தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Monday, May 09, 2016

தண்ணீர் (நாவல்) - அசோகமித்திரன் (முன்னுரை மற்றும் முதல் இரண்டு அத்தியாயங்கள்)

தண்ணீர் (நாவல்) - அசோகமித்திரன்
(முன்னுரை மற்றும் முதல் இரண்டு அத்தியாயங்கள்)
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகுஎனக்குத் தெரிந்து 1948-லிருந்தே சென்னையில் தண்ணீர் ஒரு கவலைப்பட வேண்டிய பொருள்தான். தனித்தனி வீடுகள், கிணறுகள் ஆனால் தண்ணீர் குடிக்கும்படியாக இருக்காது. ஆதலால (அன்று கார்ப்பரேஷன்) குழாய்த் தண்ணிரை நம்பித்தான் சென்னைவாசிகள் எல்லோரும் இருந்தார்கள். தெருக் குழாய்கள் எனப் பல இருந்தன. அவற்றில் எந்நேரமும் தண்ணீர் வரும். தண்ணிருக்கென்று யாரும் தனியாகச் செல வழித்தது கிடையாது. குழாய்த் தண்ணிரை நேரடியாகவே பயன்படுத்துவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது குழா யடியில் உள்ளங்கையைக் குவித்துக் கொண்டு தண்ணீர் குடித் திருக்கிறேன். ரயிலில் வெளியூர் போவதாக இருந்தால்தான் ஒரு கஜாவில் தண்ணீர் எடுத்துப் போவார்கள். வாழ்க்கையில் உன்னதமானதெல்லாம் இலவசம் என்று ஒரு பழமொழி அன்று உண்டு. அன்று அது உண்மை.
முபது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீர் வரி விதிக்கக்கூடியதாகவும் விலை கொடுக்க வேண்டியதாகவும் மாறத் தொடங்கிற்று. இந்த மாற்றம் மிக மெதுவாக வந்தது. இது எளிதில் புலப்படவில்லை. உண்மையில் அன்று ਾਂ மக்கள் அனுபவித்த பல இன்னல்கள் இந்த மாற்றம் வந்து கொண்டிருப்பதை உணராததுதான். தண்ணீர் விநியோகமும் ஒழுங்குபடவில்லை. இன்று சென்னை நகரில் குடிசைவாசிகள் உள்படத் தண்ணிருக்குக் கட்டணம் ஏதாவது ஒரு வகையில் கட்ட வேண்டியிருக்கிறது. கூரையிட்ட வீடுகளில் ஒரு குடும்பம் நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை மாதாமாதம் தண்ணிருக்கே செலவழிக்க வேண்டியிருக்கிறது. பத்து மாடி, பன்னிரண்டு மாடிகளில் வசிக்கும் செல்வந்தர்கள்(!) மழை பெய்தாலும்தண்ணி | 5
-________________பெய்யாவிட்டாலும் தண்ணீர் வசதிக்காக ஏராளமாகச் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
'தண்ணீர் நாவல் இதெல்லாம் பற்றியல்ல. ஆனால் இவற்றுக் கான அறிகுறிகள் கொண்டதுதான். இதெல்லாம் நான் திட்டமிட்டு எழுதவில்லை. ஊர் பெயர் தெரியாத ஒரு பெண் குடத்தை வைத்துக் கொண்டு அலைவதைத் திரும்பத் திரும்பப் பார்த்ததன் விளைவாகத்தான் கதை எழுதப்பட்டது.
இந்த 2006-ம் ஆண்டில் இந்தத் தண்ணீர் நாவலுக்கு எப்படிப் பொருத்தம் தேடுவது? தண்ணீர் மூலம் இருக்க முடியாது. ஆனால் இந்தக் கதையிலுள்ள நெருக்கடிகள் வேறு வேறு பொருள்களுக்காகவும் காரணங்களுக்காகவும் நிகழ்கின்றன. நிர்ப்பந்தங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. முயற்சி, வெற்றி, தோல்வி, நிராசை, இன்னமும் வாழத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுப்பும் தருணங்கள் இருந்து கொண்டுதான்உள்ளன.
'தண்ணீர் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு என் முயற்சியினால் அல்ல. இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் லட்சுமி ஹாம்ஸ்ட்ராம் அவர்களிடமிருந்து கடிதம் வந்தபோது வியப்பாக இருந்தது. நான் சரி என்று சொல்லித் தபாலெழுதுவதற்குள் ஒர் இங்கிலாந்து பிரசுர நிறுவனத்திலிருந்து கடிதம். ஒரு மாதத்தில் நூலே வெளிவந்துவிட்டது!
இந்தப் புதிய, தமிழ்ச் செம்பதிப்பு நூலை வெளியிடும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் வாசகர்களுக்கும் மனநிறைவு அளிக்க வேண்டும். அதுவே எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.
சென்னை, நவம்பர் 2005 அசோகமித்திரன்
6 அசோகமித்திரன்

1
அரை மணி நேரமாக வீட்டுக்காரர்கள் பம்பு அடிப்பதைப் படுத்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்த ஜமுனா, பம்பு சத்தத்தில் சிறு மாறுதல் ஒன்று கேட்டவுன் தன்னை உதறிக் கொண்டு எழுந்தாள். அறையின் விளக்கைப் போட்டு அங்கிருந்த இரு பித்தளைத் தவலைகளையும் எடுத்துக் கொண்டு கீழே பம்பு இருக்கும் இடத்துக்கு ஓடினாள்.
ஆக்கம்பக்கம் வீடுகள் எல்லாவற்றிலும் பம்பு அடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தெரு, அடுத்த தெரு, அதற்கடுத்த தெரு எல்லாவற்றிலும் ஒவ்வொரு விட்டிலும் அந்தந்தத் தண்ணீர் பம்புக்கேற்ற ஒலிகளைத் தனித் தனியாகவும் ஒன்று சேர்த்தும் அந்த நேரத்தில் தெளிவாகக் கேட்க முடிந்தது. சில வீடுகளில்தான் விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. ஒரு விளக்கு அங்கு ஏற்படுத்திய மங்கலான வெளிச்சத்தில் வீட்டுக்கார அம்மாள், அவளுடைய இரு பெண்கள், மகன் இத்தனை பேரும் பம்பைச் சூழ்ந்துகொண்டு இருப்பதை ஜமுனாவால் பார்க்க முடிந்தது. அவர்கள் பக்கத்தில் அவளும் போய் நின்றாலும் அவர்கள் அவளை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. பம்பு ஒலியில் சிறு மாறுதல் ஏற்பட்டு மேலே வருகிற மாதிரி இருந்த தண்ணீர் மீண்டும் கீழே போய்விட்டது. அதை இழுத்துவர வெறி பிடித்தவர்கள்போல் அவர்கள் அங்கு நின்று கொண்டிருந் தார்கள். பம்பை மாறி மாறி அடித்தார்கள். குப்பென்று தண்ணீர் பீறிக் கொண்டு வந்தது. வந்த தண்ணீர் கீழே சிதறிப் போய்விடாமல் முன்பே வீட்டுக்கார அம்மாள் அகலமான வாளி வைத்திருந்தாள். கால் வாளி நிரம்பியவுடன் தண்ணிரை வாளியுடன் சுழற்றி இன்னொரு பாத்திரத்தில் மாற்றிவிட்டு வாளியை மீண்டும் பம்படியில் வைத்தாள். பிடித்த தண்ணிரைச்
தண்ணி | 7
________________
-
—l
சிறிது வெளிச்சத்தில் எடுத்துப் போய்ப் பார்த்தாள். துரு கலந்த அழுக்குத் தண்ணிராகத்தான் அது இருந்தது. இருந்தும் அந்த அம்மாள் அதைக் கீழே கொட்டவில்லை.
இப்போது தண்ணீர் தடங்கல் இல்லாமல் வந்து கொண்டிருந்தது. வீட்டுக்காரர்கள் ஒரு தவலை பிடித்து, இன்னொரு தவலைக்குத் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டில் மற்ற குடித்தனக்காரர்களும் ஆளுக்கு இரண்டு மூன்று பாத்திரங் களுடன் அங்கு வந்து நின்றார்கள். ஜமுனா கூடுமான வரையில் பம்புக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள். ஒரு குடித்தனக்கார அம்மாள் அதற்குள் எப்படியோ எந்தத் தண்ணிரிலோ குளித்துவிட்டு, புடைவையைப் புடைவையாகக் கட்டிக் கொள்ளாமல் வெறுமனே உடலில் சுற்றிக் கொண்டு தலையிலும் ஈரத் துணியை முடிந்து கொண்டு வந்திருந்தாள். ஜமுனாவை, "ஏன் இடிச்சுண்டு நிக்கறே? கொஞ்சம் தள்ளித்தான் நில்லேன்?" என்றாள். ஜமுனா சிறிது தள்ளி நின்றாள்.
வீட்டுக்காரர்கள் மூன்றாவது தவலைக்கு அடித்துக் கொண் டிருந்தார்கள். ஈரத்துணி அம்மாள், "இதை அடிச்சுண்டப்புறம் கொஞ்சம் எனக்கு விடுங்கோ, நான் ஒரு சின்னத் தவலை மட்டும் மடியா பிடிச்சுண்டு போயிடறேன்' என்றாள். வீட்டுக்காரர்கள் பதில் ஒன்றும் தராமல் பம்பு அடித்துக் கொண்டிருந்தார்கள். ஈரத்துணி அம்மாள் பம்பை நெருங்கிய வாறு நின்றாள். ஜமுனா, 'நாங்கள் எல்லாம் முன்னமேயே வந்து நிக்கறது தெரியலே?" எனறு உரக்க முணுமுணுத்தாள். ஈரத்துணி அம்மாள், 'நீ இங்கே இல்லைன்னாலும் இரண்டு இடம் ஒடியாடிக் கொண்டு வரமுடியும். எம்மாதிரிக் கிழடு கட்டைக்கு முடியுமா? என்றாள். iட்டுக்காரப் பையன் சொன்னான். 'நாங்க பத்து பேர் குளிச்சுக் குடிக்கணும். கொஞ்சம் தள்ளியே இருங்கோ என்றான். இன்னொரு குடித்தனக்கார அம்மாள், 'எல்லாரும் தான் குளிக்கணும். நீங்களே தண்ணி அடிச்சுண்டிருந்தா மத்தவங்கள்லாம் எங்கே ஒடறது?’ என்று கேட்டாள்.
வீட்டுக்கார அம்மாள் சொன்னாள், 'நீங்கள்லாம் பொழுது விடியறதுக்குக்கூடக் காத்துண்டிருக்காம கிணத்தை இறைச்சுக் காலி பண்ணிடறேள். உங்களோட அங்கே போட்டிக்கு நிற்க முடியறதா?” என்றாள்.
8 / அசோகமித்திரன்
ஒரு குடித்தனக்காரர் சொன்னார், ''நான்தான் ஒரு வாரமா சொல்லிண்டிருக்கேன். ராத்திரியானவுடன் தாம்புக் கயித்தைக் கழட்டிட்டுக் கார்த்தாலே எல்லோருக்கும் ஆளுக்கு இரண்டு வாளியா கிணத்துத் தண்ணிரை நீங்களே பிரிச்சுக் கொடுத்துடுங் கோன்னு. நீங்க அது செய்யறதில்லே, நாங்க ஒத்தருக்கொருத்தர் முட்டிண்டிருக்க வேண்டியிருக்கு."
விட்டுக்காரர்களின் மூன்றாவது பாத்திரம் முடிந்தவுடன் ஜமுனா தன்னுடைய தவலையை இடித்துக் கொண்டு பம்படியில் வைத்தாள். அதை இடித்துக் கொண்டு ஈரத்துணி அம்மாள் அவள் பாத்திரத்தை வைத்தாள். ஜமுனா, 'கொஞ்சம் தள்ளியிருங்க மாமி என்று கடுமையாகச் சொல்லி அந்தப் பாத்திரத்தை நகர்த்திவிட்டுத் தன் தவலையை வைத்து பம்பு அடிக்க ஆரம்பித்தாள். நீயே அடிச்சுண்டு போ, சனியனே என்று ஈரத்துணி அம்மாள் சொன்னாள்.
'யாரை சனியன்னிங்க? நீங்கதான் சனியன். வார்த்தையைப் பார்த்து விடுங்க' என்று ஜமுனா சொன்னாள். அவளுக்குத் திக்கென்றது. தண்ணீர் வெகுவாக நுரைத்துக் கொண்டு வந்தது. குழுமியிருந்தவர்கள் எல்லாரும், 'அடி, அடி. வேகமா அடி!' என்றார்கள். முந்தின தினம் பத்து தவலை அடித்த பிறகுதான் இப்படி நுரை வந்தது. ஜமுனா இரு கையாலும் தன் பலம் கொண்ட அளவுக்கு வேகமாக அடித்தாள். ஆனால் தண்ணீர் போய்விட்டது. தண்ணீர் நின்றேவிட்டது. எல்லோரும் மறு பேச்சோ சண்டையோ போடாமல் அவரவர் பாத்திரத்தைத் தாக்கிக் தொண்டு அந்தத் தெருவின் கோடி வீட்டுப் பக்கம் ஓடினார்கள்.
தண்ணி | 9
________________
2
'இன்னிக்கும் தண்ணி இல்லையே?’ என்று உதட்டுச் சாயம் பூசியவண்ணம் சாயா கேட்டாள். ஜமுனா பதில் சொல்லாமல் காலி தவலைகளைக் கீழே வைத்துவிட்டு, மூடியிருந்த உயர டிரம்மைத் திறந்து பார்த்தாள். 'இரண்டு லோட்டா தண்ணி தான் எடுத்துண்டேன். பயந்து போயிடாதே என்று சாயா சொன்னாள்.
ஜமுனா சொன்னாள், "இன்னிக்கு இதைக் காலி பண்ணலேன்னா நாத்தமெடுத்துப் புழுகூட வந்துடும்."
'நான் இன்னிக்கும் குளிக்காம ஒடிகொலோனைப் போட்டுண்டு ஏமாத்தறேன். நாளைக்கு இங்கே முடியலேன்னா ஆபீசிலியே யாவது குளிச்சுடப் போறேன்."
"நீயாவது ஆபீஸ்லே குளிக்கலாம். நான் எங்கே போய்க் குளிக்கறது?"
சாயாதன் தலைமுடியை இரு கைகளால் உயரத் தூக்கிச் சரி செய்தவண்ணம் ஜமுனாவை அகலக் கண் விரித்துப் பார்த்தாள். பிறகு, "பாட்டி வீட்டுக்குப் போய்க் குளிக்கலாம் என்றாள்.
'பாட்டி வீட்டுக்கு நான் போகவே மாட்டேன்' என்று ஜமுனா சொன்னாள். 'பாட்டி நிச்சயம் அம்மாவைக் கூட்டிண்டு போயிடுன்னு கூச்சல் போடுவா."
'பாவம், அம்மா என்றாள் சாயா.
'ஏன், நீ அழைச்சுக் கொண்டு வைச்சுக்கோயேன்என்று ஜமுனா
சொன்னாள்.
10 | அசோகமித்திரன்
- - - - ~
'எனக்கு வீடு கிடைச்சவுடனே நிச்சயம் அம்மாவை அழைச்சு வைச்சுக்கத்தான் போறேன். அம்மா வீட்டிலே இருந்தா முரளியையும் கொண்டு வந்து வெச்சுக்கலாம்.'
'முரளியை இப்பக்கூட நான் பாத்துக்க மாட்டேன்னு சொல்லலே. அந்தக் குழந்தையாலே எனக்கு ஒண்ணும் கஷ்டம் கிடையாது.”
சாயா பதில் சொல்லாது பெருமூச்சு விட்டாள். பிறகு, டீ. நீ கலந்துடறியா?" என்று கேட்டாள்.
ஒரு சிறு செப்புத் தோண்டியில் பாதியளவு குடிதண்ணீர் இருந்தது. ஜமுனா ஸ்டவ்வை மூட்டி இரண்டு தம்ளர் தண்ணிரை ஒர் அலுமினிய சாஸ்பானில் சுட வைத்தாள். சாயா அலங் காரத்தை முடித்துக் கொண்டு சுவர் ஆணி ஒன்றில் தொங்க விட்டிருந்த பையிலிருந்து ஒரு டப்பாவை எடுத்தாள். அதில் அதற்கு முன்தினம் வாங்கி வைத்திருந்த கடை ரொட்டி இருந்தது. "நீயும் இப்பவே எடுத்துக்கறயோல்லியோ? " என்று சாயா கேட்டாள். ஜமுனா, கடை ஆவக்காய் ஊறுகாய் பாட்டிலை அலமாரியிலிருந்து எடுத்தாள். அவளும் இரண்டு ரொட்டி வில்லைகளை எடுத்துக் கொண்டு ஒன்றின்மேல் ஊறுகாய் போட்டுக் கொண்டாள்.
சாயா ரொட்டி தின்று முடிக்கும்போது, 'இன்னிக்குச் சாப்பாடு அனுப்பறப்போ ஞாபகமா சக்கரை ஒரு பொட்டலம் வைச்சு அனுப்பு. எங்க கேண்டீன்லே தர காபிக்கு சக்கரையே போடாம கொடுத்துடறான் என்றாள்.
'சரி என்று ஜமுனா சொன்னாள். 'இனிமே சமைக்க ஆரம்பிக்கணும்' என்றும் சொன்னாள்.
"சமையலுக்காவது தண்ணி இருக்கா? என்று சாயா கேட்டாள்.
ஜமுனா செப்புத் தவலையைச் சாய்த்துப் பார்த்து உதட்டைப் பிதுக்கினாள். 'பின்னே என்ன பண்ணப் போறே? என்று சாயா
கேட்டாள்.
"அந்தக் கோடி வீட்டிலே போய்த்தான் கொண்டு வரணும்-அங்கே இதுவரைக்கும் நான் போகலை இல்லை, வீட்டுக்கார அம்மாளைக் கேட்டு இரண்டு சொம்பு தண்ணி கொண்டு வந்துக்கணும்."
'கோடி வீட்டிலே மட்டும் எப்படித் தண்ணி வரது?"
தண்ணி | 11
________________
'என்னமோ அந்த ஒரு வீட்டிலேதான் கொஞ்சம் தண்ணி வரதாம். நீ ஆபீசுக்குப் போனப்புறம் அங்கேதான் போகப் போறேன்."
''நான் இன்னும் நாலு நாள் பாக்கப் போறேன். அப்பவும் தண்ணிக்கு இப்படித்தான் தொங்கணும்னு இருந்தா நான் பேசாம ரெட்டி ஹாஸ்டல்லே போய்ச் சேந்துடப் போறேன்.'
ஜமுனா பதில் சொல்லவில்லை. அந்த ஹாஸ்டசில் வேலைக்குப் போகாத பெண்களுக்கு இடம் கிடையாது. ஜமுனா, கொதிக்கும் தண்ணிரில் இரண்டு ஸ்பூன் தேயிலையைப் போட்டு சாஸ்பானைக் கீழே இறக்கி வைத்துவிட்டு ஸ்டவ்வை ஊதி அணைத்தாள். மண்ணெண்ணெய் புகை குப்பென்று வந்தது. 'நீ ஹாஸ்டலுக்குப் போ. நான் ஊர் மேயப் போறேன்' என்று ஜமுனா சொன்னாள்.
'உன்னை யாரு ஊர் மேயப் போகச் சொன்னா? இந்த மெட்ரிக் பரீட்சையை ஒரு தடவை குண்டுர் போய் எழுதுன்னு எவ்வளவோ சொன்னேன். நீ அந்த பாஸ்கர் ராவ் உன்னைப் பெரிய ஹீரோயினா பண்ணிடப் போறான்னு அவன் பின்னாலே ஒடினே. கல்யாணம் ஆனவனை நம்பி எவளாவது ஒடுவாளா? இதெல்லாம் இன்னும் சொல்லிண்டிருக்கான்னு தானே பாட்டி வீட்டுக்கு நீ போகாம இருக்கே?"
'அவன் கல்யாணம் ஆனவன்னு எனக்குத் தெரியாது." 'அவன் மூஞ்சியிலேதான் அதை எழுதி ஒட்டி வைச்சிருக்கே.'
'நீ மட்டும் என்ன வாழ்ந்தே?"
'வாழ்ந்தேனோ இல்லியோ, முரளிக்கு அப்பான்னு ஒருத்தன் உண்டு. எங்களுக்குக் கல்யாணம்னு ஒண்ணு இருந்தது. இப்பவும் அவர் மிலிட்டரிலேந்து ரிலீஸ் பண்ணின்டு வந்தாலோ, இல்லே இங்க மெட்ராஸ் பக்கம் போஸ்டிங் வாங்கிண்டு வந்தாலோ நாங்க ஜாகை வைச்சுக்கத்தான் போறோம்."
சாயா டீ குடித்துவிட்டு ஏழேகாலுக்கு அவள் ஆபீசுக்குக் கிளம்பிப் போனாள். அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு ஜமுனாவும் ஒரு தவலையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள். சாயாவின் செருப்பின் குதிகால் மட்டும் சிறிதாவது உயரம் குறைவாக இருந்தால் அவள் நடையில் இவ்வளவு நெளிவு இருக்காது என்று ஜமுனாவுக்குத் தோன்றியது.
12 | அசோகமித்திரன்
3

கோடி வீட்டுப் பம்படியில் நின்ற பெண்களில் நடுநாயகமாக நின்ற அந்தக் குண்டு டீச்சரம்மா, ஜமுனாவைப் பார்த்து, 'வாடியம்மா வா, உன்னை இன்னும் இங்கே பாக்காமே இருந்ததிலே என் கண்ணே பூத்துப் போச்சு' என்றாள். ஜமுனாவுக்கு வெட்கமாக இருந்தது. 'உன் தவலையை அந்த வரிசையிலே கோடியிலே வைச்சுட்டு நீயும் இப்படி கொலு நில்லு என்று டீச்சரம்மா சொன்னாள்.
அந்த வீட்டுக்கார அம்மாள் வாசல்படியில் ஒரு முக்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். 'இதோ பாரு டீச்சரம்மா, சரியா எட்டு மணிக்கு பம்பை பூட்டிச் சாவியைக் கையில் கொடுத்துடு. நான் இப்படியே இங்கே நின்னுண்டிருந்தா எப்ப என் குழந்தை குட்டிகளுக்கு சோத்தைப் பொங்கிப் போடறது? என்று சொன்னாள்.
"உங்களை யாரு இங்கேயே இருக்கச் சொன்னது? உங்களுக்கு இன்னும் இரண்டு பாக்கெட் தண்ணி வேணுமா, நான் அடிச்சுத் தரச் சொல்றேன். நீங்க உள்ளே போய் சமையல் பண்ணி எங்களுக்கும் கொஞ்சம் போடுங்கஎன்று டீச்சரம்மா சொன்னாள். அங்கே நின்றிருந்தவர்கள் சிரித்தார்கள். வீட்டுக்கார அம்மாள் கீழே இறங்கி வந்து டீச்சரம்மா கன்னத்தைக் கிள்ளினாள். டீச்சரம்மா அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள்.
டீச்சரம்மா சொன்னாள், 'உம், உம். அடுத்தது அடுத்தது. ஏய் குட்டி எங்கே உன் பக்கத்து வீட்டு மைனரை நினைச்சுண்டு கனா கண்டுண்டு இருக்கே நகர்த்தி வை, உன் அண்டாவையோ குண்டாவையோ.
தண்ணி | 13