தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, May 10, 2019

சாய்வு நாற்காலி - 1&2 -தோப்பில் முஹம்மது மீரான்

சாய்வு நாற்காலி - 1,2 -தோப்பில் முஹம்மது மீரான்

பல நூற்றாண்டுகளுக்கு முன் வந்த அரேபியப் பயணிகளின் மர மிதியடி அடையாளங்கள் பதிந்த தென்பத்தன் கிராமத்தின் மணலில் ஆனி ஆடி ஈரம் காயவே இல்லை . ஆடிக்குளிர் நல்கிய இன்பமயக்க சுகத்தில் உணர்ச்சி அடங்கி, மரங்கள் புதுத்தளிர்களையும் மொட்டுகளையும் கர்ப்பம் தரித்தன. வெயில் முகம் காட்டவே இல்லை. கருமேக காட்டிற்குள் எங்கோ மறைந்துகொண்டிருக்கும் நக்ஸலைட் சூரியன்! 

முதுகுத் தண்டோடுச் சேர்த்துப் பலமாக மாட்டியிருக்கும் விலா எலும்புக் கட்டுக்களைக் குலையவைக்கும் கடுங்குளிர் சுழன்றடிக்கும் விவரம் கெட்ட ஈரக்காற்று. 

ஆனப்பாறை, ஆற்றுப் பள்ளிப்பாறை, சாஸ்தான் கோவில், அரசகுளம் ஏலா, இன்னும் எங்கெல்லாமோ சுற்றித்திரியும் போக்கிரிக் காற்று. அது கடந்து போகும் வழிகளில் காட்டும் எத்துவாளித் தனங்களுக்குக் கையும் கணக்குமில்லை. 

கடைகளின் முன்பகுதியில் கட்டியிருந்த பல்பொடி விளம்பரத் துணிகளைத் தூக்கி உயர்த்தியது. மீன் விற்கும் பெண்களின் தலையிலிருந்த பெட்டிகளையும் கமுகுப் பாளைகளையும் கீழே தள்ளியது. கொடிகளில் உலரப் போட்டிருந்த துணிகளையெல்லாம் சுருட்டி சகதியும் மழை நீரும் கட்டி நின்ற இடங்களில் வீசியது. கனம் குறைவான சிறு சிறு அலுமினியப் பாத்திரங்களை ஒன்றோடு ஒன்று மோதவைத்து ரசித்துப் பல்லை இளித்துக்காட்டியது. 

எண்களிலடங்கா மரங்களை வளர் உளராகப் பெயர்த்துப் போட்டது ஆனி ஆடிக் காற்று. வீட்டு வளாகங்களில் நின்றிருந்த முருங்கை மரங்களையும் பூவரசுகளையும் வேருடன் சாய்த்தது. 

தலைமுறை தலைமுறையாகக் கிராமத்தின் அழுகையையும் சிரிப்பையும் பார்த்து மெளனமாக அந்தக் கிராமத்தைக் காவல் காத்து நின்றிருந்த ஒற்றப்பனை ஓர் இரவில் வீசி அடித்த காற்றில் பொத்தென்று விழும் ஓசை கேட்டு நடுநிசியில் கிராமமே திடுக்கிட்டு விழித்தது. நடுஇரவில் ராந்தல் விளக்கைப் பற்றிக்கொண்டு மக்கள் ஓடி வந்தனர். வானத்தை முட்டி நின்றிருந்த ஒற்றப்பனை நீண்டு மல்லாந்து கிடப்பதை அங்க கூடிய மக்கள் கண்டனர். யாருக்கும் எந்தவித சேதமும் இல்லை அது விக்கன் சேமதின் கய்யால் மீது விழுந்து கிடந்தது. 

குளிர் தாங்காமல் காதோடு சேர்த்து மப்ளர் கட்டிக் கொண்டும் துண்டு கட்டிக்கொண்டும் கம்பளிச் சட்டை அணிந்துகொண்டும் மக்கள் விறைத்து நின்றனர். நூற்றாண்டுகளின் வரலாற்றை நேரில் பார்த்த சாட்சியின் திடீர் முடிவைப் பார்த்து மெளன அஞ்சலி செலுத்தினர். 

முதல் உலகப்போர் நடக்கும்போது தென்பத்தன் கிராமத்தையே நடுங்க வைத்த சூறாவளிக் காற்றிலும் இந்த ஒற்றப்பனை சாயவில்லை. தலை நிமிர்ந்தே நின்றது. டச்சுக்காரர்களின் பீரங்கிக்குண்டு ஆனப் பாறையைத் துளைத்துச் சென்ற நேரம் நெஞ்சை விரித்துக் காட்டி நின்றது இந்த ஒற்றப்பனை, 

கோடி ஜனம் சேர்ந்து முயற்சித்தாலும் கடுகளவும் அசைக்க முடியாத குத்துக்கல் கூட அன்றைய சுழல் காற்றில் அப்பாடா என்று விழுந்தது. இருந்தும் ஒற்றப்பனை சாய வில்லை. அதைச் சாய்க்க முடியவில்லை. 

ஆனால் .... 

இந்தப் பீக்கிறிக் காற்றில், ஒற்றப்பனை சாய்ந்த ரகசியம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை. 

எல்லாம் படச்சவனுக்க குதறத்துதான் ! 

லாரன்சுதோப்பிலும் தென்பத்தன் கிராமத்திலும் பட்டினியின் கூரிய நகங்களுக்கிடையில் கிடந்து நெளிந்தது ஜனம். 

அரபிக்கடல் பேயாடியதால் லாறன்சு தோப்பு மக்கள் கடலில் மீன் பிடிக்கக் கட்டுவள்ளம் இறக்கவில்லை . கரையிலுள்ள மணலை முழுதும் கடல் நக்கி விழுங்கி இடிகரையாக மாற்றிவிட்டது. 

பொழி முகத்தின் பர்தாவை நீக்கிவிட்டு குழித்துறை ஆறு அரபிக்கடலின் கன்னத்தில் முத்தம் கொடுத்தது. நீலக் கன்னத்தில் கலங்கிய ஆற்றுநீர் ஒரு கோடு போல் தெரிந்தது. அரைப்பனை உயரத்தில் அலைகள் அலறும் திரைகள். 

லாரன்சுதோப்பிலுள்ள கறுத்த மக்கள் கடலுக்குச் செல்லாத்தால் தென்பத்தனிலுள்ளவர்கள் வாயையும் வயிற்றையும் சுட்டிக்கொண்டு ஆங்காங்கே குந்தியிருந்தனர். பிடித்துண்டுகள் உதட்டுக்கு உதடு மாறின. 

பொழி முகத்தைக் கடத்திவிடும் நைனாம்மதின் வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு கடுகும் கருவேப்பிலையும் தாளிக்கும் மணம் பொங்கியது. நைனாம்மதின் வீட்டை உரசி வரும் காற்றை வயிறு ஒட்டிய சிறு குழந்தைகள் சுவாசித்தனர். 

பொழி ஓடத்துவங்கி ஒரு மாதமாகிவிட்டது. ஆற்றில் வடக்கிலிருந்து தண்ணீர் வருவது குறையவில்லை. மழையும். 

எங்கும் ஆனி ஆடிப் பஞ்சம், நோயும் நொடியும் - தடுமல், காய்ச்சல், மண்டையிடி, வயிற்றுப்போக்கு. அரசாங்க மருத்துவ மனையின் சிமெண்ட் போட்ட மினுமினுப்பானத் தரையில் வெள்ளைச் சேலை உடுத்திய பொன்னம்மா அங்குமிங்குமாக சிமிட்டிச்சிமிட்டி நடந்தாள். இந்தச் சிமிட்டியை ரசிக்க ஒரு கூட்டம், பீடி குடித்து, துண்டால் உடம்பை மூடி உதட்டில் காதல் புன்னகையுடன். பருமனான நாலைந்து குப்பிகளில் பல மாதங்களாகத் தேங்கிக் கிடந்த மருந்தை அவள் கையிலிருந்து வாங்கிக் குடித்தபோது நோய்களெல்லாம் குணமாயின, 

குளிரும் ஈரக்காற்றும் தென்பத்தன் மனிதர்களுக்கிடை யில் பரபரப்பை ஏற்படுத்தின. 

கிராமத்தின் மேற்குப் பகுதியிலுள்ள பள்ளிப்பிடாகையில் மதரஸா. பள்ளியை ஒட்டிப் பச்சைச் செங்கற்களால் கட்டப் பட்ட ஓலை வேய்ந்த சிறு கட்டிடத்தில் கால்கள் கழன்று ஆடும் நாலைந்து பெஞ்சுகளில் உட்கார்ந்து குழந்தைகள் காயிதா ஒதிக்கொண்டிருந்தனர். மூஸா மொய்லியார் கருவேப்பிலைக் கம்பை உயர்த்தி தில்மீதுகளிடம் ஓதச்சொன்னார். 

குழந்தைகள் கூவே என்று கத்தினர், அல்லது ஓதினர், வெளியில் ஜலதோஷம் பிடித்த வானத்தின் மூக்கிலிருந்து நீர் வடிந்தது. இடையிடையே காற்று அள்ளி வீசிய மழைத்துளிகளின் ஈரம் பட்டு குழந்தைகளின் தாடை எலும்புகள் ஒன்றோடொன்று மோதின. குருத்துக் கைகளைத் தாடையோடு சேர்த்து வைத்துச் சூடேற்றினர். 

மூஸா மொய்லியாரின் கம்பு அடிக்கடி பெஞ்சில் ஓசை எழுப்பி குழந்தைகளை நடுங்க வைத்தது. நடுக்கத்திற்குப் பிறகு ஓதும் சத்தம் மேலோங்கும். பிறகு ஓய்ந்து விடும். 

தெற்கு மூலையில், கடலின் மீது வானம் கவிழ்ந்து கிடக்கு மிடத்தில் திரண்டுவரும் கருமேகத்தின் அடிவயிறு கனத்து வருவதை முஸா மொய்லியார் கவனித்தார். 

“எல்லோரும் ஒதுங்கடா ... நா, இப்பம் வாறேன்." 

பெருமழை கொட்டுவதற்கு முன் சிறுநீர் கழித்துவிட்டு வரலாமென்று எண்ணிக் குடையை எடுத்துக்கொண்டுக் கிளம்பினார். பழைய ஓட்டை வாளியிலிருந்து ஓர் ஒட்டுக் துண்டையும் எடுத்துக்கொண்டார். 

காற்று பலமாக வீசியது. தென்னை மண்டைகள் ஆடின. உயரம் கூடிய தென்னை மண்டைகள் போர்க்காளைகள் ஒன்றோடொன்று மோதுவது போல் முட்டி முட்டிப் பின்வாங்கின. ஓலைகளும் கொம்புகளும் காற்றின் இறக்கையின் உட்கார்ந்து சவாரி செய்தன, தேங்காய்க் குலைகள் இடிந்து விழுந்தன. 

செவிப்பறைகளைச் சுக்குநூறாக்கும் பெரும் ஓசையைக் கேட்டு மூஸா மொய்லியார் சிறுநீர் கழிப்பிடத்திலிருந்து ஓடி வந்தார், 

மதரஸாவை ஒட்டி நின்ற தென்னைத் தெங்கு மதரஸாமீது விழுந்து கிடக்கிறது. மதரஸாச் சுவர் இடிந்து கிடக்கிறது. குழந்தைகள் அலறிக்கொண்டே வெளியே குதித்தனர். 

“எக்க றப்பே. " மூஸா மொய்லியார் பிரமைப் பிடித்தாற் போல் கூப்பிட்டார். 

மதரஸாமீது தென்னை விழுந்த சோகச் செய்தி எங்கும் பரவியது. ஊர் மக்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டு ஓடிக் கூடினர் . ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கேள்விப் பட்டவர்களும். 

தாய் தந்தையர் தங்கள் குழந்தைகளைத் தேடினர். உயிர் தப்பிய குழந்தைகளை அவர்களுடைய உற்றார்களும் உறவினர்களும் வாரியணைத்தனர்; முத்தமிட்டனர்; தலையைத் தடவி விட்டனர். படச்சவன் ரெட்சிச்சான். 

அச்செய்தி தென்பத்தன் கிராமத்தையும் பக்கத்திலுள்ள கிராமங்களையும் ஒர் உலுக்கு உலுக்கியது. கிராமம் கிராமாகப் பெயர்ந்து வந்தது. செய்தி, தென்பத்தன் கிராமத்திலுள்ள பாரம்பரியக் குடும்பம் வாழும் சவ்தா மன்ஸிலிலும் எட்டியது. மரியம் பீவி வாய்விட்டு அழுதாள். அவளது அழுகைக் குரல் காலம் உண்டுபண்ணிய வெடிப்புகள் விழுந்த பழைய சுவர்களில் மோதி எதிரொலித்தது. 

சாய்வு நாற்காலியில் காலாட்டிக்கொண்டு கிடந்த முஸ்தபாக்கண்ணு, வீட்டின் உள்தளத்திற்கு நேராக தலை சாய்த்துக் கேட்டார். 

"குட்டியேய் , . - அங்கென்ன கரச்சல் ?" 

மரியம் பீவி கணவன் பக்கம் ஓடி வந்து பதற்றத்துடன் சொன்னாள்: 

"மதரஸாக்கெ மேலே தெங்கு விழுந்து, நெறய புள்ளியோ மௌத்தா போச்சாம்." 

அவள் சொன்னதை ஏதோ பல்லியோ பாச்சானோ செத்த செய்தி கேட்டதுபோல் முனகிக் கேட்டார் முஸ்தபாக் கண்ணு. முகத்தில் எந்தவித உணர்ச்சியுமில்லை. நாற்காலியி லிருந்து காலை எடுத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். கால்பக்கம் உள்ள ஸ்டூலின் மீதிருந்த சிகரெட்டை எடுத்தார். புகைவிடும்போது இருமினாார்; கிளாம்பு பிடித்துக் கறுத்துப் போனப் படிக்கத்தில் சளியைத் துப்பினார். 

"எளும்பிப் போய்ப் பாருங்கோ ... நம்ம புள்ளியோ இல்லையா...?" மரியம் பீவி கணவனிடம் வேண்டினாள், 

முஸ்தபாக்கண்ணு தாடியை கையால் ஒதுக்கினார். அவருக்கு நேர் எதிர்ப்பக்கம் ஆங்காங்கே சாந்து கழன்று நின்ற சுவரில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொங்கவிட்ட கடிகாரத்தைப் பார்த்தார். 

"மணி எட்டாச்சு , பசியாற உண்டோ ?" 

2

தென்பத்தன் கிராமத்தில் நிகழ்ந்த சோகச் சம்பவத்தில் ஆறு குழந்தைகள் மாண்டனர். ஜூம்ஆ பள்ளி வாசலின் தென்பகுதிகளில் உயரமாக வளர்ந்து நின்ற கருவேப்பிலை மரத்தின் மூட்டில் அந்தப் பிஞ்சு உடல்களை வரிசையாக அடக்கம் செய்தனர், 

அந்தப் பாலக உடல்களை மண்ணறைகளில் வைக்கும் போது நீர் சுரக்காத கண்களே இல்லை. மூஸா மொய்லியார் நினைவற்றுக் கிடந்தார். 

வந்து கூடிய மீனவர்கள் தோளில் கிடந்த துண்டை எடுத்துக் கக்கத்தில் வைத்துக்கொண்டு கைகட்டித் தலைகுனிந்து நின்றனர். நாடார்கள் அந்த உயிர் துறந்த உடல்களைக் கபர்களில் வைக்கும்போது நீர் நிரம்பிய விழிகளோடு கைகூப்பினர், 

சற்றுத் தொலைவிலுள்ள அந்தோணியார் கோயில் மணி ஒலித்தது. அந்த ஒலி, அந்த கிராமத்தின் இதய விம்மலை ஆகாயத்திலிருக்கும் "பாவா"விடம் எட்ட வைக்கும்போது ... 

சவ்தா மன்ஸில் காரணவரான முஸ்தபாக்கண்ணு சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார். சுவரில் அசை போட்டுக் கொண்டிருந்த மணியை உற்றுப் பார்த்தார். நான்கு. வயிறு வறட்சியை உணர்ந்ததும் மனைவியை அழைத்தார். 

"குட்டியேய் ...." பதில் இல்லை . “மணி நாலாச்சு .... சாயா உண்டோ ?" பதில் இல்லை , “ அவொ எங்கெவுட்டி போய்த் தொலஞ்சா ...'' “தாத்தா மரிச்ச ஊட்டுக்குப் போனாங்கோ ...." 

சவ்தா மன் ஸிலில் அடுக்களை வேலை பார்க்கு” ரைவறானத் வாசல் திரையை விலக்கிப் பதில் சொன்னா'' 

"அந்த நாசம் புடிப்பா எப்பொப் போனா?"

 “இப்பத்தான்." 

"எப்பொ வருவா ?" முஸ்தாபாக்கண்ணனின் குரல் மிருதுவாகப் பரிணாமம் கொண்டது. நரைத்த தாடியை நோக்கிச் சாய்ந்த, சிகரெட்டுக்கறை படிந்து கறுத்துப்போன உதட்டில் புன்னகையின் பிரேதம் தலை உயர்த்துவதாக ரைஹானத்துக்குத் தோன்றியதும் அவள் வாசல் திரையை இழுத்துப் போட்டாள். வெறுப்புடன் அடுக்களைக்குச் சென்றாள். 

"நேரம் அசரானாலும் மனுசனுக்குச் சாயா இல்லை ...." அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். முன்னால் கிடந்த ஸ்டூலில் காலத் தூக்கிவைத்தார், 

“பெண்ணே ய் ...." காரணவர் கூப்பிட்டார். 

வாசலில் திரை விலகுகிறதா என்று கவனித்தார், விலக வில்லை. சற்று நேரம் எதிர்பார்த்துவிட்டு மீண்டும் கூப்பிட்டார், 

"பெண்ணேய் !" 

திரைமீது வேர் விட்ட பார்வையைப் பிடுங்கவில்லை, கறுத்த உதட்டில் மல்லாந்து படுக்கவைத்த வெளிறிய பிரேதம் அப்படியே கிடந்தது. 

வாசல் திரை நீங்குவதைக் கண்டபோது ஆவலோடு பார்த்தார். படம் எடுக்கும் பாம்பின் பார்வையும் புன்னகையும். 

“அவொ எப்போ வருவா. ?” சளிகட்டிய தொண்டையைக் கனைத்துச் சரி செய்தார். 

“இப்பம் வருவாங்கோ ..." “ஆசியா .... என்ன செய்யா ?" "ஒறங்காங்கோ ...," "ஒறக்கமா ?" 

"நீ என்ன செய்யா?" "சாயா போடப் போறேன்." 

முஸ்தபாக்கண்ணு அன்புப் பார்வை பார்த்தார். புன்முறுவலும் சொரிந்தார், 

அந்தப் பார்வையையும் அந்தப் புளித்துப்போன புன்முறு வலையும் அவளால் தாங்க முடியவில்லை, அருவருப்பான பார்வை. மனம் குமட்டும் புன்முறுவல், ரைஹானத் திரையை இழுத்துவிட்டாள். 


"சீ.... என்ன மனுசன் ..." ரைஹானத் மனத்தின் திறந்த வெளியில் காறித் துப்பினாள். 

திரையை இழுத்துவிடும்போது அவளுடைய இடதுகையில் கிடந்த நிறம் மங்கிய கண்ணாடி வளையல்களின் கிலக்கம் முஸ்தபாக்கண்ணின் காதில் தேன் ஊற்றியது. அந்த வளைக் கிலுக்கம் அவர் இதயக் கம்பியில் ராகம் மீட்டியது. அந்த ராகத்தில் விழித்த இதயத்தினுள் ஏதோ பொந்தில் ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்த சுண்டெலி நகத்தால் பிராண்டியது. அந்தப் பிராண்டலின் உந்துதலால் தாடியைக் கையால் ஒதுக்கிவிட்டார். மார்பில் பரந்து கிடந்த உரோமக் காட்டில் கறுத்த ஈட்டி மரத்தைத் தேடினார். இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக, கையை முறுக்கி நாற்காலியின் நீண்ட கையை இடித்துச் சோதித்தார். பலமுண்டு. முதுமை பாதிக்கவில்லை. இளமை இன்னும் எஞ்சியுள்ளது. 

நாற்காலியில் சாய்ந்தார். கடிகாரத்தைப் பார்த்தார். நாலு இருபது. வளையல் கிலுங்கிய கையால் சாயா வாங்கிக் குடிப்பதற்காகக் காலாட்டினார். வளையல் அணிந்த மென்மையான கரம் நீட்டும் சாயாவை வாங்கி அருந்த ஆவல் கொள்ளும் உள்ளம். சாயாவைக் கைநீட்டி வாங்கும்போது, தெரியாத பாவனையில் அந்த நேர்த்தியான கையைத் தொடுவதற்கான மோகம். அந்த ஸ்பரிச சுகம் உளற்றித் தரும் இன்பலாகிரியில் உலகைச் சிறிது நேரம் மறக்கப் போகும் சுபமுகூர்த்தத்தின் நிமிடத்திற்காகக் காத்துக் கிடந்தார். 

மரியமும் நல்ல அழகுள்ளவனாகத்தான் இருந்தாள். முதல் இரவில் மறவனையில் பால்கொண்டு வந்த நேரம், சில பெண்கள் அவளை உள்ளே தள்ளிவிட்டுக் கதவைச் சாத்தினர். பால் கிண்ணத்துடன் அவள் வெட்கித்து நின்றாள். அன்று, அந்த நாணம் கோணிய பெண்ணின் சிவந்த உதட்டில் கண்ணாம்பொத்தி விளையாட்டுக் காண்பித்த கள்ளச்சிரிப்பு. சுறுமா எழுதிய கண்களால் எய்துவிட்ட கள்ளப்பார்வை, மனதை வசீகரிக்கும் ஹூருலீன்களின் மைலாஞ்சியிட்ட கைகளிலிருந்து பால் வாங்கும்போதுதான், முதன்முதலாக அவளைத் தொட்டது. 

அப்போது ஏற்பட்ட அந்தக் கன்னிமயிர்ச் சிலிர்ப்பு: ஹா!.... ஹா! உருண்டுபோன நாட்களை முஸ்தபாக்கண்ணு அசையிட்ட போது தம்மை அறியாமலேயே உள்ளில் ஒரு குதூகலம். உருண்டுபோன அந்த நாட்கள் இனி திரும்பி வருமா 

மரியம் பீவியின் உதட்டுத்தோல் இப்போது காய்ந்த செதில்போல் கழன்று நிற்பதை நினைத்தபோது வெறுப்பாசி யிருந்தது. 

"பாறுகாலி" - முணுமுணுத்தார். கறவை தீர்ந்த பசு, பால் பிழிந்தெடுத்து தேங்காய்ப்பீனா 

மரியம் வரும்முன் சாயா குடிக்க வேண்டும். சாயா குடிப்பதற்காக அல்ல. ரைஹானத்தைப் பார்க்க. இப்போது அந்தப் பெண் பக்கத்தில் வருவதே இல்லை. மரியத்தைக் கண்டு பயமாக இருக்கலாம். அல்லது மரியம் விலக்கியிருப்பாள். அவள் விலக்கக் கூடியவள் தான். 

“பெண்ணேய் சாயா போட்டாச்சா?" 

ஆனி ஆடிக் குளிர். இரு கைகளையும் நெஞ்சோடு பிணைத் தார். இந்தக் குளிரைப் போக்க மாமிசச் சூடு வேண்டும். 

ரைஹானத் சாயா கொண்டு வருவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. புன்னகையோடு வருவாளா? அல்லது முகம் கோணி, சாயாவை ஸ்டூலின் மீது வைத்து விட்டு ஓடிவிடுவாளா? 

முன்னால் கிடந்த ஸ்டூலை எடுத்து மாற்றினார். நிமிர்ந்தே உட்கார்ந்திருந்தார். 

ஒரு பாட்டுப் பாடினாலோ ...? சினிமாபாட்டு, ஆண் களின் பாட்டில் பெண்கள் மயங்கிவிடுவார்களென்று யாரோ ஒருதடவை சொன்ன நினைவு. சங்கதி சரிதான். 

மீசை கிளர்ந்து வரும்போது ஒரு சினிமா படம் கண்டதுண்டு. வாப்பாவுக்குத் தெரியாமல் ஒளிந்து சென்று குடம் கொண்டு தண்ணீர் எடுக்கச் சென்ற ஒரு பெண் கேட்கும்படி ஆண் பாடினான். மாப்பிள்ளைப் பாட்டின் மெட்டில், 

அந்தப் பாட்டை எத்தனையெத்தனை பெண்களுக்காகப் பாடி நடந்ததுண்டு. அது ஒருகாலம். 

அந்தப் பாட்டின் இனிமையில் அவள் அனைத்தும் மறந்தாள். அவனைக் கண் முனையால் நுகர்ந்தாள். தாகம் நிறைந்த பார்வை. அவளுடைய பற்களில் பெளர்ணமி நிலவு. வதனத்தில் வெட்கத்தின் செம்பருத்திப் பூக்கள். 

பிறகு அவள் அவனுடைய நெஞ்சில் தலை சாய்ந்தாள் - என் நாதா . . ! 

முஸ்தபாக்கண்ணு பாட்டை முனகினார். உரக்கப் பாடினாலோ? வேண்டாம். ஆசியா விழித்துவிடுவாள். . 

நாற்காலியின் கையில் தாளம் போட்டுப் பாட்டை முனகினார். 

தெரிந்த வரிகளெல்லாம் திருப்பித் திருப்பிப் பாடி முடித்தார். இனிப் பாடுவதற்கு வரிகளில்லை . 


அவள் வரவில்லை . சுவரில் பார்த்தார். மணி ஐந்து. 

நேரம் கடந்துபோனதை மறந்தார். ரைஹானத்தை மனத்தில் குடி இருத்திய மதுரமான சிந்தனையில் கடிகாரத்தை மறந்தார். சாயாவை மறந்தார். சூழலை மறந்தார், 

திரை நீங்குவதைக் கவனித்தார். ஆவலோடு கவனித்தார். மரியம் பரவி ! “இந்தப் பாறுகாலியா!" மனம் கொண்டு திட்டினார், முகத்தில் தவழ்ந்து நடந்த மகிழ்ச்சி மாய்ந்தது. உதட்டில் கிடந்த புன்னகைப் பிரேதம் அழுகி நாற்றமெடுத்தது. மனம் பறந்து திரிந்த பூவனங்களில் பூக்களெல்லாம் காம்பு அழுகி உதிர்ந்த ன . 

"நிங்கோ ஒரு மனுசன் தானா? அஞ்சாறு பிஞ்சுப் பைத்லுவோ பறக்கத் துடிக்கப் போச்சு தெ .... அந்த மய்யத்துத் தொழுவெய்க்குக் கூடப் போவாதெ இஞ்செ இந்தப் பாண்ட கசேரியிலே ஒடுக்கத்தெ இருப்பா இருக்கீளாக்கும் ... சீ என்ன மனுசன் ...." விலகிக் கிடந்த ஸ்டூலை அவர் முன் எடுத்துப் போட்டுச் சாயாவை வைத்தாள். முகத்தை வெறுப் புடன் வெட்டித் திருப்பி உள்ளே சென்றாள், 

முஸ்தபாக்கண் ணு சாயாக் கோப்பையைத் தொட்டுப் பார்த்தார், 

“சூடு இல்லியே ...." உள்ளே பார்த்துக் கேட்டார். “கடிக்க ஒண்ணும் இல்லியோ?" 

சாயாவை ஒரு இழுப்பு படித்தார். நாற்காலியில் சாய்ந்தார். சிகரெட்டு பற்றவைத்தார். 

“அடுப்பளி ஒளுவி நெறயுது. தண்ணீலெ நின்னு சீதம் புடிச்சாச்சு." கணவனிடத்தில் வந்து ஆவலாதி சொன்னாள். 

கணவன் முனகிக் கேட்டார். “ஒரு கொத்தனெ விளிச்சு ஒடஞ்ச ஒடெ மாத்தப்புடாதா?" "உம் ...." 

"எல்லாம் உம் ... உம்னு ..... கேட்டிட்டு இந்த எளவு கசேரியிலெ இரியுங்கோ ... வெளியிலெ எறங்காதெங்கோ. மரியம் பீவி வீட்டிற்குள் சென்றாள். உடம்பறையில் தூங்கிக் கொண்டிருக்கும் ஆசியாவும்மாவைக் கூப்பிட்டாள். 

"மைனீ... மைனீ....." 

ஆசியாவும்மாள் கிடந்தபடியே பூனைக்குட்டி கண் திறப்பதுபோல் மெல்லக் கண் திறந்தாள் .... "உம் - 
"சாயா குடியுங்கோ ." “யா அல்லா!" ஆசியாவும்மா படுக்கையிலிருந்து யாரோ அடர்த்தி எடுப்பதுபோல் எழும்பினாள். கலைந்த முடியைக் கட்டினாள், 

| "நேரம் அசராச்சாவுள்ளே.. ?" ஒரு கொட்டாவி விட்டாள். ஜன்னல் வழியாக வீட்டு வளாகத்தில் பகல் வெளிச்சத்தைப் பார்வையிட்டாள். மஞ்சள் வெயிலைக் காணவில்லை. 

“அசருக்கு வாங்கிட்டு ஒருபாடு நேரமாச்சு." “வாய்க் கொப்பளிக்க இத்திப்போலத் தண்ணி தா." 

மரியம் பீவி செம்பில் தண்ணீர் கொடுத்தாள். ஆசியா வும்மா செம்பைத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு வாய்க் கொப்பளித்தாள். இருந்த இருப்பிலேயே ஜன்னல் வழியாகத் தண்ணீரை வெளியே உமிழ்ந்தாள். 

சாயாக் கோப்பையை எடுத்தாள், “துசியா களுவினியா ?" 

சாயாவைக் குடித்துவிட்டு மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள், “மய்யத்தெல்லாம் அடக்கியாச்சா?" கிடந்தவாறு ஆசியா விசாரித்தாள். 

“நீ போனியா?" 

“தெருவெல்லாம் துப்புரவுக் கேடாக் கெடக்குமே? காலும் கையும் துசியா களுவிட்டுதானா சாயா போட்டா...?" 

மரியம் பீவி பதில் சொல்ல நிற்கவில்லை . சகதியாகக் கிடந்த அடுக்களைக்குள் சென்றாள். 

ாென சாப்பாட்டிற்கு அரிசி போட்டாள். ரைஹானத் அம்மியில் அரைக்க உட்கார்ந்தாள். 

“குட்டியேய் ...." கணவனின் அழைப்பு. மரியம் பீவி படிப்புரைக்கு வந்தாள். 

ஆசியா வும்மாவின் கணவன் செய்தகம்மது பிள்ளை படிப்புரை தெற்கு மூலையில் போடப்பட்டிருந்த கட்டிலில் முட்டுக் கட்டி உட்கார்ந்திருந்தார். 

"மச்சானுக்குச் சாயா கொண்டா...." முஸ்தபாக்கண்ணு தலை குனிந்தபடி உத்தரவு போட்டார். மரியம் கொண்டு வந்த சாயாவை ஒரே இழுப்பு இழுத்தார் செய்தகம்மது. கோப்பையைக் கட்டிலில் வைத்துவிட்டு எதுவும் பேசாமல் தோளில் தொங்கிய துண்டைச் சரிசெய்துகொண்டு இறங்கி நடந்தார். 

மெளனம் தளம் கட்டிய சவ்தா மன்ஸில் அடுக்களையில் ரைஹானத் அம்மியில் அரைக்கும் சத்தம். சுவரில் தொங்கிய கடிகாரம் நாவை அசைக்கும் "டிக் - டிக்" ஓசை, இவ்விரு சத்தங்களும் இபயொனார்! சதா மாளவபில் நிசப்தம். 

முஸ்தபாக்கண்ணின் விரலிடுக்கிலிருந்து கழுத்து நெரிந்த சிகரெட்டுப்புகை மரம் ஏறிப் பாம்புபோல் மேல் நோக்கி உயர்ந்தது. கறையான் கறம்பிய முகட்டில் தெரிந்த ஓட்டை களில் புகை மண்டியது. நூலாம்படைகளிலும், 

மரியம் பீவியும் ரைஹானத்தும் பாய்விரித்து உடம்பைச் சாய்க்கும்போது இரவு மணி பனிரெண்டு. இருள் பதுங்கிய அந்த வீட்டில், இரவின் பயங்கரத்தில் கெட்ட கனவு காணாம் லிருக்க அவர்கள் நெஞ்சில் குர் ஆன் ஆயத்துகள் ஓதி ஊதினார்கள். 

வெளியில் அள்ளிச் சொரியும் மழை! 

வீட்டிற்குள் கடும் குளிர். சிமெண்டு கழன்று போன தரையில் நீரூற்றுக் கண்டது. 

கம்பளிப் போர்வைக்குள்ளிலிருந்து முஸ்தபாக்கண்ணின் குறட்டை ஒலிப் பிரவாகம். 

மரியம் பீவிக்குத் தூக்கம் வரவில்லை , இதயத்திற்குள் ஒவ்வொரு முக்கிலும் மூலையிலும் பறக்கத் துடிக்கப் போன பிஞ்சு பைதல்களின் செல்ல முகங்கள். 

சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டிக் கிடக்கும் கணவனின் தாடியும் தாடி மறைத்திருக்கும் முகமும் இரக்க மில்லாத இதயமும், 

“படச்சவனே! இந்தக் குடும்பத்திலெ என்னெக் கொண்டாக்கினியே..." மரியம் பீவியின் இதயத்திற்குள்ளிருந்து ஏக்கங்கள் நீர்க்குமிழிகளாக மேல்நோக்கி எழும்பும்போது அந்தோணி யார் கோவிலின் உயர்ந்த கோபுரத்திலிருந்து முதல் மண முழங்கியது. 

தொடர்ந்து பாங்கும். 

ரைஹானத் விழித்தாள். அவளுடைய, ஒரு பகல் ஆரம்பிக்கப்போகிறது. 

*

No comments:

Post a Comment