தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, May 17, 2016

தர்மு சிவராமின்(பிரமிளின்) கவிதைகளினூடே ஒரு நெடும்பயணம் - ஞானி

தர்மு சிவராமின்(பிரமிளின்) கவிதைகளினூடே ஒரு நெடும்பயணம் - ஞானி
http://kovaignani.org/downloadbooks/
https://s3.amazonaws.com/kovai.gnani/criticism/33+Marxium+Tamil+Ilakiyam.pdf
1 நாம் ஒரு கவிதையை ரசிப்பது என்பது அது தரும் செய்திக்காக அல்ல; அதில் பயன்பட்டுள்ள படிமங்களுக்காகவும் அல்ல, பின் எதற்காக என்பது கேள்வி. ஒர் உதாரணத்திற்கு எரிகல் கவிதையைப் பார்ப்போம். "வானம் எரிகல்லில் கிழிபடுகிறது (வானம் கிழிபடவில்லை யென்பது நமக்குத் தெரியும்) "வானக்கடலின் முத்து விழுகிறது (வானம் கடல் இல்லை. விழுவது முத்து இல்லை) இருட்கரியின் வயிரம் உதிர்கிறது (இருள்கரியல்ல, எரிகல் வைரமுமல்ல) இருளை மொழி பெயர்த்த உதிர்த்த கவி (எரிகல் கவியல்ல) உதரக்குடல் நாடி உதிரும் சிறு குழவி (எரி கல்லுக்கு மண்ணுலகம் உதரமல்ல)
இக்கவிதையில் எரிகல் பற்றி விஞ்ஞானம் சம்பந்தமான செய்திகள் சொல்லப் படவில்லை. பின் ஏன் இதை இரசித்தோம் வானம் கிழிபடலில் ஒர் அதிர்ச்சி. அது கிழிபடவில்லையென்ற உணர்வோடு - கிழிந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை வீச்சோடும் பார்க்கும்போது ஒர் அற்புதம். வானத்தைக் கடல் என்பதும், எரிகல்லை முத்து என்பதும், இருளைக் கரி என்பதும் பழங்கவிதை முறை. இப்படிச் சொல்லும்போது சில காட்சிகள். வானத்திலிருந்து வைரம் உதிர்தல் கற்பனையில் புதிய காட்சி. இருளை மொழிபெயர்த்த கவி - இதில் எரிகல், அழகிய கவிதையாகிறது. எரிகல் : குழவி. தன்னை ஈன்ற தாய் நோக்கி விழுதல் - கற்பனையில் ஒரு காட்சி.
அதாவது, கண்ணில் அழகிய காட்சியாகப் பட்ட எரிகல், அதன் வேகத்தால், அழகு மிகுதியால் மனத்தில் விழுந்து பல அலைகளை எழுப்புகிறது. ஒவ்வொரு அலையிலும் ஒரு காட்சி எரிகல்லோடு சேர்ந்து எழுகிறது. எரிகல்லை இரசிப்பதோடு, அதைப்பற்றிய உணர்வு ஊன்றலில், நம் மனத்தில் எழும்புகிற காட்சிகளையும் நாம் இரசிக்கிறோம். நாம் எரி கல்லை இரசித்தோமா, பிற காட்சிகளை இரசித்தோமா என்பது தெரியாமல். பிற உலகக் காட்சிகளையும் மனம் உருவாக்கிக்கொண்ட காட்சிகளையும் இந்தக் கவிதையில் இரசிக்கிறோம். இந்த இரசனை நம் கற்பனையைக் கிளறி விடுவதும் ஆற்றல் மிக்க காட்சிகளைக் கிளறி நம் மனத்தில் ஆற்றல் சேர்க்கிறது என்பதும் இங்கு மேலும் கவனிக்கத் தக்கது. கவிதை நமக்குள் வருவது, நமக்கு வசமாவது நமக்கு அனுபவமாவது, நமது ஆற்றலைக் கிளறுவது ஆகியவை தொடர்ந்து நிகழ்வன. காட்சிகளைத்தரும் பண்பைக்காட்டிலும் நம்மைக் கிளறி விடுவது, நமக்கு அனுபவம் ஆவது - இதில்தான் ஒரு கவிதையின் தரம்
ஞானி 136
உயர்கிறது. எரிகல் கவிதை முதல் நிலையிலேயே பெரிதும் நின்று விடுகிறது? எரிகல் கவிதையின் தரத்தில் இயல்வதுதான், ‘விடிவு', 'புகை, சாவு", 'மின்னல்’ ஆகிய கவிதைகள். ஒரு பொருளுக்குப் பல படிமங்கள் தருவதால், ஒரு கவிதையின் காட்சி அழகு சிறக்கிறது. பல படிமங்கள் கூறுவது, அப்பொருள் நம்மிடம் ஏற்படுத்தும் அழகுணர்வு அல்லது சோகம் நம் மனத்தில் நிறைவதால், நாம் அதன் பாதிப்பைச் செரிப்பதற்காக அதன் கனத்திலேயே நம் மனம் கூடு கட்டுவதால். சங்கீத ஆலாபனை போன்றது இக்கவிதை முறை. பழங்கவிதை கையாண்ட முறைதான் இது. பழங்கவிதை கையாண்டது என்பதால் இது பழையதாகி விடவில்லை, சுரதா மாதிரிப் பிடித்துத் தொங்காத வரை. இம்முறையை ஒரு உத்தியாக்கிப் புதுக்கவிதையை கல்யாண நகையாக்கி விலை கூறி விற்பவர்கள் பலர். சிவராம் கவிதை இப்படியிருப்பது அவர்களுக்கு ஒரு வசதி. இத்தகைய கவிதைகளை அதிகம் தருவது ருசிகரம்'. இந்த ருசிகரம், சோர்ந்த மனத்துக்கு இதமாக இருக்கலாம். வசதி உள்ளவனிடம் இது வசீகரம் ஆகிவிடும். கம்பன் கழகத்தவரிடம் கம்பன் அகப்பட்டுக் கொண்ட மாதிரிஒருவேளை,கவிதைப் படைப்புக்கான மனப்பக்குவத்தை மனநிலை ஆக்கத்தை நிலை நிறுத்துவதற் காக ஒரு கவிஞர் இப்படிச் செய்யலாம். இதனால் கவிதையின் தரம் உயர்ந்து விடாது. சிவராம் தான் முதல் படிமக்கவிஞர் என்பதில் வரலாறு சொல்லப் படுவதைக் காட்டிலும், இந்தக் கூற்றில் தொனிக்கும் அகங்காரம் கவிதை ரசனைக்கும் உள்வாங்கலுக்குமே கலவரம் செய்யும். கவிதையைப் படிமமாகவே பார்த்துவிடக்கூடிய தவறுக்கும் இக்கூற்று காரணமாகி விடலாம்.
2
இவ்வகைக் கவிதையின் தரத்திலிருந்து மேல் எழுந்து உயர் தரத்தில் இயங்கும் கவிதைகள் பலவற்றை சிவராம் படைத்துள்ளார். இவை தாம் படைப்பு என்ற சொல்லுக்குச்சரியாகப் பொருந்துபவை. இதில் சிவராமின் தேர்ச்சி மிகுதி. உதாரணத்திற்கு எல்லை.
கருகித்தான் விறகு
தீயாகும்.
அதிராத தந்தி -
இசைக்குமா?
அதிர்கிற தந்தியில்
தூசு குந்தாது
கொசு நெருப்பில்
மொய்க்காது

முதல் நான்கு வரிகள், செய்தி. ஒரு பாய்ச்சலுக்கு வசதியாக தரப்படும் தளம். இந்தத் தளத்திலிருந்து அக உலகத்திற்குள் ஒரு பாய்ச்சல். தொடர்ந்து பல அதிர்வுகள் இம்முறையில், வாழ்வின்
137 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்
பல்வேறு சூழல்களில் நாம் பெற்ற பல அனுபவங்களையும் தனக்குள் தாங்கிய படிமங்கள் -குறியீடுகள் இவை. இக்குறியீடு ஒரு உன்னத அனுபவம் சொற்களில்தான் நம் அனுபவத்தைக் குறிப்பிட்டாகவேண்டும் என்பதற்காக, இங்கு தந்தி, தூசு, கொசு, நெருப்பு ஆகிய சொற்கள். அகராதிப் பொருளை விட்டு இவை வெகு தொலைவு வந்துவிட்டன, கங்கைக் கரைச்சேரி மாதிரி. அதிர்கிற வரை தூசு குந்தாது. நெருப்பாக இருக்கும் வரை கொசு மொய்க்காது - இது எல்லை. அதிர்வு நின்றால் தூசு நிறையும். நெருப்பின் தன்மை நீங்கினால் கொசு கூட்டமாக மொய்க்கும். வாழ்க்கையின் அனுபவங்களை ஒரு தரிசனத்தில் இக்கவிதை ஒரு முகத்தில் காட்டிவிட்டது. இது காட்சி அல்ல, நொண்டுவதற்கு இது தரிசனம்; ஆகவே பாய்ச்சல்.
இது சுண்ணாம்பும் மணலும் அல்ல; உயர் கொதி நிலையில் உருவான கண்ணாடி.
இடையில் கவனிக்க வேண்டியவை சில. உவமை உருவக ஆக்கத்தின்போது அவ்வகை ஆக்கமாகிய கவிதையும் அதில் சொல்லப்படும் அனுபவமும் பிரிந்து நின்றன. ஆனால் ஒரு 'கொதி நிலை'யில் ரசாயணமாற்றத்தில் அவை இயைந்து படிமம் ஆகின்றன. கவிப் பொருள் இங்கு நுண்மையாகி விட்டது. இதைக் காணப் பயிற்சி வேண்டும். இந்தப் பயிற்சியால் அறிவு கூர்மை அடையும்; புதிய பொருளழகு மனத்தில் விரியும். மனம் அழகு மயமாகும். கவிதை மனம் கவிதை இயற்றுவதற்கான மனம் - சித்திக்கும். இன்னொன்று மேற்குறிப்பிட்ட கவிதையில் அது கவிதையாகச் சிறப்பதற்கு இறுதி நான்கு வரிகள் போதும். முதல் நான்கு வரிகள் ஒரு எடுப்பு; ஒரு பாயச்சலுக்கு உதவி; இது கவிதைக்கு இன்றியமையாதது அல்ல. இப்படிக் கவிதையில் வரும் சில சொற்கள் வரிகளைக் கொண்டு கவிதையின் தரம் தீர்மானிக்கக் கூடியது அல்ல. சொற்சிக்கனம் நல்லதுதான். ஆனால் கவிதைக்கு அதுவே இலக்கணமாகாது.
படைப்பின் தரத்தில் உயர்ந்த பல கவிதைகள் சிவராமிடம் உள்ளன. "ஊமை யில் ஒரே தாவலில், நட்சத்திரங்களை விட நிறையவே பேசுவது அவற்றின் இடையேயுள்ள இருள் இன்னொரு பாய்ச்சலில் "ஊமை கண்ட கலை சமிக்ஞை - சொற்களில் அடங்காத அனுபவங்களைக் காட்டுவதற்குக் கலைஞன் கண்டமுறை - இது (symbolism) என்கிறது கவிதை. புல்லின் குரலில் கடைசிப்பத்தி உன்னதம். அதை நோக்கிய வரிகள் முன்னையவை. 'சைத்ரீகன், 'மின்மினி லெளகீகம் நம்பிக்கை கோவில்', முதலிய கவிதைகளும் இந்தத் தரத்தவை. இருள் அழகாகிறது, மெளனம் அதிர்கிறது. ஒரு தரிசனத்தின் போது மனம் ஒருமைப்பட்டுக் கூர்ந்து குவிந்து தெறிப்பது இந்தத் தரிசனம். இதன் போதுதான் சாவு தன் கனத்தை இழந்து, பழுத்து உதிர்கிறது. ('தன்னழிவு)தரமுயர்ந்த கவிதைகளைப் படைப்பதற்குத் தரத்தில் குறைவான பல
ஞானி 138
கவிதைகளை ஒரு கவிஞன் தயாரிக்க வேண்டியிருக்கிறது. பல குப்பைகளுக்கிடையில் சில குன்றி மணிகள். கவிதைத்திறனை தக்க வைத்துக் கொள்வதற்கான பயிற்சி இத்தகையது. இதை இகழ்வது கூடாது. முதல் தரமான கவிதைகளை ஒரு கவிஞன் படைக்காத போது இந்த வெற்று முயற்சி இகழத்தக்கது என்பதில் ஐயமில்லை. கவியரங்கக் கவிதைகள் இத்தகையவை. காலக்குளத்தில் அலை ஏன் புரள்கிறது என்ற கேள்விக்கு இக்கவிதை பதில் சொல்லிக் கொண்டிருக்கும். தன்னை நிலை நாட்டிக் கொள்ளும் முயற்சியில் இது கத்தும், 'அறை கூவல் விடும். சிவராமின் கவிதைகளில் இதற்கும் இடமுண்டு. கவிதை பற்றிய தீவிரமான ஆய்வின் போது இப்பிரச்சனை நம்மை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை. இக்கவிதைகள் செய்தி சொல்வதற்கும் அடுத்த கட்டத்தைச் சேர்ந்தவை.
படைப்பாற்றிலின் செழுமையில் பிறந்த, தவத்தில் உயர்ந்த கவிதைகள், படைப்பாளியின் ஆன்மாவில் இருந்து ஆன்மாவைப் பிளந்து கொண்டு ஒரு வெளிச்சமாக ஒரு விடுதலையாக புதுமையாகப் பிறப்பவை. இந்தக் கவிதைகள் வாழ்வின் உன்னதத்தைக் கொண்டவை. வாழ்க்கையின் பல்வேறு கோலங்களை உயர்கதியில் தாங்கிய இவ்வகைக் கவிதைகளின் அழகியல் உன்னதமானது.
-
இத்தகைய கவிதைகளைப் படைக்கும் கவிஞனுக்குள் - நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கவிஞனே ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளவிட்டாலும், - அவனுக்குள் ஒரு மெய்யியலாளன் - சிறிய அளவிலோ பெரிய அளவிலோ இருக்கிறான். கவிதையின்பால் அவன் காதல் கொண்ட போதும், கவிதைப் பயிற்சியின் போதும் கவிஞனுக்குள் மெல்ல அரும்பியவன் இவன். மற்றவர் புலன் இன்பங்களிலும் அதற்கான தேட்டத்திலுமே மூழ்கியிருந்தபோது, அதிலிருந்து கொஞ்சம் விலகி, கொஞ்சம் கொஞ்சமாக விலகி வாழ்க்கை பற்றிய சிந்தனையில் இவன் ஈடுபட்டான். இயற்கையழகு, இசை முதலியவற்றில் மனத்தை நெகிழவிட்டு, அப்போது ஏற்படும் மனப்பரவசத்தில், விடுதலையுணர்வில், தன் மேன்மையை தன் இருப்பை இவன் கண்டான். இவன் கண்ட இயற்கை அழகு இவனிடம் வெறும் உபாசனையாகி விடவில்லை. இத்தனை அழகுடைய உலகம் சிதைந்து விடக்கூடாது, கோரமாகி விடக்கூடாது என்பதில் இவன் அக்கறை கொண்டான். இப்படி அக்கறை கொண்டதினாலேயே வாழ்க்கை இவனுக்கு பிரச்சனை யாயிற்று. நாளடைவில் இவன் தனக்குத்தானே பிரச்சனையாகிப் போனான். இந்நிலையில் அவன் தவிர்க்க இயலாமல் ஒரு மெய்யியலாளன் ஆகிறான்.
ஆதாவது: கவிஞனின் கருவிலேயே ஒரு மெய்யியலாளன் இருக்கிறான். இவ்வாறு தன்னைச் சரியாகக் கண்டறிந்தவன் தன்
139 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் 
இலட்சியங்களைத் தீர்மானிக்கிறான். கண்ணிர்ப் பூக்கள், காம ரூபங்களை எழுதுவதிலிருந்து இவன் விடுபடுகிறான். பக்தி இவனுக்குப் பல்ன் தரவில்லை. கடவுள் உருவங்கள் இவனைக் காப்பாற்றவில்லை. கோபுரங்களைப் போலவே குருமார்களும், கும்பல்களும், கோவிந்தாக்களும் தன்னையும், தன்னைச் சூழ்ந்துள்ள மக்களையும் காப்பாற்றவில்லை காப்பாற்றமாட்டார் கள்என்பதை இவன் அறிகிறான். இந்த உலகம் இவனுக்கு நிம்மதியைத் தரவில்லை. இந்த உலகச்சூழலை விமர்சனம் செய்வதில், வெட்டியெறிவதில், இவன் நிம்மதியைத் தேடுகிறான். தனக்குள்ளேயே ஒரு இலட்சிய உலகைக் கற்பனை செய்து கொண்டு அதன் வரவுக்காக இவன் காத்திருக்கிறான்; கவிதை எழுதுகிறான்.
சிவராம் என்ற சிறந்த கவிஞனுக்குள்ளும் ஒரு மெய்யியலாளன் இருக்கிறான். இந்த உலகம் அதனோடு முரண்படுவதைப் போலவே அவன் உலகத்தோடு முரண்படுகிறான். லாப மீன் திரியும் பட்டணப் பெருங்கடல், தாவிக்குதிக்கும் காரியப் படகுகள் அவனுக்குச் சம்மதமில்லை. வீதி வழி ஓடினால் விரியும் விலா எலும்பு ஆபீஸ் கட்டிடங்கள், கோவில் இதய முகட்டில் சிலுவை அறைந்த பரிதி, நகரச் சந்தையில் கானகக் குரல்களின் ஊர்வலம், சுவர்களின் இனம் மூடும் நகர்,'ஒரு திறந்த பாலை,'சாந்தி வீரர்கள் யுத்த சன்னத்தராதல், கோபுரப்பாறைகள், கண்ணின் நிணத்தைப் பக்தி விடாய்க்குப் பருகிக் கொண்ட விக்கிரகம் இவை கவிஞன் காணும் காட்சிகள். இவற்றுக்கிடையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கவிஞன் முயல்கிறான். புற உலகின் சித்திரவதையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தன் அக உலகைப் பெரிதாகக் கட்டிக்கொள்ள முயல்கிறான்.
தாமரைப் பூவே உன் பிறவி ரகசியம் அறியேனோ நிலம் தேடிச் சகதியைப் புணர்ந்துறிஞ்சிப் பிறந்தவள் நீ உன் கபந்தவிடாய்க்கு நான் ஓவர்ஹெட் டாங்க் அல்ல; ஒளி, எனத் தன்னில் ஒளியேற்றிக் கொள்கிறான். புல்லின் குரலைக் காது கொடுத்துக் கேட்டு அந்தக் கோஷத்தைத் தன்னில் நிறைத்துக் கொள்கிறான். இவன் தன்னில் ஒளியையும் கோஷத்தையும் அகழ்ந்தெடுத்துக் கொள்ளும் போது, இவன் வாழ்வு உக்கிரம் பெறுகிறது.
புற உலகத்தின் கொடுமைக்கு வளைந்து கொடுக்காத இந்தக் கவிஞன் - அப்படி வளைந்து கொடுக்காமல் இருப்பதற்காக தனக்குள் கவிதையைப் புயலாக, பிரளயமாக உருவாக்கிக் கொள்கிறான். உலகப் புயலுக்கும், பிரளயத்துக்கும் ஈடு கொடுப்பதற்காக இந்த முயற்சி. ஒரு கவிஞனை ஒரு மெய்யிலாளனை நொறுக்கிவிடக்கூடிய, அல்லது வளைக்கக்கூடிய சூழலில் நிமிர்ந்து நிற்பது, அதற்காகப் பகைத்து நிற்பது சிவராமின் ஆளுமை. இவர் கவிதைகளின் கனல் தெறிப்புக்கள், கனல் தெறிப்புப் படிமங்கள் இதனால்தான். படிமம் செய்வதால் இங்கு உலகம் இவருக்குப் பகையாகிவிடவில்லை. உலகப் பகையைப் படிமத்தின் மூலம், கவிதையின் மூலம் வெளி யேற்றிக்கொள்ளும் முயற்சி. இவ்வகைக்
________________
ஞானி 140
கனல் இவருக்குள் கொழுந்துவிட்டு எரிவது ஒரு வகையில் சுகம், இன்னொரு வகையில் சித்திரவதை, சிவராம் இரண்டு வகையிலும் உச்ச நிலையை அடைகிறார். எத்தனையோ கவிஞர் தொடமுடியாத உச்சங்களைச் சிவராம் அடைவது இப்படித்தான், இதனால்தான்.
4
இனி சிவராமின் மெய்யியல் பயணத்தை, அவர் கவிதை வழியே காண்போம், ஒரு மெய்யியலாளனைக் கண்டறிவதன் மூலம் ஒரு கவிஞனின் மேன்மையை இந்தப்பயணம் நமக்கு உணர்த்தக் கூடும்.
விசாரம் என்ற கவிதையில் உடல், உயிர் உறவுச் சிக்கல் பற்றிக் கேள்வி எழுப்புகிறார். உயிர் வானைக் கிழித்த ஆதிப்பெருமாள் நிலத்தில் பதித்த விழுது உடல், விழுதைத் தொட்டு விழுங்க முணுது ஊாநது உதிர்ந்து வீழும் நத்தை என்கிறார் சிவராம். இங்கு, ஆதிப்பெருமாள் என்பதை சமயத் தொடர்பான இறைவனாக்க வேண்டியதில்லை. பரிணாம முறையில் உயிரியக்கம் தோன்றியது என்ற கருத்து சிவராமுக்கு உடன்பாடாக இல்லாமல் இருக்கலாம். விண்வெளியிலிருந்து உயிர் வந்தது என்ற கருத்தில் சிவராமுக்கு உடன்பாடு இருக்கலாம். உயிர் வானம் சம்பந்தப்பட்டது. அதை உடல விழுங்கமுடியாது. விழுங்க முயன்று ஊர்ந்து உதிர்கின்றது உடல். உடல் உயிர் இணைவுக்கு இங்கு ஒரு முயற்சி சாத்தியமே ஒழிய இரண்டும் இணைந்து ஒன்றில் மற்றதாவது சாத்தியமில்லை. இக்கருத்து விஞ்ஞான நோக்கில் கூறப்படுகிறது என்பதைக் காட்டிலும் மெய்யியல் நோக்கில் கொள்வதே மிகப் பொருத்தமாக இருக்கும்.
சிவராமின் மெய்யியல் இங்கு கருத்து முதலியல் சார்பானது என்று அறிவிடுவது சரியாகப் பிரச்சனையைப் பார்ப்பதாகாது. உயிர் - இங்கு, கருதது . இலட்சியச் சார்பானது, உடல் - தசை உடல் - மண்ணுலகம், குழல் சார்புடையது. உயிர் சார்ந்த இலட்சிய நிறைவேற்றத்திற்கு ஒரளவே உடல் ஒத்து இயங்குகிறது. இலட்சிய வீக்கம் உடலை  அழிக்கிறது. உடலின் பொருளியல் சார்பு, உயிரின் இலட்சிய சார்பைக் கட்டுப் படுத்துகிறது. இந்தப் போராட்டம் வரலாற்றில் நெடுங் காலத்திற்கு நிரந்தரமானது. இது மனிதவியல் பிரச்சனை. வர்க்க வேறுபாடாக பிளவுபட்ட இலட்சியங்களும் நடைமுறை களும் பிளவுபட்ட சமுதாயச் சூழலில் உடல் உயிர் வேறு பாட்டுச் சிக்கல் கடுமையாகிறது. வர்க்க வேறுபாடு நீங்கிய நிலையில் இப்பிரச்சனையின் கடுமை குறையும்; தீராது. இந்த உடல்தான் இராமனைத்தாசியைத் தேடி அலைய வைக்கிறது. பேரம் பேசி இருக்கலாமென்று கூறுகிறது.
இங்கு உடலையும் உயிரையும் அவற்றுக்கிடையில் பெருமளவு இணைவில்லாத முறையில் சிவராம் பிரித்துக் கொள்கிறார். இந்தப் பிரிவினை மேலும் தொடரும்

‘நான் யார்' என்ற கேள்வி மனித வரலாற்றில் மிக மூத்த கேள்வி. காலந்தோறும் பல்வேறு விடைகள் தரப்பட்டாலும் அவ்விடைகள்
141 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் 
அவ்வக் காலத்திற்கும் களத்திற்கும் சரியாக இருந்து பிறகு பொய்யாகின்றன. இன்றும் இக்கேள்வி கேட்கப் படுகிறது. தன்னை ஒருவன் மார்க்சீயவாதியாக கூறிக்கொள்வதும், கண்டறிவதும் இக்கேள்விக்கான விடைதான். சிவராம் ஒரு கவிதையில் கேட்கிறார். பாழ்வெளியைப் படைத்தவள் என் தாய். சூனிய வெளியில் கூரையின்றி நிற்பது என் இல், இதில் நான் யார்? பதிலைத் தேடி பிறந்து இறந்து ஒடுவதோ நான் பாழ்வெளியில் நான் யாரென்று தெரியாமல் படைக்கப்பட்டுப் பிறந்து இறந்து ஓடவேண்டுமா என்பது சிவராமின் வேதனை.
சிவராமுக்குள் எழும் பிரச்சனையிலிருந்து பல கேள்விகள். இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்றால் படைத்தவன் யார்? நோக்கம் என்ன? நான் எப்படிப் படைக்கப்பட்டேன்? என் மூலப்பொருள் யாது. இங்கு எனக்கென்ன நோக்கம்- இப்படியாகக் கேள்விகள். பதில் இல்லை. ஆகவே எனக்குள் சூன்யமே நிறைகிறது. இது எனக்கு வேதனை.
இன்றைய நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சி நிலையில், விண்வெளி தொடர்ந்து விரிகிறது. இந்தப் பெருவெளியிலிருந்து கதிர்மண்டலமும், உலகமும் தொடர்வது ஒரு வியப்பு. இதில் தன் உணர்வுடைய உயிர் ஒரு விந்தை. இன்றியமையாத காரண காரிய உறவின் விளைவா இது... இறுதி விளைவை முதலிலேயே உடையதாஇது? முதல் என்பது யாது? அந்த முதல் இறுதியை நோக்கி இயல்வது எப்படி? ஏன்? இக் கேள்விகளுக்கு இன்றும் விடையில்லை. சமய நோக்கில் கூறப்பட்ட இறைவன். பிரபஞ்சம் . உலகம். மனிதன். இறைவன் என்ற காரண காரியத் தொடர்பு பொய்த்துவிட்டது. இந்த இடத்தில் விஞ்ஞானம் வேறு சங்கிலித் தொடரைத் தரமுடியவில்லை. இந்நிலையில் மனித வாழ்க்கைக்குப் பிரபஞ்சத்தோடு சார்த்திப் பொருள் சொல்வதிற்கில்லை. இது சிவராமின் வேதனை.
வேதனையைத் தவிர்க்க விரும்பினால் கேள்வி கேட்காமல் இருக்க வேண்டும். கேள்விக்கு விடை தேடினால் மிஞ்சுவது அலைச்சல். ஆகவே தேடாதே, மெளனமாயிரு என்பது ஞானம். சிவராமின் தேடுதல்' 'விடிவு கேள்விகள் இருமை ஆகிய கவிதைகள் இவ்வகையானவை. ஒருவேளை கடவுள் நம்பிக்கை சிவராமுக்கு முழுமையாக இருந்திருந்தால் அவரிடம் கேள்விக்கோ வேதனைக்கோ தேவை இருந்திராது. ஆனால் கோவில், விக்கிரக வழிபாடு, அவதாரங்கள் இவற்றின் மீது சிவராமுக்கு நம்பிக்கையில்லையென்பதை அவர் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. ராமனை அவர் இரு கவிதைகளில் கேலி செய்கிறார். இக்கவிதைகளெல்லாம் சிவராமின் தொடக்ககாலக் கவிதைகள்.
இவ்வகைக் கேள்விகளிலுள்ள உண்மையை நாம் புறக்கணித்து விடக் கூடாது. பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் - அவனுடைய இலட்சியங்களுக்கும் ஒர் இன்றியமையாத உறவைக்
________________
ஞானி 142
கண்டறிவதில் பிரபஞ்ச ஒருமை நிலை கொள்ளும். இது இல்லாத நிலையில், தற்செயலாக இங்கு வந்த மனிதன் அந்நியனாகிறான். இந்தக் கேள்விக்கு விடை மார்க்சீயத்தில் இல்லை. ஏங்கெல்ஸ் விடைகூற முயன்றார். விடை சரியாக வரவில்லை. பிரபஞ்சம் மனித ஆக்கத்திற்குத்தான் இயங்குகிறது; உலகம், தாவரங்கள், விலங்குகள் வழியே மனிதனைத் தோற்றுவிக்கத் தான் இயங்குகிறது; இந்த மனிதன் கம்யூனிசத்தை நோக்கிச் செல்லத்தான் இயங்குகிறது என்று சொல்வதற்கான ஆதாரம் நம்மிடம் இல்லை. இவை கேள்விகளே அல்ல என்ற வாதமும், கேள்விகளே வேண்டாம் என்ற வாதமும் வேறுபடுவதாகவும் தோன்றவில்லை.
தற்காலச்சூழலில் இக்கேள்வியை சிவராம் கிளப்புவதற்காக அவரை நாம் நொந்து கொள்ள வேண்டியதில்லை. கேள்வி களற்ற ஒரு மெளன நிலையை சிவராம் விரும்பலாம். ஆனால் அந்தக் கேள்விகள் அவரே கூறுகிறபடி வேட்டை நாய்களாக அவரைச் சூழத்தான் செய்யும். கேள்விகளே வேண்டாமென்ற அவரது கூற்றில் ஒரு சமயவாதியைத்தான் நாம் சந்திக்கின்றோம். 'பார்வை' என்ற கவிதையில் மனிதனும் கவிஞனும் பிரச்சனைகள் அற்ற ஒரு ஆதி நிலையில் இருந்ததைக் குறிப்பிடுகிறார். இது இன்று சாத்யமில்லை. அவருடைய கவிதையில் வரும் இருமை நிலை, அவர் நம்புகின்றபடி இங்கு இயல்பாகி விட்டது. முரண்பாடுகள் நிலவும் உலகம் சிவராமுக்கு நிம்மதியில்லாத உலகம். உடல், உயிர், ஒளி, இருள் முதலியவை ஒன்றை மற்றது மறுக்கக் கூடியதாக, ஒன்று மற்றதோடு உறவு இல்லாததாகச் சிவராமுக்குத் தோன்றுகிறது. 'முரண்பாடே உன்னைச் சரணடைகிறேன்' என்ற ஒரு கவிதையில் சிவராம் கூறுகிறார். உண்மையில் இத்தகைய பார்வையுடைய சிவராமுக்கு இந்த மண்ணுலகில் திருப்தியான விடை கிடைக்காது. சிவராம் சந்திக்கும் இந்த முரண்பட்ட உலகம்தான் மார்க்சீய வாதியின் தோற்றத்திற்கான உலகம். சிவராமின் இருண்ட உலகத்திலிருந்தே ஒரு மார்க்சீயவாதி வெளிச்சத்தைப் பெறுகிறான்.
நான் யாரென்ற கேள்வி பிரபஞ்ச இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருப்பதைப் போலவே, அக்கேள்வி எழுவதற்கான ஒரு குறிப்பிட்ட சமுதாயச் சூழலோடும் தொடர்புடையது. மனிதன் அவன் வாழும் காலத்தோடும், சமூக உறவுகளோடும் தொடர்புடையவன். நான் யார் என் கடமை யாது என்ற கேள்விகளுக்கான விடை, அவன் வாழும் காலம், சூழல் ஒட்டியும் கண்டறியப்படும். மனிதன் புற உலகத்தோடு கொண்ட தொடர்பிலும் அக உலகத் தொடர்பிலும் உள்ளவன். இவன் தன்னுடன் தான் கொள்ளும் உறவிலிருந்தும் இக்கேள்வி பிறக்கிறது. நாம் விரும்பத்தக்க சமூக உறவுகள் இல்லாத காலங்களில் இக்கேள்வி கடுரமாக ஒலிக்கும். சிவராம் இந்தக் கேள்விக்கான சமூகச் சூழலை அங்கீகரிக்கவில்லை. வரலாறு, சமூக உறவுகளில் வைத்துத் தன்னைக் கணித்தலில் அவருக்கு நம்பிக்கையில்லை. ஆகவேதான் அவர் பார்வை பிரபஞ்சத்தையே நோக்கியதாக ஒரு விடைப்பு நிலையில் இருக்கிறது. சிவராம் கூறிக்கொள்ளும்
143 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்
Metaphysica I perplexity என்பது இதுதான். 'ஜகமே உலகம், அதிகாரமே சொர்க்கம், மனிதனுக்கே உரியது இந்த மண்ணுலகம் என்ற வறட்டு உலகியல் பார்வைக்குள் மனம் சிறைப்பட்டவர்கள் இந்த பிரபஞ்ச கானத்தைக் கொஞ்ச நேரமாவது கேட்டுக் கொள்ளவேண்டும். இதில் அவர்கள் தன்னிலிருந்து விடுதலை பெறமுடியும்.
பிரபஞ்சத்தோடு மனிதர் கொண்ட உறவு சிவராமிடம் தீட்சண்யத்துடன் சில கவிதைகளில் வெளிப்பட்டிருக்கின்றது. 'தவிப்பு’ ஒர் அற்புதம். மனிதச்சிறுவர்கள் எல்லையின்மையைத் தேடிப்பிடித்து ஆராய்கின்றனர். ஆய்வுக் கூடங்களில் கருவிகள் விழித்திருக்கின்றன. எல்லையின்மையைச் செயற்கைத் கருப்பையில் சிறையிடுகின்றனர். கருப்பை வெடிக்கிறது. சரித்திரம், காலம், நம்பிக்கைகள். இனிய துகள்கள் சிதறுகின்றன. இன்னொரு கவிதை வருகை'. இந்த உலகவாசிக்கு இந்த மனிதன் போதாமல் காமம் மேலிட்டுத் தவிக்கிறாள். நட்சத்திரங்களினூடே இன்னொரு அமானுஷ்யத்தைத் தேடுகிறது அவள்காம விடாய். பிரபஞ்சம் வெற்றுப்பார்வை பார்த்து அவள் விடாயைக் கூட்டுகிறது. அகாதம் அவளை நோக்கிவந்து புகுந்தபடியே இருக்கிறது. அவள் விடாய் முடிவற்றுத் தீர்கிறது. - இந்த உலகத்தோடு கட்டுப்பட்ட மனிதன்-அதாவது, உலகை மையமாகக் கொண்ட மனிதன் போதவில்லை. நட்சத்திரங்களோடு உறவு கொள்ளும் மனிதன் தேவை. பொருள்களோடும் போகங்களோடும் எல்லைகளிலும் சிறைப்படாத மனிதன் அவன் மனிதன்தானா? தேவை. சிவராம் ஒரு பிரபஞ்சியனை எதிர்பார்க்கிறார். நிச்சயம் அவன் நட்சத்திரங்களிலிருந்து இறங்கி வரமாட்டான். இந்த மண்ணிலிருந்துதான் அவன் எழுந்தாக வேண்டும். இன்று நமக்குள் இல்லாத மனிதன், நமது கற்பனைக் கேனும் தட்டுப்படாத மனிதன் நாளை பிறக்கப் போவதில்லை. சிவராம் கூறும் மனிதன் இத்தகையவன்தான். இன்றைய நிலையிலுள்ள குறைகளோடும் குற்றங்களோடும் எல்லை களோடும் குடியிருக்க விரும்பாமல் அவற்றைக் கடந்து, வென்று வளரவேண்டியவன் இந்தமனிதன்தான். இந்த மனிதனை சிவராம் எதிர்பார்ப்பதில் குழந்தைத்தனம் எதுவுமில்லை. ஆனால அவன் நட்சத்திரத்திலிருந்து இறங்கி வருவான் என்பதில் தான அவரது குழந்தைத் தனம் அடங்கியிருக்கிறது. இந்த மனிதனுக்கு Abstract man, Super man என்றெல்லாம் நாமகரணம் செய்ய விரும்புபவர்கள் ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஒரு முறை மாவோ கூறினார்-இன்றைய மனிதன் இல்லாத காலமும் வரும். கம்யூனிஸம் பிற்போக்கானதாகக் கருதப்படும் காலமும் வரும்.
தொடர்ந்து கூறிய கருத்துக்களில் இருந்து நாம் ஒன்றைக் கவனித்துக்கொள்ள வேண்டும். சிவராம் என்னதான் மறுத்த போதிலும் அவரிடம் ஒடுங்கிக் கிடக்கும் சமுதாய உணர்விலிருந்து அவருடைய கருத்துக்களும் கற்பனைகளும் பிறக்கின்றன. தனக்குள்
ஞானி
 144
இருக்கும் சமுதாய மனிதனை, அவனுடைய கால இடவரையறைகளில் வைத்துக் கண்டறியமாட்டாத குழப்பம் அவரைக் கடுமையாகப் பாதிக்கின்றது. மனிதனை உலகவியல் சூழலில் ஒரு பரிணாமத்தின் தொடர்ந்த வளர்ச்சியாகக் காணாத தால் அவருடைய விடைப்பு நிலை அதிகரித்திருக்கின்றது. இதனால் கவிதைக்கு லாபம். ஆனால்... மனிதனுக்கு?
5
சிவராமின் கண்ணாடியுள்ளிருந்து ஒரு நீண்ட மெய்யியல் கவிதை. இதைப் பொருள்படுத்துவதில் சிரமங்கள் நிறைய உள்ளன. இடையில் பொருள் புலப்படக்கூடிய சில பகுதிகளையே முழுக்கவிதையாகக் கொள்வது ஒரு போலித்தனம் என்னைப் பொருத்தவரை, புரிந்த பகுதிகளைத் திறவுகோலாகக் கொண்டு புரியாத பகுதிகளை விளங்கிக்கொள்ள முயல்கிறேன். இந்த முயற்சி பிறரிடமும் தொடர்வதன்மூலம், கவிதையின் உண்மையான பொருளைக் காண முடியுமென்று நம்புகிறேன். ஆகவே எனது கருத்தின்படி இக்கவிதைக்கு ஒரு சுருக்க உரை தர விரும்புகிறேன் - அது எவ்வளவு அபத்தமாக இருந்த போதிலும்.
1. "கண்ணாடியுள்-எனது தன்னறிவினுள்-எனக்குப் புலப்பட்ட என்னைப்பற்றிய தன்னறிவாகிய கண்ணாடியுள் எனது பிம்பத்தைப் பார்க்கிறேன். இது எனது பழைய பிம்பம் - இதன் இறப்பில்தான் நான் வாழ வேண்டும். இது எனது இருள் உருவம். உலகியலின் தொடுவானம் வரை - அதன் விரிந்த எல்லைகள் வரை - இதன் பழைய பிம்பமே நிறைந்திருக்கிறது. என் இமைகளின் ஆழத்துள் - எனது மனத்தின் ஆழத்துள் - பார்க்கிறேன். என்னைப் பற்றிய தரிசனங்கள் சில கிடைக்கின்றன.

2.   தன்னறிவுடைய தானும், தன்னறிவுக்கு வசப்படாத தானும் ஆகிய இரு உருவங்கள் ஒன்றையொன்று எதிரிட்ட நிலையில் - "நாம் ஒருவரையொருவர் ஊடுருவி அறிய முடியாதா? ஒருவர் மற்றவரின் இரத்தத்துடிப்பை - இயக்கத்தை அறிய முடியாதா...?" வாய் புலம்புகிறது. அறிய முடியவில்லை. காலம் கழிகிறது. இடைவெளி மீது எனது கோபம். நான் இருளுள் இருக்கிறேன். சற்றே ஒரு விடிவு வருகிறது. விடிவின் போதே மரணம் கலைகிறது. மனத்தின் பேராழத்திலிருந்து ஊற்றாக, இல்லை - குமிழியாக ஒளிக்கீற்றுக்கள் - என்னைப் பற்றிய தன்னறிவின் ஒளிக்கீற்றுகள் - மேலேறி வருகின்றன. இந்த ஒளிச்சிதறல்கள் நட்சத்திரத்தின் சிற்றலைகள். இவை உலகை - என்னிடம் படிந்துள்ள உலகியல் சார்ந்த பழைய இருள் பிம்பத்தைப் புரட்டக்கூடியவை.
3.  சிகிச்சைக்கருவி போல என்னைப் பிளந்து வரும் ஒளிக்கீற்று எனக்குள் என்னைக் கீறுகிறது. கீறிய பிறகு என்னை விட்டுப் 
145
பிரிகிறது. புலனின் கதவுகள் அடைத்துக் கொள்கின்றன. எனக்குள் மீண்டும் ஒரு அந்தகாரம். காலையில் எழுந்த ஒளி, இருண்ட நெருப்பாக, ஊமை நண்பனாக, பகலினுடே வருகிறது, பகலின் உலகியல் துடிப்பினுடே அந்த ஊமை நண்பன் எனக்குள் மறைந்து விடுகிறான். அந்த ஒளி கொள்ளை போன வைரம் போலப் போகிறது. ஆயினும் எனக்குள், இன்னும் எனது பரிவுக்குள் அகப்படாமல் எனக்குள் மினுமினுக்கும் நட்சத்திர பிம்பங்கள் பல. 
நானும் - தன்னறிவின் சில பிம்பங்களை உடைய நானும் . தன்னறிவுக்கு வசப்படாத அந்த எண்ணற்ற பிம்பங்களும் எதிரெதிர் நிலையில் நிற்கின்றோம், இரு கண்ணாடிகளாக. ஒன்றினுள் மற்றதன் பிரதிபலிப்பு. கோடான கோடி பிம்பங்கள் - நட்சத்திரங்கள். இவை கர்ப்பக்கிரகத்து வெளவால்கள், இருளில் பறக்கின்றன. இவற்றுக்கு வெளிச் செல்ல வழி தெரியவில்லை. இடையில் ஒரு சூரிய ஊற்று. எங்கும் உருவெளித் தோற்றங்கள். உண்மை போலத் தோன்றும் தோற்றங்கள் எல்லாமே இரவினுள் நிழல்கள். இருள் என்னும் ஒற்றை உருவே எல்லாவற்றிலும் - எல்லா வற்றையும் வியாபித்து நிற்கிறது. இந்த ஒற்றை இருளுருவம்-சூன்யம் (Nothingness)
4. என்னைப்பற்றி நான் கொள்ளும் பிரதி பிம்பம் - (இது Concept
- கருத்தாக்கம்) ஒரு போலிவெளி (falsehood) - இது ஒரு நிழல்நோய். எனது இருப்பை (being) தனக்குள் கவ்வ விரும்பும் மூளை இது. எனது இருப்பே ஒளிமயம். இதைக் கவ்வ வரும் நரம்பு வலை இது. எனது உண்மை இருப்புக்கு - ஒளிக்கு - நிழல் இல்லை. மூளை இதைக் கவ்வும் போதே, ஒளி இதைப் பிளந்துகொண்டு வெளிப்பாய்கிறது. 
மூளையில் ஏற்பட்ட பிளவின் வழியே உள்ளார்ந்த என்னை தரிசனம் கொள்கிறேன். தன்னறிவு இதுவரை நானறியாத எனக்குள் பிரவேசிக்கிறது. மயானச்சாம்பல் சொர்க்கத்துள் நுழைகிறது. எங்கும் முரசொலி, மத்தளங்கள், நடனங்கள், பரிதியைத் தீண்டுகிறது ஒரு பனிவிரல். 
இதயத்தில் அதிர்வும், மெளனமும், உடனுக்குடன் தொடர்கின்றன. எனது பழமை வீழ்கிறது. இக்கணத்தில் நான் நுழைகிறேன். எல்லாம் எனக்குள் புதிதாய்ப் பிறக்கின்றன. அவற்றுள் நான் இழைந்து நான் அவையென்ற வேறுபாடு இழந்து - அத்வைத நிலையில் - கோஷமிடுகிறேன். இக்கணத்தில் யுகங்கள் கழிகின்றன. 
இந்த ஒளி வெள்ளத்தை என் மனத்தில் தேக்கி நிறுத்த நினைவில் கொள்ள கருத்துருவாக்கம் செய்ய மனத்தை தயார்படுத்துகிறேன். உடனே இருள் இதயத்தை மூடுகிறது.மனம் (mind, concept) ஒரு சவப்பாறை மலர்மீது ஒரு ஊமை________________-ஞானி - 146 
வியாதி. இதற்குள் ஒளித்தாவரங்கள். ஒளி குவிந்து இறுகி, உறைந்த புழுதி இந்த மனம் கண்ணாடிப் பாலை மீது இது புழுதிக்காற்று.
கதவு மூடுகிறது. உள் ஒலி அடைபடுகிறது. இடையில் சாவித்துவாரத்தின் வழியே பார்க்கிறேன். வாழ்க்கை (being) மலையின் பிம்பம், சாவித்துவாரத்தில் - பனித் துளியில் - தெரிகிறது.
5. தசைச்சுவராகிய இந்த உடலியில்-பொருளியல்-உலக வெளியின் இடையில் சுடர்கள், ஆன்மாக்கள் ஆடுகின்றன. இவை விரிந்து சுருங்கிய வண்ணம் ஆடுகின்றன. இந்த ஆன்மாவை அறிந்து கொள்ள என் தன்னறிவு நீள்கிறது. கேள்விகள் வழியே சுடரை அறிய முனைகிறேன். இச் சுடர்களின் பொருளும் பார்வையும் என்ன. கேள்விகளை ஒதுக்க, இக்சுடர்களில் இக்கணமே துடிக்கிறது. இதன் துடிப்பு எனக்கு-பழைய பிம்பத்துக்கு அச்சம் தருகிறது. என் கண்கள் இருள்கின்றன. ஒளி வெள்ளத்தோடு அதிக நேரம் உறவு கொள்ள முடியாமல் திரும்பி நடக்கிறேன். எரியும் மணல் மீது சேற்றுச்சுவடுகள். இதயத்தினுள் சுடர்களின் ஒடுக்கம். புற உலகம், பாலை. இதில் திசை தெரியாமல் மனிதச் சுவடுகள்.
"கண்ணாடி வெறிச்சிடுகிறது."
கவிதைக்கு நான் தந்த சுருக்க உரை இது. கவிதையை நான் புரிந்து கொண்டவகையிலான உரை இது பேரண்டமும் சிற்றண்டமும் பிரபஞ்பசமும் மனிதனும் தமக்குள் எதிரிட்டுக் கொள்ளும் நிலை பற்றியது இக்கவிதை என்ற முறையில் சிலர்தரும் விளக்கம், நிறைய இடங்களில் பொருந்தவில்லை. எனது விளக்கம் சில இடங்களில் பொருந்தவில்லை எனக்குள் உள்ள பொருளில் இருந்தே பிறர் கவிதையை நான் கண்டாக வேண்டும் என்பது எனக்கு நேர்ந்துள்ள வரையறை, பிறர் தரும் விளக்கத்தின் மூலம் வேறு வகையில் எனக்குப் புரிதல் ஏற்படாதவரையில்.
எனது பார்வையின்படி நான் யாரென்ற மெய்யியல் கேள்வி, ஒரு பரிமாணத்தில் இங்கு மீண்டும் கேட்கப்படுகிறது. மனிதன் தன்னை அறிந்தவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான். அறிந்தது ஒரு பகுதி அறியாதது இன்னொரு பகுதி. முன்னைய தன்னறிவு, பின்னையதன் அறிவுக்கு ஒரு வகையில் திறவுகோல், இன்னொரு வகையில் தடை முன்னையதைக் கொண்டுதான், அதன் வழியில்தான் பின்னையதை அறிய வேண்டும். அதே சமயம், முன்னையதன் இறுக்கம், பின்னையதைத் தன் சாயலிலேயே காணவைப்பதால், தடை இச் சிக்கல் மனிதனின் நிரத்தரச்சிக்கல்.
சிவராமின் சிந்தனைகளில் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தாக்கம் இருப்பதை இக்கவிதை புலப்படுத்துகிறது. ஒரு வேளை சிவராம் தன் அனுவபத்தை ஜே.கே.வின் விளக்கங்கள் வழியே புரிந்து கொண்டதாகவும் இது இருக்கலாம். வரலாறு, மனம், கருத்தாக்கம்
147 
முதலியவை, நிகழ்வின் இடையறாத இயக்கத்தை ஏற்பதற்கான தடைகள். அவற்றிலிருந்து நீங்கி நிதர்சன நிலையில் இக்கணத்தில் மனிதன் இருக்க வேண்டும். இதில்தான் மனிதனுக்கு விடுதலை. ஜே.கே.வின் இக்கருத்து, சிவராமின் வேறு சில கவிதைகளிலும் காணப்படுகின்றது.
ஜே.கே.விலிருந்து சிவராம் வேறுபடுவதையும் நாம் கவனித்துக் கொள்ளவேண்டும். ஜே.கே. வுக்கு, இந்தப் பிரபஞ்ச இயக்கம், அதுபற்றி வானியல் பெளதிகத்தின் பிரச்சனைகள் இவற்றில் ஈடுபாடு இல்லை. சிவராம் இவற்றில் ஈடுபாடு கொள்வதோடு அதிலிருந்து தனக்கான ஒரு மெய்யியல் வகுத்துக் கொள்ள விரும்புகிறார். ஜே.கே.வுக்கு கருத்தாக்கம், கவிதையாக்கம், சில கொள்கைக்கான எதிர்ப்பு, பகைமை, கோபம், கிண்டல் இம்மாதிரிச் செயல்களில் அறவே ஈடுபாடு இல்லை. ஈடுபாடு தரிசனத்தில் இயங்குவதற்குத் தடை என்பதால். ஒரு ஏகாந்த நிலை ஜே. கே. வினுடையது. இம்முறையில் சிவராமின் வேறுபாடு நன்கு புரிகிறது. (ஜே.கே. விடமும் ஈடுபாடும் கருத்தாக்கமும் உண்டு என்று கூறுவதனால், அது பிரச்சனையை இன்னொரு மட்டத்திற்கு உயர்த்துகிறது). ஜே. கே. வின் நிலைப்பாடு, ஒரு மெய்யியல் வகுப்பு அல்ல. மெய்யியல் என்பது பிரபஞ்சம், வரலாறு, சமூகம், மனிதன் ஆகியவை பற்றிய அவ்வக்கால உண்மைகளைச் செரித்த வண்ணம் மனிதப் பிரச்சனைகளைக் கண்டறிகிறது; விளக்குகிறது; மனிதச் செயல்களுக்கு வழிகாட்டுகிறது. இத்தகைய வகுப்பில் ஜே.கே. வுக்கு ஆர்வமில்லை. அவர் கருத்தின்படி இத்தகைய வகுப்பில் உண்மையில்லை. ஜே.கே.வின் நிலைப்பாட்டிலுள்ள ஒரு முக்கியமான உண்மை, நிதர்சன நிலையில் இக்கண பிரத்யட்ச நிலையில் - தானிருந்து, தனது சூழலை (அதில் உலகமும், உலகம் உள்ளடங்கிய பிரபஞ்சமும் அடங்கும்) நோக்கிய திறந்த மனத்தோடு இருக்கவேண்டும். இதில் எந்த மெய்யியலாளனுக் கும்-ஆகவே மார்க்சீயவாதிக்கும்-மறுப்பு இருக்க முடியாது. புதிய உண்மைகளை மனம் செரிப்பதற்குப் பழைய கருத்தாக்கங் களில் நெகிழ்வு, நீர் நிலையில் இருக்க வேண்டும். மன இறுக்கத்தின் போது சில கொடுங்கோன்மைத் தவறுகள் நேர்ந்து விடலாம். சில சமயங்களில் அப்படிச் செய்யாமலும் இருக்க முடியாது. எப்போதும், எந்த நிலையிலும் மனம் நீர் நிலையில் இருப்பது சாத்தியமும் இல்லை. ஆனால் அடிக்கடி, அவ்வப் போது, பிரச்சனைகளில் இருக்கும்போதுகூட மனம் நீர் நிலையிலிருப்பது மேலானது.
ஜே.கே.விடம் சிவராம் கொண்ட ஈடுபாடு காரணமாக, இக்கவிதை மனித அனுபவத்தின் சில உச்சங்களைத் தொடுகிறது. இடையிடையே சில அற்புதமான காட்சிகள் பொருள் முற்றாகப் புரியாத நிலையிலும்.
'கோகயத்தில் வெளிவந்த பட்டறை சிவராமின் மெய்யியல் பார்வையை மேலும் தெளிவாக்குகிறது. அதிலிருந்து சில பகுதிகள்,
________________
ஞானி 148
உரைநடையாக,
."புலன் உலகப் புறவாழ்வில், மரத்தனத்தை ஊடுருவி விட்டால் தன்னிருப்பு என்ற தரிசனத்தைப் பெற்றிடலாம். அந்தப் பெருநிலை சிறு மனசின் எல்லைக்குள் கொள்ளாது. மனசைக் குமிழி என எற்றி எடுத்துச் சிதறடித்து எனது சுய உணர்வு அற்ற நிலையில் எனது அகம்பாவம் அற்ற நிலையில் எல்லையற்ற பேருணர்வு நிகழும்."
"மனிதன் தெய்வமாவதே இல்லை. அகந்தை ஒழிந்தால் மனிதனும் மறைகிறான். எஞ்சுவது எல்லையற்ற ஒன்று. (அத்வைதம்) அல்லது ஒன்றுமில்லை (பெளத்தம்) சிவராம் குறிப்பு இரண்டும் ஒன்றுதான்). ஞாபக அடுக்குக்குவியலின் மேல் குந்தியிருந்து நேற்று நாளையெனக் காலத்தைப் பிரித்து விருப்பு வெறுப்புக்களைத் தேர்ந்து ஞாபக் குவியலுக்கு சாதகமானவற்றை அனுசரிக்க முயற்சிக்கும் நான் என்ற தன்மை, ஞாபகங்களின் பிதுக்கப்புள்ளி, பிரமை, ஞாபகங்கள் மறைய தானும் மறையும் நிழல். இதுதான் 'மனிதன்' எனில் அவனுக்குத் தெய்வீகம் ஒரு கேடா இந்த மனிதனைக் கிழித்தெறிந்து தன்னை நிலை நாட்டுகின்ற மெய்யிற்கைதான் மனிதன் எனில், ஏற்கெனவே அவ்வியற்கை தெய்வீகமாயிருக்கிறது. புலன் வாழ்வு வெறும் சிறை என்று காணும் தெளிவு இருந்தால் அன்றோ விழிப்புக்கு இடமுண்டு! பழமைக்குவியலாம், ஞாபகக் குப்பை மறைந்தால் எநதது குப்பையும் திரவியம். வாழ்வு ஜடமல்ல, கோபித்த ஒரு பெரும் உயிரின் இடையறாக்சுடர், ஜ்வாலை."
"அன்பே செயலின் ஊற்று. கடமையல்ல. அன்பே செயலென்ற ஆற்றலின் தன் நிலை. தெய்வீக வேகத்தை மனிதர் நலனுக்காய் வரவழைக்கவென ஒரு மனித மனம் தன்னை அழித்து, தன்னையே தெய்வீகக் கருணையின் வேகத்துக்கான வாசலென ஆக்கிவிட்டால், கடமையாவது ஒன்றாவது...! இதுவே கலை ஞனிடம் தெய்வாதீனக் கருணையின் நிழலான க்லா சக்தியாக இயங்குவது.
சிவராமின் கருத்தில், புலன் அனுபவங்களின் தொகுப்பாகிய ஞாபத்திலிருந்து நீங்கினால் தான் மறையும் காலம், எல்லைகள், அகம்பாவம் மறையும்; ஏகோபித்த எல்லையற்ற பேருணர்வு எழும். அது மனித நிலையல்ல. தெய்வீக நிலை. அது எல்லை யற்ற பெருஞ்சுடர். அதுவே மெய்யியற்கை எல்லையற்ற அன்பே வடிவாகிய தெய்வீகம் தனக்குள் எழும். அந்தக் கருணையின் நிழல், கலா சக்தி.
இங்கு நாம் கவனித்துக்கொள்ள வேண்டிய உண்மை, ஜே.கே. வுக்கு அத்வைதம், பெளத்தம் சம்மதமில்லை; அரவிந்தரிடம் நாட்டமில்லை. சிவராமிடம் ஜே.கே.வோடு பிறரும் இருக்கின்றனர். அத்வைதம் கூறும் பிரம்மமும் பெளத்தம் கூறும் சூன்யமும் ஒன்று என்பது சிவராம் கருத்து. இவை அனைத்தும் சிவராமிடம் எப்படி இணைகின்றன என்பதும் பிரச்சனை.
நாம் நிதானமாக நடை இடவேண்டிய இடம் இது புலன் வழி
o
149 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் 
அனுபவங்களாகிய ஞாபகங்களைக் களைந்து அல்லது ஞாபகங் களிலிருந்து நீங்கிச்சென்றால் நாம் அடைவது குழந்தைமை நிலை. இது ஒருவகையில் ஆதி நிலை. குழந்தைமை நிலையில் நம் உணர்வு உக்கிரம் கொள்வதோ, சுடராக விளங்குவதோ சாத்தியமில்லை. சிவராமோ மற்றவர்களோ கூறும் ஆன்மீகப் பயணம், குழந்தைமைப் பேற்றில் முடிய இயலாது. புலன் வழி அனுபவங்களிலிருந்து விலகிச் செல்லும் போது ஏற்படும் துக்க நில்ை-மயக்க நிலைகூட ஆன்மீகப் பயணத்தின் இறுதியாகச் சிலரால் கூறப்பட்டிருப்பதையும் ஏற்பதற்கில்லை. புலன் வழி அனுபவங்களைத் தருவதாகிய புற உலகம், பன்மைத் தோற்றங் களையும், தோற்றம், தேய்வு, அழிவு ஆகிய வேறுபாடுகளையும் உடையது.
மாறுதலுக்குட்படும் பன்மைத் தோற்றங்கள் உண்மையாக இருக்கமுடியாது. இவற்றின்வழியே இவற்றைக் கடந்து செல்லும்போது, நமக்குள் எதிர்ப்படக்கூடிய ஒருமையே உண்மையாக இருக்கக்கூடும். வரையறைகளுக்குட்படாத நிரந்தர மான, பன்மை வடிவில்லாத ஓர் உண்மை அது. அதுவே அத்வைதத்தில் பிரம்மம் என்றும், பெளத்தத்தில் சூன்யம் என்றும் கூறப்படுகிறது. அந்த ஒர் உண்மையில் உலகியல் பொருட்கள், நிகழ்வுகள் எல்லாம் விளக்கம் பெறுவதால் அது ஒளிமயமானது. இயக்கங்கள் எல்லாவற்றினுள்ளும் அது இருப்பதால் அது இயக்கமே வடிவமானது. அதன் பார்வையில் காலமும் கட்டுப்பாடுகளும் இல்லை.
இது சமயவாதிகள் வழி விளக்கம். சிவராமின் கருத்தை இவ்விளக்கத்தின் வழிதான் விளங்கிக்கொள்ள முடியும். இவ்விளக்கம் ஜே.கே.வுக்குச் சம்மதமானதல்ல. பிரம்மம் என்றும் சூன்யம் என்றும் கூறப்படும் அந்த ஒருமையை, சிவராமின் பெளதீக வழி விளக்கந்தான் சக்தி (Energy) என்று கூறுகிறதா? அந்த ஒருமையைச் சக்தி என்று கொண்டால் அது ஏன்? எப்படிப் பொருளாயிற்று? அது எப்படி மனிதனாயிற்று? அதற்கான தேவை என்ன? பெளதீகத்தின் மொழியில் கூறப்படும் அந்தச் சக்தி மனிதனின் மேன்மையான குணமாகிய கருணையை எப்படிக் கொண்டது? இது தெய்வம் அல்ல என்றால் இதிலிருந்து தெய்வீகம் பற்றி எப்படிப் பேசமுடியும்? பெளதீகம் கூறும் சக்தியும் சமயம் கூறும் பிரம்மமும் எப்படி இணைந்தன? சமயம் கூறும் பிரம்மத்தைத் தான் பெளதீகத்திற்குள் தேடிச் சக்தியாக நிலைநாட்ட விரும்புகிறாரா சிவராம்? தம் சுய தரிசனத்தில் இந்தச் சக்தி-இந்தச் சுடர்தான் இறுதி உண்மையாகப் புலப்பட்ட தென்றால், அதை நிரூபணம் செய்வதற்குச் சிவராமோ மற்றவர்களோ மேற்கொண்ட முயற்சிகள் பரிதாபமாய்த் தோற்று விடுகின்றன. பிரம்மம், சூன்யம் இவை பற்றிய அனுபவம் புலன்களுக்கு பெளதீகத்திற்கு அப்பாற்பட்டது என்றால் அதை மனிதன் எப்படி அறியலாகும்? உண்மை என்ன என்பதைப் பற்றித் தொடர்ந்து சிந்திப்போம். உண்மையைக் காண்பதற்கான வழியை இங்கு நிச்சயம் மார்க்சீயந்தான் காட்டுகிறது.
________________
ஞானி 150 
தனித்தனியான புலன்வழி அனுபவங்களின் வழியே சிந்தனா ரீதியாக அவற்றின் பொது உண்மைகளை நாம் தொகுக்கிறோம். தனி அனுபவங்கள் என்புவை ஒரே ஒரு தனிமனிதனுக்கு உரியவை அலல. வாழ்க்கைச் சூழல் வாழ்க்கை முறையின் பொதுத் தன்மையிலுள்ள பற்பல மனிதர்களுக்கும் ஏற்படும் பொது அனுபவங்களும் அவை. இவ்வனுபவங்களும் வரலாற்றுச் சூழலில் ஏற்படுபவை. வரலாறு என்பது துண்டு துண்டாக இல்லாமல் ஒரு தொடர்ச்சியாகவும் நிகழக்கூடியது.
தன புலன்களுக்குள்ளும் அனுபவங்களுக்குள்ளும், வரலாற்றுச் சூழல்களுக்குள்ளும் சிறைப்பட்டவனல்ல மனிதன். சூழலால் மனிதன் பாதிக்கப்படுவதைப் போலவே சூழல்களை வெல்லக் கூடியவனும்தான் மனிதன். ஒரு கோட்பாட்டை உருவாக்க நூறு ஆதாரங்கள தேவைப்படும் இடத்தில், அறுபது ஆதாரங்களே இடைக்கும் நிலையில், ஒரு பாய்ச்சலாக 90, 95 ஆதாரங்களுக்குப் பொருந்தி வரக்கூடிய உண்மையை மனிதனால் கண்டறிய முடியும். ஐன்ஸ்டீனின் அனுபவத்தை மார்க்சீயவாதி மறுக்க வில்லை. மார்க்சீயவாதி இங்கு வற்புறுத்துவது ஐன்ஸ்டினும் புத்தரும், மாாககம ஒரு குறிப்பிட்ட காலச் சூழலில் தான் தோன்றுகிறார்கள் எனபதைததான ஒரு காலச் சூழலில் தோன்றியவன் காலத்தைக் கடந்தும் இயங்கமுடியும், என்பதை மார்க்சீயவாதி மறுக்கவில்லை.
மனிதன் தன் அனுபவங்களைப் புரிந்துகொள்வது என்பது, அவறறைப பொதுவயப்படுத்தல் மூலம்தான். இம்முறையில் சமுதாயது சூழலில் வரலாற்றுச்சூழலில் வைத்தே மனிதன் தன்னைக் கண்டறிகிறான்.
வரலாற்று வழியாக சேர்ந்து வந்த பார்வையும் ஆற்றல்களும் இயக்கங்களும் தனக்குள் இருப்பதையறிகிறான். தான் வாமன வடிவத்தில் இருந்தபோதிலும் தனக்குள் இயங்கும் விசவருபத் தைத் தரிதிக்கிறான். சமுதாயத்தில் தன்னை மனிதனாக வளர்த்த சக்திகளைக் கண்டறிந்து திரட்டிக் கொள்கிறான். சமுதாய வளர்ச்சிக்குத் தடையாக உள்ள சக்திகளை மோதி அழிக்கிறான்.
சிவராம் கருதுவது போலப் புலன் வழி அனுபவங்களை விட்டு விலகுவதால், மனிதன் மேன்மையடைய முடியாது. அனுபவங் களின் சாரத்தைத் திரட்டுதல் ஒரு பொதுவயப்படுத்தல் மூலந்தான். மனித அனுபவங்களுக்குக் காரணமான சமுதாய வரலாற்றுச் சக்திகளைப் புரிந்து கொள்வதன் மூலந்தான் தனித்தனி அனுபவச் சுமையிலிருந்து விடுதலை பெறமுடியும். பொது உண்மை பற்றிய காட்சியை அறிவை - தரிசனத்தைப் பெறும்போதுதான் மனிதன் பாவை கூர்மையடைகிறது; ஆழ மாகிறது; அழகாகிறது. மனிதன் தனனை அறிதலும், தன்னைத் திரட்டிக் கொள்ளுதலும் இவ்வழியில்தான். வரலாற்றின் இயக்கத்தில் தன்னை வைத்து, தனனையும இயக்கமாகப் புரிந்துகொள்ளும் போதுதான் பொருட்களின் புலன்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுகிறான். குறுகிய பற்றுகள், ஆசைகள், அகம்பாவத்திலிருந்தும்
151 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்
இவன் விடுதலை பெறுகிறான். குறிப்பிட்ட சூழல்களிலிருந்து, அவற்றின் எல்லையிலிருந்து விடுதலை பெற்று, விரிந்த எல்லைகளில் இவன் உலவு கிறான். வரலாற்றுச் சமுதாயச் சக்திகள் இவனுக்குள் திரண் டிருக்கின்றன. இவன் பார்வை தீட்சண்யம் உடையது. இவன் பார்வையில் எத்தனையோ பிரச்சனைகள் தீர்கின்றன. இவன் ஞான சூரியன். எல்லாமே இயக்கத்தில் இருக்கின்றன. இயக்கத்தின் வழியில் தான் உலகம், மனிதன், உயிர்கள் இருக்கின்றன. இயக்கம் பற்றிய தரிசனத்தின் போதுதான் வாழ்வு, சாவு, அழகு, அசிங்கம், நிலையற்றது, நிலையானது முதலியவற்றைப் பற்றிய பார்வை தெளிவுறுகிறது. இயக்கம் பற்றிய தரிசனத்தில்தான் மனித மனம் குறுகிய பிரச்சனைகள், விருப்பு வெறுப்புக்களிலிருந்து விடு பட்டுச் சாந்தநிலை பெறுகிறது. இந்த மன நிலையிலிருந்துதான் செயலாற்றல், அன்பு, கருணை முதலியவை பெருகுகின்றன. இந்த மன நிலை அழகு மயமானது; கலைகளுக்கானது. இப்போது மனம் சாவதில்லை. ம்னம் கட்டுக்களிலிருந்து விடுதலை யாகி இயக்க வடிவம் பெற்றிருக்கின்றது. தன் 'அழுக்குகளிலி ருந்து விடுதலையடைந்து தூய நிலை அடைந்திருக்கிறது. இது வரலாற்று இயக்கம் - மனித இயக்கம். இந்த இயக்க வெள்ளத்திலிருந்துதான் சிவராமும் மற்றவர்களும் கைப்பிடி அளவை எடுத்து அதில் கடலைப் பார்க்க முயற்சி செய்கிறார்கள். இந்தப் பார்வைக்குள்சிவராம் அடங்கி விடுகிறார். சிவராமின் சில புகழ்பெற்ற கவிதைகளை ஒருமுறை பார்த்துக் கொள்வோம்.
6
E = mc2 கவிதை-இதில் விஞ்ஞானம் சொல்லப்பட்டிருக்கின்றது: தமிழ்க் கவிதைக்குள் விஞ்ஞானம் இக்கவிதை மூலம் வந்திருக்கிறது என்பதற்காகப் பாராட்டப்படுகிறது. கவிதையில் அரசியல் சொல்லப்படுகிறது என்பதுபோலத்தான் இதுவும். விஞ்ஞானச் செய்தி ஒரு கவிதையில் இடம் பெறுவதற்காக அது பாராட்டப்படுவதைக் காட்டிலும் அச்செய்தி கவிதையாக்கப் பட்டுள்ளதா என்பதுதான் கவனிக்கத்தக்கது. இக்கவிதையில் விஞ்ஞானச் செய்திகள் தவிர சிவன் . கேள்வி பதில்-கபாலத்தின் கெக்கலிப்பு என்ற படிமத்திற்கிடையில் அச்செய்தி வருகிறது. இவன் சம்பந்தப்பட்ட கேள்வி பதில் விளங்கவில்லை. ஐன்ஸ்டீன்பியானோ-சங்கேதநதி-வெடிப்பு-கண்ணிர்-இப்படிமம் உருக்கமாக இருக்கின்றது. விஞ்ஞானச் செய்தி, சிவன்படிமம், ஐன்ஸ்டீன் படிமம் ஆகியவை ஒருங்கிணைந்து உயிர்ப்பைப் பெறுவதாகத் தெரியவில்லை.
இதைக் காட்டிலும் கவனிக்கத்தக்கது இன்னொன்று. வியட்நாம் போர் எங்கோ நடந்தது. அதைப்பற்றி தமிழில் பலர்-கட்சி சார்ந்தவர்களும், சாராதவர்களும் தம் ஆவேசத்தை வெளிப்படுத்தும் முறையில் கவிதை எழுதினார்கள். இது போலிக்கவிதை இப்படி

________________
ஞானி 152
அவர்கள் கவிதைகள் விமர்சனம் செய்யப்பட்டன. அக்கவிதைகள் போலித்தனமானவை என்பது உண்மை. காரணம் வியட்நாம் போர் "எங்கோ நடந்தது என்பதால் அல்ல. அந்தப் போராட்டத்தை இவர்கள் உள்வாங்கிக் கொள்ளவில்லை. அதாவது, அந்தப் போராட்டம் இவர்களை உண்மையில் பாதித்தது பற்றியோ, நமது சமுதாயத்தில் நடைபெறும் வியட்நாம் போராட்டம் பற்றிய உணர்வோ இல்லாமல் அவை கவிதைக்காக, முழக்கத்திற்காக எழுதப் பட்டவை. வியட்நாம் இவர்களின் தன்னுணர்வாகவில்லை. குளிர்காயும் நெருப்பாக இருந்தது. உள்ளிருந்தெழும் கனலாக இல்லை. -
இந்த விமர்சனம் E = mc2 கவிதைக்கும் பொருந்தும். புறநிகழ்வு அகத்தில் எழுப்பும் அலைகளாக அல்லாமல், அகத்தின் அனுபவம் ஆக வேண்டும். புதிய பிரபஞ்சம் பற்றிய கூற்று அத்தகையது. மற்ற செய்திகள், காட்சிகள், ஜடமே சக்தியென்ற கருத்திலிருந்து ஒரு தன் அனுபவம் பரிணமித்திருக்க முடியும் செய்தியைக் கவிதை அமைப்புக்குள் கொண்டு வருவது கவிதை ஆக்கத்தில், தொடக்க முயற்சி. கவிதை பல கதிகளில் பல மட்டங்களில் நிகழும். உயர் மட்டத்தில் நிகழும் சிவராமின் கவிதைக்கு விமர்சனம் : ஒரு பெரிய பிரச்சனை, முதல் முறை கவிதைக்குள் வரும்போது இப்படித்தான் கொஞ்சம் உருக்கமாகச் செய்தி சொல்லியாக இருந்துவிடுமோ? விஞ்ஞானமே கவிதை. அதுவும் ஐன்ஸ்டீனின் சாமியம் அது சொல்லப் படுவதிலேயே அற்புதமான கவிதை என்று கூறப்படுமானால் அதையும் வேறு ஒரு தளத்தில் ஏற்பதை நாம் மறுக்கவில்லை.
சிவராமின் இன்னொரு கவிதை "அற்புதம். துறைமுகத்தில் பனை உயர கிரேன் உச்சியில் ஒரு தொழிலாளி. சூரியனை அவனுடைய சிரசு மறைக்கிறது. பீடிப்புகையோடு அவன் காறித் துப்புகிறான். சூரியன் அவனது சிரசின் பின்புறத்தில் சிரசைச் சூழ வட்டமாய் இருக்க, தொழிலாளி துப்பிய துளி சூரியன் கையில் புறப்பட்ட அம்பாகிறது. கவிஞன் பார்வையில்பட்ட அத்துளியில் ஒரு வானவில் பிறக்கிறது. இந்த அற்புதக் காட்சியில் கவிஞன் தன்னை மறக்க ஒரு கணம் கிரேன்கள், லாரிகள் யாவும் இயக்கமற்றுச் சமைந்தன.
சிவராமின் படிமங்கள் ஆற்றல் மிக்கவை என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் படிமங்கள் உள்ளார்ந்த ஒரு பொருள் தொடர்பில் இயைகின்றனவா? சூரியனை அவன் சிரசு மறைத்த போதுதான், தொழிலாளி சூரியனாகிறான். உண்மையில் தொழிலாளிக்குள் ஒரு சூரியனுண்டே, அதைக் கவிதை குறிக்கிறதா. பனை யுயரக் கிரேனிலிருந்து அவன் துப்பும் எச்சில் துளி எப்படி மழைத் துளியாகும்? அந்த ஒரு துளியில் கீழே தொலைவில் உள்ளவன் பார்வையில் எப்படி வானவில் பிறக்கும்? தொழிலாளி இயங்க, உலக இயக்கமே நின்றதுபோல கவிதை கூறுவது உண்மையா? அல்லது கவிஞன் பார்வையில், இந்த உலகம் இயக்கமற்றுப் போனதில் தொழிலாளிக்கு என்ன இன்றியமையாத உறவு? இப்படி
153 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்
படிமத்தொடர், பொருள் தொடர்பில்லாததனால் அறவே சிதைகிறது. தொழிலாளியைப் பாராட்டுவதற்கு சிவராம் வேறு கவிதைதான் எழுத வேண்டும். 'குருக்ஷேத்திரம் நல்ல கவிதை, தொழிலாளிகள் போராடும் போது 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்று முதலாளிகள் அமைச்சர்கள்-தொழிற்சங்கத் தலைவர்கள் உபதேசம் செய்கிறார்கள். தொழிலாளிகள் திரள்கிறார்கள். கல் பறக்கிறது, கல் அடிபட்டு ஒடும் அவர்கள், போலீஸ்காரர்களை வரவழைக் கிறார்கள். இந்தச் செய்தி பாரதக் கதையில் குருச்சேத்திரப் படிமத்தின் வழியே இக்கவிதையில் நடைபெறுகிறது.
நீதியை நிலைநாட்ட வந்த கண்ணன், இன்று அநீதியை நிலைநாட்ட உபதேசம் செய்கிறான். கீதை இன்று இப்படியாகி விட்டது என்பதில் கீதையைப்பற்றிய ஒரு விமர்சனம். இன்றைய அர்ச்சுனன் தன் கடமையை அறிந்து கடமையைச் செய்கிறான். கார்த்த வீரியார்ச்சுனனாக கிளர்ந்தெழுகிறான். கண்ணன் கெளரவர்க்குப் பக்க பலமாகித் தன் கடவுள் பதவியைக் காத்துக் கொள்கிறான். இன்றைய நிலையில் கடவுளைப் பற்றிய விமர்சனம் இது. மேலும், இந்தக் கவிதையில் தொழிலாளர் போராட்டத்தை கல்லெறியையும் சேர்த்து - நியாயப்படுத்தும் முறையில் சிவராம் எழுதியிருக்கிறார். இம்முறையில் தொழிலாளர்க்கு ஆதரவான கவிதை இது. இந்தக் கவிதை தொழிற்சங்கப் போராட்டத்தைத்தான் சொல்கிறது, ஒர் இறுதியான வர்க்கப் போராட்டத்தைச் சொல்லவில்லை என்பதனால், குருசேத்திரம் என்ற உக்கிரமான படிமம் இங்கு பலவீனப்படுகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தவிர், கடமையைச் செய் பலனை எதிர்பாராதே, போராட்டத்தை நடத்து உடனே பலனை எதிர்பாராதே, நாளடைவில் பலன் கிட்டும், என்ற முறையில்கூட கவிதை நடைபெற்றிருக் கலாம். ஆனால் - பாரதக்கதையைத் திருகலாக்கி சிவராம் படைத்துள்ள கவிதை, அவ்வாறு படைத்ததனால் ஒரு ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. உண்மையில் ஒரு காலத்தில் நடைபெறக்கூடிய குருச்சேத்திரப் போரிலும் சிவராமுக்கு அக்கறையிருப்பதை இக்கவிதை காட்டுவதாகக் கொள்ளலாமே!
7

சிவராமின் கவிதைக்குள் ஒரு நெடும்பயணம் மேற்கொண்ட நாம் ஒரு இறுதிக்கட்டத்திற்கு வந்திருக்கிறோம். பயணத்தில் இடை வழியில், ஏற்கனவே சிவராமுக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ பலர் எழுதியுள்ளதைக் கட்டுரையில் நான் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை. காரணம் சிவராமைப்பற்றிய விமர்சனத்தில் ஏற்கனவே நிறைய உணர்ச்சிகள் கொட்டப் பட்டுள்ளன. மேலும் இந்த உணர்ச்சிகளைக் கொந்தளிக்க விடுவதில் எனக்கு அக்கறையில்லை. பெயர் குறிப்பிடா விட்டாலும் யார் கருத்து எம்முறையில் அணுகப்படுகின்றது என்பதை சம்பந்தப்பட்டவர் 
ஞானி 154 
நிதானமாகக் கவனித்துக்கொள்ள முடியும். நம் பார்வை பிரச்சனை நோக்கியதாக இருக்க வேண்டுமே ஒழிய ஆளையே நோக்குவதாக இருந்துவிடக் கூடாது. தற்காலத் தமிழ்க் கவிதையில், படைப்பாற்றலில், முன்னணியில் உள்ளவர் சிவராம் என்பதில் ஐயமில்லை. இவரது படிமங்கள், வைரப்படிமங்கள். தமிழ்க் கவிதைக்கு இது ஒரு சொத்து. இவரது கவிதைக்குள் மெய்யியல் பெற்றிருக்கும் ஆற்றலில் தான் இவரது உயர்நெறி தென்படுகிறது. இதை விமர்சனம் செய்வது இன்றைய நிலையில் தமிழகக் கவிதைக்கும், சிந்தனைக்கும் மிகத் தேவையானது என்பதால்தான் இந்த விரிவான விமர்சனம்.


சிவராமிடம் மெய்யியல் சில அம்சங்களில் புடைத்துக் கொண்டிருக்கிறது. வானியல், பெளதீகம், அணுக்கரு பெளதீகம் - பொதுவாக பெளதீகத்தில்-இவரது முனைப்பு மிகுதி. அத்துடன் ஜே. கே. வின் வழியில் ஒரு சுய தரிசனத்தில் ஈடுபாடு. இவ்விரு முனைப்புக்களில் சிவராம் மெய்யியலை அணுகுகிறார். ஒரு மெய்யியல் வகுப்புக்கு, வரலாறு, பொருளாதாரம், அறிவியல் கொள்கை முதலிய பிற முனைகள் - களங்களும் உள்ளன. உண்மையை அதன் பல கோணங்களில், பல துறைகளிலிருந்து அணுகுவதுதான் சரியான நெறி. இவ்வாறு அணுகாமல் சில முனைகளிலிருந்து அணுகுவது, சம்பந்தப் பட்டவர்க்கு ஒரு வேதனையாகவே இருக்கும். சிவராமின் நிலைமை இத்தகையது. வாழ்க்கைப் பெரும்பரப்பில் காலூன்றி நிற்காமல் காலாத்த நீள் வெளியில் பறக்க முனைந்த துணிச்சல் இவருடையது. ஒரு வகையில், அலகு குத்திக்கெண்டு ஆடுவதைப் போன்றது. இது. ஒரு சமயம் சிவராமோ மற்றவர்களோ இப்படிக் கருதலாம் : பெளதீகம், சுயதரிசனம் முதலியவை இன்று மெய்யியல் வகுப் பதில் புறக்கணிக்கப்படுகின்றன, குறிப்பாக மார்க்சீயவாதி களால். ஆகவேதான் அவற்றுக்குச் சிவராம் அழுத்தம் தருவது தேவையாகிவிட்டது. ஒருவகையில் இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், தொடர்ந்து அப்பார்வையிலேயே விடைத்துக்கொண்டிருப்பது பார்வைக்கே தடையாகிவிடும். சிவராமைப் பொருத்தவரை, மார்க்சீயத்தின்பால் தீராத வெறுப்புக் கொண்டிருப்பது போலத் தெரிகிறது. ஸ்டாலினிஸம் செய்த கொடுங்கோன்மைகளுக்கு மார்க்சீயத்தோடு இன்றிமையாத உறவு இல்லை.
ஐன்ஸ்டினை முதலில் மார்க்சீயவாதிகள் மறுத்தபோதும் பிறகு ஏற்றுக் கொண்டதில் அவர்களின் உண்மைத்தேட்டம் புலப்படுகின்றது. பிராய்டு, காப்ஃகா முதலியவர்கள் பற்றி மார்க்சீயவாதிகளுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் உண்டு