தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Wednesday, May 25, 2016

மஞ்சள் சோறு - எம்.ஐ.எம்.றஊப்

மஞ்சள் சோறு - எம்..எம்.றஊப்
உடம்பெல்லாம் கோரமாக அம்மை போட்டு இன்றோடு ஐந்தாவது நாள் முடியப்போகிறது. இரண்டு நாட்களுக்கு முன் கொப்பளித்துப் போயிருந்த இடங்கள் உக்கிக் கொண்டு வந்தன. பாழ் வளவுக்குள் பிடுங்கி துணைக்கிற நாயுண்ணிப் பழம் நினைவில் தோன்றியது அவனுக்கு.போன கிழமை இரவொன்றில், இரவுச் சாப்பாட்டை மறந்து,வேளைக்குப் படுத்துக் கொண்டான். விடிந்ததும், எப்போதும் அவனோடு ஒட்டிக்கொள்கிற இளைய தம்பி ஓடி வந்து வெருள வெருள தள்ளி நின்று அவனைப்பார்த்துக் கொண்டான்.பல் விளக்கிக்கொண்ட மாதிரி, எச்சிலைக் கூட்டித் துப்பிவிட்டு அவனைப் பார்த்த வாப்பா முகத்தைக் கோணலாக வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். தேயிலைக் கோப்பையோடு அவனை எழுப்ப வந்த உம்மா பதறிப்போனாள்.
முந்த நாள் இரவு கனவில் வந்த அம்மாள் தாய்மார் அசத்துப் பணியாரம் கேட்டதாகச் சொன்னாள். அது, இதுக்குத்தான் என சந்தோஷவாக்சில் முகத்தை மலர்த்திக் கொண்டு காரணம் சென்னாள் அந்த வாக்கில் தான் விஷயம் விளங்கியது அவனுக்கு. எழுந்திருந்து உடம்பைப் பார்த்து, கொப்புளங்கள் கண்டு கலவரப் பட்டுக் கொண்டான். இரவு படுக்கைக்குப் போகையில் செப்பமாக இருந்த தோலைத் தடவிவிட்டுக்கொள்ள வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.
சுவரில் தொங்கிய கண்ணாடி, வலது சொக்கிலும், நெற்றிட்பொட்டிலும் மிகக்கோரமாக கொப்பளித்துப் போனதைக் கண்டு, திண்ணையில் சலாரென்றது. எல்லோரும் சற்றைக்குத் திடுக்கிட்டுப் போனார்கள். பேசாமல் வந்து மெதுவாக உம்மா கண்ணாடித் துண்டுகளை தள்ளி விட்டாள்.
இந்தநேரம் கணிதபாடம் நடந்துகொண்டிருக்கும். மிக விருப்பமான ஹபீப்முகம்மது ஆசிரியர் சோக்கோடு அவனையும் கரும்பலகையையும் விடுத்துவிடுத்து பார்ப்பது வந்து போனது.ஒரு கிழமையாகப் போகாததில் அரியஸ் நிறையவே இருக்கும்.பாடசாலைக்குப் போகாததையிட்டு ஆயிசா மிகவும் சந்தோசப்பட்டுக் கொள்வாள். தனது கெட்டித் தனத்தை என்றுமில்லாதவாறு பீற்றிக் கொள்வாள். வகுப்பில் தருகிற கணக்குகளை அவனுக்கு அடுத்தாற்போல இரண்டாவதாகக் காட்ட வேண்டியிராது அவளுக்கு.
கொஞ்ச நாளைக்காவது அவள் முதலில் காட்டட்டும் என்று எண்ணுகின்ற இயலாத மனது கூட வந்து போனது அவனுக்கு. இதுகூடப் பரவாயில்லை. பொறுத்துக் கொள்ளலாம். கூட்டாளிமாரோடு பின்னேரம் விளையாட முடியாமல் போனதை நினைத்து துக்கம் வந்தது .nரோடு சேர்ந்து கல்முனைக்குப் போய் கைக் குட்டையை அவிழ்த்து எண்பத்தைந்து ரூபாவுக்கு வாங்கி வந்த ரியுப்லஸ் பந்தை தன் கையால் முதலாவதாக விளையாட முடியாமல் போனதை எண்ணி மிக நொந்து போனான். -
வழமையிலும் பார்க்க இந்தமுறை கோடை கொஞ்சம் அதிகரித்துப் போயிருந்தது. சற்றைக்கொருதரம் வெக்கைக் காற்று வேகமாக வீசிக் கொண்டது. ஒலை பழுத்து உதிர்ந்துபோக தாக்கு இல்லாமல் கூடு அந்தரப்பட முற்றத்துத் தென்னையில் காகம் மிகவும் சோகமாக சாக்குரல் இட்டுக் கொண்டிருந்தது.
கோடை பிறந்துவிட்டால் படுகொண்டாட்டம். கூடும் குஞ்சுமாக இருக்கிறகாகக் கூடுகளைக் கலைப்பதிலிருந்து காக்கா குயில் பிடித்து விற்றல், கள்ள ஒல்ை எடுத்து விற்றல் அவனுக்குப் பாடமாகிப் போயிருந்தன. கேணித் தென்னந் தோப்புக்குள் அடிமரத்தில் யாரோ கழித்துப் போட்டிருக்கிற நரகலில் கால் பட்டுக் கொள்ளாமல் கள்ள ஒலை பிடுங்குவது மிகவும் பவுத்திரமான விசயம். அவனுக்கு மட்டும்தான் கூட்டத்தில் கலையாகவும் போயிருந்தது.அது.
எப்பவுமே கரேலென்ற பச்சையாய் ஒற்றைப் பனைக்கு முன்னால் நீள்வட்டத்தில் கிடக்கிற நொச்சிப் புதர் ஆரம்பத்திலேயே கருகத் தொடங்கி இருந்தது. இந்த மட்டில் துரத்தி விளையாட ஒழிந்து கொள்கிற குகைகளெல்லாம் இலையுதிர்ந்து மொட்டையாக இருக்கும். தேடிவருகிறவனுக்கு ஆட்களைப்பிடிக்க கஸ்ரம் இராது. பிடிபட்ட கையோடு அசட்டுச்சிரிப்புடன் விலத்தி விலத்தி வரும்போது சருகுகள் மிதிபட்டுச் சலசலக்கும். கடைசியாக விளையாடிவிட்டு வரும்போது கருங்கல் கொண்டு சிதவல் எழுப்பிவைத்த ஆலமர உச்சிக் கொப்பில் பால் உறைந்து சிவந்து போயிருக்கும். கசிந்த சக்கரைமாதிரி, அதை நினைக்க எச்சில் ஊறிக்கொண்டது. வீட்டில் களவெடுத்துக் கொண்டு போகிற கறுவாப்பட்டையோடு சேர்த்து சுயிங்கம் தின்று கனநாளாகின்றது. எண்ணும்போது ஆசை கூடிக்கொண்டு வந்தது அவனுக்கு. மூத்த உம்மாவின் வீட்டுக்குப்பக்கத்தில் சவ்தாவும் அவளுடைய தோழிகளும் உம்மா வாப்பா வைத்து விளையாடமாட்டார்கள். அவனில்லாமல் விளையாட அவ ளுக்கு மனது வரமாட்டாது. இனிமேல் வாப்பாவாக விளையாட முடியாதென எண்ண துக்கம் அடைத்துக் கொண்டது. அம்மாள் போட்டதில் ஆழமாகிப்போன வடுவினால் அவளுக்குச் சமமாக, அழகில்லாமல்போன கபூரை அவள் ஒதுக்கிக்கொண்டது போல அவனையும் இனி ஒதுக்கிக் கொள்ளுவாள். கபூர் கெஞ்சாவண்ண்ம் கெஞ்சி மன்றாடியதைப் போல அவனும் அவளை ஒட்ட ஒட்ட வரவேண்டியிருக்கும். இதைநினைக்க மனது துக் கப்பட்டது. வீட்டில் எடுத்துவருகிற வெற்றிலை பாக் கைப்போட்டு சிவந்த சொண்டை நீட்டி, நீட்டி எச்சிலை துப்பிக்கொண்டு அவள் நிச்சயம் மாட்டேன் என்பாள். அதனை நினைக்கக்கூட சங்கடமாக இருந்தது.
கபூருக்கு மூக்கில் இருப்பதைப்போல வலதுபக்கச் சொக்கில் உக்கிவர இருக்கின்ற கொப்புளத்தில் மிளகு ஒன்றை வைத்து நிரப்பிக் கொள்ளலாம்.இதைவிடப் பெரிதாக உடம்பில் வேறு எங்காவது வந்திருக்கலாம்
ஆகத்தில் வந்திருக்கவே வேண்டாம் நினைக்க s வெப்பிசாரமாக இருந்தது அவனுக்கு. அவன்ை அவள் விலத்திப் போடுவாள். இனிமேல் மக்களாகத்தான் விளையாட முடியும். பொய்க்கு மண்சோறு கர்ன் # எனறு அடம்பிடிக்கிற மக்களை, பல்லைக் கடிக் o கொண்டு பாவனையால் விளாசித் ಗ್ಗೋ'' #, அவனுக்கு இனி இல்லை. கன ளுக!) ஆகப.
எங்கேயோ இருந்து உம்மாபறித்துக்கொண்டு a. - கிற வேப்பந்துளிரைக்கான அவனுக்கு என்னவோ 55 ஒவ்வொருநாளும் இப்படித்தான் நடக்கிறது ஒலதகு அடுத்தாற்போல மையத்துப் பிட்டியில் நிற் } வேம்பு மனதுக்குள் வந் துபோனது. As) r
ഥേ@ வட்டை வெட்டிமுடிய ஊருக்குள் நுளம்ட தொல்லை வந்துவிடும்.புகைபோட ஒடித்துக் கொ வருகிற வேப்பங் குழைகள் நாட்கணிக்கி கிடக்கும் விட்ட ரும் வேப்பங்குழைக்காக வந்து
~ * உமமாவுக்காகப்பரிதாபப்பட்டுக்கொண் 7ಿ அவனுக்குவராமல் வேறுயாருக்காவது அம்11. போட்டிருக்கவேண்டும் . இந்த மாதிரி .ಹಿ೦ಗೆ ಕ್ಲಿTEಿ வேண்டிய அவசியமே இல்லாமல் போயிருக்கும்.அப் படி ஒரு பரிதாபத்துக்கு ஆளாகாமல் போனது வேம் - செய்த புண்ணியம்.மொட்டையாக இல்லாமல் போ o
மதியம் ஆக ஆக அழத்தி கொண்டு வந்தது அவ ಕ್ಲೀ। பொறுத்க வெறுங் காலுடன் நிறைமதிய ಷಿ நடக்கிற அவனுக்கு இப்போது அவதியா Iருநதது. உடம்பு கணகணத்தது, மஞ்சள்:
வேப்பங் குழை அரைத்து இப்பவே பூசிக் கொண்டு குளிக்க வேண்டும் போல் இருந்தது.அப்படி ஒரு தகிப் பு.இது ஏழு நாள் கெடுவாம்.உம்மா ೧೯7 ஆகுகிறாள். வெம்பு மணல் தாண்டி வநது கெஞ்சிப் பார்த்து விட்டு போன வாப்பம்மாவும் அபபடிததான சொல்லி இருந்தாள். இன்னமும் முடிய இரண்டு நாள இருக்கின்றது.இரண்டும் இரண்டு வருடமாக அவனுக குப் படுகிறது.
கபூருக்கு அம்மை வந்த சமயம் இவனுக்கும் வர வேண்டுமென ஆசைப்பட்டான். சும்மா அலுப்புத் தோன்ற பாடசாலைக்கு டிமிக்கி கொடுப்பதற்காக
பொய்க் காய்ச்ச லெல்லாம் வந்திருக்கின்றது. பழச்சோடா குடிப்பதற்குக் கூட புண்கள் நெடு நாளைக்கு மாறாமல் இருந்திக்கின்றன. காய்ச்சலைப்போல கொப் புளங்கள் இல்லாமல் அம்மை வருமென்றால் கபூருக்கு வந்த அடுத்த நாளே அவனுக்கும் வந்துவிட்டிருக்கும். இது மட்டும் தான் அவனளவில் பொய்த்துப்போயிருந் தது.இப்போது அதை நினைக்க மனது சந்தோசப் பட்டுக்கொண்டது...... கபூருக்கு அம்மை போட்டுத் தீர்த்தம் வார்க்க உம்மா போ யிருந்தாள். அவனுக் கும் அழைப்பு கிடைத்திருந்தது கபூரிடமிருந்து.
மஞ்சள் வைத்து அரைத்த வேப்பங்குழை அரைப் பை கபூருடைய உம்மா அவனிடம்தான் கொடுத்தாள். கபூருக்கு அவன்தான் உச்சிதொட்டு உள்ளங்கால்வரை அப்பி விட்டான். மாமா,தண்ணிர் ஊற்ற தீர்த்தம்
வார்த்த சடங்கில் கூட்டாளி என்ற வகையில் அவனுக்குத்தான் ஏகப்பட்ட மரியாதை. வெள்ளை உடுப்புஉடுத்தி சோற்றுப் பெட்டியை கபூர் சுமந்து கொண்டு நடக்க அவனும் பெண்கள் கூட்டமும் கடற்கரைக்குப் போனார்கள். அன்று வாழை இலையில் கடற்கரைக் காற்று வெளியில் தின்ற மஞ்சள் சோறும் ,செத்தல் மிள காய் போட்டுச் சிவந்துபோன முருங்கை இலைச் சுண்ட லும் இப்பவும் அவனுக்கு நீரைச் சுரக்க வைத்தது. அந்தமாதிரி வெட்ட வெளியில் வாழை இலையில் மஞ்சள் சோறு தின்று பழக்கப் பட்டிருக்க வில்லை.இப்ப நினைக்க நினைக்க புது அனுபவமாகப படுகின நிறது , அவனுக்கு. மிஞ்சிப் போன சோற்றை கபூர் கடலில் கொட்ட கூடப்போனவன் அவன்தான். அந்தச் சாட் டில் மட்டி கெல்ல நின்று காற்சட்டையை நனைத்துக் கொண்ட தெல்லாம் நினைக்க இனிப்பாக வந்து போனது" --
தீர்த்தம் வார்த்து மஞ்சள் சோறு ஆக்கவெல்லாம் கனசெலவாம். பிறகு ஒரு நாளைக்காம்.உம்மா சொல்லி இருக்கிறாள். கேட்ட மாத்திரத்தில் சோகம் சோகமாய் வந்ததுஅம்மை வந்திருக்க வேண்டா மென்று தோன்றியது. நினைக்க நினைக்க அடக்கிக் கொள்ள முடிய வில்லை.இந்தமுறை இல்லாட்டில் அடுத்த முறை சட்டை தைத்துப் போடுகிற மாதிரி இது என்ன பெருநாளா? அம்மை... அதுவும் பெரியம்மை. மூத்த மாமாவுக்கு வந்தபோது அசத்துப் பணியாரம் சுட்டுப் பகிர்ந்ததல்லவா. சுகாதாரம் படிப்பிக்கிற சேர் சொன்னம திரி அம்மை வாழ்நாளில் ஒரு தடவைதான் வருமாம். நினைக்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. எல்லாத்துக் கும் மேலாக கபூரோடு சமமாகப்பழக முடியாமல் போ கபபோகின்றதே என நினைக்க உம்மாவோடு கோபம் கோபமாக வந்தது அவனுக்கு. நாளைக்கிக் கூனிக்குறுகி தலையைத் தொங்கப் போட்டுத் திரிய மனது ஒத்துக்கொள்ளவில்லை. மறுபுறம் உம்மாவை நினைக்க பாவ மாக இருந்தது. இருந்தாலும் முடியாது. தீர்த்தம் வார்த்து, மஞ்சள்சோறு கொண்டுபோய் கழிப்புக் கழி கத்தான் வேண்டும்.பன்னீர் வாங்கக் கடைக்குப் போயிருக்கிற உம்மா வந்ததும் வேண்டுமென்று சண்டை போட்டு அழுவதற்காக காற்சட்டையை உயர்த்தி விட்டுக் கொண்டு,நாடகத்தில் நடிக்கும்போது கண்ணரீர் வர, சேர் சொல்லிக்கொடுத்த யோசனைகளை நினைவுபடுத்திக் கொண்டான். Q

*********************************************************
எம்.. நுஃமான் கருத்து:
இந்தக் கதைகளைப்பற்றி பலவிதமான விமிர்சனங்கள் பல தளங்களிலிருந்து பல நிலைப்பாடுகளில் இருந்து வரக்கூடும். அது தவிர்க்கமுடியாதது. அது எவ்வாறாயினும் றஊப் ஒரு வித்தியாசமான தனித்து வமான எழுத்தாளனாக வளர்ச்சியடைந்திருக்கிறார்
என்பதை தமிழ்ச் சிறுகதை 'உலகோடு பரிச்சயம் உடையவர்கள் மறுக்கமாட்டார்கள். எனினும் ஒரு நல்ல எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய பார்வை ஆழம் தரிசனவீச்சு இனித்தான் இவருள் வளர்ச்சி அடைய வேண்டும்.அடையும் என்பதே'என்' நம்பிக்கை.
1960 களில் நான் ஒரு ஆரம்ப எழுத்தாளனாக கொத்தனின் வீட்டுக்குப் போய்வந்து கொண்டிருந்த நாட்களில் நஊப் ஒரு பாலகன். பின் ஒரு காலத்தில் இவன் ஒரு சிறுகதை எழுத்தாளனாக வளர்வான் என்றோ இவனது தொகுப்புக்கு நான் ஒரு முன்னுரை எழுதநேரும் என்றோ எங்களில் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.இன்று அது நிகழ்ந்திருக்கின்றது. இது மகிழ்ச்சி தரும் ஒரு வளர்ச்சிதான். கவிதைத் துறையில் மஹாகவியின் இன்னொரு கட்டவள்ர்ச்சி சேரன் என்றால் சிறுகதைத் துறையில் கொத்தினின் பிறிதொருகட்ட வளர்ச்சியாக நான் றஊபைக் காண் ஒன்றேன். இந்த வளர்ச்சி மேலும் செழுமைபெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

எம்.. நுஃமான் கல்முனை-9-4-1990