தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, July 06, 2021

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாயுடே ஆடு

 பாத்தும்மாவுடைய ஆடு 


'பாத்தும்மாவுடைய ஆடு' அல்லது பெண்களுடைய புத்தி என்னும் கதையைத்தான் இங்கு நான் சொல்லப் போகிறேன் ! 

பல்லாண்டுகள் ஏகாந்தமாக அலைந்து திரிந்து வாழ்க்கையைக் கழித்த பிறகு, மூக்குக்குமேல் பொங்கி வழியும் சினத்தோடு, இனியாவது நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணி, எனது வீட்டுக்குத் திரும்பி வந்தேன் .' ஆஹா ! என்ன அற்புதமான வரவேற்பு ! எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. நான் எனக்குள்ளாகவே குமைந்து குமுறினேன், என்னுடைய வீடு...... இதில் யாரையென்று குறை சொல்வது? 

பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே நான் என் வீட்டில் தொடர்ந்து வாழ்ந்தது கிடையாது. எப்போதாவது ஒரு சில இரவு களில் மட்டும் தங்கியிருந்ததாக நினைவு, அவ்வளவுதான். 

இந்தக் குடும்ப வீட்டுக்கு எதிரே, பப்ளிக் ரோடின் ஓரத்தில், ஓடு வேய்ந்த ஒரு சிறிய கட்டடம் உண்டு. நான் மட்டும் வசிப்பதற் காகவே இது கட்டப்பட்டதாகும். இதைக் கட்டும் போது நானே கல்லும் மண்ணும் சுமந்திருக்கிறேன். மிகவும் சிரமப்பட்டுமிருக் கிறேன். அமைதிக்கு உறைவிடமானதாக இருக்க வேண்டும், அழகு கொஞ்ச வேண்டும் என்று பல உபாயங்களையும் உத்திகளையும் கையாண்டேன். கற்களைக் கொண்டு எழுப்பப்பட்ட உயரமான மதில்களுடன் கூடிய முற்றத்தில் வெள்ளை மணலைப் பரப்பும்படிச் செய்தேன். இந்த முற்றத்தைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் மிக 

Page 19 

பாத்தும்மாவுடைய ஆடு 

அழகான செடிகள் உண்டு. அழகுமிகும் அரைவட்டப் பந்தல் களின் மேல் முல்லையும், பிச்சியும் படரவிடப்பட்டுள்ளன. முற்றத்தின் மூலைகளில் கொய்யாச் செடிகளை நட்டு, மரமாக வளர்த் துள்ளேன். 

அந்த வீட்டுப் புழக்கடையில் இரண்டு குளங்கள் உள்ளன. ஒன்று குடிதண்ணீருக்கானது, மற்றொன்று குளிப்பதற்கு. எனது உபயோகத்துக்கு எனத் தனியாக ஒரு கக்கூஸும் உண்டு. புழக் கடையில் உள்ள தோப்பில், நிறைய தென்னை மரங்களும் வாழை மரங்களும் இருந்தன ; இதோடுகூட பலவகை மரங்களையும் நானே நட்டு வளர்த்திருக்கிறேன். நல்ல மாமரங்களும் உள்ளன. சாலை யின் ஓரத்திலும் எல்லையிலும் அழகு கொழிக்கும் அன்னாசிப்பழ மரங்கள், வீட்டையும் தோப்பையும் சுற்றி 6 அடி உயரத்தில், தென்னை ஓலைகளும் முட்களும் கொண்டு முடைந்த வேலி. கட்டடத் தின் முன்புறம் அழிகளுடன் கூடிய கேட் அது எப்போதுமே பூட்டி வைக்கப்பட்டிருக்கும். சாலை வழியே போவோரம் வருவோரும் அழகான செடி கொடிகளையும், கண்ணுக்கு இனிய மலர் வகைகளையும் இந்த அழிக்கதலினூடே. கண்டு ர இலும். 

நான் இந்த வீட்டில் தான் தனியாக வசித்து 

. சாயா, பலகாரங்கள், சாப்பாடு முதலியவற்றை என் *மா (அம்மா) கேட்டின் மேற்புறம் வழியாக உள்ளே நீட்டுவாள். இப்டியாக நான் இந்த வீட்டினுள்ளே எவரையுமே அனுமதித்தது டையாது. விச்ராந்தியாக அமர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பேன் ; இல்லை யென்றால் எதையாவது படித்துக் கொண்டிருப்பேன் ; அதுவுமில்லை யெனில் செடிகளையும் மரங்களையும் பராமரித்தவாறு தோட்டத்தில் இங்குமங்குமாகச் சுற்றி வந்துகொண்டிருப்பேன். இப்படியிருக்கும் போது வெளியூர்களைச் சுற்றிப் பார்த்துவரும் எண்ணத்தோடு நான் ஊரை விட்டுப் புறப்பட்டேன். வர்க்கலையின் அருகேயுள்ள சிவகிரி , சென்னை, எர்ணாகுளம், கோயமுத்தூர், ஆகியவிடங்களில் மூன்றாண்டுகளைக் கழித்த பிறகு, உடல் அசௌக்யம் காரணமாக ஊர் திரும்பியபோது நிலைமை எப்படியிருக்கிறது தெரியுமா! நான் மட்டுமே நிம்மதியாக வாழ்ந்து வந்த எனது சிறிய வீட்டை , எனது நேர் அடுத்த தம்பியான அப்துல் காதர் வாடகைக்கு விட்டிருக் கிறான்! எக்சைஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமான் ராமன் குட்டி, தமது சமையல்காரனுடன் அங்கு பரம சவுக்கியத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெரியவருக்கு வீடு ரொம்பப் பிடித்துப் போயிருந்தது ; இருந்தாலும் வேறு வீடு பார்த்துப் போயிருப்பார் 

Page 20 

பாத்தும்மாவுடைய ஆடு 

தான்! ஆனால், அந்தக் கிராமத்திலே வேறு வீடு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக அல்லவா இருந்தது! 

அவர்தான் என்ன செய்வார்? பாவம்! உம்! அதனால், நான் எங்களுடைய புராதன வீட்டிலேயே வசிக்கலானேன். எனக்கோ பூரண ஓய்வு தேவையாக இருந்தது. இழந்த ஆரோக்யத்தைத் திரும்பப் பெற வேண்டும். மனச் சஞ்சலத்துக்கு இடமளிக்கக்கூடிய தொந்திரவுகளோ, ஓசைகளோ, எதுவுமே இருக்கலாகாது. ஆனால், தொல்லைகளுக்கும் கூச்சல்களுக்கும் இடையே வசிக்க வேண்டிய ஒரு நிலைதான் எனக்கு ஏற்பட்டது. 

ஓலையினால் வேயப்பட்ட ஒரு சிறிய கட்டடம்தான் எங்களது இல்லம். அதில் வசிப்பவர் யார் யார் தெரியுமா ? 

என்னுடைய உம்மா , எனது நேர் அடுத்த தம்பி அப்துல் காதர், அவனுடைய சம்சாரம் குஞ்ஞானும்மா, அத்தம்பதியரின் செல்லக் குழந்தைகளான பாத்துக்குட்டி. ஆரீஃடா , சுபைதா : அப்துல் கா தருக்கு நேர் அடுத்த தம்பியான முகம்மது ஹனீஃபா , அவனது மனைவி ஐசோம்மா, இவர்களது அருமைச் செல்வங்களான ஹபிபு முகம்மது, லைலா, முகம்மது ரஷீது ; ஹனீஃபாவை அடுத்த தங்கை ஆனும்மா, அவளுடைய கணவன் சுலைமான், இத்தம்பதியின் ஒரே செல்லக் குழந்தை ஸயிது முகம்மது. பிறகு எல்லோருக்கும் கடைசித் தம்பியான அபூபக்கர்! 

இவர்கள் தாம் - என் வீட்டு மனிதர்கள். இவர்களைத் தவிர பூனைகள் சிலவும், உம்மாவின் கருணைக்குப் பாத்திரமாகி அங்கு வாழ்ந்து வந்தன. இந்தப் பூனை களுக்குப் பயந்து மாடிமேல் சதா இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான எலிகள். கூரையிலிருந்து கொண்டு கத்தி அமர்க்களப்படுத்தும் காக்கைகள். இவை தவிர என் உம்மாவுக்குச் சொந்தமான பத்து நூறு கோழிகள். வீடு முழுவதும் இவை இஷ்டம்போல குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருக்கும் ; இவற்றின் எண்ணிலடங்கா குஞ்சுகள். இந்தக் குஞ்சுகளை லபக்கென்று கொத்திக் கவ்விக் கொண்டுபோய்த் தின்று வாழும் கழுகுகளும் பருந்துகளும் மரங்களில்! 

ஆக வீட்டில் எப்போதும் ஒரே கோலாகலம்தான். ரஷீதும் சுபைதாவும் இன்னும் தவழ ஆரம்பிக்கவில்லை. தாய்ப்பால் குடிக்காத சமயங்களில் எல்லாம் இவர்கள் அழுதுகொண்டே இருப்பார்கள். இப்போதுதான் நடக்கத் துவங்கியுள்ள ஆரீஃபா அழும் கலையில் கைதேர்ந்தவள். இவளைவிட வயதில் சற்றே பெரியவர்களான லைலாவும் ஸயிது முகம்மதும்கூட அழுவதில் 

Page 21 

பாத்தும்மாவுடைய ஆடு 

யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். அபியும் பாத்துக்குட்டியும் அழுவதில் வல்லவர்கள் ; பிடிவாதக்காரர்கள். ஹபீபு முகம்மது என்னும் பெயர் ஸ்கூலில் மட்டும்தான். வீட்டில் அவனை ' அபி' என்று அழைப்பது வழக்கம். அவன் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ' ம்பி' என்று சொல்லிக் கொள்வான். அவனும் பாத்துக்குட்டியும் முதல் வகுப்பில் படித்து வருகிறார்கள். குழந்தைகள், பூனைகள், கோழிகள், பெண்கள், பருந்துகள் எல்லா மாகச் சேர்ந்து அருமையானதொரு பக்கவாத்ய கோஷ்டியையே உருவாக்கியுள்ளனர். 

இந்த அமர்க்களத்துக்கிடையே நான் காண்பது என்ன? என் முன்னே நின்றுகொண்டிருக்கிறது ஒரு ஆடு! பெண்தான். தவிட்டு நிறம். நல்ல சுருசுருப்புடன் இருக்கிறது. அது, அதிகாலை அடுப்பங் கரைக்குச் சென்று காலைச் சிற்றுண்டியாக எதையேனும் சாப்பிடும். பிறகு அறைகளுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை களை மிதித்து எழுப்பிவிட்டு, முற்றத்திற்கு ஓடும். அங்கு இரவில் வீழ்ந்து கிடக்கும் பலா இலைகளை அவசர அவசரமாகத் தின்ன ஆரம்பிக்கும். 

முற்றத்தின் அருகேயுள்ள பலாமரம் கிழப் பருவத்தைக் கடந்த தாகும். ஆயினும் அதில் பலாப் பழங்கள் இல்லாமல் இல்லை. பல ஆடுகள் தின்பதற்கு வேண்டிய பலா இலைகளும் அதனிடம் உண்டு. ஆடு பலா இலைகளையெல்லாம் விரைவாகக் கபளீகரம் செய்துவிட்டு, முற்றத்தின் அருகேயே உள்ள சாம்ப மரத்தின் கீழே போய் நிற்கும். அங்கு விழுந்து கிடக்கும் *சாம்பக் காய்களையெல்லாம் தின்னும். பிறகு கழுத்தை உயர்த்தி மரத்தினை உற்றுப் பார்க்கும். இளம் சிவப்பு வண்ணத்தில் மூழ்கிக் கிடக்கும் பெரும் பனித் துளிகளைப் போல, சாம்பங் காய்கள் பச்சை இலைகளினூடே மினுமினுக்கும். என்ன செய்வது? ஆடு தனது இரண்டு பின்னங் கால்களையும் ஊன்றிய வண்ணம், காயை எம்பித் தின்ன முயற்சிக்கும். ஆனால் காயோ அதற்கு எட்டுவது கிடையாது. இந்தச் சாம்ப மரத்தின் தாழ்ந்த கிளைகளை மேலே இழுத்துக் கட்டியது யார்? 

அண்ணாந்து பார்த்தவாறு அது நின்று கொண்டிருக்கையில், பழுத்த பலா இலை ஒன்று பொத்'தென்று விழும். ஆடு முற்றத் துக்கு ஓடிப்போய் அதை நக்கி எடுத்து சுவாரஸ்யமாகக் கடித்துச் சுவைத்து தின்னும். அதற்குள் உம்மாவோ, குஞ்ஞானும்மாவோ * சாம்பங்காய் என்பது கேரளத்தில், அதிலும் தென் கேரளத்தில் கிடைக்கக் கூடியது. காய் புளிக்கும், பழம் இனிப்பாக இருக்கும். 

ை 

Page 22 

பாத்தும்மாவுடைய ஆடு 

ஐசோம்மாவோ ஆனும்மாவோ முற்றத்தைப் பெருக்குவதற்காக, துடைப்பமும் கையுமாக வருவார்கள் ; உடனே ஆடு வீட்டுக்குள் தாவி ஓடி, இங்குமங்குமாகச் சுற்றித் திரியும். 

இது யாருடைய ஆடு? இதுக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்தது யார் ? அது எங்கெல்லாம் சுற்றுகிறது! என்னவெல்லாம் செய்கிறது! இருந்தும் யாரும் எதுவுமே சொல்வதில்லையே! கேள்வி முறை இல்லாத ஒரு வீடு. கேள்வி கேட்பாருமில்லை, செவிமடுப்பாருமில்லை ! 

நான் ஈஸிச் சேரில் சாய்ந்தவண்ணம் காற்றாட வெளியே அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், அறைக்குள் யாரோ காகிதத்தை இழுத்துக் கிழிக்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியே நான் உள்ளே பார்த்தேன். அந்த ஆடு, என்னுடைய படுக்கையின்மேல் ஏறி நின்றுகொண்டு புத்தகத்தைத் தின்று கொண்டிருந்தது! 

பெட்டியின் மேலே ' பால்ய கால சகி', ' சப்தங்ஙள் ' ஆகிய இரண்டு புத்தகங்களுடைய புதிய பதிப்பின் ஒவ்வொரு பிரதி வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் அது, இப்போது 'பால்யகால சகி'யைத்தான் தின்று கொண்டிருந்தது. முன்னங் கால்களைக் கொண்டு புத்தகத்தை மிதித்தவாறு, ஒரே மூச்சில் இரண்டு மூன்று பக்கங்களாக நாக்கினால் நக்கி எடுத்து வாயில் திணித்து தின்று கொண்டிருந்தது. உம்! தின்றுவிட்டுப் போகட்டும்! நல்ல ஆடு தான்...' சப்தங்ஙள்' இருக்கிறதே. அதைத் தின்பதற்கும் துணிச்சல் இருக்கிறதா என்ன! 

ஊஹும்! கொஞ்சங்கூடத் தயங்கவே இல்லை. ' பால்யகால சகி' முழுவதுமாக வயிற்றினுள்ளே போய்ச் சேர்ந்தது. உடனடியாகச் ' சப்தங்களில் ' அது தன் கைவரிசையைக் காட்டத் துவங்கியது. இரண்டு நிமிடங்களுக்குள்ளாகவே அதுவும் ஜீரணிக்கப்பட்டு விட்டது. பிறகு ஆடு என் போர்வையின் மீது கவனத்தைத் திருப்பி, அதனையும் ருசி பார்க்கத் துவங்கியதும் நான் குதித்து எழுந்து அதனருகே சென்றேன் : 

"ஹே அஜ சுந்தரி! தாயே, தயவு செய்து அந்தப் போர்வையை மட்டும் தின்றுவிடாதே! அதன் விலை 50 ரூபாய். அதற்கு வேறு பிரதி கூட என்னிடம் கிடையாது. என்னுடைய வேறு புத்தகங்கள் இன் னும் நிறைய இருக்கின்றன ; வேண்டுமென்றால் அவற்றை யெல்லாம் வரவழைத்துத் தங்கட்கு இலவசமாகவே படைக்கிறேனடி அம்மா. '' 

இப்படிக் கூறியவாறு, ஆட்டைத் துரத்தி வெளியே அனுப்பி னேன். அது, அங்கிருந்து நேரே பலா மரத்தினடிக்கு ஓடிப் 

கால 

Page 23 

பாத்தும்மாவுடைய ஆடு 

போயிற்று. அங்கு இரண்டு மூன்று இலைகள் விழுந்து கிடந்தன. ராணியம்மாள் அவற்றைத் தின்னவாரம்பித்தாள். நான் உம்மாவைக் 

கூப்பிட்டுக் கேட்டேன் : 

“இந்த ஆடு யாருது?'' உம்மா சொன்னாள் : '' நம்ம பாத்தும்மாவுது'' ''ஓஹோ ! அதனாலேதான் அதுக்கு இவ்வளவு சுதந்திரம்!'' பாத்தும்மாவுடைய ஆடு --விஷயம் விளங்கிற்று. பலபலவென்று வெள்ளி முளைக்கும் முன்னரே பாத்தும்மா, அதை அவிழ்த்துவிட்டு விடுவாள். 

"அவுங்க, முற்றத்தைப் பெருக்கிப் பலா எலெங்களையெல்லாம் வெளியே கொட்டிடுவாங்க. அதுக்கு முன்னாலே நீ அங்க போயி, வயித்தை ரொப்பிக்கடா என் கண்ணு!'' என்று அவள் ஆட்டுக்கு உபதேசிப்பாள். அது நேரே சாலை வழியாக வீட்டுக்கு வரும். பிறகு தன் கைவரிசைகளைக் காட்டத் துவங்கும். 

இந்த ஆட்டின் சொந்தக்காரியான பாத்தும்மா என்னுடைய தங்கைதான். அப்துல் காதருக்கு அடுத்தவள். இங்கிருந்து ஒன்றரை பர்லாங் தொலைவில், மார்க்கெட்டின் பின்னாலேதான் அவளது வீடு. கணவன் கொச்சுண்ணிக்கு காலைச் சாயாவும் நா ஸ்தாவும் செய்து கொடுத்து அவனை வேலைமேல் அனுப்பி வைப்பாள். மாண்புமிகு கொச்சுண்ணி சார், பல்வேறு வியாபாரங் களிலும் புகுந்து பார்த்தவர். இப்போது கயிற்றுத் தொழிலில் 

இறங்கியுள்ளார். அந்தி சாயும் நேரத்தில்தான் வீடு திரும்புவார். 

கொச்சுண்ணி புறப்பட்டுப்போன கையோடு பாத்திரங்களை யெல்லாம் தேய்த்து அழகாகக் கவிழ்த்து வைத்த பிறகு, தனது பெண் கதீஜாவையும் கூட்டிக்கொண்டு பாத்தும்மா நேராக இங்கு வருவாள். படா ஸ்டைலாகத்தான் வருவாள். அவளது பின்னால் ஒரு வாலு மாதிரி கதீஜா! ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பதுபோல இருக்கும் அவளது நடை. ஆனால் வீட்டை அடைந்தவுடனேயே பாவனைகளனைத்தும் மாறிவிடும். குரல் சற்றே உயரும். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. உம்மாவின் மூத்த பெண்ணல்லவா? அதனால் கொஞ்சம் கூடுதல் செல்வாக்கு இருக்கத்தானே செய்யும்! 

பாத்தும்மா உள்ளே நுழைந்ததும் நான் எனது காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டேன். பாத்தும்மாவுடைய ஆடு இருக் கிறது. உம்மா இருக்கிறாள். சகோதரர்களின் மனைவிமார் இருக் கிறார்கள், வேறு என்ன வேண்டும்? உள்ளே என்ன நடக்கும்? 

Page 24 

பாத்தும்மாவுடைய ஆடு 

lol 

பாத்தும்மா உள்ளே சென்று தங்கையுடனும் உம்மாவுடனும் அண்ணிமாருடனும் ஓரளவு அதிகாரத்துடன் வினவினாள் : 

" என் ஆட்டுக்கு யாராச்சும் கஞ்சித் தண்ணி கொடுத்தீங்களா?'' உம்மா சொன்னாள் : '' போடீ போ, நீயும் உன் ஆடும் ! எங்க ளுக்கு ஏகப்பட்ட வேலை கிடக்குது!'' 

பாத்தும்மா வீட்டு மருமகள்களிடம் எதெதையோ கேட்டாள் : தங்கையிடம் கடுகடுத்தாள் : ''உன்னே எனக்கு நல்லா தெரியும்டீ.'' இதற்கு ஆனும்மா என்ன பதில் சொன்னாள் என்பது தெரியவில்லை. ஆனால் பாத்தும்மா உம்மாவிடம் தன்னுடைய சிரமங்களை யெல்லாம் கூறி முறையிடத் தொடங்கினாள். சிரமங்கள் சற்றுக் கூடுதல் தாம்! பிறகு நிஷ்டூரத்துடன் சொன்னாள் : ''நீங்க யாரும் எதுவும் செய்ய வேண்டாம். என் ஆடு பெறட்டும். அப்பறம் பாருங்க!'' 

பாத்தும்மாவுடைய ஆடு பிரசவிச்சதும், அவள் எதைச் செய்து காட்டப் போகிறாள் ?... 

சாம்ப மரம் காய்களால் குலுங்கிய வண்ணம் அழகுறக் காட்சி யளித்தது. நான் அதைக் கண்டு ரசித்தவாறே ஈஸிச் சேரில் மேற்குத் திசையில் சாய்ந்து கிடக்கும்போது “ம்யாவ் ம்யாவ்' என்று கத்திய வண்ணம், வீட்டில் அடைக்கலமாகியுள்ள பூனைகள் என்னருகே வந்தன. இதில் ஒன்று தாவி ஏறி என் மடியில் அமர்ந்து கொண்டது. அது ஒன்றும் அவ்வளவு சுத்தமானதாக இருக்க வில்லை . 

அது ஏன் என் மடியைத் தேடி வந்து உட்கார்ந்து கொள்கிறது? முன்னே பின்னே பரிச்சயம் கூடக் கிடையாது. இருந்தாலும் என்னிடம் அன்பு ஏற்பட்டுவிட்டது போலும்! சரி இருக்கட்டும்... இப்படியமர்ந்தவாறு நான் சாலையைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நிறையப் பெண்கள் போவது தெரிந்தது. அவர்கள் எல்லோருமே ஹைஸ்கூல் மாணவிகள். ஆமாம்! அவர்கள் எல்லோரும் ஏன் என்னையே பார்க்கிறார்கள் ? என்னவாக இருக்கும்? 

பாத்தும்மாவின் ஆட்டின் முதுகில் ஒரு காக்காய் வந்து அமர்ந்தது. அதைச் சுமந்தவண்ணம் ஆடு என் முன்னால் வந்து நின்றது. '' பார்த்ததாக நினைவில்லையே'' என்கிற மாதிரி, காக்கை என்னைச் சற்றே சரிந்து ஓரக்கண்ணால் பார்த்தது. 

அருகே சிமெண்ட் திண்ணையிலிருந்து சில கோழிகள் எதை யெல்லாமோ கொத்திக் கொண்டிருந்தன. காக்காய், கோழிக் கும்பலுக்கிடையே பறந்து சென்று, ஒரு மூலையில் அமர்ந்து கொண்டது. ' இங்கு , இதற்கு என்ன உரிமை?' என்கிற மாதிரி 

Page 25 

10 

பாத்தும்மாவுடைய ஆடு 

கோழிகள், காக்கையை நோக்கின ; ஆனால் காக்கை அதைத் துளியும் சட்டை செய்யவே இல்லை. ' இங்கு எனக்கில்லாத உரிமையா?' என்னும் பாவனையில் காக்கையும் கொத்திப் பொறுக்க 

ஆரம்பித்தது. 

இந்தக் கூட்டத்துக்கு ஒரு வெள்ளைப் பூனையும் வந்து சேர்ந்தது. அந்தக் கும்பலில் இருந்த கருங்கோழிக்கு, அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அது பூனையின் தலையில் ஒரு கொத்து கொத்திற்று. பூனை சீறியதே பார்க்கலாம். பிறகு வாலை உயரத் தூக்கி உரோமங் களைச் சிலிர்த்தவாறு, 

'' இந்த வீட்டில் எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பதை இதோ காட்டுகிறேன் பார் ! சொரணை கொஞ்சமாவது இருக்கிறது என்றால் எங்கே நீ மறுபடியும் கொத்து பார்க்கலாம்" என்ற தோரணையில் நின்று நோக்கிற்று. 

" உம்மா பாத்தீங்களா?'' என்று பெருங் குரலெழுப்பிக்கொண்டே என் கடைசித் தம்பியான அபூபக்கர், சலவை செய்து இஸ்திரி மடிப்புக் கலையாத உடைகளுடனும், படிய வாரி மினுமினுக்கும் தலையுடனும் ' கிறீச் கிறீச் ' என்று சத்தமிடும் செருப்புக்களுடனும் இந்தச் சதஸுக்குள் பிரவேசித்தான். அவன் வெறும் அபுவாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தான். ' ஐயா ஒரு டம்பாச்சாரி' என்ற பேச்சும் அடிபட்டு வந்தது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடை மாற்றுவான். அவனிடம் 60 ஜோடி செருப்புக்கள் இருக்கின்றன என்று உம்மா சொல்லியிருக்கிறாள். ஒல்லியாக வெடவெடவென் இருப்பான். ஆயினும் குரல் மட்டும் இடி முழக்கம் செய்வதுபோல இருக்கும். மகா ரோஷக்காரன். நான் இங்கு வந்ததும் அவனை எனது அறையிலிருந்து வெளியேற்றினேன். எனக்கென்றிருந்த அறையிலே, ஐயா , சர்வாதிகாரியாக செங்கோலோச்சி வந்தான். எனது வாப்பா இந்த வீட்டைக் கட்டும்போதே நானும் அப்துல் காதரும் படிப்பதற்காகவே இதனை, ஒரு ஒதுக்குப்புறமாகக் கட்டுவித் திருந்தார். அப்போதே நான் அப்துல் காதரை, அந்த அறையி லிருந்து வெளியே அனுப்பிவிட்டேன். அவன் அதற்குப் பிறகு உம்மாவின் அருகிலேயே படுத்துறங்க ஆரம்பித்தான். இப்போது அவன் தலை முழுவதும் நரைத்துப் போய்விட்டது. பார்த்தால் எனக்கு அவன் அண்ணன் என்றே எண்ணத் தோன்றும். எனது இந்தப் பழைய அறைக்கு இணையாக மற்றொரு அறையை, அவன் இப்போது வீட்டின் மற்றொரு புறத்தில் கட்டியிருக்கிறான். இந்த அறையைத் தான் ஹனீஃபாவும் அவன் பெண்டாட்டி பிள்ளைகளும் 

Page 26 

பாத்தும்மாவுடைய ஆடு 

11 

இரவு படுக்கப் பயன்படுத்தி - வந்தார்கள். அபுவை நான் எனது அறையிலிருந்து வெளியேற்றியதும் அவன் தனது பெட்டிகள், புத்தகங்கள், விளக்கு, படுக்கை சகிதமாக ஹனீஃபாவுடைய அறைக்குத்தான் குடி போனான். அபுவின் குரல் கேட்டதோ இல்லையோ பூனைகள் ஓட்டம் பிடித்தன ; காகங்கள் பறந்தன ; கோழிகள் சிதறி மூலைக்கொன்றாகப் பாய்ந்து ஓடின. பாத்தும்மா வுடைய ஆடு, உட்புறம் பெண்களுக்கருகே ஓடியது; குழந்தைகள் அழுகையை நிறுத்தின. பருந்துகளும் கழுகுகளும் மூச்சுப் பேச்சற்று எங்கோ மறைந்து ஒளிந்துகொண்டன. பெண்களின் ஊர் வம்பும் திடீரென ஓய்ந்தது. வீடே நிசப்தமாகிவிட்டது. அடவுடைய குரல் மேலும் உயர்ந்தது : 

" பெரிய காக்கா இதையெல்லாம் ஏன் அனுமதிக்கிறீங்க? பூனை குழந்தீங்க கோழி காக்கா ஆடு! ஆட்டுக்குத் தீனி போட்டு ஊட்டி வளர்க்க நல்ல இடம் பாத்தாங்க! எல்லாத்துக்கும் நான் ஒரு முடிவு கட்டறேன் பாருங்க - உம்மா, அந்தத் தடிக் கம்பையும் என் உண்டி வில்லையும் இங்கே எடுத்திட்டு வாங்க!'' 

பாத்தும்மா இதைக் கேட்டதும் துயரத்தோடு கூறுவது கேட்டது: "கதீஜா , நம்ம ஆட்டைக் கூப்பிடு. நமக்கு இந்த வீட்டிலே உரிமை ஏதும் இல்லேன்னு நல்லா புரிஞ்சு போச்சு. வா, போகலாம் - அம்மா! நாங்க போறோம்.'' 

அபு கத்தினான் : '' எனக்கும் இந்த வீட்டிலே ஏதாச்சும் உரிமை இருக்கறதா இல்லையாங்கிறதை நானும் பாத்திடறேன். ஹனீஃபா வையும் அவன் பெண்டாட்டி புள்ளேங்களையும் அந்த அறை யிலேந்து வெளியேத்தறதுதான், இன்னிக்கு என்னோட முதல் வேலை! '' 

நானும் இரைந்தேன் : ' அடே முந்திரிக் கொட்டை! இந்த வீட்டிலே இனிமே உன் குரல் கேக்கவே கூடாது, கேட்டுது அவ்வளவுதான். உன் எலும்புகளை யெல்லாம் நொறுக்கிப் போட்டுடு வேன் ஆமாம்! ஜாக்கிரதை! பாக்கறதுக்கு என்னமோ நோஞ்சா னாட்டம் இருக்கறான், கூச்சல் போடறதைப் பாரு ! அடே அபு, வெளியே போகச் சொன்னா, ஹனீஃபாவும் குடும்பமும் எங்கேடா போய் இருப்பாங்க?'' 

அபு மெள்ளச் சொன்னான் : " ஹனீஃபா காக்கா , தன்னோடு எஸ்டேட்லே ஒரு வீட்டைக் கட்டிக்கிட்டுப் போய் இருக்கட்டுமே!'' 

ரொம்ப சரி! அப்படி ஒரு பேச்சும் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. வீடு கட்டும் விஷயமாக ஹனீஃபா என்னிடமும் 

Page 27 

பாத்தும்மாவுடைய ஆடு 

குறிப்பிட்டிருக்கிறான். இரண்டு மைல் தொலைவில், குன்றின் அடிவாரத்தில் ரோடின் அருகில், ஒரு எண்பது சென்ட் நிலம் அவன் வாங்கிப் போட்டிருக்கிறான். அதில் இப்போது நேந்திரம் வாழையும் மாமரங்களும் கொண்ட தோட்டம் போட்டிருக்கிறான். அங்கே ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்குத் தேவையான உபகரணங்களையும் மற்ற உதவிகளையும் அவன் என்னிடமிருந்து எதிர்பார்க்கிறான். தன்னிடம் சல்லிக்காசு கிடையாது என்றும் அவன் என்னிடம் சொல்லியிருக்கிறான். அவன் வெள்ளி முளைக்கும்போதே 4 மணிக்கு எழுந்து, தினசரி நடந்துபோய் வாழைக்கும் மற்றவற்றுக்கும் தண்ணீ ர் பாய்ச்சிய பிறகு, 7 மணிக்கு வீடு திரும்புவான். பிறகு அபியையும் லைலாவையும் கூட்டிக்கொண்டு ஆற்றுக்குக் குளிக்கப் போவான். அப்பாவும் பிள்ளைகளும் மிகவும் அன்யோன்யமாக இருப்பார்கள். அவர்களது மனையில் வீடு கட்டியதும் என்னையும் அவர்களுடன் கூட அழைத்துக்கொண்டு போவதாக லைலாவும் அபியும் சொல்லியிருக்கிறார்கள். அதுபோலவே ஆனும்மாவின் பிள்ளை ஸயிது முகம்மதும், என்னிடம் சொல்லி வைத்திருக்கிறான். அவனும் அவன் உம்மாவும் வாப்பா சுலைமானும் வசிப்பதற்கென, இந்த வீட்டுக்கு அருகாமையிலுள்ள தோப்பில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மர வேலைகளெல்லாம் அநேகமாகப் பூர்த்தி யாகிவிட்டன. செங்கற்களும் மற்ற சாமக்ரியைகளும் கூட வந்து சேர்ந்துவிட்டன. ஹனீஃபாவுக்கு இன்னமும் இதொன்றும் முடிந்த பாடில்லை. 

நான் சொன்னேன் : ''அடே அபு, ஹனீஃபாகிட்டே பணம் ஏதும் இல்லேன்னு தோணுது!'' 

அபு மெள்ளச் சொன்னான் : " ஹனீஃபா அண்ணன் பெரிய கஞ்சன். நிறையப் பணம் வச்சுக்கிட்டு இருக்காரு!'' 

"போடா உனக்கு வேறே வேலை இல்லை.'' 

அவன் ரப்பர் உண்டி வில், உருண்டைக் கற்கள் சகிதமாய்ப் பறவைகளை அடித்து வீழ்த்தப் போனான். 

'' ஆடே., வா. அவன் உன்னை ஒண்ணும் செய்ய மாட்டான் '' என்று ஆட்டுக்கு அபயம் அளித்தவாறே, பாத்தும்மா இந்தப் பக்கம் வந்தாள். அபு தோட்டத்தில் அருகேயே நின்றுகொண்டிருப்பதைக் கண்டதும் அவனைக் கூப்பிட்டு, 

" அடே அபு, நீ அடங்கி ஒதுங்கி வாழக் கத்துக்க. அது போதும். பெரிய அண்ணன் வந்திருக்கறதைப் பாத்தே இல்லே?'' 

Page 28 

பாத்தும்மாவுடைய ஆடு 

13 

'' பாத்தீங்களா பெரிய அண்ணா , என்னெ , ' அடே அபுன்னு' பெரிய அக்கா கூப்பிட்றதை? உம்! பெரிய அண்ணன் வந்திருக்கற தைரியம் அவங்களை இப்படிப் பேசச் சொல்லுது!” 

அபுவினை அடுத்த அக்காளின் அண்ணனான ஹனீஃபாவுக்கும் அக்கா பாத்தும்மா. அவனைவிட எவ்வளவு பெரியவள், அவள் அவனை ' அடே அபு' என்று கூப்பிட்டது அவமானமாகப் போய் விட்டது அவனுக்கு! 

" ஓஹோ, அப்படி யானா உன்னை இனிமே நாங்க 'அபு ஸாஹெப்'ன்னு கூப்பிடறோம்! பெரிய இவரு! சரித்தான் போடா துப்புக்கெட்டவனே!'' என்று நான் சொன்னேன். 

அவன் போனதும், பாத்தும்மா என் அருகே வந்தாள். பிறகு சுற்றுமுற்றும் பார்த்தாள் ; யாருமில்லை. அவள் என்னிடம் ரகசிய மாகச் சொன்னாள் : '' பெரிய காக்கா ! யாருக்கும் தெரிய வேணாம். குறிப்பா ஆனும்மாக்குத் தெரிஞ்சுதோ போச்சு. சண்டைதான். எனக்கு நீங்க பணமா எதுவுமே தர வேணாம். கதீஜாவுக்கு இரண்டு கம்மல் செய்து கொடுத்தாப் போதும்- ஹனிஃபாக்கும் இது தெரிய வேணாம். உம்மாவுக்கு, மூச்! தெரியவே கூடாது என்ன?'' 

நான் மெள்ளக் கேட்டேன் : '' கம்மல் வெள்ளிலே இருக்கணுமா? இல்லே தங்கத்திலயா?'' 

பாத்தும்மா இங்குமங்கும் கண்களைச் சுழலவிட்டவாறு, 

பொன்னால் செய்ததுதான் வேணும். ஆனா, பெரிய காக்கா , இதை யார் கிட்டயும் சொல்லிட மாட்டீங்களே?'' 

''சே சே! பரம ரகசியமா இருக்கும்.'' இந்த விதமாக நான் பாத்தும்மாவுடன் ஒரு ரகஸ்ய ஏற்பாட்டைச் செய்து கொண்டேன். 

“ கம்மல் கொஞ்சம் சீக்கரமாகவே கிடைச்சாத் தேவலை - பாத்தும்மா சொன்னாள். 

'' பார்ப்போம்" என்றேன் நான். இக்கம்மல் விஷயம், ஒரு அவசரப் பிரச்சினையாக எழுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. நான் இங்கு வந்தவுடனே எர்ணா குளத்திலிருந்து 3 சிறிய குடைகளை வரவழைத்திருந்தேன். அவற்றை அப்துல் காதரின் பெண் பாத்துக்குட்டிக்கும் ஹனீஃபாவுடைய மகன் அபிக்கும், ஆனும்மாவின் மகனான ஸயிது முகம்மதுக்குமாக ஆளுக்கு ஒன்று என்ற கணக்கில் கொடுத்தேன். ஆனால் பாத்தும்மா வுடைய மகள் கதீஜாவங்குக் குடை கொடுக்கவில்லை ! பாத்துக் குட்டியும் அபியும் ஸயிது முகம்மதும் கதீஜாவும் அநேக ஒத்த 

Page 29 

14 

பாத்தும்மாவுடைய ஆடு 

வயதுடையவர்கள். விஷமத்திலும் கூச்சலிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் ; அழுவதிலும் அப்படியே. இருந்தும் கதீஜா வுக்குக் குடை கொடுக்கப்படவில்லை! என்ன காரணம்? உண்மை என்னவென்றால், நான் அந்த விஷயத்தை அடியோடு மறந்துபோய் விட்டேன். பரவாயில்லை. அவளுக்குத்தான் தங்கத்தால் செய்த 

இரண்டு கம்மல்கள் கிடைக்கப் போகின் றனவே! 

பாத்தும்மா உள்ளே போய் வீட்டு வேபைகளில் முனைந்திருந்த சமயம் பார்த்து, ஆனும்மா மெதுவாக என்னருகே வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தாள். பாத்தும்மா பள்ளிக்கூடம் போனவள் அல்ல. ஆனால் ஆனும்மா ஸ்கூலுக்குச் சென்று கல்வி கற்றவள். அதனால் இவளது உரையாடல் பாத்தும்மாவுடையது மாதிரி அல்ல. ஆனும்மா மெதுவாகச் சொன்னாள் : 

" பெரிய காக்கா , எனக்கு நீங்க, இனிமே பணமா எதுவும் தர வேணாம். பாத்திரங்க வாங்கித் தந்தாப் போதும். அதுக்கும்கூட இப்போ ஒண்ணும் அவசரம் இல்லே ; நாங்க புது வீட்டுக்குக் குடி போனப்பறம் தந்தாப் போதும். இந்த விஷயத்தை அக்காகிட்டச் சொல்லிடாதீங்க என்ன?'' 

அதாவது சுருக்கமாகச் சொன்னால் பாத்தும்மாவுக்கு இது தெரியக் கூடாது ; அவ்வளவுதான். தெரிந்தால் அவள் என்ன சொல்லுவாள் தெரியுமா? 

''போதுமடி உன் திருட்டுத்தனம்! நீ படிச்சுக் கிழிச்சவ இல்லே? நான் இல்லாத சமயம் பாத்து பெரிய காக்காகிட்டேந்து எல்லாத் தையும் கறந்துகிட்டே இல்லே? 

- இந்தப் பாத்திர விஷயம் காதோடு காதாக ரகஸ்யமாக வைத்திருக்கப்பட வேண்டியதற்கான காரணம் இதுதான்! ஆனும்மாவுக்குப் பாத்திரங்கனா வாங்கித் தருவது, அந்த விஷயத்தை ரகஸ்யமாகவே வைத்திருப்பது, என்னும் நிபந்தனைகளுக்கு நான் உடன்பட்டேன். 

இப்படியாக அமைதிச் சூழ் நிலைக்கு வழிசெய்த திருப்தியோடு நான் இருக்கையில், எங்கிருந்தோ ஒரு கூச்சல் : 'உள்ளாடத்திப் பாறு, உள்ளாடத்திப்பாறு, உன்னை நான் கூட்டிக்கிட்டுப் போமாட்டேன்.'' 

இலலாவுடைய குரல்தான் அது. அவள் யாரை இப்படிக் கூப்பிடு கிறாள் ? வெகு நேரம் குழம்பிக் கொண்டிருக்கும்படியான அவசியம் ஏற்படவில்லை. அவமானம் தாளாமல், அழுது சிவந்த கண்களோடு ஸையது முகம்மது என் முன்னால் ஓடி வந்தான். அவன் பிறந்த 

Page 30 

பாத்தும்மாவுடைய ஆடு 

15 

மேனியனாக இருந்தான். அவன் கோபத்தோடு சொன்னான் : " பெரிய மாமா, லைலாம்மா என்னை உள்ளாடத்திப்பாறுன்னு கூப்பிடறா!'' 

என்னது! ஒரு ஆணைப் பார்த்து ' உள்ளாடத்திப்பாறு'ன்னு கூப்பிடுவதா? அதுவும் ஒரு பொண்ணு! 

" அந்தத் தடிக்கம்பை எடுத்துக்கிட்டு வாடா! '' ஸையிது முகம்மது கம்பை எடுத்து வர ஓடினான். நான் கூப்பிட்டேன் : “ அடீ இலலா, இங்க வா!'' 

அவள் வந்தாள் - அவளும் அம்மணக்கட்டைதான். ஸையிது முகம்மது கம்புடன் வருவது கண்டு அவள் சொன்னாள் : ' பெரி யப்பாவைக் கூட்டிக்கிட்டு போமாட்டேன்.'' 

'வேண்டாண்டி' என்று சொல்லியவாறே ஸயிது முகம்மதிட மிருந்து கம்பை என் கையில் வாங்கிக் கொண்டேன். லைலா உச்ச ஸ்தாயியில் அழத் துவங்கினாள் : 

" அம்மச்சி, அம்மச்சி.'' லைலா தன் அம்மாவை ' அம்மச்சி' என்றுதான் கூப்பிடுவாள். நான் சொன்னேன் : ''நீ உன் அம்மச்சியேக் கூப்பிடு , உன் வாப்பாவைக் கூப்பிடு, உன் உப்புப்பா (தாத்தா)வையும் கூப்பிடு. இவங்க எல்லாரையும் நான் அடிப்பேன்!'' 

உப்புப்பா என்றால் லைலாவின் உம்மாவுடைய வாப்பா. இவர், ஹனீஃபாவுடைய வாழைத் தோட்டத்துக்கு அருகேதான் வசித்து வருகிறார். அந்தப் பக்கத்தில் எங்கோ ஒரு இடத்தில், ரயில் நிலையம் ஒன்றைக் கட்டுவதாக உள்ளனர். அப்போது நிலத்துக்கு நல்ல விலை கிடைக்கும். அதோடு அந்தப் பகுதி முழுவதுமே வசதிகள் பெற்று முன்னேற்றம் அடைந்துவிடும். இதையெல்லாம் முன் கூட்டியே யோசித்த பிறகுதான் லைலாவுடைய உப்புப்பா ஹனீஃபாவைக் கொண்டு, அந்த இடத்தை வாங்கும்படிச் செய்திருக்கிறார். 

லைலா சொன்னாள் : '' அம்மச்சியே அடிக்க வேணாம், அப்பாவை யும் அடிக்க வேணாம். என் உப்புப்பாவையும் அடிக்க வேணாம்.” 

'' அப்படியானா இனிமே நீ யாரையும் 'உள்ளாடத்திப்பாறு'ன்னு கூப்பிடக் கூடாது என்ன?'' " கூப்பிட மாட்டேன். '' "உங்கப்பா வீடு கட்டினாருன்னா ஸயிது முகம்மதைக் கூட்டிக் கிட்டுப் போவியா? பெரியப்பாவைக் கூட்டிக்கிட்டு போவியா?'' 

அவள் கண்ணீரும் கம்பலையுமாகச் சொன்னாள் : ' எல்லாரையும் கூட்டிட்டு போறேன். ”” 

Page 31 

பாத்தும்மாவுடைய ஆடு 

அப்பாடா! ஒரு வழியாக ஒரு வழக்கைத் தீர்த்து வைத்தேன். நஷ்ட ஈடாக இரண்டு மிட்டாய்களையும் ' ஞாலிப்பூவன்' பழத்தில் ஒன்றையும், ஸயிது முகம்மதுக்குக் கொடுத்தேன். நேந்திரம் பழம், தக்காளி, கண்ணன் பழம் (வாழைப் பழத்தில் ஒருவகை), அன்னாசிப் பழம், ஞாலிப்பூவன், மிட்டாய் - இதெல்லாம் எப்போதுமே என்னிடம் கையிருப்பில் இருக்கும். இவற்றில் மிட்டாய்கள் மட்டுமே நான் காசு கொடுத்து வாங்கியவை; அதுவும் குழந்தைகளின் 

அழுகையை நிறுத்துவதற்காகவே இவற்றை வாங்கி வைப்பேன். எனது தம்பிமாரும் கொச்சுண்ணியும் சுலைமானும் மற்றவற்றை வாங்கித் தருவார்கள். ஆரோக்யத்துக்காக நான் நிறைய பழங்கள் தின்ன வேண்டியது அவசியமாக இருந்தது. அவற்றையெல்லாம் முன்பு நான் மேசையின் மேலேயே வைத்திருப்பது வழக்கம். ஒரு நாள், ஸயிது முகம்மது பெட்டிமீது ஏறி நின்றவாறு, இவற்றை எம்பி எடுத்துத் திருடித் தின்றுகொண்டிருப்பதை நான் பார்த்துவிட்டேன் கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டதில் ஸயிது முகம்மதுக்கு மிகுந்த துக்க மேற்பட்டுவிட்டது. அவன் குமுறி அழுதான். அவன் மீண்டும் இம்மாதிரி அழுவதற்கு ஒரு வாய்ப்புத் தரலாகாது என்பதற்காக, இப்போதெல்லாம் நான் பழங்களைப் பெட்டிக்குள் வைத்து பத்திரப் படுத்தி வருகிறேன். ஸயிது முகம்மது, மிட்டாயையும் பழத்தையும் தின்பது கண்டு லைலாவுக்கு அழுகை அழுகையாக வந்தது. அவளுக்கும் இரண்டு மிட்டாய்களும் ஒரு பழமும் கொடுத்தேன். மோப்பம் பிடித்து வந்த ஆரீஃபாவுக்கும் இதுபோலவே கொடுத் தேன். ஆளுக்கு இரண்டு வீதம் சுபைதாவுக்கும் ரக்ஷதுக்கும் கூட மிட்டாய்களைக் கொடுத்து அனுப்பினேன். பிறகு ஆனும்மாவை விட்டு, ஒரு கோப்பைச் சாயா வரவழைத்துத் தருமாறு செய்து, ஒரு பீடியையும் புகைத்தவாறு, நிம்மதியாகச் சாய்வு நாற்காலியில் கிடந்தேன். 

அப்போது என் உம்மா என்னருகே வந்தாள். கிழவிக்கு வயது அறுபத்தியேழோ எழுபத்தியேழோ இருக்கலாம். இன்னும் ஒரு பல் கூட விழவில்லை. விடியற்காலை 4 மணிக்கு எழுந்துவிடுவாள் ; பிறகு வாய்க்கால்களில் ஊறப் போட்டிருக்கும் தென்னை ஓலைகளை எடுத்து வந்து முடைவாள். அப்புறம் அவற்றையெல்லாம் முற்றத்தில் பிரப்பம் பாய்களில் பரப்பி உலர வைப்பாள். ஆதவன் உதிக்கையிலேயே அவை உலர ஆரம்பிக்கட்டுமே! அதன் பிறகு வீட்டுக்குத் தேவை யான தண்ணீரை இழுத்து நிரப்புவாள். இரண்டு கைகளிலுமே ஒவ்வொரு பெரிய குடமாகத் தூக்கி வருவாள். பாத்தும்மா ஆனும்மா 

Page 32 

பாத்தும்மாவுடைய ஆடு 

ஐசோம்மா குஞ்ஞானும்மா எல்லோரையும் அதட்டி உருட்டியும், கூச்சலிட்டும் வேலை வாங்குவாள். இரவு 10 மணிவரை, ஓய்ச்ச லில்லாதபடி வேலை இருந்துகொண்டே யிருக்கும். 

பாத்தும்மா எல்லா இரவுகளும் இங்க தங்குவது கிடையாதுதான். ஆயினும் மூன்று பெண்கள் வீட்டில் இருக்கிறார்களே ; அம்மா எதற்காக உழைத்துச் சிரமப்பட வேண்டும்? வெறுமே ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கக்கூடாது? இந்த கேள்விகளுக்கெல்லாம் உம்மாவிடம் பதில்கள் தயாராகவே இருக்கும், ''இவங்களுக் கெல்லாம் ஒண்ணுத் தெரியாது. வீட்டை தியாகம் பண்ண இவங் க'ளுக்கு சாமர்த்தியமே போதாது; அதை அவங்க கத்துக்கிடலை. '' ரொம்ப சரி. அவங்க அதையெல்லாம் கத்துக்கட்டும்! பொறுப்பை அவங்க கையிலே ஒப்படைச்சிட்டு நிம்மதியா இருக்கக்கூடாது? அப்போதும் பதில் தயார் தான். 'உனக்கு வீட்டைப் பத்தி என்ன தெரியும்? ஒண்டிக்கட்டை , மூணுசாண் வயறு. '' 

இதிலும் நான் தோற்றுப் பின் வாங்கவில்லையென்றால் உம்மா சொல்லுவாள் : ' அவுங்களுக்கெல்லாம் புள்ளெங்க இல்லே? 

அவங்களை யாரு பாத்துப்பாங்க?'' 

நான் சொல்வேன் : " ஏன்? ஒருத்தி ஏழந்தைகளை பாத்துக் கறது. மத்தவங்க சோலி பாக்கற்து.'' 

'' இத பாரு. உனக்கென்ன, நீ எது வேணா பேசலாம். ஒத்தக் கட்டை , முச்சாண் வயிறு. ஆமாம், எனக்குக் கொஞ்சம் பணம் குடேன்.'' 

எங்களுடைய உரையாடல் எப்போதும் இறுதியில் இந்தப் பண விஷயத்தில்தான் வந்து நிற்கும். எனது ஆரோக்கியத்துக்கு அது அவ்வளவு நல்லதுமல்ல. ஆகையால் உம்மா, எதைச் சுமந்தாலும் சரி, எதையாவது இழுத்துக்கொண்டு போவதைப் பார்த்தாலும் சரி, நான் கண்டும் காணாததுபோல கம்மென்று இருந்து விடுவேன். அம்மா பணம் கேட்கும்படியான ஒரு நிலையை ஏன் வீணாக உண்டு பண்ண ணும்? 

உம்மா வந்துகொண்டே மெள்ளக் கேட்டாள் : '' அடே, எனக்கு ஒரு பத்து ரூபா கொடு, '! 

உம்மாவுக்கு உபதேசம் ஏதும் செய்ய ஆரம்பித்து, அதன் வாயி லாகத் துவங்கும் எங்களது உரையாடல், இறுதியில் பணம் கேட்பதில் வந்து நிற்கும்படியான தவறு எதையும், இப்போது, நாம் செய்யவில்லையே? என்ற பாவனையில் நான் உம்மாவைப் பார்த்தேன். உம்மா மெதுவான குரலில் தொடர்ந்தாள் : '' அப்துல் காதருக்குத் 

பா -2 

Page 33 

18 

பாத்தும்மாவுடைய ஆடு 

தெரிய வேணாம். ஹனீஃபாவுக்கும் தெரிய வேணாம். ஆனும்மாவும் பாத்தும்மாவும் கூட அறிய வேணாம். ” 

நான் மிகமிக ரகஸ்யமாகக் கேட்டேன் : " குஞ்ஞானும்மாவும் ஐசோம்மாவும் தெரிந்துகொள்வதில் தடையில்லையே?" 

உம்மா பொய்க் கோபத்துடன் சொன்னாள் : ''இதபாரு கொடுக்கற துன்னா கொடு. யாருக்கும் தெரிய வேணாம்.'' 

நானும் கொஞ்சம் கோபித்துக்கொண்டே கேட்டேன் : '' நான் இங்கே வந்த பிற்பாடு எத்தனை ரூபா கொடுத்திருக்கறேன் இந்த வீட்டிலே? பகிரங்கமாயும் ரகஸ்யமாயும் நீங்களே எத்தனை ரூபா வாங்கிட்டு போயிருக்கீங்க?'' 

உம்மா ரகஸ்யமாகச் சொன்னாள் : '' நீ எதுவுமே தர்லைன்னு நான் சொல்லலையே? இப்ப எனக்கு ஒரு பத்து ரூபா வேணும். அவ்வளவு தான்!'' 

'' நான் கொடுத்த பணமெல்லாம் எங்கே போயிடுச்சு ? அதிக நாள் கூட ஆகலியே. கொஞ்ச நாள் முந்தித்தானே கொடுத்தேன்? எங்கே அந்த ரூபாயெல்லாம்? '' 

உம்மா மிகமிக மெதுவாகச் சொன்னாள் : ''இந்தா மெள்ளப் பேசு! எல்லாத்தையும் அப்துல் காதர் வாங்கிட்டுப் போனான்." 

அவனுக்குன்னு தனியா நான் ரூபாய் கொடுத்திருந்தேனே? நொண்டி! அவன் இங்கே வரட்டும் சொல்றேன். '' 

சின்ன வயதில் அப்துல் காதருக்கு முடக்குவாதம் வந்தது. வாப்பா ஆயிரக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து வைத்தியம் பார்த்தார். இறுதியில் காலில் ஒரு ஊனத்தோடு வியாதி குணமா யிற்று. வலது கால் மட்டும் சூம்பி இருக்கும். மற்றபடி அவன் பயில்வானாகவே இருந்தான். இரும்புக் கழியை ஊன்றியவாறுதான் 

அவன் நடப்பான். 

உம்மா மெள்ளச் சொன்னாள் : '' அவனை எதுவும் கேக்கவேணாம். இந்தத் தோப்பு துறவுங்களையும் வீட்டு நிர்வாகத்தையும் அவன் தானே கவனிச்சுக்கிட்டு வர்ரான்? அவன் இல்லேன்னா அப்பத் தெரியும் சங்கதி! உனக்கென்ன, ஒண்டிக்கட்டை. முச்சாண் வயிறும் தானுமா நீ ஊர் சுத்தப்போனே. கண்டகண்ட எடங்களுக் கெல்லாம் போயி, நீ எத்தனை ரூபா செலவழிச்சே?” 

" அதுக்குத்தான் பரிகாரம் செய்துட்டேனே! இங்கே நானும் நிறையப் பணம் செலவழிச்சிருக்கேன். '' 

“ மெள்ளப் பேசேன். இல்லேன்னு இங்கே யாரும் சொல்லலை. சரி சரி, காதும் காதும் வெச்சாப்பலே எனக்கு நீ ஒரு பத்துரூபா கொடு.'' 

Page 34 

பாத்தும்மாவுடைய ஆடு 

'' இதுக்கு முன்னாலே, யாருக்கும் தெரியாம, நான் உங்ககிட்ட தந்த பணத்தையெல்லாம் அப்துல் காதர் எப்படி வாங்கிக்கிட்டான்? இந்த ரகஸியம் அவனுக்கு மட்டும் எப்படித் தெரிஞ்சுது?'' 

“ மெள்ளமாப் பேசு. அபியும் பாத்துக்குட்டியும் போய் சொல்லிக் கொடுத்திருக்காங்க. '” 

நான் மிகவும் தாழ்ந்த குரலில் சொன்னேன் : '' உம்மா, உங்க கிட்ட நான் ஒரு ரகஸியம் சொல்லப் போறேன். ஆனா, இதெ நீங்க யாருகிட்டேயும் போயி சொல்லி வைக்காதீங்க. என்கிட்ட இப்ப, ஆகமொத்தம் ஒரே ஒரு அஞ்சு ரூபா நோட்டு இருக்குது, அவ்வளவு தான். வேறே தம்படிக் காசு கிடையாது!'' 

உம்மா உடனே சொன்னாள் : ''அதை இப்படி எடு.'' நான் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அறைக்குள்ளே சென்று ஐந்து ரூபாய் நோட்டையும் ஒரு நேந்திரம் பழத்தையும் எடுத்து வந்தேன். பழத்தின் வாசனையை மோப்பம் பிடித்துவிட்ட பாத்தும்மாவுடைய ஆடு, என் முன்னால் ஆஜராகியது. பழத்தை தோலுரித்துவிட்டு நான் தின்றேன். நான் எதையோ தின்றுகொண்டிருப்பதைக் கண்டு, உம்மாவின் அபயத்துக்குப் பாத்திரமாகியுள்ள பூனைகள் வந்து சேர்ந்தன. உம்மாவின் மேற்பார்வையில் வளர்ந்துவரும் கோழிகளும் வந்தன. நான் பழத்தின் தோலைப் பாத்தும்மாவுடைய ஆட்டுக்குக் கொடுத்தேன். ஆடு மேலும் எதிர்பார்த்து அங்கேயே நின்றுகொண்டிருந்தது. நான் இங்கும் அங்கும் கண்களை ஓட விட்டேன், யாருமில்லை. மனித வாடையே இருக்கவில்லை. கோழி களும் பாத்தும்மாவுடைய ஆடும் பூனைகளும் மட்டுமே காணப் பட்டன. நான் பரம ரகஸியமாக அந்த ஐந்து ரூபாய் நோட்டை , உம்மா மடியில் போட்டேன். உம்மா சுற்றுமுற்றும் பார்த்தாள் ஊஹும். மனித நெடி மருந்துக்கும் இல்லை. உம்மா அதை நன்றாக மடித்துத் துணியின் ஓரத்தில் முடிந்து ரவிக்கைக்குள்ளாக செருகிக் கொண்டாள். பிறகு ஏதுமே நடவாததுபோல அமர்ந்துகொண் டிருந்தாள். நான் கேட்டேன். 

''உம்! உம்மா அப்பறம் என்னெல்லாம் விசேஷம் சொல்லுங்க?'' உம்மா சொன்னாள் : '' அடே எனக்கோ ரொம்ப வயசாயிடுச்சி. இன்னிக்கோ நாளைக்கோ எப்ப சாவேன்னு தெயரிலை. எனக்கு ஒரே ஒரு ஆசை மட்டும் இருக்குது. உனக்கொரு கல்யாணமாகி உங்கூட எனக்கு இருக்கணும்! '' 

நான் இரைந்து கத்தினேன் : ''எங்கயாவது போயி அக்கடான்னு நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சா, விடமாட்டாங்க போலிருக்குதே! 

Page 35 

20 

பாத்தும்மாவுடைய ஆடு 

பாத்தும்மா ! ஆனும்மா ! ஓடிவாங்க! என் பெட்டியையும் படுக்கையையும் எடுங்க சொல்றேன். கூப்பிடுங்க ஒரு கூலியாளை!'' 

அவர்கள் இருவருமே ஓடிவந்தார்கள். “என்னம்மா இதெல்லாம்?'' என்று ஆனும்மா கேட்டாள். 

பாத்தும்மா சொன்னாள் : '' பெரிய அண்ணாகிட்டே, உம்மா பணம் ஏதேச்சும் கேட்டிருப்பா!'' 

நான் உடனே சொன்னேன் : " அதெல்லாம் ஒண்ணுமில்லே.'' உம்மா எழுந்து உட்புறம் போனாள். '' என்னம்மா?'' என்று கேட்டவாறு அவர்களும் உம்மாவின் பின்னே சென்றார்கள். 

அப்பாடா! என்று நான் சற்று நிம்மதியோடு உட்கார்ந்து கொண்டேன். மீண்டும் ஆனும்மாவை விட்டு ஒரு சாயா தருவித்துக் குடித்தேன். பிறகு ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டேன். 

அப்போது பாத்தும்மாவின் ஆடு முற்றத்தில் நின்றவாறு, வராந்தாவில் எனக்கருகே வைக்கப்பட்டிருந்த வத்திப்பெட்பை , நாக்கை நீட்டி எடுத்துத் தின்ன முயற்சி செய்வதைப் . த்தேன். உடனே நான் அதை எடுத்து. தீக்குச்சிகளை எடுத்துட்டு காலிப் 

பெட்டியை அதனிடம் நீட்டினேன். 

பாத்தும்மாவின் ஆடு, அதை நன்றாக ரஸித்துச் சுவைத்துத் தின்றது. அது அங்கிருந்து நகராமல் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு நான் கூறினேன். “ஏ, அஜசுந்தரி! தீக்குச்சிகள் எனக்குத் தேவையாக இருக்குது. ஆனால் வேறு காலித தீப்பெட்டிங்க எங்கிட்ட நிறைய இருக்குது. தரட்டுமா?'' 

இந்தச் சமயத்தில் பாத்தும்மா , கொஞ்சம் கஞ்சித்தண்ணீர் கொண்டு வந்து அதற்குக் கொடுத்தாள். நான் அவளிடம் சொன்னேன் : ''பாத்தும்மா உன் ஆடு, என் இரண்டு புத்தகங்களைச் சாப்பிட்டிடுச்சு! '' 

நான் ஏதோ செய்யத் தகாத பெருங்குற்றம் ஒன்றைச் செய்து விட்டதுபோல பாத்தும்மா கூறினாள் : '' அப்படியெல்லாம் சொல்லா தீங்க பெரிய காக்கா-என் ஆடு அப்படியெல்லாம் ஒரு நாளும் செய்யாது” என்று கூறிய பிறகு, குரலைத் தாழ்த்தி “கம்மல் விஷயம் என்ன ஆச்சு?'' என்றாள். 

நானும் குரலைத் தாழ்த்தி, " நினைவிருக்குது'' என்றேன். அவள் இன்னும் கொஞ்சம் குரலை அடக்கி, '' யாருக்கும் தெரிய வேணாம்" என்று கூறியவாறே பாத்திரமும் கையுமாக உள்ளே சென்றாள். 

Page 36 

பாத்தும்மாவுடைய ஆடு 

21 

ரஷீதும், சுபைதாவும் அழுது கொண்டிருக்கிறார்கள். இதற்கு அனுதாபம் தெரிவிப்பதுபோல ஆரீஃபாவும் ஸயிது முகம்மதும் லைலாவும் அவர்களுடன் சேர்ந்து அழ ஆரம்பித்துள்ளனர். இடை யிடையே லைலா '' அம்மச்சியே கூட்டிட்டுப் போமாட்டேன் '' என்றும் கூறிக் கொண்டிருக்கிறாள். இப்படியிருக்குங்காலை, அட ஒரு கடிதமும் கையுமாக அங்கே வந்தான். கடிதத்தை என்னிடம் தந்துவிட்டு, ஒரு தடிக்கம்பைக் கையில் எடுத்துக்கொண்டு ''என்ன விஷயம்'' என்று இரைந்தபடி உள்ளே போனான். உடனே எல்லோரும் அழுகையை நிறுத்தினார்கள். வீடு நிசப்தம்! 

நான் கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். தொலைவில் சென்னையி லிருந்து அக்கடிதம் வந்திருந்தது. '' மாண்புமிகு எம். கோவிந்த னுடைய மனைவி டாக்டர் பத்மாவதி அம்மாவுக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம்.'' 

தாயும் சேயும் நலமோடு இருக்கப் பிரார்த்தித்தவாறு, நான் உடனே அதற்கு ஒரு பதில் எழுதினேன். பாலாவுக்கு ஒரு தம்பிப் பாப்பா கிடைத்திருப்பதை ஒட்டி, அவளுக்கு எனது வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொண்டேன். அவளிடம் உள்ள இரண்டரை ரூபாய்ச் சொத்தை, பாங்கியில் போட்டு வைக்கும்படி அவளிடம் கூறுமாறு அவளது தந்தைக்கு உபதேசம் செய்தேன். ஸ்ரீ எம். கோவிந்தனுக்கு, அதி உன்னதமான அப்பாப் பதவி இரண்டாவது முறை கிடைத்திருப்பதற்காக அவரைப் பாராட்டினேன். அதோடு கூட ஏ. நாராயணன் நம்பியார், எம்.ஏ., கே. ஸி. எஸ். பணிக்கர், டேவிட் ஜார்ஜ். ஜானம்மா, பாருக்குட்டி அம்மா, கே. ஏ. கொடுங்கல்லூர் , கே. பி. ஜி. பணிக்கர் (கோபகுமார்), சரத்குமார், ராம்ஜி, ஆர். எம். மாணிக்கத்தெ முதலிய எனது சென்னை நண்பர்களைப் பார்த்தால், நான் இப்போது எனது உம்மாவோடு தங்கியிருக்கும் விவரத்தைத் தெரிவிக்குமாறும், எல்லோரது சவுக்கியம் பற்றியும் நான் விசாரித்ததாக அவர்களிடம் கூறும்படியும் கேட்டுக் கொண்டு, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் எனது வாழ்த்துக்களை மறுபடியும் ஒரு முறை தெரிவித்துவிட்டுக் கடி தத்தைப் பூர்த்தி செய்து கவரில் போட்டு மிக நன்றாக ஒட்டி, அட்ரஸ் எழுதி அபுவைக் கூப்பிட்டுக் கொடுத்துவிட்டு கொண்டுபோய்ச் சீக்கரம் போஸ்ட் பண்ணுடா '' என்று ஆணையிட்டபோது, எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது : 

'' நில்லுடா '' என்று சொன்னேன். '' உன்னைப்பத்தி நிறைய புகாருங்க என் காதுக்கு வருது. அப்துல் காதர் கடையிலேந்து 

Page 37 

பாத்தும்மாவுடைய ஆடு 

பணத்தையெல்லாம் எடுத்து கண்டவங்களுக்கும் நீ கடன் கொடுக்கறே. கண்டகண்ட சஞ்சிகைகளுக்கெல்லாம் நீ ஏஜென்ஸி எடுத்திருக்கறே. யாரையும் லட்சியம் செய்யறதில்லைன்னு சொல் றாங்க. நிசந்தானா?'' 

எல்லாத்துக்கும் மொத்தமாக அவன் பதில் சொன்னான் : " என்னைக் கண்டாத்தான் யாருக்குமே பிடிக்காதே!" 

நான் வேறு ஏதும் சொல்லுமுன்பாக அவன் சொன்னான் : "பெரிய காக்கா வந்தவுடனே பாத்தீங்களா? அக்காமாருங்க, அண்ணீங்க உம்மா எல்லாருமா இந்த முற்றம், தோப்புத் துறவுங்க எல்லாத்தையும் நல்லாப் பெருக்கிக் கூட்டி, குப்பை எல்லாத்தையும் தீயிட்டுக் கொளுத்தி, எவ்வளவு சுத்தமா வைச்சிருக்காங்க பார்த் தீங்களா? முன்னாலே நான் சொன்னபோது -யாருமே லட்சியம் பண்ணலை. ' வேணும்னா நீயே பெருக்கிக்கடா 'ன்னு சொன்னாங்க. இப்ப மட்டும் என்னவாம்? பெரிய காக்காகிட்டேந்து பணம் பறிக்கறதுக்காகத்தான் இதெல்லாம். பணக்காரன் வந்தவுடனே அவரைச் சந்தோஷப்படுத்தறத்துக்காக, அவங்க இதெல்லாம் செய்யறாங்க. நான் என்ன பணக்காரனா? இல்லே எங்கையிலே காசு பணம்தான் இருக்கா? இரண்டும் கிடையாது. பெரியண்ணா, இந்த முற்றத்தை நாம இன்னும் அழகா மாத்தியமைக்கணும் ; கூரையை மாத்தி ஓடு போடணும்.'' 

நான் கேட்டேன் : “நாமன்னு சொன்னால்?'' " பெரிய காக்கா முதல் போடணும். என்கிட்டே ஏது பணம்?” அவன் உணவருந்திவிட்டு, கடிதத்தை எடுத்துக்கொண்டு போ னான். அவன் கடைக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் அப்துல் காதர் வீட்டுக்கு வரணும் அவன் போன கையோடு ஹனீஃபா வந்தான். 

ஹனீஃபா ராணுவத்தில் இருந்தவன். அதைவிட்டு வந்தபிறகு, தையல் கடை ஒன்றை ஆரம்பித்தான் ; கூடவே சைக்கிள் கடையும் நடத்தி வந்தான். ஹனீஃபா சாதாரணமாக எப்போதுமே ஸ்டைலாகத்தான் இருப்பான். டபிள் வேஷ்டி, ஜிப்பா, நன்கு வாரிவிடப்பட்ட தலை, கிளீன் ஷேவ் இத்யாதி.... ஆனால் இப்போதோ ஒரு வேட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருந்தான். இதில் ஏதோ ரகசியம் இருக்கத்தான் வேண்டும். நான் ஒன்றும் பேசவில்லை. ஏதாவது சொல்லப்போய்....! 

ஆனால் அவனே ஆரம்பித்தான் : “ பெரிய காக்கா, நான் என் எடத்தை வித்துடலாம்னு நினைக்கறேன். உங்களுக்குன்னா அதைக் குறச்ச விலைக்கே தர்றேன்!'' 

Page 38 

பாத்தும்மாவுடைய ஆடு 

23 

" அதை இப்போ எதுக்காக விக்கறே?" "பணமில்லே அதனாலெதான். இருந்திச்சின்னா ஒரு ஷர்ட்டை மாட்டிக்கிட்டிருக்க மாட்டேனா?'' 

"எடத்துக்கு என்ன விலை எதிர்பாக்கறே?” "பெரிய காக்காங்கிறதுக்காகக் குறச்ச விலைக்குத் தர்றேன். பத்தாயிரம் ரூபா கொடுங்க." 

பத்தாயிரம் ரூபாய்! ஹனீஃபா அந்த இடத்தை என்ன விலை கொடுத்து வாங்கினான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் !-- நான் பேச்சை மாற்றினேன் ; நான் கேட்டேன் : 

''ஆமாம், இப்ப வீட்டுச் செலவுக்குன்னு நீ எவ்வளவு கொடுக்கறே?'' 

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஹனீஃபா வீட்டுச் செலவுக்குத் தன் பங்குக்குக் கொடுத்து வந்தது, தினசரி இரண்டு அணாதான். அவனுக்கும் அவனது மனைவிக்கும் இரண்டு குழந்தை களுக்கும் தினசரி சாப்பாடு மற்றும் சாயா வகையறாக்களுக்கெனக் கொடுத்து வந்தது. இந்த இரண்டே அணாத்தான். அப்போது அவன் யாருக்கும் படுக்கை ஏதும் வாங்கியிருக்கவில்லை. எண்ணெ யும் சோப்பும் வாங்கி வந்ததே கிடையாது. இதெல்லாம் கூட, அவன் தந்த அந்த இரண்டணாவிலுட்பட்டவை. அப்துல் காதர் இதற்காக அவனைத் திட்டுவான். ஆயினும் அவனுக்கு வெட்கம் மானம் சூடு சுரணை எதுவுமே கிடையாது. அதிகம் பேசினால் 

அவன் சொல்லுவான் : 

' நான் பட்டாளத்துக்குப் போயிடறேன். சர்க்காருக்கு என் சேவை தேவையாக இருக்குது!'' 

இருந்தாலும், அன்று நான் தலையிட்டு இருவருக்குமிடையே பொது உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தி வைத்தேன். இரண்டணாவை நான் நாலணாவாக்கினேன். படிப்படியாக அது பன்னிரண்டணாவரை உயர்ந்து போயிற்று. நான் வீட்டைவிட்டுச் சென்ற பிறகு, ஹனீஃபா அதைப் படிப்படியாகக் குறைத்து இப்போது பழையபடி இரண்டணாவோ என்னவோ தான் கொடுத்து வருவதாகக் கேள்வி. ஹனீஃபாவுக்கு இப்போது இன்னுமொரு குழந்தை வேறு கூடியிருக்கிறது ; ஆகையால் செலவுக்குக் கொஞ்சம் அதிகம் தரும்படிக் கேட்பதற்கான நியாயமும் இருக்கிறதே. ஆயினும் என்னுடைய கேள்விக்கான பதில் அல்ல அவன் தந்தது; அவன் சொன்னான் : 

Page 39 

பாத்தும்மாவுடைய ஆடு 

“ சின்னக் காக்காவின் கொடுமை காரணமா உயிர் வாழறதே சிரமமா இருக்குது." 

"ஏன்? அப்துல் காதர் உன்னை என்ன கொடுமை படுத்தி 

னான்?" 

" ஒரு நோட்டுக் கத்தையோட என் கடைக்குள்ளார வந்தாரு. அங்கே பெரிய மனுஷங்க பலபேரு அப்போது உக்காந்து கிட்டிருந் தாங்க. அப்புறமா , ' பாத்தியாடா 'ன்னு சொல்லி அந்த நோட்டுக் கட்டை என் முகத்து மேலேயே விட்டெறிஞ்சிட்டு, ' பணத்தை வீசிப் பணத்தை எடுக்கணும் புரியுதா?"ன்னு சொன்னாரு. அப்பறம் அங்கேந்து நொண்டி நொண்டி இறங்கிப்போனாரு. நான் வெக்கத்தாலே குன்னிப் போயிட்டேன். நான் பெரிய காக்காவுக்கு நிதம் நிதம் பீடி வாங்கித் தறேன் இல்லே? தினசரி தீப்பெட்டியும் வாங்கித் தரேன் இல்லே? இப்படியெல்லாம் பணத்தை வீசியும் என் பணம் மட்டும் ஏன் பணத்தை இழுத்துக்கிட்டு வர மாட்டேங்குது?'' 

நியாயம்தான். இருந்தாலும் நான் சொன்ன பதில் இந்தக் கேள்விக்கானது அல்ல. நான் சொன்னேன் : 

"இப்போ ரஷீது வேறே அதிகப்படியா இருக்கானேடா? நீ ரேஷன் வாங்கறதுக்குன்னு எவ்வளவு கொடுக்கறே? 

அவன் உடனே இதற்குச் சொன்ன பதில் : '' நான் பட்டா ளத்துக்குப் போயிடறேன். சர்க்காருக்கு என் சேவை தேவையா இருக்குது.'' 

அவன் கோபத்தோடு உள்ளே போய்ச் சாப்பிட்டு விட்டு, தையற் கடைக்குப் போனான். 

நான் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, பாத்தும்மாவுடைய ஆடு வராந்தாவுக்கு வந்து என்னுடன் கூட உணவருந்த ஆயத்த மாகியது. நான் உடனே இரைந்தேன் : ' பாத்தும்மா. ஓடி வா!'' 

பாத்தும்மா ஓடி வந்து அதனை முற்றதுக்கு இழுத்துக்கொண்டு போனாள். நான் சொன்னேன் : '' அதைக் கயித்தாலே கட்டிப் போடனும்." பாத்தும்மா சொன்னாள் : '' கட்டிப் போடறது அதுக்கு பிடிக்காது பெரிய காக்கா.'' 

விளக்கு வைக்கும் நேரத்தில் கொச்சுண்ணி வந்தான். சில சமயங் களில் அவன் இரவில் இங்கேயே தங்குவதும் உண்டு. என்னருகே தான் படுப்பான். எனக்கு மறுபக்கத்தில் உம்மா. கொச்சுண்ணியின் அருகே அபு ஹனீஃபா, அவன் குடும்பத்தாரோடு வீட்டின் இந்தப் பக்கமுள்ள அறையில் தூங்குவான். அப்துல்காதரும் அவன் 

Page 40 

பாத்தும்மாவுடைய ஆடு 

25 

குடும்பத்தவரும் வீட்டினுள்ளே உள்ள அறையில் படுப்பார்கள். வராந்தாவில் கோணித் தடுப்புக்குள்ளே சுலைமானும் அவன் குடும்பமும். கொச்சுண்ணி இரவில் இங்கு தங்காதபோது, குடும்பத் துடன் தன் வீட்டுக்குப் போவான். தென்னை ஓலையினால் ஆன நெருப்புப் பந்தத்தை ஏந்தியவாறு கொச்சுண்ணி முன்னே செல்ல, அந்த வெளிச்சத்தின் பின்னால் பாத்தும்மா போவாள். ஒரு வால் போல, பத்து வயதான கதீஜா பாத்தும்மாவின் பின்னால். அவளைத் பின்தொடர்ந்து ஆடு. 

பாத்தும்மாவுடைய ஆட்டின் குறும்புத்தனங்கள் காலையிலிருந்தே துவங்கி விட்டன. சுமாராக 8 மணி இருக்கலாம். இடுப்பில் ஒரு சிறு துண்டுடன், தலையிலும் உடம்பு முழுவதிலும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு கசரத் பழகிக்கொண்டிருந்தேன். அப்போது முற்றத்தில் குழந்தைகளின் கூச்சல் கேட்டது. " உள்ளாடத்திப்பாறு, உள்ளா டத்திப்பாறு!'' 

" வாலைப்பிடி! வாலைப்பிடி!'' "ஒண்ணுக்குப் போறது பாரு!'' " கொம்பைப் பிடி! கொம்பைப்பிடி ! '' விஷயம் என்ன? ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய சங்கதி ஏதுமில்லை. பாத்தும்மாவுடைய ஆடு, அபியுடைய அரை நிஜாரின் முன்பக்கம் முழுவதையும் தின்றுவிட்டிருந்தது. மீதமிருந்ததை வாயினால் இறுகக் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. அபி, ஆட்டின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தான் ; பாத்துக் குட்டி வாலைப்பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள்; ஸயிது முகம்மது கொம்பைப் பிடித்தவண்ணம் நின்றான். ஆரீஃபா பயத்துடன் சற்றே விலகி நின்று கொண்டிருந்தான். ரஷீதும் சுபைதாவும் எதிலுமே அக்கறையின்றி, கட்டை விரல்களை வாயிலிட்டுச் சப்பிய படி முற்றத்தில் இருந்தார்கள். லைலா ஆட்டின் வயிற்றை இறுகப் 

Page 41 

26 

பாத்தும்மாவுடைய ஆடு 

பற்றியபடி அதனைத் திட்டிக் கொண்டிருந்தாள். "உள்ளாடத்திப் பாறு, உள்ளாடத்திப்பாறு!'' 

நான் இடுப்பில் பெரிய சவுக்கத்தைச் சுற்றிக்கொண்டு, அறையி லிருந்து வெளிப்போந்து வராந்தாவுக்கு வந்து முற்றத்தில் இறங்கி னேன். ஆட்டின் காதைப் பிடித்துக்கொண்டு அபியை விடு வித்தேன். அந்த அரை நிஜாரின் முன் பக்கத்தை மட்டுமல்லாது, ஒரு பாக்கெட்டையும் அது தின்று முடித்திருந்தது. 

விவரம் முழுவதையும் கேட்டதும், தவறு பாத்தும்மாவின் ஆட்டி னுடையது அல்ல என்பது தெளிவாயிற்று. அரை நிஜார் பாக் கெட்டில் வெள்ளையப்பம் இருந்தது. அதிலிருந்து, ஆட்டுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொடுத்துவிட்டு, பாக்கியை நிஜாரின் முன் பக்கத்தில் செருகிகொண்டு, ஆட்டின் முன்னால் சென்று “ ஏய் தின்னு ” என்று கூறியிருக்கிறான். ஆடு அப்பத்தையும் நிஜாரின் முன் பக்கத்தையும் தின்றே - விட்டது. ஜேபியில் இருந்ததையும் ஜேபியோடு சேர்த்துத் தின்றது. அபி சொன்னான் : 

"அப்பா அடிப்பாரு!'' '' அதை அப்பவே யோசித்துப் பார்த்திருக்கணும். அடிக்கட்டும், வேணும் உனக்கு." 

சற்று நேரம் கழித்து நான் சொன்னேன் : ''பயப்படாதேடா. வாப்பாகிட்டே இதைப்பத்தி யாரும் சொல்ல மாட்டாங்க!'' 

பாத்துக்குட்டி, லைலா , ஸயிது முகம்மது எல்லோரிடமும், இந்த ரகசியத்தைக் காப்பாத்தும்படிச் சொன்னேன். இனிமேல் யாரை யுமே ' உள்ளாடத்திப்பாறு' என்று கூப்பிடலாகாது என்று லைலாவுக்கு புத்திமதியும் கூறினேன். 

கசரத் எடுத்து முடித்த பிறகு, ஆற்றுக்கு குளிக்கப் போவதற்குத் தயாரானேன். கூட ஸயிது முகம்மதையும் பாத்துக்குட்டியையும் அழைத்துக் கொண்டேன். அபியும் லைலாவும்கூட அவர்களுடன் புறப்பட்டார்கள். அன்று, அவர்கள் வாப்பாவுடன் குளிக்கப் போக வில்லை. என்கூட வரவேண்டும் என்பதற்காகவே காத்துக்கொண் டிருந்திருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படியான காரணம் எதுவுமில்லை; அபியுடைய சிலேட்டுப் பென்சிலை, லைலா எடுத்து ஒடித்து சிறு சிறு துண்டுகளாக்கியிருந்தாள். இதன் காரண மாகத்தான் வாப்பா அவர்களைத் தன்னுடன் குளிக்க அழைத்துப் போகவில்லை. பாத்துக் குட்டிக்கும் அபிக்கும் சிலேட்டும் பென் ஸிலும் வாங்கிக் கொள்வதற்காக ஹனீஃபா அரையண கொடுத் திருந்தான். 

Page 42 

பாத்தும்மாவுடைய ஆடு 

27 

நான் எல்லோரையும் ஆற்றில் முழுக்காட்டிய பிறகு, கரையில் நிற்க வைத்தேன். பிறகு குளிர்ந்த நீரில் அமிழ்ந்து அணைந்தவாறு குளித்துக் கொண்டிருக்கையில், அபியுடைய குரல் கேட்டது : " பெரிய வாப்பா!” 

நான் திரும்பிப் பார்த்தேன். யாரும் கரையிலிருந்து வெள்ளத்தில் இறங்கியிருக்கவில்லை. உடனே நான் நீந்தி படித்துறைக்குச் சென்று '' என்னடா?' என்றேன். 

" எனக்கு அரை நிஜார் இல்லையே." அவன் தன் நிலையை விளக்கினான். வெக்கத்தை மூடி மறைக்க அவனிடம் ஏதும் இல்லை. ' பிறந்த மேனியோடு சாலை வழியே எப்படிப் போவது?' நான் கேட்டேன் : 

'' இப்படித்தானே நீ வந்தே?'' அதெல்லாம் சரி. ஆனால் இப்போது அபி தன்னோடு ஸ்கூலில் படிக்கும் ஒருவனைத் தோணியில் பார்த்து விட்டான். அவன் வேட்டி கட்டிக் கொண்டிருந்தான்! அதனால், அவனுடைய வெட்கத்தை மறைத்துக் கொள்வதற்காக நான் எனது சவுக்கத்தைக் கொடுத்தேன். இதைப் பார்த்ததும் பாத்துக்குட்டிக்கும் நாணம் வந்து விட்டது. அவளுக்கும் உடுத்திக் கொள்ள ஏதாவது வேண்டும்! 

நான் குளித்த பிறகு, என்னுடைய வேட்டியைக் கட்டிக்கொண் டேன். சவுக்கத்தை அவிழ்த்து நனைத்துப் பிழிந்து தலையை நன்றாகத் துடைத்துக் கொண்ட பிறகு, சவுக்கத்தை நீரில் அலசிப் பிழிந்து, பாத்துக் குட்டியிடம் கொடுத்து உடுத்திக் கொள்ளும்படி சொன்னேன். 

கலலாவும் ஸயிது முகம்மதும் இன்னும் வெட்கம் உணர ஆரம்பிக்க வில்லை. இருந்தால் என்ன செய்திருப்பானோ? என்னிடம் இருந்தது இரண்டு சவுக்கங்கள் தானே? 

நான் வீடு திரும்பியபோது, அப்துல் காதரும் ஹனீஃபாவும் பரஸ் பரம் சண்டைக்கு ஆயத்தமாயிருந்தார்கள். சண்டைக்கான காரணம் விசேஷமாக ஏதுமில்லை. ஹனீஃபா நேற்று வீட்டில் ரேஷன் வாங்குவதற்கு எதுவுமே தரவில்லை என்பது அப்துல் காதருக்குத் தெரிந்தது. ஹனீஃபாவுக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதனால் அவனும் அவனது குடும்பத்தவரும் அங்கிருந்து புறப்படு வதாக இருந்தனர்! 

'' வீட்டை விட்டு வெளியே வாடி ஐசோம்மா'' என்று ஹனீஃபா மனைவியை அழைத்தான். '' குழந்தைகளையும் கூப்பிடு.'' 

Page 43 

28 

பாத்தும்மாவுடைய ஆடு 

அவனும் அவனது குடும்பத்தாரும் அவர்களுடைய வாழைத் தோட்டத்தில் ஓலைக்கீத்துக் குடிசை போட்டுக்கொண்டு வசிக்கப் போகிறார்களாம். நான் பார்க்கையில் அவன் உடுத்திக் கொண் டிருந்த வேட்டி என்னுடையதாக விருந்தது! திருடினதுதான். நான் அவனிடம் இதுபற்றிக் கேட்டதும், '' பேசிக்கிட்டு நிக்க நேரமில்லே, எனக்குக் கொஞ்சம் வேலையிருக்குது'' என்று கூறிக் கொண்டே அவன் அகன்றான், வாயிற் படிக்கட்டை அடைந்த பிறகு அவன் சொன்னான் : 

" எனக்கு இந்த வீட்டிலே எந்தவிதமான உரிமையும் இல்லேங் கிறது முடிவாயிடுச்சு.'' 

ஹனீஃபா அவனுடைய தையல் கடைக்குப் போனான். நான் அப்துல் காதரிடம் கேட்டேன் ; ''அடே இந்த ரகளைகளிலேந்து என்னை நீ கொஞ்சம் காப்பாத்தக் கூடாதா? அந்த இன்ஸ்பெக்டரு கிட்டே , எடத்தைக் காலி பண்ணித் தரும்படியா, எனக்காக நீ இன்னொருவாட்டி கேட்கக் கூடாதா?'' 

அப்துல் காதர் கேட்டான் : ''இங்கே இக்காக்காக்கு என்ன கொறை, சொல்லுங்க? எண்ணெய், நெய்யி, பாலு, சாயா, பீடி வத்திப்பெட்டி நேந்திரம் பழம், தக்காளிப்பழம், அன்னாசி, ஞாலிப் பூவன் பழம், கண்ணன் பழம், பலாப்பழம் சாப்பாடு , பேச்சுத் துணைக்கு உம்மா, நான் அபு கொச்சுண்ணி- இன்னும் என்ன வேணும் சொல்லுங்க?'' 

அப்துல் காதர், ஒரு பள்ளிக்கூட ஆசிரியனாக இருந்தான். இலக்கணத்தில் நிபுணன். முன்பு சின்ன வயதில் ஒரு முறை இவன் அம்மாவிடம் சொன்னான் : '' மாதாவே, சிறிதளவு நல்ல நீர் தர இயலுமா?'' அன்று உம்மா சாதம் போடும் பெரிய கரண்டியினால் அவனை அடித்தாள். வாப்பா அவனைச் சமாதானப் படுத்தினார் : 

''நீ அப்படியே சொல்லுடா கண்ணு! ஆமாம், என்னை எப்படிக் கூப்பிடுவே?'' 

"பிதாவென்று.'' இதைக் கேட்டதும், உம்மா கரண்டியால் மேலும் ஒன்று கொடுத் தாள். பிறகு அவன் உம்மா என்றும் வாப்பா என்றுமே அழைத்து வந்தான். நொண்டி! 

என்னையும் அவனையும் ஒரே தினத்தில் தான் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். அப்போது, அதற்கு ''முஹம்மடன் ஸ்கூல்'' என்று பெயர். உம்பியண்ணன் என்ற பெயருள்ள ஒரு பக்திமான் தான் அந்தப் பள்ளிக்கூடத்தைக் கட்டினார். 

Page 44 

பாத்தும்மாவுடைய ஆடு 

29 

புதுஸ்ஸேரி நாராயண பிள்ளை சார் என்பவர் தாம், அப்பொழுது முதல் வகுப்பு ஆசிரியராக இருந்தார். எனக்கும் அப்துல் காதருக்கும் ' அ, ஆ' எழுதவும் படிக்கவும் கற்பித்தவர் அவர்தாம். 

அப்துல் காதர் ஸ்கூலிலும் சரி, வெளியிலும் சரி, படு போக்கிரியாக இருந்தான். நான் ஸ்கூலில் பணிவான பையன் என்று பெயர் எடுத்திருந்தேன். நாராயணபிள்ளை சாரிடம், அவன் நிறைய உதை வாங்கியிருக்கிறான். 

அப்துல் காதர் இடது காலை ஊன்றி நின்று கொண்டு வலது நொண்டிக்காலை ஒரு சுழற்றுச் சுழற்றி, பிள்ளைகளை அடித்து வந்தான். என்னையும் அவன் அப்படித்தான் அடிப்பது வழக்கம். பிறகு அவன் வலது உள்ளங்காலை மூக்கிற்கு நேரே காட்டிக் கேட்பான் : 

''இப்படிச் செய்ய முடியுமா?'' முடியாது! எப்படி இயலும்? மற்றவர்களின் கால் தொய்ந்து தளர்ந்து தொங்கிக் கொண்டிருக்க வில்லையே! வேறு யாருக்குமே இந்த சர்க்கஸ் வேலை சாத்தியமல்ல. 

"முடியாதுன்னா மோந்து பாரு.'' அவனுடைய நொண்டி உள்ளங்காலினை மற்றவர் மோந்து பார்க்கணும். இல்லையென்றால் செம்மையான உதை விழும். பிள்ளைகள் அவனிடமிருந்து தூர விலகி நின்றால், தன் மார்பில் தானே அறைந்து கொண்டு அழ ஆரம்பித்து விடுவான். அவன் நொண்டி என்பதால் எல்லோரும் இயல்பாகவே அவனிடம் அனுதாபத்தோடு நடந்து கொண்டார்கள். அதை, அவன் தனக்குச் சாதகமாக நன்கு பயன்படுத்தி வந்தான். அவன் என்ன தவறு செய்தாலும் குற்றம் சுமத்தப்படுவதென்னவோ பிறர் மீதுதான். பிள்ளைகள், நின்று அவனிடம் குத்துக்களை வாங்கிக் கொள்வார்கள். நானும் அவ்வாறே நின்று பெற்றுக் கொண்டிருக் கிறேன். அவனிடம் நான் வாங்கியுள்ள குத்துக்களுக்கு கணக்கு வழக்குக் கிடையாது. அவனுடைய சிலேட்டையும் புத்தகங்களையும் நான் தான் சுமக்கணும். நான் மூத்தவன் தானே? நியாயமாகப் பார்த்தால் தம்பிமார்கள் தாம் அண்ணன்மார்களின் சிலேட்டும் புத்தகங்களும் சுமக்கவேண்டும். ஆனால் இங்கோ, அண்ணனாகிய நான் தம்பியாகிய அவனுடைய சிலேட்டும் புத்தகங்களும் சுமக் கணும். இல்லையோ போயிற்று, அடிதான்! 

நான் நிறைய வாங்கினேன். நிறையச் சுமந்தேன், ரோஷப்புயல் என்னுள் சீறி எழும். ஆனால் என்ன செய்வது? அவன் சிலேட்டு புத்தகங்களை நடுத்தெருவில் வைத்துவிட்டு, கையைச் சுருட்டிய வாறே என்னிடம் வந்து மெள்ளக் கேட்பான் : 

Page 45 

பாத்தும்மாவுடைய ஆடு 

“ என் சிலேட்டு புத்தகங்களையும் எடுத்துக்கிட்டு வர்றே இல்லே ?'' 

“ முடியாது” என்றுதான் தினசரி சொல்லுவேன். பிறகு நியாயத்தை எடுத்தோத ஆரம்பிப்பேன். 

“அடே, நான் உன்னோட அண்ணனில்லே?'' '' எடுக்கறியா இல்லையா?'' " முடியாது.'' | உடனே ஒற்றைக்காலில் நின்றுகொண்டு மற்றொரு காலைச் சுழற்றிய படி என்னுடைய நெஞ்சில் பலமாக ஒரு அடி அடிப்பான். அடி வேகம் தாங்காமல் நான் சற்றே தடுமாறிச் சுருண்டு வீழ்வேன். அவன் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு உத்தரவிடுவான் : “ எழுந்து எடு எல்லாத்தையும். நேரமாயிடுச்சு. லேட்டாப் போனா, சாரு 

அடிப்பாரு.” 

நான் அப்படியே கிடந்த வண்ணம் யோசிப்பேன். 'இது எந்த ஊரு நியாயம்? தம்பி குத்தறது! அண்ணன் வாங்கிக்கிடறது! அப்புறம் புத்தகமும் சிலேட்டும் சுமக்கறது!' நான் அப்படியே கிடப்பதைப் பார்த்துவிட்டு அவன் என் மார்பிலே ஏறி அமருவான். பிறகு கேட்பான் : ''இன்னும் குத்து வேணுமா?' 

நான் உண்மையைக் கூறுவேன் : '. வேணாம், சுமக்கறேன்.'' நான் எழுந்துகொண்டு, அவனுடைய சிலேட்டுப் புத்தகங்களை யும், வேறு இருப்பவற்றையும் சுமந்து செல்வேன். எத்துணை நாட்கள் ! எத்துணை குத்துக்கள்! 

இப்படியிருக்கையில் ஒரு நாள் எனக்குப் புத்தி வந்தது. வழக்கம் போல குத்துவதற்காக அவன் கையை வீசு முன்பாக, என் காலால் அவனுடைய ஊனமில்லாத காலில் கொடுத்தேன் ஒரு அடி ! 

அதோ விழுந்துகிடக்கிறான் அப்துல் காதர் சாலையில்! மல்லாந்து! அலங்கோலமாக! நான் உடனே அவனுடைய நெஞ்சில் ஏறி அமர்ந்து கொண்டேன். நான் செய்யத் தகாத குற்றம் எதையோ செய்து விட்டது போல, அவன் கேட்டான் : 

" இதென்ன இது! நான் சின்னவன் இல்லே? என் நெஞ்சி மேலே நீ ஏறி உக்காரலாமா?'' 

அவனைக் குத்துவதற்காக நான் கையை சுருட்டி மடக்கிக் கொண்டேன். அவன் அழுது கொண்டே சொன்னான் : '' என்னைக் குத்தாதே! நான் காக்காவோடு தம்பி இல்லே?'' 

“ தம்பி! ஹும். இந்த அறிவு முன்னே எங்கே போய் இருந் கிச்சு ?" 

Page 46 

பாத்தும்மாவுடைய ஆடு 

''இனிமே, அதை நான் எப்பவுமே நெனப்புலெ வெச்சுக்கறேன்.'' '' அடே!'' நான் கேட்டேன்! " நாயைப் பாத்தா, அது மேலே முதல்லே கல்லு வீசறது யாரு?'' 

" இக்காக்கா!'' "ஆத்துலே குளிக்கும் போது, தண்ணீலே அளஞ்சு நீத்தி, முதல்லே அக்கரை போய்ச் சோறது யாரு?” 

"இக்காக்கா!'' “ வீட்டிலேந்து ஏதாவது திருடிக்கிட்டு வந்து உனக்குக் கொடுக் கறது யாரு?'' 

“ இக்காக்கா.'' ''நாராயணபிள்ளை சாரோட மேசையிலிருந்து சாக்குப்பீஸ்களை உனக்கு எடுத்துத் தர்றது யாரு?”” 

“ இக்காக்கா!'' ''பின்னே என்ன ?" 

அவன் சொன்னான் : " இனிமே நான் காக்காவோடே சிலேட்டு புத்தகங்களைச் சுமந்துகிட்டு வர்றேன். என்ன?'' 

நான் சொன்னேன் : ''உன்னுடையதை நீ சுமந்துக்க". " அப்படியானா முன்னாலே போறது யாரு?'' '' நான் தான்!'' இப்படியாக அன்று முதல் அப்துல் காதர், தம்பியாக மாறினான். அவன் தான் இவன். நொண்டி! 

" அடே,” நான் சொன்னேன் : '' அந்த வீட்டைக் காலி செய்து கொடுக்கும்படியா அந்த இன்ஸ்பெக்டருகிட்டே நீ கொஞ்சம் போயி சொல்லக் கூடாது? இந்த வீட்டு அமர்க்களத்திலே அகப்பட்டு கிட்டு, நான் எவ்வளவு சிரமப்பட்டுக்கிட்டு இருக்கறேன் தெரியுமா? இது உனக்குத் தெரியமாட்டேங்குது!'' 

“ இக்காக்கா! அந்த மனுஷன், வேறே வீடு பாத்துகிட்டுத் தான் இருக்காரு. எக்சைஸ்காரங்களும் அவருக்காக வீடு பாத்துக்கிட்டுத் தான் இருக்காங்க. இன்னும் கொஞ்ச நாளுகூட பொறுத்துக்கிட்டு இங்கேயே இருங்க.” 

அவன் தன் இரும்புத்தடியை ஊன்றியவாறு நொண்டி நொண்டி நடந்து கொண்டே தனது கடைக்குப் போனான். அன்னாசிப் பழம் ஒன்றின் பாதியை வெட்டி எடுத்து, அதன் தோல்களைச் சீவிக் கொண்டிருக்கும் போது, பாத்தும்மாவுடைய ஆடு சன்னல் அருகேயும், குழந்தைகள் வாயில் கதவின் அருகிலுமாக ஆஜரானார் 

Page 47 

பாத்தும்மாவுடைய ஆடு 

கள். நேந்திரம்பழம் கண்ணன் பழம் நெய் ஆகியவற்றைப் புட்டில் சேர்த்துக் கலந்து, குழந்தைகளுக்குத் தினசரி , ஆளுக்கு ஒரு உருண்டை கொடுப்பது வழக்கம். கூடவே ஆளுக்கொரு துண்டு அன்னாசியும் கொடுப்பேன். அது கிடைத்ததும் பிள்ளைகள் கூச்ச லிட்டுக் கொண்டே விளையாடச் செல்வர். ஆனால் அபி, பாத்துக்குட்டி, லைலா, கதீஜா முதலியவர்களுக்குத் தெரியாமல், ஆனும்மாவுடைய மகன் ஸயிது முகம்மது, எனக்கு முன்பாக வந்து நின்று, வராத மாதிரி பாவனை செய்துகொண்டு தூணைப் பிடித்த வாறு ஏதோ சில பாட்டுக்களை முணுமுணுத்துக்கொண்டு முகத்தை நீட்டுவான். அவனுக்கு ஸ்பெஷலாக ஒரு பெரிய உருண்டையை நான் கொடுப்பேன். காலைச் சிற்றுண்டி உண்ட பிறகு பழத்தோல் களையும் மற்றவற்றையும் பாத்தும்மாவுடைய ஆட்டுக்குக் கொடுப்பேன் . பிறகு கையலம்பிவிட்டு வாயையும் துடைத்துக் கொண்டு சாயாவும் கையுமாய் நாற்காலியில் வந்து அமர்ந்து கொள்வேன். அப்போதுதான் பள்ளிக்கூடக் குழந்தைகள் போய்க் கொண்டிருப்பார்கள். பெண் குழந்தைகள் வழக்கம் போல என்னை நோக்கியவாறே செல்லுவார்கள். 

மாணவிகள் இவ்விதம் பார்ப்பதில் புதைந்திருந்த மர்மம் பிறகு தான் எனக்குத் தெரியவந்தது. அதை பின்னால் கூறுகிறேன். 

அன்று அபியும் பாத்துக் குட்டியும் வழக்கம்போல் பள்ளிக்கூடம் சென்றார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் அபி, ஒளிந்து மறைந்து ரோடில் நின்று கொண்டே என்னை கையினால் சாடை காட்டி வருமாறு சொன்னான். 

என்னவாயிற்று? நான் இறங்கிச் சென்றேன். பாத்துக் குட்டி ஒரு தென்னை மரத்தின் கீழே பதுங்கிக் கொண்டிருந்தாள். நான் போனதும் அபி சொன்னான் : 

' பெரியப்பா, சிலேட்டு பென்சில் வாங்கறதுக்காக வாப்பா கொடுத்த அரையணா...!'' 

" அரையணா?'' 

அரை நிஜாரின் பையிலே வெச்சிருந்தேன்! '' '' நீ என்னடா சொல்றே?.'' ''ஆடு தின்னுதே, அந்த ஜேபீலேதான் வெச்சிருந்தேன்!'' ஓஹோ! பாத்தும்மாவுடைய ஆடு அரையணாவையும் முழுங்கி யிருக்கிறது! 

நான் சொன்னேன் : 

Page 48 

பாத்தும்மாவுடைய ஆடு 

33 

“ இதெ நீங்க யாருகிட்டயும் சொல்ல வேணாம்; பரம ரகஸ்யமா வெச்சிக்குங்க என்ன! அரையணாவுக்கு ஏதாவது வழி இருக்குதா பாக்கறேன்.'' 

அபி நினைவு மூட்டினான் : 1. உம்மாம்மா பாத்தா அடிப்பாங்க.'' "ஒளிஞ்சு நில்லு!'' நான் உள்ளே வந்து, பாத்தும்மாவிடம் இரண்டணா கடனாக வாங்கிக் கொண்டேன். அரையணா (அதாவது 3 பைசா) எடுத்துக் கொண்டுபோய், அபிக்கும் பாத்துக்குட்டிக்கும் கொடுத்து, அவர் களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தேன். 

பாத்தும்மாவுடைய ஆடு முற்றத்தில் நின்றுகொண்டிருந்தது. எந்த நேரத்திலும் அதனுள்ளிருந்து இரண்டு காலணாக்கள் விழக்கூடும்! நான் அவற்றை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருக்கலானேன். ஆனால், சிறு சிறு சாணப் புழுக்கைகள் விழுந்தனவே தவிர, வட்டமாக எதுவும் விழக் காணோம்! 

விழாமல் இருந்து விடுமோ? என்னுடைய கண்கள் ஆட்டின் பின்புறத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன. 

இதனிடையே, உற்சாகத்துடன் என்னைப் பார்த்தவாறே, மாணவிகள் கும்பல் கும்பலாகச் சாலையில் போய்க்கொண்டிருந்தார் கள். எனக்கு ஒரே மகிழ்ச்சி. அவர்களுக்குத் தெரியும் நான் யாரென்று! அதனால்தான், இப்படி வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு போகிறார்கள். அவர்கள் தமக்கிடையே இவ்வாறு பேசிக்கொள்ளவும் கூடும்! (இது எனது சொந்தக் கற்பனை என்பது நினைவிருக்கட்டும்.) 

சுருட்டை முடிக்காரி : " அந்த ஈஸிச்சேரில் படுத்துக்கிட் டிருக்காரே, அவரு யாருன்னு உனக்கு தெரியுமா?'' 

மான் விழியாள் : "பின்னே இது கூடத் தெரியாதா என்ன? பிரபல எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஹீர்.'' 

கோகிலவாணி : "' என்னோட ஆட்டோகிராப் புத்தகத்திலே அவரோட கையெழுத்தை வாங்கப் போறேனாக்கும்!'' 

பூனைக் கண்ணினாள் : "போடி ! அது அவரொண்ணுமில்லே. குடிசை மாதிரி இருக்கற வீட்டைப்பாரு! அவரு போயி இந்த மாதிரி ஒரு இடத்திலியா இருப்பாரு?'' 

மதுவாணி: ''போடி பூனைக்கண்ணி. அவரேதான் அது. இன்னிக்கே என் ஆட்டோகிராப் புத்தகத்திலே அவரை விட்டு எழுதச் சொல்றேன் பாக்கிறியா?'' 

பா-3 

Page 49 

34 

பாத்தும்மாவுடைய ஆடு 

"சரி டீ ! அதையும் தான் பாக்கலாமே! '' இப்படியாக, அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு ஸ்கூலுக்கு போகும் போது, அவர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள். 

இந்தச் சமயத்தில் மற்றொரு சம்பவம் என் நினைவுக்கு வந்தது. அப்போது நான் எதிர்வீட்டில் இருந்தேன். நான் ஊர் திரும்பியுள்ள விவரத்தைக் கேள்விப்பட்டு, ஹைஸ்கூலின் தலைமை ஆசிரியர் என்னிடம் வந்து சொன்னார் : ' பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழா வருகிறது ; அந்த விழாவில் தாங்கள் உரையாற்ற வேண்டும்; குழந்தைகளுக்கு நல்லுரைகளை உபதேசிக்க வேண்டும்.'' 

'' நான் எங்கும் உரையாற்றும் வழக்கமே கிடையாது. தவிர அந்தச் சமயத்தில் நான் ஊரில் இருப்பதும் சந்தேகம் தான்.'' 

அவர் சொன்a : ''நோட்டீசில் பெயரை விளம்பரம் செய்து விடுகிறோம் ; ஊரில் இருக்கும் பட்சத்தில் வந்தால் போதும்.'' 

நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டது. என் பெயரும் அதில் காணப் பட்டது. நான் என்ன செய்வது? மன நிம்மதியோடு ஏதாவது ஓய்வாகக் கொஞ்சம் எழுதலாம் என்று வந்தவன் நான்! உம்! இப்படி யோசித்தவாறு செடி.களுக்கு மத்தியில் நான் நின்றுகொண் டிருக்கையில் கேட்டின் அழிகளுக்கிடையே தெரிந்தன இரண்டு கண்கள்! சுருட்டைத் தலை முடியுடன் ஒரு பெண். முல்லைப் பூவையோ பிச்சிப் பூவையோ நாடி வந்திருக்கிறாள் போலும் என்று நான் நினைத்தேன். நான் கேட்டேன் : 

“ என்ன வேணும்?'' ''நோட்டீஸில் பேர் போட்டிருக்குது. உரையாற்ற நிச்சயமா வரணும். வராம இருந்திடாதீங்க, என்ன?'' 

“ அன்னிக்கு ஊரிலிருந்தா வர்றேன்.'' பிறகு தினமும் அவளும் வேறு பெண் குழந்தைகளும் சேர்ந்து கேட்டின் அருகே வந்து, என்னை அழைத்துச் சொல்வார்கள் : " வராம இருந்திடாதீங்க, என்ன?.'' 

ஆனால் ஆண்டு விழாவுக்கு முந்தைய தினமும், நான் அங்கிருந்து விட்டேன் சவாரி! பெட்டி படுக்கை எதுவுமே எடுத்துக்கொள் ளாமல் வெறுங் கையாகத்தான். உம்மாவிடம் மட்டும் சொன்னேன். ஆண்டு விழா நடந்து முடிந்த மறுநாள் திரும்பி வந்தேன். அன்றே, சுருட்டை முடியாளும் மற்ற பெண்களும் வந்து கேட்டார்கள் : 

'என்ன இப்படிச் செஞ்சிட்டீங்களே?'' நான் சொன்னேன் : “ஊரிலே இருந்தா வர்றேன்னுதானே சொன்னேன்?'' 

“ நல்ல ஆளு!" 

Page 50 

பாத்தும்மாவுடைய ஆடு 

35 

"கன 

அது அப்படி ஆச்சு. இப்போது வாயிற்படி தாண்டி வரும் பெண் களில் அந்தச் சுருட்டை முடியாளும் இருக்கிறாளோவென்று நான் ஆராய்ந்தேன். இல்லை. இப்போது அவர்கள் எல்லோரும் பெரியவர் களாக வளர்ந்திருப்பார்களே! அடேயப்பா! இந்தப் பெண்கள் தாம் எத்தனை விரைவாக வளர்ந்து விடுகிறார்கள்! 

இவர்களுடைய ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்துப் போடத் தயாராக இருப்பதற்காக, பேனாவை எடுக்க எண்ணினேன். பிறகு, ' வரட்டுமே, வந்து சற்று நேரம் காத்துக் கொண்டுதான் நிற்கட்டுமே' என்று தோன்றியது. 

அவர்கள் வந்தார்கள். ஆனால் என்னை நோக்கியல்ல. நேராக சாம்ப மரத்தினடிக்குச் சென்று, உம்மாவிடம் என்னவோ பேசிவிட்டு எதையோ கொடுத்தார்கள். உம்மா துணி முடிப்பிலிருந்து கை நிறைய சாம்பங்காயை எடுத்து அவர்களிடம் தந்தாள். அவர்கள் அங்கேயே நின்று ஒவ்வொன்றாகக் கடித்துக்கொண்டு சாம்ப மரத்தை குதூகலத்துடன் பார்த்தார்கள். 

கழுதைகள் ! உம்மாவின் அழுக்குத் துணி முடிச்சில் கட்டியிருந்த சாம்பங் காயைத்தான் அவர்கள் கடித்துத் தின்கிறார்கள். ஆனால் சுத்தமாக அமர்ந்து கொண்டிருக்கும் என்னைத் திரும்பிப் பார்க்கக் கூடாது? | 

திடுக்கிட வைக்கும் ஒரு விஷயம் வெட்ட வெளிச்சமாக எனக்கு விளங்கியது. இந்தப் பெண்கள் தினசரி பார்த்துக் கொண்டே போவது என்னையல்ல! 

அவர்கள் சென்றதும் நான் உம்மாவிடம் கேட்டேன் : " அவுங்க என்ன தந்தாங்க உம்மா?” உம்மா சொன்னாள் : "ஒரு அணா.'' 

“ அந்தப் பெண்களுக்குச் சாம்பங் காயை வித்தீங்களா?” '' பின்னே இல்லாம?'' '' ஒரு அணாவுக்கு எத்தினி கொடுத்தீங்க?'' ''இருபது'' | சபாஷ்! ந..ன் எத்தனை இருபது சாம்பங்காய்களைப் பாத்தும்மா வுடைய ஆட்டுக்குக் கொடுத்திருக்கறேன் ! 

அந்தப் பெண்கள் என்னைத் திரும்பிக்கூடப் பாராமல் அலட்சியப் படுத்தியது, என்னைச் சிந்திக்க வைத்தது. 

“ அந்தச் சாம்ப மரத்தை நட்டு வளர்த்தது யாரு?” என்று நான் உம்மாவைக் கேட்டேன். 

Page 51 

36 

பாத்தும்மாவுடைய ஆடு 

"தளியாக்கல்லின் வீட்டிலேந்து ஒரு கொட்டையைக் கொண்டு வந்து நீ இங்கே நட்டு வச்சே. அது வளர்ந்து மரமாயிடுச்சு.'' 

தளியாக்கல் என்ற பேர் கொண்ட கத்தோலிக்கக் குடும்பம் ஒன்று, பக்கத்தில் வசித்து வந்தது. அவர்கள் வீட்டில் தொம்மன், மாத்தங் குஞ்ஞ, குஞ்ஞப்பன் ஆகியோர் எனது அருமை நண்பர்கள். அங்கிருந்துதான் இதை நான் கொண்டு வந்தேன். நான் நட்டு வளர்த்த மரம் அது! கழுதைகள் ! என்னைத் திரும்பிக்கூடப் பார்க்க வில்லை ! நான் குதித்தெழுந்து உம்மாவிடம் கேட்டேன் : “ அந்த ஒரு அணாவை இப்படி எடுங்க!” 

அம்மா உடனே கொடுத்துவிட்டாள். நான் போய் பீடி வாங்கிக் கொண்டேன் ஆற்றோரம் சென்றமர்ந்தேன். என்னைத் திரும்பிப் பார்க்காத அந்தப் பெண்களை நினைத்துக்கொண்டே புகையைச் சுருள் சுருளாக ஊதித் தள்ளினேன் -ப்பூ! 

இதன் பிறகும் தினசரி அந்தப் பெண்கள் என்னுடைய சாம்ப மரத்தை நோக்குவார்கள். அதில் சாம்பங் காய்கள் செதுக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருக்கும். நான் எனக்க வே இவ்விதம் கூறிக்கொள்வேன் : 

'கழுதைகளே, பார்த்துக்கொள்ளுங்கள் ! - 

ன்னுடை யது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதோ இருக்கும் நான் தான் 

அதை நட்டு வளர்த்து மரமாக்கியவன் ...! கழுதைகள் ! 

இவர்களை எப்படிப் பழிவாங்குவது? நாற்காலி அமர்ந்து சமயத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தேன், அறையில் போய்ப் படுப்பது கிடையாது. இப்படியிருக்கும்போது, கடைசியில் ஒருநாள் அவர்கள் வந்தார்கள்! நான் எழுந்துபோய் சற்றே அதிகாரத்தோடு கேட்டேன் : ' என்ன வேணும்?" 

“அரையணாவுக்குச் சாம்பங்காய்.'' “ முதல்லே காசை எடு.” காசை வாங்கி இடையில் செருகிக்கொண்டேன். பிறகு மிகவும் சிறியதாகப் பொறுக்கி எடுத்து, பத்துக் காய்களை அவர்களிடம் தந்தேன். 

“என்ன இது? எல்லாம் சின்னதா இருக்குதே. அந்தப் பெரியம்மான்னா பெரிசாக் குடுப்பாங்களே?'' 

“ அந்தப் பெரியம்மாவுக்கு இந்த மரத்திலே பெரிதாக உரிமை ஏதும் கிடையாது. அதனாலேதான் அவங்க அப்படிச் செஞ்சாங்க. கழுதைகள்!” 

“அப்படியானா இன்னும் ஒண்ணு கூடக் கொடுங்களேன்.” 

Page 52 

பாத்தும்மாவுடைய ஆடு 

37 

"இந்த மரத்தைச் சிரமப்பட்டு நட்டு வளத்த ஆளுக்கு, அது இஷ்டமில்லே.'' 

ஒரே ஒரு காய்கூட நான் அதிகப்படியாகக் கொடுக்கவில்லை. ''என்னா மனுசன் ஐயா!'' என்று கூறியவாறே, அந்தப் பேராசைக் காரிகள் போனார்கள். பெருவயிற்றுக்காரிகள் ! என்னைச் சற்றுத் திரும்பிப் பார்க்கக் கூடாதாம், ஆனால் கொஞ்சம்கூட வெட்க மில்லாமல் எனது சாம்ப மரத்தை மட்டும் பார்க்கலாமாம். 

இப்படி நான் சாம்பங்காய் விற்கையில் உம்மா வந்து காசு கேட்டாள். நான் கேட்டேன் : 

''எதுக்காக? உம்மாவுக்கு இந்தச் சாம்ப மரத்து மேலே என்ன உரிமை இருக்குது? இது, என்னோட உழைப்பின் பலன் தெரியுதா? என்னோட வியர்வைத் துளிங்கதாம் இப்ப இதிலே சாம்பங்காயா தொங்குது. உம்மா இதை எத்தினி வருஷங்களா வித்துக்கிட்டு வர்றீங்க? அந்தப் பணமெல்லாம் எங்கே?'' 

தோற்றுப்போய் பதில் சொல்ல இயலாத நிலையில் உம்மா நின்றாள். ஆனால் நான் விடவில்லை : ''போதும் போதாததற்கு எடுத்ததுக் கெல்லாம் பணம் வேறே, அது வாங்கணும் இது வாங்கணும்னு சொல்லிக்கிட்டு. எத்தினி ரூபா ! உம்! இந்தப் புளிய மரத்தை யாரு நட்டாங்க?'' 

முற்றத்தின் ஒரு பக்கத்தில் புளிய மரம் ஒன்று உண்டு. மரத்தின் அடிமுதல் நுனிவரை பச்சைப் பசேல் என புளியங் காய்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அவற்றையும் உம்மா பறித்து விற்பதுண்டு. அதுவும் நான் நட்டு வளர்த்ததுதானே? 

உம்மா சொன்னாள் : " அது உன் வாப்பா நட்டு வளத்தது. நானும் அதற்குக் கொஞ்சம் தண்ணி இழுத்துக் கொட்டியிருக் கறேனாக்கும்!'' 

அப்படியானால், அதன்மீது உடமை உரிமை ஏதும் நமக்குக் கிடையாது. உம்மா கோபத்தோடு எழுந்து உள்ளே சென்றாள். 

ஆனும்மாவைக் கூப்பிட்டு ஒரு சாயா கொண்டு வருமாறு சொன்னேன். அவள் அடுத்த வீட்டுக்குச் சென்று, ஒரு பையனை அழைத்துக் கடையிலிருந்து சாயா கொண்டு வருமாறு செய்தாள். அதைப் பருகிவிட்டு, ஒரு பீடியையும் பற்றவைத்துப் புகைத்தவாறு விச்ராந்தியாக இருக்கையில் வந்தாளே பார்க்கலாம் ஒரு அஞ்சன வண்ண மேனியாள்! பத்து, பதினாறு வயதிருக்கும். சாம்பக் காய்க் காகத்தான் இவளும் வருகிறாள். காலணாக்காரியா? அரையணாக் காரியா? இந்தக் கழுதைக்கும் சின்னதாகப் பார்த்துப் பொறுக்கித் 

Page 53 

38 

பாத்தும்மாவுடைய ஆடு 

தான் கொடுப்பேன்! ஆனால், அவள் சாம்ப மரம் இருந்த திசையைப் பார்க்கவே இல்லை! நேராக நானிருக்குமிடம் வந்து, என்னை வணங்கிவிட்டுச் சொன்னாள்: 

“ எனக்குச் சாரை நல்லாத் தெரியும். சாருடைய எல்லாப் புத்தகங்களையும் நான் படிச்சிருக்கறேன் நீங்க ஊர் திரும்பியிருக் கீங்கன்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலேதான் வந்தேன். என் ஆட்டோகிராப் புத்தகத்திலே நீங்க எதுனாச்சியும் எழுதிக் 

கையெழுத்துப் போட்டுத் தரணும்.'' 

ஆ! மானம் காக்க வந்த சியாமள சுந்தரியே! உனக்கு மங்கள முண்டாகட்டும். 

" உன் பேரென்ன?'' “ சுஹாஸினி'". " எந்த வகுப்பிலே படிக்கறே?'' “ஸிக்ஸ்திலே '”. " யாருடைய பொண்ணு?” '' கூலிக்காரர் மாதவனுடைய பொண்ணுங்க.” 

தொழிலாளியின் பெண்ணல்லவா? தொழிலாளிகளுக்கு வெற்றி யுண்டாகட்டும்! 

நான் அறைக்குள் சென்று, பேனாவை எடுத்து வந்தேன். சுஹாஸினியின் ஆட்டோகிராப் புத்தகத்தை வாங்கி " அஹாஸினிக்குச் சர்வ மங்களமும் ஏற்படட்டும்" என்றெழுதி கையெழுத்தையும் போட்டுக் கொடுத்தேன், பிறகு அவளிடம் கேட்டேன் : “ சாம்பங்காய் தின்கிறாயா?'' 

"தின்றிருக்கிறேன்'' என்று அவள் சொன்னாள். ஒரு பெரிய காகிதத்தை எடுத்து வந்து, சாம்ப மரத்தின்மேல் ஏறி முத்தலாகவும் சிவப்பாகவும் உள்ள ஒரு 50 காயைப் பறித்துக் கட்டிக் கொடுத்தவாறே நான் அவளிடம் சொன்னேன் : “ சுஹாஸினி, இந்தச் சாம்ப மரத்தை நானே நட்டு வளர்த்தேன் தெரியுமா?'' 

“உம்! நிசம்மாவா?” " சத்தியமா.” 

அவள் வணங்கிவிட்டுச் சென்றாள். அன்று இரவு ஒரு புதிய சங்கதி கேள்விப்பட்டேன். பாத்தும்மா வுடைய ஆடு உடனே பிரசவிக்கப் போகிறது! கர்ப்பமாக இருக் கிறது என்று அல்ல ; உடனடியாகப் பிரசவிக்கவே போகிறது என்று! இந்த முக்கியமான விஷயம் எனக்கு எப்படித் தெரியாமல் போயிற்று! அது கர்ப்பமாகியிருப்பதுபோலத் தோன்றவே 

Page 54 

பாத்தும்மாவுடைய ஆடு 

இல்லையே! சிலசமயம் வயிறு பெரிதாக உப்பி இருக்கும்; சிலசமயம் வயிறு ஒட்டி இருக்கும். கர்ப்பமாக இருந்தால் இப்படி இருக்குமா? நான் உம்மாவைக் கேட்டேன்! 

உம்மா சொன்னாள் : ''அதுக்கு இப்ப பேறுகாலம்.'' எனக்குச் சந்தேகம். நிசம்தானா? 

அதாவது பாத்தும்மாவுடைய ஆடு உடனே பிரசவிக்கப்போகிறது. நல்ல செய்திதான். பிரசவிக்கட்டும். எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. 

ஆனும்மா, என்னுடைய அறையைப் பெருக்கி, படுக்கையைத் தட்டி உதறி வெய்யிலில் போட்டுவிட்டு வந்ததும் நான் கேட்டேன் : '' ஏம்மா, ஆட்டுக்கு எதனாச்சியும் கொடுத்தியா?'' 

'' அதுக்குக் கஞ்சித் தண்ணி கொடுத்தாச்சு'' என்று ஆனும்மா சொன்னாள். 

"கஞ்சித் தண்ணி மட்டும் கொடுத்தாப் போதாது. அதுக்குப் புதுப் புல்லு கொடுக்கணும். கொஞ்சம் பிண்ணாக்கு வாங்கி தண்ணீரில் கலக்கிக் கொடுத்தா , ரொம்ப நல்லது.'' 

இத்தகைய உபதேசங்களையெல்லாம் அவளுக்கு வழங்கிய பிறகு, நிறைய பழத்தோல்களையும் ஒரு சிறிய பழத்தையும் ஆனும்மாவிடம் கொடுத்து ஆட்டுக்குக் கொடுக்கும்படி சொன்னேன். 

என் கண்ணெதிரிலேயே ஆனும்மா இவற்றையெல்லாம் ஆட்டுக்குப் பிரியத்தோடு ஊட்டுவதையும் கண்டேன். ஆயினும் பெண்கள் ஆட்டின் கர்ப்பம் சம்பந்தமாகத் தப்புக் கணக்குப் போட்டிருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றியது. இந்த விஷயங் களிலெல்லாம் பெண்கள் தாம் அதாரிட்டிகள். இதை நான் ஒப்புக் கொள்ளவே செய்கிறேன். இருந்தாலும்... ஆட்டின் கர்ப்பம் சம்பந்தப்பட்ட மட்டில் இதோ . பெண்கள் பெரிய பிசகு செய்திருக் கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. எனக்கு அபரிமிதமான மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால் எனக்கு முன்னால் நின்று கொண் டிருக்கும் ஆடு கர்ப்பமாக இருக்கவில்லை ! வயிறு நன்றாக ஒட்டிக் 

Page 55 

பாத்தும்மாவுடைய ஆடு 

கிடந்தது! ஆடு சாம்ப மரத்தின் அடியில் விழுந்து கிடக்கும் சாம்பங் காய்களைத் தின்று கொண்டிருந்தது. கூடவே உம்மாவும் இருந்தாள். அவள் சாம்பங்காய்களைப் பொறுக்கி எடுத்துக்கொண்டிருந்தாள். 

சிவந்த நிறமுடைய பெரும் பனித்துளிகளைப் போல, பச்சை இலைகளினூடே சாம்பங்காய்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன, எனக்கு நேர் எதிராக, முற்றத்தை அடுத்து! 

நான் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கையில் பாத்தும்மா வந்தாள்! என்ன ஆச்சரியம்! அவளுடன் கூட ஒரு ஆடும் வருகிறது; கதீஜாவும் வருகிறாள். ஆனால் பாத்தும்மாவுடன் கூட வரும் ஆடு, கர்ப்பமாகவிருக்கிறது! 

நான் ஆனும்மாவைக் கேட்டேன் : “ இந்த ஆடு யாருது?” ஆனும்மா : '' என்னுது. அக்கா கொடுத்தாங்க.'' பாத்தும்மா, ஆனும்மாவுக்குத் தந்திருக்கிறாள். உம்மா சொன்னாள் : "பாத்தும்மாவோட ஆட்டின் முதல் குட்டி இது." 

அப்போ , ஆனும்மாவுக்கும் ஒரு ஆடு இருக்கிறது. இதே வீட்டில் எனக்கருகிலேயே அதுவும் வாழ்ந்து வருகிறது ; இருந்தும் எனக்கு அது பற்றித் தெரியவில்லை ! இரண்டுக்குமிடையே உள்ள வேறுபாடு எனக்குத் தெரியவில்லை. இரண்டுமே ஒரே மாதிரி தவிட்டு நிறமுடையவை. பிறகு நான் சரியாகக் கூர்ந்து கவனித்ததில், பாத்தும்மாவுடைய ஆட்டின் கண்களைச் சுற்றிலும் கருமை காணப் பட்டது. வந்தவுடனேயே பாத்தும்மாவுடைய ஆடு நேராக வீட்டுக் குள்ளே ஓடியது. நான் அவளிடம் கேட்டேன் : ' என்ன பாத்தும்மா ஆடும் நீயும் இன்னிக்கு ஏன் லேட்டு?” 

பாத்தும்மா அதற்கான காரணத்தை விவரமாகச் சொன்னாள் : கொச்சுண்ணி வாங்கிக் கொடுக்கும் புல் (இரவுக்கானது) போது மானதாக இல்லை. கர்ப்பமுற்றுள்ள ஆடு அல்லவா? அதனால், மைதானங்கள் வயல் வரப்புக்கள் போன்ற இடங்களுக்குச் சென்று, மற்றவர்கள் புல்லைப் பிடுங்கிச் செல்லுமுன்பாக, அவற்றைப் பிடுங்கி, ஆட்டுக்கு கொடுத்துவிட்டு வந்திருக்கிறாள். 

பாத்தும்மா உள்ளே சென்று அண்ணிமாருடனும் தங்கையுடனும் சண்டை பிடிக்கத் தொடங்கினாள். பாத்தும்மாவின் ஆட்டுக்கு வைத்திருந்த கஞ்சித் தண்ணீர் மிகவும் குறைவு!. 

" ஆனும்மா அதை எடுத்துத் தன்னுடைய ஆட்டுக்குக் கொடுத் திருக்கிரு! ஆனா அண்ணிங்க இத கவனிக்காம என்ன செஞ்சிக்கிட்டு இருந்தாங்க?” 

Page 56 

பாத்தும்மாவுடைய ஆடு 

நாத்தி - அண்ணிப் போர் ஒன்றை ரஸிக்கலாம் என நான் ஆவலோடு காத்திருந்தேன். மாமி மருமகள் சண்டையோ, மருமகள் களுக்கிடையே சண்டையோ, இதுவரை கேட்க இயலவில்லை. உம்மா வுடைய குரல் மாத்திரமே உச்சஸ்தாயியில் கேட்கும். எல்லோரையும் நன்கு அதட்டுவாள். இப்போது ஆனும்மாவுடைய குரல் இரைந்து கேட்டது : | 

'' என் ஆட்டுக்குக் கொஞ்சம்தான் கஞ்சித் தண்ணி கொடுக்கறது வழக்கம். கொஞ்சத்தை நாங்க குடிச்சோம். மீதியை அப்படியே வெச்சிருக்கறோம் '' 

நான் கொடுத்த பழத்தோல்களையும் ஆனும்மாவுடைய ஆடுதான் தின்றிருக்கிறது என்ற விஷயத்தை. நான் வெளியே சொல்லவே யில்லை . 

"போதும், போதும். நீ ஒண்ணும் சொல்ல வேணாம்.'' பிறகு பாத்தும்மா குறைபட்டுக் கொண்டாள் : " அம்மாவுக்கும்தான் என்னைக் கண்டா பிடிக்காதே!" 

'' அடீ, மரச்சீனிக் கிழங்கை வேகவச்சித் தின்னபிறவுதான், கொஞ்சம் கஞ்சித்தண்ணி குடிக்கறது வழக்கம். நாங்களும் கொஞ்ச மாத்தான் குடிச்சோம். உன் ஆட்டுக்குத்தான் மீதியை அப்படியே வெச்சிருந்தோம்!'' 

மரச்சீனிக் கிழங்கை வேகவைத்து உரித்துத் தின்றபிறகு கஞ்சித் தண்ணியைக் குடிக்கவேண்டும் என்று சொன்னார்களே ? மரச் சீனியை இவர்கள் எப்போது சாப்பிடுகிறார்கள் ? பரிதாபகரமான ரகசியம் எதுவும் நெருக்குதல் தேரும்போதல்லவா வெளிப்படுகிறது! உம்மா, ஆனும்மா, ஐசோம்மா, குஞ்ஞானும்மா இத்துணைபேரும் சரிவர சாதம் சாப்பிடுவது கிடையாது. அவர்கட்குச் சாப்பாடு கிடைப்பதில்லை என்பதே இதன் பொருளாகும். ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே சாதம் போடப்படுகிறது; மற்றவர்கள் மரச்சீனிக்கிழங்கை * உண்டு வாழ்கிறார்கள். காலை பதினோரு மணி வாக்கில் உலர்ந்த மரச்சீனிக் கிழங்கை இடித்துப் பொடி செய்து அதைக் கொண்டு 'புட்டு' தயாரித்துத் தின்கிறார்கள். ஒரு சிட்டிகைத் தேயிலையை (அது அநேகமாக சுலைமான் தந்ததாகவே இருக்கும்) வெந்நீரில் போட்டு சர்க்கரையோ பாலோ சேர்க்காமல் குடிப்பார்கள். பிறகு வேலையில் முனைந்து ஈடுபடுவார்கள். எல்லோருக்குமே இடுப்பொடிய நிறைய வேலை இருக்கும். ஆண்கள் மதியச் சாப்பாட்டுக்குத்தான் வீடு திரும்புவார்கள். பெண்கள் தாம் * கேரளத்தில் மரவள்ளிக் கிழங்கை, மரச்சீனி என்பர். 

Page 57 

பாத்தும்மாவுடைய ஆடு 

துன்பங்களையெல்லாம் அனுபவிக்கிறார்கள். இது என் வீட்டில் மட்டுமல்ல. பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்கள் அனைத்திலுமே இந்த நிலைமைதான். ஸ்திரீகள் மகத்தான சேவை, தியாகம் செய்து வருகிறார்கள்; ஆனால் ஆண்கள் இதனை உணருவது இல்லை? 

அப்துல் காதரின் மனைவி குஞ்ஞானும்மாவின் குரல் கேட்டது : “பாத்தும்மா அக்கா , ஆடு பெத்ததும் எங்களை மறந்துடாதீங்க. சுபைதாவுக்குக் கொஞ்சம் பால் தரணும் என்ன?'' 

ஹனீஃபாவின் பெண்டாட்டி ஐசோம்மா கேட்டாள் : ''ஏனாம்? பால் என் ரஷீதோட தொண்டைக்குள்ளே எறங்காதா என்ன? 

சுலைமானின் மறுபாதி ஆனும்மா சொன்னாள்: " என் ஸயிது முகம்மதும் பால் குடிக்கறதாலே ஒண்ணும் கொறஞ்சு போயிடமாட்டான்.'' 

ஆனும்மா ஸ்கூல் சென்று படித்தவள். பாத்தும்மா ஆனும்மா வுக்குத் தமக்கை என்றாலும், அதிகம் எழுத படிக்கக் கற்றவள் அல்ல. அதனால் பாத்தும்மா சொன்னாள் : ' போதும் போதும். வாழப்பழத்திலே ஊசி ஏத்தறதே உன் வழக்கம்.'' 

சற்றுப் பொறுத்து நான் சந்தடியின்றி மெதுவாக எனது அறைக்குள் சென்றபோது, பாத்தும்மாவின் ஆடு அங்கு இருப்பதைக் கண்டேன். என் பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்த நேந்திரம் பழங்களில், இரண்டினை அது தின்றுவிட்டிருந்தது. அது பாத்தும்மா வுடைய ஆடேதான்! கிழக்குப்புறத்து வாயில் கதவின் வழியாக, அது உள்ளே வந்திருக்கிறது; அந்தக் கதவைச் சாத்த ஆனும்மா மறந்திருக்கிறாள். 

நான் கூச்சல் போட்டேன் : '' பாத்தும்மா ஆனும்மா ஓடி வாங்க! உங்க ஆடு பெரிய நேந்திரம்பழம் திங்குது பாருங்க!'' 

இருவரும் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி வந்தார்கள். ஆனும்மாவுக்கு பரம திருப்தி. அவள் சொன்னாள்: “ இது அக்கா வுடைய ஆடு.'' 

'. போனாப் போவுது இக்காக்கா”-பாத்தும்மா சொன்னாள் : " நான் வேறே ரெண்டு பழம் வாங்கித் தந்திடறேன். அதுக்குப் பசி தாங்கலைப் போலிருக்குது, பாவம்." 

ஆனும்மா சொன்னாள் : “ இதுக்கு எதைச் சாப்பிட்டாத்தான் என்ன! பசி அடங்கவே அடங்காது. என் ஆட்டோட புல்லையுமல்ல அது திருடித் திங்குது.'' 

பாத்தும்மா கடுகடுத்தாள் : " போதும் போதும், உன் ஆடும் உன் புல்லும்!'' 

Page 58 

பாத்தும்மாவுடைய ஆடு 

43 

நான் சொன்னேன் : '' போனாப் போவுது விடுங்க. பாத்தும்மா, நீ குழந்தைகளுக் கெல்லாம் ஆட்டின் பால் தரணும் என்ன!'' 

''அது எப்படி காக்கா முடியும்? செலவு எவ்வளவு இருக்குது? பாலு விக்கிற பணத்தைக் கொண்டுதான், எங்க வீட்டு வாசக் கதவைச் சரியண்ண னும்!'' 

என்ன செய்வது? பாத்தும்மாவும் கொச்சுண்ணியும் கதீஜாவும் வசித்து வரும் வீட்டின் கதவு, கயிற்றால் கட்டி வைக்கப்பட்டுள்ளது. அதை முதலில் சரிப்படுத்தியாக வேண்டுமே! 

வீட்டில் உள்ள பெண்களுக்கெல்லாம் நான் இங்கிருந்து புறப்படு முன்பாக, குறைந்த பட்சம் ஒரே ஒரு தடவையாவது வயிறு நிரம்பச் சாப்பாடு கிடைக்கும்படிச் செய்யவேண்டும். அதுக்குப் பணத்துக்கு எங்கே போவது? என்னிடமோ சல்லிக்காசு கூடக் கிடையாது. இருந்ததை எல்லாம் எல்லோருக்குமாகப் பங்கு போட்டுக் கொடுத் தாகிவிட்டது. பங்கிட்டுக் கொடுத்தேன் என்று சொன்னால் அது வெறும் மரியாதை நிமித்தமாகத்தான். உண்மையைச் சொல்லப் போனால், எல்லோரும் என்னிடமிருந்து பறித்துக் கொண்டு போனார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாகும். பிறகு என்னை நிர்ப்பந்தமாக இத்தகைய ஒரு நிலைமையில் அமர்த்தி வைத்துள்ளனர். 

நினைக்க நினைக்கப் பற்றிக்கொண்டு வருகிறது. நான் என்ன வெல்லாம் வாங்கித் தந்திருக்கிறேன் ! பணமாகக் கொடுத்திருக் கிறேன், பாத்திரங்கள் வாங்கிக் கொடுத்தேன். கண்ணாடிச் சாமான்கள் வாங்கிக் கொடுத்தேன். பெண்கள் தலைக்குத் ' தட்டம் முண்டுகள் ' வாங்கித் தந்தேன். இவ்வளவெல்லாம் செய்தும் " நான் ஒன்றுமே தரவில்லை'' என்பதுதான் எல்லோருக்கு முள்ள குறை. எனக்கு இப்பொ வந்திருக்கும் கோபத்துக்கு அளவே கிடையாது. இடம் கிடைத்ததோ , போயிற்று! நான் யாரையும் விடபோவதில்லை. அபுவைத் திட்டுவேன். அப்துல் காதரைத் திட்டி நொறுக்குவேன். ஹனிஃபாவையும் விடப்போவதில்லை. அப்துல் காதர் , ஹனீஃபா, சுலைமான் ஆகிய மூவரது குழந்தைகளையும் அடிப்பேன். ஆனால் பாத்தும்மாவின் மகள் கதீஜாவை அடிக்க மாட்டேன். ஏனெனில் அவள் தான் வெளியே தென்படுவதே கிடையாது! வாய்க்கு வந்தபடி கூச்சலிடும்போது வீட்டில் உள்ள பெண்கள் யாரையும் விட்டு வைக்க மாட்டேன். குறிப்பாகத் தம்பி மாரின் மனைவியரைத் திட்டாமல் இருக்கமாட்டேன். என்னுடைய 

Page 59 

44 

பாத்தும்மாவுடைய ஆடு 

குரல் படிப்படியாக உயர்ந்து உச்சஸ்தாயியை எட்டும்போது வீடு நிசப்தமாகிவிடும்! ஒரே அமைதிதான். நான் எதையோ சாதித்து விட்ட தோரணையில் அப்படியே அமர்ந்து கொண்டிருப்பேன். 

பாத்தும்மாவுடைய ஆடு முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறது. உலர்ந்த பலா இலைகளைத் தின்று கொண்டிருக்கிறது. தின்று வயிற்றை நிரப்பிக் கொள்ளட்டும். அப்போதுதான் பிரசவிக்கையில் நிறைய பால் சுரக்கும். சுபைதா , ரஷீத், கதீஜா , அபி, ஸையது முகம்மது பாத்துக்குட்டி முதலிய குழந்தைகள் எல்லோருமே கொஞ்சம் பால் குடிப்பது நல்லது. ஆனால் பால், நெய் இதில் ஒன்றையும் என் வீட்டில் யாருமே பயன்படுத்துவது கிடையாது. நான் நெய் சாப்பிடுகிறேன் ; பாலும் நான் குடிப்பது உண்டு. ஆனால் என் விஷயத்தில் மட்டும் இங்கு ஸ்பெஷல் சலுகை உண்டு. நெய், பால் விஷயத்தைக் கூறும்போது ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. பத்து, இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த சங்கதி இது. 

நானும், அப்துல் காதரும், ஹனிஃபாவும், பாத்தும்மாவும், மட்டுமே அப்போது பிறந்திருந்தோம். ஆனும்மா பிறந்து விட்டாளா இல்லையா என்பது சரியாக நினைவு இல்லை. அபு பிறக்கவில்லை என்பது மட்டும் நிச்சயம். 

அப்போது வீட்டில் கறவைமாடு இருந்தது. பாலுக்கும் தயிருக்கும் பஞ்சமே கிடையாது. 

வாப்பா மர வியாபாரத்துடன் படகு வியாபாரத்தையும் நடத்தி வந்தார். மலைகளிலிருந்து மரங்களை வெட்டி, அங்கிருந்தே அவற்றைப் படகுகளில் ஏற்றி நதிகளின் வழியாக மொத்தம் மொத்த மாகக் கொண்டுவந்து இறக்கித், தச்சர்களை விட்டு நன்றாகச் சீவி இழைக்குமாறு செய்து மொத்தக் கணக்கில் பெரும் தொகைக்கு 

அவற்றை விற்பது வழக்கம். 

அப்போது வீட்டில் எப்போதுமே நெய் இருக்கும் ; மஞ்சள் நிறத்தில் பெரிய மணல் போல. கம்மென்று வாசனை வீசும் நெய். ஒரு பெரிய பளிங்கு ஜாடி நிறைய அப்படியே வைக்கப்பட்டிருக்கும். 

கடையத்தூர் மலைகளில் நிறையக் காணப்படும் குருந்தோட்டி இலைகளைத் தின்று வளர்ந்த பசுவுடைய நெய்தான் அது. இந்த விவரங்களையெல்லாம் வாப்பா சொன்னதாக எனக்கு நினைவிருக் கிறது. நெய் ஜாடிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த ஜாடியில் சர்க்கரை இருந்தது. இந்த இரண்டு பளிங்கு ஜாடிகளுமே மூலையில் இருந்த பலகையில் வைக்கப்பட்டிருந்தன. 

Page 60

பாத்தும்மாவுடைய ஆடு 

45 

சாதத்திலும் பலகாரங்களிலும் இந்த நெய்யைச் சேர்த்துக்கொண்டு தான் நாங்கள் சாப்பிடுவோம். 

அந்தக் காலத்தில், வாப்பாவிடம் நான் நிறைய அடி வாங்கி யிருக்கிறேன். அப்துல் காதர் ஒரு போதும் அடி வாங்கியதே கிடையாது. அந்தப் பாக்கியம் எனக்கு மட்டும் சுலபமாகக் கிடைத்து வந்தது. சில சமயம் காரணத்தோடும், சில சமயம் காரணமே இல்லாமலும் கூட அடிகள் கிடைத்து வந்தன. தந்தை மாரும் குழந்தைகளை அடிப்பார்கள். அம்மாக்களும் மக்களை அடிப்பர். ஓ...என் உம்மாவும் என்னை நிறைய அடித்திருக்கிறாள்! கரண்டிக் காம்பினால் என்னை அடித்து அடித்து சமையலறையி லிருந்து வெளியே விரட்டுவாள். அந்தக் காலத்தில் எனக்கு, எப்போதுமே ஏதாவது தின்றுகொண்டே இருக்கவேண்டும். அடுக் களைக்குள் புகுந்து பாத்திரங்களையும் டப்பாக்களையும் சோதனை யிடுவேன். ஏதாவது கிடைத்தால் அதை வாரித் தின்பேன். அப்துல் காதரும் இப்படியே தின்றிருக்கிறான். ஆனால் யாரும் அதை நம்பமாட்டார்கள். அவன் திருடித் தின்றாலும் நான் தான் ஜவாப் தாரி. எனக்குத் தான் அடி கிடைக்கும். 

அன்றொரு நாள் காலை நாஸ்தாவுக்கும் மதியச் சாப்பாட்டுக்கும் இடையில் உள்ள சுபமுகூர்த்த வேளை. கொஞ்சம் கொஞ்சமாகப் பசியெடுக்க ஆரம்பித்திருந்தது. தொறுக்குத் தீனி ஏதேனும் தின்னு வதற்கு ஏற்ற சமயம் அது!. நான் சமையல் அறைப் பக்கமாக நழுவினேன். அங்கு உம்மா இருந்தாள். வேலைக்காரியுமிருந்தாள். வேலைக்காரியின் பெயர் நங்கேலி என்பது. இந்த நங்கேலியும் என்னை அடிப்பாள். அடித்து அடித்து என்னை விரட்டுவாள். 

நான் சின்ன எசமானன்! சின்ன எசமானை வேலைக்காரி அடிக்கக் கூடாது. ஆனால், இந்த நியாயம் ஒன்றும் எனது வீட்டில் கிடை யாது. உம்மா விடம் சொன்னால் : ''நல்லா வேணும், நீ கைபோட்டு ஏன் வாரித் தின்னே ?'' என்றுதான் கூறுவாள். அதோடு, இந்த நங்கேலியிடம் நான் பால் குடித்திருக்கிறேன் என்று வேறு சொல்லு வாள். (பல பெண்களிடம் நான் பால் குடித்திருப்பதாக உம்மாவும் மற்றவர்களும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.) 

நான் என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தேன். ஒரு பச்சை மாங்காயையாவது கடித்துத் தின்னலாம். ஆனால் அதற்கும் வழி யில்லை. நங்கேலி சொன்னாள் : ''பசிக்கட்டும், கொஞ்ச நேரத்துக்கு அப்படியே இரு. இதோ சாப்பாடு போடறேன். இல்லே முதுகிலே ரெண்டு வைக்கட்டுமா?" 

 Page 61 

46 

பாத்தும்மாவுடைய ஆடு 

ஐய்ய! நான் பேசாமல் அங்கிருந்து வெளியேறினேன். இங்கு மங்குமாகச் சற்று நேரம் சுற்றிவிட்டு வீட்டுக்குள் சென்றபோது, புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நடத்தினேன். நெய் ஜாடியும் சர்க்கரை ஜாடியும் அருகருகே இருக்கின்றன ; இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் தின்பதற்கு ருசியான பண்டம் ஒன்று தயாராகிவிடும்! இதன் பிறகு நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. யாருக்கும் தெரியாமல் குழிக் கிண்ணம் ஒன்றை எடுத்து வந்தேன். பிறகு சுற்றும் முற்றும் கவனமாக ஆராய்ந்துவிட்டு, மெதுவே வாப்பாவின் படுக்கை யறைக்குள் சென்றேன். நெய் ஜாடியை மெல்ல எடுத்து வாப்பாவின் கட்டிலின் மீது வைத்தேன். மூடியை மெதுவாகத் திறந்து என்னுடைய பரிசுத்தமான கையினால் நெய்யை வாரி யெடுத்துப் பாதிக் கிண்ணம் வரை நிறைத்தேன். பிறகு நெய் ஜாடியை எடுத்து மூலைப் பலகையில் வைத்தேன். சர்க்கரையையும் இதேபோலக் கிண்ணத்தில் தாராளமாகக் கொட்டி நிரப்பினேன், இரண்டு ஜாடிகளுமே இப்போது அதனதன் இடத்தில் வைக்கப் பட்டு விட்டன. யார் பார்த்தாலும் அதில் எந்தவித மாற்றமும் இருப்பதாகத் தோன்றாதவாறு கச்சிதமாகக் காரியத்தை முடித் திருந்தேன், சர்க்கரையையும் நெய்யையும் எடுத்துக் கொண்ட பிறகு, வாப்பா எப்படி கரண்டியை ஜாடிக்குள் விட்டு அவற்றை சமப்படுத்துவாரோ அதேபோல, நான் எனது கையினை ஜாடிக்குள் விட்டு நெய்யையும் சர்க்கரையையும் சமமாகப் பரப்பி வைத்தேன். பிறகு வாப்பாவின் கட்டிலில் அமர்ந்து கிண்ணத்து நெய்யையும் சர்க்கரையையும் சேர்த்துக் குழைத்து, கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டு ' கரும் முரும்' என்று கடித்து மென்று தின்னத் துவங் கினேன். அஸ்கா சர்க்கரை ! அதனால் இன்னும் கரைந்தபாடில்லை. ஆயினும் மிகவும் ஸ்டைலாக சுவைத்துத் தின்று கொண்டிருந்தேன். 

அப்போது மிகவும் மெதுவான அடங்கிய குரலில் ஒரு கேள்வி! எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கேள்வியைத் தொடுத்தது அப்துல் காதர்! அருகேயேதான் நின்றுகொண்டிருந்தான். இவன் எப்படி, எப்போது, அறைக்குள் வந்தான்? தீர்மானமாகத் தெரிய வில்லை. அவன் மெள்ளக் கேட்டான் : " இக்காக்கா என்ன தின்றே ?'' 

“ஒரு மருந்து.'' " நான் உங்க பின்னாலேயே நின்னுகிட்டு எல்லாம் பார்த்துக் கிட்டேதான் இருந்தேன் ; எனக்கும் கொடு ; இல்லே எல்லாத்தை யும் நான் வெளியே போய்ச் சொல்லிடுவேன்! 

 Page 62 

பாத்தும்மாவுடைய ஆடு 

பரம ரகசியமான விஷயம் போல நான் மெதுவாகக் கேட்டேன் : " அடே நீ என் தம்பியல்ல?'' 

'' அப்படியானா எனக்கும் தா!'' நான் அவனுக்கும் கொடுத்தேன், கிண்ணத்தை நக்கித் துடைத்தது அவன் தான். 

" இனிமே நான் எடுக்கவே மாட்டேன் - நான் சொன்னேன் : 'நீயும் எடுக்காதே என்ன!'' 

இந்த உடன்பாட்டின் பேரில் நாங்கள் அறையை விட்டு வெளி யேறினோம். கிண்ணத்தை இருந்த இடத்திலேயே கொண்டு போய் வைத்து விட்டு உலகில் எதுவுமே நடக்காத மாதிரி நாங்கள் வெளி யேறினோம். 

இதன் பிறகு நெய்யும் சர்க்கரையும் இருந்த திசை பக்கமே நான் செல்லவில்லை ; அவற்றைத் தொடவுமில்லை என்பது கலப்படமற்ற உண்மையாகும். நெய்யின் நன்மை தீமை என்ன என்பதும் எனக்குத் தெரியாது தின்பதற்கு ஏதும் கிடைக்காதபோது அவற்றை எடுத்து தின்றேன் அவ்வளவுதான். வீட்டில் அப்போ தெல்லாம் தின்பதற்குப் பல பண்டங்கள் இருக்கும். பழுத்த பலாப் பழங்களும் மாம்பழங்களும் இருந்தன. பொரித்து வைக்கப்பட்ட இறைச்சி ஒரு ஜாடி. நிறைய அலமாரியில் இருந்தது. அக்கறையெல்லாம் இவற்றில்தான். 

இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அப்பாவியான எனக்கு இதோ அடி கிடைக்கத் தொடங்கியுள்ளது ; அப்துல் காதருக்கு நோய் கண்டிருக்கிறது! 

நான் அடிபடும் காரணம், யாரோ நெய்யை அள்ள அள்ளித் திருடித் தின்கிறார்கள். ஜாடிக்கு வெளியிலும் கட்டிலிலும் ரேகை அடையாளங்கள் காணப்படுகின்றன. நான் நிறைய அடி வாங்கினேன். அப்துல் காதரின் நோய்தான் விசித்திரமானதாக இருந்தது. அவன் பலூன் மாதிரி உப்பிக்கொண்டே போனான். எப்போது பார்த்தாலும் தண்ணீரைத் தண்ணீரைக் குடித்தான். அவனால் எதையுமே தின்ன முடியாமல் போயிற்று. 

குழந்தைக்கு ஏதோ பெரிய நோய் வந்திடிச்சி.'' உம்மாவும் நங்கேலியும் சொன்னார்கள். அப்பா நாட்டு வைத்தியரைக் கூட்டி வரப் போனார். அப்போதெல்லாம் 'கணியான்' தான் பெரிய வைத் தியன். அப்போது உம்மா அப்துல் காதரை மடிமேல் கிடத்திய வண்ணம், அவனைத் தடவிக் கொடுத்தபடியே வருத்தத்தோடு சொன்னாள் ! 

 Page 63 

48 

பாத்தும்மாவுடைய ஆடு 

"ஏ அல்லா! என் தங்கத்துக்கு என்ன ஆயிடுச்சு? '' நங்கேலி சொன்னாள் : "ஆண்டவனே, என் பொன்குடத்துக்கு எதுவும் வராம காப்பாத்து!'' 

அப்துல் காதர் எந்தவிதக் கவலையுமின்றி, நோயாளியாக, தடியனாக, செல்லக் குழந்தையாக இருந்து வந்தான். 

'' அடே திருடா! நீ அந்த நெய்யெல்லாத்தையம் திருடித் தின்னுக்கிட்டு தடியனா உப்பிக்கிட்டே போறே இல்லே?'' என்று சொல்லும் பாவனையில் நான் அவனது முகத்தை உற்றுப் பார்த்தேன், 

ஆனால், இதற்கெல்லாம் அவன் மசியவே இல்லை. கணியான் வந்தான். அதன் பிறகு வேறு ஒரு வைத்தியர் வேலன் வந்தார். அதன் பிறகு ஒரு முஸ்லிம் நாட்டு வைத்தியர் முசிலியாரும் வந்து பார்த்தார். 

நாட்கள் நகர்ந்தன ; நெய்யும் குறைந்து கொண்டே போயிற்று. வழக்கம் போல நான் அடி வாங்கிக் கொண்டுமிருந்தேன். அப்துல் காதர் பெருத்துக் கொண்டே போனான். அவன் மருந்து எதையும் சாப்பிடவே மாட்டான். யாருக்கும் தெரியாமல் அதை அவன் வெளியே கொட்டுவான். எப்போதேனும் கொஞ்சம் சாப்பிடுவான். அவ்வளவுதான். அவன் நோயாளியானதால் எல்லோரும். அவனிடம் பிரியமாக இருந்து வந்தனர். அவனுக்குச் சோர்வு ஏதும் கிடையாது. நன்றாகவே சுற்றுவான். தினமும் நெய்யையும் சர்க்கரையையும் அவன் தின்கிறான் என்பது எனக்குத் தெரியும். ஆனால் யாரிடம் போய் இதைச் சொல்வது? சொன்னாலும் யாரும் நம்பவும் மாட்டார்கள். 

ஒரு நாள் அவனுக்கு நான் கொஞ்சம் பொரித்த இறைச்சி கொடுத்தேன். யாரும் அறியாதவாறு அலமாரிக்குள்ளிலிருந்து நான் அதனைத் திருடி எடுத்திருந்தேன். அவன் அதை வாங்கித் தின்றான். அப்போது நான் கேட்டேன் : 

'' அடே, நீ என் தம்பி இல்லே! நிஜத்தை சொல்லு. நீ இப்படிப் பெருத்து போனது எப்படி? நெய்யும் சர்க்கரையும் தின்று தானே?'' 

“பேசாம போ, இக்காக்கா, எனக்கு உடம்பு நோவுன்னு சொல்லலே?'' 

இவனுடைய திருட்டை அம்பலப்படுத்த வழி என்ன? சொல்லப் போனால் யாரும் நம்ப மாட்டார்கள். இருந்தாலும் நான் உம்மாவிடம் 

 Page 64 

பாததும்மாவுடைய ஆடு 

49 

சொன்னேன், நங்கேலியிடமும் சொன்னேன், நெய்யையும் சர்க்கரை யையும் தின்று முடிக்கும் பெரும் திருடன் அவன் தான் என்று! 

நான் எண்ணியது போலவே 5:1 எனது கூற்றைத் துளியும் நம்பவே இல்லை. ஏழை சொல் அம்பலம் ஏறுமா? ஆயினும் எனது நல்லிதயத்தின் சக்தியால் ஒரு சம்பவம் நடக்கவே செய்தது. 

ஒரு வெள்ளிக்கிழமை. வாப்பா நமாஸ் ஓதுவதற்காகப் பள்ளி வாசலுக்குப் போயிருந்தார். அடுத்து விட்டில் உம்மாவும் வேறு சில பெண்களுமாகத் தலையில் பேனெட்துக் கொண்டும், ஊர்க் கதைகளைப் பேசிக்கொண்டும். வம்பளது கொண்டிருந்தார்கள். அப்துல் காதரின் விசித்திரமான நோய் வித்தும் பேச்சு அடி பட்டது. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு நான் வீட்டுக்கு வந்தேன். நங்கேலி தூங்கிக்கொண்டிருந்தாள், சமையலறைக்குள் சென்ற நான் இங்கு மங்குமாகச் சற்று நேரம் குடைந்தேன். சிலவற்றைக் 57 கபோட்டு வா! வாயில் போட்டுக்கொண்டேன். பிறகு அங்கிருந்து உள் வழியாக வராந்தாவுக்கு வந்து கொண்டிருந்தேன். வாப்பா படுக்கும் அறையில் ஏதோ ஒ), சலசலப்பு : கரு பூட்டு சத்தம்!... 

நான் மெல்ல எட்டிப் பார்த்தேன். வாப்பாவின் கட்டிலின் கீழ் இரண்டு கால்கள் : ஒன்று தொய்ந்து - கொங்சம் கால். 

அப்துல் காதர் நெய்யும் சர்க்கரையும் தின்று கொண்டிருக்கிறான்! நான் ஓசைப்படாமல் பூனை போல வெளியே வந்து, உம்மாவிடம் ஓடினேன். 

" அப்துல் காதரின் நோய் பார்க்கணுமா? ஓடிவா!'' எல்லோரையும் நான் கூட்டி வந்து, ஓசைப்படாமல் கதவிற்கு வெளியே நிற்கவைத்தேன். நான் மட்டும் உள்ளே சென்று, நிமிட நேரத்தில் கதவுகள் இரண்டையும் படீரெனத் திறந்து விட்டேன். 

குழிக் கிண்ணத்திலிருந்து நெய்யையும் சர்க்கரையையும் தின்றவாறு, அப்துல் காதர் கட்டிலின் சிழ் அமர்ந்து கொண்டிருந் தான்! 

நான் கையும் களவுமாக அவனைப் பிடித்து வெளியே இழுத்து வந்தேன். உம்மா அவனைச் செம்மையாக வாங்கினாள். இந்த இரைச்சலில் நங்கேலி எழுந்து வந்தாள். விஷயமறிந்ததும் அவளும் அவனை அடித்தாள். 

அந்த மனோகரமான காட்சியைக் கண்டு மகிழ்ந்தவாறு, நான் நின்றுகொண்டிருந்தேன். வாப்பா வந்தபோது அவரும் அவனை 

அடித்தார். 

பா-4 

 Page 65 

50 

பாத்தும்மாவுடைய ஆடு 

இதெல்லாம் முடிந்த பிறகு அவன் தனியே என்னிடம் வந்து, '' நான் இக்காக்காவுடைய தம்பியில்லே? எதுக்காக என்னை 

நீங்க காட்டிக் கொடுத்தீங்க?'' என்று கேட்டான். 

''பெருந் திருடா! உன்னாலே நான் எத்தனி அடி வாங்கியிருக் கறேன் தெரியுமா? நான் உன்னோட அண்ணனுங்கிற நினைப்பு அப்ப உனக்கு வந்திச்சா? பக்காத் திருடா : '' 

இதையெல்லாம் நினைத்துக்கொண்டு நான் எனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டிருந்தேன். அப்போது உம்மா அங்கே வந்தாள். 

“ எதுக்காக நீ தனியே உட்கார்ந்து உனக்குள்ளாரவே சிரிச்சுக் ' கிட்டு இருக்கறே?'' என்று கேட்டாள். 

" பழைய ஒரு சம்பவத்தை நினைச்சப்ப சிரிப்பு வந்திச்சு. சின்னப்போ அப்துல் காதர் நெய்யைத் திருடித் தின்னு பலூன் 

மாதிரி ஊதிப்போனானே-''' 

' ஆம்! அதை நீ இன்னும் மறக்கலே?'' “ இல்லே ! ) | " உங்கிட்ட பணம் இருந்தா அஞ்சு ரூபா தாயேன், பாத்தும் மாவோடு ஆடு கஞ்சிக் கலயத்தை உடைச்சிடுச்சி. '' 

“ இக்காக்கா! அது, ஆனும்மாவோட ஆடாயிருக்கும் '' பாத்தும்மா சொன்னாள். 

ஆனும்மா ஓடிவந்து சொன்னாள் : " அது என் ஆடு அல்ல. இத்தாத்தா (அக்கா) ஆடுதான் அது.'' 

பாத்தும்மா : '' போதுண்டீ போதும் பெரிய அண்ணா இருக்காரு, கண்ணு தெரியலை? நீ கொஞ்சம் அடக்க ஒடுக்கமா இருக்கக் கத்துக்க. என் ஆடுதான்னு உனக்கு எப்படித் தெரிஞ்சுது? சொல்லேன் பார்க்கலாம்?'' ஆனும்மா சொன்னாள் : "பெரிய அண்ணனும் தெரிஞ்சுக்கட்டுமேன்னுதால்: இதை நான் இப்ப சொல்லறேன். அக்காவோட ஆடு இங்கே வந்தா , என் ஆட்டை நான் உள்ளே கொண்டுபோய்க் கட்டிப் போட்டுடுவேன். அக்காவோட ஆடு, என் ஆட்டோட புல்லைத் திருடித் திங்கறது ; எங்களோடு மரவள்ளிக் கிழங்குப் பட்டைத் திருடித் திங்கறது. எங்களோட பாலில்லாத சர்க்கரை இல்லாத சாயாவையும் கூட திருட்டுத்தனமாக் குடிச்சிடறது. புள்ளைகளுக்குத் தின்ன எதுவுமே கிடைக்கறது இல்லே. எல்லாத்தியும் இந்த ஆடே தின்னு 

முடிக்குது!" 

 Page 66 

பாத்தும்மாவுடைய ஆடு 

51 

பாத்தும்மா சொன்னாள் : “போதுண்டீ போதும், உன்னுது திருடத் தெரியாத ஒரு ஆடு பாரு! இந்த ஆடு உனக்கெங்கிருந்து வந்திச்சடி?'' 

ஆனும்மா சொன்னாள் : " அது, அக்கா தந்தது தான் ''. '' அடி,'' பாத்தும்மா சொன்னாள் : '' இந்த உலகத்திலெ, எத்தினி அக்காமாரு தங்களோட தங்கைமாருக்குக் கொடுக்கறாங்க? அதைக் கொஞ்சம் சொல்லேன்!'' ஆனும்மா சொன்னாள் : "ஐய்யே! எத்தினியோ அக்காமாருங்க தங்கச்சிகளுக்கு யானையே கொடுக்கறாங்க ! ப்பூ ! குச்சி போல, ஒரு நோஞ்சான் ஆட்டைக் கொடுத்திட்டு என்ன பெருமையோ?'' 

பாத்தும்மாவுக்கு வெறி பிடித்தது ; அவள் சொன்னாள் : * பெரிய காக்கா இங்கே இருக்காரு, நீ பொழச்சே. இல்லே, உன்னை நான் விட்டு வெச்சிருப்பேன்னு நினைச்சியா? அடீ, கன்னாபின்னான்னு பேசாதே. ஆண்டவனுக்குப் பொறுக்காது. எனக்கு ரெண்டு ஆடு இருந்திச்சி. அதிலே ஒண்ணை, என் அருமைத் தங்கையாச்சேன்னு உனக்குக் கொடுத்தேன். அதைக் கொஞ்சம் நினைப்பு வெச்சுக்க!'' 

பாத்தும்மா பிறகு என்னருகே வந்து மெல்லக் கேட்டாள் : '' கதீஜாவுடைய கம்மல் விஷயம் மறந்தீட்டீங்களா?'' நானும் தாழ்ந்த குரலில், “ இல்லை'' என்று சொன்னேன். பாத்தும்மா தாழ்ந்த குரலில் போதித்தாள் ; ' யாருக்கும் தெரியவேணாம்". உடனே ஆனும்மா என்னருகே வந்து கேட்டாள் : ''பெரிய காக்கா , அக்கா என்ன ரகஸ்யம் சொல்லிக்கிட் டிருந்தா ?'' 

பாத்தும்மா ஓடி வந்து, ''ஒண்ணும் சொல்லலேடி அம்மா '' என்றாள். '' இல்லே இல்லே. எனக்குத் தெரியும். எங்களுக்கெல்லாம் தெரியாமே, அக்காவுக்கு ஏதோ தர முன்னு கேட்டிருக்கா . பெரிய காக்கா , என்ன தர்றதா சொல்லியிருக்கீங்க? 

அப்போது உள்ளேயிருந்து இரண்டு அசரீரி வாக்குகள் ஒரே சமயத்தில் சேர்ந்து ஒலித்தன. அப்துல் காதரின் மனைவி குஞ்ஞானும் மாவும் ஹனீஃபாவின் மனைவி ஐசேரம்மாவும் தாம் அவற்றின் சொந்தக்காரிகள். 

"நகை நட்டுங்கன்னா, எங்க புள்ளைகளுக்கும் வேணும்." 

 Page 67 

பாத்தும்மாவுடைய ஆடு 

இந்த ' முக்கால அறிவு' அவர்களுக்கு எப்படி ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. பெண்களுக்கு இதெல்லாம் சகஜமாயிருக் கலாம்! | 

ஆனால் பாத்தும்மாவுக்கு இதைக் கேட்டதும் மீண்டும் வெறி பிடித்தது: “ அடீ , கதீஜா , நம்ம ஆட்டைக் கூப்பிடு. நாம போகலாம் வா. இங்க இருக்கறவங்க எல்லாம் சரியான மூதேவீங்க. இனிமே நாம இங்க அடியெடுத்து வைக்கக்கூடாது!'' 

ஆனும்மாவுக்குப் புரிந்து விட்டது : அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது, அவள் சொன்னாள் : 

'' அல்லாவே ! அதுதான் சங்கதி. பொன்னு விஷயம்தான். நகையாத்தான் இருக்கணும்! பெரிய காக்கா என்ன தர்றேன்னு சொல்லியிருக்கீங்க?'' 

நான் சொன்னேன் ! அதாவது விஷயத்தை எடுத்துக் கூறினேன்: " எல்லோரும் தெரிஞ்சுக்குங்க! கதீஜாவுக்கு இரண்டு கம்மலு. அது பண்ணித் தர்றதா நான் சொல்லியிருக்கறேன். கொடுக்கற துண்ணும் தீர்மானிச்சிட்டேன். இதிலே யாருக்கேனும் ஆட்சேயரின ஏதும் இருக்குதா?'' 

ஆனும்மா சொன்னாள் : '' பெரிய அண்ணா , 515 கும் ரெண்டு கம்மலு வேணும்.'' 

'' போதும்டீ உன் குசும்பு! போதும். நீ உன் புது வீட்டுக்குக் குடிப்போறப்ப, அவசியமான பாத்திரமெல்லாம் வாங்கித் தரணும்ணு நீ பெரிய காக்கா கிட்டே கேக்கலே? வாங்கித் தரேசானு அவரும் சொல்லியிருக்காரில்லே! இதெல்லாம் எனக்கும் தெரியும்டீ , என் அருமைத் தங்கச்சீ! " 

இந்த ரகசியம் பாத்தும்மாவுக்கு எப்படித் தெரிந்தது? 

இரைச்சல் கேட்டு, நான் சமயலறைக்குள் சென்றபோது, உம்மாவின் தலைமையில் எல்லாப் பெண்களும் செயலற்று நின்று கொண்டிருந்தார்கள். இவர்களின் நடுவே பாத்தும்மாவுடைய 

 Page 68 

பாத்தும்மாவுடைய ஆடு 

ஆடு! ஆனால் அதன் தலையைக் காணவில்லை. காணோம் என்று சொன்னால், அது, பேராசையோடு கலயம் ஒன்றிற்குள் எப்படியோ தலையை நுழைத்துக்கொண்டு விட்டு, பிறகு அதை எடுக்கத் தெரியாமல் 'கலயமும் தலையுமாய் ' நின்று கொண்டிருந்தது. பெண்கள் அனைவருமாக அதனைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். கலயத்தை எப்படி விடுவிப்பது? இதுதான் முக்கியமான பிரச்சனை. 

பாத்தும்மாவின் ஆடு செய்துள்ள குறும்புத் தனத்தை நான் பார்த்து விட்டேனல்லவா? தனக்கு ஏதோ அவமானம் நேர்ந்து விட்டது போலப் பாத்தும்மா எண்ணினாள் : ''இது இப்படி யெல்லாம் செய்ததே கிடையாது, இக்காக்கா!'' 

நான் ஒரு சிறிய கல்லை எடுத்து கலயத்தை உடைத்து ஆட்டை விடுவித்தேன். 

'' அய்யோ ! இந்த வித்தை எங்களுக்கு மட்டும் தெரியாதாக்கும்!'' என்று அம்மா சொன்னாள். 

'' என்ன ஒரு அறிவு கெட்டதனம் ! நல்ல கலயத்தை வீணா உடைச்சிட்சியே?'' என்றும் அவள் கூறினாள். 

நான் குன்றிப்போய் வராந்தாவில் வந்து அமர்ந்து கொண்டேன். அப்போது அப்துல் காதரின் மூத்த பெண் பாத்துக்குட்டி 'வூத்தப்பா ' என்று விளித்தவாறே ஓடி வந்தாள். அவளுடைய மேல்வரிசைப் பற்களில் சில , காணாமல் போயிருந்தன. "அபி என்னை அடிச்சிட்டான் '' என்று அவள் சொன்னாள். இதற்குள் 

அபி ஓடி வந்து சொன்னான் : '' அக்காவும் 'ம்பீயை' அடிச்சா '' என்றான். 

இனிமே, இருவரும் சண்டைபோட்டுக் கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கையோடு அவர்களை அனுப்பி வைத்தேன். அப்போது 

ஸயிது முகம்மதும் ஒரு பிராதுடன் வந்தான். 

" மாமா! லைலா என்னை உள்ளாடத்திப்பாறு'ன்று கூப் பிட்டா .'' 

அநியாயம்! ஒரு பொண்ணு ஒரு ஆணைப்பார்த்து உள்ளாடத்திப் பாறு ' ன்னு மறுபடியும் கூப்பிடறதாவது! ''லைலா " - நான் கூப் பிட்டேன். லைலா வந்தாள். அவள் கண்களில் நீர் நிறைந்திருந்தது. வந்தவுடன் அவள் சொன்னாள் : '' பெரியப்பாவைக் கூட்டிட்டுப் போமாட்டேன்.'' 

"வேணாம்! அடே ஒரு கம்பெடுத்துக்கிட்டு வாடா.'' 

ஸயிது முகம்மது புளியங்கம்புகளைக் கொண்டு வந்தான். அதைக் காட்டி கலலாவை மிரட்டினேன் ; இனிமேல் யாரையும் ' உள்ளா 

 Page 69 

பாத்தும்மாவுடைய ஆடு 

டத்திப்பாறு'ன்னு அழைக்கலாகாதென்ற எச்சரிக்கையுடன் அவர் களையும் ஒருவழியாக அனுப்பி வைத்தேன். 

கோழிகள் சில, பயங்கரமாகக் கத்திக் கூச்சலிட்டவாறே ஓடிப் பறந்து ஈஸிச்சேரில் கிடந்த என்மேல் வந்து விழுந்தன. அவற்றின் பின்னாலேயே பாத்தும்மாவுடைய ஆடும் ஓடி வந்து கொண் டிருந்தது. பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த ஆடு மற்றும் ஒரு கஞ்சிக் கலயத்தை உடைத்திருக்கிறது. 

ஆனும்மா - ஐசோம்மா ---குஞ்ஞானும்மா , ஆகிய மூவரின் குரல் களும் உச்சஸ்தாயியில் கேட்டன. கூடவே உம்மாவின் வசை மாரியும், குழந்தைகளின் சிரிப்பொலியும் கேட்டன. அதையெடுத்து பாத்தும்மாவின் சமாதானங்களும் வந்தன. 

தனக்கு எதுவுமே தெரியாது என்னும் பாவனையில் பாத்தும்மா வின் ஆடு, பலா மரத்தினடியில் நின்று கொண்டிருந்தது. மாலை மணி நான்கிருக்கும். சரி. கொஞ்சம் காற்றாட உலவிவிட்டு வரலாம் என்று நான் புறப்பட்டேன். மார்க்கெட்டின் வழியே செல்லும்போது, 

அரிய காட்சி ஒன்றைப் பார்த்தேன்! 

அபியும் பாத்துக்குட்டியும், சிறிய ஒரு கூடை நிறையச் சாம்பங் காய்களுடன் கும்பலுக்கிடையே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் ; ஆயிரமாயிரம் யானைகளுக்கு இடையே, இரு சின்னச்சிறு எலிக் குஞ்சுகள் போல. இரண்டு பேருமாக சாம்பங்காய் விற்றுக்கொண் டிருந்தார்கள். ஆனால், தலைமை விற்பனைக்காரன் அபிதான். 

"ம்பியின் ஒரு கைக்குக் காலணா. 'ம்பீயின் இரண்டு கைகளுக்கும், மேலே ஒரு காய்க்குமாகச் சேர்த்து அரையணா!'' 

அதாவது ஐந்து சாம்பங்காய்களுக்கு மூன்று பைசா. ஆறு பைசா வுக்கு பதினொன்று. அபியின் கைகளில் இருப்பது, ஐந்து விரல்களல் லவா? இந்த வியாபார ரீதியைப் பார்த்தவாறு நான் நின்று கொண் டிருந்தேன். அவர்கள் மொத்தம் ஆறு அணாவுக்கு வியாபாரம் நடத்தினார்கள். அந்த ஆறு அணாவையும் நான் வாங்கி வைத்துக் கொண்டேன்! அன்றிரவு உம்மாவிடம் நான் எட்டணாவைக் கொடுத்தேன், உம்மாவுக்குப் பரம திருப்தி. இரவு உண்டு விட்டுப் படுக்க போகுமுன்பாக, வீட்டிலுள்ள தந்தைகளிடம், குழந்தைகளை வளர்க்க வேண்டிய விதம் பற்றி எடுத்துரைத்தேன் ; தாய்மாருக்கு வேளா வேளைக்கு நல்லுணவுக்கு வழி செய்யவேண்டியதன் அவசியம் பற்றியும் சொன்னேன். குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைப் போதிக்க வேண்டியது பற்றியும், வீட்டையும் அதனை 

 Page 70 

பாத்தும்மாவுடைய ஆடு 

55 

ஒட்டிய பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் தேவை பற்றியும் ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தேன். 

ஹனீஃபா இவையனைத்துக்குமாகச் சேர்த்து ஒரே பதிலாகச் சொன்னான் : 

'' நான் ராணுவத்துக்கே போயிடறேன்.'' அபு சொன்னான் : " பெரிய காக்கா , நீங்க ஒரே ஒரு விஷயத்தைக் கவனிச்சீங்கன்னா போதும் ; ஆனா, அதுக்குக் கொஞ்சம் பணம் செலவாகும் அவ்வளவு தான். இந்த வீட்டோட மேல்கூரையை மாத்தி, ஓடு போட்டுட்டா நல்லாயிருக்கும். பெரிய காக்கா வந்திருக்கற்தனாலேதான் முற்றம் சீராச்சி!'' 

அதைச் சீராக்குவதற்காக நான் கொஞ்சம் பணம் செலவு செய் தேன். கற்களினால் தூண்கள் எழுப்பி அதைப் பலப்படுத்தினேன். 

" அதெல்லாம் விடு''- அப்துல் காதர் சொன்னான் : '' இங்கே எல்லாமே சரியாயிடும் ; பாத்தும்மாவுடைய ஆடு பிரசவிக்கட்டும் பாரேன்!'' 

மேலும் சில தினங்கள் கழிந்தன. டும்! டும்! பாத்தும்மாவுடைய ஆடு பெற்றே விட்டது! 

மதியவேளை, நல்லதொரு முகூர்த்தம்! சிறு சிறு தூரலாக மழை இருந்தது. இந்தச் செய்தி கேட்டதும், எனக்குக் கொஞ்சம் திகில் ஏற்பட்டது. தீங்கு ஏதும் நேராமல் இருக்க வேண்டுமே ! பிரசவத் தில் இறந்துபோன சம்பவங்கள் பல, என் நினைவில் ஓடின. எனக்குப் பெருத்த மனக் கலவரம் உண்டாயிற்று. உம்மாவைக் குறைந்த பட்சம் நூறு முறையாவது அழைத்திருப்பேன். 

" உம்மா அதுங்கிட்டக்கவே இரு என்ன !'' என்று நான் வேண் டிக்கொண்டேன். உம்மா ஒன்றுமே சொல்லவில்லை. எனக்கு திகில் அதிகமாகியது. என்ன நேரிடும்? அங்கு போய்ப் பார்த்தாலென்ன? ஆனால் சென்று பார்ப்பதற்கு வேண்டிய துணிச்சலும் இருக்கவில்லை. இருந்தும்கூட நான் சற்றே எம்பிப் பார்த்தேன். ஆட்டை மட்டும் காணவில்லை. ஒரு பெருங்கூட்டமே அங்குக்கூடியிருந்தது. உம்மா, குஞ்ஞானும்மா, ஆனும்மா, ஐசோம்மா, பாத்துக்குட்டி, அபி ஆரிஃபா, ஸையது முகம்மது, ரஷீது சுபைதா , ஆகியோரைத் தவிர அண்டை அயல் வீட்டுப் பெண்களும் அங்குக் குழுமியிருந்தார்கள் ; ஏதோ பெரும் திருவிழா போல எல்லோரும் மகிழ்ச்சியுடன் காணப் 'பட்டார்கள். யாருமே கவலைப்படுவதாகக் காணோமே? ஏன்? நான் உம்மாவைக் கூப்பிட்டுக் கேட்டேன் : " பாத்தும்மாவுக்கு 

ஆள் அனுப்பிச்சியா ? ' 

 Page 71 

56 

பாத்தும்மாவுடைய ஆடு 

அங்கு இந்தச் சமயத்தில் இருக்க வேண்டிய முக்கியமான ஆள் அவள் தானே! ஆனால் அவளுக்குச் சொல்லியனுப்பவே இல்லை. அம்மாவும் மற்ற பெண்களும் ' ப்பூ இதென்ன பெரிய விஷயம்!' என்பது போல அலட்சியமாக இருந்தார்கள். இவர்கள் யாருக்குமே இதொன்றும் பிரமாதமான விஷயமல்ல என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. இவர்கள் எல்லோருமே பல முறை பிரசவித்திருப்பவர்கள். உம்மாவுக்கே நாங்கள் எல்லோருமாக நிறையக் குழந்தைகள் இருக்கிறோம். உம்மாவுடைய பெண்களான பாத்தும்மாவும் ஆனும்மாவும் பேறு பெற்றவர்கள் தாம். மருமகள் களான குஞ்ஞானும்மாவும் ஐசோம்மாவும் கூடத் தாயானவர்கள் தாம். யாருக்காவது குழந்தை பிறந்திருப்பது பற்றிய செய்தி ஏதும் வந்தால், அதை அவர்கள் ஒரு பெரிய சங்கதியாகக் கருதுவதே கிடையாது. ' குழந்தை ஆணா, பெண்ணா ?' ஒரு மாமூல் கேள்வி மட்டுமே அவர்களிடமிருந்து வரும். 

ஆனால், இந்த அனுபவம் ஏதும் பெறாத நான், சற்றே திகிலடைந்து போனேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்! 

வராண்டாவில் மேற்குப் புறமாக நான் தனியே நாற்காலியில் அமர்ந்தவாறு இருந்தேன். அந்தப் பக்கத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஒரு விவரமும் தெரிந்தபாடில்லை. நான் கொஞ்சம் அதிகமாகவே பீடிகளை ஊதித் தள்ளினேன். இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக நடந்து தீர்த்தேன். இவ்வாறு நடந்துகொண்டிருக்கும்போது, அபியும் பாத்துக்குட்டியும் நான் இருக்கும் திசையை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். என்னருகே வந்ததும் அபி பெருமையடித்துக் கொண்டான் : " மொதல்லெ பாத்தது . ம்பீ ' தான்." 

பாத்துக்குட்டி சொன்னாள் : " அபி இல்லே, நான் தான் '' இதற்குள்ளாக லைலாவும் ஸையிதுமுகம்மதும் வந்தார்கள். 

ஸையிது முகம்மது சொன்னான்: ''நான் தான் முதல்லே பாத்தேன்.'' லைலா : “அண்ணனைக் கூட்டிட்டுப் போமாட்டேன். நான் தான் முதல்லே பாத்தேனாக்கும்!'' 

இந்தக் குட்டிப் பிசாசுகள் எதை முதலில் பார்த்தன? நான் அபியிடம் கேட்டேன் : “ என்னத்தேடா நீ மொதல்லே பாத்தே?" அபி பெருமையோடு சொன்னான் : 

"ஆயு பெத்ததை முழுக்க முழுக்க பாத்தேனே! ம்பி தான் பார்த்தான்! முதல்லே.” 

 Page 72 

பாத்தும்மாவுடைய ஆடு 

“ ஆடு பெத்திடிச்சா ?'' - நான் கேட்டேன். பாத்துக்குட்டி உடனே சொன்னாள் : ' ஆமாம்! பெத்துடுச்சி.... பெரீப்பா , அது பெத்ததெ முழுக்க முழுக்க நான் தான் மொதல்லே பாத்தேன்!'' 

அப்பாடா! அது கடைசியில் ஒரு வழியாகப் பெற்றுவிட்டது. எந்தவிதமான குழப்பமும் இல்லை. எனக்குப் பெருத்த நிம்மதி ஏற்பட்டது. நான் போய்ப் பார்த்தேன். குட்டித் திண்ணையில், அம்மாவும் குழந்தையும் காணப்பட்டன. வெள்ளை வெளேர் என்று அழகிய குட்டி. இந்த மாபெரும் பிரபஞ்சத்தை அலட்சியமாகப் பார்த்தவண்ணம் அது கீழே கிடந்தது. 

தாய் ஆட்டினை வெந்நீரில் குளிப்பாட்டுவது, அதற்குப் பாலாகாரம் கொடுப்பது போன்ற யோசனைகளைக் கூற வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் பால் ஏது? வெந்நீர் வேண்டு மானால் கிடைக்கும். அதோடு நான் ஏதாவது சொல்லப் போனால் பெண்களுக்குத் தமாஷாக வேறு போய்விடும். இருந்தாலும் நான் உம்மாவிடம் கேட்டேன் : 

'' அதுக்கு ஏதாச்சும் கொடுத்தீங்களா?' ''ஒண்ணும் கொடுக்கலை. கொஞ்ச நேரம் பொறுத்து தேரகத்தின் எலையோ, இல்லாட்டிப் போனா, வேறே ஏதாவது விசேஷமான இலைங்க கொடுப்போம். அதுதான் வழக்கம்.'' 

நான் சொன்னேன் : '' ஆட்டுக்குட்டியை ஒரு பாயிலே விடுங்க. ஜில்லுனு பச்சத் திண்ணையிலே அது கிடக்குது!'' - பாயிலே அதைப் படுக்கப் போட்டாங்களோ, என்னமோ! நான் அதற்குள் ஒரு பெரிய நேந்திரம் பழத்தை எடுத்து வந்து, தாய் ஆட்டிடம் கொடுத்தேன். அது நன்றியோடு வாங்கித் தின்றது. 

'இதென்ன வேடிக்கையாயிருக்குது!' என்பது போல் பெண் களெல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உம்மா மட்டும் வெறுமே முறுவலித்துக்கொண்டாள். 

அந்திக்குப் பிறகு பாத்தும்மாவும் கதீஜாவும் கொச்சுண்ணியும் வந்தார்கள். ஆடு பெற்ற விஷயத்தைக் கேட்டபிறகும் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. 

படுக்கும்போது நான் கேட்டேன் : “ ஆட்டுக் குட்டியே எங்க விட்டிருக்கீங்க?'' 

" சமயலறையில்"-யாரோ சொன்னார்கள். " அடுப்பிலே நெருப் பிருக்குமே?'' 

உம்மா சொன்னாள் : ''கூடையாலே மூடியிருக்கறோம்.'' கூடையைப் போட்டு மூடி வெச்சிருக்காங்களாமே! 

 Page 73 

58 

பாத்தும்மாவுடைய ஆடு 

"ஆனும்மா!'' நான் இரைந்து கத்தினேன் : " அதுக்கு மூச்சு முட்டாது? உங்க புள்ளேங்க யாரையாச்சியும் இப்படிக் கூடை போட்டு மூடி வப்பீங்களா?'' 

"பின்னே வேறே என்ன தான் செய்யறதாம்?” இவ்வாறு பதில் கேள்வி தொடுக்கப்பட்டது. கேட்டது யார் என்று தெரியவில்லை. நான் ஒன்றும் பேசாமல் மௌனமாகக் கிடந்தேன். குழந்தை குட்டிகளைப் பெற்றுள்ளவர்களின் மத்தியில், நான் ஏதாவது சொன்னால் அது ஒரு தினுசாகத்தான் இருக்கும். நான் இல்லாத போது அவர்கள் அது பற்றிப் பேசி கேலி செய்வார்கள்; சிரிப்பார்கள். நானோ கலியாணமாகாதவன். அப்படி இருக்கையில் நமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதானே உத்தமம்! 

நான் போர்வையை இழுத்துப் போர்த்தியவண்ணம் கண்ணையும் மூடிக்கொண்டு பேசாமல் உறங்க ஆரம்பித்தேன். 

அடுத்த நாள் எழுந்து காலைக்கடன்களை முடித்த பிறகு சாயாவும் குடித்துவிட்டு ஆனும்மாவிடம் கேட்டேன் : 

''அதுக்கு ஏதேனும் கொடுத்தியா?'' அதற்கு என்றால் பாத்தும் மாவுடைய ஆட்டுக்குத்தான் என்பது ஆனும்மாவுக்குத் தெரியும். 

"புல்லு கொடுத்தோம்'' என்று ஆனும்மா சொன்னாள். ஆனும்மா வின் ஆட்டுக்கான புல் அது. 

. பாத்தும்மா வுடைய ஆடும், குட்டியும் முற்றத்தில் பலாமரத்தி னடியில் நின்று கொண்டிருந்தன. தங்களுக்கான ஆகாரம் எங் கிருந்து வருகிறது என்று தாய் ஆடு, குட்டிக்குக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது போலும்! குட்டி தள்ளாடித் தள்ளாடி துவண்டு விழுந்து கொண்டிருந்தது. தடுமாறாமல் நடப்பதற்குக் கொஞ்சம் சிரமப்பட்டது. அதை எடுத்து முத்தம் கொடுத்தால் என்ன என்று எனக்குத் தோன்றிற்று. இந்தச் சமயத்தில் ஹனீஃபா என் முன்னே வந்து நின்றான். ஒரு லுங்கி மட்டுமே அணிந்திருந்தான். அவன் சொன்னான் : ''பெரிய காக்கா ஒரு பத்து ரூபா வேணுமே. சின் னண்ணாகிட்டே கேட்டா திட்டுவாரு. அபுவுக்குத் தெரிந்ததோ போச்சு. அவனும் சேர்ந்து என்னைக் கிண்டல் பண்ணுவான். பாருங்க! என்கிட்ட பணம் இருந்திச்சின்னா ஒரு ஷர்ட் போட்டுக் கிட்டிருக்கமாட்டேனா ? ” 

“ என்னோட ஒரு டபிள் வேஷ்டியையும் ஒரு ஷாட்டையும் கொஞ்ச நாளுக்கு முன்னாலே நீ எடுத்துக்கிட்ட நினைப்பு 

இருக்குதே. '' 

50 

 Page 74 

பாத்தும்மாவுடைய ஆடு 

59 

'' நானா?......எனக்கு எதுவும் வேணாம். நான் பட்டாளத்துக்குப் போய்க்கறேன். இங்கே யாருக்கும் நான் வேணாமின்னாலும், சர்க்காருக்கு என்னோட சேவை தேவையா இருக்குது. அதை எல்லாரும் கொஞ்சம் நினைப்பு வெச்சுக்கிட்டீங்கன்னா போதும் பெரியண்ணா கொடுத்த டபிளும் ஷர்ட்டும்" 

நான் ஊடே சொன்னேன் : " அட எங்கப்பா, கொஞ்சம் நில்லுடா கண்ணு. நான் ஒண்ணும் உனக்கு அதைத் தரலை. வெளுத்து வந்தபோது, எங்கிட்டெ ஒரு 

வார்த்தை கூடக் கேக்காமே நீயே அதை எடுத்து வெச்சுக்கிட்டே. - எங்கிட்ட வேட்டி சட்டைங்க கொஞ்சமா இருக்கறதனாலே அதை யெல்லாத்தையும் எண்ணித்தான் வெச்சிருக்கறேன். நிறைய இருந்தபோது உம்மா திருடியிருக்காங்க. அப்துல் காதர் திருடி எடுத்திருக்கறான், பாத்தும்மாவும் ஆனும்மாவும் கூடத் திருடி எடுத்துக்கிட்டிருக்காங்க. உன் மனைவி ஐசோம்மாவும் அப்துல் காதரின் மனைவி குஞ்ஞானும்மாவும் மட்டும் திருடினது கிடையாது.'' 

ஹனீஃபா சொன்னான் : "அந்த ஓட்டை வேட்டியையும் ஷர்ட்டையும் அபு, எங்கிட்டேந்து பிடுங்கிக்கிட்டு போயிட்டான். பாத்தீங்களா பெரியண்ணா என் நிலைமையை?'' 

''ஒடிசலான அபு, தடியனான உங்கிட்டேந்து பிடுங்கிக்கிட்டுப் போயிட்டானா?” 

“உங்களுக்கு என் வார்த்தைலே நம்பிக்கை இல்லேன்னா அபி கிட்டே கேட்டுப் பாருங்க ! அடே அபி-'' 

அவன் வந்தான். ஹனீஃபாவுக்கு, எல்லாவற்றுக்கும் உள்ள ஒரே சாட்சி அபிதான். அவன் வந்தவுடனே சொன்னான் : “ வாப்பா சொன்னதை ' ம்பி' பாத்தானாக்கும்!'' இந்தச் சமயத்தில் சற்றே திறந்திருந்த கதவு வழியாக ஐசோம்மா, ரஹீதை இடுப்பில் சுமந்தவாறு வந்தாள். அவள் சொன்னாள் : “ அப்பாவும் புள்ளையும் சொல்றது அத்தனையும் பச்சப் புளுகு. புள்ளேகிட்டே , இப்படிச் சொல்லுன்னு சொல்லிக் கொடுத்துக்கிட் டிருந்ததை நான் என் காதாலேயே கேட்டேன். பெரிய காக்காவோட டபிள் வேட்டியும் ஷர்ட்டும் அபியோட வாப்பாவோட பெட்டி யிலேயே இருக்குது!'' 

" அடே திருடா ! பகல் கொள்ளைக்காரா! அடே நீ என்னையும் 'அப்துல் காதரையும் தென்ன மட்டை சுமக்கச் செய்த கதை உனக்கு 

நினைப்பு இருக்குதாடா?'' 

 Page 75 

பாத்தும்மாவுடைய ஆடு 

ஹனீஃபா சொன்னான் : '' அதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு ஏகப்பட்ட வேலை கிடக்குது. ரத்தத்தை தண்ணீயாப் பாய்ச்சி, நாயா உழைக்கிற ஒரு தொழிலாளி நான்." 

“ஓ ! உனக்கு நேந்திரம் வாழத் தோட்டம் இருக்குதோ?” 

அவன் சொன்னான் : " அதை வேணும்னா பெரிய காக்காவுக்கே தந்திட்றேன். ஒரு பத்தாயிரம் ரூபா கொடுங்க போதும்.'' 

இதிலே பத்தில் ஒரு பங்கு விலைக்குத்தான் அவன் அந்தத் தோட்டத்தை வாங்கினான் என்பது எனக்குத் தெரியும். பெரும் திருடன்! 

நான் உம்மாவைக் கூப்பிட்டு, அவள் வந்ததும் கேட்டேன் : "இந்த ஹனீஃபா சின்னவனா இருந்தபோது அஞ்சு ரூபா திருடி எடுத்துக்கிட்டானில்லே? அப்புறம் முதலாளியா மாறி, தன்னுடைய அண்ணாக்களான என்னையும் அப்துல் காதரையும்விட்டு, மலைபோலக் குவிந்திருந்த தென்னை மட்டைகளை உலரப் போடுமாறு செய்தான். இவன் மட்டும் உலரப் போடலை. எங்களுக்குத் தினசரி 4 சக்கரம்* கூலி கொடுப்பான். இப்படி அஞ்சாறு நாள் ஆனப்புறம் தான், வாப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சுது. நான் தான் பணத்தைத் திருடினேன்னு நினைச்சு அப்பா என்னை அடிக்கவும் செய்தாரு. உங்களுக்கு நினைப்பு இருக்குதா?'' 

உம்மா சொன்னாள்: '' ஹனீஃபா வாப்பா வோடு பெட்டிலேந்து பணத்தை எடுக்கலே. அந்தக் காலத்திலே என்னோடே வெத்தலைப் பொட்டிலே, எப்பவுமே வெள்ளிப் பணம் நிறைய இருக்கும். இவன் எப்படித் திருடுவான்னு சொல்லட்டுமா? உம்.... வேணாம் நான் சொல்லலை, எதுக்கு வீணா இவன் பெண்டாட்டியும் புள்ளெங்களும் கேப்பாங்க." 

'' சும்மாச் சொல்லுங்க உம்மா. அவங்களும்தான் இவனைப்பத்தித் தெரிஞ்சுக்கட்டுமே!'' 

நான் ஏன் இப்படிச் சொன்னேன் என்றால் உம்மாவுடைய வெற்றிலைச் செல்லத்திலிருந்து வெள்ளிப் பணம் திருடுவது, எனது தினசரி வழக்கமாக இருந்தது. நான் உம்மாவின் அருகேதான் படுப்பேன். உம்மா சற்றே கண்ணயரத் தொடங்கியதும், அவளது மடியிலிருந்து வெற்றிலைச் செல்லத்தை மெள்ள எடுத்து, அதிலிருந்து நான்கு பணத்தை எடுத்துக்கொண்ட பிறகு, அதை இருந்த இடத் திலேயே வைத்துவிட்டு ஓடிவிடுவேன். 

* சக்கரம் - பழைய திருவிதாங்கூர் மாநிலக் காசு. 

 Page 76 

பாத்தும்மாவுடைய ஆடு 

61 

“ இந்த ஹனீஃபா பெரியவனா ஆனப்பறம்கூட, என்னிடம் பால் குடிக்க வருவான். பாலைக் குடித்துக் கொண்டிருக்கும்போதே, வெற்றிலைச் செல்லத்திலிருந்து பணத்தை மெள்ளத் திருடி எடுத்துக் கொண்டுவிடுவான். இவன் இப்படிச் செய்யும்போது ஒரு தடவை நான் பாத்துட்டேன், அன்னிக்கு அவனைச் செம்மையா அடிச்சேன் . அன்னிலேந்து தாய்ப்பால் கொடுக்கறதையே நிறுத்திட்டேன்.'' 

''பெருந் திருடன்! உம்மா, அப்துல் காதர் திருடினது இல்லே?'' " அவனும் திருடியிருக்கறான். நீ மட்டும்தான் திருடலை.” ஆஹா ! எத்துணை நல்லவன் நான்! ஹா, எப்படியொரு மெச்சும் படியான வாழ்வு! 

'' பாத்தியாடா ஹனீஃபா. பாத்தியா அபி. உம் பாத்துக்கடி லைலா. நன்னாப் பாத்துக்கடா ரஷீது!- பாத்துத் தெரிஞ்சுக்குங்க.'' 

ஹனீஃபாவுக்குப் பொறுக்க முடியவில்லை. அவன் சொன்னான் : ''ஐயோ உம்மா! என் அருமை அம்மா! உங்களுக்கு எதுவுமே நினைப்பு இல்லை ; இல்லே, ஐசோம்மாவும் ஆனும்மாவும் சின்ன அண்ணியும் கேட்டுக்கிட்டிருக்கறாங்களேங்கிறதுக்காக உம்மா பொய் சொல்றீங்க. இந்த ரெண்டுலே ஒண்ணுதான் நீங்க இப்படிப் பேசற்துக்குக் காரணமா இருக்கணும். பெரிய காக்காவும் உம்மாவோடு வெத்தலைப் பெட்டிலேந்து பணம் திருடி எடுத் திருக்காரு! எனக்கு நல்லா நினைப்பு இருக்குது. என்னையும் சின்ன அண்ணனையும் கூட்டிட்டு போயி, சாயா வாங்கித் தந்திருக்கறாரு. எத்தனை தடவை தெரியுமா? கடைக்காரனுக்கு அவரு எப்பவும் வெள்ளிப் பணமாத்தான் கொடுப்பாரு. அந்தக் காலத்திலே பெரிய அண்ணாருக்கு ஏது பணம்? எங்கிருந்து வந்திச்சு? சொல்லு உம்மா !” 

விஷயத்தை மாற்ற வேண்டியதன் உடனடித் தேவையை நான் உணர்ந்தேன் : 

'' நீ பலதடவை எங்கிட்டேந்து ரெண்டும், மூணும், அஞ்சும், பத்துமா பணம் வாங்கிட்டிருக்கற்தைத் தவிர, மொத்தமா ஒரு நூறு ரூபா வரைக்கும் நீ எனக்குத் தரவேண்டியது பாக்கியிருக்கிறது. இதுக்குச் சாட்சியா, உன்னோட கிறிஸ்தவத் தோழருங்களும் நாயர்மாரு சிநேகிதங்களும் ஹரிஜனங்களான ஈழவமாரும் இருக் கறாங்க இல்லே? அவங்க எல்லாரையும் உம்மாகிட்டே கூட்டிக்கிட்டு வர நான் தயாராத்தான் இருக்கறேன் ! எடுடா என் நூறு ரூபாயை ! ”” | 

 Page 77 

பாத்தும்மாவுடைய ஆடு 

'' என் அருமை உம்மா! பெரிய அண்ணன் என்னென்னமோ கதையளக்கறாரே? எனக்கு ஒண்ணுமே விளங்கலியே? நான் 'அவருக்குப் பணம் தரணுமா ! நல்லாயிருக்குதே கதை. நான் என் கைப் பணத்தைச் செலவழிச்சுட்டில்லே பெரிய காக்காவுக்கு என்னென்னமோ வாங்கித் தந்திகிட்டு வர்றேன்? நேந்திரம் பழம் அன்னாசிப் பழம் வாங்கித் தந்திருக்கறேன். பீடி, கணக்கு வழக் கில்லாமே வாங்கி வந்திருக்கறேன். கீரை காய்கறிங்க ஆட்டிறைச்சி வாத்து முட்டை மீன் பலாப்பழம் - இதெல்லாத்தோடு கணக்கையும் பாத்தா பெரிய காக்காகிட்டேந்து தான், எனக்கு 40 ரூபா வர வேண்டியிருக்குது. அதிலேந்துதான் ஒரு 10 ரூவா தாங்கன்னு நான் இப்ப கேட்டுக்கிட்டு இருந்தேன்!'' 

" ஆமாண்டா! இவரு பெரிய வள்ளலு ! கொடுத்திட்டே பாரு! உன் எஸ்டேட்டிலே ஒடிஞ்சு விழுந்த வாழை மரத்திலேந்து, முற்றாத காயிங்களைப் புகைபோட்டு வாட்டிப் பழுத்த நிறமாப் பண்ணி நீ கொண்டுவந்து தருவே. மீதியெல்லாம் அப்துல் காதரும் கொச்சுண்ணியும் சுலைமானும் அவுங்க அவுங்க கையிலேந்து பணம் போட்டு வாங்கிட்டு, நீ வீட்டுக்கு வர்றபோது உன் கையிலே கொடுத்தனுப்புவாங்க. அவ்வளவுதான்! நீ என்னடான்னா. அதை யெல்லாம் கொண்டுவந்து, ஏதோ நீயே சொந்தப் பணம் போட்டு வாங்கினா மாதிரி நடிப்பே. எனக்கு எல்லாம் தெரியும்டா!'' 

இதைக் கேட்டவுடன் ஹனீஃபா இரைந்து கத்தினான் : 'வாடி ஐசோம்மா , வெளியே வா. குழந்தைகளையும் கூப்பிடு. நாம இனிமே இங்கே இருக்க வேணாம். நம்ம எடத்திலேயே எதுனாச்சும் ஓலைக் குடிசை கீலைக்குடிசை போட்டுகிட்டு இருக்கலாம்! வாடி வெளியே!'' 

"நில்லுடா ! எங்கே போறே? உன் நூறு ரூபாச் சாயத்தே வெளுக்கப்போறேண்டா! அதுக்கப்புறம் எங்கே வேணாப்போ. உம்மா கேட்டுக்குங்க. அப்ப, இவங்கிட்ட நான்கு சைக்கிள் இருந்திச்சி. ரொம்ப வருஷங்க ஒண்ணும் ஆயிடலே. நான் ஊருக்கு வர்ற சமயத்திலே, எப்பனாச்சியும் இவனோட சைக்கிளை எடுத்துக்கிட்டு சுத்துவேன், பத்தே நிமிஷங்களுக்குள்ளே திரும்பிட்டாலும் கூட இவன் என்ன சொல்லுவான் தெரியுமா? • ரெண்டு மணி நேரம் ஆயிடிச்சு ! ' மொத்தத்திலே இவனுக்கு வாடகை வேணும். அது தான் விஷயம். அப்பவெல்லாம் இவனுக்கு என்ன வேலை தெரியுமா? இவன், தன்னோட சிநேகிதங்களான கிறிஸ்தவங்க, நாயருங்க ஈழவருங்க இவர்களோடகூட எர்ணாகுளத்துக்கு என்கிட்டே 

 Page 78 

25 

பாத்தும்மாவுடைய ஆடு 

வருவான். இப்பொ, பொய் சாட்சி சொல்ல அபிக்குச் சொல்லிக் கொடுத்திருக்கற மாதிரியே அவங்களுக்கும் இவன் பொய் சொல்லக் கத்துக் கொடுத்து வெச்சிருக்கறான். அவங்க அங்கே வந்தவுடன் ஹனீஃபாவின் பரிதாபத்திற்குரிய கஷ்ட நிலைமையைப் பத்தியே தான் பேசுவாங்க. ' பாவம்! ஹனீஃபா ரொம்பக் கஷ்டப்படறான்' அப்படி இப்படின்னெல்லாம் சொல்லுவாங்க. அந்தப் புராணம் முடிந்த கையோட இவன் கடன் கேப்பான். கடைசியிலே ' ஒரு ஐந்து ரூபாயாவது கொடுங்க 'ம்பான். அது கூட எதுக்குத் தெரியுமா? புள்ளெங்களுக்கு என் சார்பிலே எதனாச்சும் வாங்கிட்டுப் போறதுக்குன்னு சொல்லுவான். நான் மூன்று ரூபா கொடுப்பேன். இவன் அதிலேந்து ஒரு அணாவுக்கு ஆரஞ்சு மிட்டாயி வாங்கி வந்து புள்ளெங்களுக்கு தருவான். 

'' அந்தக் காலத்திலே 325 ரூபா விலையிலெ நான் ஒரு சைக்கிள் வாங்கியிருந்தேன். அதை இவன் எப்படியோ தெரிஞ்சுக்கிட்டான். ஒரு நாள் இவன் தன் சிநேகிதக் கும்பலோடு. அங்கே வந்தான். இவனையும் சேர்த்து நாலு பேர் இருந்தாங்க. மூன்று சைக்கிள்ளெ சவாரி செஞ்சுகிட்டு வந்தாங்க. வந்தவுடனேயே ஒரு சத்யாக்ர கத்தைத் தொடங்கினாங்க. ஹனீஃபாவுக்கு என் சைக்கிள் வேணுமாம். அது அவன் கடையிலே இருந்திச்சின்னாத்தான் அவனோடு ஓட்டை சைக்கிளுங்களை சனங்க வாடகைக்கு எடுத்துப் போவாங்களாம், நான் சொன்னேன் : • சைக்கிள் எனக்குத் தேவைப்படுதே.' இவனோட சிநேகிதக்காரங்கள்ளே ஓர்த்தன் சொன்னான் : * ஹனீஃபா அதுக்குப் பணம் தந்திடுவான்.' அவன் சொல்லி வாயை மூடக்கூட இல்லை. ஹனீஃபா ஒரு கத்தை நோட்டுங்களை எடுத்து என் மடியிலே போட்டான். எண்ணிப் பார்த்தேன். 240 ரூபா இருந்திச்சு • பாக்கி'ன்னு கேட்டேன். 'ஓ! அதை வீட்டுக்குப் போன கையோட அனுப்பிவெச்சிடறேன் 'ன் 

னான். சிநேகிதக் காரங்களும் சொன்னாங்க : 'அதைப் பத்திக் கவலைப்படாதீங்க. அவன் அனுப்பும்படியா நாங்க பாத்துக்கறோம்.' அவங்க ஜாமீன் தந்தாப் போராதா என்ன? உடனேயே ஹனீஃபா அங்கேயே ஒரு பத்து ரூபா எங்கிட்டே கடனாகவும், மூன்று ரூபா , புள்ளேங்களுக்கு ஏதாச்சும் வாங்கிக் கொடுக்கறதுக்காவும் வாங்கிக் கிட்டான். பல மாதங்கள் ஆயிடுச்சு. அந்த ரூபா இன்னும் வந்த பாடில்லே. நான் இங்கே வந்தப்பறம் இவனோட சிநேகிதக்காரங்க எல்லாம் என் தலை தெரிஞ்சாப் போதும். ஒளிஞ்சிக்கிட ஆரம்பிச்சுட 

றாங்க. எடுடா அந்த ரூபாயை!" 

 Page 79 

04 

பாத்தும்மாவுடைய ஆடு 

"குன. 

" நான் பட்டாளத்திலே சேர்ந்துடறேன்!'' 

அபி சொன்னான் : ''ம்பீயும் பட்டாளத்துக்குப் போயிடுவான் '' லைலா சொன்னாள் : '' நானும் பட்டாளத்துக்கே போறேன்.'' 

ஐசோம்மா : ''அப்படியானா, ரஷீதும் நானும் கூட வந்துடறோம் ராணுவத்துக்கு. சர்க்காருக்குக் கஞ்சித் தண்ணியும் குழம்பும் 

வச்சுத் தர்றேன்.'' 

"போதுண்டி! நாலு பேர் இருக்கற எடத்திலே பந்து பேச ஆரம்பிச்சிட்டியா நீ? பெரிய காக்கா இருக்கறாரேன்னு பாக்கறேன். இல்லே.... உன்னை ... நான்! போடி உள்ளே !'' என்று அதட்டிய வண்ணம் ஹனீஃபா மார்க்கெட்டில் உள்ள தன்னுடைய தையல் கடைக்குப் போனான். 

சற்று நேரம் ஆனதும் ரஹீதையும் சுபைதாவையும் எடுத்துக் கொண்டு உம்மா என்னருகே வந்தாள் : 

''நாங்க குளிக்கப் போயிட்டு வர்றோம். இந்தக் குழந்தேங்களே கொஞ்சம் பாத்துக்கடா.'' 

நான் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளத் தொடங்கினேன். eஅவர்கள் எல்லோரும் ஆற்றுக்கு குளிக்கப் போனார்கள் 

இரண்டுமே அழ ஆரம்பித்தன. அழுகையை நிறுத்துவதற்காக இரு குழந்தைகளுக்கும் இடையே, ஆட்டின் குட்டியைக் கொண்டு வந்து விட்டேன். 

குழந்தைகள் இரண்டும் மூத்திரம் பெய்தன. ஆட்டுக்குட்டி இரண்டையுமே கழித்தது. இந்த அமர்க்களத்துக்கிடையில் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். மிக மிக சொகுசுக்காரனான அபு. அவன் கேட்டான் : "இதெல்லாம் என்ன கூத்து?'' 

அபு குழந்தைகளுடைய அழுகையை நிறுத்தினான். இதற்கு, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வித்தை எதையும் அவன் கையாள வில்லை. கண்களை உருட்டி முறைத்தான், உதடுகளைக் கடித்தான், உறுமினான். அவன் , பாத்தும்மாவுடைய ஆட்டையும் அடித்து விரட்டினான். பூனைகளை அடித்தான். கோழிகளை விரட்டி ஓட்டினான். இந்தச் சமயத்தில் நான் ஆட்டுக் குட்டியின் மல மூத்திரங்களை அள்ளியெறிந்தேன் ; குட்டியை எடுத்து, முற்றத்தில் நிறுத்தினேன். 

'' பாத்தீங்களா? ஆடு, கோழி, பூனை குழந்தைங்க - எல்லாமாச் சேர்ந்து முற்றத்தையும் வராண்டாவையும் எப்படிப் பாழ்பண்ணி 

 Page 80 

பாத்தும்மாவுடைய ஆடு 

65 

யிருக்குதுங்க. பெரிய அண்ணா, இதையெல்லாம் ஏன் தான் 

அனுமதிக்கறீங்களோ ?'' 

'' நான் என்ன செய்யணும்ங்கறே? > '' அடிக்கோணும்." நோஞ்சானாக இருக்கும் இந்த அபு, கடச்சல் போடுவதிலும் அடிப் பதிலும் நிபுணன். எல்லோருக்குமே அவனைப் பார்த்தால் பயம்தான். அவனிடம் குழந்தைகளை விட்டுப் போக, அம்மாக்களுக்கும் உம்மா வுக்கும் தைரியம் கிடையாது. 

பெரிய அண்ணா, நான் உங்களோட ஒரு ஷர்ட்டும் வேட்டியும் திருடியிருக்கறேன்னு சின்ன அக்கா சொன்னாங்களா?'' ஆனும்மா அப்படிச் சொன்னாள் என்றோ, சொல்லவில்லை என்றோ, நான் கூற வில்லை. அவனுக்குக் கோபம் வந்தது , 

'' எல்லாருமே அவுங்கவுங்க பங்குக்குத் திருடியிருக்காங்க; நான் மட்டுமில்லே. உம்மாவும் சின்ன அக்காவும்கூட ஆளுக்கொரு வேட்டி திருடியிருக்காங்களே, அதைச் சொன்னாங்களா?'' 

'' நீ திருடியிருக்கறேன்னு ஆனும்மா சொல்லலே.'' ''ஒரு வேட்டியும், ஷர்ட்டும் நான் திருடியிருக்கறேன் ; உண்மை தான். இதை நான் யார்கிட்டேயும் சொல்லத் தயாராவே இருக்கறேன். ஆமாம். பெரிய காக்கா எனக்குன்னு என்ன தந்திருக்கறீங்க?'' 

"நீ படுத்துக்கறியே அந்தக் கட்டில். அதுக்கு என்ன விலை தெரியுமா? 40 ரூவா. கட்டிலிலே விரிச்சுப் போட்டிருக்கற ஜமுக் காளம், மெத்தை தலையணைங்க, பெட்ஷீட், நீ போத்துக்கிறயே அந்தக் காஷ்மீர் சால்வை. அதுக்கு மட்டும் என்ன விலைன்னு நினைக்கறே? 50 ரூவா. நீ ஸ்டைலாகக் குத்திக்கிட்டு நடக்கறியே, அந்தப் பார்க்கர் பௌண்டன் பேனா. அதுக்கு விலை என்னன்னு நினைக்கறே? 42 ரூவா. இது தவிர நீ வர்றப்ப எல்லாம் பணம். இதுக்கெல்லாம் கணக்கே கிடையாது.'' 

"இதெல்லாம் பழசுங்கதானே? புதுசா என்ன வாங்கித் தந்தீங்க?” 

''உனக்குத் தந்தபோது புதிசாத்தானே இருந்திச்சி?”” '' பெரிய காக்கா! எனக்கு ஒரு 25 ரூவா கொடுங்க.'' “ எதுக்குடா?'' “ எனக்கு வேணும்.'' 

ஹனீஃபா பணம் கேட்டான். அபு கேக்கறான். இன்னிக்கு என்ன விசேஷம்? அபுவுக்கு பணத்தின் தேவை ஏதும் அவ்வளவாகக் 

பா-5 

 Page 81 

66 

பாத்தும்மாவுடைய ஆடு 

கிடையாது. பத்து அல்லது இருபது ஷர்ட்டும் வேட்டியும் பனியனும் அவனிடம் இருக்கின்றன. ஒரு பெட்டி நிறைய செருப்புக்கள். 60 ஜோடியுண்டு, என்று உம்மா சொல்லியிருக்கிறாள். 

குளிக்கப் போயிருந்த பெண்கள் திரும்பி வருகையில், ஆண்களும் மதிய உணவு அருந்த வீடு திரும்பினார்கள். அப்துல் காதர் உள்ளே நுழையும் போதே கேட்டான் : “ அண்ணா ! ஒரு 50 ரூவா வேணும். எனக்கு அவசரமாத் தேவைப்படுது." 

"உன் வழியைப் பாத்துக்கிட்டு போடா.'' ஹனீஃபா மீண்டும் நினைவுபடுத்தினான் : '' நான் கேட்டது ஒரே ஒரு 10 ரூவா தான்.'' நான் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தேன். ஒரு மணி நேரம் சென்றதும் மர்மம் வெளியாயிற்று. தபால்காரக் குட்டம்பிள்ளை படியேறி வந்து சொன்னான் : 

'' சாருக்கு ஒரு மணியார்டர், 100 ரூவா வந்திருக்குது.'' 

குட்டம் பிள்ளையின் ஒரு பக்கத்துக் கன்னத்தில் ஒரு சிறு மாம் பழத்தை உள்ளே அடக்கிக் கொண்டிருப்பது போல ஒரு உருண்டை உண்டு. அதை நோட்டமிட்டவாறு நான் கேட்டேன் : " குட்டம் பிள்ளே! இந்த மணியார்டர் விஷயத்தை யாருகிட்டெயாச்சியும் சொன்னீங்களா?” 

'' சாரே! நாங்களெல்லாம் இந்த ஊரிலேயே இருக்கறவங்க, அப்துல்காதராலேயும் ஹனீஃபாவாலேயும் எனக்குப் பல காரியங் களும் ஆகவேண்டியிருக்குது. சாருக்கு மணியார்டர் ஏதும் வந்திச் சின்னா முன்கூட்டியே அதைப்பத்தி அவங்களுக்குத் தெரியப் படுத்தணும்னு எங்கிட்ட அவங்க சொல்லியிருக்கறாங்க.” 

" அப்படியானா எனக்கு இந்த மணியார்டர் வேண்டாம். குட்டம் பிள்ளை நீங்களே எடுத்துக்குங்க.'' 

“ஐயய்யோ ! அது ஏன் அப்படி ?'' "ஐம்பதும், ஒரு இருபத்து அஞ்சும், ஒரு பத்தும் மூன்று இந்து மானால் எவ்வளவு? ” 

''நூறு.'' “ அதுதான் இந்த ரூபாய்க்கான கணக்கு." குட்டம் பிள்ளையிடம் நான் விவரங்களையெல்லாம் எடுத்துச் சொன்னேன். அவன் சொன்னான் : '' அதெல்லாம் அப்படித்தான் இருக்கும் சாரு.'' 

உம் உம்! அதெல்லாம் அப்படித்தான்! என்ன ஒரு பயங்கரமான சதித்திட்டம்! எவ்வளவு பெரிய பகல் கொள்ளை ! 

 Page 82 

பாத்தும்மாவுடைய ஆடு 

குட்டன் பிள்ளை, தன் மகள் சரஸ்வதியைக் காலேஜில் சேர்த் திருக்கும் விவரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, நான் மணியார்டர் கூப்பனில் ஒப்பமிட்டுக் கொடுத்தேன். ரூபாய் நூறையும் நோட்டுக்களாக என் கையில் அவன் வைத்தான். அப்போது உம்மாவும் ஆனும்மாவும் சும்மா- சும்மாத்தான் வராந்தாவில் வந்து அமர்ந்து கொண்டார்கள். 

தான் பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து பாத்தும்மாவின் ஆட்டின் வாயருகே நீட்டினேன். 

'' சாரே! இது என்ன வேடிக்கை?'' என்று குட்டன் பிள்ளை கேட்டான். நான் சொன்னேன் : 

'' அதுவும் தான் தின்னுட்டு போவட்டுமே! பாத்தும்மாவுடைய ஆடு இல்லே! பாவம்! பிரசவிச்சு ஒண்ணு ரெண்டு நாள் தான் ஆச்சி .'' 

குட்டன் பிள்ளை சிரித்துக்கொண்டே வெளியேறினான். அம்மா கேட்டாள் : " எத்தினி இருக்குடா?'' " உங்களுக்குத் தெரியாது? '' என்னவென்று சொல்வது! அன்றைய தினமே அவ்வளவும் க்ளோஸ்! 

அன்று மாலை ஹனீஃபா செலவில் எனக்கு சாயா கிடைத்தது. வழக்கமாக அப்துல்காதர் தான் காசு தருவான் ; குடிப்பது என்னமோ ஹனீஃபா கடையில் அமர்ந்தவண்ணம்தான். அன்று என்னவோ சாயாவுக்கு ஹனீஃபாவே காசு கொடுத்தான். 

ஹனீஃபா பெரும் கஞ்சன். அவனுடைய கடையில், ஒரு விளக்கு கூடக் கிடையாது. அவனது கடைக்கு அடுத்ததுதான் அப்துல் காதரின் தகரக்கடை. அங்கு பத்துப் பன்னிரண்டு பெட்ரோமாக்ஸ் விளக்குகள் இருந்தன. ஒரு கிராமபோனும் உண்டு. கிராமபோன் என்னுடையதுதான் ; ஆனால், என்னிடமிருந்து வாங்கித் தருமாறு 

 Page 83 

68 

பாத்தும்மாவுடைய ஆடு 

உம்மாவிடம் அழுது பிடிவாதம் பிடித்து அதைக் கடையில் கொண்டு வந்து வைத்துக்கொண்டிருக்கிறான். விளக்குகளும், கிராமபோனும் வாடகைக்குக் கொடுக்கப்படுகின்றன. மாலைக்குப் பிறகும் வேலை நீடித்தால், ஹனீஃபா அபுவைக் கூப்பிட்டுச் சொல்லுவான் : ''அந்த விளக்கைக் கொஞ்சம் இந்தப் பக்கமா நகர்த்தி வை!" 

இப்படிக் கிடைக்கும் வெளிச்சத்தில் தான் ஹனீஃபா தைப்பான். நான் இப்படியே அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும்போது அப்துல் காதரின் கதை நினைவுக்கு வந்தது. 

அவன் எப்போதுமே நெருப்பின் அருகேதான் வேலை செய்கிறான். அந்தக் கடையில் கொல்லன் உலை இருக்கிறது. அயராது உழைப் பவன் அவன். அவனுடைய தலை முழுவதும் நரைத்துப்போய் விட்டது என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அவனை என்னுடைய அண்ணன் என்றே பலரும் தவறாக நினைப்பது உண்டு. அதிகத் துணிச்சலான வேலைகளையெல்லாம் ஏற்று முடித் திருக்கிறான். நாங்கள் இருவரும் சேர்ந்து மலையாளம் 4-ஆம் வகுப்பு வரைப் படித்தோம். பிறகு நான் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். அப்துல்காதர் மலையாளம் 7-ஆம் வகுப்பு பாசான போது நான் கண்ணணூர்ச் சிறையில் ஒன்பது காகக் கடுங்காவல் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தேன் என்று நினைவு. அந்தக் கதையை ''ஓர் ஓர்மக் குறிப்ப" (ஒரு நினைவுக் குறிப்பு) என்னும் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். தண்டனைக்காலம் பூர்த்தி யான பிறகு விடுதலையாகி நான் ஊர் வந்தபோது, குடும்பச் சொத்து முழுவதுமே கடனில் மூழ்கிப் போயிருந்தது. நல்லபடியாக உண் பதற்குக் கூட வீட்டில் எதுவும் கிடையாது. புதுஸ்ஸேரி நாராயண பிள்ளை சார், எங்களுக்கு அ, ஆ கற்பித்த ஸ்கூலில், அப்துல் காதர் 

ஆசிரியராக இருந்தான். 

பத்திரிகை ஏதேனும் ஆரம்பிக்கலாம் என்று எண்ணி, நான் கொச்சிக்குப் போனேன். சிறிது காலத்துக்குப் பிறகு நான் ஊருக்கு வந்தபோது, அப்துல் காதர் ஆசிரியர் வேலையை விட்டு விட்டு, ஒரு கடையில் பீடி சுற்றுபவனாக வேலையில் அமர்ந்திருந்தான். தன் முன்னால் முறத்தில் பீடி இலைகள், நூல், கத்திரிக்கோல், ஆகிய வற்றை வைத்துக்கொண்டு அவன் பீடி சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு நாளைக்குச் சுமார் 2000 பீடிவரைச் சுற்றுவான். ஒன்று அல்லது ஒன்றரை ரூபாய் வரை கிடைக்கும். அடுத்த முறை நான் ஊர் திரும்பியபோது, அவன் பீடி சுற்றும் வேலையை விட்டுவிட்டு மார்க்கெட்டில் ஒரு சின்ன அறையில், கொல்லன் உலை வைத்துக் 

 Page 84 

பாத்தும்மாவுடைய ஆடு 

69 

கொண்டு தகரச்சாமான் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான். தகரத்தினால் பற்பலவிதமான சாமான்களைச் செய்வதில் அவன் கை தேர்ந்தவனாக இருந்தான். இதையெல்லாம் அவன் யாரிடமும் கற்றுக் கொள்ளவே இல்லை. சுயபுத்தி, சுய முயற்சிகள் தாம். 

அந்தக் காலத்தில், நான் எழுத்தாளனாக எர்ணாகுளத்தில் வசித்து வந்தேன்-1936-37 இல் நிறைய எழுதி எழுதிக் குவிப்பேன். சாப்பிடக்கூட எதுவுமே இருக்காது ; இருந்தாலும் எழுதுவேன். பத்திரிகைகளில் எல்லாம் அவை வெளியாகி வந்தன. பத்திரிகை களிலிருந்து அவற்றை வெட்டி எடுத்து ஒன்றாக அடுக்கிச் சேர்த்து பத்திரப்படுத்தி வைப்பேன். இப்படி ஓர் எழுத்தாளனாக நான் சிரமத்துடன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கையில், ஒருநாள் அப்துல் காதர் இரும்புத் தடியை ஊன்றியவாறு பருமனான ஒரு பௌண்டன் பேனாவுடன் என்னிடம் வந்தான். 

'' இக்காக்கா ! பத்திரிகைகளிலெல்லாம் ஏதேதோ பிரசுரமாகி யிருக்குதே? அதெல்லாம் என்ன? எல்லாத்தையும் இங்கே கொஞ்சம் கொடுங்க. நான் கொஞ்சம் படிச்சு பாக்கட்டும்.'' 

சற்றே பெருமையோடு, நான் எனது இலக்கியப் படைப்புக்களை யெல்லாம் எடுத்து அவன் கையில் கொடுத்தேன். பிறகு அவனிட மிருந்து இரண்டணா வாங்கிக் கொண்டு சாயா குடிக்கப் போனேன். அவன் அவற்றையெல்லாம் நிதானமாகப் படித்து ரசிக்கட்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் இங்குமங்குமாகக் காலாரச் சுற்றினேன். ' அவனிடம் இன்னும் ஒரு 4 அணா கடன் வாங்கிக் கொள்ள வேண்டும்; உலகப் பிரசித்தி பெற்ற படைப்புக்களின் மூலகர்த் தாவான அவனுடைய சொந்த அண்ணனல்லவா கேட்கிறான்? அவன் நிச்சயமாகத் தருவான் ' என்றெல்லாம் எண்ணமிட்டபடியே நான் அறைக்குத் திரும்பினேன். அவன் என்ன செய்திருக்கிறான் தெரியுமா? தான் படித்த எல்லாக் காகிதங்களிலும் தன்னுடைய பருமனான பேனாவினால் கோடு கிழித்திருக்கிறான். 

எதற்காக இந்தக் கோடுகள் ? நான் பீடி ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டு, நாற்காலியில் அமர்ந்ததும் அவன் கூப்பிட்டான். “ இக்காக்கா! இங்கே வாங்க! " 

ஏதோ முக்கியமானதொரு விஷயமாக இருக்கும். நான் நாற்காலியை விட்டு எழுந்து அவனருகே பாயில் அமர்த்து கொண்டேன். அவன் மிகவும் இகழ்ச்சியோடு என்னைப் பார்த்தான். பிறகு ஒரு வாக்கியத்தை உரக்கப் படித்தான். நல்ல கம்பீரமான 

 Page 85 

70 

பாத்தும்மாவுடைய ஆடு 

ஒரு வாக்கியம் அது. ஆனால் அவன் கேட்டான் : "இதில் 'ஆக் யாதம்' எங்கே ?'' 

எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. '' ஆக்யாதம் என்னால்?'' 

தொடக்கப் பள்ளி மாணவனோடு பேசுவதாக நினைத்துக் கொண்டு என்னோடு அவன் சற்று நேரம் 'லெக்சர்' அடித்தான். அதில் ' ஆக்யா ' ' ஆக்யாத் ' ' விசேஷண்'' அன்வய் ' லொட்டு லொசுக்கு - முதலிய, இலக்கணம் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் அடங்கி யிருந்தன. லொட்டு லொசுக்கு என்று அவன் சொல்லவில்லை! அரைமணி நேரம் பொழிந்து தள்ளிய உரையில் அவன் என்னை ஒரு முழு முட்டாளாக்க முயற்சித்தான். பிறகு சொன்னான் : ''இக்காக்கா , இலக்கணம் படிக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.'' 

அதோடு நிறுத்திக் கொள்ளாமல், இலக்கணப் புத்தகங்கள் சிலவற்றின் பெயர்களையும் எனக்குக் கூறி, அவற்றை எல்லாம் நன்கு படிக்குமாறும் உபதேசம் செய்தான். 

எனக்குக் கோபம் பொங்கியது. நான் சொன்னேன் : ''போடா இங்கிருந்து. நீயும் உன் ஆக்யாதமும்! அடே நெய்யெத் திருடித் தின்னுட்டு நோயாளின்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்ச பெருந் திருடன் தானே நீ! இதெல்லாம் உனக்கெங்கேடா விளங்கப் போவுது. பரஸ்பரம் ஒர்த்தரோட ஒர்த்தர் பேசிக் கொள்றது போல சாதாரண நடையிலே எழுதியிருக்கேண்டா. இதிலே உன் நொட்டை 'ஆக்யாத 'மில்லாமப் போனா என்னடா முழுகிடும்? நொண்டி!'' 

அவன் சொன்னான் : '' அண்ணாச்சி, என்னெ எப்படி வேணுமா னாலும் திட்டுங்க. பரவாயில்லே. ஆனா ஒண்ணு, நீங்க குறைஞ்ச பட்சம் ஒரு வருஷமாச்சும் நான் சொன்ன இந்தப் புத்தகங்களை யெல்லாம் நல்லாப் படிச்சி, நல்லவிதமா எழுதவும் படிக்கவும் கத்துக் கிட்டப்பறம் எழுதத் தொடங்குங்க. '' ' 

"போடா , உன் வழியைப் பாத்துக்கிட்டு." நான் சொன்னேன் : ''வீட்டிலே எல்லாரையும் நான் விசாரித்ததாகச் சொல்லு. - 

முக்கியமா வாப்பாவையும் உம்மாவையும். எனக்கு இன்னும் பணம் ஒண்ணும் கிடைக்கத் தொடங்கலை ; அதனாலேதான் நான் வீட்டுக்கு இன்னும் ஒண்ணும் அனுப்பலைன்னும் சொல்லு.'' 

அவனிடம் காலணாக்கூட கடன் கேட்கவில்லை. கேட்க மனம் வரவில்லை. அவனும் அவனது துப்பில்லாத இலக்கணமும்! 

அந்தக் காலமெல்லாம் போய்விட்டது : இப்போது எனது புத்தகங்களை யெல்லாம் அவன் ஆவலோடு வாசிப்பான். எங்களது 

 Page 86 

பாத்தும்மாவுடைய ஆடு 

71 

உறவினர்களைப் பற்றியும் அவ்வப்போது ஒரு சில கதைகளை எழுது மாறும், அவன் என்னிடம் கூறுவான். " இக்காக்கா நீங்க எழுதிக் கொடுங்க போதும்; மத்ததை எல்லாம் நான் பாத்துக்கிடறேன். அந்தக் கதைங்களைப் புத்தகமா அச்சடிச்சி விக்கறது எல்லாம் என் பொறுப்பு. விடுங்க.” 

ஆமாம்! பணத்தையும் அவனே சுவாஹா செய்வான். தெரியாதா என்ன? பெரும் திருடன்! 

அடுத்த நாள் வாயில் தண்ணீர் ஊறிப் பெருக, என்னுடைய சாம்பமரத்தைப் பார்த்தபடி பெண்கள் போய்க் கொண்டிருக்கையில், பாத்தும்மா வந்து ஆட்டையும் குட்டியையும் தன் இருப்பிடத்துக்கு அழைத்துக் கொண்டு போனாள். 

“ இத்தே இங்கே யாருமே கவனிக்கமாட்டாங்க இக்காக்கா. அபு விரட்டி ஓட்டுவான். அதோட நாளையிலேந்து பால் விற்க ஆரம்பிக் கணும். பால் தர்றேன்னு ஒரு சாயா கடைக்கு வேறே சொல்லி 

வெச்சிருக்கறேன்!'' 

ஓஹோ ! அதுதானே பார்த்தேன்! பாத்தும்மா ஆட்டையும் குட்டியையும் அழைத்துக் கொண்டு போனாள். 

அதன் பிறகு ஆடும் குட்டியும் திரும்பி வருவது பகல் 10 மணிக்குத் தான். குட்டி குஷியோடு இங்குமங்கும் துள்ளித் திரியும். என்னுடைய படுக்கையில் ஏறும். பிள்ளைகளுடன் கூடவே உண்ணும். தாய் ஆடும் கூடப் பேராசைக்காரியாய்ப் போய் விட்டாள். குழந்தைகளுடன் கூடவே சாதம் சாப்பிடுவாள். ஒரே சத்தமும் ரகளையும் ஓட்டமும்தான். 

இப்படியே சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் வீட்டில், சிரிப்பும் கூச்சலும் கும்மாளமுமாக ஒரே அமர்க்களமாக இருந்தது. ஒரே உற்சாக ஆரவாரம், அபி, பாத்துக்குட்டி ஸையது முகம்மது, லைலா, ஹனீஃபா முதலியோர் சாயாவில் பால் விட்டுக் குடித்துக் கொண் டிருந்தார்கள்! அதற்குச் சிரிப்பும் கும்மாளமும் ஏன்? நான் உள் கட்டுக்குச் சென்றேன். இரண்டு ஆனும்மாக்களும் (குஞ்ஞானும்மா, ஆனும்மா ) ஐசோம்மாவும் உம்மாவும் மரச்சீனிப் புட்டோடு பால் சாயாவும் குடித்துக் கொண்டிருந்தார்கள்! அதோடு எல்லோரும் சந்தோஷமாகச் சிரித்துக்கொண்டு மிருந்தார்கள். 

''ஒரே சிரிப்பும் கும்மாளமுமா இருக்குதே, என்ன விஷயம் உம்மா ?” 

''ஒண்ணுமில்லேடா!” உம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள். 

 Page 87 

பாத்தும்மாவுடைய ஆடு 

"பெரிய அண்ணா ! யாரு கிட்டயும் சொல்லிடாதீங்க. தாங்க ஆட்டுக்குட்டியேப் பிடிச்சுக் கட்டிப் போட்டுட்டோம்.'' 

" அப்புறம்?'' "பெரியண்ணா ! சொல்லிடுவீங்களா?'' " அடடா. விஷயம் என்னன்னு சொல்லுங்க?'' 

அப்துல் காதரின் மனைவி குஞ்ஞானும்மா இடையே புகுந்து சொன்னாள் : 

" நாங்க, பாத்தும்மா அக்காவோட ஆட்டைக் கறந்தோம். ஆழாக்கு பாலு கெடச்சிது. '' 

"என்ன அம்மா இது, நீங்க எதுக்காகப் பாத்தும்மாவோட ஆட்டைத் திருட்டுத்தனமாக் கறந்தீங்க?'' 

உம்மா சொன்னாள் ; “ அதனாலே என்ன? பாலு கொடுப்போம்கிற நினைப்பே அவளுக்கு இல்லையே, அதனாலேதான்.'' 

ஆனும்மா சொன்னாள் : "பெரியண்ணா! சொல்லிடாதீங்க. அப்புறம் எங்களுக்கெல்லாம் அவமானமாப் பூடும்.'' 

“ அவமானப்படுங்க! என் கண்ணு முன்னாலேயே இப்படித் திருட்டுத்தனம் செய்யறதை நான் எப்படி அனுமதிப்பேன்?'' 

பாத்தும்மா வந்தவுடன் நான் சொன்னேன் : ''பாத்தும்மா! நீ சாக்கிரதையா இருக்கணும். ஏன்னா, இவங்க எல்லாருமாச் சேர்ந்து உன் ஆட்டைக் கறந்து, அந்தப் பாலைவிட்டுச் சாயா குடிச்சாங்க. 

குட்டியே முன்னாலேயே கட்டிப் போட்டுட்டாங்க.'' 

பாத்தும்மாவுக்கு கிலி பிடித்ததே பார்க்கலாம். “ அவுங்க நெஞ்சிலே ஈவு இரக்கம் எதுனாச்சியும் இருக்குதா? அவுங்க புள் ளெங்களா இருந்தா இப்படிக் கட்டிப் போடுவாங்களா? நீங்களே சொல்லுங்க?'' 

பாத்தும்மா உட்புறம் ஓடினாள். அங்கு அப்போது உம்மா, ரெண்டு ஆனும்மாமாரு, ஐசோம்மா, பாத்துக்குட்டி, லைலா, அபி, ஆரிஃபா, எல்லாருமே தயாராக நின்றுகொண்டிருந்தார்கள். எல்லோருமாகச் சேர்ந்து ஒரே குரலில் ஓலமிட்டனர் : '' நாங்க செய்தது ரொம்ப சரி! இன்னமும் அப்படியேதான் செய்வோம். ஆடும் குட்டியும் வளர்றது என்னமோ இங்கேதான் ! எங்களோட மரச்சீனிப்புட்டு, எங்க பலாவோட இலையுங்க, எங்களோட கஞ்சித் தண்ணி, எங்க புள்ளெங்களோட சோறு, இதெல்லாத்தையும் தின்னுட்டுத்தான் அது பெருத்துப் போயிருக்குது. நாங்கதான் 

அதை வளக்கறமாக்கும்!'' 

 Page 88 

பாத்தும்மாவுடைய ஆடு 

7: 

பாத்தும்மா இப்போது அவர்களுக்கிடையே பிளவுண்டாக்க முயற்சி செய்தாள் : 

"அடி ஆனும்மா! நீ என் அருமைத் தங்கையில்லே ! உனக்குன்னு eநான் ஒரு ஆடுகூடத் தந்திருக்கறேனே. உமா என் அருமை அம்மா! நீங்க என்னைப் பெத்தவங்க இல்லே? ஈவு இரக்கமில்லாத இந்த மருமகளுங்களைக் கொண்டு நீங்க செய்திருக்கிற காரியம் உங்களுக்கே நல்லாருக்குதா?'' 

உம்மா சொன்னாள் : ''போதுமடி. போதும். உன் அண்ணிமாரு , உன்னோட உம்மா, உன்னோட அருமைத் தங்கச்சி, எல்லோருமா சேர்ந்துதான் கறந்தோமாக்கும். நாங்க எல்லாருமாச் சேர்ந்துதான் சாயாவும் குடிச்சோம். நல்ல ருசியா இருந்திச்சி!'' 

பாத்தும்மா சொன்னாள் : ''இனிமே நான் இந்த வீட்டிலே காலெடுத்து வைக்கமாட்டேன். '' 

பிறகு, பாத்தும்மா ஆட்டின் குட்டியை வாரி எடுத்து முத்த மிட்டவாறு சொன்னாள் : 

''என் கண்ணு, உனக்குச் சேரவேண்டிய பாலை இவங்க எல்லாருமா திருடிக் குடிச்சுட்டாங்கடா ! உனக்குப் பச்சத் தண்ணி தரேண்டா செல்லம்!'' 

பாத்தும்மா ஆட்டுக் குட்டியை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தாள். 

பெரிய அண்ணா ! நான் போறேன். இனிமே இவங்க என் ஆட்டைக் கறந்து எப்படிப் பாலு குடிக்கப் போறாங்கன்னு, பாத்துப்புடறேன்!'' 

பாத்தும்மா ஆட்டின் குட்டியை எடுத்துக்கொண்டு போனாள். எனக்கு மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. குட்டி இல்லாமல், இவர்கள் ஆட்டைக் கறந்து எப்படிப் பால் குடிப்பார்கள்? 

அதையும் தான் பார்க்கலாமே? ஹொஹ்ஹோ ! 

 Page 89 

பாத்தும்மாவுடைய ஆடு 

சரியாகப் பத்து மணிக்குப் பாத்தும்மாவுடைய ஆடு வரும். சற்றுப் பொறுத்து பாத்தும்மாவும் கதீஜாவும் வருவார்கள். பாத்தும்மாவுக்கு உள்ளூரக் கோபம் உண்டோ என்னமோ? அண்ணிமாரோடும் உம்மாவோடும் தங்கச்சியோடும் கலகலப்பாகப் பேசிக்கொண்டு தான் இருந்தாள். வீட்டு வேலைகளையும் செய்கிறாள் ; மரச்சீனிப்புட்டு தின்கிறாள் ; பாலில்லாத கறுப்புச் சாயா குடிக்கிறாள் ; ஆட்டுக்குக் கஞ்சித் தண்ணியும் கொடுக்கிறாள். கொச்சுண்ணி வந்தபோது பால் திருட்டுப் பற்றி நான் அவனிடம் கூறினேன், 

அவன் சொன்னான் : ''கொஞ்சம் பாலு கொடுத்தனுப்புன்னு நானும் சொன்னேன். பாத்தும்மா என்ன செய்திருக்கறா தெரியுமா? நாலு வீடுங்களுக்குப் பாலு தாறதா ஏத்துக்கிட்டிருக்கறா. ஒரு சாயாக் கடைக்குப் பாலு ஊத்தறதா நானும் வாக்குக் கொடுத்திருக் கறேன். எனக்கும் கதீஜாவுக்கும் சாயாவுக்குக்கூடக் கொஞ்சம் பாலு கொடுக்கறது கிடையாது.'' 

ஓஹோ! அப்படியா சமாச்சாரம்! அப்ப, வேண்டுமென்றால் கொச்சுண்ணியும் கதீஜாவும்கூட, கொஞ்சம் பால் திருடத் தயங்க மாட்டார்கள் ! 

நான் பாத்தும்மாவிடம் கேட்டேன் : ''இன்னா நீ , கொச்சுண்ணிக் கும் கதீஜாவுக்கும் கூடக் கொஞ்சம் ஆட்டுப் பாலு கொடுக்க மாட்டேங்கறே?'' 

பாத்தும்மா சொன்னாள் : '' பாலு வித்துக் கிடைக்கற பணத்தைக் கதீஜாவோடு வாப்பா தானே வாங்கிக்கிடறாரு? அதோட இத்தினி நாளும் எல்லாரும் பாலு இல்லாமத்தானே சாயா குடிச்சோம்; இப்ப மட்டும் ஏன் இந்த ஆசை? நான் மட்டும் பாலு விட்டுக்கறேனா என்ன ?'' 

" நீ ரொம்ப கஞ்சத்தனமுள்ளவளா ஆயிட்டே போ.'' ''கதீஜாவுடைய வாப்பா சீட்டுச் சேர்ந்திருக்காரு. அதுக்குக் கட்டப் பணம் வேணாமா?” 

அதுவும் நியாயம் தான் என்று எண்ணமிட்டபடி இருக்கும்போது, சுலைமான் 3 அன்னாசிப் பழங்களைக் கொண்டுவந்து என்னிடம் தந்து விட்டுச் சொன்னான் : "சீம அன்னாசி. ரொம்ப ருசியாயிருக்கும்.'' 

அதிலிருந்து நான் ஒரு பழத்தை எடுத்து, தோல் சீவிவிட்டு பிள்ளைகளுக்கெல்லாம் ஒவ்வொரு துண்டு கொடுத்துவிட்டு, தின்று கொண்டிருக்கும்போது, அபு கம்பீரமாக உள்ளே வந்தான். 

 Page 90 

பாத்தும்மாவுடைய ஆடு 

II 

"ஆ.... பணக்காரன்னா இப்படித்தான் இருக்கும்"- அவன் சொன்னான். '' அன்னாசி தர எனக்கு யாராச்சும் இருக்கறாங்களா? பெரிய காக்காவுக்கு இன்னிக்கு ஒரு விருந்து வைக்க ஏற்பாடு நடந்துக்கிட்டு இருக்குது. '' 

'' என்னா விருந்து?'' '' அரிசிப் பணியாரம், ஈரல் கறியும், சாயாவும்.'' " நீயும் என் கூட வந்திடு.'' '' என்னை யாரும் கூப்பிடலையே? பெரிய காக்கா , ஒரு விஷயம் தெரியுமா? மஹா கருமியான பெரிய அக்கா பாத்தும்மா, சின்ன அண்ணனுக்கும் 'ஹனீஃபா அண்ணனுக்கும் பாலுவிட்ட சாயா கொடுத்தனுப்பியிருந்தாங்க!'' '' பாலுவிட்ட சாயாவா ?'' " ஆமாம்! ” "உனக்குக் கொடுக்கல்லே?'' '' நான் பக்கத்திலேயேதானே இருக்கறேன். அதனாலே எனக்கும் ஒரு சிங்கிள் கிடைச்சது.'' 

ஆச்சரியம்தான்! பாத்தும்மா, அப்துல் காதருக்கும் ஹனீஃபா வுக்கும், கூடவே அபுவுக்கும் பால் சாயா கொடுத்தனுப்பியிருக் கிறாள் ! இதிலே என்னமோ இருக்குது விஷயம். 

'' பாத்தும்மா பால் சாயா கொடுத்தனுப்பக் காரணம் என்ன?'' “ ஹனீஃபா காக்கா ஸ்ட்ரைக் பண்ணினாரு. '' '' என்ன ஸ்ட்ரைக்?'' “ பெரிய அக்காவோட ரவிக்கைகளையும் கதீஜாவுடைய சட்டை களையும் தைக்கறது ஹனீஃபா காக்காதான். அவங்களோட கிழிசத் துணிங்களையெல்லாம் ஒட்டுப் போட்டுச் சீராக்கிக் கொடுக்கறதும் அவருதான். முந்தா நாளுன்னு நினைக்கறேன். எதையோ தைச்சு வாங்கிக்கிட்டு போறதுக்காகக் கதீஜா கடைக்கு வந்தப்ப தைக்க விருப்பமில்லேன்னு ஹனீஃபா காக்கா சொல்லியனுப்பிட்டாரு. இந்த மாதிரி இனிமேலும் சொல்லாம இருக்கோணுமேங்கிறதுக்காகக் கொடுக்கப்பட்ட லஞ்சம்தான் இது, அதாகப்பட்டது ஒரு சிங்கிள் பால் சாயா!'' 

''சரி. அப்துல் காதருக்குக் கொடுத்தது?'' “ அது வந்து, பெரிய மச்சான், சின்ன காக்காவுக்குக் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியது பாக்கியிருக்குது. பெரிய அக்காவைப் பார்த்தப்போ சின்ன அண்ணன் சொன்னாரு: ' பணத்தை உடனே திருப்பலேன்னா கேஸு போடுவேன். முதல் பிரதிவாதி பெரிய 

 Page 91 

76 

பாத்தும்மாவுடைய ஆடு 

மச்சான். இரண்டாம் பிரதிவாதி பெரிய அக்கா. மூணாம் பிரதிவாதி கதீஜா. அதுவும் போதாதுன்னா ஆட்டையும் ஜப்தி செய்யச் சொல்லுவேன்!' - அப்படி எதுவும் செய்துடாம இருக்கறதுக்காகத் தான் அந்த ஒரு சிங்கிள் சாயா! '' 

இவ்வாறு லஞ்சம் கொடுக்கவும், பாத்தும்மாவின் ஆட்டின் பால் உபயோகப்படுத்தப்படுகிறது! அ. சொன்னான் : 

"குட்டம்பிள்ளை வர்றாரு" உண்மைதான். தபால்காரக் குட்டம்பிள்ளை படிதாண்டி வந்தார். ஒரு பார்சலை என்னிடம் கொடுத்தார். நான் கையெழுத்துப் போட்டு அதனைப் பெற்றுக்கொண்டேன். குட்டம்பிள்ளை போன பிறகும் நான் அதைப் பிரிக்கவில்லை. உம்மா கேட்டாள் : 

" அந்தக் கட்டுலே என்னடா வந்திருக்குது?'' நான் சொன்னேன் : ' என்னோட புதுப் புத்தகத்தோட பத்துக் காபி, பிரசுரகர்த்தா எனக்கு இனாமா அனுப்பித் தந்திருக்கான். போதுமா? 

உம்மாவுக்கு மேற்கொண்டும் அறியனும். "இதை வித்தா பணம் கிடைக்குமோ?” . 

" நீங்க கொஞ்சம் உங்க வழியைப் பாத்துக்கிட்டு உள்ளே போறீங் களா? எப்பப் பாரு பணம், பணம், பணம்!'' 

அப்போது என்னிடம் காலணாக்கூட கிடையாது. மனதில் ஒரு யோசனை தோன்றியது. உம்மா போன கையோடு , அபுவை நான் ரகசியமாகக் கூப்பிட்டேன். 

“ உன்னாலே இந்தப் புத்தகங்களை பஜாருக்கு எடுத்துட்டுப் போயி, விற்க முடியுமா?'' 

அவன் உடனே கேட்டான் : ''எனக்கு என்ன கமிஷன் தருவீங்க?'' - " எல்லாம் தர்றேண்டா '' என்று சொல்லி பார்சலைப் பிரித்து, ஒன்பது புத்தகங்களை ஒரு காகிதத்தில் கட்டி அபுவின் கையில் கொடுத்தனுப்பிவிட்டுக் காத்துக் கொண்டிருந்தேன். 

சொந்த ஊர். நான் எழுதிய புத்தகத்தை யாராவது காசு கொடுத்து வாங்குவாங்களா? ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழிந்தது. அபு வந்தான். நல்ல காலம். எல்லாப் புத்தகங்களுமே விற்றுப்போயிருந்தன! 

ஒரு புத்தகத்தின் விலை முழுவதையுமே அபுவுக்குக் கொடுத்தேன். பாக்கிப் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கையில் ' எத்தினி கிடைச்சுது?' என்று கேட்டவாறே உம்மா வந்தாள். இந்தப் 

 Page 92 

பாத்தும்மாவுடைய ஆடு 

பணத்தை அவர்கள் பார்த்து விட்டார்கள் என்பதை அறிந்ததும் எனக்குக் கெட்ட கோபம் வந்தது. என் பக்கத்தில் இருந்த கண்ணாடித் தம்ளரை எடுத்து, என் பலம் முழுவதையும் உபயோ கித்து எறிந்தேன் , எதிரில் இருந்த சுவரை நோக்கி! ஒரு பத்தாயிரம் சுக்கல்களாகக் கிளாஸ் நொறுங்கி வீழ்ந்தது. வீடு நிசப்தமாகியது. எனக்குப் பெருத்த நிம்மதி உண்டாயிற்று. உம்மா மௌனமாக உடைந்த சில்லுகளையெல்லாம் பெருக்கி எடுத்து ஒரு காகிதத்தில் சுற்றி, வெளியே கொண்டுபோய் எறிந்துவிட்டு வந்தாள். பிறகு, எதுவுமே பேசாமல் எனக்கு நேர் எதிராக, மேற்குப்புறம் பார்த்து அமர்ந்து கொண்டிருந்தாள். 

நான் மீதமிருந்த ' விஸ்வவிக்யா தமாய மூக்க' புத்தகத்தை எடுத்து, பாத்தும்மாவுடைய ஆட்டின் முன்னால் நீட்டினேன், அது பேராவலோடு அருகே வந்தது. 

''இதென்ன பெரிய காக்கா இப்படிச் செய்யறீங்க?'' என்று அபு கேட்டான். 

" பாத்தும்மாவோட ஆடு, 'பால்யகால சகி', 'சப்தங்கள்' ஆகிய புத்தகங்களை ருசியோடு தின்னுட்டிருக்குது. இன்னும் வேறே புஸ்தகங்க இருக்குது , தர்றேன்னு அதுங்கிட்ட சொல்லியிருந்தேன், 'விஸ்வ விக்யாதமாய மூக்கை 'யும் தான், அது தின்னு பார்க் கட்டுமே!'' 

" அதுக்கு ரொம்ப தின்னக் கொடுக்காதீங்க.'' என்று அபு சொன்னான். நான் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய்ப் பெட்டியினுள்ளே வைத்தேன். அபு போனதும், கிடைத்த பணத்தில் சரிபாதியை உம்மா மடியில் தூக்கிப்போட்டேன். உம்மா கேட்டாள் : " அடே ஒரு புஸ்தகத்துக்கு என்னடா விலையிருந்திச்சு?'' 

நான் உண்மையைச் சொன்னேன். சற்று நேரம் கழித்து அப்துல் காதர் சாப்பிட வந்தபோது, என்னிடம் மிஞ்சியிருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டான். 

“ஒரு பெரிய கட்டா இல்லெ வந்தது?'' " பத்து காபி இருந்திச்சி. ஓம்பதை அபுகிட்டே கொடுத்து விக்கச் சொன்னேன்.” 

* பணமெங்கே ?'' "ஒரு பொத்தகத்தோட விலையை, அபுகிட்டக் கொடுத்தேன். மீதமிருந்ததிலே பாதியை உம்மாகிட்டே கொடுத்தேன். '' 

“ எனக்கொண்ணுமில்லையா?” " நீ இந்தப் புஸ்தகத்தை வித்துப் பணத்தை எடுத்துக்க.'' 

 Page 93 

78 

பாத்தும்மாவுடைய ஆடு 

“உம்மா!'' என்று கூப்பிட்டவாறே அவன் உள்ளே போனான். அங்கே சில ' கசமுச ' ஓசைகள் கேட்டன. 

“இங்கே செலவெல்லாத்தையும் ஏத்து நடத்தறது நான் தானே தவிர நீங்க அல்ல!" அப்துல் காதர் சொன்னது கேட்டது. சற்றுப் பொறுத்து, அவன் மகிழ்ச்சியோடு வெளியே வந்தான். உம்மா வுடைய முகத்தைப் பார்த்தபோது அவளிடமிருந்த பணத்தை அப்துல் காதர் பறித்துக்கொண்டு போய்விட்டான் போலும்! என்றே தோன்றியது. 

மாலை நாலு மணி வாக்கில் கொச்சுண்ணியும் கதீஜாவும் வந்து என்னை அழைத்தார்கள். நான் அபுவையும் அழைத்துக் கொண்டு போனேன். 

கொச்சுண்ணியுடைய வீட்டில் கொச்சுண்ணியுடைய அப்பா அம்மா மற்றும் அவனது சகோதரிகளும் இருந்தார்கள். பாத்தும்மா வுக்கும் கொச்சுண்ணிக்கும் பாத்தும்மாவுடைய ஆட்டுக்கும், குட்டிக்கும் கோழிகளுக்கும், நிம்மதியாக வசிக்க ஒரு சின்ன குடிசை உண்டு என்று அபு சொன்னான். '' இந்த விஷயம் பெரிய காக்கா வுக்குத் தெரியக்கூடாது 'ன்னு பெரிய அக்கா சொல்லியிருக்காங்க. ஆனால் பெரிய காக்கா, நீங்க அதை அவசியம் பாக்கணும்” என்று அபு என்னோடு ரகசியமாகச் சொன்னான். 

சுட்ட அரிசிப்பணியாரத்தையும் ஈரல் கறியையும் நாங்கள் வயிறு நிரம்ப ஒருகை பார்த்தோம். பால் சாயாவும் குடித்தோம். பாத்தும் மாவின் வீட்டையும் பார்த்துவிட்டோம். 

''பெரிய காக்கா, ஏன் இங்கே வந்தீங்க?'' என்று துயரம் பொங்கப் பாத்தும்மா கேட்டாள். அவளுடைய வீடு இரங்கத்தக்க நிலையில் இருந்தது. மண்ணைக் குழைத்துப் பூசிய சுவர்களும், பனை ஓலையால் வேயப்பட்ட கூரையும் கொண்ட, ஒரு சிறிய அறைதான் அது. அதன் கதவு, ஏதோ ஒரு புராதன வீட்டினுடையதாகும். அதைக் கயிறு போட்டுக் கட்டிவைத்திருந்தார்கள். அதற்குப் பூட்டு ஏதும் கிடையாது. 

“ எனக்கு ஒரே அவமானமா இருக்குது.'' பாத்தும்மா சொன்னாள். '' இனி நான் உயிரோடு இருந்துதான் என்ன பிரயோசனம்?'' நான் சொன்னேன் : “நீ பேசாம இரு. அந்தக் கதவுகளைச் சீராக்கறதுக் கான பணத்தை நான் கொடுக்கறேன்.'' 

"வேணாம் பெரிய காக்கா! நான் என் ஆட்டுப்பாலை வித்து பணம் சேர்ந்தப்பறம் பண்ணிக்கறேன்.'' 

"வேணாம்! நான் தர்றேன்னா தறேன்.'' 

 Page 94 

பாத்தும்மாவுடைய ஆடு 

79 

அன்று இரவு உண்ட பிறகு, நான் எங்கள் வீட்டில் மேற்குப் புறம் பார்த்தவாறு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தேன். கொச் சுண்ணி யிருந்தான். சுலைமான் இருந்தான். பாத்தும்மா இருந்தாள். எல்லோருமே இருந்தார்கள். அப்துல் காதர், ஹனீஃபாவிடம் சொன்னான் : " அடே, நாம காலங்கார்த்தாலேயே இங்கிருந்து புறப் பட்டுடணும். கோர்ட்டு திறந்ததும் உடனே நம்முடைய கேஸுை தாக்கல் பண்ணிட்டுத் திரும்பிடலாம் என்ன?'' 

நான் கேட்டேன் : '' என்ன கேஸு?'' 

ஒரு சிவில் கேஸு. கூடவே ஜப்தியும் உண்டு. இந்தக் கேஸை நான் ஒத்திப் போட்டுக்கிட்டே இருந்தேன். ஆனா சில சம்பவங் களாலே, இனிமே அத ஒத்திப்போடறதுக்கு இல்லே! '' 

“ என்ன சம்பவங்கள் ?'' '' சுட்ட அரிசிப் பணியாரத்தைத் தேங்காய் பாலில் தோய்த்துக் கிண்ணத்தில் அடுக்கிவச்சுக் கொடுத்தப்ப எங்களைப் பத்தின நெனப்பு வந்துச்சா? ஈரல் கறியைக் குழிக்கிண்ணம் நிறைய அள்ளிப் போட்டுக் கொடுத்தப்ப, எங்க நினைப்பு வந்திச்சா? எங்களுக்கு மட்டும் ஒவ்வொரு கப் சிங்கிள் சாயா! மத்தவங்களுக்குப் பணியாரமும் ஈரல் கறியும்.'' ஆனும்மா சொன்னாள் : '' நானும் உம்மாவும் அண்ணிகளும் நாக்கிலே தண்ணி சொட்ட சொட்டக் காத்துக்கிட்டு இருந்தோம். எங்களைப் பத்தின நினைப்பும் இல்லை !'' 

சுலைமான் சொன்னான் : '' என்னைப் பத்தியும்தான்.'' அப்துல் காதர் சொன்னான் : '' சுலைமானே, நீதான் முதல் சாட்சி. '' 

பாத்தும்மா சொன்னாள்: "நான் யாருக்கெல்லாம் தான் பயப் படறது? உம்மாவுக்குப் பயப்படணும். அண்ணிமாருங்களுக்கும் என் தங்கைக்கும் பயப்படணும். சின்னண்ணாவுக்குப் பயப்படணும். ஹனீஃபாவுக்கு அஞ்சணும், அபுவுக்குப் பயப்படணும். என்னைக் கட்டினவனுக்குப் பயப்படணும், இப்ப சுலைமானுக்கும் பயப்பட வேண்டியிருக்குது!'' 

“ எனக்கு யாரும் பயப்பட வேணாம்”-அபு தொண்டை கிழியக் கத்தினான். 

நான் சொன்னேன் : " போதுமடா.'' பாத்தும்மா சொன்னாள் : " சின்னண்ணா, நான் எல்லோருக்கும் ஈரல் கறியும் பணியாரமும் சாயாவும் தர்றேன். கொஞ்ச நாள் பொறுத்துக்கிட்டாப் போதும்.'' 

 Page 95 

பாத்தும்மாவுடைய ஆடு 

" எத்தினி நாளு?"-அவன் கேட்டான் . " அதெ நான் அப்புறம் சொல்றேன் சின்னண்ணா ! அடே ஹனீஃபா, நீ செய்தது சரியா? கதீஜாவுடைய துணிங்களைத் தைக்காம அப்படியே திருப்பியனுப்பி யிருக்கறியே?” 

ஹனிஃபா சொன்னான் : " நான் எல்லாருக்கும் இலவசமாத் தச்சுக் கொடுத்திட்டு இப்படியே இருந்தா போதும் இல்லே? அபுவுக்குத் தினமும் ஷர்ட் தைக்கணும். ஏன்? இந்த வீட்டிலே எல்லோருக்கும் தான் தைக்கணும். எனக்கு இந்த வீட்டிலே யாராச்சும் கூலி கொடுக்கறீங்களா?” 

அப்துல் காதர் சொன்னான் : ''உன் பெண்டாட்டியோட ரவிக்கை தைக்க நான் காசு தரணும். லைலாவோடு பாவாடையும் பிளவுஸும் தைக்க நான் கூலி கொடுக்கணும். அபியோடு கோட்டும் ட்ரௌசரும் தைக்கறதுக்கும் நான் தான் காசு தரணும் இல்லே? ஆளு தேவலையே! ” | 

ஹனீஃபாவுக்குக் கோபம் வந்தது. “யாரும் எனக்கு எதுவும் தர வேணாம். நான் பட்டாளத்துக்குப் போய்க்கறேன். இன்னிக்கு ராத்திரியே போயிட்றேன்.” 

அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. நான் சொன்னேன் : " அடே கொஞ்சம் பொறுத்துக்க. ஒரு அரை மணி நேரம் கழிச்சு பட்டாளத்திலே சேரலாம். அடே, நீ முன்னே ராணுவத்திலே இருக்கறப்போ, லீவிலே பல தடவை ஊருக்கு வந்திட்டுத் திரும்பறப்போ, எர்ணாகுளத்துக்கு எங்கிட்ட வருவே யில்லே? அப்போதெல்லாம் நீ எங்கிட்டேருந்து அஞ்சும் பத்தும் கடனா வாங்கிட்டுப் போவே. கையிலே கொண்டாந்ததையெல்லாம் உம்மா வாங்கிக்கிட்டாங்க, அப்துல்காதர் வாங்கிக்கிட்டான்னுதான் எங்கிட்ட நீ சொல்லுவே. அந்தப் பணம் எதுவும் நீ திருப்பினதே கிடையாது. அதையெல்லாம் இப்ப எடு! '' 

ஹனீஃபா உடனே ஐசோம்மாவைக் கூப்பிட்டான் : ''வெளியே வாடி, குழந்தைங்களையும் எடுத்துக்க. இந்த வீட்டிலே இனிமே நாம் இருக்க வேணாம். இவங்களோட அதிகாரம் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது. நமக்கு அங்கே போயி ஓலைக் குடிசை ஏதாவது போட்டுக்கிட்டு இருக்கலாம். வா. எந்திரிடா அபி.'' 

நான் கேட்டேன் : " அடே, நீ எங்கிட்டேந்து ரூபா வாங்கிக்கிட்டு இருக்கறேன்னு நினைப்பு இருக்குதா?'' 

அவன் சொன்னான் : '' அதெல்லாம் ரொம்பப் பழைய கதை யாச்சுதே இக்காக்கா. அதெல்லாம் இப்ப யாருக்கு நினைப்பு இருக்கு?" 

 Page 96 

பாத்தும்மாவுடைய ஆடு 

81 

" ஏதோ, தரவேண்டிய பாக்கி இருக்குதுங்கறதையாவது ஒத்துக் கிட்டயே. அந்த வரைக்கும் சந்தோஷம்தான்." 

நான் போய்ப் படுத்தேன். விடியற்காலை 4 மணிக்கு பாத்தும்மாவும் கொச்சுண்ணியும் கதீஜாவும் தங்கள் வீட்டுக்குப் புறப்படும் ஆயத்த ஒலி கேட்டு, நான் விழிப்புற்றேன். ஆயினும் எழுந்திருக்காமல் அப்படியே கிடந்தேன். உம்மா கேட்டாள் : ' நீ எந்திரிச்சிட்டியா?'' 

நான் கேட்டேன் : “ நான் படுத்துக்கிட்டு இருக்கறேன். என்ன வேணும்?” உம்மா சொன்னாள் : " உங்கிட்ட பணம் இருந்திச்சின்னா, எனக்கு ஒரு ரூவா தா. யாருக்கும் தெரியவேணாம்.'' 

" நேத்து நான் கொடுத்தேனே?'' “ அதெல்லாத்தையும் அப்துல் காதர் வாங்கிக்கிட்டான். அவன் தானே இந்த வீட்டைக் கவனிச்சுக்கிட்றான். எவ்வளவு செல விருக்குது? ஒரு நாளைக்கு எத்தினி ரூபா வீட்டுச் செலவுக்கு வேணும்னு நீ தான் கொஞ்சம் யோசனை பண்ணிப்பாரேன்!'' 

'' உங்க பாட்டுக்குப் போங்க, ஆமாம்! மேலே மேலே எதாச்சும் சொன்னீங்க, நான் இப்பவே இங்கிருந்து போயிடுவேன் ஆமாம்!'' 

உம்மா பேசவில்லை. நான் அசையாமல் அப்படியே கிடந்தேன். கொஞ்ச நாட்கள் முன்பு நான் வந்தபோது நடந்த ஒரு சம்பவம் என் நினைவில் ஓடியது. அன்று நான் இருந்தது, வழக்கமாக வசித்து வரும் சிறிய வீட்டில்தான். 

ஒரு ஸ்பெஷல் காரில் தான் வந்து இறங்கினேன். கார் வீட்டின் முன்னால் நின்றதும் சிறு கும்பல் ஒன்று கூடியது. நான் டாக்ஸி ட்ரைவருக்கு நோட்டுக்களை எண்ணிக் கொடுப்பதை, எல்லோரும் பார்த்தார்கள்! 

அன்று இரவு உணவை முடித்துக்கொண்ட பிறகு, நான் படுக்கச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அப்துல் காதரும், உம்மாவும், ஹனீஃபாவும் சேர்ந்து வந்தார்கள். வந்தவுடன் அப்துல் காதர் சொன்னான் : '' இக்காக்கா, ரூவா எதினாச்சியும் இருந் திச்சுன்னா இங்கே வச்சுக்கிடாதீங்க; எங்கிட்ட கொடுங்க. யாரு னாச்சியும் திருடனுங்க வருவாங்க ; வந்து அடிச்சுக் கொன்னு போட்டுடுவாங்க.'' 

நான் உம்மாவின் கண் எதிரிலேயே, 500 ரூபாயை எடுத்து எண்ணி அவனிடம் கொடுத்தேன். இனிமேல் திருடர்கள் வந்து அடித்துக் கொல்லட்டும்! பணம் போகாதல்லவா? எல்லோரும் திருப்தியோடு போனார்கள். 

பா-6 

 Page 97 

82 

பாத்தும்மாவுடைய ஆடு 

நான் மன நிம்மதியோடு அப்படியே படுத்தவாறு, ஒரு பீடியைப் புகைத்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ வீட்டினுள்ளே இருப்பது போல எனக்குத் தோன்றியது. சற்றே பயத்தோடு நான் கேட்டேன் : “ யாரு அங்கே?'' 

" நான் தாண்டா"-உம்மா மெள்ளச் சொன்னாள். "யாருக்கும் தெரியாம நான் வந்திருக்கறேனாக்கும்.'' 

''என்ன விஷயம்?'' " அடே, காதும் காதும் வச்சாப்பலே இருக்கணும். யாருக்குமே தெரியக்கூடாது...'' 

உம்மா சொன்னாள் : " நீ எனக்கு ஒரு 25 ரூவா கொடுக்கணும். யாரும் அறியக்கூடாது.'' 

உம்மாவல்லவா! நான் 25 ரூபாய் உடனடியாகவே எடுத்துக் கொடுத்தேன். இப்படி அன்றிரவு நான் நிம்மதியாகத் தூங்கினேன். அடுத்த நாள் முதல், கடன் வாங்குவோரின் வருகை துவங்கியது இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் தாம். எல்லோருமே முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களல்லர். ஆனால், இந்த பெண்கள் எல்லோரிடமுமே நான் தாய்ப்பால் குடித்திருக்கிறேன் ! " புள்ளெ அதெ மறந்திட்டியா? ஒரு ரெண்டு ரூவா கொடேன்?'' 

இப்படியாக, நான் ரெண்டும் நாலும் அஞ்சுமாகக் கொடுக்க ஆரம்பித்தேன். இந்தக் கடன், ரூபாய் நூறை எட்டியபோது ''இல்லை. நான் யாரோட தாய்ப்பாலும் குடிக்கலே," என்று சொல்லியவாறு கடன் கொடுப்பதையே நிறுத்திவிட்டேன். இதற் கிடையே ஒரு வேடிக்கை வேறு நடந்து கொண்டிருந்தது. உம்மா, அபியையும் பாத்துக்குட்டியையும் கூட்டிக் கொண்டு வருவாள் : 

“ இந்தக் குழந்தேங்களுக்கு எதினாச்சும் கொடுடா. ஆனா, செப்புக் காசை மட்டும் கொடுத்திடாதே.” 

அது மட்டுமல்ல. “ அடே, நீ, இப்ப இங்கேயே இருந்திட்றதுன்னு வந்திருக்கறே! உன்னைப் பார்க்கறதுக்காக உன் சிநேகிதக்காரங்க வருவாங்க 

இல்லே? அவங்களுக்கு நாங்க எதிலே சாதம் போட்றது?'' 

"இலையில். '' " சே , அது கௌரவக் கொறச்சலு இல்லே? நமக்குக் கொஞ்சம் பிளேட்டுங்களும் கிண்ணிகளும் கிளாஸுங்களும் வேணும்.'' 

"எங்கிட்ட பணம் கிடையாது.'' 

 Page 98 

பாத்தும்மாவுடைய ஆடு 

83 

'' அப்படியானா, நான் ஆனப்பறம்புலே இருக்கற கடைக்குப் போயி, நீ அனுப்பிச்சதாகச் சொல்லி, இதெல்லாத்தையும் வாங்கிட்டு வர்றேன்.'' | 

கிழவி சொன்னபடி செய்யக் கூடியவள். ஆனப்பறம்பில், வர்க்க குஞ்சுக்கு பெரிய ஸ்டேஷனரி கடை ஒன்று இருக்கிறது. அவன் என் னுடைய சிநேகிதன் தான். அங்கே உம்மா போனால், அந்தக் கடை யில் உள்ளது எல்லாவற்றையுமே வாங்கிவரத் தயங்கமாட்டாள். 

நான் சொன்னேன் | '' உம்மா நீங்க போக வேணாம். நானே போயி வாங்கிக்கிட்டு வர்றேன்.'' 

நான் போய், ஒரு பெரிய கோணி நிறையப் பாத்திரங்களை வாங்கி, ஓர் ஆளைக் கொண்டு எடுத்து வருமாறு செய்தேன். இப்படியாகக் கொஞ்சம் நிம்மதியுடன் இருந்து வரும்போது, உம்மா சொன்னாள் : 

" அடே, நீ இப்ப எப்படியிருந்தாலும் இங்கேயே இருந்திட் றதுன்னு வந்திட்டே. உன் சிநேகிதங்க வந்தா , எங்கே தூங்கு வாங்க? நீ கொஞ்சம் படுக்கற்துக்கான தடிப் பாயிங்களும் தலையணைங்களும் வாங்கிட்டு வா ! ” 

“ நீங்க கொஞ்சம் பேசாமப் போங்க!'' 

இதென்னடா வம்பாப் போச்சுதே! தொல்லை தீர வேண்டி, நான் அதையும் வாங்கிக் கொடுத்தேன். பிறகு உம்மாவுக்கு ஒரு தாமிர அண்டா வேணும், நெல்லுக் கிடைச்சதுன்னா புழுக்கலாம் ; குளிக்கற துக்கு தண்ணி ரொப்பி வெச்சுக்கலாம். 

நான் எண்ணினேன் : தாமிர அண்டாவுக்குப் பிறகு, மாட்டு வண்டி! அதுக்குப் பிறகு மோட்டார் கார்! உம்! 

பெட்டியும் படுக்கையும் எடுத்துக்கொண்டு நான் அங்கிருந்து விட்டேன் சவாரி... வர்க்கலையைக் கடந்து சென்று, மதராஸ் முதலிய விடங்களில் சுற்றிவிட்டுத் திரும்பி வந்தேன்.. மறுபடியும் சுற்றப் போனேன்; மறுபடியும் திரும்பி வந்தேன். இம்முறை இந்த விதமாகத் திரும்பியவன் தான் நான். ஹனீஃபா , ' பட்டாளத்துக்குப் போயிட றேன் ' என்று சொல்வதுபோல் அல்ல; ' நான் போறேன்' என்று சொன்னால் நிச்சயமாகவே போய்விடுவேன். அதனால்தான் உம்மா ஒன்றுமே பேசாமல் அசையாமல் இருக்கிறாள். நான் எழுந்து போய்ப் பெட்டியைத் திறந்து, மீதியிருந்த பணம் எல்லாவற்றையுமே 

அவளிடம் கொடுத்துவிட்டேன். 

நான் சொன்னேன் : 'இனிமே பயப்பட வேணாம்! நான் போறேன்னு சொன்னாக்கூட, போக முடியாது. வழிச் செலவுக்குப் பணமில்லே. இனிமே நீங்களே என்னைக் காப்பாத்திடுங்க!” 

 Page 99 

84 

பாத்தும்மாவுடைய ஆடு 

நாட்கள் இப்படியாக நகர்ந்துகொண்டிருந்தன. அப்போது ஒரு அற்புதமான சம்பவம் நடந்தது. பாத்தும்மாவுடைய ஆட்டை, இரண்டு ஆனும்மாக்களும் ஐசோம்மாவுமாகச் சேர்ந்து கறந்து, பாலைப் போட்டுச் சாயா குடித்தார்கள் ! 

குட்டியில்லாமல்தான் ! ஒரு தடவையல்ல. தினசரி பால் திருட்டுத் தான். ' குட்டியில்லாமல் பால் சுரக்காது' என்ற நம்பிக்கையில் சுகமாகவும் நிம்மதியாகவும் இருந்து வருகிறாள் பாத்தும்மா! 

அபியையும் பாத்துக் குட்டியையும் ஆட்டுக் குட்டிபோல ஊட்டச் செய்த முயற்சி பலிக்கவில்லை. இறுதியில் சுபைதாவும் ரஷீதும் ஆட்டுக் குட்டிகளாயினர். 

இந்த அற்புத சம்பவத்தைத்தான் பாத்தும்மா கேட்டாள். அவள் நெஞ்சில் அறைந்துகொண்டு அழுதாள். 

" நீங்க மனுசங்கதானா? இப்படிச் செஞ்சுட்டீங்களே? வேண்டாம். இனிமே இப்படிச் செய்யாதீங்க உங்களுக்கு நான் பாலு தந்திட றேன்.' 

அடுத்த நாள் முதல், பாத்தும்மாவிடமிருந்து அரை பாட்டில் பால் வீட்டுக்கு வர ஆரம்பித்தது. 

சுபைதா, ரஷீத், அபி, ஆரீஃபா, லைலா பாத்துக் குட்டி எல்லோ ருக்கும் ஒரே குஷிதான். ஆனும்மாக்களுக்கும் ஐசோம்மாவுக்கும் உம்மாவுக்கும் கூட பால் சாயா தான். 

இப்போதெல்லாம் ஆட்டின் கூட குட்டியும் வருகிறது. கூடவே அரை பாட்டில் பாலுடன் கதீஜாவும். 

இப்படியாக இரண்டு விதமான பால் வீட்டிற்குக் கிடைக்கிறது. ஒன்று திருடிக் கிடைப்பது. மற்றொன்று பாத்தும்மா கொடுத் தனுப்புவது. 

பாவம் பாத்தும்மா! ஒரே ஒரு ரகசியம் மட்டும் இன்னும் விளங்காமலேயே இருந்து வருகிறது. இந்தப் புத்தி பெண்களில் யாருக்கு முதலில் தோன்றியது? 

 Page 100