தமிழ் அமிழ்தம் www.padippkam.com for pdf
நகுலனின் நாவல்கள்
நகுலனின் எழுத்துக்களில் ஈடுபட்டது தீவிரமான ஆன்மீக யாத்திரையாய் போய்க்கொண்டிருந்தது. சுசீலாவையும் பூட்ரிஸையும் நவோமியையும் தேடுகையில், புல்லிதழ்களில் ஒளிரும் வெண்பனிப்புள்ளிகளும் பிரண்டைப் பூக்களின் மணிப்புள்ளிகளும் காணக்கிடைத்தது பாக்கியமே. நகுலனிலிருந்து பயணம் தொடங்கும் கோணங்கிக்காக...
சா. தேவதாஸ்
நகுலன் : முடிவுறாத தேடலும், சிறகடிப்பும்
''....சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார் என்பது தெரியாது என்பதனால், என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எது என்று கண்டுபிடிக்க, எழுத்தை நாடுகிறேன்." (-நகுலன்/'வேளை வந்துற்றபோது கட்டுரையில்)
நாற்பதாண்டுகால எழுத்துலக இயக்கத்தில் நகுலனிடமிருந்து விதவிதமான பிரதிகள் கிடைத்துள்ளன. ஒரு பக்கம் வார்த்தை விளையாட்டுகளாய், இன்னொரு பக்கம் தீவிரமான விசாரமாய், வேறொரு பக்கம் ஆவேசமான உணர்வுத் தெறிப்பாய்ப் பாய்ச்சல் கொள்பவை அப்பிரதிகள். பைத்தியங்களின் உறைவாய்த்தோற்றம் தரும் அதே வேளையில், பைத்தியங்களின் பீதி நிறைந்த சொரூபத்தைக் காட்டிவிடும் வல்லமையினையும் பெற்றிருக்கும்; ப்ரூகளின், வான்காவின் தீவிரத்தீட்டுதல்களை ஒத்திருக்கும்."
இந்திய ஆன்மீக தத்துவ இழைகளை அடிக்கடி தொற்றியபடி விசாரம் செய்யும் நகுலன், அதனை - அப்படியே ஏற்றுக்கொள்கின்றாரா? ' '-
வேதாந்த உண்மைகளை எடுத்துரைக்கத்தான் அவரது இலக்கியப் பிரதிகள் உருவாக்கப்பட்டனவா? 'நேதி', 'நேதி' என எதிர்மறையாய் முடிவுறும் தத்துவமரபிலிருந்து நகுலனின் திசைவழி எங்கே போகிறது?
தீவிர ஆன்மிகப் பிடிப்பு இருந்தபோதிலும் தெய்வத்தைப்பற்றி அவர் கவலைப்படவில்லை . இதன் காரணமாகவே பிரம்மத்துடன் சங்கமிப்பது பற்றிய தேடலே எழுத்தில் அவரை ஈடுபடவைக்கிறது. இத்தேடலில் தன்னை அறிந்திட முடிந்ததா?
தமிழில் கதையைத் தவிர்த்துவிட்டுக் கதை எழுதியவர் என்று நகுலனைத்தான் கூற வேண்டும். அதிலும் யதார்த்தவாதத்தில் பாத்திரவார்ப்பு சம்பவக் கோவை பிரச்சினைகளின் விரிப்பு, கதைப்பின்னல் என்றவாறு நவீனத்தமிழ் எழுத்துலகம் போய்க்கொண்டிருந்த காலகட்டத்தில் புதிய வடிவத்தில் புதிய சொல்லாடல்களை நிகழ்த்தியவர். சமூகத்தைப் பாதிக்கின்ற/ சமூகம் சார்ந்த சிக்கல்களை நேரடியாகத் தொடாமல் 'சில நபர்களின் அக உலகங்களுக்குள் யாத்திரை செய்வதாக அமைந்தது நகுலன் எழுத்து. அதற்காக யதார்த்த பாணியிலான நாவல்களின் வரும் உளவியல் சித்தரிப்பில் இறங்குவதில்லை அவர்.
சாரதி என்பவனின் கதையைப் படித்துவிட்டு நவீனன் தன் அபிப்பிராயமாக "நிழல்களில் இப்படி பதிவு செய்கிறான்
பெரும்பாலும் பேச்சு நடையிலேயே எழுதுவது நகுலனின் தனிச்சிறப்பான பண்பு. இதனால் நகுலனின் தீவிரமான எண்ண - - ஓட்டங்கள் கூட தனக்குள் தானே நிகழ்த்திக்கொள்ளும் உரையாடல்களாகி விடுகின்றன. நகுலன் எழுத்து எப்பொழுதும் முடிவுகளை, தீர்வுகளை விளக்கங்களை முன்வைப்பதில்லை. அவரது உரையாடல்கள் புதிர்களைப் போடு கின்றன, குழப்பங்களை முன் வைக்கின்றன. புதிர்களும் சிக்கல்களும் மர்மங்களும் கொண்டுள்ள தான வாழ்க்கையின் கதியைக் கள்ளங்கபடமற்றதான குழந்தையின் கனிவுடன் கண்டு நகைக்கின்றது; புதிர்களை விடுவித்துப் புதிய புதிர்களைப் போடுகின்றது; மர்மங்களை அவிழ்த்து வேறு விசித்திரங்களைச் சேர்க்கிறது. ----
"சாமி ஐயங்கார், சகோதரி சாரதா, ஸ்டாலின் பக்தர் பராங்குச நாயுடு, ஆரோக்கியசாமி, ஏன் கேசவமாதவன் கூட - இவர்கள் பிரதிரூப பிம்பங்கள் ஒன்றும் என் மனதில் யாதொரு கவனத்தையும் விளைவிக்கவில்லை. இந்த ராமசாமி ஐயங்கார் என்ற சாமி ஐயங்கார் என்பவர் மாத்திரம் என் உயிரை வதைக்கிறார்.
தன் கதையை நவீனனிடம் சொல்லிக்கொண்டிருக்கும் சாரதியின் பேச்சில் இது இடம்பெறுகிறது.
தன் சார்புகளையெல்லாம் சூழல்களையெல்லாம் திறந்த புத்தகமாக்கியிருப்பது நகுலனிடம் உள்ள இன்னொரு வலுவான அம்சம். தமிழில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்களைப் பொருத்தவரை இரண்டு முகங்கள் இருக்கும். எழுத்தில் தெரியும் முகம் வேறு, தனிப்பட்ட வாழ்வுக்குரிய முகம் வேறு. சிலரைப் பொருத்தவரை, திட்டமிட்டு இரகசியமாகக் காப்பாற்றப்படும் அந்தரங்கமுகம். சிலரைப் பொருத்தவரை, உயர்ந்த விஷயங்களை விட்டுவிடவேண்டும் என்ற நடைமுறை. நகுலனுக்கு இந்தப் பேதங்கள் இல்லை . மனதின் மூலை முடுக்கில் ஒளிந்திருக்கும் சபலம், -- குயுக்தி, வேட்கைகளிலிருந்து சதா ஓடியவாறு இருக்கும் எண்ணப் பிரவாகமெனும் சிந்தனைச் சுழிப்பு வரை அனைத்தும் எழுத்தில் முகம் காட்டும். முதலில், ஒளிவுமறைவின்றி முற்றமுழுதாகத் தன்னைப் பிரதியில் காட்டுவது.
அடுத்து, இது ஒருவகையான ஒப்புவித்தல் - மனதில் உள்ளதையெல்லாம் கொட்டித்தீர்த்து விச்ராந்தியாதல். அப்போது தன்னைச் சரியாக அடையாளங்கண்டு கொள்ளகூடும். 'வார்த்தைகள் வந்தன. கதவுகள் திறந்தன' என்பது மாதிரி அகத்தரிசனங்களுக்கு உபாயம்.
இந்த அம்சத்தைப் ப. கிருஷ்ணசாமி அழகுபடத் தொட்டுக்காட்டுகிறார்:
சாரதி சொன்னதாக நவீனன் தன் டைரியில் எழுதியுள்ள குறிப்பு இது.
"ஏதோ ஒன்றின் பிரதிபலிப்பு' என்ற உணர்வு அடிப்படையான தத்துவ உண்மை . அதற்கு எதிர்நிலையில் இருப்பது - 'ஒரு-ஸ்வரூபம் இருப்பதாக' உணர்வது இந்தச் சிக்கலும் மோதலும் உராய்வும் நகுலனின் சொல்லாடலின் தொடக்கங்கள், பிரதிபலிப்பு என்ற நிலையில் ஒரு ஜீவிக்கு முயன்று அடையவேண்டியது ஏதுமில்லை. தனிச் சொரூபம் உண்டு என்று கொள்ளும்போது உருவாதல் நிகழும் பரிணமித்தல் நிகழும் இந்தியாவில் தத்துவப் போக்குகளுக்குள்ளும் இந்தப் பிரிவினைகளும் வேறு வேறான போக்குகளும் நிலவினாலும், ஏகத்துவமாக்கும் - சங்கரரின் அத்வைதம் சட்டாம்பிள்ளையாகிவிடும். மற்றவற்றை தலையில் குட்டி - - அமர்த்திவிடும்.
மேலோங்கி நிற்கும் அத்வைதம் வேதாந்த உண்மையினை நேதி, நேதி என்று விலக்கிக்கொண்டே போயிருக்கும். அது, இதுதான் பிரும்மம் என்று சுட்டிக்காட்டுவதில்லை. பிரம்மம் என்று அடையாளங்காட்டுவதில்லை. மாறாக, இது இல்லை, இது இல்லை என்று எதிர்மறையாக விளக்கிக்கொண்டே போகும்.
நகுலனின் இகர முதல்வியும் இதனைச் செய்கின்றாள். வேதாந்தத்தின் போக்கையும் இகரமுதல்வியின் போக்கையும் ஓரிடத்தில் இணைத்துவிடுவது நகுலன் செய்யும் ரசமான விளையாட்டு
'இன்மை பகரும்
இகர முதல்விக்கு
இந்"நிழல்கள்"
உண்மை பகரும்'
என்று சமர்ப்பனத்தில் அதனைக் கோடி காட்டுவார்.
“வாக்குமூலத்தில் மஞ்சள் - வெள்ளைப் பூனை - கடுவன் பூனை குறித்த சொல்லாடலிலும் இது தெறிக்கும்.
"அந்தப் பூனையை அதன் சுபாவம் அறிந்து அதை அதாக அறிந்து கொண்டபிறகுதான் இந்தப் புரியுந்தன்மை ஏற்பட்டது. "...
இது மென்மை என்றால் அது கடினம் - இது மிருது என்றால் அது முரடு. இவற்றுக்கிடையில் இருக்கும் உறவு. '...
இந்தப் பூனைகளுக்கு உள்ளதுபோல ஒருவிதப் பயமின்மை , ஒரு அவசிய பாவம் எல்லாம் வேண்டும். எழுத்தாளனுக்குப்பாலும் புலாலும் அவசியம் என்று வைத்துக்கொள்.
இந்தச் சிக்கலை/பார்வையை காப்ஃகாவை வாசிக்கும்போது நகுலன் முன் வைக்கின்றார்:
இது இந்திய தத்துவத்தில் அடிப்படையாய் வற்புறுத்தப்படுவது. நகுலனின் மன உலகிலும் இந்த விசாரமே ஆக்கிரமித்துக்கிடக்கிறது. இந்த வெளிவரிச்சட்டத்திலிருந்து வெளியேறிதாண்டுதலாக அவ்வப்போது வாசகங்களும் தெறிப்புகளும் இடம்பெறும். இப்படியாக
"சுவர்களை எழுப்பிக் கொண்டு என்னால் சொந்தமாக வாழமுடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. என்னையே நான் தேட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்"
தேடுதல் நிற்கும்போது வாக்கியம் முற்றுப்புள்ளி பெற்று விடும், வார்த்தைகள் நின்றுவிடும், பிரதி உருவாகாது.
தட்டுமுட்டுச் சாமான்கள் அடுக்கப்படும் மேஜையாகவும் சவிட்டு மெத்தையாகிவிட்டதாகவும் பிரமைகள் கொள்கின்ற இராஜசேகரன் மனநோயாளி இல்லை என்பதற்கான ஆட்சேபத்தை சாஸ்திரிகள் தெரிவிப்பார்: ''...
மொழி - அளவில் இவை சில மன நிலைகளைச் சித்தரிக்கின்றன. ஏனென்றால் எந்த மனிதனும் எப்படி ஒரு மேஜையாக ஒரு சாக்ஷாத் சவிட்டு மெத்தையாக மாறமுடியும். இதனால்தான் எனக்கு இவன் பைத்தியம் இல்லை என்று தோன்றுகிறது. இவன் ஒரு கட்டத்தில் அல்லது இன்னொரு கட்டத்தில் தன்னை ஒரு கலைஞனாகவே ஸ்தாபித்துக்கொண்டு விடுவான்"
தத்துவத்தின் பிரச்சனையை கலைஞனின் பிரச்சனையாக மாற்றிக்கொண்டதுதான் நகுலன் சாதித்த பெரிய சாதனை. இல்லாது போனால் இந்தச் சொல்லாடல்கள் பிறந்திருக்க சந்தர்ப்பம் வாய்த்திருக்காது.
பார்க்கப்படுவதும், பார்ப்பவனும் தீவிரப்படும்போது பார்ப்பவன் இல்லாது போய்ப் பார்த்தல் மட்டும் நிகழவேண்டும். பார்ப்பவன் இல்லாது போகும் போது தான், கடந்தகாலக் - கவலைகளும் ! முன்னனுமானங்களும் எதிர்கால எதிர் பார்ப்புகளும் இல்லாது நிகழ் காலத்து அனுபவம் மட்டும் அதன் தீவிரகதியில் நிகழ வாய்ப்புண்டு. இந்தப் பார்வையும் அணுகுமுறையும் கலைஞனுக்கு இருந்தால் என்ன நிகழும் என்பதுதான் நகுலனிடம் நாம் காண்பது.
இப்பொழுதான் இக்கணத்திலான அனுபவத்தில் மட்டும் கவனத்தைக் குவிப்பது - மற்றவற்றையெல்லாம் விலக்கித்தள்ளிவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் நதியாக மனதை வைத்திருப்பது, அதில் நினைவுகள் என்ற பாசி படியாது காப்பது - இதுதான் ஜே. கிருஷ்ணமூர்த்தி முன்வைப்பது.
இக்கணத்தின் தீவிரத்தை/உக்கிரத்தை எதிர்கொள்ளத் தயங்குகையில் நினைவுகள் குமிழியிடுகின்றன, சற் ஆறுதல் தருகின்றன. இத்திசை விலகலில் நிகழின் ணம் இழக்கப்படுகிறது. இந்தப்போக்கில் = ச T தப்பித்தலையும் திசை விலகலையும் மனம் நாடத்தலைப்படுகிறது. மனதை அதன் போக்கில் விட்டால் என்ன கிடைக்கும், "நினைவுப் பாதை" கிடைக்கும்.
'தத்துவார்த்தப் பிரச்சினைகள் எழுவதே மொழி தறிகெட்டுப்போவதால்தான் என்னும் ஜென்ஸ்பீனின் வாசகத்தை நகுலன் மேற்கோள் காட்டுவார். ஆனால், அதில் ஒரு லாபமும் உண்டு. தறிகெட்டுப்போகும் மொழியைப் பதிவு செய்தால் அற்புதமானதும் அதிர்ச்சி தருவதுமான பிரதியாயிருக்கும். அது நினைவுப்பாதை.
'வாழ்க்கையைப்பற்றி ஒரு பரஸ்பரமான சர்ச்சை' செய்திட நாட்குறிப்பு வடிவத்தைத் தெரிவு செய்து கொண்டு 28.03.69 லிருந்து 14.04.90 வரை மனநோய் விடுதியிலிருந்தபோது உண்டான மன அவசங்களை உரைநடையும் கவிதையுமாக நகுலன் தந்திருப்பது "நினைவுப்பாதை" நாட்குறிப்பு என்பதால் அது உணர்வு பாவங்கள் நீங்கிய அறிவார்த்தப் பதிவுகளாக நின்றுபோகவில்லை. நவீனன்
நகுலனுடன் கொள்ளும் உரையாடலாக இருக்கிறது. வாசகனுடன் பேசுவதாக அமைகிறது. பேச்சு மொழியில் போகிறது. கட்டற்ற நகையுணர்வில் தீவிரமான விசாரங்கள் நிகழ்த்தப்படுவது அலாதியான தன்மை பெற்று விடுகின்றன. மொழியில் இறுக்கத்தை தவிர்க்கமுடிந்ததும், உரையாடல் நிகழ்த்த முடிந்ததும், நகை உணர்வுடன் பேச முடிந்ததும் தான், நகுலனால் புதுப்பிராந்தியங்களில் பயணிப்பதை சாத்தியமாக்கி இருக்கிறது. இந்திய தத்துவ விசாரத்தின் நிழலை மாத்திரம் பதிவு செய்திடாமல், சுயரூபம் கொண்ட சொல்லாடலைச் செய்ய முடிந்திருக்கிறது. அத்தீவிரத்தில் உரைநடையை விட்டுவிட்டு, கவிதையைக் கைக்கொள்ள நேர்கிறது. அப்போது கடவுளை நோக்கியதாய்ப் பயணமும் சஞ்சாரமும் இருந்திருப்பின் மானுடத்தி திளைப்பில் - பக்தி மரபினரின் கவிதைகள் கிடைத்திருக்கும். - இங்கே - கடவுளை நோக்கியதாயில்லாததால், அனுபூதி கவிதைகளின் இடத்திலே நாவல் பிரதிகள் உருக்கொள்கின்றன. "
இந்தக் கரைதல், ஆழ்தல் என்ப து புற உலகை மறந்துவிடவா?
இந்த கரைதலும், ஆழ்தலும் உண்டாக்கும் ரசவாதம் ஒன்றுண்டு. நிகழ்ச்சிப் போக்கு ஒன்று நிகழ்கிறது. "
''நினைவுப் பாதையில் இடம்பெறும் இன்னொரு சொல்லாடல் சுசீலா தொடர்பானது.
காதலிக்கப்பட்டவள் இன்னொருவனுக்கு மனைவியாகி விடுகிறாள். இது சம்பவம். பின்னர் அவளின் நினைவு, பிரிவின் வேதனையாகத் தொடங்கி, அவனுக்கு உத்வேகம் அளிக்கும் உணர்வாக, அவனை மீட்டெடுக்கும் சக்தியாக, விடுதலை தந்து காக்கும் தேவதையாக அவளை மாற்றியமைத்துக்கொண்டே இருக்கிறது. இதில் உருமாறுவது நகுலன் மட்டுமா? சுசீலாவும்தான். ஒரு முகங்கொண்ட சுசீலாவை பன்முகங்கொண்ட வியாபியாக மாற்றிக்காண்பது நகுலன் தானே! இந்த அர்த்தம் தொனிக்க எழுதியதுதானே 'சுசீலாவிடம் -- இல்லை சுசீலாவின் சிறப்பு' என்னும் வாசகம்.
"... ஒரு கணத்தில் கண்டது முதல் இந்தக் கட்டை கீழே விழும்வரை என்னில் இருக்கும் சுசீலா என்ற என் சாபத்தை - இவர்களையெல்லாம் இலைகளையெல்லாம் விட '
நீ தான் எனக்கு
வேண்டியிருக்கிறது.
நீ வரவும் மாட்டாய்
போகவும் மாட்டாய்
நீ இருக்கிறாயோ
இல்லையோ
என்பதுகூட
எனக்கு நிச்சயமாகத்
தெரியாது' ”
சுசீலாவை சாபமாகக் குறிப்பிட்டாலும் அவருக்கு வரமாகவே திகழ்ந்திருக்கிறாள் என்பதை நம்மால் காணவே திணறுகிறது. நகுலனின் கதைகளும் கவிதைகளும் நாவல்களும் சுசீலாவை காரணமாகப் பிறந்தவைதானே! மௌனி கதைகளில் முகங்காட்டிய சுசீலா நகுலனிடம் ஊற்றுப்பிரவாகமாகிவிடுகிறாள்.
"காணும் பெண்களிடம் எல்லாம் சுசீலாவின் ஒரு அம்சம் தோன்றி மறைந்ததாக' போதங்கொள்ளும் நவீனன் நினைவில் படர்வது:
''அகிலலோகநாயகி, வராபயங்கரி, அன்னலெவியா, ப்ளுராபெல், ஐராவதி, காவேரி, கோதாவரி, கங்கா, யமுனா, நீளமாக ஓடும் நைல்நதி, இந்த நதியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. சமுத்திரம் போல் பொங்குகிறது."
"எப்பொழுதுமே மனிதன் பெண்ணை விரும்பும் அதே சமயம் அவளைக் கண்டு பயப்பட்டிருக்கிறான்...
“அவளோ அடிப்படையில் தாய்ப்பாம்பு. ஆடு பாம்பே ஆடு நாதன் முடிமேல் இருக்கும் நல்ல பாம்பு, குண்டலினி. சுசீலா நீ கம்பனைப் படித்திருக்கிறாயா? பிரிந்தவர் கூடினால் பேசமுடியுமா? நீ எப்பொழுது என்னைவிட்டுப் பிரிந்தாய்? ஏன் இப்படி உன்னைப் பற்றிப் பேசும் பொழுதும், எழுதும்பொழுதும் இந்தப் பரவசம்? இந்த அனுபவம் என்னை ஆழ்ந்த வியாகுலத்திலும் ஒருவகை செய்ய முடியாத ஆனந்தத்திலும் ஆழ்த்துகிறது. இந்த ஜென்மத்தில் நீ எனக்கு அன்பின், பக்தியின் புனிதத்தன்மையைக் கற்றுக்கொடுத்திருக்கிறாயள். இந்தத் தீ என்னைப் புனிதமாக்குகிறது, என்னைக் குளிர்விக்கிறது. இந்த நினைவில் நான் வாழ்வையே கடந்து விடுவேன்...' -
இளமைக் காலத்தைப் பாரிஸில் கழித்துவிட்டால் பின்னர் அது எப்போதும் எங்கும் ஒருவரை விட்டு அகலாத விருந்தாக இருந்துகொண்டே இருக்கும் என்னும் பொருளில் ஹெமிங்வே குறிப்பிட்ட 'For Paris is a movable feast'- ஆக நகுலனுக்கு சுசீலாவின் நினைவு.
இந்நினைவில் இன்னொன்று தட்டுப்படுகிறது. ஆண் தான் இழந்து போன மறந்து போன இன்னொரு பாதியான பெண் அம்சத்தை தேடிக்கொள்ளவேண்டும் என்று.
"Some Yogis can make both the penis and the testes disappear in the pubic arch, so that the body has the appearance of that of a woman"
என்னும் அவலானின் வரிகள் நகுலனை வெருட்டுகின்றன.
என்பது இதப்படுத்துகிறது. -
கலைஞன் என்ற நிலையில் இந்த உணர்வும் தேடலும் அவனை எங்கோ கொண்டுபோய் சேர்க்கும்? "
... கலைஞனும் சிருஷ்டி விஷயத்தில் ஈடுபடுகையில் பால் வேற்றுமையிலிருந்து அகன்று நிற்கிறான். அப்பொழுது அவன் ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி அர்த்த நாரீசுவர வடிவைப் பெறுகிறான். கலைக்குப் பொருந்துவதுதான் வாழ்க்கைக்கு பொருந்தும். தான் இழந்த பாதியைத்தான் இங்குப் பிறந்த துவேஷத்தால் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்" '
நாம் எது ஆவோம் என்றிருக்கிறதோ அது நம்மைப் பின் தொடர்கிறது. அதன்பின் நாம் செல்கிறோம்; நகுலனைப் பின் தொடர்வது யார்? சுசீலா. சுசீலாவை நகுலன் பின் தொடர்வது எதற்கு? சுசீலாவாக..
ஒரு கட்டத்தில் சுசீலா, கொல்லிப்பாவையாகி ஆட்டிவைப்பதுமுண்டு. வனப்புக் காட்டி வசீகரித்து மயக்கி உருவழித்து விடுபவள்தானே கொல்லிப் பாவை. அழித்து விடுபவள் கொல்லிப்பாவையா? தன்னில் கரைத்து விடுபவள் கொல்லிப் பாவையா? அழித்தல் வேறு, கரைத்தல் வேறா? "..
மறுகணம்
காலங்கண்டு '
நகைக்கும்
நிகழும் நிமிஷம் போல்
உயிர் வெளவி
உயிர் காக்கும்
யாதுமறியாப் பேதைபோல்
யான் போற்றும்
கொல்லிப்பாவையாள்
தன்மை பொலியத் தன்னுருவாய் -
நீ நிற்பாய்; ---
அது கண்ட நெஞ்சம் ---- -- - -
பறை கொட்ட
நின்முன் மீண்டும் மீண்டும் -
வந்தேன்; வகை செய்யப்பட்டேன்”
- இது மட்டுமில்லை. பால் பேதமற்று அவஸ்தை கொண்டு மன்றாடுதல் நிகழ்தலும் நடக்கின்றது:
"...நாக்கடித்து
வாய்ப்பறை கொட்டி - -
வேதாந்தக் கயிறு திரித்துக் -
குறிதான் ஏதுமின்றி
பேடியெனப் பால்திரிந்து
அவள் உருக் கண்டு
உள்ளங் குலைந்து
உரம் வேண்டி
வந்து போகும் அர்ச்சுனன் நான்"
இன்னும் சொல்லிவிட்ட நிறைவு உண்டாகவில்லை. - யூங்கின் வாசகம் பொறிதட்டுகிறது. - --
"அவள் கட்டுக்கடங்காத ஜீவப் பிரளயம்;
மோகினிப் பிசாசு; வாழ்விக்க வந்த பிராட்டி;
தவிர மனிதனைக் காதல் - சாதல் என்ற இரு உச்சங்களுடனே இழுத்துச் செல்லும் வேகம்; கியா சக்தி; பிளயத்தின் ரூப் சத்தியம்"
நினைவுப் பாதையின் 5வது அத்தியாயம் முழுவதும் நனவு மனத்தின் பங்கில்லாது முற்றிலும் நனவிலி மனத்தின் விகசிப்பாய் இருப்பது; 10.04.70 லிருந்து 14.04.70 வரையிலுமான இறுதி 5 நாட்களிலான குறிப்புகளைக்கொண்டது.
" கடுமையான 1 - கேலி - கிண்டலாயிருக்கும். கன்னாபின்னாவென்று போகும். எதையும் ஒன்றுமில்லாததாக்கிவிடும். உற்றார் - உறவினர், வேண்டியவர்-வேண்டாதவர், பெரியவர்- சிறியவர் நண்பர் - விரோதி எவரும் விலக்கப்படவில்லை. எல்லாருமே இப்பேனாவரைதலுக்கு ஆளாகி ஒன்றுமில்லாது போகின்றனர். இது, தன்னை ஒன்றுமில்லாதாக்கிக்கொள்ளும் நடவடிக்கையா...! அகத்தின் சுவடுகூட இல்லாது போவதற்கான சாதகமா?
எந்தத் தர்க்க விதிகளுக்கும் கட்டுப்படாது எந்த நியதிகளுக்கும் அடங்காது எல்லா வரம்புகளையும் மீறிப்பாயும் மனத்தில் பாய்ச்சல் இங்கே நிகழ்கிறது.
பயங்கரமாயும் பீதி நிறைந்ததாயும் சவால் மிக்கதாயும் உள்ள சித்தப் பேதலிப்பை இப்படி நையாண்டிக்குரிய விஷயமாக்குவது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல.
கோயாவும் ப்ரூகலும் வான்கோவும் ரிம்பாவும் தீவிர மனநிலைகளில் சஞ்சாரம் செய்ததைத் தீட்டியுள்ளனர், கவிதையாக்கியுள்ளனர். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காணவேண்டிய திகைப்புகளும் பிரமிப்புகளும் அவர்களிடம் காணவே கிடைக்கின்றன.
ஆனால் அத்தீவிர, உக்கிர கணங்களைத் தாண்டிய அபிந்தங்அடுத்தகட்டமாகிய எள்ளலும் பரிகசிப்பும் து வம்சமாக்குதலும் நகுலனிடம் இருப்பது தனிச்சிறப்பான ஒன்று. ந ச ல னி ட ம் உள்ளதுபோல எம். ெவ ங் க ட் ர ர மின் 1 க ா து க ளி ல் ' இடம்பெற்றுள்ளது.
பால் ய த் தி லே யே பெற்றோரை இழந்து அ ன ா ன த க ள் இ ல் ல த் தி ல் வ ள ர் ந த த ன் க ர ர ண ம ா க அடையாளச் சிக்கலில் உழன்று மனநோய்க் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்து கவிதைகள் எழுதத் தொடங்கிய பில்நாட் என்னும் அமெரிக்க கவியை இங்கே நினைவு படுத்தலாம். ஃபிரெஞ்சு ஆபாச நாவலின் கதாநாயகனின் பெயரான 'புனித ஜெராட் பில் நாட், தன்னைத் தனித்தொதுங்கித் தூரத்திலிருக்கும் குளிர்ந்த மீனாகக் கருதுவார்.
வாழ்விலும், கவிதையிலும் ஆளுமை இழந்திருப்பதானது, முடிந்த அளவுக்கு மக்களது உணர்வுப் போக்கையும் எண்ணப் போக்கையும் தன்னகத்தே கொண்டு வரும் வகையில், கற்பனை விரிவுக்கும் ஆளுமை விரிவுக்கும் வழிகோலும் என்று உணர்வார்.
நவோமி என்னும் கற்பிதமான பெண் மீதான காதலில் மொழிக்குச் சாத்தியமான - கற்பிதங்களையும் கனவுகளையும் உருவாக்கிவிடுவார்.
"சிறுமி ஒருத்தியின் கல்லறை மீதான
ஒரே எதிர்வினை
அதன் முன் கிடப்பதும் இறந்துவிட்டதுபோல -
வேடிக்கை காட்டுவதுமே” என்பார்
"ஒவ்வொரு மாலைப் போதும் கடல், நட்சத்திர மீனைகி கடற்கரையில் வீசிச் சிதறடிக்கின்றது. சூரியனில் இருண்ட வறுமைகளைப் படியவிட்டு, விடியலில் அவை மாண்டு போகின்றன. அக்கோடையில் நாங்கள் அங்கே துயின்றோம். அவற்றின் பிரகாசமான பரிமாணங்களில் எமது உடல்களால் புணர்ந்தோம். மூச்சிறைக்கும் நட்சத்திர மீன்களால் வளைக்கப்பட்ட நாங்கள் எங்களை உருவாக்க இணைந்தோம். எம் அவயவங்களிலிருந்து சொட்டிய வியர்வைத் துளிகளை இராவெல்லாம் உறிஞ்சி, அவை உயிர்த்திருந்தன. அடிக்கடி அவள் கூச்சலிட்டாள். உனது கரம்! - எனது அக்னியுடன் அவளைத் தழுவுகின்ற ஒரு நட்சத்திர மீன் அது" என்பார்
மனதை, புலன்களை முற்றிலும் ஒழுங்கு பிசகச் செய்தால்தான் கவிதை சாத்தியம் என்று இயங்கிய ஃபிரெஞ்சுக்கவி ரிம்பாவை நகுலனுக்கு அருகே கொண்டுவரமுடியும்.
சிறுவயதிலிருந்து தனித்து வளர்ந்து அனுபூதியாளர்களின் நம்பிக்கைகளுக்கு நெருக்கமான எண்ணங்களைக் கொண்டிருந்த ரிம்பா இடைக்காலத்து ரசவாதிகளை வீரர்களாகக் கருதியிருந்தார். "நான் என்பது இன்னொரு நபர்" என்று அவரது 15வது வயதில் குறிப்பிட்டார்.
கவிதை உருவாக்கத்தை ஆன்மீக வளர்ச்சியாகக் கொண்டிருந்தவர். மதத்தை இழிவு படுத்தினார். வீட்டிலிருந்து ஓடிச்சென்று தன்பால் புணர்ச்சியாளர்களுக்கு இரையானார். பால் வேர்லைன் என்பவர் மட்டுமே அவருக்கு நெருக்கமாயிருந்தார். இருபால் புணர்ச்சியாளரான வேர்லைன்தான், ரிம்பாவின் நெருக்கடியான காலகட்டங்களில் ஆறுதலாய் இருந்திருக்கிறார், வழி நடத்திச் சென்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் ரிம்பாவை நீங்கிச் சென்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிம்பாவைச் சுட்டுக்காயப்படுத்திவிடுகிறார். அதிலிருந்து தன் வீட்டில் தனி அறையில் உணவினைக்கூட மறுதலித்து, கூச்சலிட்டும் குழம்பியும் எழுதியும் தீவிர கணங்களில் வாசம் செய்கிறார். மறுபடியும் வீட்டிலிருந்து ஓடிச்செல்கிறார். அபிசீனியாவில் வர்த்தகராயிருக்கிறார். 37 வயதில் இறந்து போகும் ரிம்பா, 19 வயது வரைதான் கவிதை எழுதினார் என்பது இன்னொரு புதிர்மிகு விஷயம். |
"சூசிப்பெண்ணே
ரோசாப் பூவே
ராத்திரி வெயிலடிக்கும்
புகல்லிலே பைத்தியம் பிடிக்கும்...
"வாவா ஜகஜண்டி மாடே
மரத்துக்கு மரம் ஏறும் சம்மந்திக் குரங்கே
ஆனை புகுந்ததாம் தோப்பில்
அழுகப் பழுத்ததாம் மாம்பழம் -
குதிரை புகுந்ததாம் தோப்பில்
குலுங்கப் பழுத்ததாம் மாம்பழம்
சித்தானைக் குட்டிக்குக் கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம் சுத்தி சுத்தி வந்ததாம்
கையில் வெண்ணெய் சிந்திற்றோ -
' கமல முகம் வாடித்தோ
துயில் பட்ட தங்கமே
சங்கூதி ஜலம் தெளித்து..."
என்றபடி, கவிதையில் விசித்திரமான சொல்லாடல்களும் விபரீதமான படிமங்களும் அநாயசமான நினைவு கூர்தல்களும் ஒன்றாய் அமைகின்றன. மிகையதார்த்தப்பாணியில், ஆண்ட்ரே பிரெட்டன் குறிப்பிட்டது போல பேனா தானாக எழுதிச் செல்லும் முறை என்று சொல்லலாமா?
இன்னொரு பத்தியில் தன்னைப் பாடையில் கிடத்தும் காட்சியை விவரிக்கிறார். அப்போது கூட அவரது பேனா வரைந்து செல்வது பாரதி வரியை, புதுமைப்பித்தன் பாத்திரத்தை ... "...
பிரக்ஞையின் தீவிரகதியில் இயங்கி அதனைப் பிரதியாக்க முற்படும் கவிக்கு வார்த்தைகள் கூட தடையாகின்றன. மேலும் நாம் வாசிக்கும்போது வார்த்தைகளையா படிக்கிறோம்? என்ற கேள்வி வேறு எழுகின்றது. 'வார்த்தைகள் புத்தகத்தைக் கறைப்படுத்துகின்றன' என்ற மேற்கோள் நினைவுக்கு வருகிறது.
“படிக்கப் படிக்க வார்த்தைகள் அழிகின்றன. பிரக்ஞையின் நிதானமான போக்கும்"
உக்கிரம் கொண்ட பிரக்ஞையை வெள்ளைத்தாள்கள் எப்படிச் சகித்துக்கொள்ளும் என்பதான கவலைவேறு மூளும்; "பேப்பருக்குத்தான் எவ்வளவு சகிப்புத்தன்மை"
போலி செய்தலும் திரும்பச் சொல்வதும் எழுத்தாகா. "..
நானே எழுதின மாதிரி என் பேனா எழுத ஆரம்பிக்கிற பொழுதே, உருவங்கள் நிழல்கள் ஆகி விடுகின்றன" -
தர்க்க நியதிகளை உடைத்துப்போட்டு எழுத்து உடைப்பெடுக்கும்போது - தர்க்கரீதியாக - ஒரு வாக்கியத்தைப் புனைந்து பார்க்கத் தோன்றுகிறது நகுலனுக்கு: --
எங்கே புத்திசாலித்தனமாக இருப்பது அபாயகரமோ அங்கே முட்டாள்தனமாக இருப்பது புத்திசாலித்தனம்"
நவீனன் தான் எழுதிய 500 பக்கங்கள் கொண்ட நாட்குறிப்புகள் ஐந்தினை நகுலனிடம் தந்து விட்டுப்போகிறான். நவீனனைப் பற்றிய நினைவுகளையும் நாட்குறிப்புப் பகுதிகளையும் கொண்டதாக அமைந்தது ! "நவீனன் டைரி"
"நவீனன் டைரி" முழுவதுமே நனவிலி மனதின் விளையாட்டுத்தான்.
டயரி என்றால் என்ன? மனச்சிதறல்கள் என்பதாக இந்நாவலில் ஓர் உரையாடல் வரும், ஒருவகையில் மனச்சிதறல்கள் என்ற வரையறை இந்நாவலைப் பொருத்துக் கச்சிதமானதாகவே இருக்கிறது.
எழுத்தாளன், வாசகன், எழுத்துப் பற்றிய சொல்லாடல்கள் அங்கங்கே இடம் பெறுகின்றன. உரையாடல்களாகப் பதிவுகளாக அவை அமைகின்றன. வாசிப்புக் குறித்து பின் நவீனத்துவம் கூறுவதை நினைவூட்டுகின்றன. "'
... ஒரு எழுத்தாளர் தரமானவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என்பதே அவன் ஒவ்வொரு வாசகனுக்கும் அவன் வகையில் ஏதோ ஒன்றைக் கொடுக்கிறான் என்பதுதான் போலும். எழுத்தாளன் அங்கிருந்து வந்து கொண்டிருக்கையில் இவன் இங்கிருந்து போகிறான் என்பதனால்தான் போல் இருவருக்கும் இருவர் முகங்கள் புலப்படுகின்றன போல"
எழுதுபவன் - வாசகன் உறவு நிலை இப்படி என்றால், எழுதுபவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான ஒரு விவரணை "
"ஒரு கலைஞனின் கெட்டிக்காரத்தனம் அவன் முட்டாளாக இருப்பதில்தான் இருக்கிறது” 'நானே ஒரு புத்தகம்' என்று கூறிக்கொள்ளும் நவீனன்,
'சூன்யத்தை அறியவேண்டுமானால் நான் சூன்யனாக வேண்டும்' என்பான்.
இந்த எழுத்தின் உச்சமாக ஒரு கவிதை உண்டாகிறது:
"அறையில் நாற்காலி
சுவரில் எட்டுக்காலி
தெருவில் விட்டவழி
அறையுள்
தட்டுமுட்டுச் சாமான்கள் |
பயணத்தின் முடிவில் ஒருவன்
பயண வழி நெடுக !
ஒருவன்
கடலின் இக்கரையில்
காப்பார்
மணல் வெளி
அக்கரையில்
அலைகளின்
அடங்காத வெளி
கரையிரண்டும்
மணலென்று
கண்டால்
எல்லாம் வெட்ட வெளி"
"எழுத எழுத எழுத்து அழிகிறது, வாசிக்க வாசிக்க வாசகன் தொலைகிறான்"
தத்துவார்த்தச் சொல்லாடலே எழுத்தாக்கச் சொல்லாடலாயும் விரிவு கொள்கிறது. இல்லாது போதலும் அழிதலும் சூன்யமாதலும் எழுத்திலும் வாசிப்பிலும் காணக்கூடியதாக உள்ளது.
தத்துவார்த்த உலகின் அக்கறைகளையெல்லாம் கலை உலகின் பிரச்சனைப்பாடுகளாக மாற்றிக்கொள்வதும் கலைஞனாக நின்று தத்துவார்த்த சிக்கல்களை அணுகுவதும் அப்போது சித்தாந்தங்கள் விடைபெற்றுப் பிரிந்து கொள்ள, சித்தர் மொழியில் திருமூலர் மொழியில் சிவவாக்கியர் மொழியில் தாயுமானவர் மொழியில் அனுபூதிக் கவிதைகளும், மிகை யதார்த்தப் படிமங்களும் நனவிலி மனத்தின் சிதறல்களும் பிரக்ஞையோட்டத்தின் தெறிப்புகளும் பிரதிகளாக வந்துகொண்டிருக்கின்றன. '
'... எனக்குக் கோவிலில் ஒருவருமில்லாத சமயத்தில் புகுந்து திரிகையில் என் வயது கற்பாந்த காலம் சென்ற பிரமை - என் அம்மையின் ஸ்தனங்களின் ரூபமும் ஆண்டவன் குறியும் என்னுள் ஒரு பவித்திர உணர்ச்சியை விளைவிக்கின்றன?" என்பது போன்ற அபூர்வமானதும் அதிர்ச்சியூட்டுவதுமான தொன்மக்கவி வரைதல் அப்போது சாத்தியமாகிறது. -- - - -
நுட்பமான ட கவித்தெறிப்பும் உசிரமான பிரக்ஞைப்போக்குமுள்ள ஒருவன், மரபை எதிர் கொள்ளும்போது சூக்கும் நிலையிலான அனுபூதிக்குப் பதிலாக புலனின்பம் சார்ந்த ஒருவித திளைப்பை பவித்திரத்துடன் அனுபவித்தல் நிகழ்கிறது. விக்ரமாதித்யன் கவிதைகளில் அங்கங்கே இத் தெறிப்பு பளிச்சிடும்.
"நாய்கள்" நாவலில் ஓர் இடம் : ''... தானாகவும், பாத்திரமாகவும், எழுத்தாகவும், கண்டதையும் காணாததையும், பார்த்த மனிதர்களையும் பார்க்காத தெய்வங்களையும், கிடைத்த அனுபவங்களையும் தனியாக வந்து சேர்ந்த ஞானங்களையும் அதையும் இதையும் எதை எ ழுது கின்றோம் என்று தெரியாமலேயே எதை எதையெல்லாமாமோ எழுதிக்கொண்டிருந்தான்...
" எழுத்தின் தீவிரமான ஒரு முகத்தை அடையாளம் காட்டுவதுபோல ஒரு குறிப்பு அதே நாவலில் இடம் பெறும் :
".... அவனுக்கு எழுதுவது என்பதே எதை எழுதாமல்விட்டோம் என்பதைக் காண்பிப்பதற்கோ"
அறிந்ததன் மூலம் அறியாததை அறிவது மாதிரி. நகுலனுக்கு எழுத்து என்பதே ஒருவித தத்துவார்த்த தளத்திலான போதமாகிவிடுகிறது. ,
"எழுத எழுத ஏன் எழுத்துக்கரையமாட்டேன் என்கிறது" என்னும் கவலைபிறக்கிறது.
மொழி இல்லாததான ஒரு நிலையை தாயுமானவர் பாடல்களில் காணக்கூடும் என்று தமிழவன் குறிப்பிடுவார். இறையுணர்வில் கரையும் தாயுமானவரால் மொழியைக் கரைந்து போகச் செய்ய முடிந்திருக்கிறது.
உன் முக்யாத்திரை செய்து செய்து நகுலன் தான் உண்டது என்ன என்பதை விவரிக்கிறார்: ---
"மனம் என்பதே ஒரு ஆழம் காண முடியாத குப்பைக்கூடைதானே? கொட்டிக் கவிழ்க்கக் கவிழ்க்க குப்பை கூடிக்கொண்டுதானே இருக்கிறது? இந்தக் குப்பையிலே சில உயர்வகையானவையென்றாலும், அவையும் குப்பைதான்"
எழுத்துப்பற்றி ஹெர்மன் ஹெஸ் சொன்னதை நினைவு கூர்ந்து கொள்கிறார்:
"நம்மை எழுத வைப்பதெல்லாம் நம் வீட்டை பற்றிய ஞாபகம்தான்"
இழந்து போனதும் மறந்து போனதுமான ஒன்றை நினைவில் மீட்டிப் பார்க்கும் காரியமே எழுத்தாகிறது. அப்படி மீட்டிப் பார்க்கும்போது அவ்வளவையும் அப்படியே எழுதி விடலாகாது என்னும் எச்சரிக்கை குறிப்பையும் முன் வைக்கிறார் நகுலன்.
"எழுத்து விஷயத்தில் அர்த்தம் பூஜ்யமாவதில் தான் அர்த்தம் உருவாகிறது என்று : இது எழுத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும் - வார்த்தை, வார்த்தைச் சேர்க்கை, அந்தச் சேர்க்கைகளின் முழுரூபம் - ஒன்றிலும் நாம் கண்டு பழகி - களைத்துப்போன உருவங்களைப் பார்க்க கூடாது. நிறைய - நிறைய எழுதி, எழுதி, எழுதவேண்டுவதை எழுதாமல் விட்டுவிடவேண்டும்" -
தென்படுவதை வைத்து தோற்றதைக் கண்டு மனப்பதிவுகளின் அடிப்படையில் எழுதுகிறோம், பேசுகிறோம். -
வார்த்தைக் கூட்டங்கள் என்னும் குறிகள் மூலம் அர்த்தத்தை தொடர்பு படுத்த விழைகிறோம்.
கேட்பவன்/வாசகன் தன் பார்வைக்கேற்ப ஒன்றை பெற்றுக்கொள்கிறான்.
இந்நிகழ்வில் தோற்றம் ஒன்றாயும் அதன் பின்னுள்ள நிஜம் வேறொன்றாயும் இருக்கலாம் தோற்றத்தை வைத்து உண்டான மனப்பதிவுகள் ஒன்றாகவும், அவற்றை வார்த்தைகளில் இறக்கும்போது இன்னொன்றாகவும் மாறிடலாம். சொல்வதும் எழுதுவதும் ஒன்றாயிருக்க புரிந்து கொள்வதும் வாசிப்பதும் வேறானதாகலாம்.
"தெரிஞ்சவனைப்பத்தி -- -- - தெரியாதவற்றை, தெரியாதவர்களைப்பற்றி தெரிஞ்சதைப்பற்றி, ஆள் இல்லாமல் பேர் இல்லாமல் தன்மைகளை மாத்திரம், தகவல்கள் இல்லாமல், தகவல்களைக் கொடுத்து தன்மைகளைக் காட்டாமல், எப்படியும் எப்படியாவது சுற்றி வளைத்துச் சொல்ல வந்ததைச் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று ஒரு உத்வேகம்" -
தன்னிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவே எழுத்து சாதனமாகிறது என்று உணர்ந்து கொள்ளும் நகுலன், எழுத்தின் சாத்தியப்பாடுகளாக அறிவது:
"எழுத்து எங்கெல்லாம் நம்மை அழைத்துச் செல்கிறது. தட்டின் கதவுகளெல்லாம் திறக்கும் போலும். ஊசி வழி நூல் செல்லும் என்பதுபோல மனம் வழி எழுத்துச் செல்லும் போலும். மனம் ஆசை வழி செல்லும் போலும். ஆசையால் அறையலுற்றேன் என்றான் கம்பன். சொன்னால்தான் சத்தியம் வெளிப்படும்; சாத்யங்கள் சிவசத்யங் கள் ஆகும். அன்றிருப்பதை இன்றும் காண்கையில் காலமே காலாதீதமாகி விடுகிறது"
"இவர்கள்" நாவலில் கதை சொல்லி தன்னுடன் தானே பேசுவதாக, உரையாடிக்கொள்வதாக பின்னொரு கட்டத்தின் தனி மொழியுரைப்பதாக அமைகின்றது..
முன்னிறுத்திப் பேச நவீனனும், இகர முதல்வியும் பேனாவும் இருக்கவே செய்கின்றனர்.
எழுத்துக்கும் பேச்சுக்கும் இடைவெளி இருக்கலாகாது என்ற அக்கறையுடன் தொடங்குகிறது இந்நாவல். இந்த அக்கறை எழுத்துடனான உரையாடலாகவும் போய்விகிறது. ஒருபுறம் பேனா எழுதிக்கொண்டே போகிறது. பிரக்ஞை நிலையிலுள்ள மனம், அதனைத் தாண்டிய அடிமனம் என மனம் பேதப்படுவதற்கு முன்னிருந்த ஆதிமனத்திலிருந்தே நகுலனின் பேச்சு! எழுத்து தொடங்கிவிடுகிறது. பெக்கெட்டைப் போல, ஜாய்ஸைப் போல. அப்போது மொழியில் நூதனங்கள் கிடைக்கின்றன. அரட்டை, வெளிப்பாடு என்னும் ரூபங்களில் எழுத்து நுங்கும் நுரையுமாகப் பாய்ச்சல் கொள்கிறது. -
கதை சொல்லிக்கு உகப்பான ராமனாதனையும் (கநாசு) நல்ல சிவன் பிள்ளையையும் (மெளனி) சுற்றிச் சுற்றி வருகிறது பேச்சு. அங்கங்கே பசுவய்யா தலையிலும், தருமு தலையிலும் குட்டிவிட்டுப் போகிறது. பிடித்தவர்களை வேறு பெயர்களில் இடம்பெறச் செய்யும் நகுலன், பிடிக்காதவர்களை அவர்தம் புனைப்பெயர்களிலே தந்து விடுவது சுவராஸ்யமானது.
"... இந்த ஒத்தரை ஒருத்தர் காக்கற விஷயம், இந்த ஒத்தர் ஒத்தரோட பேசற விஷயம் - இதில் எல்லாமே அடிலெ ஒடறது என்னன்னா நமக்கு நம்மோடேயே பேச - , முடியாதங்கறதுதான் - என் உள்ளே இருக்கிறது வெளிலே வர்றதுக்கும் உன் உள்ளே இருக்கிறது வெளிலே வர்றதுக்கும் நாம்ப ஒத்தரை ஒத்தர் பாக்கர மாதிரியும், பேசற மாதிரியும், உள்ள பாவனை யிலெ இறங்கவேண்டியிருக்கே..."
பேசுவதுபோலவே எழுதினால்தான் சிந்தனைப் போக்கை அப்படியே தருவதாக அமையும் என்று எண்ணுகின்ற நகுலன் தான் எழுத்தின் பெரும்பகுதியை அப்படியே எழுதிப்பார்த்திருக்கிறார். இதுதான் எழுத்தில் அவரது விசுவாசத்தையும் தீவிரத்தையும் அறிந்து கொள்ள உதவுவது. இந்தப் பேச்சு தனிமொழியில் உச்சத்தை அடையும்போது அடிமனத்தின் எழுத்தாகி விடும். அதனைத் தாண்டிய பயணம் கவிதை உலகிற்குள் கொண்டு சேர்க்கும். அங்கே தாயுமானவர், பத்திரகிரியார், திருமூலர் வழிவந்த தமிழ் வளங்காட்டும் தன்னை அந்நியனாக, அநாமதேயமாக, பறையனாக உணர்ந்து கொள்ளும். சுசீலாவைத் தேடும், பரவசத்தைப்பாடும். மலர்களோடும் நட்சத்திரங்களோடும் - குழந்தைகளோடும் விருட்சங்களோடும் கிளிகளோடும் உரையாடும், ஒன்றிப்போகும்.
எல்லாவற்றினின்றும் விலகி வேறுபட்டு சோதியில் ஒன்றிவிடப்புறப்பட்ட பயணம் திசைமாறி அலைந்து திரிந்து புறப்பட்ட புள்ளிக்கு வந்து சேரும். இப்போது அந்த ஜீவி அந்நியமானதல்ல, அநாமதேயமல்ல. அது இந்தப் பிரகிருதியுடன் இணக்கம் காண்பது. இந்த உறவில் களிப்படைவது. - . ஏனெனில் -----
-- அது உருமாற்றமடைந்து விட்டது. அது ஒளியால் , குதூகலத்தால் பாடலால் ஆன ஜீவியாகும். -
தத்துவ - ஞானியும், கலைஞனும் எப்படி வேறுபடுகின்றனர்? என்பதை "ரோகிகள்" நாவலில் ஓரிடத்தில் விவாதிக்கிறார்:
'தத்துவஞானி தன் அடிப்படை ஸ்தானத்திலிருந்து நகராமல் எல்லாவற்றையும் பாகுபாடு செய்கிறான்; கலைஞன் ஸ்தானத்தை மாற்றி விதவிதமாகப்பாகுபாடு செய்கிறான் 'யாத்திரை' குறுநாவலில் அச்சுதன் என்னும் நாய்க்கும், நவீனனுக்குமிடையேயான உறவு அசாதாரணமாக இருக்கிறது.
நாய்களும் பூனைகளும் பறவைகளுமான உலகில் நகுலனின் கதை சொல்லிகளால் இயல்பாக இருக்கமாகமுடிகிறது; இணக்கம் கொள்ள முடிகிறது. குழந்தைகள் அருகில் இருக்கையில் குதூகலப்படமுடிகிறது; கொண்டாட முடிகிறது. ராமகிருஷ்ணர் மாதிரியான ஞானியரின் இருப்பு தரிசனம் தருவதாய் அமைகிறது: பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது. - -
"என் கவிதைகளை அப்பாவும் வாசித்தார். அவருக்குப் புரியாமலிருக்க வசமில்லை . ஆனால் அவர் இயற்கைக்கேற்ப அதை அவர் அசட்டை செய்தார். அம்மாவுடைய வியாதியே மருந்தாகும் என்று பேசாமலிருந்து விட்டாள்"
நவீனனுக்கும், தாய் - தந்தைக்குமிடையேயான உறவின் போக்கை இப்படிச் சுட்டிக்காட்டுவார். எழுத்தில் நிறை வேற்றவேண்டியது எது என்ற பிரச்சனையை அவர் அலசுவார். -
"... என்னையும் உன்னையும் தாண்டி நிற்கும் அவனையும் - ஏனென்றால் நாம் காணும் இவ்வுலகம் நான்-நீ-அவன் என்ற தொடரில்தானே இயங்குகிறது. வெற்றிகரமாக உருவங்கண்டு உருவாக்குவதில் ஒரு கலைஞன் தன் மகத்தான வெற்றியைக் காண்கிறான். இதனால்தான் இன்று தமிழில் எழுதிப் பிரசித்தம் பெற்ற சில ஆசிரியர்களின் உலகுகூட வீட்டுச் சுவர்களில் அடைபட்டு வாழும் பிரகிருதி பூதாகிருத ஆகிருதிகளாக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து விட்ட | தோற்றமாகக் காட்சி அளிக்கிறது"
நவீனனுக்கும் அவனது தந்தைக்குமான உறவின் விவரிப்பே "யாத்திரை” என்று கூறலாம். ஒருவகையில் இது காஃப்காவின் "தந்தைக்கு கடிதம்" போன்றது. "யாத்திரை" , அடிப்படை இதுவாயிருந்தாலும், இதில் பெரும்பகுதி நாய்களைப் பற்றின சம்பவங்களும் மனப்பதிவுகளும் இடம்பெற்று விடும் - - - இதில் நுட்பமான சித்தரிப்புகளுடன் கூடவே வேடிக்கையான விளையாட்டுகளும் சேர்ந்து கொள்ளும். லிஸ்ஸி, ஜிம்மி, வால்டர், அச்சுதன், ஸாம் என்று அய்ந்து நாய்கள் இடம் பிடித்துக்கொகின்றன. "நாய்கள்" என்ற பெயரிலேயே ஒரு நாவல் இருக்க, இதிலும் நாய்கள் ஆக்கிரமித்துக்கொள்வது நூதனமானது. |
"அவன் (நவீனன்) வாழ்க்கையில் ஒரு ஐந்து நாய்கள் குறுக்கிட்டன. குறைந்தது ஒரு ஐம்பது மனிதர்களாவது இதே முறையில் அவனுடன் தொடர்பு பெற்றிருந்தனர். இதே ரீதியில் ஒரு 10 பெண்கள்தான் அவன் நினைவிற்கு வந்தனர்."
ரோகிகளைக்கூட நகுலன் நாவல் என்றே குறிப்பிடுவதால் ''யாத்திரை' மட்டுமே குறுநாவல் - என்று சொல்லக்கூடியதாக அமையும்.

'வாழ்க்கையின் வியர்வை நாற்றம் சொட்டி லேசான அழுகல் நாற்றம் வீசும் பிரஜைகளின் நடுவில் சிக்கி வதங்கினாலும் அவர்களிடமிருந்து வெளியே வந்து அவர்களையே பார்த்துக்கொண்டு நிற்கும் நிலை"
பெரும்பாலும் பேச்சு நடையிலேயே எழுதுவது நகுலனின் தனிச்சிறப்பான பண்பு. இதனால் நகுலனின் தீவிரமான எண்ண - - ஓட்டங்கள் கூட தனக்குள் தானே நிகழ்த்திக்கொள்ளும் உரையாடல்களாகி விடுகின்றன. நகுலன் எழுத்து எப்பொழுதும் முடிவுகளை, தீர்வுகளை விளக்கங்களை முன்வைப்பதில்லை. அவரது உரையாடல்கள் புதிர்களைப் போடு கின்றன, குழப்பங்களை முன் வைக்கின்றன. புதிர்களும் சிக்கல்களும் மர்மங்களும் கொண்டுள்ள தான வாழ்க்கையின் கதியைக் கள்ளங்கபடமற்றதான குழந்தையின் கனிவுடன் கண்டு நகைக்கின்றது; புதிர்களை விடுவித்துப் புதிய புதிர்களைப் போடுகின்றது; மர்மங்களை அவிழ்த்து வேறு விசித்திரங்களைச் சேர்க்கிறது. ----
"சாமி ஐயங்கார், சகோதரி சாரதா, ஸ்டாலின் பக்தர் பராங்குச நாயுடு, ஆரோக்கியசாமி, ஏன் கேசவமாதவன் கூட - இவர்கள் பிரதிரூப பிம்பங்கள் ஒன்றும் என் மனதில் யாதொரு கவனத்தையும் விளைவிக்கவில்லை. இந்த ராமசாமி ஐயங்கார் என்ற சாமி ஐயங்கார் என்பவர் மாத்திரம் என் உயிரை வதைக்கிறார்.
"நவீனா! நான் பிராம்மணன்; ஐயங்கார் பையன். இதெல்லாம் அப்பொழுது என் ஞாபகத்திற்கு வந்தது. 20 வது நூற்றாண்டில் சரித்திர யுகத்தில் பிராம்மணன் சபிக்கப்பட்டவன் ஆகிவிட்டான். தன் சுயரூபத்தை மறந்துவிட்டு, கர்மபந்தத்தில் சிக்கித்தன் சைதன்யத்தை மறந்துவிட்டான். அன்றிலிருந்து அவனுக்குத் தவிர்க்க முடியாத வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது" - -
தன் கதையை நவீனனிடம் சொல்லிக்கொண்டிருக்கும் சாரதியின் பேச்சில் இது இடம்பெறுகிறது.
தன் சார்புகளையெல்லாம் சூழல்களையெல்லாம் திறந்த புத்தகமாக்கியிருப்பது நகுலனிடம் உள்ள இன்னொரு வலுவான அம்சம். தமிழில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்களைப் பொருத்தவரை இரண்டு முகங்கள் இருக்கும். எழுத்தில் தெரியும் முகம் வேறு, தனிப்பட்ட வாழ்வுக்குரிய முகம் வேறு. சிலரைப் பொருத்தவரை, திட்டமிட்டு இரகசியமாகக் காப்பாற்றப்படும் அந்தரங்கமுகம். சிலரைப் பொருத்தவரை, உயர்ந்த விஷயங்களை விட்டுவிடவேண்டும் என்ற நடைமுறை. நகுலனுக்கு இந்தப் பேதங்கள் இல்லை . மனதின் மூலை முடுக்கில் ஒளிந்திருக்கும் சபலம், -- குயுக்தி, வேட்கைகளிலிருந்து சதா ஓடியவாறு இருக்கும் எண்ணப் பிரவாகமெனும் சிந்தனைச் சுழிப்பு வரை அனைத்தும் எழுத்தில் முகம் காட்டும். முதலில், ஒளிவுமறைவின்றி முற்றமுழுதாகத் தன்னைப் பிரதியில் காட்டுவது.
அடுத்து, இது ஒருவகையான ஒப்புவித்தல் - மனதில் உள்ளதையெல்லாம் கொட்டித்தீர்த்து விச்ராந்தியாதல். அப்போது தன்னைச் சரியாக அடையாளங்கண்டு கொள்ளகூடும். 'வார்த்தைகள் வந்தன. கதவுகள் திறந்தன' என்பது மாதிரி அகத்தரிசனங்களுக்கு உபாயம்.
இந்த அம்சத்தைப் ப. கிருஷ்ணசாமி அழகுபடத் தொட்டுக்காட்டுகிறார்:
"தனது வேர்களை மறக்காமல் (பிராமணீயவேர்) அவற்றைத் தனது எழுத்துக்கிடையே - - போகும் அதிதீவிர பட விமரிசனக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதும் இவர் எழுத்துக்களில் நிகழ்கின்றன. திருக்குறளின் பாதிப்பிலிருந்து விடுபட முடியாமலிப்பதும், சித்தர்களை முழுவதுமாக ஏ ற் று க் ெக ா ள் ள முடியாமலிருப்பதும், சுசீலா ஒரே சமயத்தில் காம ரூபமாகவும் சக்தி வடிவமாகவும் இருப்பதும் இதன் பரிமாணங்கள்"
"நான் அனுபவத்தைக் கண்டு அதனுள் நுழையும் பொழுது நான் ஏதோ ஒன்றின்., பிரதிபலிப்பு என்பதை உணர்கின்றேன். ஆனால் எனக்கு ஒரு ஸ்வரூபம் இருப்பதாகவும் உள்ள ஒரு பிரக்ஞை என்னிடமிருந்து எப்பொழுதும் விலகுவதில்லை "
சாரதி சொன்னதாக நவீனன் தன் டைரியில் எழுதியுள்ள குறிப்பு இது.
"ஏதோ ஒன்றின் பிரதிபலிப்பு' என்ற உணர்வு அடிப்படையான தத்துவ உண்மை . அதற்கு எதிர்நிலையில் இருப்பது - 'ஒரு-ஸ்வரூபம் இருப்பதாக' உணர்வது இந்தச் சிக்கலும் மோதலும் உராய்வும் நகுலனின் சொல்லாடலின் தொடக்கங்கள், பிரதிபலிப்பு என்ற நிலையில் ஒரு ஜீவிக்கு முயன்று அடையவேண்டியது ஏதுமில்லை. தனிச் சொரூபம் உண்டு என்று கொள்ளும்போது உருவாதல் நிகழும் பரிணமித்தல் நிகழும் இந்தியாவில் தத்துவப் போக்குகளுக்குள்ளும் இந்தப் பிரிவினைகளும் வேறு வேறான போக்குகளும் நிலவினாலும், ஏகத்துவமாக்கும் - சங்கரரின் அத்வைதம் சட்டாம்பிள்ளையாகிவிடும். மற்றவற்றை தலையில் குட்டி - - அமர்த்திவிடும்.
மேலோங்கி நிற்கும் அத்வைதம் வேதாந்த உண்மையினை நேதி, நேதி என்று விலக்கிக்கொண்டே போயிருக்கும். அது, இதுதான் பிரும்மம் என்று சுட்டிக்காட்டுவதில்லை. பிரம்மம் என்று அடையாளங்காட்டுவதில்லை. மாறாக, இது இல்லை, இது இல்லை என்று எதிர்மறையாக விளக்கிக்கொண்டே போகும்.
நகுலனின் இகர முதல்வியும் இதனைச் செய்கின்றாள். வேதாந்தத்தின் போக்கையும் இகரமுதல்வியின் போக்கையும் ஓரிடத்தில் இணைத்துவிடுவது நகுலன் செய்யும் ரசமான விளையாட்டு
'இன்மை பகரும்
இகர முதல்விக்கு
இந்"நிழல்கள்"
உண்மை பகரும்'
என்று சமர்ப்பனத்தில் அதனைக் கோடி காட்டுவார்.
“வாக்குமூலத்தில் மஞ்சள் - வெள்ளைப் பூனை - கடுவன் பூனை குறித்த சொல்லாடலிலும் இது தெறிக்கும்.
"அந்தப் பூனையை அதன் சுபாவம் அறிந்து அதை அதாக அறிந்து கொண்டபிறகுதான் இந்தப் புரியுந்தன்மை ஏற்பட்டது. "...
இது மென்மை என்றால் அது கடினம் - இது மிருது என்றால் அது முரடு. இவற்றுக்கிடையில் இருக்கும் உறவு. '...
இந்தப் பூனைகளுக்கு உள்ளதுபோல ஒருவிதப் பயமின்மை , ஒரு அவசிய பாவம் எல்லாம் வேண்டும். எழுத்தாளனுக்குப்பாலும் புலாலும் அவசியம் என்று வைத்துக்கொள்.
இந்தச் சிக்கலை/பார்வையை காப்ஃகாவை வாசிக்கும்போது நகுலன் முன் வைக்கின்றார்:
"'...காப்ஃகா கவர்ச்சிகரமாக இருந்தாலும் மனிதன் எப்பொழுதுமே ஒரு குற்றவுணர்ச்சியுடன் இருக்கிறான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவகையில் காப்ஃகாவும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். அரண்மனையில் இடம் கிடைக்கவில்லை, விசாரணையில் கொல்லப்படுகிறான்; அமெரிக்கா ஆதர்ச உலகமில்லை ; மாறுதலில் மனிதன் பூச்சியாகிறான், பிறகு இந்தப் பால் உறவு விஷயம். ஆனால் அவன் தேடல் முடியவில்லை. காப்ஃகா வாழவில்லை என்று எப்படிச் சொல்லமுடியும்?"அனுபவங்கள் கூடக்கூட சிக்கல்கள் அதிகரிப்பதாக உணர்தல். அதன் காரணமாய் அனுபவங்களைத் தவிர்க்க யத்தனிப்பு. --
இது இந்திய தத்துவத்தில் அடிப்படையாய் வற்புறுத்தப்படுவது. நகுலனின் மன உலகிலும் இந்த விசாரமே ஆக்கிரமித்துக்கிடக்கிறது. இந்த வெளிவரிச்சட்டத்திலிருந்து வெளியேறிதாண்டுதலாக அவ்வப்போது வாசகங்களும் தெறிப்புகளும் இடம்பெறும். இப்படியாக
"சுவர்களை எழுப்பிக் கொண்டு என்னால் சொந்தமாக வாழமுடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. என்னையே நான் தேட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்"
தேடுதல் நிற்கும்போது வாக்கியம் முற்றுப்புள்ளி பெற்று விடும், வார்த்தைகள் நின்றுவிடும், பிரதி உருவாகாது.
தட்டுமுட்டுச் சாமான்கள் அடுக்கப்படும் மேஜையாகவும் சவிட்டு மெத்தையாகிவிட்டதாகவும் பிரமைகள் கொள்கின்ற இராஜசேகரன் மனநோயாளி இல்லை என்பதற்கான ஆட்சேபத்தை சாஸ்திரிகள் தெரிவிப்பார்: ''...
மொழி - அளவில் இவை சில மன நிலைகளைச் சித்தரிக்கின்றன. ஏனென்றால் எந்த மனிதனும் எப்படி ஒரு மேஜையாக ஒரு சாக்ஷாத் சவிட்டு மெத்தையாக மாறமுடியும். இதனால்தான் எனக்கு இவன் பைத்தியம் இல்லை என்று தோன்றுகிறது. இவன் ஒரு கட்டத்தில் அல்லது இன்னொரு கட்டத்தில் தன்னை ஒரு கலைஞனாகவே ஸ்தாபித்துக்கொண்டு விடுவான்"
தத்துவத்தின் பிரச்சனையை கலைஞனின் பிரச்சனையாக மாற்றிக்கொண்டதுதான் நகுலன் சாதித்த பெரிய சாதனை. இல்லாது போனால் இந்தச் சொல்லாடல்கள் பிறந்திருக்க சந்தர்ப்பம் வாய்த்திருக்காது.
பார்க்கப்படுவதும், பார்ப்பவனும் தீவிரப்படும்போது பார்ப்பவன் இல்லாது போய்ப் பார்த்தல் மட்டும் நிகழவேண்டும். பார்ப்பவன் இல்லாது போகும் போது தான், கடந்தகாலக் - கவலைகளும் ! முன்னனுமானங்களும் எதிர்கால எதிர் பார்ப்புகளும் இல்லாது நிகழ் காலத்து அனுபவம் மட்டும் அதன் தீவிரகதியில் நிகழ வாய்ப்புண்டு. இந்தப் பார்வையும் அணுகுமுறையும் கலைஞனுக்கு இருந்தால் என்ன நிகழும் என்பதுதான் நகுலனிடம் நாம் காண்பது.
இப்பொழுதான் இக்கணத்திலான அனுபவத்தில் மட்டும் கவனத்தைக் குவிப்பது - மற்றவற்றையெல்லாம் விலக்கித்தள்ளிவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் நதியாக மனதை வைத்திருப்பது, அதில் நினைவுகள் என்ற பாசி படியாது காப்பது - இதுதான் ஜே. கிருஷ்ணமூர்த்தி முன்வைப்பது.
இக்கணத்தின் தீவிரத்தை/உக்கிரத்தை எதிர்கொள்ளத் தயங்குகையில் நினைவுகள் குமிழியிடுகின்றன, சற் ஆறுதல் தருகின்றன. இத்திசை விலகலில் நிகழின் ணம் இழக்கப்படுகிறது. இந்தப்போக்கில் = ச T தப்பித்தலையும் திசை விலகலையும் மனம் நாடத்தலைப்படுகிறது. மனதை அதன் போக்கில் விட்டால் என்ன கிடைக்கும், "நினைவுப் பாதை" கிடைக்கும்.
'தத்துவார்த்தப் பிரச்சினைகள் எழுவதே மொழி தறிகெட்டுப்போவதால்தான் என்னும் ஜென்ஸ்பீனின் வாசகத்தை நகுலன் மேற்கோள் காட்டுவார். ஆனால், அதில் ஒரு லாபமும் உண்டு. தறிகெட்டுப்போகும் மொழியைப் பதிவு செய்தால் அற்புதமானதும் அதிர்ச்சி தருவதுமான பிரதியாயிருக்கும். அது நினைவுப்பாதை.
'வாழ்க்கையைப்பற்றி ஒரு பரஸ்பரமான சர்ச்சை' செய்திட நாட்குறிப்பு வடிவத்தைத் தெரிவு செய்து கொண்டு 28.03.69 லிருந்து 14.04.90 வரை மனநோய் விடுதியிலிருந்தபோது உண்டான மன அவசங்களை உரைநடையும் கவிதையுமாக நகுலன் தந்திருப்பது "நினைவுப்பாதை" நாட்குறிப்பு என்பதால் அது உணர்வு பாவங்கள் நீங்கிய அறிவார்த்தப் பதிவுகளாக நின்றுபோகவில்லை. நவீனன்
நகுலனுடன் கொள்ளும் உரையாடலாக இருக்கிறது. வாசகனுடன் பேசுவதாக அமைகிறது. பேச்சு மொழியில் போகிறது. கட்டற்ற நகையுணர்வில் தீவிரமான விசாரங்கள் நிகழ்த்தப்படுவது அலாதியான தன்மை பெற்று விடுகின்றன. மொழியில் இறுக்கத்தை தவிர்க்கமுடிந்ததும், உரையாடல் நிகழ்த்த முடிந்ததும், நகை உணர்வுடன் பேச முடிந்ததும் தான், நகுலனால் புதுப்பிராந்தியங்களில் பயணிப்பதை சாத்தியமாக்கி இருக்கிறது. இந்திய தத்துவ விசாரத்தின் நிழலை மாத்திரம் பதிவு செய்திடாமல், சுயரூபம் கொண்ட சொல்லாடலைச் செய்ய முடிந்திருக்கிறது. அத்தீவிரத்தில் உரைநடையை விட்டுவிட்டு, கவிதையைக் கைக்கொள்ள நேர்கிறது. அப்போது கடவுளை நோக்கியதாய்ப் பயணமும் சஞ்சாரமும் இருந்திருப்பின் மானுடத்தி திளைப்பில் - பக்தி மரபினரின் கவிதைகள் கிடைத்திருக்கும். - இங்கே - கடவுளை நோக்கியதாயில்லாததால், அனுபூதி கவிதைகளின் இடத்திலே நாவல் பிரதிகள் உருக்கொள்கின்றன. "
...
ராமநாதன் போன்றவர்கள் அன்பு என்றால் என்ன என்பதை எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தனர். என்னிடமிருந்து வாங்கிக்கொள்ள நிறைய இருக்கிறது, எடுத்துக்கொள் என்று சொல்லாமல் சொன்னார். நானும் தாராளமாகவே வாங்கிக்கொண்டேன். சின்னச் சின்ன எறும்பே நீ என்னை இந்தப் பரவசத்தில் ஆழ்த்திவிட்டு எங்கே செல்கிறாய்? வேலை செய்ய சாகவாசமில்லாமல் நின்னுடன் பேசிக் காலந்தாழ்த்தமாட்டேன், ஆலிலைமேல் லீலைபுரியும் கண்ணன் போல், சர்க்கரைக் கடலில் கரைந்த சர்க்கரைப் பதுமைபோல் எழுத்தில் நான் கரைந்து விட்டேன். என் சிந்தனையால் நான் சாகமாட்டேன்..."
இந்தக் கரைதல், ஆழ்தல் என்ப து புற உலகை மறந்துவிடவா?
இந்த கரைதலும், ஆழ்தலும் உண்டாக்கும் ரசவாதம் ஒன்றுண்டு. நிகழ்ச்சிப் போக்கு ஒன்று நிகழ்கிறது. "
... நான் யார் யாரைச் சந்திக்கின்றேனோ நான் அவர் அவர் ஆகின்றேன்;-ராமநாதன், சச்சிதானந்தம் பிள்ளை , சாரதி, தேசமாதவன், சுசீலா இன்னும் இப்படியாக இப்படியாக. அதனால்தான் இக்கணம் பச்சைப் புழு மறுகணம் சிறகடிக்கிற வண்ணத்திப்பூச்சி."
''நினைவுப் பாதையில் இடம்பெறும் இன்னொரு சொல்லாடல் சுசீலா தொடர்பானது.
காதலிக்கப்பட்டவள் இன்னொருவனுக்கு மனைவியாகி விடுகிறாள். இது சம்பவம். பின்னர் அவளின் நினைவு, பிரிவின் வேதனையாகத் தொடங்கி, அவனுக்கு உத்வேகம் அளிக்கும் உணர்வாக, அவனை மீட்டெடுக்கும் சக்தியாக, விடுதலை தந்து காக்கும் தேவதையாக அவளை மாற்றியமைத்துக்கொண்டே இருக்கிறது. இதில் உருமாறுவது நகுலன் மட்டுமா? சுசீலாவும்தான். ஒரு முகங்கொண்ட சுசீலாவை பன்முகங்கொண்ட வியாபியாக மாற்றிக்காண்பது நகுலன் தானே! இந்த அர்த்தம் தொனிக்க எழுதியதுதானே 'சுசீலாவிடம் -- இல்லை சுசீலாவின் சிறப்பு' என்னும் வாசகம்.
"... ஒரு கணத்தில் கண்டது முதல் இந்தக் கட்டை கீழே விழும்வரை என்னில் இருக்கும் சுசீலா என்ற என் சாபத்தை - இவர்களையெல்லாம் இலைகளையெல்லாம் விட '
நீ தான் எனக்கு
வேண்டியிருக்கிறது.
நீ வரவும் மாட்டாய்
போகவும் மாட்டாய்
நீ இருக்கிறாயோ
இல்லையோ
என்பதுகூட
எனக்கு நிச்சயமாகத்
தெரியாது' ”
சுசீலாவை சாபமாகக் குறிப்பிட்டாலும் அவருக்கு வரமாகவே திகழ்ந்திருக்கிறாள் என்பதை நம்மால் காணவே திணறுகிறது. நகுலனின் கதைகளும் கவிதைகளும் நாவல்களும் சுசீலாவை காரணமாகப் பிறந்தவைதானே! மௌனி கதைகளில் முகங்காட்டிய சுசீலா நகுலனிடம் ஊற்றுப்பிரவாகமாகிவிடுகிறாள்.
"காணும் பெண்களிடம் எல்லாம் சுசீலாவின் ஒரு அம்சம் தோன்றி மறைந்ததாக' போதங்கொள்ளும் நவீனன் நினைவில் படர்வது:
''அகிலலோகநாயகி, வராபயங்கரி, அன்னலெவியா, ப்ளுராபெல், ஐராவதி, காவேரி, கோதாவரி, கங்கா, யமுனா, நீளமாக ஓடும் நைல்நதி, இந்த நதியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. சமுத்திரம் போல் பொங்குகிறது."
"எப்பொழுதுமே மனிதன் பெண்ணை விரும்பும் அதே சமயம் அவளைக் கண்டு பயப்பட்டிருக்கிறான்...
“அவளோ அடிப்படையில் தாய்ப்பாம்பு. ஆடு பாம்பே ஆடு நாதன் முடிமேல் இருக்கும் நல்ல பாம்பு, குண்டலினி. சுசீலா நீ கம்பனைப் படித்திருக்கிறாயா? பிரிந்தவர் கூடினால் பேசமுடியுமா? நீ எப்பொழுது என்னைவிட்டுப் பிரிந்தாய்? ஏன் இப்படி உன்னைப் பற்றிப் பேசும் பொழுதும், எழுதும்பொழுதும் இந்தப் பரவசம்? இந்த அனுபவம் என்னை ஆழ்ந்த வியாகுலத்திலும் ஒருவகை செய்ய முடியாத ஆனந்தத்திலும் ஆழ்த்துகிறது. இந்த ஜென்மத்தில் நீ எனக்கு அன்பின், பக்தியின் புனிதத்தன்மையைக் கற்றுக்கொடுத்திருக்கிறாயள். இந்தத் தீ என்னைப் புனிதமாக்குகிறது, என்னைக் குளிர்விக்கிறது. இந்த நினைவில் நான் வாழ்வையே கடந்து விடுவேன்...' -
இளமைக் காலத்தைப் பாரிஸில் கழித்துவிட்டால் பின்னர் அது எப்போதும் எங்கும் ஒருவரை விட்டு அகலாத விருந்தாக இருந்துகொண்டே இருக்கும் என்னும் பொருளில் ஹெமிங்வே குறிப்பிட்ட 'For Paris is a movable feast'- ஆக நகுலனுக்கு சுசீலாவின் நினைவு.
"நீ இருக்கும் இடம் பார்க்காமல் உன்னைப் பற்றிக்கூட நினைக்காமல், கண் சலிக்க, வாய் குவிய, மனம் வியக்க, நீ இருக்கும் அதே இடத்தில் நானும் இருக்கிறேன் என்ற ஒரு உபபோதமே என்னை உன்மத்தமாக எவ்வளவு நிமிஷங்கள் யுகாந்திர காலமாகக் கற்பூரம் கரைவதைப்போல நான் இருந்திருக்கிறேன். ஆனால் காலந்தான் கற்பாந்தத் தத்துவத்தையும் சிறைப்படுத்தி விடுகிறது" - - 1 ,
இந்நினைவில் இன்னொன்று தட்டுப்படுகிறது. ஆண் தான் இழந்து போன மறந்து போன இன்னொரு பாதியான பெண் அம்சத்தை தேடிக்கொள்ளவேண்டும் என்று.
"Some Yogis can make both the penis and the testes disappear in the pubic arch, so that the body has the appearance of that of a woman"
என்னும் அவலானின் வரிகள் நகுலனை வெருட்டுகின்றன.
'இராமகிருஷ்ணர்கூட ஒரு காலகட்டத்தில் தன்னைப் பெண்ணாகப் பாவித்துப் பெண்போல ஆடை அணிந்து கொண்டு நடை உடை பாவனையில் கூடப் பெண் போல் பழகினார் என்று சொல்கிறார்கள்
என்பது இதப்படுத்துகிறது. -
கலைஞன் என்ற நிலையில் இந்த உணர்வும் தேடலும் அவனை எங்கோ கொண்டுபோய் சேர்க்கும்? "
... கலைஞனும் சிருஷ்டி விஷயத்தில் ஈடுபடுகையில் பால் வேற்றுமையிலிருந்து அகன்று நிற்கிறான். அப்பொழுது அவன் ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி அர்த்த நாரீசுவர வடிவைப் பெறுகிறான். கலைக்குப் பொருந்துவதுதான் வாழ்க்கைக்கு பொருந்தும். தான் இழந்த பாதியைத்தான் இங்குப் பிறந்த துவேஷத்தால் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்" '
நாம் எது ஆவோம் என்றிருக்கிறதோ அது நம்மைப் பின் தொடர்கிறது. அதன்பின் நாம் செல்கிறோம்; நகுலனைப் பின் தொடர்வது யார்? சுசீலா. சுசீலாவை நகுலன் பின் தொடர்வது எதற்கு? சுசீலாவாக..
ஒரு கட்டத்தில் சுசீலா, கொல்லிப்பாவையாகி ஆட்டிவைப்பதுமுண்டு. வனப்புக் காட்டி வசீகரித்து மயக்கி உருவழித்து விடுபவள்தானே கொல்லிப் பாவை. அழித்து விடுபவள் கொல்லிப்பாவையா? தன்னில் கரைத்து விடுபவள் கொல்லிப் பாவையா? அழித்தல் வேறு, கரைத்தல் வேறா? "..
மறுகணம்
காலங்கண்டு '
நகைக்கும்
நிகழும் நிமிஷம் போல்
உயிர் வெளவி
உயிர் காக்கும்
யாதுமறியாப் பேதைபோல்
யான் போற்றும்
கொல்லிப்பாவையாள்
தன்மை பொலியத் தன்னுருவாய் -
நீ நிற்பாய்; ---
அது கண்ட நெஞ்சம் ---- -- - -
பறை கொட்ட
நின்முன் மீண்டும் மீண்டும் -
வந்தேன்; வகை செய்யப்பட்டேன்”
- இது மட்டுமில்லை. பால் பேதமற்று அவஸ்தை கொண்டு மன்றாடுதல் நிகழ்தலும் நடக்கின்றது:
"...நாக்கடித்து
வாய்ப்பறை கொட்டி - -
வேதாந்தக் கயிறு திரித்துக் -
குறிதான் ஏதுமின்றி
பேடியெனப் பால்திரிந்து
அவள் உருக் கண்டு
உள்ளங் குலைந்து
உரம் வேண்டி
வந்து போகும் அர்ச்சுனன் நான்"
இன்னும் சொல்லிவிட்ட நிறைவு உண்டாகவில்லை. - யூங்கின் வாசகம் பொறிதட்டுகிறது. - --
"அவள் கட்டுக்கடங்காத ஜீவப் பிரளயம்;
மோகினிப் பிசாசு; வாழ்விக்க வந்த பிராட்டி;
தவிர மனிதனைக் காதல் - சாதல் என்ற இரு உச்சங்களுடனே இழுத்துச் செல்லும் வேகம்; கியா சக்தி; பிளயத்தின் ரூப் சத்தியம்"
நினைவுப் பாதையின் 5வது அத்தியாயம் முழுவதும் நனவு மனத்தின் பங்கில்லாது முற்றிலும் நனவிலி மனத்தின் விகசிப்பாய் இருப்பது; 10.04.70 லிருந்து 14.04.70 வரையிலுமான இறுதி 5 நாட்களிலான குறிப்புகளைக்கொண்டது.
" கடுமையான 1 - கேலி - கிண்டலாயிருக்கும். கன்னாபின்னாவென்று போகும். எதையும் ஒன்றுமில்லாததாக்கிவிடும். உற்றார் - உறவினர், வேண்டியவர்-வேண்டாதவர், பெரியவர்- சிறியவர் நண்பர் - விரோதி எவரும் விலக்கப்படவில்லை. எல்லாருமே இப்பேனாவரைதலுக்கு ஆளாகி ஒன்றுமில்லாது போகின்றனர். இது, தன்னை ஒன்றுமில்லாதாக்கிக்கொள்ளும் நடவடிக்கையா...! அகத்தின் சுவடுகூட இல்லாது போவதற்கான சாதகமா?
எந்தத் தர்க்க விதிகளுக்கும் கட்டுப்படாது எந்த நியதிகளுக்கும் அடங்காது எல்லா வரம்புகளையும் மீறிப்பாயும் மனத்தில் பாய்ச்சல் இங்கே நிகழ்கிறது.
பயங்கரமாயும் பீதி நிறைந்ததாயும் சவால் மிக்கதாயும் உள்ள சித்தப் பேதலிப்பை இப்படி நையாண்டிக்குரிய விஷயமாக்குவது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல.
கோயாவும் ப்ரூகலும் வான்கோவும் ரிம்பாவும் தீவிர மனநிலைகளில் சஞ்சாரம் செய்ததைத் தீட்டியுள்ளனர், கவிதையாக்கியுள்ளனர். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காணவேண்டிய திகைப்புகளும் பிரமிப்புகளும் அவர்களிடம் காணவே கிடைக்கின்றன.
ஆனால் அத்தீவிர, உக்கிர கணங்களைத் தாண்டிய அபிந்தங்அடுத்தகட்டமாகிய எள்ளலும் பரிகசிப்பும் து வம்சமாக்குதலும் நகுலனிடம் இருப்பது தனிச்சிறப்பான ஒன்று. ந ச ல னி ட ம் உள்ளதுபோல எம். ெவ ங் க ட் ர ர மின் 1 க ா து க ளி ல் ' இடம்பெற்றுள்ளது.
பால் ய த் தி லே யே பெற்றோரை இழந்து அ ன ா ன த க ள் இ ல் ல த் தி ல் வ ள ர் ந த த ன் க ர ர ண ம ா க அடையாளச் சிக்கலில் உழன்று மனநோய்க் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்து கவிதைகள் எழுதத் தொடங்கிய பில்நாட் என்னும் அமெரிக்க கவியை இங்கே நினைவு படுத்தலாம். ஃபிரெஞ்சு ஆபாச நாவலின் கதாநாயகனின் பெயரான 'புனித ஜெராட் பில் நாட், தன்னைத் தனித்தொதுங்கித் தூரத்திலிருக்கும் குளிர்ந்த மீனாகக் கருதுவார்.
வாழ்விலும், கவிதையிலும் ஆளுமை இழந்திருப்பதானது, முடிந்த அளவுக்கு மக்களது உணர்வுப் போக்கையும் எண்ணப் போக்கையும் தன்னகத்தே கொண்டு வரும் வகையில், கற்பனை விரிவுக்கும் ஆளுமை விரிவுக்கும் வழிகோலும் என்று உணர்வார்.
நவோமி என்னும் கற்பிதமான பெண் மீதான காதலில் மொழிக்குச் சாத்தியமான - கற்பிதங்களையும் கனவுகளையும் உருவாக்கிவிடுவார்.
"சிறுமி ஒருத்தியின் கல்லறை மீதான
ஒரே எதிர்வினை
அதன் முன் கிடப்பதும் இறந்துவிட்டதுபோல -
வேடிக்கை காட்டுவதுமே” என்பார்
"ஒவ்வொரு மாலைப் போதும் கடல், நட்சத்திர மீனைகி கடற்கரையில் வீசிச் சிதறடிக்கின்றது. சூரியனில் இருண்ட வறுமைகளைப் படியவிட்டு, விடியலில் அவை மாண்டு போகின்றன. அக்கோடையில் நாங்கள் அங்கே துயின்றோம். அவற்றின் பிரகாசமான பரிமாணங்களில் எமது உடல்களால் புணர்ந்தோம். மூச்சிறைக்கும் நட்சத்திர மீன்களால் வளைக்கப்பட்ட நாங்கள் எங்களை உருவாக்க இணைந்தோம். எம் அவயவங்களிலிருந்து சொட்டிய வியர்வைத் துளிகளை இராவெல்லாம் உறிஞ்சி, அவை உயிர்த்திருந்தன. அடிக்கடி அவள் கூச்சலிட்டாள். உனது கரம்! - எனது அக்னியுடன் அவளைத் தழுவுகின்ற ஒரு நட்சத்திர மீன் அது" என்பார்
மனதை, புலன்களை முற்றிலும் ஒழுங்கு பிசகச் செய்தால்தான் கவிதை சாத்தியம் என்று இயங்கிய ஃபிரெஞ்சுக்கவி ரிம்பாவை நகுலனுக்கு அருகே கொண்டுவரமுடியும்.
சிறுவயதிலிருந்து தனித்து வளர்ந்து அனுபூதியாளர்களின் நம்பிக்கைகளுக்கு நெருக்கமான எண்ணங்களைக் கொண்டிருந்த ரிம்பா இடைக்காலத்து ரசவாதிகளை வீரர்களாகக் கருதியிருந்தார். "நான் என்பது இன்னொரு நபர்" என்று அவரது 15வது வயதில் குறிப்பிட்டார்.
கவிதை உருவாக்கத்தை ஆன்மீக வளர்ச்சியாகக் கொண்டிருந்தவர். மதத்தை இழிவு படுத்தினார். வீட்டிலிருந்து ஓடிச்சென்று தன்பால் புணர்ச்சியாளர்களுக்கு இரையானார். பால் வேர்லைன் என்பவர் மட்டுமே அவருக்கு நெருக்கமாயிருந்தார். இருபால் புணர்ச்சியாளரான வேர்லைன்தான், ரிம்பாவின் நெருக்கடியான காலகட்டங்களில் ஆறுதலாய் இருந்திருக்கிறார், வழி நடத்திச் சென்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் ரிம்பாவை நீங்கிச் சென்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிம்பாவைச் சுட்டுக்காயப்படுத்திவிடுகிறார். அதிலிருந்து தன் வீட்டில் தனி அறையில் உணவினைக்கூட மறுதலித்து, கூச்சலிட்டும் குழம்பியும் எழுதியும் தீவிர கணங்களில் வாசம் செய்கிறார். மறுபடியும் வீட்டிலிருந்து ஓடிச்செல்கிறார். அபிசீனியாவில் வர்த்தகராயிருக்கிறார். 37 வயதில் இறந்து போகும் ரிம்பா, 19 வயது வரைதான் கவிதை எழுதினார் என்பது இன்னொரு புதிர்மிகு விஷயம். |
"சூசிப்பெண்ணே
ரோசாப் பூவே
ராத்திரி வெயிலடிக்கும்
புகல்லிலே பைத்தியம் பிடிக்கும்...
"வாவா ஜகஜண்டி மாடே
மரத்துக்கு மரம் ஏறும் சம்மந்திக் குரங்கே
ஆனை புகுந்ததாம் தோப்பில்
அழுகப் பழுத்ததாம் மாம்பழம் -
குதிரை புகுந்ததாம் தோப்பில்
குலுங்கப் பழுத்ததாம் மாம்பழம்
சித்தானைக் குட்டிக்குக் கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம் சுத்தி சுத்தி வந்ததாம்
கையில் வெண்ணெய் சிந்திற்றோ -
' கமல முகம் வாடித்தோ
துயில் பட்ட தங்கமே
சங்கூதி ஜலம் தெளித்து..."
என்றபடி, கவிதையில் விசித்திரமான சொல்லாடல்களும் விபரீதமான படிமங்களும் அநாயசமான நினைவு கூர்தல்களும் ஒன்றாய் அமைகின்றன. மிகையதார்த்தப்பாணியில், ஆண்ட்ரே பிரெட்டன் குறிப்பிட்டது போல பேனா தானாக எழுதிச் செல்லும் முறை என்று சொல்லலாமா?
இன்னொரு பத்தியில் தன்னைப் பாடையில் கிடத்தும் காட்சியை விவரிக்கிறார். அப்போது கூட அவரது பேனா வரைந்து செல்வது பாரதி வரியை, புதுமைப்பித்தன் பாத்திரத்தை ... "...
என்னைப் பாடையில் வைத்துக்கட்டிட வாயில் துணி அடைத்து, பாடையருகில் போட்டுவிட்டு, நல்ல தாம்புக் கயிறு வாங்கக் குடல் தெறிக்க ஓடினான்; ஐயோ பிழைத்தேன் என்று நானும் சிட்டுக்குருவியாய் விட்டு விடுதலையாய்ப் பறக்கிறேன். சாத்தா, எனக்குப் பைலார்க்கஸ் பைத்தியம் நன்றாகப் பிடித்துவிட்டது; எனக்கு உன் தத்துவச் சாம்பில் கொஞ்சம் தா...