தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, May 10, 2016

பசி ஆறிற்று (தி. ஜானகிராமன்)

texts
பசி ஆறிற்று (தி. ஜானகிராமன்)


https://archive.org/download/orr-10269_Pasi-Aaritru/orr-10269_Pasi-Aaritru.pdf

 "மணி பன்னிரண்டாகப் போகிறது சுருக்க வாங்கோஎன்று மத்தியான்ன பூஜைக்கு நைவேத்தியத்தை எடுத்துக்கொண்டு கோயிலுக்குப் போகும் புருஷனுக்குப் பின்னால் கத்தினாள் அவள். கத்தின கத்தில் குரல் விரிந்துவிட்டது. புகைந்து இருமி, நெஞ்சுகமறி இரண்டு பொட்டு ஜலம் கூடக்கண்ணில் வந்துவிட்டது.
"என்ன?" என்று திரும்பிப் புருவத்தை உயர்த்திக்கொண்டு கேட்டார் சாமிநாதக்குருக்கள்.
"நாசமாய்ப்போச்சுஎன்றுமெதுவாகச் சொல்லிக்கொண்டே முற்றத்தில் வந்திருந்த வெள்ளைவெயிலையும் நிழலையும் காட்டி ஜாடைசெய்தாள் அகிலாண்டம்
"நாழியாயிடுத்துன்னு சொல்றயா? இதோ வந்துடறேன்என்று அவர் பதில் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.
சாலப்பிறை வழியாகஅடுத்தவீட்டில் பேசுவது காதில் விழுந்தது. “எனக்கா ஏன் இவ்வளவு மெதுவாகப் பேசுகிறாள். அடுத்த வீட்டு அம்மாமிஎன்று.
அதற்காக அவள் வருத்தப்படவில்லை. அதைப்போல எவ்வளவோ பேர் சொல்லியிருக்கிறார்கள். டமாரச் செவிட்டுக்கு மாலை போட்டுவிட்டு இதையெல்லாம் சட்டை செய்துகொண்டிருந்தால் எப்படி வேலை நடக்கும்? அதைப்பற்றி அவள் கவலைப்பட வில்லை. அவள் கவனத்தை இழுத்தது. அந்தக் குரல் புதிதாக இருந்ததுதான். அடுத்த வீட்டு ருக்மிணி அம்மாமி, தம்பி வரப்போகிறான்' என்று நேற்றுச் சொல்லிக்கொண்டிருந்தாள். பேசினது அவனாகத்தான் இருக்கவேண்டும்
சற்றுக் கழித்து, "நான் காவேரிக்குப் போய்க் குளித்துவிட்டு வருகிறேன் அக்காஎன்று அவன் சொல்லிக்கொள்வது காதில் விழுந்ததுஇருப்புக் கொள்ளாமல் வாசலுக்கு ஓடினாள்.அகிலாண்டம்
வாசலுக்கு வந்த அவன், இடுப்பிலிருந்த பொடி மட்டையை எடுத்து.ஒட்டுச் சார்ப்பின் மூங்கிலுக்குள் செருகிவிட்டுத் தற்செயலாகத் திரும்பினான். திண்ணையிலிருந்தே போக்குவரத்துச் செய்து கொள்வதற்காக இருந்த திறப்பின் வழியாக அகிலாண்டம் நிற்பதைப் பார்த்தான்.உடனே உள்ளே ஒருமுறை பார்த்தான்.தெருவில் கிழக்கும் மேற்குமாக ஒரு முறை பார்த்தான். குரைக்கக்கூடச் சோம்பல் படும் நாயைத் தவிர வேறு , காக்காய் இல்லை. தைரியமாக அவளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
நறுக்கென்று அவள் மறைந்துவிட்டாள். ஆனால் ரேழிக்குப் போனதும் கால் தயங்கிற்று. சற்று நின்றாள்.உள்ளுக்கா.வாசலுக்கா என்றுகேட்டுக்கொண்டிருந்த மனத்தைக் கடைசியில் வாசல் பக்கமே திருப்பிவிட்டாள். நிலைக்கருகில் நின்று பார்த்தபோது அவனைக் காணவில்லை. சோப்புப் பெட்டியை ஆட்டிக்கொண்டு வேகமாகப் போய்க்கொண்டிருந்தான். சடக்கென்றுதான் மறைந்ததைப் பார்த்ததும் பயந்துகொண்டு போய்விட்டானோ என்னவோ?
வாஸ்தவமாகத்தன் துணிச்சலை நொந்துகொண்டுதான் அவன் போனான்.
அவளுக்கும் தான் செய்தது தப்பு என்று பட்டது.வேறு என்ன செய்வது? பைத்தியக்காரப் பெண் ஜன்மம் அந்தச் சமயத்தில் வேறு என்ன செய்யும் என்று பெண்மையை நொந்துகொண்டாள். அவன் திரும்பி வரட்டும். இங்கேயே நின்று கொண்டிருக்கலாம். அவன் திரும்பி வரும்போது அவனுடைய சந்தேகத்தையும் பயத்தையும் போக்கிவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டாள்.
மேல்வீட்டில் எல்லோருமே அழகுதான்.ருக்மிணி அம்மாமிக்கு நாற்பது வயது ஆனாற்போலவே இல்லை. கன்னமும் காலும் பட்டுத் துடைத்துவிட்டாற் போல இருக்கின்றன. தம்பியும் அப்படித்தான் இருக்கிறான். காலேஜில் வாசிக்கிறானாம். சிரிக்கச் சிரிக்கப் பேசுவானாம். ஒடுகிற பாம்புக்குக் கால் எண்ணும் வயசு வெகு புத்திசாலி என்று ருக்மிணி அம்மாமி சொல்வதுண்டு.
எப்படியிருந்தால் என்ன? இதையெல்லாம் நினைத்து என்ன பிரயோஜனம் கவைக்குதவாத ஆசை.
கல்யாணமாவதற்கு முன், பிறந்த ஊரில் எதிர் வீட்டுக்கு ஒரு பையன்வந்திருந்தான்.அவன் பார்த்த பார்வை என்ன குளுமை; விழுங்கி விழுங்கிப் பார்த்துவிட்டுக் கடைசியில் ஊருக்குப் போய்விட்டான். பிறகு ஆளையே காணவில்லை.
இந்த டமாரச் செவிட்டுக்கு வாழ்க்கைப் பட்டாகிவிட்டது. குருக்கள் பெண், குருக்களுக்குத்தான் வாழ்க்கைப்பட வேண்டும் என்றாலும் அப்பாவுக்கு இந்தப் பூமண்டலத்தில் வேறு ஒரு வரன் கூடவா அகப்படவில்லை? கட்டை குட்டையாய், கல்லு மாதிரி உடம்பு. காதிலே கடுக்கன் எதற்காகவோ தெரியவில்லை.கேட்காத காதுக்குக் கடுக்கன் என்ன? மாட்டல் என்ன? கல்யாணமானது முதல் நாலு வார்த்தை சேர்ந்தாற்போல் பேசினோம் என்பதே இல்லை. இரண்டு வார்த்தை  பேசுவதற்குள் விழி பிதுங்கி, தொண்டை உடைந்துபோய் விடுகிறதே இவள் குரல்.எப்படி இருக்குமென்றேஅவனுக்குத் தெரியுமோ என்னவோ? பரவசநிலையில் அடங்கிய குரலில்,பேசும் பாதி ரகஸ்யப் பேச்சுக்கள் அவளுக்கு எப்படிக் கிட்டும்? அவனோடு பேசிப் பேசித் தொண்டை பெருகிவிட்டது. பிறந்த ஊருக்குப்போனபோது, ஏண்டி இப்படிக் கத்தறே? மெதுவாய்ப் பேசேன். ஊர் முழுக்கக் கிடு கிடுக்கணுமா? என்று தங்கை தமக்கைகள் அலுத்துக்கொள்வார்கள்."
போடி போ, அத்திம்பேருக்கு நீங்கள் மாலை போட்டிருந்தால் தெரியும் அவர் காது கிட்ட பீரங்கி வெடிச்சா, நெருப்புக் குச்சி கிழிக்கிற மாதிரி இருக்கு அவருக்கு என்னைப் போய்ச் சொல்ல வந்துட்டா! என்று அவள் பதில் சொல்லும்போது எல்லோரும் சிரிப்பார்கள்.
இப்படி அவர்கள் சிரிக்கச் சிரிக்கப் பேசினாலும், அவள் மனத்திற்குள் மட்டும் துணுக்கென்றது. செவிடாய்ப் போவதை விட மட்டம் ஒன்றுமே இல்லை. யாராவது பேசும்போது, அஆ? என்று ஜடம் மாதிரி கேட்டுக்கொண்டேயிருந்தால்? செவிட்டுப் புருஷனோடும் செவிட்டு மனைவியோடும் எத்தனையோ பேர் அந்யோத்நியமாகத் தாம்பத்தியும் நடத்துகிறார்கள். அவளுக்கு மட்டும். அவளுக்கு மட்டும் என்ன? பிரியம் இல்லாமலா இருக்கிறது? எல்லாம் இருக்கிறதுஆனால் குறை குறைதானே.
போன வருஷம் எதிர் வீட்டில் ராதா கல்யாணத்தின் போது மதுரை மணி சங்கீதக்கக்சேரி நடந்தது. கூட்டத்திற்கு நடுவில் அவள் புருஷனும் உட்கார்ந்திருந்தான்.பக்கத்தில் வாயைப் பிளந்தும் ஆகாரம் போட்டும் மெய் மறந்திருந்தவர்களை ஜடம் மாதிரி பார்த்துக் கொண்டிருந்தான்.நடுநடுவே பெரிய வீட்டு வாயாடிக் கிட்டுச்சாமி, கச்சேரி எப்படி? என்று கண்ணைச் சிமிட்டி அவனிடம் ஜாடை செய்துகொண்டிருந்தான்.
ஸ்திரீகளுக்கு நடுவில் உட்கார்ந்திருந்த அகிலாண்டத்திற்கு வந்த ஆத்திரத்திற்கும் துக்கத்திற்கும்அளவே இல்லை.காதுதான் இல்லையே! நடுக்கச்சேரியில் உட்கார்ந்து அசட்டுத்தனத்தைத் தப்படித்துக் கொள்ளுவானேன்! புருஷன் கையைக்கரகரவென்று பிடித்து இழுத்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டால் தேவலைபோல் இருந்தது.அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்த ஸ்திரீகளை ஏறிட்டுப் பார்க்கவே கூச்சமாக இருந்தது. பார்த்தால் எல்லோர் கண்ணிலும் தென்படும், ஐயோ,பாவத்தை எப்படிச் சகிப்பது? அவ்வளவு தூரத்திற்கு - எல்லோரும் பாட்டைக் கேட்காமல் அவளைப் பார்த்து இரக்கப் பட்டுக் கொண்டிருப்பார்கள் என்ற அளவுக்கு-அவள் துன்பம் வந்துவிட்டது.
கச்சேரி நடக்கும் பெஞ்சுக்கு முன்னால் உட்கார்ந்திருந்தான் ராஜம், அந்த வீட்டுக்காரரின் பையன் அவன். இருபது வயதிருக்கும். எங்கோ மீரத்தில் மிலிடரியில் உத்தியோகம்ராதா கல்யாணத்திற்காக லீவு எடுத்துக்கொண்டு வந்திருந்தான். நல்ல சாரீரம் அவனுக்கு. நன்றாகப் பாடுவான் அகிலாண்டம் பாடகரைப் பார்க்க பிரம்மப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தாள். ஆனால் கண், தலையாட்டி பொம்மை மாதிரி ராஜத்தின் மேலேயே திரும்பித் திரும்பி விழுந்து, அவன்பாட்டைரஸிக்கும்.அழகைக்கண்டுவியந்துகொண்டிருந்தாள்.
பிறகு இரண்டு நாளைக்கு அகிலாண்டத்திற்கு ஒன்றும் ஒட வில்லை. தேனி மாதிரி அவன் நினைவே வந்து அவளை ஒட்ட ஒட்ட மொய்த்துக்கொண்டிருந்தது ஏதாவது ஒரு சாக்கைச் சொல்லி எதிர்வீட்டுக்கு மணிக்கு ஏழு தடவை போக ஆரம்பித்தாள். ராஜம் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தான்.
"மாமி, சற்று எறும்பு வடிகட்டியைக் கொடுங்களேன். இதோ தந்துவிடுகிறேன்என்று அகிலாண்டம் அதை வாங்கி வந்தாள்.சற்றுப் பொறுத்து, அதை ஜோட்டி ஜலத்தில் நனைத்துத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்தாள்.அவள் கூடத்திற்குத் திரும்பி வரும்போதுஏண்டி, அகிலம், தேங்காய் உரிக்கிற பாறையைத் திருப்பிக்கொடுத்து விட்டாயோ?” என்று ராஜத்தின் தாயார் கேட்டாள் சமையல் உள்ளிருந்து, "என்ன?” என்று கேட்டுக்கொண்டே ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த ராஜத்தைப் பார்த்தாள் அவள். அப்பொழுதுதான் அவன் கண்ணெடுக்காமல், இத்தனை நாளாக இல்லாத ஒரு பார்வை பார்த்தான்அவளைப் புரிந்து கொண்டுவிட்டதாகச் சொல்வதுபோல் இருந்தது.
"பாறையா? இதோ கொண்டுவருகிறேன்என்று சொல்லிவிட்டு அவள் திரும்பினாள்.
திரும்பி வந்தவள் ஏதோ ஞாபகம் வந்து ஒரு வெண்கலப் பானையை "மறந்தே போய்விட்டதுஎன்று கெஞ்சிக் கொடுத்து விட்டுவந்தாள்.
ஏழெட்டு நடைஆகிவிட்டது மறுபடியும் போனாள். "வெற்றிலை இருக்கோ, மாமி
சமையல் உள்ளில் இருந்து ராஜத்தின் தாயார், ராஜம், அலமாரியிலிந்து கொஞ்சம் வெற்றிலை எடுத்துக் கொடேன் அந்த மாமி கிட்ட என்று உள்ளே இருந்தபடியே சொல்லி விட்டுப் பத்துப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புழக்கடைக்குப் போய்விட்டாள்ராஜம்,ராதா கல்யாணத்திற்குக் கண்டு மிஞ்சியிருந்த வெற்றிலையில் பாதிஎடுத்து அவள் கையில் வைத்தான்அவன் நிமிர்ந்து பார்த்தாற்போல் அவளுக்குப் பார்க்க முடியவில்லை.வெடவெடத்துக் கொண்டு, அதை வாங்கிக்கொண்டு திரும்பி விரைந்தாள். தன் வீட்டு ஆளோடியில் ஏறும்போது, இருமல் ஓசை கேட்கவே, திரும்பிப் பார்த்தாள். நிலையின்மேல் இரு கைகளையும் தூக்கி வைத்துக் கொண்டு, ராஜம் அவள்மீது பார்வையை நாட்டியிருந்தான். அவசர அவசரமாக அவள் உள்ளே வந்து அடுக்கில் வெற்றிலையை வைத்து மூடிவிட்டு, மீண்டும் வாசலுக்கு வருவதற்காகக் கிளம்பினாள். “காபி போட்டாச்சா?” என்று கூடத்தில் துணியை விரித்துப் படுத்திருந்த அவள் புருஷன் தூக்கம் தெளிந்து உலர்ந்த உதட்டை நனைத்துக் கொண்டே கேட்டான். அப்போதுதான் அவளுக்கு மறந்துபோன காரியங்களெல்லாம் ஞாபகத்திற்கு வந்தன. மாட்டுக்குத் தண்ணிர் காட்டவில்லை; பால் கறக்கவில்லைபசு சோர்ந்து விட்டிருந்ததுஅதை கவனிக்க ஆரம்பித்தாள். பாலைக் கறந்து, அடுப்பை மூட்டி காபியைப் போட்டாள். சர்க்கரை டப்பாவை எடுத்துத் திறந்துபோது, அது துடைத்து விட்டாற் போல் இருந்தது. கட்டி தட்டி, ஓர் ஒரத்தில் ஒட்டி மினுங்கின துண்டைத்தவிர ஒன்றுமில்லை.
"சர்க்கரை வாங்கிண்டு வந்துடறேன்என்று அவன் காதருகில் கர்ஜித்துவிட்டு எதிர் வீட்டுக்கு ஓடினாள். வாசலில் அரை வண்டி பூட்டி நின்று கொண்டிருந்தது. உள்ளே போனாள். கூடத்தில் கோட்டும் சட்டையும் போட்டுக் கொண்டு ராஜம் நின்று கொண்டிருந்தான். அவன் தாயார் தட்டிலிருந்து விபூதியைக் கட்டைவிரலால் எடுத்து அதை அவனது நெற்றியில் இட்டுக்கொண்டிருந்தார்விபூதி இட்டுக்கொண்டதும் ராஜம் அவர்கள் இருவருக்கும் நமஸ்காரம் செய்தான்.
ஒன்றும் மறக்கவில்லையே? எல்லாம் எடுத்துவச்சினுட்டியோ இல்லையோ?” என்று கேட்டார் அவர்.
ஒன்றும் மறக்கவில்லை” “போய்ச் சேர்ந்தவுடனே லெட்டர் போடு வாரம் ஒரு கடுதாசி போடணும். உன் செளகர்யப்படிதான் எழுதணும் என்று வச்சுக்கப் படாதுஅம்மா ரொம்பக் கவலைப்பட ஆரம்பிச்சுடறாள்.'
"நீங்க சொல்லிண்டே இருக்க வேண்டியதுதான். அவன் போட்டால்தானே.”
"போடுகிறேம்மாஎன்று ஆயிரம் மைல் பிரயாணத்திற்கும் தனிமைக்கும் ஹோட்டல்சாப்பாட்டுக்கும் கிளம்பிக் கொண்டிருந்த ராஜம் தழுதழுத்தான்.
ரேழி வாசற்படிக்கருகில் நின்று இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த அகிலாண்டத்திற்கு ஏக்கம்பிடித்துவிட்டது.அயர்ச்சி தாளாமல் திரும்பினாள்.
என்னடி அகிலாண்டம், என்ன வேணும்' என்று கேட்டாள் ராஜத்தின் தாயார். -
சர்க்கரை ஒரு கரண்டி வேணும். காப்பி கலந்து வைத்தேன். அப்புறந்தான் சர்க்கரை இல்லை என்று ஞாபகம் வந்தது."
வாங்கிக்கொண்டு போயேன். நன்னா திரும்பிப் போகிறாள் அசடு
நிறையக் கொடுடீ, ஒரு கரண்டி என்ன?’ என்று உத்தரவு போட்டார்.ராஜத்தின் தகப்பனார்.சகுனம் ஆயிற்றே என்று அவருக்கு முகம் மலர்ந்துவிட்டது. "ராஜம் கிளம்புஎன்று பெட்டியை எடுத்துக்கொண்டுவாசலுக்குப்போனார்.ராஜம் தயங்கி நின்றான்.
"போயிட்டு வரேம்மா, அந்த மாமி கிட்டவும் சொல்லு" என்று விடைபெற்றுக்கொண்டான்.
போயிட்டுவரேன்னுசொல்லிக்கிறாண்டி'என்று அகிலாண்டத்திற்கு அஞ்சல் செய்தார் தாயார்.
சரிஎன்று வேதனையை அடக்கிப் புன்சிரிப்புடன் கூறினாள். அகிலாண்டம் உடனேயே வாசலுக்கு வந்துவிட்டாள்.
எல்லோரும் வாசலுக்கு வந்ததும், "பார்த்தாயா, ஊஞ்சல் பலகையில் வச்சிருக்கிற புஸ்தகத்தை மறந்துவிட்டேன்என்று நினைத்துக் கொண்டு சொன்னான் ராஜம்
"நான் போய் எடுத்துண்டுவரேண்டாஎன்று உள்ளே ஓடினார் தகப்பனார்.
"அம்மா ஒரு கிராம்பு கொண்டுவாயேன்என்றான் ராஜம் அம்மாவும் உள்ளே போனாள். வாசலில் வண்டிக்காரனைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. அவனும் மாட்டுச் சலங்கையைச் சரிப் படுத்திக்கொண்டிருந்தான்.
"போயிட்டுவரட்டுமா? என்ற பாவனையில் அகிலாண்டத்தைப் பார்த்துத் தலையாட்டினான் ராஜம்.தன்னிடம் தனியாகச் சொல்லிக் கொள்ள அவன் இவ்வளவு சிரமப்பட்டதைக் கண்டு அவளுக்குப் பெருமை தாங்கவில்லை. கண்ணில் நிறைந்த ஜலத்தை விழாமல் தேக்கிக்கொண்டு தலையாட்டினாள். கிராம்பும் புஸ்தகமும் வந்துவிட்டன. சலங்கை ஒலித்தது. ஒரு நிமிஷத்தில் வாசல் வெறிச்சோடிவிட்டது. கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே போனாள் அகிலாண்டம்
பித்துப் பிடித்தாற்போல உட்கார்ந்திருந்தாள் அவள் பறி கொடுத்துவிட்டமனது அடித்துக்கொண்டே இருந்தது. சாயந்தரம், வேலைக்காரி வந்தபோது, பாத்திரத்தில் ஏதோ பத்து ஒட்டிக் கொண்டிருந்ததென்று, விதியிடம் பட்ட ஆத்திரத்தை அவள் மீது திருப்பிவிட்டாள்.
எத்தனை நாளைக்கடி சொல்றது சொரணை கெட்டவளே, இப்படி தேய்க்காதேன்னுட்டு நீ சோறுதான் திங்கிறியா? இதென்ன வேலை? கழுதைக் குட்டி மாதிரி இளிக்கிறியே. சீ. பல்லை மூடு,மானங்கெட்டவளே."
இளித்துக்கொண்டிருந்த வேலைக்காரியின் முகம் இருண்டு விட்டது. அவள் விஸ்வரூபம் எடுத்துவிட்டாள்.
என்னாம்மா களுதை குதிரைங்கறே? என்ன மானங்கெட்டுப்போயிட்டேன்? நாக் கூசாம அடுக்கிறியே மானங்கெட்டவ.மானங் கெட்டவன்னுட்டு, இந்தப் பேச்சுக்கு அந்த மவராசன், உன் புருஷன் பூசை பண்றானே அந்த ஆண்டவன்தான் உன்னைக் கேக்கணும் ஐயையோ, இதென்னாடி பேச்சு!"
சீ.சீ.பதில் பேசாதே."
"சரிதாம்மா, பேசாம இரு ரொம்ப நல்லாப் பேசிட்டே பாரு கணக்கைப் பாத்துக் காசை விட்டெறி. மானங்கெட்டவ வேலையும், சங்காத்தமும் உனக்கு வாணாம். நீ ஒரு மனுசி மாதிரிஎன்று பொரிந்துவிட்டுக் கொல்லைப் படலைத் திறந்துகொண்டு பறந்து விட்டாள் வேலைக்காளி.
படபடப்பு ஒய்ந்ததும், நடந்ததை நினைத்து அழுதாள் அகிலாண்டம். நிம்மதியிலிருந்து நழுவிவிட்ட மனம் வேதனை தாங்கமாட்டாமல் அழுந்திக்கொண்டிருந்தது. நாலு நாள் கழித்துத் தற்செயலாக அவள் தகப்பனார் வந்தார்.அவரோடு பிறந்தகம்போய்ப் பத்துப் பதினைந்து நாள் இருந்துவிட்டு வந்ததுந்தான் மனம் நிலை கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக, இரண்டு நாள் அவள் கற்பனையிலும் ஆசையிலும் நாடகம் ஆடிவிட்டுப் போன ராஜத்தை மறந்துவிட்டாள்.
இப்பொழுது அந்த ஸ்தானத்திற்கு வந்துவிட்டான்அடுத்தவீட்டு ருக்மிணி அம்மாமியின் தம்பி அவனுக்கு லீவு பத்துப்பதினைந்துநாள் இருக்கிறது. இருந்தால் என்ன? அவள் அதிர்ஷ்டம் தெரிந்ததுதானே. இருந்தும் மனது கேட்க மாட்டேன் என்கிறது. ஒரு ஆசை-குளிக்கப் போனவன் இன்னும் வரவில்லை. துடிக்கத் துடிக்க அவனை எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
"என்ன யோஜனை பலமாயிருக்குஎன்று குரல் கேட்கவே, சூன்யத்தைப் பார்த்து. நினைவிழந்திருந்தவளுக்குத் தூக்கி வாரிப் போட்டதுஅவள் புருஷன் நைவேத்தியப்பாத்திரத்துடன் புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டு நின்றான்.
ரொம்ப நாழி பண்ணிவிட்டேனோ? பசி துடிக்கிறதாக்கும் அம்பாளுக்குஎன்று கேட்டார் அவர் செவிடனின் சிறு குரலில் எவ்வளவு பரிவு எவ்வளவு கனிவு எவ்வளவு நம்பிக்கை என்ன நிர்மால்யமான, நிர்மலமான பார்வை வெயிலில் கால் பொரிய நடந்துவிட்டுவந்ததேகம் வேர்த்து விறுவிறுத்துக்கொண்டிருந்தது. ஜன்மத்திலேயே கோபத்தை அறியாத கண்ணும் உதடும் வழக்கம்போல் புன்சிரிப்பில் மலர்ந்திருந்தன.
"இதை விட என்ன வேண்டும்' என்று மயங்கிப் போனாள் அகிலாண்டம்.
சிரித்துக்கொண்டே நைவேத்தியப் பாத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அவ்வளவு அன்பைக் காட்டிய விதியை உள்ளே அழைத்துப்போய்க் கதவைத் தாழிட்டு, அதன் உடல் வேர்வையைத் துடைத்தாள்.அது இலையில் உட்கார்ந்து சாப்பிட்டபோது அவளுக்கு எல்லாப்பசியும் தீர்ந்துவிட்டது.
முத்துக்கள் பத்து 3 15