தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, May 21, 2016

ஹிம்சை - தளவாய்சுந்தரம் : காலச்சுவடு 12 டிசம்பர் 1995

www.padippakam.com

ஒவியம் எஸ்.ஜி. வாசுதேவ்
ஹிம்சை - தளவாய்சுந்தரம் : காலச்சுவடு 12 டிசம்பர் 1995
www.padippakam.com
நீங்கள் மஞ்சளாய் வெளிச்சம் பரவிக் கிடந்த அந்த பள்ளிக் கூடத்திற்கு முன்னால் இறங்கிக் கொள்கிறீர்கள். ஆனால் உண்மையிலேயே நீங்கள் ஆஸ்பத்திரிக்குத் தான் டிக்கெட் எடுத்திருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் பயணப்பட்ட வண்டியில் இருந்த அதிகப்படியான கூட்டமும் தினமும் மருந்துகளின் வாடையுடன் நோயாளிகளுக்கு இடையே நடக்க வேண்டியிருந்ததும் உங்களை எரிச்சல் படுத்தியிருந்தது. இங்கே இறங்குவதன் மூலம் கொஞ்சம் அதிகமான தூரத்தை கடக்க வேண்டி வரும் என்று தெரிந்தும் நம்முடைய தலைவிதியில் இறங்க வேண்டும் என்று இருக்கும் போது நாம் செய்வதற்கு என்ன இருக்கு நீங்கள் இப்படி நடந்து கொள்கிறீர்கள் உங்களுக்குப் பிறகு வயதான ஒருவரும் முன்னால் ஒரு பெண்ணும் இறங்கிக் கொண்டதும் அந்த வண்டி அதற்குள் பிதுங்கி கொண்டிருந்த ஆட்களோடு ஓடிப் போகிறது.

வயதான அந்த ஆளும், பெண்ணும் காணாமல் போன பின்னாடியும் நீங்கள் அங்கேயே எதையே ஞாபகப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதுபோல் நின்று கொண்டிருக்கிறீர்கள். அங்கிருந்த ஒன்றிரண்டு கடைகளையும் அடைத்துவிட்டு போயிருந்தார்கள்.

திடீரென்று ஞாபகம் வந்ததுபோல் பள்ளிக் கூடத்திற்கு எதிர்திசையில் போகிற பாதையில் நடகக ஆரம்பிக்கிறீர்கள். சாயங்காலம் மழை பெய்திருந்ததாலும் பாதை குண்டும் குழியுமாய் இருப்பதாலும் மிகக் கவனமாகத்தான் நடக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சதூரம்தான் பள்ளிக் கூடத்திற்கு முன்னால் இருந்த மெர்க்குரி உங்களுக்கு உதவி செய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் நீங்கள் இருட்டிற்குள் செல்ல ஆரம்பிக்கிறீர்கள். அது உங்களைப் பயப்படச் செய்கிறது. பாதையின் ஓரங்களில் எப்போதோ டியூப்கள் எரிந்து கொண்டிருந்தன என்பதற்கு அடையாளமாய் மின் கம்பங்களில் குழாய்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. முந்தின நகரசபை தேர்தலின் போதாக இருக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறீர்கள். நகரசபைத் தலைவரின் மேலும் அவரை தேர்ந்தெடுத்த முட்டாள் ஜனங்களின் மேலும் உங்களுக்கு கோபமும் எரிச்சலும் வருகிறது. ஆனாலும் நீங்கள் நடந்துகொண்டேதான் இருககிறீர்கள்.

ஆங்காங்கே பாதையின் ஓரத்தில் நாய்களும் பன்றிகளும் மலங்களை தின்றுகொண்டிருக்கும் வாயால் உங்களைப் பார்த்து உறுமுகின்றன. எனவே மிக கவனமாக மலங்களை மிதிக்காமல் இருக்க வேண்டியும் பாதையின் மத்தியில் எப்பவாவது வரும் சைக்கிளுக்கோ பைக்குக்கோ ஒதுங்கி இடம் விட்டுக் கொண்டு நடக்கத் தொடங்குகிறீர்கள்.

இருண்ட பகுதிக்குள் சிறிது தூரம் கடந்ததும் முன்னாடி யாரோ போய்க் கொண்டிருப்பது நிழலுருவமாய் உங்களுக்குத் தெரிகிறது. என்னென்னமோ நினைத்து பயந்து கொண்டிருந்தது போய் மனதில் கனம் குறைவதை உணர்கிறீர்கள். பேசிக் கொண்டே போக துணை கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் கொஞ்சம் உங்கள் நடை வேகமாகிறது. தண்ணீர் தேங்கி, குண்டுகள் தெரியாமல் இருப்பதாலும் பாதை சேறும் சகதியுமாக இருப்பதாலும் வேகமாக நடப்பது உங்களுக்குச் சிரமமாக இருக்கிறது. ஆனாலும் அதில்தான் நீங்கள் விருப்பம் காட்டுகிறீர்கள். எனவே விரைவிலேயே அந்த நிழலுருவத்தை நெருங்குகிறீர்கள். ஆனால் இப்பொழுது அந்த நிழலுருவம் ஒரு பெண்ணினுடையது என்பதைக் காண்க o

பேருந்தில் இருந்து இறங்கின. பெண்ணை ஞாபகப் படுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் நடையின் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனாலும் நீங்கள் அந்த பெண்ணைவிட வேகமாகவே நடந்துகொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அந்த பெண்ணிற்கும் உங்களுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது.

அந்த பெண்ணும் பாதையின் மததியில்தான சென்று கொண்டிருககிறாள் கையில் சின்னக் கூடை ஒன்று தொட்டில்ாடுகிறது. எங்கேயாவது கடைக்கோ, சந்தைக்கோ அல்லது கோயிலுககே போய்விட்டு வருபவர்களாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனாலும் இப்படி அத்த ராத்திரியில் நமே பயந்து சாகும்போது ஒரு பெண் தைரியாட போகிறாளே என்று ஆச்சரியம் உங்களுக்கு அந்த பெண்ணிற்கும் உங்களுக்குமான இடைவெளி குறைக குறைய இப்பெண்ணின் வயதும் குறைந்து கொண்.ே வருகிறது. நீங்கள் கனக்கிட்டிருந்ததையும் தாண்டி பதை நீண்டு கொண்டே போகிறது.

உங்களின் காலடிச் சத்தம் அப்பெண்ணிறகுக கேட்கும் அளவுக்கு நெருங்கியபொழுது அவள் திரும்பிப பார்க்கிறாள். உடனே நீங்கள் தாக்கப்பட்டது போல் உங்களுக்கு அவள் ஒரு பொருட்டு இல்லை என்பதை காண்பிக்கி விரும்பி முகத்தைத் திருப்பி சுற்றிலும் பார்க்கிறீர்கள் மங்கிய பிறைநிலா வெளிச்சத்தில் தென்னை மரங்கள் கறுத்துபோய்த் தெரிகிறது. திரும்பிய அவள் முகம் அழகாக இருந்தது என்று நினைத்துக் கொள்கிறீர்கள். ஒரு நாய் திடீரென ஓட ஆரம்பிக்கிறது. அவளுக்கு உங்கள் வயதோ அல்லது கொஞ்சம் குறைவாகவே இருக்கலாம். இந்த எண்னம் உங்களை பரவசப்படுத்துகிறது. நீங்கள் மீண்டும் அவ ளை பார்ப்பதற்காக திரும்பியபொழுது அவள் திரும்பித் திரும்பி உங்களைப் பார்த்தபடியே சென்று கொண்டிருக்கிறாள். அப்பொழுதுதான நீங்கள் அபபடியே நின்று கொண்டிருப்பது உங்கள் பொறியில் தட்டியது. இது எப்படி நடந்தது என்று ஆச்சர்யப்படுகிறீர்கள் சிந்தித்துக் கொண்டே உடனே நடக்க ஆரம்பிக்கிறீர்கள். நாம் நடக்கிறோமா ஓடுகிறோமா என்று சந்தேகம் வருகிறது உங்களுக்கு புள்ளியாய் ஒரு வெளிச்சம் ஆரம்பித்து பெரியதாகிக் கொண்டே வந்து உங்களையும் அவளையும் ஒரு சைக்கிள் கடந்து போகிறது.

திடீரென அவள் ஒரு கல்லில் தட்டி கீழே விழப் பாக்கிறாள். குடிகாரனைப் போல் தள்ளாடி குட்டி கரணம் அடிக்காமல் தப்பித்துக் கொள்கிறாள். திரும்பிப் பார்க்கிறாள். உடனே நீங்கள் முந்தைய முறை போலவே ஆனால் இந்த முறை மெதுவாக நடந்துகொண்டே முகத்தைத் திருப்பிக் கொள்கிறீர்கள் நீங்கள் அவள்பால் கவரப்பட்டிருப்பீர்கள் என்று நினைத்து கொண்டிருக்கும் அவளுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாய் போயிருக்கும் என்று நினைத்துக் கொள்கிறீர்கள். வெற்றியடைந்துவிட்ட திருப்தி உங்களுக்கு.

பெண்ணாய் இருந்தால் என்ன, பேசிக்கொண்டே போனால் செத்தா போய்விடுவோம் என்று உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள். அவளும் நீங்களும் பேசிக்கொண்டே செல்கிறீர்கள். பின் நண்பர்களாகிறீர்கள். அப்புறம் என்ன காதலிக்க வேண்டியதுதானே. அப்புறம் நீங்கள் இருவரும் உங்கள் காதல் உண்மையானதுதான் என்று இந்த பாழாய்ப்போன சமுதாயம் ஏற்றுக் கொள்ளவேண்டி கல்யாணம் செய்து கொள்கிறீர்கள். அப்புறம் உங்கள் கற்பனை சரடு போட்ட கிடா போல் அடங்கி போகிறது.

இதுபோல் நினைத்துக் கொண்டே பின் தொடர்வது உங்களுக்கு சுகத்தைக் கொடுக்கிறது. நீங்கள் வேகமாக நடக்க ஆரம்பிக்கிறீர்கள். ஆனாலும் உங்களுக்குத தயக்கம் இல்லாமலில்லை. 

இப்பொழுது அவளும் வேகமாக நடந்து கொண்டிருக்கிறாள். அவள் திரும்பித் திரும்பி பார்ப்பதற்குள்ளான இடைவெளி மிகக் குறைவாக இருக்கிறது. அவள் உங்களைப் பார்த்துப் பயப்படுகிறாள் என்று உங்களுக்குத் தெரிகிறது. எதற்கு வீண்வம்பு என நினைக்கிறீர்கள். ஆனாலும் உங்களுக்கு இதில் சுவர்ஸ்யம் கூடி வருகிறது. அவள் உடுத்தியிருந்த துணி வேகமாக நடப்பதில் அவளுக்கு சிரமத்தை
காலச்சுவடு 12 71 டிசம்பர் 1995
படிப்பகம்

ஏற்படுத்துகிறது. சரட் சரட் என்று சத்தம் கேட்கிறது. மோசமான பாதையாதலால் அடிக்கடித் தள்ளடுகிறாள். வேண்டியதுதானே.

நீங்கள் சிரிக்கிறீர்கள் கூப்பிடடு “எம்மா பயப்பட வேண்டிய அவசியமில்லை" என்று சொல்லிவிட முடிவு செய்கிறீர்கள் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாமே என்ற எண்ணமும் இருக்கிறது. இப்போதைக்கு இதில் அதிக விருப்பம் இல்லாமல் இருந்தாலும் நாளை நண்பர்கள் மத்தியில் சொல்லி அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் நீங்கள் கோம்பையன் இல்லை என்று நிரூபிக்க வேண்டியாவது கொஞ்சம் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் கொஞ்சம் பயமும் தயக்கமும் இருக்கத்தான் செய்கிறது. திடீரென்று ஞாபகம் வந்ததுபோல் தப்தப் என்று சப்தம் ஏற்படுத்திக் கொண்டே கண் தெரியாதவர்களை போல் ஓடுகிறீர்கள். பன்றிகளும் நாய்களும் உங்களின இந்த திடீர் மாற்றம் கண்டு திகைத்து உறுமிக் கொண்டே ஓடுகின்றன. ஒன்றிரண்டு எதிர்த்து பார்க்கின்றன. உங்களிடமா நடக்கும்! உங்கள் எண்ணம். அவளைப் பயமுண்டாக்குவது மட்டுமே ஆதலால் உங்களுக்கும் அவளுக்குமான இடைவெளி இருபது அடி இருக்கும்போது நின்று கொள்கிறீர்கள். அவளின் எண்ணம் உறுதிப்பட்டிருக்க வேண்டும் தலைதெறிக்க ஓடுகிறாள். சேலையின் அடிப்பாகம் கைகளுக்கு உயருகிறது. முண்டமே இப்படி, பயப்படுத்தீயே என்று அவளை மனதிற்குள் திட்டிக் கொள்கிறீர்கள். ஆனால், இன்னும் அதிக சுவராஸ்யத்தை இதில் நீங்கள் கண்டுகொள்கிறீர்கள். அவள் திரும்பி பார்த்த சில சமயங்களில் டாட்ட காண்பிக்கிறீர்கள்

இப்படியே உங்கள் திருவிளையாடல் நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொருமுறையும் அவளுக்கும் உங்களுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. இடைவெளி குறையக்குறைய நீங்கள் குரூரமாய் சிந்திக்கத தொடங்குகிறீர்கள். இது தவறு இல்லையா எனறு உங்களுக்குள் ஒரு கேள்வி பாழாய்ப்போன கேள்வி நேரம் காலம் தெரியாமல் வந்து நிற்கிறது பாத்திங்களா. கமோ நினைத்துதானே பாக்கிறோம். அபபடியெல்லாம் செய்யத் கூடிய அளவுக்கு நம் ஒன்றும் மோசமானவன் இல்லையே என்று சமாதானம் செய்துகொள்கிறீர்கள் சரி, செய்தல் தான் என்ன என்றும் நினைத்துக் கொள்கிறீர்கள். இது தெரிய வரும்போது உங்களை அப்பாவி என்று எண்ணிக் கொண்டிருக்கும் உலகம் என்ன செய்யும் என்று சிந்திக்கத் தொடங்குகிறீர்கள் வேறு ஒன்றும் இல்லையென்றாலும் கழட்டு கையை என்றாவது மிரட்டிப் பாக்கலாமே என்று தோன்றுகிறது. ஆனாலும் பழையபடியேதான ஓடி ஓடி நின்றுகொண்டிருககிறீர்கள்.

பாதையின் அந்த முதல் திருப்பத்தைக் கடந்தபோது அதிர்ந்து போகிறீர்கள். லைடடு எரிந்து கொண்டிருககும் அந்த வீடடுக்கு முன்னால் அவளுடன் இன்னும் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். அவள் நீங்கள் நின்று கொண்டிருந்த திசையைக் காண்பித்து அவர்களிடம் உங்கள் திருவிளையாடலை சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவர்கள் முகங்களில் ஆச்சர்யம் பரவிக் கிடக்கிறது. அவள் சொல்வதை நம்ப முடியாதவர்களாய் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். பின் அவர்கள் அவளோடு சேர்ந்து உங்களைப் பார்த்து வருகிறார்கள். இதை நீங்கள் எதிர் பார்க்கவில்லை. நீங்கள் நின்று கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியாது என்றாலும் உங்களை அடைய அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படும் என்றாலும் நீங்கள் வேகமாக சிந்திக்கத் தொடங்குகிறீர்கள்

காலம் கடந்துவிட்டது என்பதை நீங்கள உணராமலில்லை. உங்களுடைய எந்த வாதத்தையும் அவர்கள் நிச்சயமாய் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அப்படியே ஏற்று கொண்டாலும் அது இரண்டு மூன்று தர்ம அடிகளுக்குப் பின்னாடிதான் சாத்தியப்படக்கூடும். வந்த பாதையில் 'அம்புட்டேனா பார் என்று ஒடத் தொடங்குகிறீர்கள்.

இதை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த கதையை முடிப்பதற்காக உங்களை விரட்டிக் கொண்டு ஓடிவர வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன. கல்லூரி அளவிலான இருநூறு மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் முதல் இடத்தை பெற்றிருந்த பின்னும் உங்களை பாதியிலேயே தொலைக்கிறேன். விரட்டிக் கொண்டு ஓடி வந்த நாய்கள் முடியாமல் பாதியில் திரும்பி மலம் தின்ன போகிறது. மூச்சிரைக்க நான் அந்த பள்ளிக்கூடத்தை வந்தடைந்த போது நீங்கள் அந்த வயதானவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப்போலவே ஆஸ்பத்திரியில் இறங்க வேண்டிய அவர், ஆனால் தெரியாமல் இங்கே இறங்கி விட்டிருந்திருக்கிறார். இந்த இடத்திற்கு புது ஆள் 'போல், எங்கல்லாமோ சுற்றி கடைசியில் உங்களிடம் , வழி கேட்கிறார். நீங்கள் பயந்து கொண்டிருப்பது அவர் முகத்தில் கேள்விக்குறியாய் இருக்கிறது. கடைசி பஸ்சும். போயிருககும். வேறு வழி, ஆஸ்பத்திரி வாடையும் நோயாளிகளும் தான இன்று அவரை அழைத்து கொண்டு நடக்க தொடங்குகிறீர்கள்.

உங்களைப் பாத்தாகிவிட்டது சரி. அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா மறுபடியும் அந்த பாதையில் ஓடினேன். ஒடிக்கொண்டே இருந்தேன். எந்த இடத்திலும் அவர்கள் என்னை எதிர் கொள்ள வில்லை. சரி, திரும்பி போயிருப்பார்களாக இருக்கும் எனறு எண்ணிக் கொண்டேன்.

இதுவரை அனைத்தையும் உங்கள் கண்களின் உதவி கொண்டே பார்த்துக் கொண்டு வந்த நான் வந்த திருப்பத்தை கடந்த போது அதிர்ந்து போனேன். அங்கே இந்த லைட்டும் எரிந்து கொண்டிருக்கவில்லை. வீடு இருந்தால்தானே லைட்டு எரிவதற்கு..

டிசம்பர் 1995

படிப்பகம்