தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Sunday, May 01, 2016

பந்தாட்டம் - விமலாதித்த மாமல்லன்

https://docs.google.com/file/d/0B2RNbdLo8seocGRJemJSZWYtTlE/
பந்தாட்டம் - விமலாதித்த மாமல்லன்
Automated Google_Ocr

முஹம்மது இப்ராஹிம் ராவுத்தரின் வம்சத்தைப் பூண்டோடு ஒழித்துக் கட்டிவிடவேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு, அவரது தாய்மாமன் முஹம்மது சுலைமான் ராவுத்தர், ஏழு மந்திரவாதிகளை ஏவி, சூனியம் வைக்க முயற்சிக்கிறான் என்பதை, துரத்து உறவான, கதிரியா பேகத்தின் மூலமாய்க் கேள்விப்பட்டுக் கலங்கிய சமயத்தில், அவரது ஆடிட்டரான ஆத்மராம ஐயர், கம்ப்யூட்டரில் ஜாதகம் கணித்துப் பார்த்து, கவலைப்படத் தேவையில்லை எனக்கூறிய மறு தினத்திலிருந்தே, அவரது மனைவி உண்டானதைப் போலகுண்டாகிக் கொண்டே போக, கட்டாயமாய் இது செய்வினைதான் சந்தேகமேயில்லை என்று, டிரைவர் லோகநாதன், தனது குருநாதரான கோவளத்தில் வாழ்ந்துவரும், பெற்ற வரங்களாய்க் கிடைத்திருக்கும் சித்திகளை, நன்மைக்கு மட்டுமே பயன்படுத்தும் வெள்ளை மாந்ரீகரான, கருப்புடையணிந்த செஸ்திவல் காதிரி சங்கிலி மஸ்தான் என்றழைக்கப்படும், முஹம்மது சிக்கந்தர் பாவாவிடம் அழைத்துச் செல்ல, அவர் தமது நாசியின்மேல் மூன்று விரல்களை வைத்து கிளம்புங்கள் எனச்சொல்லி, ஆந்திரத்து எல்லையில் இருக்கும், மிகவும் சக்திவாய்ந்த சையது முஹம்மது கரிமுல்லா ஷா காதிரி காலாஷாபீர்-மஸ்தான் தர்காவிற்கு அழைத்துச் சென்று இரவு தங்கவைக்க, கோட்டுருவம் ஒன்று கனவில் வந்து, நாட்டைவிட்டு ஓடிவிடு எனக் கட்டளையிட, மனைவி மக்களுடன் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றிற்கு இரவோடிரவாகப் பறந்துவிட்ட காரணத்தால், காசுக்கு ஆசைப்பட்டுக் கண்டதும் செய்கிற ஏழு மந்திரவாதிகளின் சூனியம், மத்திய அரசு அலுவலகத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்த, முஹம்மது இப்ராஹிம் ராவுத்தருக்கு சொந்தமான கட்டிடத்தை சூழ்ந்து கொண்டு இருப்பதை அறியாமல், வழக்கம் போல அலுவலுக்கு ஒருவர்பின் ஒருவராய் வந்தவண்ணம் இருந்த ஊழியர்களுக்கு, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று அந்த அலுவலகத்தில் சேர்ந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்த, உயிர்களைக் காக்கும் பொருட்டு, கோவர்த்தன மலையைத் தூக்கி நின்ற தருணத்தில், ரீ கிருஷ்ண பகவானுக்குக் கால்பிடித்துப் பணிவிடைகள் செய்து முக்தியடைந்த பல்லப்பன் என்கிற யாதவனுடைய வம்சாவளியில், நாஸ்திகவாதம் தலைதூக்கி நிற்கும் கலிகாலத்தில், அற்புதத்தை நிகழ்த்திக் காட்டி, இறையுணர்வைத் திரும்ப நிலைநாட்டுவதற்காகப் பிறவியளித்து விடப்பட்டிருந்த காரணத்தால், கடைநிலை ஊழியனின் அடிப்படைக் கடமையான, சலாமைக் கனகச்சிதமாய் அடித்துக் கொண்டு இருந்தான் இடும்பாவனம் எல்லப்பன்.
முஹம்மது இப்ராஹிம் ராவுத்தர் ஆரம்ப காலத்தில் ஓரளவு வசதி படைத்தவராகவே இருந்தார். அண்ணா சாலை மெளண்ட் ரோடாக இருந்த காலம். சாலையை ஒட்டி இருந்த மூன்று கிரவுண்ட் நிலம், பாகப் பிரிவினையில் அவர் பெயருக்கு வந்தது. இருந்த நகை நட்டை எல்லாம் வைத்து அந்தக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார். கட்டப்பட்டிருந்தது என்கிற காரணத்தாலேயே அதை கட்டிடம் எனச் சொல்ல வேண்டி இருந்தது. சுற்றிவர முப்பதடியளவிற்கு இடம் விட்டு நான்கு புறமும் சுவரெழுப்பி தளம் போட்டஒரு கட்டமைப்பை கட்டிடம் என்று ஒரு வசதிக்காக மட்டுமே அல்லவா சொல்ல முடியும். அரசுத் துறைக்கென வாடகைக்குக் கேட்டால், கனவிலும் அலறுகின்ற காலத்தில், பதினான்கு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட, தற்காலிக பணமுடையை சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்தின் காரணமாக ராவுத்தர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அனைத்து ஊழியர் சங்கங்களும் ஒன்று திரண்டு மனுப்போட்டு முறையிட்டு அடையாள வேலைநிறுத்தங்கள் செய்து, பல வருடங்கள் போராடி வாகனங்களை நிறுத்தக் கூரை வேய்ந்து கொண்டன. மறுதினத்திலிருதே ஒரு ஏளலிகார் கூரையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது.
சூரியனுக்குக் கீழிருக்கும் அனைத்துப் பொருட்களின் மேலும் விதிக்கப்படும் வரியை, வதுலிக்கும் துறை என்பதனால் ஏற்பட்டிருந்தது அபரிமித செல்வாக்கு. சக்கிரவர்த்தியான சர்க்காரிடம், கொஞ்சம் வசதிக்கேற்ப வரியை செலுத்த வகைசெய்யும் தயவு தேவை என்பதனால், வணங்கி நின்றது வர்த்தக வர்க்கம். பிரதான அலுவலகத்தில் இருக்கும் அரசர், கிளைகளில் இருக்கும் சிற்றரசர்கள், அவர்களுக்குக் கீழ் ஆங்காங்கே ஆளுகையில் இருக்கும் குறுநில மன்னர்கள், அவர்களது ரத கஜ துரக பதாதிகள் என எல்லோருக்கும் அவரவர் தகுதி திறமைக்கேற்ப கப்பம் கட்டப்பட்டு வந்தது.
அப்போது அந்தப் பிரதேசத்தை ஆண்டுகொண்டிருந்த சிற்றரசர், நேர்மைக்குப் பேர்போன சீராளர் என சக்ரவர்த்தியிடமிருந்தே சான்றிதழ் வாங்கியவர். கப்பம் வாங்காத கண்ணியவான். கோவில் குழல்விளக்கில் வேனா தானா ராமச்சந்திர படையாச்சி உபயம் என வெளிச்சத்தை மறைக்கும் விதமாக எழுதியிருப்பதைப் போல, அவரது வண்டியின் ஒவ்வொரு பாகத்திலும் எழுதி இருந்தாலே, பெயிண்ட் அடித்த கம்பெனிக்கு காசு மிச்சமாகி இருந்திருக்கும். இதன் காரணமாகவே குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தும் அதை ஒளலி கார் என்றே ஊழியர்கள் கிசுகிசுத்தனர். சத்தமாய்ப் பேசினால் சங்கடம். சிற்றரசரின் சீற்றத்திற்கு இரையாகி, கப்பம் என்கிற வார்த்தையைக் காதில் கூடக் கேட்க கதியற்ற பாலைவனத்தில் கிடக்கவேண்டி வரும். அனைத்தும் அனைத்தோடும் பின்னிப் பிணைந்திருக்கும் ஐக்கியம்.
துரதிருஷ்டவசமாய் அப்பன் மண்டையைப் போட, அதிர்ஷ்டவசமாய் வேலையில் சேர்ந்திருந்த இளம் குமாஸ்தா, முந்தைய தினத்துத் தபால்களை எழுதி, அலுவலர்களுக்கு விநியோகிக்கும்படிக் கொடுத்தான் எல்லப்பனிடம். முதல் தபாலிலேயே விவகாரம் தொடங்கிற்று. எனக்கில்ல ஜேகேவுக்கு
இதுல ஆர்கேன்னுதானே சார் எளுதி இருக்கு ஆமா எழுதி இருக்கு அதனால என்ன
நீங்கதானே சார் ஆர்கே
ஆமா ஆனா இந்த பேப்பர் ஜேகேவோட சீட்டுக்குப் போகவேண்டியது புரியுதா
ஜேகே சார் இந்தாங்க
எந்தில்லேப்பா இது கொட்டையா ஆர்கேன்னு எழுதி இருக்கே இங்கிலீஷ் தெரியாதா
எளுதியிருக்கே தவுத்து, இது உங்க ஸிட்டுக்குதானாமே சார்
ஐசி பேப்பர்னா மட்டும் என்னுதில்லேன்னு இளிச்சவாயன் கிட்டத் தள்ளிடுவானுங்க, அடுத்தவன் ஸிட்டுக்குடைய அஸ்ஸி வந்தாமட்டும் வாங்க வாங்கன்னு வாயெல்லாம் பல்லா, தனியா தள்ளிகிட்டுப் போயிடுவனுங்க, நான் பாத்து முடிச்சித் தரேன்னுட்டு. நியாயமா அடுத்தவனுக்கு சேரவேண்டிய துட்டைத் தன் பாக்கெட்டுல தள்ளிக்கிடுவானுங்க. இந்த அநியாயத்தை யார் கேக்கறது.
பேப்பரை வாங்கிக்குங்க சார் என்னுதில்லேன்னு எப்பியோ சொல்லிட்டேனே இன்னும் என்ன யாருதுன்னாவுது சொல்லுங்க சார்
அப்படிக் கேட்டிருந்தின்னா அப்பியே சொல்லியிருப்பேன். என்னோட பதினெட்டு வருஷ சர்வீசுல, எத்தனை பேருக்கு உதவி செஞ்சிருக்கேன் தெரியுமா. நான் வேலை பார்த்த எந்த ஆபீஸ்ல வேன்னா கேளு சொல்லுவாங்க. இப்ப வரானுங்களே எக்ளலாம்னு எதையோக் கிறுக்கிட்டு, எல்லம் தெரிஞ்சாப்புல இங்கிலீஷ் பேசிக்கிட்டு. அயர்ண் பண்ணி சட்டை போட்டா அயல்நாட்டுக்காரனாயிட முடியுமா. நான் ரொம்பக் கஷ்டப்பட்டு கீழேயிருந்து படிப்படியா மேல வந்தவன்பா. அதனாலதான் எனக்கு அடுத்தவன் கஷ்டம் தெரியும். இரு பாக்கறேன். இது சிகேவுக்கு சேர வேண்டியது.
சிகே சார் லீவாச்சே சார்
ஆள் லிவுல போயிட்டா அரசாங்கம் நின்னுடுமா. பெரியவர் விட்டுக்கு மொறவாசல் செஞ்சி, அடுத்த ஸிட்டுக்கு அடிஷணல் சார்ஜ் வாங்கிகிட்டு, ரெண்டு பாக்கெட்டையும் ரொப்பிகிட்டு இருக்கானே எம்கே, அவன்கிட்ட குடு.
எம்கே சார்
இதுல எம்பேர் இல்லியே அடிஷணல் சார்ஜ் பாக்கற ஸிட்டுக்காரருக்குடையதாம் சார் அவம்பேரும் இல்லியே பேர் வேறென்னாலும் பேப்பர் அவுருக்குதானாம் சார் அர்ஜெண்ட் பேப்பரா
எனக்கின்னா சார் தெரியும். உங்களைப் போல படிச்ச ஆபீஸருங்களுக்குதான் தெரியும் பெரியவர் வேலையா வெளிய போவணும். அர்ஜெண்ட்டுன்னா
வாங்கிக்கிறேன். ஆர்டினரினா சிகே லிவுலேந்து வந்த பெறகு அவன்கிட்டையே குடு
சார் இது அர்ஜெண்டா ஆர்டினரியா சார் ஏன் எம்கேவுக்கு எழுதப் படிக்கத் தெரியாதாமா பெரியவர் வேலையா வெளிய போராராம்
கரெக்டுதான். செய்யறது தோட்டி உத்யோகம்னாலும் பாக்கறது தொர விட்லயோன்னோ, பந்தாவுக்கு என்ன கொறைச்சல்
சார் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க சார் அவுரு கெளம்பிகிட்டு இருக்காரு
செகூடின் ஹெட்டுன்னு பெத்த பேரை வெச்சுண்டு, மொட்டக் கையெழுத்தைப் போட்டுண்டு, நாங்கள்லாம், என்ன சொன்னாலும் லேடிஸ்லாம், யாரண்டையும் அசிங்கமாக் கைநீட்டற பழக்கமில்லேன்னு, பொட்ட கெளரவம் பேசிண்டு, போறவா வரவாகிட்டேயெல்லாம், பொட்லம் பொட்லமாத் தள்ளிண்டு போறதே அத்தக் கேளு, பாக்கலாம். சாவகாஸ்மாப் படிச்சி சொல்றதான்னு
அம்மா இந்தப் பேப்பர்.
அட அது கெடக்கறது. ஆப்பிஸ் வேலை என்னிக்கும்தான் இருக்கு. கேக்கனுண்டு இருந்தேன். உம் பொண்டாட்டிக்கு என்ன வயசிருக்கும்
இருபத்தியெட்டும்மா
எதுக்கு சும்மா வாய்க்குவாய் அம்மாங்கறே. அவ்ளோ வயசானவளாவாத் தெரியறது என்னப் பாத்தா
ஐயையோ அதுக்கில்லம்மா ஒரு மரியாதைக்கி.
ரைட்ரைட் மரியாதைன்னா சரி. இந்த காலத்துப் பசங்களுக்குக் கொஞ்சமாச்சும் மட்டு மரியாதை தெரியறதா. போட்டும். ஆமா உம் பொண்டாட்டி வயசென்ன சொன்னே
இருபத்தியெட்டு எப்பிடி எப்பிடி, நல்ல செகப்பா இருப்பாளா, என்னை மாதிரி
எங்க சாதில எப்புடிம்மா உங்க கலர் வரும். எனக்குப் பாக்கைலக் கொஞ்சம் புது நெறமா இருக்கும்
புது நெறமா பேஷ் பேஷ். இந்தப் பொடவையப் புதுநெறக்காரா யாருக்காவுதுதான் தரனும்னுதான் வெச்சிண்டிருந்தேன். அவாளுக்குதான் இது எடுக்கும். உனக்கு அடிச்சிது யோகம். எடுத்துக்கோ
இப்ப எதுக்கும்மா இப்ப எதுக்கா. நன்னாருக்கு போ. இன்னும் இருபது வருஷம் கழிச்சு
பொண்டாட்டிய குஷிப்படுத்தி என்ன பிரயோஜனம். நன்னா அனுபவிக்க வேண்டிய வயசு, நெடுநெடுன்னு நன்னா ராஜாவாட்டம் இருக்கே. உனக்கென்ன இன்னக்கில்லாம் இருந்தா முப்பத்தியெட்டு இருக்குமா
கரெக்டும்மா. இந்த ஆனிக்கு முப்பத்தியெட்டு முடியுது.
கெளசல்யாவா கொக்கான்னானாம். கேட்டுப்பாரு, இந்தக் கலெக்ட்ரேட்டுக்கே தெரியும். என்னை ஏதோ பொடவை வியாபாரம் பண்றவோன்னுத் தப்பா நெனச்சுடாதே. எங்காத்துப் பக்கத்துல ஒரு மாமி. பாவம் முப்பது வயசு நெறையறத்துக்குள்ளியே அம்போன்னு விட்டுட்டுப் போய்ச்சேந்துட்டார் அவொ ஆத்துக்காரர். மூனு கொழந்தேள வெச்சுண்டு அவொ அல்லாட்றதைப் பாக்கக் கண்றாவியா இருந்துது. அவாளுக்கு ஒதவி பண்ணதான் ஆபீஸுக்குக் கொண்டாந்தேன். இங்க இருக்கறப் பிடாரிகளோட கொள்ளிக்கண் பட்டுறப் படாதேன்னுதான் பீரொவுல வெச்சிருக்கேன். ஒரிஜினல் வெல முந்நூத்தியம்பது. நீயும் பாவம் கிளாஸ் ஃபோர்தானே உனக்காக முந்நூருக்கு தறேன். ஒடனே மெறளாதே. மொள்ளமா நூறு நூறாக் குடுக்கலாம் மூனு மாசத்துல. காசு பணத்தை என்ன போம்போது வாரிண்டா போப்போறோம். பொடவைய வாங்கிண்டு போனேன்னா உம் பொண்ட்டாட்டியும் சந்தோஷப்படுவா. போக்கத்த குடும்பத்துக்கு ஒதவி பண்ணின புண்ணியமும் கெடைக்கும். இந்தா யோசிக்காமெ எடுத்துக்கோ. இன்னைக்கி ரொம்ப நல்ல நாள், கிருஷ்ண பகவானோட நட்சத்திரம்.
விட்டுல கேட்டுட்டு சொல்றேம்மா. இந்தப் பேப்பர்.
வாங்கோ வாங்கோ என்ன வந்துட்டு அப்பிடியேப் போயிடலாம்னு பாத்தேளா, கோயம்பத்துர் எப்பிடி இருக்கு. குடும்பத்தோட ஊட்டி போனேளா. மாமி எப்டி இருக்கா. பத்மநாபன் கல்யாணத்துலப் பாத்தது. பழையத் தோட்டை அழிச்சுப் புதுசாப் பண்ணப் போறதா சொல்லிண்டிருந்தாளே மாமி.பண்ணிக்கலாமே நம்ம ஆசாரியாண்டை. ரொம்ப நம்பிகையானவன். நல்ல ராசியான கை. எம் பேரைச் சொல்லுங்கோ போரும்.
அம்மா இந்த பேப்பர்.
என்.ணப்பா. வராத மனுஷர் அபூர்வமா வந்துருக்கார். செத்த நாழி பேசவிட்றியா, ஆஃபீஸ் டீளெலன்சி தெரியவேண்டாம்
இந்தத் தபால் அர்ஜெண்டா ஆர்டினரியான்னு. சார் கெளம்பிட்டீங்களா இந்தப் பேப்பர்.
நான் அப்பவே சொன்னேன்ல பெரியவர் வேலையா வெளியப்போறேன்னு போவும்போது குறுக்கால வந்து கூப்புட்றியே. போற வேலை முடியாமப் போச்சின்னா அதுக்கு நீதான் பொறுப்பு
சார் இந்தப்.
பேப்பர் அர்ஜெண்டா ஆர்டினரியான்னுதான் பாக்கச் சொன்னேனே தவிர என்னோடதுன்னு சொன்னேனா
சார் அடிசனல் சார்ஜ் பாக்குற.
அடிஷனல் சார்ஜுன்னா என்னான்னு பாத்தே. அந்த ஸிட்டுக்கு ஆள் வரவரைக்கும் அதுவும் என்னோட ஸிட்டுதான்.
அப்ப இந்தப் பேப்பர்.
எனக்கு இல்லேன்னு சொன்னா நான் பாக்குற அத்தினி ஸிட்டுக்கும் இல்லேன்னுதான் அர்த்தம்
சார் நீங்கப் பேப்பரையே கைல.
வாங்கி பாக்கலைன்னு சொல்ல வரியா. ஏன்யா இதுக்கு முன்னால நீ எங்க வேலை பாத்தே
மிலிட்டரில சார்
மிலிட்டரி ஓட்டல்ல வேலை பாத்தா மாதிரி இல்லே பேசறே. மிலிட்டரில சேந்த ஒடனே மொதோ பாடம் என்னா. ஒபே த ஆர்டர்.
சொல்லுங்க சார் சொல்றதுக்கின்னாய்யா இருக்கு. என் மூடே அவுட் இந்தப் பேப்பர் யாருக்குன்னு. குடுத்தவன் கிட்டியே போய் கேளு போ. போய்யா தம்பி இது யாருக்குன்னே தெரியல்ல.
எனக்கு மட்டும் என்னங்க தெரியும். நான் வேலைல சேந்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகலியே
இத அப்ப நீங்களே வெச்சுக்குங்க தம்பி
ஒரு பேப்பர்கூட பெண்டிங்கா இருக்கக் கூடாதுன்னு, சேந்த அன்னிக்கே என்கிட்ட சொன்னாங்களே.
யாருமே வாங்காத பேப்பரை என்ன தம்பி பண்ணுறது அதப்பத்தி எனக்கு சொல்லலிங்களே
நீங்கதானே தம்பி எளுதினது
எழுதினது நாந்தான், ஆனா மார்க் பண்ணினது டிவிஎல் மேடம். அவங்களை வேன்னா கேளுங்க
அம்மா இந்தப் பேப்பர்.
ரெண்டு நிமிஷம், ஒரு துணுக்கு, ஒரே ஒரு ஜோக்கு, நிம்மதியாப் படிக்க முடியறதா இந்த ஆஃபீஸ்ல. விட்லதான் பிடுங்கல், காசிக்குப் போனாலும் கருமம் தொலையலேங்கற கதயான்னா இருக்கு. யாரண்டையாவுது குடு. இல்லே உன் இஷ்டம் போல பண்ணு. இன்னும் அரை மணிநேரத்துக்கு என்னை டிஸ்டர்ப் பண்ணாதே. மனுஷன் என்னமா மனளலத் தொட்றார். நேர்ல பேசறாப்ல நெஞ்சுலக் கொரல் முட்றது. அத்தப் படிக்க விடாம தொணதொணணுண்டு. போ போ அப்பறம் பாக்கலாம்
என்னங்க இது எல்லாரும் என்னை இப்புடி பந்தாட்றிங்க. அட பந்தாட்றாங்களா எப்பிடி இப்பிடியா
சகுனத்தடை காரணமாய் வெளியில் போகாமல் தாமதித்து நின்றவன் எல்லப்பனை லேசாய் ஒரு தள்ளு தள்ளினான். சற்றும் இதை எதிர்பாராதவனாய் சட்டென நிலைகுலைந்தான். ரெஜிஸ்டர் கைப்பிடி நழுவிக் கீழே விழு, அல்லாட வைத்த பேப்பர் பறக்க, எதிர் டேபிளில் சரிந்தான். அந்த டேபிளுக்குரியவன் பதறிப்போனவனாய், தன் சீட்டை விட்டெழுந்து, எல்லப்பனின் அக்குளில் ஆதரவாய் கைகொடுத்துத் தூக்கி, நெம்பி தள்ளிவிட்டான். அடுத்தவன் மனைவியுடன் சிநேகமாய், அறிவுபூர்வமாய் கலவி கொள்வதைப் பற்றி, கலைத்துவத்துடன் கதையெழுதி நெஞ்சைப் பிறாண்டும், அறிவுஜீவி எழுத்தாளரின் ரசிகை மிரண்டு போனாள். எங்கே எல்லப்பன் மேலே விழுந்து தன் கற்புக்குப் பங்கம் விளைவித்து விடுவானோ என்கிற பயத்தில், ரைட்டிங் பேடைக் கேடையமாய்த் தூக்கிப் பிடித்திருந்தாள். எல்லப்பனின் தலை நெட்டுக்குத்தாய் அதில் மோதிற்று. முண்டமாய்ப் பிறவி எடுத்தவன் போல உடலில் புதைந்தது தலை, இதைக் கண்டதும் ஆங்கிலப் படங்களைத் தவறாமல் பார்க்கும் வேறொருவன் எல்லப்பனின் வலது கையைப் பிடித்து இழுத்தான். அது இலாஸ்டிக் போல அவனுடனேயே வந்தது. இழுத்ததை விட்டதும் வந்த வேகத்திலேயெ உடலுக்குள் சென்று மறைந்தது. இந்த அதிசயத்தில் புல்லரித்தவளாய், புடவை விற்று புண்ணியம் தேடி முக்தியடைய முயற்சித்தவள், டேபிளின்மேல் ஏறி நின்று சிறுமியைப் போல கைகொட்டத் தொடங்கினாள். இதையெல்லாம் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஓரிருவர், தத்தம் சொந்த அலுவலில் மூழ்கியிருந்த அடுத்தவர்களுக்கு சொல்லிவிட்டு களம் நோக்கி வந்தார்கள். அதற்குள்ளாகவே ஆளுக்கொருபுறம் பிடித்து இழுத்ததில், அனைத்தும் உள்ளே சென்றுவிட ஒரு பெரிய செவ்வகமாய் ஆகிவிட்டிருந்தான் எல்லப்பன். மனித உருவிலிருந்து வேறுபட்டிருந்ததால், பெயரளவு கண்ணியமும் கொடுக்க அவசியமற்றுப் போனது. கால்களை உபயோகிக்கத் தொடங்கி கும்பலாய் சூழ்ந்து கொண்டனர். ஏராளமான கால்களின் தாறுமாறான எத்துகளால், செவ்வகம் மெல்ல உருண்டையாய் உருமாறிக் கொண்டு இருந்தது.
ஓய்வுபெற இன்னும் ஓரிரு மாதங்களே இருந்த குறுநிலம் ஒன்று, அவசரமாய் ஓடிப்போய் சிற்றரசரை ஆட்டத்திற்குத் தலைமை தாங்கும்படி அழைத்து வந்தது. குவழியடைந்த சிற்றரசு, குறுநிலத்தை நடுவராக்கி இருப்பதாக அறிவித்தது.
வெள்ளைக்காரன் காலத்திலேயே வேலைக்கு சேர்ந்து, குடியரசான சமயத்தில் குடுமிப்பிடி சண்டை போட்டு, ஜென்மவைரிகளாயினர் இரண்டு நண்பர்கள். சீனத்துப் படையெடுப்பின் போது, சிவலோகப் பதவி அடைந்தனர். அநாதரவாய்ப் போய்விட்ட அவர்களின் குடும்பங்களுக்கு, ஆதரவு காட்டும் முகமாய், அலுவலில் அமர்த்தப் பட்டனர் அவர்களின் சீமந்த புத்திரர்கள். துரகங்களாய் வாழ்க்கையைத் தொடங்கிக் குறுநிலங்களாய் கொட்டமடித்துக் கொண்டிருந்தனர். மண்டையைப் போட்டுவிடாமல் இருக்க, ஏகப்பட்ட மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு இருந்தும், பாரம்பரியப் பகையை அணைந்து போகாமல் பாதுகாத்துவரும் இரண்டு குறுநிலங்களும், இடமும் வலமுமாய் எதிரெதிர்பக்கம் நிற்கப் போக, அனிச்சையாய் உருவெடுத்தன அணிகள்.
திடீரென நினைவு கொண்டவராய்த் திரும்பினார் சிற்றரசர். அவருக்குப் பின்புறம் முழங்காலிட்டு, கைகட்டி வாய்பொத்தி இருந்தது முறம். அசந்தர்பமாய் விஜயம் செய்துவிடப் போகிறார் அரசர் எனக்கூறி, அலுவலகத்தின் ஒரே வாயிலை மூடச் சொல்லிக் காலால் கட்டளையிட்டார். வெளி வேலையை செய்து முடிக்காமல் இருந்துவிட்டமைக்கு, விமோசனம் தேடிக்கொள்ளும் விதமாய், விரைந்து சென்று ஷட்டர் கதவைத் தலையால் மூடிற்று முறம்.
களத்திற்குக் களையூட்ட, வளையமாய் சுற்றி நின்று குலவையிட்டது மாதர்குலம். பந்தாட்ட சாதனைக்காகவே வேலையில் சேர்ந்திருந்த இளம் விரன், சாதித்துக் காட்டினால் சந்தோஷப்பட்டு, சிற்றரசர் சீக்கிறமாய் நல்ல சீட்டில் போடமாட்டாரா என்கிற ஆர்வத்தால், முழு வலுவையும் சேர்த்து விட்டான் ஒரு உதை. அந்த பிரும்மாண்டப் பந்து விருட்டெனக் கிளம்பி மேல்தளம் நோக்கிப் போனதை, அத்தனைக் கண்களும் ஆவென சப்தமிட்டு அண்ணாந்து பார்த்தன.
பந்து தளத்தைத் தொட்டுவிடப் போன அதேதருணத்தில், வருகின்ற பந்தை வரவேற்பதைப் போல, மேல்தளம் மெல்ல இறங்கத் தொடங்கிற்று. ஒரு கணம் அனைத்து வாய்களிலும் சப்தம் ஸ்தம்பித்தது. அடுத்த கணம், நிகழ்வின் தர்க்கரீதியான நீட்சியின் முடிவு பொட்டில் அறைய, தராதரமின்றி அனைத்தும் ஒரே சமயத்தில், இருந்த ஒரே வழியை நோக்கி ஓடின. ஒடிய வேகத்தில் இரண்டொன்று உருண்டன. ஓரிரண்டு கைகால்கள் முறிந்தன. யாருடைய உறுப்பு யாரால் உடைந்தது எனப் பார்க்கின்ற மனநிலையில் உடைபட்டவர்களேக்கூட இருக்கவில்லை. இருப்பதைத் திரட்டிகொண்டு, வெளியேறினால் போதும் என்கிற வேதாந்த நிலையை எய்தி இருந்தனர். இன்னமும் முழுமையாய் இயங்கிக் கொண்டிருந்த கைகளும் கால்களும் ஒன்றுபட்டு, நிலத்தை உதைத்தபடி தூக்க முயன்றும், ஷட்டர் அசையக்கூட இல்லை. திறக்க வழியில்லை எனத் தீர்மானமாய் தெரிந்து போனதும், முதல் குரலாய் சீறினார் சிற்றரசர்.
யாரவன் பாரா டுட்டி பாக்கறது? எண்ணெய் ஏன் விடலை? மெமோ குடு இப்பவே
எஸ்ஸார்
என்றது நடுவராய் இருந்த குறுநிலம், எங்கோ ஒருமூலையில் இருந்தபடி, சுளுக்கையும் பொறுட்படுத்தாது, கால் தூக்கித் தரையில் ஒத்தி, கைதுக்கி சலாம் போட்டது. சிற்றரசரின் சீற்றத்திற்கு இரையாகி, பென்ஷன் வராமல் போய்விடுமோ என்கிற பெருங்கவலை
பிடித்திருந்தது குறுநிலத்தை.
இடதுசாரி அணிக்குப் பொறுப்பேற்றிருந்த குறுநிலம், அவசரமாய் போனை எடுத்து தீயணைப்பு நிலையத்து நம்பரைச் சுற்றி ஹலோ ஹலோ ஹலோ என அலறத் தொடங்கிற்று.
வலதுசாரி அணிக்குத் தலைமை வகித்த குறுநிலம், தன் மேஜையை நோக்கி நடந்தபடியே கூறிற்று.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
எழுது பலகையை எடுத்து வைத்துக் கொண்டு, புகையிலை விள்ளலைக் கதுப்பில் அதக்கியபடி எழுதத் தொடங்கிற்று. அனைவரும் ஆவலாய் அதை சூழ்ந்து கொண்டனர்.
வாய்ல சொன்னாக் காத்துலப் போய்டும். எழுத்துல வெச்சாத்தான்
எதுவொண்ணும் நடக்கும். இதுகூடத் தெரியலை, இருவத்தியஞ்சு வருஷம் சர்விஸ் போட்டு என்ன பிரயோஜனம்
அனுப்புநர் பெருநர் ஐயா பொருள் என்று, அழகான கையெழுத்தில் அருமையான ஆங்கிலத்தில், தளம் இறங்கிக்கொண்டு இருப்பது குறித்து, புகார் மனு எழுதத் தொடங்கிற்று, தலைமை அலுவலகத்திற்கு.
தொலைபேசி இணைப்பு எப்போதோ துண்டிக்கப்பட்டுவிட்டதென ஆப்பரேட்டர் சொன்னான். இடதுசாரி இதைக் காதிலேயே வாங்காமல், குறுக்கீடாய் நினைத்துப் பொத்தாம் பொதுவாய், குலைக்கத் தொடங்கிற்று.
குழப்பத்தில் என்ன செய்வதென்று அறியாத சிற்றரசர், குளிர்சாதனம் பொறுத்தப் பட்டிருந்த தமது தனியறைக்குள் போய் புகுந்து கொண்டார்.
வெளிச்சுவரை ஒட்டி மூன்று புறமும் மரப்பலகைச் சுவர்கள். மேற்புறம் பொய்க்கூரை போடப்பட்டு உருவாகி இருந்தது தனியறை. தளம் இறங்கிக்கொண்டிருப்பது கண்ணுக்குத் தெரியாத தற்காலிக நிம்மதியில், சற்றே நீட்டி சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டார். தனியறையின் வெளிப்புறத் தலையிலிருந்த சிவப்பு விளக்கின் பட்டனைத் தட்டிவைத்தார், யாரும் தொந்திரவு செய்யலாகாதென்ற அறிவிப்பாக,
நேரம் செல்லச்செல்ல அனைவரின் நிம்மதியும் முற்றாகப் பிடுங்கப்பட்டு விட்டது. எனினும் ஏதும் செய்ய வழியற்ற காரணத்தால், கலவரம் களேபரம் ஆகாமல் ஊமை வெயிலாய் உறைத்துக் கொண்டிருந்தது. அத்துனை அவஸ்த்தையிலும், அரசு அலுவலகத்தின் அடிப்படை லட்சணமான புழுக்கம் இன்றி காற்றோட்டம் கூடிக்கொண்டே இருந்ததில் அனைவருக்கும் கொஞ்சம் ஆசுவாசம்.
பரலோகத்திலிருந்த, நீண்டு நெடிந்த தள விசிறிகள், அன்றுதான் முதன்முதலாகத் தம் இருப்பை தெளிவுபடுத்தத் தொடங்கி இருந்தன. தூதர்கள் தேவனின் செய்தியுடன் இகலோகம் வருவதைப் போலக் கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருந்தன.
அவிசாரி எழுத்துக்களை ஆங்கிலத்தில் படித்து ஆராதிக்கும் அரசாங்கத்து இளம் அறிவுஜீவிகள் தமக்குள் தர்கித்துக் கொண்டிருந்தனர்.
கலவரப்படத் தேவையில்லை. மின்விசிறிகள்தான் ஏழெட்டு இருக்கின்றனவே, அவற்றின் கம்பங்களே ஆறடிக்கும்மேல் நீளமானவை. எனவே தர்க்கரீதியில் பார்த்தால் அவையே தளத்தைத் தாங்கிக்கொள்ளும்.
இத்துனைக் காலமும் தளம் அவற்றைத் தாங்கிக் கொண்டிருந்ததே, இந்த நெருக்கடியான தருணத்தில் தன்னை அவை தாங்கவேண்டும் என்பதற்காகத்தான்.
அட்டகாஸம் என ஒன்று மற்றதைத் தோளில் தட்டிற்று.
தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. எப்படி மின்இணைப்பு மட்டும் இருந்துகொண்டு இருக்கிறது?
தலைக்கும் தரைக்குமான வேறுபாட்டினால்
புதிர்போலப் பேசிப் புரியாதவன் தலையில்விழுந்தது ஒரு தட்டு. தட்டினால் எழுந்தது தாராள சிரிப்பலை. அலையைக் கிழித்து மேலெழுந்தது ஒரு மூலையிலிருந்து உச்சஸ்த்தாயியில் ஒலித்த ஒற்றைப் பெண்குரல்.
எமன் ரொம்பப் பொல்லா தவன் விடமாட்டான் - எங்கள் நர சிம்மன் பேரைச் சொன்னால் தொடமாட்டான்
இரண்டொரு பெரிசுகள் இதைக் கும்பலாய்த் திரும்ப ஒலித்தன. ஏழு கட்டை அதையேத் திரும்பப் பாடி பெயரை மட்டும் மாற்றிக்கொண்டது. திரும்பப் பாடும் கும்பல் பெருகி, பல குரல்கள் ஒன்றுகூடி பலமாய் ஒலிக்கத் தொடங்கின. பீதி பெரும் சத்தமாய் போலி தைரியத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. இதற்கு ஈடு கொடுப்பது போலக் கிளம்பிற்று, எதிர் முனையிலிருந்து இன்னொரு குரல்.
எல்லாம் ஏசுவே - எனக்கெல்லாம் ஏசுவே அருகிலிருந்த ஆதரவுக் குரல்கள் திருப்பி ஒலித்தன.
எந்தப்பக்கமும் சேராமல் நின்றிருந்தது ஒரு நெடிய உருவம். தலைமுடி ஏகமாய் பறக்கத் தொடங்க, தடாலெனத் தரையில்
மண்டியிட்டுக் கைகளை முன் நீட்டி அடிக்குறலெடுத்தது.
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
ஜோதி வழிபாட்டுச் சுடரொன்று, கும்பல் தீவுகளுக்கு அன்புப் பாலம் அமைத்து கூட்டுப் பிரார்த்தனையாய்க் கூட்டத்தை மாற்றியது.
சற்று நேரத்திலேயே சடபடவென சத்தம் கேட்டது. நொறுங்கிக் கொண்டிருந்த தனியறையின் கதவைத் தள்ளிக் கொண்டு கூட்டத்தில் கலந்தார் சிற்றரசர். அண்ணாந்து பார்த்தவர் அலறத் தொடங்கினார். அவர் தலைக்கு நேர் மேலே ஒரு தூதர் பறந்தபடி இறங்கிக் கொண்டு இருந்தார். ஆணையிட யாரேனும் தேவை என்கிற அவசியமற்று, தூதர்களின் கைகளுக்கு எட்டாத விதமாய் எல்லாப் பக்கமும் சிதறுண்டது கும்பல். பயப் பிராந்தியில் ஆங்காங்கே கூட்டிவைத்த கூளங்களென அனைத்தும் முடங்கிக் கொண்டன.
தடையாய் இருந்த டேபிள் நாற்காலிகளைப் பதம்ப் பார்த்தபடி தரையிறங்கி, கடமுடவென உடைத்து ஆக்கிரோஷமாய் அனைத்து திசைகளிலும் செய்தியைப் பரப்பினர் தூதர்கள். துண்டங்கள் சீறிப்பாய்ந்து, சிராய்த்தும் கிழித்தும் துவம்ளலப்படுத்தின. ஒடுங்கிக் கிடந்த கும்பல்கள், கிடக்கப் படுத்துக் கூக்குரலிட்டபடி அதனதன் பாவங்களைப் புலம்பி அலறியபடி மன்னிப்பு கேட்கத் துவங்கின. தளம் இரும்புக் கம்புகளைத் தரையில் இறக்கியபடி ஆழம் பார்த்துக் கொண்டிருந்தது.
மன்னிப்பு இல்லைபோலும். உறுதியாகிவிட்ட கடைசி கணத்தின் கண்றாவிக் காட்சியைக் காணாமலேனும் போய்ச் சேரலாமென ஒருசேரத் தீர்மானித்ததைப் போலக் கண்களை மூடிக்கொண்டன கும்பல்கள்.
நிசப்தம்
இதோ நசுக்கப் போகின்றன தளத்தைக் குறுக்காய் தாங்கி இணைக்கும் உத்திரங்கள்.
நீண்ட நிசப்தம் ஏன் இன்னும் நிகழவில்லை
கலி இன்னும் முடியவில்லையா?
தீர்ப்பு நாள் இன்றில்லையா?
இறைவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள இன்னும் ஏன் தாமதிக்கிறார்.
ஒவ்வொன்றாய் மெல்லக் கண்திறந்தன. தளம் தடைபட்டு நின்றுவிட்டிருந்தது. நம்ப முடியவில்லை. மெல்ல தலைகள் உயர்ந்தன.
அற்புதம்
நடுநாயகமாய் தளத்தைத் தாங்கி நின்றது பந்து.
(மே-1994) கணையாழி