தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Wednesday, May 25, 2016

வண்ணநிலவன் - கடிதங்கள் : நிழல்padippakam
உங்கள் வண்ணநிலவன் - கடிதங்கள்
......
கொண்டிருந்த பெண்ணை பார்த்தேன். நம் பகவதியும், சந்திராவும் -வும்.  டால்ஸ்டாயின் அன்னா கரீனாவும் தான் அவள்', எந்த நதியும் கால்களை நனைப்பதற்குக்கூடப் போதுமானதாக இல்லை இந்த நாட்களில். அவமானத்தைத் தருகிற மர்ம உணர்வுகளோடு உலகம் இயங்குகிறது. திரைப்படங்களுக்கு போதுமான பரிசுகளைக் கொடுத்தாயிற்று. ஒரு இருநூற்றைம்பது பேர்கள் போல மிகுந்த அழுத்தத்தோடு, விட்டுகொடுக்க மனமற்றவர்களாய் விமர்சன பூர்வ மாக, பிரக்ஞையுணர்வுடன் இலக்கியம் பற்றித் தெரிந்துகொண்டு படைத்துக் காட்டியிருக்கிறதும் நிகழ்ந்துவிட்டது (சிவராம கராந்த்துக்குத் தரப்பட்ட பத்மஸ்ரீ பட்டத்தை அவர் மறுத்து, ராஷ்டிரபதிக்கு எழுதிய கடிதமும் நம்மோடுதான் இருந்து கொண்டிருக்கிறது) கணேசனின் உலகம் துரதிஷ்டவசமானதும், மணி, (அவர் உண்மையில் ஞானத்தை அடைந்தவர் என்றாலும்) நான் என்னுடைய கடமைகளை அவசியம் செய்வது என்றே திடங்கொண்டிருக்கிறேன். உங்கள் எல்லோருடைய உதவிகளும் இதைச் சிறக்கப் பண்ணும். உண்மையை அறிந்த யோகியாக இருந்து காரியங்களை முடிப்போம். மனித சுதந்திரம், அமைதி இவைகளுக்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் இலக்கியம் சிருஷ்டிக்கிறவர்கள் என்கிற விதமாய்.
உங்கள் வண்ணநிலவன்
நிழல்/2 - -
படிபபகம
________________
padippakam
கடிதம் 11
வண்ணநிலவன்
அன்புள்ள நம்பிக்கு,
இன்று நீங்கள் அனுப்பிய வல்லிக்கண்ணன் கடிதங்கள் வந்து சேர்ந்தன. அந்த கடிதங்களை எல்லாம் படித்தபோது எவ்வளவு ரம்யமான காலத்தையெல்லாம் இழந்துவிட்டு வத்துவிட்டோம் என்று ஏக்கமாக இருக்கிறது எவ்வளவு மனோகரமான நாட்கள் அவை. நினைக்க நினைக்க எவ்வளவோ ஞாபகத்துக்கு வருகிறது. பதேர் பாஞ்சாலியின் உருக்கம் நிறைந்த அழகை அந்த நாட்கள் நினைவு படுத்துகின்றன எளிமையும் கவித்துவமும்மிக்க காலமது. பொலிவிழந்த போர்வை, ஜமீலா, அபிதா மோகமுள், அம்மா வந் தாள், அன்பு வழி தாகூரின் கதைகளைலெல்லாம் படிக்கும்போது கடைசி இருபது முப்பது பக்கங்கள் வரும்போது, இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த உருக்கம் நிறைந்த அனுபவம் முடியப் போகிறதே என்று ஏக்கமாக இருக்கும். முடிந்துவிடக்கூடாது என்பதற்காகவே பல நாவல்களை கடைசிவரும்போது அப்படியே வைத்துவிடுவேன். அதுபோல முடியவே கூடாத நாட்கள் அவை, முடிந்துவிட்டன. உயிர்ப்பும் ஜீவனுமிக்க காலமது எல்லாமே பொய்யாய் கனவாய்பழங்கதையாய் முடிந்துவிட்டது.
அப்போது எவ்வளவோ கஷ்டம் இருந்தது. என்றாலும், ஜங்ஷன் ரயில்வே கேட்டைத் தாண்டிப் போகும் போதெல்லாம் சுல்தானியா ஹோட்டல் டீக்காக முப்பது பைசாவைப் பத்திரப் படுத்த முடிந்தது. ராயல் டாக்கீஸில் ஆராதனா பார்க்கிறதுக்காக செகண்ட் ஷோ போக முடிந்தது. மணிமொழி என்ற அருமையான நண்பரோடு வந்து நெல்லை லாட்ஜல் தங்கியிருந்த கங்கை கொண்டானை ஒன்பது மணிக்குமேல் கோபால் கல்யாணியோடு பார்க்க முடிந்தது. அம்பாசமுத்திரம் கோர்ட்டுக்குப் போனபோதெல் லாம் பாலனைப் பார்க்கப் போவதுண்டு
சோகத்தின் அழகைச் சொல்லத் தெரிந்தவனே கலைஞனாக முடியும் கண்ணதாசனிடம் இது இருந்தது. சினிமாவில் ரேயிடம் இது இருந்தது கதைகளில் தாகூரிடம் இது இருந்தது.
இந்த கடிதங்களைப் படித்ததும் யார் யாரையெல்லாமோ மனம் தேடிற்று. ரங்கநாதன் இல்லாமல் நாமும் வாழ்ந்து கொண்டிருக்
நிழல்/3
படிப்பகம்
________________
padippakam
கிறோமே என்று உறுத்திற்று. நடையும் அஃக்-கும் இல்லாமல் போய்விட்டது. கண்ணதாசனின் கடிதம்' இல்லை, பூதப்பாண்டியில் கிருஷ்ணன் நம்பி இல்லை. 3. சொக்கலிங்கசாமி கோயில் தெரு வில் - இல்லை. விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் கச்சேரியை பொருட் காட்சியில் கேட்க முடியவில்லை. ஒரு முறை வ. க. விடம் பேசிக் கொண்டிருந்தபோது செப்பறைத் தேர் எல்லாம் போய்விட்டது என்றார்கள் தாமிரபரணியேகூட காணமல் போனால் ஆச்சரியப் படுவதற்கில்லை. உலகம், ரசனை, மனிதர்கள் எல்லாம் கரடு முரடாகிவிட்டன. சுந்தரத்து அக்காவைப் பார்த்து நாலு வருஷத் துக்கு மேலாகிவிட்டது இருக்கிறாளோ என்னமோ.
என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். பெரிதாக விஷயம் மாதிரி இந்த வாழ்வை எழுதக் கூடாதா? சமீபத்தில் திருவனந்தபுரம் சென்றீர்களா? நகுலனைப் பார்த்தீர்களா? சோகத்தோடே வாழ்ந்து முடிந்து போக ஒரு தைரியம் வேண்டும். அதுதான் ஆன்மபலம். மீனாகுமாரிக்கும், சாவித்ரிக்கும், கமால்-அன்புரோசிக்கும் குருதத்துக்கும் இது இருந்தது.
மதுவும் சாரதாவும் நடித்த நதி' படத்தைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. பாலஸ்-டி-வேல்ஸ் கொட்டகையைப் பூட்டி விட்டார்கள் தெரியுமா? அங்கே வைத்துத்தான். கரை காணா கடல்' என்ற சத்யன் நடித்த படத்தின் செகண்ட் ஷோவுக்கு வந்திருந்த உங்கள் அப்பாவைப் பார்த்தேன். மதுரம் நுள்ளித் தரு, நின் அரும பூ வாடியில் நீ தேடுவதாரை? புயலிலே ஒரு தோணி, புத்தம் வீட்டின் எளிமையை எந்த இலக்கியக் கொம்பனாலும் கொண்டுவர முடிய வில்லை. காட்டு ரோஜாவில் ஒரு சிறு காட்சியில் தோன்றிய பூ பீடி கம்பெனி டான்ஸர் கண்ணனைத் தெரியுமா? சரஸ்வதி அக்காவை நீங்கள் பார்த்ததுண்டா? கல்யாணியா பிள்ளை மகன் கல்யாணத்துக்குப் பாடின எம். எல் வசந்தகுமாரியின் கச்சேரியைக் கேட்டிருந்தால்தான் விபூதிபூஷன் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியும் வஸந்தகுமாரி அன்று லஸ் சீனிவாச சாஸ்திரி ஹாலில் பாடின லதாங்கி ராகத்தைக் கேட்ட பிறகு எந்த சங்கீதத்தைக் கேட்டால் என்ன கேட்காவிட்டால் என்ன? மதுரம், மதுரம் அது தான் இன்று எல்லா கலைத்துறைகளிலும் தொலைந்துவிட்டது. என்றாலும் உடன்குடியிலிருந்து குலசேகரபட்டிணம் ரோட்டில் இரண்டு பக்கமும் இன்னும் பனைவட்ரிகள் மைல் கணக்குக்கு நிற் கின்றன என்கிறார்கள் மோகமுள். ரங்கண்ணாவை சினிமாவில் காட்ட முடியுமா? யமுனாவை, அபிதாவைக் காட்ட முடியுமா? வாழ்நாள் பூராவும் ஒரே ஒரு உன்னதமான சொல்லை எழுதினால் கூடப் போதும் அடைய முடியாப் பொருளின் மீது ஆசை தீராது.
நிழல்/4
படிப்பகம்