தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, October 11, 2016

‘ஹார்ன்’ இசைப்பவர் - ஃபெர்னான்டோ ஸோரன்டினோ (மொ.பெ. - எம்.எஸ்)

42
www.padippakam.Com
(ஒரு சந்தேகத்துக்குரிய நாவலின் ஏழாம் அத்தியாயம்)
‘ஹார்ன்’ இசைப்பவர்
ஃபெர்னான்டோ ஸோரன்டினோ - (மொ.பெ. - எம்.எஸ்)
காலச்சுவடு-40

ஒரு துளி கண்ணீர்கூட சிந்தாமல் மரியா அலெஜான்ட்ரா என்னை விட்டுப் பிரிந்து, ஒரோ வழியாக, சார்காஸ் நோக்கிச் சென்றுவிட்டாள். முதலில் சற்று வருத்தப்பட்டேன். அவள் நிரந்தரமாகவே என்னைவிட்டுப் போகிறாள்; இது மாற்ற முடியாத ஒன்று. என் வாழ்வின் ஒரு அத்தியாயம் முடிகிறது' என்று நினைத்தேன். அதன் பின்னர் குரோதம் நிறைந்த சிந்தனைகள் பிறந்தன. இது நேர்ந்ததும் நன்மைக்குத்தான், அவள் என் வாழ்வையே சிக்கலாக்கி விட் டாள். இழப்பு அவளுக்குத் தான்; எனக்கல்ல."

ஆனால் வாழ்க்கை - ரேடியோ நாடகங்களில் வருவதுபோல் - நிற்காமல் நடந்து கொண்டிருக்கத்தான் வேண்டும். முதலில் இப்போது சாந்தபேயும் ஒரோவும் இணையும் வீதிமுனையில் நான் நின்றுகொண்டிருக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. அத்துடன், தெருவோர ஹோட்டல்களில் பிசரியாஸ் சுடும் எண்ணெய் மணமும், பஸ்ஸில் ஆட்கள் இடித்துத் தள்ளியபடி ஏறி இறங்கும் சப்தங்களும் எனக்கு எரிச்சலூட்டின. வீட்டை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினேன். ஒர் அர்த்தமுள்ள உறவு முறிந்துவிட்ட நினைவுகள் உங்களைக் கசக்கிப் பிழியும்போது நிதானமாக நடப்பது கடினம், மரியா அலெஜான்ட்ரா பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை; ஆனால் என் சிந் தனைகள் பரந்துபட்டிருந்ததால் நான் எதைப் பற்றியுமே நினைக்கவில்லையோ என்று தோன்றியது. இடது வரிசையில் தாறுமாறாக அமைந்திருந்த பல்வேறு கடைகளின் ஜன்னல்களை கவனமின்றி நோக்கினேன். வீட்டுக்குச் செல்ல சற்று நேரம் பிடிக்கட்டுமே என்ற நினைப் பில் காரன்ஸா தெருவுக்கு வரும் வழியில் விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையொன்றை நின்று கவனித்தேன். விதவிதமான பல வண்ணப் பொருட்கள் - பொம்மை சிப்பாய்களும், துப்பாக்கிகளும், கார்களும் - நிறைந்த உலகம் அது. ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும்போது மிகச் சாதாரணமான விஷயங்களைப் பற்றி சிந்திப்பது என் வழக்கம். அப்போது பொம்மைகளுக்கிடையே காணப்படும் நியாயமற்ற உருவ வேறுபாடுகளைக் குறித்து சிந்தித்தேன். கம்பளியால் செய்யப் பட்ட ஒரு நாய் தகர ரயிலைவிட பத்து மடங்கு பெரியதாக இருந்தது; தகர ரயில் ஒரு பிளாஸ்டிக் நாய்க் குட்டியைவிட பத்து மடங்கு பெரிது. பொருட்கள் எல்லாம் பொருத்தமற்ற அளவுகள் கொண்டிருந்தால் உலகில் வாழ்க்கை பயங்கரமாயிருக்கும்
என்றேன் தீர்க்கத்தரிசனமாக நல்லவேளை, நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை. இந்த “கனமான' விஷயங்களில் சட்டென்று ஆர்வமிழந்ததும் மரியா அலெஜான்ட்ரா வின் உருவம் மீண்டும் என் மனதில் நுழைந்து கொண்டது. மரியா அலெ ஜான்ட்ரா இப்படித் திரும்பத் திரும்ப என்னைத் தொந்தரவு செய்வதை ஒர் அற்ப செயலால் தவிர்த்து விடலாம் என்று தோன்றியதும், கடைக்குள் நுழைந்து, ஐம்பது சென்ட் பிளாஸ்டிக் "ஹார்ன்" ஒன்றை வாங்கினேன். அது மூன்று பகுதிகளாக இருந்தது - வாய்ப்பகுதி பச்சை, நடுப்பகுதி சிவப்பு நிறத்தில்மூன்று சிறு பட்டன்கள்; முன் பகுதி அம்பு போன்ற இதழ்களுடன் கூடிய வெள்ளை சல்லாப் பூவைப் போல், வீட்டுக்கு வந்ததும் ஹார்னை வாசிக்கத் தொடங்கினேன். ஏதோ ஒரு இசையை வெளிக்கொணர முயன்றேன். ஆழமான ராகம் ஒன்று மில்லை; ஜனரஞ்சகமான, டி.வி.யில் கேட்கும் சாதாரண மெட்டுகள் தான். ஆனால் அதிலிருந்து வெளி வந்ததோ சில கடூர ஒலிகள் மட் டுமே. எனக்கு இசைப் பயிற்சி இல்லாததும், இந்த ஹார்ன் வெறும் விளையாட்டுப் பொருள் என்பதுமே என் தோல்விக்குக் காரணம் என்று எண்ணிக் கொண்டேன்.

அப்போது மோனிகா கதவைத் திறப்பதற்காகப் பூட்டில் சாவியை நுழைக்கும் சப்தம் கேட்டது. ஒரு போதுமில்லாத இரக்கத்துடன், பாவம் வேலை முடிந்து வருகிறாள். களைப்புடன் செக்குமாடு மாதிரி ஒரே வேலையை செய்து செய்து அவளுக்கு அலுப்புத் தட்டியிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். மரியா அலெஜான்ட்ராவின் உருவம் திடீரென என்னைத் தாக்க, நான்கு வருஷங்களில் முதன் முறையாக எனக்குக் குற்ற உணர்வு பிறந்தது. அதி லிருந்து விடுபட - என் மனைவி என்னை மன்னிப்பதற்காக - ஒரு குழந்தை மாதிரி நடித்து அவளைக் குஷிப்படுத்த விரும்பினேன். ஷ அவைக் கழற்றிவிட்டு வரவேற்பறை மேஜைமேல் ஏறி நின்றேன். திடுக்கிட்டபடி என் மனைவி - முதலில் வியப்புடனும், பின் மேஜையை நான் பிறாண்டியிருக்கவில்லை என்ற நிம்மதியுடனும் - என்னைப் பார்த்தாள். நான் ஹார்னை முழு பலத்துடன் ஊதினேன். வேடிக்கையான கிறிச்சொலிகள் பிறந்தன. மோனிகா ஒரு சிறுமியைப் போல் சிரித்து, என்னை முத்தமிட்டாள். அவளுடைய சிரிப்பும் முத்தமும் நாங்கள் இளங்காதலர்களாக இருந்த இனிமையான நாட்களை நினை வூட்டின.

அன்றிலிருந்து ஒவ்வொரு மாலையும் வங்கியில் வேலை முடிந்து நேரே வீட்டுக்கு வந்ததும், ஹார்ன் வாசிக் கத் தொடங்கினேன். இதன் மூலம் மரியா அலெஜான்ட்ராவின் சந்திப்புகளின் இழப்பைச் சரிக்கட்ட முயன்றேன். இரவு உணவுநேரம் வரை மட்டுமே இசைப்பேன். சாப்பிட்டதும் படுக்கைக்குச் சென்றுவிடு வேன். இரண்டு மணி நேரம் கஷ்டப் பட்டு இசைப்பதாலோ என்னமோ

காலச்சுவடுமார்ச் - ஏப்ரல் 2002www.padippakam.Com
43
படுத்ததும் தூங்கிவிடுவேன். கன புத்துணர்ச்சியுடன் எழுவேன். வாழ்க்கையே இனிய மலர்ச்சியுடன் காட்சியளித்தது.

என் மனநிம்மதிக்கு ஹார்ன் எவ்வளவு அனுகூலமாக இருக்கிறது என்பதை உணர்ந்ததும், காலையிலும் அதற்காக நேரம் ஒதுக்கினேன். அன்றாட ஷாப்பிங் போகும் நேரத்தைப் பொறுத்து, காலையில் மூன்று அல்லது நான்கு மணி நேரம் வாசிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு சாப்பிட்டுவிட்டு வங்கிக்குச் செல்வேன். அங்கு நான் ஹார்னைத் தொடமாட்டேன் என்று சொல்லத் தேவையில்லை.

2

வங்கியில் பணியாற்றுபவர்களின் வேலையை இரண்டு பெரும் காலப் பகுதிகளாகப் பிரிக்கலாம் என்பது எனது பத்தாண்டு பணி கற்றுத் தந்த அறிவு, முதல் நான்கு மணி நேரம் வாடிக்கையாளர்கள் வருவதும் போவதும், விசாரிப்புகளும் ஆலோசனைகளும் நடக்கும். அது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லாவிடினும், பொறுத்துக்கொள்ளக் கூடியதே. பிறகு நான்கு முதல் ஏழு வரை, வாடிக்கையாளர்கள் சென்ற பின், மீதம் இருக்கும் ஊழியர்களுடைய ஆர்ப்பாட்டங்கள்தான். அப்போது என் மனதில் ஒருவித சோகமும் அமைதியின்மையும் குவியும். வாடிக்கையாளர்கள் இல்லாத நேரங்களிலும் வங்கி ஊழியர்களின் பேச்சும் கேலியும் சுழன்று வரும். சில பேச்சுக்கள் அவ் வளவாக போரடிப்பதில்லை என்பதும் அவ்வப்போது ஒரு சில ஜோக்குகள் கொஞ்சம் சிரிப்பூட்டக்கூடிய தாக இருக்கும் என்பதும் கூட உண்மைதான். ஆனால் இந்த அற்ப மகிழ்ச்சியெல்லாம் ஹார்ன் வாசிப்பதற்கு கிட்ட வர முடியாது.

எனவே, மார்ச் 27, 1970, வெள்ளிக் கிழமையன்று சிற்றுண்டி கொண்டு செல்லும் கைப்பெட்டியில் எனது ஹார்னை எடுத்து வைத்துக்கொண்டேன் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. மாலை ஐந்து மணிக்கு பாத்ரூமுக்குள் சென்று, அங்குள்ள கண் ணாடியின்முன் நின்றபடி ஹார்னை வாசிக்க ஆரம்பித்தேன். முதலில் முன்னெச்சரிக்கையுடன், அதிக சப்தபோல் வாசித்தேன்.

ஹார்னிலிருந்து கிளம்பிய ஸ்வரங்கள் ஓர் இசையாக அமையாவிட்டாலும் என்னால் அதற்கு ஒருவற்ற ஆழ்ந்த உறக்கம். காலையில்மெழுப்பாமல், மூச்சு விடுவது சோகம் நிறைந்த நாதத்தையும், ஒரு வித ஏக்கம் கலந்த இனிமையையும் தரமுடிந்தது. மனதில் அழுத்தம் குவிந்து கண்களில் நீர் நிறைந்த போது, மீண்டும் குதூகலம் நிறைந்த இசையை வாசிக்கத் தொடங்கி னேன், கொஞ்சம் கொஞ்சமாக சப்தம் மேலெழுந்து, காலையில் வீட்டில் வைத்து வாசிக்கும் அளவை எட்டிவிட்டது, கண்ணாடியைப் பார்த்தபடியே ஸோலோ வாசிக்கும் கலைஞனின் முகபாவத்தையும் அங்க அசைவையும் கொண்டுவர முயன்றேன். (ஹார்ன் வாசிக்கும் ஸோலோ கலைஞர்கள் உண்டுமா?) என் இசை வெள்ளத்தில் மூழ்கி அடித்துச் செல்வது போன்ற உணர் வில் கண்களை மூடியபடி வாசித்துக் கொண்டிருந்தேன். கண்களைத் திறந்தபோது கண்ணாடியில் தெரிந்தது என் முகம் மட்டுமல்ல. ஹார் னின் உரத்த இசையால் ஈர்க்கப் பட்ட வங்கி ஊழியர்கள் அனைவரும் பாத்ரூமில் குழுமியிருப்பதைக் கண்டேன். அவர்கள் வயிறு நோக சிரித்துக் கொண்டிருந்தனர்.

சிரிக்காத ஒரே ஜீவன் கிளை மேலாளர் மிஸ்டர் அன்வினெல்லி மட்டுமே. இத்தாலி நாட்டுக்காரர். அவர் முகத்தில் மூன்று அம்சமே காணப்படும் கூர்மையான மூக்கு, நேரான மீசை, கவர்ச்சியான கண்ணாடி அதிகாரத் தோரணையுடன்என்னை முறைத்தபடியே உணர்ச்சி யற்ற குரலில் அந்த எக்காளத்தை ஊதுவதை நிறுத்திவிட்டு, போய் வேலையைப் பார்க்கும்படி கூறினார். அவர் சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. நான் வாசிக்கும் இசைக்கருவி எக்காள மல்ல, ஒரு ஹார்ன் என்று பணிவாக, ஆனால் உறுதியாகச் சொல்லி அவரை முதலில் திருத்தினேன். பிறகு பாத்ரூமிலிருந்து நாங்கள் அனைவரும் தடதடவென வெளியே வந்தோம். ஆண்களின் பாத்ரூமுக்குள் வரமுடியாமல் வெளியே ஆர்வமுடன் குழுமியிருந்த பெண் ஊழி யர்களைத் தாண்டி நிமிர்ந்த தலையுடன் பெருமை மிளிர நடந்து சென்றேன்.

என் மேஜைக்கு வந்தபோது ஹார்னை வாசிக்கவொட்டாமல் என்னைத் தடுத்த மிஸ்டர் அன்ஸினெல்லியின் மேல் ஆத்திரம் பொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவரது எல்லை வங்கிக் கதவுகள் வரை தானே. அடக்கப்பட்ட என் ஆசை கள் தூக்கத்தில் ஃப்ராய்டியத்தன மாக உருவெடுக்க விடாமல், வீட் டில் இரவு இரண்டு மணிவரை ஹார்ன் வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது கீழ் போர்ஷனில் வசிப்பவர் தூக்கம் கெட்ட கலங்கிய கண்களுடன் காட்சி அளித்தார். அடுத்தவர் உரிமைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற நல் லெண்ணத்தாலும், தூக்கமின்மையால் எனக்கேற்பட்ட களைப்பாலும், இசைப்பதை நிறுத்திவிட்டு, படுக்கச் சென்றேன். இசையின் மெல்லிய உணர்வுக்கு பக்குவப் படாத மோனிகா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் காதுகளில் பஞ்சு உருண்டைகள் இருந்தன.

அதிர்ஷ்டவசமாக அடுத்த நாள் சனிக்கிழமை, சனி, ஞாயிறு இரண்டு நாட்களையும் நான் வீணாக்க வில்லை. விடுதலையின் உச்ச ஒலி களை எழுப்பியது எனது ஹார்ன். வருந்தத்தக்க தவிர்க்க முடியாத, நான் பயத்துடன் எதிர் நோக்கிய திங்கள்கிழமை வந்தது. அதைத் தொடர்ந்த நான்கு நாட்களிலும் ஹார்ன் மேல் எனக்கு முழு ஆதிக்கம் செலுத்த முடியாமல் போயிற்று.

3

வங்கியில் எனக்கு ஒரளவாவது மதிப்பு இருக்கிறது என்றால் அதற் குக் காரணம் என் பொறுப்புணர்வும் திட சித்தமுமே. அந்த வெள்ளிக் கிழமை, 27 மார்ச் 1970, மிஸ்டர் அன்ஸினெல்லியின் மன்னிப்புக்கே இடமில்லாத முகத்தோற்றம் வங்கிக்கும் ஹார்னுக்கும் பொருத்தமில்லை என்பதைத் தெளிவாக்கியது. இரண்டு எதிரெதிர் சக்திகள் என் உள்ளே மெளனமாகப் போரிட்டன: நான் ஹார்ன் இசைப்பதை விரும்பினேன்; டிஸ்மிஸ் செய்யப்படுவதை அஞ்சினேன். நல்ல சம்பளம், மேலதி
காலச்சுவடு
மார்ச் - ஏப்ரல் 200244
www.padippakam.com
காரிகளின் நன்மதிப்பு - மிஸ்டர் அன்ஸினெல்லி உட்பட ~ என் கீழே பணிபுரிபவர்களின் மரியாதை எல்லாம் கூடிய வேலையை இழப்பது புத்திசாலித்தனமல்ல என்று என் பொறுப்புணர்வு கூறியது. வழக்கமான முடிவற்ற செலவினங்களான மின்சாரம், டெலிபோன், காஸ் இவற்றுடன் வீடு, கார் போன்றவற் றுக்கு அடைக்க வேண்டிய கந்து வட்டிக் கடன்களையும் சேர்த்திருந்தேன். முடிவாக, பொறுப்பும் மனத்திடமும் சேர்ந்து சதித் திட்டமிட்டு வங்கியில் நான் ஹார்னைத் தொட விடாமல் என்னை தடுத்து நிறுத்தி விட்டன.

எண்ணற்ற வாசகர்களின் ஆவலைத் தணிப்பதற்காக, பிப்ருவரி 1, 1971 திங்கள்கிழமை நான் டிஸ்மிஸ் செய்யப்பட்டேன் என்பதைச் சற்று முன்னதாகவே கூறிவிடுகிறேன். அது விதியின் செயல் என்று அடுத்த வீட்டுக்காரர் சொன்னார். நான் மறுத்துப் பேசும் மனநிலையில் இல்லை. வேறு காரணங்களும் இருக்கலாம். காலண்டரைப் பார்த்த போது வருடத்தில் பன்னிரண்டில் ஒரு பாகத்தையே இன்னும் கடந்திருக்கவில்லை. எனக்கு முன்னால் பயங்கரமான பதினொரு மாதங்கள் பிடிவாதத்துடன் வரிசையாக அணி வகுத்து நின்றன. குறிப்பாக அந்த வாரத்திலேயே இன்னும் நான்கு நாட்கள் இருந்தன.

முடிவு வெளியான திங்கள் கிழமையன்று என் மனநிலை சரியாக இல்லை. மண வாழ்க்கையில் சில பிரச்சினைகளிலிருந்து நான் மீண்டு கொண்டிருந்தேன், அல்லது அவை என்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தன. என்னால் சகித்துக் கொள்ள முடியாத ஒரு விஷயம், கோபத்தின் காரணமாக என் மகிழ்ச்சி குலைக் கப்படுவதுதான். அந்த ஜனவரி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை என் மனைவியின் எரிச்சலூட்டும் பிடிவாதத்தால் ஹார்ன் வாசிக்கும் என் மகிழ்ச்சி சீர்குலைந்திருந்தது.

அன்று நான் அதிகாலையிலேயே மனநிறைவுடன் எழுந்துவிட்டேன். அவசரமில்லாமல் காபி சாப்பிட்டு விட்டு, பத்திரிகைகளை மெதுவாக மேய்ந்தேன். பின்னர் ஹார்னை எடுத்துக்கொண்டு அதில் மூழ்கினேன். மாலையில் மோனிகா ஹார்ன் வாசிப்பதைவிட சினிமாவுக்குப் போகலாம் என்றபோது என் னால் நம்பவே முடியவில்லை! அப்புறம் தொடர்ந்து அதிர்ச்சி அளிக் கும் சம்பவங்கள் நடந்தன. மோனிக்காவின் கூச்சலும் கண்ணிரும் கண் டனங்களும் உயர்ந்தன. அவள் முன்னுக்குப் பின் முரணாகவும் அர்த்த மற்றும் வாதிட்டாள். என்னிடம் நியாயமான ஒரு காரணமே இருந்தது: தியேட்டருக்குள் ஹார்ன் வாசிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்பதைத் திரும்பத் திரும்பக் கூறினேன். என் தரப்பு நியாயம் வென்றது; நாங்கள் சினிமாவுக்குப் போகவில்லை. வரவேற்பறையில் சுண்டிய முகத்துடன் என் மனைவி முடிவில்லாத டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்க, படுக்கையறையில் கதவை சாத்திவிட்டு களைப்பு மேலிடும் வரை நான் ஹார்ன் வாசித்துக் கொண்டிருந்தேன். உடைகளை மாற்றாமலே படுத்தேன். சாப்பிட வில்லை. ஒரே களைப்பு. மறுநாள் திங்கள் கிழமை விழிக்கும்ப்ோது மணி பதினொன்றரை உணர்ச்சி யற்ற இயந்திரமயமான வங்கியை அடைந்தபோதும் நான் சாப்பிட்டி ருக்கவில்லை. ஹார்னை ஒரு கணம் கூட வாசித்திருக்கவில்லை.

மனோதத்துவ கதைகள் படித் திராதவர்கள்கூட நான் இப்போது எந்த மாதிரி மனத் தளர்ச்சிக்கும் படபடப்புக்கும் ஆளாகியிருப்பேன் என்பதை ஒருவாறு ஊகிக்க முடியும். ஏழுமணி வரை ஹார்ன் இசைக்காமல் பொறுத்திருக்க முடியாது என்பதை திடீரென உணர்ந்தேன். மூக்குக் கண்ணாடியை வீட்டில் மறந்து வைத்து விட்டதாகவும், பத்து நிமிஷத்தில் எடுத்துக்கொண்டு வந்து விடுவதாகவும் மிஸ்டர் அன்ஸி னெல்லியிடம் சாக்குச் சொன்னேன். வங்கியின் பசஃபிக்கோ கிளையிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளியே என் வீடு இருக்கிறதென்று அவருக் குத் தெரியுமாதலாலும் பத்து நிமிஷத்தில் வந்துவிடுவேன் என்று நான் உறுதி கூறியதாலும் அவர் என்னைப் போக அனுமதித்தார். அதற்கு முன் தம்மை இவ்வாறு கடமையிலிருந்து விலகச் செய்வதில் தமக்குரிய அதிருப்தியை கடுமையான பார்வையில் காட்டி விட்டே அனுமதி அளித்தார்.

ஆவேசத்துடன் இரண்டு தெருக் களையும் ஒரே தாவாகத் தாண்டி வீட்டை அடைந்து வெறி பிடித்தவன் போல் அந்த சொற்ப நிமிஷங் களை முழுதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆத்தி ரத்துடன் ஹார்ன் வாசிக்கத்
தொடங்கினேன். பிறகு லிஃப்டில் கீழிறங்குகையில் மூன்றாவது நாலாவது தளங்களுக்கிடையே லிஃப்டை நிறுத்தி திரும்பவும் மேலே எனது மாடிக்குச் சென்றேன். ஹார்னை ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றி எடுத்துக் கொண்டு வங்கிக்குத் திரும்பினேன். வரும் வழியில், காரை விற்றுவிடுவது நல்லது என்று தோன்றியது. அது எனக்குத் தேவையில்லை. வங்கிக்கு நடந்துதான் போகிறேன்; வாரக் கடைசியில் வீட்டில் இருந்தபடியே ஹார்ன் வாசிக்க முடியும்.

"இவர்தான் கடன் வழங்கும் அதிகாரியின் உதவியாளர். உங்களுக்குத் தேவையான ஆலோசனை களை வழங்குவார்" என்று எனக்காக ஆபீஸில் காத்துக் கொண்டி ருந்த ஓய்வு பெற்ற ஜெனரல் போன்று டிப்டாப் பாக உடைய ணிந்திருந்த ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் மிஸ்டர் அன்ஸினெல்லி. பிட்ஸ்ராய் நகரிலுள்ள பேட்ரியாட்டிக் பபிள் என்ற சோடாக் கம்பெனியின் உரிமையா ளராம். எனக்கு சற்றும் அறிமுகமில் லாத ஏதோ ஒரு விசித்திரமான இயந்திரம் ஒன்றை வாங்கக் கடன் கோரி பறந்து வந்திருக்கிறார். அந்த இயந்திரத்தைப் பற்றி - பிஸ்டன், எக்ஸ்டிராக்டர், கோவர்னார் என்றெல்லாம் - நான் தடுப்பதற்கு முன்பே எனக்கு விரிவாக விளக்கிக் கூறத் தொடங்கி விட்டார். ஆனால் அவர் மிகப் பணிவாகவும் நடந்து கொண்டார். என் கையைப் பிடித்துக் குலுக்கி, பலமாக அழுத்தினார். என் சிரெட்டைப் பற்ற வைத்தார். நான் அமருமுன் நாற்காலியில் உட்கார மறுத்தார். அப்புறம் ஒரு சோகம் நிரம்பிய குரலில் கரடுமுரடான முன்னேற்றப் பாதையில் நடந்து செல்ல அவர் படும் சிரமங்களை விவரித்தார். குதிரை இழுக்கும் வண்டியிலிருந்து தொடங்கி - ஒரு குதிரையைப் பற்றி நிறையவே சொன்னார் - 1947க்குத் தாவி ஒரே ஒட்டமாக 1971இல் நவீன ஜெர்மன்
டிரக்குகள் வாங்கியதைப் பற்றிக் கூறினார். அவர் குடும்பத்தைப் பற்றிப் பொதுவாகவும், சூடிகையான அவர் பெண்னைப் பற்றி நிறையவும் சொன்னார். அவள் பொது ஜனத் தொடர்பு படித்துக் கொண் டிருக்கிறாளாம். குழந்தை நல்ல நிலைமைக்கு வருவாள் என்பதில் அவருக்கும் அவர் மனைவிக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சமயத்தில் அவர் தம் மணி பர்சை
காலச்சுவடு
மார்ச் - ஏப்ரல் 2002WW.padippakam.Com
45
ரகசியமாக வெளியே எடுத்தார். கடன் வழங்குவதற்காக அவர் எனக்கு லஞ்சம் கொடுக்கப் போகிறாரோ என்று நினைத்தேன்.இல்லை. அதிலிருந்து பொதுஜனத் தொடர்பு படிக்கும் தன் மகளின் புகைப் படத்தை எடுத்துக் காட்டினார். அடர்ந்த தலை முடி. முகக்கண் ணாடி அணிந்திருந்தாள், பொங்கி வரும் அவரது சுய சரிதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, சில படிவங்களை அவரிடம் கொடுத்து நிரப்பித் தரும்படிச் சொன்னேன், சோடாக் கம்பெனிக் காரர் அவற்றில் அழுத்தி எழுதிக் கொண்டிருக்கும் போது, நான் மேஜையின் அடியில் இருந்து ஏதோ ஒரு காகிதத்தை எடுக்கும் பாவனையில், குனிந்து ஹார்னை ஊதினேன். அந்த மனிதருக்கு எதுவும் கேட்டதாகத் தெரியவில்லை; எழுதிக் கொண்டேயிருந்தார். தம்முடைய அடையாள அட்டையையும் சமூக பாதுகாப்பு அட்டையையும் எடுத்து அதிலுள்ள எண்களைப் படிவத்தில் கவனமாகக் குறித்துக் கொண்டி ருந்தார். வங்கி அந்த நேரத்தில் பல விதக் குரல்களால் நிரம்பி வழிந்ததைப் பயன்படுத்திக் கொண்டு நான் அவ்வப்போது ரகசியமாக என்னுடைய ஹார்னை ஊதி சிறிய அடங்கிய இசை ஒலிகளை எழுப் பிக் கொண்டிருந்தேன்.

இப்படி ஹார்னை இசைப்பது "புகை பிடிக்கக்கூடாது" என்று அறிவித்துள்ள ரயில் பெட்டியில் புகைப் பது போல்தான். புகைப்பவர் சற்று பதற்றத்துடனேயே புகைக்கிறார் - பரிசோதகர் வந்துவிடக் கூடாதே என்று; சக பிரயாணி ஒருவரின் பார்வையில் எதிர்ப்பு தெரிகிறது; புகைப்பது ஒரு சுகம் என்பது மாறி, அபராதம் விதிக்கப்படுவதற்குக் காரணமான ஒன்று என்றாகிவிடுகிறது. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் புகைக்காமல் இருக்கவேண்டும். ஹார்னை இசைக்காமல் இருக்க வேண்டும். சோடாக்காரர் படிவங்களைத் தின்றுவிடுவது போல் முகத்தின் அருகே வைத்தபடி, நொடிக் கொருதரம் என்னிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். (“ஒரு சின்ன சந்தேகம்') பிரயாணி, அன்று பூராவும் நிற்க வேண்டியிருந்தாலும் கூட, வேறு பெட்டிக்கு மாறிவிட முடியும். ஹார்ன் இசைப்பவருக்கு அது சாத்தியமல்ல.
எதையும் யோசிக்காமல் மேஜைக் கடியிலிருந்து ஹார்னை எடுத்து,
அதன் அம்புமுனை இலை போன்ற விளிம்புப் பகுதியை படிவங்களில் மூழ்கியிருந்த சோடாக்காரரின் நரைத்த தலை மயிரை நோக்கி நீட்டியபடி, உற்சாகம் கொப்புளிக்க, வாசிக்கத் தொடங்கினேன். அற்புத மாகப் பிறந்த ஒலியில் அந்த மனித ரின் நரை மயிர்கள் எழுந்து ஆடின. தலையை உயர்த்தி, பயம் மிளிரும் கண்களுடன், என்னை வியப்புடன் பார்த்தார்.

"ஒ, உங்கள் குழந்தைகளுக்கா ?” என்றார் சிரித்துக்கொண்டே, சற்று தயக்கத்துடன், "எனக்குக் குழந்தைகள் இல்லை" என்றேன், தெளிவான குரலில், சற்றுக் கடுமையாக, "என்னுடைய ஹார்ன் இது. எப்போ விருப்பமோ அப்போ வாசிப்பேன்."

இதை உறுதிப்படுத்துவதற்காக அதை இன்னும் பலமாக ஊதினேன். இந்தத் தடவை சில நொடிகள் அல்ல; ஒரு முழு நிமிஷத்துக் கும் அதிகமாக. என் அலுவலகப் பகுதி கண்ணாடிச் சுவர்களால் பிரிக்கப்பட்டது; வெளியே "கடன் கள்” என்ற எழுத்துக்கள். ஹார்ன் ஒலியால் ஏற்பட்ட விளைவைக் காண இருக்கையிலிருந்து எழுந்தேன். வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர் அனைவரும் என்னையே நோக்கினர். நான் கிரேக்க மன்னன் ஏனியாஸாகவும் சோடாக்காரர் ஏனியாஸின் காதலி டிடோவாகவும் இதில் எனக்கு சற்று வருத்தம்தான்) அவர்களுக்குத் தோன்றியிருக்கும். நான் சிறிது அசட்டுத்தனமாகவே உணர்ந்தேன். கடவுள் விட்ட விதிப் படி நடக்கட்டும்.

ஹார்னை உதடுகளில் பொருத்தி, அதிலிருந்து வெளிப்படக் கூடிய அனைத்து ஸ்வரங்களையும் எனக்குத் தெரிந்த அளவில் சுவாரஸ்யமாக வாசிக்கத் தொடங்கினேன். எனது சிறிய அலுவலக அறையில் அடைந்து கிடக்க விருப்பமின்றி வெளியே வங்கியின் மத்தியப் பகுதிக்கு வந்து, நாடகப் பாணியில் கவுண்டரில் ஒரு மான் போல துள்ளி ஏறி, அதன் ஒரு முனையிலி ருந்து மறுமுனை வரை மேலும் கீழும் நடந்தேன். கவுண்டரில் கையை வைத்துக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பயந்து விலகினர். இந்த நிகழ்ச்சியின் கதாநாயகனாக இருப்பது எனக்கு மகிழ்ச்சிய எளித்தது; அனைவரையும் குழப்பத்தி லாக்குவது எனக்கு உற்சாக மூட்டி யது. சின்ன சின்ன விளக்கங்கள் எழுந்தன. "இது ஒரு ஸ்டிரைக்!", "ஏதோ எதிர்ப்புக் குரல் போலிருக் கிறது", "இவருடைய மனைவி இறந்து போய் விட்டாளாம்... ''

அதே நிமிஷம் மிஸ்டர் அன்லினெல்லி வேகமாக என்னை நோக்கி வருவதைக் கண்டேன். ஆயிரக்கணக்கானோரின் பிரச்சினைகளைத் தீர்ப் பதற்காக கடவுள் அனுப்பிய தூத ரைப் போல் அவர் விரைந்து வந் தார். முகம் சிவக்க, உரத்த குரலில்| கட்டளையிட்டார்: "மிஸ்டர் டெல்பிரெட் மானேஜர் அறைக்கு சற்று வருகிறீர்களா? உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்.'

அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஹார்ன் வழியே ஒரு கனைப்புச் சிரிப்பை வெளியிட்டேன். சுற்றி நின் றவர்களின் நகைப்பு மிஸ்டர் அன்ஸி னெல்லியை முட்டாளாக்கியது. பழைய மிடுக்கைக் கொஞ்சம் மாற்றி வைத்து விட்டு, ஹார்னை என் கையிலிருந்து தட்டிவிட முயன்றார். ஒரு தேவதையின் லாவகத்துடன் என்னுடைய நிலையை மாற்றாமல் அனாயாசமாக கவுண்டரிலிருந்து வாடிக்கையாளர் மத்தியில் குதித்தேன். அந்த இடத்தை வசப் படுத்திக்கொண்டு வெற்றி மிளிர ஹார்னில் இரண்டொரு துணிச்சலான ஒலி களை எழுப்பினேன். மிஸ்டர் அன்ஸ்னெல்லி - அந்த பயங்கர உருவமும் ஐம்பத்தைந்து வயதும் இருநூறு பவுண்டு எடையும் - கவுண்டரில் ஏறியது எவ்வளவு வேடிக்கை! அதே கொனஷ்டைகளுடன் அவர் கீழே வாடிக்கையாளர் மத்தியில் விழுந்த போதும் வேடிக்கையாகவே இருந்தது.
காலச்சுவடு
மார்ச் - ஏப்ரல் 2002WWW.padippakam.Com
46
எழுந்து நின்ற மிஸ்டர் அன்ஸினெல்லி ஒரு முரட்டு எருதைப் போல் என் மேல் பாய்ந்தார். ஹார்னை ஊதிக் கொண்டே முட்டியால் விலக்கியபடி வளைந்து வளைந்து ஓடினேன். தனிப்பட்ட கலாபூர்வமான ஒரு நிகழ்ச்சி இப்போது பொதுவான அரசியலாகி விட்டது. ஓர் அசட்டுப் பீதி அந்த அமைதியான வங்கிக் கட்டிடம் முழுக்கப் பரவியது. மக்கள் அலறிய படி ஓடத் தொடங்கினர். பால் குடித்துக் கொண்டிருந்த தன் குழந்தையை ஒரு பெண் தன்னிசையாக மார்போடு அனைத்துக் கொண்டாள். நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு சுவரோடு இணைத்திருந்த பால் பாயின்ட் பேனாக்களை சிலர் அறுத்துக்கொண்டு ஓடினர் இரண்டு பேர்களுக் கிடையே கை கலப்பு ஏற்பட்டது. எங்கோ கண்ணாடி உடைந்து நொறுங்கும் சப்தம் கேட்டது. நான் அந்தக் கணத்தில் பிடிபட்டேன்.

கண்ணிர்ப் புகையின் வேகம் குறைந்து, போலிஸ் காரர்கள் சென்ற பிறகு அமைதி நிலை நாட்டப்பட்டது. மிஸ்டர் அன்ஸினெல்லி வெறி பிடித்து மாறிமாறி போன் செய்துவிட்டு, வங்கியின் பிரதான கிளை அலுவலகத்துக்குப் போய், என்னை அந்த இடத்திலேயே டிஸ்மிஸ் செய்வதற்கான உத்தரவுடன் திரும்பினார். எங்கள் வங்கி மிகத் திறமையாகச் செயல்படுவது எனக்குத் தெரியும், சில நிமிஷங்களிலேயே நான் வேலையை விட்டு நீக்கப்பட்டேன். எனக்குரிய சம்பளம் தரப்பட்டது. ஹார்னைக் கையில் இடுக்கிக்கொண்டு வங்கியை விட்டு வெளியேறினேன்.

திங்கட்கிழமை மாலை ஐந்து மணிக்கு ரோடு எப்படியிருக்கும் என்று நான் இதுவரை பார்த்ததில்லை என்பதால் ஏழு மணிவரை சுற்றியலைந்தேன்.இப்போது எனக்கு ஹார்னை ஊத முடியும் என்றாலும் ஏனோ அதைச் செய்ய விருப்பமில்லை. டோரெகோ தெருவரை நீள நடந்து மைதானத்தை நோக்கிச் சென்றேன். மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலின் விசில் என்னிடம் சுருக்கமாக எதையோ உணர்த்தியது. ஒன்றிரண்டு தடவை ஹார்னை இசைத்த பிறகு மேற் கொண்டு வாசிக்க இயலவில்லை. ஹார்ன் மேல் எனக்குள்ள ஆசை போய்விட்டது. போலோ மைதானத்தை அடைந்ததும், இரும்புக் கிராதி வழியே என்னை சந் தேகத்துடன் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பூனையை நோக்கி ஹார்னை வீசியெறிந்தேன். ஏதோ புதருக்கடியில் போய் விழுந்தது அது. பின்னர் யாராவது அதை எடுத்துக் கொண்டார்களோ என்னமோ எனக்குத் தெரியாது.

அப்போதுதான் எதிர்பாராத அந்த விசித்திர சம்பவம் நடந்தது. ஹார்னின் நினைவு என்னைவிட்டு முற்றிலும் அகலுவதற்குமுன் லிபர்டார் சாலையைக் கடக்க முயன்று கொண்டிருந்தபோது மிகச் சிறிய எலி போன்ற ஒரு மெக்ஸியன் நாயைக் கையில் பிடித்துக் கொண்டு ஆண்கள் அணியும் சட்டையை அணிந்து வந்து கொண்டிருந்த மரியா அலெஜான்ட்ராவை சந்தித்தேன்.
THE HORN PLAYER : (Chapter Seven from an apocryphal novel) by Fernando Sorentino
ஃபெர்னான்டோ ஸோரன்டினோ காலச்சுவடுக்கு நேரடியாக அனுப்பிய கதை
தமிழில்: எம். எஸ்.
***************************************************************************
பிறவழிப் பயணம்
கடக்க முடியாத நிழல்
ரவிக்குமார் : adheedhan Grediffmail.com, adheedhan Geth.net
5ார்ல் மார்க்ஸின் கட்டுரையொன்றில் கொள்ளிடம் என்ற எனது ஊரின் பெயரைப் பார்த்தபோது சிறுப்பிள்ளைத் தனமான மகிழ்ச்சி என்னுள் மலர்ந்து மறைந்தது. வர லாற்றறிஞர் அய்ஜாஸ் அஹமது தொகுத்து வெளியிட்டுள்ள மார்க்ஸ், எங்கெல்ஸ் கட்டுரைகள் அடங்கிய நூலொன்றை (On the National and Colonial Quicstions-Left word, New Delhi, 2001) படித்துக்கொண்டிருந்த போது யதேச்சை யாகக் கண்ணில் பட்டது அது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது பிரிட்டிஷாரால் இந்தியர்கள் சித்ரவதை செய்யப்பட்டது பற்றி தியூயார்க் டெப்லி ட்ரிப்யூன் பத்திரிகையில் 17.91857ல் வெளியான கார்ல் மார்க்ஸின் கட்டுரையில்தான் ஆந்தப்பெயர் இடம்பெற்றிருக்கிறது.
மெட்ராஸ் சித்ரவதை கமிஷனின் அறிக்கையிலிருந்து கார்ல் மார்க்ஸ் சில பகுதிகளைச் சுட்டிக்காட்டி அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார். வரி கட்டாததற்காகவே பெரும்பாலோர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். மற்ற காரணங்களுக்காகவும்கூட சித்ரவதை முறை கையாளப் பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின்மீது ரயில்வே பாலம் கட்டும் வேலை நடந்தபோது தாசில்தார், கொள்ளிடம் மற்றும் அதை கற்றியிருந்த கிராமங்களைச் சேர்ந்தவர் களை அழைத்து விறகு, கரி, மரம் முதலான பொருட் களைத் தருமாறு கேட்டதாகவும், அவற்றைத் தராததால் பன்னிரெண்டு பேரை விட்டு தன்னைப் பிடித்து இழுத்துச் சென்று பல்வேறு விதங்களில் கேவலப்படுத்தியதாகவும் கொள்ளிடத்தைச் சேர்ந்த பிராமணர் ஒருவர் புகார் அளித்துள்ள விவரம் மார்க்ஸின் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. "இது குறித்து சப்-கலெக்டர் திரு. டபிள்யூ கேடெல் என்பவரிடம் நான் புகார் செய்தேன். அவர் இதுபற்றி விசாரிக்கவில்லை. என் புகாரையும் கிழித்துப் போட்டுவிட்டார். கொள்ளிடம் பாலம் கட்டும் பணியை அதிக செலவில்லாமல் ஏழைகளின் உழைப்பைக் கொண்டு முடித்து அரசாங்கத்திடம் நல்ல பெயர் வாங்க அவர் விரும்புவதால் தாசில்தார் செய்த கொலையின் தன்மை எதுவாக இருந்தாலும் அவர் அதைப் பற்றிப்
பொருட்படுத்தவில்லை” என்று அந்த பிராமணர் கூறிய |
விவரம் மார்க்ஸால் மேற்கோள் காட் டப்பட்டடுள்ளது.
இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எழுதிய எட்டு கட்டுரை கள், ஒரு கடிதம் மற்றும் எங்கெல்ஸ் எழுதிய இரண்டு கட்டுரைகள் ஆகியவை அய்ஜாஸ் அஹமதுவின் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நியூயார்க் டெப்லிட்//யூன் பத் திரிகைக்கு இந்தியா குறித்து முப்பத்து மூன்று கட்டுரை கள் எழுதியுள்ளதாகவும், (நாற்பது கட்டுரைகள் எழுதி
னார் என சிலர் குறிப்பிடுவதாகவும் அஹமது தெரிவித்
துள்ளார்) அவை 1833க்கும் 1858க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை எனவும் அஹமது கூறுகிறார்.
இந்தியாவில் சித்ரவதை நடந்தது என்பதைவிடவும், அப்படிச் சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் பரிகாரம் பெறுவதற்குப் பட்ட கஷ்டங்களே மிகவும் துயரம் தரு பவையாக இருந்ததென அந்தக் கமிஷன் அறிக்கையில்
øTiña 46 40
܊
மார்ச் - ஏப்ரல் 2002
LILợČILJEELD

Fernando Sorrentino

The Horn Player: Chapter Seven
From an Apocryphal Novel
Translated by Clark M. Zlotchew


1

Without even shedding a tear, Maria Alejandra left me, making her way along Oro Street in the direction of Charcas. At first I sadly thought: "She's leaving for ever; it's an irreversible act. It's the end of a chapter in my life." Then the spiteful thoughts occurred to me: "It's the best thing that could have happened; she only complicated my life anyway. It's her loss, not mine."

But life - as they say in songs on the radio - must go on and, for openers, I had no reason to be standing on the corner of Santa Fe and Oro. Besides, the greasy smell of the pizzerias as well as the pushing and shoving of the crowds getting on and off the buses were grating on my nerves. I tried to walk home slowly and it's very difficult to walk slowly when you're being crushed by the idea that a meaningful relationship has come to an end. I couldn't help thinking about Maria Alejandra, but my thoughts were so vast that it was almost as though I weren't thinking about anything. I distractedly looked at the multiplicity of confused store windows on my left. To make the walk home take longer I stopped to look at a toy-shop window just before coming to Carranza Street. It was a heterogeneous multicolored world in which toy soldiers, guns and automobiles seemed to predominate. When I'm in a tough situation I tend to think about trivial matters. At that moment I thought about the injustice there was in the disproportion of sizes which prevailed among the toys. A dog made out of felt was ten times larger than a little tin train which was ten times larger than a little plastic puppy. I prophesied - but no one heard me - that life would be horrible in a world in which everything were out of proportion. I suddenly lost interest in those weighty matters and the image of Maria Alejandra forced its way back into my consciousness. That's when it occurred to me to fight the annoying reiteration of Maria Alejandra by means of a truly trivial act; I went into the toy-shop and acquired a fifty-cent plastic horn. The horn was divided into three sections: the mouthpiece was green; the middle was red and had three little holes; the bell was white and looked like a calla lily.
< 2 >


At home I started to play the horn. I fruitlessly tried to squeeze some melody out of it. I didn't attempt anything sublime; I was only looking for something simple, catchy: popular songs, half-time tunes, television jingles. But the horn could barely manage to emit a few isolated, strident tones. I believe that this was due to the fact that I don't know music and also to the fact that the horn was only a toy.

At that moment I heard the sound of Monica's key in the lock. "The poor kid," I thought with unaccustomed tenderness, "she's back from work. She must be tired and bored to death with the routine of her job," because the sudden image of Maria Alejandra afflicted me with the first feelings of remorse in four years. To escape them, so that my wife would secretly forgive me, I decided to act like a little kid; I decided to cheer her up. I took off my shoes and stood on the living room coffee table. Startled, my wife looked at me, first with surprise and then with relief when she realized that I hadn't scratched the table. Then I blew with all my might and my horn let out some really joyful, shrill blasts. Monica laughed like a little girl and kissed me. The simultaneous laughter and kiss brought me back to those loving times when we were sweethearts.

From that day on, when I left my job at the bank each evening, I filled in for those past meetings with Maria Alejandra by going straight home to play my horn. I'd play only till dinner time; I'd prefer to go to bed after I ate. I don't know whether it was because of the work my lungs were subjected to during the two hours a day I'd play the horn; the fact was that I'd doze right off and fall into a deep and peaceful sleep without dreams, a sleep like I'd never had before. Consequently, on the following morning I'd awaken in great mood with a rosy outlook on life.

Then seeing how beneficial the horn was for my spirits, I decided to add morning session. That's why I acquired the habit of playing every morning for three or four hours, depending on the time I'd spend on the daily shopping. Then I'd have lunch and leave for the bank, where - - it goes without saying - I never played the horn.
< 3 >


2My ten years of banking experience have taught me that you can divide banker's work into two great periods. The first four hours - in which customers come and go, have consultations, handle business, make inquiries - were bearable, even if not quite entertaining. But afterward, from four to seven - when the bank is closed to the public and whatever animation there is has to stem from the employees alone - a kind of sadness and restlessness invade my soul. It's true that when there are no customers around the employees usually engage in conversation and joke around. It's no less true that some of the conversations weren't too boring and that once in a while a joke might be more or less amusing. Yet these pale pleasures were in no way comparable with playing the horn.



Therefore, it was to be expected that on Friday the 27th of March of 1970 I should place the horn in the attache case meant for carrying my daily sandwich. At about five in the afternoon I went into the bathroom and, facing the lavatory mirror, I began to play the horn. At first I blew prudently, almost inaudibly, almost sighing. And even though the notes issuing from my horn never managed to form a melody, I succeeded in giving them a plaintive tone and a certain romantic quality tinged with an ineffable nostalgia. When I noticed that I was becoming depressed and that my eyes were filling with tears, I fell back into a happier vein; I played cheery, optimistic music. Gradually, my playing became louder and louder until I reached the intensity with which I usually played at home. Depending on the mirror to guide me, I simultaneously made an effort to assume the facial expressions and gestures of a soloist (while admitting the non-existence of horn soloists). During that time, carried away by my own music, I was performing with my eyes closed. When I opened them I saw that my face no longer monopolized the mirror. Attracted by the stentorian notes of the horn, all the employees had entered the washroom. They were laughing their guts out.

One person who wasn't laughing was Mr. Ansinelli, the branch manager. His heritage is Italian; his face consists of three features: a sharp nose, a straight moustache and an imposing pair of eyeglasses. His manner tends to be imperious. Coldly staring at me, he dryly ordered me to cease playing the bugle and to get back to work. I had no choice but to obey him, but not without first setting him straight, courteously but firmly, with regard to my instrument's identity as a horn. Following this brusque epilogue we all stampeded out of the bathroom. My head high, I walked with dignity past the female employees who, not having dared to penetrate beyond the unseen barriers of the gentlemanly enclosure, crowded together in a chaste throng in front of the men's room.
< 4 >


I returned to my desk feeling that a frozen rage directed at Mr. Ansinelli, the man who wouldn't let me play my horn, had taken possession of my soul. But his jurisdiction stopped at the bank doors. I didn't allow my repressed desires to Freudianly manifest themselves in my sleep; I played my horn at home till two in the morning, at which time my bleary-eyed neighbor from the floor below made his appearance. I, probably respectful of the rights of others and certainly exhausted from lack of sleep, put away my horn and went to bed. Monica, insensitive to the charms of music, had been sleeping for quite a long time, her ears stopped up with cotton plugs.

Luckily, the next day was Saturday. I didn't let that Saturday and Sunday go to waste; the horn gave out with the bravest sounds of freedom. Lamentably, inevitably, the fearful Monday arrived and, after it, the other four days in which I couldn't be the absolute master of my horn.



3

If I had any reputation at all at the bank, it was for responsibility and for having will power. That Friday, March 27, 1970, Mr. Ansinelli's implacable face definitely established the incompatibility which kept the horn separate from the bank. Two opposing forces mutely struggled in my soul: I loved the horn, I feared dismissal. My sense of responsibility told me that in no way was it advisable to lose a position in which I earned a good salary, enjoyed the esteem of my numerous superiors - Mr. Ansinelli included - and had the respect of my few subordinates. To the customary and incessant expenditures for electricity, gas and the telephone, I had just boldly added the anomalous and exorbitant payments for the apartment and the car. As a result, both abstract nouns - responsibility and will - substantially conspired in favor of my abstaining from playing the horn at the bank.



4

In order to obviate an unjustifiable state of anxiety in my multitudinous readers, I shall begin this paragraph by getting ahead of myself and saying that on Monday, February 1st, 1971, I was fired. The housekeeper said it was fate. I, in no mood to debate, think other factors were involved. Mainly the unfortunate disposition of the calendar. From a general point of view, I had hardly advanced a twelfth of the year and before me stretched, obstinate and lined up in an orderly row, eleven lethal months. And, more specifically, that week still had four days to go.
< 5 >


On the other hand, that decisive Monday found me in a terrible mood. I was just beginning to overcome, or to be overcome by, some marital difficulties. If there's one thing I can't stand, it's having my enjoyment contaminated by anger. And that very last Sunday in January was a day on which the joy of playing my horn had been clouded by an exasperating bit of stubbornness on my wife's part.

On Sunday I got up early feeling content. I leisurely lingered over my coffee and read the rotogravures unhurriedly. Later I devoted myself to playing the horn. Toward nightfall, Monica, incredibly enough, preferred our going to the movies to having me play the horn. A shocking scene ensued in which Monica thought it appropriate to go in for screams, tears and reproaches. Her arguments were varied and contradictory. I had just one coherent argument: I repeated that they don't allow horn playing at the movies. My point of view won out and we stayed home. While my sour-faced wife watched an endless television program in the living room, I locked myself in the bedroom and kept playing the horn until I fell with exhaustion. I missed dinner and slept with my clothes on. My exhaustion was extreme and on Monday I awoke after eleven-thirty. And that's how I entered the frigid, mechanistic enclosure which is the bank without having eaten and without having been able to play the horn even for an instant.

Even those who don't cultivate psychological fiction will be able - maybe - to imagine the frenzied state of nervousness and excitation with which I was seized. I suddenly realized that I wouldn't be able to make it to seven in the evening without playing my horn. Pretending to have forgotten my glasses I asked Mr. Ansinelli for permission to go home to look for them. Since I promised to return in ten minutes and since Mr. Ansinelli knew that I lived only two blocks away from the Pacifico branch of the bank, he granted me permission, not without first assuming the severe look with which he reproved me for having morally obligated him to slight his duty.
< 6 >


Running with desperation, I devoured the two blocks which separated me from my house and, as if in a fit of insanity, I frantically began to play the horn, trying to make the absolute most of the few minutes I had. Going down in the elevator I pressed the STOP button when I was between the third and fourth floor and went back up to my apartment. I wrapped the horn in a newspaper and returned to the bank. On the way I thought that it would be a good idea to sell the car. I really didn't need it anyway; after all, I walked to the bank and on weekends I preferred staying at home playing my horn.

"This gentleman is the assistant to the credit officer. He'll be very glad to advise you." Mr. Ansinelli directed these remarks to an impeccably dressed gentleman who looked like a retired general and who awaited me in my office. I learned that he was the proprietor of the famous Patriotic Bubble soda pop plant on Fitz Roy and that he had "hied himself" - he had recourse to this strange verb - to the bank to request a loan toward the acquisition of I don't know what cryptic equipment which, nevertheless - before I could prevent him from doing so - he described at length with an abundance of extractors, pistons, governors and other incomprehensible terms. The man was excessively polite. He aggressively squeezed my hand, lighted my cigaret, absolutely refused to sit down before I did. Then, in a melancholy tone he orally composed a detailed outline of his struggles to advance along the arduous road of progress. Attracted by the sudden remembrance of the first horsedrawn streetcar - one of the horses figures in an ample collection of anecdotes - he suddenly backed away to 1947 only to vertiginously return to 1971 at the controls of one of the modern German trucks of his fleet. Next he spoke to me about his family in general and in particular about a highly intelligent daughter who was studying public relations and on whom he and his wife pinned their highest hopes. At this point he took out his billfold with a furtive gesture that made me think he would attempt to bribe me in an effort to obtain the loan. However, what he showed me was a snapshot of the daughter who was studying public relations; I glimpsed some hair and a pair of eyeglasses.
< 7 >


To mitigate his uncontainable autobiography I handed him some blank forms and told him to fill them out. While the soda man was writing with an iron hand, I bent over - as if to look for a piece of paper in the box under the desk - and quickly blew on the horn. The man didn't hear a thing and kept writing. Now he had unfolded his identification and his social security card whose numbers he determinedly was copying. Then, taking advantage of the fervent buzzing of voices that held sway in the bank at that hour of the day, I'd bend over from time to time and stealthily play my horn, producing a few short and muffled notes.

And playing the horn under those circumstances is just like smoking in a railroad car in which it's not permitted. The lawbreaker smokes nervously, fearful of the conductor's approach, a passenger looks at him disapprovingly; smoking is no longer a pleasure but only a reason to be fined. In that kind of situation it's better not to smoke, not to play the horn. The soda man, his mouth over the papers as if he were going to eat them, framed a question for me every so often (he called it a doubt). The passenger, even though it's at the risk of having to stand for the rest of the trip, can change cars. This is not possible for the horn player.

Without thinking about it I took the horn out of the box, and pointing its white, calla lily shaped bell at the greyish head of hair poring over the forms, I blew with all my heart and soul and wrung a short high-pitched note out of it which blew a few strands of hair out of place on the soda man's head. Frightened, he raised his head and stared at me in wide-eyed wonder.

"Oh, for your kids," he smiled as he doubted.

"I have no children," I responded with tranquil ferocity. "It's mine and I play it whenever I feel like it."

To emphasize this affirmation, I blew even harder, and not for just a few seconds this time, but for more than a minute. My office is nothing more than a glass partition with a little sign saying CREDIT: I rose in my seat a little to be able better to observe the effect produced by the unexpected sounds. All the employees and customers conticuere intentique ora tenebant, as if I were Aeneas and the soda man, though it grieve us, queen Dido. Then, idiotically epical, I thought: "Let it be as God wills."
< 8 >


I brought my horn to my lips and, having recourse to all the variants permitted to me by the rudimentary structure of the instrument, I began to play in earnest. At times I'm a bit theatrical; not satisfied with the confined quarters of the credit office, I emerged in the lobby, climbed onto the counter with an agility not devoid of a certain faun-like quality and began to march up and down on it from one end to the other. The customers fearfully removed their elbows from the counter. It gratified me to be the unquestioned protagonist of the episode; it cheered me to see everyone else in confusion. I heard fragmentary comments: "It's a strike"; "It's an act of repudiation"; "I think it's an employee whose wife just died."

At that moment I saw Mr. Ansinelli swiftly advancing; he had the bearing of a Providence-sent man whose appearance was breathlessly awaited by a multitude which faced insoluble problems. Scarlet, he entreated me in quite a loud voice. "Mr. Del Prete, be so kind as to go to the Manager's Office immediately. I must speak with you."

I responded by intoning a sort of outlandish burst of laughter on the horn. The bystanders were overcome by a general hilarity which made Mr. Ansinelli look like a fool. Then, renouncing his earlier majesty, Mr. Ansinelli attempted to knock the horn out of my hand. An angelic grace guided my movements; with elegance, maintaining my poise, I leaped from the counter into the area meant for the public. Thus entrenched, I looked at it triumphantly and executed a couple of bellicose blasts in which a scornful challenge was implicit. What a grotesque figure Mr. Ansinelli was as he laboriously clambered up on the counter, dragging his high position, his fifty-five years and his 200 pounds after him! And how hilarious as he came crashing down into the public area trailing behind him the same attributes as when he had climbed up!

Immediately getting to his feet, Mr. Ansinelli charged me like a fighting bull. I broke into a swift zigzagging run keeping up my horn playing, stepping on feet and jabbing my way through with my elbows. Uncannily, an affair which had been private and artistic turned into one that was public and political. An absurd panic spread through the tranquil banking premises. People began to run and shout. A lady intuitively protected the nursing child she was carrying in her arms. A few misfits took advantage of the situation by making off with the ballpoint pens, breaking the chains with which they were fastened to the wall. Two men began a fistfight. I could hear the noise of glass shattering and right then I was captured.
< 9 >


When the effects of the tear gas had dissipated and when the minions of the police force had pulled out, calm was laboriously restored. Mr. Ansinelli, after hysterically placing several telephone calls, rushed to the bank's main branch and came back with the victorious order to fire me on the spot. Our bank is efficient, I'll give them that; in just a few minutes they had arranged my dismissal, they had paid me and I was on my way out of the bank with my horn under my arm.

Since I didn't know what the street was like at five on a Monday afternoon, I decided to wander around down there until seven o'clock. Curiously, now that I could play my horn I no longer had any desire to do so. I went all the way to Dorrego Street and began to walk toward the flatland. The whistle of a train that was passing overhead, off to the right, seemed to inspire me briefly. I couldn't get myself to play more than one or two notes; I was no longer interested in the horn. When I got to the polo field I tossed it at a cat that was suspiciously watching me through the iron grillwork. And that's where the horn remained, at the foot of some bushes. I have no idea whether or not someone later picked it up.

But what really strikes me as weird is the fact that hardly had I forgotten the horn when, as I was getting ready to cross Libertador Avenue, I strangely came upon Maria Alejandra who, dressed in a sort of man-tailored suit, was taking a diminutive mouselike Mexican dog for a walk.