தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, February 08, 2020

தி. ஜ. ரங்கநாதன்& சங்கரராம் - க.நா.சு இலக்கிய சாதனையாளர்கள்

தி. ஜ. ரங்கநாதன்& சங்கரராம் - க.நா.சு
இலக்கிய சாதனையாளர்கள்

தி. ஜ. ரங்கநாதன்
கம்பன் பிறந்த ஊரில் பிறந்தவர் - தி. ஜ. ரங்கநாதன்.
"அவன் காலத்துப் பள்ளிக்கூடத்தில் கம்பன் எத்தனாங்கிளாஸ் வரையில் படித்தானோ- எனக்குத் தெரியாது. நான் எலிமெண்டரி ஸ்கூல் தாண்டியதில்லை'" என்று ஒரு தரம் சொன்னார் தி. ஜ.ர. - எல்லாம் அவராகக் கற்றுக்கொண்டது தான், வெ. சாமிநாத சர்மா தனக்குத் தெரியாத விஷயங்களை எழுதக்கூடாது என்ற கொள்கை உடையவர். அதேபோல மொழிபெயர்ப்புகளில் - எவ்வளவு சிக்கலான விஷய மானாலும் - மிகச் சிறப்பாக, தெளிவுடன், பழகு தமிழில் மொழிபெயர்த்து விடுவார் தி. ஜ. ர. குமாவூன் புலி, ஒரே உலகம், மகாத்மா காந்தி, அதிசய உலகத்தில் அலிஸ் என்று பல நூல்களையும் சிறப்பாக மொழி பெயர்த்தவர் அவர்.
சதுரங்கம் முதல் ரேடியோ மெக்கானிஸம் வரையில் எல்லாவற்றையும் தானாகப் படித்துக் கொண்டவர் தி. ஜ. ரங்கநாதன், விஷயங்களைச் சரிவரத் தெரிந்து கொளள வேண்டும் என்று அளவற்ற ஆசை அவருக்கு. நடை முறையில் மோட்டார் யந்திரம் பழுதுபார்ப்பது முதல் ரேடியோ ரிப்பேர் செய்வது வரையில் அவர் தானாக பழகிக் கொண்டிருந்தார்.
சக்தி காரியாலயத்தில், சக்தி பத்திரிகையின் எடிட்டராக அவர் இருந்தபோதுதான் அவரை முதல் தடவையாகச் சந்தித்தேன். அவரிடம் நான் ஒரு கதையைக் கொடுத்தேன். மார்க்கண்டன் என்று கதை. கதையைப் பிரித்துக்கூடப் பார்க்காமல் வாங்கி வைத்துவிட்டு “உங்களுக்கு ரேடியோ மெக்கானிஸம் தெரியுமா?'' என்று கேட்டார். “தெரியாது'' என்று பதில் சொன்னேன். “தெரிந்து கொள்ள ஆசையில்லையா?'' என்று கேட்டார். "இல்லையே'' என்றேன். 'அதெப்படி ஆசையில்லாது இருக்க முடியும்?'' என்று அவர் கேட்டதும், சம்பந்தமே யில்லாமல் சைக்கிள் விடக்கூட எனக்குத் தெரியாது'' என்று நான் சொன்னதும் எனக்கு நினைவிருக்கிறது.
“நீங்கள் ஏன் நாவல்கள் எழுத முயலக்கூடாது?'' என்று ஒருதரம் அவரைக் கேட்டேன்,
'எழுத முயன்று பார்க்கவில்லை என்று நீங்கள் நினைப்பது சரியில்லை. பல தடவை முயன்று பார்த்திருக் கிறேன். முதல் அத்தியாயத்துக்கு மேல் நகரமாட்டேன் என்கிறது. கதைக்காக உருவாக்கிக்கொண்ட மூன்று நாலு பேர்வழிகளையும் மேலே என்ன செய்யச் சொல்வது என்று புரியவில்லை '' என்றார்.
எஸ். வி. வி.க்கும் அவருக்கும் மாம்பலத்தில் துமிலன் வீட்டில் நடந்த ஒரு இலக்கிய நண்பர்கள் கூட்டத்தில் நடந்த ஒரு விவாதம் நினைவுக்கு வருகிறது. எஸ். வி. வி. தான் நாவல் எழுதுகிற பாணியைப்பற்றிச் சொன்னார். "எல்லா நாவலையும் அப்படி எழுதினால் ஒரே மாதிரியாக அமைந்துவிடுமே!'' என்று தி. ஜ.ர. அவரைக் கேட்டதும் எஸ். வி. வி. அவரை "நீங்கள் ஒரு நாவலும் எழுதியதில் லையோ?'' என்று மடக்கினார். எப்படித் தெரிகிறது?' * என்றார் தி. ஜ.ர. 'நாவல் எழுதியவராக இருந்தால் இந்த மாதிரி ஒரு அசட்டுச் சந்தேகம் வந்திராது. ஒரு உதாரணம் சொன்னால் அது எல்லாவற்றிற்கும் எந்த சந்தர்ப்பத்துக்கும் பொருந்தும் என்று எண்ணி விடுகிறவரால் நாவல் எழுதவே முடியாது'' என்று விளக்கினார் எஸ். வி. வி. தி. ஜ.ர. பதில் சொல்லவில்லை .
பல இலக்கிய நண்பர்கள் கூட்டங்களுக்கு வந்து பங்கு கொண்டிருக்கிறார். தி.ஜ.ர. பல விஷயங்களை அவர் அளவில் அழுத்தமாகவே சொல்லுவார். ஆனால் அவர் சொல்லுகிற விஷயங்கள் அவர் முக்கியமான எழுத்தாளர் என்று எண்ணுபவர்கள் இடையே கூட எடுபடாது. அவர் சொல்கிற விஷயம் சரியான விஷயமாக இருந்தால்கூட எடுபடாது. இது ஏன்? என்று நானே பல சமயம் ஆச்சரியப் பட்டதுண்டு.
''மணிக்கொடிக்காரர்கள் என்னைச் சிறுகதையாசிரிய னாகக்கூட ஏற்றுக்கொள்வது கிடையாது'' என்று குறைப்பட்டுக்கொள்ளுகிற மாதிரி ஒருதரம் கூறினார். அது உண்மைதான். "ஏன் அவர்கள் - ஏற்றுக்கொள்வ தில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது?'' என்று கேட்டேன். சிறிது நேரம் யோசித்துவிட்டு நாணயமாக எனக்குத் தெரியவில்லை'' என்று சொன்னார். எனக்குத் தெரிகிற காரணத்தைச் சொல்லட்டுமா?'' என்று கேட்டேன். கு.ப. ரா., புதுமைப்பித்தன், சிதம்பர சுப்பிரமணியம் போன்ற மணிக்கொடி எழுத்தாளர்கள் சிறுகதை என்கிற இலக்கிய உருவத்தில் நம்பிக்கை உள்ள வர்கள். உங்களுக்கு அதில் பூரணமாக நம்பிக்கையில்லை. சமயம் நேருகிறபோது சிறுகதையும் எழுதுகிறீர்கள். அவ்வளவுதான்'' என்றேன். “அது உண்மையாகவே இருக்கலாம்'' என்று ஏற்றுக்கொண்ட தி. ஜ.ர. ' எனக்கு -உபயோகமான எழுத்து. என்பதிலும், essay என்கிற இலக்கிய உருவத்திலும் இருக்கிற நம்பிக்கை சிறுகதையில் வரவில்லை '' என்றார். -
தமிழில் வேறு ஒருவரும் செய்யாத அளவுக்கு அவர் essay என்கிற இலக்கிய உருவத்தை மிக அற்புதமாகக் கையாண்டிருக்கிறார். அவருடைய பொழுதுபோக்கு
என்கிற கட்டுரைத் தொகுப்பு மிகவும் அற்புதமாக வந்திருக்கிற ஒரு தமிழ் நூல். A loose sally of the mind என்று essay என்கிற இலக்கிய உருவத்துக்கு அர்த்தம் சொல்லுவார்கள். அந்த மாதிரிப் பார்க்கும்போது தி. ஜ. ரங்க நாதனின் எஸ்ஸேஸ் லக்ஷிய உருவம் பெற்றவை என்று சொல்லவேண்டும். ஒரு நாற்பத்தொன்பது கட்டுரைகள் அடங்கிய இந்த நூலைத் தமிழுக்குக் கிடைத்த ஒரு அரிய பொக்கிஷமாகவே கருதவேண்டும்.
தி. ஜ. ரங்கநாதன் இந்தக் கட்டுரைகளில் எந்தெந்த மாதிரியான விஷயங்களை, பிரச்னைகளை எழுப்புகிறார் என்று நினைத்துப் பார்ப்பதே சுவாரசியமான விஷயமாக அமைகிறது. தாயுமான ஸ்வாமிகள் இப்போது உயிருடன் இருந்தால் எந்தப் பத்திரிகை ஆபீஸிலாவது அவருக்கு ஆசிரியர் உத்தியோகம் கிடைத்திருக்குமா என்று ஒரு கேள்வி. பாடத்தெரியாதவன் சங்கீதத்தைப் பற்றிப் பேசலாமா கூடாதா என்று ஒரு கேள்வி. ஸைக்கிள் வண்டியை துவிச்சக்கரவண்டி என்று சொல்லலாமா உதை வண்டி என்று சொல்லவேண்டுமா? - பகல் தூக்கத்துக்கு மிகவும் உகந்த வேலை வாத்தியார் வேலையா, வேறு ஏதாவதா? ஒரு பத்திரிகை நிருபர் சென்னை சட்டசபை ஒரு இரவு முழுவதும் அங்கத்தினர் களைத் தூங்கப் போகவிடாமல் வேலை செய்து சரித்திரத்தைப் படைத்துவிட்டது என்று ஒரு - பத்திரிகை நிருபர் எழுதியது சரியா அல்லவா? கடவுள் தோல்வி யறுவது யாரிடம்? - இந்தமாதிரிப் பல கேள்விகளுக்கு
அவர் கட்டுரைகளில் விடை காணலாம்.
கட்டுரைகளைத் தவிர பல குழந்தை நூல்களையும் படைத்திருக்கிறார் அவர். தமிழ்வாணன் என்கிற மிகவும் வெற்றி பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளர் ஒருதரம் என்னிடம் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. 'தி. ஐ. ரங்க நாதன்தான் என் ஆதர்ச புருஷர் . அவர் அடியேனுக்குப் போட்ட பிச்சைதான் நான் இன்று என் அறிவு என்று
சொல்வதெல்லாம்'' என்று சொன்னார். இதை உண்மை யென்றே வைத்துக் கொள்ளலாம். தி. ஜ. ரங்கநாதன் இலக்கியவுலகில் அவ்வளவாக வெற்றி காணாதவர். என்றாலும் பலரும் அவரை ஒரு குருவாக மதித்து ஏற்றுக் கொள்வதில் பெருமை கண்டார்கள். வ. ரா.வும், தி. ஜ.ர.வும் அந்தத் தலைமுறை எழுத்தாளர்களின் -குருபீடத்தில் இருந்தவர்கள். பலர் பின்னர் வ. ரா. விட மிருந்து நகர்ந்துவிட்டார்கள். தி. ஜ. ரங்கநாதனிடமிருந்து நகரவேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்பட்டதில்லை.
மஞ்சேரி - ஈசுவரன் என்கிற சிறுகதாசிரியரும் தி. ஐ. ர.வும், ஆப்த நண்பர்கள். இந்த நட்பு அவர்கள் ஆயுட்காலம் பூராவும் நீடித்தது. பல ஈஸ்வரன் சிறுகதைகளை தி.ஜ.ர . அழகுபட மொழிபெயர்த் திருக்கிறார்.
ஒரு தினசரிப் பத்திரிகை ஆசிரியராக வேண்டும் என்று தான் தி. ஜ. ரங்கநாதனுக்கு ஆசை. பத்திரிகையாளர்களே நடத்திய ஒரு தினசரியில் போய்ச் சேர்ந்தார். ஆனால் பத்திரிகையில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. திரும்பவும் மஞ்சரியின் ஆசிரியராக வந்து சேர்ந்துவிட்டார், தனக்கு இவ்வளவுதான் என்ற நினைப்புடன். ஓரளவுக்கு ஆசைகள் அதிகம் இல்லாது வாழ்ந்து விட்டவர் என்று தி ஜ. ரங்கநாதனைச் சொல்லவேண்டும். -
*****************************
சங்கரராம்
தமிழ் நாவல் இலக்கியவுலகின் முதல்வராகக் கருதப் பட வேண்டியவர் சங்கரராம் என்கிற புனை பெயரில் எழுதிய T. L. நடேசன் என்பவர். நாற்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் நாவலின் இலக்கிய மறுமலர்ச்சியைச் சந்தேகத்துக் கிடமில்லாமல் தொடங்கி வைத்தவர் சங்கரராம். மண்ணாசை என்கிற அவர் நாவல் நாற்பது களிலும் பின்னரும் ஏற்பட்ட ஒரு நாவல் கலை வளத்துக்கு முன்னோடியாகச் செயல்பட்டது. அவரைத் தொடர்ந்து ஷண்முகசுந்தரம், நான், மற்றவர்கள் எழுதினோம்.
மண்ணாசை நாவல் கலையின் ஒரு சிகரத்தை எட்டிப் பிடித்தது என்று சொல்ல வேண்டும். கிராமத்துக்குத் திரும்பிப்போ, நகரங்களை நம்பாதே என்று ஒரு இயக்கம் இருபதுகளிலும் முப்பதுகளிலும் தீவிரமாக இருந்தது. இதன் ஒரு கூறு மகாத்மாகாந்தியின் சிந்தனைகளையும் தொட்டது என்று சொல்லலாம். இலக்கியத்தில் இதன் முதல் நவீன ஆரம்பம் என்று நட் ஹாம்ஸனின் நிலவளத் தைச் சொல்லவேண்டும். 1919-ல் அதற்கு நோபல் இலக்கியப் பரிசு கிடைத்தது பரவலாக இந்தியாவிலும் பேசப்பட்டது என்று தெரிகிறது. பாரதியார் அந்த நாவலையும், நாவ லாசிரியர் பற்றியும், பத்திரிகாசிரியராக ஒரு குறிப்பு எழுதி யிருக்கிறார்.
இந்தக் கிராமத்துக்குத் திரும்பிப்போ' இயக்கத்தின் செயல்பாடாகவே கே. எஸ். வேங்கடரமணியின் இரண்டு நாவல்களையும் (முருகன், கந்தன்) கவனிக்கலாம். அவை ஆங்கிலத்தில் ஏற்படுத்திய தாக்க அலைகளை விட அதிக மாகத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டபோது ஏற்படுத்தியது. (ஒரு நாவலை மொழி பெயர்த்தவர் கிருஷ்ணகுமார். இரண்டாவது நாவலை மொழி பெயர்த் தவர் ஆசிரியரே.) கே. எஸ். வேங்கடரமணியைப் பின்பற்றி சங்கரராம் தன் நாவலை Love of the Dust என்று ஆங்கிலத் தில் எழுதினார். குடியானவன் தன் மண்ணை நேசிக்கிற அளவு வேறு எதையும் நேசிப்பதில்லை என்கிற ஒரு அடிப்படை விஷயத்தை ஒரு மனுஷ்யப் பார்வையுடன் இந்த நாவலில் விவரித்திருக்கிறார். இதை மொழி பெயர்த்து அவரே வெளியிட்டபோது கல்கியும் மற்றவர் களும் நாவல்கள் எழுதத் தொடங்கி விட்டார்கள். ஆனால் அவர்களிடம் இல்லாத ஒரு இலக்கியத் தரம், கலை மேன்மை சங்கரராமிடம் இருந்தது. தன்
இந்த நாவல் இப்போது படிக்கக் கிடைப்பதில்லை; அச்சில் இல்லை என்பது பற்றித் தமிழர்கள் வெட்கப்பட வேண்டும். அது ஒரு Classic status என்று சொல்லக் கூடியதை எட்டிவிட்ட நாவல். அதைப் படிக்காதவன் எவனும் தமிழ் நாவலைப் பற்றிப் பேச லாயக்கில்லாதவன் என்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன், அதற்குப் பிறகு பல நாவல்களும் தொடர்கதைகளும் எழுதினார் சங்கர ராம். ஆனால் அவை அந்த முதல் நாவலின் தரத்தை எட்டியதாகச் சொல்ல இயலாது. இன்னொன்றும் கூடவே சொல்லவேண்டும். தமிழில் எழுத ஆரம்பித்தபிறகு அவர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதவில்லை . தமிழில் எழுதுவது அவர் திருப்திக்குப் போதுமான தாக இருந்தது.
- மண்ணாசை மூன்று நாலு பதிப்புகள் கடகடவென்று வந்தன. இருந்தும் பிரசுரகர்த்தாவிடம் சண்டையிட்டுக் கொண்டு (வேறு என்ன? பணத்தைப்பற்றித்தான்) வேறு ஒருவரிடம் - நூலைப் பிரசுரிக்கத் தந்தார். அதோடு, பதிப்புகள் வருவது நின்றுவிட்டது. பிரசுரகர்த்தர்கள், ஆசிரியர்களுக்கிடையே நிலவுகிற இன்றைய நிலைப்பற்றிய வியாக்கியானமாக இதைக் கொள்ளலாம்.
நாவலாசிரியராகப் பெயர் பெற்ற சங்கரராம் பல சிறு கதைகள் எழுதியிருக்கிறார். இன்று விமரிசன ரீதியாக எனக்குத் தோன்றுவது அவர் சிறுகதையில் சாதித்த அள வுக்கு நாவல்களில் சாதிக்கவில்லை என்பது தான். இதற்குக் காரணம் தேடிக்கொண்டு வெகு தூரம் போக வேண்டிய தில்லை. மண்ணாசைக்குப் பின்னால் வந்த அவர் நாவல் கள் எல்லாமே தொடர்கதைகளாக வந்தவைதான். பத்திரிகைத் தேவையையும் பணத்தேவையையும் காரண மாகக் கொண்டு எழுதப்பட்டவை. சிறுகதைகள் உள்ளே யுள்ள உந்துதலால் எழுதப்பட்டவை.
அவர் முதன் முதலில் எழுதிய நூலும் ஒரு சிறுகதைத் தொகுப்புத்தான். ஆங்கிலத்தில் Children of the Kaveri என்று ஆறணா விலை போட்டிருந்த அந்தப் புஸ் தகத்தை எடுத்துக்கொண்டு தானே பிரசுரித்திருந்த மாதிரி தானே விற்க அவர் ஒரு நவராத்திரி லீவில் அண்ணாமலை யூனி வர்ஸிடி ஹாஸ்டலுக்கு வந்தார். ஹாஸ்டல் பையன்கள் எல்லோரும் லீவுக்கு ஊருக்குப் போயிருந்தனர். என்னைப் போல லைப்ரரியில் படிக்கிற அக்கறையுடன் நாலைந்து பேர்வழிகள் மட்டுமே இருந்தோம்.
சங்கரராமைக் கண்டதும் அவர் புஸ்தகத்தில் - எனக்கும் பின்னால் நேரப்போகிற கதியை நினைத்துக் கொண்டே - மூன்று பிரதிகள் கமிஷன் கழித்து ஒரு ரூபா கொடுத்து வாங்கிக் கொண்டேன். மூன்று பிரதிகள் எதற்கு?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டார். நான் என் னுடைய இலக்கிய அபிலாஷைகளைச் சொன்னேன். ஓரளவுக்கு அகம்பாவத்துடன் “அப்படி ஒன்றும் எழுதுவ தென்பது சுலபமான விஷயம் அல்ல'' என்று சொல்லிவிட்டு பேச்சை நிறுத்திக் கொண்டார். அந்த அகம்பாவம் எனக்குப் பிடித்திருந்தது. நன்றாக எழுதுவதென்பது, அப்படி ஒன்றும் சுலபமான காரியம் இல்லை தான். நன்றாக எழுதுபவர்கள் அகம்பாவம் கொள்ள நிச்சயமாக உரிமை உள்ளவர்கள் தான் என்று இன்றும்கூட 1985-ல் நினைத்துப் பார்க்கும் போதும் தோன்றுகிறது.
இது என் கல்லூரி நாட்களில் முப்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் நடந்தது. பின்னர் அவரைச் சந்தித்தபோது 1944, 1945-ல் இது பற்றி அவருக்கு நினைப்பூட்ட முயன்றேன். சந்திப்பு எனக்கு நினைவிருந்தமாதிரி அவருக்கு நினைவில்லை. ஆனால் அந்தப் புஸ்தகம் விற்கவேயில்லை. இருநூறு முந்நூறு ரூபாய் கைநஷ்டப் பட்டதோடு சரி'' என்றார். இந்தத் தொகுப்பிலிருந்து 1957, 58-ல் நான் பம்பாயில் சந்தித்த Joseph Kalmer என்பவரிடம் நாலைந்து கதைகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடு செய்ததும், அதற்குக் கணிசமான அளவில் சங்கரராமுக்குப் பணம் வந்தது என்றும், அது காரணமாக இன்னும் கொஞ்சம் மொழி பெயர்ப்புகள் சாத்தியமா என்று கேட்டுக்கொண்டும் சங்கர ராம் என் வாலாஜா வீட்டு மாடிக்கு வந்ததும் நினைவிருக் - கிறது.
ஒரு சமயம் பேச்சுவாக்கில் அவர் பிள்ளை குட்டிகள் குடும்பம் என்று கேட்டபோது "அதெல்லாம் சாரமில்லாத விஷயங்கள். அது பற்றிப் பேச வேண்டாம்'' என்று சொல்லிவிட்டார். ஏதோ தனியாக இருப்பதாகவும், ஒரு கோசாலை நடத்துவதாகவும் அதில் ஏகப்பட்ட நஷ்டம் என்றும் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு விடை பெற்றுப் போனார்.
வீட்டில் தெலுங்கு பேசுபவர் என்று எண்ணுகிறேன். அகண்ட காவேரிக் கரையைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் ஒரு விலாசம் இருந்தாலும் அதிகமாகச் சென்னையில் தங்காதவர் என்று எண்ணு கிறேன். நான் நடத்திய நூற்றுக்கணக்கான இலக்கிய நண்பர்கள் கூட்டங்களில் ஒன்றுக்குக்கூட அவர் வந்ததில்லை என்று நினைவிருக்கிறது. காரணம், விரோதமோ அல்லது அதனிடம் அவநம்பிக்கையோ அல்ல - அவர் அநேகமாக சென்னைக்கு வெளியே இருந்தார் என்பதுதான்.
பணத்துக்குக் கஷ்டப்படுவதைப் பற்றியும், தன் புஸ்தகங்களைப் போட்டவர்கள் சரியாகப் பணம் கொடுப்ப தில்லை என்பது பற்றியும் தாராளமாகச் சொல்லுவார். இதில் எவ்வளவு தூரம் கற்பனை, எவ்வளவு தூரம் நிஜம் என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் அவருடன் அவ்வளவாக நெருங்கிய பழக்கம் எனக்கு ஏற்படவில்லை.
தன் பிற்கால நாவல்களைப் பற்றி ஒரு சமயம் என் அபிப்பிராயத்தைக் கேட்டார். “மண்ணாசை நல்ல நாவல்'' என்று நான் சொன்னதும் மற்றதையெல்லாம் எழுதியிருக்க வேண்டாம் என்கிறீர்களா?'' என்று கேட்டார். 'அதை எப்படி நான் சொல்ல முடியும்?'' என்று பதில் சொன்னேன். அவருக்கே தன் சிறுகதைகள் பற்றிக் கேட்க நினைவில்லை.
நான் இல்லாத வேறு ஒரு சமயம் வீட்டுக்கு வந்திருக் கிறார். அப்போது யாரோ ஒரு இலக்கியத் தகுதியற்ற வருக்கு சாஹித்திய அக்காதெமி பரிசு கிடைத்திருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்திருந்த சமயம். என் மனைவி அவருக்குக் காபி கொடுத்துவிட்டு “உங்களுக்கு இன்னும் வரவில்லையே இந்தப் பரிசு?'' என்று கேட்டிருக்கிறாள். வராதம்மா வராது. எனக்கெல்லாம் வராது!'' என்று பதில் சொன்னாராம்..
தனக்கு சாஹித்திய அக்காதெமி பரிசு வரவில்லையே என்று மறுதடவை என்னைச் சந்திக்கும்போது ஆதங்கப் பட்டார். “அது அவ்வளவு முக்கியமா?'' என்று கேட்ட தற்குச் சற்றுத் தயங்கிவிட்டு எனக்கு உடனடியாக இப்போ கோசாலையைத் தொடர ஒரு ஐயாயிரம் வேண்டும். எங்கே போவது?'' என்றார். கோசாலையை மூடிவிட்டு அந்தச் சமயம் சென்னைக்கு வந்து விட்டார் என்று கேள்விப்பட்டேன்.

No comments:

Post a Comment