தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, January 09, 2019

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாயுடே ஆடு ; பால்யகாலசகி : எம். முகுந்தன் - முன்னுரை

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாயுடே ஆடு ; பால்யகாலசகி : எம். முகுந்தன் - முன்னுரை (மொழி ஆக்கம் - குமாரி சி.எஸ்.விஜயம்)

மறு வெளியீடு


முன்னுரை 

மலையாள நாவல் இலக்கியம் தோன்றி இன்னும் நூறாண்டுகள் கூட ஆகவில்லை. 1887-ல் அப்பு நெடுங்காடி 'குந்தலதா' என்ற முதல் நாவலை எழுதினார். மேலைநாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவில் ஷேக்ஸ்பியர் காலத்தில் நாவல்கள் தோன்றிவிட்டன என்பது அறிஞர்கள் கருத்து. ஆனால் மலையாள மொழியில் இவ்வகை இலக்கியம் வெகு நாளைக்குப் பிறகே உருவாகியது. இலக்கியம் என்றால் கவிதையைப் படித்து ரஸிப்பது தான் என்று கருதிய சமயத்தில் ‘ குந்தலதா ' வெளிவந்தது. 'குந்தலதா' வாசகர்களுக்குப் புதியதொரு ரசனைக்கு வழி திறந்தது. எனினும், நாவல், இலக்கிய வடிவில் ரசிகர்களுக்குக் கிடைத்தது ' இந்துலேகா' மூலம்தான். ஓ.சந்துமேனவன் எழுதிய இந்த நாவல்தான் சிந்தனைக்கோப்பும், அமைப்பு அழகும் கொண்ட முதல் மலையாள நவீனம். 

நீதிபதியாக இருந்த சந்துமேனவன் ஆங்கில இலக்கியத்தில் நன்கு பரிச்சயம் கொண்டிருந்தார். அவர், தமது சமூக நிலையை  'இந்துலேகா'வில் சித்தரித்திருந்தார். தாய்வழி (மருமக்கள் தாயம்) முறை குறைந்து வருவதையும், ஆங்கிலக் கல்வி பயின்ற புதிய தலை முறையினரின் சுதந்திர உணர்வையும், அந்த நாவலில் அவர் முக்கியமாகக் கையாண்டிருந்தார். 

* இந்துலேகா' விற்குப் பிறகு மலையாள மொழியில் வெளியான இரண்டாவது முக்கிய நவீனம் ஸி. வி. ராமன் பிள்ளை எழுதிய * மார்த்தாண்டவர்மா ' என்பதாகும். இது முற்றிலும் இந்துலேகாவினின்று வேறுபட்டது. கருத்துக்களிலும், அமைப்பிலும் சர் வால்டர் ஸ்காட் எழுதிய 'ஐவன்ஹோ ' என்ற நாவலை விட, ஒரு படி மேலாகவே இருந்தது இந்நாவல். இது ஒரு வரலாற்று நாவல் ; நாடு விடுதலை பெறும் வரை திருவிதாங்கூர் என்று வழங்கி வந்த தென் கேரள, ராஜ்யத்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. 

1911.ல் இதே எழுத்தாளரின் கைவண்ணமாக, ' தர்மராஜா' என்ற கதை வெளிவந்தது. இதை, அந்தப் பரம்பரை எழுத்தின் முடிவாகக் கொள்ளலாம். இந்த இரண்டு நாவல்களும் சந்துமேனவனுடைய அந்தஸ்தை, ராமன் பிள்ளைக்குக் கிடைக்கச் செய்தன. இதற்குப் பிறகு மலையாள நாவல் உலகில், இருபது இருபத்தைந்து வருடங்களுக்குப் புரட்சிகரமான மாறுதல் ஏதும் நிகழவில்லை. இக்காலத்தில் ஒரே ஒரு நவீனம்தான் நினைவில் வைத்துக் கொள்ளும்படி வெளியாயிற்று. அது பவத்ராதன் நம்பூதிரிப்பாடு எழுதிய “ அப்பண்டே மகள். ' இந்தக் காலம் தற்கால மலையாள நாவல்களின் வளர்ச்சிக்குக் கரு என்று சொல்லலாம். 

சந்துமேனவன் காலம்வரை, மலையாள எழுத்தாளர்களுக்கு மேலை நாட்டு இலக்கியத்துடன் அநேகமாகத் தொடர்பு ஏதும் இருந்திருக்க வில்லை. ஆனால் இந்த நூற்றாண்டின் நாற்பதாவது வருஷத்தில் நிலைமை மாறிவிட்டது. பல நல்ல நூல்கள், ஆங்கிலத்திலிருந்தும் மற்ற மேற்கு மொழிகளிலிருந்தும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப் பட்டன. எழுத்தாளர்களின் ஆங்கில ஞானமும் பரிச்சயமும் வளர்ந்தன. இதன் வாயிலாக, நாவல் பற்றிய அவர்களது கருத்துக்களும் எண்ணங்களும் சீரடைந்தன. இதன் விளைவாக, நவீன இலக்கியம் தோன்றியது. ருஷ்யப் புரட்சியும், சோஷலிஸமும் கேரளத்தவரின் சிந்தனையைக் கவர்ந்தன. சோஷலிஸத்தின் உத்வேகமும், மேற்கத்திய நாவல்களின் இலக்கிய நயங்களும்  ஒருங்கிணைந்து, மலையாள நாவல் இலக்கியப் பொற்காலத்துக்கு அடி கோலின. 

தகழி, கேசவ்தேவ், பஷீர் ஆகியோர் இக்காலத்தின் தலைசிறந்த நாவலாசிரியர்கள். மலையாள நாவல் உலகத்தின் ' மும்மூர்த்திகள் ' என்று இவர்கள் கருதப்படுகிறார்கள். 

' உரூப்', பொற்றேகாட் ஆகிய இருவருக்கும் இதே ஸ்தானம் உண்டு. அவர்களுடைய கலையும் கருத்துக்களும் மாறுபட்டவை என்பதைத் தவிர, வேறு வேற்றுமை கிடையாது. தகழியின் நாவல்களில் ஒரு யுகத்தின் துடிப்பையும் இரத்த ஓட்டத்தையும் காண்கிறோம். கேசவ்தேவின் படைப்பில் தார்மீகக் கோபத்தையும், நெருப்புப் புயலையும் காண்கிறோம். பஷீரின் கதைகளில் விவேக ஒளி பரவக் காண்கிறோம். உரூபின் படைப்புகளில், படைப்பு ஆற்றலின் கம்பீரத்தையும், பொற்றேகாட்டின் இலக்கியங்களில், இதய ஓட்டத்தின் சித்திரங்களையும் பார்க்கலாம். 

தகழி சிவசங்கரன் பிள்ளை தான் தற்கால மலையாள நாவல்களின் தந்தை. புதிய முற்போக்கு யுகத்தின் இதயத் துடிப்புக்கள் இந்த நாவலாசிரியரின் படைப்புகளில் எதிரொலிக்கின்றன. ' சோஷலிஸ யதார்த்தவாதத்தின் தீர்க்கதரிசி' என்று இவர் பெயர் பெற்றவர். 

இவரது நாவல்களைத் தவிர வேறு எவருடைய நாவல்களிலும் படைப்பின் கோபாவேசத்தையும், ஆதாரபூர்வமான யுகத்தின் ஆத்மாவையும், உணர்ச்சி பூர்வமாகக் காண இயலவில்லை, இவருடைய “ தோட்டியுடே மகன் ' என்ற புகழ்பெற்ற நாவல் வழக்கமான நடத்தை நெறிகளுக்கு ஒரு சவாலாகும். * யதார்த்த வாதத்தின் தத்துவார்த்தம் என்ன என்பது இந்த நாவலில்தான் முதலில் வெளியிடப்பட்டிருக்கிறது. 'ரெண்டிடங்கழி' என்ற நாவலுக்குச் 'செம்மீனு'க்குக் கிடைத்த புகழ் கிடைக்கவில்லை. ஆனால், இந்த நாவல்தான் தகழியின் படைப்பாற்றலை நிறைவாக எடுத்துக் காட்டுகிறது. இதில், தமது உறுதியான கருத்துக்களைத் தகழி வெளியிட்டிருக்கிறார். கேரள மக்களின் புரட்சி எண்ணங்களை விழித்தெழச் செய்ததில், இந்த நாவலுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. • செம்மீன் ' மீனவர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்த நாவலின் முடிவில் பரீக்குட்டியும் கருத்தம்மாவும் ஒருவரை ஒருவர் தழுவிய நிலையில் சடலங்களாக அலைகளால் அடித்துக் கொண்டு வந்து கரையில் ஒதுக்கப்படுகிறார்கள். இந்தக் காட்சியுடன் துவங்கும் நாடக விளைவை, அதுவரை எந்த மலையாள நாவலிலும் காண முடிந்ததில்லை. கடலையும், மனித ஆத்மாவின் விசாலமான கண்யத்தையும் ' தகழி ' செம்மீனில் இணைத்திருக்கிறார். “ ஏணிப்படிகள் ' ஒரு பெரிய நாவல். நாட்டு விடுதலைக்குப் பின் கேரளம் பின்பற்றிய தேசிய மற்றும், சமுதாயப் பாதையை இந்த நாவல் எடுத்துரைக்கிறது. 

கேசவ்தேவ் நாவல்களின் சாரமும், புரட்சி விழிப்புறல்தான். தகழியின் புரட்சி உணர்வுக்கு அடிப்படை ஒரு குறிப்பிட்ட கொள்கை அதாவது மார்கசீயம். ஆனால் கேசவ்தேவின் புரட்சி உணர்வு இயற்கையானது. அவரது பாத்திரங்கள் அநீதியையும், ஒழுங்கீனத்தையும் கண்டு வெகுண்டு சீறுகின்றன. அவரது சிறந்த படைப்பான 'ஓடையில் நின்னு'வின் கதாநாயகன் 'பப்பு' தியாகத்தின் சின்னம். அவனைப் படைத்ததன் வாயிலாக ஆசிரியர் மனித குலத்துக்கு ஒரு சிகரம் வைத்திருக்கிறார். கேசவ்தேவின் பெரிய நாவலான ' அயல்கார்', தகழியின் ' ஏணிப்படிகள் ' போன்றது. சமுதாயத்தின் பல்வேறு மக்கள் பிரிவினரையும், அவர்களது சமூக வாழ்க்கை வேறுபாடுகளையும் அவர் விரிவாகச் சித்திரித்திருக்கிறார். ஒருவேளை 'ஓடையில் நின்னு' வுக்கு கிடைத்த முக்கியத்துவம் அதற்குக் கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அதன் உணர்ச்சிச் செறிவும், கலைநயமும், கேசவ்தேவின் சிறந்த நாவலெனக் கருதும்படி செய்திருக்கிறது. தகழியின் சிறந்த படைப்புகள் எழுதப்பட்ட காலம், சமூக வாழ்க்கையின் நாவல் காலம் என்று கருதப்படுகிறது. சமூகத்தில் காணப்பட்ட விழிப்புணர்வு, இந்த நாவலாசிரியர்களைக் கவர்ந்தது. 

உரூபும் பஷீரும், சமூகத்தையும், சிக்கலான சமூக அமைப்பையும் நிர்வகிக்கும் மனிதர்களின் உள்ளங்களை நேராக ஊடுருவிப் பார்த்தனர். உரூபின் 'உம்மாச்சு' என்ற நாவல் மலையாளத்தின் தலைசிறந்த நாவல்களில் ஒன்று எனக் கருதப்படுகிறது. 'சுந்தரிகளும் சுந்தரன்மாரும்' என்ற அவரது புத்தகம், உலக இலக்கியத்தின் சிறப்புமிக்க நாவல்களை நினைவூட்டுகிறது. மனிதன் மீது காலம் செய்யும் கோலமும் சமூகத்தில் மனிதனால் விளையும் விளைவுகளும், படக்காட்சி போல் இந்த நாவலில் தோன்றுகின்றன. • குஞ்ஞம்மையும் கூட்டுகாரும்' என்ற இனிய கதை சமூகத்தின் கண்ணாடி எனச் சொல்லவேண்டும். 

பஷீரைப் போலவே உரூபும் அனைவரது மரியாதைக்கும் உரியவராவர். தகழியின் புரட்சி உணர்வோ கேசவ்தேவ்-யின் தார்மீகக் கோபமோ அவரிடம் காணப்படவில்லை. ஒரு முனிவரது, ஒருமனப் பட்ட சிந்தையுடன், படைப்புத் தவம் செய்கிறார். இந்த ஒருமனப்பட்ட, சிந்தையும் அதன் பலனான கம்பீரமும் அவரது நாவல்களின் சிறப்பாகும். 

பொற்றேகாடு' தமது இலக்கியப் பணியைத் துவக்கிய காலம், உலகம் முழுவதும் பொறுமையின்றித் தவித்த சமயம். கேசவ்தேவ், உரூபு ஆகியோரின் நிலைக்கு இவருடைய நிலை குறைந்ததல்ல. இவரது எழுத்துக்களில் கவிதை நயம் சொட்டுவதைக் காணலாம். இவரை ஒரு நாவலாசிரியர் என்று சொல்வதை விடக் கவிஞர் என்றே சொல்லிவிடலாம். மலையாள மொழியில் தாராளப் போக்கை மதிப்பவர்களில் இவர் தலைமைப்பீடம் வகிப்பவர். படைப்பு.புரட்சியின் தழலில் வெந்து கொண்டிருக்கும் வாசகர்களின் இதயத்தைச் சந்தனக் குழம்பால் குளிர்விக்கும் இதமூட்டும் பல நாவல்களையும் கதைகளையும் இவர் எழுதியிருக்கிறார். ஆனால் இவரது படைப்புக்கள் வெறும் கற்பனைக் குமிழிகள் மட்டுமல்ல. உதாரணமாக இவரது “ விஷகன்யா ' ஒரு காதல் கதை மட்டுமல்ல ; திருவிதாங்கூரிலிருந்து, வளம் நாடி செல்வம் தேடிச் சென்று வயநாட்டின் மலைப்பகுதிகளில் குடியேறிய விவசாயிகளின் கதையுமாகும். நாடோடிக் கூட்டம் ஒன்றின் ஆசாபாசங்களையும் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எடுத்துரைக்கும் வரலாறு. தகழியின் * செம்மீன்,' பஷீரின் 'பால்ய காலசகி, ' கேசவ்தேவ்-யின் ‘ஓடையில் நின்னு, ' உரூபின் ' உம்மாச்சு' ஆகியவற்றைப் போல 'விஷகன்யா ”வும் மலையாளத்தின் சிறந்த நாவல்களில் ஒன்று. இந்த ஆசிரியருடைய மற்றொரு நாவலும் இதேபோல் கவனத்துக்குரியது. ' தெருவிண்டே கதா ' என்பது அந்நூல். நகரின் தெரு ஒன்றின் கதை வாயிலாக நாட்டின் சமூகப் பண்புகளை அவர் இதில் அம்பலப்படுத்துகிறார். 

பொதுவாக மலையாள நாவலாசிரியர்கள் புதிய பாணிகளை எற்பதை அவ்வளவாக விரும்புவதில்லை). தகழி, பொற்றேகாடு நாவல்களின் சிறப்பு அம்சம் அவற்றின் கட்டுக்கோப்பு அழகாகும். மலையாள நாவல்களின் உயிர், கூரிய உணர்வுகளாகும். எம்.டி.வாசுதேவன் நாயர் தான் புதிய பாணியில் சோதனை நடத்திய முதல் நாவலாசிரியர். அது ஒரு தனிப்பட்ட துணிகர முயற்சியாகும். மார்ஸெல் பிரௌஸ்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகிய இருவரது கலை நய ரகசியங்களை ஒருங்கிணைத்து, வழக்கமான கூரிய உணர்ச்சிகளைப் புண்படுத்தாமல், தமக்கென சொந்தமான பாணியை உருவாக்கிக் கொண்டார். நாவல்களின் பரிணாமம், பாத்திரங்களின் வெளிப்புறங்களில் ஏற்படுவதில்லை. அவர்களது அந்தராத்மாவில் தான் ஏற்படுகிறது. வாசுதேவன் நாயரின் இப்புதிய பாணி, வாசகர்களுக்குப் புதியதோர் அனுபவமாயிருந்தது. அவரது நாவல்கள் புதிய பாணி மட்டுமல்ல, சந்து மேனவன் கண்ட தாய் வழிமுறையின் மறையும் தோற்றம், வாசுதேவன் நாயரின் நாவல்களில் நிதர்சனமாக நிறைவடைவது போல் தெரிந்தது. அவரது கதாநாயகர்கள் அனைவரும். மரபாகி வந்த தளைகளிலிருந்து விடுதலை பெறும் முயற்சிகளுக்கு உண்மைச் சாட்சிகளாவர். புரட்சிக்காரர்களைப் புகுத்திய மலையாளி நாவலாசிரியர்களில் வாசுதேவன் நாயர் முதல்வர், அவரது சிறந்த படைப்பான * நாலுகட்டு பழைமை வாத இருட்டில் மூழ்கி நாசமுற்ற நாயர் குடும்பம் ஒன்றின் கதையாகும். * காலம் ' என்ற புதிய நாவல், பாரதம் சுதந்திரம் பெற்றபின் மாறிவரும் பண்புகளைச் சித்திரிக்கிறது. ஈடு இணையற்ற கவிதை நபமுடைய வசன நடைக்கும், வீர்யமுள்ள, கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டான கதாநாயகர்கள், பெண்களின் அரிய சிறப்புகளுக்கு உறைவிடமான கதாநாயகிகள் ஆகியவர்களின் படைப்புக்கும் பெயர் பெற்றுப் புகழடைந்த வேறு மலையாள மொழி நாவலாசிரியர் எவருமில்லை என்று தயக்கமின்றிச் சொல்லலாம். 

மேலே சொன்ன நாவலாசிரியர்களுக்குப் பிறகு மற்றொரு வரிசை உண்டு . 'பாரப்புரம், ' கே. சுரேந்திரன், ஈ. எம், கோவூர், கோவிலன் ஆகியோரைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். * பாரப்புரம்' எழுத்துக்களில் சிப்பாய்களின் வாழ்வும், கேரள கிராமங்களின் கதைகளும் போதிய அளவு பிரதிபலிக்கின்றன. கே. சுரேந்திரன் குடும்பப் பிணக்குகளைத் தமது கருப் பொருளாகத் தெரிந்தெடுத் திருக்கிறார். கோவூரின் எழுத்துச் சிறப்பு பலவகைப்பட்ட கருப்பொருள்களாகும். சிப்பாய்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பதில் கோவிலனுக்கு ஈடு எவருமில்லை. நாவல் இலக்கியத்துக்கு வளமூட்டுவதில் இந்த ஆசிரியர்களின் பங்கு குறைவான தல்ல. 

பொதுமக்களின் அபிமானத்துக்குப் பாத்திரமாகி மலையாள இலக்கியத்தில் ஓர் இடத்தைப் பிடித்து ஊன்றிக் கொண்ட நாவலாசிரியர்களில் வைக்கம் முகம்மது பஷீர் ஒருவர். அவருக்குச் சமமானவர் என்று கருதப்பட்டவர்கள் எல்லாம் இப்போது வெறுமே பெயர் குறிப்பிடக் கூடிய நிலைக்கு வந்துவிட்டார்கள் . ஆனால் இந்த இலக்கிய மேதையோ இவர்கள் அனைவரையும் தூக்கி அடித்து விட்டு, தனிச் சிறப்புடன் ஒளி வீசுகிறார். முதுமைப் பருவத்தை எட்டிய போதிலும் கணக்கற்ற வாகர்கள் இவரைத் தொழுகிறார்கள். புதிய விழிப்பு யுகத்தில் நவீன இலக்கிப் படைப்புகள் இருந்த போதிலும் இவர் வேறு பல ஆசிரியர்களைப் போல, பழைய யுகத்துடன் ஒன்றிப்போய் விடவில்லை. இந்த ஆசிரியர் ஒரு யுகத்தையோ கால கட்டத்தையோ ஆட்கொள்ளவில்லை. பிறகு இவர் யார்? இவரது படைப்புகளின் குணச்சித்திரங்கள் என்ன ? 

பஷீர் என்ற பெயருடைய ஆசிரியரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமானால் பஷீர் என்ற பெயருடைய ஒரு மனிதரை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்டம் முழு வேகத்தில் நடந்து கொண்டிருந்தபோது இளம் பஷீர், வீட்டைத் துறந்து அதில் குதித்தார். கோழிக்கோடு கடற்கரையில் உட்கார்ந்து உப்பு தயாரித்தார். அதன் விளைவு போலீஸ் அடக்குமுறைக்கு ஆளாகி, சிறைக் கம்பி எண்ண வேண்டியதாயிற்று. இதயத்தில் சுதந்திரக் கனல் வீச, பஷீர் இந்திய நாடு முழுவதிலும் பயணம் செய்தார். வெளி நாடுகளுக்கும் போய் வந்தார். புதிய முற்போக்குக் காலத்தின் 1மற்ற யுக சிருஷ்டி ஆசிரியர்களைப்போல பஷீரின் உள்ளேயும் புரட்சிக் கருத்து கனன்று கொண்டிருந்தது. 

" எனது சதையும் ரத்தமும், எலும்பும் தோலும் அனைத்தும் இந்தியாவுக்குச் சொந்தம் '' என்று ' ஜன்ம தினம் ' என்ற கதையில் கூறியிருக்கிறார். ஆனால் அவரது கதைகளின் சாரம் தார்மீகக் கோபத்தையோ, தேசிய விழிப்புணர்வையோ கொண்டவை அல்ல. இதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த புரட்சிக் கருத்தை வசமாக்கி, சாந்தப்படுத்திக் கொண்டிருந்த விசேஷ உணர்வு ஒன்றும் இருந்தது. இதுதான் பஷீரை, தகழி, கேசவ் தேவ் ஆகியோரினின்று வேறுபட்டவராகச் செய்தது. 

பஷீர் சிறிது காலம் மனநோய் வசப்பட்டிருந்தார். மனநோய் ஆஸ்பத்திரியில் மனம் பேதலித்தவர்களுடன் அவர் இருந்தபோது “பாத்தும்மாயுடே. ஆடு” என்ற குறு நாவலை எழுதினார். 

அதன் முன்னுரையில் அவர் நினைவு கூர்கிறார் : " நாலு பக்கங்களிலும் 20-30 பைத்தியக்காரர்கள் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். கைகளில் விலங்கு பூட்டியவர்களும், கால்கள் தளைகளால் பிணைக்கப் பட்டவர்களுமாகப் பலவிதமான மனிதர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தார்கள். '' பஷீரின் மனதில் இருந்த சிந்தனைகள் அல்லது விசித்திர எண்ணங்கள் முரண்பட்டவை அல்ல. இந்த உலகின் வியாபகம், அதை நிரப்பியுள்ள இருள்- இவையே அப்போது அவரது சிந்தனைகள். பஷிர் என்ற எழுத்தாளரின் நல்ல அதிர்ஷ் த்தின் ஒரு பகுதியே பஷீரின் பைத்திய நிலை. அவரது ஆழங்காண முடியாத வாழ்க்கைத் தத்துவத்தில் இந்த உண்மையைக் காணலாம். 1 பஷீர் ஒரு புரட்சிக்காரர் என்பதைவிட உண்மையைத் தேடுபவர் என்று சொல்லலாம். அவரது சக ஆசிரியர்கள் சோஷலிஸ் யதார்த்தவாதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி வருகையில் பஷீர், 'எட்டுக்காலி மம்மூஞ்ஞ ', ' ஆனவாரி ராமன் நாயர் ; போன்ற நகைச்சுவைக் கதைகளை எழுதிக் கொண்டிருந்தார். 

* ஸ்தலத்தே பிரதான திவ்யன்மார் ', ' ஆனவாரியும் பொன் குரிசும் ', ' முச்சீட்டு களிக்காரண்டே மகள் ' ஆகியவை உயர்தர நகைச்சுவைக் கதைகள் எனக் கருதப்படுகின்றன. இப்படியிருந்தும் பஷீர் ஒரு நகைச்சுவை எழுத்தாளர் அல்ல. “ பாத்தும்மாயுடே ஆடு” என்னும் நூலின் முகவுரையில் அவர் எழுதுகிறார் : “ இது ஒரு ஹாஸ்யக் கதை. ஆனால் நான் இதை எழுதுகையில் என் உள்ளே ஒரு நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. ” அந்தத் தீயிலிருந்து விடுபடுவதற்கு இலக்கியப் படைப்புதான் பஷீருக்கு வழியாய் இருந்தது. பஷீர் சோஷலிஸ உண்மையைக் காணாமல் கண்ணை மூடிக் கொள்ளவில்லை. மிகப் பெரிய சிக்கல் நிறைந்த சமூக அமைப்பை ஊடுருவி நோக்கும் சக்தி, உருடைப்போல் பஷீருக்கும் உண்டு, 'என்டுப் புப்பாக் கோரானை யுண்டார்னு' (என்னுடைய தாத்தாவிடம் ஒரு யானை இருந்தது) என்ற புத்தகம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இது சமுதாயத்தின் தளத்தில் ஒரு புயலை எழுப்பும் நாவல்.

பஷீரின் நாவல்கள் பலவும் கேரளத்தின் முஸ்லீம் சமுதாய நிலையை விவரிப்பவை. “ பாத்தும்மாவுடே ஆடு' ' முச்சீட்டுகளிக்காரன்டே மகள் ' போன்ற நாவல்களில் தமது சமூகத்தைப் பற்றி எடுத்துரைக்கும் மனப்பான்மை காணப்படுகிறது. உண்மையான வாழ்க்கையிலிருந்து பொறுக்கிய பெண் பாத்திரங்கள் அவரது நாவல்களின் உயிர் ஓட்டமாகும். 'என்டுப் பாப்பாக் கோரானை யுண்டார்னு ' என்ற நாவலில் தனது சமூகத்தை ஒரு சேர்க்கை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். இந்த நாவல் குஞ்ஞபாத்தும்மா என்ற அப்பாவிப் பெண்ணைப் பற்றியது. பாத்தும்மாவைப் பற்றி பஷீர் சொல்கிறார் : “ தனது குழந்தைப் பருவம் தொடங்கி எல்லா உயிர்களிடத்தும் அன்புகொண்ட சிறு பெண் அவள்.”' குருட்டு தம்பிக்கை என்னும் அச்சில் உருளும் ஒரு குடும்பத்தின் கதை இது. பல தலைமுறைகளாக இரத்தத்தில் ஊறிப்போன வகுப்புப் போட்டியை பஷீர் பின் வருமாறு விளக்குகிறார் : “ தாத்தாவின் யானை ஆறு பேரைக் கொன்றுவிட்டது. ஆறு மாவுத்தர்களும் முஸ்லீம் அல்லாதார்கள். யானை, ஒரு முஸ்லீமைக்கூடக் கொல்லவில்லை.'' அம்மிஜான் சொன்னார் : ' அது உண்மையான விஷயத்தை அறிந்த யானை.'' 

பஷீரின் மற நாவல்களைப்போல் இதுவும் சிறிய நாவலே. இதன் நடை. அழகு மிகுந்த கவிதை நடை... குரானிலிருந்து மேற்கோள்களும், நிகழ்ச்சிகளும் இந்த நவீனத்தின் அழகை மேலும் துலங்கச் செய்கின்றன. முஸ்லீம் சர்தா புயத்தின்  புரியாப் புதிர்களைப் புரியவைக்கும் பல நாவல்கள் மலையாளத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றில் இது பிரதான புத்தகமாகும். முஸ்லீம் சமூகத்துக்கு எதிராக எவரும் ஒரு வார்த்தைகூடப் பேசுவதற்குத் துணியாத ஒரு சமயத்தில் பஷீர் இந்த நாவலை எழுதினார். இதைக் கண்ட அந்தச் சமூகத்தின் காவலர்கள் : என பல பெரிய மனிதர்கள், பஷரை அவதூறுக்கு இலக்காக்கப் பெரிதும் முயன்றார்கள். ஒரு சமயம் இந்த நூல்மீது சட்டபூர்வமான தடை இருந்தது. 

பஷீரின் கதையில் வரும் எந்தப் பாத்திரத்துக்கு எதிராகவும் தமது மனங்களில் வெறுப்போ, அருவருப்போ எழமுடியாது. குஞ்ஞப் பாத்தும்மாவின் ஏக்கங்களுக்கும் வற்றாக் கண்ணீருக்கும் காரணம் அவளுடைய தந்தைதான். இந்தப் பாத்திரத்தைக்கூட வாசகர்களின் அன்பையும் அநுதாபத்தையும் பெறத்தக்கதாக அவர் படைத்திருக்கிறார். இதன்மூலம், பஷீர் ஒரு புரட்சிக்காரர் என்பதை
விட மனித குலத்தை நேசிப்பவராக இருக்கிறார் என்பது நிரூபணமாகிறது. ' 

மலையாள நாவல்கள் காலத்தை ஒட்டியே அமைந்திருப்பது அவற்றின் அடிப்படை அம்சம். காலத்துக்குப் புறம்பாக அது வெகு தொலைவில் சென்றால் “ஓடையில் நின்னு' போன்ற ஒரு நாவல் கூடச் சுவையற்றதாகிவிடும். ஆனால் பஷீரின் நாவல்களுக்கு இந்த எல்லைகள் அவசியமாகத் தோன்றவில்லை. இதற்குச் சிறந்த உதாரணம் மேலே குறிப்பிட்ட நாவல். 

• பால்யகாலசகி'யை அறியாத மலையாள வாசகர் எவரும் இருக்க முடியாது. உலகத்தின் மர்மங்களை ஆராயும் பஷீரின் நாவல்கள் எளியவை, அழகானவை. நாடோடிப் பாடல்களைப் போன்றவை, ஒரு வீணையின் இனிய நாதத்தின் கவர்ச்சி அவரது வாக்கியங்களில் தென்படுகின்றன. ' தகழி ', உரூபைப்போல் பெரிய நாவல்களை பஷிர் எழுதவில்லை. இவரைப்போல் செட்டாக வார்த்தைகளைப் பயன்படுத்தும் மலையாள எழுத்தாளர்கள் அதிகம் கிடையாது. பஷீரின் கலைத்திறனுக்கு 'பால்யகாலசகி' நல்லதொரு எடுத்துக்காட்டு. வெளித் தோற்றத்துக்கு இதுவும் ஒரு காதல் கதை தான். இந்தக் காதல் கதையின் நிழலில் மனிதனின் அதிர்ஷ்டம், வாழ்க்கை ஆகியவற்றின் மர்மப்பொருள் விரவிக் கிடக்கிறது ; அவரது ஒவ்வொரு சொல்லிலும் வழிபாடு செய்வோரின் மணி ஓசை எதிரொலிக்கிறது. சிறியதொரு முத்தில் உலகின் இரகசியத்தை உள்ளடக்கும் இக்கலைத்திறன் அற்புதமானது. 

பஷீரின் மற்றொரு நாவல் உண்டு. அதை படிக்கத் தொடங்கினால் முடிக்காமல் கீழே வைக்க மாட்டோம். அது தான் 'பாத்தும்மாயுடே ஆடு' (பாத்தும்மாவுடைய ஆடு). பஷீரின் நாவல்கள் அனைத்துமே இத்தகைய சிறப்புடையவைதாம். அதனால் தான் இளைஞர்கள் முதியோர்கள் என்ற வேறுபாடின்றி வாசகர்களிடையே அவருடைய நாவல்கள் பிரபலமாக இருக்கின்றன. 

'பால்யகாலசகியைப் போல, 'பாத்தும்மாயுடே ஆடு'ம் சுமார் 100 பக்கங்களுக்கு உட்பட்டதே! ' ஏணிப்படிகள் ', * ஆள் கூட்டம் ' போன்ற பெரிய நாவல்கள் பல மலையாளத்தில் இருக்கின்றன. ஆனால் இவை, நாவலின் அமைப்பு பற்றிய பழைய விதிகளை அனுசரிக்கவில்லை. இக்கருத்துடன் பார்த்தால் பஷிரை நாம் கணக்கில் அடங்காதவர் என நினைக்க வேண்டும். விக்டர் ஹியூகோவிடமிருந்து ஆக்கம் பெற்ற எழுத்தாளர்கள் அவருடைய நீண்ட பிரசங்க முறையைப் பின்பற்றவில்லை. மலையாள எழுத்தாளர்கள் ஆத்மாவை நீண்ட பிரசங்கத்தில் காணுவதில்லை. செட்டான உரையாடலிலேயே கண்டுபிடிக்கிறார்கள். 

'பாத்தும்மாயுடே ஆடு' பஷீரின் குடும்பக் கதை. அதில் வரும் பாத்திரங்கள் அவருடைய சகோதரர், சகோதரி, தாயார் முதலானவர். ஆனால், அது எழுதப்பட்டிருக்கும் சிறப்பான பாணியும், நடையும், அதை நம் அனைவரது கதையாக்கிவிடுகின்றன. கிராமத்து வீடு ஒன்றையே பரந்த உலகமாக பஷீர் சித்திரிக்கிறார். 

பஷீர், ஆட்கள், குடும்பங்கள் அல்லது கூட்டத்தினரின் வெறும் கதையை மட்டும் சொல்லவில்லை. மனித வாழ்வின் ஓர் அத்தியாயத்தை மட்டும் அவர் சொல்லவில்லை. சத்தியத்தைச் சொல்லு கிறார். விண் முட்டும் மலைகள், கடல்களின் கோரப் புயல்கள், எல்லை யில்லா வானம் ஆகியவற்றில் அவரது கற்பனை சஞ்சரிக்கிறது. அவரது ஆய்வு மனம் உலகத்தின் தோற்றம் வரை போய்விட்டது. 

புதிய படைப்பு ஒன்றை அவர் எப்படித் துவக்குகிறார் என்று பாருங்கள் : '' முடிவற்ற சூன்யம் என்றால் வெறுமை அதாவது ஒன்றுமில்லாமை என்பது பொருள். அந்த வெறுமையிலிருந்து தான் எல்லாம் தோன்றியது-தெரிந்தது தெரியாதது அனைத்தும் '' (ஓர்மயுடே அறைகள்). 

மூளைக் கோளாறால் வீணாகிப்போன மூளையை உலக இரகசியங்களால் நிரப்பிய பஷீர் அமர்ந்த வண்ணம், தனது வழுக்கை மண்டையை தடவிக்கொண்டே சிரிக்கிறார். இவர்தான் பஷீர். இவரது படைப்புகளைப் புரிந்து கொள்ளும் வழியும் இதுதான். 

மலையாள நாவல் பல புதிய பரிணாமக் கட்டங்களுக்கு உள்ளாகி வருகிறது. எம்.டி.வாஸுதேவன் நாயர், சங்கேதப்பாணி விஷயமாகக் காட்டிய வழியிலிருந்து நாவலாசிரியர்கள் வெகு தொலைவு முன்னேறிப் போய்விட்டார்கள். புதிய தலைமுறையின் வாழ்க்கை இலட்சியங்களை அவர்கள் குலைத்து விட்டார்கள். மலையாள நாவல், புதிய பண்புகள், புதிய வாழ்க்கை லட்சியங்கள், புதிய சங்கேதப்பாணிகள் ஆகியவற்றுடன் முன்னேறிச்செல்கிறது. இந்தப் முன்னேற்றப் பயணத்தில், இந்த மாறுதல் புயல்களில் பஷீர் தலை நிமிர்ந்து, கலங்கரைவிளக்கு போல் நின்றுகொண்டிருக்கிறார். 

எம். முகுந்தன்

No comments:

Post a Comment