மரப்பசு - தி. ஜானகிராமன்
எதைப் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது. கலியாணப் _பந்தலைப் பார்த்தால் சிரிப்பு. மணமகள் தலைகுனிந்து நாணத்திலும் அடக்கத்திலும் முழுகிப்போய் உட்கார்ந்திருக் சிறாள். அதைப் பார்த்தால் சிரிப்பு. அகல மார்பும் இடைச் சரிவும் வழவழத் தோலுமாக, மணமகன் அக்னியில் நெய்யை வார்க்கிறான். அதைப் பார்த்தால் சிரிப்பு. இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற கிழவர்களையும் நடு வயதுக் காரர்களையும் பார்த்தால் சிரிப்பு. இத்தனை இரைச்சல்களையும் கவனிக்காமல், சீவாளியைக் குழந்தைக் கடியாக கவ்விக் கொண்டு, ஆகாசத்திற்கும் பூமிக்குமாக நாயனத்தை வீசி வளைத்துக் கொண்டிருக்கிறாரே, அவரைப் பார்த்தால் சிரிப்பு. எதற்கு 'உம்'மென்று இந்த முகம் இந்தக் கன்ன உப்பல்) நாயன துவாரங்களை இத்தனை கண்ணும் கருத்துமாகத் தடவி, எந்த ஸ்வர சுத்தத்துக்கோ பயந்து கொண்டு வேதனைப் படுவதைப் பார்த்தால்... கலியாணத் துக்குக் கூடியிருக்கிற இத்தனை சாயல்களை, பற்களை, நெற்றிகளை, கால்களை, சிரிப்புகளை, புருவத்துக்கும் கவலைகளை, முகங்களில் படர்ந்திருக்ற பசனரி வெள்ளைகளை, தாளே பேசுகிற குழந்தைகளை, வருடங்கள் கழித்து சந்திக்கும் தாயாதிகளை - ஒன்றையும் பார்க்காமல் ஏன் இப்படி கண்ணை மூடி நாயனத்தில் வதைகொள்ள வேண்டும்?________________
யாராவது செத்துப் போய்விட்டார்கள் என்று கேட்டால் கட எரிப்பு வருகிறது. ஒரு சித்தப்பா செத்துப்போனதும், எல்லாரும் இடைகழியில் அழுதார்கள். எனக்குச் சித்தப்பாவைப் பார்த்துச் சிரிப்பு வந்தது. அவர் மார்பில் சாய்த்து, "என்னை விட்டுட்டு இப்படிப் போயிட்டேளே! எப்படி மனசு வந்தது? நான் என்ன பண்ணினேன் உங்களுக்கு?' என்று சித்தி சற்றைக்கொரு தடவை வீலென்று கத்துவாள். சித்தப்பா எங்கே போய்விட்டார்? இங்கே தானே படுத்திருக்கிறார். ஒவ்வொரு கத்தலுக்கும் தான் சிரிப்பேன். "சித்தி பொய் சொல்றா" என்று இரண்டு தடவை சொல்லவும் சொன்னேன். அவள் பொய் சொல்கிறதாக யாருக்கும் புரியவில்லை .
"போடி, அந்தண்டே" என்று வேம்பு மாமி சீறி விழுந்தாள், வேம்பு மாமியின் பிள்ளை முத்து அருகே வந்தான். “இப்ப சிரிக்கப்படாது" என்றான். "அப்படித்தான் சிரிப்பேன்." "சிரிச்சா அறைவேன் ஒங்கி." "நானும் அடிப்பேன்" என்று சிரித்தேன். "பேசாம இருடி கண்ணு " என்றாள் அம்மா. "இருக்கமாட்டேன் நீங்க மாத்திரம் ஏன் அழறேளாம்' அழுதகண்ணை உருட்டி விழித்துக்கொண்டே அம்மா என்னை அள்ளியெடுத்துக் கொல்லைப் பக்கம் கொண்டு போனாள். அம்மா வெறுமே உருட்டி முழித்தாலே சிரிப்பு வரும் எனக்கு. அதுவும் அழுது பிச்சு பிச்சு என்று ஒட்டிக் கொள்கிற கண்ணை உருட்டினதும் இன்னும் சிரிப்பு வந்தது. கிணற்றடியில் கொண்டு நிறுத்தி “இப்பெல்லாம் சிரிக்கப் படாது. அசடு வழியாதே," என்று ஓசைப்படாமல் கிள்ளி விட்டாள். கிள்ளு வலித்தது. அழ வைக்கத் தானே | கிள்ளுகிறாள். மறுபடியும் சிரித்தேன்________________
அம்மாவுக்கு சிரிப்பு வருகிற மாதிரி இருந்தது, "எனக்குன்னு வந்து பொறந்தியேம்மா" என்று என்னைப் பின்கொல்லையில் தள்ளி, "போய் தொலை, பெருமா கோயில், மேலக்குளம், புளியந்தோப்பெல்லாம் இரிஞ்சுட்டு வா என்று கதவைச் சாத்திவிட்டாள்,
இதெல்லாம் குழந்தையாக இருந்தபோது; இப்பொழுது கூடவா என்றால் இப்பொழுதும் அப்படித்தான், சாவு, கல்யாணம் மட்டும் இல்லை. எதைப் பார்த்தாலும்தான். கதை படித்தால் சிரிப்பு, நாடகம் பார்த்தால் சிரிப்பு, உலகமே முரண், விரிச்சோடி, நொண்டி, குதர்க்கம் என்று சொல்லுகிறவர்களைப் பார்த்தாலும் சிரிப்பு, அவர்கள் பார்க்கிற, செய்கிற கதை, சித்திரம், நாடகம், ஆய்வு, அவர்கள் புறத்திலோ அகத்திலோ அணிகிற கலர்ச்சட்டை வளர்க்கிற தாடி மயிர், மலட்டுக் கோபம், குடிக்கிற கஞ்சா - 1 இதைப் பார்த்தாலும் சிரிப்பு. கோமளம்மாள் தானும் தன் குடும்பமும் உலகத்தை ஆளப் பிறந்தவர்கள் அதற்காகத் தங்களை மட்டும் தனி புத்தி சாதுர்யங்களுடன் ஆண்டவன் படைத்திருக்கிறான் என்று நம்புகிறாள். ஒரு படி அந்தஸ்து குறைந்தவர்களைக் கண்டால் அவளுக்குப் பூரித்துக் கொண்டு வரும் - இந்த மட்டுமாவது தங்களுக்குச் சமமில்லாமல் படைத்தானே என்று, அதனால்தான் பத்து மாடி ஆபீஸ் | கட்டிடத்தை கட்ட வந்திருத்த, சசு லலித சாமக்கிரியை களிலும் ஒரு பங்கை ஒதுக்கி, கணவர் ஒரு தோட்ட பங்களாவைக் கட்டிக்கொண்டு சிங்காரப்படுத்தியது ஒரு பாத்தியமான செயலாகத் தோன்றுகிறது அவளுக்கு. பொறுக்கின விதை என்று தர்களோடு என்னையும் அவரையும், சுரேஷையும், சிமாவையும், பாமாவையும், லல்லியையும் சேர்த்துக் கொண்டாயே என்று பெருமாளிடம் அவள் வடிக்கிற நன்றிக் கண்ணீரைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. இத்தனைக்குமிடையே உடம்பே சரியில்லை என்று அவள் கையில் கண்ணாடி டம்ளருடன் எட்டுவித________________
- கலெகயை கடுமுடுவென்று கடித்துக் கொண்டும் பல் --- விழுங்கிக் கொண்டும். மப்பால் மிது பாப்பியுள்ள
காரோ படங்களையும் இதயநாடி அலைகளையும்
ப்பதைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது: க்யூபிலமும் - பன்மும் நம் உடம்புக்குள்ளேயே இருப்பதை நினைத்து
பப்பால் அவன் கவலைப்படுவதைப் பார்த்து நான் அழலாமோ சிரிப்பது தானே நியாயம். எனக்கு மூன்று நான்கு சிநேகிதிகள் இருக்கிறார்கள்.
லைக் கூட்டாக, பின்னாத, வெட்டி யும் கொள்ளாத ரெளபதிகள், எதிர்பாராமல் இரவோ பகலோ எந்நேரத்திம் வருவார்கள், போவார்கள். இரண்டு பேரை பாரிஸி அம் ரெண்டு பேரை கிழக்கு ஜெர்மனியிலும் சந்தித்துப் பழகின பழக்கம், ஆயுதப்புரட்சியில்லாமல் இந்த நாட்டில் வறுமையோ வர்க்கமோ அநீதியோ அகலாது என்று மூன்று மணி நேரம் பேசி தோசை, முறுக்கு எல்லாம் காலி செய்துவிட்டு காரில் ஏறிப்போய் விடுவார்கள். மூன்று பேர் காஞ்சிபுரம், பங்களுர், காசி பட்டுப்புடவை தவிர வேறு கவர்ந்து நான் பார்த்ததில்லை. இலை மறைவில் நடக்கிற புரட்சி இளைஞர் கூட்டங்களுக்கும் இப்படியே தான் 'போவார்கள். வடிகட்டி வைத்த ராஜா அளவு சிகரெட்டு | உன் நடிப்பார்கள். ஒருநாள் ஏழெட்டு மாதங்களுக்குப் பி. முன்று பேரும் திடீரென்று சொந்த ஊருக்குப் பாம் என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள், ஒருத்தி அப்பா தயராக்கில் பெட்ரோல் விற்கிற கோடீசுவரர். - பொருக்கி பின் அப்பா இ வத்தி ரங்கள் விற்கிற 39 வார். இந்து மாதிரி மொத்த வியாபாரிகளுக்குக் கடன் பெடுகிறவர் மூன்றாவது புரட்சிக்காரியின் அப்பா, |ன்று பேரும் பெண்கள் மூலமாகவே சிநேகமாகி, உருக்கு
காலம்பி வராவிட்டால் சொத்து பாத்தியதை நீக்கி | வேள் பன்று கண்டித்து விட்டார்கள் என்று பின்பு | பெரிது. வாயில் குருவின் மூன்றும் பறந்து விட்டது.________________
நாலாவது பெண் புரட்சிக் கூட்டங்களில் வாய் வேற்றுமை களில் அலுத்துப் போய் இந்த நாட்டில் சுட்டுப் போட்டாலும் புரட்சி வராது என்று முடிவு செய்து ஒரு தொழிற்சாலையில் சட்ட துணுக்க அதிகாரியாகச் சேர்த்து விட்டான். மார்க்ஸும், சேகுவாராவும், காஸ்ட்ரோவும், மார்க்குலே யும், பெண்வேடம் தரித்து இப்படி ஓட்டம் பிடித்ததைப் பார்த்து வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந் தேன்,
இன்னொருவர் ஆண் நண்பர். நாற்பத்திரண்டு வயது. இந்த வயதில் தான் காதலிக்கும் உணர்ச்சி அவருக்கு முளைத்திருக்கிறது. சாப்பிடுகிற சமயத்திற்கு வருவார். "சாப்பிடுகிறீர்களா?" "கையலம்பி விட்டுத்தான் வரேன்." “எங்க சாப்பாடு " "அங்கதான்" "வித்யா வீட்டிலேயா?” "ஆமா, பிடிவாதம் பண்ணினா, இன்னிக்கு சாப்பிட லேன்னா நாளைக்குப் புளிச்ச மோரிலே உப்புப் போடா பச்சை வெண்டைக்காய் மோர்க்குழம்புதான் பண்ணிப் போடுவேன்னு பயமுறுத்தினா. நீ க்ருடாயில்வே புளியோதரை பண்ணினால்கூட சாப்பிடறவனாச்சேன்னு பேசாம சாப்பிட்டு வந்துட்டேன்- இஹே" என்று அந்த நினைவில் உள்ளம் விம்மி வெடித்துவிடுவது போல் சிரிப்பார். நானும் சிரிப்பேன். இருபது வருடம், தன்னம் மின் சாரத்தைக் கண்டு திளைத்தவர், இப்போது... பாவம், - இன்னும் எதையெல்லாமோ பார்த்து சிரிப்பும் வருகிறது. சொந்தக்காரில் போகிறவர்களை, விமானங்களில் போகிறவர் களை, குழந்தையைப் பார்ப்பது போல் பர்பிடேரைப்பார்க்கப் பார்த்து மகிழ்ந்து போகிறவர்களை, குழந்தை யைக் குளிப்பாட்டுவது போலவே காரைக் குளிப்பாட்டிக் கலிப்பாட்டில் தடவி மெய்மறப்பவர்களை, போரில் படு பயம் பட்டு தாகம் தாகம் என்று கண் காணாத மண்ணில் மெக்லி 2 இளைஞர்களை, அவர்கள் படங்களைப் பத்திரிகைளில் போட்டு, பாட்டுப் பாடுகிறவர்களை அந்தப் பாட்டு களெல்லாம் தங்களைத்தான் கடைசியாகச் சாரும் என்று மாலைகளுக்குள் புன்னகை பூக்கிற நடு கிழ வயது ஆட்சித் தலைவர்களை- எதைப் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது.
இப்படிச் சிரிப்பாகச் சிரிக்கிறதென்றால் சித்தப் பிராமையா, மனநோயா இருக்கலாம். நீயாகத்தான் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். நீ யார்? ப்ராய்ட், யுங், காமு, லார்க், பிண்ட்டர், அடமோவ், ப்ரெக்ட். அபொனஸ் கு என்று அடுக்குகிற பேர்வழியா? கம்பன், மில்ட்டன், ஷேக்ஸ்பியர், தாகூர், பாரதி - இந்த மாதிரி தாட்டமா? அயன் ராண்ட், இர்விங் வாலஸ், ராப்பின்ஸ் என்று இளைப்பாறுகிற தொழில் நிர்வாகி அல்லது அரசியல் வாதியா? “அந்நிய மாதல் கடையில் வாங்கின உடைந்த மூக்குக் கண்ணாடியை அணிந்துக் கொண்டிருக்கிற நீள் முடியா? அப்பாடா ஒய்வு கிடைத்தது என்று மூன்று நாள். படிக்க வேண்டிய பத்திரிகை - புத்தக மூட்டைகளை 'வைத்துப் படுத்திருக்கிற மனையாளா? வார, மாதப் பக்திரிகைகளை ஒன்றுவிடாமல் வாங்கிப் படித்து, புருவத் அக்கிகளின் கிண்டலுக்கும் சாபங்களுக்கும் ஆளாகிற பாமர அப்பாவியா? அதிவே உயிர் என்று வாழ்கிற சிந்தனை பாளரா? அப்படியானால் அதில் எந்தப் பணத்தைக் கொண்டு பிழைப்பு நடத்துகிற அறிவாளி? கழுகுப் பணமா? காடிப் பணமா! ட்ரேகன் பணமா? எது தந்த பணமோ என்று கண்ணை மூடிக் கொள்கிற பூனையினமா?
|| யாராயிருந்தால் என்ன? பிடித்தால் கேள். அகம் | அகமய என்று எனக்கும் பட்டம் தட்டிவிட்டு நீ காதைப் பொத்திக் கொண்டாலும் சரி, கால் எரித்துக் கொண்டு தானிருப்பேன்.
ஆனால் ஆண்பிள்ளையாக இருந்தால், அப்படிப் போய்விட மாட்டாய். ஒரு கதை சொல்லுகிறேன். கதை இல்லை , நடந்தது. நான் பன்னிரண்டு வயசுக் குட்டியாக இருந்த போது நடந்தது. வீட்டுக்கு எதிரே பெரிய குளம். குளத்திற்கு நாலு பக்கமும் தெருக்கள். நாலுபக்கமும் படிக்கட்டுகள். புண்ய தீர்த்தம், தெளிந்த நீரும்கூட அல்லும் பகலுமாக ஜனங்கள் குளித்தமணியாக இருக்கும், கொக்கும் ம டையானும் மீனுக்கு வட்டமிடும். திண்ணை யில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஒரு நாள் சாயங்காலம் குளக்கரையில் ஒரே கட்டமாக இருந்தது. | ஓடிப்போய்ப் பார்த்தேன். கூட்டத்துக்கு நடுவில் யாரோ பெண் முழு அம்மணமாக நின்று கச்சா விட்டுக் கொண்டிருந்தாள். இடுப்பில் குழந்தை. ஒரு கையில் சுருட்டின பச்சைப் புடவை. புரிந்துவிட்டது. இந்த மாமியைப் பார்த்திருக்கிறேன். அய்யங்கார் மாமி. எலிமென்டரி ஸ்கூலில் வாத்தியாரம்மா, கறுப்புதான், ஆனால் வாட்ட சாட்டம். பாந்தமுகம். உருண்டு திரண்ட வலுவான உடம்பு, தொடை, கை, கால் எல்லாம் அச்சாரம் கொடுத்துப் பண்ணம் சொன்னாற் போலிருந்தது. அதைக் கூடப் பார்த்தேன். பாவம் புருஷன் இல்லையாம் பைத்தியம் பிடித்து விட்டதாம். பூண்டி மாமா பூண்டி மாமா என்று ஒரு கிராமத்து பணக்காரர் நாலுவீடு தள்ளி குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டு குடியிருந்தார். அவர் ஒரு சாட்டைக் கம்பும் கையுமாக, "புடவைக் சுட்டிக்கிறியா இல்லையா இப்பம்... இல்லாட்டா ரத்தவிளாறா இழுத்துப்பிடுவேன், கம்பாலே" என்று ஓங்கி ஓங்கி விடும் கொண்டிருந்தார், "நீ என்னடா ஆம்படையாலா எனக்கு பிரமாதமா காய்தா பண்றியே , என்று அவள் திருப்பிக் கத்தினாள். பூண்டி மாமா கையை ஓங்கி ஓங்கி வீசினாரே________________
தவிர, அடிக்க வில்லை . பளீரென்று ஒரு வீச்சு வீசியிருந்தால் அவள் அந்தக்கணமே குழந்தையைக் கீழே விட்டுவிட்டுப் புடவையைச் சுற்றிக் கொண்டிருப்பான். எனக்கு என்னமோ, பண்டி மாமாவும் கூட்டமும் அவள் புடவையைக் கட்டிக் கொண்டுவிடப் போகிறாளே என்று கவலைப்படுகிற மாதிரி இருந்தது, சிரித்தேன் கண்கள் போகிற திக்கைப் பார்த்து, ' கூட்டத்தில் அத்தனைபேரும் ஆன் பிள்ளைகள் என்னைப் போல இரண்டு மூன்று குட்டிகளையும் காய்கறி விற்றுவிட்டு வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்த இரண்டு கிழவிகளையும் தவிர்த்து ,
அந்தக் கறுப்பு அம்மணத்திற்கே இத்தனை ஈர்ப்பு என்றால்... நீ என்ன அப்ஸரசோ என்று கேட்பாய். அப்ஸரசு களை தான் பார்த்ததில்லை. ஆனால் என்னிடம் கிட்டத்தட்ட ஒருநானுறு காதற் கடிதங்கள் இருக்கின்றன. சுமார் நாற்பது பேர் எழுதிய கடிதங்கள். இன்னும் உள்ள நானுறு ஐந்தாறும் அவர்கள் எழுதியவை தான். பின்னர் எழுதியவை. காதற் கடிதம் போல் தோன்றாவிட்டாலும், சொர்க்கங்களை 'அசைபோடுகிற கண்மூடல்கள். இத்தனையும் கண்ணாடிகள். நீ என்னை இத்தனையிலும் பார்க்கலாம், நானும் பார்த்துக் 'கொள்வேன், சிரிப்பதற்காக, நிலைக்கண்ணாடி அலுத்துப் 'போகும் பொழுது, எப்போதாவது இவற்றைப் பார்ப்பேன், எனக்குச்சிரிப்பு வராத சமயம் நிலைக்கண்ணாடி முன் நிற்கும் போது தான். வலது வகிட்டை இடது வகிடாகவும் இடது மேலாக்கை வலது மேலாக்காகவும் காண்பித்து நம்மைப் பார்த்துச் சிரிக்கிற ஆள் அது. நீ ரொம்ப அழகு. நல்ல சிவப்பு, உன் புன்னகைக்கு ஈடே கிடையாது என்றெல் லாம் தம்மை முகமன் செய்து தலைசுற்றி ஆடவைக்கும் சோம ரசம், அதனால் தான் பயமாயிருக்கிறது. சிரிப்பைக் கடுத்துக் கொள்ளவே பல சமயங்களில் கண்ணாடி முன்பு நிற்பேன். முகம் போகும். நினைவு வரும்.________________
நாலு வயதுப் பெண் மொழுமொழுவென்று எங்கும் பழம் கன்னத்தில், மார்பில், வயிற்றில், தொடையில், கணுக்காலில் பாதத்தில், இரட்டை நாடியா, ஒற்றை நாடியா, கால், கை எல்லாம் நீளமா, குட்டையா-சிறு இடையா, பெரு இடையா, என்றெல்லாம் ஜோஸ்யம் சொல்ல முடியாத சதை மூடின பருவம், சீப்புக்கு அடங்காமல் நுனி சுருள்கிற அடர்த்தி மயிர், இடுப்பில் பட்டுக்கயிறு இடம் விட்டு ஒதுங்கின வெள்ளி அரசிலையை, அம்மா அப்பா ரெண்டு பேருமே அரசிலையை இழுத்து இழுத்து இடத்துக்கு நகர்த்தி விடுவார்கள். கவுன், பாவாடைகளைக் கூட இழுத்து எறிவதைப் பார்த்து அம்மாவுக்குக் கண் உருளும், அப்பாவுக்குப் புருவம் சுருங்கும். "பட்டிச் சிறுக்கி", சிரிப்பாக வரும். அவர்கள் கோபத்தைப் புரிந்து கொள்ளாத மாதிரி சிரிப்பேன். _ "ஒரு எழவும் புரியாம என்ன சிரிப்பு? ஏமாத்திப் - பிடுவன்ல எல்லாரும்.. அசட்டுப் பொணமே அம்மா. |
சட்டை துணியெல்லாம் சிநேகிதமே இல்லை காற்று தான் நமக்கு சிநேகிதம். இந்த மாதிரி தோன்றும். ஆனால் 'வார்த்தைகள் இப்போதையவை.
அம்மா, கவுனையும் சட்டையையும் மாட்டி “போப் என்று திருப்பி தகர்த்திவிடுவான். இடைகழியில் இரண்டை யும் அவிழ்த்து, "உன்னோட டு' என்று கதவு மூலையில் போட்டு விட்டுப்போன பிறகுதான் உடம்பு உடம்பாகும். வாசல் பந்தலில் போய் நின்றவுடன் காற்று வந்து சேர்த்தி சொல்லும். அரசிலை ஒதுங்கி நிற்கும்,
“பெண் குழந்தைக்கு அரசினவ பின்னாடி தொங்கிறாப்பல, இவனுக்கு எதுக்கு தம்புரா? அப்பனாணை, ஏழு ஜன்மத்துக்குச் சுரு திசேராத சாரீரம்" -கோபாலி________________
சொல்ற நகைப்பு, எந்தச் சுருதி வைத்தாலும் சேராமல் கர்ந்து போகிற துரதிர்ஷ்டக் குரல்களைக் கோட்பாவி வர்ணிக்கிற விதம்.
கண்ணாடி வில் கோபாலி சில சமயம் அந்த நாலு வயசுக் குழந்தை மாதிரியே நின்று அழகு பார்த்துக் கொள்வார். அந்த மயக்கத்திலும் கண்ணழகு போய்விடாது. பெரிய கண், மையிட்டாற்போன்று அடியிலும் ஓாத்திலும் ஒரு கறுப்பு. மையில்லை. பிறவி இந்தக் கண்ணைப் பார்த்துப் பார்த்து வசமிழந்து எத்தனை பகல்! எத்தனை இரவு !! ஆனால் படு சுயநலம். "நிலாவுக்கு எப்படிக் கையும் காலும் முளைச்சுது என்று என்னைப் பார்த்துக்கொண்டேயிருக்கும். வெளியே வீசும் நிலவின் மிச்சம் ஹாலின் இருளை. விலக்கியிருக்குமோ அந்த மயக்கில் கூட அந்தக் கண்ணின் >ாக் சுறுப்புத் தெரியும். காத்துக்கொண்டேயிருக்க வேண் டியது தான். முகத்தைப் பார்க்கும், மேனியைப் பார்க்கும்..! ஆனால் ஞாபகம் எங்கோ ராகம் பாடிக் கொண்டிருக்கும். கம்மல் குரல். சங்கீதம் பிரமாதமாக ஒன்றும் எனக்குத் தெரியாது. ஆனால் இது பாடுகிறதுதான் சங்கீதம் என்று ஒரு பிடிவாதம், கோபாலி பாட்டுக்கப்புறம் தாண்டா எந்தப் 'பாட்டும் என்று மற்ற பாட்டுக்களையே மறுக்கிற சில கிழங்களையும் நடுவயதுகளையும் எனக்குத் தெரியும். | காத்துக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். குரல் சம்மல்கான் கேட்கும். ஐயோ, என்ன கம்மல் எங்குமே | கேட்காத கம்மல் புடாபெஸ்ட் ஹோட்டல் ஒன்றில் ரங்கிரியை விட்டுப் புறப்படுவதற்கு முதல் நாளிரவு ஒரு இப்லி பாடுகிறான் என்று அழைத்துப் போனார்கள், இந்திய சினிமாப் பாட்டுக்கூட பாடுவாளாம். மைக்கை ஏந்திக் கொண்டு மேஜை மேஜையாக நின்று பாடினாள். முதலில் குரலைக் கேட்டதும் உடம்பெல்லாம் கிளுகிளுத்து முதுகு மயம் குளிர்ந்து சொடுக்கிற்று, அதே குரல், கோபாலியின் சும்மல் குரல் கோபாலியே அவதாரம் எடுத்து________________
வந்துவிட்டாரா! இந்த உலகத்தில் அதுபோல பேன், குரல்கள்தானா நிலாவுக்கு எப்படிக் கைகால் முனைச்சது. அழுதே தெரியாத கட்டைக்கு அழுகை வந்தது. அந்த மாகஇன்னொரு பிராணிக்குக் குரல் இருக்கிறதா? அப்படி ஒரு கோபம் வேறு கண்ணாடி என்னாடி யாக ஒன்னை உற் நிரப்பினார்கள். ஹோட்டலுக்கு எப்படி வந்தோம் என்று இப்போதும் ஞாபகம் இல்லை, டாக்சியில் வந்து எடுத்தேளாம், காலையில் ஏழு மணிக்கு விமானம். ஆறு மணிக்குக் கதவை டபடப வென்று இடித்த பிறகு சுரனை வந்ததே தவிர தலை நிற்கவில்லை. கண் பார்க்லில்னல. பெட்டி படுக்கையெல்லாம் கட்டவில்லை, அவசர அவசரமாக அறையில் இருந்த துணி ம சிங்கார சாமான்கள், புத்தகங்கள் எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுத் திணித்துப் பூட்டி என்னைக் காரில் போட்டு விமானத்திலும் ஏற்றி விட்டார்கள். ஏதோ சொல்லி உடை பெற்றுக்கொண்ட ஞாபகம். விமானத்தில் உட்கார்ந்த பிறகு கனவு. "நிலாவுக்கு எப்படிக் கை கால் முளச்சதசாக வந்ததும் இதைச் சொன்னேன். அதற்குப் பதில் - நன்ன இருப்பாளா? என்ன வயசிருக்கும் இதுதான் எங்க 'அறையவேண்டும் போலிருந்தது. _ “உன் அன்மையெல்லாம் இந்தக் கம்மலில் காைள்: உன்னைப் பேடியா ஆக்கிவிட்டதுன்னு நெனப்பேர் - 'கரைஞ்சு உருகி எதையோ சொல்கிறேன்,
''கோச்கக்காதே, நான் என்னிக்குமே பொம்பளைதான். இல்லாட்டா இப்படி ராகத்தைத் தேடித் தேடி வி 2.3 விலக்கி இண்டு இடுக்கெல்லாம் பார்க்க முடியாது, உள் மேல் விழுந்து நாய் பொனறாப்பல பெரண்டுண்டிருக் கணும்..."
"ஆக, நான் பொண்ணு. நீ பொண்ணு இந்த ராகம் தான் ஆம்பனை)________________
நீள பேசிண்டே போகாதே எனக்கு இதெல்லாம் புரியாது. நீ படிச்சவ. ஜாமட்ரி பிலாஸபி. இதெல்லாம் பேசுவே, உலகம்லாம் சுத்தறே. நான் வெறும் பாட்டுப் பட தற்குறி- கோபாலின்னு கையெழுத்துக்கூட போடத் தெரியாது3. கோமாளின்னு போட்டுடுவேன். அதுசரி. இதைச் சொல்லு ... ஜர்மனி, ஜப்பான். எல்லாம் பெண்கள்ளாம் உன் மாதிரி அழகாயிருக்க மாட்டாளாமே ! > ---- மொத்து மொத்துனு சீவின கர்ணக் கிழங்கு மாதிரி இருப்பாளாமே, இந்த ஜிப்சியும் அப்படித்தான் இருந்தாளா சொல்லு.. என்ன யோசிக்கிற! நான் யோகியா. யோகியான்னா: பானாவுக்கும் பாலாவுக்கும் ஒரு சோடுதான் வித்யாசம். வடக்குத்தி பாஷையிலேகூட அப்படித்தானாமே.-.. அவசரமா எழுதினா ரண்டும் ஒண்ணு மாதிரி இருக்குமாமே... மோதிபாய் சொன்னா ... அதுசசி, என்னை எல்லாம் வெச்சுண்டு ஒயினாக் குடிச்சேங்கறியே.' ஒருஅரைகாலனாவது கையில் எடுத்துண்டு வரப் படாதோ."
சிரிக்காமல் என்ன செய்ய? -
சிரி சிரி நானும் சிரிக்கிறேன்; அன்னவாசல் அம்மணி அம்மான்னு பேருதான். அரை அவுன்ஸ் தாக சாந்திக்கு வழியில்லேன்னு நானும் தாளம் போட்டுண்டு சிரிக்கிறேன்" 'கோபாலி உதட்டை விரலால் பொத்தினேன்,
அன்னவாசலைப் பற்றிப் பேசினால் எனக்குப் பிடிக்காது. பிறந்து வளர்த்த ஊர்தான். பழைய ஒயின் வேறு. பழைய மோர் வேறு.
மரியா, பாவ்லோ கொய்லோவின் பதினொரு நிமிடங்கள் [Eleven Minutes] நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரம், அம்மணி அம்மாள் தி.ஜாவின் மரப்பசு நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரம்..இருவரும் வாழ்வில் சந்தித்துக்கொள்ளும் புள்ளி எது?
நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி.
நம் எல்லாருக்குமே ஒரு இருட்டறை தெரியும், இருட்டாக்கப்பட்ட அறை! அந்த அறையினுள் நுழைய, உள்ளிருக்கும் ஒவ்வொன்றையும் இனம் கண்டு ரசிக்க, அனுபவிக்க, தேடிக் களிக்க நமக்கு அளவிட முடியாத ஆசை உண்டு. அந்த ஆசையும் வேட்கையும் தான் உலகை நிர்வகிக்கிறது என்றும் சொல்லலாம். ஏனென்றால், இருட்டுக்குள் அமிழ்த்தப்பட்ட அந்த அறை அத்தகையது. ஆனால், எனக்கு இரண்டு பேரைத் தெரியும். அவர்களுக்கு இந்த அறையின் மற்றொரு வாசல் தெரிந்திருந்தது. வாழ்வின் பாதைகளை அவர்கள் வளைக்க, திருப்ப முற்படவில்லை, வாழ்வின் ஓட்டத்துடன் அவர்கள் பயணித்தார்கள், அந்த பயணத்தின் ஒவ்வொரு புத்தம் புதிய நொடிகளையும் ரசித்தார்கள், அதிகம் சிரித்தார்கள். அதனாலே, அந்த அறைக்கான மற்றொரு வாசலை அவர்கள் கண்டடைந்தார்கள். அதன் வழி உள் நுழையும் போது தான் இது ஒரு அறை அல்ல என்பது தெரிய வந்தது. அது ஒரு மாபெரும் கடலாய் விரிந்திருந்தது, பெருங்காட்டின் ரகசியங்களைக் கொண்டிருந்தது, உயர்ந்து நிற்கும் மலையின் அமைதியைப் பெற்றிருந்தது. கடலின் அலைகளில் அவர்கள் தவழ்ந்த போதும், காட்டின் மடியில் உறங்கிய போதும், மலையின் மடிப்புகளில் சற்று இளைப்பாறிய போதும் அவர்கள் தங்களையே பார்த்துக்கொண்டார்கள். தனக்கான தேடலிலே, சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாய் திருப்தி அடைந்தார்கள். தேடலில் கண்டெடுத்த ஒவ்வொன்றையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள், அந்த பயணத்திற்கு உடன் வருபவர்களையும் அழைத்துச் சென்றார்கள். யார் இவர்கள்? வெளிப்படுத்தப்படாததெல்லாம் இவர்களுக்குப் புலப்படுகின்றன, மறைக்கப்பட்டவை இவர்களுக்குப் புரிகின்றன, அற்ப விஷயங்கள் இவர்களுக்குப் பேரின்பம் கொடுக்கின்றன! யார் இவர்கள்? இவர்களும் சாதாரண பெண்கள் தான். ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர்கள். உலக அறிவைப் பெற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தும், விடாப்பிடியாய் கற்றுக்கொடுக்கும் இதே சமூகத்தில் உழன்றவர்கள் தான். ஆனால், வாழ்வின் ஒரு புள்ளியில் அந்த உலக அறிவு எடுக்க சொன்ன முடிவை வேண்டாமென்று ஒதுக்கியவர்கள். அந்த புள்ளியில் ஆரம்பித்த பயணம் அது, அந்த வாசலில் கொண்டு வந்து விட்டது. அன்றிலிருந்து குடும்பப் பெண் என்ற பெயருக்குள் அடைபட இயலாது போனார்கள், விபசாரிகள் என்று அழைக்கப்படத் தகுந்தவர்கள் ஆனார்கள். அவர்கள் அம்மணி அம்மாளும், மரியாவும்.
இவர்கள் இரண்டு பேருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒருத்தி அக்ரஹாரத்தில் பிறந்து, சென்னையில் குடியேறியவள். இன்னொருத்தி பிரேசிலின் ஒரு சிறு டவுனில் பிறந்து, வேறொரு புது நாட்டில் தன் பயணத்தைத் தொடங்கியவள். இருவரும் ஒரு வேளை சந்தித்திருந்தால் கூட தங்களுக்குள் ஏதேனும் ஒற்றுமைகளைக் கண்டுபிடித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஆனால், அம்மணி அம்மாளுக்குள் ஒரு மரியாவும், மரியாவுக்குள் ஒரு அம்மணி அம்மாளும் இருப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அம்மணி அம்மாளின் சிரிப்பில் மரியாவைப் பார்க்கலாம். மரியாவின் நாட்குறிப்பில் அம்மணி அம்மாளைப் பார்க்கலாம். அம்மணி அம்மாளின் சிரிப்பைப் பற்றி, அவள் சந்தோஷங்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அவளின் வார்த்தைகளையே சொல்லலாம் ‘எனக்கு எதைப் பார்த்தாலும் சிரிப்பு வருகின்றது.’ மரியாவின் நாட்குறிப்போ அவள் இதயம், அவள் ஆன்மா. அவள் பணியிடத்திற்குச் செல்லும் போது அவளின் இதயத்தை அவள் எழுதும் நாட்குறிப்புக்குள் தான் வைத்துவிட்டுச் செல்வதாகக் கூறுவாள். வாழ்வு அவளுக்குக் கற்பிக்கும் பாடங்களை, அவள் குழப்பங்களை நாட்குறிப்பில் எழுதுவாள். இவர்கள் இருவருக்கும் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்ற அடிப்படை அறிவு கூட தெரியாமல் இருக்கலாம், பைத்தியக்காரிகள் என்று அழைக்கப்பட எல்லா வகையிலும் உகந்தவர்களாக இருக்கலாம். ஆனால், இவர்களுக்கு ஒன்று தெரியும், எதைக் கொடுத்தாலும் வாங்க இயலாத, கற்றுக்கொள்ள இயலாத ஒன்று! நிபந்தனைகள் இன்றி அன்பு செய்யத் தெரியும்! அதனாலேயே, தங்களது ஆழ்துயரங்களையும் கொண்டாடத் தெரியும்,
மனிதர்களை உயிர்ப்புடன் அணுகத் தெரியும், தன்னிடம் வருபவர்களை உயிர்ப்பித்துக் கொடுக்கத் தெரியும். இவர்களென்ன, தேவதைகளா? இல்லவே இல்லை, இவர்கள் மனுஷிகள்! தங்களிடமிருக்கும் ‘அன்பு செய்ய முடியும்’ என்ற அளவிட முடியா சக்தியைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள், பயன்படுத்தாமல் வாழ முடியாதவர்கள். இப்படியான வாழ்க்கை ஓட்டத்தில் அவர்கள் எதனைக் கண்டறிந்தார்கள்? தன்னையேவா, இல்லை தனக்கான காதலையா? ஏன் இவர்கள் இவர்களுக்கென்று ஒரு அன்பான இதயத்தைக் கண்டறிந்து அதனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளவில்லை? யாருமே உடன் இல்லாமல், அன்பு செய்ய மட்டுமே படிக்கும் இவர்களால் எப்படி மகிழ்வுடன் இருக்க முடிகிறது? அம்மணி அம்மாளால் எப்படிச் சிரித்துக் கொண்டே இருக்க முடிகிறது? மரியாவால் எப்படி வாழ்க்கையை ரசிக்க முடிகிறது? எல்லா கேள்விகளுக்குமான விடை அவர்கள் கற்றுக்கொண்ட அன்பில் தான் இருக்கிறது. மிக எளிமையான அந்த விஷயத்தில் இருக்கிறது, இத்தனை கடினமான, கடுமையான கேள்விகளுக்கான விடைகள். அவர்களின் வாழ்க்கை உண்மையிலேயே ஒரு அதிசயம் தான். அந்த அதிசயத்தை நம்மால் வாழ முடியுமா என்றால் முடியாது தான். அவர்களின் வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது, ஆனால், நமது வாழ்க்கையின் அதிசயத்தை நாம் நினைத்தால் மாத்திரமே வெளிக்கொண்டு வர முடியும். நமது அதிசயம் கேட்பாரற்று ஓரத்தில் கிடக்கிறது. இவர்கள் புனைவில் வெளிப்பட்ட இரு கதாபாத்திரங்கள் தான். இவர்களைப் போல உண்மையில் வாழ முடியுமா என்ற கேள்விக்கு விடை நம்மிடத்தில் தான் இருக்கிறது. அந்த கேள்விக்கு இயல்பாகவே ‘முடியாது’ என்ற பதிலை நாம் தந்துவிடுவதால் இவர்கள் அற்புதமானவர்களாக, தேவதைகளாக நமக்குத் தெரிகிறார்கள். ஆனால், இவர்களும் நம்மிலிருந்து, நாம் வளர்ந்த, வாழ்கின்ற, நமக்குப் பழக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள். இவர்களுக்கும் பயங்கள், அழுகைகள், துயரங்கள் உண்டு.
அம்மணி ஒருமுறை வெளிநாட்டில் புரூஸ் என்ற இளைஞனைச் சந்தித்தாள். கடந்த காலத்தின் குற்றவுணர்வு ஒரு எச்சிலின் வடிவில் துரத்திக்கொண்டே இருக்க, குத்தும் அந்த முள்ளினை எடுக்க முடியாமல் தவிக்கும் ஒரு இளைஞன் புரூஸ். வழக்கமான அம்மணியின் சிரிப்போ, எதைப் பேசினாலும் ஊன்றி கேட்கும் அவள் கவனமோ, ஏதோ ஒன்று அவன் முள்ளினை சரி செய்திருக்க வேண்டும். நீண்ட நாட்கள் கழித்து போர்முனையின் சத்தம் கேட்காமல், எச்சில் துரத்தாமல் அம்மணியின் அருகில் அவன் நிம்மதியாகப் படுத்து உறங்கினான். நன்றியும் பரவசமுமாகக் குழந்தை போல உறங்கும் அவனில் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மணி. இப்படித் தான் அம்மணி. யார் பேசினாலும் அமர்ந்து கதை கேட்டுக்கொண்டிருப்பாள், ஜன்னல் வழியே வீதியைப் பார்த்துக்கொண்டிருப்பாள், பால்கனியில் மர இலைகள் வரைந்த வெயில் வட்டங்களை எண்ணிக்கொண்டிருப்பாள், அந்த எண்ணிக்கையை அதே அறையில் இரவில் அரவம் அடங்கிய பின்பும் தூங்காமல் இருந்த ஆண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பாள், மாடியில் மொட்டை வெயிலில் படுத்துக் கொள்வாள், பாட்டுக் கேட்பாள், பரதம் ஆடுவாள், ஊர் ஊராகச் சுற்றுவாள், முகத்திற்கு நேராக உண்மையைப் பட்டென்று சொல்வாள், அவளிடம் உண்மையை மறைத்தால் வார்த்தைகளாலேயே வாயிலிருந்து வரவைப்பாள், ஆசைகளை மறைக்க மாட்டாள். காயங்களை ஆற்றுப்படுத்தும் சக்தி அவள் சிரிப்பிலா, குரலிலா, பார்வையிலா, உடலிலா? எதில் இருந்தது என்று தெரியவில்லை. அவள் தேர்ந்துகொண்ட வாழ்க்கையிலிருந்து அவளை இழுத்துச் செல்ல அவள் அம்மா வந்து எவ்வளவோ கெஞ்சி, அழுது பார்த்தும், அவள் அப்பா வந்து அடித்து உதைத்து பார்த்தும், அவர்களின் இழுப்பிற்கு அசைந்து கூட கொடுக்காதவள். தனக்குப் பிடித்தது போல் வாழ யார் அனுமதியையும், இசைவையும் எதிர்பார்க்காதவள். பல ஆண்களோடு உறவு வைத்து கொள்ளும் இவளைக் குறித்து ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். இந்த எண்ணம் தோன்றுவதும் மிக இயல்பானது தான். இயல்பாய் நமக்குள் இந்த எண்ணம் உதிக்கக் காரணமாக இருந்தவை எதையும் சிறுவயதிலிருந்தே அருகில் நெருங்க அவள் அனுமதித்ததில்லை. எவரிடமும் கை பிடிக்காமல் பேச அவளால் முடிந்ததுமில்லை. கைபிடிக்காமல் பேசினால், பேசியது போலவே இல்லை என்று குறைபட்டுக் கொள்வாள், பொசுக்கென்று அணைத்துக்கொள்வாள். ‘இப்படியே போய்க்கொண்டிருந்தால், வயதான பிறகு என்ன ஆகும்?’ புரூஸ் ஒருமுறை அவளைப் பார்த்துக் கேட்ட கேள்வி இது. சற்று யோசித்தாள் தான், ஆனால் யோசனைக்குப் பிறகு அவள் மனதில் எழுந்த பதில் ‘இருநூறு முந்நூறு பேரில் நான் உடம்பைக் கொடுத்ததெல்லாம், உலகத்தில் பிறந்த அத்தனை பேருக்குமாக என்று நம்புகிற இரண்டு, மூன்று பேர் இருப்பார்கள். அத்தனை பேருக்கும் கொடுக்கிற எண்ணம் இருந்திருக்கிறது. ஆனால், நடைமுறையில் முடியாமல் முந்நூற்றோடு நின்றுவிட்டது. இது, முந்நூறு கோடி மூவாயிரம் கோடிக்குச் சமம் என்று நினைக்கிற ஓரிரண்டு பேர் இருப்பார்கள்’ இவள் வாழ்க்கையைப் பார்க்கும் போது அம்மணி ஒரு கடலைப்போல தோன்றலாம். சக்தி வாய்ந்த, எதனாலும் அடக்கவியலாத, ஆழமான ஒரு கடலாய்த் தோன்றலாம். ஆனால், இவள் சாதாரண மனுஷி! மனதில் இயல்பாய் வழியும் அன்பின் வழி காரியங்களைச் செய்வது அன்றி நமக்கும் இவளுக்கும் வேறு வித்தியாசங்கள் கிடையாது. மரியாவுக்கு எப்போதுமே ஒரு ஆச்சரியம் உண்டு, அவளிடம் வரும் ஆண்கள் பாலியல் ரீதியாகத் தூண்டப்படாவிடில், தங்கள் மீதே ஏன் குற்றம் சுமத்திக்கொண்டு காயப்படுகிறார்கள் என்ற கேள்வி தரும் ஆச்சரியம். ‘உண்மையில், அவமானம் கொள்ள வேண்டியது நான் தானே, என்னைப் பார்த்து அவர்களுக்கு தூண்டுதல் ஏற்படவில்லையானால், நான் தானே வெட்கப்படவேண்டும்!’ என்று எண்ணுவாள். மரியா தனக்குள்ளேயே மூன்று மரியாக்களை உருவகித்து வைத்திருந்தாள். தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார்போல், கூறும் பெருமைக் கதைகளைக் கேட்டு கவரப்படும் ஒரு சிறு பெண்ணாகவோ அல்லது தன் மேல் சுமத்தப்பட்ட பொறுப்புகளும் பாரங்களும் அழுத்த, இறக்கி வைக்க முடியாமல் அலைபவர்களிடமிருந்து பொறுப்புகளைக் கழற்றி இளைப்பாற வைக்கும் பெண்ணாகவோ, எல்லா கதைகளையும் கேட்டு, அறிவுரை வழங்கி அமைதிப்படுத்தும் பெண்ணாகவோ உருமாறிக்கொள்வாள். தன் வாடிக்கையாளர்களின் மனநிலையை நன்கு புரிந்து கொள்பவளாக அவள் இருந்தாள். (மரியா பணிபுரிந்தது நமது நாட்டில் அல்ல, சுவிட்சர்லாந்தில் இருந்த ஒரு கிளப்பில் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்) கிட்டத்தட்ட அந்த கிளப்பில் பணிபுரிந்த ஒரு வருடம் முழுவதும் அவள் ஆராய்ந்து கொண்டிருந்தது, அவள் மனதில் பதில் கிடைக்காது திருப்பித் திருப்பி எழுந்த இந்த கேள்வியைத்தான், ‘இந்த பதினொரு நிமிடங்களுக்காகவா இவ்வளவும்?’ பணியில் சேர்ந்த புதிதில் அவள் கற்றுகொண்டது, ‘ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பணம் கொடுத்து வாங்க விரும்புவது என்னது? நிச்சயம் சந்தோஷம் தான். ஆனால், அது அந்த பதினொரு நிமிடங்களில் கிடைப்பது இல்லையே!’ எங்கேயோ நிச்சயம் தப்பு இருக்கிறது என்று அவளுக்குப் புரிந்தது.
சுவிட்சர்லாந்தில் அவள் தங்கியிருந்த ஒவ்வொரு பொழுதிலும் எத்தனையோ போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. அவற்றுள் அயல்நாட்டில் இருக்க வேண்டி நேர்ந்த தனிமையை அவள் பழகிக்கொள்ள அதிகம் போராடினாள். ஆனால், அந்த தனிமையும், அவள் பணியும், சந்தித்த ஆண்களும் அவளுக்கு நிறைய கற்றுக்கொடுத்தார்கள். கடந்த காலத்தின் மரியாவும், அந்த மரியாவின் வலி கொடுத்த காதல்களும் இப்பொழுது அவளுக்கு வேறொரு வடிவில் புரியத் தொடங்கின. தன்னிடம் வரும் ஆண்களின் மூடிய பக்கங்களைத் திறந்து, அவர்களை அமைதிப்படுவது அவளுக்கு இயல்பாக நிகழ்ந்தது. சிலநேரங்களில் மகிழ்வு கொடுக்க அந்த பதினொரு நிமிடங்கள் தேவைப்படவில்லை என்பதையும் அவள் கண்டாள். பதினொரு நிமிடங்கள் முக்கியமில்லை என்பது அவளுக்குப் புரிந்தது. அவள் பணியின் மூலமாக அவள் காதலைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினாள். அவள் அதுகாறும் நினைத்துவைத்திருந்தது போல காதல் வாழ்வின் பரப்பை சுருக்குவதல்ல, விரியச் செய்வது, முழு சுதந்திரத்தை உணரச் செய்வது என்பதைப் புரிந்துகொண்டாள். அவளின் காதலை அவள் சந்தித்த பின்பு, பதினொரு நிமிடங்களின் பொருளும் அவளுக்குப் புரிந்தது. உடலுறவை ஒரு கலையாக அணுகத் தொடங்கினாள். அவளின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், ‘காதலிக்கும் இரண்டு பேர் எப்போதுமே இணைந்து தான் இருக்கிறார்கள், உடல் ரீதியாகப் பிரிந்திருந்தாலும்! இது போல் இணைந்திருக்கும்போது உண்டாகும் மகிழ்வுக்கு முடிவென்பது கிடையாது, அவர்களுக்கு பதினொரு நிமிடங்கள் என்பது இல்லவே இல்லை. கோப்பையில் ஊற்றப்படும் ஒயின், கோப்பை நிறைந்த பின்பு இயற்கையாக வெளியே வழிவது போல, தவிர்க்க முடியாமல், அந்த ஒரு தருணத்தில் மட்டும், வாழ்க்கையின் அழைப்புக்கு செவிசாய்த்து, உடலின் கட்டுப்பாட்டை இழந்து இரு உடல்களும் இணைந்து கொள்ளும் (Genital Embrace என்று இதனை அழைத்தாள்) ஆனால், இது உடலுறவின் தேவையை எண்ணி, அதன் மூலம் தான் மகிழ்வு கிட்டும் என்று கருதி நிகழ்வது அல்ல.’ இது அவளின் தொழில் அவளுக்குக் கற்றுக்கொடுத்தது. இந்த தேவைகள், தேவை என்றில்லாமல் அவளே சொல்லும் அந்த வாழ்க்கையின் அழைப்புக்கு செவிசாய்ப்பது என்று எதன் மீதும் அவளுக்கு முன்முடிவுகள், புகார்கள் கிடையாது. இயல்புகளை எந்த குற்றச்சாட்டும் இன்றி ஏற்றுக்கொள்ள அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளின் காதல் அவளுக்கு இன்னும் அதிகமதிகமாய்க் கற்றுக்கொடுத்தது. தனக்குப் பிடித்தவனிடமிருந்து எதுவும் கேட்காமல் காதலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். எதுவும் கேட்காத காதல் கொடுக்கும் மகிழ்வை அவளின் டைரியில் கொண்டாடித் தீர்த்திருப்பாள்.
அம்மணி அம்மாளின் கதை அவளுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இருந்த உறவை முன்வைத்தே கூறப்பட்டிருந்தது. மரியாவின் கதை அவளுக்குள் நிகழும் போராட்டங்களை முன்வைத்தே நகர்த்தப்பட்டிருந்தது. அம்மணி அம்மாள் விடைபெறும் முன் புரூஸுக்குக் கொடுத்த அறிவுரை ‘கல்யாணம் செய்துகொள். ஆனால், என்று உன் மனைவிக்கு உன்னைப் பிடிக்கவில்லையோ அன்று உன் பாயைத் தூக்கி வாசலில் வீசி எறியச் சொல். சண்டை போடாமல், அந்தப் பாயை எடுத்துக்கொண்டு வேறு ஜாகை பார்த்துக்கொள். இஷ்டமிருந்தால் அந்தப் பாயை எடுத்துக்கொண்டு இன்னொருத்தி வீட்டுக்குப் போ. இல்லாவிட்டால் அதையும் தூக்கி எறிந்துவிட்டு தரையில் படுத்துக்கொள்’. மரியாவின் ஆசையோ காதலிக்க வேண்டும், ஆனால், ஒருவரையொருவர் உடைமையாக்கிக்கொள்ளக் கூடாது என்பது தான் (Love one another, but let’s not try to possess one another) ஆனால், இதைப் புரிந்துகொள்வதற்கு நிறைய தாங்க வேண்டும் என்பதையும் கூறுகிறாள். தனக்குப் பிடித்தவனை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வரும் அவள் அன்று இரவு டைரியில் ஒரு சிறு கதையை எழுதுகிறாள், அழகான ஒரு சிறு பறவையை காதலிக்கும் பெண்ணைப் பற்றிய கதை. இருவரும் காதலிக்கிறார்கள், வானம் தாண்டி பறக்கும் அந்த பறவையைத் தன்னுடனேயே இருக்க செய்கிறாள் அந்த பெண். ஆனால், சிறிது நாட்களிலேயே ஒரு விசித்திரமான மாற்றம், அவளுக்கு அந்த பறவையின் மீது காதல் குறைந்தது போன்ற ஒரு எண்ணம். பறக்க முடியாமல் போன இயலாமையினாலேயே அந்த பறவை இறந்து போகின்றது. அவள் வேதனையில் கரைகிறாள், அவள் ஞாபகங்களில் வானத்தில் வட்டமடிக்கும் பறவையின் தோற்றம் திரும்பத் திரும்ப வந்து போகிறது, கூண்டிலடைபட்டுக் கிடந்த பறவையின் தோற்றம் நினைவிலேயே தங்கவில்லை! அதன் பின்பு தான், அந்த பெண்ணுக்குப் புரிகின்றது, தான் காதலித்தது, வெறும் பறவையை அல்ல, வானம் தாண்டி பறக்கும் சிறகுகள் உடைய பறவையை! தன்னைக் கவர்ந்தது அதன் சிறகுகளும், வானத்தைத் தாண்டி பறக்கும் அதன் சுதந்திரமும்தான், தன் காதலன் பறவையாய் இருந்தது அதன் சிறகுகளால்தான் என்பதைப் புரிந்துகொள்கிறாள். காதலனுடன் சிறு பொழுதைக் கழித்த பின்பு மரியா வந்து டைரியில் எழுதியது இந்த சிறு கதையைத் தான்.
இவர்கள் இருவரையும் அறிந்துகொண்டால் காதலுக்கான உங்களின் விளக்கங்கள் மாறலாம், எல்லாமே மாறிப்போய் வாழ்க்கை காயப்படுத்துவதாய் சில நேரங்களில் தெரியலாம், நீங்கள் மட்டும் வித்தியாசப்படுத்தப்பட்டு சில நேரங்களில் தனிமை உங்களைக் குதறலாம். ஆனாலும், இவர்கள் இருவரையும் இறுக்கி அணைத்துக் கொள்ளுங்கள். கடினமான தருணங்களைக் கூட அற்புதமாய்க் கடக்கக் கற்பீர்கள், வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தீவிரமாய் வாழ்வீர்கள், தீவிரமாய் நேசிப்பீர்கள். வாழ்க்கை மிக அழகாய் தெரியும், சந்தோஷங்கள் புரியும்.

***
https://uyirmmai.com/இரண்டுகலை-இலக்கியம்/இரண்டு-பெண்கள்-ஒரு-உலகம்/ பெண்கள்- ஒரு உலகம்