தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, May 05, 2016

கார்ல் க்ரலவ்' (Karl Krolow) என்ற ஜெர்மன் கவியின் வன்முறை என்ற கவிதை பற்றி .... பிரமிள் & விமர்சனாஸ்ரமம் - பிரேமிள்

I opened my veins
Unstoppably
Life spurts out with no remedy
Now I set out bowls and plates
Every bowl will be shallow
Every plate will be small
And overflowing their rims,
Into the black earth, to nourish
the rushes unstoppably
without cure, gushes poetry...
Marina Tsvetaeva
கார்ல் க்ரலவ்' (Karl Krolow) என்ற ஜெர்மன் கவியின் வன்முறை .... பிரமிள்

.....கார்ல் க்ரலவ்' (Karl Krolow) என்ற ஜெர்மன் கவியின் வன்முறை என்ற அக்கவிதையின் ஆங்கில வடிவம் 
Violence
Out of hiding it came 
Raised dead metal to life
 
The last negotiators peeled off their gloves
 
And left, their smiles a coinage with drawn

Out of hiding it came .
 
The place it looked at is lost
 
The doors fly open
 
The windows get smashed
 
Ashes and mortar
 
Scatter into eyes.
 
Lips shut under thumbs from fists
 
The squalid night holds ready
 
its attacks and black minutes
 
Soon the hearts will stop beating
 
Behind the curtains rust.
 

Out of hiding it came,
 
It will man handle us
 
We may still leave the house |
 
And gaze into the sky of bulbs
 
But in the suburbs
The slogans are posted
 
Soon the street fighting will reach us
Soon we shall be alone with the muzzle of guns
 
Which of us shall be
 
The first to fall forward
Across his table

- KARL KROLOW (In English : Christopher Middleton) ;

இந்த கவிதையை வெ.சா. எனக்கு அனுப்பி இதை நான் தமிழ்ப்படுத்தவேண்டும் என்றார். நான் மறுத்தேன். இதற்கு என் காரணம் இது: இக்கவிதையில் போர்ப் பிராந்தியம் மட்டுமே சித்தரிப்புப் பெறுகிறது. வாழ்வு அல்ல. வேதனை அல்ல. ஏன். ரத்தம் மரணத்துடிப்பு என்பவைகூட இக்கவிதையில் தவிர்க்கப் பட்டுள்ளன. The squalid night holds ready Its attacks and black minutes என்ற வரிகளைத் தவிர மற்றவை வெறும் எழுத்தாற்றலைத்தான் காட்டுகின்றன. கவித்துவ ஆழத்தை அல்ல.

"வன்முறை என்ற இந்தக் கவிதையின் தாத்பரியம் வன்முறைக்கு எதிராக வன்முறைதான் வரும், ஜாக்ரதை' என்பது தான். அதில் வன்முறை எவ்வளவு மிருகரீதியானது என்ற சித்திரம் இல்லை. வன்முறையை ருசிகரப்படுத்தும் நாடகார்த்தம் தான் இருக்கிறது. இதைத்தான் ஹாலிவுட் சினிமாக்களும் சித்தரிக்கின்றன. சமரசம் பேச வந்தவர்கள் புன்னகைகளையும், கையுறைகளையும் களைந்து நீங்குவதிலிருந்து, யாவரும் போர்க் கோலம் கொண்டு துப்பாக்கிகள் ஏந்தி ஜன்னல், கண்ணாடி சிதறச் சுடுதல், முஷ்டியால் முகத்தில் குத்துதல் ஆகிய விபரங் களும், முடிவில் நீயா? நானா? சுடுபட்டு இறக்கப் போறோம் என்ற அச்சுறுத்தலாக நிறைவேறும் கவிதை இது. இதிலே வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் கதி, பீதி இல்லை. வன்முறையினால் பாதிக்கப்படும் நுண்ணிய உணர்வுகளும் இல்லை. அலறல் இல்லை. வேதனையின் துடிப்பும் மனித உன்ன தத்தின் வீழ்ச்சியடைந்த பிண்ட பாவமும் இல்லை. எனவே இந்தக் கவிதை வன்முறையைச் சிறப்பிக்கும் கவிதை” என்று குறிப்பிட்டு, அதை மொழிபெயர்க்க வேண்டுமென்று அவர் விரும்பியிருந்தமையினால், நான் அதை மொழிபெயர்க்கவில்லை என்று மறுத்து பதில் எழுதியிருந்தேன். அதற்கு அவர் எழுதிய பதிலை (27.12.74) அவருக்கே நான் திருப்பி அனுப்ப, அதையே அவர் பிறகு எனக்கு தாம் சொல்லிக் கொடுத்தற்கு சாட்சியம்’ என்று பிரசுரித்துள்ளார். ஏன் திருப்பி அனுப்பினேன் தெரியுமா? சு.ரா., ந. மு. போன்றோரை பிளாக்மெயில் பண்ணியது போல், ‘'நீ எனக்கு எழுதிய கடிதங்கள் என்னிடம் உள்ளன...' என்று என்னிடமும் வெ.சா. தமது கைவரிசையைக் காட்ட முன்வந்தார். அப்போது இதோ இதையும் வச்சுக்க என்றுதான் நான் திருப்பி அனுப்பினேன்.

அவர், எழுத்தைவிட்டு ஆளைக் கடிக்கும் விமர்சனங்களை எழுதுகிறார் என்று நான் விமர்சித்ததும், இதனால் எனது கடிதங்களைத் தாம் பிரசுரித்து விடப் போவதாக என்னை ‘பிளாக்மெயில் செய்ய முயன்றதும், உடனே அவரிடம் உள்ள என் கடிதங்களோடு அவர் எனக்கு எழுதியவற்றையும் பிரசுரிப்பது நலமென அவருக்கு நான் திருப்பியனுப்பிய கடிதங்களுள் ஒன்றே அந்த சாட்சியம்'. இது தலைகால் புரியாமல் அவரால் ஆக்கப்பட்டுள்ளது.

அடுத்து-அவர் மேற்குறிப்பிட்ட ஜெர்மன் கவிதையின் அற்புதத்தை எனக்கு விளக்கிய கடிதத்தை வாசகருக்குத் தந்திருக்கிறாரே. அதைப் பார்க்கலாம்: அதிலே பிரஸ்தாப கவிதை வன்முறை பற்றியதல்ல என்று கூறமுயற்சிக்கிறார். தாம் இக்கவிதையை படித்ததும் சம்பந்தா சம்பந்தமற்ற பெயர்கள் எல்லாம் எட்டுத்திக்கு பதினாறு கோணங்களில் எழும்பி நிற்கக் கண்டாராம். கவிதையைப் படித்ததும், கவிதையில் இல்லாத எட்வர்ட் மங்க் (Edward Munk) சித்திரம், வியட்நாம் குழந்தையின் புகைப் படம் எல்லாம் பிரசன்னமாயினவாம். இவ்விடத்தில் அம்பலப் படுவது உண்மையில் அவருடைய அறைகுறை அறிவுதான். அவர் அடிக்கும் சுயதம்பட்டம் மொத்தத்தில் இதையே நிறை வேற்றி வந்திருக்கிறது. இங்கேகூட, இதே கதிதான். எட்வர்ட் மங்க் என்ற ஓவியரின் குறிப்பிட்ட சித்திரம், மரப்பலகைச் செதுக்கலாகவும், ஓவியமாகவும் அவரால் படைக்கப்பட்டது. ஒரு ஆவி போன்ற உருவம் 'ஒ'வென்று கத்துவதும் அதன் ஒலி அலைகள் போன்ற தீற்றல்களும் உள்ள படைப்பு இது மங்க்கின் இந்தப் படைப்பும் சரி, அவரது எந்தப் படைப்பும் சரி, போர், வன்முறை போன்றவற்றுடன். சம்பந்தம் அற்றது. சுவீடன் நாட்டவரான மங்க் இளமையிலேயே உடல் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர். சுமாரான வாழ்வுகூட அற்ற நோய், வறுமை ஆகிய சூழ்நிலையில் இருந்தவர். இதுவே அவரது ஓவியங்களில் பிரதிபலிப்பது. ஆனால் ‘இந்த மங்க், அந்த கொங்க்' என்று வெ.சா. சத்தம் எழுப்பினால், அடேங்கப்பா; என்னாபேரெல்லாம் சொல்றாரு வாத்யாரு’ என்று அவரது வழிபாட்டுக்காரர் பரவசமடைவர். இதைத் தாண்டிய தகவலோ இலக்கிய சுரணையோ வெ.சா.வின் விமர்சனங்களிலிருந்து பிறப்பதில்லை. -
கார்ல் கிரலோவின் ஜெர்மன் கவிதையினது விஷயாம்சத்தில் குழந்தைகள் முதலிய நெகிழ்வான வாழ்வுகள்கூட இல்லை.
ஆனால் வெ.சா.வுக்கு இந்த வயலன்ஸ் என்ற கவிதையைப் படித்ததும் அதெல்லாம் வந்து விடுகிறது. தெருவில் கூச்சல் போட்டதும் குழந்தைகளை எல்லாம் வீட்டிற்குள் கூப்பிட்டுக் கதவை தாழிட்டுக் கொண்டு நிற்பது வேறு, ஒரு கவிதையில் உள்ள விபரங்களின் அடிப்படையில் மட்டுமே அதனை அளவிடுவதுவேறு என்பதுகூடப் புரியவில்லை இவருக்கு. இவர் எனக்குத் தந்த விளக்கத்தினால் இவர்மீது எனக்கு பகை உண்டாயிற்றாம். இது எப்படி ஆகும்? இதில் எப்படி பகை ஏற்பட முடியும்!?. இதற்கு அவரது அந்த விளக்கக் கடிதத்தில் என்ன சாட்சியம்? தானே மொழிபெயர்க்கத் திரானியற்ற வெ.சா. முதலில் கவிதையை எனக்கு அனுப்பி மொழிபெயர்க்கச் சொல்கிறார். இந்த விபரத்தைக் கட்டுரையில் செளகரியமாக மழுப்பியுள்ளார் வெ.சா. ஏனெனில் சாட்சியத்துக்கு அது உதவாது. கவிதை 'வன்முறை பற்றியது என்று கூறி மறுக்கிறேன். நான் கவிதையை மொழிபெயர்க்க மறுத்த விபரமும் அவரிடமிருந்து வெளிவர வில்லை. பதிலாக கவிதை வன்முறை பற்றியதல்ல என்று அவர் விளக்க முயற்சித்தார். சரி! இது அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்தது. எவ்வளவோ விஷயங்களை அவர் சொல்லிக் கொடுத்தது போல இதையும் சொல்லிக் கொடுத்தார். அப்படியானால் அந்த 'எவ்வளவோ விஷயங்களைக் கேட்டு உருப்பட்டு போன நான் இதை மட்டும் கேட்டு ஏன் அவர் மீது பகை கொண்டேன்? 'பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்’ என்ற சாமான்யமான சாதுர்யம்கூட அவரது சித்தத்திலிருந்து காலியாகி விட்டதோ என்று வியக்கலாம். சங்கதி அதுவல்ல, சும்மா ஒரு 'பதிலடி குடு டிஷாங்! அவ்வளவு போதும். தலையற்ற முண்டங்கள், சந்நிதியில் நின்று ஆட அது போதும்! . . . . . . . . , , - - * * *
"வன்முறை பற்றி அவர் சொல்லிக் கொடுத்ததை நான் ஏற்றுக் கொண்ட்ேனா? இந்த வெ.சா. சொல்லிக் கொடுத்த: ஒவ்வொன்றையும் நான் ஒன்று மறுத்துள்ளேன், அல்லது வேண்டிய மட்டுக்கும் சொல்லி விட்டுப் போகட்டும் என்று வாளாவிருந்திருக்கிறேன். எப்போதாவது அவரிடத்தில் ஒரு உபயோகமான அம்சம் பிறந்திருந்தால் அதை ஊக்குவித்திருக்கிறேன். இந்த வன்முறை கவிதை விஷயத்தில் நடந்தது அதுதான். கவிதை பற்றி அவரது விளக்கத்தை நான் உள்ளுர ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அவர் எழுதி இப்போது பிரசுரித்துள்ள கடிதத்தில், ஏதோ கொஞ்சநஞ்சமாவது ஒரு கவிதையைப் பற்றிப்பேசுவதற்கு முயற்சி செய்தாராகையால், நீ சொல்வது ரொம்பச்
சரி! இதே மாதிரி சொல்லிக் கொண்டு வா' என்ற தோரணையில் நான் பதில் எழுதினேன். இந்த என் பதில் பற்றி அவரிடமிருந்து பேச்சில்லை. ஏனெனில் அவர் மீது நான் பகை' கொண்டதாக அவர் கூற அது வசதியளிக்காது. கவிதைக்கு அவர் தந்த விளக்கத்தை நான் ஒப்புக் கொள்ளவும் இல்லை.
எனவே எனக்கு அவர் சொல்லிக் கொடுத்து நான் உருப்பட்டவனல்லன். இதற்கான சாட்சியங்களுள் ஒன்று.அவர் விரும்பிய படி நான் பிரஸ்தாப கவிதையை மொழிபெயர்க்கவில்லை. இரண்டாவது சாட்சியம் - அவர் தந்த விளக்கத்தை மேலே தகர்த்துக் காட்டியுள்ள என் விமர்சனம்.
 WWW.noolaham.org
/விமர்சனாஸ்ரமம்
பிரேமிள் 
லயம் வெளியீடு பெரியூர் சத்தியமங்கலம்.638 401

பொருளடக்கம்
1. முன்னுரைக்குறிப்புகள் 
2. பின்னணி
 3. விமர்சனாஸ்ரமம் 
4. பின்னுரை 
5. அநுபந்தம்
i-iv 1-11 12-35 35-37 37.40
விமர்சனாஸ்ரமம் பிரேமிள்
முதல் பதிப்பு : டிசம்பர் 1995 உரிமை : பிரேமிள் அச்சு
: பாரிஜாதம், கோவை-15 சித்திரங்கள் : பிரேமிள்
லயம் வெளியீடு , பெரியூர், சத்தியமங்கலம்-638 4013:
ந ய
6.
முன்னுரைக்குறிப்புகள் வெங்கட் சாமிநாதனின், எழுத்துலகப் பிரவேசம் ஒரு கடிதம் மூலம் நிகழ்ந்தது ('பெரியவன்கதைபற்றி' - எழுத்து - 6, ஜூன் '59). அவரது முதல் கட்டுரை' 'பாலையும் வாழையும்' (எ-19, - 1 ஜூலை '60). 1985 வரை அவர் தொடர்ந்து எழுதினார். -- அவருடைய பெரும்பாலான கட்டுரைகள்: 'பாலையும் வாழை யும்', 'ஒர் எதிர்ப்புக்குரல்', 'என் பார்வையில்', 'அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சிவரை', 'பாவைக் கூத்து' போன்ற புத்தகங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. என்றாலும் சில உதிரிக் கட்டுரைகளும், 'யாத்ரா' பத்திரிகையில் பெயர் - குறிப்பிட்டும் பெயரற்றும் அவர் எழுதிய சிலவும் நூலுருவில் கிடைப்பதில்லை . 'விமர்சனாஸ்ரமம்'-ல் குறிப்பிடப்படும் சில 'யாத்ரா' கட்டுரைகள் பற்றிய விபரங்கள் :
1. இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் (யாத்ரா-13,
ஆக 79). 2. விவாதத்திற்கான சில தொடக்க வார்த்தைகள் - ஓர்
இடையீடு (யா-17, டிச 79). மறுபடியும் சில விளக்கங்கள் (யா-15, அக் 79). வேண்டுவது வாசக விவேகம் - ந. முத்துசாமி (யா-17,
டிச 79). . 5. கடிதம் - சி. மோஹன் சி எங்கள் பதில் (யா-18, 19,
ஜன - பிப் 80). மனதில் பட்டவை : நடந்ததுதான் என்ன? - வெ. சா.
(யா-18, 19, ஜன-பிப் 80) 7. ரசனைகள், மதிப்புகள், மாற்றங்கள் - சமூகவியல்
ஆராய்வு (யா-50, 51, 1984). 8. என் வார்த்தைகள் சில, வெ. சா., ('யா-53, அக் -
டிச 85). தளையசிங்கம் வெ. சா. வுக்கு எழுதிய கடிதங்கள்
(யா-53, அக்-டிச 85). 10. மீண்டும் பிராபல்யம் வேண்டி (!), வெ. சா. (யா-55,
1985). - பிரேமிளின் முதல் படைப்பு 'நான்' என்ற கவிதை (எழுத்து - 13, ஜன 60). முதல் கட்டுரை சொல்லும் நடையும்' (எழுத்து16, ஏப் 60). இன்றுவரை அவர் தொடர்ந்து இயங்கி வருகி றர். அவருடைய பல 'எழுத்து' கட்டுரைகள் மட்டும் 'தமிழின் நவீனத்துவம்' தொகுப்பில் கிடைக்கின்றன. 'விமர்சன ஊழல் கள்' என்ற சிறு பிரசுரமும் வெளிவந்துள்ளது. ஆனால் நூற் மறுக்கும் அதிகமான அவரது கட்டுரைகள் இன்னும் புத்தக வடி
வம் பெறாமல், புதுமலர்ச்சியோடு காத்திருக்கின்றன. .
'எழுத்து' வில் வெளியான 'வெயிலும் நிழலும்' (நவ - டிச 62) கட்டுரையே வெ. சா. வுக்கு பதில் கூறும் தோரணையில் தான் அமைந்துள்ளது. - படைப்பையும் படைப்பாளியையும் இணைத்துப் பேசிய வெ. சா. வின் கருத்துக்கு பதில் அளிக்கும் முகமாக 'புனித ஜ்ெனெ' (கசடதபற, பிப் 171) கட்டுரையைப் பிரேமிள் எழுதியிருக்கிறார். படைப்பு வேறு படைப்பாளி வேறு என்பதை, அமைப்பியல் பற்றித் தெரியவே வராத காலத்திருந்து இன்றுவரை வெ. சா. வைக் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார் பிரேமிள். 1983 வாக்கில் அவர் 'புனிதப் புளுகு' என்ற" நூல் வடிவில் எழுதியவை, புத்தகமாகாமல் 1986 க்குப் பின்புதான் பத்திரிகைகளில் தனித் தனிக் கட்டுரைகளாக வெளி வந்தன. அதில் ஒரு கட்டுரையே 'விமர்சனாஸ்ரமம்'. - அது பின்பு அவ்வப்போது விரித்து எழுதப்பட்டு, இப்போதுதான் பிரசுரம் பெறுகிறது.
கீழ்கண்ட பிரேமிளின் கட்டுரைகள் விமர்சனாஸ்ரமத்துடன் சேர்த்து வாசிக்கத் தகுந்தவை.
1. Commercialism in Tamil Writing (Thought' 72). 2. கோணல்கள் (அஃக், ஜன-பிப் 74) . 3. கலைஞனும் கோட்பாடும் (கொல்லிப்பாவை, அக் 76) 4. சுயம்பு விமர்சனம் (கொ-3, 1978). 5. கடிதம் (யாத்ரா , அக் 78). 6. சூழலோ சூழல் (கொ-6, 1978 7. வெகுஜன ரசனையும் மத மரபும் (கொ-8, 1979). 8. சஞ்சாரம் (கொ-8, 1979). 9. ருசிகரம் (கொ-9, 1979). 10. மேலும் சில் வசவுகள் (கொ-10, 1980).
... சஞ்சாரம் II (கொ, மார்ச் 81). 12. தமிழின் நவீனத்துவம் (படிமம், 81 8 தமிழின் நவி
னத்துவம்) . 13. மனோவியாதி மண்டலம் (லயம்- 6, ஏப் 86). “புனிதப் புளுகு' கட்டுரைகள் :
14. தமிழிசையும் நாதப் பிரம்மமும் (ல-7, செப் 86). 15. இந்திய மத மரபு ச தத்துவப்போலிகள்
(ல்-8, அக்- டிச 86). 16. வரலாற்றுச் சலனங்கள் (கல்குதிரை -1, 1989). 17. இந்தியக் கலைமரபும் ஹிட்லரிசமும் (க.கு-2, 1989) 18. வாழ்வும் இதிகாசங்களும்: நீதியியலின் பரிமாணங்கள்
டேட் (நிகழ்-13, பிப் 90). " மற்றும் முந்திய வானம்பாடி, பார்வை பேட்டிகள் மற்றும் சமீபத்திய மீறல் சிறப்பிதழ், லயம் 10, 11, 12 இதழ்ப் பேட்டிகள்.
இவற்றையெல்லாம் தொடர்ந்து படித்து வந்திருக்கும் வாச கருக்குத் தெரியும் - வெ.சா. தமிழ்ச் சிறுபத்திரிக்கை உலகை விட்டே ஒதுங்கிப் போனதற்கு என்ன காரணம் என்று. ஆனால் தமிழவன் சொல்கிறார் இன்று- தனக்கும் தெளிவில்லாமல் வாச , கர்க்கும் புரிபடாமல் அன்று தாம் வெ.சா.வை எதிர்த்து எழுதி . யவைதாம் அவரை விரட்டியடித்தன என்று. இந்த நான்தானி ஸம்' நகைப்பைத்தான் வரவழைக்கும்.
கால கப்ாமரிப்பும்பின்னணி
இந்தக் கட்டுரை எழுதப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. 'யாத்ரா' பத்திரிக்கையில் வெங்கட்சாமிநாதன் தொடர்ச்சியாகச் செய்துவந்த கருத்துலக மோசடிகளுக்கு பதில் கூறுவதாக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை. அவருடைய எழுத்தின் இயக்கப் பின்னணி மற்றும் அவரது ஆழமற்ற தன்மை . , , தவறான திசையோட்டம் யாவும் வெளியே கொண்டு வரப்பட்டு உள்ளன இங்கே. இவற்றுடன் தொடர்புள்ள அவருடைய செயல் முறைகளையும் சுயப்பிரதானப் போக்கையும் கட்டுரை கோடிட்டு காட்டுகிறது. அவர் விமர்சகருமல்லர், நேர்மையான வாசகர் கூட அல்லர் என்பதை இவ்விவாதம் காட்டும். இருந்தும் 1974 வரை, ஒருவித தார்மீகத்தன்மை அவரிடமிருந்து வெளிப்பட்டு வந்திருக்கிறது. 'எழுத்து' பத்ரிக்கையின் பக்கங்களில் ஆரம்பித்த அவரது இந்த இயக்கம் பெருவாரிப் பத்திரிக்கைகளும் பண்டித மரபுகளும், தலைசிறந்த நவீன எழுத்தியலை பகிஷ்கரித்தது கண்டு கிளர்ந்த ஒன்று. இது க. நா. சுப்ரமணியம், ஏற்கனவே வெளிப்படுத்திய குணத்தின் இன்னொரு வடிவமாகவே வெ.சா., விடமிருந்து பிறந்தது. 'எழுத்து' வைத் தொடர்ந்து இந்த இயக் கம் செயல்பட முடியாதவாறு, பெருவாரிப் பத்திரிக்கை மோகம் கொண்டிருந்த அசோகமித்திரன், சா. கந்தசாமி, ஞானக்கூத்தன் முதலியோரால் 1970 வாக்கில் 'கசடதபற' மூலம் வெ.சா.க்கு வாய்ப்பூட்டு போடப்பட்டது. 'எழுத்து'வில் ஆரம்பித்து பிறகு எழுதாமலிருந்த எனது உதவியையும் ஆதர்வையும் வெ.சா. 1971 வாக்கில் நாடினார். நானும் THOUGHT என்ற டில்லி பத்திரிக்கையில் தமிழ் நவீன எழுத்தியல் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னையை முன்வைத்து ஆங்கிலத்தில் எழுதினேன். உடனேயே வெ.சா.வுக்கு இடப்பட்ட வாய்ப்பூட்டு சிதறி வீழ்கிறது. தொ டர்ந்து தமிழில் 'கோணல்கள்' என்ற கட்டுரையும் எழுதினேன். வெ.சா. தொடர்ந்து செயல்பட வகைசெய்தேன். இது ஒரு கும்பலையே எனக்கு எதிராக செயல்பட வைத்தது. தொடர்ந்து தார்மீகமாக சேவை உணர்வுடன் செயல்படுவார் வெ.சா. என்று நான் எதிர்பார்த்தது தவறாயிற்று. முதலில் சுயபிரதானமும்,
பெ:இதன் தொடர்ச்சியாக இதனை பாதுகாக்கவேண்டிய கருத்துலக மோசடியும், இந்த அம்சங்களைக் கொண்ட பார்பனீயவாதமும் தான் வெ.சா. விடம் மேலோங்கத் துவங்கின. அவரது போலித் தனங்களை விமர்சித்த என் மீது விஷப்பல் பிரயோகமும் பண்ணத் தொடங்கினார். ஏற்கனவே 'விமர்சன ஊழல்கள்' ல் இதனை விபரித்துள்ளேன். இதன் சரித்திரத் தொடரை விமர்சனாஸ்ரமம்' மீட்டுக் கூறுகிறது. வெ.சா.வின் மேற்படி இயக்கம் ஏற்கெனவே என்னால் விமர்சிக்கப்பட்டபோதும் அக்டோபர்-95 சுபமங்களா பேட்டியில் தொட்டுத் தொடருவதனால் வெ.சா. பேட்டிக்கு நான் ஏற்கெனவே, பத்தாண்டுகளுக்கு முன் எழுதிய முன்னுணர்வுப் பதில் ஆகவும் நிற்கிறது 'விமர்சனாஸ்ரமம்' கட்டுரை.
'கசடதபற' என்ற பத்திரிகை, 'எழுத்து' பத்திரிகையில் சி.சு. செல்லப்பா நடத்திய தீவிர இலக்கிய மதீப்பீட்டுக் இயக் கத்தை இரண்டாம்பட்சமாக்க வேண்டும் என்ற முனைப்புடன் மட்டுமே செயல்பட்ட ஒன்று. இதை அது செய்ய ஒரே வழி தான் உண்டு. 'எழுத்து' வில் ஏதும் மதிப்பீட்டுக் கோளாறு, கருத்துலக மோசடி இருந்திருந்தால் அவற்றைச் சுட்டிக்காட்டும் இயக்கமாக செயல்படுதல். 'கசடதபற' செய்தது இதை அல்ல. 'எழுத்து'வின் மதிப்பீட்டுத் தளத்தைவிடக் கீழான படைப்புகளை 'எழுத்து' வின் தரத்தைவிட மேலானவை என்று சகட்டுமேனிக்கு கும்பல் பலத்தின் மூலம் ஸ்தாபிக்கவே 'கசடதபற' முயன்றிருக் கிறது. சி. சு. செ. யின் 'இலக்கிய விசாரம்' பிரசுரத்துக்குப் பதிலாக 'கசடதபற'விலேயே நான் எழுதிய ஒரு மதிப்புரையில், - 'கசடதபற' சார்ந்த (ஞா.கூ. போன்ற) வர்களை நான் கவிஞர் என்று ஏற்பதில்லை என்று எழுதியுள்ளேன். வெ.சாவின் இயக்கத் தில் இத்தகைய ஓர்மை வெளிப்பட்ட சரித்திரமே இல்லை என்று காட்டுகிறது 'விமர்சனாஸ்ரமம்'. உண்மையில், சமூக வக்ரம், இலக்கிய சுரணையின்மை, பாமர பார்ப்பனீயம் ஆகியவற்றுக்கு வாகனமாக வெளிவந்த கசடதபற எழுத்தாளரான ஞானக்கூத்த னை, சி. மணி (மாலி) உடன் சேர்த்து இவர்களது குரல்போல் தமிழ் கவிதை சரித்திரத்தில் கேட்டதே இல்லை என 'நடை '-6 ன் , மதிப்புரைப் பகுதியில் ஞானரதம் பற்றி எழுதியவர் வெ.சா. இது வெ.சா.வின் இலக்கியப் பொறுப்பின்மையை மட்டுமல்ல தமிழ் கவிதை சரித்திரம் பற்றிய அறிவீனத்தையும் பிரகடனம் செய்கிறது.
'விமர்சனாஸ்ரமம்', என்ற கட்டுரை என்னால் விமர்சிக்கப் - பட்டு என் விமர்சனத்துக்கு பதில் தர இயலாத நிலையில் உள்ள 4விமர்சனாஸ்ரமம் - பிரசுரிக்கப்படுவது அதிகபட்சம் என்றும் 'லயம்' ஆசிரியர் குறிப்பிட்டார். ஒருவகைப் பாம்பு அடிக்கப் பட்டதும் தான் இறந்து விட்டதாகக் காட்டுவதற்காக புரண்டு படுக்கும். வெ.சா. வைப் போன்ற பேர்வழிகள் இத்தகையவர் கள்தாம். இதனை 'லயம்' ஆசிரியர் உணரும்படி மீண்டும் நெளிவெடுத்து ஆடியிருக்கிறார் பிரஸ்தாப விமர்சனாஸ்ரமவாதி -'சுபமங்களா' அக்டோபர் 1995 இதழில்..,
இப் பேட்டியில் வெ.சா. தமது விமர்சனத்தின் ஆதாரம் தமது சுயமே என்பதன் அபத்தத்தை நான் காட்ட வேண்டிய தில்லை. இன்றைய எந்தக் குழுவைச் சேர்ந்த தீவிர எழுத்தாள ராலும் ஒப்புக் கொள்ளமுடியாதது இது. இவ்விடத்தில் எனது விமர்சனமுறை பற்றி கால சுப்ரமணியம் 'தமிழின் நவீனத்துவம்: முன்னுரையில் கூறியுள்ளதை நினைவுறுத்தலாம். தன்னைத் திரும்பிப் பார்த்து விசாரித்து அறியும் பண்பு இல்லாதவர்கள்தாம் - வெளியீட்டியலில் 'சுயம்' பற்றி பேசுவார்கள். . There is no such thing as original thinking', என்கிறார் ஜே. 'கிருஷ்ண மூர்த்தி . வெ.சா.வின் விமர்சனப் பார்வை க . நா சுப்ரமணியத்தின் அணுகு முறையை ஆவேச வடிவுக்குக் கொண்டு வந்த ஒன்றுதான். இது “விமர்சனாஸ்ரமம்' ஆரம்பத்திலேயே கோடி காட்டப் பட்டுள்ளது. அவரது கோளாறுகள் என்று நான் காட்டுகிறவை தாம் அவரது சுயம். -
'நடை' 6-ன் மதிப்புரை பகுதியில் ஞா.கூ. வை புகழ்ந்து தள்ளிவிட்டு பின்பு அவராலும் அவரது கும்பலினாலும் இருட் டடிப்புச் செய்யப்பட்டதை இப் பேட்டியில் அவர் மறந்துவிட்டார். பின்னாட்களில் எனது கருத்தை இரவல் பெற்று முந்திய தமது .. 'நடை', கருத்துக்கு, முற்றுமுரணாக ஞா கூ. பற்றி 'கண்ணாடி , யுள்ளிருந்து' என்ற கட்டுரையில் 'கத்தி' யது அவருக்கு மறந்து விட்டது. 'கண்ணாடியுள்ளிருந்து' கட்டுரையில் கவிதைகளின் தராதர மதிப்பீடு எதுவும் செய்யப்படாமையை நான் நேர்ப் பேச்சில் குறிப்பிட்டபோது, கத்துவதைத் தவிர வேறெதையும் செய்தறியாத வெ.சா. தாம் இந்த தராதர மதிப்பீட்டை பின்னாடி செய்து காட்டப் போவதாக எனக்கு 'தம்' பிடித்துக் காட்டிய துக்கு மேல் எதையும் எழுதவே இல்லை. இந்நிலையில் எனது கவிதைகளைப் பற்றி அவரால் மட்டுமே எழுதமுடியும் என்று நான் - கருதியதாக மேற்படி 'சு.ம.' இதழில் கூறுகிறார். அவர்க
IIT
'எழுத்து' வில் வந்த கவிதைகளையே சரிவரப் படித்தவரல்லர் என்பதை நேர்ப் பரீட்சை ஒன்றன் மூலம் அறிந்திருக்கிறேன். நூல் படிப்புப் பழக்கத்தைக் கூட இழந்துவிட்ட ஒரு நியூஸ் பேப்பர் ரீடராகவே அவர் தேய்ந்திருக்கி றார். விபரஞானம் 'அற்ற விதத்தில் அவர் எழுதியவை இதற்கு சாட்சியம். இவை பெருமளவுக்கு என்னிடமிருந்தும் உ வே.சா., கி.வா.ஜ., விஷயத்தில் ரமணி (கால சுப்ரமணியம்) இடமிருந்தும் பதில் பெற்றுள்ளன. இவை எதுவும் வெ.சா.வுக்கு நினைவில்லை. ஆனால் ஞா.கூ., அ.மி., சா.க. முதலிய 'கசடதபற'க்கள் அவருக்கு இருட்டடிப்புச் செய்தபோது அவரை இலக்கியவாதி களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவர் ஒரு 'பெரு நிகழ்ச்சி' (ஃபினோமினன்) என்று நான் கூறியது அவருடைய அடி நாக்கில் இன்னும் இனிக்கிறது. அந்த சமயத்தில் இலக்கிய மதிப்பீட்டை ஏய்க்கும் விதமாக சிறுபத்திரிகை சாதனத்தை திருகத் துவங்கிய மேற்படி கும்பலை அவர் இனம் காட்டுவதில் தீவிர . மாக, இருந்த அளவில் அவர் அப்போது ஒரு ஃபினோமினன் ஆகவே இருந்தார். ஆனால் இப்போது தராதர மதிப்பீடு எதுவும் அற்ற விதத்தில் அவரே செயல்படும் நிலை - அதிலும் ஏதோ என்ஸைக்ளோபீடியாவில் சிகரம், பாதாளம், பொந்து, சிலந்தி வலை, ஒட்டடை எல்லாத்தையும் ஒரே கோணிப் பைக்குள் தாம் போட்டு பிரசுரிக்க வைத்ததாக பீற்றிக் கொள்ளும் அளவுக்கு இந்த ஃபினோமினன் கழுதை தேய்ந்திருக்கிறது. எவ்வித இயக்க மாக அவர் அன்று இருந்ததுக்காக அவரை நான் ஃபினோபி மினன் என்றேனோ அந்த இயக்கத்தை அவரே நிர்மூலமாக்கிய தேர்வு இது. இவ்விதம் தராதரம், மதிப்பீடு எதும் அற்றவித மாக இந்த என்ஸைக்ளோபீடியா கோணிப்பைத் திணிப்பைச் செய்ததுக்காக அவரை மகா தியாகமூர்த்தியாகவோ என்ன எழவாகவோ காண வேண்டும் என தமக்குதாமே சண்டப் பிரசண்டமாக 'பராக்' - சொல்கிறார் சு.ம.வில். என்னைப் போன்றவன் இந்த மாதிரி கோணிப்பைகளுக்குள் அமுக்கப்பட் டால் என்னுடன் சேர்த்துத் திணிக்கப்பட்டதுகளையும் கோணிப் பையையும் திணித்த கையையும் பஸ்மீகரம் = பண்ணிவிட்டு வெறும் ஜ்வாலை ஆகவே நிற்பான் என்கிற மதிப்பீட்டுணர்வு இன்னும் வெ.சா.வுக்கு சித்தியாகவில்லை.
- எனது கட்டுரைகளினால் கருத்துலகில் சிதறடிக்கப்பட்டவர் வெ.சா. ஆனால் இந்த கருத்துலகை அவதானிக்கும் சிரத்தை - அற்ற ஸ்தாபன உலகம் ஒன்றில் அவர் 'விமர்சகர்' என்றபெ

பட்டை நாம வேஷத்துக்காக மட்டும் தொடர்ந்து ஜீவிக்கிறார். இந்த ஸ்தாபன உலகம் வெறும் புள்ளி விபரத்தை மீறமுடியாத ஒரு யந்திர அமைப்பு - கருத்துலகின் மின் ஓட்டத்தை ஏற்று செயல்பட முடியாத வகையான ஸ்பிரிங் சிஸ்டமாகவே இது இன்னும், நம்மிடையே உள்ளது. கருத்துலகில் தமது பிரதிமை யை கருத்தியக்க அடிப்படையில் மீண்டும் ஸ்தாபிக்க இயலாத வெ.சா., இந்த ஸ்தாபன யந்திரத்தின் மூலம் கருத்தோட்டத்தை ஏய்த்து அதன் கேந்திரத்தில் தமக்கு இமேஜ் பண்ணச் செய்த முயற்சியாகத்தான் அவரது என்ஸைக்ளோப்பீடியா கோணிப்பை கவலையை நாம் காண வேண்டும். தராதரக் குணமற்ற விதத் தில் அவர் இதில் செயல்பட்டமைக்கு முக்ய காரணம் இதுதான். செய்துவிட்டு அதுபற்றி அருவருக்கத்தக்க சுயதம்பட்டம் போடும் போது இது ஆபாஸக் கோலத்தில் அம்பலப்படுகிறது. இந்த ஆபாஸத்தை நாம் கும்புடோணுமாம். 'சேவை' எதுவும் இவ்வித ஆபாஸமாகாது. கொல்லிபாவை' யில் தீவிரமடைந்த என் விமர்சன இயக்கம் ஒரு கடுமையை எட்டியது, ''மேலும் சில வசவுகள்'' என்ற கட்டுரையில்தான், மதுரையில் என்.பி. ராமானுஜமிடம், ''பிரேமிளுக்கு ரெஸ்பெக்ட் கொடுத்து ஏன் பேசுகிறீர்கள்?'' என்று கேட்டார் வெ.சா. எனது விமர்சனங் கள் தமது ரசனைக்கும் கல்லூரி விரிவுரைப் பணிக்கும் உதவு வதாக என் .பி, ரா. கூறியதும் வெ.சா. உதிர்த்த மகா வாக்கியம்
• 'ஃபட்,- யூ ஆர் ஏ பிராமின், ஐ ஆம் ஏ பிராமின், ஹீ இஸ் நாட் ஏ பிராமின்,'' கொல்லிப்பாவையின் ஆசிரியராக இருந்து அதை நடத்தியவர் - ராஜமார்த்தாண்டன். எனக்கு என்.பி. ராமானுஜம் தெரிவித்த இந்த விபரத்தை உள்ளடக்கி *மேலும் சில வசவுகள்'' என்ற கட்டுரையை எழுதி கொல்லிப்பாவைக்கு - நான் அனுப்பியபோது, என்.பி. ராமானுஜத்திடம் இதன் உண்மையை' ராஜமார்த்தாண்டன் விசாரித்தறிந்த பின்பே அதனைப் பிரசுரித்தார். இதன் பின்னணியில் வெ.சா. ஒரு ஜாதி வெறி பிடித்த பாமரப் பார்ப்பன மௌடீகன் என்பது என் திட்டவட்டமான கருத்து. இவருடைய இதே, மனோபாவம் -
இரண்டாண்டுகளுக்கு முன்புகூட 'எஸ். வையாபுரிப்பிள்ளை' என்ற இவரது பேச்சின் பிரசுர (புதிய நம்பிக்கை இதழ்) வடிவில் அலங்கோலமாக வெளிப்பட்டு மிகக் கடுமையாக என்னால் மீறல் சிறப்பிதழில் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் சு. ம. பேட்டியில் சொல்கிறார் தமக்கு ஜாதி, மதப்பார்வை இல்லை என்று. அவரது ஒவ்வொரு கோணல் வாதமும், சமூக விரோதப் பார்வையும்,விபரஞானமற்ற பாமரத்தனமான வைதீகப் பிதற்றலும் வெளிப் படையாகவோ கிசு கிசு லெவலிலோ பிறந்து கொண்டே இருக் கின்றன. ஜாதி மட்டுமன்றி மத விஷயத்திலும் இது செயல் படுவதனை 'எஸ்.வை.' கட்டுரை ஈறாக அவரிடம் காண் கிறோம். ஆரியக் கடவுளைரையும் கோவில் முறையையும் தமிழர்கள் பின்பற்றுவதாக அதில் கூறியுள்ளமை விபரஞான மற்ற பாமரப் பாப்பாரப் பிதற்றல். அல்லாமல் வேறென்ன? இக் கட்டுரை இதற்குரிய கீழ்த்தரத்திலிருந்து கல்லி எடுக்கப் பட்டு நுட்பமான வாமச்சாரம்,- கண்ணகீயம், கடவுளர் சரித்திரம் வரை மேலேறிய தளத்திலேயே என் மீறல் பேட்டியில் பதில் பெறுகிறது. இந்த வகை மோதலில். என் பணியை அபாரமாக இடதுசாரியினர் ஈறாக சிலாகித்துப் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தப் பணியை ''பெர்ஸனல் தாக்குதல்' என்று , சு.ம.வில் வெ. சா. கூறுகிறார். 'யாத்ரா' ஆரம்ப வருஷ இதழ்களில் அவர் என் மீது பாய்ந்து பிராண்டிய உலகமகா பெர்சனல் தாக்குதலை வெ.சா. ஒரே யடியாக அமுக்கிவிட்டார். ஞா.கூ. விஷயத்தில் என் கருத்தை அவர் இரவல் வாங்கியதை நான் குறிப்பிட்டதும் என்னை 'கிறுக்கு' என்று ஸ்தாபிப்பதுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட இதழ் களை அர்பணித்ததுடன் இதனை சுந்தரராமசாமி நாசூக் ஆக ஒப்புக் கொண்டது போதாது என்றும் கத்தியவர் - வெ.சா. அந்த நாசூக்: தனத்தை சு.ரா.வின் பயங்கொள்ளித்தனம் என்று கூறும் அளவுக்கு அவர் போனதும், உடனே ''சு.ரா. ஒரு மகா அலெக்ஸாண்டராக்கும், நெப்போலியனாக்கும்'' என்ற தோர ணையில் சி. மோஹன்...! அடேங்கப்பாவான இதெல்லாம் வெளியான யாத்ரா இதழ்களை வெ.சா., சு.ரா., பக்தசிகா மணிகளே வெளியில் காட்ட வெட்கி தங்கள் லெட்ரீன்களுக்குள் ஒளித்து வைத்திருப்பதாக அவ்விடங்களில் ஒண்ணுக்குப் போன வர்கள் சொல்கிறார்கள்.
ஜாதி மத வேறுபாடு தமக்கு இல்லை என்று கூறுவதுடன் அவர் நிற்கவில்லை. அவை அவரிடம் செயல்படும்போது அதன் விளைவாக அவரிடமிருந்து பிறக்கும் விபர மோசடிகளை திருத்துகிற என்னிடம் தான் ஜாதி மத வேறுபாடு உண்டு என்றும் வெ.சா. கூறுகிறார். ஆழ்ந்தகன்ற நீதி இயலைப் பயிலும் நீதி மானை நோக்கி அவனால் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒருவன் ஆற்றாமையில் '' நீதாண்டா குற்றவாளி?'' என்று ! கூச்சலிடும் குரலே கேட்கிறது இவ்விடத்தில். என் எழுத்து,செயல் ஆகியவற்றில் எங்கே ஜாதி மதவெறிகள் வெளிப்பட்டுள்ளன என்று வெ.சா. காட்ட வேண்டிய பயங்கரப் பொறுப்பு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது- இதை உணரக்கூடிய அறிவுசக்தி பாமரத் நிலைக்குப் போய்விட்ட அவருக்கு இல்லை. .

வெச வெச
-- என் எழுத்துகளுள், முதல் 'எழுத்து' பத்திரிக்கை கட்டுரை யான 'சொல்லும் நடையும்', பின்னாடி 1981-ன் 'படிமம்" தொகுப்பில் 'தமிழின் நவீனத்துவம்' என்று சுருக்கித் தரப்பட் டதுடன், புதிய பார்வைப் பகுதிகளையும் அது கொண்டுள்ளது. 'தமிழின் நவீனத்துவம்' கட்டுரையின் முதல்பகுதி, 'சொல்லும் நடையும்' மின் அதே பார்வைகளையே வெளியிடுகிறது தெளி
வாக்கங்களுடன். பழைய கட்டுரையின் பார்வை எதுவும் மாற்றப் படவில்லை . மற்றபடி, 'தமிழின் நவீனத்துவம்' என்ற நூலில் உள்ள என் 'எழுத்து' கட்டுரைகளை கால சுப்ரமணியம் அங் கங்கே எடிட் செய்து தொகுத்து வெளியிட்டுள்ளார். இதெல்லாம் வாசகருடைய சுரணையையும், அறிவார்த்தத் தேவையையும் முன்வைத்து செய்யப்பட்ட பணி. , 'வச வச' என்று தொனிக்கும் பகுதிகளை நீக்குவது அவசியம் என்ற என் நோக்கமும் என் உதவியும் கால சுப்ரமணியத்தின் பணியின் பிண்ணனியாகும், கட்டுரைகள் செட்டாக, கலையுருவங்களாக இருக்கவேண்டும் என்பதை மீறி, என் பார்வைகளைத் திருகவோ, மாற்றவோ முயன்ற வேலை அல்ல இது. ''அச்சுப்பிழை உட்பட முதல் பிரசுரத்தில் உள்ளபடியே '' தமது கட்டுரைகளை வெளியிட்டுள்ள வெ.சா. வின் நோக்கம் எப்போதுமே வெளியீட்டுச் செம்மை அல்ல என்பதுக்குதான் இது பற்றிய அவரது சு.ம. பேட்டியின் பீற்றல் சாட்சியமாகிறது. இந்த பீற்றல் கத்தையினால் அவர் மூடி மறைக்க முயல்கிற அவரது இயக்கத்தைப்பற்றிய உண்மை , பீற்றல் வழியாக தனது ஓணான் தலையை வெளியே காட்டு - கிறது. அது இது: அவரைப் போய்ப் பார்த்து 'பேசு' கிற வர்களுக்கும் விமர்சன ஆசீர்வாதம் தருவார். இப்படிச் செய்யா விட்டால் ஆசீர்வாதம் பெற்றவனுக்கே சாபம் போடுவார். செம்மையை உத்தேசித்து கட்டுரைகளைச் சுருக்குவதற்கும் அந்தக் காட்டுமிராண்டி வேலைக்கும் இடையே ஒப்பீடு செய்ய முடியாது. இருந்தும், அவருக்கு இப்போது கிடைத்திருக்கிற களங்கள், இவ் ஒப்பீட்டைச் செய்யக்கூடிய மமதையை அவருக்கு தந்திருக்கின்றன.)
தம்முடன் பழகுகிறவர்களுக்கும், இதைவிட, தம்மிடம் வந்து கெஞ்சுகிறவர்களுக்கும் இலக்கிய ஆசீர்வாதம் தரும் வெ.சா.இவர்களுடன் ஏற்படும் உறவுகள் மாறுபட்டால் 'பிடிசாபம்' என்பார். பிறகு இதற்கு விளக்கமாக சூழலை உருவாக்கவே முந்தியதையும் பிந்தியதையும், தாம் செய்ததாக சாதிப்பார்! இது இலக்கியம், விமர்சனம் எதையும் பிரதிபலிக்கும் விஷய மல்ல. தகுதியற்றவர்களின் அதிகாரத்தைக் காட்டுகிற இந்திய பூசாரீயத்தையே பிரதிபலிக்கிறது. இது சமூக மனோவியல் கோணத்தில் ஆராயப்படவேண்டிய ஒரு 'கேஸ்' தானே அன்றி பெரிய ஒரு இலக்கிய மதிப்பீட்டுப் பிரச்னை அல்ல." இருந்தும் சுபமங்களா, இந்தியா டுடே (தமிழ்) போன்ற பெரு வாரிப் பத்திரிகைகளின் கேந்திரப் பாதுகாப்புடன் எப்படி நடக்கிறது இது என்றால், இந்தியாவில்தானே சமீபத்தில் பிள்ளையாராகச் செதுக்கப்பட்ட கற்கள். பால் குடித்தன என்பதை நாம் நினைவுக்குக் கொண்டு வரலாம்.
பெ1
எனது இயக்கம் இவ்வித முரண்களைக் கொண்டிருந்ததா? 1972-ஜூலை இதழ் 'கசடதபற' வில் சி.சு. செல்லப்பாவின் 'பார்வை' பற்றி நான் பாதகமாக, கிண்டல் தொனியில் எழுதிய போது என் கோணம் விமர்சனம் தானே அன்றி வெ.சா. வின் பூசாரீயம் அல்ல. எனது விமர்சனக் கோணத்தைப் புரிந்து கொள்ளாமல் மேற்படி சமயத்தில் என்னைத் தாக்கி சி. சு. செ, வெளியிட்ட 'இலக்கிய விசாரம்' பிரசுரத்துக்கு நான் பதிலாக 'இலக்கிய விசாரம்' என்ற தலைப்பில் செப்டம்பர் '72 இதழ் கசடதபறவில் எழுதிய போதும் என் கோணம் விமர்சனம் தான். சி.சு.செ, நான் கசடதபறவுக்கு 'கட்சி - மாறியவன்' என்கிற மாதிரி குற்றம் சாட்டியதுக்கு பதிலாக அதில், 'கசடதபற' சார்ந்த கவிஞர்களை நான் கவிஞர்களாக ஒப்புக்கொள்வதில்லை என்று எழுதியுள்ளேன். இதுதான் மதிப்பீட்டியக்கம். இது சூழலைப் பேணும் இயக்கம். சூழலைப் பேணவே தெரியாத வெ. சா. தமது பூசாரீய ஆசீர்வாதம், சாபம் ஆகியவை 'சூழலை உருவாக்கும்' வேலை என்று சாதிக்க முயன்ற ஒருவர் தாம். இவரின் இலக்கிய விமர்சன இயக்கத்துக்கும் கல்லுப் பிள்ளையார் பால் குடித்த புரளிக்கும் இடையே எதுவித வேறுபாடும் இல்லை.
'சூழலை உருவாக்கும்' அவதாரப் புருஷரான வெ.சா.வினால் 'எழுத்து' வில் ஆரம்பிக்கப்பட்ட தர மதிப்பீட்டு இயக்கம் பாழ டிக்கப்பட்டது மட்டுமின்றி, ஸ்தாபன உறவு மூலம் அவர் என் - - ஸைக்ளோபீடியாவில் இந்த மதிப்பீட்டுச் சீரழிவுக்கு அரசாங்க முத்திரை குத்தும் கிளார்க் புருஷராகவும் ஆகியுள்ளார். அவர்(மா
கொடுததுளள 'லிஸ்ட்' டில் எழுதியுள்ள கட்டுரைகளில் இடம் இது பெற்றோர் இன்னின்னார் என்று சு. ம. பேட்டியில் தெரிவிக்கும் போதே அவருக்கு பயத்தில் வாய்குளறல் ஒருபுறமும் அவரது வழக்கமான பீற்றல் சுயதம்பட்டம் மறுபுறமும் ஆகத்தான் கேட் கிறது சூழலைப் பேணுவதே முதல்பட்ச வேலை. இந்தப் பேணலை மட்டுமின்றி உருவாக்கலைக்கூட பிரேமிளும், கால் சுப்ரமணியமும் செய்துள்ளமை வெளியே தெரியாமல்தான் இருந்து வருகிறது. இதை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம்கூட வெ.சா.வின் ஆபாஸ் மா ன பீற்றலுக்கும் நாக்குளறலுக்கும் பதிலாகத் தான். இவ்விருவரின் சூழல் விளைவித்தவை என்று குறிப்பிடத்தக்க பெயர்கள் உள்ளன. இவர்களுள் ஒவ்வொரு வருமே ஞா.கூ., சா.க. 'கசடதபற' கும்பலை மீறிய எழுத்தா கள். இவர்களுடைய பெயர்கள் வெ.சா. லிஸ்டில் உள்ளனவா? இவர்களுள் ஒரு கௌதம சித்தார்த்தனின் எழுத்து வீச்சுக்கு எத்தனை சா, கந்தசாமிகளினாலும் ஈடுகட்டமுடியாது. ஒரு கோபுல்ஸ்ரீ யின் அநாயசமான கவித்வத்துக்கு முன் ஞானக்கூத் தன் தோப்புக்கரணம் போட வேண்டும். தேவதேவனிலிருந்து கோணங்கிவரை இந்த வட்டத்துக்கு வெளியே பிறந்து வளர்ந்த சிலரையும் இவ்விதம் ஞா.கூ., சா. க. வகையறாக்களுடன் ஒப் பிட்டால்கூட மேலுள்ளபடிதான் ஆகும். என் பெயரை பிரேமிள் என்று குறிப்பிடாதவரை அது குறிப்பிடவில்லை என்பது ஒருபுறம் இருக்க, என் பெயரைக் குறிப்பிடாமல் அவர் அந்த ஸ்தாபனக் கட்டுரையை எழுதியிருந்தால் தம்மைத்தாமே கழுவில் ஏற்றிக் கொண்டவராவார். அவர் உட்பட எல்லாருக்கும் தெரிந்த விஷயம் இது. இதில் போய் பீற்றிக் கொள்ள என்ன இருக் கிறது? எனவே என் பெயர் குறிப்பிடப்பட்டது குறிப்பிடாமல் இருப்பதுக்கு பயந்து செய்யப்பட்டதுதானே அன்றி வெ.சா.வின் தர்மகைங்கர்யம் அல்ல. இருந்தும் இப்போது நான் என் -பெயரை ஏன் குப்பைக்கூளங்களோடு கூட்டி கோணிப்பைக்குள் போட்டாய் என்று கேட்கிறேன், அதாவது எனது நோக்கம் தராதர ரீதியாக நான் கணிக்கப்பட வேண்டும் என்பதே. இதன் பின்னணி மதிப்பீட்டுப் பேணல் மட்டும் தான்,
IIIIIII -
தமிழில் வாழை வளராது, ஏனெனில் தமிழ் ஒரு பாலை - என்று பிரலாபித்த வெ.சா., தமிழியலின் மதீப்பீட்டு வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து அதை அழிக்கும் காட்டுமிராண்டி வேலையைத்தான் செய்து வந்திருக்கிறார், அவரது தொடர் பினால், அவர் சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளில், ஒரு படைப்பாளியும் பிறந்ததில்லை, அவரால் ஊக்குவிக்கப்பட்ட 'கசட தபற' கும்பலை விமர்சிக்க எனது இயக்க இரவல்தான். அவர் களை விமர்சிக்க வேண்டி வந்தபோது- அவருக்கு உதவியது. அவரது ஊக்கத்தால் விளைந்த இவர்கள் போலிகள்; மதிப்பீட் டியலை இன்றுவரை சீரழிப்பவர்கள். ஞானக்கூத்தன் எழுது கிறவை பிரசுரத்துக்கே லாயக்கற்றவை ஆகிவிட்டன. இதுதான்
வெ.சா. உருவாக்கிய சூழல். - இதனை தாமே - விமர்சிக்க வேண்டிய அழுத்தம் அவருக்கு ஏற்பட்டபோது, அதனைச் செய்ய முன்வந்த கடமையுணர்வுக்காக மட்டும்தான் அன்று அவரை ஃபினோமினன் என்றேன். இதை இன்றுவரை ஒப்புவித்து (யார் கண்டார்கள். இது வெளிவந்த Thought இதழை தமது ஸ்தாபன கிளார்க் புருஷ்த்வத்தைப் பெறக்கூட அவர், 'உபயோகித்து' இருக்கலாம்) வரும் அவரால் நான் ஒரு சமயம் கிறுக்கு என்றும் குரங்கு என்றும் தாக்கப்பட்டவன். அதாவது இதனை நாம் பரிபாஷை வடிவாகக் கண்டு விளங்கிக் கொள்ள வேண்டும். 'கிறுக்கு' என்பது சிவபெருமான். 'குரங்கு' என்பது மனித வர்க்கத்தின், இங்கே நவீன எழுத்தியலின் மூலகர்த்தா. இத் தகைய நிலையில் உள்ள உள்ள ஒருவன் தம்மை ஃபினோமினன் என்றால் அவருக்கு இன்றும் இனிக்காதா என்ன?
சுபமங்களா பேட்டியில் தமது கருத்து எதையும் எவரும் எதிர்கொள்ளவில்லை என்ற வெ.சா. வின் கூற்று எவ்வளவு பெரிய ஒரு பிரமை பிடித்த மனோ நிலையைக் காட்டுகிறது என்பது வியப்பு. இதையும் நாம் ஒரு 'கேஸ் ஹிஸ்டரி' வரிசை யில் தான் சேர்க்க வேண்டும். வெ.சா.வின் கட்டுரைகளையும் அவற்றுக்கு என் பதில் கட்டுரைகளையும் கால சுப்ரமணியம் 'முன்னுரையில் அட்டவணை இட்டுத் தந்துள்ளார். இது கருத் துலக வரலாறாக மாறி, சமீபத்தில் ஆர்வ மிகுதியினால் இரா. மாயப்பன் (சதுக்கபூதம் - இரண்டாமிதழ் '95) ஈறாக நான் ''வெங்கட் சாமிநாதனை வெட்டித் தள்ளிய 'தாகக் கூறுமளவு ஸ்தாபிதம் பெற்றுள்ளது. இதை உணரமுடியாத வெ.சா.வின் மனோநிலை தமக்கு சாதகமான ஒரு கணத்தில் ஸ்தம்பிதம் பெற்றுவிட்ட நிலை ஆகும். மானம் போதல், இளமையில் திடீரென ஆதரவான பெற்றோர் போன்ற துணையை இழத்தல் முதலிய அதிர்வுகளின் போது, “'இது நிகழவே இல்லை '' என்ற பாவனா வடிவமான மனோநிலை ஸ்தம்பிதம் இது. கேஸ் ஹிஸ்டரி ஆக ஸ்டடி பண்ண வேண்டிய விஷயம். மனோ தத்துவ சிகிச்சையில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஷீரடி சென்று சாயி சமாதியை வெ.சா. தரிசிப்பதுதான் சிரேஷ்டம்!
வெப்
A5I5Uதிட்டம் அது. இளவே அதனைவளியீட்டு நூல்கள்
விபரஞானமற்ற, தர்க்க நிலை அற்ற, சுயபிரபாவக் - கூ ச் ச ல ா க - வெளிவந்திருக்கும் வெ.சா.வின் - பேட்டி 'சுபமங்களா'வின் போலி இலக்கிய சிகரமாகும்! எஸ் பொன்னு துரையின் பேட்டியில் பிரேமிள் கிறுக்கு என்பது சுபமங்கள கிளுகிளுப்புடன் வெளிவந்திருக்கிறது. இப்போது பிரேமிள் ஜாதி மதம் பாராட்டுகிறதான இந்த சுபமங்கள குளுகுளு. - இதில் ஒரு திட்டத்தின் புரையோட்டம் வெளிப்படையாகவே தெரிகிறது. மதிப்பீட்டியக்கத்தை குழிதோண்டிப் புதைக்கும் திட்டம் அது. இதன் ஒரு அங்கம் பொது வாசகருக்குத் தெரி யாத ஒன்று. எனவே அதனை இங்கே தெரிவிக்கிறேன், 'லயம்' இதழ்களும், லயம் வெளியீட்டு நூல்களும் எனது - இயக்கத்துக்கு களம் தருகிறவை. இவை சுபமங்களாவின் நவீன மோஸ்தர் இலக்கியப் பிரவேசத்தின் ஆரம்பத்திலிருந்தே சு.ம. வுக்கு அனுப்பப்படுகின்றன - மதிப்புரைக்காக. 'வரப்பெற்றோம்' மூலையில் கூட இவை எப்போதுமே குறிப்பிடப்பட்டதில்லை, சுந்தர ராமசாமியின் ஆலோசனை, வெ.சா. தொடர்பு முதலியவை - இந்தப் போக்கை நிர்ணயிக்கின்றன. இதுவே என்ஸைக்ஸோ
பிடியாவில் வெ.சா. பண்ணிய கோணிப்பை வேலையின் ரகஸி யத்தை அம்பலப்படுத்துகிறது. சு.ம. வின் 'வரப்பெற்றோம்' - பகுதியில் கூட எனது இயக்கத்தை குறிப்பிட பயப்படுகிற ஒரு
பத்திரிகை, கருத்துலகில் சிதறடிக்கப்பட்ட வெ.சா.வுக்கு ஜோ
டனை தருவதற்காகவே என்ஸைக்ளோப்பீடியா கோணிப்பைக் குள் என் பெயரை வெ.சா, போட்ட விஷயத்தைப் பிரசுரிக்கிறது.
மீறல் சிறப்பிதழுக்கு எழுத முடியாது என்று கூறிவிட்டு அதுவரை ஆங்கிலத்தில் (காசுக்கு!?!) எழுதிக்கொண்டிருந்த வெ.சா. திடீரென தமிழில் மீண்டும் எழுத ஆரம்பித்ததுகூட தமிழில் இப்போது பெரும் பத்திரிகைள் சில மோஸ்தர் இலக்கியம் பண்ணி அதுக்கு 'காசு குடுக்கிறாங்க" என்ற காரணத்துக்காகத் தான். பிறப்பால் பிராமணரான வீராச்சாமி இந்த வெ.சா வின் பழைய அதே பார்ப்பனீயவாதக் குரல் தமிழில் மறு பிரவேசம் செய்திருப்பதைக் கண்டு கொதித்து, என்னிடம், 'மீண்டும் அதையே சொல்ல என்ன திமிர்! என்ன தைரியம்!'' என்று கூறியதை இங்கே பதிவு செய்வது என் கடமை. இந்த ஒரு வீராச்சாமியின் கொதிப்பே சு.ம.வில் வெ.சா. இளிச்சவாய்ப் போட்டோவுடன் குறிப்பிடுகிற அவரது ஜாதி ம த பேதமின்மை யை பைசல் பண்ணிவிடும்; இருந்தும் செத்துப்போன மாதிரி நடித்துவிட்டு மீண்டும் விஷத்தைக் கக்க ஆரம்பிக்கிற பாம்பை இவ்விதமாக எளிதில் சந்திக்க முடியாது. எனவே தான் பாரதியின் 'புதிய ஆத்திச்சூடி' பிரகாரம் -
த்திச்சூடி' பிரகாரம் - 'நையப்புடை'.
அக்டேபர்-95 சென்னை .
பிரேமிள்இ விமர்சனாஸ்ரமம்
'எழுத்து' விற்கு முன்பிருந்தே க. நா. சுப்ரமண்யம் தமிழ் இலக்கியத்துறையின் வரட்சியைப்பற்றி வெளிநாட்டு இலக்கிய வளத்துடன் தமிழை ஒப்பிட்டு அவ்வப்போது எழுதி வந்திருக் கிறார். இதே வேலையை தொடர்ந்து செய்தவர் தாம் வெங்கட் சாமிநாதன், 'பாலையும் வாழையும்' என்ற நூலாக வெளிவந்த இவரது கட்டுரைகளின் மொத்தமான இந்த முறையீடு, ஆங்கி லத்தின்மூலம் பிற நாட்டு நவீன இலக்கியங்களை அனுபவித்து விட்டுத் தமிழைத் திரும்பிப் பார்க்கும் ஒரு சிறுபான்மையினரின் மேலோட்டமான முறையீட்டையே பிரதிபலிக்கிறது. அந்தச் சிறுபான்மையினரின் பிரதிநிதி என்பதற்கு மேற்சென்று, ஒரு விமர்சகராக நிலைமையின் காரணங்களை வெங்கட்சாமிநாதன் ஆராய்ந்தவரல்லர். க. நா. சுப்ரமண்யம் எப்படிப் பத்திரிக்கை காரர்களெனவும் ஜனரஞ்சக எழுத்தாளர்களெனவும் வியாபார, பொழுதுபோக்கு எழுத்தாளர்களைக் கணித்தாரோ, அதே போன்று வெறும் அபிப்ராய ரூபத்தில், விமர்சனபூர்வமாக அல்லாமல் வெ.சா. வும் எழுதி வந்திருக்கிறார். 'எழுத்து'வின் பக்கங்களில் இவை வெளிவந்தபோது அப்பத்திரிகையில் விமர்ச னபூர்வமாக எழுதியவர்களது ஆய்வுகளின் பின்னணி, இவரது மேலோட்டப் பார்வைக்கு ஆதரவாக நின்றதுண்டு. , இன்று 'எழுத்து' வின் பக்கங்களிலிருந்து தனித்து அவரது கட்டுரைகள் புத்தக ரூபத்தில் தோன்றிய நிலையில், 'எழுத்து' வின் இதர பகுதிகளில் வேறு - எழுத்தாளர்கள் தந்த காரணபூர்வமான கணிப்புகள், படைப்பின் உருவமாகச் சாட்சியம் பேசும் மதிப் பீடுகள் போன்ற பின்னணிகளை இழந்து, தமது. பலத்திலேயே நிற்க வேண்டி உள்ளன. இந்தத் துணையற்ற நிலையில் வெ.சா.வின் கட்டுரை நூல் ஆதாரம் தராமல் அபிப்ராயம் விளம் புகிற குறைபாடுகளை நிரம்பவும் வெளியிடுகிறது. இந்தக் குணத்தின் அடித்தளம், இலக்கியப் பிடிவாதம் என்று ஒன்று இருந்தால் போதுமானது என்ற மனோபாவத்தையே காட்டு கிறது என நினைக்கிறேன்.
சும்
இந்த மனோபாவத்தின் முக்யமான பிரதிநிதியாகவும் அபத் தமான எல்லைக்கு இலக்கியப் பிடிவாதத்தை இழுத்துச் சென்றுள்திருக்கிறது. இலக்கியப் பிடிவாதம் காட்டியவர்களைப்பற்றி - இவர் விமர்சனமல்லாத சிலாகிப்புகளைச் செய்துள்ளார். இப்படிச் செய்ததின் விளைவுகள், இவர் அப்படிச் செய்வதாலேயே விளைந்துவிடும் என்று நம்பிய சூழலை , கேலிக்குரிய சூழலாக் கிற்று என்பதுதான் இவரது இயக்கத்தின் விடம்பனம் (Irony). , விமர்சகத்துக்குப் புறம்பாக இவர் சிலரைத் 'தட்டிக் கொடுத்து', அதன் விளைவாக இவரால் தட்டுதல் பெற்றவர்கள் வாசகர் ளிடையே முக்கியஸ்தர்களாகி, பின்னர் இந்த போலி முக்கியஸ் தர்கள் தங்களது பத்திரிக்கைப் பலம், வாசக ஆதரவு ஆகியவை மூலம் இவரையே 'கவிழ்த்த' பிறகு, அதுவரை தட்டிக் கொடுத் தலுக்குத் தந்திராத ஒரு புதிய சமாதானத்தை தந்தார் வெ. சா. இந்தச் சமாதானமே ‘சூழலை உருவாக்கவென அப்படித் தட்டிக் கொடுத்தேன்' என்ற அவரது வாதம். இந்த விசித்திர நிலை மையின் சரித்திரத்தையும் இத்துடன் நேரடியாகவும், மறைமுக மாகவும் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் இங்கே கவனிப்போம்.
காலவாரியாகத் தமது கட்டுரைகளைத் தொகுத்தவர் தாம் ஒருவரே என்று கூறி, அத்துடன் எனக்கு ஒரு புகழ்மாலைக் கட்டுரையையும் (கண்ணாடியுள்ளிருந்து) ஒரு இகழ்மாலைக் கட்டுரையையும் (கலைஞனும் சூழலும்) ஒன்றாகவே, 'பாலையும் வாழையும்' நூலில் தாம் சேர்த்துள்ளதாக தம்பட்டமடித் துள்ளார் வெ.சா. உண்மையில் இந்த இரண்டு கட்டுரைகளும் 'காலவாரி' யாக நூலில் இடம்பெறவில்லை . தி. ஜானகிராமனைப் பற்றிய கட்டுரையை விட்டுவிட்டே 'கலைஞனும் சூழலும் கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அபத்தக் களஞ்சியமான அந்தச் கட்டுரை எல்லாப் பத்திரிகைகளாலும் நிராகரிக்கப்பட்ட மையால் வேண்டுமென்றே தொகுப்பில் 'செருகப்பட்டது. அந்த அபத்தக் களஞ்சியத்தைப் பிரசுரிப்பதற்கு ஒரு லைசென்ஸாகவே, அத்துடன் என்னைப் 'புகழ்கிற', 'கண்ணாடியுள்ளிருந்து' கட் டுரையையும் சேர்த்துள்ளார். 'கண்ணாடியுள்ளிருந்து', உண்மை யில் என் கவிதை எதையும் விமர்சனபூர்வமாக அணுகவில்லை. வெறுமனே புகழ்ந்து தள்ளும் கட்டுரை அது. கூடவே, ஞானக் கூத்தனைத் தாக்குவதற்கென தாம் பதுங்கிக் கொள்ள என் கவிதைகளை அக்கட்டுரையில் ஒரு அரணாகவே உபயோகிக் கிறார். 'கலைஞனும் சூழலும்' கட்டுரை நான் எழுதாததை எழுதியதாகத் திரிபு செய்து காட்டி, அதைத் தாக்குகிற எண் ணத்தில் வெ.சா. தம்மையே தாக்கிக் கொள்கிற கட்டுரை. இதனை 'கலைஞனும் கோட்பாடும்' கட்டுரை (கொல்லிப்பாவை
13நிர்.1ல்) 'விமர்சன ஊழல்கள்' நூல் ஆகியவற்றில் விளக்கி உள்ளேன்.
ப எனது 'தமிழின் நவீனத்துவம்' நூலில், சிற்சில பகுதிகள் செம்மையை உத்தேசித்துத் திருத்தி எழுதப்பட்டவை. திருத்தி எழுதுதல் (Re-writing) புதுப்பார்வை செலுத்துதல் (Revision, ஆகிய இரண்டுக்கும் இடையே வெ.சா-வுக்கு வித்யாசம் தெரி. வில்லை. இங்கே நான் வெ.சா.வின் ஓரிரு சித்தாந்தங்களினது சரித்திரத்தைக் காட்டுவதுடன் இவரது வேறு சில கருத்துகளின் விஷயங்களுக்கும் வருகிறேன்.
12 'எழுத்து' நிர்-3, மார்ச் 159 இதழில் ஆர். சூடாமணி, "பெரியவன்' என்ற கதையை எழுதியிருந்தார். இதற்கு அடுத்த இதழில் விசேஷ குறிப்பும் தந்திருந்தார் 'எழுத்து' ஆசிரியர் சி.சு. செல்லப்பா. இக்கதையின் முக்கிய குறைபாடு சம்பாஷணை வேகத்தையும் வாக்கியக் கட்டுப் கோப்பையும் சார்ந்தது. சிறு வர்கள் பேசுவதாக அமைந்துள்ள இக்கதையில் ஒரு சிறுவன் கூறுகிறான்: ' 'ஆமாம், அவனுக்கு நாலு வயது ஆய்விட்டதால் வீட்டில் ஒரு வாத்தியார் வைத்துப் பாடம் சொல்லிக் கொடுத்து அடுத்த வருஷம் சரியான வகுப்பில் சேர்த்துவிட வேண்டும் என்று அப்பாவுக்கு யோசனை''. இவ்வளவு நீள மான பின்ன லான வாக்கியம் பெரியவர்களது சாதாரணப் பேச்சில்கூட அநேக மாக வராது. கதையின் முக்கியக் குறைபாடு இதுதான். இதை சம்பாஷணை வேகத்துக்குள், அதுவும் சிறுவனது பாத்திரத்துக்கு ஏற்பத், திருப்பி எழுதிக் காட்டுவோம். ''ஆமா, அவனுக்கு நாலு வயசாயிடுத்தோல்லியோ? இனிமே வீட்லேயே வாத்யார் வச்சு பாடம் சொல்லிக் குடுப்பா! அப்புறம் அடுத்த வருஷம் ஸ்கூல்லே சேர்த்திடுவர். அப்பா அப்படித்தான் சொல்லிண்டிருக்கிறார்!'' 'எழுத்து' நிர்-6, ஜூன் இதழில் 'பெரியவன்' கதையைக் குறை பாடானதாகக் காட்டும் நோக்கத்துடன் விமர்சித்திருந்தார் வெ. சாமிநாதன். இதுதான் அவருடைய எழுத்து பிரவேசத்தின் அரங்கேற்றம். ஆனால் அதுவே தும்பைவிட்டு வாலைப் பிடிப் பதாகவே அமைந்திருந்தது . " ஊஹலோ- வா, வா, வழி தெரிந் ததா? ''-- நான் கொஞ்ச நாழி உன்னுடன் பேசட்டுமா?' போன் ற பிரயோகங்கள் செயற்கையானவை என்ற தவறான வாதம் வெ.சாவின் தட்டுல- 01 வா தீம வே.சாவின் கட்டுரையில் நிறையவே காணப்பட்டன. வசனங்கள் கட்டுரைப் பாணியில் இருப்பதாக வெ.சா. கூறியதற்கு இத்தகைய உதாரணங்களையே அவரால் தர முடிந்திருக்கிறது. கதையைப் பற்றிய வெ.சா.வின் பார்வை சரியானாலும் அவர்
ப F
ILகாட்டிய காரணங்கள் மிகமிகத் தவறானவை. எனவே அடுத்த இதழில் சூடாமணி தந்த பதில் வெ.சாவின் வாதத்தைச் சிதற 'டித்து விட்டது.
மேலே வெ.சா, தந்த உதாரணங்கள் உண்மையிலேயே சிறுவர்களால் நிஜ வாழ்வில் உபயோகிக்கப்படுகிறவை என்று சுட்டிக் காட்டினார் சூடாமணி. இந்த வாதத்தை 'பெரியவன்' கதை சம்பந்தப்பட்ட அளவில் வெ.சா. ஏற்றுக் கொள்ளவில்லை. சி.சு.செ.யுடன் தமக்கு கருத்து வேறுபாடு இருந்தது என்று அவர் குறிப்பிடுவது இதைத்தான். நான் சொல்லவிருப்பதற்கு இந்தத் தகவல் ஒரு முக்கிய பின்னணியாகும்.
115
-
2
16
5 இனி 'கசடதபற', 'அஃக்' காலத்துக்கு வந்து இதே வெ.சா வைத் திரும்பிப் பார்க்க வேண்டும். 'கசடதபற' வினால் நிரா கரிக்கப்பட்ட அம்பையின் 'பயங்கள்' நாடகம், அஃக்கில் வெளி யாக உதவினார் இதே வெ.சா. இந்த நாடகத்தில் கூட பாத்திரங்கள் செயற்கையாகவே பேசுகின்றன என்று காண வேண்டும்; 'பெரியவன் 'னில் இருந்த சிறிய கலையம்சம்கூட "பயங்கள்' ளில் இல்லை. செக்ஸுவல் ரெவல்யூஷன் ) என்ற மோஸ்தர்தான் உண்டு. இருந்தும் பெரியவனைப் பிரசுரித் ததுக்காக 'எழுத்து' ஆசிரியரான சி.சு, செ.வை அன்று குறை கூறிய அதே வெ.சா., இந்த 'பயங்கள்' ளுக்காகக் காவடி தூக்கி இருக்கிறார். இதில் சம்பாஷணைகள் செயற்கையாக இருக் கின்றனவே என்று நான் நேரில் வெ.சா.விடம் கேட்டபோது அவர் பரிதவித்தார். உணர்ச்சிவசப்பட்டார். 'அந்த சம்பாஷ ணை அவ்வளவும் உண்மை வாழ்வில் அப்படியே நடந்தது. நீயே அம்பையைக் கேட்டுப் பாரு!' என்று குரல் தழுதழுத்தார். அதாவது அன்று சூடாமணி தனது செயற்கைத்தனத்துக்கு தந்த விளக்கத்தை ஏற்காதவர். இன்று அம்பை தமது செயற்கைத் தனத்துக்கு அதே விளக்கத்தைத் தருகிறபோது அதை ஏற்கிறார். இதே காலகட்டத்தில் 'சுய அனுபவமே கலையாகும்' என்ற ஒரு நாய்க்குட்டிச் சித்தாந்தத்தையும் வெ.சா, தமது வாசலில் கட்டிப் போடுகிறார். பிறகு , சுய அனுபவம் இல்லாத இலக்கியம் ஏது உலகில் உண்டா?” என்றுகூடக் கேட்டுக் கொண்டு அலைகிறார், கவ மேற்படி, சூடாமணி - அம்பை , சுய அனுபவக் கலை யா வற்றுக்கும் நான் நேரிலோ எழுத்திலோ பதில்கள் தந்துள்ளேன். அம்பையும் வெ.சா.வும் 'பயங்கள்' சம்பாஷணயினது உண்மைப்
15பின்னணியை முன் வைத்தபோது நான் தந்த நேர்முக பதில் இது: ''சம்பாஷணையின் இயற்கை, செயற்கை ஆகியவற்றை நிர்ணயிப்பது, அது உண்மையில் நடந்தது - நடக்காதது என்ற விபரமல்ல. பாத்திரங்கள் வலுவாக உள்ளனவா என்பதைப் பொறுத்த விஷயம் அது.. 'பயங்கள்' ளின் பாத்திரங்கள் வலுவற்றவை.'
அடுத்து - சுய அனுபவமே கலையாகும் என்ற சித்தாந்தம் இலக்கிய அறிவு இல்லாமையின் விளைவு. பிரெஞ்சு எழுத்தா ளர் குஸ்தாவ் ஃபிளாபர், தமது' மேடம்பவாரி'யை எழுதுவதற் காகப் பெண் ஒருத்தியின் உடம்புக்குள் கூடுவிட்டுக் கூடு பாய வில்லை .... இப்படி ஏராளமான உண்மைகளை வெ.சா.வுக்கு பதிலாகத் தரலாம். ஆனால் இவ்விடத்தில் அநுபவத்தை அவ தானமாக மாற்றி, அவதானமே அநுபவம் என்பார் வெ.சா. இது விதண்டா வாதம். அவதானமே அநுபவம் என்றால் எச்.ஜி. வெல்ஸ் எந்த மாய மனிதனை அவதானித்து தமது அற்புத கதாபாத்திரங்களுள் ஒன்றாக, 'இன்விஸிபில் மேன்' நாவலின் மாய மனித நாயகளை உருவாக்கினார்? அநுபவத்துக்கு - அதுவும் சுய அநுபவத்துக்கு மட்டும் முக்யத்துவம் தரும் சித்தாந்தம் ஒன்றை வெ.சா. உருவாக்க முன் வருகிறார் என்றால், அவ தானத்தைச் சுய அநூபவமாக்கும் லைசென்ஸ் அவருக்கு எப்படி கிடைக்கிறது? இந்த சுய அநுபவ நாய்குட்டியின் கழுத்தில் அவர் கட்டி உள்ள கயிற்றின் நீளம் என்ன? அவருக்கே தெரியாது.
நான் 'காடன் கண்டது' என்ற ஒரு சிறுகதையை எழுதி உள்ளேன். வெ.சா.வின் சித்தாந்தப்படி பார்த்தால், குறவன் ஒருவன் கதை சொல்வதாக அமைந்துள்ள இந்தக் கதையை எழுதியுள்ள நான் ஒரு குறவன். ஆனால் இதே சித்தாந்தப்படி பார்த்தால் கதையைப் படிப்பவரும் குறவர்தான். ஏனெனில் ஒரு குறவன் இன்னொரு குறவனுக்குக் கதை சொல்வதாகத்தான் 'காடன் கண்டது' எழுதப்பட்டுள்ளது. (குறவனாக இருப்பதில் நான் குறை காணவில்லை. அவர்களது இயற்கை வாழ்வு எனது பொறாமைக்குரியது.)
வெ.ச.வின் 'காலவாரியான' பிரசுரங்களுள் வராத 'நடை' நிர்-6 ன் 'ஞானரதம்' மதிப்புரை பற்றி, 'விமர்சன ஊழல்கள்' லில் நான் ஏற்கனவே எழுதி உள்ளேன். இந்த மதிப்புரையில் அவர் ஞானக்கூத்தனை இரண்டாயிரம் வருஷத் தமிழ்க் கவிதை யிலேயே கேட்டிராத குரல் என்று ஆவேசக் குரல் எழுப்புகிறார்.
16**வே, மாலி”' (சி. மணி) யின் 'குறை நிறைகள்', 'ஞானக் கூத்தனின் 'ஒட்டகம்' -'நடை'யின் அறிமுகங்கள் இருவரும். கவிதைகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஒரு புதிய குரலின் இரு சாயல்கள். இப்புதிய குரலையும் இவ்விரு சாயல்களையும் நம் ஞாபகத்தில் தமிழ்க் கவிதை கண்டதில்லை, கவிதை வர லாற்றில் இன்றைய கவிதை பற்றிய பேச்சில் 'நடை' வெகுவாக திரும்பத் திரும்ப கவனத்திற்கு வரும். இதற்குக் காரணம் வே. மாலியும் ஞானக்கூத்தனுமாக இருப்பார்கள்.'' ('நடை' நிர்-6ல் *ஞானரதம்' இதழ் பற்றி வெ.சா.வின் மதிப்புரையிலிருந்து.)
அதே காலகட்டத்தில் தான் 'தொழு நோயாளிகள்' என்ற கவிதையில் அந்த துரதிர்ஷ்ட சாலிகள் 'உதிர்த்த (?) உறுப்பு களைப் பொறுக்கி அவர்களிடமே திருப்பிக் கொடுத்து '' (திரு வல்லிக்) கேணியில் இவற்றை ஏன் உதிர்க்கிறீர்கள்?' என்று அச்சுறுத்தும் சமூக வக்ரக் குரலையும் வெளியிடுகிறார் ஞானக் கூத்தனார். உண்மையில் ஞா.கூ.விடம் நேர்ப்பேச்சில் இதே *தொழுநோயாளிகள்' கவிதையை வெ.சா. பாராட்டியும் இருப்ப தாக ஞா.கூ. வும், அவரது 'கசடதபற' கூட்டாளியான ராம கிருஷ்ணனும் என்னிடம் கூறி உள்ளனர். இது உண்மையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், ஆதாரம் மேலே தரப் பட்டுள்ள வெ.சா.வின் மதிப்புரை மேற்கோள்.
- இதற்கு பின்பு 'தினமணி கதி’ ரில் சாவி, தாம் போட்டு வந்த இந்திரா பார்த்தசாரதியின் தொடரை பாதியில் நிறுத்த, இந்திரா பார்த்தசாரதிக்குப் பரிந்து வெ.சா, கசடதபற வில் 'யாருக்காக எதற்காக என்று அழுவது?' என்ற கட்டுரை எழுத அதற்குப் பதிலாக அழவேண்டாம் வாயை மூடிக் கொண்டிருந் தால் போதும்' என்று அசோகமித்திரன் பதில் எழுத, அத்துடன் 'விவாதத்தை'கசடதபற முடித்துக்கொள்கிறது. அதாவது வெ.சா, வினால் தப்பட்டவர்களே அவரை மட்டம் தட்டிய நிலை இது.
உண்மையில் வெ.சா. தான் ஞானக்கூத்தனை க. நா.சு.வும் நகுலனும் ஏற்றுக் கொண்டதுக்கு மூலக் காரணம். ஆனால் அவர்கள் ஞா.கூ.வுக்கு வெ.சா, கொடுத்த ஆதாரமற்ற அத்து மீறிய பட்டயம் எதையும் கொடுத்ததில்லை. தங்கள் பட்டியல் களுள் ஞா.கூ. வையும் சேர்த்துக் கொண்டார்கள். இதை ஏதும் பெரிய விமர்சனக் கோளாறாகக் கூறமுடியாது. விமர்சனக் கோளாறு, வெ.சா. எழுதி இங்கே நான் தந்த மேற்கோளிலே தான்.
- அன்று அவ்விதம் 'தொழுநோயாளிகள்' உட்பட்ட ஞா.கூ.. கவிதைகளைப் பாரதூரமாக வெ.சா. புகழ்ந்தது ஏன் என்பதுக்கு அவரே 'யாத்ரா'வில் அன்றைய ஞா ,கூ, தம்மிடம் வந்து கெஞ்சி யமைதான் என்று பிறகு காரணம் காட்டினார். ஆக, மீண்டும் சூடாமணி, அம்பை பிரச்னைகள் இங்கே கிளம்புகின்றன. சூடாமணி அச்சின் மூலமே வெ.சா.வைச் சந்தித்தவர். அம்பை யோ வெ.சா.வை நேரில் சந்தித்தவர். ஞா.கூ. தமது காரியம்', ஆகவேண்டுமானால் உடன்பாட்டுடன் எவருடனும் பழகக்கூடிய வர். அத்துடன் காரியம் ஆனபிறகு ஏறிய ஏணியை எட்டி உதைப்பவரும்கூட. இதையே அசோகமித்திரனும் செய்திருக் கிறார். வேண்டிய அளவு வெ.சா.வினால் ஊதப்பட்ட பிறகு ஞா.கூ.வும், அ.மி. யும் வெ.சா.வை ஒதுக்கினார்கள். இதன் விளைவாக கையும் ஓடாமல் காலும் ஓடாமல் தாடி வளர்த்துக் கொண்டிருந்த வெ.சா., இந்த முழு அறிவார்த்த ஆபாஸங் களையும் அருவருப்புடன் கவனித்துக் கொண்டிருந்த என்னைச் சந்திக்கிறார். திரும்பத்திரும்ப என்னிடம் கசடதபறக்களையும் அ.மி. யையும், ஞா.கூ. வையும் பற்றிய என் நேர்ப்பேச்சு விமர் சனங்களை எழுத்தில் தரும்படி வேண்டுகிறார். நானும் டெல்லி யில் (Thought) பத்திரிகையில் என் பார்வையை முன் வைக் கிறேன். இந்தக் கட்டுரையை இதற்காக டைப் செய்தவர் வெ.சா. என்பதும், இதில்தான் முதன்முதலாக நான் நவீன தமிழ் இலக்கிய உலகினுள் ஊடுருவிய ஜாதீயத்தை அம்பலப்படுத்து கிறேன் என்பதும், இதே அம்பலப்படுத்தலுக்கு வெ.சா. பின் னாடி இலக்காகியபோதுதான் என்னை கேடு கெட்ட பிராமண எதிர்ப்பாளனாகக் கருதினார் என்பதும் கவனத்துக்குரியவை. அன்றைய நேர்ப்பேச்சுகளில் வெ.சா.வுக்கு நான் ஞா.கூ.வின் உயிரற்ற கவிதை நடை, சமூக வக்ரம் நிறைந்த பொருளம்சம் ஆகியவை பற்றி போதித்து இருக்கிறேன் என்றால் மிகை யாகாது. இந்தப் போதனையை அப்படியே ஏற்றுக் கொண்ட வெ.சா., முன்னாடி புகழ்ந்துரைத்த 'தொழு நோயாளிகள்' கவிதையில் பின்னாடி சமூக வக்ரத்தைக் கண்டுபிடிக்கிறார். இவ்வளவும் பிரசுர சாட்சியங்களுடன் இணைத்துக் காணத்தக்க கருத்துலக சரித்திரம். இருந்தும்கூட முந்திய ஞா.கூ.வுக்கும் பிந்திய ஞா.கூ.வுக்கும் இடையில் தாம் பெரிய வித்யாசத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக இல்லாத மீசையை முறுக்குகிறார் வெ.சா. 'யாத்ரா'வின் இறுதி இதழ்களில். 10
வை
என்று
அது என்ன வித்யாசம் என்பதைச் சொல்வதுதான் படித்துப் பயன்பெறத்தக்க விமர்சனமாகும். ஆனால் உண்மையில் அன்றுவெ.சா. சிறப்பித்த ஞா.கூ.வுக்கும் பிறகு எனது போதனையை ஏற்ற வெ.சா. கண்டுபிடித்த அதேகாலத்திய ஞா.கூ.வின் சமூக வக்ரத்துக்கும், இன்றைய ஞா.கூ.க்கும் இடையில் வித்தியாசம் கிடையாது. தாம் ஒரு சமூக வக்ரவாதியாக இனம் காட்டப் பட்டதும் இடையில் ஞா. கூ. சுருக்கமடைந்து தம்மை ஆரோக்கி யப்படுத்த முனைந்தமை மட்டுமே, 'ழ', 'கவனம் காலத்திய கவி தைகளில் தெரிகிறது. எனது விமர்சனத்தினால் முதலில் சுருக்க மும் பிறகு திருத்தமும் பெற்ற இன்னொருவர் சுந்தர ராமசாமி. ஆனால் இதெல்லாம் மேல் பூச்சு மாறுதல் தான். ஏனெனில் மீண்டும் கடைசி 'ழ' வில் வேலை கிடைக்காததால் பல்பொடி, சவர பிளேடு வியாபாரங்களில் ஈடுபடும் இளைஞர்களையும், குளிப்பதற்கு மறைவிடம் கூட அற்ற பெண்ணையும் பரிஹாஸப் படுத்திக் கவிதை எழுதியவர் ஞா.கூ. அதாவது ஞா.கூ. மாறவில் லை; மாறியவர் வெ.சா. தான். அதுவும் எத்தகைய மாற்றம்? அற் புதமான சித்தாந்த மாற்றம் இது. அன்று தாம் புகழ்ந்த அதே ஞா.கூ., அசோகமித்திரன் போன்றோரைப் பின்னாடி இகழ வேண்டும்: வெ.சா.வுடன் முதலில் 'வாங்கோ , வாங்கோ '' என்றும் பின்பு 'சரிதான் போடா' என்றும் பழகிய மாறுபாடு கள்தான் இதற்குக் காரணம். இவர்களது எழுத்தை அடிப்படை யாக்கி அன்று தாம் புகழ்ந்த இதே பேர்வழிகளை இன்று இகழ வெ.சா.வுக்கு விமர்சனபூர்வமான ஆதாரம் இல்லை. இதற்காக அவர் கண்டுபிடித்ததுதான் சொந்த வாழ்வில் ஒரு எழுத்தாளன் நடந்து கொள்வதை வைத்து அவனது எழுத்தைக் கணிக்கலாம் என்ற வகையான சித்தாந்தம். இதை அவர் தயாரித்துக் கொண் டிருந்த காலகட்டம் 1972. அப்போதே அவரை நான் இதற் காக கடுமையாக நேரிலும் கடிதங்களிலும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டேன். அவர் பத்திரிக்கைத் தளத்துக்கு தமது சித்தாந்தத் துடன் வந்ததும் நான் பத்திரிக்கைத் தளத்தில் அதற்கு விமர் சனங்களைத் தர ஆரம்பித்தேன். மேலே உள்ள 'சொந்த வாழ்வு நடைமுறையின்' யின் இன்னொரு வடிவம்தான், 'சுய அநுபவமே கலையாகும்' என்ற அவரது 11 சித்தாந்தம். இது எல்லாம் சூடாமணியின் பெரியவன்' கதையை அவர் விமர்சித்த 'எழுத்து' வின் ஆரம்ப காலத்தில் அவருக்கு வேண்டியிருக்க வில்லை . இப்
டெல்லியில் காணக்கிடைத்த அகில உலக கலைச் சினிமாக் களை க. நா. சு. வும் பார்க்கச் செய்ததுடன் அவற்றை வெ.சா. ரஸிக்கும் பாணியில் க. நா.சு.வும் ரஸித்து 'எல்லா கலைகளுக்கும் அடிப்படை ஒருமையுண்டு' என்ற வெ.சா.வின் கண்டுபிடிப்புக்கு
19க. நா.சு. சப்போர்ட் தரவேண்டும் என எதிர்பார்த்தார் வெ.சா. இதற்கு க. நா. சு. கூறிய பதில்: 'எனக்கு இலக்கியமே குறி'. உடனே க. நா. சுவை பிலுபிலுவென்று பிடித்து போதிக்க ஆரம் புத்துவிட்டார் வெ.சா. இதனால்தான் வெ.சா.வை வெறும் 'சினிமா கேஸ்' என்றார் க. நா. சு. உண்மையில் வெ.சா. எந்த நவீன இலக்கிய நூலையும் கடந்த இருபது வருஷத்துக்கும் மே லாகப் படித்ததே கிடையாது. இதை நான் நேரில் அறிவேன். ஆனால் எந்த டில்லிக் கலைப்படக் காட்சியையும் அவர் தவற விடமாட்டார். எனவே வெ.சா.வை 'சினிமா கேஸ்' என்று க. நா. சு. தீர்த்தது மிகச் சரியான கணிப்பு. இந்தக் கேஸ், பின் னாடி நாடகக் கேஸ் ஆகியிருப்பதே இதற்கு சாட்சியம்.
கலைகளிடையே உள்ள அடிப்படை ஒருமைபற்றி வெ.சா. பேசும் விதம், ஏதோ கலைத் தத்துவ விசாரணையைச் சார்ந்த தல்ல- அது வெறும் சுய தம்பட்டம், கலைச்சினிமாக்களை க.நா.சு. வால் ரஸிக்க முடியாது, தம்மால் முடியும் என்ற தம்பட்டம். 'கலை, அனுபவம், வெளிப்பாடு' என்ற அவரது கட்டுரையில் இதற்காக அவர் கூறுகிறவற்றுள் சிந்தனைச் சரக்கு உள்ள யாவும் கெட்ரூட் ஸ்டெயின் (Gertrude Stein) இடமிருந்து எடுக்கப் பட்டவை. வெ.சா. வுடையது அல்ல. புத்த க. நா. சு., தி.ஜா. போன்ற கலைஞர்களிடம் காட்டிய தமது சித்தாந்தங்களை என்னிடமும் வெ.சா, நேர் சந்திப்பில் காட்ட முயன்றபோது நான் விமர்சன பூர்வமாக மறுத்து அனுப்பி இருக்கிறேன். என்னிடம் இலக்கியத்திறன் மட்டுமின்றி நுண் கலைகளான ஓவிய, சிற்பத்திறன்களும் உள்ளன. இத்துடன் சினிமா, ஓவியம் முதலியவற்றில் வெ.சா. காணக்கூடியவற்றை விட அதிகமாகவே காணத்தக்க பார்வைத் தீட்சண்யமும் எனக்கு உண்டு. எனவே தம்முடைய சகலகலா ஒருமைச் சித்தாந்தத் துக்கான சாட்சாத்கார புருஷனாக என்னை ஆஜர்ப்படுத்த அவர் ஆசைப்பட்டார். இதை நான் பரிபூர்ணமாக நிராகரித்து எதிர் வா தங்களை தந்துள்ளேன். புதுமைப்பித்தனால் சங்கீதத்தை ரஸிக்க முடிந்ததில்லை. மெளனியால் நல்ல ஓவியத்தை உணரமுடிந்ததில் லை - என்பது போன்ற ஏராளமான வாதங்கள் இவை. இன்னும் ஒன்று. நடிப்பு, நடனம், சங்கீதத்தை எல்லாம் இலக்கியவாதி கள் ரஸிக்க வேண்டும் என்று அவர்களை அறுக்கும் வெ.சா., இலக்கியத்தை நீங்கள் ரஸிக்க வேண்டும் என்று ஆர்ட்டிஸ்ட் ஆதிமூலம், வெ.சா.வின் 'ஆ, ஊ' வுக்களுக்குரிய சோ மற்றும் பத்மா சுப்ரமணியம், செம்மங்குடி இத்யாதிகளிடம் போதிப்பதில்
20லை. முயன்றால் அவர்கள், 'சரிதான் போடா' என்று எடுத் தெறிவார்கள் அல்லது ஏதாவது போலித்தனமாக பெயர் உதிர்ப் பார்கள். இது வெ.சா.வுக்குத் தெரியும். கலைகளிடையே உள்ள துறை வேறுபாடு, மிக மிக வரையறுக்கப்பட்ட பயிற்சி வேறுபாடு களை அடிப்படையாகக் கொண்டது. இதனால் சங்கீதத் துறை யினுள்ளேயே நாதஸ்வரம் போன்ற கருவிகளைப் பயில்வோர் குரலை உபயோகித்துப் பாடினால் வாத்தியாரினால் கண்டிக்கப் படுவார்கள். இத்தகைய எல்லைகளின் தவிர்க்கமுடியாத அறுதி யாகத்தான் ஒரு துறை ரஸனை இன்னொன்றுக்கு எட்டுவது அபூர்வமாகிறது. இதற்கு விதிவிலக்குகள் உண்டு. வெ. சா. இந்த விதிவிலக்குகளையே விதியாக்க முயல்கிறார். இதனை அவர் செய்ய வேண்டுமானால் நேரே நடிக, நடன, சங்கீதக் காரர்களிடம் போய் அவர்களை நவீன இலக்கிய ரஸிகர்களாக்கு வதுதான் நல்லது. இன்றைய நிலையில் இது ஓரளவு அவசியமும் கூட. உ ண்  ைம யி ல் நடிக நடன சங்கீதக்காரர்கள் மரபு வாதிகளாக மட்டுமே தேங்கி நிற்கும் நிலைக்கு இது ஒரு விடு விப்பாகவும் இருக்கும். இதை வெ.சா. செய்யவில்லை. செய்யப் மாட்டார். ஏனெனில் இதனால் அவரது சுயதம்பட்டத்தைத் தட்ட இடம் கிடைக்காது. ,
1 'சூழல்' என்ற வார்த்தையைத் தாமே கண்டுபிடித்ததாக இன்னொரு தம்பட்டம். - Milieu என்ற ஆங்கில பதத்தையும் பொருள் மரபையும் தமிழ்ப்படுத்தியதுக்கு மேல் இதில் எதையும் வெ.சா, சாதிக்கவில்லை. உண்மையில் சூழலை அவர் ஏற்கனவே நாசப்படுத்தியிருப்பதற்கான நியாயங்களை எழுப்புவதற்கே 'சூழல்' என்ற பிரயோகத்தை உபயோகிக்கிறார். அவரது 'சூழல் இன்றுவரை எத்தனை சிறுகதைகளை உருவாக்கியுள்ளது? விஞ்ஞானம், அரசியல், சமூகவியல், பொருளாதாரம், தத்துவம் என எத்தனையோ துறைகளில் நூற்றுக்கணக்கான 2 ஆங்கில அரும் பொருட்பதங்கள் தமிழாக்கப்படுகின்றன. இவற்றை சாதிப் பவர்கள் அடக்கத்துடன் செயல்படும் போது இங்கே வெ.சா. உ அடிக்கும் தம்பட்டம் ஆபாஸமானது. Violence என்றால் வன் முறை, Non-Violence என்றால் ' அஹிம்ஸை ' ஆயினும் 'வன் முறை' என்ற பதத்தின் நேரடியான எதிர்ப்பதமாக இது இல்லை. அத்தகைய ஒரு சொல்லை உருவாக்க முனைந்து நான் சலித் திருந்தபோது, யாரோ ஒரு செய்திப் பத்திரிகை வாசகர் ஒரு ஒரு டீக்கடையில் உட்கார்ந்திருந்து உரத்துப் பேசியதைத் தெரு வோடு போய்க்கொண்டிருந்த நான் கேட்டு அதிசயித்தேன்.
LID I
21'வன்முறை மட்டும் தான் ஒரே வழியா? மென்முறைக்கு இடமே இல்லையா?' சற்றே பொருள்ரீதியான வளைவு இருந்தாலும் இதுதான் நான் தேடிய பதம். இத்தகைய மொழியாக்கல் பிரச்னை களிடையே, தமது பிரதிமையில் வெ.சா. ஒட்டி வைத்துள்ள 'சூழல்' என்ற லேபளைப் பார்த்து பிரேமிளுக்கு காட்டம் என்று அவர் கூறியது பரிதாபகரமானது. தமிழ் மொழியில் இன்றைய ஆளுமையாளன் பிரேமிள் என்பது வெ.சா. வின் பிரக்ஞையை எட்டவில்லை இருந்தும் பிரேமிளின் ஆளுமை டீக்கடை வரை சென்று கற்றுக் கொள்ளத் தயாராக உள்ள இயக்கத்தில் இடை யறாது புடம் பெறுவது. இத்தகைய மனோபாவப்படி புதிய அரும்பொருட் பதங்களுக்காக அவற்றை உருவாக்கியோருக்கு பிரேமிள் நன்றி தான் தெரிவிப்பான். காட்டம் ஏன்? உண்மையில் தமது சுய தம்பட்டமும் முகமூடித்தனமும் என்னால் ஆபத்துக்குள் ளாகின்றன என்பதாலேயே 'சூழல்' பதத்துக்காக அவர் மீது எனக்கு காட்டம் கற்பிக்கிறார் வெ.சா. இதற்குப் பெயர் திசை திருப்புதல்! இதில் வெ.சா. ஒரு பெரிய ஆள்!
16
போலிகளும், போக்கிரிகளும் இன்று தமிழ் அறிவுலகத்துக்குள் நடமாடுவதும் இவர்கள் இன்று படும்பாடும் தெரிந்த விஷயம் தான். ஆனால் ஆயிரமாயிரம் வருஷங்களாக வேஷங்கள் கட்டிப் பாமர மூளை களை ஏய்க்கிற இவர்களுடைய குணம் லேசில் பின் வாங்கிவிடக்கூடிய ஒன்றல்ல. அறிவுப்பூர்வமாகத் தங்கள் வேஷகள் களையப்படுவதில் இவர்கள் யாரும் வெட்கங் கொள் வதில்லை, இதற்கு முக்கிய காரணம் இவர்கள் காட்டும் 'சாட்சி யங் ' களை ஊடுருவ முடியாத பாமரர்களின் பக்கபலம் இவர் களுக்கு இருப்பதால்தான். பார்க்கப்போனால் இந்தப் பாமர மூளைகள் வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி போன்றோருக்கு ஒரு கவர்ச்சி ( Glamour) மதிப்பு கொடுத்து வந்தமைதான், - இந்திய அறிவார்த்த சரித்திரத்தின் சாபக்கேடாகும். இந்தக் கவர்ச்சிகரத்தினை அறிவார்த்த தளத்தில் தகர்க்க முடியாது. இதனாலேயே பாமர வகையறாக்கள், தங்கள் மயக்க நிலை யிலிருந்து வாதரூபமான அறிவார்த்த இயக்கங்களினால் விழிப் படைவதில்லை. இவர்கள் பொற்றோளாய் உன்னுடைய பெருமை மிகு சர்வீஸில் சிற்றுருவமானதொரு அட்டெண்டர் ஆகேனோ' (புதுமைப்பித்தன் கவிதை) என்று பாடும் தொண்டரடிப்பொடியாழ் வார்களாக நிலவுகின்றனர். விவாதபூர்வமான விமர்சனத்திற்கு இவர்களது தெய்வங்களானவர்கள் தரும் பதில்களை இவர்கள்4
)
WITH
வா
பிப்
அறிவுப்பூர்வமாகக் கவனிப்பதில்லை. இவர்கள் இந்த அறிவுத் துறையினுள் நுழையுமுன்பே, தாங்கள் தெய்வங்களெனக் கண்ட வர்களின் சந்நிதியில் சிதறு தேங்காய்களாகத் தங்கள் மூளை களை அடித்து உடைத்துவிட்டு நிற்கிறார்கள். அந்த தெய்வங் கள் கிளப்பும் சப்தங்கள் ரொம்பவும் திவ்யமாகவும் அறிவார்த்த விபரங்களை மறுக்கிற அசைக்க முடியாத பதில்களாகவும் இவர் களுக்குத் தோன்றுகின்றன.
விமர்சனத்துறையில் ஞானக்கூத்தன், அசோகமித்திரன் போன்றோரைப் பற்றி என்னிடமிருந்து அபிப்ராய இரவல் பெற்று அவற்றின் பலத்தில் விளையாடிவர் வெங்கட் சாமிநாதன் என்பதை முன்பகுதியில் கண்டோம். ஞா.கூ. கவிதைகளுக்கு என் சுருக்க மான விமர்சனம் "அஃக்' (கோணல்கள்) கட்டுரையில் வெளி யாயிற்று. உடனே வெ.சா. முன்னே பாய்ந்து போட்டார் முரட்டு விமர்சன சாமியாட்டம். அதாவது எனது நுட்பமான கருத்தை இரவல் வாங்கி, * *.அவன் அப்படி-ஆகவே அவன் எழுத்தும் அப்படி'', என்று காட்டாள் கூச்சளாகுமளவு இது போயிற்று. - இந்நிலையில் இவரை முதலில் நேரிலும் கடிதத்திலும் எச்சரித்து, பின்பு பகிரங்கத்தில் விமர்சிக்கிறேன். உடனே காட்டுத்தனம் என்மீது திரும்புகிறது. அப்போது இது சம்பந்தமான பிரச்னை யில் அவர் என்னிடம் ஞா.கூ. பற்றி இரவல் கருத்துப் பெற்றதை வெளிப்படையாகவே குறிப்பிடுகிறேன். சாட்சியம் ஏற்கனவே **கோணல்கள்''ளில் ஒரு சில வரிகளினுள் *ஞா.கூ.' பற்றிய என் விமர்சனமாக இருக்கும்போதே. உடனே அவர் என்னைக் *குரங்கு', 'கிறுக்கு' என்று 'யாத்ரா' பத்திரிகையினை இதழ் 'இதழாக உபயோகித்துப் பிரச்சாரம் செய்ய ஆரம்பிக்கிறார். ந. முத்துசாமி, சுந்தர ராமசாமி, சாரு நிவேதிதா ஆகியவர்களின் தலையாட்டல்கள் அதே பத்திரிகையில். இதற்குப் பத்திரிகைகள நிர்மாணம் செய்த பக்தர்கள் ஆர். மணியும், ஜெயபாலனும்.
தமிழ் இலக்கிய சரித்திரத்திலேயே கண்டிராத இந்த முழு ஆபாஸத்திற்கும் பொறுப்பு எவர் தலைகள் மீது விழுகிறதோ அவர்கள் தங்கள் தலைகள் மீது அதைச் சுமக்க மறுத்தால் அவர் களுக்குத் தலைகளே இல்லை என்றுதான் அர்த்தம், அந்தத் தலைகள் முன்கூறிய சிதறு தேங்காய்களாகிவிட்டன! இவ்வள வையும் கொல்லிப்பாவை' வெளியீடான 'விமான ஊழல்கள்' நூலில் பிரச்னா விமர்சன அடிப்படையில் ஒருமுகப்படுத்தி யுள்ளேன். இதற்கு 'யாத்ரா' விலும் பின்பு வாழ்க்கை , கலை , அனுபவம், வெளிப்பாடு' என்ற புத்தகத்திலும் வெளியான ஒரு கட்டுரையில் -'என்னிடமிருந்து எல்லாவற்றையும் வாங்கினாய்'என்ற பரிதாபத் தொனியில் எதையோ ஜோடித்திருக்கிறார் வெ. சா. ('ஒரு புகைப்படம், ஒரு ஓவியம், பின் ஒரு கடிதம்' 'யாத்ரா' - 26, 1981 மற்றும் 'வாழ்க்கை , கலை, அனுபவம் , வெளிப்பாடு' நூல்) . எனக்கு சொல்லிக் கொடுத்தாராம், ஒரு ஜெர்மன் கவிதையின் அற்புதத்தை, இந்த வெ. சா. இது அவரே எனக்கு - ' எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தற்கான சாட்சியம்'. இந்த ஜெர்மன் கவிதை பற்றிய சாட்சியம் எதைச் சொல்கிறது? கவிதையை அவர் தந்துள்ளார். கார்ல் க்ரலவ் (Karl Krolow) என்ற ஜெர்மன் கவியின் 'வன்முறை' என்ற அக்கவிதையின் ஆங்கில வடிவம் இது :
எ VIOLENCE
af hiding it sal to life is off their 9
Out of hiding it came Raised dead metal to life The last negotiators peeled off their gloves And left, their smiles a coinage with drawn Out of hiding it came The place it looked at is lost The doors fly open The windows get smashed Ashes and mortar Scatter into eyes Lips shut under thumbs from fists The squalid night holds ready Its attacks and black minutes Soon the hearts will stop beating Behind the curtains rust. Out of hiding it came It will manhandle us
We may still leave the house And gaze into the sky of bulbs But in the suburbs The slogans are posted Soon the street fighting will reach us. Soon we shall be alone with the muzzle of guns Which of us shall be The first to fall forward Across his table,
- KARL KROLOw (In English - Christopher Middleton)
e posted
will reach usule of gyதமிழ்ப்படுத்தவேண்டும் என்றார். நான் மறுத்தேன். இதற்கு என் காரணம் இது: இக்கவிதையில் போர்ப் பிராந்தியம் மட்டுமே சித்தரிப்புப் பெறுகிறது. வாழ்வு அல்ல. வேதனை அல்ல. ஏன்ரத்தம் மரணத்துடிப்பு என்பவைகூட இக்கவிதையில் தவிர்க்கப் பட்டுள்ளன.
The squalid night holds ready Its attacks and black minutes
என்ற வரிகளைத் தவிர மற்றவை வெறும் எழுத்தாற்றலைத்தான் காட்டுகின்றன. கவித்துவ ஆழத்தை அல்ல.
என்
5
.
2 'வன்முறை' என்ற இந்தக் கவிதையின் தாத்பரியம் 'வன் முறைக்கு எதிராக வன்முறைதான் வரும், ஜாக்ரதை' என்பது தான். அதில் வன்முறை எவ்வளவு மிருகரீதியானது என்ற சித்திரம் இல்லை. வன்முறையை ருசிகரப்படுத்தும் நாடகார்த்தம் தான் இருக்கிறது. இதைத்தான் ஹாலிவுட் சினிமாக்களும் சித் தரிக்கின்றன. சமரசம் பேச வந்தவர்கள் புன்னகைகளையும், கையுறைகளையும் களைந்து நீங்குவதிலிருந்து, யாவரும் போர்க் கோலம் கொண்டு துப்பாக்கிகள் ஏந்தி ஜன்னல், கண்ணாடி சிதறச் சுடுதல், முஷ்டியால் முகத்தில் குத்துதல் ஆகிய விபரங் களும், முடிவில் நீயா? நானா? சுடுபட்டு இறக்கப் போறோம் என்ற அச்சுறுத்தலாக நிறைவேறும் கவிதை இது. இதிலே வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் கதி, பீதி இல்லை . வன்முறையினால் பாதிக்கப்படும் நுண்ணிய உணர்வுகளும் இல்லை. அலறல் இல்லை. வேதனையின் துடிப்பும் மனித உன்ன தத்தின் வீழ்ச்சியடைந்த பிண்ட பாவமும் இல்லை. எனவே இந்தக் கவிதை 'வன்முறையைச் சிறப்பிக்கும் கவிதை' என்று குறிப்பிட்டு, அதை மொழிபெயர்க்க வேண்டுமென்று அவர் விரும்பியிருந்தமையினால், நான் அதை மொழிபெயர்க்கவில்லை என்று மறுத்து பதில் எழுதியிருந்தேன். அதற்கு அவர் எழுதிய பதிலை (27.12.74) அவருக்கே நான் திருப்பி அனுப்ப, அதையே அவர் பிறகு எனக்கு தாம் சொல்லிக் கொடுத்தற்கு சாட்சியம்' என்று பிரசுரித்துள்ளார், ஏன் திருப்பி அனுப்பினேன் தெரியுமா? சு.ரா., ந. மு. போன்றோரை பிளாக்மெயில் பண்ணியது போல், ''நீ எனக்கு எழுதிய கடிதங்கள் என்னிடம் உள்ளன...'' என்று என்னிடமும் வெ.சா. தமது கைவரிசையைக் காட்ட முன்வந்தார். அப்போது இதோ இதையும் வச்சுக்க என்றுதான் நான் திருப்பி அனுப்பினேன்.
25அவர், எழுத்தைவிட்டு ஆளைக் கடிக்கும் விமர்சனங்களை எழுதுகிறார் என்று நான் விமர்சித்ததும், இதனால் எனது கடி தங்களைத் தாம் பிரசுரித்து விடப் போவதாக என்னை "பிளா "மெயில்' செய்ய முயன்றதும், உடனே அவரிடம் உள்ள என் கடிதங்களோடு அவர் எனக்கு எழுதியவற்றையும் பிரசுரிப்பது நலமென அவருக்கு நான் திருப்பியனுப்பிய கடிதங்களுள் ஒன்றே அ ந்த. 'சாட்சியம்'. இது தலைகால் புரியாமல் அவரால் ஆக்கப்பட்டுள்ளது.
பெ1110
1
அடுத்து அவர் மேற்குறிப்பிட்ட ஜெர்மன் கவிதையின் அற் புதத்தை எனக்கு விளக்கிய கடிதத்தை வாசகருக்குத் தந்திருக் கிறாரே- அதைப் பார்க்கலாம்: "அதிலே பிரஸ்தாப் கவிதை வன்முறை பற்றியதல்ல என்று கூறமுயற்சிக்கிறார். தாம் இக்கவி தையை படித்ததும் சம்பந்தா சம்பந்தமற்ற பெயர்கள் எல்லாம் எட்டுத்திக்கு பதினாறு கோணங்களில் எழும்பி நிற்கக் கண்டா ராம். கவிதையைப் படித்ததும், கவிதையில் இல்லாத எட்வர்ட் மங்க் (Edward Monk) சித்திரம், வியட்நாம் குழந்தையின் புகைப் படம் எல்லாம் பிரசன்னமாயினவாம். இவ்விடத்தில் அம்பலப் படுவது உண்மையில் அவருடைய அறைகுறை அறிவுதான். அவர் அடிக்கும் சுயதம்பட்டம் மொத்தத்தில் இதையே நிறை வேற்றி வந்திருக்கிறது. * இங்கேகூட, இதே கதிதான். எட்வர்ட் மங்க் என்ற ஓவியரின் குறிப்பிட்ட சித்திரம், மரப்பலகைச் செதுக் கலாகவும், ஓவியமாகவும் அவரால் படைக்கப்பட்டது. ஒரு ஆவி போன்ற உருவம் 'ஓ' வென்று கத்துவதும் அதன் ஒலி அலைகள் போன்ற தீற்றல்களும் உள்ள படைப்பு இது. மங்க்கின் இந்தப் படைப்பும் சரி, அவரது எந்தப் படைப்பும் சரி, போர், வன்முறை போன்றவற்றுடன், சம்பந்தம் அற்றது.. சுவீடன் நாட்டவரான மங்க் இளமையிலேயே உடல் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர். சுமா ரான வாழ்வுகூட அற்ற நோய், வறுமை ஆகிய சூழ் நிலையில் இருந்தவர். இதுவே அவரது ஓவியங்களில் பிரதிபலிப்பது. ஆனால் 'இந்த மங்க், அந்த கொங்க்' என்று வெ.சா. சத்தம் எழுப்பினால், 'அடேங்கப்பா; என்னா பேரெல்லாம் சொல்றாரு வாத்யாரு' என்று அவரது வழிபாட்டுக்காரர் பரவசமடைவர். இதைத் தாண்டிய தகவலோ இலக்கிய சுரணையோ வெ.சா.வின் விமர்சனங்களிலிருந்து பிறப்பதில்லை.
கார்ல் கிரலோவின் ஜெர்மன் கவிதையினகட விடியாம்மக்கில்
ஜெர்மன் கவிதையினது விஷயாம்சத்தில் குழந்தைகள் முதலிய நெகிழ்வான வாழ்வுகள்கூட இல்லை.
26ஆனால் வெ.சா. வுக்கு இந்த வயலன்ஸ் என்ற கவிதையைப் படித்ததும் அதெல்லாம் 'வந்து' விடுகிறது. தெருவில் கூச்சல் = போட்டதும் குழந்தைகளை எல்லாம் வீட்டிற்குள் கூப்பிட்டுக் கத. வை தாழிட்டுக் கொண்டு நிற்பது வேறு, ஒரு கவிதையில் உள்ள விபரங்களின் அடிப்படையில் மட்டுமே அதனை அளவிடுவது வேறு என்பதுகூடப் புரியவில்லை இவருக்கு. இவர் எனக்குத் தந்த விளக்கத்தினால் இவர் மீது எனக்கு பகை உண்டாயிற்றாம். இது எப்படி ஆகும்? இதில் எப்படி 'பகை' ஏற்பட முடியும்!?. இதற்கு அவரது அந்த விளக்கக் கடிதத்தில் என்ன சாட்சியம்? தானே மொழிபெயர்க்கத் திராணியற்ற வெ.சா. முதலில் கவிதை யை எனக்கு அனுப்பி மொழிபெயர்க்கச் சொல்கிறார். இந்த வி ப ர த்  ைத க் கட்டுரையில் சௌகரியமாக மழுப்பியுள்ளார் வெ.சா. ஏனெனில் 'சாட்சியத்துக்கு அது உதவாது. கவிதை 'வன்முறை' பற்றியது என்று கூறி மறுக்கிறேன். நான் கவிதை யை மொழிபெயர்க்க மறுத்த விபரமும் அவரிடமிருந்து வெளிவர வில்லை. பதிலாக கவிதை வன்முறை பற்றியதல்ல என்று அவர் விளக்க முயற்சித்தார். சரி! இது அவர் எனக்குச் 'சொல்லிக் கொடுத்தது', எவ்வளவோ விஷயங்களை அவர் 'சொல்லிக் கொடுத்தது' போல இதையும் சொல்லிக் கொடுத்தார்'. அப்படியானால் அந்த 'எவ்வளவோ' விஷயங்களைக் கேட்டு உருப்பட்டு போன நான் இதை மட்டும் கேட்டு ஏன் அவர் மீது பகை கொண்டேன்? 'பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்' என்ற சாமான்யமான சாதுர்யம்கூட அவரது சித்தத் திலிருந்து காலியாகி விட்டதோ என்று வியக்கலாம். சங்கதி
அதுவல்ல, சும்மா ஒரு பதிலடி குடு’ - டிஷங்! அவ்வளவு போதும். தலையற்ற முண்டங்கள், சந்நிதியில் நின்று ஆட
அது போதும்! - 4,
ப ட ட 'வன்முறை' பற்றி அவர் சொல்லிக் கொடுத்ததை நான் ஏற்றுக் கொண்டேனா? இந்த வெ.சா, சொல்லிக் கொடுத்த' ஒவ்வொன்றையும் நான் ஒன்று மறுத்துள்ளேன், அல்லது வேண்டிய மட்டுக்கும் சொல்லி விட்டுப் போகட்டும் என்று வாளா விருந்திருக்கிறேன். எப்போதாவது அவரிடத்தில் ஒரு உபயோக : மான அம்சம் பிறந்திருந்தால் அதை ஊக்குவித்திருக்கிறேன். இந்த 'வன்முறை' கவிதை விஷயத்தில் நடந்தது அதுதான், கவிதை பற்றி அவரது விளக்கத்தை நான் உள்ளூர ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அவர் எழுதி இப்போது பிரசுரித்துள்ள கடிதத்தில், ஏதோ கொஞ்ச நஞ்சமாவது ஒரு கவிதையைப் பற்றிப்பேசுவதற்கு முயற்சி செய்தாராகையால், 'நீ சொல்வது ரொம்பச் சரி! இதே மாதிரி சொல்லிக் கொண்டு வா' என்ற தோரணை - யில் நான் பதில் எழுதினேன். இந்த என் பதில் பற்றி அவரிட மிருந்து பேச்சில்லை. ஏனெனில் அவர் மீது நான் 'பகை' கொண்டதாக அவர் கூற அது வசதியளிக்காது. கவிதைக்கு அவர் தந்த விளக்கத்தை நான் ஒப்புக் கொள்ளவும் இல்லை, எனவே எனக்கு அவர் 'சொல்லிக் கொடுத்து ' நான் உருப்பட்ட வனல்லன். இதற்கான சாட்சியங்களுள் ஒன்று- அவர் விரும்பிய படி நான் பிரஸ்தாப கவிதையை மொழிபெயர்க்கவில்லை. இரண்டாவது சாட்சியம் - அவர் தந்த விளக்கத்தை மேலே தகர்த்துக் காட்டியுள்ள என் விமர்சனம். அவருடன் நேரிலும் கடிதத்திலும் நான் இவ்வளவு கடுமைகளை அபூர்வமாகவே " காட்டி வந்துள்ளேன். வெ.சா. உறுதியற்ற உள்குணங்கள் அற்ற வெறும் டம்மி இன்டலக்சுவல் என நான் அறிந்திருந்தமைதான் இதற்குக் காரணம்.
வனல்
இத்தகைய டம்மிகளே பெரும்பாலும் இந்திய அறிவியல் பாரம்பரியத்தின் முச்சந்தியில் நின்று 'குருமார்கள்' ஆகியிருக் கிறார்கள். ஆழ்ந்த மனிதர்கள் இவர்களை கண்டு விலகி, சரித் திரத்தில் தங்கள் சுவட்டைக்கூட விடாமல் மறைந்திருக்கிறார் கள். இவர்கள் தம்மை பிறரது வழிபாட்டிலிருந்தே மறைத்து மறைந்த புனிதர்களாவர். கெளரவவாதம் தன்னை பிறர் வழிபட வைப்பது. மெய்மை சார்ந்த ஆன்மீகம், anonymous ஆனது. (The highest virtue is anonymity- ஜே. கிருஷ்ண மூர்த்தி ) ஆழ்ந்த பேரருளாளர்களென ஒருவரல்ல, ஒன்றுக்கு மேற்பட்டவர் களை நான் அறிந்திருக்கிறேன். என்னுடைய தார்மீகமான கோபங்களும் அறிவார்த்த இயக்கமும் அவர்களுடைய இதழோர இள நகைக்கு முன்புதான் பணிந்து மெளனிக்கும்.
ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றி க. நா.சு., 'ஞானரத த்தில் எழுதியதற்காக, கடைசியாக வெளிவந்த 'யாத்ரா' இதழில் வெ.சா. அவர்மேல் பாய்ந்து ஆலிங்கனம் பண்ணியிருக்கிறார். (யாத்ரா-5523.3-86) ஏனோ ? 'எழுத்து' காலத்தில் வெ.சா. வுக்கு நான் எழுதியபோது அவர் தந்த பதில் இதோ: 'நமது இந்தியர் ஒருவர் வெளிநாடுகளில் போற்றப்படுகிறார் என்ற பெருமிதத்துடன் அவரது பேச்சைக் கேட்கப் போனேன். அவDLE
ரோ இந்திய மரபுகளைத் தாக்குகிறார். இதனால் அருவருப் படைந்து வந்து விட்டேன்.'' இப்போது அன்றைவிட பேருருவாக ஜே. கி .யின் வடிவம் எழுந்து நின்று வெ.சா.வைப் பயமுறுத்தி விட்டது. எனவே ஜே.கி. யின் மேல் த வேதகாலத்து ரிஷிக் கோழிகளைப் பிடிக்கும் கோணிப்பையைப் போட்டு அமுக்கு கிறார் வெ.சா, உண்மையில் இத்தகையக் கோணிப்பைகளை எல்லாம் பஸ் மீகரித்து விட்டு நிற்கும் வடிவம் கிருஷ்ணமூர்த்தி யுடையது. அவர் தம்மை எந்த மரபுக்கும் வசப்படுத்தக்கூடிய சிறுவிஷயத்துக்குகூட இடம்விட்டதில்லை. அவரை வேதகாலத்து ரிஷி என்று வெ.சா, கூறியுள்ளார், வேதகாலத்து ரிஷிகளும் அவர் களது இந்துப் பாரம்பரியமும் 'ஆன்மா உள்ளது' என்ற ஆன்ம வாதத்தைச் சார்ந்தவை.. ஜே.கி. ஆன்மா 'இல்லாதது' என்று கூறுகிறவர். அனாத்மவாதியான புத்தருடன் மட்டுமேதான் இவரை ஒப்பிடலாம், அப்படி ஒப்பிட்டால் வெ.சா.வினால் ஜே. கி.யை தமது கோணிப்பைக்குள் பிடிக்க முடியாமல் போய் விடும், இந்த சமாச்சாரம் - உண்மையில் வெ.சா.வுக்குத் தெரியாத புரியாத தத்துவ விபரம்.
TLDA
- இதில் ஒரு கொசுறு விபரமும் உண்டு. ஜே.கி. சென்னையில் ஆலமரம் ஒன்றின்கீழ் இருந்து உபன்யாசம் செய்ததாக வெ.சா. கூறுகிறார். இந்த ஆலமர மரபைக்கூட ஜே.கி, உதறியவர். அவர் சென்னையில் அடையாறு வசந்தவிஹாரில் அமர்ந்திருந்து பேசிய நிழல் ஒரு கருங்காலி மரத்தினுடையது. கிருஷ்ண' என்றால் கறுப்பு. - கருங்காலியும் கருப்பு. 'Black is beatiful!' இந்த அமெரிக்கக் கறுப்பர் கோஷம் வெ.சா.வுக்கு அலர்ஜியானதுவெ.சா.வின் தோலைவிடவும் சிவப்பான தோல்களை உடைய அமெரிக்கக் கறுப்பர்கள் கூட இக் கோஷத்தைப் போடுகிறார் கள் என்பதை கவனிக்க வேண்டும்,
( ஜே. கி. பற்றி, ருக்மணி தேவி அருண்டேலைப் பற்றி எல்லாம் க.நா.சு. எழுதிவிட்டார். அவருடன் நானும் சேர்த்தி என்று காட்டும் ஒரே நோக்கத்துடன்தான் வெ.சா, இவர்களைப்பற்றி எழுதியிருக்கிறார், ருக்மணிதேவியின் சேவை நுண்கலைகளைச் சார்ந்தது. ஜே.கி. யின் இயக்கம் ஆத்மார்த்தப் புரட்சியையும் உலகின் போர் நிலையையும் பற்றியது என்ற வேறுபாடு எதுவும் வெ.சா,வுக்குத் தெரியவில்லை, ஆனால் 'ருக்மணியின் பணி உடனடிப் பயனளித்துள்ளது; ஜே.கி. இயக்கம் பயனளிக்க வில்லை' என்றும் தொனிக்கிறார், குழந்தைகளைத் தண்டிக்கா
மலும் ஒரு குழந்தையை இன்னொன்றுடன் ஒப்பிடாமலும் போ திப்பது பற்றிய ஜே.கி.யின் கல்விமுறை புரட்சிகரமானது. இதன் அடிப்படையில் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா ஆகிய இடங் களில் கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன்காரர்கள் பள்ளிகளை நிறுவி அவருக்கு பின்பு இன்றும் தொடர்ந்து நடத்துகிறார்கள். ஜே. கி. பற்றி மேரி லுட்யன்ஸ் எழுதியுள்ள வரலாற்றின் இரண் டாம் பாகமான The years of fulfilment-ஐயும் புப்புல் ஜெயகர் எழுதிய கிருஷ்ணமூர்த்தி சரிதையையும் வெ.சா. படித்தாரானால் இந்திய எமர்ஜென்ஸியின் போது இந்திரா காந்தியைச் சந்தித்து தேர்தல் நடத்தும்படி அவரது மனதைத் திருப்பியவர் ஜே.கி. என்பதற்கான தகவலை அறிவார். ஆனால் வெ.சா.வுக்கு ஜே.கி.யின் இந்த ஆளுமைகளில் எவ்வித அக்கறையும் இல்லை. ஜே.கி.யை வேதகாலத்துக் கோழிகளுள் - ஒன்றாக்கி உரித்து மசாலாக் கொழுக்கட்டை பண்ணி தமது சநாதன வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்துவதுதான் வெ.சா.வின் ஒரே நோக்கம்.
2. முன்பு க.நா.சு., அசோகமித்திரன், ராமகிருஷ்ண ன், ஞானக் கூத்தன் ஆகியவர்களை தாக்கிய வெ.சா.பிறகு என்னை ஒழித்துக் கட்டுவதற்காகவே தமது முழு சக்தியையும் பிரயோகித்தார். முந்தியோர் வெ.சா.வின் தாக்குதல்களினால் சிதறலும் சிராய்ப் யும் அடைந்தனர். ஆனால் நான் வெ.சா.வைத் திருப்பித் தாக்கியவன். இது வெ.சா.வை நிர்மூலமாக்கியுள் ள தாக்குதல். 'யாத்ரா'வை நடத்தி அவரது கட்டுரைகளைப் பிரசுரித்தவர்கள் கூட அவரிடம் 'மாட்டிக் கொண்டோம்' என்ற மனோ நிலையில் - தான் அவரை பிரசுரித்தனர். இந்நிலையில், தம்மைத்தாமே தூக்கி நிறுத்த முடியாமல் பின்னாடி க. நா. சுப்ரமணியம்., எஸ்.வி. ராஜதுரை ஆகியவர்கள் மீது ஆதரவு தேடிச் சரிந்தவர் வெ.சா. இது மிக மிகப் பரிதாபமான காட்சி. இதனால் ருக்மணி, ஜே. கி. பெயர்களும் இழுபட்டன. 'அன்றைய வரட்சியிலிருந்து இன்றைய முயற்சிவரை' என்ற புத்தகத்திற்கு ராஜதுரை யிடம் பின்னுரை கேட்டு வாங்கிப் போடும் நிலையும் ஏற்பட்டது.
சரி, ஜே.கி.யைப் பற்றி க.நா.சு. அப்படி என்னதான் எழுதி விட்டார் என்று பார்த்தால் அது இன்னொரு கோலாகலம். உண்மையில் ஜே. கி.யை அவர் 'மட்டம் தட்ட' வே முயன்றுள் ளார். 'ஞானரதம்' கட்டுரையில் 'உனக்கு நீயே வழிகாட்டி; உன்னை நீயே விசாரித்து அறியவேண்டும்' என்பதுதான் ஜே.கி. யின் செய்தி என்று கூறும் க. நா.சு. இதனை ஹெர்மன் ஹெஸ் என்ற ஜெர்மன் ஆசிரியரிடமிருந்து ஜே.கி. எ டுத்துக் கொண்டதெரியவில்லை. அவருக்கு உண்மையில் எது பற்றியும் எதுவுமே தெரியாமல் போய்விட்டது என்பதற்கான சாட்சியங்களுள் இதுவும் ஒன்று.
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் அடிப்படைச் செய்தி இதுதான்: 'சத்யம் பாதையில்லா பிரதேசம். எந்த வழிமுறையும் மதமும் அதற்கு இட்டுச் செல்லாது.' இந்தக் கூற்றின் விரிவே அவரது நீண்டகால பிரசங்கங்களில் கிளை பரப்பியுள்ளது. 1979-ல் The core of the teachings என்ற பிரசுரத்தில் மிகச் சுருக்கமாக இது வே தமது செய்தியின் மையம் என ஜே.கி., கூறுகிறார். 'எழுத்து' காலத்திய 'புதுவானம்' கட்டுரையில், 1963-ல் நான் இதையே ஜே.கி.யின் செய்தியாகக் குறிப்பிட்டுள்ளேன், சத்திய நாட்டத்தில் ஈடுபடுவோரின் பிரக்ஞைக்கே இது புலனாகும். நிச்சயமாக 'வேதகாலத்து ரிஷி' என்று கோழி பிடிப்பவர்களுக்கு இதெல்லாம் வெகு தூரத்து சமாச்சாரங்கள்.
( வெங்கட் சாமிநாதனின் 'விமர்சனங்கள்' உண்மையில் விமர் சனங்களே அல்ல என்பதை இங்குள்ள விபரங்கள் மூலம் காண லாம். அவர் எந்த ஒரு கலைப்படைப்பையும் விமர்சித்து, அதன் மூலம் அதன் தரத்தையோ தரமின்மையையோ நிறுவியதில்லை. 'எழுத்து' பத்திரிகையில் மட்டும் தி. ஜானகிராமனைப் புகழ்ந் தும், ந. சிதம்பர சுப்ரமண்யனை குறைத்துக் காட்டியும் இரண்டு கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். மற்றபடி அவரது கட்டு ரைகள் 'தமிழில் ஒன்றுமில்லை' என்ற சமஸ்கிருத ஸ்தாபனக் கூக்குரலின் மாடர்ன் குரலாக மட்டுமே ஒலித்து வந்திருக்கிறது. எனவே அவருடைய இந்த ஒலியையும் நாம் கவனிக்க வேண்டும்.
* தமிழனிடம் ஒன்றுமில்லை. இளங்கோவும் கம்பனும் உந்நத நிகழ்ச்சிகள், இவர்களை விட்டால் தமிழனிடம் எதுவுமே கிடையாது''. என்பது வெட்கட்சாமிநாதனின் விமர்சனப் பிராந்தியம் முழுவதிலுமே' பரந்து கிடக்கும் பார்வை ஆகும்.
ஐரோப்பிய இலக்கியத்துக்கும் கலாச்சாரத்துக்கும் கருவூல மாக இருந்தது கிரேக்க உலகம். இந்த உலகத்தைப் பற்றிய ஒரு சிம்பிள் தகவலை நாம் இங்கு பார்ப்போம்:
கிரேக்க காவிய இலக்கிய சரித்திரம் கிறிஸ்துவுக்கு முன் எண்ணூறு ஆண்டுகளாக நிகழ்ந்து, தொடர்ந்து கி.பி. 650 வரை நிலவி இருக்கிறது. எழுதப்பட்ட காவியங்கள். கதைகள்
31யாவும் கிரேக்க இனக் குழுக் கடவுள்களையும் வீர புருஷர்களை யும் பற்றியவை. இவற்றுள் ஹோமர் என்ற ஆசிரியரால் படைக்கப்பட்ட 'இலியாத்', 'ஒடிஸ்ஸீ' என்ற இரண்டு காவி யங்கள் மட்டும்தான் இலக்கிய ரீதியாக உந்நதமானவை. மற் றய படைப்பு எதுவும் இவற்றுக்கு சமமாகக் கூட வரவில்லை. மற்றவை நூற்றுக்கும் மேற்பட்ட பெருங்காப்பியங்கள் ஆகும். இவற்றுள், பிற்காலத்தியவை தவிர, மற்றயவை போன இடம் தெரியாமல் மறைந்து விட்டன. ஒவ்வொன்றிலும் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரிகள்தான் எஞ்சி இருக் கின்றன. ஹோமருக்குப் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து ஜூலியஸ் சீஸரின் காலத்தில் வெர் ஜில் தமது 'ஏனீட்' காவியத் தைப் படைக்கிறார். ஆனால் இதற்காக, ஐரோப்பாவின் எந்த விமர்சகனும் '' கிரேக்க கலாச்சார சரித்திரத்தில் ஒன்றுமில்லை. ஹோமரும் வெர்ஜிலும் உந்நத நிகழ்ச்சிகள், இவர்களை விட் டால், கிரேக்கனிடம் எதுவுமே கிடையாது'' என்று பேத்திக் கொண்டிருப்பதில்லை.
இவ்வளவுக்கும் கிரீக், தமிழ் - இரண்டு மொழிகளிலும் இன்றுவரை படைப்பாளிகள் இருந்து கொண்டுதான் இருக்கி றார்கள். ஆங்கிலத்தின் = வழியாக கிரீக் மொழியிலிருந்து நிக்கோஸ் கஸான் ஸாக்கிஸ் என்ற பெரிய கவி தெரிய வரு கிறார். இதேபோல் தமிழில் புதுமைப்பித்தனைக் குறிப்பிட வேண்டும். கிரீக் மொழியைவிடப் பழைமையானது தமிழ். இவ்விடத்தில் வெங்கட்சாமிநாதன் தமிழ் பற்றி ஓயாமல் எழுப் பிய துவேஷக் கூச்சலுக்குப் பதிலாக, சிகாகோ யுனிவர்ஸிட்டி மின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவரும் ஆழ்வார் பாசுரங்கள், குறுந்தொகை ஆகியவற்றிலிருந்து தேர்ந்த கவிதை களை ஆங்கிலப் படுத்தியவருமான ஏ.கே. ராமாநுஜனைத் தான் பேச வைக்கவேண்டும் : -
இந்தியாவின் இரண்டு பேரிலக்கிய (கிளாஸிக்கல்) மொழிகளுள் ஒன்றான தமிழ் மட்டும்தான் சமகால இந்தியாவில் ஒரு பேரிலக்கியத் தொடர்ச்சியோடு இன்றும் சுவாதீனத் தொடர்பு கொண்டு இயக்கும் ஒரே மொழி''.
(After word: "The Interior Land scape")
இந்தத் தொடர்பைத் தாங்க மாட்டாமல். இந்த ஜீவித சக் தியை சகித்துக்கொள்ள முடியாமல், இந்த சக்தியின் விளைவாக
32தட்டி தகுதியற்ற பதவிகளைத் தாங்கள் பெறமுடியாமல் திரும் பத் திரும்ப வெ.சா. போன்ற வர்ணாஸ்ரம தர்மவாதிகள் எழுப் பும் கூச்சல்தான் தமிழில் என்ன, இருக்கிறது?'' இதே ஆசாமி இந்தத் தொன்மை வாய்ந்த கிளாஸிக்கல் மொழியில் இதுவரை கேளாத குரலாகக் கேட்டது எவர் குரலை? அவரிடம் போய் கெஞ்சிக் கூத்தாடிய ஒரு ஞாவன்னாக் கூத்தாடியின் சமூக வக்ரங்களையும் துவேஷங்களையும் தான். ' 'தமிழ்க் கூச்சலே தவளைக் கூச்சல் - ஆயிரம் வருஷமாகியும் அது தொலைய லையே'' என்றும், 'பார்ப்பன ன் தின்றெரிந்த எச்சல் இலைக் காக தெரு நாய்கள் குறைக்கின்றன, கடிபடுகின்றன'' என்றும், எவ்வித சரித்திர ஞானமும் அற்று எழுதும் ஒரு சாக்கடை புத்தி யின் குரல் பற்றி ஸிந்து, மகத, முகலாய இந்தியாக்களின் சரித்திர விபர அடிப்படையில் இது எவ்வளவு அபத்தம் என்று 'கொல்லிப்பாவை' பத்திரிகையில் 'கருக்களம்' கட்டுரையில் நான் காட்டி இருக்கிறேன். ஆனால், இத்தகைய விமர்சனபூர்வ மான பார்வை எதுவும் வர்ணாஸ்ரம தர்மவாதிகளின் கேந்திரங் களினுள் நுழைந்துவிட முடியாது. இதற்குக் காரணம் வெங்கட் சாமிநாதன் போன்றோர் சமய சந்தர்ப்ப அடிப்படையில் திரும் பத் திரும்ப எழுப்பும் துவேஷக் கூச்சல்கள்! இந்த துவேஷம்தான் வெ.சா.வையும் ஞா.கூ.வையும் இணைப்பது. இடையில் என்னி 'டம் அபிப்ராய இரவல் பெற்று ஞா.கூ.வை 'அட்டாக்' பண்ணி னாரே - அது எப்படி என்றால்: வர்ணாஸ்ரமம், இனவாதம், வகுப்புவாதம், கட்சியம் முதலிய எல்லா வெறிகளுக்கும் வசப் படுகிறவர்கள் தகுதியில்லாதவர்கள்; இருந்தும் வர்ண, இன, வகுப்பு, கட்சி அடிப்படையில் " நானே ஃபஸ்ட்' என்ற மனோ பாவத்தைக் கொண்டவர்கள். இத்தகைய மனோபாவம் கொண்டவர்களுக்கு சரித்திர உணர்வு, உள்ளதை உள்ளபடி காணும் பாரபட்சமின்மை, கலைப் பொருளில் திளைக்கும் உணர்வு நுட்பம் எதுவும் இராது. ஏனெனில் நானே ஃபஸ்ட்'. இந்த அடிப்படையில், வெங்கட்சாமிநாதன், ஞானக் கூத்தன், தமிழவன், ஜெயமோகன் போன்ற யாவரும் ஒரே வர்ணம், ஒரே இனம், ஒரே. வகுப்பு, ஒரே கட்சி. இவர்களுள் 'நானே ஃபஸ்ட்' என்ற திமிர் எவருக்கு மிக மூர்க்கமாக முறுக் கியபடி நிற்கிறதோ அவரை இவரது ஆள்களே வழிபட வேண் டும், முகாலோபனம் பண்ண வேண்டும். இந்த முகாலோப னத்தை தமக்கு பண்ணியதற்காக மட்டுமே ஞா.கூ.வுக்கு விமர் சனக் கடாட்சம் தந்தார் வெ.சா. இதையே தொடர்ந்து பண்ணு வதை விட்டு '' நானே ஃபஸ்ட்' டிஸத்தின் விதிக்கு ஆட்பட்டு,வெ.சா.வின் காலை வாரி விடுவதற்காக ஞா.கூ. சம்பந்தப்பட் டிருந்த கசடதபற, வெ.சா.வுக்கு வாய்ப்பூட்டுப் போட்டதும் வெ.சா.வின் 'நானே ஃபஸ்ட்' டிஸம் ஞா.கூ.வுக்கு எதிர் முனை ஆகிறது. இதுவா விமர்சன இயக்கம்? -
இவ்வளவு தூரம் அம்பலப்பட்டு நிற்கிறவர்களின் பிரதிமை களுக்கு பிரசுரத் தகுதியைக்கூட ஒரு சுவாதீனமுள்ள 'சூழல்' தராது. 1 ஒன்றைக் கவனிக்க வேண்டும் - இவ்வளவு அவலங் களையும் கொண்ட கசடதபற' வில் சில குறிப்பான் இதழ்களை யும் அதைவிட முக்கியமாக, பிரேமிளை குரங்கு, கிறுக்கு என்று வெ.சா.வும் அவருக்கு பக்கவாத்தியமாக, சுந்தர ராமசாமி, ந. முத்துசாமி ஆகியோரும் அர்ச்சனை செய்த 'யாத்ரா' இதழ் களை யும் 'வேர்கள்'ளின் மு. ராமலிங்கம் போன்றவர்கள் வெளியே காட்டவே வெட்கப்படுகின்றனராம். இலக்கிய இயக் கம், விமர்சன இயக்கம் என்றால் பழைய பக்கங்கள் பொக்கி ஷங்களாகிவிடும். வெ.சா. சம்பந்தப்பட்ட விவகாரங்கள் சாக் கடைக் குழிகளாகத்தான் ஆகி இருக்கின்றன. ஆகி, காலத் தின் அங்கீகாரத்தை எதிர் நோக்கி இருக்கின்றனவாம். அன்று அவற்றை பிரசுரித்த மணியும் ஜெயபாலனும் அன்றே போகப் போக ''வெ.சா.விடம் மாட்டிக்கொண்டோம்'' என்ற நிலை யைத்தான் அடைந்தனர் என்பதை மீண்டும் இங்கே குறிப் பிடுகிறேன்.
''நானே ஃபஸ்ட்' என்ற மனப்பிரமையைப் பேணிக் கொண்டிருப்பவரால் வாளாவிருப்பவர்களையும், பின்வாங்கிப் போகிறவர்களை யும் anonymous ஆக இருக்க விரும்புகிறவர் களையும் அணுவளவுகூடப் புரிந்து கொள்ள முடியாது. மிகத் தீவிரமாக, ஆழ்ந்த நுட்பமான செறிவான பண்புடன் செயல்படு கிறவர்களின் லட்சணம் இது என்று புரியாது. இதனாலேயே விட்டல் ராவ் தொகுப்பு நூலில் என் கதை ஏதும் ஏன் இடம் பெறவில்லை என்பதை விசாரித்துக் கூட அறியாமல், தமது 'நானே ஃபஸ்ட்' 'டிஸ அடிப்படையில் நானும் அதற்காக தம் மைப்போல் முறுக்கியடிப்பேன் என்று நினைத்து எதையோ பிணாத்தி இருக்கிறார் வெ.சா. 'சுபமங்களா' இதழ் மதிப்புரை யில். அத்தகைய தொகுப்புகளிலோ, சுபமங்களா போன்ற ஆழ மற்ற இலக்கிய விளம்பரப் பத்திரிகையிலோ என்னை எவரும் சந்திக்க முடியாது. இன்றைய 'சிறு பத்திரிக்கைகளில் சந்திக்க முடிவதே துர்லபம்!ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய ஜுராஸிக் காலத்து மகாஓணான்களுக்கு தலையில் ஒரு மூளை, வால் பகுதியை இயக்க இடுப்பின் கீழ் இன்னொரு மூளை இருந்ததாம். அதேபோல் ஜாதீயத்தின் தலையில் வர்ணாஸ்ரம தர்மம் என்று ஒரு மூளை, அதன் இனவெறி என்ற வாலை இயக்க இடுப்பின் கீழ் விமர்ச னாஸ்ரமம் என்ற இன்னொரு மூளை. இந்த மூளையின் இயக் கமே வெங்கட்சாமிநாதன் என்ற வாலாக ஆடிக்கொண்டிருக் "கிறது. இந்த மூளையை யூஸ் பண்ணினால், மூளைகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கே இடமிருக்காது. வாலைப் பிடித்து உருவு கிறவர்களுக்கு ஆசீர்வாதமும், மற்றவர்களுக்கு வாலுக்கு அடியி லிருந்து அமேத்யப் பிரஸாதமும்தான் கிடைக்கும்; ஆராய்ச்சி கிடைக்காது; வராது. 1
21 )
பின்னுரை
:
4. இந்தியாவின் சாபக்கேடாக மாறிய வர்ணாஸ்ரமம், அதன் சமூகச் சீரழிவு நிலையான ஜாதீயம் ஆகியவற்றின் பாற்பட்ட மனோபாவங்களே விமர்சனாஸ்ரமம் பண்ணுகின்றன. இங்கே யும் சரி, வேறு இடங்களிலும் சரி, தகுதியற்றவர்கள் தகுதி பெறச் செய்யும் தந்திரங்களைக் குறிப்பிடவே 'பார்ப்பனீயம்' 'விமர்சனாஸ்ரமம்' என்ற பதங்களை உபயோகிக்கிறேன்.
பார்ப்பனன் என்பதற்கு பழந் தமிழில் 'இருபிறப்பாளன்' என்றும் சமஸ்கிருதத்தில் 'துவிஜன்மி' என்றும் பதங்கள் உள் , 'பார்ப்பு' என்றால் குட்டி என்றும், இளையோன் என்றும் இதன் வழியில் இரண்டாம் தரத்தவன் என்று 'பார்ப்பனன்', பொருள் பெறலாம் என்றும் கூறுகின்றனர் அறிஞர்கள். ஆயி னும் '* இருபிறப்பாளன்.'' என்றே பழந் தமிழ் நூல்களில் * 'பார்ப்பனன்'' தனிமைப்படுத்தப் படுவதனால் 'பறவை' என்ற பொருளே பொருந்துகிறது. முதலில் முட்டையாகவும் பிறகு முட்டைக்குள்ளிருந்து குஞ்சாகவும், பறவை பிறப்பதால் இரு பிறப்பாளரே பார்ப்பனர் எனவும் குறிப்பிடப்பட்டனர். ''திரி செக்கர் வார்சடை, பால் புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலம்'' (மூன்று சுற்றுக் கொண்ட சிவந்த ஜடையும் பால்
போன்ற வெண்பற்களும் கொண்ட பார்ப்பன வடிவம்) என்று இளங்கோ குறிப்பிடுவது ஐரோப்பிய இன அடையாளங்களுள் ஒன்றான சிவந்த (செக்கர்) தலைமயிரைக் காட்டுவதனால் இது இனரீதியான தனித் தன்மையையும் குறிப்பிடுவதாகும். இத்த கைய தனித் தன்மைகள் எந்தக் காலத்திலும் எங்கும் இனப் பரிசுத்தவாதமாகப் பேணப்பட்டதுமில்லை, பேணப்படவும் முடி யாது. இளங்கோவின் காலத்தில் தென்பட்ட இந்த அடையா ளம் இன்று இனரீதியாக 'பார்ப்பனர்' என்று குறிப்பிடப்படுகிற பிராமணரிடத்தில் இல்லை என்பது இதனை நிரூபிக்கும். - இனரீதியாக இன்றும் ஐரோப்பிய அமைப்புகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தின் சித்பாவ பிராமணர்கள் போன்ற எல்லாரும் இனவாதிகள் என்றும் கூற முடியாது. ஏனெனில் இந்த வகுப்பைச் சேர்ந்த மனோஹர் ஓக் எனது ஆத்ம சகோதரர் எனுமளவுக்கு நண்பர். ( நண்பர் என்ற பதம் இங்கே பல வீனமானது). இவரை நான் அறிய வந்தது இவரது இன்னொரு ஆத்ம சகோதரர் ஆன காத்ரி யூனுஸ் அப்துல்லா பேடா மூல மாகும். பம்பாயில் தாதர் - பகுதியில் அதிசயமான விதத்தில் மனோஹரை நான் சந்தித்தபோது, தமது பூர்வீகம், அம்பேத் கரின் பிரசித்தி பெற்ற லைப்ரரி உள்ள ஊர் என்றார். அவர் அம்பேத்கர் மீது பெருமதிப்பு வைத்திருந்தமை அவரது பேச்சில் தெரிந்தது. இவ்வுளவும் தகுதி சார்ந்த ஒரு உறவையும் ஈடு பாட்டையும் கொண்ட பேர்வழிகளைப் பற்றிய விபரங்களாகும். தகுதி எதுவும் அற்று இனத்தால், ஜாதியால், கட்சியால் தங்களை தகுதியாளர்களாகக் காட்டுகிறவர்களே என்னால், பார்ப்பனீயர்களாக இனம் காட்டப்பட்டு வருகின்றனர்.
உண்மையான மோதல் ஜாதி களிடையே அல்ல. தகுதிக் கும் தகுதியின்மைக்கும் இடையே தான், எல்லாவிதமான வகுப்பு வாத மோதல்களும் நடந்து வந்திருக்கின்றன. ஆரம்பத்தில் 'தகுதி' என்பதே 'வர்ண' என்ற பதத்தின் பொருளாகும், இது தகுதியற்றவர்களினால் இனவாதமான வகுப்புவாதமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வகுப்புவாதிகளுக்கு இந்தியாவின் ஆரம்ப கர்த்தா 'மனு'. மோழையனாக இருந்தாலும் பிரா மணனாகப் பிறந்தால் தகுதியாளனாகிறான் என்று விதிக்கு மளவுக்குப் போனவர் ஆவர். இந்த விதியின் பின்னணியில் தகுதி சம்பந்தமான சமூகக் கிளர்ச்சிகள் (புத்தரின் இயக்கம் " இதற்கு ஒரு சரித்திர சாட்சியம்) பதிவு பெறாத ஊகங்களாக நிழலாடுகின்றன," 1, 2இன்றையத் தமிழிலக்கிய சரித்திரத்திங்கூட மோதல் ஏற் பட்டது தகுதிக்கும் தகுதியின்மைக்கும் இடையேதான். பார்ப்ப னீயரான வெங்கட் சாமிநாதனுக்கும் பார்ப்பனீயர்களான கசடதபற கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தகுதி பற்றிய ஒன்றாகும். மதிப்பீடு பற்றிய ஒன்றாகும். அந்த மோதல் நடந்த 1969 - 1975 காலகட்டத்தில் மதிப்பீட்டுச் செம்மை சார்ந்தவராகவே வெங்கட்சாமிநாதன் கணிக்கப்பட லாகும். கசடதபறக்களோ மதிப்பீட்டியலையே ஏய்க்க முயன் றவர்களாவர். 1 இப்படி எத்தனையோ நுட்ப விபரங்களை நான் ஏற்கெனவே லயம் பேட்டியில் தந்திருக்கிறேன், பிந்திய காலத்து வெங்கட் சாமிநாதனின் க்ஷணங்களே மேலுள்ள கட்டு
ரையில் விமர்சனாஸ்ரமம் என்று இனம் காட்டப்படுகின்றன,
'விமர்சனாஸ்ரமம்' என்ற பதம் கும்பலுக்காக மதிப்பீட்டைச் சீரழிக்கிற எவருக்கும் பொருந்தும். அவர்கள் ஜாதீயவாதி களாயினும், பார்ப்பனராயினும், திராவிடீயராயினும், வைதீக ராயினும், கட்சியராயினும், நம்பஸெட்டிஸ்டுகளாயினும் இது பொருந்தும்,
- 1: புக ' 'அ நயந்த
அநுபந்தம்
ம் ,
11 1976 ஆகஸ்டில் ஆரம்பிக்கப்பட்ட * யாத்ரா' வின் முதலி தழில் 1 * ந. முத்துசாமியின் 4 புஞ்சை ' என்ற க ட் டு வ ர யி ல் *'ஒடிஸ்ஸி'' என்ற கிரேக்க காவிய நாயகனான ஒடிஸ்ஸியசு க்கு யு லி ஸ் ஸ் பெயரை உபயோகித்து அந்த க ப வி ய ம் , தந்தையைத் தேடுவது பற்றியது என்று வெங்கட்சாமிநாதன் , எழுதினார். இது சம்பந்தமான தவறுகளை டேவிட் சந்ரசேகரும் நானும் யாத்ராவுக்கு எழுதிச் சுட்டிக்காட்டி யபோது பதில் தந்த வெங்கட்சாமிநாதன் மேலும் தவறுகளை இழைத்தார். அவை பற்றி நான் எழுதிய பின்வரும் கடிதம் யாத்ராவினால் நிராகரிக் கப்பட்டது. சு ம எ ஏ 20 வருஷங்களின் பின்பு இது இங்கே தரப்படுகிறது. கன்: 14 ம் ம்,'
' - பக கிரகம் - 1 - 6
'', ஒரு இலக்கியப் படைப்பின் ஆசிரியர் என்ன கருப்பொருளி னால் அக்கறையினால் உந்தப்பட்டார் என்பது பொருள் வியாக்
27யானத்துக்கு மேல் உபயோகப்படாத விபரம். அந்த அக்கறை அவரது தரத்தை விமர்சிக்கும் கடினமான வேலையின் தளத்துக்கு உபயோகமாகாது. - அப்பனைத்  ேத டு வ து என்ற அக்கறை பொருளம்சம். சம்பந்தப்பட்டது. 'மக்களை உய்விக்க' என்ப பதிலிருந்து " இறைவனடி பணிய'' என்பது வரை எத்தனையோ வித அக்கறைகள் எத்தனையோ வகைகளில் - தரங்களில் தர, மின்மைகளில் எழுதியவர்களுக்கு உண்டு. இந்த அக்கறைகள் அவர்களது தரத்தை நிர்ணயித்ததில்லை . நி ர் ண யி த் த ா ல் '' அப்பனைப் பாடும் வாயால். பழனியாண்டி சுப்பனைப் பாடு வேனோ'' என்ற பாடலின் மு ன் ன ா ல் நமது வெங்கட்சாமி நாதன் , எப்போதோ  ேதா ப் பு க் க ர ண ம்  ேப ா ட் டி ரு க் க வேண்டியவர்.! - 22 - உம ம ட ட - 3
அவர் யாத்ரா முதலிதழில் ( ந. முத்துசாமியின் ' புஞ்சை ' கட்டுரை) கண்டுபிடித்திருக்கும் உலக இலக்கிய சிகரம் மேற்படி பாடலின் அக்கறை எந்த சுண்டுவிரல் அளவு உயரமோ அந்த அளவுக்கே அவரது அளவுகோலின் வழியிலே சுருங்கிவிடுகிறது. ஏனெனில், அக்கறை எதுவாக இருந்தாலும் அது இலக்கியத் தன்மையை அடைந்த விதம் எத்தகையது அல்லது அடையாமல் தோற்றது எ வ வி த ம் என்ற மிகக் கடினமான வேலையை அவரால் செய்ய இயலவில்லை. செய்யக்கூடியவர் என அவரைப் பற்றி நான் நினைத்திருந்ததைக் கூட முறியடித்துவிட்டார். அவர் செய்திருப்பதுதான் என்ன ? சம்பந்தா சம்பந்தமில்லாத பிற நூல் விபரங்களை எல்லாம் இழுத்து வந்து இதில் உள்ளது தானே அ தி லு ம் இருக்கு என்று கேட்கிறார். - பிரச்னைக்கு இவர் தரும். இவரது சொந்தச் சரக்கு, ஒப்புமை பேசும் மேற்படி வாக்கியம் ஒன்றுதான்." வெ. சா. தரும் பிற நூல் விபரங்கள் அந்த பிற நூல்களைப் பொறுத்தவரை பொ ரு ந் த ல் ந ம் . பொருந்தாமல் கூடப் போகலாம். பிரச்னைக்குரியவை அந்த நூல்களல்ல. பிரச்னைக்குரிய ஒன்றன் இலக்கிய - நியாயத்துக்கு அவர் தரும் பிற நூல் விபரங்கள் உதவாதவை. பிரச்னைக் குரிய நூலின் மூலம் வெ, சா. எதை உ ண ர் ந் த ா ர் என்று கூறுவதே விமர்சனமாகும். இலக்கிய ரீதியான ரஸனையின் கிளர்ச்சி அது. நி ற் க .-" யுலிஸஸ், ஒடிஸ்ஸியஸ் என்ற (ஒடிஸ்ஸி - கிரேக்க காவியத்தினது) நாயகனுக்கு பொது வழக்கு'' என்பது, அவர் பதில். - ' ஒடிஸ்ஸி காவியத்தின் கருப் பொருளையே அறியாமல் அது அப்பனைத்  ேத டு வ து பற்றியது என்கிறார் '' என்ற என் குற்றச் , சாட்டுக்கு ,
IIIT
|
மேலுள்ளது அவர் தரும் பதில். ஒடிஸ்ஸியஸ் என்ற கிரேக்கப் பெயர் கிரேக்க கலாச்சாரத்தை சுவீகரித்த ரோம நாகரீகத்தில் யுலிஸஸ் ஆயிற்று. சி. (ஜீயுஸ், 1 ஹீரா மு த ற்  ெக ா ண் டு ஜூப்பிட்டர், ஜூனோ என இப்படி, பெயர்கள் இந்த சுவீகரிப்பில் மாற்றமடைந்தன). -, ரோமின் லத்தீன் பா தி ப் பு ம லி ந் த இன்றைய ஐரோப்பிய வழக்கில், யுலிஸஸ் தான் நன்கு தெரிய வந்த பெயர்.. என்றால்தான் நிலமை விளக்கமாகும். ஆனால் இது ' கிரேக்க மாகாவியத்தின் பெயரே ஒரு பொது வழக்கின் படி யுலிஸஸ்தான் '' என ஆக்கிவிடாது. பட வால்மீகியினது சமஸ்கிருத மாகாவியத்தின் பொது வழக்கு கம்பராமாயணம் என்று கூறுவதுக்கு ச ம ம ா ன அபத்தம் இது. உண்மையில், நமது உலக இலக்கியப் பெட்டகமான வெங்கட் சாமிநாதனின் இத்தகைய குணம் 'பாலையும் வாழையும்' நூலில் ஒரு இடத்தில் நான் சம்பந்தப்பட்ட அளவில் வெளிப்படுகிறது. - அவரிடம் லூயி - பெர்டினான்ட் செலின் (Louis - Ferdinand Celine) என்ற பிரெஞ்சு நாவலாசிரியரைப் பற்றி நான் நேரில் பேசி இருக்கி றேன். இவனது முக்யமான Journey to the end of the night நாவலை அவரிடம் படிக்கும்படி கொடுத்துத் தூண்டினேன். அன்பர் எ ன் னி ட மி ரு ந் து அ  ைத வாங்கிக் கொள்ளக்கூட இல்லை ... அ.மி., இ.பா., ஞா.கூ., க. நா. சு. முதலியோரின் சுவைக்குதவாத வண்ட வாளங்களினால்தான் அன்பர் அப்போது பீடிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் படித்திராத செலின் இந்த களேபரத்தினூடே அவருக்கு ஒரு உபயோககரமான பெயராக மட்டும் கிடைத்திருக்கிறது. 'என்னைப் பற்றி' (அதா வது, அவரைப் பற்றி) என்ற அவரது விகாரமான கட்டுரைகளுள் ஒன்றில் ('பாலையும் வாழையும்' நூலின் முடிவில்) இது இடம் பெற்றிருக்கிறது. அதுவும் அந்த பெயர் பெற்றுள்ள வடிவம் என்ன ? Ferdinand De Celine, ஆசிரியனின் பெயரைக் கூட சரிவரத் தெரிந்து கொள்ளாமல் அவனைப் பற்றி எல்லாந் தெரிந்த தொனியில் (வெ. சா. வின் இந்த தொனி அவரது கட்டுரைகளின் அலங்கோல் அம்சம் ஆகும்) எழுதுவது போலித் தனமாகும். இது வெங்கட் சாமிநாதனின் பிரஸ்தாப தொனிக்குப் பின்னிற்கும் அவரது நியாயமான பார்வைகள் சிலவற்றைக் கூட வலுவிழக்கச் செய்வதோடு அவரே தமது அறிவின் ' 'விசால்'' -த்தைக் காட்ட வேண்டி வந்து சம்பந்தா சம்பந்தமில்லாத விபரங்களை எல்லாம் அச்சேற்றி அறுக்கும் நிலையும் உருவாகி றது. மொத்தத்தில் இப்போது, யாத்ராவிலும் இது நடந்திருக் கிறது. ஒடிஸ்ஸு விஷயத்தில் வெளுத்த சாயத்தை பழைய படி ஏற்றச் செய்த முயற்சியும் நிறைவேறவில்லை. பெயராக
கிடைத்துள்ளது ம ''ஒரு இடையறாத - அலைச்சல், எல்லை யற்ற யாத்ரை'' என்ற பொருள் தான். இந்த காவியத்தில் ஆரம்பப் பகுதியைப் பற்றி மட்டும் கேள்வி வாயிலாகவே ஏதோ வெங்கட் சாமிநாதன் அறிந்திருக்கிறார் என்பதுதான் இப்போதும் அவர் தந்துள்ள விளக்கத்தில் தெரிவது. ஒடிஸ்ஸியஸின் கப்பல் மாலுமிகள், ஹீலியஸ் (அப்போலோ) என்ற சூரியக் கடவுளின் ஆடுகளை உணவாகக் கொண்டமையினால் ஏற்பட்ட சாபம் தான் ஒடிஸ்ஸியசின் கப்பலை திசை தடுமாற வைத்து அலைச் சலை ஏற்படுத்துகிறது. மற்ற வீரர்கள் ட்ராய் யுத்தத்திலிருந்து திரும்பியும் தனது தந்தையான ஒடிஸ்ஸியஸ் திரும்பாதது கண்டு மகன் டெலிமாக்கஸ் கிளம்பிப் போய் ஒரு இடத்தில் விசாரிக்கிறான். இதைத்தான் '' அப்பனைத் தேடிய கதை'' யாக ஒடிஸ்ஸு காவியத்தின் மீதே ஏற்றுகிறார் வெங்கட் சாமி நாதன். டெலிமாக்கசின் விசாரிப்பு 'தேடல்'' அல்ல. அவன் தேடி அலையவுமில்லை. ஓடிஸ்ஸியில் வரும் உபகதைகளுள் ஒன்றே அவனது விசாரிப்பு. ஒடிஸ்ஸியின் காவியப் பொருள் இது அல்ல. உக * , ,
, , , , ,
இந்த விபரம் காவியத்தின் ஆரம்பத்திலே வரும், எத்தனை யோ சிறு விபரங்களுள் ஒன்று. தகப்பனைத் தேடுவதுதான் காவியத்தின் முழு நோக்கமே " என்று " வெங்கட் சாமிநாதன் சாதிக்க முனைவது அவரது அறியாமை எத்தகைய அடக்க மின் மையின் வெறியில் மயங்கி எத்தகைய ஆழமற்ற வாசகர்கள் மீது தம்மை விசுவரூபமாகக் காட்ட முனைகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. இதுதான் போலித்தனத்தின் அடிப்படை. இத்தகைய போலி இதர போலிகளைத்தான் ஊக்குவிக்கும்.

165 பாடகர் -
-
-
- -
40விமர்சனாஸ்ரமம்
பிரேமிள்
வெங்கட் சாமிநாதனின் விமர்சன கருத்துலகம் பற்றிய கணிப்பாக, ' விமர்சனாஸ்ரமம்' விளங்குகிறது. 'எழுத்து' பத்திரிகையில் வெ.சா. வின் ஆரம்பப் பிரவேசம், இடைப்பட்ட காலத்தின் தர்மாவேசம், பிற சிறு பத்திரிகைகளிலும் "யாத்ரா' இதழ்களிலும் தொடர்ச்சியாக அவர் செய்து வந்த கருத்துலக மோசடிகள், அவரது விமர்சன எழுத்தின் இயக்கப் பின்னணி, ஆழமற்ற தன்மை, தவறான திசை யோட்டம், க்ஷணங்கள், கடைசியாக நீண்ட இடை வேளைக்குப்பின் வெளிவந்த 'சுபமங்களா' (அக். '95) பேட்டியின் அபத்தம் போன்ற அனைத்து விஷயங் களும் 'விமர்சனாஸ்ரமத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
ல ய ம் வெளி யீ டு