- ஓர் கலைஞனின் தேடல் -மு. பொன்னம்பலம் : யதார்த்தமும் ஆத்மார்த்தமும்
-
1
யார் இந்த ஜே. ஜே. ?
சு. ரா. வின் 'ஜே. ஜே. சில குறிப்புகள்' பற்றி விமர்சனம் ஒன்றை நான் எழுத எத்தனித்தபோது, அல்பியர் காம்யூவின் 'அந்நியன்' (The Outsider) பற்றி சாத்தர் (Sartre) எழுதிய காரசாரமான விமர்சனம் என் நினைவில் ஓடி வருகிறது. ஜே.ஜே. நாவலின் ஆரம்பமே அல்பியர் காம்யூவை நினைவு கூர்ந்து எழுவதால் இந்த நினைவு எழுகிறதா அல்லது சாத்தரின் 'அந்நியன்' பற்றிய இறுதி வரிகள் ஏதோ விதத்தில் இந்த நாவலுக்கும் ஒத்துப்போவது போல் தெரிவதால் இது ஏற்படுகிறதா?- -
அந்நியன்' பற்றி சாத்தர் இறுதியில் பின்வருமாறு கூறுகிறார்:
'காம்யூ இதை ' நாவலென கூறுகிறார்... நான் நாவலெனும் பதத்தைப் பாவிக்கக் கொஞ்சம் தயங்குவேன்... அல்லது நாவலெனின் அது 'சாதிக்' (Zadig)கும் 'கான்டீட்' (Candide)டும் நாவல் என்று கொள்ளப்படும் அர்த்தத்தில் தான் கொள்ளப்படும். ஒழுங்கான அங்கதப் பூச்சோடு, விபச்சாரிகளைக் கூட்டிக் கொடுப் யவன், நீதிபதி, அரசு தரப்பு வழக்கறிஞன் ஆகியோர் பற்றிய விவரணக் கதைகளடங்கிய ஒழுக்கவியல் வாதியொருவரின் குறு நாவல் எனக் கூறலாம்...''
சு. ராவின் ஜே. ஜேயும் ஆழமான அங்கதம் இழைய நாயர், அரவிந்தாட்ச மேனன், முல்லைக்கல், ஓமனக்குட்டி, சம்பத் போன்றோரின் விவரணங்கள் அடங்கிய குறு நாவல் எனக் கூறலாமா? -
ஆனால் அப்படிக் கூறுவதற்கு நான் தயங்குவேன். அப்படி மொட்டையாக கூறுவேனாயின் நான் நாவலின் முழுமையையும் அது தரும் செய்தியையும் அறியாத குற்றத்திற்கே ஆளாவேன்.
சாத்தரின் 'அந்நியன் பற்றிய விமர்சனம் ஒருவித நையாண்டியும் சிடுசிடுப்பும் மேலெழ எழுதப்பட்டிருந்தாலும் நாவலின் தத்துவ நோக்குப் பற்றிய விசாரணை, சூழல், அதன் மொழி நடை பற்றிய விசாரணை என்னும் ஆழமான பூரண அலசலில் அவை அடிபட்டுப் போகத் தன்னை நிலை நாட்டிக் கொள்வதோடு 'அந்நியனை'த்தான் ஆட்டங்காணச் செய்கிறது.
ஆனால் நாமோ அவ்வளவுக்குத்தான் போகாவிட்டாலும் இந்த ஜே.ஜே. யார் என்று சரியாகத் தெளிவு பெற்றுக் கொள்ளவாவது வேண்டும்.
ஆமாம் யார் இந்த ஜே.ஜே? இவன் எமக்கு , எமது கலாச்சார சூழலுக்கு அந்நியமானவனா? இவனுக்கும் காம்யூவின் அந்நியனுக்கும் தொடர்பிருக்கிறதா?
இவற்றுக்குப் பதில் காண, நாம் மீண்டும் ' நாவல்' என்று சு.ரா. எழுதிய ஜே ஜே. சில குறிப்புகளுக்கு வருகிறோம்.
இதில் வரும் பாத்திரமான ஜே.ஜே. புதுமையான ஒருவரா?
இல்லை. மேற்கத்தைய இலக்கியங்களில் இவர் மாதிரியான பாத்திரங்களுக்கு அநேக உதாரணங்கள் காட்டலாம். இவர் ஒரு பிறத்தியான் அல்லது அந்நியன். சமூகத்தோடு ஒத்தோடாது உள்ளொளி தேடும் ஒரு பிறத்தியான். இவன் தன் வாழ்க்கையில் தோற்றுப் போனவனாயிலும் தான் வாழ்ந்த சூழலின் போலித்தனங்களையும் பொய்மையையும் சாடியதில் வெற்றி பெறுகிறான். இந்த ரீதியில் பார்க்கும்போது இவன் வரித்துக் கொண்ட வாழ்க்கையின் நோக்கே இதுவெனின், அந்த அளவில் இவன் வாழ்க்கையில் தோற்றுப் போனவன் என்று கூடச் சொல்ல முடியாது. அதாவது ஜே.ஜே. தனது வாழ்க்கையின் செய்தியை பூரணமாக உணர்ந்தே கடைசிவரை இயங்கியவன், அந்த ரீதியில் புதுமையென்றில்லா விட்டாலும் ஜே.ஜே. ஓர் வலுவான பாத்திரம்தான். ஆனால் நாவலின் புதுமை வேறோர் வகையில் உருவாக்கப்படுகிறது. அதாவது நாவலில் வரும் பாத்திரமான ஜே. ஜே. உண்மையாக வாழ்ந்த ஒருவராகவே விவரிக்கப்படுகிறது. - - - - -
அப்படியாயின் ஜே ஜே. உண்மையில் மெய்யாக வாழாத ஒரு பாத்திரமா? ஒரு கற்பிதப் பாத்திரமா?
அப்படி ஒரேயடியாக, ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட முடியாது. காரணம், அது உண்மையாக வாழும் ஒரு மனிதனின் லட்சிய வெளிக்காட்டலாகவும் இருக்கிறது. ஜே.ஜே. ஓர் எழுத்தாளன், ஓவியன், கால்பந்தாட்டக்காரன், மார்க்சீயப் போலிகளிலும் அத் தத்துவத்தின் போதாத் தன்மைகளிலும் அதிருப்திப் பட்டவன்; உள்ளொளி தேடுபவன்.
நாகர்கோவிலில் வாழும் இந்நாவலின் ஆசிரியர் சு.ரா. ஓர் எழுத் தாளர்; ஓவியத்தில் பற்றுடையவர்; கால்பந்தாட்டக்காரர்; மார்க்சீய அனுதாபி; போலி மார்க்சீயவாதிகளில் அதிருப்திப் பட்டவர்; உண்மை தேடுபவர்.
அப்படியாயின் சு. ரா. தான் ஜே ஜேயா? அல்லது ஜே.ஜே. சு.ரா வின் அநுபவ வெளிக்காட்டலுக்கு ஏற்ப வடிகாலிடும் அவரின் கற்பிதமா? இல்லை, அந்த அனுபவ வெளிக்காட்டலுக்கு வடிகாலிடு வதோடு அந்த அனுபவத்தை உக்கிரப்படுத்த வந்த கற்பிதம், ஜே. ஜே. சரியா? -
அப்படியானால் இடையில் துருத்திக்கொண்டு நிற்கும் பாலு? அதற்குப் பின்னர் வருவோம்.
--- --- அப்படியாயின் இதில் என்ன புதுமை இருக்கிறது? எல்லா நாவல் களிலும் வரும் பாத்திரங்கள் யாவும் அந்தந்தக் கதாசிரியனின் வாழ்க்கை அநுபவத்தின் வெளிக்காட்டலுக்குரிய கற்பிதங்கள் தானே?
இதற்குப் பதில் நாம் ஆரம்பத்தில் கூறியதையே திருப்பிக் கூற வேண்டும். அதாவது, நாவல் ஜே. ஜேயை மெய்யாக வாழ்ந்த ஒருவரைப் போலவே விவரித்துச் செல்கிறது. அதுதான் புதுமை.
ஆனால் நாவல் ஆசிரியருக்கேன் இந்த நிர்ப்பந்தம்?
அதாவது மெய்யாக வாழ்ந்தது போலச் சொல்ல வேண்டியதன் நிர்ப்பந்தம்? அப்படி இந்தப் புதிய உருவாக்கத்தின் மூலம் அவர் கருத்துகள் வெற்றி பெறுகின்றனவா? -
அப்படி மெய்யாக வாழ்ந்ததுபோல் எழுதியும் அது மெய்யல்ல என்று தெரியவரும் பட்சத்தில் ஆசிரியரின் கருத்துகள் பலம் உறு கின்றனவா? பலவீனப் படுகின்றனவா? - - - - - - -
ஒவ்வொரு கலை, இலக்கிய உருவத்தின் தோற்றப்பாடும் அது வெளியிடும் கருத்தை உக்கிரப்படுத்தும் நிர்ப்பந்தத்தின் இயல்பான உந்தலே எனின் சு. ராவின் நாவல் வெளியிடும் கருத்துகளும் வெற்றி பெறத்தானே வேண்டும்?
வழமையான நாவல் உருவங்களைக் கொண்ட தரமான நாவல்களின் கருத்துக்களே வாசகரை ஆட்கொள்வதில் வெற்றி பெறும் கின்றபோது, அவற்றைவிட மெய்யான ஒன்றாகப் பிரமையூட்டும் ஒன்று கூடுதலாக வெற்றி பெறவேண்டும். உண்மைதானே?
ஆனால் ஒரு திருத்தம். வழமையான தரமான நாவல்களைப் படிக்கும் வாசகன் ஒருவனின் மன நிலைக்கும் “ஜே.ஜே'யைப் படிக்கும் ஒருவனது மன நிலைக்கும் வித்தியாசம் உருவாகிறது' - ------- - -- ---------
முன்னதைப் படிப்பவன் இடைக்கிடை நாவலால் ஈர்க்கப்பட்டு அதற்குள் அமிழ்ந்து போனாலும் அவனது மனதில் புனையப்பட்ட கதையொன்றைப் படிக்கிறேன் என்ற எண்ணம் கடைசிவரை அடியோடியே நிற்கிறது. ஆனால் பின்னதைப் படிப்பவன் மன நிலை அப்படியல்ல. கடைசிவரை உண்மையான ஒன்றைப் படிப்பதாக நினைத்தே நாவலில் மூழ்கிறான். ஆனால் கடைசியில் அது உண்மையல்ல என்ற உண்மை ஏதேதோ அவனிடம் உள்வெளிக்கும்போது அவனது வீழ்ச்சி பாரதூரமானது. அவன் வீழ்ச்சியோடு அவனைப் பற்றியிருந்த அவன் படித்த “ 'உண்மைக்கதை''யின் கருத்துக்களும் அவனை விட்டு இன்னும் கீழே கீழே வீழ்கின்றன. அதாவது வழமையான நாவல்களைப் படிப்பவன் கனவு காணும்போதே தான் கனவு காண்கிறான் என்ற ஒருவித 'அறிகனவுறுகிறான். அதனால் அவனுக்கு வீழ்ச்சியில்லை. மற்றவன் (ஜே. ஜேயைப் படிப்பவன்) நிஜமென்று கனவில் ஆழ்கிறான். ஆனால் மெல்ல மெல்ல நனவு இமைக்க, விழிப்பில் காலூன்றும்போது அவன் கண்ட கனவிலிருந்து மரக்கொப்பு முறிந்து வீழ்பவன் போல் வீழ்கிறான். ''அட இது கனவா!”-அவன் மனம் அங்கலாய்த்துச் சுருங்குகிறது. அந்தச் சுருக்கம், கனவில் வீங்க வைத்த கருத்துக்களின் காற்றுப் போன தன் சுருக்கம். உதாரணமாக, ஜே.ஜேயின் நூல்களை மொழிபெயர்ப்பதன் மூலம், படிப்பதன் மூலம் மேலும் பல இந்தியக் கலைஞர்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம் வாசகர்களுக்கு ஏற்படத்தானே செய்யும்?'' என்று ஜே.ஜே. பற்றி எழுதும் பாலு கூறுகிறார். ஆனால் ஜே.ஜே. என்ற பிரகிருதியே பொய்யென்று தெரிந்த பின்னர் கற்பனைக் காட்டில் மட்டும் வாழும் அவன் நூல்களென்னும் மாயமானை யார் தொடர்வது? அது மட்டுமல்ல, இந்த நிகழ்வு வேறு இந்தியக் கலைஞர்கள் பற்றி அறிவது, அவர்கள் நூல்களைப் படிப்பது என்கிற லட்சியத்தையே கேலிக் கூத்தாக்காதா?
ஆனால் இக் கேள்விகள், 'ஜே.ஜே' என்ற நூல் வெறும் கனவுக் கற்பனை என்ற முடிவுக்கு மேல் எழ முடியாமல் இருந்தால் மட்டுமே பலமுறலாம்.
'ஜே.ஜே' என்ற நூல் வெறும் கனவுக் கற்பனையா? அல்ல. ஆனால் அந்நூலில் அமைந்துள்ள பாத்திர அமைப்பு முறை, சில கனவுகளின் இயக்க முறைகளோடு ஒத்திருப்பது என்பது வேறு விஷயம். ஜே.ஜே என்ற பாத்திரம் யார்? எதன் உருவாக்கம் அது? என்று நாம் மீண்டும் நம் கேள்விகளை ஆழமாகக் கூர்மைப்படுத்துகையில் தவிர்க்க முடியாத வகையில் நாம் மீண்டும் நாகர்கோவில் சு.ரா. அவர்களிடமே வரவேண்டியிருக்கிறது.
ஜே.ஜே. உருவாக்கம் அல்ல. சு. ராவின் ஆழ்மனக்குரலேதான். அதாவது இன்னும் விரிவுபடுத்துவதெனில், ஜே.ஜே யாருமல்ல சு.ராவின் பிளவுபட்ட மனதின் ஆழ்மனக் (அடிமனக்) கூறே எனலாம். அந்த ஆழ்மனக் கூறின் இலட்சிய இயக்கத்தையே ஜே .ஜே.யாக ஆக்கியிருக்கிறார், சு. ரா. -
இந்த ஆழ்மனம் ஆத்மார்த்தமானது, பிறத்தியானுக்கு (அந்நியனுக்கு) உரியது. சமூகத்தோடு ஒத்தோடாதது. சமூகத்தை புது மரபுத் தளத்துக்கு உயர்த்தப் புரட்சி செய்வது. இந்த ஆழ்மனதில் போர்க்கோலத்தை, இலட்சிய வேட்கையைச் சுய இருப்பாக்கி, அதன் மூலம் பிளவுபட்டியங்கும் மனதை ஒருமைப்படுத்தி வாழும் புரட்சிகர ஆளுமை வெகு சிலருக்கே கைகூடுகிறது. அத்தகைய ஆளுமை அற்றவர்கள் அதன் தாக்குதலை வெளிப்படுத்திச் சமாளிக்க பல்வேறு விதங்களில் இயங்குகிறார்கள். கலைஞர்களுக்கு இதை ஆற்றுப்படுத்துதல் எளிதாகக் கைகூடுகிறது. புரட்சிகர அடிமன இலட்சியங்களை தரித்து வாழும் வாழ்க்கையை, என்றைக்குமே சமூக பழக்க வழக்கங்களுக்கும் அதன் வரம்புகளுக்கும் ஏற்ப ஒத்தோடும் மேல் மனதின் கண்காணிப்பாளரான Super ego அநுமதிப்பதில்லை. அதன் தணிக்கையை மீறும் பலம் எல்லோருக்கும் இருப் பதில்லை. ஆனால் கலைஞர்கள் அதை சில ஆழ்மனக் கனவுகள் மீறும் பாணியில் - மீறும் தந்திரோபாயங்கள் உடையவர்,
இங்கே சு.ரா. தன் ஆழ்மனக் கூறை சுய இருப்பாக்கி, தன் பிளவு பட்ட மனதை ஒருமையுறச் செய்து வாழவில்லை. அதாவது அவர் ஆழ்மனம் அவாவும் ஜே.ஜேயாக மாறி அவர் வாழவில்லை. இடையில் துருத்திக்கொண்டு நிற்கும் மேல் மனதின் பாலுவாகத்தான் வாழ்கிறார். ஆனால் அவர் கலைஞராகையால் தன் ஆழ்மன உந்தல்களை 'ஜே.ஜே. சில குறிப்புகளாக மாற்றியுள்ளார். இந்த ஜே.ஜே என்னும் பாத்திர வார்ப்புக்கு இன்னும் மெருகூட்ட உண்மையாகவே வாழ்ந்த சில அனாமதேய புத்த ஜீவிகளின் சில வாழ்க்கைக் குறிப்புகளையும் பயன்படுத்தியிருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் அதற்காக ஜே.ஜே. சு.ராவுக்கு அந்நியமானவனல்ல. அது அவரே தான். வீண் கற்பனைப் புனைவுகளில் காலூன்றாது தன் காலிலேயே நிற்க இயலும் ஜே ஜே என்னும் சு.ரா.
ஜே ஜே. சு. ராவின் அடி மனம் என்றால் பாலு என்பவர் சு.ரா. என்னும் எழுத்தாளனுக்குரிய Super ego. இந்த Super ego வை மீறி சு. ராவால் ஜே.ஜே.யாக வாழ்ந்திருக்க முடியாது. எனவே அந்த லட்சிய நிறைவேற்றத்தை அவர் வேறு விதமாக நிறைவேற்றுகிறார். எப்படி அமுக்கப்பட்ட அடி மன ஆசைகள், பீதிகள், பிறழ்வுகள் என்பன கனவுகளில் Super egoவின் தணிக்கையை மீறி வெளிவருவதற்கு மாறுவேடங்கள் கொள்கின்றனவோ, அவ்வாறே இயங்கும் சு.ராவின் அடிமன லட்சியம் பாலுவின் தணிக்கையை மீறி வருவதற்கு 'ஜே.ஜே. சில குறிப்புகள்' என்னும் நாவல் போர்வையில் வெளிவருகிறது.
ஆனால் இங்கே இன்னோர் மனோவியல் பாங்கான சிக்கல் ஒன்றும் ஏற்படுகிறது.
பாலு super egoவாக இயங்கும் அதேநேரத்தில் ஜே.ஜேயின் போக்குகளை அவாவி நிற்கும் பிளவுபட்ட பாத்திரமாக, மனமாக, ஒரு split personality ஆகவும் இயங்குவதுதான் இன்னோர் முக்கிய அம்சமாகும்.
இதோ பாலு கூறுகிறான்: 'ஜே.ஜேயைப் படித்தபோது பயம் ஏற்பட்டது என்றேன். என்ன பயம்? பயம் ஏற்பட என்ன இருக்கிறது? ஆனால் பயந்தான். நான் நம்பும் உலகத்தை இல்லாமல் ஆக்கி விடுவானோ என்று பயம். நான் நம்பும் உலகத்தை இல்லாமல் ஆக்கி அதன் மூலம் என்னை இல்லாமல் ஆக்கி விடுவானோ என்ற பயம். கனவுகளுக்கு அவன் எதிரி. எனக்கோ அவை தின்பண்டம்.'' என்று அவன் கூறும்போதும், "ஜே. ஜே. என் மனதில் எத்தனையோ சஞ்சலங்களை ஏற்படுத்திவிட்டான். பழக்கத்தில் ஆழ்ந்து போகும் என் அடிமைப் புத்தி அவனால் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்பட்டு விட்டது'' என்று கூறும்போதும் எப்படி பாலு ஜே. ஜேக்கு எதிரான super ego ஆக இயங்குகிறான் என்பதையும், நான் ஆகவேண்டியதை ஜே.ஜே ஆகி ரத்தமும் சதையுமாக என் முன் நிற்கிறான்'' என்று கூறும்போதும், ''எனக்கு அவனில் கோபம், எனக்கு அவனில் மோகம்'' என்று கூறும்போதும் பாலு எப்படி ஜே.ஜே. எனும் இலட்சியத்தோடு காதலுற்றிருக்கிறான் என்பதையும் அதன் மூலம் அவனது பிளவுபட்ட இரட்டைத் தன்மையையும் நாம் காணலாம். இந்த நாவல் ஓர் எழுத்தாளனின் case history என்றால் என்ன? அதனால் அதுவும் கெட்டு விடுகிறதா? இல்லை, மாறாக வாழ்க்கையின் ஆழமான தரிசனங்களே மினுக்கமுறு கின்ற ன. -
அடி மனதுக்குரிய ஆழமான விஷயங்கள், அமுக்கப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் ஆத்மார்த்த தளத்துக்குரியவை, அந்நியனுக்குரியவை. அந்நியன் ஆத்மார்த்த தளத்தின் கரையோரப் பிரதேசங்களில், மையப் பகுதிகளில், உச்சப் பகுதிகளில் எல்லாம் வாழுபவன். அந்நியனின் தரங்கள், அவன் வாழும் ஆத்மார்த்த பகுதிகளின் இவ்விடங்களிலிருந்தே பெறப்படும். அந்நியன் என்பவன் தன் காலச் சமூகத்தோடு ஒத்தோடாது முரண்டு நிற்பவன். தன் காலச் சமூகமரபை புதிய உயர் தளத்துக்கு இழுத்துவிடப் போராடு பவன்,
ஜே.ஜே. என்னும் நூல் இன்றைய சமூகத்தில் ஓர் அந்நியனின் போராட்டம் பற்றியது. இவ்வந்நியர்களுள்ளும் பல்வகை தரங்கள் உள்ளன என்றோம். அவரவர் அறிவு, கல்வி, வாழ்வின் நோக்கு என்பவற்றால் இவர்களின் தரங்கள் வேறுபடலாம். ஆனால் இவர் கள் எல்லோருக்கும் உரிய பொதுப்பண்பு, சமூகத்தோடு ஒத்தோடாமை.
ஆழமான அறிவும் லட்சிய வேட்கையும் கொண்ட ஒருவன் -அந்நியன்-உளுத்துப்போன மரபை உடைப்பதற்காகவே இயங்குகிறான். சந்தர்ப்பம் வரும்போது தன் ஆளுமைக்குரிய இயக்கங்கள் மூலம் மரபை உடைக்கிறான்; புதிய மரபு உருவாக்கம் நிகழ்கிறது; சமூகம் புதிய தளத்துக்கு உயர்த்தப்படுகிறது. இவர்களுள் மிகவும் தரத்திலும் அறிவிலும் குறைந்தவன், சமூகத்தில் மலட்டுத் தன்மையை ஏதோவிதத்தில் உணர்ந்து கொள்கிறான். எனினும் அதைப் புதிய தளத்துக்கு ஆற்றுப்படுத்தும் அறிவும் ஆற்றலும் அவனுக்கு இருப்பதில்லை. எனவே அவன் தனது மரபுடைப்பைத் தனக்குத் தெரிந்த அராஜகத்தோடு இணைக்கிறான். அவன் psychopathy என்று பெயர் எடுக்கிறான். எனினும் இவர்களது மரபுடைப்பும் சமூகத்தின் தேக்கத்தைத் தகர்த்து வளர்க்கவே செய்கிறது. எதிர் மறையாகவேனும் இருப்புவாதம் இவர்கள் நிலைகளை விளக்குகிறது.
ஜே.ஜே. இவர்களுள் எந்த வகையைச் சேர்ந்தவன்?
நிச்சயமாக ஜே.ஜே முதல் தரத்துக்கு உரியவன் என்பதில் சந்தேக மில்லை .
-
3 ஜே.ஜே. ஒரு புத்திஜீவி, எழுத்தாளன். தத்துவ விசாரங்களில் ஈடுபாடுடையவன். குறிப்பாக மார்க்சியத்தில் அதிக ஈடுபாடு காட்டியவனாயினும் அதன் போதாத்தன்மையிலும் அதைக் கடைப் பிடிப்போரின் போலித்தனங்களிலும் அதிருப்தி கொண்டவன். அதனால் தனக்குள் * மூன்றாம் பாதை' ஒன்று வகுத்து உள்ளொளி தேடி இயங்கியவன். இதோ 'ஜே.ஜே. சில குறிப்புகளில் ஜே, ஜேயின் நண்பர்களில் ஒருவரான பேராசிரியர் அரவிந்தாட்ச மேனன் மூலம் அவனது பிரச்சனைகள் விளக்கப்படுகின்றன; ''ஒன்று, நேராக மனித மனதை மேல் நிலைப்படுத்துவது. இரண்டு: புற உலகை மாற்றி அதன் விளைவாக மனித மனதை மேல் நிலைப் படுத்துவது. ஜே. ஜே.யின் பிரச்சினை இதுதான். இந்த இரண்டு பாதைகளில் எந்த ஒன்றிலும் அவனால் போக முடியாது. எதுவும் முற்றாகப் பொய்யுமல்ல. முற்றாக உண்மையு மல்ல. ஆறுதலுக்காக நம்புவது என்னுடைய வேலை அல்ல. அதை விடவும் மனங்கசந்து இறந்து போகலாம்'' என்றான் அவன். ''மூன்றாவது பாதை' என்னும் தலைப்பில் அவன் குறிப்புகளை எழுதிவருவதாக சொன்ன தும் சட்டென விஷயம் புலப்பட்டது பேராசிரியருக்கு.''
பேராசிரியருக்குப் புரிந்தது என்ன? நாங்கள் புரிந்து கொள்வது என்ன ?
நாம் உள்ளுணர்வாகவே நிலையைப் புரிந்து கொள்கிறோம். பேராசிரியரின் நிலையும் அஃதே. ஆனால் இன்னதுதான் ஜே.ஜேயின் நிலை என்று நாம் திட்டவட்டமாகக் கூறமுடியாது. அப்படிக் கூறு வதற்கு ஜே.ஜே. 'மூன்றாவது பாதை' பற்றி எழுதிய குறிப்புகளை பாலு தரவில்லை. பாலு தராவிட்டாலும் வேறு சந்தர்ப்பங்களில் ஜே.ஜே. கூறியவற்றிலிருந்து நாம் இந்த நிலையை அனுமானிக்கக் கூடியதாக இருக்கிறது. ' ' மனிதனை உருவாக்க அவன் குரல்வளையைப் பற்றிக் கொண்டிருக்கும் கொடிய கரங்களிலிருந்து அவனுக்கு விடுதலை தேடித்தர வேண்டும். ஒவ்வொரு மனிதனிடமும் சென்று, * ' நீ எப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறாயோ அப்படியே இரு'' என்று நாம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த இரண்டாயிரம் வருடங்களாக மனிதன் அடைந்திருக்கும் சங்கடங்கள், நிம்மதியின்மை , குற்றஉணர்ச்சிகள், பாவ உணர்ச்சிகள் - இவற்றிலிருந்து அவனுக்கு முற்றாக விடுதலை கிடைக்க வேண்டும். அவன் இயற்கையாகப் பயணத்தைத் தொடரட்டும். அவன் கால் சுவடுகளில் துளிர்ப்பவை எவையோ அவைதான் நாகரிகம். அவன் பாய்ந்து பிடிக்க அடி வானத்துக்குப் பின்னால் ஏதோ தொங்கிக் கொண்டு கிடக்கிறது என்ற கற்பனை இனி வேண்டாம்.'' இவ்வாறு எழுதிக் கொண்டு போகிறான் ஜே.ஜே. என்று கூறப்படுகிறது.
இந்தக் குரல் யாருடைய குரல்?
இது ஜே.ஜேயுடையது மட்டுமல்ல; இன்றைய இருப்புவாதிகளின் குரலும் இதுவே தான். ஜே. ஜே. முகம் கொள்ளும் பிரச்சனைகளில் பெரும்பாலானவை இன்றைய இருப்புவாதிகளினுடையதாகவும் இருக்கிறது. இந்தப் பிரச்சினைகளெல்லாம் ஒவ்வொரு இருப்பு வாதியின் தரத்துக்கேற்பவும் அவன் உறையும் ஆத்மார்த்த வலையங் களுக்கேற்பவும் பல்வேறு ரூபங்களெடுத்தாலும் அவையெல்லாம் " மூன்றாம் பாதைக்குரிய பிரச்சினைகளே தான். இதனால்தான் ஏனைய இரண்டு பாதைக்காரரும் இவர்களைப் புரிந்து கொள்வது தில்லை. புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல அப்புரிந்து கொள்ளாமை சிலவேளைகளில் இவர்களை நோக்கி பரிகாசமாகவும் வெளிப்படுவது தான் அவர்களின் மட்டரகப் பேதமையாகும். ஆனால் இவர்களின் பரிகாசத்துக்கு முன்னவர்கள் பலியாவதில்லை. மாறாக, முன்னவர் கள் பின்னவர்களை திருப்பித் தாக்கும்போது தாக்கப்பட்டவர்கள் வெறும் ஊதி உரசிய பலூன்களாக வெடித்து விடுகின்றனர். ஜே.ஜே. திருப்பித் தாக்கியபோது முல்லைக்கல்லின் நிலை அப்படித் தான் தொங்கிப் போகிறது.
- இந்த இரண்டு பாதைக்காரரும் யார்?
காலங்காலமாக மரபைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அதன் வழி ஒழுகுவோர், முதல் வகையினர். இரண்டாவதினர், ஒரு காலத்தில் ஏற்பட்ட புரட்சியையும் அதன் கொள்கையையும் சிறிதும் வளர்க் காது அதை யந்திரகதியாக்கி இயங்குவோர், அல்லது இவை போன்ற யந்திரகதித் தூண்டுதல்களால், பிறரின் தூண்டுதல்களால் சுயப்பிரக்ஞையற்று இயங்குபவர். இவர்களால் சமூகமோ தனி மனிதனோ வளர்க்கப்படுவதும் இல்லை. வளம் பெறுவதுமில்லை.
மாறாக உள்ளுழுத்து அழிந்து போகின்றன. ஆனால் உண்மையில் நாம் குறிப்பிட்ட " மூன்றாம் பாதை'யினர் என்னும் அந்தச் சிறு கூட்டத்தினராலேயே இந்த அழிவும் உள்ளழுகலும் குணப்படுத்தப் பட்டு மனித நாகரிகம் புதிய தளத்துக்கும் புதிய மரபுக்கும் பாய்ச் சலுறுகிறது. இதனால்தான் ஜே.ஜே. தன்னைப்பற்றிச் சொல்லும் போது, ''எனக்கு புறப்படும் இடம் தெரியும் போகுமிடம் தெரி யாது'' என்று கூறி விட்டு, சேருமிடம் தெரிந்தவர்களை, 'நாய் வாய்க்கழியைப் பற்றிப் பின் தொடரும் குருடர்கள்' என்று மற்றைய இரு சாராரையும் பரிகசிக்கின்றான்.
போகுமிடம் தெரிந்தவனுக்கு நிம்மதி. போகுமிடம் தெரியாத வனுக் கா அது கிடைப்பதில்லை. காரணம், அவன் ஏற்கெனவே கிழிக்கப்பட்ட கோடுகளில் நடப்பதில்லை. எப்பவோ நலமெடுக்கப் பட்ட வாய்பாடாகிவிட்ட நெறிகளில் அவன் மனம் லயிப்பதில்லை. அவன் புதிய பாதையைத் தேடிச் செல்கிறான், அவனுக்குத் துணையாக விரக்தியும் துயருமே வந்தடைகின்றன. இதைத்தான் ஜே.ஜே. தன் டயறிக் குறிப்புகளில் குறிக்கிறான், ''வாழ்க்கையில் பிடிப்பு என்பதே இல்லை. எதை நம்பி உயிர் வாழ? கடவுள் சரிந்து விட்டார். சமயங்கள் சரிந்துவிட்டன. ஆலயங்கள் அழுகி முடை நாற்றம் எடுத்துக் கொண்டிருக்கின்றன. பணவெறி பிடித்து அலைகிறான் மனிதன்' '-ஜே.ஜே.யின் இந்தக் குரல் நீட்சேயின் குரலோடு ஒத்து ஒலிக்கிறது. நீட்சே இருந்திருந்தால் இதையும் கூடச் சேர்த்திருப்பான்; ''மார்க்சியம் எங்கே? மார்க்சியத்தை 'தொழிலாளர்கள் கொன்றுவிட்டார்கள். சோவியத் யூனியனும், சீனக் குடியரசும்தான் மார்க்சியத்தின் கல்லறைகள்!'' என்ற வெறுமையைத்தான் ஜே. ஜேயின் கருத்தாக அரவிந்தாட்ச மேனன் வேறுவிதத்தில் ஒலிக்கிறார். '' மனமாற்றம் நிகழாத தலைமை நேற்றைய சரித்திரக் கொடுமைகளை அம்பலப்படுத்தி, அதன் மூலம் நற்பெயர் பெற்று, அதே கொடுமை இன்று செய்து. பதவியை உறிஞ்சிக் கொண்டு கிடக்கும்.''
ஜே.ஜேயின் தீட்சண்யம் மிக்க கூரிய விமர்சனங்கள் புதுமைப் பித்தனின் ஆக்ரோஷத்துடன் இன்றைய 'வழிகாட்டி'களை அதாவது ஏற்கெனவே குறிப்பிட்ட இரண்டு வகை வழிகாட்டிகளையும் சாடு கிறது. பாஷையை வைத்துப் பிழைக்கும் அறிவின் எல்லைக்குள் வராத சாமான்ய தி.மு.க., காங்கிரஸ் அரசியல் வாதிகளைவிட மார்க்சியத்தை அனுஷ்டிப்பதாகக் கூறும் கட்சிக்காரர்களுக்கே இவனது விமர்சனங்கள் சாட்டையாய் விழுகின்றன. முல்லைக்கல் மாதவன் என்ற மார்க்சிய எழுத்தாளன், அல்பேர்ட் என்கிற மார்க்சிய தொழிற்சங்கவாதி ஆகியோர் எப்படி மார்க்சியத்தின் பெயரால் மக்களைச் சுரண்டுகிறார்கள் என்பதை ஜே ஜே . ஈவிரக்க மின்றிக் கிழித்தெறிகிறான். அவன் கேட்கிறான், முதலாளியின் கையிலிருந்து ஆட்சியை இவர்கள் கையில் மாற்றிவிட்டால் சோஷ லிஸம் மலர்ந்துவிடுமா?'' என்று. இதற்கு பதிலாக அவனே சொல்கிறான்: ''நான் இறந்திருக்காவிட்டால், என்னைக் கொன்று விடுவார்கள்'' என்று.
4'ஜே. ஜேயின் இத்தாக்குதல்கள் மார்க்சீயத்தையல்ல, மார்க்சீ யத்தைக் கடைப்பிடிப்பவர்களையே கண்டிக்கிறது. இன்றைய neo-marxist களும் இதையே செய்கிறார்கள். ஆகவே இது ஒரு புதுமையல்ல'' என்று சிலர் கேட்கலாமா? ஆனால் ஜே. ஜேயின் தாக்குதல்கள் அப்படியான ரகத்தவையல்ல. இன்னும் ஆழ மாகவே போகின்றன. இதோ அரவிந்தாட்ச மேனன் முல்லைக் கல்லோடு விவாதிக்கும்போது ஜே. ஜேயின் நோக்குகளை பிரதிபலிக் கிறார். ''அல்பேர்ட் ஒரு சாதாரண மனிதன் அல்ல. ஒரு புதிய தத்துவத்தில் நம்பிக்கை வைத்தவன். இதற்கான ஒரு தளத்தைத் தேர்ந்தெடுத்து அவன் வேலையில் ஈடுபடுகிறான். இப்போது அல் பேர்ட் ஏற்றுக்கொண்டிருக்கும் தத்துவம் அவனை எந்த அளவுக்கு மாற்றியிருக்கிறது என்று ஆராய்கிறான் ஜே. ஜே. மாற்றிவிட வில்லை என்பதற்கு ஜே, ஜேக்கு சில தடயங்கள் கிடைக்கின்றன. முதலாளிகளும் அல்பேர்ட்டும் ஒரே மன நிலையில் உள்ளவர்கள் என் பது ஜே ஜேயின் வாதம்'' என்று அவர் கூறும்போது இது தத்து வத்திலேயே சந்தேகம் எழுப்புகிறது. தத்துவமே எங்கோ அடிப் படையில் சுளுக்கிக்கொண்டு நொண்டுவது போன்ற படி மம். இதோ முல்லைக்கல்லே மேனனிடம் பரிதாபமாக ஒப்புதல் செய்யும்போது அதையே வலுப்படுத்துகிறார். ''ஜே. ஜேயின் எல்லா விமர்சனங் களையும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நான் ஒரு சிலவற்றை ஏற்றுக் சுொள்கிறேன். அவனைப் போலவே எனக்கும் பல சந்தேகங்கள். அவற்றை நான் வெளியே சொல்வதில்லை....... எப்படி சார் சொல்ல முடியும்? சொன்னால் எதிரிகள் பயன்படுத்திவிட மாட்டார்களா?''
எதிரிகளுக்குப் பயப்பட வைப்பதெனில் அது தத்துவத்தின் பலவீனம் ஆகாதா? எதிரிகளுக்குப் பயந்து, தான் இதய பூர்வமாக அறியும் தத்துவத்தின் தொய்வுகளை ஒப்கொள்ளாமை என்பது மீண்டும் தத்துவத்தின் குறைபாடு தானே? இப்படிக் குறைகளை அமுக்கி மறைப்பது தத்துவத்தை பலமுறவைக்குமா? எதிரிகளைச் சந்திக்கத் திராணியற்றவை தத்துவங்களே அல்ல என்றுதான் ஜே. ஜே. சொல்லுவான். அப்படியானால் அவன் காட்டும் வழி?
மேலெழுந்த நோக்கில் பார்க்கும்போது. ஜே. ஜே ஒரு வழி சொல்ல முடியாதவனாகவே தெரிகிறான். ''என் கனவுகள் உள்ளூர ஓங் கி,
திமுதிமுவென்று வளர்ந்து கொண்டிருக்கின்றன ...... அவற்றின் சாயல்கள் வெளியே கசிகின்றன. அவற்றின் ஈரத்தை நான் ஸ்பரி சித்து உணர்கிறேன். ஆனால் இந்த உணர்ச்சி ஒரு வடிவத்தைக் கேட்டு வதைக்கிறது. நடைமுறைக்கு வழி கேட்கிறது'' என்று எழுதும் ஜே. ஜே தன் நோக்கின் அடிப்படையில் வழி சொல்ல முடி யாதவனாகவே தெரிகிறான். ஆனால் அதற்காக அவன் மரபு சார்ந்த தத்துவங்களிடமோ கருத்து முதல் நோக்குகளிடமோ தஞ்சம் புகுந்து விடவில்லை. அந்த ரகக் குற்றச்சாட்டையும் அவனில் யாரும் சுமத்திவிட முடியாது. ஜானகி என்ற பிச்சைக்கார கர்ப்பிணிப் பெண்ணின் கால்வீக்கத்தைப்பற்றி பிரஸ்தாபிக்கும் போது அவன் கூறுகிறான். ''ஒருவார காலத்தில் நிவர்த்தி செய்து விடக்கூடிய எளிய சிகிச்சைமுறை. இதை உலகம் அறிந்து எத்தனை காலம் ஆகி யிருக்கும்? இந்த அறிவின் பயன் ஜானகியை சென்று எட்ட இனியும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்? விதி வந்தால் சாவோமாம். என்ன பைத்தியக்காரத்தனமான வார்த்தை. ஆஷாடபூதி மீண்டும் ஒரு வாதத்தைக் கிளப்புவான். இதே நோய்க்கு மிகத்தரமான சிகிச்சை அளிக்கப்பட்டும் இறந்து போனவர்கள் உண்டு என்பான். பிரச்சினையைத் தீர்ப்பது சுலபமல்ல என்று வாதிடுவதில் என்ன உற் சாகம்? ஜானகி சுகமாக குழந்தையைப் பெற்றெடுப்பதில் இவ னுக்கு ஏன் இவ்வளவு வருத்தம்? இரண்டு காரணங்கள் இருக்கக் கூடும். உலகின் நிலை மாறும்போது, தங்களுடைய நிலை ஆட்டங் கண்டுவிடும் என்று பயப்படுகிறார்கள் போலும். உலகம் இந்த மோசமான நிலையில் இருப்பதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்ற உறுத்தலும் இருக்கலாம்.
இதைவிட ஆஷாடபூதி மரபுவழித் தத்துவங்களுக்கு சாட்டையடி யாரால் கொடுக்கமுடியும்? அதையும் ஜே. ஜேதான் செய்கிறான்.
இவ்விரு நடைமுறையில் இருக்கும் போக்குகளுக்கு விமர்சனச் சாட்டை வீசும் ஜே. ஜே தன்னுள் சுடரும் மூன்றாம் பாதைக்கு தன் னளவில் உருவம் கொடுக்க முடியாமல், அதன் நடைமுறை வாழ்க் கைக்கு வழிகாட்ட முடியாமல் தத்தளிக்கிறானா?
இருப்புவாதம் என்பது இவனுள் சுடரும் நோக்குக்கு உருவம் கொடுக்கக்கூடிய ஒன்றா? நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடிய தத்துவமா?
ஜே. ஜே. ஓர் இருப்புவாதியா? எனின் எந்த ரீதியில்? எவ்வளவு அருகாமையில்?
_
- - ஜே. ஜே. ஓர் அந்நியன் . 1 - -
- அதன்
- 1 அந்நியர்கள் எல்லோருமே இருப்புவாதிகளா?
" . தாம் இருப்புவாதிகள் என்று அவர்களில் பலருக்கு சொல்லத் தெரியா விட்டாலும் இருப்புவாதம் அவர்களை விளக்குவதாய் இருக் கிறது. அந்த ரீதியில் அந்நியர்கள் எல்லோரும் இருப்புவாதிகள் ?
ஜே. ஜே. அந்நியர்களில் முக்கிய மானவன். காரணம், அவன் தன் அந்நியத் தன்மையை பிரக்ஞை பூர்வமாக உணர்ந்தவன். தனது சமூகத்தோடு ஒத்தோடாமையை பிரக்ஞை பூர்வமாக
நிகழ்த்துபவ " -
-
அப்படியானால் இவன் இருப்புவாதிகளில் முக்கியமான வன்? ம.
இவனைவிட இன்னும் வேறுவகையான, சுவையான அந்நியர்களை ஹெமிங்வேயின் சிறுகதைகளிலும் காஃப்காவின் கதைகளிலும் காண லாம். ஏன், காம்யூவின் ''அந்நியன்'' கூட அப்படிப்பட்டவன் தானே?
ஆனால் ஜே. ஜே பின் முக்கியத்துவம், அவனது ஒத்தோடாமையின் ஆக்க ரீதியான பண்பினால் ஏற்படுகிறது.
முன்னவர் போன்ற அந்நியர்களின் ஒத்தோடாமையினால் பற்பல அராஜகங்கள் தலைதூக்க, அதை விளக்க இருப்புவாதத்தைப் பிர யோகிக்க வேண்டிய நிர்ப்பந்தம். காரணம், அவர்களில் பலர் அந் நியர்களாகப் பிறந்து விட்ட-அதனால் அதுபற்றிய சுயப்பிரக்ஞை யற்ற அந்நியர்கள். - ---
ஆனால் ஜே ஜே. அப்படியல்ல. அவன் ஒரு புத்திஜீவி, இருப்புவாதி களில் முன்னோடியான கேரக காட்டின் Eitherior நூல் முதல் எல் லாவித அறிவு சம்பந்தப்பட்ட நூல்களையும் தரிசித்தவன்; கலைஞன் . அவன் வெறும் இருப்புவாதியாகவல்ல, இருப்புவாதத்தின் ஆக்கச் சக்தியாகவே இயங்க வல்லவன் என்று வாதிடலாம். அந்த ரீதியில் இவனது முக்கியத்துவம் அதிகரிக்கிறது எனலாம். |
ஆரம்பத்தில் அவன் அய்யப்பனோடு பழக ஆரம்பித்த காலத்தில், சமூகத்தோடு ஒத்தோடும் சாதாரண மார்க்சியவாதிகளுக்குரிய இயக்க வேலைகளையே செய்தான். நேர்மையாகவே அதைச் செய்தான் என்பதால் அதில் இவனது அந்நியத்தன்மையும் தனித்துவமே. ஆனால் இவனது உண்மையான அந்நியமாதல் அய்யப்பன் போன் றோரோடு தனது கருத்தொற்றுமையை முறித்துக் கொண்ட காலங் களிலிருந்தே ஏற்படுகிறது. எனினும் இவனது இந்தப் போக்கிற் குரிய கீற்றுக்கள் இவனது இளமைப்பருவத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது என்பதை அவன் தனது வகுப்பு மாணவியின் வெளியே தெரிந்த உள்ளாடையின் நாடாவை சரிசெய்து கொள்ளச் சொன்ன சம்பவத்திலிருந்தே அறியலாம்.
ஆயினும் ஜே. ஜே. ஒரு இருப்புவாதியெனக் கூறலாமா? அப்படி ஒரு தத்துவக் கூட்டுக்குள் தன்னை அடைத்துக் கொள்ள விரும்பு
அவன் விரும்புகிறோனோ இல்லையோ இருப்புவாதம் அவன் அவாவி நிற்பவற்றுக்கு வழிகாட்டத் துணை புரிகிறதா? அது கூறும் செய்தி என்ன?
இதற்குப் பதில் காண சாத்தர் ஏன் இருப்புவாதத்தோடு மார்க்சீ யத்தை இணைத்துக் கொண்டார் என்ற கேள்வி உதவலாம் , ஆமாம், ஏன் அவர் அப்படி ஒரு இணைவு ஏற்படுத்தினார்.
மார்க்சியம் அரசியல், சமூக இயக்கத்தையும் அதன் மூலம் ஏற் படும் சமூக மாற்றத்தையும் கோரி நிற்கிறது. அதற்காக சமூகத்தை ஆற்றுப்படுத்துவது.
இதன் பின்னணியில் பார்க்கும் போது இவற்றுக்கு அதிகம் முக்கி யத்துவம் கொடுக்காது ஆனால் இவை காட்டுபவற்றையும்விட சில ஆழமான உன்மைகளுக்கு, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப் பதாக இருப்புவாதம் அமைகிறது. இதை வேறு விதத்தில் சொல்வ தானால் சமூக மாற்றத்தையும் கோரி அறிவுக்குரிய இயக்கங்கள் நடத்தும் போராட்டத்தின்போது, விடுபட்டுப்போகும் அல்லது ஓரம் வழிந்துபோகும் உணர்வுகளுக்கும் உண்மைகளுக்கும் உருவம் கொடுக்க இருப்புவாதம் முனைகிறது எனலாம். அப்படியானால் இருப்புவாதத்திடம் இல்லாததை மார்க்சியம் கொடுக்கிறது. அதனால் அந்த இணைவு சாத்தருக்கு அவசியமாகிறது.
இப்படியான பிரச்சனைகளில் தான் ஜே. ஜேயும் சிக்கியிருக்கிறான் என்பது அவனது டயறிக் குறிப்புகளிலிருந்து தெரிகிறது. அப்படி யெனின் ஜே. ஜேயும் இருப்புவாதியாகவே இயங்குகிறான்? இதோ அவன் தனது டயறிக் குறிப்பில் குறிப்பிடுகிறான்: ''தெளிவில்லாமலும் முரண்பட்டும் ஏறுக்கு மாறாகவும் சிந்தித்துக் கொண்டிருக் கிறேன் என்றார் அய்யப்பன். இருக்கலாம், ஒவ்வொரு கணத்திலும், அந்தக் கணத்தில் படும் உண்மையை எட்ட ஆவேசமாகப் பாயும் குணம் என்னுடையது. அய்யப்பனுடைய அணுகல் நிதானமானது, தர்க்கரீதியானது. அநுபவத்தை மூளையால் கிள்ளும்போது குறைந்து போகும் பகுதியைக் கலைஞன் நிரப்புகிறான்' என்று ஜே. ஜே. கூறும் போது மிகத் தெளிவாக அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை அவன் வெளிக்கொணர்கிறான். அறிவின் நிதானிப்பில் இயங்கும் போராட்ட இயக்கங்களுக்கும் அவற்றின் இயக்கத்தின்போது வெளிவழிந்து போகும் ஆழமான மனித உணர் வுகளுக்கும் இங்கே வரைவு கொடுக்கப்படுகிறது. முன்னதை மார்க் சியம் பிரதிபலிக்கிறதெனின் பின்னதை இருப்புவாதம் விளக்கிச் சொல்லும். அதனால் தான் மார்க்சிய ஆதரவாளர்களாய் இருக்கும் இருப்புவாதிகள் பலருக்கு இவையிரண்டும் ஒன்றையொன்று நிரப்புபனவாய், ஒன்றுக்கொண்டு ஈடுசெய்பனவாய் நிற்கின்றன. வரண்டு, காய்ந்து, மரணித்துக் கொண்டிருக்கும் மார்க்சிய வேர்கள் இத்தகைய சிந்தனையாளர்களால் மீண்டும் சிறிது தளிர்த்து, ஒளிர் வதைக் காணலாம். இவைபற்றி உணர்வற்ற வெறும் மலட்டு மார்க்சிய சடங்கள் வரட்டுக் கூச்சல் போடத்தான் செய்கின்றன, (நல்ல உதாரணம் ஜே. ஜே பற்றிய அலையில் வெளிவந்த சிவசேக ரத்தின் விமர்சனம்) ஆனால் அவர்கள் இதைப் பொருட்படுத்துவ தில்லை. இந்த மலடுகள்தான் ஜே. ஜேயின் 'நாய்வாய்கழி குருடர் கள்'. - -
ஜே.ஜே. விரும்பியோ விரும்பாமலே இ ருப்பு வாதத்தோடுதான் நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். அப்படி நெருங்கி வரும் ஜே.ஜே. இருப்பு வாதத்தின் போசிப்பில், தன்னுள் சிரசுகாட்டும் கோட்பாட்டில் தெளிவு பெறுகிறானா? தெளிவுக்கான இவனது தேடல் அல்லது போக்கு இருப்புவாதத்தை இன்னும் ஆழமாக்கு கிறதா? திசை பிறழவைக்கிறதா?
இருப்புவாதம் ஒரு தத்துவ மா? ஒரு கோட்பாடா? இருப்புவாதம் ஒரு தத்துவமோ கோட்பாடோவெனின் அது தத்துவங்களையும் கோட்பாடுகளையும் உடைக்கும் தத்துவம். எல்லாவித கட்டுக்களை யும் அதாவது மரபினால், அதன் சடங்குகளால், ஒழுக்க விதிகளால், சட்டங்களால், தத்துவங்களால் இலட்சிய வேட்கைகளால் ஏற்படுத் தப்படும் எல்லாவித கட்டுக்களையும் தகர்ப்பது இருப்புவாதம். அப்படி தகர்ப்பதன் மூலம் மனிதனுக்கு 'விடுதலை' தேடித்தர முயல்வது. ஆனால் அதற்காக இருப்புவாதி ஒரு சூன்யவாதியோ (Nihilist) பாழாட்சிக்காரனோ (Anarchist) அல்ல. தனது செயல்கள் அனைத்துக்கும் தானே பொறுப்பாளி என்னும் உயர்ந்த விடுதலை ஒழுக்கமுடையபெ :
ஜே.ஜேயின் இருப்பு இதற்குள் எங்கே வந்து பொருந்துகிறது?
சாத்தர் தன் தோழி சிமன் போவாவுடன் இல்லறம் நடத்தியும் திருமணம் என்னும் சடங்குக்குள் இறங்கவில்லை. காம்யூவின் * அந்நியன்' தன் தாய் இறந்த அடுத்த நாளே தன் தோழியுடன் சரசத்தில் ஈடுபடுகிறான். எந்தவித பற்றும் அவன் இருப்பில் குறுக் கிடவில்லை .
-ஆனால் அவன் ஜே ஜே?
ஆனால் ஜே ஜேயின் வாழ்க்கையில் ஏற்படும் இரண்டு நிகழ்ச்சிகள் அவனது இருப்பில் ஏற்படும் குணரீதியான இன்னோர் பரிமாணத் தைக் காட்டுகின்றன.
முதலாவது, தான் மணக்கப்போவதாகக் கூறும் தோழி ஓமணக் குட்டியுடன் உல்லாசப்பயணம் போகிறான் ஜே.ஜே. ஆனால் துரதி ருஷ்டவசமாக ஓமணக்குட்டி தான் எழுதிய கவிதைகளைக் காட்ட, இவன் அவை கவிதைகளே அல்ல என்று தூக்கி எறிய, அதனால் ஒரு பெரிய ரகளையே நேர்ந்து திடீரென அவன் காதல் வாழ்க்கை , அத்துடன் முடிவடைகி ரிது. இந்த நிகழ்ச்சி இலக்கியம் சம்பந்தமாக ஜே ஜே வைத்திருந்த உயர்ந்த நோக்கை விட்டு எக்காரணத் தை முன்னிட்டும் கீழிறங்கவோ சமரசம் செய்யவோ விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. இச்செயல் சாத்தரின் மரபுடைப்புக்கும் காம்யூவின் அந்நியனின் செயலுக்கும் வித்தியாசமானது. அவர்களின் மரபுடைப்பில் இத்தகைய 'லட்சிய வேட்கை' இருந்ததாகத் தெரியவில்லை. அரவிந்தாட்ச மேனன் ஜே.ஜேயைப் பற்றிச் சொல்லும்போது 'அவன் ஒரு பேர்ஃபெக்ஷனிஸ்ட்' என்கிறார். மேலும் ""பெரிய சங்கீதம் அண்ட வெளியில் வெகுநேரம் கவிழ்ந் திருந்து கீழ்ஸ்தாயியில் தேய்ந்து தேய்ந்து மறைந்தபின் கிடைக்கும் அமைதியின் பரவசம் இடையறாது நிரம்பிக் கொண்டிருக்க வேண்டும் என அவன் விரும்பினான்" என்னும் அவன் மன நிலையைப் பற்றி சொல்கிறார்.
மேற்கத்தைய இருப்புவாதிக்கு ஜே.ஜேயின் perfectionismத்தை உடைப்பதுதான் பெரிய perfectionனைத் தருவதாகப் படும். அத் தோடு 'அண்ட வெளியில் கவிழும்.... சங்கீத பரவசம்' போன்ற ஆத்மார்த்தமான விவரணைகளும் அவனுக்கு அந்நியமானதாகவே இருக்கும்.
ஜே ஜேக்கு நிகழ்ந்த இரண்டாவது நிகழ்ச்சியும் இத்தன்மைகளின் இன்னோர் தன்மையை காட்டுவதாகவே உள்ளது. தன்னிடம் இரந்து நின்ற தொழுநோய்ப் பிச்சைக்காரனுக்கு ஏதாவது கொடுப்பதா விடுவதா என்ற பிரச்சினையில் ஒரு முடிவுக்கு வரமுடி யாமல் மணித்தியாலக் கணக்காய் சிந்தனையில் ஆழ்கிறான் ஜே. ஜே . பல மணித்தியாலங்கள் கழிந்து ஜே.ஜே. அந்தப் பிச்சைக்கார னுக்கு உதவ வேண்டும் என்ற ச முடிவுக்கு வந்தபோது அந்தப் பிச்சைக்காரன் அங்கே இல்லை. பின்னர் அந்தப் பிச்சைக்காரனைத் தேடிச் சென்றபோது அவனைப் போன்ற இன்னோர் தொழுநோய்ப் பிச்சைக்காரனைக் கண்டு அவனுக்கு பிச்சையிட, அவன் தனது கால் களால் இவன் போட்ட வெள்ளிப் பணத்தை அரைத்துத் தள்ளினான்.
இந் நிகழ்ச்சி ஜே.ஜேக்கு அவமானமாகப் பட்டது. அவனால் அதைத் தாங்கவே முடியவில்லை.
இந்த இடத்தில் ஜே.ஜேக்குப் பதிலாக சாத்தரையோ காம்யூவின் யாத்திரைத்தையோ நிறுத்தியிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்?
காம்யூவின் அந்நியனானால் ஆரம்பத்தில் இரந்து நின்ற பிச்சைக் காரனின் “ நிலை' யே தனக்குப் பிடிக்கவில்லை என்று அவனைச் சுட்டுக் கொன்றாலும் கொன்றிருக்கலாம். சாத்தராயின் ஜே.ஜேயை விட அதிக நேரம் இது சம்பந்தமாக சிந்தித்து இது பற்றி ஒரு கட்டுரையே எழுதியிருக்கலாம். ஆனால் அநேகமாக பிச்சைக்கார னுக்கு உதவ வேண்டுமென்று தீர்மானித்திருக்க மாட்டார். ஆனால் ஒன்று, இந்த 'அற்ப' விஷயத்துக்காக சாத்தரோ காம்யூவின் அந்நியனோ இப்படி ஜே.ஜே. செய்தது போல் மனம் உடைந்து தவித்திருக்க மாட்டார்கள்.
ஆனால் ஜே.ஜேயின் இந்த 'மன உடைவு' தான் அவனது வேறு தன்மையைக் காட்டுவது. அவனது மன உடைவும் தவிப்பும் மேலெழுந்தவாரியாக ஒரு 'சென்டிமென்டல்' தனத்தைக் காட்டு வதாக இருந்தாலும் அதன் ஆழம் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட லட்சிய வேட்கையோடு இணைகிறது .
ஜே.ஜே. அந்தப் பிச்சைக்காரனை ஒட்டியெழுந்த சிந்தனையில் எவ்வளவு தூரம் மூழ்கிப் போகிறான்! அவ்வளவு நேரம் இதற்குச் சிந்திக்க வேண்டுமா? சாமான்யர்கள் ஒரு நொடிக்குள் முடிவெடுக்கும் பிரச்சினைக்கு இவ்வளவு நேரம் தேவையா? மேதைகள் என்பவர்கள் இப்படித்தான் நேரம் எடுப்பார்களோ என்று சாமான்) யர்கள் கேலி எழுப்பவே செய்வர்.
ஆனால் அறிவின் ஆழமான வீச்சுள்ளவன் எதிலும் இலகுவில் முடிவுக்கு வந்து விடுவதில்லைதான். இதே பிரச்சினைகளுக்கு சாமான்யர்கள் ஒரு நொடிப் பொழுதில் தீர்வும் அமைதியும் கண்டு * விடுதலை பெறுகின்றனர் . அவனவன் அறிவுக்கு ஏற்பவே அவனவன் விடுதலை சாரும்.. ஜே.ஜே. ஆழமாகச் சிந்தித்தான். அந்தச் சிந்தனை மூலம் ஒரு முடிவுக்கு வந்து விடுதலை பெறுகிறான். ஆனால் அந்த விடுதலையை அநுபவிக்க முடியாமல் போய் விடுகிறது - அந்தத் தொழுநோய்ப் பிச்சைக்காரன் அப்படிச் செய்து விட்டான். கடைசியில் ஜே. ஜேயின் சிந்தனை ஆழமும் விடுதலையும் அந்தப் பிச்சைக்காரன் கையில் ஊசலாடும் அற்பப் பொருட்களா? ----
சாமான்யர்களாய் இருந்தால் இச்சந்தர்ப்பத்தில் * *போகிறான் பிச்சைக்காரப் பயல்!' என்று தம் நெஞ்சில் தடிப்பேற்றியிருப். பார்கள். மேற்கத்தைய இருப்புவாதியோ * 'உன் செயல் உன்னு. டையது. என் செயல் என்னுடையது'' என்று லேசாக சிரித்து விட்டுப் போயிருப்பான்,
ஆனால் ஜே, ஜே.?----
அவன் வருந்துகிறான். அந்தப் பிச்சைக்காரன் அப்படி நடந்து கொள்வதற்கு தான் விட்ட பிழையை ஆராய்கிறான். தான் அந்த வெள்ளிப் பணத்தை அப்படி எறியாமல் அவன் கையிலே தந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறான். அவன் மனம் அத்த கையது. தாழ்வாரத்தில் ஒதுங்கிய மாட்டின் மேல் வெற்றிலை எச்சிலைக் கொப்பளித்த மனிதனின் அநாகரிகத்தைக் கண்டே வெட் கப்படும் நுண்ணிய உணர்வு கொண்டவன் அவன். இதற்கெல் லாம் காரணம் அவனது சிந்தனையும் அதையொட்டி எழும் விடுதலை நோக்கும் வெறும் சுயம்புவானதல்ல, தன்வயப்பட்டதல்ல. மற்றவர்களையும் மதிப்பது. எல்லா உயிர்களை யும் நேசிப்பது. தன் விடுதலை அனுபவிப்புள் எல்லா உயிர்களையும் இழுத்துவிட முன் நிற்பது. இந்த ரீதியில்தான் அவனின் அந்த நிலையை விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த இடத்தில்தான் ஜே.ஜே தான் எடுத்த இருப்புவாதப் போக்கில் இன்னோர் பரிமாணத்தைச் சேர்த்துக் கொள்கிறான். இந்தப் புதுப் பரிமாணச் சேர்க்கை இருப்பு வாதத்துக்கோர் பின்னகர்வாய் அமைகிறதா அல்லது முன் னெடுத்துச் செல்ல உதவுகிறதா என்பதே கேள்வி.
அந்நியர்கள் எல்லோரும் ஆத்மார்த்தப் பிரதேசங்களில் வசிப்பவர் கள் என்று நான் முன்னர் கூறினேன். ஆத்மார்த்த உலகு தனி யானது. அந்த உலகில் பிரவேசிப்பவர்களும் தனியானவர்கள். அள்ள அள்ளக் குறையாது, நிதியங்களைத் தந்து கொண்டு தன்னை அளந்துவிட முடியாத ஆழ் மெளனமாய் வைத்திருப்பது, இந்த உலகு. இந்த உலகு வழங்கும் நிதியங்களை வெளிக்கொணரும் ஒரு சில அந்நியர்களால் மட்டுமே மனித நாகரிகம் தேக்கமுறாது புதுப் புது பாய்ச்சல்களை எடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்த ஆழ் மெளன உலகுள் வெறும் மூழ்குதல் மட்டும் செய்யும் அந்நியர் களே அநேகம். அப்படி மூழ்கும்போது தம் இருள் பகுதிகளில் ஒளியேற்றிக் கொள்ளத் தெரியாது, வெருண்டோடுவோர், உளறு வோர், பைத்தியங்களாவோர் அநேகம். மூழ்குவோரில் வெகு சிலரே இரண்டொரு முத்துக்களோடு மேலெழுகின்றனர். அந்த ஒரு சில முத்துக்களே மனித மேம்பாட்டுக்கு ஒளியேற்றக் கூடியது. இன்னும் வெகு சிலரே ஆத்மார்த்த உலகின் ஆழம் வரை செல்லக் கூடியவர்களாய் இருக்கின்றனர். இவர்கள் அங்கிருந்து அள்ளித் தரும் திரவியங்களே முழு மனித குலமும் முன்னேறும் ஒளிக்கோடு களாய் அமைகின்றன. இத்தகைய செயலுக்குரிய அந்நியர்கள் ஞானிகளாகவே இருக்கின்றனர். மனித குலத்தால் இதுவரை அதிகமாகப் பயன்படுத்தப்படாது, பயன்படுத்தத் தெரியாது, எண்ணற்ற கனிப் பொருள்களைக் கொண்ட இவ் ஆத்மார்த்தப் பிரதேசம் ஞானிகளால் மட்டுமே ஆங்காங்கே சுழியோடப்படும் கின்றன. இவர்களே ஆத்மார்த்த உலகின் மையப் புள்ளிகளாக இருப்பதோடு, இதை நன்கு பயன்படுத்தத் தெரிந்த முதல்தர அந்நியர்களாகவும் இருக்கின்றனர். அத்தோடு மனித இருப்பை நன்கு விளங்கிக் கொண்ட பூரண இருப்புவாதிகளாகவும் இருக் கின்றனர்.
அப்படியானால் ஜே.ஜே. ஒரு ஞானியா?
ஜே.ஜே. ஒரு ஞானியல்ல. அப்படிச் சொல்வது அவனைக் கொச்சைப் படுத்தியதாக முடிவதோடு ஞானிகளையும் கொச்சைப் படுத்தியதாக முடியும். ஏன், ஞானிகளை இந்த இடத்தில் இழுத்து விட்டதே சிலருக்கு சிறிது கலைக்குறைவாகப் படலாம். ஆயினும் ஞானிகளைவிட அந்நியர்கள் இங்கே யார் இருக்கின்றனர்? அவர் களை விட இருப்பைப்பற்றி அக்கறை காட்டுவோர் அதன் ஒரு பக்க தளத்துக்கும் மறுபக்க ஆழத்துக்கும் மையத்தில் இருப்பில் ஆனந்திப்போர் யார்?
நிச்சயமாக ஜே.ஜே. அந்த நிலையில் இல்லைதான். அப்படியானால் ஜே.ஜேயின் இருப்பு எந்த நிலையைத் தொட்டுக் கொண்டு நிற் கிறது? இதோ அவனே தன் நிலையும் லட்சியமும் பற்றி இரத்தினச் சுருக்கமாக விவரிக்கிறான்: ' " நம்மீது எவ்வித பிரயாசையும் இன்றி சாபத்தின் ஏவல்போல் ஒட்டிக் கொள்ளும் பொய்மையைச் சதா நம் மூளையிலிருந்து பிடுங்கிவிட்டெறிந்த வண்ணம் யாத்திரை தொடருதல். உண்மை தேடுதல் என்று இதற்குத்தான் பெயர். உண்மையில், உண்மை தேடுதல் இல்லை. யாத்திரையும் பொய் தவிர்த்தலுமே. பொய்மை இயற்கையாக, நிரந்தரமாக மீண்டும் ஊடுருவச் சாத்தியமற்ற நிலை ஏற்படும்போது மனங்கொள்ளும் பரவசத்தின் பெயர்தான் கண்டடைதல் என்பது. "
இந்த இடத்தில் ஜே.ஜே. தன் முயற்சியையும் லட்சியத்தையும் வேறெங்கேயும் சொன்னதைவிட மிகத் தெளிவாகவும் அழகாகவும் சுருக்கமாகவும் சொல்லி விடுகிறான். அதாவது பொய்மை தவிர்த் தலும் அதன் போய் வரும் பரவசமுமே அவனது முயற்சியும் லட்சியமும். -- - -
பொய்மை தவிர்த்தல் முயற்சியை அவன் யாத்திரை என்கிறான். அதன் பயனாய் வரும் பரவசம் அவன் கண்டடையும் லட்சியம் ஆகிறது.
இந்தப் பொய்மை தவிர் யாத்திரையும் பரவசக் கண்டடைதலும் அவனை எந்த நிலையில் காட்டுகிறது? யாரோடு கொண்டு போய்ச் சேர்க்கிறது?
நிச்சயமாக மேற்கத்தைய இருப்புவாதிகளோடு மட்டும் இல்லை , அப்படியானால்?
- --- - --
முன்னர் நாம் பார்த்த ஆத்மார்த்தப் பண்புகளான உயர் இலக்கிய வேட்கை, சங்கீத பரவசம் ஆகியவற்றோடு சேர்ந்து பொய்மை தவிர்த்தல் அதன் பேறான பரவசம் எல்லாம் அவனை ஆத்மார்த்த பிரதேசத்தின் மையத்துக்கே இட்டுச் செல்கின்றன. ஆத்மார்த்த பிரதேசத்தின் மையம் ஞானிகளுக்குரியது. - - -
விடுதலை தேடும் ஒவ்வொரு இருப்புவாதியின் விடுதலை பற்றிய நோக்கும் அவனது தேசத்தின் பண்பாட்டு, கலாசார சூழலால் ஆழ மாக்கப்படுகிறது. ஜே.ஜேயின் தனித்துவம் இந்த இடத்திலிருந்து தான் மேற்கிலிருந்து வேறுபட்டுக் கொள்கிறது. மேற்கின் இருப்பு வாத போக்குடன் பெரிதும் இணையாமலும் அதே நேரத்தில் கிழக்கின் மரபுவழிச் சிந்தனைப் போக்கோடு நேரடித் தொடர்பு கொள்ளா மலும் நகர்ந்து கொண்டே கிழக்கின் தத்துவ நோக்குகளின் ஆழ மானதைக் கண்டடையும் போக்கு ஜே .ஜேயினது. அதாவது பொய்மை தவிர்த்தலும் அதனால் கண்டடையும் பரவசமும்.
இது இருப்புவாதத்தை பின்னடையச் செய்கிறதா இன்னும் ஆழ மாக்கி முன்னெடுத்துச் செல்கிறதா?
* பொய்மை தவிர்த்தலும் பரவசமும்' என்றதுமே பலருக்கு சமயங் கள் கூறும் போதனையில் பழைய வாடையே வீசுவதாகப் படலாம். அதனால் ஜே.ஜேயின் கோட்பாடு ஒரு பின்னடிப்பாக, இருப்பு வாதத்திலிருந்து பிறழ்வு பட்டதாகப் பலருக்குப் படலாம். ஆனால் உண்மையில் சமயங்களில் கூறும் பொய்மை தவிர்த்தலை, அதன் சடங்குகளோடு சம்பந்தப் படுத்தாமல் செய்து பார்த்தவர் எத்தனை பேர்? பரீட்சார்த்தமாகவாவது முயன்று பார்க்கத் துணிந்தவர் எத்தனை பேர்? சமயங்கள் என்றதுமே எந்தவித ஆதாரமும் அற்று பிற்போக்கானது என்ற ரீதியில் கண்மூடித்தனமான தூக்கி எறிதல். ஆனால் அதே ரீதியில் ஜே .ஜே.யின் கோட்பாட்டையும் அதற்காகத் தூக்கியெறிந்துவிட முடியாது. ஜே.ஜேயின் அணுகல் ஆழமானது; இருப்புவாதத்தையும் ஆழமாக்குவது.
பிரச்சினைகள் ஏற்படும்போதுதான் இருப்புவாதி தன்னை இன்னும் இன்னும் தரிசிக்கிறான். அதனால் ஒரு இருப்புவாதிக்கு சிறைத் தண்டனை அளித்தாலும் சரி, மரணதண்டனை வழங்கினாலும் சரி அவன் தான் பற்றிய தரிசிப்பின் அதிகரிப்பில் விடுதலை பெறுகிறான். சிறைத் தண்டனையும், மரண தண்டனையும் அவனைச் சிறை வைப்பது மில்லை கொல்லுவதுமில்லை. மாறாக, பெரும் விடுதலையே தரு கின்றன. 10
68 17 ஜே ஜேயின் பொய்மை தவிர்த்தலும் பிரச்சினைகளின் உருவாக்கமே. ஆனால் அராஜகத்தாலும் நெறிகெட்ட வாழ்க்கையாலும் ஏற்படும் பிரச்சினைகளைவிட ஆழமானது, அறிவின் ஆழங்களைத் தொடுவது. ஜே ஜே. அய்யப்பனது கோட்பாடுகளோடு இணங்கியிருந்தால், ஓமனக் குட்டியின் கவிதைகளோடு ஒத்துப் போயிருந்தால், முல்லைக் கல்லைப் பொருட்படுத்தாது விட்டிருந்தால், முன்னால் இரந்து நின்ற பிச்சைக்காரனை மறந்திருந்தால் அவனுக்குப் பிரச்சனைகள் இருந்திருக்காது. ஆனால் இப்பிரச்சனைகளே அவன் சுய இருப்பை அதிகரிப்பவை; விடுதலைக்கு வழிகாட்டுபவை. அற்ப விஷயங் களிலும் பொய் தவிர்த்தல் என்பது பாரிய பிரச்சனைகளின் உருவாக் மே, விடுதலையின் வழிகாட்டிகளே என்பதை அவன் அறிவான்,
அராஜகத்தினதும் பிறழ்வுற்ற போக்குகளினதும் இருப்புவாதிகள் ஆத்மார்த்த பிரதேசத்தின் ஓரங்களில் வாழ்பவர். தம் சுயத்தின் மேல் விழுந்த இருட்கவிப்புகளிலிருந்து விடுபெற முடியாதவர்கள். ஆனால் பொய் தவிர்த்தல் மூலம் ஒத்தோடாமையை இயல்பாக நிகழ்விப்போர், அறிவின், இருப்பின் ஆழப் பகுதிகளில் சஞ்சரிப் போர். இவர்களுக்கு சிறையும் மரணமும் ஒரு நிகழ்வல்ல. ஆனால் அறிவின் இக்கட்டான பிரச்சனைகளும் பிறரின் துயரும் அவஸ்தை களும் அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வழிவகுக்கும் சுய இழப்பு களுமே இவர்களுக்கு சுய இருப்பை அதிகரிப்பவை; விடுதலையை தருவிப்ப வை . - - --- --- --- --- --
- -- -
இந்நிலையில் ஜே.ஜேயின் பொய் தவிர்த்தல் என்பது இருப்பு வாதத் தை ஆழமாக்குகிறதா? பின்னகர்த்துகிறதா? நிச்சயமாக ஆழமாக் கவே செய்கிறது. ஆனால் இருப்புவாதத்தைப் பற்றி யார் கவலைப் பட்டார்? இருப்புவாதத்தை ஆழமாக்கினால் என்ன, விட்டால் என்ன? ஆனால் ஜே.ஜேயின் பொய் தவிர்த்தல் வாழ்க்கையை, இருப்பை ஆழமாக்குகிறதா? மனிதனின் விடுதலையை ஆழமாக்குகிறதா என்பதே ஜே.ஜேயின் பிரச்சினை. அவனது மூன்றாவது பாதையின் விசாரணை அது பற்றியதே என்று நாம் நிச்சயமாக ஊகிக்கலாம். ஆனால் ஜே.ஜேயின் பொய் தவிர்த்தலும் விடுதலையும் மரணத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றன? இது முக்கியமான கேள்வி. மரணத் தின் பின் எல்லாமே சூன்யமெனின் பொய் தவிர்த்தல் யாத்திரை யும் அதன் விடுதலையும் அவசியமா? அவை தாக்குப் பிடிக்க கூடிய வையா? மரணத்தின் பின் எல்லாமே சூன்யம் என்றால், எல்லா நெறிப்பாடும் அதன் வழிவரும் தொழிற்பாடும் விழலானதும் அர்த்த மற்றதும் என்று கூறுவதில் பிழை இருக்கிறதா? ஆனால் பொய் தவிர்த்தலும் அதன் வழி வரும் விடுதலையும் பரவசமும் மரணத்தின் பின்னும் விடுதலையே இருப்பாகுமெனில் விடுதலையே மிகுந்து மிகுந்து பெருகுமெனில் அது மனிதகுலம் வழுத்தப்படவேண்டிய முக்கிய நெறியாகும். ஜே ஜேயின் வாழ்க்கை எதைக் காட்டுகிறது.
-
ஜே.ஜேயின் வாழ்க்கையில் இதற்கு பதில் கிடைக்கிறதா? இதற்குப் பதில் காண நாம் ஜே.ஜேயின் மூலத்தை இன்னும் ஆழமாகக் காண வேண்டும்.
சு.ரா., பாலு, சம்பத், ஜே.ஜே.
இவர்கள் யார்? இவர்கள் மூவரும் ஒருவரா? அதாவது ஜே ஜேயா? அய்யப்பன், மேனன், சம்பத் ஆகியோரைப் பற்றி ஜே.ஜே. சொல்லுகையில் சூறை, காற்று, தென்றல் என்று கூறி ஒரு பொருளே வெவ்வேறு குணங்களில் நிற்பதாகக் காட்டுகிறான். அப்படியா இவர்களும்?
சு.ராவின் மறுபெயரே பாலு என்றால் அவர் அவாவி நிற்கும் லட்சியமே ஜே.ஜே. இந்த லட்சியப் பாத்திரத்தின் வாழ்க்கை நோக்கு Optimistic ஆக தெரிந்தாலும், அவன் வாழும் வாழ்க்கை யின் வாடை விரக்தியை, pessimism த்தையே தருகிறது. ஜே. ஜே வாழ்க்கையை வழுத்தாத, ஆமோதிக்காத, விரக்திகளோடு போராடுபவர் என்றால் இக்குறைகளை நிறைவு செய்யும் இவரின் அடுத்த பகுதி போல் வாழ்க்கை ஆமோதிப்போடும் வழுத்தலோடும் நிற்கிறார் சம்பத். இதோ சம்பத் என்பவர் எழுதியுள்ளதாகக் காட்டப்படும் இடத்தில், அவர் ஜே.ஜேயையும் தன்னை யும் ஒப் பிட்டுக் கூறும் பாணி இதைப் பலப்படுத்துகிறது. ''ஜ்ே.ஜே. உனக்கு எதுவும் பிடிக்காமல் போய்க் கொண்டிருக்கிறது மாதிரி எனக்குத் தோன்றுகிறது. எனக்கு சகலமும் ஒன்று விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றின் மீதும் எனக்கு அபரிமிதமான ஆசையும் ஆர்வமும் பிரியமும் ஏற்பட்டுக் கொண்டி ருக்கின்றன .
பிற ஜே ஜே பின் மறுபகுதி போலவே சப்பத் இக்குறிப்பில் தன்னைக் (கொள்கிறான்.
பாலு முதன் முதலாக ஜே ஜேயை தனது ஏழாவது வயதில் சம்பத் வீட்டில் தான் சந்திக்கிறான். இது ஒரு முக்கியமான நிகழ்வு. அதோ பாலுவே, ஏ. ஜி. எஸ்ஸின் வீட்டு மொட்டை மாடியிலிருந்து ஜே. ஜேயும் - ஏ.ஜி.எஸ்ஸும் பேசிக் கொண்டிருந்ததை தன் வீட்டுப் பின் திண்ணையிலிருந்து தான் கவனித்துக் கொண்டிருந்ததை மானசிக மாக பின்வருமாறு கதைத்ததாகக் கூறுகிறான்.
4 'ஜே ஜே. உன்னை இங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.... கோட்டயத்தில் ஏழாவது வயதில் முதல்முதலாக சம்பத் மாமாவின் தச்சுப்பட்டறையில் உன்னைப் பார்த்தேன். அன்று உன் அர்த்தம் எனக்குத் தெரியாது. அந்தச் சந்திப்பை நான் உதறிவிட்டேன். முற்றாக அர்த்தம் எனக்குத் தெரியாது என்பதால்.''
இப்படிப் பாலு கூறுவது ஓர் முக்கியமான உண்மை . பாலு ஏழாவது வயதில் தனக்குள் இருக்கும் ஆழமான ஒன்றை சம்பத்தினது
வீட்டில் திடீரென தரிசிக்கிறான். ஆனால் அர்த்தம் புரியாத அந்த வயதில் அதை உதறிவிடுகிறான். இதை அவன் தன் சுயத்தின் திடீர் தரிசிப்பெனக் கூட எடுக்கலாம். அதன் பின்னர் அவன் பெரியவனான இளமைக் காலத்தில், ஜே.ஜே. என்ற அருட்டல் பலமாக, பலமுறை தாக்கிய பின்னர், அதை அவன் நேரே தரிசிக்க விழைகிறான். மீண்டும் முன்னேற்ற எழுத்தாளர் சங்க மாநாட்டில் சந்திக்கிறான். ஆனால் ஜே.ஜேயின் '' சிவகாமி அம்மாள் தனது சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?' என்ற முதல் கேள்வியே பாலுவை நிலைகுலைய வைத்துவிடுகிறது. அதன் மேலும் ஜே ஜே யோடு உரையாட முடியாத சூழல் ஏற்படவே அவன் திரும்பி விடு கிறான். பின்னர் பாலுவின் வீட்டுக்கு அருகிலேயே ஜே.ஜே. ஏ. ஜி. எஸ்ஸுடன் வீட்டில் தங்கியிருந்தபோது இவன் தன் வீட்டில் எட்ட இருந்தவாறே அவனைப் பார்த்து மானசீகமாக உரையாடிக் கொண்டிருக்கிறான். ஆழ்மனதின் உண்மைகளைச் சந்திக்கப் பயந்து கிடக்கும் சில மனப்பலவீனர்கள் போல் பாலு அவனை நேராக சந்திப் பதைத் தவிர்த்துக் கொள்கிறான். ஏதோ ஒரு தடை, ஏதோ ஒரு கூச்சம் என்னைத் தாண்டி அவன் வேறெங்கோ போய் விட்டான் என்ற எண்ணம்'' என்று பாலு அதைப் பற்றித் தெரிவிக்கிறான். முன் னேற்ற எழுத்தாளர் மாநாட்டில் சந்தித்தபோது ஜே.ஜே. கிளப்பிய முதல் கேள்வியே பெருந்தாக்குதல், அதன் பின்னர் மீண்டும் அவனைச் சந்திக்கும் திராணி இல்லை. அதனால் ஏற்படும் பீதி, உண்மையின் அழுத்தம், அசௌகரியங்களை சந்திக்க பாலு தயார் இல்லை. ஆகவே ஜே.ஜேயாக மாறி வாழ முடியாது போய்விட்டா லும் 'பாதுகையை வைத்து அரசாளும் பரதன் மாதிரி ' ஜே.ஜேயின் தூரத்து லட்சியங்களை சேவித்து நிற்கிறான் பாலு.
இவர்களுக்குள் சம்பத் எங்கே வந்து பொருந்துகிறார்? எதைக் காட்ட வருகிறார்? -- -
கடைசியாக வரும் பாத்திரம் - கடைசியாக விவரிக்கப்படும் பாத்திரம் ஆனால் அதுவே காத்திரமாகவும் வருகிறது.
சு.ரா., பாலு, ஜே.ஜே., சம்பத். பாலு ஜே.ஜேயை முதன்முதலில் ஏழாவது வயதில் சம்பத்தின் தச்சுப் பட்டறையில் தான் சந்திக்கிறான். அப்படியானால் ஜே ஜேக் கும் சம்பத்துக்கும் என்ன சம்பந்தம்? நண்பர்களாய் இருக்க வேண்டும் அப்படியா? ஆனால் சம்பத் இவர்களின் பிணைப்புப் பற்றிச் சொல்வது நவமானதும் மிக ஆழமானதுமாக அமைகிறது: "........ படைக்கும் தலைவன் நம் இருவரையும் மட்டும், முதன் முதலாவதாக, இந்த நிமிஷம் இங்கு அனுப்பி வைத்துள்ளது போல் நாம் இருவரும் திகைத்துக் கொண்டிருக்கிறோம். (இயற்கையின் கோலங்களைப் பார்த்து அடைப்புக் குறிப்பு எம்முடையது) ஆகவே உனக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ளது சினேகமல்ல. முதுகும் நெஞ்சும் ஒரே உடலில் ஒட்டிக் கொண்டிருப்பது சினேகத்தால்
அல்ல. திகைப்பின் ஒன்றுபட்ட வார்ப்பு அது.''
இது எதை எம்மிடம் கோருகிறது?
இந்தப் பின்னணியில் சம்பத்தை வேறொருவராக அல்லாமல் ஜே. ஜேயின் இன்றொரு பகுதியாகவே பார்ப்பதற்கு இயல்பாகவே உந்தப்படுகிறோம். இருவரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் எனக் கொள்ளலாமா? சம்பத் கண்டதாக விபரிக்கப்படும் கனவு இதற்கு பலமூட்டுகிறது.
சம்பத்தோ வாழ்க்கையில் பிடிப்புள்ளவன். வாழ்க்கை அநுபவிப் பில் சந்தோஷிப்பவன். எந்தவிதப் பிரச்சனைகளோ, அடிமனப் பீதியோ, சிக்கல்களோ இல்லாத தெளிந்த நீரோடையின் தன்மை அவனது குறிப்புகள் மூலம் தெரிகிறது. ஜே.ஜேயோ இதற்கு நேர்மாறானவன். தன் எழுத்துக்களால், விமர்சன ரீதியான உரை யாடல்களால் அதிகம் எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டவன். வாழ்க்கையில் விரக்தியே அதிகம் பரிசாகக் கண்டவன். அப்படிப் பட்ட ஜே.ஜே. காணக்கூடிய பீதி நிறைந்த கனவை சம்பத் காணு வதுதான் விசேடமானது. 'எட்டு வீட்டுப் பிள்ளைமார்' கொடிய ஆயுதங்களுடன் சம்பத்தை கொல்லுவதற்குத் துரத்தும் காட்சி மிக அற்புதமாகக் காட்டப்படுகிறது. அந்த இடத்தில் சம்பத்தை விட்டு எம்மை அறியாமலே ஜே.ஜேயைத்தான் போட்டுப் பார்க்கத் தூண்டுகிறது. ஜே. ஜேக்குத்தான் அந்த ரகப் பீதிகள் அதிகம் பொருந்தும். ஒரு வித " மரண பயம்.' கடைசியில் சம்பத் கொலை காரரிடம் அகப்பட்டுக் கொல்லப்படுகிறான். கொல்லப்பட்ட அவன் காணும் காட்சிகளும் அநுபவங்களும் பற்பல அதிர்வுகளை படிப்
போரிடம் ஏற்படுத்தும் ஆழம் மிக்கவை.
கனவிலிருந்து சம்பத் விழித்துக் கொள்கிறான். விழித்துக் கொள்ளும் போது புலரிப்பொழுதாகிக் கொண்டிருப்பதால் சம்பத் காரை எடுத் துக்கொண்டு சூரியோதயம் பார்க்க விரைகிறான். ஆனால் கனவில் சம்பத் இறந்த பின்னர் இதே மாதிரி ஒரு காட்சியைக் காண்கிறான். அதாவது சூரியோதயம் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோயில் படிக்கட்டில் சுற்றிவர ஆட்கள் சூழ காந்தி மகான் இருக்கும் மகோன்னதக் காட்சிதான் அது. சம்பத்தின் கனவில்
அவன் இறந்த பின்னர் கண்டதாகக் கூறும் இக்காட்சியை ஓவிய மாக்கித் தருகிறான் ஜே. ஜே! சம்பத் கண்ட காட்சி ஜே.ஜேயால் ஓவியமாக்கப்படுகிறது என்பதுதான் இன்னும் ஆழமானது. இதை யும் விட ஆழமானது என்னவெனின் சம்பத் கனவில் இறந்தபின்னர் காண்பதாகக் கூறும் காட்சிகள். இக்காட்சிகள், ஆழமாகக் கவனிப் பவரிடம் சூக்கும், ஆத்மீக காட்சிகளாகவே விரியும். இதோ சம்பத் தான் கண்ட சில காட்சிகளை விபரிக்கிறான் :
தொலைதூரத்தில் ஏதோ ஓசை கேட்கிறது... விடியற்காலை பஜனை வருகிறதுபோல் இருக்கிறது. என்ன அற்புதமான குரல்! யார் இப்படிப் பாடுகிறார்கள்! பின்பற்றிப் பாடும் குரல்கள் கார்வை குறைந்தும் கரடுமுரடாகவும் இருக்கன்றன. ஆனால் அந்தக் குரல் கள் ஆத்மார்த்தம் கொண்டவை. எல்லா இசைக்கும் எது முக்கி யமோ , புலமையையும் குரல் வளத்தையும் விட எது முக்கியமோ அது அவர்களிடம் இருக்கிறது. ஆத்மார்த்தம்... எவ்வளவு மோச மான நிலையிலும் ஆத்மார்த்தத்தின் அழகை மறைக்க முடியாது... தன்னை முற்றாக மறந்து பாடுகிறான் அவன். அவன் இசையிலிருந்து பரவும் அந்தப் பரவசமே பாட ஆரம்பிக்கும் அற்புதமான நிமிஷத்தை அவன் நெருங்கிக் கொண்டிருக்கிறான். )
பால் - '' நான் கண்களைத் திறந்து பார்த்தேன். லாந்தரின் மஞ்சள் ஒளி தெரிந்தது. என்ன இது! என்ன ஆச்சரியம்! முன்வரிசையில் மையத்தில் விரைந்து வந்து கொண்டிருப்பவர் யார்? காந்தியா? என்னால் நம்பவே முடியவில்லை.
* 'உடலோடு இருந்தவரையில் சரிவர ஒன்றையும் பார்க்கவில்லை என்பதும் சரிவரப் பார்ப்பதாகக் கற்பனை செய்து கொண்டிருந்தது தவறு என்பதும் இப்போது துல்லியமாக எனக்குத் தெரிகிறது.
"பஜனைக் கோஷ்டி கோயில் முகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனக்குக் கண்கள் கூசின. அந்தப் பொன்மேனியிலிருந்த பிர காசம் என் கண்களில் பட்டுக் கூசின. என்ன அற்புதமான முகம்! சாந்தி அலையடித்துக் களி நடனம் புரிகிறது...'' பெட்ட இவையெல்லாம் சம்பத்தின் கனவுக் காட்சிகள்!
இவை உண்மையில் கனவுக் காட்சிகள்தானா? சங் தேத்தைப் பற்றி அவன் சொல்லும்போது, ''எல்லா இசைக்கும் எது முக்கியமோ, புலமையையும் குரல் வளத்தையும் விட எது முக்கியமோ அது அவர்களிடம் இருக்கிறது. ஆத்மார்த்தம்... எவ்வளவு மோசமான நிலையிலும் ஆத்மார்த்தத்தை மறைக்க முடியாது'' என்ற ஆத்மார்த்தம் பற்றிய நுணுக்கமான உணர்வும் ''அவன் இசையிலிருந்து பரவும் அந்தப் பரவசமே பாட ஆரம்பிக்கும் அற்புதமான நிமிஷத் தை அவன் எட்டிக் கொண்டிருக்கிறான்'' என்னும் போதும் காந்தி தரிசன விபரிப்பும், உடல் சார்ந்த பார்வைக்கும் அதன் பிரக்ஞை யற்ற பார்வைக்கும் உள்ள வித்தியாசம் பற்றிய விளக்கமும் இவற்றை சாதாரண கனவுக் காட்சிகள் என்று நினைப்பது பேதமை.
சாதாரண ஒருவனுக்கு ஒருவன் படுத்திருக்கும் நிலையிலோ இருக்கும் நிலையிலோ கண்களை மூடித் தியானத்திலிருப்பது நித்திரை செய்வதாகவே படும். அதனால் அவன் காண்பவையும் கனவுகளாகவே படும். ஆனால் இவை பற்றி விஷயம் விளங்கியவன் அவன் கூறும் காட்சிகளிலிருந்தே அவை சாதாரண கனவுக் காட்சி கள் அல்ல, அவை சூக்கும், ஆத்மீக தளங்களுக்குரியவை என்பதை உடனேயே கண்டு கொள் கிறான். உடலில் இருந்து கொண்டே உடலைக் கடந்து காணும் காட்சிகள் தரிசனங்கள் என்று அவன் உணர்கிறான். சிலருக்கு இது இறந்த பின்னர்தான் கை கூடுகிறது என்பது வேறு விஷயம். இதனால் இவைபற்றி அறிந்தவன் இதை 'பார்வையின் இன்னோர் அகலிப்பு, விடுதலையின் இன்னோர் விசாலிட்பு' என்று கூறுவான்.
- -- -- இதே அநுபவங்கள் ஜே.ஜேக்கும் உரியவையாகவே இருக்கின் றன. அவனது பெரிய சங்கீதம் அண்டவெளியில் வெகு நேரம் கவிழ்ந் திருந்து கீழ் ஸ்தாயியில் தேய்ந்து தேய்ந்து மறைந்த பின்னர் கிடைக்கும் அமைதியின் பரவசமும், அவனது பொய் தவிர்த்து வாழும் யாத்திரையும், அதனால் அவன் கண்டடையும் பரவசமும், அதை யொட்டிய அநுபவங்களும் சம்பத்தின் அநுபவங்களிலிருந்து வித்தியாசமானவையல்ல. எல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடப்பவை. இவை பற்றி விளக்க வார்த்தைகள் தேடுவது அர்த்தமற்ற வேலை'' என்பது சம்பத்தின் வியாக்கியானம். அதனால் தான் சம்பத், தான் கண்ட கனவுக் காட்சிகள்' பற்றி பின்னர் தனக்குள் விவாதிக்கும்போது மீண்டும் கனவைச் சொல்ல வந்தவன் கனவைச் சொல்ல முடியவில்லை என்பதை மீண்டும் சொல்லி விட்டுப் போகிறான்.... சொல்லாமல் அவற்றைப் புரிய வைக்க ஏன் அவனுக்குத் தெரியவில்லை? புரிய வைக்கச் சொல்லப் பட வேண்டுமா? இந்தத் தவறான எண்ணம் எப்போது ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது?'' என்று சம்பத் கேட்கும் கேள்விகள் ஜே. ஜே. யின் குரலாகவே ஒலிக்கிறது. இருவரும் ஒருவராகவே நிற் கின்றனர். ஒருவரை ஒருவர் நிரப்பிகள். சம்பத் கண்ட சூரியோ தயக் காட்சிக்கு ஜே ஜே உருவம் கொடுப்பது போல் ஒருவரை ஒருவர் நிரப்பிகள்.
ஆனால் சம்பத்தின் இக்கேள்விகள் மிக முக்கியமானவை. ' சொல் லாமல் புரிய வைக்க ஏன் தெரியவில்லை? புரிய வைக்க சொல்லப்பட வேண்டுமா?'' என்னும் இக்கேள்விகள் இன்றைய மனித வாழ்க் கையின் அடிப்படை மாற்றமும் புரட்சியும் எங்கே, எப்படி ஏற்பட வேண்டும் என்பதை கோடி காட்டிச் சொல்லும் மிக ஆழமான கேள்விகள்; புது மாற்றத்தை ஆரம்பிக்கும் கேள்விகள்.
"மரணத்தின் பின் என்ன?' என்ற இருப்புவாதியின் கேள்விக்கு. சம்பத்தின் இக்கேள்விகளும் அவனது “கனவுக் காட்சிகளும் நல்ல பதில். மரணத்தின் பின்பு மனிதன் வாழ்கிறான், இருக்கிறான். ஆனால் அவனது இருப்பையும் விடுதலையையும் மரணத்தின் முன்பும் பின்பும் தீர்மானிப்பவை, அவனது இயக்க முறையே. ஜே ஜே கூறும் பொய் தவிர்த்தல் யாத்திரை, மனிதனின் இருப்பை அல்லது விடுதலையை ஆழமாக்குவதில் முக்கியமானது என்பது அவனது மரணத்தின் பின்பும் நீளும் இருப்பினாலேயே நிரூபணம் பெறுகிறது. அத்தோடு ""சொல்லாமல் புரியவைக்க முடியாதா? இத் தவறான எண்ணம் எப்போது ஏற்பட்டது?'' என்று கேட்கும் சம்பத்தின் கேள்விகள், மனித இருப்பும் விடுதலையும் வெறும் உடல் புலனு ணர்வுகளோடு மட்டும் சம்பந்தப்பட்டவையல்ல, அதைக் கடந்தும் நீள்கின்றன என்பதையே காட்டுகின்றன. இந்த இருப்பின் நீட்சி யை, அகலிப்பை வெளிக்கொணர்ந்து மனித குலத்தின் பொதுப் பண்பாக்குவதே, பொதுச் சொந்தாக்குவதே இனிவரும் பெருந் தளப் புரட்சியாகும். இதைத்தான் சம்பத்தின் கேள்விகள் காட்டி நிற்கின்றன.
அப்படியானால் ஜே.ஜே.யின் 'மூன்றாம் பாதை யின் உருவம் என்ன?' 'ஒவ்வொரு கணத்திலும் அந்தக் கணத்தில் படும் உண்மையை எட்ட ஆவேசமாகப் பாயும்” ஜே.ஜ்ேயால் தான் கண்ட உண்மைக் கும் தான் ஸ்பரிசித்து உணரும் அந்த ஈர உணர்வுக்கும் நடை முறை வடிவம் கொடுக்க முடிந்ததா?
ஜே.ஜே. நேரடியாக தன்னளவில் இன்னதுதான் என்று கூறவிட் டாலும் சு.ரா. அதை, ஒருவன து அழகிய மெல்லிய புன்னகை போல் மெல்லிதாக அதன் வெளிக்கோடுகள் தெரிய உருவம் கொடுத்தே உள்ளார். அந்த வெளிக்கோடுகளை நாம் இப்படிக் கூறலாம்: மார்க்சியம் கூறும் பொதுவுடைமைப் புரட்சி வரவேற்கப் பட வேண்டியதேதான். ஆனால் அதற்காக அது கையாளும் லோகாயத பார்வையால் எல்லாவற்றையும் விளக்கிவிட முடியும் என்று நினைப்பதும் என்றைக்கும் அது செல்லுபடியாகும் என்று சொல்வதும் அர்த்தமற்றதாகும். மனிதனின் ஆழமான அடிமன உண்மைகளுக்கும், ஆன்மீக ஆழங்களுக்கும் பொதுவுடைமை இடங்கொடுக்க வேண்டும். அதன் வழியிலேயே அதன் தேவை களையும் உண்மையாகச் செயற்படுத்த முடியும், இல்லாவிட்டால் முல்லைக்கல், அல்பேர்ட், ஸ்ரீகாரியம் போன்றவர்கள் தான் காலங் காலமாய் பொதுவுடைமை வாதிகளாய் இருந்து கொண்டிருப் பார்கள். அது உண்மையில் ஒரு தீமையை அகற்றிவிட்டு இன்னொரு தீமையை அதனிடத்தில் கொலுவிருத்தியதாகவே முடியும். ஒரு காந்தி யென்னும் மெய்மையை மார்க்சிய பொதுவுடைமைப் பரப்புள் இறக்கிவிட்டால் தெரியும் அங்கு வெடிக்கும் புரட்சியின் பரிமாணங் கள்! எங்கோ தொலையில் அற்பத்தில் அற்பமாக கட்சியின் பெயரில் சுரண்டிக் கொண்டிருக்கும் ஒரு அநாமதேயத்தின் இதயத் துடிப் பிலும் வேறோர் அதிர்வு காண தொடங்கிவிடும்! இதுதான் ஜே.ஜே காண முயன்றிருந்த வடிவமாக இருக்க வேண்டும். இதன் செயற் பாட்டு வடிவம் ஜே.ஜே. யால் நேரடியாக வெளிக் கொணரப்படா விட்டாலும் சுராவின் படைப்பின் படிமமாக இது வந்து விழுகிறது. இது படைப்புக்கு நிறைவைத் தருகிறதா? குறையாய் இருக்கிறதா? இது கலை நிறைவைத் தருவதாக இருந்தாலும் அதனோடு ஒட்டிக் கொண்டு இன்னோர் கேள்வியும் எழுகிறது: ஜே.ஜே. தான் கருதிய கோட்பாட்டின் வடிவம் பற்றி நேரடியாகச் சொல்லியிருந்தால் அது பிரச்சாரமாகப் போயிருக்குமா? அப்படியானால் ஜே.ஜேயின் எத்தனையோவற்றைத் தேடியெடுத்து பதிவு செய்து கொள்ளும் பாலு ஜே. ஜே. * மூன்றாம் பாதை' எனத் தலைப்பிட்டு எழுதிய வற்றைத் தவறவிட்டது ஒருவித செயற்கைத்தனமாய் இல்லையா? இது மீண்டும் சிருஷ்டியில் பிரச்சார வாடை வீசக்கூடாது என்ற பழைய இலக்கிய அளவுகளுக்கு ஆட்பட்டதாகாதா? அதனால் ஜே.ஜே. என்னும் பாத்திரத்தை தீர்வுக்கு வராத புது யுகத்துக் கேற்ற ஆமோதிப்பைத் தராத பழைய பாணி அந்நியனாகத் திகழ வைப்பதாகவும் அதனால் எம்மையும் பழைய பாணி அளவுகளை வைத்தே இந்நாவலையும் விமர்சிக்கக் கோருவதாகவும் இது அமை யாதா?
தவறவி..ன்றாம் ' டுத்து பயானால் தோல் அ,
இனி 'ஜே.ஜே. சில குறிப்புகள்' பற்றி எழுதப்பட்ட சில விமர்சனங் கள் பற்றியும் மேலோட்டமாகப் பார்ப்பது எமது விமர்சனத்தை இன்னும் பூரணப்படுத்த உதவலாம். - -
அம்ஷன் குமார் இந்நூல் பற்றி மானுடத்தில் விமர்சித்தபோது, சு.ரா. உண்மையாகவே ஒரு இருப்புவாதியான காம்யூவைப் பற்றி எழுதியிருந்தால் அது ஜே. ஜேயைவிட எல்லா வகையிலும் சிறந் திருக்கும் என்கிறார். அதில் ஓரளவு உண்மையிருந்தாலும் சு.ரா. காட்ட முயலும் தேவையின் வடிவத்துக்கு மேற்கத்தைய சூழலில் பிறந்த காம்யூ தடையாகவே இருந்திருப்பார். இவ்வளவு தூரம் ஆழமாகப் போக அவன் அனுமதித்திருக்க மாட்டான். அத்தோடு ஜே.ஜே.யைப் படிக்கும்போது நம் சமகால எழுத்தாளர்களையும் எழுத்துக்களையும் அவர்கள் இயக்கங்களையும் தரிசிக்கின்ற இன்னோர் பரிமாணம் வேறு விரிகிறது. முல்லைக்கல்லைப் படிக்கும் போது என்னையும் மீறிக் கொண்டு என் பிரக்ஞையில் ஜெயகாந்தனே மிதந்து கொண்டிருக்கிறார். இன்னும் கல்கி, சாண்டில்யன், திமுக எழுத்தாளர்கள் என்று எத்தனை வகையறாக்கள் வந்து வந்து போகிறார்கள். ஓமனக் குட்டி-ஜே ஜே யைப் படிக்கும்போது உள் உடல் குலுங்கும் நாம் - * பொங்கு மாக்கடல்' ஆசிரியர் 'தாமரைக்கனி'யின் *சே சே " " விவகாரத்தின் போது வாய் விட்டே சிரித்து விடுகிறோம். 2)
அடுத்து '' இலக்கிய விமர்சனம் என்றால் என்ன?'' * " அது ஒரு நிகழ்வு'' என்று நம் இதழ்கிடையில் புன்னகையை வரவழைக்கும் கேள்வி பதி லோடு ஆரம்பிக்கும் தமிழவனின் புதுவித விமர்சனம் பற்றியது. தமிழவன் ஜே ஜே. நாவல் ஆன்மாவற்ற-அதாவது மையம் அற்ற நாவல் என்கிறார். ஆனால் அதில் வரும் சிறிய பாத்திரமும் ஜே.ஜேயை மையப்படுத்த வந்தவையே. நான் ஆரம் பத்தில் கூறியதுபோல் அது ஒரு தனித்தனிக் கதைகளின் கூட்டாகத் தெரியினும் அவை ஜே ஜே .யை மையப்படுத்த, அவன் செய்தியை முதன்மைப் படுத்த தொகுக்கப்பட்ட நிகழ்வுகளே . இன்னும் தமிழ வனின் ஜே.ஜே. பற்றிய முக்கிய கண்டனம் என்னவெனில் அவன் சரித்திரத்துக்கு வெளியே நிற்கிறான் என்பதே. மார்க்சிய கட்சி களிலும் அதன் இயக்கங்களிலும் பங்குபற்றுவோன் சரித்திரத்துக்கு உள்ளே நிற்கிறானாம். உடனடி அழகியல், தத்துவம், இலக்கிய விசாரங்களில் ஈடுபடுவோர் போன்றோர் சரித்திரத்துக்கு வெளியே நிற்பவர்களாம். அதனால் இவர்களால் சரித்திரம் செய்ய முடியாது என்பது இவரது விவாதம். இது எப்படி மார்க்சிய இயங்கியல் பார்வைக்குப் பொருந்துகிறது என்பது ஒரு புறமிருக்க, யாந்திரிகம் பொதுவுடைமைக் காலத்தின்போது மாதக் கணக்காய் வருடக் கணக்காய் லண்டன் மியூசியத்துக்குள் தன்னை அடைத்துக் கொண்டு புத்தகங்களோடு ஐக்கியமாகிவிட்டிருந்த மார்க்ஸ் சரித்திரத்துக்கு உள்ளே நின்றாரா? வெளியே நின்றாரா?
மேற்காட்டப்பட்ட அம்ஷன் குமாரினதும் தமிழவனதும் இரு விமர் சனங்களும் மார்க்சியத்தின் புதிய கவனிப்புகளாகி அதன் உயிர்ப் பைப் பேண முயல்பவை என்றால் அத்தகைய மார்க்சிய உயிர்ப் பையே கசக்கி கருக்கி விடும் போக்குத்தான் ஜே.ஜே. பற்றி 'அலை' யில் வந்த சிவசேகரத்தின் விமர்சனம். பாவம், இவர் அறிந்து வைத்திருப்பவையெல்லாம் 19ம் நூற்றாண்டுக்குரிய மார்க்சியப் பார்வையும் அதற்கெதிராகக் குரல் கொடுப்பவர்களைத் தாக்கும் அதேகால வரட்டு சுலோகங்களுமே. இத்தகையோர் ஜே. ஜே. போன்ற படைப்புகளை விமர்சிக்க வந்தால், எவ்வளவுக்கெவ்வளவு நமக்கு உயர்வான பகுதிகளாகப் படும் இடங்களெல்லாம் அவர் களுக்கு ஜட நிலையின் ஆகக்குறைந்த உணர்வுகளை எழுப்பும் இடங் களாகவே தெரியும். அதனால்தான் இந்த மன நிலை, பத்மனாப ஸ்வாமி கோவில் படிக்கட்டுகளில் மக்கள் சூழ இருக்கும் காந்தியை பிர்லா மாளிகை படிக்கட்டுகளில் வைத்துப் பார்க்க ஆசைப்படு கிறது. காய்ந்து வரண்டு போன எலும்புத் துண்டைக் கடிக்கும் நாய் கடைசியில் தன் பற்களிலிருந்தே வழியும் இரத்தத்தை ரசித்து உறிஞ்சும் மனவிகாரம் இது.
கடைசியாக ஒரு கேள்வி. 'ஜே.ஜே.' நாவல், மு.த.வின் இலக்கியக் கோட்பாடான 'மெய்யுளு க்கு ஒரு சவாலாக எழுந்த தாகக் கொள்ள முடியாதா? அதாவது 'மெய்யுள்' வாழ்க்கையின் உண்மை நிகழ்வுகளையே கலைத்துவத்தோடு வடித்துத் தரும்படி கேட்டு நிற்கிறது என்ற ஒரு அம்சத்தின் அடிப்படையில் பார்த்தால் இங்கே சு.ரா. வாழ்க்கை உண்மை வரலாற்றுக்குப் பதில் சில கற்பனைகளைப் புகுத்தி உண்மையில் நடந்தது போல் கூறி பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது மெய்யுள் கோட்பாட்டுக்கு ஒரு சவாலா காதா?
இல்லையென்றே சொல்லவேண்டும். காரணம் 'ஜே.ஜே. 'பழைய பாணி கற்பனைக் கதையல்ல என்பது ஒரு புறமிருக்க, 'மெய்யுள்' என்றைக்கும் பழைய உருவ ஊடகங்களை ஒரேயடியாக நிராகரிக்க வேண்டும் என்று சொன்னதில்லை. அவற்றின் கலப்பிலும், உடைப் பிலும் அதனால் ஏற்படும் புதிய உயிர்ப்பிலுமே மெய்யுள் எழுகிறது. இந்தப் பழைய உருவங்களின் உடைப்பும் கலப்பும் அதனால் பெறப் படும் புதிய உருவாக்கமும் தவிர்க்க முடியாத தேவையில் உந்தலி லேயே நிகழ வேண்டும். அந்த விதத்தில் பார்க்கப் போனால் ஜே.ஜே. சில குறிப்புகள், மெய்யுள் கோட்பாட்டுக்கு வலுவூட்டு வதாகவே நிற்கிறது. அதாவது நாவல் என்ற பழைய உருவத்தை உடைத்து, ஜே.ஜே. பற்றி ஓர் எழுத்தாளனின் குறிப்புகள், சிலரின் தகவல்கள், எழுத்தாளனின் சிறு பிராய அனுபவம், ஜே.ஜே.யின் டயறிக் குறிப்பு, ஒரு நண்பனின் கனவுக் குறிப்பு என்று பல உருவங் களின் சேர்க்கையாய் நிற்கும் இப்படைப்பு, தக்க பெயர் இன்மை யால் வசதிக்காக நாவலாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் உண் மையில் நாவல் என்ற உருவத்துள் வீழ மறுத்து நிமிர்ந்து நிற்கும் படைப்பு இது. இந்த நிமிர்வுக்கு ஜே.ஜே. எழுதியதாகத் தரப் படும் புத்தக அநுபந்தம் (அதில் காணப்படும் தலைப்புகள் மிகுந்த கவித்துவச் செறிவுடையனவாகத் தெரியினும்) ஒருவித செயற்கைத் தன்மைகளோடு சேர்ந்து சோர்வுள் விழுத்த முயன்றாலும், அது நிமிர்ந்தே நிற்கிறது. மொத்தத்தில் இனிவரும் இலக்கியச் சிருஷ்டிகளின் வடிகாட்டியாகவும் முன்னோடியாகவும் இந்நூல் நிமிர்ந்து நிற்கிறது.