தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, June 28, 2020

கரிசல்க் காட்டில் ஒரு படைப்பாளி - சாது சாஸ்திரி --- கொல்லிப்பாவை

மன்னிக்கவும் மெய்ப்பு பார்க்க இயலவில்லை

கரிசல்க் காட்டில் ஒரு படைப்பாளி - சாது சாஸ்திரி --- கொல்லிப்பாவை

வேட்டி - கி. ராஜநாராயணன் (கடிதங்கள் - கதைகள் - கட்டுரைகள்) அன்னம் - 4 புதுத்தெரு - சிவகங்கை - 623560, விலை - ரூபாய் ஆறு. 



கதவு' என்ற கதை மூலம் தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமானவர் கி. ராஜ நாராயணன். 'காகி - கன்னியாகுமரி பெருவழிப்பாதையில் கோவில்பட்டியிலிருந்து தெற்கே (திருநெல்வேலி போகிற சாலையில்) ஏழாவது மைலில்' இருக்கும் இடைசெவல் இவர் பிறந்த ஊர். பிறந்த ஊரிலேயே இருந்து வரும் இவர், எழுத்து என்னுடைய தொழில் அல்ல. என் பொழுது போக்கு களில் இதுவும் ஒன்று என் கிருர். அமரர் கு. அழகிரிசாமியும் இவரும் ஆப்த நண்பர் களாக இருந்தவர்கள். தம் சிறுகதைத் தொகுப்புக்கு (கதவு) இவர் தமிழ்நாடு அரசி டமிருந்து பரிசு பெற்றிருக்கிறார். நாடோடிப் பாடல்கள், கதைகள் சேகரிப்பதில் ராஜ நாரா யணன் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரது நாடோடிக் கதைகளின் தொகுதி ஒன்றை New century book house வெளி யிட்டிருக்கிறது. 'கசடதபற', 'ஞா ன ரதம், போன்ற இலக்கியச் சிறு பத்திரிகை களுச்குக் கதைகள் எழுதியுள்ள இவர், குமுதத் திறும் கதைகள் எழுதிப் பிரசுரித் திருக்கிருர். ' 

ஊஞ்சல்' என்ற பெயரில் இவர் நடத்திய கையெழுத்துக் கடிதப்பத் திரிகை இவரது இலக்கிய நண்பர் வட்டங் களின் கவனத்தைக் கவர்ந்தது. முற்போக்கு எழுத்தாளர்கள், ரசிகர்கள் மத்தியில் இவர் சிறப்பான செல்வாக்கு பெற்றிருப்பது பலர் அறிந்த உண்மை . இவரது அடுத்த கதைத் 

தொகுப்பு 'கன்னிமை'. இவர் எழுத்துகளில் டி. கே. சி., சுந்தர ராமசாமி பாதிப்பு ஓரளவு இருப்பதாக எனக்குப் படுகிறது. கொச்சை யான கரிசல்க் காட்டுப் பேச்சு வழக்குச் சொற்களும், பிரயோகங்களும் இவர் எழுத் துக்கு ஒரு தனி. சோபையையும் அமைப் பையும் கொடுத்திருக்கின்றன. 

இங்கு விமர்சிக்க 'எடுத்துக் கொள் ளப்பட்டிருக் 'வேட்டி' தொகுப்பில் ஆசிரிய ரின் பத்து கடிதங்களும், ஒன்பது கதைகளும், நான்கு கட்டுரைகளும் அடங்கியுள்ளன. இந்தப் புத்தகத்தின் 138 பக்கங்களையும் ஒரே இருப்பில் சலிப்பின்றி என்னால் படித்து முடிக்க முடிந்தது. 

கடிதங்களுடன் ஆரம்பமாகும் இப்புத்த கத்தின் பத்து கடிதங்களும், 'வேட்டி' யின் பதிப்பாளருக்கு ஆசிரியரால் எழுதப்பட்ட வை என்று தெரிய வருகிறது. கடிதம் எழுது ததில் நான் எவ்வளவு ஆனந்தம் கொள் கிறேனோ, அதே அளவுக்கு அதை வாசிப் பவர்க்ளும் அடைகிறார்கள்' ( நானும் என் எழுத்தும் பக்கம் - 117) என்று ஆசிரியர் கூறுவது மிகையன்று. இவரது கடிதங்கள் சிலவற்றை (கையெழுத்தில்) முன்பே நான் படித்திருக்கிறேன், சுவாரஸ்யமாகவும், கெட் டிக்காரத்தன்மையாகவும், ஒருவித இலக்கிய அனுபவமாகவும் கி. ரா , வின் கடிதங்கள் அமைந்து விடுகின்றன என்று இலக்கிய நண்பர்கள் சிலர் என்னிடம் கூறியிருக் கிறார்கள். 

'வேட்டி'யில் அச்சாகியிருக்கும் கடிதங் களும் நூலின் முன்னுரை -- முகவுரை என் பதாய் அமையாமல் நூலின் ஒரு பகுதியா கவே இருப்பதால், இக்கடிதங்களிலிருந்து நாம் என்ன பெறுகிறோம் என்பதை வாசகன் பரிசீலனை செய்ய நேர்ந்து விடுகிறது. 

முதல் கடிதத்தில் மனம் சலனமில்லாத போது தான் கவிதைக்குள் நுழையணும் என்ற ஒரு வாக்கியம் தான் வாசகன் சம் மந்தப்பட்டதாக இருக்கிறது. இதை வாசிக் கையில், “மனம் சலன முறுகையில் நான் கவிதைகள் படிப்பேன்” என்று ஒரு இலக்கிய ரசிகர் குறிப்பிட்டது என் நினைவுக்கு 

வருகிறது, மனம் சலனமில்லாத போது தான் நான் கவிதைக்குள் நுழைவேன்' என்று ஆசிரியர் சொல்லியிருந்தால் எந்த வழக்கும் இடமில்லாமற் போயிருக்கும். 

2, 3, 4, 6, 7, 10 - கடிதங்க ளுக்கும்.. இலக்கிய வாசகனுக்கும் எவ்விதத் தொடர் பும் இருக்க நியாயமில்லை. இந்த ஆறு - கடிதங்களிலிருந்தும் சில தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், தகவல்களுக்கா பஞ்சம்? தகவல்களின் செறிவாகவே உலகம் இருக்கிறது. செய்திப் பத்திரிகைகள் நமக் குள் கொடுக்கும் தகவல்கள் கொஞ்சம் அல்லவே! | 

8, 9 கடிதங்களில் நாம் அனுபவிக்கக் கூடிய வாசகங்கள் காணப்படுகின்றன - 

''படுக்கையில் பக்கத்தில் - அம்மாவுச்குப் பக்கத்தில் படுத்திருக்கும் கைக்குழந்தை மாதிரி - உங்கள் காயிதம் (நீளக்கவரில்) கிடைந்தது'' (கடி - 9) 

'' நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன்; ஒதுங்கியவன் பள்ளிக்கூடத் தைப்பார்க்காமல் மழையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்” (கடி - 8) 

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆசிரியர் ஆண்டாள் கோயில் பார்த்த விவரம் சுவையாகவே இருக்கிறது. (கடி - 9) 

ஆனாலும், ஒரு சிறு இலக்கிய வட்டத் துக்குள் கடித இலக்கியப் புகழ் பெற்றிருக்கும் ஆசிரியரிடமிருந்து நமக்கு வாசிக்கக் கிடைத் திருக்கும் பத்து கடிதங்களில் ஏழு நமக்கு அர்த்தப்படாமல் போய்விட்டது பெருத்த ஏமாற்றத்தையே தருகிறது. அக்கறை எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தால் நல்ல கடிதங்களாகத் தேர்ந்து தொகுத்திருக்க முடியும். 

5 - வது கடிதத்தில் புத்தகத்துக்கு முன்னுரை என்று ஏதேனும் எழுதி விமர்சனக்காரனின் வாய்க்கு அவல் அளிக்க முற்படுவது. இட்டஞ் செடிக்குள் தலையைக் கொடுக்கிற காரியம் என்கிறார் ஆசிரியர் . ஆனால் விமர்சனம் என்று எழுதப் புறப்படுகிறவனுக்குப் புத்தகமே படி அவலாயிருக் கையில் முன்னுரைப்பிடி அவல் ஒரு பொருட் டில்லை அல்லவா! 

ஒரே தாண்டலில் ஒரு வாய்க்காலைக் கடப்பது போல் மேற்படி பத்து கடி தங் களையும் தாண்டி ஆசிரியரின் கதைச் சோ லைக்குள் காலடி எடுத்து வைக்கிறோம். 

முதல்கதை, “வேட்டி' 1942- ல் ஒரு தலைமறைவு அரசியல் - வாதிக்குத் தன் குடிசையில் அடைக்கலம் கொடுத்ததற்காகத் தூங்கா நாயக்கர் என் பவரைப் போலீசார் பிடித்து உதைக்கிறார்கள். நாயக்கர் அடிக்கப்படுவதை அப்படி அடித் தார்கள். இப்படி அடித்தார்கள், அப்படி மிதித்தார்கள், இப்படி மிதித்தார்கள் என் றெல்லாம் மிகையாகச் சொல்லி, வாசகனை சலிப்படையச் செய்துவிட்டு, “கையும் காலும் போலீஸுக்கு வலித்ததால் பிழைத்துப்போ என்று நாயக்கரை எச்சரித்து விட்டு விட் டார்கள். எனவே அவர் 'ஆகஸ்டுதியாகி, ஆகாமல் ஒரு நூல் இழையில் தப்பினார் என்று ரசமாக முத்தாய்ப்பு வைக்கிறர் ஆசிரியர், 

“வேட்டி' யைப் பற்றி கருத்து தெரிவிக்குமுன் கதை என்ன என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம், 

தூங்கா நாயக்கர் பரம ஏழை. உடுப்பதற்கு ஒரே ஒரு வேட்டிதான் அவரிடம் உண்டு . அதுவும் புளியம்பழம் பொறுக்கக் குனிகையில் கிழிந்து போய் விடுகிறது. நாயக்கருக்கு "அடி நாளிலிருந்தே தேசீயப் போராட்டம், சுதந்திரம் முதலியவற்றில் கொஞ்சம் கிறுக்கு உண்டு,'' 1942 ஆகஸ்ட் போராட்டத்தின் போது ஒரு தலை மறைவு அரசியல் வாதிக்குத் தன் குடிசையில் அடைக் கலம் தந்ததற்காகப் போலீசாரால் நையப் புடைக்கப் பட்டவர். . 

சுதந்திரதின வெள்ளி விழாவைக் கொண் டாடப்பணவசூல் செய்யும் கிராமத்தின் முக் கியஸ்தர்கள் தூங்கா நாயக்கரிடமும் வருகிறார்கள், . 

நாயக்கர் இன்னது செய்வதென்று தெரியாமல் பரபரப்புடன் எழுந்து நின்று இடது கையால் வேட்டியின் கிழிசலை மறைத் துக் கொள்கிறார். 

இதுதான் கதை 

சுதந்திரம் வந்து 25 வருடங்களாகியும் நாயக்கர் போன்ற ஏழைக்கு - ஆகஸ்டுப் போராட்ட காலத்தில் அடிவாங்கியும் கூட, உடுக்க வேட்டி கிடைக்கவில்லை என்கிறது கதை. அடி வாங்கிய, வாங்காத எல்லா ஏழைகளுக்குமே உடுத்துக்கொள்ள வேட்டி கள் வேண்டும் என்பதே நம் சோஷலிஸ லட்சியம். நம் அரசியல் மேடைகளும், பத்தி சிகைகளும் நிறையவே இது பற்றி நமக்குச் சொல்லி விட்டன. 'வேட்டி ஆசிரியரும் இதையே நமக்கு மீண்டும் சொல்லியிருக்கிறார். 

இதையும் சொல்லி, வேட்டிகளைப் பற்றி நமக்குத் தெரிந்த, தெரியாத பல தகவல் களையும் தருகிறார் ஆசிரியர், பழசாகிப் போன வேட்டியை எப்படி துவைக்க வேண்டும், எப்படித் துவைத்தால் அது கிழியாமல் இருக்கும் என்பதும் நமக்கு கற்றுத் தரப் படுகிறது. மேலும், ராமராஜு நாணப்ப நாயக்கரின் பேரன் ராகவலு முதலாளி நல் லா நாயக்கர் முதலியோர் என்னென்ன மாதிரி வேட்டிகள் வாங்கினார்கள். கட்டிக் கொண்டார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரிய வருகிறது. (ஒரு கதையை எழுதி விட்டு எழுதியதைத் தத்தியாக எண்ணி, அவசியமற்ற விவரங்களை அடித்துவிட்டால், கதை அமைப்பு கச்சிதமாகிவிடும் என்று, எழுதுகிறவர்களும்குச் சொல்லி வைத்த பிரெஞ்சு ஆசிரியரின் நினைவு இங்கு வருகிறது.) 

தூங்கா நாய்க்கர் கிணற்றில் இறங்கி வேட்டியைத் துவைத்து, கமலையின் சதகுப் பாகையில் காயப் போட்டு விட்டுக் குளிக் கிறார். “குளிக்கும் போதே அண்ணாந்து மேலே வேட்டியை ஒரு பார்வை. (காலம் கெட்டுக்கிடக்கிறதல்லவா. எவனும் வேட்டியை ஆத்திக்கொண்டு போய் விட்டால்!) - மெல்ல இடுப்புத் துண்டை அவிழ்த்து (திரும்பவும் மேலே ஒரு பார்வை; இது வேட்டிக்காக அல்ல!) அவிழ்த்த துண்டை நீளவசத்தில் 

சுங்குல் பிடித்து தண்ணீரில் வட்டமாகச் சுற்றுவார் - வேகமாக” 

குளிப்பது ஆண்பிள்ளையா தலால், இதெல் லாம் ஆபாசம் என்று சொல்லிவிட முடியா தல்லவா! 

சுப்பு செட்டியார் என்பவரின் குளியல் பித்து, இவரது மயிர் மழிப்பு வைபவம், எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் இவர் கிராமத்து ஏழைகளிடமிருந்து அழுக்கடைந்த ரூபாய் நோட்டுக்களை சந்தோஷமாசப் பெற் றுக்கொள்ளுதல் முதலான சமாசாரங்கள் இந்தப் பதினொரு பக்கக்கதையில் இரண்ட ரைப் பக்கத்துக்கு மேல் போய் விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். (பிரெஞ்சு ஆசிரியன் மீண்டும் நினைவில் வருகிறான்.) 

சுப்பு செட்டியார் எப்படி மயிர் மழித்துக் கொண்டார் என்பதை ஆசிரியர் கூறுகிறார். 

வாரத்தில் ஒருநாள், 'மதியும் புதனும் மயிர்களை' என்ற முதுமொழிக்கு ஏற்ப 

ங்கள் 'அல்லது புதன் கிழமையில் குடிமகனைக் கூப்பிட்டனுப்பி தலை, மார்பு முதலிய உடம் பில் ரோமம் முளைத்துள்ள சகலபகுதிகளிலும் மழுங்கச் சிரைத்துத் தள்ளி விடுவார்” என்று எழுதி விட்டு, ஆசிரியர் தொடர்ந்து பின் வருமாறு எழுதுகிறார். 

மழுங்க விட்டு கிருர் 

''உடம்பில் எங்காவது ஒரு சிறிய ரோமம் தட்டுப்பட்டாலும் சகித்துக் கொள்ள மாட்டார். கால் கைகளெல்லாம் (கவனிக்க வேண்டும்; கால், கைகள்,) மழித்து சுரைக் காய் மாதிரி சுத்தமாய் இருக்க வேண்டும் அவருக்கு. யாருக்கு? தூங்கா நாயக்கருக் கல்ல; சுப்பு செட்டியார் என்பவருக்கு! (வட மொழியில் சர்வாங்கம் என்று ஒரு வார்த்தை இருக்கிறது. எத்தனையோ வட சொற்களைப் போல் இதுவும் தமிழில் கலந்துவிட்ட சொல். ராஜநாராயணனுக்கும் இது தெரிந்திருக்கலாம்) 

படைப்பில் எதையும் தாராளமாக எழுத லாம் என்பது ஒரு புறமிருக்க, எழுதியதைக் கலாபூர்வமாக நியாயப்படுத்தி விடும் வன்மை படைப்பாளிக்கு இருக்க வேண்டும் என்பதும் 

முக்கியம். 

இந்தக் கதைக்கும் சுப்பு செட்டியாருக் கும் இருக்கிற சம்பந்தம், இவரும் இக்கதை நாயக்கரும் வேட்டி அணிபவர்கள் என்பது மட்டுமே. 

இக்கதையில் வேட்டி பற்றி ஒரு அழ கிய கட்டுரையை ஆசிரியர் நமக்குத் தந்து உதவியிருக்கிறார் என்று சொல்லலாம். 

‘வேட்டி’யை முடித்துவிட்டுத் 'தான்' என்கிற இரண்டாவது கதையைப் படிக்கை யில் ஒரு ஆசுவாசம் கிடைக்கிறது. கதை நன்றாகவே வந்திருக்கிறது. 

உச்சிமலை தன் குடும்பத்தோடு பஸ்ஸுக் காகக் காத்திருக்கிறான். சர்க்கஸ் பார்க்கப் போவதற்காக, பஸ்ஸுக்கு வேறு பலரும் வந்து கூடிவிடுகிறார்கள். "எல்லோரும் சர்க்கஸுக்குத்தான் போறாக, அதான் அம் புட்டுக்கூட்டம் இண்ணைக்கி'' என்று எண்ணு கிருன் உச்சிமலை; ஒரு சாவுச் சடங்குக்குச் செல்ல ஒரு கும்பல் அங்கு வந்து நிற்கிறது. அதில் ஒரு பெண் அம்புட்டு சனமும் துட்டிக்குத்தான் வாராக; பெரிய துட்டி" என்கிறாள். அங்கு வரும் சோலை என்பவன் ஒரு கல்யாணத்தில் கலந்து கொள்ளப்புறப் பட்டிருக்கிறான். அவன், "இது கல்யாண மாசமில்லா; அதான் கூட்டம்'' என்கிறான். 

பஸ் கிடைக்காமல் போகவே கும்பல் ஒரு லாரியைப் பிடித்துக் கொள்கிறது உச்சி மலை லாரியில் பெண்டுபிள்ளை எல்லாத்தை யும் ஏற்றி விட்டு, அவனும் ஏறத்தயாரான சமயத்தில் திடீரென ஒரு கொச்சை வீச்சம் வந்து அவன் மூக்கில் தாக்கிற்று. அந்த வீச்சம் தன்னிலிருந்துதான் வருகிறதோ என்று ஒரு கணம்'" அவன் அதிர்கிறான். 

சர்க்கஸ் கூடாரத்தினுள் “உயர்வகுப்பில் வசதியான இடத்தில் குடும்பத்தோடு', அமர் கிறான் உச்சிமலை. சுற்றஞ்சூழ "நகர நாக ரிகத்தின் கொடுமுடியில் வசிக்கும் குடும்பங் கள்........அலங்கார ஆடை அணிகளுடன்...." “எங்கிருந்தோ ஒரு ரம்மியமான வாசனை வந்து” வியாபிக்கிறது. “பரவசத்தாலும் ஆனந்தத்தாலும் சொக்கிய ' உச்சிமக', " அந்த வாசம் தன்னிலிருந்தே தனது உடம் பிலிருந்து' வருவதாக எண்ணுகிறான். 

இப்படி தன்னை வைத்தே எதையும் கணக்குப் போடுகிற மனித மனப்பாங்கை 

யுடன் சொல்லும் இந்தக்கதையில், வாழைப் பழத்தைத் தின்று கொண்டு புளியமரத்தடியில் “வெளிக்குப் போகும் பெண் குழந்தையைக் கொண்டுவராமல் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. 

எங்கும் ஓர் நிறை” அடுத்த கதை. 

குப்பாசாமி நாயக்கர் ஓர் விவசாயி, (ஆசிரியர் பாஷையில் சம்சாரி) சில்லரைப் பருத்தி வாங்கும் ஒரு கடைக்குப் போயிருக் கும் கடைக்காரர் இன்னும் திரும்பிவரவில்லை. அவருடைய பையன் கல்லாவில் இருக்கிறான், பையனிடம் கொஞ்சம். பேச்சுக் கொடுத்து விட்டு, கடைத்தராசையும், புதிதாக வந்திருக் கும் கிலோகிராம் படிகளையும் பார்த்து சந்தோ ஷப்படுகிறார் நாயக்கர். படிகளை மனசுக்குள் பாராட்டுகிறார். 

( நாப்பது அம்பது வருசத்துக்கு முந்தி யெல்லாம்?* . * துலாக்கோல்திராசு” போன்ற துல்லியக் குறைவான நிறுவைச் சாதனங் களில் எடை போடப்பட்டு பருத்தி விற்பனை யில் தான் ஏமாந்து போனதை நினைத்துப் பார்க்கிறார். : 'அங்கயக் கண்ணி , அங்கயக் கண்ணி' என்பவளின் கடையில் சம்சாரிகள் பருத்தி போட்டு எடையில் ஏமாந்த காலங் 

கள் அவருக்கு நினைவு வருகிறது. 

இப்போது கிலோகிராம் படிகளும், தட் டோட்டமில்லாத புதிய திராசுகளும் எங்கே பார்த்தாலும் வந்து விட்டது'', 

கடைக்காரர் வந்ததும், கொண்டுவந்த பருத்திப் பொதியை அவிழ்த்து தராசுத்தட்டில் நாயக்கர் வைப்பதோடு கதை முடி கிறது. 

கதைப் பாத்திரங்களாகக் குப்பாசாமி நாயக்கரும், கடைப்பையனும் நன்றாக வந் திருக்கிறார்கள், எப்போதுமே தன்கதை மனி தர்களை உடம்பம் உயிருமாக நம் கண் முன்னே கொணர்ந்து நிறுத்திவிடும் ஆற்றல் ஆசிரியருக்குச் சிறப்பாகக் கைவந்திருக்கிறது. கலைப்படைப்பில் மெய்ம்மையான பாத்திர 

ஒன்றும் அல்ல ஒரே நபரை உடைமாற்றி, நடைமற்றி வெறும் 'டைப்'பாக, பொம்டி லாட்டப் பாவையாக நடமாட விடும் பாத் திர வரட்சி. ராஜநாராயணனிடம் இல்லை, புதிசு புதிசாக மனிதர்கள் வந்த வண்ண மி ருக்கிறார்கள். இவர்கள் பேசுவதெல்லாம், இவர்கள் பேசக்கூடியதாகவே இருக்கிறது. ஆசிவியரின் அதிபுத்திசாலித்தனங்களைக் கதைப்பாத்திரங்களின் வாய்க்குள் நிர்ப்பந்த மாகத் திணித்து வதைக்கிற காரியத்தை கி. ரா, செய்யவில்லை. இது இவருடைய எல்லாக் கதைகளுக்குமே பொருந்தும். 

பருத்தி வாங்குகிற கடைக்காரியான அங்கயற்கண்ணியின் சித்திரத்தை ஆசிரியர் வரைந்து காட்டுகிறார் - 

"பூஷணிப்பழம் மாதிரி நிறம். நல்ல உசரமும் உருட்டும்; சிரிச்சு சீதேவி முகம், என்னேரமும் வெத்தலையும் கருப்பட்டிப் புக யிலையும் வாய் திறைச்சு செவேலென்று இருக் கும். நெத்தியிலே ஒத்தை நாயம் போல பச்சை குத்தியிருப்பா, காதுகளில் 'பழைய சிகப்பு கற்கள் பதித்த பெரிய கம்மல்கள். செவந்த ரெண்டு புஜங்களிலேயும் கைகளி லேயும் பச்சைக் கோலங்கள், உச்சி வகுடு எடுத்த சுருட்டை முடியிலே ஊடு நரை. (ஒவ்வொருத்திகளுக்கு நரைகூட பொருத்த மாயும் அழகாகவும் இருக்கு!) கைகள்ளே கனமான பித்தளைக் காப்பு. கால்கள்ளெ கனத்த உருண்டையான வெள்ளித்தண்டை. எப்பப் பாத்தாலும் ''கள்ளிப்பழம் மணக்கும்" பச்சைநிறச் சேலைதான் உடுத்திகிட்டிருப்பாள் அந்தக் காலத்துப் பெண்டுக வழக்கப்படி அவளும் ரவிக்கை போடுகிறதில்லை, {'அங்கயக்கண்ணியின் இந்தச் சித்திரம் ஆசிரியக்கூற்றாகவும் நாயககரின் நினைப் போட்டமாகவும் முயங்கி வருவதால் கொச் சைப் பதப்பிரயோகங்கள் மலிந்திருக்கின்றன) 

‘எங்கும் ஓர் நிறை'யில் ஆசிரியர் நமக் குச்சொல்ல வருவதென்ன? முறை கேடான தராசுகளால் ஏமாற்றப்பட்டு வந்த பழைய தலைமுறை விவசாயி புதிய, நாணயமான நிறுவை அமுலுக்கு வரவும் விமோச்னம் பெறுகிறான் என்பதா? அல்லது அரசுகள் நாட்டில் புகுத்துகிற பெரிதும் சிறிதுமான ஒழுங்கு முறைகள் கிராமப்புறங்களில் ஏற்படுத் 

தும் எதிரொலிகளைக் கோடிட்டுக் காட்டுவதா? சமூக மாற்றம் ஏற்பட்டு, பழைய சுரண்டல் முறைகளிலிருந்து விடுபட்டு, கிராமவாசி புதிய சமதர்மக் கோட்பாடுகளுக்குத் தயாராவதை இக்கதை குறியீடாகக்காட்டுகிறது என்று ஒரு முற்போக்காளர் கூறினால், அது ஏற்கக்கூடி யது தானா? அப்படியானால், நாயக்கரை அலட்சியப்படுத்தி அழகுகாட்டிக் கேலி செய் யும் கடைக்காரப் - புதிய தலை முறைப் பைய னுக்குக்கதையில் இடமேது? .... 

நான் அதிகமாக எதிர்பார்க்கிறேனோ, என்னவோ! ஒரு சிறு கதை சமாசாரம் இரும் புக்குண்டாகக் கனத்திருக்க வேண்டும் என் கிற கட்டாயம் எதுவும் கிடையாதல்லவா? வர்ணச் செறிவாக, நிறங்களின் கோலாகல மாக ஒருவன் சித்திரம் தீட்டுகையில் மற்ருெரு கலைஞன் நாலைந்து stroke-களில் அல்லது ஒரு 'லினோகட்டில் தன்னளவில் உத்தேச நிறைவேற்றம் அடைந்து விடுவதும் சாத்தி யம் தானே? 

கனிவு ஒரு காதல் கதை. புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்களின் காதல். காதல் என்றால், கல்யாணம் - பின் காதல் - பின் ஊடலோ ஊடல் - தடைகள் - பின் கூடல் என்கிற பார்முலாவில் எழுதப்பட்ட கதை, கரிசல் காட்டுப் பின்னணி 'ஒன்று தான் வித்தியாசமானது. 

இது உலகமறிந்த கதை. அரைத்த காவை அரைத்துப் பார்க்கிற சமாசாரம். பணம் கொடுக்கிற, படம் போடுகிற (தன் கதைகளுக்குப்படம் போடுவது ஆசிரியருக்குப் பிடிக்காதுதான்; ஆனாலும் போட்டுவிடுகிறார் கள், என்ன செய்ய) நாலு லட்சம் விற்கிற குமுதத்தில் பிரசுரமானது என்பது இந்தக் கதையின் சிறப்பு. 

மாதரி, கிடைக்கலை, சொகம் என்றெல் லாம் எழுதும் ஆசிரியர், 'மல்லம்மா தனியன் ஆனான்' என்று தமிழ் பண்ணியிருப்பதும், “துக்கத்தின் ஒரு கோடியிலிருந்து குதூகலத் தின் மறுகோடியை உடனே எட்டித்தொட முடிவது பெண்மைக்கே உரிய பாங்கு'' என்று பொன் மொழி பண்ணியிருப்பதும் இக் கதையின் வேறு சிறப்புகள், 

ஆனால் கதை என்னமோ வாசிக்க சுவா ரஸ்யமாக இருக்கிறது. ஆனால், இந்த சுவா ரஸ்யமும் கரிசல் பின்னணியும் ஒரு எழுத்தை இலக்கியமாக்கி விடுமா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். 

'வேலை - வேலையே வாழ்க்கை என் நிற கதையில் ஆசிரியர் சிறப்பாக வெற்றி கண்டிருக்கிறார். கதையைப் படித்து விட்டுக் கதைத்தலைப்பைக் கவனிக்கும் போது, தலைப்பு ரொம்பவும் வெள்ளையாக இருப்பதாய்த் தோன்றுகிறது. தலைப்பு, கதையைப் பாதிப்ப தான உணர்வும் ஏற்படுவதால், தலைப்பின் றியே, கதையை மட்டும் வாசகனுக்குக் கொடுத்திருத்தலாமே என்று படுகிறது. 

கணவன் குழந்தைகளுடன் குடித்தனம் நடத்தும் கெங்கம்மா என்கிற கரிசல்க்காட்டு விவசாயப் பெண்ணின் தினப்படி வாழ்க்கை யில் ஓர் ஏட்டை - ஒரு நாளையை நடப்பை விரிக்கிறது இக்கதை, 

- வாழ்க்கை வேறு, வேலை வேறு என்று வாழும் கணவன் நாகையாவுக்கு மாருக வேலையே வாழ்க்கை என்று திகழும் கெங் கம்மா வெகு அற்புதமாக உருவாகியிருக் கிறான். கதையின் கட்டுமானம் பிரமாதம் என்று சொல்லச் சிறிதும் தயக்கமில்லை எனக்கு. சம்பாஷணை ஒன்றிரண்டு தான், மற்றப்படி ஒரே ஆசிரிய narration தான்; பிசிர், அபஸ்வரம் ஒன்று கிடையாது, சுருதி சுத்தம். 

சம்பவங்களுக்கு மனசைக் கொடுப்பவ ராய் இவ்வாசிரியர் இல்லா திருப்பதும், Suspense, உச்சம் என்பதெல்லாம் இவரி டம் காணக்கிடையாதிருப்பதும் ஒரு சுபாவ மாகத் தெரிகிறதேயன்றி, முன் கூட்டிய தீர் மானங்களின் விளைவாகத் தெரியவில்லை. 

இத் தொகுதியில் இதுவே சிறந்த கதை என நான் கருதுகிறேன். 

இதைப் படித்து விட்டு அடுத்த கதை யான 'மகாலட்சுமி' யைப் படிக்க மிகவும் சங்கடமாகப் போய்விடுகிறது. 

இந்தக் கதையின் நாயகி மோகி, இவ ரூம் கிராமத்துப்பெண் தான். செல்வங்களுக் கெல்லாம் அதிபதியான சாட்சாத் மகாலட்சுமி மின் மறு அவதாரம் என்பதுபோல் சித்தரிக் கப்பட்ட நக்கிறாள் இவள். இவளுடைய அழகு, புராணங்களில் பேசப்படும் ஊர்வசி, ரம்பை வகையறாக்களுக்கு ஈடாக Super lative வில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மோகியின் தாடை (நாடி) அழகிலேயே ஆசிரியர் மெய்ம்மறந்து போகிறார். 

ஆனால், இந்த மோகி, திடீரென்று 'உம்' மென்று ஆகி விடுவாள்.... அவள் 'உம்' மென்று ஆகி விட்டால் அவனால் (அவள் புருஷன்) தாங்கிக் கொள்ள இயலாது. நிலாவை மேகம் மறைத்த ஒரு மங்கல் போல் அவனுள்ளும் மனசு இருட்டிவிடும். எதைக் கொடுக்கிறது, எதைக் கொடுத்தால் அந்த முகத்தில் பிரகாசத்தைத் தரிசிக்கலாம்? இப்படிச் சமயங்களில் அவளை நெருங்கவே தயக்கமாக இருக்கும். பயமாகக் கூட இருக் கும்'' என்று எழுதுகிறார் ஆசிரியர். 

. இதைப் படித்து விட்டு மோகி ஒரு மோகினிப் பிசாசு என்றோ , கிராம தேவதை என்றோ, முப்பிடாரி என்றோ அல்லது இன் டியன் - பிரைம்மினிஸ்டர் போன்றதொரு ஸ்தானத்தில் இருப்பவள் என்றே நாம் எண் ணினால் தவறு நம் முடையது தான். ஆனால், இவள் மகாலட்சுமி என்பதில் மட்டும் நாம் சந்தேகம் கொள்ள வேண்டி தில்லை. முற் போக்காளரும் ஆன ராஜநாராயணன், அதிச யோக்தியாக, நமது மரபு ரீதியில், கம்பனும், காளிதாசனும் போல் எழுதி நம்மை வியப்பி 

லாழ்த்தி , மகிழ்விக்கிறார் என்று கொள்ள வேண்டும். 

* இந்த மகாலட்சுமி after all என்ன செய்கிறாள் என்கிறீர்கள்? கல்யாணம் செய்து கொண, கணவன் வீட்டுக்கு வந்த அல் 3 அவனைத் தன் வசம் எடுத்துக்” கொள், ' 

உண்டாகி', மசக்கையாக , (மசக்கை என்றால், உங்க வீட்டு, எங்க வீட்டு மசக்கை அல்ல) குழந்தையும் பெதற்கு முலைப்பாலும் கொடுக்கிறான். “குழ தையைக் கொஞ்சுகிறாள். குழந்தை சிரிக்' - தாய் சிரிக்கிறாள். அதோடு நிற்க ல்லை. “பூமியும் சிரிக்கிறது”, என் 

கிறார். கதாசிரியர். பூமி ஏன் சிரிக்க வேண் டும் என்ற வினா நமக்குள் எழக்கூட து. மோசி மகாலட்சுமி என்பதே நாம் நினைவில் கொள்ள வேண்டும், 

இந்த மோகி alias மகாலட்சுமியைப் பார்க்கையில் நமக்குச்சற்று பிரமிப்பாக இருக் கிறது. இம்மாதிரிப் பெண்கள் கரிசல்க் காட்டி லும் இருக்கிறார்களா என்கிற வியப்பு மேலிடு கிறது. 'ஏன், இருக்கக் கூடாதா?' என்ற எதிர் வினாவையும் மீறி நம்முள் அவநம்பிக்கை நிழலாடுகிறது. குடும்பக்கட்டுப்பாட்டின் இன் றியமையாமையை ஒவ்வொரு வினாடியும் வலி யுறுத்திக்கொண்டிருக்கும் இந்தியத் தாய்க் குலத்தின் கோடானுகோடிப் பெண்களில் இவளும் ஒருத்தி என்பதற்கு மேலாக இந்த மோகி alias மகாலட்சுமியிடம் என்ன சிறப்பு குடிகொண்டு விளங்குகிறது என்பதை நம் மால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவளி டம் மண்டிக் கிடக்கும் அபார அழகு உண் 

மைதானா என்கிற ஐயமும் எழுந்து விடு கிறது, ஆசிரியரால், எட்ட முடியாத ஒரு உயர்ந்த பீடத்தின் மேல் ஏற்றி வைக்கப் பட்டிருக்கும் இந்த மகாலட்சுமி எப்படித் தன்னுடன் உடலுறவு கொள்ளும் சலுகை யைத் தன் புருஷனுக்கு அளித்துக் கருவுற்றுத் தாயானாள் என்கிற ஆச்சரியமும் நமக்கு ஏற் படவே செய்கிறது. 

- இந்த மகாலட்சுமிக்கு தாடை (நாடி) அமைந்துள்ள விதம் பற்றிக் கூற வந்த ஆசிரியர், “பெண்களுக்குப் பொதுவாக நாடி மட்டும் வடிவாக அமைவது இல்லை. பிரம்மன் இதுவரை எத்தனை பெண்களைப் படைத்தும் இன்னும் அவனுக்கு பெண்ணுக்கு நாடியை அமைக்கத் தெரியவில்லை.', என்று, காவிய கர்த்தாக்களைப்போல் உயர்வு நவிர்ச்சியாக எழுது வதை இலக்கியப் பிரக்ஞை உள்ள 

சகன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றே எனக்குப் படுகிறது. பெண்ணின் தாடை எவ்விதம் அமைந்தால் அழகாக இருக்கும் என்பதைத் தீர்மானம் செய்வதற்கான 'அதா ரிட்டி' ராஜநாராயணனுக்கு எப்போது வழங் கப்பட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆசிரியர் இக்கதை யில் மோகிக்கு அளித்திருக்கும் வரம்பற்ற சலுகைகள் கண்டிக்கத்தக்கன. 

இலக்கியத்துக்கு அடிப்படையான மெய்யை ஆதாரமாகக்கொண்டிராத சரடுகள், கற்பனைக் குதிரைகள் (கரிசல் காட்டுப்) பள் ளத்தில் தலைகுப்புறச் சரிந்து விடுவதை இக் கதையில் நாம் தெளிவாகக் காணுகிறோம். 

ஒரு விசித்திரமான கனவு சுவாரஸ்ய மாகச் சொல்லப்பட்டுள்ள 'கனா' என்ற கதை யில் சுவாரஸ்யமும் விசித்திரமும் தவிர வேறு எதுவும், சொல்லும்படியாக இல்லை. உருவ கம் அப்படி, இப்படி என்று அலட்டிக் கொள்ள வேண்டாம், 

கண்ணாடிக் குப்பியினுள் அடைத்து வைக்கப்பட்ட ஒரு அதிசய வுஸ்துபோல் காட்சி தருகிறது 'கனா'. 

பூவும் பெண்ணும் சம்பந்தப்பட்ட கதை ''பூவை '. 

- பேரக்காள் என்கிற சிறுமி ஒரு சம்சாரி யின் வீட்டில் எருமை மாடு மேய்க்க வந்து சேருகிறாள். ''எருமை மாடுகளின் சாண மூத்திர வாடையில் தான் வாசம் அவள்", அந்த வீட்டுக்காக உழை உழை என்று உழைக்கிறாள். வீட்டுக்காரர்களும் சும்மா இருக்கவில்லை. தூக்கணாங் குருவிக்கூடு போலக் காட்சியளித்த அவளுடைய தலை மயிரை'' மழுங்கச் சிரைத்துவிட ஏற்பாடு செய்கிறார்கள், '* அவள் வளர்ந்த பிறகு மொட்டையிலிருந்து ‘பாப்' வைத்துக்கொள்ள அனுமதித்தார்கள்....... அவளுக்குத் தாவணி கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொன் னார்கள். பெரிய வாளியின் தாம்புக் கயிற் றைக் கிணற்றிலிருந்து தண்ணீரோடு இழுத்து இரைக்கும் போது அவளது பருத்த மார் பையும் புஜங்களையும் பார்த்து கிராமத்து இளவட்டங்கள் பெருமூச்சு விடும் அளவுக் குப் பேரக்காள் செழித்துக் கொழுத்து விட் டிருக்கிறாள் என்றால், அந்தப் பெண் மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிடுகிறவளாகத்தான் இருந்திருக்க வேண்டும், இப்படி நன்றாக உண்டு வளர்ந்த பெண்ணுக்குக் 'காதல்' வந்ததில் வியப்பில்லை தானே? *குமரய்யா - பேரக்காள் ,நெருக்கத்தைக் கண்டு பிடித்து” இருவருக்கும் ல்யாணத்தைத் தங்கள் வீட்டிலேயே தங்கள் செலவிலேயே நடத்தி வைப்பது என்று ஆரம்பித்து விட் டார்கள்' வீட்டுக்காரர்கள். 

கல்யாணத்தன்று கூடிக் குழுமியிருக்கும் பெண்களின் மத்தியில் பேரக்காள் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறாள். ஏன்? (இங்கே ஒரு சின்ன suspcncel) என்னவோ, ஏதோ என்று எல்லாரும் திகைக்கிறார்கள். வீட்டுப் பாட்டியம்மா வெளியே வந்து முடிச்சை அவிழ்க்கிறாள், ''கழுதை! ஒரு நாளாவது தலையில் பூவைத்திருந்தாலல்லவா; இண்ணைக் கிச் சிங்காரிக்கும் போது பூ வாசம் தாங்கா மல் மயக்கம் போட்டுட்டது! 

இதைக் கேட்டு எல்லோரும் ஆச்சிரி யமடைந்து, பிறகு சிரிக்கிறார்கள். 

'எனக்குச் சிரிப்பு வரவில்லை' என்று முடிக்கிறார் கதை ஆசிரியர் (கதை சொல்லி.) 

அப்படியானால் சிறிது விசனம் உண் டாயிற்று என்று வைத்துக் அப்படியானால், ஒரு ஏழைக் குமரிப் பெண் ணுக்குத் தன் திருமண நாள் வரையிலும் சூடிக் கொள்ளப் பூ கிடைக்கவில்லை. என்கிற விசனம் தானே? இதில் ஒரு சிறு விசனம் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், இந்த விசனம் இலக்கிய பூர்வமான ஒரு ஆழத்து டன் கதையில் எதிரொலிக்காமற் போய் விடுகிறது, கதை முடிவில் வாசகனுக்கு. ஏற்படும் அதிர்ச்சி, பஸ்ஸில் குடையை விட்டு விட்டு, பஸ் போய்விட்ட பின் குடை நினைவு வர போச்சே' என்று கையை உதறுகிறவனின் அதிர்ச்சியாகவே இருக்கிறது. 

பேரக்காளுக்கு ஏன் பூ கிடைக்கவில்லை? வீட்டுக்காரர்கள் வாங்கிக் கொடுக்க மறந்து விட்டார்களா? இல்லை, 'பாப்' செய்யப்பட்ட கூந்தலுக்குப் பூவின் தேவை உணரப்படா மற் போய் விட்டதா? இவளுக்கு மூன்று வேளையும் சோறு போட்டு, தாவணி கொடுத் துப்போட்டுக்கொள்ளச் சொல்லி, அவள் 'காதலைப் புரிந்து கொண்டு, காதலித்தவனை அவளுக்கு, தங்கள் வீட்டிலேயே, தங்கள் செலவிலேயே கல்யாணம் முடித்து வைத்: வர்கள் அந்தப் பெண்ணுக்கு ஒரு முழம் பூ மறுத்திருக்க முடியுமா? பேரக்காள் மொட் டைத் தலையுடனிருந்ததும், 'பாப்வைத்துக் கொண்டிருந்ததும் தற்செயலே அன்றி, இதனால் அவளுக்கு அநீதி எதுவும் இழைக் கப்பட்ட தாகக் கருத இடமிருக்கிறதா? ஒரு க-) பேரக்காள் பூவின் மேல் aversion கொண்டவளாகக் கூட இருக்கலாம்! 

இப்படியெல்லாம் வாசகன் யோசிப்ப தற்கு இக்கதை இடம் தருவதை ஒரு சிறப் பாகச் சொல்வதற்கில்லை. 

மற்றப்படி, கதை சரியாகவே வந்திருக் கிறது. எனக்குச் சிரிப்பு வரவில்லை” என்ற கடைசி வாக்கியம் தவிர்க்கப் பட்டிருந்தால் பூவை' அதனளவில் பூரணமாக இருந்தி ருக்கும். 

கரிசல்க் காட்டில் ஒரு சம்சாரி” இத் தொகுதியில் கடைசிக் கனத. 

கொஞ்சம் நீளமான கதை இது. நெடுங் கதை என்று சொல்லும் அளவுக்கு விரிந்து போய்விடவும் இல்லை. 

துரைசாமி நாயக்கர் என்கிற கரிசல்க் காட்டு சம்சாரியின் -- டிட்பிக்கல் பூர்ஷ்வா வின் வரலாறாக அமைந்துள்ள இந்தக் கதை யை ஆசிரியர் வெகு நேர்த்தியாக, அலுப் புத்தட்டாத படி, நகைச்சுவையும், வாசால கமும், சாதுர்யமும் மிளிர சுவாரஸ்யமாக 

நடத்திச் செல் கிருர். 

கதை ஒரு உபந்நியாசக நேர்ப் போக் கில், சமதரையில் ஒழுகும் சிற்றாறுபேரல் செல்கிறது. 

ஏழை துரைசாமி நாயக்கர் தம் இளம் பிராயத்தில் "ஒரு சம்சாரி வீட்டில் கலப்பை பிடித்து உழ ஆரம்பித்து சகல சம்சாரி வேலை 

களையும் பழகிக் கொள்கிறார். 

இவருடைய தகப்பனார் சொத்து “நாலேக்கர் கரிசல்க் காடு... விசேசம் ஒண் 

ணும் வினையாது.'' இந்த நிலத்திலும், வித வைகளாகி இவரோடு வந்து சேர்ந்துவிட்ட இவருடைய பெரியப்பா பெண்களின் நாலு ஏக்கர் புஞ்சையிலுமாக அரும்பாடு பட்டு வேளாண்மை செய்கிருர் நாயக்கர், 

நாமும் நாலுகாசு சம்பாதித்து முன்னுக்கு வந்து, முடிந்தால் (எப்படியாவது) பணக் காரனாகிவிடுவது என்கிற சர்வசாதாரண, சராசரி லௌகிக நோக்குடன், 'ஆயிரம்' அகட் விகடங்கள் பண்ணி , தகர வீட்டிலிருந்து காரைவீடு என்கிற லட்சியத்தை எட்டிப் 

பிடித்து, முடிவில் , எல்லாரையும் போல் மண் டையைப் போட்டு விடுகிறார் நாயக்கர். 

- இந்த நாயக்கர் என்னென்ன சாகசங் களெல்லாம் செய்கிறார் என்கிறீர்கள்! 

தன் புஞ்சையில் ஏற்பட்டிருந்த ஆட் கள் நடந்து போகிற தடத்தை இல்லாம லாக்கி பக்கத்துப் புஞ்சையில் தன் 'மொங் கங் - கட்டை 'க் காலை மாற்றி மாற்றித் தேய்த்து, புதுத் தடம் உண்டாக்கி விடுகி 

ரூர் 

இவர் எண்ணெய் - தேய்த்துக் குளிப்ப தில்லை. (சிக்கனம்) 

மற்றவர்கள் தானியம் முந்தி விற்கை யில் இவர் சேமித்துப் பதுக்கி வைத்து பிறகு நல்ல விலைக்கு விற்றுக் காசாக்கு கிறார். 

சல்லிசான விலைக்கு ஒரு கொம்டேயுள்ள ஒற்றைக் காளையை வாங்கி ('மாடுதான் உழப் போகுது; கொம்பா உழட் போகுது :) வேறொரு சம்சாரியின் காங்கேயம் காளைக்குச் சரியாகக் கலப்பையில் பூட்டி வெல்ஓம் தந் திரம் இவருக்குத் தெரிந்திருக்கிறது. 

'கஞ்சம் பத்தியும் (கருமி) தன் வயிற் றுக்கே சரிவர உண்ணாதவருமான இவர் தன் மாடுகளைப் பேணும் விதமே அலாதி. ''ஒரு வரப்பைப் பார்த்து விட்டு இதில் புல் இல்லை என்று கைவிட்ட இடத்தில் இவர் உட் கார்ந்து பன்னறுவாள் பிடித்தால் கொஞ்ச நேரத்தில் ஒரு சாக்குப் பச்சையை அறுத்துச் சேர்த்து விடுவார்'' 

வருஷமானம் இவருக்கு மூணு பங்காய் உயருகிறது 

'முவ்வாயிரம் என்று விலையாடிய தோட் டத்தை'' அந்தத் தோட்டத்தை எடுத்துப் போட்டு வைக்கணும்' என்று நினைத்த சரி யான புள்ளிகள் ரெண்டு பேர்' தயாராக இருந்த நிலைமையில், தந்திரமாக இருநூறு ரூபாய் குறைத்துத் தன் பெயருக்கு விலை முடித்துக் கொள்கிறார், 

மண்ணைப் பொன்னாக்குகிறார். 

தோட்டத்தில் ஆட்கள் நுழைந்து களவு செய்யாமல் தடுக்க, ஆவி நடமாட்டம் என்றும் பாம்பு நடமாட்டம் என்றும் புரளிகளைக் கிளப்பி விட்டு எல்லோரையும் நம்ப வைக்கிருர். 

தானியம், பணம் இரண்டையுமே வட் டிக்கு விட்டு, வட்டி குட்டி போட்டு, கடை சியில் கடன் புட்டவன் என் நெலத்தை எடுத்துக்கோ சாமி, ஆளை விடு” என்று எழு திக் கொடுத்து விட்டுப் போகும் நிலங்களுக்கு நாயக்கர் அதிபதியாகிறார். 

- வசதியாக விருந்து கெட்டுப்போன புள்ளி யிடமிருந்து, பட்டணத்தில் லட்சத்துக்கு மேல் மதிக்கிற காரை வீட்டைப் பக்தா பிரத்து குத் தட்டிக் கொள்கிறர். 

மகன், மகள் கல்யாணங்களை ஊர் தூற் றும். அளவுக்சப் படுசிக்கனமாகப் பண்ணி வைத்து விடுகிறர். 'ஊருக்கு ஒரு வாய் சாப் பாடு போடவில்லை". 

இத்தனை சாகசங்களையும் புரிந்து மடியும் துரைசாமி நாயக்கரின் வரலாறு தான் ''கரி சல்க் காட்டில் ஒரு சம்சா 

இந்த வரலாற்றை சிறுகதை வரம்புக்குள் கொண்டுவர ஆசிரியருக்கு ஒரு கதை சொல் லி' யும், கதை கேட்பவனும் தேவைப் பட் டிருக்கிறது, இந்த உத்தியைக் கையாண்டு கதை எழுதுவதில் கோலம் எதுவும் இல்லை என் லும், இது கல்கி காலத்து உத்தி என்பதை மறுப்பதற்கில்க. கல்கி சதைகளைப் போலவே இதிலும் கதை சொல்லி அல்லது கதை கேட்போனின் சில குறிக்கீடுகள் நம்மைச் சங்கடப்படுத்தவே செய்கின்றன. சில முக்கியமான சங்கதிகள் வாசக மூட 

னுக்த எங்கே எட்டாமற் போய் விடுமோ என்கிற கவலையில் ஆசிரியர், இல்லை 'கதை சொல்லி' இடை இடையே தலையை நீட்டி விளக்கங்கள் தருவது எரிச்சலூட்டுவதாயிருக் 

ஒரு உதாரணம் - 

இரண்டாவது உலகப்போர் பயங்கர மாக நடந்து கொண்டிருந்த போது எல்லோ ருமே ஹிட்லர் வருகிற வரத்தைப் பார்த்து 

அவன் தான் ஜெயிப்பான் என்று தீர்மான மாகச் சொன்னார்கள். கடுமையான பிரிட்டிஷ் விசுவாசியான நாயக்கர் ஒருத்தர். தான் அந்த ஊரில் ஹிட்லர் நிச்சயமாகத் தோற் பான் என்று சொன்னவர், பிரிட்டிஷ் சர்க் கார் இந்த யுத்தத்தில் தோற்றால் என் உள்ளங்கையில் அடுப்பு மூட்டி உங்களுக் கெல்லாம் சோறு பொங்கிப் போடுவேன் என்றும் சொன்னார் 

இந்த இடத்தில் வாசகமூடனின் பிரதி நிதியே போல் இறுக்கிட்டு “அது என்ன; அதுக்கு என்ன அர்த்த?” என்று வாயைக் கொடுக்கிறார் கதை கேட்பவர், உடனே கதை சொல்லி. 'ஒருக்காலும் இது நடக்காது என்பது தான் இதுக்கு அர்த்தம். உள்ளங் 

கையில் மூன்று சற்களை வைத்து அடுப்பு மூட்டத்தான் முடயுமா; அத்தனை பேருக்கும் சமையல் செய்துதான் போட முடியுமா! கிராமத்தில் ஏதோ அப்படி ஒரு பிரயோகம் இன்னும் கூட இருந்து வருகிறது'' என்று கதை கேட்பவரின் (வாசக மூடனின்) ஐயத் 

தைத் தெளிய வைக்கிறார் ஆசிரியர்! 

- இதுவரை யாகம் செய்யாத ஒரு காரி யமும் இக்கதையில் செய்யப்பட்டுள்ளது. கதையில் நகைச்சுவை வெளிப்படும் இடங் கள் அடையாளமிடப் பட்டுள்ளன! 

'இது இத்தொகுதியில் நகைச்சுவைக் குறியாகக் கையாளப் படுகிறது' என்கிற அறிவிப்பு இந்த நூலின் ஒரு பக்கத்தில் அச்சிடப் பட்டிருப்பதையும் காணு கிருேம், 

நகைச்சுவை போலவே பிற சுவைகளும் எங்கெங்கே புத்தகத்தில் மறைந்து கிடக்கின் றன என்பதையும் குறிகள் இட்டுக்காட்டி யிருந்தால் வாசக மூடனுக்கு மிகவும் வசதி யாக இருந்திருக்கும். ஆனால், குறியிடப்பட்ட சில இடங்களில் நகைச்சுவை காண இய லாதிருப்பதையும், குறியிடாத சில இடங்களில் நகைச்சுவை பெறப்படுவதையும் நாம் இக்க 

தையில் காண நேர்கிறது. 

சொல்ல வேண்டும். - 

* 'கதை சொல்லியின் பாத்திரகுணம் சேதமுறாவிதத்தில், கொச்சைப் பேச்சு வழக் குச் சொற்கள் ஆசிரிய narration உடன் இழைந்து பிறக்கும் பாஷையில் ஒரு பிரத்தி யோக எழில் கூடி விடுகிறது, 

ஜெயகாந்தனின் “சினிமாவுக்குப் போன சித்தாளு', வின் வரிந்துகட்டின கொச்சை நிரூபணம், செயற்கைத்தனம் கி. ரா. விடம் இல்லாதிருப்பது இலக்கிய வாசகனின் கவ னத்திற்குரியதாகி விடுகிறது. 

எல்லாம் சரி; இந்தத் துரைசாமி நாயக் கர் வரலாற்றில் இவ்வாசிரியர் கொள்ளும் உத் தேசம் என்ன ஒரு சுவையான கதை சொல்வது மட்டும்தானா? 

வேட்டி'யில் தூங்கா நாயக்கர் போன்ற எளியவர் களுக்கு உடுக்கத் - துணி கிட்ட வேண்டும் என்கிற மனிதாபிமானமும், (தான்' னில், தன்னை வைத்தே எதையும் எடை போடுகிற மனித பலவீனமும், 'எங் கும் ஓர் நிறை யில் ஒரு பாமர விவசாயி யின் மீது கவிகிற பரிவும், 'கனிவு' என்கிற கதையில் ஆண்- பெண் பிரிவுத்துயரமும், வேலை-வேலையே வாழ்க்கையில் உழைப் பையே வாழ்வாகக் கொண்டு விட்ட கெங் கம்மா என்பவளின் மகோன்னதமும், 'பூவை' யில் திருமண நாள் வரை பிலும் பேரக்காள் என்கிற பென் பூ அணிந்து அறியாதவள் என்பது வெளிப்படுரையில் உண்டாகிற அநு தாப அதிர்ச்சியும் ஆசிரிய உத்தேசங்களாக அமைந்து வாசகனிடம் தோற்றுவிக்கும் சல னங்களை உணர்கிறோம், இக்கதைகளில் ஆசிரிய பிரிவு சார்ந்து நிற்கும் இலக்குகளும் நமக்குத் தெளிவாகவே புலப்படுகின்றன. 

ஆனால் இந்தத் துரைசாமி நாயக்கர் பற்றி ஆசிரியர் என்ன நினைக்கிறார்? நாயக் கரின் குணாதிசயங்கள் இக்கட்டுரையில் முன் னரே சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. இந்தப் பணம்காக்கும் பூதத்தின் மேல் ராஜநா ராயணனுக்கு ஒரு appreciation இருக்கிறது என்ற முடிவுக்கு- கதையின் இறுதிக்கு வரு 

கையில் - நாம் வந்துவிட நேர்கிறது. 

இலக்கியம் என்று வருகையில், ஒரு படைப்பில் ஆசிரிய உத்தேசம் என்ன என் 

பது முக்கியமான விஷயம் இந்த உத்தே சம் முற்போக்கானதா, பிற்போக்கானதா என்பதெல்லாம் இலக்கியப் புறம்பான சங்க திகள். ஆனால், எவ்வகையிலேனும் பொரு ளீட்டி, செல்வந்தனாகிவிட வேண்டும் என்கிற ஒரே (இதைப் பிற்போக்கானது என்று கருத லாமல்லவா?) குறிக்கோளை முன்னிறுத்தி அதில் வெற்றியும் கண்டு, இறுதியில் எல்லா ரையும் போல் ஒருவன் மாண்டு போகிறான் என்பதற்கு மேல் ஒரு படைப்பில் அதன் ஆசிரியருக்குச் சொல்ல ஒன்றும் இல்லை என் றால், அந்தப் படைப்பின் இலக்கியத்தரம் கேள்விக்குரியதாகி விடுகிறது. 

சம்பவம், சரளம், சுவாரஸ்யம், விறுவிறுப்பு, நடை யழகு, போன்றவை மட்டுமே ஒரு எழுத்துக்கு இலக்கிய அந்தஸ்தை ஏற்றி விடாது என்பது தான் இலக்கியப் பெரியவர் களின் கருத்தாக இன்றும் இருந்து வருகிறது. 

இத்தொகுதியின் ஒன்பது கதைகளிலும் ரசனாபூர்வமாக மனசைக் கொடுக்கிற வாசக உள்ளத்துக்கு ஒரு சிறு நிறைவு தோன்றவே செய்யும். ஆனால், இந்த நிறைவு இலக்கிய பூர்வமானதுதானா என்கிற கேள்வி பொறுப் புள்ள தொரு விடையைக் கோரி நிற்கிறது மேற் சொன்ன வாசக நிறைவுக்கான அடிப்ப படைகள் என்ன? 

நமக்கு முன்பரிசமம் இல்லாத இந்தக் கரிசல் காட்டுப் பகைப்புலம் ஒரு புதுமையை யும் கவர்ச்சி ஈயயும் காட்டி நம்ம ஆட் சொண்டு விடுகிறது, இந்த வட்டாரப் பேச்சு வழக்குகள், கொச்சைகள் உட்பட, இம்மண் ணின் மக்களான நாயக்கர்களும், பேரக்காள் களும் நம் பிரியத்துக்குப் பாத்திரர் - RA விடுகிறார்கள். இவர்களுடைய வெளி இயக் கங்கள் நம்மை மகிழ்விப்பதாகவே இருக்கின் றன. இவர்களது மேம்போக்கான, அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட எண் ணங்களையும், மன உணர்வுகளையும் வெளியி டுவதில் ஆசிரியர் சிறிதும் சோடை போய் விடவில்லை. ஆனால் இந்தச் சனங்களுக்குத் தீர்க்கமான - ஆழ்ந்த உணர்வுகள் கிடை யாதா? இவர்களிடையே பூசல்கள், மோதல் கன், கடும் மனப்பிணக்குகள், வன்மங்கள், குரோதங்கள், பெருந்துயர்-துக்கங்கள், கசப்புகள் எதுவும் உண்டாவதில்லையா? 

விதவைகளாகி வீடு திரும்பும் துரைசாமி நாயக்கரின் பெரியப்பனின் பெண்கள் நால் வரும் ‘பழியோ பழி என்று புஞ்சையேகதி' என்று கிடந்ததை எண்ணிப் பார்க்கிறேன். கம்மங்கஞ்சிக்கும், கேப்பைக்களிக்கும் மேலாக இவர்களைப் போன்றவர்களின் அகமன உணர் வுகள் என்ன என்று தெரிந்து கொள்ள என்னுள் ஆவல் கிளர்ந்தெழுகின்றது. 

- துரைசாமி நாயக்கர் என்கிற உயிருள்ள மனிதனின் வாழ்க்கை 'வெற்றி மேல் வெற்றி' யாகி நடந்து முடிந்திருந்தால் அதில் நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், இலக் கிய சிருஷ்டி என்று வரும் போது இந்தக் கரிசல்க் காட்டு சம்சாரியின் வாழ்வில் ஒரு பெரும் சிக்கல், வீழ்ச்சி போன்றவை தவிர்க்க இயலாததாகிவிட வேண்டும். 

படைப்பிலக்கியத்தில் ஆழம் காணவிழை யும் உள்ளங்களுக்கு இவ்வாசிரியர் ஈடு கொடுக்க முடிந்திருந்தால், இவர் கதைகளி விருந்து வாசகன் பெறும் நிறைவு இன்னும் இலக்கிய பூர்வமானதாகியிருக்கும் என்று நினைப்புக் கொள்கிறேன். 

ஒரு கால் இந்தக் கரிசல் காட்டுப் படைப்பாளியிடமிருந்து நான் அதிகம் எதிர் 

பார்க்கிறேனோ என்னமோ1 

பத்து கடிதங்களுக்கும், ஒன்பது கதை களுக்கும் பிறகு வரும் கட்டுரைகள் நான் 

குடன் இந்த நூல் நிறைவெய்து கிறது. 

நான்கு கட்டுரைகளுமே படிக்கச் சுவை யாக இருக்கின்றன. ஆசிரியரின் தமிழ் தேனாக இனிக்கிறது என்றால் அது மிகை யன்று நம் பண்டிதர்கள் டன்னிப்பரவும் பொத் தம் பொதுவான ‘தமிழ்த் தேனை நான் இங்கு குறிப்பிட வில்லை, ராஜநாராயணனின் தேன் அவருக்கே சொந்தமானது. இடை செவல் பிரான்ட் தமிழ்த்தேன் இது! 

முதல் கட்டுரையில், "எங்கள் ஊரை ‘அழகான ஆண்கள் நிறைந்த ஊர்” என்று மற்ற கிராமத்துப்பெண்கள் சொல்லக் கேட் டிருக்கிறேன்'' என்று ஆசிரியர் குறிப்பிடு கையில், இடைசெவல் ஆண்களை, குறைந்த பட்சம் இந்த நூலாசிரியர் ராஜநாராயணனை 

யாவது நேரில் பார்த்து விட வேண்டும் என் கிற ஆவல் எழுகிறது. 

''நானும் என் எழுத்தும்" என்கிற இரண்டாவது கட்டுரை முன்னதை விடவும் ரசமாக எழுதப்பட்டுள்ளது. 

தான் எழுதிய 'காயிதம்? ஒன்றைத்தன் முதல் எழுத்தாசுக் காணுகிறார் ஆசிரியர். 'காயிதங்கள்' தான் இவரது கதைகளுக்கும் பிறபடைப்புகளுக்கும் முதற்படியாக அமைந் தன என்பது இக்கட்டுரையில் நமக்குத் தெரி யவருகிறது. 

தன் எழுத்தைப் பற்றி ஆசிரியர் கொண் டுள்ள சில 'விசித்திரமான' எண்ண ங்களையும், 'ஆசை' கனையம் நாம் கவனிக்க வேண்டும். 

''என்னுடைய எழுத்துக்களைச் சத்தமிட்டு வாசிக்கக் கூடாது. மனசுக்குள்ளேயே - உதடுகள் அசையாமல் கண்களால் வாசிக்க வேண்டும். (மேடைகளில் பேசப்பட்ட பிர சங்கம் போன்றவைகள் அச்சாகி இருந்தாலே, அவைகளை வாய் விட்டுப் படிக்கலாம்.) மௌனத்தில் பிரந்த எழுத்துக்களை மௌன மாகவே படித்து அறிந்தாலே அதன் ஜீவனை அறிய முடியும். மௌனவாசிப்புக்கென்றே என் நடை உண்டாக்கப்பட்டது, உரத்து வாசிப்பதற்கு அல்ல.'' 

ராஜ நாராயணன் என்னை மன்னிக்க வேண்டும். அவருடைய தடை உத்தரவை மீறி இந்தப் புத்தகத்தின் சில பக்கங்களை உதடுகள் அசைத்து, உ... ரக்க வாசித்தேன். கேட்டுக் கொண்டிருந்த நண்பரும் நானும் நன்ருகவே அனுபவித்தோம், எழுத்தின் ஜீவனை எங்களளவுக்கு எங்களால் அறியவும் முடிந்தது. 

"ஒரு தடவை மட்டிலும் என் கதை களை வாசிப்பவர்கள் நன்கு அனுபவிக்க முடி யாது''. என்கிறார் ஆசிரியர். உண்மை இலக்கியம், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை வாசகனைப் படிக்கத் தூண்டி விடுகிறது என் பதும், இலக்கிய ரசிகனை மறுவாசிப்புக்குத் தூண்டும் ஆற்றல் ஒரு எழுத்தில் அமைந் திருக்க வேண்டும் . என்பதும் இங்கு கூறப் பட வேண்டியவையாகும். 

கதைக்கு ஒரு கரு', என்கிற மூன்றா வது கட்டுரை, “கதைக்கு ஒரு கரு என்ன, இரண்டு கரு வைத்துக் கூட ஒரு கதை எழுதலாம்' என்று தொடங்குகிறது. "ஏன், இருபது கருவைத்துக் கூட ஒரு கதை எழுதலாமே'' என்று கூறத் தோன்றுகிறது நமக்கு , 

தொடர்ந்து "கருவே இல்லாமல் கூட கதை எழுதி விடலாம்'' என்று சொல்லி நம்மை வியப்பிலாழ்த்துகிறார் ராஜநாரா யணன்! 

இக்கட்டுரையில் சில முக்கியமான உண் மைகளை - நமக்குத் தெரிவிக்கிறார் ஆசிரியர். வாசகர்கள், குறிப்பாக எழுத்தாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய உண்மைகள் இவை 

"எழுதுகிறவனுக்கு மாத்திரமில்லை, எல் லோருக்கும்தான் கிடைக்கும் கரு. கருவுக் குப்பஞ்சமே இல்லை -- 

"இன்றைய தேதிவரை கரு கிடைக்கா மல் திண்டாடினான் ஒருவன் என்று நான் கேள்விப் பட்டதே இல்லை' - 


Printed by Thenkumari Printers

No comments:

Post a Comment