தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, June 24, 2018

அன்பு வழி (பாரபாஸ்) - பேர் லாகர்குவிஸ்டு :: க. நா. சுப்பிரமணியம்,, மொழிபெயர்த்தது


http___tamildigitallibrary.in_admin_assets_book_TVA_BOK_0002647_அன்பு-வழி.pdf
ஆரம்பப் பகுதியும் முடிவுப்பகுதியும்

அன்பு வழி

சிலுவையில் அறையப்பட்டு அவர்கள் அங்கு எப்படித் தொங்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சுற்றிலும் நின்றவர்கள் யார் யார் என்பதும் எல்லோருக்கு மே தெரியும். தாயார் மேரி, மேரி மாடலென், வெரோனிகா, சிலுவையைத் தாங்கிவந்த ஸைரீனைச்சேர்ந்த ஸைமன், மற்றும் போர்வையெடுத்துப் போர்த்திவிட்ட அரிமி தியாவைச் சேர்ந்த ஜோஸப் ஆகியவர்கள் சுற்றிலும் நின்றார்கள். ஆனால் சரிவிலே சற்றுத் தள்ளி, ஒருபுறமாக ஒதுங்கி நின்றான் ஒருவன். அவனால் சிலுவையில் அறையப்பட்டிருந்தவரிடமிருந்து கண்களைத் திருப்பவே முடியவில்லை. நடுச் சிலுவையில் அந்த மரண அவஸ்தையை ஆரம்ப முதல் கடைசி வரையில் ஒரு துளிகூட விடாமல் பார்த்துக்கொண்டு நின்றான் அவன். அவன் பெயர் பாரபாஸ். அவனைப்பற்றித்தான் இந்த நூல்.

அவனுக்கு வயது முப்பத்திருக்கும். கட்டுமஸ்தான உடல், வெளிரிய மேனி, சிவந்த தாடி, கருத்த மயிர். அவன் புருவமயிரும் கருப்பாகத்தான் இருந்தது. அவன் கண்கள் குழிவிழுந்து ஆழ்ந்துகிடந்தன ; எதிலிருந்தோ பயந்து ஒளிந்து கொள்ள விரும்புகிறவைகள் போல் அவை எங்கேயோ போய் ஒட்டிக்கொண்டிருந்தன. ஒரு கண்ணுக் குக்கீழே இருந்த ஆழமான வடு தாடியில் சென்று மறைந்தது. ஆனால் ஒரு ஆசாமியின் உருவத்துக்கும், தோற்றத்துக்கும் அப்படி முக்கியத்வம் எதுவும் உண்டா என்ன ?

கவர்னரின் அரண்மனை முதல், தூரத்தில் அந்தக் கும்பலை அவன் பின்தொடர்ந்து வந்திருந்தான் ; தெருத் தெருவாகத் தொடர்ந்து வந்திருந்தான். ஓய்ந்துபோன ராபி சிலுவையைத் தூக்க மாட்டாமல் தெருவிலே சாய்ந்த போது தூரத்திலேயே நின்றான் அவன். ஸைனைப் பிடித்து அவனை அந்தச் சிலுவையைத் தூக்கிவரக் கட்டாயப்படுத்தினார்கள். அப்படிக் கும்பல் ஒன்றும் அதிகம் இல்லை. இருந்த கும்பலிலும் பெரும் பகுதி ரோமா புரியின் சேனை வீரர்கள் தான்! தண்டனை விதிக்கப்பட்டவர் களின் ஸ்திரீ ஜனங்களும், தெருவிலேயே வசிக்கும் குழந்தை களையும் தவிர கும்பலில் வேறு யாருமில்லை என்றுதான் சொல்லவேண்டும். எந்தத் தெருவோடு போனாலும், சிலுவை தூக்கும் குற்றவாளியை வேடிக்கை பார்க்கப் பத்து குழந்தைகளாவது வரும் - அதுவும் தங்கள் தெருவைத் தாண்டிவராது. தினசரி விளையாட்டுகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட பொழுதுபோக்குத் தானே அது ! இருந்தாலும் குழந்தைகளுக்கு அந்தக் காட்சி சீக்கிரமே அலுத்து விடும் . அவை மீண்டும் தங்கள் விளையாட்டுகளில் ஈடுபடத் தொடங்கிவிடும். ஆனால் திரும்புமுன், கடைசியாக வந்து பாரபாஸையும் ஒரு சந்தேகப் பார்வை பார்த்துவிட்டுத் தான் திரும்பின அந்தக் குழந்தைகள் எல்லாம். 

சிலுவைக்குன்றின் சரிவிலே நின்று கொண்டிருக் கிறான் அவன். நடுச் சிலுவையில் அறையப்பட்டிருந்த மனிதரிடமிருந்து அவனால் தன் கண்களை வாங்கவே முடியவில்லை. உண்மையில் அவன் இந்தப் பக்கம் வரவே விரும்பவில்லை. இங்கு எதையும் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் ; எதுவுமே அசுத்தம் தான் இங்கு. சக்தி வாய்ந்த இந்தப் பிரதேசத்திலே காலடி எடுத்துவைத்து விட்டவன் மீள்வதென்பது அப்படி ஒன்றும் சுலபமான காரியமல்ல. ஒருதரம் வந்தவன் திரும்பத்திரும்ப இங்குவர விரட்டப்படுவான் - தப்பமுடியாத காலம் ஒன்று வரும் வரையில் விரட்டப்படுவான். மண்டையோடுகளும், மனித எலும்புகளும் நாலாபக்கங்களிலும் சிதறிக்கிடந்தன. உளுத்து மக்கிக்கொண்டிருந்த மரச் சிலுவைகள் ஆங் காங்கே கிடந்தன. இங்கிருப்பதை யார் தொட்டு அகற்று வார்கள் ? அல்லது உபயோகப்படுத்துவார்கள் ! விடுதலை பெற்றவனான அவன் அங்கு, கொல்கோதா குன்றில், என்ன செய்து கொண்டிருந்தான்.

சிலுவையில் அறையப்பட்டவரின் தலை தொங்கலிட்டு விட்டது. மூச்சு சிரமப்பட்டு வந்தது. இன்னும் அதிக நேரம் தாக்குப்பிடிக்காது, அப்படி ஒன்றும் பலசாலியல்ல அவர். உடல் மெலிந்து ஒட்டி வற்றியிருந்தது. கைகளால் எந்த வேலையும் செய்து பழக்கப்படாதவர்போல, அந்தக் கைகள் வலுவில்லாமல், முறுக்கில்லாமல் இருந்தன. விசித்திரமான மனிதர் தான். தாடிகூட அடர்த்தியாக இல்லை ; மாரிலே மயிரேயில்லை ; சிறு பையனுடைய மார்பு போல இருந்தது. பாரபாஸுக்கு அவரைப் பிடிக்கவில்லை.

அரண்மனையின் வெளி முற்றத்திலே அவரை முதல் முதலாகப் பார்த்தது முதற்கொண்டே, அவர் ஒரு விசித்திரமான மனிதர், விந்தையானவர் என்கிற எண்ணம் ஏற்பட்டுவிட்டது பாரபாஸுக்கு. ஏன், எதனால் என்று அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. அவன் மனத்தில் தோன்றியது அது. அந்த ஆசாமியைப் போன்று வேறு ஒரு ஆசாமியை அதற்குமுன் பார்த்திருப்பதாகவே பாரபாஸுக்கு நினைவுக்கு வரவில்லை. சிறையில் பலகாலம் அடைபட்டிருந்துவிட்டு வெளியே வந்திருந்த அவன் கண்களுக்கு அந்த வெளிச்சம் பழக்கப்படாததால் ஏற்பட்ட தோற்றமாகக் கூட இருக்கலாம் முதலில் அந்த மனிதரையே அசாதாரணமான ஒரு ஒளி சூழ்ந்திருப்பது போலத் தோன்றியது. ஆனால் சிறிதுநேரத்தில் தானாகவே அந்த ஒளி மறைந்து விட்டது. அவன் கண்கள் அந்த வெளிச்சத்திற்குப் பழகிவிட்டன. முற்றத்தில் நின்று கொண்டிருந்த மற்ற உருவங்களும் அவன் கண்ணில் பட்டன. எனினும் அந்த ஆசாமி ஒரு தினுசாக இருப்ப தாகவும் அவரைப்போல வேறு யாரையும் தான் பார்த்த தில்லை என்றும் எண்ணினான் பாரபாஸ். தன்னைப்போலவே அவரையும் கைது செய்து உயிர்த்தண்டனை விதித்து விட்டார்கள் - எனினும் அது நம்பத்தகுந்த விஷயமாகத் தோன்றவில்லை. தன்னைப்போல அவரும் ............. அதை பாரபாஸால் கிரஹித்துக் கொள்ள இயலவில்லை. ஆனால் அவனுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அவருக்கு எப்படி அவர்களால் தண்டனை விதிக்க முடிந்தது ? அவர் குற்றவாளியல்ல என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிகிறதே !

பிறகு அவரைச் சிலுவை தூக்கச் சொன்னார்கள். பாரபாஸை அவிழ்த்து விடுவித்து விட்டார்கள். அவனாகச் செய்தது இதில் ஒன்றுமில்லை. அவர்கள் முடிவு செய்த விஷயம் அது. யாரை அவர்கள் விடுவிக்க விரும்பினார்களோ அவரை விடுவிக்கலாம் - பாரபாஸை விடுவித்து விட்டார்கள். நடந்தது அவ்வளவுதான். அவர்கள் இருவருக்கும் உயிர்த் தண்டனை விதிக்கப்பட்டி ருந்தது. ஒருவரை விடுவிக்கலாம் என்றதும் அவனை விடு வித்து விட்டனர். அவர்கள் தன்னை விடுவித்தது பற்றி பார்பாஸிற்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. தன் சங்கிலிகளைத் தெறித்துத் தன்னை விடுவிக்க வீரர்கள் முயன்று கொண்டிருக்கையிலேயே அவரைசிலுவை தூக்கச் செய்து முற்றத்திலிருந்து அழைத்துச் சென்று விட்டார் கள் என்று கண்டான் பாரபாஸ். முதுகில் சிலுவையை சுமந்து கொண்டு கிளம்பிவிட்டார் அவர்.

சாவி வளைவு மூலமாகப் பார்த்துக் கொண்டு ஒரு நிமிஷம் தயங்கினான் பாரபாஸ். அவன் பிரமையுற்றவன் போல நிற்பதைக் கண்ட காவலாளி முதுகில் கைவைத்து ஒரு தள் ளு தள்ளினான் :- என்ன, பல்லையிளித்துக் கொண்டு நிற்கிறாய் ? உன்னை விடுதலை செய்தாய்விட்டது ; ஓடு என்று தள்ளினான். அதற்குப் பிறகுதான் பாரபாஸிற்கு சுய ஞாபகம் வந்தது. ஆலிவ்வளைவு மூலமாக அவசர அவசரமாக வெளியேறினான். எதிரே தெருவோடு சிலுவையைத் தூக்கிக் கொண்டு அந்த ஆசாமி போவதை பார்த்ததும், வேறு ஒன்றும் செய்யத் தோன்றாமல் பின் தொடர்ந்தான். ஏன் என்று அவனுக்கே தெரியாது. மணிக்கணக்காக அந்த மரணாவஸ்தையைப் பார்த்துக் கொண்டு ஏன் இப்படி இங்கே நின்று கொண்டிருந்தான் என்பதும் அவனுக்குத் தெரியாது. அவனுக்கும் அதற்கும் துளிக்கூடச் சம்பந்தமில்லை. எனினும் நின்றான்.


சுற்றி நின்ற மற்றவர்களும் அங்கு நின்றிருக்க வேண்டிய தில்லை தானே ? அவரவர் இஷ்டமில்லாமலா நின்றார்கள்? அசுத்தத்தில் நின்று, தங்களையும் அசுத்தப் படுத்திக் கொள்பவர் தான் விரும்புவார்கள். தாமாக வந்து நின்றார்கள் அவர்கள். ஆனால் அவர்கள் உறவினர் களாகவும், அந்த ஆசாமிக்கு மிகவும் வேண்டிய நண்பர் களாகவும் இருக்கலாம். அசுத்தம் என்பதை அவர்கள் பொருட்படுத்தாமலிருப்பது போல இருந்ததும் விசித்திர மாகத்தான் இருந்தது.

அந்த ஸ்திரீ அவர் தயாராக இருக்கும். ஆனால் அவரைப் போல இல்லை அவள். அனாலும் யார் தான் அவரைப் போல இருக்க முடியும்? அவள் ஒரு குடியானவ ஸ்திரி மாதிரி யிருந்தாள். கடுமையான முகபாவத்துடன் சிறப்பற்ற ஒரு தன்மையுடன் இருந்தாள் அவள். அடிக்கடி புறங்கையால் வாயையும் மூக்கையும் துடைத்துக் கொண்டாள். கண்ணில் ஜலம் துளித்து மூக்காலும் வாயாலும் வழிந்தது. ஆனால் அவள் அழுதாள் என்று சொல்லமுடியாது. மற்றவர்களைப் போல அவள் துயரப் பட்டாள் என்றுகூடச் சொல்ல முடியாது. மற்றவர்கள் பார்த்ததைப் போல அவள் அவரைப் பார்க்கவில்லை. ஆகவே அனேகமாக அவள் அவர் தாயாராகத்தான் இருக்கும். மற்றவர்களை விட அவள் அதிகமாக அவருக் காகத் துயரமுற்றிருந்தாள் என்பது உண்மையாகவே இருக்கும். இருந்தும் அங்கு அப்படி தன் மகன் சிலுவையில் தொங்குவது பற்றி மகனையே குற்றம் சாட்டிக் குறைகூறுவது போன்ற ஒரு பாவம் அவள் முகத்திலே இருந்தது. தானாகத் தேடிக்கொண்ட தண்டனை அது என்று அவள் கூறுவது போல இருந்தது. ஏதோ செய்து தானே அவர் அந்தத் தண்டனைக்குள்ளாகி யிருக்க வேண்டும் ? குற்றமே செய்யாதவராயினும், தவறே இழைக்காதவரெனினும் எதுவும் செய்யாதவரைச் சிலுவை தூக்கச் சிணுக்கமாட்டார்களே ! அவர் செய்தது எதுவானாலும் அதை அவர் தாயாகிய அவள் அனுமதிக்க வில்லை என்பது தெரிந்தது. தாய்க்குத் தெரியாதா மகன் குற்றமற்றவன் என்பது ? எது செய்திருந்தாலும் மகன் குற்றமற்றவன் என்று தானே தாய் நம்புவாள்?

பாரபாஸுக்குத் தாயார் கிடையாது. சொல்லப் போனால் தகப்பனார் கூடக் கிடையாது. அவனைப் பற்றிய வரையில் தகப்பன் என்று யாரையும் குறிப்பிட்டு அவன் அறிந்தது கிடையாது. உற்றார் உறவினர் என்றும் சொல்லிக் கொள்ள அவன் அறிந்த வரையில் அவனுக்கு யாரும் கிடையாது. அவனைச் சிலுவையில் அறைந் திருந்தார்களானால், அவனுக் கென்று கண்ணீர் சிந்த யாருமே கிடையாது. இந்த மாதிரி யார் அழப்போகிறார்கள் அவனுக்காக ? மார்பில் கைகளால் அறைந்து கொண்டு இப்படியும் நடந்ததுண்டோ உலகில், என்று எண்ணியவர் களாக சோகாக்கிரந்தர்களாக நின்றார்கள் அவர்கள். அந்த அழுகையும் விம்மலும் மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது.

வலது புறத்துச் சிலுவையில் அறையப்பட்டிருந்த ஆசாமியை அவனுக்கு நன்றாகவே தெரியும். அவன் அங்கு நிற்பதைக் கண்டானானால் தன் மரணாவஸ்தையைப் பார்த்து ஆனந்திக்கத்தான் வந்து நிற்கிறான் என்று அவன் எண்ணிக் கொள்வான். ஆனால் பாரபாஸுக்கு அவனைப் பற்றிய சிந்தனையே யில்லை ; அவன் பொருட்டு அங்கு வரவில்லை அவன். அவன் சிலுவையில் அறையப்பட்டு உயிரை இழக்க வேண்டியவன் என்பது தான் பாரபாஸின் எண்ணமும். மரண தண்டனைக் குரியவன் தான் அந்த ராஸ்கல். அவன் எதற்காக தண்டனை விதிக்கப் பட்டு உயிர் துறந்தானோ! அதற்காக இல்லாவிட்டாலும் வேறு குற்றங்கள் எத்தனையோ செய்தவன் அவன். மரண தண்டனைக்குப் பல காரணங்களால் தகுதியுள்ளவன் தான்.

கோடியிலிருந்தவனைப் பார்ப்பானேன்? நடுவிலிருந்தவர் பொருட்டன்றோ அவன் அங்கு நின்று கொண்டிருந்தான். தனக்குப் பதில் இந்தக் கணம் சிலுவையில் உயிர் நீத்துக் கொண்டிருந்த நடு சிலுவைக் காரரைப் பார்க்கவன்றோ அவன் வந்திருந்தான் ? அவனிஷ்ட மில்லாமலேயே அங்கு அவனைத் தருவித்து நிறுத்தியிருந்தது அந்த அசாதாரணமான ஆசாமியின் சக்தியன்றோ? சக்தியா? ஆனால் அந்த ஆசாமியைப் பார்த்தால் சக்தியேயற்றவர் போலத்தான் இருந்தது. சிலுவையில் இதுவரை தொங்கி உயிர் நீத்த எந்தக்

குற்றவாளியையும்விடச் சக்தியற்றவராகக் காட்சியளித் தார் அந்த ஆசாமி! துயரத்தின் எல்லை அது தானே ! பக்கத்தில் இருந்த இருவரையும் பார்க்கக்கூட அவ்வளவு பரிதாபமாக இருக்கவில்லை. அவர்களிருவரும் அவ்வளவு கஷ்டப்பட்டதாகத் தெரியவில்லை. மற்றவர்கள் பலசாலிகள். அவர்களுக்கிருந்த பலத்தில் சிறிது கூட அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை, தலையை நிமிர்த்திப்பார்க்கக் கூடத் தெம்பில்லை அந்த ஆசாமிக்கு ; தலை மாரிலே தொங்கலிட்டுவிட்டது.

இருந்தும் இப்போது சற்று தலையைச் நிமிர்த்திப் பார்க்க முயன்றார் அந்த மனிதர். மெலிந்த மயிரில்லாத  மார்பு விம்மி விம்மி அடங்கிற்று. நாக்கால் உதடுகளைத் தடவிக்கொண்டார்; உலர்ந்த உதடுகளில் உயிரில்லை. தாகம் என்று பலஹீனமாக முணுமுணுத்தார் அவர். குன்றின் சரிவிலே பகடைக் காய்களை உருட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த சேனை வீரர்களுக்கு அலுப்பு ; இந்த மனிதர் இவ்வளவு நேரம் சாகாமல் இழவு கொடுக்கிறாரே என்ற ஆத்திரம் அவர்களுக்கு. தாகம் என்று அவர் முணு முணுத்தது அவர்கள் காதுகளில் விழவில்லை. ஆனால் உறவினர்களில் ஒருவர் அவர்களை அணுகிச் சொன் னார். மனசில்லாமலே ஒரு வீரன் எழுந்தது. ஒரு சட்டியில் கடல் நுரையைத் தோய்த்து ஒரு கழியில் வைத்து சிலுவையில் அறையப்பட்டிருந்தவர் உதட் டண்டை கொண்டுபோய் நீட்டினான். அந்த ஜலம் என்ன துர்நாற்ற மடித்ததோ - எவ்வளவு குப்பை சத்தை ஊறிய ஜலமோ. அது பிடிக்கவில்லை சிலுவையில் அறையப் பட்டவருக்கு. அது வேண்டாமென்று ஒதுக்கிவிட்டார். பல்லையிளித்துக் கொண்டு நின்றான் இரக்கமற்ற வீரன். நடந்ததைப் பார்த்த மற்ற சகாக்களும் பல்லை இளித்தார்கள். தகப்பன் பெயர் தெரியாத அயோக்கியர்கள் !

உறவினர்களும் மற்றவர்களும் மூச்சு பெரும் பெரும் மூச்சுகளாக வருவதைப் பார்த்துக்கொண்டு செயலற்று நின்றார்கள். சீக்கிரமே முடிவு வந்துவிடும் என்பது தெளி வாகிக் கொண்டிருந்தது. முடிவு சீக்கிரமே வருவதும் நல்லது தான், என்றெண்ணினான் பாரபாஸ், பாவம் ! அந்த அப்பாவி இன்னும் அதிக நேரம் கஷ்டப்பட வேண்டியதாக இருக்காது. முடிவு சீக்கிரமே வந்து விட்டால் நல்லது தான் முடிவுற்றபின் பாரபாஸ் தன் வழி போகலாம் - அதற்குப் பின் அவன் இந்தக் காட்சி யைப்பற்றி எண்ணிப் பார்க்க அவசியமே இராது.....

ஆனால் திடீரென்று குன்றின் சரிவிலே இருட்டத் தொடங்கிவிட்டது. சூரியன் வெளிச்சம் தர மறுத்தது போல இருந்தது. திடீரென்று பிரமாதமாக இருட்டத் தொடங்கிவிட்டது. அந்த இருட்டிலே, சிலுவையில் அறையப்பட்ட மனிதர் உரத்த குரலில் கத்தினார் :

- என் கடவுளே ! என் கடவுளே ! என்னை ஏன் கைவிட்டுவிட்டாய்?

பயங்கரமாக இருந்தது! அவர் சொன்னதற்கு அர்த்தம் தான் என்ன ? ஏன் இப்படி திடுதிப்பென்று எங்கும் காரிருள் சூழ்ந்துவிட்டது ? நண்பகலில் இப் படியும் இருட்டுபோ? இதற்குக் காரணம் என்ன சொல்ல இயலும்? உயரத்தில் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக மூன்று சிலுவைகளும் லேசாகத் தெரிந்தன. கோரமாகப், பயமுறுத்தும் காட்சியாக இருந்தது அது. ஏதோ பயங்கர மானதொன்று நடக்கவிருப்பதுபோல இருந்தது. பகடை உருட்டிக் கொண்டிருந்த சேனை வீரர்கள், கைகளில் ஆயுதங்களை உருவிக்கொண்டு, எதற்கும் தயாராகப் பாராக் கொடுத்தனர்; எது எப்படியானாலும் ஆயுதங்களை உருவிக் கொண்டு கிளம்புவது அவர்கள் வழக்கம்! நீட்டிய வேல்களுடன் அவர்கள் சிலுவைகளைக் காவல் புரிந்தனர். பயத்தில் அவர்கள் ஒருவருடன் ஒருவர் குசுகுசுத்துப் பேசுவது அவன் காதில் விழுந்தது. இப்போது அவர் களுக்கே பயம் வந்துவிட்டது. இப்போது அவர்கள் பல்லை யிளித்துப் பரிகசிக்கவில்லை! பயந்தாங்கொள்ளிகள் /

மூட நம்பிக்கைகள் மிகுந்தவர்கள் அவர்கள் !

________________

21

பாரபாஸுக்கும் பயமாகத்தானிருந்தது. மறுபடியும் வெளிச்சமாகத் தொடங்கியதும் அவனுக்குச் சற்றுத் தைரியம் வந்தது. மறுபடியும் எல்லாம் சாதாரண த்வம் பெற்றது. அதிகாலையில் வெளிச்சம் ஏறுமே, அந்தமாதிரி வெளிச்சம் சிறிது சிறிதாக ஏறிவந்தது. குன்றும், சுற்றிலும் நின்ற ஆலிவ்மரங்களும், சூரிய வெளிச்சத்தில் தெரியத் தொடங்கின. அஸ்தமன சமயத்தில் அடங்கும் பறவைகள் அடங்கிக் கிடப்பதுபோல் அடங்கியிருந்த பட்சி ஜாலங்கள் குரல் கொடுக்கத் தொடங்கின. புது நாள் உதயமாவது போல இருந்தது.

உறவினர்களும் உற்றாரும் அசையாமல் கொள்ளாமல் நின்றார்கள். அவர்கள் அழவுமில்லை, இப்போது முனகவும் மில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த மனிதரைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள் அவர்கள். பாராக்காரர் களும் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றார்கள். எல்லாம்

மரண அமைதியில் ஆழ்ந்திருந்தது.

அவன் இஷ்டப்பட்டபோது இனி போகலாம். முடிந்து விட்டது காரியம். சூரியன் மீண்டும் பிரகாசித்தது. நாள் பழையபடியாகிவிட்டது ; சாதாரணத்வம் பெற்றுவிட்டது. சிறிது நேரம் இருட்டியிருந்தது - அந்த மனிதர் இறப் பதற்காக இருட்டியது போலும்.

ஆம். அவன் இனிப் போகலாம். போகவேண்டியது தான். எதற்காக அவன் காத்திருக்க வேண்டும் ! அவனுக்காக சிலுவையை ஏற்றுக்கொண்ட அந்த ஆசாமி சிலுவையில் உயிர் நீத்தாகிவிட்டது. அவன் இனி அங்கு தங்க எக் காரணமும் இல்லை. சிலுவையிலிருந்து அவரை

________________

22

இறக்கினார்கள் - கிளம்பும் முன் அதைக் கவனித்தான் அவன். ஒரு சுத்தமான துணியினால் அந்த உடலை மூடினார்கள் இரண்டு ஆண்கள் என்றும் கவனித்தான். அந்த உடல் துணியேபோல வெண்மையாக இருந்தது. செத்த பிறகும் அந்த உடலை எவ்வளவு ஜாக்கிரதையாக அவர்கள் கையாண்டார்கள் என்பதையும் கவனித்தான் பாரபாஸ். அவருக்கு வலிக்குமோ என்று பயப்படுகிற வர்களைப் போலக் கையாண்டார்கள் அவர்கள். இதென்ன விசித்திரம் என்று எண்ணினான் பாரபாஸ் ? என்ன சொன்னாலும் சிலுவையில் உயிர் நீத்த உடல் தானே அது! விசித்திரமான மனிதர்கள் தான்! அது உண்மை . கண் களில் ஈரமேயில்லாமல், தன் மகனாக இருந்த அந்தச் சடலத்தைப் பார்த்துக்கொண்டு நின்றாள் தாயார். துயரத்தின் எல்லையை எட்டி, அதை வார்த்தைகளிலும் வெளிப்படுத்த மாட்டாமல் அவள் திணறுவதுபோல இருந்தது அவள் முகபாவம். நடந்தது என்ன என்று புரிந்துகொள்ள இயலாதவள் போல நின்றாள் அவள். அதை மன்னிக்க முடியாதவள் அவள் ! அவள் பரிதவிப்பு புரிந்தது அவனுக்கு !

பரிதாபகரமான அந்த ஊர்வலம் அங்கிருந்து கிளம் பியது. துணி போட்டு மூடிய சடலத்தைத் தூக்கிக் கொண்டு அவர்கள் முன்னால் நடந்தனர். ஸ்திரீகள் பின் தொடர்ந்தனர். அவர்களில் ஒருத்தி பாரபாஸைத் தாயா ருக்குச் சுட்டிக்காட்டி ஏதோ சொன்னாள். தாயார் நின்று திரும்பி பாரபாஸைப் பார்த்தாள் - அந்தப் பார்வையிலே தான் எவ்வளவு பரிதாபமும், குற்றம் சாட்டும் தன்மையும் நிறைந்திருந்தது! அந்தத் தாயின் பார்வையை அவனால் என்றும் மறக்கவே முடியாது. பிறகு கொல்கோதா

________________

23

பாதை வழியே அவர்கள் இறங்கி நடந்து இடது பக்கம் திரும்பி மறைந்து விட்டார்கள்.

அவர்கள் தன்னைக் கவனிக்காத வண்ணம் அவன் வெகு தூரத்துக்கப்பால் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான். சிறிது தூரத்துக்கப்பாலிருந்த ஒரு தோட்டத்தில் பாறையில் வெட்டப்பட்ட கல்லறை ஒன்றில் அந்தச் சடலத்தை அடக்கம் செய்தனர். ஒரு பெரிய கல்லைப் புரட்டி கல்லறையை மூடிவிட்டு அவர்கள் தங்கள் வழி போய்விட்டனர்.

கல்லறை ஓரம் போய்ச் சிறிது நேரம் நின்றான் பாரபாஸ். அவன் பிரார்த்தனை எதுவும் செய்யவில்லை, ஏனெனில் அவன் மஹா பாவி; தீமை செய்யவே பிறந் தவன். அவன் செய்யும் பிரார்த்தனை எதுவும் எந்தத் தெய்வத்துக்கும் உகந்ததாக இராது என்பது பற்றிச் சந்தேகமேயில்லை. குற்றம் செய்து அதை நிவர்த்தி செய்யாதவன் அவன். தவிரவும் செத்தவரை அவனுக்கு முன்பின் தெரியாது. இருந்தும் ஒரு வினாடி. கல்லறை யண்டை நின்றான் அவன்.

பிறகு அவனும் திரும்பி ஜெரூஸலம் நோக்கி நடந்தான்.

டேவிட் கேட்டைத் தாண்டி, பாதையோடு சிறிது தூரம் போனதும் பிளந்த உதடுகள் உள்ள அந்தப் பெண்ணைப் பார்த்தான் அவன். வீடுகளின் சுவர்களின் நிழலிலே பதுங்கிப் பதுங்கிநடந்த அவள் அவனைப் ......

************************************************************************
160


அடிEை: ஓட்டி, கடைசியில் ஸ்ஹாக் விருப்பப்படியே பார பாஸையும் அவனுடன் அனுப்ப ஒத்துக்கொண்டான், அவர்களிருவரும் சேர்ந்தே இருக்கலாம் என்றான். பிறகு தனிமையில் சிந்திக்க அவர்களை விட்டுப் போனான்.

உரிய காலத்தில் ஸ்ஹாக்கும் பாரபாஸும் காவ லாளியின் முன் போய் நின்றார்கள். சங்கிலிகளை அகற்றி விட்டு, சுரங்கத்திலிருந்து அவர்களை வெளியே அழைத்துப் போனார்கள். வெளியே வஸந்தகாலம் -- நண்பகல். புல்லும் பச்சையுமாகவும் மணம் வீசிப் பசுமையாக இருந்ததைக் கண்டதும், பச்சை வயல்களையும், பள்ளத்தாக்குகளையும், கடலையும் கண்ட ஸ்ஹாக் மண்டியிட்டுப் பரவசத்துடன் கூவினான் அவன்.

14 அவர் வந்துவிட்டார்!அவர் வந்து விட்டார் ! பார் ! இதோ அவர் ராஜ்யம் ஸ்தாபிதமாகிவிட்டது."

அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த அடிமை ஒட்டி ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தான். பிறகு காலால் உதைத்து எழுப்பி '' வா போகலாம்' என்றான்.

ஏரில் பூட்டி ஜோடிக் காளைகள் மாதிரி உபயோகப்பட அவர்கள் இருவரும் லாயக்கானவர்கள் தான். ஜோடியாக இருவரும் வெகு நாட்கள் பிணைக்கப்பட்டிருந்தவர்கள் தானே ! மாடுகள் போலப் பழகியவர்கள் தான் இருவரும். உடல் மெலிந்து பலமிழந்திருந்தார்கள். அரைத்தலை (மயிருடன் அவர்களைப்பார்த்து மற்ற அடிமைகள் சிரித் தார்கள் என்பதும் உண்மையே ! எங்கிருந்து வந்தவர்கள் என்ப து பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. ஆனால்

161

அவர்களில் ஒருவன் சீக்கிரமே மீண்டும் பலசாலியாகி விட்டான், ஏர் இழுக்கிற காரியத்தை அவர்கள் தெ: 0 புடனேயே செய்தார்கள். அவர்களிடம் அடிமை ஓட்டிக்குத் திருப்தி தான். சுரங்கத்திலிருந்து வந்தவர்கள் இதற்கு மேல் உபயோகப்படமாட்டார்கள்.

நடந்த துபற்றி அவர்களுக்கும் மிகவும் திருப்தி தான்நன்றி தான். காலை முதல் இரவு வரையில் மாடுகள் போல அவர்கள் உழைக்கவே வேண்டியதாக இருந்தது. ஆனால் முன்னைக்கிப்போது எவ்வளவு வித்தியாசமா நல்ல காற்றை சுவாசிக்க முடிந்தது. சூரியனைப் பார்க்க முடிந்தது. சாட்டையடி தப்ப முடியாதிருந்தது உண்மைதான். அவர்கள் மேல் வியர்வை ஆறாக ஓடியதென்பதும் உண்மை தான். இருந்தும் செத்தவர்கள் உலகிலிருந்து உயிர் பெற்றுத் திரும்பியவர்கள் அவர் கள். காலை மாலை, பகல் இரவு, சூரியன் சந்திரன், எல்லாவற்றையும் கண்டு ஆனந்திக்க முடிந்தது அப்போது. ஆனால் கடவுளின் ராஜ்யம் இன்னும் இவ்வுலகில் ஸ்தாபிதமாகவில்லை என்று

அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக மற்ற அடிமைகள் கூட அவர்களிடம் மரியாதை காட்டத் தொடங்கினார்கள். அவர்களை மிருகங்கள் என்று நினைப்பதை நிறுத்தி விட்டார்கள். அவர்களுடைய தலை மயிர் வளர்ந்தது - மற்றவர்களைப்போல அவர்களும் ஆனார்கள், அவர்களைக் கேலி செய்வதை நாளடைவில் நிறுத்தி விட்டார்கள் மற்ற அடிமைகள். சுரங்கத்திலிருந்து அவர்கள் எப்படித் தப்பி வந்தார்கள்' என்பது பெரிய ஆச்சர்யமாகத்தான் இருந்தது மற்றவர்களு க்கு. இஷ்டமிருந்ததோ இல்லையோ இதை மற்றவர்கள் அங்கீகரித்துத்தானே யாக}}ண் டும் ?

11162

இதல்லாம் அப்படி நேர்ந்தது கான்று அவர்களிடமிருந்து

அறிந்துகொள்ள முயன்றார்கள். ஆனால் புதிதாக வந்த வர்கள் அதிகாாகப் பேசுவதில்லை.

அப்படிப் பேசாமல் ஒருவரை ஒருவர் ஒட்டி அவர்கள் வாழ வேண்டியதில்லை. அவர்களைப் பிணைத்திருந்த இரும்புச் சங்கிலி இப்போதில்லை. அவர் களுக்கு இஷ்ட இருந்தால், மற்றவர்களில் சிலருடனாவது அவர்கள் சிநேக மாக இருந்திருக்கலாம். ஒருவருடன் ஒருவர் பிணைக்கப் பட்டவர்களைப் போல் இன்னமும் இருக்க வேண்டியதில்லை. ஆனாலும் அப்படியே தான் இருந்தார்கள் அவர்கள். பிரிக்க முடியாதவர்கள் போல் நெருங்கியேதான் அவர்கள் இருவரும் வாழ்ந்தார்கள். இப்போது அவர்கள் தங்களுக் குள் கூட அதிகம் பேசிக் கொள்வதில்லை - இருந்தும் சேர்ந்தேதான் இருந்தார்கள். அவர்கள் மனம் பிரிந்து விட்டது --- _டல்கள் பிரியவில்லை இன்னமும்,

(வேலை செய்யுமபோது அவர்களிருவரும் சேர்ந்த இருக்க வேண்டியதாக இருந்தது. மற்ற நேரங்களில் அவர்கள் மற்றவர்களுடன் கலந்திருக்கலாம். ஆனால் அவர்களுடன் சேர அவர்கள் சாதாரண அடிமைகள் ஆல்ல. இல்லாத சங்கிலி இன்னமும் அவர்களைப் பிணைத்தது. இரவில் விழித்துக்கொண்டு சங்கிலியைத் காணுேம் என்று உணரும்போது அவர்களுக்கே பயமாக இருந்தமாதிரி இருந்தது. பக்கத்தில் பக்கத்தில் படுத் திருக்கிறோம் என்பதே அவர்களுக்குப் பெரிய ஆறு தலாக இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு விஷயம் உண்மையாவதைப் பார்க்க பாரபாஸ் உயிர் வைத்திருந்தது ஆச்சர்யம் தான். அவன் எ" என றுமே யாருடனும் சேராதவன், அதி சயம் தான் இது !163

Lf1 கப்

வேறு ஒருவனுடன் பிணைபட்டிருப்பதிலும் ஒரு ஆனந்தமா ? இரும்புச் சங்கிலிப் பிணைப்பும் அவசியமாக முடியுமா ? இப்போது சங்கிலி இல்லை. ஆனால் அந்தப் பிணைப்பு இருந்தது. அதைக் காணோமே எனறு இரவில் தடவிப் பார்த்தான். இருக்கக்கூடாதா என்று ஏங்கினான்!'...

ஸஹாக் அப்படியில்லை. எதிர் மாறாக அவன் தங்களுக் கிடையில் நெருக்கம் முன் போல இல்லையே என்று வருந்தினான். ஏன் இல்லை?

நரகத்திலிருந்து, சுரங்கத்திலிருந்து அவர்கள் தப்பி வெளியேறியது பற்றி அவர்கள் பேசுவதே இல்லை. முதல்

இரண்டொரு நாட்கள் பேசினார்கள். அதற்குப் பிறகு பேசவில்லை. கடவுளின் Lr5ன், காப்பாற்ற வந்தவர் தான் தங்களை வெளியேற்றிக் காப்பாற்றினார் என்பது ஸ ஹாக்கின அபிப்பிராயம். இருக்கலாம்........ஸ்ஹாக்கை வெளியேற்றியது அவர் தான்....... ஆனால் பாரபாஸை வெளியேற்றியது ஸஹாக்தான். அது தானே உண்மை?

எப்படிச் சொல்வது, எது உண்மை சான்று :

தன்னையும் காப்பாற்றியது பற்றி ஸஹாக்குக்கு நன்றி சொல்லிவிட்டான் பா ரபாஸ். கடவுளுக்கு நன்றி செலுத்தினானா ? செய்திருப்பான். ஆனால் அது நிச்சய மாகத் தெரியவில்லை. நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.

பாரபாஸிடம் பிரியமும் அன்பும் ஸஹாக்குக்கு வெளந்தது. ஆனால் அவனைப்பற்றித் தனக்கு மிகவும் கொஞ்சமாகத்தானே தெரியும் என்று வருந்தினான் அவன். இருவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்ய முடிவதில்லையே என்பது ஸ்ஹாக்கை மிகவும் துன்புறுத்தியது. அப்படிப் பிரார்த்தனை செய்ய முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக164

இருந்திருக்கும். அதற்காக அவன் அவனே ன வயசில்லைதிட்டவில்லை. புரிந்து கொள்ள முடியவில்லையே எனறு வருந்தினான்.

பா ரபாஸைப் பற்றி யாரும் புரிந்துகொள் aN முடியாத விஷயங்கள் பல இருந்தன. ஆனால் தீர்க்கதரிசி செத்த. தையும், எழுந்ததையும் கண்ணாரக் கண்டவன் அவ3 . அவர் தலையை வட்டமிட்ட ஜோதியைப் பார்த்தவனும் அவன் தான், ஆனால் அதெல்லாமபற்றி இப்போது அவர்கள் பேசுவதில்லை.

ஸ்ஹாக் துயரப்பட்டான்- ஆனால் தனக்காக அல்ல. ஏற்பட்ட அவன முகமும், மெலிந்து சாட்டை. அடிவடுக்கள் நிறைந்த அவன் உடலும் அவனைத் துயரில் ஆழ்த்த வில்லை, தனக் கா க ஒவகுந்த வில்லை அவன். அவன் சந்தோஷ மாகவே தான் இருந்தார். கடவுள் அவனுக்காகவென்று நரகத்திலிருந்து அவனை மீட்கும் அதிசயத்தை வேறு செய்திருந்தார். காயல்களிலே பசுமையும் வர்ண மலர் களும் நிறைந்திருந்தனர். அதைப்பற்றி அவர் எவ்வளவு

அழகாகப் பேசியிருந்தார்.

பாரபாஸுக்கும் அந்த அதிசயத்தை அவர் செய்தார். ஆனால் அவன் எந்த விதமான சிந்தனைகளுடன் உடலகைப் பார்த்தான் மீண் டும் என்று யாரும் சொல்ல முடியாது.

மேலே அவர்கள் காலத்தில் ஒரு பகுதி இப்படியாகக் கழிந்தது.

வஸந்த உழுகை முடிந்துவிட்டது. ஜலம் இழுக்கும் (வேலை அவர் க ளுக்குத் தரப்பட்டது. இதுவும் கனமான வேலை தான். ஜலம் இழுக்காவிட்டால் எல்லாம் உலர்ந்து விடும். அறுவடைக்குப் பின் அவர்களை மாவு யந்திரம்165

இழுக்கும் வேலைக்கு ஏவினார்கள். ரோமாபுரியின் பிரதி நிதியின் கட்டிடங்களில் ஒன்றுதான் இந்த இரவு யந்திரம். ஒரு கிராமத்தில் தனியாக இருந்தது அது. கப்பல் துறை முகத்தில் ஒரு புழுதிபடிந்த அழுக்கான கிராமம் அ து. - கடற்கரை ஓரத்திலிருந்தது -அது.

அங்கே மாவு மில்லில் தான். அவர்கள் அந்த ஒற்றைக் கண்ணனைச் சந்தித்தார்கள்

கத்தரித்து விடப்பட்ட தலைமயிருடன் பருத்துக் கொழுத்திருந்த அடிமை அவன். அவன் வாய் சுருங்கி மிகவும் சிறியதாக இருந்தது. ஒரு கண்ணால் திருட்டுத் தனமாக உலகைப் பார்த்தான் அவன், ஒரு தரம் நாலுபடி மாவு திருடிவிட்டான் என்பதற்காக ஒரு கண்ணை அவித்து விட்டார்கள், அவன் கழுத்திலே அதற்குத் தண்டனையாக ஒரு பெரிய சட்டத்தையும் மாட்டிவிட்டிருந்தார்கள், சாக்கு களில் "ரவு போட்டு நிரப்ப வேண்டியது அவன் வேலை அந்த வேலையையோ, அவன் தோற்றத்தையோ அசாதாரண மானதாகச் சொல்ல முடியாது. இருந்தும் அவனைப் பார்க்கும்போதே அவன் சாதாரணமானவன் அல்ல என்பது தெரியும். யாருடைய நிம்மதியையும் கெடுத்து

விடக் கூடியவன் அவன்.

புதிதாக வந்தவர்கள் இருவரையும் அவன் பார்த்த தாகக்கூடக் காட்டிக் கொள்ள வில்லை. மிகவும் கனமான யந்திரக் கல்லை இழுக்கும் வேலை அவர்களுக்குக் தரப்பட் டிருந்ததைக் கண்டும் அவன் கேலியாகச் சுட்டிக்காட்டினான். அவன் சிரித்து யாரும் பார்த்ததில்லை. நாலு யந்திரங்கள் இருந்தன. ஒரு யந்திரத்தை இழுக்க இரண்டிரண்டு அடிமைகள் நியமிக்கப் பட்டிருந்தனர். வழக்கமாகக் கழுதைகள் தான் இந்த வேலையைச் செய்யும். ஆனால்166

கழுதை களை விட இங்கு அடிமைகள் தான் அதிகம் - மலிவு. முன்னை விட இதுவும் சிறந்த விஷயமாகத்தான் அவர்கள் இருவருக்கும் தோன்றியது. வேலை சிரமம் தான் என்றாலும், ஸஹாக்குக்கும் பாரபாஸ்-க்கும் இங்கு உணவு அதிகமாகக் கிடைத்த து. அடிரை ஓட்டியும் அவர்களை அதிக மாகத் தொந்தரவு செய்வதில்லை. சாட்டையை உபயோகிக்காமல் முதுகில் போட்டுக்கொண்டு போகிறவன் அவன். ஒரே ஒரு குருட்டு அடிமையைத் தவிர அவன் வேறு யாரையும்

அடிப்பதே கிடையாது.

வருஷக்கணக்காக மாவு படிந்து மாவு மில்லுக்குள் எங்கும் ஒரே வெள்ளையாக இருந்தது. தரை சுவர்கள் கூரையிலிருந்த ஒட்டடை எல்லாம் மாவால் வெள்ளையாக இருந்தன. IFரவு எங்கும் பறந்தது. யந்திரங்களின் ஓசை மூலைமுடுக்குகளை எல்லாம் நிரப்பியது. எல்லா அடிமை களும் நிர்வாணமா கவே தான் வேலை செய்தார்கள். ஒற்றைக் கண்ணன் மட்டும் தான் இடுப்பிலே ஒரு சாக்கைக் கட்டிக் கொண்டு, எலி மாதிரி திருட்டுத்தனமாக வந்து போய்க் கொண்டிருந்தான். கழுத்தில் தொங்கிய மரச் சட்டம் எலிப்பொறியில் மாட்டிக்கொண்ட எலியின் தோற்றத்தை அவனுக்கு அளித்தது. தனியாக இருக்கும்போது அவன் மாவைப் பிடிபிடியாகத் தின்றான் என்று சொன்னார்கள் . அவன் அப்படித் தின்னா திருப்பதற்காகத் தான் கழுத்தில் அந்தச் சட்டம் மாட்டப்பட்டிருந்தது. ஆனால் அகப்பட்டுக் கொண்டால், இன்னொரு கண்ணும் போய்விடும் என்று அவனுக்குத் தெரியும். வேண்டுமென்றே கெட்டிக்காரத் தனமாக அவன் திருடினான் என்று சொன்னார்கள்,

புதுசாக வந்த அடிமைகள் பற்றி அவனுக்குச் சிறிதும் கவலையே இல்லை. ரகசியத்தில் அவர்களை அவன் கவனித்167

தான். மற்றவர்களையும் அவன் அப்படித்தான் கவனித் தான். அவர்களிடம் விரோதம் பாராட்ட அவனுக்கு என்ன கிடக்கும் எப்படிக் கிடைக்கும் அவர்களைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் அவர்களை இதற்கு முன் அவன் பார்த்த து கூட இல்லை. யாரிடமும்

அவனுக்கு எவ்வித விரோதமும் இல்லை.

சுரங்கத்தில் வேலை செய்த அவர்கள் பயங்கரமான குற்றவாளிகளாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஒருவன் குற்றவாளி மாதிரிதான் இருந்தான். அதை மறைக்க அவன் முயன்ற மாதிரியும் இருந்தது. அல்பன் அவன் : ஆனால் மற்றவன் அசடன் என்பது தெரிந்தது. ஆனால் அவர்கள் எப்படி சுரங்கத்திலிருந்து வெளிவந்தார்கள் ? நரகத்திலிருந்து மீட்சி எப்படிக் கிடைத்தது? யார் உதவி னார்கள் அவர்களுக்கு ? அது தான் விஷயம். ஆனால் அதற்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?

காத்திருந்தால் எதுவும் தெளிவாகி விடும். காதற்கும் ஒரு விளக்கம் சுலபமாகவே காலக்கிரமத்தில் கிடைத்து விடும் என்பது நிச்சயம். தானே விளங்கிவிடும் எல்லாம். கண்கள் திறந்திருந்தால் போதும் - விஷ.யம் விளங்கிவிடும். காத்திருந்தான் ஒற்றைக் கண்ணன்.

ஒரு இரவு மெலிந்தவன் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்வதை ஒற்றைக் கண்ணன் பார்த்துவிட்டான். ஏன் அப்படிச் செய்தான்? ஏதோ ஒரு கடவுளுக்குப் பிரார்த்தனை செய்தான் அவன் எந்தக் கடவுளுக்கு ? இப்படி மண்டியிட்டு எந்தக் கடவுளுக்குப் பிரார்த்தனை செய்வார்கள் ?

ஒற்றைக் கண்ணனுக்குப் பல கடவுள்களைப் பற்றித் தெரியும், ஆனால் அவர்களில் யாருக்கும் பிரார்த்தனை168

செய்ய அவனுக்குத் தோன்றியிராது. கோயிலில் உருவச் சிலைக்கு பின் மற்ற வர்கள் பிரார்த்தித்ததுபோல் செய்வது போல அவனும் செய்திருப்பானே தவிர, இந்தமாதிரி மூலையில் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்திருக்க 1 மரட்டான் என்பது நிச்சயம். இருட்டில் அந்த மூலையில் எந்தக் கடவுள் எப்படி இருக்கமுடியும் ? முட்டாள் ! தன்னைக் கவனித்த ஒருவனுடன் பேசுவது மாதிரி வாயால் வார்த்தை சொல்லி ஏதோ தன் கடவுளிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். அதுவும் விசித்திரம் தான், குசுகுசுவென்று அவன் ஏதோ சொல்லிக் கொண்டிருந் தான். வெறும் கற்பனை தான் எல்லாம் அங்கு கடவுள் என்று எதுவும் இல்லை!

இல்லாததில் உற்சாகம் காட்டுவது சிரமம். ஆனால் இதைக் கண்டதற்குப் பிறகு ஒற்றைக் கண்ணன் ஸ்வராக் கிடம் அடிக்கடி பேச்சுக் கொடுத்தான், தனக்குத் தெரிந்த அளவில் ஸஹாக் விஷயத்தை அவனுக்கு எடுத்துச் சொன்னான். இருட்டிலும், எங்குமிருந்தார் தன் கடவுள் என்றான். எங்கும் எப்போதும் அவரை அழைக்க லாம் - அவர் வருவதை உணரலாம் என்றான். தன் உள்ளத்தில் அவர் இருப்பதை உணர்ந்து ஆனந்திக்கலாம். விசித்திரமான கடவுள் தான் என்றான் ஒற்றைக் கண்ணன்,

'' ஆமாம், விசித்திரமான கடவுள் தான் " என்றான்

ஸ்ஹாக்,

கேள்விப்பட்டதை இரண்டு நிமிஷம் சிந்தித்தான் ஒற்றைக் கண்ணன். சக்தி வாய்ந்த கடவுள் தான் ஸஹாக்கின் கடவுள். சுரங்கத்திலிருந்து வெளியேற அவனுக்கு உதவியது அந்தக் கடவுள் தானா என்று கேட்டான்,169 " ஆம், அவர் தான் உதவினார் !" என்றான் ஸஹாக்.

அடிமைப்பட்டு கஷ்டப்படுகிறவர்கள் எல்லோருக்கும் அவர்தான் கடவுள், பிரபு என்றான் ஸஹாக். சங்கிலி களைத் தகர்த்தெறிந்து அவர்களை மீட்க வருவார் கடவுளின் மகன். தன் நம்பிக்கையைச் சொல்ல விரும்பினான் ஸஹாக். இதைக் கேட்க ஒற்றைக் கண்ணன் விரும்பியதாகவும் அவனுக்குத் தோன்றியது.

| '' அப்படியா ?'' என்றான் ஒற்றைக் கண்ணன்.

எல்லோருக்கும் சொர்க்கம் கிடைக்க வழியுண்டுஅந்த வழி என்ன என்று அறிந்துகொள்ள ஒற்றைக் கண்ணன் விரும்பியதாகவும் ஸஹாக்குக்குத் தோன்றியது. கடவுளின் சித்தம் அவன் அவருக்கு சாக்ஷி சொல்ல வேண்டும் என்பதுவானால் அவன் சொல்லத் தயாராகவே இருந்தான். அடிக்கடி தன் கடவுளைப் பற்றி அவனிடம் பேசத் தொடங்கினான் அவன். பாரபாஸுக்கு இதில் சற்று வருத்தம் தான். ஒற்றைக் கண்ணனிடம் அவனுக்கு நம்பிக்கையில்லை. அவனுடன் தன் சகா பேசியதையே அவன் விரும்பவில்லை என்றுதான் சொல்லவேண்டும். கடைசியில் ஒரு நாள் பரம ரகசியமான தன் தாலி விஷயத் தையும் ஒற்றைக் கண்ணனிடம் அவன் சொல்லிவிட்டான். அவன் கடவுளின் பெயரைக் கேட்ட ஒற்றைக் கண்ண னிடம், பெயரைச் சொல்லிவிட்டு, அது தன் தாலியில் பொறிக்கப்பட்டிருப்பதையும் காட்டினான். மிகவும் கவனமாக ஒற்றைக் கண்ணன் அந்தத் தாலியைத் தடவித் தடவிப் பார்த்தான். கிரேக்க அடிமை -அந்தப் பெயரை எப்படி எழுதினான் என்பதை விசாரித்து அறிந்து கொண்டான். கடவுளின் பெயரை இப்படி எழுதுவதே ஒரு விசித்திரம்தானே!170

மீண்டும் ஒரு தரம் தாலிக்குப் பின் இருந்த பெயரைப் பார்த்துவிட்டு அதைத் திருப்பி விட்டுக்கொண்டான். ஆனந்தத்துடன் தான் கடவுளின் அடிமை - அவருக்கே சொந்தம் என்றும் சொல்லிக்கொண்டான்,

''அப்படியா ?"

சிறிது நேரம் கழித்து மற்றவன் தாலியிலும் இப் பெயர் எழுதியிருக்கிறதா என்று விசாரித்தான்.

" இருக்கிறது, ஆம் " என்றான் ஸ்ஹாக்.

தனக்கும் அவனுக்கும் ஒரேவிதமான கடவுளும் நம்பிக் கையும் உண்டா என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியாது - எனினும் அவன் இப்படிப் பதில் சொல்லி வைத்தான். ஏனென்றால் அந்தப் பலசாலியான பாரபாஸ் என்றும் பிரார்த்தனை செய்வதே கிடையாது. இதற்குப் பிறகு பல தடவைகள் ஒற்றைக் கண்ணனும், ஸஹாக்கும் ஸ்ஹாக்கினுடைய கடவுளைப் பற்றிப் பேசினார்கள். இருவரும் மிகவும் நெருங்கிக் கொண்டிருப்பதாக ஸ்ஹாக் எண்ணிக்கொண்டான். அவனிடம் தன் ரகசியத்தைச் சொன்னது நல்ல விஷயம் - கடவுளின் காரியம் அது என்று தான் ஸஹாக் எண்ணினான். கடவுள் இஷ்டப்படியே இது நடந்தது என்று அவன் நினைத்தான்.

ஆனால் ஒரு நாள் காலையில் அடிமை ஓட்டி வந்து பாரபாஸையும் * ஸ்ஹாக்கையும் ரோம சக்ரவர்த்தியின் பிரதிநிதி பார்க்க விரும்புகிறார் என்று சொன்னதும் எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். இந்தமாதிரி அவர்கள் அனுபவத்தில் என்றுமே நடந்ததில்லை. அடிமைகளைப்போலவே அடிமை ஓட்டியும் ஆச்சரியப் பட்டான். அவனுக்குத் தெரிந்தும் இப்படி நடந்ததில்லை. கேவலம் அடிமைகளை சக்ரவர்த்தியின் பிரதிநிதி பார்க்க171

விரும்புவதாவது இதன் காரணம் என்ன? மிகவும் தாழ்ந்த அடிமைகள் இருவர், பிரதிநிதி முன் போய் நிற்பதாவது? ஆச்சரியம் தான். அவனே அவர்களை கவலையுடன் அழைத்துப் போக இருந்தான். இதற்கு முன் அடிமை ஓட்டிகூட அந்த மாளிகைக்குள் கால் வைத்தது கிடையாது. ஆனால் அவனுக்கும் அதற்கும் என்ன சம்பந்தமிருக்கப் போகிறது? அங்கு அவர்கள் போய்ச் சேருவதற்கு மட்டும் தான் அவன் பொறுப்பு. குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் கிளம்பினார்கள். எல்லோரும் அவர்களையே ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஒற்றைக் கண்ண னும் பார்த்துக்கொண்டு நின்றான்.

குறுகலான சந்துகளிலே வழி கண்டு பிடித்து பாரபாஸும், ஸ்ஹாக்கும் கவர்னரின் மாளிகையைத் தனி யாகக் கண்டுபிடித்திருக்க மாட்டார்கள், வழி காட்டிக் கொண்டு வந்தான் அடிமை ஓட்டி. இருவரும் நெருக்கி யடித்துக்கொண்டுதான் தெருவிலும் நடந்தார்கள்ஜோடிக் காளைகள் மாதிரி, மீண்டும் சங்கிலி போட்டு அவர்கள் பிணைக்கப்பட்டிருப்பதுபோல இருந்தது.

வாசற் கதவுடன் பிணைக்கப்பட்டிருந்த ஒரு கறுப்பு அடிமை அவர்களுக்குக் கதவைத் திறந்துவிட்டான், அழகாக வேலை செய்யப்பட்ட செடார் மரத்தினாலானவை அந்தக் கதவுகள். ஒரு அதிகாரி வந்து முன் கூடத்தைத் தாண்டி அவர்களை அழைத்துப் போனான். ஒரு முற்றத்தைத் தாண்டி ஒரு நடுத்தரமான அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றான். அந்த அறையில் ரோம கவர்னரின் முன் நின்றார்கள் மூவரும்.

கீழே விழுந்து அவரை வணங்கினார்கள் மூவரும். நெற்றி நிலத்தில் பட நமஸ்கரித்தார்கள். தங்களைப்172

போலவே ஒரு னிதரான அவர் முன் இப்படி நமஸ் கரிப்பது மனிதத் தன்மையல்ல என்றுதான் பாரபாஸும் ஸ்ஹாக்கும் எண்ணினார்கள்-எனினும் அப்படித்தான் செய்யவேண்டும் என்று அடிமை ஓட்டி அவர்களைப் பயமுறுத்தி வைத்திருந்தான். எழுந்திருக்கலாம் என்று அவர் சொல்லும் வரையில் அவர்கள் மூவரும் எழுந் திருக்கவில்லை. அறையின் எதிர் கோடியில் ஒரு ஆஸனத்தில் சாய்ந்திருந்த அவர் அவர்களை அணுகி வரச் சொல்லிக் கையைக் காட்டினார். தயங்கித் தயங்கி முன்னேறி அவர் முன் நிமிர்ந்து நின்றார்கள் அவர்கள். அறுபது வயதிருக்கும் அவருக்கு ; உறுதியான உடலுள்ளவர். பருத்த முகம் - ஆனால் சதை தொங்கவில்லை. அகன்ற முகவாய்க்கட்டை. உத்தரவிடப் பழகிய வாய். கண்கள் தீக்ஷண்யமானவை- ஆனால் அவற்றில் அவர் களிடம் எவ்வித வெறுப்பும் காணவில்லை என்று கண்டார்கள், பயமுறுத்துகிறமாதிரி இல்லை அவர் தோற்றம்,

முதலில் இந்த இரண்டு அடிமைகளும் எப்படி நடந்து கொண்டார்கள் என்று அடிமை ஓட்டியை விசாரித்தார் அவர். அவர்கள் வேலை திருப்திகரமாக இருந்தது என்றான் அடிமை ஓட்டி. அடிமைகளைக் கண்டிப்பாக நடத்துவது தான் தன் வழக்கம் என்றும் சேர்த்துக் கொண்டான். இதைச் சக்கரவர்த்தியின் பிரதிநிதி எப்புடி ரஸித்தார் என்று சொல்லமுடியவில்லை. சரி போகலாம் என்று அடிமை ஓட்டியைப் போகச் சொல்லிவிட்டார் அவர். இதுபற்றி அவனுக்கு ஆகேஷடமில்லை. போகிற அவசரத்தில் கொஞ்சம் அவமரியாதை. திரும்பி ஓடி விட்டான் -அடிமை ஓட்டி.173

பிறகு அவர் ஸ்ஹாக், பாரபாஸ் பக்கம் திரும்பி அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எதற்காக அவர்கள் அடிமை வாழ்வு வாழத் தண்டிக்கப்பட்டார்கள், சுரங்கத்தி லிருந்து எப்படி வெளிவந்தார்கள் என்றெல்லாம் விசாரித் தார். மிகவும் கருணையுடன் தான் பேசினார் அவர். பிறகு எழுந்து அவர்களை அணுகினார். எழுந்தபோது அவர் இவ்வளவு உயரமாக இருந்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஸஹாக்கை அணுகி அவன் தாலியைத் தொட்டு அதில் மேல் பக்கத்தில் எழுதியிருந்ததைக் காட்டினார். அதன் அர்த்தம் தெரியுமா என்றார், ரோம ராஜ்யத்தின் முத்திரை அது என்றான் ஸஹாக். நல்லது என்று தலையை ஆட்டினார் கவர்னர். அந்த முத்திரையின் அர்த்தம் ஸஹாக் ரோம் சக்ரவர்த்தியின் உடமை என்பதன் சின்னம் என்றார். பிறகு அந்தத் தாலியைத் திருப்பி அதன் பின்பக்கத்தில் எழுதி யிருந்ததைப் படித்தார்-கவனமாக. ஆச்சரியம் எதுவும் தெரியாமல், பார்த்தார். 14 கிறிஸ்து - ஏசு '' என்று படித் தார்......... கடவுளின் பெயரை அவரால் படிக்க முடிகிறதே என்று ஸஹாக்கும் பாரபாஸு"ம் ஆச்சரியத்தில் மூழ்கினர்கள்,

''யார் அது ?” என்றார் அவர். குரல் நடுங்க " அவர் என் கடவுள்" என்றான் ஸஹாக்.

" ஆஹா! அப்படியா ? அந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதாக ஞாபகம் இல்லை. கடவுள்கள் எத்தனையோ பேர் உண்டு-அதில் இவரும் ஒருவர். உன் சொந்த மாகாணத்துக் கடவுளா அவர் ?''

. " இல்லை. எல்லோருக்கும் கடவுள் அவர் தான் " என்றான் ஸஹாக்.174

" எல்லோருக்குமா? அப்படியா? நல்லதுதான். அவர் பெயரை நான் இது வரை கேள்விப்பட்டதுகூட இல்லையே ! ரகசியமாக இருக்கிற கடவுள் போல இருக்கிறது.''

" ஆமாம்,"

"* எல்லோருடைய கடவுளா அவர்? சக்தியுள்ளவராகத் தான் இருக்கவேண்டும். அவர் சக்தியின் ஆதாரம் என்ன ?''

" அன்பு .''

" அன்பா ...... ஏன் கூடாது !அது எப்படியானாலும் சரி, அதைப்பற்றி எனக்கென்ன ஆக்ஷேபம் ? உன் இஷ்டப்படி நீ அதுபற்றி எண்ணுவதில் எனக்கொரு ஆக்ஷேபமும் இல்லை. அவர் பெயரை எதற்காக இந்தத் தாலியில் எழுதியிருக்கிறாய் ?"

" அவருக்கு உரியவன் நான். அவர் சொத்து.'' ஸ்ஹாக்கின் குரல் மறுபடியும் நடுங்கியது.

" அப்படியா? அவர் சொத்தா நீ ? அது எப்படி? நீ ரோமாபுரிச் சக்ரவர்த்தியின் சொத்து, அடிமை என்று இந்தப்பக்கம் சொல்கிறதே! நீ சர்க்காரின் சொத்து அல்லவா ?''

ஸஹாக் பதில் சொல்ல வில்லை. தரையைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

கடைசியில் அந்த கவர்னர் சொன்னார்- அனுதாபத் துடன் சொன்னார் : " இதற்கு நீ பதில் சொல்ல வேண்டும். இது பற்றித் தெளிவாக எனக்குத் தெரிய வேண்டும். நீ சர்க்கார் சொத்தா இல்லையா சொல்."

" நான் என் பிரபு, என் கடவுளின் சொத்து -- அடிமை " என்றான் ஸஹாக் நிமிர்ந்து பார்க்காமல்.175

அவனையே பார்த்துக்கொண்டு நின்றார் கவர்னர், ஸஹாக்கின் முகத்தைக் கையால் நிமிர்த்தி அவன் கண்களைப் பார்த்தார். ஒரு சில வினாடிகள் எதுவும் சொல்லாமல் நின்றார். பிறகு அவன் முகவாய்க்கட்டையை

விட்டுத் தன் கையை எடுத்தார்.

பிறகு பாரபாஸ் முன் நின்று அவன் தாலியையும் திருப்பிப் பார்த்தார். கேட்டார் :

" நீயும் இந்த அன்புக் கடவுளை நம்புகிறாயா ?" பாரபாஸ் பதில் சொல்லவில்லை. " சொல், நீயும் நம்புகிறவனா ?" பாரபாஸ் தலையை ஆட்டினான்.

• நீ நம்பவில்லையா? அப்படியானால் அவர் பெயரை ஏன் இங்கு பொறித்து வைத்திருக்கிறாய் ?''

பாரபாஸ் மீண்டும் மௌனம் சாதித்தான்.

" அவர் உன் கடவுளில்லையா ? அது தானே இதன் அர்த்த ம் :

பாரபாஸ் கடைசியில், பொதுவாக, மெல்லிய குரலில் சொன்னான் : " எனக்கு ஒரு கடவுளும் இல்லை." ஸஹாக் காதிலும் (ரோம கவர்னரின் காதிலும் தெளிவாகவே இந்த வார்த்தைகள் விழுந்தன. ஸ்ஹாக்கின் ஏமாற்றமும், துயரமும், ஆச்சரியமும் நிறைந்த பார்வை தன்னை ஈட்டி போலக் குத்தியது என்று உணர்ந்தான் பாரபாஸ். மற்றவன் கண்ணை (நேரில் பார்க்காவிட்டாலும், அவன் பார்வை தன் உள்ளத்தைத் துளைத்தது என்று கண்டான் பாரபாஸ்.

சோம கவர்னருக்கும் இது ஆச்சரியமாகத்தான் இருந்தது.176

''எனக்குப் புரியவில்லை '' என்றார் அவர். "பின் ஏன் இதில் அவர் பெயரை - கிறிஸ்து- ஏசு ' என்கிற பெயரைப் பொறித்துக் கொண்டிருக்கிறாய் ?"

இருவரில் ஒருவரையும் நிமிர்ந்தே பார்க்காமல் பாரபாஸ் பதிலளித்தான். '' நான் நம்ப ஆசைப் படுவதால் !'' என்றான்.

கவர்னர் நிமிர்ந்து அவனைப் பார்த்தார். எத்தனையோ அனுபவங்கள் அவன் முகத்திலும் கண்களிலும் கோடுகள் வரைந்திருந்தனர். பலமுள்ளவன் அவன். அவன் கண்களி லிருந்து எதையும் தெரிந்து கொள்ள முடியாது என்று அறிந்து கொண்டார் கவர்னர், இந்த சனி தன் முகத் தையும் நிமிர்த்திப் பார்க்க வேண்டும் என்று அவருக்குக் தோன்றவேயில்லை. ஏன் ? அது அவரு க் "கே தெரியாது.

ஸ்ஹாக் பக்கம் திரும்பினார்.

" நீ சொன்னதன் அர்த்தம் உனக்கே தெரிகிறதா? சீஸரின் அதிகாரத்தை நீ எதிர்க்கிறாய் என் று ஏற்படுரி, அவரும் ஒரு கடவுள் தான் என்பதை அறிவாயா நீ? அவர் சொத்து நீ என்பது புரியவில்லையா உனக்கு ? உன் தாலியில் முதலில் எழுதியிருப்பது அவர் பெயர் தான், நீ வேறு ஒருவர் சொத்து என்று சொல்கிறாயே! பெயரே வெளியில் தெரியாத ஒரு கடவுளின் அடிமை என்று நீ சொல்லிக்கொள்வது சரியா, சொல்லு ? சீஸரை எதிர்ப்பதல்லவா அது ?''

" ஆம் '' என்று நடுக்கமில்லாத குரலில் பதிலளித் தான் எப்ஹாக்.

'' அதுவே சரி எனகிறாயா " ''ஆமாம்.''177

11 இப்படி சொல்வதால் உனக்கு என்ன கிடைக்கும் என்று தெரியுமா ?"

" தெரிகிறது.''

ரோம் கவர்னர் சற்று நேரம் மௌனமாக இருந்தார். இந்த அசடனின் கடவுளைப்பற்றி அவர் சமீப காலத்தில் நிறையவே கேள்விப்பட்டிருந்தார். உஅடிமையின் சாவை அடைந்த அந்தப் பைத்தியக்காரனைப்பற்றி அவர் கேள்விப் பட்டிருந்தார். " தளைகளை அறுத்தெரியுங்கள் !............" " கடவுளின் அடிமைகளை விடுவிக்க வருவேன் நான்........." என்று சொன்னவர் அவர். அப்படி ஒன்றும் தீங்கு தராத கொள்கையல்ல அது... இந்த அடிமை போன்ற பிடிவாத முக முள்ளவர்களால் சொந்தக்காரர்களுக்கு அதிக லாபம் இராது.

உன் கொள்கையைத் துறந்தால் உனக்கு ஒரு கெடுதியும் வராமல் பார்த்துக் கொள்கிறேன் " என்றார் அவர், " உன் கடவுளை மறுத்துவிடு."

“ என்னால் முடியாது" என்றான் ஸஹாக். '' ஏன் முடியாது ?" " என் கடவுளை நான் எப்படி மறுக்க முடியும் ?"

'' அதிசயமான மனிதன் தான் நீ எந்த பாதிரி தண்டனை விதிப்பேன் நான் உனக்கு என்று தெரியும் மில்லையா ? உன் கொள்கைக்காக நீ சாகவும் தயாராக

இருக்கிறாயா?''

* அந்தத் தீர்மானம் என் கையில் இல்லை " என்றான் ஸ்ஹாக் அமைதியாக.

" அது தைரியஸ்தன் பேச்சல்ல. உயிர் வாழ்வது விரும்பத் தக்கதல்லவா ?'

12178

11 விரும்பத் தக்கது தான் " என்றான் ஸஹாக்.

" உன் கடவுளை நீ மறுக்காவிட்டால், உன்னை யாரும் காப்பாற்ற முடியாது. நீ சாகவேண்டியதுதான்."

"என் பிரபுவை, என் கடவுளை நான் மறுப்பது எப்படி ?"

ரோம கவர்னர் தோள்பட்டைகளை உலுக்கினான்,

" அப்படியானால் உனக்கு நான் செய்யக்கூடிய உதவி ஒ ன றுமில்லை." தான் சற்று முன் உட்கார்ந்திருந்த (மேஜை யண்டை போய், அ தன் சலவைக்கல் தட்டை ஒரு சிறிய தந்தச் சுத்தியால் தட்டினான்.

தனக்குத் தானே சொல்லிக்கொள் கிற மாதிரி நீயும் உன் கடவுள் மாதிரியே அரைப் பைத்தியாமாகத்தான் இருக்கிறாய் " என்று சொன்னான்.

காவலாளி வருவதற்காகக் காத்திருக்கும்போது, பார பாஸை அணுகி கவர்னர் தன் குத்தீட்டியால் ** கிறிஸ்து -ஏசு " என்கிற வார்த்தைகள் மேல் ஒரு கோடு கிழித்தார்.

" இதற்கு அவசியமில்லை நீ அவரிடம் நம்பிக்கை வைக்காதவன் அல்லவா ?" என்றார்.

நெருப்பால் சுடுவதுபோல் இருந்தது பாரபாஸுக்கு ஸஹாக்கின் பார்வை. அதை அவன் மறக்கவே முடியாது.

காவலாளி ஸ்ஹாக்கை அழைத்துச் சென்றான். பார பாஸ் அங்கேயே நின்றான். புத்திசாலித்தனமாக நடந்து கொண்ட துபற்றி அவனைப் பாராட்டினார் கவர்னர். அதற கேற்றபடி அவனுக்கு வெகுமதி அளிக்கத் தான் விரும்புவ காகவும் சொன்னார். வீட்டில் அடிமைகளின் தலைவு னிடம் போய், வீட்டு அடிமைகளில் ஒருவனாக அவன்179

இனி வேலை செய்யவேண்டும் என்றார் கவர்னர், வேலை அவ்வளவு கடினமாகவும் இராது என்றார்.

நிமிர்ந்து ஒரு விநாடி அவரைப் பார்த்துவிட்டுத் தலை குனிந்தான் பாரபாஸ். அவன் கண்களில் ஒரு பாவம் இருந்தது என்பதை இப்போது தான் அந்த ரோமன் கவனித்தான். வில்லிலிருந்து விடுபட மாட்டாமல் சக்தி யிழந்துவிட்ட ஒரு அம்புபோல அந்தக் கண்களில் வெறுப்புக் குடியிருந்தது என்று கண்டார் அவர்.

உத்தர » கிடைத்தபடிச் செய்யப் போனான் பாரபாஸ்.

| ILL

ஸஹாக்கைச் சிலுவையில் அறைந்து கொன்ற போது பாரபாஸ் சிறிது தூரத்துக்கப்பால் மறைந்து நின்று கொண்டு கவனித்தான். ஸ்ஹாக்கின் கண்களில் பட அவன் விரும்பவில்லை. சித்திரவதை செய்யப்பட்டு குத் துயிரும் குலையுயிருமாகச் சிலுவையில் உயிர் நீத்துக் கொண்டிருந்த ஸஹாக் அவனைக் கவனித்திருப்பானா என்பதே சந்தேகந்தான். சித்திரவதை உத்திரவிடவில்லை கவர்னர் எனினும், அதிகாரிகள் வழக்கமாக ஸஹாக்க சித்திரவதை செய்து தான் சிலுவையில் தொங்க விட்டார்கள். சித்திரவதை செய்ய வேண்டாம் அவனை என்றும் உத்திரவிடவில்லை. எதற்காக அவனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அடிமைகளைச் சிலுவையில் அறைவது சகஜமான நித்தியப்படிக் காரியம் தான்.

மீண்டும் அவன் தலையில் பாதி க்ஷவரம் செய்யப்பட் டிருந்தது. மயிரும் ரத்தமும் தலையில் திட்டுத் திட்டாக இருந்தன. அவன் முகத்தில் ஒரு வித பாவமும் இல்லை. ஆனால் ஏதாவது இருக்க முடியுமானால், எப்படி இருக்கும்180

என்று பாரபாஸ் உணராமல் இல்லை. எரிகிற கண்களுடன் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே நின்றான் அவன். அங்கிருந்து சயவே அவனுக்கு மனமில்லை-முடிந்தால் கூட அவன் நகர்த்திருக்க மாட்டான் என்றே சொல்ல வேண்டும். இந்த மெலிந்த உடல் என்ன குற்றம், எப்படிச் செய்திருக்க முடியும்? அரசரை எதிர்த்த சதிக்குற்றம் ஓஎனபதற்கடையாளமாக அவன் IIார்பில் அரசரின் முத்திரை தீயால் சுடப்பட்டிருந்தது. இனி அவசிய மில்லை என்பதால் அவன் அடிமைத் தாலியையும் அகற்றி யிருந்தார்கள்,

நகருக்கு வெளியே ஒரு குன்றின்மீது உயிர் நீத்தான ஸஹாக். அடிவாரத்திலிருந்த ஒரு புதருக்குப்பின் ஒளிந்து கொண்டு பார்த்தான் பாரபாஸ். அதிகாரிகளையும் அவனை யும் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. ஏதாவது குற்றம் செய்து தண்டிக்கப்பட்டவனாக இருந்தால் அங்கு ஒரு கூட்டமே கூடியிருக்கும். இப்போது யாருக்கும் அவன் செய்த குற்றம் சான் ன என்றே தெரியாது.

இப்போதும் வஸந்த காலம் தான், 'அவர் வந்து விட்டார் '' என று மண்டியிட்டு, சுரங்கத்தை விட்டு வெளியேறும்போது, வரவேற்றானே ஸ்ஹாக் அதே போன்ற வஸந்த காலம் தான் இதுவும். பூமியே பசுமை யாக இருந்தது. சாவுக் குன்றிலேயும் மலர்கள் பூத்து இரு ந் த ன. நண்ப சுலாதலால், ஒரே வெப்பமாக இருந்தது. ஈக்கள் நிறைய இருந்தன. ஸ்ஹாக்கின் உடல் பூராவும் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. அவற்றை விரட்டவேண்டும் என கிற பிரக்ஞையே அவனுக்கோ மற்றவர்களுக்கோ இல்லவேயில்லை. ஸஹாக்கின் 11ரணத்திலே விசேஷம், பெரிய து, அதிசயம் என்று சொல்ல ஒன்றுமில்லை.181

இப்படியிருந்தும் இந்தச் சான பாரபாஸின் உள்ளத்தை 2.ருக்கியது. ஒவ்வொரு சிறு சம்பவத்தையும் ஞாபகத்தில் இறுத்திக் கொள்வது என்கிற உத்தேசத்தில் அவன் எல்லாவற்றையும் கவனித்தான்-நெற்றியில் அரும்பி, கன்னங்களில் வழிந்தோடிய வியர்வை, அரசாங்கச் சின்னங்கள் சுடப்பட்ட மார்பு எழுந்து அடங்குவது, ஒருவரும் ஓட்டாத ஈக்கள் எல்லாவற்றையும் பார்த்து மனத்தில் பதிய வைத்துக்கொண்டு நின்றான் அவன், தலை தொங்க, பெரிதாக முனகிக் கொண்டிருந்தான் ஸஹாக். அவன் விட்ட ஒவ்வொரு மூச்சும் பாரபாஸின் காதில் ஒலித்தது. அவனும் பெருமூச்சு விட்டான் ; அவன்வாயும் பிளந்திருந்தது. தாகமாக இருப்பதாகக்கூட எண்ணினான் அவன். இப்படி பாரபாஸ் உணர்ந்ததே ஆச்சர்யம் ; பிறர் உணர்ச்சிகள் எதையுமே பாதிக்காதிருக்க பழகியவன் அவன். அவனுடன் பிணைபட்டிருந்தவன் அவன் - இன்னமும் அந்தச் சங்கிலி அறுபடவில்லை என்றே பாரபாஸ் எண்ணினான்.

ஏதோ சொல்ல ஸஹாக் முயன்றான்-அவன் முயற்சி வெற்றி தரவில்லை. என்ன சொன்னான் என்பது யார் காதிலும் விழவில்லை. பாரபாஸ்-க்கே கேட்கவில்லை. மலைச்சரிவிலே ஓடிப்போய் என்ன வேண்டும் என்று அவன் கேட்டிருக்கலாம், ஈக்களைக் கூட ஓட்டியிருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. புதருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு பேசாதிருந்து விட்டான். எரிகிற கண் களால் பார்த்துக் கொண்டு, அவன் வலியால் இவன் வாயும் திறந்திருக்க அசையாமல் நின்றான் பாரபாஸ்.

அதி சீக்கிரமே ஸஹாக் இறந்து விடுவான் என்பது தெளிவாகிவிட்டது. மூச்சு லேசாக வந்தது.182

டட பொ

பாரபாஸ் நின்ற இடத்தில் அவன் மூச்சுவிட்ட சப்தம் கேட்டு அடங்கிவிட்டது. அவன் மார்பு எழுந்து

அடங்குவதும் நின்றுவிட்டது. சிறிது நேரத்துக் கெல்லாம் ஸ்ஹாக் செத்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் தடவை உலகம் இருட்டவில்லை, அதிசயங்கள் எதுவும் நிகழவில்லை. ரொம்ப நாட்களுக்கு முன், கொல்கோதாவில் போலவே காவலாளிகள் இங்கும் பகடை உருட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். அசாதாரணமாக எதுவும் நடைபெறவில்லை. சிலுவையில் இருந்தவன் மரித்ததைக்கூட கவனியாமல் பகடை உருட்டினார்கள். இறந்துவிட்டான் ஸ் ஹாக் கவனித்தது பாரபாஸ் ஒருவன் தான். இறந்துவிட்டான் என் ரறிந்தும் பெருமூச்சு விட்டுவிட்டு, பிரார்த்தனை செய்பவன்போல மண்டியிட்டான பாரபாஸ்.

மண்டியிட்டதும் அதிசயம் தான். ஸஹாக் இருந்தால் அதுபற்றிச் சந்தோஷப்பட்டிருப்பான். அவன் தான் இறந்துவிட்டானே !

அது எப்படியானாலும், மண்டியிட்ட பா ரபாஸ் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது. யாரைப் பிரார்த்திப்பது ? எதற்காகப் பிரார்த்திப்பது ? இருந்தும் அவன் அங்கு மண்டியிட்டிருந் தான் கொஞ்சநேரம்.

துயரம் நிறைந்த முகத்தை மூடிக் கொண்டு அழுகிற மாதிரிச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான் பாரபாஸ்.

திடீரென்று காவலாளி ஒருவன் எழுந்தான். இறந்து விட்டான் அடிமை என்று கண்டதும் அவனைச் சிலுவையி லிருந் து கழட்டிவிட்டு எல்லோரும் அவரவர்கள் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.183

இப்படியாக ஸஹாக் சிலுவையில் உயிர் நீத்ததைப் பார்த்துக்கொண்டு நின்றான் தப்பிய பாரபாஸ்-விடுதலை செய்யப்பட்ட பாரபாஸ்.

சில நாட்களில் கவர்னர் தனது பதவியிழந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். அவர் ஆட்சி செலுத்திய காலத்தில் தனக்கும் அரசாங்கத்துக்கும் அவர் நிறையப் பொருளீட்டினார். எத்தனையோ அடிமைகளும் அடிமை ஓட்டிகளும் இந்தப் பொருளீட்டுதலுக்கு பதவினார்கள். எத்தனையோ சொடுமைகள் எத்தனையோ பேர்வழிகளுக்கு இழைக்கப்பட்டன. அந்தத் தீவின் இயற்கை வளத்தையும் சுரங்கச் செல்வத்தையும் பூரணமாக ஆராய்ந்து லாப மடைந்தார் அந்த கவர்னர் . ஆனால் அவர் கொடூர சித்தமுள்ள மனிதர் அல்ல. அவர் ஆட்சி கொடுமையாக இருந்ததே தவிர, அவர் நல்லவர்தான். அவரைக் குறை சொல்லக்கூடியவர்கள், அவரை சரியாகத் தெரிந்து கொள்ளாதவர்கள் தான். அவரைப் பலருக்குத் தெரியாது என்பதும் உண்மையே! காட்டாத உயரத்தில் இருந்தவர் அவர். அவர் போகப் போகிறார் என்றறிந்து கஷ்டப்பட்ட பலர் ஆறுதல் பெருமூச்சு விட்டார்கள். புதிதாக வருபவர் நல்லவராக இருக்க மாட்டாரா என்று அவர்கள் எண்ணினார்கள், ஆனால் அந்தப் பசுமையான அழகிய தீவை விட்டு மனசில்லாமல் தான் பிரிந்தார் அவர். அவர் பல சந்தோஷ நாட்களை அங்கு கழித்திருந்தார்.

தன் வேலையில்லாமல் தனக்கு மிகவும் கஷ்டமாகவே இருக்கும் என்று உணர்ந்தார் அவர். வயதானவர் எனினும் சுறுசுறுப்பானவர் அவர் மிகவும் பண்புள்ளவர் -ஆகவே தன் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ரே !மா புரியில்184

இடம் இருக்கலாம் என்று எண்ணி ஆறுதல் அடைந்தார் அவர். சரிசமானமாகப் பலருடன் தலைநகரில் பழகலாம் என்பதே பெரிய ஆறுதல் தானே ! கப்பலின் மேல் தளத்தில் ஆஸனத்தில் சாய்ந்தபடியே கடலைப் பார்த்துக் கொண்டே இப்படியெல்லாம் எண்ணினார் அவர்.

தனக்குத் தேவை என்று அவர் எண்ணிய அடிமை களையும் உடன் அழைத்துச் சென்றார். அவர்களுடன் பாரபாஸும் போனான். அவ்வளவு வயசான அடிமையால் அப்படியொன்றும் பிரமாத உபயோகமிராது -எனினும் ஏதோ உணர்ச்சி காரணமாக, ஒரு பிரியம் காரணமாக அவர் அவனையும் ரோமாபுரிக்கு அழைத்து சென்றார், அரசர் சார்பில் தன் கடவுளையும் மறுக்கவும் துணிந்த இந்த அறிவுள்ள அடிமையிடம் அவருக்கு அனுதாபம் இருந்தது. அவனும் வரட்டுமே என்று எண்ணினார், இப்படி ஒரு அடிமையிடம் மறக்காமல், பிரியமாக, அவர் இருப்பார் என்று யாருமே எண்ணவில்லை.

காற்று இல்லாதபடியால் கப்பல் வழக்கத்துக்கும் அதிகமாகவே கடலில் சென்றது. படகு தள்ளும் அடிமைகள் துடுப்பெடுத்துக் கையில் ரத்தம் துளிக்கத் தன்னி -அதைப் பல வாரங்களுக்குப் பிறகு ஆஸ்டியா துறை முகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். மறுநாளே கவர்னர் ரோமாபுரிக்குப் போய்ச் சேர்ந்தார். அடிமைகளும் மற்றவர்களும் இரண்டொரு நாட்களுக்குப்பின் போய்ச் சேர்ந்த னர்.

மிகவும் பணக்கார, நாகரிகப் பகுதியில் நகரில் ஒரு மாளிகையை வாங்கினார் அவர். பல மாடிகள் உள்ள ஒரு கட்டிடம் அது. சலவைக்கல்லும் வேறு பலவித அலங் காரப் பொருள்களும் நிறைந்த Ifளிகை அது. மற்ற185

அடிமைகளைப் போல பாரபாஸ்-ம் இந்த மாளிகையில் அடித்தளத்தில் வசித்தான். மிகவும் பெரிய அழகிய மாளிகை அது என்று அவனுக்குத் தெரிந்தது-ஆனால் அதைப்பற்றி அவனுக்கென்ன வந்ததும் மிகவும் சுலபமான வேலைகள் தான் அவனுக்கிடப்பட்டன, சில்லறை வேலைகள், அடிமையாயிருந்து விடுதலை பெற்ற ஒரு அகம்பாவக்கார சமையற்காரனுடன் அவனும் மற்றும் பல அடிமைகளும் தினமும் சந்தைக்குப் போய் சாமான்கள் வாங்கிவருவார்கள். (ரோமாபுரியில் பெரும் பகுதியைப் பார்க்க பாரபாஸுக்கு

இப்படி வாய்ப்புக் கிடைத்தது.

அவன் அதைப் பார்த்தான் என்று சொல்வதே பிசகோ என்னவோ ? அவனை எவ் விதத்திலும் பாதிக்காமல் ரோமாபுரி அவன் கண்களில் பட்டது என்று சொல்ல லாமா? குறுகலான தெருக்களிலே கூட்டத்திலே முட்டி மோதிக்கொண்டு முன்னேறும்போதும், சந்தைக் கும்பலில் திரியும் போதும் அதெல்லாம் ஏதோ பனிப் படலத்தில் தெரியும் காட்சிகள் போல அவன் மனத்தில் பட்டன. தனக்கு அப்பாற்பட்டது அது என்ற எண்ணம் தான் அவனுக்கு. பெரிய சக்திவாய்ந்த அந்தத் தலைநகரம் அவனைப்பற்றிய வரையில் உண்மையே அல்ல. தன் நினை வில்லாமலே தான் அவன் இதையெல்லாம் பார்த்தான். வழக்க வேகத்திலே ஏவிய காரியத்தைச் செய்தான். பல தேசத்து மக்கள், பல பாஷை பேசுகிறவர்கள் இங்கு வந்து கூடினர். பொருளும் பணமும் ஏராளமாக எங்கும் இறை பட்டது. எத்தனை பாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் இருந்தன. கடவுள்கள் எத்தனை எத்தனையோ ? கடை களுக்குப் போவோரும், கோயிலுக்குப் போவோரும் வருவோருமாகத் தெருக்கள் நிறைந்திருந்தன. இதெல்லாம்186

கண்டு வேறு ஒருவனின் கண்கள் பரவசப்பட்டிருக்குர். பாரபாஸ் இதெல்லாவற்றையும் கண்டும் காணா தமாதிரி நடமாடினான். அவனுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவு. இந்த உலகத்தின் படாடோபங் களைப்பற்றி அவனுக்கு என்ன கவலை ? இது அவன் கவனத்துக்கு உரியதல்ல என்றே அவன் எண்ணினான்.

அப்படி அவனால் அல்ஷியமாக இருக்கவும் முடிய வில்லை. இதெல்லாம் பற்றி அவன் அடிமனத்திலே ஒரு வெறுப்பும் தோன்றிக் கொண்டிருந்தது.

இதிலே பொய்யான விஷயங்கள் என்று சொல் வதற்குக் குறிப்பாக கோயில் வளர்வலங்களும், மதப் படா டோபங்களும் அவன் கண்களை உறுத்தின. என்ன ஆர்ப்பாட்டம் ! இவ்வளவும் எதற்கு ? கடவுளேயற்ற அவனுக்கு இதெல்லாம் வெறும் புரட்சி என்று தான் தோன்றிற்று. அடிக்கடி இந்த ஊர்வலங்களைப் பார்த்து அவற்றிற்காக ஒதுங்கி நிற்கவேண்டி யிருந்தது பற்றி அவன் என்ன நினைத்தான் ? திருட்டுத்தனமாக அரைப் பார்வையாக அவற்றையெல்லாம் கவனித்தான் அவன். ஒருதரம் இப்படிப்பட்ட ஒரு ஊர்வலத்தைத் தொடர்ந்து அவன் ஒரு கோயிலுக்குள் போனான். அதுவரை அவன் பார்த்த கோயில்களை எல்லாம்விடப் பிரமாதமாக இருந்தது இந்தக் கோயில். கையில் ஒரு குழந்தையுடன் ஒரு ஸ்திரீ நின்றாள் ஒரு படத்தில். அது யார் என்று அவன் கேட்ட போது ஐஸிஸும், அவளுடைய புனிதமான குழந்தை ஹேப்ரஸும் என்று பதில் வந்தது. பிறகு அவர்கள் அவனைச் சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கினார்கள். ஐஸிஸின் பெயர் கூடத் தெரியாத இவன் யார் ? புண்ணிய வதித் தாயின் பெயர் தெரியாத இவன் யார் ? கோயில்187

SNL

HT

காவலாளி வந்து அவனை வெளியே துரத்தினான். கோயிலையும், தன்னையும் இந்த துரதிருஷ்டக்காரனின் கெட்ட பார்வையிலிருந்து காப்பாற்றுவதற்காக ஒரு முத்திரை வைத்துக்கொண்டான். வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் வெறுத்து அவ்வெறுப்பிலே உயிர் வைத்திருந்தவன் பாராஸ் 11ன்பதை அவன் ஒரே பார்வையில் உணர்ந்து கொண்டு விட்டானோ?

முகத்து வடு சிவக்க, அம்புகள் போலக் கண்கள் எரி நாக்குகள் கக்க, கோயிலிலிருந்து புறப்பட்ட பாரபாஸ் தெருத் தெருவாக ஓடினான். " இங்கிருந்து ஓடு, அயோக்யப் பயலே!'' வழி தவறிவிட்டது அவனுக்கு. எங்கிருக்கிறோம் என்று தெரியாமலே சுற்றிவிட்டு தன் இருப்பிடம் திரும்பினான். யசமானனுக்கு வேண்டியவன் என்று அறிந்திருந்ததினால் யாரும் அன்று அவனைத் தண்டிக்க வில்லை. வழிதவறிவிட்டது என்கிற அவன் கால் உரப்பை அடிமை ஓட்டி நம்பவும் தயாராக இருந்தான். பார்பிலே தாலியின் பின்பக்கத்தில், எழுதி அடித்திருந்த கிருஸ்துஏசு" என்கிற எழுத்துக்கள் அவன் உள்ளத்தை நாசிப்பது போல உணர்ந்தான் அவன்.

அன்றிரவு தன்னுடன் இரும்புச் சங்கிலியால் ஒரு அடிமை பிணைக்கப்பட்டிருப்பதாகவும், அவன் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்வதாகவும் கனவு கண்டான் அவன்.

* எதற்காகப் பிரார்த்திக்கிறாய் ? பிரார்த்திப்பதால் லாபம் என்ன ?'' என்று கேட்டான்.

" உனக்காகப் பிரார்த்திக்கிறேன் " என்று மிகவும் பழக்கப்பட்ட குரல் பதிலளித்தது. இருட்டில் அவன் முகம் தெரியவில்லை-குரல் தெரிந்தது.188

அவனுடைய கிழட்டுக் கண்களில் நீர் சுரந்தது. அவனுடைய சிரார்த்தனையைக் கெடுக்கக்கூடாது என்று -அசையா பால் படுத்திருந்தான் பாரபாஸ், விழித்து எழுந்து சங்கிலியும் அடிரையும் எங்கே என்று தேடும்போது தான் அது கனவு என்று தெரிந்தது அவனுக்கு. யாரும் அவனுடன் பிணைபட்டிருக்கவில்லை. அவன் தனியன்,

கீழ்த்தனத்துக்கும் அடியில் ஒரு ஒதுப்புறமான இடத்தில் சுவரில் மீன் வரையப்பட்டிருந்ததைப் பார்த்தான் ஒரு நாள். அது சரியாக வரையப்படவில்லை எனினும் -அதன் அர்த்தம் என்ன என்று பாரபாஸும் புரிந்து கொள்ளும்படியாகத்தான் இருந்தது. இங்குள்ள அடிமை களில் யார் கிறிஸ்தவனாக இருக்கலாம் என்று சிரித்தான் பாரபாஸ். ஒவ்வொருவரையும் உற்றுக் கவனித்து அறிந்து கொள்ள முயன்றான். ஆனால் அவன் யாரையும் கேட்க வில்லை. யாருக்காவது தெரியுமா என்றும் விசாரிக்கவில்லை அவன். விசாரித்திருக் கலாம். எனினும் அவன் செய்ய வில்லை ,

யாருடனும் அவன் நெருங்கிப் பழகுவதில்லை. அவசிய மானாலொழிய அவன் பேசக்கூட மாட்டான். யாரையும் சரிவரத் தெரியாது அவனுக்கு. யாரும் அவனைப்பற்றிக் கவலைப்படுவதுமில்லை-தொந்தரவு செய்வதுமில்லை.

ரோமாபுரியில் பல கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் என்பது மட்டும் அவனுக்குத் தெரியும். பிரார்த்தனைக் கூடங்களில் அவர்கள் அடிக்கடி கூடினார்கள் என்பதும் தெரியும் அவனுக்கு. சகோதர கோஷ்டி கள் பல இருந்தன. நகரின் பல பகுதிகளில். அவன் அவர்களைத் தேடிப் போக முயலவில்லை. ஒன்றிரண்டு தடவைகள் போகலாமா என்று அவன் எண்ணியதுண்டு- ஆனால் போக வில்லை. அவர்189 பெயர் அவன் தாலியில் இருந்தது ஆனால் அதை அடித்து விட்டிருந்தது.

அத்தாலிகள் தரக்கூடிய தொந்தரவுகளுக்குப் பயந்து அவர்கள் அடிக்கடி வெவ்வேறு இடங்களில் ரகசியத்தில் சந்திக்கவேண்டியதாக இருந்தது. சந்தையில் வந்துபோன பலர் சொல்ல இதைக் கேள்விப்பட்டிருந்தான் பாரபாஸ். அவனுடன் பேசியவர்கள் எல்லோருமே கைவிரல்களை விரித்து அவன் தீக்கண் தங்களை ஒன்றும் செய்யாதிருக்க வேண்டும் என்று முத்திரையிட்டுக் கொண்டார்கள் என்று கவனித்தான் அவன். கிறிஸ்தவர்கள் வெறுக்கப்பட்டனர், தீச்செயல்கள் செய்கிறார்கள் என்று ஜனங்கள் எண்ணி னார்கள். சூனியக்காரர்கள் என்று நினைக்கப்பட்டார்கள். அவர்கள் கடவுள் கடுந்தண்டனையடைந்த ஒரு குற்றவாளி என்றார்கள். அவர்களை அணுகவே யாரும் விரும்பவில்லை.

இருட்டில் ஒரு நாள் இரவு இரண்டு அடிமைகள் குசுகுசு வென்று பேசிக்கொண்டது பாரபாஸ் காதில் விழுந்தது. அவர்கள் அவனைப் பார்க்கவில்லை. புதுசாக வந்து சேர்ந்த அடிமைகள் அவர்கள்.

மறுநாள் மாலை ஒரு சகோதரர்கள் கூட்டம் மார்கஸ் லூஷியஸின் திராகைத் தோட்டத்தில் அப்பியன் வழியிலே நடக்க விருந்தது என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். தோட்டத்திலல்ல - தோட்டத்தில் தொடங்கிய யூதர்கள் கல்லறைத் தோட்டத்தில இருந்தது அந்தக் கூட்டம் என்று சிறிது நேரம் கழித்துப் புரிந்துகொண்டான் பாரபாஸ்.

விசித்திரமான இடம் தான் கூட்டத்துக்கு....... இறந்த வர்கள் மத்தியில் .......... எதற்காக அங்கு கூட வேண்டும் ?190

மறுநாள் மாலை அதிசீக்கிரமே அடிமைகள் பூட்டப்படுமுன் உயிருக்கும் துணிந்து மாளிகையை விட்டு வெளியேறினான் பாரபாஸ்,

அப்பியன்வழியை அவன் அடையும்போது இருட்டவே தொடங்கி விட்டது. அங்கு நிர்மானுஷ்யமாக இருந்தது, திராகைத் தோட்டம் எங்கிருக்கிறது என்று ஒரு ஆட்டிடையனைக் கேட்டுக்கொண்டு போனான்.

பிறகு கல்லறைத் தோட்டத்திற்குள் படிகள் பல இறங்கிப் புகுந்தான். அஸ்தமன வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது எனினும் தட்டுத் தடுமாறிக்கொண்டு தான் முன்னேற வேண்டியதாக இருந்தது இருட்டிலே சவக்குழித் தோட்டம் நீண்டு கிடந்தது. ஜில்லென்றிருந்த அந்தச் சுவர்களைக் கையால் பிடித்துக்கொண்டு நெடுந் தூரம் போனான். முதல் கூடத்தில் சந்திப்பதாக இருந் தார்கள் என்று அந்தப் புது அடிமைகள் சொன்னதைக் கவனித்திருந்தான் அவன். தொடர்ந்து சென்றான்.

ஏதோ பேச்சுக் குரல் கேட்கிறமாதிரி இருந்தது. நின்று கவனித்தான். சப்தமே எதுவுமில்லை. மேலும் போனான், வழியிலே படிகள் வேறு இருந்ததால் ஜாக் கிரதையாக இருட்டில் முன்னேற வேண்டியதாக இருந்தது. பூமிக்குள்ள பாதை இறங்கிச் சென்று கொண்டே இருந்தது.

நீண்ட பாதை இருந்ததே தவிர கூடம் எதுவும் தெரியவில்லை. பல வழிகள் குறுக்கிட்டான். எவ்வழியைப் பின்பற்றுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை குழப்பமடைந்து தயங்கி நின்றான். தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. வெகு தூரத்து க்கப்பால் உள்ள191

வெளிச்சம் தான். அதை நோக்கி வேகமாக நடந்தான்,

அங்குதான் கூட்டம் நடக்க வேண்டும்.

திடீரென்று அந்த வெளிச்சமும் மறைந்து விட்டது. (வேறு வழி தப்பி எங்காவது புகுந்து விட்டானோஅந்த வெளிச்சம் திடீரென்று மறைந்து விட்டது. திரும்பி நடந்து பார்த்தான் வெளிச்சம் தெரியுமோ என்று. ஆனால் மறைந்தது மறைந்தது தான்.

குழப்பமடைந்தவனாக அப்படியே பிரமித்து நின்றான் அவன். அந்த சகோதரர்கள் எங்கே ? அவர்களை அவன் எங்கே காண்பது ? அவர்கள் ஏன் இங்கில்லை ?

அவன் எங்கிருந்தான் ? எப்படி இங்கு வந்தான் என்பது அவனுக்குத் தெரியும். எப்படியும் சுலபமாக இங்கிருந்து வெளியேறிவிட முடியும். வந்தவழியே திரும்பி விடத் தீர்மானித்தான்.

குறுகிய பாதை வழியாக அவன் திரும்பும்போது மீண்டும் அவன் கண்களில் அந்த வெளிச்சம் பட்டது. அதே வெளிச்சம் தான்- ஆனால் இப்போது அது வேறு ஒரு திசையில் தெரிந்தது. அதை விட்டுக் கண்ணை எடுக்காமல் நடந்தான் பாரபாஸ். ஆனால் திடீரென்று மீண்டும் மாயமாக அணைந்துவிட்டது அந்த வெளிச்சம், வெளிச்சம் அதிகமா வதுபோல் ஒரு நிமிஷம் தெரிந்தது. அடுத்த நிமிஷம் இல்லவே இல்லை அது.

திடீரென்று அணைந்து விட்டது.

தலையைக் கைகளால் பிடித்துக் கொண்டான் அவன். கண்களை மூடி மூடித் திறந்தான். எந்தமாதிரியான வெளிச்சம் அது? அது வெளிச்சம் தானா வேறு ஏதாவ தா? வெறும் பிரமையா? அவன் கண்களில் தான் ஏதாவது192

கோளாறார்....... முன்பு ஒருதரம் கொல் கோ தா மலையில்

இருட்டிற்றே, அது மாதிரி மாயமா?

இல்லை. அங்கு எவ்வித வெளிச்சமும் இல்லை. எந்தத் திசையிலும் வெளிச்சமில்லை, எல்லையற்ற, குளிர்ந்த இருட்டுத்தான் எங்கும் அவனைச் சூழ்ந்திருந்தது. அவன் அங்கு தனியாக இருந்தான். கிறிஸ்தவர்கள் அங்கில்லை அங்கு ஒருவருமே இல்லை, அவனைத் தவிர உயி முள்ளவர்கள் யாருமில்லை அங்கு. செத்தவர்கள் தான் இருந்தார்கள்,

ஆம். செத்தவர்கள்......... அவனைச் சுற்றிலும் செத்த வர்கள் தான் இருந்தார்கள். எல்லா இடங்களிலும் அங்கு கல்லறைகள் தான் இருந்தன. எங்கும் அவர்களைத் தப்பி அவன் எங்கு திரும்பு வ துர் எங்கு போவது? வெளியேற வழி எது என்று அவனுக்குத் தெரியவில்லை. செத்தவர்கள் நிறைந்த அங்கிருந்து வெளியேற வழி யே தெரியவில்லை

அவனுக்கு ........

செத்தவர் ராஜ்யம் அது !....... செத்தவர் ராஜ்யத்தி லிருந்தான் அவன். செத்தவர் ராஜ்யத்திலே அடைபட்டு இருந்தான் ..........!

அவன் உள்ளத்தில் ஒரு பீதி நிறைந்து வழிந்த து. மூச்சுத் திணற வைத்த பீதி அது. திடுதிப்பென்று அவன் ஓடத் தொடங்கினான். அர்த்தமில்லாமல், பயந்து, எங்கு எத்திசையில் ஓடுகிறோம் என்று அறியாமல் தடுக்கி விழுந்துகொண்டு ஓடினான் அவன். ஒவ்வொரு வழியாக வெளியேறப் பாதை தேடி ஓடினான் ................ பைத்தியம் பிடித்தவன் போல் அங்கு அலைந்தான் அவன்........ மூச்சுத் திணறிய து - இரைத்தது. சுவரில் முட்டி மோதிக்கொண்டு193

ஓடினான் - விழுந்தடித்து ஓடினான். செத்தவர்களைத் தப்ப எண்ணி ஓடினான். வெளியேறவே முடியாது போய் விடுமோ ?

கடைசியில் புது உலகத்திலிருந்து, பூமியின் மேல் பாகத்திலிருந்து உஷ்ணமான காற்று அவன் முகத்தில் அடித்தது....... உணர்ச்சியற்றவனாக அவன் ஏறி வெளியே வந்தான். திராக்ஷைத் தோட்டத்தை எப்படியோ வந்து அடைந்துவிட்டான்.

தரையில் சிறிதுநேரம் படுத்து சாய்ந்துகிடந்தான் வானத்தின் இருட்டுச் சூனியத்தைப் பார்த்துக்கொண்டே இளைப்பாறினான்.

எங்கும் இருட்டாக இருந்தது. வானில் மட்டு மல்லாமல் பூமியிலும் இருட்டாகவே இருந்தது. எங்கும் இருட்டுத்தான்...........

அப்பியன் வீதிவழியே, இரவில் பாரபாஸ் வீடு திரும்பும்போது தன் தனிமையை விசேஷமாக உணர்ந் தான், கூட யாரும் வரவில்லை. தெருவிலே மனித நடமாட்டமே இல்லை என்பதனால் மட்டுமல்ல. எல்லையற்ற இருட்டில் தான் தனியாக இருப்பதையும், வானத்திலோ பூமியிலோ வேறு எங்குமோ அவனுக்கு சகா என்று சொல்ல யாருமில்லை என்பதையும் அவன் உணர்ந்தான். இறந்தவர்களிலோ உயிருடனிருப்பவர்களிலோ அவனுக்கு நண்பன் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. என்றும் இப்படித்தான் -எனினும் இன்று தான் அவனுக்குத் தன் தனிமை சிறப்பாகத் தெரிந்தது. இருட்டில் நடந்தான்இருட்டில் புதைபட்டவன் போல நடமாடினான் அவன். தனிமை தொனிக்க முகத்திலே வடுவுடன் நடந்தான், அவன் தகப்பன் தந்த வடு அது. சுருங்கிய மாரிலே,M

194

நரைத்த மயிர்களுக்கு மேல், கடவுளின் பெயரை அடித்து விட்ட அந்தத் தாலி கிடந்தது. ஆம், அப்பூமியிலோ வானிலோ உறு துணை அவனுக்கு யாருமில்லை.

அவன் தன்னிலே மூழ்கியிருந்தான் - செத்தவனாகி விட்டான்- அது அவன் சாவின் ராஜ்யம். அங்கே அவன் தப்புவது எப்படி ?

ஒரே தடவைதான் அவன் வேறு ஒருவனுடன் நெருங்கிப் பிணையுண்டிருந்தான், அந்தப் பிணைப்புக்கூட ஒரு இரும்புச் சங்கிலியால் ஏற்பட்டது தான் ; வேறு எதுவும் இல்லை ; இரும்பும் பிணை தவிர வேறு எவ்வித பிணைப்பையும் அறியாதவன் அவன்.

பாதையின் கற்களிலே அவன் காலடிச் சப்தம் அவன் காதிலே விழுந்தது. மற்றப்படி எங்கும் 'பூரணமான மெளனம் நிலவியது. உலகிலே வேறு யாருமே உயிருட னில்லையா என்ன ? எங்கு பார்த்தாலும் இருட்டுத்தான் அவனைச் சூழ்ந்திருந்தது. ஒரு விளக்குக்கூட எரியவில்லை, வானத்திலே நக்ஷத்திரங்களைக்கூடக் காணவில்லை. எங்கும் பாலையின் அழிவும் சூனிய மும் நிறைந்திருந்தது.

கனமாக மூச்சுவிட்டான் அவன். காற்றே உஷ்ணமாக வீசிக்கொண்டிருந்தது. ஜூரம் அடிப்பது போல இருந்தது அவனுக்கு - உலகத்துக்கே ஒரு ஜுரவேகம் ஏற்பட் டிருப்பது போல இருந்தது யாருக்கு ஜூரம்? எப்படி வந்தது இந்த ஜூரம் அவனுக்கு ? கீழே அங்கு அவனைச் சாவு பிடித்துக்கொண்டு விட்டதோ ? சாவு ! என்றுமே சாவின் பிரஜைதான் அவன். என்றும் அவன் உள்ளே உள்ளது தான் சாவு என்கிற தத்துவம். அவனைத் தேடி சாவு வேட்டையாடிக் கொண்டிருந்தது. மனத்தின் இருட்டிய குகைகள் போன்ற பாதைகளிலே சாவு அவனை வேட்டை யாடியது. அதன் பயங்கரம் அவனை வெகுவாகப்195

பாதித்தது. இப்போது அவன் வய தானவன் தான்இனியும் உயிர்வாழ அவன் விரும்பவில்லைதான். இருந்தும் சாவு என்பது பயங்கரமானதாகத்தான் இருந்தது. அதை அவன் வெகுவாக விரும்பினான்...

இல்லை ! இல்லை ! அவன் சாக விரும்பவில்லை, விரும்பவில்லை,

செத்தவர்களின் மத்தியிலே கூடி அவர்கள் தங்கள் கடவுளைப் பிரார்த்தித்தார்கள். சகோதரர்களுடனும் கடவுளுடனும் நெருங்க அவர்கள் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் சாவைக் கண்டு அஞ்ச வில்லை. சாவு என்கிற பீதியை ஒழித்து விட்டவர்கள் அவர்கள் ; அதை வென்று விட்டவர்கள். நேச விருந்துகள் சகோதர கூட்டங்கள் எதற்கும் சாவின் நிழலிலே கூடி னார்கள்....... ஒருவரை ஒருவர் நேசியுங்கள்............ஒருவரை ஒருவர் நேசியுங்கள்.......

ஆனால் அவன் தேடி வந்தபோது அவர்களை அங்கே காணவில்லை. அங்கு அவர்களில் ஒருவரும் இல்லை. இருட்டில், தட்டுத் தடுமாறிக்கொண்டு சுற்றிவிட்டு வந்திருந்தான் அவன். அவன் மனம் போல இருட்டுக் குகைகளிலே சுற்றியலைந்து விட்டு வந்தான் ,

அவர்கள் எங்கே ? ஒருவரை ஒருவர் நேசிப்பதைப் பேசிக்கொண்ட அவர்கள் எங்கே ?

இந்த வெப்பமான இருட்டில் அவர்கள் எங்கே போனார்கள் ?- கல்லறைத் தோட்டத்தையும் விட இங்கு அதிக வெப்பமாகி இருந்த து. உலகத்தையே அழித்துவிட விரும்பிய து போலக் கவிழ்ந்து கொண்டிருந்ததே இரவு ! ஜூர இரவு அது - மூச்சுக்கூட விடமுடியாமல் திணர வைத்த இரவு!............196

ஒரு திருப்பம் திரும்பியபோது, புகை வாசனை அவனைத் தாக்கியது. எதிரேயிருந்த ஒரு வீட்டின் அடித்தளத்தி லிருந்து புகை மண்டலம் கிளம்பி அவனைத் திக்குமுக்காடச் செய்தது. இரண்டொரு சாளரங்கள் வழியாக தீ நாக்குகள் வெளியே நீண்டன. அதை நோக்கி ஓடி னான் அவன்.

சுற்றிலும் பலர் ஓடிவந்த சப்தம் கேட்டது. "தீ! தீ!' என்று பலர் கத்தினார்கள்.

அடுத்த தெருவிலும் ஒரு பகுதி எரிந்து கொண் டிருந்தது என்று கண்டான் அவன். தீ வெகுவாக பரவி கவிட்டது அங்கு. குழப்பமாக இருந்தது அவனுக்கு புரிய வில்லை....... திடீரென்று தூரத்தில் பலர் குரல் கொடுத்தது

அவன் காதில் விழுந்தது.

" கிறிஸ்தவர்கள் ! கிறிஸ்தவர்கள் தான் காரணம் !"

பல பக்கங்களில் " இதற்குக் காரணம் கிறிஸ்த வர் கள் தான் " என்று பல குரல்கள் எக்காலத்தில் கத்தின.

ஸ்தம்பித்து நின்றான் அவன். காதில் விழுந்தது புரியவில்லை. அதன் அர்த்தம் விளங்கவில்லை. கிறிஸ்த வர்களா?........சிறிது நேரத்தில் புரிந்தது..

ஆம், கிறிஸ்தவர்கள் தான்! ரோமாபுரியை எரித்துக் கொண்டிருப்பவர்கள் கிறிஸ்தவர்கள் தான்! உலகையே தீக்கிரையாக்க அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள்!

அங்கு கூட்டம் ஏன் நடக்கவில்லை என்பது அவனுக்கு இப்போது தான் புரிந்தது. நாசகாரக் கும்பல் நிறைந்த அநாகரிகபுரியான ரோம் நகருக்கு, அந்த உலகத்துக்குத் தீ வைப்பதில் ஈடுபட்டிருந்தார்கள் அவர்கள். அவர்கள்197

நேரம் வந்துவிட்டது. அவரைக் காப்பாற்ற வந்த கடவுள் வந்துவிட்டார்!

சிலுவையில் இறந்தவர் வந்துவிட்டார். கொல் கோதா மனிதர் மீண்டும் வந்துவிட்டார், மனித குலத்தைக் காப்பாற்ற - இன்றுள்ள அதர்ம உலகத்தை அழிக்க வந்துவிட்டார். அதை ஒழித்து, தீ வைத்து தீர்த்து விட்டு, வாக்களித்தபடி தன் சிஷ்யர்களைக் காப்பாற்ற வந்துவிட்டார். தன் சக்தியைப் பூரணமாகக் காண்பிக்க வந்துவிட்டார். பாரபாஸாகிய அவன் அவருக்கு உதவி செய்ய வேண்டும் ! தப்பித்து விட்ட பாரபாஸ், கொள்ளைக் காரன் பாரபாஸ், அயோக்கியன் பாரபால் அவருக்கு உதவி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தத் தடவை பாரபாஸ் பின்வாங்க மாட்டான் - அவருக்கு உதவத் தவறிவிட மாட்டான். எரிந்துகொண்டிருந்த முதல் வீட்டை அணுகி, கொள்ளிக் கட்டைகளைப் பிடுங்கி எரியாத வீடுகளில் வைத்தான் அவன். பல கொள்ளிக் கட்டைகளைப் பிடுங்கி வந்து வழி நெடுகத் தீ வைத்தான் அவன். புது வீடுகளைப் பற்ற வைத்தான், நன்றாகப் பற்றிக் கொள்ளும் வரையில் நின்று பார்த்துக்கொண் டிருந்தான். எங்கும் எல்லா வீடுகளும் பற்றி நன்கு எரியத் தொடங்கின, தீயைப் பரவவைக்க ஓடியாடி வெகுவாகப் பாடுபட்டான் பாரபாஸ். தன் தாலியில் அடிக்கப்பட் டிருந்த அந்தப் பெயரை உச்சரித்துக்கொண்டே அங்கு மிங்கும் பரபரப்பாகக் கொள்ளிக்கட்டைகளுடன் ஓடினான் அவன். கடவுள் தன்னை நாடியபோது தான் சோர்ந்து விடவில்லை என்கிற நினைவு அவனுள் தோன்றி வளர்ந்தது. கடவுளின் ஆட்சி தொடங்கு முன் எதுவும் அழிந்தாக வேண்டும்- அந்த அழிவு நேரம் வந்துவிட்டது. தீ பரவிக்198

கொண்டிருந்தது. எங்கும் அக்னிக் கடல் - தீ நாக்குகள் நக்கி நிமிர்ந்தன. உலகமே பற்றி எரிந்து கொண்டிருந்தது.

பார் ! அவர் - ராஜ்யம் வந்துவிட்டது-ஸ்தாபிதமாகி விட்டது ! இதோ அவர் ராஜ்யம் நிலைத்துவிட்டது !

காபிடோ லுக்குக் கீழேயுள்ள சிறையில் தீக்குக் காரணமாகக் கருதப்பட்ட கிறிஸ்துவர்கள் எல்லோரும் அடைக்கப்பட்டிருந்தனர். பாரபாஸும் அவர்கள் மத்தியில் இருந்தான். தீக் கொள்ளிகளுடன், அவனைப் பிடித்து விசாரித்து விட்டு, கிறிஸ்தவர்களுடன் அவனையும் அடைத்து விட்டார்கள். கிறிஸ்தவர்களில் ஒருவனாகி விட்டான் அவனும்.

கற்பாறையிலே குடைந்தெடுத்த சிறை அது. சுவர் களில் ஈரம் சொட்டி வழிந்து கொண்டிருந்தது. மங்கிய வெளிச்சத்தில் கைதிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இயலவில்லை. அதுபற்றி பாரபாஸுக்குப் பரம திருப்தி தான், அழுகிக் கொண்டிருந்த வைக்கோல் மேல் ஒரு புறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந் திருந்தான் அவன்.

ரோமாபுரியில் பரவிய தீயைப் பற்றியும், தங்கள் விதிகளைப் பற்றியும் அவர்கள் தங்களுக்குள் பேசித் தீர்த்து விட்டார்கள், தீயை அவர்கள் வைத்ததாகச் சொல்லியது பொய் தான். அதிகாரிகள் அவர்களைச்சிறைப்படுத்த செய்த சூழ்ச்சி தான் அது. அந்தத் தீக்குக்காரணம் கிறிஸ்தவர்கள் அல்ல என்பது நீதிபதிக்கும் தெரியாதா என்ன ? அவர் களில் ஒருவர்கூட தீப்பட்ட பகுதியிலே இல்லவேயில்லை. அவர்கள் ஏதோ இப்படி நடக்கப் போகிறது என்று கேள்விப்பட்டு தங்கள் தங்கள் வீட்டைவிட்டுக் கிளம்பாமலே199

தான் இருந்தார்கள். அவர்கள் கூடும் இடம் அதிகாரி களுக்குத் தெரிந்துவிட்டது - அங்கு போகக்கூடாது என்று அவர்கள் அங்கும் போகாதிருந்து விட்டார்கள். அவர்கள் நிரபராதிகள், அதைப் பற்றிக் கவலைப்படுவதற்கு யார் இருந்தார்கள் ? ஊரார் எல்லோரும் அவர்கள் தான் குற்றவாளிகள் என்று நம்பத் தயாராக இருந்தார்கள், கூலிக்காக " கிறிஸ்தவர்கள் ! கிறிஸ்தவர்கள் !" என்று கத்திய கோஷ்டியைத்தான் நம்பத் தயாராக இருந்தார்கள்.

" யார் கூலி தந்தார்கள் அவர்களுக்கு " என்று ஒரு குரல் இருட்டிலிருந்து கேட்டது. ஆனால் யாரும் பதில் தரவில்லை ,

குருநாதரின் சிஷ்யர்கள் இந்தக் குற்றத்தை எப்படிச் செய்திருக்க முடியும் ? ரோமாபுரியைத் தீக்கிரையாக்க அவர்களுக்கென்ன பைத்தியமா? யாராவது அதை நம்ப முடியுமா? அவர்களுடைய குருநாதன் ஆத்மாவுக்குப் புனிதத் தீ இடுவாரே தவிர, நகரங்களுக்கா தீ இடுவார்?

அன்பின் உருவம் என்றும், ஒளி என்றும், அவரைப் பற்றிப் பேசினார்கள் அவர்கள், அவர் ராஜ்யம் ஸ்தாபித மாகும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள் அவர்கள். பிறகு அற்புதமான பல் வார்த்தைகள் அடங்கிய பிரார்த்தனை கீதங்களைப் பாடினார்கள், தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு அவற்றைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தான் பாரபாஸ்.

சிறைக் கதவின் வெளிச் சட்டம் அகற்றப் படுவதும், கதவு கிரீச் என்று சப்தத்துடன் திறக்கப்படுவதும் அவர்கள் காதில் விழுந்தது. ஒரு சிறைக் காவலாளி உள்ளே வந்தான், கைதிகள் சாப்பிடும் போது வெளிச்சம் இருக்கட்டும் என்பதற்காகக் கதவை திறந்து வைத்தான்200

காவலாளி. அப்போது தான் அவன் சாப்பிட்டுவிட்டு வந்திருந்தான் - ஆனால் அவன் கோபமாகவும் மட்டமாகவும் அவர்களைப் பேசிக் கொண்டே சாப்பிட முடியாத அந்த உணவை அளித்தான். வழக்கத்தால் வந்த மட்டமான பேச்சே தவிர அது வேறு ஒன்றுமல்ல. வையுமபோதும் திட்டும்போதும்கூட அவன் அவ்வளவாக மனத்தில் கெடுதி நினைக்காதவன் மாதிரி, நல்ல தனம் உள்ள வன் மாதிரிதான் பேசினான். வாசல் கதவு வெளிச்சத்தில் (நேரே உட்கார்ந்திருந்த பாரபாஸைப் பார்த்ததும் அவன் உரக்கச் சிரித்தான்.

* அ ேதா இருக்கிறானே அந்தப் பைத்தியம் !'' என்று கூவினான். “ ரோமாபுரிக்குத் தீ வைத்துக்கொண்டு திரிந்தவன் அவன் தான். அரைப் பைத்தியம் ! நீங்கள் தீ வைக்கவில்லை என்று சொன்னால் யார் நம்புவார்கள் ? பொய்யர்கள் ஸெர்வியஸின் எண்ணைக் கிடங்கில் தீ வைக்கும்போது கையும் மெய்யுமாக அவனைப் பிடித்து விட்டார்கள்."

பாரபாஸ் நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை. அவன் முகத்தில் எவ்வித பாவமும் இல்லாமல் உட்கார்ந்திருந் தான். கண்ணுக்குக் கீழேயிருந்த வடு மட்டும் ரத்தச் சிவப்பாகச் சிவந்தது.

ஆச்சர்யத்துடன் மற்றக் கைதிகள் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களில் யாருக்கும் அவனைத் தெரியாது. யாரோ குற்றவாளி தங்களைச் சேராதவன் என்று அதுவரை அவனைப்பற்றி எண்ணியிருந்தார்கள் கிறிஸ்தவர்கள்,

" து து சாத்தியமில்லையே !'' என்றார்கள் அவர்கள். *'* எது சாத்தியமில்லை ?”201

" அவன் கிறிஸ்தவனாக இருக்க முடியாது. நீ சொல்வதை அவன் செய்திருந்தால், அவன் எங்களில் ஒருவனாக இருக்க முடியாது !'

. 'சாத்தியமில்லையா? அவனே சொல்லிக்கொண்டானே! விசாரணையில் கூட அப்படி ஏற்றுக்கொண்டானாம் அவன். மற்றப்படியும் அவனைப் பிடிக்காதவர்கள் எனக்குச் சொன்னார்களே !''

" எங்களுக்கு அவனைத் தெரியாது '' என்று நிம்மதி யற்றவர்களாகச் சொன்னார்கள்.

" எங்களில் ஒருவனானால் எங்களுக்குத் தெரியாதா? நாங்கள் அறியாத அன்னியன் -அவன் !"

" வெறும் போலிகள் நீங்கள். ஒரு நிமிஷம் இருங்கள், காட்டுகிறேன் " என்று காவலாளி பாரபாஸை அணுகி அவன் கழுத்திலிருந்த தாலியைப் புரட்டிக் காட்டினான். " இதைப் பாருங்கள். உங்கள் கடவுளின் பெயர் எழுதி யிருக்கிறதா இல்லையா? இது தானே உங்கள் கடவுள் பெயர் ? எனக்குப் படிக்கத் தெரியாது - நீங்களே சொல்லுங்கள்.''

பாரபாஸையும் அவனையும் சூழ்ந்து கொண்டார்கள் கைதிகள் ஆச்சர்யத்துடன். தாலியின் பின் பக்கம் எழுதியிருந்ததைப் பார்த்தனர். பெரும்பாலோருக்குப் படிக்கத் தெரியாது தான் - ஆனாலும் இரண்டொருவர் '' கிறிஸ்து- ஏசு " " கிறிஸ்து-ஏசு " என்று முணு முணுத்தார்கள்.

வெற்றிப் பார்வையுடன் பாரபாஸ் கழுத்தில் தாலியைத் திருப்பிவிட்டு நின்றான் கரவலாளி.

" என்ன சொல்லுகிறீர்கள் இப்போது ? கிறிஸ்தவன் அல்லவா? அவனே தான் அதை நீதிபதிக்குக் காட்டினான், நான் சக்கரவர்த்தியின் அடிமையல்ல என்றும், உங்கள்202 கடவுளின் அடிமைதான் என்றும் சொன்னான் அவன். அவனை யும் இப்போது, உங்கள் கடவுளைப் போல, சிலுவையில் அறைந்துவிடுவார்கள். நீங்கள் எல்லோருnே சிலுவையில் உயிர் துறக்க வேண்டியது தான். அவனைவிட நீங்களெல்லோரும் கெட்டிக்காரத்தனமாகத்தான் இருந் தீர்கள். இருந்தும் ஒருவன் தான் கிறிஸ்தவன் என்று கூவிக்கொண்டு அதிகாரிகள் கையில் மாட்டிக்கொண்டது உங்கள் துரதிருஷ்டம் தான்."

குழம்பியானத்துடன் இருந்த கிறிஸ்தவர்களை விட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு வெளியேறினான் காவலாளி.

பாரபாஸைச் சூழ்ந்து கொண்டு அவர்கள் கோபமாக அவனைப் பலவிதமான கேள்விகள் கேட்டனர். யார் அவன் ? உண்மையிலேயே கிறிஸ்தவன் தானா? எந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவன்? அவன் தான் தீயை ஆரம்பித்து

வைத்ததா?

பாரபாஸ் பதில் சொல்லவில்லை. அவன் முகம் வெளுத்தது. கண்கள் அவன் முகத்தின் ஆழத்தில் போய் ஒளிந்துகொண்டன.

* கிறிஸ்தவனா ? ஏசுவின் பெயர் அடிக்கப்பட் டிருந்ததே !'

" அப்படியா ? கடவுளின் பெயரா ?"

" நீ பார்க்க வில்லையா? அடிக்கப்பட்டுத்தான் இருந்தது."

இரண்டொருவர் கவனித்தனர். ஆனால் அதைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை. பாரபாஸின் தாலியைத் திருப்பி ஒருவன் மறுபடியும் பார்த்தான். பெயர் அடிக்கப்பட்டிருந்தது என்பது அந்த மங்கிய ஒளியிலும்203

தெரிந்தது. கத்தியால் குறுக்கே கோடு கிழிக்கப்பட்டு இருந்தது.

" ஏன் கடவுளின் பெயர் அடிக்கப்பட்டிருக்கிறது ?" என்று ஒருவர் பின் ஒருவராக அவனைக் கேட்டார்கள். '' அதன் அர்த்த ம் என்ன ? காதில் விழுகிறதா? இதன்

அர்த்தம் என்ன ? சொல்லு...''

ஆனால் பாரபாஸ் அப்படியும் பதில் சொல்லவில்லை. தோள்கள் குனிய, தலை தொங்கலிட, எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான். அவர்கள் எது செய்தாலும் செய்து கொள்ளட்டும். அந்தத் தாலியையும் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அவனைப் பார்த்து ஆத்திரமும் ஆச்சரியமும் அடைந்தார்கள் அவர்கள். கிறிஸ்தவனா இவன்? விசித்திரமாக இருக்கிறதே! எப்படி அவன் கிறிஸ்தவனாக இருக்கமுடியும்? அவன் நடத்தையைப் புரிந்துகொள்வது அவர்களால் முடியாத காரியம். வேறு ஒரு மூலையில் எதிலும் கலந்துகொள்ளாமல் உட்கார்ந் திருந்த ஒரு கிழவனை அணுகி அவனிடம் ஏதோ சொன் னார்கள் அவர்கள். சிறிது நேரம் பேசியபிறகு, கிழவன் எழுந்து வந்து பாரபாஸை அணுகினான்.

உருவத்தில் பெரியவன் அவன். நல்ல உயரமாகவும் இருந்தான். அவன் மார்பு அகலமாக இருந்தது. தலை மயிர் அடர்த்தியாக இல்லையே தவிர நீளமாக இருந்தது. கம்பீர்யமும், தண்மையும் நிறைந்த பார்வையுடன் பார்த் தான் அவன். குழந்தையின் கண்கள் போல அவன் கண்கள் அகன்று அழகாக இருந்தன. வயசின் ஞானம் படைத் தவன் அவன் என்பதை கண்களிலுள்ள ஒளி காட்டிற்று.

வெகுநேரம் பாரபாஸைப் பார்த்துக்கொண்டு நின்றான் அவன், பிறகு ஏதோ ஞாபகம் வந்தவன் போலத் தலையை204

" ரொம்ப நாட்களுக்குமுன் நடந்தது '' என்றான், மன்னிப்புக் கேட்பவன் குரலில். வைக்கோலில் பாரபாஸின் முன் உட்கார்ந்தான் அவன்,

சுற்றி நெருங்கி நின்ற மற்றவர்கள் ஆச்சரியத்தில் முழுகினார்கள். அவர்களுடைய மதிப்புக்குரிய பிதாவுக்கு இந்த மனிதனைத் தெரியுமா ?

தெரியும் என்று தெரிந்தது. அவனுடன் கிழவன் (பேச ஆரம்பித்ததுமே அது தெளிவாகிவிட்டது. எப்படி யெல்லாம் வாழ்ந்தான் பாரபாஸ் என்று விசாரித்தான் கிழவன். தன் வாழ்நாள் சம்பவங்களை பாரபாஸ் சொன்னான். எல்லாவற்றையும் சொல்லவில்லை - கிழவ னுக்கும் புரியும்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொஞ்சம் கொஞ்சம் சொன்னான். இருவரும் வெகுநேரம் பேசினார்கள். யாரிடமும் எதுவும் சொல்வதென்பது பாரபாஸின் சுபாவத்துக்கு விரோதமான விஷயம் தான். எனினும் கிழவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்தான் அவன். அவன் முகத்தைப்போலவே அனுப் வத்தைக் காட்டிய அந்தக் கிழவனின் முகம், அவன் முகத்திலில்லாத ஒரு அமைதியையும் காட்டியது. முன் பார்த்த அதே மாதிரி தான் இன்றும் இருந்தான்பற்கள் தான் பல உதிர்ந்துவிட்டன. பழைய மாதிரியே,

அந்த பாஷையேதான் இன்னமும் பேசினான் அவன்.

ஏசுவின் பெயர் எப்படி அந்தத் தாலியில் வந்தது, எப்படி அடிக்கப்பட்டது என்பதை அந்தக் கிழவன் விசாரித்து அறிந்து கொண்டான். ஏன் ரோமாபுரி நகருக்கு பாரபாஸ் தீ வைக்க முயன்ற காரணத்தை யும் அவன் விசாரித்து அறிந்துகொண்டான். காப்பாற்ற வந்த கடவுள் அதை விரும்பினார் என்று அவன் எண்ணி205

உதவி செய்ய முன்வந்தான். இதைக் கேட்ட கிழவன் துயரத்துடன் தன் நரைத்த தலையை ஆட்டினான். கிறிஸ் தவர்கள் எப்படி அந்தத் தீயை வைத்திருக்க முடியும் ? சீஸர் தான் அதைத் துவக்கிவிட்டு, கிறிஸ்தவர்களை

அநியாயமாகக் குற்றஞ் சாட்டினான். பாரபாஸ் சீஸருக்குத் தான் உதவினான்-கடவுளுக்கு அல்ல.

" இந்த சக்ரவர்த்திக்குத்தான் நீ உதவினாய். பெயர் அடிக்கப்பட்டிருக்கும் கடவுளுக்கு உதவவில்லை நீ. நீயும் அறியாமலே நீ உன் நியாயமான யசமானனுக்குத்தான் உதவினாய்? நம் பிரபுவே அன்பு " என்று சொல்லிவிட்டு, பாரபாஸின் தாலியைத் திருப்பி, அதில் அடித்திருந்த பெயரைத் துயரத்துடனும் வருத்தத்துடனும் பார்த்தான்.

அதை விட்டுவிட்டுப் பெரு மூச்சு விட்டான். ஏனென்றால் இது பாரபாஸின் தாலி - அதை அவன் அணியாமல் தப்புவது முடியாத காரியம் என்பதை உணர்ந்தான் கிழவன். அவனுக்குத் தான் எவ்விதத் திலும் உதவி செய்ய முடியாது என்பதையும் உணர்ந் தான். பயமும் தனிமையும் ததும்பிய பாரபாஸ் கண்களி லிருந்து அவனும் இதை உணர்ந்தான் என்பதைக் கண்டு கொண்டான் கிழவன்.

கிழவன் அங்கிருந்து எழுந்ததும் மற்றவர்கள் '' யார் அவன் ? யார் அவன் ?'' என்று அவனைக் கேட்டார்கள், முதலில் அவர்களுக்குப் பதில் சொல்ல அவன் விரும்ப வில்லை, அவர்கள் ஓயாமல் கேட்டதும் தப்ப முடியாமல் சொன்னான் :

" அவன் பாரபாஸ். நமது பிரபுவுக்குப் பதில் சிலுவையிலிருந்து தப்பியவன்."206

அன்னியனைப் பார்த்துப் பார்த்து வாயடைத்துப் போனார்கள். வேறு எதுவும் இவ்வளவு ஆச்சரியகரமாக அவர்களுக்குத் தோன்றியிராது. குசுகுசுவென்று தங்க ளுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள், * பாரபாஸ்! தப்பிய பாரபாஸா இது ! தப்பியவன் ?''

அதை அவர்களால் சரிவரப் புரிந்துகொள்ள இயலவில்லை .

ஆனால் கிழவன் அவர்களை அடக்கினான். " இவன் மஹா துரதிருஷ்டசாலி. உலக வாழ்வில் ஆனந்தமே காணாதவன். நாமும் குற்றங்களும் பாவங்களும் செய்தவர்கள் தான் ! இருந்தும் நமது கடவுள் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ளவில்லையா? அவனுக்கு ஒரு கடவுள் இல்லை என்பதற்காக அவனைக் குற்றம் சொல்ல நாம் யார் ?'

அவர்கள் தலை குனிந்தார்கள். இதற்குப் பிறகு அவர்கள் பாரபாஸ் பக்கம் திரும்பவும் கூட சங்கோசப் பட்டார்கள். அவனிடமிருந்து மெளனமாக நகர்ந்து விட்டார்கள். கிழவனும் பெருமூச்சுடன் தன்னுடைய இடத்திற்குப் போனான்.

பாரபாஸ் மீண்டும் தனியனாக அங்கு உட்கார்ந் திருந்தான்.

அவர்களிடம் கலந்து கொள்ளாமல் தனியாக, நாளுக்குப்பின் நாள், பல நாட்கள் சிறையிலே கழித்தான் பாரபாஸ். அவர்களுடைய பிரார்த்தனை கீதங்களில் கலந்து கொள்ளாமல், பாடுவதைக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான். சாவையும், சாவுக்குப்பின் சொர்க் கத்தையும் பற்றி அவர்கள் அளவற்ற நம்பிக்கையுடன்207

பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான், தண்டனை விதிக்கப்பட்டவுடன் இந்தப் பேச்சு அதிகமாகிவிட்டது. அவர்கள் நம்பிக்கை அதிகமுள்ளவர்கள், அசைக்கமுடியாத நம்பிக்கையுள்ளவர்கள்.

சிந்தனையிலாழ்ந்தவனாக இவ்வளவு பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்தான் பாரபாஸ். ஆலிவ் மலையில் தனக்கு உப்பும் ரொட்டியும் தந்த அந்த மனிதனை ஞாபகம் வந்தது பாரபாஸுக்கு - செத்துப்பிழைத்தவன் அவன் இப்போது கடைசியாக செத்தும் இருப்பான். எல்லையற்ற இருட்டில் பல்லிளித்துக் கொண்டு கிடப்பான் அவன்.

எல்லையற்ற வாழ்வு........

தான் வாழ்ந்த வாழ்வுக்கு ஏதாவது அர்த்தம் உண்டா ? அதில்கூட அவனுக்கு நம்பிக்கை வரவில்லையே, ஆனால் நம்பிக்கை என்பதே அவன் அறியாத விஷயம் ! அவன் எப்படி என்ன நிச்சயமாகச் சொல்ல முடியும் ?

ஒரு மூலையில் தாடிக்கிழவன் உட்கார்ந்து தன் கிறிஸ் தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். சில சமயம் தலையைக் கையால் தாங்கிக்கொண்டு பேசாமலும் இருந்து விடுவான். தன் சொந்த ஊரைப்பற்றி நினைத்துக் கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தானோ என்னவோ? அங்கு செத்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணிக்கொண்டிருந்தானோ? ஆனால் அவன் ரோமா புரியில் தான் உயிர்விடவேண்டும் தன் பிரபுவை தெருவில் பார்த்தபோது " என்னுடன் வா '' என்று அவர் அழைத் தார். முகத்தில் ஒரு அமைதியுடன் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

இப்படியாகக் கடைசியில் அவர்கள் சிலுவையில் அறைய அழைத்துச் செல்லப்பட்டார்கள், இருவர்208

இருவராகப் பிணைத்து அழைத்துச் சென்றார்கள். ஒற்றைப்படை எண்ணிக்கையாதலால் இதிலும் விதியின் செய்கை விசித்திரமாயிற்று. பாரபாஸ் தனியாகக் கடைசியில் அழைத்துச் செல்லப்பட்டான். இப்படி நடந்தது தும் விசேஷம் தானே ! இப்படியே தான் அந்த வரிசைச் சிலுவைகளிலும் அவன் சிலுவை ஓரத்தில் கடைசியில்

அமைந்தது.

பெரிய கூட்டம் கூடியிருந்தது. எல்லாம் முடிவதற்கு வெகு நேரமாயிற்று. சிலுவையில் அறையப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டும், பிரார்த்தனை கீதங்களைப் பாடிக்கொண்டும் உயிர் துறந்தனர். பாரபாஸிடம் யாரும் பேசவுமில்லை.

இருட்டத் தொடங்கியபோது வேடிக்கை பார்க்க வந்தவர்கள் போய்விட்டார்கள். தவிரவும் அதற்குள் சிலுவையில் அறையப்பட்டவர்கள் எல்லோருமே இறந்து விட்டார்கள்.

அங்கு பாரபாஸ் தான் தனியாக உயிருடன் சிலுவையில் தொங்கிக் ெகாண்டிருந்தான். இன்னமும் உயிர் இருந்தது அவனுக்கு. அவன் ஆயுள் பூராவும் பயந்து நடுங்கிய சாவு நெருங்கியதை உணர்ந்ததும் அவன் சுற்றிச் சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து, அதனிடம் பேசுகிறாரதிரி சொன்னான்.

" என் ஆத்மாவை உனக்கு அளித்துவிடுகிறேன்." பிறகு அவனும் இறந்து விட்டான்.
*

No comments:

Post a Comment