தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, July 25, 2018

மரப்பாவைகள் - காரூர் நீலகண்ட பிள்ளை :: : எழுத்து பிப்ரவரி 1966

மலையாளக் கதை
மரப்பாவைகள் 
காரூர் நீலகண்ட பிள்ளை

வீட்டின் கதவு நம்பரை சரிபார்த்துக் கொண்டே கணக்கு எடுப்பவன் தனக்குள் சொல்லிக் கொண்டான் ; 312 ஆசாரி பரம்பில்'. ஒரு கூரைக் குடிசை சுவர்கள் கூட தென்னங் கீற்று களால் ஆனது. முகப்புக் கதவுக்கு அவன் வந்தான்.

'யாரும் இல்லையா?' அவன் பலக்க கேட்டான்.

'ஒரு பெண் குடிசைக்குள் இருந்து வெளியே வந்தாள்.

'உன் பெயர் உம்மிணியா?' என்று கேட்டான் கணக்கெடுப்பவன் தன் கையில் இருந்த காகிதங் களை பார்த்துக்கொண்டே

அந்த இளம் பெண்ணின் அகலவிரிந்த பெரிய கண்கள் இன்னும் விரிந்தன. அவள் பீதி அடைந்தாள். கேசு, போலீசு ஏதாவது இருக்குமோ?

நான் ஆட்களை கணக்கெடுக்கிறேன். சென்ஸஸ். இங்கே யாரெல்லாம் இருக்கிறார்கள்?'

'இப்போதைக்கு நான் மட்டும். அம்மா துறையின் மறுபக்கத்துக்கு நாணல் வெட்டி வரப் போயிருக்கிறாள். தம்பி வேலைக்குப் போயிருக்கிறான்.

'உம்மிணி என்கிறது யாரு?

என் அம்மா .' 'சரி, உம்மிணி', என்று எழுதிக்கொண்டே கேட்டான் 'ஆணா பெண்ணா?''

இதைக் கேட்டு அவள் லேசாக சிரித்தாள். எளப்பமாக இருந்தாலும் என்ன வசீகரமான புன்னகை!

'அம்மாவும் நானும் பெண்கள், என் தம்பி ஆண்.'

.. அப்பா இல்லையா?'

'இல்லை. இறந்துவிட்டார். '

'அப்போது, உம்மிணி விதவை இல்லையா?',

'இப்போ இருக்கிறதைத்தானே கேட்கிறீர்கள்? ஆமாம்.'

அவள் சேர்த்தாள். 'சென்ஸஸ் எடுக்கிற போது குடையை விரிக்க அனுமதி கிடையாது என்கிற மாதிரி படுகிறது. இந்த எரிக்கிற வெய்யிலில் நீங்கள் மனிதர்களை கணக்கெடுத்துக் கொண்டே போனால் சீக்கிரமே கணக்கெடுப்பிலே ஒரு ஆளை குறைத்துக்கொள்ளவேண்டி இருக்கும். இந்த பெஞ்சிமேலே நீங்கள் உட்கார்ந்துக்கலாம்.'

கணக்கெடுப்பவன் தாழ்வாரத்தில் ஏறி பெஞ்சிமேலே உட்கார்ந்து கொண்டான். தாழ்வாரம் ஒடுக்கமாக இருந்தாலும் சாணியாலே வழவழப்பாக மெழுகி கண்ணாடி போலே பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.

உம்மிணியை பற்றிய எல்லா தகவல்களையும் கேட்டு குறித்துக்கொண்டான் அவன்.

'உன் பெயர்?'

எழுது

நளினி', கொஞ்சம் வெட்கத்தோடு சொன்னாள். .

 வயது?

என்னைப் பார்த்து யூகிக்க முடியுமோ உங்களாலே?

'நான் எதுவும் யூகிக்கவில்லை'

அவள் லேசாக சிரித்தாள் .... -

'இருபத்தி மூன்று.'

கல்யாணம் ஆகிவிட்டதா?

 'ஆமாம்'

அப்போது, கணவனும் இருக்கிறார், இல் லையா?

அவள் தயங்கினாள்.

இப்போது, இங்கே இல்லை பதிமூன்றாவது மைலில் உள்ளவர்களை நீங்கள் கணக்கெடுத்தாச்சா?

'அதை வேறே யாராவது செய்வார்கள். ஆக, கணவன் இருக்கிறார். இல்லையா?

- ஆமாம், இல்லை ஏதாவது எழுதிக் கொள்ளுங்கள், உங்கள் இஷ்டப்படி ', என்றாள் அவள் அதைப் பற்றி கவலையே படாதவள் போல

ஆனால் ஆமாமுக்கும், இல்லைக்கும் ஒரே அர்த்தம் இல்லை, உனக்குத் தெரியுமோ?

'அப்போது, ஆமாம் என்று எழுதிக்கொள்ளுங்கள். ஆனால் தெளிவாக இல்லாமல் இருக்கட்டும்.'

ஒரு வேளை கல்யாணம் இப்போதுதான் நிச்சயமாகி இருக்கிறதோ? அப்படியானால் மணம் ஆகிவிட்டது' என்று எழுதமாட்டேன். 'மண மாகவில்லை என்று.

அப்படி இல்லை. எனக்கு மணம் ஆகி விட்டது.'

அவள் தன் பின் தலையை சொரிந்து கொண்டாள். அப்போது அவளுடைய செழிப்பான கூந்தல் அழிந்து விழுந்தது, அவளுடைய வசீகரமான உருவத்துக்கு ஒரு நேர்த்தியான பின் திரையாக அமைந்தது. -

'ஆமாம், கணவன்,

'ஆமாம், இல்லை . .

விட்டுட்டதாக, இருக்கலாமா?' 'அப்படியானால் கணவன் இல்லை.'

அந்த வார்த்தை வேடிக்கையாக இருக்கு, நீங்க அதை எழுதிக்கலாம்னு தான் நான் நினைக்கிறேன். என்ன சொன்னீர்கள்? இன்னொரு தரம் கேட்கிறேன். கணவன் இல்லாதவள். ஆமாம், ஏன் நிலைமை கொஞ்சம் குழம்பித்தான் இருக்கு. ஆனால் அவர் என்னை விலக்கவில்லை. அதுதான் அவர் செய்ததாக இருந்தால், வாராவாரம் அவர் ஏன் மத்தியஸ்தர்களை அனுப்புகிறார்?

'நீ அவரை விட்டுட்டதாக இருக்கலாம்?

1'

ந்து - 39'

சொல்லப்போனால் நான் அவர் பின்னாலே ஒருபோதும் போனதே இல்லை. பின்னாடி நான் அவரைவிட்டு விலகினேன் என்கிறதும் இல்லை. எது முறையானதோ அதை நீங்கள் எழுதிக் கொள்ளுங்கள், நீங்கள் எல்லாம் தெரிந்தவர் இல்லையா?''

'உன் கணவனைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாதே. நீ சொல்கிறதை நான் அப்படியே எழுதிக்கிறேன். உனக்கு கணவன் இருக்கிறதாக.'

'அதுதான் தேவலை'.

'எது தேவலை, எது மோசம் என்கிறதை குறித்துக்கொள்ள இல்லை இந்த புஸ்தகம். இருக்கிறதை அப்படியே எழுதிக்கிறது.

'நான் இருக்கிறதைத்தானே சொன்னேன், என்று சொல்லிக்கொண்டே அவள் கூந்தலை முடிந்து கொண்டாள். அவசியம் இல்லாமல் அவன் அவளை கவனித்துக்கொண்டிருந்தான்.

'குழந்தைகள் ஏதாவது?'

'இல்லை, ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை!'

'அபார்ஷன் ஏதாவது உண்டா ?' '

ஓ ஆமாம் எத்தனையோ! எங்களுக்கு மண மாகி ஆறு மாதம் கூட முடியவில்லை ஆரம்பமாகி விட்டது. அதிலே இருந்து எங்களுக்குள்ளே ஒரு தகராறோ சண்டையோ இல்லாமல் ஒருநாள் கூட போனதில்லை.'

'என்ன சொல்கிறாய் நீ? தினமும் அபார்ஷனா?

'ஆமாம், அதனாலேதான் நான் இங்கே திரும்பி வந்துவிட்டேன்.'

'இது ரொம்ப மோசம். நான் கர்ப்பச் சிதைவு என்று சொன்னேன். அதாவது குறைப் பிரசவம் என்று அர்த்தம் இது ஏதாவது இருந்ததா?'

'நீங்கள் என்ன அசிங்கமான கேள்வி எல்லாம் கேட்கிறீர்கள்? நல்லவேளை என் கூடப் பிறந்தவன் இப்போதைக்கு இங்கே இல்லாமல் போனது.'

இதைக் கேட்டு அவனுக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது

'உன் கூடப் பிறந்தவன் இருந்தால் மட்டும் என்ன? உன் சிற்றப்பாவுக்கு பாட்டனார் இருந்திருந்தால் கூட நான் இந்த கேள்வி எல்லாம் கேட்டே இருப்பேன். நீ எல்லாத்துக்கும் சரியாக பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீ சொல்லாவிட்டால் அது குற்றம் ஆகும். நீ சொல்கிற எதுவும் ரகசியமாகத்தான் வைத்துக்கொள்ளப்படும்.

'உங்களுக்கு ரொம்ப வெப்பமாக இருந்தால் நீங்கள் இதாலே விசிறிக்கலாம்' என்று நளினி பெஞ்சியின் ஒரு ஓரத்தில் ஒரு பனை விசிறியை வைத்தாள். 'இந்த கேள்விகளை என் சகோதரன் முன்னால் கேட்டிருந்தால் வெட்கப்பட்டிருப்பேன் என்ற அர்த்தத்திலாக்கும் சொன்னேன்.

'சரி?'

'இல்லை .'

என்ன இல்லை? பதில் சொல்ல மாட்டாய், அப்படித்தானே?

'இல்லை, இல்லை, இல்லை. கர்ப்பச் சிதைவு பற்றி நீங்கள் கேட்டீர்கள் இல்லையா? அதுக்கு எழுபதில் தான் இல்லை.

'உன் மாச வரும்படி எல்வளவு?'

'என் சகோதரனுக்கு ஒருநாள் வேலைக்கு மூணு ரூபாய் கிடைக்கிறது.'

'உன் சகோதரனைப் பற்றி நான் கேட்கவர வில்லை. உன் வரும்படி - '

'நான் எந்த வேலைக்கும் போகிறதில்லை.'

'ஆக உனக்கு வருமானம் இல்லை. ஒருவர் ஆதரவில் இருப்பவரை ..........

'நானா? யார் சொன்னது உனக்கு இதை? அந்த கதா இருக்காளே, தோணித்துறை பக்கத்தில் இருப்பவள், இதை எல்லாம் உன்னிடம் சொல்லி இருக்கணும். அவளைப்பற்றியும் எனக்கு கொஞ்சம் சொல்லத் தெரியும்.'

அவன் இந்த தமாஷை அனுபவித்தான்.

'கதாவா? அவள் சொன்னாளா. என்ன சொல்கிறே நீ? நான் சொன்னதை நீ சரியாக புரிந்துக்கவில்லை. ஒருவருக்கு வரும்படி இல்லையானால் அவனோ அவளோ சாப்பாட்டுக்கு இன்னொருவர் ஆதரவிலேதான் இருக்கவேண்டி இருக்கும். உனக்கோ வரும்படி இல்லை. இருந்தாலும் சாப்பாட்டுக்கும் உடைக்கும் மற்ற செலவுகளுக்கும் உனக்கு பணம் தேவை. இதெல்லாம் யார் உனக்கு தருகிறார்களோ, உன் அம்மாவானாலும் சரி, சகோதரன் ஆனாலும் சரி அவர்கள் ஆதரவில் தான் நீ இருக்கிறாய். நான் சொல்கிறது சரி தானே?

'கோர்ட்டில் அவர்கள் கேட்கிற கேள்வி மாதிரி இருக்கிறது?

கோர்ட்டிலே உன்னை கேள்வி கேட்கிறார்களா?'

'ஆமாம், அந்த சைத்தான் என்னை கோர்ட் டுக்கும் இழுத்தது!

'உன் புருஷனைத்தானே குறிப்பிடுகிறாய்?'

'அவன் என் புருஷன்? எனக்கு புருஷனே இல்லை என்று தயவு செய்து எழுதிக்கொள்ளுங் கள். அதுக்காக உங்களுக்கு ஏதாவது கொஞ்சம் கொடுக்கத் தயாராக இருக்கேன்.'

'அது இருக்கட்டும். உனக்கு வரும்படியே இல்லை, இல்லையா?'

'கொஞ்சம் வரும்படி வருது. நான் யாரையும் நம்பி இல்லை. குறைந்தது மாதம் பதினைந்து ரூபாய் சம்பாதிக்கிறேன்.'

'சரி, உன் தொழில் என்ன?'

இந்த சிர்கார் என்னெல்லாம் தெரிந்துக்க விரும்புகிறார்? எனக்கு ஒரு வேலை மட்டும் இல்லை, பல வேலை.'

'எல்லாத்தையும் நீ சொல்லலாம். இந்த கடுதாசியிலே போதுமான இடம் இருக்கு.'

'இந்த வீட்டிலே சமைக்கிறது நான் தான். தாழ்வாழத்தை மெழுகுவதும் நானேதான்.'

'என்ன பிரமாதமாக மெழுகி இருக்கு. கண்ணாடி மாதிரி பளிச்சென இருக்கே.'

என் பணிக்கன் -- அவன் எனக்கு ஒன்றுமே இல்லை இப்போது - ஒரு காலத்தில் என் கன்னங் கள் கண்ணாடி மாதிரி இருக்கு என்று சொல்வதுண்டு. அது மாதிரி இந்த தாழ்வாரம் என் கன்னம் மாதிரி இருக்கும். தமாஷுக்கு அவள் சிரித்தாள்.

அவனும் சிரித்தான். இதன் நடுவே பக்கத்து வீட்டு சிறுமி ஒருத்தி முற்றத்தில் வந்து நின்று கணக்கெடுப்பவரையே உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

'இந்த பெண்ணுக்கு வயது பத்துதான் ஆகிறது. அவள் உறுத்துப் பார்க்கிறதை பாருங்கள். இன்னும் இரண்டு வருஷம் போகட்டும். ஆண் பிள்ளைகள் இந்தப் பக்கமே நடமாடத் துணிய மாட்டார்கள்.'

சிறுமிக்கு கோபம் பெரிசாக வந்துவிட்டது. 'ஆமாம், நான் பார்த்துவிட்டால் இந்த பணிக்காத்திக்கு என்ன நஷ்டமாகப் போயிடுத்தாம். கடவுளே, நான் என் பாட்டுக்குப் போறேன்.' தனக்குள் ஏதோ முனகிக்கொண்டு அவள் விருட்டென்று போய்விட்டாள்'

நளினி சொன்னாள். 'பொங்கி, அலட்டிக் கொண்டு போகட்டுமே அவள். இப்படித்தான் யாராவது ஒருவர் வந்தால் போதும், முற்றத்துக்கு வந்து தலையை காட்டிவிடுவாள்.

கணக்கெடுப்பவனுக்கு அங்கே உட்கார்ந்திருப்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தது.

'ஆமாம், உன் தொழில் என்ன என்கிறதை நீ சொல்லவே இல்லையே.

'சொல்லவில்லையா? ஒரு வீட்டில் என்னெல்லாம் வேலை இருக்கோ அத்தனையையும் நான் செய்கிறேன்.'

'நான் தெரிந்துக்க விரும்புகிறது உனக்கு வரும்படி வரக்கூடிய வேலை என்ன என்கிறதைத் தான்.'

'வரும்படி வரக்கூடிய வேலை எதுவும் எனக்கு இல்லையானால் எனக்கு ஏதாவது வேலை நீங்கள் கொடுப்பீர்களா?'

'நீ என்னிடம் இதை கேட்டாயானால் - '

'கேட்டால் போதும் கொடுத்து விடுவீர்கள் இல்லையா?'

அவன் கொஞ்சம் குழப்பமடைந்து சுற்றி விழித்தான்.

அவள் சொன்னாள்: 'ஒரு வீட்டுக்கு யாராவது வந்தால் அவர்களுக்கு மரியாதை ..'

அவன் சடக்கென கேட்டான். நான் ஏதாவது மரியாதைக் குறைவாக சொல்லிவிட்டேனா?'

'நீங்கள் சொல்லவில்லை. நான் தான் மரியாதை காட்டவில்லை. நீங்கள் வெற்றிலை போட்டுக் கொள்வீர்கள் இல்லையா ?' அவள் உள்ளே சென்றாள். உள்ளே அவள் எதையோ தேடுவதை அவன் கவனித்தான்.

கொஞ்ச நேரத்தில் அவள் வெற்றிலையையும் மற்ற உபகரணங்களையும் கொணர்ந்தாள். அவன் தன் கவனத்தை அவை மீது திருப்பினான். இன்னொருதரம் அவள் உள்ளே சென்று மூன்று மரப் பொம்மைகளுடன் வந்தாள். அவள் சொன்னாள்: -

'இதுதான் என் தொழில் ஒரு பொம்மை செய்ய ஒரு நாளுக்கு மேல் ஆகாது

அவைகளை கையில் எடுத்துப் பார்த்தான் 'அவன். எல்லாம் பெண் உருவங்கள். ஆறு ஏழு அங்குல உயரம் இருக்கும் ரொம்ப நேர்த்தியாக செதுக்கப்பட்டவை. பளிச்சிடும் வர்ணம் தீட்டப் பட்டிருந்தது. வழவழப்பாயும் உருண்டு திரண்டும், அழகான அங்கங்கள், நல்ல வளைவுகள். அங்கப்பொருத்தமானவை. நிறைய தலைமயிர். வசீகரமான புன்சிரிப்பு. மொத்தத்தில் ரொம்ப கவரக்கூடிய, அழகிய கலைப்படைப்புகள். அவன் அவைகளை கூர்ந்து உற்றுப்பார்த்தான். அவன் அவளையும் பார்த்தான்.

'இந்த நாலும் எவ்வளவு ஒரே மாதிரியாக இருக்கு ! என்ன அதிசயம் !'

இதிலே நிஜமான அதிசயம், மூன்று பொம்மைகளை பார்த்துவிட்டு ஒருவர் நாலு என்று எண்ணுவதுதான் என்றாள் அவள்.

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. 'இதெல்லாம் அச்சில் வார்த்ததா?' 'நாங்கள் வெண்கல - வேலைக்காரர்கள் இல்லை.'

'கடைசல் பட்டறையில் செய்யப்பட்டதாக இருக்கலாம். பாற்கடலை அவர்கள் கடைந்தபோது கிடைத்த லஷ்மி மாதிரி இருக்கு.'

'அவர்கள் பாற்கடலை கடைந்தபோது நான் அவர்களோடு கூடச் சேரவில்லை. அதனாலே நான் லஷ்மியையும் பார்த்ததில்லை. என் தொழில் என்ன என்கிறதை உங்களுக்குக் காட்டினேன். அவ்வளவுதான் நல்லது. எப்படி நாலு என்கிறீர்கள்?

'உயிர் இல்லாத இந்த மூன்றையும் இவைகளை செய்யும் உயிருள்ள ஒருவரையும் சேர்த்து குறிப்பிட்டேன் இவை எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பது தான் ரொம்ப அதிசயம்!

'வேறுவிதமாக சொல்லப்போனால் உயிர் உள்ள ஒன்று இந்த உயிர் இல்லாதவைகள் மாதிரி இருக்கு, அதானே அதிசயம்? இதில் அதிசயப்பட எதுவும் இல்லை. அது என் தலைவிதி.'

அவள் கண்கள் பளீரிட்டன். அவள் மறுபடியும் உள்ளே சென்று திரும்பியபோது அவள் கன்னங்கள் செவந்திருந்தன. அவள் கையில் இன்னொரு சிறு சிலை இருந்தது. அதை அவன் பக்கத்தில் வைத்தாள். அவன் தன் கைகளில் அதை எடுத்தான்.

இது கிருஷ்ணனா. கம்ஸ்வதமா? அல்லது கிருஷ்ணன் மாதிரி உடை அணிவிக்கப்பட்ட கொள்ளைக்காரனா? இதுமட்டும் இதைவிட பெரிதாக இருக்குமானால் காய்கறித் தோட்டத்தில் சோளக்கொல்லை பொம்மையாக வைக்க உபயோகப்படும். இல்லை. இன்னும் சின்னதாக இருந்தால்....'

அவள் அவனை இடைமறித்தாள். 'இப்படித் தான் ஆச்சு. சுமார் ஐம்பது பொம்மைகள் நான் செய்தபிறகு இதேமாதிரியே வந்தது. முதலில் கிருஷ்ணன் உருவம் செய்தேன். பார்த்தவர்கள் எல்லாம் அவைகளையும் வாங்கினார்கள். ஒவ்வொன்றுக்கும் மூணு, நாலணா கிடைக்கும். போகப் போக உடுப்புகள் தான் கிருஷ்ணனுடைய தாக இருந்ததே தவிர உருவம் வேறு ஒரு கிருஷ்ணனாக ஆகிவிட்டது. அந்த வேறொரு கிருஷ்ணன், உங்களுக்குத் தெரியுமே, நான் ஒரு காலத்தில் கிருஷ்ணனாக கருதி இருந்த அதே ஆள்தான். அவனைப்பற்றி நினைக்கிறபோதெல்லாம் எனக்கு ஏகக் கோபம் வரும். நான் செய்கிற உருவம், என் கோபம் அதன் முகத்தில் பிரதிபலிக்க, அவனைப்போலவே தோன்ற ஆரம்பித்தது. போகப் போக ஜனங்கள் இந்த பொம்மைகளை வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். ஆண் உருவங்கள் செய்கிறதையே நான் நிறுத்திவிட்டேன். ஸ்ரீ பார்வதி உருவம் செய்ய ஆரம்பித்தேன். அதாவது பெண் உருவம் செய்து அதை ஸ்ரீபார்வதி என்று பெயர் வைத்தேன். நான் ஸ்ரீ பார்வதியை பார்த்ததே இல்லையே, பார்த்திருக்கேனா என்ன..? ஸ்ரீ பார்வதி சிவபெருமானுடன் ஆடினது மற்ற விஷயங்கள் எல்லாம் நான் கேள்விப்பட்டிருக் கேன். அதை சினிமாவிலேயும் பார்த்திருக்கேன். பார்வதியும் பரமேஸ்வரரும் சில சமயம் தங்களுக்குள்ளே சண்டைப்பிடித்துக் கொள்வதுண்டு என்கிறதும் தெரிந்தது. இதையெல்லாம் மனதில் கொண்டு நான் பார்வதி உருவம் செய்ய ஆரம்பித்தேன். என்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு பார்வதியின் முகபாவங்களை என் முகத்தில் தோன்றச் செய்து பிறகு மரக்கட்டைக்கு அவைகளை ஏற்றுவேன், நான்தான் பார்வதி என்று கற்பனை செய்துகொண்டு, முடிவில் எல்லா பார்வதி பொம்மைகளும் ஒரே மாதிரி ஆகி விட்ட து...'

அவள் தொடருமுன் அவன் சொன்னாள்: 'பார்வதியும் நீயும் ஓரே ஆளாகிவிட்டீர்கள்.'

'என்ன சொல்கிறீர்கள், பார்வதியும் நானும் ஓரே ஆளா? பாருங்கள். என் மாதிரினா பார்வதி ஆக ஏற்பட்டது. அவைகளை விற்க எனக்கு வெட்கமாக இருந்தது, என் உருவ பொம்மைகளை நானே விற்பது என்றால் .?

அவன் அவசரப்பட்டு சொன்னான், அவைகளை வாங்க பலபேர்கள் இருப்பார்களே''.

'நானே அதையெல்லாம் பார்த்தேனே . ஆனால் அவைகளை வாங்குகிறவர்கள்கூட என்னை நிந்திப்பார்கள், உருவங்கள் நன்றாக இருக்கின்றன, ஆனால் அதெல்லாம் ஆடம்பரமாக தன்னை காட்டிக்கவும் ஆண்களை வசீகரிக்கவும் தான் விற்கிறதாகவும் இது மாதிரி எல்லாம் பேச்சு. நான் கொஞ்சம் முந்தி சொன்னேனே அந்த கதா, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என் முகத்துக்கு நேரேயே இதெல்லாம் சொன்னாள். நான் சூடாக திருப்பிக் கொடுத்தது அவள் கண்களையே அநேகமாக குருடாக்கி இருக்கணும். அப்புறம் நான் நினைத்தேன் என் காதுலே விழாத இடத்திலே எல்லாம் அவள் இதெல்லாம் சொன்னால் நான் எப்படி அவளை திட்ட முடியும்? நான் செய்ததை வேறே ஒருத்தி செய்தால் கதா மாதிரியே தான் நானும் நடந்து கொண்டிருப்பேன்.'

''அது உண்மையாக இருக்கலாம், இருந்தாலும் தன்னைப் போலவே இப்படி இந்த மாதிரி செய்கிற திறமை உண்மையாகவே வியக்கத்தக் கதுதான்.'

அவள் சொன்னாள்: 'நீங்கள் என்னை முகஸ்துதி செய்கிறீர்கள். ஒரு உருவம் அதுமாதிரி செய்தால் அதிலிருந்து எத்தனையோ அதேமாதிரி செய்யலாம் இல்லையா ? ஒருவர் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக் கொண்டு ஒன்றை செதுக்கணும், அவ்வளவுதான், அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை.'

என'அது நிஜம்தான்', 'இந்த சுற்றுப்புறத்திலே இருக்கிற ஒவ்வொருத் தரும் நான் எதைச் சொன்னாலும் அது உண்மை தான் என்று சொன்ன காலம் உண்டு. அவர்களை எல்லாம் கண்டாலே எனக்கு பயம்'

'இப்போ நீ என்னைக் கண்டு பயப்படவில்லை என்று நினைக்கிறேன்.'

'இப்போ யார் கிட்டவும் எனக்கு பயம் இல்லை எனக்கு வெளியே யாரும் இருப்பதாகக் கூட நினைத்து நான் அலட்டிக்கிறதில்லை.'

. 'அநேக கலைஞர்கள் அப்படித்தான் இருக்கி றார்கள்.'

அதைத்தான் 'நான்' என்கிற உணர்வு என்று சொல்வது என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். அவள் உள்ளே போய் திரும்பி வந்தாள் ,

இன்னும் நாலு பொம்மைகளை அவன் முன் வைத்தாள். அவை எல்லாம் அவள் உருவங்கள் கருணை, கோபம், வியப்பு காமாவேசமான தோற்றங்களுடன்

இந்த நாலும் முதல் தரமான கலைப்படைப்புகள் என்று நான் சொன்னால் நான் வெறும் முகஸ் துதிக்காரன் என்றுதான் நீ நினைப்பாயா ?'

'அப்படி நினைக்காமல் இருக்க முயற்சிப்பேன் ஆனால் முதல் தரமானது என்றெல்லாம் ஏன் சொல்லுகிறீர்கள்? இப்போதெல்லாம் நான் இவைகளை விற்கிறதே இல்லை, பகல் நேர சலிப்பிலே இருந்து தப்பிக்கத்தான் நான் இதுகளை செய்கிறேன். ஒரு நாள் இதுகளுக்கு கிராக்கி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். என்னையே பார்க்காதவர்கள் கைகளுக்கு இவை கிடைக்கிற போது ஒரு விபசாரியின் சுயவிளம்பரம் என்று சொல்லி இவைகளை நிந்திக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.

'ஒருவருக்கு நல்ல கைத்திறன் இருக்கு. உண்மையாக ஒரு நிபுணர். இருந்தாலும் அதைக் கொண்டு சம்பாதிக்க முடியவில்லை. ரொம்ப பரிதாபகரமானது. இந்த அவதூறுக்கெல்லாம் ஏன் பயப்படுகிறாய்? ஜனங்கள் தங்கள் நாக்கை ஆட்டிக் கொண்டு போகட்டுமே. நீ ஏன் அதை கவனிக்கிறாய்? ஒரு குருட்டுப் பயல் கூட இந்த சிற்ப பொம்மை ஒண்ணுக்கே ஒரு ரூபாய் தாராளமாக கொடுப்பானே, யாரையும் நம்பி இராமல் நீ வாழலாமே. தொழில் சிற்பி என்றுதான் நான் எழுதப் போகிறேன்.'

அவன் அதையே எழுதிக்கொண்டான். மற்ற விஷயங்களையும் கிறுக்கிக் கொண்டான். அவளும்  அவளுடைய சகோதரனைப் பற்றி விசாரித்து அந்த தகவலையும் குறித்துக் கொண்டான். இதுக்கிடையே அவள் ஒன்றைத் தவிர மற்ற எல்லாத்தையும் உள்ளே கொண்டுபோய் வைத்தாள். ஒன்றை கையில் வைத்துக்கொண்டிருந்தாள்.

இன்னொரு தரம் அவன் வெற்றிலை போட்டுக் கொண்டான். இதுகளில் எதையும் நீ விற்கமாட்டாய், அதானே சொல்கிறாய்?

'இதுகளை நான் தின்றுவிடுகிறதும் இல்லை, அல்லது நெருப்பிலே போட்டுவிடுகிறதும் இல்லை.

'இவை நிறைய வைத்திருக்கிறாயா நீ?'

நீங்கள் இப்போது எடுக்கிற சென்ஸஸ் கணக்கில் இந்த கேள்வியும் சேர்ந்ததா?'

"நல்லது, நான் இப்போது புறப்படுகிறேன், கணவனுடன் சண்டை - நீ சொன்னது...'

அவள் இடித்துப் பேசினாள். நான் உங்களுக்கு சொல்லவில்லை? நல்லது, கணவனைப் பற்றி அன்னியரிடமும் வழியில் போகிறவரிடமும் ஒருத்தி இன்னும் அதிகமாக என்ன சொல்ல முடியும்? அவன் ஒரு மிருகம். நிறைய குடிப்பான். குடிபோதையில் வெறி நாய் மாதிரி நடந்து கொள்வான். ரோட்டிலே போகிற யாரோடேயும் ஒவ்வொருத்தரோடேயும் வலுச் சண்டைக்குப் போவான். அப்புறம் சமத்தியாக அடியும் வாங்கிப்பான். நிதானம் வருகிறவரை அதாவது விடிகிறவரை ராத்திரி போலீஸ் ஸ்டேஷனில்தான் தூங்குவான். ஒரு நாள் ராத்திரி, அகாலமான பிறகு நான் போய் என் பணிக்கனை " ஜாமீனில் விடுதலை பெறச் சொல்லி ஒரு போலீஸ்காரர் மூலம் ஹெட் கான்ஸ்டபிள் சொல்லி அனுப்பினார். விடிந்த பிறகு அவனை விடுதலை செய்தால் போதும் என்று நான் அவரிடம் சொன்னேன். என் கணவன் இல்லாத போது யாராவது வீட்டுக்குள் நுழைந்து எதாவது வம்பு செய்தால் நான் புகார் செய்ய போலீஸ் ஸ்டேஷனுக்கு போகமுடியாது என்று போலீஸ்காரர் என்னை எச்சரித்தார். நான் சொன்னேன் அவருக்கு , யாராவது என் இடத்தில் வந்து வம்பு செய்தால் என் தலையணைக்கு அடியிலே கூர்மையான உளி வைத்திருக்கேன் என்று. அவர் போய் விட்டார். ஒரு மணி கழித்து என் கணவன் போதையில் தடுமாறிக் கொண்டுவந்தான். நான் எதுவும் பேசவில்லை; பகல் ஆனதும் நான் அவன் கிட்ட கொஞ்ச நாளைக்கு ஊருக்குப் போய் இருக்கப் போகிறேன் என்று சொன்னேன். அவன் கேட்டான், 'இப்போ போவானேன் ? நான் சொன்னேன், 'இனிமேல் நான் இங்கே தங்கினால் யாரையாவது நான் என் உளியாலே கொலை செய்ய அவசியம் ஏற்படும். அதனாலே தான் நான் போகிறேன். அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா ? ; அந்த சமயம் என் கையும் சும்மா கட்டிக்கொண்டு இருக்காது. நினைவு இருக்கட்டும்.' என்றான் அந்த மிருகம் ! நீ மிருகம். உன் கூட நான் வாழத் தயாராக இல்லை என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டேன், ரோடுக்கு வந்தேன். பஸ் ஏறி நேரே இங்கு வந்து விட்டேன். அவனைப் பற்றி இது மாதிரி எத்தனையோ அருவருப்பான கதைகள் இருக்கு. அதை எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.'

அவள் நிறுத்தியதும் அவன் எழுந்தான் , 'உங்களுக்கு இஷ்டமானால் இதை நீங்கள் உங்களுக்கே வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிக்கொண்டே தன் கையில் இருந்த மரஉருவத்தை அவன் முன் நீட்டினாள்.

அவன் சந்தோஷத்தோடு வாங்கிக்கொண்டு அதைப் பார்த்தான். ரௌத்ர பாவத்தில் அவள் உருவம் அது. அதைப் பார்த்ததும் அவன் முகம் விழுந்து விட்டது. இருந்தாலும் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு பெஞ்சிமீது ஒரு காகிதத்தை வைத்து, "இதை கொஞ்சம் பாரு என்றான் அவன்.

அவள் பார்த்தாள். அதில் அவன் அவள் மாதிரியே - வரைந்திருந்தான்! அவள் இன்னும் கவனித்துப் பார்த்தாள்.

'நெடுகப் பேசிக்கொண்டே நீங்கள் இதை வரைய முடிந்தது அதிசயம். நான் கொடுத்த அந்த பொம்மையை தயவு செய்து என்னிடம் திருப்பித் தாருங்கள்.' அவள் உள்ளே சென்று பார்வதி தவம் செய்கிற மாதிரி இன்னும் கொஞ்சம் பெரிய பொம்மையுடன் வந்து கலைஞனிடம் அதை கொடுத்தாள். சந்தோஷமும் நன்றியும் குறிக்கும் முகபாவத்துடன் அவன் அந்த வெகுமதியை பெற்றுக் கொண்டான்.

'நல்லது, போய்வாருங்கள்' என்று அவள் சொல்லிக் கொண்டு வெளியே வந்தாள். அவன் அடுத்த வீட்டுக்கு வந்தான். அவன் நெஞ்சில் வீணைத்தந்திகள் நாதம் எழுந்து எதிரொலித்தது.

'ஸமீக்ஷா' பத்திரிகையின் அகில இந்திய எழுத்தாளர் மகாநாடு மலரில் வந்து இங்கிலீஷ் மொழி பெயர்ப்பிலிருந்து  தமிழாக்கப்பட்டது மலையாளத்திலிருந்து இங்கிலீஷில் மொழி பெயர் த்தவர் ஏ . என் நம்பியார்)
------ - ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இன்றையத் தமிழ் இலக்கியத்தில்
சில போக்குகள் (32-ஆம் பக்கத் தொடர்ச்சி) ரிக்கர்களும் அடங்கிய உலகம் அது. அது மட்டும் மல்ல; மேலை நா களைப் பாதித்து மாற்றும் சக்தி பெற்று வருகிற இந்திய, சீன, ஜப்பானியக் கருத் துக்களையும் போக்குகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைத் தமிழ் இலக்கியத் தில் உலக நோக்கு மிகவும் அவசியமாகும். உலக இலக்கியத்தில் மற்ற இலக்கியங்களுடன் சரி சம் மாக தமிழ் இலக்கியமும் இடம் பெறவேண்டும் மானால் ஒரு உலக நோக்கு நமக்கு மிகவும் அவசிய மாகும். இது விமரிசகன் உண்டாக்கித் தரவேண் டிய ஒரு நோக்கு. இலக்கியத்தில் உலக நோக் கைச் சம்பாதித்துக் கொள்ளமுடியாத எவரும் இன்று விமர்சகனாக இருக்க இயலாது. ஒரே உல கம் என்கிற தத்துவம் அரயேல் பற்றி எப்படி யானாலும் இலக்கியம் பற்றிய வரையில் அவசியம், கைவந்த ஒரு கொள்கை என்றில்லாத விமர்சகன் தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியிலுமே நல்ல விமரிசகன் ஆகமாட்டான். இந்த இலக்கிய உலக நோக்கைக் காண ஒரு பயிற்சி, ஒரு தேர்ச்சி நமக்குத் தேவை. இன்று நமது இலக்கியாசிரியர் களும் வாசகர்களும் இலக்கியத்துக்கும் விமரிசனத் துக்கும் ஒரு பயிற்சி தேவை என்று உணராமலே இருப்பதைத் தான் மிகவும் சோகமான உண்மை யாகச் சொல்லவேண்டும். ஐ. ஏ. ரிச்சார்ட்ஸ், டி. எஸ். எலியட், எப். ஆர். லீவிஸ், எஸ்ரா பவுண்டு போன்றவர்களுடைய கருத்துக்களை மட் டும் இங்கு எடுத்து நட்டுவிட்டால் போதும் என்று நினைப்பது தவறு. அப்படி நினைத்துக் காரி யம் செய்பவர்களையும் நமது விமர்சகர்களிலே நாம் காண்கிறோம்; அது துயரம் தருகிற ஒரு சின்னமாகும்.
து - 43

No comments:

Post a Comment