தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, May 11, 2016

ராஜாங்கத்தின் முடிவு - சாதத் ஹசன் மண்டோ : காலச்சுவடு ஆண்டு மலர் 1991

காலச்சுவடு ஆண்டு மலர் 1991
www.padippakam.com
ராஜாங்கத்தின் முடிவு
உருது மூலம் சாதத் ஹசன் மண்டோ
ஆங்கிலம் வழி தமிழில் ஜே. வசந்தன்.
தொலைபேசியின் மணியொலித்தது. மன்மோகன் எடுத்தான்.
"ஹலோ, 44457."
'ஸாரி ராங்நம்பர்' என்றது ஒரு பெண்குரல்.
மன்மோகன் தொலைபேசியை வைத்து விட்டு, பழையபடி வாசிப்பைத் தொடர்ந்தான். அந்தப்புத்தகத்தை ஒரு இருபது தடவை வாசித்திருந்தான். அபூர்வமான புத்தகம் என்பதால் அல்ல; அறையில் இருந்த ஒரே புத்தகம் அது தான். கடைசிப் பக்கங்கள் இல்லாத புத்தகம்.
இந்த ஒருவாரமாக மன்மோகன் மட்டுத்தான் தங்கியிருக்கிறான், இந்த அலுவலக அறையில். அவனுடைய நண்பன் ஒருவனின் அறை இது. நண்பன் வியாபாரத்துக்காக கடன்புரட்ட வெளி யூர் போயிருந்தான்.
மன்மோகன், நகரின் வீடற்ற, இரவுகளில் நடைபாதையில்துங்கும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவன். எனவே, நண்பன் தான் இல்லாத போது சாமான்களைப் பார்த்துக்கொள்ளவென்று மன்மோகனை இங்கு தங்கச் சொல்லியிருந்தான்.
அவன் வெளியிலே போகவே இல்லை. உத் யோகம் என்பதையே வெறுப்பவனாதலால், வேலை என்பதே கிடையாது. உண்மையாகவே அவன் முயன்றிருந்தானென்றால், ஏதாவது ஒரு சினிமாக் கம்பெனியில் சுலபமாகச் சேர்ந்திருக்க
காலச்சுவடு - - 244
முடியும் - இயக்குனனாக வேலை பார்க்காமலிருக்கத் தீர்மானித்த சமயத்தில் அவன் இயக்குனனாகத்தான் இருந்தான். -
என்றாலும், அவனுக்கு மறுபடியும் அடிமை உத்தியோகம் பார்க்க இஷ்டமில்லை. அவன் ஒரு இனிய சுபாவமுள்ள அமைதியான, சாதுவான மனிதன். அநேகமாக சொந்தச் செலவுகள் என்று எதுவும் கிடையாது. அவனுடைய தேவையெல் லாம் காலையில் ஒரு கோப்பை தேநீரும், தீயில் வாட்டின ரொட்டித்துண்டுகள் இரண்டும் மதியம் கொஞ்சம் குழம்பு, பிரட் ஒரு பாக்கெட் சிகரெட் அவ்வளவுதான். அதிர்ஷ்டவசமாக இந்த எளிய தேவைகளைப் பூர்த்தி செய்யப்போதுமான நண்பர்கள் இருந்தனர் அவனுக்கு சந்தோஷமாகச் செய்தனர்.
மன்மோகனுக்குக் குடும்பமோ, நெருங்கின உறவுகளோ கிடையாது. சிரமதசையான நாட்க ளில் நாள் கணக்காகச் சாப்பிடாமல் இருக்க முடியும் அவனால், சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தவன்; பம்பாயின் விசாலமான நடைபாதைகளில் வருஷக்கணக்காக வசித்து வருபவன் என்பதைத்தவிர அவனுடைய நண்பர்களுக்கு அவனைப் பற்றி அதிகம் தெரியாது. அவனுக்கு வாழ்க்கையில் வாய்க்காமல் இருந்த ஒரே விஷ யம் - பெண்கள், -
அவன் சொல்வதுண்டு:
@DT1991]
படிப்பகம்
________________
WWW.padippakam.Com
"என்னை மட்டும் ஒரு பெண் காதலித்தாள் என்றால் என் வாழ்க்கையே மாறிவிடும்."
நண்பர்கள் பதிலடி கொடுப்பார்கள்: "அப்போதும் நீ வேலை பார்க்கமாட்டாய்." 'அதற்கப்புறம் வேலை பார்ப்பதைத் தவிர வேறு வேலையே கிடையாது' என்று பதில் சொல்வான்.
'அப்போக் காதலிக்க வேண்டியதுதானே?"
"ஆண்பிள்ளை முதலடி வைக்கும் காதலும் ஒரு காதலா என்ன?"
இப்போது பிற்பகல். சாப்பாட்டு வேளை. திடீ ரென்று தொலைபேசிமணி ஒலித்தது.
எடுத்தான். "ஹலோ 44457' "44457 - ?' - ஒரு பெண்குரல் கேட்டது. "அதேதான்' என்றான் மன்மோகன். 'நீங்கள் யாரு?" "மன்மோகன்."
மறுமுனையில் பதிலில்லை. 'நீங்கள் யாரோடு பேசனும்?' அவன் கேட் டான்.
'உங்களோடு."
'என்னோடா?"
'உங்களுக்கு ஆட்சேபம் இல்லாவிட்டால்." 'அதெல்லாம் ஒன்றுமில்லை." 'உங்கள் பெயர் மதன்மோகன் என்றா சொன்னீர்கள்?"
'இல்லை, மன்மோகன்.' 'மன்மோகனா?'
மெளனம். "என்னோடு பேச விரும்பீனீர்கள் என்று நினைத்தேன்."
"ஆமாம்'
காலச்சுவடு
245
"அப்படியானால் பேசலாமே."
'எனக்கு என்ன பேசுவதென்று தெரிய வில்லை. நீங்கள் ஏதாவது சொல்லுங்கள்."
"நல்லது. நான் ஏற்கனவே என் பெயரைச் சொல்லிவிட்டேன். இப்போதைக்கு இந்த அலுவலகம்தான் என் தங்குமிடம். நகரத்தின் நடைபா தையில் தான் வழக்கமாகத் தூங்குவேன். கடந்த ஒருவாரமாய் பெரிய அலுவலக மேஜையொன்றின் மேல் தூங்குகிறேன்.'
'கொசுத் தொல்லையை எப்படி சமாளிப்பீர்கள்? நடைபாதையில் கொசுவலை கட்டிக் கொள்வீர்களா?"
மன்மோகன் சிரித்தான்.
'இதற்கு பதில் சொல்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கிவிடுகிறேன். நான் பொய் சொல்வதில்லை. வருஷக்கணக்காக நடை பாதையில்தான் தூங்கி வருகிறேன். இந்த அலுவலகம் என் கைக்கு வந்ததுக்கப்புறம் வசதியாக இருக்கிறேன்."
'வசதி என்றால்?"
'இங்கே ஒரு புத்தகம் இருக்கிறது. கடைசிப் பக்கங்கள் இல்லை. ஆனால், இதை இருபது தடவை படித்து விட்டேன். என்றைக்காவது, காணாமல் போன பக்கங்கள் என் கையில் அகப்படும்போது அந்தக் காதலர்கள் சந்தித்த முடிவு என்ன என்பதைத் தெரிந்து கொண்டு விடுவேன்.'
'நீங்கள் ஒரு சுவாரஸ்யமான ஆள் என்று தோன்றுகிறது'என்றது குரல்.
'இது உங்கள் பரிவைக் காட்டுகிறது." "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"
'செய்வதா?"
'அதாவது, உங்கள் தொழில்?"
'தொழிலா. ஒன்றும் இல்லை. வேலையே பார்க்காதவனுக்கு என்ன தொழில் இருக்கும்?
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
www.padippakam.com
ஆனால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதென்றால், நான் பகலில் ஊர் சுற்றுகிறேன். ராத்திரியில் துங்குகிறேன்."
'இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறதா?" 'பொறுங்கள். இந்தக் கேள்வியை நான் கேட் டுக் கொண்டதேயில்லை. இப்போது நீங்கள் கேட்டுவிட்டதால், நானும் முதல் தடவையாய்க் கேட்டுக் கொள்கிறேன். நான் வாழ்கிற விதம் எனக்குப் பிடித்திருக்கிறதா?"
'பதில் என்ன?"
'பதில் இல்லைதான். ஆனால் இதுவரை வாழ்ந்து வந்த தினுசில்தான் நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதால் எனக்குப் பிடித்திருக்கிறது என்று கொள்வதுதான் சரியாக இருக்கும்.'
மறுமுனையில் சிரிப்பு.
'ரொம்ப அழகாகச் சிரிக்கிறீர்கள் என்றான்
மன்மோகன்,
'நன்றி.' - குரலில் நாணமிருந்தது. தொலை பேசி தொடர்பறுந்தது. வெகுநேரம் வரை அவன் ரிஸிவரைக் கையில் வைத்திருந்தான் - தனக்குத் தானே புன்னகைத்தபடி
மறுநாள் காலை எட்டுமணி சுமாருக்கு
தொலைபேசி மறுபடி ஒலித்தது. ஆழ்ந்த உறக்கத் தில் இருந்தவனை எழுப்பியது ஓசை கொட்டாவி விட்டான். தொலைபேசியை எடுத்தான்.
"ஹலோ, இது 44457.' 'குட்மார்னிங் மன்மோகன் சாகிப்' 'குட்மார்னிங் ... நீங்களா குட்மார்னிங்.' 'துங்கிக் கொண்டிருந்தீர்களா?"
"ஆமாம். இங்கு வந்தபிறகு வீணாய்ப் போய் விட்டேன் தெரியுமா. நடைபாதைக்குத் திரும்பின பிறகு சிரமப்படப்போகிறேன்.'
'ஏன்?'
'நடைபாதையில் துங்கினால், காலையில்
згазвао 248|
ஐநது மணிக்கு முன்பாக எழுந்தாக வேண்டும்."
மறுமுனையில் சிரிப்பு. 'நேற்று சடாரென்று வைத்து விட்டீர்கள்." 'நான் அழகாகச் சிரிக்கிறதாய் ஏன் சொன்னீர்
கள்?"
'இதென்ன கேள்வி அழகாய் இருக்கிற ஒன்றைப் பாராட்ட வேண்டாமா?"
'வேண்டாம்.'
"நீங்கள் நிபந்தனைகளை விதிக்க வேண்டிய தில்லை. கட்டுப்பாடுகளை நான் ஏற்றதே இல்லை. நீங்கள் சிரித்தால், அழகாய்ச் சிரிக்கிறீர்கள் என்று சொல்லத்தான் செய்வேன்.'
"அப்படிச் சொன்னால், நான் ஃபோனை வைத்துவிடுவேன்.'
"தாராளமாய்ச் செய்யலாம்."
"நான் மனமுடைவது பற்றி உண்மையிலேயே உங்களுக்கு அக்கறையில்லையா?"
'முதலில், நான் மனமுடைய விருப்ப மில்லை. அதாவது, நீங்கள் சிரித்து, நீங்கள் அழ காகச் சிரிக்கிறீர்கள் என்று நான் சொல்லாது போனால் என்னுடைய நல்ல ரசனைக்கு அநீதி செய்தவனாவேன்.'
ஒரு சிறு மெளனம். பிறகு மறுபடியும் வந்தது குரல்:
"மன்னியுங்கள். வேலைக்காரியுடன் சற்று பேச வேண்டியிருந்தது. உங்களது நல்ல ரசனைக்கு ஆதரவாளர் என்றுதானே சொல்லிக் கொண்டிருந்தீர்கள்? உங்கள் நல்ல ரசனைக்குப் பட்சமான வேறு விஷயங்கள் என்ன?"
'என்ன கேட்கிறீர்கள்?"
'அதாவது, வேலை பொழுதுபோக்கு. அல்லது இப்படிக் கேட்கட்டுமா? உங்களுக்கு என்ன செய்யத் தெரியும்?" -
மன்மோகன் சிரித்தான்.
Aerosař 1991
படிப்பகம்
________________
www.padippakam.Com
'புகைப்படம் எடுப்பதில் கொஞ்சம் இஷ்டம் உண்டு என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை."
"நல்ல பொழுதுபோக்கு."
"அது நல்லது அல்லது கெட்டது என்கிற மாதிரி நான் யோசித்ததே இல்லை."
'உங்களிடம் மிக நல்ல காமிரா இருக்க வேண்டுமே?'
'என்னிடம் காமிரா இல்லை. அப்பப்போ ஒரு நண்பனிடம் இரவல் வாங்கிக் கொள்வேன். என்றாலும் எப்போதாவது கொஞ்சம் பணம் சம் பாதிக்க முடிந்தால், நான் வாங்கவிருக்கும் காமிரா ஒன்றுண்டு."
'என்ன காமிரா?"
''எக்ஸாக்டா. அது ஒரு ரிஃப்ளெக்ஸ் காமிரா. எனக்கு ரொம்பப் பிடித்தது."
சற்று அமைதி,
"நான் ஒன்றைப்பற்றி யோசித்துக் கொண்டி ருந்தேன்."
'দোষ্ঠোনো? ''
'நீங்கள் என்னுடைய பெயரையோ தொலை பேசி எண்ணையோ கேட்கவில்லை."
"அவசியமென்று படவில்லை."
"ஏன்?"
'உங்களுடைய பெயர் எதுவாயிருந்தால் என்ன? உங்களிடம் என்னுடைய எண் இருக்கி றது. அது போதும். நான் அழைக்க வேண்டு மென்று நீங்கள் விரும்பினால், உங்கள் பெயரை யும் எண்ணையும் கட்டாயம் சொல்வீர்கள்'
'இல்லை.... மாட்டேன்."
'உங்கள் இஷ்டம் போல் செய்யுங்கள். நான் கேட்கப் போவதில்லை."
'நீங்கள் ஒரு விநோதமான நபர்."
'வாஸ்தவம்தான்.'
காலச்சுவடு
247
மீண்டும் மெளனம்.
'மறுபடியும் யோசித்துக் கொண்டிருந்தீர்களோ - அவன் கேட்டான்.
"ஆமாம். ஆனால் யோசிப்பதற்கான விஷயம் எதுவும் புலப்படவில்லை."
'அப்படியானால் வைத்துவிடலாமே. இன்னொரு முறை..."
'நீங்கள் ஒரு முரடர் வைத்து விடுகிறேன்." மன்மோகன் குறுஞ்சிரிப்புடன் தொலைபே சியை வைத்தான். முகம் கழுவிவிட்டு, உடை களை அணிந்து கொண்டான். புறப்படவிருந்த போது, தொலைபேசி ஒலித்தது. எடுத்தான்.
"ஹலோ, 44457."
'திரு. மன்மோகன் தானே?' - கேட்டது குரல்.
"நான் என்ன செய்ய வேண்டும் உங்களுக்கு?"
"என்னுடைய எரிச்சல் போய்விட்டது என்று உங்களிடம் சொல்ல விரும்பினேன்.'
'ரொம்ப சந்தோஷம்.'
'காலைச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, உங்களிடம் எரிச்சல்படக்கூடாது என்று தோன்றியது தெரியுமா? நீங்கள் சாப்பிட்டு விட் டீர்களா?"
'இல்லை. நீங்கள் அழைத்தபோதுதான் கிளம்பிக் கொண்டிருந்தேன்."
" அப்படியானால் நான் தாமதப்படுத்த மாட்டேன்.' -
'விசேஷமான அவரசம் ஒன்றுமில்லை. ஏனென்றால், என்னிடம் பணம் இல்லை. இன்று காலை சாப்பாடு கிடையாது என்றுதான் தோன்று கிறது."
'ஏன் இதுமாதிரிப் பேசுகிறீர்கள்? உங்களை வருத்திக் கொள்வது ஆனந்தமாக இருக்கிறதா
ಶ್ರೀಕ@DEF1991|
படிப்பகம்
________________
www.padippakam.com
என்ன?'
'இல்லை. நான் இருக்கிற விதத்துக்கும். வாழும் வகைக்கும் மிகவும் பழக்கப்பட்டுவிட்டேன்."
"பணம் ஏதும் அனுப்பட்டுமா?"
"நீங்கள் விரும்பினால், எனக்குப் பணஉதவி செய்பவர்களின் பட்டியலில் இன்னொரு பெயர் சேரும்."
"அப்படியானால் அனுப்பமாட்டேன்." "விருப்பம் போலச் செய்யுங்கள்." வைத்துவிடப் போகிறேன்." "வைத்து விடுங்கள்."
மன்மோகன் தொலைபேசியை வைத்தான்.
அலுவலகத்தை விட்டு வெளியே நடந்தான்.
மாலையில் வெகுநேரம் கழித்துத் திரும்பிவந் தான். பகல் முழுக்க தன்னை அழைத்தவள்பற்றி வியந்து கொண்டிருந்தான். இளமையான குரல். படித்தவள் போலிருக்கிறாள். அழகாகச் சிரிக்கிறாள். 11 மணிக்கு தொலைபேசி ஒலித்தது.
"ஹலோ"
"திரு. மன்மோகன்?"
'அவன்தான்."
'பகல் முழுவதும் ஃபோன் செய்து கொண்டேயிருந்தேன். தாங்கள் எங்குசென்றீர்கள் என்று தயவு செய்து விளக்கலாமா?"
'எனக்கு வேலை இல்லையே தவிர, செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கத்தான் செய்கின் றன.'
'என்ன காரியங்கள்?"
"ஊர் சுற்றுதல்."
"எப்போது திரும்பி வந்தீர்கள்?" "ஒரு மணி நேரம் முன்பு."
"நான் அழைத்தபோது என்னசெய்துகொண் டிருந்தீர்கள்?"
"மேஜையில் படுத்துக் கொண்டு, உங்கள் தோற்றம் பற்றிக் கற்பனை செய்து கொண்டிருந் தேன். தொடர்ந்து கற்பனை செய்ய உங்கள் குர லைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்னிடம்."
'வெற்றி கிடைத்ததா?"
'இல்லை."
'நல்லது. முயற்சி செய்யாதீர்கள். நான் அவலட்சணமானவள்.'
'நீங்கள் அழகில்லையென்றால் தயவு செய்து வைத்துவிடுங்கள். வெறுக்கிறவன்.'
நான் அவலட்சணத்தை
"ஓஹோ அப்படியென்றால் நான் அழகி. நீங் கள் வெறுப்பை வளர்த்துக் கொள்வதில் எனக்கு இஷ்டமில்லை."
சிறிது நேரம் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை.
மன்மோகன் கேட்டான்:
"யோசித்துக் கொண்டிருந்தீர்களா?"
'இல்லை. உங்களிடம் ஒன்று கேட்கவேண்டு மென்று."
"யோசித்து கேளுங்கள்."
"நான் உங்களுக்காகப் பாடினால் பிடிக்கு Lont P ''
'ம்'
'சரி, பொறுங்கள்.'
அவள் தொண்டையைச் செருமிக் கொள்வது கேட்டது. பிறகு, மிருதுவான தழைந்த குரலில் அவனுக்காக ஒரு பாட்டுப் பாடினாள்.
"அற்புதமாய் இருந்தது.'
'நன்றி.”
வைத்துவிட்டாள்.
காலச்சுவடு
|248
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
WWW.padippakam.com
இரவு முழுவதும் அவள் குரலைப் பற்றிய கனவுகள், வழக்கத்தைவிடச் சீக்கிரம் எழுந்து அவளது அழைப்புக்காகக் காத்திருந்தான். ஆனால் தொலைபேசி ஒலிக்கவேயில்லை. நிம்மதியிழந்தவனாக அறைக்குள் சுற்றிச் சுற்றி வந் தான். மேஜையில் படுத்துக் கொண்டான். தான் இருபது தடவை படித்துவிட்ட புத்தகத்தை எடுத் தான். மீண்டும் ஒரு தடவை படித்தான். நாள் முழுக்கக் கழிந்தது.
சாயங்காலம் ஏழுமணியளவில் தொலை பேசி ஒலித்தது. விரைந்து எடுத்தான்.
'யாரது?"
"நான் தான்."
'பகல் முழுக்க எங்கே போனாய்?" சிடுசிடுப்பாய்க் கேட்டான்.
'ஏன்?' - குரல் நடுங்கியது.
பணம்
"நான் காத்துக்கொண்டிருந்தேன். இருந்தும் சாப்பிடப் போகவில்லை."
"நான் விரும்பும்போது ஃபோன் செய்வேன். நீங்கள்...'
மன்மோகன் இடைவெட்டினான்.
'இதோ.பார், ஒன்று இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டு, அல்லது நீ எப்போக் கூப்பிடுவாய் என்று சொல்லிவிடு. காத்திருக்கப் பொறுக்க வில்லை எனக்கு."
'இன்று நடந்ததற்கு மன்னித்துவிடுங்கள். நாளை முதல் காலையிலும் மாலையிலும் கட்டாயம் அழைக்கிறேன்."
'இதைச் சொல்லு, பிரமாதம்'
'எனக்குத் தெரியாது. நீங்கள்..."
'விஷயம் என்னவென்றால் எனக்குக் காத்திருக்க சகிப்பதில்லை. சகிக்க முடியாதது நடந்துவி டும்போது என்னையே தண்டித்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறேன்."
"எப்படி?"
'நீ காலையில் ஃபோன் செய்யவில்லை; நான் வெளியில் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. படபடத்து நாள் முழுக்க உட் கார்ந்திருந்தேன்."
"நான் வேண்டுமென்றேதான் ஃபோன் செய் யவில்லை."
'ஏன்?"
"என் அழைப்புக்காக ஏங்குகிறீர்களா என்று பார்க்க.'
'விஷமக்காரி நீ இப்போது வைத்து விடு. நான் வெளியில் சாப்பிடப் போக வேண்டும்."
'எவ்வளவு நேரமாகும்?"
'அரைமணி."
அரைமணி நேரம் கழித்துத் திரும்பினான். அவள் தொலைபேசியில் வந்தாள். நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அதே பாட்டைப் பாடச் சொல்லிக் கேட்டான். சிரித்தாள். பாடினாள்.
காலையிலும் மாலையிலும் தவறாமல் பேசி னாள். சிலவேளைகளில் மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால், இதுவரை மன்மோகன் அவள் பெயரையோ, தொலைபேசி எண்ணையோ கேட்கவேயில்லை. ஆரம்பத்தில் அவள் தோற்றம் பற்றிக் கற்பனை செய்ய முயன்ற துண்டு. இப்போது அது அவசியமற்றதாகிவிட்டது. அவளது முகம், ஆத்மா, உடல் சகலமும் அவள் குரல்தான்.
ஒருநாள் அவள் கேட்டாள்.
'மோகன், என் பெயரை ஏன் கேட்கவில்லை நீங்கள்?"
காலச்சுவடு
249
ஆண்டுமலர் 1991
படிப்பகம்

________________
www.padippakam.com
'உன் குரல்தான் உன் பெயர் என்பதால்
தான்."
இன்னொரு நாள்.
"மோகன், நீங்கள் காதலித்ததுண்டா?"
'இல்லை."
'ஏன்?"
அவன் சோகமானான்.
"இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டு மானால், என் வாழ்க்கையில் அடிபாடுகள் அனைத்தையும் வாரிப்போட்டாக வேண்டும். அவற்றில் ஒன்றுமில்லாமல் மிகுந்த வருத்தமடைவேன்.'
போகுமானால்
"அப்படியானால் வேண்டாம்.'
ஒரு மாதம் கழிந்தது. ஒருநாள் மோகனுடைய நண்பனின் கடிதம் வந்தது. பணம் புரட்டி விட்டதாகவும், ஒரு வாரத்தில் பம்பாய் திரும்புவதாக வும் எழுதியிருந்தான். அன்று மாலை அவள் பேசியபோது அவன் சொன்னான்
'இதுதான் என் ராஜாங்கத்தின் முடிவு."
'ஏன்? --
'என் நண்பன் திரும்பி வருகிறான்."
'ஃபோன் வைத்திருக்கும் வேறு நண்பர்க ளும் உங்களுக்கு இருப்பார்களே?"
"இருக்கிறார்கள். அவர்களின் எண்களை நான் உன்னிடம் தரமுடியாது."
"ஏன்?"
"வேறு யாரும் உன் குரலைக் கேட்பதை நான் விரும்பவில்லை."
'ஏன்?"
"பொறாமை என்று வைத்துக் கொள்ளேன்.' "நாம் என்ன செய்வது?" "சொல்லு." 'உங்களுடைய ராஜாங்கம் முடியும் நாளில்
காலச்சுவடு
படிப்பகம்
250
என்னுடைய எண்ணைத் தருவேன்.'
அவன் உணர்ந்திருந்த சோகம் சடாரென்று விலகியது. மீண்டும் அவளைப் பற்றிய சித்திரம் ஒன்றை உண்டாக்கிக் கொள்ள முயன்றான். குரல் மட்டுமே இருந்தது. பிம்பம் இல்லை. சில நாட்களே உள்ளன, அவளைச் சந்திப்பதற்கு என்று சொல்லிக் கொண்டான். அலாதியான அந்தத் தரு ணத்தை கற்பனை செய்துகூடப் பார்க்க முடிய வில்லை அவனால்,
மறுநாள் அவள் அழைத்தபோது அவன் சொன்னான்:
'உன்னைக்காண ஆவலாய் இருக்கிறேன்.'
'ஏன்?"
'என்னுடைய ராஜாங்கம் முடிவுறும் நாளில் உன்தொலைபேசி எண்ணைத் தருவதாகச் சொன்னாயே?'
"ஆமாம்.'
"அப்படியென்றால் நீ வசிக்கும் இடத்தையும் எனக்குச் சொல்வாய் என்றுதானே அர்த்தம்? எனக்கு உன்னைப் பார்க்க வேண்டும்.'
"என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இன்றைக்கே கூட."
'இன்றைக்கு வேண்டாம் நான் நல்ல உடைகள் அணிந்து கொண்டுதான் உன்னைப் பார்க்க வேண்டும் என் நண்பன் ஒருவனிடம் கேட்டிருக் கிறேன் - நல்ல உடைகள் தரும்படி.."
'குழந்தை போலிருக்கிறீர்கள் நாம் சந்திக்கும்போது உங்களுக்கு ஒரு பரிசு தரப் போகிறேன்."
'உன்னைச் சந்திப்பதைவிடப் பெரிய பரிசு எதுவுமில்லை. இந்த உலகத்தில்."
'நான் உங்களுக்காக ஒரு எக்ஸாக்டோ கேமிரா வாங்கியிருக்கிறேன்."
'அப்படியா!'
"ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் என்னைப் படமெடுக்க வேண்டும்."
ஆண்டுமலர் 1991
________________
www.padippakam.com
"நாம் சந்திக்கும்போது அதை முடிவு செய்வேன்.'
'அடுத்த இரண்டு நாட்களுக்கு நான் ஃபோன்
செய்யமாட்டேன்."
- 'ஏன்? --
'குடும்பத்தோடு வெளியூர் போகிறேன். இரண்டே நாள்தான்." -
மன்மோகன் அலுவலகத்தை விட்டு வெளியில் செல்லவில்லை அன்று. மறுநாள் காலை காய்ச்சல் அடிப்பதுபோலிருந்தது. அவள் போன் செய்யாததால் ஏற்பட்ட சலிப்பு என்றுதான் முதலில் நினைத்தான். பிற்பகலில் கடுமையான காய்ச் சல். உடம்பு நெருப்பாய்ச் சுட்டது. கண்களில் எரிச்சல், மேஜையில் படுத்திருந்தான். வெகுவாக தாகம் எடுத்தது. நாள் முழுவதும் தண்ணீர் குடித் துக் கொண்டே இருந்தான். நெஞ்சு அடைத்தது. மறுநாள் காலை திரானியற்றவனாக உணர்ந்தான். நெஞ்சு வலித்தது.
கடுமையான ஜூரம் காரணமாய் ஜன்னி கண்டது. பிதற்ற ஆரம்பித்தான் தொலைபேசியில் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான் அவள் குர லைக் கேட்டபடி மாலையில் நிலைமை இன்னும் சீர் குலைந்தது. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக் கான தொலைபேசிகள் மணியடிப்பது போல, மண்டைக்குள் குரல்களும், விநோத ஒலிகளும், மூச்சுவிட முடியவில்லை.
தொலைபேசி ஒலித்தது. அவனுக்கு கேட்க வில்லை. வெகுநேரம் ஒலித்துக்கொண்டே இருந் தது. சடாரென்று. துலங்கிய ஒரு தருணம். அவ னுக்குக் கேட்டது. எழுந்தான். கால்கள் நிதானமி ழந்து தடுமாறின. கிட்டத்தட்ட விழுந்தே விட் டான். சுவரில் சாய்ந்து சுதாரித்துக்கொண்டு, நடுங்கும் கைகளுடன் தொலைபேசியை எடுத்தான். உதடுகளை நாக்கால் தடவிக்கொண்டான் - விறகுபோல் உலர்ந்திருந்தன. அவை.
"ஹலோ"
"ஹலோ மோகன்'
"மோகன்தான்' - குரல் நடுங்கியது
'கேட்கவில்லை."
ஏதேனும் சொல்ல முயன்றான். தொண்டைகுள்ளே குரல் வறண்டது.
"நான் நினைத்ததைவிட சீக்கிரம் வந்து விட் டோம். உங்களை அழைக்க மணிக்கணக்காக முயன்று கொண்டிருக்கிறேன். எங்கே இருந்தீர் গুলো ? ' '
மன்மோகனுக்குத் தலைச் சுற்ற ஆரம்பித்தது.
'என்ன சிக்கல்?' - அவள் கேட்டாள்.
பெரும் சிரமப்பட்டு அவன் சொன்னான்.
'என் ராஜாங்கம் இன்றுடன் முடிவுற்றது." அவன் வாயிலிருந்து ரத்தம் சிந்தி வழிந்தது. மோவாய்க் கட்டை வழியாக கழுத்து வரை ஒரு மெல்லிய சிவப்புக் கோடாய் இறங்கியது.
அவள் சொன்னாள்:
'என் எண்னைக் குறித்துக் கொள்ளுங்கள். 50314. 50314 காலையில் கூப்பிடுங்கள். இப்போது நான் போக வேண்டும்."
வைத்துவிட்டாள்.
ரத்தம் வாயிலிருந்து கொப்புளிக்க மன்மோகன் தொலைபேசியின்மேல் தளர்ந்து சரிந்தான்.
காலச்சுவடு
251 ஆண்டுமலர் 1991

படிப்பகம்
http://thamizhstudio.com/shortfilm_review_19.php
ராஜாங்கத்தின் முடிவு - 
குறும்பட விமர்சனம்
ஸ்ரீகணேஷ் 

திரைக்கதை : ஆறு.அண்ணல்
ஒளிப்பதிவு : விஜய் திருமூலம்
இசை : லக்ஷ்மி நாராயணன்
இயக்கம்: அருள் எழிலன் 


குறும்படங்களின் ஆளுமை தற்போதைய சூழலில், சமூகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களிடையே தற்போது குறும்படங்கள் மிகவும் பிரபலம். அது வெகுஜன மக்களைக் கவரத் துவங்கி விட்டதால் தானோ நிறைய கமர்ஷியல் கதைகளும் குறும்படங்களில் வரத் துவங்கிவிட்டன. 'டேய் அவன போட்றா', 'அவ ரொம்ப அழகு' போன்ற வசனங்களை தற்போது குறும்படங்களிலும் கேட்டு பிறவிப் பயனடைகிறோம். கூடிய விரைவில் குத்துப் பட்டும் வரலாம்.
குறும்படங்களைப் பற்றி அதிகம் தெரியாத, பெரிதாய் பேசப்படாத பத்தாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான குறும்படம் "ராஜாங்கத்தின் முடிவு". இப்படத்தை இயக்கி நடித்திருப்பவர் திரு. அருள் எழிலன். இவர் ஒரு முழுநேர பத்திரிகையாளர். விகடனில் முதன்மை நிருபராய் நீண்ட நாட்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் விகடனில் எழுதிய பல கட்டுரைகள் மிகவும் பிரபலம். நல்ல ஆழமும், மனிதமும் நிறைந்த எழுத்து இவரின் சிறப்பு.
இனி படத்தைப் பற்றி பாப்போம். இப்படம் முழுக்க முழுக்க ஒரு வீட்டிற்குள்ளேயே படமாக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனும், ஒரு தொலைபேசியும், ஒரு பெண்ணின் குரலுமே இப்படத்தில் வரும் பாத்திரங்கள். ஒரு மனிதனின் தனிமையே இப்படத்தின் கரு. அதை காட்சி மூலமும், நிறைய வசனங்கள் மூலமும் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் இயக்குனர்.
ரவிக்குமார் என்பவன் வேலைகள் ஏதுமற்ற, அன்பு காட்டவும் ஆளில்லாத ஒருவன். அவனுக்கென்று சொந்தமாக பொருட்களோ, தங்கும் இடமோ கூட இல்லை. சாலை ஓரங்களில் தங்கிக் கொண்டு, கிடைத்த இடத்தில சாப்பிட்டுக் கொண்டு வாழ்கையை ஓட்டுகிறவன். ஆயினும், வாழ்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடுபவன். தன் மேல் துளி கூட கழிவிரக்கம் இல்லாதவன். எதையும் எளிதாக, மகிழ்ச்சியாகவே பார்க்கிறவன்.
துன்பங்கள் அவனை பாதிப்பதில்லை. எல்லாமே அவனைக் கடந்து செல்கின்றன.
அவனுடைய நண்பர் ஒருவர் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், தன் அலுவலகத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ரவியிடம் ஒப்படைக்கிறார். அவன் சில நாட்கள் அங்கேயே தங்கிக் கொண்டு, புத்தகம் படித்துக் கொண்டு பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறான். அப்போது ஒரு நாள் ஒரு பெண் ராங் நம்பராய் இவனுக்கு போன் பண்ணி விடுகிறாள். தவறுதலாய் பேசும் அந்த ஃபோன் காலிலிருந்து இவர்கள் நட்பு துவங்குகிறது. பின்பு இருவரும் அடிக்கடி பேசத் துவங்குகிறார்கள்.
ஆரம்பத்தில் இருவருமே அந்த ஃபோன் காலை பேச விரும்பவில்லையோ எனத் தோன்றுகிறது. பின்பு மெல்ல மெல்ல அவர்களின் உரையாடல் சுவாரசியம் அடைவதையும், இருவருக்கும் இடையே ஒரு இழை ஓடிக் கொண்டே இருப்பதையும் நம்மால் மெலிதாய் சிரித்துக் கொண்டே உணர முடிகிறது. எதுவும் என்னை பாதிக்காது என அசால்டாய் திரியும் ரவி, மெல்ல மெல்ல அவனையறியாது அப்பெண்ணின் குரலுக்கு அடிமையாவதும், தனக்குள் இருக்கும் காதலை உணர்வதும் நல்ல தருணங்கள். அப்பெண்ணின் குரல் மட்டுமே நமக்குக் கேட்டாலும், நம்மை மிகவும் கவர்ந்து விடுகிறாள். இதற்கு மேல் இப்படத்தின் கதையை சொன்னால் சுவாரசியம் கெட்டுவிடும். பார்த்து அனுபவியுங்கள்.
சரத் ஹசன் மாண்டோவின் சிறுகதையைத் தழுவி இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இக்குறும்படம் நம் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அருள் எழிலன் இக்கதையை படித்த உடனேயே இதைப் படமாக்க வேண்டும் என முடிவு செய்ததாகவும், நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். நிறைய நல்ல படைப்பாளிகள் இலக்கிய படைப்புக்களை திரைப்படுத்த முனைவது நல்ல விஷயம். இது இன்னும் தொடர வேண்டும்.
படத்தை இயக்கி தானே நடிக்கவும் செய்திருக்கிறார் அருள் எழிலன். முழுக்க முழுக்க mono acting வகையிலான நடிப்பில் நன்றாகவே செய்திருக்கிறார். படத்தில் வரும் பெண்ணின் குரல் திரு.ஜெயா மாதவனுடையது. நல்ல ஆழமான குரல். படத்தில் வரும் தொலைபேசி கூட ஒரு பாத்திரம் தான். இப்படத்தின் மிகப் பெரும் பலம் அதன் வசனங்கள். சின்ன சின்ன ஷார்ப்பான வசனங்கள். கேலியும் கிண்டலும் பல இடங்களில் மின்னுகின்றன. அவை மட்டும் இல்லா விட்டால் இப்படம் போர் அடித்திருக்கும்.
'சாப்பிட போலாம்னு நெனச்சேன்.. உங்க ஃபோனுக்காக தான் காத்திருந்தேன்..'
'அய்யோ சரி சாப்பிடப் போங்க..'
'முடியாதே. சும்மா தான் நெனச்சேன். கைல காசு இல்ல.'

'இந்த புத்தகத்தையே 3 , 4 வாட்டி படிச்சிருப்பேன். இன்னும் சுவாரசியம் போகல..'
'எப்படி? போர் அடிக்காதா..'
'இதில் தான் கடைசி பக்கம் கிழிஞ்சுடுச்சே .. அதனால் இன்னும் முடிவு தெரில'

இவை சின்ன சாம்பிள் தான். படத்தில் இன்னும் நிறைய உள்ளது. கதையை குறும்பட வடிவில் தர இயக்குனர் நன்கு உழைத்திருக்கிறார் எனத் தெரிகிறது. திரைக்கதை அமைத்த ஆறு.அண்ணல் அவர்களும் பாராட்டுக்குரியவர். ஒளிப்பதிவு விஜய் திருமூலம். இசை லக்ஷ்மி நாராயணன்.
படத்தில் சிறு குறைகளும் இருக்கவே செய்கின்றன. தொழில்நுட்ப விஷயங்களில் இப்படத்தை விமர்சித்தல் சரியல்ல. பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த வசதிகளை வைத்துக் கொண்டு நன்றாகவே செய்திருகிறார்கள். படத்தின் கதையில் தான் சில நெருடல்கள். ரவிக்கும் அந்த பெண்ணுக்குமான உறவு சரியாக register செய்யப் படவில்லையோ எனத் தோன்றுகிறது. அதற்கு குறும்படத்தின் கால அளவும் காரணமாக இருக்கலாம். அந்த பெண் பாடும் பாடல் ஒன்று படத்தில் வருகிறது. அப்பாடல் தேவையா என விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், வைத்த பாடலின் இசையாவது நன்றாக இருந்திருக்கலாம். அப்பாடல் கொஞ்சம் அயர்ச்சியே தருகிறது. 20 நிமிடம் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு கடைசி காட்சியில் பெரிதாக உடைந்து விடுகிறது. ரவி பழைய தமிழ் சினிமா பாணியில் 'என் ராஜாங்கம் இன்றுடன் முடிகிறது' என படத்தின் தலைப்பை சொல்வது தேவையற்றது. மேலும் அந்த சோகமான முடிவே திணிக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது. ஒரு நல்ல குறும்படம் இப்படிப்பட்ட குறைகளால் முழுமையான பாதிப்பை ஏற்படுத்தாமல் போகிறது.
இம்மாதிரி கதைகள் சினிமா படிப்பவர்களுக்கும், புத்தி ஜீவிகளுக்கும் மிகவும் பிடிக்கலாம். எளிய மக்களை இப்படம் சுவாரசியமான குறும்படம் என்ற அளவிலே கடந்து சென்று விடும். இன்னும் கொஞ்சம் கதையை செதுக்கி இருந்தால் இக்குறும்படம் தனிமையை சிறப்பாய் பேசிய குறும்படமாயிருக்கும். அருள் எழிலன் என்னும் நல்ல படைப்பாளி இதை நிச்சயம் ஒத்துக் கொள்வார்.
-ஸ்ரீகணேஷ்