தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, October 07, 2016

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் ::: அத்தியாயம் ஒன்று



அத்தியாயம் ஒன்று 

லாரியில் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். பீடி குடித்துக்கொண்டிருக்கும் டிரைவர் துரைக்கண்ணு வுக்குப் பக்கத்தில் தேவராஜன் உட்கார்ந்திருந்தான். எப்பொழுதும் போல தனது தனித்துவத்தைக் காட்டிக் கொள்கிற தோரணையில் அவன் படித்துக்கொண்டி ருந்தான். அவன் கையில் 'அட்லாஸ் ஷ்ரக்ட்' என்று தலைப்பிட்ட புத்தகம் இருந்தது. அவன் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசதியோடும் வளத்தோடும் வாழ்கிறவன். கிராமத்துப் படிப்பாளி. அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் பி.டி. அஸிஸ்டண்டு. இந்த மனிதர்களோடு மனத்தால் ஒட்டாமல் இருக்க விரும்புகிறவன். லாரியின் இடது ஓரமாய்த் தொத்தி உட்கார்ந்திருந்த கிளீனர் பையன் பாண்டு, தேவராஜனுக்கும் தனக்குமிடையே உட்கார்ந்து உறங்கி விழுந்து கொண்டிருந்த கிழவரையும், வெளியே தெரியும் வேடிக்கைகளையும் கண்டு ரசித்துக்கொண்டி ருந்தான். அரை நிஜாரும் அழுக்குப் பனியனும் போட்டுக் கொண்டிருந்த பாண்டு, துரைக்கண்ணுவின் தயாரிப்பு ; சீடன். லாரியின் பின்புறத்தில் மூவர் நின்றுகொண்டி ருந்தனர். அந்த மூவரும் இடுப்பு வேட்டியைத் தலைப் பாகையாகக் கட்டிக்கொண்டு கோவணத்துடன் இருந்தார்கள். இந்தப் பகுதியில் உள்ள கிராமத்து ஏழைகள் அநேகமாக அப்படித்தான் திரிகிறார்கள். இன்னும் சற்றுத் தூரம் சென்றால் மேலும் பலர் லாரியில் ஏறுவார்கள். பஸ்ஸுக்கு என்ன சார் ஜோ அதே பணத் தைப் பாண்டு அவர்களிடம் வசூலிப்பான். லாரி டிரைவர் துரைக்கண்ணு, வசூலித்த பணத்திற்குப் பாண்டுவிடம் கணக்குக் கேட்பானே தவிர பங்கு கேட்கமாட்டான். ஆனால் பாண்டு தானாகப் போய் லாரிக்கு ஆள் சேர்த்தால் துரைக்கண்ணு கோபித்துக் கொள்வான், சில சமயங்களில் பாண்டுவை அடித்துக்கூட விடுவான். 

டிரங்கு ரோடில் உள்ள ஆலம்பட்டிக்குப் பக்கத்துக் கிராமங் களிலிருந்து சரக்கு ஏற்றி வரும் லாரி அது. எப்போதா தொலை தூரப் பயணம் போகும். வண்டி மிகவும் பழசாக விட்டதால் இப்பொழுது சில மாதங்களாகத் துரைக்கண்ணு அதை நம்பி எடுத்துக்கொண்டு வெளியூர்ப் பயணங்கள் போவதில்லை. 

ஆலம்பட்டியிலிருந்து கிழக்கே பிரிகிற மலைப்பாங்கான ரோடுகளில் இருபது மைல் தொலைவில் உள்ள கிராமங்களைச் சுற்றிக்கொண்டு குமாரபுரத்துக்குப் போய்ச் சேரும் லாரி அது. ஆலம்பட்டி, ரயில்வே ஸ்டேஷனுள்ள மிகச் சிறிய ஊர்தான் என்றாலும் இரண்டு டிரங்கு ரோடுகள் ஒன்றை ஒன்று குறுக்கிடுகிற 'கூட்டுரோடு' ஜங்ஷனாக இருப்பதால் லாரிக்காரர்கள், கமிஷன் வியாபாரிகள், காய்கறி சப்ளை செய்யும் கிராமவாசிகள் முதலியோரின் நடமாட்டம் மிகுந்த ஏற்றுமதி இறக்குமதி ஸ்தலமாக அந்தப் பிரதேசத்திலேயே பிரபலமாகி இருந்தது. இரண்டு மூன்று டீக்கடைகளும், ஒரு ஓட்டலும், அதன் முன்னே வரிசையாக நிற்கும் லாரிகளும், எக்ஸ்பிரஸ் பஸ்களும், ஒரு பெட்ரோல் பங்க்கும், பஸ் பிரயாணிகள் இறங்கிக் காலாறும் இடமாக இருப்பதால் சந்தடியும் அதை ஒரு பெரிய ஊரின் கடைத்தெரு மாதிரி ஆக்கியிருக்கிறது. மற்றபடி அந்த ஊரில் தெருக்களோ வீடுகளோகூடக் கிடையாது. 

காலையில் வண்டி நிறையக் காய்கறி மூட்டைகள், பூக்கூடைகள், வாழைத்தார்கள் லோடு ஏற்றிக்கொண்டு வரும்போது இந்த லாரிகளில் பிரயாணிகள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த லாரியில் கிளீனர் பாண்டுவோடு வேறு யாராவது ஓரிரு வியாபாரிகளோ அல்லது கமிஷன் ஏஜெண்டுகளோ முன் பக்கத்தில் அமர்ந்திருப்பார்கள். 

துரைக்கண்ணு அவர்கள் யாரிடமும் அதிகம் பேச மாட்டான். பாண்டுதான் அவன் சார்பாக யாரிடமும் எதுவும் பேசுவான். அதைத் துரைக்கண்ணு கவனித்துக்கொண்டிருப் பான். ஆனால் பாண்டு தவறாகவோ, சரியில்லாமலோ, இவன் நினைக்காத மாதிரியிலோ ஏதாவது சொல்லிவிட்டால் மட்டும் எல்லார் முன்னிலையிலும் சத்தம் போட்டுக் கெட்ட வார்த்தை சொல்லி அவனைத் திட்டுவான் துரைக்கண்ணு. பாண்டு அதனால் சிறிதும் பாதிக்கப்படாமல், ஆனால் மெளனமாகி, அவனைப் புரிந்துகொண்டு அவனுக்காகத் தொடர்ந்து பிறரிடம் பேசுவான். துரைக்கண்ணு எப்போதும் 




கோபமாயிருப்பதுபோல் தோன்றுவான். ஆனால் பாண்டுவோடு திரும்பி லாரியில் வரும்போது அவனிடம் அன்பாகப் பேசுவான். தான் கோபித்துக் கொண்டதற்குச் சமாதானம் கூறுவான். தமாஷ் பேசுவான். அப்போது பாண்டு மட்டும் தனியாக இருக்க வேண்டுமென்பதில்லை. இவன் கோபித்துக் கொள்ளும் போது, கூட இருந்தவர்களைத் தவிரப் புதிய மனிதர்களின் கூட்டம் எவ்வளவு இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், பாண்டுவைச் சமாதானம் செய்வான் துரைக்கண்ணு. 

ஆலம்பட்டிக்கும் குமாரபுரத்துக்கும் பதினைந்து மைல் இருக்கும். இடையில் பத்து மைலுக்கு மலைப் பாதை. மலை என்றால் பெரிய பெரிய மலைகளில் ஏறிப் போவதற்கும்  இதற்கும் அதிக வித்தியாசமில்லாதபடி இந்தப் பத்து மைல் களுக்குள்ளாகவே நான்கு ஹேர் - பின் வளைவுகள் உண்டு. மலைப் பாதை முடிவடைகிற இடத்தில் கிருஷ்ணராஜபுரம் என்ற அழகான சிறிய கிராமம் இருக்கிறது. லாரியில் ஏற்றுகிற பெரும் பகுதி காய்கறிகளும், புஷ்பங்களும் கிருஷ்ண ராஜபுரத்தில் இருந்துதான். அதற்கு அப்புறம் உள்ள ஐந்து 

மைல் தூரத்தைக் கடப்பதற்குள் பிரிந்து செல்லும் பாதை களின் வழியே சென்று குறிஞ்சிக்குப்பம், மானகிரி, பூண்டியான் பட்டு போன்ற கிராமங்களைச் சுற்றிக் குமாரபுரம் வந்தடையப் பத்து மைல்களாகிவிடும். 

ஆலம்பட்டிக்கும் குமாரபுரத்துக்கும் இடையே நேரான பஸ் போக்குவரத்தும் உண்டு. ஆனால் ஒரு பஸ்ஸை விட்டு விட்டால் பிறகு நான்கு மணி நேரம் காத்திருக்க நேரும். அப்போதெல்லாம் மக்கள் இந்த லாரிகளையே எதிர்பார்ப் பார்கள் . 

ஐந்து மணி பஸ் போய்விட்டது. இனிமேல் கலை பஸ்தான். பாண்டு இன்றைக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தான். அவன் எதிர்பார்த்த அளவுக்குப் பிரயாணிகள் சேராததே அதற்குக் காரணம். துரைக்கண்ணு இன்றைக்கு மிகவும் குஷியாக இருந்தான். அதற்கு ஒரு காரணமும் இல்லை , அவன் முகம் கோபமாக இருந்தாலும், அவனுள்ளே எப்போது ஆனந்தமாகத்தான் இருக்கிறான். இரண்டுக்குமே காரணம் இல்லை. அவன் வாயில் வீடியோடு பாட்டுப் பாடிக்கொண்டே லாரியை ஓட்டினான். 

அவன் எப்போதும் ஏதாவது கற்பனையாகப் பாடுவான். சின்னக் குழந்தை மாதிரி வாயில் வந்ததை உளறுவான். அந்த உளறல்களைப் பாண்டுவிடம் திரும்பச் சொல்லச் சொல்லி வற்புறுத்துவான். பாட்டின் அடிகளையும் தன்கூடச் சேர்ந்து பாடச் சொல்லுவான். பாண்டு சில சமயத்தில் இந்த விளை யாட்டில் கலந்து கொண்டு அவனோடு பாடுவான்; அவன் உளறுகிற மாதிரியே சிரித்துக்கொண்டு அவனுக்காக உளறுவான். 

துரைக்கண்ணு இப்போது பாடுவது படித்துக்கொண்டி ருந்த தேவராஜனுக்கு இடைஞ்சலாக இருந்தது; புத்தகத்தை மூடினான். திடீரெனப் பாட்டை நிறுத்திக் கொண்டு பாண்டு விடம் தாழ்ந்த குரலில் கேட்டான் துரைக்கண்ணு : 

'பின்னாலே யாரும் பொம்பளைங்க இல்லையேடா?" "பொம்பளையுமில்லை; ஆம்பளையுமில்லை. நீங்க பாத்தீங்களே... அந்த மூணு பேர்தான்." 

'ஏண்டா, அந்த மூணு பேர் ஆம்பளையில்லியா?" என்று சிரித்தான் துரைக்கண்ணு. சிரித்துவிட்டுத் தொடர்ந்து பாடினான். அவன் குரல் அவன் மீசையைவிட முரட்டுத்தன மாயிருந்தது. 

குருவிக்காரியை வரச்சொல்லி குளிக்கச் சொன்னான் குப்பன் குருவிக்காரி குளிச்சு முழுவிக் குடிசைக்குள்ளே போனாள் - அவ 

குடிசைக்குள்ளே போனாள் என்று துரைக்கண்ணு பாட, பாண்டு அதே ராகத்தில் பாட்டின் கடைசி அடியைக் கூடச் சேர்ந்து பாடினான். 

ஆமாம் - குடிசைக்குள்ளே போனாள் கொஞ்ச நேரம் ஆனததுக்கப்புறம் 

குப்பன் குளிக்கப் போனான் ..... என்று பாடினான் துரைக்கண்ணு. பாண்டுவும் அந்த வரியை அவன் பாடி நிறுத்திய பிறகு தாளம் போட்டுக் கொண்டு பாடிச் சிரித்தான். 
பக்கத்தில் உட்கார்ந்திருந்த தேவராஜன் ரகசியமாகப் பாட்டை ரசித்து வாய்க்குள் சிரித்துக்கொண்டான். துரைக் கண்ணு பாடிய ராகம் தன் பள்ளியில் குழந்தைகள் பாடுகிற 'நர்ஸரி ரைம்' மாதிரி ....குப் குப் குப் குப் ரயில் வண்டி மெட்டை ஞாபகப்படுத்தியது தேவராஜனுக்கு. அவன் சிரிப்பைக் கவனிக்காத துரைக்கண்ணு தொடர்ந்து பாடினான்: 

குருவிக்காரன் அங்கே வந்து குய்யோ முறையோ என்றான் குருவிக்காரி குளிச்சாலென்ன 

குடியா முழுகிப் போகும்? என்று பாடி, பாண்டுவிடம் திரும்பி "சொல்லேண்டா..' என்று கத்தினான் துரைக்கண்ணு : 

குடியா முழுகிப் போகும்? பாண்டுவும் அதே ராகத்தில் கூடப் பாடினான். 

அட குடியா முழுகிப் போகும்? குருவிக்காரியைக் குருவிக்காரன் கூட்டிக் கொண்டு போனான் கூட்டம் போட்டுப் பஞ்சாயத்தார் குப்பனைக் கூப்பிட்டாங்க ; குருவிக்காரியைக் குடிசைக்குள்ளே குப்பன் விட்டது தப்பாம் குப்பனும் குளிச்சு விட்டதனாலே 

குத்தம் உண்டோ ஐயா . இப்போது தேவராஜன் வாய்விட்டே சிரித்தான். 

"இது என்னா பாட்டு ? சினிமாவிலேயா?' என்று தேவராஜன் கேட்டான். 

"இதெல்லாம் நமக்குச் சொந்தப் பாட்டுதாங்க. நம்ப டீக்கடை குப்பன் இல்லே.... அவன் முந்தா நாளு ஒரு குருவிக்காரிச்சியை ... " என்று சொல்லிச் சிரிக்க ஆரம்பித்தான் துரைக்கண்ணு. 

"குருவிக்காரின்னா கொறத்திதானே?” என்று பாண்டு கேட்டான். 

"இந்தப் பக்கமெல்லாம் எல்லாரையும் கொறத்தின்னு சொல்றாங்க. பட்டணம் பக்கமெல்லாம் என்னடான்னா எல்லாரையுமே குருவிக்காரிச்சின்றாங்க. ஆனா குருவிக்காரி வேறே; கொறத்தி வேறே ..... என்னா பெரியவரே. இதெப்பத்தி நீங்க என்னா நெனைக்கிறீங்க?" என்று இவன் பாட்டு சத்தத்தில் விழித்துக்கொண்ட கிழவரிடம் கேட்டான் துரைக் கண்ணு. அவர் கொஞ்சம் தீவிரமாக யோசித்தார் : 

"குறவர்ன்னா - இந்த நரிக்குறவருங்க. குருவிக்கார வேறே” என்று கிழவர் விளக்கம் தந்தார். 

லாரி திரும்பி மலைப்பாதையை நெருங்கிற்று. 'மலைப்பாதை. பார்த்துச் செல்லவும்' என்று அறிவிக்கிற பலகையின் அருகே நடந்து போய்க்கொண்டிருந்தான் வா மனிதன்; அவன் தன் பின்னால் லாரி வருகிற சத்தம் தேவை திரும்பிப் பார்த்து நின்றான். 

அவ்வளவு தூரத்திலிருந்தே அந்த மனிதன் அந்தப் பிரதேசத்துக்குப் புதியவன் என்று தெரிந்தது. செம்மண் படிந்து வெளிறிய ரோஸ் நிறமாகி விட்ட அவனுடைய பைஜாமாவின் பாத ஓரங்கள் கரிய அழுக்கேறி நைந்து தேய்ந்து இருந்தது. மலைக் காற்றில் தாறுமாறான அவனது சிகை விசிறிப் பறந்து நெற்றியில் கவிந்து பார்வையை மறைத்ததால் அவன் தலையை அண்ணாந்து கொண்டு இந்த லாரியைப் பார்த்தான். அவனது வெள்ளை ஜிப்பாவின் மேல் அநாவசியமாக ஒரு துணிப் பட்டையைக் கட்டிக் கொண்டிருந்தான். தோள் வழியே ஓர் 

ஆலிவ் நிற மிலிட்டரிக்கார 'கிட்' மூட்டை போல் முதுகில் வழிந்து கிடந்தது. இடது கையால் அதைப் பிடித்துக்கொண்டு வலது கையில் புத்தம் புதிய லெதர் ஸ ட்கேஸ் ஒன்றும் வைத்திருந்தான். காலில் மிக நைந்து போன ஒரு ஹவாய். 

அவன் பஸ்ஸை நிறுத்துவதற்காகக் கையை ஆட்டவோ குரல் கொடுக்கவோ இல்லை. மலைப் பாதையை ரசித்துக் கொண்டு நடந்து போகிற உல்லாசத்தில் ஒரு பறவையை ரசிக்கிற மாதிரி, மலைகளுக்குப் பின்னால் கவிந்து சுருண்டு எழுந்து பளபளத்து நிற்கிற வெள்ளிய மேகக்கூட்டத்தைக் கண்கள் இடுங்கப் பார்க்கிற மாதிரி, பின்னால் இரைச்சலிட்டுக் கொண்டு வருகிற இந்த லாரியையும் அவன் நின்று ரசித்தான். தனக்காக இந்த லாரி நிற்குமென்றோ, நிற்க வேண்டுமென்றோ அவன் எதிர்பார்க்கவில்லை. 

பாண்டு, துரைக்கண்ணுவிடம், "ஒரு டிக்கெட் வருதுங்க" என்று கெஞ்சுவது மாதிரிச் சொன்னான். அப்போதுதான் தேவராஜன் அந்த மனிதனை அருகில் பார்த்தான். லாரி வேகம் குறைந்து அவன் பக்கத்தில் போய் மெதுவாக நின்றது. லாரி நின்றிருக்கும்போது ஓடுவதை விடவும் அதிகமாக இஞ்சின் சத்தம் பேரோசையாக அதிர்ந்தது. இடது ஓரமாய்த் தொத்தி உட்கார்ந்திருந்த பாண்டு குதித்துக் கீழே இறங்கினான். 

அந்த மனிதன், தனக்காக இந்த லாரி நின்றதையும், ஒருவன் இறங்கியதையும் பார்த்தவுடன் எதிர்பாராது கிடைத்த இந்த வசதிக்காக மகிழ்ந்து நன்றி தெரிவிக்கிற மாதிரிச் சிரித்தான். 

அப்போது அவர்கள் எல்லோருக்குமே அவன் ரொம்ப விசித்திரமாகத் தோன்றினான். அவனது கண்களின் நடுவிழி கள் பழுப்பும் நீலமுமாக இருந்தன. ஆனால் அவனது நிறம் ஒன்றும் வெள்ளைக்காரர்களுடையது மாதிரி இல்லை. தேவராஜன்கூட அவனைவிட வெள்ளை நிறமாக இருந்தான். ஆனால் அவனது தலைமுடி செம்பட்டையாயும் முழங்கை யிலும் மணிக்கட்டிலும் அரும்பி இருந்தவை பொன் நிறமாகவும் இருந்தன. அவனது ரோமானிய மூக்கு இந்தப் பக்கத்து மனிதர்களிடம் காணமுடியாத ஒன்று. இவனிடம் தமிழில் பேசினால் புரியுமா? என்ற தயக்கத்துடன் பாண்டு, தேவராஜ னிடம் திரும்பிச் சொன்னான்: "நீங்கதான் கேளுங்களேங்க - எங்கே போறார்னு.” 

தேவராஜன் கேட்பதற்கு முன்னாலே அந்த மனிதன் முந்திக்கொண்டான் : "கிருஷ்ணராஜபுரத்துக்குப் போகணும். பஸ் பூட்டுது. நெக்ஸ்ட் பஸ்... ராத்திரி ஆவுமாமே" என்று சொல்லிக்கொண்டே - இதற்கிடையில் லாரியிலிருந்து இறங்கி அவன் அருகே வந்து லாரியில் அவனை ஏற்றிக்கொள்ள சித்தமாகி இருக்கிற பாண்டுவைப் பார்த்து ஒரு புன்னகை காட்டி - தனது தோளில் இருந்த அந்த 'மிலிட்டரி கிட்டை பாண்டுவின் தோளுக்கு மாற்றினான் அவன். 

பின்புறத்தில் நின்றுகொண்டிருந்த அந்தக் கோவணாண்டி கள் லாரி மேலிருந்தபடியே பாண்டுவிடமிருந்து அந்தச் சுமை யை வாங்கி உள்ளே வைத்தார்கள். கையில் அந்தத் தோல் பெட்டியுடன் அந்த மனிதன் தானும் பின்னால் ஏறப் போனான். பாண்டு அவனிடம், "நீங்க முன்னாலே ஏறிக்குங்க சார்" என்று மரியாதையாகச் சொல்லி, முன் சீட்டில் தன் இடத்தை அவனுக்குத் தந்து தான் போய்ப் பின்னால் ஏறிக்கொண்டான். 

லாரியில் ஏறிக்கொண்டதும் தன் பக்கத்தில் உட்கார்ந்தி ருந்த கிழவரையும் அவரை அடுத்திருந்த தேவராஜனையும் இப்போதுதான் கவனித்தான் அவன். அவர்கள் எல்லோருமே இந்த நேரத்தில் இவனைப் பற்றியே நினைத்துக் கொண்டி ருந்தனர். அவன் தன்னைப் பார்க்கிற சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த தேவராஜன், "கிருஷ்ணராஜபுரத்திலே யாரைப் பார்க்கப் போறீங்க?" என்று விசாரித்தான். அந்த மனிதன் நெற்றியைச் சுருக்கினான். அவனது சிறிய நெற்றியில் மூன்று சுருக்கங்கள் விழுந்தன. மீசை இல்லாத மேல் உதட்டின் மீது வீணைத் தந்தியை வருடுவது மாதிரி இரண்டு மூன்று முறை செய்து கொண்டான். பின்னர் ஒரு நிதானத்துடன் சொன்னான்: 

"நான் யாரையும் பாக்கறத்துக்குப் போவலியே!” - 


இந்தப் பதில் முன் சீட்டிலிருந்த அவர்கள் எல்லோரை யும் ஒரு முறை அவனைப் பார்க்க வைத்தது. பின்னால் நின்றிருந்த பாண்டுகூட இவர்களின் முதுகுக்குப் பின்னா லாரி பலகையில் இருந்த சிறிய சந்து வழியாக அந்த மனிதனை பார்த்தான், 

தனது பதிலினால் அவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியைப் பற்றிய உணர்க்கையே இல்லாமல் அவன் மிகவும் சாதாரண மாக வெளியே திரும்பி அந்த மலைப் பிரதேசத்தை வேடிக்கை பார்த்தான். 

"If I am not Inquisitive" என்று அவனை அழைப்பதுபோல் ஆரம்பித்தான் தேவராஜன். அவன் மறுபடியும் மேல் உதட்டை மீட்டியவாறு திரும்பி தேவராஜனை உற்றுப் பார்த்தான். தேவராஜன் தொடர்ந்து சொன்னான்: 

"நீங்கள் என்ன காரியமாகக் கிருஷ்ணராஜபுரத்துக்குப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டால் என்னால் ஆன உதவியைச் செய்யலாம். நானும் அந்த ஊர்தான். என் பெயர் தேவராஜன்." 

"ஹென்றி" என்று தன் பெயரைச் சொல்லிக்கொண்டு அந்த மனிதனும் தேவராஜனும் நடுவில் இருந்த கிழவருக்குக் குறுக்காகக் கைகளை நீட்டிக் குலுக்கிக் கொண்டார்கள். இவர்கள் ஆங்கிலம் பேசிக்கொள்வதையும் கை குலுக்கிக்கொள்வதையும் பார்த்த பாண்டுவுக்கு ஏனோ சிரிப்பு வந்தது. 

ஹென்றி தனக்குத்தானே பேசிக்கொள்வது மாதிரி தேவராஜனிடம் சொன்னான்: "I am a stranger." இந்த ஊரிலே ரோடிலே நடக்கறப்போ உங்களுக்கெல்லாம் நான் ஒரு ஸ்ட்ரேஞ்சர்... தனியே இருந்தால் am a stranger to myself. என் பேர் ஹென்றி. இந்த ஊரிலேதான் இனிமே இருக்க போறேன் ..... வில்லேஜ் முன்சீப்பைப் பாக்கதுக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா? எனக்கு அவர் கிட்டே கொஞ்சம் வேலை இருக்கு." 

இவன் பேசுகிற தமிழும் சுத்தமாயில்லை . இங்கிலீஷம் சரியாக இல்லை. ஆங்கில உச்சரிப்பு பழகிக் கொச்சை மிகுந்து இருந்தது. தமிழ் உச்சரிப்பு, சோரித்தனமாக இருந்தது. அவன் சொன்ன விஷயம் அவர்களை இன்னும் குழப்புவதாயிருந்தது. 

துரைக்கண்ணு ஒரு ஹேர் - பின் வளைவிலிருந்து லாரி யை ஜாக்கிரதையாகக் திருப்பி உயரமாகப் போய்க்கொண்டி ருந்த நேர்ச்சாலையில் இரண்டாவது கியரைப் போட்டு 'ஹோ' வென்ற இரைச்சலோடு ஒரு மேட்டைக் கடந்த பிறகு 




சமமான தரையில் லாரியை ஓட்டிக்கொண்டு வெகுநிதான மாக இவனைப் பார்த்து, ரொம்ப நேரமாகக் கேட்கலாமா. கூடாதா என்றிருந்த கேள்வியைக் கேட்டான்: "இந்த ஹிப்பி - 

ஹிப்பின்றாங்களே... அதுவா நீங்க?" 

"நோ" என்று அதை மறுத்துவிட்டு I don't know என்று தன்னுள் முனகிக் கொண்டான் ஹென்றி . மறுபடியும் அவன் வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான் ஒரு குழந்தை மாதிரி . 

மலைப் பாதையில் ஓர் இடத்தில் சமதளத்தில் சாலை அருகே ஓர் ஓடையில் கருங்கல் சிலை மாதிரி ஒரு விவசாயப் பெண் குளித்துக் கொண்டிருந்தாள். அவள் லாரியை ஏதோ ஒரு யந்திரம் என்று நினைத்துக்கொண்டாள் போலும். எனவே அவள் தன்னிச்சையாகக் குளித்துக்கொண்டிருந்தாள். ஹென்றி அந்தக் காட்சியைப் பார்த்தான். வண்டியின் முன்புறத்தில் இருந்த கிழவனையும், பின்னால் நின்றிருந்த கோவணாண்டி களையும் தவிர, மற்ற மூவருமே அதைப் பார்த்தார்கள். பாண்டுப் பையன் கூடப் பார்த்தான். அவர்கள் பார்த்தபின் எல்லாருமே ஹென்றியைப் பார்த்தார்கள். ஹென்றி மட்டும் யாரையுமே பார்க்காமல் அந்தக் காட்சி கடந்த பிறகும் கூடக் கழுத்தை வளைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான். அவன் அப்படிப் பார்த்தது துரைக்கண்ணுக்கு எரிச்சலைத் தந்தது; ஒரு தடவைக் கனைத்தான். அப்போதும் ஹென்றி திரும்பாத தைக் கண்டு, "தொரை, தலையை உள்ளே எடுத்துக்கோ" என்று சொல்லி அதோடு நிறுத்த மனமில்லாமல், "பொம்பிளை குளிக்கிறதை அப்படிப் பாக்கிறியே...' என்றான். 

ஹென்றி சிரித்தான்: " நீங்க இதை மாத்திரம்தான் பாத்தீங்களா? கொஞ்ச நாழிக்கு முன்னாலே அந்த ஹேர் - பின் பெண்டுலே வரும்போது வெள்ளை வெளேர்னு ஒரு கன்னுக்குட்டி ஓடிச்சுதே... கீழே பள்ளத்து வயலிலே ' கொச்சின் மார்க், மாதிரி வாலைத் தூக்கிட்டு நம்ப லாரி சத்தத்திலே ரெண்டு துள்ளி துள்ளிச்சதே பாய்ஞ்சு. குதிச்சு அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்திச்சிதே அதைப் பார்த்தேனே நீங்க பாக்கலியா? லாரிக்குக் குறுக்கே இப்ப, கொஞ்சம் மின்னாலே கொரங்குங்க இந்தப் பக்கம் குதிச்சு... இந்தப் பக்கத்துக்குத் தொப் தொப்புனு குதிச்சு ஓடிச்சுதே... அதெப் பார்த்தேனே ... நீங்க பாக்கலே?' 

ஹென்றி சொன்ன பதில் தேவராஜனுக்குப் பிடித்திருந் தது. அவனைப் பார்த்து ஒரு புன்முறுவலில் தன் பாராட்டைத் தெரிவித்துக்கொண்டே சட்டைப் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவனிடம் நீட்டினான் தேவராஜன். 




"நோ... தாங்ஸ். நான் ஸ்மோக் பண்றதில்லே" என்றான் ஹென்றி. தேவராஜன் மாத்திரம் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். சிறிது நேரம் அவர்கள் யாருமே எது? 

பேசவில்லை. லாரி கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. 

"அதோ தெரியுது பாருங்க. அதுதான் கிருஷ்ணராஜபுரம்" என்று தேவராஜன், ஹென்றிக்கு மாலை வெயில் இறங்கி கொண்டிருக்கின்ற ஒரு பசுமை நிறைந்த இடத்தைச் சுட்டி காட்டினான். அந்தப் பசுமை கண்ணைப் பறித்தது. 

"இன்னும் எவ்வளவு தூரம் இருக்குதுங்கோ ?" என்று அந்தத் தூரத்து அழகை வியந்து கொண்டே கேட்டான் ஹென்றி . 

ஃபோர் மைல்ஸ்" என்று தேவராஜன் சொன்னதை மறுத்து, தனக்கும் இங்கிலீஷ் தெரியும் என்று காட்டிக்கொள்கிற தோரணையில் துரைக்கண்ணு சொன்னான்: "நோ, நோ . திரீ மைல்ஸ்தான்." 

பாண்டுப் பையனுக்கு அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 
 

தேவராஜனும் ஹென்றியும் மட்டுமே கிருஷ்ணராஜ் புரத்தில் இறங்கினர். அவர்கள் இருவரும் ஒன்றாகவே வந்தது போலவும் ஒருவருக்கொருவர் ஏற்கெனவே பரிச்சயம் கொண்டவர்கள் போலவும் கிருஷ்ணராஜபுரக் கடைத்தெரு வாசிகளுக்குத் தோன்றினர். பாண்டுப் பையன் லாரியிலிருந்து ஹென்றியின் மூட்டையை இறக்கிய போது தேவராஜனே அதைக் கீழிருந்து வாங்கி வைத்தான். ஹென்றி பாண்டுவிடம் ஓர் இரண்டு ரூபாய்த் தாளை எடுத்து நீட்டியபோது, மீதிச் சில்லறைக் காகக் கால் சட்டைப் பையில் இருந்து கை நிறைய நாணயங்களை அள்ளி அதிலிருந்து இரண்டு எட்டணா, நாலணாக்களைப் பொறுக்கி எடுத்து ஹென்றியிடம் நீட்டினான் பாண்டு. 

ஹென்றி ஒரு புன்னகையுடன், "நீயே வெச்சிக்கோப்பா" என்ற போது பாண்டு தயக்கத்துடன், "இல்லே ஸார், பஸ் சார்ஜ-க்கும் மேலே வாங்கினா அண்ணன் திட்டுவாரு என்று விளக்கினான். ஹென்றி அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கீழே இறக்கி வைத்த மூட்டையைத் தூக்கினான். 

https://ayyanaarv.blogspot.com/2019/01/blog-post_11.htmlஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை சமீபமாய் மீண்டும் வாசித்தேன். என் இருபதுகளில் மிகுந்த உணர்வெழுச்சியைத் தந்த நாவல் இது. ஹென்றி கதாபாத்திரம் என்னுடனேயே தங்கிவிட்டது என்றும் கூட சொல்லிவிடலாம். சில மாதங்களுக்கு முன்பு இந்நாவலின் பிடிஎப் வடிவம் கிடைத்தது. மீண்டும் வாசிக்க விரும்பினாலும் ஒரு சின்னத் தயக்கம் இருந்தது. நம் ஆரம்பகாலத்தில் வாசித்த, மிகவும் பிடித்துப் போன படைப்புகளை இப்போது வாசித்துப் பார்க்கும்போது அது மிகவும் சாதாரணப் படைப்பாக தோன்றிவிடலாம். மோகமுள்ளை மறுவாசிப்பு செய்து அப்படி ஒரு உணர்வை அடைந்தேன். இதையா அப்படி கொண்டாடினோம் என்கிற மனநிலை உருவானது. ஆனாலும் மரப்பசு நாவல் மறு வாசிப்பிலும் பிடித்திருந்தது. ஒரு குழப்பமான மனநிலையில்தான் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை வாசிக்கத் தொடங்கினேன். முழுமையாய் வாசித்தே மீண்டேன். இந்த நாவல் இன்னும் அதிகமாய் என்னை ஈர்த்துக் கொண்டது.


இப்போதைய வாசிப்பில் ஹென்றி கதாபாத்திரத்தை கிரேக்க எழுத்தாளர் நிகோஸ் கஸண்ட்ஸாசிஸ் உருவாக்கிய ஸோர்பா கதாபாத்திரத்தோடு ஒப்பிட முடியும் எனத் தோன்றியது. இருவருமே கணங்களில் வாழ்பவர்கள். பழைய மரபான விஷயங்களை உடைத்து தன்னியல்பான ஒரு வாழ்வை முன்னெடுப்பவர்கள். ஸோர்பாவின் கொண்டாட்ட முறைகள் (குடி, பெண், நடனம்) வேறாக இருந்தாலும் இருவரின் மனநிலையும் ஒன்றுதான் எனத் தோன்றியது. இதயத்திலிருந்து பேசவும் வாழவும் முடிகிற ஒரு மனிதனாக இருவரையும் ஒரே தராசில் வைக்க முடியும்.


ஹென்றியின் வளர்ப்புத் தந்தை கதாபாத்திரமான சபாபதிப் பிள்ளை இன்னொரு அற்புதமான குணவார்ப்பு. அவரின் அடியொற்றித்தான் ஹென்றி என்கிற முழுமையான மனிதன் உருவாகிறான். ஹென்றி பள்ளிக்கூடம் போவதில்லை. அவனுக்கு என்ன செய்யப் பிடிக்கிறதோ அதை மட்டுமே செய்யும் சுதந்திரத்தை பப்பா தருகிறார். பப்பா ஹென்றியிடம் சொல்வது ஒன்றைத்தான் எப்போதும் சந்தோஷமாக இரு அதுவே தர்மம். ஹென்றி அப்படித்தான் இருக்கிறான்.


ஜேகே உருவாக்கியிருக்கும் கிருஷ்ணராஜபுரம் ஒரு கற்பனை கிராமம். ஆனால் கிராம மக்கள் பேசும் வட்டார வழக்கு வட தமிழகத்தின் மொழியாக இருக்கிறது. மல்லாட்டை, காசி என பணத்தை சொல்வது - எளிய மக்கள் சதா எச்சிலைத் துப்பியபடி, துப்பிய எச்சிலின் மீது காலால் மண்ணை நகர்த்தி மூடுவது, வேட்டியை தலைப்பாகையாக கட்டிக் கொள்வது போன்ற விவரிப்புகள் ஒரு வடதமிழக கிராமத்தை அடையாளம் காட்டுகின்றன. மக்களின் பேச்சு மொழியும் வட தமிழக மொழிதான்.


இந்த கிருஷ்ணராஜ புரத்திற்கு ஆங்கிலோ இந்தியனைப் போன்ற தோற்றம் கொண்ட தமிழ் சரிவரப் பேசத் தெரியாத ஹென்றி வந்து சேருகிறான். அவன் வரும் லாரியில் அறிமுகமான தேவராஜனுடன் நட்பு உருவாகிறது. தேவராஜன் அந்த கிராமத்து பள்ளிக்கூடத்து வாத்தியார். அவர் வீட்டிலேயே தங்குகிறான். தேவராஜன் ஒரு முறை ஹென்றியை குடிக்க அழைக்கிறார். ஹென்றிக்கு குடிப்பழக்கமில்லை ஆனால் மறுப்பேதும் சொல்லாமல் தேவராஜனுடன் குடிக்க அமர்கிறான். அவனுக்காக ஊற்றப்பட்ட மது காலியாவதே இல்லை. தேவராஜன் எனக்காக உங்கள் கொள்கையை தளர்த்துகிறீர்களா எனக் கேட்கிறார். ஹென்றி என் கொள்கையே Flexible ஆக இருப்பதுதான் என்கிறார். இந்த வரியைப் படித்துவிட்டு ஒரு கணம் ஆடிப்போனேன்.


எவ்வளவு பெரிய தத்துவம் இது. மனிதன் மட்டும் Flexible ஆக இருந்துவிட்டால், மதங்களும் சாதிகளும் அவனை கூறு போட்டிருக்காது இல்லையா?

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - என்றென்றைக்குமான நாவல்.