தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, May 17, 2016

பிரசுரிக்கப்படாத கைப்பிரதி - அம்பை

பிரசுரிக்கப்படாத கைப்பிரதி - அம்பை
https://ia600302.us.archive.org/3/items/orr-11912_Prasurikkapadatha-Kaiprathi/orr-11912_Prasurikkapadatha-Kaiprathi.pdf
மேசைமேல் அவள் பெயரிட்ட அஞ்சலுறை ஒன்று கிடந்தது. அம்மா வைத்திருக்க வேண்டும். பல்கலைக்கழகத்திலிருந்து சீக்கிரமாகவே வந்துவிட்டாள் போலும் திறந்து மூடக்கூடிய மரச் சட்டங்கள் குறுக்கே இட்ட சன்னல் பக்கம் சென்று மடக்குச் சட்டங்களைத் திறந்து பார்த்தபோது, செளகரியமான ஸல்வார்-கமீஸ் உடைக்கு மாறி, அம்மா தன் வழக்கமான விறுவிறுப்பான நடையில் புல்வெளியைக் கடந்துகொண்டிருந்தாள். பொன்வண்டு வண்ண ஸல்வார்-கமீஸ். மீண்டும் மேசை அருகே வந்து அஞ்சலுறையை எடுத்தபோது, அதனருகே "எட்டு மணிக்கு வருவேன். சேர்ந்து சமைக்கலாம்” என்று கறுப்புப் பட்டைப் பேனாவால் அம்மா எழுதிய குறிப்பு இருந்தது. அதன் மேல் சிறகுகளைப் பரப்பியபடி நின்ற செவ்வண்ணச் சுடுமண் பறவை ஒன்று இருந்தது. அஞ்சலுறையின் மேல் 'கவிஞர் முத்துக் குமரன் நினைவு விழா செயற்குழு என்று அச்சிடப்பட்டிருந்தது, சற்று வியப்பைத் தந்தது. உறையைத் திறந்து எடுத்த கடிதத்தில் கவிஞர் முத்துக்குமரன் நினைவு விழாவை ஒட்டி அவர் எழுதிய எல்லாக் கவிதைகளையும், கைப்பிரதிகள் உட்பட, மொத்தமான ஒரு தொகுப் பாகக் கொண்டு வரப் போவதாகவும் ஓர் ஆராய்ச்சிப் பத்திரிகையின் ஆசிரியை என்ற முறையிலும் முத்துக்குமரனுடன் அவளுக்கிருக்கும் உறவுக்காகவும் அவள் இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும் என்று அழைத்திருந்தார்கள். அவளுடைய முகவரி கிடைக்க நிரம்பச் சிரமப்பட்டதாகவும், தங்கள் அழைப்பை அவள் மறுக்கக் கூடாது என்றும் வேண்டிக்கொண்டிருந்தார்கள். கடிதம் எழுதிய தாளில் நினைவு விழா செயற்குழுவின் முகவரிக்கு மேலே கவிஞரின் முகத்தை மட்டும் காட்டும் புகைப்படம் அச்சிடப்பட்டி ருந்தது. துளைக்கும் கண்களும் இறுகிய உதடுகளும் அடர்த்தியான மீ சையும் வாராமல் அலட்சியமாகப் புரண்ட தலையுமாய் தலையைத் திருப்பிச் சன்னல் சட்டங்களின் சிறிய இடைவெளிகளுடே பார்த்த போது, வெகு தூரத்தில், பச்சைப் புல்வெளியின் எல்லையில், அம்மா ஒரு மஞ்சள் பொன்வண்டுப் பொட்டாய்த் தெரிந்தாள்.
O O O
<- 362 -- அம்பை
________________
அவள் பள்ளியில் படிக்கும்போது இருந்த வீட்டின் உள்பக்கத்து அறையில் ஒரு கண்ணாடி இருந்தது. அலங்கார மரச்சட்டம் போட்ட முட்டை வடிவக் கண்ணாடி அதை ஒட்டி, பளபளவென்று பித்தளை இழுப்பான்கள் கொண்ட இரு சிறிய இழுப்பறைகள். உடைகள் வைக்கும் மர பீரோவின் மேல் இருக்கும் ஆடு கண்ணாடி மேலும் கீழும் கண்ணாடியைத் துக்கி இறக்கலாம். கண்ணாடியைப் பாதி வரை தூக்கிச் சரேலென்று இறக்கி, கழுத்தை வெட்டித் திரும்பிப் பார்ப்பாள் உக்கிரமான பார்வையுடன். அவள் மூன்று கண்ணுடை யாள். அந்த உக்கிரப் பார்வை, எதிர்காலத்தில் அவள், மேடையில் அநியாயங்களை எதிர்த்து முழங்கி, மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் ஏதாவது ஒரு நபரைப் பார்க்கப்போகும் பார்வைக்கான ஒத்திகை சில சமயம் சற்று தூரத்தில் இருந்தபடி, கண்ணாடியை நோக்கி நடப்பாள், முகத்தை அதீத சாந்தத்துடன் வைத்தபடி அது அவள் யோக நிலைப் பார்வை. மற்றவர்களைப் பாதங்களில் விழவைக்கப்போகும் பார்வை. ஏதோ ஒரு வகையில் அவள் எல்லோ ரையும் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளப்போகிறாள் எதிர்காலத்தில் என்று அவளுக்குத் தோன்றும் அடிக்கடி சில சமயம் கண்ணாடிமுன் நடக்கும் இவள் ஒத்திகைகளின்போது கண்ணாடியின் ஒரு மூலையில் அம்மா தோன்றுவாள். அப்போதுதான் பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பியிருப்பாள். தோளில் பெரிய தோல் கைப்பை தொங்கும். முகத்தில் ஒரு புன்முறுவலோடு அவளைப் பார்த்தவாறிருப்பாள். இவள் திரும்பி அம்மாவைப் பார்த்துச் சிரிப்பாள்.
"இன்னிக்கு நீ யாரு?" என்பாள் அம்மா. இவளுக்குச் சொல்ல ஏகப்பட்ட பெயர்கள் இருந்தன. கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்று எத்தனையோ. பால் வித்தியாசம் ஏதுமி ல்லை. ஒரு நாள் அவள் லோபமுத்ரா என்றால் இன்னொரு நாள் அவள் நக்கீரன். ஒரு நாள் ஒளவையார் என்றால் இன்னொரு நாள் பாரி. ஒரு நாள் பாரதியார். மறுநாள் அக்கமகாதேவி ஒரு நாள் வீணை தனம்மாள். மறுநாள் டைகர் வரதாச்சாரி. ஒரு நாள் பேகம் அக்தர். மறுநாள் பீம்ஸென் ஜோஷி, ஒரு நாள் ஸித்தேஸ்வரி தேவி. மறுநாள் பலுஸ்கர். ஒரு நாள் ஜிக்கி. மறுநாள் ரகுநாத் பாணிக்ரஹறி. ஒரு நாள் லோர்கா. மறுநாள் ஸில்வியா ப்ளாத். எல்லோரும் அம்மா அவளுக்கு அறிமுகப்படுத்திய நபர்கள்.
அம்மா பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக இருந்தாள். ஆங்கில மொழித்துறை அப்போது அவள்கீழ் இருந்ததால் பல அதிகப்படியான வேலைகள். வீடு திரும்ப நேரமாகிவிடும். பள்ளி விட்டதும் இவள் கங்கையை ஒட்டி நடப்பாள். கைகளை இரு பக்கமும் சிறகுகள் போல விரித்து, தலையைப் பின்னால் சாய்த்து, வானைப் பார்த்தவாறே ஒடுவாள். சில சமயம் யார் மேலாவது முட்டிக் கொள்வாள். யாரும் திட்டமாட்டார்கள். "பேட்டி, ஸம்பால்கே" என்று சிரிப்பார்கள்.
கங்கை மற்றும் அதன் கரையின் அத்தனை ரகசியங்களும் அவளுக்குத் தெரியும். அதன் முதலைகளைத் தெரியும். அதன்
பிரசுரிக்கப்படாத கைப்பிரதி -o- 363 ->
________________
அழுக்கும் அசுத்தமும் தெரியும். அதில் முங்குவோரைத் தெரியும். அருமையாகப் பிறந்த பிள்ளையைக் கங்கையில் தள்ளிப் பின் எடுத்துக்கொள்ளும் அந்த யமனை ஏய்க்கும் நாடகம் தெரியும். அலையும் பைராகிகளும் சாவை எதிர்நோக்கும் வயதான விதவைகளும் சடங்குகள் செய்யும் புரோகிதர்களும் அத்தனை பேரும் அவள் தினமும் நடந்த கரையைச் சேர்ந்தவர்கள். பத்து இருபது வருடங்களுக்குமுன் அங்குள்ள சிறு கோவில்களின் துரண்களில் சாய்ந்தவாறு சில சமயம், அரசவையில் ஒரு காலத்தில் பாடிய பாடகிகள் முதுமை ஏறி அமர்ந்திருப்பார்கள். உள்ளத்தை உருக்கும் தும்ரி பாடல்களைத் தன்னை மறந்து பாடுவார்கள். விழாக் காலங்களில் படகுகளில் அமர்ந்து பாடியபடி பலர் போவதுண்டு, குரலைக் கொண்டு யார் பாடுவது என்று புரிந்துவிடும். அங்குள்ளவர்கள் இதுபற்றி அவளிடம் கூறியதுண்டு.
உடல்கள் எரிக்கப்படும் சுடுகாடுவரை அவள் போயிருக்கிறாள். ஒரு முறை தள்ளி நின்று ஒரு பெண்ணின் உடல் முழுவதும் எரியும் வரை பார்த்தாள். சாவதற்காக காசி வந்த, கங்கைக் கரையின் ஒரு ஆசிரமத்தில் இருந்த விதவையா என்று தெரியவில்லை. வெள்ளைப் புடவை போர்த்தியிருந்தார்கள். அன்று சிறிது தூறல் போட்டுக் கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த அவள் உடை ஈரமாகி விட்டது. சற்று துரத்தில் நெருப்பு எரிந்தது நடுவில் வெள்ளைப் போர்வையுடன். அன்று அவள் ஒரு கவிதை எழுதினாள். அம்மா படித்துவிட்டு, நல்ல கவிதை என்றாள். ஆரம்பத்தில் இலக்கணம் தவறாத கவிதைகள்தான் எழுதினாள். தமிழ் இலக்கணத்தை அம்மா மண்டையில் ஏற்றியிருந்தாள். அம்மா புதுக்கவிதை படிப்பாள். இலக்கணத்தை மீறித் தானும் எழுதக் கூடாதா என்று இவள் கேட்டபோது எதை மீறுகிறோமோ அது முதலில் கைவர வேண்டும் என்பாள். கோடில்லாமல் ஏது மீறல் என்பாள். சில சமயம், வெகு அபூர்வமாக, பின்னிரவு வேளைகளில் அம்மா திருவாசகத்திலிருந்து ஏதாவது மெள்ளப் பாடுவாள். திருப்புலம்பலிலிருந்து உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன் . . . பாடுவாள். பல தடவைகள் அவள் பாடுவது திருச்சதகத்தில் உள்ள வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமேயாக இருக்கும். அவலக் கடலாய வெள்ளத்தே' என்று அது கடலில் முடிவதனால் இருக்கலாம். ஏனென்றால் கடல் அம்மாவுக்குப் பிடிக்கும். மற்றபடி அம்மா பூசை செய்தோ, கோவிலுக்குச் சென்றோ இவள் பார்த்ததில்லை. திருவாசகத்தின் உருக்கம் தனக்குப் பிடிக்கும் என்பாள். இரட்டைச் சொற்கள் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று வியப்பாள். நெக்கு நெக்குள் உருகி உருகி என்று சொல்லிச் சொல்லி அனுபவிப்பாள். அம்மாவின் பெயர் திருமகள். திரு என்று அவளைக் கூப்பிடுவார்கள் எல்லோரும். சில சமயம் அவள் உட்கார்ந்திருக்கும்போது பின்புறமாகச் சென்று, கழுத்தைக் கட்டிக்கொண்டு, திரு திரு' என்பாள். அம்மா தலையை உயர்த்திப் பார்த்ததும், இரட்டைச் சொற்கள் அவளுக்குப் பிடிக்குமே என்று இவள் சொல்வாள். சிரிப்பார்கள் இருவரும். கவிதைகள்,
<> 364 <> அம்பை
________________
கவிதையுடன் வரும் நினைவுகளையும் ஒட்டியதாகவே இவள் கற்பனைகள் ஓடின. அந்த வயதில் மெள்ள உருப்பெற்றுக்கொண்டிருந்த தன் முலைகளுக்கு அவன் அங்கவை சங்கவை என்று பெயரிட்டிருந்தாள்.
கங்கைக் கரையில் அவளுடன் நடக்கும்போது அம்மா பல கவிஞர்களின் கவிதைகளை அவளுக்குச் சொல்லித் தந்ததுண்டு. தீக்குள் விரலை வைத்தால் எப்படி இன்பம் வரும் என்று இவளை யோசிக்கச் சொல்வாள். துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ ..." இவளுக்கு ரொம்பப் பிடித்த பாட்டு அம்மா அதை சுருதி சுத்தமாகப் பாடுவாள். மாலைப் பொழுதில் கங்கையில் தவழும் விளக்குகளின் பின்னணியில் ஒதுக்குப்புறமாக அமர்ந்து அம்மா பாடும்போது, ஆண் ஒருவனுக்குத் துன்பம் வராதா, தான் யாழ் இசைத்து இன்பம் சேர்க்க மாட்டோமா என்று இவளுக்கு ஒரு கிறக்கம் ஏற்படும். அம்மாவிடம் சொல்வாள். அம்மர் சிரிப்பாள். ஓர் ஆண் யாழ் வாசித்து அவள் துன்பத்தைப் போக்கி இன்பம் சேர்ப்பதாக ஏதாவது சுற்பனை அவளுக்குத் தோன்றுகிறதா என்று கேட்டாள் அம்மா ஒருமுறை. இவள் இல்லை என்றாள். ஏனென்று அவன் யோசிக்க வேண்டும் என்றாள். அம்மா.
பல கவிஞர்களின் வாழ்க்கைபற்றிக் கறுவாள். செல்லம்மாள் கடன் வாங்கிவந்த அரிசியை பாரதியார் குருவிகளுக்குப் போட்டது. புத்தம் புதுக் கோட்டு தைத்தபின் அதைப் பிச்சைக்காரனுக்குப் போட்டது. கஞ்சா குடித்தது எமக்குத் தொழில் கவிதை என்றது -இதையெல்லாம் சொல்லியிருக்கிறாள். பாரதியின் வாழ்க்கைபற்றி அவர் பெண் எழுதியதையும் அவர் கவிதைகளையும் ஒரு பிறந்த நாளின் போது தந்தாள். பாரதிதாசன் தன் பெண்ணின் திருமணத்தின்போது, தனக்கு உடனே முட்டை அவித்துத் தர வேண்டும் என்று கத்தியது: குடும்பம் ஓர் இடமும் அவர் ஒர் இடமுமாக இருந்தது; குயில் பத்திரிகை நடத்தியது எல்லாம் விவரமாகச் சொல்வாள். ஸில்வியா ப்ளாத் காஸ் அடுப்பில் தலை கொடுத்துத் தற்கொலை செய்து கொண்டது: அன்னா அக்மதோவா லெனின் கிராடின் சிறைக்கு வெளியே பல மாதங்கள் நின்றது எல்லாம் சரித்திர விவரங்கள் போவில்லாமல் உற்ற மனிதர்களைப் பற்றிப் பேசுவதுபோல் விவரிப்பாள்.
இவள் இரவில் படுக்கையில் ஒரு கையை முட்டுக் கொடுத்து ரங்கநாதர் கோவில் படுத்துக்கொண்டு எதிரே ஓர் ஆண், யாழ் வாசித்துத் தன்னை உற்சாகமூட்டுவதுபோல் கற்பனை செய்து பார்ப்பாள். அது உருப்பெறுவது கஷ்டமாக இருந்தது. பாரதி பக்கத்து விட்டுக்குப் போய் அரிசி கடன் கேட்பதைப் போல் தினைத்துப்பார்ப்பாள். அவர் கொண்டு வந்த அரிசியைச் செல்லம் மாள் உற்சாகமாகக் குருவிகளுக்குப் போடுவதைப்போல் கற்பனை செய்வாள். ஒர் ஆண் செய்யும்போது சரியாகத் தோன்றும் ஒன்று, ஒரு பெண் அதைச் செய்தால் பைத்தியக்காரத்தனமாக ஏன்
பிரகரிக்கப்படாத கைப்பிரதி * 365 &
________________
தோன்றுகிறது என்று வியப்பாள். ஒரு முறை அபூர்வமாக கர்ணன் படம் வந்திருந்தது. அதில் தேவிகா காதல் பாட்டுப் பாட, பாடல் முழுவதும் சிவாஜி கணேசன் தொடையில் ஒரு கை வைத்தபடி விறைப்பாகவே உட்கார்ந்திருப்பார். கர்ணன் வீரன் என்பதால் போலும். தேவிகா ஒரு பட்டுப்பூச்சி மாதிரி அவரைச் சுற்றிச்சுற்றி வருவாள். அதில் சிவாஜி கணேசன் புன்னகைகூட, தீர்ந்துபோன பற்பசைக் கூட்டைப் பிதுக்கும் முயற்சி போல் இருக்கும். பக்தியில் கனிந்து கரைந்து உருகுவது ஆண்களுக்குச் சாத்தியம் என்றால், காதலில் அப்படி ஆகக் கூடாதா என்ன? எப்படிப்பட்ட ஆணை அவள் மதிப்பாள் என்று உறுதியாக அவள் தீர்மானித்து விட்டிருந்தாள். அவனுக்கு உருகத் தெரிய வேண்டும். நெக்கு நெக்குள் உருகி உருகி' இருக்க அவனுக்குத் தெரிய வேண்டும்.
அம்மாவின் பெண் மற்றும் ஆண் நண்பர்களில் பலர் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள்தாம். வெள்ளிக்கிழமை மாலைகளில் வீட்டில் கூடுவார்கள். பல மொழிக் கதைகள், கவிதைகள் படிக்கப்படும். மொழிபெயர்க்கப்படும். கவிதைகளின் சில வரிகள் அவள் மனத்தில் மாட்டிக்கொண்டுவிடும். காலையில் எழும்போது, மாலையில் நடக்கும்போது, இரவில் கண்ணை மூடிய பிறகு என்று கூடவே வரும். தலையில் கட்டிய ரிப்பன் மாதிரி மெலிதாக மனத்தில் பறக்கும். திடீரென்று ஈயக்குண்டு மாதிரி கனக்கும். அம்மாவிடம் சொன்னால் கவிதை என்றால் அப்படித்தான் என்பாள். வரும் கவிஞர்களின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் அவளுக்குச் சில சமயம் விசித்திர மாக இருக்கும். ஒரு பெங்காலிக் கவிஞர் திடீரென்று, "மா" என்று அலறி அம்மாவின் காலடியில் விழுந்துவிடுவார். அம்மாவின் மாணவன் ஒருவன் அவளிடம் அந்தக் கவிஞர் அவள் அம்மாவைத் தீவிரமாகக் காதலிப்பதாகக் கூறினான். அம்மாவிடம் அதுபற்றிக் கேட்டபோது, அது உண்மையில்லை என்றாள். அவர் வணங்குவது அவர் மனத்தில் உள்ள ஏதோ ஒரு கற்பனைப் பெண்ணை என்றாள். வெள்ளிக்கிழமை அந்தக் கவிஞர் வருவது நிற்கவில்லை. காரணம், அவர் எழுதும் கவிதைகளின் தரம் என்றாள் அம்மா, "உனக்கு அப்பா எழுதின கவிதை பிடிக்கிற மாதிரியா?” என்று கேட்டாள் இவள். அவள் அப்பாவைப் போல் ஒரு கவிஞனோடு வாழ்வதைவிட அவன் கவிதைகளோடு வாழ்வது சுலபம் என்றாள் அம்மா. அப்பா வின் கவிதைகளை அம்மா தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தாள். கருத்தரங்கங்களில் இந்திய மொழிகளில் எழுதும் கவிஞர்கள்பற்றிப் பேசும்போது அப்பாவின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் கவிதைகளையும் படிப்பாள். அப்படிச் செய்யும்போது சில பேர் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வார்கள். அல்லது முழங்கையால் பக்கத்தில் உள்ள நபரை இடிப்பார்கள். அம்மா தன் பாட்டுக்குப் பேசுவாள் எதையும் கவனிக்காமல். -
வேலையில் மூழ்கிவிட்டால் அம்மா எழுந்திருக்கமாட்டாள். சமைக்கமாட்டாள். குளிக்கமாட்டாள். அவளைச் சுற்றிலும் புத்தகங்
<- 366 --> அம்பை
________________
களும் காகிதங்களும் இறைந்திருக்கும். கூந்தலை இறுக்கி முடிந்து தலைமேல் வைத்திருப்பாள் நாரதர் மாதிரி எதைக் கேட்டாலும், 'ம், ம்” என்பாள். "அம்மா, நான் செத்துடப்போறேன்" என்று ஒருமுறை சொல்லிப்பார்த்தாள். "ம், ம்” என்றாள் அம்மா, பிறகு அவளிடம் கூறியதும், "நிசமாவா?” என்று சிரித்தாள். பிஸ்கோத்து, பழங்கள் எல்லாம் எடுத்துப் போய் அம்மாவை வலுக்கட்டாயமாய்ச் சாப்பிட வைப்பாள். பள்ளியிலிருந்து வந்ததும் அம்மாவுக்கு டீ போட்டுக் கொடுப்பாள். தான் எழுதிய ஏதாவது பகுதியை அம்மா படித்துக்காட்டுவாள். ஆராய்ச்சிக் கட்டுரைகளைக்கூட இவளுக்குப் படித்துக் காட்டுவாள். சில சமயம் புரியும். சில சமயம் புரியாது. ஆனால் அவள் படிப்பதைக் கேட்கும் அனுபவம் பிடிக்கும். அம்மாவுக்காக அகராதியில் சொற்களைப் பார்ப்பது, தட்டச்சுப் பொறியின் நாடாவை மாற்றுவது, புத்தகங்களில் மேற்கோள்களைத் தேடுவது போன்ற எடுபிடி வேலைகள் செய்ய அவளுக்குப் பிடிக்கும். வேலை முடிந்ததும் தவம் கலைந்து வருப்வளைப் போல் ஒர் ஒளியுடன் வருவாள். சன்னல் பக்கத்தில் உள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்து வெளியே பார்ப்பாள். சில சமயம் அது மாலை வேளையாக இருக்கும். அவள் நிழலுருவமாய்த் தெரிவாள். கூந்தலைப் பிரித்து விட்டிருப்பாள். நெற்றி முனையில் இருந்து ஆரம்பித்துக் கூந்தல் நுனிவரை ஒரு மங்கலான ஒளிக்கரை ஓடும். அம்மாவை இன்னமும் அதிகமாகப் பிடித்துப் போகும்.
சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டுக் குரலெடுத்து, முழுப் பெயரையும் சொல்லி இவளை விளிப்பாள்.
"செந்தாமரை .' ஒடிப் போய் முன்னால் நிற்பாள். அம்மா முகம் மலரச் சிரித்துத் தலையாட்டியவாறே, "சமைக்கலாமா ?” என்பாள்.
இவளும் தலை அசைப்பாள். இருவருமாக என்ன சமைப்பது என்று விவாதிப்பார்கள். பட்டாணி வேண்டாம், உரிக்க நேரமாகும்; மீன் குழம்பு செய்ய முடியாது, மீன் வாங்கவில்லை; பரோட்டா வேண்டாம், மாவு பிசைய வேண்டும்; வீட்டில் தயிர் இருக்கிறதா, பால் இருக்கிறதா என்று பேசித் தீர்ப்பார்கள். பார்க்கப் போனால் விவாதத்துக்கே அவசியமில்லை. முக்கால்வாசி நாட்கள் இந்த மாதிரி சமயங்களில் செய்வது சோறும் முட்டைக்கறியும்தான். அம்மாவுக்கு நிறங்களைப் பொறுத்துச் சமைக்கப் பிடிக்கும். வெண்மையாகச் சோறு, சற்றே சிவந்த நிறத்தில் முட்டைக்கறி, ஆரஞ்சு வண்ணத்தில் காரட் துண்டுகள், பச்சை நிறத்தில் புதினா - கொத்த மல்லித் துவையல், கூடுதலான வெண்மைக்கு ஒரு தயிர்ப் பச்சடி என்று மேசையில் பரப்பி வைப்பாள். நிறங்களைப் பார்க்கும்போதே நாவில் நீர் ஊறும் அந்த நேரத்தில் யாராவது வீட்டுக்கு வந்தால் அந்த நபருக்குச் சாப்பாட்டு யோகம் அடிக்கும். பல நாட்கள் அது மோஹன் குப்தாவாக இருக்கும். ஐஸ்க்ரீம் அல்லது இனிப்புப் பண்டங்களுடன் வருவார். அவர் நாடகங்கள் பல மேடையேறியிருந்தன. பலத்த
பிரசுரிக்கப்படாத கைப்பிரதி * 367 -->
________________
விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அவர் மொழியை உபயோகித்த விதமும், நாடக அமைப்பும், உறவுகளை அவர் பார்த்த விதமும் பலவித சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தன.
அம்மாவின் அறையில் உட்கார்ந்துகொண்டு அவர் நிறையப் பேசுவார். இரவு ஒரு மணி, இரண்டு மணிக்குக்கூடக் கிளம்பிப் போவார். ஒரு முறை அவள் அம்மாவிடம் ஏதோ கேட்கப்போன போது அவர் கேட்டது காதில் விழுந்தது.
"திரு, நான் இங்கே வந்து உன்னுடன் வாழக்கூடாதா?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
"இல்லை, அது முடியாது” என்றாள் அம்மாவும் ஆங்கிலத்தில். "ஏன், எல்லா ஆண்களும் அந்த முத்துக்குமரன் போல்தான் என்று நினைக்கிறாயா?”
ஒரு நீண்ட மெளனம். அதன்பின் அம்மா பேசினாள். அவள் குரல் மிகவும் கனிந்து இருந்தது. ஆங்கிலச் சொற்கள் சற்றே இழுபட்டு ஒலித்தன.
"நானும், என் மகளும் கூடிய இந்த உலகை உருவாக்க நான் நிரம்பச் சிரமப்பட்டேன் மோஹன். அதை உன்னால் கற்பனைகட செய்ய முடியாது. அது உன் நாடகங்களைவிட அதிகம் நாடகத் தன்மையுடையது. முத்துக்குமரன் இல்லாத இந்த வீட்டை அமைக்க நான் ... நான். பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்..” அம்மாவின் குரல் உடைந்தது.
"திரு . . . ப்ளிஸ் மோஹனின் குரல் கரகரத்தது. செந்தாமரை வெளியேயே நின்றாள். அவள் பெயரில் உள்ள 'எம்' முத்துக்குமரனுக்குரியது என்று அவளுக்குத் தெரியும்.
இந்தச் சம்பவம் நடந்த சில தினங்களுக்குப் பின்தான் அவளுக்கு அது கிடைத்தது. அந்தக் கைப்பிரதி அம்மா ஒரு கருத்தரங்கிற்காக வெளியூர் போயிருந்தாள். விடுதியில் இருந்தபடி படிக்கும் ஒரு மாணவி இவளுக்குத் துணையாக வீட்டில் இருக்க வந்தாள். இவள் பள்ளியிலி ருந்து மத்தியானமே ஒரு நாள் வந்துவிட்டாள். பழைய புத்தகம் ஒன்றைத் தேடி அம்மாவின் அறையிலிருந்த பீரோவைக் குடைந்த போது அந்தக் கைப்பிரதி கிடைத்தது. தமிழில் எழுதியிருந்த கைப் பிரதி. திருவாசகம் என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இவள் அதை வெளியே எடுத்துப் படிக்க முற்பட்டாள்.
அதை எவ்வளவு முறை அவள் அப்போது படித்தாள். பிறகு படித்திருக்கிறாள் என்று நினைவில்லை. அவள் வாழ்வின் பல சந்தர்ப்பங்களில், பல கால கட்டங்களில் அவள் அதைப் படித்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் அது ஒரு வலிவு கூடிய அலையாய் அவளை வந்து வந்து தாக்கியது. ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு விவரங்கள் புலப்பட்டன. தாத்தா, அவர் லட்சியம், அவர் மென்மை, அவருடன் அம்மாவின் உறவு, அவர் நண்பர்கள், அம்மாவின் காதல் என்று பல நிகழ்ச்சிகளால் பின்னப்பட்ட அது, சோகம், பாசம்,
-- 368 - அம்பை
________________
கோபம், வியப்பு, மதிப்பு, காமம் சார்ந்த உணர்வுகள் என்று பல சந்தர்ப்பங்களில் பல உணர்வுகளைத் துண்டியது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்று முளைவிட்டது. சிலவற்றைப் படிக்கும்போது அம்மா அம்மா என்று அரற்றியிருக்கிறாள். அம்மாவைச் சிறு பெண்ணாக்கி மடியில் கிடத்திக் கொள்ளத் தோன்றியிருக்கிறது. அந்தக் கைப்பிரதியின் சில வரிகள், சில சம்பவங்கள் அவள் மனதிலேயே தேங்கிவிட்டன.
அக்கைப்பிரதியை அம்மா ஒரு கடற்பயணத்தில் துவக்கியிருந்தாள். அம்மாவின் அப்பா ராமசாமி தன் மலேயா வாழ்க்கையை முடித்துக் கொண்டு தமிழ்நாடு வரத் தீர்மானித்தார். மனைவி இறந்தபின் அங்கிருக்க அவருக்குப் பிடிக்கவில்லை. மூன்று வயதான திருமகளுடன் அவர் கப்பலேறினார். அந்தக் கப்பல் பயணத்தில் அவள் நினைவிலிருந்தது அவள் எப்போதும் தலையைப் பதித்தவாறிருந்த முரட்டுக் கதர்ச் சட்டை அணிந்த அப்பாவின் தோளும், இவளைச் சுற்றி இருந்த அவர் மென்கரங்களும், கப்பலின் மேல் தட்டிலிருந்து இரவில் பார்த்த மிகக் கரிய வானின் எண்ணிலா தாரகைகளும், முடிவில்லாக் கடலும்தான் என்று அம்மா எழுதியிருந்தாள்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த இரண்டொரு ஆண்டுகளுக்குப் பின் சென்னை வந்த ராமசாமி ஒர் அச்சகத்தை விலைக்கு வாங்கி அத்துடன் ஒரு பதிப்பகத்தையும் ஆரம்பித்தார். அவருக்கென்று சில கொள்கைகளை வைத்திருந்தார். தமிழ் இலக்கியப் புத்தகங்கள், நாட்டுப் பாடல்கள், பல சமயங்களைப் பற்றிய புத்தகங்கள், விஞ்ஞானம் பற்றிய புத்தகங்கள், பள்ளிப் புத்தகங்கள் என்று வெளியிடுவார். தாலி மகிமை, வெள்ளிக் கிழமை விரதம் என்று சடங்குகளையும் சின்னங்களையும் வலியுறுத்தும் புத்தகங்களை வெளியிடமாட்டார். ஒரு குறிப்பிட்ட இனத்தாரையோ, மொழிசார்ந்தவர்களையோ ஆபாசமாகத் தாக்கி எழுதும் புத்தகங்களை வெளியிடமாட்டார். அச்சகம் ஒட, துண்டுப்பிரசுரங்கள், வாழ்த்து அட்டை, திருமணப் பத்திரிகைகள் என்று அடிக்க வேண்டி வரும். அதிலும் பிடிவாதம் காட்டுவார். மந்திர-தந்திரம், வசிய மருந்து என்று வரும் துண்டுப் பிரசுரங்களை ஏற்கமாட்டார். பூப்பெய்து விழாச் சடங்கு அழைப்பிதழ், சடங்குகளுடன் நடக்கும் திருமண அழைப்பிதழ்கள் இவற்றை அடிக்க மாட்டார். அம்மா வளரும்போது அவர் அடிக்கடி சொல்லி அவள் கேட்டது, "நம்மளால போட முடியாதுங்க” என்பதுதான் என்று அம்மா எழுதியிருந்தாள்.
தமிழ்ப் பண்டிதரும் சீர்திருத்தவாதியுமான ஒருவர் அவர் நல்ல நண்பர். அவர் ஒரு கைப்பிரதியைத் தந்திருந்தார் ராமசாமியிடம். விதவைகளுக்கு மறுவாழ்வு தர ஒரே வழி விதவா விவாகம்தான் என்று அவர் வாதிட்டிருந்தார் அதில். லட்சியவாதியான ஆண்களைத் தியாகம் செய்ய அழைத்திருந்தார். நல்ல மனிதர் அவர் துணிகரமான கருத்துகளைச் சொல்பவர் என்று பெயரெடுத்தவர். சாம்பசிவனார் என்றும் மகா பண்டிதனார் என்றும் அழைக்கப்படுபவர்.
பிரசுரிக்கப்படாத கைப்பிரதி -o-, 369 -
________________
"என்ன ராமசாமியாரே, எப்படி புத்தகம்? கொஞ்சம் புரட்சிகரமான கருத்துதான். தைரியமாப் போடுவீங்களா?” என்று கேட்டார். "போடறத்துக்கென்னங்க: போட்டுடலாம். ஆமா, ஒரு விதவைப் பொண்ணு ஒருத்தனைக் கட்டிக்கிட்டாதான் அவ வாழ்க்கை அமையுங்கறதில என்னங்க புரட்சி ; அவ படிக்கிறதுக்கும் வேலை பண்ணுறதுக்கும் உதவி பண்ணனும், யூனிபாரம் போடுறாப்பல அவ பொட்டில்லாம, பூவில்லாம இருக்கக் கூடாதுன்னு சொன்னிங் கன்னா சரி. இது ஏதோ ஆம்பள வந்து அவளுக்கு வாழ்வு தரனும்கறது அவள ஆம்பள கீழயே வைக்கணும்னுட்டு சொல்றாப்பல இருக்கே அவன் நிழல்லதான் இவ ஒண்டனும்கறாப்பல. வேணு மின்னா கல்யாணம் செய்துகிடட்டும். மனசுக்குப் பிடிச்சவனைக் கட்டட்டும். அதை ஏன் வாழ்வு தரதுன்னுட்டுச் சொல்றீங்க? ஆம்பள ஏதோ தியாகம் பண்றாப்பல சொல்றீங்களே ?” என்றார் ராமசாமி மெள்ள.
சாம்பசிவனார் சற்றுத் தாக்கப்பட்டார். பெண்ணைப் போற்றி எழுதுபவர் அவர். பெண் தன் பெண்தன்மையைக் குலைக்கும் எந்தவிதக் கல்வியையும் நாடக்கூடாது என்று சொல்லிவருபவர். பெண்களின் பாதுகாவலர் என்று பலராலும் புகழப்படுபவர். ராமசாமி அவரைப் பீடத்திலிருந்து இறக்கிவிட்டார்.
அவரிடம் அப்படிப் பேச ராமசாமிக்குத் தகுதி இருந்தது. அவர் தந்தையின் நண்பரின் மகள் ஒருத்தி கணவனை இழந்தவள். அவளை இவர் விரும்பினார். அவள் முகத்தில் மாறாத ஒரு சோகம் இருந்தது. நண்பர்கள் பலர் அவளுக்கு மறுவாழ்வு தர இவரைத் துரண்டினர். அப்படிப்பட்ட எண்ணம் ஏதுமில்லாமலே ராமசாமி அவளை அணுகித் தன் விருப்பத்தை வெளியிட்டதும் அவள் சற்று தயங்கி, "எனக்குப் படிக்கணும்னுட்டு ஆசை. படிக்க உதவி பண்ணுவீங்களா?” என்றாள். ராமசாமி சம்மதித்தார். "அப்ப உங்கம்மா சிரிச்சா. பூப்பூத்த மாதிரி. படிப்புக்காகத்தான் அவ முகத்துல அத்தனை சோகம்” என்று சொல்வார் திருமகளிடம். திருமணத்தின்போது நண்பர்கள் உரையாற்ற விரும்பியபோது தடுத்துவிட்டார். வேணாம். நீங்க விதவைக்குத் திருமணம், விதவைக்கு வாழ்வு தரதுன்னுட்டு விதவை, விதவைன்னு பத்து வாட்டி பேசுவீங்க. அவங்க மனசு புண்படும்” என்று மறுத்துவிட்டார். அதன்பின் அவளை மேலே படிக்க கல்லுரி விடுதியில் சேர்த்துவிட்டு மலேயா போய்விட்டார். அவள் ஆசிரியைப் பயிற்சி முடித்த பின்புதான் மலேயா வந்தாள் அவருடன் வாழ. இடையில் அவர்கள் ஒர் ஆயிரம் கடிதங்களாவது எழுதிக்கொண்டார்கள். அக்கடிதங்கள் தன்னிடம் இருப்பதாக அம்மா எழுதியிருந்தாள்.
மனைவி பிறந்த தினம், இறந்த தினம் இரண்டையும் கொண்டாடு வார் ராமசாமி. பிறந்த நாள் அன்று உணவுடன் இனிப்பு உண்டு. இறந்த தினம் கட்டாயம் வாராய் நீ வாராய் பாட்டை வைப்பார். 'அன்பே நீ வாராய்' என்று திருப்புமிடம் வரும்போது கூடவே
* 370 -o- அம்பை
________________
அதிகக் குரலெழுப்பாமல் பாடுவார். இதுதான் அம்மா புரிந்து கொண்ட ஆழ்ந்த காதல். +
ராமசாமியின் இன்னொரு நண்பர் சுப்பைய்யா நாயுடு, தெலுங்கர். ஆனால் சமஸ்கிருதம், தமிழ் இரண்டும் படித்தவர். முறையாக சங்கீதம் பயின்றவர். இசைவேளாளக் கலைஞர்கள் பலரிடம் நெருங்கிப் பழகுபவர். அவர் தியாகராஜர் கிருதிகளையும் நாட்டியத்திற்கேற்ற ஜாவளிகளையும் மாலைகளில் தங்கபஸ்பம் புகையிலை போட்டு மென்றபின் முணுமுணுப்பாக ஆரம்பித்துப் பிறகு பாடுவார். திரு மகளுக்காக என். எஸ். கிருஷ்ணனின் கிந்தனார் காலட்சேபம்’ செய்வார். ஆனால் தெலுங்கில் முங்கினால் எழ மனது வராது அவருக்கு. சஹானாவில் "ராமா இக நன்னு ப்ரோவ..." அடிக்கடி பாடுவார். ஆரம்பிக்கும்போது ஒற்றைச் சொல்லாய் "ராமா" என்று எடுத்து விடுவார் பெருமூச்சு விடுவதைப் போல. அதன் பின்பு "ராமா'வை இழுத்தும் நீட்டியும் குலுக்கியும் ஓங்காரமாகவும் குரல் இழையவும் பாடுவார். பின்னர் "இக நன்னு ப்ரோவராதா" என்று துவங்கும்போது கெஞ்ச ஆரம்பித்துவிடுவார். "தய லேதா?" என்று கீழ் மட்ட ஸ்வரங்களுக்குக் கீர்த்தனை போகும். இவர் பாடும்போது பாதாளத்தில் உழலுபவர் போல கீழ் மட்டத்தில் அலைவார். மீ ண்டும் "பூரீ ...” என்று மேலெழுந்து "ராமா'வை எட்டுவார். ராமசாமி அனுபவித்துக் கேட்பார்.
நண்பர் அடிக்கடி, "தமிழ்ப் பாட்டு மட்டும் பாடட்டுமா?” என்று கேட்பார்.
வேணாய்யா. உனக்கு எதுல ஆசையோ அதுல பாடு. சங்கீதத்துக்கு மொழி கிடையாதுய்யா. அமெரிக்கால ஒரு கறுப்பர், லூயிஆம்ஸ்ட் ராங்னுட்டு. ட்ரம்பட் வாசிக்கிறாரு ஜாஸ் சங்கீதம். அவரு வாசிச்சா கறுப்பர் வாழ்க்கையே கண்முன்னால வராப்பல இருக்கு எங்கெங் கயோ இழுத்துட்டுப் போவாரு ...” என்றுவிட்டு, தன் பழைய கிராமபோனில் அவர் மலேயாவிலிருந்து பத்திரமாகக் கொண்டு வந்திருந்த ப்ளேட்டைப் போடுவார். அவரும் சுப்பைய்யா நாயுடுவு மாகக் கேட்பார்கள். அம்மா வீட்டிலிருந்தால் அம்மாவும் கூட உட்காருவாளாம்.
ராமசாமிக்குச் சமைக்கப் பிடிக்கும். அம்மியில் இழையஇழைய அரைத்துத் துவையல் செய்வார். எடுபிடி வேலைகள் தவிர அம்மாவை வேறு எதுவும் செய்ய விடமாட்டார். "நீ படிம்மா. இப்பத்தான் படிக்க முடியும்” என்பார். யாராவது தூரத்து உறவினர்கள் வரும்போது, "பொம்பளப் பிள்ளைக்குச் சமைக்கத் தெரியாண்டாமா? சோறுகூட வடிக்கத் தெரியலையே?’ என்று அவர்கள் பங்குக்கு அங்கலாய்ப்பார் கள். இதெல்லாம் அவரை இன்னொரு திருமணம் செய்துகொள்ள - வாய்க்கு ருசியா ஆக்கிப் போட ஒருத்தி, ஒடம்பு முடியல்லேனா ஒரு வாய் சுடு தண்ணி தர ஒருத்தி - வற்புறுத்தும் முஸ்தீபுகள் என்று அவருக்குத் தெரியும் ஒன்றும் சொல்லாமல் சோறு, மீன்கறி, முட்டைப் பொரியல் என்று செய்து போடுவார் அவர்களுக்கு "எம் பொண்ணு
பிரசுரிக்கப்படாத கைப்பிரதி -> 371 -o
படிக்கணும். சமைக்கிறது பிரமாத விஷயம் இல்ல. வயறு பசிச்சா தானா செய்துக்குவா” என்று விளக்குவார்.
நடந்ததும் அதுதான். ராமசாமிக்கு உடம்பு முடியாமல்போன பின்புதான் திருமகள் சமைக்கத் துவங்கினாள். அப்பாவுடன் கேலி பேசியபடி சமையல், "அப்போவ் ...” என்று கூப்பிடுவாள் சில சமயம். "அய்யா ...” என்றும் கூப்பிடுவாள். மிகவும் சீண்ட வேண்டும் என்றால் 'ராமசாமியாரே ...” என்று கூப்பிடுவாள். அவர் வெளிய றையில் இருந்தபடி சில சமயம் சமையல் விளக்கங்கள் தருவார். சில சமயம் உள்ளே வந்து எளிதான வேலைகளைச் செய்தபடி சொல்லிக் கொடுப்பார். அவள் ஆங்கில இலக்கியத்தில் எம். ஏ. படித்துக் கொண்டிருந்தாள் அப்போது. வீட்டுக்கும் கல்லூரிக்குமாக ஒட்டம். அந்தச் சமயத்தில்தான் பதிப்பகத்தின் ஆலோசகர்களில் ஒருத்தி என்ற முறையில் முத்துக்குமரனின் கவிதைகளைப் பதிப்பிக்கச் சிபாரிசு செய்தாள். ராமசாமி முத்துக்குமரனின் கவிதைகளை வெளியிட்டார். அவன் வீட்டுக்கு வரத் துவங்கினான்.
அவள் அவனை முதலிலேயே கவனித்து அவன்பற்றிய தன் உணர்வுகளைக் கணித்து விட்டாள். அவனுக்குச் சில காலம் பிடித்தது. ஆரம்பத்தில் அவன் அவளை கவனிக்கவே இல்லை. ஆங்கில இலக்கியம் படிப்பவளிடம் என்ன பேச்சு என்பதைப் போல ஒதுங்கிக் கொண்டான்.
அம்மா எழுதியிருந்த அந்த ரிக்ஷாப் பயணம் செந்தாமரை பின்னால் பலமுறை படித்து ரசித்த ஒன்று. காமம் என்பது இறுக்கி முடுக்கப்பட்ட கம்பி போல அவளுக்குப் படும். அதை ஒரிடத்தில் தொட்டதும் அதன் அதிர்வலைகள் பொங்கிப் பரவுவதைப் போல அவள் உணர்ந்தாள் பின்னால் பலமுறை.
ஒரு முன்னிரவு நேரம் திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. மண்ணடியை அம்மா எட்டும்போது மழை வலுத்துவிட்டது. ஒர் ஒட்டு வீட்டுத் திண்ணையில் அம்மா ஒதுங்கி நின்றுகொண்டாள். சுற்றிலும் சரம்சரமாக மழை ஒட்டிலிருந்து கொட்டியது. எதிரே மழையா, புகையா என்று தெரியாமல் தண்ணிர்த் திரை. திடீரென்று ஒவியம் உருப்பெறுவதுபோல் அந்தத் திரையிலிருந்து முத்துக்குமரன் எழும்பி அதே ஒட்டு வீட்டை நோக்கி வந்தான். அதே திண்ணையில் நின்றுகொண்டான். அவளை கவனிக்கவில்லை. மழையில் நனைந்து நெற்றியில் ஒட்டிக்கொண்ட சுருட்டை முடியை விலக்க அவன் கையை மேலே எடுத்தபோது அவன் விரல்கள் அவள் மேல் பட்டன. பட்டும் படாமலும் ஒரு தொடல். ஒரு விரலின் நகம் சற்றே உரசியது இறகால் தொட்டதுபோல். "அந்த மழை ஏற்படுத்திய குளிரா அல்லது முதன் முதல் முத்துக்குமரனின் கை பட்டதால் ஏற்பட்ட ஒரு விளக்க முடியாத குளிர்ச்சியும் குடும் கலந்த உணர்வா என்று தெரியவில்லை; கால்கள் துவளுவதுபோல ஒர் உணர்ச்சி ஏற்பட்டது” என்று அம்மா எழுதியிருந்தாள். அப்போதே அவனை அனைத்து அந்தத் திண்ணையில் கிடக்க வேண்டும் என்று தோன்றிய
<- 372 -- அம்பை
________________
தாம். பெண்களை எப்படி எப்படியோ கவிஞர்கள் வர்ணிக்கிறார்கள். ஆனால் ஓர் ஆணை எப்படிப் பார்க்கிறாள் பெண் என்று அன்று தான் தெரிந்தது என்று அம்மா விளக்கியிருந்தாள். மழையில் அவன் முழுவதும் நனைந்திருந்தான். வேஷ்டியும் சட்டையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு இருந்தன. ஈரமான வெள்ளைச் சட்டையின் ஊடே கரிய தோள்கள் சட்டைத் துணியின் மடிப்புகளுக்கேற்ப ஏறி இறங்குவதுபோல் பட்டது. அரைக் கைச் சட்டையாதலால் நனைந்த கைகள் தொங்கியபடி இருந்தன.
மணிமணியாய் மழைத்துளி கைகளின் மேல் வேஷ்டியைத்துக்கிக் கட்டி அவன் சுவரின் மேல் சாய்ந்து நின்றபோது, நடந்து வலுப்பெற்ற கரிய கால்கள் கண்ணில் பட்டன. டயர் செருப்பு முரட்டுக் கால்கள். பாத நகங்கள் சீராக வெட்டப்படவில்லை. கோணியிருந்தன. சில. பாதங்கள் விசிறி மாதிரிப் பரந்திருந்தன. உள்ளங்காலில் வெடிப்பு வரிகள். இந்த ஆண் கடவுள்களுக்கெல்லாம் தாமரைப் பாதங்கள் என்று ஏன் சொல்கிறார்கள்? யாருக்கு வேண்டும் தாமரைப் பாதங்கள்? அவற்றில் நடந்த, ஒடிய, இடறிய, விழுந்த, விளையாடிய புழுதியும் மண்ணும் ஒட்டிய அடையாளங்கள் உண்டா? முத்துக் குமரனின் பாதங்கள் பூமியில் பிணைந்த பாதங்கள். அதன் அசைவு களில் உருவான பாதங்கள். அப்பாதங்களிடம் சில கதைகள் இருந்தன சொல்ல. அக்கதைகளுக்கு எதிர் உருவமாய் அந்த மென்மையான விரல்கள் கூடிய கைகள். திருமகளுக்கு ஜிவ்வென்றது. அப்போதுதான் முத்துக்குமரன் அவளைப் பார்த்தான் சரியாக. ஏதோ பேசிக் கொண்டார்கள். பின்பு அவனும் அவளுடன் ஒரு ரிக்ஷாவில் அவள் வீட்டுக்கு வந்தான். ஓர் அமானுஷ்ய பிரதேசத்தை நோக்கிப் போவது போல் அமைந்தது அந்த ரிக்ஷாப் பயணம். மழையைக் கிழித்துக் கொண்டு மெள்ளப் பறப்பது போல. தொப்பியிலிருந்து மழைநீர் சொட்டியபடி சற்றே மேலெழும்பி ரிக்ஷாவை மிதித்த ரிக்ஷாக் காரனின் வளைந்த உருவம். மேலும் கீழுமாய் ஏறியும் இறங்கியும் இயங்கிய அவன் கால்கள். உள்ளே வீசிவிசி அடித்த மழையை ஏற்றுக்கொண்டு இவர்கள்.
சில வாரங்களில் அந்த முடிவை எடுத்தனர். ராமசாமியிடம் அவள் சொன்னபோது அவர் மறுக்கவில்லை. இவளின் பிரவாகமிட்ட உணர்வுகள் அவருக்குப் புரிந்தது. அதனால் எதுவும் சொல்லும் முன்பு கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.
பின்பு அவர் மெள்ள, "திரு, அவனுக்குக் கொஞ்சம் குடிப்பழக்கம் உண்டு போல’ என்றார்.
"குடிச்சுட்டு ஒண்ணும் ஆடறாப்பல இல்லப்பா அது எப்பவாவது நண்பர்களோட இருக்கறப்ப இருக்கலாம் அந்தப் பழக்கம்” என்று பதிலளித்தாள்.
"கஞ்சா கூட அடிப்பான்னுட்டு நாயுடு சொல்றார்மா. அவர் வீட்டுக்குப் பக்கத்துலதான் இவன் வீடாம்.”
பிரசுரிக்கப்படாத கைப்பிரதி -- 373 -
________________
"கஞ்சா ஒண்னும் விஷம் இல்ல. பாரதியார் கஞ்சா அடிக் கலையா? இதெல்லாம் சாதாரண விஷயம்" என்று அவள் விளக்கினாள்.
அதன்பின் நேர்ந்தது ஒரு வன்முறைப் பயணம். திருமணமான ஒரு சில வாரங்களில் உருவான பயணம். அப்பயணத்தின் பாதை களை அம்மா விவரமாக எழுதியிருந்தாள். அவற்றில் சில விவரங்கள் உள்ளத்தை ஜில்லிட வைத்தன.
அம்மா ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்தாள். அவளுடைய ஒரு சில ஆங்கிலக் கட்டுரைகளும் இரண்டொரு மொழிபெயர்ப்புக் கவிதைகளும் வெளிவந்திருந்தன. முதல் கட்டுரை வெளிவந்ததுமே ராமசாமி ஒரு ரெமிங்டன் தட்டச்சுப்பொறி வாங்கித் தந்தார். தோன்றியபோதெல்லாம் அதன்முன் அமர்ந்து விடுவாள். முத்துக்குமரனுக்காக வீட்டின் ஒரு பகுதியில் ஒர் அறையை உருவாக் கினார். அதில் பச்சை ரெக்ஸின் பதித்த ஒரு பெரிய மேசை, அதன்மேல் ஐந்து வகைப் பேனாக்கள். காகிதங்கள். முதுகு வலிக்காத வாகான நாற்காலி, வண்ணக் கண்ணாடி சன்னல்கள் கிறித்துவத் திருக்கோயிலில் இருப்பவை போல். "அய்யா, முத்து கவிஞன்தான். ஏசு கிறிஸ்து இல்ல" என்று இவள் கேலிசெய்தாள் அவரை.
அச்சகம், பதிப்பகம் இரண்டையும் அவள் பொறுப்பில் விட்டார் ராமசாமி. கவிதை எழுதுவதைத் தவிர வேறு பொறுப்பு எதையும் ஏற்றுக்கொள்ள முத்துக்குமரனும் விருப்பம் தெரிவிக்கவில்லை. கல்லூரி, அச்சக, பதிப்பக வேலை என்று நேரம் ஓடியது. நினைத்த போது சமையல், ராமசாமி பாலும் பழமும் ரொட்டியும் மட்டுமே புசிக்கத் தொடங்கியிருந்தார். அவள் வேலைசெய்யும் நாட்களில் உணவு ஒட்டலிலிருந்து வரவழைக்கப்படும். சோறு மட்டும் வடிப்பாள் சில சமயம்.
முத்துக்குமரனுக்கு நண்பர்கள் பட்டாளம் அதிகம். இவன் இரைந்து கவிதை சொல்லச் சொல்ல ரசிக்கும் நண்பர்கள். கவிதை களும் ரசிக்கும்படியே இருக்கும். அடிக்கடி தேவைப்படும் காபி, டீ, கார பக்கோடா போன்ற விஷயங்களை அச்சகத்தில் எடுபிடி வேலை செய்யும் யாராவது வாங்கிவந்துவிடுவார்கள்.
மாலையில் அவனுடன் வெளியே போக திருமகளுக்கு விருப்பம். முத்துக்குமரனுக்கு வீசுநடை போட்டவாறே நண்பர்களுடன் கடற்கரை வீதியில் உலாவப் பிடிக்கும். அதைத் தடைசெய்வது அவன் சுதந்திரத்தைப் பறிப்பதாகும் என்று அவள் நினைத்தாள். ராமசாமி அருகில் சென்றமர்ந்து கல்லூரிபற்றி, அச்சகம்பற்றிப் பேசுவாள்.
முத்துக்குமரனின் குடும்பப் பின்னணி தெரியாததால், அவன் மனத்தில் எத்தகைய மனைவி பற்றிய கற்பனை இருந்தது என்று தெரியவில்லை. அவன் தாயின் பெயர் தனலகஷ்மி என்றும் திருமகள் என்ற அவள் பெயர் அவனை நெகிழ்த்தியது என்றும் கூறியிருந்தான் ஒருமுறை துன்பம் நேர்கையில் யாழெடுத்து இசைக்கும் ஒருத்தி,
> 374 அம்பை
________________
காலையில் குளித்து, பட்டுடுத்தி, இன்னும் ஈரமான கூந்தலைத் தளரப் பின்னி, பளிச்சிடும் குங்குமத்துடன் ஆவி பறக்கும் காபியுடன் எழுப்புபவள், மல்லிகைப்பூ போல் இட்லிகளை இலையில் வைத்து அவன் புசிக்கும்போது மகிழ்ச்சியுடன் நோக்குபவள் என்று ஒரு பெண் அவன் மன ஆழத்தில் இருந்தாளா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ வகையில் தான் கணவனாக நடத்தப் படவில்லை என்று அவனுக்குப் பட்டது.
ஆரம்பக் கட்ட வன்முறை அதீத கோபத்தில் விளையும் தப்பிதங் கள்போல் மிகைப்படாமல் இருந்தன. -
"சோறு வடிச்சிட்டாப் போதுமா? குழம்பை யாரு சூடாக்கறது? பசிச்சு வந்தவனுக்குச் சோறு போடாம அப்படி என்ன வேலை?” "முத்து, குழம்பைச் சூடாக்குறது பெரிய வேலையா? கத்துக்கயேன். நானும் இப்பத்தான் ப்ரெஸ் வேல முடிச்சிட்டு வரேன். காலை லெக்சருக்கு நோட்ஸ் வேற எடுக்கணும். தட்டை வை. நான் ஒரு குளி குளிச்சிட்டு வந்திடறேன்.”
முணுமுணுப்பும் பாத்திரங்கள் இடிபடும் ஒசையும். "நீ எல்லாம் பொம்பளையா?” என்று அடித்தொண்டை உறுமல். மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வி எழுந்தது. "நீ எல்லாம் பொம்பளையா?” கேள்வி எழும். பின்பு இரவில் வாபஸ் வாங்கப்படும். காலில் தலை வைத்து மன்னித்தால்தான் எழுவேன்' என்றழுது மன்னிப்புக் கேட்கும் படலம். சில சமயம் அது ஏதாவது கவிதையில் முடியும். அல்லது இறுக்கமான அணைப்பில் அவள் நெஞ்சில் முகம் வைத்துத் துங்கும் ஆழ்ந்த துரக்கம். மிகை எல்லாமே மிகை.
வீட்டில் அங்கிங்கு பொட்டலங்கள் கிடைக்கும் கஞ்சாத்துகளுடன். அவனைக் கூப்பிட்டுக் காட்டியதும் அவள் கண்களைத் தவிர்ப்பான். இனி இல்லை என்பான்.
செந்தாமரை உருவானாள். ராமசாமி அவளைக் கருத்துடன் கவனித்துக்கொண்டார். தினமும் கல்லூரி போகும்போது என்ன சாப்பிட்டாள் என்று சொல்லியாக வேண்டும். நல்ல நெய்யில் செய்த இனிப்பைத் தினம் தருவிப்பார். அடுத்த தெருவில் வாழ்ந்த முதிய தம்பதியர், சிலருக்குச் சாப்பாடு அனுப்பிச் சம்பாதித்தனர். அவர்களிடம் எடுப்புச் சாப்பாட்டுக்கு ஏற்பாடுசெய்தார்.
"அதென்ன அப்படி அக்கறை ' என்று முனகல், 'உன்னைக்கூடத்தான் சொல்றாரு கவிதை எழுதறவரு பால் குடிக்கச் சொல்லு'ன்னுட்டு.”
"ஆமா, சொல்றாரு.” அவன் கவிதைத் தொகுப்புக்கு ஒரு பெரிய விருது கிட்டியிருந்தது அப்போது நண்பர்கள் வந்தவண்ணம் இருந்தனர். பல நாட்கள், அவர்களை வரவேற்றுவிட்டுத் தன் அறைக்குப் போய் விடுவாள் சற்று ஒய்வெடுக்க ஒருநாள், "ஏங்க, தமிழ்ப் பண்பாடே விருந்தோம்பல் தாங்க. இவ்வளவு பெரிய கவிஞரைக் கட்டியிருக்கீங்க. அவரையும்
பிரசுரிக்கப்படாத கைப்பிரதி -- 375 --
________________
அவர் நண்பர்களையும் உபசரிக்க வாணாமா? இது எங்கள அவமதிக் கறாப்பல இருக்குங்க" என்று எடுத்து விட்டார் ஒருவர். அதையே பல விதத்தில மாற்றிக் கூறினர் மற்றவர்கள்.
திருமகள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "தெனம் ஒரு நாளைப் போல குடும்பம், பெண்டாட்டி, பிள்ளைக இல்லாதவங்க போல இங்க வரீங்க இலக்கியம் பேசlங்க. பேசுங்க வேண்டாங்கல. ஆனா எனக்கு விருந்தோம்பல பத்திச் சொல்ல நீங்க யாரு? எனக்கு நாலு வேலை இருக்கும். அசதியா இருக்கும். உங்க தமிழ்ப் பண்பாட்டுல ஒரு பொண்ணுக்கு படுத்துத் தூங்க வேளை, பொழுது உண்டில்லையா?” என்றாள்.
உள்ளேயிருந்து ராமசாமி, "அவ பிள்ளத்தாச்சியா இருக்குறா. அவளைத் தொந்தரவு செய்யாதீங்க” என்று குரல் கொடுத்தார். அன்றிரவு பாத்திரங்கள் உருண்டன. எட்டிப் பார்த்த இவளுக்குக் கையால் ஒரு இடி. கண்கள் சிவந்திருந்தன. மதுவின் நெடியும் கஞ்சாவின் மணமும் வீசியது.
"முத்து, என்ன இது?” என்று அடக்க முயன்ற அவளைத் தள்ளினான் வயிற்றில் கை வைத்து.
"பேர் வச்சுக் கூப்பிடாதேடி நீ எல்லாம் பொம்பளையா? முத்துவாம் முத்து. அத்தான்னு சொல்லேன். மரியாதை வெச்சுப் பேசேன் . . . நீ எல்லாம் ...”
"முத்து, அய்யா முழிச்சிட்டிருப்பார் ...”
“எதுக்கெடுத்தாலும் அய்யா, அய்யானுட்டு என்ன பெரிய கூப்பாடு '
சற்று தடுமாறியபடி முன்னால் வந்த அவனைப் பிடித்து அறைக்கு அழைத்துப் போக முயன்றாள். கையை உதறினான்.
"எப்பப் பாத்தாலும் என்ன டைப்ரைட்டர் முன்னால வேல! நான் கவிதை எழுதறவன். நான் அப்பிடி உக்காந்தா சரி. நீ என்னனுட்டு எழுதிக் கிழிக்கறே?" கேட்டுக்கொண்டே, அவள் எதிர்பார்க்கும்முன், விருட்டென்று அடுத்த அறையில் புகுந்து ரெமிங்டனை கையால் கீழே தள்ளிக் காலால் நெட்டித்தள்ளினான் சுவர்ப் பக்கம்.
திருமகள் விக்கித்துப்போய் நின்றாள். போதை தெளிந்ததும் வழக்கமான மன்னிப்புக் கோரல்,
அடுத்து வந்த நாட்களில் ராமசாமியின் முகம் நோக்கி அவளால் பேச முடியவில்லை.
செந்தாமரை பிறந்தாள். வெள்ளைத் துணியில் சுற்றி ராமசாமி யிடம் காட்டியதும் "தாமரைப் பூ” என்றார். முத்துக்குமரன்தான் செந்தாமரை என்று பெயரிட்டான். ஆறாம் மாதம் செந்தாமரை அவர் படுக்கையையும் சட்டையின் ஒரு பகுதியையும் நனைத்துவிட்டு, அவர் சட்டைக் காலரை இழுத்தவாறு கிடக்க, ராமசாமி மெள்ள இறந்து போனார். அவரைக் கொண்டு போனபோது அதிகமாக அழுதது
-o- 376 -- அம்பை
________________
முத்துக்குமரன்தான். “மன்னிச்சிடுங்க, மன்னிச்சிடுங்க” என்று முறையிட்டான்.
அச்சகம், பதிப்பகம், வீடு எல்லாவற்றையும் அவள் பெயருக்கு எழுதியிருந்தார் ராமசாமி. சற்று அடங்கியவனாய் வளைய வந்தான். ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்னொரு கவிதைத் தொகுப்புக்கான கைப்பிரதியை அவள் அலுவலக மேசை மீது வைத்து அவளை வியப்பிலாழ்த்தினான். அன்றே அதைப் படித்து முடித்தாள். கவிதை களின் அடியிழையாய் ஒரு வன்முறை உணர்வு ஒடுவதுபோல் அவளுக்குப் பட்டது. அது உலகத்திலுள்ள வன்முறையின் பிரதி பலிப்பு என்று எடுத்துக்கொண்டாலும், அந்த வன்முறை பெண்கள்' பற்றிய உருவகங்களிலேயே இருப்பதுபோல் தோன்றியது. ஆண்குறி கத்தியாய் மாறி பெண்ணைக் கீறுவது போலவும் முலைக்காம்புகள் பிய்ந்து குருதி வடிவது போலவும் கருப்பையிலிருந்து ஊளையிட்ட வாறே நரிகளும் அலறிக் கனைத்தவாறே பன்றிகளும் வருவது போலவும் ஆண்குறி கல்லாக உறைந்து யோனியை அழுத்திச் சிதைப்பது போலவும் பல உருவகங்கள்.
இரவு அவனிடம் கூறியபோது அவன் முகம் மாறியது. "அத வெளியிடறோம் இல்லையா?" என்றான்.
"நான் மட்டும் சொல்ல முடியாதே? பதிப்பகத்துக்கு ஆலோசனை சொல்ற குழு இருக்கே, அவங்களுக்கு அனுப்பியிருக்குறேன்” என்றாள்.
"பதிப்பகம் நம்முதுதானே?" "பதிப்பகம் என்னுது முத்து. ஆனா நான் மட்டும் எதையும் தீர்மானம் செய்ய முடியாது.”
"கவிதை ஆலோசனையாளர் குழுவில் நானும் இருக்கேனில்ல?” "ஆனா குழுவைச் சேர்ந்த ஒருத்தர் அவர் சொந்த எழுத்தைத் தர்றப்போ, அவர் குழுவுல ஒருத்தரா இருக்க முடியாது. அந்தச் சமயத்துல அவருக்குப் பதிலா வேற ஒருத்தரப் போடணும்.”
"யாரைப் போட்டிருக்கீங்க?" "மாணிக்கம்.” "அதெப்படிப் போடலாம்? அவரு வேற தலைமுறையைச் சேர்ந்தவரு. நான் எழுதறதே அவருக்குப் புரியாது. என்னோட இருக்கறவங்கள்ல நெல்லை அழகப்பனப் போடலாமே?”
"என்கிட்டத் தமிழ்ப் பண்பாடு பத்திப் பேசினவர்தானே?” "நீ பதிப்பகம் நடத்தவே லாயக்கில்லை. சொந்த விருப்பு, வெறுப்பு அதுல பார்க்கக் கூடாது. எழுதறது தரமா இருக்குதா இல்லையாங் கறதுதான் முக்கியம்.”
“இத்தனை நாளும் தரத்தைத் தீர்மானிச்சது நானும்தானே? இப்பக்கூட இதை என் சொந்த அபிப்பிராயமாத்தான் சொல்றேன். புஸ்தகம் வெளிவரதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல. உன் முதல் புஸ்தகத்தப் போடணும்னு அய்யாவுக்குச் சொன்னது யாரு? மறந்திட்டியா?”
பிரசுரிக்கப்படாத கைப்பிரதி > 377 <>
________________
'மறக்கலடி” என்று சீறினான். எழுந்து நின்றுகொண்டான். "நீ மறக்கவிடலை என்னை எது சொன்னாலும் அய்யாவோட கொள்கை இது. இதை மாத்த முடியாது, அய்யா அதை விரும்ப மாட்டாருன்னு பதில் பேசற. அய்யா, அய்யா, அய்யா ..." உரக்கக் கூவினான்.
"அவர் உனக்கு அப்பன்தானா இல்ல ...”
திருமகள் ஒரு வினாடிகூடத் தாமதிக்கவில்லை. எழுந்து நாலு எட்டு நடந்து வலது காலால் அவன் கொட்டையில் ஓங்கி ஓர் உதை விட்டாள்.
"ஐயோ' என்று அலறித் தொடை இடுக்கில் கை வைத்தபடி விழுந்து அழ ஆரம்பித்தான். வலியில் நெளிந்தான்.
அவள் பார்த்தபடி நின்றாள்.
பிறகு திரும்பி, கண் விழித்து அழ முற்பட்ட செந்தாமரையை எடுக்கக் குனிந்தபோது அவள் பின்மண்டையை எதுவோ தாக்கியது.
கண் விழித்தபோது அவள் கை, கால் பிணைக்கப்பட்டுக் கிடந் தாள். பின்பு கேள்விகள் வந்து வந்து அறைந்தன.
"எவ்வளவு நாளா இப்படி வன்முறை உணர்ச்சி இருக்குது?” “உங்க கணவரைப் பல தடவை தாக்கினிங்களாமே?”
-- - - ே ெ - - ייק ஆணகள கமல அவறுபடினடா:
-- - - G ெ - - + - 2** குடும்பத்துல வேற பெண்கள் யார் யார்:
“தாமரை” என்றாள் முணுமுணுப்பாக கேள்விகள் சுழன்று சுழன்று அவளைச் சுற்றி வியூகம் அமைத்தன. ஆறு மாத வியூகம். அதன்பின் வேறு யாரையோ பார்க்க மனநோய் ஆஸ்பத்திரிக்கு வந்த அச்சக ஊழியர் ஏகாம்பரம் தற்செயலாக அங்கே அவளைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார். அவள் வெளியூர் போயிருப்பதாக அவரும் மற்றவர்களும் நினைத்துக்கொண்டிருந்தனர். சுப்பைய்யா நாயுடுவையும் தமிழ்ப் பண்டிதர் சாம்பசிவனாரையும் அழைத்துவந்தார். இவள் வெளியே வந்தாள். சுப்பைய்யா நாயுடு தன் வீட்டிற்கு அழைத்துப் போனார். முத்துக்குமரன் ஏதோ வேலை யாகக் காஞ்சிபுரம் போயிருந்தான். இந்த ஆறு மாதத்தில் தன் கவிதைகளைப் பதிப்பித்திருந்தான். ஏகாம்பரம் செந்தாமரையை அழைத்து வந்தார்.
அந்தப் பத்து நாட்கள் இடைவெளியில் ராமசாமியின் வக்கீல் நண்பர் மூலம் அவள் அச்சகத்தையும் வீட்டையும் பதிப்பக உரிமைக ளையும் விற்றாள். கல்லூரிக்குச் சென்று தகுதிச் சான்றிதழ்கள் பெற்று வந்தாள்.
தொலைவில் உள்ள இடம் போய்விட வேண்டும். மிகத் தொலை வில் போய்விட வேண்டும் என்று யோசித்துயோசித்து, வக்கீல் நண்பரின் உறவினர் தங்கும் காசியைத் தேர்ந்தெடுத்தாள். வீட்டுச்
* 378 - அம்பை
________________
சாமான்களை லாரியில் அனுப்பிவிட்டு, இரு பெட்டிகளோடு கிளம்பினாள் செந்தாமரையுடன். சென்னையை விட்டுக் கிளம்பிய நாளை அம்மா விவரமாக எழுதி இருந்தாள்.
"ரயிலடிக்கு மிகச் சீக்கிரமே போக வேண்டி வந்தது. காரணம், அன்று அண்ணாதுரை அவர்களின் இறுதி ஊர்வல நாள் தெருவெல் லாம் ஜனங்கள். ரிக்ஷாவில் சுப்பைய்யா நாயுடுகாருவுடன் உட்கார்ந்து வந்தபோது சென்னையே திரண்டு என்னை வழியனுப்ப வந்தது போல் பட்டது. அவர்கள் சோகமெல்லாம் என்னை வந்து கவ்விக் கொண்டது. நடைபாதையில் சில பெண்கள், "அய்யா போயிட்டியா? எங்கள விட்டுட்டுப் போயிட்டியா?” என்று நெஞ்சில் அறைந்து கொண்டு அழுதனர் ஊர்வலம் சற்று தள்ளிப் போகும்போது. அடி வயிற்றில் ஒரு கனம் ஏற்பட்டது. அங்கும் இங்கும் புகுந்து புறப்பட்டு ரயிலடியை அடைந்ததும் ரிக்ஷாக்காரர், "அம்மா ஸ்டேஷன் வந்திடுச்சு' என்றார். ரிக்ஷாவின் பக்கவாட்டுக் கம்பிகள் ஊடே உயர்ந்து எழுந்த கடிகாரம் தெரிந்தது. அடிவயிற்றிலிருந்து சோகம் சுழன்று எழும்பி நெஞ்சை முட்டியது. ரிக்ஷாக் கம்பியின் மேல் முகம் பதித்துக்கொண்டேன். தொண்டை கமற, கதறிக்கதறி அழ ஆரம்பித்தேன்.
"என்னம்மா, என்னம்மா ?” என்று பதறினார் ரிக்ஷாக்காரர். நாயுடுகாரு திகைத்துப் போய் நின்றார். வெகு நேரம் அழுதேன் ஒரு கையால் தாமரையை அணைத்தபடி வண்டியில் ஏறி, படுக்கும் தட்டில் மல்லாந்து படுத்தபடி மேலே வெள்ளை பெயிண்ட் அடித்த ரயில் கூரையையும் அதன் விளக்குக் குமிழ்களையும் மின் விசிறி களையும் பார்த்தபடி மீண்டும் அழுதேன். முத்துவின் ரயில் பயணக் கவிதையொன்று நினைவுக்கு வந்தது. தாமரையைத் தொந்தரவு செய்யாதபடி திரும்பிப் படுத்தபோது ரயில் சன்னல் வெளியே நெருப்புப் பொறிகள் குட்டித் தாரகைகள் போல ஒடிக் கொண் டிருந்தன.”
முதல் முறை படித்து முடித்ததும் அப்பாவின் புகைப்படம் ஒன்றுகூட வீட்டில் கிடையாது என்பது ஞாபகம் வந்தது. அப்பா ஒரு கிச்சுகிச்சு மூட்டும் மீசையாய் மட்டுமே நினைவில் இருந்தார். அப்பாவின் பழைய கவிதைத் தொகுப்பு ஒன்றில் அவர் புகைப்படம் பின்னட்டையில் இருந்தது. அது மங்கிப் போய் மடங்கல் விழுந்து இருந்தது. முகத்தின் குறுக்கே மடங்கல் மூக்கின் நடுவிலும் இடது கண்மேலும் ஓடியது. மற்றொரு கண்மேல் பூச்சி அரித்த ஓட்டை இருந்தது. அதனால் அப்பாவின் முழு உருவத்தையும் கற்பனைசெய்ய முடியவில்லை.
முதலில் அதைப் படித்த முறை அம்மா வெளியூரிலிருந்து திரும்பி வந்தபோது இவள் அவளை இறுக அனைத்து வரவேற்றாள். அன்றிரவு அம்மா துரங்கும்போது சென்று, அவள் துதலில் முத்த மிட்டாள். அம்மா கண் விழித்து அவளைப் பார்த்தாள். அவள் கண்களை
பிரசுரிக்கப்படாத கைப்பிரதி 379
________________
நேராகப் பார்த்து, "படிச்சியா' என்றாள். இவள் அம்மாவின் நெஞ்சில் தலையை வைத்துக்கொண்டாள்.
சில மாதங்களுக்குப்பின் அம்மா அவளை கங்கைக் கரையில் உட்கார்த்திவைத்து அந்தச் செய்தியைச் சொன்னாள். அப்பா ஜெனரல் ஆஸ்பத்திரியில் பொது வார்டில் குடல் வெந்து இறந்து போனாரென்று. ஒரு செய்தி அறிவிப்பு மாதிரி சாதாரணமாகச் சொன்னாள். அப்பாவின் நண்பர்கள் அவர் உடலுக்கு எரியூட்டியாகி விட்டது என்றாள். சற்று அம்மாவின் பக்கம் நகர்ந்து அமர்ந்தாள். மெளனமாக அமர்ந்தனர். பிறகு எழுந்து நடக்கத் தொடங்கினார்கள்.
அவர்கள் முன்னே ஒரு தம்பதியர் சென்று கொண்டிருந்தனர். ஆணின் கையில் ஒரு வயதுப் பெண் குழந்தை ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. தலையைக் கழுத்துப்புறம் வைத்தபடி மென் உதடுகள் கழுத்தில் அழுந்தியபடி இருந்தன. சாய்ந்த தலையில் முடியப் பட்டிருந்த ரோஜா வண்ண ரிப்பன் காற்றில் பறந்தது. ஆழ்ந்த துரக்கத்தில் குழந்தையின் கால்கள் கனத்துத் தொங்கின. அவற்றில் மென்மையாகச் சிணுங்கும் கொலுசு, தூக்கத்தில் குழந்தையின் தலை, தோளிலிருந்து சரியும்போதெல்லாம் இன்னொரு கரத்தால் மீண்டும் அதைத் தோளில் வாகாக வைத்தார் அதன் தந்தை தலையை இப்புறமும் அப்புறமும் திருப்பி மூக்கைத் தோளில் தேய்த்தது இடையிடையே. அப்போது கழுத்தைச் சற்றே திருப்பி, கடைக் கண்ணால் அதைப் பார்த்து இன்னமும் செளகரியமாகக் கரத்தில் பிடித்துக்கொண்டார். அப்போது கால்கள் ஆடின. கொலுசு சிணுங்கியது.
அம்மாவும் இவளும் அவர்கள் பின்னால் நடந்தபடி வீடு வந்து சேர்ந்தனர். வீட்டில் நுழைந்ததும் இவள் தன் அறைக்குச் சென்றாள். மேசையில் தலையைச் சாய்த்து உட்கார்ந்து கொண்டாள். கண்கள் கனத்தன. மெள்ளமெள்ள சிறு விசும்பலுடன் அழ ஆரம்பித்தாள். அவள் தலையைத் துரக்கியபோது அவள் மேசைமேல் சட்டமிட்ட ஒரு புகைப்படம் இருந்தது. அதில் சிறு குழந்தையாக அவள் அப்பாவின் கையிலிருந்தாள். மரகதப் பச்சைப் பாவாடை. சிவப்புச் சட்டை தலையின் ஒரு பக்கம் முடிச்சிட்ட சிவப்பு ரிப்பன். அம்மா அவரருகே கொட்டைப் பாக்கு நிறப் புடவையில், அவர் தலைமுடி இவளுடையதைப் போலவே சுருட்டையாகவும் அடர்த்தியாகவும் இருந்தது. இவள் மை ஒழுகிய விழிகளை விரித்து எதிரே பார்த்தவாறி ருந்தாள். கீழே தொங்கிய கால்களில் கொலுசு இருந்தது. இவள் பின்பாகம் அப்பாவின் இடது கையில் அழுந்தியிருந்தது. அப்பாவின் வலது கை பச்சைப் பாவாடை விரிந்த இவள் தொடை மேல் மென்மையாகப் படிந்திருந்தது.
இரண்டொரு நாட்களுக்குப் பின் அவள் புகைப்படத்தை அம்மாவிடம் திருப்பித் தந்த போது, "உன் கிட்ட இருக்கட்டும்” என்றாள் அம்மா. அவ்வப்போது கண்ணில் பட்டபடி அது இருந்தது.
O O O
- 380 <> அம்பை
________________
நினைவு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று தோன்றியது. அந்தக் கவிதைகளின் தொகுப்பை அவளால் சரியான விதத்தில் எதிர் கொள்ள முடியும். பங்கேற்பதாக ஒப்புக்கொண்டு எழுதி உறையிலிட்டு நிமிரும்போது, அம்மா கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. சில வினாடிகளில் அவள் அறையின் கதவை விரைவாகக் கடந்து அம்மா அந்தப் பக்கம் போனாள். ஒளிரும் மஞ்சள் இறகு ஒன்று மிதந்து போவதுபோல.
'இந்தியா டுடே' பெண்கள் சிறப்பு மலர்', 1996

பிரசுரிக்கப்படாத கைப்பிரதி <> 381 -