தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, May 24, 2016

சுய சித்திரத்திற்கான குறிப்புகள் (மே 1935 - 7 மார்ச் 51) - ஆல்பர் காம்யு : நிழல்

padippakam
சுய சித்திரத்திற்கான குறிப்புகள் (மே 1935 - 7 மார்ச் 51) தேர்ந்தெடுக்கப்பட்டவை
ஆல்பர் காம்யு
l, மே 1935 - செப்டம்பர் 37
(3ւը 1935
நான் சொல்லவருவது இதைத்தான் : கற்பனா சக்தி இல்லாமலேயே ஒருவனால் வறுமையின் கொடுமையை உணர முடியும். பணம் இல்லாமல் வாழக்கூடிய சில காலங்கள் போதுமானது, நம்மை உணர்வுப்பூர்வமாக உந்தித்தள்ளுவதற்கு. இக் குறிப்பிட்ட விஷயத்தில், ஒரு மகன் தனது தாயின் மீது கொண் டிருக்கக்கூடிய விநோத ஈடுபாடானது அவனுடைய மொத்த உணர்வுத்தளத்தையும் ஆக்கிரமிப்பதாகிறது. பின்னாட்களில் பரந்து பட்ட பல்வேறு துறைகளிலும் அவனுடைய இளமை காலத்தின் ஞாபகங்கள் (ஆன்மாவுடன் ஒட்டிக்கொண்ட பிசின் அது) உணர்வுக் கீற்றுகளாக வெளிப்படும்.
இதைப் புரிந்து கொண்டவர்கள் நன்றிக் கடன்பட்டவர்களாக உணரும் அதே சமயம் தன்னையுமறியாத குற்றவுணர்விற்கும் ஆட்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. வேறு ஒரு வாழ் நிலைக்கு அவன் நகர்ந்துவிட்டால், பழையவற்றுடன் நிகழ் காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில், மிகப்பெரிய வளமையை இழந்துவிட்டதான உணர்வையே அவன் அடைவான். பணம் படைத்தவர்களுக்கு வானம் மிகச் சாதாரணமானது; இயற்கையின் இன்னுமொரு பரிசு அவ்வளவுதான். ஆனால் ஒரு ஏழை வானத்தை அதன் தன்மை யிலேயே பார்ப்பான். அவனுக்கு அது ஒரு முடிவற்ற அற்புதம்.
குற்ற உணர்வு என்பது ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஒத்துக்கொள்ளப்பட்டவையே கலை. நானே இதற்கான சாட்சி. விஷயங்களை தெளிவாகப் பார்க்க முடிந்த தருணங்களில், ஒன்றே
- - நிழல்/27 படிபபகம
________________
padippakam
ஒன்றைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். இந்த வறுமையான வாழ்நிலையில், இந்தப் பயனற்ற பணிவான மக்களுக்கு மத்தியில் நான் தொட்டுள்ள பகுதிகளை குறித்து நான் உணர்வது நிச்சயமாக இதுதான் வாழ்வின் உண்மையான அர்த்தம். கலையின் பங்களிபபு எந்தவிதத்திலும் போதுமானதல்ல. கலை மட்டுமே எனக்கு எல்லாமுமாக இல்லை. குறைந்தபட்சம் அதுவும் ஒரு வழி
கோழைத்தனமான சிறிய செயல்கள், குற்றமுணர்ந்து வெட்கி நிற்கும் நேரங்கள், இன்னொரு உலகு குறித்து சிந்திக்கும் முறை பணக்கார உலகம் குறித்து, போன்றவைகளை அது குறித்த யோசனை இன்றியே சிந்திப்பவைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். நான் நினைக்கிறேன் ஏழைகளின் உலகம் முழுமையாக தங்கள் முகமாக தாங்களே திரும்பிக் கொள்கின்றனர். இந்த உலகம் சமூகத்தில் ஒரு தீவாகிவிடுகிறது, இங்கே யார் வேண்டுமானாலும் எளிதாக நுழையலாம், எது வேண்டுமானாலும் செய்யலாம் ராபின்சன் குருஸ் (Robinson Crusoe) போல.
இவை எல்லாம் தாய் - மகன் உறவு குறித்த ஆய்வின் மூலம் வெளிப்படுத்த வேண்டும்,
நான் எழுதியிருப்பது பொதுவான விஷயங்களுக்கே பொருந்தும். குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு ஒருவன் வருவானேயானால், எல்லாமும் சிக்கல் வாய்ந்ததாக மாறிவிடும்.
1. ஒரு அமைப்பு. பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள்.
2. தாய் - அவள் செய்யும் பணிகள்.
3  தாய்க்கும் மகனுக்குமான உறவு.
தீர்வு என்ன? அந்தத் தாய்? மகனின் தாயக நாட்டம் தன் தாயின் உருவக வடிவின் மூலம் - உறவின் மூலம் உயிர் பெற்று நிலைக்குமா?
O
நகைச்சுவை குறித்த கருவும் முக்கியத்துவம் வாய்ந்ததே. கடும் துயரமான காலகட்டத்தில், நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்கிற உணர்வுதான் நம்மைக் காப்பாற்றும் உணர்வாக இருக்கிறது - மற்றவர்கள் இரக்கம் காட்ட இயலும் அளவிற்கு உட்பட்ட தூரத்தில் தனிமைப்பட்டுள்ளோம் என்ற உணர்வு. இந்த உணர்வினுள் தான் நாம் மகிழ்வுறும் காலங்கள் பொதிந்துள்ளது.
நிழல்/28
படிப்பகம்
________________
padippakam
நம் இன்பத்தில் உரைந்துள்ள முடிவில்லாத சோகத்தை எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் நாம் காண்கிறோம். இந்த உணர்வினுள் நிலைத்திருப்பது இதுதான். துக்கத்தில் தன்னிரக்கம் கொள்ளும் ஒரு விழிப்புணர்வே நமது இன்பம்". --- -
கடவுள் ஏழைகளின் மீது தன்னிரக்கம் காட்டுகிறார், எவ்வாறு எனில், நோயையும் அதற்கான தீர்வையும் அருகருகே வைத்திருப் பது போல.
O
செப்டம்பர்
"கிறிஸ்த்துவத்தை புரிந்து கொள்ளவில்லை, ஆறுதல்கள் இன்றி நான் வாழ விரும்புகிறேன்" என்று நீங்கள் சொல்வீர்களேயானால் நீங்கள் குறுகிய மனப்பான்மையும் தவறான எண்ணப் போக்கையும் உடையவராவீர்கள், ஆறுதலின்றி நீங்கள் வாழ்வதாக வைத்துக் கொள்வோம். கிறிஸ்த்தவர்களின் நிலையைப் புரிந்தவன், நேசிப்பவன் என்று அப்பொழுது சொல்வீர்களானால் நீங்கள் ஒரு ஆழமில்லாத நுண்கலைப் பிரியர் என்றே நான் சொல்வேன். மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணவலையிலிருந்து நான் மெல்ல வெளியேறத் தொடங்கியுள்ளேன்.
செப்டம்பர் 1937 . ஏப்ரல் 959
30, செப்டம்பர்
ஒருவரிடம் இருக்கக்கூடிய எல்லா தன்மைகளையும் உற்றுக்கவனித்த பிறகே அம்மனிதன் குறித்த முடிவிற்கு நான் வருவேன். இதில் கால அவகாசம் குறித்த கேள்வி மட்டும் தான் உள்ளது.
இதில் எப்பொழுதும் இடைமுறிவுக்கான உணர்வு எனக்கு வந்து விடும். விசேஷம் என்னவென்றால், அந்த மனிதன் எது குறித்தோ தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தடைபட்டு நிற்பதாக நான் உணரும் தருணத்தில் முறிவு நிகழ்ந்துவிடுகிறது
4 , அக்டோபர்
சில நாட்களுக்கு முன்பு வரை என்னிடம், வாழ்க்கையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி நின்றது.
நிழல்/29
படிப்பகம்
________________
padippakam
இதற்குக் காரணம் என்னுடைய வறுமை, அதன் கொடுர அனுபவம், தனிமை. இவையெல்லாம். ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்ல என்னை உந்தித்தள்ளியது. இது தவறான எண்ணமில்லை என்றாலும் ஏதோ ஒன்று உள்ளுக்குள் அரித்தது. Bel - Abbe's-ல் வேலை கிடைத்தவுடன் மகிழ்ந்தேன். அதன் நிரந்தரத்தன்மை என்னை சலனப்படுத்தியது. இதனால் பழைய எண்ணங்கள் சிதறின. வேலையை உதறிவிடலாம் என்று தீர்மானித்தேன். ஏனெனில், பாதுகாப்பான வேலை என்பது வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகளை ஒப்பிடும் போது முக்கியத்துவம் அற்றதாகக் கருதினேன். ஒரே விதமான ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்பான வேலை கொடுக்கும் ஸ்திரத்தன்மையில் உள்ளம் ஒழுங்கற்ற சோம்பலை நாடியது சில நாட்களுக்கு என்றால் சமாளிக்கலாம். வாழ்வே அதுதான் என்றால், எனவே என்னை நானே சுருக்கிக் கொண்டுவிட்டேன். நிரந்தரமாக தனிமைப்பட்டுக் கிடக்க நான் தயாரில்லை. இது என் பலமா, பலவீனமா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. எல்லோரும் என்னிடம் அரிய வாய்ப்பை நழுவ விட்டாய் என திட்டித் தீர்த்தனர். எனக்குத் தெரியும் இது முரண்பாடல்ல. நிலைத்து நிற்பதென்பது வேறு நிலையாய் இருத்தல் என்பது வேறு என்னை வேலையிலிருந்து ஓடும்படி செய்தது சந்தேகத்துக்கு இடமின்றி எதுவென்றால், நிரந்தரமாக ஒட்டிக் கொண்டு விடுவது குறித்த பயம் கூட அதிக காரணமில்லை. ஆனால் ஏதோ ஒரு அசிங்கத்தின் மீது நிரந்தரமாக ஒட்டிக் கொள்ள நேர்ந்து விடுமோ என்ற எண்ணம்தான்.
O
10 அக்டோபர்
ஏதோ ஒன்றில் மதிப்பாக இருப்பது அல்லது இல்லாமலிருப்பது படைப்பது அல்லது படைக்காமல் இருப்பது. முதல் விஷயத்தில் அனைத்தும் நிரூபிக்கப்பட்டவைகள் எவ்வித விதிவிலக்குமின்றி அனைத்தும். இரண்டர்வதில் முழுமையான முட்டாள் தனமே. பிறகு தெரிவு செய்ய இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு, அழகுணர்வு மிகுந்த திருப்திப்படுத்தும் வடிவான தற்கொலைதான் திருமணம் மற்றும் 40 மணிநேர வாரம் அல்லது ஒரு கைத்துப்பாக்கி, O
பிப்ரவரி 1938
புரட்சிக்கான ஆன்ம வேகம் முழுவதும், மனித நிலைகளை எதிர்க்கக்கூடிய மனித செயல்பாட்டில் தங்கியிருக்கிறது. பல்வேறு.
நிழல்/30
படிப்பகம்
________________
padippakam
வடிவங்களில் இது பரிமளிக்கிறது. இதில் ஆத்மார்த்தமாக சேர்ந்துள்ள வடிவங்களே கலையும், மதமும். புரட்சி எப்பொழுதும் கடவுளுக்கு எதிராகவே நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆன்ம வேகத்தை வரலாற்று சான்றுகளிலிருந்து அறியலாம். இதற்கு மால்ரர்க்ஸ் (Mallraux's)-ன் உணர்வு தேவை. இந்த உணர்வும் விருப்பத்தை தீர்மானிக்கும் அளவிற்கு இருத்தல் கூடாது இதனை எளிதாக அதன் சாரத்திலிருந்தும், குறிக்கோளிலிருந்தும் கண்டுபிடித்துவிட முடியும். இக்குறிப்பிட்ட பார்வையின் அடிப்படை யில் மகிழ்ச்சியின் வெற்றியை மறுபதிப்பு செய்யக்கூடிய எந்தக் கலைப்படைப்பும் புரட்சிகரமானது.
Ο
ஏப்ரல் 1938| நாற்பது மணிநேர வாரம் குறித்த கட்டுரை
என் குடும்பத்தில் - பத்து மணி நேர வேலை, பின் தூக்கம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை - வேலையின்மை : அழுகின்ற மனிதன். அவனுடைய மிகப்பெரிய துக்கம் என்னவென்றால் தன்னை தலைகுனியச் செய்த ஒன்றிற்காக ஒரே சமயத்தில் வாழ்த்தவும், அழவும் செய்ய வேண்டி அவன் இருப்பதே.
வேலையின் மதிப்பைப் பற்றியும் அதன் தேவை குறித்தும் இன்று மக்கள் அதிகம் பேசுகிறார்கள். குறிப்பாக மான் ஸியர் கிக்னோஸ் இது குறித்த முடிவான கருத்துக்களை வைத்துள்ளார்.
இது பித்தலாட்டத்தனமானது. இலகுவாக ஏற்றுக்கொள்ளப்படும் போதுதான் வேலைக்கு மதிப்பு ஏற்படுகிறது ஏதும் செய்யாதிருப்பதில்தான் ஒழுக்க மதிப்புகள் இருக்கிறது. ஏனென்றால் இது மனிதர்களை எடை போடுவதற்கான ஒரு நிலையைக் கொடுக்கிறது. இது மரணத்திற்கு ஏதுவானது, இரண்டாவதாகத்தான். ஆனால் வேலை என்பது எல்லோரையும் ஒரே தரத்திற்குக் கொண்டுவந்து விடுகிறது மனிதர்களை எடை போடுவதற்கான எந்த ஒரு அடிப்படையையும் இது கொடுப்பதில்லை. அடிமைத்தனமா வடிவத்திற்குள் எந்த ஒரு சிறந்த மனிதனாலும் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்த இயலாது.
வேலை என்பதற்கு மிகவும் மேலெழுந்தவாரியாகவே நாம் பொருள் கொண்டுள்ளோம். வேலையை சோம்பேறித்தனத்திற்கு கிடைத்த பரிசாக நினைக்கிறோம். வேலையின் மதிப்பு என்பது, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருவன் தனக்காக செய்து கொள்ளக்கூடிய
நிழல்/31
படிப்பகம்
________________
padippakam
சிறிய செயல்களிலும் அடங்கியுள்ளது. இங்கு வேலையும் விளையாட்டும் மீண்டும் இணையும்: மேலும் விளையாட்டு சுதந்திரமான போக்குடன் தொழில் நுட்ப அறிவோடு சேரும் போது வேலைக்கு மதிப்பும் கலைக்கு மதிப்பும் மேலும் படைப்பிற்கும் மதிப்பு ஏற்படு கிறது
O
இன்று பரிந்துரைக்கப்படுகிற அல்லது அனுமதிக்கப்படுகிற ஒரே ஒரு சகோதரத்தன்மையான நேசம் என்பது யுத்தகளத்தின் மரணமுகமான, கீழ்த்தரமான, ஒன்றாக இருக்கிறது.
O
கலைஞனும் கலையின் பங்களிப்பும்
மிகக்குறைவாக சொல்வது ஏதுவோ அதுவே உண்மையான கலைப்படைப்பு. படைப்பாளியின் உலகளாவிய அனுபவத்திற்கும். அவனுடைய எண்ணம் - அவனுடைய வாழ்க்கை (அவனுடைய வாழ்க்கைமுறை - ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் இந்த வார்த்தை குறிக்கக்கூடிய ஒழுங்கு முறைகளிலிருந்து விடுபட்ட வாழ்க்கை) ஆகியவற்றிற்கும் குறிப்பிடத்தக்க தொடர்பு உள்ளது. அவனுடைய படைப்பு இந்த அனுபவத்தை வெளிப்படுத்தும். ஒரு படைப்பு இந்த அனுபவத்தின் மொத்தத்தையும் இலக்கிய அலங்காரங்களால் சூழப் பட்டு வெளிப்படுத்துமேயானால் மேற்குறிப்பிட்ட உறவு தவறானதாகிவிடும். வெட்டியெடுக்கப்பட்டு பட்டை தீட்டப்பட்ட வைரக்கல்லானது எவ்வாறு தன்னுடைய உள்ளார்ந்த ஒளியை எதிரொளிக்க செய்து அதே நேரம் முழுமையாக வெளியேற்றிவிடாத தன்மையோடு விளங்குமோ அதே போல் மொத்த அனுபவத்தின் வெட்டி யெடுக்கப்பட்ட ஒரு பகுதியாக கலைப்படைப்பு இருக்க வேண்டும். இதுதான் சரியான ஒன்றாகும். முதல் விஷயத்தில், மிகைப்படுத்தலும், இலக்கியமும் இருக்கிறது. இரண்டாவது, இனிமையான படைப்பாக அமைந்துவிடுகிறது. ஏனென்றால் முழுமையான அனுபவத்தின் சாரம் நேரடியாக வெளிப்படுத்தப்படுவதில்லை.
பிரச்சினை என்னவென்றால், வாழ்க்கை குறித்த அறிவைப் பெறுவது (வாழ்ந்து பார்ப்பதற்குப் பதிலாக) என்பது எழுதுவதற்கான குறைந்தபட்ச திறனுக்கும் அப்பால் இருக்கிறது. எனவே, இறுதி ஆய்வில் மாபெரும் கலைஞன் என்பவன் முதல் மற்றும் முதன்மையான மனிதன் - மிகப் பெரிய அளவில் வாழ்ந்தவன்
நிழல்/32
படிப்பகம்
padippakam
அனுபவத்திற்கும், அது குறித்த நமது எதிர்பார்ப்பிற்கும் இடையிலான, நுட்பமான உறவுதான் உண்மையில் வாழ்வது என்பதாகும்.)
மரணமும் எழுத்தாளனின் படைப்பும்.
மரணத்திற்கு சற்று முன்னர் அவனுடைய இறுதி படைப்பு, அவனிடம் வாசித்துக்காட்டப்படுகிறது. தான் சொல்ல வேண்டியதை இன்னும் சொல்லியிருக்கவில்லை. அந்தப் படைப்பினை எரித்துவிட கட்டளையிடுகிறான். அறுபட்ட வீணையின் தந்திக் கம்பியினைப் போல எதுவொன்றோ தன் இதயத்தில் துண்டிக்கப்பட்ட ஒலியுடன் எது ஒன்றாலும் திருப்தியுராத அந்தப் படைப்பாளி இறந்து போகிறான்.
சூரியன் மற்றும் கடலின் மகிழ்வானது, பெண்களின் முகம்கொலை செய்யப்பட்டுக்கொண்டிருப்பது இதுதான். நாம்கொலையை ஏற்றுக்கொள்ளா விட்டால் அதனை மறுக்க வேண்டும். நாம் மிகச் சரியாக முரண்பாடுகளின் மத்தியில் வாழ்கிறோம். துயரத்தைக் குறைக்கும் ஒரு துளி கண்ணிர் கூட இல்லாமல், நம் இந்த நூற்றாண்டின் மொத்தமும் வளைத்து கொடுக்காமலும், இந்த முரண்பாட்டின் கழுத்துப்பிடியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தீர்வு எதுவுமில்லை என்பது மட்டுமல்ல, எந்தப் பிரச்சினைகளுமே அங்கு இல்லை.
11 ஏப்ரல் 1939- பிப்ரவரி 1942.
ஆகஸ்ட்
நேசத்துடன் வாழ்வதற்காக சிலர் படைக்கப்பட்டுள்ளனர். சிலரோ நேசிக்கமட்டுமே படைக்கப்பட்டுள்ளனர்.
தனிமையில் இருந்து எவ்வளவு அறிகிறோம் என்பதை உணர்ந்தால் தனிமை குறித்து அதிகம் எழுதமாட்டோம்.
நான் ஒரு மணம் மிக்கவன். எந்த கலையாலும் என்னை வெளி கொண்டுவர முடியாது. ஏனெனில் வாழ்வை மட்டுமே கொண்டு வரமுடியும் (மணத்தை கொண்டுவர இயலாது.)
நிழல்/33
படிப்பகம்
________________
padippakam
நாம் எந்த இடத்தில் வாழ்கின்றோமோ அங்கேயே நன்றாக வாழலாம். வேலையை முழுமையாக செய்ய விடாமல் தடை செய்வது வேலையே நமது பயணத்திற்கு தடையாய் உள்ளது எதுவோ, அதுவே நம்மை அதில் பயணப்படுத்தவும் செய்யும்.
பாரிஸ் 1940
ஆகஸ்ட்
0 பாரீஸில் எது வெறுக்கத்தக்கது - இளகிய மனம், மறைமுக இனிய உணர்வுகள், இதனுள் எல்லாமே அழகோடு, அழகின்
ரகசியமாய், தளிர் தன்மையுடன் அந்தகாரமான வானம், மின்னிடும் வீட்டின் கூரை மற்றும் விடாது பெய்யும் மழை,
C பாரீஸில் எது ஊக்கமளிப்பதாக உள்ளது - மிகப் பயங்கரமான தனிமை, சமூக வாழ்விற்கு ஒரு தீர்வாக நான் பெரிய நகரங்களையே கூறுவேன். தற்பொழுது நமது மனம்தான் வெறுப்பின் விளிம்பில் - இங்கு உடம்பு தனது மதிப்பை இழப்பது - இவை மூடி மறைக்கப்படுகிறது. ஒழுங்கற்ற தோலின் மேலாக, இதில் விடுபடுவது ஆன்மாமட்டுமே ஆல்காஹால் மழையில் நனைந்து அதன் ஒலங்கள் எங்கெங்கிலும் மோதும் அவலநிலை - ஆனாலும் ஆன்மா மட்டுமே தன் தன்மையோடு விலகி நிற்கிறது
o பாரீஸின் சாம்பல் நிற மேகத்திற்கு கறுப்புநிற மரங்கள் துணையுடன் சாம்பல் வண்ண புறாக்கள் அதனோடு இணைய புல்வெளிகளின் ராகம் புறாக்களின் ஆன்மாவை உலுக்க இனிய ராகங்களுக்கு சுருதி சேர்ப்பதாய் இறக்கைகளின் படபடப்பின் விளைவில் புல்வெளிகளின் சோககி தம் மாறி அப்புறாவைப் போல இதமாக ஒலி எழுப்பி அன்பை பரிமாறும் அற்புதமும் இங்குண்டு.
IV. சனவரி 42 - ஜூலை 1945
o பொதுவான மனோநிலை - நாம் ஒருவருடன் எவ்வாறு உறவு கொண்டுள்ளோம் எனில் அவரை குறித்து நல்ல விசயங்களை மட்டும் பேசுகினறோம் அவரின் தவறுகளை கவனமாக ஒதுக்கி
நிழல்/34
படிப்பகம்
________________
padippakam
விடுகின்றோம், முரண்பாடுகளை களைய இவ்வாறு உதவுகின்றோம் ஒவ்வொருவருக்கும் நல்ல மதிப்பும், நல்லவிசயங்கள் மட்டும் பிடிக்கும், அரசியல் தத்துவம், கல்வி வரலாறு எதுவா னாலும் இவ்வகையில் தான் வளர்க்க முடியும். தற்பொழுது நாம் 20-ம் நூற்றாண்டில் கிறிஸ்துவ கற்பனையின் பிரதிநிதி யாக இருந்துள்ளோம். ஆனால் 2000 வருடங்களாக மனிதன் இழிவு அடைந்திருந்தான் என்பது மிகையாகாது. யாரால் சொல்லமுடியும் 2000வருடத்தில் எப்படி இருந்தோம் என்பதை என் பிரபஞ்சத்தின் ரகசியம் - ரகசியம்-கடவுள் குறித்த கனவு மனிதனின் மரணமில்லாத தன்மையை விடுத்து நினைத்து பார்ப்பதில் உள்ளது.
அக்டோபர்
O பாலுணர்வு நம்மை வெறுமைக்கு இட்டுச் செல்லும், இதில் ஒழுக்கமின்மை என்பது இல்லை. மாறாக பலனளிக்காத ஒன்று நீங்கள் விரும்பும்வரை ஈடுபடலாம், உற்பத்தி என்பது மட்டும் இல்லாமல் இருக்கும் வரையில். ஆனால் பாலியல் ஒழுக்கம் ஒருவனின் முன்னேற்றத்துடன் சம்பந்தப்பட்டது.
O ஒருகாலத்தில் பாலுணர்வு வெற்றிபெறும், எப்பொழுது எனில் ஒழுக்கங்களிலிருந்து நம்மை விடுவிடுத்துக் கொள்ளும்பொழுது ஆனால் அது உடனடி தோல்வியில் கொண்டு சேர்க்கும், உண்மையான வெற்றி கிடைக்க வேண்டுமெனில் பாலியல் ஒழுக்கத்தில் நாம் நிலைத்தல் வேண்டும்.
நவம்பர்
காப்காவின் (Kafka) திறமை எதில் பொதிந்துள்ளது எனில் மீண்டும் மீண்டும் படிக்க வைப்பதில், அவரின் படைப்புகளில் முடிவில் அல்லது முடிவது போன்ற நிலையில், உற்று நோக்கினால் முற்றிலும் வேறு புதிய கோணத்திலிருந்து அணுக நம்மை தூண்டும், சில சமயங்களில் மூன்று நான்கு கோணங்களில் பார்க்கும் பொழுது அவரின் படைப்புகளை மீண்டும் நாம் மூன்று நான்கு தடவைகள் படிக்க நேரிடும். ஆனால் ஏதாவது ஒரு கோணங்களை வைத்துக் கொண்டு அவரை வரையறுத்துவிடமுடியாது. ஒரு மொழிபெயர்ப்பாளரால் கூட அவரின் எண்ண அலைகளை சரியாக மொழிபெயர்க்க
நிழல்/35
படிப்பகம்
________________
padippakam
இயலாது, வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கும் அர்த்தத்தில் அல்ல. ஒரு புள்ளியில் துவங்கி பல கோணங்களை (Direction) எட்டுவது அல்லது பல புள்ளியிலிருந்து ஒரு கோணத்திற்கு வருவது எல்லாம் படைப்பாளியின் மனநிலையினுள் உறைவது,
O தத்துவ அறிஞர்கள் - பண்டைய காலத்தில், தாங்கள் படித்ததைவிட அதிகம் சிந்தித்தார்கள், எனவே உண்மையின் அருகில் அவர்களால் எளிதாக வர முடிந்தது. அச்சுக்கலை இப்போக்கையே மாற்றிவிட்டது. மக்கள் நிறைய படிக்க ஆரம்பித்தனர் விளைவு சிந்திப்பது பாதித்தது, தற்பொழுது நம்மிடம் இருப்பவை தத்துவமில்லை வெறும் வர்ணனைமட்டுமே. ஒரு சிந்தனையாளன் புத்தகத்தை எழுதும் போது "நாம் முதலிலிருந்து சிந்திக்க தொடங்கினால் .” என்று எழுதும் போது சிரிப்பு வருகிறது. இன்று நிலவும் தத்துவங்கள் இலக்கிய தரத்தையோ, மேற்கோள்களையோ அதிகாரப்பூர்வமான விசயதாரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாமலேயே படைக்கப்படுகிறது.
20 மே
முதன் முதலில் என்னுள் ஒரு இனம் புரியாத உணர்வு குறு குறுப்பு, திருப்தி முழுமையான திருப்தி, என்னுள்ளேயே கேள்விகள் எழுப்புகிறேன். புல்வெளியில் படுத்துக்கொண்டு மிதமான மாலை மஞ்சள் வெயிலை அனுபவித்துக்கொண்டு. இதுவே எனது வாழ்வின் கடைசி நாளாக ... பதில் - என்னுள் அமைதியான சிரிப்பு. எதைப்பற்றியும் பெருமை பட்டுக்கொள்ளாத எதைப்பற்றியும் முடிவு எடுக்க இயலாத என் நிலையை நான் புரிந்துகொள்ள முடியாத இந்நிலை - ஒரு அனுபவத்தின் முதலில் இறுக்கம் அடைகின்றேனா? அல்லது இந்த இனிய மாலைப் பொழுதின் பாதிப்பா, விவேகத்தின் வெளிப்பாடா?
ஜூன், லக்ஸம்பர்க்
o சூரியனும் காற்றும் முழுதும் நிரம்பிய ஒரு ஞாயிறு காலை நீண்டு வளர்ந்த மரங்களின் நிழலில் இரண்டு வாலியர்களின் உரை யாடல் மனித கெளரவங்களின் நம்பிக்கை குறித்து முகவுரை
அன்பு
அறிவு
இரண்டும் ஒன்றுதான்
நிழல்/36
படிப்பகம்
________________
padippakam
( உண்மையான காதல் திருமணத்தில் முடியும். அன்பு பொய்மை இல்லாத தூய அன்பு மட்டும்.
(-) கலையின் இயற்கை தன்மை குறித்து முற்றிலும் சரியான வடிவங்களில் வெளிப்படுத்துவது முடியாத காரியம் ஏன்னெனில் உண்மையை வெளிப்படுத்துவதில்லை மட்டமான ரசனை, வக்கிரம் மனிதனை அதன் ஆழமான எதிர்ப்புகளில் திருப்திபடுத்தமுடியாது. எனவே தான் மனிதபடைப்புகள் இவ்வுலகையே எதிர்க்க துணிந்து விட்டது. தொடர்கதைகள் மட்டமானவை, உண்மையின் விளிம்பை, நிலையை அறிந்து கொண்டதால், உலக மரபுகளை ஒத்திருப்பதால் கலையும் கலைஞனும் இவ்வுலகை உருவாக்குவார்கள் ஒரு வித மறைமுக எதிர்ப்புடன்.
30 ஜூலை 1945
இ) முப்பது வயதில் தன்னைப்பற்றி அறிந்திருத்தல் அவசியம் தன் உள்ளங்கை போல, தோல்விகளின் எண்ணிக்கையும் அவனின் தன்மைகளையும். எவ்வளவு தூரம் அவைகளை கடந்து செல்வது என்பதை அறிந்திருக்க வேண்டும். தோல்விகளை முன்கூட்டியே அறிவது - என்ன தன்மையுடன் மேலாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கு வேண்டும். ஆனால் சம்பவங்கள் எல்லாம் உண்மையானவை, எல்லாவற்றையும் செய்து பார்ப்பதும், வழங்கு வதும் தினசரி வாழ்வில் தீர்க்கப்படுபவை. ஆனால் முகமூடியுடன் செயல்படுவதால் ஏறத்தாழ எல்லாவற்றையும் வழங்குமளவிற்கு எனக்கு அனுபவம் கிடைத்துவிட்டது. என்றாலும் திரும்பவும் பெரிய அளவுகளில் முயற்சி தேவை. ரகசியமாக முயன்று கொண்டிருக் கிறேன். இவைகளில் நம்பிக்கையுடனும் நம்பிக்கையற்றும், முனைப்புடன் முயற்சியில் எதையும் புறந்தள்ளாதே - ஏனெனில் ஒவ்வொன்றும் ஒருவகையில் மதிப்புமிக்கவை.
V. செப்டம்பர் 1945 - ஏப்ரல் 1948
நவம்பர் - 32 வயதில்
மனிதனின் இயற்கையான நெளிவுத் தன்மை, தன்மையும் தன்னுள் இருப்பவனையும் அழிப்பதில் வெற்றியடையும், சாதாரண தன்மைக்கு மிகுந்த பிரயாசை பட வேண்டும், அதைவிட அவனின் குறிக்கோளை எட்டுவதற்கு அதிக முயற்சி தேவை. மனிதன்
நிழல்/37
படிப்பகம்
________________
padippakam
அவனுக்குள்ளும் ஒன்றுமில்லாதவன். அந்த நிலைக்கு அவனே பொறுப்பாவான். ஆனாலும் அவனுடைய வாய்ப்புகள் கணக்கிலடங் காதவை மனிதனின் இயல்பே அவனை அடிக்கடி மூழ்கடித்துக் கொள்வதில் அமைந்துள்ளது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி வளர்ச்சிக்கு எப்பொழுதும் வாய்ப்பளித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக இவைகளை நான் பரிசீலித்து வருகின்றேன். மனித மிருகங்களில் இருந்து தியாகிகள் வரை பேய்களிலிருந்து நம்பிக்கையற்ற பலியிடுதல்வரை ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இது ஒளிந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் இவ்வாய்ப்பு கிடைத்துக் கொண்டு தான் இருக்கும். மனித நெறிகளை, வரையறுைகளை, அவனின் முயற்சிகளை ஆராயும்பொழுது கடவுள் என்ற பிரச்சனையை கவனத்தில் எடுக்காமல் இருத்தல் முடியாது. இதற்கெல்லாம் ஒரு வரையறை தேவையெனில் நாம் முதலில் நம்மை ஆளத்தெரிந் திருத்தல் அவசியம்,
ா ஹெகலியத்தின் (Hegelianism) அடிப்படை தவறுகளை இருத்தலியல் தன்னுள் வைத்துள்ளது. அதாவது மனிதனை ஒரு வரலாற்றுச்சான்றாக குறைமதிப்பீட்டில் வைத்துள்ளது. ஆனாலும் இதன் தொடர்புகளின் மதிப்புகளை அது கவனிக்க தவறிவிட்டது. அவனின் சுதந்திரத்தை மறுத்துவிட்டது.
Panelier 17 geg-sör 1947
உன்னதமான தினம் இன்று. இளங்காலை சூரிய வெளிச்சம் கடற்கரை ஒட்டிய மரங்களின் மீது புகைபோல் அமிழ்ந்து ஒவ்வொரு மரக்கிளையிலும் மெதுவாக நகர்த்து வழிந்தோடிக் கொண்டிருக் கிறது. இலைகளின் அடர்த்தி, அதன் அசைவு ஆயிரக்கணக்கான உதடுகள் காற்றை உறிஞ்சும் நிகழ்வை ஞாபகப்படுத்த ஆயிரக் கணக்கான சிறிய ஊற்றுகள் வான த்திற்கு நீர்பர்ய்ச்ச முனைய, அதனூடே காலை வெயிலின் சிதறிடிக்கப்பட்ட ஊதா பழுப்பு வண்ணம் மீண்டும் - இதுபோதும்.
ஏப்ரல் 194இ - மார்ச் 1951
(-) நாவலின் முடிவு - "மனிதன் மதவெறிபிடித்த விலங்கு' என அவன் சொன்னான். உடனே பேய்மழை இப்பூமியை நனைத்தது
நிழல்/38
படிப்பகம்
________________
padippakam
படைப்புகள் சரி செய்யப்படுகிறது. அந்த மதத்திற்கு அவன் ஒருவனே பிரதிநிதி - பழையவனும் அவனே - அவன் எல்லா இடங்களிலும் வேட்டையாடப்படுகின்றான். * .
என்னின் எல்லா சக்திகளையும் குவித்து-என்னின் பலவீனத்தை கண்டறிந்து, ஒழுக்கமான மனிதன் ஆக முயன்றேன். ஒழுக்கம் என்னை கொன்றது. -
-
நரகம் என்பது விசேசமான சலுகை. யாருக்கு அது அதிக தேவையோ அவர்கட்கு மட்டுமானது.
நாம் பெய்லி(Beyle)யின் சொற்களை வைத்து. மனிதனை மதிப்பிடுகின்றோம். எவ்வாறு ஏனில் அவர் சொல்லியதையும், எழுதியதையும் தவிர்த்து, நான் சொல்கின்றேன் அவர் செய்த தையும் தவிர்த்துதான்.
நற்பெயரை அவ்வளவு எளிதாக தக்கவைத்துகொள்ள இயலாது கெட்ட பெயரை எளிதாக தக்கவைத்துக் கொள்ளமுடியும் நல்ல பெயருடன் உலவுவது கடினம். ஏதாவது சிறிய தவறு அதள பாதாளத்தில் தள்ளி விட்டுவிடும். கெட்ட பெயருடன் சலுகைகள் உங்களைத் தேடி ஓடிவரும்.
ஓவியம் சிறிய திரைசீலையின் பின் அவள் அழகிய கண்கள் அமைதி தவழும் முகம். பால்காரியின் வெண்மை புன்னகை. திடீரென்று பேச ஆரம்பித்தாள், வாய் அஷ்ட கோணலாகி முகம் விகாரமாகி, அவளின் அழகு கரைந்து போனது. அவள் ஒரு சமூகப் பெண். அவனிடம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், அவனும் பதில் அளிக்கின்றான். தொடர்ந்து கொண்டே - ஆனால் அவன் கண்கள் எங்கேயோ எதையோ அலைந்து கொண்டு - அவன் பெண்பித்தன்,
அன்பு என்பது அநீதியானது போதுமானதல்ல.
மனிதனின் ஒரு பகுதி அன்பை மறுக்கும், இதுதான் இறக்க விரும்புவது, ஆனால் அது மன்னிக்கப்பட வேண்டிய பகுதி. எனது அனைத்து வேலைகளுமே எதிர்மறையானது.
கஷ்டமானது ஒன்றுமில்லை செய்ய முடியாதவையே இருக்கின்றன.
நிழல்/39 படிப்பகம்
________________
padippakam
0 பவுல்னர் (Faulkner) புதிய தலைமுறை எழுத்தாளர்கள் குறித்து தங்களின் கருத்து? என்ற கேள்விக்கு அவரின் பதில் : புதிதாக எதையும் எழுத முடியாது. பிரயோசனமாக விட்டுச்செல்லவும் இயலாது எழுதும்முன்பு அடிப்படை உண்மைகள் அவனுள் வேர்விட்டு உங்களை அதனை நோக்கி செயல்பட அனுமதிக்க வேண்டும். பெருமை, அவலம், மதிப்பு இவைகளைப் பற்றி நன்கு பேசத் தெரியாத, இவைகளுடன் எத்தொடர்பும் அற்ற எழுத்தாளர்கள். அவர்களின் படைப்புகள் அவர்கள் கண்முன்னே அழிந்து போகும். (Goethe)கெதெ,(Shakespeare) ஷேக்ஸ்பியர் இருவரும் நிலைத்து நிற்கிறார்கள், ஏனெனில் அவர்கள் மனித இதயத்தை நம்பியவர்கள். (Balzac) பால்லாக் (Flaubert) பால்பார்ட் போன்றவர்களும் இவை போன்று நிலைத்து நின்றவர்கள்.
O இன்றைய இலக்கியத்தில் (NIHILSM) நம்பிக்கையின்மை நுழைந்துள்ளது குறித்து?
பயம் தான். ஒரு நாள் பயப்படுவதை மனிதன் நிறுத்துவான் அன்று மீண்டும் தன்னிகரற்ற படைப்புகள் வெளிவரும்.
0 ஒவ்வொரு சாதனையும் ஒரு அடிமை வேலைதான்,
அது நம்மை பல சாதனைகள் செய்வதற்கு உந்தும்,
ALBERT CAMUS Selected Essays and Notebook
Philip Thody
ஆங்கிலம் வழி தமிழில் சம்பத்
நிழல்/40

படிப்பகம்