தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, March 20, 2014

மெளனியுடன் கொஞ்ச தூரம் திலீப்குமார், மௌனி சிறுகதைகள் பற்றி ஒரு சிறு கட்டுரை - SRM UNIVERSITY, மௌனி கதை மொழி - தமிழ்மணி, நன்றி: தினமணி, நவம்பர் 10, 1990, மௌனி குறித்த உரையாடல்கள் - வெளி ரெங்கராஜன்


மெளனியுடன் கொஞ்ச தூரம் திலீப்குமார்

http://azhiyasudargal.blogspot.in/2013/10/blog-post.html


திலீப்குமார் மெளனியைக் குறித்ததொரு ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன, அறிமுக நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே ….
தமிழின் நவீன இலக்கியத்தோடு பரிச்சயம் கொள்ளவரும் எவரும் முதலில் மௌனியின் எழுத்துக்களையும், அதைச் சார்ந்து ‘மௌனி’ என்ற எழுத்தாளனைப்பற்றி நிலவி வரும் ஒரு விநோதமான படிமத்தையும் உணரத் தவறியிருக்கமாட்டார்கள். குறிப்பாக 60களுக்குப்பின் மௌனியின் எழுத்துக்களும் அவற்றின் சிறப்புகளும் நம்மிடையே வெகுவாக   வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மௌனியைப் பற்றி நாம் பொருட்படுத்தக்கூடிய தகுதி வாய்ந்த விரிவான விமர்சனங்கள் மிகச் சொற்பமானவையே வெளிவந்துள்ளன. இந்நிலையில் மௌனியைப் பற்றிய அபிப்பிராயங்களை நான் மிகுந்த தயக்கத்துடனேயே முன்வைக்கிறேன். இவற்றில் முழுமை, தெளிவு ஆகிய அம்சங்கள் சற்றுக் குறைவாகவும் இருக்கக்கூடும். என்னளவில், எத்தகைய இலக்கிய விசாரமும் ஒரு வகையில், இலக்கியங்களை முழுமையாக நாம் அனுபவிக்க மேற்கொள்ளப்படும் ‘பயிற்சி’யே. எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பையும், நான் முதன்மையாக இந்தப் பயிற்சியின் ஒரு அம்சமாகவே கருதுகின்றேன்.
மௌனியை நான் முதன் முதலாக 1974ஆம் ஆண்டு படிக்க நேர்ந்தது. தமிழில் முறையான பயிற்சியற்ற நான் நவீனத் தமிழிலக்கியத்தில் பரிச்சயம் கொள்ளத் துவங்கியிருந்த நாட்களவை. அச்சமயத்தில் மௌனியின் கதைகள் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு, நான் அதை அப்போது அபிப்ராயங்களாக தொகுத்துக் கொள்ள இயலாமற்போயிருப்பினும் எனக்குத் துல்லியமாக நினைவிருக்கிறது. அது மௌனியின் தேர்ந்த வாசகர்கள் பலரின் அனுபவங்களையே ஒத்திருந்தது என்பதை நான் பின்னால் தெரிந்துகொண்டேன். அதைப்போல், மௌனியை அலட்சியப்படுத்த நேர்ந்த வாசகர்கள் அவரது எழுத்துக்களில் கண்ட குறைகளையும் நான் சந்திக்கவில்லை.

1974 -க்குப் பின் நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் மௌனியைப் படித்திருக்கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில், மௌனியுடனே தங்கியிருந்து, அவரது எல்லாக் கதைகளையும் நானும் அவரும் சேர்ந்து வாசித்து அவற்றை விவாதித்த அனுபவமும் எனக்குக் கிட்டியிருக்கிறது. ஒவ்வொரு சமயமும் என் வளர்ச்சிக்கேற்ப மௌனியின் எழுத்துக்களின் பல சிறப்புகளையும், குறைகளையும் நான் கண்டிருக்கிறேன். இப் புத்தகத்திற்காக அவரது கதைகளை நான் மீண்டும் வாசித்த போதும் இப்படியே உணர்ந்தேன்.

மௌனியைப் பற்றி பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் நிலவுவதை நாம் காண்கிறோம். அவரை வெகுவாகக் கொண்டாடவும், கடுமையாக தூஷிக்கவும் சாரிகள் உள்ளனர். ’மௌனியின் எழுத்துக்கள் புரியவில்லை’; ‘அவர் சமூகப் பார்வையற்றவர்’ என்றெல்லாம் அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், அவரைப் பாராட்டுபவர்களும் ரொம்பவும் தீவிரமான சொற்களைக் கொண்டு பாராட்டுகின்றனர். இத்தகைய அபிப்பிராயங்களில் பாரபட்சங்களை நாம் ஒதுக்கியே விடவேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இவை அவரவர் தம்தம் அறிவுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப இலக்கியத்தைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் வரித்துக்கொண்ட தீவிரமான எண்ணங்களைச் சார்ந்தவை. இவற்ரை நாம் முழுதாக ஏற்கவேண்டியதில்லை.
என்னைப் பொறுத்தவரையில், ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ, புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டான் என்றே நினைக்கிறேன். மாறாக இலக்கியத்தில் வரையரைகளையும், வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாக அவர் இருப்பான். நுண்ணுணர்வு கொண்ட ஒரு வாசகனால், ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பில், சமூகப் பார்வையின் இருப்பையோ, இல்லாமையையோ, அழகியல் நுட்பத்தின் உயர்வையோ தாழ்வையோ நிச்சயமாக உணர்ந்து கொள்ள முடியும். மேலும் இக்கூறுகளின் மிகுதியோ குறைவோ அவனை விசேஷமாகப் பாதிப்பதில்லை என்றே நினைக்கிறேன். என்னதான் படப்பாளியின் இமையருகே சென்று பார்த்தாலும் தான் படைப்பாளியின் கோணத்தில் உலகைப் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்தவனாக அவர் இருப்பான். அதேபோல், படைப்பாளியின் கோணத்திலிருந்து காட்டப்படும் உலகமே சர்வ நிச்சயமானது என்று ஆவேசம் கொண்டோ, சுருங்கியோ விடமாட்டான். அவர் ஒவ்வொரு படைப்பாளிக்கும் (அப்படப்பாளியின்) அவனது கலமட்டத்திற்கும் ஏற்பத் தன்னை மாற்றியமைத்துக் கொண்டே வாசிப்பதில் ஆழ்கிறான். இன்று நம்மிடையே அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கந்தசாமி, நகுலன், பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற பல எழுத்தாளர்கள் இயங்குவதைப் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொருவரின் படைப்புகளை நாம் அணுகும்போதும் வெவ்வேறு விதமாகத்தான் அணுக வேண்டியுள்ளது. நாம் அவ்வாறே அணுகிக் கொண்டிருக்கிறோம். வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் பலவிதமான எதிரெதிர் பரிமாணங்களைக் காட்டும் எழுத்தாளர்களை வெகுஇயல்பாகவே உலகெங்கும் வாசகர்கள் ஏற்று வந்திருக்கிறார்கள். ஜி. நாகராஜன் போன்ற ஒரு எழுத்தாளரையும், அசோகமித்திரன் போன்ற ஒரு எழுத்தாளரையும் நம்மால் சிரமமின்றி ஏற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு மதிப்பளிக்கவும் முடிகிறது. இதேபோல், ஒரே தத்துவ சார்புள்ள இரு எழுத்தாளர்களிடையும் கணிசமான வித்தியாசங்கள் இருப்பதை நாம் அறிவோம். மார்க்ஸியவாதிகள் மதிக்கும் இரு எழுத்தாளர்களான ஆண்டன் செக்காவ், மார்க்ஸிம் கோர்க்கி ஆகிய இருவரின் எழுத்துக்களில் காணப்படும் வித்தியாசங்களும் அழகுகளும் ரொம்பவும் நுட்பமானவை. இவற்றையும் நாம் இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறோம்.
தத்துவ சார்பில் விலகியுள்ள இரு எழுத்தாளர்களின் படைப்புகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது. உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும், மதிப்பும், அவர்கள் ஒரே விதமான தத்துவ சார்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்பதற்காகத்தான் என்று நம்மால் கொள்ளமுடியுமா? உலக இலக்கியத்தின் சிறப்பான தொகுதியை நாம் பார்க்க நேர்ந்தால், கால, தேச, எல்லைகளையும், தத்துவச் சார்புகளையும் மீறி அது நம்மை ஈர்த்துக் கொள்வதைக் காண்போம். உதாரணமாக - மேற்கத்திய மார்க்ஸிஸ்டுகள் பலராலும், எக்ஸிண்டன்ஷியலிஸவாதிகளாலும் மிகவும் மதிக்கப் பெற்ற பிரஞ்சு எழுத்தாளரான சாச்த் - எக்சூ பெரியை சமீபத்தில் ஒரு ரஷிய விமரிசகர் உலகில் தலைசிறந்த இலக்கிய மேதைகளில் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் போன்ற பல உதாரணங்களை நம்மால் பார்க்கமுடியும்.

இவ்வகையில் பார்க்கும்போது, பல்வேறு தத்துவச் சார்புடைய பல்வேறு எழுத்தாளர்களிடையே - இவர்களுக்கிடையே காணப்படும் வேற்றுமைகளையும் மீறி - ஒற்றுமைக்கான ஏதோவொரு அம்சம் இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த ஒற்றுமைக்கான அம்சம் என்ன? கொகோலுக்கும், எக்சூபெரிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை என்ன? தஸ்தா வொஸ்கி, கோர்க்கி, டால்ஸ்டாய், செக்காவ், காஃப்கா, காம்யு, ஜேக்லணன், மார்க்வெஸ் போன்ற பலரிடமும் காணக்கிடைக்கும் ஒரே விஷயம், ஒரே வசீகரம்தான் என்ன? இந்த எழுத்தாளர்கள் அனைவரும் வாழ்க்கையின் மீது தீவிரமான அக்கறை கொண்டிருந்தார்கள் என்பது மட்டும்தானா? இல்லை என்றே தோன்றுகிறது. இதையும் மீறிய ‘ஏதோவொன்று’ இருக்கவேண்டும். வாழ்க்கையின் மீmowni4து தீவிரமான அக்கறை என்பதைத் தவிர இவர்களது இலக்கியச் செயல்பாடுகளுக்குப் பின்னிருந்து இயக்கிய ஒரு ‘அற இயல்பு’ என்ற விஷயமும் இருந்திருக்கவேண்டும் என்று நான் கொள்கிறேன். இந்த ‘அற இயல்பு ’ தான் இவர்களுக்கிடையேயான ஒற்றுமைக்கான முதன்மையான அம்சம். தன்மையிலும் தத்துவச் சார்புகளிலும் மிகவும் மாறுபட்ட பல எழுத்தாளர்களிடையே காணப்படும் ஒற்றுமை இந்த ‘அற இயல்பு’ தான். மேலும் இந்த ‘அற இயல்பு’ தன்னளவில் தன்மையற்றதே என்றும் நான் கூறுவேன். இது ஒவ்வொரு படைப்பாளியிடமும் அவனது கலை இயபுக்கும், திறமைக்கும், அவன் செயல்பட்ட கால, சமூக, அரசியல், இலக்கிய பின்னணிக்கும் ஏற்ப அவனுள் விகசிக்கிறது. எழுத்தாளர்கள் பலராகவும் பல பார்வை கொண்டவர்களாகவும், வாழ்க்கையின் ஒரு சில பரிமாணங்களிலேயே கவனம் செலுத்தியவர்களாக இருந்திருப்பினும், இந்த ‘அற இயல்பை’ இந்த ஒற்றுமைக்கான அம்சத்தை நாம் எல்லோரிடமும் காண்கிறோம். ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களில், அவன் காட்டும் வாழ்க்கைப் பரிமாணங்களில் அவனது சார்பு நிலைகளில் ஒரு வாசகனுக்கு ஏற்படும் ஆவல் உண்மையில் நான் மேலே சொன்ன ‘அற இயல்பின்’ மீது ஏற்படும் மதிப்புதான். இந்த அற இயபு அதுவே ஒரு பண்பு எனவும், அது சார்ந்திருக்கும் ஏனைய விஷயங்கள் இரண்டாம் பட்சமானவையே என்றும் நான் கொள்கிறேன். இவ்வகையில் ஒரு மார்க்ஸிய எழுத்தாளன் முதன்மையாக மார்க்ஸியவாதியல்ல. அதேபோல், ஒரு சோஷலிஸ எழுத்தாளன் முதன்மையில் ஒரு சோஷலிஸவாதியல்ல. இப்படி அணுகுவதன் மூலமே, இலக்கிய வரலாற்றின் பல்வேறு போக்குகளையும், அதில் செல்வாக்கு செலுத்திய பல்வேரு தத்துவ நிலைகளையும் என்னால் சரியாக விளங்கிக்கொள்ள இயலும்.. இப்படிப் பார்ப்பதன் மூலமே ஒரு மார்க்ஸிய எழுத்தாளனும், அப்படியில்லாத ஒரு எழுத்தாளனும் என்னை ஒரேயளவில் வசீகரிப்பதை என்னால் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும்

மௌனியின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது, மேலே சொன்ன வகையிலேதான் அவற்றை கணிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. மௌனி ரொம்பவும் குறுகிய ஒரு வட்டத்திற்கான எழுத்தாளராகச் சுருங்கியிருப்பினும், அவரிடமும் நான் மேற்குறித்த ‘அற இயல்பின்’ உந்துதலைக் காண்கிறேன். மேலெழுந்தவாரியான தத்துவச் சார்புகளையும், மேலெழுந்தவாரியான அழகியல் உணர்வுகளையும் தாண்டி வந்து நாம் பார்க்கும் பொழுதே மௌனிக்குரிய மதிப்பை நம்மால் அளிக்கமுடியும்.

மெளனியுடன் கொஞ்ச தூரம் : திலீப்குமார் : வானதி பதிப்பகம்
மௌனியுடன் கொஞ்ச தூரம் - நூலிலிருந்து…
மௌனியின் கதையுலகம் – பகுதி 1
1936-ம் ஆண்டுவாக்கில் மணிக்கொடியில் மௌனி முதன் முதலாகச் சிறுகதைகளை எழுதத் துவங்கினார். அந்தக் காலகட்டத்தில் புதுமைப்பித்தன் கு.ப.ரா ஆகியோரும் மணிக்கொடியில் எழுதினார்கள. தமிழ்ச் சிறுகதைத் துறை முதிர்ச்சியடையத் துவங்கிய காலமும் இதுதான் எனக் கொள்ளப்படுகிறது. மணிக்கொடியில் மௌனியின் பிரவேசம்mowniவெகுவாக ஊர்ஜிதப்படுத்தியது. மௌனி படைப்புத் துறைக்கு வந்த்து ஒரு தற்செயல் நிகழ்வு என்று பலரும் அறிவித்திருக்கிறார்கள். மௌனி மணிக்கொடியில் எழுதினாலும் மணிக்கொடி என்ற இயக்கத்தின் படிம்த்தோடு இனம் காணப்படக் கூடாதவர் எனவும் வலியுறுத்தப்படுகிறது. மௌனிக்குத் தமிழில் முன்னோடிகள் யாருமே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
ஒருவகையில் கலைக்கும் மரபுக்குமான உறவு மிகவும் சிக்கலானது. கலைகளின் மீது மரபின் பாதிப்பு ஒரே சீராகவும் முற்றாகவும் என்றும் இருந்ததில்லை. ஆண்டுகளின் வரிசைக்கிரமப்படியும் அடியொற்றி அமைந்ததில்லை. விளைவாக கலை வரலாறுகளை நாம் பார்க்கும் பொழுது புதுமையான கலை வடிவங்களுக்கு ஒரே மரபான மரபையொட்டிய முன் முயற்சிகள் எல்லாச் சந்தர்பங்களிலும் காணக் கிடைப்பதில்லை. அதே மாதிரி எந்தப் புதுமையான கலைப் படைப்பும் முற்றாக மரபிலிருந்து விடுதலை பெற்றதாகவும் இருந்ததில்லை.அதில் மரபின் பல்வேறு காலப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அம்சங்கள் சம்பந்தப்பட்ட கலைஞனின் பக்குவத்திற்கும் அவனது சமகால வெளிப்பாட்டுத் தேவைக்கும் ஏற்ப வெவ்வேறு கோணங்களில் பிரயோகப்படுத்தப் பட்டிருப்பதை பல சந்தர்பங்களில் காணலாம்.

கலைகள் மீது மரவின் செல்வாக்கு ஒருபுறமிருக்க அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மரபென எஞ்சி நிற்கும் ஒன்றேகூட தீவிரமான பல மாறுதல்களுக்கு ஆளாகிவிட நேர்வதுண்டு. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நம் வாழ்க்கைப் போக்குகளிலும் கலைத்துறைகளிலும் கணிசமான மாற்றங்களை நாம் சந்தித்திருக்கிறோம். அதேபோல மொகலாயர்கள் ஆண்ட காலத்திலும் பல அம்சங்கள் நம் மரபோடு வந்து ஒட்டிக்கொண்டுவிட்டன என்பதை நாமறிவோம். நீடித்த ஆங்கிலேய அட்சி நம்மை மேற்குடன் நெருக்கம் காண வைத்தது. ஆங்கிலக் கல்வி தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி ஆகியவை இந்த இடைத் தொடர்பைத் துரிதப்படுத்தின. இதன் நேரடியான / மறைமுகமான விளைவாகத் தமிழ் இலக்கிய மரபு மேற்கிலிருந்து சிறுகதை நாவல் ஆகிய புதிய இலக்கிய வடிவங்களைச் சுவீகரித்துக்கொண்டது. மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமாக புதுமைப்பித்தன் மௌனி இருவரும் மேலை இலக்கியத்தில் மிகுந்த பரிச்சயம் கொண்டவர்களாக இருந்தார்கள். மௌனி காப்காவின் எழுத்துக்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவராகத் தெரிகிறது. காப்காவி்ன கதைகளைப் படித்த மௌனி அவை பிரத்யேகமாகத் தனக்காகவே எழுதப்பட்டவை எனக் கூறுமளவிற்கு உணர்ந்தார். இருப்பினும் காப்காவுக்கும் மௌனிக்கும் பல்வேறு தீர்மானவான வித்தியாசங்கள் உள்ளன. அவரை காப்காவுடன் ஒப்பிடுவது அவ்வளவு சரியில்லை. மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் மேற்கின் சிறுகதைத் துறையிலிருந்து அதன் நவீன வடிவத்தையும் வடிவம் சார்ந்த அதன் சிறப்பான பல கூறுகளையும் மட்டுமே ஏற்றுக்கொண்டார்கள். கதையம்சத்திலும் மொழிப் பிரயோகத்திலும் அவர்கள் தம் இந்திய வாழ்க்கை மற்றும் மரபிலிருந்தே பல அம்சங்களை எடுத்துக்கொண்டார்கள். இதில் மௌனி புதுமைப்பித்தன் கு.ப.ரா மற்றவர்களைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான் வெற்றி பெற்றார்கள் என்றே கூறலாம். இந்திய இலக்கிய தத்துவ மரபின் பல அம்சங்க்ளைத் தம் தனித்துவமான பார்வை கோணங்களுக்கு ஏற்ப வடிவ நுட்பத்தோடு அவர்கள் வெளிப்படுத்திய விதமே அவர்களது எழுத்துக்களுக்கு “நவீன”த் தன்மையை வழங்கியது. மௌனி தமிழ் இலக்கிய உலகம் அதுவரை அலசிப் பார்க்காத உணராத இந்திய வாழ்க்கையின் பல உள் மன பரிமாணங்களை முன்வைத்தார். புதுமைப்பித்தன் தமிழ் மொழிக்கு புதியவீச்சும் தமிழ் சிறுகதைக்கு ஒரு கலக பண்பையும் வழங்கினார். குபரா ஆண்-பெண் உறவில் உறைந்துகிடந்த குரூரத்தை மிக மென்மையான குரலில் வெளிப்படுத்தினார்.
ஒருவகையில் மௌனி முன்னோடியற்றவர்தான். ஆனால் மௌனிக்கு அளிக்கப்படும் இந்த முக்கியத்துவம் பெரிதும் அவர் தமிழ் சிறுகதை வளர்ச்சியின் முக்கியமான ஒரு காலகட்டத்தில் செயல்பட நேர்ந்த்தால்தான். மௌனியைப் பொறுத்தவரை, மௌனிக்கு அவர் முன்னோடியற்றவர் என்ற பெருமையைவிட அவர் பின்னோடியற்றவர் என்ற உண்மைதான் நமக்கு முக்கியமானது. புதுமைப்பித்தனுக்கு ஒரு சுந்தரராமசாமி ஒரு ஜெயகாந்தன் போல குபரா வுக்கு ஒரு தி.ஜானகிராமன் போல மௌனிக்கென்று ஒருவரை நம்மால் கூறமுடியாது. மௌனியின் சாதனையும் தோல்வியும் இந்த பண்பில்தான் உள்ளது. புதுமைப்பித்தன் குபரா ஆகியோர்களது இயக்கம் ஒரு வாசகர் கூட்டத்தைத தவிர ஒரு சுந்தர ராமசாமியையும் ஒரு ஜெயகாந்தனையும் ஒரு ஜானகிராமனையும் உருவாக்கியது. ஆனால மௌனியின் இயக்கம் தன் குறுகிய அளவிலேயே முழுமை கண்டு பின்னால் வந்த பலருக்கும ஒரு ஆய்வுப் பொருளாக ஒரு புதிராக மட்டுமே முடிவடைந்த்து. பின்பற்றமுடியாத கலைச் செயல்பாட்டில் சம்மான அளவு பாதகங்களும் சாதகங்களும் உள்ளன. அதன் விளைவுகளைத்தான் மௌனி இன்னும் அனுபவித்து வருகிறார். இந்த அடிப்படையில் மௌனியைப் பற்றி புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற திருமூலர் ஒப்புமைக்கூற்றுக்கு சாதகமாகவும் பாதகமாகவும விளக்கம் கூறலாம். ஆனால் இத்தகைய சர்ச்சைகள் நமக்கு இந்த சந்தர்ப்த்தில் முடிவான பயன்களை தரக்கூடியவை அல்ல. ஒருவகையில் மௌனி சிறப்பை நாம் காலப்போக்கில் சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவிர்க்கமுடியாத்தாகி விடும் என்றே தோன்றுகிறது.

மௌனியின் கதைகளில் முக்கிய அனுபவங்களாக நாம் காண்பவை வாழ்க்கையின் நிச்சயமின்மை, இரு மனிதர்களுக்கிடையேயான உறவில் இருக்கும் தனித்தன்மைகளும அவற்றின் விளைவுகளாக ஏற்படும் அதிருப்தி தோல்வி மரணம் பயணம் ஆகியவை. இந்த அனுபவங்கள் மௌனியின் கதைகளில் ஆண் பெண் உறவு என்ற அடித்தளத்தின் மீது நிறுவப்பட்டு வெளிப்படுத்தப்படுபவை. அநேகமாக மௌனியின் எல்லாக் கதைகளிலும் காதலில் தோல்வியுற்ற நுண்ணுணர்வு மிக்க ஒரு வேதாந்தியின் எட்டிய வெளியை நோக்கிய சஞ்சாரத்தைப் பார்க்க முடியும். கதையம்சம் என்ற அளவில் நாம் அலட்சியப்படுத்தி விடக்கூடிய காதல் என்ற அனுபவமே எல்லாக் கதைகளிலும் காணப்பட்டாலும் அந்த அனுபவத்தின் உந்துதலில் மௌனியின் பாத்திரங்கள் கொள்ளும விகசிப்பு ஒரு குறிப்பிட்ட உணர்வுத் தளத்திலிருந்து மனித வாழ்க்கையின் அடிப்படையான பல பிரச்சினைகளையும நிலைகளையும் நோக்கி விரிகின்றது என்பதால் அவற்றை நாம் பொருட்படுத்தியே தீரவேண்டியுள்ளது.
தன் கதைகள் வாயிலாக மௌனி கொள்ளும் தத்துவ விசாரம் திட்டமற்றது என்றே கொள்ளலாம். வாழ்க்கையின் பல விஷயங்களைப் பற்றி மௌனியின் தத்துவார்த்த விளக்கங்கள் எந்தவிதமான பொதுத்தர்க்க நியதிக்கும் உட்பட்டவையல்ல. ஏனெனில் அவரது அனுபவங்களின் தன்மைகள் அவற்றின் பாதிப்பை ஏற்றுக்கொள்ளும் அவரது பக்குவம் அதைத் தொடர்ந்து எழும் எண்ணங்கள அவை தோற்றம் கொள்ளும் மனநிலை காலம் இவ்வெண்ணங்களை வெளிப்படுத்த அவர் கைக்கொள்ளும் பல பரிமாணங்கள் கொண்ட இலக்கியவடிவம் இவையெல்லாம் அவரது விளக்கங்களை ஒரு பொது விதிக்கப்பால் இழுத்துச் சென்றுவிடுகின்றன. வாழ்க்கை பற்றிய பல உண்மைகளை அவர் மனம் நொடிந்துபோகும்படியாகவும் குதர்க்கமாகவும் விசித்திரமான மனக்கோணங்களிலிருந்தும் அளிப்பதாகத் தோன்றுவதற்கும் மேற்சொன்ன கூற்றிலிருந்தே விடை பெறமுடியும்.

முதலில வாழ்க்கை அனுபவங்களிலிருந்துதான் நாம் நம் சார்புகளை உருவாக்கிக் கொள்கிறோம். பின் அச்சார்புகளிலிருந்து மீண்டும் வாழ்க்கை அனுபவங்களை விளக்க முற்படுகிறோம். அனுபவங்களுக்கு இன்னின்ன சார்புகளை நாம் கொள்ளவேண்டும் என்றும் நினைக்கிறோம். அனுபவங்கள் ஒவ்வொரு மனிதனிடையேயும் ஏற்படுத்தும் வெவ்வேறுவிதமான விளைவுகளை நாம் கருத்தில் கொண்டாலும் அதற்கு முக்கியத்துவம் தராமல் ஒரு பொதுவான நியதிக்குள்ளேயே வாழ்க்கையைச் சார்புபடுத்தவும் வகைப்படுத்தவும் முயல்கிறோம். கலைஞர்கள் இதற்கு நேர்மாறான நிலையிலிருந்து செயல்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களை சார்புப்படுத்துவதை வகைப்படுத்துவதை விடவும் வாழ்க்கை அனுபவங்கள் மனிதரிடையே உண்டாக்கும் வெவ்வேறுவிதமான விளைவுகளை விசாரிப்பதற்கும் விவரிப்பதற்குமே அதிக அழுத்தம் தருகின்றனர். வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தத்துவம் உதவுவதைப் போன்றே இலக்கியமும் இன்னொரு கோணத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. தத்துவத்திற்கான இறுக்கம் இலக்கியத்திற்கு கிடையாது என்பதைப் போன்றே தத்துவத்தில் காணப்படும் தர்க்க –ஒழுங்கும் இலக்கியத்தில் காணக் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் இலக்கியம் தத்துவம் இரண்டுமே முழுமையற்றதான அருவமான இரு உலகங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த உரு உலகங்களும் வாழ்க்கையை விளக்கிக்கொள்வவும் வெற்றி காணவும் யத்தனித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை இந்த உலகங்களை தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது.
****
மௌனியுடன் கொஞ்ச தூரம் – வானதி பதிப்பகம் முதல் பதிப்பு-  ஏப்ரல் 1992…
தட்டச்சு.: ரமேஷ் கல்யாண்.
தொடர்புள்ள பதிவு:
மௌனியுடன் கொஞ்ச தூரம் - நூலிலிருந்து…
மௌனியின் கதையுலகம் – பகுதி 2 
தத்துவத்தைப் போன்றே இலக்கியமும் சிந்தனையைச் சார்ந்த செயல்பாடு, அதன் விளைவாக சமூகப் பார்வையையும் சார்ந்து நிற்கும் ஒன்று. எல்லாக் காரியங்களுக்கும் ஒரு சமூகப்பரிமாணம் உண்டு. மற்றவற்றை விட இலக்கியத்திற்கும்dileepe_thumb[1]தத்துவத்திற்கும் உள்ள சமூகப்பரிமாணம் அதிகமானது. மேலும் தத்துவத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள இடையுறவு பல தளங்களில் நிகழக்கூடியதுதான். எனவே மௌனியின் எழுத்துக்களில் சமூகப்பார்வை என்பதைவிட மௌனியின் எழுத்துக்கள் சமூகத்தோடு கொள்ளும் உறவு  ஒரு குறிப்பிட்ட தளத்தில் நிகழ்ந்தது – நிகழ்கிறது என்பதே உண்மை. புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் சமூகத்தோடு கொள்ளும் உறவு வெளிப்படையான யதார்த்த தளத்தில் நிகழ்வதை நாம்பார்க்கலாம். மௌனியின் எழுத்துக்கள் உள்ளார்ந்தமனம் சார்ந்த ஒரு தளத்தில் இயங்குகின்றன. புதுமைப்பித்தன் தன் எழுத்துக்களின் மூலம் சமூகத்தோடு கொள்கிற உறவு முழுமையானது அல்ல என்றுகூட ஒரு மார்ஸியவாதி கருதக்கூடும். ஒரு வாசகருக்கும் அவ்வகை எண்ணங்கள் ஏற்படலாம். அதேபோல் மௌனி தன் எழுத்துக்கள் மூலம் கொண்டிருந்த சமூக உறவு முழுமையானதா அல்லவா என்று பரிசீலிக்கப்பட வேண்டும். குறிப்பாக மார்க்ஸீயவாதிகள் அவர் சமூகப்பார்வையற்றவர் என்று ஒரேடியாக அவரைப் பகிஷ்கரித்துள்ளனர்.
மௌனிக்கு இலக்கியத்தில் போன்று தத்துவத்திலும நல்ல புலமை இருந்தது. அவரது தத்துவப் பரிச்சயம் அவரது கலை இயல்புக்கு வெகுவாக உதவியது என்றாலும் தத்துவத்தின் செல்வாக்கு அவர்மீது துல்லியமாக ஒரு குறிப்பிட்ட போக்கின் அடிப்படையில் லட்சியம் கொள்ளும்படியாக இருந்ததில்லை. மௌனிக்கு அத்வைதத்தில் ஈடுபாடு இருந்தது என்று கூறப்படுகிறது. இதை ஊர்ஜிதம் செய்யும் பல வாசகங்களை நாம் அவரது கதைகளில் காண முடியும். சமீபத்தில் ஒரு அமெரிக்க ஆய்வாளர் மௌனியை ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸவாதி என்று கூறியிருக்கிறார். இதையும் ஊர்ஜிதம் செய்யும் பல வாசகங்ளை மௌனியிடம் நாம் எளிதாகக் காணமுடியும். மௌனியை இவ்வாறு வகைப்படுத்துவது அவரைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக அவரிடமிருந்து நம்மை வெகுவாக விலக்கி வைத்துவிடும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மௌனி கதைகளில் காணப்படும் தத்துவச்சாயல் கொண்ட வாசகங்கள் ஒரு பிரக்ஞை பூர்வமாக திட்டமிடுதலின் விளைவுகள் அல்ல. அனுபவங்களின் வெளிப்பாட்டின்போது தெறித்து விழும் பார்வைத் துணுக்குகளவை! உணர்வுகளின் உத்வேகத்தில் வெளிப்படும் இவற்றை எந்த ஒரு குறிப்பிட் தத்துவப்போக்கிலும் ஐக்கியம்கொள்ள வைக்கமுடியாது. மௌனியின் தத்துவப் பூச்சுள்ள வார்த்தைகள் பன்முகம் கொண்டவை. இவற்றில் முழுமை காண முயல்வது அவ்வளவு சரியாக இராது. மௌனி தத்துவ விசாரங்களைப் பகிர்ந்து கொள்ள இலக்கியத்தைப் பயன்படுத்தவில்லை. எந்த வகைாயன தத்துவமும் வாழ்க்கையை வகைப்படுத்துவதிலேயே ஆர்வம் கொண்டிருப்பதாக அவர் காண்கிறார். தத்துவத்தின் நோக்கம் மௌனியிடம் இல்லை. வாழ்க்கைக்குத் தத்துவம் தரும நிம்மதியுணர்வை அவர் தன் கதைகளின் மூலம் முறியிடிக்க நினைத்தார். தவிர அவரது கதைகளில் காணப்படும் இந்த அம்சங்கள் ஒரு கலைப்படைப்புக்கான தேவையின் அடிப்படையில எழுந்தவை. தம் சிறுகதைகளின் வடித்தில் அவர் கொண்டிருந்த பிரக்ஞையும் கண்ட வெற்றியும் இதை ஊர்ஜிதப்படுதத்துகின்றன. மௌனி முதன்மையாக ஒரு கலைஞர்.
மேலும் மௌனியின் எழுத்துக்களைப் படிக்கும்பொழுது ஒன்றை நாம் அவரது எல்லாக் கதைகளிலும் காணமுடியும். மௌனியின் கதை மாந்தர்கள் அனைவரும் எப்போதும் ஒரு தீவிரமான பிரக்ஞை நிலையில் சஞ்சரிப்பவர்களாகவே இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் தீவிரமான பிரக்ஞை நிலையில் வாழ்க்கையின் அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் தலைப்பட்டு விடுகிறான். அவனுக்குத் தத்துவப் பரிச்சயமோ படிப்பே இல்லாத போதும்கூட. மரணம் காதல் போதை போன்ற உளவியல் விளைவுகள் பரிமாணங்கள் மிகுந்த அனுவங்களில் மனிதன் ஆழ்ந்து தீவிரமான பிரக்ஞை கொள்ளும்போது அந்நிலை அவன் பேச்சையும் நடத்தையையும் வெகுவாகப் பாதிக்கிறது.

மௌனியின் பாத்திரங்கள் இவ்வகை அனுபவங்களைக் கொண்டவர்களாகவு்ம் இத்தைய பாதிப்பை ஏற்றவர்களாகவும் உள்ளார்கள். ஏற்கெனவே கூறியது போல மௌனி கதைகளின் முக்கிய அனுபவங்களும் உளவியல் பரிமாணங்கள் மிகுந்த மரணம்,          ஆண்-பெண் உறவு, வாழ்வின் நிச்சயமின்மை போன்றவையே. மௌனிக்கு மனித அனுபவங்களின் புறவிளைவுகளில் அதிக ஈடுபாடு இருந்ததில்லை. ஒரு அனுபவம் மனிதனிடம் ஏற்படுத்தும் உளவியில் விளைவுகளிலேயே அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாகப் பல சமயம் அவரது பாத்திரங்களின் அனுபவங்கள் அதற்கு அவை காட்டும் எதிர்வினைகள் ஆகியவை விசித்திரமாகத் தோற்றம் தரக்கூடியவை. “எங்கிருந்தோ வந்தான்“ என்ற கதையில் காணப்படும் பின்வரும் வரிகள் –

“.... நடுஇரவில் நான் விழித்துக்கொண்டேன். ஒருக்கால் நான் தூங்காமலேயே படுத்திருந்தேனோ என்னவோ? பக்கத்து அறையிலிருந்து கேட்டதும் கேட்காததுமாக அடித்தொண்டையிலிருந்து அவன் பாடிக்கொண்டிருந்தான்... பாட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டது. அது மறைந்த இடத்திற்கு என்னை இழுத்துக்சென்றது போலும்... என்னையே என்னுடைய சவத்தையே நான வெகுதூரத்திற்கப்பால் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நானே உணர்ந்த என் இறப்பு வருத்தம் ஆத்திரம், ஒரு அருவருப்பு ஒருங்கு கூடின…. ஒரு கேலி நகைப்பு எங்கேயோ கேட்டது. மறுபடியும் என் சவத்தையே நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இறப்பு....? இறப்பு....? அடைய ஆவல் கொண்டு ஒரு ஸ்வர்தை எட்டி எட்டி பிடிக்க மேலிருந்தும் கீழிருந்தும் முயலும் அவன் பாட்டை கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சோகமான கீதம் அவன் பாடிக்கொண்டிருந்தான். என் உணர்வை உயர்த்தி கனவிற்கும் நினைவிற்கும் உள்ள நுண்ணிய எல்லைக் கோட்டைத் துடைக்கவல்ல அவனது கானம் சாதாரணமானதல்ல. ஆழித் தண்ணீரில் எல்லாம் பிரித்துக் கோடிட்டதுதானா நம் வாழ்க்கை..? அசைந்து அசைந்து மிதக்கும் தோணி (மனம்) எல்லைக் கடக்க அறியாது கடந்தது போலும்! கனவின் கரையைத் தாண்டி அவன் பாடிக்கொண்டிருப்பதைத்தான் நான் கேட்டுக்கொண்டிருந்தேன் போலும். நான் கனவு கொண்டிருந்தேன் என்றால் எப்போது நான் விழிப்படைந்தேன்?“.

மௌனி மனித அனுபவங்களை அநேகமாகத் தன் எல்லாக் கதைகளிலும் உள்ளார்ந்த மனமும் அறிவும் மட்டுமே சார்நத உளவியல் தளத்தில் நிகழ்த்திக் காட்டுகிறார். யதார்த்த உலகின் அம்சங்கள் அவரது கதைகளில் படிமப் பிரமாணம் கொள்ளும் போது மட்டும் அற்புதமாகப் பிரகாசிப்தையும் மற்ற சமயங்களில் மங்கலாகிப் போவதையும் காணலாம். இவ்வகையில் வாழ்க்கை அனுபவங்களின் உளவியல் பரிமாணங்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆழமாக அலசிப் பார்க்கும் போது மௌனி அனுபவங்களின் புறத்தோற்றத்தில் இறுகிய தன்மையை தகர்த்துவிடுகிறார். தவிர தன் தனித்துவமான பார்வைகளை வழங்கி அந்த அனுபவங்களைப் புதிய ஒளியில் காட்டி வாசகனைப் பிரமிப்பில் ஆழத்துகிறார்.

மௌனி இயற்கையின் பிரும்மாண்டத்திற்கும் மனித வாழ்க்கையின் நிச்சயமின்மைக்கும் வெகுவாக ஆட்பட்டிருந்தார். இரண்டுமே அவரை தீவிரமாக அச்சுறுத்தியிருக்கின்றன. மௌனி தன் அனுபவங்களின் பல்வேறு பரிமாணங்களைக் காண்பதற்கும் விளக்குவதற்கும் உந்துதலாக இயற்கையின் பல்வேறு அம்சங்களை எடுத்துக்கொள்கிறார். இயற்கை நிச்சயத்தின் குறியீடாக இருந்தாலும் தன்னளவில் இது பொருளற்றது. மனிதனுடன் உறவு கொள்ளும்போதே அது உயிர்கொள்கிறது. இயற்கையின் நிச்சயமான இருப்பு மனிதன் அல்லாதபோது பொருளற்றுப் போய்விடும் அதன் நிலை. இவற்றை மனித வாழ்வின் நிச்சயமின்மையோடு சேர்த்துப் பார்க்கும்போது மனித வாழ்வின் சிறுமை நமக்குப் புலப்படும். இந்தச் சிறுமையின் பிரக்ஞை நம்மையும் அச்சுறுத்துவது நமக்குப் புரியும்.
இருள், வானம், நட்சத்திரங்கள், மரங்கள், மலைகள், காற்று, வெயில், நிழல் போன்ற இயற்கையின் அம்சங்கள் மௌனியிடம் அலாதியாக உருக்கொள்கின்றன. இவற்றை உள்ளடக்கி மௌனி எழுதியிருக்கும பகுதிகள் விசேஷ அழகுடன் திகழ்கின்றன. சூழ்நிலை உருவாக்கத்திற்காக மட்டுமல்லாது இந்த அம்சங்களை மௌனி வாழ்க்கை பற்றிய தன் தயக்கங்களின் தனது சோகங்களின் தீவிரத்தை வெளிப்படுத்தவும் பிரயோகிக்கிறார். விவரங்களின் தொகுப்பில் காணப்படும் நேர்த்தி மௌனியின் குரலை அழகாக வெளிப்படுத்தி விடுகிறது. உதாரணமாக பிரபஞ்சகானம் என்ற அவரது கதையில் வரும கீழ்க்காணும் பகுதியைப் பார்க்கலாம்.

சிற்சில சமயம் இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்லும் நேர்பாட்டையைக் கொள்ளும்போது தன்னை மறந்து அவன் மனம் ஆனந்தம் அடைவதுண்டு மற்றும் சிற்சில சமயம் தன்னால் கவலைகளைத் தாங்க முடியாது என்று எண்ணும்போது தன்னைவிட காற்று அழுத்தமாகத் தாங்கும் என்றெண்ணித் தன் கவலைகளை காற்றில் விடுவான். ஆனால் சூல்கொண்ட மேகம் மழையை உதிர்ப்பதே போன்று அவை காற்றில் மிதந்து பிரிந்து உலகையே கவலை மயமாக்கிவிடும். எட்டாத தூரத்தில வானில் புதைந்து கேலிக்கண் சிமிட்டும் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவனது பாழ்பட்ட பழைய வாழ்க்கை நினைவு எழும். கோபித்து வானில் அந்த நட்சத்திரங்களைத் தானே வாரி இறைத்தவன் போன்ற உரிமை உணர்ச்சியுடன் அவற்றைப் பிடுங்கி கடலில் ஆழ்த்த எண்ணுவான். அந்தப் புதிய ஸ்தானத்தில் அவை எவ்வகையாகும் என்ற சந்தேகம் கொண்டவன் போல அண்ணாந்து நோக்குவான். அவையும் அதே ஐயம் கொண்டு விழிப்பது போன்று அவனுக்கு தோன்றும்“.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது மௌனி ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை சார்ந்திருக்கவில்லை என்பது தெரியும். அவரது கதைகளில் துலங்கும் தத்துவம் ஒரு தத்துவ மரபுக் கூற்றின் தொடர்ச்சியாகவோ அல்லது அதன் செல்வாக்கின் அடிப்படையிலோ எழவில்லை. இலக்கியப் படைப்புகளில் இது சாத்தியமில்லை. அவசியமும் இல்லை. தவிர இப்படியொன்று படைப்புக்கு பாதகமாகவும் முடியலாம்.
இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் பார்க்கவேண்டும். மௌனியின் பெரும்பாலான கதைகள் காதலை அடிப்படையாக கொண்டவை. காதல் என்பது குடும்பம் திருமணம் போன்ற அமைப்புகளை ஏற்காதவராகவே மௌனி நம் கதைகளில பெரும்பாலும் வெளிப்படுகிறார். (குடும்பத்தேர் என்ற ஒரு கதையில் மட்டும் குடும்பத்தைப பற்றி அவர் கொஞ்சம் ஆர்வத்துடன் பேசுகிறார். ஆனால் இந்த ஒரு கதை அவரது மற்ற கதைகளின் தரத்தை நிர்ணயிக்க போதுமானதல்ல). மௌனியின் முக்கிய அக்கறை வாழ்க்கையின் நிச்சயமின்மையின் பின்னணியில் மனித உறவுகளின் நிலை என்பதாகப் படுகிறது. எந்தச் சூழ்நிலையிலும் மனித உறவுகள் ஒரு இலட்சிய நிலையில் இயங்க அல்லது அதை அடைய முடியாது என்பது போன்ற தோற்றத்தைத்தான் மௌனி முன்வைக்கிறார். மனித உறவுகளுக்குரிய இலட்சிய சூழ்நிலையைப் பற்றிய கற்பனை ஏதும்கூட அவரிடம் கிடையாது.

மௌனி ஒரு சநாதனியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு ஆதிக்க வர்கத்தின் அலங்கோலமான பிரதிநிதியாகவே திகழ்ந்தார் என்றும் நமக்கு ஒரு சமயத்தில் தோன்றக்கூடும்.

சமூக சூழ்நிலைகளிலும் மதிப்பீடுகளிலும் விசேஷமான மாற்றங்களை காணாத வரலாற்றுக் கட்டங்களில் சுயமுனைப்போடு மாற்றங்களை வலியுறுத்தும் கலைஞர்கள் தென்படுவதில்லை. அச்சமயத்தில ஒரு கலாச்சாரத்தின் கலைகளை (வெகு சாதாரண மாற்றங்களைக் கண்டாலும்) ஒரு தேக்க நிலையிலேயே பிழைத்திருக்க நேரிடுகிறது. அரசியல் உள்ளடங்கிய புறச்சூழ்நிலைகள் மாறி அதுவரையிருந்த மதிப்பீடுகளுடனும் ரசனை உணர்வுகளுடனும் கூர்மையாக மோதும்போதுதான் ஒரு கலாச்சாரம் துடிப்பான மாற்றங்களை விளைவிக்கிறது. மாறிய நிலைகளின் தாக்கல்களுக்கு கலைகளும் ஆளாக அக்காலத்து பிரச்சனைகளையும் ரசனைகளையும தம் போக்கில் குறைவாகவோ நிறைவாகவோ பிரதிபலிக்கின்றன.
தமிழ் இலக்கிய படைப்புகளில் அரசியல் சிந்தனைகள் கொண்ட பரிமாணங்கள் மிக அழுத்தமாக இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தோன்ற ஆரம்பித்தன. மௌனி எழுதிய காலத்தில் அரசியல் சமூக வாழ்க்கை துடிப்பற்றதாக இருந்தது என்று கூறமுடியுமா என்று தெரியவில்லை. மௌனியின் காலப்பகுதிகளில் செயல்பட்ட பு துமைப்பித்தனின் படைப்புகளைப் பார்க்கும்போது அவர் அரசியலை நேரடியாக பிரதிபலிக்காவிட்டாலும் அரசியல் உணர்வுகள் ரீதியான இலட்சியங்களுக்கு நம்மை இட்டுச் செல்லக்கூடிய சமூக சித்திரங்களை அவர் படைத்துள்ளார் என்பது புலப்படும். எனவே மௌனிக்கும் அவர் காலத்தில் அரசியல் சமூக நிலைகள் உயிரோட்டமாக இருக்கவில்லை என்ற அடிப்படையில சலுகைகள் ஏதும் தரமுடியாது. ஆனால் கூடவே இன்னும் பாரதியார் புதுமைப்பித்தன் ஆகியோரின் அரசியல தத்துவ நிலைபாடுகள் பற்றிய சர்ச்சைகள் எழுந்தவண்ணமே இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இது இந்த நூற்றாண்டின் முற்பகுதி துல்லியமான நிலைபாடுகளை கலைஞர்கள் எடுத்துக்கொள்ள முடியாத ஒரு காலமாகவே இருந்த்து என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. அரசியல் யதார்த்தங்கள் வாழ்க்கைக்கு தரும் உடனடியான நடைமுறை சமூக அறிவின் ஒளியில் இலக்கியம் படைக்க வேண்டும் என்று மார்க்சிய ஜனநாயக கருத்துகளின் செல்வாக்கின் காரணமாக கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாகத்தான் நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.

இவ்வளவையும் கூறிய பின்பும் மௌனி, புதுமைபித்தன் பாரதியைப்போல சமூக உணர்வுகளை ஓரளவாவது பிரதிபலித்திருக்கலாமே என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் இத்தகைய ஒரு சர்ச்சைக்கு முடிவே இல்லை. கலை படைப்புகளிடம் நமக்கிருக்கும் பொதுவான எதிர்பார்ப்புகளுக்கும் கலைஞனின் தனித்துவமான இயல்புக்கும் உள்ள முரண் இது. இந்த முரணை கலைஞனுக்கு சாதகமாகவோ அல்லது நமக்கு சாதகமாகவோ நாம் நம் நிலைபாட்டிற்கு ஏற்ப விளக்கிக்கொள்ள முடியும்.
மௌனியின் கதையுலகம் காதல் வயப்பட்ட ஒருவனின் குறுகிய உலகம். நேரடியான கமூக பரிமாணங்களை கொண்டிராத மாயத்தோற்றம் அது. காதல வயப்பட்ட ஒருவனின் பார்வையில் உலகம் கொள்ளும் மாயத்தோற்றம் நேரடியான பரத்யட்சமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த தோற்றம் உருவான கற்பனையின் ஊற்றோடு மனித அனுபவம் ஒன்று சம்மந்தப்பட்டுள்ளது என்ற வகையில் அதுவும் பிரத்யட்சத்தின் ஒரு அங்கம்தான் என்று சொல்ல முடியும்.
மௌனியின் கதையுலகத்திற்குரிய நியாயம் இதுதான்.


நன்றி SRM UNIVERSITY
 
மௌனியின் கதைகளில் உரையாடல்கள் கதைகளை நகர்த்திச் செல்லா.  உணர்வுகளின் மொழிபெயர்ப்பையே நாம் அவருடைய கதைகளில் காணமுடியும்.  "கற்பனையின் எல்லைக் கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபட மறுக்கும் கருத்துகளையும் மடக்கிக்கொண்டு வரக்கூடியவர் மௌனி ஒருவரே" என்பார் புதுமைப்பித்தன். ஒன்றிரண்டு நிகழ்வுகள், உணர்வுகளின் பேரியக்கம் மௌனியின் கதைகளின் தனித்தன்மை.  அக உலகின் முதல் பயணி என்றும் இலக்கிய உலகில் சொல்லப்படுபவர் மௌனி.
 
"தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது மௌனி உள் உலகின் விளிம்புகளுக்குப் பயணம் செய்தார். மனத்தின் இருள், விநோதம், தத்தளிப்பு, குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள்தாம் மௌனியின் பெரும்பான்மையான கதைகளும்"  என்பது இவருடைய படைப்புகள் குறித்த பொதுப்பார்வை (மௌனி படைப்புகள் முன்னுரையிலிருந்து). இவையே அவருடைய தனித் தன்மை என்றும் கொள்ளலாம். இனி மௌனியின் வாழ்வும் படைப்பும் பற்றிக் காணலாம்.
 
2.2.1 மௌனியின் வாழ்வும் படைப்பும்
 
மௌனி 1907 - ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டச் சிற்றூர் ஒன்றில் பிறந்தார்.  கணிதத்தில் பட்டம் பெற்றார். திருமணத்திற்குப் பின்பு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். மணிக்கொடிக் கால எழுத்தாளராகிய மௌனி இதுவரையில் ‘மனக்கோட்டை’,   ‘நினைவுச் சுழல்’,   ‘அழியாச்சுடர்’ ‘பிரபஞ்சகானம்’ உள்ளிட்ட 24 கதைகளையும், ‘எனக்குப் பெயர் வைத்தவர்’ ‘செம்மங்குடி- தன் ஊர்த் தேடல்’ என்ற கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புதுமைப்பித்தன் இவரைச் ‘சிறுகதையின் திருமூலர்’ என்று குறிப்பிட்டுள்ளார். மௌனி 1985 -ஆம் ஆண்டு காலமானார். காலச்சுவடு பதிப்பகம் இவரது படைப்புகளை முழுமையாக வெளியிட்டுள்ளது.
 
மௌனியின் படைப்புகளில் ‘பிரபஞ்சகானம்’  ‘நினைவுச் சுழல்’  ஆகிய இரண்டு கதைகள் உங்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.  முதலில் பிரபஞ்ச கானத்தின் கதைச் சுருக்கத்தைக் காணலாம்.
2.2.2 பிரபஞ்சகானம் - கதைச் சுருக்கம்
 
மௌனியின் இக்கதையின் பாத்திரங்களுக்குப் பெயர் இல்லை.  அவன்,  அவள் என்றே கதை முழுதும் வருகின்றன.  காதல்தான் கரு என்றாலும்,  காதலைவிடச் சங்கீதம் கதையில் அதிகம் இடம்பெறுகிறது.
 
அவன் மூன்று வருஷங்களுக்கு முன்பு அந்த ஊருக்கு வந்தவன்.  அப்போது நிகழ்ந்தவற்றின் நினைவுகளில் சஞ்சரிக்கிறான்.
 
அவள் எதிர்வீட்டில் வசிக்கின்றவள். அவனுக்கும் அவளுக்கும் இடையில் எந்த ஓர் உரையாடலும் இல்லை. "அவள் கண்கள், அடிக்கடி குறி தவறாது அவன் மீது வீசி எறிந்து ஜொலித்தன". அவளுடைய பார்வையால் இவன் வாழ்க்கை சற்று வசீகரம் கொண்டது. உலகத்திலும் சிறு ஒளி உலாவுவதை இவன் உணர ஆரம்பித்தான்.
 
ஒருமுறை ஊர்க் குளத்திற்குக் குளிக்கப் போனபோது,  அங்குத் துணி துவைத்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்தான். அங்கு ஒரு குடியானப் பெண் சாணி தட்டிக் கொண்டிருந்தாள். அந்த வரட்டிகள் தனக்காகத்தான் என்று அவள் பார்த்ததாக எண்ணிய இவன் நெஞ்சு உலர்ந்தது.
 
அவள் நன்றாகப் பாடக்கூடியவள் என்றாலும் அவளுக்கு இருதய நோய் இருப்பதால் அவளைப் பாடக்கூடாது என்று மருத்துவர் சொல்லியிருக்கின்றனர்.   ஒருமுறை அவள் வீணை வாசிக்கக் கேட்டிருக்கிறான். அந்த வீணை வாசிப்புக்குப் பின் சங்கீதம் பற்றிய அவன் அபிப்பிராயம் உறுதியாகி விட்டது. அவள்தான் சங்கீதம். பிரபஞ்ச கானம் அவளுள் அடைபட்டுக் கிடந்தது என்று நினைத்தான்.
 
பிறகு அவளுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானது. ஒரு ஆடி வெள்ளிக் கிழமையன்று ஒன்றரை மணி நேரம் வீணை வாசித்தாள்.  இவன் எதிர் வீட்டுத் திண்ணையில் ஒரு புறம் இருள் மறைவில் நின்று கேட்டான்.  இவன் மனதில் பளீரென்று ஓர் எண்ணம்.  ஒருவகைப் பயம்.  அவள் வாசிப்பதை நிறுத்திவிட மாட்டாளா என்று துடித்துக் கொண்டே கேட்டு நின்றான். அவள் பாடக்கூடாது. பாட்டினால்தான் அவள் முடிவு என்று அஞ்சினான்.  இயற்கை தான் அவளிடம் இழந்துவிட்ட கானத்தை அவளிடமிருந்து திரும்பப்பெற முயல்வது போல அவனுக்குத் தோன்றிற்று.  அவள் முடிவு பாட்டினால் என்ற எண்ணம் அவனிடம் வலுவாக எழுந்தது.
 
சில மாதங்கள் சென்றன. அன்று அவளுக்குத் திருமணமான மூன்றாம் நாள். மாலை நலுங்கு நடந்து கொண்டிருந்தது. அவள் வருந்தி உலவிக் கொண்டிருப்பதாக இவன் நினைத்தான். இயற்கை முழுதும் சோகத்தில் இருப்பதாகவும் பிரபஞ்ச அழகே அவளால் குன்றிவிட்டதாகவும் நினைத்தான். நல்ல மழை பெய்தது.  நலுங்கில் அவள் பாடவேண்டுமென்று சுற்றிலுமிருந்த பெண்கள் வற்புறுத்தினர்.  அவள் மௌனமாக நின்றிருந்தாள். அவள் பாடக்கூடாதென்று அவனும் விரும்பினான். ஆனால், மனம் நோகப் பெண்கள் வற்புறுத்தியதனால் மனம் வெறுத்து எதிர்வீட்டுத் திண்ணையில் சாய்ந்திருந்த இவனை ஒரு முறை பார்த்துவிட்டுப் பாடத் தொடங்கினாள்.  மெய் மறந்து பாடினாள்.  தலை கிறுகிறுத்து இவன் தூணோடு ஒன்றிவிட்டான்.
 
அவள் சங்கீதத்தின் கற்பனைகள் "மரணத்தைவிட மனதைப் பிளப்பதாக இருந்தன".  ஒரு மணி நேரம் பாடினாள்.  அவளுள் அடைபட்டுக் கிடந்த சங்கீதம் வெளியில் விரிந்து பரவியது.  "சங்கீதம், இனிமை, இன்பம் எல்லாம் திறந்த வெளியில் நிறைகிறதே" என்று கத்தினான். அதே சமயம் அவளும் சாய்ந்தாள். இவ்வாறு கதை முடிகிறது.

2.2.3 பிரபஞ்சகானம் உணர்த்தும் காதலின் தனித்தன்மை
 
இக்கதையில் கதை நிகழ்ச்சிகள் குறைவாகவே இடம்பெற்றுள்ளன.  நாயகியின் இசைத்தன்மை குறித்த விவரிப்புகளும்,  நாயகன் அவள் மீது கொண்டுள்ள காதலின் நுட்ப வெளிப்பாடுகளும், நாயகியின் முடிவு ஏற்படுத்தும் வெறுமையும்தான் கதையை உருவாக்குகின்றன.
 
மற்ற காதல் கதைகளினின்றும் வேறுபட்ட ஒரு பதிவை இக்கதை உருவாக்குகிறது.  இரண்டு பேருக்குமிடையே உரையாடல் இல்லை. ஆனால் பார்வை பரிமாற்றத்தில் நுட்பமாக, வெளிப்படையாகச் சொல்ல முடியாத,  ஒருவகை உன்னதக் காதல் எழுச்சி இருப்பதை உணரமுடிகிறது.  அவளது இதய பலவீனம், பிரபஞ்ச கானம் அவளுள் அடைபட்டு உலகம் ஒளியிழந்திருக்கிறது, அந்தக் கானத்தைத் திரும்பப்பெற இயற்கை முயல்கிறது என்ற அவனுடைய அச்சம் இவையே கதையின் அடிப்படைகள். இங்குக் காதல் என்பது சங்கீதமும் இயற்கையும் பிரிந்து கூடத் துடிக்கும் துடிப்பாகக் காட்டப்படுகிறது. எனவேதான் காதலை விடச் சங்கீதம் இக்கதையில் மேன்மையும் உயர்வும் அடைகிறது.  அவளிடம் அடைபட்டுக் கிடந்த சங்கீதம் விடுதலை அடைவது போல் உணர்ந்து துயரிலும் ஒரு மனநிறைவு கொள்கிறான் அவன்.
 
மரணத்தில் காதல் முடிவதைப் பல கதைகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் இக்கதையில், இருவர் உள்ளங்களிலும் செறிந்து ஒடுங்கி, ஒரு வெடிப்பு நிலைக்காகக் காத்திருந்து, உச்சநிலையில் வெடித்து வெளியேறிப் பிரபஞ்சத்தில் இனிமை,  இன்பம் எனக் கலந்து மறையும் ஒரு அபூர்வக் காதல் முடிவற்றதாக இயற்கையில் நிறைவதைக் காண்கிறோம்.
2.2.4 நினைவுச் சுழல்
 
சென்ற கதையைப் போலவே இக்கதையும் காதலும்,  இசையும் கலந்து பின்னப்பட்டிருக்கிறது. ஆனால்,  இக்கதையில் நாயகனும் நாயகியும் என்ன விரும்புகிறார்கள்,  அவர்களின் குழப்பமான உணர்வுகளின் பின்னணி என்ன என்பவை புரிந்துகொள்ள முடியாதவையாக உள்ளன.
 
2.2.5 நினைவுச் சுழல் - கதைச் சுருக்கம்
 
ஊர் ஊராக அலைந்து திரியும் சேகரன் தான் தங்கியுள்ள விடுதி அறைக்குள் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு மனநிலையில் தவித்துக்கொண்டிருக்கிறான்.  மாலை அவன் வெளியேறித் தெருவில் செல்லும்போது,  தோழிகளுடன் வந்த கமலா அவனைக் கண்டு திடுக்கிடுகிறாள்.  அவள் பேசுமுன் அவன் கடந்து சென்று விடுகிறான். அறைக்குத் திரும்பியவன், "எதிரே வந்தது நீயா நீதான், நானும் நான்தான்" என்று வாய்விட்டுப் பேசிக்கொள்கிறான். பிடிலை மீட்டுகிறான். திடீரென்று மங்கல் ஒளியில் அவள் அவன் எதிரே வந்து நிற்கிறாள்.  அவள் முகம் "திடீரென வாய் விட்டு அலறுதலில் கிடைக்கும் ஆறுதலை" அவனுக்கு அளிக்கிறது.
 
அறைக்குள் வந்த கமலா அவன் வருகை குறித்து விசாரிக்கிறாள். இருட்டில் மது பாட்டிலைப் பார்த்து "மாமா இருந்தால் நீ இப்படி இருப்பாயா?" என்று வருத்தத்துடன் கேட்டுவிட்டுப் "பிறகு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தோழிகளுடன் செல்கிறாள்.
 
கமலா படித்துக் கொண்டிருந்த கல்லூரி ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கமலா பாடுவதாக இருந்தது. அவளுக்குப் பிடில் வாசிக்க ஒரு சினேகிதியை ஏற்பாடு செய்திருந்தாள். முதல் நாள் மாலை சேகரனைப் பார்த்ததிலிருந்து காணாமல் போன ஒரு பொருளைத் தேடி எடுத்தது மாதிரி உணர்ந்தாள். சேகரனின் அப்பா கமலாவின் மாமன்.  அவனுடைய சிறுவயதிலே இறந்துவிட்டார். தாயாரும் இரண்டு வருடங்களில் இறந்துவிட்டார்.  சிறு வயதில் இருவரும் ஒன்றாக விளையாடியது உண்டு.  அண்மைக் காலத்திலே சந்தித்ததில்லை.
 
காலையில் கமலா அவனைப் பார்க்க அவனுடைய அறைக்குச் சென்றாள். அவன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்.  அவனுடைய ஞானத்தைக் கண்டு கொண்டாள்.  அவளைப் பார்த்து அவன் திடுக்கிட்டான்.  கமலாவிற்கு அதிக நேரம் அங்கிருக்கப் பிடிக்கவில்லை.  அவன் குடிப்பழக்கத்திற்கு ஆளானது அவளுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஏன் இப்படி ஆனான் என்று தெரியவில்லை. ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக "சேகர், நான் எங்கள் கல்லூரியில் பாடப் போகிறேன். நீ பிடில் வாசிக்க வேண்டும்" என்றாள். அவன் "சரி" என்றான். அந்த இடத்தை விட்டு அவள் விரைவில் அகன்றாள்.


கல்லூரி விழாவில் கச்சேரி தொடங்கியது.  சேகரன் தாமதமாக வந்து அவளுடன் இசையில் இணைந்தான்.  அவன் குடித்திருந்ததைக் கண்டாள்.  அவன் மிக நன்றாக வாசித்தான்.  கூட்டம் இரசித்தது.  அவன் வாசிப்பிற்காகவும் இடையில் விட்டுப் பாடினாள்.  அந்த வாசிப்பில் அவன், சங்கீதத்தை விடவும் அவளுக்கான ஏதோ ஒரு செய்தியை உணர்த்துவது மாதிரி உணர்ந்தாள்.  அவள் நினைவில் சிறு வயது பிராயத்துக்குச் சென்று திரும்பினாள்.  அவன் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தான்.  "ஆம் நான் போகிறேன்.  உன்னால் கடந்துவர முடியாது"  என்று அவன் பிடில் அதையே சொல்லிக் கொண்டிருந்தது.  அவள் கண்கள் தளும்பின.  கொஞ்சம் கொஞ்சமாகத் தன் இளமை நினைவுகளுக்குத் திரும்பினாள்.  அவன் இசையில் அவளுக்கு ஏதாவது செய்தி இருந்ததா என்று கவனித்துக் கொண்டிருந்தாள். கச்சேரி முடிந்து அவன் வெளியேறினான்.
 
அறைக்குள் வந்து மீண்டும் குடித்தான். பிடில் வாசித்தான். தன்னுடைய பழைய நிலையை அடைய எண்ணினான்.  உலகில் ஒளிக்கப்பட்டவனைப் போல இருக்க எண்ணினான்.  ஆனால் எங்கு ஒளிந்திருக்க முடியும் என்று தெரியவில்லை. கடக்க வேண்டிய பாதை எல்லையற்றதாக இருந்தது. அந்த இரவு சேகரன் விடுதி அறையை விட்டு வெளியேறினான்.
 
அடுத்த நாள் கமலா சேகரனைக் காண வந்த போது அறை காலியாக இருந்தது.  கமலா தனது விடுதியில் மேல் மாடியில் வெகு நேரம் அமர்ந்திருந்தாள். மனதில் அடுக்கடுக்காய் எண்ணங்கள் உழன்று கொண்டிருந்தன.  அவள் மனம் சஞ்சலப்பட்டிருந்தது.   சேகரன் எங்குச் சென்றான் என்பது தெரியாததாலா?  அல்லது அவனிடம் ஏதாவது இரகசியம் அவளால் தெரிவிக்கப்பட்டதாக நினைத்த குழப்பமா? என்ன இரகசியத்தை அவனோடு பகிர்ந்து கொண்டேன் என்று அமைதியின்றித் தவித்தாள். வெளியே சொல்ல முடியாத ஏதோ ஒன்று இருந்ததா?  என்று நினைத்து ஒரு நினைவுச் சுழலில் அகப்பட்டு மீள முடியாமல் தொடர்ந்து இன்னொரு சுழலில் அகப்பட்டுத் திணறிக் கொண்டிருக்கும்போது, அவள் தோழி வந்து அவளைக் கீழே அழைத்துப் போனாள். இத்துடன் கதை முடிகிறது

2.2.6 நினைவுச் சுழல் உணர்த்தும் உளவியல்
 
பிரபஞ்சகானம் போலவே இக்கதையும் சோகமான காதல் புனைவுதான்.  குளத்தில் சிறு கல் ஏற்படுத்தும் தொடர்ச்சியான நீர் வளையங்களைப் போல் ஒரு சிறு நிகழ்வு மனதில் ஏற்படுத்தும் பேருணர்வு அலைகளை வார்த்தைகளாய் வார்த்துள்ளார் மௌனி.
 
இக்கதையின் நாயகன் சேகரனின் மன உணர்வுப் போராட்டங்களே கதையின் அடி நாதம். உச்சக் கட்டக் குழப்பத்தில் இருக்கும் போது அவள் முகம் நினைவுக்கு வந்து ஆறுதல் தருகிறது. கல்லூரியில் பிடில் வாசிக்கும்போது இசையின் வழியே அவன் ஏதோ உணர்த்துவதாக அவள் நினைக்கிறாள். மொழியின் உதவியின்றி இருவரின் உள்ளமும் ஒரே திசையில் பயணித்தாலும்,  உண்மையில் வெறுமையோடு அவன் எங்கோ சென்று விடுகிறான்.  அவள் அவனுடைய நினைவுகளில் மூழ்கி இறுதியில் யதார்த்த உலகுக்குத் திரும்புகிறாள்.
 
வேறு சில கதைகளில் காண்பது போலவே நிறைவேறாத காதலின் நிரந்தரத்துவத்தை நினைவுச்சுழல் கதையிலும் நாம் காணமுடிகிறது.  ஆனால் ஒருவர் நினைவுக்குள் மற்றொருவர் ஊடுருவ முடியாத சிக்கலான உளவியல் அமைப்பு மர்ம முடிச்சாகவே நின்று விடுகிறது.  இக்காரணத்தாலேயே மௌனி ஜெர்மானிய எழுத்தாளர் காஃப்காவுடன் ஒப்பிடப்படுகிறார்.

மௌனி கதை மொழி

தமிழ்மணி, நன்றி: தினமணி, நவம்பர் 10, 1990

 http://naanmowni.blogspot.in/2008/09/blog-post_2682.html

தமிழின் நவீன இலக்கியத்தோடு பரிச்சயம் கொள்ளவரும் எவரும் முதலில் மௌனியின் எழுத்துக்களையும், அதைச் சார்ந்து ‘மௌனி’ என்ற எழுத்தாளனைப் பற்றி நிலவி வரும் ஒரு வினோதமான படிமத்தையும் உணரத் தவறியிருக்க மாட்டார்கள். குறிப்பாக 60_களுக்குப்பின் மௌனியின் எழுத்துகளும் அவற்றின் சிறப்புகளும் நம்மிடையே வெகுவாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும், மௌனியைப் பற்றி நாம் பொருட்படுத்தக்கூடிய தகுதிவாய்ந்த விரிவான விமர்சனங்கள் மிகக்குறைவாகவே வெளிவந்துள்ளன. 


1934ஆம் ஆண்டு வாக்கில், மணிக்கொடியில் மௌனி முதன்முதலாக சிறுகதைகளை எழுதத் துவங்கினார். அந்தக் காலகட்டத்தில் புதுமைப்பித்தன், கு.ப.ரா. ஆகியோரும் மணிக்கொடியில் எழுதினார்கள். தமிழ்ச் சிறுகதைத்துறை முதிர்ச்சியடையத் துவங்கிய காலமும் இதுதான் எனக் கொள்ளப்படுகிறது. மணிக்கொடியில் மௌனியின் பிரவேசம் இதை வெகுவாக ஊர்ஜிதப்படுத்தியது. மௌனி படைப்புத்துறைக்கு வந்தது ஒரு தற்செயல் நிகழ்வு என்று பலரும் அறிவித்திருக்கிறார்கள். மௌனி மணிக்கொடியில் எழுதினாலும் மணிக்கொடி என்ற இயக்கத்தின் இலக்கிய படிமத்தோடு இனம் காணப்படக்கூடாதவர் எனவும் வலியுறுத்தப்படுகிறது. மௌனிக்குத் தமிழில் முன்னோடிகள் யாருமே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 


ஒருவகையில் கலைக்கும் மரபுக்குமான உறவு மிகவும் சிக்கலானது. கலைகளின்மீது மரபின் பாதிப்பு ஒரே சீராகவும் முற்றாகவும் என்றும் இருந்ததில்லை. ஆண்டுகளின் வரிசைக் கிரமப்படியும் அடியொற்றி அமைந்ததில்லை. விளைவாக, கலை வரலாறுகளை நாம் பார்க்கும்பொழுது, புதுமையான கலைவடிவங்களுக்கு ஒரே மரபான முன்முயற்சிகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் காணக்கிடைப்பதில்லை. அதே மாதிரி, எந்தப் புதுமையான கலைப்படைப்பும் முற்றாக மரபிலிருந்து விடுதலை பெற்றதாகவும் இருந்ததில்லை. அதில் மரபின் பல்வேறு காலப்பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அம்சங்கள், சம்பந்தப்பட்ட கலைஞனின் பக்குவத்திற்கும், அவனது சமகால வெளிப்பாட்டுத் தேவைக்கும் ஏற்ப வெவ்வேறு கோணங்களில் பிரயோகப்படுத்தப்பட்டிருப்பதைப் பல சந்தர்ப்பங்களில் காணலாம். 


கலைகள் மீது மரபின் செல்வாக்கு ஒருபுறமிருக்க, அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களுக்கேற்ப, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் மரபென எஞ்சி நிற்கும் ஒன்றேகூட தீவிரமான பல மாறுதல்களுக்கு ஆளாகிவிட நேர்வதுண்டு. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நம் வாழ்க்கைப் போக்குகளிலும் கலைத் துறைகளிலும் கணிசமான மாற்றங்களை நாம் சந்தித்திருக்கிறோம். அதேபோல மொகலாயர்கள் ஆண்ட காலத்திலும் பல அம்சங்கள் நம் மரபோடு வந்து ஒட்டிக்கொண்டுவிட்டன என்பதை நாமறிவோம். நீடித்த ஆங்கிலேய ஆட்சி நம்மை மேற்குடன் நெருக்கம் காண வைத்தது. ஆங்கிலக்கல்வி, தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி ஆகியவை இந்த இடைத்தொடர்பை துரிதப்படுத்தின. இதன் நேரடியான, மறைமுகமான விளைவாக தமிழ் இலக்கிய மரபு, மேற்கிலிருந்து சிறுகதை, நாவல் ஆகிய புதிய இலக்கிய வடிவங்களை சுவீகரித்துக்கொண்டது. மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமாக புதுமைப்பித்தன், மௌனி இருவரும் மேலை இலக்கியத்தில் மிகுந்த பரிச்சயம் கொண்டவர்களாக இருந்தார்கள். மௌனி, காஃப்காவின் எழுத்துகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவராகத் தெரிகிறது. காப்ஃகாவின் கதைகளைப் படித்த மௌனி, அவை பிரத்யேகமாக தனக்காகவே எழுதப்பட்டவை என்று கூறுமளவுக்கு உணர்ந்தார். இருப்பினும், காஃப்காவுக்கும் மௌனிக்கும் பல்வேறு தீர்மானமான வித்தியாசங்கள் உள்ளன. அவரை காஃப்காவுடன் ஒப்பிடுவது பெரும் தவறு. மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் மேற்கின் சிறுகதைத் துறையிலிருந்து அதன் நவீன வடிவத்தையும், வடிவம் சார்ந்த அதன் சிறப்பான பல கூறுகளையும் மட்டுமே ஏற்றுக்கொண்டார்கள். கதையம்சத்திலும், மொழிப்-பிரயோகத்திலும் அவர்கள் தம் இந்திய வாழ்க்கை, மற்றும் மரபிலிருந்தே பல அம்சங்களை எடுத்துக்கொண்டார்கள். இதில் மௌனி, மற்றவர்களைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான வெற்றி பெற்றார் என்றே கூறலாம். இந்திய இலக்கிய, தத்துவ மரபின் பல அம்சங்களைத் தன் தனித்துவமான பார்வைக் கோணங்களுக்கு ஏற்ப, வடிவ நுட்பத்தோடு அவர் வெளிப்படுத்திய விதமே அவரது எழுத்துக்களுக்கு ‘நவீன’த் தன்மையை வழங்கியது. தமிழ் இலக்கிய உலகம் அதுவரை அலசிப் பார்க்காத, உணராத இந்திய வாழ்க்கையின் பல பரிமாணங்களை மௌனி முன் வைத்தார். புதுமைப்பித்தன்கூட தமிழ்ச்சிறுகதைத் துறையில் சாதித்த புதுமைகளனைத்தும் முதன்மையாக உள்ளடக்கம் சார்ந்தவையே. வடிவத்தில் சிறப்பான முயற்சிகளை அவர் கைக்கொள்ளவே இல்லை. ஒருவகையில், மௌனி முன்னோடியற்றவர்தான். இருப்பினும் இந்தக் கூற்றின் சிறப்பை நாம் காலப்போக்கில் சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்றே தோன்றுகிறது. 


மௌனியின் கதைகளில் முக்கிய அனுபவங்களாக நாம் காண்பவை வாழ்க்கையின் நிச்சயமின்மை, இரு மனிதர்களுக்கிடையேயான உறவில் இருக்கும் தனித் தன்மைகளும் அவற்றின் விளைவுகளாக ஏற்படும் அதிருப்தி, தோல்வி, மரணம், பயணம் ஆகியவையும் அந்த அனுபவங்கள் மௌனியின் கதைகளில் ஆண்_பெண் உறவு என்ற அடித்தளத்தின்மீது நிறுவப்பட்டு வெளிப்படுத்தப்-படுபவை. அநேகமாக மௌனியின் எல்லாக் கதைகளிலும் காதலில் தோல்வியுற்ற, நுண்ணுணர்வுமிக்க ஒரு வேதாந்தியின் எட்டிய வெளியை நோக்கிய சஞ்சாரத்தைப் பார்க்கமுடியும். 


கதையம்சம் என்ற அளவில் நாம் அலட்சியப்படுத்திவிடக்கூடிய காதல் என்ற அனுபவமே எல்லாக் கதைகளிலும் காணப்பட்டாலும் அந்த அனுபவத்தின் உந்துதலில் மௌனியின் பாத்திரங்கள் கொள்ளும் விகசிப்பு, ஒரு குறிப்பிட்ட உணர்வுத் தளத்திலிருந்து மனித வாழ்க்கையின் அடிப்படையான பல பிரச்சினைகளையும் நிலைகளையும் நோக்கி விரிகின்றது என்பதால் அவற்றை நாம் பொருட்படுத்தியே தீரவேண்டியுள்ளது. 


தன் கதைகள் வாயிலாக மௌனி கொள்ளும் தத்துவ விசாரம் திட்டமற்றது என்றே கூறலாம். வாழ்க்கையின் பல விஷயங்களைப் பற்றி மௌனியின் தத்துவார்த்த விளக்கங்கள் எந்தவிதமான பொது தர்க்க நியதிக்கும் உட்பட்டவையல்ல. ஏனெனில், அவரது அனுபவங்களின் தன்மைகள், அவற்றின் பாதிப்பை ஏற்றுக்கொள்ளும் அவரது பக்குவம், அதைத் தொடர்ந்து எழும் எண்ணங்கள் தோற்றம் கொள்ளும் மனநிலை, காலம், இவ்வெண்ணங்களை வெளிப்படுத்த அவர் கைக்கொள்ளும் பல பரிமாணங்கள் கொண்ட இலக்கிய வடிவம் இவையெல்லாம் அவரது விளக்கங்களை ஒரு பொது விதிக்கப்பால் இழுத்துச் சென்றுவிடுகின்றன. வாழ்க்கை பற்றிய பல உண்மைகளை அவர், மனம் நொடிந்து-போகும்படியும், குதர்க்கமாகவும், விசித்திரமான மனக்கோணங்களிலிருந்தும் அளிப்பதாகத் தோன்று-வதற்கும் மேற்சொன்ன கூற்றிலிருந்தே விடைபெற முடியும். 


முதன்முதலில் வாழ்க்கை அனுபவங்களிலிருந்துதான் நாம் நம் சார்புகளை உருவாக்கிக்கொள்கிறோம். பின், அந்தச் சார்புகளிலிருந்து மீண்டும் வாழ்க்கை அனுபவங்களை விளக்க முற்படுகிறோம். அனுபவங்களுக்கு இன்னின்ன சார்புகளை நாம் கொள்ளவேண்டும் என்றும் நினைக்கிறோம். அனுபவங்கள் ஒவ்வொரு மனி தனிடையேயும் ஏற்படுத்தும் வெவ்வேறு விதமான விளைவுகளை நாம் கருத்தில் கொண்டாலும் அதற்கு முக்கியத்துவம் தராமல் ஒரு பொதுவான நியதிக்குள்ளேயே வாழ்க்கையை சார்புபடுத்தவும் வகைப்படுத்தவும் முயல்கிறோம். கலைஞர்கள் இதற்கு நேர்மாறான நிலையிலிருந்து செயல்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களை சார்புபடுத்துவதை, வகைப்படுத்துவதை-விடவும் வாழ்க்கை அனுபவங்கள் மனிதரிடையே உண்டாக்கும் வெவ்வேறு விதமான விளைவுகளை விசாரிப்பதற்கும் விவரிப்பதற்குமே அதிக அழுத்தம் தருகின்றனர். வாழ்க்கையைப் புரிந்து கொள்ள தத்துவம் உதவுவதைப் போன்றே இலக்கியமும் இன்னொரு கோணத்தில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. தத்துவத்திற்கான இறுக்கம் இலக்கியத்திற்குக் கிடையாது என்பதைப் போன்றே தத்துவத்தில் காணப்படும் தர்க்க ஒழுங்கும் இலக்கியத்தில் காணக் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், இலக்கியம், தத்துவம் இரண்டுமே முழுமையற்றதான அருவமான இரு உலகங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்த இரு உலகங்களும் வாழ்க்கையை விளங்கிக் கொள்ளவும், வெற்றி காணவும் யத்தனித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை இந்த உலகங்களை சதா தோற்கடித்துக் கொண்டேயிருக்கிறது. 


தத்துவத்தைப் போன்றே இலக்கியமும் சிந்தனையைச் சார்ந்த செயல்பாடு, அதன் விளைவாக சமூகப் பார்வையையும் சார்ந்து நிற்கும் ஒன்று. எல்லாக் காரியங்களுக்கும் ஒரு சமூகப் பரிமாணம் உண்டு. மற்றவற்றைவிட இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள இடையுறவு பல தளங்களில் நிகழக்கூடியது; இதைப் போன்றே இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள இடையுறவும் பலதளங்களில் நிகழக்கூடியதுதான். எனவே மௌனியின் எழுத்துகளில் சமூகத்தோடு கொள்ளும் உறவு ஒரு குறிப்பிட்ட தளத்தில் நிகழ்ந்தது. நிகழ்கிறது என்பதே உண்மை. புதுமைப்பித்தனின் எழுத்துகள் சமூகத்தோடு கொள்ளும் உறவு வெளிப்படையான யதார்த்த தளத்தில் நிகழ்வதை நாம் பார்க்கலாம். மௌனியின் எழுத்துகள் உள்ளார்ந்த மனம் சார்ந்த ஒரு தளத்தில் இயங்குகின்றன. புதுமைப்பித்தன் தன் எழுத்துகளின் மூலம் சமூகத்தோடு கொள்கிற உறவு முழுமையானது அல்ல என்று ஒரு மார்க்ஸியவாதி கருதக்கூடும். ஒரு வாசகருக்கும் அவ்வகை எண்ணங்கள் ஏற்படலாம். அதேபோல், மௌனி தன் எழுத்துகள் மூலம் கொண்டிருந்த சமூக உறவு முழுமையானதா, அல்லவா என்று பரிசீலிக்கப்படவில்லை. குறிப்பாக மார்க்ஸியவாதிகள் அவரை சமூகப் பார்வையற்றவர் என்று பகிஷ்கரித்துள்ளனர். 


மௌனிக்கு இலக்கியத்தில் போன்று தத்துவத்திலும் நல்ல புலமை இருந்தது. அவரது தத்துவப் பரிச்சயம் அவரது கலை இயல்புக்கு வெகுவாக உதவியது; என்றாலும் தத்துவத்தின் செல்வாக்கு அவர்மீது துல்லியமாக ஒரு குறிப்பிட்ட போக்கின் அடிப்படையில் லட்சியம் கொள்ளும்படியாக இருந்ததில்லை. மௌனிக்கு அத்வைதத்தில் ஈடுபாடு இருந்தது என்று கூறப்படுகிறது. இதை ஊர்ஜிதம் செய்யும் பல வாசகங்களை நாம் அவரது கதைகளில் காணமுடியும். சமீபத்தில் ஓர் அமெரிக்க ஆய்வாளர் மௌனியை ஓர் எக்ஸிஸ்டன்ஷியலிஸவாதி என்று கூறியிருக்கிறார். இதையும் ஊர்ஜிதம் செய்யும் பல வாசகங்களை மௌனியிடம் நாம் எளிதாகக் காணமுடியும். மௌனியை இவ்வாறு வகைப்படுத்துவது அவரைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக அவரிடமிருந்து நம்மை வெகுவாக விலக்கி வைத்துவிடும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மௌனி கதைகளில் காணப்படும் தத்துவச்சாயல் கொண்ட வாசகங்கள் ஒரு பிரக்ஞைபூர்வமான திட்டமிடுதலின் விளைவுகள் அல்ல. அனுபவங்களில் வெளிப்பாட்டின்-போது தெறித்துவிழும் பார்வைத் துணுக்குகளவை! உணர்வுகளின் உத்வேகத்தில் வெளிப்படும் இவற்றை எந்த ஒரு குறிப்பிட்ட தத்துவப்போக்கிலும் ஐக்கியம் கொள்ள வைக்க முடியாது. மௌனியின் தத்துவப் பூச்சுள்ள வார்த்தைகள் பன்முகம் கொண்டவை. இவற்றில் முழுமை காண முயல்வது அவ்வளவு சரியாக இராது. மௌனி தத்துவ விசாரங்களைப் பகிர்ந்துகொள்ள இலக்கியத்தைப் பயன்படுத்தவில்லை. எந்த வகையான தத்துவமும் வாழ்க்கையை வகைப்படுத்துவதிலேயே ஆர்வம் கொண்டிருப்பதாக இவர் காண்கிறார். தத்துவத்தின் நோக்கம் மௌனியிடம் இல்லை. வாழ்க்கைக்குத் தத்துவம் தரும் நிம்மதியுணர்வை அவர் தன் கதைகளின் மூலம் முறியடிக்க நினைத்தார். தவிர, அவரது கதைகளில் காணப்படும் இந்த அம்சங்கள் ஒரு கலைப்படைப்புக்கான தேவையின் அடிப்படையில் எழுந்தவை. தம் சிறு கதைகளின் வடிவத்தில் அவர் கொண்டிருந்த பிரக்ஞையும் கண்ட வெற்றியும் இதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. மௌனி முதன்மையான ஒரு கலைஞர். 


மேலும், மௌனியின் எழுத்துகளைப் படிக்கும்பொழுது ஒன்றை நாம் அவரது எல்லாக் கதைகளிலும் காண முடியும். மௌனியின் கதை மாந்தர்கள் அனைவரும் எப்போதும் ஒரு தீவிரமான பிரக்ஞை நிலையில் சஞ்சரிப்பவர்களாகவே இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் தீவிரமான பிரக்ஞை நிலையில் வாழ்க்கையின் அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் தலைப்பட்டு விடுகிறான். அவனுக்குத் தத்துவப் பரிச்சயமோ, படிப்போ இல்லாத போதுங்கூட மரணம், காதல், போதை போன்ற உளவியல் விளைவுகள், பரிமாணங்கள் மிகுந்த அனுபவங்களில் மனிதன் ஆழ்ந்து தீவிரமான பிரக்ஞை கொள்ளும்போது அந்நிலை அவன் பேச்சையும் நடத்தையையும் வெகுவாகப் பாதிக்கிறது. மௌனியின் கதைமாந்தர்கள் இவ்வகை அனுபவங்களைக் கொண்டவர்களாகவும் இத்தகைய பாதிப்பை ஏற்றவர்களாகவும் உள்ளார்கள். ஏற்கெனவே, கூறியதுபோல மௌனி கதைகளின் முக்கிய அனுபவங்களும் உளவியல் பரிமாணங்கள் மிகுந்த மரணம், ஆண்_பெண் உறவு, வாழ்வின் நிச்சயமின்மை போன்றவையே. மௌனிக்கு மனித அனுபவங்களின் புறவிளைவுகளில் அதிக ஈடுபாடு இருந்ததில்லை. ஓர் அனுபவம் மனிதனிடம் ஏற்படுத்தும் உளவியல் விளைவுகளிலேயே அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக பல சமயம் அவரது பாத்திரங்களின் அனுபவங்கள், அதற்கு அவை காட்டும் எதிர்வினைகள் ஆகியவை விசித்திரமாகத் தோற்றம் தரக்கூடியவை. ‘‘எங்கிருந்தோ வந்தான்’’ என்ற அவர் கதையில் காணப்படும் பின்வரும் வரிகள்: 


‘‘..நடு இரவில் நான் விழித்துக் கொண்டேன். ஒருகால் நான் தூங்காமலேயே விழித்துத்தான் படுத்திருந்தேனோ என்னவோ? பக்கத்து அறையிலிருந்து, கேட்டதும் கேட்காததுமாக, அடித்தொண்டையிலிருந்து அவன் பாடிக்கொண்டிருந்தான்... பாட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. அது மறைந்த இடத்திற்கு என்னை இழுத்துச் சென்றதுபோலும்... என்னையே, என்னுடைய சவத்தையே நான் வெகு தூரத்திற்கப்பால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நானே உணர்ந்த என் இறப்பு, வருத்தம், ஆத்திரம், ஓர் அருவருப்பு, ஒருங்குகூடின... ஒரு கேலி நகைப்பு எங்கேயோ கேட்டது... மறுபடியும் என் சவத்தையே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 


இறப்பு..? இறப்பு...? அடைய ஆவல் கொண்டு ஒரு ஸ்வரத்தை எட்டி எட்டிப்பிடிக்க மேலிருந்தும் கீழிருந்தும் முயலும் அவன் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தான். 


ஒரு சோகமானகீதம் அவன் பாடிக் கொண்டிருந்தான். என் உணர்வை உயர்த்தி, கனவிற்கும் நினைவிற்கும் உள்ள நுண்ணிய எல்லைக்கோட்டைத் துடைக்கவல்ல அவனது கானம் சாதாரணமானதல்ல. ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக் கோடிட்டதுதானா நம் வாழ்க்கை..?அசைந்து அசைந்து மிதக்கும் தோணி (மனம்) எல்லை கடக்க அறியாது கடந்தது போலும்! கனவின் கரையைத் தாண்டி அவன் பாடிக் கொண்டிருப்பதைத் தான் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் போலும். நான் கனவு கண்டு கொண்டிருந்தேன் என்றால் எப்போது நான் விழிப்படைந்தேன்?’’ 


மௌனி, மனித அனுபவங்களை, அநேகமாகத் தன் எல்லாக் கதைகளிலும், உள்ளார்ந்த மனமும் அறிவும் மட்டுமே சார்ந்த உளவியல் தளத்தில் நிகழ்த்திக் காட்டுகிறார். யதார்த்த உலகின் அம்சங்கள் அவரது கதைகளில் படிமப் பிரமாணம் கொள்ளும்போது மட்டும் அற்புதமாகப் பிரகாசிப்பதையும், மற்ற சமயங்களில் மங்கலாகிப் போவதையும் காணலாம். இவ்வகையில் வாழ்க்கை அனுபவங்களின் உளவியல் பரிமாணங்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆழமாக அலசிப்பார்க்கும்போது மௌனி அனுபவங்களின் புறத் தோற்றத்தின் குறுகிய தன்மையைத் தகர்த்துவிடுகிறார். தவிர, தன் தனித்துவமான பார்வைகளை வழங்கி அந்த அனுபவங்களைப் புதிய ஒளியில் காட்டி வாசகனைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறார். 


மௌனி இயற்கையின் பிரும்மாண்டத்திற்கும், மனித வாழ்க்கையின் நிச்சயமின்மைக்கும் வெகுவாக ஆட்பட்டிருந்தார். இரண்டுமே அவரைத் தீவிரமாக அச்சுறுத்தியிருக்கின்றன. மௌனி தன் அனுபவங்களின் பல்வேறு பரிமாணங்களைக் காண்பதற்கும் விளக்குவதற்கும் உந்துதலாக இயற்கையின் பல்வேறு அம்சங்களை எடுத்துக்கொள்கிறார். இயற்கை நிச்சயத்தின் குறியீடாக இருந்தாலும் தன்னளவில் அது பொருளற்றது, மனிதனுடன் உறவு கொள்ளும்போதே அது உயிர் கொள்ளுகிறது. இயற்கையின் நிச்சயமான இருப்பு, மனிதன் அல்லாதபோது பொருளற்றுப் போய்விடும். அதன் நிலை, இவற்றை மனித வாழ்வின் நிச்சயமின்மையோடு சேர்த்துப் பார்க்கும்போது மனித வாழ்வின் சிறுமை நமக்குப் புலப்படும். இந்தச் சிறுமையின் பிரக்ஞை நம்மை அச்சுறுத்துவதும் நமக்குப் புரியும். 


இருள், வானம், மரங்கள், மலைகள், வெப்பம், காற்று, வெயில், நிழல் போன்ற இயற்கையின் அம்சங்கள் மௌனியிடம் அலாதியாக உருக்கொள்கின்றன. இவற்றை உள்ளடக்கி மௌனி எழுதியிருக்கும் பகுதிகள் விசேஷ அழகுடன் திகழ்கின்றன. சூழ்நிலை உருவாக்கத்திற்காக மட்டுமல்லாது இந்த அம்சங்களை மௌனி வாழ்க்கைப் பற்றிய தன் தயக்கங்களின், தனது சோகங்களின் தீவிரத்தை வெளிப்படுத்தவும் பிரயோகிக்கிறார். விவரங்களின் தொகுப்பில் காணப்படும் நேர்த்தி மௌனியின் குரலை அழகாக வெளிப்படுத்தி விடுகிறது. உதாரணமாக மனக்கோட்டை என்ற அவரது கதையில் வரும் கீழ்க்காணும் பகுதியைப் பார்க்கலாம். 


‘‘.... மேற்குஅடிவானத்தில் மறையவிருக்கும் பிறைச்சந்திரன், அரையிருட்டைத்தான், அழகுடன் அளித்துக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் தெரிந்த எண்ணிலா நக்ஷத்திரங்கள், மொத்தமாக சிறு ஒளி கொடுக்க இருந்தன. ஸ்டேஷனில் இறங்கியவன், சிறிது நேரம் அப்பிராந்தியத்தைச் சுற்றி பார்வை கொண்டு நின்றிருந்தான். மங்கிய ஒளித்திரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரியும் அநேக மலைக் குன்றுகள், பல ரூபத்தில் பதிந்திருக்கக் கண்டான். தேவாசுர யுத்தத்தில், ஒருவருக்கொருவர் மலைகளைப் பிடுங்கி அடித்துக் கொண்டதில், சிதறித் தெறித்தனவென, ஆங்காங்கே தோன்றித் தெரிந்தனவே போலும். உயிரற்ற அவைகளுக்கு, எல்லையிலா கற்பனையில், ஜீவன் கொடுக்க, இச்சிறு ஒளிபோதும். மேலே வானத்தில் எண்ணிலா நக்ஷத்திரங்கள் தெரிவதும் கீழே பூமியில் கண்ணுக்கெட்டிய வரையில் ஆங்காங்கே தெளிக்கப்பட்டுத் தெரியும், சிறு குடிசைகளின் விளக்கொளியும் போதும் போலும். புதைவு கொண்ட அமைதி விட்டுவிட்டு, விம்முதலில் காணும் மௌனக் குமுறலின் ஓலமென எல்லாவற்றையும் பார்த்து, சிறிது நின்றிருந்தான்...’’ 


ஒரு எழுத்தாளனுக்கும் மொழிக்கும் உள்ள உறவு மிக முக்கியமானது. தனித்துவம் மிக்கது. அவன் பிரயோகிக்கும் குறிப்பிட்ட சில நூறு வார்த்தைகளின் தொகுதி, அவற்றிற்கிடையேயான இசைவில் உள்ள அழகு, பொருட்செறிவு, மொழி நடையின் ஊடாகத் தெரியும் எழுத்தாளனின் அகம் போன்ற பல விஷயங்கள் மிகச் சுவாரஸ்யமானவை. மொழிக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள உறவில் காணப்படும் நுட்பச் செறிவே அவனது இலக்கியத்தின், வெற்றியை பெருமளவு தீர்மானிக்கிறது என்று கூறலாம். இந்த நுட்பச் செறிவு ஒவ்வொரு எழுத்தாளனின் அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஏற்ப மாறுவதுண்டு. சிலரிடையே மிக எளிமையாகவும் வேறு சிலரிடம் மிகச் சிக்கலாகவும் இந்த நுட்பச் செறிவு காணப்படுவதுண்டு. புதுமைப்பித்தனிடம் காணக்-கிடைக்கும் எளிமை, மௌனியிடம் கிடைப்பதில்லை. (புதுமைப்பித்தனை வெகுவாக மதித்த மௌனியும் இதை உணர்ந்தே இருந்தார். மௌனியின் மொழிச் சிறப்பை புதுமைப்பித்தனும் புரிந்துகொண்டிருந்தார்) மௌனியின் மொழி நடையின் நுட்பச் செறிவு பூடகமான ஒன்று. அனுபவத்தின் உள்தோற்றங்களை நோக்கிய விரிவின்போது அதற்குக் கிடைத்த தன்மையிது. வெற்று அனுபவங்களை வார்த்தைகளால் ஜோடிப்பவர் அல்ல மௌனி. எளிமையான அனுபவங்களை, மிக எளிமையான வாக்கியங்களில் அவர் கூறிவிடுவதை அவரது எல்லாக் கதைகளிலும் காணலாம். 


மௌனி வார்த்தைகளை மிகுந்த பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் உபயோகித்தவர். வார்த்தைகளின் பொருளுக்கும் அவற்றின் ஒலிக்கும் உள்ள இசைவை மௌனியைப் போல் வேறு எவரும் உணர்ந்து கையாண்டிருப்பதாகத் தெரியவில்லை. ‘‘இருட்டு’’, ‘‘இருள்’’ ஆகிய ஒரே பொருளைச் சுட்டும் இரு சொற்களைக்கூட அவற்றின் சக்தியுணர்ந்தே பிரயோகப்-படுத்துபவர். ‘இருட்டு’ என்ற சொல் யதார்த்தமான ஒரு சூழ்நிலையைக் குறிப்பதாகவும், ‘இருள்’ என்ற சொல்லின் பொருளும் அதன் ஒலியும் யதார்த்தமான ஒரு சூழ்நிலையைக் குறிப்பதுடன் வேறு பல பரிமாணங்களையும் கொண்டதாகவும் இருப்பதை அவரைப் போன்றே நம்மாலும் உணர முடியும். 


மௌனியின் கதைகள் வடிவச் சிறப்பு மிக்கவை. மொழி நடையைச் சிறப்பாகக் கையாள்வதுடன், தன் ஒவ்வொரு கதையிலும் மௌனி, அவற்றின் யதார்த்த தளத்திற்கும் உளவியல் தளத்திற்குமான இடையுறவை நுட்பமாகவும் லாவகமாகவும் ஏற்படுத்துகிறார். இதில் குறிப்பாக உளவியல் தளங்களில் திகழும் பகுதிகள் மிக உயர்ந்த அழகியல் நுட்பம் மிகுந்தவையாக உள்ளன. ஒவ்வொரு கதையிலும் உளவியல் மற்றும் யதார்த்த தளங்களின் தொகுப்பே கூட ஒருவிதத்தில் குறியீட்டுத் தன்மையுடன் துலங்குவதைக் காணலாம். நிதர்சனத்திற்கும், லட்சியத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறிப்பதாக இவை அமைந்துள்ளன. இவ்விரு தளங்களுக்கும் அவர் மாறி மாறி செல்வதும், இவை சேரும் பிரியும் இடங்கள் உறுத்தாதபடி கட்டமைக்கப்பட்டிருப்பதும், காணப்படும் முக்கியச் சிறப்புகள். இன்னும் சொல்லப்போனால் மௌனி கதைகள் தரும் அடிப்படை வாசக அனுபவத்தை அளிப்பவை இக்கூறுகளே! மேலும், குறியீடுகளென தோன்றும்படி அவர் யதார்த்தத்தின் பல கூறுகளை உருமாற்றம் செய்து விடுவதும், அதன் மூலம் ஸ்தூலத்திற்கும் அருவத்திற்கும் அவர் போடும் முடிச்சுகளும் மிக அழகானவை. 


‘‘காலத்தைக் கையைப் பிடித்து நிறுத்தி கனிந்த காதலுடன் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து சென்றுகொண்டேதான் இருக்கும்’’ என்று மௌனி கூறும்போது நம்மால் ஏற்க முடியாமற் போகாது. இன்னும், இவ்வாக்கியத்தின் கட்டமைப்பு ரீதியான இலக்கிய நயத்தைப் போலவே, அதன் பொருளில் காணப்படும் ஆழ்ந்த சோகத்தையும் நம்மால் உணர முடியும். மௌனியின் கதைகளில் இவ்வாறான சோகங்கள் நிறைய உள்ளன. மௌனி உணர்த்தும் சோகங்கள் நமக்கும், நம் சமூகத்திற்கும் பொதுவானவை. 


மௌனியின் முக்கியமான கதைகள் : மனக்கோட்டை, பிரபஞ்சகானம், குடை நிழல், மாறுதல், மனக்கோலம், தவறு, எங்கிருந்தோ வந்தான், அழியாச்சுடர், பிரக்ஞை வெளியில் மௌனி சற்று வித்தியாசமான ஓரிரு கதைகளையும் எழுதியுள்ளார். சுந்தரி, மிஸ்டேக் போன்ற மிகச் சாதாரண கதைகள் தவிர, ‘குடும்பத்தேர்’ என்ற ஒரு நல்ல கதையும் உண்டு. இது மற்ற பல கதைகளைப்போல் வெகுவாகப் பேசப்படாவிட்டாலும், மௌனியின் சம்பிரதாயமான மனப்போக்கைப் புரிந்து கொள்ள உதவுகிறது. மௌனிக்கு மிகவும் பிடித்த தன் கதைகளில் இதுவும் ஒன்று, என்றாகும் போது இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. 


மௌனியின் எழுத்துகளைப்பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் இருப்பினும் அவை தமிழுக்கு மிக முக்கியமான எழுத்துகள். இலக்கிய அனுபவத்தின் நிறைவு பெரிதும் வாசகனின் நுண்ணுணர்வையே சார்ந்துள்ளது என்ற உண்மையை இன்றும் வலியுறுத்திக் கொண்டிருப்பவை மௌனியின் கதைகள். இலக்கிய உலகில் அவர் அடைந்த வெற்றிக்கும் (தோல்விக்கும்கூட) அவரது கதைகளின் இந்தப் பண்பே காரணம் என்றும் சொல்லலாம்.






வெளி ரெங்கராஜன்




அவ்வப்போதைய இலக்கிய வரையறைகளுக்கேற்றபடி மௌனியைப் பற்றி பலவிதமான அபிப்பிராயங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், மௌனி குறித்த புரிதல் என்பது சரியானபடி நிகழ்ந்திருக்கிறதா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியாது. அவரை அகஉலகம் சார்ந்தவர், சமூக அக்கறை அற்றவர் என்ற பிரிவுகளிலேயே வைத்துப் பார்த்து பெரும்பாலும் விவாதங்கள் தோன்றியிருக்கின்றன. இந்நிலையில் தலித் இதழ் ஒரு மறுவாசிப்பில் மௌனி உருவாக்கும் இலக்கியச் சலனங்கள் குறித்த ஒரு உரையாடலை முன்வைத்தபோது (பாண்டிச்சேரி செப்டம்பர் 1,2) மௌனியின் பொருத்தப்பாடு மற்றும் மௌனியின் பிம்பம் தூக்கி நிறுத்தப்படுவதின் இலக்கிய நிர்ப்பந்தம் பற்றிய அ.ராமசாமியின் கேள்விகளை அமைப்பாளர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. மௌனியின் இலக்கிய சாதனைகளுடன் ஒப்பிடும்போது அவர் குறைந்த அளவுதான் பேசப்பட்டார் என்பதுவே உண்மை நிலையாய் இருக்க, மௌனி போன்ற ஒரு முந்தைய படைப்பாளியைத் தலித் இதழ் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது என்பது திறந்த மனதுடன் அணுகப்பட வேண்டியது என்ற பா. ரவிக்குமாரின் விளக்கம் சற்று ஆறுதலாகவும், ஒரு முன்நோக்கிய நகர்தலுமாகவே பட்டது. 


ஆனால், மௌனிக்குத் தமிழின் சக படைப்பாளிகள் குறித்த ஒரு முழுமையானப் பார்வை இல்லை என்றும், அவர் சொந்த வாழ்வில் நீஷீஸீsமீக்ஷீஸ்ணீtவீஸ்மீ ஆகவும் க்ஷீமீணீநீtவீஷீஸீணீக்ஷீஹ் ஆகவும் இருந்தாலும் அவரது எழுத்துக்கள் முற்போக்கு என்று சொல்லிக் கொள்பவர்களுடையதைவிட உயர்வாக இருந்ததை நாம் யோசிக்கவேண்டும் என்ற சுந்தர ராமசாமியின் கருத்துக்கள் மௌனியின் இலக்கியம் பற்றிய பார்வைக்கு எப்படி வலு சேர்க்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால் மௌனியின் `வைதீகத்தனம்’ என்பது எந்த விதத்திலும் அவருடைய கலையில் குறுக்கிடாத போது இதுபோன்ற அவதானிப்புகள் வெறும் தகவல்களாகவும், தனிப்பட்ட பார்வையுமாகவே தங்கிவிடக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அதே போல் மௌனியின் தத்துவப் பார்வை என்பது ஸ்போட்டா (ஒரு வகையான தற்செயல்) மற்றும் அபோஹா (விலக்குதல்) ஆகிய சமஸ்கிருத தத்துவ மரபுகளின் சாயல் கொண்டது என்ற ஞானக்கூத்தனின் விளக்கத்தில், ஒரு வலிந்து பொருள் கொள்ளும் தொனியே தென்பட்டது. விலக்குதல் அல்லது எதிர்நிலைகளின் சாத்தியங்களை குறுக்குதல் என்பதில் மௌனிக்கு மிகவும் பரிச்சயமான கணித தத்துவங்களின் சாயலும் உண்டு. `பிரக்ஞை வெளியில்’ கதையில் கன்னிப்பெண் சுசிலா எதிர்நிலையான மனைவி சுசீலாவின் ஸ்தானத்திலிருந்து இடைவெளியைக் குறைத்துக்கொண்டே வருகிறாள். ஆனால், மௌனியின் அசாதாரணப் பாத்திரங்கள் விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இல்லை. 


அதேபோல் நம்முடைய தமிழ்/ஆங்கில பேராசிரியர்கள் மௌனியின் வாக்கிய அமைப்பு பிழைகள் கொண்டது என்றும் (தலைப்பு மற்றும் சில விஷயங்களில்) திருத்தப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த பிரதிகள் மௌனியின் உண்மையான பிரதிகள் தானா என்ற அடிப்படையான சில சந்தேகங்களையும் முன் வைத்தனர். கதைகளின் தலைப்புகள் மௌனியுடையவை அல்ல என்பதை ஏற்பதில் சிக்கல் இல்லை. ஆனால், மௌனி வாழ்ந்த காலத்திலேயே இரண்டு முறை பிரசுரம் கண்ட இப்பிரதிகளை மௌனியே ஏற்றுக் கொண்டிருப்பதிலிருந்து அதிக முரண்பாடுகளுக்கு வாய்ப்பில்லை என்றுதான் கொள்ளமுடியும். மேலும் ஒவ்வொரு சொல்லையும் அதன் சப்த அமைப்புடன் தேர்ந்தெடுத்துப் பிரயோகித்த மௌனி, சில இடங்களில் இலக்கணத்தைப் பின்னுக்குத் தள்ளியதை இலக்கிய நோக்கம் கருதித்தான் என்று கொள்ள இடமுண்டு (உதாரணம் _ எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?) அதேபோல் கட்டுடைத்தல் செய்வதாகச் சொல்லி மௌனியின் `மனக்கோட்டை’ கதையில் திராவிட இயக்கங்களுக்கு எதிரான மௌனியின் மனப்போக்கு வெளிப்படுவதாகவும் (அதற்கு ஆதாரமாகச் சுட்டிக் காட்டப்பட்ட வரிகள் இவை _ ``அந்த அரசன் அவன் தகப்பன் அவன் _ அவன் மகன் இவன் எனக்கொண்டு, கடல் கடந்து வாணிபம் செய்தது... இமயத்தை வென்றது. பேரவை கூட்டியது, முத்தமிழ் பரிமாறியது. அது இது எல்லாமும், மனப் பிராந்தியில் சரித்திரமாகி, கற்பனைகளுடன், உண்மையும் மறந்துவிட்டது, மறைந்தும் விட்டது’’) அண்ணன் பாத்திரத்தை தொடர்ந்த தங்கையின் மரணம் ஒரு உறவுப் பிறழ்ச்சியின் (வீஸீநீவீst ) வெளிப்பாடு என்றும் பேராசிரியர் பூர்ண சந்திரன் அவதானிப்பு செய்தது ஒரு கொடூரமான வாசிப்பாக இருந்தது. 


மௌனியின் எந்தக் கதையும் வீட்டுக்கு உள்ளே நிகழ்வதில்லை. வீட்டுக்கு வெளியேதான் எல்லாம் நடக்கிறது. வீட்டுக்கு வெளிய இருப்பது சமூகம் தானே என்று ஜீ. முருகன் கூறியது. மௌனி சமூக உணர்வு அற்றவர், தலித்தின் அக உலகத்திற்கும் மௌனிக்கும் தொடர்பில்லை என்ற ராஜேந்திர சோழன் மற்றும் ராஜ்கௌதமனின் குற்றச்சாட்டுகளுக்கான பதில் போல் இருந்தது. ஒரு சமூகத்தின் பாலியல் சிக்கல்களுக்குள் உழன்ற ஒரு மனிதன் சமூக உணர்வுள்ளவன் இல்லையா? எது சமூக உணர்வு என்பதில் இடதுசாரிகள் தங்கள் சூத்திரங்களிலிருந்து விடுபடுவது நல்லது. மரணம் குறித்த அதீத உணர்வுகள் மௌனியின் கதைப்போக்குகளைப் பாதித்ததாக பாவண்ணன் வாசிப்பு செய்தார். மௌனி குறித்த எம்.டி. முத்துக்குமாரசாமியின் விமர்சனத்தை ஒட்டி மனமும், உடலும் இணைந்து செயல்படாமல் மௌனியின் கதைகளில் உடல் பிரக்ஞை அற்று மனம் மட்டும் இயங்குவது தான். மௌனியின் வாசிப்புதன்மையை பாதித்திருப்பதாக பா.வெங்கடேசன் கருத்து தெரிவித்தார். எம். கண்ணன் மௌனியின் மறுவாசிப்புகளின் போதாமை பற்றியும், தலித்துகளின் அக உலகம் குறுக்கப்படுவது ஷிtமீக்ஷீஹ்ஷீtஹ்ஜீமீ படைப்புகளையே உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். 


கடைசியாக ஒரு தலித் மாணவர் தான் ஒரு பெண்ணுடனான உறவில் சிக்கல் கொண்டிருப்பதாகவும் இந்த மன நிலையில் மௌனியின் வார்த்தைகள் தீவிரம் கொண்டு தன்னைத் தாக்குவதாகவும் கூறினார். இந்த இடத்திலிருந்து மௌனி பற்றிய விவாதத்தைத் துவக்கி இருக்கலாம் என்று தோன்றியது. 





மௌனி: தமிழின் வசீகரக் கனவு




http://tamil.thehindu.com/general/literature/மௌனி-தமிழின்-வசீகரக்-கனவு/article6274985.ece





பிறப்பு - 27.07.1907 இறப்பு - 06.07.1985


தமிழில் பிற எழுத்தாளர்கள் மொழியின் எல்லைக்குள் நின்றபடி, மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்தி மொழியின் எல்லை வரை சென்றிருக்கிறார்கள்.


இதில் பற்பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால், மௌனி தொடங்கிய இடமே மொழியின் எல்லைதான். பிரபஞ்சத்தின் விளிம்பில் நின்றுகொண்டு அப்பால் எட்டிப் பார்க்க முயல்வதுபோல்.


மொழியை மீறிச் செல்ல முயன்றவர் என்று மட்டும் மௌனியை வர்ணித்தால் அது பெரும் பிழை. அனுபவத்தையும் சிந்தனையையும் மீற முயன்றவர் அவர். அதனால்தான், ‘காதலின் வசீகரக் கடுமை’, ‘எவற்றின் நடமாடும் நிழல்கள்’, ‘வாழ்க்கை? ஒரு உன்னத மனவெழுச்சி’ போன்ற அற்புதங்களெல்லாம் சாத்தியமாகியிருக்கின்றன.


‘நினைவுச் சுவடு’ கதையில் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று ஒரு வீட்டு வாசலில் நிற்கிறான் நாயகன் சேகரன். வீட்டின் வாயிற்புறம் இருட்டாக இருக்கிறது அப்போது ‘சேகரா- வரக் கூடாதா’ என்ற அசரீரியான சப்தம் கேட்கிறது. அந்த சப்தம் எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்று மௌனி சொல்வது பேரற்புதம்: ‘எத்தனையோ காலம் மௌனமாக நின்ற அந்த இருட்டு அப்போது ஒரு உணர்ச்சி வேகத்தில் சப்தமாக உருவாகியது போலும்!’


கால-வெளி


மௌனியின் தருணங்கள் காலமும் இடமும் முயங்கியவை, ஐன்ஸ்டைன் சொன்ன கால-வெளி போன்று. நகுலன் கவிதையில் வருவதுபோலக் காலம் இடமாகத் தெரியும் தருணங்கள் அவை.


மௌனியின் கதைகளைப் படிப்பவர் கனவுலகத்தில் நடமாடுவதுபோல உணர்வார். கனவைப் போன்று தர்க்கத் துக்குள் அகப்படாத சம்பவங்கள் மௌனியின் கதைகளில் நிறைய வரும். நாம் கனவு காணும்போது ஒரு சாதனம் நம் கனவை அப்படியே மொழி வடிவில் பிரதியெடுத்தால் எப்படி இருக்கும்?


அதைப் போன்றவைதான் மௌனியின் கதைகளும். ஆனால் வெறுமனே சம்பவங்களைக் குலைத் துப் போடுவதாலோ கால-வெளி பின்னணியைச் சரித்துவிடுவதாலோ மட்டும் மௌனி இதையெல்லாம் சாதிக்கவில்லை. அர்த்தமற்ற சம்பவங் களின் மங்கிய பின்புலத்தில் அவற்றை ஒன்றுசேர்த்து ஒரு சரடுபோல் ஓடும் மொழிதான் அவரது சாதனைக்குப் பிரதானக் காரணம். அர்த்தமின்மையின் கடலிலிருந்து திடீர் திடீரென்று தெறித்து விழும் மொழியின் அந்தத் தெறிப்புகள் அபாரமானவை.


பிரபஞ்ச ஒருமை


மொழியின் மீறல்கள், சிதைந்த கால-வெளி ஆகிய எல்லாவற்றுக்கும் அடியில் பிரபஞ்ச ஒருமையைப் பற்றிய ஆழ்ந்த தேடல் ஒன்று மௌனியின் கதைகளில் புதைந்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் எல்லா சப்தங்களையும் ஆழ்ந்த நிசப்தம் ஒன்றின் வெளிப்பாடுகளாகத்தான் அவர் காண்கிறார்:


‘எவ்வித உலக சப்தமும் பிரபஞ்ச பயங்கர நிசப்தத்தைத்தான் உணர்த்தியது.’ ‘மாபெரும் காவியம்’ கதையில் தனது காவியம் அழிந்ததில் ஆனந்தப்படும் கிட்டு இப்படி உணர்கிறான்: “மலரினின்றும் பிரிந்து வதங்கிய இதழை விட்டுச் சென்ற மணத்தை எங்கும் உணர்ந்தான். எதற்காக மலரையும் மணத்தையும் ‘அவன்’ ஒன்று சேர்த்தான். கேவலம் இது தொழில் செய்வதில் கொள்ளும் ஆனந்தத்திற்காகவா?’ இதேபோல், ‘பிரபஞ்ச கானம்’ சிறுகதையிலும், பிரபஞ்சமும், பிரபஞ்சத்தின் சப்தங்களும் காட்சிகளும் ஏதோ குறைவுபட்டவைபோல் தோன்றுகின்றன. காரணம்?


“அவள்தான் சங்கீதம்; பிரபஞ்ச கானம் அவளுக்குள் அடைபட்டுவிட்டது… அவளுடைய சங்கீதம் வெளி விளக்கம் கொள்ளாததால் இயற்கையே ஒரு வகையில் குறைவுபட்டது போலவும் வெளியில் மிதப்பது வெறும் வறட்டுச் சப்தம்தான் என்றும் எண்ணலானான்.”


பிரபஞ்சமும் தன்னிடம் குறைவு பட்ட ஒன்றை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளத் துடிக்கிறது. அவளிடம் அடைபட்டுக்கிடக்கும் பிரபஞ்சத்தின் அம்சமும் ஆரம்பத்திலிருந்து வெளிப்படத் துடிக்கிறது. இறுதியில் பாடிப்பாடி பாடலின் முடிவில் உயிரை விடு கிறாள். பிரபஞ்சத்திடம் குறைவுபட்ட அம்சம் மறுபடியும் பிரபஞ்சத்தோடு இணைந்து கொண்டது. அப்போது ‘உலகப் பேரிரைச் சல் ஒரு உன்னத சங்கீதமாக ஒலித்தது’.


பிரபஞ்சமும் பிரபஞ்ச அம்சமும் ஒன்றுதான் எனினும் ஏதோ ஒரு விஷயம் அவற்றைப் பிரிக்கிறது. பிறகு ஒன்றை யொன்று அடைய முயல்கின்றன. இதன் நிழலாட்டம்தான் வாழ்க்கையோ என்று மௌனி கேள்வி எழுப்பிவிட்டுச் செல்கிறார்.


நீண்ட முத்தத்தில் வாழ்க்கை


மௌனி கதைகளில் வரும் உறவுகள் விசித்திரமானவை. வழக்கமான உறவு களில்கூட அசாதாரணமான பிணைப்பை ஏற்படுத்திவிடுவார் மௌனி. ‘சிகிச்சை’ கதை அற்புதமான அன்பைச் சுமந்த கதை. சாகும் தறுவாயில் இருக்கும் மனைவி (கமலா) ‘தான் இறப்பினும் தன் ஜீவிய ஞாபகத்தை ஒரே பார்வை யில் பதித்துச் செல்ல முயலுவது போன்று’ தன் கணவனைப் (சீனு) பார்த்துக்கொண்டிருப்பாள்.


அவள் இறந்த பின் தன் வாழ்க்கை எப்படிக் கழியும் என்று அரற்றிக்கொண்டிருந்த கணவனை அருகில் வரச் சொல்லி ஒரு முத்தம் அளித்துவிட்டு இப்படிச் சொல்வாள்:


“இப்போது தெரிந்ததா உங்களுக்குப் பின்னால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்குமென்று?” ஒரு நீண்ட முத்தத்தில் கழியும் போலும்.’ இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவர் கோமதி ஆண்களையும் திருமணத்தையும் வெறுப்பவர். ஆனால், அவர் மனதிலும் ஒரு சலனம் ஏற்படுகிறது.


ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இவ்வளவு அன்பு இருக்க முடியுமா என்று தோன்றுகிறது. பிறகு, சீனுவைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் கோமதி இறுதியில் சொல்கிறாள்: “உங்களைத் தனியாக உங்களுக்காகவே நான் உங்களை மணக்கவில்லை. என்னுடைய மனதைக் கவர்ந்து ஆட்கொண்ட கமலாவின் நினைவு ததும்பி இருக்கும் உங்களைத்தான் நான் காதலித்து மணம் செய்துகொண்டேன்.


”ஒருவரின் நினைவு எப்போதும் ததும்பி இருக்கும் மனது எவ்வளவு களங்கமில்லாத, அற்புதமான மனது! அதற்காகவே அந்த மனதைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் மனது இன்னும் எவ்வளவு அற்புதமானது! அந்த உறவுதான் எவ்வளவு ஆனந்த வசீகரம்!


ஒருவரில் இன்னொருவரைக் காண்பது, ஒருவரின் இருத்தல் இன்னொருவரின் இருத்தலை (அந்த இன்னொருவர் இறந்துவிட்டாலும்கூட) நிஜப்படுத்திக்கொண்டிருப்பது, நீட்டித்துக்கொண்டிருப்பது என்பன தொடர்ந்து மௌனியின் கதைகளில் (மலைக்கோட்டை, பிரக்ஞை வெளியில், நினைவுச் சுழல், எங்கிருந்தோ வந்தான்) வரும்.


மௌனியின் சிறுகதைகளைப் பற்றிச் சொல்லும்போது ‘தமிழர்கள் பாக்கியசாலிகள்’ என்றார் க.நா.சு. தமிழ் மொழியின் சாத்தியங்கள் எவையெவை என்பதை ஒருவர் அறிய விரும்பினால் மௌனியின் கதைகளைப் படித்தே ஆக வேண்டும். ஒருவர் மகத்தான எழுத்தாளராகக் கொண்டாடப்படுவதற்கு 24 கதைகள் மட்டுமே போதுமா என்று மௌனியைப் படிக்காத ஒருவர் கேட்கலாம்.


ஆனால், அவரே மௌனியை ஊன்றிப் படிப்பாரெனில் ஒரு வாழ்க்கைக்கு இந்தக் கதைகள் மட்டுமே போதுமானவை என்றும் சொல்லத் தோன்றும். ஆம், மௌனியின் கதைகளைப் படிப்பதென்பது வாழ்க்கையை நீண்ட முத்த மொன்றில் கழிப்பதுபோலத்தான்.


தொடர்புக்கு: www.asaithambi.d@thehindutamil.co.in