தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, May 12, 2016

இரண்டு பெண்கள். - வண்ணநிலவன்

இரண்டு பெண்கள்.
-வண்ணநிலவன்
https://archive.org/download/orr-7037_Irandu-Pengal-Vannanilavan/orr-7037_Irandu-Pengal-Vannanilavan.pdf
இருபது வருஷமாகியும் அவ்வளவாக ஊர் மாறாமலே இருந்தது. அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஒன்பதாம் நம்பர் பஸ் அவளை இறக்கிவிட்டுச்சென்றுவிட்டது. இத்தனை வருஷத்தில் அந்த பஸ் நம்பர் கூட மாறவில்லை. திருநெல்வேலி ஜங்ஷனில் ராஜவல்லிபுரம் பஸ்ஸைப் பற்றி, கூட்டமாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்த கண்டக்டர், டிரைவர்களிடம் விசாரித்தபோது 'ஒன்பதாம் நம்பர் பஸ்ஸில் போங்கம்மாஎன்று ஏக காலத்தில் இரண்டு மூன்று பேர் சொன்னார்கள். அப்போதுதான் தெரிந்தது ராஜவல்லிபுரத்து பஸ் நம்பர் மாறவில்லை என்பது. ஆனால் பஸ் ஸ்டாண்ட் ரொம்ப விரிவடைந்திருந்தது. எங்கே பார்த்தாலும் பஸ்கள் கூட்டம் முன்பெல்லாம் பேண்ட் போட்ட ஆண்கள் எப்போதாவதுதான் தென்படுவார்கள். ஆண்களின் உடைகள் மாறியிருந்தாலும் பேச்சு மாறவில்லை. நல்ல வேளையாக இன்னும் பெண்கள் சால்வார் கம்மீஸ் அணிய ஆரம்பிக்கவில்லை. மணி பத்தாகிக் கொண்டிருந்தது என்றாலும் வெயில் அவ்வளவு கடுமையாக இல்லை. பஸ் தச்சநல்லூர் கேட்டைத் தாண்டியவுடன் மனம், கடந்த நாட்களில் உழல ஆரம்பித்தது. அதே பாதையில், இதே ஒன்பதாம் நம்பர் பஸ்ஸில் எத்தனை முறை ரங்கத்தானுடன் பாளையங்கோட்டை காலேஜூக்குப் போய் வந்திருக்கிறாள். தச்சநல்லூர் வாய்க்காலைத் தாண்டும் போதெல்லாம் வாய்க்காலுக்குப் பக்கத்திலிருந்த ஸ்பீக்கர் செட் கடையிலிருந்து அனேகமாக பாட்டுச் சத்தம் கேட்கும். இப்போது அந்த இடத்தில் அந்தக் கடை இல்லை. அவளுக்குப் பிடித்தமான எத்தனையோ பாட்டுக்களை ஒலிபரப்பிய அந்தப் பையன் இப்போது எங்கே இருப்பான்? கரையிருப்பு வரையிலும் வயல்கள் ரோட்டின் இருபக்கமும் பஸ்ஸுடனே ஓடி வந்தன. அனேகமாய் தச்சநல்லூர் கேட்டிலும் தாழையூத்து கேட்டிலும் கடந்து போகிற ரயில்களுக்காகக் காத்துநிற்க வேண்டியது வரும். அன்று ஆச்சரியப்படும் படியாக இரண்டு கேட்களையும் தாமதமின்றிப் பஸ் கடந்து வந்துவிட்டது. ஆனால் அப்படி நடந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. கடந்து போகிற ரயில் அல்லது கூட்ஸ் வண்டிக்காகக் காத்திருந்து, அது போவதைப் பஸ்ஸுக்குள் இருந்தபடியே வேடிக்கை பார்க்கிற அந்தச் சந்தோஷம் பறிபோனது என்னவோ போல்தான் இருந்தது.
________________
312 பெண் மையச் சிறுகதைகள்
பஸ் அவளை இறக்கிவிட்டுப் போய்விட்டது. ஆற்றுப் பக்கமிருந்து குளிர்ந்த காற்று வீசியது. பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரோட்டைத் தாண்டி நடக்க ஆரம்பித்தாள். பெரியப்பாவும் ருக்கு அக்காவும், திடீரென்று வந்து நிற்கிற அவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போவார்கள். பெரியப்பா வண்டிக்காரனைக் கூப்பிட்டு வண்டிக் காடினாவிலிருந்து வண்டியை எடுக்கச்சொல்லி, அவளையும் ருக்கு அக்காவையும் ஆற்றுக்குக் கூட்டிப்போய் வரச் சொல்லுவார். பாவம் ருக்கு அக்கா ரங்கத்தானோடு அவளுக்கு வாழக் கொடுத்து வைக்கவில்லை. அத்தான் உயிரோடு இருந்தால் இவளைப் பார்த்ததும் எவ்வளவு சந்தோஷப்படுவார். ஒரு வேளை அத்தான் உயிரோடு இருந்திருந்தால் இவ்வளவு தூரத்துக்குத் தேடி வந்திருக்க மாட்டோமோ என்று நினைத்தாள்.
ரங்கத்தான் இவளுக்கும் ருக்குவுக்கும் முறை மாப்பிள்ளைதான். பெரியப்பா, இவளுடைய அப்பா, ரங்கத்தானுடைய அம்மா மூன்று பேரும் உடன் பிறந்தவர்கள். சின்ன வயசிலிருந்தே ரங்கத்தானோடு அவளையும் ருக்கு அக்காவையும் சேர்த்தே பேசுவார்கள். ரங்கத்தானிடம், "அக்கா, தங்கச்சி ரெண்டு பேரையும் சேத்துக் கெட்டிக்கோ...' என்று கேலி பண்ணுவார்கள். மூன்று வீடுகளுமே அடுத்தடுத்த வீடுகள்தான். ருக்கு பெரிய மனுசியான ஒரு வருஷத்துக் கெல்லாம் காந்திமதியும் வயதுக்கு வந்துவிட்டாள். அப்போது ரங்கத்தான் காலேஜில் படித்துக் கொண்டிருந்தான். ருக்கு ரொம்ப அமைதியானவள்.
ஆனால் காந்திமதி அவளுக்கு நேர் எதிரானவள். ருக்கு பெரிய மனுஷியானதுமே அவளைப் படிக்கப் போக வேண்டாமென்று பெரியப்பா நிறுத்தி விட்டார். எல்லோரும் இதுக்காகப் பெரியப்பாவைச் சத்தம் போட்டார்கள். “பொம்பளைப் பிள்ளைக்குப் படிப்பு எதற்கு? இம்புட்டுப் படிச்சது போதும்" என்று சொல்லி, பத்தாவது வகுப்புடன் பெரியப்பா நிறுத்தி விட்டார். ருக்கு எதைப் பற்றியுமே பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டாள். படிப்பை நிறுத்தினதுக்காக அவள் நிஜமாகவே வருத்தப்பட்டாளா இல்லையா என்று கண்டுபிடிப்பது கடினம். எதையும் வெளியே காட்டிக் கொள்ளவே மாட்டாள். ஆனால் ரங்கத்தான் அவளுக்கு வீட்டில் வைத்துப் பாடங்கள் சொல்லிக் கொடுத்தான். அவளை எப்படியாவது எஸ்.எஸ்.எல்.சி. எழுத வைத்து விட வேண்டுமென்று அவன் தீர்மானமாக இருந்தான்.
ரங்கத்தான் பாளையங்கோட்டை காலேஜில் கடைசி வருஷம் படிக்கும்போதுதான் காந்திமதி காலேஜூக்குப் போக ஆரம்பித்தாள். சிறு வயது முதலே அவள் அத்தானோடு சேர்ந்து விளையாடியிருக்கிறாள். ஒன்றாகப் பள்ளிக்கூடம் கூடப் போயிருக்கிறாள். ஆனால் அத்தானோடு பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு காலேஜூக்குப் போய் வரும்போது, மனம் இனம் புரியாத குதூகலத்தில் திளைத்தது. அது என்ன
________________
வண்ணநிலவன் 3.13
சந்தோஷமென்று அப்போது சொல்லத் தெரியவில்லை. ஒருநாள் காலை ருக்கு அக்காவோடு ஆற்றுக்குக் குளிக்கப்போகும்போது, ஏதோ பேச்சில், 'ஒனக்கென்னமா? ரங்கத்தான் கூட ஜோடி சேந்து இப்பவே காலேஜூக்கெல்லாம் போக ஆரம்பிச்சிட்டே' என்று ருக்கு சொன்னாள். அப்போதுதான் தெரிந்தது அவளுக்கு ரங்கத்தானோடு தான் சேர்ந்து போவது பிடிக்கவில்லை என்பது.
ஆனால் கல்யாணம் நடந்தது என்னவோ அக்காவுக்கும், அத்தானுக்கும்தான். கல்யாணமான பிறகு காந்திமதி அத்தான் வீட்டுக்குப் போவதில் எச்சரிக்கையோடு இருந்து வந்தாள். ருக்கு அக்காவே இதுபற்றி அவளிடம் கேட்கிற அளவுக்கு அவள் நடந்து கொண்டாள். ஆனால் அவள் அப்படி ஒதுங்கிப் போனது ருக்குவின் நன்மைக்காகத்தான் என்பதை அவள் உணராததுதான் துரதிருஷ்டமானது. தன்னுடைய இனம் புரியாத தனிமையையும், ஏமாற்றத்தையும் படிப்பில் கரைத்துக் கொள்ளத் துவங்கினாள் காந்திமதி மெட்ராஸில் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி மாணவி, கல்லூரி ஆசிரியை என்று தனிமையிலேயே வாழ்வைக் கழிக்கத் தெரிந்து கொண்டு விட்டாள். அவளுடைய அப்பா காலமான பிறகு ஊரோடு இருந்த கடைசித் தொடர்பும் அற்றுப்போய்விட்டது.
தெருவில் நடக்க நடக்க குதூகலமாக இருந்தது. அனேகமாக எல்லா வீடுகளையும் அவளுக்கு அடையாளம் தெரிந்தது. அந்த வீட்டு ஆட்களின் முகங்கள் நினைவுக்கு வந்தன. சில வீடுகளில் தெருப்பக்கமாக இருந்த சுவர்களுக்கு சிமெண்ட் பூசியிருந்தது. எதிரே ஒரு வளையல் வியாபாரி கூவிக்கொண்டு போனார். தெருவில்போகும்போது வீடுகளுக்குள் பேசுகிற சத்தத்தைக் கேட்க ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. பஜனை மடத்துக்கு முன்னால் கிடந்த பெரிய கருங்கல் பாறை இத்தனை வருஷமாகியும் அந்த இடத்திலேயே இருந்தது. அது அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு போகும்போது கீழே விழுந்த பாறை என்று சொல்வார்கள். அந்தப் பாறையில் ஏறி விளையாடாத பிள்ளைகள் அந்த ஊரில் யாரும் இருக்கமாட்டார்கள். அவள், ருக்கு அக்கா, பிரஸிடெண்ட் வீட்டு மரகதம் எல்லோரும் லீவு நாட்களில் அங்கே விளையாட வந்துவிடுவார்கள். விளையாட்டு, விளையாட்டு அப்படியொரு விளையாட்டு. இருட்டியது கூடத் தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்பார்கள். பல வீடுகளுக்கு முன்னால் நின்றிருந்த மரங்கள் கூட இன்னும் நின்று கொண்டிருந்தன. தெற்கு தெரு திருப்பத்தில் நின்ற வாகை மரம் இன்னும் இருந்தது. அந்த வழியே போன எத்தனை கல்யாண ஊர்வலங்களை, சாவுகளை அந்த மரம் பார்த்திருக்கும். அந்த மரத்தைப் பார்த்ததும் அவளுக்குக் கண் கலங்கிவிட்டது. இனம் புரியாத துக்கம் மனதைக் கவ்வியது. ஒரு தடவை ரங்கத்தான் அந்த மரத்தில் ஏறி கீழே விழுந்து கையை முறித்துக்கொண்டான்.
________________
3} 4 பெண் மையச் சிறுகதைகள்
பெரியப்பா வீடு வந்துவிட்டது. தெருவில் நின்றிருந்தபடியே பெருமூச்சுடன் வீட்டைப் பார்த்தாள். வண்டி காடினாவின் மலையாள ஒடுபோட்ட கூரை ஒரு பக்கமாகச் சரிந்து கிடந்தது. தெருவாசல் நடைப்படிக்கற்கள் பெயர்ந்து கிடந்தன. அதற்குச் சிறு சிறு கற்களை அண்டை கொடுத்திருந்தது. கதவின் வெண்கலக் கைப்பிடிகளில் தூசியும் மண்ணும் செருமிப் போயிருந்தன. அந்தக் கைப்பிடிகளைத் திருகுவதற்கு ருக்கு அக்காவுக்கும் அவளுக்கும் சின்ன வயதில் பெரிய சண்டையே நடக்கும். சமயங்களில் ரங்கத்தானும் கூடச் சேர்ந்து கொள்வான். கதவின் மீது லேசாகக் கையை வைத்ததுமே கதவு பின்னால் மெதுவாக நகர்ந்தது. கதவு திறக்கிற சத்தம் அப்படியொன்றும் பெரிதாகக் கேட்கவில்லை என்றாலும், அதற்குள் யாரோ வெள்ளையாக வீட்டிற்குள்ளிருந்து தெருவாசலைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. தெருவில் ஒரு பையன் எலெக்ட்ரிக்ட் போஸ்ட்டில் கல்லை வைத்துத் தட்டிக் கொண்டிருந்தான். இவள் நடை கூடத்தைத் தாண்டி முற்றத்தைத் தாண்டி, தார்சாவில் படியேறவும், உள்ளேயிருந்த வெள்ளையுருவம் மெதுவாகத் தயங்கித் தயங்கி வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வந்தது ருக்குதான்.
'அக்கா...! என்னைத் தெரியுதா...?' என்று சொல்லிக் கொண்டே கையிலிருந்த பெட்டியைக் கீழே வைத்துவிட்டு அவளை அப்படியே ஆவிச்சேர்த்து கட்டிக் கொண்டாள். ருக்கு லேசான புதிருடனும், அவ்வளவாக ஆரவாரமற்ற சந்தோஷத்துடனும் அவளைப் பார்த்தாள். --
'காந்தியா...? என்னது இப்பிடித் திடுதிப்புன்னு வந்து நிக்கிறியே...?" என்று மெதுவாகக் கேட்டாள். வீட்டினுள் திரும்பி 'அப்பா. அப்பா. யாரு வந்திருக்கா பாத்தியா..? காந்தி வந்திருக்கப்பா என்று சொல்லிக் கொண்டே கீழே இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு "வா. உள்ளே வா காந்தி...!" என்று அவளைக் கூட்டிக்கொண்டு வீட்டினுள் போனாள். அவளை வரவேற்று உபசரித்தாளே தவிர, வார்த்தையிலிருந்த உபசாரம் முகத்தில் இல்லை. காந்திமதிக்கு இருந்த பரவசத்தில் அதையெல்லாம் அவள் உணரவில்லை.

பட்டகசாலையில் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. வீட்டினுள் சாணிபோட்டு மெழுகிய வாடை அடித்தது. ஜன்னலுக்குப் பக்கத்தில் ஈஸிசேர் போட்டு உட்கார்ந்திருந்தார் பெரியப்பா, கையிலிருந்த திருவாசக புஸ்தகத்தை ஜன்னல் சுவரின் மீது வைத்துவிட்டு மூக்குக் கண்ணாடிக்கு மேலே பார்வையை உயர்த்திப் பார்த்தார். அதற்குள் காந்திமதி அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு அவருடைய பஞ்சு போன்ற, சுருக்கம் விழுந்த விரல்களை மெதுவாகப் பிடித்துக்கொண்டு குசலம் விசாரித்தாள். உடனே உள்ளே போய்விடக்கூடாது என்பதால் , ருக்கு சிறிது நேரம் பேருக்கு அங்கே நின்றுகொண்டிருந்தாள். பிறகு உணர்ச்சியற்ற முகம் பொருத்தப்பட்ட அந்த உடம்பு உள்ளே போய்விட்டது. பெரியப்பா
________________
வண்ணநிலவன் 315
கேள்விமேல் கேள்விகளாகக் கேட்டு அவளிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். நாற்பது வயதாகியும் அவள் கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் இருந்தது அவருக்கு அளவற்ற வருத்தத்தைத் தந்தது.
'எனக்கு என்னமோ இப்பிடியே இருக்கதுதான் பிடிச்சிருக்கு. அக்கா கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன வாழ்ந்திட்டா..?' என்று வருத்தத்தோடு சொன்னாள் காந்திமதி. அதற்கு அவரால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். ஜன்னலின் மீதிருந்த திருவாசகத்தின் மேலட்டை காற்றில் திறந்து மூடிக்கொண்டிருந்தது. ருக்கு அடுப்படியில் வேலையாக இருந்தாள் போல. பாத்திரங்கள் புழங்குகிற சத்தம் கேட்டது. சிறிது நேரம் கழித்து பெரியப்பா பெருமூச்சுடன், 'விதின்னு ஒண்ணு இருக்கும்மா... அதை யாராலே மாத்த முடியும்...? சொல்லு பாப்பம்...? என்று சொல்லிட்டு அயர்வுடன் ஈலிச்சேரில் சாய்ந்து கொண்டார். அவளுக்கு அவர் மனதைக் கஷ்டப்படுத்தி விட்டோமோ என்றிருந்தது. ருக்கு பக்கத்தில் இல்லாதது அவளுக்கு என்னவோ போலிருந்தது. நல்ல வேளையாக பெரியப்பாவே அந்த இறுக்கமான சூழ்நிலையைக் குலைத்தார். "ஏம்மா...! நீ வெயில்ல வந்திருக்கே மொதல்ல போயி நல்லாக் குளிம்மா...' என்று சொல்லிவிட்டு அடுப்படிப் பக்கம் பார்த்து, "ருக்கு. காந்திக்கு குளிக்கறதுக்கு தண்ணி எடுத்து வையி...!" என்றார். எங்கிருந்தோ "சரிப்பா..!" என்ற குரல் கேட்டது.
ருக்கு அவளுடைய பெட்டியைச் சுவரோரமாக வைத்திருந்தாள். துண்டு, மாற்றுப்புடவை, ரவிக்கையை எடுப்பதற்காகப் பெட்டியைத் தேடினாள். மேலச் சுவரில் ஒரு போட்டோவுக்கு மாலையிட்டிருந்தது. அது, ரங்கத்தானுடைய படம். அக்காவும் அத்தானும் சேர்ந்து எடுத்த கல்யாண படம் ஒன்று உண்டு. அதைத் தேடினாள் காணவில்லை. பட்டணம் பொடி கம்பெனி காலண்டரைத் தவிர வேறு படமே இல்லை. அடுப்படியில் ஏதோ தண்ணீர் சொதிக்கிற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அவளுக்காக ஏதோ செய்து கொண்டிருந்தாள் ருக்கு.
அவளுக்கு ஆற்றுக்குப் போய் குளிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், அதற்குள் அக்கா புறவாசலில் குளிக்கத் தண்ணீர் எடுத்து வைத்துவிட்டாள்.
'எனக்காக ஒண்ணும் பண்ண வேண்டாம் அக்கா!' என்று சொல்லிக்கொண்டே அவள் பக்கத்தில் போய் நின்றாள். ருக்குவின் கனத்த மெத்தென்ற விரல்கள் கத்தரிக்காயை வதக்கிக் கொண்டிருந்தன. அடுப்படி இருட்டிலும், கரியிலும் அவளுடைய வெள்ளைப்புடவை பளிச்சென்று இருந்தது. ரொம்ப அழகாகவே இருந்தாள் ருக்கு.
'ஒனக்குன்னா ஒனக்கு மட்டுமா...? எல்லாருந்தானே சாப்பிடப் போறோம்.? என்று வெடுக்கென்று பதில் சொன்னாள் ருக்கு காந்திமதிக்கு
________________
3 i 6 பெண் மையச் சிறுகதைகள்
அவள் சொன்னது என்னவோ போலிருந்தது. சிறிது நேரம் எதுவுமே பேசத் தோன்றவில்லை.
'இல்லக்கா.உனக்கு எதுக்கு வீண் கஷ்டம்னு நெனைச்சேன்...' என்று அவளைச் சமாதானப்படுத்துகிற மாதிரிச் சொன்னாள்.
'நானும் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்' என்று அவள் முகத்தைப் பாராமலேயே சொன்னாள். அதற்குமேல் காந்திமதியால் அங்கே நின்று கொண்டிருக்க முடியவில்லை. கண் கலங்கிவிட்டது. அங்கே வந்திருக்கக் கூடாதோ என்று தோன்றியது. ஏதோவொரு உணர்ச்சி வேகத்திலும் கடந்த நாட்களின் நினைவுகளிலும், ஊரையும் உறவுகளையும் தேடி வந்துவிட்டோம் என்று நினைத்தாள். ருக்கு காந்திமதி குளிப்பதை அடுப்படி ஜன்னல் வழியே குரோதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பேரில் தாங்க முடியாத வெறுப்புணர்வு எழுந்தது.
அவள் குளித்துவிட்டு வருவதற்குள் பெரியப்பா, ஈலிச்சேரில் படுத்தபடியே தூங்கிவிட்டிருந்தார். ருக்கு முன்வாசலில் யாருடனோ கதவோரமாக நின்று பேசிக்கொண்டிருந்தாள். புறவாசலில் புடவை மாற்ற முடியவில்லை. அதனால் அறை வீட்டுச் சுவரோரமாக நின்று புடவை மாற்றிக் கொண்டிருந்தாள். அவள் உடை மாற்றுவதை ஸ்டூலில் உட்கார்ந்தபடியே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள் ருக்கு திடீரென்று பின்பக்கம் திரும்பிப் பார்த்தவளுக்கு ருக்கு தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. சூழ்நிலையை சகஜமாக்குவதற்காக 'மெட்ராஸ்லே தம்பிதான் அடிக்கடி, அக்கா ஊருக்குப்போயி பெரியப்பா அக்காவையெல்லாம் பாத்துதுட்டு வரணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். நான் போய் சொன்னால், என்னை மட்டும் விட்டுட்டுப் போயிட்டு வந்திட்டீயேக்கான்னு சொல்வான்...!" என்று சொல்லிவிட்டு அவளே செயற்கையாகச் சிரித்தாள்.
"ஏன் அவனையும் கூட்டிக்கிட்டு வந்தா என்ன...?' என்று குரலில் சிறிது கூடச் சுரத்தின்றி, யந்திரம் போல் பேசினாள் ருக்கு அதற்குப் பதில் சொல்லவே தோன்றவில்லை. என்றாலும், ஏதாவது பேசினால் அந்த இறுக்கம் குறையும் போலிருந்தது.
'நானும் எங்க காலேஜ் ஸ்டுடன்ஸ்களோடத்தான் வந்தேன். குற்றாலம், கன்னியாகுமரி யெல்லாம் போயிட்டு வந்தோம். இன்னைக்கி, சாயந்திரம் ரெயில்லே மெட்ராஸ் போறோம்" என்று சொன்னாள் காந்திமதி. அவள் அங்கே இரண்டு மூன்று நாளாவது தங்கியிருந்து விட்டுப்போகலாம் என்றுதான் வந்திருந்தாள். ஆனால் இப்போது உடனே அங்கிருந்து போனால் போதும் போலிருந்தது. ருக்கு அவள் சொன்னதைக் கவனித்தாளா என்றே தெரியவில்லை. அவள் கவனம் பூராவும் இப்போது, திறந்து கிடந்த காந்திமதியின் பெட்டியின் மீதே இருந்தது. அவள் பெட்டி நிறைய அடுக்கி வைத்திருந்த விதவிதமான புடவைகளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள்.
________________
வண்ணநிலவன் 317
அவளுடைய கனத்த மார்பு ஏறித்தாழ்ந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்த காந்திமதி, திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவளாய்."அடாடா...மறந்தே போயிட்டேன் அக்கா' என்று சொல்லிக்கொண்டே பெட்டிக்குப் பக்கத்தில் போய் குனிந்து புடவைகளின் அடியில் கையை நுழைத்து ஒரு சிறு பையை எடுத்தாள். வேகமாக ருக்குவிடம் வந்தாள். 'அல்வா, பழம் எல்லாம் வாங்கினேன். பேசிக்கிட்டே இருந்ததுலே எடுத்துக் குடுக்க மறந்துட்டேன் அக்கா" என்று சொல்லிக் கொண்டே அந்தப் பையை அவளிடம் கொடுத்தாள். ருக்கு உணர்ச்சியே இல்லாமல் அதை வாங்கி வைத்துக் கொண்டாள். சேலைகளின் நடுவிலிருந்த வேட்டி, துண்டை எடுத்துக் கொண்டு பெரியப்பாவிடம் போனாள். ருக்குவைத் தாண்டிப்போகும்போது, 'ஒனக்கு என்ன எடுக்கறதுன்னே புரியல. அதனாலதான் பெரியப்பாவுக்கு மட்டும் ஒரு வேட்டி, துண்டு எடுத்தேன்' என்று அவற்றை பெரியப்பாவிடம் கொடுத்தாள். அவர் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டார்.
'அவுஹளுக்கு வாங்கியிருக்கேல்லா. அதுபோதும் எனக்கு என்னத்துக்கு? நான்தான் தாலியறுத்துத் தட்டழிஞ்சு நிக்கேனே' என்று எரிச்சலுடன் சொன்னாள் ருக்கு
பெரியப்பா சாப்பாடு எடுத்து வைக்கச் சொன்னார். சாப்பிட ஆரம்பிக்கும்போது, ருக்குவையும் கூட உட்கார்ந்து சாப்பிடச் சொன்னார். "நானும் உட்கார்ந்துட்டா யாரு வந்து பரிமாறுவா?' என்று வெடுக்கென்று சொன்னாள். ஆனால் பெரியப்பா மிகுந்த சந்தோஷத்தோடு அவளோடு பேசிக் கொண்டே சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் புறப்பட்டுவிட்டாள்.
'பெரியப்பா அப்ப நான் வரட்டுமா? சாயந்திரம் மெட்ராஸ் வண்டிக்குப் போகணும்?' என்றாள்.
'என்னம்மா இது? இப்பிடி வந்ததும் வராததுமா உடனே போகணும்.கிறீயே? ஒரு நாலு நாள் இருந்துட்டுப் போகலாம்' என்று வற்புறுத்தினார்.
"இல்லே பெரியப்பா. இன்னொரு தடவை வாரேன். இப்போ ஸ்டூடண்ஸ்களோட எக்ஸ்கர்ஷன் வந்தேன். எல்லாரும் எனக்காகக் காத்துக்கிட்டு இருப்பாங்க, ஒங்களையெல்லாம் பார்க்கணும்னு தோணிச்சு பாத்தாச்சு. பொறப்படட்டுமா?"

"அவ காலேஜ் பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கா. அவளை போயி நாலு நாள் இருன்னு சொன்னா எப்படி?" என்றாள் ருக்கு காந்திமதி புறப்பட்டுக் கொண்டிருந்தாள். காலண்டர் காற்றில் அடித்துக் கொண்டிருந்தது.