தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, May 16, 2016

ம் - ஷோபா சக்தி (ஒரு சிறு பகுதி)

ம் - ஷோபா சக்தி (ஒரு சிறு பகுதி)
சிறிய புஷ்பம்
281 ம்
பட்டுவேட்டி, நஷனல், சால்வை சகிதம் இரண்டு புதியவர்கள் ஒரு நாள் காலையில் பனைத்தீவு படகுத் துறையில் வந்திறங்கினார்கள். அவர்கள் இருவரும் நடுத்தர வயதினராகவும் ஒங்கு தாங்கான ஆண்பிள்ளைகளாகவும் இருந்தார்கள். அவர்கள் ஏர்னஸ்டின் வீட்டை சனங்களிடம் விசாரித்தார்கள். ஏர்னஸ்டின் வீட்டுக்கு அவர்கள் சென்ற போது ஏர்னஸ்டும், மரியாளும், மார்த்தாளும் பாட சாலைக்குச் சென்றிருந்தார்கள். வந்த இருவரும் சிறிய புஷ்பத்திடம் நேசகுமாரனைக் குறித்து விசாரித்தார்கள். அவள் அவன் பிலிமத்தலாவ இறையியல் கல்லூரியில் படிப்ப தாகக் கூறினாள். வந்தவர்கள் சிரித்துவிட்டுத் தமது இடுப்பு வேட்டிக்குள்ளிருந்து கைத்துப்பாக்கிகளை உருவி எடுத்தவாறே வீடு புகுந்து மூலைக்குமூலை தேடினார்கள். பின் வீட்டினுள் அமர்ந்தவாறே ஏர்னஸ்டைக் கூட்டிவரு மாறு சிறிய புஷ்பத்திற்கு உத்தரவிட்டனர். அவள் துடித்துப் பதைத்து ஏர்னஸ்ட் தலைமைஆசிரியராய் இருக்கும் அரசாங்கப் பாடசாலையை நோக்கி ஓடினாள். வந்தவர்கள் இரகசியப் புலனாய்வுப் பொலிசார்.
ஏர்னஸ்ட்டை சிறியபுஷ்பம் கூட்டிவரும் போது ஏர்னஸ்டின் அயல் அட்டத்தைக் கூட்டி வைத்துப் பொலி சார் நேசகுமாரன் குறித்து விசாரித்தார்கள். அந்தச் சனங் களுக்கு மத்தியில் வைத்து ஏர்னஸ்டின் வேட்டி உரிந்து விழ விழ ஏர்னஸ்டை உதைத்து நேசகுமாரனைக் குறித்து விசாரித்தார்கள். பொலிசார் சொல்லித் தான் நேசகுமாரன் தலைமறைவான கதையை ஏர்னஸ்ட்டும் சிறிய புஷ்பமும் தெரிந்துகொண்டார்கள். நேசகுமாரன் அங்கு வந்தாலோ, அவனைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்தாலோ, அவனிட மிருந்து ஏதாவது செய்திகள் அனுப்பப்பட்டாலோ உடனடியாக ஊறாத்துறை பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என மிரட்டி விட்டு பொலிசார் போனார்கள். பொலிசார் போனவுடன் வீட்டுக்குள் ஒடிப்போய் அறைக்கதவை மூடிக்கொண்டு உத்தரத்தில் து.ாக்குப் போடப்போன ஏர்னஸ்டைச் சனங்கள் வீட்டின்
ஷோபா சக்தி 29
முகட்டுக் கூரையைப் பிரித்து வீட்டினுள் இறங்கிக் காப்பாற்றினார்கள். ஏர்னஸ்ட் வயிற்றைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதான். அன்று ஏர்னஸ்ட் வீட்டில் சமையல் நடக்கவில்லை. ஏர்னஸ்டின் குடும்பம் தற்கொலைக்கு முயலும் எனக் கணக்குப் போட்ட உறவினர்கள் ஆள் மாறி ஆள் ஏர்னஸ்ட் குடும்பத்துக்கு இரவு பகலாகச் சில நாட்கள் காவலிருந்தனர்.
நேசகுமாரனைத் தாடியோடு யாழ்ப்பாண ι μ6ίύ நிலையத்தில் கண்டதாக இம்மானுவேல் ஏர்னஸ்ட்டுக்குச் சொன்னான். ஏர்னஸ்ட் யாழ்ப்பாண பஸ்நிலையத்தில் மூன்று நாட்கள் அன்னம், தண்ணியில்லாமல் பழி கிடந்தான். இந்தியாவுக்கு ஈருட்டி வியாபாரம் செய்யப்போய் வந்த ஒரு அனலைதீவு வியாபாரி நேசகுமாரனின் சாயலில் ஒருவனைத்தான் திருச்சியில் பார்த்ததாக ஏர்னஸ்டிடம் கூறினான். ஏர்னஸ்ட் உடனே பாளையங்கோட்டையில் படித்துக் கொண்டிருந்த தன் உறவினனுக்கு இது குறித்துத் தந்தி கொடுத்தான். நேசகுமாரனின் சடலம் ஊதிப் பெருத்து பண்ணைப் பாலத்தின் அருகே ஒதுங்கிக்கிடப்பதாகவும் ஒரு செய்தி வந்தது. ஏர்னஸ்ட் போய்ப் பார்த்துவிட்டு வந்தான். இந்தத் தருணத்தில் ஊறாத்துறைப் படகுத் துறையில் வைத்து பவுத்தத்தையும், சிங்களத்தையும் எக்காரணம் கொண்டும் தமிழீழத்துக்குள் அனுமதிக்கமாட்டோம் உடனடியாகப் பவுத்த பாடசாலை நடத்துவதை நிறுத்தாவிட்டால் உங்களைக் கொன்று விடுவேன்' என்று நேசகுமாரன் சிறி லும்பினி வித்தியாலயாவை நடத்தி வருமி புத்த பிக்குகளை மிரட்டியதாக அந்தச் சாதுக்கள் பனைத்தீவில் வந்து சொன்னார்கள். பின் நந்தார் இரவன்று நேசகுமாரன் வந்து சிறி லும்பினி வித்தியாலயவைக் கொழுத்தியதாகத் தாவீதுக் கிழவர் சொன்னார்.
நேசகுமாரன் யாழ்ப்பாணத்துக்கும் ஊறாத்துறைக்கும் இடையில் தான் அலைந்து கொண்டிருந்தான். இரகசிய நண்பர்களின் வீடுகளிலும் பாழடைந்த மண்டபங்களிலும், கோயில் தாழ்வாரங்களிலும் தூங்கினான். பசியும், பட்டினி யும் அவனுடன் அலைந்தன. சீனச் சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இயங்கி பின் கட்சியின் தலைமையுடன் முரண்பட்டு வெளியேறிய டாட்டுவுடன் டாட்டுவின் உண்மையான பெயர் தெரியவில்லை. டாட்டு என்பது கொங்கோ காடுகளில் போரிட்ட போது சே குவேரா தனக்கு
தமிழீழம்

டாட்டு
கலைச் செல்வன்
301 ம்
வைத்துக் கொண்ட பெயராகும் - நேசகுமாரனுக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த கலைச்செல்வனுக்கும் நேசகுமாரனுக் கும் தொடர்பு இருந்தது. அல்லைப்பிட்டியிலுள்ள அவனது வீட்டில் தான் அநேகமான இரவுகளில் நேசகுமாரன் தங்கினான். கலைச்செல்வனின் குடும்பம் உடையார் குடும்பம் அல்லைப்பிட்டியின் முக்கால்வாசி விவசாய நிலங்கள் அவர்கள் வசமே கிடந்தன. நேசகுமாரன் ஒரு பாதிரியார் என்றும் அல்லைப்பட்டி இடிந்த மாதா கோயிலில் ஆராய்ச்சி பண்ணுவதற்காக அவன் இங்கு வந்து போகிறான் என்றும் நேசகுமாரன் கலைச்செல்வனால் அவனது தகப்பனாருக்கு அறிமுகப்படுத்தப்பட்டான். மரம் வல்லிபுரம் தவமிருந்து பெற்ற பிள்ளை கலைச்செல்வன். அந்தப் பரம்பரையிலிலேயே பல்கலைக்கழகத்துக்குச் சென்ற ஒரேயொருவன் கலைச் செல்வன் தான். கலைச்செல்வன் எது சொன்னாலும் மரம் வல்லிபுரத்துக்கு அது வேதவாக்கு அவன் படித்த பொடியன் செய்தால் சரியாய் தான் இருக்கும் என்பது மரம் வல்லிபுரத்தின் நிலைப்பாடு. சுவாமி சுவாமி என்று மிக மரியாதையுடன் வல்லிபுரம் நேசகுமாரனோடு பழகி வந்தான்.
அமைப்பின் முதலாவது மாநாடு சென்னையில் நடந்தபோது டாட்டு மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகத்துக்குப் போய் வந்திருந்தான். வந்தவன் நேசகுமாரனுக்கு நம்பிக்கைகளாகத் தின்னக் கொடுத்தான். லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி என்று எல்லா இடங்களிலுமுள்ள தமிழர்களிடம் இவர்களது அமைப்பு வேலை செய்வதாகவும் விரைவிலேயே இவர்களுக்காக உத்தரப்பிரதேசத்திலே ஒரு பயிற்சி முகாமை இந்திய அரசாங்கம் தொடங்கவிருப்பதாகவும் பயிற்சிக்கு அனுப்பப்படும் முதலாவது அணியில் நேசகுமாரன் இருப்பான் எனவும் டாட்டு உறுதி கூறினான். அதுவரைக்கும் முடியுமான அளவுக்கு அமைப்பை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் பணி டாட்டுவால் நேசகுமாரனுக்குக் கொடுக்கப்பட்டது.
நேசகுமாரன் சோறு தண்ணியில்லாமல் தாடியும் சிவப்பு மட்டைப் புத்தகங்கள் நிரம்பிய பையுமாகக் கிராமங் கிராம மாக இரவுகளில் அலைந்தான். சுடலைகளிலும் பற்றைக் காடுகளுக்குள்ளும் இளைஞர்களைச் சந்தித்துப் பேசினான். கலைச்செல்வன் நேசகுமாரனின் வலது கரமாக இயங்கினான். அவனின் புண்ணியத்தில் தான் அவ்வப்போது செலவுக்கு
ஷோபா சக்தி 131
அய்ந்து ரூபாய், பத்து ரூபாய் நேசகுமாரனுக்குக் கிடைத்தது. நேசகுமாரன் இறையியல் கல்லூரியில் படித்த காரணத் தாலோ என்னவோ அவனுக்குப் பிரசங்கம் கை வந்த கலை யாக இருந்தது. வாயில் நுரை தள்ள காற்புள்ளி, அரைப் புள்ளி, முற்றுப்புள்ளி இல்லாமல் அவன் நாக்குத் துடித்து. முந்நூறுக்கும் குறைவான தோழர்களுடனேயே பிடலும், சேகுவேராவும் ஹவானாவைக் கைப்பற்றினார்கள் என்று அவன் சலிப்பில்லாமல் திரும்பத் திரும்பக் கூறிவந்தான். மூங்கில் மரங்களைக் கயிறுகளால் வளைத்துக் கட்டி பொறி அமைத்த வியட்நாம் மக்கள் அமெரிக்காவின் நவீன விமா னங்கள் வியட்நாம் காடுகளில் பறக்கும்போது மூங்கில் களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை வெட்டிவிட விசையு டன் நிமிர்ந்த மூங்கில் மரங்கள் விமானங்களை வீழ்த்தின என்றான். ஒரு மாலையில் ஊறாத்துறை ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து துண்டுப்பிரசுரங்களை வழங்கியபோது நேசகுமாரன் அவனின் பனைத்தீவைச் சேர்ந்த சிறிகாந்தமலரைத் தாதி உடையில் அங்கே கண்டான். சிறிகாந்தமலர் நெடுநெடு வென வளர்ந்த ஒல்லியான சிவந்த பெண். அவளுக்கு இருபத் தைந்து வயதுக்கு முன்னே பின்னே இருக்கலாம். சிறிகாந்த மலர் சுவாமி என்று அன்புடன் நேசகுமாரனைக் கூப்பிட்டுப் பேசினாள். சிறிகாந்தமலர் ஊறாத்துறைத் தாதிகள் விடுதியிலேயே தங்கியிருந்தாள். நேசகுமாரன் வெவ்வேறு தினங்களில் அவளுடன் இரண்டு மணிநேரங்கள் மட்டுமே பேசினான். விடுதலை ஆவியால் ஆட்டுவிக்கப்பட்டவனாக ஒரு கடுகதிப் புகையிரதம் ஒடும் தாவரகதியில் அவன் பேசப்பேச சிறிகாந்த மலர் ஒடி ஏறினாள். எழுபத்தேழாம் ஆண்டுக் கலவரத்தை அவன் இரத்தம் சொட்டச் சொட்டச் சித்திரித்துக் காட்டியபோது அவள் கண்ணிர் விட்டாள். இறுதியில் தன்னால் முடிந்தவரை நேசகுமாரனின் அமைப் புக்கு உதவுவதற்கு அவள் முடிவெடுத்தாள். இதைச்சொல்லி விட்டு அவள் தனது இரண்டு கை வளையல்களை அலமாரி யில் இருந்து எடுத்து நேசகுமாரனிடம் கொடுத்தாள். தங் களது இயக்கக் கொள்கைப்படி மக்களிடமும் ஆதரவாளர் களிடம் தங்கம் வாங்கலாமா? இல்லையா? என்பது நேச குமாரனுக்குத் தெளிவில்லை. எனவே அவன் வளையல்களை வாங்க மறுத்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் போது இது குறித்து டாட்டுவிடம் கேட்டுத் தெளிய வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
சிறிக்ாந்த மலரை சந்தித்தது
விடுதலை

321 ம்
தமிழ்நாட்டுக்குப் படகில் சென்றுகொண்டிருந்த போது கடலில் நேவி அடித்து டாட்டு குற்றுயிரும் குலையுயிரு மாகக் கைது செய்யப்பட்டான். டாட்டுவின் தோழன் பார்த்திபன் கொல்லப்பட்டான் என்ற செய்தி கிடைத்தபோது நேசகுமாரன் பார்த்திபனுக்கு ஒரு அஞ்சலித் துண்டுப் பிரசுரத்தை எழுதி வெளியிட்டான். டாட்டு கைதானதோடு அவனுக்கு இயக்கத்துடன் தொடர்புகள் அறுந்துபோயின. யாழ்ப்பாணத்தில் இருந்த டாட்டுவின் தோழர்கள் தங்கள் தங்கும் இடங்களை மாற்றிக்கொண்டிருந்தனர். தாங்களும் தலைமறைவாகி விடலாமா என்று கலைச்செல்வன் கேட்டபோது எனக்கு டாட்டுவில் நம்பிக்கை இருக்கிறது டாட்டு கடைசி வரைத் தோழர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டான் என்று நேசகுமாரன் சொன்னான். நேசகுமாரனின் நம்பிக்கையை டாட்டு கடைசி வரைக்கும் காப்பாற்றினான். தொடர்புகள் அறுந்த போதும் நேசகுமாரன் தன் முயற்சியில் சற்றும் மனந் தளரவில்லை. அவன் அல்லைப்பிட்டிக் கடற்கரையில் தாழம்புதர்களிடையே வைத்து மூன்று நாட்களாகக் கலைச்செல்வனுடன் சேர்ந்து இயக்கவியல் பொருள் முதல் வாதமும் வரலாற்றுப் பொருள் முதல் வாதமும் என்ற தொடக்க நூலை வாசித்து விவாதித்தான். முதலில் என்ன சுவாமி? முதலாம் பக்கத்திலும் பருப் பொருள் இரண்டாம் பக்கத்திலும் பருப்பொருள் மூன்றாம் பக்கத்திலும் பருப்பொருள் என்று கலைச்செல்வன் பஞ்சிப் பட்டாலும் போகப் போகப் படிப்பதில் கலைச்செல்வன் ஆர்வம் காட்டுவதாகவே நேசகுமாரனுக்குத் தோன்றியது.
ஒரு மதியம் கலைச்செல்வன் பெரிய கடையிலிருந்து ஊருக்கு வந்தபோது பஸ் அவனைப் பிரதான வீதியிலேயே இறக்கி விட்டது. கலைச்செல்வன் நெல்வயல்களுக்குள்ளாக வரப்புகளின் மீது நடந்து தான் ஊர்மனைக்குள் போக வேண்டும் கலைச்செல்வன் கண்ணெறிந்து பார்த்தபோது கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்களே தெரிந்தன. அவ்வளவு வயல்களும் கலைச்செல்வனின் உடையார் குடும் பத்துக்குச் சொந்தமானவை. வயல்களிலே ஆணும் பெண்ணு மாக விவசாயக் கூலிகள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போதெல்லாம் நாளொன்றுக்கு ஆணுக்கு பத்து ரூபாயும் பெண்ணுக்கு ஏழு ரூபாயும் கூலியாக வழங்கப்பட்டன. கலைச்செல்வன் வயல்வெளியைத் திரும்பவும் பார்த்தான். விவசாயக் கூலிகளை மறுபடியும் பார்த்தான். கொஞ்சம் தலையைக் கீழே குனிந்து தனது மார்பிலிருந்து கால்கள்
ஷோபா சக்தி 133
வரை பார்த்தான். வாயில் எச்சில் குமிழ்கள் உண்டாக்கிக் கொண்டே யோசித்தான். பின் விறுவிறுவென வீட்டை நோக்கி நடந்தான். கலைச்செல்வன் வீட்டுக்கு வந்து உடுப்பும் மாற்றாமல் நில அளவு நாடாவை எடுத்துக்கொண்டு வயல்வெளியை நோக்கி ஒட்டமும் நடையுமாகப் போனான். சற்றுநேரத்தில் கள்ளுத் தவறணையில் இருந்து குடித்துக் கொண்டிருந்த மரம் வல்லிபுரத்துக்கு ஒரு செய்தி கிடைத்து. அவனின் மகன் வயலுக்குள் இறங்கி தொழிலாளர்களை வேலை செய்யவிடாமல் தடுக்கிறான் என்ற செய்தியைக் கேட்டவுடனேயே என்னுடைய மகன் படித்தவன், அவன் எது செய்தாலும் அதில் ஒரு பொருள் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே கள்ளு வயிற்றைத் தடவிக்கொண்டே மரம் வல்லிபுரம் வயல்வெளிக்கு ஆடி அசைந்து போனபோது அங்கே விவசாயக் கூலிகள் கூடிக் கூடி நின்று பேசுவதையும் கலைச்செல்வன் காற்சட்டையை முழங்கால் வரை மடித்து விட்டுக்கொண்டு மும்முரமாக அளவு நாடாவால் வயல் வெளியை அளப்பதையும் கண்டான். எல்லை பிரித்து வயல்களை இந்தத் துண்டு உங்களுக்கு அந்தத் துண்டு அவருக்கு என்று சொல்லிச் சொல்லிக் கைகளைக் காற்றில் சுட்டி விவசாயக் கூலிகளுக்குக் கலைச்செல்வன் நிலங்களை வழங்கிக்கொண்டிருந்தான். மரம் வல்லிபுரத்துக்கு அடிமுடியெல்லாம் பற்றியெழுந்தது. குனிய நிமிர அவனுக்கு உடம்பு வணங்காத போதும் ஆவேசத்தோடு குனிந்து குனிந்து கற்களைப் பொறுக்கி அடேய் துரோகி, படித்த விசரா, என் குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே என்று கத்திக்கொண்டே ஒடி ஒடி கற்களால் எறிந்து கலைச்செல்வனைத் துரத்தினான். மரம் வல்லிபுரத்தின் கல்லெறியைச் சமாளிக்க முடியாத கலைச்செல்வன் வயல்களுக்குள்ளால் ஒட ஆரம்பித்தான். ஒடியவன் மரம் வல்லிபுரத்தின் கல்வீச்சுத் திறன் எல்லையைக் கடந்ததும் ஒரு கணம் நின்று திரும்பி சுட்டு விரலால் தகப்பனுக்குப் பத்திரம் காட்டி கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு நடந்தது தான் உமக்கும் நடக்கும் என்று கடுமையாக எச்சரித்தான். 'யாரடா அவன் கோபாலகிருஷ்ணன்? என்று கேட்டு மரம் வல்லிபுரம் இன்னொரு கல்விட கலைச்செல்வன் விட்ட இடத்திலிருந்து ஓட ஆரம்பித்தான்.
ம்
வல்லி புரம்

ஊறாத் துறை
செயல்
கலைச்செல்வன் இப்போது தனது வீட்டில் தங்கு வதில்லை என்றும் தனது கிராமத்தில் கூலி விவசாயிகள் அமைப்பொன்றைத் தான் கட்டுவதற்கு கடும் முயற்சி செய்து வருவதாகவும் கூலிகளின் வீட்டிலேயே சாப்பிட்டுக் கூலிகளு டனேயே தூங்குவதாகவும் கலைச்செல்வன் நேசகுமாரனுக்குச் சொன்னபோது 'கலைச்செல்வன் புறநிலைகளைப் பரிசீலிக்காது வெறும் அகத்துண்டலுக்கு அடி பணிந்து வருவதாக நேசகுமாரன் கருத்துச் சொன்னான். நேசகுமாரனும் தனது மறைவிடத்தை அல்லைப்பிட்டியிலிருந்து மாற்றிக் கொண்டான். ஊறாத்துறைப் பொலிஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம் மட்டுமே உள்ள ஊறாத்துறை ஆஸ்பத்திரியின் பின் விறாந்தையில் பல இரவுகள் அவன் தூங்கினான். சிறிகாந்த மலர் நோயாளிகளுக்குச் சமைக்கப்படும் சோற்றிலும் கீரையிலும் அவனுக்காகச் சிறிது எடுத்து வைப்பாள். அவன் இரவு எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் காத்திருந்து உணவைக் கொடுத்தாள்.
டாட்டுவின் கைதோடு அமைப்பின் செயற்பாடுகள் யாழ்ப்பாணப் பகுதியில் உதிரிகளின் செயற்பாடாகவே இருந்தது. ஆனால் அமைப்பு இந்தியாவிலும் அய்ரோப்பா விலும் படு தீவிரமாகவே ஒருங்கிணைக்கப்பட்டு இயங்கி வருவதாகச் செய்திகள் கிடைத்தன. நேசகுமாரன் இந்தியா வுக்குச் சென்று அமைப்போடு பேசிவிட்டு வருவது என்று முடிவு செய்தான். கடல் கடப்பதற்கு முன்னதாக ஒரு செயலுக்குத் திட்டமிட்டான். ஊறாத்துறைப் பொலிஸ் நிலையத்தின் மீது குண்டு வீச்சொன்றை நிகழ்த்த அவன் திட்டமிட்டான். கலைச்செல்வனையோ தன்னுடன் தொடர் புடைய மற்ற இளைஞர்களையோ நேசகுமாரன் நம்பத் தயாரில்லை. கலைச்செல்வன் இன்னும் பக்குவமடையாத ஆர்வக் கோளாறுக்காரன் என்பது நேசகுமாரனின் கணிப்பு மற்றவர்களும் இறுதிவரை இரகசியங்களைக் காப்பார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. ஆனால் சிறிகாந்தமலரை நேசகுமாரன் நம்பினான்.
சிறிகாந்தமலருக்குக் குருநகரில் நெருங்கிய உறவுக்காரர்கள்
ஷோபா சக்தி 1 35 சிலர் உண்டு அவர்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பதில் பெயர் போனவர்கள் என்று சிறிகாந்தமலர் சொன்னாள். இந்தத் தடவை சிறிகாந்த மலரிடம் ஒற்றைத் தங்க வளையலைக் கேட்டுப் பெற்ற நேசகுமாரன் அதை விற்றான். சிறிகாந்தமலர் நேசகுமாரனைக் குருநகர் சின்னத் தண்ணித் தாங்கிக்கு அருகிலிருந்த ஒரு சிறிய வீட்டுக்குக் கூட்டிப் போனாள். அந்த வீட்டிலிருந்தவர்கள் கடலில் மீன்களைக் கொன்று பிடிப்பதற்காக எறியப்படும் டைனமட்டுக்களை இரகசிய மாகத் தயாரிப்பவர்கள். நேசகுமாரனுக்காக அவர்கள் ஒரு டைனமட்டைத் தயாரித்தார்கள். நேசகுமாரனுக்கு அந்த டைனமட்டில் திருப்தியில்லை. முதலில் அது மிகவும் சிறியதாக இருந்தது. வெறும் காகிதக் குழாயிலேயே அது தயாரிக்கப்பட்டிருந்தது. தயாரிப்புமுறையைக் கவனித்துக் கொண்டிருந்த நேசகுமாரனின் மனதில் ஒரு திட்டம் தோன்றியது. அவர்களிடம் மூன்று டைனமட்டுகளை வாங்கினான். டைனமட்டுகளுக்காக அவர்கள் பணம் பெற மறுத்து விட்டார்கள். நேசகுமாரனின் தோற்றத்திலிருந்தும் பேச்சிலிருந்தும் அவர்கள் எதையோ ஊகித்திருக்கவேண்டும் காசை மறுத்து நாங்களும் சப்போர்ட் தான் என்று மட்டும் சொன்னார்கள். மூன்று சிறிய டைனமைட்டுக்களையும் ஒரு மாட்டுத் தாள்ப்பையில் சுற்றிக்கொண்டு யாழ்ப்பாண பஸ்நிலையத்துக்கு நேசகுமாரனும் சிறிகாந்தமலரும் வந்தார்கள். ஊறாத்துறை பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் சிறிகாந்த மலர் சுவாமி அதை என்னிடம் தாருங்கள் என்று கேட்டு டைனமைட் பையை வாங்கித் தனது கைப்பைக்குள் வைத்துக்கொண்டு நேசகுமாரன் உட்காரிந்திருந்த இருக்
வழியில் சில நேரங்களில் பொலிசார் பஸ்ஸைச் சோதனை போடுவதும் உண்டு. பொலிசார் அநேகமாக ஆண்களைத் தான் சோதனை செய்வார்கள். சிறிகாந்தமலரின் தைரியத் திலும் எச்சரிக்கை உணர்வாலும் நேசகுமாரன் வெகுவாகக்கவரப்பட்டான்.
மூன்று டைனமட்டுகளையும் உதிர்த்து நேசகுமாரன் அவற்றை ஒன்றாக்கினான். ஒரு கட்டிப்பால் தகரப்பேணியை வாங்கி அதன் மேற்பகுதியில் பத்துச் சதக் குற்றியளவுக்குத் துறப்பணத்தால் துளையிட்டான். பாலை வெளியேற்றியதன் பின்பாகப் பேணியைக் கழுவிக் காயவைத்தான். பின் அந்தத் துவாரத்துக்குள்ளால் உதிர்த்து வைத்திருந்த சக்கையைப் பேணிக்குள் நிதானமாக நிரப்பினான். முடிந்தவுடன்
டைனமட்

தாக்குதல்
361 ம்
துவாரத்துள் கெற்பை நிறுத்தினான். கெற்பை சுற்றித் துளையை சீமெந்தால் அடைத்தான். அவன் தாதிகள் விடுதியில் சிறிகாந்த மலரின் அறையில் வைத்தே இந்த வெடிகுண்டைத் தயாரித்தான். கதவுக்கு வெளியே சிறிகாந்தமலர் காவலிருந்தாள். - х
பொலிஸ் நிலையத்தின் மீது குண்டு வீசுவதற்காக ஒரு அமாவாசை இருளை நேசகுமாரன் தேர்வு செய்தான். முதலில் தனியாகப் போய்த்தான் குண்டு வீச அவன் நினைத்தான். முடியுமான அளவுக்குப் பொலிஸ் நிலையத்தை நெருங்கிக் குண்டு வீச வேண்டும். ஆனால் அப்படி நெருங்கும் போது பொலீசார் கண்டு விட்டாலோ, கண்டு சுட்டுவிட் டாலோ குண்டு வீசும் திட்டம் நிறைவேறாது. ஆகவே ஒருவன் வெடிவாங்கினாலும் மற்றவன் குண்டை வாங்கி வீச வேண்டும். அவன் கலைச்செல்வனையும் அழைத்துச் செல்வதாக முடிவு செய்தான்.
இரவு பதினொரு மணிக்கு ஊறாத்துறை ஆஸ்பத்திரிக்கு முன்பாக நேசகுமாரன் தயாராகக் காத்திருந்தான். கலைச்செல்வன் குறித்த நேரத்திலேயே வந்திருந்தான். நேசகுமாரன் தன் கையில் பொலித்தீன் பையால் சுற்றி வைத் திருந்த வெடிகுண்டையும் தீப்பெட்டியையும் சரி பார்த்துக்கொண்டான். இருவரும் ஒழுங்கைகளுக்குள்ளால் நடந்து சென்று பருத்தியடைப்புப் பகுதிக்குள் நுழைந்தனர். வீட்டு மதில்களோடும் வேலிகளோடும் நிழல்களாக நகர்ந்தனர். பொலிஸ் நிலையம் மங்கிய ஒளியில் கிடந்தது. பொலிஸ் நிலையத்தின் பின்புறத்தில் போடப்பட்டிருந்த முட்கம்பி வேலிக்குக் கீழால் முதலில் நேசகுமாரன் தவழ்ந்தான். முதுகில் முட்கம்பி கீறி எரிந்தது. கலைச்செல்வன் உள்ளே வந்தான்.
இருவரும் வேலியை ஒட்டி அமர்ந்திருந்து நிலைமையை அவதானித்தனர். பொலிஸ் நிலையத்தின் பின்புற வாசலில் ஒரு மங்கிய மின்குமிழ் எரிவதையும் அதன் கீழே ஒரு பொலிசுக்காரக் கிழவன் கதிரையில் சாய்ந்து கிடந்து கால்களை முன்னாலிருந்த மேசையில் போட்டுத் துரங்கி வழிந்துகொண்டிருப்பதும் தெரிந்தது. மழை தூறல் போடத் தொடங்கியது. கலைச்செல்வனை வேலியின் அருகிலேயே விட்டு விட்டுத் தரையோடு தரையாக இருளோடு இருளாக நேசகுமாரன் ஊர்ந்து சென்றான். முடியுமான அளவுக்கு பொலிஸ் நிலையக் கட்டடத்தை நெருங்கிச் சென்றான். இருளுக்கும் வெளிச்சத்துக்குமான கோட்டில் நின்று
ஷோபா சக்தி 37
வெடிகுண்டைக் கொழுத்திப் பொலிஸ் நிலையத்தின் கூரையில் வீசி எறிந்துவிட்டு இருளுக்குள் தாவி விழுந்தான். மின்னலாய் உருண்டவாறே கலைச்செல்வனுக்கு அருகில் போனான். கலைச்செல்வன் மெதுவாக சுவாமி பற்களுக்கு இடையில் ஏதாவது துணியைக் கடியுங்கள். வெடி அதிர்வால் பற்கள் மோதி உடையக் கூடும் என்றான். அவன் ஏற்கனவே தனது பற்களுக்கு இடையில் ஏதோவொரு துணியை வைத்திருந்ததால் அவன் பேச்சு மழலையாய்க் குழறியது. வெடிகுண்டு தயாரித்ததில் தவறோ அல்லது கொழுத்திய திரி மழைத்துறலில் நனைந்து அணைந்ததோ தெரியவில்லை. குண்டு வெடிக்கவில்லை. அது ஒட்டுக் கூரை உச்சியில் விழுந்து டொக். டொக் என்ற சத்தத்துடன் ஒடுகளில் மோதிச் சத்தத்தை எழுப்பியவாறே கீழே வந்து கொண்டிருந்தது. தூங்கி வழிந்து கொண்டிருந்த பொலிசுக்காரன் எழுந்து டேய் யாரடா அவன் கல் எறிவது? என்று சத்தம் போட்டான். |
நேசகுமாரனும் கலைச்செல்வனும் கடற்கரைப் பனைக் கூடலுக்குள் வந்து சேர்ந்தனர். நேசகுமாரனுக்குக் குண்டு வெடிக்காதது ஏமாற்றமாய் இருந்தாலும் சோர்ந்து விடவில்லை. இதை விடச் சிறந்த இன்னொரு இலக்கைத் தன்னால் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள் இருந்தது. கலைச்செல்வன் ஏன் சுவாமி குண்டு வெடிக்க வில்லை என்று கேட்டான். அவன் இப்போதும் மழலையில் குழறினான். இன்னும் துணியைப் பற்களுக்கிடையில் இருந்து எடுக்கவில்லையா? என்று நேசகுமாரன் கேட்டதற்கு அப்போதே எடுத்து விட்டேன்' என்று கலைச்செல்வன் மீண்டும் குழறினான். நேசகுமாரன் கலைச்செல்வனை மூஞ்சிக்கு மூஞ்சி நெருங்கிக் கவனித்தான். கலைச்செல்வனின் வாயில் கள் வாசனை அடித்தது. தோழர் குடித்திருக்கிறீர் களா? என்று நேசகுமாரன் கேட்கவும் அய்யோ இல்லை சுவாமி என்று கலைச்செல்வன் குழறினான். அப்படியானால் வாயில் என்ன நாறுகிறது? என்று நேசகுமாரன் கேட்க இரவு தோசையும் தேங்காய்ச் சம்பலும் தின்றேன், அது புளித்த சம்பலாய் இருக்க வேண்டும் அது தான் நாறுகிறது. என்றான் கலைச்செல்வன்.
தோழர் பொய் சொல்லக் கூடாது என்ற புனித விதிகள்
ஒரு இரகசிய இயக்கத்து சூழலில் இருக்க முடியாது எனினும் நாம் நமது எதிரிகளிடம் மட்டுமே பொய் சொல்

குற்றம்
381 ம்
லும் தந்திரத்தைக் கடைப்பிடிக்கலாம். தோழர்களுக்குத் தோழர்கள் பொய் பேசக் கூடாது என்று நேசகுமாரன் சொல்லவும் முதல் பீல்ட் என்பதால் கொஞ்சம் பதற்றமாய் இருந்தது. பதற்றத்தைத் தணிக்க ஒரு கோப்பைக் கள்ளுக் குடித்தேன் சுவாமி என்று கலைச்செல்வன் நேசகுமாரனுக்கு மறுமொழி சொன்னான். நேசகுமாரனுக்கு ஆத்திரம் கொப்பளித்தது. தோழர் கள்ளுக் குடித்துக் கொண்டா நீங்கள் மக்கள் மத்தியில் கட்சி கட்டப் போகிறீர்கள்? வெட்கமாயில்லையா?
'மன்னித்து விடுங்கள் சுவாமி, நான் கள்ளுக் குடித்தது இது தான் முதற் தடவை, இது தான் கடைசித் தடவையும்
நான் தனிமனிதன், நீங்கள் ஒரு தனி மனிதன் என்றால் மன்னித்து விடுவேன். ஆனால் நாங்கள் இருவருமே தனி மனிதர்கள் அல்ல. உங்கள் தவறுக்கு நிச்சயமாக அமைப்பு தண்டனை வழங்கும், இல்லாவிட்டால் இயக்கம் நடத்த முடியாது ஒப்புக் கொள்கிறீர்களா? 'ஓம் கலைச்செல்வன்
/
மெளனமானான்.
நேசகுமாரன் கலைச்செல்வனின் சட்டையைக் கழற்ற சொன்னான். கலைச்செல்வன் மறுபேச்சுப் பேசாமல் சட்டையை கழற்றினான். ஒரு பனையைக் கட்டிப் பிடிக்கு மாறு நேசகுமாரன் உத்தரவிட்டான். கலைச்செல்வன் கட்டிப் பிடித்தான். நேசகுமாரன் இடுப்பு பெல்டை அவிழ்த்துக் கலைச்செல்வனின் முதுகில் வீசினான். இரண்டு மூன்று அடிகள் அடித்தவன் நிறுத்தி விட்டு தோழர் நான் செய்வது சரி தானே? என்று கலைச்செல்வனிடம் கேட்டான் சரி என்றான் கலைச்செல்வன். நேசகுமாரன் மீண்டும் கலைச்செல்வனை அடிக்க ஆரம்பித்தான்.
ஷோபா சக்தி 39
செட்டிகாடு இரு மரபும் துய்யவந்த வெள்ளாளர்களின் சாதிக்கொழுப்பு பிரசித்தமானது அவர்களின் சாதிக் கொழுப் பைத் தாழ்த்தப்பட்ட மக்கள் சவால் செய்தபோது கேடானி யலும் அவரின் தோழர்களும் அந்த மக்களுடன் நின்றனர்.
செட்டிகாடு அந்தோனியார் கோயிலின் பெருநாளின் போது செட்டிகாடு வீதிகளில் அந்தோனியார் சொரூபம் எடுத்து வரப்படும். இதைக் கூடு காவுவது என்பார்கள். இந்த அந்தோனியார் சொரூபம் நிற்கும் கூட்டை வெள்ளாள்ர்கள் மட்டும் தான் தொட்டுத் துரக்கலாமாம். மற்றச் சாதியினர் மறுபேச்சுப் பேசாமல் ஆமென் சொல்லிக் கொண்டு பின்னால் அமைதியாக வரவேண்டும். 1983 மார்ச் இருபத்தைந்தாம் நாள் நடக்கவிருக்கும் பெருநாளில் பள்ளர்கள் நாங்களும் தொட்டுக் கூடு துரக்குவோம் என்று அறிவித்தார்கள்.
வெள்ளாளர்கள் மிரட்டிப் பார்த்தார்கள், வேலை தர மறுத்துப் பார்த்தார்கள், இந்த முறை மட்டும் வழமை போலவே பெருநாள் நடக்கட்டும் அதன்பின் பிரச்சனையைப் பேசித் தீர்க்கலாம் எனக் கெளரவமாகக் கெஞ்சிக் கூடப் பார்த்தார்கள். எதுவும் நடக்கவில்லை. மிெருநாளின் போது கலகம் நடப்பதை வெள்ளாளர்கள் விரும்பினார்களோ இல்லையோ கோயிலின் பாதிரி விரும்பவில்லை. அவன் வெள்ளாளர்களிடம் கூடிப் பேசி ஒரு திட்டத்தைக் கூறினான். அவர்கள் அதை ஏற்றுக்கொண்ட பின்பு பேச்சு வார்த்தைக்கு டானியலும் போனார். டானியல் வெளியூரவர் என்ற காரணத்தைச் சொல்லி அவரை உள்ளே விட வெள்ளாளர்கள் மறுத்தனர். டானியல் அமைதியாக வெளியே போய்க் காத்திருந்தார்.
உள்ளே பேச்சுவார்த்தையில் வெள்ளாளர்கள் அந்தோனியார் கோயில் தங்களுடைய சொந்தக் கோயில் என்றனர். தங்கள் நிலத்தில் தங்கள் பணத்தில் கோயில் கட்டப்பட்டது என்றனர். அக்கோயிலில் வெள்ளாளர்
களைத் தவிர வேறு எவருக்கும் உரிமை இல்லையென்றனர்.
பாதிரி நியாயம் உரைத்தான். அது உண்மை கோயில்
செட்டி காடு



டானியல்
401 ம்
உங்களுடையதுதான். ஆனால் இந்த ஏழை மக்களும் கிறிஸ்தவர்கள் தானே! அவர்களுக்கு வழிபடுவதற்கு இந்த ஊரில் வேறு தேவாலயம் கிடையாது:
'உன்னைப்போல் உன் அயலானையும் நேசி என்பது வேதாகமத்தின் சத்தியம். நீங்கள் இந்த ஏழை மக்கள் தங்களுக்கென ஒரு கோயில் கட்ட உதவ வேண்டும்: வெள்ளாளர்கள் பாதிரியுடன் ஏற்கனவே பேசிப் பறைந்து வைத்த மாதிரியே வேறொரு இடத்தில் பத்துப் பரப்புக் காணியைப் பள்ளர்களுக்குக் கோயில் கட்டுவதற்குத் தானமாகத் தர வெள்ளாளர்கள் சம்மதித்தார்கள். இதில் பாரபட்சம் எதுவும் இல்லை என்றும் பள்ளர்களும் அந்தோனியார் கோயிலே கட்டலாம் என்றும் தானும் தன் பங்குக்குக் கட்டப்படும் கோயிலுக்குப் பீடமேற்ற ஒரு புனித அந்தோனியார் சொரூபத்தை இலவசமாகத் தருவதாகவும் பாதிரி சொன்னான். தகவல் வெளியே நின்றிருந்த டானியலுக்குப் போனபோது, அவர் உள்ளே அடாத்தாக வந்து பாதிரியைக் கை எடுத்துக் கும்பிட்டு பத்துப் பரப்புக் காணியும் பள். அந்தோனியாரும் தந்ததற்கு மிக்க நன்றி சுவாமி என்றார்.
பெருநாளுக்கு முதல் நாள் மாலை நேசகுமாரனைச் சிறிகாந்தமலர் சந்தித்தபோது சுவாமி நாளைக்குச் செட்டி காடு அந்தோனியார் கோயிலில் கூடு தூக்கும்போது வெள்ளாளர்கள் ஏதாவது சண்டை வலிக்கக் கூடும் என்றாள். நாளைக்குக் காலையில் நான் அங்கு இருப்பேன் கீழ்ச் சாதிச் சனங்களைக் கூடுதுக்க அனுமதிக்காவிட்டால் நான் அந்த அந்தோனியார் கோயிலைக் குண்டு வைத்துத் தகர்ப்பேன் என்றான் நேசகுமாரன். காலையில் நேசகுமாரன்
செட்டிகாடு அந்தோனியார் கோயிலுக்குச் சென்றபோது
ஜெயக் குமார்
கூடு புறப்படத் தயாராகவிருந்தது. அந்தோனியார் நான்கு வெள்ளாளர்களின் தோள்களில் அமர்ந்திருந்தார். கோயில்
வளவு முழுவதும் வெள்ளையும் சொள்ளையுமாக வெள்ளா
ளர்கள் தேநீர்க் கடைகளிலும் கச்சான் கடைகளிலும் காப்புக் கடைகளிலும் கூடிக் கூடி இரகசியம் பேசிக்கொண்டிருந் தனர். அந்தோனியாருக்கும் அவரைத் தாங்கி நிற்கும் நான்கு வெள்ளாளர்களுக்கும் காவலாய் நான்கு பொலிசுக்காரர் களும் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரும் துப்பாக்கிகளோடு நின்றிருந்தார்கள். நிறைய வெள்ளாளர்கள் பைபிள், செபமாலை எல்லாவற்றையும் வீட்டில் வைத்துவிட்டுக்
ஷோபா சக்தி 141
கத்திகள் பொல்லுகளோடு வந்திருந்தார்கள். இவை எல்லா வற்றையும் பார்த்துக்கொண்டு ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாக எண்ணி முப்பது முப்பத்தைந்து பேர் அந்தோனியாரின் கூடு புறப்படும் வழியை மறித்து வீதியில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களிடையே சிறிகாந்தமலரும் இருந்தாள். எங்களையும் கூடு தூக்க அனுமதிக்காவிட்டால் கூடு புறப்பட நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று அவர்கள் கோசமிட்டார்கள். .
நேசகுமாரன் சனங்களோடு சனங்களாக நின்றிருந்தான். இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மறியல் செய்தவர்களிடம் வந்தான். அவனின் கையில் துப்பாக்கி பளபளத்தது. அவ னோடு கோயில் மூப்பரும் ஊர்ப் பெரிய மனுசனுமான அவுறாம்பிள்ளை தோளில் கிடந்த உத்தரியத்தை எடுத்துத்
தலைப்பாகை கட்டிக்கொண்டும் பட்டு வேட்டி முனையைக்
கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டும் ஒடி வந்தான். அவுறாம்பிள்ளை மறியல் செய்தவர்களிடம் பேசினான். மக்காள் இப்போ என்ன சொல்கிறீர்கள்? தெய்வகாரியத் துக்குக் குறுக்கே நிற்காதீர்கள். அது சாவான பாவம் முதலில் அந்தோனியாரைப் போகவிடுங்கள். நீங்கள் என்னுடைய பள்ளர்கள். உங்களுக்கு நான் பிழையாக நடப்பேனா? நீதி யாகச் செய்வேன். எல்லாவற்றையும் பின்பு பேசிக் கொள்ள லாம். இப்போது கோயிற் காரியத்துக்குத் தடையாக இருக்காதீர்கள். கோயிற் காரியத்தைத் தடுப்பது நீங்களா? நாங்களா? நாங்கள் கூடு தொடக் கூடாது என்று எந்தச் சுவிஷேசப் புத்தகத்தில் எழுதிக் கிடக்கிறது? சிறிகாந்த மலருக்குப் பக்கத்திலிருந்த பெண் இப்படிக் கேட்டாள். ஜெயக்குமார் தொண்டையைச் செருமினான். பின் அவன் தன் கைகளை இடுப்பில் வைத்தவாறே மரியாதையாக இப்போது வழி விடவேண்டும். இல்லாவிட்டால் நான் உங்களை அடித்துத் துரத்த வேண்டியிருக்கும் என்றான். அவுறாம்பிள்ளை பேசினான், ஜெயக்குமார் பேசினான், மக்கள் பேசினார்கள், தருக்கம் நீண்டது. நீண்ட நேரமாகத் தோள்களில் அந்தோனியார் கூட்டைச் சுமந்து நின்ற நான்கு வெள்ளாளர்களும் சலிப்போடு அந்தோனியார் கூட்டை கீழே இறக்கிவைத்தார்கள். மறியல் செய்துகொண்டிருந் தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரோடும் சிறிகாந்த மலருடனும் நேற்று இரவே நேசகுமாரன் பேசி ஒரு திட்டம் வகுத்திருந்தான். அந்தத் திட்டப்படி சாதகமான ஒரு தருணத் தில் கூட்டைச் சுற்றி வெள்ளாளர்கள் போட்டிருக்கும் பாது
துப்பாக்கி
________________
அவுறாம் பிள்ளை
421 ம்
காப்பு வளையத்தைத் தாண்டி ஒடி நேசகுமாரனும் அந்த மூன்று இளைஞர்களும் கூட்டைத் தொட்டுத் தோள்களில் தூக்குவதே திட்டம் மறியல் செய்துகொண்டிருந்த மூன்று இளைஞர்களும் தயாராகினார்கள். நேசகுமாரன் சனங்களை விலக்கியவாறே சனங்களுக்குள்ளிருந்து வந்து கொண்டிருந் தான். மூன்று இளைஞர்களும் நேசகுமாரனைக் கண்டு விட்டார்கள். அவர்கள் தங்களுக்குள் கண்சாடைகள் செய்து கொண்டார்கள். நேசகுமாரனின் இந்த விநாடிக்கான நோக்கம் கூடு தூக்குவதல்ல. அவன் சனங்களுக்குள்ளிருந்து ஜெயக்குமார் மீது தாவிப் பாய்ந்தான். பாய்ந்த வேகத்தில் ஜெயக்குமாரின் கையிலிருந்து துப்பாக்கியை ஒத்திப் பறித்துக் கொண்டு சனங்களுக்குள் மறைந்தான். ஜெயக்குமார் ஒரு கணம் தான் தடுமாறினான். உடனடியாக அவனின் பொலிஸ் கள்ள மூளை வேலையைக் காட்டியது. ஜெயக்குமார் தன் அருகில் நின்றிருந்த பொலிஸ்காரனிடமிருந்து துப்பாக்கி யைப் பறித்து வானத்தில் சுட்டான். பின்பு மூப்பர் அவுறாம் பிள்ளையை ஒரு பள்ளன் சுட்டுவிட்டுத் தப்பியோடுகிறான் என்று அவன் கத்தினான். துப்பாக்கியோடு ஒடும் நேச குமாரனை வெள்ளாளர்கள் துரத்திச் சென்றார்கள். கற் களால் எறிந்தார்கள். நேசகுமாரன் இரண்டாம் முறை குப்புற விழுந்த போது துப்பாக்கி அவன் கையிலிருந்து எகிறியது. வீழ்ந்து கிடந்தவனை வெள்ளாளர்கள் கற்களால் அடித் தார்கள். இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் இரத்தத்தில் கிடந்த நேசகுமாரனின் நெற்றியில் தனது சப்பாத்துக் காலைத் துக்கி வைத்து நான் உன்னை விடப் பெரிய புலி என்று விரல் களைச் சொடுக்கினான்.
நிர்வாணம்
நேசகுமாரன் தான் மயங்கி விடக்கூடாது என்பதில் உறுதி யாக இருந்தான். தன்னால் இந்த அய்ந்து பொலிஸ்காரர் களிடமிருந்தும் ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் தப்பியோட முடியும் என்று நம்பினான். தன் நெற்றியில் இருந்த ஜெயக் குமாரின் காலைக் கையால் அலட்சியமாகத் தட்டிவிட்டான். ஜெயக்குமார் நேசகுமாரனைத் துக்கி நிறுத்தினான். நேசகுமாரன் ஜெயக்குமாரைப் பார்த்து கேலியாக உதடுகளைச் சுழித்தான். ஜெயக்குமார் நேசகுமாரனின் கண்களையே உற்றுப் பார்த்தான். பின்பு நேசகுமாரனின் சட்டையைக் கிழித்தெறிந்தான். பின்பு நேசகுமாரனின் காற்சட்டை பிய்த் தெறியப்பட்டது. நேசகுமாரனின் உள்ளாடையில் ஜெயக் குமார் கை வைத்தபோது நேசகுமாரன் தனது ஜட்டியை இறுகப் பிடித்தான். ஜெயக்குமார் நேசகுமாரனின் ஜட்டி
ஷோபா சக்தி 143
யைக் கீழே இழுத்தபோது நேசகுமாரன் ஜெயக்குமாரை பார்த்து ப்ளிஸ் சேர் என்றான். அவன் கண்கள் கலங்கிக் கெஞ்சின. அந்த அந்தோனியார் கோயில் பெருநாளில் நிறுத்தப்பட்டு நேசகுமாரனின் ஜட்டியும் பொலிஸாரால் உரியப்பட்டு அவன் நிர்வாணத்தைச் சனங்கள் அறிந்தபோது நேசகுமாரன்  வாழ்வின் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் இழக்கலானான்.
நேசகுமாரன் நிர்வாணமாகத் திறந்த ஜீப்பின் பின்புற இருக்கையில் விலங்கால் பிணைக்கப்பட்டு ஊறாத்துறை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டான். பொலிஸ் நிலையத்தில் ஜெயக்குமார் நேசகுமாரனை மேசையில் படுக்கப்போட்டு நஞ்சு பூசப்பட்ட கத்தியை உள்ளங்காலில் வைத்தான். நேசகுமாரன் காலைக் குறண்டி மெதுவாக ப்ளீஸ் சேர் என்றான். ஜெயக்குமார் கத்தியை நேசகுமாரனிடமிருந்து அகற்றினான். பின் நேசகுமாரனின் பிடரி மயிரைப் பிடித்து அவனின் கண்களை உற்றுப் பார்த்தவாறே நீ பேசுவாய் என்று நம்புகிறேன் என்று தலையை மேலும் கீழுமாக அசைத்தான்.
நேசகுமாரன் பேசத் தொடங்கினான்.