தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, May 24, 2016

ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு) - வல்லிக்கண்ணன் : முன்னுரை - அசோகமித்திரன்

ஆர்மேனியன்   சிறுகதைகள்  (மொழிபெயர்ப்பு)  - வல்லிக்கண்ணன்
முன்னுரை -  அசோகமித்திரன்
அவர்கள் என் ஜனங்களைக் கொல்கிறார்கள். அவர்கள் என் சகோதரர்களைக் கொன்று தள்ளுகிறார்கள். இலவசமாக முடிவெட்டிக்கொள்வதற்காக சலுனுக்குப் போயிருந்த ஏழை அமெரிக்கச் சிறுவனிடம் முடிவெட்டும் தொழிலாளி ஒருவன் இவ்வாறு புலம்புகிறான். ஆர்மேனியாவில் பிறந்த அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் சரோயன் எழுதிய எழுபதாயிரம் அஸிரியர்கள்என்ற கதையில் இது வருகிறது. அது சோகமான, வேடிக்கையான, உள்ளத்தை உறுத்தக்கூடிய ஒரு கதை ஆகும். விஷயம் என்னவென்றால், அந்த முடிவெட்டும் தொழிலாளி, தனது இனத்தாரின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருப்பதை நினைத்து வருத்தப்படுகிற ஒரு ஆர்மேனியனக இருக்கக்கூடும். ஏனெனில், பல நூற்றாண்டுகளாகவே ஆர்மேனியர்கள் அவ்வப் போது சித்திரவதைக்கும் அழிவுவேலைகளுக்கும் ஆளாகிவந்திருக் கிறார்கள். 1915-ல் துருக்கிய அதிகாரிகள் பிற்பட்டவர்களை வெளியேற்றுவதுஎன்ற பெயரில் ஆர்மேனியர்களைப் பெரு வாரியாக நாடு கடத்தினர்கள். சுட்டெரிக்கும் சிரியா பாலைவனத்திலும், டைகிரிஸ் யூப்ரட்டிஸ் ஆறுகளின் வெள்ளப் பெருக்கிலும் சாகும்படி அவர்களைக் கொடுமைப்படுத்தினர்கள். அப்போது மட்டும் ஒன்றரை லட்சம் பேர் மடிந்துபோனதாகக் கூறப்படுகிறது. வரலாற்றில் இடம் பெற்றுள்ள முதலாவது பெரும் மக்கள் கொலை இதுதான். பதினேழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு முதலாவதாக வந்த ஆர்மேனியர்கள் உல்லாசப் பயணிகளோ லாபநோக்கு கொண்ட வணிகர்களோ அல்லர்: துருக்கிய மற்றும் ஈரானியப் படையெடுப்பாளர்களால் துன்புறுத்தப்பட்டு வெளியேறிய அகதிகளேயாவர்.

பொதுவாக, ஆர்மேனியா திறந்தவெளி மியூசியம் எனக் கருதப்படுகிறது. அதன் தலைநகரமான ஏரெவான், பாபிலோன் நகரைப் போலவே தொன்மையான கலாசாரத்துக்குப் பெயர் போனது. அந்த நாடு முழுவதும் இடிபாடுகள் நிறைந்து கிடக்கின்றன. அவை கடந்த பல நூற்றாண்டுகளின் வெற்றிகளை எடுத்துக்காட்டுவதோடு, படையெடுத்துவந்தவர்கள், கொள்ளைக் காரர்கள், மதவெறியர்கள் ஆகியோர் ஏற்படுத்திய காயங் களையும் வடுக்களையும் புலப்படுத்துகின்றன. இன்று ஆர்மேனியா
________________
viii
சோவியத் யூனியனில் ஒரு குடியரசாக இருக்கிறது. அது முஆப்பர்ங்கான பிரதேசம். ஏறக்குறைய அதி உஷ்ண நிலைமை கொண்டது. 11,000 சதுரமைல் விஸ்தீர்ணமும், 218 மில்லியன் ஜனத்தொகையும் கொண்ட நாடு. யூரேஷியாவின் தேசப் படத்தில், காகஸ்சுக்குக் கீழே, கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் அதைக் காணலாம். பலதரப்பட்ட பயிர் வகைகள் விளையும் நிலம் என்று அது வர்ணிக்கப்படுகிறது. செம்பு, இரும்பு, சலவைக்கல் ஆகியவை அந் நாட்டில் கிடைக்கிற முக்கிய உலோகப் பொருள்கள் ஆகும்.

அநேகமாக உலகத்திலேயே மிகமிகச் செங்குத்தானது என்று கருதப்படவேண்டிய, பயங்கரமும் அழகும் கலந்த ஆழ்ந்த பள்ளப்பகுதியின்-அமெரிக்காவின் கிராண்ட் கேன்யான்பள்ளத்தாக்கின்-ஒரு முகட்டின் மேலே இருக்கிற ஆராய்ச்சி சாலை ஒன்றின் உள்ளே ஒரு கல் துண்டு இருக்கிறது. அதனோடு ஒரு இரும்புத் துண்டும் கட்டப்பட்டுள்ளது. அந்த இரும்புத் துண்டை அக் கல்லுடன் உரசும்படி பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். அந்த ஆராய்ச்சிசாலை தோன்றிய பிறகு, சென்ற ஐம்பது வருஷ காலத்தில் கிராண்ட் கேன்யானைப் பார்ப்பதற்காக வந்த லட்சக்கணக்கான மக்கள் அப்படி இரும்புத் துண்டைக் கொண்டு கல்லை உரசியதன் விளைவாக, அந்தக் கல்லில் ஒரு சென்டிமீட்டர் ஆழத்துக்கு ஒரு பள்ளம் பதிந்திருக்கிறது. அதே ரீதியில் கொலராடோ நதியின் நீரோட்டம் கிராண்ட் கேன்யானில் மைல் கணக்கில் ஆழமான ள் ங் ளே உண்டாக்கியிருக்கிறது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. அதற்கு நெடுங்காலம் ஆகியிருக்கிறது. இருபது லட்சம் வருஷங்கள். அவ் வட்டாரத்தின் ஆதிவாசி களான ஹோப்பிஸ் இனத்தவர் கிராண்ட் கேன்யானுடன்தான் சிருஷ்டியே ஆரம்பமாயிற்று என்று நம்புகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ளலாம் போல்தான் நமக்கும் தோன்றுகிறது.

ஹோப்பிஸ் இனத்தார் சிருஷ்டி காலத்துக்கே போகக்கூடும் எனில், ஆர்மேனியர்கள் நாகரிகத்தின் ஆரம்பத்துக்குப் போக இயலும். ஏனெனில், ஆர்மேனிய மலைச்சிகரமான மவுன்ட் ஆராரட் மீதுதான் பிரளயத்துக்குப் பின்னர் நோவாவின் படகு வந்து தங்கியதாகச் சொல்லப்படுகிறது.

கி.பி. 808ஆம் வருஷத்தில், ரோமாபுரி கிறிஸ்துவ ராஜ்யமாக ஆவதற்கு முன்னரே, ஆர்மேனியா முதலாவது கிறிஸ்துவ ராஜ்யமாக இருந்தது. ஒருவேளை, பைபிளின் மொழி பெயர்ப்பே அதன் முதலாவது இலக்கியமாக இருக்கலாம்.
________________
ix
கி. பி. 424ஆம் வருஷத்திலேயே செயின்ட் மெஸ்ராப் பைபிளே. மொழி பெயர்த் திருந்தார். 36 எழுத்துகளைக் கொண்ட ஆர்மேனிய அகர வரிசையைக் கண்டுபிடித்தவரும் அவரே. .

ஆர்மேனியர்கள் வியாபாரம், பெரும் வர்த்தகம் ஆகிய வற்றின் ஒரு புதிய அத்தியாயத்தையும், பரஸ்பர நலனுக்கு உதவும் நட்பையும் சிரத்தையையும் அடிப்படையாகக்கொண்ட ஒரு உறவையும் இந் தி யா வுக் கு க் கொண்டுவந்தார்கள். ஆர்மேனியர்கள் நல்ல வர்த்தகர்களாகவும், நல்ல குடி மக்களாகவும் இருந்திருக்கவேண்டும். ஏனெனில், கல்கத்தா விலும் சென்னையிலும் ஆர்மேனியன் தெருஎன்ற பெயரைக் கொண்ட நீளமான தெருக்கள் இருக்கின்றன. இவ்விரு ஆர்மேனியன் தெருக்களிலும் இருநூறு வருஷங்களுக்கும் மேற்பட்ட ஆர்மேனியன் சர்ச்சுகள் நிலைபெற்றிருக்கின்றன. கல்கத்தாவில் நாசரத்தில் இருக்கிற ஆர்மேனியன் புனித தேவாலயம்தான் இந்தியாவில் உள்ள மிகப் புராதனமான ஆர்மேனியன் சர்ச் ஆகும். 1707-ல் அமைக்கப்பட்டு, அவ்வப் போது புதுப்பித்தும் விரிவுபடுத்தியும் கட்டப்பெற்றுள்ள இத் தேவாலயத்தில் ஒரு சமாதிக் கல், இருக்கிறது. 'காலம் சென்ற தர்மசிலர் சூக்கியாசின் மனைவி ரெஸா பீபி'யின் கல்லறைச் சின்னமாக விளங்கும் அது, ஜூலை 21, 1630 என்ற தேதியைக் கொண்டிருக்கிறது. பதினறாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் கல்கத்தாவுக்கு வந்து குழுமத் தொடங்கிய ஆர்மேனிய வர்த்தகர்கள் அந் நகரத்தில் நன்கு செழிப்புற்றனர். பழைய ஹெளரா பாலத்துக்குத் தெற்கே, ஹஅக்ளி ஆற்றங்கரை மீது அவர்கள் தங்களுக்கெனத் தனி இடுகாடும் அமைத்துக் கொண்டார்கள். கல்கத்தாவில் ஆர்மேனியர்கள் நிறுவிய பிரதான அமைப்புகள் பல இன்றும் நிலைத்திருக்கின்றன. இன்றைய 500 அறைகள் கொண்ட கிராண்ட் ஹோட்டல்ஆராது.ான் ஸ்டீபன் என்ற ஆர்மேனிய நகை வியாபாரியின் முயற்சியால் தோன்றியதுதான். ஸி. எல். பிலிப்ஸ் எனும் மற்றொரு ஆர்மேனியர்-இந்திய நிலக்கரிச் சுரங்கங்களில் அவர் கொண்டிருந்த மிகுந்த தொடர்புகள் காரணமாக அவர் நிலக்கரி மன்னன்என்று அழைக்கப்பட்டார்-மாளிகை போன்ற ஒரு பெரிய வீட்டைக் கட்டினர். அதற்கு பிலிப்சின் அறிவினம்’ (Philips Holly) என்று அவர் பெயர் வைத்தார்-நல்ல நகைச் சுவை உணர்வு உள்ளவராக இருக்கவேண்டும்! அப்புறம், கல்கத்தாவின் ஆர்மேனியன் காலேஜ் இருக்கிறது. இப்போதும் அது கல்விப் பயிற்சியின் சுறுசுறுப்பான கேந்திரமாகத் திகழ்கிறது. ஆங்கில இலக்கிய அபிமானிகளுக்கு இந்த
________________
x : ஆர்மேனியன் கல்லூரி மற்றொரு முக்கிய விசேஷத் தன்மை பெற்றதாகும். இக் கல்லூரியின் அறைகளுள் ஒன்றில்தான் 1811 ஜூலையில் வில்லியம் மாக்பீஸ் தாக்கரே பிறந்தார்.

சென்னையில் இருக்கும் ஆர்மேனியன் தெரு இன்றும் நகரத்தின் பரபுரப்பான வீதிகளில் ஒன்றாக விளங்குகிறது. தீவிரத் தொழில் இயக்கங்களின் மையமாகவும் அது அமைந் துள்ளது. ஆர்மேனிய இனத்தவரின மிச்சசொச்சங்களாக, ஒரே ஒரு தம்பதியர் மட்டும் இத் தெருவின் ஆரம்பத்தில் உள்ள வித்தையான புராதனக் கட்டடம் ஒன்றில் வசிக்கிறா.ர்கள். அது தான் சென்னையின் செயின்ட் மேரீஸ் ஆர்மேனியன் சர்ச் ஆகும்.

இருவழிப் படிக்கட்டு ஒன்று ஆலயத்தின் வாயிலுக்கு இட்டுச் செல்கிறது. வாயிலின் முகப்பில் 1772 என்று வருஷம் குறிக்கப் பட்டிருக்கிறது. கட்டடத்தின் தோற்றமும் அதை நிரூபிக்கிறது. பூர்விக ஆர்மீனியன் தேவாலயம் 1712-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருகில் கட்டப்பட்டிருந்தது. ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்குமிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் அது தாக்குண்டு அழிந்தது. எனவே அதைக் கைவிட நேரிட்டது. அதுவரை இடுகாடு ஆக இருந்த இடம் புதிய ஆர்மேனியன் சர்ச் ஆக மாற்றப்பட்டது. இந்த ஆலயத்தில் மின்விளக்குகள், ஒரு டெலிபோன், மற்றும் தற்காலத்துக்கு உரிய சின்னங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனலும்கூட, கட்டடத்தினுள் புகுந்ததும் நாம் இருநூறு வருஷங்களுக்கு முற்பட்ட காலத்துக்கு இட்டுச் செல்லப் படுகிறோம். செங்கற்களாலும் சுண்ணும்பாலும் ஆன கட்டடம் அது. அதன் சுவர்கள் ஒன்றரை அடி கனம் உள்ளவை. ஒவ்வொரு கதவுக் கீலும் (இணைப்பும்) நான்கு அல்லது ஐந்து ராத்தல் கனம் இருக்கும் என்று தோன்றுகிறது. தரையின் பெரும்பகுதியில் கருங்கல் பலகைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கல்லும் ஒரு கட்டில் அளவு பெரியதாக இருக்கிறது. ஒரு விதத்தில் அவை கட்டில்கள்தான். ஏனெனில், இந்த இரண்டரை நூற்றாண்டுக் காலத்தில் சென்னையில் மரணம் அடைய நேர்ந்த ஆர்மேனியர்கள் அக் கற்களின் அடியில்தான் மீளாத்துயிலில் ஆழ்ந்திருக்கிறார்கள். இச் சமாதிக் கற்கள் அவர்களது வரலாற்றை வி சித் தி மா எழுத்துகளில் புலப்படுத்துகின்றன. ஆர்மேனிய மொழியை அறிந்திராதவர் களுக்குத்தான் அவை விசித்திரமானவை, அக் கற்கள் வெகு கெட்டியாய், கனமாய், அழிக்க முடியாதனவாய்த் தோன்று கின்றன.
________________
xi
ஆர்மேனியாவில் ஒரு கையெழுத்துப் பிரதி-கால்த்தால் கயவர்களால், யுத்தத்தால்-அழிப்ட மறுத்தது. மூஷின் உபதேசங்கள்' என்ற மாபெரும் நூல்தான் அது. சுமார் 600 பக்கங்கள் கொண்டது. 60 ராத்தல் எடை உள்ளது. 800 வருஷங்களுக்கு முற்பட்டது. இப்போது அது ஆர்மேனியாவில் மாட்டன்டாரன் நகரத்தில் அனைவரும் கண்டுகளிக்கும்படியாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அது விசி எறியப்பட்டது: துண்டுதுண்டுகளாகச் சித்றடிக்கப்பட்டது; பல்வேறு தனிநபர்கள் கைகளில் சிக்கியது. ஆலுைம், தேவதைக் கதை ரீதியில் அந்த் எழுத்துப் பிரதி புனர்ஜென்மம் பெற்றுவிட்ட்து. o ஒரு மொழியின் நிலத்து வாழும் தன்ம்ை, அது தனது சொந்த நாட்டில் வளம் பெற்று விளங்குவதில் இல்லை. ஆனல், அயல்மண்ணில் பல இன்னல்களுக்கின்டயே அது விளர்வதில் தான் இருக்கிறது. சென்னையிலிருந்து ஒரு ஆர்மேனியப் பத்திரிகை பிரசுரமாவதை எண்ணிப்பாருங்கள்! விராஸ் நகரைச் சேர்ந்த ஒரு ஆர்மேனியப் பாதிரியார் ஒரே வாரத்தில் தன் இரு மகன்களையும் இழந்துவிடுகிருர். அவ்ர் தனது துயரத்துடன் போராடுவதற்காக அநேக மொழிகளைப் பயில்வதில் ஈடுபடுகிறா.ர். அவர் ஆர்மேனியர்களின் மதகுரு ஆகவும் தேவாலயப் ப்ர்திரியாகவும் ச்ென்னைக்கு வருகிறா.ர். 1794-ல், உலகத்திலேயே முதலாவது ஆர்மேனியப் பத்திரிகையான "அஸ்தரார்'ஐத் த்ொடங்குகிறா.ர். இருபத்துஎட்டே பேர் சந்தாதாரர்களாகத் தந்த ஆதரவோடு, அவரே அச்சுக்கோப்பவராகவும் அச்சிடுகிற வராகவும் செயல்புரிகிறா.ர். தனக்கு வேண்டிய அச்சு எழுத்து களையும் அவரே உருவாக்கிஞர். பத்திரிகைக்குத் தேவையான கா கி த் தை க் கூட அவர்தான் பருத்திக் கூழிலிருந்து தயாரித்தார். எனவே, பூஜ்யர் ஆராதுர்ன் ஷ்மாவேனியனைத் தற்கால ஆர்மேனிய எழுத்தின் தந்தை என்று குறிப்பிடுவது நியாயம் ஆகும். அவர் 1824-ல் மரணம் அடைந்தார். சென்னை ஆர்மேனியன் சர்ச் பாதிரியாராக அவர் நாற்பது வருஷங்கள் பணிபுரிந்திருக்கிறார்
-
சென்னையின் வளர்ச்சியிலும் வளத்திலும் ஆர்மேனியர்கள் கணிசமான அளவு பங்குகொண்டிருப்பதைக் கூறும் சிறப்பான வரலாறுகள் இருக்கின்றன. சுமார் இருநூறு வருஷங்களுக்கு முன்பு: நவாபுகள், சுல்தான்கள், மற்றும் கிழக்கு இந்தியக் கம்பெனியாரின் காலம் அது. ஆற்காடு நவாபுக்கு நெருக்கடி யான காலம், கடன்காரர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, தங்களுக்கு உரிய பணத்தைத் தரும்படி நெருக்குகிறார்கள். துயரமான, அவமானகரமான நேரம். ஆர்மேனிய வணிக
________________
xii
இளவரசர் ஒருவரையும் அந்தக் கூட்டத்தில் கண்டு அவர் மிகவும் பாதிக்கப்படுகிறார். நீ கூடவா ஆகா ஷாமீர்என்று அவர் பெருமூச்செறிகிறோம். நான் மட்டும்தான்; உங்களுக்குத் தேவையுள்ள நேரத்தில் வந்திருக்கிறேன்' என ஆகா ஷாமீர் பதிலளிக்கிறார். அது மட்டுமா? நவாபு அவருக்குத் தந்திருந்தி பிராமிசரி நோட்டை அவர் கிழித்தெறிகிறார், அவருடைய செயல் நவாபை மிக மோசமான ஒரு கட்டத்திலிருந்து காப்பாற்றிவிடுகிறது. தனது எல்லேக்குட்பட்ட ஆர்மேனிய நிலங்களுக்கும் கட்டடங்களுக்கும் நவாப் வரிவிலக்கு அளிக்கிறா.ர். இன்றுகூட ஆர்மேனியன் தேவாலயம் வரிவசூலிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறது. . 

இதனினும் அதிகமான வனப்புள்ளது ஆர்மேனிய வியாபாரி கோஜா பெட்ரோஸ் வாஸ்கன் சென்னை அருகில் உள்ள செயின்ட் தாமஸ் மவுன்ட் (பரங்கிமலை)மீது இருக்கிற ஆலயத்துக்கு நிர்மாணித்த 160 கல் படிக்கட்டு. அவரே சென்னையில் மர்மலாங் பாலத்தை 1728-ல் 30,000 பகோடாக்கள் செலவில் கட்டினர். மேலும், அந்தப் பாலத்தைப் பாதுகாப்பதற்காகவும் அவ்வப்போது பழுது பார்ப்பதற்காகவும் நிரந்தரமான நிதி ஏற்பாட்டையும் அவர் செய்தார்

கோஜா பெட்ரோஸ் வாஸ்கன் கவியுள்ளம் படைத்தவ ராகவும் இருந்திருக்கவேண்டும். அவர் சென்னையில் இறந்தார், அவருடைய உடல் ஆர்மேனியன் ஆலயத்தில் அடக்கம் செய்யப் பட்டது. ஆளுல், அவரது இதயம், ஈரானில் ஜல்பா இஸ்பஹானில் அவருடைய பெற்றோர்களின் சமாதியில் புதைக்கப் படுவதற்காக, ஒரு தங்கப்பேழையில் எடுத்துச் செல்லப்பட்டது

இப்போது இந்தியாவில் அதிகம்ான ஆர்மேனியர்கள் வசிக்க வில்லை என்றே தோன்றுகிறது. சென்னையில் இரண்டு குடும்பங்கள், பம்பாயில் மூன்று, கல்கத்தாவில் சில நூறு குடும்பத்தினர். எண்ணிக்கையில் அதிகம் இல்லை என்றாலும், இந்தியாவில் வசிக்கும் ஆர்மேனிய இன்த்தவர்பற்றிய விவரங்கள், மெஸ்ரோப் ஜே. சேத் எழுதிய இந்தியாவில் ஆர்மேனியர்கன்’, ஆன்பாசில் எழுதிய இந்தியாவில் ஆர்மேனியக் குடியேற்றங்கள்என்ற இரண்டு புத்தகங்களிலும் நன்கு தொகுக்கப்பட்டிருக் கின்றன.

இந்தியாமீது ஆர்மேனியர் பதித்துள்ள தாக்கம் உண்மை யானது. அதைவிட ஆழமும் நுண்மையும் கொண்டது. ஒரு ஆர்மேனியர் இந்திய அறிவாளிகளிடையே ஏற்படுத்தியிருக்கிற பாதிப்பு. அவர்தான் வில்லியம் ஸ்ரோயன். அவர் ஆங்கில
________________
xiii
மொழியில் தான் எழுதினர். ஆயினும், ஆர்மேனிய ஆன்மாவின் இசையையும் தேடல்களையும் அவர் உண்மையாகப் பதிவு செய்தார். முப்பது வருஷங்களுக்கு முன்பிருந்தே அவருடைய படைப்புகள் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. சென்னையில் மிக அதிகமாகப் பேச்சு வழக்கில் இருக்கிற மொழியான தமிழிலும் அவை மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன.

'நாம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஒரு ஆர்மேனியனை இனம் காணமுடியும்' என்று ஸ்ரோயன் ஒரு சமயம் சொன்னர்.

" எப்படி?’ என்று யாரோ கேட்டார்கள்,

கண்களைப் பார்த்து... ஆர்மேனியக் கண்கள் வருத்தமாய், துயரம் நிறைந்து இருக்கும்.’’

ஸ்ரோயன் 1978-ல் ஆர்மேனியா சென்றார். அப்போது அவர் சொன்னார் :

'இப்போது இதுதான் எனக்கு முக்கியமாகப்படுகிறது. ஆர்மேனியர் கண்களில் வருத்தமும் துயரமும் குறைந்திருக்கின்றன. நான் எங்கே போனலும், ஆரோக்கியமான, வலிமையும் சந்தோஷமும் கொண்ட ஜனங்களையே பார்க்கிறேன். இது அற்புதமானது...'
சென்னை
31 ஆகஸ்ட் 1979                       அசோகமித்திரன்