காக்கை குருவி எங்கள் ஜாதி ஒரு காவியம் - நகுலன்
நான் கண்டதுண்டு
காக்கை, குருவி, கோழி, கருடன், பருந்து, புறா, வாத்து, மைனா,மயில், மரங்கொத்தி, அக்காக்குருவி, மீன் கொத்தி முதலிய பறவைகளை நான் கண்டதுண்டு.
எங்கு சென்றாலும் இந்தக் காக்கை உபத்திரவம் அல்ல. உற்சவப் பிரளயம், சனி பகவான் வாகனம், இதைப் பற்றி ஒரு கதை. பிராட்டியினுடைய ஸ்தனத்தைக் கொத்தியதாக அம்மா மிகப் பரிவுடன் சாப்பிடுவதற்கு முன் இதற்குப் பருப்பும் நெய்யுமாக ஒரு உருண்டைச் சோறு கொடுப்பாள். சிறு வயதில் பித்ருக்களைச் சாந்தி செய்யப் பெரியோர்கள் “காகாகாகாகா” என்று கத்துவதை நான் கேட்டதுண்டு, காகா கரைந்துண்ணும். காகம் கூடிவரும் ஒரு நபர் மறைந்தால் கூட கூச்சலிடும் காகம், என் மனவட்டத்தில் சுற்றித் திரியும் ஒரு கறுப்புப் புள்ளி - காகாகாகாகா.
குருவி. சின்னச் சின்னக்குருவி ‘விர்’ரென்று அதன் சின்னஞ்சிறகடித்து, தத்தித் திடீரென்று மேலே எம்பி குதிக்கும் ஒரு சிறு குருவி. ஒரு ஸில்க் கோதுமை நிறம். பாரதி இதையும் தன் ஜாதியென்று சொன்னதைத் தவிர வேறொன்றும் இதைப் பற்றி ஞாபகம் வரவில்லை.
என் மனதில்விர் என்றுஒரு உணர்வு“பார் என்னை”என என்னைஉணர்த்திபோகப் போனேன்நான்.
விழுப்பரம், திருச்சிராப்பள்ளி, நீல ஆகாயத்தின் வெகு உயரம், பெருமாள் கோயில் இவைதான்
பருந்துஎன்றுபகரகருடன்என்றுநகரஎன் உள்ளத்தின்உயரத்தில்சுற்றிச் சுற்றிச்சுழலும்
கோழி, சிவப்புக் கொண்டை வெள்ளைக் கோழி; “கொக்கரக்கோ” என்று கத்திக் கொண்டு போவது; அது அடைகாத்துக் குஞ்சு பொரிப்பது (அப்படிச் சலனமற்றுத் தன்னுள் தானே கவிழ்ந்து உட்கார்வது எளிதில்லை) சருக்கங்கள் விழுந்த முன் கால், அதன் சதைத் தாடி
கோழித்தூவல் என்று ஒரு சொல்;வாரணம் என்று ஒரு வார்த்தைபார்த்தாயா, நீ, புறாவைப் பார்த்ததுண்டா?வகை வகையாகவெளுப்பாகசாம்பலாகவிதவிதமாகஅழகான காகமாகஆரும் விரும்புவதானபுறாவே, நீ கண்டதுண்டோகண்ணம்மா?ஆனாலும் என்ன?
புறாக்கூடு போன்ற சிற்றறைகளில் லோகாயுதம் என்ற பேரேட்டின் தாஸ்தாவேஜூகளைச் சிவப்பு நாடாவில் கட்டி வைத்து விசிறி சுழலும் ஒரு அறையில் ஒரு மனிதன் அமர்ந்திருக்கப் பிணம் போன்ற மனிதர்கள் வரிசை வரிசையாக நிற்கிறார்கள்.
ஆனால் மசூதியின் பெருவெளியில் இப்புறாக்கள், என் அருமை சுசீலாவைப் போல் என்னைப் பரவசமுறுத்துகின்றன.
நாரை
நாராய் நாராய் செங்கால் நாராய். பழைய பிசிராந்தையார் பாட்டு, அவர் ஊரிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம் ஒரு நரைத்த பறவை (பழம் பெருச்சாளி) காலரில்லாத சட்டை போட்டுக்கொண்டு ஆபிஸில் தவமிருக்கும்.
நாரை - நாரை
நாரை ஓடிச் செல்லும் நதியில் ஒரு மீன் பாய்ந்தால் துள்ளியெழும்.
விதவிதமாய்க்காசாக தோட்டாகக்கசந்த மனதுடன்என் பிச்சைமனதைகொஞ்சம்கொஞ்சமாகக்கசக்கி கசக்கி
இந்த நாரையை நான் சாந்திப் படுத்தியிருக்கிறேன். என் நாமாவளியில் அவன் ஒரு நாமம். சம்ஹாரமூர்த்தி என்பதில்தான் சுசீலா எனக்கு எத்தகைய உவகை.
நாரை, ஒரு நாரைஒர் மீன் கொத்திமாமிசம் சாப்பிடும்ஒரு நாரை
வாத்து, வாத்து, வாங்கலியோ வாத்து - கோழி முட்டை டபிள் ஸைஸ் வாத்து முட்டை - ஐயா முகத்தைக் கண்டால் உபத்திரவம் போலத் தோன்றுகிறது.
வாத்து முட்டையைவேக வைத்துஅதில் ஆத்திக் கீரையைக்கலந்து கபளீகரம்செய்தால்ஐயாமூலவேதனைஐயோ, நான் போறேன்என ஓடிப் போகும்
சிறு வயதில், சைதாப்பேட்டையில்தான் என நினைக்கிறேன். குட்டை குட்டையாக இந்த அவலக்ஷணமான வாத்துக் கூட்டம் சதக் சதக் கென்று சென்றதைப் பார்த்தபோது, சுசீலா, காமரூபினி, மனமோகினியே.
எனக்குத்தான்எவ்வளவு மகிழ்ச்சிஅதைச் சொல்லதான்படுமோஅல்லதுசொல்லித்தான்தீருமோ
ஏ, தேரை, இது ஏன்
மைனாமைனாவா வா என்றால்மைனாவருமா?
இரண்டு சிட்டுக் குருவியின் சைஸ் ஒரு அசல் மைனா; பழுப்பின் கருப்பு; கருப்பின் பழுப்பு அதன் மேனி; அதன் கண் சுற்றி மிளிரும் மஞ்சள் வரிகள், அது சிறகுயர்த்தினால் ஒரு வசீகர வெள்ளை.
அதுபுல்வெளியில்தத்தித் திரிவதுகண்டால்சூசிப் பெண்ணேரோசாப் பூவேஉன்னைப் போல்அதுவும்தான்ஒரு அழகின் வடிவம்காண்.
மயில் மேனிக் நீலக் கறுப்பு; கறுப்புநீலம்ந அதன் கழுத்து பாம்பின் நீளம்; அதன் தோகை விரித்தால் அல்குல் போல் கண்கள் ஆயிரம், கார் காலத்தில் அது தோகை விரித்து ஆடுவது காண்பவர் கண்களுக்கு உற்சவம்; அது ஒரு உறுசவமூர்த்தி. மயில் ஆடக் குயில் பாட என்றொரு பாடல்
சுசீலாஅது ஒரு ஆள் உயரப் பறவைஅதைப் பார்க்கையில்சுசீலாநீ சென்று மறைவதைப்போல்ஒரு பிரமை.
அந்தப் பழையப் பாடல் உனக்கு ஞாபகம் வருகிறதா?
ஆறுமுகம்அவன்என் அண்ணன்சூரபதுமன்வேறுபடவதைத்த முகம்ஏது முகம்?
என் அன்பே நீ வா. இந்த இருபதாம் நூற்றாண்டில் சந்தர்ப்பங்களில் நீயும் நானும் மயில் கறி சாப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது.
சுசீலாஇந்த டம்பப் பறவைதனைரம்பம் கொண்டுடகர், டகர்என ராவி எறிவதுஒரு தனி இன்பம்
மயிலுக்குப் பின் ஒரு மரங்கொத்தி, அதன் ஒய்யாரக் கொண்டை ஒரு அரசன் கிரீடம், அட்டை மஞ்சள், அழகான கறுப்பு அதன் மேனி.
இந்த மரமேறும்மரங்கொத்திஎன் மனவெளியில்ஒய்யாரமாய்த் திரியும்ஒரு அதிசயப் பறவை
வா, சுசீலா, வா, இன்னும் சில பறவைகளை உனக்குக் காண்பிக்கிறேன்.
நடுக்கட்டில்ஒரு அதிரூப சந்தரிதன் கூந்தல் விரித்துஅசோக மரத்தடிசீதை போலசோகமயமாய்ச் சாய்ந்திருந்தபோது
அந்தரத்தில் ஓரு அக்காப் பறவை ஐயோ என்று சிறகடித்து குரல் எடுத்துக் கூவிப் போயிற்று.
இதுஏன்என் அருமைப்பெண்ணேசுசீலா?என்னைப்போல்அவளும்காதல் சுரத்தில்உடல் வெந்தாளா?அல்லதுசெத்துத்தான்மண்ணோடு மண்ஆனாளா?
ஓடிச் சென்றது ஒரு நதி, டபக் கென்று அதன் நடுவில் பாய்ந்தது ஒர் கருநீலப் பறவை. அதன் அலகில் ஈர மினுமினுப்புடன் அதிசயங் கக்கும் அசல் மீன்.
மரங்கொத்திப் பறவையுண்டென்றால் இவ்வுலகில் மீன் கொத்திப் பறவையுண்டு.
சுசீலா, நான்தான் என்ன என்ன அனுபவங்களைக் கண்டேன். கோவில் சென்று சனீச்வரனைச் சேவித்தேன். வந்து எனக்கு விட்டு விடுதலையாகப் பறக்கும் சிட்டுக் குருவியைக் காட்டினான். மசூதியில் புறாக்களைப் பார்த்தேன்.ஆற்றங்கரையில் ஒற்றைக்கால் தவம் செய்யும் நாரையைக் கண்டேன். ஒரு வாத்துக் கூட்டம் என்னைப் பார்த்துக் கண்ணடித்து நாங்களும் இருக்கிறோம் என்றது. மைனா என் மனவெளியில் தத்தித்தத்திச் சென்றது. மயில் என்னைக் கண்டு நகைத்தது. மரங்கொத்தியும் மீன் கொத்தியும் உனக்கும் ஒரு கூரிய அலகு தேவை என்றன. பருந்து போல், கருடன் போல் ஆமைகளை முடங்கிக் காணும் நானும், பருந்து போல் கருடன் போல் உயரப் பறந்த தருணங்கள் உண்டு. அக்காக்குருவி போல் நானும் உட்கார்ந்து அழுத சமயங்களுண்டு..
ஆனால்சுசீலாஇந்த உலகம்என்ற பெருவெளியில்நீ என்னைத் தனியாகத்தவம் புரிய விட்டுச்சென்று விட்டாய்.
பரவாயில்லை, சுசீலா, பரவாயில்லை. நீ சிருஷ்டித்த தனிமையில் நான்.
என் உள்ள வெளியில் பல மின்னல்கள்வீசக் கண்டேன்பரவசமடைந்தேன்.
(என் சகோதரி திரிசடைக்கு)
- விருட்சம், 1994
தட்டச்சு : ரா ரா கு