தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, May 28, 2016

பலி - தேவிபாரதி

Www.padippakam.com
பலி - தேவிபாரதி
அவள் மிகவும் பயந்து போனவளைப் போலத் தென் பட்டாள். முகம் கலங்கியிருந்தது. ஒரு பூனைக் குட்டி -யைப் போல சுவரோடு பதுங்கி, மட்கிய வியர்வை நெடி விசும் அந்த அறையை மிரட்சியுடன் பார்த்துக் கொண் டிருந்தாள்.
கதவைத் தாளிட்டதும், அவளை இழுத்து இதழ்களைக் கவ்வி முரட்டுத்தனமாகச் சுவைத்தான். அவளது திரட்சி யான மார்பகங்களைக் கசக்கினான்.
அவள் பெருமூச்செறிந்தாள்.
அவனது செயல்களுக்குத் தன் இசைவின்மையைத் தெரிவிப்பது போல நடுங்கினாள். எதிர்பார்த்தபடி ஒத்துழைக் காததாலோ என்னவோ அவன் அவளை விடுவித்தான். பேண்ட்டையும் சட்டையையும் கழட்டிவிட்டுக் கைலி யைச் சுற்றிக் கொண்டான். இதுபோன்ற சந்தர்ப்பங் களில் இயல்பாக ஏற்படும் எரிச்சலும் கோபமும் அவன் முகத்தில் அப்பட்டமாகத் தென்பட்டன.
கட்டிலில் ஒருக்களித்துச் சாய்ந்து அவளைப் பார்த்தபடி சிகரெட் பற்ற வைத்தான். அவள் இன்னும் அதே இடத்தில்தான் நின்று கொண்டிருந்தாள். அவனது நேர் பார்வையைத் தவிர்க்கும் பொருட்டுத் தலை குனிந்தது.
அவளைக் கூப்பிட முடியும்.
படிப்பகம்
________________
www.padippakam.com
176 
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகளையும், வார்த்தைகள் பயனளிக்காவிட்டால், என்ன செய்ய வேண்டுமென்பதையும் அவன் அறிவான்.
எண்ணங்களுக்கும் செயல்களுக்குமிடையேயான தவிர்க்க முடியாத இடைவெளியைக் கடப்பதற்கான அவ காசத்தை, புகைபிடிப்பதில் செலவிட முற்பட்டவனைப் போல ஒன்றன்பின் ஒன்றாக சிகரெட்டுகளைப் புகைத் துத் தீர்த்தான். இது தன்னுடைய யூகம்தான் என்கிறார், இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பவர்.
பார்வை அசைவின்றி அவள் மேல் கவிந்திருந்தது. அந்த அறையினுள்ளேயும், அறைக்கு வெளியே தாக்கத்தில், ஆழ்ந்திருக்கும் நகரத் தெருக்களிலும் நிலவும் பீதியூட்டும் மெளனத்தை நினைவூட்டுவது போல டியூப்லைட் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
அந்த மெளனம் உடைக்கப்படும் பயங்கரமான தருணத்தை பதட்டத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந் தான். அவன் இதை அவமதிப்பாகவும் எடுத்துக் கொண் டிருக்கக்கூடும். ஒரு பயங்கரமான ஊமை நாடகத்தின் பரிதாபகரமான பாத்திரப் படைப்புகளைப் போல, என்று வர்ணிக்கிறார் கதை சொல்பவர்.
விடுதித் தலைவி பொய் சொல்லவில்லை. அவள் இந்தத் தொழிலுக்குப் புதியவள். அங்கு கொண்டு வரப்பட்டு ஒரிரு நாட்களே ஆகியிருந்தனவெனச் சொன்னாள் விடுதித் தலைவி. தான் ஏமாற்றப்படவில்லையென்பது குறித்து அவனுக்குக் சந்தோஷமாகவே இருந்தது.
அனுபவப்பட்டவர்களாயிருந்தால், இது போன்ற சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்பதைத் தெரிந்து வைத்திருப்பார்கள். வாடிக்கை யாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டும், பேசியதைவிட அதிகமாக டிப்ஸ் பெறவும் வேண்டி, சில
படிப்பகம்
________________
Www.padippakam.com
தேவிபாரதி 177
சமயங்களில் குமட்டலெடுக்கும் அளவுக்கும் கூட நடந்து கொள்வார்கள். அறைக்குள் நுழைந்தவுடனேயே உடை களைக் களைந்து விடுவார்கள். அநேகமாக அந்த அறைக்குள் கழிக்கும் சிலமணி நேரங்களும் அம்மன மாகவே இருப்பார்கள். சிலர் அவனோடு சேர்ந்து குடிப்பார்கள். அனுபவப்பட்ட வாசகர்கள், தான் பொய் சொல்லவில்லையென்பதை உணர்ந்திருப்பார்கள் என் கிறார் கதை சொல்பவர்.
அவர்களில் எவருமே இவற்றிலெதையும் ஈடுபாட்டுடன் செய்யவில்லையென்பதை, இது போன்ற நடவடிக்கை களைத் துவக்கிய கொஞ்ச காலத்திற்குள்ளாகவே அவன் புரிந்து கொண்டான். ஆனால் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதற்குப் போதிய காரணம் எதையும் அவனால் கண்டறிய முடியவில்லை.
இப்போதுகூட அவனுக்கு அவள்மீது பச்சாதாபமெதுவும் ஏற்பட்டு விடவில்லை. பலவந்தப்படுத்தாமல் அவளை இணங்கச் செய்வதைக் குறித்து யோசிக்க முற்பட்டான். குறைந்தபட்சம், கதை சொல்பவர் இப்படிக் கருதினார் என்று சொல்லலாம்.
அவள் நல்ல அழகி, சிவந்த நிறம், இந்தத் தொழிலுக்குப் பொருத்தமற்ற குழந்தை முகம். இன்னும் கூட கன்னின்ம யின் எழில் சிதைக்கப்பட்டு விடவில்லை. நீண்ட கால வாடிக்கையாளனான தனக்கு விடுதித் தலைவியின் ஊக்கப் பரிசு என்று நினைத்தான் அவன். அப்படியானால் அவன் அவளிடம் மிகவும் போராட வேண்டியிருக்கும். பலவந்தம் செய்ய நேரலாம். இது அவனுக்குப் பழக்கமில்லாதது. அப்படியே அவன் அதற் கெல்லாம் துணிந்தாலும் அவள் கத்திக் கூச்சலிடவோ, கதறி அழவோ எல்லாவற்றுக்கும் வாய்ப்பிருக்கிறது.
ப-12
படிப்பகம்
________________
www.padippakam.com
178 
அவள் நின்று கொண்டுள்ள நிலையைப் பார்த்தால் எந்தக் கணத்திலும் உடைந்து அழத் தயாராயிருப்பவ ளென்று உறுதியாகச் சொல்லமுடியும். அப்படி அழுதால் அது ஒரு நிராதரவான குழந்தையின் அழுகையைப் போல - கடவுளே. இதை எப்படி அவனால் சகத்துக் கொள்ள முடியும்?
திடீரென தான் மிக மோசமானதொரு நெருக்கடியில் இக்கிக்கொண்டுவிட்டதாக நினைத்தான். இது போன்ற நெருக்கடிகளுக்கு அவன் பழக்கப்பட்டவனுமல்ல. உடனடியாக அவளை அங்கிருந்து வெளியேற்றி, ஆரியபடி விடுதித் தலைவியிடம் திரும்பக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவதன்மூலம், இதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியுமாவென யோசிக்க முற்பட்டான்.
ஆனால் அது அபத்தமான யோசனையென்பது எடுத்த எடுப்பிலேயே அவனுக்குப் புரிந்து போயிற்று. தான் இங்கு செய்யத்தவறியதை செய்ய விரும்பாததை, வேறொரு வாடிக்கையாளன். தான் செய்திருக்கக் கூடிய தைவிடவும் குரூரமாகச் செய்யத் துணியலாம். சந்தேக மின்றி அதுதான் நடக்கும். உடனடியாக, இந்த இரவின் எஞ்சிய நேரத்திற்குள்......
இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில், அவனைப் போன்ற ஒரு நபர் இப்படியெல்லாம் யோசிப்பது நடைமுறையில் சாத்தியப்படக் கூடியதாவென வாசகர்கள் கேட்கக் கூடும் என்று அனுமானிக்கிறார் கதை சொல்பவர். இதற்குத் திட்டவட்டமான விளக்கம் எதுவும் இல்லை யென்றும், மனித மனங்களின் புதிரான உள்ளறைகளுக்குள் இதற்கு விடை கிடைக்கலாமென்றும் கிட்டத்தட்ட மழுப்பலாகப் பதில் சொல்கிறார், கதை சொல்பவர்.
படிப்பகம்
________________
www.padippakam.com
தேவிபாரதி 179
தான் அனுமதித்தால், உதவினால், தப்பி ஓடிவிட அவள் தயாராகவே இருப்பாளெனக் கருதினான் அவன். இதனால் அவனுக்குச் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். விடுதித் தலைவி கோபம் கொள்வாள், இழப்பீடாக ஒரு பெருந்தொகையைக் கேட்பாள். முன்பின் அறிமுகமில் லாத ஒருத்தியை முன்னிட்டு தன்னைச் சங்கடத்திற்குள்ளாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்தானாவென யோசித்தான்.
விவரிக்க முடியாத துயரத்துடன், பொலிவிழந்த ஒரு புராதனச் சிற்பம்போலக் குன்றி நிற்கும் அவளைக் கண்டதும் அவன் பதட்டமுற்றான். எப்படிப்பட்ட சங்கடங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் சரி, அவளுக்கு உதவ வேண்டுமெனத் தீர்மானித்தான். அவளுக்கு இதை எப்படித் தெரிவிப்பதென அவனுக்குப் புரியவில்லை. அவளிடம் இதைப் பேசுவதற்குரிய பொருத்தமான வார்த்தைகள் இல்லாதது போல, ஒருவகையில் அவமான மாக இருந்தது அவனுக்கு.
அவளைக் கூப்பிட்டுக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து,
"இதோ பார் பெண்ணே, நீ ஒரு வேசியாய் வாழ்க்கை
நடத்துவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது.
இங்கிருந்து தப்பி, எங்காவது போய்விடு' என்று கேட்டுக்கொள்ளலாமா.
ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தலாமா? அதற்கென்ன பதில் சொல் வாள் அவள்? சரி என்று அவனுக்கு நன்றி சொல்லிவிட்டுப போய் விடுவாளா? முற்றிலும் எதிர்பாராத இந்த உதவி யால், திக்கு முக்காடி உணர்வுகள் தழுதழுக்க அழத் துவங்கி விடுவாளா? அல்லது......சட்டென வெடித்துச் சிரித்து விட்டால்? கடவுளே...இதற்கு வாய்ப்பே இல்லையென்று சொல்லி விடமுடியாது.
படிப்பகம்
________________
www.padippakam.Com
130 
எப்படியும் அவளிடம் ஒரு கதை இருக்கக்கூடும். காதலனை, நம்பி, அல்லது சினிமா ஆசையால் வீட்டை விட்டு இடி வந்து என்பது போன்ற தற்காலத்துக்குரிய ஏதாவதொரு கதை.
அவன் அவளை அழைத்தான்.
அவள் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவனது குரலில் தென்பட்ட பச்சாதாபம் நம்ப முடியாத தாயிருந்தது. அந்தக் குரல் தனது கற்பனையோவெனக் சந்தேகித்து நின்றாள். ஆனால் அவன், மறுபடியும் அழைத்தான். அவனருகில் கிடந்த ஒரு நாற்காலியைச்
சுட்டிக் காட்டி, அதில் வந்து உட்காரும்படி ஒரு விருந்தாளியை உபசரிக்கும் தொனியில் சொன்னான்.
ஒரு குழந்தையைப் போல, மகிழ்ச்சி ததும்ப அவள்
புன்னகைத்தாள். அந்த ஒரே அழைப்பில் அவனது
மனதின் எல்லாப் பக்கங்களையும் படித்து அறிந்து கொண்டு விட்டவளைப் போல துள்ளலுடன், அவன் சுட்டிக் காட்டிய நாற்காவியினருகே வந்து நின்றாள்.
உன்னதமான பண்புடைய கதாபாத்திரங்களைப் படைப் பதற்கு விரும்புகிறாரா என்று கேட்டதற்கு இல்லை யென்று மறுக்கிறார் கதை சொல்பவர். நீங்களும் நானும் அந்தக் கதாபாத்திரங்களின் இடத்தில் இருந்தால், இப்படித்தான் அல்லது கிட்டத்தட்ட இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டிவரும். அது தவிர்க்க முடியாதது என்றும் சொல்கிறார்.
:உட்கார்...'
அவள் தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
"உட்கார்...' என்று மன்றாடுவது போல மீண்டும்
சொன்னான் அவன், அவுளுக்கு ஏதாவது சாப்பிடக் கெர்டுக்கலாமாவென் ப்ேர்சித்தான். அவனிடம்
படிப்பகம்
________________
www.padippakam.com
தேவிபாரதி 181
கொஞ்சம் பிஸ்கட்டுகளும், சிப்ஸ் பாக்கெட்டும் o _பிளாஸ்க்கில் சிறிதளவு காபியும் இருப்பது நினைவுக்கு
வந்தது. எழுந்து அலமாரியிலிருந்து அவற்றை எடுத்து
அவளுக்குப் பரிமாறினான்.
'சாப்பிடு...'
அவள் மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள்.
'பரவாயில்லை. சாப்பிடு...'
இன்னொரு நாற்காலியை இழுத்துப்போட்டு ஒரு நண்பனைப் போல அவளெதிரில் உட்கார்ந்தான். அவளுடைய சங்கோஜத்தைப் போக்குவதற்காகத் தானும் ஒரு பிஸ்கட்டை எடுத்துக் கடித்தான்.
அவள் பயம் நீங்கி, கூச்சத்துடன் சாப்பிடத் தொடங்
கினான்.
அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது. இனி அவனது உதவியை அவள் மறுக்கவே போவதில்லையெனக் கருதினான். தன்னால் இப்படிக் கூட நடந்து கொள்ள முடியுமாவென ஆச்சரியமடைந்தான். இப்போது அவள் மிகவும் வேகமாகச் சாப்பிடத் தொடங்கியிருந்தாள். மிகவும் பசியுடனிருக்கிறாளென்பது புரிந்தது. அவன் அவள் பெயரைக் கேட்டான். அவள் சாப்பிட்டபடியே சொன்னாள்.
'நல்ல பெயர்' இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வழக்கமாகச் சொல்லப் படுவதை அவன் சொன்னான். பிறகு அவன் அவளுடைய ஊரைக் கேட்டான். அவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, கலக்கமாக அவனைப் பார்த்தாள். அவன் பதட்ட முற்றான். தங்கள் உரையாடல் இதற்குமேல் தொடராமல் போய் விடுமோவெனப் பயந்தான். தான் வெறுமனே
படிப்பகம்
________________
www.padippakam.Com
182 புலி
அதைத் தெரிந்துகொள்ள விரும்பியதாகவும், அவளுக்கு விருப்பமில்லையென்றால் சொல்ல வேண்டாமென்றும். கிட்டத்தட்ட மன்னிப்புக் கோரும் குரலில் சொன்னான். ஆனால் கொஞ்சம் தண்ணிர் குடித்துவிட்டு அவள் சொல்லத்தான் செய்தாள். அவள் கண்களில் அவன் மீதான நம்பிக்கை ஒரு ண் ணத்துப் பூச்சிபோல் பட படத்தது. பழுத்து உதிரும் ஒரு இலைபோல வார்த்தைகள் பதட்டமின்றி வந்தன.
-- -- --------------------- ---
அவன் யங்கரமாக அதிர்ச்சியடைந்தான். நம்பமுடிய வில்லை. பொய் சொல்கிறாளோவென்று நினைத்தான். ஆனால் அது பொய் சொல்கிற முகமில்லையென்று திட்ட வட்டமாகச் சொல்ல முடியும்.
அது அவனுடைய பூர்வீகக் கிராமம்.
அவனைச் சேர்ந்தவர்கள் இன்னும் அங்கே இருந்தார்கள். அந்த ஊரையும், அங்கே விட்டு விட்டு வந்த இழிவான கடந்த காலத்தையும் அவன் மறக்க முயன்று கொண்டிருந் தான் ஒரு பயங்கரக் கனவைப் போல அவளுடைய உருவம் கொண்டு திரும்பி வந்திருக்கிறது. அது. முற்றிலும் எதிர்பாராத ஒரு குரூரமான தற்செயல் நிகழ்வு நிலை குலைந்து தடுமாறினான். அவளுக்குக் கொஞ்சம் அல்லது வேண்டிய மட்டும் பணம் கொடுத்து அனுப்பி விடலாமா வென யோசித்தான்.
ஆனால் தன்னை மீறியதொரு பேராவலால் உந்தப்பட்டுப் பேசத் தொடங்கினான்.
"அங்கே...' தடுமாறினான், மூச்சுத் திணறிற்று. "யாருடைய குடும்பத்தைச் சேர்ந்தவள் நீ'
அவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.
படிப்பகம்
________________
www.padippakam.com
தேவிபாரதி 183
'சொல்... யாருடைய மகள் நீ?"
மிரட்டலைப் போலவும், வலியுறுத்தலைப் போலவும் தோன்றும்படியான குரலில் கேட்டான். ஒரு நீண்ட மெளனத்திற்கும், கசப்பான பெருமூச்சுக்கும் பின்னர் அவள் சொன்னாள்.
'............................ என்று ஒருவர். அவர் என்
பாட்டனார்.’’
"அவரா?’’
என்று கிட்டத்தட்டக் கத்தி விட்டான் அவன். அவன் மறந்துவிட முயன்று கொண்டிருந்த அவனது இழிவான கடந்த காலத்தின் சவக் குழியைத் தாக்கி உடைத்தது அந்தப் பெயர். அவரா - அவரா?' என்று ஒரு நோயாளியைப் போலவும், பைத்தியக்காரனைப் போலவும் புலம்பத் தொடங்கினான். இது நம்பவே முடியாத விஷயம். வாழ்வின் வக்கரித்த விளையாட்டு என்று இதைப்பற்றிச் சொல்கிறார், கதை சொல்பவர்.
ஒரு காலத்தில் செல்வத்தில் புரண்ட ஆசாரப் பிராமணக் குடும்பம் அது. கடவுளின் துாதரைப் போல, கிராமத்தின் இருண்ட தெருக்களில் உலா வந்தவர் அவர். அவன் தந்தையும் பாட்டனாரும் அந்த வீட்டின் மலத் தொட்டி யைச் சுத்தம் செய்தவர்கள். தாயின் கருப்பையிலேயே மலத்தைச் சுவாசித்தவன் அவன். குடலைப் புரட்டும் மலநெடி அவர்களது தணிவான குடிசைகளுக்குள், அவர்களுக்கு முன்பாகவே பிறந்து, அவர்களைத் தாண்டி பும் நீடித்திருக்கப் போவதைப் போல அவர்களது கனவுகளைக் கண்காணிக்கவும், அவற்றைக் கருவிலேயே நசுக்கி அழித்து விடவும் அதிகாரம் பெற்ற சர்வ வல்லமை படைத்த ஒற்றனைப் போல அகங்காரத்துடன் வீற்றி ருந்தது. நினைவின் சவக்குழியிலிருந்து உயிர்ப்பிக்கப்
படிப்பகம்
________________
www.padippakam.Com
184 உதவி
பட்ட பினமாய், அவனெதிரே உட்கார்ந்திருந்தாள்
"............... ------- குடும்பம் பற்றிக் கேள்விப்பட்
டிருக்கிறாயா?
என்று தன் பாட்டனின் பெயரைச் சொல்லிக் கேட்டான் அவன். குரலில் வன்மம் தெறித்தது. கைகள் நடுங்கின. நெற்றியிலும் பிடரியிலும் வியர்வைத் துளிகள் பொடித்தன.
'இல்லை'
என்றாள் தணிந்த குரலில், அவளுடைய குழந்தைத் தன்மை கொண்ட பார்வை திடீரெனக் கூர்மைப்பட்டது. அவனது முன்னோர்களின் சாயலை அறிய முற்பட்ட வளைப்போல, அவன் முகத்தைத் தீவிரமாய் ஆராய்ந் தாள்.
'உன் முன்னோர்களின் மலத்தொட்டியைச் சுத்தம்
செய்தார் அவர்"
என்று ஆத்திரத்துடன் சொன்னான் அவன்.
'எனக்கு நினைவிருக்கிறது"
என்று பீதியுடன் முணுமுணுத்தாள் அவள். அவனது நினைவின் திரைச்சிலையில் காலத்தின் புகை படிந்த ஒரு மங்கலான முகம் தென்பட்டது.
"அவர் என் பாட்டனார்...!" என்று மகிழ்ச்சியுடன் கத்தினான் அவன்,
"உங்கள் மலத் தொட்டியைச் சுத்தம் செய்து கொண் டிருந்தார் அவர். அவரும், என் தகப்பனாரும், ஏன் எங்களுடைய எல்லா மூதாதையர்களுமே அதைத் தான் செய்து கொண்டிருந்தனர். '
படிப்பகம்
Www.padippakam.com
_தேவிபாரதி iš5
சவமாக வெளுத்திருந்தாள் அவள். பேசும் சக்தியை இழந்து விட்டதுபோல பேசுவதற்கு எதுவுமே இல்லாதது போல, சலனமற்ற விழிகளால் அவனைப் பார்த்தாள். ஆத்திரத்துடன் சிகரெட்டின் வெண்புகையை அவள் மேல் ஊதினான். ஒரு விசுவாசமான வேட்டை நாயைப் போல, அவளை முற்றுகையிட்டது சிகரெட் புகை. அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வந்தது போல மெளனம் அவர்களுக்கு நடுவில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது.
ஆனால் அந்த மெளனம் எந்தக் கணத்தில் உடைந்ததோ அந்தக் கணத்தை விளக்குவது கடினம். அங்கே நிலவிய சகிக்க முடியாத மெளனத்தில் விரிசலை ஏற்படுத்தியது அவர்களிருவரில் யாரென்பதை கதை சொல்பவருங்கூட அறிந்திருக்கவில்லை. இந்தக் கதையைச் சொல்ல நேர்ந்தது குறித்துக் கதை சொல்பவர் வருத்தம் தெரிவிக் கிறார். துல்லியமாகக் கவனிக்கத் தவறியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதுடன், ஒரு கதை போல இதைச் சொல்லிக் கொண்டு போக முடியாத தற்காகத் தன்னை எப்படிக் குறை சொல்ல முடியும் என்று பகைமையோடு கேட்கவும் செய்கிறார். ஆத்திரமான முகபாவமும், நடுங்கும் குரலுமாகக் கதையை அவர் தொடரும்போது, ஒரே சமயத்தில் அவர் மீது இரக்கமும், வெறுப்பும் ஏற்படுகிறது. ஆனால், சொல்ல வேண்டியவற்றில் மிகவும் அவசியமானவை யெனக் கருதத்தக்க எல்லாவற்றையும் அவர் சொல்லத் தான் செய்கிறார்.
"வேசியே, ஏன் இன்னும் உடைகளைக் களைந்து
அம்மணமாகாமலிருக்கிறாய்?"
என்று அவனைப் பார்த்து, அவன் ஆத்திரத்துடன் அடிச்சலிட்டதையும், அவள் அவனது ஆத்திரத்துக்குப்
படிப்பகம்
________________
www.padippakam.com
186 பலி
பணிந்து அல்லது வாடிக்கையாளனின் விருப்பம் எதுவா னாலும் அதை நிறைவேற்றுவது ஒரு வேசியான தன் கடமையெனத் தீர்மானித்துத் தானே முன் வந்து, அல்லது விவரிக்க முடியாத வேறு காரணங்களால் உந்தப்பட்டு தனது எல்லா ஆடைகளையும் களைந்து நிர்வானப் படுத்திக் கொண்டதையும் வாசகர்களுக்குச் சொல்லத் தவறவில்லை. அவர்.
"நான் உன்னைப் புணர்வேன்...' என்று குரல் நடுங்க அவன் சொன்னான்.
"நான் வேசி:
என்று அழுத்தந் திருத்தமான குரலில் கூறிவிட்டு, பதட்ட மின்றி நடந்து, கட்டிலில் மல்லாந்து படுத்தாள் அவள். ஒரு சவம்போல அவள் மேல் கவிழ்ந்தான் அவன். அவனது சுவாசத்தில் காமமில்லை. ஒரு இரைபோல பற்றியிழுத்து முரட்டுத்தனமாகத் தழுவினான்.
"நான் தீண்டத் தகாதவன்' என்று அவள் செவிகளில் வன்மமாகக் கிசுகிசுத்தான்.
"நான் வேசி.'
'என் தந்தை உன் மலத்தை அள்ளினார்.'
"நான் வேசி...' அவன் அவளுடைய வாய்க்குள் தன் உமிழ்நீரைத் துப்பி விட்டுச் சொன்னான்.
"நாங்கள் செத்த மாடுகளின் மாமிசத்தைப் புசிப்ப
வர்கள்.' "நான் வேசி' என்று அவனது உமிழ்நீரை விழுங்கி
னாள் அவள்.
அவளை உதறி எழுந்து ஆத்திரத்துடன் கத்தினான் அவன்.
படிப்பகம்
________________
Www.padippakam.com
தேவிபாரதி 187
‘'நீ பிரம்மனின் தலையில் பிறந்தவள்...'
"நான் வேசி...' என்றாள் துவண்ட குரலில்.
தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான கேடயமாகவும்: அவனைத் திருப்பித் தாக்குவதற்கான ஆயுதமாகவும் அவள், அந்த வார்த்தைகளை பிரயோகித்ததாகச் சொல் கிறார் கதை சொல்பவர்.
"நீ வேசி...' என்று வெறுப்புடன் தரையில் காறித் துப்பினான் அவன். இந்த முறை அவள் பதிலளிக்க வில்லை. இதுவரையிலும் அவன் கேட்ட, இனிகேட்கப் போகிறதான எல்லாக் கேள்விகளுக்குமான பதில் - நான் வேசி.
அது ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது என்று சொல்ல விரும்புவது போல உயிரற்ற பார்வையால் அவனை வெறித்து நோக்கினாள்.
'பேசியது போல பத்து மடங்கு பணம் தருவேன்
உனக்கு?’’
அவள் விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன.
"ஒரு வேளை நூறு மடங்கு... ஆமாம் நூறு மடங்கு
பணம் தருவேன்...'
திட்டவட்டமாக அறிவித்து விட்டு, பீரோவைத் திறந்து அதிலிருந்த பணம் முழுவதையும் வாரியெடுத்துக்கொண்டு வந்து அவள் மேல் வீசினான். பைத்தியக்காரனைப் போல, அறை முழுக்கத் தேடி, ஜன்னல் விளிம்புகளில் புத்தக அலமாரியின் இடுக்குகளில், சட்டைப் பைகளில், இறைந்து கிடந்த, சில்லறைக்காசுகளையும் விடாமல்.
படிப்பகம்
________________
www.padippakam.Com
F83 ப்லி
உண்மையில், இத்துடன் கதையை நிறுத்திவிட விரும்பிய தாகச் சொல்கிறார் கதை சொல்கிறவர். திடீரென நிறுத்தி விட்டதாக விமர்சிக்கப்பட நேர்ந்தாலும், தொடர்ந்து சொல்வதன் மூலம், தனக்கு ஏற்படக்கூடிய ஆன்மீகப் பதட்டத்தைத் தவிர்க்க முடியும் என்று சொல்கிறார். *ஆால் அவர் வேறு விதம்ாகவும் யோசித்திருக்கக்கூடும். ஒருவேளை போதிய மனத்துணிவு அவருக்கு இல்லாதிருக்க ಖ ஆபாசமான, மிருகத்தனமான, வக்கரித்த கற்பனை சின் நிா, நமது மரபான பண்பாட்டிற்கும் மனித நேயச் சிந்தனைகளுக்கும் எதிரானதென்றோ, விமர்சகர்களால் ஈவிரக்கமின்றித் தாக்கப்படலாமென அவர் அஞ்சக் *ம்ே அல்லது அவருக்கே கூட கதையில் எஞ்சிய பகுதி ஏற்றுக்கொள்ள முடியாததாயிருந்திருக்கலாம். குற்றச் சாட்டுகளுக்கும் அவமதிப்புக்கும் உள்ளான ஒரு கைதியின் வாக்கு மூலம் போல, தணிந்த குரலில் சொல்ல முயன்றார் கதை சொல்பவர்.
எதார்த்தத்திலோ, கதைகளிலோ, உலகின் எங்கேனும் ஒரு பகுதியில், அல்லது ஏறத்தாழ எல்லாப் பகுதிகளிலும், இதையொத்த அல்லது இதைவிடவும் மோசமான நடப்பு களும் கற்பனைகளும் எப்போதுமே இருந்து வந்திருக் கின்றன என்று தனது வாசகருக்குக் காட்ட விரும்பிய வரைப் போல, சில பத்திரிக்கைச் செய்திகளையும் போருக்குப் பிந்திய ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு நாவல் களையும், லத்தின் அமெரிக்கச் சிறுகதைகளையும்
ஆப்பிரிக்கக் கவிதைகளையும், சோவியத் யூனியனிலிருந்து வெளியேற்றப்பட்ட புகழ்பெற்ற இயக்குநர்களின் சில திரைப்படங்களையும் ஏன் ரோமானிய நாடகங்களையும், இந்தியப் புராணங்களையும்கூட, மேற்கோள்களாகக் காட்டி, இவற்றினுடாகவே,கதையின் எஞ்சிய பகுதியைச் சொல்கிறார், கதை சொல்பவர்.
படிப்பகம்.
________________
Www.padippakam.com
தேவிபாரதி 189
உண்மையில் வியக்கத்தக்க சமயோசிதம் இது. அவர் குறிப் பிட்ட ஆன்மீகப் பதட்ட த்திலிருந்து கதை சொல்பவர் மட்டுமல்ல வாசகர்களுமே தப்பித்துக் கொள்வதற்கு இது உதவக்கூடும்.
கதைகளிலும், திரைப்படங்களிலும் சித்தரிக்கப்பட்டி ருப்பது போல்தான், எல்லாமே அசுர வேகத்தில் நடை பெற்றன. அவளுடைய கைகால்களைக் கட்டிலோடு பிணைத்துக் கட்டி, வாயில் துணிப்பந்தை அடைத்து, அவனெதிரே நாற்காலியில் நிர்வாணமாக உட்கார்ந்தபடி சிகரெட்டைக் கொளுத்தி, சிகரெட்டின் நுனியில் கனல் திரண்டு, ஒரு மிருகத்தின் பழி நிறைந்த கண்களின் சாயலைப் பெறும் வரை புகையை ஆழ்ந்து உள்ளிழுத்து, நிதானமாக அவளுடைய நிர்வாணத்தின் சாத்தியப்பட்ட எல்லா இடங்களிலும், அழுத்தி எடுத்ததுமான அவனு டைய எல்லாச் செயல்களும், தாங்க முடியாத சித்ர வதையின் விளைவாக அவள் துடித்ததும், நெஞ்சுக் கூட்டுக்குள் நசுங்கி உயிரிழந்து போன அவளுடைய கதறல்களும்- அவர் மேற்கோள்களாகக் குறிப்பிட்ட கதைகளையும், திரைப்படக் காட்சிகளையும் துல்லியமாக ஒத்திருந்தன.
கதை சொல்பவர் விரும்பியிருந்தால், இந்தக் கட்டத்தில் கதையை முடித்திருக்க முடியும். ஆனால் சொல்ல வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன என்கிறார். இது தனது சித்தத்திற்குட்பட்ட விஷயமல்ல. முற்றிலும் சுயேச்சையான முடிவை நோக்கிக் கதை தயக்கத்துடன் நடந்து செல்கிறது, எனவே வாசகர்கள் குறுக்கிடாதிருக்கு மாறு கேட்டுக் கொள்கிறார்.
'உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, ஊருக்கு
வெளியே மலச் சகதியில், நரகத்தின் முன் மாதிரி போலிருக்கும் அந்த இடம்...'
படிப்பகம்
________________
www.padippakam.com
290 பலி
பீதியூட்டும் ஒரு கனவை நினைவுபடுத்திக் கொள்வது போல பதட்டம் நிறைந்த குரலில் சொல்லத் துவங்கி னான். அவள் கண்கள் எதையோ சொல்ல விரும்பின.
'அங்குதான் நாங்கள் வாழ்ந்தோம்...' ஆத்திரத்துடன் புகையைத் துப்பிவிட்டுச் சொன்னான்.
"பன்றிகளைப் போல.. எங்கள் மூச்சுக் காற்றுக் கூடத் தீண்டத் தகாததாய்க் கருதப்பட்டது. காட்டு மிராண்டித்தனமான காலங்களைப் பற்றி என் தாத்தா சொல்லியிருக்கிறார். கழுத்தில் மண் கலயங் களைத் தொங்க விட்டுக் கொண்டு நடந்தோம். செத்தமாடுகளின் இறைச்சியை உண்ணும் எங்கள் உமிழ்நீரால் இந்த பூமி தீட்டுப்பட்டு விடுமென்று உங்கள் சாஸ்திரங்கள் சொன்னதால், அந்த அடிமைச் சின்னங்களை பிச்சைப் பாத்திரங்களைப் போல சுமந்து திரிந்தோம்..."
அவள் விழிகளில் நெருப்பின் சித்ரவதையைத் தாண்டிய ஒரு கழிவிரக்கம் தென்பட்டது.
'சாஸ்திரங்கள் உங்கள் மூதாதையர்களால் எழுதப் பட்டவை...' என்று வன்மத்துடன், அவள் காது களில் கிசுகிசுத்தான்.
"நாங்கள் உங்கள் வயல்களில் மாடுகளைப் போல உழைக்கவும், உங்கள் மலத்தொட்டிகளைச் சுத்தம் செய்யவும் படைக்கப்பட்டவர்கள். ஹா... உங் களால் எச்சில் படுத்தப்பட்ட பழைய சோற்றைக் கொண்டு எங்கள் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டுமாம். உங்களது பழைய கந்தல்களால்
படிப்பகம்
________________
Www.padippakam.com
தேவிபாரதி 191
எங்கள் நிர்வாணத்தை மறைத்துக் கோள்ள வேண்டு மாம். தாசிகளைப் போல எங்கள் பெண்கள் அரை நிர்வாணத்துடன் அலைகிறார்கள்... இன்னும் கூட...'
அவன் நடுங்கினான். அவன் மனதின் அடியாழத்தில் கண்ணிர் தத்தளிததது. கண்ணிரில் நனைந்த அந்த வார்த்தைகளால் அவள் துயரமடைந்தாள்.
"வேசியின் புத்திரர்களென்று எங்களுக்குப் பெயர்
சூட்டினார்கள்... உங்கள் ஆடவர்களின் முன்னே திறந்த மார்பகங்களுடன் எங்கள் பெண்கள் நின் றார்கள்..."
அவள் அதிர்ச்சியுற்றவளைப் போலக் கத்த விரும்பினாள். அவளது விழிகளிலிருந்து கண்ணிர் தெறித்துச் சிதறிற்று.
"இதையெல்லாம் ஏற்க மறுக்கும் ஒவ்வொரு
முறையும் நாங்கள் தாக்கப்படுகிறோம்...'
அறையின் சுவர்கள் அவனோடு சேர்ந்து கூச்ச விட்டன. அவன் சொல்பவற்றை ஆமோதிப்பது போல எதிரொலி எழுப்பின.
“உயர்ந்த ஆன்மாக்களென்று உங்களைச் சொல்லிக் கொள்கிறீர்களே... பசுவுக்கும்,புறாவுக்கும் நீதி வழங் கியதாகத் தம்பட்டமடித்துத் கொள்கிறீர்களே... எங்கள் குழந்தைகள் கிணற்றில் குதித்தபோது மின்சாரம் பாய்ச்சிக் கொன்றீர்களே...? கால்படி நெல்மணி அதிகம் கேட்டதற்காக, எங்கள் பெண் களையும், குழந்தைகளையும், இளைஞர்களையும் நெருப்பிவிட்டுப் பொசுக்கினர்களே...? எங்கள்
படிப்பகம்
________________
www.padippakam.com
192 
மக்களின் கண்களைக் குருடாக்கினர்களே..? இதற் கெல்லாம் என்ன பிராயச்சித்தம்? எங்கே நீதி'
ஆனால் கைமாறு செய்வது போல்தான் அவள் அழுதாள். அவனுக்கும் அவனது மூதாதையர்களுக்கும், தனது பாட்டனாரும், மூதாதையர்களும் இழைத்த கொடுமை களுக்காக அழுதாள். எல்லாவற்றுக்குமான பிராயச் சித்தம் போல அவள் மேனி முழுவதும் கருகிப் போயிருந்: தது, அவனுக்குத் தன்னைப் பலியிட்டுக் கொண்டவளைப் போல எதிர்ப்பின்றி...
ஆனால் இதற்குமேல் சொல்ல மறுத்துவிடுகிறார் கதை சொல்பவர். வேடிக்கையான கதையொன்றைச் சொல்லி முடித்து விட்டது போல புன்னகைத்தார். கதை கேட்ட குழந்தைகளிடம் புதிர் போடுவது போல தனது வாச கரிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறார். வேடிக்கையான ஆள்!
அதாவது கதையின் முடிவு எப்படியிருக்குமென யூகிக்கச் சொல்கிறார். அல்லது எந்த மாதிரியான முடிவை நீங்கள் விரும்புகிறீர்கள், என்று கேட்கிறார்.
சில சாத்தியப்பாடுகளை முன் வைக்கிறார்.
அவன் இறுதியாக அவளைக் கொன்று விடுகிறான். அல்லது சித்ரவதையின் உச்சத்தாலோ மிதமிஞ்சிய மன அழுத்தத்தாலோ அவன் இயல்பாகவே செத்துப் போய் விடுதல் இந்த இரண்டையுமே விரும்பாத பட்சத்தில் அவன் ஏதாவது ஒரு கட்டத்தில் அவளது கண்ணிரின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு தன் குற்றத்தை உணர்ந்து அவளை விடுவித்தல்_திரைப்படங்களிலும், நாவல் களிலும் வருவது போல அவனது செயலுக்குப் பிராயச்
-*
படிப்பகம்
________________
www.padippakam.com
தேவிபாரதி 193
சித்தமாக அவளைத் தானே மணம்புரிந்து கொள்ளப் போவதாய் அறிவித்து வாசகரை நெகிழச் செய்தல், மர்ம நாவல்களில் வருவது போல போலீஸ் அல்லது ஏதாவது சமூக சேவை உறுப்பினர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, ஆபத்தான நிலையிலிருந்த அவளைக் கண்டுபிடித்து...
சிரிக்கிறீர்களே...!
கதைச் சொல்பவருக்குக்கூட இதெல்லாம் நகைப்பூட்டக் கூடிய, சிறுபிள்ளைத்தனமான வாதங்களாகத்தான் தோன்றுகின்றனவாம். இருந்த போதிலும் இந்த மாதிரி யான சந்தர்ப்பத்தில் அதுபோலவெல்லாம் தவிர்க்கவிய லாமல்...
ஆக, கதை சொல்பவரைப் பொறுத்தவரை எல்லாக் கதைகளையும் போல இதுவும் ஒரு கதை. இல்லையா?
D —1993.
ப-13
படிப்பகம்