தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, May 07, 2016

மோக முள் - தி. ஜானகிராமன் (சில பகுதிகள்) (579-593) - இதற்குத்தானா?

மோக முள் - தி. ஜானகிராமன் (சில பகுதிகள்) (579-593) - இதற்குத்தானா?

.........
கடைக்காரன் ஆட்டைக் கொலை பண்ணித் தொங்கவிட்டு வியாபாரம் பண்ணுகிறாப்போல, சுருதியைக் கண்டம் கண்டமா கழிச்சுத் தொங்க விட்டுன்னா காசு சம்பாதிக்கிறானுகள்."
"பாபு, உடம்பு சரியாயில்லே உனக்கு கையை மூடிண்டு இப்படி ஆத்திரப்படாதே. நிதானமாயிரு."
"பின்னே பாரேன்."
"பேசாம இரேன்."
யமுனா அவனை அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தான் அவன். ரிக்ஷா வீட்டு வாசலில் நிற்கிறவரையில் அவன் பேசவில்லை.
படுக்கையில் படுக்க வைத்துப் போர்த்திச் சிறிது நேரம் ஆனபிறகு "யமுனா, நான் ஏதாவது சப்தம் போட்டேனா என்ன?" என்றான் அவன்.
"கொஞ்சம் வேகமாகத்தான் பேசினே ... ஜூர வேகம்தான்.
"ம்ஹம் ஜூரமும் இல்லை. வேகமும் இல்லை. நான் அவன் பாட்டில், அந்த சமுத்ரத்திலே திளைச்சிண்டிருந்தேன். இந்த அபஸ்வரம், அம்மாவையே கொலை பண்ணுகிற இந்தக் கிராதகன் போடற சத்தம் என்னை ஒரு நிமிஷம் என்னமோ பண்ணிவிட்டது."
"திடீர்னு அந்தப் பாட்டு எங்கே ஞாபகம் வந்தது?"

"என்னமோ பழசெல்லாம் நினைச்சிண்டே வந்தேன்." 

"இப்ப ஒன்றும் நினைக்க வாண்டாம். கொஞ்ச நேரம் தூங்கு"
"தூங்கனுமோ என்னவோ, கண்ணை மாத்திரம் திறக்கத்தான் முடியவில்லை. ... ம்... வெளிச்சத்தையும் பார்க்க முடியவில்லை.
"கண்ணை மூடிக்கிட்டாவது படுத்திரு. நல்லாப் போர்த்தி விடறேன்" என்று போர்வையை நன்றாக இழுத்து, கழுத்து வரையில் போர்த்தி, காலிரண்டையும் தூக்கிப் போர்வையை அடியில் விட்டு. "கொஞ்சம் கீழே போயிட்டு வந்திடறேன். நல்லா தூங்கு" என்றாள் யமுனா.
புறப்பட்டுப் போயிடுவியா?"
"இங்கேயேதான் இருக்கப் போறேன். கீழே போயிட்டு வந்திடறேன். வந்ததே புடிச்சு வீட்டுக்காரங்க கூட பேசவே இல்லை."
"அப்படியே, சாப்பிட்டு வந்துவிடேன். பர்சை எடுத்துண்டு போ."
"லைட்டை அணைச்சிட்டுப் போகட்டா ?"
ம்.”
578 தி. ஜானகிராமன்
“ஸ்விட்சை மேலே தள்ளிவிட்டு தூங்கறியா? சும்மா அலட்டிக் கிட்டே இருக்காதே.. ம்?.”

“ம்?"
யமுனா கீழே இறங்கிப் போவது தெரிந்தது.
டாக்டர் தூக்கத்துக்கும் சேர்ந்து மருந்து கொடுத்து விட்டாரோ, என்னவோ... கண்ணை அமட்டுகிறது.
O
விழிப்புக் கொடுத்தது. விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. யார் அது? யார் உட்கார்ந்திருக்கிறது?
பாபு மலங்க மலங்க விழித்தான். பாலூர் ராமு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்.
"இப்ப எப்படியிருக்கு?"
“ஜுரம்தான் ... நீங்க எப்ப வந்தேள்?"
"இப்பதான் வந்தேன். அசையவாண்டாம். அப்படியே படுத்துங்கோ."
"இப்பதான் வரேளா, மணி என்ன?"
'ஒன்பதரையாகப் போறது. ஒன்பது மணிக்குக் கச்சேரி முடுஞ்சுது. நேரே இப்படி வந்தேன். பையன் சொன்னான் ஜூரம்னு."
"நான் இன்னிக்கி கொடுத்து வைக்கவில்லை."
“ஆமாமா. பெரிய அம்ருதம்னா தவறிப் போயிடுத்து! நீர் என்னமோ... என்னதினாலோ திடீர்னு ... வெதர்தான் எல்லோரையும் சிரமப்படுத்தறது ..." என்று தொட்டுப் பார்த்தார் ராமு.
"ஜுரம் விட்டிருக்காப்பல இருக்கே. வேர்த்திருக்கே" என்றார். புழுக்கமாகத்தான் இருந்தது. காலை மூடியிருந்த போர்வையை உதறித் தள்ளிவிட்டு, வேட்டியைச் சரிப்படுத்திக்கொண்டு உட்கார்ந்தான் பாபு.
கால் மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். நல்ல கூட்டமாம். ஆனால் பாபு வராமலிருக்க நேர்ந்தது ஏமாற்றமாகத்தான் இருந்ததாம்.
"கச்சேரிக்கு வரமுடியாதது மாத்திரம் இல்லை . . . டாக்டர் வீட்டுக்குப் போய் வரபோது ஹோட்டல்லெ வச்சிருக்கிற ஸ்பீக்கர்லேர்ந்து ஒரு அபசுருதி வந்தது பாருங்கள். சுருதியிலே சேரப்படாதுன்னு சபதம் பண்ணிண்டாப்போல ஒரு பாட்டு."
"ஞாயிற்றுக்கிழமை. அதுக்கு லீவு கொடுத்திருப்பர்."
மோக முள் 579
________________


"இல்லை வாரம் ஏழு நாளும் லீவு கொடுத்துவிட்டா போலிருந்தது. இதைப் பற்றி வயித்தெரிச்சல் தீர உங்களோட பேசனும் ஒரு நாளைக்கு ..."

"உடம்பு தேறட்டும். வாங்கோ பேசலாம்."

"பேசினால் போதாது. பெரிய சண்டைக்கு ஆரம்பிக்கனும். இப்படியே விட்டு விடப்படாது.”

"இந்தச் சண்டைக்குச் சாதாரண பலம் போதாதுய்யா"

அவர் போகும்போது ஒன்பதே முக்கால் ஆகிவிட்டது. "பாதகமில்லை" என்று சொல்லிக்கொண்டே மாடிப்படி வரையில் போய அவரைக் கொண்டுவிட்டு வந்தான் அவன்.

அவர் போன பிறகு யமுனா கஞ்சியை எடுத்து வந்தாள். வீட்டுக்காரரும் வந்து சேர்ந்தார். உடம்பைத் தொட்டுப் பார்த்து ஜூரம் விட்டிருப்பதைப் பார்த்து தூங்கச் சொல்லிவிட்டுக் கீழே. போனார் அவர் மறுபடியும் வந்தார். கையில் ஒரு கித்தான். ஜமக்காளம், தலையணை.

"நீங்களும் இங்கேயே படுத்துங்கம்மா. ராத்திரி ஏதாவது வேணும்னா, வெந்நீரோ மருந்தோ - எழுப்பிக் கொடுங்க."

"நான் வந்து எடுத்துக்கமாட்டேனா படுக்கையை?"

"பரவாயில்லை. சார். தூங்குங்க. ஜூரம் இல்லேன்னுஏதாவது புஸ்தகத்தை எடுத்துக்காதீங்க . . . என்ன?"

 "இல்லை."

"துப்புரவா ஒய்வு வேணும் இப்ப, ஆமாம்" என்று சொல்லி விட்டுக் கீழே போனார்.

யமுனா படுக்கையை உதறி தலையணையைத தட்டி விட்டுப் போட்டுக் கொண்டாள்.

"லைட்டை அணைத்துவிடலாமா?"

ம்.”

யமுனா பித்தானைத் தட்டிவிட்டுப் போய்ப் படுத்து கொண்டாள். இருளாக இல்லை. வெளியே வெள்ளி பூசியிருந்தது நிலவு உள்ளே இருப்பவற்றைப் பார்க்க முடிந்தது. மேஜை, கடுதாசிகள். சட்டை மாட்டியில் தொங்கிய துணிகள், அலமாரியில் டிக்கிடும் கடிகாரம், நாற்காலி - எல்லாம் கண்ணுக்கு ஓரளவு தெரிந்தன. அவள் படுத்திருப்பதும் தெரிகிறது. என் பக்கம் ஒருக்களித்துத்தான் படுத்திருக்கிறாள். தலையணை போதாதென்று இடது கையை வேறு அதிகப்படி உயரத்திற்கு வைத்துக்கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது. கண் மூடியிருக்கிறதா திறந்திருக்கிறதா தெரியவில்லை. என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாளா?

580


யமுனா!"

“ம்

'தூங்கிவிட்டியா?"

"இல்லையே."

"மணி என்ன ஆகிறது?"

"பத்து இருக்கும்."

மருந்து ஒரு டோஸ் சாப்பிடலாமா?"

அடேடே மறந்தே போயிட்டுதே நாலு மணிக்கப்பறம் சாப்பிடச் சொன்னாரே!" என்று எழுந்தாள்.

"லைட்டைப் போட வாண்டாம். கண்ணைக் கூசுகிறது."

யமுனா மேஜை மீதிருந்த மாத்திரைப் பொட்டணத்தையும் _து பாட்டிலையும் எடுத்து அருகே வந்தாள். பொட்டணத்தைப் பிரித்து ஒரு மாத்திரையை அவன் கையில் கொடுத்து, பாட்டிலைத் திறந்து வாயில் மருந்தை ஊற்றினாள். கார்க்கை மூடி மறுபடியும் போய்ப் படுத்துவிட்டாள்.

"படுத்துவிட்டாயா?"

"ஏதாவது வேணுமா?"

வாண்டாம்."

என்ன சொல்கிறது என்று தெரியவில்லை.

கீழே விட்டுக்காரர் சம்சாரம் பேசும் குரல் கேட்கிறது எதிர் _ாயில் யாரோ இரண்டு பேர் பேசுகிறார்கள். நிலவொளியில்  வெண்மை பூண்ட மேகங்கள் கப்பல் கப்பலாக விம்மிக்கொண்டிருந்தன

படபடவென்கிறது மார்பு எழுந்துகொள்ளட்டுமா? எழுந்து உட்கார்ந்தான் அவன். குதிரை வாலைப் போல மேகம் கிழக்கே பூசிக்கிடந்தது. வில்லடித்த பஞ்சுப்படலம் ஒன்றின்மீது சந்திரன் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வலையில் படாமல் ஓடுவதுபோல.

தெரு விளக்குகள் சட்டென்று அணைந்தன. நிலாக்காலம். _கை அனைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

பாபு திரும்பிப் பார்த்தான். முன்னைப் போலவே ஒருக்களித்தாள் அவள் இடது கையும் அப்படியே அண்டக் கொடுத்திருந்தது.

இன்னும் வீட்டுக்கார அம்மாள் பேசுகிற குரல் கேட்கிறது. அவள் தூங்கட்டும். "ம்ம்" என்று பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தையாக பதில் சொல்லுகிற அவரும் தூங்கட்டும்... எதிர்த்த சாரி பேச்சு நிற்கட்டும். உலகம் எல்லாம் தூங்கட்டும் பிறகு ...

 581இந்தப் பேச்சொலிகளே பாதுகாப்பு இல்லையா? எல்லாவற்றையும் மறைத்து முழுக முழுக அடிக்கத்தானே இந்த ஒலிகளும் அரவங்களும் ... பாபு எழுந்தான். அடிமேல் அடி வைத்தான். தெற்கு ஜன்னல் பக்கம் நடந்தான். மெதுவாக மண்டியிட்டான். உட்கார்ந்து விடவில்லை. முழங்கால் மடியும்போது மளக் என்று நரம்பு சொடுக்குகிறது.

அவள் தலையைக் கோதினான். காதோடு பேசுகிற குரலாகச் சொல் கம்மிற்று.

"தூங்க வரதா?”

"இல்லையே."

"அங்கே வாயேன்."

"எங்கே?"

"ஜில்லென்கிறது இங்கே அங்கே வந்துவிடேன். எனக்கு இங்கே உட்கார முடியவில்லை. கால் ஜிலிர் என்கிறது"

அவள் எழுந்தாள்.

பாபு படுத்துக்கொண்டதும் பக்கத்தில் உட்கார்ந்தாள். பொட்டைச் சற்று அழுத்தினாற்போல விரலால் தடவிவிட்டாள்.

லொட லொடவென்று சைக்கிள் ரிக்ஷா ஒன்று போய்க் கொண்டிருந்தது.

அம்மாடா தலையை வலிக்கவில்லை. ஆனால் இந்தத் தடவலும் விரலின் லேசான அழுத்தமும் வேண்டித்தானிருக்கின்றன. அவனுடைய கை கூசிக்கொண்டு, அவள் கால்மீது பட்டுக்கொண்டு கிடந்தது. சற்றுக்கழித்து புரண்டு, அழுத்திக் கூச்சத்தைத் தெளிவித்துக்கொண்டது.

திடீர் என்று, பொட்டைத் தடவியவளின் புஜத்தைப் பற்றி இழுத்ததும், அவளும் வேரற்றுப்போய், விழக் காத்திருந்ததுபோல அவன்மீது சாய்ந்துவிட்டாள்.

"வேண்டாம்."

"என்ன வேண்டாம்?"

"உடம்பு சரியாயில்லை உனக்கு."

"இப்ப ஒண்னுமில்லை உடம்புக்கு. ஜூரம் விட்டுவிட்டது."

"பச்சைக் குழந்தை மாதிரி பேசறயே."

"நிஜமாகவே சொல்லுகிறேன். எனக்கு இப்போது ஜூரம். குளிர், ஒன்றுமில்லை."

"ஒன்பது மணிவரையில் ஜூரமடிச்சிருக்கு, மருந்து சாப்பிட்டு பத்து நிமிஷம்கூட ஆகலியே."
; 582 :
தி. ஜானகிராமன்

எல்லா ஜூரத்துக்கும் மருந்தாக நீ வந்திருக்கிறாயே."

ஆமாமா."

"இது அஞ்சு நாள் ஜூரம் எட்டு வருஷமாக பத்து வருஷமாக ஜூரத்தில் கிடக்கிறேனே."

"என்ன செய்யறது?"

"பத்து வருஷம் என்ன, அதுக்கும் முன்னாலேயே பிடித்து அடிக்கிற ஜூரம் இது."

'தப்பு தப்பா கணக்குப் போடாதே."

என்ன ?"

“அப்பா போய் எட்டு வருஷம்தான் ஆகிறது."

அதனால் என்ன ?”

அதுக்கப்புறம்தானே ஒரு நாளைக்கு விடியகாலம் _பேயறைஞ்சாப்போல வந்து ஊஞ்சல்லெ உட்கார்ந்திருந்தே. என்னன்னு கேட்டேன். பொம்மனாட்டி மாதிரி அழுதுண்டே விறுக்குனு எழுந்து வாசல்லெ போனியே."

ஆமாம் யமுனா, பொம்மனாட்டி மாதிரிதான் இருந்தேன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், எங்கேயோ தொத்திண்டிருக்கிற கம்பியிலே இடிமின்னல் இறங்குவது போல அது வந்து இறங்கி, என்னை ஸ்தம்பிக்க அடித்துவிட்டது."

அதுக்கப்புறம் நீ எங்கிட்ட வந்து பயந்து பயந்துண்டு நாலு பக்கமும் பார்த்துண்டு, ஏதோ திருட்டு சாமானைத் திறந்து காண்பிக்கிறாற்போலக் குழறினே."

பாபு சிரித்தான்.

எட்டு வருஷம் ஆகிறது" என்றாள் யமுனா. "நானும் விட வில்லை. எத்தனை நாளா இப்படி புத்தி போச்சு என்று கூடக் கேட்டேன். நாலஞ்சு மாசம் என்கிறாற்போல்தான் நீ சொன்னே."

'இல்லை யமுனா. அப்போது எனக்கே தெரியவில்லை. ஆனால், எட்டு வருஷம் அதைப்பற்றி யோசித்துவிட்டேன். நான் பள்ளிக் கூடத்திலே படிக்கிறபோது, வீட்டுக்கு வருவியே உங்க அம்மாவோட நீ ஏதோ ஒரு நாளைக்கு உங்க ரண்டு பேரையும் உட்கார வைத்துவிட்டு, அந்த இடத்திலே நிற்க முடியாமல் கூடத்திற்கு ஓடி வந்துவிட்டேன். உங்கம்மா பிடித்துப் பிடித்து இழுத்தாள். நான் திமிறிக்கெண்டு ஓடினேன். உன்னைப் பார்க்கப் பயந்துகொண்டே நான் ஓடினேன். அப்புறம் பல தடவை அதுமாதிரி பிய்த்துக்கொண்டு _ ஓடியிருக்கிறேன்."

“தெரியும்."
583姿 _முள்

"அப்போதிருந்து இந்த உடம்பு வந்துவிட்டது என்று நினைக்கறேன். அப்புறம் நீங்கள் கும்பகோணத்துக்கு வருகிறவரையில் நான் உன்னை நேராகப் பார்த்ததுகூட இல்லை."

"நான் நிறையப் பார்த்திருக்கிறேன்."

"பின்னே என்ன ?"

"எனக்கு நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது. அத்தனை வருஷமாகவா?”

“ஆமாம்.”

"பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை அழைத்து, உபசாரம் எல்லாம் பண்ணினாயே."

"கடைசியில் சண்டையும் போட்டேன் ... அவர் வந்ததே. என் கோபத்தைக் கிளறி விட்டுவிட்டாற்போலிருக்கிறது."

"சும்மா இரேன், இந்த உடம்போடு" என்று கையிரண்டையும் எடுத்துவிட்டு எழுந்தாள் அவள். மார்பிலிருந்து பாரம் எழுந்ததில் பெருமூச்சு விட்டான் அவன்.

யமுனா அறையை விட்டு வெளியே சென்று, தாழ்வாரத்தின் கட்டைச் சுவரோரமாகக் கிழக்கே பார்த்துக்கொண்டு நின்றாள். நிலவொளியின் சூழ்வில் அவளுடைய மெல்லிய தலைமயிர் கிரணக் கற்றையாகப் பரந்திருந்தது.

சுவர்க்கோழி கத்திக்கொண்டிருந்தது. வீட்டுக்கார அம்மாள் இன்னும்
பேசிக்கொண்டிருக்கிறாள். பஸ்ஸின் ஹார்ன் சப்தம் தொலைவில் கேட்கிறது.

பாபு எழுந்தான். தாழ்வாரத்தில் போய் நின்றான். கிழக்கே பார்த்தான். பட்டையடித்த கரும் பஞ்சின் பின்னால் முக்கால். சந்திரன் ஒடிக்கொண்டிருந்தது. திடீரென்று சந்திரன் நின்று மேகம் நகர்ந்தது. மீண்டும் ஒரு நிமிஷம் கழித்து சந்திரன் மேகத்திற்குள் ஒடிற்று. ஒளி மங்கி அங்கும் இங்கும் நாலைந்து விண்மீன்கள் இமைத்துக்கொண்டிருந்தன. வெள்ளமாக வந்து முழுக அடித்து ஒளிக்கடலை எதிர்த்து நீந்தித் தலைதுாக்கி நின்றன அந்த நட்சத்திரங்கள்.

'மனசை யோசிக்க விடுவதில் பல ஆபத்து இருக்கிறது’ என்று அந்த நட்சத்திரங்கள் குரல் கொடுப்பது போலிருந்தது

"உள்ளே வாயேன்.

யமுனா பதில் பேசவில்லை. கிழக்கே வானைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

"உள்ளே வாயேன்."
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
姿584 -

விரலைப் பிடித்து இழுத்த பிறகு திரும்பி, உள்ளைப் பார்க்க நடந்தாள் அவள்.

என்ன பாபு இது?"

எதுக்காக அங்கே போய் நிற்கிறாய்?"

 'நிலா காய்கிறது. குளுகுளு என்றிருக்கிறது. வெளிச்சமாயிருக்கிறது"

இங்கேயும் வெளிச்சமாயிருக்கிறது."

உடம்பு உனக்கு சரியாக இல்லை."

நிலைக் கதவையும் அடுத்திருந்த ஜன்னல் கதவுகளையும _விட்டு வந்தான் பாபு.

என்ன பாபு இது?"

ஒன்றுமில்லை."

நான் சாயங்காலமே புறப்பட்டுப் போயிருக்கணும்."

போயிருந்தால் ஜூரமும் ஜாஸ்தியாயிருக்கும் - நீ புறப்பட் _ாலும் வீட்டுக்காரர் உன்னை விட்டிருக்கமாட்டார்.

"நல்லவங்களை இப்படி ஏமாத்தலாமா?"

ஏமாற்றுகிறதென்ன?"

அவர்தானே சொன்னார், உன்னை இருக்கச்சொல்லி"

இருக்கத்தான் சொன்னார்."

ஏமாற்றச் சொல்லவில்லை என்கிறாயா? எதுக்காக இப்படி பேசிண்டிருக்கே. பேசாமல், வார்த்தையே வராமல் இந்த வாயை அடைச்சால் என்ன?" 

அப்புறம் அவள் பேசவில்லை.

இருளும் சிறு ஒளியும் குழைத்த மௌனம்  அந்த அறையில் இரவு முழுவதும காவல காத்தது.  தூக்கம் அறைக்குள் வராமல் சூடும் உணர்வும் காவல காத்து நின்றன. சந்திரன்  மேற்கே வெகு தூரம் போய்விட்டது போலிருக்கிறது. சிறிது விழுந்திருந்த எதிரொளியை _ இருள் மெல்ல மெல்லக் கவ்விக்கொண்டிருந்தது. அறையிலிருந்த பொருட்கள் முன்னைப்போல் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. கடிகாரம், மருந்துபாட்டில், நாற்காலியின் முதுகில் போட்டிருந்த புடவை, மேஜை மீதிருந்த புத்தகங்கள் திட்டு விழுந்தாற் . போல் தெரிந்தன.

எல்லாம் அடங்கிக் கிடந்தது. நடு நிசியில் தெருவில் நடமாடும் ஒன்றிரண்டு ரிக்ஷாக்கள்கூட உறங்கச் சென்றுவிட்டன.
 தி. ஜானகிராமன் _முள் 585
எதிர் வீட்டுக் குழந்தையும் நடுநிசிக் கத்தலைக் கத்தி வெகு நேரமாகிவிட்டது.

உலகெல்லாம் தூங்குவது போலிருந்தது.

இங்கு விழிப்பின் மடியில் உணர்வு துள்ளிக்கொண்டிருந்தது. உலகத்து மலைவெளிகளில் உள்ளம் ஏறித் தனிமையின் ஆட்சியை அருந்திக்கொண்டிருந்தது. குகையும் சிகரங்களும் நிறைந்த மலைவெறி யின் தனிமையில், ஆழ்ந்த மறதியும் தன்மயமும் தோன்றுகின்றன. யாரும் புகுந்து வாழ முடியாத தனிமை, நமக்கு மட்டும் படைக்கப் பட்ட தனிமை என்று ஒரு நிச்சயம், ஒரு உவகை படர்கிறது. வேறு யாரும் காணாத காட்சி இது தொலைவில், நாட்டில் வாழ்பவர்கள் ஆனந்தத்தின் உண்மையறியாதவர்கள், வயிறு வளர்க்கும் அன்றாடங் காய்ச்சிகள் என்று உள்ளம் தன் தனிமையில் நினைக்கிறது.

சந்திரன் மறைந்ததற்கும் காலை நரைக்கும் உள்ள இடையில் எதிரேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் அவள். இருள் சூழ்ந்தது. முழுகிக் கிடந்த விண்மீன்கள் வெள்ள வடிவிற்குப் பின் உயிர்த்து எழுந்தன. களைப்பையும் ஓய்வையும் கொண்டு கொட்டின. தூக்கம் இமையை அழுத்திற்று.

கண்ணைத் திறந்தபோது யமுனா பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள்தான் தட்டி எழுப்பினாள் போலிருக்கிறது.

"எழுந்துக்கல்லே இன்னும்?" என்று கேட்டாள் அவள்.

வெயில் உள் சுவர்மீது விழுந்திருந்தது.

"மணி எட்டாகப் போறது" என்றாள் யமுனா.

"ஆமாம்."

"எட்டா ?"

"சரியாக எட்டு." |I)

"முன்னாலேயே எழுப்பப்படாதா?”


"நான் போகணும் பாபு. நேரமாயிட்டுது. காப்பியை ப்ளாஸ்கில் வைத்திருக்கிறேன். சாப்பிடறியா?" என்று ப்ளாஸ்கை எடுத்து வந்தாள்
தலையை நன்றாக வாரி முடிந்திருந்தாள் அவள். பெரிய முடிப்பாக, கூந்தல் பிடரியில் தளர்ந்துகொண்டிருந்தது. முகம் நீரில் நனைந்து பளபளவென்று பொலிந்தது. குங்குமப் பொட்டு பளிர் என்று எடுப்பாகச் சிவந்திருந்தது. தேய்த்து அலம்பிய செப்பு சிலைபோல நின்றாள் அவள் இன்னும் தெய்வச் சிலைகளின் மானிடத்தைக் கடந்த அமைப்புதான் அதில் பொலிகிறது. இந்த வெயில் படும்போது, இந்தக் காலையில் அவளுடைய தூய்மை, மாசுபடுத்த முடியாத தூய்மைபோல் உயர்ந்து நிற்கிறது. இவளுடைய உயரத்தில், உடலின் மென்மையில் அந்தத் தூய்மையை வெளிப்படையாகக் காட்டும் ஏதோ ஒன்று இருக்கத்தான் இருக்கிறது.

586

இரண்டு மூன்று விநாடிகள்தான் அவளைப் பார்க்க முடிந்தது. அவள் காப்பியைக் கொடுத்தபோது, தலையைக் குனிந்துகொண்டே, _தை வாங்கிப் பருகினான். அவன் நெற்றியில் உள்ளங்கையை _வத்துப் பார்த்து, "ஜூரம் விட்டிருக்கு" என்றாள் அவள்.

பதில் பேசவில்லை அவன். பேசமுடியவில்லை.

 "இன்னும் ரண்டு நாள் கழிச்சு ஆபீஸ் போகலாம். இன்னிக்கும் நாளைக்கும் வேண்டாம். நாளை மறுநாள் போறதுதான் நல்லதுஎன்றாள் அவள்.

"உடம்பைப் பார்த்துக்கொள். நான் வரேன். நேரமாகிறது." "ம்" என்று எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தான் பாபு. "நான் செய்தது சரியா? கடைசியில் ..."

"என்ன ?"

"மணி எட்டாகிவிட்டதே."


"நான் போக நேரமாகவில்லையா?"

ம்

யமுனா எழுந்துவிட்டாள். பதில் வரவில்லை.

அருகே வந்து நின்றாள். அவன் கையைப் பிடித்தாள்.

"திருப்திதானே?"

"இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுகிறது"

.
"வருஷக் கணக்காக, எத்தனை வருஷம், எட்டு வருஷமா இல்லை, விவரம் தெரிந்தது முதல், பையனாக இருந்தது முதல் தவிச்சதெல்லாம் இதற்குத்தானே ம்: யமுனாவின் கை அவன் _லைமயிரைக் கோதிக்கொண்டிருந்தது.

பாபு எங்கேயோ கிழக்கே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

"என்னைப் பார்த்துச் சொல்லேன்."

பாபு நிமிர்ந்தான்.
தி. ஜானகிராமன் பாக முள் 587"இதுக்குத்தானே?"

பதில் சொல்ல முடியாமல் அவள் முகத்தைச் சற்றுப் பார்க்கத் தான் முடிந்தது. தொடர்ந்து பார்க்கவும் முடியாமல் திரும்பிக் கொண்டான். அந்தப் புன்னகையில் காலத்தின் சாம்பல் வெளிறிச் சிரித்தது - கடந்த காலத்தின் சாம்பல். அம்பு பாய்ந்த உயிரின் சிரிப்பு ஒளிர்ந்தது. நிலைத்து நின்ற விண்மீன்கள் பெயர்ந்து உதிர்ந்த குலைவு கிடந்தது.

"இதுக்குத்தானே?"


"சொல்லேன்."

"ஏன் இப்படிக் கேட்கிறே?"

"சொல்லேன்."

"இதுக்குப் பதில் சொல்லித்தான் ஆகணுமா?"

"சொல்லு."

"இப்போது சொல்ல முடியாது போலிருக்கிறது."

"நான் சொல்லட்டுமா?"

சொல்லேன்.

"இதற்குத்தான்."

"காதில் விழுகிறது. இதற்குத்தானா? இதற்குத்தானா?"

"நான் வரட்டுமா?"

"நேரமாகிவிட்டது இல்லையா?"

"ஆமாம். இப்ப போனா, பஸ் கிடைக்கும். அப்புறம் போனால்" க்யூ!வில் நிற்கணும்."

"சரி" என்று எழுந்தான் பாபு.

"அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரட்டுமா?"

"வரலாம்னு சொன்னால்தான் வரணுமா?"

"ஆமாம்.

கட்டில்காலைக் கால் விரலால் தேய்த்துக்கொண்டே நின்றாள்

ஒரு நிமிஷம் ஆயிற்று.

"நான் போகணுமே."
588

பாபு நிமிர்ந்து பார்த்தான். அவள் முகத்தைப் பார்த்ததும் அவனையறியாமல் சிரிப்பு ஒன்று தெறித்தது. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் பார்த்துப் பழகின அந்தக் கேலி, கண்ணில் பளபளத்துக்கொண்டிருந்தது.

போயிட்டு வாயேன்."

"நான் கேட்டதுக்குப் பதிலைக் காணோமே."

"ஞாயிற்றுக்கிழமை வரதுக்கா?"
   
"ம்"

வாயேன்."

சரி என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்து படியிறங்கினாள் அவள்.

பாபுவுக்கு மேலே நடக்க முடியவில்லை. கீழே போக வேண்டும் போல் தானிருந்தது. ஆனால், மனம் பதுங்கிக் கட்டிலை நாடிற்று. ஒரு நிமிஷம் உட்கார்ந்தான். நிலைகொள்ளாமல் எழுந்தான் தாழ்வாரத்தில் கட்டைச் சுவர் ஒரமாக நின்று தெருவைப் பார்த்தான் இன்னும் கிளம்பவில்லை போலிருக்கிறது. போய்ப் பாரேன். பார்க்கலாமா?

மெதுவாக நடந்து அவன் கீழே போவதற்கும், வீட்டுக்கரம்மாள்_பின்னால் வர, அவள் வெளியே வருவதற்கும் சரியாயிருந்தது.

“வரட்டுமா பாபு?”

உடம்பு எப்படிங்க இருக்கு '

தேவலை, ராத்தரி விட்ட ஜூரம்தான். திரும்பவில்லை."

"அதுதான். அம்மா வந்தாங்க விட்டுப் போயிடிச்சு. அதான் எப்பவும் நம்ம மனுசங்க இருக்கணும்கிறது. ஆயிரம் இருக்கட்டும். வங்கன்னு ஒருத்தர் இருக்கிறாப்பல இருக்குமா?

அசலாருங்க கடைசிவரையில் செஞ்சுப்பிட்டா, எல்லாம் சரியானப்புறம் நம்ம ஜனங்க வந்து நல்ல பேரு வாங்கிக்க வருவாங்க" என்று சிரித்தாள் யமுனா.

ஆமாமாம். நீங்க வராட்டி இப்படி எழுந்து நடக்கமாட்டாங்க. நான்தான் சொல்றேனே.”

அவள். "சரி, அப்படியே இருக்கட்டும் . வரட்டுமா?"

வாங்க."

இதற்குத்தானா?

 தி. ஜானகிராமன் _முள் 589


அவளே பதிலும் சொல்லிவிட்டாள். இதற்குத்தான். இதில்லா லேயே இருந்திருக்க முடியாதா?
கடந்துபோன ஆண்டுகளிலும் ரங்கண்ணாவின் பேச்சுகளி தந்தையின் பேச்சகளிலும் ராஜம் பேசிய சொற்களிலும் வி தேடினான் அவன். அன்று நிலவில் சுழித்து ஓடிய ஆற்று நீரின் முன் படிக்கட்டில் அமர்ந்து வைத்தி சொன்னதெல்லாம் ஒலித்தது ரங்கண்ணா சொன்னவை ஒலித்தன. காவிரியின் மணலிலும் பார்க்கிலும் ராஜம் காது கேட்கச் சிந்தித்த நினைவுகள் ஒலித்தன வைத்தி அவன் கற்பனையில் உருவாக்கிய மனிதன் ராஜூவின் நினைவு கண்ணில் நின்றது.
இதற்குத்தானா? என்று கேட்ட புன்னகைக்கு என்ன அர்த்தம்:இதற்குத்தான் என்று நானே சொல்லிவிடுவதாக நீ சொன்னது மனப்பூர்வமாகச் சொன்னதா? இல்லை, வெறும் கேலிக் குரலா
கேலிதான். முப்பத்தெட்டு வருடம் மனிதன் நாடாத, நா முடியாத பிரதேசத்தில் வளர்ந்து நின்ற செடிக்கு அர்த்தம் என்ன ! லட்சியம் என்ன? கடைசிவரையில் யாரும் நாடாமல் இருப்பதுதான் யார் கண்ணிலும் படாமல் இருப்பதுதான். அதுதான் வெற்றி ஓங்கி நிற்பதுதான் வெற்றி இப்போது ஏன் வளைந்து கொடுத்தாய் நீ என்னைப் பார்த்து இப்படிச் சிரிக்கவா? சிரிப்பின் ஒளியில் புரியாத ஒன்றை எனக்குக் காட்டவா?
"என்னங்க: உடம்பு எப்படியிருக்கு" என்று சிட்டிகை பிரியாத விரல்களைக் காண்பித்துக்கொண்டே வந்தார் வீட்டுக்காரர். இந்த சின்முத்திரை, தட்சிணாமூர்த்தி காட்டிய சின்முத்திரைக்கு மாறாக மூக்குப்பொடியின் சின்னமாக எதிரே நிற்கிறது. வேறு எதையோ பிடித்துக்கொண்டு நிற்கிறது - மூன்றாவது பொருள் ஒன்றை.
ஆபீஸுக்கு இரண்டு நாள் கழித்துப் போகலாம் என்று சொல்லி விட்டு, அவரும் என்னன்னமோ பேசிக்கொண்டிருந்தார். போனில் லீவு சொல்ல அவர் இரண்டனா வாங்கிக்கொண்டு போகிற வரையில், அவர் பேசியது ஒன்றிரண்டுதான் அவன் காதில் விழுந்தது.
"இதற்குத்தானா?" - இது என்ன, கூச வேண்டிய ஒன்றா?
உடலைப் படைத்தது உதறி எறிவதற்காகவா? அதுவும் என்னில் ஒரு பகுதிதான். அதுவே எல்லாம் இல்லாமல் இருக்கலாம். அதுவும் ஒரு பகுதிதான். இரட்டைச் சக்கரத்தில் ஒன்று.
ஹ்ம். இதற்குத்தானா என்று நீ சொன்னது உண்மைதான். நீ சொன்னது கேலி இல்லை. உண்மைதான்.
பாபு தலையணைகளை ஒன்றன்மேல் ஒன்றாகத் தலைமாட்டில் நிறுத்திச் சாய்ந்துகொண்டிருந்தான்.
姿590姿 தி. ஜானகிராமன்
 ________________
ஆனால் இந்தக் கழிவிரக்கம் உள்ளத்தை ஏன் இப்படிப் _கொண்டிருக்கிறது? நான் செய்தது தவறா? ... தவறில்லை. நீ பணிந்ததுதான்  தவறு. நீ ஏன் இன்னும் எதிர்த்து நின்றிருக்கக் கூடாது?
-"
யாராவது தோல்வியை வேண்டும் என்று அணைவார்களா? தீயில் யாராவது தானாகப் போய்க் குதிப்பார்களா? அன்று மாட்டேன் என்று சொன்னதுபோல இப்போதும் சொல்வதற்கென்ன ராஜம், நீ ஏதாவது சொல்ல முடியுமா? உனக்குத்தான் இதை முதலில் சொல்ல வேண்டும்.
கடுதாசையும் அட்டையையும் எடுத்து வந்து, சாய்ந்த வாக்கில் எழுத ஆரம்பித்தான் பாபு.
ன்புள்ள ராஜத்திற்கு,
இந்தக் கடிதம் எந்த விதமான எண்ணங்களை உன் மனதில் எழுப்புமோ தெரியவில்லை. ஆனால், எனக்கு உன்னிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. எழுதுகிறேன். நீ பதில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். எப்படி எழுதினால் என்ன? நடந்து விட்டது.
நாலைந்து நாளாக ஜுரம். நேற்று ஞாயிற்றுக்கிழமை யமுனா வந்தாள் ஜூரம் நேரம் தெரியாமல் வந்துகொண்டிருந்தது. நேற்று இரவு இங்குதான். இந்த அறையில்தான் படுத்திருந்தாள். சென்ற ஞாயிறன்றும் வந்திருந்தாள். அப்போதே, நான் எட்டு வருஷம் கழித்து மீண்டும் கேட்டேன். நான் எதிர்பாராத, எதிர்பார்த்த ‘சரி’ கிடைத்துவிட்டது.
நேற்று அவள் வந்தபோது என் ஜூரம் போன இடம் தெரிய வில்லை. பழைய ஜூரத்திற்கு மருந்து கொடுத்துவிட்டாள். எந்த உடலைக் கண்டு நான் குனிந்து வணங்கிக்கொண்டிருந்தேனோ, எந்த முகத்தை தெய்வத்தின் முகமாக நான் ஒரு காலத்தில் நினைத்தேனோ ...
ஆமாம், மூன்று ஜாமங்களில் அந்த எண்ணம் மூன்று தடவை  இறந்தது.
காலையில் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. அவள் சாதாரணமாகத்தானிருந்தாள். மீண்டும் கோயில் சிலை மாதிரி என் முன் நின்று, எட்டு வருஷம் தவித்தது இதற்குத்தானா?" என்று ஏழெட்டு தடவை கேட்டாள். எனக்குப் பதில் தெரியவில்லை. அவள் இதற்குத் தான்" என்று தானே சொல்லிவிட்டுப் போய்விட்டாள். கோயிலிலிருந்த செப்புருவம் உயிர்த்து வந்து சொல்வது மாதிரிதான் இருக்கிறது. அவளுடைய வனப்பே செப்பு விக்ரகத்தின் வடிவுதான். இப்போது முகம் சற்று நீண்டிருப்பதுபோலிருக்கிறது, முகவாய் கூர்ந்திருக்கிறது.
மோக முள் 591
கோயிலில் காண்கிற உலோகச் சிலைதான். தியாகத்தைப் புரிந்து விட்டுச் சிரித்த அந்தச் சிரிப்பு, என்னை என்னமோ செய்கிறது
உன்னிடம் சொன்னால் தேவலை போலிருந்தது. சொன்னேன் மேலே என்ன என்று எனக்குத் தெரியவில்லை . . .
உன் குழந்தை, மனைவி யாவரும் நலம் என்று நம்புகிறேன்
இப்படிக்கு.
பாபு."
கடிதத்தை நாலைந்து முறை வாசித்தான் அவன். உயிரற்ற குரல், சொல்லுக்குத் தவிப்பதுபோலிருந்தது கடிதம் சாயங்காலம் காப்பி வாங்கி வருவதற்காக ப்ளாஸ்கை எடுத்து வந்த வீட்டுக்காரரிடம் கொடுத்து, அதைத் தபாலில் சேர்க்கச் சொன்னான்.
காப்பியைக் கொடுத்துவிட்டு அவர் திருப்பிச்சென்ற பத்து நிமிஷத்திற்கெல்லாம் மாடிப் படியில் செருப்போசையும் பேச்சுக் குரலும் கேட்டது.
"என்னய்யா உடம்பு எப்படி இருக்கு" என்று கேட்டுக்கொண்டு வந்தார் பாலூர் ராமு. கூட ஒரு சீடன் வந்தான்.
--
"தேவலை சார் வாங்கோ . . .
O
உடம்பைத் தொட்டுப் பார்த்துவிட்டு ஜூரம் இல்லை" என்று சொல்லிக்கொண்டே, கட்டிலில் உட்கார்ந்துகொண்டார்.
மனிதர்களைப் பற்றிய முதல் அபிப்பிராயம் அவ்வளவு சரியானது
என்று சொல்ல முடிவதில்லைதான். காசு விஷயத்தில் கிண்டாக இருக்கலாம். எத்தனை தடவை வந்துகொண்டிருக்கிறார் மனிதன்!
"இன்னிக்கி அபச்ருதி ஒன்றும் கேட்கவில்லை போலிருக்கிறது. உடம்பு சரியாகிவிட்டது!" என்று சிரித்தார் அவர்.
"ஆமாம் அண்ணா."
"என்ன செய்கிறது? சுருதி முக்யம்தான். அதுக்கு என்ன
செய்கிறது. அது லேசிலே வரமாட்டேங்கிறதே. பிரமாதமா பிகு பண்ணிக்கிறது."
"பிகு பண்ணிக்கொள்ளவில்லை அண்ணா. சோம்பேறிகளைக் கண்டால் அதுக்கு ஆத்திரமாயிருக்கு ஒதுங்கி போயிடறது ... கேட்க முடியவில்லை."
ராமுத்ஸ்" என்று ஒப்புக்கொள்கிறாற்போலத் தலையாட்டி விட்டு, "ஆனால் ..." என்று ஆரம்பித்தார்.
姿592 தி. ஜானகிராமன்
 _______________
அவர் என்ன சொல்லப் போகிறார் என்று சண்டைக்குத் தயாராக இருந்தான் பாபு.
"நீங்கள் ஆனால் போடுவதைப் பார்த்தால், எதிர்க் கட்சியிலேயே இருப்பதாகத் தீர்மானித்துவிட்டாற் போலிருக்கிறதே" என்றான் பாபு.
"நீ இன்னும் உம்முடைய கட்சியையே சொல்லவில்லையே... அதற்குள் என் கட்சியைப் பற்றி என்ன கவலை? நான் எதிர்க்கட்சி என்று எப்படித் தீர்மானம் செய்ய முடியும்?" என்று பாலூர் ராமு காலைத் துரக்கிக் கட்டில்மேல் போட்டுக்கொண்டார்.
"என் கட்சி என்ன கட்சி! என் வேதனை. என் ஆத்திரம்." என் தாபம் அது." "சொல்லும் சொல்லிவிட்டு ஆத்திரப்படும்." "நமக்கு சுருதி சேருவது ஏதோ லாட்டரி சீட்டில் பரிசு விழுகிற மாதிரி இருக்கிறது. வாச்சான் பிழைச்சான் வியாபாரம்! பத்து தடவை முண்டி முண்டிப் பிரயத்னப்பட்டால், ஒரு தடவை அற்பத்தொகை வருகிறதே சூதாடிக்கு அந்த மாதிரி ஒரு சூதாட்டமா நாம் பாடிக்கொண்டிருக்கிறோம்."
ம்_அப்புறம்?"
நமக்கு சுருதி சேரமாட்டேன் என்கிறது. இப்போது பெரிய வித்வான்கள் என்று சொல்லப்படுகிற எல்லோருக்குமே இந்த அவஸ்தைதான். அதாவது, நல்ல காது என்று படைக்கப்பட்ட எல்லா காதுகளுக்கும் நாராசம் ..."
"நீர் நிறுத்த வேண்டாம். சொல்லுகிறதை எல்லாம் சொல்லும், அப்புறம் நான் பதில் சொல்லுகிறேன்."
"இல்லை. நீங்களும் கலந்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் எனக்கும் சூடு ஏறாது."
"அப்படியா சரி. யார் யாருக்கு சேரவில்லை?"
'கணேசன், அண்ணாவையங்கார், புல்லூர் அய்யர் ஒருவருக்கும் வரவில்லை."
"எனக்கு ?" 

"உங்களுக்குச் சேருகிறது." 

"எதிரே இருக்கிறேனே என்று சொல்லுகிறீரா?"
"இல்லை. உங்களுக்கு நன்றாகச் சேர்கிறது. அதனால்தான் அந்த உருக்கம் சாத்தியமாகிறது. நீங்கள் கச்சேரி ஆரம்பித்தவுடனேயே களைகட்டிவிடுகிறது. ஆனால், சுருதியில் நிற்பதற்காக ரொம்ப
மோக முள் 593