தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, January 08, 2020

கத்தரிக்கப்பட்டச் செய்திகள் - ஹுலியோ கொர்த்தஸார் ::: தமிழில் : நாகார்ஜுனன் - கல்குதிரை

- அர்ஜென்டினா 0 கல்குதிரை உலக சிறுகதைகள் சிறப்பிதழ்

கத்தரிக்கப்பட்டச் செய்திகள் - ஹுலியோ கொர்த்தஸார்

தமிழில் : நாகார்ஜுனன் 
தமது முப்பத்தி எட்டாவது வயதில் பாரீஸுக்கு வந்து வாழ்நாளின் இறுதிவரை அங்கேயே வாழ்ந்த ஹுலியோ கொர்த்தஸார், ஒரே சமயத்தில் கவிஞனாகவும் மொழி பெயர்ப்பாளராகவும், ஜாஸ் இசைக் குழுக்களில் அவ்வப்போது வாசிப்பவராகவும் இருந்தார். இவருடைய Night Face Up சதையில் நவீன அறுவைக் சிகிச்சைக்காக மேஜையில் கிடத்தப்படும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பழக்கமுடைய இளைஞன், அஸ்டெக் பழங்குடியினரின் பலிச் சடங்குக்கு உள்ளாக்கப்படும் வீரனாக மாறிவிடுகிறான். பிரெஞ்சு நவீனத்துவமும் வரலாற்றில் மறைந்து போய்விட்ட மனிதக் கூட்டங்களின் பெயர் தெரியாத கதைகளும் கலந்த மாய நடையில் எழுதுபவர் கொர்த்தஸார். இவருடைய Hopscotch நாவலை வரிசைக்கிரமமாகவும், வரிசைக்கிரமம் தாண்டியும் படிக்க முடியும். இவருடைய கதைகளை வாசிப்பவர்கள், மர்மநாவலை வாசித்து முடிக்கும் போது தானே கொலையுண்டவனாக தாமதமாக உணரும் வாசகனைப் போன்ற நிலையை எய்துவார்கள். Blow-Up என்ற சிறுகதையைப் படமாக எடுத்த மைக்கேலாஞ்சலோ அன்டாய்னியோனி இப்படித்தான் கூறினார். 1984-இல் மரணமடைந்த போது "லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் தாடிவைத்த தாத்தா" என்று அழைக்கப்பட்டார் கொர்த்தஸார். Press Clippings என்ற கதை We Love Glenda So much and Other Stories புத்தகத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 
77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777


"கத்தரிக்கப்பட்டச் செய்திகளில் முதலாவது நிஜமானது என்பதையும் இரண்டாவது கற்பனை செய்யப்பட்டது என்பதையும் தேவையில்லை 

என்றாலும் இங்கே சொல்லிக்கொண்டு விடுகிறேன்." ரிக்வே வீதியில்தான் அந்தச் சிற்பி வசிக்கிறார். அவர் அங்கே வசிப்பது அவ்வளவு சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் பாரீஸ் நகரத்தில் 

கல்குதிரை / 172 

வேறுவழி எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்த நகரத்தில் அர்ஜன்டினாவைச் சேர்ந்தவராக இருப்பதும் சிற்பியாக இயங்குவதும் மிகவும் சிரமமான இரன்டுவித வாழ்க்கை முறைகள் தான். 

எங்களுக்குள் அத்தனை பரிச்சமுமில்லை. இருச்கும் பரிச்சயமும் இருபது வருட காலத்தில் ஒரு சில துளிகள் மூலமாகத்தான். தம் அண்மைக் காலச் சிற்பங்களைப் பதிவு செய்கிற புத்தகம் ஒன்றில் அவற்றை ஒட்டிய உரையைப் பிரதியாக எழுத அவர் என்னை அழைத்தபோது, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் எத்தகையதொரு பதிலைக் கூறினால் அது சரியாக இருக்குமோ அதையேதான் நான் அவரிடம் கூறினேன்; 'உங்கள் படைப்புக்களை எனக்குக் காட்டுங்கள். அப்போது பார்ப்போம்... பார்க்கலாம்.'' 

இரவில் அவருடைய ஃப்ளாட்டுகுச் சென்றவுடன் எனக்கு காப்பி வழங்கப்பட்டது. நட்பு ரீதியான லேசான மோதலும் எங்களிடையே இருக்கத்தான் செய்தது. மேலும் தமது படைப்புக்களை இன்னொருவரிடம் காட்டும்போது யாருமே சென்றடையக்கூடிய அந்த பயங்கரமான கட்டம் வந்தேவிடுகிறது. சொக்ப்பனையானது எரிக்கப்படுமபோது அது நனைந்து போய்விட்டிருப்பதையும் படைப்புக்களிலிருந்து கனவைலிடவும் புகைதான் அதிகம் வருவதையும் உணர்ந்து கொண்டுவிடுகிற கட்டம் அது; வார்த்தைகளில் அதை ஒப்புக்கொண்டுவிடுகிற கட்டம் அது. 

ஏற்கனவே தொலைபேசியில் தமது அண்மைக்காலப் படைப்புக்கள் பற்றி சிற்பி என்னிடம் கூறியிருந்தார். மனிதன் மனிதனாகவும் ஓநாயாகவும் வசித்துவருகிற அத்தனை அரசியல் மற்றும் பூகோள ரேகைகளிலும் படர்ந்துள்ள வன்முறை பற்றிய வரி விசயான சிறு சிற்பங்கள் அவை. அர்ஜன்டினியர்சளான எங்கள் இருவருக்கும் இதுபற்றியெல்லாம் நிறையத் தெரிந்தே இருந்தது. நினைவுகளின் குமட்டல் எங்களை நிறைக்கவும் கடிதங்கள், தந்திகள் மற்றும் திடீர் மௌனங்கள் மூலமாக தினசரி அதிகரித்து வந்த பயம் எங்களை மூழ்கடிக்கவும் கொஞ்சநேரம் அப்படியே இருந்தோம். 

நாங்கள் பேச ஆரம்பித்ததும் மேஜையை அவர் சுத்தம் செய்துவிட்டு என்னை இருக்கையில் சௌகரியமாக அமரச் செய்தார். ஒவ்வொரு சிற்பமாகக் கையிலெடுத்து மேஜையின்மீது மெதுவாக ஒளி வெள்ளத்தில் வைத்தார். நான் ஒவ்வொரு சிற்பத்தையும் நன்றாகப் பார்த்தவுடன் அவற்றை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது பேசுவதற்கு எங்களிடம் எதுவுமில்லை. ஏனென்றால் வார்த்தைகள் அச்சிற்பங்களில் உறைந்துபோய் விட்டிருந்தன. அந்த வார்த்தைகள் அப்போதும் எங்களுடையதாகவே இருந்தன. 

173 | கல்குதிரை 

களிமண்ணிலும் பிளாஸ்டரிலும் செய்யப்பட்ட பத்து சிறிய சிற்பங்கள் அலை. பாட்டில்களிலும் கம்பிகளிலும் பேனாக்கத்தியால் வண்ணம் தீட்டப் பட்டு விரல்களால் திறமையாக முறுக்கிலிடப்பட்ட சிற்பங்கள் அவை. காலிடப்பாக்களும் இன்னபிற சாதாரணப் பொருட்களுமான அவற்றினூடே சிற்பியின் திறமையானது, உடல்களும் தலைகளுமாக, புஜங்களும் கைகளுமாக எனக்குப் பிடிபட்டபோது இரவு வெகுநேரமாகிவிட்டிருந்தது. தெருவிலிருந்து காலி லாரிகள் கடந்து செல்லும் ஓசையும் ஆம்புலன்சின் அவ்வப்போதய சீழ்க்கை ஒலியும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன. 

காட்டப்பட்ட சிற்பங்களில் திட்டவட்டமாகவும், விவரணை ரீதியாகவும் எதுவுமில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவருடைய சிற்பங்கள் ஒவ்வொன்றும் தம்மளவில் புதிர்களாக எனக்குத் தெரிந்தன, வன்முறையானது அச்சிற்பங்களுள் உறைந்திருக்கும் வழிமுறையை அறிந்து கொள்வதற்கு நெடுநேரம் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. இன்னும் சொல்லப்போனால் - ஒரே சமயத்தில் சாதாரணச் சிற்பங்களாகவும் அசாதாரணப் பொருட்களாகவும் அவை இருந்து கொண்டிருந்தன என்றும் கூறலாம். ஆனாலும் அச்சிற்பங்களில் எந்தவிதக் கொடூரமான உணர்வோ , உணர்ச்சி ரீதியான மிகைப்படுத்தலோ துளியும் இருக்கவில்லை. நகரமுடியாத படி பயங்கரமாகத் தனிமைப்படுத்தப்பட்டு நிகழ்த்தப்பெறும் இறுதிக்கட்ட வன்முறைவடிவமாகிய சித்திரவதைகூட - அப்போது என் நினைவில் திரும்பி விட்டிருந்த போஸ்டர்களிலும், பிரதிகளிலும் சந்தேகத்துக்குரிய வகையில், மிகச் சாதாரணமாக, முக்கியத்துவமின்றி, சித்தரிக்கப்பட்ட சித்திரவதைகூட வேறுவிதமாக - அதுவும் என்னுள்ளிருந்த பிம்பங்களை மீண்டுவரச் செய்து யாருக்கும் புரியவியலாத ஏதோ ஒரு ரகசிய இன்பத்தைத் தருவிப்பதாக இருந்தது. சிற்பியின் அழைப்பின் பேரில் அப்பிரதியை எழுதினால் எப்படித் தான் எழுதுவது என்று என்னையே கேட்டுக்கொண்டு, "உங்கள் விருப்பத்தின் படி அந்த பிரதியை நான் எழுதினால் இச்சிற்பங்களைப்போலவே துண்டங் களாக அது அமையும்'' என்று அவரிடம் கூறினேன். சிதைவாக்கப்பட்ட மொழியை விடுத்து தீர்க்கமாகவும் திட்டவட்டமாகவும் எழுதுகிற சௌகரி யத்தை மிக எளிதாக நான் எய்திவிட முடியும். என்றாலும் அத்தகைய நேர்க்கோட்டு மொழியில் மாட்டிக் கொள்ளவே போவதில்லை என்பதையும் அவரிடம் கூறிவிட்டேன். 

"எழுதுவது உன்னைப் பொறுத்தது, நோமி!'' என்ற சிற்ப தொடர்ந்து சொன்னார் : “எழுத்து என்பது லேசான காரியம் அல்ல என்பது எனக்குப் புரிகிறது. ஏனென்றால் தமது நினைவுகளில் எக்கச்சக்க ரத்தத்தை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம். எந்த அளவு ரத்தம் நமது நினைவுகளில் ஓடுகிறது என்கிற விஷயம் அந்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் போதான 

கல்குதிரை / 174 

சில சமயங்களில் - அது நம்மை மூழ்கடித்துவிடாமல் நிறுத்தி வைக்கும் போதான சில தருணங்களில் - நமக்கு ஏற்படும் குற்ற உணர்வின் மூலம் நமக்குத் தெரிகிறது." 

''நீங்கள் சரியான நபரிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்'' என்று அவரிடம் கூறிவிட்டுத் தொடர்ந்தேன். '. இந்தக் கந்தரிக்கட்பட்ட செய்தியைப் பாருங்கள். இதில் கையொப்பமிட்டிருக்கும் பெண்ணை எனக்குத் தெரியும்' இவளைப் பற்றிய இதர விவரங்களை நண்பர்களிடமிருந்து தெரிந்து கொண்டேன், முன்று வருடங்களுக்கு முன்பு அவளுக்கு நடந்த நிகழ்ச்சி அது என்றாலும் சென்ற இரவுகூட யாருக்கோ நடந்திருக்கக்கூடிய நிகழ்ச்சிதான் அது. ஏன், இதே சமயத்தில் ப்யுனஸ் அயர்ஸ் அல்லது மான்ட்விடியோ நகரத்தில் இதே நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கக்கூடும்... உங்கள் வீட்டுக்குக் கிளம்பி வருவதற்கு சற்று முன்பு நண்பரிடமிருந்து வந்த கடிதத்தைப் பார்த்தேன். இந்தக் கத்தரிக்கப்பட்ட செய்தியை அனுப்பியிருக்கிறார். அடுத்த கப் காப்பியை நான் குடித்து முடிக்குமுன் நீங்கள் இதைப் படித்து விடலாம்." 

அவர் பின்வருமாறு படிக்கத் துவங்கினார் : 

"மெக்சிகோ நாட்டில் கொலோனியா குடேமெக் மாகாணத்தின் பத்தாம் மாவட்டத்தில் அடோயக் எண் 26 உள்ள வீட்டில் வசிக்கும் - கீழே கையொப்பமிட்டிருக்கும் - லாரா பியட்ரிஸ் போனபார்ட்டெ ப்ருச்ஸ்டின் ஆகிய நான், பின்வரும் பொது வாக்கு மூலத்தை அளிக்க விரும்புகிறேன் : 

1. பெயர் : ஐடா லியனோரா ப்ருச்ஸ்டின் போனபார்ட்டெ. 

பிறப்பு : 1951 மே 21, ப்யுனஸ் அயர்ஸ், அர்ஜன்டினா. 

தொழில் : எழுத்தறிவு இயக்கத்தில் ஆசிரியை. 

பதிவு : 1975 டிசம்பர் 24 அன்று ஐடா என்ற 6 பெண், அர்ஜன்டினா நாட்டின் தலைநகருக்கு அருகேயுள்ள மாண்டே சிங்காலோ என்ற சேரிப் பகுதியில் உள்ள அவளுடைய பணியிடத்தில் வைத்து, ராணு லத்தின் 601-வது பட்டாளப் பிரிவினரால் கடத்தப்பட்டாள். 
அதற்கு முந்திய தினம் அதே இடத்தில் சுமார் நூறுபேர் வரை கொல்லப்பட்ட சண்டை நடந்திருந்தது. கொல்லப்பட்டவர்களில் சேரிவாசிகளும் உண்டு. 

175 | கல்குதிரை 
கடத்தப்பட்ட எனது மகள் ஐடா, 601-வது பட்டாளப் பிரிவினரின் தலைமையகத்துக்கு இட்டுச் செல்லப்பட்டாள். அங்கிருந்த இதர பெண்களைப்போல அவளும் கடுமையாக சித்திர வதை செய்யப்பட்டாள். சித்திரவதையைத் தாண்டியும் உயிரோடு இருந்தவர்கள் அதே கிறிஸ்துமஸ் இரவன்று சுட்டுக் கொல்லப் பட்டார்கள். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் என் மகளும் உண்டு.

சண்டையின்போது கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் என் மகள் உள்பட கடத்தப்பட்ட ஆயுதம்தாங்காத நபர்களையும் அடக்கம் செய்ய ஐந்து நாட்கள் பிடித்தன. தலைமையகத்திலிருந்து தானியங்கி மண் வெட்டிகளின் ஊடாக லானுஸ் காவல் நிலையத் துக்கும் அங்கிருந்து அவெல்லனெடா கல்லறைக்கும் எடுத்துச் செல்லப் பட்ட அவ்வுடல்கள் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டன.'' 

மௌனத்தில் வாசித்துக் கொண்டிருந்த சிற்பியைப் பார்க்காமல் மேஜையில் இன்னுமிருந்த கடைசிச் சிற்பத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அறையிலிருந்த சுவர்க்கடிகாரத்தின் 'டிக்டிக்' சப்தம் துல்லியமாக முதன்முறை எனக்குக் கேட்டது. வாசற்பகுதியிலிருந்து அந்த சப்தம் வருவதாகவும் உணர்ந்தபோது அது மட்டுமே எனக்குக் கேட்டது. தெருவானது மேலும் மேலும் காலியாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். தனியாக நாங்கள் இருவரும் ஏதோ ஒரு வகையில் மாட்டிக் கொண்டிருந்த அந்தக் குகையில், காலத்தை எப்படியேனும் உயிர்ப்பிக்கச் செய்யும் முயற் சியாக, சுவர்க்கடிகாரத்தின் 'டிக்டிக்' சப்தமானது கேட்டுக் கொண்டிருந்தது. மெலிதான அந்த சப்தம், ஓர் இரவுநேர ரயிலைப் போல என்னை வந்தடைந்த அந்த சப்தம், பாரீஸின் ஒரு மூலை ஃப்ளாட்டிலும் ப்யுனஸ் அயர்ஸின் மிகமோசமான சேரி ஒன்றிலும் உறைந்து போய்விட்ட அந்தக் கணத்தை - நாட்காட்டிகளைச் செயலிழக்கச் செய்துவிட்ட அந்த கணத்தை - விவரணைக் காக தேர்ந்த வார்த்தைகள் தீர்ந்துபோய்விட்ட நிலையில் - பயங்கரத்தைக் குறிக்கும் முக்கிய வார்த்தைகள் சோர்ந்தும் அழுக்காகவும் ஆகிவிட்ட அந்த நிலையில் - வைத்து உயிர்ப்பிக்க முயன்று கொண்டிருந்தது. 

சிற்பி இப்போது சத்தமாக வாசித்துக் கொண்டிருந்தார்: 

"சித்திரவதையைத் தாண்டி உயிரோடிருந்தவர்கள் அதே கிறிஸ்துமஸ் இரவன்று சுட்டுக் கொல்லப்பட்டார்கள்'' 

வாசித்துவிட்டுக் கூறினார் : "ஒருவேளை அவர்களுக்கு இனிப்புகளும் பழரசமும் கொடுத்தார்களோ என்னவோ? நாஜிகளின் ஆஸ்விட்ஸ் சித்ரவதை 

கல்குதிரை / 176 

முகாமில் விஷவாயுக் கிடங்குக்கு அனுப்புவதற்கு முன்பு குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய் வழங்கினார்கள் என்பது நினைவிருக்கிறதா?' 

என் முகத்தில் ஏற்பட்ட எதையோ அவர் பார்த்திருக்க வேண்டும். மன்னிப்புக் கேட்பது போன்ற சைகை அவரிடமிருந்து வெளிப்பட்டபோது இன்னொரு சிகரெட்டை நான் தேடிக் கொண்டிருந்தேன். 

"1976 ஜனவரி எட்டாம் தேதி லா ப்ளாட்டா நகரத்து எட்டாம் நீதி மன்றத்தில் என் மகளின் கொலை பற்றிய அதிகாரப் பூர்வமான குறிப்புகள் எனக்குக் கிடைத்தன.பிறகு லானுஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மூன்றுமணி நேர விசாரணைக்குப் பின்பு அவளைப் புதைத்த இடம் பற்றித் தெரிவித்தார்கள். என் மகள் தொடர்பாக அவர்கள் காட்டியதெல்லாம் அவளுடைய உடலிலிருந்து துண்டாடப்பட்ட கைகளை 24 என்று இலக்கமிட்டிருந்த ஒரு கண்ணாடிக் குடுவையில் வைத்திருந்ததைத்தான். அவளுடைய உடலாக எஞ்சியிருந்தவற்றை அவர்களால் என்னிடம் காட்ட முடிய வில்லை. ஏனென்றால் அது ராணுவ ரகசியமாக வைக்கப்பட வேண்டிய விவு:யம். அடுத்தநாள் அவெல்லனெடா போய் 28 என்று இலக்கமிட்டிருந்த கல்லறையைத் தேடினேன். ''எங்களுக்கு அளிக்கப் பட்டவற்றை உடல்களென்று சொல்ல முடியாது. எனவே நீங்கள் அவளுடைய எச்சமிச்சத்தைத்தான் பார்க்க முடியும்" என்று ஏற்கனவே இன்ஸ்பெக்டர் என்னிடம் சொல்லியிருந்தார். அவெல்ல னெடாவின் கடைக் கோடியில் இருபதுக்கு இருபதடி என்ற அளவில் அண்மையில்தான் கெர்த்திப்போடப் பட்ட இடத்தைப் பார்த்தேன். என் மகளின் கல்லறையை எப்படி அடையாளம் காண்பது என்று எனக்குப் புரிந்துவிட்டது. கிட்டத்தட்ட நூறுபேர் ஒருசேரக் கொல்லப்பட்டு அங்கே புதைக்கப் பட்டிருந்தார்கள். அவர்களுள் என் மகள். 

2. இந்தக் கொடுமையான சூழ்நிலையில், விவரிக்க முடியாத கொடூரத்துக்கு உள்ளாக்கப் பட்டதால், ப்யுனஸ் அயர்ஸ் நகரத்தின் ஒன்பதாம் மாவட்டத்தில் லேவல் வீதியில் இலக்கம் 730 என்றுள்ள கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் வசிக்கும் நான், 1976 ஜனவரி மாதம் அர்ஜன்டினிய ராணுவத்தின் மீது கொலை உள்ளிட்ட குற்றச் சாட்டுகளைச் சுமத்தினேன். லா ப்ளாட்டாவின் எட்டாவது சிலில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு பதிவாகியுள்ளது'' கைகளை ஆட்டி வீசிக்கொண்டே சிற்பி என்னிடம் பேசினார்: 

177 / கல்குதிரை 

''நோமி! இதனாலெல்லாம் என்ன பயன்? இந்தச் சிற்பக்குப்பைகளுடன் மாதக் கணக்கில் நான் செலவழித்திருக்கிறேன். நீயோ புத்தகம் புத்தகமாய் எழுதிக்குவிக்கிறாய். ஆனால் இதற்கெல்லாம் அர்த்தம் என்று எதுவும் கிடைப் பதில்லை. இந்தப் பெண்மணி ராணுவத்தின் அத்துப் மீறல்களை, கொடூரங் களைக் கண்டித்துக் குரல் எழுப்புகிறார். கடைசியில் நம்மைப் போன்ற வர்கள் வட்டமான மேஜைகளில் உட்கார்ந்துகொண்டு இது பற்றியெல்லாம் பேசுகிறோம்; வருத்தப்படுகிறோம்; கண்டிக்கிறோம். சிற்சில சமயங்களில் இந்த நிலைமைகள் மாறிவிடக்கூடும் என்று நம்பவும் செய்கிறோம். ஆனால் நம்பிக்கைகள் பொய்க்கும் என்பதை, இரண்டே இரண்டு நிமிடத்தில் படித்து விடக்கூடிய இப்படி ஒரு காகிதம் நம்மை அடைவதிலிருந்து தெரிந்து கொண்டு விடுகிறோம். உண்மை என்பதை இப்படி அறிந்துகொள்ள...'' 

"நானும் தான் இப்படியெல்லாம் நினைக்கிறேன்'' என்று அவரிடம் கூறினேன். அப்படிக் கூறியபோதே ஏன் அப்படிக் கூறினேன் என்று என் மீதே கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 

"இத்தகைய நிலைமைகளை ஏற்றுக்கொண்டுவிடுவோம் என்றால், சாதாரணமாக ஒரு கண்டனத் தந்தி கொடுத்துவிட்டால் என்ன என்று யோசித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்புறம் வருகிற அடுத்த நாள் காலையில் அடுத்த சிற்பத்தைச் செதுக்கும் வேலையில் நீங்கள் ஆழ்ந்து போய் விடுவீர்கள். நான் டைப்ரைட்டர் முன்பு உட்கார்ந்து விடுவேன் என்பதும் உங்களுக்குத்தெரியும். நம்மைப்போன்றவர்கள் மிகச் சிலர் என்பது உண்மையாயிருந்தாலும் ஏகப்பட்ட பேர் இப்படி இருக்கிறார்கள் என்று நம்பத் தோன்றும். மிகவும் பலவீனமாக இப்படி இருக்கிறோம் என்பதே நாம் மௌனமாக இருந்துவிடுவதற்கான அடிப்படையாக இருக்க முடியாது.... பேசியது போதும் என்று நினைக்கிறேன். நீங்கள் வாசித்து முடித்தாகி விட்டது என்றால் நான் கிளம்பலாமா?" 

இல்லை என்று தலையை ஆட்டிவிட்டு காப்பி குடிக்குமாறு எனக்கு சைகை காட்டினார். மீண்டும் வாசிக்க ஆரம்பித்தார். 

"சட்ட ரீதியான நடவடிக்கைகளை நான் எடுத்ததால் பல பின் விளைவுகளைச் சந்திக்க நேரிட்டது. அவை பின்வருமாறு : 

3. பெயர் : ஏட்ரியன் ஸெய்டான் 

வயது : 24) 

பதிவு : 1976 மார்ச் மாதம் ஒரு நாள், என் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்த இந்த அர்ஜன்டினிய இளைஞன், ப்யுனஸ் 

-க. 23 

கல்குதிரை / 178 

அயர்ஸ் நகர வீதி ஒன்றில் காவல்துறையினரால் கொல்லப்பட்டுக் கிடந்தான். இச்செய்தி காவல் துறையினர் மூலம் அவனுடைய அப்பா டாக்டர் ஆபிரஹாம் ஸெய்டானுக்கு எட்டியது. அவனுடைய உடல் அவரிடம் ஒப்படைக்கப் படவில்லை. ஏனெனில் அது ஒரு ராணுவ ரகசியம் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. 

4. பெயர் : டாக்டர் ஸாண்டியாகோ ப்ரூச்ஸ்டின் பிறப்பு : 1918 டிசம்பர் 15 

பதிவு : கொலை செய்யப்பட்ட என் மகளின் அப்பாவாகிய இவரும் அர்ஜன்டின நாட்டவர் தான். மோரன் நகரில் நுண்லேதியல் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர். 1976 ஜுன் 11 அன்று, சாதாரண சிவில் உடை அணிந்திருந்த சில ராணுவத்தினர், லேவல் வீதியில் இலக்கம் 730 கொண்ட கட்டிடத்தில் ஒன்பதாது 'ஃப்ளாட் டான அவருடைய இருப்பிடத்துக்கு வந்தனர். மாரடைப்பு ஏற்பட்டு 'மூன்று மாதங்கள் வரை தான்' என்று மருத்துவர்களால் கெடுவைக் கப்பட்டிருந்த என் கணவர் அப்போது படுத்த படுக்கையாகத்தான் இருந்தார். நர்ஸ் ஒருத்தியின் பராமரிப்பிலிருந்த அவரிடம் என்னைப் பற்றியும் எங்கள் குழந்தைகளைப் பற்றியும் ராணுவத்தினர் சர மாரியாகக் கேள்விகளைத் தொடுத்தனர். 'யூதத் தேவடியாப் பயலே! ராணுவத்தின் மீது கொலைக் குற்றம் சாட்ட என்ன தைரியம் உனக்கு!' என்று ஏசினர். பிறகு படுக்கையிலிருந்து அவரைக் கிளப்பி அடித்துத்கொண்டே ஒரு காரில் அவரை ஏற்றிக்கொண்டு சென்றனர். மருந்துகளைத்தம்முடன் எடுத்துச் செல்வதற்குக் கூட அவர் அனுமதிக் கப்படவில்லை . 

என் கணவர் கைது செய்யப்பட்ட போது, சுமார் முப்பது கார்கள் எங்கள் கட்டிடத்தை முற்றுகையிட்டன என்றும் அவை ராணுவம் மற்றும் காவல்துறைக்குச் சொந்தமானலை என்றும் சாட்சிகள் கூறியுள்ளனர். என் கணவரைப் பற்றி இதுவரை தகவல் ஏதும் இல்லை என்றாலும் துவக்கக்கட்ட சித்திர வதையின் போதே அவர் திடீர் மரணம் அடைந்து விட்டார் என்று அதிகாரப் பூர்லமற்ற வட்டாரங்கள் மூலம் அறியப்பெற்றேன்' 

"நிலைமை இப்படியிருக்க, ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி இங்கே என் புத்தகத்துக்கான காகிதம் எப்படியிருக்க வேண்டும், புகைப்படங் கள் எப்படி அமையவேண்டும், அட்டை எப்படிப்போட வேண்டும் என்று பதிப்பாளரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் பார்த்தாயா?'' என்றார் சிற்பி. 

179 | கல்குதிரை 

''நானும்தான். வயதுக்கு வந்துவிட்ட சிறுமியின் உளவியல் பிரச்னை களைப் பற்றிய ஒரு சிறுகதையை எழுதிக்கொண்டிருக்கிறேன் ஆக, நீங்கள் சொல்வதுபோல ஒருவிதமான சுயசித்திரவதையில் நாமும் நம்மைப் போன்ற வர்களும் ஈடுபட்டுள்ளோம் எனலாம். இப்படி. சுயசித்திரவதைப்பட்டு மாய்ந்து கொள்வதற்கு பதிலாக, நிஜமான சித்திரவதையே போதும் என்றும் நினைக்கலாம் அல்லவா?" 

''உண்மைதான் நோமி! இந்த மாதிரி சித்திரவதைகள் எல்லாம் வேறொரு களத்தில், பிறிதொரு காலத்தில் நடப்பவை என்று எனக்கு ஏற்கனவே தெரியும். இவை நடக்கும்போது நாம் அங்கிருப்பதில்லை; இருக்கவும் போவதில்லை. ஒருவேளை...'' என்று இழுந்தார். 

சிறுமியாக இருந்தபோது படித்த ஒருவிஷயம் எனக்கு நினைவுக்கு அப்போது வந்தது: க்ளோபிஸ் அரசனையும் அவனுடைய குடிமக்களையும் கிறித்துவ மதத்தை ஏற்குமாறு ஞானி ஒருவர் செய்தார். ஏசுநாதரை சிலுவை யில் ஏற்றி அறைகிற காட்சியை ஞானி விவரித்துக்கொண்டிருந்த போது, "ஐயோ! நானும் என் பரிவாரங்களும் இந்த அதிசயத்தைப் பார்க்க அங்கில்லையே" என்று இருக்கையிலிருந்து எம்பிக்குதித்தவாறு தன் ஈட்டியை வீசிக்கொண்டே அங்கலாய்த்தான் க்ளோபிஸ் அரசன். நிறைவேற்றப்பட முடியாத விருப்பம் ஒன்று நிறைவேறிவிட்டால் அவனுக்கு அது ஓர் அதிசயம் அல்லவா! வாசிப்பில் தன்னை மறந்துவிட்ட நிலையில் சிற்பி கொண்ட வீரியமற்ற ஆத்திரமும் இத்தகையதே. 

5. பெயர் : பாட்ரிஷியா வில்லா 

பிறப்பு : 1952 

தொழில்: இன்டர் - பிரஸ் செய்தி நிறுவன நிருபர். 

பதிவு : என் மருமகளின் சகோதரியான பாட்ரிஷியாவும் அவளைத் திருமணம் செய்துகொள்ள இருந்த சக நிருபர் எட்வர்டோ ஸ்வாரஸும் 1976 செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு ப்யுனஸ் அயர்ஸ் நகரத்திலுள்ள காவல்துறைத் தலைமைச் செயலகத்துக்கு இட்டுச்செல்லப்பட்டனர். ஒரு வாரகாலத்திற்குப் பின்பு, கைதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாட்ரிலியாவின் அம்மாவிடம் "இந்தக் கைது என்பதே மிகவும் துரதிருஷ்ட வசமான ஒரு தவறு.'' என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரின் உடல்கள் மட்டும் எங்களுக்கு தரப்படவில்லை. 

கல்குதிரை / 180 

6. பெயர் : ஐரீன் மோனிகா ப்ரூச்ஸ்டின் போனபார்ட்டேடி 
கின்ஸ்ப ர்க் . வயது : 22 தொழில் : கலைஞர்

பதிவு : 1977 மார்ச் 11 அன்று ஐரீனையும் இருபத்தி நான்கு வயதான அவளுடைய கணவரும் கட்டிடத்தொழில் மேலாளருமான மரியோ கின்ஸ்பர்க்கையும் அவர்களுடைய ஃப்ளாட்டிருந்து ராணுவம் - காவல்துறை உள்ளிட்ட கூட்டுரோந்துக்குழுவினர் அழைத்துச் சென்றனர். அவர்களுடைய குழந்தைகள் விக்டோரியாவும் (இரண்டரை வயது) ஹ்யூகோ ராபர்ட்டோவும் (ஒன்றரை வயது) ஃப்ளாட்டின் வாசல்கதவுக்கு அருகில் தனித்து - விடப்பட்டனர்.

"என் மகள் ஐரீன் அவள் கணவருடன் கைது செய்யப்பட்ட உடனேயே மெக்சிகோ நகரத்திலுள்ள அர்ஜன்டினிய தூதரகத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தேன். மரியோவின் அப்பா ப்யுனஸ் அயர்ஸ் நகர நீதிமன்றத்தில் மனுலை அளித்தார். கைது மற்றும் அப்புறம் நடந்த கொடூரமான நிகழ்ச்சி களை விவரித்து ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பு, ஐரோப்பியக் கூட்டு நாடாளுமன்றம், சர்வதேச பொதுமன்னிப்பு சபை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு எழுதினேன். ஐரீனும் மரியோவும் வைக்கப்பட்டுள்ள சிறை எங்கிருக்கிறது என்ற தகவல்கூட எனக்குக் கிட்டவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று இன்னும் உறுதியாக நம்புகிறேன், 

மேலே விவரித்துள்ளபடி என் குடும்பமே ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதால் அர்ஜன்டினாவுக்குத் திரும்ப முடியாத நிலையில் நான் இருக்கிறேன், சட்டரீதியான வழிமுறைகள் என்னைப் பொறுத்தவரை பலனளிக்கவில்லை என்பதால் மனித உரிமைகளைப் பாதுகாக்க உறுதிகொண்டுள்ள அமைப்புக்களையும், நபர்களையும் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இவ்வளவுதான், என் ஐரீனையும் மரியோவையும் மீட்டுத்தாருங்கள்; அவர்களுடைய உயிர் களையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க உங்களால் இயன்ற வழிமுறைகளைக் கைக்கொள்ள முயற்சி செய்யுங்கள். 

(கையொப்பம்) லாரா பீட்ரிஸ் போனபார்ட்டே ப்ருச்ஸ்டின். 1976 அக்டோபர் மாதம் El Pari's பத்திரிகையில் முதலில் வெளிடப் பட்ட இதனை 1978 டிசம்பர் மாத Denuncia பத்திரிகை மறுபிரசுரம் செய்துள்ளது. 


181 | கல்குதிரை 

சிற்பி அந்தக் கத்தரிக்கப்பட்ட செய்தியைத் திருப்பிக்கொடுத்தார். தூக்கத்தைத் தவிர்த்துப் பேசிக்கொண்டிருந்ததால் அயர்ச்சியோடிருந்த நாங்கள் அப்போது மௌனமாக இருத்தோம். தம்முடைய புத்தகத்துக்கான உரையை எழுத நான் ஒப்புக்கொண்டது குறித்து அவர் மகிழ்ச்சி அடைந் திருப்பது எனக்குப் பிடிபட்டது. கடைசிவரை நான் அதற்கு ஒப்புக்கொள் வேனா என்பதுபற்றி அவருக்கு சந்தேகம் இருந்ததும் எனக்குப் பிடிபட்டது. இதற்கெல்லாம் என்னைப் போன்ற பிரபலமான எழுத்தாளர்களுக்கு நேரமிருக்குமோ என்று அவர் நினைத்திருக்கக் கூடும். மேலும் ஓய்வின்றி எழுதிக்கொண்டிருப்பவள் நான்; எனதேயான பிரத்தியேகமான சில பிரச்னை கள் குறித்து எழுதுபவள் நான் என்பதும் எல்லோருக்கும் தெரியும். இதை ஓரளவு சுயநலம் என்றும் கூறலாம். அருகாமையில் டாக்ஸி ஏதும் கிடைக்குமா என்று அவரிடம் கேட்டுவிட்டு ஆளரவமற்ற, குளிர்ந்துபோய்விட்ட, எனக்குப் பிடித்த, பாரீஸ் நகரத்தின் அந்த வீதிக்கு வந்தேன். குளிர்காற்று வீசியவுடன் மேல் கோட்டின் காலரை உயர்த்தி கழுத்தை மறைத்துக் கொண்டேன். அந்த மௌனமான சூழலில் என் குதிகால் பட்டைகளின் 'க்ளிக்' சப்தம் தாளகதியில் தொடர்ந்து கேட்டது. அந்தத் தாளத்தில் களைப்பும் நிறை வேறாத அலைக்கழிக்கும் எண்ணங்களும் திரும்பத் திரும்ப வருகிற ஒரு இசைக் கோவையாக, கவிதையின் ஒரு வரியாக, அமைந்தன. ஆனால் இவற் றினூடே நான் பார்க்க முடிந்ததெல்லாம் அவளுடைய கைகள் மட்டுமே 

அவளுடைய உடலைக் கூறு போட்டு அதை இருபத்தி நான்கு என்ற இலக்க மிட்ட ஒரு பாட்டிலில் போட்ட அந்தக் கைகள் மட்டுமே. திரும்பத் திரும்ப . வந்த அந்தக் குமட்டலிலிருந்து மீள்வதற்காக மூச்சை இழுத்து விட்டேன், கொஞ்சம் கொஞ்சமாக நாளைய வேலையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். யோசித்துக் கொண்டு போகும்போது எப்போது எதிர்ப்பக்க நடைபாதையை அடைந்தேன் என்றே தெரியவில்லை. அந்தத்தெரு சாப்பல் சதுக்கத்துக்கு இட்டுச் சென்றது. அங்கே எனக்கு ஒரு டாக்ஸி கிடைக்கக் கூடும். தெருவின் எந்தப் பக்கத்தில் நடந்து சென்றாலும் சாப்பல் சதுக்கத்துக்குச் சென்று விடலாம். இருந்தபோதிலும் தெருவின் குறுக்கே மீண்டும் மீண்டும் சென்றேன். ஏன் குறுக்கே அப்படி நடந்து சென்றேன் என்றால், அப்படித்தான் நடந்தேன், ஏன் அப்படி நடந்து சென்றேன் என்று என்னைக் கேட்டுக் கொள்வதற்கான சக்தி கூட என்னிடம் இருக்கவில்லை. 

அந்தச் சிறுமி உட்கார்ந்திருந்த கட்டித்தின் நுழைவாசல், பிற கட்டிடங்களின் வாசல்களிடையே கிட்டத்தட்ட மறைந்து விட்டிருந்தது. இருண்ட கட்டிடங்களோ ஒன்றையொன்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத படி, குறுகலாகவும் நெடியதாகவும் அமைந்திருந்தன. அந்த இரவு நேரத்தில் தனியாக அப்படி ஒரு சிறுமியைப் பார்த்ததை விடவும் அவர் 

கல்குதிரை | 182 

வராந்தாவின் விளிம்பில் உட்கார்ந்திருந்த விதம் என்னைப் பாதித்தது. கால்களை இறுகக் கட்டிக்கொண்டு கைகளால் முகத்தை மூடிக்கொண்டு உட் கார்ந்திருந்த அவள் ஒரு வெள்ளைக்கறையாகத் தெரிந்தாள். அந்தக் கறை ஒரு வீட்டு நாயாகவோ வாசலில் மறந்துபோய்விடப்பட்ட குப்பையாகவோ கூட இருக்கலாம். குழப்பத்தில் பொதுவாகப் பார் த்தேன். பலஹீனமான மஞ்சள் விளக்கொளியுடன் லாரி ஒன்று தன்னை இழுத்துக் கொண்டிருந்தது. எதிர்ப்புற நடைபாதையில் கூன் விழுந்த ஒருவன் மண்டையைக் கோட்டின் காலருக்குள் இழுத்துவிட்டுக் கொண்டும் பாக்கெட்டுகளுக்குள் கைவிரல்களை நுழைத்துக்கொண்டும் நடந்துபோய்க் கொண்டிருந்தான். மீண்டும் ஒரு முறை அந்தச் சிறுமியைப் பார்த்தேன். மெலிதான தலைமுடியைக் கொண் டிருந்தாள், ஸ்கர்ட் வெள்ளை நிறம், ஸ்வெட்டர் பிங்க் நிறம். முகத்திலிருந்து கைகளை விடுவித்தவுடன் அவள் கண்களையும் கன்னங்களையும் பார்த்தேன். அரையிருட்டால் அவள் கண்ணீரை மறைக்க முடியவில்லை. வாய்வரையிலும் வழிந்து அது ஒளிர்ந்தது. 

"இங்கே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" 

பெருமூச்சுவிட்ட அந்தச் சிறுமி கண்ணீரையும் சளியையும் விழுங்கிவிட; அவள் கடைவாய் விரிந்து உதடுகள் குவிந்து விக்கலுக்கான அறிகுறி தெரிந்தது, சின்னஞ்சிறிய சிவந்த மூக்கும் வாயின் நடுங்கும் வளைவும் என்னை நோக்கி நிமிர்ந்தன. மீண்டும் அதே அதே கேள்விகளைக் கேட்டேன். என்றாலும் அவனருகே குனிந்து மிக நெருக்கத்தில் நான் அப்போது கேட்டதுதான் என்ன என்று யாரால் சொல்ல முடியும். 

"அம்மா; என் அம்மா!'' விசும்பலுக்கிடையில் அவள் கூறினாள். "அம்மாவை அப்பா ...'' 

மேலும் தொடர்ந்து அவள் பேசக்கூடும் என்றாலும் அவள் கரங்கள் நீண்டு என்னைத் தழுலிக்குகொள்வதை உணர்ந்துகொண்டேன். முகத்தை என் கழுத்தில் வைத்து அழுதாள். முகர்ந்ததில் அழுக்காக அவள் இருந்தாள் என்று தெரிந்தது. முகர்ந்ததில் உள்ளாடைகள் நனைந்திருந்தது தெரிந்தது. அவளைத் தூக்கிக்கொண்டு எழுந்திருக்க நான் முற்பட்டபோது கட்டிடத்தின் நுழைவாசல் இருட்டை நோக்கிப் பின் வாங்கினாள். எதையோ விட்டு நடந்து சென்ற அவளைப் பின்தொடந்தேன். கல்லால் ஆன நிலை ஒன்றைத் தாண்டிய பின்பு அரையிருட்டில் தோட்டத்தைப் போன்ற ஒன்று துவங்கியது. திறந்த வெளியை அடைந்த பின்பு அது பூந்தோட்டமல்ல என்பதும் கம்பிகளால் வேலி அமைத்து சுற்றிவளைத்துப் பின்னப்பட்ட காய் சறித்தோட்டம் என்பதும் தெரிந்தது. பசை தருகிற ஒல்லியான மரங்களையும் 

183 | கல்குதிரை 

பரவும் கொடிகளைத் தாங்கும் கம்பங்களையும் பறவைகளை விரட்ட வைக்கப் பட்டிருக்கும் கந்தல்களையும் பார்க்க முடிந்தது. இவற்றுக்கு நடுவில் தகரக்கொட்டகையான தாழ்வான ஒரு வீடு இருந்தது. பச்சைநிற ஒளி ஜன்னலில் தெரிந்தது. ஆனால் சுற்றியிருந்த கட்டிடத்தின் ஜன்னல்களில் துளிக்கூட வெளிச்சமில்லை. கட்டிடமோ ஐந்துமாடிகள் வரை உயர்ந்துபோய் மேகமூட்டம் நிறைந்த தாழ்வான வானத்துடன் கட்டிடத்தின் கருஞ்சுவர்கள் கலந்துகொண்டுவிட்டன. 

காய்கறித்தோட்டத்துக்கு நடுவிலுள்ள அந்தக் கொட்டகைக்கு இட்டுச் செல்லும் பாதை வழியே நேராக சிறுமி சென்றாள். பின்னால் நான் வருகிறேனா என்பதை ஊர் ஜிதப்படுத்திக்கொண்டு அவள் கொட்டகைக்குள் சென்றாள். தான் கண்ட கெட்ட கனவு ஒன்றை மறப்பதற்காகத்தான் அவள் கொஞ்சநேரம் வெளியே வந்துவிட்டுத் திரும்பிப்போய் படுக்கையில் விழப் போகிறாள் என்று அந்த இடத்திலேயே அரைகுறையாய்த் திரும்பிக் கொண்டு எனக்குள் சொல்லிக்கொண்டிருந்திருக்க வேண்டும். இந்த அகால வேளையில் அந்நியமான ஒரு கொட்டகைக்குள் போவது எவ்வளவு அபாயகர மானது, எவ்வளவு அபத்தமானது என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் அறிவு எனக்குத் தந்திருக்கக்கூடிய அத்தனை காரணங்களையும் எனக்குள் அப்போது விவாதித்துக்கொண்டிருந்திருக்கவேண்டும். அதை யெல்லாம் அப்போது செய்யாத எனக்கு இப்போதுதானே, எல்லாம் புரிகிறது! அரைகுறையாகத் திறந்திருந்த அந்தக் கதவினூடே நுழைந்து அங்கே பழைய மரச்சாமான்களுக்கும் தோட்டவேலைக்கான உபகரணங்களுக்கும் இடையே சிறுமி எனக்காகக் காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது ஒருவேளை இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் நிஜமாகவே நான் யோசித்திருக்கக்கூடும். கதவினூடே தெரிந்த ஒளியைக் காட்டிக்கொண்டே சிறுமியானவள் துள்ளி யெழுந்து போய் கதவைச் சப்தமில்லாமல் திறந்தாள். கதவைத்திறந்த மஞ்சள் ஒளிவெள்ளத்தில் முழுமையாகிக்கொண்டிருந்த அவள் முகத்தருகே ஏதோ எரியும் நாற்றத்தை உணர்ந்தேன். வாயடைத்துப்போன ஒருவித அலறலைத் திரும்பத்திரும்பக் கேட்க முடிந்தது. இடையிடையே நின்றுபோன அந்த அலறல் தொடர்ந்தும் கேட்டது. கதவை என் கை தள்ளித் திறந்ததும் அந்தக் கேவலமான அறைக்குள் நுழைந்தேன் - உடைந்த முக்காலிகளும் பழைய செய்தித்தாள்கள் நிறைந்துவிட்ட மேஜையும் அவற்றைத்தாண்டி இரும்புக்கட்டி லும் அதில் வாயில் அழுக்குத்துண்டு திணிக்கப்பட்டு கட்டிலுடன் சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் கிடந்த நிர்வாண உடலும் இருந்த அறை.ஒரு பெஞ்ச்சில் முதுகைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த சிறுமியின் அப்பா, சிறுமியின் அம்மாவை என்னவெல்லாமோ செய்து கொண்டிருந்தான்! தனக்கேயான அவகாசத்தை எடுத்துக்கொண்டு வாய்வரை கொண்டு சென்று இழுத்துப் 

கல்குதிரை | 18-1 

புகையை மூக்கு வழியாக மிகமெதுவாக விடும்போது சிகரெட்டின் நெருப்பு நுனியானது இறங்கி சிறுமியின் அம்மாவின் மார்பகத்தைத் தொட்டுவிட்டு, கண்களைத் தவிர முகமெங்கும் வாயிலும் இறுக்கிக்கட்டப்பட்டுள்ள துணியைத் தாண்டிய அவளுடைய அலறல் ஓய்ந்துபோகும் வரையில், அங்கேயே நின்றது. இந்த நிகழ்வின் ஒருபகுதியாக நாம் இருந்துவிட்டதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே - இந்த நிகழ்வைப் புரிந்து கொள்வதற்கு முன்பே - சிறுமியின் அப்பாவுக்கு சிகரெட்டை அங்கிருந்து மீட்டுக்கொண்டு, தனது வாயருகே கொண்டுவந்து, பற்றவைக்கப்பட்ட நுனிக்கு மீண்டும் உயிர் கொடுத்து, அருமையான பிரெஞ்சுப் புகையிலையை உள்ளிழுத்துச் சுவைத்துக் கொள்வதற் கான எக்கச்சக்க நேரம் இருந்தது. வயிற்றுப்பகுதியிலிருந்து கழுத்து வரையி லும் தொடைகளிலியிருந்தும் குறியிலிருந்தும் மார்பகங்கள் வரையிலும் - அது வரை தொடப்படாமலிருந்து இப்போது நெருப்பு நுனி திரும்பச்சென்று கவனமாகத் தொட்டுச் சுவைத்துக் கொண்டிருந்த மார்பகத்தின் புதிய பிரதேசம் வரையிலும் - பார்த்துக்கொள்ள எனக்கும் அவகாசம் இருந்தது. வலியால் துடித்து, துடிப்பதால் கட்டிலைக்கிறீச்சிட வைக்கும் உடலின் அந்த ஆதிகால நடுக்கமும் அலறலும் அப்போது என்மூலம் நடந்துவிட்ட செயல் களுடன் இரண்டறக் கலத்துவிட்டன. என்னால் தேர்வு செய்யப்படாத - எனக்கே விளக்கப்பட்டுக்கொள்ள முடியாத - செயல்கள் அவை. அவனுடைய முதுகுக்கும் எனக்குமிடையே கிடந்த முக்காலி மேலே கிளம்பி அந்த அப்பாவின் மண்டையில் செங்குத்தாக விழுந்ததை நான் பார்த்தேன். அவனுடைய உடலும் அந்த முக்காலியும் ஒரே கணத்தில் தரையை அடைந்து விழுந்தன. அத்துடன் சேர்ந்து நானும் விழாமலிருக்க கொஞ்சம் பின்னால் துள்ளிக் குதிக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால் முக்காலியைத் தூக்கி அவனை அடிக்கும் செயலியக்கத்தில் என் முழுசக்தியையும் பிரயோகிப்பது தேவையாக இருந்தது. அந்த சக்தியானது என்னை அனாதையாக்கிவிட்டு, பதற்றமிக்க ஒரு முட்டாளாக்கிவிட்டுப் போய்விட்டது. வெளியிலிருந்து தான் இனி எந்த ஒரு சக்தியையும் நான் பெறமுடியும் என்றிருந்த நிலையில், அரை குறையாகத் திறந்திருந்த கதவின் வழியாக நோக்கினால் அந்தச் சிறுமியைக் காணவில்லை என்று தெரிந்துகொள்ள முடிந்தது. பிழிந்துபோடப்பட்ட கந்தலாக, குழப்பமான அறையின் பரப்பாக அந்த மனிதன் விழுந்து கிடந்தான். | 

அதற்கு அப்புறம் அங்கே நடந்தவற்றை சினிமாவிலோ நாவலிலோதான் ஒருவேளை நான் பார்த்திருக்க முடியும். அந்த இடத்தில் நான் இருந்ததற்கும் இல்லாமல் ஒருவேளை போயிருந்தால் அதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை என்ற அளவில் நான் செயல்பட்டுக்கொண்டிருந்தேன். அந்தக் குறைந்தபட்ச அவகாசத்தில் அதிவேகமாக இயங்கினேன். அந்தக் கணத்தில் - காலத்தின் 

185 | கல்குதிரை அந்த மிகச் சிறிய துளியில் தான் அது நடந்துவிட்டதா என்ன?- மேஜையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து அவனுடைய கட்டுக்களை அறுத்து திணிக்கப்பட்ட துணியை முகத்திலிருந்து எடுத்து மௌனமாக அவளை எழுப்ப வைத்து விட்டேன். மௌனமாகத்தான் செயல்பட்டாக வேண்டும். ஏனென்றால் கீழே கிடந்த உடல் நினைவுதப்பிப்போய் முடங்கிக்கொண்டிருந்தாலும் அந்த முடக்கம் நிரந்தரமானதல்ல. வார்த்தைகளின்றி என்னை அப்படிப் பார்த்த அவள் அந்த உடலின் கைகளைப் பிடித்துக்கொள்ள நான் அதன் கால்களைப் பிடித்துக்கொள்ள இரண்டுபேராகத் தூக்கி அதே கட்டிலில் கிடத்தி அதே கட்டுக்களை முடிச்சுப் போட்டு அதே அழுக்குத் துண்டால் அவன் வாயை அடைத்தபோது அந்தமௌனத்தில் ஒலியின் கேள்-எல்லையைத்தாண்டி ஏதோ அதிர்ந்து ஒடுங்கியதாக உணர்ந்தேன். அப்புறம் என்ன நடந்ததோ அது எனக்குத் தெரியாது. அந்தப் பெண் இன்னும் நிர்வாணமாகத்தான் இருந்தாள். அவள் கைகள் அவனுடைய உடைகளைக் கிழித்து காற்சட் டையைக் கழற்றி, கணுக்கால்களோடு அதைச் சுருட்டிவிடுகிறது. அவள் விரிந்த கண்கள் என் பார்வையில் பட்டுத்தெறிக்க, நான்கு கைகள் அவனுடைய கோட், சட்டை மற்றும் இதர உள்ளாடைகளைக் கிழித்துக் கொண்டிருந்தன. இப்போது இவற்றையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவந்து எழுத வேண்டி யிருப்பதால், எனது சபிக்கப்பட்ட இந்த நிலையும் கறாரான நினைவு சக்தியும் விவரிக்கப்பட முடியாமல் வாழப்பட்ட இதேபோன்ற இன்னொரு நினைலை என்னிடத்தே கொண்டுவந்து சேர்த்தன. ஜாக்லண்டனின் கதை யொன்றில் வடதுருவத்தில் மாட்டிக்கொண்ட ஒருவன் சுத்தமான சாவை எதிர் நின்று போராடிக் கொண்டிருக்க, கூட வந்த ஒருவனை இன்னும் பிரக்ஞை கொண்ட ஜந்துவாக வைத்திருக்க நடத்தப்படும் சித்திரவதையை அவன் பார்த்துப் பொறுத்துக்கொள்ள நேரிடுகிறது. கூட வந்தவனின் வாழ்க்கையை இன்னும் கொஞ்ச நேரம் நீட்டுவதற்காக ஆதிவாசிப் பெண்கள் நடத்தும் சித்திரவதையில் அவன் அதிர்ந்து போய் அலறிக்கொண்டிருப்பது நினைவுக்கு வருகிறது. அவர்கள் ஒவ்வொரு முறையும் புதுப்புது கலா பூர்வமான வழிமுறைகளைக் கையாண்டு அவனைக் கொல்லாமல் கொல் வதைக் கொன்றும் கொல்லாமல் இருப்பதை ஜாக்லண்டன் விவரிக்க முடியாமல் - ஆனால் இங்கே நான் செய்த அக்காரியத்தைப் போல - பார்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. நான் எப்படிப்போய் இதில் மாட்டிக் கொண்டேன், இதையெல்லாம் செய்வதற்கு எனக்கென்ன உரிமை இருக் கிறது என்று யோசிப்பதில் அர்த்தமில்லை. ஜாக்லண்டன் கற்பனையில் கண்ட ஒரு விஷயத்தை, அவன் கைகள் எழுத முடியாமல் போன அந்த ஒன்றை, தீர்மானமாகப் பார்த்துவிட்டிருந்த இந்தக் கண்களின் முன்பு நடந்த அந்த விஷயத்தில் நான் போய் எப்படி மாட்டிக் கொண்டேன் என்று யோசிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அறைக்குள் நான் நுழைந்தபின்பு அந்தச் சிறுமி 

-க. 24 

கல்குதிரை | 186 

அங்கில்லை என்பதையும் இப்போது அவளுடைய அம்மாதான் அப்பாவை என்னவெல்லாமோ செய்து கொண்டிருக்கிறாள். என்பதையும் தெரிந்து கொண்டிருந்த இந்த நானுக்கு வந்த சந்தேகம், அது அந்தச் சிறுமியின் அம்மாதானா, நடந்ததெல்லாம் மீண்டும் அந்த இரவுப் பொழுதின் சூறா வளியா, கத்தரிக்கப்பட்ட செய்தியிலிருந்து வரும் பிம்பத் துண்டுகளா, அவள் உடலிலிருந்து துண்டாடப்பட்டு இருபத்தி நான்கு என்ற இலக்கமிடப்பட்ட கண்ணாடிக் குடுவையில் அடைக்கப்பட்ட கைகளா, சித்திரவதையின் துவக்கத் திலேயே அவர் இறந்து போய்விட்டதை அதிகாரப் பூர்வமற்ற வட்டாரங் சளிலிருந்து நாங்கள் கண்டுபிடித்துத் தெரிந்து கொண்டதா, அவன் முகத்தில் திணிக்கப்பட்டிருந்த அழுக்குத் துண்டு மற்றும் அங்கிருந்த எரியும் சிகரெட் டுச்கள் போன்றவையா, தனித்து விடப்பட்ட இரண்டரை வயது விக்டோ ரியாவும் ஒன்றரை வயது ஹ்யூகோ ராபர்ட்டோவுமா? அது எல்வளவு நேரம் தொடர்ந்தது என்று எனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? சரி என்பதன் பக்கத்திலேயே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் நான், அத்தகைய காரியத்தைச் செய்வதற்கு எதிரான நிலையில் இருப்பதாக நினைத்துக் கொன் டிருக்கும் நான், எப்படி அதைச் செய்திருக்க முடியும்? துண்டாடப்பட்ட கைகளையும் கூட்டு சவக்கிடங்குகளையும் எதிர்ப்பதாக இருக்கும் இந்த நான் எப்படி எதிர்ப்பக்கம் போயிருக்க முடியும்? கிறிஸ்துமஸ் இரவன்று சித்திர வதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட பெண்களின் பக்கத்திலிருந்து எப்படி எதிர்ப்பக்கம் இந்த நான் போயிருக்க முடியும்? திரும்பி, அப்புறமாக தோட்டத்தைக் கடந்து, கடக்கும்போது கம்பியில் மோதி முட்டியைச் சிராய்த்துக் கொண்டு, உறைந்து போய்விட்ட ஆளரவமற்ற அந்த வீதியை அடைந்து, நடந்து சாப்பல் சதுக்கத்தில் உடனே பிடித்துவிட்ட அந்த டாக்ஸி, என்னை வோட்காமேல் வோட்காவுச்கும் அப்புறமாகத் தூக்கத்துக்கும் இட்டுச் சென்றுவிட்டது. 

தூக்கத்திலிருந்து எழுந்து பார்த்தபோது உச்சிவேளை, என்படுக்கையில் ஆடைகளைக் கூடக் கழற்றாமல் தூங்கிவிட்டிருந்த என் முட்டியிலிருந்து வழிந்த ரத்தமும் பாட்டிலின் கழுத்திலிருந்து நேராகத் தொண்டைக்குள் வோட்கா சென்று விடுவதால் ஏற்படுகிற தலைவலியும் பெரிதாகத் தெரிந்தன. பகலில் உட்கார்ந்து எழுதிய எனக்கு கவனம் சிதறாமல் அந்த அளவுக்கு உட்கார்ந்து எழுத முடிந்தது நடந்தே தீரப்போகும் பயங்கரமான ஒரு விஷயம் என்று புரிந்துவிட்டது. மாலை கவிழும் போது தொலை பேசியில் சிற்பியிடம் எனக்கு நடந்தவற்றை விவரிந்தேன். ஒரே மூச்சில் வார்த்தைகளைத் தொலை பேசியில் நான் சொட்டி விட்டதை மதித்தார் என்றாலும் சில சமயங்களில் அவர் இருமிக்கொண்டதையும் இடையிடையில் கேள்விகேட்க முயன்ற தையும் கேட்க முடிந்தது. 

187 | கல்குதிரை 

'ஆக, நீங்கள் விரும்பியதைச் செய்து முடிக்க எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை பார்த்தீர்களா?'' 

''எனக்குப் புரியவில்லை. இப்போது நீங்கள் சொல்வதுதான் பிரதியா?'' 

''ஆமாம். அதைத்தான் இப்போது உங்களுக்குப் படித்துக் காட்டினேன். அடித்தல் திருத்தல் இல்லாமல் ஒழுங்காக எழுதியதும் உங்களுக்கு அனுப்பி விடுகிறேன். இன்னும் அது இங்கேயே இருப்பதை நான் விரும்பவில்லை.'' 

மாத்திரைகள், மதுபானங்கள் மற்றும் இசைத்தட்டுகள் இன்னும் எவை யெவையெல்லாம் வெளியுலகத்துடனான தொடர்புக்குத் தடையாக இருக்குமோ அவற்றுடன் இரண்டு மூன்று நாட்கள் கழித்துவிட்டு, ஃபிரிட்ஜ் காலியாகிப் போனதையும் என் பூளை காலைச் சுற்றி வந்து கத்தியதையும் புரிந்துகொண்டு ஒருவாறாக சாப்பிடுவதற்கு எதையாவது வாங்கலாம் என்று வெளியில் வந்தேன். கதவிலிருந்த தபால் பெட்டியில் ஒரு கடிதம். உறையில் சிற்பியின் கொட்டை கொட்டையான கையெழுத்து. உள்ளே ஒரு தாளும் ஒரு கத்தரிக்கப்பட்ட செய்தியும் இருந்தன. கடைக்குப் போகும் வழியில் வாசித்துக் கொண்டுபோன எனக்கு உறையைக் கிழித்தபோது அந்தக் கத்தரிக்கப்பட்ட செய்தியின் ஒரு பகுதியையும் சேர்த்துக் கிழித்துவிட்டோம் என்று பிறகுதான் தெரிந்தது. தமது புத்தகத்துக்கு நான் எழுதுகிற அந்த பிரதிக்காக அவர் எனக்கு நன்றி தெரிவித்திருந்தார்.என்னுடைய எழுத்துபோலவேதோற்றமளித்த போதிலும் அது வழக்கத்திலிருந்து மாறுபட்டிருந்தது என்பதையும் அத்தகைய புத்தகங்களில் காணப்படும் பிரதிகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக அமைந் திருப்பதையும் குறிப்பிட்டு, எனக்குப் பிரச்னையாக அமைந்த அளவுக்கு அந்தப் பிரதி தமக்கு ஒரு பிரச்சனையாக இல்லை என்பதையும் விளக்கியிருந் தார். பின்குறிப்பாக பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. 

'உன்னிலிருந்து அருமையான ஒரு நடிகை காணாமல் போயிருந்தா லும் பிரமாதமான எழுத்தாளர் ஒருவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்பது உண்மை . நிஜமாகவே உனக்கு நடந்துவிட்ட ஒரு விஷயத் தைத்தான் அன்று பகலில் தொலைபேசியில் என்னிடம் விவரித்தாய் என்று நினைத்திருந்தேன். ஆனால் எதேச்சையாக ப்ரான்ஸ் - 7வ 7 செய்தித்தாளைப் படித்தேன். அதிலிருந்து உன் சொந்த அனுபவத் தின் மூலத்தைக் கத்தரித்து இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். எதார்த்தம்தான் - அது குற்றம் தொடர்பான சாதாரணச் செய்தி யாச இருந்தாலும் சரி - எழுதுவதற்கான தூண்டுகோலாக அமைகிறது என்றாலும் ஆத்மார்த்தமான எழுத்தானது அதே விஷயத்தை வேறொரு பரிமாணத்துக்கு எடுத்துச்செல்கிறது, அதே விஷயத்துக்கு வேறொரு மதிப்பீட்டை வழங்குகிறது என்று எழுத்தாளர்கள் வாதிட 

கல்குதிரை / 188 

முடியும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இருந்தாலும் நோமி! அன்று தொலைபேசியில் உன் பிரதியை வாசிக்க என்னைத் தயார் செய்வதாக நினைத்துக்கொண்டு நாடகீயத்தனமாக நீ பேசியிருக் கிறாய். அப்படி என்னைத்தயார் செய்யவேண்டிய தேவை ஏதுமில்லை. ஏனென்றால் அப்படிப்பட்ட தேவையைக் கடந்துவிட்ட அளவில் நமது நட்பானது அமைந்திருக்கிறது அல்லவா! சரி. இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடுவோம். உன் ஒத்துழைப்பை மிகவும் மதிக்கிறேன். ஏன் எனக்கு அது இத்தனை மகிழ்ச்சியை அளிக்கிறது. என்றால்...'' 

அந்தக் கத்தரிக்கப்பட்ட செய்தியைப் பார்த்தபோது அதன் ஒரு பகுதியை உறையோடு சேர்த்துக் கிழித்துவிட்டது எனக்குப் புரிந்துவிட்டது. அடாடா, அந்த உறையை எங்கோ போட்டுலிட்டேனே! ஃப்ரான்ஸ் - ஸுவாவின் வழக்கமான நடையிலேயே அந்தச்செய்தியானது சுவாரசியமாக அமைந் திருந்தது: மார்லெய்ல்ஸ் புறநகரில் பயங்கரம்! குழாய் ரிப்பேர் செய்துகொண் டிருந்து தொழிலை மாற்றிக்கொண்ட ஒருவர் கட்டிலோடு சேர்த்துக்கட்டப் பட்டு, துணி வாயில் திணிக்கப்பட்டு, பிணமாக... இத்யாதி, இத்யாதி. அக்கம்பக்கத்தவர்க்கு அங்கே நடந்த கொடூரமான நிகழ்ச்சிகள் அரசல் புரசலாகத் தெரிந்தவைதான்; சிறுமியைக் கொஞ்ச நாளாகவே காணோம்; எங்கேயாவது அனாதரவாக விடப்பட்டிருக்கலாம்; போலீஸ் கள்ளக்காதலி யைத்தேடுகிறது. இது பயங்கரமான கொலையாச... 

செய்தி இந்த இடத்தில் நின்றுபோய் விடுகிறது. உறையை நக்கி ஒட்டிய போது சிற்பி கொஞ்சம் அதிகமாகவே செய்திருக்கிறார். ஆக, ஜாக்லண்டனும் என் நினைவும் செய்துவிட்ட அதே விளைவைத்தான் சிற்பியும் ஏற்படுத் தியுள்ளார். ஆனால் அந்த வீட்டின் புகைப்படத்தை அவர் கிழித்துவிட்டிருக்க வில்லை. காய்கறித்தோட்டத்துக்கு நடுவில் அந்தக் கொட்டகை, கம்பிவேலி, தகரக்கூரை, சுற்றியுள்ள உயரமான சுவர்களும் அவற்றின் குருட்டுக்கண்களும், அரசல்புரசலாகப் பேசிக்கொள்கிற நபர்கள், சிறுமி அனாதரவாக விடப்பட்ட தற்கான அத்தாட்சிபற்றிய பேச்சு, அந்தச் செய்தியின் ஒவ்வொரு துளியும் என் முகத்தில் அறைந்தது. 

ரிக்வே வீதிக்கு உடனே ஒரு டாக்ஸியில் சென்று இறங்கினேன். அது முட்டாள் தனம் என்பது தெரிந்தும் முட்டாள் தனமான காரியங்கள் அப்படித் தான் செய்யப்படுகின்றன என்பதாலும் அப்படிப்போய் இறங்கினேன். என் நினைவிலிருந்த எதுவும் அங்கே பகலில் தெரியவில்லை. ஒவ்வொரு வீட்டையும் பார்த்துக்கொண்டு சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் சென்றதாக நினைத்த அதே இடத்தில் மீண்டும் குறுக்காகச் சென்றேன். அந்த இரவு பார்த்த வாசலைப்போன்ற ஒன்றை என்னால் அடையாளங்காண முடியவில்லை. பகல் 

189 | கல்குதிரை 


ஒளியானது பொருட்களின் மீது அடங்காத முகமூடியாகக் கவிழ்ந்துகொண்டு விட்டிருந்தது. தோட்டங்கள் அந்தத் தோட்டமாக இல்லை. கட்டிடங்களுக்குள் ளும் அது இல்லை. ஆனால் ஏதோ ஒரு வாசலில் கிழிந்த பொம்மையுடன் விளை யாடிக்கொண்டிருக்கும் சிறுமியை நான் கண்டேன். அவளுடன் பேசப்போக அவள் உள்ளே ஓடினாள். கூப்பிடுவதற்குள் வேலைக்கார மாது ஒருத்தி வெளியே வந்தாள். வந்தவள் நான் ஒரு சமூகசேவகிதானா என்று தெரிந்து கொள்ள விரும்பினாள். தெருவில் அனாதரவாக விடப்பட்டுக் கண்டெடுக்கப் பட்ட அந்தச் சிறுமியைக் கூட்டிப்போவதற்கு ஒரு சமூகசேவகி வரக்கூடும் என்று சாலையில் வந்த ஒருவன் அவனிடம் சொல்லியிருந்தான். அந்தச் சிறுமியின் பெயரை, எனக்கு ஏற்கனவே, தெரிந்திருந்த அந்தப்பெயரை, சேட்டு விட்டு அப்புறமாக அருகில் காப்பி சாப்பிடும்போது சிற்பியின் கடித்தத்தின் பின்பு புறம் அவருக்கான பிரதியின் விட்டுப்போன பகுதியை எழுதினேன். எழுதிவிட்டு அவருடைய வீட்டின் கதவுக்கடியில் அந்தக் கடிதத்தை உள்ளே தள்ளிவிட்டேன். அவருடைய சிற்பங்களின் புகைப்படங் களுடன் பிரசுரமாகப்போகிற அந்தப் பிரதி முழுமையாக அமைய வேண்டும் என்றால் அவருக்கு அப்பிரதியின் விட்டுப்போன இறுதிப்பகுதி தெரிந்தாக வேண்டும் அல்லவா!

No comments:

Post a Comment