந்து வெகு நேரமாய் ஒரு ஹார்ன் ஒலித்துக்கொண்டே இருந்தது. ரங்கநாத் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். டிரைவரோ கேட்டும் கேளாதவன் போல் பாவித்தான். சற் று நேரத்திற்கெல்லாம் பின்னலிருந்தஅத்தியாயம் ஒன்று 7
கிளினர் தொங்கிக் கொண்டே நகர்ந்து, டிரைவரின் காதரு கிலே இருந்த ஜன்னலில் டிக் டிக்கெனத் தட்டி ஓசை எழுப்பிய தும் டிரக்கின் வேகம் குறைந்துவிட்டது. பாதையின் இடது புறத்துக்கு டிரைவர் டிரக்கை மாற்றி விட்டான்.
ஹார்னின் ஒலி ஒரு ஸ்டேஷன் வாகனிலிருந்துதான் வந்து கொண்டிருந்தது. வலது புறமாக முன்னேறி வந்த அதன் வேகம் குறைய, வண்டியினுள்ளே இருந்து நீண்ட கரம் ஒன்று டிரக்கை நிற்கும் படி சைகை காட்டவே, இரண்டுமே நின்று விட்டன.
ஸ்டேஷன் வாகனிலிருந்து அதிகா ரிபோன்ற தோரனேயுடன் ஒரு பியூனும், பியூன் போலிருந்த ஓர் அதிகாரியும் இறங்கினர். கூடவே காக்கி உடை அணிந்த இரு போலீஸ்காரர்களும் இறங் கினர். அவ்வளவுதான். பிண்டா ரிகள் போல் இழுத்துப் பறிக் கும் சோதனை ஆரம்பமாகிவிட்டது. ஒருவன் டிரைவரின் டிரைவிங் லே சென் ஸைப் பிடுங்கினன். ரிஜிஸ்ட்ரேஷன் கார்டை இன்னெருத்தான் பறிமுத்ல் செய்தான். ஒருவன் டிரைவர் எமீட்டின் முன் ைலிருந்த கண்ணடியைத் தட்டிப் பார்த் தான். ஹார்னே அழுத்தினன். ஒருத்தன் ப்ரேக்கைச் சோதித் தான். புட்போர்டை ஆட்டிப் பார்த்தான். விளக் கைப் போட் டான். மணியை அடித்துச் சோதித்தான். அவர்கள் எதைப் பார்த்தாலும், எதில் கை வைத்தாலும் அது மோசமாய் இருந் தது. எதைத் தொட்டாலும் அது வேலே செய்ய மறுத்தது. நான்கு நிமிஷத்திற்குள் அந்த நான்கு பேரும் டிரக் கில் 40 குறைகளேப் பரிசோதித்து அறிந்துவிட்டனர். சோதனை முடிங் ததும் இறங்கிச் சென்று ஒரு மரத்தினடியில் கூடி நின்று விவாதிக்கலாயினர். விவாதத்தின் விஷயம்? எதிரியிடம் எந்த விதமாய் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான்.
ரங்க நாத் சற்றுத் தள்ளி வேருெரு மரத்தின் அடி யிலே போய் நின் முன், டிரை வருக்கும் "செக் கிங்’ குழுவினருக்கு மிடையே டிரக்கின் ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் விவாதம் நடந்துகொண் டிருந்தது. பின்னர் மெல்ல மெல்ல டிரக்கின் கருவிகளே விட்டு நழுவிய விவாதம் நாட்டின் கிலே, மோசமான பொருளாதாரம் பற்றிய விஷயத்துக்கு வந்துவிட்டது. சற் றைக்கெல்லாம் அங்குக் கூடியிருந்தவர்கள் தனித்தனிக் குழு வாகப் பிரிந்தனர். குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் நிபுணர் போல் தனித்தனியே ஒரு மரத்தின் கீழே நின்று ஒவ்வொரு விஷயத்8 தர்பாரி ராகம்
தைப் பற்றியும் சிந்திக்கலாயினர். நெடு நேர விவாதம். சிந் தனேக்குப் பின்னர் ஒரு மரத்தின் அடியிலே மீண்டும் திறந்த வெளி அரங்கம் கூடியது. சற்றைக்கெல்லாம் விவாதம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது எனத் தோன்றியது.
கடைசியில் அதிகாரியின் வரட்டுக் குரல் ரங்கநாத்தின் காதில் விழுந்தது: "என்ன? அஷ் பாக்மியான் ! என்ன சொல் லுகிருய்? மன்னித்து விடலாமா?"
“வேறு என்ன செய்ய முடியும் சாகப்? ஏதாவது ஒரு விஷயம் மோசமாயிருக்கிற தென் ருல் சார்ஜ் செய்யலாம்; எது எதுக்கென்று சார்ஜ் செய்வது?" சில நிமிஷம் ஏதேதோ பேசிய அதிகாரி முடிவில் கூறினர் 'சரி, பன்டா சிங்! நீ போகலாம். உன்னை மன்னித்துவிட்டேன்.”
'ஐயா ஒருவரால்தான் இப்படி நடந்துக்க முடியும்’ என்று முக ஸ்துதி பாடினன் டிரைவர்.
மரத்தடியில் நின்றுகொண் டிருந்த ரங்க காத்தை அந்த அதிகாரி நெடு நேரமாய்க் கவனித்துக் கொண்டே இருந்தார். இப்பொழுது சிகரெட்டைப் புகைத்தவாறே அவனே நோக்கி வந்தவர், அவனே நெருங்கியதும், 'நீங்களும் இந்த டிரக்கில் பிரயாணம் செய்கிறீர்களா?" என வினவினர்.
"ஆமாம்’ என்ருன் ரங்கநாத், 'உங்களிடம் சார்ஜ் எதுவும் இவன் வாங்கிக்கொள்ள at 6ial GL?' 'இல்லை." 'உங்கள் உடையைப் பார்த்ததுமே இது தெரிந்துவிட்டது. ஆனல் விசாரிப்பது என் கடமையல்லவா?”
அவரைக் கிண்டல் செய்ய விரும்பிய ரங்கநாத் சொன்னுன் 'இது அசல் கதர் அல்ல, மில் கதர்.”
'அரே சாகப் ! இதனுல் என்ன? கதர் என்ருல் கதர்தான்; இதில் அசலாவது, நகலாவது?” \ என்ருர் மரியாதையுடன்,
அதிகாரி அவ்விடம் விட்டகன் றதும் டிரை வரும், பியூனும் ரங்கநாத்திடம் வந்தனர். 'சார் இரண்டு ரூபாய் கொடுங்க” என்ருன் டிரைவர். r
முக த்தைத் திருப்பிக் கொண்ட ரங்கநாத் கடுமை தொனிக்க, 'ஏன்? நான் எதுக்காக ரூபாய் கொடுக்கணும்?” என்ருன்.
டிரைவர் பியூனின் கரத்தைப் பற்றி, "வாங்க, நீங்க வாங்க என் கூட” என்றவன், போகும்போது ரங்கநாத்தை நோக்கி,-அத்தியாயம் ஒன்று 9
'உன்னுல்தான் இன்ஃனக்கிச் செக்கிங் நடந்தது. நீயே கஷ்ட காலத்தில் என்னிடம் இப்படிப் பேசுகிருயே! இதுதான் நீ படித்த படிப்பா?” என்று கேட்டுக்கொண்டே சென்ருன் ,
தற்காலக் கல்வி இருக்கிறதே அது வழியில் படுத்துக் கிடக்கும் நாய் மாதிரிதான். யார் வேண்டுமானலும் அதை எட்டி உதைக்கலாம். இந்த டிரைவர் கூட அப்படித்தான். கடந்து கொண்டே அதை எட்டி ஓர் உதை உதைத்துவிட்டுப் பியூனுடன் டிரக்கை நோக்கிச் சென்றுவிட்டான்.
ரங்கநாத் பார்த்தான். மாலைப் பொழுது இறங்கிக்கொண் டிருக்கிறது. அவனுடைய தோற்பெட்டியோ டிரக்கில் இருக் கிறது. சிவபால் கஞ்ச் இங்கிருந்து குறைந்த பட்சம் 5 மைலா வது இருக்கும். இவர்களுடைய நல்லெண்ணமும் ஒத்துழைப் பும் மிகத் தேவை என்பதை உணர்ந்ததும் அவன் கால்கள் டிரக்கை நோக்கி எட்டி நடை போட்டன.
ஸ்டேஷன் வாகனின் டிரைவர் ஹார்னே அடித்து அடித்துப் பியூனே அழைத்துக்கொண் டிருந்தான். ரங்கநாத் இரண்டு ரூபாயை டிரை வருக்குக் கொடுக்க விரும்பியதும் அவன் அலட்சியமாகக் கூறினன்: ‘'இப்பக் கொடுக்கிறதா இருந்தா பியூனுக்குக் கொடுங்க. எனக்கு எதுக்கு ரூபாய்?”
இதைக் கூறும் பொழுதே அவன் குரலில் காசைக் கரத்தால் தீண்டாத, "உன் காசு எனக்குத் தூசுக்குச் சமானம்’ எனக் கூறும் சாதுக்களின் தொணி வந்துவிட்டது. ரூபாயைப் பையில் போட்டுக்கொண்ட பியூன் பீடியைக் கடைசியாக இழுத்துப் புகை த்த பின், பாதி எரிந்த பீடித் துண்டை ரங்கநாத்தின் பைஜாமாவின் மீது வீசிவிட்டு ஸ்டேஷன் வாகனே கோக்கி நடந்துவிட்டான். அவர்கள் புறப்பட்ட பின், டிரைவர் டிரக்கை ஒட்டினன். இம்முறை கியரை டாப்பில் போட்டுவிட்டு ரங்க நாத்தின் கரத்தில் கொடுத்துவிட்டான்.
வண்டி ஓடியது. சற்று நேரத்துக்கெல்லாம் அக்தி வே&ளயின் மங்கலான ஒளியில் பாதையின் இருபுறமும் உருட்டிவிட்ட மூட்டைகள் மாதிரி தெரிந்தன. அவை முட்டைகள் அல்ல; பெண்கள்தாம் இப்படி வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர் என்பது தெரிய வங்தது. மிகவும் சாவகாசமாய் அரட்ட்ை அடித்தவாறு காற்று வாங்கிக்கொண் டிருந்த அவர்கள் அதே சமயத்தில் மல, மூத்திரமும் கழித்துக்கொண் டிருந்தார்கள்.10 தர்பாரி ராகம்
பாதை ஒரத்தில் குப்பைக் கூளங்கள் நிறைந்து கிடந்தன போலும், மாலை நேரத்திய மென் காற்று, அந்த முடை நாற்றத்தின் சுமையால் கர்ப்பிணிப் பெண் னே ப் போல் தளர் நடை போட்டுக்கொண் டிருந்தது.
தொலேவிலே நாய்கள் குரைத்தன. கண்களுக்கெதிரே புகை மண்டலம் மேலே எழும்பிச் செல்வது தென் பட்டது. அவர்கள் ஒரு கிராமத்தை நெருங்கிக்கொண் டிருக்கின்றனர் என்பதை எவரும் மறுக்க முடியாது.
இதுதான் சிவபால் கஞ்ச்.