தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Wednesday, May 11, 2016

அழிந்த பிறகு - சிவராம கரந்த் முதல் அத்தியாயம்

அழிந்த பிறகு - சிவராம கரந்த்

முதல் அத்தியாயம்
வாழ்க்கை என்பது ஒரு நீண்ட காலப் பயணம். அது தொடங்கு கிற நாளிலிருந்து ஆறு, ஏழு ஆண்டுகள் வரை நம்முடைய உணர்வே நமக்கு இருப்பதில்வே. தாய், தந்தை, அண்ணன், தம்பி, உறவினர்கள் முதலிய பலருடைய தொடர்பு, நம் இளவயதில் உண்டாகிறது என்ருலும், பிறருடைய உதவியின்றி நம் வாழ்க்கை அப்பொழுது நடைபெறுவதற்கு இயலாதென்ரு லும், அவற்றைப் பற்றிய நினைவு நமக்கு உண்டாவதில்லை. இவ்வாறு குழவிப் பருவம் கடந்து, இளமை துவங்கினல், பள்ளிக் கூடத்தின் உள்ளும் வெளியிலும் சம வயதுடையவர்களின் நட்பு நமக்குக் கிடைக்கிறது; அப்போது நண்பர்களைப்பற்றி மிகுதியாக நினைப்பதில் காலம் கழிக்கிருேம். அந்த நினைவுகளும்கூட நிலை யானவையல்ல. மாணவப் பருவம் கழிந்து, காளைப் பருவத்தில் காலிடும்போது நம் வாழ்க்கை, வேண்டிய அளவு இனிய நினைவு களைக் கொண்டிருந்தாலும் அடுத்து வாழ்க்கைச்சுழலில் அடியிடும் போது, நினைவுக் கருவூலத்தில் எஞ்சியிருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டேயாகும். மிகுதியாகப் போனுல், பத்து அல்லது பன்னிரண்டாக இருக்கலாம். அதனை அடுத்து வருவது வேருெரு உலகாகும். வாழ்க்கைப் போக்கிலே சந்திக்கும் நண்பர்கள் வேறு வகையானவர்கள். அப்போதும் ஆழ்ந்த நினைவுக்கு அடிப்படையாக அமையும், வாழ்க்கைக் குதவும் அல்லது வாழ்க்கைக்குத் தடையாக வந்து தாக்கி நினைவை ஆழமாகப் பதிக்க வல்ல மக்களின் எண்ணிக்கை மிகுதி யாக இராது.

பிறகு முதுமை தொடங்குகிறது; பழைய நினைவுகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன. முதுமையில் ஒத்த வயதற்றவருடன் அதிகத் தொடர்பு இருப்பதில்லை. நம்முடைய இன்பம், துன்பம், அமைதி முதலியவற்றிற்கு எழுபதாண்டு வாழ்க்கைப் பயணத்தில் கண்டு, பேசியவர்களின் எண்ணிக்கை. உடன்படித்தவர்களின் எண்ணிக்கை, வேலைசெய்யும் இடத்தில் சேர்ந்து பிறகு பிரிந்து

2 அழிந்த பிறகு சென்றவர்களின் தொகை-இவற்றையெல்லாம் கூட்டினல் ஆயிரத்திற்கும் மிகும். முடிவில் இறக்கும்போது யாரும் அறியா மலே இறக்கவும் கூடும். ஒரளவு புண்ணியம் செய்தவனுக இருந் தால், பத்துப் பன்னிரண்டு நண்பர்கள் அவன் இறந்ததை எண்ணி 'பாவம், போய்விட்டாஞ? வயது ஆயிற்று, இன்னும் என்ன? போகவேண்டியதுதான்' என்று அவன் மரணத்தை நினைத்து ஒரு சொட்டுக் கண்ணிர் சிந்தலாம்-கண்ணிர் சிந்தாமல்வெற்றுப் பேச்சுடன் முடித்தும் விடலாம். எவ்வளவு நீண்ட பயணம்? எவ்வளவு நாட்கள் தொடர்ந்தது? எந்தெந்தப் பயன் களே-மனித வாழ்வில் அடைய வேண்டியவற்றை-அடைய முடிந்தது? உழைத்தது எவ்வளவு? விட்டது எவ்வளவு? என்றெல் லாம் கணக்கிட்டால் வீடு வாசல், பணம் காசு-ஒரளவு எஞ்ச லாம். ஆளுல், பிறருடைய நினைவுத்தடத்தில் 'இத்தகையவர் ஒருவர் இருந்தார்-போய்விட்டார். அவர் போனதால் நம் வாழ்க்கைச் செல்வத்தில் அந்த அளவு குறைந்தது' என்று பொறிக்க வல்லவர்களின் வாழ்க்கை, உண்மையில் உயர்ந்த தாகும். ஆளுல் அது எத்தனே பேருக்குக் கிட்டும்!

வாழ்க்கைப் பயணமே"அப்படிப்பட்டதுதான். அந்த நாடகத் தில் ஒரு கணத்தில் நடக்கும் காட்சி-நாம் வெளியூர்களுக்குச் செல்லும் பயணம். இது உண்மையான பயணம். இரயிலிலோ, படகிலோ, பஸ்ஸிலோ ஏறி ஏதோ ஒரு வேலைக்காக நாம் அலைந்து கொண்டே இருக்கிருேம். ஒன்று, வேலையாகப் போகிருேம், அல்லது வேடிக்கைப் பார்க்கப் போகிருேம். நான் நீங்கள்எல்லோரும் அப்படியே செய்கிருேம். சில மணி நேர பஸ் பிரயாணம் செய்ததை விட்டுவிட்டால், படகிலோ, இரயிலிலோ ஓரிரண்டு நாட்கள் நாமெல்லாம் போயிருக்கிருேம். அவ்வேளை யில் நிலைத்துள்ள உலகத்தை நாம் மறந்துவிடுகிருேம், நாம் சென்றுகொண்டே யிருக்கிருேம். அந்தப் படகில் அல்லது வண்டி யில் நூற்றுக்கணக்கான, அல்லது ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்யும் பிற மக்களும் நிறைந்திருக்கிரு.ர்கள். ஒரு தடவை அந்த வண்டி அல்லது படகில் ஏறிவிட்டால் இறங்கும் வரையில் அதுவே நமது வீடு. அதில் முன்பே மக்கள் நிரம்பி யிருந்தால், புதிதாக ஏறும் நாம் அவர்களுடைய பகைவர்களாகக் கருதப்படுவோம். நம்மைப் பார்த்தவுடனே இன்னும் சிறிது பரப்பிக்கொண்டு உட்காருவர் சிலர். நண்பகலாஞலும் விரித்த படுக்கையைச் சிறிதுகூட ஒதுக்காமல் தூங்குபவர்களைப் போல்
________________
அழிந்த பிறகு 3
நடிப்பவர்களும் உண்டு. 'வந்தவனுக்கும் சிறிது இடம் கொடுப் போம்' என்று நினைப்பவர்கள் மிக மிகச் சிலர். அங்கே இடமே யில்லையென்ருல் இடம் கொடுக்கும் பிரச்சினையே இல்லை. மணிக் கணக்காக நின்றுகொண்டே போகவேண்டியதுதான். அத் தகைய வேளையில் நாமும் சீறுகிருேம். வண்டியில் இருப்பவர் களின் மீது நமக்கு ஆத்திரம் பொங்குகிறது. பல்வேறு வகையான விலங்குகளையும், பறவைகளையும் ஒரே காட்சிச்சாலையில் அடைத்து வைத்ததைப்போல், அந்த நிலைமை காட்சி அளிக் கின்றது. அப்படியிருந்தும்கூட மக்கள் கூட்டம் குறைவதே யில்லை. புறப்படும்போது நண்பர்கள் குழுவையும் சேர்த்துக் கொண்டு புறப்பட்டால் பயணத்தில் ஏற்படும் கஷ்டங்களை, வேண்டிய-வேண்டாத பேச்சுக்களைப் பேசி மறந்துவிடலாம். பயணத்தையே ஒரு திருவிழாவாக நினைத்து, அறிமுகமில்லாத வர்களேயும் பேச்சுக்கிழுத்து, இரண்டே மணி நேரத்தில் வண்டியி லிருந்தவர்களெல்லாம் நம் பக்கத்து வீட்டு நண்பர்கள் என்று சொல்லும் அளவிற்கு இனிமையாகக் காலம் கழித்து, வண்டியி லிருந்து இறங்கும்போது எல்லோருக்கும் வணக்கம் கூறிவிட்டுப் போகும் மக்களும் இருக்கிரு.ர்கள். அதன் பிறகு அப்ர்கள் எங்கோ! இவர் எங்கோ!

பயணத்தையே வாழ்க்கையின் ஒரு பகுதியாகக்கொண்டுள்ள மக்களிலும் வெவ்வேறு வகைகளைக் காண்கிருேம். இங்கிலாந்து போன்ற நாட்டில் இரயில் பிரயாணம் செய்தால் மற்ருெரு விசித்திரத்தைக் காணலாம். அங்கே ஒருவன் மற்ருெருவ னுடைய இடத்தைப் பிடித்துக்கொள்வதில்லை. இடமில்லாத வர்கள் நின்றுகொண்டிருப்பார்கள். இடம் கிடைத்தவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அருகருகே உட்கார்ந்து பத்துப் பன்னி ரண்டு மணி நேரம் பயணம் செய்வார்கள் கையில் புத்தகமிருந் தால் படிப்பார்கள். இல்லையென்ருல் ஊமைப் பிசாசுகளைப் போல் உட்கார்ந்திருப்பார்கள், ! உங்களுக்கு எந்த ஊர்? எந்த ஊருக்குப் போகிறீர்கள்? என்ன வேலை செய்கிறீர்கள்? என்ன வருமானம்?-இப்படி ஒரு கேள்வியையும் அவர்கள் கேட்ப தில்லை. அவரவர் பாடு அவரவர்களுக்கு. இரயில் பயணம் என்பது நட்பைப் பெருக்கிக்கொள்வதற்காக அல்ல, பயணம் செய்வதற்காக மட்டுமே என்று அங்குள்ளவர்கள் நினைக் கிரு.ர்கள். இவற்றில் எது சரி? எது தவறு?
________________
4 அழிந்த பிறகு
என் வாழ்க்கையில் நான் ஆர்வம் மிருந்து ெ ாங்கும் நிலையி லிருந்து வெறுப்பு உண்டாகும்வரை பலமுறை படகிலும் இரயிலி லும் பயணம் செய்திருக்கின்றேன். அந்தப் பயணங்கள் அனைத்தை யும் பற்றி நான் இப்போது வர்ணித்துச் சொல்ல வரவில்லை. பயணத்தின்போது என் மனநிலை எப்படியிருக்கும் என்பதை எடுத்துக் கூறுவதே என் நோக்கம். எனக்குக் கூட்டத்தைக் கண்டாலே பிடிக்காது. கூட்டம் மிகுதியாகுலும், பேச்சு அதிக மானுலும் முழு ஊமையாக மாறிவிடுவது என் இயல்பு. நான் உட்கார்ந்திருந்த வண்டியில் சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தவர் களையும் பார்த்திருக்கிறேன். பகீரதனைப் போலத் தவம் செய்யும் நிலையில் நின்றிருந்தவர்களேயும் கண்டிருக்கின்றேன். சவாசனத் தில் இருந்தவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். கூட்டம் பெருத்து இரயிலில் மூச்சுத் திணறும்போது, அவர்களேயெல்லம் பார்த்து, எப்போது இந்தப் பயணம் முடியுமோ என்று நான் வருந்தியதுண்டு. எனவே சில ஆண்டுகளாக, செலவு மிகுதி யென்ருலும் விருப்பம்போலப் பயணம் செய்யவேண்டும் என்ற வேட்கை எனக்கு அதிகமாகி வருகிறது. அப்படிப் பார்க்கும் போது மூன்றும் வகுப்புப் பயணம் எனக்கு ஒத்து வரவில்லை. தகுதிக்கேற்ற இன்டர் வகுப்பு அல்லது இன்றைய இரண்டாம் வகுப்பில் செல்வது வசதியாக இருக்கும். சுதந்திரம் வந்த பிறகு நாட்டில் நடுத்தர மக்கள் கடைநிலைக்கு இறங்கியதைப்போல, இன்டர் அல்லது இரண்டாம் வகுப்புப் பயணத்தைப் பறிப்பதற்கு மட்டுமே பயன்படுகிறது. வேறு பயன் ஏதுமில்லே. மூன்றும் வகுப்பில் உள்ள கூட்டம், நெருக்கடி, கூச்சல் எல்லாமே இதிலும் நிரம்பியிருக்கின்றன. ஆகவே விரும்பியோ, விரும்பாமலோ என்பாட்டிற்கு நான் இருக்கவேண்டும் என்னும் ஆசையால் முதல் வகுப்பிலே பயணம் செய்கிறேன். அங்கேயும் நான் விரும்பியதெல்லாம் கிடைத்துவிடுகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். பொதுவாக முதலிலேயே டிக்கட் வாங்கி ரிசர்வ்’ செய்துவிடுவதால் உட்காருவதில் தொல்லை ஏதும் இல்லை. ஒரு மூலையில், காலேத் தொங்கவிட்டோ, மடித்துச் சப்பனமிட்டோ, பக்கவாட்டில் முதுகைச் சாய்த்தோ, உட்கார வசதி கிடைத்தால் அதுவே எனக்குப் போதுமானது. இனி, பயணத்தின்போது உடன்செல்லும் மற்றவர்களுடைய போக்கு விசித்திரமாகவே யிருக்கும் என்பதைத் தனியே சொல்லவேண்டியதில்லை. முதல் வகுப்பிற்குப் பணம் கொடுத்துவிட்டு, இது நம் விடு, இங்கே
*=
________________
f அழிந்த பிறகு 5
மற்றவர்க்கு இடமேயில்லை என்னும் நினைப்பில் நான்கைந்து படுக்கைகள், பத்துப் பன்னிரண்டு பெட்டிகள், பழக்கூடைகள், சிற்றுண்டிப் பாத்திரங்கள், குழந்தைகளின் கமோடு முதலிய வற்றையெல்லாம் பிரேக் வேனில் போட்டு அடைப்பது போன்றே அடைத்து, தாம் கொடுத்த பணத்திற்கு முழுப் பயனேயும் அனுபவித்துத் தீர்க்கும் துரைமார்களும் வருகிருர்கள். மிகுதியாகச் சாமான்கள் இல்லாவிட்டாலும், இரயிலேயே விலைக்கு வாங்கிவிட்ட தோரணையில் நடந்துகொள்பவர்களும் இருக்கிருர்கள். மக்கள் மக்களேதான். பணம் காசு-இவற்ருல் மட்டும் அவர்கள் தேவர்கள் ஆகிவிடுவார்களா? அவர்களில் ஒரளவு அறிவும், பண்பாடும் அதிகமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிருேம். அவையில்லாவிட்டாலும் இந்த ஜனங்கள் மூன்ரும் வகுப்புப் பிரயாணிகள் பலரைவிட ஒழுங்காய் இருக் கிருர்கள். இந்த ஒரு காரணத்தினுலாவது பயணம் இனிமை யாக அமைகிறது. அதுவுமின்றி இவ்வாறு தண்டச் செலவு செய்ய வல்லவர்களின் தொகை குறைவானதால் பயணம் செய்ப வர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். மிகுதியான மக்கள் இங்கே முண்டி அடித்து ஏறுவதில்லை. இரவில் தூக்கம் கெடுவதுண்டு. நானே தூக்கத்தை இழக்க விரும்பாதவன். 'வாழ்க்கையில் மிகவும் இன்பமயமாகக் கழியும் நேரம் எது?" என்று கேட்டால் இன்ப துன்பத்தின் தாக்குதல் அற்ற அமைதி யான தூக்கம்' என்று சொல்லக்கூடியவன் நான். ஆளுல் என் தூக்கத்திற்கும் ஒர் அளவுண்டு. வேறு பலரைப்போல முதல் வகுப்பைப் பார்த்தவுடனேயே எனக்குத் துரக்கம் வருவதில்லை. நண்பகலில் ஒரு மணி நேரமே தூக்கம். எனவே மற்ற நேரமெல் பொம் விழித்திருக்கவேண்டும். ஆம், நான் விழித்தேயிருப்பேன், அந்த நேரத்தில் ஏதாவது ஒரு நூலைப் படித்துக்கொண் டிருப்பேன். படிக்காத நேரத்தில் சும்மா சாய்ந்துகொண்டு உட்கார்ந்து இருப்பேன். பயணம் என்ற நாடகத்தில் என் எதிரில் உள்ள மேடையில் நடமாடும் பாத்திரங்களுடைய பேச்சு, நடை செயல் முதலியவற்றை g) GYI Éī5) LÜLITT 5 இருந்து பார்த்திருப்பேன். பெரும்பாலும் நானகவே பேச்சுக் கொடுப்பதில்லை. அதிர்ஷ்டவசமாக நல்ல நண்பர்கள் கிடைத்தால் பேசமாட்டேன் என்பதல்ல. எப்போதோ ஒரு முறை அப்படிப்பட்டவர்கள் கிடைக்கவும் செய்கிருர்கள். ஒருவரிடம் மற்றவர்க்கு மதிப்பு ஏற்படும் வகையிலே அமைந்த பிரயான நண்பர்கள் சிலர் என்
________________
6 அழிந்த பிறகு
நினைவில் நிலைத்திருக்கிருர்கள். இப்பொழுது அப்படிப்பட்ட ஒருவரின் கதையைச் சொல்லத்தான் தொடங்கியிருக்கிறேன்.

ஒரு பயணத்தின்போது அரைநாள் பொழுது என்னுடன் இருந்து கழித்த முதிய குடும்பி ஒருவனப் பற்றி ஒரு நாவலே எழுதத்தொடங்கியிருக்கிறேன் என்றால் உங்களுக்கு வியப்பாகவும் இருக்கும். அந்தப் பயணத்தில் அந்த மனிதருடன் சிறிது அறிமுகம் ஏற்பட்டு, பல்வேறு காரணங்களால் அவர்மீது எனக்கிருந்த பற்று வளர்ந்து, பிறகு ஆழ்ந்த நம்பிக்கை மிகுந்ததால் இதை எழுதிக்கொண்டிருக்கின்றேன். வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த அந்த மனிதர் என் நினைவுத்திரையில் பதிந்து, என் ஆவலைப் பெருக்கி, அந்த ஆவலுக்கு வழிவகுக்கும் முறையில் மேலும் ஒரிரு குடும்பத் தலைவர்களும், குடும்பத் தலைவிகளும் அவர் விட்டுச் சென்ற ஒரு நாட்குறிப்பும் எனக்குக் கிடைத்ததால், ஒரு வாழ்க்கை வரலாற்றைப்போல எழுத நேர்ந்தது. அதில் கைநழுவிப்போன காட்சிகளும், அரைகுறையான சித்திரங்களும் பலப்பல இருக்கலாம். இப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், அந்த மனிதர் உயிருடன் இருந்தபோது அவருடைய தனி வாழ்க்கையில் அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடந்தன என்று தெரிந்திருந்தால், என்னுடைய இந்த எழுத்தோவியம் இன்னும் சுவையானதாக இருந் திருக்கும். நாவலுக்குப் பதிலாக ஒரு வாழ்க்கை வரலாறே தோன்றியிருக்கலாம். எனக்குத் தெரிந்த பகுதிகளையும், புரியாத பிரச்சினைகளையும், அவர் வாழ்ந்திருந்த காலத்தில் அவரையே கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம்.

எனக்கும் அவருக்கும் நட்பு ஏற்பட்டு ஐந்தாறு ஆண்டுகளே ஆயிற்று. அதுவும் ஆண்டுக்கு இரண்டொரு முறை, இரண் டொரு நாட்கள்; அந்த நாட்களிலும் ஒரிரு மணி நேரமே வளர்ந்துவந்த நட்பு. விரும்பியவர்களுடன் விரும்புகிறபோது நான் எவ்வளவு வாயாடியாவேனே அதில் பாதி அளவுகூட அந்த என் நண்பர் பேசமாட்டார். நான் அவரை அறிமுகம் செய்து கொண்ட தொடக்க நாட்களில் அவர் நூற்றுக்குப் பத்து சொற்கள்கூடப் பேசியதில்லை. அந்தப் பத்து வளர்ந்து நூற்றுக்கு ஐம்பது ஆவதற்கு ஐந்து ஆண்டுகள் பிடித்தன. இடையில் நாங்கள் மிகுதியாகக் கடிதங்களும் எழுதிக்கொண்டதில்லை; அவருடன் அறிமுகம் ஏற்பட்ட பிறகு அவரை அவர் வீட்டிலேயே கண்டு பேசி, ஊர் திரும்பிய பிறகு நான் சும்மா இருந்து
________________
அழிந்த பிறகு 7
விடுவேன். மீண்டும் அவர் வாழும் ஊருக்குப் போகும் வாய்ப்பு ஏற்படும்போது, நான் உங்கள் ஊருக்கு நான்கு நாட்களுக்காக வரவிருக்கின்றேன். வந்தால் உங்களைச் சந்திக்கின்றேன்' என்று கடிதம் எழுதுவேன். அவர் கண்டிப்பாக வாருங்கள். எனக்கு எப்போதுமே ஒய்வுதான். வாராமலிருக்கக்கூடாது' என்று பதில் எழுதுவார். எங்களுக்கிடையில் நடைபெற்ற கடிதப் போக்குவரத்து இவ்வளவுதான். கடைசி இரண்டு ஆண்டுகளில் மட்டும் மாதத்திற்கு ஒரு முறை அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அவர் எனக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். நானும் அவர்க்கு எழுதினேன்.

அவர் என்னைவிட மூத்தவர். அவருடைய ஆழ்ந்த அனுபவ மிகுந்த வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கையிருந்தது. இளையவளுன எனக்கு அவர் கடிதம் எழுதவேண்டிய காரணமேயில்லை. பல விஷயங்களில் பழுத்த அனுபவம் உடையவர் அவர். அரை வேக்காடு வாழ்க்கை நடத்தும் என்னிடம், அவர் 'இது எப்படி? அது ஏன்?' என்று கேட்கும்போது எனக்கு வியப்பாக இருக்கும். வாழ்க்கையின் பிரச்சினைகள், என்னைத் துளைப்பதுபோலவே, எல்லோரையும் துளைப்பதுபோலவே, அவரையும் அதிகமாகத் தாக்கியிருக்கவேண்டும் என்று அவர் கடிதங்களிலிருந்து எனக்குத் தோன்றியது. அவர் எழுப்பிய பிரச்சினைகள் ஆழ்ந்தவையாக இருந்ததால் என்னுடைய யூகங்களைப் பெரி தாக்கி அது இப்படியிருக்கலாமல்லவா?' என்னும் ஐயங் களையே, அவருடைய கேள்விகளுக்குப் பதிலாக நான் எழுதிக் கொண்டிருந்தேனே தவிர, அதைவிட அதிகமாக எழுதுவதற்குத் துணிந்ததில்லை. அவர் எழுப்பிய பிரச்சினைகள் வெறும் விவாதத் திற்கு எழுப்பப்படும் பிரச்சினைகள் அல்ல, மற்றவர்களைவிட நான் மிகுதியாக அறிவேன் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக எழுப்பிய பிரச்சினைகளும் அல்ல.

வாழ்வது ஏன்? வாழ்வது எப்படி?’ என்பது போன்ற அந்தப் பிரச்சினைகள் தர்க்கம், அறிவு ஆகியவற்ருேடு தொடர்புள்ளவை யல்ல; சிந்தனை, காட்சி ஆகியவற்ருேடு தொடர்புள்ளவை. நம் முடைய நம்பிக்கையைக் குலேத்து, தகர்த்த பிரச்சினைகள்; மூட நம்பிக்கையினல் விடை காணமுடியாதவை. அப்படியிருக்கும் போது அவருடைய கடிதங்களுக்கு நான் தகுந்த கடிதங்கள் எழுதுகின்றேன் என்று நான் என்றுமே நம்பியது இல்லை. அதிக
________________
8 அழிந்த பிறகு
மாகப் போனல், ! உங்களைப்போலவே எனக்கும் அந்த ஐயம் தோன்றுகிறது' என்று பதில் எழுதுவதுண்டு.

வாசகர்களுக்கு இந்த நாவலின் முன்னுரையே ஒரு பெரும் சுமையாகத் தோன்றும். ஆம், வாழ்வு எவ்வளவு பெருஞ் சுமையோ, என் நண்பரின் வாழ்வும் அவ்வளவு பெருஞ்சுமை யாகவேயிருந்தது. எனது அந்த நண்பர் எனக்கு எழுதிய இறுதிக் கடிதம்: 'நீங்கள் மீண்டும் பம்பாய்க்கு எப்போது வருவீர்கள்? மூன்று மாதங்க ளு க் கு முன்புதான் வந்து போனிர்கள். என்னுடைய ஆத்திரத்திற்கு என்னை மன்னிக்க வேண்டும். ஏனே என் மனத்தில் இன்னும் ஒரு முறை உங்களைக் காண்பேன் என்ற உறுதி தோன்றவில்லை. அதனுலேயே இந்தக் கேள்வியைக் கேட்கின்றேன். நீங்கள் கூடிய சீக்கிரம் வந்தால் நன்றாயிருக்கும். நான் சிற்சில சொற்களைக் கிறுக்கி வைத்திருக்கின்றேன். அவற்றை இதுவரை யாரிடமும் காட்டியதில்லை. இப்போதைக்குக் காட்டும் எண்ணமும் இல்லை, நான் இருக்கும் வரை அதைக் காட்டப்போவதில்லே. அப்படியானால் எழுதியது வீணாகத்தானே போகும். அப்படியாகக் கூடாது என்பதற்காக அதை உங்கள் கையில் கொடுக்கவேண்டும். என் காலம் முடிந்த பிறகு நீங்கள் அதைப் படிக்கவேண்டும் என்பது என் ஆசை. வேறு ஏதுமில்லே.

ஒரு விஷயம், பாருங்கள், நமது மூதாதையர்களான பல்வேறு முனிவர்கள் உலகம், பிறப்பு முதலியவற்றைப்பற்றி இது இப்படி, இதுவே உண்மை, இதுதான் இறுதியான முடிவு-என்றெல்லாம் கூறியிருக்கிருர்கள் அல்லவா? அவற்றை வேதம் என்ருவது சொல்லுங்கள், உபநிடதம் என்ருவது சொல்லுங்கள்-தவத்தி ஞல் அறிந்துகொண்டது என்ருே, கடவுளே வந்து காதில் கிசுகிசுத்தது என்ருே சொல்லுங்கள். எனக்கு ஒர் ஐயம், இந்த உலகம், படைப்பு முதலியவற்றைப் பற்றி தான் ஏதோ சிறிது படித்துத் தெரிந்துகொண்டிருக்கின்றேன். உயிர்க் கூட்டத்தின் இந்த யாத்திரை எங்கோ தொடங்கி எங்கே போய்க்கொண் டிருக்கிறது. பயணம் தொடங்கிய எவ்வளவோ காலத்திற்குப் பிறகு, வழியில் இரயில் நின்ற இடத்தில் வண்டியேறும் பிரயாணியைப்போல மனிதன் என்னும் பிராணி உள்ளே நுழைந் தான். நுழைந்தவன், நுழைந்ததுபோலவே இறங்கியும் போய் விட்டான். வாழ்வு என்னும் பயணம் மட்டும் இன்னும் த்ொடர்ந்துகொண்டிருக்கிறது. அதனுடைய குறிக்கோள் இன்று
________________
அழிந்த பிறகு '
வரை தெரியவில்லே. இன்னும் கடக்கவேண்டிய வழி எண்ணிப் பார்க்க முடியாத அளவு நீண்டிருக்கிறது. அத்தகைய வேளையில் அவன் எப்படிப்பட்டவனேயாகட்டும், "நான் இதன் இரகசியத் தைக் கண்டுபிடித்துவிட்டேன், இதுவே உண்மை' என்று முழங்குவாணுளுல் அது நகைப்பிற்குரியதாகிறதல்லவா?' என்று அவர்தம் கடிதத்தில் எழுதியிருந்தார். அவருடைய இந்தக் கேள்வி எல்லா மதங்களுடைய ஆணிவோகளையும் அசைக்கும்படி யாக இருக்கிறதல்லவா!

அந்த நண்பர், வாழ்வை அக்கறையோடும், ஆதாரத்தோடும் கண்டு, ஆராய்ந்து, தான் அறிந்தது மிகக் குறைந்த அளவு உண்மையே என்பதை உணர்ந்துகொண்டு வாழ்ந்துவந்த ஒரு மனிதர். அவர் ஏதாவது சில விஷயங்களைப் பற்றி தாலு வரிகளை எழுதினல் அவை வெற்றுப் பேச்சாக இருக்க இயலாது. நான் உயிருடன் இருக்கும்வரை அதை யாரும் பார்க்கவேண்டியதில்லை என்று கூறும் அந்த மனிதர் பெருமைக்காக அப்படிச் செய்திருந் தால், எழுதியது ஏன்? யாருக்காக? அதில் என்ன இருக்கலாம்? இப்படிப் பல்வேறு கேள்விகள் என்பனத்திரையில் எழுந்ததுண்டு. எப்படியானுலும் அவர் இருக்கும்வரை அவர் எழுதியது எனக்குக் கிடைக்காது. அவர் ஏன் இப்படி இந்த விசித்திரமான ஆசை யைக் கொண்டிருந்தார் என்று எனக்குத் தோன்றியது. அவர் புற வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்து, அதனுல் ஆமையைப் போல் தன் கைகால்களே உள்ளே இழுத்துக்கொண்டு தனி வாழ்க்கையை நடத்தினுரோ என்ற ஒரே ஒர் ஐயம் எனக்கு ஏற்பட்டது. புறத்திலும் அப்படியே இருந்தார். அகத்திலும் அப்படியே. தன் பேச்சில் தனக்கு நம்பிக்கையில்லை என்பதல்ல; தன் கருத்துக்கள் பிறரிடத்இல் நகைப்பை விளைவிக்கலாம்-தான் செந்த பிறகு யார் என்ன நினைப்புக் கொண்டாலும் கவலை
-: , 2. -:ா. - - !. - - - - - - யில்லே -என்னும் காரணத்தால் அவர் அப்படி நினத்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

அவர் வாழும் பம்பாய்க்குப் போகும் வேலை எனக்கு அப்போது இல்லை. அப்படி ஒரு வேலே ஐந்தாறு மாதங்களுக்கு ஏற்படாது என்ற நிலை. அவருக்காக நான் பம்பாய் போய்வந்தால், என்ன என்னும் ஆசையும் ஒரு முறை எழுந்தது. ஆசைக்கேற்றவாறு செயலில் ஈடுபடும் சுறுசுறுப்பு எனக்கில்லை. ஆசை ஆவலாய், ஆவல் தணியாத வேட்கையாய் என்னைத் துளைக்கவேண்டும். பல்வேறு தொல்லகளுக்கு இடையே, அவற்றையெல்லாம்

________________
10 அழிந்த பிறகு
கடந்து இந்த வேலையைச் செய்யும் அளவு வேகம் எனக்கு உண்டாகவில்லை. அதாவது அவருடைய இக வாழ்க்கை முடிவுபெறுவதற்குள் நான் அவரைக் காணமுடியவில்லே. அதற் காகப் பம்பாயிலிருந்து ஒரு தந்தி வரவேண்டியிருந்தது. அவ ருடைய அடுத்த வீட்டுக்காரர், ! உங்கள் உறவினருக்கு உடல் நலமில்லை; உடனே புறப்பட்டு வாருங்கள்' என்று தந்தி கொடுக்க வேண்டியதாயிற்று. நான் அவருடைய உறவினன் என்ற எண்ணம் தந்தி கொடுத்தவர் மனத்தில் இருந்திருக்க வேண்டும். அதைக் கொடுப்பதற்குக் காரணம் அந்த என் நண்பர் சொல்லியிருந்திருக்கவேண்டும். அப்பொழுது நான் தாமதம் செய்யாமல் பம்பாய் சென்றேன். அவர் வீட்டுக்குப் போனேன். அவர் அங்கேயில்லை. அடுத்த வீட்டுக்காரரிடமிருந்து அவரை கே. இ. எம். மருத்துவ நிலையத்திற்குக் கொண்டுசென் றிருந்தார்கள் என்பதை அறிந்து, அங்கும் ஒடினேன். வேறு யாரும் தனக்கு உற்ற நண்பர்களோ, உறவினர்களோ இல்லாத வரைப்போல அந்த நண்பர் என்னைக் காண விரும்பியதற்கு அவ ருக்கு நான் கடமைப்பட்டிருந்தேன். ஆனல், அவர் என்னிடம் வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக்கொள்ளும் தகுதி எனக்கில்லாமல் போயிற்று; இருந்திருந்தால் அவருடைய இறுதிக் கடிதத்திற்கு விடையாக நானே நேரில் அன்றே சென்று கண்டிருப்பேன்.

இப்பொழுது அவரைக் காண்பதற்கு மருத்துவ நிலையத்திற்குப் போய் அறிந்துகொள்ள வேண்டியதாயிற்று. உடம்பிற்கென்ன என்பதை அடுத்த வீட்டுக்காரர்கள் தெளிவாகச் சொல்லவில்லை. அவர்களுக்கு அவ்வளவு அக்கறை தோன்றவேண்டிய காரண மில்லை. "உங்கள் முகவரி எழுதிய ஒரு துண்டுக் காகிதத்தை அவர் காட்டினர். அப்போது அவருக்கு மிகுதியான காய்ச்சல் வந்திருந்தது. உடனே அவரை ஒரு மருத்துவரிடம் காட்டினேன். இவரை உடனே மருத்துவ நிலையத்திற்குக் கொண்டுசெல்லுங்கள். என்று அவர் சொன்னர். இரண்டு மூன்று நாட்களாகவே அவர் படுத்துக்கொண்டிருந்தார். அவருடைய அறைக்கதவு திறவாதது கண்டு, நானே உள்ளே சென்று அவருடைய நிலைமையைக் கண்டு அஞ்சினேன். நாங்கள் பார்க்கும்போது அவருக்குப் பேசுவதற்குக் கூட வலிமையில்லை. உங்கள் முகவரி எழுதிய, மேஜைமேலிட் டிருந்த ஒரு துண்டுக் காகிதத்தை நடுங்கும் தன் கையால் காட்டி ஞர். உடனே தந்தி கொடுத்தோம். நீங்களும் வந்துவிட்டீர்கள்.
________________
அழிந்த பிறகு 11
இனி, பொறுப்பு உங்களுடையது' என்று முடித்தார். இதைக் கேட்டு என் மனம் சிந்திக்கும் திறனற்று நடுங்கிற்று. அவர் சொல்லியபடியே மருத்துவ நிலையத்திற்கு ஒடினேன். அதற்குச் சிறிது நேரத்திற்கு முன்புதான் அவர் உடலைக் கட்டிலிலிருந்து அகற்றி, சவக்கிடங்கில் இட்டிருந்தார்கள்.

நான் இப்போது வந்தும், வாராததுபோல் ஆயிற்று இருந்தும் இல்லாததுபோல்தான். அங்கேயே நின்றேன். அரை மணிநேரம் எந்தவித வேதனையும் இல்லாமல் அமைதியாகக் கிடந்த அவ ருடைய மூப்பு மிகுந்த முகத்தைக் கண்டேன். நீண்ட சிந்தனைக்கு அங்கே நேரமில்லை. மேலே ஏற்பாடுகளைச் செய்யவேண்டாமா" என்று வினவினர். 'மரித்தவுடனேயே வாழ்கிறவர்களுடைய வேலை முடிந்துவிடுவது இல்லை' என்று நினைத்து, பம்பாயிலிருந்த என்னுடைய சில நண்பர்களே நினைவிற்குக் கொண்டுவந்தேன். அங்கிருந்து வெளிவந்து, தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு, என் நெருங்கிய நண்பர் ஒருவரை வரவழைத்தேன். அவர் உதவி யுடன் அந்த நண்பருடைய ஈமச் சடங்குகளே முடித்தும் விட்டேன்.

இனி என்ன செய்வது? அவருடைய அறைக்குத் திரும்பிப்போக வேண்டுமா, வேண்டாமா? நான் யார்? அவர் யார்? என்னும் கேள்வி எழுந்தது. நான் அவருடைய நண்பன் என்பது உண்மை. அதிர்ஷ்டம் கெட்ட நண்பன் என்பதும் உண்மை. ஆனல், அவ ருடைய சொத்துக்களின்மேல் எனக்கு 6767 உரிமையிருக்கிறது என்றெல்லாம் தோன்றியது. எனக்குத் துணையாக வந்த, அந்த நண்பர் அப்படியல்ல, அங்கே போங்கள்; அவருடைய அறை யில் உள்ள பொருட்களை வசப்படுத்திக்கொண்டு, அவருடைய உறவினர்கள் யார், யார் எங்கேயிருக்கிருர்கள் என்பதைத் தேடி, அவற்றையெல்லாம் ஒப்படை க் கும் வரை யில் உங்களுக்குப் பொறுப்பு உண்டு. அவருக்கு உங்களிடம் அவ்வளவு நம்பிக்கை யில்லாவிட்டால் அவராகவே உங்கள் பெயரை ஏன் எழுதிக் காட்டிஞர்?' என்று கேட்டார். ஆகவே, நானும் அவருமாக அந்த நண்பர் இருந்த அறைக்குத் திரும்பிச் செல்லவேண்டிய தாயிற்று. அடுத்த வீட்டுக்காரர்களின் அனுமதியுடன், அந்த ஒரு நாளைக்காவது அந்த அறை, அதிலிருந்த சாமான்கள் அனைத் திற்கும் எஜமானனக நான் இருக்கவேண்டியிருந்தது.

பம்பாயில் 'மலபார் ஹில்'' பகுதியில் அந்த நண்பர் வாழ்ந்து வந்தார். மலபார் ஹில் வசதிகளெல்லாம் செல்வர்களுக்கே
________________
12 அழிந்த பிறகு
உரியவை என்று பொதுவாக அனைவரும் நினைக்கிருர்கள். பெரும் செல்வர்களின் வீடுகளுக்கு இடையிடையே நூற்றுக்கணக்கான சிறு சிறு குடில்களும் உண்டு. ஒரு காலத்தில் செல்வர்களின் மாளிகையாக இருந்தது சிதிலமடைந்து, இப்போது குடிசை களைப்போலக் காட்சியளிக்கும் வீடுகளும் அங்கே இருக் கின்றன. என்னுடைய நண்பர் வாழ்ந்து வந்தது அப்படிப் பட்ட ஒரு வீட்டில்தான். 'Back Bay' கடலே ஒட்டி ஒரு சிறு நிலப் பரப்பு உண்டு. அங்கே பழைய குடியிருப்பை ஒட்டி “out house' அமைப்பில் அதைக் கட்டியிருந்தார்கள். அதன் கீழ்ப்பகுதியில் கடைகள் இருக்கின்றன. பின்பகுதியில் மிகவும் வறிய குடும்பம் ஒன்று வசித்துவருகின்றது. மாடி மிகவும் பெரியது, கடலே நோக்கிய தாழ்வாரம் ஒன்று உண்டு. அதன் எதிர்ப்பக்கத்தில் இரண்டு குடும்பங்கள் தங்குவதற்குரிய பகுதிகள் இருக்கின்றன.

படிகளுக்கு மிக அருகில் இருந்த பகுதியிலே எனது பழைய நண்பராகிய யசவந்தராயர்' இருந்தார். மூன்று அறைகள் இருந்த அந்தப் பகுதி, பம்பாய் மக்களேப் பொறுத்தவரை , அதுவும் நடுத்தர வகுப்பினரைப் பொறுத்தவரை, பெரிதாகத் தோன்றும் அறைகளும் கூடச் சிறியவையல்ல; காற்று, வெளிச்சம், இடம் எல்லாமே நிறைய இருந்தன. அந்தக் கடைசிப் பகுதியில் இருந்த குடும்பத்தினரையே நான், முதலில் அடுத்த வீட்டுக்காரர்கள் என்று குறிப்பிட்டேன். அது ஒரு பார்சிக் குடும்பம். குடும்பத்தின் தலைவர் ஜாம்சேட்ஜி, கண்டி ராக்டர். தந்தி கொடுத்து என்னே வரவழைத்தவர்.

இப்பொழுது எனக்குத் துணையாக வந்தவரும், யசவந்தராயரின் ஈமச் சடங்குகளே நிறைவேற்ற உதவியாக இருந்தவருமான நண்பர் பம்பாயில் பல ஆண்டுகளாக வாணிபம்செய்து வருபவரான மாதவராயர் அவரும் நானும் சேர்ந்து, இருட்டிய பிறகு, நண்பர் யசவந்தராயரின் வீட்டில் காலிட்டோம். அங்கே வந்து, எனக்கு மிகவும் அறிமுகமான அந்த வீட்டின் கதவைத் திறந்து, விளக்கு ஏற்றி, அங்கிருந்த இரண்டு பிரம்பு நாற்காலிகளில் அமர்ந்தோம். மாதவராயரே, நீங்கள் இன்றெல்லாம் எனக் காக அலைந்திருக்கிறீர்கள். கடைசியாக, இறுதி யாத்திரையை யும் முடித்துக் கொடுத்தீர்கள். உங்களுக்கு மிகவும் களைப்பாக இருக்கும். நானே இன்று உணவைப்பற்றிச் சிந்திக்கிற நிலைமை யில் இல்லை. இங்கேயே சும்மா படுத்திருந்து, காலேயில் ஒய்வாக எல்லாவற்றையும்பற்றிச் சிந்திக்கப் போகிறேன்' என்றேன்.
________________
அழிந்த பிறகு 13
உங்களுக்கு இவர் உறவினரா? நீண்டகாலமாகவே அறிவீர் களா?' என்று அவர் கேட்டார். அதற்குள் யாரோ பூட்ஸ் காலுடன் தடதடவென்று வரும் ஒலி கேட்டது. நான், இப் போது வேண்டாம்-நாளை விவரமாகக் கூறுகிறேன்' என்றேன். அதற்குள் அடுத்த வீட்டுக் கண்டிராக்டர் வந்தார். கதவைத் திறந்து, விளக்கு ஏற்றியிருப்பதைப் பார்த்து, பழக்கம் காரணம் போலும்- ஹல்லோ'' என்ருர் யசவந்தராயரின் பெயரையும் கூறியிருப்பாரோ, என்னவோ! நாங்கள் இருவரும் அவருக்குப் புதியவர்கள். என்னே அவர் சில முறை பார்த்திருக்கிறார், இப் பொழுது என் பெயரும் அவருக்குத் தெரியும். ஆகவே, மகிழ்ச்சி யோடு, என்னுல் ஆஸ்பத்திரிக்கு வரமுடியவில்லை. நாங்கள் எல்லாம் அன்றாடக் கடமைகளுக்கு அடிமைகள். போகட்டும், நம் யசவந்தர் எப்படியிருக்கிருர்?' என்று கேட்டார்.

நான் கைச் சைகையாலே போய்விட்டார்' என்று குறிப்பிட்டு, இந்த நண்பரின் உதவியால் ஈமச் சடங்குகளையும் முடித்துவிட்டு, தாதரிலிருந்து இப்போதுதான் திரும்பிவந் தோம்' என்றேன். அவர், என்ன..! போய்விட்டாரா!' என்று கேட்டு உடனே தன் மனைவியைக் கூவி அழைத்து இந்தச் செய்தி யைச் சொன்னர். அவருடைய குடும்பமே அங்கே வந்து கூடியது. கண்டிராக்டர் சோகம் நிறைந்த குரலில் உங்கள் பெயர் கார்தாத் அல்லவா’ என்று கேட்டார்.

ஏதோ ஒன்று. ''

இல்லை, சரியான பெயர் என்ன? '

 காரந்த, 

இவர்?"

என் நண்பர், மாதவராயர், '

காரந்தரே, நீங்கள் இங்கே ஆண்டுக்கு இரண்டொரு முறை வந்துகொண்டிருந்ததால் உங்களே எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கு அவரை நன்ருகத் தெரிந்திருக்கும். உங்களுக்கு மிகவும் நெருங்கியவரல்லவா? நானும் அவருக்கு நெருக்க மானவன், நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் இந்த வீட்டுக்கு வந்தவர்கள். அப்பொழுது போர் நடந்துகொண்டிருந்தது. அதனுலேயே இந்த வீடு மிகவும் எளிதாக எங்களுக்கு வாடகைக் குக் கிடைத்தது. உங்கள் உறவினர் யசவந்தராயர், மிகவும் குறைவாகவே பேசுவார். என் குழந்தைகள் அவரைத்
________________
14 அழிந்த பிறகு
தாத்தா' என்று அழைப்பார்கள். என் மனைவிக்கும் அவரிடம் மிகுந்த மரியாதையுண்டு; குழந்தைகளேவிட்டால் பெரியவர்க ளிடம் அவர் பேசுவது மிகவும் குறைவு. அவர் என் குழந்தைகள் தொந்தரவுபடுத்தியபோதெல்லாம் ஒவியம் வரைந்து கொடுப் பார் கதைகளைச் சொல்வார். அவர் அப்படியொன்றும் சிறந்த ஒவியர் அல்ல. ஆனல் அது வேறு விஷயம் . . . ஆனால், அவர் ஒரு துறவி என்றே எனக்குத் தோன்றியது. அவர் எவ்வளவு தாராளமாகப் பழகினரோ அந்த அளவுக்கு அவர் விலகியும் இருந்தார் என்றே சொல்லலாம். வயதை மட்டும் நினைத்து நான் இப்படிச் சொல்வதாக நினைக்காதீர்கள். அவருடைய அன்ருட வாழ்க்கையில், நடவடிக்கைகளில், எப்பொழுதும் சிந்தனை தங்கிய முகத்தில் ஏதோ ஒருவகையான அபூர்வமான களை காணப்பட்டது! உங்களுக்கு அப்படித் தோன்றவில்லையா?" என்று கேட்டார்.

உண்மை' என்றேன் நான். அவர் எப்போதாவது என்னுடன் பேசுவதுண்டு. ஆளுல், அவை நிறுத்துப் பேசியது போன்று இருக்கும்! அந்தப் பேச்சு வாழ்க்கையின் அனுபவத்தையும் சுவைகளையும் எடுத்துக்கூறும். அற்பமான விஷயத்தைப்பற்றி அவர் பேசியதேயில்லை. உண்மை யில் மிக உயர்ந்த வாழ்க்கை அவருடையது. ஆமாம், அவர் உங்களுக்கு என்னவாக வேண்டும் என்றீர்கள்?'

இவ்வளவு விரைவில் அவர் நம்மிடமிருந்து போய்விடுவார் என்று நான் நினைக்கவேயில்லை. முந்தாநாள் கே. இ. எம்.-க்குப் போய் விசாரித்துக்கொண்டு வந்தேன். அது செரிபிரல் மலேரியா'வாக இருக்கலாம் என்ருர்கள். அதுவுமன்றி நான் அழைத்துக்கொண்டுவந்த டாக்டர், பிழைப்பார் என்ற நம்பிக் கையை முதலிலிருந்தே கொடுக்கவில்லை . . . புண்ணியவசத்தால் syaiGsml–u Gunawa Guds Will you contact this friend for me என்று எழுதி வைத்த காகிதம் என் கண்களில் பட்டு, உங்க ளுக்குத் தந்தி கொடுத்தேன். '

மிகவும் உதவி செய்திருக்கிறீர்கள்.' எனக்கென்னவோ அவர் இல்லாத இந்த மாடி சூனியமாகத் தோன்றுகிறது. நான் வருந்திக் கவலைப்பட்டபோதெல்லாம், எனக்கு அறிவுரை கூறியிருக்கிருர், ஊக்கமூட்டியிருக்கிருர், ஒரு முறை நான் பண நெருக்கடியிலிருந்ததை, எங்கள் பேச்சி
________________
அழிந்த பிறகு 15
லிருந்தே தெரிந்துகொண்டு, தாமாகவே வந்து, என்ன வேண்டும் சொல்லுங்கள், கொஞ்ச நாளைக்காக நான் பணம் கொடுக்கிறேன்' என்ருர். இதைக் கேட்டதும் நான் திகைத்தே போனேன். செக் புத்தகத்தை எடுத்து ஆயிரம் ரூபாய்க்குச் 'செக் எழுதிக்கொடுத்தார். அதுவரையில் அவரிடம் பணம் இருக்கும் என்றே நான் நினைக்கவில்லை. அவரை, சொந்தக்காரர் களைப்பற்றிக் கேட்டபோதும் அவர் ஏதும் சொன்னவரல்ல. அவருக்குச் சம்பாதிக்கிற வயதில் பிள்ளைகள் இருக்கவேண்டும், அவர்கள் தொலைவில் இருந்துகொண்டு, இவருடைய செலவுக்குப் பணம் அனுப்பிக்கொண்டிருக்கிருர்கள் என்றே நான் நினைத்திருந் தேன். அன்று என் மானத்தை இழக்கும் ஒரு நெருக்கடியில், நான் கேட்காமலேயே, அவ்வளவு பணம் கொடுத்து என்னைக் காப்பாற்றினர். நானும் விரைவிலேயே அதைத் திருப்பிக் கொடுத்துக் கடனிலிருந்து விடுதலை அடைந்தேன்.

'அவர், இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மகாபலேஸ் வரம், பூஞ, போர்டி என்று போய்க்கொண்டிருந்தார் அல்லவா, ஒவியம் வரைவதற்காக! அந்தச் சமயங்களில் எங்களுக்கு இந்த வீடு வெறிச்சோடியதைப்போலக் காட்சி அளிக்கும். அவர் இங்கே குடியிருந்தது, ஒரு ரோஜாச்செடி பூவிட்டுச் சிவப்பை அள்ளி வீசிய தைப் போல த் தோற்றம் அளித்துக்கொண் டிருந்தது.'

அவர் பேச்சை நிறுத்தினர், நான் மாதவராயரை நோக்கி, நீங்கள் இப்போது போய் வாருங்கள்' என்று வற்புறுத்தி அனுப்பி வைத்தேன். கண்டிராக்டரும் தான் இப்போதே வருவதாகச் சொல்லித் தன் வீட்டுக்குப் போளுர். அங்கேயும் அந்த ஆள் பேசிக்கொண்டிருந்தது யசவந்தராயரைப்பற்றியே தான். அவர் இறந்த செய்தி கேட்ட அவர் மனைவியும், இரண்டு சிறிய குழந்தைகளும் அழுதது எனக்குக் கேட்டது. எனக்கு இப் போது நான் எங்கேயிருக்கிறேன், ஏன் வந்தேன், இனி என்ன செய்யவேண்டும் என்ற எதுவுமே தோன்ருமல், அமர்ந்திருந்த நாற்காலியிலேயே தூங்கிப்போனேன். ஜாம்சேட்ஜி திரும்பி வந்து என் முன்னுல் நின்றதுகூடத் தெரியவில்லை. அவர் வந்து உங்களுக்கு மிகவும் களைப்பாய் இருக்கும். படுத்துக்கொள்ள லாமே . . . ஆளுல், உணவிற்கு என்ன செய்வீர்கள்? . . . "தாதா, அவர் நோய்வாய்ப்படுவதற்குச் சரியாக எட்டு நாட் களுக்கு முன்பே சண்டை போட்டுவிட்டுப் போய்விட்டான்.

________________
16 அழிந்த பிறகு
ஐந்து ஆண்டுகள் அவருடைய நிழலேப்போல இருந்த அவன், ஒரு நாள் அவரிடம் கடன் கேட்டு, அவர் கொடுக்கவில்ஃ என்பதால், "நீங்கள் சாகும்போது இதை யெ ல் லாம் கொண்டுபோகப் போகிறீர்கள் அல்லவா?' என்று கேட்டு உமிழ்ந்து, திட்டிவிட்டுப் போனன். எவ்வளவு நன்றிகெட்டதனம்' என்றே எனக்குத் தோன்றியது. சாப்பாடு போட்டு, துணிமணி எல்லாம் கொடுத்து, மாதம்தோறும் அவனுக்கு நாற்பதுக்கும் அதிகமான ரூபாய்களைச் சம்பளமாகக் கொடுத்திருக்கவேண்டும். அப்படியும் அவனுக்குத் திருப்தி ஏற்படவில்லே.

அவன் கூச்சலைக் கேட்டு யசவந்தராயர் ரெ.ான்னுராம் "தாதா நான் சாகும்போது என்னவாகும் என்று எனக்குத் தெரியாது. பணத்தை மட்டுமல்ல, என் பிணத்தையும்கூட விட்டுவிட்டுத்தான் போவேன் . . .
ஆளுல், அப்படிப்பட்ட பேச்சு உன்னைப் போன்றவன் வாயிலிருந்து வந்திருக்கக்கூடாது. நீ அன்ருெரு நாள் மேசைமேல் வைத்திருந்த நூற்றுச் சில்லரை ரூபாய்களை எடுத்துக்கொண்டு, 'நான் எடுக்கவே இல்லை என்று ஏதேதோ ஆணையிட்டுக் கூறினுய். அன்று முதலே நீ ஒரு மனித னல்ல என்பதாக நான் முடிவு செய்தேன். அன்று முதல் நீ சுட்டுத் தந்த ரொட்டி என் கொண்டைக்குள் இறங்கவில்லை. என்ருலும் நானுக உன்னைப் போ என்று சொல்லவில்லை. இப்போது அந்த நேரம் வந்துவிட்டது. போ' என்று சொல்வி அனுப்பிவைத்தார். அவனே அனுப்பும்போது அவருக்கே துக்கம் தாங்க முடியாமல் தாதா, தாதா! பணம் வரும், போகும். நான் எவ்வளவோ சம்பாதித்திருக்கிறேன், இழந்துமிருக்கிறேன். ஆளுல், இழந்துவிட்ட நம்பிக்கையை மீண்டும் சம்பாதிப்பது கஷ்டம்' என்ருர், தாதா வெறிபிடித்தவனைப்போல, உங்கள் நம்பிக்கை யாருக்கு வேண்டும்? இந்தக் கிழவனுக்குப் பணக் கொழுப்பு' என்றெல்லாம் திட்டத் தொடங்கிஞன். அப்போது என் மனைவி இங்கே வந்து, தாதாவைக் கடிந்து வெளியே அனுப்பினள். அதன் பிறகு அவரே ஸ்டவ் பற்றவைத்து டீ, டோஸ்ட் செய்துகொண்டு நாளைக் கழித்தார்

இவ்வாறு ஜாம்சேட்ஜி சொல்லிக்கொண்டிருக்கும்போது அவ ருடைய மனைவி தன் பங்களிடம் எனக் காகச் சிறிது பால், ரொட்டி, பழம், வெண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தனுப்பி ஞள். அந்த நேரத்திற்கு என் கண்னெதிரில் யசவந்தரே உயிருடன் வந்து நின்றதைப் போலிருந்தது; கண்டிராக்டர் என்
________________
அழிந்த பிறகு 17
நிலைமையைப் பார்த்து, கொஞ்சமாவது சாப்பிடுங்கள்' என்ருர். நான் வேண்டாம்' என்றேன். எனக்கு எதுவும் பிடிக்கவில்லை.

காலையிலிருந்து எதுவுமே சாப்பிட்டிருக்கமாட்டீர்கள் நீங்கள் . . . . .

நேற்றிலிருந்தே . . . . . அப்படியானல், நீங்கள் இதை எடுத்துக்கொண்டே ஆக வேண்டும். உங்கள் உறவினருடைய நினைவு வந்து துன்பப்படுத்து வது இயல்பே. ஆனல், யாரேனும் சாவிலிருந்து தப்பிய துண்டா?' '

''நான் அதற்காக வருந்தவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு நீங்கள் எப்போது திரும்பவும் வருவீர்கள்?' என்று அவர் என்னைக் கேட்டிருந்தார். நான் அப்போதே வந்திருக்கவேண்டும். அவரிட மிருந்து தெரிந்துகொள்ளவேண்டியவை எவ்வளவோ இருந்தன.' 'உண்மை. அவர் மிகவும் பெரியவர், ஆல்ை, பாருங்கள், பத்துக்கு ஒன்று அல்லது இரண்டு சொற்களிலேயே அவர் பதில் அளிப்பார். நான் இவ்வளவு அருகிலிருந்தும் என்னல் அவருடன் தாராளமாகப் பேசமுடியவில்லை . . . அது இருக்கட்டும், உங்க ளுக்கு அவர் என்ன உறவு?''

அந்தக் கேள்விக்கு அப்போதே விடையளிக்கும் உறுதி எனக்கு இல்லை. அவருடைய நண்பன் என்று கூறியிருக்கலாம். கூறி யிருந்தால் அவருடைய சொத்துக்களே நான் தொடமுடியாது. அவை எனக்குத் தேவையும் இல்லே. ஆயினும், அவர் என்னை வரும்படி கடிதம் எழுதியது ஏன் என்பதைத் தெரிந்துகொள்வதற் காகவாவது முயலவேண்டாமா? அவருடைய கடிதங்கள் முதலிய வற்றிலிருந்து அவருடைய உறவினர்களில் யார் உயிருடன் இருக் கிரு.ர்கள், எங்கேயிருக்கிரு.ர்கள் என்று தெரிந்துகொண்டு, அவர் களுக்குத் தெரிவிக்க வேண்டாமா? இதனுலேயே நான் ஜாம் சேட்ஜி கேள்விக்கு விடையளிக்கத் தயங்கினேன்.

நான் விடையளிக்கத் தாமதம் ஆவதைக் கண்டு, அவரே உங்களுக்கு அவர் தூரத்து உறவோ, என்னவோ'' என்ருர், "ஆம்,' என்றேன். அதே நேரத்திற்குக் களைப்பு மிகுதியால் எனக்குத் துாக்கம் வந்தது. அதைக் கண்டு கண்டிராக்டர் முதலில் சிற்றுண்டியை முடியுங்கள்' என்று வற்புறுத்தினர்.
அ.பி.-2
________________
18 அழிந்த பிறகு
நான் எதைத் தின்றேன், எதை விட்டேன் என்பதொன்றும் தெரியவில்லை. களைப்பு, தூக்கம், நண்பரைப்பற்றிய கனவு இவையெல்லாம் ஒன்றாகக் கலந்ததுபோல் தோன்றியது. கண்டிராக்டர் கொடுத்தவற்றில் சிறிது பாலைக் குடித்தேன் என்று நினைக்கிறேன். அவர் புறப்பட்டுப் போன பிறகு கதவைத் தாழிட்டேன். விளக்கை அணைத்தேன். பக்கத்திலிருந்த ஒரு பழைய சோபாவின்மேல் காலை நீட்டிச் சாய்ந்தேன். இரவெல்லாம் ஒரே கனவு. நான் உடல்நலம் குன்றிப் படுத்திருந்தது போலவும், யசவந்தராயர் தமது கையை என் நெற்றியின்மேல் இட்டுக்கொண்டு, என் பக்கத்தில் உட்கார்ந்திருந்ததைப்போல வும் தோன்றியது. நான், ''சாவு அச்சத்தைத் தருகின்றது' என்றேன். அவர், 'அச்சம் ஏன்? இங்கே வேலை முடிந்துவிட்ட தல்லவா? நீ வந்த வேலை முடிந்தது. முடிந்ததற்கு நீ மகிழ வேண்டும்' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நாளை என்ன ஆகும்?' என்று அவரைக் கேட்டேன்.

நாளைய வேலையைத் தொடர்ந்து செய்வது மற்றவர்களின் பொறுப்பு.'

நான் என்ன ஆவேன்?'

"நீ இல்லை யாவாய்."


'மறுபடியும் பிறவியா?"

யாருக்குத் தெரியும்?''

இல்லையா?"

"அது உனக்கேன்? நீ இன்றைய தினத்தைச் சேர்ந்தவன். நேற்றையவனுமல்ல; நாளையவனுமல்ல. அதற்குள் எனக்கு உறக்கம் வந்திருக்கவேண்டும். காலையில் சாளரத்தின் வழியே வெயில் மேலே பட்ட பிறகே எழுந்தேன். உடல் களைப்பெல்லாம் மறைந்துவிட்டிருந்தது. எனக்குப் புது வாழ்வு வந்ததுபோல் இருந்தது. யசவந்தராயரை நினைத்து, அவருடைய மறைவுக்காக வருந்திய வருத்தம்கூடக் கழிந்துவிட்டதைப்போலத் தோன்றியது. நாம் ஒரு நாடகத்தைப் பார்க்கிறோம்; அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நாமும் உணர்ச்சி மிக, நடிகர்களோடு கலந்து அதில் பங்கு பெறுவதுபோலத் தோன்றும். நாடகம் முடிந்து வீட்டுக்குப் புறப்படும்பொழுது மிஞ்சுவது நினைவு மட்டுமே. அந்த நினைவு இனிமையாகவோ, கசப்பாகவோ இருக்கின்ற அளவுக்கு அது தொடர்ந்து நிற்கின்றது.
________________
அழிந்த பிறகு 19
யசவந்தராயருடைய நினைவு எனக்கு மிகவும் விருப்பமானது: இனிமையானது; அந்த அனுபவம் மறக்கமுடியாதது. என் னுடைய சொந்த உபயோகத்திற்காக அவர் இனிக் கிடைக்கமாட் டார். ஆளுல், அவர் என் வாழ்க்கையில் பொறித்துச் சென்ற நினைவு என்றென்றும் என் கைக்கு எட்டக்கூடியது. அதை நான் இருத்திக்கொள்ளலாம் அல்லது மறந்தும்விடலாம். ஒரு மனித னின் அடையாளம் நீடிப்பதோ அல்லது அழிவதோ அவனுடைய வாழ்க்கையிஞல்தான். அந்த வாழ்க்கை நம்முடைய நினைவு களுக்கு உயிர் ஊட்டி, நம் வாழ்க்கையின் மூலம் அழியாது நின்று, கலந்து தொடர்ந்தால், அதுவே மறுபிறப்பாகும் என்று எனக்குப் பட்டது.

நான் யசவந்தராயரைப் பலமுறை கண்டிருக்கின்றேன். இப் பொழுது அவர் விட்டுச் சென்றுள்ள காலடிகளின் குறிகளைக் காண்பதற்கு வந்திருக்கிறேன். அவரை நான் உண்மையிலேயே நன்ருகத் தெரிந்துகொண்டிருந்தால், அவருடைய காலடிகளின் குறியே அவர் வாழ்க்கை நடத்திய முறையை எனக்குக் காட்டித் தரும்-என்றெல்லாம் நினைத்தேன்.

எழுந்து உடம்பை முறித்து முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து, கண்ணுடியெதிரில் நின்று முகத்தை வழித்துக்கொண்டே எதிர்ச் சுவரைப் பார்த்தேன். அந்தக் கண்ணுடியின் இரண்டு புறங்களி லும் பத்துப் பன்னிரண்டு ஒவியங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. யசவந்தராயரே எழுதிய ஒவியங்கள் அவை. அவர் ஒவியம் தீட்டுவதைக் கற்றுவந்தார். ஒவியக்கலை பயிலாமல், அதனுடைய நுணுக்கங்களை அறிந்துகொள்ளாமல், தமது பொழுதைப் போக்குவதற்காக அதை ஒரு பொழுதுபோக்காக அவர் வைத் திருந்தார். அந்த ஒவியங்களே நான் முன்பே எத்தனையோ முறை கண்டிருக்கின்றேன். அவை என்னேக் கவரவில்லை. அவர் ஓவியக் கலைஞர் என்ற தகுதியைப் பெறத்தக்கவரல்லர். அதனல் என்ன, தமது மனத்தில் தோன்றிய உருவங்களுக்கு வண்ணம் தீட்டி எழுதவில்லை என்று தோன்றியது. அதஞல் எந்தவிதமான தொல்லையுமில்லையல்லவா-என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

இந்தத் தடவை அதே ஒவியங்களைப் பார்க்கும்போது, அவற் றில் நுணுக்கம் ஏதும் தெரியாவிட்டாலும், யசவந்தராயர் இவற்றையெல்லாம் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே எழுதவில்லை என்று தோன்றியது. ஒவியக்கலே அவருடைய
________________
20 அழிந்த பிறகு
மொழியாகவில்லை என்பது உண்மை. மொழி தெரியாத ஒருவன் வேற்று நாட்டுக்குச் சென்ருல் கை, வாய் முதலியவற்றின் குறிப் பினல், தனக்கே உரிய முறையில், நான் இன்ன இடத்துக்குப் போகவேண்டும், வழிகாட்டுங்கள்' என்று சொல்வதற்கு முயலக் கூடாது என்பதுண்டோ?
அப்படியானுல் இவர் தமது ஒவியங்களில் எதை எடுத்துச் சொல்ல முயன்ருர் என்பதை அறியும் ஆவல் ஏற்பட்டது. அரை மணி நேரம் கழிந்த பின்பும் அவை ஒவியங்களாகவும் தோன்ற வில்லை; எந்தப் பொருளையும் எடுத்துக் கூறவுமில்லை.

அப்படியானுல், விரைவாக ஏதேனும் ஒரு சிற்றுண்டிச் சாலேக்குச் சென்று, சிற்றுண்டியை முடித்துக்கொண்டு அவ ருடைய சொத்து விவரங்களை அறிய முயல்வேன்; முடிந்த அளவு விரைவிலேயே சொந்த ஊருக்குத் திரும்புவேன் என்ற முடிவுக்கு வந்தேன்.

இரண்டாம் அத்தியாயம்

அன்று காலையில், நான் எதிர்பாராதிருந்தும்கூட. எனது நண்பராகிய மாதவராயர் தமது வேலையிலிருந்து விடுப்புப் பெற்றுக்கொண்டு நான் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்; தம்மால் முடிந்த உதவியைச் செய்வதற்காகவே அவர் வந்தார். குருடனுக்குக் குருடன் துணை ஆனதுபோல, நாங்கள் இருந் தோம். அடுத்த வீட்டு ஜாம்சேட்ஜி காலேயிலேயே வந்து தம் முகத்தைக் காட்டி, வணக்கம் சொல்லிவிட்டுப் போய்விட்டார். நாங்கள் இருவரும் கதவைத் தா ழி ட் டு க் கொண் டு. அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கிளுேம். முதலில் ந ண் பர் மாதவராயருக்கு, யசவந்தராயருக்கும் எனக்கும் இருந்த அறிமுகத்தை எடுத்துச் சொன்னேன். அவர் என்னிடமிருந்து பெற விரும்பியது என்ன உதவி அல்லது வேலை என்பதே தெரியவில்லை' என்பதையும் குறிப்பிட்டேன்.