தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Sunday, May 22, 2016

687430743 V D584 L8367 - ஷோபா சக்தி

687430743 V D584  L8367 - ஷோபா சக்தி
 இருள்வெளி - 1998 (தொகுப்பு - சுகன்)
எல்லாம் முடிந்தது. இக்கணத்தில் நகரத்தின் ஒரு புள்ளியில் செக்கல் கிழித்து பொறி பறந்திருக்கும். அது முளாசும். ஈபிள்கோபுரம் தழலாய் உருகி உருகியோட ஐம்பது-நூறு அர்த்தங்களில் சிரிக்கும் மோனலிஸாவும் அவுட், வெண்ணிற மாதாகோவிலுக்கு ஐயோ கேடு. லாச்சப்பல் பிள்ளையாரும் வயிறு வெடித்துச் சாவார். உரிந்து போட்டு திரியும் எல்லோருமே எரிவீர்... கூய். கூய்...
"சனியனே கத்தாம இருடா" என்று பல்லைக் கடித்துக்கொண்டு கையை ஓங்கிய படியே சித்தப்பன் எனக்கு அடிக்க ஓடி வந் தான். கைகளால் முகத்தை மூடிக்கொண்டே முழங்கால்களுக்குள் பத்திரப்படுத்துவதற்காய் கதிரைக்குள் குறண்டினேன். கண்கள் தாமாகவே இறுக மூடிக்கொண்டன. மூடிய கண்களுக்குள் சிணிப்பிடித்த இலக்கங்கள் உன்னிக்கொண்டு மில்லியன் முறைகள் மோதி வெடித்தன. அதிர்வுகள் என் பிடரியையும் பொத்துப் போடலாம். இனியும் கண்களை மூடியிருக்க முடியாது. அடி விழுந்தால் காரியமில்லை. மெல்ல கண்களை திறந்து பார்த்தேன். சித்தப்பன் ஓங்கிய கை ஓங்கியபடியே எனக்கு ஓரடி முன் னால் ஒரு சடன் பிரேக் அடித்த கோலத்தில் மூசிக்கொண்டு நிர்வாணமாய் நின்றான்.
"சரியாய் குளிருது ஒரு சிகரெட் தாறியோ” என்று சித்தப்பனிடம் கேட்டேன்.
"இண்டைக்கு கனத்த நாளல்லோ, அதுதான் அட்டகாசம் கூடிப்போச்சு” என்று சித்தி சொன்னாள்.
"எடியே உடுப்பில்லாமல் நிற்காதே எரிந்து போவாய்” என்று சொன்னேன்.
"செருப்பால் அடிப்பன் நாயே” என்று சித்தி செருப்பெடுக்க ஓடினாள். சித்தப்பன் கண்ணெல்லாம் கலங்கிப்போய் என் தலை முடியை பிடித்து என்னை உலுக்கியெடுத்தான். செருப்பு தோதாக கிடைக்காததால் சித்தி எட்ட நின்று காறித் துப்பினாள். வலதுகை சுட்டிவிரலை சித்தியின் மூஞ்சிக்கு நேராய் பிடித்து இடது கையைப் பொத்தி முழங்கையோடு மடக்கி நரம்புகளை இறுக் கிப் பிடித்து எழுந்து நின்று அடி வயிற்றிலிருந்து ஒரு கூவடித்தேன். சித்தி காதுகளை பொத்திக் கொண்டு ஓடிப்போனாள்.
சித்தி உள்ளே போகமட்டுக்கும் பார்த்துக்கொண்டிருந்த அந்த குத்தியன் சித்தப்பனிடம் நெருங்கி "பொடியனுக்கு இந்திரியம் உச்சந்தலைக்கேறி அடிச்சுப்போச்சு... அது தான் இப்படிப் போட்டு பூமரத்த உலைக்குது” என்று அடிக்குரலில் சொன்னான். இந்தக் குத்தியன்தான் இன்று பின்னேரம் என் னைப்பிடித்து இங்கே வைபோசாக இழுத்து வந்தவன். சித்தப்பனோடு ஒட்டு.
இவர்கள் நாளைக்காலையில் என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போக திட்டமிடுகிறார்கள். பாவம் இவர்கள். உரிஞ்சாங்குண்டிகளுக்கு நாளை என்பதே இருக்கப்போவ தில்லை.
ஆஸ்பத்திரி எனக்கு எப்போதுமே சலிப்பூட்டுவது. கடைசியாக சென்ற கோடை காலத்தில் சித்தப்பன் என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போயிருந்தான். டொக்டரும் நானும் எதிரெதிராய் இருந்தோம். "நீ ஏன் கூவுகிறாய்? நீ ஏன் குதிக்கிறாய்? என்று என் கண்களை உற்றுப் பார்த்தவாறே டொக்டர் கேட்டான். எனக்கு அலுப்புத் தட்டியது நான் எப்போதும் உண்மையையே பேசிவந்தாலும் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் முடிவாக கல் யாணம் செய்து வைக்கவோ, சாத்தானை விரட்டவோ, பொலிஸில் பிடித்துக் கொடுக்கவோ அல்லது ஆஸ்பத்திரியில் மறிக்கவோதான் முற்றெடுக்கிறார்கள். நான் இந்த முறை பேசப்போவதில்லை.
ஆனால் இந்த டொக்டர் சிங்கனாய் இருந்தான். விடாமல் என் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று உச்சிக் கொண்டு என் கண்களுக்குள் பாய்ந்தான். டக்கென்று கண்களை மூடிக் கொண்டேன். இலக்கங்கள் உன்னிக்கொண்டு மோதிப்பறக்க, இம்முறை அதிர்வுகள் நாளங்களை அரித்துக் கொண்டு உள்ளங் கால்களில் இறங்கின. எனது கண்களுக்குள் ளால் புகை கிளம்பியது. "டொக்டர் என்னை விட்டுவிடு, எனக்குள் இலக்கங்கள் மின்னி தெறிக்கின்றன. என்னை எரிய விடாதே" என்று துடித்துப் பதைத்தேன்.
டொக்டர் குறுக்குமறுக்காக தலையை ஆட்டிக் கொண்டான். "பிசாசே நீ என்னை நம்பவில்லையா? எனது கண்களுக்குள்ளால் புகை கிளம்புவது உன் பொட்டைக்கண்க ளுக்கு தெரியாமல் போனதோ?
டொக்டர் எனது தோள்களில் தனது கைகளை மெதுவாக வைத்து என்னை படுக்கையில் சாய்த்தான் "அது உண்மை தான் நண்பனே” என்று எனது காதுக்குள் சொன்னான். டொக்டரின் குரல் இன்னும் இன்னும் வேகமாகவும் மெதுவாகவும் என்னை வருடிற்று "நீ நிம்மதியாக தூங்கு நண்பனே, உன்னை தின்னும் இலக்கங்களோடு நான் இப்போது பேசுவேன், நண்பனே நீ தூங்கி விடு" நான் வாய் கிழிந்து கொட்டாவி விட்டேன்.
*****************
687430743 V பேசுகிறது 
பிள்ளைபிடிகாரர்களின் ஆட்சியில் கிராமம் இருந்தது. ஒழுங்கைகள் நெடுகலும் கறுப்பு முண்டாசு கட்டிய, தலைப்பாகையணிந்த புல்லுத் தொப்பி போட்டவர்கள் பனைகளையும் வேலிகளையும் குரோட்டன் செடிகளையும் வெட்டிப்போட்டார்கள். அவர்கள் என்னை ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போதோ, மேகலை மச்சாள் தந்த கடிதத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போதோ இல்லை ஐயாவும் நானும் கண்டப்பட்டை அவித்து சாயமிடும்போதோ சுற்றி வளைத்தார்கள்.
அக்காலத்தில் நான் நிறைய மீன்குஞ்சுகள் வளர்த்தேன். அவர்கள் ஒருபோதும் கண்களை விரித்து என் மீன்குஞ்சுகள் குறித்து கேட்டதில்லை. அந்தக் காலத்தில் நான் பென்னம் பெரிய சிப்பிகள் சேகரித்து ஒவியங்கள் வரைந்து வைத்திருந்தேன். அவர்கள் ஒருபோதும் ஒரு ஓவியம் கேட் டதில்லை. அவர்கள் எப்போதும் எனது அடையாள அட்டையையே கேட்டார்கள். அடையாள அட்டையை புரட்டி புரட்டி பார்த்தவர்கள் எனது பெயரை கேட்டார்கள். சொன்னேன். அவர்களுக்கு தமிழோ, சிங்களமோ படிக்கத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் அடையாள அட்டையை தமது உள்ளங் கைகளுக்குள் பொத்தியவாறே அதன் இலக்கத்தை கேட்டார்கள். நான் அதை ஞாபகத்தில் வைத்திருக்கவில்லை. சந்தேகத்துடன் என் கன்னத்தில் இடித்தார்கள். சப்பாத்துக்கால்களை முத்தமிட்ட அம்மாவை ஏறி மிதித்தார்கள்.
அந்தோனியார்கோவில் சுவாமி ஆடி அசைந்து வந்து நான் சோலிசுறட்டுக்கு போகாதவன் என்று அவர்களிடம் சொன் னான். சுவாமி அவர்களின் நம்பிக்கைக்கு உரியவனாய் இருந்திருக்கவேண்டும். அவர் கள் என்னை விட்டுவிட்டார்கள். நான் மீன் குஞ்சுகளை சாகக்கொடுத்தேன். உட்கார்ந்தி ருந்து ஓவியங்களை அழித்தேன். மேகலை மச்சாளுக்கும் பதில் கொடுக்கவில்லை. எனக்குரிய எல்லாவற்றையும் விட்டு அடை யாள அட்டையின் இலக்கத்தை மட்டுமே பிடித்துக்கொண்டேன். தளர்பாடம் செய்தேன். பிள்ளைபிடிகாரர்கள் உக்கிரம் கொண்டார்கள். பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கரும்பலகைகளில் ராக்கற் எழுதி சுட்டுப்பழகினார்களாம். ஒருநாள் மேகலை மச்சாளையும் பிள்ளைபிடிகாரர் தூக்கிச்சென்றார்கள். ஆனால் மேகலை மச்சாள் அடையாள அட்டையை கரைந்த பாடம் பண்ணியிருந்ததாக மாமி குளறினாள். -
D 584 பேசுகிறது
மேகலைமச்சாளின் செத்தவீட்டுக்கு அடுத்த நாள் நான் பலாலியில் ஏறி இரத்மலானையில் இறங்கினேன். சூளுக்கு போன போது திருக்கை அடித்து படுத்தபடுக்கையாய் கிடந்த ஐயாவுக்கு அராலி பரவைக் கடலையும் சின்ன களங்கண்ணி கூட்டத்தையும் தவிர வேறெதுவுமே தெரிந்திருக்கவில்லை. அம்மா கொஞ்சம் வாயாடி கையாடி யாக இருந்தாள். என்னை விமானத்தில்ஏற் றிவிட்டு கொழும்புக்கு ரயிலைப் பிடித்தாள்.
விமானத்தில் இருந்தவர்கள் எல்லோருமே பிள்ளைபிடிகாரருக்கு தப்பிவருபவர்கள். நாங்கள் இரத்மலானையில் இறங்கியபோது. எட்டு திக்குகளிலிலுமிருந்து ஆய்போவன் ஓதப்பட்டது. எங்கள் உச்சிகள் முகரப்பட்டன. அம்மா நிமிசத்துக்கு நூற்றிப்பத்து ரூபா கொடுத்து சித்தப்பனை கெஞ்சிமன்றாடினாள். மனுசிக்கு மன்றாடுவதை தவிர வேறு மொழியில் பேச பழக்கப்பட்டிருக்கவில்லை. அம்மா எனக்கு தோல் ஜக்கட் வாங்கித்தந்தாள். குளிரேறாத சப்பாத்துக்கள் வாங்கித்தந்தாள். வறுத்த மிளகாய்த்துளும், மிக்ஸர் பக் கெட்டுக்களும் வைத்து ஒரு பொதி தயார் செய்தாள்.
ஒரு சாமத்தில் எல்லாம் தலைகீழாய் போக கதவை உடைத்து சனியன் பிடித்தது. இந்த நாட்டில் என்ன இழவு நடக்கிறது, யார் சொல்லி விழுகிறது என்ற சூத்திரம் எனக்கு பிடிபடாமல் போனது. அவர்கள் என்னை ஜீப்பில் கூட்டிச் சென்றபோது போனமாதம்
முழுதும் விகாரைகளில் மினுக்கிய வெசாக் கூடுகள் அவிந்துபோய் கிடந்தன. ஜீப்பிலிருந்து இறக்கிய கையோடு என்னை உருட்டி உருட்டி எத்தினார்கள். நூறு படிகளும் மூன்று திருப்பங்களும் கடந்து வீழ்ந்தேன். "உண்மையை சொல்லிவிடு புலியே, ஜனாதிபதியை கொல்லத்தானே இங்கு வந்திருக்கிறாய்? ஜனாதிபதி மாளிகையை படம் பிடித்து விட்டாயா? எப்படி வெடிப்பதாகத் திட்டம்?
"ஐயாமாரே என்னில் இரக்கம் செய்வீர். நான் தொலைவுக்கு ஓடிவிட என் அம்மா ஜக்கட்டும் சப்பாத்தும் வாங்கி வைத்திருக்கிறாள். ”
"சும்மா அணங் மணங் கதைவிடாதே! மகனே, நீ நினைப்பதுபோல் இங்கு எதுவும் சுலபமாக செய்துவிட முடியாது. சரி மாளிகையைப் பற்றி ஏதாவது சொல்லேன். ”
"அம்மா ஏங்கிப்போய் இருப்பாள். என்னில் கருணை காட்டுங்கள். நீங்கள் சொல்லும் மாளிகை எங்கேயுள்ளது என்பதைக்கூட அறியமாட்டேன்."
"நமக்கு மிகவும் அருகில்தான் உள்ளது. நான் உனக்கு இப்போது காட்டுகிறேன் பார்” என்றவன் சரக்கென்று தனது களுசானை அவிழ்த்து என் முகத்தில் மூத்திரம் பெய்தான். உடைந்துபோயிருந்த முகம் பற்றிக் கொண்டெழும்ப கைகளையும் கால்களையும் அசைக்கவிடாமல் சிலர் கால்களுக்குள் மிதி த்து வைத்திருக்க "ஐயோ என்று உயிர் போக கத்தினேன். பிரேமதாஸாவுக்கு கேட்டிருக்குமோ தெரியாது.
என்னோடு அவர்கள் மூன்று நாட்களாக மண் நிரப்பிய எஸ்-லோன் பைப்புக்கள், ஊசிகள், பனிக்கட்டிகள், நாம்பன்மாட்டின் சாமான் சகிதம் மினக்கெட்டு களைத்தபொழுதில் நான் வெறும் சோத்துமாடு என்று அவர்கள் முடிவெடுத்திருக்க வேண்டும். என்னைக்கூட்டி அள்ளிக் கொண்டுபோய் மருதானை பொலிஸ் கூட்டுக்குள் கொட்டினார்கள். அந்த ஒரு சவப்பெட்டி X சவப்பெட்டி அளவுள்ள கூண்டுக்குள் ஏற்கனவே இருபத்தியொருவர் வீழ்ந்து கிடந்தாள்கள். நான் இருபத்தியிரண்டாவது. எங்களில் சிவலைக்கு மட்டும்தான் சிங்களம் பேசத் தெரிந்திருந்தது. நாள் முழுதும் கம்பிகளை பிடித்தவாறே நின்று தண்ணிள் கேட்டு கத்துவான். கம்பிகளுக்கு இடையால் பெற்றன் பொல்லு இடிகளும் எப்போதாவது தண்ணீரும் பெற்றுக்கொள்வான். இருபத்தியிரண்டு மிடறுகளுக்கு தண்ணீர் போதுமானதாக இருப்பதில்லை. அவன் மீண்டும் மீண்டும் கத்துவான். அவன் ஓள்மமும் பெண்ணின் சாயலும் கொண்ட மனிதன். எனது புண்களில் ஈக்கள் மொய்க்கும் போது ஊதிக் கலைப்பான். ஒரு இரவில் நான் குலைப்பனில் கிடந்தபோது தனது சாரத்தை அவிழ்த்து எனக்கு போர்த்துவிட்டு ஜட்டியோடு இரவு முழுதும் குந்திக்கொண்டிருந்தான். ஒரு முறை எங்களுக்கு ஒரு பைக்கட் பற்பொடி கிடைத்தது. சிவலை எனக்கு பல் துலக்கிவிட்டான்.
ஏழாவது நாளில் என்னால் கம்பிகளை பிடித்தவாறு மெல்ல எழுந்து நிற்கக்கூடியதாக இருந்தது. சிவலை சந்தோசப்பட்டு சீட்டியடித்தான். "ஹட்டனுக்கு இப்போழுது செய்தி போயிருக்கும். எனது அக்காச்சி வந்து என்னை மீட்டுப் போவாள். ஹே! நான் உன்னையும் வெளியில் கொண்டு போ வேன்" என்று நம்பிக்கையோடுபேசினான். சிவலையின் பெயர் பிரபாகரன் என்று தெரிந்து கொண்டேன். டவர்மண்டபத்துக்கு முன்னாலுள்ள சைவக்கடையில் ரீயடித்து சீவித்த சிவலை கூண்டுக்குள் வீழ்த்தப்பட்டதற்கு அவனுடைய பெயர் மட்டுமே காரணமாயிருந்ததாம்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
*அச்சுப்பிழை என்று எண்ணவேண்டாம், அது 21 மனிதர்கள்தான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எட்டாவது நாளில் நாங்கள் ஒரு மூடிய வாகனத்தில் ஏற்றப்பட்டோம். வாகனம் களனி ஆற்றை நோக்கித்தான் ஓடிக் கொண்டிருப்பதாக சிவலை ஊகித்துச் சொன்னான். வழியில் கொஞ்ச நேரம் வாகனம் எங்கேயோ நின்றபோது "ரயர் வாங்கி அடுக்குபண்ணுகிறார்களாக்கும்" என்று ஒரு குரல் இரகசியமாய் அழுதது. இல்லை. இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்பு நாங்கள் மாற சிறைச்சாலையில் ஒப்புக் கொடுக்கப்பட்டோம். அம்மாவிடமிருந்து முன்னர் என்னைப் பறித்தவர்கள் இப்போது எனது கையில் கிடந்த ஏழாலையம்மன் கட்டிவிட்ட கறுப்புநூல், அடையாள அட்டை ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு எனக்கு இல D854 ஐ மட்டுமே வழங்கினார்கள். அலுமினியக்கோப்பை அடுத்த நாள் வழங் கப்பட்டது.
D என்பது பயங்கரவாத தடுப்புச்சட்டத் தின் கீழ் அடைத்து வைக்கப்பட்டிருப்போரை மற்றைய கைதிகளிடமிருந்து பிரிப்பதற்கான சிறப்பெழுத்தாம். ஆக நான் பயங்கரவாதி 854 ஆகியிருந்தேன். சிவலை பயங்கரவாதி 590 ஆகியிருந்தான்.
காலை ஐந்துமணிக்கு இலக்கங்களை ஏறுவரிசை கட்டி நிற்கவைத்து எண்ணிப் பார்ப்பார்கள். எந்தவொரு இலக்கமும் தப்பி யோடவில்லை, தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்படவில்லை என்று உறுதியான பின்பாக இலக்கங்களுக்கு பாண்துண்டு வழங்கப்பட்டது. பன்னிரெண்டு மணிக்கு சோறு போடப்படும். இலக்கங்கள் நெடுநேரம் சோற்றுக்குள் கல் பொறுக்கி உசும்பின. இலக்கங்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு அதுதான். - நான் புகைவிட பழகிக்கொண்டேன். சிகரட், பீடி கிடைக்காது. மரத்துாள்களை கொண்டு 'லோக்கல்' என்று ஒன்று சிறைக்குள் இரகசியமாக தயாரிக்கிறார்கள். சிவலை விரைவாகவே இந்த வித்தையை கற்றுக் கொண்டான். உண்மையாகவே 'லோக்கல்' இன்பமானதுதான்.
ஒரு திங்கட்கிழமை சிவலையின் அக்காச்சி சிறைச்சாலைக்கு வந்து சிவலையை சந்தித்தாள். சிவலை என்னைப் பற்றித்தான் அதிகம் பேசினானாம். அவள் வெள்ளிக்கிழமை வரும் போது என் அம்மாவையும் கூட்டிவந்தாள்.
அம்மா தைரியமாகப் பேசியது எனக்கு புதினமாய்க் கிடந்தது. தானும் சிவலையின் அக்காச்சியுமாக செல்லச்சாமி ஐயாவைக் கொண்டு அலுவல் பார்ப்பதாகவும் எங்களை விரைவாக வெளியிலே எடுக்கலாமென்றும் சொன்னாள். -
அன்றிரவு முழுவதும் நானும் சிவலையும் நித்திரை கொள்ளவில்லை. "அவர் மலைகளின் மைந்தன் எங்களை ஒருபோதும் கைவிடார்” என்று சிவலை முணுமுணுத்தான். சென்ற வருட மேதினக் கூட்டத்தில் அவர் பேசியதை சிவலை கேட்டிருந்தானாம். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி முடிய பேச எழுந்தவர், தேயிலைச் செடிகளில் நட்சத்தி ரங்களைப் பூக்கச் செய்வதைப் பற்றி பேசினாராம். கூட்டம் முடிய காலிமுகத்திடலிலி ருந்து மருதானைவரை இவன் பறந்தே வந் தானாம். "மினிஸ்டர் இல்லாவிட்டால் இவர்கள் எங்களை கடல்களுக்கும் அப்பால் விரட்டி கஞ்சிக்கு சிங்கியடிக்க விட்டிருப்பார்கள். போக மறுத்தவர்களும் பச்சைக் கூப்பன்களாகவே செத்திருப்பார்கள்.” என்று கண்கலங்கிச் சொன்னான்.
செவ்வாய்க்கிழமை என்னை அவசர அவசரமாக சிறைச்சாலை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். சிவலையிடம் சொல்லி விட்டுக்கூட போகமுடியவில்லை. அவன் எந்த செல்லுக்குள்ளாவது யாரும் வருத்தக்காறருக்கு ஒத்தடம் பிடித்துக் கொண்டிருப்பான். அழைத்துச்செல்ல வந்த காக்கிச்சட்டை சுடுகுது மடியைப் பிடி என்று நின்றான்.
என்னை ஒரு ஜீப்வண்டியில் ஏற்றி பின்புறமாய் விலங்கிட்டார்கள். ஜீப்வண்டி கடவத்த சந்தியில் போய்க்கொண்டிருப்பதை விளம்பர பலகைகளின் ஆங்கில எழுத்துக்களை வாசித்துப் புரிந்துகொண்டேன். அது கள னிப்பாலம் ஏறி பஞ்சிகாவத்தைக்குள்ளால் விரைந்து மாளிகாகந்தை நீதிமன்றத்தில் என்னை நிறுத்தியது.
நீதிவான் அசுவாரசியமாய் என்னைப் பார்த்தான். மிகவும் சோர்வாய் காணப் பட்டான். பாலாஜிக்கு கிட்டவும் நெருங்கான் "நான் உன்னை விடுதலை செய்கிறேன்" என்றான். எழுந்து போய்விட்டான் என்னை கைதுசெய்த காரணத்தையும் ஏன் விடுதலை செய்த காரணத்தையும் கூட எனக்கு சொல்வது தனது பொன்னான நேரத்தை மண்ணாக்கும் வேலையென அவன் நினைத் திருக்கலாம்.
நீதிமன்றத்திலிருந்து நேராக கொள்ளுப் பிட்டிக்கு அம்மா ஒட்டோ ரிக்ஷா பிடித்தாள். போய்க்கொண்டிருக்கும்போது சிவலையின் அக்காச்சியைப் பற்றி விடுத்து விடுத்துக் கேட்டேன். "அவள் யாரோடு எப்படிப் பேசுவது என்பதைத் தெரிந்திராத மரியாதை தெரியாத தோட்டக்காட்டாள்” என்று மட்டுமே அம்மா சொன்னாள்.
கொள்ளுப்பிட்டி சென்மைக்கல் வீதியில் உயர்ந்திருந்த கட்டடத்துக்குள் சுவர்முழுதும் செல்லச்சாமி ஒரு கள்ளப்பூனைச் சிரிப்புடன் கும்பிட்டுக் கொண்டிருந்தான். கும்பிட்டவனுக்கு கீழே மேசைபோட்டு அமர்ந்திருந்த வனை அம்மா எனக்கு அறிமுகப்படுத்தி னாள். "இவர்தான் கோவிந்தராஜன், செல்லச்சாமி மினிஸ்டருக்கு இடதும் வலதும், எமக்கு தெய்வமுமானவர். இவர்தான் உன்னை வெளியில் எடுத்துவிட்டு இரட்சித்தவர்."
கோவிந்தராஜன் "ஆ. இவர்தானா உங்களின் மகன்" என்று அமர்த்தலாக கேட்க அம்மா ஒரு பல்லிமாதிரி சிரித்தாள். கோவிந்தராஜன் அலுவலகத்தை விட்டு வெளியேறி அருகிலிருந்த தேனீர்கடைக்குள் போய் அமர்ந்து கொண்டான். அம்மா என்னை இழுத்துக்கொண்டு பின்னாலேயே ஓடினாள். அவள் நெஞ்சுசட்டைக்குள்ளிருந்து ஒரு என்வலப்பை எடுத்து இரண்டு கைகளாலும் நீட்டினாள்.
ஏதோ தும்புமுட்டாசு வாங்குவது போல அலட்சியமாக வாங்கிக்கொண்ட கோவிந்தராஜன் "எவ்வளவு" என்று கேட்க "ஐயாயிரம் இருக்கிறது” என்று அம்மா இளித்தாள். "அவ்வளவு தானா? என்று கேட்டுக்கொ ண்டே கோவிந்தராஜன் சிகரட் மூட்டினான். "எங்களுக்கு வெளியிலிருந்து காசு வர வேண்டியுள்ளது. வந்தவுடன் இன்னும் தருவேன்."
"சரி...சரி. இது மினிஸ்டருக்கு மட்டுமே போதுமானது. என்னை பிறகு நீங்கள் கவனிக்க வேண்டும்."
எனக்கு கொஞ்சம் குழப்பமாய் இருந்தது. "ஐயா நீங்கள் தயவுசெய்து சிவலையையும் மீட்க வேண்டும்” என்று அழுவார்போல கேட்டேன். கோவிந்தராஜனின் கண்கள் வேட்டை நாயின் கண்களாக மின்னின. "யாரது சிவலை?” என்று கேட்டான்.
அம்மா என்னை இரகசியமாய் நுள்ளி விட்டு "அன்று உங்களோடு சண்டைபோட்டு விட்டு போனாளே அவளின் தம்பியைச் சொல்கிறான்” என்று பொச்சடித்தாள்.
"ஓ அவளா.. எங்களுக்குத்தான் வோட்டு போட்டதாகவும், காதுக்குச்சியை விற்று ரயிலுக்கு கொடுத்தவளை சல்லி கேட்பது நியாயமில்லை என்று சட்டம் பேசிவிட்டு போனாளே அவளா? சரி மன்னித்துவிடுவோம். பத்தாயிரம் ரூபா தாருங்கள் சிவலையை வென்று தருகிறேன்."
நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன் -D590க்குள் சிவலை சுருண்டுபோய் கிடக்க D590 உன்னி உன்னி சூனியத்தில் சிதம்பர சக்கரமாய் சுழன்றடிக்க சிவலை குளறியழு தான். D590 போட்ட ஆட்டத்தில் குலுங்கிப்போய் கண்களைத் திறந்தேன். கோவிந்தராஜன் வேட்டியை உரிந்துபோட்டு நிர்வாணியாய் நின்றான். எனது முகத்தை பொத்திப்பிடித்துக் கொண்டே அடிவயிற்றால் கூவென்று குரலெடுத்தேன்.
L836753 பேசுகிறது.
ஒரு மாதமாய் ஒரு வருத்தமும் இல்லாத என்னை பம்பலப்பிட்டி ஆஸ்பத்திரியில் கட்டாயப்படுத்தி வைத்திருந்தார்கள். அம்மா விடாமல் இந்தா கதிரேசன்கோவில் விபூதி, இந்தா பொன்னம்பலவாணேசுவரர் விபூதி என்று கம்மாரிசு அடிக்கற சாங்கத்தில் என் நெற்றியைப்பொத்தி விபூதியும் குங்குமமும் அடித்துக் கொண்டேயிருந்தாள்.
ஒரு நாள் கொச்சிக்கடை அந்தோனியாருக்கு பானும், செக்கட்டித்தெரு முருகப்பெருமானுக்கும் கொட்டாஞ்சேனை மாரியம்மனுக் கும் தலா ஆயிரம் ரூபாயும் கொடுத்து என்னை சுகப்படுத்தியதன் நிமித்தமாக நேர்த்திக்கடன் முடித்துவிட்டதாய் சொல்லி விட்டு என்னை சிங்கப்பூருக்கு ஏற்றி விட்டாள்.
சிங்கப்பூரில் எனக்காக சித்தப்பன் காத்திருந்தான். என்னை பிரான்சுக்கு அனுப்பி விடுவதற்காய் ஒவ்வொரு ஏஜெண்டுகளாய் அணுகிக் கொண்டேயிருந்தான்.
அந்தக்காலத்தில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் கோபால் பற்பொடிக்கு இணையாக புகழ் பெற்றிருந்த சிகாமணி, ஹொங்கொங் பாலா, இத்தாலி பாலா, கைதடி பாலா, மியாமி மோகன், பரிஸ் மோகன், பிலிப்பைன்ஸ் மோகன், கச்சாய்மோகன், மட்டக்கிளப்பு வரதன், மாளிகாவத்தை வரதன், கனடா பரம், மொட்டை சக்தி, டென்மார்க் விக்கி, கனகநாயகம், அற்புதசிங்கம், சிங்கப்பூர் கோபால் போன்ற எந்தச்சுழியனாலும் என்னை பிரான்சுக்கு ஏற்றிவிட முடியாமல் போனது.
அவர்கள் எவ்வளவு பக்காவாக எனக்கொரு பாஸ்போர்ட் தயாரித்து பெயர்களையும் இலக்கங்களையும் எனக்கு தீத்தி அனுப்பினாலும் சிங்கப்பூர் விமானநிலைய அதிகாரிகளை கண்டதுமே நான் நடுங்கிப் போவேன். அவர்கள் நான் கொண்டுபோகும் பாஸ்போர்ட்டைப் பற்றிய கேள்வியில் தொடங்கி என்னை அனுப்ப முயலும் ஏஜெண்டுகளைப் பற்றிய விபரங்களையும் ஒட்ட கறந்துகொண்டு என்னை விமானநிலை யத்துக்கு வெளியே கலைத்து விடுவார்கள்.
ஏஜெண்டுகளின் சரித்திரத்திலேயே இல்லாத ஒன்று நடந்தது. அதாவது பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்று சித்தப்பனிடம் வந்து அழுதார்கள். இவ்வளவு அமளிக்குள்ளும் நன்றாக அனுபவப்பட்டு ஏகலைவன் பாணியில் சுயமாக ஏஜெண்டாகி விட்ட சித்தப்பன் L836753 ஐ எனக்காக தயார் செய்தான். பெயர்களையும், இலக்கங்களையும் மண்டை காய பாடம் செய்தேன். எனது பெயர், மொழி, பிறப்பு, ஒவியங்கள், ஐயா, கடற்கரை, கிராமம், எல்லாம் பொய்யாகிப்போக L836753ல் தொங்கினேன். வியட்நாம் ரூட்டால் சித்தப்பன் போடிங் உடைத்தான். பின்பு கொடிகட்டிப் பறந்த வியட்நாம் ருட்டை முதன் முதலாய் கண்டுபிடித்த பெருமை சித்தப்பனுக்கே! விசயம் வெற்றி!
04.06.1990, 08.09.1979... மற்றும் பல பேசுகின்றன.
பனியிலே முதற்காலை வைத்தவன் அடுத்த காலை கேஸ்கார திருநாவுக்கரசு வீட்டில் வைத்தேன். மேகலை மச்சாள் செத் துப் போனதையிட்டு திருநாவுக்கரசு சரியாக சந்தோசப்பட்டான். அந்தப்பிரேதத்தை வைத்தே வழக்கை வென்று தருவதாகச் சொன்னான். மேகலை மச்சாளை தான் சுதந்திரப் பறவைகளில் சேர்த்து விடுவதாகச் சொன்னான். ஐயாவை பிடித்துக்கொண்டு போய் கச்சேரி சத்தியாக்கிரகத்தில் இருத்திஎழுப்பி எண்பத்திமூன்று வன்செயலுக்குள் கா.பொ.இரத்தினத்தின் விசுவாசியாகச் சாகக் கொடுத்தான். அம்மாவை அன்னையர் முன்னணியில் சேர்த்துவிடுவதில் உறுதியாக நின்றான். நான் மாற சிறையில் இருந்ததற்கான ஆதாரப் பத்திரங்கள் இல்லாத காரணத்தால் அது அகதி வழக்குக்கு பொருத்தமில்லாத புள்ளி என்றான். அவனிடம் வெலிகடை சிறைச்சாலை சம்பந்தமான ஆதாரங்களே வெற்றுத் தாள்களில் கிடந்தன. என்னை கேட்டுக்கேள்வியின்றி வெலிகடை சிறைச்சாலைக்கு மாற்றம் செய்தான்.
முடிவாக அகதிச்சட்டத்தின் ஓட்டை ஒழுங்கைகளில் புகுந்து புறப்பட்டவன் இரண்டாயிரம் பிராங்குகளை வாங்கிக் கொண்டு என் கழுத்துக்கு மேலே என் பாதங்களை பொருத்தி அவற்றில் ஆயிரக்கணக்கான இலக்கங்களை நாளாக, மாதமாக, வருடமாக, வாகனங்களின் அடையாளமாக கட்டிச் சுமத்திவிட்டான். விழுந்தேன்.
விழுந்து விழுந்து ஆறுமாதமாக இலக்கங்களை பாடம் செய்தேன். ஏதாவது பிழை விட்டேனோ வாழ்க்கை முடிந்ததாம். நிறையப் பேர் சரியாகப் பாடம் பண்ணாததால் ஜெர்மனிக்கும் ஹொலண்டுக்கும் ஓடிப்போனார்களாம். சித்தப்பன் வழக்குவிசாரணையின் போது எப்படி மாய்மாலம் செய்வதென்றும், சித்தி கடல், கம்பு, வலை, ஓவியம், மேக லைமச்சாள் இனிமையாகப் பாடுவது, மாற மறியல்வீடு எல்லாவற்றையும் மறந்து போகச்சொன்னாள். இல்லாவிட்டால் அக திமட்டை கிடைக்காதாம். நான் முன்பின் அறிந்தேயிராத இலக்கங்களை பாடம் செய்தால் மட்டை கிடைக்குமாம்.
எனது அகதிவழக்கை பரிசீலிப்பதற்காக நேர்முக விசாரணைக்கு கூப்பிட்டிருந்தார்கள். இலக்கங்களை பொறுக்கி மூட்டையாக்கி தலையில் காவிக்கொண்டு போனேன்.
ஒரு அழுகல் உருளைக்கிழங்கு போல அதிகாரி கதிரைக்குள் நசிந்துபோய்க் கிடந்தான். மொழிபெயர்ப்பாளன் நெட்டி முறித்துக் கொண்டிருந்தான். கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லவேண்டுமென்று அதிகாரி எனது தொண்டைக்குழிக்குள் கத்திரிக்கோலை செருகிய நேரத்தில் மூட்டை அவிழ்ந்து போய் இலக்கங்கள் குதியாட்டம் போட்டுக்காட்டி ஓடிப்போயின.
"சொல்லு நீ யாரைச் சாகக்கொடுத்தாய்? "நான் எனது மீன்குஞ்சுகளை சாகக் கொடுத்தேன்? அதிகாரி என்னை கூர்ந்து கவனித்தான்.
"உனது கிராமத்தில் குண்டுகள் வீசப்பட்டதோ?”
"ஆம் அது ஏழு கடலும் ஒன்பது மாடுகளும் இரண்டு சிட்டுகுருவிகளும் உயிரோடு எரிந்த கதை."
"அது ஊரோடு ஒத்ததுதானே. நீ மட்டும் தானே இங்கு வந்திருக்கிறாய். மற்றவர்கள் அங்கு இன்னும் வாழ்கிறார்கள்."
"நீ எனது கிராமத்துக்கு ஒரு கப்பல் விட்டுப் பார்”. .
அதிகாரி கோப்புக்களை அடித்து மூடினான். வழக்கு பெயில். ஆனால் பிரண்டு போவான் என்னை ஆஸ்பத்திரியில் சேர்ப் பதற்கு சிபாரிசு செய்தான். இந்தப் புள்ளியை வைத்தே கொமிசனில் வெல்லலாம் என்று திருநாவுக்கரசு மகிழ்ந்து போனானாம். எதுவித வருத்தமும் இல்லாத என்னை எண்ணிமாளாத நாட்கள் ஆஸ்பத்திரியில் வைத்திருந்து கொடுமை செய்தார்கள். இந்த காலத்தில் எனக்கு பிரஞ்சுமொழி பிடிபட்டுப் போனது. டொக்டரின் கையைப் பிடித்துக்கொண்டு எனக்கு அகதிஅட்டை கிடைப்பதற்காக லூட்ஸ் மாதாவிடம் போய் நேர்த்தி வைக்கப்போகிறேன் என்றேன். எனக்கு நல்ல சுகமாகிவிட்டது என்று கூறிய டொக்டர் என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தான். கொஞ்சநாள் கழித்து நிர்வாணிகள் திரும்பவும் ஆடத் தொடங்கினார்கள். ஆஸ்பத்திரிக்கு திரும்ப திரும்ப கூட்டிக்கொண்டு வந்து கொடுமை செய்கிறாள்கள்.
நான் தூங்கி எழுந்திருந்தபோது டொக்டர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். என்னை நிமிர்ந்து பார்த்து "நண்பனே நிம்மதியாக தூங்கினாயா” என்று கேட்டான். நான் அமைதியாக தலையாட்டினேன். "சரி நண்பனே ஒவ்வொரு புதன்கிழமையும் தயவு செய்து என்னை வந்து சந்தித்துப்போ” என்றவன் எனது கையை பற்றி குலுக்கினான். நான் கையை ஒத்திப் பறித்துக்கொண்டேன்.
கோடை செத்து குளிர் கிளம்பியது. திருநாவுக்கரசு சித்தப்பனிடம் மூவாயிரம் பிராங்குகள் பெற்றுக்கொண்டு என்னை மறு விசாரணைக்காக தயார் செய்ய முயற்சித்தான். இந்தமுறை இலக்கங்களை கட்டிக் கொண்டு மாரடிக்க நான் மறுத்துவிட்டேன். "நீங்கள் இலக்கங்களில் தொங்குவதானால் தொங்கிக் கொள்ளுங்கள். கடலும் ஓவியமும் மேகலை மச்சாளும் உயிர் கொண்டு உசும்புவன. நான் கடல், நான் ஓவியம், நான் மேகலைமச்சாள், நான் வெறும் இலக் கமில்லை. நான் கடல், நான் ஓவியம், நான் மேகலைமச்சாள்...” என்று சொல்லிவிட்டேன்.
"இந்த லூசை இஞ்ச கூப்பிட்ட என்னை செருப்பால அடிக்கவேணும் என்று சித்தப்பன் கத்தினான். அடிக்கடி என்னை வெளியே இறங்கி குளிரில் தள்ளி வீட்டுக்கதவை அடி த்துச் சாத்தினான். எனக்கு படுக்க ஒரு இடம் தேவை, கொஞ்சக்காசு தேவை, ஒரு வேலை தேவை.
உணவுவிடுதி முதலாளிகள் நான் சரளமாக பிரஞ்சு பேசுவதைக்கேட்டு ஆச்சரி யப்பட்டாள்கள். ஆனால் வேலைதர மறுத்து விட்டாள்கள். முதலாளிகளாலும் குளிராலும் விரட்டப்பட்டு வீட்டுக்கு ஓடி வந்து கதவைத்தட்டினேன். உள்ளே கேட்டுக் கொண்டிருந்த பாட்டு நிறுத்தப்பட்டது. நெடு நேரமாய் தட்டினேன். உள்ளே விளக்கும் அணைக்கப்பட்டது.
கதவை உடைக்குமாற்போல தட்டிக் கொண்டிருந்தேன். கைகள் சோர்ந்து போக கண்களை மூடி அழுதேன். மண்டைக்குள் இலக்கங்கள் உன்னிக் கொண்டு பறக்க வீதி முழுதும் கூவடித்து நடந்தேன். சில நிர்வாணிகள் தங்களுடையதை பொத்திப் பிடிப்பதை விட்டுவிட்டு என்னை வேடிக்கை பார்த் தார்கள். நான் ரயில் நிலையத்துக்குள் நெடுநேரமாய் உட்கார்ந்திருந்தேன். எனக்கு சோறோ, தண்ணியோ தேவைப்படவில்லை. ஆனால் ஒரு புகை தேவைப்பட்டது. கொழுத்து திரிந்தவர்களிடம் கேட்டுப்பார்த்தேன். யாருமே ஒரு புகை தரவில்லை.
உரத்து பாடிக்கொண்டே அவள் வந்து எனக்கு அருகில் இருந்தாள். கையிலிருந்த பையைத் திறந்து தரையிலே கொட்டினாள். ஒரு வைன் போத்தல், ஒருசோடி கம்பளி கையுறை, கொஞ்சம் வர்ணநூல் பந்துகள், ஒரு கத்தி, நீண்ட ஊசிகள் ஆகியவை நிலத்தில் சிதறின. நூல்பந்தையும் ஊசி யையும் எடுத்துக் கொண்டு சிதைந்து கிடந்த ஒரு நூல்சிக்கலை நாக்கை துருத்திக் கொண்டே சீர்படுத்தி பின்னலிட ஆரம்பித்தாள். நிலத்தில் போட்ட பொருட்கள் போட்டபடியே கிடக்க, அவள் ஒரு குஞ்சுக் குழந்தைக்கே அளவான கம்பளிச்சட்டை பின்னிக் கொண்டிருந்தாள். அவளின் வயிறு ஊதிக்கிடந்தது.
"மன்மஸல்” என்று மெதுவாகக் கூப்பிட் டேன்- மன்மஸலுக்கு தமிழ் என்ன செல்வியா? சீலம்பாய் நீங்கள் சாமத்தியச் சடங்கு அழைப்பிதழ்களில் மட்டும் தானே அதை உபயோகிக்கிறீர்கள்- மன்மஸல் கடும் யோசனையில் இருந்திருக்க வேண்டும், திடுக்குற்று என்னை நிமிர்ந்து பார்த்தாள். "உன்னிடம் ஒரு சிகரட் இருக்குமா” என்று கேட்டேன். அவள் உதட்டை பிதுக்கி தோள்களை குலுக்கினாள். அவள் ஊதிய வயிற்றை தடவியவாறே ஏதோ யோசித்தாள். திடீரென "கமறாத்” என்று என்னைக் கூப்பிட்டாள். -கமறாத்துக்கு தமிழ் என்ன தோழனா? மண்ணாங்கட்டி நீங்கள் மாப்பிள்ளை அழைப்புகளில் மட்டும்தானே அதை உபயோகிக்கிறீர்கள். "வேண்டுமானால் கொஞ்சம் வைன் குடியேன்” என்று வைன் போத்தலை எடுத்து நீட்டினாள். "நன்றி எனக்கு தாகமில்லை” என்றேன். மன்மஸல் தலையை ஆட்டிக் கொண்டு சிரித்தாள். திடீரென்று எழுந்து குறுக்காலே வந்த கோட் சூட்காரனை மறித்துப் பிடித்து சிகரெட் கேட்டாள். மன்ம ஸலின் திடீர் பாய்ச்சலால் கொஞ்சம் கெலித்துப்போன கோட்சூட் ஒரு சிகரட்டை எடுத்து மன்மஸலின் கைகளில் முட்டுவதை கவனமாக தவிர்த்துக்கொண்டே கொடுத்தான்.
மன்மஸல் சிகரட்டை கொண்டுவந்து என்னிடம் கொடுத்தாள். "மன்மஸல் உனக்கு தேவையில்லையா?” என்று கேட்டேன். வயிற்றை தடவிக் காட்டி "இதுக்கு கூடாது” என்று சொன்னாள். o
நானும் அவளும் மிகவும் அருகருகாய் இருந்தோம். அவள் ஒரு போத்தல் வைனையும் குடித்து முடித்தாள். ஒவ்வொரு வாய் குடிக்கும் போதும் என்னையும் குடிக்கச் சொல்லிக் கேட்டாள். மன்மஸலின் கண்கள் சொக்கிப்போக பிரஞ்சில் மூச்சுவிடாமல் பேசிக்கொண்டிருந்தாள். "இவ்வளவு வேகமாக பிரஞ்சு பேசினால் எனக்குப் புரியாது” என்றேன். "மன்னித்துக்கொள் கமறாத்தே" என்று எனது கைகளை அழுத்தி மன்னிப்புக் கேட்டாள்.
நேரமாக இன்னும் சில சொக்கிப்போன மனிதர்கள் எங்களோடு வந்து அமர்ந்து கொண்டார்கள். அவள் தனது புதிய தோழனை சொக்கிப் போனவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள். நான் அவளின் வயிற்றை தொட்டுக்காட்டி "இரவாகிப்போனதே நீ இந் தக் குஞ்சின் அப்பாவிடம் போகவில்லையா? என்று கேட்டேன். "அவன் எங்கேயாவது ஒரு ரயிலை ஒட்டிக்கொண்டிருக்கலாம், அல்லது ஒரு கடையை உடைத்து திருடிக்கொண் டிருக்கலாம் இல்லை பொலிஸ் நிலையத்தில் யாருடைய மண்டையையாவது பிளந்து கொண்டிருக்கலாம்" என்று தெளிவாகப் பேசினாள்.
சற்று கழித்து ரயில்நிலைய அதிகாரி ஒருவன் ரயில்நிலையத்தை மூடிக்கொண் டிருந்தான். ரயில்களே ஓடாத அந்தநேரத்தில் நானும் மன்மஸலும் இன்னும் சில சொக்கிப் போன மனிதர்களுமே அங்கிருந்தோம். அதிகாரி எங்களை ரயில்நிலையத்துக்கு வெளியே விரட்டியடிக்க முயன்றான்.
சொக்கிப்போனவர்களின் பிரதிநிதியாக தாடிக்கிழவன் பேசினான். "மதிப்புக்குரிய அதிகாரியே, எங்களை கொல்லவா போகிறீர்? வெளியில் போனால் நாங்கள் பனி குத்தி சாவோம். நாங்கள் குளப்படி செய்யாமல் படுத்துவிட்டு காலையில் போய்விடுகிறோம். நீர் எங்களை நம்பலாம். எங்களோடு நின்று மினக்கெடாதையும். ஆண்டவர் உம்மை ஆசீர்வதிப்பார். உமது மனைவி உமக்காக காத்துக் கொண்டிருப்பாள். உமக்கு நல்ல இரவாகட்டும்.”
அதிகாரி ஒவ்வொரு இரவும் இவர்களோடு இந்த விளையாட்டு விளையாடி சலித்துப் போனவனாய் இருக்கவேண்டும்.
"சரி. சரி நீர் முதலில் நடையைக் கட்டும். யாரது? ஒரு புதிய கடலைக்காரனும் உங்களோடு சேர்ந்திருக்கிறானே, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள், உங்கள் எல்லோருக்கும் நாங்கள் நல்ல பாடம் கற்பிக்கிறோம்.”
அதிகாரி முடிக்கவில்லை மன்மஸலின் கையிலிருந்த வைன்போத்தல் அதிகாரியை நோக்கிப் பறந்தது "அவனே இவனே அம்மாவோடு படுப்பவனே, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள். எங்களுக்கு நீங்கள் பாடம் கற்பிக்க முன்பே நாங்கள் உங்களை கொன்று போடுவோம். பார்த்துக்கொண்டே யிரு. கடலைக்காரன் கதைபேசினாயோ உன் அழுக்குப்பிடித்த தொண்டையை குதறிப்போடுவேன். உன் பாட்டன் இருட்டுக்குள் யாரை ஊம்பப் போனான்?
எறியப்பட்ட போத்தல் அதிகாரியின் தலைக்கு ஒரு சாண் உயரத்தில் சுவரில் மோதிப் பறந்திருந்தது. அதிகாரி ஓட்டமாய் ஓடினான்.
தாடிக்காரக் கிழவன் கெக்கட்டமிட்டு சிரித்தான். "அவனுக்கு நல்லாய் கொடுத்தாய் மகளே. பாரேன் அவன் இப்பொழுது பொலிஸைக் கூட்டிக்கொண்டு வருவான்.” மன்மஸல் என் கைகளைப் பிடித்துக் கொண்டு "ஒன்றுக்கும் அஞ்சாதே கமறாத். நாங்கள் உன்னை எங்களது உள்ளங்கை களில் தாங்குவோம்.” என்றவள் எனது நெற்றியில் முத்தமிட்டாள்.
"இல்லை மன்மஸல் எனக்கு பயமாய் இருக்கிறது. போலிஸார் எங்களிடமிருந்து எல்லாவற்றையும் ஒத்திக்கொண்டு இலக் கங்களை எங்கள் நெற்றியில் எழுதுவார்கள். வா ஓடிவிடுவோம்” என்று கெஞ்சினேன்.
மன்மஸல் என்ன நினைத்தாளோ "கமறாத் குளிர் அவ்வளவு கொடுமையானதல்ல” என்று மெதுவாகச் சொன்னாள். நானும் மன்மஸலும் ரயில்நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். ஒரு தொலைபேசி கூண்டுக்குள் போய் அமர்ந்து கொண்டோம். குளிர் கண்ணாடி துளைத்து குத்த மன்மஸலுக்குள் ஒடுங்கிப்போனேன். மன் மஸல் "நீ எனது மூத்தது இது
இரண்டாவது” என்று சொல்லி வயிற்றை தடவிக்காட்டி புன்னகைத்தாள்.
மூன்று நாட்களாக மன்மஸ்லோடும் சொக்கிப் போனவர்களோடும் சீவித்திருந்தேன். இலக்கங்களை சுத்தமாய் மறந்திருந்தேன். இலக்கங்கள் மட்டுமல்ல பெயர்கள்கூட எங்க ளுக்கு இல்லை. கமறாத் வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது. நான் இலக்கமில்லை. நான் கமறாத்.
நேற்று முழுதும் எங்களுக்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. கிளிமூக்கன் கொஞ்ச வைன்போத்தல்களை எங்கேயோ திருடிக் கொண்டு வந்திருந்தான். வைன் மட்டுமே குடித்துக் கிடந்தோம்.
காலையிலிருந்து மன்மஸல் வீதியோர மாய் மயங்கிக்கிடந்தாள். "பிள்ளைத்தாச்சி பசியால் சாகப்போகிறாளே... மூச்சுக்கு மூச்சு இது எங்களின் நாடு எங்களின் நாடு என்கிறாயே, அவசரத்துக்கு உதவாத சொத்து இருந்தென்ன விட்டென்ன, இந்த தொலை பேசி கூண்டை யாருக்காவது தீர்த்து விற்றுவிட்டு அவளை காப்பாற்று வோமா?”என்று தாடிக்காரக் கிழவனைக் கேட்டேன்.
தாடிக்காரக் கிழவன் சோகமாக தலையாட்டினான். "அது முடியாது தோழரே அதை ஏற்கனவே அரசாங்கம் விற்றுவிட்டது.”
மன்மஸல் எழுந்து சுவரோடு சாய்ந்திருந்தாள். வாயால் எச்சில் வடிந்தது. "சாப்பிட ஏதாவது உள்ளதா” என்று கேட்டாள். நாங்கள் எதுவும் பேசாமல் இருந்தோம். தாடிக்கார கிழவன் காலை தொடங்கி பிச்சையெடுத்து இரண்டு பிராங்குகள் மட் டுமே சேர்த்திருந்தான். மன்மஸல் திடீரென வயிற்றை தொட்டுக்காட்டி "இதை கொல்லவா போகிறீர்கள் என்று கத்தினாள். பின் மெதுவாக ஒரு சனியன் பிடித்த ஆணுறை உள்ளதா” என்று கேட்டாள். ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. மன்மஸல் நாரியைப் பிடித்துக் கொண்டே எழுந்து நின்றாள். நான் ஏங்கிப்போய் மன்மஸலையே பார்த்துக் கொண்டிருந்தேன். "பொறுத்துக்கொள் கமறாத் இழவெடுத்த காசை கொண்டுவருகிறேன்” என்று சொல்லிவிட்டு சுவரைப் பிடித் துக்கொண்டே நடந்தாள்.
"நானும் உன்னோடு வருகிறேன்” என்றேன். "இல்லை நீ இங்கேயே இருந்துகொள் இருட்டுவதற்குள் வந்துவிடுவேன்.”
"இல்லை, நீ இல்லாவிட்டால் என்னை இலக்கங்களுக்கு தின்னத் தருவார்கள்.”
"பயப்படாதே கமறாத். உன்னில் யாராவது உரசினால் இந்த நகரத்தையே எரித்துப் போடுவேன்” என்றவள் என் நெற்றியில் முத்தமிட்டுப் போனாள். தாடிக்காரக் கிழவனும் சொக்கிப் போனவர்களும் ரயில்நிலையத்துக்குள் சோர்வாகப் போனார்கள்.
என்னோடு மன்மஸல் பேசிக்கொண்டிருந்த போது இந்தக்குத்தியன் இரண்டு மூன்று தடவைகள் எங்களுக்கு குறுக்குமறுக்காய் போய்வந்து கொண்டிருந்தான். மன்மஸல் தெருமுனையில் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன் ஓடி வந்து என் கையை இறுக்கி பிடித்துக்கொண்டான். "நீ ராசலிங்கன்ர சிறியமோன்தானே” என்று உறுக்கிக் கேட்டான். "இல்லை நான் கமறாத்” என்றேன். தமிழன்ர மானத்த வாங்கிறத்துக்கு எண்டே பிளேனை புடிச்சு பரீசுக்கு வந்தி ருக்கிறியள் என்று கன்னத்தை பொத்தி அறைந்தான். கிறுகிறுத்துப் போனேன். குத்தியனுக்கு கராட்டியோடு அல்லது காண்டாமிருகத்தோடு சம்பந்தமிருக்கிறது.
என்னை குத்தியன் காருக்குள் தள்ளியது ஞாபகமிருக்கிறது. பிறகு பார்த்தால் சித்தப்பனின் வீட்டில் இருக்கிறேன். இவர்கள் என்னை நாளைக் காலையில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்லப் போகிறார்களாம்.
"என்னை விடுங்கள் நான் மன்மஸலை சந்திக்க வேண்டும். இருட்டும்போது அவள் எனக்காக காத்திருப்பாள். நான் அவளை காணவில்லையெனில் நீங்கள் சாகவே சாவீர்கள்.” கூய். கூய்...
குத்தியன் சித்தப்பனை பார்த்து கண்சிமிட்டி விட்டு எனக்கு அருகாக வந்திருந் தான். "தம்பி அவள் ஊத்த வேசை, உமக்கு ஒரு நல்ல குடும்பத்து பொட்டையா பார்த்து வைச்சிருக்கிறன். வெள்ளக்காறியளோட சீவிக்க ஏலுமே நீர் ஒண்டுக்கும் கவலைப்படாதேயும். குழப்படி செய்யாமல் இரும், நானெல்லோ உமக்கு சோக்கான பொம்புளையா செய்து வைக்கிறது."
"ஏய் நீ ஏன் உன்னுடையதை வெட்க மில்லாமல் காட்டிக்கொண்டு நிலத்தில் தேய்க்கிறாய்.” என்று கத்திக்கொண்டு விடாமல், உயிர் போனாலும் விடாமல் கூவ டித்தேன். சித்தப்பன் ஓடிவந்து என் முகத்தைப் பொத்தி அறைந்தான்.

எல்லாம் முடிந்தது. Cl