தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, March 21, 2014

நெய்தல் - நகுலன் (இப்படியும் ஒரு கவிதை)

‘காண்மதி பாண! நீ உரைத்தற்கு உரியை!’         (நெய்தல் 40)

‘யான் எவன் செய்கோ! பாண!’                  (நெ. 133)

‘ஓண்தொடி அரிவை கொண்டனள்!’               (நெ. 172)

‘இரவினாலும் இன் துயில் அறியாது
அரவு உறு துயரம் எய்துப தொண்டித்
தண் நறு நெய்தல் நாறும்
பின் இருங்கூந்தல் அணங்குற்றோரே’              (நெ. 178)

‘தோளும் கூந்தலும் பல பாராட்டி.
வாழ்தல் ஓல்லுமோ - பாண!
‘அம்ம வாழி! பாண’                            (நெ. 178)

‘பிரியினும் பிரிவது அன்றே-
இவளோடு மேய மடந்தை நட்பே!’               (குறிஞ்சி 207)
புல்’லென்று
படரும் இம்மாலைவாய்
அம்பல் கூம்ப
அலரும் சிதற
ஊரும் இவள் உருவம்
கண்டெனம் அல்லமோ!’
பாண,
ஆகலின்,
‘வறிது ஆகின்று, என் மடம் கெழு நெஞ்சே!’

(மருதம் 47)

  நகுலன் ‘இப்படியும் ஒரு கவிதை’ என்று நான்கு பக்க விளக்கத்துடன் ஒரு சோதனை சிருஷ்டியை இத் தொகுப்பில் சேர்த்திருக்கிறார்.

     ‘எந்த ஒரு எழுத்துப் பத்தியையும் எடுத்துக்கொண்டு வார்த்தைகளையும் சொல் அமைப்பையும் மாற்றி அமைத்தால் ஒரு நூதன உருவைக் கொண்டு வரலாம்’ என்று  வில்லியம் பரோஸ் என்பார் ‘டைம்ஸ் லிட்டரி சப்ளிமென்ட்’டில் எழுதியிருந்த கட்டுரையைப் படித்த நகுலன், அக்கொள்கையை அவர் வழியில் ஏற்றுக்கொண்டு’ ஐங்குறுநூற்றின் பல பாடல்களிலிருந்து பலவரிகளை ஒன்று கூட்டி (அவைகளுடன் கூடியவரை, அந்த நடைக்கு ஏற்ப என்னால் இயன்றவரை என் வரிகளையும் சேர்த்து) ஒரு
கவிதையைச் செய்திருக்கிறார். 
- புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் -வல்லிக்கண்ணன்

நன்றி tamilvu.org